பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

வ.ந.கிரிதரன் பக்கம்

விரைவில் 'பதிவுகள்' இணைய இதழ் புதிய வடிவமைப்பில்......

•E-mail• •Print• •PDF•

விரைவில் 'பதிவுகள்' இணைய இதழ் புதிய வடிவமைப்பில்......

தற்போது வெளியாகும் 'பதிவுகள்' இணைய இதழ் ஜும்லா தொழில் நுட்பத்தின் (JOOMLA) பழைய பதிப்பில் (Version 1.5.26) இயங்கிக்கொண்டிருக்கின்றது. ஜூம்லா தொழில்நுட்பத்தின் புதிய பதிப்புக்கு (Version 3.94) மாற்றுவது பெரியதொரு வேலை. பழைய பதிப்பிலுள்ள கட்டமைப்பு புதிய பதிப்பில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. பழைய கட்டமைப்பிலுள்ள தரவுத்தளத்தை அப்படியே பாவிக்க முடியாது. புதிய பதிப்புக்கு மாற்றுவது இலகுவானதல்ல. அதே சமயம் புதிய ஜூம்லாப்பதிப்புக்கு மாற்றுவது காலத்தின் கட்டாயம். புதிய பதிப்புக்கு மாற்றுவதால் பல நன்மைகளுள்ளன.அவற்றிலொன்று அலைபேசிகளில் இலகுவாக வாசிக்கும் வகையிலான 'ரெஸ்பொன்சிவ் டெம்பிளேட்டை ( Responsive Template) புதிய பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு கொண்டிருப்பதுதான். மேலும் புதிய வடிமைப்பில் பராமரிப்பது, பாதுகாப்பது எல்லாமே பல நன்மைகளைக்கொண்டுள்ளன.

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Monday•, 15 •February• 2021 04:24••
 

கவிதை: எமக்கும் கீழே தட்டையர் கோடி!

•E-mail• •Print• •PDF•

கவிதை: எமக்கும் கீழே தட்டையர் கோடி!

தட்டையர்கள் உலகுக்கு விஜயம் செய்வதென்றால் எனக்கு மிகவும் பிடித்த
பொழுதுபோக்கு.
பரிமாண வித்தியாசங்கள் எங்களுக்கிடையில் ஏற்படுத்திய வித்தியாசங்கள்
எங்களுக்கு மிகவும் சாதகமாகவிருந்தன.
அதனால் தட்டையர்கள் உலகு எப்பொழுதும் எனக்கு உவப்பானதாகவே இருந்ததது.
தட்டையர்கள் உலகில் நான் எப்போதுமே உவகையுறுவதற்கு முக்கிய காரணங்களிலொன்று
என்னவென்று நினைக்கின்றீர்கள்?
மானுடப் படைப்பிலுள்ள பலவீனங்களிலொன்றுதான்.
ஏனெனில் அங்கு நான் அவர்களைவிட
எல்லாவகையிலும் உயர்ந்தவன்.
என்னை மீறி அங்கு எவையுமேயில்லை.

•Last Updated on ••Saturday•, 13 •February• 2021 10:39•• •Read more...•
 

நல் இலக்கிய உரை கேட்போம்: நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்! முனைவர் ஜி.ஞானசம்பந்தனின் நல்லதோர் உரை!

•E-mail• •Print• •PDF•

நல் இலக்கிய உரை கேட்போம்: நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்! முனைவர் ஜி.ஞானசம்பந்தனின் நல்லதோர் உரை!

எனக்குக் காப்பியங்களில் மிகவும் பிடித்த காப்பியம் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம். முதன் முதலாக எனக்குச் சிலப்பதிகாரம் அறிமுகமானதுக்கு முக்கிய காரணம் எனது தந்தையார். என் பால்ய பருவத்தில் நான் அனைத்துத் தமிழ் வெகுசன இதழ்கள், புனைகதைகளில் மூழ்கிக் கிடந்தேன். அவற்றையெல்லாம் வாங்கிக்குவித்த அப்பா தமிழ் இலக்கிய நூல்களையும் அக்காலகட்டத்தில் வாங்கித் தந்தார். புலியூர்க் கேசிகனின் பொழிப்புரையுடன் கூடிய சிலப்பதிகாரம், மணிமேகலை, நற்றிணை ஆகிய நூல்களையும் வாங்கித்தந்தார். கூடவே பாரதியாரின் பாடற் தொகுப்பினையும் வாங்கித்தந்தார். இவற்றுடன் ராஜாஜியின் 'வியாசர் விருந்து' (மகாபாரதம் என்னும் பெயரில் பின்னர் பெயர் மாற்றம் பெற்ற நூலின் ஆரம்பகாலத்தலைப்பு), 'சக்கரவர்த்தித்திருமகன்' (இராமாயணம் என்னும் பெயர் மாற்றம் பெற்ற நூலின் ஆரம்ப காலத்தலைப்பு)  ஆகிய இதிகாச உரைநடை நூல்களையும் வாங்கித்தந்தார்.  இதனால் என் பால்ய பருவத்திலேயே இந்நூல்களெல்லாம் அறிமுகமாகிவிட்டன.

•Last Updated on ••Sunday•, 07 •February• 2021 09:34•• •Read more...•
 

கவிதை: நூலகம் நோக்கி!

•E-mail• •Print• •PDF•


அந்த உலகம் எனக்குப் பலவிதங்களிலும் பிடித்த உலகம்
என்பேன்.
என் மனத்தில் சஞ்சலங்கள் அலையடிக்கத்தொடங்குகையில்,
என் மனத்தில் சஞ்சலப்புயல்கள் வீசத்தொடங்குகையில்,
என் மனத்தின் அமைதி சீர்குலையத்தொடங்குகையில்,
நான் அந்த உலகை நோக்கிப் பயணமாகத் தொடங்குகின்றேன்.
அந்த உலகப்பயணம் தரும் திருப்தியை எனக்கு வேறெந்தப் பயணமும்
தருவதில்லை.
அந்த உலகில் நானும் காட்சிகள் அற்புதமானவை.
பறவைகளைப் பற்றிய புரிதல்களை,
அறிவியற் சாதனைகளை வெளிப்படுத்தும்
அந்த உலகில் நான் எவ்வளவு நேரமானாலும் என்னை மறந்து
பயணிப்பேன்.

•Last Updated on ••Friday•, 05 •February• 2021 13:27•• •Read more...•
 

கவிதை: கவிதை = அறிவுணர்வுப்புரிதல்கள் ->ஆழ்வுணர்வுக்கவி -> கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: கனவுகள்! கனவுகளே!

அண்மைக்காலமாக அடிக்கடி கனவுகள்
வருகின்றன.
சிலவேளைகளில் அவை கனவுகளா
நனவுகளா என்பதில் கூட
என்னால் வேறுபாடுகளைக் காண முடிவதில்லை.
முன்பெல்லாம் ஆழ்ந்துறங்கையில் வரும் கனவுகள்
இப்போதெல்லாம் அரைத்தூக்கத்திலும் வருகின்றன.
நம்பவே முடியவில்லை. நிஜமா? நிழலா? என்பதை.
ஆனால் கனவுகள் நனவுகள் அல்ல என்பதை
உணர்கையில் ஏற்படும் திருப்தி
இனியதோர் அனுபவம்.
அப்பாடா என்று எத்தகையதோர் நிம்மதி!
ஏன் கனவுகள் எம்மை ஆட்டிப்படைக்கின்றன?
என்று அவ்வப்போது எண்ணுவதுண்டு.
அறிவுணர்வின் புரிதல்கள்தமை
ஆழ்வுணர்வுக்கவி
வடித்திடும் கவிதைகளா?
அல்லது
அக்கதாசிரியர் வடித்திடும்
புனைவுக் காட்சிகளா?

•Last Updated on ••Wednesday•, 03 •February• 2021 21:48•• •Read more...•
 

கவிதை: பழைய புத்தகக்கடை அனுபவமொன்று!

•E-mail• •Print• •PDF•

கவிதை: பழைய புத்தகக்கடை அனுபவமொன்று!

எனக்குப் பிடித்த விடயங்களிலொன்று
பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது.
புதுக் கடைகளில் வாங்குவதை விடப்
பழைய புத்தகக் கடைகளில்  வாங்குவதிலுள்ள
இன்பமே தனி.
பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பதைப்போல்
எல்லாவகைப் புத்தகங்களும்
புதுப்புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை.
உதாரணத்துக்கு ஒன்று கூறுவேன்.
உங்களால் பழைய  புத்தகக் கடைகளில்
வாங்குவதைப்போல்
புதுப்புத்தகக் கடைகளில்
பால்ய பருவத்தில் பிடித்தமான இதழொன்றில்
தொடராக வெளியான,
ஓவியங்களுடன் கூடிய , அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட
நூல்களை ஒருபோதுமே பெற முடியாது.
அந்நூல்களைக் கைகளால் அளைகையிலுள்ள சுகம்
இருக்கிறதே
அதுவொரு பெரும் சுகமென்பேன்.
அவ்வகையான சுகத்தினை ஒருபோதுமே உங்களால்
புதுப்புத்தகக் கடைகளில் பெற முடியாது.

•Last Updated on ••Saturday•, 06 •February• 2021 09:25•• •Read more...•
 

டொமினிக் ஜீவா!: இலக்கிய ஆலமரம்! தோப்பாகிய தனிமரம்!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் டொமினிக் ஜீவாமல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் மறைவுச் செய்தியினை முகநூல் கொண்டு வந்தது. அவரது மறைவு துயரினைத் தந்தாலும் அவரது நிறைந்த வாழ்வு மகிழ்ச்சியைத் தந்தது. அவர் பூரணமான, நிறைந்ததொரு வாழ்வினை வாழ்ந்து முடித்துள்ளார். தான் விரும்பியதை, விரும்பியவாறு எவ்வித சமரசங்களுக்கும் இடங்கொடுக்காது செய்து , வரலாற்றில் ஆழமான தடத்தினைப் பதித்துச் சென்றுள்ளார். அது மகிழ்ச்சியைத் தந்தது.

எழுத்தாளராக, இதழாசிரியராக, அறச்சீற்றம் மிக்க சமூக, அரசியற் செயல் வீர்ராக அவரது இருப்பு பெருமைப்படத்தக்கதோர் இருப்பு. எத்தனை பேருக்கு இவ்விதமானதோர் இருப்பு அமையும்?

இருப்பில் நிலவிய சமூக, அரசியல் பிரச்சினைகளை, வர்ண, வர்க்க வேறுபாடுகளைக்கண்டு ஒதுங்கிச் செல்லாமல் , இறுதிவரை உறுதியாக, தெளிவாகத் தனது எழுத்துகளூடு, இதழினூடு , தத்துவார்த்த அடிப்படையில் , சமரசங்கள் எவற்றுக்கும்  இடங்கொடாது முடிந்தவரை போராடிச் சென்றார். இதிலிருந்து நாம் படிக்க வேண்டியவை பற்பல. தன் இருப்பினூடு மானுட இருப்புக்கான அர்த்தம்தனை அனைவருக்கும் எடுத்துக் காட்டியவர் டொமினிக் ஜீவா அவர்கள்.

'மல்லிகை' மூலம் அவர் இலக்கியத்தில் விழுதுகள் பலவற்றை உருவாக்கிய ஆலமரம்! அந்த ஆழமரம் தந்த நிழலில் இளைப்பாறியவர்கள்தாம் எத்தனை! எத்தனை!

•Last Updated on ••Friday•, 29 •January• 2021 12:17•• •Read more...•
 

அ.ந.கந்தசாமியின் இரு நூல்கள் கிண்டில் பதிப்பு மின்னூல்களாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு!

•E-mail• •Print• •PDF•

1. 'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு!

அ.ந.க.வின் 'நான் ஏன் எழுதுகிறேன்?'இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை அறிஞர் அ.ந.கந்தசாமி. சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என அவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகப்பட்டது. பத்திரிகையாசிரியராக, இதழாசிரியராகவும் அவரது பங்களிப்பைப் புறக்கணித்து விட முடியாது. தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை மிக்கவர். அவரது படைப்புகளெல்லாம் பலவேறு பத்திரிகைம் சஞ்சிகைகளில் சிதறிப்போய்க் கிடப்பது துரதிருஷ்ட்டமானது. இவற்றை முழுமையாகச் சேகரித்து வெளியிடுவது மிகவும் அவசியமானதொன்று. 'பதிவுகள்' இணைய இதழ் ஏற்கனவே அ.ந.கந்தசாமியின் படைப்புகள் பலவற்றைத் தேடிப்பிடித்து ஆவணப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது ('மனக்கண்' நாவலுட்பட). தற்போது அவரது பதினான்கு கட்டுரைகள் அடங்கிய மின்னூற் தொகுதியினைக் கிண்டில் பதிப்பாக 'நான் ஏன் எழுதுகிறேன்' என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது. இந்நூல் அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அ.ந.க்.வின் ஏனைய படைப்புகளும் கிண்டில் பதிப்புகளாக வெளிவரவுள்ளன என்பதையும் அறியத்தருகின்றோம்.

அ.ந.க.வின் 'நான் ஏன் எழுதுகிறேன்' கட்டுரைத்தொகுதியில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் விபரங்கள் வருமாறு:

1. நான் ஏன் எழுதுகின்றேன்?
2. தொடர் நவீனம் 'மனக்கண்' முடிவுரை!
3. நாடகத் தமிழ்
4. கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை நினைவுக் கட்டுரை: புத்தர் வாழ்வை விளக்கும் புதுமைத் தமிழ்க் காப்பியம். 'ஆசிய ஜோதி'யின் அருங்கனிச் சிறப்பு!
5. எமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி 'நானா' மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா!
6. தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்!
7. நாடக விமர்சனம்: "மதமாற்றம்"
8.  சுதந்திரனில் (8.7.51) அ.ந..கந்தசாமி : கண்ணகி பாத்திரம் பெண்மையின் சிறப்பைக் காட்டுகிறதா? 'பெண்ணடிமையின் சிகரம்' என்பதே பொருந்தும். மன்னைன் தவறுக்காக மக்களைத் தீயிலிட்டுக் கொழுத்திய கொடுமை! புதிய கோணத்தில் சிலப்பதிகார ஆராய்ச்சி!
9. சுதந்திரனில் அ.ந.க: புதுமைத் தமிழ்ப் பூங்கா - சஞ்சீவி மாமலையியே கண்டெடுத்த 'ரேடியோ டெலிவிஷன்' மூலிகைகள்!
10.  சுதந்திரனில் அ.ந.க: புதுமைத் தமிழ்ப் பூங்கா - காதலும் அறிவும் களிநடம் புரியும் 'சஞ்சீவி பார்வதத்தின் சாரல்' புதுவைப் பூங்குயிலின் மனோகரத் தமிழிசையின் மகத்துவம். கொஞ்சும் தமிழிலே கொட்டும் பாரதிதாசனின் பைந்தமிழ்க் காப்பியம்.
11. வெற்றியின் இரகசியங்கள்: அத்தியாயம் மூன்று - எமில்கூ காட்டிய வழி!
12. பாரதி இதழ்: புரட்சிப்படம்
13.  நூல் மதிப்புரை: "தீ"
14. சுயவசியம் செய்வதெப்படி? - 'வெற்றியின் இரகசியங்கள்' நூலிலிருந்து..

•Last Updated on ••Tuesday•, 26 •January• 2021 12:41•• •Read more...•
 

மின்னூற் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி!

•E-mail• •Print• •PDF•

பதிவுகள்.காம் கிண்டில் பதிப்புகளாக பல் துறைகளில் 16 மின்னூல்களை (தமிழில் 11 நூல்கள் & ஆங்கிலத்தில் 4 நூல்கள்)  வெளியிட்டுள்ளது. அவை தற்போது அமேசன் தளத்தில் விற்பனைக்குள்ளன. வெளியிட்ட மின்னூல்களின் விபரங்கள் வருமாறு:

நாவல்:
1. அமெரிக்கா -  வ.ந.கிரிதரன்
2. குடிவரவாளன் - வ.ந.கிரிதரன்
3. வன்னி மண் - வ.ந.கிரிதரன்
4. மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்
5. அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன்
6. கணங்களும் குணங்களும் - வ.ந.கிரிதரன் (தாயகம் பத்திரிகையில் மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய , தாயகம் பத்திரிகையில் வெளியான முதலாவது நாவல்.)


கட்டுரை:
7. வ.ந.கிரிதரனின் கட்டுரைகளின் தொகுப்பு

சிறுகதை:
8. கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் - வ.ந.கிரிதரன் (25 புகலிடச் சிறுகதைகளின் தொகுப்பு)

கவிதை:
9. ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - வ.ந.கிரிதரன் (44 கவிதைகளின் தொகுப்பு)

கட்டடக்கலை:
10. நவீன கட்டடக்கலைச் சிந்தனைகள் - வ.ந.கிரிதரன் (கட்டடக்கலை, நகர அமைப்புக் கட்டுரைகளின் தொகுப்பு)

வரலாறு / நகர அமைப்பு:
11. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) - வ.ந.கிரிதரன்

அறிவியல்:
12. அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் - (அறிவியற் கட்டுரைகள்,கவிதைகள் & கட்டுரைகளின் தொகுப்பு)

•Last Updated on ••Friday•, 29 •January• 2021 20:40•• •Read more...•
 

வாசிப்பும் யோசிப்பும் 368: 'பாக்குக் கலப்படச் சோற்றைக் கடைகளில் விழுங்கிக், காற்றினை அங்கே குடிப்பரே!

•E-mail• •Print• •PDF•

கவிதைத்தொகுப்பு 'இன்ப வானில்'- கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் -கவிஞர் ச.வே.பஞ்சாட்சத்திரத்தின் கவிதைத் தொகுதியொன்றின் பெயர் 'இன்ப வானில்' (1971). அகத்துறைக்கவிதைகள் என்று அவற்றைக் குறிப்பிட்டிருப்பார். புதுமைலோலனின் அன்பு வெளியீடாக வெளியான தொகுப்பு அது. காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் , பிரிவினை வெளிப்படுத்தும் கவிதைகள் பல அக்காலச் சூழலில் வைத்துச் சுவையாகப் பின்னப்பட்டிருக்கும்.

அதிலொரு கவிதை 'கொழும்பில் வேலை என்றால்..'.  கொழும்பில் பல சிரமங்களுக்கு மத்தியில் வேலை பார்க்கும் கணவன் படும் சிரமங்களை எண்ணியெண்ணி மனைவியொருத்தி வருந்துவதை விபரிக்கும் கவிதை.  அதிலுள்ள  ' .. பாக்குக் கலப்படச் சோற்றைக் கடைகளில் விழுங்கிக், காற்றினை அங்கே குடிப்பரே! பாவம்!' என்னும் வரிகள் என் கொழும்பு வாழ்க்கையை நினைவு படுத்தின.

கொழும்பில் நகர அதிகார சபையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது நானும் ஏனைய நண்பர்களும் மதிய உணவுக்காக அதிகம் செல்லுமிடங்கள்: அருகிலிருந்த புகையிரதத்திணைக்களக் 'கண்டீன்', கோட்டையிலுள்ள 'நெக்டர் கபே & சுத்தானந்தபவன் (சுத்தானந்தபவனா அல்லது ஆரியபவனா என்பதை நினைவு படுத்துவதில் சிறிது குழப்பம்). சுத்தானந்தபவனுக்குச் செல்வது பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில். அப்போது தமிழ் உணவகங்களில் மதிய உணவின்போது நீங்கள் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் சோற்றினை முடிய முடிய வாங்கிச் சாப்பிடலாம். மேலதிகக் கட்டணம் ஏதுமில்லை. இவ்விதம் மதிய உணவுக்காக வரும் ஒவ்வொருவரும் முடிய முடிய சோற்றினை வாங்கிச் சாப்பிட்டால் வியாபாரம் என்னவாவது. இதற்காகத் தமிழ் உணவக முதலாளிகள் செய்யும் தந்திரமே சோற்றில் பாக்கு போட்டுச் சமைப்பது. அப்படிச் சமைத்தால் அவ்விதம் சமைத்த சோற்றினை அதிகமாகச் சாப்பிட முடியாது. பெரும்பாலும் முதற் தடவையிலேயே வயிறு நிறைந்து விடும். இதனைத்தான் கவிஞரும் 'பாக்குக் கலப்படச் சோற்றைக் கடைகளில் விழுங்கிக், காற்றினை அங்கே குடிப்பரே' என்கின்றார். அனுபவம் பேசும் கவிஞரின் வரி.

•Last Updated on ••Tuesday•, 12 •January• 2021 11:17•• •Read more...•
 

கவிதை: முகமூடிகளின் உலகில்

•E-mail• •Print• •PDF•
கவிதை: முகமூடிகளின் உலகில்.. - வ.ந.கிரிதரன் -

இது முகமூடிகளின் உலகம்!
முகமூடிகளின் உலகில்
முகமொழித்து வாழ்தல் இலகுவானது.
உணர்வுகளை அடக்குதல் இலகுவானது.
வன்மம் உள்வைத்து புன்னகைப்பதொன்றும்
அவ்வளவு சிரமமானதொன்றல்ல
முகமூடிகளின் உலகில்.
அகத்தின் அழிவை
அடக்குதலும் இலகுவானதுதான்
முகமூடிகளின் உலகில்.
ஆக,
உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசித்திரிதல்
எளிதானதுதான்
முகமூடிகளின் உலகில்.
முகமூடிகள் கண்டு
எள்ளி நகையாடியவர்களைக் காலம்
முகமூடி அணிய வைத்துவிட்டதை
இன்று நான் முகமூடிகளின் உலகிலிருந்து
எண்ணிப்பார்க்கின்றேன்.
•Last Updated on ••Sunday•, 10 •January• 2021 09:33•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 367: கெளரியின் 'அகதி'!

•E-mail• •Print• •PDF•

கெளரியின் 'அகதி'  - நெடுங்கவிதைகவிஞர் கெளரியைப்பற்றி முதலில் எழுத்தாளர் கடல்புத்திரன் மூலம்தான் நான் கேள்விப்பட்டேன். அவர் கெளரியின் 'சோகங்களிலும் துயரமானது' என்னும் கவிதையைப்பற்றி விதந்து கூறுவார். அத்தலைப்பில் கெளரியின் கவிதைத்தொகுப்பொன்றும் 1988இல் வெளியானதாக நான் அறிந்திருக்கின்றேன். அதன் பின்னர் கெளரியை நான் தொண்ணூறுகளில் தாயகம் (பத்திரிகை -> சஞ்சிகை) கனடாவில் வெளியானபோது வெளியான அவரது படைப்புகளினூடு அறிந்திருக்கின்றேன். அவரது படைப்புகள் தாயக'த்தில் வெளியாகியுள்ளன. 'டொராண்டோ'விலிருந்து வெளியான ஏனைய ஊடகங்கள் சிலவற்றிலும் வெளியாகியுள்ளன. தாயகம் பத்திரிகையில் தாயகம் பத்திரிகையில் அதிகமாக எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களைப்பற்றி 'தாயக எழுத்தாளர்கள்' என்னும் கட்டுரையொன்றும் எழுதியுள்ளார். அதில் என்னையும் உள்ளடக்கியிருந்தார். அக்கட்டுரையும் நினைவிலுள்ளது. அக்காலகட்டத்தில் அவரது நெடுங்கவிதையான 'அகதி' நூலுருப்பெற்றது. அதனை வடிவமைத்துக்கொடுத்திருந்தவர் சகலகலாவல்லவரான 'தாயகம்' ஆசிரியரான ஜோர்ஜ்.ஜி.குருஷேவ்தான். அவர்தான் எனது 'எழுக அதிமானுடா' கவிதைத்தொகுப்பினையும் வடிவமைத்துத் தந்திருந்தார். அக்காலகட்டத்தில் அவரே தனது இருப்பிடத்தில் தாயகத்தை 'ஆப்பிள்' கணினியில் வடிவமைத்து, தன்னிடமிருந்த சிறிய  அச்சியந்திரம் மூலம் அச்சிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தார்.

'அகதி' கவிதைத்தொகுப்பினை வடிவமைத்தவர் 'தாயகம்' ஆசிரியர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவ் என்றால், அதன் அட்டைப்படத்தை வடிவமைத்துக்கொடுத்தவர் கனடா மூர்த்தி (யாழ் இந்து நாராயணமூர்த்தி). அக்காலகட்டத்தில் தாயக'த்தில் வெளியாகிக்கொண்டிருந்த முனியின் கேள்வி பதில்கள் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டவை. சிரித்திரனின் மகுடி பதில்களைப்போல், சுதந்திரனின் குயுக்தியார் பதில்கள் போல் , 'தாயக'த்தின் 'முனி' பதில்களும் முக்கியமானவை. சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பவை. முனி என்றால் ஏதோ ஆலமரத்து முனியென்று நினைத்து விடாதீர்கள். முனிவர் என்பதன் சுருக்கமான முனியே இந்தத் தாயகத்து முனி.

கெளரியின் 'அகதி' கவிதை நூலை வெளியிட்டிருப்பது 'டொராண்டோ'வில் இயங்கிக்கொண்டிருந்த  'சமூக ஆய்வு மையம்' (Social Research Circle) என்னும் அமைப்பாகும். வெளியிட்ட ஆண்டு: ஏப்ரில் 1991.

•Last Updated on ••Sunday•, 10 •January• 2021 01:52•• •Read more...•
 

வாசிப்பும் யோசிப்பும் 366 : தெளிவத்தை ஜோசப்பின் "ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட 'பாரதி கட்டுரையும், பாரதியில் வெளியான அ.ந.கந்தசாமி படைப்புகளும் & இருட்டடிப்பு ஒன்றும்!

•E-mail• •Print• •PDF•

தெளிவத்தை ஜோசப்இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் முக்கியமான சஞ்சிகை இது. யாழ்ப்பாணத்தில் 'மறுமலர்ச்சி' சஞ்சிகை அச்சில் வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன் வெளியான சஞ்சிகை. அச்சஞ்சிகைதான் எழுத்தாளர்கள் கே.கணேஷ், கே.ராமநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இணைந்து வெளியிட்ட 'பாரதி' சஞ்சிகை. ' 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்' நூலை எழுதிய முனைவர்கள் சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான் ஆகியோர் இச்சஞ்சிகையின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதனால்தான் அவர்களது ஆய்வு நூலில் இச்சஞ்சிகை பற்றி 'பாரதியில் கட்டுரைகள் வெளிவந்தன' என்று ஒரு வரி மட்டுமே காணப்படுகின்றது. இவர்கள் பாரதியை மறைத்ததற்கு முக்கிய காரணங்களிலொன்றாக நான் கருதுவது இலங்கைத் தமிழிலக்கியத்தில் முற்போக்குத் தமிழிலக்கியத்துக்கு பாரதியாற்றிய பங்களிப்புத்தான். இவர்கள் யாருமே இதுவரையில் இலங்கைத் முற்போக்குத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த இலக்கிய  முன்னோடிகள் பற்றி இதுவரையில் விரிவான ஆய்வுக்கட்டுரைகள் எவற்றையும் நானறிய எழுதவில்லை. அந்த அடிப்படையில் இவர்கள் பாரதி சஞ்சிகையின் முக்கியத்துவத்தையும் புறக்கணித்திருக்கலாம் அல்லது மறைத்திருக்கலாம் என்றும் கருதவேண்டியுள்ளது.

இவர்கள் பாரதி சஞ்சிகையின் முக்கியத்துவத்தை மறைத்தாலும் பேராசிரியர் கா.சிவத்தம்பி, எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் , எழுத்தாளர் நந்தினி சேவியர் மற்றும் எழுத்தாளர் டொமினிக் ஜீவா போன்றோர் மறக்கவில்லை. தெளிவத்தை ஜோசப் தினகரனில் 'ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட 'பாரதி' என்னும் தலைப்பில் முக்கியமானதோர் ஆய்வுக் கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரை தினகரனில் செப்டம்பர் 1984 - நவம்பர் 1984 வரை வெளியாகியுள்ளது.  இக்கட்டுரையினை எழுத்தாளர் டொமினிக் ஜீவா தொகுத்து மல்லிகைப்பந்தல் வெளியீடாக வெளியிட்ட "நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்' கட்டுரைகளின் தொகுப்பு நூலில் உள்ளடக்கியுள்ளார்.

இந்நீண்ட கட்டுரையின் ஆரம்பத்தில் பாரதி பற்றிய பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கூற்றினைத் தெளிவத்தை ஜோசப் சுட்டிக்காட்டியுள்ளார்:

•Last Updated on ••Friday•, 08 •January• 2021 02:35•• •Read more...•
 

நெடுங்கட்டுரை: மார்க்சியமும், இலங்கைத் தமிழர் பிரச்சினையும் பற்றியதொரு சிறு ஆய்வு!

•E-mail• •Print• •PDF•
 நெடுங்கட்டுரை: மார்க்சியமும், இலங்கைத் தமிழர் பிரச்சினையும் பற்றியதொரு சிறு ஆய்வு!1981-1982 காலகட்டம் என் வாசிப்பைப்பொறுத்த வரையில் மிகவும் முக்கியமானது. அக்காலகட்டத்தில்தான் எனக்கு மார்க்சிய நூல்களுடனான அறிமுகம் ஏற்பட்டது. சிந்தனையை விரிவடைய வைத்த நூல்கள். மானுட சமூக, அரசியல் மற்றும் பொருளியல் பிரச்சினைகளப்பற்றிய தெளிவினை ஏற்படுத்திய நூல்கள். கொம்பனித்தெருவிலுள்ள மார்க்சிய நூல்களை விற்கும் புத்தகைக்கடையொன்றிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, டூரிங்கிற்கு மறுப்பு, வரலாற்றுப் பொருள்முதவாதமும், இயக்கவியல் பொருள்முதல்வாதமும் (ருஷிய அறிஞர்களின் கட்டுரைகளின் தொகுப்பு), லெனின் நூல்கள் பல என்று வாங்கி வாசித்தேன். கூடவே டால்ஸ்டாயின் புத்தியிர்ப்பு', தத்யயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும், துர்க்னேவின் நாவல்கள், அன்டன் செகாவின் சிறுகதைகள், புஷ்கினின் படைப்புகளை உள்ளடக்கிய நூல் என்று புனைகதைகளையும் வாங்கி வாசித்தேன்.

இவ்விதமாக அவற்றில் மூழ்கியிருந்த நான் அவற்றை வாசித்ததால் என்னுள் எழுந்த எண்ணங்களை 'சிஆர் கொப்பி'களில் எழுதத்தொடங்கினேன். இலங்கைத் தமிழ்ப்பிரச்சினை பற்றிய மார்க்சிய அடிப்படையிலான எனது எண்ணங்கள், கவிதைகள், என் தனிப்பட்ட உணர்வுக்கவிதைகள் என்று நேரம் கிடைத்தபோதெல்லாம் எழுதினேன். அக்குறிப்பேடுகளில் சில என்னிடமின்றும் உள்ளன. அவற்றை அப்படியே எனது கையெழுத்துப்பிரதிகளாகவே இங்கு பதிவு செய்தால் என்ன என்றொரு எண்ணம் எழுந்தது. அதன் முதல்படியாக இந்நீண்ட கட்டுரையினை உங்களுக்கு வாசிக்கத் தருகின்றேன்.

இதனை எழுதிய காலத்தில் என் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் இக்கட்டுரையினை வாசியுங்கள். உங்கள் கருத்துகளை நேரம் கிடைக்கும்போது பகிர்ந்துகொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்து என் உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாடு என்னும் வகையில் இவை என்னைப்பொறுத்தவரையில் மிகவும் முக்கியம் மிக்கவை. என் குறிப்பேட்டிலுள்ள இக்கட்டுரையை எழுதிய நிலையிலேயே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். எழுத்துப்பிழைகள் இருக்கக்கூடும். இருந்தால் அறியத்தாருங்கள். கருத்துகளில் ஏதாவது குழப்பங்கள் இருப்பினும் அறியத்தாருங்கள். இக்கட்டுரை அன்று என் மனத்தில் எழுந்த சிந்தனைகளின், கேள்விகளின் பிரதிபலிப்பு. இக்கட்டுரை எழுதிய திகதி 29.12.1982
•Last Updated on ••Tuesday•, 05 •January• 2021 02:29•• •Read more...•
 

வீரகேசரியில் வெளியான வ.ந.கிரிதரனின் வானியற்பியல் (Astro Physics) கட்டுரைகள்!

•E-mail• •Print• •PDF•

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வானியற்பியல் பற்றிய எனது ஐந்து அறிவியற் கட்டுரைகள் வீரகேசரியில் வெளிவந்துள்ளன. அவை பற்றிய விபரங்கள்:

1. விளக்கங் காணும் வெளிநேரம் பிரபஞ்சம்! அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்! - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 15.9.1991)

2. பிரபஞ்சத்து மாயங்கள்! கரும் ஈர்ப்பு மையங்கள்! விண்ணிலே சூழ உள்ளவற்றைப் பொறிவைத்துப் பிடிக்கும் ஈர்ப்பு வலயங்கள்! - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 10.11.1991)

3. சூத்திரங்களினால் துலங்கும் பேரண்டச்  சூக்குமங்கள்! அச்சை விட்டு விலகிச் செல்லும் பிரபஞ்சக் குடும்பங்கள். - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 8.12.1991)

4. அதிசயமான அடிப்படைத் துணிக்கைகள்! பெளதிகக் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தும் அடிப்படை உண்மைகள்!  விசைகளே! பிரபஞ்சத்தின் அத்திவாரங்கள்! - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 2.2.1992)

5. அடர்த்தியுள் ஒளிந்திருக்கும் பிரபஞ்சச் சூனியங்கள்! ஆறுதல் அற்று விரையும் அண்டப் பொருட்கள்! - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 5.4.1992)

•Last Updated on ••Monday•, 04 •January• 2021 12:04•• •Read more...•
 

அஞ்சலி: கணக்காளர் சார்ள்ஸ் நிமலரஞ்சன் மறைவு!

•E-mail• •Print• •PDF•

அஞ்சலி: கணக்காளர் சார்ள்ஸ் நிமலரஞ்சன் மறைவு!'சாமி அக்கவுண்டிங் சேர்விஸ்' நிறுவனத் ('டொராண்டோ', கனடா) தலைவரும், கணக்காளருமான திரு.சார்ள்ஸ் நிமலரஞ்சன்  அவர்களின் மறைவு அதிர்ச்சியைத் தந்தது. கடந்த இருபது வருடங்களாக நான் இவரை அறிந்திருக்கின்றேன். வருமானவரி சம்பந்தமான ஆலோசனைகள் எவையாயினும் முதலில் நான் நாடுவது இவரைத்தான். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நண்பர் சார்ள்ஸ் பழகுவதற்கு இனியவர். சார்ள்ஸ் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். நண்பர் சார்ள்ஸின்  எதிர்பாராத மறைவு பலருக்கும் அதிர்ச்சியைத் தந்திருக்கும். இவரது மறைவு பற்றிய செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து நானின்னும் மீளவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் இவருடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டிருந்தேன். இதுவரையில் எனது மின்னஞ்சல்கள் எவற்றுக்கும்  அவர் பதிலளிக்காமல் விட்டதில்லை. ஆனால் இதற்கு அவரிடமிருந்து எவ்விதப் பதிலும் வரவில்லை. வேலையில் 'பிசி'யாக இருக்கக்கூடுமென்று நினைத்திருந்தேன். நத்தார் தின வாழ்த்து மடலும் அனுப்பியிருந்தேன். அதற்கும் அவரிடமிருந்து பதிலெதுவும் வரவில்லை. அவரது வழமைக்கு மாறான நடத்தை சிறிது வியப்பைத் தந்தது. அவரது நிறுவன இணையத்தளத்தையும் வடிவமைத்துக்கொடுத்திருந்தேன். அதுவும் கடந்த சில நாட்களாக இயங்காமலிருப்பதை அறிந்தேன். அவருடன்  தொடர்பு கொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்தேன். இன்று மாலை செய்தி அறிந்தேன். கடந்த இரு வாரங்களாக வைத்தியசாலையில் கோவிட் நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டு, 'வெண்டிலேட்டர்' பொருத்தப்பட்ட நிலையில் இன்று இவர் மறைந்ததாக அறிந்து திகைப்பும், துயரும் அடைந்தேன்.

அவரது எதிர்பாராத மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவர்தம் துயரில் நானும் பங்குகொள்கின்றேன்.

•Last Updated on ••Wednesday•, 30 •December• 2020 11:12•• •Read more...•
 

எனது முகநூற் பதிவொன்று: எழுபதுகளில் அமெரிக்கா சென்ற இளம் விவசாயி ஒரு நகைச்சுவைப் பத்திரிகை ஆசிரியர்!

•E-mail• •Print• •PDF•

1906 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் தமிழ் சஞ்சிகையொன்று வெளிவந்துகொண்டிருக்கின்றது. அதுதான் இலங்கை அரசின் கமத்தொழில் திணைக்களத்தால் வெளியிடப்படும் 'கமத்தொழில் விளக்கம்' சஞ்சிகை. தமிழ் விவசாயிகள், பண்ணைகள் நடத்துவோர் போன்ற பலருக்கும் மிகுந்த பயனுள்ள கட்டுரைகளைத் தாங்கி வரும் சஞ்சிகை.  'கமத்தொழில் விளக்கம்' சஞ்சிகையின் பழைய பிரதிகள் பலவற்றை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்.

பழைய 'கமத்தொழில் விளக்கம்' சஞ்சிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தபோது கண்ட ஒரு தகவல் என்னை வியப்படைய வைத்தது. 1974இல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் அமெரிக்க இளம் விவசாயிகள் நிறுவனமான 4-ஏச் நிறுவனத்தால் நடாத்தப்பட்ட பண்ணை வாலிபர் மாற்றீட்டுத் திட்டத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றிருக்கின்றார்.  அவர் அமெரிக்க இளம் விவசாயிகளின் விருந்தாளியாக அமெரிக்காவில் ஆறு மாத காலம் வரை தங்கியிருந்திருக்கின்றார்.

அவர் இணுவில் ஜோதி இளம் விவசாயிகள் கழகத்தின் தலைவர். சொந்தத்தில் மிகப்பெரிய நாற்றுப் பண்ணையை நடத்தி வந்திருக்கின்றார்.  நல்லின மாங்கன்றுகளை ஒட்டு முறை மூலம் இன விருத்தி செய்வதில் இவர் கை தேர்ந்தவரென்று 'கமத்தொழில் விளக்கம்' கூறுகின்றது.

என்னை வியப்படைய வைத்தது இச்செய்தியல்ல. இவ்விதம் அமெரிக்காவுக்குச் சென்ற இளம் விவசாயி ஒரு நகைச்சுவைச் சஞ்சிகை ஆசிரியர் என்பதுதான். எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் வெளியாகிய நகைச்சுவைச் சஞ்சிகையான 'கலகலப்பு' சஞ்சிகையைப் பலரும் அறிந்திருப்பார். அந்தக் 'கலகலப்பு' சஞ்சிகையின் ஆசிரியர் தான் மேற்படி இளம் விவசாயி என்னும் விபரத்தையும் 'கமத்தொழில் விளக்கம்'சஞ்சிகை கூறுகின்றது.

•Last Updated on ••Monday•, 28 •December• 2020 23:41•• •Read more...•
 

தினகரன் வாரமஞ்சரி: டெட்லாவின் குழந்தை!

•E-mail• •Print• •PDF•

- தினகரன் வாரமஞ்சரியில் (டிசம்பர் 20, 2020)  வெளியான சிறுகதை. -

1.

சிறுகதை: 'டெட்லா'வின் குழந்தை!

கேசவன் அவன் வசிக்கும் தொடர்மாடிக்கட்டடத்தின் 'அபார்ட்மென்ட்' பல்கணிக்கு வந்துநின்று எதிரே விரிந்துகிடந்த மாலைநேரத்து வானை நோக்கினான். விரிந்துகிடந்த அந்திவான் நெஞ்சில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியது. மெல்லிய இருள் பரவிக்கொண்டு வந்தது. மெல்லிருளும் அந்தியின் வெளிச்சமும் கலந்த வானம் சிவந்துகிடந்தது. அந்தச் சிவப்பின் பின்னால் அடிவானத்திற்குள் ஒளிந்துவிட்ட கதிரவனின்  கைங்கரியமிருந்தது. தொலைவில் அந்தி வானை ஊடறுத்தபடி ஜெட் விமானமொன்று நிழலாக விரைந்து கொண்டிருந்தது. கேசவனின் மனதை எப்பொழுதும் இயற்கையும், அதன் வனப்பும், வாழும் உயிரினங்களும் கவர்ந்தவை. சிட்டுக்குருவிகளை, புறாக்களை, அணில்களின் வாழ்வை இரசிப்பதில், அவதானிப்பதில் பொழுது போவதே தெரியாமல் மெய்மறந்து நிற்பான். அவ்விதமான சமயங்களில் விரிந்து கிடக்கும் விண்ணைக் கிழித்தபடி விரைந்துகொண்டிருக்கும் பூமிப்பந்தினைப் பற்றி நினைத்துக்கொள்வான். விண்வெளியில் பூமிக்கு வெளியில் நின்று கொண்டிருக்கும் ஒருவருக்கு விரையும் பூமி எவ்விதம் தெரியுமெனச் சிந்தித்துப் பார்ப்பான். சிறியதொரு வாயுக் குமிழியாக விரையுமொரு குமிழி. ஆனால் உயிர்த்துடிப்புள்ளதொரு குமிழி. அந்தக் குமிழிக்குள்தான் எத்தனை விதமான உயிரினங்கள். பல்வேறு அறிவு நிலைகளில் பல்வகை உயிரினங்கள். அறிவு நிலையில் வேறு பட்டிருந்தபோதிலும், இனத்தைப் பெருக்குவதில், குழந்தைகளை வளர்த்தெடுத்து ஆளாக்குவதிலும் அனைத்தும் காட்டும் கடமை, பாசவுணர்வு எப்பொழுதுமே அவனைப் பிரமிக்க வைத்தன. அதே சமயம் விண்ணில் விரைந்து செல்லும் இந்த நீலவண்ணக் கோளுக்கு வெளியில் கவிந்து கிடக்கும் தனிமையும், வெறுமையும் ஒருவித அச்சத்தினையும், இந்தப் பூவுலகில் வசிக்கும் ஜீவராசிகள்பால் ஒருவித பரிவினையும் ஏற்படுத்தின. வெளியினூடு ஆயிரக்கணக்கான மைல்கள் வேகத்தில் விரையுமிந்தக் கோளின் வேகத்தினையும் உணர முடியவில்லை. இதற்கு வெளியே விரிந்து, கவிந்து கிடக்கும் வெறுமையையும், தனிமையையும் உணர முடியவில்லை. உள்ளே நாடு, மதம், மொழி, இனம், சாதி.. என்று எத்தனை வேறுபாடுகள். குத்து வெட்டுகள். இந்தக் கோளும், இங்கு வாழும் உயிரினங்களும் எவ்வளவு கொடிய தனிமை சூழ்ந்த வெறுமைக்குள் வாழ்கின்றார்கள்? அதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா?

'டொராண்டோ'வில் வசிக்கும் இலட்சக்கணக்கான ஈழத்துத் தமிழ் அகதிகளில் கேசவனுமொருவன். 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து மேற்கு நோக்கிப் படையெடுத்தவர்களிலொருவன். வயது நாற்பதை எட்டிக்கொண்டிருந்தது. ஓரிரு நரைகளே தென்பட்டன. ஆனால் வலுவான உறுதியான உடல். இன்னும் திருமணம் செய்துகொள்ளாத தனிக்கட்டை. பிரமச்சாரி. அவனது பதின்ம வயதில் அனைவருக்கும் வருவது போல் அவனுக்கும் ஒரு பெண்மேல் ஈர்ப்பு வரத்தான் செய்தது. வந்த வேகத்திலேயே அது பறந்தோடி விட்டது. அதன் பிறகு நாட்டுச் சூழல் அவனை உலகின் பல்வேறு திக்குகளிலும் தூக்கியெறிந்து பந்தாடியதில் பொழுது சென்றதே தெரியவில்லை. எவ்வளவு விரைவாகக் காலம் ஓடிவிட்டது என்று பிரமித்தபோது காதோரம் நரை தட்டத் தொடங்கி விட்டிருந்தது. வயதும் நாற்பதை எட்டியிருந்தது. திருமணம் செய்யும் ஆசையே போய்விட்டது.

•Last Updated on ••Tuesday•, 22 •December• 2020 21:47•• •Read more...•
 

கவிதை: அண்டவாசியுடனோர் அளவளாவல்!

•E-mail• •Print• •PDF•

தூங்கும் நள்ளிரவு! இரவு வான்!
விரிவெளி!
இரவுப்பட்சிகளில்லை.
மாநகரின் நள்ளிரவில்.
நத்துகள் எங்கே?
நள்ளிரவு ஆந்தைகளெங்கே?
வவ்வால்கள்தம் சலசலப்புமில்லை.
தூங்கும் மாடப்புறாக்களின்
அசைவுகள் மட்டும் உப்பரிகைகளில்.
விரிவெளி ஒளிச்சிதறல் தூண்டும்
விரிவெண்ணங்கள் விரிமனவானில்.
எங்கோ ஒரு கோடியில்..
இங்கு நான்! அங்கு நீ!
சாத்தியமுண்டா?
சாத்தியமுண்டா?
நானுண்டாயின் நிச்சயம் நீயுமுண்டே.
நீளும் நம்பிக்கையில் நான்.
சந்திப்பு எப்போது?
நம்பிக்கை அதிகம் எனக்குண்டு
அவ்விடயத்தில்
ஆனால் (If) அல்ல
எப்போது (When) என்பதுதான்
இப்போதுள்ள  நிலை.
அது புரிந்தவன் நான்.
நம்பிக்கை அவ்விடயத்தில்
மிக்கவன் நான்.

•Last Updated on ••Sunday•, 20 •December• 2020 08:45•• •Read more...•
 

எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலுக்குப் பேராசிரியர் செ.யோகராசா வழங்கிய அணிந்துரை!

•E-mail• •Print• •PDF•

- கடந்தவருடம் இலங்கையில் இரண்டாவது பதிப்பாக, மகுடம் வெளியீடாக வெளிவந்த எனது (வ.ந.கிரிதரன்)  'அமெரிக்கா' நாவலுக்குப் பேராசிரியர் வழங்கிய அணிந்துரை! -


பேராசிரியர் செ.யோகராசாவின் அணிந்துரை!

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர் வரிசையில் வ.ந.கிரிதரனின் இந்நாவல் வித்தியாசமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகவுள்ளது. இதுபற்றி இவ்வேளை எடுத்துரைப்பது பொருத்தமானதென்று கருதுகின்றேன்.  

புலம்பெயர் இலக்கியத்தின் பேசுபொருள் அகற்சியுடையதென்பதையும் பல உட்பிரிவுகள் கொண்டதென்பதையும் ஆழமான வாசிப்புடைய இலக்கிய ஆர்வலர் அறிந்திருப்பர். எனினும் அவற்றுள் சில விடயங்கள் இன்றுவரை போதியளவு பேசப்படவில்லை என்பதே கவனத்திற்குரியது. 'நெடுவழிப்பயண'மும்  தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுவதும் சார்ந்த அனுபவங்கள் இவ்விதத்தில் முக்கியமானவை. ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் போதான நெடுவழிப்பயணம் பற்றி கி.பி. அரவிந்தனின் சில கவிதைகளும், இளைய அப்துல்லாவின் பத்தி எழுத்துகளும் குறிப்பிடத்தக்கவை.  கனடாப் பயணம் பற்றிய  சில அனுபவங்களை அ.முத்துலிங்கம் பதிவு செய்துள்ளார். அவுஸ்திரேலிய பயண அனுபவங்கள் சில பத்திரிகைகளில் மட்டும் வெளிவந்திருக்கின்றன.  அமெரிக்காவில் தடுப்பு முகாம் அனுபவங்களுக்குட்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுவது அரிதானது. இத்தகைய அபூர்வமான வாய்ப்பு அவப்பேறாகவோ அதிஷ்டகரமாகவோ  இவருக்குக் கிடைத்திருக்கின்றது.  இவ்விதத்தில் பேசாப் பொருளாகவிருந்ததொன்று இந் நாவலூடாக முதன் முதலாகப் பேசு பொருளாகியுள்ளமை விதந்துரைக்கப்பட வேண்டியதாகின்றது.

எண்பத்து மூன்று இனக்கலவரத்தின் விளைவாக கனடா செல்வதற்கு  புறப்பட்டவர்கள் விசா இல்லாமை காரணமாக அமெரிக்காவில் தடங்களுக்குள்ளாகி திருப்பி அனுப்பப்பட வேண்டிய நிலைக்குள்ளானபோது அகதி அந்தஸ்துக் கோரியமையினரால் நியூயோர்க் மாநகரின் ஒரு பகுதியான புரூக்லீனின் ஓர் ஓரத்தே கைவிடப்படும் நிலையிலிருந்த கட்டிடத்தின் ஐந்தாம் மாடியிலே தங்க வைக்கப்படுகின்றனர்.  அங்கிருந்த மூன்று மாத காலத்திலும் பெற்ற பல்வேறு அனுபவங்களே இந் நாவலாக மலர்ந்துள்ளது. அவைபற்றி இவ்வேளை எதுவும் குறிப்பிடாமல் வாசகரது வாசிப்பிற்கு விட்டுவிடுவதே உசிதமானது.

•Last Updated on ••Friday•, 18 •December• 2020 22:51•• •Read more...•
 

தொடர் நாவல்: மனப்பெண் (6) - கடிதம் காட்டிய வழி!

•E-mail• •Print• •PDF•

தொடர் நாவல் : மனப்பெண் (4) மறுநாள் அதிகாலையில் நேரத்துடனேயே விழித்து விட்டான் மணிவண்ணன். சந்திரமதி என்ன பதிலைத்தரப்போகின்றாளோ என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. அவள் மட்டும் எதிர்மறையானப் பதிலைத்தந்தால் என்ன செய்வது என்றும் சிந்தித்துப்பார்த்தான். பதில் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதே சரியானது என்றும் முடிவு செய்தான். அவள் மட்டும் சம்மதிக்காவிட்டால் நிச்சயம் ஏற்றுக்கொள்வதற்குச் சிரமமாகத்தானிருக்கும். ஆனால் அதை ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று வாழ்த்திக்கொண்டே செல்ல வேண்டியதுதான். இவ்விதமாகத் தன் மனத்தைத் திடமாக்கிகொண்டான் மணிவண்ணன். மகாகவி பாரதியாருக்கே காதல் கை கூடவில்லை. அதற்காக அவர் துவண்டா போய்விட்டார் என்று எண்ணினான். இவ்விதமாக மனோதிடத்தை வளர்த்துக்கொண்டு டியூசன் வகுப்புக்குச் சென்றான். அவன் சென்றபோது யாருமே வந்திருக்கவில்லை. வாசலில் காத்திருந்தான். வழக்கமாகச் சந்திரமதி முதலாவதாக வருவாள். வந்ததும் வீட்டின் பிரதான வாசலினூடு உள்ளே சென்று டியூசன் வகுப்பு மாணவர்கள் செல்வதற்கான வாசற் கதவைத் திறந்துவிடுவாள். இன்று இன்னும் அவளையும் காணவில்லை. இவ்விதமாகக் காத்துநிற்கையில் தூரத்தில் சந்திரமதி ஆடி, அசைந்து வருவது தெரிந்தது. மணிவண்ணனுக்கு நெஞ்சு படக்படக்கென்று அடிப்பதும் தெளிவாகக் கேட்டது. அதுவரையிருந்த மனோதிடம் அவனை விட்டுப் பறக்கச் சிறகடிக்கத்தொடங்கியது. இதற்கிடையில் சந்திரமதி அருகில் வந்துவிட்டாள். அவனை  ஓரக்கண்களால் நோக்கியபடியே மெலிதாகப்புன்னகையினைத் தவளவிட்டாள். எதுவுமே நடக்காததுமாதிரி உள்ளே சென்றாள். அவள் அவனுக்கு முதுகைக்காட்டியபடி உள்ளே சென்றபோது அவன் அவளது கூந்தலை ஆவலுடன் நோக்கினான். அது மல்லிகையற்று வெறுமையாகக்கிடந்தது. அவனது மனத்தில் ஒருவித ஏமாற்ற உணர்வு மேலெழுந்தது. இதற்கென்ன அர்த்தமென்று ஒருவித நப்பாசையுடன் மனம் கேட்டது. இன்னுமா உனக்கு நப்பாசை. அவள்தான் தெளிவாக உனக்குப் பதிலைக் கூறிவிட்டாளேயென்றும் கூடவே அதே மனம் கேட்டது.

மணிவண்ணனுக்கு இனியும் டியூசன் வகுப்புக்குச் செல்வதா என்றோர் உணர்வு எழுந்தது. அவளே மிகவும் இயல்பாக அவனது செயலை உள்வாங்கி, புன்னகைத்தபடி செல்கையில் தான் ஏன் எதற்குக் கலங்க வேண்டுமென்று எண்ணினான். நடந்ததைக் கனவாக எண்ணி மறந்துவிட வேண்டியதுதான் என்று திடமாக முடிவு செய்தா. இச்சமயத்தில் உள்ளிருந்து சந்திரமதி வந்து கதவைத்திறந்து விட்டாள். அவளுக்கு நன்றி கூறியவாறே அவளைத்தொடர்ந்தான். வகுப்பில் அவனும் , அவளும் மட்டுமே இருந்தார்கள். வகுப்பு ஆரம்பமாவதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. கடைசி நேரத்தில்தான் மற்றவர்கள் அரக்கப் பரக்க வருவார்கள். சேவற்கொடியோன் மாஸ்ட்டரும் சரியான நேரத்துக்குத்தான் வருவார்.

•Last Updated on ••Friday•, 18 •December• 2020 13:54•• •Read more...•
 

கத்யானா அமரசிங்ஹவின் 'தரணி'!

•E-mail• •Print• •PDF•

கத்யானா அமரசிங்ஹவின் 'தரணி'!கத்யானா அமரசிங்ஹவின் 'தரணி'!எழுத்தாளர் எழுத்தாளர் கத்யானா  அமரசிங்ஹ அவர்களின் சிங்கள நாவலான 'தரணி' தமிழில் தற்போது 'தரணி' என்னும் பெயரில் ,எழுத்தாளர்  எம்.ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பில், பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக வெளியாகியுள்ளது. சிங்கள் இலக்கிய உலகில் நன்கறிந்த எழுத்தாளர் கத்யானா அமரசிங்ஹ அவர்களுக்கு வாழ்த்துகள். அந்நாவலுக்கு நான் எழுதிய அணிந்துரையினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். - வ.ந.கிரிதரன் -

நூலை வாங்க: பூபாலசிங்கம் புத்தகசாலை
இல. 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11.

மின்னஞ்சல் முகவரி: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
இணையத்தளம்: www.poobalasingham.com


அண்மையில் நான் வாசித்த புனைகதை 'தரணி'. இதுவொரு சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. சிங்கள இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்ஹ. புனைகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் பன்முகத்திறமை மிக்கவர் இவர். அத்துடன் ஊடகத்துறையிலும் தீவிரமாகச் செயற்படும் சமூக, அரசியற் செயற்பாட்டாளர்.  இலங்கையின் சமகால சமூக, அரசியற்  பிரச்சினைகளில் மிகுந்த தெளிவு மிக்கவர். அவற்றை இன, மத, மொழி ரீதியாக அணுகாமல், மானுடப்பிரச்சினைகளாக அணுகுமொருவர். இதனை இவர் எழுதி அண்மையில் வெளிவந்த 'தரணி' நாவலிலும் காணலாம். இந்நாவல் இலங்கையில் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நாவலைத் தமிழுக்கு  மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப். இவரும் இலக்கியத்தின் பல்வகைப்பிரிவுகளில் , மொழிபெயர்ப்பு உட்பட, காத்திரமான பங்களிப்பைச் செய்து வருபவர். ஏற்கனவே பல நூல்களை, ஆக்கங்களைச் சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கின்றார்.  இந்நாவலின் மொழிபெயர்ப்பும் இவரது மொழிபெயர்ப்பில் தமிழுக்குக் கிடைக்கப்பெற்ற சிறந்த படைப்புகளிலொன்றாக அமைந்துள்ளதென்பதை வாசிக்கும் எவரும் உணர்ந்துகொள்ளலாம்.

•Last Updated on ••Thursday•, 17 •December• 2020 08:52•• •Read more...•
 

சிற்பி Ron Mueck இன் உயிர்ச்சிற்பங்கள்!

•E-mail• •Print• •PDF•

1. சிற்பி Ron Mueck இன் 'பையன் (குந்தியிருக்கும் பையன்)'

உயிர்ச்சிற்பம்

எழுத்தாளர் ஆதவன் தன் முகநூற்  பக்கத்தில் இப்புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். சிறுவனொருவன் குந்திக்கொண்டிருக்கும் புகைப்படம். இதைப்பார்த்தபோது  யாரோ ஒருவரின் புகைப்படமென்று எண்ணிவிட்டேன் ஆதவன் இது பற்றி எழுதியதைப் படிக்கும் வரையில். இப்புகைப்படத்தைப் பகிர்ந்த ஆதவன் பின்வருமாறு எழுதியிருந்தார்:

•Last Updated on ••Friday•, 11 •December• 2020 13:11•• •Read more...•
 

அமரர் பி.எஸ்.பெருமாளின் இலக்கியப்பணி

•E-mail• •Print• •PDF•

அமரர் பி.எஸ்.பெருமாள்எழுபதுகளில், எண்பதுகளில் ஈழநாடு வாரமலர் ஆசிரியராகவிருந்த அமரர் பி.எஸ்.பெருமாள் அவர்களை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. ஆரம்பத்தில் ஈழநாடு வாரமலர் மாணவர் மலரில் கட்டுரைகள், கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த நான்  என் பதின்ம வயதுகளில் சிறுகதைகளை எழுதத்தொடங்கியிருந்தபோது அவற்றை வெளியிட்டார். எனது ஐந்து சிறுகதைகள்,  உருவக்கதை, நல்லூர் இராஜதானி நகர  அமைப்பு, பழமையின் சின்னங்களைப் பேணுதல் பற்றிய மூன்று கட்டுரைகள் மற்றும் புதுவருடக் கவிதையொன்று (1978) ஆகியவை அவர் வாரமலர் ஆசிரியராகவிருந்த சமயமே வெளிவந்தன. நான் அவரை  ஒருபோதுமே சந்தித்ததில்லை. இருந்தும் என் படைப்புகளை வெளியிட்டு  , என் எழுத்தார்வத்துக்குத் தீனி போட்ட அவரை நான் ஒருபோதுமே மறக்க முடியாது.

அவர்  அண்மையில் அமரரானபோது வெளியான கட்டுரைகளில் அவர் பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவிருந்த விடயம் பற்றியே பொதுவாக எழுதப்பட்டிருந்தது. ஆனால் அவர் வாரமலர் ஆசிரியராகவிருந்தபோது பேனா என்னும் பெயரில் எழுதியதாக எழுத்தாளர் இளவாலை ஜெகதீசன் அறியத்தந்திருந்தார். இவ்விபரத்தைத் தற்செயலாகத்தான் அவரிடமிருந்து அறிந்தேன்.

•Last Updated on ••Thursday•, 10 •December• 2020 19:27•• •Read more...•
 

நெடுங்கவிதை: இது புதிய கோணங்கியின் புலம்பல்ல!

•E-mail• •Print• •PDF•

கவிதை: புதிய கோணங்கியின் புலம்பலல்ல!

நீண்டிருக்கும் நள்ளிரவு!
நான் மனதொன்றிக்கிடந்தேன்.
நான் நினைவுக்குளத்தில் நீச்சலடித்தேன்.
நள்ளிரவு கவிந்த தனிமைப்பொழுதுகளில்
நான் எனையிழந்திருந்தேன்.
நான் உணரும் நான்!
பிரியம் மிக்க பொழுதுபோக்கு!
விரிவெளி அடிப்படைத் துணிக்கை உலகு!
நான் நம்மிருப்பு பற்றியெண்ணுவதும்
நள்ளிரவுத் தனிமைகளில்தாம்.
நட்சத்திரத் தோழருடன்
நான் சம்பாஷிக்கும் பொழுதுகள்
நள்ளிரவுத் தனிமைகளில்தாம்.
நான் வினாக்களுக்கு விடைகள் நாடுவதும்
நள்ளிரவுத் தனிமைகளில்தாம்.
நான் ஒரு கைதி! சிறைக்கைதி!
நான் ஒரு வெளிநேரச்சிறைக்கைதி!
புரிதலைத் தடுக்கும் சிறை! சுவர்
பாய்தல் சாத்தியமா?
சாத்தியங்களை மறுக்கும் பரிமாணச்
சிறை!
நான் உணர்ந்துதான் இருக்கின்றேன்.
நான் உணர்ந்துதான் இருக்கின்றேன்.
நான் உணர்ந்துதான் இருக்கின்றேன்.

•Last Updated on ••Thursday•, 10 •December• 2020 02:56•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 365: எழுத்தாளர் ஹம்சத்வனியின் (தமிழ்ச்செல்வன் கனகசுந்தரம் - Thamilselvan Kanagasundaram ) 'முடிவிலும் அழியாதது' பற்றிய குறிப்புகள்!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் ஹம்சத்வனியின் (தமிழ்ச்செல்வன் கனகரத்தினம் - Thamilselvan Kanagasundaram )எழுத்தாளர் ஹம்சத்வனியின் (தமிழ்ச்செல்வன் கனகரத்தினம் - Thamilselvan Kanagasundaram ) 'முடிவிலும் அழியாதது' பற்றிய குறிப்புகள்!எழுத்தாளர் ஹம்சத்வனி (தமிழ்ச்செல்வன் கனகசுந்தரம்) எண்பதுகளில் என் கவனத்தையீர்த்த கவிஞர்களிலொருவர். க.தமிழ்ச்செல்வன் என்னும் பெயரில் சிறுகதைகளும் எழுதியுள்ளார்.  இதுவரை இவரது மூன்று கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன. 'சிறைகளில் இருந்து' , 'அக்கரைக்குப் போன அம்மாவுக்கு'  மற்றும் 'முடிவிலும் அழியாதது' ஆகியவையே அவை. இவற்றில் 'அக்கரைக்குப்  போன அம்மாவுக்கு' என்னிடமிருந்தது. அண்மையில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. நண்பர் யாரோ எவருக்கோ வாசிக்கக் கொடுத்திருக்க வேண்டும். யாழ் பல்கலைக்கழகக் கவிஞர்களென்றால் முதலில் நினைவுக்கு வரும் மூவர்: சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் & ஹம்சத்வனி.

அண்மையில் நூலகத்தில் இவரது 'முடிவிலும் அழியாதது' கவிதைத்தொகுப்பை வாசித்திருந்தேன். தொடர்ந்து இவரும் முகநூலினூடு தொடர்புக்கு வந்தார். இரண்டுமே தற்செயலாக நடந்தவை. ஆனால் அத்தற்செயல்களுக்கிடையில் நிலவிய ஒற்றுமை என்னை வியக்க வைத்தது.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான கவிதை நடை பிடித்திருக்கும். தேவைக்கதிகமாகப் படிமங்கள் நிறைந்து, விடுகதை போடும், வெட்டி முறித்த கவிதைகளை என்னால் ஒருபோதும் சுவைத்திட முடிந்ததில்லை. ஆற்றொழுக்குப்போன்ற தெளிந்த நடையில்., அவ்வப்போது படிமத்தாமரைகள் பூத்திருக்கும் கவிதைவாவிகள் எனக்கு மிகவும்  பிடித்தமானவை. என்ன இவன் படிமங்களை எதிர்த்துகொண்டு படிமத்தாமரைகள், கவிதைவாவிகள் என்று படிமங்களை அள்ளித்தெளிக்கின்றானென்று பார்க்கின்றீர்களா? நான் கூறவந்தது தேவைக்கதிகமான படிமங்களின் தேவை தேவையில்லையென்பதையே. ஹம்சத்வனியின் கவிதைகள் அததகையவை.

•Last Updated on ••Monday•, 07 •December• 2020 11:29•• •Read more...•
 

கனடாவில் வெளியான முதலாவது தமிழ்க் கவிதைத்தொகுப்பு!

•E-mail• •Print• •PDF•

- ரவி அமிர்தனின் 'விழிப்பூ' -

கனடாவில் 1984ஆம் ஆண்டிலிருந்து தமிழ்க் கவிதைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் மொன்ரியாலில் வெளியான புரட்சிப்பாதை (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக்கிளை வெளியிட்ட கையெழுத்துச் சஞ்சிகை) , தமிழ் எழில் ஆகியவற்றில் கவிதைகள் வெளியாகின.

இது பற்றி எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கனகசுந்தரம்  (ஹம்ஸத்வனி) பின்வருமாறு கூறுவார்: "1984  இல் மொன்றியாலின் தமிழ்எழில் என்னும் மாதாந்த கைஎழுத்துப்பிரதி  வெளிவந்தது. முதல் தமிழர் ஒளி  வானொலிச்சேவையும் தொடங்கப்பட்டது. இரண்டிலும்  எனது பங்களிப்பு இருந்தது. நான் ஆசிரியர் குழு சார்பில் எழுதினேன்.  கவிதைகள் நாடகங்கள் வந்தன."

'புரட்சிப்பாதை' சஞ்சிகையிலும் வ.ந.கிரிதரன், ரவி அமிர்தன் , செங்கோடன், ஆ.சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் கவிதைகள் வெளியாகியுள்ளன.

நூலாக வெளியான  ஆரம்பக் கவிதைத்தொகுப்புகள் என்று பார்த்தால் பின்வரும் கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன:

1. ரவி அமிர்தன் - விழிப்பூ. 11.5.1985  வெளியாகியுள்ளது. (இது பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் அருண்மொழிவர்மனுக்கு நன்றி). இது  கையெழுத்துப்பிரதியாக வெளிவந்த நூலாகத் தெரிகின்றது.

2. வ.ந.கிரிதரன் - மண்ணின் குரல். இது மண்ணின் குரல் சிறு நாவல், கட்டுரைகள் & எட்டுக் கவிதைகள் அடங்கிய தொகுப்பு. இவையனைத்தும் 84-85 காலகட்டத்தில் 'புரட்சிப்பாதை' சஞ்சிகையில் வெளியானவை. 14.01.1987 அன்று மங்கை பதிப்பக வெளியீடாக வெளியானது. றிப்ளகஸ் அச்சகம் கணினி எழுத்துகள் கொண்டு அச்சடித்த கவிதைத்தொகுப்பு. இதில் அடங்கியுள்ள கவிதைகள்:

•Last Updated on ••Sunday•, 06 •December• 2020 11:58•• •Read more...•
 

சிறுகதை: கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய்!

•E-mail• •Print• •PDF•

"இடிக்கும் கேளிர்! நுங்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று, மற்றில்ல,
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்,
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே
"
- வெள்ளிவீதியார் ((குறுந்தொகை) -

1.

சிறுகதை: கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய்!இருண்டு விட்டிருந்த டொராண்டோ மாநகரத்து இரவொன்றில் தன் அபார்ட்மென்டின் பல்கணியில் வந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே விரிந்திருந்த விண்ணை நோக்கினான் கேசவன். நகரத்து இரவு வான் ஒரு சில நட்சத்திரங்களுடன் இருண்டிருந்தாலும், அன்று பெணர்ணமி நாளென்பதால் தண்ணொளியில் இரவு குளித்துக்கொண்டிருந்தது. அவனுக்குச் சிறு வயதிலிருந்தே நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானை இரசிப்பதென்றால் மிகவும் பிடித்தமான பொழுது போக்குகளிலொன்று. இரவு வானின் விரிவும், நட்சத்திரக் கன்னியர்களின் கெக்களிப்பும் எப்பொழுதும் அவனுக்குப் பிரமிப்புடன் இருப்பு பற்றிய சிந்தனைகளையும் ஏற்படுத்தின. எவ்வளவு நேரமென்றாலும் அவனால் இரவு வானை இரசித்துக்கொண்டேயிருக்க முடியும்.

வனங்களும், குளங்கும் நிறைந்த வன்னி மண்ணில் வளர்ந்தவன் அவன். எத்தனை புள்ளினங்கள்! எத்தனை மிருகங்கள்! எத்தனை வகை வகையான விருட்சங்கள்! வன்னியில் அவனை மிகவும் கவர்ந்தவை செந்தாமை, வெண்டாமரைகள் பூத்துக்குலுங்கும் குளங்களும், புள்ளினங்களும் , பல்வகை மரங்களுமே. வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கிச் செல்லும் வீதியில் அமைந்திருந்தது குருமண்காடு. அங்குதான் அவன் வளர்ந்தான். குருமண்காடு வனப்பிரதேசமாகவிருந்த காலகட்டத்தில் அவனது வாழ்க்கை அங்கு கழிந்திருந்தது. அதனால் அவனுக்கு எப்பொழுதும் குருமண்காடும், அக்காலகட்ட நினைவுகளும் அழியாத கோலங்கள்.

இரவு வானும், சுடர்களும் அவனுக்கு மீண்டும் வன்னியில் கழிந்த பால்ய பருவ நினைவுகளில் நனவிடை தோய வைத்து விட்டன.

கேசவன் பெரிய குடிகாரன் அல்லன். ஆனால் மருந்து போல் ஒரு பெக் ரெமி பிரண்டியை விழுங்கிவிட்டு, ஏற்படும் மெல்லிய கணகணப்பில் இவ்விதமாக விரிந்திருக்கும் இரவு வானை இரசிப்பதில் அவனுக்கு எப்பொழுதுமே பெருவிருப்புண்டு. தண்ணொளி பரப்பும் முழுநிலாவைக் கண்டதும் அவனுக்கு பானுமதியின் நினைவும் கூட நினைவிலெழுந்து அவனை ஆட்டி வைக்கும். பானுமதியின் நினைவும் முழுநிலவின் தண்ணொளி தரும் இதமான உணர்வினைத்தரும்.

•Last Updated on ••Friday•, 04 •December• 2020 07:41•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 364: நினைவு கூர்வோம்: 'கலைச்செல்வி' சிற்பி சரவணபவன்!

•E-mail• •Print• •PDF•

அண்மையில் எழுத்தாளர் அன்னலட்சுமி இராஜதுரை (யாழ்நங்கை) கலைச்செல்வி ஆசிரியர் அமரர் 'சிற்பி' சிவசரவணபவன் அவர்களின் நினைவு தினத்தினையொட்டி (நவம்பர் 9) முகநூற் பதிவொன்றினை வெளியிட்டிருந்தார். அதிலவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: "நல்லாசானும் சிறந்த எழுத்தாளரும் ஈழத்துச்சிறுகதைத்தொகுதியை முதன்முதலில் வெளியிட்டவரும்   கலைச்செல்வி மாத இதழின் ஆசிரியருமாக அதனை 8 வருடங்கள் தன்னந்தனியனாக நின்று வெளியிட்டவரும் (1958 - 1966 ) கலைச்செல்விமூலம் ஈழத்து இலக்கிய வரலாற்றில் புகழ் பெற்ற எழுத்தாளர்களை உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றவருமான சிற்பி சிவசரவணபவன் அவர்களது 5 ஆவது நினைவு தினம் ( 1933 - 2015 ) நாளை ஆகும் (நவம்பர் 9) தமிழகச் சிற்றிதழ்களின் செல்வாக்கு மிகப்பெரும் அளவில்  இங்கு விளங்கிய வேளை ஈழத்தில் ஓர் இலக்கிய உணர்வு பொங்கி எழ கலைச்செல்வி காலாய் அமைந்தது வரலாறு.அதை ஞானம் சஞ்சிகை தக்க முறையில் பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது. நிலவும் நினைவும்  சத்திய தரிசனம் நினை வுகள் மடிவதில்லை  ஆகியவை  இவரது சிறுகதைத் தொகுப்புகளாகும் உனக்காகக் கண்ணே சிந்தனைக்கண்ணீர்  அன்பின்குரல் ஆகியவை இவரது நாவல்களாகும். உனக்காகக் கண்ணே நூலுருப்பெற்றது. வேறு பல உயரிய இலக்கியப்பணிகளையும் மேற்கொண்டு சிறப்புப் பெற்ற இவர் உயர் கௌரவங்களையும் பெற்றவர் என்பதும்தெரிந்ததே. அன்னாரை இவ்வேளை நினைவில் கொள்வோம்."

யாழ்நங்கை அவர்கள் 'ஈழத்து இலக்கிய வரலாற்றில் புகழ் பெற்ற எழுத்தாளர்களை உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றவருமான சிற்பி சிவசரவணபவன் அவர்களது' என்று கூறுவது உண்மையான கூற்று. அதற்கு யாழ்நங்கை அவர்களே நல்லதோர் உதாரணம். மாணவியான யாழ்நங்கை அவர்களின் ஆரம்பகாலப்படைப்புகளுக்குக் களமமைத்துக் கொடுத்தது கலைச்செல்வி. தொடர்ந்து 62இல் அவர் வீரகேசரியில் உதவியாசிரியராகப் பதவி பெற்றபோது அதனை வாழ்த்தியொரு குறிப்பினையும் கலைச்செல்வி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

•Last Updated on ••Monday•, 07 •December• 2020 10:45•• •Read more...•
 

அஞ்சலி: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

•E-mail• •Print• •PDF•

- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -எழுத்தாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களைப் பதிவுகள் வாசகர்கள் நன்கறிவர். இவரது பல கவிதைகள், இலக்கிய நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள் பல 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியுள்ளன. 'தடாகம் கலை இலக்கிய வட்ட'த்தை நிறுவி அதன் மூலம் 'கலாசூரி' விருது வழங்கி எழுத்தாளர்கள் பலரை இவர் கெளரவித்துள்ளார். அவை பற்றிய தகவல்கள் 'பதிவுக'ளில் வெளியாகியுள்ளன.  இவரது மறைவு பற்றிய செய்தியினை எழுத்தாளர் ஜவாப் மரைக்கார் மற்றும் 'ஞானம்' ஞானசேகரன் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். அவரிழப்பால் வாடும் அனைவர்தம் துயரிலும் பதிவுகளும்  பங்குகொள்கின்றது. அவர் நினைவாக அவரது கவிதைகள் சிலவற்றையும், அவரது 'தடாகம் கலை இலக்கிய வட்ட' நிகழ்வுகள் பற்றிய அறிவுப்புகள் சிலவற்றையும் பகிர்ந்துகொள்கின்றோம்.

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி கவிதைகள்:

1. நொடிக்கு நொடி

எப்படியும்
வாழ நேரிடுகிறது
வாழ்க்கை

மண்ணில்
மரணமே உண்மை
வாழ்க்கையோ பொய்.

மகிழ்ச்சியாய் வாழலாமென்றால்
வாழ் நாளோ
இரவு பகலைப் போல.

இருள் வெளிச்சம் போல்
நிரந்தரமற்ற
மாற்றங்கள்.

•Last Updated on ••Tuesday•, 24 •November• 2020 11:04•• •Read more...•
 

அமரர் பூநகரான் வழியில் அவர் மகள் ஊடகவியலாளர் அபி குகதாசன்!

•E-mail• •Print• •PDF•

நண்பர் குகதாசன் மறைந்து ஐந்தாண்டுகளைக் கடந்து விட்டன. அவர் யாழ் இந்துக் கல்லூரிக் கனடாக் கிளையினரின் கலைவிழா மலரின் இதழாசிரியராக விளங்கிய சமயம் அவருடனான  அறிமுகம் ஏற்பட்டது. மலருக்குப் படைப்புகள் நாடி என்னுடன் தொடர்புகொண்டிருந்தார். பின்னர் அவர் பூநகரான் என்னும் பெயரில் கனடாவிலிருந்து வெளியான பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகள் எழுதி அனைவருக்கும் அறிமுகமானார். அரசியல் ஆய்வாளராக கனடாத் தமிழ் ஊடகங்கள் மத்தியில் நன்கறியப்பட்டவராகவும் விளங்கினார்.

அவரது மகளும் அவர் வழியில் ஊடகத்துறையில் புகுந்து இன்று கனடாவின் புகழ்பெற்ற செய்தி ஊடகங்களிலொன்றான CTV நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். அவர்தான் அபி குகதாசன் (Abby Kuhathasan) என்று அண்மையில்தான் அறிந்தேன். அண்மையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் உபஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ் பற்றிய செய்தியொன்றினை வழங்கிக்கிகொண்டிருக்கும் இணைய இணைப்பினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

•Last Updated on ••Tuesday•, 17 •November• 2020 10:00•• •Read more...•
 

அஞ்சலி: கட்டடக்கலைஞரும் , நகர அபிவிருத்தி வல்லுநருமான திலீனா கிரின்கொட மறைவு!

•E-mail• •Print• •PDF•

என் பல்கலைக்கழக, முகநூல் நண்பர்களிலொருவரும், நகர அமைப்பு வல்லுநரும், கட்டடக்கலைஞருமான திரு. திலீனா கிரின்கொட (L.T.Kiringoda) அவர்கள் நேற்றிரவு கொழும்பில் மறைந்த செய்தியினை இன்றறிந்தேன்.  நகர அபிவிருத்தி அதிகார சபையில் நீண்டகாலம் பணிபுரிந்து சில வருடங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றிருந்தார்.

•Last Updated on ••Tuesday•, 17 •November• 2020 09:33•• •Read more...•
 

'காலம்' செல்வம் புலம்பெயர் முன்னோடிக் கவிஞரா?

•E-mail• •Print• •PDF•

அண்மையில் அகழ் இணைய இதழில் காலம் செல்வத்துடனான நேர்காணலொன்று வந்திருந்தது. அதில் பேட்டி கண்டவர் பின்வரும் கேள்வியொன்றைக் கேட்டிருந்தார்:

"கி.பி.அரவிந்தன் புலம்பெயர் தேசத்தில் கவிதைகள் எழுத முன்னரே பாரிசில் கவிதைகள் எழுதியவர் நீங்கள். ஆண்டு வரிசையை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் தான் நமது புலம்பெயர் முன்னோடிக் கவிஞன் என்று தீர்க்கமாகச் சொல்லாம். கவிதைகள் எழுத நேர்தது எப்படி? அப்போது உங்களுக்கு ஆதர்சனங்கள் இருந்தார்களா?"

இதற்குக் காலம் செல்வம் பின்வருமாறு பதிலளித்திருந்தார்:

"கி.பி.அரவிந்தன் 90களுக்கு பிறகு, நான் கனடாவுக்கு வந்தபிறகுதான் பாரிஸ் வந்தார். அவருடைய கவிதைகள் நல்லதாயிருக்கலாம். சில சிலபேர் வேறு காரணங்களுக்காக அவர் புலம் பெயர்ந்த முதல் கவிஞன் என்று எழுதியதைப் பார்த்திருக்கிறேன்"

கேள்வி கேட்டவர் காலம் செல்வம் புலம்பெயர் முன்னோடிக் கவிஞன் என்று தீர்க்கமாகச் சொல்லலாம் என்று கூறுகின்றார். இதற்கான பதில் ஊடகமொன்றில் வெளியான காலம் செல்வத்தின் கவிதையிலுள்ளது. இது  பற்றி அறிய நானும் ஆவலாகவுள்ளேன். காலம் செல்வம் எழுதிய முதலாவது கவிதை எப்பொழுது , எங்கு வெளியானது என்பதை அவர் அறியத்தந்தால் இவ்விடயத்தில் முடிவொன்றினை எடுக்க முடியும். 1984இல் மொன்ரியாலில் வெளியான புரட்சிப்பாதையில் கவிதைகள் வெளியாகியுள்ளன. எனது கவிதைகளும் அதில் இடம் பெற்றுள்ளன. வேறு சிலரின் கவிதைகளும் இடம்  பெற்றுள்ளன. அதில் வெளியான எனது கவிதைகள் மண்ணின் குரல் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளன. காலம் செல்வம் புலம் பெயர் முன்னோடிக் கவிஞன் என்று தீர்க்கமாகக் கூறியிருப்பதால் அவருக்கும் காலம் செல்வத்தின் முதல் கவிதை வெளியான விபரம் தெரிந்திருக்க வேண்டும். அவரும் இவ்விடயத்தில் பதிலைக் கூறலாம்.

•Last Updated on ••Wednesday•, 11 •November• 2020 02:34•• •Read more...•
 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி!

•E-mail• •Print• •PDF•

நடந்து முடிந்த அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். அரசியல் கருத்துகளுக்கு அப்பால் ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் கூட்டணியின் வெற்றி தற்போதைய சூழலில் முக்கியமானது; வரவேற்கத்தக்கது.  முக்கியமாகப் பின்வரும் காரணங்களுக்காக:

நடந்து முடிந்த அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். அரசியல் கருத்துகளுக்கு அப்பால் ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் கூட்டணியின் வெற்றி தற்போதைய சூழலில் முக்கியமானது; வரவேற்கத்தக்கது.  முக்கியமாகப் பின்வரும் காரணங்களுக்காக:

1. தற்போது பதவியிலிருக்கும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த நலன்களுக்காக, பதவிலிருப்பதற்காக இனவாதத்தை, குடிவரவாளர்களுக்கு எதிரான கடுமையான கொள்கைகளைக் கடைப்பிடித்தவர்.  வெள்ளையின இனவாத அமைப்புகளைப் பகிரங்கமாக ஆதரித்தவர். அவரது குடிவராளருக்கெதிரான கொள்கைகள் காரணமாக ஐந்நூறு குழந்தைகள் தம் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளார்கள். மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறலது.

•Last Updated on ••Sunday•, 08 •November• 2020 03:13•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 363: அமரர் அ.மா.சாமி (குரும்பூர் குப்புசாமி , கும்பகோணம் * அமுதா கணேசன்) நினைவுக் குறிப்புகள்!

•E-mail• •Print• •PDF•

அண்மையில் மறைந்த முன்னாள் ராணி வாராந்தரி ஆசிரியர் அ.மா.சாமிஅண்மையில் மறைந்த முன்னாள் ராணி வாராந்தரி ஆசிரியர் அ.மா.சாமி மறைவையொட்டிய காணொளியொன்று (எழுத்தாளர் அண்ணா கண்ணன் பதிவேற்றியது), பத்தியொன்று (எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைப்பதிவில் எழுதியது) ஆகியவற்றை வாசித்தபோது என் சிந்தனைக்குருவி சிறகடித்து என்  பால்ய காலத்துக்கே சென்று, கும்மாளமிடத்தொடங்கி விட்டது. நான் வாசிக்கத்தொடங்கி அதிலேயே பித்துப்பிடித்திருந்த பால்ய பருவத்தில் எனக்கு ராணி வாராந்தரி இதழுடனும் சிறிதுகாலம் தொடர்பேற்பட்டது. அத்தொடர்பு இன்று வரைக்கும் மறக்க முடியாத தொடர்பாகவே நினைவுகளில் பதிந்து கிடக்கின்றது. ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கைப்படிகளில் பல்வேறு பருவத்து நினைவுகளும் , நினைக்குந்தோறும் இன்பமளிக்கும் நினைவுகளாக நிலைத்து நின்று விடுகின்றன. அவ்வகையில் எனக்கும் ராணி வாராந்தரியுடனான நினைவுகளும் நிலைத்து நிற்கின்றன.

ராணி வாராந்தரியில் முகப்பு எப்பொழுதும் பெண்களை, குறிப்பாக நடிகைகளின் புகைப்படங்களைத் தாண்டி வெளியாவதுதான் வழக்கம். இன்றுவரை அது தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது. மிகவும் எளிய தமிழில் , தன் வாசகர்களுக்கேற்ப பல்வகைப்பட்ட படைப்புகளையும் தாங்கி வரும் ராணியின் நடுவில் ஓரிரு பக்கங்கள் சிறுவர்களுக்கானதாக வெளியாகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நான் ராணி இதழினை விரும்பி வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் நிச்சயம் ஒரு பக்கச் சிறுவர் தொடர்கதையொன்றும் பிரசுரமாகும். அப்பொழுது அவ்விதம் பிரசுரமாகி எம்மையெல்லாம் கவர்ந்திருந்த சிறுவர் தொடர்கதை 'பேசும்சிலை'. நானும் , என் சகோதர, சகோதரிகளும் போட்டி போட்டு வாசித்த சிறுவர் தொடர்களிலொன்று அத்தொடர்நாவல்.  அத்தொடர் நின்று விட, நாமும் ராணி வாசிப்பதை நிறுத்தி விட்டோம். அத்தொடர்கதையை அழகாக 'பைண்டு' செய்து வைத்திருந்தோம்.

•Last Updated on ••Sunday•, 08 •November• 2020 02:55•• •Read more...•
 

எழுத்தாளர் நிலா குகதாசன் பற்றிய நினைவுகள்.....

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் நிலா குகதாசன் பற்றிய நினைவுகள்.....இன்று பெட்டிகளில் பழைய நூல்களைத் தேடுகையில் நிலா குகதாசனின் 'இன்னொரு நாளில் உயிர்ப்பேன்' கவிதைத்தொகுப்பு அகப்பட்டது. ரோஜா பதிப்பக வெளியீடாக சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியான நூல். நூலுக்கு ஓவியர் கருணாவின் ஓவியங்கள் அணி சேர்க்கின்றன.

எழுத்தாளர் நிலா குகதாசன் என்றதும் அவரைப்பற்றிய நினைவுகள் படம் விரிக்கின்றன. அவருடன் நான் அதிகம் நெருங்கிப்பழகியவனல்லன். அவரை அவரது படைப்புகளூடு அதிகம் அறிந்தவன். அவ்வப்போது நிகழ்வுகளில் சந்திக்கையில் கதைத்துள்ளேன். தொண்ணூறுகளில் ஐபிஎம் / செலஸ்டிகா நிறுவனத்தில் (டொன்மில்ஸ் & எக்ளிண்டனில் அமைந்திருந்த)  பணி புரிந்த காலத்தில் அங்கு இயங்கிக்கொண்டிருந்த வேர்சா உணவகத்தில் அவர் பணிபுரிந்துகொண்டிருந்தார். அங்கு செல்கையில் அவ்வப்போது சிறிது நேரம் உரையாடுவதுண்டு.

கனடாவில் முதன்  முதலில் வீடியோ சஞ்சிகை இளைய நிலாவை அவர் உருவாக்கினார்.
இவ்விதமான சூழலில், கலை, இலக்கியத்துறையில் சாதிப்பதற்கு அதிகமிருக்கையில் இளமைப்பருவத்தில் அவர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டது துரதிருஷ்ட்டமானது. அவரை நினைக்கையில் கூடவே அவரது புன்னகை தவழும் முகம்தான் நினைவுக்கு வருகின்றது. சிலரின் முகங்களில் எப்பொழுதும புன்னகை தவழ்ந்தபடியிருக்கும், நிலா குகதாசன் அவ்வகையானவர்களிலொருவர்.

•Last Updated on ••Tuesday•, 17 •November• 2020 22:49•• •Read more...•
 

அஞ்சலி: கலாநிதி கே.எஸ்.சுப்பிரமணியன்!

•E-mail• •Print• •PDF•

கே.எஸ்.சுப்பிரமணியன்ஆசிய அபிவிருத்தி வங்கியில் இயக்குநராகப் பணியாற்றியவரும் , எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான திரு. கே.எஸ்.சுப்பிரமணியன் அவர்கள் மறைந்த செய்தியினை எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் அவர்கள் தனது முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். என்னை அதிர்ச்சியடைய வைத்த செய்தி. கலாநிதி கே.எஸ். சுப்பிரமணியன் அவர்களுடன் எனக்கு அண்மையில்தான் அவர் அனுப்பிய மின்னஞ்சல்கள் மூலம்  தொடர்பேற்பட்டது.

'கொரோனாக் கால ஊரடங்குச் சட்ட அனுபவங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட தமிழ்க்கவிதைகளை ஆங்கிலத்துக்கு மொழிபயர்த்தவர் திரு. கே.எஸ்.எஸ் அவர்கள்.  அதுவொரு தொகுப்பாக 'Lockdown Lyrics' என்னும் பெயரில் நூலாகவும் வெளியாகியுள்ளது. என் கவிதையொன்றும் , ' கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்!' , அத்தொகுப்பில்  இடம் பெற வேண்டுமென்று தொகுப்பாளர்கள் விரும்பினார்கள்.

எனது  கவிதை: 'கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்!' என்னும் கவிதை சிறிது நீண்டது. அதனைச் சிறிது சுருக்கி , ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து Lockdown Lyrics என்னும் தொகுப்பு நூலில் வெளியிட்டுள்ளார். கவிதையினைச் சிறிது சுருக்கி வெளியிடுவதற்காக , வெளியிடுவதற்கு முன்னர் எனக்குக் கடிதம் எழுதி என் அனுமதியைக் கோரினார். பின்னர் நூல் வெளியானதும் அதனை அறிவிப்பதற்காக மின்னஞ்சலொன்றினை அனுப்பினார். அதில் தமிழக முகவரியினையும் கேட்டிருந்தார். தமிழகத்தில் வசிக்கும் என் பால்ய காலத்து நண்பரும் எழுத்தாளருமான ஶ்ரீராம் விக்னேஸ் (ஆர்.விக்கினேஸ்வரன்) அவர்களின் முகவரியையும் கொடுத்து விட்டேன். அதன்படியே நண்பர் நூலை என் சார்பில் பெற்றுக்கொண்டார்.

•Last Updated on ••Monday•, 26 •October• 2020 10:25•• •Read more...•
 

நல்லூர் ராஜதானி வரலாற்றுச் சின்னங்கள் பற்றி...

•E-mail• •Print• •PDF•

அதற்கண்மையில்  சிறியதொரு முகப்புடன் கூடிய வைரவர் சிலையொன்றுமிருந்தது. அதில் 'இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மன்னர் வழி காத்துப் பூஜித்த நல்லை தேரடிப் பதியுரை பண்டார மாளிகை வாசல் ஶ்ரீ பைரவர் ஆலய ஆதிமூலம் உள்ளே' என்னும் வசனங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. நான் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியதற்கான் காலகட்டம் 1979-1981. பின்னர் அத்தகவல்களின் அடிப்படையில் தொடராகத் தாயகம் (கனடா) சஞ்சிகையில் எழுதினேன். அத்தொடரே பின்னர் ஸ்நேகா (தமிழகம்) & மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளியானது.

ஆய்வாய்வுக் கட்டுரைகளை முதலில் ஈழநாடு வாரமலரில் எழுதினேன். பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகக் கட்டடக்கலைச் சரித்திரப் பாடத்துக்காகவும் ஆய்வுக்கட்டுரையாகச் சமர்ப்பித்தேன். நான் எழுதியபோது அப்போது எனக்குக் கிடைத்த நில அளவைத்திணைக்கள வரைபடங்களையும் பாவித்திருந்தேன். அண்மையில் கூகுள் மூலம் அப்பகுதியைத் தேடியபோது அப்பகுதியே முழுமையாக மாற்றமடைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக யாழ் பருத்தித்துறை வீதி நல்லூர் ஆலயத்துக்கருகாக வந்து , முத்திரைச் சந்தை நோக்கித் திரும்பும் பகுதியில் தென்னந்தோப்பொன்றிருந்தது (சங்கிலியன் வீதிக்கும், யாழ் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் மேற்குத்திசையில்) , பருத்தித்துறை வீதியை நோக்கிய அவ்வளவுப் பகுதியில்  பண்டாரமாளிகை என்றொரு  தூணுமிருந்தது.

அதற்கண்மையில்  சிறியதொரு முகப்புடன் கூடிய வைரவர் சிலையொன்றுமிருந்தது. அதில் 'இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மன்னர் வழி காத்துப் பூஜித்த நல்லை தேரடிப் பதியுரை பண்டார மாளிகை வாசல் ஶ்ரீ பைரவர் ஆலய ஆதிமூலம் உள்ளே' என்னும் வசனங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.  அதை விபரிக்கும் புகைப்படமிது. என் பெட்டிக்கமராவால் அப்போது எடுக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படம். கூகுள் வரைபடம் மூலம் பார்த்ததில் இதற்கான அடையாளத்தையே காண முடியாத அளவுக்கு அப்பகுதியே மாறியிருப்பதை அவதானிக்க முடிந்தது. யாராவது அப்பகுதியில் இப்போதும் இச்சிலையுள்ளதா என்பதை அறிந்து கூற முடியுமா? பண்டாரமாளிகை தூணையும் நான் கூகுள் வரைபடங்களில் காணவில்லை.

•Last Updated on ••Wednesday•, 14 •October• 2020 10:12•• •Read more...•
 

விரைவில் மீண்டு வருக கே.எஸ்.எஸ் அவர்களே!

•E-mail• •Print• •PDF•

கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன்

தற்போது உடல்நலமற்றிருக்கும் கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் விரைவில் பூரண சுகம் பெற்று, அதே துடிப்புடன் , உணர்வுடன் மீண்டு வந்திட வேண்டுகின்றேன்; வேண்டுவோம்.

கடந்த அறுபது வருடங்களாகக் கலை, இலக்கிய விமர்சனங்கள், குறிப்புகள் எழுதி வரும் கே.எஸ்.எஸ் அவர்கள் ஆரம்பத்தில் சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

சுதந்திரன் பத்திரிகையின் சிறுவர் பகுதியில் மாணவனாக எழுதிய காலத்திலிருந்து இன்று வரை தளராது ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதிவரும் அவராற்றல் எப்போதுமென்னைப் பிரமிக்க வைப்பது.

'பதிவுகள்' இணைய இதழிலும் தொடர்ச்சியாக அவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

மாணவனாக நான் கொழும்பு நகரிலுள்ள 'அமெரிக்கன் சென்ட'ருக்குச் சென்ற காலகட்டத்தில் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த கே.எஸ்.எஸ் அவர்களைப் பிரமிப்புடன் பார்த்ததுண்டு. அவரே பின்னர் பதிவுகள் இணைய இதழில் விரும்பி எழுதியபோது மகிழ்ந்தேன். இன்றவர் முகநூலில் நண்பராகவுமிருக்கின்றார். அது மேலும் மகிழ்ச்சியைத் தருவது. இதனைச் சாத்தியமாக்கிய இணையத்துக்கு நன்றி.

•Last Updated on ••Friday•, 09 •October• 2020 07:30•• •Read more...•
 

வாசிப்பும் , யோசிப்பும் 362: மலர் உதிர்ந்தது! அட்டைப்பட ஓவியம் தவறான சொற்பிரயோகமா?

•E-mail• •Print• •PDF•

மலர் உதிர்ந்தது!

பொன்னியின் செல்வன் நாவல்பொன்னியின் செல்வன் நாவலின் மையக்கரு பொன்னியின் செல்வனின் மகுடத்தை மதுராந்தகருக்கு விட்டுக்கொடுத்த தியாகத்தை ஒட்டியதாகவிருந்தாலும் நாவலின் நாயகன் பொன்னியின் செல்வனல்லன். வாணர்குலத்து வீரனான வந்தியத்தேவனே நாவலின் நாயகன். நாவல் வந்தியத்தேவன் தன் நண்பன் கந்தமாறனின் தந்தையான கடம்பூர் சம்புவரையரின் அரண்மனையை நோக்கிச் செல்வதுடன் ஆரம்பமாகும் . இடையில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் அவர்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. நாவலின் இறுதி மீண்டும் வந்தியத்தேவன் கந்தமாறனுடன் சந்திப்பதில் முடிவுறும்.  கந்தமாறனின் தங்கையான மணிமேகலை வந்தியத்தேவன் மீது மிகுந்த காதல் கொள்கின்றாள். அதன் காரணமாகச் சித்தப்பிரமை மிக்கவளாகின்றாள்.

இறுதியில் வந்தியத்தேவனின் அரவணைப்பில் அவன் மடியில் உயிர் துறக்கின்றாள். நாவலில் வாசிப்பவர் உணர்வுகளை அதிரவைக்கும் துயரச் சம்பவம் மணிமேகலையின் மரணம். ஐந்தாம் பாகத்தின் தொண்ணூற்றோராவது அத்தியாயத்தில் முடிவுறும் நாவலின் அத்தியாயத்தலைப்பு : மலர் உதிர்ந்தது.  அந்த மலர் மணிமேகலை. மணிமேகலையின் மறைவினை வெளிப்படுத்தும் ஓவியர் வினுவின் ஓவியத்தையும் , நாவலின் இறுதிப்பக்கத்தையும் இங்குள்ள பக்கங்களில்  காணலாம். தமிழர்தம் இலக்கியங்கள் காதலையும், வீரத்தையும் (அகமும், புறமும்) சிறப்பித்துக்கூறுகின்றன. பொன்னியின் செல்வனும் காதலையும், வீரத்தையும் சிறப்பித்துக் கூறுமொரு நவகால உரைநடைக் காவியமாகவே நான் கருதுகின்றேன். வந்தியத்தேவன் - குந்தவை காதல், வானதி - இராஜராஜன் காதல், மணிமேகலை - வந்தியத்தேவன் காதல், மந்தாகினி - சுந்தரசோழர் காதல் என்று மானுடர் பலரின் காதலைச் சிறப்பித்துக்கூறும் பொன்னியின் செல்வன் அக்காலத் தமிழரின் வீரத்தையும் சிறப்பித்துக்  கூறுகின்றது. இதனால்தான் நாவல் தமிழர்கள் மத்தியில் தலைமுறைகள் கடந்து இன்றும் விருப்புடன் வாசிக்கப்படுகின்றது.

என்னைப்பொறுத்தவரையில் சிலப்பதிகாரம் , மணிமேகலை போல் தமிழர் வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நிற்கப்போகுமொரு உரைநடைக்காப்பியம்தான் கல்கியின் பொன்னியில் செல்வன். மக்களை அடையாத எந்தவொரு இலக்கியமும் நிலைத்து நிற்காது. பொன்னியின் செல்வன் விமர்சகர்கள் பலரின் புலமைத்துவ எதிர்ப்புகளையும் மீறி மக்களைச் சென்றடைந்த உரைநடை இலக்கியம். மக்கள் இலக்கியம் நிலைத்து நிற்கும்.

•Last Updated on ••Wednesday•, 07 •October• 2020 00:36•• •Read more...•
 

தொடர் நாவல்: மனப்பெண் (5)

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் ஐந்து:  நினைவில் நிறைந்தவள்!

தொடர் நாவல் : மனப்பெண் (4) VNGவீ்டு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த மணிவண்ணனின் நினைவெல்லாம் அடுத்து என்ன நடக்கும் என்பதிலேயே இருந்தது. சந்திரமதி அக்கடிதத்தைப் படித்திருப்பாளோ? ஒருவேளை காந்திமதியிடம் அவன் அவளுக்குக் கடிதம் எழுதிய விடயத்தைக் கூறியிருப்பாளோ? இவ்விதமான சிந்தனைகளில் மூழ்கிக்கிடந்த அவன் தான் அவசரப்பட்டு விட்டானோ என்றும் எண்ணினான். ஒருவன் ஒருத்தியை விரும்புவது மனித வாழ்க்கையில் மிகவும் சாதாரணமான ஒரு விடயம். அதனை வெளிப்படுத்துவதுக்குக் கூட எவ்வளவு தடைகள். அதனையொரு பாவ விடயமாக, ஒழுங்கற்ற நடத்தையாக உருவகித்து வைத்துள்ளதே இச்சமுதாயமென்று   எண்ணமொன்று எழுந்தோடியது. அதே சமயம் இன்னுமொரு எண்ணமும் எழுந்தது. பதின்ம வயதுப்பருவம் இவ்விதமான உணர்ச்சிக்கொந்தளிப்பு நிறைந்த பருவம். இப்பருவம் தாய், தந்தையரின் அரவணைப்பில், ஆதரவில் கழியும் பருவம். வாழ்க்கையில் தனித்து நிற்கும் நிலையை அடைந்த பருவமல்ல. இப்பருவத்தில் இக்காதல் உணர்வுகள் அவசியம்தானா என்றும் எண்ணினான். உணர்வுகள் அவசியமென்றும் எண்ணிய அவன் அவை அவசியமானவைதாம். பருவத்தின் தேவைகளிலொன்றுதான். ஆனால் அதே சமயத்தில் இக்காதல் உணர்வுகள் கல்வியைத் தடுக்கும் வகையில் அமையக் கூடாது. தனித்து நின்று வாழ்வை எதிர்நோக்கும் நிலை வரும் வரையில் காதலிப்பவர்கள் காத்து நிற்க வேண்டும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். உண்மையான காதலென்றால் காத்து நிற்கும் தன்மை மிக்கதாக அமையும். அவ்விதம் காத்து நிற்க முடியாத காதல் உண்மையானதாக இருக்க முடியாது. அவ்விதம் காத்து நிற்க முடியாதென்றால் , அவ்விதம் காத்து நிற்கையில் எதிர்ப்படும் தடைகளை உறுதியுடன் எதிர்கொண்டு வெற்றியடையும் காதலே உண்மையானது என்றும் எண்ணினான். ஆனால் உண்மையான  காதல் கூட சில சந்தர்ப்பங்களில் கடமைகளின் காரணமாக, உறவுகளின் மீதான பாசத்தின் காரணமாக நிறைவேறாமல் போய்விடும் சாத்தியங்களுள்ளன என்பதையும் அவன் நினைத்துப்பார்த்தான்.

இவ்விதமான எண்ணங்களின் மத்தியில் அவன் சந்திரமதி மீதான தன் காதல் உணர்வுகளை எண்ணிப்பார்த்தான். அவள் அவனது காதற் கோரிக்கைக்கு அனுமதியளிக்கும்  பட்சத்தில் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன? அவன் அவளிடம் தான் படித்து முடிக்கும் வரையில் , அவள் படித்து முடிக்கும் வரையில், இருவரும் தனித்து வாழ்க்கையை எதிர்நோக்கும் நிலை வரும் வரையில் காத்து நிற்க வேண்டும். இதற்கு இருவருமே சம்மதிக்க வேண்டும். இவ்விதமான முடிவினை இருவருமே எடுக்க வேண்டும். இவ்விடயத்தில் இருவருக்கும் தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும்.

•Last Updated on ••Wednesday•, 07 •October• 2020 00:50•• •Read more...•
 

தொடர் நாவல் : மனப்பெண் (4)

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் நான்கு:  காளையின்  காதல் உணர்வுகள்!

தொடர் நாவல் : மனப்பெண் (4) “யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.“- செம்புலப்பெயனீரார் ( குறுந்தொகை -40) -

மணிவண்ணனுக்கு ஒரு கணம் தன்மேலேயே வெறுப்புத் தோன்றியது. எவ்வளவு தூரம் அவன் திட்டமிட்டிருந்தான் தன் கடிதத்தைச் சந்திரமதியிடம் கொடுப்பதற்காக. அவனது திட்டம் அவனது ஆழ்ந்த தூக்கத்தினால் பிழைத்துப்போய்விட்டதே. அடுத்தநாள் ஞாயிறு டியூசன் வகுப்பில்லை. இனி அடுத்த வகுப்பு திங்கள் காலையில்தான். அதுவரை காத்திருக்க வேண்டும். இம்மாதத்துடன் டியூசன் வகுப்பும் முடிந்து விடும்.அதன் பிறகு அவளைக் காண்பதற்குக் கூடச் சந்தர்ப்பங்கள் வாய்க்குமோ இல்லையோ தெரியாது. இந்நிலையில் எப்படியாவது அவளது பதிலை அறிந்து விடவேண்டுமென்று முடிவு செய்துக் கவனமாகப்போட்ட திட்டம் இப்படிப்பிழைத்துப்போய்  விட்டதேயென்று மனம் எண்ணியது. மறுகணம் எல்லாமே நல்லதுக்காகத்தானிருக்கும் என்று எப்பொழுதும் இருப்பினை ஆரோக்கியமாக எதிர்கொள்ளும் அவனது மனது எண்ணி அவனை ஆறுதல்படுத்தியது.

அன்று முழுவதும் அவனால் வேறெதிலும் கவனத்தைச் செலுத்த முடியாமலிருந்தது. மனம் நிறைய அவளே நிறைந்திருந்தாள். அவனுக்கு அவனையெண்ண எண்ணச் சிறிது வெறுப்பாகக்கூடவிருந்தது. எதற்காக இக்காதல் உணர்வுகள் மனிதரைப் பிடித்து ஆட்டி வைக்கின்றன என்றொரு எண்ணமும் தோன்றியது. மானுட வாழ்க்கை பல்வகை உணர்வுகளாலும் பின்னப்பட்டதொன்று. வர்க்க வித்தியாசங்களற்று, வர்ண வித்தியாசங்களற்று, வயது வித்தியாசங்களற்று மனிதரை ஆட்டிப்படைக்கும் முக்கியமான மானுட உணர்வாகக் காதலைக்  கூறலாம். குறிப்பாகத் தமிழரைப்பொறுத்து காதலும், வீரமும்தாமே அவர்தம் உணர்வுகளில் முக்கிய இடங்களைப் பிடித்திருக்கின்றன. சங்க இலக்கியங்களில் அகமும் (காதலும்) புறமும் (வீரமும்) தாமே நிறைந்து கிடக்கின்றன. இயற்கையில் உயிரினங்களின் இருப்புக்கு இனப்பெருக்கம் முக்கியமாகவிருக்கின்றது, அதற்காக இயற்கை உருவாக்கிவைத்த உணர்வுதானே இக்காதல். காமத்தின்மூலம் உயிர்கள் இனப்பெருக்கம் செய்து தம்மை நிலைநிறுத்துவதற்கு ஒரு சாதனமாக விளங்கும்  உணர்வுதானே இந்தக் காதல். ஆனால் அப்படியும் கூறுவதற்கில்லை. காதலைக் காமத்துடன் ஒன்றாக வைத்து எண்ணமுடியாது. காதலில் காமம் கலந்திருந்தாலும் , அவற்றில் முன்னிலை வகிப்பது காதலே. காதலற்ற காமம் உடற்பசிக்கான உணவு மட்டுமே.

•Last Updated on ••Saturday•, 26 •September• 2020 23:04•• •Read more...•
 

எழுத்தாளர் சாண்டில்யன் நினைவாகச் சில குறிப்புகள்!

•E-mail• •Print• •PDF•

சாண்டில்யன்என் வெகுசன எழுத்து வாசிப்பில் எழுத்தாளர் சாண்டில்யனுக்கும் (இயற்பெயர் பாஷ்யம்) முக்கியமானதோரிடமுண்டு. என் பால்ய பருவத்தில் வீட்டில் அப்பா கல்கி, விகடன், அம்புலிமாமா, கலைமகள், தினமணிக்கதிர், மஞ்சரி என்று தமிழகச் சஞ்சிகைகள் பலவற்றை வாங்கினார். ஆனால் குமுதம் சஞ்சிகையை மட்டும் வாங்கவில்லை. அக்காலத்தில் சாண்டில்யனின் நாவல்கள் குமுதம் சஞ்சிகையிலேயே வெளியாகிக்கொண்டிருந்தன. அதனால் கல்கி, ஜெகசிற்பியன், அகிலன் , நா,பார்த்தசாரதி, மீ.ப.சோமு போன்ற எழுத்தாளர்களின் வரலாற்று நாவல்களையறிந்திருந்த எனக்குச் சாண்டில்யனின் வரலாற்று நாவல்களை அறிந்திருக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

அச்சமயத்தில் வவுனியா மகாவித்தியாலயத்தில் என்னுடன் படித்துக்கொண்டிருந்த ரிஷாங்கன் என்னும் மாணவரின் வீட்டில் குமுதம் வாங்கிக்கொண்டிருந்தார்கள். அவர் மூலமே எனக்குக் குமுதம் சஞ்சிகை முதலில் அறிமுகமாகியது. அதில் வெளியாகிக்கொண்டிருந்த சித்திரக்கதைத்தொடரான 'கடற்கன்னி' என்னை மிகவும் கவரவே அப்பாவிடம் குமுதம் சஞ்சிகையையும் வாங்குமாறு கூறினேன். அப்பாவும் வாங்கத்தொடங்கினார். அப்பொழுது குமுதத்தில் சாண்டில்யனின் ராஜமுத்திரை வெளியாகிக்கொண்டிருந்தது. ஏற்கனவே முதற்பாகம் முடிந்து இரண்டாவது பாகம் தொடங்கியிருந்தது. இரண்டாம் பாகத்தில் இந்திரபானு என்னும் தளபதியே நாயகன். முதற்பாகத்தில் சேரமன்னன் வீரரவியால் கடத்தப்பட்ட அவனது காதலியான பாண்டிய ராஜகுமாரியை மீட்பதில் பெரும்பங்கு வகித்தவன் இந்திரபானு. நான் வாசித்த முதலாவது சாண்டில்யனின் நாவல் ராஜமுத்திரை நாவலின் இரண்டாம் பாகம்தான். வெகுகாலத்துக்குப் பின்னரே ராஜமுத்திரையின் முதற்பாகத்தைப் படித்தேன்.

அதன் பின்னர் ராணிமுத்து பிரசுரங்களாக வெளியான சாண்டில்யனின் ஜீவபூமி, உதயபானு, இளையராணி , மஞ்சள் ஆறு ஆகிய நாவல்களை வாசித்தேன். இவை பெரிய நாவல்களல்ல. இவற்றில் ஜீவபூமி என்னை மிகவும் கவர்ந்த நாவல். அதில்வரும் ராஜபுதனத்து வீரனான ரதன் சந்தாவத் சலும்பரா என்னை மிகவும் கவர்ந்த சாண்டில்யனின் நாயகர்களில் ஒருவர்.

•Last Updated on ••Sunday•, 13 •September• 2020 14:09•• •Read more...•
 

மகாகவி பாரதியார் நினைவாக. ( பாரதியார் நினைவு தினம் செப்டெம்பர் 11)

•E-mail• •Print• •PDF•

மகாகவி பாரதியார்"போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ?"
- பாரதியார் -

என்னை மிகவும் கவர்ந்த, பாதித்த இலக்கியவாதியென்றால் முதலில் நான் கருதுவது மகாகவி பாரதியாரைத்தான். முரண்பாடுகளற்ற மனிதர்கள் யாருளர். பாரதியிடமும் முரண்பாடுகளுள்ளனதாம். ஆனால் அவை அவரது அறிவுத் தாகமெடுத்த உள்ளத்தின் கேள்விகளின் பரிணாம வரலாற்றின் விளைவுகள்.

குறுகிய கால வாழ்வினுள் அவர் மானுட வாழ்வின் அனைத்து விடயங்களைப்பற்றியும் சிந்தித்தார். கேள்விகளையெழுப்பினார். அவற்றுக்குரிய விடைகளைத் தன் ஞானத்துக்கேற்ப அறிய முயற்சி செய்தார். இவற்றைத்தாம் அவரது எழுத்துகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

பாரதியாரின் எழுத்துகளிலிருந்து நான் அறிந்த , இரசித்த, எனையிழந்த முக்கிய விடயங்களாகப்பின்வருவனவற்றைக் கூறுவேன்:

1. மானுட வாழ்க்கையைப்பற்றிய, மானுட இருப்பு பற்றிய சிந்தனைகள்.
2. மானுட வாழ்வின் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் பிரச்சினைகள் பற்றிய அவற்றுக்கான தீர்வுகள் பற்றிய சிந்தனைகள்.
3. மானுட  இருப்பு பற்றிய, மானுட சமூக, அரசியல் மற்றும் பொருளியல் பற்றிய கோட்பாடுகள் பற்றிய சிந்தனைகள்.
4. இயற்கை பற்றிய , பூவுலகின் ஏனைய உயிர்கள் பற்றிய சிந்தனைகள்.
5. தமிழ் மொழி , தமிழ் இனம் பற்றிய , சக மானுடர் பற்றிய சிந்தனைகள்.
6. மானுட உணர்வுகள் பற்றிய காதல், இயற்கையை இரசித்தல் போன்ற சிந்தனைகள்
7. மானுட ஆளுமைகள் பற்றிய சிந்தனைகள்.
8. மானுட வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு நடைபோடுதல் பற்றிய சிந்தனைகள்
9. பிரபஞ்சம் பற்றிய அவரது சிந்தனைகள்

இவற்றை முக்கியமானவையாக கூறுவேன்.

•Last Updated on ••Sunday•, 13 •September• 2020 12:07•• •Read more...•
 

சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் (Environmental Sustainability) பற்றிய நகரமைப்பு வல்லுநரும், கட்டடக்கலைஞருமான பியால் சில்வாவின் உரை!

•E-mail• •Print• •PDF•

இலங்கையின் நகர அமைப்பு நிபுணர்கள் சபையும், இலங்கைப் பசுமைக் கட்டடச் சபையும் இணைந்து பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் 25.1.2014 நடாத்திய 'பசுமையினூடு பெறுமதியை உருவாக்குதல்' என்னும் மாநாட்டில் கட்டடக்கலைஞரும் ,நகர அமைப்பு வல்லுநருமான திரு/. பியால் சில்வா (Piyal Silva) அவர்களின் உரையினைத் தற்செயலாக 'யு டியூப்'பில் கேட்டேன்.இலங்கையின் நகர அமைப்பு நிபுணர்கள் சபையும், இலங்கைப் பசுமைக் கட்டடச் சபையும் இணைந்து பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் 25.1.2014 நடாத்திய 'பசுமையினூடு பெறுமதியை உருவாக்குதல்' என்னும் மாநாட்டில் கட்டடக்கலைஞரும் ,நகர அமைப்பு வல்லுநருமான திரு/. பியால் சில்வா (Piyal Silva) அவர்களின் உரையினைத் தற்செயலாக 'யு டியூப்'பில் கேட்டேன். முதலில் எனக்கு மகிழ்ச்சியாகவிருந்தது. காரணம் இவர் என்னுடன் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் படித்த சக மாணவர்களிலொருவர். இவர் சூழற் பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் என்னும் (Environmental Sustainability) தலைப்பில் அம்மாநாட்டில் உரையினையாற்றினார். அபிவிருத்தி என்னும் போர்வையில் உலகம் முழுவதும் சூழற் பாதுகாப்பு சீரழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இவ்வுரை முக்கியமானதென்பதால் அவ்வுரையின் முக்கிய அம்சங்களை இங்கு குறிப்பிடலாமென்று கருதுகின்றேன்.

இவர் தனது உரையினை மேற்படி 'சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல்; என்னும் கோட்பாடு பற்றிய கேள்வியொன்றுடன் ஆரம்பித்தார். நகர்மயமாக்கல் மிகுந்த வேகத்துடன் முன்னெடுக்கப்படுகையில் நாம் அதனால் ஏற்படும் சூழல் விளைவுகளைக் கண்டுகொள்வதில்லை. பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. அவற்றாலேற்பட்ட விளைவுகளை அனுபவிக்கத்தொடங்கி விட்டோம். இப்போது ஒவ்வொருவரும் அதனைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். கடந்த ஐந்தாறு வருடங்களில் பல்வேறு இயற்கை விளைவுகளை (சுனாமி, சூறாவளி போன்ற)  நாம் அனுபவித்திருக்கின்றோம். இவ்வகையான விளைவுகள் தற்போது அடிக்கடி நிகழ்கின்றன. தற்போது சூழலைப்பாதுகாப்பதென்பது ஒருவகை 'ட்ரென்ட்'  ஆகிவிட்டது. எல்லோரும் சூழலின் நண்பர்களாகிவிட்டார்கள். பசுமைக் கட்டடம், பசுமை 'மோல்' .என்று பலவற்றைக் கேட்டிருக்கின்றோம். இப்போக்கானது வெறும் ஒப்பனையானதா? அல்லது நாம் உண்மையிலேயே சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் பற்றிய உண்மையான விடயங்களை அறிந்திருக்கின்றோமா? அல்லது இவ்விடயத்துடன் எம்மை அடையாளப்படுத்துவதுடன் நின்று விடுகின்றோமா" குறிப்பாக உலகமயமாக்கல் என்னும் இன்றைய நிலையில் எல்லாமே இறுதியில் பணத்தில்தான் வந்து முடிகின்றன. ஆனால் எவ்வளவு கவனத்தை நாம் இவ்விடயங்களில் காண்பிக்கின்றோம்.

•Last Updated on ••Sunday•, 06 •September• 2020 13:14•• •Read more...•
 

தொடர் நாவல்: மனப்பெண் (3)

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் மூன்று: நித்திராதேவியின் தழுவலில் தன்னை  மறந்த காளை!

தொடர் நாவல்: "மனப்பெண் " - வ.ந.கிரிதரன் -மணிவண்ணன் வீட்டை நெருங்கியபோது இரவு மணி  ஒன்பதைத்தாண்டி விட்டிருந்தது. முழு நகரும் முழுநிலவின் தண்ணொளியில் குளித்துக்கொண்டிருந்தது.

"டேய் கேசவா, வீட்டை வந்து கொஞ்ச நேரம் கதைச்சுட்டுப் போயேன். அம்மா தோசை சுட்டி வைத்திருப்பா.அதையும் கொஞ்சம் சாப்பிட்டிடுப் போ"

மணிவண்ணன் இவ்விதம் கேட்கவும் கேசவனுக்கும் அது சரியென்று தோன்றியது. மணிவண்ணனின் புத்தக அலமாரியிலிருந்தும் மேலும் சில நூல்களை எடுக்கலாமென்றும் தனக்குள் எண்ணிக்கொண்டான். இதற்கிடையில் நண்பர்களிருவரும் வீட்டினுள் நுழைவதைக் கண்ட மணிவண்ணனின் அம்மா "தோசை சுட்டு சாப்பாட்டு மேசையிலை மூடி வைச்சிருக்கு. இரண்டு பேரும் எடுத்துச் சாப்பிடுங்கோ. இன்னும் தேவையென்றால் சொல்லுங்கோ. சுட்டுத்தாறன்" முன் கூடத்துக்குச் சென்று தனது சாய்வு நாற்காலியில் சாய்ந்தாள். அருகிலிருந்த மேசையில் ஏதோ படித்துக்கொண்டிருந்தாள் இந்திரா.

"ஓமம்மா.தேவையென்றால் சொல்லுறன். இல்லையென்றால் நானே சுட்டுச் சாப்பிடுறன்" என்று பதிலுக்குக் கூறியபடியே மணிவண்ணன் கேசவனை அழைத்துக்கொண்டு முன் விறாந்தையின் இடது பக்கத்திலிருந்த தனது அறைக்குள் சென்றான். அங்கு அவனுக்கென்றொரு புத்தக அலமாரியிருந்தது. நூல்கள், சஞ்சிகைகளில் வெளியாகிப் 'பைண்டு; செய்யப்பட்ட நாவல்கள் அதில் இடம் பிடித்திருந்தன.

"கேசவா, ஏதாவது குடிக்கக் கொண்டு வரட்டா?"

"எனக்குமொரு கோப்பி போட்டுக்கொண்டு வாடா மணி'

மணிவண்ணன் கோப்பிக்கு அடிமையாகிவிட்டிருந்தான். கேசவனும் அவனைப்போல் ஒரு கோப்பி பைத்தியம்தான். மணிவண்ணன் கோப்பி போட்டுக்கொண்டு வரச் சென்ற இடைவெளியைப்பாவித்து கேசவன் மணிவண்ணனின் புத்தக அலமாரியைத் துலாவத்தொடங்கினான். கல்கியில் வெளியான நாவல்கள் பல அந்த அலமாரியில்  இடம் பிடித்திருந்தன. அவனுக்குப் பிடித்த ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்' , கல்கியின் 'பொன்னியின் செல்வன்' , காண்டேகரின் நாவல்கள் எனப் பல நாவல்களிருந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றைக் கேசவன் ஏற்கனவே வாசித்திருந்தான்.

•Last Updated on ••Wednesday•, 07 •October• 2020 00:51•• •Read more...•
 

கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்!

LOCKDOWN LYRICS - TAMIL POEMS IN TRANSLATION

கொரோனா ஊரடங்குச் சூழல் அனுபவங்களைப் பதிவு செய்யும் 103 தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியன் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு டிஸ்கவரி புக் பலஸ் வெளியீடாக LOCKDOWN LYRICKS என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. அத்தொகுப்பில் இக்கவிதையின் மொழிபெயர்ப்பும் இடம் பெற்றுள்ளது.

கொரோனா ஊரடகுச் சூழலால் 'டொரோண்டோ' வூட்பைன் குளக்கரையருகில் மனிதர்களின் நடமாட்டம் குறைந்த நிலையைப் பயன்படுத்தி, நரியொன்று தனக்கொரு வளையமைத்துக் குட்டிகளையீன்று வாழத்தொடங்கியதை இம்மாநகரத்து மக்கள் வியப்புடனும், அன்புடனும் பார்த்தார்கள். மான்கள் நகரின் மையத்தில் நடமாடின. அந்நரிக்குடும்பத்தின் புகைப்படத்தையே இங்குள்ள கவிதையுடன் காண்கின்றீர்கள். அதுவரை பதுங்கிக் கிடந்த மிருகங்களெல்லாம் நகரத்தின் மையத்துக்கே வரத்தொடங்கியிருந்தன. உலகின் பல பகுதிகளில் இவ்விதமான காட்சிகளைக் காண முடிந்தது. கொரோனா என்றால் எனக்கு அந்த நரிக்குடும்பமும் நினைவுக்கு வரும். அக்குடும்பம் ஓரடையாளம். இக்கவிதையிலும் அந்நரிக்குடும்பத்தைப் பதிவு செய்துள்ளேன்.


கவிதை: கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்!

- வ.ந.கிரிதரன் -

மாநகர் துஞ்சும் நள்ளிரவில்
வெளியே வந்தேன்.
நுண்கிருமியின் தாக்கம்.
சுருண்டு கிடந்தது மாநகர்
உந்துருளியில் நகர்வலம்
வந்தாலென்ன? வந்தேன்.
வாகனவெள்ளம் பாயும் நதிகள்
வற்றாதவை வற்றிக்கிடந்தன.
கட்டடக்காட்டில் இருள்
கவிந்து கிடந்தது.
நிசப்தம் நிலவியது நகரெங்கும்.

•Last Updated on ••Monday•, 31 •August• 2020 02:21•• •Read more...•
 

இலங்கையின் முதலாவது பெண் கட்டடக்கலைஞர் மினட் டி சில்வா (Minnette de Silva): அவரது வாழ்வும் , பணியும் பற்றியொரு நோக்கு!

•E-mail• •Print• •PDF•

Minnette De Silvaஇலங்கையின் பயிற்றுவிக்கப்பட்ட முதலாவது  பெண் கட்டடக்கலைஞர் மின்னட் டி சில்வா உலகின் கவனத்துக்குள்ளாகிய முக்கியமான பெண் கட்டடக்கலைஞர். சுதந்திரமடைந்த இலங்கையின் கட்டடக்கலையின் முன்னோடியாகவும் கருதப்படுபவர்.  1948இல் முடிக்குரிய பிரித்தானிய கட்டடக்கலை நிறுவனத்தின் (Royal Institute of British Architects - RIBA)(தோழராகத் (Associate) தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஆசிய நாட்டுப் பெண் என்னும் பெருமையும் இவருக்குண்டு. உலகக் கட்டடக்கலைத் துறையில் இவரது முன்னோடிப்பங்களிப்பு 'வெப்பமண்டலப் பிரதேச நவீனத்துவம்' ('regional modernism for the tropics') என்னும் கட்டடக்கலைப்போக்கிலாகும்.

பெப்ருவரி 1, 1918இல் கண்டியில் பெளத்தச் சிங்களத் தந்தைக்கும் (ஜோர்ஜ் ஈ.டி,சில்வா), கிறித்தவ பேர்கர் தாய்க்கும் (ஆக்னெஸ் நெல்) பிறந்த கலப்பினக் குழந்தை இவர். தந்தையார் பிரபல்யமான கண்டிய  அரசியல்வாதி.  இலங்கைத் தேசியக் காங்கிரஸின் தலைவராகவும், அரசில் உடல்நலத்துறை அமைச்சராகவும்  விளங்கியவர். இவரது குடும்பத்தில் மூன்று குழந்தைகள்.  மின்னட் டி சில்வாவே கடைசிக்குழந்தை. இவரது சகோதரி அனில் டி சில்வா ஒரு கலை விமர்சகரும் , வரலாற்றாய்வாளராகவும் விளங்கியவர். சகோதரரான ஃப்ரெடெரிக் டி சில்வா வழக்கறிஞர். கண்டியின் முதல்வராகவும் விளங்கியவர். பின்னர் இலங்கைப்பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த அவர் பிரான்சுக்கான இலங்கைத்தூதுவராகவும் பின்னாளில் பதவி வகித்தார்.

மின்னட் டி சில்வாவின் முக்கியமான பங்களிப்புகளாகக் கட்டடக்கலைத்துறைப்பங்களிப்பு, கட்டடக்கலை வரலாற்று ஆய்வுப்பங்களிப்பு, இதழியற் பங்களிப்பு , சமூக, அரசியற் பங்களிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இங்கிலாந்தில் புனித  மேரிக் கல்லூரியில் படிப்பை முடித்துக்கொண்டு திரும்பிய மின்னட் டி சில்வா கொழும்பில் கட்டடக்கலைத்துறையில் பயிற்சியைப்பெற முடியாததால் , பம்பாயிலுள்ள 'Sir Jamsetjee Jeejebhoy' கலைக்கல்லூரியில் தன் கல்வியைத் தொடர்வதற்காகச் சென்றார். ஆனால் அவர் மெட்ரிகுலேசன் சித்தியடையாததால்  அவர் ஆரம்பத்தில் பம்பாயை மையமாகக்கொண்டியங்கிய  மிஸ்ட்ரி & பெட்வர் (Mistri and Bhedwar) என்னும் நிறுவனத்தில் கலைத்துறையில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அங்கு பயிற்சி பெறுகையில் பெரின் மிஸ்ட்ரி (Perin Mistry)  மற்றும் அவரது நண்பரான மினூவுடன் (Minoo) நட்பையேற்படுத்தி கட்டடக்கலையினைப் போதிக்கும்  கல்வி நிறுவனமொன்றில் பிரத்தியேக வகுப்புகளைக் கட்டடக்கலைத்துறையிலெடுத்தார். இதன் பின்னரே 'Sir Jamsetjee Jeejebhoy' கலைக்கல்லூரியில் தன் கல்வியைத்தொடர்ந்தார்.

•Last Updated on ••Friday•, 28 •August• 2020 10:51•• •Read more...•
 

அறிமுகம்: 'சென்னையும் நானும்' எஸ்.ராமகிருஷ்ணனின் சென்னை மாநகர் பற்றிய யு டியூப் அனுபவப்பதிவுகள்.

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்என் வாழ்க்கையைச் சிறிது சிந்தித்துப்பார்த்தால் என் வாழ்வின் பெரும்பகுதி மாநகரங்களில்தாம் கழிந்திருக்கின்றது. கொழும்பு, நியூயார்க், 'டொராண்டோ' இவற்றுடன் வடக்கின் யாழ்ப்பாணம். யாழ்ப்பாணம் மாநகரில்லாவிட்டாலும், வடக்கின் முக்கிய நகர். என் நியூயார்க் மாநகர வாழ்க்கையை என் நாவலான 'குடிவரவாளன்' நாவலில் முழுமையாகப்பதிவு செய்துள்ளேன். 'அமெரிக்கா' சிறு நாவலும் நியூயோர்க் நகரின் இன்னுமோர் இருண்ட பக்கத்தைக் காட்டி நிற்கிறது. 'டொரோண்டோ' நகர வாழ்க்கையை நாவல்களில் பெரிதாகப்பதிவு செய்யவில்லையென்றாலும், சிறுகதைகள் பலவற்றில் பதிவு செய்துள்ளேன். 'டொரோண்டோ' மாநகரின் மனிதர்கள் பலவற்றை, பகுதிகள் பலவற்றை அச்சிறுகதைகளில் நீங்கள் காணலாம்.

எப்பொழுதுமே பெருநகரத்து மானுடர்தம் வாழ்க்கையை, அவர்கள்மேல் அம்மாநகர்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை. அவற்றை அவர்கள் எதிர்கொள்ளும் விதங்களை மையமாகக்கொண்ட புனைகதைகளை வாசிப்பதில் எனக்குப்பெருவிருப்பு. ஃபியதோர் தஸ்தயேவ்ஸ்கியின் 'குற்றமும், தண்டனையும்' அத்தகையதொரு நாவல். ருஷ்ய மாநகரமான புனித பீட்டர்ஸ்பேர்க் மாந்தர்களை, அம்மாந்தர்களின் மேல் அம்மாநகர் ஏற்படுத்தும் தாக்கங்களை விபரிக்கும் நாவலது.

இவ்விதமாக என்னைக் கவர்ந்த இன்னுமொரு மாநகர் சென்னை. ஆரம்பத்தில் வெகுசன இதழ்களினூடு வெளியான புனைகதைகளில் ஊறிக்கிடந்தவேளை அவற்றினூடு என்னை ஆட்கொண்ட நகர் அது. முதலில் அம்மாநகரின் என்னை ஆட்கொண்ட பகுதியாக சென்னை மெரினாக் கடற்கரையையே குறிப்பிடுவேன். அதற்குக் காரணம் எழுத்தாளர் மணியன். அதற்கு முக்கிய காரணம் அவரது அதிகமான நாவல்களில் சென்னை மெரினாக் கடற்கரையிருக்கும். சென்னையின் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய பொழுதுபோக்கு இடமே அதுதான். மணியனின் 'காதலித்தால் போதுமா' வில் மெரீனாவில் சுண்டல் போன்ற உணவு வகைகளை விற்று வாழ்வைத்தக்க வைத்துக்கொள்ளும் மானுடர்களைப்பற்றி விபரிக்கப்பட்டிருக்கும். 'உண்மை சொல்ல வேண்டும்' நாவலில் காதலர்கள் சந்திக்குமிடமாக விபரிக்கப்பட்டிருக்கும், 'காதலித்தால் போதுமா' நாவலையும் இவ்வகைக்குள்ளும் அடக்கலாம்.

•Last Updated on ••Sunday•, 23 •August• 2020 19:43•• •Read more...•
 

தொடர் நாவல்: மனப்பெண் (2)

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் இரண்டு: காதல் கடிதம்...

தொடர் நாவல்: "மனப்பெண் " - வ.ந.கிரிதரன் -அன்று மாலை பாடசாலை விட்டு வீடுதிரும்பிக்கொண்டிருக்கையில் நண்பன் கேசவன் கேட்டான்

"என்ன மணி இன்று முழுக்க நானும் கவனித்துக்கொண்டுதானிருக்கின்றன் உன்ர  முகமே சரியாயில்லையே. ஏதாவது பிரச்சினையா? அப்படியென்னடா பிரச்சினை?"

கேசவன் மணிவண்ணனின் நெருங்கிய நண்பர்களிலொருவன். அவன் இன்னுமொரு விடயத்திலும் ஏனையவர்களிடமிருந்து  வேறுபட்டிருந்தான். அரசியலில் அதிக ஈடுபாடு மிக்கவனாகவிருந்த அதே சமயம் மார்க்சியத்திலும் அந்த வயதிலேயே அதிக நாட்டம் மிக்கவனாகவுமிருந்தான். மணிவண்ணனைப்பொறுத்தவரையில் தமிழரசுக் கட்சியினரின் உணர்ச்சி அரசியலில் அதிக ஈடுபாடு மிக்கவன். அவனுக்கு லெனின் , மார்க்ஸ் என்று எதுவுமே தெரியாது. ஆனால் அண்மைக்காலமாக கேசவன் அவனுக்கு இலகுவான மொழியில் மார்க்சியம் பற்றிப்போதித்துக்கொண்டு வந்தான். அதன் விளைவாக மணிவண்ணனுக்கும் மார்க்சிய நூல்களை அதிகம் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டிருந்தது. அவனது ஆர்வத்தைப்புரிந்துகொண்டு கேசவனின் அவனுக்கு மார்க்சிக் கோர்க்கியின் 'தாய்' நாவலைக்கொண்டு வந்து கொடுத்திருந்தான். அதை மணிவண்ணனும் வாசிக்கத்தொடங்கியிருந்தான். அதே சமயம் அவனுடனான உரையாடல்களின்போது மார்க்சியம் பற்றிய தனது புரிதல்களைக் கேசவன் அவனுக்கு எளிய மொழியில் விளங்கப்படுத்தவும் தொடங்கியிருந்தான்.  இருவருக்குமிடையில் தமிழரசுக் கட்சியினரின், ஏனைய தமிழ், சிங்கள அரசியல்வாதிகளின் உணர்ச்சி அரசியல் பற்றி சில சமயங்களில் நட்புரீதியிலான மோதல்களும் ஏற்படாமலில்லை.

அவனிடம் மணிவண்ணன் பொதுவாக எதனையும் மறைப்பதில்லை. ஏதாவது பிரச்சினையா என்று கேசவன் கேட்கவுமே ஏன் அவனிடமே தன் நிலையினை எடுத்துக்கூறி ஆலோசனை கேட்கக்கூடாதென்று  தோன்றியது மணிவண்ணனுக்கு. கேசவனின் வீடு பிறவுண் வீதியிலிருந்தது. ,மணிவண்ணனின் வீடு கஸ்தூரியார் வீதியில் பாடசாலைகண்மையிலிருந்தது.

•Last Updated on ••Wednesday•, 07 •October• 2020 00:51•• •Read more...•
 

தமிழ்ச்சொற்களைச் சேர்த்தெழுதிய அறிஞர்தம் தமிழெல்லாம் தவறா? தவறு என்கின்றார் எழுத்தாளர் அருணகிரி சங்கரன்கோவில்!

•E-mail• •Print• •PDF•

- வ.ந.கிரிதரன் -எழுத்தாளர் அருணகிரி சங்கரன்கோவில் 'அருணகிரி' என்னும் பெயரை வடமொழியில் வைத்திருப்பவர் இலங்கைத்தமிழர்கள் வடமொழியில் அதிகம் எழுதுகின்றார் என்று கவலைப்பட்டிருக்கின்றார். அக்கவலையை நம்மூர் எழுத்தாளர் வி.ரி.இளங்கோவனுக்குக் கூறியிருக்கின்றார். அவர் என்ன காரணமொ தெரியவில்லை பதிவுகள் கிரிதரனை அவருக்கு அறிமுகப்படுத்தி என் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துள்ளார். அருணகிரி எனக்கு எழுதி வடமொழி ஆதிக்கம் தமிழில் நிலவுவதையிட்டுக் கவலைப்பட்டிருந்தார். நான் பதிலுக்கு நான் தனித்தமிழ் ஆதரவாளனல்லன் என்று குறிப்பிட்டுப் பதில் அனுப்பியிருந்தேன். தற்போது அவர் அதற்குப் பதில் எழுதியிருக்கின்றார். அதில் அவர் பின்வருமாறு எழுதியிருந்தார்:

"கனடா பதிவுகள்.காம் திரு கிரிதரன் அவர்கள் எனக்கு எழுதி இருக்கின்ற கடிதத்தில் நான் செய்து இருக்கின்ற திருத்தங்கள்....

நான் தனித்தமிழ் ஆதரவாளனல்லன். -ஆதரவாளன் அல்லன்.
தவறேதுமில்லை ..........தவறு ஏதும் இல்லை.
என்பதென் கருத்து. -என்பது என் கருத்து
வளர்ந்திருக்கின்றது. - வளர்ந்து இருக்கின்றது.
மரபுமுண்டு.......மரபும் உண்டு..."

இவ்விதம் என் அவரது கடிதத்துக்கான பதிலில் நான் சேர்த்தெழுதியிருந்த சொற்களையெல்லாம் பிரித்துப் பிரித்து எழுதி இறுதியில் "தமிழில் இரண்டு, மூன்று, நான்கு சொற்களைச் சேர்த்து எழுதுவது தவறு." என்றும் கூறியிருக்கின்றார். இவருக்கு நான் கூறுவது இதனைத்தான். யார் உங்களுக்குக் கூறியது சொற்களைச் சேர்த்தெழுதுவது தவறென்று (இதனை அவர் 'தவறு + என்று' வாசிக்கவும். :-) ) நான் சில பந்திகளைக் கீழே தருகின்றேன். வாசித்துப்பாருங்கள்:
•Last Updated on ••Wednesday•, 19 •August• 2020 09:53•• •Read more...•
 

தனித்தமிழ், தமிழில் பிறமொழிச் சொற்கள் பற்றிய கடிதமும், அதற்கான என் பதிலும்!

•E-mail• •Print• •PDF•

- வ.ந.கிரிதரன் -அண்மையில் திரு. அருணகிரி சங்கரன்கோவில் என்பவரிடமிருந்து கடிதமொன்று வந்தது. அதில் அவர் தனித்தமிழில் எழுதுவதன் அவசியம் பற்றி எழுதியிருந்தார். அவரது கடிதத்தையும் அதற்கான எனது பதிலையும் இங்கு நான் பதிவு செய்கின்றேன்,


On Mon, Aug 17, 2020 at 5:44 AM Arunagiri Sankarankovil < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• > wrote:

மதிப்பிற்கு உரிய நவரத்தினம் கிரிதரன் அவர்களுக்கு,

வணக்கம். இன்று காலை இந்திய நேரம் 5.30 மணி அளவில், பிரான்ஸ் நாட்டில் வசிக்கின்ற ஈழத்தமிழ் எழுத்தாளர் வி.ரி. இளங்கோவன் அவர்களுடன் நான் நிகழ்த்திய உரையாடலை, இத்துடன் தங்கள் பார்வைக்கு இணைத்து உள்ளேன்.
என்னுடைய முகநூல் பதிவு.....     இன்று காலையில் வாட்ஸ் அப்பில் ஒரு காணொளி பகிர்ந்தேன்.     உடனே, எழுத்தாளர் வி.ரி. இளங்கோவன், பதிவுகள்.காம் செய்திகளையும் பாருங்கள் என குறிப்பு அனுப்பினார்.
அவரை அழைத்தேன்.     இன்னமும் விழித்து இருக்கின்றீர்களா? இப்போது ஃபிரான்ஸ் நாட்டில் மணி என்ன ஆகின்றது? என்று கேட்டேன்.

•Last Updated on ••Monday•, 17 •August• 2020 19:28•• •Read more...•
 

அறிந்ததும், தெரிந்ததும் (1)

•E-mail• •Print• •PDF•

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க உப ஜனாதிபதி வேட்பாளர்!

ஜனநாயகக் கட்சியினரின் உப ஜனாதிபதி வேட்பாளராக இந்திய, ஜமேய்க்க வம்சாவழியில் வந்த அமெரிக்கரான கமலா ஹாரிஸ் (kamala Harris) தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். அவரது முழுப்பெயர் கமலாதேவி ஹாரிஸ்.

அரசியலுக்கு அப்பால், பெண்ணாக, சிறுபான்மையினச் சமூகத்திலொருவராக அவரை நோக்குகின்றேன். அவ்வகையில் அமெரிக்க உப ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் முதலாவது இந்திய, ஜமேய்க்க வம்சாவழி அமெரிக்கராகக் கமலா ஹாரிஸ் இருக்கின்றார். அவ்வகையில் அவரது தெரிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

எவ்விதம் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தெரிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததோ அவ்விதமே உபஜனாதிபதிப்பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸின் தெரிவும் முக்கியத்துவம் மிக்கது.

எவ்விதம் அமெரிக்கர்கள் பராக் ஒபாமா மேல் வீசப்பட்ட அவதூறுகளையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு அவரைப் பதவியில் அமர்த்தினார்களோ, அவ்விதமே இம்முறையும் கமலா ஹாரிஸைப் பதவியில் அமர்த்துவார்கள் என்று நம்புவோம்.

பராக் ஒபாமா ஜனாதிபதியாகவிருந்தபோது உப ஜனாதிபாதியாக இருந்தவர் ஜோ பைடென். இப்போது ஜோ பைடென் ஜனாதிபதி வேட்பாளராகப்போட்டியிடுகையில் உப ஜனாதிபதியாக இருப்பவர் கமலா ஹாரிஸ். இரு வரலாற்றுச் சாதனைகளுடனும் ஜோ பைடென் பெயர் பின்னிப்பிணைந்துள்ளது.

•Last Updated on ••Sunday•, 16 •August• 2020 01:03•• •Read more...•
 

தொடர் நாவல்: "மனப்பெண் " (1)

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் ஒன்று: அதிகாலையில் பூத்த மலர்!

தொடர் நாவல்: "மனப்பெண் " - வ.ந.கிரிதரன் -நகரத்து வானமிருண்டு கிடந்தது. தான் வசிக்கும் தொடர்மாடியின் பல்கணியிலிருந்து வழக்கம்போல் நகரத்து வானை சாய்வு நாற்காலியிலிருந்து நோக்கிக்கொண்டிருந்தான் மணிவண்ணன். அவனுக்கு மிகவும் பிடித்தமான விடயங்களில் இயற்கையை இரசித்தல், குறிப்பாக இரவு வானை இரசித்தல் அடங்கும். அது அவனது சிறுவயதிலிருந்து அவனுக்கு ஏற்பட்ட பழக்கங்களிலொன்று. என்று முதன் முதலாக 'கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே! ' ('டுவிங்கிள்! டுவிங்கிள்! லிட்டில் ஸ்டார்' ) குழந்தைப்பாடலைக் கேட்டானோ அன்றிலிருந்து அவனை ஆட்கொண்ட விருப்புகளிலொன்று இவ்விருப்பு.

"கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே!
நீ என்னவென்று நான் வியப்புறுகின்றேன்.
அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது,
வானின் வைரம் போன்று விளங்குகின்றாய்."

அவனுக்கு 'அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது' என்னும் வரி மிகவும் விருப்பமானது. அவ்வரி அவனது கற்பனையை எப்பொழுதும் சிறகடிக்க வைக்கும் வரிகளிலொன்று. அங்கே உயரத்தில் விரிந்து , உயர்ந்து , பரந்து கிடக்கும் ஆகாயத்தில்தான் எத்தனை சுடர்கள்! எத்தனை நட்சத்திரக் கூட்டங்கள்! எத்தனை எத்தனை கருந்துளைகள்! எத்தனை பிரபஞ்சங்கள்! நினைக்கவே முடியாத அளவுக்கு விரிந்த பிரபஞ்சம்! அவனுக்குப் பல்விதக் கற்பனைகளை, கேள்விகளை அள்ளித்தருவது வழக்கம். அக்கேள்விகள் அவனது சிந்தனைக் குதிரைகளைத் தட்டிப் பயணிக்க வைக்கும் ஆற்றல் மிக்கவை. அச்சிந்தனைக் குதிரைப்பயணங்களிலுள்ள இன்பம் அவனுக்கு வேறெந்தப் பயணத்திலும் இருப்பதில்லை. முடிவற்று விரியும் சிந்தனைக்குதிரைகளின் பயணங்களுக்குத் தாம் முடிவேது? முப்பரிமாணச்ச்சிறைக்குள் வளையவரும் மானுட உலகின் பரிமாணங்களை மீறிய பரிமாணங்களை உள்ளடக்கியதாகப் புதிருடன் அவனுக்கு விரிந்து கிடக்கும் இரவு வானும், பிரபஞ்சமும், கொட்டிக்கிடக்கும்  நட்சத்திரங்களும் தெரியும். 'டொரோண்டோ' நகரத்து வான் பூமத்திய ரேகைக்கு அருகிலிருக்கும் இரவு வானைப்போல் நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானல்ல. அதற்கு நகரிலிருந்து வெளியே செல்ல வேண்டும். நகரத்து ஒளிமாசிலிருந்து வெளியேற வேண்டும். இருந்தாலும் இருண்டு கிடக்கும் நகரத்து வானையும் கூர்ந்து நோக்கத்தொடங்கினால் ஒன்று, இரண்டு , மூன்று . .என்று இருட்டுக்குப் பழகிய கண்களுக்குத் தெரியத்தொடங்கிவிடும். அது போதும் அவனுக்கு.

•Last Updated on ••Wednesday•, 02 •September• 2020 12:11•• •Read more...•
 

கவிஞர் அனாரின் கவிதை மொழிபெயர்ப்பு நிகழ்வு

•E-mail• •Print• •PDF•

கவிஞர் அனார்

18 August 2020 - London Time: 6.30 pm to 8.00 pm Poetry Translation Centre (London) நடாத்தும் கவிஞர் அனாரின் கவிதை மொழிபெயர்ப்பு நிகழ்வு நடைபெறும். ஆங்கிலேயர் மத்தியில் எமது ஈழத்துக் கவிதைகள் பரவ இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதில் நாம் அனைவரும் பங்குகொள்வது விரும்பத்தக்கது. கலந்துகொள்ள விரும்புவர்கள் தயவுசெய்து உடன் அறியத்தாருங்கள். சிறிய அன்பளிப்பு செய்ய வேண்டும். அதனை நான் செய்கிறேன்.

•Last Updated on ••Sunday•, 09 •August• 2020 01:49•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும்: மார்க்சும் பிராய்டும்!

•E-mail• •Print• •PDF•

Karl MarxSigmund Freud'அலை' சஞ்சிகையின் ஏழாவது இதழில் (2.1.77) 'பிராய்டின் பாலியல் நோக்கும் மாக்ஸிசமும்' என்னுமொரு ஒரு பக்கக் கட்டுரையை எழுத்தாளர் ஞானி எழுதியுள்ளார். சிறு கட்டுரையானாலும் நல்லதொரு கட்டுரை, ஏனென்றால் நவகால மார்க்சிய அறிஞர்களிலொருவரான ஹேபேட் மார்குஸ் என்பவரின் மார்க்சியச் சிந்தனைகளின் ஒரு பகுதியை அறிமுகம் செய்வதால் நல்லதொரு கட்டுரை. இவ்வறிஞர் செய்தது என்ன? சிக்மண்ட் பிராய்டின் பாலியல் நோக்கு பற்றிய சிந்தனைகளை மார்க்சியத்துடன் இணைத்துப்பார்த்து, இவ்விரு கோட்பாடுகளின் அடிப்படையில் அவர் ஒரு முடிவுக்கு வருகின்றார் என்பதைக் கட்டுரை விபரிக்கின்றது. இதைச் சுருக்கமாகப் பின்வருமாறு கூறலாம்:

மார்க்சிய, பிராய்டிச சிந்தனைகளின் அடிப்படையில் இவர் இரண்டுக்குமிடையிலொரு தொடர்பினை ஏற்படுத்துகின்றார். இவரது கருத்துப்படி மனிதர் இரண்டு விதத்தாக்கங்களுக்கு ஆட்பட்டவர்கள். இன்பியற் போக்கு (Pleasure Principle) , யதார்த்தப்போக்கு (Reality Principle) ஆகியவையே இவை. ஆதியில் இன்பியற் போக்கினால் ஆட்பட்டிருந்த மனிதரை பின்னர் ஏற்பட்ட பொருளியற் சுரண்டல் சமுதாய அமைப்புகள் அந்நிலையிலிருந்து நீக்கி விட்டன. மனிதரை இன்பியற்போக்கிலிருந்து நீக்கி, யதார்த்தப்போக்குக்குள் பொருளியற் சுரண்டல் சமுதாய அமைப்புகள் தள்ளி விட்டன. மீண்டும் மனிதரை முன்பிருந்த இன்பியற் நிலைக்குக் கொண்டு செல்ல மீண்டும். மனிதரை வர்க்கபேதமற்ற சமுதாய நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு மார்க்சியம் உதவுகின்றது. இவைதாம் மார்க்சிய அறிஞர் ஹேபேட் மார்குஸின் சிந்தனைப்போக்கு. இதுதான் ஞானியின் கட்டுரையின் சாரமும் கூட.

•Last Updated on ••Sunday•, 09 •August• 2020 01:05•• •Read more...•
 

வரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்!

•E-mail• •Print• •PDF•

இராஜகோபாலன் மாஸ்டரும் & டொமினிக் ஜீவாவும்'டொரொண்டோ'வில் தொண்ணூறு வயதினைக் கடந்த நிலையிலோர் எழுத்தாளர் அமைதியாக வாழ்ந்து வருகின்றார். இவர் அதிகமாக எழுதியவரல்லர். கட்டுரைகள் , சிறுகதைகள் எனக் குறைந்த அளவிலேயே எழுதியிருக்கின்றார். ஆனால் இவர் சமூக, அரசியல் செயற்பாட்டாளராக வாழ்ந்தவர். நாற்பதுகளின் இறுதியில் இடதுசாரி அரசியலில் தீவிர தொண்டனாகச் செயற்பட்டவர் இவர் ஓர் ஆசிரியராகத் தன் பணியினைச் செய்தவர். இவரை மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா மல்லிகையின் அட்டைப்படமாகப்போட்டுக் கெளரவித்துள்ளார். இவர்தான் எழுத்தாளர் தி.இராஜகோபால்.

எழுத்தாளர் டொமினிக் ஜீவா இராஜகோபால் 'மாஸ்டர்' மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர். அவ்விதமே அவர் இராஜகோபால் அவர்களைக் குறிப்பிடுகின்றார். அவர் தன் நினைவுக் குறிப்புகளிலும் இவரைப்பற்றி நினைவு கூர்ந்திருக்கின்றார். 3.3.1967 சுதந்திரனில் வெளியான இவரது 'எங்கே போவேன்?' என்னும் சிறுகதை. சுதந்திரன் நடாத்திய பொங்கல் சிறுகதைப்போட்டியில் பாராட்டுப்பெற்ற சிறுகதைகளிலொன்றென்பதும் குறிப்பிடத்தக்கது.

உண்மையில் மேற்படி அட்டைப்படக் கட்டுரையினை ஆசிரியர் டொமினிக் ஜீவாவே எழுதியுள்ளார். அதிலவர் தான் முதன் முதலில் பூபாலசிங்கம் புத்தகசாலையிலேயே இராஜகோபால் அவர்களைக் கண்டதாகவும், பூபாலசிங்கம் அவர்களே அவரைத் தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இவை தவிர அவர் மேலும் சில முக்கியமான தகவல்களையும் அக்கட்டுரையில் பகிர்ந்துள்ளார். அவையாவன:
•Last Updated on ••Monday•, 03 •August• 2020 13:07•• •Read more...•
 

ஓவியர் நகுலேஸ்வரி (மீனகுமாரி நகுலன்) மறைவு!

•E-mail• •Print• •PDF•

ஓவியர் நகுலேஸ்வரி (மீனகுமாரி நகுலன்) மறைவு!கடந்த இரு நாட்களாக பதிவிடும் மனநிலையில்லை. இதற்குக் காரணம் ஓவியர் நகுலேஸ்வரி (இயற்பெயர் மீனகுமாரி நகுலன்) அவர்களின் மறைவுதான், இவர் என் அம்மாவின் இளைய சகோதரியும் , முன்னாள் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையுமான அமரர் நகுலேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின் புதல்வி. குழந்தைப்பருவத்திலிருந்து நான் அறிந்த, நான் நன்கு பழகிய ஒருவர். எனக்கு அக்கா முறையானவர். தனது அறுபத்து நான்காவது வயதில் மாரடைப்பினால் மறைந்துவிட்டார். சிறந்த ஓவியர். இவரது ஓவியங்கள் சிலவற்றை இங்கு சென்ற வருடம் பதிவு செய்திருந்தேன். உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே இவர் இவ்விதம் ஓவியங்கள் வரைவது தெரியும். அவரும் அத்துடன் திருப்தியடைந்தவராகவேயிருந்தார். இவரை இத்துறையில் மேலும் ஊக்குவிப்பதற்காகவே பதிவுகள் இணைய இதழிலும், முகநூலிலும் இவரது ஓவியங்கள் சிலவற்றைப் பதிவு செய்திருந்தேன். அது அவருக்கு மகிழ்ச்சியைத்தந்தது. தொடர்ந்து இத்துறையில் அதிகமாக ஈடுபடுவாரென்றெண்ணியிருந்தேன். அது இனி நடைபெறப்போவதில்லை. அவரது இறுதிச் சடங்கும் அவரது விருப்புக்கேற்ப குடும்பத்தவர்கள், உறவினர்களுக்கு மட்டுமுரிய அந்தரங்க நிகழ்வாக அமைந்து விட்டது.

இவரது மறைவு குழந்தைப் பருவத்து நினைவுகள் பலவற்றை நினைவூட்டிவிட்டது. பாடசாலை விடுமுறை நாட்களில் சின்னம்மாவின் குழந்தைகளுடன் ஆச்சி வவுனியாவுக்கு வந்து விடுவார். அப்பொழுது நாம் வவுனியாவில் வசித்து வந்தோம். இல்லாவிட்டால் நாம் யாழ்ப்பாணத்துக்குச் சென்று விடுவோம். அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணத்தில் பார்த்த திரைப்படங்களின் கதைகளைச் சுவாரசியமாக எங்களுக்குக் கூறுவார். நாங்கள் சுற்றியிருந்து ஆவலுடன் கேட்போம். அவ்விதம் கூறிய திரைப்படங்களிலொன்று வாத்தியாரின் 'கன்னித்தாய்'. அக்கா என்னும் உரிமையுடன் 'டேய்..' என்று செல்லமாக அழைப்பார். அந்த அழைப்பை இனி நான் கேட்கப்போவதில்லை.

•Last Updated on ••Sunday•, 09 •August• 2020 01:47•• •Read more...•
 

நண்பர் மோகன் அருளானந்தம் பற்றிய நினைவலைகள்...

•E-mail• •Print• •PDF•

- மோகன் அருளானந்தம் -
நண்பர் மோகன் அருளானந்தம் மட்டக்களைப்பைச் சேர்ந்தவர். மட்டக்களப்புப் புனித மைக்கல் கல்லூரி மாணவர். கட்டடக்கலைஞர். என்னுடன் படித்தவர். பல வருடங்களுக்குப் பின்னர் அவருடன் உரையாடும் சந்தர்ப்பத்தை சமூக ஊடகமான 'வாட்ஸ்அப்' ஏற்படுத்தித்தந்தது. கட்டடக்கலை இறுதியாண்டில் இவர் என் அறை நண்பராகவுமிருந்தவர். தற்போது ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்.

மோகன் அருளானந்தமை நினைத்ததும் எனக்கு இரு மேனாட்டு நாவலாசிரியர்கள் நினைவுக்கு வருவார்கள். ஒருவர் அல்பேர்ட்டோ மொறாவியோ. அடுத்தவர் அலிஸ்டர் மக்லீன். அல்பேர்ட்டோ மொறாவியோ புகழ்பெற்ற இத்தாலிய நாவலாசிரியர். இவரது நாவல்களிலொன்றான 'இரு பெண்கள்' (Two Women) இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் ரோமில் வாழ்ந்துகொண்டிருந்த ஓரு விதவைப்பெண்ணும் , அவரது இரு பதின்ம வயதுப்பெண்களும் யுத்தத்தினால் எதிர்கொள்ளும் சவால்களை, பாலியல் வன்முறைகளை  (நாசிகள் & நேசப்படைகளிடமிருந்து) விபரிக்கும். திரைப்படமாக வெளியானது . அதில் நடிகை சோபியா லாரென் நடித்திருந்தார். அதற்காக அவருக்குச் சிறந்த நடிகையென்ற ஆஸ்கார் விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. அடுத்தவர்  அலிஸ்டர் மக்லீன் 'ஹன்ஸ் ஓஃப் நவரோன்' (The Guns of Navarone,) போன்ற சாகச நாவல்களை எழுதிய ஸ்கொட்டிஸ் எழுத்தாளர். இவர்கள் இருவரின் நாவலகளையே அதிகமாக வாசித்துக்கொண்டிருப்பார் மோகன்.  இவரை நினைத்ததும் இந்நாவலாசிரியர்களும் கூடவே நினைவுக்கு வருவார்கள்.
•Last Updated on ••Monday•, 07 •September• 2020 22:09•• •Read more...•
 

வரலாற்றுச் சுவடுகள்: மருத்துவர் சோமசுந்தரம் இராஜசுந்தரம் நினைவு நாள் ஜூலை 27 (83 வெலிக்கடைச்சிறைச்சாலைப் படுகொலை )

•E-mail• •Print• •PDF•

மருத்துவர் இராஜசுந்தரம்கறுப்பு ஜூலையில் நடைபெற்ற வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையில் இரண்டாவது தடவையாகத் தமிழ்க் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் ஜூலை 27. இன்றுதான் மருத்துவர் இராஜசுந்தரம் படுகொலை செய்யப்பட்டார். இத்தருணத்தில் அவருடன் பழகிய நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன். குறுகிய காலமே பழகியிருந்தாலும் என்மீது மறக்க முடியாத தடங்களை பதித்த இலட்சிய புருசர் அவர். அவருடன் ஜீப்பில் நாவலர் பண்ணைக்குச் செல்கையில், அவரது இருப்பிடத்தில் , இறம்பைக்குள அநாதைகள் விடுதியில் நடந்த 'தமிழீழமும், சமயமும்' கருத்தரங்கில் உரையாடிய தருணங்களை நினைத்துப் பார்க்கின்றேன். அவரோர் இலட்சிய புருசர். அயராது அகதிகளின் புனர்வாழ்வுக்காக உழைத்தவர்.

