நாவலின் பின்னணியாகப் பின் வரும் விஷயங்கள் இருந்தன : அருந்ததிராயின் அம்மா மேரி ராய் கேரள சிறியன் கிறிஸ்தவர். அப்பா ராய் வங்காளி. மேரி விவாகரத்தானவர். அருந்ததியின் சகோதரர் லலித். அருந்ததியும் லலித்தும் இரட்டைப் பிறவிகள் அல்ல. கோட்டயம் நகரத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் அயமனம் கிராமம் இவர்களது சொந்த ஊர். அருந்ததியின் மாமா ஜியார்ஜ் ஐஸக். அருந்ததியின் தாத்தா ஜான் குரியன். தலைமைப் பொறியியலாளராக இருந்து பாதிரியாக ஆனவர். ஐஸக்கின் விவாகரத்துப் பெற்ற மனைவி ஸிஸிலியா பிலிப்ஸன். பாரடைஸ் ஊறுகாய் பேக்டரி ஐஸக் தொடங்கியதுதான். ஐஸக் இப்போதும் தாயுடன்-அம்மாச்சியுடன் தான் வாழ்கிறார். புள்ளியம்பல்லின் வயல்களுக்கு அப்பால் மிருச்சல் நதியோடுகிறது. அருந்ததி கட்டிடக்கலை பயில்கிறார். கோவாவில் திரிகிறார். குகா என்னும் மார்க்ஸிட்டோடு வாழ்கிறார். பிற்பாடு கிருஷ்ணன் என்பவரை மணக்கிறார். கிருஷ்ணன் ஏற்கனவே மனமானவர். இரண்டு குழந்தைகள் அவரது முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள். அருந்ததி, இரு பெண் குழந்தைகள், கிருஷ்ணன் ஆகியோர் குடும்பமாக வாழ்கிறார்கள். ராய் பிறந்தது ஷில்லாங்கில். பிற்பாடு அயமனம் வந்தவர். மேரி வழக்கு மன்றம் சென்று தன் சொத்துரிமையை நிலைநாட்டியவர்.
•Last Updated on ••Sunday•, 09 •November• 2014 00:37••
•Read more...•
முப்பதாண்டு காலம் ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய போராளித் தலைவனின் மரணம் அங்கீகரிக்கப்படாத தமிழகப் புகலிட அரசியல் சூழலில், இலங்கையில் அமைதி நிலவுகிறது அபிவிருத்தி கொழிக்கிறது எனப் பிரச்சாரம் செய்யப்படும் காலத்தில், தாயின் கல்லறையில் அழுது ஆற்றுப்படுத்திக் கொள்வது என்பது கவிஞர் வ.ஐ ச.ஜெயபாலனுக்கு ஒரு பெரும் அரசியல் போராட்டமாக ஆகிவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். தருணத்திற்குப் பொருத்தமாக மீராபாரதி மரணமும் ஆற்றுப்படுத்தலும் குறித்து மரணம் இழப்பு மலர்தல் எனும் தலைப்பில் அவசியமான முன்னோடி நூல் ஒன்றினை எழுதியிருக்கிறார்.. மரணங்கள் இரு வகையிலானவை@ இயல்பாக நிகழும் மரணங்கள் மற்றும் சுமத்தப்பட்ட மரணங்கள். இயல்பாக நிகழும் மரணங்கள் குறித்த ஆற்றப்படுத்துதல் எந்தச் சமூகத்திலும் இயல்பாகவே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எந்தச் சமூகமும் அதற்கென மரபான சடங்குகளையும் கொண்டிருக்கிறது. ஆற்றுப்படுத்தலின் வழியில் மனிதர்கள் தம்மை எதிர்கால வாழ்வுக்கு மீட்டுக் கொள்கிறார்கள். சுமத்தப்பட்ட மரணங்களில் இதற்கான வாய்ப்பு அதனோடு சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு இல்லாது போகிறது. சுமத்தப்பட்ட மரணங்கள் எனும்போது அவற்றைத் தற்கொலை படுகொலை வெகுமக்கள் மரணங்கள் என நாம் வகைப்படுத்துகிறோம். இயக்க உட்படுகொலைகள் மறைக்கப்பட வேண்டிய காரணங்களால் நிகழும் தற்கொலைகள் அரசினால் ஏவப்படும் வெகுமக்கள் படுகொலைகள் என இவற்றை வகைப்படுத்துகிறோம். பெரும்பாலுமான சமயங்களில் இத்தகைய மரணங்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. இந்த மரணங்களுக்கு எவரும் பொறுப்பேற்பது இல்லை. இந்த மரணங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசுவது பேசுபவரின் மரணத்திற்கும் இட்டுச் செல்வதாக இருக்கிறது.