மருத்துவர் இராஜசுந்தரம் 23.03.1943 சோமசுந்தரம் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப்பிறந்தவர். பெற்றோர் ஆசிரியர்கள். இவர் ஆரம்பத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் படித்திருக்கின்றார். அப்பொழுது இளம் விவசாயிகள் சங்கத்தின் செயலாளராகவிருந்திருக்கின்றார்.  பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்றார். அப்பொழுது சாரணர் படைத்தலைவராகவிருந்திருக்கின்றார். 1963இல் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் ஒரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர் (ஆர்.எம்.பி). மனைவி சாந்தி காராளசிங்கம் மருத்துவர் (எம்.பி.பி.எஸ்). இவர் தனது மருத்துவக் கல்வி முடிந்ததும் லுனுகல, புசல்லாவ ஆகிய இடங்களிலுள்ள மருத்துவ நிலையங்களில் பணியாற்றினார். தோட்டத்தொழிலாளர்களின் உடலாரோக்கியத்தைப் பேணுவதில் கவனம் செலுத்தினார். அக்காலகட்டத்தில் இந்தியத் தொழிலாளர் பேரவையில் அங்கத்தினராகவும் விளங்கியிருக்கின்றார். காந்தியம் அமைப்பில் இணைந்து பணியாற்றுவதற்கு முன்னரே அவர் மலையக மக்களுடன் இணைந்து பணிபுரிந்து வாழ்ந்திருக்கின்றார், அவர்கள்தம் நல்வாழ்வில் அக்கறை காட்டியுள்ளார் என்பதை அறிய முடிகின்றது.

•Last Updated on ••Tuesday•, 28 •July• 2020 00:00•• •Read more...•
 

அறிமுகம்: எண்ணிம ஆவணகம் / நூலகம் (https://archive.org)

•E-mail• •Print• •PDF•

எண்ணிம ஆவணகம் /நூலகம் (https://archive.org) இணையத்திலுள்ள இணையத்தளங்களையெல்லாம் ஆவணப்படுத்தி வருகின்றது. நீங்கள் பதிவு செய்யாவிட்டாலும் கூட காலப்போக்கில் அவை உங்கள் தளங்களைக் கண்டு பிடித்து
ஆவணப்படுத்திவிடும். நீங்கள் இத்தளத்துக்குச் சென்று உங்கள் தளத்தைத் தேடிப்பாருங்கள், காணக்கிடைக்காவிட்டால், அத்தளத்தில் உங்களுக்கான கணக்கொன்றை உருவாக்கி உங்கள் இணையத்தளத்தினைப் பதிவு செய்துகொள்ளுங்கள். ஒருவேளை  நாளை உங்கள் தளம் இயங்காது போனால் கூட இவ்வெண்ணிம ஆவணகத்தில் அத் தளம் சேகரிக்கப்பட்டுக்கிடக்கும்.

மேலும் இங்கு கணக்கு உங்களுக்கு இருந்தால் உங்கள் படைப்புகளை மின்னூல்களாக்கி அங்கு சேகரித்துக்கொள்ளலாம். இது இலவசமாகத் தனது சேவையை வழங்கி வருகின்றது. உலகின் பல்வேறு மொழிகளிலுமுள்ள படைப்புகள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளதைக் காண முடியும்.

இங்கு நீங்கள் உங்களது இணையத்தளம், வீடியோ, ஆடியோ, இமேஜ், ஷாவ்ட்ஃபெயர் என்பவற்றை ஆவணப்படுத்த முடியும். எண்ணிம ஆவணகத்தின் இணையத்தள முகவரி: https://archive.org/

•Last Updated on ••Saturday•, 18 •July• 2020 21:31•• •Read more...•
 

அஞ்சலி: எழுத்தாளர் 'புதுமைப்பிரியை' (பத்மா சோமகாந்தன்) மறைவு!

•E-mail• •Print• •PDF•

அஞ்சலி:  எழுத்தாளர் 'புதுமைப்பிரியை' (பத்மா சோமகாந்தன்) மறைவு!இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த முக்கியமான பெண் ஆளுமைகளிலொருவரான பத்மா சோமகாந்தன் அவர்கள் நேற்று மறைந்த செய்தியினை அச்சூடகங்கள், சமூக ஊடகங்கள் , எண்ணிம ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். வருந்தினேன். ஐம்பதுகளின் ஆரம்பத்தில் சுதந்திரனில் புதுமைப்பிரியை என்னும் பெயரில் சிறுகதைப்போட்டியில் முதற் பரிசினைப் பெற்றதன் மூலம் தன் பக்கம் இலக்கிய உலகின் கவனத்தைத்திருப்பியவர். புனைவு, அபுனைவு என்னும் பிரிவுகளில் பல நூல்கள் இவரது படைப்புகளைத்தாங்கி வெளியாகியுள்ளன.

இவர் தன் கணவர் எழுத்தாளர் ஈழத்துச் சோமுவுடன் (சோமகாந்தன்) கனடாவுக்கு வருகை தந்தபோது அவர்கள் தங்கியிருந்த மிஸ்ஸிசாகா நகருக்கு எழுத்தாளர் கடல்புத்திரனுடன் சென்று சந்தித்தேன். சுமார் இரு மணி நேரம் இருவருடனும் பல்வேறு விடயங்களைப்பற்றிக் கலந்துரையாடிவிட்டுத் திரும்பினோம். அவர்களுடன் உரையாடியதை ஒலிப்பதிவு செய்திருந்தேன். ஆனால் அவ்வுரையாடல் ஒழுங்காங்கப் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. ஆழமான கிணறொன்றுக்குள் இருந்து பேசினால் எப்படியிருக்குமோ அப்படி ஒலிக்கும் நேர்காணலாக அமைந்து விட்டது. இடையில் பல இடங்கள் விடுபட்டும்போய்விட்டன. ஒலிப்பதிவுக் கருவியின் தவறாகவிருக்க வேண்டும். இருந்தும் அவர்கள் குரல்களைப் பதிவு செய்துள்ள ஒலிநாடாக்களை இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன்.

சோமகாந்தன் தன் எழுத்துலக அனுபவங்களை , தான் எழுதிய பல்வகை நூலுருப்பெற்ற படைப்புகளைப்பற்றி (இலக்கிய நினைவலைகள், இலங்கைத்தமிழர்தம் அரசியல் பிரச்சினை, முற்போக்கு எழுத்தாளர் சங்க வரலாறு, நாவல்கள் பற்றி ) உரையாடினார். அன்றிருந்த பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி போன்றவர்களைப் போன்ற ஆளுமைகளைத் தற்போது இலக்கிய உலகில் காண முடியவில்லை என்று அவர் கூறியதுடன் பேராசிரியர் கைலாசபதியுடனான அனுபவங்களையும் நினைவு கூர்ந்தார். கூடவே தான் பிறந்த இடத்து அவரது சமூகத்தின் நலிந்த நிலையினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள தன் நாவல் பற்றியும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன் வீரகேசரியில் தான் எழுதிக்கொண்டிருந்த பத்தி எழுத்துகள் பற்றியும் எடுத்துரைத்தார். சோமகாந்தன் அவர்களின் குரல் மிகவும் மென்மையானது. உள்ளத்தை வருடிச்செல்லும் தன்மை மிக்கது. தனித்துவமான குரலும் கூட. ஒருமுறை கேட்டாலும் மறக்க முடியாத குரல்.

•Last Updated on ••Thursday•, 16 •July• 2020 04:16•• •Read more...•
 

வரலாற்றுச் சுவடுகள்: 'நமது வரலாற்றை நாங்கள்தாம் ஆவணப்படுத்த வேண்டும்' - பதிவுகள் -வரலாற்றுச் சுவடுகள்: 'நமது வரலாற்றை நாங்கள்தாம் ஆவணப்படுத்த வேண்டும்' - பதிவுகள் -

•E-mail• •Print• •PDF•

தில்லைநாதன் கோபிநாத் எழுதிய 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்'அண்மையில் நண்பர் தில்லைநாதன் கோபிநாத் எழுதிய 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்னும் நூலை வாசித்தேன். மேற்படி நூலின் தலைப்பு அவ்விதமிருப்பதால்தான் இப்பதிவை எழுத வேண்டிய தேவையேற்பட்டது. சில காரணங்களால் தவிர்க்கப்பட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டி ஆவணப்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்பதால்தானிந்த பதிவு. 'பதிவுகள்' இணைய இதழ் நூலகத்தின் ஆரம்பகாலத்திலிருந்தே அது பற்றிய செய்திகளை வெளியிட்டு அதன் முயற்சிகளுக்கு ஆதரவு வெளியிட்டு வருகின்றது. உலகளாவியரீதியில் தன் வாசகர்கள் மத்தியில் அது பற்றிய செய்திகளை எடுத்துச்செல்ல உதவி வருகின்றது. தனிப்பட்டரீதியிலும் எனது நூல்கள்,மின்னூல்கள் ,தனிப்பட்ட சேகரங்களை நூலகத்திட்டத்துக்கு வழங்கியுள்ளேன். என் நாவலான 'குடிவரவாளன்' நாவலையும் வழங்கியுள்ளேன். ஆனால் அவை தனிப்பட்ட ஒருவரின் பங்களிப்பு என்பதால் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதொன்றல்ல. இது போல் எழுத்தாளர்கள் பலர் , தனிப்பட்டவர்கள் பலர் தம்மிடமிருந்த நூல்களை நூலகத்திட்டத்துக்கு வழங்கியுள்ளார்கள். ஆனால் 'பதிவுகள்' என்னும் இணைய இதழ் நூலகத்திட்டம் பற்றிய தகவல்களைப்பிரசுரித்து உலகளாவியரீதியில் அது பற்றிய விபரங்களை எடுத்துச் சென்றிருப்பதால் நூலில் அது பற்றிக் குறிப்பிட்டிருக்கலாமென்று தோன்றியது.

நூலின் தலைப்பு 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்றிருப்பதால் , திண்ணை போன்ற இணைய இதழ்களெல்லாம்  குறிப்பிடப்பட்டுள்ளதால் ,'பதிவுகள்' பற்றியும் ஒரு வரியாவது குறிப்பிட்டிருக்கலாமென்று தோன்றியது. கோபி வேண்டுமென்றே தவிர்த்திருக்க மாட்டார். சில வேளை ஆரம்பகாலப் பதிவுகளில் வெளியான தகவல்கள் அவருக்கு முக்கியத்துவமில்லாமலிருந்திருக்கலாம் அல்லது ஞாபகத்திலில்லாமலிருந்திருக்கலாம். 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்னும் நூலின் தலைப்புக்கேற்ப 'பதிவுகள்' இணைய இதழும் ஆவணப்படுத்தப்பட வேண்டிய தன்னைப்பற்றிய தகவலைத் தான் தான் ஆவணப்படுத்த வேண்டுமென்ற நிலையில் இப்பதிவை முன் வைக்கின்றது. அதற்கொப்ப 2000ஆம் ஆண்டிலிருந்து பதிவுகள் இணைய இதழில் நூலகம் பற்றி வெளியான தகவல்கள் சிலவற்றைக் கீழே தருகின்றோம்.

நூலகம் தளத்தின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. நூலகம் தளம் இல்லாவிடின் பல இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய தகவல்கள் பலவற்றை என்னால் பெறவே முடியாது போயிருக்கும். இதன் வளர்ச்சிக்காக உழைத்த , உழைக்கும் அனைவரையும் வாழ்த்துகின்றேன்.

மேற்படி 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்னும் நூற் தலைப்பில் சிறியதோர் இலக்கணத்தவறுள்ளது. இருந்தாலும் இத்தவறுடனேயே வழக்கில் பலர் பாவிப்பதால் அது என்னைப்பொறுத்தவரையில் முக்கியமான தவறல்ல. ஆனால் நூலகம் பற்றிய நூலொன்றில் இவ்விதமான இலக்கணத்தவறு ஏற்படாமலிருந்திருக்கலாமென்று தோன்றியதால் சுட்டிக்காட்டுவது அவசியமானது. தலைப்பில் நமது என்று பன்மை வருவதால் நூலின் தலைப்பு " 'நமது வரலாற்றை நாங்கள்தாம் ஆவணப்படுத்த வேண்டும்" என்று வந்திருக்க வேண்டும்.

* தில்லைநாதன் கோபிநாத் - 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' : http://noolaham.net/project/750/75000/75000.pdf

•Last Updated on ••Wednesday•, 15 •July• 2020 13:17•• •Read more...•
 

வ.ந.கிரிதரன் மொழிபெயர்த்த ஒன்பது கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

அல் ஹண்டர் (Al Hunter)

1.  கவிதை: கனவுக் குதிரைகள் (Dream Horses)!

(Walt Bresette நினைவாக)!
ஆங்கிலத்தில்: அல் ஹண்டர் (Al Hunter) - கனடியக் கவிஞர்  | தமிழில்: வ.ந.கிரிதரன்!

1

நிலவு வெளிச்சத்திற்குக்
கீழாக
விண்ணில்
எனது கனவுக் குதிரைகள்
தெற்கு நோக்கி
ஓடும்.

தெற்கு: பயணம் இங்குதான்
முடியும், அத்துடன்
தெற்கு: பயணம் இங்குதான்
மீண்டும் தொடங்கும் -
ஆத்மாக்களின்
பயணத்தில்.

•Last Updated on ••Tuesday•, 14 •July• 2020 15:33•• •Read more...•
 

கலை, இலக்கிய விமர்சகர் மு,நித்தியானந்தனுடன் முகநூலிலோர் உரையாடல்!

•E-mail• •Print• •PDF•

மு.நித்தியானந்தன்-அண்மையில் முகநூலில் லடீஸ் வீரமணியின் நாடகப்பங்களிப்பு பற்றிய வ,ந.கிரிதரனின் பதிவொன்றையொட்டி கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் தெரிவித்திருந்த கருத்துகளிவை. - பதிவுகள் -


நித்தியானந்தன் முத்தையா:  "1967 இல் ஊவாக்கல்லூரி நடத்திய கலை விழாவில் முற்போக்கு இலக்கியத்தின் மூத்த தலைமுறையாளர் அ .ந.கந்தசாமி அவர்கள் 'நாடகத்தை ரசிப்பது எப்படி?' என்ற பொருளில் ஆற்றிய சொற்பொழிவு ரசனை மிகுந்த ஒன்றாகும்.இவரது மறைவையடுத்து ஊவாக்கல்லூரித் தமிழ் மாணவர் மன்றம் அன்னாருக்கு முதல் அஞ்சலியைத் தெரிவித்து இரங்கற் கூட்டம் நடத்தியது." இது தினகரன் வார இதழில் 'துங்கிந்த சாரலில் ...ஒரு பதுளைக்காரனின் இலக்கியப்பதிவுகள்' என்ற தொடரில் (3.12. 1995) நான் எழுதிய குறிப்பு.

அப்போது ஊவாக்கல்லூரித் தமிழ் மாணவர் மன்றத்தின் செயலாளராக நானும் மலர்ப்பொறுப்பாளராக எஸ்.கணேசனும் செயற்பட்டோம். கொழும்பு சென்று அ.ந.கந்தசாமி அவர்களைச் சந்தித்து இப்பேச்சுக்கு ஒழுங்கு செய்தோம்.எங்கள் கல்லூரித் தமிழ் மன்றம் வெளியிட்ட 'இலக்கிய வெளியீடு' மலரில் நான் எழுதியிருந்த 'கம்பனும் பொதுவுடைமையும்' கட்டுரையைப்பாராட்டி அ.ந.கந்தசாமி அவர்கள் தனது உரையில் பாராட்டியது எனக்கு அப்போது பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது.

அ.ந.கந்தசாமி அவர்கள் உரையாற்றிய கடைசிக்கூட்டம் அவர் எங்கள் கல்லூரியில் பேசிய கூட்டம் என்று நினைக்கிறேன். அப்போது அவர் எழுதி, பாரி நிலைய வெளியீடாக வெளிவந்திருந்த ' வெற்றியின் ரகசியங்கள்' என்ற நூலை எனக்குத்தந்திருந்தார்.கொழும்பு சென்றபின், எனக்கு நன்றி தெரிவித்துக் கடிதமும் எழுதியிருந்தார். ஒரு சாதாரண பாடசாலை மாணவன் ஒருவனுடன் அவர் கொண்டிருந்த நேசஉணர்வு எனக்கு அவர்மீது பெரும் மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர் தனது இறுதிக் காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, லடீஸ் வீரமணியும் அவரது துணைவியாரும் அ .ந.கந்தசாமி அவர்களைக் கவனமாகப் பராமரித்தனர்.

•Last Updated on ••Monday•, 13 •July• 2020 02:03•• •Read more...•
 

வரலாற்றுச் சுவடுகள்: லடீஸ் வீரமணியின் அரங்கப் பங்களிப்பும், அவர் மீதான இருட்டடிப்பும்!

•E-mail• •Print• •PDF•

லடீஸ் வீரமணிஅண்மையில் 'அரங்கு ஓர் அறிமுகம்' என்னுமோர் நூலை வாசித்தேன். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் சி.மெளனகுரு மற்றும் திரு.க.திலகநாதன் ஆகியோரால் எழுதப்பட்ட நூல். அமரர் சி.பற்குணம் நினைவு மலர்க்குழுவினால் வெளியிடப்பட்டது. அரங்கு பற்றியதோர் அறிமுக நூலாக இதனைக் குறிப்பிடலாம். தாமறிந்ததை இந்நூல் மூலம் அறியத்தந்திருக்கின்றார்கள். இந்நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது ஒருவரை எவ்வளவு நாசூக்காக இருட்டடிப்பு செய்யலாம் என்பதை உணர்ந்துகொண்டேன். இந்நூலில் நான் அவதானித்த ஒருவரைப்பற்றிய இருட்டடிப்பு பற்றிய என் எண்ணமே இப்பதிவு. இந்நூல் பற்றிய விமர்சனமல்ல. இந்நூல் அரங்கு பற்றிய நல்லதொரு நூலே. அதற்காக இதனை எழுதியவர்களும், வெளியிட்டவர்களும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் நூல்கள் எல்லாவற்றிலும் எழுதுபவர்கள் சார்ந்து இருட்டடிப்புகள் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. அவை தவிரக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் இப்பதிவை நான் இடுகின்றேனே தவிர நூலாசரியர்களைத் தனிப்பட்டரீதியில் தாக்குவதற்காகவல்ல.

நூலில் 'நாடகக் கலையின் இயல்புகள்', 'நாடகக் கலையின் தோற்றம்', 'மேல்நாட்டுப்பாரம்பரியத்தில் நாடகம்', 'தமிழ் நாட்டு நாடகப் பாரம்பரியம்', 'இலங்கைத் தமிழ் நாடகப் பாரம்பரியம்' மற்றும் 'நாடகத் தயாரிப்பு' ஆகிய தலைப்புகளில் ஆறு அத்தியாயங்களுள்ளன. இவற்றில், 'இலங்கைத் தமிழ் நாடகப் பாரம்பரியம்' என்னும் அத்தியாயத்திலுள்ள ஒரு தகவல் பற்றியதே எனது இப்பதிவு.

இவ்வத்தியாயத்தில் நவீன அரங்கு பற்றிய பகுதியில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை தொடக்கி வைத்த இயற்பண்பு நாடக மரபு பற்றிக்குறிப்பிடும் நூலாசிரியர்கள் பின்வருமாறு குறிப்பிடுவார்கள்:

"நாடகமறியாதோரினதும் சமூகப் பிரக்ஞையற்றோரினைதும் கையில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை தொடக்கி வைத்த இயற்பண்பு நாடக மரபு இவ்விதம் சீரழிய, நாடகப் பிரக்ஞையும், சமூகப் பிரக்ஞையும் உடைய மத்தியதர வர்க்கத்தினரிடையே இவ் இயற்பண்பு நாடக நெறி வளர்ச்சியடைகின்றது. நாடக நிலை நோக்குடனும் சமூகப்பிரக்ஞையுடனும் அதனை வளர்த்துச் சென்றவர்கள் பல்கலைக்கழகத்தினரும் அதனைச் சார்ந்தோருமே. இலங்கைப் பல்கலைகழகத் தமிழ்ச்சங்கம் அ.முத்திலிங்கத்தின் 'பிரிவுப்பாதை' (1959), 'குடித்தனம்' (1961), 'சுவர்கள்' (1961) ஆகிய நாடகங்களையும் , அ.ந,கந்தசாமியின் 'மதமாற்றம்' (1962), சொக்கனின் 'இரட்டை வேசம்' (1963) ஆகிய நாடகங்களையும் மேடையிட்டது. இந்நாடகங்களை க.செ.நடராசா, கா.சிவத்தம்பி,
வீ.சுந்தரலிங்கம் , சரவணமுத்து ஆகியோர் தயாரித்தனர்." [பக்கம் 193]

•Last Updated on ••Saturday•, 11 •July• 2020 02:19•• •Read more...•
 

கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்!

•E-mail• •Print• •PDF•

- கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன் -அண்மையில் 'Kälam / Tradition & Heritage /C.Anjalendran / The Architecture of the Tamil Hindus of Sri Lanka' என்னும் தலைப்பிடப்பட்ட , இலங்கைக் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனுடான நேர்காணலை உள்ளடக்கிய காணொளியொன்றினைப் பார்த்தேன். அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் சிலவற்றைப்பற்றிய என் கருத்துகளின் பதிவிது. காணொளிக்கான இணைப்பினை இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.

முன்னாள் வவுனியா பா.உ சி.சுந்தரலிங்கத்தின் பேரனும் , கட்டடக்கலைஞருமான அஞ்சலேந்திரனின் உரையிது. அஞ்சலேந்திரன் புகழ்பெற்ற இலங்கை, தெற்காசியக் கட்டடக்கலைஞர்களிலொருவர். இங்குள்ள காணொளியில் அஞ்சலேந்திரன் இந்துக் கட்டடக்கலை பற்றிக் கூறிய கருத்துகளிலிருந்து அவருக்கு இந்துக்கட்டடக்கலை பற்றி மேலோட்டமான புரிதல்தான் உள்ளதோ என்று சந்தேகப்படுகின்றேன். உதாரணத்துக்கு அவர் கோயில் விமானத்தைக் கோபுரமாகக் கருதிக் கூறிய கருத்துகள். பொதுவாகக் கட்டடக்கலை கற்கைநெறி மேனாட்டுக் கட்டடக்கலையை அடிப்படையாகக்கொண்டு கற்பிக்கப்படுவது. அதில் பாரம்பரியக் கட்டடக்கலை ஆழமாகக் கற்பிக்கப்படுவதில்லை. பெளத்தக் கட்டடக்கலை , இந்துக் கட்டடக்கலை பற்றியெல்லாம் கற்பிக்கப்படுவதில்லை. இதன் காரணமாகவும் அவரது புரிதலில் தெளிவின்மை ஏற்பட்டிருக்கலாம்.

•Last Updated on ••Sunday•, 02 •August• 2020 17:49•• •Read more...•
 

வரலாற்றுச் சுவடுகள்: இவர் ஒரு பல்கலைக்கழகம்.

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பிறந்ததினம் ஜூன 27!

வரலாற்றுச் சுவடுகள்: இவர் ஒரு பல்கலைக்கழகம்.யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள், பேராசிரியர்களை அதிக அளவில் கொண்ட பல்கலைக் கழகமொன்றுள்ளது. இங்கு தமிழ்ப்பேராசிரியர்கள் பலர் இது ஆரம்பித்த நாளிலிருந்து பணி புரிந்து வந்துள்ளார்கள். இவர்கள் இதுவரையில் இலங்கைத்தமிழ் இலக்கியத்தை வெளிப்படுத்தும் வகையில் இதுவரையில் கீழுள்ளவற்றில் எத்தனை விடயங்களைச் செய்துள்ளார்கள் என்பதை அறிந்தவர்கள் அறியத்தரவும்?

* இலங்கைத் தமிழ் இலக்கியத்தை வெளிப்படுத்தும் ஆய்வு நூல்கள் * ஆய்வுக் கட்டுரைகள்..
* இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலகட்டத்தை வெளிப்படுத்தும் ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்
* இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் வரலாற்றை வெளிப்படுத்தும் ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
* இலங்கைதமிழ் இலக்கியத்தின் ஏனைய இலக்கியப்போக்குகளான பிரபஞ்ச யதார்த்தவாதம் பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
* இலங்கைச் சிறுபான்மைத்தமிழரின் குரலினை வெளிப்படுத்தும் ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
* இலங்கை மலையகத்தமிழர்களின் இலக்கியம்  பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
* இலங்கைத் தமிழ் முஸ்லீம் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியத்து ஆற்றிய பங்கு பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
* இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்குப் பிறமொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
* இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்கள், ஆய்வாளர்களை நினைவு கூர்ந்து எழுத்தப்பட்ட ஆக்கங்களைப்பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.

இவற்றைப்பற்றித் தெரிந்தவர்கள் அறியத்தரவும், ஆனால் இவற்றையெல்லாம் தனித்திருந்து ஒருவர் சாதித்துள்ளார். இவர் வெளியிட்ட மல்லிகை சஞ்சிகைகளில் வெளியான ஆக்கங்களிலிருந்து இவை அனைத்தையும் உருவாக்க முடியும்.

•Last Updated on ••Thursday•, 02 •July• 2020 13:42•• •Read more...•
 

வரலாற்றுச் சுவடுகள்: 2020 - கோப்பாய்ப் பழைய கோட்டையின் இன்றைய கோலம்!

•E-mail• •Print• •PDF•

இங்குள்ள வீதிதான் தற்போது பழைய கோட்டை ஒழுங்கை என்று அழைக்கப்படுகிறது. இதனைத்தான் சுவாமி ஞானப்பிரகாசர் கோட்டை வாய்க்கால் என்று அழைத்தார். இந்த ஒழுங்கையை அண்டி ஓட்டு வீட்டுடன் காணப்படும் காணி தான் முன்பு திருமதி வூட்ஸ்வேர்த் என்பவருக்கு நாற்பதுகளில் சொந்தமாகவிருந்தது. தற்போது தனியாருக்குச் சொந்தமாகிவிட்டது.  மானிப்பாய்- கைதடி வீதிக்கு வடக்காக, வலது புறத்தில் , கோப்பாய்ச் சந்தைக்கு முன்பாக உள்ள வீதி இந்த வீதி.நாற்பதுகளில் (1940) சுவாமி ஞானப்பிரகாசர் முதல் முறையாகக் கோப்பாய்க் கோட்டை இருந்த இடத்தைக் கண்டுபிடித்து ஒரு கட்டுரையொன்றினை ஆங்கில ஆய்விதழொன்றில் எழுதியிருந்தார். எண்பதுகளில் நான் கலாநிதி கா.இந்திரபாலாவை யாழ்

பல்கலைக்கழகத்தில் சந்தித்தபோது அவர் காட்டினார். அந்த ஆய்விதழ் யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் இருக்கக்கூடும். அதனடிப்படையில் நான் அக்கோட்டையிருந்த இடத்தைப் பார்க்கச் சென்றேன். என்னுடன் நண்பர் ஆனந்தகுமார் வந்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன்.  யாழ் பல்கலைக்கழகத்துக்கு அவருடனே சென்றிருந்தேன். கோப்பாய்க் கோட்டைக்குச் செல்கையிலும் அவர்தான் வந்திருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. பின்னர் அக்கோப்பாய்க் கோட்டை பற்றி எழுதி வீரகேசரிக்கு அனுப்பினேன். வீரகேசரி அதனைப் பிரசுரித்ததுடன் சன்மானமும் (ரூபா 35) அனுப்பியிருந்தார்கள்.
•Last Updated on ••Friday•, 03 •July• 2020 04:05•• •Read more...•
 

முகநூலில் எதிர்வினைகளினூடு ஒரு நேர்காணல்!

•E-mail• •Print• •PDF•

கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன்

அண்மையில் மல்லிகை சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் செ.யோகராசா அன்று எழுதிய அ.ந.கந்தசாமியின் கவிதைப்பங்களிப்பு  பற்றி எழுதிய கட்டுரையைப் பதிவிட்டிருந்தேன். அதற்குத் தன் எதிர்வினையாற்றிய கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரனுடன் கருத்துகளைப் பரிமாறும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் கேள்விகள் சிலவற்றுக்கு அவரும் சளைக்காமல் பதிலளித்தார். முடிவில் பார்த்தபோது அதுவே சிறியதொரு நேர்காணலாக இருப்பதை அறிந்தேன். அதனைத்தொகுத்து இங்கு பதிவு செய்கின்றேன். நண்பர்களே! நீங்கள் உங்கள் நட்பு வட்டத்திலுள்ள கலை, இலக்கிய , அரசியல் ஆளுமை எவருடனாவது இவ்விதமாகக் கேள்விகள் கேட்பதன் மூலம் நேர்காணலற்ற நேர்காணல்களைச் செய்ய முடியும். யார் சொன்னது முகநூல் ஆரோக்கியமற்றதென்று? இது முகநூலின் ஆரோக்கியமான விளைவுகளிலொன்று. எழுத்தாளர் எம்.எஸ்.எம். இக்பால் பற்றி கே.எஸ்.எஸ் அவர்களும், எழுத்தாளர் ஜவாப் மரைக்கார் அவர்களும் பின்வருமாறு கருத்துகளை முன் வைத்தார்கள்.

கே.எஸ்.சிவகுமாரன்: எம்.எஸ்.எம். இக்பால் அவர்கள் மறைந்து விட்டார்கள். அவர் ஒரு தீவிரவாசகர். காரசாரமாக விமர்சிப்பவர்

ஜவாத் மரைக்கார்: தனது வாழ்வின் இறுதிக்காலப் பகுதியில் ( 1975 தொடக்கம் மரணிக்கும் வரை) என்னுடன் நெருக்கமாகவும் அன்போடும் பழகியவர் எம்.எஸ்.எம். இக்பால். துணிந்த கட்டை  

நான்: நான் மதிக்கும் எழுத்தாளர்களில் அவரும் முக்கியமானவர். அவரது கட்டுரைகள், கவிதைகளை மல்லிகை சஞ்சிகையில் கண்டிருக்கின்றேன். இலங்கைத்தமிழ் முற்போக்கு இலக்கியத்துக்கு முஸ்லீம் எழுத்தாளர்கள் பலர் மிகுந்த பங்களிப்பினை ஆற்றியிருக்கின்றார்கள். தேசாபிமானியிலிருந்து பிரிந்த பின்னர் இளங்கீரன் அவர்கள் பல மார்க்சிய ஆய்வுக்கட்டுரைகளைத் தொழிலாளி பத்திரிகையில் எழுதியிருக்கின்றார்.

•Last Updated on ••Tuesday•, 23 •June• 2020 14:55•• •Read more...•
 

மாநகரத்துப் பெருமழை!

•E-mail• •Print• •PDF•

city_man_by_auguat_hermann_scherer

இருண்டிருக்கும்  மாநகரத்திரவு.
இருளைக்கிழித்தொரு மின்னலின் கோடிழுப்பு.
இடியின் பேரொலி.
யன்னலினூடு பார்க்கையில் பேசாத்திரைப்படமாய்
மழைக்காட்சி விரிகிறதெதிரே.
இழந்தது உறவுகள் , உருண்டு புரண்ட மண்
மட்டுமல்ல,
இதுபோன்ற இயற்கை நிகழ்வுகளையும்தாமென்று
உணர்ந்தது உள்ளம்.
இழந்ததையெண்ணிக் கழிவிரக்கமா?
இன்னுமா?
அன்று மட்டுமல்ல,
இன்று மட்டுமல்ல,
என்றுமே இருக்கப்போகும்
உணர்வு இதுவென்றும்
உணர்ந்தேன்.
உணர்வுகளுக்கு அடை போட முடியுமா?
எதற்காக? யாருக்காக?

•Last Updated on ••Monday•, 22 •June• 2020 02:47•• •Read more...•
 

ஆய்வுத் தேடலற்ற இலக்கிய நந்திகளும், ஆய்வுத்தேடலும் , அர்ப்பணிப்பும் மிக்க எழுத்தாளர்களும்!

•E-mail• •Print• •PDF•

நந்திஇலக்கிய நந்திகள் என்று நான் கருதுவது புத்திஜீவிப் பேராசிரியர்களில் சிலரை. இவர்கள் புத்தி ஜீவிகள். இவர்களுக்குப் பணம் ஊதியமாக வழங்கப்படுவது அவர்களது புத்தியைப் பாவித்து சீவியத்தை நடத்துவதற்காக. கூடவே ஆய்வுகள் செய்வதற்காக.  ஆனால் இவர்கள் செய்வதென்ன? செய்ததென்ன? தங்கள் மேதமையைக் காட்டுவதற்காக, தங்களுக்குப் பிடித்த சிலரின் படைப்புகளை மட்டும் முன்னிறுத்தி தமக்குக் கீழ் சீடர்கள் வட்டமொன்றினை அமைத்துக்கொள்வார்கள். அதன் பின்னர் குருவும், சீடர்களும் ஒருவருக்கொருவர் உறுதுணையாகச் செயற்படுவார்கள். இவர்கள் மூலம் மறைக்கப்பட்ட இலக்கிய ஆளுமைகள் பலர்.

இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் அ.ந.கந்தசாமியின் கவிதைப்பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இதுவரை எனக்குத்தெரிந்து ஒரேயொரு பேராசிரியரே அதனைச் சரியாக உணர்ந்து மல்லிகையில் கட்டுரை எழுதியிருக்கின்றார்.  அவர் பேராசிரியர் செ.யோகராசா.   அவர்  'நவீன ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சியில் அ.ந.கந்தசாமியின் பங்கு' என்னுமோர் அரிய கட்டுரையினை எழுதியிருக்கின்றார். மல்லிகை சஞ்சிகையில் வெளியான கட்டுரை அது.  ஆனால் இதுவரையில் புத்திஜீவிப் பேராசிரியர்கள் எவராவது அ.ந.கந்தசாமியின் கவிதைப்பங்களிப்பு பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. இதுவோர் உதாரணம் மட்டுமே. இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் ஜாம்பவான்களிலொருவரான அ.ந.க.வின் படைப்புகளுக்கே இந்த நிலையென்றால் , மிகவும் தரமான படைப்புகளைத் தந்த எழுத்தாளர்கள், கவிஞர்களின் நிலையென்ன?

•Last Updated on ••Saturday•, 20 •June• 2020 22:10•• •Read more...•
 

வரலாற்றுச் சுவடுகள்: நல்லூர் மந்திரிமனை

•E-mail• •Print• •PDF•

வரலாற்றுச் சுவடுகள்: நல்லூர் மந்திரிமனை

இங்குள்ள 'மந்திரிமனை'  ஓவியத்தை வரைந்திருப்பவர் ஓவியர் பிருந்தாயினி தீபனா. இதனைக் கட்டடக்கலைஞர் மயூரநாதன் அவர்கள் 'யாழ்ப்பாண நகரம் - 400' குழுமத்தில்  பகிர்ந்துகொண்டிருந்தார். அவ்வோவியத்தை இப்பதிவுக்காக நன்றியுடன் பாவிக்கின்றேன்.

'மந்திரிமனை' என்னும் இக்கட்டடம்  பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான வரலாற்றுச் சின்னங்களிலொன்று.  இக்கட்டடத்தின் முகப்பிலுள்ள தகவல்களின்படி இக்கட்டடம் 1890இல் கட்டப்பட்ட விபரமும், ஒரு குடும்பத்துக்குரியதென்பதும்  தெரிய வரும். ஆனால் இக்கட்டடம் முக்கியத்துவம் பெறுவது பின்வரும் காரணங்களினால்:

இக்கட்டடத்தின் கட்டடக்கலை அம்சங்கள் திராவிட , ஐரோப்பியக் கட்டடக்கலை அம்சங்களை உள்ளடக்கியது. பாவிக்கப்பட்ட  கட்டட மூலப்பொருட்கள். கட்டடக்கலை அம்சங்கள், கட்டப்பெற்ற காலகட்டம் எல்லாம் இக்கட்டடம் வரலாற்றுச் சின்னங்களிலொன்றாகக் கருதப்பட்டு பேணப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
இக்கட்டடம் 'மந்திரிமனை' என அழைக்கப்படுவதானது பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. இக்கட்டடம் உண்மையில் ஏற்கனவே இப்பகுதியில் தமிழரசர் காலத்திலிருந்து முக்கியத்துவம் பெற்ற கட்டடமொன்றிருந்த இடத்தில் கட்டப்பெற்ற ஒன்றா? அச்சரித்திர  முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தனிப்பட்ட ஒருவரால் வாங்கப்பெற்று பழைய கட்டடமிருந்த இடத்தில் இக்கட்டடம் கட்டப்பெற்றதா?  இவையெல்லாம் நியாயமான கேள்விகள். ஆய்வுகள் பதில்களை அடைய அவசியம்.

•Last Updated on ••Friday•, 19 •June• 2020 16:11•• •Read more...•
 

வரலாற்றுச் சுவடுகள்: மறுமலர்ச்சிக்காலம் இலக்கியச் சிறப்பிதழ்.

•E-mail• •Print• •PDF•

* மறுமலர்ச்சிக்காலம் இலக்கியச் சிறப்பிதழ் - கலைப்பெருமன்றம் உழவர் விழா மலர் , அம்பனை, தெல்லிப்பழை - 1973 -

இலங்கைத்தமிழ் இலக்கிய உலகம் பெருமைப்படத்தக்கதொரு மலரிது . இம்மலரில் எழுத்தாளர் அ.செ.முருகானந்தனுக்குச்  'சிந்தனைச் செல்வர்'என்னும் பட்டம் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார். அவரைப்பற்றி, அவரது இலக்கியப் பணி பற்றி இலக்கிய ஆளுமைகள் பலரின் அரிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

இதற்காக தெல்லிப்பழை கலைமன்றத்தினர்,   மலர்க்குழுவினர் ( ஆ.சிவநேசச் செல்வன், மயிலங்கூடலூர் பி.நடராசன், பொன்.நாகரத்தினம், வை.குணாளன்) பெருமைப்படலாம். மறக்காமல் கெளரவிக்கப்பட வேண்டிய இலக்கியவாதியொருவர் கெளரவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இவ்வமைப்பும், தொகுப்பாளர்களும் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகின்றார்கள். காரணம்: அ.செ.மு பற்றிய விரிவான மலர் என்பதுடன் அவர் 'சிந்தனைச் செல்வர்' என்னும் பட்டம் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார். அவ்வகையில் இதுவரை வெளியான முதலாவதும் , ஒரேயொரு நூலும் இதுதான். (நான் அறிந்தவரை) என்பதற்காக.

•Last Updated on ••Friday•, 19 •June• 2020 02:13•• •Read more...•
 

கவிதை: கனவு நிலா!

•E-mail• •Print• •PDF•

கனவு நிலா

கனவுநிலாவின் அழகில் நானெனை
மறந்திருந்தேன். அதன் தண்ணொளியில்
சுகம் கண்டிருந்தேன்.
நனவுமேகங்களே உமக்கேனிந்தச்
சீற்றம்? எதற்காக அடிக்கடி
எழில் நிலாவை மூடிச்செல்ல
முனைகின்றீர்கள்?
நீங்கள் மூடுவதாலென்
கனவுநிலாவின் எழில்
மறைவதில்லை.
நினைவுவானில்
நீந்திவரும் நிலவை
யாரும் மூடிட முடியாது.
நனவுமேகங்களே!
உம்மாலும்தாம்.
பார்க்கும் ஒரு  கோணத்திலும்மால்
மூட முடிவதுபோல் தெரிவதெல்லாம்
முழு உண்மையல்ல.
பின்னால் மறுகோணத்தில்
நனவுவானில் நடைபயிலும்
முழுநிலவின் நடையழகை
யார்தான் தடுக்க முடியும்.
இரசிப்பதை யார்தான் தடுக்க முடியும்.
கனவுநிலவினெழிலில்
களித்திருக்குமெனை யார்தானிங்கு
தடுக்க முடியும்?

•Last Updated on ••Thursday•, 18 •June• 2020 18:34•• •Read more...•
 

வரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் ஈழகேசரியின் இளைஞர் பகுதியில் வெளியான சிறுகதைகள்!

•E-mail• •Print• •PDF•

அ.ந.கந்த்சாமியின் இளைமைத் தோற்றம்இலங்கையிலிருந்து வெளியான ஈழகேசரி இளைஞர்களுக்காக ஒரு பகுதியை கல்வி அனுபந்தம் என்னும் பெயரில் தனிப்பத்திரிகையாக வெளியிட்டு வந்தது. அதன் மூலம் பின்னாள் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் கால் பதித்த எழுத்தாளர்கள் பலர் உருவானார்கள். அப்பகுதியில் பதினாறு வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அங்கத்தவர்களாகச் சேரலாம். ஒரு முறை அவர்களை ஊக்குவிக்கும் முகமாக யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியில் விழா நடத்தி பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டிகளில் விருதுகளும் வழங்கிக் கெளரவித்தது போற்றுதற்குரிய விடயம்.

மேற்படி மாணவர் பகுதியைத் 'தாத்தா' நடத்தினார். தாத்தா ஓய்வெடுக்கும் சமயத்தில் 'பாட்டி'  நடத்தினார். அங்கத்தவர்களாகச் சேரும் மாணவர்களின் படைப்புகள் தெரிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டதுடன் , சிறுகதைப்போட்டிகளும் நடத்தப்பட்டன. அ.ந.கந்தசாமியின் மாணவர் அங்கத்துவன் இலக்கம்: 181. அப்பொழுது அவருக்கு வயது 14 (1938).

மாணவர்கள் அனுப்பும் படைப்புகளைப்பற்றி தாத்தா (அல்லது பாட்டி) தமது கருத்துகளைக் கூறுவார்கள். அனுப்பிய படைப்புகள் நல்லாயிருந்தன, அல்லது தரமாகவில்லை போன்ற தமது கருத்துகளைச் சுவையாகக் கூறி அவர்களை ஊக்குவித்தார்கள். அவற்றில் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளர்களான அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தன் போன்றோருடனெல்லாம் இளைஞர் பகுதித் 'தாத்தா' உரையாடியிருக்கின்றார்.
•Last Updated on ••Friday•, 19 •June• 2020 02:14•• •Read more...•
 

மறுமலர்ச்சிச் சங்கத்தில் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பும், வரதரின் இருட்டடிப்பும். ஏன்?

•E-mail• •Print• •PDF•

வரதர்அறிஞர் அ.ந.கந்தசாமிஅண்மையில் ஜனவரி 2007 வெளிவந்த ஞானம் சஞ்சிகை பார்த்தேன். வரதர் சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. அதில் செ.சுதர்சன் எழுத்தாளர் வரதருடன் நிகழ்த்திய நேர்காணல் வெளியாகியுள்ளது. 'வரலாறு ஒன்றின் மூலமும் கடைசியுமான கதை சொல்லி' - அதில் வரதர் மறுமலர்ச்சி இயக்கம் பற்றியும், சஞ்சிகை பற்றியும் அளித்த பதில்கள் வியப்பினை அளிப்பவையாகவிருந்தன. இதுநாள் வரை அவர்மேல் வைத்திருந்த மதிப்பினை ஓரளவுக்குக் குறைக்கும் வகையிலான வகையில் அவர் எழுத்தாளர் ஒருவரை இருட்டடிப்பு செய்துள்ளார். அதுவும் முழுப் பூசுணைக் காயைச் சோற்றில் மறைப்பதைப்போன்றது. அந்த நேர்காணலில் ஓரிடத்திலாவது அவர் அ.ந.க பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. இது அ.ந.கந்தசாமியின் மறுமலர்ச்சி இயக்கத்துக்கான பங்களிப்பைத் திட்டமிட்டே மூடி மறைப்பதாகும். ஒருவர் மறைந்து விட்டால், அவரில்லையென்ற துணிவில் இது போல் சாதனையொன்றுக்குத் தாமே அதிக உரிமையினைக் கோரி வரலாற்றை மாற்ற முற்படுவர் சிலர். வரதர் எவ்விதம் அவ்விதம் தாழ்ந்தார்? எப்படி அ.ந.கந்தசாமியை மறுமலர்ச்சி இயக்கம் பற்றிக் குறிப்பிடுகையில் மறைக்க முடிந்தது? [ ஞானம் சஞ்சிகையி வெளியான வரதரின் நேர்காணல் - http://noolaham.net/project/11/1024/1024.pdf ]

மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்கிய இளைஞர்கள் பற்றிக் குறிப்பிடுகையில் மேற்படி இதழில் வெளியான 'ஒரு காலத்தின் காலாக அமைந்தவர்' என்னும் கட்டுரையில் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பை மறக்காமல் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு கூறுவார்: "1940களில் மறுமலர்ச்சிச் சங்கம் நிறுவப்பட்டது. இதனை வரதராசன், சோ.தியாகராசா, நாவற்குழியூர் நடராஜன், பஞ்சாட்சர சர்மா, அ,ந,கந்தசாமி ஆகியோர் நிறுவினர்" ஆனால் இங்கு பேராசிரியர் அ.செ.முருகானந்தனைத்தவற விட்டு விட்டார். சோ.தியாகராஜாவுக்குப் பதிலாக அ.செ.மு என்றிருக்க வேண்டும்.
•Last Updated on ••Sunday•, 28 •June• 2020 16:26•• •Read more...•
 

மார்க் ட்வைனின் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) நாவல் நூலுருப்பெறுகிறது!

•E-mail• •Print• •PDF•

மார்க் ட்வைனின் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) நாவல் நூலுருப்பெறுகிறது!

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்" - பாரதியார் -

அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக முனைவர் ஆர்.தாரணியின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான மார்க் ட்வைனின் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) நாவல் விரைவில் நூலாகத் தமிழகத்தில் எழிலினி பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது. அவருக்கும் , பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.

•Last Updated on ••Wednesday•, 10 •June• 2020 09:34•• •Read more...•
 

ஈழநாடும் , நானும் (5): என் கவிதை முயற்சிகளும், வீரகேசரி, சிந்தாமணி & தினகரன் அமைத்துத்தந்த கவிதைக் களங்களும்!

•E-mail• •Print• •PDF•

V.N.Giritharan in his teen days.."நான் என்  பால்ய ,பதின்மப் பருவத்து வாசிப்பு, எழுத்தனுபவங்களை இங்கு எழுதுவதற்கு முக்கிய காரணம் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இவ்வனுபவங்களை அறிய வேண்டுமென்பதற்காகவே. பொதுவாக எழுத்தாளர்கள் தம் பால்ய, பருவத்து எழுத்து, வாசிப்பனுபவங்களை விரிவாக எழுதுவது குறைவு. எனது அப்பருவத்து அனுபவங்கள் இப்பொழுதும் மகிழ்ச்சியைத்தருவன. இந்நிலையில் இவற்றை வாசிக்கும் இளம் பருவத்தினருக்கும் இவ்வனுபவங்கள் நிச்சயம் இன்பத்தைத்தருவதுடன் , வாசிப்பு, எழுத்தில் ஆர்வமுள்ளவர்களை மேலும் இத்துறைகளில் ஆழ்ந்து ஈடுபடத்தூண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு." - வ.ந.கி -
மானுட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் முன் நிற்பது கவிதையே. அதற்கு நிகர் வேறெதுவுமில்லை. குறைந்த வரிகளில் உணர்வுகள் எவையாயினும் அவற்றை வெளிப்படுத்தக் கவிதைகளால்தாம் முடியும். என்னைப்பொறுத்தவரையில் என் கவனம் பதின்ம வயதுகளில் கவிதையின் பக்கம் திரும்பியதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: அப்பருவத்துக்குரிய உணர்வுகளுக்குக் கவிதை வரிகள் வடிகால்களாகவிருந்தன. அடுத்து எப்பொழுதுமே என் உள்ளத்தில் இருப்பு பற்றிய கேள்விகள் மற்றும் , வர்க்கம், வர்ணம், இனம்,மதம்,மொழி, நாடென்று பல்வேறு பிரிவுகளால் ஏற்படும் மானுடரின் வாழ்வியற் பிரச்சினைகள், அவற்றின் விளைவான சவால்கள், துயரங்கள் எல்லாம் சிந்தையிலேற்படுத்திய பாதிப்புகளுக்குரிய வடிகால்களாக,வெளிப்படுத்தும் சாதனங்களாக எழுத்துகளேயிருந்தன. கவிதைகளில் அவற்றைக் குறைந்த வரிகளில் வெளிப்படுத்த முடிந்தன. என் எழுத்துகளில் கவிதைகளுட்பட , நீங்கள் இம்மூவகைப்பண்புகளையும் காணமுடியும். இருப்பு பற்றிய கேள்விகள், மானுட அக உணர்வுகள் மற்றும் மானுடர் வாழும் சமூக, அரசியல் & பொருளியச் சூழல்களின் பாதிப்புகள் என் எழுத்துகளில் விரவிக் கிடப்பதை நீங்கள் காணலாம்.
•Last Updated on ••Wednesday•, 10 •June• 2020 18:22•• •Read more...•
 

அறிஞர் அ.ந.கந்தசாமியும் ,சுதந்திரனும்

•E-mail• •Print• •PDF•

அறிஞர் அ.ந.கந்தசாமிஎழுத்தாளர் அ.ந.கந்தசாமி சுதந்திரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியப்பீடத்தில் இருந்த காலகட்டம் சுதந்திரனைப் பொறுத்தவரையில் அதன் பொற்காலமென்றே கூறுவேன். அக்காலகட்டத்தில் அவர் எழுதிய படைப்புகளில் அ.ந.கந்தசாமி என்னும் பெயரில் எழுதிய படைப்புகள் , கவீந்திரன் என்னும் பெயரில் எழுதிய படைப்புகள் மற்றும் பண்டிதர் திருமலைராயர் ,கலையரசன் என்னும் பெயர்களில் எழுதிய படைப்புகள் கிடைத்துள்ளன. இவை அவர் எழுதிய முழுமையான படைப்புகள் என்று கூறுவதற்கில்லை. எமக்குக் கிடைத்த படைப்புகளிவை. அவர் சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் 1949 தொடக்கம் 1952 வரையிலான காலகட்டத்திலிருந்ததாக அறியப்படுகின்றது. இக்காலகட்டத்தில் கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, இலக்கியக் கட்டுரைகள் மற்றும் அவரளித்த குயுக்தி பதில்கள் என்பவை முக்கியத்துவம் வாய்ந்தவை.

இது போல் அ.ந.க.வின் படைப்புகளை ஆராய்பவர்கள் தேசாபிமானி ஆசிரியராகவிருந்த காலகட்டம், சுதந்திரன் காலகட்டம், ஶ்ரீலங்கா காலகட்டம், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த காலகட்டத்தில் அவர் இலக்கியப்பங்களிப்பு மற்றும் ஏனைய காலகட்டங்கள் என விரிவாக ஆராய வேண்டும். இவை தவிர அவரது மாணவப்பருவத்தில் அவருக்குக் களமமைத்துக்கொடுத்த ஈழகேசரி காலகட்டம், மறுமலர்ச்சிக் காலகட்டம் ஆகியவையும் விரிவாக ஆராயப்பட வேண்டும். மறுமலர்ச்சிக் காலகட்டம் என்றவுடன் போதிய ஆய்வுகளற்ற பலரும் (பேராசிர்கள் பலருட்பட) மறுமலர்ச்சிச் சஞ்சிகை வெளிவந்த காலகட்டத்தை மையமாகக்கொண்டே அவரது பங்களிப்பை ஆராய முற்படுகின்றார்கள். இது தவறான அணுகுமுறை.  அ.ந.க மறுமலர்ச்சி அமைப்பின் ஸ்தாபகர்களிலொருவர். அதன் செயலாளராக இருந்தவர். எழுத்தாளர் பஞ்சாட்சர சர்மாவுக்குக் கடிதமெழுதி அவரை மறுமலர்ச்சிச் சங்கத்துக்குள் கொண்டு வந்தவர் அ.ந.கந்தசாமியே. இக்கடிதத்தை பஞ்சாட்சரசர்மாவின் நூலொன்றில் காணலாம். இதுபோல் மறுமலர்ச்சிச் சங்க அமைப்பினை உருவாக்கியவர்களில் அவர் ஒருவர் என்பதையும், அதன் செயலாளராக விளங்கியவர் என்பதையும் அவர் மல்லிகை சஞ்சிகைக்குத் தனது இறுதிக்காலத்தில் அனுப்பிய வில்லூன்றி மயானக் கவிதை உருவாகிய வரலாறு பற்றிய கட்டுரை தொடர்பாக எழுதிய கடிதத்தில் காணலாம். அதனையும் மல்லிகை சஞ்சிகையில் காணலாம்.

•Last Updated on ••Tuesday•, 09 •June• 2020 19:55•• •Read more...•
 

மொழிபெயர்ப்புக் கவிதை: காதல் தத்துவம் (Love’s Philosophy)

•E-mail• •Print• •PDF•

 Percy Bysshe Shelley

கவிஞர் ஷெல்லியின் புகழ்பெற்ற கவிதைகளிலொன்று 'காதல் தத்துவம்' .இதனைத் தழுவி இதே பெயரில் இரு கவிஞர்கள் கவிதைளை எழுதியிருக்கின்றனர். ஒருவர் அ.ந.கந்தசாமி. இவரது கவிதை தேன்மொழி (1955) சஞ்சிகையில் வெளியானது. இன்னுமொரு தழுவல் கவிதையை எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகம் எழுதியிருக்கின்றார். அது ஈழநாட்டில் வெளியானது. மேலும் பலர் தழுவியோ அல்லது மொழிபெயர்த்தோ எழுதியிருக்கக்கூடும். இங்கு நான் இதே தலைப்பில் ஷெல்லியின் கவிதையை மொழிபெயர்த்திருக்கின்றேன். ஷெல்லியின் கவிதை மரபுக்கவிதை. ஆனால் அதனை அதன் கருத்தின் அடிப்படையில் தமிழாக்கம் செய்துள்ளேன். ஓரிரு மரபுக்கவிதையின் அம்சங்களிலிருந்தாலும் இது மரபுக்கவிதையல்ல.  அறிஞர் அ.ந.கந்தசாமி, எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகம் ஆகியோர் தழுவி மொழிபெயர்த்த கவிதைகளையும் கீழே தந்துள்ளேன். அவற்றில் ஷெல்லியின் கவிதையிலுள்ள ஆத்மீக வெளிப்பாடு இல்லாதிருப்பதை அவதானிக்கலாம். அவர்கள்தம் கொள்கைகளுக்கேற்ப அதனை அவர்கள் தவிர்த்திருக்கக்கூடும். அதன் காரணமாகவே அதனைத்தவிர்த்து முழுமையான மொழிபெயர்ப்பாக இல்லாமல் தழுவித் தம் கவிதைகளைப்படைத்திருக்க வேண்டும்.

காதல் தத்துவம்

- பேர்ஸி பிஷ் ஷெல்லி | தமிழில்: வ.ந.கிரிதரன்

ஊற்றுகள் ஆற்றுடன் கலந்துவிடும்.
ஆறுகளோ ஆழியில் கலந்துவிடும்.
சொர்க்கக் காற்று எப்போதும்
சேர்ந்தே கலந்து விடுமின் உணர்வுடனே.
இங்கு எவையும் தனித்தில்லை;
இறைவிதி வழியனைத்து மிங்கோர்
ஆன்மா ஆகியிணைந்தே கலந்துவிடும்..
அடியேனிலையே அவ்விதமுன்னுடன் ஏன்?

•Last Updated on ••Monday•, 08 •June• 2020 18:36•• •Read more...•
 

ஈழநாடும் , நானும் (4); சிறுகதைகளை நோக்கித் திரும்பிய கவனம்....

•E-mail• •Print• •PDF•

"நான் என்  பால்ய ,பதின்மப் பருவத்து வாசிப்பு, எழுத்தனுபவங்களை இங்கு எழுதுவதற்கு முக்கிய காரணம் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இவ்வனுபவங்களை அறிய வேண்டுமென்பதற்காகவே. பொதுவாக எழுத்தாளர்கள் தம் பால்ய, பருவத்து எழுத்து, வாசிப்பனுபவங்களை விரிவாக எழுதுவது குறைவு. எனது அப்பருவத்து அனுபவங்கள் இப்பொழுதும் மகிழ்ச்சியைத்தருவன. இந்நிலையில் இவற்றை வாசிக்கும் இளம் பருவத்தினருக்கும் இவ்வனுபவங்கள் நிச்சயம் இன்பத்தைத்தருவதுடன் , வாசிப்பு, எழுத்தில் ஆர்வமுள்ளவர்களை மேலும் இத்துறைகளில் ஆழ்ந்து ஈடுபடத்தூண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு." - வ.ந.கி -


V.N.Giritharan in his teen days..பதின்ம வயதுகளில் ஈழநாடு மாணவர் மலரில் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நான் நாவலர் வீதியும், கே.கே.ஸ்.வீதியும் சந்திக்குமிடத்திலிருந்த சாந்தையர் மடப்பிள்ளையார் கோயில் வருடா வருடம் சிவராத்திரி தினத்தையொட்டி நடாத்தும் சமயக் கட்டுரைப்போட்டியில் பங்குபற்றியிருக்கின்றேன். 1971- 1974 காலகட்டத்தில் மூன்று தடவைகள் பங்கு பற்றியிருக்கின்றேன். நாவலர் பள்ளிக்கூடத்தில் போட்டி நடைபெற்றது. அவற்றில் இரு தடவைகள் முதலாவதாகவும், ஒருமுறை இரண்டாவதோ அல்லது மூன்றாவதாகவும் வந்திருக்கின்றேன். பரிசாகச் சான்றிதழும் , சமய நூல்களும் தந்தார்கள். அவற்றில் முதல் பரிசைப்பெற்ற ஒரு கட்டுரையொன்றின் தலைப்பு மட்டும் நினைவிலுள்ளது. அது 'சமயமும், விஞ்ஞானமும்' அதில் டார்வினின் கூர்ப்புக் கொள்கையையும் திருவாசகரின் 'புல்லாய்ப் பூண்டாய்..' என்று வரும் சிவபுராண வரிகளையும் ஒப்பிட்டு விஞ்ஞானம் இன்று கூறியதை அன்றே கூறியவர் மாணிக்கவாசகர் என்று வாதிட்டிருந்தேன். அப்போட்டிகளை நடத்துவதில் ஈடுபாடுள்ள இருவர் இன்னும் என் நினைவிலுள்ளார்கள். ஒருவர் இளம் வயதுடையவர். சாந்தையர் மடப்பிள்ளையார் கோயில் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளவர். நாவலர் வீதியில் வசித்தவர். அவருடன் காணப்பட்ட இன்னுமொருவர் ஆசிரியரைப்போன்று தென்பட்டார். கந்தசாமி என்று அவருக்குப்பெயர் என்று நினைவு. ஏனெனில் பெற்ற பரிசுச் சான்றிதழ்களிலும் இ.கந்தசாமி என்ற பெயரே இருந்ததாக நினைவு (சிலவேளை அது தவறாகக்கூட இருக்கலாம். நீண்ட காலமாகிவிட்டதால் நினைவில் உறுதியாக அப்பெயரில்லை.) ஆனால் பின்னர் கார்க்கியின் நூல்கள், அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவு நூல்கள் காரணமாகச் சமயம் மீதான ஈடுபாடு எனக்குக் குறைந்தது. கார்ல் மார்க்சின் கோட்பாடுகளை விரிவாக அறிந்த காலகட்டத்தில் விஞ்ஞானமே என் மெய்ஞ்ஞானமாயிற்று. எம் மானுட அறிவுக்குட்பட்ட விடயங்களை அறிவதற்கான, புரிதலுக்கான வழி அறிவியலே என்பதே தற்போது என் நிலைப்பாடு.

•Last Updated on ••Sunday•, 07 •June• 2020 18:39•• •Read more...•
 

ஈழநாடும் , நானும் (2 & 3): அப்பாவின் பெயரிலெழுதிய சித்திரைப்புத்தாண்டுக்கவிதையும், மட்டக்களப்பில் நடைபெற்ற அகில இலங்கைத்தமிழ்த்தின விழா நிகழ்வும்....

•E-mail• •Print• •PDF•

"நான் என்  பால்ய ,பதின்மப் பருவத்து வாசிப்பு, எழுத்தனுபவங்களை இங்கு எழுதுவதற்கு முக்கிய காரணம் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இவ்வனுபவங்களை அறிய வேண்டுமென்பதற்காகவே. பொதுவாக எழுத்தாளர்கள் தம் பால்ய, பருவத்து எழுத்து, வாசிப்பனுபவங்களை விரிவாக எழுதுவது குறைவு. எனது அப்பருவத்து அனுபவங்கள் இப்பொழுதும் மகிழ்ச்சியைத்தருவன. இந்நிலையில் இவற்றை வாசிக்கும் இளம் பருவத்தினருக்கும் இவ்வனுபவங்கள் நிச்சயம் இன்பத்தைத்தருவதுடன் , வாசிப்பு, எழுத்தில் ஆர்வமுள்ளவர்களை மேலும் இத்துறைகளில் ஆழ்ந்து ஈடுபடத்தூண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு." - வ.ந.கி -


வ.ந.கிரிதரன் பால்ய  பருவத்தில்...ஈழநாடும் , நானும் (2): அப்பாவின் பெயரிலெழுதிய சித்திரைப்புத்தாண்டுக்கவிதையும், மட்டக்களப்பில் நடைபெற்ற அகில இலங்கைத்தமிழ்த்தின விழா நிகழ்வும்..

ஈழநாடு மாணவர் மலர் என் 'தீபாவளி தித்தித்தது' கட்டுரைக்குத் தந்த ஊக்கம் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டியது. மேலும் சில கதைகளை என் பாடசாலை அப்பியாசப் புத்தகத்தில் எழுதினேன். அவற்றில் ஒன்றின் தலைப்பு  மட்டும் இன்னும் நினைவிலுள்ளது. கதையின் தலைப்பு - 'மழை பெய்து ஓய்ந்தது'. கதை ஆரம்பிக்கும்போதும் , முடியும் போதும் இடம்பெற்றிருக்கும் வசனங்கள்: 'மழை பெய்து ஓய்ந்தது'. :-)  அதனை வழக்கம்போல் அப்பாவுக்குக் காட்டினேன். அவர் படித்துப்பாராட்டினார். அக்காலகட்டத்தில் எங்கள் வீட்டு அயல்வீட்டில் குடியிருந்த 'அன்ரி' ஒருவரும் அக்கதைக் 'கொப்பி'யை இரவல் வாங்கிச்சென்று வாசித்துவிட்டு வந்து பாராட்டினார்.

இதற்கிடையில் பொங்கல் திருநாளும் நெருங்கிக்கொண்டிருந்தது. அப்பொழுது அப்பா சுதந்திரன் பத்திரிகையையும் வாங்கிக்கொண்டிருந்தார்.அதில் நா.பாலேஸ்வரியின் 'எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு' தொடராக வெளிவந்துகொண்டிருந்ததாக நினைவு. அவரது எழுத்து நடையும் என்னை அக்காலகட்டத்தில் மிகவும் கவர்ந்திருந்தது என்பேன். அப்பருவ நினைவுகள் அழியாத கோலங்கள் என்பவை என்பதால் அவர் பற்றிய நினைவுகளும் அவரது தொடர்கதையின் சில பக்கங்களை மட்டுமே வாசித்திருந்தபோதிலும் நினைவில் பதிந்து விட்டன.

•Last Updated on ••Sunday•, 07 •June• 2020 18:38•• •Read more...•
 

'ஈழநாடு'ம் , நானும் (1) : பத்திரிகைக்கு அனுப்பிய முதற் படைப்பு - 'தித்திக்கும் தீபாவளி''

•E-mail• •Print• •PDF•

"நான் என்  பால்ய ,பதின்மப் பருவத்து வாசிப்பு, எழுத்தனுபவங்களை இங்கு எழுதுவதற்கு முக்கிய காரணம் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இவ்வனுபவங்களை அறிய வேண்டுமென்பதற்காகவே. பொதுவாக எழுத்தாளர்கள் தம் பால்ய, பருவத்து எழுத்து, வாசிப்பனுபவங்களை விரிவாக எழுதுவது குறைவு. எனது அப்பருவத்து அனுபவங்கள் இப்பொழுதும் மகிழ்ச்சியைத்தருவன. இந்நிலையில் இவற்றை வாசிக்கும் இளம் பருவத்தினருக்கும் இவ்வனுபவங்கள் நிச்சயம் இன்பத்தைத்தருவதுடன் , வாசிப்பு, எழுத்தில் ஆர்வமுள்ளவர்களை மேலும் இத்துறைகளில் ஆழ்ந்து ஈடுபடத்தூண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு." - வ.ந.கி -


வ.ந.கிரிதரன் பால்ய  பருவத்தில்...என் பால்ய காலம் வவுனியாவில் கழிந்தது. என் வாசிப்புக்கும், எழுத்துக்கும் முக்கிய காரணம் அப்பா. வீட்டைத் தமிழகச் சஞ்சிகைகள், நூல்களால் நிறைத்திருந்தார். கல்கி, விகடன், கலைமகள், மஞ்சரி, தினமணிக்கதிர், ராணி, ஈழநாடு, சுதந்திரன், தினமணி் , இந்தியன் எக்ஸ்பிரஸ், ராணிமுத்து, குமுதம், அம்புலிமாமா, பொன்மலர் (காமிக்ஸ்) , பால்கன் (காமிக்ஸ்). என வாங்கிக்குவித்திருந்தார். இவைதவிர அவர் தனியாக ஆங்கில நூல்களடங்கிய புத்தக அலுமாரி வைத்திருந்தார். அதில் கிறகாம் கிறீன், ஆர்.கே.நாராயணன், டால்ஸ்டாய் , இர்விங் ஸ்டான் , டி.இ.லாரன்ஸ்௶, பி.ஜி.வூட் ஹவுஸ் என்று பலரின் நூல்கள் அவரிடமிருந்தன. இவை தவிர ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து, பாரதியார் கவிதைகள், புலியூர்க் கேசிகனின் உரையுடன் கூடிய சிலப்பதிகாரம் ,மணிமேகலை போன்ற பண்டைத்தமிழரின் காப்பியங்கள், கவிதைகள் வாங்கியிருந்தார். தமிழகத்தில் திமுக பதவியேற்றதும் நடைபெற்ற உலகத்தமிழராய்ச்சி மகாநாட்டையொட்டிச் சிறப்பானதொரு மலரை வெளியிட்டிருந்தார்கள். அம்மலரும் வீட்டிலிருந்தது. இதன் காரணமாக என் பால்ய பருவத்திலேயே நான் தீவிர வாசகனாக உருவெடுத்தேன். அப்பாவுக்கு வீட்டில் எப்பொழுதும் ராமாயணம், மகாபாரதம் இருக்க வேண்டும். குழந்தைகள் எங்கள் ஐவரின் பெயர்களையும் அவ்விரு காப்பியங்களிலிருந்துதாம் தெரிவு செய்திருந்தார்.

•Last Updated on ••Sunday•, 07 •June• 2020 18:38•• •Read more...•
 

எதிரொலி: நடேசன் அவர்களின் 'இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா' கட்டுரை பற்றியது...

•E-mail• •Print• •PDF•

- வ.ந.கிரிதரன் -நடேசன் அவர்கள் தனது 'இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா' என்னும் கட்டுரையில் பின்வருமாறு கூறியிருக்கின்றார்:

"போரின் விளைவால் புலம் பெயர்ந்து சென்ற எழுத்தாளர்களின் வரிசையில் இலங்கைத் தமிழர்களாகப் பலர் உண்டு . அதில் ஏற்கனவே எழுத்தாளராகப் புலம் பெயர்ந்தவர்களும், புலம் பெயர்ந்த பின்பு எழுத்தாளர்களானவர்களும் அடக்கம். இவர்களில் ஒற்றைக் கை விரல்களில் எண்ணக்கூடியவர்களே புலம்பெயர்ந்த இலக்கியம் என்று சிந்தித்துப் படைப்பவர்கள். மற்றையோர் கண்டங்கள் கடந்திருந்து , கால் நூற்றாண்டுகள் மேல் பாரிஸ் , லண்டன் , ரொரண்ரோ என வாழ்ந்தபோதிலும் ஊர்  நினைவுகளை மீட்டுகிறார்கள். அது அவர்களது தவறல்ல . ஊர் நினைவுகள் ஒரு எலும்பில் புகுந்த சன்னம் போன்றது. இன்னும் அழுத்தமாகச் சொன்னால் அடிமை கொள்ளும் போதை போன்றது. விலகுவது சுலபமல்ல. நண்பர் ஷோபாசக்தி நேர்மையாக அதை சமீபத்திய செவ்வியில் ஒப்புக்கொண்டார். பலர் அதை ஏற்றுக்கொள்ளாமல் புலம்பெயர்ந்தவர்கள் என்ற லேபலுக்குள் இருந்து பால்ய கால நினைவுகளையும் இலங்கையில் நீடித்த போர் பற்றியும் எழுதுகிறார்கள் . நான்கூட அசோகனின் வைத்தியசாலை , உனையே மயல்கொண்டேன் முதலான அவுஸ்திரேலியாவின் வாழ்வு சார்ந்த நாவல்களை எழுதிவிட்டு மீண்டும் கானல் தேசம் என்ற போரக்கால நாவலை எழுதினேன்."

•Last Updated on ••Saturday•, 06 •June• 2020 20:08•• •Read more...•
 

எழுத்தாளர் சி.மகேஸ்வரனின் (இந்து மகேஷின்) 'இதயம்'

•E-mail• •Print• •PDF•

அண்மையில் எழுபதுகளில் , யாழ்ப்பாணத்தில் எழுத்தாளர் சி.மகேஸ்வரன் (இந்து மகேஷ்) ஆசிரியராகவிருந்து வெளியிட்ட 'இதயம்' சஞ்சிகை  பற்றியொரு குறிப்பினைப்பதிவு செய்திருந்தேன். அது பற்றி இந்து மகேசுக்கும் அறியத்தந்திருந்தேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார். அத்துடன் தான் முகநூலில் 'இதயம்' பற்றி எழுதிய பதிவு பற்றியும் அறியத்தந்திருந்தார். அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அத்துடன் அவர் ஜேர்மனியிலிருந்து 1998 -2008 காலகட்டத்தில் 'பூவரசு' என்னும் பெயரில் சஞ்சிகையொன்றினை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மூன்று இதயம் இதழ்கள் நூலகம் தளத்திலுள்ளன: http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

அவர் அனுப்பிய மின்னஞ்சல் கீழே:

"அன்பிற்கினிய கிரிதரன்! வணக்கம். அவ்வப்போது உங்கள் முகநூல்பக்கமும் வந்துபோகிறேன். இதயம் வெளியான காலகட்டம் (1971) நம்நாடு போர்ச்சூழலுக்குள் சிக்கியிருந்ததால் புத்தக வெளியீட்டிலும் அதன் விநியோகத்திலும் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு வருடத்துக்குமேல் தாக்குப்பிடிக்க முடியாமல் இதயம் துடிப்படங்கிப் போயிற்று. ஆனாலும் வெளியான ஒரு சில இதழ்களிலேனும் பயனுள்ள சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறோம் என்ற நிறைவை உங்களது முகநூல்பதிவு தந்திருக்கிறது. திரு.மணியம் அவர்களையும் இரசிகமணி கனக் செந்திநாதன் அவர்களையும் இதயம் இதழுக்காகவும், ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்களை வரதர் அவர்களின் வெள்ளி இதழுக்காகவும் நேரடியாகச்சென்று பேட்டி எடுத்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகவே பூவரசு இதழிலும் நமது கலைஞர்கள் என்னும் பகுதியில் புலம்பெயர் கலைஞர்கள் பலரது பேட்டிகளும் பிரசுரமாகியிருக்கின்றன.  அன்புடன் இந்துமகேஷ்"

•Last Updated on ••Tuesday•, 02 •June• 2020 23:21•• •Read more...•
 

கவிஞர் வேதா இலங்காதிலகத்தின் கவிதைகள் வெளிப்படுத்தும் சிந்தனைகள்!

•E-mail• •Print• •PDF•

- பதிவுகள் இணைய இதழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான கவிஞர் வேதா இலங்காதிலகம் அவர்களின் கவிதைத் தொகுப்பான 'மனக்கடல் வலம்புரிகள்' இலங்கையில் ஜீவநதி பதிப்பகத்தின் நூற்றி நாற்பத்தெட்டாவது வெளியீடாக வெளிவந்துள்ளது. அத்தொகுப்புக்கு நான் எழுதிய அணிந்துரையிது. நூலைச்சிறப்பாக, அழகான வடிவமைப்புடன் வெளியிட்டுள்ளார்கள் ஜீவநதி பதிப்பகத்தினர். பதிப்பகத்தினருக்கும், கவிஞருக்கும் வாழ்த்துகள். - வ.ந.கிரிதரன் -


- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -கவிஞர் வேதா இலங்காதிலகத்தை நான் முதன் முதலில் அறிந்துகொண்டது 'பதிவுகள்' இணைய இதழ் மூலமாகத்தான். 'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து தமிழகம் தொடக்கம் உலகின் ஏனைய பாகங்கள் பலவற்றில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் பலர் தம் படைப்புகளை அனுப்பி ஆக்கப்பங்களிப்பு செய்து வருகின்றார்கள். 'பதிவுகள்' எழுத்தாளர் ஒருவரின் கவிதைகள் நூலுருப்பெறுவது மகிழ்ச்சியினைத்தருகின்றது. கவிஞர் வேதா இலங்காதிலகம் இணைய இதழ்கள், தமிழ் வானொலிகள் என ஊடகங்கள் பலவற்றில் அயராது தொடர்ச்சியாக எழுதிவருபவர். தொடர்ச்சியாக , சளைக்காமல் அவர் தொடர்ந்து எழுதிவருவது அவரது எழுத்து மீதான பற்றினை வெளிப்படுத்துமொரு செயல். 

வேதா இலங்காதிலகத்தின் கவிதைகளை வாசித்தபொழுது எனக்கு முதலில் அவற்றில் தென்பட்ட  பிரதான அம்சங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடுவேன். அவை மானுட நேயத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. அவை மானுட உயர்வுக்கான வழிமுறைகளை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. அவை மானுடர்தம் தாய்மொழியின் முக்கியத்துவத்தை, அதன் மீதான பற்றினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. அவை மானுடர்தம் பல்வகை உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.  அவை மானுடர் வாழும் இயற்கைச்சூழலை, அதன் அழகினை விதந்தோடுபவையாகவுள்ளன. இவற்றுடன் அவ்வப்போது அவரது கற்பனையாற்றலை, படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் கவிதைகளில் தென்படும் உவமைகள், உருவகங்கள் அமைந்துள்ளன. இவ்வகையில் சிறப்புற்றிருக்கும் கவிதைகளை உருவாக்க அவர் பாவித்திருக்கும் எளிமையான மொழியின் இனிமையும் அவரது கவிதைகளின் முக்கியமான அம்சங்களிலொன்று. இவை பற்றிச் சுருக்கமாக இனி நோக்குவோம்.

•Last Updated on ••Tuesday•, 02 •June• 2020 21:17•• •Read more...•
 

எழுத்தாளர் மணியனின் இலங்கைப்பயணக் கதை!

•E-mail• •Print• •PDF•

மணியனின் இலங்கைப்பயணக்கதைஅறுபதுகளில் , எழுபதுகளில் தமிழ் வெகுசன வாசகர்கர்கள் இவரின் எழுத்துகளைத்தீவிரமாக வாசித்தார்கள். ஆனால் இன்று அவரது படைப்புகளை ஏனைய வெகுசனப் படைப்பாளிகளான நா.பார்த்தசாரதி, அகிலன், சாண்டில்யன் .. போன்றோரின் படைப்புகளை வாசிப்பது போல் வாசிப்பதாகத்தெரியவில்லை. ஏனையவர்களின் படைப்புகளைப்போல் பதிப்புகள் பல கண்டதாகத்தெரியவில்லை. ஏன் என்று யோசித்துப்பார்ப்பதுண்டு. இவரது பல நாவல்கள் ஆனந்த விகடனில் தொடர்களாக வெளியாகின. விகடனின் எண்ணிக்கையும் அவற்றால் அதிகரித்தது. அவர்தான் மணியன். வேங்கட சுப்பிர மணியன் என்பது முழுப்பெயர். திரையுலகிலும் இவரது படைப்பான இதயவீணை வெளியாகி வெற்றியடைந்தது. திரைக்கதை எம்ஜிஆர் மயப்படுத்தப்பட்டிருந்தது.

காதலித்தால் போதுமா என்னும் நாவலில் தொடங்கி (ஓவியர் மாயாவின் ஓவியங்களுடன் வெளியாகிய நாவல்) நீரோடை, தேன் சிந்தும் மலர், இதய வீணை, நெஞ்சோடு நெஞ்சம், உண்மை சொல்ல வேண்டும், உன்னை ஒன்று கேட்பேன், என்னைப்பாடச் சொன்னால், லவ் பேர்ட்ஸ். என்று பல தொடர்கதைகளை எழுதினார். இவற்றில் லவ்பேர்ட்ஸ் நாவலைக் குமாரி பிரேமலதா என்னும் பெயரில் எழுதினார். இந்நாவலுக்கு மட்டும் ஓவியர் ஜெயராஜ் கவர்ச்சிகரமான ஓவியங்களை வரைந்திருந்தார். ஏனைய நாவல்கள் அனைத்துக்கும் ஓவியர் மாயாவே ஓவியங்கள் வரைந்திருந்தார். இவற்றில் இதயவீணை, உண்மை சொல்ல வேண்டும் ஆகியவை மிகுந்த வரவேற்பைப்பெற்றதாக நினைவு. காதலித்தால் போதுமாவை நான் விகடன் பிரசுரமாகத்தான் வாசித்தேன். அது தொடராக வெளியானபோது நான் இதழ்களில் வெளியான தொடர்களை வாசிக்கத்தொடங்கியிருக்க வில்லை.

பல்வேறு நாடுகளுக்குச் சென்று தன் பயண அனுபவங்களை இதயம் பேசுகிறது என்று எழுதினார். அவையும் அவை வெளியான காலகட்டத்தில் வாசகர்களின் பேராதரவைப்பெற்றன. அதனால்தான் விகடன் நிர்வாகம் அவரை மீண்டும் மீண்டும் வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பியது. எம்ஜிஆரின் நம்பிக்கைக்குப்பெரிதும் உகந்தவர்களிலொருவராக விளங்கியவர். பின்னர் ஆனந்த விகடனிலிருந்து வெளியாகி 'இதயம் (பேசுகிறது') என்னும் சஞ்சிகையைத்தொடங்கினார்.

•Last Updated on ••Tuesday•, 02 •June• 2020 10:05•• •Read more...•
 

யாழ் பொதுசன நூலக நினைவுகள்....

•E-mail• •Print• •PDF•

சிந்திக்கும் பையன்மே 31, 1981. யாழ் பொது சன நூலகம் எரிக்கப்பட்ட நாள். யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம். நாகரிகத்தின் உச்சியிலிருப்பதாகக் கூறிப் பெருமிதமுறும் மனித இனமே நாணித்தலை குனிய வேண்டிய தினம். நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதிகளெல்லாம் நெருப்போடு நெருப்பாக அழிந்தே போய்விட்டன. இவற்றின் அழிவினைத் தாங்க மாட்டாத பாதிரியார் ஒருவரும் (தாவீது அடிகள்) மாரடைப்பால் இறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

பொதுவாக அவ்வப்போது யாழ் பொதுசன நூலகம் பற்றிய நினைவுகள் தோன்றுவதுண்டு. இந்த நூலகத்துடனான எனது உறவு பின்னிப்பிணைந்ததொன்று. என் மாணவப்பருவத்துத் தோழர்களில் முக்கியமான தோழனாக விளங்கிய நூலகம். பன்முகப்பட்ட அறிவினை அள்ளி வழங்கிய சிறந்த நண்பன். எவ்வித எதிர்பார்ப்புகளுமற்று அதனை வாரி வழங்கிய நண்பன். யாழ் பொது நூலகத்தை எண்ணியதும் எப்பொழுது முதன் முதல் அதனுடனான எனது தொடர்பு ஏற்பட்டது என்று எண்ணிப்பார்க்கின்றேன்.

•Last Updated on ••Monday•, 01 •June• 2020 22:50•• •Read more...•
 

மொழிபெயர்ப்புக் கவிதை: என் இனிய மேரி ஆனுக்கு

•E-mail• •Print• •PDF•

Lord ByronMary Anne Chaworth

கவிஞர் பைரனின் (Lord Byron) பிரபல்யமான கவிதைகளிலொன்று 'எனது இனிய மேரி ஆனுக்கு' (To My Dear Mary Anne ). அவரது பதினைந்தாவது வயதில் ஏற்பட்ட முதற் காதல் தோல்வியையடுத்து தன் இழந்த காதலி மேரி ஷாவேர்த்தை (Mary Anne Chaworth) நினைத்து எழுதிய கவிதை. எனக்குப் படைப்பொன்றின் மொழிபெயர்ப்பானது முடிந்தவரை வரிக்கு வரி இருக்க வேண்டும். அதுவே சிறந்த மொழிபெயர்ப்பு என்பது என் கருத்து. ஏனென்றால் பொருளினை உள்வாங்கி அதனடிப்படையில் படைப்பொன்று மொழிபெயர்க்கப்படும்போது மூலத்திலிருந்து  மொழிபெயர்ப்பானது பெரிதும் வேறுபட்டு விடுகின்றது. இக்கவிதை இயலுமானவரையில் வரிக்கு வரி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1,

சென்றுவருகிறேன் என் இனிய மேரி, நிரந்தரமாகவே.
அவளிடமிருந்து நான் விரைவாகவே விடைபெற வேண்டும்.
எம்மிருவரையும் *விதித்தேவதைகள் பிரித்தாலும்
அவளது உருவம் என் நெஞ்சில் குடியிருக்கும்.

•Last Updated on ••Sunday•, 31 •May• 2020 00:23•• •Read more...•
 

'வசந்தம்' சஞ்சிகையில் வெளியான ஒரு மொழிபெயர்ப்புக்கதை பற்றி...

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் அ.கந்தசாமி (கந்தசாமி 'மாஸ்ட்டர்')

வசந்தம்' சஞ்சிகையின் மார்ச் 10, 1966 இதழில் வெளியான ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதை என் கவனத்தைக் கவர்ந்தது. அது ஒரு மெக்சிகோ நாட்டுச் சிறுகதை. எழுதியவர் யுவன் றுல்போ. தமிழாக்கம் செய்தவர் எழுத்தாளர் அ.கந்தசாமி. இவர்தான் எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்று விளங்கிய பெளதிக ஆசிரியர்களிலொருவர். கல்விப்பொதுத்தராதர சாதாரண, உயர்தர மாணவர்களுக்கான பெளதிகப் பாடத்துக்கு இவரது 'டியூசன்' வகுப்புகள் பிரசித்தம். நானும் இவரிடம் உயர்தர வகுப்புக்கான பெளதிகப் பாடத்துக்கு டியூசன் எடுத்திருக்கின்றேன். கனடாவில் வெளியான 'ழகரம்' சஞ்சிகையின் ஆசிரியரும் இவரே. கதை, சிறுகதை, கவிதை , கட்டுரை என இவரது இலக்கியப் பங்களிப்பும் பரந்தது.

'வசந்தம்' சஞ்சிகையின் ஆசிரியர் எழுத்தாளர் இ.செ.கந்தசாமி. ஆரியர் வீதி, கொழும்புத்துறையில் வசிக்கும் இ.செ.கந்தசாமியால் ஶ்ரீ பார்வதி அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படும் சஞ்சிகையென்று சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கதையை முதலில் வாசித்தபோது அறிஞர் அ.ந.கந்தசாமி எழுதிய கதையோ என்று நினைத்தேன். அக்கால சஞ்சிகைகள், பத்திரிகைகள் பலவற்றில் எழுத்தாளரின் பெயர்களில் எழுத்துப்பிழைகள் ஏற்படுவதையும் அவதானித்துள்ளேன். இ.பத்மநாபன் இ.பத்மநாதன் என்றும், நா.சுப்பிரமணியன் நா.சுப்பிரமணியம் என்றும் வெளியாகியுள்ளன. இதுபோல் அ.ந.கந்தசாமி என்பதிலுள்ள ந விடுபட்டுப் போயிருக்குமோ என்னும் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அச்சந்தேகம் நீங்கிவிட்டது. இதனை எழுதியவர் எழுத்தாளர் அ.கந்தசாமி என்பதை அறிந்துகொண்டேன்.

•Last Updated on ••Monday•, 01 •June• 2020 22:39•• •Read more...•
 

தேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்!

•E-mail• •Print• •PDF•

அறுபதுகளில், எழுபதுகளில் & எண்பதுகளில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களுக்கு ஓவியர் மணியமென்றால் நன்கு தெரிந்த ஒருவர். தமிழகத்து ஓவியர் மணியம் அல்லர் இவர். இவர் யாழ்ப்பாணத்து ஓவியர் மணியம். அக்காலகட்டத்தில் யாழ் திரையுரங்குகளில் உச்ச நட்சத்திரங்களின் (எம்ஜிஆர் & சிவாஜி) திரைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம் ஒன்று மட்டும் நிச்சயம். அது அநேகமாக அத்திரைப்படத்துக்கு ஓவியர் மணியம் ஒரு பிரும்மாண்டமான கட் அவுட் வரைந்திருப்பார் என்பதுதான். இவரைப்பற்றி நினைத்தாலே காவல்காரன், அடிமைப்பெண், நீதி, ராஜா, பாபு, நீரும் நெருப்பும், அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன் , நாளை நமதே திரைப்படங்களுக்கு இவர் வரைந்த கட் அவுட்டுகள் நினைவில் வந்து போகும், இவரைப்பற்றியும் இவரது கட் அவுட்டுகள் பற்றியும் அவ்வப்போது முகநூற் பதிவுகள் இட்டிருக்கின்றேன். ஆனால் ஓவியர் மணியம் பற்றிய அதிக தகவல்களைப்பெற முடியாதிருந்தது.

இந்நிலையில் நூலகம் எண்ணிம நூலகத்தில் பழைய சஞ்சிகைகள் மேய்ந்து கொண்டிருந்தபோது யாழ்ப்பாணத்திலிருந்து எழுபதுகளில் எழுத்தாளர் சி.மகேஸ்வரனை ஆசிரியராகக்கொண்டு வெளியான 'இதயம்' சஞ்சிகைகளின் சில பிரதிகள் வாசிக்கக்கிடைத்தன. காத்திரமான விடயங்களைத்தாங்கி வெளிவந்த கலை, இலக்கிய மாத இதழ் 'இதயம்'. சி.மகேஸ்வரனே எழுத்தாளர் இந்து மகேஸ் என்று இப்பதிவுக்கான தனது எதிர்வினையொன்றில் எழுத்தாளர் வி.ரி.இளங்கோவன் அறியத்தந்திருந்தார். இன்றுதான் எழுத்தாளர் இந்து மகேஸ்தான் இதயம் சஞ்சிகை ஆசிரியர் என்னும் விடயத்தை முதன் முறையாக அறிந்துகொண்டேன். தகவலுக்கு நன்றி இளங்கோவன் அவர்களே.

•Last Updated on ••Friday•, 29 •May• 2020 14:17•• •Read more...•
 

அறிவியல் எழுத்தாளர் இ.பத்மநாபன் (இ. பத்மநாப ஐயர்)

•E-mail• •Print• •PDF•

அறிவியல் எழுத்தாளர் இ.பத்மநாபன் (இ. பத்மநாப ஐயர்)அறிவொளி சஞ்சிகையின் 1967 தை மாத இதழில் வெளியான 'இராமன் விளைவு' என்னும் அறிவியற் கட்டுரை என்னைச் சஞ்சிகையின் பக்கங்களைப் புரட்டியதுமே கவர்ந்தது. முதன் முதல் நோபல் பரிசு பெற்ற சேர்.சி.வி.ராமன் அதனை இயற்பியலுக்காகப்பெற்றார். அவர் கண்டுபிடித்த கண்டு பிடிப்பே 'இராமன் விளைவு'. இயற்பியலில் பல்கலைக்கழக மட்டத்தில் கற்பிக்கப்படுகின்றது. அவரது கண்டு பிடிப்பே வானம் ஏன் நீல நிறமாக விளங்குகின்றது என்பதற்கான காரணத்தை விளக்குகின்றது என்பது பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் அது தவிர மேலதிகமாக எவற்றையும் அறிந்திருக்க மாட்டீர்கள்.

அந்தக் கண்டுபிடிப்பே ஒளியின் அலை, மற்றும் துகள் கொள்கையினை விளக்கப்போதுமானது. அதனையும் குவாண்டம் இயற்பியல் பற்றியும் , ஐன்ஸ்டைனின் போட்டோன்கள் பற்றிய கண்டு பிடிப்பு பற்றியும் இ.பத்மநாபனின் இவ்வறிவியற் கட்டுரை விளக்கமாக விபரிக்கின்றது. அதனால் அக்கட்டுரை வெளியான அறிவொளி சஞ்சிகையினை வாசிக்க அதற்கான இணைப்பிங்கே: http://noolaham.net/project/390/38918/38918.pdf

நான் இதுவரை தமிழில் 'ராமன் விளைவு' பற்றிய அறிவியற் கட்டுரை வேறு வாசித்ததில்லை. வந்திருக்கலாம். நான் அறியவில்லை. ஆனாலிந்த அறிவியற் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. ஒளியின் அலை, மற்றும் துகள் பண்புகளை அழகாக ராமன் விளைவு மூலம் வாசிக்கும் எவரும் அறியும் வண்ணம் கட்டுரையாளர் இ.பத்மநாபன் இக்கட்டுரையினை எழுதியிருந்தார்.

இ.பத்மநாபனின் மேலும் சில அறிவியற் கட்டுரைகளை இலங்கையில் வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட நவீன விஞ்ஞானி பத்திரிகையிலும் அறிவியல் மேதைகள் பற்றி எழுதியுள்ளார். அவையும் என்னை மிகவும் கவர்ந்தன. நவீன விஞ்ஞானி பத்திரிகையில் வெளியான இ.பத்மநாபனின் அறிவியற் கட்டுரைகள் பற்றிய விபரங்கள் வருமாறு ( என் கண்களுக்கு அகப்பட்டவை):
•Last Updated on ••Saturday•, 23 •May• 2020 21:53•• •Read more...•
 

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் சிறுகதையொன்றும் , முகநூல் எதிர்வினைகளும்!

•E-mail• •Print• •PDF•

அஞ்சலி' சஞ்சிகையின் ஆகஸ்ட் 1971 இதழில் வெளியான 'ஒரு வரலாறு ஆரம்பமாகின்றது' நல்லதொரு சிறுகதை. நெடுந்தீவில் வாழும் மீனவர்களைப்பற்றிய கதை. அவர்களுக்கிடையில் நிலவும் உட்பிரிவுகள், அதனாலேற்படும் வறட்டுக் கெளரவப்பிரச்சினைகள், கடலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இயற்கை ஏற்படுத்தும் இருப்பிடப் பிரச்சினைகள் , தொழிலாளர் & முதலாளி முரண்பாடுகள் , கூளக்கடாய்ப் பறவை, இராவணன் மீசை, கத்தாளைச் செடிகள் என எனப் பலவற்றை விபரிக்கும் மண் வாசனை மிகுந்த சிறுகதை.

கதாசிரியர் ஜெயபாலன் என்றுள்ளது. கதைக்களம் நெடுந்தீவென்பதால் ஜெயபாலன் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனாகவிருக்க வேண்டும். இச்சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட சிந்தனை: ஜெயபாலன் கவிதையில் செலுத்திய நாட்டத்தைப் புனைகதையிலும் அதிகம் செலுத்தியிருக்க வேண்டும். மண் வாசனை தவழும் புனைவுகள் பல கிடைத்திருக்கும்.

ஒரு கேள்வி? இக்கதையில் வெல்லைக் கடற்கரை என்று வருவது அப்படித்தான் அழைக்கப்படுகின்றதா? அல்லது வெள்ளைக்கடற்கரை என்று அழைக்கப்படுகின்றதா? அறிந்தவர்கள் அறியத்தரவும்.

ஆகஸ்ட் 1971 'அஞ்சலி'க்கான இணைப்பு: http://noolaham.net/project/15/1500/1500.pdf


மேற்படி முகநூற் பதிவுக்கான எதிர்வினைகள்:

K S Sivakumaran VIS Jeyapalan is a versatile poet,actor and writer. Cheers to him

Giritharan Navaratnam Your article is also in the issue....
1
K S Sivakumaran Is it? Kindly send a photocopy of it to me dear friend VNG. I don't hava clipping.Thanks.

Thavarajah Arulkumaran நல்ல பதிவு.

Indran Rajendran உண்மைதான். ஆனால் இப்போதுகூட கெட்டுவிடவில்லை. ஜெயபாலன் கதையில் கவனம் செலுத்தலாம்.

Giritharan Navaratnam செக்குமாடு என்று குறுநாவலொன்று எழுதியிருக்கின்றார். எஸ்.பொ. & இந்திரா பார்த்தசாரதி தொகுத்த தொகுப்பிலுள்ளது.

•Last Updated on ••Friday•, 22 •May• 2020 11:12•• •Read more...•
 

இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த 'அஞ்சலி' சஞ்சிகையும் , அது வெளியிட்ட மூன்று சிறப்பிதழ்களும் (மலையக, வடக்கு & கிழக்கு)!

•E-mail• •Print• •PDF•

அஞ்சலி சஞ்சிகை - வத்தளைஇலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த 'அஞ்சலி' சஞ்சிகையும் , அது வெளியிட்ட மூன்று சிறப்பிதழ்களும் (மலையக, வடக்கு & கிழக்கு)!

'அஞ்சலி' என்னும் சிற்றிதழ் எழுபதுகளின் ஆரம்பத்தில் வத்தளையிலிருந்து வெளியாகியுள்ளது. ஏ.எம்.செல்வராசா இதன் நிர்வாக ஆசிரியர். காரியாலய முகவரி: முகவரி: 198 நீர்கொழும்பு வீதி, வத்தளை. இச்சஞ்சிகையின் பத்து இதழ்கள் 1971- 1972 வரை, எண்ணிம நூலகமான 'நூலகம்' இணையத்தளத்திலுள்ளன. கண்ணைக்கவரும் அட்டைப்பட ஓவியங்களுடன் வெளிவந்த அஞ்சலி இதழ்களில் வட கிழக்கு, மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பலரின் பல்வகைப்படைப்புகளையும் காணமுடிகின்றது. ஓவியர் வீகேயின் (வி.கனகலிங்கம்) கைவண்ணம் இதழ்களெங்கும் பரவிக்கிடக்கின்றது. கஸ்தூரி, சந்ரா போன்றோரின் ஓவியங்களையும் காண முடிகின்றது.

உதாரணத்துக்கு நாமெல்லாரும் நன்கறிந்த படைப்பாளிகள் தொடக்கம் , புதியவர்கள் வரை சிறுகதை, கட்டுரை, கவிதை, தொடர்கதைகள் ஆகியவை இலக்கியத்தின் வரலாறு, சமூகம், நாடோடி இலக்கியம், வரலாறு, தொல்லியல், மொழிபெயர்ப்பு போன்ற பிரிவுகளில் இவ்விதழ்களிலுள்ளன. அருள் சுப்பிரமணியம், குப்பிழான் ஐ.சண்முகம், செ.யோகநாதன், தெளிவத்தை ஜோசப், கே.கணேஷ், என்.எஸ்.எம்.ராமையா, கலாநிதி கா.இந்திரபாலா, கலாநிதி க.கைலாசபதி, கலாநிதி கா.சிவத்தம்பி, முருகையன், காரை செ.சுந்தரம்பிள்ளை, ஜெயபாலன், ந.பாலேஸ்வரி, யாழ்நங்கை, மலரன்பன், செங்கை ஆழியான் , இரசிகமணி கனக செந்திநாதன், மு.கனகராசன், எம்.ஏ.நுஃமான், சபா. ஜெயராசா, அகஸ்தியர், மாத்தளை செல்வம், அல்.ஹாஜ்.ஆ.மு.ஷரிபுத்தீன், பஸீல் காரியப்பர், சி.மெளனகுரு, திக்கவயல் தர்மகுலசிங்கம், மருதூர்க்கொத்தன் , பரிபூரணன் , வ.அ.இராசரத்தினம்.. என்று பலரின் படைப்புகளையும் அஞ்சலி இதழ்களில் காண முடிகின்றது.

•Last Updated on ••Thursday•, 21 •May• 2020 12:18•• •Read more...•
 

பத்து நாட்கள் பத்து திரைப்படங்கள் (10): சமஸ்காரா (கன்னடம்) - Samskara (1970)

•E-mail• •Print• •PDF•

சம்ஸ்காரா (கன்னடம்) - Samskara (1970)பட்டாபிராம ரெட்டி தயாரித்து, இயக்கிய கன்னடத்திரைப்படம்தான் எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் புகழ்பெற்ற நாவலான 'சம்ஸ்காரா'. பட்டாபிராம ரெட்டியும் எழுத்தாளர், கவிஞர், படத்தயாரிப்பாளர், இயக்குநர்,  திரைக்கதை வசனகர்த்தா எனப்பன்முகக் கலையாளுமை மிக்க ஒருவர். இவற்றுடன் சமுக, அரசியற் செயற்பாட்டாளரும் கூட.

இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இவரது மனைவி சிநேகலதா ரெட்டியும் இவரைப்போன்று பன்முகக் கலையாளுமை மிக்க ஒருவர். மேடை, சினிமா நடிகை. சமூக, அரசியற் செயற்பாட்டாளர். இந்தியாவில் அவசரகால நிலை நிலவியபோது சிறைவாசம் எட்டு மாதங்கள் அனுபவித்தவர். சிறையில் பல்வகைச்சித்திரவதைகளை அனுபவித்தவர். சிறையில் தொய்வு நோயால் அவதிப்பட்ட இவர் அதன் காரணமாகவே நினைவிழந்தும் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிறையிலிருந்து பரோலில் விடுவிக்கப்பட்டு , அடுத்தவாரமே சிறைச்சித்திரவதைகள், சிறையில் கவனிக்கப்படாத உடல்நிலை காரணமாக மரணித்தவர். இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக்குப் பலியாகிய முதலாவது நபர் இவரே. இத்தனைக்கும் காரணம் இவர் அப்போது தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணான்டஸுடன் தொடர்பிலிருந்தார் என்பது மட்டுமே. முன்னாள் அமைச்சரும், அரசியல்வாதியும் இவரிருந்த சிறையில் அப்போது அடைக்கப்பட்டிருந்த மது தாண்டவதே இரவுகளில் சித்திரவதைகளால் அலறும் சிநேகலாதாவின் குரலொலி கேட்டதாகத் தனைது நினைவுக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். சிநேகலதாவும் சிறைக்குறிப்புகளை எழுதியுள்ளார். இவரது மகள் எழுத்தாளரும் , மனித உரிமைச் செயற்பாட்டாளருமான நந்தனா ரெட்டி உருவாக்கிய வேலை பார்க்கும் குழந்தைகளுக்கான , பெங்களூரை மையமாகக்கொண்டியங்கும் இலாப, நோக்கற்று இயங்கும் அமைப்பு அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் (2012) பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சிநேகலதா ரெட்டி, பட்டாபிராம ரெட்டி தம்பதியின் மகனும் ஓர் இசைக்கலைஞரே.

இத்திரைப்படத்தில் கதாநாயக வேடத்தில் நடித்திருப்பவர் கன்னடச் சினிமா, நாடக உலகில் நன்கறியப்பட்டவரும், அண்மையில் மறைந்தவருமான கிரீஷ் கர்னாட். இவரும் இயக்குநர், எழுத்தாளர், நாடகாசிரியர், திரைக்கதை வசனகர்த்தா எனப் பன்முகக்கலைத்திறமை மிக்கவராக விளங்கியவர்.

•Last Updated on ••Wednesday•, 20 •May• 2020 17:38•• •Read more...•
 

நிகழ்வு: 'மொழிபெயர்[ப்பும், ஆய்வும் - சமகாலப் பார்வை' என்னும் இணையப்பட்டறையும் . முனைவர் ர.தாரணியின் 'மொழிபெயர்ப்பு, ஆய்வும் - இணைக்கும் புள்ளிகள்' என்னும் ஆய்வுரையும்!

•E-mail• •Print• •PDF•

நிகழ்வு: 'மொழிபெயர்[ப்பும், ஆய்வும் - சமகாலப் பார்வை' என்னும் இணையப்பட்டறையும் . முனைவர் ர.தாரணியின் 'மொழிபெயர்ப்பு, ஆய்வும் - இணைக்கும் புள்ளிகள்' என்னும் ஆய்வுரையும்!அண்மையில் ஶ்ரீ வாசவி கல்லூரியில் (ஈரோடு) ஏழு நாள் இணையப்பட்டறையொன்று 'மொழிபெயர்[ப்பும், ஆய்வும் - சமகாலப் பார்வை' “Translation and Research – A Contemporary Perspective” என்னும் தலைப்பில் நடைபெற்றது. அதனை ஒருங்கிணைத்து நடாத்தியவர் முனைவர் என்.மைதிலி. இப்பட்டறையில் கலந்துகொண்டு , நீண்டதொரு உரையினை அரச கலை & அறிவியற் கல்லூரியில் (அவிநாசி) உதவிபேராசிரியராகவும், ஆங்கிலத்துறைத் தலைவராகவும் பணியாற்றும் முனைவர் ர.தாரணி அவர்கள் 'மொழிபெயர்ப்பு, ஆய்வும் - இணைக்கும் புள்ளிகள்' ( “Translation and Research – the Connecting Dots”) என்னும் தலைப்பில் நிகழ்த்தினா. அவ்வுரையினை உள்ளடக்கிய காணொளிக்கான இணைய இணைப்பினை அனுப்பியிருந்தார் முனைவர் ர.தாரணி. அதற்காக அவருக்கு என் நன்றி. அத்துடன் அக்காணொளியினை உங்களுடன் பகிர்ந்தும்கொள்கின்றேன். https://youtu.be/GA3SUsC_eb0

அவரது நீண்ட உரையின் முதல் பகுதி சுமார் நாற்பது நிமிடங்கள் மொழிபெயர்ப்பு பற்றியதாகவும், அடுத்த ஒருமணி நேரம் ஆய்வு, மொழிபெயர்ப்பும் ஆய்வும் ஆகியவை பற்றியவையாகவும் அமைந்திருந்தன. மொழிபெயர்ப்பு பற்றிய உரையில் மொழிபெயர்ப்பின் வரலாறு, காலனியாக்கத்திற்குப் பின், மற்றும் முன் காலகட்டத்தில் முறையே உலகில், இந்தியாவில் நடைபெற்ற மொழிபெயர்ப்பு முயற்சிகள், அவை ஆரம்பத்தில் சமய நூல்களின் மொழிபெயர்ப்புகளின் வரலாறாகவே இருந்தன என்பது பற்றிய வரலாறு பற்றிக் குறிப்பிட்ட அவர், இந்தியாவைப்பொறுத்தவரையில் அவ்விதமான மொழிபெயர்ப்புகள் சமூகத்தின் உயர்வர்க்கத்தினரின் மொழியான சமஸ்கிருதத்திலேயே அமைந்திருந்தன என்றும் , அதனை உடைத்தவர் புத்தரே என்றும் குறிப்பிட்டார். புத்தர் அவ்வகையான சமயத்தத்துவ நூல்களை பாலி மொழியில் மொழிபெயர்த்து ஏனைய வர்க்கத்தினரையும் சென்றடைய வைத்தார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

•Last Updated on ••Tuesday•, 19 •May• 2020 23:35•• •Read more...•
 

யாதும் ஊரே !யாவரும் கேளிர்!

•E-mail• •Print• •PDF•

முள்ளிவாய்க்கால் நினைவாக...

முள்ளிவாய்க்காலின் துயரம்

மடிந்தவர்தம் துயரம்

மட்டுமன்று. இம்

மண்ணின் துயரம்!

மணிபல்லவத்தின் துயரம்.

மாநிலத்தின் துயரம்.

மானுடரின் துயரம்.

•Last Updated on ••Monday•, 18 •May• 2020 08:14•• •Read more...•
 

வெகுசன இலக்கியம் பற்றி.....

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் அ.யேசுராசாஎழுத்தாளர் யேசுராசா அவர்கள் அண்மையில் தனது முகநூற் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

"நா. பார்த்தசாரதியின் ‘குறிஞ்சிமலர்’, ‘பொன்விலங்கு’, போன்ற நாவல்களை எனது பதின்ம வயதில் விருப்புடன் வாசித்திருக்கிறேன். ஒழுக்க விழுமியங்களையும் இலட்சிய நோக்குகளையும் எம்மனதில் விதைத்தவை அவை (மு. வரதராசனின் படைப்புகளும் அவ்வாறான வையே!). தற்போது எமது விமர்சகர் பலர், இவர்களது படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை; இன்றைய நிலையில் அவை இலக்கியமாக என்னைக் கவருமா என்பதை, மறுபடி வாசித்த பின்னர்தான் கூற முடியும்."

இதற்கான எனது எதிர்வினை: நிச்சயமாகக் கவராது. ஆனால் அவை உங்கள் வாசிப்பின் ஒரு காலகட்டத்தை நினைவூட்டுவதால் நிச்சயம் அவற்றைக்கையிலெடுத்ததும் மகிழ்ச்சியைத்தரும். இன்றைய நிலையில் அவை இலக்கியமா என்று பார்க்கக்கூடாது. அன்றைய நிலையில் ,உங்களது இளமைபருவத்தில், அவை உங்களைக் கவர்ந்ததா என்பதுதான் முக்கியம்.ஏனென்றால் இன்று நீங்கள் இவ்வளவுதூரம் வளர்ந்திருக்கின்றீர்கள் என்றால் அதற்குக் காரணம் அன்று நீங்கள் குறிஞ்சி மலர், பொன்விலங்கு போன்ற வெகுசனப்படைப்புகளை வாசித்து, வாசிப்பதில் ஆர்வம்கொண்டு வளர்ந்ததால்தான். அவையெல்லாம் ஒருவரின் வாசிப்பின் பரிணாம வளர்ச்சியில் தவிர்க்க முடியாத படிக்கட்டுகள்.

•Last Updated on ••Sunday•, 17 •May• 2020 10:54•• •Read more...•
 

பத்து நாட்கள் பத்து திரைப்படங்கள்: திரைப்படம் (5 ) - அகிர குரோசாவாவின் (Akira kurosawa) 'டேர்சு உசாலா' (Dersu Uzala - 1975)

•E-mail• •Print• •PDF•

இயக்குநர் அகிரா குரோசாவாஜப்பானியத் திரைப்பட இயக்குநர் அகிரா குரோசாவாவின்  'டேர்சு உசாலா' திரைப்படம் இவ்வரிசையில் என் அடுத்த  தேர்வு. 'டேர்சு உசாலா' (Dersu Uzala) ருஷ்யாவின் தூரகிழக்குபகுதியான பனி சூழ்ந்த சைபீரிய வனப்பகுதியில் ஆய்வுப்பணிகளைச் செய்த ஆய்வாளர் விளாமிடீர் ஆர்செனியேவ் (Vladimir Arsenyev) தன் அனுபவங்களைப் பயண நூல்களாக வெளியிட்டுள்ளார். அவ்விதமான ஆய்வுப் பயணங்களிரண்டை மூலக்கதையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமே 'டேர்சு உசாலா'. திரைப்படம் இரு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முதற்பகுதி முதற்பயணத்தில் அவருக்கு அறிமுகமாகிப் பயணத்தின் முடிவில் மீண்டும் தன் வனப்பகுதிக்கே திரும்பும் அப்பகுதி வேட்டக்காரனான பூர்வீக மனிதன் ஒருவனைப் பற்றி விபரிக்கின்றது. அவனது பெயர்தான் டேர்சு உசாலா. திரைக்கதை ஆய்வாளரின் பயணங்கள் பற்றிய நனவிடை தோய்தலாக ஆரம்பமாகின்றது.

இரண்டாம் பகுதி அடுத்த பயணத்தை மையமாகக்கொண்டது. ஏழு வருடங்கள் கழிந்து மீண்டும் அவர் அப்பகுதிக்கு நில அளவை ஆய்வுக்காகச் தன் குழுவினருடன் செல்கையில் மீண்டும் அம்மனிதன் எதிர்ப்படுகின்றான். பயணத்தின் முடிவில் டேர்சு உசாலா பார்வைக்குறைபாட்டினை உணர்கின்றான். அக்குறைபாட்டுடன் தனித்து அவ்வனப்பகுதிக்குள் தன்னால் தப்பிப்பிழைக்க முடியாதென்று உணர்கின்றான். அதன் காரணமாக இம்முறை அப்பயண முடிவில் அவன் ஆர்னிசேவுடன் அவருடைய இல்லத்துக்குத் திரும்பச் சம்மதிக்கின்றான். இவ்விதம் திரும்பும் அவன் நகரம் தன் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்புடையதல்ல என்பதை உணர்கின்றான். இதற்கிடையில் அவன் ஆர்செனியேவின் குடும்பத்துடனும் குறிப்பாக அவரின் பால்ய வயதுப்பையனுடனும் நன்கு பழகி விடுகின்றான். இறுதியில் நகர் அவனது வாழ்க்கைக்கு ஒத்து வரவில்லையென்பதால் காடு நோக்கித் திரும்புகின்றான். திரும்பும் வழியில் அவனுக்கு என்ன நடக்கின்றது? என்பதை நாவல் விபரிக்கின்றது. அதுதான் நாவலின் கிளைமாக்ஸ்.

•Last Updated on ••Sunday•, 17 •May• 2020 09:49•• •Read more...•
 

'கழுகும் குழந்தையும்' ஓவியமும், புகைப்படக் கலையும் பற்றி...

•E-mail• •Print• •PDF•

கழுகும் குழந்தையும்அண்மையில் எழுத்தாளரும், ஓவிய, காணொளிக் கலைஞருமான தமயந்தியின் முகநூலில் எழுத்தாளர் கற்சுறா எழுதியிருந்த பதிவொன்றில் காணப்பட்ட வசனனங்கள்  என் கவனத்தை ஈர்த்தன. அது இதுதான்:  "ஒரு புகைப்படம் என்பது ஒரு புகைப்படக் காரனுக்கு தொழில் அல்ல. அது அவனது அரசியலைப் பேசுபவை" உண்மையில் நான் அறிந்த புகைப்படக் கலைஞர்கள் பலர் சிறந்த புகைப்படக் கலைஞர்கள். அவர்களில் பலருக்குப் புகைப்படம் என்பது தொழில். இது ஓவியர்களுக்கும் பொருந்தும்,  இவர்களெல்லாரும் தம் கலையை விற்றவர்கள்; விற்பவர்கள்.  இவர்கள் எல்லாரும் சிறந்த புகைப்படக் கலைஞர்கள்; ஓவியர்கள்.  இந்த வசனங்களைப்பார்த்ததும் முதலில் என் நினைவுக்கு வந்தவர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த , வெள்ளையினத்தவரான கெவின் கார்ட்டர். உலகின் மிகச்சிறந்த புகைப்படக்கலைஞர்களில் ஒருவராக விளங்கியவர். உலகின் பல பகுதிகளிலும், தென்னாபிரிக்காவிலும் நடந்த மானுட துயரம் மிகுந்த மோதல்கள் பலவற்றின் மானுட துயரங்களைப் புகைப்படங்களாக்கியவர்.

•Last Updated on ••Saturday•, 16 •May• 2020 01:32•• •Read more...•
 

பத்து நாட்களில் பத்துப் படங்கள் (4) - பாலு மகேந்திராவின் 'வீடு'

•E-mail• •Print• •PDF•

இயக்குநர் பாலு மகேந்திராதமிழ்த்திரையுலகில் சத்யஜித் ரே போன்று யாராவது இருக்கின்றார்களா என்று எண்ணிப்பார்த்தால் முழுமையாக அவரைப்போன்றில்லாவிட்டாலும், ஒரளுக்காவது அவரைப்போன்ற ஒருவர் இருக்கின்றார். யார் அவர் என்று நீங்கள் கேட்கலாம். அவரும் சத்யஜித் ரே போல் பன்முகத்திறமை வாய்ந்தவர்தான். சத்யஜித் ரே இயக்கம், திரைக்கதை, கதை, இசை என்று பன்முகத்திறமை வாய்ந்தவர். அவர் சில படங்களுக்கு இயக்கத்துடன் இசையினையும் வழங்கியிருக்கின்றார். இவரும் பன்முகத்திறமை வாய்ந்தவர்தான். இயக்கம், ஓளிப்பதிவு, 'எடிட்டிங்', திரைக்கதை, கதை என்று பன்முகத்திறமை வாய்ந்தவர்தான்.

இருவருக்கும் இன்னும் சில ஒற்றுமைகளுள்ளன. இருவருமே எழுத்தாளர்கள். அது தவிர இருவருமே 'பைசிக்கிள் தீவ்' திரைப்படத்தைப்பார்த்து விட்டு , அதன் தூண்டுதலால் தரமான சினிமாவை எடுக்க வேண்டுமென்று ஆர்வம் கொண்டவர்கள். இப்பொழுது உங்களுக்கு அவர் யாரென்பது புரிந்திருக்கும். அவர்தான் பாலு மகேந்திரா. ஏன் பாலு மகேந்திராவை நூற்றுக்கு நூறு வீதம் சத்யஜித் ரேயுடன் ஒப்பிட முடியாது என்று கேட்கலாம். அதற்குக் காரணம்: ரே ஒருபோதுமே வர்த்தக சினிமாவுக்காக விட்டுக்கொடுத்தவரல்லர். ஆனால் பாலு மகேந்திரா விட்டுக்கொடுத்தவர். அதனால் அவரது திரைப்படங்கள் பல ரேயின் படங்களைப்போன்று உன்னத நிலையினை அடையவில்லை. அவரே இதனை உணர்ந்திருக்கின்றார். அதனால்தான் அவர் தான் எடுத்த படங்களிலேயே தனக்குப் பிடித்த படங்கள் வீடு மற்றும் சந்தியாராகம் மட்டுமே என்று கூறியிருக்கின்றார். இவையிரண்டிலுமே குறைந்தளவு விட்டுக்கொடுப்புகள் செய்ததாகவும் நினைவு கூர்ந்திருக்கின்றார்.
•Last Updated on ••Friday•, 15 •May• 2020 11:27•• •Read more...•
 

பத்து நாட்கள் - பத்து திரைப்படங்கள் திரைப்படம் -3 - சத்யஜித் ரேயின் 'அபுர் சன்சர்' , 1959, (The World of Apu - அபுவின் உலகம்)

•E-mail• •Print• •PDF•

இயக்குநர் சத்யஜித் ராய்திரைப்படம் - 3- சத்யஜித் ரேயின் 'அபுர் சன்சர்' , 1959, (The World of Apu - அபுவின் உலகம்)

வங்கநாவலாசிரியர் விபூதி பூஷன் பந்தோபாத்யாயவின் நாவலை வைத்து மூன்று திரைப்படங்கள் எடுத்துள்ளார் இயக்குநர் சத்யஜித் ராய். முன்றுமே அபு என்னும் சிறுவனின் வாழ்க்கையை வளர்ந்து பெரியவனாகி அவன் எதிர்கொள்ளும் மானுட வாழ்வுச் சவால்களை விபரிப்பது. முதலாவது பதேர் பாஞ்சாலி. மிகுந்த புகழை அவருக்குப் பெற்றுத்தந்தது. அடுத்தது அபராஜிதா. மூன்றாவது அபுர் சன்சர் ( அப்புவின் உலகம் - The World of Apu ). இத்திரைப்படம் இந்திய மத்திய அரசின் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதினைப்பெற்றுள்ளதுடன், சர்வதேச நாடுகளின் விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. தி டைம்ஸ் சஞ்சிகை அபுவின் வாழ்வை விபரிக்கும் இம்மூன்று திரைப்படங்களையும் உலகளாவிய மிகச்சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் சேர்த்துள்ளதும் மேலும் பல ஊடகங்களும் இவ்வாறே இப்படத்துக்குக் புகழ்மாலை சூடியுள்ளதும் குறிப்பிடத்தக்கவை. தவிர பல மேலைத்தேயத்திரைப்படங்கள் சிலவற்றில் இதன் தாக்கமிருப்பதையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நான் பார்த்த சத்யஜித் ராயின் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது எதுவென்றால் (அனைத்துமே பிடித்தவை என்றாலும்) இதனையே குறிப்பிடுவேன். .வேலையில்லாப்பட்டதாரியான இளைஞன் அபுவின் கல்கத்தா நகர வாழ்க்கையை படத்தின் ஆரம்பம் மிகவும் தத்ரூபமாக விபரிக்கின்றது. எனக்கு கொழும்பு, நியூயார்க் என்று மாநகர்களில் வாழ்ந்த இளம்பருவத்து நகர் வாழ்வினை நினைவூட்டியது. ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய புகழ்பெற்ற நாவலான 'குற்றமும் தண்டனையும்' நாவலில் நாயகனின் மாஸ்கோ நகர வாழ்க்கையை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். எனக்கு இப்படத்தைப் பார்க்கும்போது அந்நாவலின் நினைவுகள் தோன்றின.

•Last Updated on ••Thursday•, 14 •May• 2020 08:50•• •Read more...•
 

அறிமுகம்: கலைஞர் டிலிப்குமாரும், 'தாய்வீடு' பத்திரிகையும் பற்றி....

•E-mail• •Print• •PDF•

திலிப்குமார்பொதுவாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலிருந்து நூற்றுக்கணக்கில் இலவசப்பத்திரிகைகள் வெளியாகின்றன. இவற்றின் அடிப்படை நோக்கம் பணம் சம்பாதிப்பது. அதனையே அடிப்படையாகக்கொண்டு வெளியாவதால், எனக்குத்தெரிந்து கொள்கைகப்பிடிப்புள்ள எழுத்தாளர்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் சிலர் கூட இவ்விதப்பத்திரிகைகளை வெளியிடத்தொடங்கியதும் வியாபாரிகளாக உருமாறியதைக் கண்டிருக்கின்றேன். இவ்விதமான இலவசப்பத்திரிகைகளில் எனக்குத்தெரிந்து ஒரு பத்திரிகை மட்டுமே இலவசப்பத்திரிகையாக வெளிவரும் அதே சமயம் தரமான சமூக, கலை, இலக்கியப் பத்திரிகையாகவும் வெளியாகின்றது. அதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது கொள்கைப்பிடிப்புள்ள கலைஞர் , எழுத்தாளர் ஒருவரிடமிருந்து அப்பத்திரிகை வெளியாவதுதான். இவரை நான் முதலில் அறிந்து கொண்டது நாடக நடிகராக. டொராண்டோ, கனடாவிலுள்ள தேடகம் போன்ற அமைப்புகளின் நாடகங்களில் நடித்த , நடிப்புத்திறமையுள்ள நடிகர்களிலொருவராகவே அறிந்திருக்கின்றேன். அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத ஒருவராகவே அறிந்திருந்தேன். அவர்தான் தாய்வீடு மாதப்பத்திரிகையின் ஆசிரியரும் , வெளியீட்டாளருமான டிலிப்குமார் ஜெயரட்ணம். ஆரம்பத்தில் எழுத்தாளர் 'அசை சிவதாசன்' வீடுவிற்பனை முகவராக உருமாறியபோது வெளியிட்ட 'வீடு' பத்திரிகை நின்றுபோனபோது அதனைப்பொறுப்பெடுத்து "தாய்'வீடு'" மாதப்பத்திரிகையாக வெளியிடத்தொடங்கினார். இவரும் எனக்குத்தெரிந்த ஏனைய சிலரைப்போல் பணம் சம்பாதிப்பதையே அடிப்படையாகக் கொண்டு வழி மாறிச் சென்று விடுவாரோ என்று ஆரம்பத்தில் எண்ணியதுண்டு. ஆனால் அவ்விதமில்லாமல் தாய்வீடு பத்திரிகையைத் தரமானதொரு கலை, இலக்கிய, சமூக, அரசியல் பத்திரிகையாகவும் வெளியிட்டுக்கொண்டும், அதே சமயம் அதனையொரு வருமானம் ஈட்டும் சாதனமாகவும் நிலைநிறுத்திக்கொண்டு இன்றுவரை வெளியிட்டு வருகின்றார் டிலிப்குமார்.

•Last Updated on ••Thursday•, 14 •May• 2020 02:30•• •Read more...•
 

பத்துநாட்கள் - பத்து திரைப்படங்கள்: திரைப்படம் (2): - சத்யஜித் ரேயின் அகண்டக் (Agantuk- அந்நியன் - The Stranger)

•E-mail• •Print• •PDF•

இயக்குநர் சத்யஜித் ராய்சத்யஜித் ராயின் கடைச்சிப்படம் இந்தப்படம். இந்திய - பிரெஞ்சுக் கூட்டுத்தயாரிப்பு.  இது சத்யஜித் ராயின் 'அதிதி' சிறுகதையொன்றின் திரை வடிவம். இத்திரைப்படத்தின் இயக்கம், இசை, திரைக்கதை எல்லாவற்றையுமே மிகவும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் சத்யஜித்  ராய். இத்திரைப்படத்துக்கு இந்திய மத்திய அரசின் விருதுகளுடன் , சர்வதேசத் திரைப்பட விழா விருதுகளும் கிடைத்துள்ளன. வங்காள நடிகர் உத்பால் தத் (Utpal Dutt) மிகச்சிறந்த நடிகர்களிலொருவர்.

இத்திரைப்படத்தில் பல வருடங்களுக்கு முன் இளம் வயதில் வீடு துறந்து, மேற்கு நாடுகள் பலவும் அலைந்து திரிந்து, மானுடவியலில் பட்டம் பெற்று அத்துறையில் ஊடகங்களுக்கு எழுதி வருபவராக விளங்கும் மனோமோகன் மித்ராவாக அவர் நடித்திருக்கிறார். பல தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் தன் மருமகள் வீட்டுக்கு விருந்தினராக, அந்நியராக வருகை தருகின்றார். அவரை அவர் உறவினர்கள் எவ்விதம் வரவேற்கின்றார்கள், உபசரிக்கின்றார்கள் , முடிவில் அவர் என்ன செய்கின்றார் என்பதை விளக்குவதுதான் திரைக்கதையின் பிரதான நோக்கம். அவரது நடிப்பும், அப்பாத்திரச்சிறப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. இவரது பாத்திரத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றிய முக்கிய எண்ணங்களிலொன்று எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது புகழ்பெற்ற நாவலான 'ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு  உலகம்' நாவலின் நாயகனாகப் படைத்த ஹென்றி என்னும் பாத்திரத்தை இத்திரைப்படத்தில் வரும் மனோமோகன் மித்ரா பாத்திரம் ஏற்படுத்திய தூண்டல் காரணமாகப் படைத்திருப்பாரோ என்ற எண்ணம்தான். இத்திரைப்படத்தின் முடிவும், அவர் எதற்காக வருகின்றார் என்பதற்கான முக்கிய நோக்கமும் அவ்விதமான எண்ணத்தை ஏற்படுத்தியது. நீங்களும் பார்த்துப்ப்பாருங்கள். முடிவு செய்து கொள்ளுங்கள்.

•Last Updated on ••Thursday•, 14 •May• 2020 02:10•• •Read more...•
 

பத்துநாட்கள் - பத்து திரைப்படங்கள் (1): - சத்யஜித் ரேயின் 'சாருலதா'

•E-mail• •Print• •PDF•

இயக்குநர் சத்யஜித் ராய்முகநூலில் பத்து நாட்களுக்குத் தொடர்ச்சியாகப் பத்து திரைப்படங்களை  பதிவிட்டு ஞாபகப்படுத்த வேண்டும் என்று நண்பர் பரதன் நவரத்தின் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையேற்று நாளொன்றுக்கு ஒவ்வொரு திரைப்படம் பற்றிய விபரங்களைப் பதிவு செய்து வருகையில் ஏன்  அத்திரைப்படங்களைப் பதிவுகள் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தக் கூடாது என்று தோன்றியது. இத்தருணத்தை இயக்குநர் சத்யஜித் ரேயின் திரைப்படங்களில் யு டியூப்பில் கிடைக்கும் அனைத்தையும் பார்ப்பதற்கு முடிவு செய்தேன். அவ்வகையில் முதலாவதாக அறிமுகம் செய்யும் திரைப்படம் அவரது 'சாருலதா' திரைப்படம்.

நல்லதொரு திரைப்படம் எவ்வகையில் அமைந்திருக்க வேண்டுமென்பதற்கு உதாரணங்களாக அமைபவை அவரது திரைப்படங்கள். திரைப்படமொன்றின் இயக்கம், கதை, ஒளிப்பதிவு, நடிப்பு , திரைக்கதை & இசை இவை யாவுமே எவ்விதம் அமைய வேண்டுமென்பதற்கு உதாரணங்களாக அமைபவை அவரது திரைப்படங்கள். பாத்திரங்களுகேற்ற சிறந்த , பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதுடன் அவர்களை எவ்விதம் இயக்க வேண்டுமென்பதை இன்றுள்ள இயக்குநர்கள், சினிமாத்துறைப் பல்வகைக் கலைஞர்களும் அறிந்துகொள்ள வேண்டும்.

சாருலதா ஒரு காவியம். ரவீந்திரநாத் தாகூரின் 'சிதைந்த கூடு' என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். பார்க்கையில் சிறந்ததொரு கவிதையை வாசிப்பது போன்று சட்டத்துக்குச் சட்டம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் சத்யஜித் ரேய் உலக சினிமாவுக்கு இந்தியா வழங்கிய மாபெரும் கொடை. எழுத்து, இயக்கம், இசையமைப்பு என அவரது பல்வகைத்திறமை வாய்ந்தவர்.

ஒன்று மட்டும் நிச்சயம். இந்தப் பத்துப் படங்களையும் பார்த்தீர்களென்றால் முடிவில் உங்களுக்குச் சிறந்த திரைப்படம் பற்றிய புரிதல் (இயக்கம், கதை, ஒளிப்பதிவு, இசை & நடிப்பு போன்றவற்றில்) நிச்சயம் ஏற்படும் என்பது மட்டும் நிச்சயம். எனவே பொழுதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

•Last Updated on ••Tuesday•, 12 •May• 2020 11:45•• •Read more...•
 

வாழ்த்துகின்றோம் 'வடலி' பெரும் பனையாக வளர்ந்திட , உயர்ந்திட!

•E-mail• •Print• •PDF•

புகலிடத்தமிழர்கள் மத்தியிலிருந்து ஒரு பதிப்பகம் எவ்வித ஆரவாரமுமின்றி உலகத்தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்து வருகின்றது. இதற்குக் காரணமான இதன் உரிமையாளரான எழுத்தாளரின் தன்னடக்கம் மதிப்புக்குரியது. எழுத்தாளர் வேறுயாருமல்லர் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான எழுத்தாளர் த.அகிலனே. 'மரணத்தின் வாசனை: போர் தின்றவர்களின் கதை' மூலம் எமக்கெல்லாம் அறிமுகமானவர். போர்ச்சூழலில் மக்கள் மரணத்துள் எவ்விதம் வாழ்ந்திருந்தார்கள் , எவ்விதம் அதனை எதிர்கொண்டார்கள் என்பவற்றை வெளிப்படுத்தும் கதைகளின் தொகுதி. முக்கியமான போர்க்கால இலக்கியப் பிரதிகளிலொன்று. கதை, கவிதை , கட்டுரை நூல் வெளியீடு என இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்துபட்டது.

வாழ்த்துகின்றோம் 'வடலி' பெரும் பனையாக வளர்ந்திட, உயர்ந்திட, மேலும் பல வளங்களை வாசகர்களுக்கு, தமிழ் இலக்கியத்துக்கு வழங்கிட வளர.

இதுவரை உருவாகிய குறுகிய காலத்திலிருந்து இப்பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் , நேர்த்தியான வடிவமைப்புடன் வெளியான தன்மை வடலிக்கு மிகப்பெரிய வளர்ச்சியினை எதிர்காலத்தில் அடைய உதவுமென்பது வெள்ளிடைமலை.

•Last Updated on ••Wednesday•, 06 •May• 2020 16:59•• •Read more...•
 

அ.யேசுராசாவின் 'பனிமழை' (2002) - மொழிபெயர்ப்புக் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் அ.யேசுராசாவின் தமிழ் இலக்கியத்துக்கான முக்கிய பங்களிப்புகளாக அவர் வெளியிட்ட அலை சஞ்சிகை, கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், உலக சினிமா பற்றிய கட்டுரைகளைக் குறிப்பிடுவேன். அவரது 'நல்லம்மாவின் நெருப்புச் சட்டி' அவரது கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை. உண்மையான உணர்வுகளின், அனுபவங்களின் வெளிப்பாடாக அமைந்த சிறந்ததொரு கவிதை. அண்மையில் அவரது மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்பான 'பனிமழை' தொகுப்பினை வாசித்தேன். எண்ணிம நூலகமான நூலகம் தளத்திலுள்ளது. அதற்கான இணைய இணைப்பு: http://www.noolaham.net/project/01/45/45.htm

நூலின் என்னுரையிலிருந்து அ.யேசுராசவின் ஏனைய புனைபெயர்களையும் அறிய முடிகின்றது. அலை, புதிசு, களனி, திசை, தாயகம், கவிதை ஆகிய இதழ்களில் சொந்தப்பெயரிலும் , கடலோடி, ஜெயசீலன் ஆகிய புனைபெயர்களிலும் வெளியான மொழிபெயர்ப்புக் கவிதைகள் இவை. இவற்றை இந்தியா, இலங்கை, ரஷ்யா, ஸ்பெயின், இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, யூகோஸ்லாவியா, உருகுவே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பதினான்கு கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்திலருந்து தமிழுக்குக் கொண்டு வந்திருக்கின்றார் அ.யேசுராசா. அட்டைப்பட ஓவியத்தை ஓவியர் ரமணி வரைந்திருக்கின்றார்.

இந்நூலுக்குச் சிறப்பான முன்னுரையொன்றினை எழுதியிருக்கின்றார் கவிஞர் சோ.பத்மநாதன். அவரும் கூட சிறந்த மொழிபெயர்ப்பாளர். அவர் தனது முன்னுரையில் மொழிபெயர்ப்பு பற்றிக் கூறிய கூற்றுகள் என்னைக் கவர்ந்தன. படைப்புகளை மொழிபெயர்க்க விரும்பும் எவரும் கவனிக்க வேண்டிய கருத்துகள் அவை. அவற்றில் சிலவற்றை இங்கு தருகின்றேன்:
•Last Updated on ••Saturday•, 02 •May• 2020 10:30•• •Read more...•
 

கணையாழி மே 2020: ' 'பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற்காதல் பற்றி - வ.ந.கிரிதரன் -

•E-mail• •Print• •PDF•

கணையாழி சஞ்சிகையின் மே 2020 இதழில் எனது கட்டுரையான 'பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற்காதல் பற்றி' என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் சென்று வாசிக்கவும். 'கணையாழி' சஞ்சிகை இணையப்பதிப்பாக வெளியாகின்றது. வாங்கிப்படிக்க நீங்கள் நாட வேண்டிய இணைய இணைப்பு: https://www.magzter.com/IN/Kanaiyazhi/Kanaiyazhi/Art/
கணையாழி சஞ்சிகையின் மே 2020 இதழில் எனது கட்டுரையான 'பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற்காதல் பற்றி' என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது
•Last Updated on ••Thursday•, 30 •April• 2020 13:07•• •Read more...•
 

வ.ந.கிரிதரன் பெயர்க் குழப்பமும் , மணிமேகலை பதிப்பகமும்...

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரனும் , வி.என்.கிரிதரனும்நான் எனது பத்து வயதிலிருந்து வ.ந.கிரிதரன் என்னும் பெயரில் எழுதிக்கொண்டு வருகின்றேன். ஆங்கிலத்தில் V.N.Giritharan என்று எழுதிக்கொண்டு வருகின்றேன். என் நூல்கள் தமிழகத்திலும் 1996இல் வ.ந.கிரிதரன் என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழகத்திலுள்ள  மணிமேகலை பதிப்பகம்   வி.என்.கிரிதரன் என்னும் பெயரில் இன்னுமோர் எழுத்தாளரின் நூலை வெளியிட்டுள்ளது. இத்தனைக்கும் மணிமேகலை பிரசுர உரிமையாளர் ரவி தமிழ்வாணனுக்கு என் பெயர் தெரியாதென்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் பல வருடங்களுக்கு முன்னர் அவர் பதிவுகளுக்கு அவரது புத்தக வெளியீடுகள் சம்பந்தமாகக் கடிதமொன்று அனுப்பியிருந்தார். ஆனால் அவர் V.N கிரிதரன் என்னும் பெயரில் எதற்காக இன்னுமொருவரின் நூலை வெளியிட்டார்? அவ்விதம் V.N.கிரிதரன் என்று எழுதியவர் எதற்காக அப்பெயரில் எழுதினார்? அதிலுள்ள வி என்பது அவரது தந்தையையோஅல்லது அவரது பிறந்த ஊரையோ குறிக்கின்றதா? இவ்விதமாக ஏற்கனவே எழுத்தாளர் ஒருவர் அப்பெயரில் எழுதிக்கொண்டிருந்தால் நூலொன்றினை வெளியிடுபவர் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக அப்பெயரில் வேறோர் எழுத்தாளரின் நூலினை வெளியிடுவதைத்தவிர்க்க வேண்டும். ஆனால் ரவி தமிழ்வாணம் தவிர்க்கவில்லை.

நான் குறிப்பிடும் புத்தகத்தின் பெயர்: முத்தமிழில் நல்முத்துக்கள் ; எழுதியவர்கள்: V.N.கிரிதரன் & S.N.கிருஷ்ணமூர்த்தி ; வெளியிட்டவர்கள்: மணிமேகலை பதிப்பகத்தினர்.

•Last Updated on ••Thursday•, 30 •April• 2020 13:08•• •Read more...•
 

எழுத்தாளர் தமயந்தியின் (தமயந்தி சைமன்) புகைப்படமொன்று..

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர்  தமயந்தி (தமயந்தி சைமன்) எழுத்தாளர் தமயந்தி (தமயந்தி சைமன்) பல்கலை வித்தகர். எழுத்து, நடிப்பு, புகைப்படம் & காணொளி என இவரது ஆற்றல் பன்முகப்பட்டது, இவர் முகநூலில் பகிர்ந்துகொண்ட காணொளிகள், ஓவியங்கள் பலவற்றை மறக்கவே முடியாது, அவற்றுக்காக அவர் பல சமயங்களில் மணிக்கணக்காகக் காத்துக்கிடப்பதுமுண்டு.

ஒருமுறை இரவு முழுக்கக் காத்திருந்து தவளைகளின் சங்கீதக் கச்சேரியைக் கேட்பதற்காக எடுத்துப் பதிவு செய்திருந்த காணொளியை என்னால் மறக்கவே முடியாது. ஒரு காலத்தில் மழைக்கால இரவுகளில் , ஓட்டுக்கூரைகளில் பட்டுச் சடசடக்கும் மழையொலிகளூடே வயற்புறங்களிலிருந்து ஒலிக்கும் தவளைக்கச்சேரிகளை இரசிப்பதில் பெரு விருப்புடைய எனக்கு பல வருடங்களுக்குப் பின்னர் அவ்விதம் தவளைகளின் கச்சேரியினை இரசிக்கும் சந்தர்ப்பத்தையேற்படுத்தித்தந்த காணொளி அது.

இங்குள்ள புகைப்படத்தைப்பாருங்கள். எவ்வளவு அற்புதமாகக் காட்சியைக் கமராவுக்குள் கலைத்துவத்துடன் கொண்டு வந்திருக்கின்றார். நம்மத்தியில் இவ்விதமான கலைஞரொருவர் வாழ்கின்றாரென்பதையிட்டு நாம் நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

•Last Updated on ••Tuesday•, 28 •April• 2020 17:40•• •Read more...•
 

கோமாளிகள் பற்றியொரு நனவிடை தோய்தல்!

•E-mail• •Print• •PDF•

கோமாளிகள் பற்றியொரு நனவிடை தோய்தல்!கோமாளிகள்! இலங்கைத்தமிழ் சினிமாவில் அதிக வசூலையீட்டிய திரைப்படம். இத்திரைப்படம் வெளியானபோது யாழ்ப்பாணம் , கொழும்பு நகர்களில் ஐம்பது நாள்களைக்கடந்து ஓடியது. ஏனைய இடங்களிலும் நன்கு ஓடியது நினைவிலுள்ளது. வி.பி.கணேசனின் 'புதிய காற்று' வெற்றியைத்தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகியபோது இதனை நான் பார்க்கவில்லை. யாழ் வின்சர் திரையரங்கில் ஓடியது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் 'கோமாளிகள் கும்மாளம்' என்னும் பெயரில் சுமார் இரண்டு வருடங்கள் வாராவாரம் ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பைப்பெற்ற வானொலி நாடகமிது.

எஸ்.ராம்தாசின் கதை, திரைக்கதை வசனத்தில், எஸ். இராமநாதனின் இயக்கத்தில் வெளியான திரைப்படத்துக்கு இசையினை கண்ணன் - நேசம் இரட்டையர் அமைத்திருந்தனர். ஒளிப்பதிவு - ஜே. ஜே. யோகராஜா. இராமநாதன், யோகராஜா இருவரும் சிங்களத்திரையுலகில் நன்கு பிரபலமானவர்களாக விளங்கினார்கள். படத்தைத்தயாரித்தவர் வர்த்தகரான எம். முகம்மது எஸ்.ராம்தாஸ், அப்துல் ஹமீட், ஆனந்தராணி இராஜரத்தினம் (இன்று ஆனந்தராணி பாலேந்திரா), சுப்புலட்சுமி காசிநாதன், சில்லையூர் செல்வராசன், கே.ஏ.ஜவாஹர், செல்வம் பெர்ணாண்டோ, கமலினி செல்வராசன், எஸ்.செல்வசேகரன், ரி.ராஜகோபால், ஜேசுரட்னம், கே.சந்திரசேகரன் என்று புகழ்பெற்ற வானொலிக் கலைஞர்கள் பலர் நடித்திருந்தார்கள்.

'பல்கலைவேந்தர்' சில்லையூர் செல்வராசனின் வானொலி, திரைப்படப்பங்களிப்பு முக்கியமானது. இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் முன்னோடிகளிலொருவராகக் கருதப்படுபவர். அது பற்றிக் கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரனும் கட்டுரையொன்றினை எழுதியிருந்தார். நினைவுக்கு வருகின்றது. சில்லையூர் செல்வராசன் 'தணியாத தாகம்' (திரைப்படச் சுவடி), விவரணத்திரைப்படங்கள் ( ‘கமம்’, ‘தங்கமே தங்கம்’, ‘பாதைதெரியும் பார்’ என்பவை அவற்றுட் சில. ‘கமம்’ புதுடில்லி பேர்லின் திரைப்பட விழாக்களில் விருதுகளைப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது).
•Last Updated on ••Monday•, 27 •April• 2020 10:44•• •Read more...•
 

சேக்ஸ்பியர் நினைவாக... (ஏப்ரில் 23 அவரது நினைவு தினம்)

•E-mail• •Print• •PDF•

Chakspeare

சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக்கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. இன்றுள்ள சூழலைப்பாவித்து அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தில் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

https://www.sparknotes.com/shakespeare/#jumpTo-no-fearno

•Last Updated on ••Saturday•, 25 •April• 2020 17:17•• •Read more...•
 

தணியாத தாகம் தீர்ந்தது!

•E-mail• •Print• •PDF•

சில்லையூர் செல்வராசன்கமலினி செல்வராசன்இன்றுள்ளது போல் எம் பெண்கள் தொலைக்காட்சிச் 'சீரியல்'களில் மூழ்கிக் கிடக்காத காலகட்டம். தமிழ் வார இதழ்களில், மாதாந்த நாவல்களில் மூழ்கிக்கிடந்த காலகட்டம். அக்காலகட்டத்தில் ஒவ்வொரு வாரமும் ஒருநாள் அவர்கள் தவறாமல் இலங்கை வானொலியின் முன் கூடுவார்கள். அது 'பல்கலை வேந்தர்' சில்லையூர் செல்வராசனின் 'தணியாத தாகம்' வானொலி நாடகத்தைக் கேட்பதற்காகத்தான். என் உறவுக்கார அக்காமார் பலர் இவ்விதம் கூடிக் கேட்பார்கள். நான் அந்நாடகத்தைத் தொடர்ச்சியாகக் கேட்டு இரசித்தவன் அல்லன். ஆனால் எல்லோரும் இவ்வளவு ஆர்வத்துடன் அந்நாடகத்தைக் கேட்டதால் அந்நாடகம் என் கவனத்தையும் சிறிது ஈர்த்தது.

இலங்கை மக்கள் வங்கியின் ஆதரவுடன் ஒலிபரப்பாகிய அந்நாடகத்தின் இடையில் ஒலிக்கும் சில்லையூர் செல்வராசன் & கமலினி செல்வராசன் தம்பதியினர் இணைந்து பாடும் 'அத்தானே அத்தானே! எந்தன் ஆசை அத்தானே' பாடலை யார் மறப்பார்?

இந்நூலைச் சில்லையூர் செல்வராசன் ஒரு திரைப்படச் சுவடியாகவே எழுதியிருப்பதை நூலின் முதற் பதிப்புக்கான முன்னுரையின் மூலம் அறிய முடிகின்றது. அது 1971இல் வெளியாகியுள்ளது. இரண்டாவது பதிப்பை எழுத்தாளர்கள் புலோலியூர் ஆ.இரத்தினவேலோனும், எஸ்.ரஞ்சகுமாரும் இணைந்து 'மீரா பதிப்பகம்' மூலம் 1999இல் வெளியிட்டுள்ளார்கள். நூலைச் சில்லையூர் செல்வராசன் தனக்கேயுரிய பாணியில் தன் மனைவி கமலினி செல்வராசனுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். கவிஞரான அவர் 'தான்தோன்றிக்கவிஞர்' என்று அறியப்பட்டவர். தான் தோன்றித்தனமாக எழுதாமல் சமர்ப்பணத்தை விடுகதைப் பாணியில் ஒரு கவிதை மூலம் சமர்ப்பித்திருக்கின்றார். அக்கவிதை வருமாறு:

"எழுதுவித்தவளுக்கு!
மன்னி செகராச வல்லி என நாமத்துட்
பின்னி உயிர்க் குள்ளும் பிணைப்பாகி - முன்னின்று
எவள் எனை இக்காதை எழுதுவித் தாளோ
அவளுக் கிந் நூல் அர்ப் பணம்'


மன்னி செகராச வல்லி என்னும் பெயருக்குள் மறைந்துள்ளார் கமலினி செல்வராசன். வித்தியாசமான, தனித்துவம் வாய்ந்த சமர்ப்பணம். இந்நூலினை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்: http://noolaham.net/project/27/2606/2606.pdf

இந்நூல் பற்றிய தனது முகவுரையில் கமலினி செல்வராசன் அவர்கள் பின்வருமாறு தன் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கின்றார்:

•Last Updated on ••Saturday•, 25 •April• 2020 01:00•• •Read more...•
 

தடம் பதித்த 'புதிசு'

•E-mail• •Print• •PDF•

சஞ்சிகை:புதுசுகலாநிதி நா. சுப்பிரமணியன்இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் 'புதுசு' சஞ்சிகையின் பங்களிப்பும் முக்கியமானது. எழுத்தாளர் நா.சபேசனை நிர்வாக ஆசிரியராகவும், எழுத்தாளர்களான இளவாலை விஜேந்திரன், பாலசூரியன், அ.ரவி ஆகியோரை உள்ளடக்கிய ஆசிரியர் குழுவையம் கொண்டு வெளியான சஞ்சிகை. காலாண்டிதழாக ஆரம்பித்த 'புதுசு' பல்வேறு சிக்கல்கள் காரணமாக ஒழுங்காக வெளிவரவில்லையென்று அறிகின்றோம். 'புதுசு'சஞ்சிகையில் கவிதைகளே அதிகமாகவே இடம் பெற்றிருக்கின்றன. கவிதைகள் தவிர கதை, கட்டுரை என 'புதுசு'வின் பங்களிப்பு பன்முகப்பட்டது. சமூக, அரசியலை உள்ளடக்கிய கட்டுரைகள் 'புதுசு'வில் வெளிவந்துள்ளன. இலங்கைத்தமிழர் விடயத்தில் , அவர்தம் உரிமைப்போராட்டத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்க இடதுசாரிகள் தவறிவிட்டனர் என்பதை வெளிப்படுத்தும் கட்டுரை, மலையகத்தமிழ் மக்களின் பிரச்சனைகள் எனப் 'புதுசு' சஞ்சிகையும் இலங்கைத்தமிழர்கள் அனைவரினதும் பிரச்னைகள் பற்றிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

'புதுசு' பற்றிய கலாநிதி நா.சுப்ரமணியனின் 'ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் 'புதுசு'வின் பண்பும் பணிவும்' என்னும் கட்டுரையினை ஈழநாடு வாரமலரில் எழுதியுள்ளார். 30.3.1986 அன்று வெளியான மலரில் இடம் பெற்றுள்ள அக்கட்டுரையை தொடராக மேலுமிரு ஈழநாடு வாரமலர்களில் வெளியாகியுள்ளது. அவற்றை வாசிப்பதற்குரிய இணைய இணைப்புகளைக் கீழே தருகின்றேன்.

ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் 'புதுசு'வின் பண்பும் பணிவும் - கலாநிதி நா.சுப்பிரமணியன் (ஈழநாடு வாரமலர் 30-3-1986) - http://noolaham.net/project/256/25502/25502.pdf
இனப்பிரச்னை இடதுசாரிகள் - 'புதுசு' - கலாநிதி நா.சுப்பிரமணியன் (ஈழநாடு வாரமலர் - 6-4-1986- http://noolaham.net/project/256/25509/25509.pdf
•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 14:29•• •Read more...•
 

ஒரு கேள்வி! ஒரு பதில்! இதழியல் ஆய்வு பற்றி...

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் டொமினிக் ஜீவா பற்றிய முகநூல் பதிவொன்றுக்கு எதிர்வினையாற்றிய எழுத்தாளர் மாலன் அவர்கள் பின்வருமாறு கேட்டிருந்தார்" இலங்கையின் இதழியல் வரலாறு பற்றி ஒரு நூல் எழுதப்பட வேண்டும்.எத்தனை பெரும் ஆளுமைகள்! ஏன் நீங்களோ முருகபூபதியோ முயற்சிக்கக் கூடாது?"

அதற்கு நான் பின்வருமாறு பதிலளித்திருந்தேன்: "முருகபூபதியே பொருத்தமானவர். அவர் ஏற்கனவே நிறைய எழுதியுள்ளார். நூல்கள் பல எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் பலருடன் அதிகமாகப்பழகியுள்ளார். வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் அவர் பணியாற்றியதும் அதற்கு அவருக்கு உதவியாகவுள்ளது. அவரிடம் இது பற்றித்தெரிவிக்கின்றேன்."

இது  பற்றி முருகபூபதி அவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதற்கு முருகபூபதி அவர்கள் உடனடியாகவே பின்வருமாறு பதிலளித்திருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்:

"அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம்.  நீங்கள் அனைவரும் நலமாக இருக்கவேண்டும். இங்கு நாமும் வீட்டில்தான் முடங்கியிருக்கின்றோம்.  தங்களது அண்மைய இரண்டு பதிவுகள் (  காவலூர் ஜெகநாதன் – மல்லிகை ஜீவா ) படித்தேன். நல்ல பதிவு. தாமதிக்காமல், பிரான்ஸில் வதியும் ஈழநாடு ( டான் ரீவி)  குகநாதனுக்கும் ( காவலூர் ஜெகநாதனின் தம்பி ) அதனை பகிர்ந்துகொண்டேன்.

•Last Updated on ••Wednesday•, 22 •April• 2020 11:35•• •Read more...•
 

இலங்கைத்தமிழ் இலக்கியம்: தடம் பதித்த சிற்றிதழ்கள் - தீர்த்தக்கரை & நந்தலாலா

•E-mail• •Print• •PDF•

இலங்கைத்தமிழ் இலக்கியம்: தடம்  பதித்த சிற்றிதழ்கள் - தீர்த்தக்கரை & நந்தலாலாதீர்த்தக்கரை எண்பதுகளின் ஆரம்பத்தில் கண்டியிலிருந்து வெளியான சஞ்சிகை. எல்.சாந்திகுமாரை ஆசிரியராகக்கொண்டு காலாண்டிதழாக வெளியான பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் எஸ்.நோபேட் (இவர்தான் 'புதியதோர் உலகம்' எழுதிய 'கோவிந்தன்'. ஏனைய புனைபெயர்கள்: ஜீவன், கேசவன். இயற்பெயர் சூசைப்பிள்ளை நோபேட். திருகோணமலையைச் சேர்ந்தவர்). . எம்.தியாகராம் & எல்.ஜோதிகுமார் ஆகியோர் அடங்கியிருந்தனர். நூலகம் தளத்தில் 1980-1982 காலகட்டத்தில் வெளியான 'தீர்த்தக்கரை'யின் ஐந்து இதழ்களுள்ளன. தீர்த்தக்கரை சஞ்சிகை மொத்தம் ஐந்து இதழ்களே வெளிவந்ததாக அறிகின்றேன். இதன் பின்னர் 1992 தொடக்கம் 2014 காலப்பகுதியில் அவ்வப்பொது தடை பட்ட நிலையில் 'நந்தலாலா' சஞ்சிகை காலாண்டிதழாக வெளியானது. 'நந்தலாலா'வை வெளியிட்டது நந்தலாலா இலக்கிய வட்டம். ஆனால் தீர்த்தக்கரையில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதுபோல் நந்தலாலா சஞ்சிகையில் நந்தலாலா இலக்கிய வட்டத்தில் உள்ளவர்கள் யார் யார், நந்தலாலாவின் ஆசிரியர், ஆசிரியர் குழுவினர் யார் யார் என்பவை போன்ற விபரங்களைச் சஞ்சிகையில் காண முடியவில்லை. ஆனால் தீர்த்தக்கரை குழுவினரே நந்தலாலாவையும் வெளியிட்டனர் என்பதை ஊகிக்க முடிகின்றது.

தீர்த்தக்கரை, நந்தலாவா இரண்டுமே  இலங்கைத்தமிழ் இலக்கியப்பரப்பில் வெளியான சஞ்சிகைளில் முக்கியமானவை. இவற்றைக் கலை, இலக்கிய சஞ்சிகைகள்  என்று மேலோட்டமாகக் கூறிக் கடந்து விடமுடியாது. சமூக, அரசியல் விடயங்களைத் தாங்கி வெளியான கலை, இலக்கிய சஞ்சிகைகள் இவை. இவற்றை வெளியிட்டவர்களுக்குக் குறிப்பிட்ட அரசியல் பார்வை இருந்தது. மார்க்சியக் கண்ணோட்டத்தில் மக்களின் பிரச்சினையை அணுகினார்கள். அவ்வணுகளில் அவர்களுக்குத் தெளிவான பார்வையிருந்தது. இலங்கையின் மலையக மக்களின் சமூக, அரசியல் பிரச்சினைகள், இலங்கைத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம், உலக அரசியல் இவை அனைத்தையுமே இவரகள் அணுகுவதில் இவர்கள் கொண்டிருந்த தெளிவான பார்வை சஞ்சிகைகளில் வெளியான படைப்புகள் எல்லாவற்றிலுமே புலப்படுகின்றன.

•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 00:21•• •Read more...•
 

மணம் வீசிய மல்லிகை!

•E-mail• •Print• •PDF•

இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு எழுத்தாளர் ஒருவரின் பங்களிப்பு மகத்தானது மட்டுமல்ல பிரமிக்க வைப்பதும் கூட. இவரது எழுத்துலகப் பங்களிப்பும் முக்கியமானது என்றபோதும் பிரமிக்க வைப்பது இவர் இலக்கிய உலகுக்கு ஆற்றிய இன்னுமொரு முக்கியமான பங்களிப்புத்தான். இவர் முற்போக்கு இலக்கியத்தைத் தன் பாதையாக ஏற்றுக்கொண்டதுடன் , செயற்பட்டவரும் கூட, சுயமாக வாசித்துத் தன் எழுத்தாற்றலை, ஞானத்தினை வளர்த்துக்கொண்டவர். இவர் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தைச் சேர்ந்தவராகவிருந்தபோதும்கூட சகல பிரிவு எழுத்தாளர்களுக்கும் களமமைத்துக்கொடுத்தார். நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் உருவாக, வளர அவர் அமைத்துக்கொடுத்த களம் உதவியது. அதுதான் அவரது மிக முக்கியமான இலக்கியப்பங்களிப்பு. அவர்தான் எழுத்தாளரும், மல்லிகை சஞ்சிகை ஆசிரியருமான டொமினிக் ஜீவா.

ஓவ்வொரு தடவை மல்லிகை இதழ்களைப் புரட்டும்போதும் ஏற்படும் பிரமிப்புக்கு அளவில்லை. முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தில் அவர் இருந்தாலும், மல்லிகையில் அனைவருமே எழுதினார்கள். எழுத்தாளர் எஸ்.பொ. ஒருவரின் படைப்புகளைத் தவிர ஏனைய பல்வேறு இலக்கியக் குழுக்களைச் சார்ந்தவர்களின் படைப்புகளையெல்லாம் மல்லிகையில் காணலாம். எழுத்தாளர் மு.தளையசிங்கம் எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் சு.வில்வரத்தினம் எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் மு.பொன்னம்பலம் எழுதியிருக்கின்றார். கவிஞர் கந்தவனம் எழுதியிருக்கின்றார். கலாநிதி க.கைலாசபதி எழுதியிருக்கின்றார். அறிஞர் அ.ந.கந்தசாமி எழுதியிருக்கின்றார். ஒவ்வொரு காலகட்டத்திலும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கெல்லாம் மல்லிகையில் இடம் கிடைத்திருக்கின்றது. கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன், வடகோவை வரதராஜன், தாமரைச்செல்வி , கே.எஸ்.சுதாகர் என்று அன்று இளையவர்களாகவிருந்த பலர் எழுதியிருக்கின்றார்கள்.

•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 00:19•• •Read more...•
 

இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாததோர் ஆளுமை: காவலூர் எஸ். ஜெகநாதன் (காவலூரான்)

•E-mail• •Print• •PDF•

காவலூர் எஸ். ஜெகநாதன்ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டக்காலத்தில் அமைப்புகளின் உள் முரண்பாடுகள், புற முரண்பாடுகள் பலரை பலி வாங்கியுள்ளன. இலங்கை அரசுக்கும், போராட்ட அமைப்புகளுக்குமிடையிலான மோதல்கள் பலரைப் பலியாக்கியிருக்கின்றது. போராட்டம் காரணமாக அமைப்புகளினால் பல்வேறு அரசியல் காரணங்களினால் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்விமான்கள், பொதுமக்கள் எனப்பலர் பலியாகியுள்ளனர். அவர்களின் இழப்புகள் ஈடு செய்யப்பட முடியாதவை. அவர்களில் ஒருவர்தான் எழுத்தாளர் காவலூர் எஸ்.ஜெகநாதன். எனக்குக் காவலூர் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் இவர்தான். காவலூருக்கு இவரைப்போல் பெருமை சேர்த்தவர் வேறொருவர் இலர். அவ்வளவுக்குப் பத்திரிகை, சஞ்சிகைகள், வானொலியிலெல்லாம் காவலூரின் பெயரை ஒலிக்க வைத்தவர் இவர். அண்மையில் நூலகம் தளத்தில் பழைய மல்லிகை போன்ற சஞ்சிகைகள், பத்திரிகைகளைத் தேடிக்கொண்டிருந்தபோது எங்கு தேடினாலும் என் கண் முன்னாள் வந்து நிற்கும் எழுத்தாளராக விளங்கியவர் இவரே. அவ்வளவுக்கு அவர் தீவிரமாக எழுத்துலகில் இயங்கிக்கொண்டிருந்தார். மல்லிகை, வீரகேசரி, சுடர் என்று அவரது படைப்புகள் வெளிவராத பத்திரிகை, சஞ்சிகைகளே இல்லையெனலாம்.

இலங்கையில் பட்டம் பெற்று  நல்ல பணியில் இருந்தவர் 83 ஜூலைக்கலவரத்தைத்தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாகத் தமிழகம் சென்றார். தன் குடும்பத்தாரைப் பாதுகாப்பாக அங்கு தங்க வைத்துவிட்டு அடிக்கடி இலங்கை வந்து போய்க்கொண்டிருந்தார். அவ்விதமானதொரு சூழலில் திடீரெனக் கடத்தப்பட்டுக் காணாமல் போனார். பின்னர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. அவர் கொல்லப்பட்டது பற்றிப் பலவிதமான தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இத்தகவல்களை காவலூர் ஜெகநதன் பற்றிய என் முகநூல் பதிவொன்றின்போது எதிர்வினையாற்றிய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களினால் பதிவு செய்யப்பட்டன. அவர் அமைப்பொன்றினால் கடத்தப்பட்டு இன்னுமோர் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், பின்னர் அவ்வமைப்பினால் கொல்லப்பட்டதாகவும் அத்தகவல்கள் கூறின. அதற்கு அவரைக் கைது செய்த அமைப்பின் தலைவர் கூறிய காரணம் அவர் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதுதான். அப்பதிவுக்கு எதிர்வினையாற்றியிருந்த காவலூர் ஜெகநாதனின் சகோதரரான எழுத்தாளர் எஸ்.எஸ்.குகநாதன் அக்காலகட்டத்தில் தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கை எழுத்தாளர் ஒருவர் காவலூர் ஜெகநாதன் தமிழகத்தில் குறுகிய காலத்தில் அடைந்த செல்வாக்கினைக்கண்டு பொறுக்க மாட்டாமல் அவர் மேல் அவ்விதமானதொரு பழியைப்போட்டதாகவும், அதன் காரணமாகவே அவரது நண்பரான அமைப்பின் தலைவர் அவரைக் கைது செய்ததாகவும் தன் கருத்தினைப் பதிவு செய்திருந்தார். ஆனால் இன்று அவரைக் கைது செய்த அமைப்பின் தலைவரும் இல்லை. கொன்ற அமைப்பின் தலைவரும் இல்லை. ஆனால் காவலூர் ஜெகநாதன் உயிருடன் இல்லாவிடினும் அவர் படைப்புகளூடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இனியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்துகொண்டுதானிருப்பார். அவ்வளவுக்கு அவர் படைப்புகள் தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்திருக்கின்றன. அப்படைப்புகள் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகளினூடு , அவர் வெளியிட்ட படைப்புகளூடு அவர் வாழ்ந்துகொண்டிருப்பார்.