•Last Updated on ••Thursday•, 21 •August• 2014 23:19••
•Read more...•
கருத்துக்களைக் கட்டமைப்பது என்பது விவாதங்களில் ஒரு முக்கியமான கருத்தமைவு. விவாத அடிப்படைகளையே திசைமாற்றவது எவ்வாறு என்பதை இதனை முன்வைத்து நாம் விளக்க முடியும். ஜோ.டி.குரூஸ் விஷயத்தில் இடதுசாரிகள் அல்லாது தமிழில் எழுதுகிற எந்த எழுத்தாளனும் தமது சொந்தக் கருத்துக்களை இதுவரை எழுதவில்லை. அரவிந்தன் நீலகண்டன் எழுதுவதற்கு 'லைக்' போடுகிறார்கள். அல்லது சித்தார்த் வரதராஜன் இதுபற்றி எழுதியதை 'ஷேர்' செய்கிறார்கள். ஓன்று சொந்தக் கருத்துக்கள் இவர்களுக்கு இல்லை. எழுதுவதற்கான தர்க்கம் இல்லை அல்லது வெளிப்படையான மனம் இல்லை. இவர்கள் செய்கிற வேலை மோடிக்கு ஆதரவான மனநிலையைக் கட்டமைப்பது எனும் கள்ளத்தனமான வேலைதான். அரவிந்தன் நீலகண்டன் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் அறிவித்துக் கொண்ட இந்துத்துவவாதி, ஆர்.எஸ்.எஸ்.செயல்பாட்டாளர். அவரை நண்பராகவும் உடன்பயணியாகவும் கொண்டவர்களைப் பார்த்து நம்மால் பரிதாபப்பட மட்டுமே முடியும். சித்தார்த் வரதராஜனை அப்படிச் சொல்லிவிடமுடியாது. குஜராத் படுகொலைகள் பற்றிய முழுமையான நூலொன்றின் தொகுப்பாளர் அவர். இலக்கியமும் திரைப்படமும் அறிந்தவர் அவர். ஷோலேவில் நடித்த ஹேமமாலினி பிஜேபியை ஆதரிப்பதால் நாம் ஷோலேவை நிராகரிக்க முடியுமா என்கிறார் அவர். பால்தாக்கரேவையும் சிவசேனாவையும் பின்னாளில் ஆதரித்த தலித் கவிஞரான நாமதேவ் தசலைப் பதிப்பித்த நவயானா ஜோ.டி.குருஸைப் பதிப்பிக்க மறுப்பது என்ன நியாயம் என்று கேட்கிறார் அவர். சாரம்சமாக, படைப்பாளியின் அரசியலுக்காகப் படைப்பை நிராகரிக்க முடியுமா? என்பது சித்தார்த் வரதராஜனின் கேள்வி.
•Last Updated on ••Saturday•, 19 •April• 2014 17:53••
•Read more...•
மேற்கத்திய சமூகத்தின் இயந்திர கதியிலான வாழ்வைப் பின்புலமாகக் கொண்டு இளைஞர்களிடத்திலும் யுவதிகளிடத்திலும் தோன்றியிருக்கும் வன்முறையைக் கொண்டாடும் அன்றாடக் கொலை உணர்வை தனது படங்களில் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார் ஆஸ்திரியத் திரைப்படக் கலைஞனான மைக்கேல் ஹெனக்கே. வியட்நாமிலிருந்து அமெரிக்கா வெளியேறியதன் பின், அமெரிக்கப் படைப்பணியினைக்; கடந்தகாலமாகக் கொண்ட ஒரு தலைமுறையின் உளச்சிதைவையும் குற்ற உணர்வையும் தற்கொலை மனப்பான்மைiயுயும் அவர்தம் அன்றாட வாழ்வில் இடம்பெறும் வன்முறையையும் தனது படங்களின் பேசுபொருளாகக் கொண்டு கணிசமான படங்களை உருவாக்கினார் அமெரிக்க இயக்குனரான ஆலிவர் ஸ்டோன்.
கடந்த முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தினிடையில் வாழ்ந்து, இழந்து, முள்ளிவாய்க்கால் பேரழிவில் ஆயிரக் கணக்கான உறவுகளையும் பறிகொடுத்த ஈழ சமூகம், வரலாற்றின் கைதிகளாக, சாட்சிகளாக வாழ்ந்த அந்த மனிதர்களின்பாலான பரிவுடன், அவர்களது சிதைவுகளை, சித்திரவதைகளை, நம்பிக்கைகளை நம்பிக்கைவீழ்ச்சிகளை அதனது தொடர்ச்சியைப் படைப்புக்களாக உருவாக்கியிருக்கிறதா எனும் கேள்வி எவருக்கும் மிகமிக முன்கூட்டிய ஒரு கேள்வியாகத் தோன்றலாம். கோவிந்தனின் 'புதியதோர் உலகம்' நாவலை நினவுகூர இக்கேள்வி என்னளவில் இன்று பொருத்தமானது என்றே தோன்றுகிறது.
•Last Updated on ••Thursday•, 06 •March• 2014 18:50••
•Read more...•
திரைப்படம் மனித நடத்தையை விளக்க முயலும் காட்சிரூப மொழியிலானது. இலக்கியம் மனித உளவியலை விளக்க முயலும் குறியீடுகளான சொற்களால் ஆனது. திரைப்படத்தில் மனிதர்களின் உடல்மொழி அடிப்படையானது எனில், இயற்கை அதனது துணைப்பிரதி. மௌன இடைவெளி திரைப்படத்தில் பெரும் அர்த்தம் உளவியல் மொழியிலானது. இலக்கியத்தில் மௌன இடைவெளி கற்பனைக்கு உரிய இடம். ஸ்பரிச அனுபவம் என்பதனை திரைப்படம் பாவனைகளாலும் இலக்கியம் சொற்களாலும் பற்றிப் பிடிக்க முனைகிறது. இரண்டும் தத்தம் அளவில் வெகுதூரம்-காலம் பயணம் செய்து தமக்கென தனித்தனி தர்க்கங்களையும் கொண்டிருக்கிறது. ஓன்றைவிடப் பிறிதொன்று மேன்மையானது என இதன் இரண்டினதும் வரலாற்றினையும் சாதனைகளையும் கொடுமுடிகளையும் அறிந்த எவரும் சொல்ல மாட்டார்கள். இப்படிச் சொல்ல முனையும் இலக்கியவாதியை திரைப்படக் கலையை அறியாதவன் எனவும், திரைப்பட இயக்குனரை இலக்கியம் அறியாதவன் எனவுமே சொல்ல முடியும்.
•Last Updated on ••Saturday•, 23 •November• 2013 00:48••
•Read more...•
[ அமரர் ஏ.ஜே.கனகரத்னாவின் நினைவு தினம் அக்டோபர் 11. அதனையொட்டி 'பதிவுகள்' இதழ் 38இல் (பெப்ருவரி 2003) வெளியான யமுனா ராஜேந்திரனின் இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள் - ]
(1). மத்து : மித்ர: சென்னை: மறுபிரசுரம் : டிசம்பர் 2000. (2). மார்க்சியமும் இலக்கியமும் : சில நோக்குகள் : அலை வெளியீடு : யாழ்ப்பாணம் 1981. (3). செங்காவலர் தலைவர் யேசுநாதர் : மித்ர : சென்னை : டிசம்பர் 2000
அக்டோபர் புரட்சி தொடங்கி இரண்டாயிரமாண்டு இறுதிவரையிலான ஆண்டுகள் , உலகின் மிகப்பெரிய வரலாற்று உற்பவங்களுக்குச் சாட்சியமாக இருக்கிறது. 1968 பிரெஞ்சு மாணவர் எழுச்சியும், அதைத் தொடர்ந்து சமவேளையில் முதலாளித்துவத்துக்கும், அதிகாரவர்க்க சோசலிசத்திற்கும் எதிரான கலாச்சார விமர்சகர்களும் படைப்பாளிகளும் தோன்றினர் இலக்கியவாதியான ஸார்த்தர், கோட்பாட்டாளரான மார்க்யூஸ், உளவியல் ஆய்வாளரான எரிக் பிராம், பொருளியலாளரான கென்னத் கால்பிரெய்த் போன்றவர்கள் அக்கால கட்டத்தில் முக்கியமான சிந்தனையாளர்களாக இருந்தனர். எண்பதுகள் அதிகார வர்க்க சோசலிசத்தின் வீழ்ச்சியும், தேசிய இன எழுச்சிகளின் உச்சபட்ச வீச்சும் நிகழ்ந்த ஆண்டுகளாகின. இருபதாம் நு¡ற்றாண்டின் இறுதி ஆண்டுகளில், உலக முதலாளித்துவம், ‘உலகமயமாதல்’ எனும் புதிய பெயராகியிருக்கிறது. சோசலிசத்தினதும் இடதுசாரிக் கோட்பாட்டினதும் கோஷங்களை இன்று மதவழிப்பெருந்தேசியம் ஸ்வீகரித்துக் கொண்டுவிட்டது. இனக்குழுக்களுக்கிடையிலான போர்களும், விளிம்பு நிலை மக்களுடைய வேட்கைகளும், பெண்விடுதலை குறித்த பிரக்ஞையும் எமது நாடுகளில் புதிய வீறுடன் எழுந்திருக்கிறது. ஏ.ஜேயின் எழுத்துக்கள் இந்தக் கால இடைவெளியில் நிகழ்ந்த அறிவுத்துறை நடவடிக்கைகளைத் தமிழில் ஆவணப்படுத்தியிருக்கிறது. வரலாற்று உற்பவங்களுக்கு ஆதாரமாகவிருந்த, உலகைக் குலுக்கிய முக்கியமான புத்தகங்கள், தமிழ் மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மார்க்சீய அழகியல் தொடர்பான விவாதங்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த நு¡ற்றாண்டு அறிவுப் பரப்பின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டத்தில் அறிமுகம் கொள்ள நினைக்கிறவர்களுக்கு நிச்சயமாகவே நாம் ஏ.ஜே.யின் எழுத்துக்களைப் பரிந்துரைக்கமுடியும்.