•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 00:20•• •Read more...•
 

'சுட'ரில் சுடர்ந்த ஓவியர்கள் சிலர்..

•E-mail• •Print• •PDF•
சுடர் இதழொன்றின் அட்டைப்படம். ஓவியர் - இந்துஎண்ணிம நூலகமான 'நூலக'த்தில் எழுபதுகளில் சுதந்திரன் பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட 'சுடர்' சஞ்சிகையின் ஆடி 1975 தொடக்கம் ஜூன்/ஆடி 1983 வரைக்குமாக 32 இதழ்களைக் காண முடிந்தது. அவற்றை மேலோட்டமாகப் பார்த்தபோது வரதர், இரசிகமணி கனக செந்திநாதன், கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை , எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் தொடக்கம், அனலை இராசேந்திரம், காவலூர் ஜெகநாதன், தாமரைச்செல்வி, தமிழ்ப்பிரியா, மண்டைதீவு கலைச்செல்வி, கோப்பாய் சிவம், கே.எஸ்.ஆனந்தன், இளவாலை விஜேந்திரன், வாகரைவாணன், கே.ஆர்/டேவிட், தென்மட்டுவில் கண்ணன், மங்கை கங்காதரம் என்று மேலும் பலரின் பல்வகைப் படைப்புகளையும் காண முடிந்தது. கலாமோகனின் இலக்கியக் கட்டுரகளையும் காண முடிந்தது.

கலை, இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்த 'சுடர்' சஞ்சிகையும் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு மிகவும் வளம் சேர்த்த சஞ்சிகைகளிலொன்றாகக் கருதலாம். 'சுடர்' சஞ்சிகையில் மேலுள்ள எழுத்தாளர்களுடன் மேலும் புதிய எழுத்தாளர்கள் பலர் பங்களித்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. 'சுடர்' சஞ்சிகை மரபுக்கவிதை, புதுக்கவிதைக்கென பக்கங்களை ஒதுக்கியிருந்தது. புதுக்கவிதைப் பக்கத்தில் பல இளையவர்கள் எழுதியிருந்தனர். பக்கங்களில் ஆங்காங்கே நறுக்குக் கவிதைகளையும் கவிஞர்கள் பலர் எழுதியிருந்தனர். குறிப்பாகக் கவிஞர் காசி ஆனந்தனின் 'கணைக் கவிதை'களைக் குறிப்பிடலாம். இவை தவிர ஆரத்தியின் 'இலக்கியச் சோலை' பத்தியில் எழுத்தாளர்கள் பலரைப்பற்றிய அறிமுகக் குறிப்புகள், வாழ்த்துக்குறிப்புகள் நிறைந்திருந்தன. வடகோவை வரதராஜன், தாமரைச்செல்வி, அ.செ.முருகானந்தன், சாரதா சண்முகநாதன், தமிழ்ப்பிரியா என்று பலரைப்பற்றிய குறிப்புகள் காணப்பட்டன. மேலும் இளம் எழுத்தாளர்கள் பலரை அறிமுகப்படுத்தும் பகுதியையும் சுடர் உள்ளடக்கியிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

•Last Updated on ••Wednesday•, 22 •April• 2020 11:37•• •Read more...•
 

அஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்

•E-mail• •Print• •PDF•

நீர்வை பொன்னையன்எழுத்தாளர் நீர்வை பொன்னையனின் மறைவு பற்றி முகநூற் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். எழுத்தாளர் நீர்வை பொன்னையன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவரது 'மேடும் பள்ளமும்' சிறுகதைத்தொகுதிதான். தனது இருபத்தேழாவது வயதிலிருந்து எழுத்துத்துறைக்கு வந்தவர் எழுத்தாளர் நீர்வை பொன்னையன். அவர் தான் எழுதிய முதலாவது சிறுகதை வெளிவந்த ஆண்டு  1957 என்று அண்மையில் ஆதவன் தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணலொன்றில் கூறியிருக்கின்றார். அது வெளியானது ஈழநாடு வாரமலரில் என்றும் கூறியிருக்கின்றார். அதனைப்பாராட்டி அப்போது ஈழநாடு ஆசிரியராகவிருந்த இரா. அரியரத்தினம் தனக்குக் கடிதமொன்றினை எழுதியதாகவும் அந்நேர்காணலில் அவர் கூறியிருக்கின்றார். அதே சமயம் 1961ஆம் ஆண்டு வெளியான தனது முதலாவது கதைத்தொகுதியான 'மேடும் பள்ளமும்' தொகுதிக்கான முன்னுரையில் அவர் தான் முதலாவதாக எழுதிய சிறுகதை 'புயல்' என்று குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் அத்தொகுதியி;லுள்ள சிறுகதைகளை வெளியிட்டதற்காக தேசாபிமானி, தினகரன், வீரகேசரி, கலைமதி, தாமரை, தமிழன், கலைச்செல்வி ஆகியவற்றில் வெளிவந்தவை என்றும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கின்றார். அங்கு அவர் ஈழநாடு பற்றியெதுவும் குறிப்பிடவில்லை. இக்குழப்பம் எனக்கு அண்மையில் அவர் நேர்காணலைக் கேட்டதிலிருந்து ஏற்பட்டதொன்று. ஏனென்றால் அவரது 'மேடும் பள்ளமும்' சிறுகதைத்தொகுதியைப் பல வருடங்களுக்கு முன்னர் வாசித்ததிலிருந்து அவரது முதற்கதை 'புயல்' என்றே எண்ணியிருந்தேன். ஒரு வேளை அவர் அத்தொகுதி வெளியானபோது ஈழநாடு பற்றிக் குறிப்பிட மறந்திருக்கலாம். முதற்கதை 'புயல்' என்று தவறுதலாகவும் குறிப்பிட்டிருக்கலாம். 1957 ஆம் ஆண்டுக்குரிய ஈழநாடு வாரமஞ்சரிப் பிரதிகளைப் பார்த்து முடிவு செய்ய வேண்டிய விடயமிது.

இருந்தாலும் 'மேடும் பள்ளமும்' அவரது முதற்கதையோ இல்லையோ அவரது ஆரம்பக் கதைகளிலொன்று. 1930ஆம் ஆண்டு பிறந்த அவர் தனது இளமைப்பருவத்திலேயே சிறுகதைகள் எழுதத்தொடங்கி விட்டார். எனக்கு நீர்வை பொன்னையன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவரது முதற் சிறுகதைத்தொகுதியான 'மேடும் பள்ளமும்'தான். அதிலுள்ள 'மேடும் பள்ளமும்' சிறுகதைதான். அவரது ஆரம்ப சிறுகதையே அவரை நினைவு படுத்தும் சிறுகதையாக அமையும் வகையில் சிறப்பாக எழுதியிருப்பது அவரது எழுத்தாற்றலுக்குச் சான்று. 'மேடும் பள்ளமும்' சிறுகதையின் கரு இதுதான்:  அக்கிராமத்தின் உயர்குடி நில உடமையாளன் ஒருவனிடமிருந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் விளைவித்துக் கொண்டிருந்தான் ஒரு தொழிலாளி. அவன் சமூகத்தின் அடிமட்டத்தைச் சேர்ந்த தாழ் குடிகளில் ஒருவன். பயிருக்குப் பயன்படாது என்ற நிலைலியிருந்த மேட்டு நிலத்தை எடுத்து நெல் விளைவித்தான் அவன். கடந்த இரு வருடங்களாக அவனுக்கு நட்டத்தை ஏற்படுத்திய அந்த மேட்டு நில வயல் அவ்வருடம் அவனுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்தது. வழக்கமாக விளைச்சலைக் கொடுக்கும் அந்நில உடமையாளனின் பள்ள நில வயல் அம்முறை பெய்த பெரு மழை ஏற்படுத்திய அழிவினால் பாதிப்புற்றிருந்தது. இதனால் மனம் புழுங்கிய அந்நில உடமையாளன் அத்தொழிலாளியை உடனடியாகவே குத்தகைப்பணப் பாக்கியைக் கட்டும்படி வற்புறுத்தினான். அவ்விதம் கட்டாவிட்டால் அவனது விளைச்சலைத் தானே சாகுபடி செய்யப்போவதாகப் பயமுறுத்தி இறுதியில் அவ்விதமே செய்கின்றான். அத்தொழிலாளியையும் அடித்துப் பள்ள வயலின் மூலையில் போட்டு விடுகின்றான். இதனால் வெகுண்டெழுந்த தொழிலாளர்கள் ஒன்று அந்நில உடமையாளனுக்குக்கெதிராகத் திரண்டு எழுகின்றார்கள். அம்மேட்டு நிலத்தை நோக்கி, தாழ் நிலத்து வயலில் அடிபட்டுக் காயமடைந்து கிடந்த அந்தத்தொழிலாளியையும் சுமந்தபடி மேட்டு நிலத்தை நோக்கிச் செல்கின்றார்கள். இதுதான் கதை. இச்சிறுகதையினை நீர்வை பொன்னையன் அவர்கள் சிறப்பாகவே எழுதியிருக்கின்றார். இதுவொரு குறியீட்டுக் கதை. வர்க்கமற்ற சமுதாயத்துக்கான போராட்டத்துக்குத் தொழிலாளிகள் திரண்டெழுவதை விபரிக்கும் குறியீட்டுக்  கதை.

•Last Updated on ••Wednesday•, 22 •April• 2020 16:45•• •Read more...•
 

வாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி

•E-mail• •Print• •PDF•

தேனருவி சஞ்சிகைஅருண்மொழி தேவன் (அருண்மொழி) இவர் ஓர் எழுத்தாளர்; நாடக நடிகர். சஞ்சிகையொன்றினை 1962- 1964 காலகட்டத்தில் நடத்தியிருக்கின்றார். இவ்விதழின் உதவி ஆசிரியராகவிருந்தவர் பா.மகேந்திரன். இவரே பின்னர் தமிழ்த்திரையுலகில் புகழ் பெற்ற இயக்குநரும் , ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா என்று , இப்பதிவுக்கான முகநூல் எதிர்வினையொன்றில் பிரபல கலை,இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் சுட்டிக்காட்டியிருந்தார். அவருக்கு என் நன்றி.

அக்காலகட்டத்தில் வெளியான மேற்படி சஞ்சிகையின் நான்கு இதழ்களையே நூலகம் எண்ணிம நூலகத்தில் காண முடிந்தது. அவற்றைப் புரட்டிப்பார்த்தேன். எனக்கு மிகவும் வியப்பாகவிருந்தது. காரணம்? இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த இலக்கியத்தின் பல்துறைகளையும் நேர்ந்த படைப்புகள் (கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை அவ்விதழ்களில் என்னால் காண  முடிந்தது. ஆனால் இதுவரையில் நானறிந்த வரையில் இதழாசிரியரைப்பற்றியோ அல்லது சஞ்சிகை பற்றியோ எங்கும் வாசித்ததாக நினைவிலில்லை.. கலாநிதி சி. மௌனகுரு, கலாநிதி சித்திரலேகா மெளனகுரு & கலை,இலக்கிய விமர்சகரும், கவிஞனுமான எம். ஏ. நுஃமான் ஆகியோர் இணைந்து எழுதிய 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்' என்னும் நூலிலும் தேடிப்பார்த்தேன். தேனருவி பற்றியோ அதன் ஆசிரியர் அருண்மொழி தேவன் (அருண்மொழி)  பற்றியோ தகவல்கள் எவற்றையும் அறிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை இவர்களுக்கெல்லாம் தேனருவி பற்றியோ அதன் படைப்புகள் பற்றியோ தெரிந்திருக்காமல் இருக்கக்கூடுமோ என்றெண்ணியவாறு 'தேனருவி' சஞ்சிகையையின் சேமிக்கப்பட்டிருந்த இதழ்களைப் புரட்டியபோதுதான் அதன் இலக்கியப் பங்களிப்பினைப் புரிந்துகொண்டேன். அப்பொழுது எனக்கு எழுந்த முக்கியமான கேள்வி இதுதான்: "எதற்காக? எதற்காக 'தேனருவி' சஞ்சிகையும், அதன் ஆசிரியரும் கலை, இலக்கிய  விமர்சகர்களாள் இருட்டடுப்பு செய்யப்பட்டார்கள்? இத்தனைக்கும் இளஞரான  நுஃமானின் 'எச்சில் எனினும்...' என்னும் காதற் சிறுகதை கூடத் 'தேனருவி' இதழொன்றில் வெளியாகியுள்ளது.  

அருண்மொழிதேவன் அவர்கள் 'தேனருவி' சஞ்சிகையை மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் வெளியிட்டுள்ளார். பலருக்குக் களமமைத்துக்கொடுத்துள்ளார். * தேனருவி சஞ்சிகையின் ஆசிரியரான அருண்மொழி  தேவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரென்று கலை, இலக்கிய விமர்சகரான கே.எஸ்.சிவகுமாரன் இப்பதிவுக்கான தனது முகநூல்எதிர்வினையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.  அவருக்கு நன்றி. உண்மையில் அருண்மொழி தேவன் (அருண்மொழி) இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்புகள் பலவற்றை வெளியிட்டு ஆக்கபூர்வமான பங்களிப்பினைச் செய்துள்ளார். 'வானொலி நாடகக்  குழு' நாடக அமைப்பினருடன் இணைந்து தமிழ் நாடகத்துறைக்கும் பங்களிப்பு செய்துள்ளார். அவை பாராட்டப்பட வேண்டியவை. ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை.

இவ்விதமான இருட்டடிப்புகளுக்கு முக்கிய காரணங்களிலொன்று. கலை, இலக்கிய விமர்சகர்கள் பாரபட்சமாகச் செயற்படுவது. இவர்கள் எழுதுவதன் அடிப்படையிலேயே ஏனையோரும் ஆய்வுகள் செய்வதால் இவர்களால் தவற விடப்படும் எழுத்தாளர்கள், சஞ்சிகைகள், படைப்புகள் பல தொடர்ந்தும் இவை பற்றி ஆய்வு செய்யும் ஏனையவர்களாலும்  தவறவிடப்படுகின்றன. ஆனால் இன்று இணையத்தின் வருகையும், எண்ணிம நூலகங்களின் உருவாக்கமும் இவ்விதம் தவற விடப்பட்டவர்களையெல்லாம் இனங்காண்பதற்கு மிகவும் உதவியாகவிருக்கின்றன. 'நூலகம்' என்னும் எண்ணிம நூலகத்தில் இவ்விதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதால்தானே என்னால் இவற்றைப்பற்றி அறிய முடிந்தது.

•Last Updated on ••Thursday•, 26 •March• 2020 10:16•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 361: அறிமுகம்: 'அமிர்த கங்கை'

•E-mail• •Print• •PDF•

சஞ்சிகை அமிர்த கங்கை; ஆசிரியர்: செம்பியன் செல்வன் -
'நூலகம்' தளத்தில் சஞ்சிகைகள் பகுதியை மேய்ந்துகொண்டிருக்கையில் கண்களில் பட்ட சஞ்சிகை 'அமிர்த கங்கை'. எழுத்தாளர் செம்பியன் செல்வனை கெளரவ ஆசிரியராகக்கொண்டு வெளியாகிய சஞ்சிகையின் 12 இதழ்கள் ( ஜனவரி 1986 தொடக்கம் ஜூன் 1987 வரையிலான காலகட்டத்துக்குரிய) சேகரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஏப்ரில் 1986, செப்டெம்பர் 1986, டிசம்பர் 1986, ஜனவரி 1987, பெப்ருவரி 1987 ஆகிய இதழ்களைக் காணவில்லை. ஜனவரி 1986 வெளியான இதழே முதலாவது இதழ்.

இதழில் சிறுகதைகள், தகவல்கள், குட்டிக்கதைகள், செம்பியன் செல்வனின் உருவகக்கதைகள், ஓவியர் ரமணியின் ஓவியங்களுடன் கூடிய 'ரமணி'என்னும் சிறுவர் பகுதி, கட்டுரைகள், செங்கை ஆழியானின் 'தீம்தரிகிட தித்தோம்' தொடர் நாவல், புதுமைப்பித்தனின் பேஸிஸ்ட் ஜடாமுனி (பாஸிச வரலாறு) என்னும் தலைப்பிலான முசோலினி பற்றிய தொடர், சத்ஜித்ரேயின் வங்காள நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பின் (லீலா றே மொழிபெயர்த்தது) தமிழ் மொழிபெயர்ப்பு 'பக்திக் சந்த்' தலைப்பில் வெளியான தொடர், கேலிச்சித்திரங்கள் இவற்றுடன் சஞ்சிகையின் இறுதிப்பகுதியில் சோதிடம் (இராசி பலன்) ஆகியவை காணப்பட்டன. சத்ஜித்ரேயின் தொடரைத் தமிழாக்கம் செய்தவர் எழுத்தாளர் சொக்கன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
•Last Updated on ••Saturday•, 03 •October• 2020 08:45•• •Read more...•
 

காலத்தை வென்ற சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரங்கள்

•E-mail• •Print• •PDF•

1. சுந்தரின் 'கொரோனா' கேலிச்சித்திரம் (ஒரு கற்பனை)

கொஞ்ச நேரம் கொரோனாவை மறந்து விட்டு சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரத்தில் சிரித்து சந்தோசமாகவிருப்போமென்று 'நூலகம்' தளத்திலுள்ள சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரங்கள் அடங்கிய தொகுப்பு நூலான 'சிரித்திரன் சித்திரக்கொத்து' நூலைப் புரட்டினேன். முதலில் கண்களில் பட்டது இந்தக் கேலிச்சித்திரம்.

தற்போது தேர்தல் காலம். கொரோனா வந்து எல்லாவற்றையும் தடுத்து விட்டதே என்று நினைத்தேன்.

இந்தக் கேலிச்சித்திரம் சிறு மாற்றத்துடன் இக்காலகட்டத்துக்கும் பொருந்துமேயென்று தோன்றியது.

படத்தில் நோயால் படுக்கையிலிருக்கிற முதியவரை நாடி தேர்தல் வேட்பாளர் வந்து நிற்கிறார். அவரைப்பார்த்து அந்த முதியவர் "தம்பி அழாதை. வோட்டுப்போடுற நாள் வர கால் சுகப்பட்டுப்போம். நான் ஓடி வந்து உனக்கு வோட்டுப் போடுறன்" என்கின்றார்.

முதியவர் கூறுவதை ""தம்பி அழாதை. வோட்டுப்போடுற நாள் வர கொரோனா சுகப்பட்டுப்போம். நான் ஓடி வந்து உனக்கு வோட்டுப் போடுறன்" என்று மாற்றினால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன் சிரிக்கப் போன இடத்திலும் சிந்தனையில் கொரோனாதான்

•Last Updated on ••Saturday•, 21 •March• 2020 16:24•• •Read more...•
 

இன்ஸான் சிறுகதைகள்

•E-mail• •Print• •PDF•

[எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் இன்ஸான் முஸ்லிம் வாரப்பத்திரிகையில் வெளியான சிறுகதைகளைப்பற்றிய ஆவணச்சிறப்புள்ள இப்பதிவினை எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அதனை நான் இங்கு பதிவு செய்கின்றேன். - வ.ந.கி -]


21.6.1967 தொடக்கம் 4.7.1969 வரை இலங்கையில் வெளிவந்த வாரப் பத்திரிகை ‘ இன்ஸான் ‘ .அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக , முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கில் இப்பத்திரிகை வெளியானது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ( ரஷ்ய சார்பு ) நிதியுதவியில் இப்பத்திரிகை வெளியிடப்பட்டதாயினும் தன்னையொரு கம்யூனிஸ்ட் பத்திரிகையாக அது இனங்காட்டிக்கொள்ளவில்லை. இதன் ஆசிரியர் அபூதாலிப் அப்துல் லதீஃப் . துணை ஆசிரியர் பண்ணாமத்துக்கவிராயர் பாரூக். எனினும் , அவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளிப்படுத்தப்படவில்லை. அப்பத்திரிகையில் எழுதியவர்களுக்கோ அதன் வாசகர்களுக்கோ தெரியாத இரகசியங்களாகவே இவை இருந்ததெனலாம். ‘ கௌரவ ஆசிரியர் : எஸ்.எச்.ஏ. வதூத் ‘ என நண்பர் ஒருவரின் பெயர் பின்னாள்களில் பொறிக்கப்பட்டது. இலங்கை முஸ்லிம்களின் பேச்சு வழக்குச் சொற்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பத்திரிகை முஸ்லிம்கள் மத்தியில் அன்று பிரபலம் பெற்றிருந்தது.

இன்ஸான் ஓர் அரசியல் பத்திரிகையாக இருந்தபோதிலும் ( மொழி பெயர்ப்பு உட்பட ) சிறுகதை , கவிதை , கட்டுரைகள் என கலை – இலக்கிய ஆக்கங்களுக்கும் முக்கியத்துவமளித்தது. பின்னாளில் புகழ் பெற்ற பல எழுத்தாளர்கள் , ' தாம் இன்ஸான் பண்ணையில் வளர்ந்தவர்கள் ' என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் அளவுக்கு அவர்களின் பயில்களமாக இன்ஸான் அமைந்தது.

•Last Updated on ••Wednesday•, 18 •March• 2020 16:59•• •Read more...•
 

அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'யூத -அரபு உறவு பற்றி பேட்ரண்ட் ரஸல்' என்னும் 'இன்ஸான்' பத்திரிகைக் கட்டுரை பற்றி..

•E-mail• •Print• •PDF•

அ.ந.கந்தசாமியின் 'யூத -அரபு உறவு பற்றி பேட்ரண்ட் ரஸல்' என்னும் 'இன்ஸான்' பத்திரிகைக் கட்டுரை பகுதி 1  அறிஞர் அ.ந.கந்தசாமி

அறிஞர்  அ.ந.கந்தசாமி அவர்கள் இன்ஸான் பத்திரிகையில் 'யூத -அரபு  பற்றி பேட்ரண்ட் ரஸல்'என்றொரு கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரையானது இன்ஸான் பத்திரிகையில் 21.7,1967 , 28.7.1967 ஆகிய திகதிகளில் 'யூத - அரபு உறவு பற்றி பேட்ரண்ட் ரஸல்' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது.  பேட்ரண்ட் ரஸலின் நூல்களிலிருந்து யூத அராபிய உறவு பற்றிய பேட்ரண்ட் ரஸலின் கருத்துகளை ஆராய்ந்து அ.ந.க எழுதிய கட்டுரை.

•Last Updated on ••Wednesday•, 18 •March• 2020 19:18•• •Read more...•
 

நடிகர் ரஜனிகாந்தின் உரை பற்றிய கருத்துகள் சில..

•E-mail• •Print• •PDF•

ரஜனிரஜனிகாந்தின் முதல்வர் பதவி தனக்கு வேண்டாம் என்ற பேச்சினைக் கேட்டேன். முதலில் கேட்கையில் அவர் கூறுவது நல்லது என்பதுபோல் தோன்றினாலும், சிறிது சிந்திக்கையில் அரசியலில் இறங்கும் துணிவு அவரிடமில்லை என்ற முடிவே ஏற்படுகின்றது. இளைஞர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறுகின்றார். இருக்கும் பலமான கட்சிகளை எதிர்த்துப் போராடுவது அவ்வளவு எளிமையானது அல்ல என்று அஞ்சுகின்றார். தேர்தலில் இறங்கினால் வெற்றி நிச்சயம் என்றால்தான் அவர் வருவார் என்று கூறுகின்றார். அண்ணா சிறந்த தலைவர் என்று கூறுகின்றார். அண்ணா பல தலைவர்களை உருவாக்கினார் என்று கூறுகின்றார்.

அறிஞர் அண்ணா அரசியலில் நுழைந்தபோது அவர் தன் இருபதுகளில் இருந்தார். அவர் பெரியாருடன் முரண்பட்டு பிரிந்து திமுகவை உருவாக்கியபோது அவரது வயது 41. சுமார் நாற்பது வருடங்கள் கழிந்த பின்னர்தான் அவர் ஆட்சியையே பிடிக்கின்றார். எம்ஜிஆர் அரசியலில் தன் வயது முப்பதுகளில் இருந்தபோது ஈடுபட்டார். தான் நம்பிய அரசியல் கருத்துகளைத் தன் திரைப்படங்களில் , உரைகளில் வெளிப்படுத்தினார். பின்னர் திமுக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அவர் திமுகவின் பலத்தை எண்ணி அஞ்சவில்லை. துணிந்து கட்சியைத் தொடங்கினார்.தன் இரசிகர்களை, தொண்டர்களை மட்டுமே நம்பினார். அவர் ஆட்சியைப்பிடித்தபோது அவருக்கு வயது அறுபது. ஜெயலலிதா அரசியலில் தீவிரமாக நுழைந்தபோது அவரது வயது முப்பதுகளில் இருந்தது. தொடர்ந்து வாழ்க்கையை நாட்டு அரசியலுக்கே அர்ப்பணித்தார். கலைஞர் தன் இளமைப்பருவத்தில் அரசியலில் ஈடுபட்டார். பல்லாண்டுகள் அரசியலில் தன்னைப்பிணைத்துக்கொண்டவர் அவர்.  தன் எழுத்தால், தன் பேச்சால் தான் நம்பிய கொள்கைகளுக்காகச் செயலாற்றினார்.

•Last Updated on ••Friday•, 13 •March• 2020 14:26•• •Read more...•
 

முனைவர் ஆர்.தாரணியின் கட்டுரையொன்று பற்றி...

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'முனைவர் ஆர்.தாரணிஎனது நாவலான தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான  'குடிவரவாளன்' நாவல் பற்றி பற்றி முனைவர் ஆர்.தாரணி ‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' ('சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை') என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே எனது படைப்புகள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளைக் கருத்தரங்குகளில் சமர்ப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் என் படைப்புகளை அறிந்துகொண்டது இணையத்தின் மூலமாகவே என்பது இணையத்தின் ஆக்கபூர்வமான நன்மையொன்றினை வெளிப்படுத்துகின்றது. அக் கட்டுரையின் முக்கியமான என்னால் தமிழாக்கம் செய்யப்பட்ட பகுதிகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். நாவலினை நன்கு உள் வாங்கித் தன் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி.

இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'An Immigrant' (லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) நாவலைத் தனது புகலிட இலக்கியங்கள் பற்றிய பிரிவுக்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வு செய்திருந்த விடயத்தினை இணையம் வாயிலாக அறிந்துள்ளேன். குடிவரவாளன் நாவல் ஆங்கிலத்தில் 'An Immigrant' என்னும் தலைப்பில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' ('சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை') - முனைவர் ஆர்.தாரணி ; தமிழில்: வ.ந.கிரிதரன்-

'குடிவரவாளன்' கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப்பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும் போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப்படுகொலையினைத்தாங்கிநிற்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற 1983 ஜூலைக் இனக்கலவரத்தில் தம் உயிர்களை, உடமைகளை, நாட்டை மற்றும் மானுட அடையாளத்தைக்கூட இழந்த மக்களுக்கான தனித்துவம் மிக்க அஞ்சலியாகவும் இந்நூல் இருக்கின்றது. நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் , கதாசிரியர் , கலவரத்தினுள் அகப்பட்ட இளங்கோ என்னும் இளைஞனின் நிலையினை உயிரோட்டத்துடன் விபரிக்கின்றார். தன் சொந்த மண்ணில் இனத்துவேசிகளால் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளங்கோ அந்தப்பூதங்களிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்குத்தப்புவதற்கு முயற்சி செய்கின்றான். இப்படைப்பானது கலவரத்தைப்பற்றிய , இளங்கோ என்னும் மனிதனின் பார்வையில் , நெஞ்சினை வருத்தும் வகையிலான ஆசிரியரின் விபரிப்பாகும்.

•Last Updated on ••Saturday•, 14 •March• 2020 13:07•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் (360) : எழுத்தின் எளிமையும் , ஆழமும் பற்றி...

•E-mail• •Print• •PDF•

எந்த விடயத்தைப் பற்றி எழுதுவதென்றாலும் முதலில் அந்த விடயத்தைப்பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். அது பற்றிப் பல்வேறு கோணங்களில் விளக்கமளிக்கும் நூல்களை, கட்டுரைகளை வாசியுங்கள். அது பற்றிய புரிதல் நன்கு ஏற்பட்டதும் அது பற்றி மிகவும் எளிமையாக அதே சமயம் மிகவும் ஆழம் நிறைந்ததாகவும் எழுதுங்கள். எளிமையாகவும், ஆழம் நிறைந்ததாகவும் எப்படியிருக்க முடியும் என்று ஆச்சரியப்படுகின்றீர்களா? தெரியாவிட்டால் மகாகவி பாரதியாரின் மகத்தான கவிதைகள் போன்ற பல படைப்புகளை இருக்கின்றனவே. 'நிற்பதுவே நடப்பதுவே ' கவிதையை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் அக்கவிதையில் பாவிக்கப்பட்டுள்ள சொற்கள் எவ்வளவு எளிமையானவை. ஆனால் அக்கவிதை கூறும் பொருள் அவ்வளவு எளிமையானதுதானா? இல்லையே . மிகவும் ஆழமானது. அதுபோல்தான் அவரது 'இன்று  புதிதாய்ப்பிறந்தோம்' போன்ற கவிதைகளும். கவிஞர் கண்ணதாசனின் பல சிறந்த திரைப்படப்பாடல்களும் எளிமையும், ஆழமும் நிறைந்தவைதாம். இவ்வகையில் எளிமையான ஆற்றொழுக்குப்போன்றதொரு நடையில் ஆழமான விடயங்களை எழுதுவதில் , கூறுவதில் வல்லவராக விளங்கியவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி. ஸ்டீபன் ஹார்கிங் வானியற்பியலில் சிறந்த அறிவியல் அறிஞராக விளங்கியவர். அவர் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் சார்பியற் தத்துவம், குவாண்டம் இயற்பியல் போன்ற விடயங்களைப்பற்றியெல்லாம் மிகவும் எளிமையான நடையில் 'காலத்தின் சுருக்கமான வரலாறு' என்னும் அற்புதமானதொரு அறிவியல் நூலினை எழுதியுள்ளார். எளிமையும், ஆழமும் நிறைந்த நூல் அது.

•Last Updated on ••Saturday•, 07 •March• 2020 18:14•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் (359): ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க பற்றிய கூற்றும், சில சிந்தனைகளும்

•E-mail• •Print• •PDF•

இலங்கையின் முன்னாள் பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க (இவர் உலகின் முதலாவது பெண் பிரதமர்) பற்றிய எழுத்தாளர் பொ. கருணாகரமூர்த்தியின் முகநூற் பதிவொன்று ஏற்படுத்திய நினைவலைகள் இவை:

எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் (Karunaharamoorthy Ponniah) ஶ்ரீமாவோ அம்மையார் பற்றிய முகநூற் பதிவு: "ஆனந்தசங்கரி அவர்கள் பதவியில்லாமல் இருந்தபோது 1983 இல் பெர்லினில் கூடியிருந்த நண்பர்களிடத்தில் சொன்னது: “ இந்தக்கூட்டணி, மாட்டணி ஒன்றுந்தேவையில்லை, அமிரை வீட்டில இருக்கவைச்சிட்டு.....நாலு எம்பிக்களை தமிழ்ப்பகுதியிலிருந்து அவளுக்கு (ஸ்ரீமாவோ) அனுப்பியிருந்தால் தமிழர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அவளிட்ட வாங்கியிருக்கலாம்…………. முட்டாள் தமிழர்களுக்கு மூளை ஒருநாளும் வேலை செய்யாதென்றன். வெங்காயம் விளைஞ்சநேரம் வெங்காயத்தையும், மிளகாய் விளைஞ்சநேரம் மிளகாயையும் அரசாங்கக்காசில இறக்குமதிசெய்து ஜே.ஆரைபோல தமிழர்களுக்கு வம்புபண்ற கெடுபுத்தி அவளுக்கில்லை, அவள் மனுஷி……. !” நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

என்னைப்பொறுத்தவரையில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க கொண்டு வந்த புதிய அரசியலமைப்புச் சட்டம், தரப்படுத்தல் ஆகியவை, தமிழ் இளைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது போன்றவற்றால் எழுந்த எதிர்ப்பு தமிழரசுக்கட்சியினரைக் கூட்டணி அமைத்து தமிழீழம் கேட்க வைத்தது. மாவை சேனாதிராஜா, வண்ணை ஆனந்தன் என்று 42 தமிழ் இளைஞர்கள் (தமிழ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த) கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். ஆனால் உண்மையில் ஶ்ரீமாவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட நன்மைகளாக நான் கருதுவது:

•Last Updated on ••Friday•, 06 •March• 2020 10:52•• •Read more...•
 

கணையாழி: 'விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை'

•E-mail• •Print• •PDF•

கணையாழியில் என் கட்டுரை: 'விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை'2020 மார்ச் மாதக் கணையாழி இதழில் எனது கட்டுரையான 'விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை' நாவல் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது . கூடவே நண்பர் கே.எஸ்.சுதாகரின் 'தலைமுறை தாண்டிய தரிசனங்கள்' சிறுகதையும் வெளியாகியுள்ளது. எனது கட்டுரையின் பக்கங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

இதுவரை கணையாழி சஞ்சிகையில், தொகுப்பு நூலில் வெளியான எனது ஏனைய படைப்புகள்:

1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை
மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)
2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).
3. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
4. 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்- (கணையாழி மே 2012)
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -
7. கணையாழி செப்டம்பர் 2017: கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயின் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -

•Last Updated on ••Wednesday•, 04 •March• 2020 09:55•• •Read more...•
 

கவிதை: வேற்றுலகவாசியுடனோர் உரையாடல் (1)

•E-mail• •Print• •PDF•

கவிதை: வேற்றுலக வாசியுடனோர் உரையாடல் (1)
ஊர்துஞ்சும் நள்ளிரவு.
விரிவெளி பார்த்திருந்தேன்.
இரவுவான்!
புட்களற்ற மாநகரின் நள்ளிரவு
நத்துகள் ஒலியேதுமில்லை.
ஆந்தைகளின் அலறல்கள் எங்கே?
வெளவால்கள்தம் சலசலப்புமில்லை.
வாகன இரைச்சல் மட்டும்
சிறிது தொலைவில்
சிறிய அளவில்.
உப்பரிகையின் மூலையில்
தூங்கும் மாடப்புறாக்களின்
அசைவுகள்
அவ்வப்போது கேட்கும் சூழல்.
விரிவெளியில் சுடரும் ஒளிச்சிதறல்கள்
பல்வகை எண்ணங்கள் நெஞ்சில்.
எங்கோ ஒரு கோடியில் இங்கு
நான்.
அங்கு
நீ!
எங்கே?
சாத்தியமுண்டா?

•Last Updated on ••Wednesday•, 26 •February• 2020 21:08•• •Read more...•
 

வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (6): "அறிந்தால் அறிவியடி அருவியே!"

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள்

கண்ணம்மா! அலைக்கூம்புக்குள்
விரிந்திருக்கின்றதடி நம்காலவெளி.
ஆம்!
கூம்புக்காலவெளியில் நாம்
கும்மாளமடிக்கின்றோமடி.
கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம்.
நாமறியாக் காலவெளி அது கண்ணம்மா!
கண்ணம்மா! நீ இவைபற்றி என்றாவது
கருத்தில் கொண்டதுண்டா? கூறடி!
இருப்புப்பற்றி இங்கு நினைப்பதிலுண்ட
இன்பம் வேறொன்றுண்டோ கண்ணம்மா.
காலவெளியடி கண்ணம்மா! நீ என்
காலவெளியடி கண்ணம்மா!

•Last Updated on ••Tuesday•, 25 •February• 2020 12:48•• •Read more...•
 

வெகுசன ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பும் அவற்றின் விருதுகளும் பற்றி...

•E-mail• •Print• •PDF•

ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'ஆனந்த விகடன் சஞ்சிகை தமிழ் இலக்கியச் சூழலில் வெளிவரும் முக்கியமான வெகுசன இதழ்களிலொன்று. தமிழ் இலக்கிய வரலாறு பற்றி எழுதுபவர்கள் விகடன் போன்ற வெகுசன இதழ்கள் ஆற்றிய பங்களிப்புகள் பற்றிக் குறிப்பிடுவதில்லை. முனைவர்கள் தொடக்கம் சிறு சஞ்சிகை ஆசிரியர்கள் வரைக்கும் இப்போக்கினைக் காணலாம். வெகுசன சஞ்சிகைகள், பத்திரிகைகள் வாசகர்களின் உணர்வுகளுக்குத்தீனி போட்டு, பணம் சம்பாதிப்பதையே பிரதானமாகக்கொண்டு செயற்படுபவை. அதனால் அவற்றில் வெளியாகும் படைப்புகள் அனைத்துமே ஒதுக்கித்தள்ளப்பட வேண்டும் என்பது அர்த்தமல்ல. தமிழ் வாசகர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்ததில் அவற்றின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில் குறை நிறைகளுடன் அவற்றின் பங்களிப்பு அணுகப்பட வேண்டியவை. அவற்றின் ஆரோக்கியமான பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட வேண்டியவை. ஆனால் அதனை நம் விமர்சகப்பெருந்தகைகளோ, சிறு சஞ்சிகை ஆசிரியர்களோ செய்வதில்லை. இவர்களது எழுத்துகளில் எங்குமே இச்சஞ்சிகைகளின் ஆக்கபூர்வமான பங்களிப்பு பற்றியோ, இச்சஞ்சிகைகளில் வெளியான முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள் பற்றியோ தகவல்களோ, கட்டுரைகளோ வெளிவருவதில்லை.

அதே சமயம் இவ்வகையான பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்தால் பலரைச் சென்றடையும் சூழல் உண்டு. இதனாலோ என்னவோ இவ்வகையான ஊடகங்கள் வழங்கும் விருதுகளுக்கு மட்டும் இவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். உதாரணத்துக்கு விகடன் விருதுகள் பற்றிக் குறிப்பிடலாம். விகடன் விருது கொடுத்தால் விகடனின் ஆக்கபூர்வமான இலக்கியப்பங்களிப்புகளையெல்லாம் சுட்டிக்காட்டாத எழுத்தாளர்கள், கவிஞர்கள், இதழாசிரியர்கள் எல்லாரும் , விகடன் விருது பெற்ற செய்திகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து முகநூலில், வலைப்பதிவுகளில் விளம்பரப்படுத்திக் களிப்படைகின்றார்கள். காரணம் விகடன் விருது அவர்களது பெயர்களை இலட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சென்று சேர்க்கின்றதல்லவா?

இவர்கள் செய்நன்றிக்கடனாக ஒன்று செய்யலாம். விகடன் போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வரும் இலக்கியத்தரம் மிக்க படைப்புகளை, சமூக, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களைப்பற்றியாவது அவ்வப்போது தம் எழுத்துகளில் வெளிப்படுத்தலாம். செய்வார்களா?

•Last Updated on ••Thursday•, 20 •February• 2020 01:40•• •Read more...•
 

வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (5): காலவெளிக் கைதிகள்!

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள்

காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா அவன்போல்
சிந்திக்க விரும்புகின்றேன்.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே என்றான் கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையென்றுரைத்தான்.
அவனறிவின் உச்சம் பற்றி கண்ணம்மா
பிரமித்துப்போகின்றேன்.
மனத்து அசை இன்னும் முடியவில்லை.

•Last Updated on ••Tuesday•, 18 •February• 2020 11:49•• •Read more...•
 

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள் 4 ; காலவெளிக்காட்டி வல்லுனன்!

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள்

காலவெளிச் சட்டங்களைக் கோத்து
உருவானதிந்த இருப்படி கண்ணம்மா!
இவ்விருப்புமொரு காலவெளிப் படம்
என்பதையுணர்வாயாயடி நீ!
என்னாசையொன்றுள்ளதென்பேன்.
என்னவென்று நீ அறியின் நகைக்கக்கூடும்.
ஒருபோதில் ,உணர்வுகள் கிளர்தெழுந்த
பருவத்தினொரு போதில்
உனைப்பார்த்த உணர்வுகளுளவே.
அவ்வுணர்வுகளைப் பிரதிபலிக்கும் காட்சிகளுளவே.
அப்போது கண்ணம்மா! அதிகாலைநேரம்.
ஆடியசைந்து நீ வந்தாய் பொழுதின் எழிலென.
நினைவுள்ளதா? இருக்கிறதெனக்கு.
மார்புற நூல்தாங்கி, முகம் தாழ்த்தி
நடந்து வந்தாய்; அது உன் பாணி.
நிலம்பார்த்து நடக்குமுனக்கு
நடப்பதற்கு,
நேரெதிர்க் காட்சிகள்
தெரிவதெப்படி என்று வியப்பதுண்டு அப்போது.
இருபுறம் பிரிகுழல் இடைவரை
இருந்தசைய ,
பொட்டிட்ட வதனத்தில் நகையேந்தி நீ'
நடந்துவருமெழிலில் பொழுது சிறக்கும்.
ஒருபோதில் வழக்கம்போல் அசைந்து சென்றாய்
அதிகாலைப்பொழுதொன்றில்.
அவ்விதம் சென்று சந்தி திரும்புகையில்
ஓரப்பார்வைக்கணை தொடுத்துச் சென்றாய்.
நினைவிருக்கிறதா? ஆனால் எனக்கு
இருக்கிறதடி.
அக்கணத்தைச் சிறைப்படுத்தி ஆழ்மனத்தினாழத்தே
பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.
அதற்கு எப்போதுமில்லையடி
விடுதலை. ஆயுள் தண்டனைதான்.
இருக்கும் வரை அதனாயுள் அங்குதான்.

•Last Updated on ••Tuesday•, 18 •February• 2020 11:48•• •Read more...•
 

'கோவிட்'டுடன் வாழ்வதில் அச்சம் ஏனோ?

•E-mail• •Print• •PDF•

'கோவிட்'டுடன் வாழ்வதில் அச்சம் ஏனோ?

கொரொனா வைரஸ் என்றொரு வைரஸ்
ஆட்டிப் படைக்குது அகிலத்தை இன்று.
இரும்புத் திரைக்குள் என்ன நடக்குது?
சொல்வ தெல்லாம் உண்மை தானா?
இதுவரை நாங்க கண்ட தில்லை
இந்த வைரசை என்ற போதும்
அச்சம் பெரிய வியாதி அன்றோ
அறிந்து துணிந்து எதிர்த்து நிற்போம்.

•Last Updated on ••Thursday•, 13 •February• 2020 12:17•• •Read more...•
 

யாழ் மாநகர முன்னாள் மேயர் இராசா விசுவநாதன் பற்றிய நினைவலைகள்...

•E-mail• •Print• •PDF•

அம்மாவும் விசுவநாதன் தம்பதியினரும்..இன்று 'வாட்ஸ் அப்'பில் என் கடைசித்தங்கை தேவகி ஒரு செய்தியினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அது முன்னாள் யாழ் நகர மேயர் இராசா விசுவநாதன் அவர்களின் மரணச்செய்தி. இவரது மரணத்தால் துயருறும் அனைவர்தம் துயரிலும் நானும் என் அம்மா சார்பில் கலந்துகொள்கின்றேன். அம்மா சார்பில் என்று கூறுவதற்குக் காரணமுண்டு. முன்னாள் மேயர் இராசா விசுவநாதனின் காலத்து மாநகரசபை நிர்வாகம் தனித்துவம் வாய்ந்ததாக நான் எண்ணவில்லை. உண்மையில் அக்காலகட்டத்தில் யாழ் மாநகரத்திலுள்ள பழமையின் சின்னங்களைப்பேணும் அவசியம் பற்றிய கட்டுரை ஒன்றினை ஈழநாடு (யாழ்ப்பாணம்) பத்திரிகையில் எழுதினேன். முழுப்பக்க அக்கட்டுரையை ஈழநாடு வாரமலர் முக்கியத்துவம் கொடுத்துப்பிரசுரித்திருந்தது. அதில் யாழ் பழைய சந்தையிலிருந்த கங்கா சத்திரத்தைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தியிருந்தேன். ஆனால் யாழ் மாநகரசபை அது பற்றிக் கவனத்திலெடுத்திருக்கவில்லை. அக்கட்டுரை வெளியாகிச் சிறிது காலத்திலேயே அக்கட்டடம் உடைத்தழிக்கப்பட்டது.

ஆனால் திரு.இராசா விசுவநாதன் அவர்கள்மீது அவரது அரசியலுக்கப்பால் எனக்கு மிகுந்த மரியாதையுண்டு. அவர் அக்காலகட்டத்தில் வெற்றிகரமான வழக்கறிஞராக விளங்கினார். என்பதற்காக அல்ல. பின். அம்மாவின் பால்ய காலத்திலிருந்து அவரது இறுதிவரை அவரது அன்புக்குரியவர்களாக விளங்கியவர்கள் விசுவநாதன் தம்பதியினர் என்பதற்காக. அம்மா யாழ் இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகப்பணி புரிந்த காலத்திலும் அவருக்குப் பிரியமாக இருந்த சிநேகிதிகளாக அவருக்குச் சிலர் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர் திருமதி விசுவநாதன். 'விசுவநாதன் டீச்சர்' என்றறியப்பட்ட இவரது பெயர் தவமணி.
•Last Updated on ••Wednesday•, 12 •February• 2020 09:44•• •Read more...•
 

நடிகர் கேர்க் டக்ளஸ் நினைவாக...

•E-mail• •Print• •PDF•

நடிகர் கேர்க் டக்ளஸ் நினைவாக...அண்மையில் தனது நூற்றி மூன்றாவது வயதில் மறைந்த நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) உலகச்சினிமாவில் முக்கியமானதோர் ஆளுமை. மூன்று தடவைகள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இவருக்குக் கிடைக்காத அவ்விருது இவரது மகன் மைக்கல் டக்ளசுக்குக் கிடைத்தது. ஆனால் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பின்னர் கிடைத்தது. இவர் இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகத்திறமை மிக்க நடிகர்களிலொருவர்.

இவரை நினைத்தாலே முதலில் நினைவுக்கு வருவது ஸ்டான்லி கூப்ரிக்கின் இயக்கத்தில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த ஸ்பார்ட்டகஸ் திரைப்படமே .  அதில் அவர் ரோமானிய அடிமைகளிலொருவராக நடித்திருப்பார். அடுத்து ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் லஸ்ட் ஃபோர் லைஃப் (Lust for Life - வாழ்வுக்கான காமம்) .ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் அவர் அதற்காக ஆஸ்காரின் சிறந்த நடிகர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ருஷ்யாவிலிருந்து , உலகம் போரில் மூழ்கியிருந்த காலகட்டத்தில் அமெரிக்காவுக்கு வந்த யூதக் குடிவரவாளர்கள் இவரது பெற்றோர். இரண்டாவது உலக யுத்தக் காலகட்டத்தில் அமெரிக்கக் கடற்படையிலிணைந்து பணியாற்றினார். பின்னர் நாடக மேடை நடிகராக நடித்துத் திரையுலகுக்குள் நுழைந்தார். சிறுவயதில் குடும்பப் பாரத்தைச் சுமப்பவதற்காகப்  பல்வேறு வேலைகளைச் செய்தார். பின்னர் வளர்ந்து திரைப்பட நடிகரானதும் , தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். இவரது புகழ்பெற்ற திரைப்படமான ஸ்பார்ட்டகஸ் திரைப்படத்தை அக்காலகட்டத்தில் யாரும் அறிந்திராத ஸ்டான்லி கூப்ரிக்கின் இயக்கத்தில் தயாரித்தது இவரது நிறுவனமான 'பிரியானா புரடக்ஸன்ஸ்' (Bryna Productions) நிறுவனமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

கென் கேசி (Ken Kesey) எழுதிய  நாவலான One Flew Over the Cuckoo's Nest (குயில் கூட்டுக்கு மேலால் பறந்த ஒன்று) ஜாக் நிக்கல்சனின் நடிப்பில் திரைப்படமாக வெளியாவதற்கு முன்னர் அதில் நடிகராக அதே வேடத்தில் நடித்தவர் இவர். அதற்கான உரிமையினைப்பெற்றவர், அதில் நடிக்காமல் அதைத் தன் மைக்கல் டக்ளஸிடம் கொடுத்துவிட அவர் ஜாக் நிக்கல்சனை வைத்துத்தயாரித்து வெளியிட்டார். ஆஸ்கார் விருதுகளை அள்ளிச்சென்ற திரைப்படம் அது. அதில் நடிக்காதற்காகப் பின்னர் கேர்க் டக்ளஸ் வருந்தியதாக எங்கோ வாசித்த ஞாபகம்.

•Last Updated on ••Monday•, 10 •February• 2020 00:50•• •Read more...•
 

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள் (3): காலவெளி மீறிய கவிஞனடி கண்ணம்மா!

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள்

கண்ணம்மா!
நேற்று -இன்று - நாளை என்று
காலத்தின் ஒரு திசை பயணத்தில்
மீளுதல் சாத்தியமற்றதா? ஆயின்
'அறிவுணர்'வுக்கு அது இல்லை. ஆம்!
அது இல்லை. எது?
ஆம்! அதுதான். அதுதான்.ஆம்!
அது இல்லை.
தயக்கமெதுவற்று அதனால் தங்குதடையின்றிப்
பயணிக்க முடியும்.
நேற்று - இன்று - நாளை
காலத்தின் அர்த்தமற்றதொரு நிலை
'அறிவுணர்'வுக்குண்டு.
குவாண்டம் நுரையில் கிடக்கும் இருப்பில்
நேரத்துக்கும் அர்த்தமுண்டோ?
அங்கு அனைத்துமே சம காலத்தில்
இருப்பன. அறிவாயா கண்ணம்மா!
காலமே காலமாகி விட்ட நிலைதான்
குவாண்டம் நிலை. ஆம் ! அந்த நிலை.
என் 'அறிவுணர்'வு கொண்டு
என்னால் எங்கும் பயணிக்க முடியும் கண்ணம்மா!
உனக்கது புரியுமா?

•Last Updated on ••Saturday•, 08 •February• 2020 10:58•• •Read more...•
 

அறிஞர் அண்ணா நினைவாக (அறிஞர் அண்ணாவின் நினைவு தினம் பெப்ருவரி 3).....

•E-mail• •Print• •PDF•

அறிஞர் அண்ணாஇதுவரை உலகில் நடைபெற்ற மரண ஊர்வலங்களில் மிகப்பெரியது கின்னஸ் உலக சாதனைக்குறிப்பின்படி அறிஞர் அண்ணாவின் மரண ஊர்வலம்தான். சுமார் 15 மில்லியன் மக்கள் (ஒன்றரைக்கோடி மக்கள்) கலந்துகொண்ட மரண ஊர்வலம் அது. (ஆதாரம்: https://www.bbc.com/news/blogs-magazine-monitor-25310508)

. உலகத்தமிழர்கள் மத்தியில் அறிஞர் அண்ணாவுக்கு மிகுந்த மதிப்பு உண்டு. தமிழக அரசியலிலும் சரி, கலை, இலக்கிய வரலாற்றிலும் சரி திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு மறுக்க முடியாத இடமுண்டு. சமூதாயச்சீர்திருத்தக் கருத்துகளை, மதரீதியிலான சுரண்டல்களை, தமிழர்களின் தாழ்ந்து போன நிலைக்குக் காரணங்கள் எவை என்பது பற்றிய கருத்துகளை எனத் தமிழ் மக்களை விழிப்படைய வைத்ததில் திமுகவினருக்குச் சிறப்பானதோரிடமுண்டு. அவர்களது பகுத்தறிவுக் கருத்துகளை, மதச்சார்பற்ற கருத்துகளை திரைப்படங்கள், எழுத்துகள் மூலம், உரைகள் மூலம் கொண்டு சேர்த்தவர்கள் அவர்கள். குறிப்பாக மதம் எவ்வளவுதூரம் மக்களை வர்ணரீதியாகப்பிரித்து வைத்திருக்கின்றது என்பதைப்புள்ளி விபரங்களுடன் , தர்க்கரீதியாக, சுவையான அடுக்குமொழித்தமிழில் எடுத்துக்காட்டியவை அறிஞர் அண்ணாவின் எழுத்துகள். உண்மையில் நாடகம், சினிமா போன்றவற்றில் நாற்பதுகளின் இறுதிக்காலத்திலிருந்து அறுபதுகளில் திமுக ஆட்சியினைப் பிடிக்கும் வரையிலான காலகட்டத்தில் தமிழகக்கலை, இலக்கியம் மற்றும் அரசியலில் திமுக வகித்த ஆரோக்கியமான பங்கு முக்கியமானது.

சினிமாவைப்பொறுத்தவரையில் பாடல்கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தை வசனத்துக்கு மாற்றியவர்கள் திமுகவினர் என்று கூறலாம். திரைப்படங்களில் சமுதாயச்சீர்திருத்தக் கருத்துகளை மையமாக வைத்துக் கதைகளைப் பின்னினார்கள். அறிஞர் அண்ணாவின் கதை, வசனத்தில் திரைப்படங்களாக அவரது நாடகங்கள், நாவல்கள் வெளிவந்தன. உதாரணத்துக்கு 'ஓர் இரவு ' நாடகம் திரைப்படமாகியதையும், 'ரங்கோன் ராதா' நாவல் திரைப்படமாகியதையும் குறிப்பிடலாம். 'நல்லதம்பி', 'வேலைக்காரி', 'ஓர் இரவு' 'ரங்கோன் ராதா' போன்ற அறிஞர் அண்ணாவின் திரைப்படங்கள் அவரது திரையுலகப்பங்களிப்பைப்பொறுத்தவரையில் முக்கியமானவை.
•Last Updated on ••Tuesday•, 04 •February• 2020 11:43•• •Read more...•
 

வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (2): மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள்

உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?
நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம்
உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று.உண்மையாக
நீ இருக்கின்றாயென்று.
என்னை விட்டுத் தனியாக எப்பொழுதுமே
இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.

ஆயிரம் மில்லியன் ஒளிவருடங்களிற்கு
அப்பாலிருந்து இருந்து வரும்ஒளிக்கதிர்களுக்கும்
உன்னிலிருந்து வரும் ஒளிக்கதிர்களுக்கும்
இடையிலென்ன வித்தியாசம் ?நேரத்தினைத் தவிர.

•Last Updated on ••Saturday•, 08 •February• 2020 11:00•• •Read more...•
 

வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (1):காலவெளிச்சித்தனின் மடலொன்று!

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள்

ஒளிக்கூம்புக்குள் விரிந்து , சுருங்கி,
மீண்டும் விரிந்து
கிடக்குமென் அண்டம்.
அடியே! அண்டத்தில் நீ இங்கெங்கு சென்றிடினும்
உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து
மறைந்துவிடவே முடியாதடி.
ஏனென்று கேட்கின்றாயா?
நீயே அறிந்துகொள்
நீயே புரிந்துகொள்
என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை.
உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை
வைக்கப்போவதில்லை.
நானே  கூறுகின்றேன் விளக்கம் கண்ணம்மா!
உன்னால் புரிந்துகொண்டிட முடிந்தால்
புரிந்துகொள்.
ஏனென்றால் இப்பிரபஞ்சத்துடனான என் உறவு
ஏன் உன் உறவும் கூடத்தான்
ஒருபோதுமே பிரிக்கப்பட முடியாதடீ.
இருந்தாலும் கவலையை விடு.
இன்னும் சிறிது விளக்குவேன்.
நீ, நான் , இங்குள்ள அனைத்துமே
துகள்களின் நாட்டியம்தாம்.
சக்தியின் வடிவம்தான்.
புரிந்ததா சகியே!

•Last Updated on ••Saturday•, 08 •February• 2020 11:00•• •Read more...•
 

'டொரோண்டோ' நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு ஏற்படவுள்ள முடிவு?

•E-mail• •Print• •PDF•

'டொரோண்டோ' நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு ஏற்படவுள்ள முடிவு?இன்று பிற்பகல் 'ஃபிளெமிங்டன் பார்க்'கில் அமைந்திருக்கும் 'டொராண்டோ பொதுசன நூலக'க்கிளைக்குச் சிறிது நேரம் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. அவ்வப்போது இந்நூலகக்கிளையில்  தமிழ் நூல்களை இரவல் பெறச்செல்வதுண்டு. ஏதாவது புதிய தமிழ்ப்புத்தகங்கள் வந்திருக்கின்றனவா என்று பார்ப்பதற்காகச் சென்ற எனக்கு அதிர்ச்சியினையூட்டும் நிலையே ஏற்பட்டது. அங்கு தமிழ்ப்புத்தகங்கள் எவற்றையுமே காணவில்லை. அங்கு கடமையிலிருந்த இளம் பணியாளரிடம் சென்று தமிழ்ப்புத்தகங்கள் எங்கே? என்ன நடந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதிலே என் அதிர்ச்சிக்குக் காரணம். அவர் 'இன்னும் ஓரிரு மாதங்களில் 'டொரோண்டோ'விலுள்ள நூலகக் கிளைகளிலிருந்து அனைத்துத் தமிழ் நூல்களும் எடுக்கப்பட்டு விடும்' என்று கூறியதை என்னால் ஒரு கணம் நம்பவே முடியவில்லை. 'என்ன! எல்லா நூலகக் கிளைகளிலிருந்துமா?' என்று வியப்புடன் கேட்டேன்.

என் கேள்வியில் தொனித்த வியப்பினையும், கவலையினையும் அவதானித்த அவர் 'துரதிருட்டவசமாக அதுதான் நிலை. ஃபிரெஞ்ச் & சீனமொழி நூல்களைவிட ஏனைய மொழி நூல்கள் அனைத்தையும் எடுத்துவிடப்போகின்றார்கள். இது பற்றி எங்களுக்கு அறிவித்தல் வந்திருந்தது. இன்னும் ஓரிரண்டு மாதங்களில் முழுமையாக எடுத்து விடுவார்கள்' என்று துயர் கலந்த தொனியில் பதிலிறுத்தார். பதிலுக்கு நான் அப்படியென்றால் அவ்விதம் நீக்கப்படும் தமிழ்நூல்களை வாங்க முடியுமா?' என்றன். அதற்கவர் அதே துயர் கலந்த தொனியில் 'அநேகமாக 'ரீசைக்கிள்' செய்வார்கள் 'என்றார்.

உண்மையிலேயே அதிர்ச்சியினைத்தந்த செய்திதான். எம் தலைமுறையுடன் அதிகமாக நூலகங்களில் தமிழ் நூல்களை இரவல் பெற்று யாருமே படிக்கப்போவதில்லை என்னும் எண்ணமே ஒருவிதத் துயரினைத் தந்தது.

உடனடியாக எழுத்தாளர் சின்னையா சிவனேசனின் (எழுத்தாளர் துறைவன்) நினைவு வரவே அவருக்கு இது பற்றிய செய்தியொன்றினை அனுப்பி விசாரிக்கலாம் என்றெண்ணினேன். அவரிடம் இதுபற்றி விசாரித்துத் தகவலொன்றினை அனுப்பினேன். அதற்கு அவர் இச்செய்தி தனக்குப் புதியதென்றும், அப்படி நடப்பது நம்மவர் நூலகக்கிளைகளைப் பாவிப்பதைப்பொறுத்தது. தமிழ் நூல்களுக்குத் தேவையில்லாவிடில் நூலகம் தமிழ்ப்புத்தகங்களை வாங்குவதற்கு 'ஓர்டர்' தராது. இது தமிழ் மக்களைப்பொறுத்தது என்று உடனடியாகவே பதிலை அனுப்பியிருந்தார். நூலகத்துக்குத் தமிழ் நூல்களைத் தெரிவு செய்யும் ஒருவராக அவர் விளங்கியவர் என்பதை அறிந்திருக்கின்றேன். இப்போதும் அப்பணியில் அவரிருக்கின்றாரா? என்று தெரியவில்லை.

•Last Updated on ••Sunday•, 02 •February• 2020 09:58•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 358: பூந்துணர் 2010 பற்றிச் சில கருத்துகள்...

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 358: பூந்துணர் 2010 பற்றிச் சில கருத்துகள்...

அண்மையில் இலண்டனிலிருந்து பேராசிரியர் கோபன் மகாதேவா அனுப்பிய 'பூந்துணர் '(Perceptions in Bloom) தொகுப்பு நூல் கிடைத்தது. எழுத்தாளர் சின்னையா சிவனேசன் மூலம் அனுப்பியிருந்தார். இருவருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 'பிரித்தானிய 'ஈழவர் இலக்கியச் சங்க எழுத்தாளர்கள்' அமைப்பு மாதாமாதம் நடத்திய இலக்கிய நிகழ்வுகளில் வாசிக்கப்பட்ட 61 படைப்புகளின் தொகுப்பு நூலே இத்தொகுப்பு நூல். இவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் கோபன் மகாதேவா, இணைப்பாளராக விளங்கிய அமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் பெருமுயற்சியினால் இத்தொகுப்பு நூல் வெளியாகியுள்ளது. இத்தொகுப்பில் ஆங்கில மற்றும் தமிழ்ப்படைப்புகளுள்ளன. தமிழ்த்தொகுப்புகளைப் பொறுத்தவரையில் பேராசிரியர் கோபன் மகாதேவா, திருமதி அமரர் சீதாதேவி கோபன்மகாதேவா , இணைப்பாளராக விளங்கிய அமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் மற்றும் திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம் ஆகியோரின் படைப்புகளை அதிகமாகக் காணமுடிகின்றது. இந்நூலின் முன்னுரையில் முதற்தொகுப்பு 2007 மார்கழியில் வெளிவந்ததாகவும், இது 2011ற்கான தொகுப்பு என்றும், 2008, 2009 & 2010 ஆண்டுகளில் தொகுப்பு நூல் வெளியாகவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 'பூந்துணர் 2010' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் நூலின் உள்ளே முதற் பதிப்பு 2011 என்றும் , காப்புரிமை 2010 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொகுப்பு வெளியான ஆண்டு பற்றிய குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.

நூலின் கட்டுரைகளின் கூறுபொருளைப்பற்றிப்பார்க்கையில் அவை பன்முகத்தன்மை வாய்ந்தவை. இலக்கியம், அரசியல், சமூகம், அறிவியல் , புகலிடம் அனுபவம், இயற்கை ,நூல் விமர்சனம் என்று அவை பல்வகையின. இவை பற்றிய படைப்புகளுடன், அத்துறைகளில் சிறந்து விளங்கிய ஆளுமையாளர்களைப்பற்றிய கட்டுரைகள் பலவற்றையும் காணமுடிகின்றது. தொகுப்பின் முதற்கட்டுரையினை அமரர் திருமதி சீதாதேவி கோபன்மகாதேவா எழுதியுள்ளார். தலைப்பு 'காந்தியும் விடுதலை வேட்டைகளும்; என்றுள்ளது. 'காந்தியும் விடுதலை வேட்கைகளும்' என்றிருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். மகாத்மாவைப்பற்றிய நல்லதொரு கட்டுரை. கட்டுரை சுருக்கமாக (ஆனால் சுவையான நடையில்) காந்தியைப்பற்றி 'உயிரினமும் சுதந்திரமும், 'காந்தியின் வாழ்க்கையும் முயற்சிகளும் சாதனைகளும் என்னும் உபதலைப்புகளில் ஆராய்கிறது. சுருக்கமான ஆனால் தெளிவான கட்டுரை. மகாத்மாவின் வாழ்வு பற்றிய நல்லதோர் ஆவணக்கட்டுரை. அதனைத்தொடர்ந்து பேராசிரியர் கலாநிதி கோபன் மகாதேவா 'மகாத்மா காந்தியின் வாழ்க்கை ஆராய்ச்சிக்காக உகந்த சில கருவூலகங்கள்' என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். இதுவொரு வித்தியாசமான கட்டுரை. காந்தியைப்பற்றிய ஆராய்ச்சி செய்யும் எவரும் எடுக்க வேண்டிய பல்வகைத் தலைப்புகளைப் பட்டியலிடும் கட்டுரை. இவர் குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி, அதனைப் பல தொகுப்பு நூல்களாக்கலாம், அவ்விதம் செய்யின் அவை மகாத்மா காந்தி பற்றிய விரிவான அவரது குறை , நிறைகளை வெளிப்படுத்தும் தொகுப்புகளாக அமையும். இவ்விதம் செய்வதாயின் அதற்கு எவ்வளவு செலவாகும் என்பது பற்றியும் தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார் கட்டுரையாசிரியர் இக்கட்டுரையில். நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களும் 'பார் போற்றும் சாதனையாளர் மகாத்மா காந்தி' என்று நல்லதொரு கட்டுரையினை எழுதியுள்ளார். மகாத்மா காந்தியின் வாழ்க்கை பற்றி, அவரது சமூக, அரசியல் மற்றும் பொருளியற் கோட்பாடுகள் பற்றி அறிய விரும்பும் எவருக்குமுரிய நல்லதொரு அறிமுகக் கட்டுரை.
•Last Updated on ••Saturday•, 25 •January• 2020 00:04•• •Read more...•
 

யாழ்ப்பாணத்தில் 'எங்கட புத்தகம் - கண்காட்சியும், விற்பனையும்'

•E-mail• •Print• •PDF•

எங்கட புத்தகம் கண்காட்சியும் விற்பனையும்

எழுத்தாளர் எஸ்.குணேஸ்வரன் ஜனவரி 24,25 & 26 தினங்களில் யாழ் முற்றவெளியில் நடைபெறவுள்ள 'எங்கட புத்தகம் - கண்காட்சியும், விற்பனையும்' நிகழ்வு பற்றிய தகவலை அனுப்பியிருந்தார். அதனை நானிங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். முக்கியமான நிகழ்வு. வரவேற்கப்பட வேண்டிய நிகழ்வு. புத்தகப்பிரியர்கள் அனைவரும் திரண்டு சென்று வாங்கி ஆதரியுங்கள்.

எனக்கு ஒரு மிகப்பெரிய ஆசையுள்ளது. அது: தமிழ் எழுத்தாளர்கள் தம் எழுத்துகள் மூலம் வாழும் நிலை தோன்றவேண்டும். உலகமெங்கும் கோடிக்கணக்கில் தமிழர்கள் வாழும் நிலையில் இன்னும் இது சாத்தியமாகவில்லையே என்னும் கவலை எனக்கு எப்போதுமுண்டு. அந்நிலை மாறவேண்டும். இலங்கைத்தமிழர்கள் அவர்கள் இலங்கையில் இருந்தாலும், புலம் பெயர்ந்து ஏனைய நாடுகளில் வாழ்ந்தாலும் பல விடயங்களில் முன்மாதிரியாக விளங்குகின்றார்கள். சின்னஞ்சிறு தீவில் வாழும் தமிழர்களால் எவ்விதம் இவ்விதம் பல சாதனைகளைச் சாதிக்க முடிகின்றது என்று சில வேளைகளில் நான் நினைப்பதுண்டு. இவ்விடயத்திலும் இலங்கைத்தமிழர்கள் அதனைச் சாதிக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு உங்களைப்பற்றிய நம்பிக்கையான , ஆரோக்கியமான சிந்தனை அவசியம். நாம் எம்மவர்கள்தம் கலை, இலக்கியப்படைப்புகள் எவையாவினும் அவற்றை ஆதரிப்போம். அவை வளர்ச்சியுற முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று உறுதி எடுங்கள். இது போன்ற புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகையில் செல்லுங்கள். இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை உள்ளடக்கிய புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்லுங்கள். அதிக அளவில் வாங்குங்கள். வாசியுங்கள். எனக்கு நிச்சயம் நம்பிக்கையுண்டு. இலங்கைத்தமிழர்கள் நிச்சயமாக தமிழ் எழுத்தாளர்கள் தம் எழுத்துகள் மூலம் வாழும் நிலையினை உருவாக்குவார்கள். அதனை உலகத்தமிழர்கள் பெருமையுடன் பார்க்கத்தான் போகின்றார்கள்.

•Last Updated on ••Saturday•, 18 •January• 2020 12:49•• •Read more...•
 

நூலகம் நிறுவனம் பதினாறாவது ஆண்டில்..

•E-mail• •Print• •PDF•

நூலகம் நிறுவனம் பதினாறாவது ஆண்டில்..நூலகம் நிறுவனம் இப்பொங்கல் திருநாளன்று பதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்து பதினாறாவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கின்றது. மனம் நிறைந்த வாழ்த்துகள். தற்காலச்சூழலில், இலங்கைத்தமிழர்கள் அழிவுகள் பலவற்றைச் சந்தித்து மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ள சூழலில் நூலகம் நிறுவனம் ஆற்றிவரும் சேவை மகத்தானது. நூலகம் நிறுவனம் பற்றிய சுருக்கமான ஆணால் தெளிவான அறிமுகத்தை நூலக நிறுவன இணையத்தளத்திலுள்ள அதன் அறிமுகக் குறிப்பிலிருந்து அறிந்துகொள்ளலாம். அவ்வறிமுகக் குறிப்பில் அது தன்னைப் பற்றிப்பின்வருமாறு கூறுகின்றது:

"நூலக நிறுவனமானது இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகள், மரபுரிமைகளை ஆவணப்படுத்திப் பாதுகாத்து இலவசமாகத் திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்யும் முக்கிய பணியை செயற்படும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்."

ஆரம்பத்தில் நூலக நிறுவனமானது எண்ணிம நூலகச் செயற்பாட்டையே பிரதானமாகக் கொண்டிருந்தாலும் , இன்று அதன் சேவைகள் சேகர அபிவிருத்தி , பள்ளிக்கூடம்), உசாத்துணை வளங்கள் , எண்ணிம ஆவணகம், சுவடி ஆவணகம் , பல்லூடக ஆவணகம், நூலக நிறுவன நிகழ்ச்சிகள் & ஆய்வு அடிப்படையிலான செயற்பாடுகள் என்று பரந்த அளவில் விரிவடைந்துள்ளது அதன் பிரமிக்கத்தக்க வளர்ச்சியினை எடுத்துக்காட்டுகின்றது.

நூலகம் நிறுவனத்தின் பிரதான பகுதியான எண்ணிம நூலகம் நான் அடிக்கடி பாவிக்கும் நூலகம். ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் , வாசகர்கள் எனப்பல்வகைப்பட்ட்ட மானுடர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும் எகையில் வளர்ந்துள்ளது. பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த அரிய பல நூல்கள் சஞ்சிகைகள, பத்திரிகைகள், பிரசுரங்கள், நினைவு மலர்கள், சிறப்பு மலர்கள் எனப் பல்வகை நூல்களையும் இங்கு ஆவணப்படுத்தியுள்ளார்கள். தனிப்பட்டரீதியில் நான் நூலக நிறுவன இணையத்தளத்தின் எண்ணிம நூலகத்திலிருந்து மிகுந்த பயனை அடைந்திருக்கின்றேன். பல அரிய நூல்களை, சஞ்சிகைகளை & பத்திரிகைகளை அங்கு வாசித்திருக்கின்றேன், இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளிகள் பலரின் ஆக்கங்கள் பலவற்றை இந்நூலகம் வாயிலாகப் பெற்றுப்பயனடைந்திருக்கின்றேன். கட்டுரைகளில் சான்றாதாரங்களாகப் பாவித்துள்ளேன்.

•Last Updated on ••Wednesday•, 15 •January• 2020 11:13•• •Read more...•
 

அழியாத கோலங்கள்: ஜிம் பிறவுனின் 'எல் கொண்டர்' & ஜூலியனோ ஜெம்மா (Giuliano Gemma)

•E-mail• •Print• •PDF•

அழியாத கோலங்கள்: ஜிம் பிறவுனின் 'எல் கொண்டர்'

ஜிம் பிறவுனின் 'எல் கொண்டர்'பொதுவாக வெஸ்டேர்ன் திரைப்படங்களில் கறுப்பின நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பது குறைவு. ஆனால் அவ்விதமாக நடித்த நடிகர் ஒருவரின் திரைப்படத்தையும் என் பதின்ம வயதுகளில் (நான் பார்த்துக் குவித்த ஆங்கிலத் திரைப்படங்களில்) பார்த்திருக்கின்றேன்.

இவரது ஓரிரு திரைப்படங்களே அக்காலகட்டத்தில் வெளிவந்ததாக நினைவு. இவரது படங்களைப்பார்ப்பதற்கு இளைஞர்கள் முண்டியடிப்பார்கள். அந்த நடிகர்தான் ஜிம் பிறவுண். அந்தத்திரைப்படம் 'எல் கொன்டொர்' (El Condor).

பாதுகாப்பான மண் கோட்டையொன்றில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தைக் கொள்ளையடிப்பதற்காக இவரும், எனக்கு மிகவும் பிடித்த இன்னுமொரு நடிகரான லீ வான் கிளீவ் (Lee Van Cleef) இணைந்து அமெரிக்க இந்தியர்களின் குழுவொன்றும் செல்வார்கள். கண்களைச் சுருக்கி, இதழ்க்கோடியில் இலேசாகச் சிரிப்பைத் தவழவிடும் லீ வான் கிளீவ்வின் நடிப்பு எப்பொழுதும் என்னை மிகவும் கவர்ந்ததொன்று. The Good The Bad and The Ugly திரைப்படத்தில் கெட்டவனாக (The Bad) நடித்திருப்பவர் இவரே. இவரது பல திரைப்படங்கள் அக்காலகட்டத்தில் யாழ்நகரில் திரையிடப்பட்டன. 'சபாட்டா (Sabata)' தொடர் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. 'அடியோஸ் சபாட்டா', 'ரிடேர்ன் ஆஃப் சபாட்டா' ஆகியவை நினைவில் நிழலாடுகின்றன.

அக்கோட்டையினைப் பாதுகாக்கும் அதிகாரியாக 'பற்ரிக் ஒ''நீல்' (Patrick O'Neal) நடித்திருப்பார். அவரது மனைவியாகப் தொலைக்காட்சி நடிகையாகவிருந்து திரைப்பட நடிகையாகப் புகழ்பெற்ற மரியானா ஹில் (Marianna Hill) நடித்திருப்பார். இவரது தந்தையான ஃப்ராங் ஸ்வார்ஸ்கோஃப் (Frank Schwarzkopf) ஒரு கட்டடக்கலைஞர். போர்த்துக்கீசர். ஜோர்ஜ் புஷ் சீனியர் காலத்தில் ஈராக்குடன் நடந்த வளைகுடா யுத்தத்தில் அமெரிக்கா இராணுவத்தளபதியாக யுத்தத்தை வழி நடத்திய நோர்மன் ஸ்வார்ஸ்கோஃப்பின் மைத்துனர். இவர் தனது தாயாரின் குடும்பப்பெயரான ஹில் என்பதைத்தன் குடும்பப்பெயராக வரித்துக் கொண்டவர்.

•Last Updated on ••Sunday•, 12 •January• 2020 02:28•• •Read more...•
 

குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் இலக்கியக் குழுக்கள்!

•E-mail• •Print• •PDF•

குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் இலக்கியக் குழுக்கள்!குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் இலக்கியக் குழுக்கள்!காலத்துக்காலம் நாடுகளில் இலக்கியக் குழுக்கள் இயங்கும். இவற்றின் பின்னால் இவற்றின் சீடர்கள் இணைந்து இவர்களின் அங்கீகாரத்துக்காக அலைவார்கள். ஆதரவாகச் செயற்படுவார்கள். பதிலுக்கு இவர்கள் சீடப்பிள்ளைகளின் படைப்புகள் அவை எத்தகையவையாகவிருந்தபோதும் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். ஒருவருக்கொருவர் அங்கீகாரம். இதுதான் இதன் பிரதான நோக்கம். இக்குழுக்கள் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் & சஞ்சிகைகளைக் கைகளில் போட்டுக்கொள்வார்கள். அவையும் இக்குழுக்களின் பிதாமகர்களைத் தூக்கிப்பிடித்துக்கொள்வார்கள். இவை போன்ற இலக்கியக் குழுக்களின் ஆதிக்கம் முன்பு பலமாக இருந்தது. ஆனால் இன்று இணையத்தின் வருகை, முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் வருகை அவ்வகையான ஆதிக்கத்தை ஆட்டங்காண வைத்து விட்டது. இணையத்தின் மூலம் உலகத்தின் பல்வேறு பாகங்களிலுமுள்ள வாசகர்களை இலகுவாக எழுத்தாளர்கள் அணுக முடிகின்றது.

கனடாவைப்பொறுத்தவரையில் தற்போதுள்ள குழுக்களில் முக்கியமானது மூன்று குழுக்களின் கூட்டிணைப்பு. 'அன்னை -இல்லம்' பத்திரிகை, 'நேரம்'சஞ்சிகை மற்றும் 'தமிழ்-விருது' ஆகிய குழுக்கள் இணைந்து கூட்டுக் குழுவாக இயங்குகின்றன. இக்குழுக்களில் இணைந்து முனைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் சிலர் தீவிரமாக இயங்குகின்றார்கள். இவர்கள் தம் குழுக்களைச் சாராதவர்களின் படைப்புகளை வாசிப்பதில்லை. அவை பற்றிக் கதைப்பதோ , எழுதுவதோ இல்லை.

•Last Updated on ••Sunday•, 12 •January• 2020 23:47•• •Read more...•
 

கதை பிறந்த கதை: வீடற்றவன் சிறுகதை பிறந்த கதை!

•E-mail• •Print• •PDF•

Kevin   Clarkeஇச்சிறுகதை உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவான சிறுகதை. ஒரு முறை வீடற்ற வீதி மனிதர் ஒருவரை 'டொராண்டோ' நகரின் வீதியொன்றில் சந்தித்தேன். அவருடனான எனது அனுபவத்தை மையமாக வைத்து உருவான கதையிது. கதையில் அம்மனிதரின் உண்மைப்பெயரை , உரையாடலின்போது அவர் கூறிய பெயரை, பாவித்துள்ளேன். பின்னரே அறிந்துகொண்டேன் அவ்வீதி மனிதர் உரையாடலின்போது கூறிய தகவல்கள் பொய்யல்ல என்பதை. அம்மனிதரின் முழுப்பெயர்ட் கெவின் கிளார்க் (Kevin Clarke). இவரைப்பற்றிய விக்கிபீடியாத் தகவல்களைப் பின்வரும் இணைப்பில் காணலாம்: https://en.wikipedia.org/wiki/Kevin_Clarke_(politician)

இவருடன் உரையாடியபோது இவர் தான் 'டொரோண்டோ நகரின் முதல்வர் பதவிக்குப் போட்டியிடப்போவதாகக் கூறியபோது நான் அதனை உளவளர்ச்சி பாதிப்புற்ற வீதி மனிதர் ஒருவரின் கூற்றாகவே எண்ணியிருந்தேன். இருந்தாலும் நடந்த சம்பவத்தை மறக்காமல் பதிவு செய்ய வேண்டுமென எண்ணி அதனை ஒரு சிறுகதையாக எழுதினேன். அவ்விதம் எழுதுகையில் அம்மனிதர் தெரிவித்த பெயரினையே பாவித்தேன். இச்சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பின்னர் பத்திரிகைச் செய்தியொன்றில் பே வீதியும் , அடிலெய்ட் வீதியும் சந்திக்கும் சந்திக்கண்மையில் வீடற்ற மனிதர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டை பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் ஒருவர் மீது வழக்குப் பதிவான விடயத்துடன் அம்மனிதரே 'டொராண்டோ மாநகர முதல்வர் பதவிக்குப் போட்டியிட்ட கெவின் கிளார்க் என்னும் விபரமும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்பொழுதே அறிந்து கொண்டேன் அம்மனிதரும் நான் சந்தித்த வீதி மனிதரும் ஒருவரென்பதை. அவர் கூறியவை பொய்யல்ல என்பதை. அம்மனிதருடனான உரையாடலின்போது அம்மனிதர் எனக்குக் கூறியவற்றை வைத்தே கதையின் உரையாடலினைப் பின்னியுள்ளேன். விக்கிபீடியாவிலுள்ள இவரைப் பற்றிய குறிப்புகள் இவர் ஒரு காலத்தில் ஸ்கார்பரோ பகுதியில் ஆசிரியராகவிருந்ததைத் தெரிவிக்கின்றன.

'டொரோண்டோ' அனுபவங்களை மையமாக வைத்துப் பல சிறுகதைகளை எழுதியுள்ளேன். அவ்வகையில் அவ்வனுபவங்கள் மறக்க முடியாதவை; முக்கியமானவை. -

•Last Updated on ••Monday•, 06 •January• 2020 09:31•• •Read more...•
 

புத்தாண்டே! நீ வாழ்க! வருக!

•E-mail• •Print• •PDF•

புத்தாண்டே வாழ்க! வருக!

இன்னுமோர் ஆண்டு! புத்தாண்டு!
புத்தாண்டே! உனக்கு வயது எப்பொழுதுமே
ஒன்றுதான்.
வயது ஒன்றானதும் மீண்டும்
வந்து பிறக்கின்றாய். ஆனால்
அந்தவோராண்டினுள்தான் நீ
எத்தனை எத்தனை மாற்றங்களை இப்புவியில்
ஏற்றி விடுகின்றாய். உருவாக்கி விடுகின்றாய்.

இன்பமும் , துன்பமும்
இருப்பின் இயற்கையென்பதை
எடுத்துக்காட்டி நிற்கின்றாய்.
உணர்ந்து பின் மீண்டும்
உறுதியுடன் இருப்பினை எதிர்நோக்கத்தானோ
நீ
மீண்டுமொரு பிறப்பினை
மறு வருடத்திலேயே எடுக்கின்றாய்?

இன்று புதியாய்ப்பிறந்தோமென்று நீ
இங்கு வந்து மீண்டும் பிறப்பதற்கு
எடுக்கும் காலமோ ஒராண்டு!
உன் வழியில் நாமும் மீண்டுமிங்கு
உதிப்போம்; உரமுடன்
உலகத்தை உள்வாங்கி எதிர்கொள்வோம்.

உலகைச் சீரழிக்க மாட்டோம்.
உலகைச் சீரமைப்போம் என்றோர்
உறுதி எடுப்போம். அதையும்
உணர்வுபூர்வமாகவே எடுப்போம். இவ்வுலக
உயிரனைத்துமெம் உறவுகளென்றெண்ணி
உண்மை உணர்ந்து இம்மண்ணை
இன்பப்பூக்காடாக்குவோம். இதற்காக
இணைந்து எழுவோம்; உயர்வோம்.

புத்தாண்டே! நீ வாழ்க! வருக! இப்
புவிதனை நீ
புத்துணர்ச்சியால்,.
பேரின்பத்தால்
பொங்க வைப்பாய்.
மகிழ்ச்சிக்கடலால்
மூழ்கடிப்பாய்.

•Last Updated on ••Tuesday•, 31 •December• 2019 12:35•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 357: கவிதை - தேவதைகளுக்கு வயசாவதும் இல்லை. - - அருண்மொழிவர்மன் -

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் அருண்மொழிவர்மன்எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அண்மையில் தான் முன்னர் யாழ் உதயன் பத்திரிகையில் தனது யாழ்ப்பாண டியூசன் நிலையங்கள் பற்றி எழுதிய கட்டுரையினை முகநூலில் பகிர்ந்திருந்தார். அக்கட்டுரையின் இறுதிப்பந்தியின் வரிகளை கவிதையாக அடுக்கி அதற்கு 'தேவதைகளுக்கு வயசாவதில்லை' என்று தலைப்புமிட்டுள்ளேன். அதனையே இங்கு பகிர்ந்துள்ளேன். கட்டுரையின் இறுதி வரிகளிலுள்ள கவித்துவமே என்னை இவ்வாறு வரிகளைக்கவிதையாக அடுக்கத்தூண்டியது.

உண்மைதான் தலைமுறைகள் மாறினாலும் தேவதைகளுக்கு வயசாவதில்லைதான். :-) உங்களில் பலருக்கு அருண்மொழிவர்மன் பகிர்ந்துள்ள கட்டுரையின் இறுதி வரிகள் பழைய பதின்ம வயது நினைவுகளைக் கிளறி விட்டிருக்கக் கூடும்; கிளறி விடக்கூடும். வயசாகாத உங்கள் தேவதைகளை மீண்டும் நினைவுக்குக்கொண்டு வந்திருக்கக்கூடும் :-)

அருண்மொழிவர்மனின் இப்பதிவை வாசித்தபோது பல வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் எழுதிய சிறுகதையொன்றின் ஞாபகமெழுந்தது. தன் நினைவுகளில் வயசாகமலிருந்த தன் பாடசாலைப்பருவத்து இனியவளை மீண்டும் சந்தித்தபோது முதுமையின் தளர்வுடன் கோலம் மாறியிருந்த, வயதுபோய் விட்டிருந்தது கண்டு திகைப்படையுமொருவன் பற்றிய கதையது. வயதாகிவிட்ட அவனது தேவதை பற்றிய கதையது.

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பசீரும் 'பால்ய காலத்து சகி' நாவலில் தன் தேவதையை மீண்டும் சந்திக்கும் ஒருவன் அடையும் உணர்வுகளை, அனுபவங்களை வெளிப்படுத்தியிருப்பார்.
•Last Updated on ••Tuesday•, 31 •December• 2019 11:04•• •Read more...•
 

கணன் ஸ்வாமியின் 'பரதேசியின் வலித்தொகை'

•E-mail• •Print• •PDF•

கணன் ஸ்வாமிநண்பர் கணன் ஸ்வாமியுடன் சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் இன்று நடைபெற்ற தேடகம் அமைப்பினரின் முப்பதாண்டு விழாவின்போது கிடைத்தது. அப்பொழுது அவர் தமிழகத்துப் புதுக்கோட்டையிலுள்ள இலங்கைத்தமிழ் அகதி முகாமில் சுமார் பதினைந்து வருடங்கள் தான் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டார். அக்காலகட்டத்தில் அவர் நண்பர்களுடன் இணைந்து 'பரதேசியின் வலித்தொகை' என்றொரு கையெழுத்துச் சஞ்சிகையும் நடத்தியதாகக் குறிப்பிட்டார். அத்துடன் 2008 வரை 'மனுதர்' எனுமொரு வலைப்பதிவினையும் நடாத்தி வந்ததாகவும் குறிப்பிட்டார். அவ்வலைப்பதிவுக்குச் சென்று பார்த்தேன். ஒரு பதிவு மட்டுமேயிருந்தது. ஏனையவை நீக்கப்பட்டு விட்டன போலும்.

கணன் ஸ்வாமி தன் புதுக்கோட்டை அகதிகள் முகாம் வாழ்வனுபவங்களைப் பதிவு செய்வது மிகவும் அவசியம். அவ்விதம் செய்தால் அது வரலாற்று முக்கியத்துவம் வாய்த்த நல்லதோர் ஆவணமாகவிருக்கும். கணன் ஸ்வாமி செய்வாரா? செய்வார் என்று எதிர்பார்ப்போம்.

அவரது 'மனுதர்' வலைப்பதிவிலுள்ள 'பரதேசியின் வலித்தொகை' 11 கவிதைகளின் தொகுப்பிது. அப்பதிவினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். பரதேசியின் வலித்தொகை தொகுப்புக்கு நல்லதொரு பெயர். அகதிகளாகப் பரதேசம் அலைந்து திரிபவர்களின் வலியினை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகை (தொகுப்பு).

•Last Updated on ••Sunday•, 22 •December• 2019 09:51•• •Read more...•
 

தேடகம் அமைப்பினரின் வருடாந்த ஒன்று கூடல் 2019

•E-mail• •Print• •PDF•

இடமிருந்து வலமாக: தேவகாந்தன், கற்சுறா, போல் ராசாத்தி, நான், குமரன் & ஆதவன்
தேடகம் (தமிழர் வகைதுறை வள நிலைய அமைப்பினர்) அமைப்பினரின் வருடாந்த ஒன்று கூடல் இன்று குயீன் பலஸ் விருந்து மண்டபத்தில் நடைபெற்றது. நண்பர் எழுத்தாளர் தேவகாந்தன், எழுத்தாளர் கடல்புத்திரனுடன் நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். முப்பதாவது ஆண்டில் நடக்கும் நிகழ்வு என்பதால் தேடகம் மலர் ஏதாவது வெளியிடலாம் என்றெண்ணியிருந்தேன். ஆனால் அவர்கள் வெளியிடவில்லை. இவ்விதம் வருடாவருடம் நடக்கும் நிகவுகளில் தேடகம் 'தேடல்' சஞ்சிகையை ஆண்டு மலர் வடிவில் வெளியிடலாம். அது மிகவும் பயன் மிக்கதாகவுமிருக்கும். அதே சமயம் கனடாத் தமிழ்இலக்கியத்துக்குப் பங்களிப்பினை வழங்கிய தேடகம் சஞ்சிகையின் தொடர்ச்சியாகவுமிருக்கும். தேடக நண்பர்கள் சிந்திப்பார்களாக. நிகழ்வில் தேடக நண்பர்கள், ஆர்வலர்கள் பலர் வந்திருந்தனர். பலர் குடும்பங்களுடன் வருகை தந்திருந்தனர். இளைய தலைமுறையினர் பலரையும் நிகழ்வில் காண முடிந்தது. அவர்கள் நிகழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பலவற்றை ஆர்வமுடன் நடத்திய பாங்கு வரவேற்கத்தக்கது; ஆரோக்கியமானது.
•Last Updated on ••Sunday•, 22 •December• 2019 10:25•• •Read more...•
 

'சுட்டி' கணேசன்!

•E-mail• •Print• •PDF•

'சுட்டி' கணேசன்!அண்மையில் 'சுட்டி விகடன்' ஆசிரியர் சுட்டி கணேசன் பற்றிய கட்டுரையொன்றினை இணையத்தில் வாசித்தேன் , அதை எழுதியவர் தகவற் தொழில்நுட்ப வல்லுநரும், அத்துறையில் தமிழ் நூல்கள் பலவற்றை எழுதியவருமான காம்கேர் கே.புவனேஸ்வரி அவர்கள். அவர் அக்கட்டுரையில் 'சுட்டி' விகடன் சஞ்சிகையுடன் தனக்கேற்பட்ட அனுபவமொன்றினையும் பகிர்ந்துகொண்டிருந்தார். நல்லதொரு கட்டுரை. அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். 'சுட்டி' விகடன் அவர்கள் என் முகநூல் நண்பர்களில் ஒருவரும் கூட. அக்கட்டுரைக்கான இணைய இணைப்பு: http://compcarebhuvaneswari.com/?p=483

'சுட்டி' கணேசன் அவர்களைப்பற்றிய மேற்படி கட்டுரை ஆச்சரியத்தைத்தரவில்லை. ஏனென்றால் அவரை நான் 1996ஆம் ஆண்டிலிருந்து அறிவேன். 'ஸ்நேகா' பாலாஜியாக அறிமுகமானவர். ஸ்நேகா பதிப்பகமே எனது நூல்களான 'அமெரிக்கா' (சிறுகதைகள் மற்றும் சிறு நாவற் தொகுப்பு) மற்றும் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆகிய நூல்களைத் தமிழகத்தில் சிறப்பாக வெளியிட்டது. அவையே தமிழகத்தில் முதலில் வெளியான எனது நூல்கள்.

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இவரை 'சவுத் ஏசியன் புக்ஸ்' பாலாஜியாக அறிந்திருப்பார்கள். 'சவுத் ஏசியன் புக்ஸ்' நிறுவனமும், இலங்கையின் தேசிய கலை இலக்கிய பேரவையும் இணைந்து பல நூல்களை வெளியிட்டுள்ளன்மை குறிப்பிடத்தக்கது.

அன்றிலிருந்து இன்று வரை இவருடனான தொடர்பு நீடித்து வருகின்றது. இவரது பல கடிதங்களும் என்னிடம் இன்னுமுள்ளன. எனது நூல்களை வெளியிட்ட காலத்தில் அவர் எழுதிய கடிதங்கள் அவை.

இவரைப்பற்றி நினைத்ததும் வேறு பல நினைவுகளும் உடன் நினைவுக்கு வரும். எனது படைப்புகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் இவரே.

•Last Updated on ••Wednesday•, 18 •December• 2019 01:55•• •Read more...•
 

எழுத்தாளர் ஜி.ஜி,சரத் ஆனந்தவின் மொழிபெயர்ப்பில் 'கந்துலு நிம வன துரு'. - கண்ணீர் வற்றும் வரை - (சிங்கள மொழியில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு)

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் ஜி.ஜி,சரத் ஆனந்தவின் மொழிபெயர்ப்பில் 'கந்துலு நிம வன துரு'. - கண்ணீர் வற்றும் வரை - (சிங்கள மொழியில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு)ஜி.ஜி,சரத் ஆனந்த

- எழுத்தாளர் ஜி.ஜி,சரத் ஆனந்தவின் மொழிபெயர்ப்பில் 'கந்துலு நிம வன துரு'. - கண்ணீர் வற்றும் வரை - (சிங்கள மொழியில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு) -

நண்பர் ஜி.ஜி.சரத் ஆனந்த தகவலொன்றை அனுப்பியிருந்தார். அதில் பின்வருமாறு எழுதியிருந்தார்:

"உங்கள் சிறுகதையொன்றும் அடங்கியுள்ள புதிய தொகுப்பொன்று உடனே வெளிவரும் உங்கள் 'உடைத்த காலும் உடைத்த மனிதனும்' கதை தான். உங்கள் நல்லூர் ராஜதானி நூலை வெளியிட்ட அஹஸ மீடியா' வேர்க்ஸ் பப்ளிஷர்.  வட கிழக்கு, ,தோட்ட பகுதி, முஸ்லிம், அத்துடன் வெளிநாட்டில் வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் கதைகள் அடங்கியுள்ளன. நான்கு பெண் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். 12 எழுத்தாளர்கள் ( மூன்று தலைமுறையில்). 'கந்துலு நிம வன துரு'.. 'கண்ணீர் வற்றும் வரை' என்பது நூலின் பெயர். நூலில் இடம் பெறும் எழுத்தாளர்கள்: மு.சிவலிங்கன், நயீமா சித்திக், நீர்வை பொன்னையன், அழகு சுப்பிரமணியம், ராணி சீதரன், கே. ஆர்.டேவிட், ஆர்.ராஜேஸ்கண்ணன், ஆர். எம். நௌஷாத், வ.ந..கிரிதரன், பாலரஞ்சனி ஷர்மா, எம்.ரிஷான் ஷெரீப், மாதுமை சிவசுப்பிரமணியம்."

•Last Updated on ••Monday•, 16 •December• 2019 00:52•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 356: மல்லிகை 43ஆவது ஆண்டு மலரும், முனைவர் க.குணராசாவின் (செங்கை ஆழியான்) "'ஈழநாடு' இதழின் புனைகதைப் பங்களிப்பு" ஆய்வுக் கட்டுரையும்.

•E-mail• •Print• •PDF•

மல்லிகை 43ஆவது ஆண்டு மலர்மல்லிகை சஞ்சிகையின் 43ஆவது ஆண்டு மலரை நூலகம் தளத்தில் வாசிக்கலாம். இம்மலரில் எழுத்தாளர் செங்கை ஆழியான் (முனைவர் க.குணராசா) ஈழநாடு (யாழ்ப்பாணம்) பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பு பற்றி "'ஈழநாடு' இதழின் புனைகதைப் பங்களிப்பு" என்னும் தலைப்பில் நல்லதோர் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். அதில் ஈழநாட்டில் வெளியான பல்வகைப்புனைகதைகள் பற்றிக் (சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் போன்ற) குறிப்பிட்டுள்ளதுடன் , ஈழநாட்டில் எழுதிய எழுத்தாளர்களை ஏழு தலைமுறைப் படைப்பாளிகளாக வகைப்படுத்தியுமுள்ளார். அவர்களைப்பற்றியும் , அவர்கள்தம் படைப்புகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஆவணச்சிறப்பு மிக்க ஆய்வுக்கட்டுரை. வேறு யாரும் இவ்விதம் விரிவாக ஈழநாடு பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பு பற்றி ஆய்வுக் கட்டுரையேதாவது எழுதியதாகத் தெரியவில்லை. அவ்விதம் எழுதியிருந்தால் நான் இதுவரை அறியவில்லை.

ஈழநாட்டில் எழுதியவர்களைப்பற்றிய அவரது வகைப்படுத்தலில் என் பெயர் , வடகோவை வரதராஜன் ஆகியோரின் பெயர்களை ஏழாந்தலைமுறைப்படைப்பாளிகள் பிரிவினுள் கண்டேன். என் படைப்புகளைப்பற்றிக் குறிப்பிடுகையில் "வ.ந.கிரிதரன் (இப்படியும் ஒரு பெண், மணல் வீடுகள்)" என்று என் இரு சிறுகதைகளைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அக்காலகட்டத்தில் என் பதின்மவயதுப்பருவத்தில் ஈழநாடு பத்திரிகையின் வாரமலரில் என் ஆரம்பகாலச் சிறுகதைகள் நான்கு வெளியாகியுள்ளன. அவற்றில் இரண்டு மட்டுமே செங்கை ஆழியானுக்குக் கிடைத்திருப்பதுபோல் தெரிகின்றது.

மேற்படி கட்டுரையில் ஏழாந்தலைமுறைப் படைப்பாளிகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் பகுதிகளை இங்கு ஒரு பதிவுக்காகப் பகிர்ந்துகொள்கின்றேன். மல்லிகை மலரையும் மேற்படி கட்டுரையையும் முழுமையாக வாசிப்பதற்குரிய இணைய முகவரி: http://noolaham.net/project/29/2870/2870.pdf
•Last Updated on ••Sunday•, 15 •December• 2019 09:45•• •Read more...•
 

அ.ந.க.வின் கவிதைகள், நாவல் மனக்கண் மின்னூல்களாக...

•E-mail• •Print• •PDF•

அ.ந.க.வின் மனக்கண் மின்னூலாக

இதுவரை அறிஞர் அ.ந.கந்தசாமியின் இரண்டு நூல்கள் அச்சு வடிவில் வெளியாகியுள்ளன. ஒன்று தமிழகத்தில் பாரி நிலைய வெளியீடாக வெளியான 'வெற்றியின் இரகசியங்கள்'. அடுத்தது தேசிய கலை இலக்கியப் பேரவையூடாக வெளியான 'மதமாற்றம்' நாடகம், தற்போது பதிவுகள்.காம் வெளியீடுகளாக அவரது கவிதைகள் தொகுப்பு மற்றும் 'மனக்கண்' நாவல் ஆகியவை வ.ந.கிரிதரனின் விரிவான முன்னுரைகளுடன் மின்னூல்களாக வெளியாகியுள்ளன. அவற்றை நூலகம் இணையத்தளத்தின் நூலக நிறுவனத்தின் ஆவணகம் வலைத்தளத்தின்
'எண்ணிம எழுத்தாவணங்கள்' பிரிவில் வாசிக்கலாம்.

நூலக நிறுவனத்தின் ஆவணகம் வலைத்தளத்தின்
'எண்ணிம எழுத்தாவணங்கள்' பிரிவு உண்மையில் மிகுந்த பயனுள்ள பிரிவு. மின்னூல்களை இன்றைய வடிவங்களாக அங்கீகரித்து உருவாக்கப்பட்ட பிரிவு. இதுவரை அச்சேறாத தம் படைப்புகளை எழுத்தாளர்கள் மின்னூல்களாக்கி ஆவணப்படுத்த வழியேற்படுத்தியுள்ளது. இதனை எழுத்தாளர்கள் முறையாக, ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் ஆக்கங்களைத் தொகுத்து அவற்றைப் பிடிஃப் கோப்புகளாக்கி நூலகம் இணையத்தளத்துக்கு அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Monday•, 09 •December• 2019 10:10•• •Read more...•
 

அருளரின் ஆளுமை: அறிந்ததும், அறியாததும்!

•E-mail• •Print• •PDF•

அருளர்அமரர் அருளரை அவரது 'லங்காராணி' மூலம் மட்டுமே இதுவரை அறிந்திருந்தேன். ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களிலொருவர் என்றும் அறிந்திருந்தேன். அவரது நாவலான 'லங்கா ராணி' மூலம் அவர் சமதர்ம சமுதாயத்தை விரும்பும் ஒருவர் என்றும் எண்ணியிருந்தேன். இலங்கைத் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தைத் தீவிரமாக ஆதரிக்கும் ஒருவராகவும் எண்ணியிருந்தேன். அவரது மறைவு முகநூலில் அவர் பற்றிய பல்வகைப்பட்ட பலரது கருத்துகளையும் வெளிப்படுத்தியது. அதன்பின்னரே அவரது எழுத்துகள் பற்றி கவனத்தைத் திருப்பினேன். எழுத்தாளர் சரவணன் கோமதி நடராசா தனது முகநூற் பதிவொன்றில் அருளரை அவரது லங்கா ராணிக்காகப்பாராட்டிய அதே சமயம் அவர் பாவிக்கும் சாதிரீதியிலான சொல்லாடல்களைத் தனது “தலித்தின் குறிப்புகள்” கட்டுரையில் விமர்சித்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதே சமயம் "இந்த விமர்சனங்களுக்கு அப்பால் அவர் ஈழப் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பு மரியாதைக்குரியவை. அவர் எழுதிய லங்காராணி நாவல் இன்றும் ஒரு முக்கிய இலக்கியமாகவும், பதிவாகவும் போற்றப்படுகிறது. தோழருக்கு செவ்வணக்கங்கள்." என்றும் அஞ்சலி செலுத்தியிருந்தார். எழுத்தாளர் மைக்கல் (சதுக்கபூதம்) தனது முகநூற் பதிவொன்றில் அருளர் கோவியர்களோடும் ,ஒடுக்கப்பட்ட மனுஷர்களோடும தோளணைக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இவை போல் அருளரைப்பற்றிய பல்வகையான கருத்துகளை முகநூலில் காணமுடிந்தது.

அருளர் முகநூலிலும் இருப்பதாக அறிந்தேன். ரிச்சர்ட் அருட்பிரகாசம் (Richard Arudpragasam) என்னும் அடையாளத்தில் அவர் இருப்பதாகவும் அறிந்தேன். அவர் என் நட்பு வட்டத்தில் இல்லாததால் அவரது பதிவுகள் எவையும் என் கண்களில் தட்டுப்பட்டிருக்கவில்லை. அவரது பதிவுகளைப் பார்வையிட்டபோது அவரது இதுவரை நான் அறியாதிருந்த ஆளுமையினை, அவரது மறுபக்கத்தினை அறியும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒருவகையில் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியது என்பேன். இதுவரை நான் என் மனத்தில் பதிவு செய்திருந்த அருளர் வேறு, முகநூலில் இயங்கிக்கொண்டிருந்த அருளர் வேறு என்பதை என்பதை உணர முடிந்தது.

•Last Updated on ••Friday•, 06 •December• 2019 01:30•• •Read more...•
 

ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் 'நிறமூட்டப்பெற்ற பறவை' (The Painted Bird) அல்லது 'வண்ணம் பூசிய பறவை'

•E-mail• •Print• •PDF•

ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் 'நிறமூட்டப்பெற்ற பறவை' (The Painted Bird) அல்லது 'வண்ணம் பூசிய பறவை'ஜேர்ஸி கொஸின்ஸ்கியைத் தமிழ் இலக்கிய உலகுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய கட்டுரை சுபமங்களா இதழில் வெளியான Being There கட்டுரை. அது அவரது புகழ்பெற்ற நாவல். அளவில் சிறியதானாலும் காரம் மிக்க நாவல். திரைப்படமாகவும் வெளியானது. விம்ப ஆராதனை மிக்க தற்காலச்சமுதாயத்தை விமர்சிக்கும் நாவல். அக்கட்டுரையை எழுதியவர் வ.ந.கிரிதரனாகிய நானே.

ஜேர்ஸி கொஸின்ஸ்கி போலந்திலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபுகுந்து , ஆங்கிலத்தில் எழுதத்தொடங்கி , ஆங்கில இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர்.

இவரது 'நிறமூட்டப்பெற்ற பறவை' (The Painted Bird) நாவல் இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க இலக்கியத்தில்; முக்கிய படைப்பாகக் கருதப்படும் படைப்பு. 1965இல் வெளியான இந்நாவல் இதுவரை முப்பதுக்கும் அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகயுத்தக் காலத்து மானுட உரிமை மீறல்கள் வாசிப்பவர்தம் இதயங்கள் உறையும் வகையில் சில இடங்களில் மிகவும் குரூரமாக விபரிக்கப்பட்டுள்ளதால் வாசகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. யூதச்சிறிவனொருவனை அவனது பெற்றோர் அவனாவது நாசிகளிடமிருந்து தப்பிப்பிழைக்கட்டும் என்னும் எண்ணத்துடன் மனிதரொருவனுடன் அனுப்பி வைக்கின்றனர். இவ்விதம் அனுப்பப்பட்ட அச்சிறுவன் யுத்தச்சூழல் நிலவிய காலகட்டத்தில் கிழக்கைரோப்பிய நாடுகளெங்கும் தப்பிப் பிழைப்பதற்காக அலைந்து திரிகின்றான். பல்வேறு வகைப்பட்ட அனுபவங்களுக்குள்ளாகின்றான். அவற்ற விபரிப்பதே 'நிறமூட்டப்பெற்ற பறவை' நாவல்.

பல வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஸ்நேகா பாலாஜி அவர்களுடன் இந்நாவல் பற்றி உரையாடியபோது, அந்நாவலால் ஈர்க்கப்பட்ட அவர் அந்நாவலைத் தமிழில் ஸ்நேகா பதிப்பகம் மூலம் வெளியிட விரும்புவதாகக் கூறினார். நாவலிருந்தால் அனுப்பி உதவுமாறும் கூறினார். நானும் அந்நாவலைபெற்று பாலாஜிக்கு அனுப்பினேன். இது பற்றி நண்பர் பாலாஜி என்னுடன் பகிர்ந்துகொண்ட தகவல்கள் வருமாறு:

•Last Updated on ••Wednesday•, 04 •December• 2019 02:29•• •Read more...•
 

ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலும், எழுத்தாளர் பவா செல்லத்துரையின் காணொளியும்!

•E-mail• •Print• •PDF•

ஜெயகாந்தன்எழுத்தாளர் ஜெயகாந்தன் என் வாழ்க்கையில் என் பால்ய காலத்திலிருந்து இன்றுவரை என்னை மிகவும் பாதித்த ,கவர்ந்த, பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். உண்மையில் நான் வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்னரே இவரைப்பற்றி அறிந்திருக்கின்றேன். அப்பா அப்பொழுதெல்லாம் ஆனந்த விகடனில் வெளியான ஜெயகாந்தனின் 'கோகிலா என்ன செய்து விட்டாள்?' என்னும் குறுநாவலைப்பற்றிக் கதைத்துக்கொண்டிருப்பார். அப்பொழுதிலுருந்தே ஜெயகாந்தனைப்பற்றி அறிந்திருக்கின்றேன். அதன்பின் நான் வாசிக்கத்தொடங்கிய குறுகிய காலத்திலேயே நிறைய வாசிக்கத்தொடங்கி விட்டேன். ஜெயகாந்தனின் விகடனில் வெளியான முத்திரைச் சிறுகதைகளிலொன்றான 'ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது' தொடக்கம், 'தினமணிக்கதிர்ர்' சஞ்சிகையில் வெளியான ஜெயகாந்தனின் பல சிறுகதைகள் என அவரது கதைகளை அதிகம் வாசித்திருக்கின்றேன். 'தினமணிக்கதிர்' சஞ்சிகையில் ஜெயகாந்தனின் சிறுகதைத்தொகுப்பபொன்றிலிருந்து சிறுகதைகளை மீள்பிரசுரம் செய்துகொண்டிருந்தார்கள். 'ஒரு பிடி சோறு', 'ராசா வந்திட்டாரு', 'பிணக்கு', 'டிரெடில்' என்று சிறுகதைகள் பல வெளியாகின. தொடர்ந்து அவரது 'சில நேரங்களில் சில மனிதர்கள்' கோபுலுவின் ஓவியங்களுடன் தொடராக வெளியானது. 'ரிஷி மூலம்' குறுநாவலும் , தொடராக கோபுலுவின் ஓவியங்களுடன் வெளியானது. ''அக்காலகட்டத்தில்தான் விகடனில் அவரது 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' ஆகிய நாவல்கள் தொடராக வெளியாகின. ராணிமுத்து பிரசுரங்களாக அவரது கைவிலங்கு குறுநாவல் 'காவல் தெய்வம்' என்னும் பெயரில் வெளியானது. அதனுடன் சேர்ந்து 'கருணையினால் அல்ல' குறுநாவலுமிருந்தது. தொடர்ந்து 'வாழ்க்கை அழைக்கிறது' நாவலும் ராணிமுத்துப் பிரசுரமாக வெளியானது.

இவை தவிர நான் வாசிக்கத்தொடங்குவதற்கு முன்னர் வெளியான 'யாருக்காக அழுதான்?', 'உன்னைப்போல் ஒருவன்' ஆகியவற்றைப் பின்னர் தேடியெடுத்து வாசித்திருக்கின்றேன்.

•Last Updated on ••Sunday•, 01 •December• 2019 21:38•• •Read more...•
 

பொறியியல் பீட மாணவி லிண்டா ஷாவை நினைவூட்டிய கால்நடை வைத்தியர் பிரியங்கா ரெட்டியின் மரணம்!

•E-mail• •Print• •PDF•

கால்நடை வைத்தியர் பிரியங்கா ரெட்டிLinda Shawஹைதராபாத்தில் கால்நடை வைத்தியர் பிரியங்கா ரெட்டி பயணித்த 'ஸ்கூட்ட'ரின் 'டய'ரொன்றினைப் 'பங்ச'ராக்கி, , அவருக்கு உதவுவதுபோல் நடித்து, அவரைப்பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிப் படுகொலை செய்த செய்தியானது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விரைவிலேயே கொலையாளிகள் நால்வரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். பிரியங்கா ரெட்டி இறப்பதற்கு முன்னர் தனது சகோதரியை அழைத்துள்ளார். தனக்குப் பயமாகவுள்ளதாகவும், தன்னுடன் பேசிக்கொண்டிருக்கும்படியும் வேண்டியுள்ளார். நிலைமையின் தீவிரத்தைச் சகோதரி  உணர்ந்திருக்கவில்லை. பிரியங்கா ரெட்டியும் சகோதரியை அழைத்ததற்குப் பதில் காவல்துறையினைரை அழைத்திருந்தால் ஒருவேளை தப்பியிருக்கக்கூடும். இது போன்ற சந்தர்ப்பங்களைப பெண்கள் தவிர்க்க வேண்டும். இரவுகளில் தனிமையாக  நேரங்கெட்ட நேரங்களில் 'அண்டர்கிரவுண்ட்' வாகனத்தரிப்பிடங்களில் வாகனத்தை நிறுத்தச் செல்லல், தனிமையாகத் தொலைதூரத்துக்குப் பயணித்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். செல்லும் வழியில் ஏதாவது வாகனத்துக்கு நடந்து விட்டால் , நிராதரவான நிலையில் , தவிக்கும் நிலை ஏற்படும் சாத்தியமிருப்பதால் இதுபோன்ற சந்தர்ப்பங்களைத்  தவிர்க்க வேண்டும்.

'டொரண்டோ' நகரில் இளம் பெண் வைத்தியரொருவர் தான் வசிக்கும் 'கொண்டோ'வின் 'அண்டர்கிறவுண்ட்' வாகனத்தரிப்பிடத்துக்கு நள்ளிரவில் தனது வாகனத்தைக் கொண்டு சென்றபோது அங்கிருந்த வீதி மனிதனிருவனால் தாக்கப்பட்டுக் கொலை  செய்யப்பட்டது நினைவுக்கு வருகின்றது.

•Last Updated on ••Sunday•, 01 •December• 2019 12:48•• •Read more...•
 

முகநூற் பதிவுகள் சிலவும் , எதிர்வினைகள் சிலவும்!

•E-mail• •Print• •PDF•

கோகிலம் சுப்பையாவை எழுத்தாளர் நந்தினி சேவியர் முகநூலில் நினைவுபடுத்தியிருந்தார். வீரகேசரி பிரசுரமாக வெளியான இவரது 'தூரத்துப்பச்சை' மலையக இலக்கியத்துக்கு, தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த, சேர்க்கும் முக்கியமானதொரு படைப்பு. நாவலில் வரும் வள்ளி என்னும் பாத்திரம் மறக்க முடியாத பாத்திரம். தகழியின் தோட்டியின் மகனை வாசித்தபொழுது ஏற்பட்ட உணர்வு எனக்கு இந்நாவலை வாசிக்கையிலும் ஏற்பட்டது. இரு நாவல்களுமே மானுட வாழ்வின் குழந்தையிலிருந்து முதுமை வரையிலான போராட்டத்தை, சமூக, அரசியற் சூழல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவுகளை வெளிப்படுத்துவதாக அமைந்த நாவல்கள். மீண்டும் அவரது 'தூரத்துப் பச்சை' நாவலினைப் வாசிக்க வேண்டுமென்ற உணர்வினை நந்தினி சேவியரின் நினைவூட்டல் ஏற்படுத்திவிட்டது.

நந்தினி சேவியரின் பதிவில் எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் 'தூரத்துப்பச்சை' (வீரகேசரி பிரசுரம்) அட்டையினைப் பகிர்ந்திருந்தார்.அதனை நன்றியுடன் இங்கு பகிர்கின்றேன்.
கோகிலம் சுப்பையாவின் 'தூரத்துப் பச்சை'
•Last Updated on ••Sunday•, 01 •December• 2019 12:39•• •Read more...•
 

இலங்கையில் மாவீரர் தின நிகழ்வுகள்!

•E-mail• •Print• •PDF•

இலங்கையில் தமிழர்கள் வாழும் பல இடங்களில் வருடா வருடம் விடுதலைப் புலிகளால் நினைவு கூரப்படும் மாவீரர் தின நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. அமைதியான முறையில் அசம்பாவிதங்கள் எவையுமின்றி இடம்பெற்றுள்ளன. புகலிடத் தமிழர்கள் நினைவு கூரும் மாவீர்ர் தின நிகழ்வுகளுக்கும் , இலங்கையில் நடைபெறும் மாவீர்ர்தின நிகழ்வுகளுக்குமிடையில் காணப்படும் வேறுபாடு புகலிடத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாள் நவம்பர் 26 கொண்டாடப் படுவதைப்போல் இலங்கையில் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் மாவீரர் தின நிகழ்வுகள் நினைவு கூர்ப்படுவது இலங்கையில் தடுக்கப்படுவதில்லை. இலங்கை அரசக் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிக்கரை நிறுவனம் வெளியிடும் தமிழ்ப்பத்திரிகை தினகரன். தினகரன் இம்முறை வடக்கில் நடக்கும் 'மாவீரர் தின' நிகழ்வினை வெளிப்படுத்தும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து "நல்லூரில் மாவீரர்களுக்கு அஞ்சலி" என்னும் தலைப்பிட்டுப் பிரசுரித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு மாவீரர் தின நிகழ்வுகள் நடப்பதில் ஆட்சேபணையில்லை. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்தநாள் மூலம் நினைவு கூரப்படுவதை இலங்கை அரசாங்கத்தினால் ஏற்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் உருவப்படங்கள் மீண்டும் புலிகள் போன்ற அமைப்புகள் இலங்கையில் உருவாகக் காரணமாக அமைந்துவிடும் என்று இலங்கை அரசு ஐயுறுவதுதான்.

•Last Updated on ••Thursday•, 28 •November• 2019 01:03•• •Read more...•
 

கண்ணீர்த்தீவின் எதிர்காலம்?

•E-mail• •Print• •PDF•

இலங்கைத்தீவுபுதிய ஜனாதிபதியாக நந்தசேன கோத்தபாயா ராஜபக்‌ஷ இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டதிலிருந்து நடைபெறும் செயல்கள் நாட்டின் எதிர்காலம் பற்றிய பல்வகை வினாக்களை எழுப்புகின்றன. நாட்டின் எதிர்காலம் பற்றிய முதலாவது அச்சம் நாடு எவ்வகையான ஆட்சியமைப்பை நோக்கிச் செல்கின்றது என்பதையிட்டுத்தான். 2015இல் நடைபெற்ற ஜனாதிபதி ஆட்சியின்போது எதிர்பாராதவிதமாக மகிந்த ராஜபக்‌ஷா தேர்தலில் தோல்வியுற்றபின்னர் தன் தம்பியான கோத்தபாயா ராஜபக்சவுடன் இணைந்து நாட்டின் தேர்தலை இரத்துச் செய்துவிட்டு ஆட்சியில் நீடிக்கச் செய்த சதி வெற்றியளிக்கவில்லை. முப்படைத்தளபதிகளும், காவல்துறைத் தலைவரும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அதனால்தான் அச்சமுற்ற மகிந்த ராஜபக்‌ச அவசர அவசரமாக, தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடமுன்னரே, ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து அவருடன் பாதுகாப்பாக வெளியேறியதாக ஒரு செய்தி இலங்கை அரசியலில் அடிபடுகின்றது. அதில் பாடம் படித்த மகிந்தவும், கோதபாயாவும் எதிர்காலத்தில் அவ்விதமானதொரு நிலை தோன்றக்கூடாது என்பதில் உறுதியான நோக்கில் இருப்பதுபோல் தெரிகின்றது.

தற்போதுள்ள அரசியல் சூழலில் இன்னும் நீண்ட காலம் இலங்கை அரசியலில் ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சிக் கட்டில் இருக்கப்போகின்றனர். அவ்விதமிருந்து இவர்கள்மீது அதிருப்தியுற்று மக்கள் முன்புபோல் தேர்தலில் தோல்வியுற வைத்தாலும் கோத்தபாயா ஆட்சியிலிருந்து இறங்கப்போவதில்லை போல்தான் தோன்றுகின்றது. அடிப்படையில் அவர் அரசியல் தலைவரல்லர்.இராணுவத்தளபதி. அதனால்தான் பதவிக்கு வந்தவுடனேயே இராணுவத்தினரின் கைகளில் பாதுகாப்பைக் கொடுத்திருக்கின்றார். இதனால் ஏற்படும் முக்கிய நன்மைகள்: காவல்துறையினரின் முக்கியத்துவம் குறைகின்றது. காவல்துறையின் புலனாய்வுப்பிரிவின் படையினர் மீது புலனாய்வு விசாரணைகளை ஆரம்பிக்கப் போவதில்லை. ஏற்கனவே அவ்விதம் விசாரணைகளை முன்னெடுத்தவர் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

•Last Updated on ••Wednesday•, 27 •November• 2019 01:37•• •Read more...•
 

அனைவரையும் நினைவு கூர்வோம்!

•E-mail• •Print• •PDF•

இலங்கைத் தமிழர்களின் உரிமைப்போராட்டம் ஆயுதம் தாங்கிய போராட்டம் என்னும் நிலையிலிருந்து வேறொரு கோணத்தில் பயணிக்கின்றது. 2009இல் ஆயுதப் போராட்டம் பேரழிவுடன், பாரிய மனித உரிமை மீறல்களுடண் முடிவுக்கு வந்தது. ஆயுதப் போராட்டக் காலத்தில் இலங்கையில் பாரிய மனித அழிவுகள் ஏற்பட்டன. இலங்கைப்படையினருக்கும் , போராளிகளுக்குமிடையிலான மோதல்களில் போராளிகள், பொதுமக்கள், படையினர் எனப் பலரும் அழிந்தனர். சிறைகளில் அடைக்கப்பட்டனர். பல்வேறு வதைகளுக்கு உள்ளாகினர். இலங்கை அரசு பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்தியதால் இனங்களுக்கிடையிலான கலவரங்கள், மோதல்கள் அழிவுகளைத் தந்தன. தற்போது அந்நிலையினைத் தாண்டி இன்னுமொரு காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.

இக்காலகட்டத்தில் கடந்த கால வரலாறானது பக்கச்சார்பற்றுப் பதியப்படுவதுடன், நினைவு கூரப்படவும் வேண்டும். ஏற்பட்ட அழிவுகளிலிருந்து பாடங்களைக் கற்க வேண்டும். தமிழ் அரசியல் அமைப்புகள் பல்வேறு பிரிவுகளாகப் பிளவுண்டு இருந்தாலும், இவ்விடயத்தில் ஒன்று பட்டுச் செயற்படலாம். எதிர்காலத்தில் இவ்விதமாகப் பல்வேறு விடயங்களில் ஒன்றுபட்டு இயங்குவதற்கு இதுவோர் ஆரம்பமாக இருக்க உதவும். வரலாறானது பக்கச்சார்பற்று அணுகப்பட வேண்டுமென்பது எதனை வெளிப்படுத்துகின்றது? அனைத்து அமைப்புகளும் தமக்கிடையில் நிலவிய முரண்பாடுகள் காரணமாகப் பல்வேறு சார்பு நிலைகளை எடுத்தன. பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன. இயக்கங்களின் வதை முகாம்களில் பலர் வதைக்கப்பட்டனர். அதே சமயம் இடம் பெற்ற யுத்தத்தினால் மாந்தர்கள் பலரும் பேரழிவுகளுக்குள்ளாகினர்.

•Last Updated on ••Wednesday•, 27 •November• 2019 01:30•• •Read more...•
 

எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் கடிதம்

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் வல்லிக்கண்ணன்

எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக 'அமெரிக்கா' , 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆகிய நூல்கள் வெளியானபோது , நண்பர் ஸ்நேகா பாலாஜி அந்நூல்களை வல்லிக்கண்ணன் அவர்களுக்குக் கிடைக்கச் செய்தார். அவ்விதம் கிடைத்த எனது நூலான 'அமெரிக்கா' பற்றிய கருத்துகளைத் தெரிவித்து அவர் தனது முத்து முத்தான கையெழுத்தில் எட்டு பக்கக் கடிதமொன்று அனுப்பியிருந்தார். அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்

•Last Updated on ••Wednesday•, 20 •November• 2019 10:32•• •Read more...•
 

எழுத்தாளர் சீர்காழி தாஜின் கடிதம் 1

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் தாஜ்

அண்மையில் யாருமே எதிர்பார்க்காத நிலையில் மறைந்தவர் எழுத்தாளர் சீர்காழி தாஜ். அவர் என்னுடன் முதன் முதலில் தொடர்பு கொண்டது இங்கு நான் பகிர்ந்துக்கொள்ளும் நீண்ட கடிதம் மூலம்தான். தமிழகத்திலுள்ள நூலகமொன்றில் என் 'அமெரிக்கா' , 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆகிய நூல்களை வாசித்து விட்டு எனக்கு முதன் முதலாக அவர் எழுதிய கடிதம் இதுதான். இதன் பின்னர் அவர் எனக்கு மேலும் சில நீண்ட கடிதங்களை அனுப்பியிருந்தார்.

•Last Updated on ••Wednesday•, 20 •November• 2019 11:03•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 355: புதுமைலோலனின் 'தடுப்புக் காவலில் நாம்'

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் புதுமைலோலன் அவர்களைச் சில தடவைகள் யாழ் பிரதான சந்தைக்கண்மையிலுள்ள அவரது புத்தகக்கடையான 'அன்பு புத்தகசாலை'யில் சந்தித்திருக்கின்றேன். ஆனால் அப்பொழுது நான் பதின்ம வயதை நெருங்கிக் கொண்டிருந்த சிறுவன. மாணவன். எழத்தில் ஆர்வம் மிகுந்து குழந்தைகளுக்கான சஞ்சிகைள், பத்திரிகைகளில் வெளியாகும் சிறுவர் பகுதிகளுக்கு ஆக்கங்களை அனுப்பத் தொடங்கியிருந்தேன். புதுமைலோலன் அவர்கள் எழுத்தாளர் செங்கை ஆழியானின் அண்ணன் என்று அக்கடையில் பணிபுரிந்த இளைஞர் (பெயர் மறந்துவிட்டது) கூறியிருந்தார். அவ்விளைஞரே எனக்கு அக்காலகட்டத்தில் தன்னிடமிருந்த மார்க்சிக் கார்க்கியின் 'தாய்' நாவலைத் தந்தவர். எழுத்தாளர் ரகுநாதனின் மொழிபெயர்ப்பில் வெளியான நாவல்.

அண்மையில் 'நூலகத்'தில் புதுமைலோலன் எழுதிய 'தடுப்புக் காவலில் நாம்' என்னும் நூலினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல். 1961இல் யாழ் கச்சேரிக்கு முன்பாகத் தமிழரசுக் கட்சியினர் 'சத்தியாக்கிரக'மிருந்தனர், பெண்களும் அதில் பங்குபற்றியிருந்தனர். அதனை அன்றிருந்த ஶ்ரீமா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசு படைபலம் கொண்டு அடக்கியது. தமிழ் அரசியல்வாதிகளுட்பட ஏனைய சத்தியாக்கிரகிகள் யாவரும் தாக்குதல்களுள்ளாகிக் கைது செய்யப்பட்டு பனாகொடை இராணுவ முகாமில் அடைக்கப்பட்டனர். அவர்களில் எழுத்தாளர் புதுமைலோலனும் ஒருவர். அவர் 18.4.1961 தொடக்கம் 26.7.1961 வரை பனாகொடை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தனது தடுப்புக் காவலிலிருந்த சமயம் தம்  அனுபவங்களைத் தன் மகள் அன்பரசிக்குக் கடிதங்களாக எழுதினார். அக்கடிதங்கள் 'சுதந்திரன்' பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.  அக்கடிதங்களின் தொகுப்பே மேற்படி நூலான் 'தடுப்புக் காவலில் நாம்'.

•Last Updated on ••Tuesday•, 19 •November• 2019 09:43•• •Read more...•
 

தொகுப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் 'கணையாழி' சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள் (ஒரு பதிவுக்காக) -

•E-mail• •Print• •PDF•

- வ.ந.கிரிதரன் -- தொகுப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் 'கணையாழி' சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள் (ஒரு பதிவுக்காக) -

தொகுப்புகள்

சிறுகதைகள்

1. சிறுகதை: 'ஒரு மா(நா) ட்டுப் பிரச்சினை' - வ.ந.கிரிதரன் - மித்ர பதிப்பக வெளியிட்ட 'பனியும், பனையும்' சிறுகதைத்தொகுப்பு. புகலிடத்தமிழர்களின் சிறுகதைகளை உள்ளடக்கியது.
2. சிறுகதை: 'சாவித்திரி ஒரு ஶ்ரீலங்கன் அகதியின் குழந்தை' - ஞானம் சஞ்சிகை (இலங்கை) வெளியிட்ட புலம்பெயர்தமிழர்களின் சிறப்பிதழ் (சிறப்பிதழ் என்றாலும் இது தனியான தொகுப்பு நூல்.)
3. அறிவியற் சிறுகதை 'நான் அவனில்லை' - வ.ந.கிரிதரன் - (அமரர் சுஜாதா அறக்கட்டளையும், ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடாத்திய - உலக ரீதியிலான - அறிவியற் சிறுகதைப் போட்டியில் வட அமெரிக்காவுக்கான ரூபா 5000 பரிசினைப் பெற்ற சிறுகதை. ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட அறிவியற் சிறுகதைத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.)

கட்டுரைகள்:
1. "அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!" - வ.ந.கிரிதரன் - (வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாண்டு இலக்கியப்பணியினைச் சிறப்பிக்கும் முகமாக வெளியான 'வெங்கட் சாமிநாதன் வாதங்களும் , விவாதங்களும்' தொகுப்பு நூலில் இடம்பெற்ற கட்டுரை)
2. 'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும்' - வ.ந.கிரிதரன் - 'கணையாழிக் கட்டுரைகள் (1995 - 2000) தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரை.
3.- 'அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்' - வ.ந.கிரிதரன் - கணையாழிக் கட்டுரைகள் (1995 - 2000) தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரை.
4. 'கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்!' - வ.ந.கிரிதரன் - (எழுத்தாளர் பென்னேஸ்வரன் டெல்லியில் வெளியிட்ட 'வடக்கு வாசல்' சஞ்சிகையின் 'இலக்கிய மலர் 2008' இல் வெளியான கட்டுரை:)
5. 'கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!' - வ.ந.கிரிதரன் - (ஊடகவியலாளர் செந்தில்நாதனின் ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட தமிழ்க்கொடி 2006 ஆண்டு மலருக்காக எழுதிய கட்டுரை)
6. 'நாவலர் பண்ணை பற்றிய நினைவுகள்' - வ.ந.கிரிதரன் - (அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன் - சொ.அ.டேவிட் ஐயா - சமூக இயல் பதிப்பகம், ஐக்கிய இராச்சியம்)

•Last Updated on ••Sunday•, 17 •November• 2019 00:15•• •Read more...•
 

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை!

•E-mail• •Print• •PDF•

மாணவி பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடியில் மானுடவியல் துறையில் முதுகலையில் படித்துக்கொண்டிருந்த கேரளாவைச்சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் அங்கு பணி புரியும் பேராசிரியர்கள் சிலரின் பாரபட்சம் மற்று துன்புறுத்தல்கள் காரணமாகத் தற்கொலை செய்துள்ள விபரம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பாத்திமா தன் அலைபேசியில் தனது தற்கொலைக்குக் காரணமான பேராசிரியர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார், பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன், மற்றும் இன்னுமொருவர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.  இப்பேராசிரியர்களை நிச்சயம் சட்டம் தண்டிக்க வேண்டும். இதில் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மாணவி பாத்திமாவின் பாடமொன்றுக்கு முதலில் குறைந்த புள்ளிகளை இட்டிருக்கின்றார். பின்னர் மாணவி மீளாய்வு செய்யக்கூறியதும் அதிகரித்துள்ளார்.  இம்மாணவியின் தற்கொலை பற்றிய இந்தியா டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்கட்டுரையில் இவ்விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சகல பாடங்களிலும் உயர் பெறுபேறுகளைப்பெற்று வந்துள்ள மாணவி பாத்திமா இவ்விதமானதொரு முடிவினைத் தேர்ந்தெடுக்கத் தூண்டிய சென்னை ஐஐடி கல்வி நிறுவனப்பேராசிரியர்களால் அந்நிறுவனத்திற்கே அவமானம்.

•Last Updated on ••Monday•, 16 •December• 2019 01:06•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 354: மகாகவியின் குறும்பா தமிழுக்குப் புது வரவா?>

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 354: மகாகவியின் குறும்பா தமிழுக்குப் புது வரவா?>
- கவிஞர் மகாகவியின் குறும்பா பற்றிய பயனுள்ள , ஆரோக்கியமான முகநூல் உரையாடலுக்கு ஜவாத் மரைக்கார் அவர்களின் 'நவமணி'க் கட்டுரை வழிவகுத்துள்ளது. அதற்காக அவருக்கு நன்றி. எனது முகநூற் பதிவும் , அதனையொட்டிய முகநூல் எதிர்வினைகளும் கீழே தரப்பட்டுள்ளன. - வ.ந.கி -
எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது முகநூற் பதிவொன்றில் 'நவமணி' பத்திரிகையின் 'ஜலதரங்கம்' பகுதியில் வெளியான 'மகாகவியின் குறும்பா LIMERICKS' என்னும் கட்டுரையினைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் 'குறும்பா தமிழுக்குப் புதிய வடிவமன்று. ஏற்கனவே தமிழிலுள்ள நந்தவனத்திலோர் ஆண்டி' என்னும் .சித்தர் பாடலையொத்தது' என்றும் கூறியிருந்தார். அத்துடன் மேனாட்டுக் கவிதை வடிவங்களிலொன்றான 'லிமரிக்'வுடன் ஒப்பிட்டு குறும்பாவும் .லிமரிக் கவிதை வடிவமும் ஒன்றல்ல என்றும் கூறியிருந்தார்.

மகாகவியின் குறும்பா கவிதை வடிவத்தைப் பலர் 'லிமரிக்' என்னும் ஆங்கிலக் கவிதை வடிவத்தின் தமிழ் வடிவமாகக் கருதுகின்றார்கள். உண்மை அதுவல்ல. குறும்பா தமிழுக்குப் புதிய வடிவம். குறும்பா நூலினை வெளியிட்ட அரசு பதிப்பக உரிமையாளர் எம்.ஏ.ரஹ்மான் 'தமிழுக்குப் புதிய யாப்பும், புதுப் பொருள் மரபும் அமைத்து, தமிழ்க் கவிதையை வளப்படுத்தும் இக் கவிக்கோவை.' என்று நூலுக்கான பதிப்புரையில் கூறுகின்றார்.

நூலுக்கு மிகச்சிறப்பானதொரு 'முன்னீடு' எழுதியிருக்கின்றார் எழுத்தாளர் எஸ்.பொ. அதிலவர் குறும்பா பற்றிய பல தகவல்களைத் தருகின்றார். அதில் அவரும் குறும்பாவை மகாகவி தமிழுக்குத் தந்த புது வடிவமாகவே குறிப்பிட்டிருக்கின்றார். குறும்பாவை லிமரிக்கின் தமிழ் மொழிபெயர்ப்பு எனக்கூறும் விமர்சகர்களை அவர் கடுமையாகச் சாடியிருப்பார். அதற்கு எடுத்துக்காட்டு பின்வரும் கூற்று:

"ஆற்றலிலக்கிய எழுத்தில் ஏற்பட்ட நபுஞ் சகத்தனத்தினலேயே 'இலக்கிய விமர்சகர்கள்’ எனத் தம்மைக் கருதுவோர் நம் நாட்டில் அநேகர் உளர். சோம்பலை ஓம்பி, நுனிப் புல் மேய்ச்சலிடும் சுபாவமுள்ள அவர்கள், 'குறும் பாக்கள் விமரிக்கின் மொழிபெயர்ப்பே' என்று ஏக வசனத்திற் கூறிவிடுவார்கள். இது பிரமை அன்று. இக் குறும் பாக்களுட் சில இளம் பிறை' மாசிகையிற் பிரசுரமான காலத்தில், தாழ்வுச் சிக்கலிஞலும், விரக்தியினுலும் சாம்பிக் கொண்டிருக்குஞ் சில 'இலக்கியகாரர்' இத்தகைய அபிப்பிராயம் ஒன்றைப் பரப்பியதை நான் அறிவேன்."

இவ்விதம் விமர்சகர்கள் சிலரைச் சாடும் அவர் தொடர்ந்து இவ்விதம் கூறுவார்:

"குறும் பாக்களிலே சுயம்புவான கருத்து வீறும், மொழி வீச்சும், கற்பனை வளமும் இருக்கின்றன. இத் தன்மைகளே குறும்பா புதிய தமிழ்க் கவிதை முயற்சி என்பதை நிறுவுவதற்குப் போதுமானவை"
•Last Updated on ••Thursday•, 07 •November• 2019 10:28•• •Read more...•
 

அஞ்சலி: மூத்த ஊடகவியலாளர் 'ஈழநாடு'பெருமாள் மறைவு!

•E-mail• •Print• •PDF•

ஊடகவியலாளர் பெருமாள்..இன்று வெளியான 'காலைக்கதிர்' பத்திரிகைச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது. .கூடவே துயரினையும் தந்தது. பழம்பெரும் பத்திரிகையாளர் 'பெருமாள்' அவர்கள் தனது எண்பத்தியாறாவது வயதில் மறைந்த செய்தியே அது. 'காலைக்கதிர்' செய்தியின்படி அவர் ஈழநாடு செய்தி ஆசிரியராகவும், பின்னாளில் உதயன் பத்திரிகையின் ஆசிரியபீடத்திலும் பணியாற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தன் உடலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்க வேண்டுமென்ற அவரது விருப்பத்துக்கேற்ப் அவரது உடல் கையளிக்கப்பட்டதாகவும்  மேற்படி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூத்த பத்திரிகையாளர் பெருமாள் அவர்களின் மறைவு என் நினைவுகளை அசை போட வைத்து விட்டது. என் இலக்கிய வாழ்க்கையில் அவரை நான் ஒருபோதுமே மறக்க மாட்டேன். என் எழுத்துலகத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் என்னை ஊக்குவித்த பத்திரிகையாளர்களில் அவர் முதலிடத்திலிருப்பவர். இவ்வளவுக்கும் இன்றுவரை அவரை நான் ஒரு தடவை கூடச் சந்தித்ததில்லை. அவர் எப்படியிருப்பார் என்பது கூடத் தெரிந்திருக்கவில்லை. இருந்தும் எப்பொழுதும் என் நெஞ்சில் அவருக்கு எப்போதுமோரிடமிருக்கும்.

அக்காலகட்டத்தில்தான் நான் சிறுகதைகள் எழுதத்தொடங்கியிருந்தேன். சிரித்திரன் சஞ்சிகையில் என் முதலாவது சிறுகதை வெளியாகியிருந்தது. அப்பொழுது நான் யாழ் இந்துக்கல்லூரியில் கல்விப்பொதுத் தராத உயர்தர வகுப்பில் , விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். அதன்பின் நான் எழுதிய சிறுகதை 'அஞ்சலை என்னை மன்னித்து விடு'. அது வீட்டு வேலைக்காரியாகப்பணிபுரியும் ஏழைச்சிறுமியிருத்தியைப்பற்றிய சிறுகதை. அதுவே ஈழநாடு பத்திரிகையில் வெளியான எனது முதற்சிறுகதை. அப்பொழுது ஈழநாடு வாரமலர் ஆசிரியராகக் கடமையாற்றிக்கொண்டிருந்தவர் பெருமாள் அவர்கள். அதன்பின் எனது சிறுகதைகளான 'இப்படியும் ஒரு பெண்' , 'மணல் வீடுகள்', 'பல்லி சொன்ன பாடம்' ஆகியவை ஈழநாடு வாரமலரில் வெளியாகின. இவற்றைத்தொடர்ந்து 'நியதி' என்னும் உருவகக் கதை, நல்லூர் ராஜதானி நகர அமைப்பு பற்றிய கட்டுரைகள் இரண்டு, புத்தாண்டுக் கவிதையொன்று, யாழ்நகரிலுள்ள பழமையின் சின்னங்களைப்பேணப்படுதலின் அவசியம் பற்றிய கட்டுரை ஆகியவை ஈழநாடு வாரமலரில் வெளியாகியன. அவற்றை வெளியிட்டு என்னை ஊக்குவித்தவர் பெருமாள் அவர்கள்.

•Last Updated on ••Wednesday•, 06 •November• 2019 08:02•• •Read more...•
 

கணையாழி: ஆஷா பகேயின் 'பூமி' பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்!

•E-mail• •Print• •PDF•

- கணையாழி சஞ்சிகையின் நவம்பர் 2019 இதழில் 'ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்!' என்னும் தலைப்பில் வெளியான கட்டுரை. -


கணையாழி: ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்!ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்! | தமிழினி (சிவகாமி) ஜெயக்குமாரனின் கொண்டாடப்பட வேண்டிய இருப்பு!மராத்திய எழுத்தாளரான ஆஷா பகேயின் முக்கியமான நாவல்களிலொன்று 'பூமி' பி.ஆர்.ராஜாராமின் மொழிபெயர்ப்பில் தமிழில் 'சாகித்திய அகாதெமி' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஆஷா பகேயின் படைப்புகளில் நான் வாசித்த முதலாவது படைப்பு இந்த நாவல்தான். ஏற்கனவே சாகித்திய அகாதெமியினரால் வெளியிட்டப்பட்ட வங்க நாவலான 'நீலகண்டப் பறவையைத்தேடி', 'தகழி சிவசங்கரம்பிளையின்' ஏணிப்படிகள்' மற்றும் 'தோட்டி', சிவராம காரந்தின் 'மண்ணும் மனிதரும்', எஸ்.கே.பொற்றேகாட்டின் 'ஒரு கிராமத்தின் கதை', எம்.டி.வாசுதேவன் நாயரின் 'காலம்' போன்ற நாவல்களின் வரிசையில் என்னைக்கவர்ந்த இந்திய நாவல்களிலொன்றாக 'பூமி' நாவலும் அமைந்து விட்டது.

இந்த நாவலின் கதையும் வித்தியாசமானது. மராத்திய டாக்டர் ஒருவருக்கும், தமிழ் நர்ஸ் ஒருவருக்கும் மகளாகப்பிறந்தவளே நாவலின் நாயகி. சிறு வயதிலேயே அவள் தந்தையை இழந்து விடுகின்றாள். தாயாரே அவளைக் கண்ணுங்கருத்துமாக வளர்த்து வருகின்றார். நாயகியின் மாணவப்பருவத்திலேயே தாயாரும் நோய்வாய்ப்பட்டு இறக்கும் சூழ்நிலை உருவாகுகின்றது. தாயின் இறுதிக்காலம் மனதை அதிர வைக்கும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளது. நாவலின் முக்கியமான பகுதிகளில் அதுவுமொன்று. தாயாரும் இறந்து விடவே தனித்து விடப்படும் சிறுமியான நாயகியை அவளது தந்தையின் மராத்தியச் சகோதரி பம்பாய்க்குத் தன்னுடன் அழைத்துபோகின்றாள்.

நாவல் தமிழ்நாடு, பம்பாய் என இரு நகரங்களில் நடைபோடுகிறது. அத்தையுடன் வாழும் தன் இளம் பருவத்தில் பகுதி நேர வேலையாக மறைந்த பேராசிரியர் ஒருவரின் செல்வந்த மனைவிக்கு பணிவிடை செய்யும் பணிப்பெண்ணாகவும் வேலை பார்க்கின்றாள். அச்சமயத்தில் பேராசிரியரின் வீட்டு நூலகத்து நூல்களெல்லாம் அவளது இலக்கியப்பசியைத்தீர்த்திட உதவுகின்றன.

மராத்தியக் கலாச்சாரத்தில் வாழும் அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து பெரியவளாகும் நாயகி ஆரம்பத்தில் படிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கினாலும், அவளது வாசிப்புப் பழக்கம் அவளுக்குக் கை கொடுக்கிறது. அவளது ஆளுமையினை ஆரோக்கியமான திசையை நோக்கித்தள்ளி விடுகிறது. அதுவே பின்னர் வெற்றிகரமான பெண்ணாகவும் உருமாற்றி விடுகிறது. அவள் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த அச்செல்வந்தப்பெண்ணின் மகனையே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதும் திருமணமும் செய்து கொள்கிறாள். திருமணத்தின் பின்பு கலாநிதிப்பட்டமும் பெற்று பல்கலைக்கழகவிரிவுரையாளராகப் பணிபுரிகின்றாள்.

•Last Updated on ••Tuesday•, 05 •November• 2019 02:00•• •Read more...•
 

சுர்ஜித்! இனி என்றும் நீ இருப்பாய் எம் இதயங்களில் நிலைத்து

•E-mail• •Print• •PDF•

சுர்ஜித்

- மணப்பாறைக்கு (திருச்சி) அண்மையிலுள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழாய்க்கிணற்றினுள் தவறி விழுந்த இரன்டு வயதுக்குழந்தை சுர்ஜித்தைக் காப்பாற்றுவதற்கான மீட்பதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இறந்த நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. -


மகத்தான பூமியே!! இம்
மண்ணுக்குள் அகப்பட்ட இம்
மழலையை உன்னால்
மீட்டிட முடியவில்லையே!
ஏங்கி, ஏங்கி அப்பிஞ்சு
எவ்வளவு துடித்திருக்கும்?
எப்படியும் தன்னை மீட்பார்களென்று
எண்ணி எதிர்பார்த்திருக்கும்?
உணவின்றி, உறக்கமின்றி
உடல் நொந்து வருந்தியிருக்கும்.
ஏன்? ஏன்? ஏன்?
எதற்காக? எதற்காக? எதற்காக?
இம்மானுடப் பிறப்பு இம்
மண்ணில் எதற்காக?
மலர்ந்து பின் மடியுமிம்
மானுடப் பிறப்பு இம்,
மண்ணில் எதற்காக?
இன்பமொன்றே நியதியாக
இருக்கும் வண்ணம்
இம்மண்ணில் வாழ்வு இல்லையே?
துயர் சூழ்ந்த நிகழ்வுகள்:
துடிக்க வைக்கும் போர்கள்,
இவை போதாதென்று
இவ்விதமான அழிவுகள்
இன்னுமேன் எதற்காக?
தவழ்ந்து நிமிர்ந்த குழந்தை
தடக்கித் துளையினுள் வீழ்ந்து
துடித்து மடிந்ததும் எதற்காக?

•Last Updated on ••Wednesday•, 30 •October• 2019 09:17•• •Read more...•
 

அலைபேசியில் அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளர் வி.என்.மதியழகன்!

•E-mail• •Print• •PDF•

ம் பதின்ம வயதுகளில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஒலிபரப்புச் சேவையில் ஒலித்த குரல்களில் என்னைக் கவர்ந்த குரல்களாகப் பின்வருவோரின் குரல்களைக் கூறுவேன்: இராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீட், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், வி.என். மதியழகன், சற்சொருபவதி நாதன். இவர்களெல்லாரும் தொழிலைத் தெய்வமாக மதித்தவர்கள்; மதிப்பவர்கள். கடுமையான உழைப்பினால் வானொலியில் எவ்விதம் சீராகத் தம் குரல் வளத்தைப் பாவிக்க வேண்டுமென்பதில் திறமையானவர்கள். பன்முக அறிவாற்றலைப் பெருக்கிக்கொண்டவர்கள். அதனால்தான் இன்றுவரை இவர்கள் இன்னும் எம் நினைவுகளில் நிறைந்திருக்கின்றார்கள்.

இன்று காலை என் அலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. சனி காலையே நேரத்துடன் வந்த அழைப்பைத் தவற விட்டுவிட்டேன். ஆனால் அதுவும் ஒரு விதத்தில் நன்மையாகவே முடிந்தது. தனது இன்குரலால், வானொலியில் உரையாற்றுவது போன்றே தன் தகவலையும் அலைபேசியில் பதிவு செய்திருந்தார். அக்குரலில் அத்தகவலைக் கேட்கையில் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒரு காலத்தில் அவர் குரலுக்கு அடிமையாகி அவர் வாசிக்கும் செய்திகளைக் கேட்பதுண்டு. அதே குரலை அதே மாதிரி இன்றும் கேட்க முடிந்தது உண்மையில் மகிழ்ச்சியே. அக்குரலுக்குச் சொந்தக்காரர்: வி.என்.மதியழகன்.

•Last Updated on ••Sunday•, 27 •October• 2019 09:45•• •Read more...•
 

குழாய்க்கிணற்றினுள் குழந்தை! மீண்டு வர வேண்டுவோம்!

•E-mail• •Print• •PDF•

மணப்பாறைக்கு (திருச்சி) அண்மையிலுள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழாய்க்கிணற்றினுள்  தவறி விழுந்த இரன்டு வயதுக்குழந்தை சுர்ஜித்தைக் காப்பாற்றுவதற்காக அனைவரும் போரடிக்கொண்டிருக்கின்றார்கள். தற்போது ஆழ்துளக்கிணறுக்கருகில் இன்னுமொரு துளையிட்டுச் சென்று காப்பாற்றும் வகையில் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. குழந்தையை விரைவில் மீட்டெடுப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்; வேண்டுதல் செய்வோம்.

•Last Updated on ••Saturday•, 26 •October• 2019 23:42•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 353: எழுத்தாளர் நந்தினி சேவியரின் கடல்புத்திரன் பற்றிய முகநூற் பதிவு!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் நந்தினி சேவியர்எழுத்தாளர் நந்தினி சேவியர் தான் படித்த சிறுகதைகள் மூலம் அறிந்த எழுத்தாளர்களையும், அவர்களது சிறுகதைகளில் தனக்குப் பிடித்த சிறுகதையையும் பற்றி முகநூலில் எழுதிவரும் சுருக்கக் குறிப்புகள் முகநூலில் மிகுந்த வரவேற்பைப்பெற்றவை. அவற்றில் அவரது ஆரம்ப அறிமுகக் குறிப்புகளை உள்ளடக்கிய தொகுதி ஒன்று ஏற்கனவே இலங்கையில் கொடகே பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. நந்தினி சேவியரின் இம்முகநூற்  குறிப்புகள் இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்தவை. அதற்காக அவருக்கு தமிழ் இலக்கிய உலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.

அண்மையில் அவர் எழுதிய நானூற்றி எண்பத்தியேழாவது குறிப்பினை வாசித்தேன். பதிவுகளில் தனது சிறுகதைகள் மூலம் அறியப்பட்ட எழுத்தாளர் கடல்புத்திரன் (ந.பாலமுரளி) பற்றியத் அக்குறிப்பு. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். கடல்புத்திரனின் நாற்பத்தியொரு சிறுகதைகளை சிறுகதைகள்.காம் இணையத்தளத்திலும் வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு: http://www.sirukathaigal.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/page/5/


முகநூற் பதிவு: பிடித்த சிறுகதை. - 487 - நந்தினி சேவியர் -

நான் ஒரு மா.ஓ வாத இடது சாரி இயக்கத்தைச் சேர்ந்தவன். 50 வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல், இலக்கிய அனுபவத்துடன் இன்றும் நிறம்மாறாது இருப்பவன். தமிழ் தேசிய இயக்கங்கள் தலையெடுத்த காலத்திலும் அந்த அலைகளில் அள்ளுண்டு போகாதவன். தமிழரசுக்கட்சியின் தீவிர விமர்சனாக இருந்தபோதும் அவர்களின் அபிமானிகள் மத்தியில் எனக்கான நட்புவட்டம் இருந்தது. அதேபோல் இயக்க காலத்திலும் சகல இயக்கக்காரர்கள் மத்தியில் உள்ள இலக்கியக்காரர்களிடம் எனக்கான ஆதரவு இருந்தது. அவர்களுக்கு நான் யாரையும் காட்டிக்கொடுக்கமாட்டேன் என்ற நம்பிக்கை இருந்தது. நான் அரச அராஜக நடவடிக்கைகளுக்கு எதிரானவன் என்பதை அவர்கள் அறிவார்கள். இலக்கிய ரீதியான நட்புடன் என்னோடு பழகிய சிலரை நான் இழந்து விட்டேன். அவர்களில் சகோதரப்படுகொலை செய்யப்பட்டவர்கள் அதிகம். நான் எழுதப்போகும் இவர் ஒரு இயக்கக்காரர். இடதுசாரி சிந்தனையை ஏற்றுக்கொண்ட இயக்கக்காரரே என்னோடு நிறைந்த உறவுடன் இருந்தனர். ஈரோஸ், புளட், ஈபிஆர்எல்எவ். என்எல்எவ்ரி இயக்கங்கள் இதில் குறிப்பிடப்பட வேண்டியவை. நான் 'ஈழமுரசு ' பத்திரிகையிலும் சில காலம் கடமையாற்றியிருக்கிறேன். என் சுயத்தோடு. இவர் முன்நாள் 'புளட் ' இயக்கத்தைச்சேர்ந்தவர். எனக்கு அறிமுகம் இல்லாதவர்.

•Last Updated on ••Saturday•, 26 •October• 2019 22:03•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 352: கடல்புத்திரனுடன் சில நிமிடங்கள்....

•E-mail• •Print• •PDF•

கடல்புத்திரன்- அண்மையில் முகநூலில் எழுதிய பதிவும் அதற்கான எதிர்வினைகள் சிலவும் இங்கு ஒரு பதிவுக்காக. - பதிவுகள் -


அண்மையில் எழுத்தாளர் கடல்புத்திரனுடன் அவரது ஆரம்ப கால இயக்க அனுபவங்களைப்பற்றிய உரையாடலொன்றின் போது அவர் கூறிய ஒரு விடயம் ஆச்சரியத்தைத் தந்தது. இவர் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் படவரைஞர் கற்கை நெறி கற்று விட்டு 'பில்டிங் சுப்பர்வைச'ராக யாழ்ப்பாணத்தில் இயங்கிக்கொண்டிருந்த நிறுவனமொன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இவருடன் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் அதே கற்கை நெறி கற்ற இன்னுமொருவரும் இவருடன் அதே நிறுவனத்தில் அதே வேலை பார்க்கத்தொடங்கினார். பின்னர் அந்நிறுவனத்தில் வேலை முடிவுக்கு வந்ததைத்தொடர்ந்து இருவரும் இயக்கங்களில் இணைந்து போராட முடிவெடுக்கின்றார்கள். இவரது நண்பர் புலிகளுடன் இணைய முடிவெடுக்கின்றார். இவருக்கு எந்த இயக்கத்தில் இணைவது என்பதில் குழப்பம். போதிய விளக்கமில்லை. இன்னும் விளக்கம் வேண்டுமென்று நினைக்கின்றார். இச்சமயத்தில் இவரது நண்பர் தனது மச்சானொருவன் 'புளட்'ட்டில் இருந்ததாகவும்,, ஆனால் அவன் மேற்கு நாடொன்றுக்குச் சென்று விட்டதாகவும், வேண்டுமானால் அவன் வைத்திருந்த அரசியல் பிரசுரங்கள் எல்லாம் தன்னிடமிருப்பதாகவும், அவற்றைக் கொண்டு வந்து தருவதாகவும் கூறுகின்றார். இவரும் அதற்குச் சம்மதிக்கவே இவரது நண்பர் அப்பிரசுரங்கள், நூல்களையெல்லாம் கொண்டுவந்து இவரிடம் கொடுக்கின்றார். அவற்றை வாசித்து விட்டு இவர் முடிவெடுக்கின்றார் 'புளட்'டில் இணைவதாக. அதே சமயம் இவரது நண்பரோ புலிகளுடன் இணைந்து விட்டார். பின்னர் அவர் போராட்டத்தில் மரணித்தும் விட்டார்.

இது எனக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது. புலிகளுடன் இணைந்து போராடச் சென்ற ஒருவர் தன் நண்பருக்கு புளட்டிலிருந்த மச்சானின் அரசியல் பிரசுரங்கள், நூல்களைப் படிக்கக் கொடுக்கின்றார். தன்னுடன் வா என்று அவர் அழைக்கவில்லை. இவ்விதம்தான் 83 இனக்கலவரத்தையடுத்து ஆயிரக்கணக்கில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிப்போராடப் புறப்பட்டார்கள். அதற்குக் காரணம் அன்றைய ஜே.ஆரின் அரசின் அடக்குமுறைகள். அவ்விதம் புறப்பட்டவர்களுக்கிடையில்; இயக்கரீதியான முரண்பாடுகள் எவையுமிருக்கவில்லை. இயக்கமெதுவானாலும் போராடச் சென்றால் சரி என்ற எண்ணமே இருந்தது. ஆனால் பின்னர் இவ்விதம் போராடப்புறப்பட்டவர்கள் ஒருவரையொருவர் கொன்று குவிக்கும் நிலை ஏற்பட்டது துரதிருஷ்ட்டமானது.

•Last Updated on ••Saturday•, 26 •October• 2019 22:51•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 351 : கிடைத்தது சாண்டில்யனின் ஜீவபூமி (ராணிமுத்து)

•E-mail• •Print• •PDF•

என் வாசிப்புப் பழக்கம் தொடங்கியது நானென் குடும்பத்தவருடன் வசித்து வந்த வவுனியாவில்; என் பால்ய பருவத்தில். வாசிப்பு என்பது அக்கினிக் குஞ்சு போன்றது. விரைவாகவே பெருஞ்சுவாலையுடன் பற்றியெரியத்தொடங்கிவிடும். அதனால்தான் அக்காலகட்டத்தில் வாசித்த பல்வகை வெகுசன இதழ்களில் வெளியான புனைகதைகளெல்லாம் இன்றும் அழியாத் கோலங்களாக நினைவில் நிலைத்து நிற்கின்றன. அவ்விதம் அவை இன்றும் இனிமை தருவதற்கும் , நினைவில் நிலைத்து நிற்பதற்கும் மிகவும் முக்கியமான காரணம் அவை மானுட வாழ்வின் இனிமையான ஒரு பருவத்தை மீண்டும் நினைவில் கொண்டுவருவதால்தான்.

என் பால்ய பருவத்தில் எவ்விதம் வாசிப்பு என்னை ஆட்கொண்டது என்பது பற்றி அவ்வப்போது முகநூலில் எழுதியிருக்கின்றேன். அம்புலிமாமா, ராணி, ராணிமுத்து, கல்கி, விகடன், கலைமகள், தினமணிக்கதிர், கல்கண்டு, பொம்மை, பேசும்படம், பொன்மலர் (காமிக்ஸ்), பால்கன் (காமிக்ஸ்), வேதாள மயாத்மா பற்றிய இந்திரஜால் காமிக்ஸ் , குமுதம், ஈழநாடு (யாழ்ப்பாணம்), வீரகேசரி, மித்திரன், தினகரன், தினமணி.. இவ்விதம் சஞ்சிகைகளை, நூல்களை வாங்கி வீடெல்லாம் குவித்து வைத்தார் அப்பா. இவற்றுடன் தனக்கு மேலதிகமாக பென்குவின் பதிப்பக நூல்களை, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளையெல்லாம் வாங்கினார் அப்பா. இதனால் என் ஒன்பதாவது வயதிலேயே பெரும்பாலான தமிழகத்தின் வெகுசன இதழ்களில் வெளியான தொடர்கதைகளை, சிறுகதைகளை, கவிதைகளை, குறுநாவல்களை, முழுநாவல்களையெல்லாம் தீவிரமாக வாசிக்கத்தொடங்கி விட்டிருந்தேன். இவ்விதம் வெளியாகும் படைப்புகளை வாசிப்பதற்காக வீட்டில் எப்போதும் குழந்தைகள் எமக்கிடையில் போட்டி நிலவும். அவ்வப்போது எல்லோரும் சுற்றிவர இருந்து சஞ்சிகைகளில் வெளியான படைப்புகளை அத்தியாயம், அத்தியாயமாகச் சேகரித்து 'டுவைன்' நூல் கொண்டு , கட்டி வைப்போம்.

இவ்விதமாக 'பைண்டு' செய்யப்பட்ட என்னிடமிருந்த முக்கியமான படைப்புகளாகப் பின்வருவனற்றைக் கூறுவேன்:
•Last Updated on ••Wednesday•, 23 •October• 2019 08:26•• •Read more...•
 

கவிதை: சேகுவேரா!

•E-mail• •Print• •PDF•

மாவீரன் சேகுவேரா!

மானுட விடுதலைக்காகத்
தன்னுயிர் தந்த
மாவீரன்.
மறைந்தும் இவன் புகழ்
இன்னும்
மங்கவில்லை மானுடர்தம்
மனங்களில்.

மரணப்படுக்கையிலும் இவன்
மனவுறுதி மலைக்க வைப்பது.

இவன் சிந்தனைகள்,
இவன் எழுத்துகள்
இவன் வாழ்வு
போர் சூழ்ந்த உலகில்
படிக்க வேண்டிய பாடப்
புத்தகங்கள்.

•Last Updated on ••Thursday•, 10 •October• 2019 00:22•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 350 : மறக்க முடியாத காண்டேகர்!

•E-mail• •Print• •PDF•

'காந்தியப் பண்பும் 'வெண்முகில்' நாவலும் ' என்னும் தலைப்பில் எழுத்தாளர் காண்டேகரின் நாவலான 'வெண்முகில்' பற்றிய திருமதி.பா.சுதாவின் ஆய்வுக்கட்டுரை ( தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளிலொன்று; பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது) காண்டேகர் பற்றிய நினைவலைகளை ஏற்படுத்தி விட்டதெனலாம்.

என் பதின்ம வயதுகளில் வாசிப்பு வெறி பிடித்துத் தேடித்தேடி வாசித்த எழுத்தாளர்களில் காண்டேகருக்கு முக்கியமானதோரிடமுண்டு. மராட்டிய எழுத்தாளரான காண்டேகர் தமிழில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களிலொருவராக அறுபதுகளில், எழுபதுகளில் விளங்கிக் கொண்டிருந்தார். எழுத்தாளர் கா.ஶ்ரீ.ஶ்ரீயின் சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான காண்டேகரின் நாவல்களைத் தமிழ் வாசகர்கள் விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்தார்கள். காண்டேகரின் பல படைப்புகள் பல தமிழில் வெளியான பின்னரே மராத்தியில் வெளியாகின என்று எழுத்தாளர் ஜெயமோகன் காண்டேகர் பற்றிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகின்றது. அவ்வளவுக்குக் காண்டேகரின் புகழ் தமிழ் இலக்கிய உலகில் பரவியிருந்தது.

•Last Updated on ••Wednesday•, 23 •October• 2019 00:32•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 349: ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி!

•E-mail• •Print• •PDF•

ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி'புகலிடத் தமிழ் நாவல்களில் உலக இலக்கியத்துக்கு வளம் சேர்த்த புனைவுகளில் ஒன்றாக நிச்சயம் ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' படைப்பினைக் கூறுவேன்.

ஒரு நல்ல படைப்பானது தனது மறு வாசிப்புகள் மீதான ஆர்வத்தினை எப்பொழுதும் தூண்டிக்கொண்டேயிருக்கும். . ஒவ்வொரு வாசிப்பிலும் அது புதியதோர் அனுபவத்தினைத் தருமொன்றாக அமைந்திருக்கும். அவ்வகையான புனைவுகளிலொன்றுதான் ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' நாவலும்.

முழுக்க முழுக்கப் புகலிட அனுபவங்களையே மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்கள் குறைவு. எனது 'அமெரிக்கா' , 'குடிவரவாளன்' ஆகியவை அவ்வகையானவை. இளங்கோ என்னும் இலங்கைத் தமிழ் அகதியின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வையும், அதன் பின்னரான நியூயார்க் மாநகரில் அவனது இருப்புக்கான போராட்டத்தினையும் விபரிக்கும் நாவல்கள் அவை. ஆனால் அவற்றில் கூட பிறந்த மண்ணின் சமூக, அரசியல் நிலைமைகள் விபரிக்கப்படுகின்றன. ஆனால் ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் புகலிட வாழ்வினை முழுமையாக விபரிக்கும் நாவல். நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை'யும் புகலிடத் தமிழர்தம் வாழ்வினை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல்களிலொன்று.

லெனின் சின்னத்தம்பி பணிபுரியும் உணவகத்தின் முதலாளி சப்கோஸ்கி, அவனது மனைவி, அவனுக்குக்கீழ் தொழிலாளிகளைக் கண்காணித்து வேலை வாங்கும் இடைநிலைத்தொழிலாளர்களான சண்டைக்காரன் (திருவாளர் ஸ்ரைற்ரர்) , அக்சல் குறுப்ப இவர்களை மையமாக வைத்து. உணவகம் திவாலாகப் போகும்வரையிலான நிலையினை விபரிப்பதுதான் இந்த நாவலின் முக்கிய நோக்கம்.

எழுத்தாளர் ஜீவமுரளி திறமையான கதைசொல்லிகளிலொருவர் என்பதற்கு நல்லதோர் அத்தாட்சி 'லெனின் சின்னத்தம்பி'.

'கெவ்ரர் பார்ட்டி சேவீஸ்' என்ற உணவகத்தில் சமையல் பாத்திரங்களைக் கழுவி வயிறு வளர்க்கும் கோப்பை கழுவுமொரு தொழிலாளியான 'லெனின் சின்னத்தம்பி'யின் வாழ்வினை அவர் வேலை பார்க்கும் உணவகம் 'திவாலா'கப் போகும் வரையில் விபரிக்கும் நாவல் அவரது வேலை அனுபவங்களை, அவருடன் வேலை பார்க்கும் சக மனிதர்களின் உளவியலை, நிறுவனத்தின் வர்த்தக நிலையினை, அது எதிர்நோக்கும் சவால்களை, அது பணி புரியும் தொழிலாளர்கள் மேல் ஏற்படுத்தும் பாதிப்புகளைச் சுவையாக, சிறப்பான மொழி நடையில் வெளிப்படுத்துகின்றது.

•Last Updated on ••Wednesday•, 23 •October• 2019 00:33•• •Read more...•
 

தமிழ்நதியின் 'பார்த்தீனியம்'

•E-mail• •Print• •PDF•

- கணையாழி சஞ்சிகையின் அக்டோபர் (2019) இதழில் வெளியாகியுள்ள தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவல் பற்றிய என் விமர்சனக் கட்டுரை. -


அண்மையில் வெளியான தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவலின் முதற்கட்ட வாசிப்பின்போது அதன் வெளியீட்டு விழாவில் ஜான் மாஸ்ட்டர் கூறிய கருத்தொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவர் இதனை ஒரு கோணத்தில் பார்த்தால் ஒரு காதல் கதையாகவும் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எனக்கு வித்தியாசமான காதற்கதையாகத்தான் நாவலில் விபரிக்கப்பட்டிருந்த காதற்கதையும் தென்பட்டது.

நாவலின் பிரதான பாத்திரமான புலிகள் இயக்கத்தில் பரணி என்றழைக்கப்படும் போராளிக்கும், வானதி என்னும் பெண்ணுக்குமிடையிலான காதல் வாழ்வின் தொடக்கத்தில் அவன் இயக்கத்தில் சேர்ந்து , இந்தியாவுக்குப் பயிற்சிக்காகச் செல்கின்றான். செல்லும்போது 'எனக்காகக் காத்து நிற்பீர்களா?' என்று கேட்கின்றான். இவளும் அவனுக்காகக் காத்து நிற்பதாக உறுதியளிக்கின்றாள். அவ்விதமே நிற்கவும் செய்கின்றாள். இது உண்மையில் எனக்கு மிகுந்த வியப்பினைத்தந்தது. சொந்த பந்தங்களை, பந்த பாசங்களையெல்லாம் விட்டு விட்டு இயக்கத்துக்குச் செல்லும் ஒரு போராளி தான் விரும்பியவளிடம் தனக்காகக் காத்து நிற்க முடியுமா என்று கேட்கின்றான். போராட்ட வாழ்வில் என்னவெல்லாமோ நடக்கலாம், நிச்சயமற்ற இருப்பில் அமையப்போகும் வாழ்வில் இணையப்போகுமொருவன் தன் குடும்பத்தவர்களை விட்டுப் பிரிவதைப்போல, தன் காதலுக்குரியவளையும் விட்டுப்பிரிவதுதான் பொதுவான வழக்கம். ஆனால் இங்கு நாவலில் தன் வாழ்க்கையையே விடுதலைக்காக அர்ப்பணிக்கப்போகும் ஒருவன் , ஏதோ வெளிநாட்டுக்கு வேலை பெற்றுச்செல்லும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியிடம் கேட்பதுபோல் கேட்டு உறுதிமொழி பெற்று விட்டுச் செல்கின்றான். இது நாவலின் புனைவுக்காக எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். உண்மையில் அவ்விதமான சூழலில் பிரியும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியைப் பார்த்து தன் எதிர்காலம் நிச்சயமற்றிருப்பதால், மீண்டும் வந்தால் , இலட்சியக்கனவுகள் நிறைவேறினால் , மீண்டும் இணையலாம் அல்லது அவள் தனக்காகக் காத்து நின்று வாழ்வினை வீணாக்கக் கூடாதென்று அறிவுரை செய்திருக்கத்தான் அதிகமான வாய்ப்புகளுள்ளன. போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ளச் சென்றுவிட்ட அவனுக்காக அவளும் கனவுகளுடன் மீண்டும் இணைவதையெண்ணிக் காத்திருக்கின்றாள். இவ்விதமாக நகரும் வாழ்வில் அவள் யாழ் பல்கலைக்கழக அனுமதி பெற்றுச் செல்கின்றாள்.

•Last Updated on ••Tuesday•, 01 •October• 2019 00:37•• •Read more...•
 

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் 'தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள்' என்னும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கத்துக்கான எனது வாழ்த்துச் செய்தி!

•E-mail• •Print• •PDF•

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் 'தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள்' என்னும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கத்துக்கான எனது வாழ்த்துச் செய்தி!இன்று தமிழகத்தில் நடைபெறுகின்ற தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் 'தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள்' என்னும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கத்துக்கான எனது வாழ்த்துச் செய்தியினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.


தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் (தன்னாட்சி) ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தேசியக் கருத்தரங்கத்துக்குப் பதிவுகள் இணைய இதழும் இணைந்து தன் பங்களிப்பை நல்க வேண்டி முனைவர் வே.மணிகண்டன் அவர்கள் தொடர்புகொண்டபோது மகிழ்வுடன் இணங்கினேன். முனைவர் வே.மணிகண்டன் வழி நடத்திலில் ஏற்கனவே இளமுனைவர் பட்ட ஆய்வுக்கு எனது படைப்புகள் மற்றும் பதிவுகள் இணைய இதழ் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இணைய இதழ்களின் ஆரோக்கியமான பங்களிப்பை நன்கு பயன்படுத்தும் முனைவர் வே.மணிகண்டனின் முயற்சியால் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கு தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் ஒன்றாக அமையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

அதே சமயம் 2000ஆம் ஆண்டிலிருந்து , 'அனைவருடனும் அறிவைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் செயற்பட்டு வரும் 'பதிவுகள்' இணைய இதழின் இதுவரை காலப்பங்களிப்பையிட்டு எனக்கு மனத்திருப்தி நிறையவே உண்டு.

இணையத்தில் தமிழின் பாவனையை எழுத்தாளர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் அதிகரிப்பதையும், என் படைப்புகளை வாசகர்கள், எழுத்தாளர்களுடன் பகிர்ந்து கொள்வதையே முக்கிய நோக்கங்கங்களாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட 'பதிவுகள்' இணைய இதழை வாசகர்கள், எழுத்தாளர்களின் தொடர்ச்சியான பங்களிப்பு முக்கியமான இணைய இதழ்களிலொன்றாக மாற்றி விட்டது. அத்துடன் தமிழகப் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரின் பங்களிப்பு 'பதிவுகள்' இணைய இதழினை இன்று முக்கியமான பன்னாட்டு இணைய ஆய்விதழாகவும் மாற்றியுள்ளது.

தமிழிலக்கிய ஆய்வுகளுக்குப் 'பதிவுகள்' இணைய இதழ் களமமைத்துக் கொடுத்து வருவதையிட்டு நான் உண்மையில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றேன். அதே சமயம் 'பதிவுக'ளின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா), பேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு), பேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்) மற்றும் எழுத்தாளர் லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா) ஆகியோர் பதிவுகளுக்கு ஆலோசகர்களாகவிருந்து ஆற்றும் பங்களிப்பும் விதந்தோதப்பட வேண்டியது. ஆரம்பத்தில் ஆலோசகர்களிலொருவராக விளங்கியவரும், பதிவுகள் இணைய இதழில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவருமான அமரர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) அவர்களையும் இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன்.

•Last Updated on ••Wednesday•, 25 •September• 2019 08:18•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 348 : தேவகாந்தனின் 'நவீன தமிழ் இலக்கியம்: ஈழம் - புகலிடம் - தமிழகம்'

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் : தேவகாந்தனின் 'நவீன தமிழ் இலக்கியம்: ஈழம் - புகலிடம் - தமிழகம்' அக்டோபர் 5 அன்று 'டொராண்டோ'வில் வெளியிடப்படவுள்ள எழுத்தாளர் தேவகாந்தனின் ஐந்து நூல்களிலொன்று 'நவீன இலக்கியம்: ஈழம் -  புகலிடம் - தமிழகம்".  பூபாலசிங்கம் (இலங்கை) பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட நூல். தேவகாந்தனின் பதினாறு கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகள் பேசும் விடயங்களாக தமிழ்க்கவிதைகளின் செல்நெறி, இலங்கைத்தமிழ்க் கவிதைகள் பற்றிய வரலாற்றுப் பார்வை, இலங்கைத்தமிழ் நாவல்கள் பற்றிய விமர்சனப் பார்வை, வல்லிக்கண்ணன், ஜெயகாந்தன் மற்றும் நா.பார்த்தசாரதி போன்றோரின் படைப்புகள் , தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய நோக்கு, புலம் பெயர் இலக்கியம், மலேசிய இலக்கியம், பின் காலனித்துவ இலக்கியம், கனடா இலக்கியச் சஞ்சிகைகள் இவற்றுடன் மு.தளையசிங்கத்தின்  படைப்புகள் ஆகியன அமைந்துள்ளன. கட்டுரைகள் 1998 -2018 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவை.

தேவகாந்தன் அவர்கள் முகத்துக்காக எழுதுபவரல்லர். தனக்குச் சரியென்று பட்டதை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர். இங்குள்ள கட்டுரைகளில் அவரது இவ்வாளுமையினைக் காணலாம். அவரது சிந்தனை வீச்சினைக் காணலாம். ஒருவரது படைப்புகளை வாசித்துச் சிந்தித்து அவர் எடுக்கும் முடிவுகளிலிரிந்து இதனை அவதானிக்கலாம். உதாரணத்துக்கு மு.தளையசிங்கத்தின் படைப்புகளிலிருந்து அவர் எடுக்கும் பின்வரும் முடிவினைக் கூறலாம்:

"சர்வோதயம் சார்ந்து அவர் எவ்வளவுதான் பின்னாளில் எழுதியிருந்தாலும் , இச்சிறுகதை உருவான காலத்தில் ஒரு தமிழ்த் தேசியவாதியாக தன்னை உணர்ந்துள்ளார் மு.த. அதுவும் இறுக்கமான நடவடிக்கைகள் அவசியமென்ற கருத்துக்கொண்டு. அப்படியில்லை என்று வாதிடுவதெல்லாம் வீண்."
(பக்கம் 118; கட்டுரை 'படைப்பினூடாக படைப்பாளியை அறிதல்: மு.த. குறித்தான ஓர் இலக்கிய விசாரணை'.)

தொகுப்பின் கட்டுரைகள் கவிஞர்கள், சிறுகதையாசிரியர்கள், நாவலாசிரியர்கள் எனப் படைப்பாளிகள் பலரை அவர்கள் தம் எழுத்துகளை, சஞ்சிகைகள், இணைய இதழ்களை அறிமுகப்படுத்துவதுடன் தேவகாந்தனின் கருத்துகளையும் கூடவே வெளிப்படுத்துகின்றன. நவீனத் தமிழ்க் கவிதைகள் கூறும் பொருள் பற்றிக் குறுப்பிடுகையில் "இன்றைய தமிழ்க் கவிதையின் தளம் மிக விஸ்தீரணமானது.  அதுமனுக்குலம் எதிர்நோக்கும் புதிய புதிய பிரச்சினைகளைப் பேசுகின்றது. மனித அவலங்களை, நம்பிக்கைகளை, பெண்ணிய எழுச்சிகளை, ஜனநாயக அறை கூவல்களைப் பேசுகின்றது.  சில கவிதைகள் யுத்தங்களின் நியாயத்தை, சில கவிதைகள் ஆயுதங்களின் நாசத்தை மொழிகின்றன. சில் பொருளாதாரத்தளத்தில்  மூன்றாம் உலக நாடுகளின் பொதுக் கொடுமைகளான பசி, பிணி, அறியாமை பற்றியும் , சில உலகப் பொதுப் பிரச்சினைகளான விபசாரம், எயிட்ஸ் நோய் போன்றன குறித்தும் பிரஸ்தாபிக்கின்றன. பேசப்படும் பொருள் அது குறித்து ஒரு பொது அடையாளத்தைப் பொறித்திருப்பினும் அவற்றுக்கு விசேட அடையாளங்களுமுண்டு. இத்தனிப்பண்புகள் கவிதைத்தரத்தை நிர்ணயிக்க, பொதுப்பண்புகள் கவிதைச் செல்நெறியை வரைகின்றன." (பக்கம் 1 & 2;  கட்டுரை 1: 'சமகால தமிழ்க்கவிதைகளின் செல்நெறி குறித்து....) என்று அவர் கூறுவது ஓருதாரணம்.

•Last Updated on ••Wednesday•, 23 •October• 2019 00:33•• •Read more...•
 

49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி)

•E-mail• •Print• •PDF•

•Last Updated on ••Friday•, 20 •September• 2019 05:53••
 

காலத்தால் அழியாத கானங்கள்: அபிமான் திரைப்படப்பாடல்கள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

காலத்தால் அழியாத கானங்கள்: அபிமான் திரைப்படப்பாடல்கள் இரண்டு!1. காலத்தால் அழியாத கானங்கள் : 'அபுது கே துமசி கரு குஷி அபுனி'

ஜெயாபாதுரி, லதா மங்கேஷ்கார், எஸ்.டி.பர்மன் & மஜ்ரூத் சுல்தான்பூரி கூட்டணியில் உருவான இன்னுமொரு நெஞ்சிற்கினிய 'அபிமான்' பாடல் 'அபுது கே துமஷி கரு குஷி அபுனி'. filmy Quotes இணையத்தளத்திலிருந்த இப்பாடலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பினைத் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கின்றேன்.

படம்: அபிமான்
இசை: எஸ்.டி.பர்மன்
பாடகர்: லதா மங்கேஷ்கார்
பாடல் வரிகள்: மஜ்ரூத் சுல்தான்பூரி
https://www.youtube.com/watch?v=emKJ5_cMEHk

இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..
இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்
என் வாழ்க்கை இருப்பது உனக்குத் தியாகம் செய்வதற்காகத்தான்.
இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..

இப்போழுது எனது இதயமானது உன்மீது பித்துப்பிடித்துள்ளது.
இப்போழுது எனது இதயமானது உன்மீது பித்துப்பிடித்துள்ளது.
உலகம் என்ன கூறுகின்றது என்பது பற்றி எனக்குக் கவலையில்லை.
என் உறவினர்கள் யாரும் என்னைப்பற்றி என்ன கூறுகின்றார்கள் என்பது பற்றி.
எனக்குக் கவலையில்லை.

இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..

உன்மீதான காதலால் என் பெயரானது அதிக அளவில் கெட்டு விட்டது.
உன்மீதான காதலால் என் பெயரானது அதிக அளவில் கெட்டு விட்டது.
நான் உன்னுடன் இணைந்து புகழும் பெற்றுள்ளேன்.
யாருக்குத் தெரியும் எனது அமைதியின்மை என்னை எங்கே கொண்டு செல்லுமென்று.

இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..

•Last Updated on ••Friday•, 20 •September• 2019 05:53•• •Read more...•
 

மாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியீடாக 'புவி எங்கும் தமிழ்க் கவிதை'

•E-mail• •Print• •PDF•

மாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியீடாக 'புவி எங்கும் தமிழ்க் கவிதை'எழுத்தாளர் மாலன்சாகித்திய அகாதெமி (சென்னை) நிறுவனத்தினர் எழுத்தாளர் மாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியிட்டிருந்த 'புவி எங்கும் தமிழ்க் கவிதை' நூலின் நான்கு பிரதிகளைத் தபால் மூலம் அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு நன்றி.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் முடிந்தவரையில் கவிதைகளைத் திரட்டித் தொகுத்துள்ளார் மாலன். சிறப்பானதொரு கவிதைத்தொகுதியினைத் தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ள சாகித்திய அகாதெமியினருக்கும், தொகுத்த எழுத்தாளர்
மாலனுக்கும், தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்களுக்கும் வாழ்த்துகள் .

தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்கள் மற்றும் அவர்கள்தம் கவிதைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:

அமெரிக்கா:

1. கோகுலக் கண்ணன் - அகராதியில் விழுந்த குழந்தை, ஒளியில் குழந்தை
2. பெருந்தேவி - உடைமை
3. வேதம் புதிது கண்ணன் - வீடுபேறு, மணம்
4. கவிநயா - கைப்பைக் கனவுகள்

ஆஸ்திரேலியா:

1. ஆழியாள் - உப்பு, குமாரத்தி

இங்கிலாந்து:

1. நா.சபேசன் - நான் காத்திருக்கிறேன்
2. தவ சஜிதரன் - படர்க்கை
3. நவஜோதி ஜோகரட்னம் - சதா மெளனம், வயது வந்தாலென்ன

இலங்கை:

1. நுஃமான் - பிணமலைப் பிரசங்கம், துப்பாக்கி பற்றிய கனவு
2. அனார் - இரண்டு பெண்கள்
3. சோலைக்கிளி - எலி
4. தீபச்செல்வன் - ஒரு கொரில்லாவின் இறுதிக் கணம்
5. எம்.ரிஷான் ஷெரீப் - ஆட்டுக்குட்டிகளின் தேவதை
6. அபார் - தாள் கப்பல்
•Last Updated on ••Friday•, 20 •September• 2019 05:23•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 347: நண்பர் வேந்தனார் இளஞ்சேயின் இன்னுமொரு கருத்துப்பகிர்வு!

•E-mail• •Print• •PDF•

வேந்தனார் இளஞ்சேய்"நண்பர் வேந்தனார் இளஞ்சேய் புலனத்தில் யாழ் இந்து நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட இன்னுமொரு கருத்துப் பகிர்வு; பகிர்ந்துகொள்கின்றேன். இளஞ்சேய் என் பால்ய காலத்திலிருந்து நண்பராகவிருக்குமொருவர். அக்காலகட்டத்தில் நாமிருவரும் எம்மிடமுள்ள புனைகதைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி வாசித்து மகிழ்வோம். அவர் சிறந்த பேச்சாளர்; கவிஞர்; எழுத்தாற்றல் மிக்கவர். பயனுள்ள அவரது கருத்துகளுக்காக மீண்டுமொருமுறை நன்றி." - வ.ந.கிரிதரன் -


இளஞ்சேய்:

"அன்பிற்குரிய பள்ளிக்கால நண்பர்களே, எம் பள்ளித்தோழன் கிரிதரனின் "அமெரிக்கா" என்ற குறுநாவல், மற்றும் "குடிவரவாளன்" என்ற நாவல், இவ்விரண்டு நூல்களையும் கடந்த சனி- ஞாயிறு முழுமையாக வாசித்தேன். நான் நூல்களை வாசிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவன். அந்த வகையில் கிரிதரன் என்னை கனடாவில் சந்தித்தபோது, அவரின் பல ஆக்கங்களில்- மேற்கண்ட இரண்டை எனக்குத் தந்திருந்தார். இந்த இரு நாவல்களையும் , இவ்வாறு நாட்டைவிட்டு, செய்த நல்ல வேலைகளை விட்டு , வெளிநாடுகளுக்கு , பெரும் செலவு செய்து , பலவித இன்னல்களுக்குட்பட்டு வந்து, வாழ்க்கையை மிகவும் அடித்தளத்தில் இருந்து தொடங்கி, இன்று தம் கடுமையான முயற்சியினால் உயர்வடைந்துள்ள நம்மவர்கள், எல்லோரும் வாசிக்கவேண்டும் . இந் நாவல்கள் ஆங்கிலத்திலும் வந்துள்ளன. இதனை எமது பிள்ளைகளுக்கு வாசிக்கக் கொடுக்க வேண்டும்.

இலங்கையில் இனக்கவரம் ஏற்படுத்திய அழிவுகள், படித்து முடித்து நல்ல உத்தியோகங்களில் இருந்தவர்களும், எல்லாவற்றையும் துறந்து , உயிரைக் காப்பாற்ற , புலம் பெயர் நாடுகளிற்கு சென்று, புலத்தில் இனக்கலவரத்தால் அலையுண்டு திரிந்த தம் உறவுகளுக்கு பணம் அனுப்ப அவர்கள் பட்ட பாடு, அவர்கள் வாழ்ந்த வாழ்வு, இவை எல்லாம் ஆவணப்படுத்தப் படல் வேண்டும். ஒவ்வொரு ஈழத் தமிழனின் இன்றைய புலம்பெயர் வாழ்வும், அவன் காலத்திய பிரச்சனைகளை, உறவுகளை விட்டு, ஊரை, உத்தியோகத்தைத் துறந்து , பனியிலும்- குளிரிலும்- கடும் வெய்யிலிலும் , அவன் உழைத்த உழைப்பை, தனிமையில் அவன் தவித்த தவிப்பை எல்லாம், நம் வருங்கால சமுதாயம் உணர்தல் வேண்டும்.

•Last Updated on ••Tuesday•, 20 •August• 2019 09:17•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 346: இந்தியத் தொல்லியல் துறை விட்ட தவறும், நம்பிய கலை, இலக்கிய விமர்சகர் இந்திரனும்!

•E-mail• •Print• •PDF•

அண்மையில் பிரபல கலை, இலக்கியத்திறனாய்வாளர் தனது முகநூற் பதிவொன்றாகக் காஞ்சி கைலாசநாதர் ஆலயம் பற்றியொரு குறிப்பினையிட்டிருந்தார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

"காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சினங்கொண்ட சிவனின் காலடியில் மிதிபடும் அரக்கனின் வலியில் கதறும் முகபாவம் தமிழர்களின் சிற்ப சாதனை.சிவனின் உடல் மொழியைக் கவனியுங்கள்.வலது கையில் ஜாக்கிரதை என்று எச்சரிக்கிறார்.துரதிருஷ்டவசமாக மணல் கல்லால் கட்டப்பட்ட இக்கலைக்கோயில் முதலாம் நரசிம்மவர்மனால் ( இராஜசிம்மன்) கி.பி.700- 728 கட்டப்பட்டது.அதிட்டானம் பகுதி மட்டும் கருங்கல்லில். இது சமணக் கோயிலாக இருந்து பின் சிவன் கோயிலாக மாற்றப்பட்டதாக மயிலை சீனி குறிப்பிடுகிறார்.மழையில் கரைந்து வரும் இக்கோயிலை எப்படி காப்பாற்றுவது?"

இதில் கோயிலைக்கட்டிய மன்னனான இராஜசிம்மனைத் தவறுதலாக முதலாம் நரசிம்மவர்மன் என்று குறிப்பிட்டிருந்தார். இதுவோர் தற்செயலான தவறு. அவருக்கு நிச்சயம் கட்டியவர் யாரென்று தெரிந்திருக்கும். எழுதும்போது தவறுதலாக இது போன்ற பிழைகளை நாம் அனைவரும் செயவதுண்டு.

அவரது பதிவை வாசித்தபோது இதனைக் கண்ட நான் அவரது பதிவிலேயே எதிர்வினையொன்றினை

"Giritharan Navaratnam //இக்கலைக்கோயில் முதலாம் நரசிம்மவர்மனால் ( இராஜசிம்மன்) கி.பி.700- 728 கட்டப்பட்டது// இரண்டாம் நரசிம்மவர்மன் என்று அழைக்கப்பட்ட ராஜசிம்மனால் கட்டப்பட்டது. முதலாம் நரசிம்மவர்மனே மாமல்லர்." என்று இட்டிருந்தேன்.

தற்செயலாக மீண்டும் அப்பதிவு என் கண்களில் பட்டது. வியப்பாகவிருந்தது. அப்பதிவு இன்னும் அத்தவறுடனேயே காணப்பட்டது. அப்பதிவுக்கு எதிர்வினையாற்றிய ஏனைய எவருமே இத்தவறினைச் சுட்டிக்காட்டவுமில்லை.

மீண்டும் அவருக்கு உட்பெட்டியில் இதனைச் சுட்டிக்காட்டித் தகவல் அனுப்பியிருந்தேன். அதற்குப் பதிலாக இந்திரன் அவர்கள் "தொல்லியல்துறையின் அறிவிப்பைப் பாருங்கள் நண்பரே"  என்று பதிலிட்டிருந்ததுடன் , இந்தியத் தொல்லியல் துறையினரின் அறிவிப்புப் பலகையொன்றின் புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார்.

நிச்சயமாக நான் இவ்விதமான பதிலொன்றினைக் கலை,இலக்கியத் திறனாய்வாளர் ஒருவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவர் கூறிய இந்தியத் தொல்லியல்துறையினரின் அறிவிப்புப் பலகையில் காஞ்சி கைலாசகோயிலைக் கட்டியவர் முதலாம் நரசிம்மவர்மன் என்றுதான் தமிழில் எழுதப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினரின் அறிவிப்புப் பலகையில் அவ்விதம் தமிழில் எழுதப்பட்டிருந்தால் பொய் உண்மையாகி விடுமா? கல்கியின் சிவகாமியின் சபதம் வாசித்த சாதாரண வாசகர் ஒருவருக்கே தெரியும் மாமல்லரும் முதலாம் நரசிம்மவர்மரும் ஒருவரே என்பது. காஞ்சி கைலாசதர் ஆலயத்தைக் கட்டிய ராஜசிம்ம பல்லவன் முதலாம் நரசிம்மவர்மன் அல்லர் என்பது சாண்டில்யனின் ராஜதிலகம், ஜெகசிற்பியனின் மகரயாழ் மங்கை போன்ற சரித்திர நாவல்களைப்படித்த சாதாரண வாசகர் ஒருவருக்குத் தெரியும். இந்நிலையில் இந்தியத் தொல்லியல் துறையினரிட்ட தவறினை இதுவரை யாருமே கண்டுகொள்ளாதது வியப்பினைத் தருகின்றது. தவறினைச் சுட்டிக்காட்டியும் அதனை எழுதிய கலை, இலக்கிய விமர்சகர் இந்திரன் அதனை மறுத்தது இன்னும் வியப்பினைத்தருகின்றது. இந்திரன் அவர்கள் இந்தியத்தொல்லியல் துறையின் அறிவிப்புப்பலகையின் ஆங்கில விளக்கத்தைப் படித்திருப்பாரானால் அதில் தொல்லியல்துறை சரியாக இரண்டாம் நரசிம்மவர்மனான ராஜசிம்மன் என்று எழுதியிருப்பதை அறிந்திருப்பார். தொல்லியல்துறையின் தவறினையும் அறிந்திருப்பார். தமிழுக்கு இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் நிலை ஒன்றுதான்.
•Last Updated on ••Tuesday•, 20 •August• 2019 08:36•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 345: மன ஓசை வெளியிட்ட மூன்று நூல்கள் பற்றிய குறிப்பு!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன்அண்மையில் எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின் 'மனஓசை' பதிப்பக வெளியீடுகளாக வெளியான மூன்று நூல்கள் கிடைத்தன. இதற்காக அவருக்கு என் நன்றி. இவற்றில் இரு நூல்கள் அவர் எழுதியவை. அடுத்தது அவரது கணவரும் எழுத்தாளரும், ஓவியருமான மூனா (ஆழ்வாப்பிள்ளை தெட்சணாமூர்த்தி செல்வகுமாரன்) எழுதியது. இவற்றில் சந்திரவதனாவின் 'நாளைய பெண்கள் சுயமாக வாழ' அவரது பதினைந்து கட்டுரைகளையும், 'அலையும் மனமும் வதியும் புலமும்' பத்தொன்பது சிறுகதைகளையும் , மூனாவின் 'நெஞ்சில் நின்றவை' இருபத்தியிரண்டு கட்டுரைகளையும் உள்ளடக்கியவை. அழகாக வடிவமைக்கப்பட்ட வன் அட்டைகள் நூலுக்கு மேலும் சிறப்பைத்தருகின்றன. இவற்றுக்கான ஓவியங்களை வரைந்திருப்பவர் இவரது கணவரான ஓவியர் மூனா. மேலும் அட்டைகளை வடிவமைத்திருப்பதும் அவரே. புகலிடத்தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர்களிலொருவர் எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன். அவரது எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் கட்டுரைகள், சிறுகதைகளை உள்ளடக்கிய இந்நூல்கள் அண்மையில் வெளியான முக்கிய வரவுகள்.

'நாளைய பெண்கள் சுயமாக வாழ' நூலிலுள்ள கட்டுரைகள் புகலிடப் பெண்கள், பெண்கள் சுயமுடன் , சமூகத்தில் அவர்களை அடக்கி வைத்திருக்கும் எழுதப்படாத சட்டங்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு சுதந்திரமாக வாழ வேண்டுமென்பதை வலியுறுத்தும் கட்டுரைகள். பெண்களுக்கு பெண் விடுதலை விடயத்தில் சிந்தனைத்தெளிவை ஏற்படுத்தி அவர்களுக்கு வழிகாட்டும் சேவையினை ஆற்றும் கட்டுரைகளிவை. 'பெண் விடுதலை என்பது ஒரு சமூகத்தின் விடுதலை. மானுடத்தின் விடுதலை' என்று நூலுக்கான தன்னுரையில் அறை கூவல் விடுக்கும் சந்திரவதனா நூலின் தாரக மந்திரங்களாக ' நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய இளம் பெண்களே வழி கோலுங்கள்' என்ற கூற்றினையும், 'பெண்ணே நெருப்பாயும் வேண்டாம். செருப்பாயும் வேண்டாம். உனது இருப்பு , உனது விருப்போடு, உனதாய் இருக்கட்டும்' என்னும் கூற்றினையும் முன் வைக்கின்றார். பெண்ணுரிமையினை வலியுறுத்தும் தன் எண்ணங்களை இக்கட்டுரைகளில் வலியுறுத்தும் சந்திரவதனா , அவை ஆண்களுக்கு எதிரானவை அல்லவென்றும் குறிப்பிடுகின்றார்.

•Last Updated on ••Sunday•, 18 •August• 2019 23:24•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 344 : நண்பர் வேந்தனார் இளஞ்சேயின் கடிதங்கள் மூன்று!

•E-mail• •Print• •PDF•

வேந்தனார் இளஞ்சேய்அண்மையில் நண்பரும், எழுத்தாளருமான வேந்தனார் இளஞ்சேய் என் படைப்புகள் சிலவற்றை வாசித்துத் தன்  கருத்துகளைப் புலனம் (Whatsup) மூலம் தெரிவித்திருந்தார். அவற்றை ஒரு பதிவுக்காக இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். என் படைப்புகளை வாசித்துத் தன் கருத்துகளைத் தெரிவித்த நண்பருக்கு என் மனம் நிறைந்த நன்றி.


1. 05.08.2019

நல்லது கிரி. உங்கள் குறுநாவலான "சுமணதாஸ பாஸ்" ஜ தற்போது வாசித்தேன். இயற்கையை இரசிக்கும் தன்மை - அடர்ந்த காடு - கடும்மழை- குளங்கள்- ஆறுகள்-பறவைகள்-விலங்குகள் - இவற்றை ரசிக்கும்  மனப்பாங்கு , பொதுவாகவே எழுத்தாளர்களுக்கு அதிகம். அது உங்கள் எழுத்தில் நன்கு தெரிகின்றது. கதை ஓட்டம் , ஆற்றொழுக்காக இயற்கை காட்சிகள் வர்ணனைகளுடன் தங்கு தடையின்றி செல்கின்றது.வாழ்த்துக்கள்.நீங்கள் தந்த உங்கள் நூல்களையும் விரைவில் வாசிப்பேன். நிற்க. இக் கதையின் உட்கருத்து - மனிதாபிமானமிக்க சுமணதாஸ் பாஸ் கொல்லப் பட்டதும் , அவனுடன் சேர்ந்து அவன் குடும்பமும் கொல்லப்பட்டதும் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும் என்ற அங்கலாய்ப்பும், ஆதங்கமுமே. இதை நான் நன்கு உணர்கின்றேன். ஏற்றுக் கொள்கின்றேன்.

சம்பவம் 1
நானிருந்த கந்தர்மடத்தில் ,  1969-73 பகுதிகளில், என் வீட்டிற்கு மூன்று வீடு தள்ளி ஓர் குடும்பம்  வசித்து வந்தது. மூத்த இரு ஆண் பிள்ளைகள்.கடைசி பெண்பிள்ளை. மூத்த ஆண் பிள்ளைக்கு என்னிலும் 3 வயது குறைவு. மற்றவனுக்கு 5 வயது குறைவு. கடைசிப் பெண் பிள்ளை 12 வயது இளமையானவள். இரு பெடியன்களும் எங்களுடன் துடுப்பெடுத்தாட்டம்- உதைபந்தாட்டம்  விளையாடுவார்கள். அவர்களுடன் வரும் சிறுமியை, என் சிறிய தமக்கையார் தூக்கிக் கொண்டு திரிவார்.

•Last Updated on ••Sunday•, 18 •August• 2019 22:49•• •Read more...•
 

வாசிப்பும் யோசிப்பும் 343: பல்வகைச் சிந்தனைகள்!

•E-mail• •Print• •PDF•

விஜை சேதுபதி  முத்தையா முரளிதரனாக...

முத்தையா முரளிதரன் சிறந்த துடுப்பெடுத்தாட்ட வீரன். அதே சமயம் முரளிதரனின் இலங்கைத்தமிழர்கள் பற்றிய அரசியல்ரீதியிலான கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. முரளிதரன் என்னும் ஆளுமையை வைத்து ஒருவர் திரைப்படம் தயாரித்தால் அதில் நடிக்கும் நடிகர் ஒருவரை அவ்வேடத்தில் நடிக்கக்கூடாது என்று கூறுவது நடிகர் ஒருவரின் நடிப்புச் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகும்.  எடுக்கப்படும் திரைப்படம் முரளிதரன் என்னும் ஆளுமையைக் குறை, நிறைகளுடன் வைத்து வெளிப்படுத்துகின்றதா என்று பார்க்க வேண்டுமே தவிர அவ்வேடத்தில் நடிக்கும் நடிகர் ஒருவரைப்பார்த்து நீ அவ்வேடத்தில் நடிக்கக்கூடாது.நடித்தால் உன் படத்தைப்புறக்கணிப்போம் என்று வெருட்டுவது சரியான செயற்பாடு அல்ல. முரளிதரனின் ஆளுமையை எதிர்ப்பவர்கள் படத்தைப்புறக்கணியுங்கள். அது பற்றிய உங்கள் விமர்சனத்தை முன் வையுங்கள். ஆனால் நடிகர் ஒருவரைப்பார்த்து நீ அவ்வேடத்தில் நடிக்காதே என்று கூறுவதன் மூலம் அந்நடிகனின் நடிப்புச் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்.

யூதர்களை இனப்படுகொலை செய்த அடொல்ஃப் ஹிட்லரை வைத்து எத்தனை  திரைப்படங்கள் , தொலைக்காட்சித்திரைப்படங்கள் வெளியாகின. இத்திரைப்படங்களிலெல்லாம் ஹிட்லரின் ஆளுமையை பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தியிருப்பார்கள். நடிகர்கள் பலர் ஹிட்லரின் வேடங்களில் நடித்திருப்பார்கள். யூதர்கள் யாரும் இத்திரைப்படங்களில் நடித்த நடிகர்களை எவரையாவது பார்த்து  ஹிட்லரின் வேடத்தில் நடிக்காதே என்று கூறியிருப்பார்களா? அப்படிக்கூறியிருந்தால்கூடக் கலையுலகம் அதனை ஏற்றிருக்குமா?

நாம் எதிர்க்கவேண்டியது அல்லது விமர்சிக்க வேண்டியது முரளிதரனின் திரைப்படம் வெளியாகும்போது அத்திரைப்படத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக உண்மையினைத்திரித்துக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றைத்தாமே தவிர அப்படத்தில் முரளிதரனாக நடிக்கும் நடிகரை அல்ல. யுத்தச் சூழலில் இந்தியப்படைகளுடன், இலங்கைப்படைகளுடன் எல்லாம் பல்வேறு முரண்பாடுகள் காரணமாக இயங்கியவர்களையெல்லாம் இன்று இலங்கைத்தமிழ் மக்கள் தம் அரசியல் தலைவர்களாக ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். இவ்விதமானதொரு சூழலில் முரளிதரனின் கூற்றுகளை அதுவும் பலவருடங்களின் முன்னர் கூறிய கூற்றுகளை வைத்து அவருக்கெதிராகப்போர்க்கொடி தூக்கியிருப்பது ஆச்சரியத்தைத்தருகின்றது. இத்தனைக்கும் அவர் அரசியல் தலைவர்களில் ஒருவர் கூட அல்லர்.

•Last Updated on ••Sunday•, 11 •August• 2019 01:07•• •Read more...•
 

'ஞானம்' சஞ்சிகை குறுநாவலான 'சுமணதாஸ பாஸு'ம், அது பற்றிய கடிதங்கள் சிலவும்......

•E-mail• •Print• •PDF•

இம்மாத 'ஞானம்' சஞ்சிகையில் வெளியான எனது குறுநாவலான 'சுமணதாஸ பாஸ்' பற்றி எழுத்தாளர்கள் குரு அரவிந்தனும், முருகபூபதியும் கடிதங்கள் அனுப்பியிருந்தார்கள். முதலில் இக்குறுநாவலைச் சிறப்பாகப் பிரசுரித்ததற்காக ''ஞானம் சஞ்சிகை ஆசிரியர் ஞானசேகரனுக்கு என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இக்குறுநாவல் பற்றிய தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட குரு அரவிந்தன், முருகபூபதி ஆகியோருக்கும் நன்றி.

1. குரு அரவிந்தனின் கடிதம்:

Kuru Aravinthan < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
Aug. 1 at 10:03 p.m.

அன்பின் கிரிதரன், வணக்கம். ஞானம் இதழில் வெளிவந்த தங்களின் சுமணதாஸ் பாஸ் பல விடயங்களை எடுத்துச் சொல்லும் குறுநாவலாக இருக்கின்றது.இயற்கை சார்ந்த மரம், குளம், மிருகம், பறவை என்று அந்த மண்ணில் வாழ்ந்தவர்களோடு இணைந்த அத்தனையும் பாத்திரங்களாகி இருக்கின்றன. கதையில் வருவது போல, அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்குவது அனேகமான சிறுவர்களின் பழக்கமாக அக்காலத்தில் இருந்தது. நானும் இப்படித்தான் அப்பாவின் மடியில் படுத்துக் கொண்டு இருட்டியதும் தென்னிந்தியாவில் இருந்து தெற்கு நோக்கி பறக்கும் மாம்பழ வெளவால்களை நிலவு வெளிச்சத்தில் எண்ணியிருக்கின்றேன். இலுப்பம்பழக் காலத்தில்அதிகமாக பறந்து வரும் இவை காலையில் திரும்பிச் சென்று விடுமாம். குறுநாவல் மூலம் பல விடயங்களைத் தெரிய வைத்த உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்புடன்
குரு அரவிந்தன்.
•Last Updated on ••Saturday•, 03 •August• 2019 07:10•• •Read more...•
 

(ஞானம் சஞ்சிகை) குறுநாவல்: சுமணதாஸ பாஸ்!

•E-mail• •Print• •PDF•

ஞானம் சஞ்சிகையில் வ.ந.கிரிதரனின் 'சுமணதாஸ பாஸ்'- இக்குறுநாவல் இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'ஞானம்' சஞ்சிகையின் ஆகஸ்ட் 2019 இதழில் வெளியாகியுள்ளது. என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. சுமணதாஸ பாஸைப் பொறுத்தவரையில் ஒரு முக்கிய உண்மையைக் கூறத்தான் வேண்டும். வன்னிமண்ணில் நாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் எங்கள் வீட்டிற்கருகில் ஒரு சிங்கள பாஸ் குடும்பம் இருக்கத்தான் செய்தது. அந்த பாஸ் குடும்பத்தவர்கள் நாங்கள் அம்மண்ணிற்குப் போவதற்கு முன்பிருந்தே அம்மண்ணுடன் பிணைந்து வாழ்ந்து வந்தவர்கள். எங்களுடன் நெருங்கிப் பழகியவர்கள். சுக துக்கங்களில் பங்கு பற்றியவர்கள் ஒருமுறை எங்கள் வீட்டிற்கருகிலிருந்த குளமொன்றில் மூழ்கும் தறுவாயில் தத்தளித்துக் கொண்டிருந்த என்னையும், சாந்தா என்ற சிங்கள இளைஞனையும் துணிச்சலுடன் காப்பாற்றியவர் அந்த சிங்கள் பாஸ்தான். நாங்கள் 70களில் யாழ்ப்பாணம் திரும்பி விட்டோம் அதன்பிறகு எங்களிற்கும் அவர்களிற்குமிடையிலிருந்த தொடர்பு விடுபட்டுப்போனது. 1983 இலிருந்து மாறிவிட்ட நாட்டு நிலைமையைத் தொடர்ந்து, தமிழ் மக்களின் போராட்டம் கனன்றெரியத் தொடங்கி விட்டது. இந்தக் காலகட்டத்தில் விடுதலைக்காகப் போராடும் அமைப்பொன்றினால் அந்தச் சிங்கள பாஸ் குடும்பமே முற்றாக அழிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? வழக்கம்போல் பலவிதமான வதந்திகள், ஊகங்கள். அந்த சிங்கள பாஸ்தான் 'சுமணதாஸ பாஸாக' இக்கதையில் உருப்பெற்றிருக்கின்றார். நான் இன்று உயிருடன் இருப்பதற்குக் காரணமானவர் அந்தச் சிங்கள பாஸ். அதனை என்னால் ஒரு போதுமே மறக்க முடியாது.    - வ.ந.கிரிதரன் -


1.

சிந்தனையில் மூழ்கிவிடும் போதுதான் எவ்வளவு இனிமையாக, இதமாக விருக்கின்றது. மெல்ல இலேசாகப் பறப்பதுபோல் ஒரு வித சுகமாகக் கூடவிருக்கின்றது. எனக்கு இன்னமும் சரியாக ஞாபகமிருக்கின்றது. 1963ம். ஆண்டு மாரிகாலம் தொடங்கி விட்டிருந்தது. என் பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். அப்பா ஆங்கில வாத்தி, அம்மா தமிழ் டீச்சர். இருவரிற்குமே வவுனியாவிற்கு மாற்றலாகியிருந்தது. அம்மாவிற்கு வவுனியா மகாவித்தியாலயத்திற்கும் அப்பாவிற்கு நகரிலிருந்த இன்னுமொரு பாடசாலைக்கும் மாற்றல் உத்தரவு கிடைத்ததுமே அப்பா முன்னதாக வவுனியா சென்று, வாடகைக்கு வீடு அமர்த்திவிட்டு வந்திருந்தார். வீட்டுச் சாமான்களையெல்லாம் ஏற்றி வர ஒரு லொறியை ஏற்பாடு செய்துவிட்டு அப்பா லொறியுடன் வர, நானும் அம்மாவும் அக்காவும் தம்பியும் மாமாவுடன் சோமர் செட் காரொன்றில் வன்னி நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது எனக்கு வயது ஐந்துதான். அந்தப் பயண அனுபவம் இன்னமும் பசுமையாக நெஞ்சில் பதிந்து கிடக்கின்றது. முதன் முதலாக பிறந்த இடத்தை விட்டு இன்னுமொரு இடத்திற்கான பயணம். நெஞ்சில் ஒருவித மகிழ்ச்சி, ஆர்வம் செறிந்து கிடந்தது. கார் பரந்தன் தாண்டியதுமே வெளியும், வானுமாகத் தெரிந்த காட்சி மாறிவிட்டது. சுற்றிவரப் படர்ந்திருந்த கானகத்தின் மத்தியில் பயணம் தொடங்கியது.

வன்னி மண்ணின் அழகு மெல்ல மெல்ல தலைகாட்டத் தொடங்கிவிட்டது. மரங்களிலிருந்து செங்குரங்குகளும், கறுத்த முகமுடைய மந்திகளும் எட்டிப் பார்க்கத் தொடங்கி விட்டன. பல்வேறு விதமான பட்சிகள் ஆங்காங்கே தென்படத் தொடங்கி புதிய சூழலும், காட்சியும் என நெஞ்சில் கிளர்ச்சியை ஒருவித ஆவலை ஏற்படுத்தின. பயணத்தை ஆரம்பித்த பொழுது இருண்டு கொண்டிருந்த வானம், இடையிடையே உறுமிக் கொண்டிருந்த வானம், நாங்கள் மாங்குளத்தைத் தாண்டியபொழுது கொட்டத் தொடங்கிவிட்டது. பேய் மழை அடை மழை என்பார்களே அப்படியொரு மழை, சூழல் எங்கும் இருண்டு, 'சோ' வென்று கொட்டிக்கொண்டிருந்த மழையில் பயணம் செய்வதே பெரும் களிப்பைத் தந்தது. அன்றிலிருந்து கொட்டும் மழையும் அடர்ந்த கானகமும் பட்சிகளும் எனக்குப் பிடித்த விடயங்களாகிவிட்டன. ஒவ்வொரு முறை மழை பொத்துக் கொண்டு பெய்யும் போது, விரிந்திருக்கும் கானகத்தைப் பார்க்கும்போதும், அன்று முதன்முறையாக வன்னி நோக்கிப் பயணம் செய்த பொழுது ஏற்பட்ட அதேவிதமான கிளர்ச்சி, களிப்பு கலந்த உணர்வு நெஞ்சு முழுக்கப் படர்ந்து வருகின்றது. பேரானந்தத்தைத் தந்து விடுகின்றது.

•Last Updated on ••Friday•, 02 •August• 2019 01:49•• •Read more...•
 

யாழ்ப்பாணப் புத்தகத்திருவிழா!

•E-mail• •Print• •PDF•

யாழ்ப்பாணப் புத்தகத்திருவிழா!

இன்று வெளியான 'காலைக்கதிர்' பத்திரிகையில் வெளியான செய்தியொன்று என் கவனத்தை ஈர்த்தது. அது எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி செப்டம்பர் 1 வரை யாழ் வீரசிங்க மண்டபத்தில், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணத்துக்கமைய நடைபெறவுள்ள 'யாழ் புத்தகத் திருவிழா' பற்றியது. பெரிய அளவில் நடைபெறவுள்ள இப்புத்தகத்திருவிழாவில் பாடப்புத்தகங்களுடன் இந்திய, இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்று அறிய முடிகின்றது.

•Last Updated on ••Wednesday•, 31 •July• 2019 09:48•• •Read more...•
 

வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு நூல் வெளியீட்டு நிகழ்வு!

•E-mail• •Print• •PDF•

வேந்தனார் கட்டுரைகள் - பாகம் 3வேந்தனார் கட்டுரைகள் - பாகம் 2இன்று 'டொராண்டோ'வில் நடைபெற்ற வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழா நூல்கள் வெளியீட்டு விழாவில் வேந்தனார் அவர்களின் ஆறு நூல்கள் வெளியிடப்பட்டன. இதற்காக வேந்தனார் அவர்களின் மகன் வேந்தனார் இளஞ்சேயைப்பாராட்ட வேண்டும். நிகழ்வு வெற்றிபெற உறுதுணையாக நின்ற அவரது உறவினரான கஜேந்திரன் ஆறுமுகம் குடும்பத்தினர், யாழ்இந்து(கனடா) பழைய மாணவர் சங்கத்தவர்கள் இவர்களுடன் நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்து , நூல்களை வாங்கிச் சென்ற கலை, இலக்கிய ஆர்வலர்கள் , நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளை வடிவமைத்து வழங்கிய  சிறீமதி சங்கீதா கோகுலன் அவர்களின் சுவர சாகித்திய இசைக்கல்லூரிக் குழுவினர், சிறீமதி ரஜனி சக்திரூபனின் அபிநயலாலய நாட்டியாலயத்தினர் ஆகியோருக்கும், அக்கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவிகள் அனைவருக்கும், நிகழ்வில் சிறப்புரையாற்றிய திருமதி புனிதவதி பரமலிங்கம், திரு.அருண்மொழிவர்மன், திரு.உருத்திரமூர்த்தி சேரன் (கவிஞர் சேரன்)  ஆகியோருக்கும், நூல்கள் பற்றிய உரைகளையாற்றிய பண்டிதர் ச.வே பஞ்சாட்சரம், திரு. வல்லிபுரம் சுகந்தன், மற்றும் திரு.தீவகம் வே.இராசலிங்கம் ஆகியோருக்கும் நன்றி கூற வேண்டும். நகரில் வேறு பல நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த நிலையிலும் இந்நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். நிகழ்வில் தலைமையுரை, ஏற்புரை மற்றும் நன்றியுரை ஆகியவற்றைச் சிறப்பாக வழங்கியிருந்தார் வேந்தனார் இளஞ்சேய். இறுதியில் கலை, நிகழ்வுகளில் பங்குபற்றிய குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் வெளியிடப்பட்ட நூல்களைத்தரம் பிரித்திருந்த முறை என்னை மிகவும் கவர்ந்தது. குழந்தைகளுக்கு, இளம் மாணவர்களுக்கு, வாசிப்பு அதிகமுள்ள வளர்ந்தவர்களுக்கு என வெளியான நூல்கள் அமைந்திருந்தன. குழந்தைகளுக்கான குழந்தைப்பாடல்களை உள்ளடக்கிய தொகுதிகள் மூன்றும் முறையே குழந்தைமொழி - பாகம் 1, 2 & 3 என்னும் தலைப்புகளில் வெளியாகியிருந்தன. இளம் மாணவர்களுக்கான மாணவர்களுக்கேற்ற வகையில் எழுதப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு 'மாணவர் தமிழ் விருந்து' என்னும் தலைப்பிலும், வளர்ந்தவர்களுக்கான கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி 'தமிழ் இலக்கியச் சோலை' என்னும் தலைப்பிலும் வெளியாகின. இவை தவிர வேந்தனார் பற்றிக் கலை , இலக்கிய ஆளுமைகள் பலர் எழுதிய கவிதைகள் , கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு 'செந்தமிழ்வேந்தன் வேந்தனார் நூற்றாண்டு விழா மலர்' என்னும் பெயரிலும் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான வித்துவான் வேந்தனாரை இன்றைய தலைமுறையினருக்குச் செய்யும் அரும்பணியினை வேந்தனார் இளஞ்சேய் செய்து வருகின்றார். இதற்காக அவரை மீண்டுமொரு தடவை பாராட்டுவதோடு , மேலும் பல வேந்தனாரின் படைப்புகளை உள்ளடக்கிய தொகுதிகள் பலவற்றை வெளியிட வேண்டுமென்ற அவரது கனவும் நனவாகவும் வாழ்த்துகின்றேன்.

மேற்படி நிகழ்வில் வெளியான  `செந்தமிழன் வேந்தன் வேந்தனார் நூற்றாண்டு விழா மல`ரில் `மக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்` என்னும் தலைப்பில்  எனது கட்டுரையும் பிரசுரமாகியுள்ளது.

•Last Updated on ••Sunday•, 28 •July• 2019 22:08•• •Read more...•
 

அஞ்சலி: எழுத்தாளர் கண மகேஸ்வரன் மறைவு!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் கண மகேஸ்வரன்எழுத்தாளர் கண மகேஸ்வரன் மறைந்த செய்தியினை முகநூற் பதிவொன்றின் மூலம் அறிந்துகொண்டேன். ஆழ்ந்த இரங்கலைத்தெரிவிப்பதுடன் , அஞ்சலியாக  செப்டம்பர் 16, 20118 அன்று  முகநூலில் நான் அவர் பற்றி எழுதியிருந்த பதிவொன்றினையும் பகிர்ந்துகொள்கின்றேன்.

கிழக்கில் சுடர்விட்ட தாரகை!

எழுத்தாளர் கண மகேஸ்வரன் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர். இவ்வளவுக்கும் சிறுகதைகள் சிலவற்றை அவ்வப்போது பத்திரிகைகளில் பார்த்திருக்கின்றேன். ஆனால் வாசித்ததில்லை. இப்பொழுது அவற்றைத் தேடிப்பிடித்து வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் பிறந்திருக்கின்றது.

இவர் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர் என்று கூறினேனல்லவா. அதற்குக் காரணம் ஒன்றுள்ளது. நான் வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பு மாணவனாக இருந்த சமயம் ஈழநாடு மாணவர் மலர் நடாத்திய 'தீபாவளி இனித்தது' என்னும் கட்டுரைப்போட்டியில் கலந்து கொன்டிருந்தேன். ஆனால் அதில் என் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட வில்லை. அதில் அப்போது உயர்தர மாணவராக இருந்த கண மகேஸ்வரனின் கட்டுரை தெரிவாகிப்பிரசுரமாகியிருந்தது. ஆனால் மாணவர் மலரில் என் கட்டுரையைப்பற்றிக் குறிப்பிட்டு, என்னைப்பற்றியும் நான் படித்துக்கொண்டிருந்த பாடசாலையைப்பற்றியும் குறிப்பிட்டு வாழ்த்துக்கூறியிருந்தார்கள். கட்டுரை பிரசுரமாகாவிட்டாலும் அவ்வாழ்த்துரை என்னை அவ்வயதில் உற்சாகமூட்டியது. அவ்வுற்சாகத்துடன் அடுத்து வந்த பொங்கல் தினத்தை முன்னிட்டுக் கவிதையொன்றினை எழுதிச் 'சுதந்திரன்' பத்திரிகைக்கு அனுப்பினேன். அது 'சுதந்திரன்' பத்திரிகையின் பொங்கல் இதழில் பிரசுரமானது. அதுவே நான் எழுதிப் பிரசுரமான முதலாவது படைப்பு. அப்போது நான் ஏழாம் வகுப்பு மாணவன்.

ஆணால் அண்மையில் 'நூலகம்' தளத்தில் உலாவிக்கொண்டிருந்தபோது மட்டக்களப்பிலிருந்து எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளியான 'தாரகை' சஞ்சிகையின் சில பிரதிகளைக் கண்டேன். அவற்றை வாசித்தபோது அதன் ஆசிரியர்களாக விளங்கியவர்களைப்பற்றிய விபரம் என் கவனத்தை ஈர்த்தது. ஆரம்பத்தில் அதன் ஆசிரியராக சி.சங்கரப்பிள்ளையும், கெளரவ ஆசிரியராக டாக்டர் இ.மதனகோபாலன் என்பவரும், ஆசிரியர் குழுவில் கண.மகேஸ்வரன், இந்திராணி தாமோதரம்பிள்ளை ஆகியோரும் இருந்துள்ளார்கள். பின்னர் கண மகேஸ்வரனே அதன் ஆசிரியராக அதனைக்கொண்டு நடத்தியிருக்கின்றார். ஓரிதழில் செ.ரவீந்திரன் ஆசிரியர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

•Last Updated on ••Thursday•, 25 •July• 2019 22:47•• •Read more...•
 

கறுப்பு ஜூலை 1983 பற்றிய நினைவுக்குறிப்புகள்!

•E-mail• •Print• •PDF•

கறுப்பு ஜூலை 1983 பற்றிய நினைவுக்குறிப்புகள்! ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் மே 2009, ஜூலை 1983 இரண்டு மாதங்களும் அவர்கள்தம் வரலாற்றைப் புரட்டிப்போட்டு வைத்த மாதங்கள். ஜூலை 1983 அதுவரை இலங்கைத்தமிழர்களுக்கெதிராக வெடித்த இனக்கலவரங்களில் மிகப்பெரிய அழிவுகளையும் , உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்திய கலவரம். ஜே.ஆர்.அரசின் முக்கிய அமைச்சர்கள் , அரசியல்வாதிகள் பலர் முன்னின்று நடாத்திய கலவரம். இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தைச் சுவாலை விட்டெரியச்செய்த கலவரம். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை முக்கிய உபகண்ட அரசியற் பிரச்சினைகளிலொன்றாக, சர்வதேச அரசியற் பிரச்சினைகளிலொன்றாக உருமாற்றிய கலவரம். இலட்சக்கணக்கில் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக உலகின் பல்வேறு பகுதிகளையும் நோக்கிப் படையெடுக்க வைத்திட்ட கலவரம். இவ்விதமுருவான இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை பேரழிவுகளுடன் முடிவுக்கு கொண்ட மாதம் மே 2009.

ஜூலை 1983 இனக்கலவரத்தைப்பற்றி கடந்த சில வருடங்களாக முகநூலில் பதிவுகளிட்டிருந்தேன். அவற்றுக்குப் பலர் எதிர்வினைகள் ஆற்றியிருந்தார்கள். தம் அனுபவங்களை, கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அவற்றை ஆவணப்படுத்த வேண்டுமென்று எண்ணினேன். அவற்றை முக்கியமான எதிர்வினைகளுடன் தொகுத்து என் வலைப்பதிவான 'வ.ந.கிரிதரன் பக்கம்' தளத்தில் இவ்வருட என் நினைவு கூர்தலாகப் பதிவு செய்துள்ளேன். அதனை இங்கு  பகிர்ந்து கொள்கின்றேன்.

1. 83 'ஜூலை' இலங்கை இனக்கலவர நினைவுகள்.: இந்தியா அனுப்பிய சிதம்பரம்! (July 22, 2018)

சிதம்பரம் கப்பலை கூகுளில் தேடிப்பார்த்தேன். கப்பலின் படம் வந்தது. இக்கப்பலைத்தான் இலங்கையின் 1983 இனக்கலவரத்தையடுத்து இந்தியா கொழும்பில் தங்கியிருந்த அகதிகளை யாழப்பாணம் கூட்டிச்செல்வதற்காக அனுப்பியிருந்தது. இக்கப்பல் பல நினைவுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிகள் முகாமில் ஆரம்பத்திலிருந்தே தொண்டர்களாக மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சேவையாற்றினர். தர்மகுலராஜா அவர்களும் அவர்களிலொருவர். இவர் எனக்கு ஒரு வருட 'சீனியர்'. அவர்களில் நானுமொருவனாக இணைந்திருந்தேன். ஏற்கனவே இலங்கை அரசு வழங்கியிருந்த லங்கா ரத்னா போன்ற சரக்குக் கப்பல்களில் அகதிகள் பலரை அனுப்பி வைத்தோம்.

பின்னர் இறுதியாக சிதம்பரம் கப்பல் தமிழக அரசால் அனுப்பப்பட்டபோது , இரு வாரங்கள் கழிந்திருந்த நிலையில், நானும் யாழ்ப்பாணம் செல்வதற்கு முடிவு செய்தேன். என் வாழ்க்கையில் கட்டுமரங்களில் பயணித்திருக்கின்றேன்; படகுகளில் பயணித்திருக்கின்றேன்; ஆனால் கப்பலொன்றில் பயணித்தது அதுவே முதற் தடவை. கொழும்பிலிருந்து கிழக்கு மாகாணத்தைச் சுற்றிச் சென்ற கப்பலின் பணியாளர்களெல்லாரும் அகதிகளென்று மிகவும் அன்புடன் , பண்புடன் உதவியாகவிருந்தார்கள். கொழும்பில் கப்பலில் ஏறும்பொழுதும் வரிசையில் நின்று ஒவ்வொருவர் உடமைகளையும் வாங்கியுதவி ஏற்றினார்கள். நேற்றுத்தான் நடந்ததுபோல் இன்றும் நினைவிலிருக்கின்றது.

•Last Updated on ••Monday•, 22 •July• 2019 11:34•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் : தமயந்தியின் 'காக்கைதீவுக் கொக்கு'

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் தமயந்திஎழுத்தாளர் தமயந்தி சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல புகைப்படப்பிடிப்பாளரும் கூட. இதுவரை கால இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் உருவாகிய மிகச்சிறந்த புகைப்படக்காரராக இவரையே நான் கருதுவேன். சிறந்த எழுத்தாளர் ஒருவர் எவ்விதம் மானுட வாழ்வை அணுகிப்படைப்புகளை அணுகுகின்றாரோ, அவ்விதமே காட்சிகளையும் அணுகும் சிறந்த புகைப்படப்பிடிப்பாளர் தமயந்தி. உயிர்த்துடிப்புடன் விளங்கும் புகைப்படங்களை மட்டுமல்ல சூழற் சீரழிவுகளையும் பார்ப்பவர்தம் உள்ளங்களைத் தைக்கும் வகையி்ல் புகைப்படங்களாக்குவதில் வல்லவர்.

'காக்கைதீவுக் கொக்கு' என்னும் தலைப்பில் அவர் பதிவு செய்திருந்த இப்புகைப்படம் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டது. இது பற்றி என் எதிர்வினையினைப்பின்வருமாறு பதிவு செய்திருந்தேன்:

"நண்பரே, கல்லுண்டாய் வெளி , நவாலி மண் கும்பி, காக்கைதீவுக் கடற்கரை, அராலிப் பாலம் போன்றவற்றையும் உள்ளடக்கிய புகைப்படங்கள் இருந்தாலும் பகிர்ந்துகொள்ளவும். ஒரு காலத்தில் காலையும், மாலையும் அப்பிரதேசத்து அழகைப்பருகி மெய்ம்மறதிருந்தவன். இப்புகைப்படம் அந்நினைவுகளை மீண்டும் படம் விரிக்க வைக்கின்றன."

அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்:

"நண்பா, நீங்கள் கேட்கும் இடங்களெல்லாம் முன்புபோல அல்ல. பிளாஸ்டிக் மற்றும் நச்சுக் கழிவுகளின் குப்பைத் திடல்களாக உள்ளன.
அராலி வயல்வெளிகளெல்லாம் விதைக்கப்படாத நிலங்களாக மட்டுமல்ல, பொலித்தீன் குப்பைகளால் நிறைந்து போயுள்ளன."
•Last Updated on ••Sunday•, 21 •July• 2019 10:20•• •Read more...•
 

எழுத்தாளர் நெல்லை க.பேரனை நினைவு கூர்வோம்!

•E-mail• •Print• •PDF•

நெல்லை க.பேரன் குடும்பத்தினர்எழுத்தாளர் நெல்லை க.பேரனின் நினைவு தினம் ஜூலை 15. 1991 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 அன்று இராணுவம் வீசிய ஏவுகணைக்களிலொன்று இவரது வீட்டின்மேல் விழுந்ததில் இவரது குடும்பத்தினர் அனைவருடன் இவரும் கொல்லப்பட்டார். அவர் நினைவாக அவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பினையும், 'நூலகம்' தளத்திலுள்ள 'வளைவுகளும், கோடுகளும்' நாவலுக்கான இணைய இணைப்பினையும் பகிர்ந்துகொள்கின்றேன்.


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து (https://ta.wikipedia.org/s/i8f) ...

நெல்லை க. பேரன் (கந்தசாமி பேரம்பலம், டிசம்பர் 18, 1946 - ஜூலை 15, 1991) ஈழத்து எழுத்தாளர். செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள், புதினம், கவிதை, நேர்காணல்கள் எனப் பலவும் எழுதியவர்.

யாழ்ப்பாணம் நெல்லியடியில் கந்தசாமி, பறுபதம் ஆகியோருக்குப் பிறந்தவர் பேரம்பலம். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் பல்தொழில்நுட்ப நிலையம், சட்டக் கல்வி நிலையம் ஆகியவற்றில் கல்வி கற்றார். பேரன் 1960களின் தொடக்கத்தில் வீரகேசரியில் யாழ்ப்பாண செய்தியாளராகவும், பின்னர் 1966 இல் அஞ்சல் திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். குவைத் நாட்டில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். இவரது சிறுகதைகள் ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் மற்றும் சத்தியங்கள் ஆகியன தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. விமானங்கள் மீண்டும் வரும் என்ற குறுநாவல் இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்று ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1986 இல் நூலாக வெளிவந்தது.

1991 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் நாள் இலங்கை இராணுவம் ஏவிய எறிகணை ஒன்று பேரனின் வீட்டில் வீழ்ந்ததில் பேரன், மனைவி உமாதேவி, மகன் உமாசங்கர் (14 வயது), மகள் சர்மிளா (7 வயது) ஆகிய நால்வரைக் கொண்ட பேரன் குடும்பம் கொல்லப்பட்டது

இவரது நூல்கள்

ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறான் (சிறுகதைகள், 1975)
விமானங்கள் மீண்டும் வரும் (புதினம்)
வளைவுகளும் நேர்கோடுகளும் (புதினம், 1978)
சத்தியங்கள் (சிறுகதைகள், 1987)
பேரனின் கவிதைகள்
சந்திப்பு (நேர்காணல்கள், 1986)

•Last Updated on ••Friday•, 19 •July• 2019 20:58•• •Read more...•
 

வாசிப்பும் , யோசிப்பும் 344: எழுத்தாளர் அப்பச்சி மகாலிங்கம் பற்றியதொரு நனவிடை தோய்தல்!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் அப்பச்சி மகாலிங்கம் தம்பதிஎழுத்தாளர் அப்பச்சி மகாலிங்கம் அவர்களை நான் நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அம்மா அராலி இந்துக்கல்லூரியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தபோது என் சகோதரன், இளைய சகோதரிகள் இருவரும் அங்குதான் படித்தார்கள். அங்குதான் ஆசிரியராக அப்பச்சி மகாலிங்கம் அவர்களும் பணி புரிந்து வந்தார். நவாலிப்பக்கம் வசித்து வந்ததாக என் தம்பி கூறுவான். அப்பச்சி மகாலிங்கம் அவர்களை நான் நேரில் அறிந்திருக்காவிட்டாலும் , அவரது சிறுகதைகள் பல வீரகேசரி வாரவெளியீட்டில், ஈழநாடு (யாழ்ப்பாணம்) வாரமஞ்சரியில் வெளியாகியிருப்பதை அறிந்திருக்கின்றேன். கடற்றொழிலாளர்களை மையமாக வைத்து அவரது கதைகள் பல இருந்தன.

என் தம்பி எழுத்தாளர் கடல்புத்திரனாக உருமாறியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் அப்பச்சி மகாலிங்கம். இது பற்றிக் கடல்புத்திரன் தனது 'வேலிகள்' சிறுகதைத்தொகுதியில் பின்வருமாறு கூறுவார்: "இந்த என் எழுத்து முயற்சிக்கும் சிறிய வரலாறு இருக்கிறது. முதலில் 6-9 வகுப்பு வரையில் எனக்கு தமிழ்ப்பாடம் கற்பித்த அப்பச்சி மகாலிங்கம் ஆசியரை குறிப்பிட்டேயாக வேண்டும். நான் எழுதுகிற கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் இருந்தபோதும், அவற்றை பொறுமையுடன் படித்து எடுத்த விசயங்களையும், சம்பவங்களையும் பாராட்டியே வந்தார். “அ” னாவையும் ‘சு’ னாவையும் கவனித்து எழுது. வித்தியாசமில்லாமல் எழுதுகிறாய் கவனமாகவிரு உன்னால் கொஞ்சமாவது எழுத முடியும் என்பார்".

அவரது நாவலொன்றும் வீரகேசரி பிரசுரமாகவும் வெளியானது. அவரது சிறுகதைகளில் 'கடல் அட்டைகள்' பற்றிய சிறுகதையொன்றைக் கடல்புத்திரன் அடிக்கடி சிலாகிப்பதை அவதானித்திருக்கின்றேன்.

அவரது ஆக்கங்களை மீண்டும் படிக்க வேண்டுமென்று ஆசையேற்பட்டது. நூலகம் தளத்திலும் தேடிப்பார்த்தேன். நூல்களாகக் கிடைக்கவில்லை. பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இருக்கலாம். தேடிப்பார்க்க வேண்டும். ஈழநாடு பத்திரிகைகள் பல இன்னும் வாசிக்கும்படியாக பதிவேற்றம் செய்யப்படவில்லை.

இவரது புத்திரனான மகாலிங்கம் கெளரீஸ்வரன் என் முகநூல் நண்பர்களிலொருவராக இருக்கின்றார். அண்மையில்தான் அறிந்துகொண்டேன். அவரிடம் அப்பச்சி மகாலிங்கள் படைப்புகள் இருந்தால் பதிவேற்றம் செய்யும்படி கூறியிருந்தேன். புகைப்படமிருந்தாலும் அனுப்பும்படியும் கூறியிருந்தேன். அனுப்பியிருந்தார். அதனை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். விரைவில் அவரது படைப்புகளை நூலுருவில் பார்க்கக் காலம் துணை செய்யட்டும்.

இவரைப்பற்றி நூலகம் தளத்தில் ஆளுமைகள் பகுதியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

•Last Updated on ••Sunday•, 28 •July• 2019 22:37•• •Read more...•
 

தற்போதுள்ள இலங்கையின் அரசியற் சூழல் பற்றி.....

•E-mail• •Print• •PDF•

இலங்கைஇலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லீம் மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துள்ள நிலையில் இன, மதவாதம் கக்கும் புத்தமதத்துறவிகளின் இனத்துவேச உரைகளும் , செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன. தமிழ்ப்பகுதிகளிலுள்ள சைவ ஆலயங்களுள்ள இடங்களில் விகாரைகள் கட்டும் முயற்சிகளில் மேற்படி புத்தபிக்குகள் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசியற் சூழலைப்பொறுத்தவரையில் புத்தமதத்துறவிகளின் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. அதே சமயம் புத்தமதத் துறவிகளின் செயலை ஒட்டுமொத்தச் சிங்கள மக்களின் செயற்பாடுகளாகக் கருதி, முழுச் சிங்களச் சமுதாயத்தின் மீதும் பழி போட்டிடச் சிலர் முயற்சி செய்வதும் வருந்தத்தக்கது. புத்தபிக்குகளின் அடாத செயற்பாடுகளுக்கு எதிராக அமைதியான வழிகளில் போராடுவதுடன் ,சட்டரீதியாக அவர்களின் செயற்பாடுகளை எதிர்கொள்ள வேண்டும். மாறாக இனத்துவேச விடத்தைக் கக்கும் குறிப்பிட்ட இனத்துவேசப் புத்தமதத்துறவிகளைப்போல் பதிலுக்கு சிங்கள மக்கள் மேல், புத்த மதத்தின் மேல் ஒட்டுமொத்தமாகப்பழியைச் சுமத்தினால் அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

இலங்கைப்பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அதுரலிய ரதன தேரர் இவ்விடயத்தில் இவ்விதம் சைவ ஆலயங்களுள்ள இடங்களில் அத்து மீறி விகாரைகளை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இவ்விடயத்தில் அமைச்சர் மனோ கணேசனின் செயற்பாடுகளும் வரவேற்கத்தக்கவை. வியாழக்கிழமை காலை ஜனாதிபதியுடனான சந்திப்பொன்றுக்குத் தமிழ்ப்பிரதிநிதிகளை அழைத்திருக்கும் அவரது செயலும் தற்போதுள்ள சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தது.

தமிழர் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களில் விகாரைகள் அமைப்பதன் மூலம் நாட்டில் நிலவும் இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தைச் சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் புத்தமதத் துறவிகள் சிலரின் செயற்பாடுகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இதனை இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இப்பிரச்சினை எதிர்காலத்தில் உபகண்ட பிரச்சினைகளிலொன்றாகப் பெருஞ்சுவாலையாகப் பற்றி எரிவதற்குக் சாத்தியங்களுள்ளது.

இலங்கை பல்லின, பன்மொழி, பன்மத மக்கள் வாழுமொரு நாடு. இது தனியே புத்தமதத்தவர்களுக்கோ அல்லது சிங்கள மக்களுக்கோ மட்டும் சொந்தமான நாடு அல்ல. அனைவருக்கும் உரித்துள்ள நாடு. புத்த மதத்தவர்கள், சிங்கள மக்கள் பெரும்பான்மையினர். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. ஆனால் அவர்கள் சிறுபான்மைச் சமூகங்களையும் உள்ளடக்கி, ஒன்றிணைத்துச் செயற்படவேண்டுமே தவிர, சிறுபான்மைச் சமூகங்களுக்கெதிராக இனத்துவேச விடத்தினைக் கக்கி அரசியல் செய்யக்கூடாது. அது முழு நாட்டுக்குமே எதிர்காலத்தில்தில் தீய விளைவுகளை ஏற்படுத்தும்.

•Last Updated on ••Thursday•, 18 •July• 2019 10:00•• •Read more...•
 

எழுத்தாளர் தேவகாந்தனின் அடுத்த நாவல் 'மேகலை கதா'

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் தேவகாந்தன்நண்பர் எழுத்தாளர் தேவகாந்தனுடன் இன்று மாலை சிறிது நேரம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபொழுது தான் எழுதிக்கொண்டிருக்கும் அடுத்த நாவலான 'மேகலை கதா' என்பது பற்றிக் குறிப்பிட்டார். அது பற்றிய குறிப்பொன்றினையும் தனது வலைப்பூவிலும் , முகநூலிலும் வெளியிட்டிருந்தார் என்பதையும் சுட்டிக் காட்டினார். தமிழ்க்காப்பியங்களில் எனக்குச் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் மிகவும் பிடித்தவை. குறிப்பாக மாதவி , மணிமேகலை ஆகிய பாத்திரங்கள் எனக்குப்பிடித்த பெண் பாத்திரங்கள். இவர்களிலும் மணிமேகலை என்னை மிகவும் ஆழமாக ஈர்த்த பாத்திரமென்பேன்.

சாத்தனாரின் 'மணிமேகலை'யைப் பல வருடங்களுக்கு முன்னர் வாசித்தபோது அக்காவியம் முழுவதும் தத்துவத்தர்க்கங்களால் நிறைந்திருந்ததை அவதானித்தேன். ஆச்சரியமாகவிருந்தது. அறிவுத்தாகமெடுத்து அலையும் எனக்குக் குடிப்பதற்கு நிறையத் தண்ணீரை உள்ளடக்கிய காப்பியம் மணிமேகலை.

மணிமேகலையை மையமாக வைத்துத் தமிழ்த்திரைப்படங்கள் பல வெளியாகியுள்ளன. டி.ஆர்.மகாலிங்கம், பி.பானுமதி நடிப்பில் 'மணிமேகலை' என்னுமொரு தமிழ்த்திரைப்படம் வெளியாகியுள்ளது. அண்மையில் கூடச் சிங்களப்படமான 'பத்தினி'யில் மணிமேகலையின் பிறப்பு , இளம் பருவத்துக் காட்சிகள் உள்வாங்கப்பட்டிருந்தன.

மணிமேகலையை மையமாக வைத்து யாராவது நாவலொன்றினை எழுத மாட்டார்களா என்று அவ்வப்போது எண்ணுவதுண்டு. அக்குறையை விரைவில் தேவகாந்தன் அவர்கள் தீர்க்கவிருப்பது மகிழ்ச்சியளிப்பது. நாவல் தொடராக வெளிவரும் நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பவர்களீல் நானும் ஒருவன். வாழ்த்துகள் தேவகாந்தன்.

எழுத்தாளர் தேவகாந்தன் தனது அடுத்த நாவலான 'மேகலை கதா' பற்றிய குறிப்பொன்றினை அவரது வலைப்பதிவினில் வெளியிட்டுள்ளார். அதனை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.


'மேகலை கதா'பற்றிய ஓர் அறிவிப்பு!   - தேவகாந்தன் -

புனைவின் வழியில் நான் உணர்ந்ததைப் படைப்பாக்கிய ‘கதா காலம்’ (2004), ‘லங்காபுரம்’ (2008) ஆகிய நாவல்களுக்குப் பிறகு காலம் நீளக் கடந்துபோய் இருக்கிறது. இப்போது அதே வழியில் சாத்தனாரின் மணிமேகலை காப்பியத்தை நாவலாக்கும் முயற்சியிலிருக்கின்றேன்.

புத்த ஜாதகக் கதைகள் என் சிறுவயதுப் பழக்கம். அதுவே கௌதம புத்தர் வரலாற்றினுள்ளும், புத்த மத வரலாற்றினுள்ளும் புகும் வேட்கையை எனக்குத் தந்தது. இலங்கையிலுள்ள எண்ணிறந்த விகாரைகளும், தாதுகோபுரங்களும், சிகிரியாபோன்ற கலை மற்றும் வரலாற்றுச் சின்னங்களும் இவ்வார்வங்களுக்கும் முயற்சிகளுக்கும் உத்வேகம் தந்திருக்க முடியும். எல்லாவற்றையும் உள்வாங்கியிருந்தபோது மணிமேகலை காப்பியப் பிரவேசம் பெரும் புனைவு வெளியை என்னுள் உண்டாக்கிற்று. நினைவின் பரப்பெங்கும் அது முதல் ஒரு புத்த பெண் துறவியின் இடையறாச் சஞ்சாரம் இருந்துகொண்டு இருந்துவிட்டது. ஒரு வாய்ப்பான சமயத்துக்காக நான் காத்திருந்தேன். ஆனால் என் காத்திருப்பால் மணிமேகலையின் சஞ்சாரம் மனத்துள் வார்த்தைகளை ஒரு தருணத்தில் பிதுக்கத் துவங்கிவிட்டது. இதை நான் தவறவிடக்கூடாத ஒரு சமயமென எண்ணினேன். அதனால் எழுதத் தொடங்க தீர்மானித்தேன்.

அது அத்தனை சுலபத்தில் முடிந்துவிடக் கூடியதாய் இருக்கவில்லை. அதற்காக என்னை நான் நிறையத் தயார்படுத்தவேண்டி இருந்தது. அதனால் மறுபடியும் ‘மணிமேகலை’க்குள் புகுந்தேன். இந்திரவிழாவும், கண்ணகி- கோவலன் வரலாறும் காண சிலப்பதிகாரத்தின் புனர் வாசிப்பும் அவசியமாயிற்று. பௌத்த தத்தவங்களை மீள படிக்கவும் நேர்ந்தது. அத்தனை வாசிப்பு, ஆய்வு முயற்சிகளுக்குப் பிறகும் இடைஞ்சல் இருந்தது.

பௌத்த தத்துவத்தை ஆழப் புரிந்துகொள்ளல் அத்தனை சுலபத்தில் கைகூடவில்லை. அது ஒரு நூலிழை தவறினாலும் பிற மத தத்துவங்களோடு, குறிப்பாக சமண மதத்தோடும், இந்து மதத்தோடும் ஊடாட்டம் கொள்வதாய் இருந்தது. புத்தர் வாழ்ந்த காலத்தின் சமய நிலை, அவரது போதனைகளை பிற்காலத்தில் எழுதியோரது மனநிலையென இந்த உராய்தலுக்கான காரணங்களை விளங்க முயன்றேன். ஆயினும் நண்பர்களுடன் உரையாடினேன். ஆய்வு நூல்களை மேலும் விளக்கம் பெறும்வரை கற்றேன். ஒரு தெளிவு பிறந்ததான நம்பிக்கை வந்தது.

•Last Updated on ••Saturday•, 13 •July• 2019 08:37•• •Read more...•
 

செல்வி துளசி பாலமுரளியின் மறைவு பற்றி....

•E-mail• •Print• •PDF•

துளசி பாலமுரளிஎன் சகோதரன் எழுத்தாளர் பாலமுரளி (கடல்புத்திரன்) - காஞ்சனா தம்பதியினரின் புத்திரி செல்வி துளசி பாலமுரளி 8.7.2019 அன்று  தனது இருபத்து மூன்றாவது வயதில் இவ்வுலகை விட்டு நீங்கினார். மருத்துவரின் கவனக்குறைவினால் பிறப்பிலேயே பாதிக்கப்பட்ட துளசி  இதுநாள் வரை இருப்புக்கான தனது போராட்டத்தைத் துணிவுடன் எதிர் கொண்டு வந்தார். தனக்குரியதோர் உலகினில் வாழ்ந்தபோதினும் சுற்றியிருந்த அனைவருக்கும் இன்பத்தையே தந்து வந்தார். அவ்வப்போது புன்னகை மலர அனைவரையும் நோக்கும் துளசியின் முகம் நினைவிலென்றும் நிழலாடும். தன்னால் முடிந்தவரை இருப்புக்காகப் போராடிய துளசி பற்றிய நினைவுகள் அனைவர்தம் நெஞ்சங்களிலும் என்றும் பசுமையாக நிலைத்து நிற்கும்.

இவரது ஈமச்சடங்குகள்  Highland Funeral Home - Scarborough Chapel இல் ஜூலை 11, 2019 காலை நடைபெற்றன. பின்னர் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்பட்டு, St. John's Norway, 256 Kingston Rd., Toronto ON M4L 1S7  என்னும் முகவரியில் அமைந்துள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இது பற்றிய விரிவான விபரங்களுக்கு: https://www.arbormemorial.ca/highland-scarborough/obituaries/miss-thulasi-balamuraly/36225/  துளசி பாலமுரளியின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. முகநூலில் இது பற்றிய தகவலறிந்து தமது அஞ்சலியினைத் தெரிவித்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி.


-செல்வி துளசி பாலமுரளியின் பிரிவை எண்ணிக் கவிஞர் தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் எழுதிய அஞ்சலிக் கவிதை . -

துளசி மீண்டும் வரமாட்டாளா?

- தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

மனக்குறள் 9 & 10

மலர்தலை உலகம் மன்பதை சிறக்கும்
வளர்கலை அறிவம் வையகம் ஆக்கும்

புலர்பொழு தொன்றில் பூத்திட நின்ற
மலர்மகள் துளசி மலர்ந்திடக் கண்டோம்!

எழுத்துல கத்தொடும் இயம்பிடும் மானுடம்
பழுத்தவோர் மடியினிற் பாங்கினள் ஆயினும்

வழுத்திய மான்மகள் வைத்தியம் வதையுற
அழுத்திய தாம்பிழை ஆக்கினர் என்பதும்

•Last Updated on ••Saturday•, 13 •July• 2019 07:43•• •Read more...•
 

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகருடன் ஒரு மாலைப்பொழுது!

•E-mail• •Print• •PDF•

தற்போது கனடாவுக்கு வருகை தந்திருக்கும் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் அவருடனான சந்திப்பொன்று இன்று மாலை ஸ்கார்பரோவில் அமைந்துள்ள 5 ஸ்பைஸ் (5 Spice) உணவகத்தில் நிகழ்ந்தது. மேற்படி நிகழ்வில் எழுத்தாளர்கள் தேவகாந்தன், கடல்புத்திரன், நண்பர் எல்லாளன் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன். சுமார் இரண்டு மணித்தியாலம் வரை நிகழ்ந்த சந்திப்பில் பல்வேறு விடயங்களைப்பற்றிய எம் எண்ணங்களைப்பகிர்ந்துகொண்டோம்; நனவிடை தோய்ந்தோம்.

•Last Updated on ••Monday•, 08 •July• 2019 01:35•• •Read more...•
 

'வடலி' பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான் ஜானின் நூற் தொகுதி!

•E-mail• •Print• •PDF•

'வடலி' பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான் ஜானின் நூற் தொகுதி!ரகுமான் ஜான்இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டு ஆண்டுகள் பதினொன்றாகி விட்டன. இந்நிலையில் போராட்டம், அமைப்புகள், தத்துவங்கள் பற்றிய ரகுமான் ஜான் அவர்களின் நூற் தொகுதியொன்று விரைவில் 'வடலி' பதிப்பக வெளியீடாக வெளியாகவுள்ளது. இத்தொகுதியானது மூன்று நூல்களை உள்ளடக்கியதொன்றாகும்.

முன்னாட் போராளிகள் பலர் தம் அனுபவங்களின் அடிப்படையில் பல நூல்களை வெளியிட்டுள்ளனர். அவையெல்லாம் அவர்கள் பார்வையில் அவரவர் இயக்கம் பற்றிய அல்லது அவர்களின் தப்பிப்பிழைத்தல் பற்றிய அனுபவங்களாகும். இவ்வகையில் தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்', ஐயரின் 'ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்', செழியனின் 'ஒரு போராளியின் நாட்குறிப்பு' போன்றவை முக்கியமானவை. ஆனால் இவையெல்லாம் முன்னாட் போராளிகளின் அனுபவங்களை அதிகமாகக் கூறுபவை. நடந்த தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம், அமைப்புகள், அவற்றின் தத்துவங்கள் பற்றிய விரிவான ஆய்வு நூல்களல்ல.

இந்நிலையில் ஈழத்தமிழர்தம் விடுதலைப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ரகுமான் ஜானின் மேற்படி நூற் தொகுதி வெளிவரவிருப்பது நல்லதொரு விடயம். ஏனெனில் இத்தொகுதிகள் பின்வரும் தலைப்புகளில் வெளியாகவுள்ளதாகவும் அறிகின்றேன்:

1. ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அரசியல் பிரச்சனைகள்.
2. ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள்
3. ஈழப்போராட்டத்தின் மூலோபாய, தந்திரோபாய பிரச்சனைகள்.

ரகுமான் ஜானின் உரைகள், கட்டுரைகள் பலவற்றை முறையே கேட்டிருக்கின்றேன், வாசித்திருக்கின்றேன். அவை தர்க்கச்சிறப்பு மிக்கவையாக இருப்பதையும் அவதானித்திருக்கின்றேன். இந்நிலையில் ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அமைப்புத்துறை, மூலோபாய தந்திரோபாயப் பிரச்சினைகள் பற்றிய ஆய்வுகள் தற்போதுள்ள சூழலில் தேவையானவை; முக்கியத்துவம் வாய்ந்தவை.

•Last Updated on ••Monday•, 08 •July• 2019 01:35•• •Read more...•
 

அப்பா நினைவாக......

•E-mail• •Print• •PDF•

அப்பா நடராஜா நவரத்தினம்அப்பாவும் மகனும்வீடு முழுவதும் புத்தகங்கள் , சஞ்சிகைகளால் நிறைந்திருந்த சூழலுக்குக் காரணம் அப்பா(நடராஜா நவரத்தினம் - நில அளவையாளரான அவரைப் பலர் 'Tall Nava' என்று அறிந்திருக்கின்றார்கள்).  தமிழகச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், இலங்கைப்பத்திரிகைகள் என்று அவற்றை வாங்கிக் குவித்தார். இவற்றுடன் அவர் தனது ஆங்கில நூல்களுக்காக புத்தக 'ஷெல்ஃப்' ஒன்றும் வைத்திருந்தார். அவற்றிலிருந்த நூல்களின் ஆசிரியர்களில் முக்கியமானவர் கிறகாம் கிறீன். அவரது நாவல்கள் பல அவரிடமிருந்தன. ஆர்.கே.நாராயணனின் நாவல்களும் ஓரிரண்டிருந்தன. டி.இ.லாரண்ஸின் 'லாரண்ஸ் ஒஃப் அராபியா' (Lawrence of Arabia) . இவற்றுடனிருந்த இன்னுமொரு நூல் டால்ஸ்டாயின் 'அன்னா கரீனினா'.

என் வாசிப்பு, எழுத்தார்வத்துக்கு முக்கிய காரணமே அப்பாதான். அப்பா என்றதும் கூடவே நினைவுக்கு வரும் இன்னுமொரு விடயம் அப்பாவுடன் பார்த்த ஆங்கிலத்திரைப்படங்கள். என் சிறு வயதில் வவுனியாவில் இருந்த காலகட்டத்தில் என்னைத் தன்னுடன் ஆங்கிலத்திரைப்படங்களுக்குக் கூட்டிச் சென்றிருக்கின்றார். 'சீன் கானரி' ஜேம்ஸ் பாண்டாக நடித்த 'யு ஒன்லி லிவ் டுவைஸ்' , 'பரபாஸ்', 'பெனஹர்' அடுத்தது 'டென் கமாண்ட்மென்ட்ஸ்'.  இவற்றில் முதலாவதைத்தவிர ஏனையவை பைளிள் கதைகளை ஆதாரமாகக்கொண்டவை. இத்திரைப்படங்கள் அவருக்குப் பிடித்திருந்ததற்கு முக்கிய காரணங்களிலொன்று அவற்றில் நடித்திருந்த நடிகர்கள். இவர்கள் அப்பாவுக்கு மிகவும் பிடித்த 'ஹாலிவூட்' நடிகர்கள். பாண்ட் திரைப்படத்தில் சீன் கானரி. பரபாஸில் அந்தனி குயின். பென்ஹர், டென் கமாண்ட்மென்ட்ஸில் சார்ள்டன் ஹெஸ்டன். இவர்கள் அனைவருமே சிறந்த நடிகர்கள். இதன் மூலம் என் பால்யகாலப்பருவத்திலேயே இந்நடிகர்கள் எனக்கும் அறிமுகமானார்கள். பின்னர் என் பதின்ம வயதுகளில் இவர்கள் நடித்த திரைப்படங்கள் பலவற்றைத் தேடித்தேடிப்பார்ப்பதற்கு அப்பாவுடன் சென்று பார்த்த இத்திரைப்படங்களே காரணம்.

அக்காலகட்டத்தில் அவருக்குப்பிடித்த நடிகர் சிவாஜி. எனக்கோ எம்ஜிஆர். பாலச்சந்தரின் திரைப்படங்களை அவர் விரும்பிப் பார்த்தார். அவை பற்றியும் அவர் அம்மாவுடன் உரையாடுவார். குறிப்பாக எதிர் நீச்சல், பாமா விஜயம் ஆகியவை பற்றிய அவரது அம்மாவுடனான உரையாடல்கள் நினைவிலுள்ளன. எதிர் நீச்சல் படத்தில் வரும் நாயர் (முத்துராமன்) மற்றும் மாது (நாகேஷ்) பாத்திரங்களை அவர் பெரிதும் இரசித்தார்.

•Last Updated on ••Sunday•, 16 •June• 2019 23:47•• •Read more...•
 

எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டது குறித்து....

•E-mail• •Print• •PDF•

ஜெயமோகன்எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பதிவில் பின்வருமாறு எழுதியுள்ளார்:

"தாக்கப்பட்டேன் . இச்செய்தியைப் பற்றி பலர் கேட்டனர். சேதி உண்மை. ஒரு சிறு விவகாரத்தால் நான் தாக்கப்பட்டேன். அருகில் உள்ள வசந்தம் கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள் பழைய புளித்த மாவை கொடுத்து விட்டார்கள். கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை திரும்பி எடுக்க மறுத்து என்னை வசைபாட ஆரம்பித்தார் நான் கோபமாக மாவு பாக்கெட்டுகளை நீயே வைத்துக்கொள் என வீசிவிட்டு திரும்பினேன். அருகே அவள் கணவன் நின்றிருந்தான். உரிமையாளன். பெரிய குடிகாரன். ஏற்கனவே குடித்து தகராறு செய்தபடி நின்றிருக்கிறான். நான் கவனிக்கவில்லை.

என்னை தாக்க ஆரம்பித்தான். தாடையில் அடித்தான். கீழே விழுந்தபோது உதைத்தான். என் கண்ணாடி உடைந்தது. பலமுறை தாக்கி கெட்டவார்த்தை சொன்னான். பிடித்து அகற்றினர். அவனுடைய கடை வேலையாட்கள் அவர்கள். வீடு வந்தேன். அதற்குள் வீட்டுக்கு வந்து என் மனைவியையும் மகளையும் வசைபாடினான். வீட்டுக்குள் நுழைய முயன்றான். அதன் பின்னரே காவல் நிலையம் சென்று புகார் கொடுத்திருக்கிறேன். காவல் நிலையம் சென்ற பின்னர்தான் ஒரு கேடியின் தொடர்புகள் புரிந்தது. வழக்கறிஞர்கள். அரசியல் தலைவர்கள் வந்து அவனுக்காக வாதாடினார்கள். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இருக்கிறேன். சிறு காயங்கள் உள்ளன . வழக்கு பதிவு செய்யப்படும் என நினைக்கிறேன். நீதி கிடைக்குமென்றும்."

•Last Updated on ••Saturday•, 15 •June• 2019 10:12•• •Read more...•
 

‘முரண்’முரண்களை உள்ளடக்கிய சிறந்ததொரு தொகுப்பு!

•E-mail• •Print• •PDF•

கோமகனின் 'முரண்'வ.ந.கிரிதரன்எழுத்தாளர் கோமகனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் இணைய இதழ் 'நடு'. 'நடு' இதழின் ஆணி 2019 இதழில் கோமகனின் சிறுகதைத் தொகுதியான 'முரண்' பற்றிய எனது விமர்சனமொன்று வெளியாகியுள்ளது. அதனை இங்கு ஒரு பதிவுக்காகப் பகிர்ந்துகொள்கின்றேன். அண்மையில் வாசித்த புகலிடச் சிறுகதைகளில் சிறந்த சில சிறுகதைகளை உள்ளடக்கிய சிறுகதைத் தொகுப்பு 'முரண்'. குறிப்பாக 'மாதுமை' , 'ஏறு தழுவல்' என்னை மிகவும் பாதித்த சிறுகதைகள் என்பேன். வாழ்த்துகள் கோமகன். - வ.ந.கி -


எழுத்தாளரும், ‘நடு’ இணைய சிற்றிதழ் ஆசிரியருமான கோமகனின் மூன்றாவது வெளியீடான ‘முரண்’ சிறுகதைத்தொகுதியை அண்மையில் படித்தேன். எழுத்தாளர் கோமகன் என் முகநூல் நண்பர்களிலொருவர்.  அவரது எழுத்துகளை நான் முதன் முதலில் அறிந்துகொண்டது முகநூலில் ‘சுறுக்கர்’ என்ற பெயரில் அவர் போடும் பதிவுகள் மூலமே. சுறுக்கரின் பதிவுகளில் எப்பொழுதும் நகைச்சுவை பொங்கி வழியும். அவரது எழுத்துகளிலும் அவ்வுணர்வு நிறையவே இருக்குமென்று எண்ணியபடியே நூலை வாசிக்கத்தொடங்கினேன். முதலில் நூலின் அவரது ‘என்னுரை’யில் அவர் தொகுப்பின் கதைகளைப்பற்றிக் கூறியவை என் கவனத்தைச் சற்றே திசை திருப்பின. அதிலவர்:

“இத்தொகுப்புச் சிறுகதைகளில் நான் தனிப்பட்ட பல இடங்களில் முரண் பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதைசொல்லும் உத்திகளில் பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கின்றேன். எம்மவரிடையே காலங்காலமாகப் பேணப்பட்டு வரும் புனிதப்படுத்தல்களை கேள்விக்குட்படுத்தி உடைத்தெறிந்திருக்கின்றேன். பேசாப் பொருட்களைப் பேசியிருக்கின்றேன். அவைகளில் நான் வெற்றி பெற்றிருக்கின்றேனா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கின்றேன் என்பதை என்னால் உறுதிப்படச் சொல்ல முடியும். எனக்கு  இலக்கிய ஜாம்பவான்களைப்போல் சொல் கட்டத்தெரியாது. எல்லோருக்கும் வாலிப்பருவம் அதன் வசந்தத்தையும் ஊர் உறவு நண்பர்கள் என்று அள்ளிக்கொடுக்க, அதே வயதில் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் உபரி விளைவாக நான் அகதியாக அந்நிய தேசத்துக்குப் புலம் பெயர்ந்ததும் இந்தச் சொல் கட்டுக்குள் வராமைக்கு ஒரு காரணமாகின்றது.” என்று கூறியிருப்பார். அவரது இச்சுய விமர்சனத்தை மனத்திலிருத்தி நூலினை வாசித்தேன்.

இத்தொகுப்பின் கதைகள் ஒன்றைத்தவிர  இம்மாநிலத்தின் உயிரினங்களின் பல்வேறு ஆளுமைகளைப்பற்றி விபரிக்கும் விவரணச்சித்திரங்களாகவும் கொள்ளக்கூடியவை. ஏனெனில் மானுடர்களின், மிருகங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துபவை என்பதால் அவ்விதம் கூறினேன். அந்த ஒன்று ‘மயானம்’ ஒன்று தன் கதையை, தன்னைப்பாவிக்கும் மானுடர்களுக்கிடையிலான முரண்பாடுகளைப்பற்றிக் கூறுகின்றது. இறுதியில் அம்மானுடர்களின் முரண்பாடுகளால்  அம்மயானம் மின்சார மயானமாக மாறுவதுடன் முடிவுக்கு வருகின்றது.

நூலாசிரியர் தன்னுரையில் ‘பேசாப் பொருட்களை பேசியிருக்கின்றேன்’ என்று கூறியுள்ளதை மெய்ப்பிக்கும் வகையிலான கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. தொகுப்பின் தலைப்புக்கதையான ‘முரண்’ அவ்விதமான கதைகளிலொன்று. முகுந்தன், மிருதுளா என்னும் இலங்கைத்தமிழ்த் தம்பதியின் கதை, தமிழர்கள் மத்தில் அதிகம் பேசப்படாத பொருளாகிய ‘தன்னினச்சேர்க்கை’ பற்றிப்பேசுகின்றது. நாயகன் முகுந்தன் சிறுவயதிலேயே மச்சான் முறையான உறவினனுடன் தன்னினச்சேர்க்கையில் ஈடுபட்டவன். வம்ச விருத்தியைப் பிரதான காரணமாகக்கொண்டு மிருதுளாவைத் திருமணம் செய்தாலும்  அவனது விந்து குழந்தைகளை உருவாக்குவதற்குரிய வீரியமற்றது. இந்நிலையில் மனைவி மிருதுளாவுக்குச் செயற்கைக் கருக்கட்டல் தொழில் நுட்பத்தின் மூலமும் அவள் குழந்தை பெறுவதற்கான முயற்சி நடைபெறுகின்றது. இடையில் அவன் மீண்டும் புகலிடச் சூழலில் தன்னுடன் பணிபுரியும் கொலீக் (சகபணியாளன்)  ஒருவனுடன் மீண்டும் ஒருபாலுறவுத் தொடர்பில் ஈடுபடுகின்றான். தன்னினச் சேர்க்கையாளர்கள் செல்லும் கிளப்புகளுக்குச் செல்கின்றான். இதற்காக அவன் கிரடிட் கார்ட்டில் எடுக்கும் பண விபரத்தைக் கண்டு, அவன் ஒரு பாலுறவுக்காரனென்பதை அறிந்து, அவனிடம்  கூறாமலேயே அவனை விட்டுப்பிரிந்து செல்கின்றாள் மிருதுளா. இது பற்றிய ஆசிரியரின் விபரிப்பு பின்வருமாறிருக்கும்:

•Last Updated on ••Wednesday•, 12 •June• 2019 21:03•• •Read more...•
 

எழுத்தாளர் காத்யானா அமரசிங்கவின் யாழ் நூலகம் பற்றிய பத்தி பற்றி...

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் காத்யானா அமரசிங்கயாழ் நூலகம் எரிக்கப்பட்ட நாளான மே 31 பற்றி முகநூலுட்படப் பல்வேறு ஊடகங்களில் அது பற்றிய பதிவுகள் பலவற்றைப்பார்த்தோம். இன, மத , மொழி வேறுபாடின்றிப் பல்லின மக்களும் நூலக எரிப்புக்காக மனம் வருந்துகின்றார்கள். சிங்கள எழுத்தாளர் காத்யானா அமரசிங்க அவர்களும் அவர்களிலொருவர். இலங்கைத் தமிழ் மக்களின் உணர்வுகளைப்புரிந்துகொண்ட சிங்கள மக்களில், எழுத்தாளர்களிலொருவர். அண்மையில் வெளியான அவரது நாவலும் கூட அவரது வடக்குப் பயணத்தின்போது அவர் கேட்டு, அறிந்த , அனுபவங்களை மையமாக வைத்து எழுதப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் இன்று புதன் கிழமை வெளியான (ஜூன் 5, 2019) 'ரச' பத்திரிகையின் புதன் கிழமைக்கான பதிப்பில் 'எரியும் இதயம்' என்னும் தலைப்பில் யாழ் நூலக எரிப்பு பற்றி எழுதியுள்ளார். இக்கட்டுரை ஏரிக்கரை நிறுவனம் வெளியிடும் இப்பத்திரிகையின் புதன் கிழமைக்கான பதிப்பில் வாரம் தோறும் அவர் எழுதும் பத்திக்கான இவ்வாரக் கட்டுரையாகும்.

இக்கட்டுரையில் அவர் நூலகம் எரியுண்டதன் பின் ஊடகங்களில் வெளியான நூலகர் ரூபாவதி நடராஜா அவர்கள் நூலகப் பணியாளர்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் பற்றிக் குறிப்பிடுகையில் 'நூலகர் ரூபாவதி நடராஜாவின் வெறுமையான பார்வை என் இதயத்தை வேதனையால் எரிக்கின்றது' என்று குறிப்பிட்டுள்ளார். இப்பந்தியில் நூலக எரிப்பு பற்றிய எனது கருத்துகளையும் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையில் வெளியான எனது கருத்துகளில் நூலகம் எவ்வாறு என் மாணவப்பருவத்தில் உதவியது என்பது பற்றியும், அங்கு நான் வாசித்த பல் துறை நூல்கள், மொழிபெயர்ப்புகள் பற்றியும் குறிப்பிட்டதுடன் 'நூலகங்களே எனது ஆலயங்கள்' என்ற எனது கருத்தினையும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி கட்டுரையை அவர் முகநூலிலும் பதிவு செய்துள்ளார். அதனை வாசித்த சிங்கள மக்கள் பலர் அதனைப் பகிர்ந்துகொண்டுள்ளதுடன் , நூலக எரிப்புக்கான அவர்கள்தம் வருத்தத்தையும் எதிர்வினைகளில் பதிவு செய்துள்ளார்கள்.
•Last Updated on ••Wednesday•, 05 •June• 2019 08:36•• •Read more...•
 

திரைப்பட இயக்குநர் 'புதியவன் ராசையா'வுடனோர் அந்திப் பொழுது!

•E-mail• •Print• •PDF•

திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான 'புதியவன் இராசையா'வுடனோர் அந்திப் பொழுது!

இன்று மாலை (ஜூன் 4, 2019) ஸ்கார்பரோவில் மார்க்கம் & மக்னிகல் பகுதியில் 2901 மார்க்கம் றோட் என்னும் முகவரியில் அமைந்துள்ள , நட்பான பணியாளர்களைக் கொண்ட 'தோசா ராமா' உணவகத்தில் நண்பர் எல்லாளனுடன் ('ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' நூலாசிரியர்) திரைப்பட இயக்குநர் புதியவன் ராசையாவைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தனது திரைப்படங்கள் மூலம் நன்கு அறியப்பட்டவரான புதியவன் ராசையா அவர்கள் தற்போது அவரது திரைப்படமான 'ஒற்றைப் பனைமரம்' திரைப்படத்தினைக் கனடாவில் திரையிடுவதற்காகத் தற்சமயம் கனடாவுக்கு வருகை தந்துள்ளார். ஏற்கனவே இவர் 'மாற்று' (2001), 'கனவுகள் நிஜமானால்' (2003), 'மண்' (2005) & 'யாவும் வசப்ப்டும்' (2015) ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை RSSS என்னும் தமிழக நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்.  படத்துக்கு இசையமைத்துள்ளவர் அண்டாவக் காணோம், காஞ்சனா, சதுரங்க வேட்டை 2 போன்ற பல படங்களில் பணியாற்றிய அஷ்வமித்ரா. படத்தின் ஒளிப்பதிவாளர் இலங்கையைச் சேர்ந்த மகிந்த அபேசிங்க. இவர் சர்வதேச விருது பெற ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தைத் தொகுத்திருப்பவர் சுரேஷ் அர்ஸ். இத்திரைப்படத்தின் முக்கிய பாத்திரங்களில் புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன் மற்றும் தனுவன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 37 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் தேர்வாகி, இசை, ஒளிப்பதிவு , சிறந்த நடிப்பு போன்றவற்றுக்காக விருதுகளைப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜூன் 9, 2019 அன்று 5637 ஃபிஞ்ச் அவென்யூ ஈஸ்ட் , யுனிட் 1 என்னும் முகவரியில் காலை மணி பதினொன்றுக்கு இத்திரைப்படம் திரையிடப்படவுள்ளது. கட்டண விபரங்கள்: கடைசி வரிசை 20 & முதல் வரிசை 50 & 100. மேலதிக விபரங்களுக்கு 416.834.6618 / 437.241.9526 என்னும் தொலைபேசி இலக்கங்களில் தொடர்புகொள்ளுங்கள். இத்திரைப்படம் 14.06.2019 அன்றும் 'டொராண்டோ'வில் மீளத்திரையிடப்படவுள்ளதாகவும் அறிகின்றேன்.

புதியவன் ராசையா பற்றி அறிந்திருந்தாலும் அவரைச் சந்திப்பது இதுவே முதற் தடவை. சிலருடனான முதற் சந்திப்பு நன்கு அறிமுகமான ஒருவருடனான சந்திப்பைப்போன்று அமைந்துவிடுவதுண்டு. புதியவன் ராசையாவுடனான சந்திப்பும் அத்தகையது. புதியவன் புதியவராகத் தெரியவில்லை. நன்கு அறிமுகமான பழையவர் ஒருவரைப்போன்றே தென்பட்டார். எடுத்த எடுப்பிலேயே மிகவும் இயல்பாக உரையாடத்தொடங்கினார். சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளை , தேர்வுகளை, பரிந்துரைகளைப்பெற்ற திரைப்படமான 'ஒற்றைப்பனைமரம்' திரைப்படத்தின் , இயக்குநரான புதியவன் ராசையாவின் எளிமையான பண்பு என்னைக் கவர்ந்தது. சந்திப்பின் நேரம் குறுகியதாகவிருந்தபோதும் அவரைப்பற்றி, அவரது ஆளுமையைப்பற்றி நன்கு அறியக்கூடியதாக அவருடனான உரையாடல் அமைந்திருந்ததில் மகிழ்ச்சியே. உரையாடல் பல்வேறு விடயங்களைத் தொட்டுச் சென்றது. அவரது ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து இன்று வரையிலான அவரது அனுபவங்கள் பலவற்றை அறிய அவ்வுரையாடல் மிகவும் உதவியது என்றே கூறுவேன். ஏற்கனவே 'மண்' என்னும் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது பெற்ற இயக்குநர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாங்கிய தத்துவம் பற்றியும் அதன் அடிப்படையான அம்சம் பற்றியும் அவர் உரையாடியது அவரது பன்முகப்பட்ட அறிவினை வெளிப்படுத்தியது.
•Last Updated on ••Wednesday•, 05 •June• 2019 08:35•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 343 : சங்கிலி மன்னன் பற்றிய அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் கருத்து பற்றி......

•E-mail• •Print• •PDF•

சங்கிலியன் சிலைநிலாந்தன்அண்மையில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னன் சங்கிலியன் பற்றிய கட்டுரையொன்றினை கனடாவிலிருந்து வெளியாகும் 'உலகத்தமிழர்' பத்திரிகை தனது மே 31- ஜூன்06 பதிப்பில் 'அரசியல் கட்டுரை'யாக 'சங்கிலியனும் சிவசேனையும்'  என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தது. அதில் ஆய்வாளர் நிலாந்தன் சங்கிலியன் பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

" சங்கிலியன் முதலாவதாக யாழ்ப்பாணத்தின் கடைசி அரசன். அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப்போராடி தோற்கடிக்கப்பட்ட ஒரு மன்னன். அவனுடைய அரசுதான் யாழ்ப்பாணத்தின் கடைசி தமிழ் அரசு ஆகும்.....  இரண்டாவதாக சங்கிலியன் தனது சொந்த மக்களில் சுமார் 600 பேர்களை வெட்டிக்கொன்றான் என்று ஒரு குற்றச்சாட்டு.  மன்னாரில் போர்த்துக்கீசரால்  மதம் மாற்றப்பட்ட சுமார் 600 க்கும் குறையாத தமிழ் மக்களை சங்கிலியன் வேட்டையாடியதாக குற்றஞ் சாட்டப்படுகிறது'

சங்கிலியன் என்னும் மன்னரைப்பற்றிய சரியான விளக்கம் பொதுமக்களுக்கு வேண்டுமானால்  இல்லாமலிருக்கலாம். ஓர் அரசியல் ஆய்வாளருக்கு இல்லாமல் போகலாமா? இலங்கைத்தமிழ் மன்னர்களின் யாழ்ப்பாண அரசின் வரலாற்றில் சங்கிலியன் என்னும் பெயரில் இருவரின் பெயர்கள் காணப்படுகின்றன. இம்மன்னர்கள் மாறி மாறி யாழ்ப்பாண அரசை ஆண்ட போது தமது பெயர்களை செகராசசேகர்ரன், பரராசசேகரன் என்னும் பட்டப்பெயர்களுடன் ஆண்டு வந்தார்கள். இவர்களில் முதலாவது சங்கிலி மன்னன் ஏழாம் செகராசசேகரன் என்னும் பெயரில் 1519 தொடக்கம் 1561 வரை நாற்பதாண்டுகள் ஆட்சியிலிருந்தவன். இவன் இவனுக்கு முன் ஆண்ட ஆறாவது பரராசசேகரனின் மூன்றாவது மனைவி மங்கத்தம்மாளின் மகனாகக் கருதப்படுபவன்.

சங்கிலி 2 சங்கிலி குமாரன் என்னும் பெயரில் 1616 தொடக்கம் 1620 வரை நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவன்.

யாழ்ப்பாண அரசர்களின் வரலாற்றைப்பற்றிய நூலான மாதகல் மயில்வாகனப்புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலானது  கைலாயமாலை, வையா பாடல், பரராசசேகரனுலா மற்றும் இராசமுறை என்னும் நூல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை  என்பதை யாழ்ப்பாண வைபவமாலை நூலின் பாயிரத்திலுள்ள செய்யள் கூறும். யாழ்பபாண வைபவமாலையின் காலகட்டத்தை  அதன் பாயிரத்தில் கூறப்படும் ஒல்லாந்து தேசாபதியின் பெயரின் அடிப்படையில் கிபி.1736 என்று கருதலாம் என்பது சுவாமி ஞானப்பிரகாசர் போன்ற வரலாற்றறிஞர்கள் ஆகியோரின் கருத்து. ஏற்கக்கூடிய தர்க்கம்.

மயில்வாகனப்புலவர் சங்கிலியன் மன்னர்கள் இருவரின் வாழ்க்கை வரலாறுகளையும் ஒன்றாக்கிக் குழப்பியடித்த விபரங்களை யாழ்ப்பாண வைபவமாலை நூலை அக்காலகட்டத்தில் சிங்களவர்கள் மற்றும் போர்த்துக்கீசர்கள், ஒல்லாந்தர் போன்றோரின் வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் ஒப்பிட்டு, ஆராய்ந்து சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ.இராசநாயகம் அண்மையில் பேராசிரியர் சிற்றம்பலம் போன்றோர் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள். சுவாமி ஞானப்பிரகாசரின் 'யாழ்ப்பாண வைபவ விமர்சனம்' இவ்வகையில் மிகவும் முக்கியமான நூல்களிலொன்று.

•Last Updated on ••Monday•, 03 •June• 2019 21:50•• •Read more...•
 

காலம் 53 செழியன் சிறப்பிதழ் வெளியீடு!

•E-mail• •Print• •PDF•

காலம் இலக்கிய நிகழ்வு

•Last Updated on ••Sunday•, 02 •June• 2019 11:00••
 

முகநூற் கவிதை: யாழ் நூலகம்

•E-mail• •Print• •PDF•

இஸ்மாயில் ஏ.முகமட் (Ismail A. Mohamed) -

\அறிவின் கருவை
அக்கினி தின்ற
அகவை முப்பத்து எட்டே
நூல்
செறிவில் வஞ்சம்
சேர்த்தன நெஞ்சம்
அழித்தன கண்கள் பட்டே

ஆசிய மண்ணின்
அதிசயமாக அமைந்ததில்
வந்தது இடையூறா
மதி
வீசிய தேசம்
வெந்தழல் மீது
வீழ்ந்திடக் காரணம் கண்ணூறா

•Last Updated on ••Sunday•, 02 •June• 2019 10:56•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 342: வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் & வ.ந.கிரிதரனின் யாழ் நூலகம் பற்றிய முகநூற் பதிவுகள்.

•E-mail• •Print• •PDF•

- வ.ந.கிரிதரன் -

நண்பர்களே! எனது ஐம்பத்தாறு கட்டுரைகளை (இலக்கியம், கட்டடக்கலை, நகர அமைப்பு மற்றும் அறிவியல்) ஏழு பகுதிகளாக 'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் எனது வலைப்பதிவில் நீங்கள் வாசிக்கலாம். அவற்றின் இணைய முகவரிகள் வருமாறு:

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஒன்று (1 - 10) - https://vngiritharan230.blogspot.com/2019/06/1-10.html#more
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி இரண்டு (11 - 20) - https://vngiritharan230.blogspot.com/2019/06/11-20.html#more
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி மூன்று (21 - 30) - https://vngiritharan230.blogspot.com/2019/06/21.html#more
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி நான்கு (31 -36) - https://vngiritharan230.blogspot.com/2019/06/31-36.html#more
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஐந்து: கட்டடக்கலை & நகர அமைப்பு பற்றிய கட்டுரைகள் _37 - 45 ) - https://vngiritharan230.blogspot.com/2019/06/37-45.html#more
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஆறு : அறிவியற் கட்டுரைகள் (46 - 50) - https://vngiritharan230.blogspot.com/2019/06/46-50.html#more
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஏழு (51 - 56) - https://vngiritharan230.blogspot.com/2019/06/51.html#more

•Last Updated on ••Sunday•, 02 •June• 2019 10:49•• •Read more...•
 

மேலும் சில தமிழினியின் (றொமிலா ஜெயன் ) படைப்புகள் பற்றி...

•E-mail• •Print• •PDF•

தமிழினி ஜெயக்குமாரன்தமிழினி ஜெயக்குமாரன் இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். அத்துடன் ஆயுதம் தாங்கி இலங்கை இராணுவத்திற்கெதிராக யுத்தம் புரிந்தவரும் கூட. யுத்தம் மெளனிக்கப்பட்ட பின்னர் தன் இறுதிக்காலம் வரையில் அவர் கவனம் எழுத்துக்குத் திரும்பியது. அவரது சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழல்' மற்றும் கவிதைத்தொகுப்பான  'போர்க்காலம் - தோழிகளின் உரையாடல்' ஆகிய இரு நூல்களுமே உலகத்தமிழ் இலக்கியத்துக்கு அவராற்றிய பங்களிப்புகளாகும். இவ்விரு நூல்களும் அவரது பெயரை வரலாற்றில் நிலைத்து நிற்க வைக்கும். இவற்றுடன் அவரது இலக்கியப்பங்களிப்பு நின்று விடவில்லை. றொமிலா ஜெயன் என்னும் புனைபெயரில் அவர் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் எண்ணப்பதிவுகள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.  அப்படைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவரது சிறுகதைகள் 'எதுவரை' இணைய இதழ் மற்றும் 'அம்ருதா' (தமிழகம்) சஞ்சிகை ஆகியவற்றிலும் வெளியாகியுள்ளன. அவையும் குறிப்பிடத்தக்கவை.

அவர் முகநூலில் 'றொமிலா ஜெயன்' என்னும் பெயரில் நட்புக்கான அழைப்பினை அனுப்பியபோது எனக்கு அவரை யாரென்று தெரிந்திருக்கவில்லை. யாரோ ஒரு பெயர் சொல்ல வக்கற்ற முகமூடியாக அவரை எண்ணியதால், அந்த நட்பு அழைப்பினை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் அவர் தமிழினி என்னும் பெயரில் முகநூலில் அறிமுகமாகி, பதிவுகள் இணைய இதழில் அவரது படைப்புகள் வெளியாகிய காலகட்டத்திலேயே அவர்தான் றொமிலா ஜெயன் என்னும் புனைபெயருக்குள் ஒளிந்திருப்பவர் என்னும் விடயமே எனக்குத் தெரிய வந்தது.

தமிழினியின் இலக்கியப்பங்களிப்பு றொமிலா ஜெயன் என்னும் புனைபெயரில் அவர் எழுதிய படைப்புகளையும் உள்ளடக்கியது. றொமிலா ஜெயன் என்னும் பெயரில் அவர் எழுதிய சிறுகதைகள், கவிதைகள், பதிவுகள் போன்றவையும் தொகுக்கப்படுதல் அவசியம். றொமிலா ஜெயன் என்னும் பெயரில் முகநூலில் அவர் எழுதிய கவிதைகள் சில மற்றும் பதிவுகள் சிலவற்றை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன். இத்தொகுப்பு ஓர் ஆவணத்தொகுப்பு.

முகநூலில் றொமிலா ஜெயனின் பதிவுகள் சில:

1. றொமிலா ஜெயன்  நவம்பர்  27, 2014 -

"என் மக்களுக்காக ஆயுதம் தூக்கியதை தவிர
நான் என்ன தவறு செய்தேன்..."


றொமிலா ஜெயன் - டிசமபர் 24, 2014

நான் வீழ்ந்து விட்டேன்
என்று எண்ணி மட்டும்
யாரும் சந்தோசம் கொள்ளாதீர்கள்..
நான் வீழ்ந்ததே முளைப்பதற்குத்தான்..


2.  கவிதை:  எனது அன்னை.

எனைக் கருச் சுமந்த
காரணத்தால்
காலமெலாம்
கவலைகளையே
சுமந்தலைந்தாய்
வறுமையும்
வசைகளும் தாங்கினாய் -உன்
கனவுகளை சிதைத்துப் போட்ட
பிரயோசனமில்லாப் பிள்ளையானேன்- என்
பிறப்புக்கு அர்த்தம் தேடியலையாமல்
அன்னையே
உன் முகத்திலொரு புன்னகையை
மலரச் செய்வேனாகில்
ஆன்மா நிறைவடைவேன்.

•Last Updated on ••Wednesday•, 22 •May• 2019 08:06•• •Read more...•
 

கனடாத் தமிழ் இலக்கியமும் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையும்!

•E-mail• •Print• •PDF•

கனடாத் தமிழ் இலக்கியமும் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையும்!கனடாத்தமிழ் இலக்கிய வரலாற்றில் 'புரட்சிப்பாதை' சஞ்சிகைக்குமோரிடமுண்டு.  இதுவொரு கையெழுத்துச் சஞ்சிகை. 'அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிவோம்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியான சஞ்சிகை.  'இப்பத்திரிகை வட அமெரிக்கா வாழ் தமீழீழ மக்கள் விடுதலைக்கழக ஆதரவாளர்களினால் வெளியிடப்பட்டது' என்னும் குறிப்புடன் வெளியானாலும், இதன் அமைப்பின்படி இதனையொரு சஞ்சிகையாகவே கருதலாம் (செய்திக்கடிதமாகவும் கருதலாம். ஆனால் நாவல், கவிதை, கட்டுரை எனப்பல ஆக்கங்கள் வெளியானதால் சஞ்சிகையென்று கருதுவதே பொருத்தமானதென்பதென் கருத்து.). இதன் கனடாத் தொடர்புகளுக்கான முகவரி:  C.P.842, POST OFFICE - AHUNSTIC, MONTREAL, QUEBEC H3L 3P4 என்றும் குறிபிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பதினைந்தாம் திகதி வெளியான இச்சஞ்சிகை  15.09.1984 தொடக்கம் 15.06.1985 வரை பத்து இதழ்கள் வெளியாகியுள்ளன. வெளியான இதழ்கள் எவற்றிலும் ஆசிரியர் குழுவினரின் பெயர்கள் இல்லை. இளைஞர்கள் பலரின் கூட்டு முயற்சி இது. எனக்குத் தெரிந்து சுந்தரி (கோண்டாவில்)  ,ஜெயந்தி (உரும்பிராய்), நவரஞ்சன், குணபாலன் போன்றோருடன் மேலும் சிலர் இணைந்து இச்சஞ்சிகையினை வெளியிட்டார்கள்.  

இதுவோர் அரசிலமைப்பு சார்ந்து வெளியான கையெழுத்துச் சஞ்சிகையென்றாலும், கனடாவில் 1984இல் வெளியான தமிழ்ச் சஞ்சிகையென்றவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இச்சஞ்சிகை கவிதை, கட்டுரை மற்றம் நாவல் & கேலிச்சித்திரம் போன்றவற்றையும் பிரசுரித்ததன் மூலம் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கும் வளம் சேர்த்துள்ளது. கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவலான எனது 'மண்ணின் குரல்' இச்சஞ்சிகையிலேயே தொடராகவும் ஏழு அத்தியாயங்கள் வரை வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

'புரட்சிப்பாதை'யில் வெளியான ஆக்கங்களின் விபரங்கள் வருமாறு (என்னிடம் இதழ் மூன்றிலிருந்தே  இருப்பதால் அதிலிருந்தே ஆரம்பிக்கின்றேன்) :

புரட்சி 1. விழிப்பு 3 - 15.11.1984

1. முதலிரு பக்கங்களில் 'எமது மக்களே எம்மை புரட்சியாளராக்கினர்' - தோழர் உமாமகேசுவரன் என்னும் தலைப்புடன் அவரது பேட்டியின் ஒரு பகுதி இடம் பெற்றுள்ளது. 'தமிழன் குரல்' பத்திரிகையில் வெளியான பேட்டியின் மீள்பிரசுரம்.
2. பக்கங்கள் 3,4 &5: Enemies of the People'  என்னும் தலைப்பில் ஸ்வீடிஷ் பாராளுமன்றத்தில் திரு.எவெரெட் ஸ்வென்சன் (Everet Svennson) ஆற்றிய உரையின் பகுதியுடன் ஆரம்பமான ஆங்கிலக்கட்டுரை, 'ஸ்பார்க்ஸ்' பகுதி 1 1984 இலிருந்து மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. மகாவலித்திட்டம் பற்றிய, குறிப்பாகக் கொத்மலைத்திட்டம் பற்றிய தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் நடாத்திய ஆய்வினை விபரிக்கும் கட்டுரை. கட்டுரையில் சிங்கள மக்களும் ஒடுக்கப்படுகின்றார்கள். அவர்களை ஒருபோதும் தமிழர்களின் எதிரிகளாகப் 'தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் கருதியதில்லை' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரையின் இறுதியில் இலங்கையின் தென்பகுதி மக்களையும் ஜே.ஆரின் அரசினை அடக்குமுறைகளிலிருந்து விடுதலைபெறுவதற்கான போராட்டத்தில் இணையும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3. பக்கம் 6: ஆசிரியர் குழுவின் எண்ணத்தைப்பிரதிபலிக்கும் 'விடுதலைப்பாதையிலே..' தொடர் கட்டுரையின் பகுதி பிரசுரமாகியுள்ளது.
4. பக்கம் 7 அஞ்சலி : தோழர் பரமதேவா.  'மங்கை'யின் ஆசிரியருக்கான வாசகர் கடிதம்.  கவிஞர் பைரனின் 'தைரியத்தின் ஒரே நம்பிக்கை சொந்த நாட்டின் வாள்களில் வாழ்கிறது'  என்னும் கூற்றும் பிரசுரமாகியுள்ளது.
5. பக்கம் 8 இறுதிப்பக்கம்: கவிதை -'மரணத்துள் வாழும் மக்கள்' - கிரிதரன்

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்னும் தலைப்பில் கேலிச்சித்திரம். வரைந்தவர் பெயர் குறிப்பிடப்படவில்லை.  சித்திரத்தைப்பார்க்கையில் கட்டடக்கலைஞர் பாலேந்திராவின் கேலிச்சித்திரம்போல் தெரிகின்றது.

•Last Updated on ••Sunday•, 19 •May• 2019 23:52•• •Read more...•
 

மக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்!

•E-mail• •Print• •PDF•

மக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்! - - இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் வித்துவான் வேந்தனாரின் எழுத்துலகப்பங்களிப்பு முக்கியமானது. அவரது நூற்றாண்டு விழாவையொட்டி நூற்றாண்டு விழாமலர் 548 பக்கங்கங்களைக் கொண்ட விரிவான நூலாக வெளியாகியுள்ளது. அம்மலரில் வெளியான எனது கட்டுரையிது. மலரைச் சிறப்பாக வெளியிட்ட அவரது மகனும், கவிஞரும் , நண்பருமான வேந்தனார் இளஞ்சேய் அவர்கள் இதன் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார். வாழ்த்துகிறேன். . -


வித்துவான் வேந்தனாரைப் பற்றி எனது மாணவப் பருவத்திலேயே எனக்கு மிகுந்த மதிப்பிருந்தது. வித்துவான்களில் அவர்  சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கான வித்துவான். பாரதியின் வழிவந்த மரபுக் கவிஞரான அவர் சிறந்த குழந்தைக்கவிஞர்களிலொருவராகவும் தென்பட்டார். அவரது மானுட விடுதலைக்  கவிதைகளில் தொனிக்கும் முற்போக்குக் கருத்துகளெல்லாம் அவற்றைத்தான் எனக்கு எடுத்தியம்பின. பண்டிதர்கள் என்றாலே பழமைவாதிகள் என்றோர் எண்ணம் நிலவுவதுண்டு. ஆனால் இதற்கு விதிவிலக்காகத் திகழ்ந்த பண்டிதர்களில் வித்துவான் வேந்தனார், எழுத்தாளர் சொக்கன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். வித்துவான் வேந்தனார் அவர்கள் பழமையின் சிறப்பம்சங்களைப்பேணிய அதே சமயம், புதுமையின் சிறப்பம்சங்களையும் உள்வாங்கி இலக்கியம் படைத்தவர்; மக்கள் இலக்கியம் படைத்தவர்.

வேந்தனாரைப்பற்றி விரிவாக அறியும் சந்தர்ப்பம் என் வாழ்க்கையிலேற்பட்டதற்கு முக்கிய காரணம் அவரது புத்திரர்களிலொருவரான வேந்தனார் இளஞ்சேய். நான் யாழ் இந்துக்கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்த சமயம் என் வகுப்பில் என்னுடன் ஒன்றாகக் கல்வி பயின்ற மாணவர்களிலொருவர். என் பதின்ம வயதுகளில் இளஞ்சேயும், நானும் அடிக்கடி வாசிப்பதற்காக ஒருவருக்கொருவர் எம்மிடமுள்ள நூல்களை இரவல்கொடுப்பதுண்டு. பல சந்தர்ப்பங்களில் யாழ் இந்து  மகளிர் கல்லூரிக்கண்மையிலிருந்த அவரது இல்லத்துக்குச் சென்றதுண்டு. அக்காலகட்டத்தில் வேந்தனார் இளஞ்சேய் அவர்கள் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார்.  இன்று தந்தையைப்போல் எழுத்துலகிலும் தன் எழுத்தாற்றலைக் காட்டி வருகின்றார். தந்தையாரின் படைப்புகளைத் திரட்டி , நூல்களாகத்தொகுத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருகின்றார். வாழ்த்துகின்றேன்.

வேந்தனாரின் இலக்கிய நோக்கினை அவரது பின்வரும் கவிதை வரிகளினூடு பார்க்கலாம்,

“பாடுகின்றோர் எல்லோருங் கவிஞ ரல்லர்
பாட்டென்றாற் பண்டிதர்க்கே உரிமை யல்ல
ஓடுகின்ற பெருவெள்ளப் பெருக்கே போல
உணர்ச்சியிலே ஊற்றெழுந்த ஒளியால் ஓங்கி
வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள
மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல்
கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு
குமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான்”


என்று அவர் பாடினார். வித்துவானான அவரே 'பாட்டென்றால் பண்டிதர்க்கு மட்டும் உரிமையல்ல' என்று சாடினார். கூடவே 'வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல் கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு குமுறுகின்ற கோளரியே கவிஞனாவான்' என்று எடுத்துரைத்தார். அதற்கேற்ப குமுறுகின்ற கோளரியாக விளங்கிய கவிஞன் அவர். 'மக்களினம் மாட்சி கொள்ள மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல் கூடுகின்ற கொள்கை' இதுவே அவரது பிரதானமான இலக்கிய நோக்காக நான் கருதுகின்றேன்.

மேலும் மேற்படி ‘கவிஞன்’ என்னும் கவிதையில் அவர் பின்வருமாறும் பாடுவார்:

“பஞ்சனையில் வீற்றிருந்தே பனுவல் பார்த்துப்
பாடுகின்ற கவிதைகளும் பாராள் வேந்தர்க்
கஞ்சியவர் ஆணைவழி அடங்கி நின்றே
ஆக்குகின்ற கவிதைகளும் அழிந்தே போகும்..”

“வீட்டிற்குள் வீற்றிருந்தே கொள்கை யின்றி
விண்ணப்பப் பதிகங்கள் விளம்பு வோரை
ஏட்டிற்குள் கவிஞரென எழுதி னாலும்
இறவாத கவிஞரையே உலகம் ஏற்கும்”


அதிகாரத்திற்கஞ்சி, பிழைப்புக்காய் ஆக்கப்படும் கவிதைகளெல்லாம் அழிந்தே போகும் என்று அவர் கூறியவற்றின் உணமையினை நாம் நேரிலேயே பல தடவைகள் பார்த்ததுண்டு. இவ்விதமாகக் கொள்கையின்றி விண்ணப்பப் பதிகங்கள் எழுதுவோரை ஏடுகள் கவிஞரென எழுதி வைத்தாலும் கால ஓட்டத்தில் இறவாத கவிஞரையே உலகம் ஏற்கும் என்பதுதான் எத்துணை உண்மையான வார்த்தைகள். பாரதியாரின் வாழ்க்கையே இதற்கொரு சிறந்ததொரு உதாரணம். இறவாத அவரது கவிதைகள் இன்றும் நிலைத்து வாழ, அவரது காலகட்டத்தில் அவரை எள்ளி நகையாடிய எத்தனைபேரை ஏடுகள் சிலாகித்திருக்கும். தூக்கிவைத்துப் புகழ்மொழி பேசியிருக்கும். இன்று அத்தகையவர்களில் பலர் காலவெள்ளத்தில் அடியுண்டு போகவில்லையா? இதுபோல்தான் இன்றைய பத்திரிகை, சஞ்சிகைகள் பலவற்றில் காணப்படும் பெயர்களில் பலவற்றை இன்னும் ஐம்பது வருடங்களில் காண முடியாது போய் விடலாம். அதே சமயம் இன்று காணமுடியாத பல பெயர்கள் , திறமை காரணமாக மீள்பரிசோதனை செய்யப்பட்டு நிலைத்து நிற்கப் போவதையும் வரலாறு பதிவு செய்யும்.

•Last Updated on ••Saturday•, 18 •May• 2019 23:08•• •Read more...•
 

வ.ந.கிரிதரன் கவிதைகள் 39: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்!

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரன்எனது கவிதைகளில் 39  கவிதைகளின் தொகுப்பிது. எதிர்காலத்தில் என் கவிதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் எண்ணமுண்டு. 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் தலைப்பில் அத்தொகுப்பு வெளியாகும். இத்தொகுப்பினை எனது வலைப்பதிவான 'வ.ந.கிரிதரன் பக்க'த்தில் நீங்கள் முழுமையாக வாசிக்கலாம். அதற்கான முகவரி:   வ.ந.கிரிதரன் கவிதைகள் 37: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்!

1. ஆசை!

அர்த்த ராத்திரியில் அண்ணாந்து பார்த்தபடி
அடியற்று விரிந்திருக்கும் ஆகாயத்தைப் பார்ப்பதிலே
அகமிழந்து போயிடுதல் அடியேனின்
வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளிலே கண் சிமிட்டும்
சுடர்ப் பெண்கள் பேரழகில் மனதொன்றிப் பித்தனாகிக்
கிடந்திடுவேன்.

நத்துக்கள் கத்தி விடும் நள்ளிரவில்
சித்தம் மறந்து
சொக்கிடுவேன்.

பரந்திருக்கும் அமைதியிலே பரவி வரும் பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்டபடி பைத்தியமாய்ப்
படுத்திடுவேன்.

இயற்கையின் பேரழகில் இதயம் பறிகொடுத்தே
இருப்பதென்றால் அடியேனின்
இஷ்ட்டமாகும்.

2. இயற்கையே போற்றி!

எங்கும் வியாபித்து, எங்கும் பரந்து எங்கனுமே,
சூன்யத்துப் பெருவெளிகளும் சுடர்களும், கோள்களும்,
ஆழ்கடலும், பாழ் நிலமும், பொங்கெழி லருவிகளும்,
பூவிரி சோலைகளும இன்னும்
எண்ணற்ற , எண்ணற்ற கோடி கோடி யுயிர்களுமாய்
வியாபித்துக் கிடக்கும் பரந்து கிடக்கும்
இயற்கைத் தாயே! உனைப் போற்றுகின்றேன்.
நானுனைப் போற்றுகின்றேன்.
பொருளும் சக்தியுமாய்
சக்தியே பொருளுமாய்
E=M(C*C)
இருப்பதுவே யில்லாததாய்
இல்லாததே யிருப்பதுவாய்
உண்மையே பொய்மையுமாய்
பொய்மையே உண்மையுமாய்
நித்தியமே அநித்தியமுமாய்
அநித்தியமே நித்தியமுமாய்
புதிர்களிற்குள் புதிராகக்
காட்சிதரும் இயற்கைத்தாயே! உனைப்
போற்றுகின்றேன்! நானுனைப் போற்றுகின்றேன்.

•Last Updated on ••Saturday•, 18 •May• 2019 22:40•• •Read more...•
 

நினைவு கூர்வோம் மே 18!

•E-mail• •Print• •PDF•

 

விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த இசைப்பிரியா ஊடகவியலாளர்; கலைஞர். கர்ப்பிணியான அவர் இறுதி யுத்தத்தில் இராணுவத்தின் கரங்களில் அகப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டவர். இராணுவம் புரிந்த யுத்தக் குற்றங்களுக்கு ஆதாரங்களாக இவரது வாழ்வின் இறுதிக்கட்டங்கள் சம்பந்தமாக வெளியான காணொளிகள் அமைந்துள்ளன.  இசைப்பிரியாவை நினைக்கும் தோறும் கூடவே என் நினைவுக்கு வருபவர் 71 ஜேவிபி புரட்சியின்போது கொல்லப்பட்ட போராளியான பிரேமாவதி மனம்பெரி. பிரேமாவதியின் மரணத்துக்கான நீதி அவரது மரணத்தின் பின் கிடைத்தது. ஆனால் இசைப்பிரியாவுக்கான நீதி அவர் மரணித்து பத்து வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்னும் கிடைக்கவில்லை. இதனை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை Six Degrees Of Separation: Sad Saga Of Premawathie & Isaipriya என்னும் இக்கட்டுரை. இதனை எழுதியவர் சண்முகம் கனகரத்தினம் ( Sanmugam Kanaga-Ratnam). இக்கட்டுரை வெளியான பத்திரிகை 'கொழும்பு டெலிகிறாப் (Colombo Telegraph)'.

விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த இசைப்பிரியா ஊடகவியலாளர்; கலைஞர். கர்ப்பிணியான அவர் இறுதி யுத்தத்தில் இராணுவத்தின் கரங்களில் அகப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டவர். இராணுவம் புரிந்த யுத்தக் குற்றங்களுக்கு ஆதாரங்களாக இவரது வாழ்வின் இறுதிக்கட்டங்கள் சம்பந்தமாக வெளியான காணொளிகள் அமைந்துள்ளன. இசைப்பிரியாவை நினைக்கும் தோறும் கூடவே என் நினைவுக்கு வருபவர் 71 ஜேவிபி புரட்சியின்போது கொல்லப்பட்ட போராளியான பிரேமாவதி மனம்பெரி. பிரேமாவதியின் மரணத்துக்கான நீதி அவரது மரணத்தின் பின் கிடைத்தது. ஆனால் இசைப்பிரியாவுக்கான நீதி அவர் மரணித்து பத்து வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்னும் கிடைக்கவில்லை. இதனை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை Six Degrees Of Separation: Sad Saga Of Premawathie & Isaipriya என்னும் இக்கட்டுரை. இதனை எழுதியவர் சண்முகம் கனகரத்தினம் ( Sanmugam Kanaga-Ratnam). இக்கட்டுரை வெளியான பத்திரிகை 'கொழும்பு டெலிகிறாப் (Colombo Telegraph)'.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நிகழ்ந்து பத்து வருடங்கள் கழிந்து இன்னும் அவற்றுக்கான நீதி கிடைக்கவில்லை. யுத்தக்குற்றங்களுக்கான சான்றுகளிருந்தும் இன்னும் அவற்றுக்கான நீதி கிடைக்கவில்லை. இலங்கையில் முறையான் நல்லிணக்கம் , அமைதி ஏற்படுவதற்கு இலங்கை அரசானது இறுதி யுத்தக்காலத்தில் புரியப்பட்ட யுத்தக்குற்றங்களை ஏற்று , அவற்றுக்குரிய நீதி வழங்குவது அவசியம். முள்ளிவாய்க்கால் படுகொலைகளைப்பற்றி நினைவுபடுத்தும் ஒரு குறியீடு இசைப்பிரியா. முள்ளிவாய்க்கால் படுகொலை தினமான மே 18 நாளினை முன்னிட்டு இக்கட்டுரையை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். இணைய இணைப்பு: https://www.colombotelegraph.com/index.php/six-degrees-of-separation-sad-saga-of-premawathie-isaipriya/

•Last Updated on ••Saturday•, 18 •May• 2019 02:07•• •Read more...•
 

எனது , வ.ந.கிரிதரனின், மூன்று கவிதைகள் பற்றி...

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார்எழுத்தாளர் மாலன்எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார். அத்தொகுப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. அது பற்றி அறியத் தந்த மாலன் " அன்புள்ள கிரிதரன், தேர் ஒருவழியாக புறப்பட்டுவிட்டது. உங்களது கவிதை இடம்பெற்றுள்ள அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு-புவி எங்கும் தமிழ்க் கவிதை- சாகித்திய அகாதெமியின் வெளியீடாக வந்துள்ளது. 22 நாடுகளில் வசிக்கும்  தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது  தமிழ்க் கவிதைகளின் விரிவிற்கும் ஆழத்திற்கும் சான்றளிக்கும் ஓர் அரிய நூல்" என்றும் தனது மின்னஞ்சலில் குறிப்ப்ட்டுள்ளார். முதலில் இத்தொகுப்பு நூலிலுள்ள கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளதற்காக அவருக்கு நன்றி. அத்தொகுப்பினை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினை மாலனின் கடிதம் ஏற்படுத்துகின்றது. மேற்படி தொகுப்பில் எனது கவிதையொன்றும் இடம் பெற்றுள்ளது. "நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'" என்பது அக்கவிதையின் தலைப்பு, அக்கவிதையினையே கீழே காண்கின்றீர்கள்:


கவிதை: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று
விரிவெளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ, நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.

இரவு வானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திர சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கிறேன்.

எப்பொழுதுமே இறுதி வெற்றி
உனக்குத்தான்.
எப்பொழுதுமே உன் காட்டில்
மழைதான். அதற்காக
மனந்தளர்வதென் பண்பல்ல. ஆயின்
உன்னை வெற்றி கொள்ளுதலுமென்
பேரவாவன்று பின்
உனைப் புரிதல்தான்.

ஓரெல்லையினை
ஒளிச்சுடருனக்குத்
தந்து விடும் பொருளறிந்த
எனக்கு
அவ்வெல்லையினை மீறிடும்
ஆற்றலும், பக்குவம்
உண்டு; புரியுமா?

•Last Updated on ••Monday•, 15 •July• 2019 22:46•• •Read more...•
 

கவிதை: மறக்கப்பட்டவர்களின் துயரம்!

•E-mail• •Print• •PDF•

-அண்மையில் இலங்கையில்  கிறிஸ்த்த ஆலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்களில் பலியாகியவர்கள், பாதிக்கப்பட்டவர்களை முன்வைத்த எண்ணங்கள் -

குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள்

ஊடகங்கள் உங்களை மறந்து விட்டன.
ஊடகங்கள் மட்டுமா
உங்களைக் காக்க வேண்டிய அரசும்
உங்களைக் காக்க வில்லை.
ஊடகங்களுக்கோ உங்களை அழித்தவர்கள்
உங்களைக் காயப்படுத்தியவர்கள் பற்றி
எழுதுவதற்கே நேரம் போதவில்லை.
உங்களைப்பற்றி எழுதுவதற்கு எங்கே நேரம்
உள்ளதவர்களுக்கு.

•Last Updated on ••Sunday•, 28 •April• 2019 07:53•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 341: அண்மைய கிறித்தவ ஆலயத் தாக்குதல்களும், ஒரு கவிதையும்!

•E-mail• •Print• •PDF•

அண்மையத் தாக்குதற் காட்சியொன்றுஅண்மையில் இலங்கையில்  'இஸ்லாமிய அரசின்' (ஐஎஸ் அல்லது இஸ்) அனுசரணையுடன், வஹாபிஸத்தை நம்பும் தீவிரவாத முஸ்லிம் அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு கிறிஸ்தவ ஆலயங்களில், நட்சத்திர ஹொட்டல்களில் நடாத்திய குண்டுத்தாக்குதல்கள் 9-11 தாக்குதலையொத்தது. மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு, செயற்படுத்தப்பட்ட தாக்குதல்கள். வசதியான, படித்த இளைஞர்களால் நடாத்தப்பட்ட தாக்குதல்கள். இந்த இஸ்லாமிய அமைப்பினை நடாத்தி வந்தவர் ஜஹ்ரான் ஹாசிம்.

ஒரு நாட்டில் மக்கள் பல்வேறு அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே கிளர்ந்தெழுவார்கள். தற்கொலைத்தாக்குதல்கள் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். ஆனால் இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீதான அடக்குமுறைகள் , இனக்கலவரங்கள் நடைபெற்றிருந்தாலும் அவை இலங்கைத்தமிழர்கள் கடந்த காலங்களில் அனுபவித்தவை போன்றவையல்ல. இருந்தாலும் எதற்காக இவ்வளவு மூர்க்கமாகக் கிறிஸ்தவ ஆலயங்கள் மீதும், வெளிநாட்டவர்கள் அதிகமாகத் தங்கியிருந்த நட்சத்திர ஹொட்டல்களிலும் தம் உயிரைத் துச்சமாக மதித்து இம்முஸ்லிம் அமைப்பினர் தற்கொலைத்தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.

உண்மையில் இலங்கையில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் வஹாபிசத்தை நம்புபவர்கள் அல்லர். அவர்கள் பிற இனங்களுடன் இணைந்து வாழ்பவர்கள். தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருபவர்கள். இலங்கையின் முஸ்லிம் மக்களைப்பிரதிநிதிப்படுத்தும் அமைப்புகள் எல்லாம் கடந்த காலங்களில் தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு பற்றியும், அதன் போதனைகளின் அபாயம் பற்றியெல்லாம் காவல் துறையினருக்கு அறியத்தந்திருக்கின்றார்கள். ஆனால் அவற்றையெல்லாம் காவல் துறையினர் உரிய முறையில் கவனத்துக்கெடுத்திருப்பதாகத் தெரியவில்லை. அண்மைய தாக்குதல்கள் பற்றிய அபாய முன்னறிவிப்புகளை, தகவல்களைக்கூட அவர்கள் அவ்விதம் கவனத்தில் கொண்டிருக்கவில்லை. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குக் கூட அறிவித்திருக்கவில்லை.

இவ்விதமான சூழலில் எதற்காக இவ்விதம்  தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு தாக்குதல்களை நடாத்தியுள்ளது? இதற்கு முக்கிய காரணம் அவர்கள் இஸ்லாமிய அரசு அமைப்பின் கொள்கைகளை உள்வாங்கி அதனை இலங்கையில் செயற்படுத்தியதுதான்.  'இஸ்லாமிய அரசு' அவ்விதமானதொரு  அரசினை ஈராக்கிலிருந்து சிரியா வரை நடாத்தியிருந்தது. அதனை அது இழந்து விட்டாலும் அவ்வமைப்பு செயலிழந்து போகவில்லை. அவ்வமைப்பில் மேற்கு நாடுகளிலிருந்தெல்லாம் பலர் இணைந்து கொண்டார்கள். அவ்விதம் இணைந்து கொண்டவர்களெல்லாரும் தாம் வாழ்ந்த நாடுகளில் தமக்கேற்பட்ட அடக்குமுறைகளால் இணைந்துகொண்டவர்கள் அல்லர். அவர்கள் உலகளாவியரீதியில் இஸ்லாமிய அரசொன்றைனை ஸ்தாப்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய அரசின் போதனைகளை, தத்துவங்களை ஏற்றுக்கொண்டு இணைந்தவர்கள்.

•Last Updated on ••Thursday•, 25 •April• 2019 08:14•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 340: ஸோலாவும், அ.ந.க.வும் பற்றி மு.தளையசிங்கம்!

•E-mail• •Print• •PDF•

எமிலி ஸோலாஅ.ந..க.மு.தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலில் ஓரிடத்தில் இவ்விதம் வருகின்றது: "அ.ந.கந்தசாமி கூட சோலாவைப்பற்றித்தான் எழுதினார். சோலா இயற்கைவாதியே ஒழிய சோஸலிஸ்ட் யதார்த்தவாதியல்ல. அதோடு அப்படி ஒருவரைத்தான் தேட வேண்டுமென்றால் மார்க்ஸே பால்சாக்கைப்பிடித்திருக்கலாம். ஆனால் அவர் சோலாவைத்தான் பிடித்தார்."

இக்கூற்றினை சிறிது ஆராய்வோம். அ.ந.க சோலாவைப்பற்றி எழுதுவதிலென்ன தவறிருக்க முடியும். ஐம்பதுகளின் ஆரம்பத்தில் எமிலி சோலாவின் நாவலான 'நானா'வைத் தமிழுக்கு மொழிபெயர்த்து சுதந்திரன் பத்திரிகையில் வெளியிட்டவர் அ.ந.க. சோலாவின் பாதிப்பு அ.ந.க.வுக்கு நிறையவேயுண்டு. எமிலி சோலாவைப்பற்றி அவர் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அதில் சுதந்திரனில் 'நானா' தொடராக வெளியான சமயம் எழுதிய 'எமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி நானா மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா' என்னும் கட்டுரையும் முக்கியமானது.

எமிலி ஸோலாவின் இலக்கியம் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுவார்: "ஸோலா இலக்கியத்திலே மோகனமான கனவுகளைத் தோற்றுவிக்கும் போக்கில் நம்பிக்கை கொண்டவரல்ல. சாக்கடை உலகைச் சாக்கடை நாற்றத்தை நாம் உணரத்தக்கவகையில் இயற்கைத்தன்மையுடனே சமைப்பதில்தான் அவரது சிறந்த கலை வெற்றி பெறுகிறதென்று கூறலாம். 'இயற்கை வாதம்' (Naturalism) என்று அவரும் அவரது கோஷ்ட்டியினரும் தமது இலக்கியப் பாணிக்கு நாமகரணம் செய்து கொண்டனர்."

மேலும் "பிளாபரியின் இலக்கியப் போக்குக்கும் ஸோலாவின் இலக்கியப் போக்குக்கும் வித்தியாசம். இருந்தபோதிலும் பிளாபரி பிளாபரி ஸோலாவின் அகண்டாகாரமான இலக்கிய வளத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அவருக்குப் பிடிக்காத அம்சம் ஸோலாவின் எல்லை மீறிய - சில சமயங்களில் அருவருப்பூட்டும் யதார்த்தவாதமேயாகும். பிளாபரி ஸோலாவைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்." என்றும் கூறுவார்.

இவற்றிலிருந்து இயற்கைவாதம் என்றால் தீவிர யதார்த்தவாதம் என்று முடிவு செய்யலாம். இயற்கைவாதம் , யதார்த்தவாதம் இரண்டுமே மானுட வாழ்க்கையை உள்ளது உள்ளபடி சித்திரிப்பவை. இரண்டுமே கற்பனாவாதப்படைப்புகளுக்கு எதிராகத் தோன்றிய இலக்கிய வடிவங்கள். இவற்றில் இயற்கைவாதம் இயற்கை, அதன் விதிகள், பரம்பரை, நிலவும் இயற்கைச் சூழல் ஆகியவை மானுட வாழ்வை நிர்ணயிக்கும் கூறுகள் என்பதை அக்கோட்பாட்டின் அடிப்படைகளாகக் கொள்பவை. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அதன் சிக்கல்களை , கோரங்களை அப்படியே எடுத்துரைப்பவை. உண்மையில் இயற்கைவாதம் யதார்த்தவாதத்தின் தீவிர வடிவமே.

•Last Updated on ••Sunday•, 21 •April• 2019 00:31•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 339 : இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்ள 'தேசிய இலக்கியமும், மரபுப்போராட்டமும்' என்னும் நூல் பற்றியுமான பதிவு!.

•E-mail• •Print• •PDF•

சுபைர் இளங்கீரன் தொகுத்துள்ள 'தேசிய இலக்கியமும், மரபுப்போராட்டமும்'இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றைப்பொறுத்தவரையில் முக்கியமான காலகட்டங்களாக 'மறுமலர்ச்சி'க் காலகட்டத்தையும், 'இலங்கை  முற்போக்கு எழுத்தாளர் சங்கக்' காலகட்டத்தையும் குறிப்பிடலாம். இலங்கை மண்ணுக்கேயுரிய மண்வாசனை மிக்க தனித்துவம் மிக்க எழுத்துகளைப்படைக்க வேண்டுமென்று 'மறுமலர்ச்சிக்' குழு வழிவந்த இளைஞர்கள் எண்ணினார்கள். ஆனால் அந்நோக்கமே 'தேசிய இலக்கியம்' என்னும் கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் வழிச் செயற்பட்ட எழுத்தாளர்கள் , திறனாய்வாளர்கள். தேசிய இலக்கியம் பற்றிய புரிதலுக்காக எழுத்தாளர் இளங்கீரனின் 'மரகதசம்' சஞ்சிகையில் 'தேசிய இலக்கியம்' பற்றி 'மரகதம் ' சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் க.கைலாசபதி, ஏ.ஜே.கனகரட்னா, அ.ந.கந்தசாமி ஆகியோர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை.

இதனைத்தொடர்ந்து தினகரன் பத்திரிகையில் மரபினைப்பேணிய பண்டிதர்களுக்கும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களுக்குமிடையில் தலையெடுத்த 'மரபு' பற்றிய விவாதமும் முக்கியமானது. இரு சாராரும் தினகரன் பத்திரிகையில் நடாத்திய விவாதம் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வு.

'மரகதம்' சஞ்சிகையில் வெளியான 'தேசிய இலக்கியம்' பற்றிய கட்டுரைகளையும், தினகரன் பத்திரிகையில் நிகழ்ந்த மரபு பற்றிய விவாதக் கட்டுரைகள் சிலவற்றையும், வேறு சில கட்டுரைகளையும் தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கின்றனர் 'சவுத் ஏசியன் புக்ஸ்' (சென்னை) பதிப்பகத்தினர். தொகுத்தவர் எழுத்தாளர் சுபைர் இளங்கீரன். மிகவும் முக்கியமான தொகுப்பு.

இத்தொகுப்பில் 'மரகதம்' சஞ்சிகையில் வெளியான 'தேசிய இலக்கியம்' பற்றிய கட்டுரைகளை  எழுதியவர்கள்:

1. தேசிய இலக்கியம் என்றால் என்ன? - பேராசிரியர் க.கைலாசபதி (மரகதம் 1961).
2. தேசிய இலக்கியம்  -சில சிந்தனைகள் - ஏ.ஜே.கனகரத்தினா (மரகதம் செப்டம்பர்  1961)
3. தேசிய இலக்கியம் - அ.ந.கந்தசாமி (மரகதம் அக்டோபர் 1961)

இதுபற்றி மேற்படி நூலுக்கான முன்னுரையில் இளங்கீரன் அவர்கள் பின்வருமாறு கூறுவார்:

"1954இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  நிறுவப்பட்டது.  அது நடத்திய இலக்கிய இயக்கத்தினூடாக ஈழத்து எழுத்தாளர் மத்தியிலும் , ஈழத்துப் படைப்பிலக்கியம் சம்பந்தமாகவும் விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் ஏற்பட்டது.  எனவே ஈழத்தின் படைப்பிலக்கியம் தமிழ் என்னும் பொதுப்பரப்புக்குள் அடங்கும் அதே வேளையில், அதன் தனித்துவத்தைக் காட்டவும் அத்தனித்துவத்தை நமது  மக்கள் இனங்கண்டு அதன் மீது தமது இலக்கிய உணர்வைப் பதிய வைக்கவும் , நேசிக்கவும், யதார்த்தவாதக் கோட்பாட்டை எளிதில் புரிந்துகொள்ளவும் அதற்குத் 'தேசியம்' என்னும் சொற் பிரயோகம் தேவையாகவிருந்தது.  எனவே இ.மு.எ.ச தனது முதலாவது மாநாட்டில் முன்வைத்த ஜனநாயக யதார்த்தவாதக் கோட்பாட்டை அடியொட்டி இரண்டரை வருடங்களுக்குப் பிறகு 1960 இல் 'தேசிய இலக்கிய'த்தைப் பிரகடனம் செய்தது. இதனைத்தொடர்ந்து தேசிய இலக்கியம் பற்றிய விளக்கத்தை அளிக்க வேண்டியிருந்தது.  1961இல் வெளியான எனது கலை இலக்கிய சஞ்சிகையான 'மரகதம்' இப்பணியை ஏற்றது.  அதில் முதல் இதழில் பேராசிரியர் கைலாசபதி 'தேசிய இலக்கியம்' பற்றிய  தனது முதலாவது கட்டுரையை எழுதினார். அதனை அடுத்து இரண்டாவது மூன்றாவது கட்டுரைகளாக ஏ.ஜே.கனகரத்தினா, அ.ந.கந்தசாமி ஆகியோர் எழுதியதை மரகதம் வெளியிட்டது. "

•Last Updated on ••Friday•, 19 •April• 2019 22:40•• •Read more...•
 

யாழ் நகரத்துத் திரையரங்குகள் பற்றியதொரு நனவிடை தோய்தல்!