•Last Updated on ••Saturday•, 12 •October• 2013 00:03••
•Read more...•
உலகின் தலைசிறந்த ஆவணப்பட இயக்குனர்கள் என நாம் சிலரைக் குறிப்பிட முடியும்; அதுபோல உலகின் தலசிறந்த ஆவணப்படங்கள் எனவும் சிலவற்றை நாம் குறிப்பிட முடியும். இலத்தீனமெரிக்காவின் ஜெட்டினோ மற்றும் சொலானஸ், பிரான்சின் கிரிஸ் மார்க்கர் போன்றவர்கள் உலகின் ஆவணப்பட மரபை உருவாக்கிய மேதைகள் என்றால், அவர்கள் உருவாக்கிய எ கிரின் வித் எ கேட் (A Grin with a Cat) த ஹவர் ஆப் த பர்னசஸ் (The Hour of the Furnces) போன்ற ஆவணப்படங்களை நிரந்தரத்துவம் பெற்ற உன்னதக் கலைப்படைப்புகள் என நாம் குறிப்பிடலாம். இந்த இயக்குனர்களின் வரிசையில் வைத்துப் பேசத்தக்க இந்திய ஆவணப்பட இயக்குனர் என ஓருவரைக் குறிப்பிட வேண்டுமானால், அவர் ஆனந்த் பட்வர்த்தன் எனத் தயங்காமல் குறிப்பிடலாம்; அதுபோல உலகின் தலைசிறந்த ஆவணப்படங்களில் ஒன்றாக அவர் உருவாக்கிய ஜெய் பீம் காம்ரேட் ஆவணப்படத்தையும் நாம் முன்வைக்கலாம். குறிப்பிட்ட வரலாற்றில் வாழ நேர்ந்த மக்கள்திரளின் ஆற்றலையும், அவர்கள் எதிர்கொண்ட அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளையும், அந்த வரலாற்றில் வைத்து அவர்கள் அடைந்த தனிநபர்ப் பாடுகளையும், அவர்களது விடுதலைத் தேட்டத்தையும் பதிவு செய்தவை இவர்கள் உருவாக்கிய ஆவணப்படங்கள். கிரிஸ் மாக்கரின் எ கிரின் வித் எ கேட்(1977) நிலவிய சோசலிசம் நெருக்கடிக்கு உள்ளான காலகட்டத்தில், 1968 பாரிஸ் மாணவர் தொழிலாளர் எழுச்சியின் பத்து ஆண்டுகளின் பின் உருவாக்கப்பட்டது. சொலானஸ், ஜெட்டினோவின் த ஹவர் ஆப்த பர்னசஸ்(1968) சே குவேரா பொலிவிய மலையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலைமையில் இலத்தீனமெரிக்க மக்களை நோக்கிய புரட்சிகர அறைகூவலாக உருவாக்கப்பட்டது.