•E-mail• •Print• •PDF•

யாழ் ராணி திரையரங்குஅண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன். அக்காலகட்டத்தில் யாழ் நகரில் பல திரையரங்குகள் பல இருந்தாலும் (மனோஹரா, ராணி, ராஜா, றீகல்,, ஹரன், சாந்தி, ஶ்ரீதர், லிடோ (பழைய வின்சர்), வின்சர் , வெலிங்டன் & றியோ ), இவற்றில் என்னை அதிகம் பாதித்தவை பற்றிய பதிவுகளிவை. இவற்றையும், இவற்றுக்கான எதிர்வினைகளையும் பதிவு செய்வதன் அவசியம் கருதி அவை அனைத்தையும் தொகுத்து இங்கு தருகின்றேன்.

1. யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று - ராணி

முகநூலில் Shan Naranderan ராணி (யாழ்ப்பாணம்) திரையரங்கின் புகைப்படமொன்றினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அதனை இங்கு மீண்டும் நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இன்று ராணி திரையரங்கு இருந்த இடத்தில் 'சீமாட்டி' வர்த்தக நிலையமுள்ளது. ஆனால் அன்று எம் பதின்ம வயதுகளில் அவ்வாழ்வுக்குரிய பொழுதுபோக்குகளில் முக்கிய இடத்தை வகித்த திரையரங்குகளிலொன்றாக விளங்கிய திரையரங்கு ராணி. முதன் முதலில் ராணி திரையரங்கைப் பார்த்த தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் இ.போ.சபையின் பஸ்ஸில் வந்து , யாழ் பஸ் நிலையத்தில் இறங்கியபொழுது கண் முன்னால் விரிந்தது ராணி திரையரங்கின் முன் அமைக்கப்பட்டிருந்த அடிமைப்பெண் எம்ஜிஆரின் பிரமாண்டமான , ஓவியர் மணியத்தின் 'கட் அவுட்' இடுப்பில் கைகளை வைத்து, மணிமுடியுனிருந்த அந்த எம்ஜிஆரின் கட்அவுட் இன்னும் கண் முன்னால் விரிகின்றது. இன்னுமொரு முறை அவ்விதம் வந்து யாழ் பஸ் நிலையத்தில் இறங்கியபொழுது 'மாட்டுக்கார வேலன்' திரைப்படத்திலிடம் பெறும் 'ஒரு பக்கம் பார்க்குறா' பாடலுக்கான காட்சியை வெளிப்படுத்தும் இரு எம்ஜிஆர்களின் உயர்ந்த உருவங்களை உள்ளடக்கிய இரு 'கட் அவுட்'டுகள். இவ்விதமாக ராணி திரையரங்குடன் ஆரம்பமாகியதென் உறவு.

யாழ் ராணியில் பார்த்த , நினைவில் நிற்கும் திரைப்படங்கள்: 'அடிமைப்பெண்', 'மாட்டுக்காரவேலன்', 'ராஜா, பட்டிக்காடா பட்டணமா', 'சவாலே சமாளி', 'பணமா பாசமா', 'அன்புச் சகோதரர்கள்', 'ராமன் எத்தனை ராமனடி', 'என் தம்பி', 'இருவர் உள்ளம்' (மீள் வெளியீடு), வி.பி.கணேசனின் 'நான் உங்கள் தோழன்' , 'புதிய காற்று', 'நாளை நமதே', 'வாடைக்காற்று' , 'பட்டணத்தில் பூதம்'& 'நீதி'

இன்னுமொரு விடயத்துக்காகவும் யாழ் ராணி நினைவிலுள்ளது. 1974 தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிஸார் சுட்டுக் கலவரமாகிய சூழலில் தப்பி ஓடிக்கொண்டிருந்த மக்களைத் தன் திரையரங்கில் தங்க வைத்த மனிதாபிமானச் செயல் அது. அதன் மூலமும் 'ராணி' திரையரங்கு நெஞ்சில் பதிந்து விட்டது. இன்று திரையரங்கே இல்லாத நிலையில் இது போன்ற புகைப்படங்கள் அரியவை. சேகரித்துச் சேமிக்கப்பட வேண்டியவை. இவை ஒரு காலகட்ட வரலாற்றுச் சின்னங்கள்

•Last Updated on ••Friday•, 19 •April• 2019 08:16•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 339: கு.ப.ரா.வின் வசன கவிதை பற்றிய கூற்று பற்றி....

•E-mail• •Print• •PDF•

கு.ப.ராஜகோபாலன்எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது முகநூற் பதிவாக எழுத்தாளர் கு.ப.ரா.வின் கீழ்வரும் கூற்றொன்றினைப் பதிவு செய்திருந்தார். :

" வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி அலங்காரம் உண்டு. அதற்கும் தளையுண்டு. மோனையுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கும் ரிதம் உண்டு. செய்யுள் எழுதுவதைக்காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம். செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைகளும் ஒரு இசை இன்பத்தை ஊட்டிவிடும். ஆனால் வசன கவிதையில் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில் தட்டினால்தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக்கும். சொல்லில் கவிதையின் அம்சம் இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது - வெறும் வசனம்தான் ” ( கு.ப. ராஜகோபாலன் - 1939 இல் )

மேற்படி கூற்றுக்கான என் எதிர்வினை:

இது கு.ப.ராஜகோபாலன் அவர்கள் மரபுக்கவிதையின் ஆதிக்கமிருந்த காலகட்டத்தில் , மரபுக்கவிதையைச் சிறிது எளிமைப்படுத்தி பாரதியார் மரபுக்கவிதைகளையும், வசன கவிதைகளையும் எழுதியதன் பின்னர் மணிக்கொடி எழுத்தாளர்கள் மரபை மீறிக்கவிதைகள் படைக்க முற்பட்ட காலகட்டத்தில் கூறிய அல்லது எழுதிய கூற்று. இதனை இன்று ஏற்க வேண்டியதில்லை. கு.ப.ரா போன்றவர்களால் மரபை முற்றாக மீற முடியாமலிருந்ததால் தான் இவ்விதம் கூற முடிவதாகவே கருதுகின்றேன். கவிதை என்றால் மரபுக்கவிதைதான். அதனால் வசன கவிதைகளிலும் மரபுக்கவிதையின் அம்சங்கள் இருக்க வேண்டுமென்று அவர் கருதினாரென்று கருதுகின்றேன். மரபுக்கவிதையின் அம்சங்களைப்போல்  வசனகவிதைகளும் மோனை, தளை போன்ற கட்டுப்பாடுகளை உள்ளடக்கியவை என்னும் கருத்தில்தான் கு.ப.ரா இங்கு கூறியுள்ளார்.  கட்டுப்பாடுகள் அல்லது விதிகளுடன் கூடிய மரபுக்கவிதைகளுக்குரிய அம்சங்களை முன்வைத்து , மரபை மீறி உருவான கவிதையொன்றினை ஆராய்வது சரியானதல்ல என்பதென் கருத்து.  இங்கு அவர் வசனகவிதைக்குரிய தளை, மோனை, அணி அலங்காரம் எவ்விதமிருக்க வேண்டும் என்று தெளிவாக விபரிக்காவிட்டாலும், மரபுக்கவிதைக்குரிய அம்சங்களான அவற்றின் அடிப்படையில் அவர் வசனகவிதையை ஆராய்வது சரியல்ல என்பதே என் கருத்து.  ஆனால் வசன கவிதையிலோ , புதுக்கவிதையிலோ அல்லது இன்றுள்ள கவிதையிலோ மரபுக்கவிதைக்குரிய அம்சங்கள் இருக்கலாம்; இல்லாமலிருக்கலாம். இருப்பதால் மட்டும் அவை கவிதைகளாவதில்லை. இல்லாமலிருப்பதால் மட்டும் அவை கவிதைகளில்லை என்பதுமில்லை. இன்று கவிதை மரபினை மீறி முற்றாக இன்னொரு தளத்தில் பயணிக்கின்றது. கவிதையென்பது உணர்வின் வெளிப்பாடு . அதனடிப்படையில் மட்டுமே மரபுக்கவிதையோ அல்லது ஏனைய கவிதை வடிவங்களோ நோக்கப்பட வேண்டுமென்று கருதுகின்றேன். அவ்விதம் கவிதையொன்றினை ஆராய்கையில் அதில் மரபுக்கவிதையின் கூறுகள் உள்ளனவா , இல்லையா என்று ஆராயலாமே தவிர அவை இருந்தால் மட்டுமே அது கவிதையா அல்லது இல்லையா என்று தீர்மானிக்க முடியாது. அவ்விதம் ஆராய்கையில் அதில் பாவிக்கப்பட்டுள்ள மொழி, பொருள் போன்ற ஏனைய பல விடயங்களும் கவனத்திலெடுக்கப்பட வேண்டும்.

•Last Updated on ••Thursday•, 11 •April• 2019 07:40•• •Read more...•
 

வாசிப்பும்,யோசிப்பும் 338 : இலங்கைத் தமிழ் இலக்கியமும் , 'இன்ஸான்' பத்திரிகையும்.

•E-mail• •Print• •PDF•

1965-1970 காலப் பகுதியில் ' இன்ஸான்'( மனிதன்) என்ற வாராந்தரி பத்திரிகை ஏ.ஏ.லத்தீஃபை ஆசிரியராக கொண்டு வெளியாகியது. முஸ்லிம் வாழ்வியலை,சமூகப் பார்வையுடன் இலக்கியமாக்கும் வாய்ப்பை வழங்கி வழிகாட்டியது. எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் 'இன்ஸான்' பத்திரிகை பற்றிப்பின்வருமாறு பதிவு செய்திருந்தார்:

"1965-1970 காலப் பகுதியில் ' இன்ஸான்'( மனிதன்) என்ற வாராந்தரி பத்திரிகை ஏ.ஏ.லத்தீஃபை ஆசிரியராக கொண்டு வெளியாகியது. முஸ்லிம் வாழ்வியலை,சமூகப் பார்வையுடன் இலக்கியமாக்கும் வாய்ப்பை வழங்கி வழிகாட்டியது. இதனூடாக வெளிப்பட்ட சிறுகதையாளர்களில குறிப்பிடத்தக்க ஒருவர் எம்.பி.எம. நிஸ்வான். ஐம்பது ஆண்டுகள் கழிந்தும் ஒரு பத்தோ இருபதோ இன்ஸான் கதைகளை தொகுத்து வெளியிடும் முயற்சி கைகூடவில்லை.இன்ஸானோடு சம்பந்தப்பட்ட ஒருசிலரே இன்று எம்மத்தியில் உள்ளனர்.அவர்கள் சந்திக்கும்போது பேசிக் கலைவதைத்தவிர வேறொன்றும் ஆகவில்லை. முஸ்லிம்களின் இலக்கியம் என்பது அனாதை இலக்கியமே என்பதற்கு இதைத்தவிர வேறென்ன அத்தாட்சி வேண்டும்? பாணந்துறை எம்.பி.எம்.நிஸ்வானின் இரு நூல்களின் வெளியீடு கடந்த 07.04.2018ல் உம்முல் மலீஹா மண்டபத்தில் நடைபெற்றபோது கருத்துரை வழங்குகையில் மேற்படி விடயங்களை எடுத்துக் கூறினேன்."

எழுத்தாளர் அந்தனி ஜீவா 'தினகரன்' (இலங்கை) பத்திரிகையில் எழுத்தாளர்ர் அ.ந.கந்தசாமி பற்றி எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடரில் பின்வருமாறு கூறுவார்:

" அ.ந.க. அறிஞர் பெர்னாட்ஷா முதல் பேரறிஞர் பெட்ரண்ட் ரஸ்ஸல் வரை அறிந்து வைத்திருந்தார். பெட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத அராபிய உறவுகள்' என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை 'இன்ஸான்' வார இதழில் தொடர்ந்து எழுதினார். "

கலாபூஷணம் மாத்தளை பெ.வடிவேலன் செப்டம்பர் 30, 2012 தினகரன் (இலங்கை) பத்திரிகையில் எழுதிய எழுத்தாளர் ஏ. ஏ. லத்தீப் பற்றிய 'நக்கிள்ஸ் மலைகளின் மடிதனிலே...' கட்டுரைத்தொடரில் பின்வருமாறு கூறுவார்:

"1965-1968 காலப்பகுதியில் இன்ஸான்” எழுப்பிய அலை ஓசையை மறக்க முடியாது. முஸ்லிம்களின் வரலாறு கலை இலக்கியம் சமூகவியல் போன்றவற்றில் இன்ஸான் ஆற்றிய பணி கால ஓட்டத்தில் கரைந்துவிட முடியாத ஒன்று “இலங்கை முஸ்லிம்களின் பேச்சு வழக்கான சோனகத் தமிழ் அழகை வீச்சாகக்கொண்டு அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய பத்திரிகை அது"

ஏ. ஏ. லத்தீப் அவர்களே 'இன்ஸான்' பத்திரிகையையும் நடாத்தியதை மேற்படி கட்டுரையிலுள்ள "நானும் இலக்கிய ஆர்வலர் ஜனாப் நkர் ரியாலும் இன்ஸான் லத்தீஃபை பற்றி பலமணிநேரம் கலந்துரையாடினோம்" என்னும் கூற்று வெளிப்படுத்துக்கின்றது. மேற்படி கட்டுரை எழுத்தாளர் ஏ. ஏ. லத்தீப் பற்றிப் பின்வருமாறு கூறுவது அவரது கலை, இலக்கியப்பங்களிப்பைச் சிறப்பாக எடுத்துரைக்கின்றது:

•Last Updated on ••Wednesday•, 10 •April• 2019 21:51•• •Read more...•
 

இலங்கைத்தமிழ் இலக்கியமும், விமர்சனமும் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பும், மு.பொன்னம்பலத்தின் இருட்டடிப்பும்!

•E-mail• •Print• •PDF•

அ.ந..க.இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி எனக்கருதப்படும் இவர், புலமை காரணமாக அறிஞர் அ.ந.கந்தசாமி என்று அழைக்கப்பட்ட இவர் சிறுகதை, கவிதை,  நாடகம், விமர்சனம் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தனது குறுகிய கால வாழ்வினில் காத்திரமான பங்களிப்பினை நல்கியவர். அவ்வப்போது இலங்கைத்தமிழ்  இலக்கியம் பற்றி எழுதும் சிலர் அத்துறையில் போதிய புலமையற்றோ அல்லது திட்டமிட்டோ இவரது பங்களிப்பினை மறைத்துவிடுகின்றனர்.

அ.ந.க.வின் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் விமர்சனத்துக்கான (அல்லது திறனாய்வுக்கான) பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அ.ந..க.வின் புலமை காரணமாகவே பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் தனது 'ஒப்பியல் இலக்கியம்' நூலினை அ.ந.க.வுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் திறனாய்வுத்துறைக்குப் பெரும்பங்களிப்பு செய்தவர் பேராசிரியர் கைலாசபதி. அவர் ஒருவருக்குத் தன் நூலினைச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார் என்றால் அதனைச் சாதாரணமாக எடுத்துவிட முடியாது. அச்சமர்ப்பணத்தில் அவர் இவ்விதம் கூறுவார்:

“  பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங்கொடுத்து வருபவரும், இன்றைய  ஈழத்து  எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவரும், பிறமொழி யிலக்கியங்களைக் கற்றுமகிழ்ந்து அவற்றைத் தழுவியும் மொழிபெயர்த்தும்  தமிழுக்கு அணி செய்தவரும் ,பலதுறை வல்லுனருமான காலஞ்சென்ற அ.ந. கந்தசாமி அவர்களது நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்”  இக்கூற்றிலுள்ள "பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங்கொடுத்து வருபவரும்"  என்று பேராசிரியர் கைலாசபதி அவர்கள் கூறுவதொன்றே போதும் அ.ந.க.வின் திறனாய்வுப்புலமையினை எடுத்தியம்புதற்கு.

தினகரன் (இலங்கை) பத்திரிகையில் 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் அ.ந.க பற்றிய கட்டுரைத்தொடரினை எழுதிய எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் அ.ந.க.வின் விமர்சனப்பங்களிப்பினைக் குறிப்பிடுகையில் பினவ்ருமாறு குறிப்பிடுவார்:

•Last Updated on ••Saturday•, 13 •April• 2019 07:24•• •Read more...•
 

'Fleeting Infinity (VOL 1) ((கணநேர எல்லையின்மை) இருமொழிக்கவிதைத்தொகுப்பு பற்றி..

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்த சமகால இருமொழிக்கவிதைத்தொகுப்பான a 'Fleeting Infinity (VOL 1) ((கணநேர எல்லையின்மை) அநாமிகா அல்ஃபபெட்ஸ் (Anaaamikaa alphabets) பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. அத்தொகுப்பிலுள்ள எனது கவிதையான " குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி."

 

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்த சமகால இருமொழிக்கவிதைத்தொகுப்பான a 'Fleeting Infinity (VOL 1) ((கணநேர எல்லையின்மை) அநாமிகா அல்ஃபபெட்ஸ் (Anaaamikaa alphabets) பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. அத்தொகுப்பிலுள்ள எனது கவிதையான "கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி."எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்த சமகால இருமொழிக்கவிதைத்தொகுப்பான a 'Fleeting Infinity (VOL 1) ((கணநேர எல்லையின்மை) அநாமிகா அல்ஃபபெட்ஸ் (Anaaamikaa alphabets) பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. அத்தொகுப்பிலுள்ள எனது கவிதையான "கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி."

தமிழில் வெளியான கவிதைத்தொகுதிகளில் முக்கியமானதோர் கவிதைத்தொகுதியாக இக்கவிதைத்தொகுதி விளங்கும் என்பதை இத்தொகுதியின் கவிதைகள் புலப்படுத்துகின்றன. தொகுப்பின் தலைப்பான 'கணநேர எல்லையின்மை' நல்லதொரு கவித்துவம் மிக்க தலைப்பு.  பல்வேறு நாடுகளிலிருந்தும் கவிதைகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம் இத்தொகுப்பின் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது.

சிறப்பான தொகுதியொன்றினைத்தந்ததற்காகவும், இதற்கான அவரது கடுமையான உழைப்பிற்காகவும் லதா ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கூடவே இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

•Last Updated on ••Saturday•, 06 •April• 2019 19:56•• •Read more...•
 

எதிர்வினையொன்று !

•E-mail• •Print• •PDF•

அண்மையில் "அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அறிக்கை - முருகபூபதி -" என்னும் எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரையினைப் பதிவு செய்திருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றியிருந்த நண்பர் திலினா கிரிங்கொட (Thilina Kiringoda) , கட்டடக்கலைஞர் & நகர வடிவமைப்பு வல்லுநர்; மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் என்னுடன் ஒன்றாகப்படித்தவர், ஆற்றியிருந்த எதிர்வினை என் கவனத்தைக் கவர்ந்தது. அதனை இங்கு தமிழில் தருகின்றேன்:

"கிரி, நாங்கள் கல்விப்பொதுத்தராதர (சாதாரண மற்றும் உயர்தர) வகுப்புகளைக் கொண்டுள்ள பாடசாலைகளுக்கு, விஞ்ஞான மேன்மைக்கான ஶ்ரீலங்கா அமைப்பின் ஆதரவுடன் நடாத்தப்படும் விஞ்ஞானபாடத்திட்டங்களை நடத்துவதற்காகச் செல்வதுண்டு. மண்டலங்களுக்குரிய (Zonal) விஞ்ஞான இயக்குநர்கள் பகல் நேர விஞ்ஞானத் திட்டங்களை நடாத்துவதற்காக 'விஞ்ஞான மேன்மைக்கான ஶ்ரீலங்கா அமைப்பு'க்கு விண்ணப்பிக்க முடியும். தேர்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் 300 மாணவர்களை உள்ளடக்குவதற்கான வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் இவர்களில் 200 மாணவர்கள் அப்பாடசாலைகள் அமைந்துள்ள மண்டலங்களிலுள்ள, இவ்வகையான விஞ்ஞானத் திட்டங்களை நடாத்துவதற்குரிய வசதிகளற்ற, ஏனைய பாடசாலைகளைச் சேர்ந்தவர்களாகவிருக்க வேண்டும் என்னும் நிபந்தனையைப்பூர்த்தி செய்ய வேண்டும்.

தமிழ்ப்பாடசாலைகளுக்கு ,அண்மையிலிருக்கும் பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ் பேசும் விரிவுரையாளர்களைப் பெற்றுக்கொள்வோம். இதன் கடைசி விரிவுரையை நான் "அரச பல்கலைக் கழகங்களுக்கு வெளியில், பட்டப்படிப்பையொத்தக் கல்வித் தகமையினைப்பெறுவதற்கான விஞ்ஞான மாணவர்களுக்கான வாய்ப்புகள்" என்னும் தலைப்பில் ஆற்றியிருந்தேன். 'ஶ்ரீலங்காவின் தொழில்சார்ந்த சங்கங்களின் அமைப்பின்' (Organization of Professional Associations of Sri Lanka -OPA) கடந்தகாலத் தலைவரென்ற முறையில், 'ஶ்ரீலங்காவின் தொழில்சார்ந்த சங்கங்களின் அமைப்பின்' அங்கத்தவர்கள் நடாத்தும் பல்கலைக்கழக மான்யக் குழுவின் (University Grant Commission - UGC) அங்கீகாரம் பெற்ற பாடத்திட்டங்கள் பற்றிய விபரங்களைப் பெறும் அனுகூலம் பெற்றவனாகவிருந்தேன்.

கடந்த வருடம் இத்திட்டத்திற்கு நிதியுதவி முழுமையாகக் கிடைத்தது. இம்முறை இதற்கான் நிதியில்லை என அமைச்சு எமக்கு அறிவித்துள்ளது. ஆக பழைய மாணவர் சங்கங்கள், பாடசாலை அபிவிருத்திச் சமூகங்கள் தாம் இத்திட்டத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும்.

•Last Updated on ••Thursday•, 04 •April• 2019 07:50•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 337: -ஈழத்துத் தமிழ்க் கவிதை -: 'தேன்மொழி'க் கவிதைகள் - அ.ந..க.வின் 'கடைசி நம்பிக்கை' & 'நான் செய் நித்திலமே'

•E-mail• •Print• •PDF•

அ.ந..க.

கவிதை: அ.ந..க.வின்  'கடைசி நம்பிக்கை'!

பொதுவாகப் பெற்றொர் பிறக்கும் பிள்ளை புத்திக்கூர்மையுடன் இருக்க வேண்டுமென்று விரும்புவர். ஆனால் இந்தத்தந்தையோ அதற்கு நேர்மாறு. காரணம் மிகுந்த புத்திக்கூர்மை மிக்க தந்தையிவருக்கு இவருடைய புத்திக்கூர்மை வாழ்க்கைக்கு உதவவில்லை. 'யானோ எனது புத்தியின் கூர்மையால் , வாழ்க்கை முழுவதும் வரண்டு கிடக்கின்றேன்' என்று வருந்துகின்றார். இதனால் இவர் வேண்டுவதுதான் யாதோ? தனது பிள்ளை அறியாமையிலும், மடமையிலும் சிறந்து விளங்கவேண்டுமென்று விரும்புகின்றார். அவற்றில் எவர்க்கும் குறைவிலாதிலங்க வேண்டுமென்று விரும்புகின்றார். :-)

"இன்றென் நினைவு ஒன்றேயாகும் -
என்சிறு பிள்ளை நன்கு வளர்ந்து
அறியாமையிலும் மடமைச்சிறப்பிலும்
எவர்க்கும் குறைவிலா திலங்கி அமைதி
நிலவும் வாழ்க்கை நீள நடாத்"த வேண்டுமென்று விரும்புகின்றார்.

எதற்காகத் தெரியுமா?

அப்படியென்றால்தான் ,

"ஈற்றில் இந்த நாட்டை இயக்கும்
மந்திரி சபையிலும் குந்தியிருப்பான்" :-)

ஓரு சீனக்கவிதையின் தமிழாக்கமிது. தமிழாக்கியிருப்பவர் அ.ந.கந்தசாமி. 'தேன்மொழி' சஞ்சிகையின் இரண்டாவது இதழில் (ஐப்பசி 1955) வெளியான கவிதை இது. இன்று ஆட்சிக்கட்டிலுள்ள அமைச்சர்கள் பலரைப்பார்க்கும்போது இக்கவிதையில் விரவிக்கிடக்கும் அங்கதம் இதழ்க்கோடியில் புன்னகையினை வரவழைக்கின்றது. அன்று பாடியது இன்றும் நன்கு பொருந்துகிறதல்லவா.

•Last Updated on ••Tuesday•, 02 •April• 2019 01:45•• •Read more...•
 

வாசிப்பும் , யோசிப்பும் 337: செல்வம் அருளானந்தம் (காலம் செல்வம்) எழுதிய 'எழுதித்தீராப் பக்கங்கள்' பற்றி...

•E-mail• •Print• •PDF•

அண்மையில் செல்வம் அருளானந்தம் (காலம் செல்வம்) எழுதிய 'எழுதித்தீராப் பக்கங்கள்'அண்மையில் செல்வம் அருளானந்தம் (காலம் செல்வம்) எழுதிய 'எழுதித்தீராப் பக்கங்கள்' வாசித்தேன். தன் புகலிட அனுபவங்களுடன் சிறிது புனைவினையும் கலந்து , அங்கதச்சுவை மிக்க படைப்பாக்கியிருக்கின்றார் காலம் செல்வம். இந்நூலிலுள்ள பாத்திரங்களின் உரையாடல்கள், சம்பவங்கள் சில இந்நூல் புனைவும் கலந்ததென்ற உணர்வினையே எனக்குத் தருகின்றது. இந்நூலின் முக்கிய பலம் நூலாசிரியரின் அங்கதச்சுவை மிக்க எழுத்து. வெறும் நகைச்சுவை எழுத்தென்றில்லாமல் , நகைச்சுவையினூடு சமூகத்தையும் கிண்டலடிக்கின்றது. அதனாலேயே அங்கதச்சுவை மிக்க படைப்பாகியிருக்கின்றது இந்நூல். நூல் சுவைப்பதற்கு இன்னுமொரு காரணம் நூலில் காணப்படும் ஓவியங்கள். ஓவியங்களுடன் நூலை வாசிக்கையில் பல இடங்களில் அடக்க முடியாமல் சிரிப்பு வெடிக்கின்றது. நூலாசிரியரின் நடையும், ஓவியங்களும் இந்நூலின் சிறப்புக்கு முக்கிய காரணங்கள்.

இந்நூலை வாசிக்கும்போது என் கவனத்தை இந்நூலைத் தொடராக வெளியிட்ட 'தாய்வீடு' பத்திரிகையின் ஆசிரியர் டிலிப்குமார் இந்நூலுக்கு எழுதிய அறிமுகக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ள சில கருத்துகள் ஈர்த்தன. அவை வருமாறு: "புலம் பெயர்ந்த முதல் தலைமுறையினரது துயர வாழ்வு ஒரு தொடராக எழுதப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்" " முதல் தலைமுறையினரது அனுபவங்கள் செவிவழிக் கதைகளாக இருந்தனவேயன்றிப் பதிவுகளாகத் தெரிந்திருக்கவில்லை"

இவை தவறான கூற்றுகள். காலம் செல்வத்தின் ''எழுதித்தீராப் பக்கங்கள்' நூல் அண்மைக்காலகட்டத்தில்தான் 'தாய்வீடு' பத்திரிகையில் தொடராக வெளியானது. இந்நூல் புகலிடத்தமிழர்களின் வாழ்வினை ஆவணப்படுத்துமொரு சிறப்பான நூல் என்பதில் மாற்றுக்கருத்துகளில்லை. ஆனால் இவ்விதமான நூலொன்று வெளியானது இதுவே முதல் தடவையாகும் என்பது தவறானது. இந்நூல் வெளியாவதற்குப் பல வருடங்களின் முன்னரே , தொண்ணூறுகளில் வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கனடாவிலிருந்து வெளியாகும் 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியானது. இதுபோல் 2007 காலகட்டத்தில் திண்ணை, பதிவுகள் இணைய இதழ்களில் தொடராக வெளியான வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலும் தொடராக திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. இவையெல்லாம் முறையே இலங்கைத்தமிழ் அகதி ஒருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வையும், நியூயார்க் மாநகரத்தில் அலைந்து திரிந்த வாழ்வையும் பதிவு செய்தவை. இவையிரண்டுமே உண்மை அனுபவங்களின் அடிப்படையில் உருவான புனைவுகள்.

•Last Updated on ••Friday•, 29 •March• 2019 02:46•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 336: இருவர்!

•E-mail• •Print• •PDF•

மாணிக்கதாசன்உபதிஸ்ஸ கமநாயக்க'மக்கள் விடுதலை முன்னணி'த்தலைவர் ரோகண விஜேவீரா பற்றிய சிங்களத்திரைப்படம் பற்றிய காணொளியைப்பார்த்ததும் கூடவே ரோகண விஜேவீராவுடன் கைது செய்யப்பட்டுப் படையினரால் கொலைசெய்யப்பட்ட கட்சியின் உபதலைவரான உபதிஸ்ஸ கமநாயக்கவின் (Upatissa Gamanayake) நினைவும் தோன்றியது. கூடவே அவரது தாயாரின் சகோதரியின் மகனான இன்னுமொருவரின் நினைவும் தோன்றியது. உபதிஸ்ஸ கமநாயக்க சிங்கள சமுதாயத்தின் வர்க்க விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி, அரசபடையினரால் கொலைசெய்யப்பட்டால், அவரது அன்னையின் சகோதரியின் மகனோ இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காய் ஆயுதம் தாங்கிப்போரிட்ட ஒருவர். ஆரம்பத்தில் தமிழ்ப்புலிகள் அமைப்பில் இணைந்தவர் பின்னர் அது தமீழீழ மக்கள் விடுதலைக் கழகம், விடுதலைப்புலிகள் என்னும் அமைப்புகளாகப்பிரிந்தபோது தன்னை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்துடன் இணைத்துக்கொண்டவர். பின்னர் தன் இறுதிகாலத்தில் அவ்வமைப்பின் இராணுவத்தளபதியாகவும் , பிரதித்தலைவராகவுமிருந்தவர். அவர் வவுனியாவிலிருந்த கழகத்தின் முக்கிய பாசறையான லக்கி ஹவுஸுல் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் மாணிக்கதாசன்.

மாணிக்கதாசன் என்றதும் அவரது இராணுவச்செயற்பாடுகள் மற்றும் அவை காரணமாகவெழுந்த விமர்சனங்கள்தாம் முதலில் நினைவுக்கு வரும். விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய அனைத்து அமைப்புகளிலும் இவை போன்ற விமர்சனங்களுள்ளன.

மாணிக்கதாசனுக்கும் வடக்கு அராலிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இவரது சகோதரியொருவர் அங்குதான் திருமணம் செய்தவர். இவரது சகோதரரொருவர் அங்கு மாணவர்களுக்கு 'டியூசன்' கொடுத்துக்கொண்டிருந்ததாகக் கூறுவர். எண்பதுகளின் ஆரம்பத்தில் மாணிக்கதாசனே அங்குவந்து தேடப்படும் காலங்களில் உறைந்து வாழ்ந்ததாகவும் கூறுவர். இவரைப்பற்றி 1984 -1987 காலப்பகுதியில் கழகத்தின் அப்பகுதிப்பொறுப்பாளராகவிருந்த முரளி இவரைப்பற்றிக் கூறியது இவரைப்பற்றிய இன்னுமொரு பிம்பத்தையே தந்தது.

வாகனத்தை மிகவும் வேகமாக ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராம் மாணிக்கதாசன். அவ்விதமொரு நாள் அப்பகுதிப்பொறுப்பாளரான தன்னைச் சந்திக்க வந்த நிகழ்வைப்பற்றி அவர் நினைவு கூர்கையில் (யாழ் கோட்டையில் 'புளட்' அரண் அமைத்துக் காவல் புரிந்து கொண்டிருந்த காலகட்டமது) வழக்கம்போல் வேகமாக வாகனத்தையோட்டி வந்த அவர் அவ்விதமே தன்னையதிலேற்றி முருகமூர்த்தி ஆலயத்தடிக்கு அழைத்துச்சென்று சிறிது நேரம் உரையாடிச்சென்றதாகவும், அப்போது அப்பகுதியில் இன்னுமொரு பயிற்சி முகாம் அமைக்க வேண்டுமெனக் கூறியதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் அவர் கூறிய இன்னுமொரு விடயம்: 'தோழர் சின்ன மெண்டிஸ் போராளிகளுடன் மிகவும் நட்புரீதியாகப்பழகுவார். மாணிக்கதாசனும் அவ்வாறே மிகவும் நட்புரீதியாகப்பழகுவார். அத்துடன் மிகவும் வேடிக்கையாகவும் உரையாடுவார்.' இவ்விதமான அவரது ஆளுமையினால் அக்காலகட்டத்தில் கழகத்தோழர்களின் அன்புக்குரியவராகவுமிருந்தாரென்றும் அவர் மேலும் கூறினார்.

•Last Updated on ••Thursday•, 28 •March• 2019 22:36•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 335: தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!

•E-mail• •Print• •PDF•

அம்மாஇன்று , மார்ச் 26, அம்மாவின் நினைவு நாள். நவரத்தினம் டீச்சர் என்று அன்புடன் அவரது மாணவர்களாலும், 'மங்கை' என்று அவரது சிநேகிதிகளாலும் அன்புடன் அழைக்கப்பட்ட அவரது நினைவு நாள் என் சிந்தையில் அவருடன் கழித்த நாள்களை நினைவு கூர்ந்திட வைக்கின்றது. யாழ் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, வவுனியா மகா வித்தியாலயம், அராலி இந்துக்கல்லூரி என அவர் ஆசிரியராகப் பணிபுரிந்த பாடசாலை மாணவர்களைத் தன் அன்பால், சிரிப்பால், மென்மையான அணுகுமுறையினால் கட்டிவைத்தவர் அவர். வாழ்நாளில் ஆத்திரப்பட்டுப் பேசி நான் பார்த்ததில்லை. சில சமயங்களில் குரலில் சிறிது கண்டிப்பைக் காட்ட முற்பட்டாலும் கூட அக்கண்டிப்பை அவரால் வெளிப்படுத்தவே முடிந்ததில்லை.

என் பால்யபருவத்தில் ஆரம்பத்திலிருந்து ஏழாம் வகுப்புவரை வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்த காலகட்டத்து நினைவுகள் அழியாத கோலங்கள். அதிகாலையிலேயே எழுந்து, காலைச்சாப்பாடு, மதியச்சாப்பாடு எல்லாம் தயாரித்து, மதிய உணவையும் பார்சல்களாகக் கட்டி அல்லது 'எவர்சில்வர்' தூக்கு பாத்திரத்திலிட்டு பாடசாலை அழைத்துச் செல்வார். குழந்தைகள் நாமும் குருமண்காட்டிலிருந்து பாடசாலைக்கு அவரணைப்பில் பின் தொடர்வோம்.

அதிகாலை நேரங்களில் ஸ்டேசன் 'றோட்டின்' ஒரு புறத்தே பசிய வயல்கள் காட்சியளித்தன. பச்சைக் கிளிகள், குக்குறுபான்கள், ஆலாக்கள், மைனாக்கள், காடைகள், சிட்டுக் குருவிகள், மாம்பழத்திகள், நீண்ட வாற் கொண்டை விரிச்சான் குருவிகள், நீர்க்காகங்கள், மணிப்புறாக்கள்,.. எனப்பல்வகைப்புள்ளினங்களின் மலிந்திருக்கும் வனப்பிரதேசங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. இயற்கையின் தாலாட்டில் எந்நேரமும் தூங்கிக் கிடக்கும் வன்னி மண்ணின் அதிகாலப்பொழுதுகளை எண்ணியதும் கூடவே அம்மாவுடன் பாடசாலைக்குச் சென்ற பருவங்கள் படர்ந்த நினைவுகள் , அவருடன் வாழ்ந்த அனுபவங்கள் சிந்தையில் படம் விரிக்கின்றன.

அவரது உலகமெல்லாம் பாடசாலையும் , குடும்பமும்தாம். அவற்றிலேயே அவர் இன்பமுற்றார். செல்லும் வழியில் அன்று வவுனியா எம்.பி.ஆகவிருந்த தா.சிவசிதம்பரத்தின் வீடிருந்தது. அதற்குப் பக்கத்தில் ஸ்டேசன் 'றோட்டி'ல் இராமச்சந்திரன் டீச்சர் வீடிருந்தது. அவர் ஒரு மொரிஸ் மைனர் கார் வைத்திருந்தார். சில சமயங்களில் அவருடன் அவர் காரில் பாடசாலை செல்வதுண்டு.

அவ்விதமாக அதிகாலைகளில் பாடசாலை நோக்கி ஸ்டேசன் வீதி வழியாகச் செல்லும் காலைப்பொழுதுகளில் எதிர்ப்புறமாக ஒருவர் மடித்துக் கட்டிய வேட்டியும், வெறும் தோளுமாக, வேப்பங்குச்சியால் பற்களை விளக்கியபடி வருவார். பார்த்தால் அசல் என்.எஸ்.கிருஷ்ணனைப்போலவே இருப்பார். அவரைப்பார்க்கும் நேரமெல்லாம் நான் அம்மாவிடம் 'என்.எஸ்.கிருஷ்ணன் வாறார்' என்று கூறுவேன். ஒருநாள் அம்மா அவரிடம் 'இவர் உங்களைப்பார்க்க என்.எஸ்.கிருஷ்ணனைப்போல இருக்குதாம் என்று கூறுகிறான்' என்று கூறி விட்டார். அதைக்கேட்டதும் பல்லை விளக்கியபடி வந்து கொண்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனின் 'வாயெல்லாம் பல்'. :-) இப்பொழுதும் நினைவில் பசுமையாக நினைவிலுள்ளது.

அவர் அன்னையாகவும், வவுனியா மகா வித்தியாலயத்தில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் என் புவியியல் ஆசிரியராகவும் விளங்கியவர். . அவ்வப்போது குட்டிக் கதைகள் சிலவற்றையும் பாடத்தின் இடை நடுவில் கூறிச் சிரிக்க வைத்து, மாணவர்களை உற்சாகப்படுத்திப் பாடத்தைத் தொடர்வார்.

•Last Updated on ••Thursday•, 28 •March• 2019 20:50•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 334: அஞர், ஆரஞர் மற்றும் பேரஞர் பற்றிய புரிதல்!

•E-mail• •Print• •PDF•

ஆரஞர்அண்மையில் 'டொராண்டோ'வில் நடைபெற்ற எழுத்தாளர் பா.அ.ஜயகரனின் சிறுகதைத்தொகுதியிலுரையாற்றிய முனைவர் மைதிலி தயாநிதி trauma  என்னும் ஆங்கிலச் சொல்லுக்குரிய சரியான சொல் தெரியவில்லை எனச் சபையினரைப்பார்த்துக் கேட்டபோது மேடையில் வீற்றிருந்த கவிஞர் சேரன் அவர்கள் அஞர் என்றார். அஞர் என்றதும்தான் நினைவுக்கு வருகின்றது சேரனின் அண்மையில் வெளியான கவிதைப்புத்தகத்தின் பெயரும் கூட அஞர் என்பதுதான். உண்மையில் முனைவர் சேரனின் கருத்துப்படி அஞர் என்பதற்கான அவரது விளக்கம் இணையத்தில் காணப்பட்ட குறிப்பொன்றிலுள்ளது ("முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு ஆற்ற ஒண்ணா அஞர்" - சேரன்). அக்குறிப்பிலுள்ள அவரது அஞர் பற்றிய விளக்கம் வருமாறு:

"பெருந்துயரம், ஆறாத காயம், ஆற்ற முடியாத மனவடு, உளவடு என்பவற்றைக் குறிக்கும் பழைய தமிழ்ச் சொல் அஞர். எடுத்துக்காட்டாக, ‘ஊங்கு (மிக்க) அஞர் நிலையே’ என நற்றிணையிலும் (30.10), ‘ஆர உண்டு பேரஞர் போக்கி’ எனப்பொருநராற்றுப்படையிலும்(88), ‘கோடா மரைப்பின் நடுங்கஞர்’ எனக் குறளிலும் இந்தச் சொல் பயின்று வருகிறது. Trauma என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சொல்லாக இதனைப் பயன்படுத்தலாம் என்பது என் எண்ணம்."

இதன்படி அஞர் என்றால் "பெருந்துயரம், ஆறாத காயம், ஆற்ற முடியாத மனவடு, உளவடு." உண்மையில் அஞர் என்றால் பெருந்துயரம் அல்ல; துயரம் என்பதே சரியாக எனக்குப்படுகின்றது. 'ஊங்கு அஞர்' என்னும்போது துயரம் பெருந்துயரமாகின்றது.  பெரிய அஞர் (பேரஞர்) என்னும்போது துயரம் பெருந்துயரமாகின்றது. நடுங்கஞர் என்னும் சொல்லிலும் நடுங்கும் என்னும் சொல்லுடன் அஞர் சேரும்போதே நடுங்கஞர் ஆகின்றது.

அண்மைக்காலத்து அகராதிகளில் அஞர் பற்றிய விளக்கங்கள் எதுவுமில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியான அகராதிகளிலெல்லாம் அஞர் என்னும் சொல்லும் இடம் பெற்றுள்ளதை அவதானிக்கலாம். உதாரணத்துக்கு  'யாழ்ப்பாணம் மேலைப்புலோலி வித்துவான் அறிஞர் நா.கதிரவேற்பிள்ளை'யின் அகராதியைப்பார்த்தால் (சாரதா பதிப்பக வெளியீடு) அஞர் பற்றிய விளக்கம் இவ்வாறுள்ளது:  "அறிவிலார், துன்பம், வருத்தம்"

இதிலிருந்து அஞர் என்பது துன்பம், வருத்தம் என்னும் பொருளிலும், 'அறிவிலார்' என்னும் பொருளிலும் பாவிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. ஆனால் அஞர் என்னும் சொல்லுடன் ஊங்கு, பெரிய என்னும் சொற்கள் சேரும்போது மட்டுமே அஞர் ( துயரம் ) பெருந்துயரமாகின்றது. ஆனால் பெருந்துயரத்தை விபரிக்கவும் இன்னுமொரு பழந்தமிழ்ச்சொல்லுண்டு. அது அஞர் அல்ல ஆரஞர் (பெருந்துன்பம்).

சிலப்பதிகாரத்தில் தேவந்தி வரலாறு என்னும் பகுதியில் அச்சொல் காணப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில் வேறிடங்களிலும் இச்சொல் இருக்கலாம். இதுவே என் கண்களில் முதலில் பட்டது. சங்க இலக்கியங்களில் அஞர் தாராளமாகவே பல பாடல்களில் பாவிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.

•Last Updated on ••Thursday•, 28 •March• 2019 20:44•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 333: குயுக்தி கேள்வி -பதில் பகுதியை உருவாக்கியவர் யார்? எழுத்தாளர் அ.ந.கந்தசாமியா? பத்திரிகையாளர் எஸ்.டி.சிவநாயகமா?

•E-mail• •Print• •PDF•

அ.ந.ககுயுக்தி கேள்வி -பதில் பகுதியை உருவாக்கியவர் யார்? எழுத்தாளர் அ.ந.கந்தசாமியா? பத்திரிகையாளர் எஸ்.டி.சிவநாயகமா?  எனது அ.ந.க பற்றிய முகநூற் பதிவொன்று சம்பந்தமாகக் கருத்துத்தெரிவித்திருந்த எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்கள் 'ஒரு சந்தேகம் .குயுக்தியார் எஸ் டி சிவநாயகம் இல்லையா ?' என்றொரு கேள்வி கேட்டிருந்தார்.குயுக்தி கேள்வி -பதில் பகுதியை உருவாக்கியவர் யார்? எழுத்தாளர் அ.ந.கந்தசாமியா? பத்திரிகையாளர் எஸ்.டி.சிவநாயகமா?

எனது அ.ந.க பற்றிய முகநூற் பதிவொன்று சம்பந்தமாகக் கருத்துத்தெரிவித்திருந்த எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்கள் 'ஒரு சந்தேகம் .குயுக்தியார் எஸ் டி சிவநாயகம் இல்லையா ?' என்றொரு கேள்வி கேட்டிருந்தார்.

அக்டோபர் 1961 'மரகதம்' சஞ்சிகையில் வெளியான, ராம்- ரஹீம் எழுதிய 'ஒட்டிப்பிறவாத இரட்டையர் அ.ந.க - எஸ்.பொ' என்னும் தலைப்பில் வெளியான கட்டுரையில் அ.ந.கந்தசாமியே குயுக்தியார் கேள்வி - பதில் பகுதியை உருவாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எஸ்.டி.சிவநாயகம் சுதந்திரனின் ஆசிரியராக இருந்த காலகட்டம் 1952 – 1961. ஆனால் அ.ந.க.வின் நானா வெளியான காலகட்டத்தில் (4-11-1951) 'கேட்டுப்பாருங்கள் குயுக்தி' என்னும் கேள்வி பதில் சுதந்திரனில் வெளியாகியுள்ளது.

இதிலிருந்து எஸ்.டி,சிவநாயகம் குயுக்தி கேள்வி-பதில் பகுதியை ஆரம்பித்திருக்கச் சாத்தியமில்லை. அவர் ஆசிரியராக விளங்கிய காலகட்டத்தில் அப்பகுதியைத் தொடர்ந்திருக்கவே சாத்தியமுண்டு. இதன்படி அ.ந.கந்தசாமியே குயுக்தி கேள்வி - பதில் பகுதியைச் சுதந்திரன் பத்திரிகையில் உருவாக்கியவராகயிருக்க வேண்டும்.

அ.ந.க சுதந்திரனிலிருந்த காலகட்டத்தில் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல் மொழிபெயர்ப்பு , புத்தகவிமர்சனம் மற்றும் குயுக்தி பதில் எனப்பன்முகப் பங்களிப்பு செய்துள்ளார். அது பற்றி அ.ந.க.வின் சுதந்திரன் காலகட்டம் என்னும் தலைப்பிலான ஆய்வு செய்யப்படுவது முக்கியம்.  4.11.1951 சுதந்திரனில் வெளியான குயுக்தி பதில்களுக்கான மற்றும் மரகதம் சஞ்சிகையில் வெளியான கட்டுரைக்கான சான்றுகள் கீழே. இங்குள்ள சுதந்திரன் குயுக்தி கேள்வி-பதில் பகுதியில் வாசகர் ஒருவர் அ.ந.க.வின் நானா பற்றியும் கேள்வியொன்றினைக் கேட்டுள்ளதை அவதானியுங்கள்

•Last Updated on ••Thursday•, 21 •March• 2019 20:37•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 332: 'ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்' என்னும் அனோஜன் பாலகிருஷ்ணனின் கட்டுரை பற்றி...

•E-mail• •Print• •PDF•

அனோஜன் பாலகிருஷ்ணன்'ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்' என்னுமொரு கட்டுரையை அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதியிருக்கின்றார் (https://www.jeyamohan.in/119092… ) அதனை எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைப்பதிவில் மறுபிரசுரம் செய்து தட்டிக்கொடுத்திருக்கின்றார். இளம் எழுத்தாளரைத் தட்டிக்கொடுத்து ஆதரிப்பது நல்ல விடயமே. அக்கட்டுரையின் ஆரம்பத்தில் அவர் எழுதிய பின்வரும் கருத்துகளைக் கவனியுங்கள்:

"தனிப்பட்ட வாழ்கையில் அலைக்கழிப்பும் துயரம் நிறைந்த அனுபவமும் இருந்தால் நல்ல இலக்கியம் பிறக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. டால்ஸ்டாய், ஜெயமோகன்,ஷோபாசக்தி, மிலன் குந்தேரா, ஹனீப் குரேஷி வரை அதற்கான முன்னோடிகள் இருக்கிறார்கள்தான்."

ஷோபாசக்தி, ஜெயமோகன் ஆகியோர் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய படைப்பாளிகள். ஆனால் அவர்களை டால்ஸ்டாயுடன் ஒரே தட்டில் வைத்து ஒப்பிட முடியுமா? சிறிது அதிகமாகத்தெரியவில்லையா?

இலக்கியமென்பது அலைக்கழிப்பு உள்ளவர்களாலும் . அவ்விதமில்லாதவர்களாலும் படைக்க முடியும். அவர்களை வரிசைப்படுத்துகையில் அவர்களது படைப்புகளின் சிறப்பின் அடிப்படையில் குறிப்பிடுவதே சிறந்தது. வெகுசனப்பத்திரிகையில் பல்வேறு வாழ்க்கைப்போராட்டங்களில் சிக்கி,உழைப்புக்காக மர்மக்கதைகள்படைக்கும் எழுத்தாளர் ஒருவரையும் டால்ஸ்டாய்க்குப் பக்கத்தில் வைத்து இவ்விதமான கூற்றின் அடிப்படையில் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?

தனிப்பட்ட வாழ்க்கையில் அலைகழிப்பும் துயரமும் நிறைந்த அனுபவமும் இருந்தால் நல்ல இலக்கியம் பிறக்கும் என்பதை மட்டும் காரணமாக வைத்து இவ்விதமாக ஒப்பிட முடியுமா? இதனை வாசிக்கும் ஒருவருக்குக் கட்டுரையாளர் இந்த ஒரு விடயத்துக்காக மட்டும் இவ்விதமொரு வரிசையைச் சுட்டிக்காட்டுகின்றார் என்பது புலப்படாது. டால்ஸ்டாய் என்னும் படைப்பாளியின் படைப்புகளூக்கு ஈடாக ஏனைய படைப்பாளிகளும் ஒப்பிடப்பட்டிருக்கின்றார்கள் என்றுதான் புலப்படும்.

•Last Updated on ••Tuesday•, 19 •March• 2019 19:08•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 331: அஞ்சலி; அறிவுலகை ஆட்டி வைத்த அறிஞர்கள் மூவர்! நினைவு கூர்வோம்!;வவுனியா விக்கியின் மின்னஞ்சலொன்று!;சிங்கள விமர்சனம்!

•E-mail• •Print• •PDF•

அஞ்சலிஅண்மையில்  நியூசீலாந்தில் இரு மசூதிகளில் தொழுகைகளில் ஈடுபட்டிருந்த அப்பாவிப் பொதுமக்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொன்றதுடன், அதனை இணையத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்திருக்கின்றான் நிறவெறி பிடித்த ஆஸ்திரேலிய வெறியனொருவன். எல்லா மதங்களிலும், மொழிகளிலும், இனங்களிலும் வெறியர்களிருக்கின்றார்கள். அதற்காக அவ்வெறியர்களின் இன, மத மற்றும் மொழி மக்களை ஒட்டுமொத்தமாகக் குற்றஞ்சாட்டுவதா? அதுதான் முஸ்லிம் மக்கள் விடயத்தில் நடந்துள்ளது. இவ்விதமான தொடுக்கப்படும் வன்முறைகள் கண்டு அஞ்சி விடாமல், தலை நிமிர்ந்து தம் நம்பிக்கைகளின் வழி பெருமையுடன் தொடர்ந்து பயணிப்பதே இவ்வெறியர்களுக்குக் கொடுக்கப்படும் தகுந்த பதிலடியாகும்.

இன்றைய தாக்குதல்களில் பலியாகிய மற்றும் காயமடைந்த முஸ்லிம் மக்கள அனைவருக்கும் எமது அஞ்சலி! அவர்களையிழந்து வாடும் உற்றார், உறவினர்கள் & நண்பர்கள் அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்.


முகநூலும், எழுத்தாளர்களும்!

பொதுவாக தமிழ் இலக்கிய உலகிலுள்ள வளர்ந்த, இளம் எழுத்தாளர்களின் நிலை அல்லது செயற்பாடுகள் ஒருவரையொருவர் அங்கீகரிப்பதும், தூக்கி விடுவதுமாகவிருக்கும். இதனை நாம் 'முதுகு சொறிதல்' என்போம் . :-) இவ்விதமான அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்கள் என்பவர்கள் பலருடன் உரையாடுகையில் அல்லது இவர்களது நேர்காணல்களில் முகநூல் பற்றிய பதிலொன்று பெரும்பாலும் ஒரே கருத்துள்ளதாக அமைந்திருப்பதைக் காண்கின்றேன். அவர்கள் கூறுவார்கள்: 'முகநூலா நான் அப்பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை. அது வெட்டிப்பேச்சு பேசுபவர்களின் இடம். அங்கு இலக்கியம் படைக்க முடியாது.'

முகநூல் மேய்தல்

இவர்கள்  ஏன் முகநூலைக் கண்டு பயப்படுகின்றார்கள்? அடிப்படைக்காரணம்: அச்சூடகங்களில் இவர்கள் எழுதும் எதற்கும் இவர்களுக்கெதிரான எதிர்வினைகள் உடனடியாக வெளியாவதில்லை. வெளிவருகையிலும் எல்லாம் வெளியாவதில்லை. தணிக்கைக்குள்ளாகியே வெளியாவதுண்டு. எனவே இவர்களது கூற்றுகளுக்கு, நிலைப்பாடுகளுக்கு எதிரான எதிர்வினைகள் அதிகம் வெளிவராத நிலையில் இவர்களது இடம் தக்க வைத்துக்கொள்ளப்படுகின்றது. ஆனால் முகநூலில் இதற்கான சாத்தியங்களில்லை. இவர்களது படைப்புகளுக்கு, அல்லது கூற்றுகளுக்கான எதிர்வினைகள் உடனடியாகவே பதியப்படுகின்றன. ஆதரவான, எதிரான எதிர்வினைகள் அனைத்துமே உடனடியாகவே  முகநூலில் புரியப்படுகின்றன. ஒருவேளை அவற்றின் காரம் காரணமாக அப்படியானவர்களைத் தடை செய்தாலும், அவ்விதம் எதிர்வினை புரிபவர்கள் தம் எதிர்வினைகளைத் தம் பக்கத்தில் தொடர்வார்கள். ஆக ஒருபோதுமே உடனடியாக எழும் எதிர்வினைகளைத் தடுப்பதென்பது சாத்தியமிலை. இதனால்தான் இதுவரை அச்சூடகங்களில் முடி சூடா மன்னர்களாகக் கோலோச்சிக்கொண்டிருந்தவர்களுக்குத் தம் ஆட்சியினை ஆட்டங்காண வைத்து விடுகின்றது முகநூல் என்பதால்தான் முகநூல் பக்கமே வர நடுங்குகின்றார்கள். இலக்கிய உலகில் ஆஸ்தானப் படைப்பாளிகளாகத் தொடர்வதற்கு, எவ்விதக் கேள்விகளுமற்றுத் தொடர்வதற்கு முகநூல் தடையாக இருக்கின்றது என்பதால்தான் இவர்களுக்கு முகநூல் வேப்பங்காயாகக் கசக்கின்றது. ஒன்றைக் கவனிக்கவேண்டும்.

•Last Updated on ••Sunday•, 17 •March• 2019 06:52•• •Read more...•
 

திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!

•E-mail• •Print• •PDF•

திருமாவளவன்- எழுத்தாளர் கோமகனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் இணைய இதழ் 'நடு'. இம்மாத 'நடு' இதழில் கவிஞர் திருமாவளவனைப்பற்றிய எனது நனவிடை தோய்தற் கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரை கீழே. -


எழுத்தாளர் திருமாவளவனை நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது அவரது உள்ளத்தைக் கவரும் புன்னகையுடன் கூடிய முகம். கனடாவில் அவ்வப்போது  கலை, இலக்கிய நிகழ்வுகளில் சந்திக்கும்போது என்னுடன் கலை, இலக்கியம் பற்றி உரையாடும் மிகச்சிலரில் எழுத்தாளர் திருமாவளவனும் ஒருவர். சில சமயங்களில் நான் அவரது கவிதைகள் சிலவற்றை விமர்சிக்கையில், அவற்றை ஒருவித புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு தன் பதிற் கருத்தினை முன் வைக்கும் அவரது பாங்கு என்னைக் கவர்ந்ததொன்று. அவரைப்பற்றி எண்ணியதுமே அவருடன் சந்தித்த, உரையாடிய காட்சிகள் விரிகின்றன. அவரது எழுத்துகள் குறிப்பாகக் கவிதைகள் பற்றிய எண்ணங்கள் சிறகடிக்கின்றன.

புகலிடத் தமிழ்க்கவிஞர்களில் திருமாவளவன் முக்கியமானவர் மட்டுமல்லர் தனித்துவமானவரும் கூட. பொதுவாக நாடறிந்த கவிஞர்களெல்லாரும் அரச அடக்குமுறைகளைப்பற்றி, அரச மனித உரிமை மீறல்களைப்பற்றியே தம் கவனத்தைத்திருப்பியிருந்த சமயம், சிலர் மதில் மேற் பூனைகளாக உருமாறியிருந்த சமயம், அக்காலகட்டத்தில் அரச மனித உரிமை மீறல்களுக்கெதிராகத் தன் குரலை உயர்த்தி முன் வைத்த அதே சமயம் , விடுதலைப்புலிகளையும் துணிந்து விமர்சனத்துக்குள்ளாக்கியவர் அவர். விடுதலைப்போராட்டத்தில் அரச அடக்குமுறைகளுக்கெதிராக மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமென்று ஏனையவர்களெல்லாரும் அடக்கி வாசித்துக்கொண்டிருக்கையில் , திருமாவளவனின் குரல் தனித்தொலிக்கின்றது. அதுவே அவரது கவிதைகள் ஏனையவர்களின் கவிதைகளிலிருந்து வேறுபடுவதற்கு முக்கிய காரணம்.

திருமாவளவனின் கவிதைகள் இழந்த மண்ணைப்பற்றிய கழிவிரக்கத்தை வெளிப்படுத்துவன. இலங்கை அரசின் கொடிய அடக்குமுறைகளுக்கெதிரான எதிர்க்குரலாக ஒலித்தன. புகலிடத் தமிழர்களின் சமூக, பொருளியல் நெருக்கடிகளைப்பேசின. அதே சமயம் அக்காலகட்டத்தில் தேசிய விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தின. ஏனைய கவிஞர்கள் பலரிடமிருந்து கவிஞர் திருமாவளவன் வேறுபடும் இரண்டு முக்கிய விடயங்களாக அவரது விடுதலைப்புலிகளின் குழந்தைப்போராளிகள் பற்றிய கடும் விமர்சனத்தையும், புகலிடத்தமிழர்களின் நெருக்கடி மிகுந்த வாழ்வினை வெளிப்படுத்தும் போக்கினையும் குறிப்பிடலாம். உதாரணத்துக்குத் திருமாவளவனின் ‘நச்சுக்கொடி’ மற்றும் ‘ஷத்திரியம்’ ஆகிய இரு கவிதைகளையும்  சிறிது நோக்குவோம்.

‘நச்சுக்கொடி’

“அழு பெண்ணே அழு.
உன் ஒப்பாரியில்
ஏழு கடல்தாண்டி

எழுகிறது
என் செவியில்.”

“கண்மூடி விழிக்கு முன்னெழுந்த
கணப்பொழுதுள்
களத்தில் பாய்ந்து
வெடித்துச் சிதறி
காற்றில் கலந்து விட்டான்
உன் பாலன்.
கட்டிப்புரண்டு
கதறி அழுகின்றாய்
நீ

•Last Updated on ••Sunday•, 17 •March• 2019 06:49•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 330: கே.எஸ்.எஸ் சிவகுமாரனின் நூல்கள் மூன்று பற்றி....

•E-mail• •Print• •PDF•

கே.எஸ்.எஸ் நூல்கே.எஸ்.சிவகுமாரன்கே.எஸ்.சிவகுமாரனின் 'ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் - ஒரு பன்முகப்பார்வை' (ஜீவநதி பதிப்பக வெளியீடு), ஈழத்து உளவியற் சிறுகதைகள் (மணிமேகலை பிரசுர வெளியீடு) மற்றும் 'அருமையான ஆளுமைகளும், சுவையானமதிப்புரைகளும்' (மணிமேகலை பிரசுர வெளியீடு) ஆகிய மூன்று நூல்களையும் நண்பர் காலம் செல்வத்திடமிருந்து இன்று பெற்றுக்கொண்டேன். நூல்களைக் கொண்டுவந்து சேர்ப்பித்தற்காக அவருக்கு நன்றியினை இத்தருணத்தில்தெரிவித்துக்கொள்கின்றேன். சிறுகதை நூல் தவிர ஏனைய நூல்களிரண்டும் கே.எஸ்.எஸ் அவர்களின் பல்வேறு புத்தகங்கள் பற்றிய, அவர் இரசித்த ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ஜீவநதி பதிப்பகம் நூலினை மிகவும் சிறப்பாக வெளியிட்டுள்ளது. நூலினை ஒரு மூச்சில் வாசிக்க வேண்டுமென்ற அவாவினைத் தூண்டுகின்றது. 73 கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் சிறந்ததோர் ஆவணம். இந்நூலினைப்பார்த்தபோது ஒரு சிந்தனையோடியது. இதுவரை கே.எஸ்.எஸ் அவர்கள் எழுதிய நூல்கள், எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் அனைத்தையும் ஒரு பெருந்தொகுப்பாக இது போன்றதொரு சிறப்பான வடிவமைப்பில் வெளியிட்டால் அதுவோர் சிறப்பான ஆவணமாகவிருக்கும்.

ஜீவநதி வெளியீடாக வெளியான ''ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் - ஒரு பன்முகப்பார்வை'' நூலின் பொருளடக்கத்தைப் பார்த்தபோது உடனடியாகத் தோன்றிய எண்ணம் இந்நூலில் விடுபட்டவர்கள் பற்றிய கட்டுரைகள். ஈழத்துச் சிறுகதைகளும் , ஆசிரியர்களும் ஒரு பன்முகப்பார்வை என்றிருப்பதால் அப்பன்முகப்பார்வையில் தவிர்க்கப்பட முடியாத பலர் தவிர்க்கப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

1. தொகுப்பு கே.எஸ்.எஸ் அவர்கள் 1962 - 1998 காலப்பகுதியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அக்காலப்பகுதியில் கே.எஸ்.எஸ் மேற்படி தவிர்க்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றி எழுதாமலிருந்திருக்கலாம். அல்லது எழுதியிருந்தாலும் தொகுத்த ஜீவநதி பதிப்பகம் அவற்றைக் கவனத்திலெடுக்காமலிருந்திருக்கலாம்.

2. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் பெரும்பாலும் வெளியான தொகுப்புகளை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளன. மேற்படி தவிர்க்கப்பட்ட எழுத்தாளர்களின் தொகுப்புகள் இக்காலப்பகுதியில் வெளிவராதிருக்கலாம். ஆனால் இக்காலப்பகுதியில் ஈழத்துப்படைப்பாளிகள் எழுதிய அரிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்புகள் பல வெளியாகியுள்ளன.. அவற்றில் மேலே குறிப்பிடப்பட்ட தவிர்க்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் பல உள்ளடங்கியுள்ளன. அத்தொகுப்புகளைப்பற்றிய கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கும்பட்சத்தில் தவிர்க்கப்பட்டவர்களின் தொகுப்புகள் வெளிவராதிருக்கும் பட்சத்தில் கூட நினைவு கூரப்பட்டிருப்பார்கள். மேலும் தொகுப்பில் நீர்வை பொன்னையன் சிறுகதைகள் பற்றிய இரு கட்டுரைகள் இடம் பெற்று:ள்ளன. இதுபோலவே காவலூர் ஜெகநாதனின், செ.யோகநாதனின், யோ.பெனடிற்பாலனின், கோகிலா மகேந்திரனின், சுதாராஜின் சிறுகதைகள் பற்றி ஒன்றிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அதற்குப்பதில் அவர்களைப்பற்றி ஒவ்வொரு கட்டுரையும், பதிலாகப் பிற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப்பற்றிய கட்டுரைகளும் வெளிவந்திருக்கலாம். அதே சமயம் 'மட்டக்களப்புப் பிராந்தியப் பேச்சு வழக்கின் கதை' கட்டுரை தொகுப்பொன்றிலில்லாத படைப்பாளிகளின் சிறுகதைகளைப்பற்றி எழுதப்பட்டுள்ளது.

•Last Updated on ••Sunday•, 17 •March• 2019 06:23•• •Read more...•
 

வாசிப்பும்,, யோசிப்பும் 329: கலை , இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் நினைவாக மின்னஞ்சல்கள் சில..

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்'பதிவுகள்' இணைய இதழ் எனக்குப்பல நன்மைகளைச் செய்துள்ளது. சமகாலத் தமிழ் இலக்கியத்தின் ஆளுமைகள் பலருடன் தொடர்புகளை ஏற்படுத்தித்தந்தது. அவர்களில் முக்கியமானவர்களிலொருவர் அமரர் கலை, இலக்கிய விமர்சகரான திரு.வெங்கட் சாமிநாதன்.' பதிவுகள்' இணைய இதழில் மதிப்பும், என் மேல் அன்பும் வைத்திருந்தார். அவரைப்போன்றவர்களுடனெல்லாம் தொடர்புகளை இணையம் , குறிப்பாக 'பதிவுகள்' இணைய இதழ் ஏற்படுத்தித்தந்தது என் அதிருஷ்ட்டமே.

அவர் பல வருடங்களாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்குத்  தன் படைப்புகளை அனுப்பிக்கொண்டேயிருந்தார். உண்மையில் அவர் இறக்கும் வரையில் அனுப்பிக்கொண்டேயிருந்தார் என்பேன். அக்டோபர் 20 2015 அவர் மறைந்தார். மறைவதற்கு முன் அக்டோபர் 18, 2015 அன்றும் அவர் பதிவுகள் இணைய இதழுக்குத் தன் கட்டுரையை அனுப்பியிருந்தார். அத்துடன் அவர் அனுப்பியிருந்த மின்னஞ்சல்தான் கீழுள்ளது:

- Swaminathan Venkat < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
To: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
Oct. 18, 2015 at 12:47 a.m.
அன்புள்ள ஆசிரியருக்கு, இத்துடன் ஒரு நீண்ட பேட்டியை முன்று பகுதிகளாக்கி அதனை மீண்டும்  உங்கள் சௌகரியத்திற்காக முன்று அங்கங்களாக்கி,. உங்களுக்கு அனுப்பும் சௌகரியத்திற்காக மூன்றாக அனுப்பியிருக்கிறேன் . நீ​​ங்கள் இந்த மூன்றையும்  இணைத்து ஒன்றாக்கிக்கிக் கொள்ளுங்கள்.

அன்புடன்
வெசா -


பல வருடங்களாக அவரைப்போன்ற பலர் எழுதிய மின்னஞ்சல்கள் பல பல்வேறு கணினிகளில் புதையுண்டு கிடக்கின்றன. அவ்வப்போது கணினிகளை மாற்றுவதால் ஏற்பட்ட விளைவு. மீண்டுமொருமுறை அவற்றையெல்லாம் தோண்டி எடுக்க வேண்டும். அமரர் வெ.சா அவ்வப்போது எனக்கனுப்பிய மின்னஞ்சல்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். மின்னஞ்சல்கள் குறுகியவையாக இருந்தாலும் அவை என்னைப்பொருத்தவரை முக்கியமானவை. பதிவுகள் மீதான அவரது மதிப்பினையும், என் மீதான அவரது அன்பினையும் வெளிப்படுத்துபவை.

Swaminathan Venkat < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
To: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
Apr. 23, 2009 at 8:14 a.m.
thank you. I see you are flush with such abundance of contributions that you are not able to cope with it, an enviable position of course.  I wish you the same success throughout.  Yesterday evening I met a friend from Singapore who said that he has been closely following what I write in Pathivukal.  It was then I thought, I must remind you of the position.

thank you,
swaminathan

•Last Updated on ••Sunday•, 17 •March• 2019 06:23•• •Read more...•
 

அறிமுகம்: ஓவியர் நகுலேஸ்வரி

•E-mail• •Print• •PDF•

நகுலேஸ்வரி ஓவியம்

எழுபதுகளிலேயே கனடாவுக்குப்புலம்பெயர்ந்து , இங்குள்ள பிரபல நிறுவனமொன்றில் பணியாற்றி , அண்மையில் ஓய்வு பெற்றவரே நகுலேஸ்வரி அவர்கள். இவரை எனக்கு சிறு வயதிலிருந்தே நன்கு தெரியும். எமது மாணவப்பருவத்திலேயே இவர் அக்காலகட்டத்தில் வெளியான வெகுசன இதழ்களில் வெளியாகிக்கொண்டிருந்த ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களைப் பார்த்து அழகாக ஓவியங்களை வரைந்துகொண்டிருப்பதை வியப்புடன் பார்த்திருக்கின்றோம், கனடாவின் பொருளியல் வாழ்க்கைக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட இவர் பெரிதாகத் தனது ஓவியத் திறமையில் நாட்டம் செலுத்தவில்லை. ஆனால் ஓய்வு பெற்ற பின்னர், குழந்தைகளெல்லாம் வளர்ந்து  தம் வாழ்வைக் கவனிக்கத்தொடங்கிவிட்ட நிலையில் மீண்டும் பொழுதுபோக்குக்காக இவரது கவனம் ஓவியத்தின்பால் ஈடுபடத்தொடங்கியது. இருந்தாலும் தன் ஓவியத்திறமையில் பெரிதும் நம்பிக்கை வைத்தவராகத்தெரியவில்லை. அடிக்கடி 'வோட்டர் கலர்' ஓவியங்களை வரைவதும் , அவற்றை அழிப்பதுமாக இருந்திருக்கின்றார். அவ்வாறான சமயங்களில் தான் இவர் வரைந்த சில ஓவியங்களைப்பார்த்தேன். எனக்குப் பிரமிப்பாகவிருந்தது.

•Last Updated on ••Friday•, 08 •March• 2019 08:49•• •Read more...•
 

அஞ்சலி: ஓவியர் கருணா மறைந்தார்

•E-mail• •Print• •PDF•

ஓவியர் கருணா!அண்மைக்காலமாகவே முகநூல் மரண அறிவித்தல் ஊடகமாக மாறி வருகின்றதோ என்னும் வகையில் நம்ப முடியாத , பலரின் மரணச்செய்திகளைத் தாங்கி வருகின்றது. எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் மரணம் அத்தகையது. தற்போது கனடாவில் வசிக்கும் ஓவியர் கருணாவின் (கருணா வின்சன்ட்) மரணச் செய்தியும் அத்தகையதே. . நண்பர் யோகா வளவன் தியா அவர்களின் முகநூற் பதிவு மூலமே தகவலை அறிந்துகொண்டேன்.

ஓவியமே உலகமாக வாழ்ந்திருந்த கருணாவையே நான் அறிந்திருந்தேன். அவருடன் எனக்கு நெருங்கிய தொடர்பில்லை. இருந்தாலும் சிறிது காலம் 2001 காலகட்டத்தில் 10 கேட்வே புளவாட்டில் அமைந்திருந்த அவரது காரியாலயத்தில் அவரது காரியாலயத்தின் ஒருபகுதியை தகவற் தொழில் நுட்பம் தொடர்பான வகுப்புகளை வழங்கிக்கொண்டிருந்த எனக்கு வாடகைக்குத் தந்திருந்தார். அப்பொழுதுதான் அவரும் கவிஞர் பா.அ.ஜயகரனும் இணைந்து 'டிஜி கிராபிக்ஸ்' நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார்கள். நான் சென்ட் கிளயர், ஒகோனர் பகுதியில் தனிக் காரியாலயமொன்றில் வகுப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் நண்பர் ஜயகரன் தங்கள் காரியாலயத்தில் ஒரு பகுதியைப் பாவிக்கலாமென்று கூறியதன் அடிப்படையில் அங்கிருந்து கற்பிக்கத்தொடங்கினேன். ஆனால் அங்கு சிறிது காலமே அவ்விதமியங்க முடிந்தது. அக்கட்டட நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி அங்கு தொடர முடியாத நிலையேற்பட்டது. ஆனால் அக்காலகட்டத்தில் ஓவியர் கருணாவை அவதானிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. மிகவும் அர்ப்பணிப்புடன் நாள் முழுவதும் தன் பணியில் மூழ்கியிருப்பதை அவதானித்தேன்.

ஓருரு சமயங்களில் கிராபிக்ஸ் மென்பொருள்கள் பலவற்றில் நன்கு அனுபவம் பெற்றிருந்த கருணாவிடம் அவை பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களைப் பெற்றிருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் அவர் அவற்றை விளங்கப்படுத்துவதற்காக நிறுவனங்களுக்கான அடையாளச் சின்னங்களை அம்மென்பொருட்களைப்பாவித்து மிகவும் இலகுவாக, இலாகவமாக வரையும் அழகை, நேர்த்தியைக் கண்டு வியந்திருக்கின்றேன். அன்று சிறியதாக ஆரம்பித்த அவரது ஓவியச் சுய தொழிலே பின்னர் அவரது நிரந்தரத் தொழிலானது.
•Last Updated on ••Friday•, 22 •February• 2019 21:30•• •Read more...•
 

வாசிப்பும் யோசிப்பும் 327: வாசித்ததில் பிடித்தது 1 - 'காண் என்றது இயற்கை'யில் கனவு பற்றி எஸ்.ரா.

•E-mail• •Print• •PDF•

எஸ்.ராமகிருஷ்ணன்எனக்கு எழுத்தாளர்களின் அபுனைவுகளில் அவர்கள் தம் வாழ்க்கை அனுபவங்களை மையமாக வைத்து எழுதும் சுய அனுபவங்களை வாசிப்பது மிகவும் பிடிக்கும். சமகாலத்தமிழ் இலக்கியத்தில் அவ்விதம் எழுதியவர்களில் முதலிடத்திலிருப்பவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். தன் ஆரம்பகால வாசிப்பு, சென்னை போன்ற பல்வேறு நகரங்களுக்கான பயணங்கள் பற்றிய அனுபவங்களையெல்லாம் விபரித்து அவர் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். மிகவும் சுதந்திரமாக, எவ்விதக் கட்டுப்பாடுகளுமற்றுத் தன் உணர்வுகளை அபுனைவுகளில் அவர் வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் இதுவரை அவர் தன் சொந்த அனுபவங்களை மையமாக வைத்து ஏதாவது நாவல்கள் எழுதியதாகத் தெரியவில்லை. அவ்விதம் அவர் எழுதுவாரானால் அது மகத்தான நாவல்களிலொன்றாக அமையுமென்ற நம்பிக்கை எனக்குண்டு.

புனைவுகளில் கூட இவ்விதம் ஆசிரியர் தன் சொந்த அனுபவங்களை மையமாக வைத்து எழுதும் புனைவுகள் மிகவும் பிடிக்கும். வெகுசனப்படைப்புகளைப்பொறுத்தவரையில் அகிலனின் 'பாவை விளக்கை' இவ்விதம் கூறுவர். நா.பார்த்தசாரதியின் பாத்திரப்படைப்புகளில் சில அவரையே பிரதிபலிப்பதாக நான் எண்ணுவதுண்டு. உதாரணத்துக்கு அவரது 'பொன்விலங்கு' நாவலில் வரும் நாயகனான சத்தியமூர்த்தியைப்பற்றிய அவரது விபரிப்பு அவர் தன்னையே விபரிப்பதைப் போலிருக்கும்.

உயர்ந்த, சிவந்த அவரையே சத்தியமூர்த்தி பாத்திரம் எனக்குப் புலப்படுத்துவதுண்டு. நீல.பத்மநாபனின் 'தேரோடும் வீதி'யையும் இவ்விதமான புனைவுகளிலொன்றாகக் கூறலாமென்று கருதுகின்றேன். ஹெர்மன் மெல்வில்லின் 'மோபி டிக்' அவரது கடற்பயண அனுபவங்களின் வெளிப்பாடு. இவ்விதமாக ராமகிருஷ்ணனும் தன் சொந்த அனுபவங்களை மையமாக வைத்து , விரிவான நாவலொன்றினை எழுதினால் நன்றாகவிருக்குமென்று நினைப்பதுண்டு.
•Last Updated on ••Friday•, 22 •February• 2019 19:27•• •Read more...•
 

உமா மகேஸ்வரன் இலங்கையின் இனமோதலின் திசையை மாற்றிய மனிதன்!

•E-mail• •Print• •PDF•

உமாமகேஸ்வரன்- ஷேர்லி கந்தப்பா -( தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் செயலதிபராக விளங்கிய உமாமகேஸ்வரன் பற்றி அண்மையில் எண்பதுகளில் இவ்வமைப்புடன் இணைந்து செயலாற்றிய சேர்லி  கந்தப்பா (Shirley Candappa)  அவர்கள் எழுதிய  ஆங்கிலக் கட்டுரையான Uma Maheswaran A MAN WHO CHANGED THE COURSE OF SRILANKA’S ETHNIC CONFLICT  என்னும் கட்டுரையினை முடிந்த வரையில் குறுகிய நேரத்தில் மொழிபெயர்த்திருக்கின்றேன். 18.02.2019 அன்று Daily Mirror  பத்திரிகையில் வெளியான கட்டுரை இது. ஈழத்தமிழர்களின் உரிமைக்கான ஆயுதபோராட்டத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் செயலதிபராக விளங்கிய உமாமகேஸ்வரன் பற்றி அண்மையில் எண்பதுகளில் இவ்வமைப்புடன் இணைந்து செயலாற்றிய சேர்லி  கந்தப்பா அவர்கள் எழுதிய  ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கட்டுரை உமாமகேஸ்வரன் அவர்களைப்பல்வேறு கோணங்களில் எடை போடுவதாலும், பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை உள்ளடக்கியுள்ளதாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான உமாமகேஸ்வரனின் ஆரம்பகால உறவு, தென்னிலங்கை அரசியல்வாதிகள் மற்றும் புரட்சிகர அமைப்பான ஜே.வி.பியுடனான தொடர்புகள் என பல விடயங்களை உள்ளடக்கியுள்ள கட்டுரையிது. )


பெப்ருவரி 18 உமா மகேஸ்வரனின் வருடாந்த நினைவுதினமாகும்.  உமா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகத்தலைவர், 18.2.1945 அன்று பிறந்தார்.  கோழைத்தனம்மிக்க கொலையாளி ஒருவனின் குண்டினால் 16.7.1989 அன்று அவர் பம்பலப்பிட்டியாவிலுள்ள ஃப்ராங்பேர்ட் பிளேஸில் கொல்லப்பட்டார்.

நான் முதன் முறையாக உமாவை அறிந்தது 1977 பொதுத்தேர்தலையடுத்து, வடக்கில் அகதி முகாம்களை அமைத்துக்கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளில் ஒருவராகவே.  அன்றைய பிரதமரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பொருளாதாரத்தைத் தனியுடமை  ஆக்குவதற்கான தனது திட்டங்களைச் சீர்குலைக்கக்கூடிய தனது எதிரிகளை அடக்குவதற்காகவும், அவர்களை அச்சுறுத்துவதற்காகவும் அவர்களுக்கெதிராகவும், மலையகத்தமிழர்களுக்கு எதிராகவும் கூடக் குண்டர்களை ஏவி விட்டார். 

அப்பொழுது நான் தேசிய கிறிஸ்தவ சபையின் அபிவிருத்தி ஆணைக்குழுவின் செயலாளராகவிருந்தேன்.  அரசாங்க ஒத்துழைப்பால் உருவான இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு , இடம் பெயர்ந்த  தோட்டத்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான திட்ட உருவாக்கத்துக்கு உதவுவது என்னுடைய பணி. சுமார் 30,000 மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்; அவர்களில் பலர் மலையகத்தமிழர்கள்.  மேலும் பலர் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். அத்துடன் நூற்றாண்டுக்கும் அதிகமாகக் கடுமையாக உழைத்த தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

தமிழிழ மக்கள் விடுதலைக்கழகத்துக்காக கருத்துகளை வெளியிடும் பேச்சாளரான ஸ்கந்தா அவர்களின் கூற்றின்படி உமாவைக் கொன்ற சூத்திரதாரி கழகத்துக்குத் தெரிந்தவராக இருந்தபோதும், கொலையின் தொடர்ச்சியாக ஐரோப்பாவில் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருந்தபோதும், உமாவின் கொலைக்குத் திட்டமிட்ட, பின்னாலிருந்த சூத்திரதாரிகள் யாரென்பது தெளிவாகத்தெரியவில்லை.  கொலைக்கு உரிமை கோரிய , கழகத்திலிருந்து பிரிந்த குழுவான பரந்தன் ராஜனின் குழுவினரின் கோரிக்கையினை அவர் நிராகரித்திருந்தார். ராஜனும் அவரது குழுவினரும் இந்திய உளவுத்துறையினால் பராமரிக்கப்பட்டு வந்தனர்.  அவர்கள் உமாவின் கொலைக்கு உரிமை கோரியதற்குக் காரணம் அவ்விதம் கூறும்படி இந்திய உளவுத்துறை அவர்களை வேண்டியதனாலிருக்கக்கூடும்.

•Last Updated on ••Wednesday•, 20 •February• 2019 19:36•• •Read more...•
 

இலங்கையில் 'மகுடம்' பதிப்பக வெளியீடாக , வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'....

•E-mail• •Print• •PDF•

- வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' -1983 இலங்கை இனக்கலவரத்தைத்தொடர்ந்து , பிறந்த மண்ணை விட்டுப் புகலிடம் நாடிக் கனடா புறப்பட்ட வேளை, வழியில் பாஸ்டன் நகரிலிருந்து கனடாவின் மான்ரியால் நகருக்கு ஏற்றிச்செல்ல வேண்டிய 'டெல்டா ஏர் லைன்ஸ்' நிறுவனம் எம்மை ஏற்றிச் செல்ல மறுத்து விடவே, அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் எம்மை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்துவதில் மும்முரமாகவிருந்தார்கள். அதிலிருந்து தப்புவதற்காக அமெரிக்காவில் அகதி அந்தஸ்து கோர வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து சுமார் மூன்று மாதங்கள் வரையில் நியூயார்க் மாநகரிலுள்ள புரூக்லின் நகரிலுள்ள தடுப்பு முகாமொன்றினுள் அடைத்து வைக்கப்பட்டோம். அக்காலகட்ட அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணத்தின் விளையே எனது நாவலான 'அமெரிக்கா'. அளவில் சிறியதானாலும் இந்நாவல் ஒருவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. முதன் முதலில் புகலிடம் நாடிச்சென்ற இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்களை விபரிக்கும் நாவல் இதுவேயென்பேன். இந்நாவல் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக மற்றும் கனடா மங்கை பதிப்பக வெளியீடாக மேலும் சில சிறுகதைகளையும் உள்ளடக்கி வெளியானது. இதன் தொடர்ச்சியாக இந்நாவலின் நாயகன் இளங்கோவின் நியூயோர்க் மாநகரத்து அனுபவங்கள் 'குடிவரவாளன்' என்னும் நாவலாகத் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியானது. 'குடிவரவாளன்' ஆரம்பத்தில் திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழ்களில் 'அமெரிக்கா' தொடராக வெளிவந்த நாவல்.

நீண்ட நாள்களாக எனக்கு 'அமெரிக்கா' நாவலைத் தனி நூலாக வெளியிட வேண்டுமென்ற ஆர்வமிருந்தது. தற்போது அதற்கான சூழல் உருவாகியுள்ளது. திருத்தப்பட்ட பதிப்பாக, விரைவில் இலங்கையில் 'மகுடம்' பதிப்பக வெளியீடாக இந்நாவல் வெளிவரவுள்ளது என்னும் மகிழ்ச்சியான தகவலைப்பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். நண்பரும் , கட்டடக்கலைஞருமான சிவசாமி குணசிங்கம் (சிட்னி, ஆஸ்திரேலியா) அவர்கள் நாவலுக்கு சிறப்பான அட்டைப்படமொன்றினை வடிவமைத்துத் தந்துள்ளார். இவரே நான் ஆசிரியர் குழுத்தலைவராகவிருந்து வெளியிட்ட , மொறட்டுவைப்பல்கலைக்கழகத்துத் தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' (1980/1981)சஞ்சிகைக்கும் சிறப்பானதோர் அட்டைப்படத்தினை வடிவமைத்துத் தந்தவர் என்பதையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.

•Last Updated on ••Saturday•, 16 •February• 2019 08:22•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 326: இலங்கைக்கொடியும், வாளேந்திய சிங்கமும், கொடி மாற்றத்தின் அவசியமும்!

•E-mail• •Print• •PDF•

சிங்களக் கவிஞர் ஆரியவன்ச றனவீரவின் (Ariyawansa Ranaweera)அண்மையில் எழுத்தாளர் சோ.பத்மநாதனின் மொழிபெயர்ப்பில் வெளியான 'தென்னிலங்கைக் கவிதைகள்' நூலிலுள்ள சிங்களக் கவிஞர் ஆரியவன்ச றனவீரவின் (Ariyawansa Ranaweera) கவிதைகளிலொன்றான 'இன்றைய சிங்கம்' (Contemporary Lion) கவிதையை வாசித்தபோது பலவித எண்ணங்கள் இலங்கைக் கொடியினைப்பற்றி எழுந்தன. சோ.பத்மநாதனின் மொழிபெயர்ப்புக் கவிதையான 'இன்றைய சிங்கம்' கவிதை வருமாறு:

கவிதை: இன்றைய சிங்கம்

வலக்கையில் வாள் ஏந்தி
தலையைச் சிலுப்பியபடி
காற்றில் படபடக்கிறது
சிங்கராஜா
எங்கள் சின்னம்.


மகாவம்சம்:
யானையின் தலையைப்பிளக்கிறது.
தனியே அலையும் சிங்கராஜா
அதன் வீர கர்ச்சனை
அதன் இனத்துக்கு ஆறுதல்
ஆபத்து வேளையில்
தன்னினத்தைக் காக்க
தலைமை தாங்கி
முன்னே செல்கிறது சிங்கம்.

அமைதி காலத்தில்
நீர்வளத்தை வசப்படுத்தி
பயிர்பச்சை செழிக்க
பாரிய குளங்களைக் கட்டியது.


மகளுடைய விலங்கியல் நூல்:
இரவு பகலாய்
கண்ணை மூடியபடி
சோம்பி
தூங்கி வழியும்
சில அடிகள் ஓடும்
தன் இனத்தைப்புறக்கணிக்கும்
பெண் சிங்கம் கொண்டுவரும் இரைதான்
அதற்கு உணவு, ஆகாரம்.

•Last Updated on ••Tuesday•, 12 •February• 2019 19:20•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 325 : எழுத்தாளர் பூர்ணிமா கருணாகரனின் கவிதைத்தொகுப்பு - 'பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள்!?

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் பூர்ணிமா  கருணாகரனின் கவிதைத்தொகுப்பு -  'பெட்டைக் காகங்களிடுm குயில் குஞ்சுகள்!?'  - பூர்ணிமா கருணாகரனின் பெப்ருவரி 23, 2019 , ஸ்கார்பரோவில் (கனடா) நடைபெறுவுள்ளதாக அறிகின்றோம். நிகழ்வு வெற்றியடைந்திட வாழ்த்துகள். -


எழுத்தாளர் பூர்ணிமா  கருணாகரன்எழுத்தாளர் பூர்ணிமா  கருணாகரனின் கவிதைத்தொகுதியான 'பெட்டைக் காகங்களிடு குயில் குஞ்சுகள்!?' என்னும் கவிதைத்தொகுப்பினை முகநூல் நண்பர் யோக  வளவன் தியா மூலம் கிடைத்தது. அதற்காகக் கவிஞருக்கு என் நன்றி. பொதுவாக நூல் மதிப்புரைக்காக நூல்களைத் தருபவர்கள் மதிப்புரைக்காகத் தம் நூல்களை அனுப்புவார்கள். ஆனால் கனடாவிலோ வசதியாக வாழ்பவர்கள் தம் நூல்களையும் வாங்கி அவற்றுக்கான மதிப்புரையினையும்  எழுத வேண்டுமென்று நினைப்பார்கள். இந்நிலையில் எங்கோ தொலைவிலிருக்கும் கவிஞர் பூர்ணிமா கருணாகரன் தன் நூலினை எனக்குக் கிடைக்கச் செய்திருக்கின்றார். அதற்காக அவருக்கு மனப்பூர்வமான நன்றி. நூலினை வெளியிட்டுள்ள பதிப்பகத்தின் பெயரினை நூலில் காணவில்லை. அதனால் நூலை நூலாசிரியரே  எடிசன் அச்சகம் உதவியுடன் நூலினை வெளியிட்டுள்ளார் என்று கருதுகின்றேன். எடிசன் 'பிரிண்டர்ஸ்' மூலம் வடிவமைப்புச் செய்யப்பட்டு நூல் வெளிவந்துள்ளதை நூலிலுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. பளபளப்புத் தாள்களில் நூல் சிறப்பாக வெளிவந்துள்ளது. வாழ்த்தப்பட வேண்டியதொன்று.

நூலினை மேலோட்டமாக வாசித்தபோது அவதானித்த சில விடயங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்: ஆசிரியர் மீதான அவரது தந்தையாரின் ஆளுமை ஏற்படுத்திய பாதிப்புகளையும், அவற்றின் விளைவாக ஆசிரியரின் எண்ணங்களிலுதித்த கருத்துகளை வெளிப்படுத்தும் கவிதைகளையும் நூலின் வாசிப்பின்போது அவதானித்தேன். இவை தவிர நூல் ஆசிரியரின் பார்வையிலான பெண்கள் பற்றிய் நோக்கு பெண் உரிமை பற்றி விரிவாக அறியப்பட்டு, புரியப்பட்டுள்ள நிலையில் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிவிடலாம். கவிதைகளின் ஏனைய கூறு பொருட்களாக மனிதத்துவம், பெண் கல்வி, தாய்மை, தந்தைமை, பெண்ணுரிமை, விதவைகளின் நிலை, மானுட வாழ்க்கை, சமூகச்சீரழிவுகள் காரணமாக முதிர்கன்னிகளாக வாடும் பெண்களின் நிலை, புகலிடத்தமிழர்தம் வாழ்க்கை ஏற்படுத்தும் பாதிப்புகள், முன்னாட் போராளிகளின் நிகழ்கால நிலை, முதியவர்களின் நிலை, மானுட சமுதாயத்தில் தொடரும் வன்முறை என்று பல்வேறு விடயங்களைப்பற்றிய கவிஞரின் எண்ணங்கள், அறச்சீற்றங்கள் கவிதைகளாகியுள்ளன.

தொகுப்பின்  முதற் கவிதை அவரது தந்தையாரின் ஆளுமையினை, அவ்வாளுமை கவிஞரின் மீது ஏற்படுத்திய பாதிப்பினை வெளிப்படுத்துகின்றது. கூடவே தந்தையாருக்கு நடந்த கொடுமையினையும் எடுத்துக்கூறுகின்றது. முதலாவது கவிதையான 'அப்பாவின் கை பிடித்து..' தந்தையின் ஆளுமையினைப் பற்றி விபரிக்கையில் அவரது தலைமைத்துவப்பண்பினை விபரிக்கின்றது. அவ்விதம் விபரிக்கையில் அவ்வாளுமை கவிஞருக்குக் கற்றுத்தந்த அப்பண்புகளையும் எடுத்துரைக்கின்றது:

" தலைவன் என்பவன் எப்படி
தலைமைத்துவம் என்பது
எப்படி என்பதைக்
கற்பித்து வந்தவன் நீ"


"மிருக வதை
வேள்வித் தடை
அன்றே
அதை
உரத்துச் சொன்னவன் நீ" என்று கூறும் கவிஞரின்  வரிகள் தந்தையாரின் மிருக வதைக்கெதிரான குரலினையும் எடுத்துக்காட்டுகின்றன. கீழுள்ள வரிகள் தந்தையாரின் மேலுமொரு முக்கிய பண்பொன்றினை எடுத்துரைக்கின்றது.

"வீரத்தை உன் பேச்சில் காட்டி
விவேகம் செயலில் காட்டி
வணங்காய் முடியாய்
வாழ்ந்து மடிந்தவன் நீ"

இவ்விதமாக வணங்காமுடியாய் வாழ்ந்தவர் கவிஞரின் தந்தை. இவ்விதமாகத் தந்தையாரின் ஆளுமை. அது ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றிக் குறிப்பிடும் கவிதை இன்னுமொரு விடயத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது போர்ச்சூழலில் அவர் தந்தையை இழந்தது எப்படி, இழப்பதற்குரிய காரணம் அல்லது காரணங்கள் எவை என்பவை பற்றியெல்லாம் கவிதை ஆராய்கின்றது. பின்வரும் வரிகள் கவிஞரின் தந்தைக்கு ஏற்பட்ட நிலையினை விபரிக்கின்றது.

•Last Updated on ••Sunday•, 10 •February• 2019 09:15•• •Read more...•
 

இலங்கையின் சுதந்திரமும் , தமிழர்களும்!

•E-mail• •Print• •PDF•

இலங்கையின் சுதந்திரமும் , தமிழர்களும்!

இலங்கை என்னும் நாடு அங்கு வாழும் அனைவருக்கும் உரிய தாய்நாடு. ஆனால் நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து 2009 வரை அங்கு வாழும் சிறுபான்மையின மக்களுக்கெதிராகக் குறிப்பாகத் தமிழ் மக்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரங்கள், அரச அடக்குமுறைகள் , பயங்கரவாதத் தடைச்சட்டத் துஷ்பிரயோகம், மற்றும் இறுதி யுத்தத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மூலம் ஆயிரக்கணக்கில் பலியாகிய தமிழ் மக்களுக்கு உரிய முறையில் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காத நிலையில், சிறுபான்மையின மக்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு இலங்கையில் அனைத்து மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு உருவாகி , அனைத்து மக்களும் நீதியின் முன் சமம் என்னும் நிலை உருவாகாத நிலையில், இழந்த காணிகள் இன்னும் முழுமையாகக் கிடைக்காத நிலையில், இன்னும் போர்க்குற்றங்களுக்கான விசாரணைகள் நடைபெற்று நீதி கிடைக்காத வரையில் இதுவரை நடைபெற்ற வன்முறைகளால பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எவ்விதம் மனமொன்றி நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவார்கள்?

•Last Updated on ••Wednesday•, 06 •February• 2019 23:18•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 324: ஈழத்துத்தமிழ்க் கவிதையும் , ஜெயமோகனின் கூற்றும்!

•E-mail• •Print• •PDF•

ஜெயமோகன்ஜெமோ எதற்காகத் தூண்டிலைபோட்டாரோ அது நன்றாகவே வேலை செய்கிறது என்பதை முகநூலில் நம்மவர்கள் ஆக்ரோசத்துடன் போடும் கூச்சல் புலப்படுத்துகின்றது. ஜெயமோகன் தனதுரையில் ஈழத்துப்படைப்புகள், கவிதைகள் பற்றிக் கூறியதன் சாரம் இதுதான்.

"திரும்பி இலங்கை எழுத்துகளைப்பார்க்கின்றோம். இலங்கையில் ஐம்பதாண்டு காலமாக எழுதப்படுகின்றது. இலங்கையில் ஐம்பதாண்டு காலமாக எழுதப்படும்போது இலங்கேசனிலிருந்து ஆரம்பித்து அ.முத்துலிங்கம், சோபாசக்தி, அனோஜன் பாலகிருஷ்ணன் வரைக்கும் ஒரு மரபு அங்கே இருக்கு. ஆனால் இன்றைக்கு வரைக்கும் அங்கு ஒரு விமர்சன வரிசை உருவாக்கப்படவில்லை. யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்றிருக்குதில்லே.. . ஒரு பட்டியல் இருக்கு . அந்தப்பட்டியல் ரொம்பப் பிரமாண்டமாயிருக்கும் " இவ்விதம் குறிப்பிடும் ஜெயமோகன் தான் காலம் இதழில் இலங்கைக் கவிஞர்களைப்பற்றி எழுதுகையில் , குறிப்பிட்டிருந்த சில கவிஞர்களைப் பட்டியலிட்டிருந்ததாகவும், அதற்கு எதிர்வினையாற்றிய எழுத்தாளர் மு.பொன்னமப்பலம் எழுதிய கடிதத்தில் சுமார் 200 கவிஞர்களுக்கும் அதிகமானவர்களைப் பட்டியலிட்டதாகவும் குறிப்பிட்டார். அது பற்றி மேலும் குறிப்பிடுகையில் தான் அக்கடிதத்துக்கு அளித்த பதிலில் அவ்விதம் 200ற்கும் அதிகமான சிறந்த கவிஞர்கள் இருப்பின் அதற்கான தேவை அங்கில்லை. அவர்களைப் பூச்சி மருந்து கொடுத்து அழிக்கத்தான் வேண்டும் என்று கூறியதாகவும் கூறினார். மேலும் தொடர்கையில் 'ஒரு நகரத்தில் இருநூறுக்கும் அதிகமான கவிஞர்கள் அலைந்தால் நாட்டின் சட்ட ஒழுங்கு என்னாவது? மகளிரின் கற்புக்கு என்ன பாதுகாப்பிருக்கு?' என்றும் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

இக்கூற்று யாவரும், வல்லினம் இணைந்து நடத்திய மூன்று நூல்கள் அறிமுக விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆற்றிய உரையிலுள்ளது.

இவ்வுரையினை முறையாக உள் வாங்கி , அதனை ஏற்கவில்லையென்றால் ஏன் ஏற்கவில்லையென்று தர்க்கரீதியாக எதிர்வினையாற்றுவதற்குப்பதில் '200ற்கும் அதிகமான சிறந்த கவிஞர்கள் இருப்பின் அதற்கான தேவை அங்கில்லை. அவர்களைப் பூச்சி மருந்து கொடுத்து அழிக்கத்தான் வேண்டும்' என்று கூறியதைத் தூக்கிப்பிடித்துத் துள்ளிக் குதிக்கின்றார்கள். உண்மையில் இக்கூற்றினை அப்படியே விளங்கிக்கொள்ளக் கூடாது. பொதுவாக நாம் பேச்சு வழக்கில் 'இதற்குப் பதில் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துப்போகலாம்' என்போம். அதற்காக அதனை அப்படியே உண்மையில் நாக்கைப்பிடுங்கிக்கொண்டு செத்துப்போக வேண்டுமென்று கூறுவதாக நாம் அர்த்தப்படுத்தக் கூடாது. ஆனால் ஜெயமோகன் கூறியதைப்போல் 'பூச்சி மருந்து கொடுத்து அழிக்கத்தான் வேண்டும்' என்பதுபோன்ற சொற்பதங்களை யாரும் பாவிப்பதில்லை. அதுவும் அழிக்க வேண்டும் என்று யாரும் கூறுவதில்லை. 200 கவிஞர்கள் ஊரில் இருக்கிறார்கள் என்ற செய்தியைக் கேட்பதற்குப்பதில் கிருமிநாசினி குடித்து விடலாம் என்று ஜெயமோகன் கூறியிருந்தால் அதனைக் கேட்டு யாரும் கொதித்திருக்க மாட்டார்கள். ஜெயமோகனின் தாய்மொழி மலையாளம் என்பதால் அங்கு இவ்விதம் கூறுபவர்களைக் கிருமி நாசினி கொண்டு அழிக்க வேண்டும் என்று கூறுவதுபோன்ற வார்த்தைப்பிரயோகங்கள் பாவிக்கப்படுகின்றனவா, வழக்கிலுள்ளனவா என்பதை முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதனால்தான் ஜெயமோகனும் இவ்விதம் கூறினாரா என்பதும் தெரியவில்லை. மேலும் எதற்காக ஜெயமோகன் அடுத்து 'ஒரு நகரத்தில் இருநூறுக்கும் அதிகமான கவிஞர்கள் அலைந்தால் நாட்டின் சட்ட ஒழுங்கு என்னாவது? மகளிரின் கற்புக்கு என்ன பாதுகாப்பிருக்கு' என்று கூறினாரோ தெரியவில்லை. ஜெயமோகனுக்குக் கவிஞர்கள் மேல் அப்படியென்ன கோபமோ? மேலும் கற்பு என்னும் சொற்பதம் பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் , அச்சொல்லுக்குப்பதில் 'பாலியல் வன்முறை' என்னும் சொல் பாவிக்கப்படும் இக்காலகட்டத்தில் இன்னும் எதற்காக ஜெமோ அச்சொல்லில் தொங்கிக்கொண்டிருக்கின்றார்?
•Last Updated on ••Monday•, 04 •February• 2019 03:05•• •Read more...•
 

கனடாத் தமிழர்தம் வரலாறும் , ஆனந்தன் கிருஷ்ணப்பிள்ளையின் அனுபவமும்!

•E-mail• •Print• •PDF•

ஆனந்தன் கிருஷ்ணபிள்ளைஎனது 'அஞ்சலி: மறக்க முடியாத 'ராஜு அங்கிள்' (1946 -2019)' பதிவினைப்பார்த்துவிட்டு நண்பர் ஆனந்தன் கிருஷ்ணப்பிள்ளை (Ananthan Krishnapillai) என்னைத்தொலைபேசி மூலம் அழைத்து தனது ராஜு அங்கிள் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். ஆனந்தன் பகிர்ந்து கொண்ட எண்ணப்பதிவுகள் முக்கியமாவையாகப் படுவதால் அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

ஆனந்தன் அவர்கள் நாமெல்லாரும் இங்கு வருவதற்கு முன்பே வந்தவர். ஐரோப்பாவிலிருந்து வந்தவர் சட்டவிரோதமாக நாட்டினுள் நுழைந்த குற்றத்துக்காக, நாடு கடத்தப்படுவதற்காக, நாடு கடத்தும் பத்திரங்களிலும் அவரது கையெழுத்தைப்பெற்ற பின்னர் அவரைத் தடுப்பு முகாமில் தடுதது வைத்திருந்தார்கள். ராஜு அங்கிளின் மூத்த அண்ணர் ராமநாதன் முத்துச்சாமிப்பிள்ளையின் மனைவியார் அக்காலகட்டத்தில் யாழ் பொது வைத்தியசாலையில் 'மேற்ரன்' ஆகப்பணியாற்றிக்கொண்டிருந்தார். அங்குதான் ஆனந்தன் அவர்களின் அன்னையாரும் நீண்ட காலமாகப்பணியாற்றிக்கொண்டிருந்தார். தனது தாயாரிடம் தனது இக்கட்டான நிலையினைக் கூறியிருக்கின்றார் ஆனந்தன். பதிலுக்கு அவரது தாயார் 'மேற்ரனா'கப் பணிபுரிந்து கொண்டிருந்த ராஜு அங்கிளின் அண்ணியாரிடம் விடயத்தைக் கூறியிருக்கின்றார். மூத்த அண்ணர் உடனடியாகவே கனடாவிலுள்ள ராஜு அங்கிளுடன் தொடர்புகொண்டு நிலைமையை எடுத்துக்கூறியுள்ளார்.

•Last Updated on ••Sunday•, 03 •February• 2019 00:16•• •Read more...•
 

அஞ்சலி: மறக்க முடியாத 'ராஜு அங்கிள்' (1946 -2019)

•E-mail• •Print• •PDF•

Rajanathan Muthusamipillaiஅண்மைக்காலமாக நோயுற்றிருந்த 'ராஜு அங்கிள்' (ராஜநாதன் முத்துச்சாமிப்பிள்ளை) நேற்று அதிகாலை (30.01.2019) மறைந்தார். என் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திய ஆளுமைகளில் இவருக்குமோரிடமுண்டு. இவர் அம்மாவின் பிரியத்துக்குரிய கடைசி செல்லத்தம்பி.  எம் பால்ய காலத்தில் எமக்கு மகிழ்ச்சியளித்த ஆளுமைகளிலொருவராக விளங்கிய இவர், அக்காலகட்டத்தில் என் வாசிப்பனுவத்தைத் தூண்டுவதிலும் பங்களித்துள்ளார்.  உடல்நிலை படிப்படியாகச் சீர்குலைந்து , உறுப்புகளொவ்வொன்று ஒவ்வொன்றாகச் செயலிழந்து , இருப்பின் முடிவினை அண்மித்த நிலையிலும் நிலைகுலையாது , தன் உடல் வேதனையெதனையும் வெளிப்படுத்தாது , வழக்கம்போல் அனைவருடனும், சிரித்த முகத்துடன்  உரையாடிக்கொண்டிருந்த இவரது உள உறுதிமிக்க ஆளுமை என்னை மிகவும் கவர்ந்தது.  இறுதியில் நோயுற்று உடல் தளர்ந்தாலும் , முழுமையான , திருப்திகரமானதொரு வாழ்க்கை வாழ்ந்து முடித்திருக்கின்றார் என்னும் உணர்வே எனக்கு ஏற்படுகின்றது. அண்மையில் கூட  இவரைப்பற்றிய  பதிவொன்றினை 'மறக்க முடியாத ஆளுமை ராஜு அங்கிள்' என்னும் தலைப்பிலிட்டிருந்தேன். அதில் இவருடனான என் பால்ய காலத்து அனுபவங்களைக் குறிப்பாக வாசிப்பனுவங்களை விபரித்திருந்தேன். இவர் எவ்வகையில் என் பால்ய  காலத்து வாசிப்பனுவங்களுக்கு  உதவிருக்கின்றார் என்பதையும் அப்பதிவில் விபரித்திருந்தேன். அதனை அவர் நினைவாக மீண்டுமிங்கே பதிவிடுகின்றேன்.


பார்வைக்கு: 2 Feb., 2019 Saturday 4 PM - 8 PM @ OGDEN Funeral Home, 4164 Sheppard Avenue East, Scarborough, Ontario M1S 1T3
இறுதிக்கிரியை: 3 Feb. 2019 9AM - 11AM @ OGDEN Funeral Home, 4164 Sheppard Avenue East, Scarborough, Ontario M1S 1T3
தகனம்: 3 Feb., 2019 12 PM. @ St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7


மறக்க முடியாத ஆளுமை 'ராஜு அங்கிள்'

என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களைப்பற்றி எண்ணியதும் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக என் நினைவில் நிற்பவர் 'ராஜு அங்கிள்' என்றழைக்கப்படும் ராஜநாதன் முத்துச்சாமிப்பிள்ளை. இவர் என் அம்மாவின் கடைக்குட்டித்தம்பி.  அவருக்கும் அம்மாவுக்குமிடையில்  பதினெட்டு வயது வித்தியாசம். ஆச்சி பதின்ம வயதிலிருந்தே இல்லறபந்தத்தில் தன்னைப்பிணைத்துக்கொண்டவர். அதன் விளைவு இவ்வயது வித்தியாசம். அம்மா இவரைத் தன் தம்பி என்று பார்த்ததை விடத் தனது இன்னுமொரு மகன் போன்றே எப்பொழுதும் கருதி வந்தாரென்று நான் உணர்வதுண்டு. அம்மாவின் இளமைக்காலப்புகைப்படமொன்றில் அம்மாவுடன் காற்,சட்டையுடன் இவரிருந்த புகைப்படமொன்றினைப் பார்க்கும் எவரும் அவ்விதமே கருதுவர். இவர் அம்மாவுக்கு  மட்டுமின்றி அம்மம்மா, அம்மாவின் ஏனைய சகோதர, சகோதரிகள், அம்மப்பா யாவருக்குமே செல்லப்பிள்ளைதான். குறிப்பாக அம்மப்பாவின் மிகுந்த பிரியத்துக்குரிய கடைக்குட்டி பையனாக இருந்ததால், அவருடன் எப்பொழுதும் அவரது 'நாஷ்' காரில் இவர் திரிவார். சில சமயங்களில் அதில் நண்பர்களுடன் நகரை வலம் வருவதுண்டு. அம்மாவின் இன்னுமொரு தங்கையின் திருமணத்தின் போது அக்காரில் யாழ்நகரில் எங்களையெல்லாம் ஏற்றி விரைவாக ஓட்டிச்சென்றது இன்னும் ஞாபகத்திலுள்ளது. அம்மப்பாவின் இறுதிக்காலத்திலும் கூட எந்நேரமும் அவருடன் அவரது மரணம் வரையில் ஆஸ்பத்திரியில் இருந்தவர் இவர். அம்மா எவ்விதம் இவரைத் தம்பி போன்று கருதாமல், மகன் போன்று கருதினாரோ அவ்வாறே நாங்களும் இவரை மாமா முறையென்றாலும் கூட அவ்வாறு கருதுவதில்லை; எங்களது நண்பர்களிலொருவரைப்போன்றுதான், மூத்த அண்ணர்களிலொருவரைப்போன்றுதான் கருதினோம்; பழகி வந்தோம். அவரும் எங்களுடன் அவ்விதமே மிகவும் இயல்பாகப் பழகி வந்தார்; வருகின்றார்.

•Last Updated on ••Thursday•, 07 •February• 2019 16:37•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 323: (தாய்வீடு கனடா) எஸ்.கே.வி பார்வையில் 'குடிவரவாளன்'

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 323: (தாய்வீடு   கனடா) எஸ்.கே.வி பார்வையில் 'குடிவரவாளன்'சிறுகதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல் பிரிவுகளிலும் தன் பன்முக ஆளுமையைப் பதித்து வரும் எழுத்தாளர் எஸ்.கே,.விக்னேஸ்வரன் ஜனவரி 2019 'தாய்வீடு' பத்திரிகையில்  'பூவுலகின் ஓசைகள்' என்னுமொரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் வாசித்த நூல்களில் பத்து நூல்களைத் தேர்ந்தெடுத்து அவை பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவர் தேர்ந்தெடுத்த பத்து நூல்களின் விபரங்கள் வருமாறு:

1.  Beween Parenst and Child  by Heim G.Ginott
2. Black Boy by  Richard Wright
3. The Glass Palace by Amitav Ghosh
4.  மாதொருபாகன் (நாவல்) - பெருமாள் முருகன்
5. குடிவரவாளன் (நாவல்) - வ.ந.கிரிதரன்
6. நிலவளம் (நாவல்)  - க.நா.சுப்பிரமணியம் (The Growth of the Soil by Knut Hamsun என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு)
7. அன்புவழி (நாவல்)  - க.நா.சுப்பிரமணியம் Barabbas by  Par Lagerkvist என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு)
8. கதை - பார்த்திபன் (சிறுகதைத்தொகுப்பு)
9.  ஏழு கடற்கன்னிகள் - தமயந்தி (சிறுகதைகள்)
10. உம்மத் (நாவல்) - ஸர்மிளா ஸெய்யத்

இவற்றில் அவர் என் நாவலான 'குடிவரவாளன்' பற்றி எழுதிய குறிப்புகளை ஒரு தகவலுக்காக இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

குடிவரவாளன்:
"குடிவரவாளன் நாவல் அதன் கதை சொல்லி ஒரு ஈழத்து அகதி. நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவின் நியூயோர்க் மாநகரில் ஒரு சட்டவிரோதக் குடிவரவாளனாக எவ்விதம் தனது இருப்பினைத் தக்க வைப்பதற்காகப் போராடுகின்றான் என்தை விவரிக்கும் ஒரு படைப்பு.  எழுத்தாளர் வ.ந.கிரிதரன் அவர்கள் தனது  புலம்பெயர்வு அனுபவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய இரண்டாவது நாவல் இது.  புலம்பெயர் சூழலில்  நாவல் வடிவில்  இந்த விடயம் சார்ந்து ஈழத்தமிழ் படைப்பாளர்கள் மத்தியிலிருந்து வெளிவந்த எழுத்து இவரதே என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது என்று கருதுகிறேன்.

•Last Updated on ••Tuesday•, 15 •January• 2019 01:49•• •Read more...•
 

"பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்"

•E-mail• •Print• •PDF•

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்நாளில் பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும் என்றும் வாழ்த்துவார்கள். இனிய பொங்கல் நன்னாளில் நாமும் 'பதிவுகள்' வாசகர்களுக்கும், அவர்கள்தம் குடும்பத்தவர்களுக்கும் அவர்கள்தம் வாழ்வில் மங்கலம் பொங்கிட வாழ்த்துகின்றோம்.  நினைவு தெரிந்த நாள் முதலாக இத்தினம் தமிழர் திருநாளாகத்தான் கொண்டாடப்பட்டு வருகின்றது. வழக்கிலுள்ள சொற்களை உள்வாங்குவது இலக்கணம். அதுபோல் வழக்கிலுள்ள இது போன்ற நிகழ்வுகளை உள்வாங்குவது எம் மரபு.  இத்தினத்தைத் தமிழர்தம் திருநாளாகவே கருதுகின்றோம். அவ்விதமே தெரிந்த நாளிலிருந்து கொண்டாடி வந்தோம்; வ்ருகின்றோம்; வருவோம்.

தமிழர்தம் திருநாள்களில் மிகவும் பிடித்த திருநாளாக இதனையே கூறலாம். இதற்குக் காரணம் இந்நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள். கதிரவன் ஒளியும், உழவர்களும் இல்லாவிட்டால் இவ்வுலகில் எவையுமே நடைபெறாது. அதற்காக அவர்களுக்கு நன்றி கூறுவதுதான் இத்தினத்தின் சிறப்பு. அது மட்டுமல்ல உழவர்களுக்கு உறுதுணையாக விளங்கிய எருதினையும் நன்றியுடன் நினைவு கூர்வதற்காகக் கொண்டாடப்படுவதுதான் 'மாட்டுப்பொங்கல்'.

•Last Updated on ••Monday•, 14 •January• 2019 00:36•• •Read more...•
 

ஜனவரி 10, 1974 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுகள்.....

•E-mail• •Print• •PDF•

ஜனவரி 10, 1974 - லகத் தமிழாராய்ச்சி நினைவுகள்.....ஜனவரி 10, 1974 - இலங்கைத்தமிழர்கள் மத்தியில் மறக்க முடியாத நாள்களிலொன்று. அன்றுதான் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி தினம். யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் முன் இறுதி நாள் கூட்டத்தின்போது அமர்ந்திருந்த கூட்டத்தைப் பொலிசார் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை ஏவிக் கலைத்த தினம். அவர்கள் மின்சாரக் கம்பிகளைச் சுட்டு, அக்கம்பிகள் பட்டு, தப்பியோடிக்கொண்டிருந்தவர்களில் ஒன்பதுபேர் மரணமான தினம். அன்றைய நிகழ்வில் நானும் மாணவனாகக் கலந்துகொண்டிருந்தேன்.

இன்னும் அக்கலவரச்சூழல் என் கண்கள் முன்னால் காட்சி தருகின்றது. நான் மாநாட்டுக் கொடி கட்டப்பட்டிருந்த என் ரலி சைக்கிளுடன் முற்றவெளியில், யாழ் கோட்டையின் அகழிச்சுவருக்கருகில் நின்று கூட்ட உரைகளைக்கேட்டுக்கொண்டிருந்தேன். மேடையில் திருச்சி நைனார் முகம்மது என்று நினைக்கின்றேன் உரையாடிக்கொண்டிருந்தார். என் அருகில் என் எட்டாம் வகுப்பு யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியரான மகேந்திரன் (முன்னாள் மேயர் ராஜா விசுவநாதனின் தம்பி) சைக்கிளுடன் உரை கேட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது. கூட்டம் நடந்தபோது வீதியையும் மறைத்துக்கொண்டு மக்கள் அமர்ந்திருந்தார்கள். பொலிசார் வந்து வீதியை மறைத்து அமர்ந்திருந்த மக்களைத் தடியடி கொண்டு கலைத்தார்கள். பதிலுக்கு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் மக்கள் தம் காலணிகளை அவர்கள் மேல் எறிந்து தாக்கினார்கள். பொலிசார் பின் வாங்கினார்கள். விரைவில் மீண்டு வந்தார்கள். மக்கள் மேல் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் தாக்கினார்கள். மக்கள் யாரும் கதறி அழுததாகத் தெரியவில்லை. எல்லோரும் ஓடித்தப்பவே முயன்றார்கள். எல்லோரும் ஆத்திரத்துடன் கூடிய பயத்துடனேயே காணப்பட்டார்கள்.

என் வாழ்நாளில் கண்ணீர்ப்புகைக்குண்டுகளைப்பற்றி அறிந்திராத நான் பொலிசார் துப்பாக்கிக் குண்டுகளால் சுடுவதாகவே அச்சமயத்தில் நினைத்தேன். என் அருகிலும் குண்டொன்று வந்து விழுந்து புகையைக் கக்கியது. கண்கள் எரிய சைக்கிளையும் விட்டுவிட்டு ஓட முயன்றேன். கூட்டத்திலொருவர் அருகிலிருந்தவர் ' குப்புறப்படுங்கள். குப்புறப்படுங்கள். சுடுகிறான்கள் ' என்று கத்தியதும் நினைவிலுள்ளது. சிலர் நிலத்துடன் நிலம் படுத்தார்கள். நானும் அவ்விதம் படுத்தேன். கண்களின் எரிவு சிறிது நீங்கியதும் எழுந்தேன்.

•Last Updated on ••Monday•, 14 •January• 2019 23:52•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 322: 'மகுடம்' பதிப்பக வெளியீடாக 'அமெரிக்கா'; எஸ்.பொ.வின் 'நனவிடை தோய்தலும்' மகாகவி பாரதியும்!; The Good, The Bad And The Ugly;காலத்தால் அழியாத கானங்கள்: ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்! நீயொரு தனிப்பிறவி!

•E-mail• •Print• •PDF•

'தாயகம் (கனடா)' தொடராக 'அமெரிக்கா''மகுடம்' பதிப்பக வெளியீடாக 'அமெரிக்கா'

83 இனக்கலவரத்தைத்தொடர்ந்து நாட்டை விட்டுக் கனடா நோக்கிப்புறப்பட்டபோது வழியில் அமெரிக்காவில் தடுத்து நிறுத்தப்பட்டுத் தஞ்சம் கேட்டு , நியூயார்க் பெரும்பாகத்திலுள்ள புரூக்லீன் நகரத்துத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட அனுபவங்களைப் பதிவு செய்யும் பொருட்டு எழுதிய நாவலான 'அமெரிக்கா' 'தாயகம்' (கனடா) பத்திரிகையில் வெளியானது. ஏற்கனவே தொகுப்பு நூலாகத் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளிவந்தது.

அளவில் சிறிய நாவலானாலும் 'அமெரிக்கா' தனி நூலாக வெளிவரவேண்டுமென்று நீண்ட நாள்களாக விரும்பியிருந்தேன். தற்போது அதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. திருத்தப்பட்ட பதிப்பாக இந்நாவல் விரைவில் இலங்கையில் 'மகுடம்' பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஏற்கனவே எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல் எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்தவினால் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 'அஹஸ மீடியா வேர்க்ஸ்' பதிப்பக வெளியீடாக வெளிவந்தது தெரிந்ததே. தற்போது 'அமெரிக்கா' நாவலும் இலங்கையில் வெளிவரவுள்ளது மகிழ்ச்சியினைத் தருகின்றது.


எஸ்.பொ.வின் 'நனவிடை தோய்தலும்' மகாகவி பாரதியும்!

நீண்ட நாட்களாக நனவிடை தோய்தல் எஸ்.பொ. அவர்கள் உருவாக்கிய சொல்லென்று எண்ணியிருந்தேன். ஆனால் பின்னர்தான் தெரிந்தது அது மகாகவி பாரதியார் தன் சுயசரிதையில் பாவித்த சொல்லென்று. தனது சுயசரிதையில் தனது பிள்ளைக்காதல் பற்றிக் கூறுகையில் 'அன்ன போழ்தினி லுற்ற கனவினை அந்த மிழ்ச்சொலி லெவ்வணஞ் சொல்லுகேன்? சொன்ன தீங்கன வங்கு துயிலிடைத் தோய்ந்த தன்று, நனவிடை தோய்ந்ததால்..' என்று மகாகவி பாரதியார் அச்சொல்லை ஏற்கனவே பாவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளை வைத்து எத்தனை எழுத்தாளர்கள் புனைகதைகளை, அபுனைவுகளை எழுதியிருக்கின்றார்கள். 'தீக்குள் விரலை வைத்தால்' (கே.எஸ்.ஆனந்தன்), 'பேசும் பொற் சித்திரமே', 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' (சேவற்கொடியோன்), 'தீராத விளையாட்டு' (கு.அழகிரிசாமி), 'வெந்து தணிந்தது காடு' (இந்திரா பார்த்தசாரதி), 'மண்ணில் தெரியுது வானம்' (ந.சிதம்பர சுப்பிரமணியன்) .. இவ்விதம் பலர் தம் நாவல்களுக்கு பாரதியாரின் கவிதை வரிகளைத் தலைப்புகளாக்கியுள்ளார்கள். அவ்வகையில் எஸ்.பொ. அவர்கள் தன் அபுனைவு நூலுக்கு 'நனவிடை தோய்தல்' என்னும் பெயரை வைத்துள்ளார்.

•Last Updated on ••Thursday•, 10 •January• 2019 07:33•• •Read more...•
 

தொடர் நாவல் (1): பேய்த்தேர்!

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் ஓன்று: சுடர் தேடுமொரு துருவத்துப் பரதேசி!

தொடர் நாவல் (1): பேய்த்தேர்! - வ.ந.கிரிதரன் -ஒரு பெளர்ணமி நள்ளிரவில் 'டொராண்டொ'வில் வசிக்கும் புகலிடம் தேடிக் கனடாவில் நிலைத்துவிட்ட இலங்கை அகதியான கேசவனின் சிந்தையிலோர் எண்ணம் உதித்தது. வயது நாற்பதைக் கடந்து விட்டிருந்த நிலையிலும் அவன் எவ்விதப்பந்தங்களிலும் தன்னைப் பிணைத்துக்கொள்ளாமல் தனித்தே வாழ்ந்து வருகின்றான். இந்நிலையில் அவன் சிந்தையில் உதித்த அவ்வெண்ணம் தான் என்ன? 'நெஸ்கபே' ஒரு கப் கலந்துகொண்டு , தான் வசிக்கும் தொடர்மாடியின் பல்கணிக்கு வந்து, அங்கிருந்த கதிரையிலமர்ந்தான். எதிரே விரிந்து கிடந்த வானை நோக்கினான். சிந்தனைகள் ஒவ்வொன்றாகத் தோன்றி மறையத்தொடங்கின. மீண்டும் அவன் சிந்தையில் அவ்வெண்ணம் தோன்றி மறைந்தது. தான் யார்? என்று மனம் சிந்தித்தது. அதுவரை காலத் தன் வாழ்வைச் சிறிது சிந்தித்துப்பார்த்தது மனம். பால்ய பருவம், பதின்மப் பருவம், இளைமைப்பருவம், புகலிடப்பயணம் என பல்வேறு பருவங்களைப்பற்றி மனத்தில் அசை போட்டான். 'காலம் எவ்வளவு விரைவாக ஓடி விட்டது.' எனறொரு எண்ணம் தோன்றி மறைந்தது. தன் எண்ணங்களை, இதுவரை காலத்தன் வாழ்க்கையினை எழுத்தில் பதிவு செய்தாலென்ன  என்றொரு எண்ணமும் கூடவே தோன்றியது. இவ்வெண்ணம் தோன்றியதும்  சிறிது சோர்ந்திருந்த நெஞ்சினில் உவகைக் குமிழிகள் முகிழ்த்தன. அதுவரை காலமுமான தன் வாழ்பனுவங்களை ஆவணப்படுத்துவதன் அவசியம் பற்றிச் சிந்தித்தான். அதுவே சரியாகவும் தோன்றியது.    அது அவனுக்கு ஒருவித உற்சாகத்தினைத் தந்தது. அதன் மூலம் அவனது எழுத்தாற்றலையும் செழுமைப்படுத்த முடியுமென்றும் எண்ணமொன்று தோன்றி மறைந்தது. எதிர்காலத்தில் அவன் தானோர் எழுத்தாளனாக வரவேண்டுமென்று விரும்பினான். இவ்விதம் தன் வாழ்க்கை அனுபவங்களை எழுதுவதன் மூலம் தன் எழுத்தாற்றலைச் செழுமைப்படுத்தலாமென்றெண்ணினான். அதுவே எழுத்தாளனாவதற்குத் தான் இடும் அத்திவாரமுமாகவுமிருக்கக்கூடுமென்றும் எண்ணினான்.

அவனுக்கு அவன் அதுவரையில் வாசித்த சுயசரிதைகள், புனைவுகள் பல நினைவுக்கு வந்தன. கவிதையில் எழுதப்பட்டிருந்த பாரதியாரின் சுயசரிதை அனைத்துக்கும் முன்வந்து நின்றது. அவனுக்குப் பிடித்த சுயசரிதையும் கூட.  எப்பொழுது மனம் அமைதியிழந்து அலைபாய்ந்தாலும் அச்சுயசரிதையை எடுத்து வாசித்துப்பார்ப்பான். அலை பாயும் மனம் அடங்கி அமைதியிலாழ்ந்து விடும். அச்சுயசரிதை நீண்டதொரு சுயசரிதையல்ல. ஆனால் அதற்குள் அவன் தன் வாழ்க்கையின் முக்கிய பகுதிகளை,  முதற்காதல், மணவாழ்க்கை, குடும்பத்தின் பொருளியல் நிலை மாற்றங்கள், இருப்பு பற்றிய அவனது கேள்விகள் அனைத்தையும் உள்ளடக்கியிருந்தான்.

பட்டினத்துப்பிள்ளையின் 'பொய்யாயொ பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்னும் வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு தொடங்கும் சுயசரிதையின் ஆரம்பத்தில் 'வாழ்வு முற்றுங் கனவெனக் கூறிய , மறைவ லோர்த முரைபிழை யன்றுகாண்' என்று கூறியிருப்பான். தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் எல்லாம் சரதம் (உண்மை) அல்ல என்பதையும் அறிந்திருந்தான். இம்மானுட வாழ்க்கை கனவுதான் ஆனால் இவ்விருப்பு மாயை அல்ல. மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன் என்கின்றான். ஆனால் அனைத்துக்கும் அடிப்படையான இப்பிரம்மத்தின் இயல்பினை  ஆய நல்லருள் பெற்றிலன் என்கின்றான். 'தன்னுடை அறிவினுக்குப் புலப்படலின்றியே தேய மீதெவரோ சொலுஞ் சொல்லினைச் செம்மையென்று மனத்திடைக் கொள்வதாம் தீய பக்தியியற்கையும் வாய்ந்திலேன்' என்னும் மனத்தெளிவு மிக்கவனாகவுமிருக்கின்றான் அவன்.

•Last Updated on ••Sunday•, 06 •January• 2019 21:21•• •Read more...•
 

அனைவருக்கும் இனிய மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

•E-mail• •Print• •PDF•

அனைவருக்கும் இனிய மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள். இந்நாளில் என் அபிமானக் கவி பாரதியின் கவிதை வரிகளை நினைவு கூருகிறேன். மாகவி தான் வாழ்ந்த சமுதாயத்தை பற்றிச் சிந்தித்தான். தான் வாழ்ந்த நாட்டைப்பற்றிச் சிந்தித்தான். தான் வாழ்ந்த உலகைப்பற்றிச் சிந்தித்தான். இவ்வுலகை உள்ளடக்கிய இப்பிரபஞ்சத்தைப்பற்றிச் சிந்தித்தான். பிரபஞ்சப்பிரக்ஞையுடன் அவன் இம்மானுடர் பிரச்சினைகளை, துயரங்களை அணுகினான். அவ்விதம் அணுகியதால்தான் அவன் மொழி வெறியனாகவோ, மத வெறியனாகவோ எப்பொழுதும் இருந்ததில்லை. மிகவும் தெளிவாக அவனால் சகல பிரச்சினைகளையும் அணுக முடிந்தது; சிந்திக்க முடிந்தது. தமிழ்  மொழியின் தொன்மையினை, இலக்கியச் சிறப்பினை உணர்ந்திருந்த பாரதி அதனால்தான் தமிழ் மொழியின் சிறப்பினைப்பாடினான். அந்நியருக்கெதிரான இந்திய தேசிய விடுதலையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த அவன் என்றுமே தேசிய வெறியனாக இருந்தானல்லன். இவ்விதமான தெளிவு காரணமாகத்தான் அவனால் மானுட விடுதலையைப்பற்றியும் மிகவும் தெளிவாகப்பாட முடிந்தது; எழுத முடிந்தது.

இந்நாளில் நாமுமொரு உறுதியெடுப்போம். நாம் நமது  மக்களின் உடனடிப்பிரச்சினையான சமுதாய, அரசியற் மற்றும் பொருளாதாரப்பிரச்சினைகளை அணுகும்போது பிரபஞ்சப்பிரக்ஞையுடன் எம் பிரச்சினைகள் அணுகுவோம். அவ்விதம் அணுகினால் நாம் மொழி வெறியர்களாகவோ, இன , மத வெறியர்களாகவோ இருக்க மாட்டோம். இம்மானுடரை, இம்மண்ணை, பிறந்த மண்ணை, இங்கு வாழும் சகல உயிரினங்களை, இவ்வுலகை, இப்பிரபஞ்சத்தை, இதற்கு இணையாக இருக்கும் சாத்தியம் மிக்க ஏனைய  பிரபஞ்சங்களைப் பற்றியெல்லாம் தெளிவுடன் இருப்போம். இருக்கும் பிரச்சினைகளையும் விரைவாக அணுகித் தீர்த்திட முயற்சி செய்வோம்.

•Last Updated on ••Monday•, 31 •December• 2018 23:05•• •Read more...•
 

வாசிப்பும் , யோசிப்பும் 321 : எழுத்தாளர் திக்குவல்லை கமாலின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' பற்றிய வீரகேசரி மதிப்புரை!

•E-mail• •Print• •PDF•

அண்மையில் சிங்கள மொழிக்கு எழுத்தாளர் ஜி.ஜி.சரத் அனந்த அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட எனது ஆய்வு நூலான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' பற்றிய நூல் மதிப்புரையொன்றினை 29.12.2018 வெளியான வீரகேசரியில் எழுதியுள்ளார் எழுத்தாளர் திக்குவல்லை கமால். அவருக்கு என் நன்றி. இம்மதிப்புரையினை ஜி.ஜி.சரத் ஆனந்த அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்தார். அவருக்கும் நன்றி. இந்நூலினை வெளியிடுவதற்கான அஹஸ மீடியா வேர்க்ஸ் பதிப்பகத்தினைக் கண்டு பிடித்த எழுத்தாளர் காத்யான அமரசிங்க அவர்களுக்கும் நன்றி.

•Last Updated on ••Monday•, 31 •December• 2018 01:21••
 

வாசிப்பும், யோசிப்பும் 321: இலக்கணமும், ஜெயமோகனும்! நான் இரசித்த புனைவுக் காட்சியொன்று!

•E-mail• •Print• •PDF•

அண்மையில்  எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பதிவில் கண்ட கேள்வி பதிலொன்று என் கவனத்தைக் கவர்ந்தது.  கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் இலக்கணம் பற்றியும், அவ்வப்போது இலக்கணம் மீறப்படுவது பற்றியும், பின்னர் இவ்விதம் மீறப்பட்டவற்றை இலக்கணம் உள் வாங்குவதும் பற்றிய தன் எண்ணங்களை ஜெயமோகன் மிகவும் எளிமையாக ஆனால் தர்க்கச்சிறப்புடன் எடுத்துரைத்திருக்கின்றார. அதனை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.


கேள்வி பதில் – 60  
இலக்கணத்தை மீறி இலக்கியம் படைப்பது சரி என்றால் பழங்காலங்களிலும் இன்றைய காலத்திலும் இலக்கணம் மீறாமல் படைக்கப்பட்ட அழியா இலக்கியங்களை எந்தக் கணக்கில் சேர்க்கலாம்? -  கேவிஆர். -

ஜெயமோகன்ஜெயமோகனின் பதில்: "ஏற்கனவே இதை ஓரளவு விளக்கிவிட்டேன். ஒன்று இலக்கணம் என்பது மாறாத விதிமுறைகளின் தொகையாக என்றுமே இருந்தது இல்லை. அப்படிச்சொல்பவர்களுக்கு இலக்கிய வரலாறு தெரியாது. இலக்கணத்தை மாற்றும் சக்தி எது? இலக்கிய ஆக்கத்தில் உள்ள புதுமைநாட்ட வேகமேயாகும். அதையே ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என நம் இலக்கணம் வரையறை செய்தது. பண்டைய படைப்புகளைப் பற்றி நாம் ஊகங்களால்தான் விவாதிக்க இயலும். தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் சாதாரணமாக ஒப்பிட்டால்கூட தொல்காப்பிய இலக்கணங்களை சங்கப்பாடல்கள் ஒரு பொருட்டாகவே கொண்டிருப்பனவல்ல என்பதையும் சொல்லப்போனால் ஆரம்பகால சங்கப்பாடல்களை ஒட்டியே தொல்காப்பியம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியும். தொல்காப்பியம் கண்டிப்பாக நற்றிணை குறுந்தொகை புறநாநூற்றுப் பாடல்களின் காலத்துக்குப் பிற்பட்டது. உதாரணமாக சங்கப்பாடல்களில் தொல்காப்பியத்தில் உள்ள ஒட்டகம் பற்றிய குறிப்பு இல்லை. தொல்காப்பியத்தைவிட சங்கப்பாடல்களில் வடமொழிச்சொற்கள் மிகக் குறைவு. மேலும் பிறப்பு அடிப்படையினாலான சமூகப் பிரிவினை சங்க காலத்தில் வலுவாக இருந்தது என்றாலும் இழிசினர் என ஒருவகை மக்களை வகுத்த முதல் மூலநூல் தொல்காப்பியமே. பேராசிரியர் ஜேசுதாசன் இதை மிக விரிவாகவே விளக்குவதுண்டு. கைக்கிளையும் பெருந்திணையும் [ஒருதலைக் காமம், பொருந்தாக் காமம்] இழிசினருக்கு [ஏவலர், வினைவலர்] உரியதென தொல்காப்பியர் வகுத்ததை சங்கப்பாடல்கள் ஏற்றிருந்தால் மாற்பித்தியாருக்கும் நக்கண்னையாருக்கும் எப்படி புறநாநூறில் இடம் வந்தது? கொல்லனும் குறவனும் எழுதிய நம் பெருமரபு எப்படி வினைவலனை இழிசினனாகக் கருதியிருக்க முடியும்?

சங்க இலக்கியங்களின் திணை, துறை பகுப்பு மட்டுமல்ல அகம், புறம் பகுப்புகூட மிகவும் ‘குத்துமதிப்பாகவே’ செய்யப்பட்டுள்லது. உதாரணமாக புறநாநூறில்வரும் மாற்பித்தியாரின் பாடல்களை மருதம் திணையில் குறுந்தொகையில் சேர்த்தால் என்ன இலக்கணப்பிழை வரும்? பல பாடல்கலை வரிகளை மட்டும்வைத்துப் பார்த்தால் திணை மாற்றத்தை எளிதாகச் செய்துவிடலாம். திணையை வகுத்த உடனேயே திணைமயக்கம் என்று ஒரு விதிமீறலை நம் மரபு அனுமதித்தது. இலக்கணத்தை வகுத்ததுமே ‘வழூஉ‘ என அதற்கு மாறானதையும் அங்கீகரித்தது. ‘பாட்டிடையிட்ட உரையுடைச் செய்யுளான’ சிலப்பதிகாரத்தின் வடிவம் அதற்கு முன் இல்லை. சிலப்பதிகாரமே அதை நம் மரபில் உருவாக்கியளித்தது. கம்பனின் சொற்புணர்ச்சி முறைகளின் பல்லாயிரக்கணக்கான புதியவழிகளை அதற்கு முந்தைய நூல்களில் காண முடியாது. ஒட்டக்கூத்தர் அதனாலேயே கம்பரைக் கவிஞராக ஏற்க மறுத்தார்.

•Last Updated on ••Thursday•, 27 •December• 2018 20:26•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 319: என்னைப் பாதித்த முதலிருபது நூற் பட்டியல்!

•E-mail• •Print• •PDF•

என்னைப் பாதித்த முதலிருபது நூற் பட்டியல்!

இதுவரை வாசித்த நூல்களில் என்னைப் பாதித்த முக்கியமான இருபது நூல்களை எண்ணிப்பார்த்தேன். அவற்றின் பட்டியல் இது. இன்னும் பல நூல்களுள்ளன. ஆனால் நினைத்தபொழுது முதலில் நினைவுக்கு வந்தவை இவை. என்னைக் கவர்ந்த வெகுசனப்படைப்புகள் பட்டியலும் விரைவில் வரும். அது போல் என்னைக் கவர்ந்த தமிழகப்படைப்புகள், ஈழத்துப் படைப்புகள், என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள், வெகுசன எழுத்தாளர்கள் பட்டியல்களும் வெளியாகும்

1. புத்துயிர்ப்பு - டால்ஸ்டாய்
2. Crime and Punishment - Dostoyefsky
3. பாரதியார் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்புகள்.
4. The Brothers Karamazov - Dostoyefsky
5. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை - மார்க்ஸ், எங்கெல்ஸ்
6. தாய் - மார்க்சிம் கோர்க்கி
7. The Metamorphosis - Franz Kafka
8. The old man and the Sea - Ernest Hemingway
9. வெற்றியின் இரகசியங்கள் - அ.ந.கந்தசாமி
10. Candide - Voltaire
11. காலம் - வாசுதேவன் நாயர்
12. ஒரு மனிதன்! ஒரு வீடு! ஒரு உலகம்! - ஜெயகாந்தன்
13. The Fabric of The Cosmos - Brian Greene
14. A brief History Of Time - Stephen Hawkings
15. Hyperspace -Michio Kaku
16. மோகமுள் - தி.ஜானகிராமன்
17. அன்னா கரீனினா - டால்ஸ்டாய்
18. ஏணிப்படிகள் - தகழி சிவசங்கரன்பிள்ளை
19. ஒரு கிராமத்தின் கதை - எஸ்.கே.பொற்றேகாட்
20. நீலகண்ட பறவையைத்தேடி.. - அதீன் பந்த்யோபாத்

•Last Updated on ••Sunday•, 23 •December• 2018 22:05•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 318: எழுத்தாளர் பிரபஞ்சனின் மரணமும், அவரது ஆசையொன்றும்! காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் 'தங்ஙள் அமீர்'! மகாகவியின் மகாமனது!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் பிரபஞ்சனின் மரணமும், அவரது ஆசையொன்றும்!

பிரபஞ்சன் அவர்கள் 'ஜெயித்த கதை' கட்டுரையின் இறுதியில் 'என் விருப்பமெல்லாம் , எழுத்தைப் போலவே , என் மரணமும் கெளரவமாக இருக்க வேண்டும் என்பதுதான்' என்று குறிப்பிட்டிருந்தார்.  அவரது  ஆசை அவரது மரணத்தில் நிறைவேறியுள்ளது. நீண்ட காலத்துக்குப் பிறகு எழுத்தாளர் ஒருவருக்கு உரிய  மரியாதைகொடுத்து அவரது இறுதி அஞ்சலியை நடாத்தியதற்காகப் புதுவை மாநில அரசையும், அதன் முதல்வரையும் பாராட்டுகின்றேன்.

தம்  வாழ்நாளெல்லாம் தம் எழுத்தால் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும்  எழுத்தாளர்களைப் பொதுவாக மாநில அரசுகள் கவனிப்பதில்லை. இந்நிலையில் அரச மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு இறுதி அஞ்சலியினைச் செய்ததன் மூலம் புதுவை மாநில அரசு உயர்ந்து நிற்கிறது. தமிழக அரசும், ஏனைய மாநில அரசுகளும் இம் முன்மாதிரியைப்பின்பற்றட்டும். எழுத்தாளர்கள் வாழும் காலத்திலேயே அவர்களது படைப்புகளை இலகுவாக வெளியிடும் வகையிலான திட்டங்கள் பலவற்றை உருவாக்கட்டும். நூலகங்கள் இலகுவாக அவர்கள்தம் நூல்களை வாங்கும் திட்டங்களை உருவாக்கட்டும். எழுத்தாளர்களின் நூல்களுக்குக் கொடுக்க வேண்டிய நூலுரிமைப்பணத்தை உரிய முறையில் கொடுப்பதை உறுதி செய்யும் திட்டங்களை உருவாக்கட்டும்.

எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி இறந்தபோது ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அவரை வழியனுப்பியதை இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன். தமிழ் மக்களும் எழுத்தாளர்களை மதிக்கும் பண்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும். மக்களுக்காக இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் அதற்கு முற்றிலும் உரித்துடையவர்களே.


காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் 'தங்ஙள் அமீர்'!

•Last Updated on ••Sunday•, 23 •December• 2018 21:42•• •Read more...•
 

எழுத்தாளர் பிரபஞ்சன் மறைந்தார்!

•E-mail• •Print• •PDF•

பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்'பிரபஞ்சனின் 'மானுடம் வெல்லும்'நவீனத்தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளிலொருவரான எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவுச்செய்தியை முகநூல் மூலம் அறிந்தேன். அண்மைக்காலமாக இவரது உடல்நிலை பற்றிய செய்திகளை முகநூல் மூலம் அறிந்து வந்திருக்கின்றேன். இவரது 'மானுடம் வெல்லும்', 'வானம் வசப்படும்' நாவல்கள் தமிழில் வெளியான சிறந்த படைப்புகள். 'வானம் வசப்படும்' நாவலுக்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கதை, கட்டுரை, நாவல், நாடகமெனத் தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தவர் எழுத்தாளர் பிரபஞ்சன்.

தமிழ் எழுத்தாளர்களின் புனைபெயர்களில் என்னை மிகவும் கவர்ந்த புனைபெயர்களில் ஒன்று இவரது புனைபெயரான 'பிரபஞ்சன்' என்னும் புனைபெயர்.

சென்னை மாநகரில் கழிந்த இவரது 'மேன்சன்' வாழ்க்கை பற்றிய கட்டுரைகளும் முக்கியமானவை.

இவரது மறைவு மிகப்பெரிய இழப்பு என்பது மிகையான கூற்றல்ல.

இவரைப்பற்றிய கட்டற்ற கலைக்கலைஞ்சியமான விக்கிபீடியாக் குறிப்பு இவ்விதம் கூறுகின்றது:

•Last Updated on ••Friday•, 21 •December• 2018 23:33•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 317: நகுலனின் சுசீலா! யார் அவள்?

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் நகுலன்எஸ்.ராமகிருஷ்ணனின் 'நாவலெனும் சிம்பொனி' நூலில் எழுத்தாளர் நகுலன் பற்றியதொரு கட்டுரையுள்ளது. சிறு கட்டுரை அது. அதில் நகுலனின் படைப்புகளில் அடிக்கடி காணப்படும் சுசீலா என்னும் பெண் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. நகுலனின் சுசீலா பற்றி எஸ்.ரா பின்வருமாறு கூறுவார்:

"'சுசீலாவின் உயர் தன்மைகள் சுசீலாவிடம் இல்லை' எனப்பேசும் இவர், கவிதையெங்கும் காணப்படும் சுசீலா எனும்  பெண் பெயரைக்கொண்டு அதைப்பெண்ணாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்ப்படுகிறது.  இப்பெண்பெயர் உருவாக்கும்  வார்த்தைச் சித்திரம் ஏற்கனவே உருவாகும் மனநிலையின் தீவிரத்திற்கு எதிர்நிலையாகவோ , சமன் செய்யும் ஒன்றாகவோ, பரிகசிக்கும் நிலையாகவோ கொள்ளலாம். ஒருவகையில் மரபுக்கவிதையில் வரும் வெண்சங்கே, பாம்பே, கிளியே, குதம்பாய்போல் இதுவும் சுய எள்ளல் குறியீடாகக் கொள்ளலாம்.  சில இடங்களில் சுசிலா மூலம் ஏற்படுத்தும்  நெருக்கம் பாரதியின் கண்ணம்மா என்ற வார்த்தை உருவின் செயல்பாடு போலத் தெரிகிறது."

எழுத்தாளர்கள் பலர் அவ்வப்போது சுசீலா போன்ற விடயமொன்றினைப்பற்றிக் குறிப்பிடும்போது அவ்விடயம் பற்றிய போதிய ஆய்வெதுமின்றி முடிவொன்றுக்கு வந்து விடுகின்றார்கள். அதற்கு எஸ்.ராமகிருஷ்ணனும் விதிவிலக்கானவரல்லர் என்பதையே நகுலனின் சுசீலா பற்றிய அவரது கூற்றும், அது பற்றிய மேலதிக விளக்கங்களும் புலப்படுத்துகின்றன.

எஸ்.ரா. நகுலனின் சுசீலா பற்றி இவ்விதமான முடிவொன்றுக்கு வர முன்னர் நகுலனின் படைப்புகள் அனைத்திலும் நகுலன் எவ்விதம் சுசீலாவை விபரித்திருக்கின்றார் என்று பார்த்திருக்க வேண்டும். பார்த்தாரா என்பது தெரியவில்லை. அவ்விதம் அவர் செய்திருந்தால் நிச்சயமாக 'சுசீலாவும் ஒரு எள்ளல்' என்னும் முடிவுக்கு வந்திருக்க மாட்டார். எனக்கென்னவோ நகுலனின் வாழ்வில் எதிர்பட்ட , அவர் காதலித்த ஆனால் அவருக்குக் கிடைக்காமற் போன பெண்ணொருத்திதான் அவர் படைப்புகளில் வரும் சுசீலா என்னும் பாத்திரமாக இருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. தனக்குக் கிடைக்காமற் போன பெண்ணைச் சுசீலா என்னும் பாத்திரமாக உருவகித்து அவளைத்தன் எழுத்துகளில் நடமாடவிட்டு , அவளுடன் எழுத்துலகில் வாழ்ந்து வந்திருக்கின்றார் நகுலன் என்றே தோன்றுகின்றது. இறுதிவரைத் தனிமையில் வாழ்ந்த நகுலன் நிஜ வாழ்க்கையில் தனக்குக்கிடைக்காமற் பெண்ணைச் சுசீலாவாக்கி மானசீகமாக வாழ்ந்த்திருக்கின்றார் என்றே தோன்றுகின்றது.

உதாரணத்துக்கு நகுலனின் சுசீலா பற்றிய கவிதைகள் சிலவற்றைப்பார்ப்போம்..  - நடை சிற்றிதழில் வெளியான கவிதைகள் இவை:

1. உன் நினைவு

காவியத்தின் சுவை போல
சுவை போல
நீள் நகரின் எழில் போல
எழில் போல
உன் நினைவு தான்
நினைவு தான்.


2. சுசீலா

சுசீலா
சுசீலாவின் பெயரில்லை;

சுசீலாவின் சிறப்பு (ச்)
சுசீலாவிடமில்லை

என்றாலும் என்ன
அவளிடம் இல்லாத
ஒவ்வொன்றும்
எனக்குக் கிட்டாத
ஓராயிரம்
கிட்டும் கிட்டும்
என்று

பல்லாண்டு பாடும்.

•Last Updated on ••Saturday•, 15 •December• 2018 09:19•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 316 : மிலான் குந்தெராவின் 'நாவலின் கலை'யிலிருந்து;முற்றுப்பெறாத எனது நாவல்கள்!;ஸ்கார்பரோவில் ஜான் மாஸ்ட்டரின் உரை; ஈழநாடு மாணவர் மலர்க் கட்டுரைகள்!

•E-mail• •Print• •PDF•

மிலான் குந்தெராவின் 'நாவலின் கலை'யிலிருந்துமிலான் குந்தெராவின் 'நாவலின் கலை' என்னும் நூலிலுள்ள கட்டுரைகளைப் புரட்டிக்கொண்டிருக்கின்றேன். நூலிலுள்ள முதலாவது கட்டுரை "The Depreciated Legacy of Cervantes".. அதில் நாவல் பற்றி, இருத்தல் பற்றி, மனிதர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் என் கவனத்தை ஈர்த்த சில கருத்துகளை என் மொழியில் சுருக்கமாகத் தருகின்றேன்.

எட்மண்ட் ஹஸ்ஸேர்ல் வியன்னாவிலும், பிராக்கிலும் ஆற்றிய ஐரோப்பிய மனிதத்துவம் பற்றிய புகழ்பெற்ற உரையில் ஐரோப்பிய விஞ்ஞானம் பற்றிக் குறிப்பிடுகையில் ஒரு பக்கத் தன்மை மிக்கதான ஐரோப்பிய விஞ்ஞானமானது உலகை கணித மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக்குரியதொன்றாக மட்டுமே ஆக்கிவிட்டது. மானுட வாழ்க்கையை அதன் கவனத்துக்கப்பால், அதன் எல்லைக்கப்பால் வைத்துவிட்டது என்று கூறியுள்ளார்.

விஞ்ஞான வளர்ச்சியானது மனிதரை விஞ்ஞானத்தின் சிறப்பு விதிகளுக்குள் உந்தித்தள்ளி விட்டது. எவ்வளவுக்கெவ்வளவு மனிதர் அறிவில் முன்னேறினார்களோ அவ்வளவுக்கவ்வளவு வாழ்வை முழுமையாகவோ அல்லது தம்மைப்பற்றி முழுமையாகவோ அறிந்துகொள்வதில் பின்னேறினார்கள். எட்மண்ட ஹஸ்ஸேட்லின் மாணவரான ஹைடெகரின் புகழ்பெற்ற சொற்றொடரான 'இருத்தலை மறத்தல்' (the forgetting of being) என்னும் சூழலுக்குள் மனிதர் தள்ளப்பட்டுவிட்டார். ரெனெ தெக்கார்தே (Rene Descartes) குறிப்பிட்டதுபோல் மனிதர் தொழில்நுட்பம், அரசியல் மற்றும் வரலாறு ஆகிய விசைகளால் புறக்கணிக்கப்பட்டுவிட்ட ஒரு பொருளாக ஆகி விட்டார். இவ்விசைகளுக்கு மனிதரோ அவர்தம் வாழ்வு பெறுமதியற்றதொன்று. முக்கியத்துவமற்றதொன்று. ஆரம்பத்திலிருந்தே மூடி மறைக்கப்பட்டதொன்று.

நூலாசிரியரைப்பொறுத்தவரையில் நவீன யுகத்தின் பிதாமகர்கள் தெக்கார்தேயும் சேர்வாண்டேசுமே. விஞ்ஞானமும், தத்துவமும் மனிதரின் இருப்பினை மறந்துவிட்டது உண்மையானால், சேர்வாண்டேசின் மூலம் ஐரோப்பியக் கலையானது மறக்கப்பட்டிருந்த மானுட இருப்பு பற்றிய விசாரணையினை மேற்கொண்டது. உண்மையில் ஹைடெகரால் அவரது 'இருப்பும் நேரமும்' நூலின் ஆய்வுக்குள்ளாகியிருந்த இருப்பியல் பற்றிய,அதுவரை ஐரோப்பியத் தத்துவங்களால் புறக்கணிக்கப்பட்டிருந்த அனைத்துக்கருதுகோள்களையும் ஐரோப்பிய நாவலானது வெளிப்படுத்தியது. தனக்குரிய வழியில், தனக்குரிய தர்க்கத்தில், ஐரோப்பிய நாவலானது இருப்பின் பல்வகைப்பரிமாணங்களையும் ஒவ்வொன்றாகக் கண்டு பிடித்தது: சேர்வாண்டேஸ் மற்றும் அவரது காலத்துப் படைப்பாளிகள் மூலம் மானுடர்தம் சாகசங்களின் தன்மை பற்றி ஆராய்ந்தது. ரிச்சார்ட்சன் மூலம் மானுட உணர்வுகளின் இரகசிய வாழ்க்கையினை வெளிப்படுத்தும்பொருட்டு மனிதர்தம் உள்ளே என்ன நடக்கின்றது என்பதை ஆராய்ந்தது. பால்சாக்கின் மூலம் வரலாற்றில் மானுடரின் காலூன்றல் பற்றி ஆராய்ந்தது. பிளாபர்ட் மூலம் மூடி மறைக்கப்பட்ட மானிடரின் அன்றாட வாழ்வினை ஆராய்ந்தது. டால்ஸ்டாயின் மூலம் மானுடர்தம் நடத்தை மற்றும் தீர்மானங்களில் பகுத்தறிவற்ற போக்கின் தலையீடு பற்றிக் கவனத்தைத் திருப்பியது.

•Last Updated on ••Sunday•, 16 •December• 2018 07:28•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 315: ரோகித பாஷனா அபயவர்த்தனே (Rohitha Bashana Abeywardane) & 'தாயகம்(கனடா)' பற்றிச் சில குறிப்புகள்..

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 315: ரோகித பாஷனா அபயவர்த்தனே (Rohitha Bashana Abeywardane)ரோகித பாஷனா அபயவர்த்தனே (Rohitha Bashana Abeywardane) ஒரு சிங்கள ஊடகவியலாளர். முன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் , 2006இல் இலங்கையை விட்டு புகலிடம் நாடி புலம்பெயர்ந்த சிங்கள ஊடகவியலாளர்களிலொருவர் இவர். மெளனிக்கப்பட்ட யுத்தத்தின்போது இலங்கைத்தமிழர்கள் அடைந்த இன்னல்கள், துயரங்களை வெளிப்படுத்தும் புகழ்பெற்ற ஆவணப்படமான 'மெளனிக்கப்பட்ட குரல்கள்' (The Silenced Voices) ஆவணப்படத்தில் நேர்காணப்படும் சிங்கள ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர்.  இலங்கைத்தமிழர்கள் நிலையை நன்கு அறிந்த, அதற்காகக் குரல் கொடுக்கும் சிங்கள ஊடகவியலாளர்களில் ரோகித பாஷனா அபயவர்த்தனேயின் பங்களிப்பு முக்கியமானது. தற்போதும் நாடு திரும்பாமல் PEN அமைப்பின் உதவியுடன், ஜேர்மனியில் வாழ்ந்துவரும் இவர் 'இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள்' என்னும் (JDS - Journalists for Democracy in Srilanka: http://www.jdslanka.org/ ) இணையத்தளத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், ஆசிரியர் குழுவிலொருவராகவுமிருந்து வருகின்றார். ரோகித பஷானா அபயவர்த்தனே நன்கறியப்பட்ட சிங்களக் கவிஞர்களில் ஒருவரும் கூட. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மாற்றுக்கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த சிங்களப்பத்திரிகையான ஹிரு பத்திரிகையின் ஸ்தாபகராகவும், பின்னர் அதன் ஆசிரியராகவுமிருந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தது. அப்பத்திரிகையில் இவர் எழுதிய அரசியல் கருத்துகள் காரணமாகவே இவருக்குப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அவற்றின் காரணமாகவே இவர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.

சமூக ஊடகங்கள் காரணமாகவும், யுத்தம் ஏற்படுத்திய் பேரழிவுகள் காரணமாகவும் சிங்கள மக்களில் பலர் நாட்டில் அமைதி வேண்டுமென்பதை உணர்ந்திருக்கின்றார்கள். உணரத்தொடங்கியிருக்கின்றார்கள். நாட்டில் தமிழர்கள் சம உரிமையற்று வாழ்வதை உணர்ந்திருக்கின்றார்கள். இலங்கையில் சிறுபான்மையினத்தவரின் நியாயமான பிரச்சினைகள் தீர்க்கப்படுவது நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்துக்கு அவசியமென்பதை உணர்ந்திருக்கின்றார்கள். அவர்களிலொருவர் ரோகித பாஷனா அபயவர்த்தனே. இவர்களைப்போன்றவர்களைப்பற்றி, இவர்கள்தம் அரசியல் நிலைப்பாடு பற்றியெல்லாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

•Last Updated on ••Sunday•, 02 •December• 2018 02:12•• •Read more...•
 

கனடாத் தமிழ் இலக்கியத்தில் 'தாயகம் (கனடா)\வின் பங்களிப்புப் பற்றியதொரு சுருக்கமான அறிமுகம்!

•E-mail• •Print• •PDF•

'தாயகம்' (கனடா) - எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகக் கொண்டு , ஆண்டுதோறும் வெளியாகும் இலக்கிய இதழான 'கூர் 2018' இதழில் வெளியான கட்டுரை இது. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. - பதிவுகள் -


கனடாத்தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் தவிர்க்க முடியாத , காத்திரமாகத்தடம் பதித்த, ஜோர்ஜ் இ.குருஷேவ்வை ஆசிரியராக கொண்டு வெளியான  சஞ்சிகை, பத்திரிகை 'தாயகம்' (கனடா).  புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை / சஞ்சிகைகளில் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. இருந்தும் கனடியத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிக் கட்டுரைகள் எழுதுவோர் தம் கட்டுரைகளில் மிகவும் இலகுவாக மறந்து விடும் பத்திரிகை, சஞ்சிகையும் 'தாயகம்' தான். மிகவும் வேடிகையான விடயமென்னவென்றால் 'தாயகம்' வெளிவந்தபோது, 'தாயகம்' களம் அமைத்துக்கொடுத்துத் 'தாயக'த்தில் எழுதிய எழுத்தாளர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களில் பலர்  கூட இவ்விதம் மறப்பதை எண்ணவென்பது. இந்நிலையில் 'தாயகம்' பற்றிய முறையான ஆய்வு நடத்தப்பட வேண்டிய தேவை இருப்பதால், அது பற்றிய ஆர்வத்தினை ஏற்படுத்த வேண்டிய தேவை இருப்பதால், 'தாயகம்' பற்றிய சிறியதோர் அறிமுகம் தேவை என்பதால் உருவான கட்டுரையே இக்கட்டுரை. இக்கட்டுரையின் முக்கிய நோக்கங்களிலொன்று 'தாயகம்' பத்திரிகை/ சஞ்சிகை பற்றிய விரிவான ஆய்வுக்கு எதிர்காலத்தில் மேலும் பலரைத் தூண்டுவதாகும்.

'தாயகம்' பத்திரிகை /சஞ்சிகைக்கு இன்னுமொரு முக்கியமான சிறப்புண்டு. கனடாவில் இலக்கியச்சேவை செய்வதாகச் சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பல பத்திரிகைகளின் முக்கிய நோக்கம் பணமீட்டுவதே. விளம்பரங்களால் பக்கங்களை நினைத்து,  இலவசமாக விநியோகிக்கப்பட்டுவரும் கனடியத்தமிழ்ப் பத்திரிகைகளுக்கு மத்தியில் , காசு கொடுத்து வாங்கிக் கனடியத்தமிழ் மக்கள் படித்த ஒரேயொரு பத்திரிகை 'தாயகம்' (கனடா). இதற்காகத் 'தாயகம்' ஆசிரியர் ஜோர்ஜ் இ.குருஷேவ்வைப்பாராட்டலாம். அதுவும் சுமார் ஆறுவருடங்கள் வரையில் 'தாயகம்' இவ்விதம் விற்பனையில் இருந்ததே குறிப்பிடத்தக்க சாதனைதான்.

'தாயகம்' பத்திரிகை, சஞ்சிகை பல விதங்களிலும் தனித்துவம் மிக்கதாக , 'உண்மையைத் தேடி' என்னும் தாரக மந்திரத்துடன் வெளிவந்தது. அதற்கென்று உறுதியான கொள்கையொன்றிருந்தது. அரசியல் ஆதிக்கம் மிக்க சக்திகளால் மறைக்கப்பட்ட விடயங்களை அது வெளிக்கொணர்ந்தது. அதே சமயம் அது விடுதலைப்புலிகளை விமர்சித்த பத்திரிகை, சஞ்சிகை. அதற்காக அதனைத் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிரான பத்திரிகை என்று யாரும் தவறாக எண்ணி விடவேண்டாம். அது தமிழ் விடுதலை அமைப்புகளில் நிலவிய மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதையே முக்கியமான நோக்கங்களிலொன்றாகக்கொண்டிருந்தபோதும், அனைத்துப்பிரிவினருக்கும் இடமளித்தது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். பல்வேறு அரசியல் கொள்கை கொண்டவர்களும் 'தாயக'த்தில் எழுதினார்கள்.

•Last Updated on ••Monday•, 17 •June• 2019 23:37•• •Read more...•
 

சிற்றிதழ்கள் பற்றிய புரிதலும் கனடியத் தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிய அறிதலும்!

•E-mail• •Print• •PDF•

சிற்றிதழ்கள் பற்றிய புரிதலும் கனடியத் தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிய அறிதலும்! கனடியத் தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிய எனது பார்வையைப்பகிர்ந்துகொள்வதற்கு முன் சிற்றிதழ்கள் என்றால் எவை? என்பது பற்றிச் சிறிது பார்ப்போம். சிற்றிதழ் என்பதற்கு இரு அர்த்தங்களைக் கூறலாம். சிறிய இதழ் என்னுமொரு கருத்தும் உண்டு. இவ்வடிப்படையில்தான் பலர் சிற்றிதழ்களை, சிறுசஞ்சிகைகள் என்று அழைக்கின்றார்கள். சிற்றிதழ் என்றால் சிறந்த இதழ் என்றும் அர்த்தம்கொண்டு அதனை நோக்குவோர் சிலருமுண்டு. உதாரணத்துக்கு “சிற்றிதழ் என்றாலே சிறந்த இதழ் என்றுதான் அர்த்தம். இதைத்தான் தற்போது சீரிதழ் என்றும் சொல்லி வருகிறார்கள். " என்று விக்கிபீடியா சிற்றிதழ்கள் பற்றிக் கூறும். ஆனால் என்னைப்பொறுத்தவரையில் சிற்றிலக்கியம், சிற்றிதழ், சிற்றன்னை என்பவற்றில் சிறிய எனும் அர்த்தத்திலேயே இச்சொற்கள் பாவிக்கப்படுகின்றன. சிறந்த இதழ் என்றால் சிறப்பிதழ் . சிற்றிதழ் அல்ல. சிறு சஞ்சிகை என்று கூறும்போது அது சஞ்சிகையின் உள்ளடக்கத்தின் தரத்தைக் கொச்சைப்படுத்தி விடுவதாக எதற்காகக் கருத வேண்டும்? சிறு சஞ்சிகை சிறந்த சஞ்சிகையாக இருப்பதில் என்ன தடை இருக்க முடியும்? சிறு சஞ்சிகை என்றாலும் அதன் உள்ளடக்கத்தைப்பொறுத்தவரையில் அது ஒரு பேரிதழ்.

சிற்றிதழ் அல்லது சிறு சஞ்சிகை என்றால் என்ன? அது ஏன் உருவாகின்றது? என்பது பற்றிச் சிறிது பார்ப்போம்./

வெகுசன இதழ்கள் , வணிக இதழ்கள் வருமானத்தைக் குறி வைத்து வெளியாகும் இதழ்கள். மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு (குறிப்பாக இனம் , மதம், மொழி மற்றும் பால்) , மக்கள் மத்தியில் புகழடைவதுடன , அதிக வருமானத்தையும் பெறும் நோக்குடன் அவை செயற்படுகின்றன; வெளிவருகின்றன. இந்நிலையில் வணிக இதழ்களில் தீவிர , காத்திரமான இலக்கியப்படைப்புகளுக்கு இடமில்லை. இவ்விதமான சூழலில்தான் சிற்றிதழொன்று உருவாகின்றது. காத்திரமான , தீவிரமான கலை, இலக்கிய, அரசியற் கோட்பாடுகளை உள்ளடக்கிய, சார்ந்த படைப்புகளைத்தாங்கிப் பல்வகைச் சிற்றிதழ்கள் வெளியாகின்றன. சிற்றிதழ்கள் பொருளீட்டி, இலாபம் சம்பாதிப்பதை மையமாக வைத்து உருவாவதில்லை. ஆர்வமுள்ளவர்களில் சிலர் ஒன்றிணைந்து வெளியிடும் இதழாக, அல்லது தனிப்பட்ட  ஒருவர் வெளியிடும் இதழாக இருப்பதால் ஒரு சிற்றிதழானது அது வெளியாகும் காலத்திலிருந்து அதன் முடிவு வரை பொருளியல்ரீதியில் போராடவே வேண்டியிருக்கின்றது. வாசகர்களை, புரவலர்களை நம்பியே, நாடியே அது இயங்க வேண்டிய சூழலும், தேவையுமுள்ளதால்தான் பெரும்பாலானவை ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்பு மூச்சடங்கிப்போகின்றன. அவ்விதம் அவை இயங்காது போயினும் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் வரலாற்றில் நிலைத்து நின்று விடுகின்றன. அவற்றின் ஆரோக்கியமான பங்களிப்புகள் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரப்படுகின்றன. கலை, இலக்கிய வளர்ச்சியில் அவை படிக்கட்டுகளாக அமைந்து விடுகின்றன. உதாரணத்துக்கு மணிக்கொடி, சி.சு.செல்லப்பாவின் எழுத்து, இலங்கையில் வெளியான மறுமலர்ச்சி, அலைகள், தீர்த்தக்கரை,  ஜோர்ஜ் இ.குருஷேவின் தாயகம் (கனடா) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

•Last Updated on ••Monday•, 19 •November• 2018 08:25•• •Read more...•
 

நியுஹாம் நகரசபை உறுப்பினர் திரு.போல் சத்தியநேசன் அவர்களுடன் ஒரு மாலை!

•E-mail• •Print• •PDF•

நியுஹாம் நகரசபை உறுப்பினர் திரு.போல் சத்தியநேசன் அவர்களுடன் ஒரு மாலை!

தற்போது கனடாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் நியுஹாம் நகரசபை உறுப்பினரான திரு.போல் சத்தியநேசன் அவர்களை நண்பர் செல்வம் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, கனடா) அவர்களின் அழைப்பின்பேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதற்காக செல்வத்துக்கு நன்றி. திரு.போல் சத்தியநேசன் அவர்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஐக்கிய இராச்சியக் கிளைத்தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்ட, உரும்பிராயைச் சேர்ந்த போல் சத்தியநேசன் அவர்கள் கடந்த இருபது வருடங்களாக, நியுஹாம் நகரசபை உறுப்பினராகவிருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை நியுஹாம் நகரத்தின் உப நகரபிதாவாகவும் பதவி வகித்திருக்கின்றார். கிழக்கு இலணடன் பல்கலைக்கழகம் இவரது சமூக சேவையினைப்பாராட்டி, இவருக்கு கெளரவ பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மார்க்கம், மக்னிகல் சந்திக்கருகில் அமைந்துள்ள டிம் ஹோர்ட்டன் கோப்பிக் கடையில் இன்று மாலை நடைபெற்ற சந்திபில் நண்பர் செல்வம் மற்றும் எழுத்தாளர் கடல்புத்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். சுமார் இரண்டு மணித்தியாலம் நடைபெற்ற சந்திப்பில் போல் சத்தியநேசன் அவர்கள் பல்வேறு விடயங்கள் பற்றித்தன் கருத்துகளை எம்முடன் பகிர்ந்துகொண்டார். அவற்றில் முக்கியமான விடயங்களாகப்பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

•Last Updated on ••Saturday•, 17 •November• 2018 01:00•• •Read more...•
 

'புதுசு' நா.சபேசனுடன் ஒரு மாலைப்பொழுது!

•E-mail• •Print• •PDF•

'புதுசு' நா.சபேசனுடன் ஒரு மாலைப்பொழுது!

இன்று மாலை தற்போது கனடா விஜயம் செய்திருக்கும் 'புதுசு' சஞ்சிகையின் ஆசிரியர்களிலொருவரான கவிஞர் நா.சபேசனுடன் கழிந்தது.  நண்பர் எல்லாளனும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். '5ஸ்பைஸ்' உணவகத்தில் எம் சந்திப்பு நிகழ்ந்தது. கள்ளங்கபடமற்ற புன்னகையுடன் கூடிய முகத்தோற்றம் மிக்க நா.சபேசனுடன் உரையாடுவதும்  இனியதோர் அனுபவம்தான். கலை, இலக்கியம், மற்றும் அரசியல் பற்றிய கருத்துகளும், நனவிடை தோய்தல்களுமாக நேரம் கழிந்தது. நண்பர் எல்லாளன் எண்பதுகளில் தமிழகத்தில் கழிந்த தன் நினவுகளையும் நினைவு கூர்ந்தார்.

•Last Updated on ••Saturday•, 17 •November• 2018 00:57•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 314: கனடா மூர்த்தி!

•E-mail• •Print• •PDF•

கனடா மூர்த்திகனடா மூர்த்தி என்று அறியப்படுகின்ற மு.நாராயணமூர்த்தி பல்துறை திறமை கொண்டவர். கதை, கட்டுரைகள் எழுதுவதில் , ஆவணப்படங்கள் தயாரிப்பதில், ஓவியம் வரைவதில், நகைச்சுவை ஆக்கங்கள் படைப்பதில், ஒலி(ளி) பரப்பாளராகப் பணி புரிவதில் என்று பல்துறை ஆற்றல் கொண்ட இவரை நான் முதன் முதலில் கண்டது யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்று கொண்டிருந்த காலகட்டத்தில்தான். அப்பொழுது இவர் சமயத்தில் ஈடுபாடு மிக்க ஒருவராக நினைவிலுள்ளார். தேவாரங்கள் கூடப் பாடியதாக ஒரு நினைவு. ஆனால் அப்போது இவரை நான் பார்த்ததோடு சரி. கதைத்தது இல்லை. இவர் எனக்கு ஒரு வருட 'சீனியர்'. அதன் பின்னர் நான் இவரைக் கனடாவில் சந்தித்தபோது ஆளே மாறிப்போயிருந்தார். ருஷ்யாவில் புலமைப்பரிசு பெற்று சென்று பொறியியல் படித்து முடித்து திரும்பியிருந்த ஒருவராக, சமூக, அரசியலில் நாட்டமுடையவராக, இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்ட ஒருவராக  மாறிப்போயிருந்தார்.

தாயகம் பத்திரிகை(+ சஞ்சிகை) வெளிவந்த போது அதில் இவரது கை வண்ணத்தைக் கண்டு வியந்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில்தான் இவரை முதன் முறையாகச் சந்தித்திருக்கின்றேன். 260 பார்ளிமென்ற் வீதித் தொடர்மாடிக் கட்டடத்தில் கனடாவில் முதன் முதலாகச் சந்தித்ததாக நினைவ. அப்பொழுது தாயகம் பத்திரிகையில் எனது தொடர்கதைகள் வெளியாகிக்கொண்டிருந்தன. அதிலொன்று 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்' அதற்கு ஓவியம் வரைந்தவர் இவரே என்பதைப்பின்னரே அறிந்து கொண்டேன். அதுபோல் தாயகம் பத்திரிகையில்  (+சஞ்சிகை) வெளிவந்து பலரின் கவனத்தையும் கவர்ந்துகொண்டிருந்த பகுதிகளில் ஒன்று 'முனியின் பதில்கள்'. சுவையான முனியின் பதில்களை இரசித்தவர்களில் நானுமொருவன். அம் முனி இவர்தானென்பதையும் பிறகு அறிந்துகொண்டேன். அம்முனிவரின் படத்தை வரைந்தவரும் இவர்தான் என்பதையும் பின்பு அறிந்தேன்.

கலை, இலக்கிய மற்றும் அரசியல் ஆளுமைகள் பலருடன் புகைப்படமெடுப்பதில் விருப்புள்ளவர் இவர். அப்புகைப்படங்கள் அனைத்தையும் தனியொரு தொகுதியாக வெளியிடலாம்.

•Last Updated on ••Monday•, 12 •November• 2018 07:54•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 313: க.நவத்தின் 'பரதேசம் போனவர்கள்'...

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 313: க.நவத்தின் 'பரதேசம் போனவர்கள்'... வ.ந.கிரிதரன் -கனடாவிலிருந்து வெளியான , புலம்பெயர்தமிழ்ப்படைப்பாளிகளிடமிருந்து வெளியான சிறுகதைத்தொகுப்புகளில் 'நான்காவது பரிமாணம்' வெளியீடாக வெளிவந்த எழுத்தாளர் க.நவத்தின் 'பரதேசம் போனவர்கள்' தொகுப்புக்கு முக்கிய இடமுண்டு. எழுத்தாளர் ஒரு கல்விமான் மட்டுமல்லர் சிறந்த எழுத்தாளரும் கூட. கட்டுரை, கவிதை , மொழிபெயர்ப்பு எனப்பல்துறைகளிலும் சிறப்பாக ஆற்றலை வெளிப்படுத்தும் இவரது 'பரதேசம் போனவர்கள்' தொகுப்பினை அண்மையில் ஆறுதலாக வாசித்துப்பார்த்தேன். தொகுப்பின் கதைகள் அனைத்துமே நாட்டு அரசியற் சூழல் காரணமாகப் புலம்பெயர்ந்து பரதேசம் சென்ற ஈழத்தமிழர்களின் வாழ்வை விபரிப்பவை. தொகுப்பின் தலைப்பான 'பரதேசம் போனவர்கள்' பொருத்தமான தலைப்பு.

தொகுப்பின் கதைகள் கூறும் கருத்துகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

சொந்த மண்ணிலிருந்து இன்னுமொரு நாட்டுக்கு, அந்நிய நாட்டுக்கு, வேறொரு கலாச்சாரச்சூழல் விளங்குமிடமொன்றுக்குப் புலம்பெயரும் மக்கள் எதிர்கொள்ளும் பொருளியல்ரீதியிலான, கலாச்சாரரீதியிலான மற்றும்  நிறவெறி போன்ற பிரச்சினைகளை, சவால்களை, அவற்றை அவர்கள் எவ்விதம் எதிர்கொள்கின்றார்கள் என்பதைச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. புதிய சூழல் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் எவ்விதம் அவர்கள் வாழ்வைச் சீரழிக்கின்றன என்பதை  புதிய சூழல் தரும் பொருளியல்ரீதியிலான அனுகூலங்களை எவ்விதம் அவர்கள் தவறாகப்பாவித்துப் பயன்பெறுகின்றார்கள் என்பதையெல்லாம் தொகுப்பின் கதைகள் விபரிக்கின்றன. சில கதைகள் அதிகம் ஏனைய எழுத்தாளர்களினால் கையாளப்பட்டிராத பால் மாற்றம் ('ட்ரான்ஸ்ஜென்டர்'), பாலியல்ரீதியிலான பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றன. இவற்றை வெளிப்படுத்தும் கதைகள் வாசகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கின்றன.

இத்தொகுப்பில் என் பார்வையில் கவனத்தை ஈர்த்த கதைகளாக 'ஜீவித சங்கல்பம்', 'வெள்ளைப்புறா ஒன்று.', 'பிச்சைக்காசு', 'காற்றைப்போன்றதடி என் காதல்', 'ஆசாரசீலம்' போன்றவற்றைக் கூறுவேன். ஏனையவையும் சோடை போனவையல்ல.

•Last Updated on ••Tuesday•, 13 •November• 2018 20:07•• •Read more...•
 

வாசிப்பும் யோசிப்பும் 312: "சொல்லும் செய்திகள்" -வி.என்.மதிஅழகனின் செய்தியறைக் கனவினை நனவாக்கும் படிக்கட்டு!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும் யோசிப்பும் 311: வி.என்.மதிஅழகனின் செய்தியறைக் கனவொன்றை நனவாக்கும் படிக்கட்டாகச் 'சொல்லும் செய்திகள்'வி.என்.மதியழகன்புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்தும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேட்கும்போதெல்லாம்,  பார்க்கும்போதெல்லாம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் எம்மை மறந்திருந்த காலம் நினைவுக்கு வருவதுண்டு. எவ்வளவு ஆர்வமாக அன்று வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு இரசித்தோம். எம்மை மறந்து இன்பத்தில் திளைத்தோம். இன்றம் கூட சற்சொருபவதி நாதன், இராஜேஸ்வரி சண்முகம், கமலினி செல்வராசன், சில்லையூர் செல்வராசன், அப்துல் ஹமீட், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் வி.என்.மதியழகன், கே.எஸ்.ராஜா, விவியம் நமசிவாயம், கே.எஸ்.பாலச்சந்திரன், சுப்புலட்சுமி காசிநாதர், கமலா தம்பிராஜா என்று பலரின் பெயர்கள் பசுமையாக நினைவிலுள்ளன. அதற்குக் காரணம் அவர்கள் திறமையான கலைஞர்கள். ஒரு நிறுவனத்தில் முறையான நிர்வாகத்தில் கீழ், திறமையாகத் தம் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டிய சூழலில் பணி புரிந்துகொண்டிருந்தார்கள். தவறுகள் விட்டால் அவை அவர்களது பணியினைப் பாதிக்கும். இதனால் அவர்கள் கேட்பவர்களை மனத்திலிருத்தி நிகழ்ச்சிகளைத் தயாரித்தார்கள். செய்திகளை வாசித்தார்கள். தம் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நிகச்சிகளை நடாத்தினார்கள். ஆனால் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் பல வானொலிகள், தொலைகாட்சிகளுள்ளன. ஆனால் இவற்றில் ஒலி(ளி) பரப்பாகும் நிகழ்ச்சிகளை நடத்தியவர்களின், பங்குபற்றியவர்களின் பெயர்களை நாம் அன்று எம்மை மகிழ்வித்தவர்களைப்போல் நினைவில் வைத்திருக்கின்றோமா?. வைத்திருப்போமா?

இதற்கு முக்கிய காரணங்களில் சில:  இங்குள்ள வானொலிகளும், தொலைக்காட்சிகளும் தனிப்பட்டவர்களின் வியாபாரங்களாக இருக்கின்றன; முறையான பயிற்சியற்ற பலர் செய்திகளை வாசிக்கின்றார்கள்; நிகழ்ச்சிகளை நடாத்துகின்றார்கள்; உச்சரிப்பில் தவறிழைக்கின்றார்கள்; போதிய தமிழறிவு, ஆய்வறிவு அற்றவர்களாக இருக்கின்றார்கள். இது போன்ற  காரணங்களினால் இவர்களால் என்றும் அழியாத கோலங்களாக நிலைத்து நிற்கும் நிகழ்ச்சிகளை வழங்க முடிவதில்லை.

இங்கு வானொலிக்கலைஞர்களாக, தொலைக்காட்சிக் கலைஞர்களில் எவ்வளவுபேர் முறையாக அத்துறைகளில் கல்வி கற்று, பயிற்சியெடுத்து பணியாற்ற வருகின்றார்கள்? இவர்களைப்போன்றவர்கள் இத்துறைகள் பற்றி , இத்துறைகளில் சிறந்து விளங்கியவர்களால் எழுதப்படும் நூல்களையாவது, விவரணக் காணொளிகளையாவது வாசித்து, பார்த்து விட்டுப் பணி புரிய வரவேண்டும். அதனால் அவர்கள் தயாரிக்கும், ஒலி(ளி) பரப்பும் நிகழ்ச்சிகளும் சிறக்க வாய்ப்புண்டு. இவ்விதமாக இத்துறைகளில் பயனளிக்கும் வகையில் எழுதப்பட்ட நூலொன்று அண்மையில் வெளியாகியுள்ளது. இதனை எழுதியவர் இத்துறையில் நீண்ட காலம் பணியாற்றிய  ஒருவர். இந்நூல்  இந்நூல் குறிப்பாகச் செய்தித்துறையினை மையமாக எழுதப்பட்டிருந்தாலும், இவ்விதமான துறைகளில் பணிபுரியும் வகையிலான நூலாகும், வாசிப்பவர்களுக்கும் இத்துறை பற்றிய அறிவினை அதிகரிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நூலாகும், இதனை எழுதியவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் , ரூபவாஹினி தொலைக்காட்சி ஆகியவற்றில் பணி புரிந்த வி.என். மதியழகன். இந்நூலின் பெயர் 'சொல்லும் செய்திகள்'. இதனை அழகாகத் தயாரித்து வெளியிட்டுள்ளது 'காந்தளகம்' பதிப்பகம்.

இந்நூல் மிகவும் சுவையாக, எளிமையாக, வாசிப்பவர்களுக்கு இத்துறை பற்றிய புரிதலைத் தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. செய்தித்தயாரிப்பில் இவ்வளவு விடயங்கள் இருக்கின்றனவா என்று வாசிப்போரைப்பிரமிக்க வைத்து விடுகின்றது.

இந்நூல் பதினைந்து அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் செய்தித்துறையின் வெற்றிக்கு, சிறப்புக்கு முக்கியமானவையாகக் கூறப்பட்ட விடயங்களில் முக்கியமானவையாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

•Last Updated on ••Monday•, 05 •November• 2018 08:22•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 311: எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அடுத்த சிறுகதை 'ஏர்னட்ஸ்ட் ஹெமிங்வே எழுதாத நாவலின் எழுதாத முதல் வரி'

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் தமிழகத்தின் வெகுசன இதழ்களில் குறிப்பாக ஆனந்த விகடனில் நன்கு பிரபலமான எழுத்தாளர். வெகுசன இதழ்களில் புனைகதைகள் எழுதும் எழுத்தாளர்கள் அவ்விதழ்களின் வாசகர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து அவர்களைக் கவரும் வகையில் எழுதுவதை விரும்புவார்கள். அ.மு.வின் புனைகதைகளை வாசிக்கும்போது இதனை அவதானிக்கலாம். தனது கற்பனையைத் தொய்வில்லாமல், கதைக்கு மேல் கதையாக நகர்த்திச்செல்வதில் வல்லவர் அவர்.

புனைகதைகளை வாசகர்களின் சுவைகளின் அடிப்படையில் எழுதுவதனாலோ என்னவோ சில வேளைகளில் அபுனைவுகளைப்பற்றி விபரிக்கையிலும் அவற்றிலும் வாசிக்கும் அல்லது கேட்டுக்கொண்டிருக்கும் வாசகர்களைக் கவரும் வகையில் புனைவுகளைக் கலந்து விடுகின்றாரோ என்று என்றொரு சந்தேகம் எனக்குண்டு. அச்சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்வதுபோல் நேற்று நடைபெற்ற வானொலி, தொலைக்காட்சிக் கலைஞர் வி.என்.மதியழகனின் 'சொல்லும் செய்திகள்' நூல் வெளியீட்டில் அவர் எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே பற்றிக் குறிப்பிட்ட சம்பவம் அமைந்திருந்தது. அவர் தனது உரையில் எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே ஒரு நாள் தனது கதையொன்றினை ஆரம்பிக்கத் தகுந்த சொற்கள் கிடைக்காது போனதனால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று குறிப்பிட்டார். நானறிந்தவரையில் ஹெமிங்வே தனது இறுதிக்காலத்தில் மன அழுத்தம் போன்ற பல்வேறு உளவியல்ரீதியிலான மற்றும் உடல்ரீதியிலான நோய்களுக்குள்ளாகியவர். அதன் காரணமாகவே அடிக்கடி மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்தவர். சில சமயங்களில் அவற்றில் தங்கியும் சிகிச்சை பெற்று வந்தவர். அவ்விதம் ஒருமுறை தம் உளவியல் சிக்கல்களுக்காகச் சிகிச்சை பெற்றுத் திரும்பி வந்தவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் பிரபல எழுத்தாளர்களின் நாவல்களின் முதல் வரிகளைப்பற்றிக் குறிப்பிடத்தொடங்கிய அ.மு அவர்கள் ஏர்னஸ்ட் ஹெம்ங்வேயின் முடிவையும் சுவையானதொரு புனைவாக்கி விட்டார். ஒருவேளை அவரின் அடுத்த சிறுகதையின் தலைப்பு 'ஏர்னட்ஸ்ட் ஹெமிங்வே எழுதாத நாவலின் எழுதாத முதல் வரிகள்' என்பதாக இருக்குமோ?
•Last Updated on ••Monday•, 05 •November• 2018 08:56•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 310 : வேந்தனார் இளஞ்சேய்!

•E-mail• •Print• •PDF•

- வேந்தனார் இளஞ்சேய் -இளஞ்சேய் (வேந்தனார் இளஞ்சேய்) இவர் என் மாணவப்பருவத்து நண்பர்களிலொருவர்.  வவுனியா மகா வித்தியாலயத்தில் எழாம் வகுப்பை முடித்துக்கொண்டு , எட்டாம் வகுப்பிலிருந்து என் கல்வி யாழ் இந்துக் கல்லூரியில் ஆரம்பமாகியது. 8G தான் என் வகுப்பு. அவ்வகுப்பில் என்னுடன் சக மாணவராக அறிமுகமானவர்தான் இளஞ்சேய். இலங்கையின் புகழ்மிக்க எழுத்தாளர்களிலொருவரான வேந்தனார் அவர்களின் இளைய புதல்வன். மிகவும் சிறந்த பேச்சாளர்ராக எம் வகுப்பில் அக்காலகட்டத்தில் விளங்கியவர். இளஞ்சேயிடமிருந்து அண்மையில் எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. இலண்டனில் எழுத்தாளர் முல்லை அமுதனிடமிருந்து என் மின்னஞ்சலைப்பெற்றுக் கடிதம் அனுப்பியிருந்தார். அவரது தந்தையார் அமரர் வேந்தனாரின் நூறாவது பிறந்ததினத்தையொட்டிப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிப்பதற்காகக் கட்டுரையொன்றினையும் அனுப்பியிருந்தார்.

இளஞ்சேயின் கடிதமும், மீள் தொடர்பும் மாணவப்பருவத்து நினைவுகளை மீண்டும் சிந்தையிலெழ வைத்துவிட்டன. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம் என் நல்ல நண்பர்களிலொருவராக விளங்கினார். நாமிருவருமே வாசிப்பதில் ஈடுபாடுள்ளவர்களாக இருந்ததும் முக்கிய காரணங்களிலொன்று. அக்காலகட்டத்திலேயே இவர் தன்னுடைய தந்தையாரை இழந்து விட்டிருந்தார். இவரது வீடு யாழ் இந்து மகளிரி கல்லூரிக்கு அண்மையிலிருந்தது. நான் இவரிடமிருந்து வாசிப்பதற்காகக் கதைப்புத்தகங்கள் வாங்குவதற்காக அடிக்கடி இவரது வீட்டுக்குச் சென்றிருக்கின்றேன். இவரும் அவ்வப்போது என்னிடம் புத்தகங்கள் இரவல் வாங்கிச்செல்வதற்காக வருவார்.

அக்காலகட்டத்தில்தான் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் முதுகலையில் பட்டம் பெற்றிருந்த இவரது மூத்த அக்கா கலையரசி அவர்களின் திருமணம் நல்லூர் ஆலயத்துக்கருகிலிருந்த ஆலயமொன்றில் நடைபெற்றது. மணமகனும் பேராதனைப்பல்கலைக்கழகப்பட்டதாரியே. அத்திருமணத்துக்காக எம் வகுப்பு மாணவர்கள் பலர் இணைந்து சென்றிருந்தோம். இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளது.

பின்னர் காலப்போக்கில் திசை மாறிச்சென்று விட்டோம். இவரைக் கடைசியாகச் சந்தித்தது கொழும்பில் பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச பஸ்ஸொன்றில். 1978- 1981ற்குட்பட்ட காலகட்டத்திலொரு நாளென்று ஞாபகம். அப்பொழுது இவர் கணக்கியல் துறையில் படித்துக்கொண்டிருந்தார். பின்னர் நாட்டு நிலை காரணமாக நான் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன். இவரும் பின்னர் இங்கிலாந்து சென்று விட்டதாக அறிந்திருந்தேன். ஆனால் தொடர்புகளிருக்கவில்லை. பல வருடங்களின் முன்னர் டொராண்டோ, கனடாவில் அமரர் வேந்தனாரின் நூல்கள் வெளியிடப்பட்டபோது அந்நூல்களிலொன்றில் இவரது பெயரைப் பார்த்திருந்தேன்.

•Last Updated on ••Friday•, 02 •November• 2018 00:48•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 309: தற்போதுள்ள இலங்கைச் சூழல் பற்றி...

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 309: தற்போதுள்ள இலங்கைச் சூழல் பற்றி...தற்போதுள்ள இலங்கைச் சூழலில் மீண்டும் மகிந்த ராஜபக்சவிடம் சரண்டைந்திருக்கின்றார் மைத்திரி. இலங்கை அரசியலைப்பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்க துரதிருஷ்டம் பிடித்த அரசியல்வாதி. அன்று யுத்த நிறுத்தம் கொண்டுவரக் காரணமாகவிருந்தார் அவர். ஆனால் அவர் துரதிருஷ்டம் சந்திரிகா அம்மையார் அவர் தலைமையிலான பாராளுமன்றத்தைக் கலைத்தார். மீண்டும் மோதல்களுக்கு அடிகோலினார். அடுத்து கைக்கெட்டிய தூரத்திலிருந்த ஜனாதிபதிப்பதவியை விடுதலைப்புலிகள் தேர்தலைப்பகிஸ்தரித்ததன் விளைவாக ஏற்பட்ட சாதகச்சூழலில் மகிந்த ராஜபக்சவிடம் பறிகொடுத்தார். பின்னர் யுத்தத்தை வென்ற துட்ட(:-) காமினியாக வெறி பிடித்தாடிக்கொண்டிருந்த மகிந்தாவின் ஆட்சியிலிருந்து , உபகண்ட. உலக அரசியற் சக்திகளுடன் இணைந்து , ஶ்ரீலங்கா கட்சியை உடைத்து நல்லாட்சி என்னும் பெயரில் மைத்திரியுடன் இணைந்து இலங்கையைக் கைப்பற்றினார். ஆனால் அதனையும் இன்று மைத்திரியின் முதுகு குத்தலால் இழந்து நிற்கின்றார். அன்று சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்குச் சகல நிறைவேற்றதிகாரங்களும் இருந்தன. ஆனால் இன்று மைத்திரி சிற்சேனாவின் ஜனாதிபதிப்பதவியை பத்தொன்பாதாவது திருத்தச் சட்டம் சிறிது கட்டுப்படுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் அவர் பிரதமரைப் பதவி நீக்கம் செய்தது இலங்கை அரசியல் அமைப்புக்கு முரணானது என்றே கருதுகின்றேன். இது பற்றி ஜெயம்பதி விக்ரமரட்ன (Jayampathy Wickramaratne ) நல்லதொரு கட்டுரையினைக் 'கொழும்பு டெலிகிறாப்' பத்திரிகையில் 'The Removal Of The Prime Minister: Why It Is Unconstitutional' என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். இலங்கை அரசியல் அமைப்புச்சட்டத்தின் பல்வேறு சரத்துகள் பற்றி ஆராய்ந்து அவர் இம்முடிவுக்கு வந்திருக்கின்றார். அவரது கட்டுரைக்கான இணைய இணைப்பு: https://www.colombotelegraph.com/index.php/the-removal-of-the-prime-minister-why-it-is-unconstitutional/

'இந்நிலையில் அலரி மாளிகையில் இன்னும் தங்கியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன் மக்கள் ஆதரவை வெளிப்படுத்த அழைப்பு விடுத்த மக்கள் ஆர்ப்பாட்டம் வெற்றியையே அளித்துள்ளது. இலட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ஆதரவளித்திருக்கின்றனர்.

இலங்கைத் தமிழர்களைப்பொறுத்தவரையில் தற்போதுள்ள சூழலில் எவ்விதம் செயற்பட  வேண்டும்?

இச்சமயத்தில் ஒன்றை நாம் மறக்கக் கூடாது? அது 2015ம் ஆண்டுக்கு முற்பட்ட சூழல். இலங்கையின் அனைத்து மக்களும் குறிப்பாகத் தமிழ் மக்கள் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இருண்ட காலகட்டம் அது. இருண்ட அக்காலகட்டத்தில் வெள்ளை வான் ஆட் கடத்தல்களும், காணமல் போதல்களும் அன்றாட வாழ்வின் அம்சங்களாகவிருந்தன. இலங்கைத் தமிழ்ப்பிரதேசங்களில் படையினரின் ஆதிக்கம் கடுமையாகவிருந்த காலகட்டம் அக்காலகட்டம்.  யுத்த முடிவுக்குப் பின்னான காலகட்டத்தில் அபிவிருத்திகள் நடைபெற்றன . உண்மைதான் ஆனால் அவை மக்கள் மீதுள்ள உண்மையான பற்றினால் அல்ல. அவற்றின் மூலம் பெறப்பட்ட கோடிக்கணக்கான ஊழற்பணத்துக்காக அவை நிறைவேற்றப்பட்டதாகக் கருத வேண்டும். அவ்வூழல் செயற்பாடுகளுக்கான வழக்குகள் பல இன்னும் நிலுவையில் நீதிமன்றங்களில் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது.

•Last Updated on ••Wednesday•, 31 •October• 2018 08:17•• •Read more...•
 

கவிதை: நினைவுகள்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: நினைவுகள்!

கடல்நினைவு!
நினைவுக்கடல்!
நினைவுமீன்கள்!
நினைவுகள் சகியே!

விண்நினைவு!
நினைவுவிண்!
நினைவுப்புட்கள்!
நினைவுகள் சகியே!

•Last Updated on ••Tuesday•, 30 •October• 2018 20:39•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 308: மகாவலி (L) - வாழ்வும் அரசியலும்!

•E-mail• •Print• •PDF•

நேற்று மாலை ஸ்கார்பறோ சிவிக் சென்ரரில் 'மகாவலி (L) - வாழ்வும் அரசியலும்' நிகழ்வு 'சமாதானத்துக்கான கனேடியர்கள் மற்றும் 'சம உரிமை இயக்கம்' ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். சமூக, அரசியற் செயற்பாட்டாளர்கள் மற்றும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரைக் காண முடிந்தது.நேற்று மாலை ஸ்கார்பறோ சிவிக் சென்ரரில் 'மகாவலி (L) - வாழ்வும் அரசியலும்' நிகழ்வு 'சமாதானத்துக்கான கனேடியர்கள் மற்றும் 'சம உரிமை இயக்கம்' ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். சமூக, அரசியற் செயற்பாட்டாளர்கள் மற்றும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரைக் காண முடிந்தது.

நிகழ்வினை அரசியற் செயற்பாட்டாளர் எல்லாளன் ராஜசிங்கம் தலைமையேற்றுச் சிறப்பாக நடத்தினார். நிகழ்வில் மூவரின் உரைகள் இடம் பெற்றன. பேராசிரியர் சிவச்சந்திரன் 'வடக்கின் நீர்வள மேம்பாடும் எதிர் நோக்கும் பிரச்சினைகளும்' என்னும் தலைப்பிலும், மகாவலி அதிகாரசபை முன்னாள் ஊழியர் மோகன் அந்தோனிப்பிள்ளை 'பயனற்ற குடியேற திட்டங்களும் பலிக்கடா ஆக்கப்பட்ட குடியேற்றவாசிகளும்' என்னும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். முன்னிலை சோசலிச கட்சியைச் சேர்ந்த புபுது ஜயகொடவின் ஒலி(ளி)ப்பதிவு செய்யப்பட்ட 'மகாவலியும் குடியேற்றமும்' காணொளி உரை நிகழ்வில் காண்பிக்கப்பட்டது.

இம்மூவரின் உரைகளும் மிகுந்த பயனைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு நிச்சயம் தந்திருக்கும். ஏனெனில் எனக்கு அவ்விதமான உணர்வே ஏற்பட்டது.

மோகன் அந்தோனிப்பிள்ளை மகாவலித் திட்டத்தில் பணியாற்றியபோது அபிவிருத்தி சம்பந்தமான விடயங்களிலேயே ஈடுபடுத்தப்பட்டிருந்தார். அவர் தனதுரையில் இலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்திலிருந்து இலங்கை அரசுகளால் (மகாவலித் திட்டமுட்பட) உருவாக்கப்பட்ட திட்டங்கள் பற்றியும், அவை எவ்விதம் தமிழ்ப்பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்படப்பாவிக்கப்பட்டன என்பது பற்றிய்யும் எடுத்துரைத்தார். அத்துடன் அவர் கூறிய இன்னுமொரு கருத்தொன்றும் கவனத்தை ஈர்த்தது. அது: டி.எஸ்.சேனநாயக்காவின் குடியேற்றத்திட்டங்கள் அக்காலகட்டத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கிய இடதுசாரிகளின் செல்வாக்கினை அழிக்கவும் பயன்படுத்தப்பட்டன. அதற்காக இடதுசாரிகளின் கோட்டைகளாக விளங்கிய பிரதேசங்களில் இவ்விதமான குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் மூலம் இத்திட்டங்களின் மூலம் பயனடையும் குடியேற்றவாசிகளின் ஆதரவினை வென்றெடுக்கலாம் என்பது டி.எஸ்.சேனநாயக்கா போன்றவர்களின் எண்ணமாகவிருந்தது. இச்சாரப்பட மோகன அந்தோனிப்பிள்ளையின் கருத்து அமைந்திருந்தது.

•Last Updated on ••Monday•, 29 •October• 2018 08:25•• •Read more...•
 

வாசிப்பும் யோசிப்பும் 307: நீண்ட தேடுதல் முடிவுக்கு வந்தது: அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் முப்பது கிடைத்தது!

•E-mail• •Print• •PDF•

மனக்கண் அத்தியாயம் முப்பது.காத்யானா அமரசிங்க அறிஞர் அ.ந.கந்தசாமியின் பத்திரிகையில் வெளியான ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. தொடராகத் தினகரனில் வெளியானபோது வாசகர்களின் அமோக ஆதரவினைப்பெற்ற நாவலிது. அ.ந.க.வின் துள்ளு தமிழ் நடையில் நாவலை வாசிப்பதே பேரின்பம்.  அமரர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் வானொலியில் அவரது 'தணியாத தாக'த்தைத் தொடர்ந்து, அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலையும் வானொலி நாடகமாக ஒலிபரப்பினார். இந்நாவல் தவிர அ.ந.க அவர்கள் தன் இறுதிக் காலத்தில் இன்னுமொரு நாவலையும் , மலையக மக்களை மையமாக வைத்துக் 'களனி வெள்ளம்' என்னும் பெயரில் எழுதியதாகவும், அந்நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், 83கலவரத்தில் செ.க.வின் கொழும்பு இருப்பிடம் எரியுண்டபோது அந்நாவலும் எரியுண்டு போனதாகவும் அறிகின்றேன்.

இவ்விதமானதொரு சூழலில் 'மனக்கண்' நாவலைத் தேடிக்கொண்டிருந்தபோது செ.கணேசலிங்கன் அவர்கள் கமலினி செல்வராசனிடம் இருக்கும் என்றும் , அவரது முகவரியைத்தந்து அவருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியிருந்தார். அவருடன் தொடர்பு கொண்டபோது அவர் அதைத்தருவதற்கு இலட்சங்களில் பணம் கேட்டார். எனவே அம்முயற்சியைக் கை விட வேண்டியதாயிற்று. பின்னர் எழுத்தாளர்கள் பலருக்கு எழுதிப்பார்த்தேன். தினகரன் ஆசிரியருக்கும் எழுதிப்பார்த்தேன். எதுவுமே கிடைக்கவில்லை. பின்னர் இலங்கைச்சுவடிகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அப்போது  அதன் இயக்குநராகவிருந்த விமலரட்னவுக்குக் கடிதமொன்று எழுதினேன். அதில் மனக்கண் நாவல் வெளியான காலகட்டத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கான பதிலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று எழுதினேன். என்ன ஆச்சரியம்.. அவரிடமிருந்து பதிற் கடிதம் வந்திருந்தது. அதில் மனக்கண் நாவல் வெளியான தினகரன் பிரதிகள் இருப்பதாகவும், அதனை அனுப்புவதாயின் போட்டோப்பிரதிகள் மற்றும் தேடுதலுக்கான கட்டணத்தை அனுப்பும்படி கூறியிருந்தார். கட்டணம் ஐம்பது கனேடிய டொலர்களுக்கும் குறைவானது. அனுப்பினேன். அவர் நாவலை 'லீகல் சைஸ்' அளவில் அனுப்பியிருந்தார். ஆனால் சுவடிகள் திணைக்களத்திடம் அத்தியாயம் 30 இருக்கவில்லை.

நாவலின் பிரதிகளை சிறிய எழுத்துகள் காரணமாக வாசிப்பதில் சிரமம் இருந்ததால் , நண்பர் ஸ்நேகா பாலாஜி அவர்களுக்கு அனுப்பி, தமிழகத்தில் தட்டச்சுச் செய்வித்துப்பெற்று, 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியிட்டேன்.

•Last Updated on ••Friday•, 26 •October• 2018 08:00•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 306: எழுத்தாளர் த.இந்திரலிங்கம் யார்? எங்கே? வினாக்களுக்கான விடைகள் கிடைத்தன.

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் த.இந்திரலிங்கம்என் மாணவப்பருவத்தில் என் போன்றவர்களையெல்லாம் சிரிக்க வைத்த எழுத்தாளர் த.இந்திரலிங்கம் யார் என்னும் வினாவுக்கான விடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ' ப்ன்முகத்திறமை மிக்க எழுத்தாளர் த. இந்திரலிங்கம்' என்னுமொரு பதிவினைப் 'பதிவுகள்' இணைய இதழிலும், முகநூலிலுமிட்டிருந்தேன்.

என் 'பதிவுகள்' இணைய இதற் பதிவினைப் பார்த்த நாடகவியலாளர் க.பாலேந்திரா இவருக்கு அப்பதிவின அனுப்பியிருக்கின்றார். அத்துடன் என் மின்னஞ்சல் முகவரியையும் அவருக்கு அறியத்தந்திருக்கின்றார். அவர் உடனேயே மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில்  பின்வருமாறு தன் எண்ணங்களைக் குறிப்பிட்டிருந்தார்:

•Last Updated on ••Friday•, 26 •October• 2018 07:42•• •Read more...•
 

வாசிப்பும் யோசிப்பும் 305: 'நவீன விஞ்ஞானி'

•E-mail• •Print• •PDF•

நவீன விஞ்ஞானி

ஈழத்துத்தமிழ் இலக்கியம் மிகவும் பெருமைப்படத்தக்கதொரு அறிவியற் பத்திரிகை 'நவீன விஞ்ஞானி'. வீரகேசரி நிறுவனத்தால் வார வெளியீடாக வெளியிடப்பட்ட பத்திரிகை அது. அறிவியலின் பல்வகைப்பிரிவுகளிலும் குறிப்பாக இரசாயனம், உயிரியல், கணிதம், பெளதிகம், புவியியல், விண்ணியல் , இலத்திரனியல் எனப் பல்வகைப்பிரிவுகளிலும் உயர்தரத்தில் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் ஆக்கங்களைப் போதிய விளக்கப்படங்களைத்  தாங்கி வெளியான பத்திரிகை இது. இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் மாணவர்கள் ஆர்வமுடன் 'நவீன விஞ்ஞானி' பத்திரிகையை வாசித்தார்கள். 'நவீன விஞ்ஞானி'பத்திரிகையின் 'மாணவர் மன்ற'த்தில் இணைந்து கொண்டார்கள்.  அறிவியல் அறிஞரும், அறிவியற் புனைகதை எழுத்தாளருமான ஆர்தர் சி கிளார்க் அவர்களின் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளும் 'நவீன விஞ்ஞானி' பத்திரிகையில் வெளியாகின.

•Last Updated on ••Wednesday•, 24 •October• 2018 23:23•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 304: வாசிப்பு பற்றிய எழுத்தாளர் கோமகனின் முகநூற் கருத்துகள் பற்றி...

•E-mail• •Print• •PDF•

டால்ஸ்டாய்எழுத்தாளர் கோமகன் தன் முகநூற் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "வாசிக்க வேண்டுமே என்பதற்காக எல்லாவற்றையும் வாசித்தால் இறுதியில் மண்டை சுக்கு நூறாகி வெடித்துவிடும் என்பது மட்டுமல்லாது தனக்குரிய கற்பனைவளத்தையும் சுயத்தையும் அது மழுங்கடித்து விடும். ஆக ஒருவனுக்கு எழுத்தும் கற்பனை வளமும் தானாக வரவேண்டியது ஒன்றாகும். அதற்கு வாசிப்பு பெரிதாக உதவப் போவதில்லை. வேண்டுமானால் அவை ஒருவரது எழுத்துப்பற்றிய ஒப்பீட்டுக்குத் துணை நிற்கலாம்."

வாசிப்பு என்பது தானாக விரும்பி வாசிப்பது. சிலர் வேலை காரணமாகவும் வாசிக்கின்றார்கள். உதாரணத்துக்குப் பத்திரிகை நிறுவனமொன்றில் வேலை பார்ப்பவர் வேலையின் காரணமாக கட்டாய வாசிப்புக்குத் தன்னை ஆட்படுத்த வேண்டிய தேவையுண்டு. அவ்வகையான வாசிப்பை நான் இங்கு குறிப்பிடவில்லை. கோமகனும் அவ்விதமான வாசிப்பைக் குறிப்பிடவில்லை எனவும் கருதுகின்றேன். வாசிப்பு என்பது இன்பத்தைத்தருமொன்று. அதற்கு வாழ்நாளே போதாது என்பதுதான் என்னைப்பொறுத்த குறை. வாசிப்பு என்னைப்பொறுத்தவரையில் மூச்சு விடுவதைப்போன்றது. மூச்சு விடுவதால் மண்டை வெடித்து விடுவதில்லை. வாசிக்காமல் இருந்தால்தான் மண்டை வெடித்து விடும். என்னைப்பொறுத்தவரையில்.  

அதிக வாசிப்பு என்பது 'தனக்குரிய கற்பனைவளத்தையும் சுயத்தையும் அது மழுங்கடித்து விடும்' என்றும் கோமகன் கூறுகின்றார். உண்மையில் பரந்த வாசிப்பு ஒருவரின் கற்பனை வளத்தையும், படைப்பாற்றலையும் மேலும் செழுமை அடைய வைக்குமென்பதே என் கருத்து. பரந்த வாசிப்பு காரணமாக ஒருவரின் எழுத்தாற்றல் மேன்மேலும் வளர்கின்றது. பரிணாமமடைகின்றது. மொழியைக் கையாடும் ஆற்றலும் மேலும் வளர்கின்றது.

அத்துடன் ஒருவனுக்கு 'எழுத்தும் கற்பனை வளமும் தானாக வரவேண்டியது ஒன்றாகும்.  அதற்கு வாசிப்பு பெரிதாக உதவப் போவதில்லை ' என்றும் கூறுகின்றார். எழுதும் ஆர்வம் என்பது பலருக்குத் தானாக பரம்பரை உயிரணுக்களின் பாதிப்பு காரணமாக வரலாம். அவ்விதம் இல்லாமலும் வாழும் சூழல் காரணமாகவும் வரலாம். கற்பனை வளம் என்பது அவரது வாசிப்பு , சிந்தனையாற்றல், பலவகை அனுபவங்கள் மற்றும் பரம்பரை உயிரணுக்களின் பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக செழுமையடையலாம். இது என் கருத்து. ஒருவரின் எழுத்துச்சிறப்புக்கும், படைப்பாற்றலுக்கும் நிச்சயம் வாசிப்பு பெரிதும் உதவும் என்பது என் கருத்து. உதாரணத்துக்குச் சங்கீதத்தில் ஆர்வமுள்ள ஒருவரின் திறமை வளர்வதற்கு அவர் நிச்சயம் அத்துறையில் மேலும் கற்க வேண்டும். பிறப்பிலேயே அவருக்குப் பாடும் திறமை இருந்தாலும் அவர் அத்துறையில் கற்காமல் சிறக்க முடியாது. சிலர் விதிவிலக்காக ஆரம்பத்தில் பிரகாசித்தாலும், அப்பிரகாசம் மேலும் சிறப்படையை பயிற்சியும், கல்வியும் அவசியம். இது போலவே எழுத்தைப்பொறுத்தவரையில் வாசிப்பு எழுத்தின் சிறப்புக்கு மிகவும் அத்தியாவசியமானதொன்று.

•Last Updated on ••Wednesday•, 24 •October• 2018 22:12•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 303: பன்முகத்திறமை மிக்க எழுத்தாளர் த.இந்திரலிங்கம்!

•E-mail• •Print• •PDF•

நுட்பம் -  1975என் மாணவப்பருவத்தில், யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் வெளிவந்துகொண்டிருந்த 'சிந்தாமணி' பத்திரிகையில் (தினபதி பத்திரிகையின் ஞாயிறுப் பதிப்பு சிந்தாமணி என்னும் பெயரில் வந்துகொண்டிருந்தது) த. இந்திரலிங்கம் என்னும் எழுத்தாளர் நகைச்சுவை ததும்பும் படைப்புகளை எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிய தொடரொன்று ஞாபகத்திலுள்ளது. அத்தொடரின் பெயர், பாத்திரங்களின் பெயர்கள் எல்லாம் மறந்து விட்டாலும், தொடரின் மையக் கரு இன்னும் ஞாபகத்திலுள்ளது. யாழ்ப்பாணத்து மணிக்கூட்டுக் கோபுரத்துக்கருகிலுள்ள முற்றவெளியிலிருந்தென்று நினைக்கின்றேன் சிலர் சந்திரனுக்கு 'ராக்கட்' மூலம் பயணிக்க விளைகின்றார்கள். 'அப்புக்குட்டி' 'மணியண்ணை' போன்ற பாத்திரங்களுடன் , சிறுவனொருவனும் விண்வெளி வீரர்களாகப் பயணிக்கின்றார்களென்று எண்ணுகின்றேன். பனங்கள்ளை ராக்கட்டுக்குரிய எரிபொருளாகப் பாவித்து ஒரு வழியாக ராக்கட்டில் புறப்படுகின்றார்கள். இவ்விதம் பலத்த ஆரவாரங்களுடன் புறப்பட்டவர்களின் விண்வெளிக்கப்பலுடனான தொடர்பு அறுந்து விடுகின்றது. தொடர்பு அறுவதற்கு முன்னர் அவர்கள் தரையினைக் கண்டது பற்றி அறிவிக்கின்றார்கள். பூமியிலிருந்தவர்களெல்லாரும் விண்வெளிக்கப்பலில் சென்றவர்கள் நிலவில் இறங்கிவிட்டதாக எண்ணுகின்றார்கள். அவர்களது நிலை பற்றிக் கவலையுறுகின்றார்கள். ஆனால் தொடரின் இறுதியில்தான் தெரிய வருகிறது அவர்கள் இறங்கியது நிலவிலல்ல , பரந்தனுக்கு அருகிலுள்ள பிரதேசமொன்றிலென்று. இவ்விதமாகத்தான் எனக்கு ஞாபகமிருக்கிறது. என் ஞாபகத்தில் பிழைகள் இருக்கக்கூடும். ஆனால அன்றைய காலகட்டத்தில் விழுந்து விழுந்து சிரித்துச் சிரித்து மேற்படி தொடரினை வாசித்தது மட்டும் இன்னும் நினவிலிருக்கிறது. ஈழத்தில் நகைச்சுவைப் படைப்புகளைத் தந்தவர்களில் த.இந்திரலிங்கத்தின் பெயரும் நிச்சயம் இடம்பெறும்.

அவ்வப்போது த.இந்திரலிங்கம் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றதா என்பது பற்றிப் பார்ப்பதுண்டு. அண்மையில் த.இந்திரலிங்கம் பற்றி மேலும் சில தகவல்கள் கிடைத்தன. மொறட்டுவைப்பல்கலைக்கழகம் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பெத்தை வளாகமாகவிருந்த சமயம், நாடகவியலாளர் க.பாலேந்திரா கட்டுப்பெத்தைத் தமிழ்ச்சங்கத்தலைவராக இருந்த சமயம், பொறியியல் பீட மாணவரான யோ.க.மதுரநாயகத்தை இதழாசிரியராகக் கொண்டு வெளியான கட்டுப்பெத்தைத் தமிழ்ச்சங்க இதழான 'நுட்பம்' சஞ்சிகையில் வெளியான அவரது அறிவியற் சிறுகதையான 'தொலைவிலிருந்து வந்தவர்கள்' என்னும் சிறுகதையில் அவரைப்பற்றி வெளியான சிறு குறிப்பிலிருந்து மேலும் சில தகவல்களை அறிய முடிகின்றது. [ கட்டுப்பெத்தை வளாகம், மொறட்டுவைப்பல்கலைக்கழகமாக 1978இல் மாறியது. மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்தின் 1980ஆம் ஆண்டுக்கான 'நுட்பம்' சஞ்சிகையின் இதழாசிரியராக நானிருந்தேன்.)

அச்சிறுகதையின் ஆரம்பத்தில் அவரைப்பற்றி வெளியான குறிப்புகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள்:

1. த.இந்திரலிங்கம் என்னும் இளம் எழுத்தாளரின் படைப்புகள் இலங்கை மற்றும் வெளிநாட்டுச் சஞ்சிகைகளில்  'ஆனந்தவிகடன்' , Readers Digest ஆகியவற்றிலும், பி.பி,சி உலகச்சேவையிலும் வெளியாகியுள்ளன. இவர் ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதுமாற்றலுள்ளவர் என்பதை இவை புலப்படுத்துகின்றன.

2. சிறுகதையின் தொடக்கத்திலுள்ள த.இந்திரலிங்கத்தின் சிறு குறிப்பு: " என் எழுத்து முயற்சிகளுக்குப் பலவகையிலும் ஊக்கமும், உற்சாகமும் அளித்துவரும் , உலகப்புகழ்பெற்ற , விஞ்ஞான எழுத்தாளரும், விஞ்ஞானியுமாகிய ஆதர் - ஸி - கிளார்க் (Arthur  C Clarke)அவர்களுக்குப் புனைகதை சமர்ப்பணம். ( இதிலிருந்து எழுத்தாளர் த.இந்திரலிங்கத்துக்கும், ஆர்தர் சி கிளார்க் அவர்களுக்குமிடையில் நிலவிய தொடர்பினையும் அறிய முடிகின்றது.

•Last Updated on ••Friday•, 26 •October• 2018 06:07•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 302 : கவிஞர் அனாரின் கவிதை பற்றிய முகநூற் பதிவு பற்றி; முல்லை அமுதனின் காற்றுவெளி!

•E-mail• •Print• •PDF•

பாரதியார்இளங்கோவடிகள்கவிஞர் அனார்  தனது முகநூற் பதிவொன்றில் கவிதையைப்பற்றி இவ்விதம் குறிப்பிட்டிருந்தார்:

"யாருக்காக நாம் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம்? நமக்காகத்தான் எழுதுகிறோம் என்றால், நமக்கே அதனை ஏன் திரும்பத் திரும்ப அழுத்திச் சொல்லவேண்டி இருக்கின்றது ? இன்னொருவருக்காக யாரும் கவிதைகள் எழுதுவதில்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இரண்டுபட்ட மனதை கொண்டுசென்று சொற்களாலான கூட்டை இளைத்து நிரந்தரமின்மையான அனைத்திலும் இருந்து விடுதலையடைய முயலும் தொடர்ச்சியான செயற்பாடுதான் கவிதை. கவிதை இன்னொரு உணர்ச்சியென நான் நினைக்கிறேன். அந்த உணர்ச்சிக்கு ஆண்பால், பெண்பால், அரசியல், தத்துவம், கோட்பாடு, கலைத்தாகம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகும்....."

இக்கூற்றின் ஆரம்பத்தில் "யாருக்காக நாம் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம்? நமக்காகத்தான் எழுதுகிறோம் என்றால், நமக்கே அதனை ஏன் திரும்பத் திரும்ப அழுத்திச் சொல்லவேண்டி இருக்கின்றது ?" என்று கேள்வியைக் கேட்டு, அதற்கான பதிலையும் கேள்வியிலேயே முடித்திருக்கின்றார். இதன்படி நமக்காகக் கவிதைகள் எழுதவில்லை என்னும் தொனியும் பிரதிபலிக்கின்றது. அடுத்து வரும் வரிகளில் "இன்னொருவருக்காக யாரும் கவிதைகள் எழுதுவதில்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். " என்றும் அவர் கூறுகின்றார்.

இக்கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. கவிதை என்பது பல்வேறு காரணங்களுக்காக எழுதப்படலாம். கவிஞர் தன் உணர்வுகளின் வடிகாலாகத்தனக்காக எழுதலாம். அவர் தனக்காக எழுதியபோதும் அக்கவிதையின் சிறப்பினால் பலருக்கும் அது பிடித்துப்போகலாம். உதாரணமாகப் பட்டினத்தார் தன் தாயின் இறுதிச்சடங்குகளின் போது பாடிய கவிதைகளைக் குறிப்பிடலாம். அதிலவர் அக்கணத்தில் தன் தாயின் பிரிவு ஏற்படுத்திய உணர்வுகளை வடித்திருப்பார். அச்சமயம் அவர் பாடியவைகளில் ஒன்றான பின்வரும் பாடல் அனைவரும் அறிந்த பாடல்களிலொன்று:

•Last Updated on ••Tuesday•, 23 •October• 2018 07:57•• •Read more...•
 

வாசிப்பும்,யோசிப்பும் 301: நினைவில் நிற்கும் எஸ்.பொ!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் எஸ்.பொ

எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள் ஒருமுறை (2000) கனடா வருகை தந்திருந்தார். வருவதற்கு முன்னர் எனது முகவரிக்கு எனக்குக் கடிதமொன்றினை அனுப்பியிருந்தார். அதிலவர் தன் கனடா விஜயம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தொடர்ந்து செய்யவுள்ள உலகப்பயணம் பற்றியும் கூறியிருந்தார். அதிலவர் கூறியிருந்தவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்:

"படைப்பிலக்கியத்திலே நீங்கள் அடைந்துவரும் முன்னேற்றமும் வெற்றியும் மனசுக்குக் குளிர்வினைத்தருகின்றது. நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமென நம்புகின்றேன். நான் எதிர்வரும் ஆகஸ்டு மாதம் பிற்பகுதியிலே கனடா வரத்திட்டமிட்டுள்ளேன். பத்து நாள்கள் Toronto வில் தங்கலாம் என்பது திட்டம். அங்கு வாழும் தமிழ் நேசங்களையும், இலக்கியப் படைப்பாளிகளையும் நேரிலே சந்தித்து அளவளாவதுதான் இந்தப் பயணத்தின் நோக்கம். இது தமிழ்ப்பயணம்.

இலக்கியப்பயணம். குழு நலன்களை பேசுவதற்கப்பாற்பட்ட முதிர்ச்சி அடைந்து விட்டேன். இந்நிலையில் படைப்பிலக்கியத்திற்குச் செழுமை சேர்க்கும் இளவல்கள் கூட்டத்தினைச் சந்திப்பதற்கே அதிகம் விரும்புகின்றேன். .... கனடாவிலிருந்து லண்டன் போய், அங்கிருந்து சில மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று , சென்னையை அடைவது திட்டம். தற்பொழுது நான் அதிக காலத்தினைச் சென்னையிலேயே செலவு செய்கின்றேன். உலகப்படைப்பிலக்கிய மையம் ஒன்றினை இங்கு நிறுவியுள்ளேன். புத்தாயிரத்திலே புலம் பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளே இலக்கிய வீரியத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என்கிற சுவிஷேசத்தின் பிரசாரகனாயும் சென்னையில் வாழ்கின்றேன்."

இவ்விதம் கூறியிருக்கும் எஸ்.பொ அவர்கள் கடிதத்தின் இறுதியில் பின்வருமாறு கூறியிருப்பார்: "இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றினைத் தக்கபடி ஆவணப்படுத்தும் பாரிய நூலொன்றினையும் எழுதிக்கொண்டிருக்கின்றேன். அதிலே குறிப்பிடும் தகவல்களைச் செப்பம் பார்ப்பதற்கும் இந்தப்பயணத்தினைப் பயன்படுத்துதல் நோக்கம்"

•Last Updated on ••Wednesday•, 17 •October• 2018 22:29•• •Read more...•
 

கவிதைத்தொகுப்பு: அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள். -

•E-mail• •Print• •PDF•

அறிமுகம்: கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு! - வ.ந.கிரிதரன் -

கவிதைத்தொகுப்பு: எதிர்காலச்சித்தன் பாடல்! - அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள். -ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது' என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது

[மறுமலர்ச்சிக் குழுவினரால் வெளியிடப்பட்ட சஞ்சிகையே 'மறுமலர்ச்சி' சஞ்சிகை. இச்சஞ்சிகையில் எழுதிய படைப்பாளிகளையே மறுமலர்ச்சி எழுத்தாளர்களாகக் காணும் போக்கொன்று செங்கை ஆழியானுட்பட இன்று இலக்கிய விமர்சனங்கள், ஆய்வுகள் செய்ய விரும்பும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினைச் சார்ந்த செல்லத்துரை சுதர்ஸன் போன்றவர்கள் மத்தியில் நிலவுவதாகத் தெரிகிறது. இது ஒரு பிழையான அணுகுமுறை. மறுமலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கி, அதில் பாடுபட்டவர்களின் படைப்புகள் யாவும் மறுமலர்ச்சிப் படைப்புகளாகத்தான் கருதப்பட வேண்டும். உண்மையில் மறுமலர்ச்சிச் சிறுகதைகள், அல்லது மறுமலர்ச்சிக் கவிதைகள், அல்லது மறுமலர்ச்சிப் படைப்புகள் , மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும்போது அது மறுமலர்ச்சி சஞ்சிகையில் எழுதிய எழுத்தாளர்களை மட்டும் குறிக்கவில்லை.  அது மறுமலர்ச்சி காலகட்டப் படைப்பாளிகளையும் குறிப்பிடுகிறது. அந்த 'மறுமலர்ச்சி' இதழினை வெளியிட்ட மறுமலர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியவர்களின் படைப்புகளையும் குறிக்கிறது. இதுவே சரியான நிலைப்பாடாகவிருக்க முடியும் என்பதென் கருத்து. செங்கை ஆழியான, செல்லத்துரை சுதர்ஸன் போன்றோர் இந்த விடயத்தில் கருத்துச் செலுத்த வேண்டுமென்பதென் அவா. சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா, எம். ஏ. நுஃமான் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்' என்னும் நூலில் ஈழத்துக் கவிதையுலகின் மறுமலர்ச்சிக் கட்ட காலம் பற்றிக் குறிப்பிடும்போது அ.ந.கந்தசாமி, மகாகவி, நாவற்குழியூர் நடராசன் ஆகியோரை மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் முக்கியமான கவிஞர்களாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் கவீந்த்திரன் என்னும் புனைபெயரிலும் எழுதிய அறிஞர் அ.ந.கநதசாமியை ஈழத்தின் தமிழ்க் கவிதையில் முதலாவதாக இடதுசாரிச் சிந்தனையினை அறிமுகப்படுத்திய படைப்பாளியாகவும் குறிப்பிடுவர்.இவ்விதம் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றியே குறிப்பிடப்படவேண்டுமே தவிர 'மறுமலர்ச்சி' சஞ்சிகையின் படைப்புகளை மட்டும் மையமாக வைத்து மறுமலர்ச்சிக் காலகட்டத்தை எடை போடக்கூடாது. அவ்விதமான போக்கு ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய பிழையான பிம்பத்தினைத் தந்துவிடும் அபாயமுண்டு. ]

•Last Updated on ••Friday•, 22 •March• 2019 20:27•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 299 : பாட்டைசாரியின் ''பாதை ஓரத்தில்''! 'பாட்டைசாரி' யார்?

•E-mail• •Print• •PDF•

பாட்டைசாரியின் பாதை ஒரத்தில்

ஈழகேசரி பத்திரிகையின் பழைய பிரதிகளின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தபோது பத்தி எழுத்தாளர் ஓருவரின் பத்திகள் என் கவனத்தை ஈர்த்தன. அவர் வேறு யாருமல்லர் 'பாட்டைசாரி'யே அவர் அவரது 'பாதை ஓரத்தில்' என்னும் பத்தி ஈழகேசரியில் நாற்பதுகளின் ஆரம்பத்திலிருந்து  அதன் இறுதிவரை , பத்து வருடங்களுக்கும் அதிகமாக ஈழகேசரியில் வெளியாகியிருந்தது. அப்பத்திகளினூடு அக்காலச் சமுக, அரசியல் (உள்நாட்டு & வெளிநாட்டு) நிலைமைகளை அறிய முடிந்தது. அவற்றை வெளிப்படுத்தும் ஆவணங்கள் அவை. அவை பற்றிய பாட்டைசாரியின் விமர்சனக் குறிப்புகள் அவை. உதாரணத்துக்கு அவரது பத்தியொன்றினைப்பார்ப்போம்:

ஈழகேசரி ஞாயிறு 29.8.48:
"இலங்கைப் பல்கலைக்கழகத்து உப அத்தியட்சகர் சமீபத்திற் சீமைக்குச் சென்றிருந்தார். அங்கு அவரை ஒரு பல்கலைக்கழகம் கெளரவப்பட்டமளித்துக் கண்ணியப்படுத்திற்று. அப்பட்டத்தைப் பிற்போக்கு அரசியல்வாதியான சேர்ச்சில் வழங்கிய்யிருந்தார். சேர்.ஜென்னிங்ஸ் இருக்கின்றாரே, அவர் ஏகாதிபத்தியத்துக்கு மிண்டு கொடுக்கும் ஒரு டாக்குத்தர். இப்பெரியாருக்கு ஏகாதிபத்தியப் பெருச்சாளியாய் சேர்ச்சில் பட்டம் வழங்கியது மிகவும் பொருத்தமானதாகும். இனி சேர் ஜென்னிங்ஸ் அவர்கள் இலங்கையிலும், மலாயாவிலும் பல்கலைக்கழகங்கள் மூலம் தாய்ப்பாஷைக்குக் குழி தோண்டலாம்."

காடைத்தனம்
சேர் ஜென்னிங்ஸ் பிறந்தநாட்டை நோக்கிச் சென்ற காலத்தில் அவருக்குப் பதிலாகப்  பேராசிரியர் ஏ.டபிள்யு மயில்வாகனம் கடமையாற்றினார். அந்தக் காலத்திற் பல்கலைக்கழகக்த்து மாணவர்கள் சிலர் காடைத்தனமாக நடந்துகொண்டதுமன்றி அங்கு முதன் முறையாகச் சேர்ந்துகொண்ட மாணவிகளைத் துன்புறுத்தினரெனவும் பத்திரிகைகளிற் படித்தோம்.  முஸ்பாத்திக்காகச் சில வேடிக்கைகள் பல்கலைக்கழகங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் எதற்கும் ஒரு எல்லை வேண்டாமா? பண்பாடு, சீர்சிருத்தம் என்ற பெயராற் காடைத்தனங்கள் நடைபெறுவதை யார்தான் சகிக்க முடியும்? ஆகவே, சேர் ஜென்னிங்ஸ் இலங்கை திரும்பியதும் குறித்த மாணவர்களின் சேட்டைகள் அவருக்கு எடுத்தோதப்பட்டன. கூட்டங்கூடி ஆலோசித்த பின்னர் ஏழு மாணவர்கள் சரியாகக் கண்டிக்கப்பட்டனர். இது ஏனையோருக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்குமல்லவா?

அரசியற் சாஸ்திரம்
அரசியல் என்றால் அது கிள்ளுக்கீரையாகி விட்டது. இது காரணமாகத் தெரிவிற் போவோர் வருவோர் பலர் அரசியலைப்பற்றிப் புகைப்பறக்கப்பேசுகின்றனர். அரசியல் சாமனியமான கலையல்லவென்பதைத் தமிழ்க் காங்கிரஸ் அடைந்த பெரிய வெற்றியிலிருந்தும், அது கெளரவமற்ற முறையிற் சரணடைந்த  தோல்வியிருந்தும் நன்கு அறிந்துகொள்ளலாம். 'அரசியற் சாஸ்திரத்துக்கு இரண்டு முகங்களுண்டு. ஒன்று உண்மை. மற்றொன்று கற்பனை' என ஓர் அறிஞர் கூறுகிறார். :-)

அவர் மேலுங் கூறுவதாவது :- "அதாவது நிகழ்காலத்தில் நம் கண்முன்னே காணப்படுகின்ற அரசியல் அமைப்புகள், அவற்றின் அசைவுகள், அந்த அசைவுகளினால் உண்டாகின்ற விளைவுகள், இவைகளை உதாரணமாகக வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் அரசியல் அமைப்பு எப்படியிருக்க வேண்டும், எப்படியிருந்தால் அதிகமான நன்மைகள் உண்டாகும் என்பனவ்வற்றைக் கற்பனை செய்து காட்டவேண்டியது அரசியற் சாஸ்திரத்தின் கடமையாகக் கருதப்படுகின்றது."

தமிழ்க் காங்கிரஸுக்கு அரசியல் தூரதிருஷ்டியுமிருக்கவில்லை. கற்பனையூற்றும் சுரக்கவில்லை. ஆகவேதான் அது நிலை நிற்க முடியவில்லை.

•Last Updated on ••Friday•, 05 •October• 2018 07:23•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 298 : இலங்கைப்புகலிடத் தமிழர்களின் 'நாடுகடந்தஉள்ளூர்த் தேசியம் (Translocal Nationalism)!

•E-mail• •Print• •PDF•

 கலாநிதி ஞானசீலன் ஜெயசீலன்இலங்கைப்புகலிடத் தமிழர்களின் 'நாடுகடந்தஉள்ளூர்த் தேசியம் (Translocal Nationalism) : வ.ந.கிரிதரனின் தேர்தெடுத்த சிறுகதைகள் மீதான வாசிப்பு! - கலாநிதி ஞானசீலன் ஜெயசீலன் (The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora: A Reading of Selected Short Stories of V.N. Giridharan By Dr. Gnanaseelan Jeyaseelan)

நாடு கடந்த அரசு, நாடு கடந்த தேசியம், நாடு கடந்த உற்பத்தி, நாடு கடந்த பொருளாதாரம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கின்றீர்கள். 'நாடு கடந்த உள்ளூர் தேசியம்' (Translocal Nationalism) என்னுமொரு சொற்றொடரைக் கேள்விப்பட்டிருக்கின்றீகளா? குறிப்பாக எமது விமர்சகர்களிடமிருந்து கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? கேட்டிருந்தால் அறியத்தாருங்கள். ஆனால் நான் முதலில் இச்சொற்றொடரை அறிந்து கொண்டது 2007இல். அப்பொழுது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றிக்கொண்டிருந்த கலாநிதி ஞானசீலன் ஜெயசீலனின் ஆய்வுக்கட்டுரையொன்றிலிருந்து. அக்கட்டுரையை அவர் மார்ச் 13, 2007 அன்று சென்னையில் 'நியூ காலே'ஜில் நடைபெற்ற இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுக் கருத்தரங்கில் சமர்ப்பித்திருந்தார். அக்கருத்தரங்கானது ஆசியர்களின் புகலிடப் புனைவுகளில் காணப்படும் அடையாளம் மற்றும் கலாச்சாரப்பிரச்சினைகள் பற்றியது. அதற்காக அவர் எடுத்துக்கொண்ட புனைகதைகள் ஆங்கிலத்தில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்ட எனது சிறுகதைகளான 'ஒரு முடிவும் விடிவும்', 'ஒரு மா(நா)ட்டுப்பிரச்சினை', 'மான்ஹோல்', 'வீடற்றவன்', 'சுண்டெலிகள்' மற்றும் where are you fom? ஆகியவையாகும்.

நாடுகடந்த உள்ளூர்த் தேசியம் (The ‘Translocal’ Nationalism )

இதற்கு முதல் நாடுகடந்த உள்ளூர்த் தேசியம் என்றால் என்ன? என்று சிறிது பார்ப்போம். புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த குடிவரவாளர்கள் பலரும் பல்வகைப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். புகலிடம் நாடிப்புகுந்த மண்ணில் அவர்கள் எதிர்நோக்கும் அடையாளச்சிக்கல்கள் பல்வகையின. மொழி, கலாச்சாரம், நிறம் என்று அவர்கள் பல்வகைப்பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். அதே சமயம் அவர்களால் அவர்கள் விட்டு விட்டு வந்த பிறந்த மண், அங்குள்ள அவர்களை உருவாக்கிய கலாச்சாரக் கூறுகளை, அரசியலை எல்லாம் மறந்து விட முடியாது. நாடு கடந்து வாழும் நிலையிலும் அவர்கள் கவனம் அவர்களது இழந்த மண்ணின் மீதிருக்கும். பிறந்த மண்ணின் அரசியலில் அவர்களது பங்களிப்பு இருக்கும். பிறந்த மண்ணின் பொருளாதாரத்தில் அவர்களது பங்கு இருக்கும். பிறந்த மண்ணின் சமூகத்தில் புகலிட அனுபவங்கள் மூலம் பல் வகை மாற்றங்கள் ஏற்படும் நிலைக்குக் காரணமாகவும் புகலிடக் குடிவரவாளர்களிருப்பார்கள்.

•Last Updated on ••Monday•, 24 •September• 2018 07:24•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 297 : நாடு கடந்த முதலாளித்துவப் பொருளாதாரமும், அரசும் மற்றும் உற்பத்தியும் சமூகவியலறிஞர் வில்லியம் ஐ.ராபின்சனின் கருதுகொள்களும்..

•E-mail• •Print• •PDF•

மாமூலனின் 'இனப்படுகொலை நாட்களில் (குரலற்ற கனடாப்பத்தி எழுத்துக்கள்)மாமூலன்அண்மையில் 'நாளை பதிப்பகம்' (கனடா) வெளியிட்ட மாமூலனின் 'இனப்படுகொலை நாட்களில் (குரலற்ற கனடாப்பத்தி எழுத்துக்கள்)' நூலை வாசித்துக் கொண்டிருந்தபொழுது அதிலுள்ள சில கட்டுரைகள் கவனத்தைக் கவர்ந்தன. அவை நாடு கடந்த அரசு பற்றிய கட்டுரைகள். அவற்றிலும் குறிப்பாக என்னைக் கவர்ந்த கட்டுரை 'நாடு கடந்த நாடு வினாவிடை (Transnational State: A short introduction for dummies) ' என்னும் கட்டுரை. கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகச் சமூகவியற் பேராசிரியரான வில்லியம் ஐ. ராபின்சன் (William I.Robinson) அவர்கள் அரசியற் பொருளாதாரம், உலகமயமாதல் , இலத்தீன் அமெரிக்கா மற்றும் வரலாற்றுப்பொருள்முதல்வாதம் ஆகிய துறைகளை மையமாக வைத்து ஆய்வு செய்பவர். இவர் கிரேக்கப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் கருத்துகளைச் சுருக்கமாக வெளிப்படுத்தும் கட்டுரை.

அந்நேர்காணலில் வில்லியம் ஐ. ராபின்சன் தெரிவித்துள்ள கருத்துகளைச் சுருக்கமாக வழங்கும் மாமூலனின் கருத்துகளைச் சுருக்கி இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

1. புதிய முதலாளித்துவம் 'நாடு கடந்த மூலதன'ங்களைக் கொண்டது. அத்துடன் உலகலாவியரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட நாடு கடந்த உற்பத்தி முறையும், பொருளாதார ஒழுங்கமைவும் உள்ளன.

2. நாடு கடந்த உற்பத்தி முறையானது ஓர் இடத்தை மையமாகக் கொண்ட உற்பத்தி முறை அல்ல. அதாவது பொருளொன்றின் பாகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நாடுகளில் செய்யப்பட்டு இன்னுமொரு நாட்டில் ஒன்றாக்கப்பட்டுச் சந்தைக்கு
வருகின்றன.

3. தேசியப்பொருளாதாரங்கள் உலகமயமாதலால் மீள் கட்டமைக்கப்பட்டுள்ளன. நாடு கடந்த உற்பத்தி என்பதும் உலகம் தழுவிய இப்பொருளாதாரத்தின் விளைவே.

4. மூலதனமானது தேசிய , உள்ளூர் மூலதனங்கள், நாடு கடந்த உலகலாவிய மூலதனம் எனப்பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் நாடு கடந்த மூலதனமே ஆதிக்கம் செலுத்துவதாகவுள்ளது.

5. நாடு கடந்த அளவிலான முதலாளித்துவ முதலீடு செய்யும் குழுக்கள் இன்று உலகளாவியரீதியிலுள்ளன. இவையே உலகத்தின் ஏனைய அதிகார, ஆளும் வர்க்கங்களின் மீது மிகப்பெரும் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன.

•Last Updated on ••Saturday•, 22 •September• 2018 07:06•• •Read more...•
 

ராஜினி திரணகம: மண்ணின் மகளே நீ வாழி!

•E-mail• •Print• •PDF•

- செப்டம்பர் 21 ராஜினி திரணகமவின் நினைவு தினம். அவர் நினைவாக -

ராஜினி திரணகம

மானுடர்தம் உரிமைகளுக்காய்ப்போராடினாய்!
மண்ணின் விடுதலைக்காய்க் குரல் கொடுத்தாய்.
மாணவர்க்கு மருத்துவம் போதிப்பதற்காய்
மீண்டும் வந்தாய் நீ பிறந்த மண்ணுக்கு.
மண்ணோ யுத்த பூமியாக,
மரண பூமியாகக் கொந்தளித்துக் கிடந்தது.

மண்ணின் அச்சூழல் கண்டும் நீ
மனந்தளரவில்லை.
மக்களுக்காய், மக்கள்தம் உரிமைகளுக்காய்
மீண்டும் மீண்டும் முழங்கினாய்.

மரணம், உன் மரணம் உன்
மண்ணின் மைந்தனொருவானாலே புரியப்படுமென்று
மனத்தில் உணர்ந்திருந்தாய்.
மனத்தில் உணர்ந்ததை எதிர்வும் கூறினாய்.

மருத்துவபீடத்தின் முன்னால் உன்
மரணம் நிகழ்ந்தது தீராத்துயர்; மாறா வலி.

•Last Updated on ••Friday•, 21 •September• 2018 06:43•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 296 : தமிழினி ஜெயக்குமரனின் 'மழைக்கால இரவு' சிறுகதைத்தொகுப்பு பற்றி; கிழக்கில் சுடர்விட்ட தாரகை!; எழுத்தாளர் தேவகாந்தனுடன் ஒரு மாலைப்பொழுது!

•E-mail• •Print• •PDF•

தமிழினி ஜெயக்குதமிழினி ஜெயக்குமரனின் 'மழைக்கால இரவு' சிறுகதைத்தொகுப்பு பற்றி...,மரனின் 'மழைக்கால இரவு' சிறுகதைத்தொகுப்பு தமிழகத்தின் 'பூவரசி' பதிப்பகமும், இலங்கையிலுள்ள 'ஷேக் இஸ்மையில் நினைவுப் பதிப்பக'மும் இணைந்து கடந்த ஆண்டு வெளியிட்ட நூல். ஏற்கனவே சிங்களத்தில் வெளியான 'அளுயம் சிஹினய' சிறுகதைத்தொகுப்பின் மூல வடிவம். 'கவுரவக் கவசம்', 'மழைக்கால இரவு', 'சுதர்சினி', 'வைகறைக் கனவு', 'பாக்கியம்மா' மற்றும் 'எனது மகன் வந்திட்டான்' ஆகிய ஆறு கதைகளின் தொகுப்பு. தமிழினியின் மறைவுக்குப்பின்னர் அவரது சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்', 'தமிழினி கவிதைகள்' மற்றும் 'மழைக்கால இரவு' (சிறுகதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை வெளியிடக் காரணமாகவிருந்த அவரது கணவர் ஜெயக்குமரனை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். இவை அனைத்துமே தமிழினியின் அனுபவங்களை கலை, இலக்கிய மற்றும் அரசியல் வரலாற்றில் பதிவு செய்பவை. அத்துடன் தமிழினியின் பல்வேறு காலகட்டச் சிந்தனைப்போக்குகளின் பரிணாம வளர்ச்சியினை வெளிப்படுத்துபவை.

தமிழினியின் 'மழைக்கால இரவு' சிறுகதைத்தொகுப்பும் இலங்கை அரசின் சாகித்திய அமைப்பின் 2017ஆம் ஆண்டுச் சிறந்த சிறுகதைத்தொகுப்பு விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட இறுதிச்சுற்றில் தெரிவான மூன்று நூல்களிலொன்றாக இருந்தது என்னும் விடயத்தை அறிந்தேன். இறுதிச்சுற்றுக்குத் தெரிவான மூன்று நூல்களின் விபரங்கள் வருமாறு:

1. ஒரு பெண்ணின் கதை - எம்.எஸ்.அமானுல்லா
2. உயிருதிர் காலத்தின் இசை - பதுளை சேனாதிராஜா
3. மழைக்கால இரவு - தமிழினி ஜெயக்குமாரன்

( இறுதியில் விருது பெற்ற நூல் பதுளை சேனாதிராஜாவின் 'உயிருதிர் காலத்தின் இசை'.)

தமிழினியின் மேற்படி தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் 'மழைக்கால இரவு', 'வைகறைக் கனவு' மற்றும் 'பாக்கியம்மா' ஆகிய சிறுகதைகள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியவை என்பதை இத்தருணத்தில் நினைத்துப்பார்க்கின்றேன். அவர் முதலில் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பிய சிறுகதை 'மழைக்கால இரவு'. அதனை வெளியிட்டபோது கீழுள்ள குறிப்புடன் வெளியிட்டோம்:

•Last Updated on ••Monday•, 17 •September• 2018 22:47•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 295: ஶ்ரீலங்கா சஞ்சிகையின் கலை, இலக்கியப்பங்களிப்பும், அ.ந.கந்தசாமியின் படைப்புகளும்!

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீலங்கா இதழொன்றுஅறிஞர் அ.ந.கந்தசாமி'ஸ்ரீலங்கா' சஞ்சிகை இலங்கைத் தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தமிழ்ச் சஞ்சிகை. ஆகஸ்ட் 1950 - டிசம்பர் 1963 காலகட்ட இதழ்கள் பல (தொடர்ச்சியாக அல்ல) நூலகம் இணையத்தளத்திலுள்ளன. இவற்றைப் பார்த்தபோதுதான் ஈழத்தமிழ்இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பினைச் செய்த சஞ்சிகைகளிலொன்றாக இச்சஞ்சிகையையும் காண முடிந்தது.

அறிஞர் அ.ந.கந்தசாமி, திரு.குல சபாநாதன் போன்றவர்கள் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணி புரிந்த காலகட்டத்தில் , அவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த சஞ்சிகை இச்சஞ்சிகையென்று அறிந்திருக்கின்றேன்.ஆனால் சஞ்சிகையின் முன் அட்டையில் அரசாங்க சமாச்சாரப் பகுதியால் வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசிப்பக்கத்தின் அடியில் தகவற் பகுதியினருக்காக இலங்கை அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பெற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றிய விபரமெதனையும் காணவில்லை.
ஆனால் இச்சஞ்சிகையின் உருவாக்கத்தில் அறிஞர் அ.ந.கந்தசாமி, திரு.குல சபாநாதன் ஆகியோரின் பங்களிப்பினை சஞ்சிகையில் வெளியான படைப்புகள் வாயிலாக அறிய முடிகின்றது. இருவருமே இச்சஞ்சிகை வெளிவந்த காலகட்டத்தில் இலங்கைத் தகவற் திணைக்களத்தில் பணி புரிந்து கொண்டிருந்ததாலும், இருவருமே நாடறிந்த எழுத்தாளர்கள் என்பதாலும் 'ஶ்ரீலங்கா' சஞ்சிகையின் ஆசிரிய பீடத்தினை அலங்கரித்தவர்களாக அறிந்த தகவல் உண்மையென்றே தோன்றுகின்றது.

இலங்கைத் தகவற் திணைக்கள வெளியீடு என்பதால் அரசு பற்றிய , அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய சஞ்சிகையாக இச்சஞ்சிகை விளங்கினாலும், ஈழத்தமிழ்க் கலை, இலக்கியத்துக்குக் காத்திரமான படைப்புகளையும் கூடவே வெளியிட்டுள்ளதால் , ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் முக்கிய சஞ்சிகைகளிலொன்றாக இச்சஞ்சிகை விளங்குகின்றது எனலாம்.

கவிதை, சிற்பக்கலை பற்றி, ஆலயக் கட்டடக்கலை பற்றி, பல்லினச் சமூகங்கள் பற்றி, ஊர்களைப்பற்றி, கந்தரோடை, நல்லூர் போன்ற நகர்கள், அரசின் பல் வகை நீர்ப்பாசனத்திட்டங்கள் பற்றி, பரந்தன் இரசாயன, வாழைச்சேனைக் காகிதத் தொழிற்சாலைகள் பற்றி, ஆதிவாசிகளான குறவர்கள் பற்றி இவ்விதம் இச்சஞ்சிகையின் களம் விரிந்தது. மிகுந்த பயன் தருவது. அறிஞர்கள், எழுத்தாளர்கள் எனப்பலரின் படைப்புகள் பலவற்றைத்தாங்கி வெளியாகிய சஞ்சிகை ஶ்ரீலங்கா. அவ்வகையில் தவிர்க்க முடியாத கலை,
இதுவரை இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாறு பற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் பேராசிரியர்கள் , எழுத்தாளர்கள் பலர் இனிமேலாவது இது போன்ற காத்திரமான கலை, இலக்கியப் பங்களிப்பு செய்த சஞ்சிகைகள் பக்கமும் கவனம் செலுத்தட்டும்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. " என்னும் வள்ளுவனாரின் குறளுக்கொப்ப ஆய்வுகளைக் காய்தல், உவத்தலின்றிச் செய்யட்டும்.

இலக்கியச் சஞ்சிகை.நூலகத் தளத்திலுள்ள ஶ்ரீலங்கா சஞ்சிகைகளில் காணப்படும் அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகள் வருமாறு:
•Last Updated on ••Thursday•, 06 •September• 2018 21:10•• •Read more...•
 

வடக்கு நோக்கிய மகாவலி அபிவிருத்தித்திட்டம் பற்றி!

•E-mail• •Print• •PDF•

- தென்னிலங்கையில் மகாவலி ஆற்றினை வழி மறித்துக் கட்டிய அணைகள் -

- தென்னிலங்கையில் மகாவலி ஆற்றினை வழி மறித்துக் கட்டிய அணைகள் -

வீணாகக் கடலில் கலக்கும் மகாவலி ஆற்று நீரை அணைகள் கட்டித் தடுத்து , மக்களின் விவசாயத்தேவைகள் மற்றும் மின்சாரத்தேவைகள் போன்றவற்றுக்காகப் பயன்படுத்துவதும், நகரங்களை நோக்கி வேலை வாய்ப்புகளுக்காகப் படையெடுக்கும் கிராமப்புற மக்களை அவ்விதம் செல்லாமல் , தாம் வாழும் பகுதிகளில் தங்கி விடச்செய்வதும், புதிய நகர்களை நதியோடும் திசை வழியே உருவாக்குவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள். மகாவலித்திட்டம் திருப்பப்படுமாயின் உண்மையில் வட, கிழக்குப் பகுதிகளுக்கு நன்மையையே தரும். ஆனால் இவ்வகையான திட்டங்களைக் காலத்துக்குக் காலம் இலங்கை அரசுகள் பெரும்பான்மைச் சமூகத்தினரின் குடியேற்றங்களுக்காகப் பயன்படுத்துவதுதான் பிரச்சினையைக் கொண்டுவருகின்றது. காலத்துக்காலம் தமிழ்ப்பகுதிகள் பல சிங்களப்பகுதிகளாகியதைப் பார்க்கின்றோம். அம்பாறை திகாமடுல்லாவாகியதையும், மணலாறு வெலிஓயா ஆகியதையும் பார்க்கின்றோம். இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இவ்வகையான குடியேற்றத்திட்டங்கள். இவ்விதமான திட்டங்களை நிறைவேற்றும்போது அப்பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மக்கள் (அவ்விதம் அப்பகுதிகளில் வாழ்ந்திருப்பின், வாழ்ந்திருந்து வெளியேற்றப்பட்டிருப்பின்) மீளக்குடியேற்றப்பட வேண்டும். மேலும் அப்பகுதிகளில் புதிதாக மக்கள் குடியேற்றப்படுவதாக இருப்பின் அப்பகுதியில் வாழும் மக்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

•Last Updated on ••Wednesday•, 29 •August• 2018 22:16•• •Read more...•
 

சிங்கள மொழியில் எனது (வ.ந.கிரிதரன்) 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு'

•E-mail• •Print• •PDF•

சிங்கள மொழியில் எனது (வ.ந.கிரிதரன்) 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு'

இன்று 'அகாசா மீடியா வேர்க்ஸ்' மூலம் பல சிங்கள நூல்கள் இலங்கையில் வெளியாகின்றன. அவற்றிலொன்று எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு. சிங்கள மொழிபெயர்ப்பைச் செய்திருப்பவர் எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த (G.G.Sarath Ananda). இந்நூலுக்கான பதிப்பகத்தைத் தேர்வு செய்து நூல் வெளிவரக் காரணமாகவிருந்தவர் எழுத்தாளர் காத்யானா அமரசிங்க (Kathyana Amarasinghe) . இவர்களுக்கும், இந்நூலினைச் சிறப்பாக வெளியிட்டிருக்கும் 'அகாசா மீடியா வேர்க்ஸ்' (AHASA Media Works) உரிமையாளர் அசங்க சாயக்கார ( Asanka Sayakkara) அவர்களுக்கும் நன்றி. நூல் வெளியீடு நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற என் மனம் நிறைந்த வாழ்த்துகளை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

•Last Updated on ••Tuesday•, 28 •August• 2018 12:20•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 294 : முன்னுரை, முகவுரை மற்றும் அணிந்துரை ?

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 294 : முன்னுரை, முகவுரை மற்றும் அணிந்துரை ? எழுத்தாளர் அ.செ.முருகானந்தன் தனது 'புகையில் தெரியும் முகம்' நாவலுக்கான நூலின் ஆரம்பத்தில் கதையின் கதை என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் அதனைக் குறிப்பிடுகையில் முகவுரை, முன்னுரை போன்ற பதங்களப் பாவித்திருப்பார். அதிலவர் பின்வருமாறு கூறுவார்:

"அடுத்தபடியாக இந்த முகவுரையை ஏன் எழுதினீர் என்று கேட்கின்றீர்களா? சரி அதையும் சொல்லி விடுகிறேன்" என்று கூறியதுடன் " முன்னுரையை நானேதான் எழுதவேண்டுமென்று நியதி இருக்கிறதா என்று வாசகர்கள் கேட்பார்களானால் - அதற்கு சுருக்கமாகவே பதிலளித்துவிடுகின்றேன்" என்றும் கூறுவார்.

இது பற்றிய தனது முகநூல் எதிர்வினையில் எழுத்தாளர் மைக்கல் கொலின் (மகுடம் இதழாசிரியர்) பின்வருமாறு கேல்வியொன்றினை எழுதியிருப்பார்:

"நூலாசிரியர் தனது நூலுக்கு எழுதும் உரை முன்னுரையே.ஏனையோர் எழுதுவது அணிந்துரை, மதிப்புரை, வாழ்த்துரை, அ.செ.மு.தனது நூலுக்கு தான் முன்னுரை எழுதியதில் என்ன புதுமை உண்டு."

இது பற்றிச் சிறிது சிந்தித்துப்பார்த்தேன். அப்பொழுதுதான் முன்னுரை, அணிந்துரை மற்றும் முகவுரை விடயத்தில் பலருக்கும் ஒருவிதக் குழப்பமிருப்பதை அறிய முடிந்தது. இது பற்றிச் சிறிது சிந்தித்துப்பார்த்தேன். அ.செ.மு அவர்கள் முன்னுரையையும் முகவரையையும் ஒன்றாகக் கருதுவதாகத்தான் அவரது 'கதையின் கதை' என்னும் கூற்றிலிருந்து முடிவு செய்யலாமா?

ஆக்ஸ்போர்ட்டின் 'ஆங்கில -ஆங்கில -தமிழ்' அகராதியில் பின்வருமாறு Preface என்னும் சொல்லை விபரித்திருப்பார்கள்:

"ஒரு நூல் இன்னது பற்றியது அல்லது இன்ன காரணத்துக்காக எழுதப்பட்டது என்பதை விளக்கும் அதன் எழுத்து வடிவிலான முன்னுரை , முகப்புரை"

முகவரை பற்றி க்ரியாவின் தற்காலத்தமிழ் அகராதியில் " உரிய விபரங்களைத் தந்து நூலை அறிமுகப்படுத்தி நூலாசிரியரே எழுதும் கட்டுரை. ஆசிரியர் முன்னுரை". மேற்படி அகராதியில் முன்னுரை பற்றி "நூலாசிரியரால் நூல் குறித்த கருத்துகள அடங்கிய அல்லது நூலுக்கு அறிமுகமாக அமையும் கட்டுரை preface" என்று கூறப்பட்டிருக்கும்.

•Last Updated on ••Saturday•, 18 •August• 2018 22:30•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 293 : ஒரான் பாமுக்கின் 'என் பெயர் சிவப்பு' மற்றும் அ.செ.முருகானந்தனின் 'புகையில் தெரிந்த முகம்' பற்றி.....

•E-mail• •Print• •PDF•

அ.செ.முருகானந்தன்Orhan Pamukஓரான் பாமுக் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற துருக்கி நாட்டவர். அவரது புகழ் பெற்ற நாவலான 'எனது நிறம் சிவப்பு' (My Name is Red) நாவலுக்காக அவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. அதில் இறந்தவர்களே நடந்த கொலைகள் எவ்விதம் நிகழ்ந்தன என்பதை விளக்குவார்கள். பின் நவீனத்துவப்படைப்புகளில் ஒன்றாக மேற்படி நாவல் கொண்டாடப்படுகின்றது. ஆனால் இது போன்ற ஆனால் அளவில் சிறிய நாவலை இலங்கைத்தமிழ் எழுத்தாளர் ஒருவர் 'ஐம்பதுகளின் ஆரம்பத்திலேயே எழுதியுள்ளார்.

'சுதந்திரன்' வாரவெளியீட்டில் தொடராக வெளியான நாவல் அது. பின்னர் நவலட்சுமி புத்தகசாலை ( 136 செட்டியார் தெரு, கொழும்பு ) பதிப்பகத்தினால் 1950இல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி நூலுக்கு நூலாசிரியர் சுவையானதொரு முன்னுரையினையும் எழுதியுள்ளார். அம்முன்னுரையின் முடிவில் அவர் " முன்னுரையை நானேதான் எழுத வேண்டுமென்று நியதி இருக்கிறதா என்று வாசகர்கள் கேட்பார்களானால் - அதற்கு சுருக்கமாகவே பதிலளித்துவிடுகிறேன். புத்தகத்தை எழுதியவரே அதற்கு முன்னுரை எழுதக்கூடாது என்று நியதி் இருக்கிறதா? :-) இன்னும் சொல்லப்போனால் நான் எழுதிய புத்தகத்திற்கு முன்னுரை எழுத என்னைவிட வேறு யார் அதிகமாக ஆசை கொள்ளப்போகிறார்கள்?"

சரி யார் அவ்வெழுத்தாளர்? அப்படைப்பின் பெயர் என்ன? என்று கேட்கின்றீர்களா? அதற்கு முன் மேலும் சில வார்த்தைகள்..

இவ்வெழுத்தாளர் யாழ்ப்பாணத்தமிழர்களின் வாழ்வினை மண் வாசனை கமழ, சுவையுடன் எழுதுவதில் வல்லவர். இக்கதையின் கதை சொல்லியான ராமலிங்கம் சுருட்டொன்றைப் பற்ற வைத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கின்றார். புகையை வட்ட வட்ட வளையங்களாக விட்டுக்கொண்டிருக்கின்றார். அச்சமயம் அச்சுருட்டுப் புகையினூடு அழகிய முகமொன்று தெரிகின்றது. அந்த முகத்துக்குரியவள் வேறு யாருமல்லள். புகையிலை வியாபாரி பொன்னுச்சாமியின் மகளான காந்திமதியே் அவள்.

காந்திமதியையும் அவளது அத்தானான காதலன் முருகேசனையும் பொன்னுச்சாமி அவர்களது காதலை எதிர்த்ததனால் கொன்று விடுகின்றார். அதன் மேல் தென்னம்பிள்ளையொன்றையும் வளர்த்து விடுகின்றார். அவ்விதம் அவரால் கொல்லப்பட்ட அவரது மகளான காந்திமதியும், அவளது காதலான முருகேசனுமே கதை சொல்லியான ராமலிங்கத்துக்குத் தங்களது கதையினைக் கூறுகின்றார்கள்.

•Last Updated on ••Saturday•, 18 •August• 2018 22:26•• •Read more...•
 

கலைஞர் மறைவு: உதயசூரியன் அஸ்தமித்தது!

•E-mail• •Print• •PDF•

கலைஞர் மறைவு: உதயசூரியன் அஸ்தமித்தது!கலைஞர் கருணாநிதி  அவர்களின் மறைவுச்செய்தியினை முகநூல் நண்பர்களின் பதிவுகளின் மூலமே முதலில் அறிந்துகொண்டேன். கலைஞர் தமிழக , இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல்வாதி. தமிழ்க் கலை, இலக்கிய உலகிலும் தவிர்க்க முடியாதவர்களிலொருவர்தான்.  அவரது கலை, இலக்கிய உலகத்துப் பங்களிப்பின் மூலம்தான் அவரைப்பற்றி முதலில் அறிந்துகொண்டேன். அவற்றின் மூலமே திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழக அரசியலில் வலுவாகக் காலூன்றியது. வெற்றியையும் அடைந்தது.

ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதுபோல் எப்பொழுதுமே மனிதர் ஒருவருக்கும் இரு பக்கங்கள் இருக்கும். நேர்மறையான , எதிர்மறையான பக்கங்களிலிருக்கும். கலைஞரும் விதிவிலக்கானவர் அல்லர். ஜெயலலிதா என்றால் பெண் குழந்தைகளைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட 'தொட்டில் சிசு'த்திட்டம் நினைவுக்கு வருவதைப்போல், எம்ஜிஆர் என்றால் 'சத்துணவுத்திட்டம்' நினைவுக்கு வருவதைப்போல், கலைஞர் என்றால் எனக்கு நினைவுக்கு வருவது 'சமத்துவப்புர'த்திட்டம். சாதிப்பிரிவுகளற்று அனைவரும் வாழும் குடியேற்றத்திட்டம் அது. சாதிப்பிரிவுகளால் பிளவுண்டிருக்குமொரு சமுதாயத்தில் மிகவும் முக்கியமானதொரு திட்டமாக அதனை நான் கருதுகின்றேன்.

கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் பன்முக ஆளுமைகளைக் கொண்டவர்கள். கலையுலக, அரசியலுலக வாழ்வினுள் காலடி வைத்தவர்கள். வரலாற்றில் இவர்கள்தம் வாழ்க்கையானது அரசியலில் மட்டுமல்ல கலையுலகிலும் வைத்து நோக்கப்பட வேண்டியதொன்று.

அரசியலைப்பொறுத்தவரையில் இவரைப்பற்றிய விமர்சனங்கள் பல இருப்பினும் ஏனைய கலை, இலக்கியத் துறைகளில் இவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தியவர். ஒரு காலத்தில் பாடல்களால் நிறைந்திருந்த தமிழ்ச்சினிமா உலகை இளங்கோவனின் வசனங்கள் திரும்பிப் பார்க்க வைத்தன. அதன் பின்னர் கலைஞரின் வசனங்கள் தமிழ்த் திரையுலகில் ஐம்பதுகளில், அறுபதுகளின் ஆரம்ப காலகட்டங்களில் கோலோச்சின. பராசக்தி, மருத நாட்டு இளவரசி, மனோஹரா , பூம்புகார், ராஜா ராணியென்று கலைஞரின் வசனங்களின் சிறப்பினை, தாக்கத்தை வெளிப்படுத்த பட்டியலொன்று உண்டு. அண்ணாவின் வசனங்கள் மாற்றியமைத்தன. சமுதாயத்தில் நிலவிய சீரழிவுகளுக்கெதிராக, மூட நம்பிக்கைகளுக்கெதிராக அடுக்குமொழிகளில் எழுதப்பட்ட கனல் பறக்கும் வசனங்களை , தர்க்கரீதியிலான வசனங்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.  கலைஞரின் திரைப்படப்பாடல்கள் குறைவாக இருப்பினும் அவற்றுக்கும் முக்கியத்துவமுண்டு. தமிழ்த்திரைப்படத் தயாரிப்பிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புண்டு,

தமிழ் இலக்கியத்துறையிலும் கலைஞர் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரையென்று அவரது இலக்கியத்துறைக்கான பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோரின் அடுக்கு மொழி நடைக்கும் ஒரு காலகட்டப்பங்களிப்புண்டு. சமூகச் சீர்கேடுகளை, மூட நம்பிக்கைகளைக்கடுமையாகச் சாடி மக்கள் மத்தியில் மிகுந்த விழிப்புணர்வை அவை ஐம்பதுகளில், அறுபதுகளில் ஏற்படுத்தின. அதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப்பிடிக்கும் அளவுக்கு முன்னேறியது வரலாறு.

•Last Updated on ••Wednesday•, 08 •August• 2018 01:00•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 292: கலைஞர் கருணாநிதியின் வரலாற்றுப்பங்களிப்பு!\

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 292: கலைஞர் கருணாநிதியின் வரலாற்றுப்பங்களிப்பு!\கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் பன்முக ஆளுமைகளைக் கொண்டவர்கள். கலையுலக, அரசியலுலக வாழ்வினுள் காலடி வைத்தவர்கள். வரலாற்றில் இவர்கள்தம் வாழ்க்கையானது அரசியலில் மட்டுமல்ல  கலையுலகிலும் வைத்து நோக்கப்பட வேண்டியதொன்று.

அரசியலைப்பொறுத்தவரையில் கலைஞரைப்பற்றிய விமர்சனங்கள் பல இருப்பினும்  ஏனைய கலை, இலக்கியத் துறைகளில் இவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தியவர். ஒரு காலத்தில் பாடல்களால் நிறைந்திருந்த தமிழ்ச்சினிமா உலகை இளங்கோவனின் வசனங்கள் திரும்பிப் பார்க்க வைத்தன. அதன் பின்னர் கலைஞரின் வசனங்கள் தமிழ்த் திரையுலகில் ஐம்பதுகளில், அறுபதுகளின் ஆரம்ப காலகட்டங்களில் கோலோச்சின. பராசக்தி, மருத நாட்டு இளவரசி, மனோஹரா , பூம்புகார், ராஜா ராணியென்று கலைஞரின் வசனங்களின் சிறப்பினை, தாக்கத்தை வெளிப்படுத்த பட்டியலொன்று உண்டு. கலைஞரின் திரைப்படப்பாடல்கள் குறைவாக இருப்பினும் அவற்றுக்கும் முக்கியத்துவமுண்டு. தமிழ்த்திரைப்படத் தயாரிப்பிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புண்டு,

தமிழ் இலக்கியத்துறையிலும் கலைஞர் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரையென்று அவரது இலக்கியத்துறைக்கான பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இருபதாம் நூற்றாண்டுத்  தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோரின் அடுக்கு மொழி நடைக்கும் ஒரு காலகட்டப்பங்களிப்புண்டு. சமூகச் சீர்கேடுகளை, மூட நம்பிக்கைகளைக்கடுமையாகச் சாடி மக்கள்  மத்தியில் மிகுந்த விழிப்புணர்வை அவை ஐம்பதுகளில், அறுபதுகளில் ஏற்படுத்தின. அதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப்பிடிக்கும் அளவுக்கு முன்னேறியது வரலாறு.

கலைஞரின் குறளோவியம், சங்கத்தமிழ் போன்ற தொகுதிகள் முக்கியமானவை.

என்னைப்பொறுத்தவரையில் கலைஞரைப்பற்றி முதன் முதலில் அறிந்துகொண்டது 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ்த் மகாநாட்டு மலர் மூலமேதான். அப்பா திமுகவினர் மேல் மதிப்பு மைத்திருப்பவர். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோர் மீது மதிப்பு வைத்திருந்தவர். அதன் காரணமாகவே அம்மாநாட்டு மலரையும் வாங்கியிருந்தார். மிகவும் சிறப்பாக வடிவமைக்கட்டிருந்த மலர் அது. இதுவரை நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மலர்களில் மிகவும் சிறப்பான மலராக அம்மலரே கணிப்பிடப்படும் என்று கருதுகின்றேன். அம்மலரில் கலைஞரின் 'பூம்புகார்' நாடகமிருந்தது. அதன் மூலமே அவரைப்பற்றி முதலில் அறிந்து கொண்டதாக நினைவு. அதன் பின் அறிஞர் அண்ணாவின் மறைவினையடுத்து அவர் பாடிய இரங்கற்பா மூலம் என்னை அவர் மீண்டும் கவனிக்க வைத்தார். கேட்பவர் நெஞ்சங்களை உருக்கும் இரங்கற்பா அது. அவ்வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரங்கற்பாவாக அவ்விரங்கற்பா அமைந்து விட்டது.

அடுத்து என்னைக் கவனிக்க வைத்தது குமுதம் சஞ்சிகையில் ஆரம்பமான அவரது 'ரோமாபுரிப்பாண்டியன்' தொடர் நாவல். வரலாற்று நாவல். அத்தொடரை அக்காலகட்டத்தில் முழுமையாகப் படிக்கவில்லை. ஆனால் வெளியான ஆரம்ப அத்தியாயங்கள் என்னை அவ்வயதில் கவர்ந்தன. ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியான தொடர் அது. அக்காலகட்டத்தில் ராணிமுத்துப் பிரசுரமாக வெளியான அவரது நாவலான 'வெள்ளிக்கிழமை'யும் என் கவனத்தைச் சற்றே அவர்பால் ஈர்த்த படைப்புகளிலொன்றே.

•Last Updated on ••Friday•, 03 •August• 2018 06:36•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 291 : 'பொதிகை'யின் 'நூல் நயம்' நிகழ்ச்சியில் வி.என்.மதியழகனின் 'சொல்லும் செய்திகள்' பற்றிய எண்ணத்துளிகள்..

•E-mail• •Print• •PDF•

'பொதிகை'யின் 'நூல் நயம்' நிகழ்ச்சியில் வி.என்.மதியழகனின் 'சொல்லும் செய்திகள்' பற்றிய எண்ணத்துளிகள்.. -வ.ந.கிரிதரன் -எம் மாணவப்பருவத்தில் எமது பிரதானமான பொழுதுபோக்குகள்: திரைப்படங்கள், புத்தகங்கள், சஞ்சிகைகள் & பத்திரிகைகள் மற்றும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத் தமிழ் நிகழ்ச்சிகள் இவையே. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ் ஒலிபரப்புச் சேவை இலங்கையில் மட்டுமல்ல, தமிழகத்திலும் மிகுந்த வரவேற்பைப்பெற்ற சேவை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தமிழ்ச் சேவை என்றதும் உடனடியாக எனக்கு ஞாபகத்தில் வரும் பெயர்கள் அப்துல் ஹமீட், 'பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி புகழ்' ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா, ராஜகுருசேனாதிபதி கனகரத்தின்ம், சற்சொருபவதி நாதன், வி.என்,மதியழகன், சில்லையூர் செல்வராசன், கமலா தம்பிராஜா...இவர்களே. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச்சேவையில் எல்லா நிகழ்ச்சிகளையும் நான் கேட்பவனல்லன். அவ்வப்போது வயதுக்கேற்ப கேட்கும் நிகழ்ச்சிகளும் மாறிக்கொண்டேயிருக்கும். ஒரு வயதில் பொங்கும் பூம்புனல் கேட்பது பிடித்திருந்தது. இன்னுமொரு சமயம் 'தணியாத தாகம்' போன்ற தொடர் நாடகங்கள், 'இசையும் கதையும்' போன்ற இசையுடன் கூடிய கதைகள், இன்னுமொரு பருவத்தில்'நெஞ்சை ஈர்க்கும் 'நெஞ்சில் நிறைந்தவை' என விரும்பிக் கேட்கும் நிகழ்ச்சிகளின் தன்மையினை  எம் வயதும் , அவ்வயதுக்குரிய உளவியலும் நிர்ணயித்தன. எனக்கு அக்காலத்தில் ராஜேஸ்வரி சண்முகத்தின் குரல் மிகவும் பிடிக்கும். சீரான வேகத்தில் நிதானத்துடன் சொற்களை வழங்கும் குரல் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினத்துடையது. இவ்விதமாக முறையான பயிற்சியும், அனுபவமும் மிக்க அறிவிப்பாளர்கள் மொழி வளம் மிக்கவர்களாக விளங்கினார்கள்; தமிழ்த்திரைப்படப்பாடல்களின் ஆவணச்சுரங்கங்களாக விளங்கினார்கள்; எப்பாடலுக்கும் உரிய தமிழ்ச் சொற்களைக் கையாண்டு அவற்றை விபரிப்பதில் மிகவும் வல்லவர்களாகவிருந்தார்கள்.

நிகழ்ச்சிகள் தவறுகள் அதிகமற்று, சிறப்பாக அமைந்திருந்ததற்கு முக்கிய காரணங்களிலொன்று இலங்கை ஒலிபரப்ப்புக் கூட்டுத்தாபனமென்னும் அரச கட்டமைப்பு. ஆனால் புகலிடச் சூழலிலோ இவ்விதமான கட்டமைப்புகள் எதுவுமற்றுள்ளன. பெரும்பாலும் தனிப்பட்டவர்களது பொருளீட்டுவதற்குரிய வர்த்தக முயற்சிகளாகவே இங்கு இயங்கும் வானொலிகளிருக்கின்றன. இதனால் ஒலி/ஒளி பரப்புத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் இத்துறையில் ஈடுபடுகின்றார்களே தவிர. இவர்களது நிகழ்ச்சிகளைக் கண்காணித்து, சீரமைப்பதற்குரிய முறையான கட்டமைப்பு இல்லாத காரணத்தால் பல தவறுகளை இவர்கள் புரிகின்றார்கள். உதாரணத்துக்கு ஒன்று: நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒருவர் ஆர்வமுடன் உரையாடிக்கொண்டிருக்கின்றார். ஆனால் நடத்துபவருக்கோ அந்நிகழ்ச்சியினை விரைவாக முடித்து விட வேண்டுமென்று எண்ணம் போலும். கலந்து கொள்பவருடன் இவரால் ஆனந்தமாக , உற்சாகமாகத் தொடர்ந்தும் உரையாட முடியாமலுள்ளது. அவரது குரலிலும் அதற்கான சலிப்பு தென்படுகின்றது. கேட்கின்றவர்களுக்கும் அந்நிகழ்ச்சியினை நடத்துகிறவரின் சலிப்பும் தெரிகின்றது. இதனால் அவர்களுக்கும் சலிப்பு ஏற்படுகின்றது. இது போன்ற சலிப்புகளையெல்லாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச் சேவை நிகழ்ச்சிகளிலெல்லாம் நான் அடைந்ததில்லை.

•Last Updated on ••Sunday•, 29 •July• 2018 17:25•• •Read more...•
 

"அன்பு நண்பர்களே, உங்களிடம் மன்னிப்பைக் கோருகின்றோம்""

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளரும், 'லக்பிமா' பத்திரிகையில் இலக்கியப்பகுதிக்கான ஆசிரியராகவுமிருக்கும் காத்யானா அமரசிங்க ( .Kathyana Amarasinghe )1983 இனக்கலவரத்தையொட்டி அவரது நண்பர்கள் சிலருடன் இணைந்து உருவாக்கிய இப்போஸ்டரை அனுப்பியிருந்தார். இதிலுள்ள வாசகங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அவ்வாசகங்கள் இவைதாம்: "கருப்பு ஜூலை - 35 ஆண்டுகள். அன்பு நண்பர்களே, உங்களிடம் மன்னிப்பைக் கோருகின்றோம்"

முதல் தடவையாகச் சிங்கள மக்களிடமிருந்து இவ்வாசகங்களைக் கேட்கின்றேன். இவை முக்கியமான வாசகங்கள். 1983 இனக்கலவரத்துக்காக, தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அழிவுகளுக்காகச் சிங்கள மக்கள் சார்பில் இவர்கள் மன்னிப்புக் கேட்கின்றார்கள். உண்மையில் இலங்கையின் அதிபர் ஓருவர் என்று இவ்விதம் சிங்கள மக்கள் சார்பில் தமிழ் மக்களுக்கு எதிராக இதுவரை நடைபெற்ற அநீதிகளுக்காக மன்னிப்புக் கோருகின்றாரே அதுவே இந்நாட்டு மக்களுக்கிடையிலான உண்மையான நல்லெண்ணத்துக்கும், புரிந்துணர்வுகளுக்கும் வழி வகுக்கும். அதற்கு முதற்படியாகவே இப்போஸ்டரையும் , வாசகங்களையும் பார்க்கின்றேன். அத்துடன் அடையாளம் காணப்பட்ட , இக்கலவரங்களில் குற்றம் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். சட்டமானது அனைவருக்கும் பொது என்னும் நிலையினை ஏற்படுத்த வேண்டும்.

•Last Updated on ••Sunday•, 29 •July• 2018 17:22•• •Read more...•
 

83 'ஜூலை' இலங்கை இனக்கலவர நினைவுகள்.....

•E-mail• •Print• •PDF•

ஓவியர் புகழேந்தியின் 1983 பற்றிய ஓவியம்சிதம்பரம் கப்பலை கூகுளில் தேடிப்பார்த்தேன். கப்பலின் படம் வந்தது. இக்கப்பலைத்தான் இலங்கையின் 1983 இனக்கலவரத்தையடுத்து அன்று தமிழக முதல்வராகவிருந்த எம்ஜிஆர் கொழும்பில் தங்கியிருந்த அகதிகளை யாழப்பாணம் கூட்டிச்செல்வதற்காக அனுப்பியிருந்தார். இக்கப்பல் பல நினைவுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிகள் முகாமில் ஆரம்பத்திலிருந்தே தொண்டர்களாக மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சேவையாற்றினர். தர்மகுலராஜா அவர்களும் அவர்களிலொருவர். இவர் எனக்கு ஒரு வருட 'சீனியர்'. அவர்களில் நானுமொருவனாக இணைந்திருந்தேன். ஏற்கனவே இலங்கை அரசு வழங்கியிருந்த லங்கா ரத்னா போன்ற சரக்குக் கப்பல்களில் அகதிகள் பலரை அனுப்பி வைத்தோம்.

பின்னர் இறுதியாக சிதம்பரம் கப்பல் தமிழக அரசால் அனுப்பப்பட்டபோது , இரு வாரங்கள் கழிந்திருந்த நிலையில், நானும் யாழ்ப்பாணம் செல்வதற்கு முடிவு செய்தேன். என் வாழ்க்கையில் கட்டுமரங்களில் பயணித்திருக்கின்றேன்; படகுகளில் பயணித்திருக்கின்றேன்; ஆனால் கப்பலொன்றில் பயணித்தது அதுவே முதற் தடவை. கொழும்பிலிருந்து கிழக்கு மாகாணத்தைச் சுற்றிச் சென்ற கப்பலின் பணியாளர்களெல்லாரும் அகதிகளென்று மிகவும் அன்புடன் , பண்புடன் உதவியாகவிருந்தார்கள். கொழும்பில் கப்பலில் ஏறும்பொழுதும் வரிசையில் நின்று ஒவ்வொருவர் உடமைகளையும் வாங்கியுதவி ஏற்றினார்கள். நேற்றுத்தான் நடந்ததுபோல் இன்றும் நினைவிலிருக்கின்றது.

1977கலவரம் நடைபெற்று மக்கள் அகதிகளாக யாழ்ப்பாணம் ஹாட்லிக் கல்லூரி அகதி முகாமுக்கு வந்துகொண்டிருந்தவேளையில் நண்பர்களுடன் மாலை நேரங்களில் சென்று வரும் அகதிகளுடன் அளவளாவி அவர்கள் கதைகளைக் கேட்டு உணர்ச்சி வசப்படுவதுண்டு. ஆனால் நானே என் சொந்த மண்ணில் அகதியாக கப்பலில் மீண்டும் வருவேனென்று அச்சமயத்தில் எண்ணியிருக்கவில்லை.

அகதிகளாக முகாமில் இருந்த சமயத்தில் என்னுடன் பணி நகர அதிகார சபையில் பணிபுரிந்த சிங்கள நண்பர்கள் சிலர் விடயமறிந்து எங்களை வந்து பார்த்தார்கள். தங்களுடன் வந்து பாதுகாப்புடன் தங்கலாமென்று அழைத்தார்கள். அப்போதிருந்த சூழலில் எம்மால் அவர்களுக்கும் பிரச்சினைகள் வரலாம்; நிலவிய சூழலில் எமக்கும் பாதுகாப்பில்லை. எனவே அகதிகள் முகாமில்இருப்பதே உசிதமாகப்பட்டது. அங்கேயே தங்கி விட்டோம். அவர்களின் பெயர்களைக் கூட மறந்து விட்டேன். ஆனால் பணியாற்றிய காலத்தில் எம்முடன் நன்கு அன்புடன் பழகிய நண்பர்கள் அவர்கள். அவ்விதம் அச்சூழலில் எம்மை வந்து பார்த்ததும் அழைத்ததும் முக்கிய விடயமாக அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி தோன்றுகின்றது.

அக்கலவரம் எனக்கு நன்கு தெரிந்த சிலரைப் பலி வாங்கியிருக்கின்றது. அவர்களில் பொறியியலாளர் ராஜாராம் ஒருவர். மொறட்டுவைப் பல்கலைக்கழகக் காலகட்டத்தில் பல்கலைக்கழகத்து முன்பாக இருந்த தெருவொன்றில் சிங்கள் வீடோன்றில் வாடகைக்கு நண்பர்களுடன் வசித்தபோது எம்முடன் வசித்தவர்களிலொருவர். மலையகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு காதலி இருந்தார்; ஆசிரியை என்றும், பெயர் ராஜேஸ்வரி என்றும் ராஜாராம் கூறியதாக நினைவு. நீண்ட காலமாகக் காத்திருந்து ராஜாராம் படிப்பை முடிந்து பணி புரிந்து கொண்டிருந்தபோதுதான் திருமணம் செய்தார். பல்கலைக்கழகப்படிப்பு முடிந்து பணி புரிந்துகொண்டிருந்த சமயத்தில் கலவரத்துக்குச் சில மாதங்களின் முன்பே அவரை வழியில் இ.போ.ச பஸ்ஸொன்றில் சந்தித்து உரையாடியிருந்தேன். யாருக்குமே தீங்கு செய்ய மனம் வராத அப்பாவி அவர். நன்கு சிங்களம் பேசக்கூடியவர். 83 கலவரத்தில் களுபோவிலை ஆஸ்பத்திரியில் ஏற்கனவே காயமுற்றிருந்து அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காடையர்கள் சென்று கொலை செய்ததாகப் பின்னர் அறிந்து துயருற்றேன்.

•Last Updated on ••Sunday•, 29 •July• 2018 17:23•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 290: வெற்றிமணி சிறுவர் சஞ்சிகையின் பரிணாம வரலாறு பற்றிய சில தகவல்களும், எண்ணங்களும்!

•E-mail• •Print• •PDF•

 1.12.1956 இதழில் ஆசிரியர் ஏ.கே.சாமி '1957 தை மாதம் தொடக்கம் கெளரவ ஆசிரியராக வித்துவான் மு.கந்தையா அவர்கள் கடமையாற்றுவார் என்று அறிவித்திருக்கின்றார்.'வெற்றிமணி' சஞ்சிகையின் 22.2.1955 இதழ் எம்.எம்.பாரிஸ் ((M.M.Faries)  என்பவரை ஆசிரியராகக்கொண்டு நாவலப்பிட்டி மிட்லண்ட் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு அவராலேயே வெளியிடப்பட்டுள்ளது. இதில் மலர் 1, இதழ் 1 என்றிருப்பதால் இதுவே அவர் ஆசிரியராகவிருந்து , வெளியிட்ட முதலாவது இதழென்பது தெரிகின்றது. (ஆதாரம் - நூலகம் தளத்திலுள்ள வெற்றிமணி சஞ்சிகைகள்) 20-10-1955  இதழ் எம்.எம்.பாரிஸ் ஆசிரியராகவிருக்கின்றார். அச்சடிக்கப்பட்டது ஆனந்த, யாழ்ப்பாணத்தில்.

20.12.1955 இதழ் நாவலப்பிட்டி மிட்லண்ட அச்சகத்திலேயே அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது. ஆனால் ஆசிரியரின் பெயர் ஏ.கே.சாமி என்றுள்ளது. 22-2-1955 தொடக்கம் 21_11_1955 வரை வெளியான இதழ்களுக்கு ஆசிரியராகவிருந்தவர் எம்.எம்.பாரிஸ். 20-10-1955 இதழ் தவிர அவ்வருடத்தில் வெளியான ஏனைய இதழ்கள் அச்சடிக்கப்பட்டதும் மிட்லண்ட் அச்சகத்திலேயே.

வெற்றிமணி சஞ்சிகையின் முதலாம் ஆண்டு மலராக 14.1.1956 இதழ் வெளியாகியுள்ளது. ஆசிரியர் ஏ.கே.சாமி. இவ்விதழில் அட்டைப்படம் அழகாக வந்துள்ளதுடன், சஞ்சிகையின் வடிவமைப்பும் மாறியுள்ளதையும் காண முடிகின்றது. அட்டையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பொங்கல் கவிதையும் வெளியாகியுள்ளது. முதலாவது ஆண்டு மலர் பொங்கல் மலராக வெளியாகியுள்ளது. 1.12.1956 இதழில் ஆசிரியர் ஏ.கே.சாமி '1957 தை மாதம் தொடக்கம் கெளரவ ஆசிரியராக வித்துவான் மு.கந்தையா அவர்கள் கடமையாற்றுவார் என்று அறிவித்திருக்கின்றார்.

வெற்றிமணி சஞ்சிகையின் 1.9.1956 இதழில் இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியொன்று முன் பக்கத்தில் வெளியாகியுள்ளது. "தமிழ் பேசும் இனத்தின் உரிமைப்போராட்டத்தை  நிர்ணயிக்கும் தமிழரசுக் கட்சியின் சரித்திரப்பிரசித்தி பெற்ற மாநாடு திருகோணமலையில் 18,19-8-1956 இல் நடைபெற்றது.  தமிழ்பேசும் இனத்தின் உரிமைப்போராட்டத்திற்குச் செல்லும் "திருமலை யாத்திரை" என்னும் அறிவிப்புடன் நெடுங்கவிதையொன்றின் முதற்பகுதி  , நவாலியூர் பண்டிதர் சோ.இளமுருகனார் எழுதியது, வெளியாகியுள்ளது. கவிதை "திருமலைக்குச் செல்லுவோம். சிறுமை அடிமை வெல்லுவோம்" என்று ஆரம்பமாகியுள்ளது.

இவ்விதழில் "எங்கள் ஊர் வவுனியா" என்னுமொரு கட்டுரையினை மாணவர் மன்ற உறுப்பினரான செல்வி.சே.சிவநேசமணி என்னும் மாணவி எழுதியிருக்கின்றார். சுருக்கமான , சுவையான கட்டுரை . அதில் அவர் வன்னிக்கு 'அடங்காப்பற்று' என்னும் காரணம் வந்த காரணத்தைக் குறிப்பிட்டிருப்பார். இதுவரை நான் கேட்காத விளக்கம். தர்க்கபூர்வமானது. அதனை இங்கு தருகின்றேன்: "வன்னிநகர் "அடங்காப்பற்று" எனும் மங்காப்பெயர் கொண்டது. இப்பெயர் பெறுவதற்குக் காரணம் அவர்கள் பேராசையன்று. முற்காலத்தில் பல்வகைச்செல்வங்களும் நிறைந்து விளங்கிய வன்னியிலே உள்ள மக்கள் ஈதலையே தலை சிறந்த அறமாகக் கொண்டிருந்தனர். இரப்போர்க்கு இல்லையென்னாது ஈந்தனர். ஈகையின்மேல் அவர்கள் கொண்டிருந்த அடங்காப்பற்றினாலேயே அவர்களது நாடாகிய வன்னிக்கு 'அடங்காப்பற்று' எனப்பெயர் உண்டாகியதென்று பலர் கூறுவர்".

•Last Updated on ••Sunday•, 22 •July• 2018 18:00•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 289: மறக்க முடியாத 'வெற்றிமணி'

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 289: மறக்க முடியாத 'வெற்றிமணி'இலங்கையில் வெளிவந்த 'வெற்றிமணி' சிறுவர் சஞ்சிகைக்கு முக்கியமானதோர் இடம் இலங்கைத் தமிழ் இலக்கியத்திலுண்டு. தமிழகத்தில் வெளியான 'கண்ணன்' சிறுவர் இதழ் எவ்விதம் எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியதோ அவ்விதமே 'வெற்றிமணி' சஞ்சிகையும் பலரை உருவாக்கியுள்ளது. வெற்றிமணியின் 'பாலர் பக்கத்தில்' இளம் எழுத்தாளர்கள் பலர் தமது ஆரம்பகாலப்படைப்புகளை (கட்டுரை, சிறுகதை, விமர்சனம், நாடகம் , உருவகக் கதை போன்ற படைப்புகளை) எழுதியுள்ளார்கள். கிழக்கு மாகாணம், மலையகத்திலிருந்தெல்லாம் இளம் எழுத்தாளர்கள் பலர் எழுதியுள்ளார்கள். முஸ்லீம் இளம் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் பலவற்றை 'வெற்றிமணி' இதழ் தாங்கி வெளியாகியுள்ளது. 'கவிதை' அரங்கம்' பகுதியிலும் பலர் இவ்விதமே எழுதியுள்ளார்கள். இலங்கையின் பிரபல எழுத்தாளர்களான திக்குவல்லை கமல், காரை செ.சுந்தரம்பிள்ளை, சாரதா, கவிஞர் புதுவை இரத்தினதுரை, கோப்பாய் சிவம் எனப்பலர் 'வெற்றிமணி' சஞ்சிகையில் சிறுவர் பாடல்களை எழுதியுள்ளார்கள். ஏழாம் வகுப்பு மாணவனான எனது குட்டிக்கதையொன்றும், பொங்கல் பற்றிய கட்டுரையொன்றும் 'வெற்றிமணி' சிறுவர் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. கவிஞர் வி.கந்தவனம், இரசிகமனி கனக செந்திநாதன் , த. அரியரத்தினம், ஏ.ரி.பொன்னுத்துரை, மு.க.சுப்பிரமணியம் போன்றொர் தொடர்ச்சியாக 'வெற்றிமணி'யில் எழுதி வந்துள்ளார்கள். குறமகளின் சிறுவர் சிறுகதையொன்றினையும் ஓரிதழில் காண முடிந்தது.

அவ்வயதில் வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன். விடுமுறைகளில் யாழ்ப்பாணத்துக்குச் செல்லுகையிலெல்லாம் யாழ் நகரிலிலிருந்த 'அன்பு புத்தகசாலை'க்குச் சென்று 'வெற்றிமணி'யை வாங்குவதுண்டு. 'அன்பு புத்தகசாலை' எழுத்தாளர் செங்கை ஆழியானின் அண்ணரான எழுத்தாளர் 'புதுமைலோலன்' அவர்களுடையது. அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த இளைஞரொருவர் எப்பொழுதும் சஞ்சிகைகள், நூல்கள் வாங்க அங்கு செல்லும்போதெல்லாம் அன்புடன் வரவேற்றுதவுவார். பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் என் கல்வி தொடர்ந்த என் பதின்ம வயதுக் காலகட்டத்திலும் அங்கு செல்வதுண்டு. அங்குதான் செங்கையாழியானின் முதலாவது நாவலான 'நந்திக்கடல்' சரித்திர நாவலினை வாங்கியதுண்டு. மார்க்சிம்கார்க்கியின் புகழ்பெற்ற நாவலான 'தாய்' (தொ.மு.சி.ரகுநாதன் மொழிபெயர்த்தது) நாவலை அவ்விளைஞரே எனக்கு வழங்கியவர்.

அறிஞர் அண்ணாவின் மறைவின் போது அவரது புகைப்படத்தை அட்டையிலிட்டு 'வெற்றிமணி' சஞ்சிகை அஞ்சலி செய்ததையும் அறிய முடிகின்றது.

'வெற்றிமணி டாணெனவே விண்முட்ட ஒலித்திடுவாய்.
நற்றமிழாம் எங்கள்மொழி நலமுற ஒலித்திடுவாய்'

என்னும் தாரகமந்திரத்துடன், குரும்பசிட்டி மு.க சுப்பிரமணியத்தைக் கெளரவ ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'வெற்றிமணி' சஞ்சிகையின் பழைய இதழ்கள் என்னை அக்காலத்துக்கே இழுத்துச் சென்றுவிட்டன.

•Last Updated on ••Sunday•, 22 •July• 2018 17:39•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 288: கே.எஸ்.சிவகுமாரனின் ஆங்கில நூலான 'On Films Seen' என்னும் நூலை முன்வைத்துச் சில கருத்துகள்..! (1)

•E-mail• •Print• •PDF•

on films seen by K.S.Sivakumaran

கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன்

அண்மையில் திரு.கே.எஸ்.சிவகுமாரன் அனுப்பியிருந்த இரு நூல்களை ('திரைப்பட விழாக்களின் படங்களும் அவை தொடர்பான சுவையான செய்திகளும்', மற்றும் 'On Films Seen ) 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன'த்தின் புகழ்பெற்ற முன்னாள் ஒலிபரப்பாளரும் , ஊடகவியலாளருமான திரு.வின்.என்.மதியழகன் மூலம் பெற்றுக்கொண்டேன். இத்தருணத்தில் பல வருடங்களுக்கு முன்னர் நண்பரொருவரிடம் கே.எஸ்.எஸ் அவர்கள் கொடுத்திருந்த நூல்கள் இன்னும் என் கைகளை வந்தடையவில்லையென்பதையும் நினைவு கூர்ந்திடத்தான் வேண்டும். நூல்களை அனுப்பிய கே.எஸ்.எஸ் அவர்களுக்கும் அவற்றை விரைவாகவே கொண்டுவந்து என்னிடம் சேர்ப்பித்த வி.என்.எம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி கோடி.

இவ்விரு நூல்களில் 'கொடகே பிறதர்ஸ்' பதிப்பக வெளியீடாக வெளியான கே.எஸ்.சிவகுமாரனின் ஆங்கில நூலான 'On Films Seen' என்னும் நூலைப்பற்றிய எனது குறிப்புகளே இச்சிறுகட்டுரை. இந்நூலைப்பார்த்தபோது எனக்கு மிகுந்த பிரமிப்பே ஏற்பட்டது. இலங்கைக்கு வெளியே நிகழ்ந்த சர்வதேசத் திரைப்பட விழாக்களில் அவர் அவ்வப்போது பார்த்து, களித்துச் சிந்தித்தவற்றை வைத்து எழுதப்பட்ட 58 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். 1990 ஆம் ஆண்டுக்கு முன் எழுதிய கட்டுரைகள் கிடைக்காததால் , அதற்குப்பின்னர் எழுதிய கட்டுரைகளையே இந்நூல் அடக்கியுள்ளதென்பதை அவரது நூலுக்கான முன்னுரை புலப்படுத்தும். கூடவே அம்முன்னுரை இன்னுமொன்றையும் கூறும். அது இந்நூலுக்கான காரணம் பற்றியது. தன்னைப்போல் இவ்விதம் சர்வதேசத் திரைப்பட விழாக்களைக் கண்டு களிக்க  முடியாத சினிமாப்பிரியர்களுக்கு இவ்விதமான சர்வதேசத் திரைப்படங்கள் பற்றிய தகவல்களைத் தருவதே இந்நூலின் நோக்கம் என்று அவர் மேற்படி முன்னுரையில் குறிப்பிடுவார். உண்மையில் கடந்த பல தசாப்தங்களாகக் கலை, இலக்கியத்துறையில் அவர் தளராது இயங்கி வருவதற்குரிய காரணங்களிலொன்றல்லவா அது.

இந்நூலின் மிகவும் பிரதானமானதும் , முக்கியமானதுமான அத்தியாயம் முதலாவது அத்தியாயமாகவிருப்பது நூலின் சிறப்பான ஒழுங்கமைப்புக்கு  நல்லதோர் எடுத்துக்காட்டு. திரைப்படத்துறையில் ஆர்வமுள்ள எவரும் கலைத்துவம் மிக்க திரைப்படங்களைப் பார்த்து இரசிப்பதற்கு முக்கியமாகத் திரைப்படக்கலை பற்றிச் சிறிதளவாவது அறிந்திருக்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள் பார்க்கும் திரைப்படங்களை நன்கு அறிந்துகொள்ள இவ்விதமான ஆரம்ப அறிவு பயனுள்ளதாகவிருக்கும். இதனையுணர்ந்துதான் இந்நூலின் முதலாவது அத்தியாயத்துக்குத் 'திரைப்படங்களை அறிந்துகொள்ளல்' (Understanding the Films) என்று தலைப்பிட்டுள்ளார். இவ்வத்தியாயமெட்டுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. தி ஐலண்ட் பத்திரிகையில் வெளியான ஆறு கட்டுரைகளும், டெய்லி நியூஸ் பத்திரிகையில் வெளியான இரண்டு கட்டுரைகளுமே அவை. 'சினிமாவின் மொழியும், அமைப்பும்', 'திரைப்பட மொழி', 'பார்வையாளரொருவரின் பங்கு' போன்ற பல விடயங்களில் சினிமா என்னும் ஊடகத்தைப்பற்றிய தனது கருத்துகளை முதல் ஆறு கட்டுரைகளில் வெளிப்படுத்துவார் கே.எஸ்.எஸ் அவர்கள். அடுத்த இரு கட்டுரைகளில் தமிழ்ப்படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான அமரர் பாலு மகேந்திராவின் சினிமா பற்றிய பார்வையினை நேர்காணல் மற்றும் கூற்றுகள் வாயிலாக வெளிப்படுத்துவார்.

•Last Updated on ••Friday•, 20 •July• 2018 05:32•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 287 : யாழ் கோட்டையில் இராணுவமுகாமும், இலங்கையின் எதிர்காலமும்; யாழில் தலைவிரித்தாடும் வன்முறைகளும், சண்டியர்களும்!

•E-mail• •Print• •PDF•

யாழ்  கோட்டைக்குள் இராணுவ முகாம்புத்தரின் கண்ணீர்'ட்விட்ட'ரில் கண்ட இச்செய்தி என் கவனத்தை ஈர்த்தது. யாழ்ப்பாணத்திலுள்ள ஒல்லாந்தரின் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு இலங்கைத் தொல்லியற் திணைக்களம் அனுமதியளித்துள்ளதாம். அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் புகைப்படங்களையும் அச்செய்தியில் காண முடிந்தது. கரிகாலன் garikaalan‏ @garikaalan என்பவரின் 'ட்வீட்' இது. ஆச்சரியமென்னவென்றால் முகநூலில் இது பற்றிய செய்திகள் எதனையும் கண்டதாக நினைவிலில்லை. இச்செய்தி உண்மையாகவிருக்குமானால் இலங்கை அரசு தவறிழைக்கின்றதென்றே கூற வேண்டும். யாழ்நகரின் மத்தியில் கோட்டைக்குள் இராணுவமுகாம் அமைப்பதே முட்டாள்தனமானது. காலம் மீண்டுமொருமுறை ஆயுதபோராட்டமொன்றினை உருவாக்குமானால் (தென்னிலங்கையில் முதற் புரட்சியில் முற்றாக நிர்மூலமாக்கப்பட்ட ஜே.வி.பி மீண்டெழுந்து பதினேழு வருடங்களுக்குப் பின்னர் ஆயுதப்புரட்சி செய்யவில்லையா) மீண்டும் அன்று மாதிரி கோட்டை மீதான முற்றுகைக்குள் சிக்கப்போவது இம்முகாம் இராணுவத்தினரே..

உபகண்ட அரசியலில் இந்தியா மீண்டும் இலங்கைத்தமிழர்களின் பிரச்சினையைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்த மாட்டாது என்பதற்கு உத்தரவாதமெதுவுமில்லை. இலங்கை எவ்வளவுக்கு எவ்வளவு சீனாவின் பிடிக்குள் செல்கின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்தியா மீண்டும் இலங்கைத்தமிழர்களின் பிரச்சினையைத் தனது துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தவே முனையும். மேலும் களத்தில் விடுதலைப்புலிகளுமில்லை. இந்தியாவின் சார்பு முன்னாள் ஆயுதப்போராட்ட அமைப்புகளே உள்ளன. எனவே இந்தியா மிகவும் இலகுவாக இலங்கைப் பிரச்சினைக்குள் உள் நுழைய முடியும்.

இலங்கையின் தென்னிலங்கை அரசியல்வாதிகள் புத்திசாலிகளென்றால் இலங்கைத்தமிழர் பிரச்சினையை முற்றாகத் தீர்த்து வைப்பார்கள். அதன் மூலம் இந்தியாவின் அழுத்தங்களிலிலிருந்து தப்பலாம். இதுபோன்ற இராணுவ மயமாக்கல் நடவடிக்கைகள் மீண்டும் இலங்கையை யுத்த பூமியாகவே மாற்றும். ஜே.வி.பி.க்கு மீண்டும் உயிர்த்தெழ சுமார் 17 வருடங்கள் பிடித்தது. தமிழர்களின் யுத்தம் முடிந்து ஒன்பது ஆண்டுகளே கடந்துள்ளன. இன்னும் எட்டு ஆண்டுகளில் என்னவெல்லாமோ நடக்கலாம்? யார் கண்டது?

•Last Updated on ••Monday•, 09 •July• 2018 05:39•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 286 :மனவெளிக்கலையாற்றுக் குழுவினரின் இப்சனின் ஒரு பொம்மை வீடு !

•E-mail• •Print• •PDF•

இப்சனின்  ஒரு பொம்மை வீடு

நேற்று (30.6.2018) நண்பர் தேவகாந்தனுடன் மனவெளி அமைப்பின் பத்தொன்பதாவது அரங்காடல் நாடக நிகழ்வுக்கு இப்சனின் 'ஒரு பொம்மை வீடு ' பார்க்கச்சென்றிருந்தேன். நண்பகற் காட்சி, மாலைக் காட்சி என்று இரு காட்சிகள் அரங்கு நிறைந்த மக்கள் ஆதரவுடன் நடைபெற்றன. மனவெளி கலையாற்றுக் குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.

ஏற்கனவே பலமுறை படித்திருந்த நாடகமாதலால் நாடகம் பற்றிய புரிதலுடனேயே சென்றிருந்தேன். நாடகம் எவ்விதம் மேடையேற்றப்படுகின்றது, எவ்விதம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது, எவ்விதம் இயக்கப்பட்டிருக்கின்றது, எவ்விதம் மேடை அலங்காரங்கள், ஒலி, ஒளி அமைப்புகள் இருக்கப்போகின்றன , எவ்விதம் நடிகர்களின் நடிப்பு இருக்கப்போகின்றது எனப் பல்வகை எதிர்பார்ப்புகளுடன் சென்றிருந்தேன். எதிர்பார்ப்புகள் எவையும் பொய்த்துப்போய் விடவில்லை. நாடகத்தைச் சிறப்பாக மேடையேற்றியிருந்தார்கள். அதற்காக மனவெளி அமைப்புக்கும், மொழிபெயர்த்து இயக்கிய பி.விக்னேஸ்வரனுக்கும் மற்றும் நாடகத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறையே அரசி விக்னேஸ்வரன், ஜெயப்பிரகாஷ் ஜெகவன் , எஸ்.ரி. செந்தில்நாதன் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஏனைய பாத்திரங்களான டாக்டர் ராங், திருமதி லிண்டே, அன்னா மரியா மற்றும் ஹெலெனா ஆகிய பாத்திரங்களில் குரும்பச்சிட்டி ஆர்.ராசரத்தினம், பவானி சத்தியசீலன், மாலினி பரராஜசிங்கம், கனித்தா உதயகுமார் ஆகியோர் நடித்திருந்தார்கள். இவர்களில் கனித்தா உதயகுமார் தவிர ஏனையோர் ஏற்கனவே நாடகத்துறையில் அனுபவம் பெற்ற தேர்ந்த நடிகர்கள். பல்கலைக்கழக மாணவியான கனித்தா உதயகுமார் அண்மையிலேயே தன்னை இத்துறையில் ஈடுபடுத்திக்கொண்டவர். நடிப்பில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்.

'ஒரு பொம்மை வீடு' இன்றைய பெண்ணியச் சிந்தனைகளுக்கெல்லாம் முன்னோடியான நாடகம் நாடகத்தின் முக்கிய ஆளுமை நோரா. வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட சிறப்பான பாத்திரம். குழந்தைகளுடன் தன் அன்புக் கணவனுடன் வாழுமொரு பெண் , அவனது நலன்களுக்காகவே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அவனுக்கு உண்மை கூறாது மறைத்த பெண், அவனுடன் வாழ்ந்த காலகட்டத்தில் , அதற்கு முற்பட்ட காலத்தில் தன் தந்தையுடன் வாழ்ந்த காலகட்டங்களிலெல்லாம் தான் ஒரு பொம்மையாகவே தான் வாழ்ந்த சமுதாயத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததை உணர்ந்து , தன் சுயமரியாதையுடன், சுய சிந்தனையுடன், சுதந்திரமாகத் தன்மீது பிணைக்கப்பட்டிருந்த தளைகளையெல்லாம் உடைத்து (திருமண பந்தமுட்பட) வாழப்புறப்படுவதுதான் நாடகத்தின் மையக்கரு.

•Last Updated on ••Monday•, 02 •July• 2018 13:19•• •Read more...•
 

எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைவு!

•E-mail• •Print• •PDF•

என்.கே.ரகுநாதன்'டொராண்டோ'வில் எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைந்த தகவலினை எழுத்தாளர்கள் கற்சுறா மற்றும் பா.அ.ஜயகரன் ஆகியோர் பகிர்ந்திருந்தனர். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் காத்திரமாகத் தன்னை நிலைநிறுத்திய எழுத்தாளர் என்.கே.ரகுநாதன்.  என்.கே.ரகுநாதன் என்றதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது அவரது புகழ்பெற்ற சிறுகதையான 'நிலவிலே பேசுவோம்' சிறுகதைதான். இத்தலைப்பிலேயே அவரது சிறுகதைத்தொகுதி 1962இல் தமிழகத்தில் பாரி பதிப்பகத்தின் விற்பனை உரிமையுடன் வெளியாகியுள்ளது. இலங்கையில் பாரதி புத்தகசாலையில் நூல் கிடைக்குமென்ற அறிவிப்புடன் வெளியான தொகுப்பு அது. எப்பதிப்பகம் வெளியிட்டது என்பதில் தெளிவான விபரமில்லை.

இத்தொகுப்பிலிருந்து என்.கே.ரகுநாதனின் 'நிலவிலே பேசுவோம்' சிறுகதை பற்றி மேலதிகத் தகவல்களைப்பெற முடிகின்றது.

அக்கதையை என்.கே.ரகுநாதன் மதுவிலக்குப பிரச்சாரம் செய்யும் இயக்கமொன்றின் பத்திரிகைக்கு அனுப்பியபோது நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுதந்திரனுக்கு அனுப்பியபோது 1951ம் ஆண்டில் அங்கு பணி புரிந்துகொண்டிருந்த எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது. நூலுக்கான அ.ந.க.வின் முன்னுரை மூலம் இதனை அறிய முடிகின்றது.  மேலும் என்.கே.ரகுநாதனின் 'சில வார்த்தைகள்'  மூலம் அ.ந.க மேற்படி முன்னுரையினை ஆஸ்பத்திரியில் நோய்ப்படுக்கையிலிருந்துகொண்டு எழுதியுள்ளார் என்பதையும் அறிய முடிகின்றது.

என்.கே.ரகுநாதனின் மறைவுக்காக ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு, அவர் நினைவாக 'நிலவிலே பேசுவோம்' தொகுப்புக்கு அ.ந.கந்தசாமி எழுதிய முன்னுரையினையும், 'நூலகம்' தளத்திலுள்ள 'நிலவிலே பேசுவோம்' தொகுப்புக்கான இணைய இணைப்பினையும் ( http://www.noolaham.net/project/03/252/252.pdf )  இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.


என்.கே.ரகுநாதனின் 'நிலவிலே பேசுவோம்' நூல் முன்னுரை! - அ. ந. கந்தசாமி -

'நிலவிலே பேசுவோம்"-என்ற அழகிய தலைப்புடன் கூடிய இச்சிறுகதைத் தொகுதியைத் தரும் என். கே. ரகு நாதன், ஈழத்தின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர்.

முதன்முதலில் இவருடைய சிறுகதையொன்றினை நான், 1951ம் ஆண்டில் வாசித்தேன். "சுதந்திரன்" பத்திரிகையில் நான் கடமையாற்றி வந்த காலம் அது. வாரந்தோறும் பிரசுரத்துக்கேற்ற கதைகளை நானே வாசித்துத் தெரிந்தெடுப்பது வழக்கம். இது அவ்வளவு இன்பமான பொழுதுபோக்கல்ல. நல்லது, கெட்டது, இரண்டும் கெட்டான் என்ற நிலையிலுள்ள சகல கதைகளையும் வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஒரு மூடை பதரை நாள் முழுவதும் துழாவி ஒரு நெல்லைப் பொறுக்கி எடுப்பது போன்ற வேலை. சில சமயம் ஒரு முழுநாள் வேலைகூட வியர்த்தமாகிவிடலாம். இப்படி, நான், ஒரு நாள் குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தபோது ஒரு  குண்டுமணி கிடைத்தது. அதுதான் "நிலவிலே பேசுவாம்" என்ற இப்புத்தகத்தின் தலைப்புக்குரிய சிறுகதையாகும்.

•Last Updated on ••Tuesday•, 12 •June• 2018 06:07•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 285: நடிகர் ரஜினியின் தூத்துக்குடிப்பேச்சும், அவர் மீதான சாடல்களும் பற்றி.....

•E-mail• •Print• •PDF•

முகநூல் முழுவதும் நடிகர் ரஜினியை வாங்கு  வாங்கென்று வாங்கித்தள்ளுகின்றார்களே அப்படி என்னதான் அவர் பேசி விட்டார் என்று பார்க்க வேண்டுமென்று இணையத்தில் தேடியபோது கிடைத்த காணொளியில் ரஜினி பேசியதையும், அவர் பேசியதாக அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.

ரஜினி நியாயமாகப் போராடிய மக்களைச் சமூக விரோதிகள் என்று கூறி விட்டார் என்பது அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் கூறும் முக்கிய காரணம். ஆனால் அக்காணொளியில் ரஜினி கூறியது என்ன? மக்களது போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து கெடுத்து விட்டார்கள். அவ்விதம் புகுந்த சமூக விரோதிகள்  காவல் துறையினரைத் தாக்கியதே தொடர்ந்து நடந்த நிலைமைக்குக் காரணம் என்று கூறுவதைத்தான் அக்காணொளியில் காண முடிகின்றது. இன்னுமொன்றையும் அவர் கூறுகின்றார். அது காவற்துறை ஆடை அணிந்த காவற்துறையினரைத்தாக்குவதை ஒருபோதுமே தன்னால் ஆதரிக்க முடியாது. அடுத்து அவர் கூறியது தொடர்ந்து இவ்விதம் போராட்டங்கள் நடந்தால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்பதை.

காணொளியில் ஓரிடத்திலும் போராட்டம் நடத்திய மக்களைச் சமூக விரோதிகள் என்று ரஜினி கூறவில்லை. நியாயமான போராட்டத்தினுள் சமூக விரோதிகள் சிலர் புகுந்து காவல் துறையினரைத்தாக்கியதுதான் நடந்த பிரச்சினைக்குக் காரணம். இவ்விதம்தான் அவர் கூறியிருக்கின்றார்.  அவர் தன் கருத்துகளைக் கூறுவதற்கு முழு உரிமையுமுண்டு. மேற்படி போராட்டம் தவறு. போராட்டத்தை நடத்தியவர்கள் சமூக விரோதிகள் என்று பொதுவாகக் கூறியிருந்தால் அது முற்றிலும் தவறானது. ஏற்றுக்கொள்ள முடியாதது.

•Last Updated on ••Saturday•, 02 •June• 2018 05:38•• •Read more...•
 

கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு ! 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு!

•E-mail• •Print• •PDF•

- எனது  'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பினை (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது)  அடிப்படையாக வைத்துத் திறனாய்வுக் கட்டுரையொன்றினை லக்பிமா  (Lakbima) சிங்களத் தினசரியின் வாரவெளியீட்டின் இலக்கியப்பகுதிக்குப் பொறுப்பான எழுத்தாளர் கத்யான அமரசிங்க அவர்கள் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை லக்பிமா வாரவெளியீட்டில் எழுதியுள்ளார். சிறப்பான அச்சிங்களக் கட்டுரையினை தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார் எழுத்தாளர் ரிஷான் ஷெரீப். இருவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. இக்கட்டுரையினைத் தங்களது வாரவெளியீட்டில் வெளியிட்ட லக்பிமா பத்திரிகை நிறுவனத்துக்கும் மனப்பூர்வமான நன்றி. இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி. பல தமிழ் நூல்களைச் சிங்கள மொழிக்கும் மொழிபெயர்த்த எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த அவர்களால் மேற்படி 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' நூல் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றது. அவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். - வ.ந.கிரிதரன் -


பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது, 'மந்திரி மனை' என அழைக்கப்படுகிறது. தென்னிந்திய வீடுகளின் கட்டடக்கலையும், ஐரோப்பிய வீடுகளின் கட்டடக்கலையும் ஒருங்கே அமைந்திருந்த அந்த அரண்மனையை முதன்முதலாகக் கண்டபோது, இலங்கையின் தென்பகுதியில் காணக்கூடிய மழையும், வெயிலும், காலமும் பொலிவிழக்கச் செய்திருக்கும் பழங்கால, பாழடைந்த ‘வளவ்வ’ எனப்படும் பாரம்பரிய வீடுகளை அது நினைவுபடுத்திற்று. யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அந்த அரண்மனையானது, போர்த்துக்கேயர்களின் வருகையோடு ஆரம்பித்த காலனித்துவ யுகத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த மந்திரியொருவரின் இல்லமாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. அவ்வாறே யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர்கள் கைப்பற்ற முன்பு இம் மந்திரி மனை அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் யாழ்ப்பாண மன்னரொருவரின் அரண்மனையும் இருந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

முதன்முறையாக 'மந்திரி மனை'யைக் கண்ட எனது உள்ளத்தில் யாழ்ப்பாண வரலாறு குறித்த பல தரப்பட்ட எண்ணங்கள் கேள்வியெழுப்பின. எனினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கே இருந்திருக்கக் கூடிய ஶ்ரீலங்காவின் தமிழ் மன்னரொருவரின் ராஜதானியைக் குறித்து கற்பனை செய்து பார்ப்பதைத் தவிர, அதைக் குறித்து மேலதிக விபரங்களைத் தேடிப் பெற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பில்லை என்பதனால் அந்தக் கற்பனைகளும் கூட தோன்றிய இடத்திலேயே மரித்து விடவும் வாய்ப்பிருந்தது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி ராஜதானிகள் குறித்து நாங்கள் பலதரப்பட்ட வரலாறுகளைப் படித்திருந்த போதிலும், ஆயிரக்கணக்கான வருடங்கள் யாழ்ப்பாணத்தில் நிலவியிருந்த ராஜதானிகளின் அமைவிடங்கள் மற்றும் வரலாறு குறித்த விரிவான குறிப்பொன்றை எங்கிருந்து தேடிப் படிப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

•Last Updated on ••Friday•, 25 •May• 2018 21:49•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 284: ஈழகேசரி இலக்கியத் தடங்கள் 2 - ஈழகேசரியின் கம்பன் நினைவு இதழும், கவீந்திரனின் (அ.ந.கந்தசாமி) 'கவியரசன்' கவிதையும்!

•E-mail• •Print• •PDF•

ஈழகேசரி 16.4.1944 ஞாயிற்றுக்கிழமைப் பிரதியை அண்மையில் நூலகம் இணையத்தளத்தில் வாசித்தபொழுது அவதானித்த , என் கவனத்தைக் கவர்ந்த விடயங்கள் வருமாறு:

1. முதற்பக்கத்தில் 'புதிய கல்வித்திட்டம்' பற்றிய 'விந்தியா விசாரணைச்சபையின் கல்வித்திட்டம் பற்றிய பரிந்துரை சம்பந்தமாகப் பிரபல வழக்கறிஞர் பாலசுந்தரத்தின் அபிப்பிராயம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி வருடாந்தப்பரிசளிப்பு நிகழ்வில் (7.4.44) அவர் ஆற்றிய உரையில் அவர் அந்நிய பாஷையில் ஊட்டப்படும் கல்வியினைச் சாடியிருக்கின்றார்.  அந்நிய பாஷையில் கல்வி கற்பதால் துரிதமாக அறிவு பெறவே முடியாது என்று அவர் கூறுகின்றார்.

'விந்தியா' விசாரணைச்சபை தாய்மொழி மூலம் கல்வியூட்ட வேண்டுமென்று வற்புறுத்தியிருப்பதுடன், பல்கலைக்கழகம் வர இலவசக் கல்வி கொடுபடவேண்டுமென்றும் வற்புறுத்தியுள்ளது என்பதையும் இச்செய்திமூலம் அறிகின்றோம்.

மேலும் அவ்விழாவுக்குத் தலைமை வகித்துப் பரிசுகளை வழங்கியவரான உள்நாட்டு மந்திரி தமிழரான் அ.மகாதேவா என்பதையும் அறிகின்றோம். மேற்படி செய்திக்கு ஈடாக இரண்டாம் உலக யுத்தம் பற்றிய செய்தி 'யுத்தம் நடக்கின்றது: இம்பாலில் கடும்போர்' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது.

அத்துடன் மேற்படி பிரதி கம்பர் 'நினைவு இத'ழாகவும்  வெளியாகியுள்ளது என்பதையும் காண முடிகின்றது. 'சூர்ப்பணகையின் காதல்' என்னும் தலைப்பில் தென்மயிலை இ.நமச்சிவாயத்தின் கட்டுரை, இலங்கையர்கோனின் 'கம்பராமாயணமும் நானும்'என்னும் கட்டுரை, க.செ.யின் 'அளவான சிரிப்பு', 'சோதி'யின் 'வால்மீகியும் கம்பனும்', ச.அம்பிகைபாகனின் 'இரு காதற் காட்சிகள்', சோம.சரவணபவனின் 'கம்பச் சக்கரவர்த்தி', வ.கந்தையாவின் 'கம்பன் கடவுட்கொள்கை', மா.பீதாம்பரத்தின் 'கம்பர் வந்தால்..', இராஜ அரியரத்தினத்தின் 'சான்றோர் கவி', இணுவை வை.அநவரத விநாயகமூர்த்தியின் 'கம்பன் கவிச்சுவை', ஆசாமி என்பவரின் 'தண்டனை', பண்டிதர் அ.சோமசுந்தர ஐயரின் 'கம்பர் கண்ட கசிவு' ஆகிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

•Last Updated on ••Friday•, 25 •May• 2018 05:01•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 283: ஈழகேசரி இலக்கியத் தடங்கள் 1 - பதின்ம வயது இளைஞன் ஒருவனின் புரட்சிக்கவிதை!