•Last Updated on ••Sunday•, 01 •September• 2013 22:09••
•Read more...•
"தலிபான் எமது காலத்தின் பிற்போக்குத் தனத்திற்கு சாட்சி. சிலவேளைகளில் தலிபான் என்பது நம் சமகாலத்தின் அரசியலைத் தெரிவிக்கும் வரலாறு. தலிபான் என்பது நாம் பெற்ற கல்வியையும் பயிற்சியையும் எமக்கு ஞாபகமூட்டுவது. எமது வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தும் சட்டங்களுக்கு மற்றொரு பெயர் தலிபான். சொர்க்கத்தினை அடையும் ஆசையின் பொருட்டும,; கடவுள் நம்பிக்கையின் பொருட்டும் நாம் சுமந்து திரியும் பயத்தில் விளைந்த எழுதப்படாத சட்டத்தின் பெயர் தலிபான். மதவெறிகொண்ட எந்த அரசும் தலிபானின் தன்மை படைத்ததுதான். அமெரிக்க ஜனநாயக சமூகத்தில் பாசிசவாதியான ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸினைச் சுற்றியிருக்கும் குழவினர் தலிபான்கள்தான். பின்லேடன் ஒரு தலிபான். ஜார்ஜ் புஸ் ஒரு தலிபான். ஸமீரா மக்மல்பாவ் ஒரு தலிபான். தலிபான் எனும் வார்த்தையைப் பிறவற்றுடன் இணைத்துப் பொறுத்திச் சொல்ல என்னை அனுமதியுங்கள். நான் தலிபான். நீங்கள் தலிபான். அவர் தலிபான். நாங்கள் தலிபான்கள். அவர்கள் தலிபான்கள். நாம் எல்லோரும் தலிபான்கள்." - ஸமீரா மெக்மல்பாவ், ஈரானிய திரைப்பட இயக்குநர் -
1.
திரைப்படம் வழி வரலாற்தை தேடிச் செல்பவன் எனும் அளவில், தலிபான் குறித்துச் சிந்திக்கிறபோது பல்வேறு முன்வரலாற்று அனுபவங்களும், திரைப்படப் பதிவுகளும் உடனடியாகவே ஞாபகம் வருகிறது. இருபதாம் நூற்றாண்டு வரலாற்றை எடுத்துக் கொண்டால் பாசிசத்தைக் கருத்தியலாக நிறுத்திய இனக்கொலை வரலாறு, அதிகாரவர்க்கத்திற்கும் பழமைவாதிகளுக்கும் எதிரானது எனக் கோரப்பட்டு அறிவுஜீவிகளுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் அப்பாவி மக்களுக்கும் எதிராகத் திரும்பிய கலாச்சாரப் புரட்சி, ஸ்டாலின் காலத்துச் சைபீரியப் பாலைவன சித்திரவதை முகாம்கள், அதீத மானுடக் கனவில் விளைந்து பிற்பாடு மனிதக் கபாலங்களின் எண்ணிக்கையைக் குவித்த கொடூரமாக மாறிய போல்பாட் காலத்திய பூஜ்யவரலாற்று மானுட விரோத நடவடிக்கைகள் என கருத்தியல்களுக்கும் வன்முறைக்குமான சாட்சியமாக வரலாறு நம் முன் இருக்கிறது. சின்ட்லர்ஸ் லிஸ்ட், கில்லிங் பீல்ட்ஸ், பாஸ்டர்நாக், டுலிவ், புளு கைட், பேர்வல் மை காங்குபைன் போன்ற திரைப்படங்கள் முறையே பாசிசம், போல்பாட் படுகொலைகள், ஸைபீரிய முகாம் சித்திரவதைகள், கலாச்சாரப் புரட்சி காலத்து அத்துமீறல்கள் போன்றவற்றின் திரைச் சாட்சிகளாக நமக்கு முன் இருக்கின்றன.
•Last Updated on ••Thursday•, 29 •August• 2013 22:10••
•Read more...•
[ பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பிறந்த தினம் மே 10. அதனையொட்டி உயிர்நிழல் சஞ்சிகையில் வெளியான இந்த நேர்காணல் மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள் ]
ய.ரா: நாங்கள் இந்த நேர்காணலிலை முழுக்க மார்க்சியம், மார்க்சியத்தினுடைய எதிர்காலம் இவை தொடர்பான விடயங்கள் குறித்துப் பேசலாம் என்று எண்ணுகிறேன். சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கான காரணங்களை நீங்கள் எப்படி assess(மதிப்பீடு) பண்ணுகிறீர்கள்?