•E-mail• •Print• •PDF•

'ஈழகேசரி' (யாழ்ப்பாணம்) பத்திரிகையின் 7.11.1943 பதிப்பில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'கனல்' என்னும் கவிதையானது 'கவீந்திரன்' என்னும் புனைபெயரில் வெளியாகியுள்ளது. 1924இல் பிறந்த அ.ந.க.வுக்கு அப்பொழுது வயது  19. தனது பதின்ம வயதினிலேயே அவர் கவீந்திரன் என்னும் புனைபெயரைப் பாவித்துள்ளதை அறிய முடிகின்றது. ஈழகேசரி பத்திரிகைப் பிரதிகளை 'நூலகம்' அறக்கட்டளை நிறுவனத்தின் இணையத்தளத்தில் வாசிக்கலாம்.

பின்னாளில் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகப் பரிணமித்த அ.ந.க.வின் பதின்ம வயதுக்கவிதையான 'கனல்' என்னும் இக்கவிதையிலேயே அதற்கான ஆரம்ப அறிகுறிகளைக் காண முடிகின்றது.

சண்டமாருதம் எழுந்ததாம். சகமெல்லாம் சூறையில் சுழன்றதாம். அச்சண்டமாருதத்தால் அண்டங்கள் யாவும் நடுங்கியதாம். மேலே ஆகாய மேகமும் அதனால் அலையும் நிலை ஏற்பட்டதாம். தொடர்ந்து எங்கும் கனல் தோன்றி மூடியதாம். எட்டுத் திசையும் எரியும் வகையிலான கனலது. யாவற்றையும் பொசுங்கிடச் செய்யும் பெரு நெருப்பு அது.

•Last Updated on ••Friday•, 25 •May• 2018 04:57•• •Read more...•
 

தமிழகத்தில் நூல்கள் வாங்கு ஆர்வமுள்ளவர்கள் கவனத்துக்கு: அறிமுகம் - எழுத்தாளர் ஸ்ரீராம் விக்னேஷ் ,Srirham Vignesh, (வவுனியா விக்கி)

•E-mail• •Print• •PDF•

தமிழகத்தில் நூல்கள் வாங்கு ஆர்வமுள்ளவர்கள் கவனத்துக்கு: அறிமுகம் - எழுத்தாளர் ஸ்ரீராம் விக்னேஷ் ,Srirham Vignesh, (வவுனியா விக்கி) எழுத்தாளர் ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலிதமிழகத்திலிருந்து நூல்களை வாங்க ஆர்வமுள்ளவர்களுக்கு நான் நண்பரொருவரை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். அவர் என் பால்ய காலத்து நண்பர்களிலொருவர். நண்பர் வவுனியா விக்கியே எழுத்தாளர் ஸ்ரீராம் விக்னேஷ் (Srirham Vignesh). அவர்களையே நான் அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். நீங்கள் வாங்க விரும்பும் புதிய நூல்களென்றாலும் சரி, உங்களது இளமைக்காலத்தில் நீங்கள் வாசித்த 'பைண்டு' செய்த படைப்புகள் அல்லது அக்காலகட்டத்தில் வெளியான நூல்கள் எவையென்றாலும் அவர் தன்னால் முடிந்த வரையில் தேடி, நியாயமான கட்டணத்தில் அனுப்புவார்.

நான் நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த நூல்களிலொன்று: ஆரம்பகால ராணிமுத்துப் பிரசுரமாக வெளியான எழுத்தாளர் ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'. என் பால்ய காலத்தில் நான் வாசித்த என்னைக் கவர்ந்த நூல்களிலொன்றென்பதால் , ஒரு நினைவுக்காக அந்நூலை வாங்க விரும்பினேன். அவரிடம் கூறினேன் இந்நூலை எங்காவது பழைய புத்தக் கடையில் கண்டால் வாங்க விருப்பமென்று. அவர் உடனேயே பழைய புத்தகக் கடைகளெல்லாம் தேடி , கடையொன்றில் அந்நூலைக் கண்டு பிடித்தார். ஆனால் அட்டையில்லாமலிருந்த நூலினையே அவரால் கண்டு பிடிக்க முடிந்தது. இந்நிலையில் எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தன் முகநூலில் பகிர்ந்திருந்த ஆரம்ப கால ராணிமுத்துப் பிரசுரங்களின் அட்டைப்படங்களிலொன்றாக ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'யுமிருந்தது. அதனை நான் என் முகநூலில் பகிர்ந்திருந்தேன். அவர் அவ்வட்டைப் படத்தைக்கொண்டு அழகான அட்டையொன்றினை உருவாக்கி, அட்டையற்ற நந்திவர்மன் காதலிக்கு அதனை அணிவித்துக் கூரியரில் அனுப்பியிருந்தார். அதற்காக அவருக்கு நன்றி.

கூடவே அக்காலகட்டத்தில் ஆனந்த விகடனில் தொடராக வெளியான ஜே.எம்.சாலியின் 'கனாக் கண்டேன் தோழி' யின் பைண்டு செய்யப்பட்ட தொகுப்பினையும் கண்டெடுத்து அனுப்பினார். அத்தொடர் நாவலில் ஓவியர் ஜெயராஜ் வரைந்த சில ஓவியங்களையும் இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். இளம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல் விதவையின் மறுமணத்தைப்பற்றியும் பேசுகின்றது. நாவலில் அவ்வப்போது வரும் காவிரி ஆற்றங்கரைக் காட்சிகளும், மொழி நடையும் படிப்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொள்வன.

•Last Updated on ••Monday•, 21 •May• 2018 12:05•• •Read more...•
 

'ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரனுடான இலக்கியச் சந்திப்பு! (சிறு குறிப்பு)

•E-mail• •Print• •PDF•

'ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரனுடான இலக்கியச் சந்திப்பு! (சிறு குறிப்பு)'ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரனுடான இலக்கியச் சந்திப்பு! (சிறு குறிப்பு)நேற்று மாலை (18.05.2015) எழுத்தாளர் தேவகாந்தனுடன் 'ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்' ஏற்பாடு செய்திருந்த , தற்போது கனடாவுக்கு வருகை தந்திருக்கும் 'ஞானம்' இதழாசிரியர் எழுத்தாளர் தி.ஞானசேகரன் தம்பதியினருடனான இலக்கியச்சந்திப்புக்குச் சென்றிருந்தேன். நிகழ்வில் கனடாவில் கலை, இலக்கியத்துறையில் நன்கு அறியப்பட்ட பலரைக் காணக்கூடியதாகவிருந்தது. குறிப்பாக எழுத்தாளர்களான அ.முத்துலிங்கம், மனுவல் ஜேசுதாஸ், அகணி சுரேஷ், அகில், தேவகாந்தன், பார்வது கந்தசாமி, சி.பத்மநாதன், ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா, 'சோக்கலோ' சண்முகநாதன், முருகேசு பாக்கியநாதன், 'காலம்' செல்வம், த.சிவபாலு, முனைவர் நா.சுப்பிரமணியன் தம்பதியினர்.. எனப்பலரைக் காணக்கூடியதாகவிருந்தது.

நிகழ்வு முள்ளிவாய்க்காலில் மரணித்த அனைவருக்குமான மெளன அஞ்சலியுடன் ஆரம்பமாகியது. அதனைத்தொடர்ந்து எழுத்தாளர் அகில் தொடக்கவுரையினை நிகழ்த்தினார். அதிலவர் இலங்கையில் வெளியான தமிழ்ச்சஞ்சிகைகளின் பங்களிப்பு பற்றி, குறிப்பாக முதலாவது சஞ்சிகையான கே.கணேசின் 'பாரதி' தொடக்கம் 'ஞானம்' சஞ்சிகை வரையிலான இலக்கியப்பங்களிப்புகள், அவற்றின் முக்கியத்துவம் பற்றிச் சுருக்கமாக எடுத்துரைத்தார். தனது முதலாவது சிறுகதை ஞானம் சஞ்சிகையிலேயே வெளியானதெனவும், மேலும் சிறுகதைகள் வெளியானதாகவும், தனது நாவலொன்று ஞானம் வெளியீடாக வெளியானதாகவும் தனது உரையிலவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

அதனைத்தொடர்ந்து ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரான எழுத்தாளர் தி. ஞானசேகரன் 'ஈழத்தின் இன்றைய இலக்கியச் செல்நெறி' என்னும் தலைப்பில் சுமார் 45 நிமிடங்கள் வரையில் நீண்டதொரு உரையினை நிகழ்த்தினார். தான் கூறவேண்டியவற்றை, மிகவும் திறமையாகத் தயார் படுத்தி வந்திருந்தார் என்பதை அவரது தான் கூற வேண்டிய பொருள் பற்றிய தெளிவான உரை புலப்படுத்தியது. அவரது உரையில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான கருத்துகள் சில வருமாறு:

1. அண்மையில் நிகழ்ந்த முப்பதாண்டுப் போரின் விளைவாக உருவான இரட்டைக் குழந்தைகளாக நாட்டில் படைக்கப்பட்ட போர்க்கால இலக்கியத்தையும், நாட்டில் நிலவிய அரசியல் நிலை காரணமாகப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் படைத்தபுலம்பெயர் இலக்கியத்தையும் குறிப்பிடலாம்.

2. அக்காலகட்டத்தில் உருவான இலக்கியம் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ஞானம் சஞ்சிகை போர்க்கால இலக்கியச் சிறப்பிதழ், புலம்பெயர் தமிழர் இலக்கியச் சிறப்பிதழ் போன்றவற்றை வெளியிட்டுள்ளது.
•Last Updated on ••Sunday•, 20 •May• 2018 17:40•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 282 : எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுஎழுத்தாளர் பாலகுமாரனின் மறைவு பற்றிய செய்தியைப் பலர் முகநூலில் பகிர்ந்துகொண்டிருக்கின்றார்கள். எண்பதுகளில் தமிழகத்து வெகுசன இதழ்களில் பிரபலமாக விளங்கிய எழுத்தாளர். தமிழ்த்திரையுலகிலும் கால் பதித்தவர். இவர் வெகுஜன இதழ்களில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் நான் வெகுசன இதழ்களை விட்டு விலகி விட்டிருந்தேன். அவ்வப்போது பார்ப்பதோடு சரி. எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் படைப்புகள் ஏதும் வந்தால் மட்டும் வாங்குவதுண்டு. அதனால் பாலகுமாரனின் எழுத்துகள் எவையும் என்னைக் கவர்ந்திருக்கவில்லை. கல்கி, நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், சாண்டில்யன், அகிலன், 'நைலான் கயிறு', 'அனிதா இளம் மனைவி' காலத்து சுஜாதா, மீ.ப.சோமு, ர.சு.நல்லபெருமாள், பி.வி.ஆர், .. என்று வெகுசன இதழ்களில் ஆதிக்கம் செலுத்தியவர்களுக்குப் பிறகு என்னை பிறகு உருவான வெகுசன எழுத்தாளர்கள் எவருமே கவரவில்லை. ஆனால் வெகுசன எழுத்துகளை வழங்கிய, வழங்கும் எழுத்தாளர்கள் மேல் மதிப்பு வைத்திருப்பவன் நான். வாசகர்களின் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டியவர்கள், தூண்டுபவர்கள் இவர்கள். அவ்வகையில் இவர்களது படைப்புகள் முக்கியமானவை.

•Last Updated on ••Tuesday•, 15 •May• 2018 17:35•• •Read more...•
 

Poem: Oh, Super Human! Where have you concealed yourself?

•E-mail• •Print• •PDF•

Poem: Oh, Super Human! Where have you concealed yourself?  'ஓ! அதிமானுடரே! நீவிர் எங்கு போயொளிந்தீரோ?' என்னும் என் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு. ஆங்கிலத்தில் இக்கவிதையினை மொழிபெயர்த்தவர் முனைவர் ர.தாரணி .


Poem: Oh, Super Human! Where have you concealed yourself?

- In Tamil: V.N.Giritharan; Translation in English Dr. R. Dharani -

Concrete! Concrete and Concrete
Walls! Ingesting the rays to radiate flames
Blameless, pellucid white surface,
Chuckling Cement-clad pathway.
In the embrace of the audacious columns,
lies enraptured spaces
heat rays cut through the layers of air.
In the pleasure of delusion over
The grass being excited
by the smiles of dew drops,
There is a gloomy cloud of thought over
The cool Lady Earth under her blue canopy.

The embracing dreams of the
Drooping tree belles' cuddle.

The impact of artificiality
Spreading over Nature’s repository.

In trees, on grass, in herds, in  caves,
In the dreadful hours of darkness,
Panicked by the lightning storm, under the torrential shower,
Coiled up in the times of bewilderment,
Continued the ancient  journey

•Last Updated on ••Monday•, 30 •April• 2018 17:56•• •Read more...•
 

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்! "The Wanderers Of The Sky And Their Cry Of Melancholy " என்னும் தலைப்பில் நான் எழுதிய ஆங்கிலக் கவிதையின் சிங்கள மொழிபெயர்ப்பு லக்பிம சிங்களத் தினசரியின் ஞாயிற்றுப் பதிப்பில் (22.04.2018) வெளியாகியுள்ளது. அக்கவிதை தமிழில் கீழே:

http://e-paper.lakbima.lk/2018/April/last_22_04_18/manjusawa.pdf

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்! - வ.ந.கிரிதரன் -

"படுத்திருக்கையில்
இரவுமழைச் சப்தங்கள்
இருண்டவான் காட்சி
இவை எப்பொழுதுமே
என்னிதயத்தை ஆழமாகத் தொடுவன.

காலையிலிருந்து
மழை பலமாகப்
பெய்து கொண்டிருக்கிறது.

மழை.
அகதிகளின் கண்ணீர்.
நாடற்ற வான் நாடோடிகள்,
மேகங்களின்
கண்ணீர்,

வழக்கம்போல்
படுத்திருக்கையில்
இரவுமழைச் சப்தங்கள்
இருண்டவான் காட்சி
இவை என்னிதயத்தை
ஆழமாகத் தொடுகின்றன.

துயர்மிகு அழுகை.
நாடோடிகளின் துயர் மிகு அழுகை.
வேதனைமிகு அழுகை.
நாடோடிகளின் வேதனை மிகு அழுகை.
அவர்கள் அழுகின்றார்கள்
அவர்கள் இழந்த மண்ணுக்காக.

•Last Updated on ••Saturday•, 21 •April• 2018 15:57•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 281: சங்கக்கவிதைகளும், ஓசையும்..

•E-mail• •Print• •PDF•

 கவிஞர் விக்ரமாதித்யன்முனைவர் கெளசல்யா சுப்பிரமணியன்அண்மையில் கவிஞர் விக்ரமாதித்யனின் 'எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு' என்னும் நூலை வாசித்தேன். கவிஞர் தன் பால்ய காலம் பற்றி, தனது பிறந்த மண்ணான திருநெல்வேலி பற்றி, தன் கவிதைகள் பற்றி, கவிதைகள் பற்றி, தானறிந்த சக இலக்கிய ஆளுமைகள் பற்றி, திரைப்படப்பாடல்களை எழுதிய கவிஞர்களைப்பற்றி, அவர்களின் பாடல் வரிகள் தன்னிடம் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, திமுக அரசியல்வாதிகள் பற்றி, அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, சக கவிஞர்களின் கவிதைகளைப்பற்றி, .. இவ்விதம் பல்வேறு விடயங்களைச் சுவையான, நெஞ்சையள்ளும் நடையில் கூறியிருக்கின்றார். பொதுவாகவே எனக்கு கலை, இலக்கிய ஆளுமைகளின் நனவிடை தோய்தல்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வமுண்டு. கவிஞர் விக்ரமாதித்யனின் இந்நூலையும் அவ்விதமே வாசித்தேன்.

அவர் நேர்காணலொன்றில் சங்கக்கவிதைகள் பற்றிக் கூறியிருந்த பின்வரும் கூற்று என் கவனத்தைக் கவர்ந்தது: "சங்கக் கவிதைகள் இசை கருதிச் செய்யப்பட்டவையல்ல". இன்னுமோரிடத்தில் " தமிழில் திருத்தக்கதேவர், கம்பனிலிருந்துதான் ஓசை, சந்தம் கூடி வருகிறது" என்கின்றார்.

கவிஞரின் இக்கூற்றுகளை வாசித்துக்கொண்டிருந்த போது எனக்கு தற்போது வாசித்துக்கொண்டிருக்கும் முனைவர் கெளசல்யா சுப்பிரமணியனின் "இசைத்தமிழ்ச் சிந்தனைகள்" நூலின் ஞாபகம் வந்தது. அதிலவர் சங்க காலத்திலிருந்து தமிழ் இசைப் பாடல்களின் வரலாறு தொடங்குவதாகக் கூறுவதுடன் அதற்கான ஆதாரங்களையும் ஆய்வுரீதியாக முன் வைத்திருப்பது நினைவுக்கு வந்தது. நூலிலுள்ள 'கலிப்பாவும் தமிழரின் இசை மரபும்' என்னும் கட்டுரையில் சங்கத் தமிழ்ப்பாவினங்களில் ஒன்றான கலிப்பா எவ்விதம் பிற்காலத்தில் உருவான கீர்த்தனைகளின் உருவாக்கத்துக்கு முன்னொடியாக விளங்கியது என்றெல்லாம் கூறியிருப்பது நினைவுக்கு வந்தது. அதில் அவர் கீர்த்தனைகளில் வரும் பல்லவி , அநுபல்லவி மற்றும் சரணம் என்பன 'கலிப்பாவின் தரவு, தாழிசை. சுரிதகம் என்ற கட்டமைப்புடன் ஓரளவு ஒத்த காட்சியைத் தருவதை உணர முடியும்" என்று கூறுவார் (பக்கம் 61). மேலும் அவர் "கீர்த்தனையிலே சரணங்களே அவற்றின் உயிர்ப்பான உள்ளடக்கப் பகுதியாகத் திகழ்வன. கலிப்பாவில் தாழிசைகளும் அப்படியே. எனவே கீர்த்தனை என்னும் இசைப்பா வடிவத்துக்கு கலிப்பாவின் அமைப்பு - குறிப்பாக ஒத்தாழிசைக் கலிப்பாவின் தரவு, தாழிசை அமைப்பு - ஒரு முன்னோடி நிலை என்பதை நாம் உய்த்துணர முடியும்." (பக்கம் 61) என்றும் கூறுவார்

•Last Updated on ••Saturday•, 21 •April• 2018 15:29•• •Read more...•
 

கவிதை: என்னைக் கண்ணீர் உகுக்க விடு! மூலம் (ஆங்கிலம்) - கத்யானா அமரசிங்க ( Kathyana Amarasinghe) | தமிழில் - வ.ந.கிரிதரன் -

•E-mail• •Print• •PDF•

கத்யான அமரசிங்க ( Kathyana Amarasinghe) அண்மையில் ஆங்கிலத்தில் கத்யான அமரசிங்க ( Kathyana Amarasinghe)  ஆங்கிலத்தில் எழுதிய கவிதை Let  My Tears Fall என்னும் கவிதை  இது. 83 கறுப்பு ஜுலைக்கலவரத்தால் நாட்டை விட்டே அகதியாகப் புலம்பெயர்ந்து சென்ற தனது தமிழ்ச்சகோதரனை எண்ணி, இதயம் வருந்தி வெளிப்படுத்தும் உணர்வுகளின் வெளிப்பாடு இக்கவிதை. அண்மையில் இவரது  'பருத்தித்துறைக் கடற்கரையில்..' என்னும் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பினை வழங்கியிருந்தேன். இப்பொழுது கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பினைத் தருகின்றேன். பல்லினங்கள் வாழுமொரு சூழலில் இது போன்ற கவிதைகள் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வினை வளர்க்க உதவும். தமிழ் மக்களின் உணர்வுகளை, பிரச்சினைகளை நன்கு உணர்ந்துகொண்ட சிங்கள எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்க. சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe) தற்போது லக்பிம பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.  - பதிவுகள் -


கவிதை: என்னைக் கண்ணீர் உகுக்க விடு!

மூலம் (ஆங்கிலம்) - கத்யானா அமரசிங்க ( Kathyana Amarasinghe) | தமிழில் - வ.ந.கிரிதரன் -

கறுப்பு ஜூலை வானமானது
செவ்விரத்தத்தால் வர்ணமடிக்கப்பட்டிருந்தபோது,
நகரம் வெறுப்பினால் எரிந்துகொண்டிருந்தபோது,
என்னுடைய சகோதரனின் இதயம் காயப்பட்டிருந்தபோது,
அது துண்டுகளாகச் சிதறுண்டிருந்தபோது
நான் எங்கே?

பனையோலை வேலியானது உடைக்கப்பட்டபோது
பூத்துக்குலுங்கும் பூக்கள் சிதைக்கப்பட்டபோது
எனது சகோதரன் தனக்குப் பிரியமான நாட்டை விட்டுப்
பலவந்தமாக ஓடச்செய்யப்பட்டபோது
அத்துடன் தொலைதூர நாடொன்றில்,
நாடற்றவனாகத் தனிமை கவிந்த மனிதனாக
அவன் அமைதியாகக் கண்ணீர் சிந்தியபோது
நான் எங்கே!

•Last Updated on ••Wednesday•, 18 •April• 2018 18:49•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 280: பார்த்திபனின் கதை சிறுகதைத்தொகுதி பற்றி...

•E-mail• •Print• •PDF•

பார்த்திபன் கதைகள்: 'கதை' முகம் தெரியாத நண்பர்களுக்கு நன்றி: கிடைத்தது பார்த்திபனின் சிறுகதைத்தொகுப்பு 'கதை'! புகலிட, புலம்பெயர் தமிழ்ப்படைப்பாளிகளில் மிகுந்த சிறப்பானதோரிடத்திலிருப்பவர் எழுத்தாளர் பார்த்திபன், சிறுகதை, நாவல் என வெளியான அவரது படைப்புகள் மிகவும் முக்கியமானவை. அவரது படைப்புகளில் பிறந்த மண்ணில் நிலவிய சூழல்கள், புகலிடம் நாடிப்புகுந்த மண்ணில் நிலவிய, நிலவிடும் சூழல்கள், நவீன உலகமயப்படுத்தப்பட்ட மானுட சமுதாயச் சூழலில் மானுடர் நிலை எனப்பல்வகைச் சூழல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். முக்கியமான படைப்பாளி. அவரது சிறுகதைகளில் 25 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து 'கதை' என்னும் பெயரில் தொகுப்பொன்றினை அவரது நண்பர்கள் 'தமிழச்சு' (சுவிஸ்) பதிப்பக வெளியீடாக வெளியிட்டுள்ளார்கள். இதற்காக அந்நண்பர்களை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

பார்த்திபனின் எழுத்துகளைக் குறிப்பாகச் சிறுகதைகளை ஆவணப்படுத்தியுள்ள முக்கியமான தொகுப்பு இது. நூலின் இறுதியில் எழுத்தாளர்கள் பலரின் பார்த்திபனின் எழுத்துகள் பற்றிய கருத்துகளையும் இணைத்துள்ளார்கள். அட்டைப்படத்தைச் சிறப்புற வரைந்த மணிவண்ணன் என்னும் ஓவியரே நூலிலுள்ள சிறுகதைகளுக்கும் நவீனத்துவம் வெளிப்படும் ஓவியங்களையும் வரைந்துள்ளார். அவையும் நூலுக்கு மேலும் சிறப்பூட்டுகின்றன.

அத்துடன் இத்தொகுதியினை என்னிடமும் கனடாவுக்கு அனுப்பிச் சேர்த்துள்ளார்கள். முகம் தெரியாத அந்நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எழுத்தாளர் பார்த்திபன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது எழுத்துகள், சிந்தனைகள் எனக்குப் பிடித்தவை. அவ்வகையில் இத்தொகுப்பினை எனக்கு அனுப்பிய முகம் தெரியாத நண்பர்களுக்கு மீண்டுமொரு முறை நன்றி. இவர்களைப்போன்றவர்களால்தாம் பல அரிய படைப்புகள் வரலாற்றில் ஆவணப்படுத்தப்படுகின்றன. அதற்காகவும் ஒரு பாராட்டு. நூலில் கூடத் தாம் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தாத இவர்களது பண்பு நெஞ்சைத்தொடுகின்றது. இத்தொகுதியினைப் பற்றிய எனது கருத்துகளை விரைவில் பதிவு செய்வேன்.

பார்த்திபனின் சிறுகதைத் தொகுதியான 'கதை'யின் முதல் ஐந்து சிறுகதைகளை வாசித்து விட்டேன். அவை பற்றிய கருத்துகளிவை. இவற்றைத்தாம்  எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் 'புள் ஷிட்' குப்பைகள் என்று தனது முகநூற் பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார். அதற்கு எதிர்வினையாற்றிய எழுத்தாளர் சுமதி ரூபன் முதல் மூன்று கதைகளுக்கு மேல் தன்னால் வாசிக்க முடியவில்லையென்று குறிப்பிட்டிருக்கின்றார். எனவே இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளையும் வாசிப்பது என்று முடிவெடுத்திருக்கின்றேன். அவ்வப்போது வாசித்து முடிந்ததும் அவை பற்றிய குறிப்புகளை எழுதுவதற்கும் தீர்மானித்திருக்கின்றேன்.

தொகுப்பிலுள்ள  முதல் ஐந்து கதைகளின் தலைப்புகள் வருமாறு: 'ஒரே ஒரு ஊரிலே..', (1986), 'பாதியில் முடிந்த கதை' (1987), 'காதல்' (1988), 'பசி' (1988) & 'மனைவி இறக்குமதி' (1988).

மானுட வாழ்வானது அதன் முடிவு தெரியாத நிலையில் இறுஹி வரையில் ஆசாபாசங்களுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது. முகநூலில் முடிவு வரைப் பல்வேறு விடயங்களைப்பற்றிப் பதிவுகளிட்ட பலரின் முடிவுகளை அடுத்த நாள் அறிந்திருக்கின்றோம். கனவுகளுடன், கற்பனைகளுடன், வருங்காலத்திட்டங்களுடன் , பல்வகையான உணர்வுகளுடன் இயங்கிக்கொண்டிருக்கும் மானுட இருப்பானது பல சமயங்களில் எதிர்பாராத விபத்துகளில், இயற்கை, செயற்கை நிகழ்வுகளின் கோரப்பிடிக்குள் சிக்கி, வாழும் மண்ணில் நிலவும் சமூக, அரசியற் மற்றும் பொருளாதாரச் சூழல்கள் காரணமாக முற்றுப்பெறுவதை அன்றாடம் வெளியாகும் செய்திகள் மூலமறிந்திருக்கின்றோம். பார்த்திபனின் 'கதை' தொகுதியிலுள்ள  கதைகளான 'ஒரே ஒரு ஊரிலே', 'பாதியில் முடிந்த கதை' மற்றும் 'பசி' இதனை மையமாக வைத்துப் புனையப்பட்டிருக்கின்றன.

•Last Updated on ••Thursday•, 12 •April• 2018 14:53•• •Read more...•
 

வாசிப்பும் யோசிப்பும் 279: பால்ய காலத்து அழியாத கோலங்கள் - ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'

•E-mail• •Print• •PDF•

ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களில் ராணிமுத்துப் பிரசுரங்களுக்கு முக்கியமானதோரிடமுண்டு. நான் ஆர்வமாக வாசிக்கத்தொடங்கியிருந்த காலகட்டத்தில்தான் ராணிமுத்து மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் அடிப்படையில் அக்காலகட்டத்தில் பிரபலமாக விளங்கிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வந்தது. அவ்வகையில் வெளியான முதலாவது நாவல் அகிலனின் 'பொன்மலர்'. ஆனால் அப்புத்தகத்தை அப்பா வாங்கவில்லை. அப்பா வாங்கத்தொடங்கியது ராணிமுத்து பிரசுரத்தின் இரண்டாவது வெளியீட்டில் இருந்துதான். இரண்டாவதாக வெளியான நாவல் அறிஞர் அண்ணாவின் 'பார்வதி பி.ஏ' இவ்விரண்டு நாவல்களும் முதலும் இரண்டும் என்று ஞாபகத்திலுள்ளது. இதன் பின் வெளியான நாவல்களில் எங்களிடம் இருந்ததாக இன்னும் என் நினைவிலுள்ளவை:

ஜெயகாந்தனின் 'காவல் தெய்வம்'.
ஜெயகாந்தனின் 'வாழ்க்கை அழைக்கிறது'.
மாயாவியின் 'வாடாமலர்'
ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'
சாண்டில்யனின் 'ஜீவபூமி'
சாண்டில்யனின் 'உதயபானு' & இளையராணி
நாரண துரைக்கண்ணனின் 'உயிரோவியம்'
அகிலனின் 'சிநேகிதி'
பானுமதி ராமகிருஷ்ணாவின் 'மாமியார் கதைகள்'
விந்தனின் 'பாலும் பாவையும்'
கலைஞர் கருணாநிதியின் 'வெள்ளிக்கிழமை'
அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா'
மு.வ.வின் 'அந்த நாள்'
சி.ஏ.பாலனின் 'தூக்குமர நிழலில்'
குரும்பூர் குப்புசாமியின் 'பார் பார் பட்டணம் பார்'
மாயாவியின் 'வாடாமலர்'
லக்சுமியின் 'காஞ்சனையின் கனவு' & 'பெண்மனம்'

இவை இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன. ஜெயராஜின் அட்டைப்படத்துடன் , நூலின் உள்ளேயும் நாலைந்து ஓவியங்கள் அவர் வரைந்திருப்பார்.

அக்காலகட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பிரசுரங்களாக ராணி முத்துப் பிரசுரங்கள் விளங்கின. என்னிடமிருந்தவற்றைப் பத்திரமாக ஏனைய நூல்களுடன் வைத்திருந்தேன். அவை அனைத்தையுமே நாட்டுச் சூழலில் தொலைத்து விட்டேன்.

ராணிமுத்து பிரசுரங்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களாக ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'யும், சாண்டில்யனின் 'ஜீவபூமி'யும் விளங்கின.

•Last Updated on ••Tuesday•, 10 •April• 2018 17:27•• •Read more...•
 

கவிதை: அந்தி விடிவெள்ளி!

•E-mail• •Print• •PDF•

கவிதை: அந்தி விடிவெள்ளீ!

அதிகாலை விடிவெள்ளிப்பெண்ணே
ஒருபோதில்
அதிகாலைகளுக்கெல்லாம் எழிலூட்டினாய்.
அதிகாலைகளில் நான் விழித்தெழுந்ததெல்லாம்
அடியே! கிழக்கினில்
ஆடி அசைந்து வரும்
உன் அழகைப்பருகுவதற்காகத்தானென்பதை
நீ அறியாய்! அந்தத் தைரியத்தில் நானுனை
அணு அணுவாக இரசித்ததுண்டு; தெரியுமா?
அதிகாலை விடிவுப்பெண்ணே!
அதிகாலைகளினெழிலேற்றிய
விடியற் பெண்ணே!
இடையிலெங்கே சென்றாய்?
தனிமையிலெனைத் தவிக்க விட்டு நீ
தலைமறைவானாய்! ஏன்?

•Last Updated on ••Saturday•, 07 •April• 2018 14:07•• •Read more...•
 

கவிதை: பருத்தித்துறைக் கடற்கரையில்...

•E-mail• •Print• •PDF•

- கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe)

- சிங்கள மொழியில் தான்  எழுதிய இக்கவிதையினை  ஆங்கில வடிவில் அனுப்பியிருந்தார் கத்யானா அமரசிங்க. அதனைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளேன். அண்மையில் அவரது வடக்குக்கான பயணத்தில் பருத்தித்துறைக்கடற்கரையில் அவரடைந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை. தமிழ் மக்களின் உணர்வுகளை, பிரச்சினைகளை நன்கு உணர்ந்துகொண்ட சிங்கள எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்க. சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe) தற்போது லக்பிம பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.  - பதிவுகள் -


 


நான் அங்கிருந்தேன் கண்ணீர்த்துளியின் மறு முனையில்
துயரக் காற்றினால் தாக்கப்பட்ட மறுமுனை
ஆழமான நீலக் கடலும் கூட
நெஞ்சை வலிக்கும் கதையினை அமைதியாகக்
கூறும்.

வீசிக்கொண்டிருந்த புயல்கள்
இளம் பறவைகளை அவற்றின்
அன்னையரிடமிருந்து பிரித்திருந்த
நேரமொன்றிருந்தது.

•Last Updated on ••Wednesday•, 18 •April• 2018 18:42•• •Read more...•
 

அ.முத்துலிங்கத்தின் இலக்கியப்பங்களிப்பு பற்றிய குறிப்புகள் சில!

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரனின் அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரை..- இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஞானம் கலை, இலக்கியச் சஞ்சிகையின் ஏப்ரில் 20018 இதழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அறுபதாண்டு இலக்கியப்பங்களிப்பினைச் சிறப்பிக்கும் மலராக வெளிவந்திருக்கின்றது. அதில் வெளியாகியுள்ள எனது கட்டுரையான 'அ.முத்துலிங்கத்தின் இலக்கியப்பங்களிப்பு பற்றிய குறிப்புகள் சில' என்னுமிக் கட்டுரை ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. -


இலங்கைத்தமிழ் இலக்கியத்தில், புலம் பெயர்தமிழ் இலக்கியத்தில் காத்திரமாகத் தடம் பதித்தவை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துகள். இவரது எழுத்துலகக் கால கட்டத்தை  புலம்பெயர்வதற்கு முன், புலம் பெயர்ந்ததற்கு பின் என இருவேறு காலகட்டங்களில் வைத்து ஆராய்வது சரியான நிலைப்பாடாகவிருக்கும். இவர் பரவலாக , உலகளாவியரீதியில், குறிப்பாகத் தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட காலகட்டம் இவரது புலம்பெயர் எழுத்துக் காலகட்டம். அதற்காக இவரது ஆரம்ப எழுத்துலகக்காலகட்டம் ஒன்றும் குறைவானதல்ல. தனது ஆரம்பக் காலகட்ட எழுத்துகள் வாயிலாகவும் இவர் கலை, இலக்கியத்திறனாய்வாளர்களின் கவனத்தைப்பெற்று, அக்காலகட்டத்துப் படைப்புகள் மூலம் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் கால் பதித்தவர்தான். அந்த வகையிலும் இவர் புறக்கணிக்கப்பட முடியாதவரே. இச்சிறுகட்டுரையில் இயலுமானவரையில் இவரது இலக்கியப்பங்களிப்பினைச் சுருக்கமாக நோக்குவதற்கு முயற்சி செய்கின்றேன். இதன் மூலம் என் பார்வையில் இவரது இலக்கியப்பங்களிப்பினை இவரது படைப்புகளை நான் அறிந்த வரையில், வாசித்த வரையில் நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இவரது படைப்புகளை இவர் நாட்டிலிருந்து புலம்பெயர்வதற்கு முற்பட்ட  காலகட்டத்தை வைத்து நோக்கினால் ஒன்றினை அவதானிக்கலாம். இக்காலகட்டத்தில் அ.முத்துலிங்கம் அவர்களின் இலக்கியப்பங்களிப்பு சிறுகதை வடிவிலேயே அதிகமாகவிருந்திருக்கின்றது. இவரது புகழ்பெற்ற முதற் கதையான 'அக்கா' தினகரன் பத்திரிகை நடாத்திய சிறுகதைப்போட்டியில் முதற் பரிசினைப்பெற்றிருக்கின்றது. 1964இல் வெளியான இவரது முதலாவது சிறுகதைத்தொகுதியிலும் இடம் பெற்றுள்ளதுடன் அதன் பெயராகவும் விளங்குகின்றது. இவரது எழுத்தார்வத்திற்கு ஆரம்பத்தில் ஊக்குசக்தியாக விளங்கியவர் பேராசிரியர் க.கைலாசபதி என்பதை 'அக்கா' நூலுக்கான முன்னுரையில் இவர் எழுதிய முன்னுரையிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. பேராசிரியர் கைலாசபதி அவர்களும், பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுமே இவரது ஆரம்ப எழுத்துலகச் செயற்பாடுகளை ஊக்குவிப்பவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதை அ.மு.அவர்கள் அம்முன்னுரையில் பதிவு செய்திருக்கின்றார்.

இவர் எழுத்துலகில் புகுந்த காலகட்டத்தில் இலங்கைத்தமிழ் இலக்கியச் சூழலில் பல் வகையான இலக்கியப்போக்குகள் நிலவி வந்தன. கலை மக்களுக்காக என்னும் கோட்பாட்டுடன் இயங்கிய முற்போக்கு இலக்கியச் சூழல், பாலியல் சார்ந்த எழுத்தை மையமாக வைத்து எஸ்.பொ. இயங்கிக்கொண்டிருந்த 'நற்போக்குச் சூழல்' (முற்போக்கு எழுத்தாளர்களின் கூடாரத்துடன் எழுந்த பிணக்குகள் காரணமாகத் தனித்தியங்கிய எழுத்தாளர்கள் தம்மை அழைக்கப் பாவித்த பதமாகவே இதனை நான் கருதுகின்றேன்), கலை, கலைக்காகவே என்னும் நோக்கில் இயங்கிய எழுத்துக்குக் கலை என்னும் ரீதியில் முக்கியத்துவம் கொடுத்த எழுத்துலகச் சூழல், இவற்றுக்கு இடைப்பட்ட , அனைத்தையும் உள்ளடக்கிய , பிரபஞ்ச யதார்த்தவாதம் என்னும் நோக்கில் இயங்கிய மு.தளையசிங்கம் அவர்களின் சிந்தனைகளை மையமாகக்கொண்ட எழுத்துலகச் சூழல் எனப்பல்வேறு சிந்தனைகளைக்கொண்டதாக விளங்கிய இலங்கைத்தமிழ் இலக்கியச்சூழலுக்குள் அ.மு. அவர்கள் நுழைந்தபோது அவரது எழுத்தானது இவ்வகையான சூழல்கள் அனைத்திலிருந்தும் தனித்து, தனித்தன்மையுடன் விளங்கியதை அவதானிக்க முடிகின்றது.

இவரது எழுத்தினைப்பற்றி மேற்படி 'அக்கா' சிறுகதைத்தொகுப்பில் அணிந்துரை வழங்கிய பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் இவரைப்பற்றிக் கூறுவதையும், அ.மு. அவர்கள் நூலுக்கான முன்னுரையில் தன்னைப்பற்றிக் கூறுவதையும் நோக்குவது பயன் மிக்கது. அவரது எழுத்து பற்றிய சிந்தனையில் தெளிவினை அடைய அவ்வகையான நோக்கு உதவும். முதலில் கைலாசப்தி அவர்கள் கூறுவதைச் சிறிது பார்ப்போம்:

ஞானம் சஞ்சிகையின் அ.முத்துலிங்கம் சிறப்பிதழ்"தனக்கென ஒரு நடையையும் போக்கையும் வகுத்துக் கொண்டு எழுதி வந்தார் அவர். தொகுதியிலடங்கியுள்ள கதைகள் எனது கூற்றுக்குச் சான்று... 'அக்கா'  என்னும் தலைப்புப் பெயரைப் பார்த்துவிட்டு வாசகர் எந்த விதமான அவசர முடிவுக்கும் வந்துவிடக் கூடாது, காதல், சகோதர பாசம், குடும்பச் சச்சரவு முதலிய வழக்கமான 'பல்லவி இங்கு பாடப்படவில்லை. காதல் போயிற் சாதலென்றே, சமூகத்தின் கொடுமை என்னே என்றே, வஞ்சனை செய்யும் மனிதரைப் பாரீர் என்றும், கதாசிரியர் எம்மை நோக்கிக் கூறவில்லை. அதற்கு மாறாகச் சர்வசாதாரணமான மனித உணர்ச்சிகளும் மனித உறவுகளும் கிராமப்புறச் சூழலில் எவ்வாறு தோன்றி இயங்குகின்றன என்பதை உணர்த்துகிறார் ஆசிரியர். நேர்மை, எளிமை, நுட்பம், விளக்கம், ஆகிய பண்புகள் பசுமை குலையாத ஓருள்ளத்திலிருந்து வந்து எமக்குப் புத்துணர்ச்சியளிக்கின்றன. நமது உணர்வைத் தொட்டுத் தடவிச் செல்கின்றன......  திரு. முத்துலிங்கம் பல்கலைக் கழகத்திலே விஞ்ஞானம் படித்த பட்டதாரி. கணிதத்தையும், பெளதீகவியலையும் இரசாயனவியலையும் படித்த அளவிற்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்துள்ளார் என்று கூறமுடியாது. அது காரணமாகத் தற்காலத் தமிழ் இலக்கியங்களைப் படித்துவிட்டு, அவற்றினால் கவரப்பட்டு, அவற்றின் வழிநின்று எதிரொலிக்கும் பண்பு அவரிடம் காணப்படவில்லை. இது மகிழ்ச்சிக்குரிய நிலைமையாகும். இலக்கியங்களிலிருந்து இரவல் அனுபவமும், போலியுணர்ச்சியும் பெற்றுக் கொள்ளாத அவர், தனது சொந்த அனுபவ உணர்வையே அடிநிலையாகக் கொண்டு, எழுதி வருகின்றார், இலக்கிய அறிவும், நூற் படிப்பும் எழுத்தாளனுக்கு ஆகாதன என நான் கூறுவதாக எவரும் கருத வேண்டியதில்லை. ஏட்டுச் சுரைக்காய் கறிக் குதவாது என்னும் பழமொழியையே நான் இலக்கிய சிருட்டித் துறைக்கு ஏற்றிச் சொல்கின்றேன்; அவ்வளவுதான். தனது அனுபவத்தையே ஆதாரமாகக் கொண்டு திரு. முத்துலிங்கம் எழுதிவருவதினுல் அவர் எழுத்துக்களில் பலமும் பலவீனமும் விரவிக் காணப்படுகின்றன. எனினும் தராசில் பலம் தாழ்ந்தே காணப்படுகின்றதென்பதில் ஐயமில்லை. சிறு கதை, நாவல் ஆகியவற்றில் அடிக்கடி காணப்படும் நைந்து போன சொற்றொடர்களோ, கதை நிகழ்ச்சிகளோ, பாத்திரங்களோ இக்கதைகளில் காணப்படா; அதே சமயத்தில் பிரச்சினைகளும் காணப்படா. ஆனால், ஆசிரியர் திறம்படச் சித்திரிக்கும் யாழ்ப்பாணத்துக் கிராமப்புறச் சூழ்நிலையிலே தோன்றும் சில பாத்திரங்களின் மன நோவுகளையும், குமைவுகளையும், சலனங்களையும், கொந்தளிப்பையும், நாம் இலகுவில் உணர்ந்து கொள்கிறோம்.....  ஆசிரியரின் சிறப்பியல்பு. இவ்வெற்றிக்குத் துணை செய்யும் அமிசங்கள் சிலவற்றையும் குறிப்பிடல் வேண்டும். யாழ்ப்பாணத்திலே கொக்குவில்கோண்டாவில் - இணுவில் - பகுதியே ஆசிரியரது பெரும் பாலான கதைகளின் களம். அப்பகுதியிலுள்ள வீடுகள், தெருக்கள், ஒழுங்கைகள், கோயில் ஆகியன உயிர்த்துடிப் புடன் கதைகளில் இடம் பெறுகின்றன; மக்களின் ஊண், உடை, பழக்கவழக்கங்கள், கம்பிக்கை முதலியன பாத்திரங்களின் சூழலுக்கு வரம்பு செய்கின்றன; அவ்வரம்பிற்குள்ளேயே மனித உணர்ச்சிகள் தோன்றி மறைகின்றன; அவ்வுணர்ச்சிகள் தாம் பிறந்த சொல் வடிவிலேயே எமக்குப் பொருள் விளக்கஞ் செய்கின்றன; நுணுக்கமான ஒலியலைகளைப் பதியும் நுண் கருவிபோலத் தனக்கு நன்கு தெரிந்த உணர்ச்சிமயமான அநுபவத்தைத் திரிக்காமலும், விகாரப்படுத்தாமலும், கெடுக்காமலும் அமைதியான முறையில் சொற்களிலே தேக்கியுள்ளார் திரு. முத்துவிங்கம்."

•Last Updated on ••Saturday•, 07 •April• 2018 17:01•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 279 : பால்ய காலத்து அனுபவங்கள் - மறக்க முடியாத ஆளுமை - 'ராஜு அங்கிள்'

•E-mail• •Print• •PDF•

ராஜு அங்கிள்என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களைப்பற்றி எண்ணியதும் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக என் நினைவில் நிற்பவர் 'ராஜு அங்கிள்' என்றழைக்கப்படும் ராஜநாதன் முத்துச்சாமிப்பிள்ளை. இவர் என் அம்மாவின் கடைக்குட்டித்தம்பி.  அவருக்கும் அம்மாவுக்குமிடையில்  பதினெட்டு வயது வித்தியாசம். ஆச்சி பதின்ம வயதிலிருந்தே இல்லறபந்தத்தில் தன்னைப்பிணைத்துக்கொண்டவர். அதன் விளைவு இவ்வயது வித்தியாசம். அம்மா இவரைத் தன் தம்பி என்று பார்த்ததை விடத் தனது இன்னுமொரு மகன் போன்றே எப்பொழுதும் கருதி வந்தாரென்று நான் உணர்வதுண்டு. அம்மாவின் இளமைக்காலப்புகைப்படமொன்றில் அம்மாவுடன் காற்,சட்டையுடன் இவரிருந்த புகைப்படமொன்றினைப் பார்க்கும் எவரும் அவ்விதமே கருதுவர். இவர் அம்மாவுக்கு  மட்டுமின்றி அம்மம்மா, அம்மாவின் ஏனைய சகோதர, சகோதரிகள், அம்மப்பா யாவருக்குமே செல்லப்பிள்ளைதான். குறிப்பாக அம்மப்பாவின் மிகுந்த பிரியத்துக்குரிய கடைக்குட்டி பையனாக இருந்ததால், அவருடன் எப்பொழுதும் அவரது 'நாஷ்' காரில் இவர் திரிவார். சில சமயங்களில் அதில் நண்பர்களுடன் நகரை வலம் வருவதுண்டு. அம்மாவின் இன்னுமொரு தங்கையின் திருமணத்தின் போது அக்காரில் யாழ்நகரில் எங்களையெல்லாம் ஏற்றி விரைவாக ஓட்டிச்சென்றது இன்னும் ஞாபகத்திலுள்ளது. அம்மப்பாவின் இறுதிக்காலத்திலும் கூட எந்நேரமும் அவருடன் அவரது மரணம் வரையில் ஆஸ்பத்திரியில் இருந்தவர் இவர். அம்மா எவ்விதம் இவரைத் தம்பி போன்று கருதாமல், மகன் போன்று கருதினாரோ அவ்வாறே நாங்களும் இவரை மாமா முறையென்றாலும் கூட அவ்வாறு கருதுவதில்லை; எங்களது நண்பர்களிலொருவரைப்போன்றுதான், மூத்த அண்ணர்களிலொருவரைப்போன்றுதான் கருதினோம்; பழகி வந்தோம். அவரும் எங்களுடன் அவ்விதமே மிகவும் இயல்பாகப் பழகி வந்தார்; வருகின்றார்.

இவர் சிவாஜியின் 'புதிய பறவை', 'ஆலயமணி' திரைப்படங்கள் வெளியான காலகட்டத்து இளைஞர்களிலொருவர் என்பதால் சிகரட் பிடிப்பதிலிருந்து, தோள்களைக் குலுக்கிச் சிரித்துக் கதைப்பதிலிருந்து அன்றிலிருந்து இன்று வரை அதே சிவாஜி 'ஸ்டைலை'ப் பின்பற்றி வருபவர். 1970இலேயே கனடாவுக்கு வந்து விட்டார். அதற்கு முக்கிய காரணங்களிலொன்று: அக்காலகட்டத்தில்தான் அம்மப்பாவின் மறைவும் நிகழ்ந்தது. அம்மப்பாவின் சகோதரர் ஒருவருக்கும் இவர் மீது மிகுந்த பிரியம் இருந்தது. அவர் சிறிது காலம் புளியங்குளத்தில் இருந்த தனது பண்ணையொன்றை இவரது பொறுப்பில் விட்டுப் பார்த்தார். ஆனால் அது வெற்றியளிக்கவில்லையென்றே கூறுவேன். எப்பொழுதும் நண்பர்களுடன் 'ஜாலி'யாக நகரத்தில் திரிந்த இவருக்கு வன்னிக்காட்டுப் பகுதி ஒத்துக்கொள்ளவில்லை. ஒவ்வொரு வாரமும் அடிக்கடி அம்மாவிடம் , அப்பொழுது அம்மா வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார், 'அக்கா, அக்கா' என்று ஓடி வந்து விடுவார்.
அப்பொழுதுதான் நான் அப்பா வீட்டில் வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கும் தமிழக வார, சஞ்சிகைகளில் என்னை மறந்து வாசிப்பதில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தேன். ஒருமுறை அம்மாவிடம் வரும்போது அழகாக 'பைண்டு' செய்யப்பட்டிருந்த , கல்கியில் தொடராக வெளியான அகிலனின்  'வேங்கையின் மைந்தன்' நாவலைக் கொண்டு வந்திருந்தார். அதன் மூலமே எனக்கு எழுத்தாளர் அகிலன் அறிமுகமானார்.

•Last Updated on ••Saturday•, 19 •January• 2019 11:58•• •Read more...•
 

அஞ்சலி: மானுட விடுதலை பாடிய கவிஞன் தம்பி தில்லை முகிலன் மறைவும், முகநூலும்!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் தம்பி தில்லை முகிலன்கவிஞர் தம்பி தில்லை முகிலனைப்பற்றி நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச்சேர்ந்த இவரது அகால மரணம் பற்றிய நண்பர் சிவா முருகுப்பிள்ளையின் முகநூற் பதிவின் பின்னரே இவரைப்பற்றி அறிந்து கொண்டேன். இவரது மறைவைப்பற்றிய பாலசிங்கம் சுகுமார் அவர்களின் முகநூற் பதிவு இவரது கலை, உலக மற்றும் சமூக, அரசியற் செயற்பாடுகளை நினைவுகூர்ந்திருந்தது. இவரது முகநூலுக்குச் சென்று பார்த்தேன். கலாபூஷணம் விருதினைபெற்ற இவருடனான நேர்காணல்கள் வெளியான பத்திரிகைகளின் புகைப்படங்களைப் பார்த்தேன். அதன் பின்னர் இவரது அண்மையப் பதிவுகளைப் பார்த்தேன். மார்ச் 30 எழுதிய பதிவில் பின்வரும் கவிதையினைப் பதிவு செய்திருந்தார்:

"வாதம் நிதம் வளம் காண
தினம் மோதலாகத் தொடரட்டும்.
பேதமழிக்க யாவரும்
பொதுமை காண ,
மனிதர் இனிமை காண,
வாதம் நிதம் தொடரட்டும்."


மானுட சமுதாயத்தில் பேதங்கள் நீங்க, பொதுமை காண (பொதுமைக்குப் பல கருத்துகளுள: இனிமை, பொதுவுடமை என) வாதம் நிதம் மோதலாகவாவது தொடரட்டும் என்று அறை கூவல் விடுக்கின்றார். இதனை எழுதியபோது மணி காலை 8.20.

இவ்விதம் மானுட சமுதாய முன்னேற்றத்துக்காக அறை கூவல் விடுத்த கவிஞர் தம்பி தில்லை முகிலன் , மார்ச் 31 இரவு 10.02 மணிக்கான இரு பதிவுகளில் பின்வருமாறு எழுதுகின்றார்:

பதிவு ஒன்று: "இருப்பதற்கு விருப்பமில்லை என் இருப்பை என்னவர் என்போரும் விரும்பவில்லை ஏன் இருப்பான் என்பதில் எழும் கேள்விக்குப் பதில் இறப்பதே சரி ஆகவே எனக்காக யாரும் கவலைப்படாதீர். ஒருவன் சொன்னதைச் சொன்னேன் சரியா பிழையா சொல்வீர். ஒருவர் இல்லை இன்று பத்தில் எட்டுப்பேர் சொல்வது தான். பற்றும் பாசமும் அற்றுப்போன காலமிது. செத்துப் போனால் என்ன? நடமாடும் பிணமாகத்தானே நாளும் பலர் இங்கு வாழ்கிறார்? பிறப்பைவிட இறப்பே இப்போ பெரிது. விடுதலை."

பதிவு இரண்டு: "செல்கின்றேன் கவலைப் படாதீர்கள். போதுமானது வாழ்கை. பிறருக்கு வாழ்வதே பிறவிப்பயன் என்பார். என்னால் பிறருக்கு வாழமுடியாது உள்ளது. உயிர்தான் உள்ளது. அதனால் எவருக்கும் ஒன்றும் செய்ய முடியாது. என்னை என்நிலை அறிந்தவர் செத்துப்போ என்றும் சொல்வதும் உண்டு. அது பற்றின் காரணம். இப்போ பற்றும் பாசமும் இடையூறாய் இருப்பது உண்மைதானே. அதனால் இறப்பை நாமே தேடுவது சரியா? பிழையா? என்நிலையில் சரியே."

இவ்விதமிட்ட கவிஞரின் முகநூற் பதிவானது அவரது முகநூல் நண்பர்கள் மத்தியில் திகைப்பினை ஏற்படுத்தியதை இப்பதிவுக்கு எதிர்வினையாற்றிய நண்பர்களின் எதிர்வினைகளிலிருந்து தெரிய வருகின்றது.

நண்பர் பாலசிங்கம் சுகுமார்: "என்ன"

Jasothsrabanu Shekar என்பவரும் பதிவு புரியாமல் கேட்கின்றார்: "என்ன?'

நாகசோதி தங்கவேல் என்னும் நண்பருக்கு விடயம் புரிந்திருக்கின்றது. எனவே அவர் கவிஞருக்கு ஆறுதலும், ஆரோக்கியமான ஆலோசனையும் கூறுகின்றார்: "சொல்பவர்கள் சொல்லட்டும் எல்லோர் விருப்பத்திற்கும் வாழ விரும்பினால் எம்மால் வாழ முடியாது, நீங்கள் இன்னும்பல ஆண்டுகள் தமிழுடனும் கவியுடனும் ஆரோக்யமாக வாழவேண்டும் இறைவன் துணையிருப்பார்."

•Last Updated on ••Monday•, 02 •April• 2018 16:57•• •Read more...•
 

ஆங்கில மொழிபெயர்ப்பில் வ.ந.கிரிதரனின் இரு கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.-அண்மையில் 'குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி' என்றொரு எனது கவிதையை இங்கு பிரசுரித்திருந்தேன். அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் (ரிஷி)  அனுப்பியிருந்தார்.  அது போல் முனைவர் ர.தாரணி அவர்கள் எனது 'தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை' என்னும் கவிதையினை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருந்தார். அவர்களிருவருக்கும் நன்றியினைக் கூறுவதுடன் அவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.. - வ.ந.கிரிதரன் -

Poem: A message for  Stallion-Stealers!  - V.N. Giritharan -   Translation  in English by Latha Ramakrishnan

Hei you, the Stallion-Stealers!
Here is a message for you.
I am a caretaker of horses.
Not a trader.
A genuine, straightforward caretaker.
I have so many sturdy stallions with me.
Indeed all of them are real good.
They are not lame ones.
I have great affection for
all the horses in my possession
I treat them with no discrimination.
I am not one to rear or sell crippled horses
Still – Hei you, the Stallion-Stealers!
You’ve become more troublesome.

•Last Updated on ••Monday•, 02 •April• 2018 16:57•• •Read more...•
 

நனவிடை தோய்தல்: தாயே! தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!

•E-mail• •Print• •PDF•

மகேஸ்வரி நவரத்தினம் (மங்கையற்கரசி, மங்கை) டீச்சர்!அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் அம்மா எழுந்து விடுவா எவ்வித அலாரமும் இல்லாமல். குருமண்காட்டுப் பிரதேசத்தித்தின் சேவல்கள் ஆங்காங்கே தம் காலைக்கச்சேரிப் போட்டியினை ஆரம்பித்துவிடும் கூவல் ஒலிகள் தவிரப் பெரிதாக வேறெவ்வித ஒலிகளுமற்ற காலைப்பொழுதில் அம்மா அந்த அதிகாலை நேரத்தில் எழுந்து விடுவதற்குக் காரணமுண்டு. குழந்தைகள் நாம் ஐவர். வவுனியா மகாவித்தியாலயத்துக்கு நடந்து செல்ல வேண்டும். அம்மாவும் அங்குதான் ஆசிரியையாகப் படிப்பித்துக்கொண்டிருந்தார். 'நவரத்தினம் டீச்சர்' என்றால் தெரியும். அனைவருக்கும் காலை, மதிய உணவு தயாரித்து, அவற்றை உணவுக்`கேரியரி`ல் அல்லது வாழை இலையில் பார்சல்களாகக் கட்டி, பாடசாலை தொடங்குவதற்குள் அனைவரையும் கூட்டிக்கொண்டு செல்ல வேண்டும். செல்லும் வழியில் அன்று வவுனியா எம்.பி.ஆகவிருந்த தா.சிவசிதம்பரத்தின் வீடிருந்தது. அதற்குப் பக்கத்தில் ஸ்டேசன் 'றோட்டி'ல் இராமச்சந்திரன் டீச்சர் வீடிருந்தது. அவர் ஒரு மொரிஸ் மைனர் கார் வைத்திருந்தார். சில சமயங்களில் அவருடன் அவர் காரில் பாடசாலை செல்வதுண்டு. அவரது கணவர் சட்டத்தரணி. மகன் இறம்பைக்குளக் 'கான்வென்'டில் படித்துக்கொண்டிருந்தார். அவர்களை இறக்கிவிட்டு அனைவரும் மகா வித்தியாலயம் செல்வோம்.

அதிகாலை நேரங்களில் ஸ்டேசன் 'றோட்டின்' ஒரு புறத்தே பசிய வயல்கள் காட்சியளித்தன. பச்சைக் கிளிகள், குக்குறுபான்கள், ஆலாக்கள், மைனாக்கள், காடைகள், சிட்டுக் குருவிகள், மாம்பழத்திகள், நீண்ட வாற் கொண்டை விரிச்சான் குருவிகள், நீர்க்காகங்கள், மணிப்புறாக்கள்,.. எனப்பல்வகைப்புள்ளினங்களின் மலிந்திருக்கும் வனப்பிரதேசங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. இயற்கையின் தாலாட்டில் எந்நேரமும் தூங்கிக் கிடக்கும் வன்னி மண்ணின் அதிகாலப்பொழுதுகளை எண்ணியதும் கூடவே அம்மாவுடன் பாடசாலைக்குச் சென்ற பருவங்கள் படர்ந்த நினைவுகள் , அவருடன் வாழ்ந்த அனுபவங்கள் சிந்தையில் படம் விரிக்கின்றன.

இன்று (மார்ச் 26) அம்மாவின் நினைவுகள் அதிகமாக எழுகின்றன. அவருடன் வாழ்ந்த இனிய பொழுதுகள் நினைவிலெழுகின்றன. இனிமையான பொழுதுகள் அவை. காரணமுண்டு: இன்று அம்மாவின் நினைவு நாள். இருப்புள்ளவரை இருக்கப்போகும் நினைவுகள். காலம் மாறி விட்டது. காட்சிகள் மாறி விட்டன. ஆனால் நினைவுகள் மாறுவதில்லை. நிலையாக இருந்து விடுகின்றன. நினைவுகளின் தோய்தல்கள் மானுடப்பிறப்புக்கு இன்பம் சேர்க்கின்றன. அம்மா பற்றிய நினைவுகளும் அவ்விதமான நினைவுகள். இருப்புக்கு இன்பம் சேர்க்கும் நினைவுகள்.

•Last Updated on ••Monday•, 26 •March• 2018 15:59•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 278: அ.ந.க.வின் 'குருட்டு வாழ்க்கை' சிறுகதையும், 'மனக்கண்' நாவலும் பற்றிய சிந்தனைகள்!

•E-mail• •Print• •PDF•

ஈழகேசரிச் சிறுகதைகள்!அறிஞர் அ.ந.கந்தசாமியின் முதலாவது சிறுகதையினை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. எழுத்தாளர் செங்கை ஆழியான் தொகுத்து பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு - கிழக்கு மாகாணம், திருகோணமலை) வெளியிட்டிருந்த 'ஈழகேசரிச் சிறுகதைகள்' தொகுப்பு நூல் உள்ளடக்கியுள்ள 'குருட்டு வாழ்க்கை' என்னும் சிறுகதைதான் அது. 17.5.1942 ஈழகேசரிப்பிரதியில் வெளியான சிறுகதை இது. இதனை எழுதியபோது அ.ந.க.வுக்கு வயது பதினேழு. இதுவே அவரது முதலாவது சிறுகதை என்று செங்கை ஆழியான நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் சிறுகதை வெளியாகியுள்ள பக்கத்தில் அ.ந.க 'சிப்பி' என்னும் புனைபெயரில் 'பகல் வெள்ளி' (1941) என்னுமொரு சிறுகதையினையும் ஈழகேசரியில் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி 'பகல்வெள்ளி'யே அ.ந.க.வின் முதலாவது சிறுகதையாகவிருக்க வேண்டும். 'குருட்டு வாழ்க்கை' வெளியான ஆண்டு 1942. 'பகல் வெள்ளி' வெளியான ஆண்டு 1941. அ.ந.க.வின் பிறந்த ஆண்டு 1924 என்பதால் (ஆகஸ்ட் 8, 1924) இச்சிறுகதை வெளியானபோது அவருக்கு வயது பதினேழு.

இச்சிறுகதையை வாசித்த போது இன்னுமொர் உண்மையினையும் அவதானிக்க முடிந்தது. அ.ந.க எழுதி தினகரனில் தொடராக வெளியான ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. இந்நாவலின் கதையமைப்பும், 'குருட்டு வாழ்க்கை' சிறுகதையின் கதையமைப்பூம் ஒரே மாதிரியானவை. குருட்டு வாழ்க்கை சிறுகதையில் வரும் நாயகன் அம்மை நோயினால் கண் பார்வையினை இழக்கின்றான். இது போலவே மனக்கண் நாவலிலும் நாயகன் ஶ்ரீதர் கண் நோயினால் கண் பார்வையினை இழக்கின்றான். இரண்டிலுமே கண் பார்வை இழந்த நாயகர்களின காதலிகள் நாயகர்களை ஒதுக்கி விடுகின்றார்கள். இரண்டிலுமே நாயகர்களின் பெற்றோர்கள் அவர்களது காதலிகள் என்று கூறி வேறு பெண்களை அவர்களுக்கு மணம் முடித்து வைத்து விடுகின்றார்கள். இரண்டிலுமே நாயகர்களுக்கு கண் சத்திர சிகிச்சை செய்து பார்வை திரும்புகின்றது. இரண்டிலுமே உண்மை அறிந்த நாயகர்கள் தாம் பெற்ற பார்வையினைத் தாமே பறித்து விடுகின்றார்கள். அவ்விதம் செய்வதன் மூலம் காதலிகள் அல்லாத மனைவியர்களுடன் குடும்பத்தை நடாத்த அவர்களால் முடிகின்றது. ஆனால் குருட்டு வாழ்க்கை சிறுகதை இந்நிலையுடன் நின்று விடுகின்றது. மனக்கண் நாவலிலோ கதை மேலும் தொடர்கின்றது. மனக்கண் நாவலில் நாயகன் தன்னை மணந்து கொண்ட பெண்ணைப்பற்றி மேலும் சிந்திக்கின்றான். அவளது தியாகத்தின் அளவை உணர்ந்துகொள்கின்றான். மீண்டும் கண் பார்வையைப் பெற விரும்புகின்றான். செல்வந்தரும், செருக்கும் மிக்க அவனது தந்தையார் இறுதியில் தன் கண்களைக் கொடுத்து அவனைக் காப்பாற்றி மறைந்து விடுகின்றார்.

குருட்டு வாழ்க்கை சிறுகதையைப்பற்றிக் குறிப்பிடுகையில் செங்கை ஆழியான் 'ஈழகேசரித் தொகுப்பு நூலில் 'நல்லதொரு சினிமாப்பாணிக் கதை. ஆனால் வாசித்ததும் வலிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார். மனக்கண் நாவலின் இறுதியில் அ.ந.க எழுதிய முன்னுரையில் அ.ந.க ஏன் அவ்விதமானதொரு சுவை மிகுந்த கதையினைப் பின்னினார் என்பதற்கும், தான் நாவலில் பாவித்த சுவையான நடையினைப்பற்றியும் விளக்கம் தந்திருக்கின்றார்.  அதில் அவர் பின்வருமாறு கூறுவார்:

•Last Updated on ••Thursday•, 22 •March• 2018 15:07•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 277: அஞ்சலி: இதழாசிரியர் ம.நடராஜனின் மறைவு! | கவிதை: பரிணாமம் |

•E-mail• •Print• •PDF•

'புதிய பார்வை' ஆசிரியர் ம.நடராஜன்அண்மையில் மறைந்த 'புதிய பார்வை' சஞ்சிகையின் ஆசிரியரான ம.நடராஜனுக்கு இலக்கியம், அரசியல் என இரு முகங்கள். கலை, இலக்கியரீதியில் அவரது 'புதிய பார்வை' சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. அந்த வகையில் அதன் ஆசிரியரான ம.நடராஜனும் தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதித்தவர்களிலொருவராகின்றார். முனைவர் ம.நடராஜன் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளிலும் அப்பிமானம் பெற்றவர். 'மகளிர் முன்னேற்றத்தில் இதழ்களின் பங்கு' என்னும் தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். அரசியலைக் கடந்து கலை, இலக்கியவாதிகள் மத்தியிலும் நட்பினைப் பேணியவர். 1967இல் தமிழகத்தில் நடைபெற்ற தனது மாணவப்பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு 'சுபமங்களா' வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் , அதே சாயல் மிக்க வடிவமைப்புடன் வெளியான சஞ்சிகை 'புதிய பார்வை'. அக்காலகட்டத்தில் அதன் இணை ஆசிரியரான பாவை சந்திரனின் 'நல்ல நிலம்' நாவல் தொடராக வெளியாகிக்கொண்டிருந்தது.

புதிய பார்வை சஞ்சிகை விடயத்திலும், அதன் ஆசிரியர் ம.நடராஜன் மீதும் என் மனத்தில் மென்மையான உணர்வுமுண்டு. அதற்குக் காரணமுமுண்டு. 1996இல் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம் மங்கை பதிப்பகத்துடன் (கனடா) இணைந்து வெளியிட்ட எனது நூலான 'அமெரிக்கா' (அமெரிக்கா சிறு நாவல் மற்றும் சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு) வெளியானபோது புதிய பார்வை அதற்கு புத்தக மதிப்புரையொன்றினை எழுதி தனது மே 1997 இதழில் வெளியிட்டிருந்தது. அதனை ஜி.சுவாமிநாதன் என்பவர் எழுதியிருந்தார். 'அமெரிக்கா'தான் தமிழகத்தில் வெளியான எனது முதலாவது நூல். ஆனால் அந்த நூலுக்கு மதிப்புரை எழுதி என் நூலுக்கு வரவேற்பு கொடுத்திருந்த 'புதிய பார்வை' சஞ்சிகை மீது அந்த விடயத்தில் எனக்கு எப்பொழுதுமே மதிப்புண்டு. குறை நிறைகளுடன் அமைந்திருந்த அந்த விமர்சனம் வெளியான 'புதிய பார்வை' சஞ்சிகைப்பக்கத்தினையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள்.

•Last Updated on ••Thursday•, 22 •March• 2018 15:24•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 276: நவீன இயற்பியலின் தந்தை ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன்! - வ.ந.கிரிதரன் -

•E-mail• •Print• •PDF•

ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் பிறந்ததினம் மார்ச் 14..

ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன்நவீன இயற்பியலின் தந்தை என்பர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனை. நவீன இயற்பியலின் இரு அடித்தளங்களாக சார்பியற் தத்துவத்தையும் (சிறப்புச் சார்பியற் தத்துவம் மற்றும் பொதுச் சார்பியற் தத்துவம்)  , சக்திச்சொட்டுப் பெளதிகம் அல்லது 'குவாண்டம் பிசிக்ஸ்'ஸையும் குறிப்பிடலாம். இவ்விரண்டு கோட்பாடுகளின் மூலவராக ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனைக் குறிப்பிடலாம். அரிஸ்டாட்டில், சேர் ஐசாக் நியூட்டன் போன்றோரின் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருந்த நவீன இயற்பியலின் அடித்தளங்களையே அடியோடு மாற்றி வைத்தவை ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவக் கோட்பாடுகள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வந்த வெளி (Space) காலம் (Time)  ஆகியவை பற்றி நிலவி வந்த கோட்பாடுகளை அடியோடு மாற்றி வைத்தவை ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவக் கோட்பாடான சிறப்புச் சார்பியற் தத்துவக் கோட்பாடு. அதுவரை வெளி, நேரம் ஆகியவை சுயாதீனமானவை என்று கருதப்பட்டு வந்தன. அவை சுற்றிவர நடைபெறும் இயக்கங்களால் பாதிப்புறுவதில்லை என்று கருதப்பட்டு வந்தன. ஆனால் ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவக் கோட்பாடோ வெளி, நேரம் ஆகியவை இரண்டும் சுற்றிவர நடைபெறும் இயக்கங்களால் பாதிக்கப்படுபவைதாம் என்று கூறின. அவை சுயாதீனமானவை அல்ல மாறாகச் சார்பானவை என்பதை வெளிப்படுத்தின. நேரமானது வேகத்தால் பாதிக்கப்படுகின்றது. வெளியானது பொருளொன்றின் திணிவினால் பாதிக்கப்படுகின்றது. திணிவு கூடிய பொருளொன்றானது தன்னைச் சுற்றியிருக்கும் வெளியினை வளைத்து விடுகின்றது என்பதை ஐன்ட்டைனின் சிறப்புச் சார்பியற் தத்துவக் கோட்பாடு வெளிப்படுத்தியது. அத்துடன் காலத்தையும் , நேரத்தையும் தனித்தனியாக ஒருபோதுமே பிரித்து வைத்துப் பார்க்க முடியாது என்றும் , நாம் வாழும் இப்பிரபஞ்சமானது 'வெளிகால' (SpaceTime) அல்லது 'காலவெளி'யால் ஆன ஒன்று என்றும் அச்சிறப்புச்சார்பியற்க்கோட்பாடு கூறியது.

இது போல் புவியீர்ப்பானது நியூட்டன் கூறியதுபோல் ஒரு விசையேயல்ல என்றும், அது காலவெளிப்படுதாவில் பொருளொன்று ஏற்படுத்திவிடும் வடிவவியல் மாறுதலின்  விளைவு என்றும் எடுத்துக் காட்டியது ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியற் தத்துவம். பொருளொன்றின் திணிவின் அளவினால் சுற்றிவர இருக்கும் காலவெளியில் ஏற்படும் வளைவின் காரணமாகவே ஒரு பொருளானது வளைக்கும் பொருளைச் சுற்றிவருவதன் காரணம் என்பதை அக்கோட்பாடு எடுத்துக்காட்டியது. அவரது சிறப்புச் சார்பியற் தத்துவமே கருந்துளைகள் போன்ற பிரபஞ்சச் சாத்தியங்களை எதிர்வு கூறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவக் கோட்பாடுகளை மையமாக வைத்து நான் எழுதிய வானியற்பியற் பற்றிய கட்டுரைகள் தொண்ணூறுகளில் வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் கட்டுரையொன்று கணையாழி சஞ்சிகையில் வெளியானது./ பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன.

ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் பிறந்தநாள் மார்ச் 14. அவர் நினைவாக இச்சிறு குறிப்பினையும், முன்பு எழுதிய கவிதைகள் இரண்டினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

•Last Updated on ••Saturday•, 17 •March• 2018 09:25•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 275: எனது சிறுகதையான 'நடு வழியில் ஒரு பயணம்' சிங்கள மொழியில்....

•E-mail• •Print• •PDF•

லக்பிமா சிங்களப்பத்திரிகையில்..இலங்கையிலிருந்து வெளியாகும் லக்பிமா (lakbima)  சிங்களத் தினசரிப்பத்திரிகையின் 18.03.2018 ஞாயிறு பதிப்பில் எனது சிறுகதையான 'நடுவழியில் ஒரு பயணம்' சிறுகதையின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. இச்சிறுகதை டிசம்பர் 2006இல் 'பதிவுகள்' மற்றும் 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளியாகிய சிறுகதை. இச்சிறுகதையினைத் தமிழிலிருந்து சிங்கள  மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவர் எனது முகநூல் நண்பரும், பல தமிழ்ப் படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவருமான எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த. அவருக்கும், லக்பிமாவில் இலக்கியப்பகுதிக்குப் பொறுப்பானவருமான எழுத்தாளர் கத்யான அமரசிங்க (Kathyana Amarasinghe)  அவர்களுக்கும் நன்றி. இச்சிறுகதை வெளியான 'லக்பிமா' :  http://epaper.lakbima.lk/last_18_03_18/manjusawa.pdf

ஏற்கனவே எனது இன்னுமொரு சிறுகதையான 'உடைந்த காலும், உடைந்த மனிதனும்' சிறுகதையினை ஜி.ஜி.சரத் ஆனந்த சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்து 'லங்கஇரிடா' (Lankairida)) பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். அச்சிறுகதை 'லங்கஇரிடா'வின் பெப்ருவரி 18, 2018 பதிப்பில் வெளியாகியுள்ளது.


'நடுவழியில் ஒரு பயணம்' சிறுகதையினை முழுமையாகக் கீழே வாசிக்கலாம்:

நடுவழியில் ஒரு பயணம்' - வ.ந.கிரிதரன் -

பார்வைக்கு சோமாலியனைப் போலிருந்தான். 'டவரின்' வீதியும் 'புளோர்' வீதியும் சந்திக்குமிடத்தில் , தென்மேற்குத் திசையில் (இங்கு 'தொராண்டோ' நகரில் வீதிகளெல்லாமே கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்காகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் திசைகளை மையமாக வைத்து முகவரிகளைக் கண்டுபிடிப்பதோ அல்லது இருப்பிடங்களை அறிந்து கொள்வதோ மிகவும் இலகுவானது). 'பஸ்'சை எதிர்பார்த்து நின்றிருந்தான். காலம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. இரவு பாதுகாவற் பணியினை முடித்துக் கொண்டு என்னிருப்பிடம் திரும்புவதற்காக 'பஸ்' தரிப்பிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயத்தில்தான் அவனை நோக்கினேன். நள்ளிரவில் பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் சமயங்களில் இவ்விதம் 'பஸ்'சினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சந்தர்பங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுகள். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, இரவை, இரவு வானை எல்லாமே இரசித்துக் கோண்டிருப்பது என் ஆர்வங்களிலொன்று. இவ்விதமான இரசித்தல் மூலம் நான் அறிந்து கொண்டவை ஏராளம். ஏராளம். நூல்கள், பத்திரிகைகள் போன்ற வெகுசன ஊடகங்கள் மூலம் நான் அறிந்தவற்றை விட இவ்விதமான பொழுதுகளில் நான் அறிந்து கொண்டவை, உணர்ந்து கொண்டவை மிக மிக அதிகம். 'லாண்ட்ஸ்டவு'னுக்கருகிலிருந்த கேளிக்கை விடுதியான 'ஹவுஸ் ஆவ் லங்காஸ்டர்'இலிருந்து நிர்வாண நடனமாதர் சிலர் வெளியில் வந்திருந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி மல்லர்களைப் போன்ற தோற்றமுடைய இரு வெள்ளையர்கள் , பார்வைக்கு இத்தாலியர்களைப் போலிருந்தார்கள், அப்பெண்களுடன் அளவளாவியபடி கவசங்களாக நின்றார்கள். வீதியின் அடுத்த பக்கத்தில், வடபுறத்தில், சில கறுப்பின போதை மருந்து விற்றுப் பிழைக்கும் சுய வியாபாரிகள் சிலர் வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தபடியிருந்தார்கள். மேலும் சிலர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள் என்னைப் போல். இததகையதொரு சந்தர்ப்பத்தில்தான் நான் அவனை அந்த பஸ் தரிப்பிடத்தில் சந்தித்தேன்.

"ஏ! நண்பா! எப்படிச் சுகம்" என்று உரையாடலினைத் தொடர்ந்தேன்.

"நான் நல்லாத்தானிருக்கிறேன். நீ எப்படி?"யென்றான். அப்பொழுதுதான் கவனித்தேன் அவன் போதை இன்னும் தணியாததை.

"நானும் நலமே! நன்றி!" என்றேன்.

அவன் அவ்வழியால் சென்று கொண்டிருந்த டாக்ஸிகள் சிலவற்றை மறித்தான். ஒருவராவது அவனுக்காக நிற்பாட்டுவதாகத் தெரியவில்லை.

"பார். கறுப்பினத்தவனென்றதும் ஒருத்தனாவது நிற்பாட்டுகிறானில்லை. அங்கு பார். அந்த கறுப்பின டாக்ஸிச் சாரதி கூட நிற்பாட்டுகிறானில்லை" என்றான்.

"அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. பத்திரிகைகளில் பார்த்திருப்பாயே. எத்தனை தடவைகள் அவர்கள் தாக்கப்பட்டிருப்பார்கள். சிலர் கொல்லப்பட்டுமிருக்கிறார்களே. மிகவும் ஆபத்தான பணிதான். உனக்கென்ன டாக்ஸிதானே வேண்டும். நான் மறிக்கவா?" என்றேன்.

"அவ்விதம் செய்தால் நன்றியுள்ளவனாகவிருப்பேன்" என்றான்.

"அது சரி. நீ எங்கு போக வேண்டும்?"

"கோடன் ரிட்ஜ் தெரியுமா? 'டான்வோர்த்' வீதியும் 'மிட்லாண்ட்' வீதுயும் சந்தியும் சந்திக்குமிடத்திற்கண்மையில்.." என்றான்.

•Last Updated on ••Saturday•, 17 •March• 2018 12:30•• •Read more...•
 

அஞ்சலி: நவீன வானியற்பியல் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹார்கிங் (1942 - 2018)!

•E-mail• •Print• •PDF•

அஞ்சலி: நவீன வானியற்பியல் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹார்கிங் (1942 - 2018)!

ஸ்டீபன் ஹார்கிங் , அண்மைக்காலத்தில் எம்முடன் வாழ்ந்த தலைசிறந்த வானியற்பியற் துறை அறிஞர் தனது 76ஆவது வயதில் இன்று காலை (மார்ச் 14, 2018)  தன்னியக்கத்தை நிறுத்தி விட்டார். இவரது அறிவு மட்டுமல்ல இவரது வாழ்க்கை கூட அனைவரையும், மருத்துவர்களையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியதொன்று. இளமைப்பருவத்தில் தனது இருபத்தியிரண்டாவது வயதில்  'மோட்டார் நியூரோன் டிசீஸ்' என்னும் ஒருவகையான நரம்பு நோயால்  உடல் நிலை பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியே வாழ்வாக அமைந்து விட்ட நிலையிலும், சிறிது காலமே வாழ்வார் என்று மருத்துவர்களால் காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையிலும் இவற்றையெல்லாம் மீறி இத்தனை ஆண்டுகள் இவர் வாழ்ந்திருக்கின்றார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்.ஐசக் நியூட்டன் வகித்த பதவியினை வகித்திருக்கின்றார். திருமண வாழ்வில் ஈடுபட்டு தந்தையாக வாழ்ந்திருக்கின்றார். இவர் மூன்று குழந்தைகளுக்குத்தந்தை.

நவீன வானியற்பியற் துறைகளின் தந்தையான அல்பேர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியல் இயக்க மற்றும் கருந்துளைகள் பற்றிய ஆய்வில், சக்திச்சொட்டுப் பெளதிகத்தில் தன்னை ஈடுபடுத்தி மேலும் பல ஆய்வுகளைச் செய்திருக்கின்றார். அவற்றின் வாயிலாகப் பல முடிவுகளை, உண்மைகளை அறிய வைத்திருக்கின்றார். குறிப்பாகக் கருந்துளைகள் பற்றிய, நாம் வாழும் இப்பிரபஞ்சம் பற்றிய இவரது கோட்பாடுகள் நவீன வானியற்பியத்துறைக்கு வளம் சேர்ப்பவை.

•Last Updated on ••Wednesday•, 14 •March• 2018 17:13•• •Read more...•
 

காலத்தால் அழியாத கானங்கள் (4-6)

•E-mail• •Print• •PDF•

காலத்தால் அழியாத கானங்கள் 4:  நாரே நாரே நாரே! நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே

ஸ்ரேயா கோஷல்கவிஞர் வைரமுத்துஇன்று இந்தியத்திரையுலகில் கொடி கட்டிப்பறக்கும் பாடகிகளில் எனக்கு மிகவும் பிடித்த பாடகியாக ஸ்ரேயா கோஷலைக் கூறுவேன். அவரது பிறந்த தினம் மார்ச் 12. மார்ச் 12, 1984 பிறந்த ஸ்ரேயா கோஷல் மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தவர். 'சரிகமப' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றி சிறந்த பாடகியாகப் புகழ்பெற்று, திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலியால் இனங்காணப்பட்டு (Sanjay Leela Bhansali ) , அவரது தேவதாஸ் இந்தித் திரைப்படத்தில் (2002) பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டு, அப்படத்தின் மூலமே இந்திய மத்திய அரசின் மற்றும் ஃபிலிம்ஃபெயர் சஞ்சிகையின் சிறந்த பாடகிக்கான விருதினைப்பெற்றவர். குறுகிய காலத்தில் நான்கு தடவைகள் இந்திய மத்திய அரசின் தேசிய விருதினையும், ஆறு தடவைகள் ஃபிலிம்ஃபெயரின் விருதினையும் சிறந்த பாடகிக்காகப் பெற்றவர். இவை தவிர தமிழக அரசின் மாநில விருதினை இரு தடவைகளு, மூன்று தடவைகள் கேரள மாநில அரசின் விருதினையும் , மேலும் பல விருதுகளையும் பெற்றவர். இங்கிலாந்திலுள்ள Madame Tussauds அருங்காட்சியத்தில் மெழுகினால் சிலையாக வடிக்கப்பட்ட முதலாவது இந்தியப் பாடகர் என்ற பெருமையினையும் பெற்றவர். இவரது பாடல்கள் எல்லாமே கேட்பதற்கு இனிமையானவை. திரைப்படங்கள் மட்டுமல்லாது, சொந்தமாகவும் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் இசை ஆல்பங்கள் தயாரித்தும் வெளீயிட்டுள்ளார்.

இவர் பாடகர் உதய் மஜும்தாருடன் பாடிய மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான 'குரு' படத்தில் பாடிய 'நன்னாரே' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. இப்பாடலின் சிறப்புகளாக ஸ்ரேயா கோஷலின் குரல், ஏ.ஆர்.ரகுமானின் இசை, கவிஞர் வைரமுத்துவின் வரிகள் , இயற்கையெழிலின் அழகிய காட்சிகளை வெளிப்படுத்தும் ஒளிப்பதிவு மற்றும் ஐஸ்வர்யா ராஜி`ன் நடிப்பு, நடன அசைவுகள் ஆகியவற்றைக் கூறுவேன்.

•Last Updated on ••Tuesday•, 13 •March• 2018 19:12•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 274: இருப்பு வாழ்வதற்கே!

•E-mail• •Print• •PDF•

திருமதி யோகரத்தினம் செல்லையாமானுடர்களில் கலைஞர்கள் (எழுத்தாளர்கள் உள்ளடங்கி),  அரசியல்வாதிகள் இவர்களைப்பொறுத்தவரையில் ஓய்வு என்பது உடலில் வலு உள்ளவரையே. உடல், உள்ளம் வலுவாக உள்ளவரை இவர்கள் இயங்கிக்கொண்டேயிருப்பார்கள். இருப்பை இவ்விதம்தான் எதிர்நோக்க வேண்டும். இதனால்தான் மனோரமா போன்ற கலைஞர்கள் தாம் இறுதிவரை நடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று கூறுவார்கள். உண்மையில் இருப்பினை ஆரோக்கியமாக எதிர்நோக்கும் பண்பு இது.  இவ்விதமே மனிதர்கள் இருக்க வேண்டும் என்பது என் பெரு விருப்பு.

இப்பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே இயங்கிக்கொண்டேயிருக்கின்றன கதிர் உட்பட. இயக்கத்துக்கு ஓய்வு என்பதே கிடையாது. ஆனால் சாதாரண மானுடரைப்பொறுத்தவரையில் தம் வாழ்க்கையை ஓய்வு பெறுதல் என்பதன் அடிப்படையில அமைத்துக்கொள்கின்றார்கள். இதனால் ஓய்வு பெறும் இலக்கை மட்டுமே வைத்துக்கொண்டு உழைக்கின்றார்கள். கடுமையாக உழைக்கின்றார்கள். ஓய்வு பெற்றதும் இவர்களில் பலருக்கு என்ன செய்வதென்றே தெரிவதில்லை. ஒய்வு பெற்றதும் எல்லாமே முடிந்து போய்விடுகின்றது என்று தளர்ந்து விடுகின்றார்கள். விரைவிலயே முதுமை பெற்று உடல்ரீதியாக, உடல் ரீதியாக வாடிப்போகின்றார்கள். பலர் ஒன்றுக்கும் இயலாத இயலாமையில் ஓய்வு பெற்றதும் வாழ்வே இல்லை  என்பது போல் ஒதுங்கி, ஓய்ந்து விடுகின்றார்கள்.

இதனால் ஓய்வு பெறுதல் (Retirement) என்னைப்பொறுத்த வரையில் எதிர் மறையானது என்பது கருத்து. இதற்குப் பதில் ஒருவர் தன்னிடமுள்ள ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளும் காலகட்டமாக இக்கால  கட்டத்தைப் பார்க்கலாம். இளமையில் படித்துப் பட்டம் பெற வேண்டுமென்று விரும்பி, வாழ்க்கைச் சூழல்கள் காரணமாக அதனைச் செய்ய முடியாமல் போனவர்கள் படித்துப் பட்டங்கள் பெறுவதை வாழ்க்கையின் இலட்சியமாகக் கொள்ளலாம். மேனாடுகளில் அன்றாடப் பணிகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட பலர் முதுமையில் படித்துப் பட்டம் பெறுகின்றார்கள். ஓவியம், எழுத்து , நடிப்பு போன்ற தம் ஆற்றல்களை வளர்த்துக்கொள்கின்றார்கள். தன்னார்வத்தொண்டர்களாக ஏனைய மானுடர்களுக்குப் பயனுள்ளவர்களாக வாழ்கின்றார்கள்.

மானுடர்கள் ஓய்வு பெறும் காலகட்டத்தை  இருப்பின் வளமான ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளும் காலகட்டமாகக் கருதித் தம் ஆற்றலை வளர்த்துக்கொள்ளவேண்டும்.  ஓய்வு பெறுதல் என்னும் சொல்லினைத் தம் வாழ்க்கையின் அகராதியிலிருந்து நீக்க வேண்டும். இருப்பில் மானுடர்களுக்கு ஓய்வு என்பது இருப்பின் முடிவில் மட்டுமே இருக்க வேண்டும் என்னும் வகையில் மானுடர்கள் தம் வாழ்க்கையினை அமைத்துக்கொள்ள வேண்டும்.

•Last Updated on ••Saturday•, 10 •March• 2018 09:25•• •Read more...•
 

அண்மைய முஸ்லிம் - சிங்கள இனக்கலவரம் பற்றி...

•E-mail• •Print• •PDF•

அண்மைய முஸ்லிம் - சிங்கள இனக்கலவரம் பற்றி...இலங்கை பல்லினங்கள் வாழும் நாடு. அண்மையில் நடந்து சற்றே தணிந்துள்ள சிங்கள் , முஸ்லீம் இனக்கலவரத்தின்போது முகநூலில் வெளியான பல பதிவுகளைப் பார்த்தேன். பலவற்றிலும் வதந்திகளின் அடிப்படையில் முஸ்லீம் மக்கள் மீது குற்றஞ்சாட்டும் இனக்குரோதம் மிக்க பதிவுகளையும் பார்த்தேன். நடந்து முடிந்த சம்பவங்களின் அடிப்படையில் தமிழர்களின் பதிவுகள் சில உணர்ச்சி மிக்கவையாக, இனக்குரோதம் மிக்கவையாக இருந்தன. சென்றவை சென்றவையாகவே இருக்கட்டும். குற்றஞ்சாட்டுவதாக இருந்தால் அனைவர் பக்கம் தவறுகள் உள்ளன. நடந்து முடிந்தவற்றிலிருந்து பாடங்கள் படிக்க வேண்டுமே தவிர அவற்றையே கூறிக்கொண்டு அவற்றில் குளிர் காய முடியாது. ஆனால் தற்போது நடைபெற்ற கலவரச்சுழலில் நான் அவதானித்த நம்பிக்கை தரும் ஆரோக்கியமான நடவடிக்கைகளாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடுவேன்:

இம்முறை தென்னிலங்கையில் ஊடகங்கள் அல்லது சிங்கள் மக்கள் பலர் நடந்து முடிந்த கலவரத்தையிட்டு வாய் மூடி மெளனத்திருக்கவில்லை. 'கலம்போ டெலிகிறாப்' பத்திரிகையில் கலவரத்தை அடக்காமல் பார்த்துக்கொண்டிருந்த காவற் துறையினரைப் பற்றிய ஆதாரபூர்வமான செய்திகளைக் காணொளி ஆதாரங்களுடன் பிரசுரித்துள்ளது. கலவரத்துக்குக் காரணமான பெளத்த துறவியை உடனடியாக இனங்கண்டு வெளிப்படுத்தியுள்ளது.

சிங்கள் மக்களில் பலர் இத்துறவியின் நடவடிக்கையை மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ள எதிர்வினைகளை இணையத்தில் வாசித்தேன். பாராமுகமாகவிருந்த காவல் துறையினரையும் கண்டித்திருக்கின்றார்கள். அதன் பின்னராவது காவற் துறையினர் கலவரத்துக்குக் காரணமானவர்களைக் கைது செய்திருக்கின்றார்கள். அரச பத்திரிகையான 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் கூட உடனடியாகக் கலவரத்தைக் கண்டித்து ஆசிரியத் தலையங்கம் வெளியாகியுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க தென்னிலங்கை ஊடகங்கள், மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்.

இத்தருணத்தில் 1977 இனக்கலவரத்தில் நாட்டின் ஜனாதிபதி தம்மிஷ்ட்டர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா 'போரென்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்' என்று போர் முழக்கமிட்டதை நினைத்துப்பார்க்கின்றேன். அன்றைய நிலைக்கும் , கலவரம் நடந்த உடனேயே அது பற்றிய காரமான விமர்சனங்களை வைக்கும் ஊடகங்களும், சிங்கள மக்களுள்ள இன்றைய நிலைக்குமிடையில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள். இதனை நாம் வரவேற்போம். இனக்குரோதத்துடன் இப்பிரச்சினையை அணுகும் தமிழ் முகநூல் பதிவாளர்களில் மிகச்சிலரே தென்னிலங்கைச் செய்திகளைப் பிரசுரித்திருந்தார்கள். மற்றவர்கள் வழக்கம்போல் எவற்றையும் வாசிக்கும் மனோநிலையற்றவர்கள் தம் மேதாவிலாசத்தைக் காட்டுவதாக வெட்டி முழங்கியுள்ளார்கள். இவர்கள் கண்களை மூடிக்கொண்ட பூனைகள். ஒருபோதுமே இவர்கள் தம் கண்களைத்திறந்து எவற்றையும் அணுகுவதில்லை. இவர்களைப்பொறுத்தவரையில் தெரிவதெல்லாம் இருட்டே. ஒளியல்ல.

•Last Updated on ••Thursday•, 08 •March• 2018 17:57•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 273: முகநூற் குறிப்புகள் சில!

•E-mail• •Print• •PDF•

கவலையளிக்கும் இலங்கை நிலை!

இலங்கை பல்லினங்கள் வாழும் நாடுகளிலிலொன்று. அண்மையில் கண்டியிலேற்பட்ட கலவரம் துரதிருஷ்ட்டமானது. இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் சமயங்களில் பாதித்தவரும், பாதிக்கப்பட்டவரும் வேறு வேறான இனத்தைச் சார்ந்தவராகவிருக்கும் பட்சத்தில் இனவாதிகளால் இச்சம்பவங்கள் ஊதிப்பெருப்பிக்கப்பட்டு இனக்கலவரங்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்களுள்ளன. கடந்த காலங்களில் வதந்திகள், சம்பவங்கள் இனக்கலவரங்களை உருவாக்கி அழிவுகளை ஏற்படுத்தின. இவ்விதமான கலவரங்கள் ஏற்படும் சமயங்களில் நாட்டில் நிலவும் சட்டதிட்டங்கள் இவ்விடயங்களைப் பொறுப்பேற்று, கலவரங்கள் ஏற்படாத வகையில் நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் நாட்டில் அடிக்கடி இனக்கலவரங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். இவ்விதமான சம்பவங்கள் ஏற்படும் சமயங்களிலெல்லாம் இன, மத, மொழி போன்ற வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று, சட்டம் தன் கடமையைத் துரிதமாகச் செய்யும் சூழலை நடைமுறைப்படுத்த வேண்டும். குற்றமிழைத்தவர்கள் முறையான நீதி விசாரணைகளின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். இவ்விதமான நடைமுறை பழக்கத்துக்கு வருமானால் இவ்விதமான சம்பவங்கள் நடைபெறும் சமயங்களில் சட்டம் தன் கடமையை ஒழுங்காகச் செய்யும் என்னும் மனநிலையில் அனைத்து நாட்டினருமிருப்பார்கள். அதனால் உணர்வுகளுக்கு ஆட்பட்டு இனக்கலவரங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றது. ஆனால் சட்டம் தன் கடமையைச் செய்வது பாரபட்சமற்று இருப்பது அவசியம். அவ்விதமிருந்தால்தான் அனைத்து இன மக்களும் அச்சட்டத்தின் மேல் மதிப்பு வைப்பதுடன், காவல் துறையினருக்கும் ஒத்துழைப்பினை நல்குவர்.

கடந்த காலங்களில் இனக்கலவரங்கள், யுத்தங்களால் மூழ்கடிக்கப்பட்டிருந்த நாட்டில் தற்போதுதான் சிறிது காலமாக அமைதி ஓரளவென்றாலும் நிலவுகின்றது. இந்த அமைதி நீடிக்க வேண்டுமென்றால் நாட்டிலுள்ள சட்டதிட்டங்கள் பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் சமமாகப் பிரயோகிக்கப்படுவது அவசியமாகும்.


எம்ஜிஆர் சிலை சிறப்பு விழாவில் ரஜனிகாந்தின் உரை பற்றி....

எம்ஜிஆர் சிலை சிறப்பு விழாவில் ரஜனிகாந்தின் இந்த உரையைக் கேட்டேன். விமர்சனங்களுக்கு அப்பால், என் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், இந்த உரையிலிருந்து நான் வந்தடைந்த முடிவு : தமிழ் நாட்டு அரசியலையே மாற்றப்போகின்ற பேச்சு.

இதற்கு முக்கிய காரணங்கள்:
1. தன் மேல் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளையெல்லாம் உள்வாங்கி அவற்றுக்கெல்லாம் பதிலளிக்கின்ற பாங்கு.
2. தமிழ் நாட்டு மக்களின் நாடித்துடிப்பை நன்குணர்ந்து எம்ஜிஆருடன் தன் உறவு, எம்ஜிஆர் பற்றிய தன் சிந்தனைகள் ஆகியவற்றை மக்களை ஈர்க்கும் வகையில் வெளிப்படுத்திய பாங்கு.
3. மக்களை ஈர்க்கும் வகையிலான அவ்வப்போது 'பஞ்ச்' வைத்துப் பேசப்பட்ட உரை.
4. ஏன் நடிகனொருவன் அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்கான காரணங்களைத் தர்க்கரீதியாக முன் வைத்தது. எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த சமயம் அவரைக் கூத்தாடி என்று இகழ்ந்தார்கள். அப்பொழுது தேர்தலுக்கு முன் அனைத்துக் கட்சியினருக்கும் இந்திய வானொலியில் உரையாற்ற சந்தர்ப்பம் கொடுத்தார்கள். அச்சந்தர்ப்பத்தை நன்கு பாவித்த எம்ஜிஆர் 'நான் கூத்தாடிதான்' என்று ஆரம்பித்துத் தன்னைக் கூத்தாடி என்றவர்களின் வாயை அடைத்து வெற்றியைத் தரும் வகையிலான உரையினை ஆற்றியிருந்தது நினைவுக்கு வருகின்றது. அதனை நினைவு படுத்துகின்றது ரஜனியின் தான் நடிகனே. நடிகன் அரசியலுக்கு வரக்கூடாதா என்ற பேச்சு.
5. ஆன்மிக அரசியலென்றால் தூய்மை அரசியல் என்ற விளக்கம்.
6. அரசியல் தலைவருக்கான வெற்றிடமுள்ளதை ஆணித்தரமாக வலியுறுத்தும் பாங்கு.
7. நடிப்பு என்னும் தொழிலை ஒழுங்காகச் செய்த நடிகனால், தம் அரசியல் வேலைகளை ஒழுங்காகச் செய்யாத அரசியல்வதியை விடச் சிறப்பாகச் செய்ய முடியுமென்று வாதிட்ட தர்க்கச்சிறப்பு.

•Last Updated on ••Tuesday•, 06 •March• 2018 15:54•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 272: நடிகர்கள் நாட்டின் செல்வங்கள்!

•E-mail• •Print• •PDF•

நடிகை ஸ்ரீதேவிஅண்மையில் நடிகை ஸ்ரீதேவி மறைவினையொட்டி நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வில் நடைபெற்ற ஒரு விடயம் என்னைக் கவர்ந்தது. அவரது மரணத்தை மகாராஷ்ட்டிர அரசானது அரச மரியாதைகளுடன் நடத்தி அவரைக் கெளரவித்தது. இது சிலருக்கு மனக்கொதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. கூத்தாடிக்கு இவ்வளவு மரியாதை தேவைதானா என்று கேட்கும் இந்தச்சிறுமதிக் கூட்டம்தாம் அக்கூத்தாடிகளின் கலைத்திறமையில் தம் இருப்புப் பிரச்சினைகளையெல்லாம் மறந்து இன்பமடைவது அதிகம். இந்தச்சிறுமதிக்கூட்டம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சினிமா, நாடக நடிகர்களும் எழுத்தாளர்கள் போல், இசைக்கலைஞர்களைப்போல், ஓவியர்களைப்போல் மக்களை அவர்கள்தம் வாழ்வியற் பிரச்சினைகளிலிருந்து சிறிதளவாவது கவனத்தைத் திருப்பி இன்பமடைய வைப்பவர்கள்; வாழ்வுக்கு வேண்டிய ஆரோக்கியமான அறிவுரைகளைத் தம் நடிப்பின் மூலம் உணர வைப்பவர்கள்; நாடொன்றின் பெருமையினை உலகெங்கும் வெளிப்படுத்துவதில் பெரும் பங்காற்றுபவர்கள். எல்லாக் கலைகளிலுள்ளதைப்போல் நடிப்புக் கலையிலும் திறமையான கலைஞர்களுள்ளனர். இவர்கள் ஏனைய துறைக்கலைஞர்களைப்போல் நாடொன்றின் செல்வங்கள். அந்த வகையில் நாடொன்றானது பல்வேறு உயரிய விருதுகளைக் கொடுத்து அவ்வப்போது இக்கலைஞர்களைக் கெளரவிக்கிறது. அதுபோன்றதொரு உயர் கெளரவம் தான் இவ்விதமான அரச மரியாதை என்பதும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்தான் நடிகை ஸ்ரீதேவி.

தமிழகத்தில் பிறந்த ஒருவரின் இழப்பில் பாரதத்தின் அனைத்து மாநில மக்களும் இன,மத, மொழி , மாநில வேறுபாடுகளற்றுப் பங்குபற்றுகின்றார்கள் என்றால், அரசியல்வாதிகள், நடிகர்கள், பொதுமக்கள் அனைத்துப் பிரிவுகளைச்சேர்ந்தவர்களும் அவர் இழப்பால் துயருகின்றார்கள் என்றால், அங்குதான் நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பாளுமை, திறமை என்பன தங்கியுள்ளன. அனைத்து மக்களையும் பாதிக்கும் வகையில் அவரது கலையுலகப் பங்களிபபு அமைந்துள்ளது. இந்த வகையில் அவரது இறுதிச்சடங்குகளை அரச மரியாதைகளுடன் நடாத்திய மகாராஷ்டிர மாநில அரசினைப்பாராட்ட வேண்டும். ஒரு மாநில அரசுக்கு நாட்டின் செல்வமான கலைஞர்களின் பங்களிப்பைப் பொறுத்து எவ்விதம் கெளரவிக்க வேண்டுமென்று தீர்மானிக்கும் முழு உரிமையுமுண்டு. அது மகாராஷ்ட்டிர மாநில அரசுக்கும் உண்டு. அதனை அவர்கள் பாவிக்க வேண்டிய தருணத்தில் சரியாகப் பாவித்திருக்கின்றார்கள்.

•Last Updated on ••Friday•, 02 •March• 2018 17:48•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 271 :'கந்தசாமியைக் காண நேர்ந்தது (ஒரு சிறு கனவு)': கவிஞர் முருகையனின் நினைவுக்கவிதையும் அதன் சிறப்பும்!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் இ.முருகையன்அறிஞர் அ.ந.கந்தசாமிஈழத்தமிழ் இலக்கியத்தில் முக்கிய ஆளுமைகளிலொருவரான  கவிஞர் இ.முருகையன் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி மறைந்து ஒரு மாதம் கழிந்த சூழலில் அ.ந.க. நினைவாகக் 'கந்தசாமியைக் காண நேர்ந்தது (ஒரு சிறு கனவு)' என்னும் கவிதையொன்றினை மார்ச் 14, 1968 தினகரன் பத்திரிகையில் எழுதியுள்ளார். மிகவும் சுவையான நினைவு கூரல். கவிஞரின் கனவில் ஒரு மாதம் முன் மறைந்த அ.ந.க தோன்றுகின்றார். நோய்வாய்ப்பட்டு மறைந்த அ.ந.க தேகசுகத்துடன் தோன்றுகின்றார்.  "நோயெல்லாம் தீர்ந்து மாயமாய் மறைந்த யாக்கைய ராகி இருந்தார்" அ.ந.க.  அவருடன் கவிஞர் கதைக்கத் தொடங்கினார்.

"இப்போ தெப்படிச் சுகம்?" எனக் கேட்கின்றார். அதற்கு அ.ந.க

அதற்கு அ.ந.க "நல்ல சுகம்" என்று நவில்கின்றார்.

கவிஞருக்கோ ஒரு மாதத்தின் முன் "அன்பர், சுவைஞர், ஆதரவாளர் துன்ப முகத்தராய்ச் சூழ்ந்து நிற்கையில், மூண்டெரி சூழ்ந்து முறுகிப் படர அன்னார் உடலம் தகனம் ஆனமை"  நினைவுக்கு வருகின்றது. இருந்தாலும் அ.ந.க.விடம் எப்படி அதை கூறுவதென்று கவிஞருக்கு ஒரு தயக்கம். கவிஞர் முன் தோன்றிய அ.ந.க.வே செளக்கியம் என்று கூறும்போது எவ்விதம் அவரது உடலம் சிதையில் எரிந்ததை எடுத்துக் கூறுவது?  இருந்தாலும் சொல்லாமலிருப்பதும் நல்லது அல்லவே. தயக்கத்தை நீக்கியவராகக் கவிஞர் அ.ந.க.விடம் கூறுகின்றார்: "உடலம் எரிந்ததை நான் கண்டேன்!"

இதற்கு அ.ந.க என்ன பதிலைக்கூறுகின்றார் தெரியுமா? கவிஞரின் வரிகளிலேயே படிப்போமா?

"இதற்கு விடையாய்க்
கலைஞர் சொன்ன பதிலைக் கேள்மினோ:
உடலம் எரிந்ததும் உண்மை தான். ஆயினும்
என் உட லாலே வீசப் பட்ட
மின்காந்த விம்ப மீதிலே, டாக்டர்
ஒப்ப ரேஷன் ஒன்றை ஆற்றினார்.
அதன் பின் எனக்கு நோய் அனைத்தும் முழுச் சுகம்"


அ.ந.க.வின் இப்பதிலுடன் கனவு நிலை நீங்கி நனவுலகுக்கு வருகின்றார் கவிஞர் இ.முருகையன். கவிஞரின் கனவில் தோன்றும் அ.ந.க கூறும் இப்பதில் என்னை மிகவும் கவர்ந்தது. அ.ந.க.வின் ஆளுமையினை எடுத்தியம்புவது. 'எதிர்காலச்சித்தன் பாடல்' என்னும் சிறந்த அறிவியல் மிகுந்த கவிதையினைத் தந்த கவீந்திரன் (அ.ந.க) நிச்சயம் இவ்விதமொரு அறிவியல் பூர்வமான பதிலைக் கூறியிருக்கக் கூடும்தான். அ.ந.க.வின் உடல் சிதையில் எரிந்ததைக் கூறிய கவிஞர் முருகையனைப்பார்த்து அ.ந.க. கூறுவதாகக் கவிஞர் சித்திரித்துள்ள பதிலில் தொனிக்கும் அறிவியல் என்னை மிகவும் கவர்ந்தது. கவிஞரின் கற்பனைச்சிறப்பினையும் கூடவே வெளிப்படுத்துவது. அ.ந.க கூறுகின்றார் 'உண்மைதான். என் உடல் எரிந்தது உண்மைதான். அவ்விதம்  எரிந்தபோது வெளிப்பட்ட மின்காந்த அலைகளின் விளைவாகத் தோன்றிய விம்பத்தின் மீது டாக்டர் 'ஒப்பரேஷன்' செய்து மீண்டும் உயிர்ப்பித்து விட்டார்'. உண்மையில் இப்பதிலில் தொக்கி நிற்கும் உண்மை என்னை மிகவும் பிரமிக்க வைத்தது. 'தொலைகாவும்' (Teleporting) தொழில்நுட்பம் மூலம் மானுடர்களும் அலைகளாகக்  (வானொலி அலைகளைப்போல்) காற்றினூடு பயணித்து மீண்டும் சுய உருவுக்கு வரும் வகையிலான தொழில்நுட்பம் (ஸ்டார் வார்ஸ் போன்ற அறிவியல் திரைப்படங்களில் வருவது போன்ற) மானுட வரலாற்றில் நிச்சயம் சம்பவிக்கும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டவன் நான். அது போல் மானுட மரணத்தையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாற்றும் தொழில் நுட்பமும் சாத்தியம் என்பதில்  மிகுந்த நம்பிக்கை கொண்டவன் நான். அ.ந.க.வும் கூட இவ்விதமான நம்பிக்கையினைக் கொண்டிருந்தவர். 'வெற்றியின் இரகசியங்கள்' என்னும் தான் எழுதிய உளவியல் மற்றும் வாழ்க்கையினை முன்னேற்றும் சிந்தனைகள் மிக்க நூலில் அ.ந.க கூறியிருக்கும் பின்வரும் கூற்று அவரது சாவை வெல்லுதல் சாத்தியம் என்னும் நம்பிக்கையினை வெளிப்படுத்தும் கூற்று எனலாம்:

•Last Updated on ••Friday•, 23 •February• 2018 14:44•• •Read more...•
 

அஞ்சலி: எழுத்தாளர் விதுரன் (இராசையா தங்கேஸ்வரன்) மறைவு!

•E-mail• •Print• •PDF•

"ஓ! மனிதர்களே நம்புங்கள்.
நான்,
பிரபஞ்சத்தில் ஒளி தேடுபவன்.
சிறந்த சித்தாந்தத்தின் புத்தன்.
இப்பூவுலகம் என் போதிமரம்." - விதுரன் -


அஞ்சலி: எழுத்தாளர் விதுரன் (இராசையா தங்கேஸ்வரன்) மறைவு!இப்பொழுதுதான் முகநூலில் இராசையா தங்கேஸ்வரனின் மறைவுச் செய்தினை அறிந்து கொண்டேன். உண்மையில் மிகவும் அதிர்ச்சியாகவிருந்தது. இவர் முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்தவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவர் ஒர் எழுத்தாளர் என்பது சிலரே அறிந்ததொன்று. விதுரன் என்னும் பெயரில் சில சிறுகதைகளையும், கவிதைகள் சிலவற்றையும் எழுதியிருக்கின்றார் (நானறிந்த வரையில்). மேலும் அதிகமாக எழுதினாரா என்பது தெரியவில்லை. இவரது சிறுகதையான நிஜதரிசனம் தேடல் (தேடக வெளியீடு) சஞ்சிகையின் பங்குனி 1994 இதழில் வெளியானது. இலங்கையிலிருந்து அகதியாக அமெரிக்கா வரும் தமிழ்ப்பெண்ணொருத்தியைக் கனடாவிலிருந்து சென்று அழைத்துவரும் தமிழ் இளைஞனைப்பற்றியது. அதில் இவர் பெண்ணுரிமை, தமிழர்தம் பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணமுறை, புகலிடப்பெண்கள் நிலை, காதல், இணைந்து பழகும் டேட்டிங் என்று பல விடயங்களைச்சுற்றிக் கதையினை அமைத்திருப்பார். இவரது கவிதையான காணாமல் போன ஆடு தேடலின் மே 1997 இதழில் வெளியாகியுள்ளது. இவரைச் சந்திக்கும் தருணங்களில் மேலும் எழுதும்படி கூறுவேன். எழுதுவேன் என்று கூறுவார். மேலும் எழுதினாரா என்பது தெரியவில்லை.

ஒருமுறை இவருடன் சம்பாஷித்துக் கொண்டிருந்தபொழுது 1983 கலவரத்தைத்தொடர்ந்து சிறிது காலம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் இணைந்திருந்ததாகவும், அதன் காரணமாகச் சிறிது காலம் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட இளைஞர்களொருவராக இலங்கைச் சிறையொன்றில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். நான் அவரது சிறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி , பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் அது பற்றி எதுவும் பின்னர் பதிவு செய்ததாகத் தெரியவில்லை.

பல வருடங்களுக்கு முன்னர் வன்னிச்சங்கம்(கனடா) மலர் வெளியிட்ட கொம்பறைக்கு ஆக்கம் நாடி அணுகியிருந்தார். கொடுத்ததாக ஞாபகம். அக்கட்டுரை கொம்பறை` மலரொன்றில் வெளியாகியிருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். அக்காலகட்டத்தில் வன்னியில் மாணவர்களுக்காக இலாப நோக்கற்ற அமைப்புக்காகச் சிறு தொகை கொடுத்தபோது நன்றி கூறிக் கடிதம் அனுப்பியிருந்தார். பின்னர் அவ்வப்போது மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்வதுண்டு. அண்மையில் கூட கண்புரை சத்திரசிகிச்சை பற்றிப் பதிவொன்றினையிட்டிருந்தபொது அச்சிகிச்சையினைத் தான் பல வருடங்களுக்கு முன்னர் செய்ததாகவும், அது பற்றிய அறிவுறுத்தல்களையும் முகநூலில் உள்பெட்டியில் தெரிவித்திருந்தார். அண்மையில் கூட ஜனவரி 23 எனது பிறந்தநாளினையிட்டு வாழ்த்துச் செய்தியினையும், பொங்கல் வாழ்த்துச் செய்தியினையும் அனுப்பியிருந்தார்.

•Last Updated on ••Thursday•, 22 •February• 2018 15:35•• •Read more...•
 

மக்கள் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளி: அ.ந.க! (அ.ந.க நினைவு தினம் பெப்ருவரி 14)

•E-mail• •Print• •PDF•

அறிஞர் அ.ந.கந்தசாமி

அறிஞர் அ.ந.க என்று அழைக்கப்பெறும் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14. தனது நாற்பத்து நான்காவது வயதில் மறைந்து விட்ட அ.ந.க தனது குறுகிய கால வாழ்வினுள் ஆற்றிய இலக்கியப் பங்களிப்பு பிரமிக்கத்தக்கது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம் மற்றும் மொழிபெயர்ப்பு என்று அவர் ஆற்றிய இலக்கியப்பங்களிப்பு ஈழத்தமிழர்தம் இலக்கிய வரலாற்றில் நன்றியுடன் நினைவு கூரப்படும். ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவராகத் திகழ்ந்த அ.ந.க இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று எழுத்தே மூச்சாக வாழ்ந்து மறைந்த படைப்பாளி. இவரது படைப்புகள் கூறப்படும் மொழியினால், சமுதாயப் பிரக்ஞை மிக்க பொருளினால், படைப்புகள் வெளிப்படுத்தும் தகவல்களினால் முக்கியத்துவம் பெறுபவை. சிந்தனையைத்தூண்டும் இவரது எழுத்தின் வீச்சு வாசகர்களின் உள்ளங்களைச் சுண்டி ஈர்க்கும் தன்மை மிக்கது.

அ.ந.க வெறும் இலக்கியவாதி மட்டுமல்லர். இலக்கியத்தைத் தான் நம்பிய சிந்தனைகளுக்கமைய வடித்த சிந்தனைச் சிற்பி. செயல்வீரர். தொழிற்சங்கங்கள் பலவற்றில் இணைந்து தொழிலாளர் நலன்களுக்காகப் போராடியவர். வீரகேசரி நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கான தொழ்ற்சங்கம் அமைய அ.ந.க.வே காரணம் என்பர். மார்க்சியவாதியான இவரது எழுத்துகள் பிரச்சார வாடையற்றவை. அதனாலேயே அனைவரையும் கவர்பவை. இவரது புகழ்பெற்ற 'மனக்கண்' நாவல் தினகரனில் வெளியானபோது வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப்பெற்றது. பின்னர் இவரது நெருங்கிய நண்பரும் , எழுத்தாளருமான சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாக்கப்பட்டு இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வானொலி சேவையில் தொடராக வெளியானது குறிப்பிடத்தக்கது. மேடையேற்றப்பட்டபோது மிகுந்த வரவேற்பைப்பெற்ற பல தடவைகள் மீள மேடையேற்றப்பட்ட 'மதமாற்றம்' நாடகம் மதம் என்னும் கருத்தாடலை அங்கதச்சுவையுடன் விபரிக்கும் ஈழத்தமிழ் இலக்கியத்தில் மேடையேற்றப்பட்ட சிறந்த நாடகங்களிலொன்று. இந்நாடகத்தைப்பற்றிப் பிரபல எழுத்தாளர் செ.கணேசலிங்கன் பின்வருமாறு கூறுவார்:

"சைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னரின் அறிவையும் இந் நாடகத்தில் காணலாம். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் மேலாதிக்கம் செலுத்தும் கருத் தியல் (Ideology) மதம் என்றும் முதலாளித்துவத்தில் கல்வி என்றும் நவ மார்க்சிய அறிஞர் அல்துரசர் கூறுவார். கலை, இலக்கியத்தில் கருத்தியல்கள் உடைக்கப்பட்டு விஞ்ஞான ரீதியான சிந்த னையைக் கொணர வேண்டும் என்பதும் அன்னாரின் கோட்பாடாகும். அத்தோடு இத்தகைய போக்கு பண்டைய நாடகங்கள், இலக்கியங் களில் காணமுடியாதது அவற்றின் பயனற்ற தன்மையைக் காட்டுகிறது என்பதும் அவரது கூற்றகும். கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந் நாடகத்தில் சாடி இருப்பது இந் நாடகத்தின் தனிச் சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை. பார்வையாளர் எம் மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப் பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தண்மூலம் அறிவர். இராமலிங்கம் என்றேர் பாத்திரத்தை ஆசிரியர் தன் பகுத்தறிவுக் கருத்துக்களையும் தருக்க நியாயங்களையும் கூறுவதற்காக நாடகத்தில் கொண்டு வந்துள்ளார். இராமலிங்கம் என்ற பாத்திரம் கந்தசாமியே. கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப் பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத் தழுவி காதலைக் கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவான போதும் "மதம், காதல்" என்ற பொய்மைகளை கந்தசாமி சாடும் திறமை அபாரம். 'மதமே பொய். இருவரும் பொய்களை நம்புகிறர்கள். ஆனல் வெவ்வேறு பொய்கள் - கந்தசாமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகிறார், நல்ல நாடகம் சமூக முரண்பாடுகளைக் கையாள வேண்டும். சிந்தனையில் மோதலை ஏற்படுத்துவதோடு தன்னை உணர்ந்து கொள்ள உதவ வேண்டும். நாடகம் பார்க்கும் வேளை நடிகனக இருந்தவன் நாடகம் முடிந்ததும் புது நடிகனாக வேண்டும், வாழ்க்கையில். இந் நாடகம் மேடையில் நடிப்பதற்காக எழுதப்பட்டபோதும் படித்துச் சுவைப்பதற்குமாக அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பாகும். புதிதாக நாடகம் எழுதுவோருக்கும் காட்சி அமைப்பையும் கருத்தின் ஆழத்தைக் கையாளும் முறையையும் கற்பிக்கத் தக்கதாக இந் நாடகம் உள்ளது" -  (  'எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினால் நூலாக 'மதமாற்றம்' வெளியிடப்பட்டபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய சிறப்புரையிலிருந்து).

கலாநிதி கைலாசபதியும் தான் பார்த்த தமிழ் நாடகங்களில் வெளிவந்த மிகச்சிறந்த தமிழ் நாடகமாக இதனைக்குறிப்பிடுவார். இந்நாடகம் கொழும்பில் பல தடவைகள் மேடையேற்றப்போது பல வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்துள்ளன.

•Last Updated on ••Friday•, 16 •February• 2018 07:35•• •Read more...•
 

கட்டடக்கலைக் குறிப்புகள் 6: 'குறைவில் நிறையச் (Less is more) சாதித்த கட்டடக்கலைஞர் லட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies Van der Rohe)

•E-mail• •Print• •PDF•

லட்விக்  மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies Van der Rohe)ஜேர்மனியில் பிறந்து 1938இல் அமெரிக்கா குடிபுகுந்து அமெரிக்காவில் நவீனத்துவக்கட்டடக்கலையின் முக்கிய கட்டடக்கலைஞராக விளங்கியவர் 'லட்விக் மீஸ் வான் டெர் ரோ' (Ludwig Mies Van der Rohe).  இவர் தனது கட்டடக்கலைத் தொழிலை ஜேர்மனியில் ஆரம்பிப்பதற்கு முன்னர் அமெரிக்கக் கட்டடக்கலைஞரான பீட்டர் பெஹ்ரென்ஸுடன் (Behrens) பணி பழகுநராகச் சேர்ந்து தன் கட்டடக்கலைத் தொழிலினை ஆரம்பித்தவர்.

கனடியர்களுக்குக் குறிப்பாகட்த் தொரோண்டோ வாசிகளுக்கு மீஸ் வான் டெர் ரோ என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது நகரின் வர்த்தக மையத்தில் உயர்ந்து நிற்கும் TD Dominiyan centre  (1964)  தான். இதுபோல் அமெரிக்க வாசிகளுக்கு, குறிப்பாக நியுயார்க் வாசிகளுக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது அவரது 'சீகிரம்'  (Seagram Buillding) கட்டடடம்தான் (Seagram Building 1958). இவ்விரு கட்டடங்களைப் பார்த்ததுமே இவரின் தனித்தன்மை உடனே புலப்படும்.

இவர் உருக்குச் சட்டங்கள் (Steel Frames), கண்ணாடி (Glass)  போன்ற புதிய கட்டடப்பொருட்களைப் பாவிப்பதில் முன்னோடிகளிலொருவராக விளங்கினார். அதில் மிகுந்த தெளிவுடனிருந்ததுடன் தனது பாணியினை 'ட்தஓலும், எலும்பும்' (Skin and Bones) என்றும் அழைத்தார். தேவையற்ற கட்டட அலங்காரங்களை இவர் தவிர்த்ததுடன் , கட்டடங்களின் உள்வெளியினை (interior space)  முழுமையாக, தேவைக்கேற்ப  திரைச்சுவர்கள் (curtain walls) மூலம் பிரித்துப் பாவிக்கும் வகையில் தனது கட்டட வடிவமைப்புகளை உருவாக்கினார்.

1929இல் பார்சலோனா கண்காட்சியிலிருந்த ஜேர்மன் விளையாட்டரங்கில் பச்சைக்கண்ணாடிகளைக் கொண்டு வடிவியல் ஒழுங்கில்  பச்சைக் கண்ணாடி, பளிங்குக் கல் (marble), 'குரோம்' தூண்கள் (chrome columns), ஒனிக்ஸ் எனப்படும் ஒருவகை இரத்தினக் கல்,  இத்தாலி நாட்டில் காணப்படும் travertine என்னும் ஒருவகைக் கிறிஸ்டல் அல்லது படிகக் கல் ஆகியவற்றைப் பாவித்து அமைக்கப்பட்ட தளங்கள் (planes) ஆகியவற்றைப் பாவித்திருக்கின்றார் இவர்.

இவரது புகழ்மிக்க கட்டடமான சீகிரம் கட்டடம் எளிமையானதும், பொதுவாகத் தேவையற்ற (superfluous)  மிதமிஞ்சிய அலங்காரங்களால் மறைக்கப்பட்டிருக்கும் நிலை  தவிர்க்கப்பட்டு கட்டுமான உறுப்புகள் (structural elements)  வெளியில் தெரியும் வகையில் அமைந்த வானுயரக் கட்டடங்கள் உருவாவதற்குரிய புதிய சகாப்தமொன்றினைக் கட்டடக்கலை வரலாற்றில் உருவாக்கி வைத்ததெனலாம்.

•Last Updated on ••Wednesday•, 14 •February• 2018 20:38•• •Read more...•
 

'திண்ணை'க் கவிதைகள் மூன்று!

•E-mail• •Print• •PDF•

- வ.ந.கிரிதரன் -திண்ணை இணைய இதழில் முன்பு வெளியாகிய கவிதைகள் இவை. என்னை எப்பொழுதுமே நாம் வாழும் இப்பிரபஞ்சத்தில்  உருவான மானுட இருப்பும், இதற்கும் மேலான உயிரினங்களின் சாத்தியம் பற்றிய சிந்தனைகளும், எம் இருப்பின் முப்பரிமாண எல்லையும் , காலவெளி பற்றிய புரிதல்களும் அவற்றின் மீதான சிந்தனையும், இயற்கையின் பேரழகும், படைக்கப்பட்டுள்ளை ஏனைய உயிரினங்களின் படைப்புச்சிறப்பும் கவரும் விடயங்கள். எம் இருப்பு '"வெறுமைக்குள் விரியும்  திண்ம இருப்பு.". நாமோ 'பரிமாண விலங்குகள் தாங்கும் அடிமைகள்'. அவை பற்றிச் சிந்திப்பதிலுள்ள இன்பம் எனக்கு வேறெவற்றிலுமில்லையென்பேன். ஆழநடுக்காட்டில் பல்லாண்டுகள் தனித்து விடப்பட்டாலும் கூட என்னால் இவை பற்றித் தொடர்ச்சியாகச் சிந்தித்துக்கொண்டேயிருக்க முடியும். 'என்று வருமந்த ஆற்றல்?', 'காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்! மற்றும்' 'மழையைச் சுகித்தல்!  ஆகிய கவிதைகளிலும் என் இந்த உளப்பாங்கினை நீங்கள் கண்டிட முடியும்.

1. என்று வருமந்த ஆற்றல்?

நள்ளிரவுக் கருமை;
மூழ்கிக் கிடக்குமுலகு; தண்ணொளி
பாய்ச்சும் நிலவு; ‘கெக்க’லித்துச்
சிரிக்கும் சுடரு.

விரிவான் விரிவெளி.
‘புதிர் நிறை காலவெளி.

வெறுமைக்குள் விரியும்
திண்ம இருப்பு.

பரிமாண விலங்குகள்
தாங்கும் அடிமை.

•Last Updated on ••Thursday•, 15 •February• 2018 07:36•• •Read more...•
 

கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.

•E-mail• •Print• •PDF•

கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.- அண்மையில் முகநுலில்  இலக்கியத்திருட்டு பற்றியொரு பதிவிட்டிருந்தேன். அதற்கு எதிர் வினையாற்றியிருந்த பிரபல கலை இலக்கிய விமர்சகரும், எனது மதிப்புக்குரியவருமான இந்திரன் (தமிழ்நாடு) அவர்கள் பினவருமாறு கூறியிருந்தார் " Indran Rajendran நல்ல குதிரையைத்தான் திருட முடியும்...உங்களுடையது நொண்டி குதிரையல்ல என்று தெரிகிறது...விடுங்கள்...". நன்றி திரு இந்திரன் அவர்களே. அதன் பாதிப்பிது. -


குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
வியாபாரியல்லன்.
நாணயமான குதிரை வளர்ப்பாளன்..
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
ஆனால் அவை நொண்டிக்குதிரைகளல்ல.
என்னிடமுள்ள குதிரைகள் அனைத்துமே
என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்பபதில்லை.
நான் நொண்டிக்குதிரைகளை வளர்ப்பவனோ,
விற்பவனோ அல்லன்.
இருந்தும் குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை
அதிகமாகிவிட்டது.

 

•Last Updated on ••Friday•, 09 •February• 2018 18:28•• •Read more...•
 

கட்டடக்கலைக் குறிப்புகள் 5: சேதனக் கட்டடக்கலை (Organic Architecture).

•E-mail• •Print• •PDF•

ஃப்ராங் லாயிட் ரைட் ( Frank Lloyd Wright நவீனக் கட்டடக்கலையின் கோட்பாடுகளிலொன்று சேதனக் கட்டடக்கலை (Organic Architecture). இதன் மூலவர் புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான ஃப்ராங் லாயிட் ரைட் ( Frank Lloyd Wright) . இதனை , இச்சொல்லாட்சியினை், அவர் தனது சூழலுக்கு இயைந்த கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிக் குறிப்பிடுகையில் பாவித்ததன் மூலம் அறிமுகப்படுத்தினார். இதனை இவர் வடிவமானது அதன் செயற்பயனை அல்லது பாவனைப்பயனைத் தொடருமொன்று (form follows function) என்று நம்பிய கட்டடக்கலைஞரும் , ஃப்ராங் லாயிட் ரைட்டின் கட்டடக்கலைத்துறை வழிகாட்டியுமான கட்டடககலைஞர் லூயிஸ் சல்லிவனின் ( Louis Sullivan) கட்டக்கலைக் கருதுகோள்களின் வாயிலாக வந்தடைந்ததாக கட்டடக்கலை விமர்சகர்கள் கருதுவர். மேலும் சிலர் தோரோவின் மீ இறையியல் (Transcendentalism) சிந்தனையே இவரை அதிகம் பாதித்ததாகக் கருதுவர். ஃப்ராங் லாயிட் ரைட் வடிவமும், அதன் செயற்பயனும் ஒன்றென்று (form and function are one.) வாதிடுவார். வடிவம் அதன் செயற்பயனைத்தொடர்வது என்னும் கோட்பாடு அல்லது சிந்தனை நவீனக் கட்டடக்கலையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடோ அத்தகையதொரு கோட்பாடே ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக் கட்டடக்கலை என்னும் கோட்பாடும்.

சேதனக் கட்டடக்கலை என்றால் என்ன?
இதனை ஒரு கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிய நவீனத்துவச் சிந்தனையெனலாம். இச்சிந்தனையான கட்டடமொன்றினை உயிர்த்தொகுதியாக உருவகித்து உயிர் வடிவங்கள் எவ்விதம் அவை அவற்றுக்குரிய உயிர்கள் வாழும் இயற்கைச் சூழலுக்கேற்ப  , சூழலுடன் இயைந்து உருவாகினவோ, சூழலுக்கு இணக்கமாக அமைந்துள்ளனவோ அவ்வாறே கட்டடமொன்றின் வடிவமும் (form) , அமைப்பும் (structure) அக்கட்டடம் அமையவுள்ள இயற்கைச்சூழலுக்கேற்பவிருப்பதுடன் , இணக்கமாகவுமிருக்க  வேண்டும் என்று எடுத்தியம்புகின்றது. ஆக, சேதனக்கட்டடக்கலையானது கட்டடம் வடிவமைக்கப்படும் வெளியினை அதன் உட்புற, வெளிப்புறங்களுடன் கலந்துவிடும் வகையில் அவற்றுடன் ஒன்றிணைக்கின்றது. இவ்விதமாக உருவாக்கப்படும் கட்டடச்சூழலினை அக்கட்டடம் உருவாகும் இயற்கைச்சூழலிலிருந்து வேறுபடுத்த முற்படாது, அச்சூழலுடன் ஒன்றாகும் வண்ணம் கலந்திருக்க வழி சமைக்கின்றது. ஃப்ராங்ல் லாயிட ரைட் வடிவமைத்த பல கட்டடங்கள் குறிப்பாக அவரது சொந்த இல்லங்கள் (ஸ்பிரிங் கிறீன், விஸ்கான்சின், அரிசோனா போன்ற இடங்களில் அமைந்துள்ள) இவ்விதமான அவரது கட்டடக்கலைச்சிந்தனைபோக்கான சேதனக் கட்டடக்கலைச் சிந்தனையினைப் பிரதிபலிப்பவை. உண்மையில் ஃப்ராங் லாயிட ரைட் கட்டடக்கலைப்பாணிகளைப்பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. ஏனென்றால் அவர் ஒவ்வொரு கட்டடமும் அது அமைந்திருக்கும் இயற்கைச்சூழலிலிருந்து இயல்பாக உருவாக, வளர வேண்டுமென்று திடமாக நம்பினார்.

•Last Updated on ••Thursday•, 08 •February• 2018 13:35•• •Read more...•
 

ஐபிசி தமிழ் இணையத்தின் இலக்கியத்திருட்டு!

•E-mail• •Print• •PDF•

ஐபிசி தமிழ் இணையத்தின் இலக்கியத்திருட்டு! ஐபிசி தமிழ் இணையத்தளத்தில்  கவிஞர் செழியனைப்பற்றிப்பின்வருமாறு செய்தியொன்று வெளியாகியுள்ளது: "ஈழத்தின் முன்னணிக் கவிஞராக அறியப்படும் தாயக விடுதலைப் போராளியும், கவிஞரும், எழுத்தாளரும், நாடகருமான செழியன் காலமானார். தாயக விடுதலைப் போராளியும், கவிஞரும், எழுத்தாளரும், நாடகருமான செழியன் காலமானார்! அண்மையில் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று கனடாவில் காலமானார். இவர் தாய்வீடு பத்திரிகையில் எழுதி வந்தவர். அத்தோடு, இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்குக் குறிப்பாகப் புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கு, கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு, புகலிடத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளி என்று தான்,கவிஞர் செழியனைக் கூறவேண்டும். 'ஒரு போராளியின் நாட் குறிப்பு', 'வானத்தைப் பிளந்த கதை', 'குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள் (கவிதைத்தொகுப்பு), 'ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை' (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியர் இவராவார்.தமிழ் விடுதலைப்போராட்ட அமைப்புகளிடையே வெடித்த முரண்கள், பகை முரண்பாடுகளாகிய நிலையில் அவற்றிலிருந்து தப்பிய தனது அனுபவங்களை 'ஒரு போராளியின் நாட் குறிப்பு' என்னும் 'தாயகம்' பத்திரிகைத் தொடரில் ஆவணப்படுத்தியவர் செழியன் என்பது, குறிப்பிடத்தக்கது." [https://news.ibctamil.com/…/poet-writer-and-playwright-seli…]

இச்செய்தியிலுள்ள "இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்குக் குறிப்பாகப் புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கு, கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு, புகலிடத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளி என்று தான்,கவிஞர் செழியனைக் கூறவேண்டும். 'ஒரு போராளியின் நாட் குறிப்பு', 'வானத்தைப் பிளந்த கதை', 'குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள் (கவிதைத்தொகுப்பு), 'ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை' (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியர் இவராவார். தமிழ் விடுதலைப்போராட்ட அமைப்புகளிடையே வெடித்த முரண்கள், பகை முரண்பாடுகளாகிய நிலையில் அவற்றிலிருந்து தப்பிய தனது அனுபவங்களை 'ஒரு போராளியின் நாட் குறிப்பு' என்னும் 'தாயகம்' பத்திரிகைத் தொடரில் ஆவணப்படுத்தியவர் செழியன் என்பது, குறிப்பிடத்தக்கது." என்னும் வரிகள் எனது முகநூற் பதிவிலுள்ள வரிகள். யார் இவர்களுக்கு என் பதிவின் வரிகளை மூலம் குறிப்பிடாமல், என் அனுமதியின்றிப்பாவிக்க அனுமதியளித்தது? இதனைச்சுட்டிக்காட்டி ஐபிசி தமிழ் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். இதுவரை அவர்களிடமிருந்து பதிலெதுவுமில்லை. எனவேதான் இந்தப்பதிவு.

•Last Updated on ••Wednesday•, 07 •February• 2018 17:08•• •Read more...•
 

கட்டடக்கலைக்குறிப்புகள் 4: லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function)

•E-mail• •Print• •PDF•

லூயிஸ் சல்லிவன்ஒரு கட்டடத்தின் அல்லது பொருளொன்றின் வடிவமானது அக்கட்டடம் அல்லது அப்பொருள் எக்காரணத்துக்காகப் பாவிக்கப்படுகின்றதோ அக்காரணத்துக்கேற்ப பொருத்தமான வடிவமொன்றினைப்பெறும். அதாவது அக்கட்டடம் அல்லது அப்பொருளின் செயற்பயனுக்கேற்ப அவற்றின் வடிவமுமிருக்கும். இதனைத்தான் வடிவம் செயற்பயனைத்தொடர்தல் (Form follows function) என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது. இக்கருதுகோள் அல்லது சிந்தனை் அல்லது விதி இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் அல்லது தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் பொருளொன்றின் வடிவமைப்பில் முக்கியமானதொரு கருதுகோளாகும்.

இக்கோட்பாட்டின் காரணகர்த்தா புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவன் ( Louis Sullivan) ஆவார். ஆயினும் பொதுவாக இக்கோட்பாட்டின் காரணகர்த்தாவாகத் தவறாகச் சிற்பி ஹொரதியொ கிறீனோ , Horatio Greenough (1805 – 1852) , குறிப்பிடப்பட்டாலும் அது தவறானது. சிற்பி ஹொரதியொ கிறீனோவை இவ்விதம் குறிப்பிடுவதற்குக் காரணம் அவரது கட்டுரைகளின் தொகுதியொன்று 'வடிவமும், செயற்பயனும்: கலை மீதான ஹொரதியோ கிறீனோவின் குறிப்புகள்' (Form and Function: Remarks on Art by Horatio Greenough.) என்னும் பெயரில் வெளிவந்ததாகும். ஆயினும் வடிவமானது எப்பொழுதுமே செயற்பயனைத் தொடரும் என்னும் கூற்றினை முதன் முதலில் பாவித்தவராகக் கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவனைத்தான் குறிப்பிட வேண்டும்.

தேரோ , எமர்சன், மெல்வில் போன்றோரின் பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட லூயிஸ் சல்லிவன் சிற்பி ஹொரதியோ கீறினோவுக்குப் பல வருடங்களுக்குப் பின் பிறந்தவர். அவர் 1896இல் எழுதிய 'கலைத்துவ அடிப்படையிலான உயர்ந்த ஆபிஸ் கட்டடம்' (The Tall Office Building Artistically Considered) என்னும் கட்டுரையில் இக்கருதுகோளினை முதன் முதலாகப் பாவித்திருகின்றார். இருந்தாலும் தனது இக்கருதுகோளுக்குக் காரணமானவராக அவர் கி.மு 80–70 காலகட்டத்தில் பிறந்து கி.மு 15 ஆண்டளவில் இறந்த புகழ்பெற்ற ரோமன் கட்டடக்கலைஞரான மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ (Marcus Vitruvius Pollio) என்பவரைப் பின்னொரு சமயம் குறிப்பிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ புகழ்பெற்ற 'கட்டடக்கலைபற்றி' என்னும் அர்த்தத்திலான De architectura என்னும் கட்டடக்கலை பற்றிப் பத்துத் தொகுதிகள் அடங்கிய நூலொன்றினை எழுதியிருக்கின்றார். கு.மு. காலகட்டத்தில் எழுதப்பட்ட அந்நூலானது கட்டடக்கலை வரலாற்றில் மிகவும் முக்கியமானதோரு நூலாகக் கருதப்படுகின்றது. இந்நூலில் அவர் கட்டடமொன்றின் அமைப்பானது திடம், பயன் மற்றும் அழகு (firmitas, utilitas & venustas) ஆகிய மூன்று முக்கியமான பண்புகளை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
•Last Updated on ••Monday•, 05 •February• 2018 19:42•• •Read more...•
 

கட்டடக்கலைக் குறிப்புகள் 3 : களனி விகாரைக் 'கண தெய்யோ' (பிள்ளையார்)

•E-mail• •Print• •PDF•

களனியா ரஜமகா விகாரைப்பிள்ளையார் களனி ரஜ மகா விகாரைSave மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றுகொண்டிருந்தபோது எமது முதலாவது வருடத்தில் 'வெளிக்களக் கட்டடக்கலை' (Field Architecture) என்றொரு பாடமுமிருந்தது. அப் பாடம் வார இறுதி நாள்களிலொன்றான சனிக்கிழமையில்தானிருக்கும். அப்பாடத்தின் நோக்கம் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களைச் சென்று பார்ப்பது. எமது பல்கலைக்கழகம் கொழும்பு மாநகரிலுள்ள மொறட்டுவைப்பகுதியிலிருந்ததால் கொழும்பு மாநகரிலுள்ள கட்டடங்களையே சென்று பார்ப்பது. கட்டடக்கலைஞர்களின் கவனத்துக்குள்ளாகிய இல்லங்கள், பழம்பெரும் சரித்திரச்சின்னங்கள், நகரின் சுதந்திர சதுக்கம் போன்ற முக்கிய கட்டடங்கள் ஆகிய பல கட்டடங்களைச் சென்று பார்த்திருக்கின்றோம். அவ்விதம் சென்று பார்த்த எல்லாக்கட்டடங்களின் விபரங்களும் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் சில கட்டடங்களுக்கான எமது விஜயங்கள் மட்டும் இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளன.

இப்பாடத்துக்கு எமக்கு விரிவுரையாளராகவிருந்தவர் இன்று தெற்காசியாவின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராக அறியப்படும் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன் அவர்களே. புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கிய ஜெஃப்ரி பாவாவின் (Geoffrey Bawa) மாணவர். இவரைபற்றி Anjalendran: Architect of Sri Lanka  என்னுமொரு நூலினை டேவிட் ராப்சன் (David Robson) என்பவர் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அஞ்சலேந்திரனின் கட்டடக்கலைப்பங்கபபளிப்பு பற்றிப் பின்னர் விரிவாக எழுதும் எண்ணமுண்டு. யாழ் நகரிலுள்ள பல்வேறு காரணங்களுக்காகப் புகழ்பெற்ற அசோகா ஹொட்டலை வடிவமைத்தவர் இவரே. அக்ஹொட்டல் வடிவமைக்கப்பட்ட காலத்தில்தான் இவர் எங்களுக்கு விரிவுரையாளராகவிருந்தார். அதனால் எமது விடுமுறைக்காலத்தில் அக்ஹொட்டல் கட்டி முடிக்கப்பட்டிருந்த ஆரம்ப காலத்தில் அங்கு சென்று பார்த்திருக்கின்றோம்.  இவர் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அரசியல்வாதிகளிலொருவராக   விளங்கிய 'அடங்காத்தமிழன்' என்று அறியப்பட்ட, முன்னாள் வவுனியாப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த சுந்தரலிங்கம் அவர்களின் பேரன். எமக்கு இப்பாடமெடுத்துக்கொண்டிருந்ந காலத்தில் எப்பொழுதும் டெனிம்ஸ் பாண்ட் அணிந்து வருவார். இவர் சிறுவயதிலிருந்தே கொழும்பு வாசியாகவிருந்தவரென்று நினைக்கின்றேன்.

•Last Updated on ••Monday•, 05 •February• 2018 18:56•• •Read more...•
 

போர்ச்சுவாலை அமரச்சுடராகியது: கவிஞர் செழியன் மறைவு!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் செழியன் ஆஸ்பத்திரியில் அனுமதி!கவிஞர் செழியனின் இறுதிச் சடங்கு குறித்த தகவல். இறுதி மரியாதைக்காக (நன்றி: பா.அ.ஜயகரன்)

Lotus Funeral and Cremation Inc ல்
121 City view Drive, Toronto, M9W 5A8
ஞாயிறு (04-02-2018) மாலை 5:00 - 9:00 மணி வரையும்
திங்கள் (05-02-2018) மாலை 2:00 -5:00 மணி வரையும் வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்

ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் 'கவிஞர் செழியன்' பெப்ருவரி 3, 2018 அன்று அமரராகிய செய்தி துயர் தருவது. மானுட வாழ்வில் இத்தகைய இழப்புகள் தவிர்க்க முடியாதவையெனினும் , ஏற்படுகையில் தரும் துயர் தவிர்க்க முடியாதது. சமூகப் பிரக்ஞை மிக்க படைப்பாளியான கவிஞர் செழியனின் பலவகை எழுத்துகளும் அவரது ஆளுமையினை வெளிப்படுத்துபவை. நாடகம், கதை, கவிதை, கட்டுரையெனப் பன்முகப்பட்ட இலக்கியப்பங்களிப்பை வழங்கிய எழுத்துகள் அவை.அவர் தான் வாழ்ந்த மானுட வாழ்வில் வழங்கிய மானுடப்பங்களிப்புகளினூடு நிலைத்து வாழ்வார். இத்தருணத்தில் அவரது இழப்பால் துயருறும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
•Last Updated on ••Sunday•, 04 •February• 2018 12:18•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 270 : ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் 'சிறுவர் கதைகள்' தொகுப்பும், அதன் சிறப்பும்!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 270 : ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் 'சிறுவர் கதைகள்' தொகுப்பும், அதன் சிறப்பும்!வாசிப்பும், யோசிப்பும் 270 : ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் 'சிறுவர் கதைகள்' தொகுப்பும், அதன் சிறப்பும்!நான் எப்பொழுதுமே ஒரு குழந்தையிலக்கிய நூலொன்றினை அணுகும்போது ஒரு குழந்தை தன் சொந்த அனுபவத்தில் எவ்விதம் அந்நூலினை அணுகுமோ அவ்விதமே என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் அணுகுவேன். என் பால்ய காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த குழந்தைக் கதைத் தொகுப்புகளில்  முக்கியமான அம்சம். அத்தொகுப்பின் அட்டைப்பட ஓவியமும், அதில் பாவிக்கப்பட்டுள்ள வர்ணங்களும், உள்ளே ஆக்கங்களுக்குப் பாவிக்கப்பட்டுள்ள ஓவியங்களும் மற்றும் கூறப்படும் மொழியும்தாம். எனக்கு எப்பொழுதுமே நூலொன்று பிடிப்பதாகவிருந்தால் மேற்கூறப்பட்டுள்ள சகல அம்சங்களும்  முக்கியமானவை. எனக்கு மட்டுமல்ல குழந்தைகள் அனைவருக்கும் இக்கூற்று பொருந்தும். குழந்தைப்பருவத்தில் குழந்தையொன்றின் சிந்தையில் நூலொன்றின் அட்டைப்படம் கற்பனைச்சிட்டினைச் சிறகடிக்கப் பறக்க வைக்கின்றது. அந்நூலிலுள்ள ஓவியங்களிலுள்ள உருவங்கள் அவை மானுடர்களாகவிருக்கட்டும் அல்லது ஏனைய உயிரினங்களாகவிருக்கட்டும் அவற்றைப்பார்க்கும் குழந்தையொன்றின் உள்ளத்தில் களிப்பினைத தருகின்றன. சிறு வயதில் கண்ணன் சிறுவர் சஞ்சிகையில் வெளியாகும் சிட்டுக்கள் போன்ற உயிரினங்களைப்பற்றிய குழந்தைக் கவிதைகளை இரசிக்கும் அதே ஆர்வத்துடன் நான் அப்படைப்புகளுடன் வெளியாகும் ஓவியங்களையும் இரசிப்பேன். இவற்றைப்போல் அப்படைப்புகளை வெளிப்படுத்தும் எளிமையான மொழி நடையும் எனக்கு மிகவும் பிடித்தவை. வாண்டுமாமா, குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா போன்றோரின் படைப்புகளின் சிறப்புக்கு முக்கியக்காரணம் அவற்றை விபரிக்கும் எளிய, இனிய மொழிநடையே. இவ்விதமான என் மற்றும் குழந்தைகளின் பொதுவான உளவியலின் அடிப்படையிலேயே நான் இவ்வகையான குழந்தைப்படைப்புகளையும் சரி, நூல்களையும் சரி அணுகுவது வழக்கம். அதே அணுகல் முறையினைத்தான் அண்மையில் 'டொராண்டோ' நகரில் வெளியான எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் குழந்தைகளுக்கான நூல்களுக்கும் கையாண்டேன். அவற்றில் இங்கு நான் எடுத்துக்கொண்ட நூல் அவர் எழுதிய 'சிறுவர் கதைகள்' என்னும் நூலே.

எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா இலங்கையில் தெல்லிப்பளையினைப் பிறப்பிடமாகக் கொண்டவர்..யாழ் மகாஜனாக் கல்லூரி முள்ளாள் மாணவி. இலங்கைப் பல்கலைக்கழகத்துப் பேராதனை வளாகத்துப் பட்டதாரி. தற்போது 'டொராண்டொ'க் கல்விச்சபையின் தமிழ் மொழி ஆசிரியராகவும், மொழி மதிப்பீட்டளராகவும் மற்றும் பாட விதான அபிவிருத்திக் குழுவின் அங்கத்தவர்களிலொருவராகவுமிருக்கின்றார். இவரது இந்தப்பின்னணி இவ்வகையான நூல்களை எழுதுவதற்கு மிகவும் உதவும்; உதவியிருக்கின்றது. இந்நூலுக்குரிய ஓவியங்களை , அட்டைப்படங்களுட்பட (முன் அட்டை மற்றும் பின் அட்டை)  வரைந்திருப்பவர் ஓவியர் ஜீவா ( ஜீவநாதன்).

•Last Updated on ••Sunday•, 02 •February• 2020 23:49•• •Read more...•
 

அஞ்சலி: கலாநிதி தர்மசேனா பத்திராஜா ( Dr.Dharmasena Pathiraja)

•E-mail• •Print• •PDF•

கலாநிதி தர்மசேன பத்திராஜா

பிரபல சிங்களத்திரைப்பட இயக்குநரும் கல்வியாளருமான கலாநிதி தர்மசேன பத்திராஜா இன்று கண்டியிலுள்ள தனியார் மருத்துவ மனையொன்றில் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத்திரைப்பட உலகில் தான் இயக்கிய திரைப்படங்கள் மூலம் தடம் பதித்தவர் இவர். தமிழில் வெளியான எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் 'பொன்மணி' புனைகதையினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுக் கலையுலகில் கவனத்திற்குள்ளாகிய 'பொன்மணி' என்னும் தமிழ்த்திரைப்படத்தினை இயக்கியவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் மூலம் சிங்களத்திரையுலகில் மட்டுமின்றி இலங்கைத்தமிழ்த்திரையுலகிலும் தவிர்க்கப்பட முடியாத இயக்குநர்களில்ருவராகத் தடம் பதித்தவர் இவர்.

இவர் இயக்கிய திரைப்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவை சர்வதேசத்திரைப்பட விழாக்களில் (மாஸ்கோ, இலண்டன், இத்தாலி, இந்தியா , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைபெற்றவையுட்பட) திரையிடப்பட்டுள்ளன. இவர் பல சர்வதேசத்திரைப்பட விழாக்களில் நடுவராகவும் விளங்கியிருக்கின்றார். இவரது படைப்புகளைப்பற்றிய ஆவணத்திரைப்படங்கள் சர்வதேசத்திரைப்பட விழாக்களில் காட்டப்பட்டுள்ளன. இவரது திரைப்படங்கள் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளன. இலங்கைச்சினிமாவுக்கு இவராற்றிய பங்களிப்புக்காகக் 'கோல்டன் லயன்' விருதினையும் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

•Last Updated on ••Tuesday•, 30 •January• 2018 18:28•• •Read more...•
 

காலத்தால் அழியாத கானங்கள் (1-3)

•E-mail• •Print• •PDF•

- வ.ந.கிரிதரன் -காலத்தால் அழியாத கானங்கள் 1: நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?

"நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?"

தமிழர்களின் கவிதை வரலாறானது சங்கப்பாடல்களில் தொடங்கி இன்றைய தமிழ்ச்சினிமா மெல்லிசைப்பாடல்களையும் உள்ளடக்கியதொன்றுதான் என்பதை இன்று கலாநிதி கெளசல்யா சுப்பிரமணியன் போன்ற தமிழ் ஆய்வாளர்கள் , திறனாய்வாளர்கள் பலரும் ஏற்றுக்கொள்ளத்தொடங்கி விட்டார்கள். சங்கப்பாடல்கள் எவ்விதம் அகம், புறம் பற்றிப்பாடினவோ அவ்விதமே இம்மெல்லிசைப்பாடல்களும் மானுடரின் அகம் , புறம் பற்றிப் பல் கோணங்களில் மானுட வாழ்வை, மானுட உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. காதலின் சிறப்பை, காதலின் இழப்பையெல்லாம் அற்புதமான நெஞ்சையள்ளும் மொழிநடையில் கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் வைரமுத்து  போன்ற கவிஞர்கள் பலர் தம் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். இவர்களது பாடல் வரிகளுக்கு உணர்வூட்டிய பாடகர்கள், நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களின் பங்களிப்பையும் புறக்கணித்து விட முடியாது.

காதலின் பிரிவுதுயரை வெளிப்படுத்தும் சிறப்பான பாடலிது. இப்பாடலின் சிறப்புக்கு மெல்லிசை மன்னர்களின் இசையும், சுசீலாவின் குரலும் ஏனைய முக்கிய காரணங்கள். கவிஞர் கண்ணதாசனின் வரிகளுக்கு தன் குரலால் உயிரூட்டும் சுசீலாவின் மிகச்சிறந்த பாடல்கள் வரிசையில் வைத்தெண்ணப்படும் பாடல்களிலொன்று இந்தப்பாடல். இப்பாடல்களெல்லாம் மானுடரின் பல்வேறு பருவங்களில் அவர்தம் மனதுக்கு ஆறுதளிப்பவை; இதமாகவிருப்பவை. இப்பாடலின் 'யு டியூப்'  காணொளி ஒன்றுக்கான  எதிரிவினைகளில் முதியவர் ஒருவர் எழுதியிருந்த கருத்தொன்று என் நெஞ்சினைத் தொட்டது. அதனைக் கீழே பதிவு செய்கின்றேன். அத்துடன் தெரிவிக்கப்பட்டிருந்த மேலும் சில கருத்துகளையும் பதிவு செய்கின்றேன். இக்கருத்துகளெல்லாம் இவ்விதமான மெல்லிசைப்பாடல்கள் எவ்விதம் மானுட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை வெளிப்படுத்துவன.

•Last Updated on ••Wednesday•, 31 •January• 2018 07:28•• •Read more...•
 

நினைவு கூர்வோம்: ஏ.ஈ.மனோஹரன் மறைவு!

•E-mail• •Print• •PDF•

நினைவு கூர்வோம்: ஏ.ஈ.மனோஹரன் மறைவு!'பொப்' இசைப்பாடகர் ஏ.ஈ.மனோஹரன் மறைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழத்திசையில் பாடகர் ஏ.ஈ.மனோஹரனின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. இலங்கையின் பல்லின மக்களாலும் பெரிதும் விரும்பப்பட்ட தமிழ்ப்பாடகராக இவரைக் குறிப்பிடலாம். இலங்கையில் அரசியல்வாதிகளால் ஊதி வளர்க்கப்பட்ட இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஓரளவுக்காவது தணிக்க உதவின ஏ.ஈ.மனோஹரன் ., எம்.எஸ்.பெர்ணாண்டோ, சுஜாதா அத்தனாயக்க, நந்தா மாலினி போன்ற கலைஞர்களின் பங்களிப்பு.  கலைஞர்களும் மானுடப் பிரிவினைகளைக் கடந்தவர்கள். கலையும், இசையும் எல்லைகளைக் கடந்தவை.

ஏ.ஈ.மனோஹரனைப்பற்றி எண்ணியதும் எனக்கு ஞாபகமொன்று தோன்றுவது வழக்கம். அப்பொழுது காற்சட்டையும், சேர்ட்டுமாகத்திரிந்து கொண்டிருந்த பருவம். யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் நடைபெற்ற திருமணக் களியாட்டமொன்றில் பாடகர் ஏ.ஈ.மனோஹரனும் கலந்துகொண்டிருந்தார். எழுபதுகளிலொருநாள். திருமண நிகழ்வினையொட்டி நடைபெற்ற ஊர்வலமொன்றில் அத்திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் யாழ் கே.கே.எஸ் வீதிவழியாக வந்து கொண்டிருந்தவர்களில் பாடகர் ஏ.ஈ.மனோஹரனும் ஒருவர். ஊர்வலம் எம்மைக் கடந்துகொண்டிருந்தபோது நண்பர்களிலொருவன் விரிந்த சுருட்டைத் தலைமயிர் குடை போல் கவிந்திருக்க வந்துகொண்டிருந்த ஏ.ஈ.மனோஹரனைக் கண்டு விட்டு 'இங்கே பாரடா ஏ.ஈ.மனோஹரன்' என்று கத்தி விட்டான். அந்த ஊர்வலத்தின் இரைச்சலிலும் நண்பனின் குரலினைச் செவிமடுத்த ஏ.ஈ.மனோஹரனின் முகத்தில் தன்னை இரசிகனொருவன் கண்டு விட்டதாலேற்பட்ட பெருமிதம் படர்ந்தது. அப்பெருமிதத்தோடு எம்மை நோக்கித் திரும்பிக் கைகளை அசைத்தவாறு சென்றார். அக்கணம் என் நெஞ்சில் அழியாத கோலங்களிலொன்றாகப் படிந்து விட்டது. பாடகர் ஏ.ஈ.மனோஹரனைப்பற்றிய நினைவுகளுடன் கலந்து விட்ட ஞாபகப்படிவம் அது.

•Last Updated on ••Monday•, 22 •January• 2018 15:51•• •Read more...•
 

முகநூல் கலையுலகக் குறிப்புகள்: அயலவர் கலையுலகம் அறிவோம் - காமினி பொன்செகாவின் (Gamini Fonseka) நடிப்பில் சருங்கலய (Sarunggalaya)

•E-mail• •Print• •PDF•

 அண்மையில் சுனில் ஆரியரத்தினாவின் இயக்கத்தில், காமினி பொன்செகாவின் நடிப்பில் வெளியான 'சருங்கலய' திரைப்படம் பற்றிய எனது சிறு குறிப்பும், அதற்கான பயன் மிக்க, ஆவணச்சிறப்பு மிக்க எதிர்வினைகளும் இங்கே ஒரு பதிவுக்காகப் பதிவிடப்படுகின்றன. பேராசிரியர் சுனில் ஆரியரத்தின- அண்மையில் சுனில் ஆரியரத்தினாவின் இயக்கத்தில், காமினி பொன்செகாவின் நடிப்பில் வெளியான 'சருங்கலய' திரைப்படம் பற்றிய எனது சிறு முகநூற் குறிப்பும், அதற்கான பயன் மிக்க, ஆவணச்சிறப்பு மிக்க எதிர்வினைகளும் இங்கே ஒரு பதிவுக்காகப் பதிவிடப்படுகின்றன. -


சிங்களத்திரையுலகின் எம்ஜிஆராக இவரைத்தமிழர்கள் அறிந்திருந்தாலும், இவர் நடிப்பிலும் திறமை வாய்ந்தவர். இவர்தான் காமினி பொன்செகா. இவரது இயற்பெயர் டொன் செல்டன் காமினி பொன்செகா (Don Shelton Gamini Fonseka). நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், அரசியல்வாதி எனப்பல்பரிமாண ஆளுமை மிக்கவர் இவர். பின்னாள்களில் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதியாகத்திகழ்ந்த இவர் வட, கிழக்கின் ஆளுநராகவும் விளங்கியவர். 'நீலகடல் ஓரத்தில்',' நங்கூரம்' ஆகிய தமிழ்த்திரைப்படங்களிலும் நடித்தவர் இவர்.

'சருங்கலய' (சருங்கலய என்றால் பட்டம் என்று பொருள்) என்னும் சிங்களத்திரைப்படத்தில் நடராஜா என்னும் தமிழராகவும் நடித்திருக்கின்றார். இப்படத்தின் பல காட்சிகள் கரவெட்டியில் படமாக்கப்பட்டதாகவும் அறியப்படுகின்றது. இத்திரைப்படம் இலங்கையில் நடைபெற்ற 1977 இனக்கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சிங்களத்திரைப்படமாகும். இத்திரைப்படத்துக்கான தமிழ் வசனத்தை திருமதி யோகா பாலச்சந்திரன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை இயக்கிய சுனில் ஆரியரத்தின தமிழில் மிகுந்த பாண்டித்தியம் பெற்றவர். எழுத்தாளர், கவிஞர், இயக்குநர், விமர்சகர், பேராசிரியர் என்று பன்முக ஆளுமையாளர். யாழ் பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும் பணி புரிந்திருக்கின்றார்.