கா.சி : சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கான காரணக்களை நான் இப்படிப் பார்க்கிறேன். இந்த மார்க்சியத்திற்கு ஏற்பட்ட முக்கியமான பிரச்சினை என்னவென்றால் சோவியத் stateஇனுடைய, சோவியத் அரசினுடைய development-உம் சோவியத் அரசு ரஷ்யப் பேரரசினுடைய பகுதிகளை சோவியத் அரசுக்குள் கொண்டு வரவேண்டிய-- கொண்டு வந்த நிர்ப்பந்தமும் இதன் காரணமாக, தொடக்கம் முதலே காணப்பட்ட ஒரு சமனற்ற வளர்ச்சியும, சோவியத் ரஷ்யப் புரட்சியை, ரஷ்யப் பேரரசின் மாநிலங்கள் முழுவதற்கும் புதுமையாக ஆக்க முனைந்ததில் எற்பட்ட வரலாற்றுப் பிரச்சினைகள் அடிப்படையில் உள்ளன என்று நான் கருதுகிறேன். புரட்சி ஏற்பட்டது ரஷ்யாவில்தான், மொஸ்கோவில்தான். ஆனால் ரஷ்யப் பேரரசு, கசாக்ஸ்தான் வரை துருக்கிஸ்தான் வரை நீண்டு கிடந்தது. லெனின் காலத்திலே படிப்படியா இவையெல்லாம் அதாவது 27, 28 இலை தான் வந்து சேருது. இங்கெல்லாம் பெரிய ஒரு revolution உடைய தன்மைகள் பற்றியோ புரட்சி பற்றியோ அதற்கான சிந்தனைகளே இருந்தது கிடையாது.
•Last Updated on ••Thursday•, 29 •August• 2013 22:15••
•Read more...•
“ காலம் இதழில் எஸ்.என்.நாகராசன் அவர்களின் நேர்காணல் ஓன்று வெளியாகியிருக்கிறது. அதைப் படிக்கும்போது காலம் உறைந்துவிட்டதுபோன்ற உணர்வு. அவரை மகான் ஆக்கிப் பார்க்கவேண்டும் என நேர்காணல் செய்தவர்கள் விரும்பி இருப்பார்கள் போலும். அது அவர்களது உரிமை. புகைப்படத்தில் பார்க்கும்போது நாகராசன் ஆரோக்கியமாகத் தெரிகிறார். இத்தகைய நேர்காணல்கள் மார்க்சியத்தைக் காலம் கடந்த தத்துவம் என்று உணரச்செய்கின்றன. மார்க்சியர்கள் என்று யாரைக் குறிப்பிடுவது? மார்க்ஸ் எழுதிய நூல்களைப் படித்தவர்களையா? அல்லது அவரது தத்துவத்தை தனது அணுகுமுறையின் அடிப்படையாகக் கொண்டவர்களையா? நேர்காணல் எடுத்திருப்பவர் தமிழ்நாட்டில் நான்கு பேர்களை மார்க்சியர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். வெளிநாட்டில் வசிக்கிற காரணத்தால் தனது பெயரை அந்தப் பட்டியலில் சேர்க்காமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது. அந்தப் பட்டியலில் பேராசிரியர் முத்துமோகனை அவர் சேர்த்திருக்கிறார். ( இதைவிடப் பெரிய விருது முத்துமோகனுக்கு வேறென்ன இருக்கமுடியும்?). இன்னும் கொஞ்சம் கருணை வைத்து அந்தப் பட்டியலை நேர்கண்டவர் நீட்டலாம். ஏனென்றால் இந்தப் பட்டியலை அதில் இடம்பெற்றிருப்பவர்களே கூட முழுமையானதென்று ஏற்கமாட்டார்கள். இத்தனை பெரிய தமிழ் நாட்டில் நாலே நாலு மார்க்சியர்கள் தான் இருக்கிறார்கள் என்றால் அது மார்க்சியத்துக்கும் அவமானம் அல்லவா! “
•Last Updated on ••Monday•, 09 •September• 2013 19:10••
•Read more...•
பிப்ரவரி 18 ஆம் திகதி இரண்டு கட்டுரைகள் வாசிக்க முடிந்தது. கட்டுரைகளின் காலப்பொருத்தம் உண்மையில் ஆச்சர்யமாக இருந்தது. இலண்டன் த இன்டிபென்டன்ட் பத்திரிக்கையில் நெஞ்சை அறுக்கும் வலி கொண்டதாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வன் சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட முறை குறித்த கோரமான படம் வெளியாகி இருந்தது. புகைப்படம் தொடர்பாக ஆவணப்பட இயக்குனர் ஹாலும் மக்ரே ஒரு கட்டுரையும் எழுதி இருந்தார். ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைத் திரைப்பட விழா நிகழ்வில் திரையிடப்படும் ஹாலும் மக்ரேவின் நோ பயர் சோன் ஆவணப்படத்தில் இடம்பெறும் புகைப்படங்களே த இன்டிபென்டட்டில் வெளியாகியிருந்தது. மகிந்த அரசின் ‘கருணை அரசியலுக்கு’ சிறுவன் பாலச்சந்திரனின் படுகொலை நடத்தப்பட்ட முறை ஒரு சான்று. இதே 18 ஆம் திகதி குளோபல் தமிழ் நியூஸ் தளத்தில் நிலாந்தனின் படம் பார் பாடம் படி கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. நிலாந்தனுக்;கு ஹாலும் மக்ரேவின் ஆவணப்படமும் கூட ஹாலிவுட் சினிமாவின் அங்கமாகத்தான் தோன்றியிருக்கும் என நினைக்கிறேன்.
•Last Updated on ••Thursday•, 29 •August• 2013 22:22••
•Read more...•
2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி முன்னிரவில் இந்தியத் தலைநகர் தில்லியில் ஓடும் பேருந்தில் 23 வயதேயான மருத்துவப் படிப்பு மாணவி ஐவர் கும்பலால் வன்பாலுறவுக்கு உள்ளாக்கப்பட்டதனையடுத்து இங்கிலாந்தின் த கார்டியன் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பிரான்சின் லெமான்டே டிப்ளமேடிக் உள்ளிட்ட உலக ஊடகங்கள் அனைத்திலும் அச்செய்தி மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பிரசுரமானது. தில்லியில் எழுந்த மக்கள் திரள் போராட்டங்கள் அரபுப் புரட்சியின் மக்கள் திரள் எழுச்சியை ஞாபகப்படுத்தின. மிருகத்தனமான வல்லுறவுக்கு ஆளானாதால் உள்ளுறுப்புகள் சிதைந்த நிலையில் இரண்டு வாரங்கள் தனது உயிருக்குப் போராடிய மாணவி சிங்கப்பூர் மருத்துவ மனையில் மரணமுற்றதனையடுத்து ஐக்கியநாடுகள் சபைச் செயலாளர் பான் கீ மூன் தனது அஞ்சலியைத் தெரிவித்துக்கொண்டார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்திரா காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பாரதீய ஜனதாக் கட்சித் தலைவி சுஸ்மா ஸ்வராஜ் போன்றவர்களுக்கு இடையில் இதனை முன்வைத்து அரசியல் உரசல்கள் இடம்பெற்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா வன்பாலுறவில் ஈடுபடுபடுபவர்களுக்கு இரசாயணமுறையில் ஆண்மைநீக்கம் செய்யும் தண்டனையைப் பரிந்துரைத்தார். ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலரும், அரசியல்வாதிகளான பிஜேபியினரும் வன்பாலுறவுக் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையைப் பரிந்துரைத்தனர். வன்பாலுறவுக்கு ஆளாகி மரணமுற்ற பெண்ணின் தந்தை வல்லுறவில் மிக வன்முறையாகவும் வக்கிரமாகவும் ஈடுபட்ட '17 வயது மைனருக்குத்தான் முதலில் மரணதண்டனை வழங்க வேண்டும்' எனக் கோரினார். மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தையை அடுத்து தண்டனையின் வயது வரம்பு 17 ஆகக் குறைக்கப்பட்டது.
•Last Updated on ••Monday•, 09 •September• 2013 19:10••
•Read more...•
எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலும் நான் வேறு வேறு காலங்களில் சந்தித்த, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறுபட்ட மனப்போக்கு கொண்ட நண்பர்கள் சிலரை பல ஆண்டுகளின் பின் தொறான்றோவில் சந்தித்தேன். எண்பதுகளில் ஈழமாணவர் பொதுமன்றத்தின் தமிழகச் செயல்பாட்டாளராக இருந்த வளவன் என்கிற யோகராஜா, பத்து ஆண்டுகளின் முன்பாக நண்பர் காண்டீபன் வீட்டில் எஸ்.வி.ராஜதுரை என்னுடன் தங்கியிருந்தபோது சந்தித்த நண்பர் சேனா, தாகம் மற்றும் நிருபம் போன்ற பத்திரிக்கைகளை நடத்திய நண்பர் நகுலேந்திரன் என்கிற கீரன் பத்தாண்டுகளின் முன்பு எனக்கு அறிமுகப்படுத்திய கோணேஸ்வரன், இலண்டனில் விம்பம் அமைப்பின் செயல்பாடுகளின்போது அறிமுகமான போல், தேசம்நெட் ஜெயபாலன் இல்லத்தில் சந்தித்த நண்பர் ரகுமான் ஜான் போன்றவர்களை மறுபடியும் நான் தொறான்ரோவில் சந்;தித்தேன். கனடாவின் முக்கியமான படைப்பாளிகளாக அறியப்பட்ட கவிஞர் செழியன், நாடகாசிரியர் ஜயகரன், சிறுகதையாசியர் டானியல் ஜீவா, நாவலாசிரியர் தேவகாந்தன், நாவலாசிரியரும் பதிவுகள் இணையத்தள ஆசிரியருமான வ..ந.கிரிதரன், கவிஞரும் சிறுகதையாசிரியருமான மெலிஞ்சி முத்தன், மொழிபெயர்ப்பாளரான மணிவேலுப்பிள்ளை, மொழிபெயர்ப்பாளரும் கவிஞரும் சிறுகதையாசிரியருமான என்.கே.மகாலிங்கம், புகைப்படக் கலைஞரும் ஓவியருமான கருணா, ஆவணப்பட இயக்குனரான கனடா மூர்த்தி, கவிஞரும் கட்டுரையாசிரியருமான கவிஞர் தமிழ்நதி மற்றும் அவரது கணவர் ராஜகுமாரன், மற்றும் புதிய தலைமுறை எழுத்தாளரான அருண்மொழி வர்மன் போன்றவர்களையும் சந்தித்தேன்.
•Last Updated on ••Thursday•, 29 •August• 2013 22:19••
•Read more...•
தமிழ் சினிமா வரலாறு எழுதுதலில் இருவிதமான சிந்தனைப் பள்ளிகள் இருக்கின்றன. முதல் சிந்தனைப்பள்ளி தியோடர் பாஸ்கரனுடையது. தியோடர் பாஸ்கரன் தமிழ் சினிமா வரலாறு எழுதுதலில் முன்னோடி ஆளுமை. அவரது பார்வை தமிழ்ச் சினிமா காட்சிரூப ஊடகமாக வளராமல் போனதற்கான தமிழ் சமூகக் கலை வரலாற்றுக் காரணங்களையும், அரசியல் காரணங்களையும் விரித்துச் சொல்வதாகவே இருக்கிறது. வரலாற்றுரீதியில் தமிழ் சினிமாவில் பேச்சு, இசை போன்றவை பெரும் இடம், அதனோடு வேறு வேறு காலங்களில் தமிழ் சினிமா மொழியில் நேர்ந்து வந்திருக்கும் வடிவ மாற்றங்களையும் நுட்பங்களையும் அவர் அவதானித்துப் பதிவு செய்கிறார். தியோடர் பாஸ்கரன் முன்வைக்கிற காட்சிரூப சினிமாவை உருவாக்குவது எனும் தேடல் தமிழ் மொழியில் பிரச்சாரம் தவிர்ந்த யதார்த்த மொழி கொண்ட ஐரோப்பிய பாணி சினிமாவை, சமூக விமர்சன சினிமாவை, தமிழ் சூழலுக்கு ஏற்ற நவ யதார்த்த சினிமாவை உருவாக்குவது எனும் தேடலுடன் தொடர்பு பட்டது. வங்கத்திலும் கேரளத்திலும் எழுந்த சத்யஜித்ரே, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் முன்வைத்த புதிய சினிமாவை தமிழிலும் விளைவது தொடர்பான தேடல் இது.
•Last Updated on ••Thursday•, 29 •August• 2013 22:23••
•Read more...•
பதிவுகளில் அன்று; மே 2003; இதழ் 41. யமுனா : ரொம்பவும் நேரடியாகவும் 'ப்ருட்டலா'கவுமே தொடங்கலாம் என்று நினைக்கிறேன். .இன்றைய இந்திய சூழலில் தமிழ்த்தேசியத்தின் தேவை என்னவென்று கருதுகிறீர்கள்?
தியாகு : தமிழ்த்தேசியம் என்கிறபோது அது ஒன்றுதான் உண்மையான நேர்மறையான தேசியம்..ஏதோ பல்வேறு தேசியங்கள் இருக்கிறமாதிரி அதில் தமிழ் தேசியம் ஒன்றாக இருந்தது அதன் இடம் என்ன அல்லது இந்திய தேசியம் என்பது என்ன என்று பேசுவதற்கான இடம் இதுவல்ல.ஒரு காலத்தில் இந்திய தேசியத்திற்கான தேவை இருந்தது. அது எதிர் மறை தேசியம¡க இருந்தது. தமிழ்த் தேசியம் என்பதுதான் -மொழி- மொழி பேசுகிற இனம்- அதனுடைய நிலப்பரப்பு- அதனுடைய பண்பாடு- அதனுடைய உளவியல் உருவாக்கம்- அதனுடைய பொருளியல் பிணைப்பு என்று எல்லா அடிப்படைகளிலும் தேசம் என்பதற்குரிய வரலாற்று வழிப்பட்ட இலக்கணங்களின் அடிப்படையில் உண்மையான நேர்வகையான தேசம்..
•Last Updated on ••Tuesday•, 10 •September• 2013 05:08••
மேலும் வாசிக்க
|