சருங்கலய திரைப்படத்தில் தமிழ்ப்பாடலொன்றும் இடம் பெற்றுள்ளது. 'வானத்து மழைத்துளி' என்னும் அப்பாடலை எழுதியவர் யோகா பாலச்சந்திரன். பாடியவர் கலாவதி சின்னச்சாமி. இசையமைத்தவர் விக்டர் ரத்னாயக்க (Victor Ratnayake).

•Last Updated on ••Sunday•, 21 •January• 2018 15:06•• •Read more...•
 

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக்குறிப்புகள் 2: பேராசிரியர் நிமால் டி சில்வாவின் 'பாரம்பரியக் கட்டடக்கலை'யும் 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பும்'.

•E-mail• •Print• •PDF•

பேராசிரியர் நிமால் டி சில்வாமொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பட்டப்படிப்பினைப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்களுக்குப் 'பாரம்பரியக் கட்டடக்கலை' (Traditional Architecture) என்னும் பாடத்தினை எடுத்தவர் பேராசிரியர் நிமால் டி சில்வா. இவர் கட்டடக்கலைஞரும் கூட. தனியாகக் கட்டடக்கலை நிறுவனமொன்றினையும் நடத்தி வந்தவர். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடக்கலை பற்றிய விடயங்களில் இப்பாடத்தின் மூலம் எம் கவனம் திரும்பியது. இப்பாடம் உண்மையில் கட்டடக்கலையின் வரலாறு என்னும் பாடத்தின் துணைப்பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ்ப்பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்ட நாற்சார வீடுகள் பற்றி, தென்னிலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மண்ணால் நிரப்பப்பட்ட மரச்சட்டங்கள் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் (wattle and daub) பற்றியெல்லாம் அறியத்துணையாகவிருந்த பாடமிது. எனக்குப் பாரம்பரியக் கட்டடக்கலை மீது ஆர்வத்தினை ஏற்படுத்தியதில் பேராசிரியர் நிமால் டி சில்வாவுக்கு முக்கிய பங்குண்டு.

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நிமால் டி சில்வாவின் 'பாரம்பர்யக்கட்டடக்கலை' பாடத்தின் மூலம்தான் நான் முதன் முதலில் பண்டைய அநுராதபுர நகர அமைப்பு பற்றியும் முதன் முதலாக அறிந்துகொண்டேன். தொல்லியற் துறையில்  நன்கு அறியப்பட்ட ரோலன் சில்வா அவர்களின் (இவர் ஒரு கட்டடக்கலைஞரும் கூட) 'பண்டைய அநுராதபுர நகர அமைப்பு' பற்றிய கட்டுரையொன்றினை பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் எமக்கு அறிமுகம் செய்தார். எவ்விதம் பண்டைய அநுராதபுர நகரமானது சந்தையினை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டதென்பது பற்றியும், நகரைச் சுற்றி இரு வேறு வட்ட ஒழுக்கில் எவ்விதம் தாதுகோபங்கள் கட்டப்பட்டன என்பது பற்றியும் விபரிக்கும் ஆய்வுக் கட்டுரை அது.  பேராசிரியர் ரோலன் சில்வா அவர்கள் பின்னர் இலங்கைத் தொல்பொருள் நிலையத்திணைக்களத்தின் தலைவராகவும், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் விளங்கியவர்.

எனக்கு நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றி அறியும், ஆராயும் ஆர்வத்தை ஏற்படுத்திய காரணங்களிலொன்று பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் அறிமுகப்படுத்திய அக்கட்டுரை. அவர் அன்று அறிமுகப்படுத்திய ரோலன் சில்வாவின் 'அநுராதபுர நகர அமைப்பு' பற்றிய கட்டுரையின் விளைவாக எனது ஆய்வு நூலான 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' தமிழகத்தில் ஸ்நேகா/மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு விடயத்துக்காகவே எப்பொழுதுமென் நினைவில் நிற்கும் ஆளுமைகளிலொருவராக பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் விளங்குவார்.

•Last Updated on ••Sunday•, 14 •January• 2018 15:08•• •Read more...•
 

கவிதை: ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்!

மானுடர்தம் திருநாளிந்தப் பொங்கல் திருநாள்.
இரவியின் குழந்தைகள்  நாம். 
இரவிதன் கதிர் இல்லையேல் நாமில்லை.
இவ்வுலகில்லை.
இரவியின் சிறப்பை உணர்ந்தன்றோ
இளங்கோ பாடினான் அன்று
'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்'

இத்திருநாளில் நாம் இருப்பறிவோம்!
இருப்பின் அடியான கதிர் அறிவோம்.
கதிர் வழங்கும் கருணை அறிவோம்.
உலகுக்கு உணவு தரும் இரவி மற்றும்
உழவர்தம் உழைப்பறிவோம்; சிறப்பறிவோம்.
உழவருக்குதவும் எருதறிவோம்.  ஆதலினால்
ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்!

பல்லினம், பல்லுயிர்  வாழும் பாரிது!
நல்லெண்ணம் நானிலத்தில் பரவட்டும்!
போர்க்குணமிழந்து பொங்கட்டும்
இன்பப்பேராறு! பொங்கட்டும்
அன்புப்பேரூற்று!

•Last Updated on ••Monday•, 15 •January• 2018 19:29•• •Read more...•
 

வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கலைக் குறிப்புகள்' 1: ஜெவ்ரி பாவா Geoffrey Bawa (23.-7.1919 - 27.05.2003)!

•E-mail• •Print• •PDF•

ஜெவ்ரி பாவா Geoffrey  Bawa ஜெவ்ரி பாவா Geoffrey  Bawa  - 'வெப்பநில நவீனத்துவக்' (Tropical Modernism) கட்டடக்கலைப்பாணியின் மூலவர்!

இலங்கையின் முக்கியமான கட்டடக்கலைஞர்களிலொருவராக விளங்கியவர் ஜெவ்ரி பாவா. இவரது முழுப்பெயர் ஜெவ்ரி மான்னிங் பாவா (Geoffrey Manning Bawa ). உலகக் கட்டடக்கலையில் ஆசியாக் கட்டடக்கலையின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராகத் தன் கட்டடங்களின் மூலம் திடமாகத் தடம் பதித்தவர் இவர். குறிப்பாக இன்று உலகக் கட்டடக்கலையில் வெப்பநில நவீனத்துவம் (Tropical Modernism) என்று அறியப்படும் கட்டடக்கலைப்பாணிக்கு அடிகோலியவராக அறியப்படுபவர் இவர்.

இவரது தந்தையாரான பி.டபிள்யு. பாவா செல்வச்சிறப்பு மிக்க சட்டத்தரணியும், நீதிபதியுமாவார். ஆங்கில, முஸ்லிம் இரத்தக்கலப்புள்ளவர். தாயாரான பேர்த்தா மரியன்னெ ஸ்ராடர் ஜேர்மனிய, ஸ்ஹொட்டிஸ் மற்றும் சிங்கள இரத்தக்கலப்புள்ளவர். இவரது மூத்த சகோதரரான பெல்விஸ் பாவா புகழ்பெற்ற 'நிலப்பரப்புத் தோற்றக் கட்டடக்கலைஞராக (Landscape Architect) விளங்கியவர்.

ரோயல் காலேஜ் மாணவரான ஜெவ்ரி பாவா ஆரம்பத்தில் படித்தது ஆங்கிலமும் சட்டமும். ஆங்கில இலக்கியத்தில் புனித காதரின்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜில் இளங்கலைப்பட்டப்படிப்பை முடித்த இவர் பின்னர் Middle, London இல் சட்டத்துறைப்பட்டதாரியானார். இலங்கை திரும்பிய இவர் இரண்டாவது யுத்தகாலத்துக்குப் பின்னர் கொழும்பிலுள்ள சட்ட நிறுவனமொன்றில் பணியாற்றினார். பின்னர் இவரது தாயாரின் மறைவினையடுத்து சட்டத்துறையை விட்டு விலகிய இவர் சுமார் இரு வருட காலம் சர்வதேச பயணங்களிலீடுபட்டார். அமெரிக்கா, ஐரோபா என்று பயணித்த இவர் இத்தாலியில் வீடு வாங்கி நிரந்தரமாகத் தங்க எண்ணினார். ஆனால் அந்த எண்ணம் சரிவரவில்லை. 1948இல் நாடு திரும்பிய இவர் கைவிடப்பட்டிருந்த இறப்பர் தோட்டமொன்றினை வாங்கினார். அதனையொரு இத்தாலியப் பாணிப்பூங்காவாக ஆக்க விரும்பினார். ஆனால் அதற்குரிய தொழில்நுட்ப அறிவு அவருக்கில்லாதது பெருங்குறையாகவிருந்தது.  

இக்காலகட்டத்தில் கொழும்பிலுள்ள எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) அவர்களது கட்டடக்கலை நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அப்பொழுது கட்டடக்கலைஞர் ரீட் மட்டுமே உயிருடனிருந்தார். அவருக்குக் கீழேயே பயிற்சியில் இணைந்தார். ரீட் மறைவினையடுத்து கேம்ரிட்ஜ் திரும்பிய இவர்  இங்கிலாந்திலுள்ள கட்டடக்கலைஞர் சங்கத்தில் மாணவராக இணைந்தார். அங்கு கட்டடக்கலைத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். அதன் பின்னர் 'ரோயல் இன்ஸ்டிடியூட் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ்' (The Royal Institute of British Architects ) அமைப்பின் 'அசோசியட்' உறுப்பினரானார். தனது 38ஆவது வயதில் நாடு திரும்பிய ஜெவ்ரி பாவா தான் பணியாற்றிய எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) கட்டடக்கலை நிறுவனத்தைத் தனது பொறுப்பில் கொண்டு வந்து தனது கட்டடக்கலைப் பணியினைத் தொடர்ந்தார்.

•Last Updated on ••Friday•, 12 •January• 2018 15:02•• •Read more...•
 

வளமான புதுவருடம் பிறக்கட்டும்!

•E-mail• •Print• •PDF•

எமது வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
இன்பமான, வளமான புதுவருடம் பிறக்கட்டும்.

அன்பு தவழும் இதயம் மிக்க
பூமித்தாயின் பிள்ளைகளான நாம்
ஒருவர்மீதொருவர் அன்பு கொள்வோம்.
ஒருவரையொருவர் மதிப்போம்.
ஒருவரையொருவர் அறிந்துகொள்வோம்.

•Last Updated on ••Thursday•, 11 •January• 2018 16:56•• •Read more...•
 

கவிதை: காலவெளிப்பயணியின் நெடும் பயணம்!

•E-mail• •Print• •PDF•

- 'ஓவியா பதிப்பக' உரிமையாளரும், எழுத்தாளருமான வதிலைப்பிரபா அவர்கள் வெளியிட்டு வரும் 'மகாகவி' சஞ்சிகையின் 'திசம்பர்' இதழ் பன்னாட்டிதழாக மலர்ந்திருக்கின்றது. இச்சிறப்பிதழில் எனது கவிதையான 'காலவெளிப்பயணியின்  நெடும் பயணம்' கவிதை வெளியாகியுள்ளது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். -

•Last Updated on ••Wednesday•, 20 •December• 2017 13:18•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 269 : மாகவி நினைவாக...

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 269 : மாகவி நினைவாக...- வ.ந.கிரிதரன் -மகாகவி பாரதியாரின் நினைவு தினம் டிசம்பர் 11. நான் எங்கு சென்றாலும் நான் எடுத்துச் செல்லும் நூல்களில் நிச்சயம் 'பாரதியாரின் கவிதைகள்' அடங்கிய நூலுமிருக்கும். பாரதியின் அறிவுத் தேடல் மிக்க நெஞ்சு, சமுதாயப் பிரக்ஞை மிக்க நோக்கு எல்லாமே என்னை அவன் ஆகர்சிக்க முக்கிய காரணங்கள். மானுட இருப்பின் சகல கோணங்களைைப்பற்றியும் அவனது சிந்தித்தான். கனவுகள் கண்டான். அவற்றை அவன் எழுத்தில் வடித்தான். அனுபவமும், அறிவுத்தேடலும் அவன் எழுத்துகளெங்கும் நிறைந்திருந்தன. மானுடனொருவருக்குத் தேவையான அனைத்துமே அவனது எழுத்துகளில் நிறைந்திருந்தன. இதனாலேயே அவனது கவிதைகள் அடங்கிய தொகுதியானது வெறும் கவிதை நூலாக மட்டுமின்றி, வாழ்க்கைக்கு வழிகாட்டுமொரு வழிகாட்டியாக, அறிவினைப்போதிக்கும் அறிவு நிலையமாக, நண்பராக, காதலராக, இயற்கையை உபாசிப்பவருக்கு இன்பமளிக்கும் இயற்கை வளங்களாக.. இவ்விதம் பல்வேறு வழிகளில் விளங்கியது. எனக்கு மனம் சோர்ந்திருக்கும் சமயங்களில் அவனது கவிதைகளின் சில வரிகளை வாசிப்பேன். மறுகணமே சோர்வு இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும்.

எனக்கு முதன் முதலாகப் பாரதியுடனான அறிமுகமும், தொடர்பும் என்னுடைய ஆறாம் வகுப்பில்தான் ஆரம்பமாகியிருந்ததாக நினைவு. பாரதியாரின் கவிதைகள், ராஜாஜியின் 'சக்கரவர்த்தித் திருமகன்' (இராமாயணம்) , 'வியாசர் விருந்து' (மகாபாரதம்) மற்றும் புலியூர்த் தேசிகனின் 'சிலப்பதிகாரம்' , 'நற்றிணை' ஆகிய நூல்களை வாங்கி வந்திருந்தார். ஒருநாள் கூட அப்பா அவற்றை வாசித்துப் பார் என்று கூறியதில்லை. அவ்விதம் வாங்கிப்போட்டிருந்த நூல்களை அவ்வப்போது எடுத்து வாசிக்கத்தொடங்கியபோது எனக்கு அறிமுகமாகி, என்னுள்ளத்தில் வந்து குடியேறியவரே மகாகவி பாரதியா. அன்று வந்து குடியேறியவர் இன்று வரை மட்டுமல்ல நான் இருக்கும்வரை இங்குதான் தங்கியிருக்கப்போகின்றார்.

இவ்விதம் என் அபிமானக் கவி பாரதியின் எனக்குப் பிடித்த கவிதை வரிகள் சிலவற்றை 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். நான் பெற்ற இன்பம் நீவிரும் பெறுக!

1.
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,

•Last Updated on ••Monday•, 11 •December• 2017 18:16•• •Read more...•
 

கவிதை: காலம் மிகவும் வலியது!

•E-mail• •Print• •PDF•

காலம் மிகவும் வலியது!

காலம் மிகவும் வலியது.
முகநூற் பதிவொன்றுக்கு நண்பனொருவன்
இட்ட எதிர்வினையிது.
உண்மைதான் நண்பா!
காலம் மிகவும் வலியதுதான்.
நிலையற்ற காலம் கூடச்
சார்பானதுதான். இருந்தும்
காலம் மிகவும் வலியதுதான்.
இருப்பில் இருக்குமனைத்தையுமே
இங்கு
நினைவுகளாக்கி நனவிடை தோய
வைத்துவிடும்
காலம் மிகவும் வலியதுதான்.
உண்மைதான் நண்பா!
மின்காந்த அலைகளுக்குள் அனைத்தையும்
அடக்கிவிடும்
காலம் மிகவும் வலியதுதான்.

•Last Updated on ••Friday•, 08 •December• 2017 19:56•• •Read more...•
 

தோழர் வேலனின் 'தேசிய இயக்கம் துயிலெழல்' மற்றும் 'தேசிய இயக்கங்களின் காலம்' ஆகிய நூல்களை முன் வைத்துச் சிறு குறிப்புகள்.... வ.ந.கிரிதரன் -

•E-mail• •Print• •PDF•

தோழர் வேலனின் 'தேசிய்  இயக்கம் துயிலெழல்' மற்றும் 'தேசிய இயக்கங்களின் காலம்' ஆகிய நூல்களை முன் வைத்துச் சிறு குறிப்புகள்.... வ.ந.கிரிதரன் -தோழர் வேலனின் 'தேசிய  இயக்கம் துயிலெழல்' மற்றும் 'தேசிய இயக்கங்களின் காலம்' ஆகிய நூல்களின் வெளியீடு கடந்த ஞாயிறன்று (3.12.2017) 'டொராண்டோ'வில் நடைபெற்றபோது நான் ஆற்றிய சிற்றுரையினை ஒரு பதிவுக்காக இங்கு பதிவிடுகின்றேன்.  வ.ந.கிரிதரன் -


தோழர் வேலனை எனக்கு முகநூல் வழியாகத்தான் அறிமுகம். அவரது இயற்பெயர் கூட இதுவரையில் நான் அறிந்ததில்லை. ஆனால் அவரது மார்க்சியப்பார்வை பற்றி அவரது இணைய எழுத்துகளினூடு, நூல்களின் வாயிலாக அறிந்திருக்கின்றேன்.. இன்று இங்கு நான் அவரது இந்நிகழ்வில் வெளியிட்டப்படவுள்ள நூல்கள் இரண்டைப்பற்றிச் என் நோக்கைப் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றேன். இந்நூலிலுள்ள கட்டுரைகள் பல அவரது வலைப்பதிவிலுள்ள கட்டுரைகளே. இக்கட்டுரைகளில் அவர் தேசம், தேசியம், ஈழத்தமிழர்களின் தேசியப்போராட்டம், பின் நவீனத்துமும் , மார்க்சியமும், தேசிய விடுதலைப்போராட்டமும் போன்ற பல விடயங்களைப்பற்றிய தனது உறுதியான பார்வையினைப் பகிர்ந்திருக்கின்றார். ஆனால் அவரது உறுதியான் பார்வை தெளிவானதா இல்லையா என்பது பற்றிச் சிறிது பார்ப்போம். அதற்கு முன்னர் இத்தொகுதிக் கட்டுரைகளைப்பொறுத்தவரையில் முக்கியமான குறைபாடுகளாக நான் கருதுவது: இலக்கணப்பிழைகள். இலக்கணப்பிழைகள் என்னும்போது சில பிழைகள் வாசிப்பின் புரிதலைத் தடுப்பதில்லை. உதாரணமாக எழுவாய்க்குரிய பயனிலை சரியாக அமையாது போவதுமோரிலக்கணப்பிழை. ஆனால் அப்பிழைகள் புரிதலைத் தடுப்பதில்லை. மாறாக முடிவற்றுத் தொங்கும் வாக்கிய அமைப்புகள், குழப்பமான சொற்தொடர்கள் ஆகியன வாசகர்களின் புரிதலுக்குச் சவாலாக இருப்பவை. அவ்விதமானவற்றை வாசிப்பின்போது அவதானித்தேன். இந்நூலிலுள்ள கட்டுரைகள் கூறும் விடயங்களில் கையாளப்பட்டுள்ள சொற்பதங்களே சாதாரண வாசகர்களுக்குப் புரியாதவை. இந்நிலையில் இவ்விதமான இலக்கணத்தவறுகள் அவர்கள்தம் புரிதல்களைச் சிரமத்துக்குள்ளாக்குகின்றன. இத்தவறுகள் எதிர்காலப்பதிப்புகளில் களையப்படுதல் அவசியம்.

அடுத்த முக்கிய குறைபாடாக நான் கருதுவது இந்நூல் பொதுவான வாசகர்களுக்காக எழுதப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். மார்க்சியப்புரிதல்கள் உள்ளவர்களுக்கு மட்டுமே எழுதப்பட்ட நூல்கள் அல்ல இவை.  இந்நிலையில் இவற்றில் கையாளப்பட்டுள்ள சொற்பதங்களுக்குரிய விளக்கங்கள் நூலின் இறுதியில் இடம் பெற்றிருந்தால் வாசகர்களுக்கு மிகுந்த பயனைத் தந்திருக்கும் எனக்கருதுகின்றேன். உதாரணமாக திருத்தல் வாதம், பாகுபாட்டுச் சிந்தனைகள், தாராளவாதம், தரகு வர்க்கம் போன்ற பல சொற்கள் இந் நூலிலுள்ள கட்டுரைகளில் இடம் பெற்றிருக்கின்றன. அவை பற்றிய விளக்கங்கள் சாதாரண வாசகர்கள் பலருக்கு மிகுந்த உதவியாகவிருந்திருக்கும். இதுவும் என் நிலைப்பாடு.

•Last Updated on ••Tuesday•, 05 •December• 2017 16:53•• •Read more...•
 

மகா மானுடர்களைப் பெருமையுடன் நினைவு கூர்வோம்!

•E-mail• •Print• •PDF•

மகா மானுடர்களைப் பெருமையுடன் நினைவு கூர்வோம்! உண்மையிலேயே எனக்குச் சில நேரங்களில் ஈழத்தமிழர்களை நினைத்தால் வியப்பாகத்தானிருக்கும். அவர்களுக்கிடையில் தீர்க்கப்படாத சமூக, அரசியற் பிரிவுகள் இருந்தபோதிலும் உலக அரங்கில் இன்று தமிழர் என்னும் அடையாளமாகத் திகழ்பவர்கள் ஈழத்தமிழர்கள்தாம். இலங்கையில் தமிழர்கள் கொடிய அடக்குமுறைகளுக்குள்ளாகிய போது எதிர்த்துப் போரிட்டார்கள். தம் வரலாற்றுக்கடமையை முன்னெடுத்துச் சென்றார்கள். வரலாற்றில் தம்மை நிலைநிறுத்திக்கொண்டார்கள். அது உலகத்தமிழர் வரலாற்றில் நிச்சயம் பெருமையுடன் பொறிக்கப்படும். உலகத்தமிழர்களின் அடையாளமாகத் திகழ்பவர்கள் சின்னஞ்ச்சிறு தீவொன்றில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் என்பது பெருமையுடன் நோக்கப்பட வேண்டியதொன்று.

அண்மையில் நடந்து முடிந்த இலங்கைத்தமிழரின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த விடுதலைப்போராளிகள் , பலியாகிய அப்பாவிப்பொதுமக்கள் (அவர்கள் எவ்வினத்தவராக இருந்த போதிலும், எப்பிரிவினராகவுமிருந்தபோதிலும் ) அனைவரையும் இத்தருணத்தில் நினைவு கூர்வோம். எதிர்காலத்தில் யுத்தமற்ற , சமூக அரசியற் பிரிவுகளற்ற சமுதாயமொன்றின் தேவையினை நடந்து முடிந்த யுத்தமும், மானுட அழிவுகளும் தொடரும் மானுடத் துயரங்களும் வேண்டி நிற்கின்றன. இத்தருணத்தை வரலாற்றிலிருந்து பாடம் படிப்பதற்குப் பயன்படுத்திக்கொள்வோம். போரற்ற சம உரிமைகளுடன் அனைத்து மக்களும் வாழுமொரு வாழ்வினை அடைந்திட கற்றுக்கொண்ட பாடங்கள் உதவட்டும்.

விடுதலைப்போராட்டத்தின் ஒரு வடிவமான ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தாலும், தொடரும் ஈழத்தமிழர்களின் சம உரிமைக்கான போராட்டம் நல்லதொரு முடிவினை அனைத்து மக்களுக்கும் தரட்டும். இன்று ஈழத்தமிழர்களின் உரிமையைப்பற்றித் தென்னிலங்கை மட்டுமல்ல உலகமே சிந்திக்கின்றது என்றால் அதற்குக் காரணம் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம்தான். எதிர்கால நன்மைக்காகத் தம்மை அர்ப்பணித்து அனைத்து மகா மானுடர்களையும் இத்தருணத்தில் நினைவு கூர்வோம். அனைவரினதும் தியாகங்கள் நல்லதொரு யுத்தங்களற்ற அமைதியான தீர்வினைத்தரட்டும்.

 

•Last Updated on ••Sunday•, 26 •November• 2017 07:45••
 

வ.ந.கிரிதரனின் முகநூற் பதிவுகளும் , எதிர்வினைகளும்: 1

•E-mail• •Print• •PDF•

- இப்பகுதியில் அவ்வப்போது முகநூலில் இடப்படும் பதிவுகளும், அவற்றுக்கான எதிர்வினைகளும் பிரசுரமாகும் -

ஒற்றுமையே பலம்!- வ.ந.கிரிதரன் -1. தமிழர்கள் சொந்த நிலங்கள் பறிபோகுதென்று கூக்குரலிடுகையிலெல்லாம் சில வேளைகளில் எனக்கேற்படும் சிந்தனையென்னவென்றால்.... அன்று ஈழத்தமிழர்களை எல்லைப்புறங்களில் சென்று குடியேறும்படி அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினர் அழைப்பு விடுத்தார்கள். எத்தனைபேர் சென்றார்கள்? சென்ற இளைஞர்கள் சிலரும் நுளம்புக்கடி தாங்காமல் ஓடி வந்து விட்டார்கள். பின்னர் வந்தவர்கள் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மலையகத்தமிழர்கள். அவர்கள் பலிக்கடாக்களாக்கப்பட்டார்கள்.

இன்று சொந்த இடத்தில் முஸ்லிம் மக்கள் அத்து மீறிக்குடியேற்றங்கள் செய்கின்றார்கள் என்று மக்களை இன, மதரீதியாகப் பிளவு படுத்திக் கருத்துகள் விடும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். நாட்டில் நிலவும் சட்டங்களை மீறி யாரும் செயற்படுவதாக இருந்தால் , சட்டங்கள் மூலம் அவற்றை எதிர்கொள்ளுங்கள். நிலத்துக்கான உறுதிப்பத்திரங்கள் இருந்தால் அவற்றின் உதவியுடன் உங்கள் உரிமைகளை நிலைநாட்டுங்கள். அமைதியான முறையில் அரசியல் ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் செய்யுங்கள். அப்பகுதிகளிலுள்ள அரச அதிகாரிகளிடம் , சமூக , அரசியல் தலைவர்களுக்கு முறையிடுங்கள். தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் அனைவருமே இவ்விதமே தமக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்க்கப்பழக வேண்டும்.

இவற்றை விட்டு விட்டு முஸ்லிம் மக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கருத்துகளை இனத்துவேசம் வெளிப்படும் வகையில் வெளியிடாதீர்கள். ஓரினத்துக்கு எதிராக எவ்விதச் சட்டங்களையும் திணிக்க முடியாது. அது மனித உரிமை மீறல். ஒரு நாட்டின் சட்டமென்பது அந்நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவானது.

உண்மையில் உங்களுக்கு உங்கள் மண்ணில் ஆர்வமிருந்தால், மேற்கு நாடுகளின் அரவணைப்பில் அம்மண்ணின் வளங்களைச் சுகித்துக்கொண்டு வாழும் இவ்விதமான கருத்துகளைக் கூறும் நீங்கள் உடனடியாக உங்கள் குழந்தைகளுடன் நாட்டுக்குத் திரும்புங்கள், அங்கு உங்கள் எண்ணிக்கையை அதிகரியுங்கள். உங்கள் கருத்துகள் உருவாக்கும் மோதல்களால் பாதிக்கப்படப்போவது அங்குள்ள அப்பாவி மக்களே. உங்களிடமெல்லாம் ஒரு கேள்வி: அன்று தலைமுறை தலைமுறையாகத் தம் சொந்த மண்ணில் வாழ்ந்து வந்த வடக்கிலிருந்த முஸ்லிம் மக்கள் விரட்டியடிக்கப்பட்ட வேளையில், ஒரு சில மணித்தியாலயங்களில் அவர்களின் உடமைகள் பிடுங்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டபோது நீங்கள் எல்லோரும் எங்கு சென்றிருந்தீர்கள். அன்றிலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு துரத்தி அடிக்கப்பட்டவர்களில் பலர் இன்றும் திரும்பாமல் இருப்பதை அண்மையில் ஐபிசி தமிழ் வெளியிட்ட ஆவணப்படமொன்றில் பார்த்தேன்.

ஒரு கணம் மேனாடுகளின் அரவணைப்பில் வாழும் நீங்கள் சிந்தித்துப்பாருங்கள். அந்நாடுகளின் பெரும்பான்மை வெள்ளையின மக்களில் சிலர் இவைபோன்ற இனத்துவேசம் மிக்க கருத்துகளை உங்களை நோக்கிக் கூறும்போது எவ்வளவுதூரம் துடித்துப்போகின்றீர்கள். இதைத்தானே அவர்களும் கூறுகின்றார்கள். எங்கள் பண்பாடு பறி போகின்றது. அதிக அளவில் குழந்தைகளைப்பெற்று, சமூக உதவிப்பணத்தை அதிக அளவில் பெற்று நாட்டு வளங்களைச் சுரண்டுகின்றார்கள். அச்சமயங்களில் அவற்றை மனித உரிமை மீறல்களாகக் கருதி முறையிடுகின்றோம். ஆனால் உங்கள் சொந்த மண்ணில் நீங்கள் வெளியிடும் கருத்துகளும் இவ்வகையானவையே.

•Last Updated on ••Sunday•, 19 •November• 2017 17:13•• •Read more...•
 

வ.ந.கிரிதரன் கவிதைகள் 28: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்!

•E-mail• •Print• •PDF•

ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்!இவை 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளியானவையே. சில 'பதிவுகளி'ல், ஏனையவை ஈரிதழ்களிலும் வெளியானவை. மீண்டும் இவற்றை வாசித்தபோது பல கவிதைகளின் அடி பிரிப்பு எனக்கு உவப்பானதாகவிருக்கவில்லை. அவை வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகளை அவ்வடிப்பிரிவுகள் தடுப்பதுபோல் உணர்ந்தேன். அவ்விதமான கவிதைகள் பலவற்றை மீண்டும் வேறொரு வகையில் அடி பிரித்து ஒழுங்காக்கியுள்ளேனே தவிர ஏற்கனவே எழுதிய சொற்களெவற்றையும் திருத்தியோ அல்லது மாற்றியோ அமைக்கவில்லை. இவை என் உணர்வுகளை , தேடல்களை, எண்ணப்போக்குகளை விபரிப்பன. உங்களுக்கும் பிடித்திருக்கும் என எண்ணுகின்றேன். இவற்றை விரைவிலொரு தொகுப்பாகக் கொண்டுவரும் எண்ணமுண்டு. 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் தலைப்பில் அத்தொகுப்பு வெளியாகும்.

1. ஆசை!

அர்த்த ராத்திரியில் அண்ணாந்து பார்த்தபடி
அடியற்று விரிந்திருக்கும் ஆகாயத்தைப் பார்ப்பதிலே
அகமிழந்து போயிடுதல் அடியேனின்
வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளிலே கண் சிமிட்டும்
சுடர்ப் பெண்கள் பேரழகில் மனதொன்றிப் பித்தனாகிக்
கிடந்திடுவேன்.

நத்துக்கள் கத்தி விடும் நள்ளிரவில்
சித்தம் மறந்து
சொக்கிடுவேன்.

பரந்திருக்கும் அமைதியிலே பரவி வரும் பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்டபடி பைத்தியமாய்ப்
படுத்திடுவேன்.

இயற்கையின் பேரழகில் இதயம் பறிகொடுத்தே
இருப்பதென்றால் அடியேனின்
இஷ்ட்டமாகும்.

•Last Updated on ••Wednesday•, 15 •November• 2017 15:28•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 268 (முகநூற் பதிவொன்றும் சில எதிர்வினைகளும்): யோ. புரட்சியின் 'செஞ்சோற்றுக்கடன்" கவிதை பற்றி...

•E-mail• •Print• •PDF•

- வ.ந.கிரிதரன் -எழுத்தாளர் யோ.புரட்சி பதிவிட்டிருந்த முகநூற் பதிவினைப்பார்த்தேன். இது ஒரு கவிதை. முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற யுத்தத்தின் இறுதிக்கால நிகழ்வுகளை விபரிக்கும் கவிதை. யோ.புரட்சியும் படையினரின் தாக்குதல்களுள்ளாகிக் காயம் பட்டவர்களிலொருவர். அச்சமயம் அவருக்கு , அவரைப்போல் பாதிக்கப்பட்ட ஏனையோருக்கு எவ்விதம் உயிரைப்பணயம் வைத்து ஓடிக்கொண்டிருந்த மக்கள் உதவினார்கள் என்பதை இக்கவிதை ஆவணப்படுத்துகின்றது. கவிதையென்பதின் வெற்றியானது அதனைப்படைத்தவரின் புலமைச்சிறப்பில் மட்டும் தங்கியிருப்பதில்லை. எத்தனையோ, படைத்தவரின் புலமையினை வெளிப்படுத்தும் கவிதைகள் பல படிப்பவரின் உணர்வுகளில் எவ்விதப்பாதிப்புகளையும் ஏற்றும் வலிமையற்று காலத்தில் காணாமல் போய் விடுகின்றன. சிறந்த கவிதையின் வெற்றியென்பது அதனைப்படைத்த கவிஞரின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். உணர்ச்சியின் வெளிப்பாடாக வெளிப்படும் கவிதையே வாசிப்பவரின் உணர்வுகளையும் பாதித்து , காலத்தில் நிலைத்து நின்று விடுகின்றது. யோ.புரட்சியின் இக்கவிதை அத்தகைய கவிதைகளிலொன்று. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அவர் அடைந்த உணர்வுகளின் உண்மையின் உண்மையான வெளிப்பாடாகவிருப்பதால் , வாசிப்பவரின் நெஞ்சங்களை ஒரு கணம் அசைத்து விடுகின்றது. நிலவிய மானுடத் துயரங்கள் வாசிப்பவர் நெஞ்சங்களில் வலியை ஏற்படுத்துகின்றன. மானுடர்கள் மட்டுமல்லர் மிருகங்கள் கூடத் தம் அன்பை வெளிப்படுத்துகின்றன. அக்காலகட்டத்து நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதால் முக்கியத்துவம் வாய்ந்த கவிதைகளிலொன்றாகவும் இக்கவிதை விளங்குகின்றது.

"யாருமருகில்இல்லாவேளை, காலதிலே எறிகணைபட்டு"க் கவிஞர் காயமுற்றவேளை, "தன்னாடை தன்னில், சிறுதுண்டு கிழித்து"க் கவிஞரின் குருதிப்பெருக்கைத்தடுத்த ஏழைத் தமிழ்த்தாய், "தாய்தன்னை இழந்த, தளிர்தன்னைக் கண்டு, யார் பிள்ளை எனும் கேள்வியது கேளாது தன்முலை தனையூட்டி வன்பசி தீர்த்த" நல்மனமுள்ள பெண், "அனைத்துறவும் இழந்து, அம்பலவன் பொக்கனையில் அந்தரித்த வேளையிலே அருகேயோர் உறவாகி" அன்புதனை அளித்துக் கவிஞருக்குக் கருணை காட்டிய ஜிம்மி என்னும் நாய், 'முகம்கழுவ நீரின்றி அகம் கரைந்த நாட்களிலே சிலமணிகள் ஒதுக்கியே கிணற்றுநீரளித்த வனப்பு உளங்கள். 'பதுங்கு குழிக்கு உரப்பையின்றி பாடுபட்ட நாட்களிலே பழஞ்சேலை' தந்துதவியவர்கள், 'பதுங்கு குழியில் இடம்தந்து பாசமொடு கஞ்சிதந்து நேசமாய்' அணைத்தவர்கள்...... .. இவ்விதம் தாம் அந்தரித்த வேளையிலும் மானுட நேயம் காட்டிய, மிருக நேயம் காட்டிய உயிர்களையெல்லாம் இக்கவிதை ஆவணப்படுத்துகின்றது. அதனாலேயே வரலாற்றினை முறையாக ஆவணப்படுத்தும் சிறப்பு மிக்கதொரு கவிதையாகவும் இக்கவிதை விளங்குகின்றது. கவிதையின் முழு வரிகளும் கீழே:

•Last Updated on ••Thursday•, 09 •November• 2017 16:52•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 267: முகநூற் பதிவுகள் சிலவும், எதிர்வினைகளும்..

•E-mail• •Print• •PDF•

- வ.ந.கிரிதரன் -- அண்மையிலிட்ட முகநூற் பதிவும் சிலவும், அவற்றுக்கான எதிர்வினைகள் சிலவற்றையும் இங்கு பதிவிடுகின்றேன். -

1. நினைவு கூர்வோம்: மகத்தான அக்டோபர் புரட்சி (நவம்பர் 7, 1917)

"குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக! என்றார்;
இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான்,
கிருதயுகம் எழுக மாதோ! " - பாரதியார் -


இந்தப்புரட்சி ஏன் வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றது? விளாடிமீர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகளால் ரஷ்யாவில் பொதுவுடமைச் சமுதாயம் அமைப்பு முதல் முறையாக ஒரு நாட்டில் முழுமையாக நிறுவப்பட்ட தினம் என்பதால்தான். கார்ல் மார்க்ஸ் தனது இடையறாத ஆய்வுகள் மூலம் மானுட உலகுக்கு வழங்கிய மகத்தான மூலதனம் அவரது மூலதனம் என்னும் ஆய்வு நூலே. பல்வேறு பிரிவுகளால் (மதம், மொழி, இனம், வருணம், வர்க்கம் போன்ற) பிளவுண்டு, துயரத்தில் உழன்று கொண்டிருக்கும் மானுட சமுதாயத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வானது அரசு உலர்ந்து உக்கி விட்ட, வர்க்கங்களேதுமற்ற கம்யூனிசச் சமுதாய அமைப்பிலேயே இருக்குமென்னும் தன் கனவைத் தன் ஆய்வுகள் மூலம் நிறுவிப் படைத்திட்ட நூல்தான் இந்த மூலதனம்.

மார்க்ஸின் கனவை, ஆய்வுகள் மூலம் நடைமுறைச்சாத்தியமான கனவு என்று எடுத்துக்காட்டிய கனவினை இம்மண்ணில் பொதுவுடமை அமைப்பொன்றினை நிறுவியதன் மூலம் மார்க்ஸின் கனவின் முதற் கட்டத்தினைச் சாத்தியமாக்கியவர் விளாடிமீர் லெனின். இப்புரட்சியின் முக்கியத்தை இந்தியாவிலேயே முதன் முதலாக அறிந்து, ஆதரித்துக் கவிதை பாடிய இலக்கியவாதி மகாகவி பாரதியார். அவரது 'ஆகா வென்றெழுந்தது பார் யுகப்புரட்சி' இந்த வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கவிதை.

•Last Updated on ••Thursday•, 09 •November• 2017 16:53•• •Read more...•
 

அணிந்துரை: எழுத்தாளர் பொன் குலேந்திரனின் அறிவியற் புனைவுகள் பற்றி....

•E-mail• •Print• •PDF•

பொன் குலேந்திரனின் 'காலம்' தொகுப்பு.- தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் பொன் குலேந்திரனின் 'காலம்' (அறிவியற் சிறுகதைகள்) தொகுப்புக்காக நான் எழுதிய அணிந்துரை இது. -

அறிவியல் புனைகதை (Science Fiction)  என்றால் அறியப்பட்ட அறிவியல் தகவல்கள் ,  உண்மைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் அல்லது சம காலத்தில் நடக்க் இருப்பதை எதிர்வு கூறி, அதனடிப்படையில் படைக்கப்படும் புனைவு என்றுதான் பொதுவாக அறியப்பட்டுள்ளது. விண்வெளிப்பயணங்கள், ஏனைய கிரக உயிரினங்கள், பிரம்மாண்டமான விண்வெளித்தொலைவுகளைக் கடப்பதற்கான வழிவகைகள், புதிர் நிறைந்த விண்வெளி அதிசயங்கள் (கருந்துளைகள் போன்ற) , பல்பரிமாண உயிரினங்கள், மானுடரின் எதிர்கால நிலை, நமது பூமியின் எதிர்கால நிலை, இவ்விதமான விடயங்களைக் கருப்பொருளாகக்கொண்டு படைக்கப்படும் புனைகதைகளையே அறிவியல் புனைகதைகள் என்போம். சமகால அறிவியல் உண்மைகளை விபரித்தலைக் கருப்பொருளாகக் கொண்ட புனைகதைகளை அவ்வகையான புனைகதைகளாகக் கருதுவதில்லை. ஆனால் அறிவியல் விடயங்களை மையமாக வைத்துப் புனையப்பட்டவையாதலால் அவையும் அறிவியல் புனைகதைகளே என்று அத்தகைய புனைகதைகளைப் படைத்த எழுத்தாளர் ஒருவர் வாதாடினால் அவருடைய தர்க்கத்தையும் மறுப்பதற்கில்லை. அவ்வகையில் பொன் குலேந்திரன் அவர்களின் இத்தொகுதியிலுள்ள புனைகதைகளையும் அறிவியல் கதைகளாகக் கொண்டு இத்தொகுதிக்கதைகளைபற்றிச் சிறிது நோக்குவோம்.

பொன் குலேந்திரன் அவர்கள்  ஒரு பௌதிகவியல் பட்டதாரி. அத்துடன் தொலை தொடர்புப் பொறியியலாளரும் கூட. அவரது பரந்த அறிவியல் உண்மைகளைப்பற்றிய அறிவு பிரமிக்க வைக்கின்றது. அவரது பன்முகப்பட்ட சுய தேடலை, சுய வாசிப்பை அது வெளிப்படுத்துகின்றது. தான் அறிந்ததை, உணர்ந்ததை சிறு சிறு கதைகளாக அழகாகப்புனைந்துள்ளார் அவர். அது அவரது எழுத்துத்திறனைப் புலப்படுத்துகின்றது.

இத்தொகுதியிலுள்ள சிறுகதைகளைப்பொறுத்தவரையில் மூன்று வகையான பிரதான பண்புகளை அவதானிக்க முடிகின்றது. முதலாவது வகைப்புனைகதைகள் பொதுவாக அறிவியல் கதைகள் என்று கூறப்படும் கதைகள்.  அடுத்தவகைப்பண்பாக சமகால அறிவியல் உண்மைகளை விபரிக்கும் கதைகள். மூன்றாவது வகைப்பண்பாக ஆசிரியரின் மத மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை ஆங்காங்கே வெளிப்படுத்தும் கதைகள். இவ்விதமாக முப்பண்புகளை வெளிப்படுத்தும் கதைகளில் பல ஆசிரியரின் படைப்புத்திறனை வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன.

குலேந்திரன் அவர்களின் முன்னுரையில் அவர் கூறியிருப்பதும் மேற்படி என் அவதானம் சரியென்பதையே எடுத்துக்காட்டுகின்றது. "இத்தொகுப்பில் உள்ள கதைகள் பல விஞ்ஞான தத்துவங்களையும் ஆராச்சிகளையும் கருவாகக் கொண்டவை." என்றும் "மூடநம்பிகைகளுக்கு அறிவியல் விளக்கம் கொடுகிறது கதைகள் 19, ,20" என்றும் அவர் குறிப்பிடுவதையே குறிப்பிடுகின்றேன்.

•Last Updated on ••Monday•, 06 •November• 2017 15:30•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 267 : கவிதை 'நள்யாமப்பொழுதொன்றில்... -

•E-mail• •Print• •PDF•

- அண்மையில் முகநூலில் எனது கவிதையான 'நள்யாமப்பொழுதொன்றில்...' கவிதையினை பதிவு செய்திருந்தேன். அது பற்றி நிகழ்ந்த சிறு கருத்துப்பரிமாறல்கள் சுவையானவை. வாசகர்களுக்கும் பயனுள்ளவையாக அமையுமென்று கருதி இங்கும் பதிவிடுகின்றேன். -

வாசிப்பும், யோசிப்பும் 267 : கவிதை  'நள்யாமப்பொழுதொன்றில்... - பற்றி....கவிதை: நள்யாமப்பொழுதொன்றில்... - வ.ந.கிரிதரன்

சொல்லவிந்து, ஊர் துஞ்சும்
நள்யாமப்பொழுதுகளில்
விசும்பு நீந்தி ஆங்கு
நீந்தி விளையாடிடும் விண்மீன்கள்தம்
வனப்பில் எனை மறக்கும்
தருணங்களில்,
இராப்பட்சிகள் குறிப்பாக
ஆந்தைகள் சிந்தனைச்சிறகடிக்கும்.
கூரிய அவைதம் பெருங்கண்
விரித்து
இரை தேடி இரவு முழுக்கப்
பறந்து திரியும்.
ஆந்தைகளுக்குப் போட்டியாக
அவ்வப்போது நத்துக்களும்
குரல் கொடுக்கும்.
மீன்களே! உங்கள் நீச்சலின் காரணத்தை
விளக்குவீரா?
ஆந்தைகளே! நத்துகளே! உங்கள்
இருப்பின் காரணத்தை எனக்கும்
சிறிது பகர்வீரா?
இரவுவான் வியக்கும் பண்பு
தந்தாய்! எந்தையே
இத்தருணத்தில் உனை நான்
என்
நினைவில் வைக்கின்றேன்.

•Last Updated on ••Saturday•, 28 •October• 2017 15:42•• •Read more...•
 

அமரர் வெங்கட் சாமிநாதன் நினைவாக..

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -அக்டோபர் 20 அமரர் வெங்கட் சாமிநாதனின் நினைவுதினம். தமிழகத்தைச்சேர்ந்த கலை, இலக்கிய ஆளுமைகளில் என்னுடன் மிகவும் அதிகமாகத் தொடர்பு வைத்திருந்தவராக நான் கருதுவது அமரர் வெங்கட் சாமிநாதனைத்தான். இவ்வளவுக்கும் நான் அவரை ஒருபோதுமே நேரில் சந்தித்ததில்லை. அவர் இயல் விருது பெறுவதற்காகத் 'டொராண்டோ' வந்திருந்தபோதுகூட நான் அவரைச் சந்திக்கவில்லை. அவர் அப்பொழுது அவரை அழைத்தவர்களுடன் மிகவும் நேரமின்றி அலைந்துகொண்டிருப்பாரென்று எண்ணி நானும் அவரைச் சந்திக்கும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதன் பின்னரே அவர் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அதிகமாக அனுப்பத்தொடங்கினார். அவரது மறைவுக்கு முதல் நாள் வரையில் அவர் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அவ்வப்போது தன் மின்னஞ்சல்களில் தான் என்னை நேரில் சந்திக்காததையிட்டு வருந்தியிருப்பார். நான் தமிழகம் வரும்போது நிச்சயம் அவரைச் சந்திப்பேனென்று ஆறுதலாக அப்போதெல்லாம் பதில் அளிப்பதுண்டு. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை. அது என் துரதிருஷ்ட்டம்.

அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த குணங்களிலொன்று: இறுதி வரையில் தன் நிலை தளராமல், தனக்குச் சரியென்று பட்டதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் அந்தப்பண்புதான். நிறைய வாசித்தார். நிறையவே சிந்தித்தார். கலை, இலக்கியத்துறையில் அவர் தனக்கென்றோரிடத்தை ஏற்படுத்தி விட்டு அமரராகி விட்டார். அவர் இருந்தபோதே அவரைக்கெளரவிக்கும் முகமாக எழுத்தாளர்கள் திலிப்குமார், பா.அகிலன் போன்றவர்கள் 'வெங்கட் சாமிநாதன் வாதங்களும், விவாதங்களும்' என்னும் அரியதொரு தொகுப்பு நூலினை வெளியிட்டார்கள். மிகவும் பாராட்டுதற்குரிய பணி அது. அதில் என் கட்டுரையொன்றும் அடங்கியுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியைத் தருவது. அதன் மூலம் அவரைச் சந்தித்திருக்காவிட்டாலும், சந்தித்துப் பழகியதோர் உணர்வே எனக்கு எப்பொழுதுமுண்டு.

அவரது தொடர்ச்சியான மின்னஞ்சல்களும், பதிவுகள் இணைய இதழுக்கான அவரது ஆக்கப்பங்களிப்புகளும் ஒருபோதுமே அவரை என் நினைவிலிருந்து அகற்றி விடாதபடி செய்து விட்டன. அவரது நினைவாக அவரது இறுதிக்கால மின்னஞ்சல்கள் சிலவற்றை மீண்டும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

•Last Updated on ••Friday•, 27 •October• 2017 08:29•• •Read more...•
 

தொடர் நாவல்: எத்தனைகோடி இன்பம்! (2)

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் இரண்டு: இரவு வானம்!

தொடர் நாவல்: எத்தனைகோடி இன்பம்!வ.ந.கிரிதரன்கேசவனும் மாயவனும் பால்கணியிலிருந்தபடி உரையாடிக்கொண்டிருந்தார்கள். இருவருமே ஒருவிதத்தில் ஒரே மாதிரியான மனப்போக்கினைக் கொண்டவர்கள். இரவு வானை, கொட்டிக்கிடக்கும் சுடர்களை இரசித்தபடியே , பியர் அருந்தியபடி அவர்களின் உரையாடலும் தொடர்ந்தது.

மாயவனுக்கு மீண்டும் மனைவியின் கோரிக்கை நினைவுக்கு வந்தது.

"கேசவா, இன்னும் எத்தனை காலம் தான்  உன் நிறைவேறாத காதலுக்காக உன் வாழ்க்கையை வீணாக்கப்போகின்றாய்?"

அதற்குச் சிறிது சிந்தனையிலாழ்ந்த கேசவன் கூறினான்:

"எனக்கு அவள் நிலை தெரிய வேண்டும். அவ்வளவுதான். அவளுக்கு மட்டும் திருமணமாகியிருந்தால் அவளை மனதார வாழ்த்தி விட்டு என் வாழ்க்கையைத் தொடர்வேன். அதுவரையில் என்னால் அடுத்த நகர்வை எடுக்கவே முடியாது"

"ஒருவேளை அவளைப்பற்றிய தகவல்களை அறிய பல ஆண்டுகள் பிடித்தால் என்ன செய்யப்போகின்றாய்? அதுவரை உன் வாழ்க்கையை வீணாக்கப்போகின்றாயா?"

"மாயவன் அண்ணே, எத்தனை ஆண்டுகளென்றாலும் பரவாயில்லை. அவளது நிலை அறியும் வரையில் காத்து நிற்பேன். அந்த என் முடிவில் எந்தவித மாற்றமுமில்லை. அவ்வளவு தூரத்துக்கு அவள் என் நெஞ்சில் பதிந்து விட்டாள். உனக்கு ஒன்று தெரியுமா?"

"என்ன..?"

"அவளைக் கடைசியாகக் கண்ட நாளிலிருந்து இன்றுவரையில் ஒவ்வொரு நாளும் முழித்திருக்கும் நேரமெல்லாம் அவளை நினைத்துக்கொண்டுதானிருக்கிறன். அவளது நினைவு தோன்றுவதை என்னாலை தடுக்கவே முடியவில்லை. அவ்வளவுக்கு நெஞ்சின் ஆழத்தே பதிந்து கிடக்கின்றாள். அவளது நிலையை அறிய வேண்டும். அதற்குப்பின்தான் எல்லாமே.."

கேசவனின் வைராக்கியம் மாயவனுக்கு நன்கு புரிந்தது. இவனது மனத்தை மாற்ற வேண்டுமென்றால் முதலில் அவனது அந்தக் காதலுக்குரியவள் பற்றிய தகவல்களை அறிய வேண்டும். அதற்குப்பின்னரே அவனது மனம் மாறும். மாயவனின் சிந்தனை பல்திசைகளிலும் பயணித்தது. திடீரென அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

" ஏன் கேசவா, எனக்கொரு  யோசனை தோன்றுது. என்னவென்றால்.."

'என்ன மாயவன் அண்ணே! சொல்லுங்கோ"

•Last Updated on ••Monday•, 30 •October• 2017 11:27•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 266: 'டொராண்டோவில்' நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் 'உலகம் பலவிதம்' தொகுப்பு நூல் வெளியீட்டு விழா! ஆ.சிவநேசச்செல்வனின் ஆவணப்படுத்தற் சேவை பற்றி..

•E-mail• •Print• •PDF•

'டொராண்டோவில்' நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் 'உலகம் பலவிதம்' தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

திரு. ஆ.சிவநேசச்செல்வன் (22.10.2017) அன்று 'டொராண்டோவில்' நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் 'உலகம் பலவிதம்' தொகுப்பு நூல் வெளியீட்டிற்குச் சென்றிருந்தேன். சிறப்பாக நடைபெற்றது. இது பற்றிப்பின்னர் விரிவானதொரு பதிவிடுவேன். எழுத்தாளர் அருண்மொழிவர்மன் வரவேற்புரையினையும், நிகழ்வின் முடிவில் நன்றியுரையும் வழங்கினார். கவிஞரும், பேராசிரியருமான சேரன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கிச் சிறப்பாக நிகழ்வினை நிர்வகித்து நடாத்தினார். நிகழ்வில் பேராசிரியர் நா.சுப்பிரமணியன், க.சண்முகலிங்கன், கலாநிதி மைதிலி தயாநிதி, ஆ.சிவநேசச்செல்வன், எழுத்தாளர் வ.ந.கிரிதரன் மற்றும் எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் ஆகியோர் உரைநிகழ்த்தினர். யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் நூலகம் நிறுவனம் ஆகிவற்றின் கூட்டு முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது. நிகழ்வின் வெற்றிக்கு பிறேமச்சந்திரா, அருண்மொழிவர்மன், தயாநிதி, மற்றும் புவனேந்திரன் திருநாவுக்கரசு ஆகியோர் உறுதுணையாக விளங்கியதை நிகழ்வில் காணக்கூடியதாகவிருந்தது.

நிகழ்வில் யாழ் இந்துக்கல்லூரியின் கலையரசி 2017 நிகழ்வில் எஞ்சிய பணத்தை (2000 கனடிய டாலர்களுக்கும் அதிகமான தொகை) யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சார்பில் புவனேந்திரன் திருநாவுக்கரசு நூலகம் நிறுவனத்துக்கு வழங்கினார். நூலகம் சார்பில் அருண்மொழிவர்மன் மற்றும் நக்கீரன் ஆகியோர் அப்பணத்தினைப் பெற்றுக்கொண்டனர். உண்மையில் யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தைப்பாராட்டத்தான் வேண்டும். இவ்விதமானதொரு தொகுப்பு நூலினை வெளியிட்டதற்கும், நூலக அமைப்புக்கு நிதி வழங்கியதற்கும்.

நூலின் பதிப்பாசிரியராகவிருப்பவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் ஆவார். பழைய பிரதிகளை வாசித்துத் தொகுப்பதில் அவர் எவ்வளவு சிரமங்களை அடைந்திருப்பார் என்பதை அறிய முடிகின்றது. அவரது பணியும் பாராட்டுதற்குரியது.

•Last Updated on ••Tuesday•, 24 •October• 2017 16:25•• •Read more...•
 

இலக்கியம் ஒரு காலக் கண்ணாடி: ம.வே.திருஞானசம்பத்தப்பிள்ளையின் படைப்புகளை முன்வைத்துச்சில குறிப்புகள்...

•E-mail• •Print• •PDF•

- *'டொராண்டோ'வில் 22.10.17 அன்று நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் 'உலகம் பலவிதம்' தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வில் நான் ஆற்றிய உரை -

இலக்கியம் ஒரு காலக்கண்ணாடி என்றொரு கூற்றுள்ளது. உண்மை.  இலக்கியப்படைப்பொன்றினை ஆராய்ந்து பார்ப்போமாயின் பல்வேறு விடயங்களை அப்படைப்பினூடு அறிந்து கொள்ள முடியும். அப்படைப்பில் பாவிக்கப்பட்டுள்ள மொழியிலிருந்து அப்படைப்பின் காலகட்டத்தை ஆய்வொன்றின் மூலம் அறிவதற்குச் சாத்தியமுண்டு. உதாரணத்துக்குச் சங்க இலக்கியப்படைப்புகளை எடுத்துக்கொள்ளலாம். அவற்றினூடு பண்டைத்தமிழரின் வாழ்க்கை முறை, இருந்த நகர அமைப்பு, ஆட்சி முறை, நிலவிய மானுடரின் பல்வேறு விடயங்களைப் பற்றிய நம்பிக்கைகள் .. எனக்கூறிக்கொண்டே செல்லலாம். எனது இச்சிற்றுரையில் இலக்கியம் காலக்கண்ணாடி என்னும் அடிப்படையில் ம.வெ.திருஞானசம்பந்தப்பிள்ளை அவர்களின் படைப்புகளை உள்ளடக்கிய  'உலகம் பலவிதம்' நூலினை அணுகுவதாகும்.

அளவில் இந்நூல் பெரியது. நூலிலுள்ள அனைத்துப் படைப்புகளையும் குறுகிய காலத்தில் முழுமையாக வாசிப்பதென்பது சாத்தியமற்றதொன்று. ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் அடிப்படையில்  இந்நூலை அணுகலாம். அதுவும் கூட முழு நூலைப்பற்றிய இவ்விதமானதோர் அணுகுதலுக்குரிய மாதிரி அணுகலாகவிருக்கும் என்பதால், அது என் நம்பிக்கை என்பதால் அவ்விதமே இந்நூலை அணுகுவதற்கு முடிவு செய்து, அவ்வணுகுதலின் அடிப்படையில் இலக்கியம் காலக்கண்ணாடி என்னும் கூற்றிலுள்ள உண்மை பற்றி அறிதற்குச் சிறிது முயற்சி செய்வதே என் நோக்கம்.

இதற்காக நான் இத்தொகுப்பபிலுள்ள இரு நாவல்கள் மற்றும் ஆசிரியரின் பத்திகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றின் மீது என் கவனத்தைத்திருப்பப் போகின்றேன்.

1. மதமாற்றம்
அந்நியராட்சியின் கீழ் முக்கியமானதொரு விடயமாக மதமாற்றம் இருந்ததைக் காண முடிகின்றது. பாதிரிமார்கள் மக்களை மதம் மாற்றுவதில் தீவிர முனைப்புடன் செயற்பட்டதை அறிய முடிகின்றது. பல்வேறு ஆதாயங்களுக்காக மக்கள் மதம் மாறியதையும் , பலர் மதமாற்றத்துக்கெதிராகச் செயற்பட்டதையும் ம.வெ.தி.யின் புனைகதைகளிலிருந்து காணமுடிகின்றது. அவர் இந்துக்கல்லூரியின் ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியவர். இந்து சாதனம் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். இயல்பாகவே மதமாற்றம் என்பது அவரை மிகவும் பாதித்ததொரு விடயமாக இருந்திருக்கும். இருந்திருக்க வேண்டும். தன் எழுத்தை மதமாற்றத்துக்கெதிராக மக்களை விழிப்படைய வைப்பதற்கு அவர் பாவித்ததை அவரது புனைகதைகள் வெளிப்படுத்துகின்றன.

•Last Updated on ••Tuesday•, 24 •October• 2017 06:43•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 265 : இன்ப ஒளி பரவட்டும் இந்நாளில்!; மார்க்சியமும், ஆனை பார்த்த குருடர்களும்!; வாழ்த்துகின்றோம்: அர்ப்பணிப்பு மிக்க முயற்சி வெற்றியடையும்.

•E-mail• •Print• •PDF•

இன்ப ஒளி பரவட்டும் இந்நாளில்!
இன்ப ஒளி பரவட்டும் இந்நாளில்!வாசகர்கள் மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். சிலர் தீபாவளி சமயத்துடன் சம்பந்தப்பட்டதால் கொண்டாடக்கூடாது என்பார்கள். தீபாவளியின் அடிப்படை நோக்கம் மானுட சமுதாயத்தை மூடியிருக்கும் இருள் நீக்கி ஒளியைப்பரப்பும் நாள் என்பது. சமயத்தைத்தவிர்த்து விட்டுப் பார்த்தால், மானுடரைச் சூழ்ந்திருக்கும் இருள் நீக்கி ஒளி பாய்ச்சும் திருநாள். சமய நம்பிக்கையுள்ளவர்கள் அவ்விதம் கொண்டாடட்டும். அது அவர்கள் உரிமை. அவ்வாறில்லாதவர்கள் மானுடரை மூடியிருக்கும் இருள் நீக்கி ஒளி பாய்ச்சும் திருநாளாகக் கொண்டாடலாம். என்னைப்பொறுத்தவரையில் இந்த இரண்டாவது காரணத்தையே மையமாக வைத்து இந்நாளை அணுகுகின்றேன். நண்பர்கள் அனைவர்தம் வாழ்விவும், உறவினர்கள் அனைவர்தம் வாழ்விலும், இவ்வுலக மானுடர்கள் அனைவர்தம் வாழ்விலும் இந்நாளில் ஆரோக்கியமான சிந்தனையொளி பரவட்டும். சமுதாயத்தை மூடியிருக்கும் மடமையென்ற இருள் நீங்கட்டும்; அறிவென்னும் இரவியெழுந்து ஒளி பாய்ச்சட்டும் இந்நாளில். மானுடரைக்கொன்று குவிக்கும் போரிருள் நீங்கி பேரொளி பரவட்டும். வர்க்கம், மதம், மொழி, இனம், நாடு, வருணம் என்னும் பிரிவிருள் நீங்கி , அன்பெனுமொளி உதயமாகட்டும்.

இந்த நாள் எம் அனைவர்தம் வாழ்விலும் தவிர்க்க முடியாத இன்ப நினைவுகளை நனவிடை தோய வைத்திடும் நாள். எம்மில் பலபேர் போர்ச்சூழலுக்கு முன் பண்டிகைகள் பல கொண்டாடிக் குழந்தைப் பருவத்தைக் குடும்பத்தவருடன் கழித்தவர்கள். மறக்க முடியாத அந்நினைவுகளைச் சுமந்துகொண்டு வாழ்பவர்கள். இன்னும் சிலருக்குப் போர்ச்சூழல் அவ்வாய்ப்பினைத் தட்டிப்பறித்திருக்கக் கூடும். ஆனால் அனைவர்தம் வாழ்விலும் இந்நாளில் இன்ப ஒளி பரவட்டும். இன்ப ஒளியில் இவ்வுலகு சிறகடிக்கட்டும்; சிறக்கட்டும். நோக்கும் திசையெங்கும் நாம் வாழும் இந்நானிலம் களியொளியில் ஒளிரட்டும்.

•Last Updated on ••Tuesday•, 24 •October• 2017 16:16•• •Read more...•
 

இள முனைவர் பட்ட ஆய்வு (தமிழகம்) ஆய்வு: வ.ந. கிரிதரனின் நாவல்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கியப் பதிவுகள் & இணையத்தமிழ் இதழ்களில் கவிதை இலக்கியப்போக்குகள்

•E-mail• •Print• •PDF•

 வ.ந. கிரிதரனின் நாவல்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கியப் பதிவுகள் 'பதிவுகள்' வாசகர்களுடன் மகிழ்ச்சியான தகவலொன்றினைப் பகிர்ந்துகொள்கின்றேன். விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணிபுரியும் வே.மணிகண்டன் அவர்கள் அவரது மாணவிகள் எனது படைப்புகளை மையமாக  வைத்து 'வ.ந. கிரிதரனின் நாவல்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கியப் பதிவுகள்' என்னும் தலைப்பிலும், 'பதிவுகள்' இதழ் கவிதைகளை மையமாக வைத்து ''இணையத்தமிழ் இதழ்களில் கவிதை இலக்கியப்போக்குகள்' என்னும் தலைப்பிலும் இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ள விபரத்தை அறியத்தந்திருந்தார். அவருக்கு இதற்காக நன்றி. அவர் இது பற்றி அனுப்பிய மின்னஞ்சல்  ஒரு பதிவுக்காகக் கீழே பிரசுரமாகின்றது.

-- ஐயா... வணக்கம்,  நான் வே.மணிகண்டன் , புதுச்சேரி) தமிழ் நாட்டில், விழுப்புரத்தில் உள்ள தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணிபுரிகின்றேன். எனது மேற்பார்வையில் வ.ந. கிரிதரனின் நாவல்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கியப் பதிவுகள், இணையத்தமிழ் இதழ்களில் கவிதை இலக்கியப்போக்குகள் ஆகிய ஆய்வேடுகள் எனது மாணவிகளால்  உருவாக்கப்பட்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்(2016-  2017) சமர்பிக்கப்பட்டு இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். தங்களுடைய ஒத்துழைப்பிற்கு மிகுந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இணையத்தமிழ் இதழ்களில் கவிதை இலக்கியப்போக்குகள் என்னும் தலைப்பில் அமைந்த ஆய்வேட்டில் 'பதிவுகள்' இதழ் கவிதைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதை தக்களுக்கு தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

ஆய்வுக்குள்ளாகிய படைப்புகள் உள்ளடக்கியுள்ள விபரங்களும் ஒரு பதிவுக்காகக் கீழே தரப்படுகின்றன.

•Last Updated on ••Saturday•, 14 •October• 2017 17:05•• •Read more...•
 

நாவல்: புதிய பாதை ( 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்') (13-15)

•E-mail• •Print• •PDF•

[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது.  மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க 'புதிய பாதை' என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் 'புதிய பாதை' என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான 'டீச்சர்' பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு  புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் 'புதிய பாதை' என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் 'புதிய பாதை' என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]


அத்தியாயம் 13: ஊர் நிலைமை!

"ஹலோ. ஹலோ"

எதிர்த் தரப்பில் குரல் மிக நைந்துபோய் பலஹீனமாகக் கேட்டது. கொழும்புக் 'கோல்' போல் தெரிகிறது. யாராயிருக்கும்...

"ஹலோ. ஹலோ. யார் பேசுறது?"

'அக்கா. அக்கா. இது. அடக்கடவுளே. இது பெரிய தங்கச்சியின் குரல் அல்லவா. இவள் எங்கு நின்று பேசுகிறாள். கொழும்புக்கு எதற்காக வந்திருக்கிறாள்?

"யாரது பெரிய தங்கச்சியோ. எங்கயிருந்து பேசுகிறாய். எதுக்கும் உன்ரை நம்பரைத்தா. நான் உடனே எடுக்கிறன்."

பெரிய தங்கச்சி நம்பரைத் தந்தாள். இவள் எடுப்பதாக கூறி விட்டு, 'லைனை'க் 'கட்' பண்ணி விட்டுத் திரும்ப 'டயல்' பண்ணினாள். சிறிது நேரம் 'லைன்' பிசியாக இருந்தது. ஒரு மாதிரிக் கிடைத்து விட்டது.

"ஹலோ. ஹலோ. "யாரு அக்காவா? அக்கா. எதிர்த்தரப்பில் பெரிய தங்கச்சி விம்மத் தொடங்கினாள். தங்கச்சி என்ன விசயம் என்ன நடத்திட்டதெண்டு இப்படி இவள் முடிக்கவில்லை. பெரிய தங்கச்சி குறுக்கிட்டாள்.

"அக்கா. அக்கா. அம்மா. அம்மா"

"அம்மாவா. அம்மாவுக்கு என்ன?" இவள் குரலில் சிறிது பதட்டம் படர்ந்திருந்தது.

'அக்கா. இம்முறை பெரிய தங்கச்சி ஓவென்று அழத் தொடங்கினாள்.

'அக்கா அம்மா எங்களை எல்லாம் ஏமாத்திப் போட்டு போய் சேர்ந்திட்டா'

‘என்ன. இவளுக்கு ஒரு கணம் எல்லாம் சுழல்வது போன்றதொரு பிரமை எழத் தலையை இறுகப் பற்றிக் கொண்டாள். சிறிது நேரத்துக்குள்ளாகவே தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொண்டாள்.

•Last Updated on ••Friday•, 24 •August• 2018 23:39•• •Read more...•
 

கவிதை: இருப்புமென் தாரகமந்திரமும்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: இருப்புமென் தாரகமந்திரமும்!
அன்பே!
அன்றொருநாள் நீ கூறினாய்
கத்தி முனையில் நடப்பதைப்
போன்றதிந்த இருப்பு என்று.

கத்திமுனை இருப்பில்
கவனத்துடன் நடப்பதிலுமோர்
களிப்பு குவிந்துதானிருக்கின்றது.
இருப்பில் இவ்விதம் இருப்பதிலுமோர்
இன்பம் இருக்கத்தான் இருக்கிறது.
இருப்பென்பது இவ்விதச் சவால்களையும்
உள்ளடக்கியுள்ளதுதானே.
இருப்பென்பதே இன்பம்தானே!
•Last Updated on ••Tuesday•, 10 •October• 2017 17:05•• •Read more...•
 

நூல் அறிமுகம்: 'கசாக்கின் இதிகாசம்'

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: கசாக்கின் இதிகாசம் பற்றி....  - 30.10.2017 அன்று 'ரொறன்ரோ' தமிழ் சங்கத்தின் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வில் நான் ஆற்றிய உரையின் மூல வடிவத்தை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். இதனை மையமாக வைத்துத்தான் அவ்வுரையினை ஆற்றியிருந்தேன். இருந்தாலும் உரையாற்றும் நேரக் கட்டுப்பாடு காரணமாகக் கூற வேண்டிய யாவற்றையும் கூறினேனா இல்லையா என்ற சந்தேகமிருப்பதால் இக்கட்டுரையினை இங்கு பதிவிடுகின்றேன். - வ.ந.கி -


இங்கு நான் அண்மையில் நான் வாசித்த நூலொன்றினை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.  இது நூல் பற்றிய அறிமுகமேயன்றி விரிவான திறனாய்வு அல்ல என்பதையும் முதலிலேயே கூறிக்கொள்ள விழைகின்றேன். இதுவொரு புதினம்.  மலையாள மொழியிலிருந்து தமிழுக்கு  எழுத்தாளர் யூமா வாசுகியால்  மொழிபெயர்க்கப்பட்ட நாவல்.  ஓ.வி.விஜயனின் (ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன்)  'கசாக்கின் இதிகாசம்' நாவலைத்தான் குறிப்பிடுகின்றேன். இம்மொழிபெயர்ப்பைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

முதலில் சுருக்கமாக நாவலாசிரியர் ஓ.வி.விஜயன் அவர்களைப்பற்றிப் பார்ப்போம். ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன் மலையாள மொழியில் எழுத்தாளர், பத்திரிகையாளர், கேலிச்சித்திரக்காரர் எனப்பன்முகபரிமாணங்களைக்கொண்டவர். நாவல், சிறுகதை, மற்றும் கட்டுரை என இவரது இலக்கியக் களம் விரிந்தது. இவரது சகோதரி ஓ.வி உஷா,வும் மலையாளக் கவிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2.7.1939இல் கேரள மாநிலத்திலுள்ள கோழிகோடு விளயஞ்சாதனூர் என்னுமிடத்தில் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் (Presidency College, Madras) ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். 2005இல் மறைந்து விட்டார். கேரள சாகித்திய அக்காதெமி, மத்திய சாக்கித்திய அக்காதெமி மற்றும் கேரள மாநில அரசின் உயர்ந்த இலக்கிய விருதான எழுத்தச்சன் விருது போன்ற விருதுகளைப்பெற்ற ஓ.வி.விஜயன் இந்திய அரசின் பத்மபூஷண் விருதினையும் பெற்றவர். இவரது மனைவி தெரசா . அவரும் அமரராகிவிட்டார். ஒரே மகனான மது அமெரிக்காவில் வசிக்கின்றார்.

'கசாக்கின் இதிகாசம்' என்னுமிந்த நாவல் மலையாளத்தில் வெளிவந்த ஆண்டு 1969. இதுவே ஓ.வி.விஜயனின் முதலாவது நாவலாகும். இதிகாசமென்றதும் பன்னூறு பக்கங்களைக் கொண்ட விரிந்த நாவலாக இதனை யாரும் கருதி விடாதீர்கள்.  தமிழ் மொழிபெயர்ப்பு 239 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது. விக்கிபீடியாக் குறிப்புகளின்படி இந்நாவலை ஆசிரியர் எழுதுவதற்கு 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. இந்நாவலின் கட்டுக்கோப்பான மொழி இறுக்கத்தின் காரணத்தை உணர் முடிகின்றது. ஆனால் எழுத்தாளர் ஜெயமோகன் மிகக்குறுகிய காலத்தில் எழுதப்பட்ட நாவலாக இதனைக் குறிப்பிடுவார்:

•Last Updated on ••Friday•, 15 •November• 2019 23:20•• •Read more...•
 

டொராண்டோவில் நிகழ்ந்த நிருத்திய நாட்டியம்! கலாநிதி பத்மா சுப்ரமண்யத்தின் 'பகவத் கீதை'!

•E-mail• •Print• •PDF•

சாண் சந்திரசேகர்-கலாநிதி பத்மா சுப்ரமணியம் கனடாவிலுள்ள 'ஏசியன் டெலிவிஷன் நெட்வோர்க்' (ATN) ஸ்தாபன உரிமையாளர் அவர்களை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. இவர் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் கலாநிதி பத்மா சுப்ரமணியத்தின் உடன் பிறந்த சகோதரர். புகபெற்ற இயக்குநர் கே.சுப்ராமணியத்தின் புத்திரர். கனடாவில் தெற்காசியர்களுக்கான தொலைக்காட்சி சேவைகளை இவரும் இவரது மனைவி ஜெயா சந்திரசேகரும் பல வருடங்களாக நடத்தி வருபவர்கள். கனடியார்கள் மத்தியிலும் வர்த்தக மற்றும் அரசியல்  வட்டாரங்களில் நன்கு அறிமுகமானவர். இவரை ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதையும், அதன் காரணமாகவே கலாநிதி பத்மா சுப்ரமணியத்தின்  நடனத்தைக் கண்டு களிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டதையும் என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது.

2001இல் ஒரு நாள், 'பதிவுகள்' இணைய இதழ் தத்தித் தவழ்ந்து நடை போட முயன்று கொண்டிருந்த சமயம். அப்பொழுது 'பதிவுகள்' இணைய இதழை அறிமுகப்படுத்தும்பொருட்டு 'டொரோன்டோ'விலுள்ள ஊடகங்களுக்கு அறிமுக மின்னஞ்சலொன்றினை அனுப்பியிருந்தேன். அவ்விதம் அனுப்பிய ஊடக நிறுவனங்களில் 'ஏசியன் டெலிவிஷன் நெட்வோர்க்' நிறுவனமும் ஒன்று. அதன் பின் அதனை அப்படியே மறந்தும் விட்டேன். ஆனால் திடீரென எனக்கு மின்னஞ்சலொன்று வந்திருந்தது. அது 'ஏசியன் டெலிவிஷன் நெட்வோர்க்' உரிமையாளரான சாண் சந்திரசேகரிடமிருந்து. அதில் அவர் என்னைத் தன் நிலையத்துக்கு வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்திருந்தார். அவர் அழைப்பினையேற்று நியுமார்க்கட் பகுதியில் அமைந்திருந்த 'ஏசியன் டெலிவிஷன் நெட்வோர்க்' நிலையத்துக்குச் சென்றிருந்தபோது அவர் வரவேற்று உபசரித்து தொலைக்காட்சி நிலையத்தைச் சுற்றிக் காண்பித்தார். அத்துடன் 'பதிவுகள்' இணைய இதழுக்கு வாழ்த்துக் கூறியவர், அக்காலகட்டத்தில் 'டொராண்டோ'வில் நடக்கவிருந்த அவரது சகோதரியான கலாநிதி பத்மா சுப்ரமணியத்தின் நாட்டிய நிகழ்வுக்கான 'விஐபி' அழைப்பிதழினையும் வழங்கியிருந்தார். அதன் மூலம் எனக்கும் உலகப்புகழ்பெற்ற நாட்டியத்தாரகையான கலாநிதி பத்மா சுப்ரமணியத்தின் நடனத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்நிகழ்வுக்கு நானும் என் மூத்த புதல்வி தமயந்தியும் சென்றிருந்தோம். மறக்க முடியாத நிகழ்வு. பின்னர் அந்நிகழ்வு பற்றிப் 'பதிவுகள்' இணைய இதழில் கட்டுரையொன்றும் எழுதியிருந்தேன். அக்கட்டுரையே இங்குள்ள கட்டுரை.

கலாநிதி பத்மா சுப்ரமணியத்தை நினைக்கும்போதெல்லாம் ஞாபகத்துக்கு வருமொரு விடயம்: 'மக்கள் திலகம்' எம்ஜிஆரின் கனவுகளிலொன்று கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலைத் திரைப்படமாக்க வேண்டுமென்பது. அதில் தான் வந்தியத்தேவனாகவும், பத்மா சுப்ரமணியம் குந்தவையாகவும் நடிக்க வேண்டுமென்பது. ஆனால் எம்ஜீஆர் பலமுறை முயற்சி செய்தும் பத்மா சுப்ரணியம் தனக்கு நடிப்பதில் ஆசை இல்லையென்று மறுத்து விட்டதால் எம்ஜிஆரின் கனவும் கனவாகவே போய்விட்டது. இதனை பத்மா சுப்ரமணியமே பல நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கின்றார். -


•Last Updated on ••Tuesday•, 26 •September• 2017 15:42•• •Read more...•
 

தமிழர்தம் வரலாற்றுச்சின்னங்கள் பேணப்படுதலின் அவசியம்!

•E-mail• •Print• •PDF•

- யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், விக்டோரியா, ஆஸ்திரேலியாவின் 'கானமழை 2017' சஞ்சிகையில் வெளியான கட்டுரை இது. -

கானமழை 2017'ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் தவறென்ன' என்று ஆக்ரோசமிடுவதுடன் திருப்தியுறும் தமிழர்களிடமுள்ள முக்கியமான குறைபாடுகளிலொன்றாக நான் கருதுவது தமிழ்ப்பகுதிகளில் காணப்படும் வரலாற்றுச்சின்னங்களைப் பாதுகாப்பதில் , பேணுவதில் காணப்படும் ஆர்வமின்மை ஆகும். மாறிவரும் காலத்தின் ஓட்டங்களுக்கேற்ப மாறிவரும் சமுதாயச்சூழலில் இனமொன்றின் தனித்துவத்தையோ அல்லது அதன் பண்பாட்டின் வளர்ச்சியையோ பேணுவது அவசியமாகும்.  அவ்வாறு செய்யாவிடின் அக்காலத்தின் வளர்ச்சியும், காலத்தின் கோலத்திற்கேற்ப கட்டெறும்பாகத் தேய்ந்து மறைந்துவிடும்.  மேலும் ஓரினத்தின் வரலாறு தெளிவின்றியிருக்குமாயின் அதன் வரலாற்றிலொரு தெளிவினை ஏற்படுத்துவதும் மிகவும் முக்கியமாகும். ஈழத் தமிழினத்தைப்பொறுத்தவரையில் அதன் வரலாற்றிலோ தெளிவற்ற ஒரு குழப்ப நிலை நிலவுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.  வரலாற்றினை நிரூபிப்பதற்குரிய சான்றுகளோ கவனிப்பாரற்ற நிலையில் புறக்கணிக்கப்பட்டுக்கிடக்கின்றன.  ஒரு வெளிநாட்டவரோ அல்லது நம்மவர் ஒருவரோ பார்க்க விரும்பினால் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளென்று அழைத்துச்சென்று காட்டக்கூடிய  பகுதிகள் எத்தனையுள்ளன? இருக்கும் பகுதிகள் கூட கவனிப்பாரற்ற நிலையில், அவை பற்றிய போதிய தகவல்களற்ற நிலையில்தாமே இருக்கின்றன. இவ்விதமானதொரு சூழலில்தான் பழமையின் சின்னங்கள் பேணப்படுதலின் அவசியம் அதிகமாகின்றது.  வரலாற்றுரீதியான ஆய்வுகளுக்கு  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பழமையின் சின்னங்களும், சிதைந்த நிலையில் காணப்படும் அழிபாடுகளும் பேணப்பட வேண்டியது மிகவும் அவசியமான, தவிர்க்க முடியாததொன்றாகின்றது.

உதாரணத்துக்கு நல்லூர் நகரை எடுத்துக்கொள்ளுங்கள்.  ஈழத்தமிழர்களின் கடைசித்தமிழ் மன்னர்களான ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் இராசதானியாக, அமோகமான புகழுடன் விளங்கிய நகர் நல்லூர்.  இன்றைய நிலை என்ன? காலத்தின் கோலத்துக்கேற்ப விரைவாக மாறுதலடைந்துள்ள நிலையில் உண்மையில் அந்நகரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளெல்லாம் முறையாகப் பேணப்படாத நிலையில், காலவெள்ளத்தில் அடியுண்டு போகும் நிலையில்தானுள்ளன. இதுவரையில் இவ்விதம் இராஜதானியாக விளங்கிய நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஒரேயொரு ஆய்வு நூல்தான் வெளியாகியுள்ளது. அது தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம், மங்கை பதிப்பகம் (கனடா) இணைந்து வெளியிட்ட எனது நூலான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் நூல்தான். 1996இல் வெளியானது.

நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றி ஆராய முற்பட்டபோதுதான் தமிழர்களாகிய நாம் எம் வரலாறு பற்றிய போதிய ஆய்வுகளற்ற நிலையில் இருக்கின்றோம் என்பதை உணர முடிந்தது. உண்மையில் நல்லூர் இராஜதானியாக விளங்கிய காரணத்தால், இப்பகுதியில் காணப்படும் வரலாற்று முக்கியம் வாய்ந்த பகுதிகள் பற்றி (குளங்கள் உட்பட) , காணப்படும் வரலாற்றுச் சின்னங்கள், அவற்றின் சிதைவுகள் பற்றி, அவற்றின் வரலாறு பற்றியெல்லாம் விரிவாக , ஆராயப்பட்டு, அவை நூல்களாகப் போதிய அளவில்  வெளிவந்திருக்க வேண்டும். அவ்விதம்  வெளிவரவில்லை. நல்லூர் நகரானது எவ்விதம் பெளத்தர்களுக்கு அநுராதபுரம் போன்ற தென்னிலங்கை இராஜதானி நகர்களெல்லாம் புனித நகர்களாகக் கருதப்பட்டு, அங்கு காணப்படும் பழமையின் சின்னங்கள் பேணப்படுகின்றனவோ அவ்விதமே கருதப்பட்டு முறையாகப் பேணப்பட்டிருக்க வேண்டும்.  ஈழத்தமிழர்களின் வட, கிழக்குப் பகுதிகளிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்களெல்லாம் , பேணப்பட வேண்டிய நகர்களாகக் கருதப்பட்டு, அந்நகர்களின் வரலாற்றுச்சின்னங்கள், வரலாற்றுக்குறிப்புகள் எல்லாம் ஆய்வுக்கண்ணோட்டத்தில் பேணப்பட்டு, இவை பற்றிய போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியிலும், ஆள்வோர் மத்தியிலும் ஏற்படுத்தப்பட்டு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

•Last Updated on ••Tuesday•, 26 •September• 2017 08:00•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 264 : விமல் குழந்தைவேலின் வெள்ளாவி பற்றி....

•E-mail• •Print• •PDF•

விமல் குழந்தைவேலின் 'வெள்ளாவி'எழுத்தாளர்  விமல் குழந்தைவேல்விமல் குழந்தைவேலுவின் 'வெள்ளாவி' புகலிடத்தமிழர்கள் மத்தியிலிருந்து வெளிவந்த நாவல்களில்முக்கியமான நாவல். அம்பாறை மாவட்டத்திலுள்ள கோளாவில் பகுதி வட்டாரத் தமிழில் நாவல் எழுதப்பட்டிருக்கின்றது. ஈழத்தில் வெளிவந்த வட்டாரத்தமிழில் வெளிவந்த நாவல்களில் இந்நாவலை முதலிடத்தில் வைக்கலாம். ஆடை துவைக்கும் சமூகத்தைச்சேர்ந்த பரஞ்சோதி என்னும் பெண் பாத்திரத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ள நாவல் பல பிரச்சினைகளைத் தொட்டுச் செல்கின்றது. சமூக, பொருளியல் மற்றும் அரசியற் பிரச்சினைகளை நாவல் வெளிப்படுத்துகின்றது. ஆணாதிக்கச் சமூகத்தில். அதுவும் தாழ்த்தப்பட்ட சமூகமொன்றில் பிறக்கும் சமூகமொன்றில் பிறக்கும் பெண்ணொருத்தி எத்தனை விதமான உளவியற் துன்பங்களை அடைய வேண்டியிருக்கின்றது என்பதை பரஞ்சோதி,, அவளது தாய் மாதவி ஆகியோர் தம் வாழ்வில் அடையும் அனுபவங்கள்: வெளிப்படுத்துகின்றன. பெண்ணைப்போகப்பொருளாகப் பயன்படுத்தும் போடியார் எவ்வளவு இயல்பாக மாதவியின் மகளை ஓரிரவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிச் செல்கின்றார். இந்த உண்மையை அறியாத பரஞ்சோதி , தன் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தந்தை தன்னை விரும்பிய வரதனாக இருக்குமோ என்று சந்தேகம் அடைகின்றாள். இச்சமயம் நடந்த உண்மையை அறிந்த தாயார் மாதவி போடியாரிடம் சென்று சண்டை போட்டு விட்டு வந்தவள் அந்தத் துயர் காரணமாகவே இறந்து விடுகின்றாள். வயிற்றில் குழந்தையுடன் தனித்து அநாதரவாக விடப்பட்ட பரஞ்சோதியை அரவணைத்துத் அவளது பிறக்கப்போகும் குழந்தையுடன் தன் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்கின்றான் நாகமணி. பிறக்கும் குழந்தை அரவிந்தன் வளர்ந்து பெரியவனாகி இயக்கத்தில் இணைந்து போராடப்போவதுடன் நாவல் நிறைவு பெறுகிறது. நாவலின் பிரதான விடயங்கள் இவையே.

இந்நாவலின் முக்கியமான சிறப்புகளாக நான் கருதுவது:

1. வட்டாரத் தமிழைப் பதிவு செய்தது.
2. கோளாவில் பகுதியில் நிலவிய சமுதாய அமைப்பு, அவ்வமைப்பில் நிலவிய சீர்கேடுகள், பெண்கள் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகமொன்றினைச் சேர்ந்த பெண்கள் போடியார் போன்றவர்களிடமிருந்து எதிர்கொள்ளூம் பாலியல் ரீதியிலான வன்முறைகள், நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருப்பது. பதிவு செய்திருப்பது.
3. தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தில் போராட்டத்தின் பெயரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் , உதாரணமாக உளநலம் குன்றிய பெண்ணொருத்தி இராணுவ உளவாளியென்று கருதப்பட்டுத் தண்டிக்கப்படுவது போன்ற , விடயங்களைப் பதிவு செய்திருப்பது. நாவல் மட்டக்களப்புச் சிறை உடைப்பு பற்றியும் நினைவு கூருகின்றது.

•Last Updated on ••Tuesday•, 24 •October• 2017 16:16•• •Read more...•
 

எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் மானுட நேயம்!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் மானுட நேயம்!எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா கிழக்கில் முஸ்லீம் / தமிழ் மக்களுக்கிடையில் இனிரீதியான கலவரச்சூழல் நிலவிய காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பற்றி முகநூற் பதிவொன்றினை இட்டிருந்தார். அண்மையில் நான் வாசித்த , என்னைப் பாதித்த பதிவிது. வைத்தியர் குகதாசனை அவர் வீட்டின் முன் நின்ற வெறிபிடித்த கும்பலொன்றிலிருந்து எவ்விதம் காப்பாற்றினார் என்பதை அப்பதிவில் அவர் பதிவு செய்திருக்கின்றார். ஆவணப்படுத்தப்பட வேண்டிய பதிவிது. எழுத்தாளர் ஹனீபா அவர்களைச் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். அவரைப்பற்றி நான் என் முகநூற் பக்கத்தில் இட்டிருந்த இக்குறிப்புக் கிடைத்த எதிர்வினைகள் சிலவற்றையும் இங்கு பதிவு செய்கின்றேன்.

எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களின் பதிவு கீழே:

"நேற்றுப் போலிருக்கிறது. கிழக்கில் தமிழ் முஸ்லிம் இனச்சங்காரம் நிகழ்ந்து 32 வருடங்கள். அந்த சித்திரை மாதம், எனக்குள் பெரும் வேதனையையும் வலியையும் விளைவித்தது. அந்த வலி இன்னும் தொடர்வதுதான் மிகப் பெரும் கொடுமை. அந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள், வாழைச்சேனையில் டாக்டர் குகதாசன் MBBS ஐயா அவர்களின் வீட்டின் முன்னால் பெரும் கும்பலொன்று திரண்டு நிற்பதாக செய்தி கிடைத்தது. ஊரில் அப்பொழுது நான் பெயர் பெற்ற LTTE ஆதரவாளன்.

அந்த இடத்திற்கு உடனே விரைந்தேன். அங்கே, குகதாசன் ஐயா முன் விறாந்தையின் நிலைப்படியில் தவித்துக் கொண்டிருந்தார். பெண்கள், பிள்ளைகள் என்று அவரைச் சுற்றி பதட்டத்தோடு நின்றார்கள். அந்தக் காட்சியை விபரிப்பதற்கு வார்த்தைகள் இன்றி முட்டுப்படுகிறேன். என்னைக் கண்டதும் இளைஞர்களில் சிலர் பின்வாங்கினார்கள். இன்னும் சிலர் என் முன்னாலேயே கண்களில் தீப்பிழம்பாக காட்சி தந்தார்கள். அவர்களை நோக்கி, நான் இவ்வாறு சொன்னேன்:

"தம்பிமாரே! நீங்கள் ஒவ்வொரு பிள்ளையும் உங்கள் தாயின் வயிற்றில் இருந்த பொழுது, இந்த டாக்டர் ஐயாதான் அந்த வயிற்றைத் தடவி உங்களையும் தடவி நீங்கள் சௌக்கியமாக இருப்பதாக உங்கள் தாயிடம் சொல்லி தைரியமூட்டியவர். என்ன நியாயம் நீங்கள் இன்று இந்த மனிதருக்கு முன்னால் இந்தக் கோலத்தில் நிற்பது? உடனடியாக இந்த இடத்தை விட்டு நீங்கள் விலகிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நடப்பது வேற விடயம்" என்றேன்.

தெருச் சண்டியர்களுக்கு ஒரே பதில். நாமும் ஒரு தெருச் சண்டியராக மாறுவதுதான். வந்தவர்கள் ஒவ்வொருவராக திரும்பிப் போனார்கள். நான் உள்ளே போய் அமர்ந்து ஆறுதல் சொல்லி விட்டு வந்தேன்.

•Last Updated on ••Tuesday•, 19 •September• 2017 05:54•• •Read more...•
 

தொடர் நாவல்: எத்தனை கோடி இன்பம்! (1) - வ.ந.கிரிதரன் -

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் ஒன்று: முதற்காதல்!

தொடர் நாவல்: எத்தனைகோடி இன்பம்!வ.ந.கிரிதரன்மாயவன் வசிக்கும் தொடர்மாடிக் கொண்டோக் கட்டடத்திலிருந்து எதிரே நோக்கினால் அருகில் விரிந்திருக்கும் பூங்காவின் வனப்பும், தொலைவில் 'டொராண்டோ' மாநகரின் மோனத்தில் தவமியற்றும் உயர்மாடிக் கட்டடங்களும், அவற்றுக்கிடையில் உயர்ந்த கோபுரமான சி.என். கோபுரமும் தெரியும். அந்திப்பொழுதுகளில் அல்லது மெல்லிருள் கவிந்திருக்கும் இரவுகளில் அங்கிருந்து சுற்றுச்சூழலை, நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானைப்பார்ப்பதைப்போல் இன்பம் வேறுண்டோ? அவனுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குகளில் இவ்விதமாகப் பொழுதைக் கழிப்பது மிகவும் விருப்பத்துக்குரியதொன்று. அவனது அபிமானக் கவி பாரதியின் பாடலொன்று நினைவில் சிறகடிக்கின்றது சிட்டுக்குருவியென.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா!

சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்

முக்தியென்றொரு நிலை சமைத்தாய் – அங்கு
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் – எங்கள்
பரமா பரமா பரமா


'எத்தனை கோடி இன்பம் வைத்தாய்' மாயவனின் சிந்தனை அவ்வரிகளின் மீதே சுற்றிச்சுற்றிப்படருகின்றது. இப்பிரபஞ்சம்தான் எத்தனை எத்தனை கோடி இன்பத்தை இங்கு புதைத்து வைத்திருக்கின்றது. இயற்கையின் ஒவ்வொரு துளியிலும் படைப்பின் பேரதிசயம் உள்ளடங்கியல்லவா இருக்கிறது.

"சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்"

யார் இவ்விதம் இவ்வுலகை இவ்விதம்  அமைத்தது? யார்? மாயவனின் சிந்தனை மேலும் மேலும் சிறகடித்துப்பறக்கின்றது.

•Last Updated on ••Saturday•, 28 •October• 2017 17:13•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 263: மானுட விடுதலைப்போராளியான தோழர் தமிழரசன் பற்றிய தோழர் பாலனின் எண்ணங்களே 'ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்' .

•E-mail• •Print• •PDF•

- * தோழர் பாலன் எழுதிய 'ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்' என்னும் மின்னூல் பற்றிய எண்ணத்துளிகள் சில. -


தோழர் தமிழரசன்

தோழர் பாலன்

தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியை உருவாக்கி, அக்கட்சியின் படைப்பிரிவாகத் தமிழ்நாடு விடுதலைப்படையினை நிறுவி , தமிழ்நாட்டில் மாவோயிச, லெனிசிச அடிப்படையிலான பொதுவுடமை அமைப்பொன்று அமைக்கப்பட வேண்டுமென்பது தோழர் தமிழரசனின் எண்ணம், செயற்பாடு எல்லாம். 1987இல் தோழர் தமிழரசன் பொன்பரப்பிலிருந்த வங்கியொன்றினை இயக்கத்தேவைகளுக்காகக் கொள்ளையிட முயன்றபோது பொது மக்களால் பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவர் அவ்விதம் கொல்லப்பட்டது இந்திய மத்திய அரசின் திட்டமிட்ட சதியால் என்று உறுதியாக எடுத்துரைக்கின்றது தோழர் பாலனின் தோழர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்' என்னும் இந்த நூல்.

'தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை' என்னும் இயக்கம் புலிகள் இயக்கத்தில் ஆரம்பத்தில் ஏற்பட்ட பிளவின்போது உருவான புதியபாதைப்பிரிவில் இயங்கிப்பின்னர் அதிலிருந்து பிரிந்து தோழர் பாலன், தோழர் நெப்போலியன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட மாவோயிச, லெனிசிசத்தைத் தம் கோட்பாடாகக் கொண்ட, மக்களின் சமூக அரசிய பிரச்சினைகளுக்கு ஒருபோதுமே முதலாளித்துவ பாராளுமன்ற அரசியல் சாதகமாக இருக்கப்போவதில்லை என்பதைத் திடமாக நம்பும் புரட்சிகர அமைப்பாகும். அந்த அமைப்பினைச்சேர்ந்த தோழர் பாலனின் பார்வையில் தோழர் தமிழரசனை வைத்து எடை போடுவதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும். தோழர் தமிழரசன் பயங்கரவாதியா அல்லது புரட்சிவாதியா என்பதை தோழர் தமிழரசனின் வாழ்க்கையினூடு, அவரது சமூக, அரசியற் செயற்பாடுகளினூடு, அவர் நம்பிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத் தத்துவங்களினூடு , உணர்ச்சிவசப்படாமல், நிதானமாகத் தர்க்கரீதியாக ஆராய்ந்து தோழர் தமிழரசன் பயங்கரவாதி அல்லர். பொதுவுடமையினை நிறுவுவதாகச் செயற்பட்ட புரட்சிவாதி என்று நிறுவுவதுதான் நூலின் பிரதான நோக்கம். அந்த நோக்கத்தில் இந்நூல் வெற்றியடைந்துள்ளதா என்பதைச் சிறிது நோக்குவோம்.

•Last Updated on ••Thursday•, 14 •September• 2017 17:20•• •Read more...•
 

தொடர் நாவல்: புதிய பாதை ('அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' ) (10 - 12)

•E-mail• •Print• •PDF•

[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்'   என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது.  மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க 'புதிய பாதை' என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் 'புதிய பாதை' என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான 'டீச்சர்' பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு  புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் 'புதிய பாதை' என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் 'புதிய பாதை' என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]


அத்தியாயம் பத்து! அகலிகையும், அவளும் !

அவன் சென்று நெடுநேரமாகி விட்டிருந்தது. இவளுக்கு நித்திரை வரமாட்டேன் என்கிறது. மனம் ஒரு நிலையில் நிற்கமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கிறாள். அலுப்பாக, மனம் சினக்கிறது. எழுந்து 'லைற்'றைப்போட்டாள். கண்ணாடியில் தெரிந்த உருவத்தை ஒருவித ஆர்வத்துடன் முதன்முறையாக பார்ப்பதுபோல் பார்க்கிறாள். கூந்தல் விரிந்து தோள்களில் புரண்டு நிற்கிறது. அழகான உதடுகளை உவப்புடன் எடை போட்டாள். கூரிய அகண்ட பெரிய கண்களை வியப்புடன் நோக்கினாள். அவளுக்கு தன்னை நினைக்க சிரிப்பாக இருந்தது. அதே சமயம் பெருமிதமாகவும் இருந்தது. கர்வம் கூட ஓரத்தே எட்டிப்பார்க்கவும் செய்யாமலில்லை. ஏதாவது குடித்தால் பரவாயில்லை போல் பட்டது. பிரிட்ஜிலிருந்து 'ஓரென்ஜ் யூஸ்” எடுத்துப் பருகியபடி சோபாவில் வந்தமர்ந்தாள். ரி.வி.யைத் தட்டினாள். குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை. ஊர் ஞாபகம் வந்தது. கடை குட்டிகளின் ஞாபகம் வந்தது. இந்நேரம் ஆவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? ஏ.கேயும் கையுமாக ஏதாவது சென்றிகளில் நிற்பார்களோ? அல்லது தாக்குதலில் முன்னணியில் நிற்பார்களோ? இவ்வளவு துணிச்சல் அந்தப் பிஞ்சுகளுக்கு எப்படி வந்திருக்க முடியும்? இவளால் அவர்களை உணர்ந்துகொள்வது கஷ்டமாக இருந்தது. சிறுவனின் ஞாபகம் கூட எழுந்தது. சிறுவனின் நட்பு நெஞ்சில் இதமாக இருந்தது. கணவனின் ஞாபகம் எழுந்தது. நெஞ்சில் ஒருவித கனிவு படர்ந்தது. அவனது நெஞ்சிலே படர்ந்து அடங்கி மனப்பாரத்தை இறக்கவேண்டும் போலிருந்தது. நான் எவ்வளவு தூரம் இன்னமும் அவரை விரும்புகிறேன். ஏன் அன்று என் உணர்வுகளுக்கு அடிமையாகிப்போயிருந்தேன்? தன்னையே கேட்டுக்கொண்டாள். எதற்காக? எதற்காக அவர் என்ன குறை வைத்தார். பின் எதற்காக? ஏன் அவ்விதம் நடந்து கொண்டேன்? பதில் அவ்வளவு சுலபமாக கிடைப்பதாக தெரியவில்லை. அன்று இவ்விதம் நடந்துகொண்ட நான் பின் எதற்காக அவர் இன்று நடந்து கொண்ட முறையைக் கண்டு கோபப்பட்டேன்? இவரை நான் உண்மையிலேயே விரும்புகிறேனோ? என் அடிமனதில் இவருடன் வாழ்வதை நான் உண்மையிலேயே விரும்பவில்லையா? எதற்காக என்னுள் இத்தனை முரண்பாடுகள். இப்படித்தான் பொதுவில் எல்லோருமா? அல்லது நான் தான் வித்தியாசமானவளோ? நான் நடந்த முறை தெரிந்தும் இவர் எப்படி என்னை ஏற்க முனைந்தார்? என்னில் ஏற்பட்ட கோபத்தை விட அவர் என்னை விரும்புகிறாரா? இவ்வளவு நிகழ்வுகள் சம்பவித்தபின்னும் இன்னும் அவருடன் சேர்ந்து வாழ்வது இயலக்கூடியது தானா? என்னால் தான் இயல்பாக இருக்கமுடியுமா? இவருக்கு துரோகம் செய்த நான் எதற்கு இன்று இவ்விதமாக ஆசைப்படுகின்றேன். நான் சுயநலக்காரியா? இந்தக் கேள்விகளைக் கேட்பதன்மூலம் தன்னை மேலும் அறிய முயன்றாள். இவ்வாறான நேரங்களில் சோர்வு நீங்கி ஒருவித தென்பில் மனம் துள்ளி எழுந்து விடுகிறது. செய்த செயல்களில் சரி,பிழைகளை சரியாக இனம் காண்பதன் மூலம் தவறுகளுக்கு பொறுப்பேற்பதன்மூலம் மனம் சுத்தமாகிவிடுகிறது. ஆடிப்பாடத் தொடங்கிவிடுகிறது.

•Last Updated on ••Friday•, 24 •August• 2018 23:40•• •Read more...•
 

கட்டுரை: 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -

•E-mail• •Print• •PDF•

- கடந்த ஆண்டு வெளியான 'கணையாழிக் கட்டுரைகள் (1995 - 2000) ' என்னும் தொகுப்பு நூல் பற்றிய எனது விமர்சனம் செப்டம்பர் 2017 'கணையாழி' இதழில் வெளியாகியுள்ளது. ஒரு பதிவுக்காக அக்கட்டுரை இங்கு மீள்பிரசுரமாகின்றது. - வ.ந.கி -


கணையாழிக் கட்டுரைஅண்மைககாலத்தில் வெளிவந்து நான் வாசித்த கட்டுரைத்தொகுதிகளில் சிறந்த தொகுதிகளிலொன்றாகக் 'கணையாழிக்கட்டுரைகள் (1995-2000) தொகுதியினைக் கருதுவதில் எனக்கு எந்தவிதத்தயக்கமுமில்லை. இந்தக்கட்டுரைதொகுதி என்னைக் கவர்வதற்குக் காரணமாக  இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ள கட்டுரைகளின் கூறுபொருள், கட்டுரைகளின் மொழிநடை ஆகியவற்றையே குறிப்பிடுவேன்.

கட்டுரைகளின் கூறுபொருள்
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளின் கூறுபொருள் பன்முகத்தன்மை வாய்ந்தவை. கலை, இலக்கியம், அறிவியல், அரசியல் எனக் கட்டுரைகள் பல விடயங்களைப்பற்றிக் கூறுபவை. இலக்கியத்தை என்னும் அதை மேலு பல உபபிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். கவிதை, படைப்பாளிகளின் படைப்புத்தன்மை, நாடகம், மொழிநடை (வட்டாரத்தமிழ் போன்ற), மேனாட்டு இலக்கிய அறிமுகம், நூல் அறிமுகம் இவ்விதம் இலக்கியத்தின் பன்முகப்பிரிவுகளிலும் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது தேர்வாளர்களின் கடும் உழைப்பினை வெளிப்படுத்துகின்றது. இப்பிரிவிவில் வெளியான கட்டுரைகள் வெளிப்படுத்தும் விடயங்கள், தகவல்களும் பற்பல.

படைப்பாளிகளைப்பற்றிய கட்டுரைகளாகச் சா.கந்தசாமியின்  'ஒரு படைப்பாளியின் நடைப்பயணத்தில்' , 'ஆருயிர் கண்ணாளுக்கு' (எழுத்தாளர் புதுமைப்பித்தன் மனைவிக்கு எழுதிய நெஞ்சினைத் தொடும் கடிதம்), 'கருத்துக்குளத்தில் கல்லெறிந்த கலகக்காரர்'(பிரபஞ்சனின் கலைஞர் படைப்புகள் பற்றிய பார்வை), சா.கந்தசாமியின் 'இலக்கிய சரிதம்' , தஞ்சை ப்ரகாஷின் 'எம்.வி.வெங்கட்ராம் எனும் நிரூபணம்', விக்கிரமாதித்யனின் 'நவீன கவிதை பிரமிளுக்கு முன்னும் பின்னும்' , ஞானக்கூத்தனின் 'டி.எஸ்.இலியட்டும் தமிழ் நவீன இலக்கியமும்' , அசோகமித்திரனின் 'சக பயணி' போன்ற கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.

அசோகமித்திரனின் கட்டுரைகளில் கூறப்படும் பொருளுடன் பல்வேறு தகவல்களும் காணப்படுவது வழக்கம். இங்கும் 'சக பயணி' என்னும் அவரது சிறு கட்டுரை கோமல் சுவாமிநாதனைப்பற்றி குறிப்பாக அவரது நாடக, சினிமா முயற்சிகளைபற்றி, அவர் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட 'சுபமங்களா' பற்றி, கோமலின் இறுதிக்காலத்தைப்பற்றிச் சுருக்கமாகப் பதிவு செய்யும் கட்டுரை அறுபதுகளில் நடிகர் சகஸ்ரநாம் சேவா ஸ்டேஜ் நாடகக் குழு பற்றி, அறுபதுகளில் உஸ்மான் சாலையின் தென்பகுதியிலிருந்த தி.நகர் பஸ் ஸ்டாண்ட் பற்றியெல்லாம் மேலதிகத் தகவல்களைத் தருகின்றது.\

தஞ்சை ப்ரகாஷின் 'எம்.வி.வெங்கட்ராம் எனும் நிரூபணம்' என்னும் கட்டுரை எம்.வி.வி.யின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் சமயம், எழுத்தாளர் நீலமணி பற்றியும், சுதேசமித்திரன் பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பு பற்றியும் எடுத்துரைக்கின்றது. பொருளியல்ரீதியில் எவ்வளவோ சிரமங்களை இருப்பு அவருக்குக் கொடுத்தபோதும் எம்.வி.வி ஒருபோதுமே 'அவர் வியாபார எழுத்தில் , வெகுஜன ரசனையில் என்றுமே ஈடுபாடு வைத்ததில்லை' என்றும் கட்டுரையாளர் சுட்டிக்காட்டுவார்.

•Last Updated on ••Wednesday•, 06 •September• 2017 16:44•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 262: கே.எஸ்.சுதாகரின் 'சேர்ப்பிறைஸ் விசிட்'

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 262: கே.எஸ்.சுதாகரின் 'சேர்ப்பிறைஸ் விசிட்' கே.எஸ்.சுதாகர்புகலிட எழுத்தாளர்களில் நகைச்சுவை உணர்வு ததும்ப முக்கியமான பிரச்சினைகளைப்பற்றி எழுதுவதில் வல்லவர் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர். வாசிக்கும்போது அவ்வப்போது இதழ்க்கோடியில் புன்னகையை வரவழைக்கும் எழுத்து அவருடையது. நான் வாசிக்கும்போது அனுபவித்து வாசிப்பது வழக்கம். அவருடைய சிறுகதைகளிலொன்று புகலிடத்தமிழ்க் குடும்பமொன்றின் உளவியலை நகைச்சுவை உணர்வு ததும்பச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றது. வாசிக்கும்போதும், வாசித்து முடித்த பின்பும் சிறிது நேரம் என்னால் எழுந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.

கதை இதுதான். 'சேர்ப்பிறைஸ் விசிட்' என்பதுதான் கதையின் தலைப்பு. நீண்ட நாட்களாக வருகை தராமலிருந்த இராசலிங்கம்/சுலோசனா தம்பதியினர் திடீரென் சிறீதரன்/பவானி தம்பதியினர் இல்லத்துக்குச் 'சேர்ப்பிறைஸ் விசிட்' அடிக்கின்றனர் :-)

"கனகாலமா வரேல்லைத்தானே! அதுதான் சும்மா ஒருக்கா வந்திட்டுப் போவம் எண்டு" என்று 'சும்மா'வைச் சற்றே அழுத்திச்சொன்னான் இராசலிங்கம். தொடர்ந்து , "அப்பிடியெண்டில்லை. இனி ஈஸ்வரன் சபேப்பிலையிருந்து வெஸ்டேர்ண் சபேப்பிற்கு வாறதுக்கு பத்துப்பதினைந்து டொலர் பெற்றோலுமில்லே செல்வாகுது" காசைக் காரணம் காட்டினாள் சுலோசனா.

"நாங்கள் நினைச்சோம்.. உங்களிலை ஆரோ ஒருத்தருக்கு வேலை பறிபோட்டுதோ எண்டு" உதட்டுக்குள் சிரித்தாள் பவானி."

இவ்விதம் கதை செல்கின்றது. 'உதட்டுக்குள்' சிரித்தாள் என்னும் சொற்பதம் அழகாக பவானியின் உளவியற் போக்கினை வெளிப்படுத்துகின்றது.

அதன்பிறகு கதை இவ்வாறு தொடர்கின்றது.

"அதன்பிறகு கோபம் நீக்கி சம்பிரதாயமான உரையாடல் சுகம் விசாரிப்பு, தேநீர் விருந்துபசாரம் மேற்கொண்டு நேரம் நகராத வேளையில் சுலோசனா இராசலிங்கத்தைப் பார்த்து கண்ணை வெட்டினாள். இராசலிங்கம் உதட்டுக்குள் சிரிப்பொன்றைத் தவழ விட்டார். ஏதோவொன்றை முடிச்சவிழ்க்கும் முஸ்தீபில் செருமினார்.

'உங்களுக்கொடு சேர்ப்பிறைஸ் விஷயமொண்டு சொல்ல வேணும். மவுன்ற் டண்டினோங்கிலை நாங்கள் ஒரு புது வீடொன்று கட்டி இருக்கிறம். ' சுப்பர் மார்க்கெட்டில் அரிசி, சீனி வாங்கியது போலச் சொன்னார் இராசலிங்கம்.'

•Last Updated on ••Sunday•, 03 •September• 2017 05:50•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 261: எழுத்தாளர் முருகபூபதி அனுப்பிய கடிதமும், அதற்கான எனது பதிலும்

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் முருகபூபதிஞானம் சஞ்சிகையின் ஆகஸ்ட், செப்டம்பர் இதழ்களில் வெளியான என்னுடனான நேர்காணல் பற்றி எழுத்தாளர் முருகபூபதி அனுப்பிய கடிதமும், அதற்கான எனது பதிலும் ஒரு பதிவுக்காக.

முருகபூபதி: "அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். ஞானம் இதழ்களில் வெளியான தங்கள் நேர்காணல் படித்தேன். வாழ்த்துக்கள். தங்களைப்பற்றிய முழுமையான அறிமுகம் எனக்கு கிடைத்துள்ளது. உங்கள் வாழ்வில் நிறைய சாதித்திருக்கிறீர்கள். தங்கள் பதிவுகள் பற்றி அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களிடத்திலும் குறிப்பிட்டேன். அவர்களுக்கு உசாத்துணையாக விளங்கக்கூடிய பல விடயதானங்கள் தங்கள் பதிவுகளில் வருகின்றன. அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை, இந்தியா உட்பட வெளிநாடுகளிலிருந்து வரும் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களிடத்திலும் பதிவுகள் பற்றி குறிப்பிட்டேன். தொடர்ச்சியாக எழுதிக்கொண்டும் இணையத்தளத்தை நடத்திக்கொண்டுமிருக்கும் தங்கள் உழைப்பு பெறுமதியானது. காலம் உங்களை மதிக்கும். வாழ்த்தும். நல்லதோர் நேர்காணலை வெளியிட்ட ஞானம் இதழுக்கும் அதற்கு வழிவகுத்த கே.எஸ். சுதாகரனுக்கும் எமது வாழ்த்துக்கள். அன்புடன், முருகபூபதி"

நான்: "அன்புள்ள திரு.முருகபூபதி அவர்களுக்கு, நன்றி உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு. 'பதிவுகள்' மூலம் நானடைந்த முக்கியமான நன்மைகளிலொன்று உங்களைப்போன்ற படைப்பாளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதுதான். அமரர் வெ.சா, நீங்கள் மற்றும் இன்னும் பலருடன் இலக்கியரீதியிலான தொடர்புகளும், கருத்துப்பரிமாறல்களும் மிகுந்த பயனுள்ளவை. உங்களது கலை, இலக்கியக் கட்டுரைகள் உண்மையில் சிறப்பானவை மட்டுமல்ல ஆவணச்சிறப்பும் மிக்கவை. ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயனாகவும் விளங்குபவை. எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிப்பதுடன் நின்று விடாது , அவர்களுக்கும் உங்கள் கருத்துகளைத்தெரிவிப்பதானது உங்களது நல்ல உள்ளத்தை வெளிப்படுத்துகின்றது. உங்களது கருத்துகளையும், எழுத்துக்களையும் நான் உயர்வாக மதிக்கின்றேன். நன்றி உங்கள் கருத்துகளுக்கு. அன்புடன், வ.ந.கிரிதரன்"

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

 

அனிதா: ஒரு கணமேனும் ஒளிர்ந்திட்ட சிறு மின்னல் நீ!

•E-mail• •Print• •PDF•

அனிதா: ஒரு கணமேனும் ஒளிர்ந்திட்ட சிறு மின்னல் நீ!
அனிதாவுக்கு அஞ்சலி!அனிதா: ஒரு கணமேனும் ஒளிர்ந்திட்ட சிறு மின்னல் நீ!

'ப்ளஸ் டூ தேர்வில்' 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், 'நீட்' தேர்வு காரணமாகத் தன் வாழ்வை முடித்துக்கொண்ட மாணவி அனிதாவின் மறைவுச் செய்தி இன்று என்னை மிகவும் பாதித்த செய்தி. வறுமைச்சூழலிலும் அவர் திறமையாகப் படித்திருக்கின்றார். ப்ளஸ் டூ'வில் 1176 மதிப்பெண்கள் வாங்கியிருக்கின்றார். இவ்விதம் திறமையாகச் சித்தியடைந்திருந்தும் அனிதாவுக்கு மருத்துவ பீடத்துக்கான இடம் கிடைக்கவில்லை. முறையற்ற அமைப்பு அநியாயமாக ஒரு திறமையான மாணவியின் உயிரைப்பறித்துள்ளது.

அனிதா! உன் விடாமுயற்சியாலும், திறமையாலும் நீ உன்னைப்பெற்றவர்களுக்குப் பெருமை சேர்த்தாய். நீ பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்தாய். இருந்தும் உன்னை இந்த அமைப்பு பாதுகாக்கத்தவறி விட்டதே! ஊழற் பெருச்சாளிகளையெல்லாம் காப்பதற்காகக் கோடிகளைக் கொட்டும் நீ பிறந்த மண்ணில் இறுதி நேரத்தில் உன்னைக் காப்பாற்ற யாருமில்லையே என்பது சோகத்தைத்தருகின்றது. புது தில்லி வரை சென்று போராடிய உன் துணிச்சலை நான் போற்றுகின்றேன். உன் முடிவு சோகத்தைத்தந்தாலும், எதிர்காலத்திலாவது அனிதாக்களின் திறமைகள் அங்கீகரிக்கப்படும் நிலை உருவாகவாவது உன் முடிவு வழி கோரட்டும். இருந்தாலும் உன் முடிவானது மிகப்பெரிய இழப்பு. ஈடு செய்ய முடியாத இழப்பு.

உனது முயற்சியும், திறமையும் எல்லோருக்கும் அவ்வளவு இலேசில் கிடைத்துவிடுவதில்லை. உனக்கு அவை கிடைத்திருந்தன . இருந்தும் அவற்றை யாரும் இனங்காணவில்லையே என்பது இதயத்தைத் தாக்குகின்றது. ஆனால், உனது முடிவால் உன்னை இம்மண் இழந்து விட்டாலும், நீ வரலாற்றில் எப்பொழுதும் நிலைத்து நிற்பாய். எத்தகைய சூழலிலும் திறமையாகக் கற்க முடியுமென்பதற்கு உன் சாதனைகள் முன்மாதிரியாக இருக்கட்டும். சிறுமியாகத் தனித்து உன் உரிமைக்காக நீதி கேட்டுப் புது தில்லி வரை சென்றாயே. அந்தப்போர்க்குணத்தால், மனவுறுதியால் நீ எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்து விட்டாய்.
•Last Updated on ••Friday•, 01 •September• 2017 18:03•• •Read more...•
 

வ.ந.கிரிதரன் நேர்காணல் பகுதி 2 (சென்ற இதழ் தொடர்ச்சி) , கண்டவர்: கே.எஸ்.சுதாகர் [ஞானம் , இலங்கை, சஞ்சிகையின் செப்டம்பர் 2017 இதழில் வெளியானது.]

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரன் நேர்காணல் பகுதி 2 - இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'ஞானம்' மாத சஞ்சிகையின் ஆகஸ்ட் 2017 இதழில் நேர்காணலின் முதற் பகுதி வெளியாகியுள்ளது. ஒரு பதிவுக்காக அது இங்கு மீள்பிரசுரமாகின்றது. -

(வ.ந.கிரிதரன் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டிடடக்கலை பயின்றவர். இலங்கையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அதிகார சபை ஆகியவற்றில் பணிபுரிந்தவர். கனடாவிற்குப் புலம்பெயர்ந்த பின்னர் அங்கு இலத்திரனியல் பொறியியல் மற்றும் தகவல் தொழில்னுட்பத்துறையில் தகமைகள் பெற்றுள்ளார். சிறுகதை, கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி மற்றும் நாவல் என்ற துறைகளில் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். அத்துடன் 2000ஆம் ஆண்டிலிருந்து ‘பதிவுகள்’ (pathivukal - http://www.geotamil.com/)  என்னும் இணைய இதழையும் நடத்தி வருகின்றார். ‘’குடிவரவாளன்’ நாவல், ’அமெரிக்கா’ நாவல்/சிறுகதைகள் தொகுப்பு,, ‘மண்ணின் குரல்’ நான்கு நாவல்களின் தொகுப்பு , ’நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு’ , 'எழுக அதிமானுடா' (கவிதைத்தொகுப்பு) மற்றும் 'மண்ணின் குரல்' (நாவல் கட்டுரை மற்றும் கவிதைகளின் தொகுப்பு) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.)


நேர்காணல் பகுதி 2

9. நீங்கள் எழுதிய அறிவியல் / அமானுஷ்ய சிறுகதைகள், புகலிட வாழ்வனுபவம் சார்ந்த படைப்புகள் பற்றிக் கூறுங்கள்.

எனக்கு அறிவியற் துறையில் மானுட இருப்பினை அறிந்து கொள்வதற்குரிய துறைகள் மிகவும் பிடிக்கும். உளவியல், உயிரியல், மானுட சமுதாயப்பொருளியல் மற்றும் வானியற்பியல் ஆகிய துறைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவற்றில் வானியற்பியல் எப்பொழுதும் என்னை மிகவும் கவர்ந்த துறை. என் சிந்தனையை விரிவு வைக்கும் துறை. இத்துறையில் ஸ்டீபன் ஹார்கிங்ஸ், பிரயன் கிறீன் மற்றும் மிஷியோ ககு போன்றொர் சாதாரண மக்களுக்குப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதிய வானியற்பியல் சம்பந்தமான அறிவியல் நூல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் யாவரும் சிறந்த அறிவியல் அறிஞர்கள். தாங்கள் அறிந்ததை, புரிந்துகொண்டதை, கண்டு பிடித்ததை எல்லாம் சாதாரண மக்களும் அறிந்துகொள்வது அவசியம் என்று கருதுபவர்கள். ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவம், குவாண்ட இயற்பியல் போன்ற துறைகளைப்பற்றி சாதாரண வாசகர்களும்  புரியும் வகையில் இவர்கள் எழுதினார்கள். பிரபஞ்சம் பற்றிய இவர்கள் பற்றிய கருதுகோள்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. குறிப்பாக மூன்று பரிமாணங்களுக்கும் அதிகமான பரிமாணங்களை உள்ளடக்கி உயிரினங்கள், இப்பிரபஞ்சம் அல்லது பிரபஞ்சங்கள் இருக்கக் கூடிய சாத்தியங்களைப்பற்றியெல்லாம் இவர்களின் நூல்கள் விபரித்தன.  இப்பல்பரிமாண உலகும், உயிர்களும் இருக்கக்கூடிய சாத்தியங்கள் எப்பொழுதும் எனக்கு மிகவும் வியப்பினைத் தந்த அதே சமயம் என் சிந்தனையையும் கேள்விகளுக்குள்ளாக்கி விரிவுபட வைத்தன. நான்  எழுதிய அறிவியற் சிறுகதைகளில் 'தேவதரிசனம்' மற்றும் 'நான் அவனில்லை' ஆகியவை  முப்பரிமாணங்களுக்கும் அதிகமான பரிமாணங்கள் இருக்கக்கூடிய சாத்தியங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. 'ஆத்மாவின் புத்துயிர்ப்பு' 'தொலைகாவுதல்' (Teleporting) என்னும் அடிப்படையில் ஆத்மா என்னும் தத்துவத்தையும் இணைத்துச் சிந்தித்ததன் விளைவாக உருவான சிறுகதை.

•Last Updated on ••Friday•, 01 •September• 2017 12:17•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 260 : ஆங் சான் சூகியே விழித்தெழு! ஆகஸ்ட் 30: சர்வதேசக் காணாமற் போனோர் நாள்! - வ.ந.கிரிதரன் -

•E-mail• •Print• •PDF•

ஆங் சான் சூகியே விழித்தெழு!

உனக்கு ராஃப்டோ விருது தந்தார்கள்
உனக்கு சாக்கரோவ் விருது தந்தார்கள்.
அமைதிக்கான நோபல் விருதும் தந்தார்கள்.
இந்திய அரசினரும் தம் பங்குக்கு
சவர்கலால் நேரு விருது தந்தார்கள்.
உன்னை மனித உரிமைகளின்
நாயகி என்றார்கள்.
உன் மண்ணில், உன் காலுக்குக் கீழ்
மதத்தின் பெயரால்,
இனத்தின் பெயரால்,
ஓரினத்து மக்கள் ,
ரொகின்யா இன மக்கள்,
உரிமைகளிழந்து
உடல்ரீதியாக, உளரீதியாக
வாதைகள் அடைகின்றார்களே!
உயிரிழக்கின்றார்களே!
மனித உரிமைகளின் செயல் வீராங்கனையே!
ஜனநாயகமும், விடுதலையும்
ஒருபோதும் கைவிடப்படாத கனவுகள் என்றாயே!
எங்கே உன் உரிமைக்குரல்?

•Last Updated on ••Wednesday•, 30 •August• 2017 17:43•• •Read more...•
 

தொடர் நாவல்: புதிய பாதை ('அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' ) (7 - 9)

•E-mail• •Print• •PDF•

[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்'  என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது.  மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க 'புதிய பாதை' என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் 'புதிய பாதை' என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான 'டீச்சர்' பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு  புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் 'புதிய பாதை' என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் 'புதிய பாதை' என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]


அத்தியாயம் ஏழு: 'டீச்சரி'ன் கடந்த காலம்!

அன்று அவனுக்கு நிறைய வேலைகளிருந்தன. "மான் பவரிற்கு போனான். வேலை ஏதாவது கிடைக்குமா என நோட்டம் விட்டான். 'போஸ்ட் ஒபிஸ்"க்கு சென்றான். வீட்டிற்கு அனுப்ப வேண்டிய கடிதங்களை போஸ்ட் பண்ணினான். பெல் கனடாவிலிருந்து றெட் நோட்டிஸ் வந்திருந்தது. ஜெராட் ஸ்குயரில் உள்ள பெல் கனடாவில் போய் பணம் கட்டினான். இவ்விதமாக நாள் முழுக்க பரபரப்பாக இருந்தான். நேற்று இரவு மாமா மகனும் மற்றவர்களும் கூறியது ஞாபகத்திற்கு வந்தது. அவளது கடந்த கால வாழ்வு பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. அதைப் பற்றி அவளிடம் கேட்கவும் அவனுக்கு விருப்பமில்லை. ஆனால் சுற்றியிருக்கிறவர்கள் சும்மா இருக்கப் போவதில்லையே. அவன் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படவில்லை. ஏற்கனவே ஓராயிரம் பிரச்சனைகள் அவனைச் சூழ்ந்திருந்தன. ஆனால் அவனால் அவளுக்கு பிரச்சனைகள் வருவதை அவன் விரும்பவில்லை. அவளது சூழ்நிலைகள் புரியாமல் அவள் வாழ்வில் குறுக்கிடுவதையும் மனம் ஏற்கவில்லை.

இதற்கு ஒரே வழி? அவளிடமே எல்லாவற்றையமே கேட்டு விட வேண்டியது தான். இவ்விதம் எண்ணினான். பிரச்சனையில் கனம் குறைந்தது போல் உணர்ந்தான். சில வேளைகளில் பிடிக்காதவற்றையும் செய்வதன் மூலம் பிரச்சனைகள் தீரும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இவ்விதம் தனக்குள் எண்ணிக் கொண்டான். இதுவும் அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்றே".

இவ்விதமான முடிவுகளுடன் அன்று 'பார்க்கில் அவன் காத்திருந்தான். வழமையாக ஆறு மணிக்கெல்லாம் வந்து விடுபவள் நெடுநேரமாகியும் வரவில்லை. இப்படித்தான் ஒரு விசயத்தை வேண்டுமென்ற ஆவலுடன் செய்யும்போதுதான் தடங்கல்கள் ஏமாற்றங்கள் சம்பவித்து விடுகின்றன. ஏனைய சமயங்களில் தாராளமாக கிடைக்கும் பொருள் தேவைப்படும் சமயங்களில் தான் காணாமல் போய் விடுகிறது என்று எண்ணிக் கொண்டான். அன்று அவளைச் சந்திக்க வேண்டுமென ஒரு வித எதிர்பார்ப்புடன், ஆவலுடன் காத்திருந்தான். ஆனால் அவளோ வரவில்லை. நெடுநேரம் தனிமையில் அமர்ந்திருந்து விட்டு 'அப்பாட்மென்ட் திரும்பும் போது அவளிருப்பிடம் செல்வோமா' என ஒரு கணம் நினைத்தான். மறுகணமே இவ்விதமாகவொருவித நினைவு கூட எழுந்தது. "அவள் வருவதாயிருந்தால் கட்டாயம் வந்திருப்பாள். அவள் வராமலிருப்பதற்கு ஏதாவது தவிர்க்கக் முடியாத காரணம் இருக்க வேண்டும். இந்நிலையில் அவளைத் தொந்தரவு செய்வது நல்லதல்ல"

ஆனால் அவள் அன்று மட்டுமல்ல தொடர்ந்தும் வராமலே இருந்தாள். அதுதான் அவனுக்கு புதிராகப் பட்டது. வியப்பைத் தந்தது. எங்கேயோ ஏதோ ஒன்று பிழைத்திருப்பது புரிந்தது. தொடர்ந்தும் இப்படியே தொடர்வது சரியாகப்படவில்லை. அன்று அவளிடம் செல்வதாக தீர்மானித்தான். இதே சமயம் பிறந்த மண்ணிலோ மோதல்கள் உக்கிரமடைந்திருந்தன. குடாநாட்டைச் சுற்றி வர அரசபடைகள் சுற்றி வளைத்திருந்தன. இம்முறை நிலைமை மக்களுக்குப் பாதகமாக இருப்பதாகவே பட்டது. தமக்குள் ஒற்றுமையின்மை, அயல்நாட்டின் ஆதரவின்மை. எதிர்காலம் பயங்கரமாகத் தெரிந்தது. நடப்பதைக் கண்டு கொள்ள வேண்டியது தானென எண்ணினான். அம்மாவின், தங்கச்சியின் ஞாபகம் எழுந்தது. ஒன்றாக இருந்த காலங்களை எண்ணி நெஞ்சு சிலிர்த்துக் கொண்டது. கூடவே அவளது குடும்ப நிலைமையையும் நினைத்துப் பார்த்தான். அவர்களுக்கு ஏதாவது நடந்திருக்கலாம். போலவும் பட்டது. எல்லாவற்றுக்கும் அவளைப் பார்ப்பதே சரியானதாகவும் தோன்றியது.

•Last Updated on ••Friday•, 24 •August• 2018 23:41•• •Read more...•
 

கவிதை: மின்னற்சுடர்!

•E-mail• •Print• •PDF•

courtesy:  Art - lightning_woman_by_memeticus

மின்னற்பெண்ணே!  நீ மீண்டும்
என் முன்னால்
மின்னினாய்.
ஆயின் இம்முறை முன்னரைப்போல்
மீண்டும் மறைந்து விடாதே.
உன் ஒளிதரும் வெளிச்சத்தில்
இப்பிரபஞ்சத்தை இன்னும் அதிகமாகச்
சுகித்திடவே விரும்புகின்றேன்.
எட்டாத உயரத்தில் நீ
இருப்பதையிட்டு எனக்குக்
கவலையில்லை.
நீ இருக்கும் இடத்திலேயே
இருந்துகொள்
மின்னலாக அல்ல
விண்சுடராக.
•Last Updated on ••Monday•, 21 •August• 2017 15:50•• •Read more...•
 

தொடர்நாவல்: புதிய பாதை ('அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' ) (4-6) - வ.ந.கிரிதரன் -

•E-mail• •Print• •PDF•

[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்'  என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது.  மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க 'புதிய பாதை' என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் 'புதிய பாதை' என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான 'டீச்சர்' பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு  புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் 'புதிய பாதை' என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் 'புதிய பாதை' என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]


அத்தியாயம் நான்கு: டீச்சரும், சிறுவனும்!

அன்று அவனைச் சந்திப்பதற்காக வரும்போது அவள் ஒரு முடிவுடன் வந்திருந்தாள். அவனுடன் பழகத் தொடங்கியதிலிருந்து அன்று வரையிலான தொடர்பிலிருந்து அவள் ஒன்றைமட்டும் நன்குணர்ந்திருந்தாள்.  அவன் வாழ்வில் துயரகரமான அல்லது ஏமாற்றகரமான சூழல் ஒன்றை அவன் சந்திருக்க வேண்டும். அளவு கடந்த பாசம் வைத்திருந்த அவன் தாயாரைப் பறிகொடுத்திருக்கலாம். அவன் மனைவியை அல்லது காதலியை இழந்திருக்கலாம். அல்லது இராணுவத்தின் குண்டுவீச்சுக்கு அவனது குடும்பம் பலியாகியிருக்கலாம். சமூக விரோதியென்று  மின் கம்பத்திற்கு அவனது தம்பியை அல்லது தந்தையை அல்லது தாயைப் பறிகொடுத்திருக்கலாம். அல்லது படையினரின் பாலியல் வன்முறையிலான வெறியாட்டத்தில் அவன் மனைவி அல்லது காதலி சீரழிந்திருக்கலாம்.  அல்லது அவன் படையினரால் மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு ஏதாவது காரணமாயிருக்கலாம். ஆனால் எது எப்படியோ அவன் பாதிக்கப்பட்டிருக்கிறான்.  அந்தப் பாதிப்பின் தன்மை மிக மிக ஆழமானதாக இருக்க வேண்டும். அதுதான் அவனைச் சிலையாக உறைய வைத்திருக்கிறது. சாதாரண ஒரு மனிதரிற்கு  இருக்கவேண்டிய உணர்வுகள், செயற்பாடுகள் குன்றி ஒரு விதமான கனவுலகில் , மனவுலகில் அவன் சஞ்சரிப்பதற்குக் காரணமாக அந்தப் பாதிப்புத்தானிருக்க வேண்டும். இதனால் அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். அவனை அவள் மாற்றப் போகின்றாள். அந்த உறைதலை அவள் உருக்கப் போகின்றாள். அந்த மெளனத்தைக் கலைய வைக்கப் போகின்றாள். அவனையும் பேச வைக்கப் போகின்றாள். கலகலப்பானவனாக, துடிதுடிப்பு மிக்கவனாக ,  அவனை உருமாற்றிடப் போகின்றாள். இதற்கு ஒரு வழி .... அவனைச் சீண்டி விளையாடிடப் போகின்றாள். வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தி, உருகுவதிலுள்ள அர்த்தமற்ற தன்மையை அவனுக்கு போதிக்கப் போகின்றாள். இவ்விதமானதொரு முடிவுடன்தான் அவள் அன்று வந்திருந்தாள்.

'ஹாய்...' என்று அவனை அழைத்த விதத்தில் அவளது எண்ணத்தின் தீர்க்கம் மறைந்திருந்தது. பரிசோதனை செய்யப்போகும் ஒரு விஞ்ஞானியின் ஆவல் அதில் ஒளிந்திருந்தது.

'வட் அ பியூட்டிபுஃல் டே' என்றாள். அவனருகில் மிக நெருக்கமாக அமர்ந்தாள்.  அவர்களது இதுவரை காலமான நட்பின் விளைவாக இருவருமே ஒருவருடன் ஒருவர் நீ, நான் என்று ஒருமையில் கதைக்குமளவுக்கு நெருங்கியிருந்தார்கள்.

அவனது கண்களையே சிறிது நேரம் உற்று நோக்கினாள்.

•Last Updated on ••Friday•, 24 •August• 2018 23:42•• •Read more...•
 

தொடர்நாவல்: புதிய பாதை ('அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' ) (1 - 3) - வ.ந.கிரிதரன் -

•E-mail• •Print• •PDF•

[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்'  என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது.  மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க 'புதிய பாதை' என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் 'புதிய பாதை' என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான 'டீச்சர்' பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு  புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் 'புதிய பாதை' என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் 'புதிய பாதை' என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]


 

அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில் ...

'தோர்ன்கிளிவ் பார்க்'...  'டொன் மில்ஸ்ஸுக்கும் எக்ளின்டனுக்குமிடையில், அண்மையில்  அமைந்திருந்த பகுதி. 'ஷாப்பிங் மால்' , பாடசாலை, பூங்கா, நூலகம் எனச் சகல வசதிகளுடன், 'டொராண்டோ டவுண் டவு'னிற்கும் அருகில் அமைந்திருந்த பகுதி.  அங்குள்ள தொடர்மாடியொன்றில்தான் அவன் கனடா வந்த நாளிலிருந்து வசித்து வருகின்றான்.  அவனது மாமா மகனின் 'அபார்ட்மென்ட்'.

தனிமையான பொழுதுகளைத் துருவித் துருவி ஆராய்ந்து , புரியாத காரணங்களுக்கு அர்த்தங்களைத் தேடுவதில் தாகமெடுத்துக் கிடக்கும் மனதின் அலைச்சலில் கழிந்து கொண்டிருந்தன பொழுதுகள் ....

கடைசியாகச் செய்துகொண்டிருந்த தொழிற்சாலை வேலை 'லெய்ட் ஓஃப்' ஆனதிலிருந்து  கடந்த ஆறு மாதங்களாக 'அனெம்பிளாய்மென்ட்'டில் ஓடிக்கொன்டிருந்தது வாழ்க்கை.  கடந்த நான்கு மாதங்களாக மாலை நேரங்களில் அந்தப் 'பார்க்கி'லேயே பெரும்பாலும் அவனது பொழுது போய்க்கொண்டிருந்தது. மாமா மகன் 'போஸ்ட் ஆபிஸ்'இல் வேலை செய்து கொண்டிருந்தான். விரைவில் அவனும் திருமணம் செய்யவிருக்கிறான். அதற்குப் பிறகு வேறிடம் பார்க்க வேண்டியதுதான்.

பார்க்கில் நன்கு இருண்டு விட்டதும் அப்படியே படுத்துக் கிடப்பான். விரிந்திருக்கும் ஆகாயத்தில் பரந்து கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை, உருமாறிக் கொண்டிருக்கும் நிலவைப் பார்த்துக் கொண்டிருப்பான். பார்க்கில் நடமாட்டம் குறைந்து அமைதி பூரணமாகக் குடிகொன்டிருக்கும்போதும் அவன் படுத்திருக்கும் இடத்தை விட்டு அசைய மாட்டான். இடைக்கிடை 'பட்ரோலி'ற்காக வரும்  பொலிஸ்காரும் சற்றுத் தொலைவில் நோட்டம் விட்டுச் செல்லும்.

•Last Updated on ••Friday•, 24 •August• 2018 23:42•• •Read more...•
 

தொடர்நாவல்: கணங்களும், குணங்களும் (காயத்ரியின் கதை பகுதி மூன்று (1 -2))

•E-mail• •Print• •PDF•

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி ஒன்று - கருணாகரன் கதை ( 1-6)- தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். இந்த நாவல் பிறந்த கதை தற்செயலானது. என்னுடைய பால்ய காலத்து நண்பர்களிலொருவர் கீதானந்தசிவம் சிவனடியான். இவர் யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். பலவருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் நன்மை, தீமை பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் எனக்கு இந்நாவலின் மையக்கருத்து மனதிலுதயமானது. எதற்காக மனிதர்கள் தவறுகள் செய்கின்றார்கள்? என்ற கேள்வியின் விளைவாக எழுந்த தர்க்கமே 'கணங்களும், குணங்களும்' நாவலாக உருவெடுத்தது. ஒரு சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக 'பதிவுகளி'ல் வெளியாகின்றது.


பகுதி மூன்று: காயத்ரியின் கதை

அத்தியாயம் ஒன்று: புயலான உள்ளம்

நான் நிச்சயமாகவே எதிர்பார்க்கவில்லை. அவன் மீண்டும் என் வாழ்வில் குறுக்கிடுவான் என்று. ஏற்கனவே உடைத்து  விட்டிருந்த அப்பா கூட இதை எதிர்பார்த்திருக்கவில்லை தான். எதற்காக இவன் மீண்டும் வந்தான்? ஏற்கனவே செய்தது போதாதென்றா. அமைதியான துள்ளலுடன் ஆடிச்செல்லும் நதியாக ஓடிக்கொண்டிருந்த வாழ்வை சுழல்கள் நிறைந்து பாயும் காட்டாறாக்கி விட்டுப் போனவன் மீண்டும் எதற்காக? மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறானாம். பாவ மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறானாம். பெண்மை எவ்வளவு இளக்காரமாய் போய் விட்டது இவர்களிற்கு. மன்னிப்புக் கேட்டு விடுவதால் மட்டும் இவன் செய்த குற்றம் இல்லையென்று ஆகிவிடுமா என்ன?

இவனைப் பற்றி எண்ணியதுமே என்னிடத்தில் இவன் மேல் ஒருவிதமான அருவருப்புத்தான் எழுகிறது. மிருகமொன்றைப் பார்ப்பது போன்றதொரு உணர்வு. என்மேலேயே எனக்கு ஒருவிதமான அருவருப்பு. நான் மிகவும் மலிந்தவளாக, அசுத்தமானவளாக, அருவருக்கத்தக்கவளாக எனக்கே தெரிகிறேன். வாழ்க்கை வெறுப்பாக, அசிங்கமானதாக மாறி விடுகின்றது. ஒரு பெண்ணின் உணர்வுகளை, உள்ளத்து வேட்கைகளை, வெறும் உடலளவில் உறுதியானவர்களாக இருந்து விட்ட காரணத்தினால் இவர்கள் எவ்வளவு இலகுவாகக் காலடியில் போட்டு நசித்து விடுகின்றார்கள். இவனைப் பற்றிய நினைவுகள் தோன்றும் போதெல்லாம் எனக்கு அந்தக் கணம் தான் தெரிகிறது. எனது கெஞ்சல்கள். வேண்டுதல்கள். எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, வெறிமிருகமாக குலைத்து, சிதைத்து. அருவருப்பாயிருக்கிறது. நாங்களென்ன அப்படிப் பெரிய பாவம் செய்தோம். இத்தகையதொரு தண்டனையை அடைவதற்கு. அதன் பிறகு வாழ்வு தான் எவ்வளவு தலைகீழாக மாறி விட்டது. அன்று இடிந்து போன அப்பா இடிந்து போனவராக மாறி விட்டார்.

•Last Updated on ••Saturday•, 12 •August• 2017 05:56•• •Read more...•
 

தொடர் நாவல்: வன்னி மண் (14 -18) - வ.ந.கிரிதரன் -

•E-mail• •Print• •PDF•

'தாயகம்' (கனடா) சஞ்சிகையில் வெளியான என் ஆரம்ப காலத்து நாவல்கள்: 'கணங்களும், குணங்களும்', 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்'. 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. இந்நான்கு நாவல்களும் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்தது. ஒரு பதிவுக்காக அந்நாவல்கள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப் பிரசுரமாகும்.

என் பால்ய காலம் வன்னி மண்ணில் கழிந்தது. என் மனதைக்கொள்ளை கொண்ட மண். நான் முதன் முதலில் எழுதத்தொடங்கியபோது அதன் காரணமாகவே என் பெயரின் முன்னால் வ என்னும் எழுத்தைச் சேர்த்து வ.ந.கிரிதரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். 'வன்னி மண்' நாவல் என் சொந்த அனுபவத்தையும், கற்பனையையும் கலந்து பின்னப்பட்டதொரு நாவல். கற்பனைப்பெயர்களை நீக்கி விட்டால் ஒரு வகையில் என் பால்ய காலத்துச் சுயசரிதை என்றும் கூடக்கூறலாம். அவ்வளவுக்கு இந்நாவல் என் சொந்த அனுபவங்களின் விளைவு என்பேன்.ஒரு சில திருத்தங்களுடன் மீள்பிரசுரமாகின்றது.


அத்தியாயம் பதினான்கு: காட்டில் கரடி!

காடு ஆரம்பமாகும் இடம் வந்தது. ஒற்றையடிப் பாதை தெரிந்தது. குமரன் பகடியாகக் கூறினான்.

"டே ராகவா. நல்லா ஒருக்கா ஆசை தீரத் திரும்பிப் பார்த்துக்கோ. காட்டுக்குள்ளை போனால். வரும் வரைக்கும் ஊரையோ மனிசங்களையோ பார்க்க முடியாது”

ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். அப்பொழுதுதான் முதன் முறையாக ஒருவித திகில் படர்ந்த உணர்வு நெஞ்சை வெட்டியோடியது. பயணத்தின் யதார்த்தம் புரிந்தது. காடு, பயங்கரமான மிருகங்கள் வசிக்கும் காடு! எந்தவிதப் பாதுகாப்புமில்லாமல் செல்கின்றோம். திரும்பி வருவோமா. ஒரு கணம் தான்! மறுகணமே நெஞ்சில் ஆர்வம் குடிகொண்டு விட்டது. புதியனவற்றைப் பார்க்கப் போகின்றோமே என்று சந்தோஷம் பரவியது. ஒருவித எதிர்ப்பார்ப்புடன், ஒருவித களிப்புடன் விரிந்திருந்த காட்டை ஊடறுத்த ஒற்றையடிப் பாதையினுள் காலடியெடுத்து வைத்தோம். மனித சஞ்சாரமேயற்ற புதியதோருலகினுள் மெல்ல நுழைந்து கொண்டோம். திரும்பின பக்கமெல்லாம் மரங்கள். பெரிய சிறிய, ஓங்கிய, வீங்கிய, மரங்கள், 'மிக்க நலமுடைய மரங்கள், பல விந்தைச் சுவையுடைய கனிகள். நெஞ்சிற் கனல் மணக்கும் பூக்கள். மதி வஞ்சித்திடு மகழிச்சுனைகள். முட்கள் மண்டித் துயர் கொடுக்கும் புதர்கள்” மலிந்த திக்குத் தெரியாத காடு. காலையிளஞ் சூரிய ஒளியினை பெருவிருட்சங்கள் மறைத்து விட்டன. இலேசாகத் தென்றல் வீசிக் கொண்டிருந்தது. பல்வேறு விதமான பறவைகளின் கீச்சொலிகள். இடையிடையே காற்றிலசையும் இலைகளின் ஓசைகள். தொலைவிலெங்கோ தாவிய மந்திகளின் ஒலிகள். இவை தவிர ஒருவிதமான மோன அமைதியெங்கும் பரவிக்கிடந்தது.

•Last Updated on ••Thursday•, 10 •August• 2017 09:36•• •Read more...•
 

'தேன்மொழி'க் கவிதைகள் - 1

•E-mail• •Print• •PDF•

சஞ்சிகை: தேன்மொழி

'நூலகம்' தளம் பல்வேறு வழிகளிலும் உதவி வருகின்றது. மிகவும் பயனுள்ள அரியதோர் ஆவணத்தளமாக 'நூலகம்' உருமாறி வந்திருக்கின்றது. அத்துடன் 'தேன்மொழி' சஞ்சிகையின் 'நூலகத்தில்' இதுவரை வலையேற்றப்படாத பிரதிகளையும் தந்துதவிய 'நூலகம்' கோபி அவர்களுக்கு நன்றி. 'தேன்மொழிக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைத்தொடரினை எழுதுவதற்கு அவரது இந்த உதவியே முக்கிய காரணம்.

தேன்மொழி சஞ்சிகை கவிதைக்காக வெளிவந்த முதலாவது சஞ்சிகை. மறுமலர்ச்சிக்காலப்படைப்பாளிகளே இச்சஞ்சிகைக்கும் தோற்றுவாய். மறுமலர்ச்சி சஞ்சிகையினை வெளியிட்ட எழுத்தாளர் தி.ச.வரதராஜனே தேன்மொழியின் நிர்வாக ஆசிரியராக விளங்கியவர். இணையாசிரியராக இருந்தவர் கவிஞர் மஹாகவி. 1955இல் நான்கு இதழ்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதழ்கள் வெளியாகியுள்ளனவா என்பது ஆய்வுக்குரிய விடயம். அத்துடன் 'நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நினைவுச்சின்னம்' என்னும் தாரக மந்திரத்துடன் எழுத்தாளர் தி.ச.வரதராஜனை நிர்வாக ஆசிரியராகவும், கவிஞர் மஹாகவியை இணை ஆசிரியராகவும் கொண்டு வெளியான சஞ்சிகை. சஞ்சிகையின் அட்டைப்படம் ஒவ்வொன்றும்  'தங்கத்தாத்தா' சோமசுந்தரப்புலவரின் கவிதை வரிகளைத் தாங்கி வெளியாகியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. சஞ்சிகையின் கடைசிப்பக்கத்தில் தேன்மொழியில் எழுதும் படைப்பாளிகளில் ஒருவரைப்பற்றியச் சுருக்கமான குறிப்பும் காணப்படுகின்றது. மேலதிக விபரங்கள்: அச்சு - ஆனந்தா அச்சகம். தேன்மொழி அலுவலகம்: 226 , காங்கேசன் துறை வீதி, யாழ்ப்பாணம், இலங்கை.  ஆண்டுக்கட்டணம் - ரூ. 3.00. தனிப்பிரதி 23 சதம்.

மறுமலர்ச்சி இதழ் மூலம் ஈழத்தமிழ் இலக்கியத்தில் கால்பதித்த தி.ச.வரதராஜன் (வரதர்) அவர்கள் முதலாவது கவிதைகளுக்காக மட்டும் வெளிவந்த முதலாவது சஞ்சிகையான தேன்மொழியினையும்  வெளியிட்டவர் என்னும் பெருமைக்குள்ளாகின்றார்.

•Last Updated on ••Monday•, 07 •August• 2017 10:38•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 259: அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'வில்லூன்றி மயானம்'

•E-mail• •Print• •PDF•

மல்லிகை ஆண்டு மலர் 1967அறிஞர் அ.ந.கந்தசாமிநூலகம் தளத்தினை மேய்ந்து கொண்டிருந்தபொழுது 'மல்லிகை' சஞ்சிகையின் 15.10.67 இதழ் ஆண்டு மலராக வெளிவந்திருந்தது கண்டேன். உள்ளடக்கத்தினைப் பார்த்தபொழுது அதில் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் (கட்டுரைகள், கவிதைகள் என) வெளிவந்திருந்ததை அறிய முடிந்தது. மேலும் மலரின் சிறப்பினை அதில் வெளிவந்திருந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'வில்லூன்றி மயானம்' என்னும் கட்டுரை அதிகரித்துள்ளது என்றே கூறுவேன். அ.ந.க மறைந்தது 14.02.1968இல். ஆனால் இக்கட்டுரை அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் அவர் எழுதிய கட்டுரை. அந்த வகையில் அவரது கடைசிக்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகளிலொன்றாக நான் இதனைக் கருதுகின்றேன். அ.ந.க.வின் இக்கட்டுரையை இப்பொழுதுதான் முதன் முறையாக அறிகின்றேன். அவரது படைப்புகளைச் சேகரித்துக்கொண்டிருக்கும் எனக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சி. நூலகத்துக்கும், மல்லிகைக்கும் நன்றி நன்றி.

1944இல் சாதியின் பெயரால் நடாத்தப்பட்ட 'வில்லூன்றி மயானப்படுகொலை' பற்றி 1944 நவம்பர் 9ந் தேதி 'தினகரன்' தினசரியில் அ.ந.க வில்லூன்றி மயானம் என்றொரு கவிதையை எழுதியிருக்கின்றார். அப்பொழுது அ.ந.க.வுக்கு வயது இருபது. அதன் பின்னர் மல்லிகையில் இக்கட்டுரையை எழுதும்போது அவருக்கு வயது 43.

அ.ந.க.வின் இக்கட்டுரை 'வில்லூன்றி மயானம்' மிகவும் முக்கியமானது பல விடயங்களில். அவரது அந்திமக் காலத்தில் வெளியான அவரது படைப்புகளில் ஒன்று என்ற வகையில், வில்லூன்றி மயானப் படுகொலையைப்பற்றிக் கவிதை எழுதிய அவர் அப்படுகொலை பற்றி எழுதிய கட்டுரை என்னும் வகையில் .. இவ்விதம் முக்கியம் வாய்ந்த கட்டுரை இது. இக்கட்டுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுவார்:  " வில்லூன்றி நிகழ்ச்சி எவ்வளவு முக்கியமான நிகழ்ச்சி. இருந்தும் அன்று என்னைத்தவிர வேறு எந்த ஆக்க எழுத்தாளனுமே அதைத் தன் எழுத்துக்குரிய பொருளாகக் கையாளவில்லை. யானோ அன்றே அந்நிகழ்ச்சியில் இன்றைய கொடிகாமத்தையும், அச்சுவேலியையும், சங்கானையையும் கண்டு விட்டேன். அன்று அந்நிகழ்ச்சி இருள் படிந்த ஓர் இடுகாட்டின் ஒரு மூலையில் நடைபெற்ற சிறு சம்பவம்.ஆனால் என்னைப்பொறுத்த வரையில் வில்லூன்றித் தீபபொறி நாளடைவில் ஒரு பேரியக்கமாக எரிய ஆரம்பிக்கும் என்று அப்போதே நான் நம்பினேன். அது வீண் போகவில்லை. வில்லூன்றியால் ஏற்பட்ட விழிப்பே - மரணத்தில் கூட எமக்குச் சமத்துவமில்லை என்ற அந்த எண்ணமே - நாளடைவில் யாழ்ப்பாணத்துச் சிறுபான்மைத் தமிழர் மகா சபைக்கு வித்திட்டது. அதனால் ஏற்பட்ட உரிமை உணர்வே இன்று புரட்சியாக யாழ்ப்பாணக்குடாநாட்டின் பல பகுதிகளிலும் வெடித்துக்கொண்டிருக்கிறது.

•Last Updated on ••Saturday•, 05 •August• 2017 12:50•• •Read more...•
 

தொடர்நாவல்: வன்னிமண் (10-13)

•E-mail• •Print• •PDF•

மண்ணின் குரல் (தொகுப்பு) - வ.ந.கிரிதரன்'தாயகம்' (கனடா) சஞ்சிகையில் வெளியான என் ஆரம்ப காலத்து நாவல்கள்: 'கணங்களும், குணங்களும்', 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்'. 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. இந்நான்கு நாவல்களும் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்தது. ஒரு பதிவுக்காக அந்நாவல்கள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப் பிரசுரமாகும்.

என் பால்ய காலம் வன்னி மண்ணில் கழிந்தது. என் மனதைக்கொள்ளை கொண்ட மண். நான் முதன் முதலில் எழுதத்தொடங்கியபோது அதன் காரணமாகவே என் பெயரின் முன்னால் வ என்னும் எழுத்தைச் சேர்த்து வ.ந.கிரிதரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். 'வன்னி மண்' நாவல் என் சொந்த அனுபவத்தையும், கற்பனையையும் கலந்து பின்னப்பட்டதொரு நாவல். கற்பனைப்பெயர்களை நீக்கி விட்டால் ஒரு வகையில் என் பால்ய காலத்துச் சுயசரிதை என்றும் கூடக்கூறலாம். அவ்வளவுக்கு இந்நாவல் என் சொந்த அனுபவங்களின் விளைவு என்பேன்.ஒரு சில திருத்தங்களுடன் மீள்பிரசுரமாகின்றது.


அத்தியாயம் பத்து: வன்னி மண் - மேலும் சில நினைவுகள்.

இச்சமயத்தில் வவுனியா நகர பொலிஸ் நிலையத்தைச் சுற்றி "சேகுவேரா இளைஞர்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக மண்மூடைகள் ஆங்காங்கே போடப் பட்டிருந்தன. ஒருமுறை இம்மண்மூடைகளை வேடிக்கை பார்த்தபடி வந்துகொண்டிருந்தபோது, வவுனியா நகரசபை மைதானத்தில் மூன்று ஹெலிகொப்டர்கள் வந்திறங்கின. 'சப்மெஷின்கன்களுடன் சிங்களச் சிப்பாய்கள் நகரசபை மைதானத்தைச் சுற்றியிருந்த கழிவுநீர் செல்வதற்காக வெட்டப்பட்டிருந்த கால்வாய் பகுதிக்குள் மறைந்து நின்று பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். முதன்முதலாக என் வாழ்வில் 'சப்மெஷின் கன்களைப் பார்த்தது அப்பொழுதுதான். அன்றிலிருந்து புரட்சி அடக்கப்பட்ட காலம் வரை அடிக்கடி புகையிரத நிலையங்களில், வீதிகளில், சிங்களச் சிப்பாய்கள் 'சப்மெஷின்கன்'களுடன் திரிவதைப் பார்ப்பது பழக்கமாகிவிட்டது. ஒரு சில சமயங்களில் மெஷின்கன் பொருத்தப்பட்ட திறந்த ஜிப்புகளில் சிங்களச்சிப்பாய்கள் செல்வார்கள். அவர்களை அவ்விதம் பார்ப்பது எங்களிற்கொரு வேடிக்கையான அனுபவம். எந்தவிதப் பயமும் எங்களிற்கேற்பட்டதில்லை. அவர்களும் தமிழர்களுடன் அன்பாக, இயல்பாக நடந்துகொண்டார்கள். சிங்கள இளைஞர்கள் விடயத்தில் மட்டும் எச்சரிக்கையாக, சந்தேகத்துடன் நடந்துகொண்டார்கள். இந்த சப்மெஷின்கன்'களைப்பற்றி நெடுநாள் எனக்கொரு சந்தேகமிருந்தது. இதன் குழலைப்பற்றி துளைகள் பல கொண்டதொரு பகுதியிருக்கும். குளிர்தன்மையைத் தருவதற்காக ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் முதன்முறையாக அதனைக் கண்டபோது பலவிதமான கதைகள் எங்களை ஈர்த்தன. அவற்றிலொன்று சமயத்தில் அந்தத் துளைகள் வரியாக ஐநூறு குண்டுகளைச் சுடலாமென்பதுதான். சிங்களப் போலிசாரைப் பொறுத்த வரையில் அவர்களை நான் 'சப்மெஷின்கன்” களுடன் கண்டதில்லை. வழக்கம்போல் நீண்ட 'ரைபிள்' தான் அவர்களது ஆயுதம்,இது அன்று. ஆனால் இன்றோ. .ஒரே மண். ஆனால் எத்தனைவிதமான நிகழ்வுகள். எல்லாவற்றிற்கும் சாட்சியாக அமைதியிலாழ்ந்து கிடக்கும் என் பிரியமான வன்னிமண்.

•Last Updated on ••Thursday•, 03 •August• 2017 22:54•• •Read more...•
 

மீள்பிரசுரம் ('ஞானம்' சஞ்சிகை): வ.ந.கிரிதரன் நேர்காணல். கண்டவர்: கே.எஸ்.சுதாகர்

•E-mail• •Print• •PDF•

- இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'ஞானம்' மாத சஞ்சிகையின் ஆகஸ்ட் 2017 இதழில் நேர்காணலின் முதற் பகுதி வெளியாகியுள்ளது. ஒரு பதிவுக்காக அது இங்கு மீள்பிரசுரமாகின்றது. -

வ.ந.கிரிதரன் நேர்காணல் (மின்னஞ்சல்வழி). கண்டவர்: கே.எஸ்.சுதாகர்

(வ.ந.கிரிதரன் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டிடடக்கலை பயின்றவர். இலங்கையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அதிகார சபை ஆகியவற்றில் பணிபுரிந்தவர். கனடாவிற்குப் புலம்பெயர்ந்த பின்னர் அங்கு இலத்திரனியல் பொறியியல் மற்றும் தகவல் தொழில்னுட்பத்துறையில் தகமைகள் பெற்றுள்ளார். சிறுகதை, கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி மற்றும் நாவல் என்ற துறைகளில் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். அத்துடன் 2000ஆம் ஆண்டிலிருந்து ‘பதிவுகள்’ (pathivukal - http://www.geotamil.com/)  என்னும் இணைய இதழையும் நடத்தி வருகின்றார். ‘’குடிவரவாளன்’ நாவல், ’அமெரிக்கா’ நாவல்/சிறுகதைகள் தொகுப்பு,, ‘மண்ணின் குரல்’ நான்கு நாவல்களின் தொகுப்பு , ’நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு’ , 'எழுக அதிமானுடா' (கவிதைத்தொகுப்பு) மற்றும் 'மண்ணின் குரல்' (நாவல் கட்டுரை மற்றும் கவிதைகளின் தொகுப்பு) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.)


மீள்பிரசுரம் ('ஞானம்' சஞ்சிகை):  வ.ந.கிரிதரன் நேர்காணல். கண்டவர்: கே.எஸ்.சுதாகர் மீள்பிரசுரம் ('ஞானம்' சஞ்சிகை):  வ.ந.கிரிதரன் நேர்காணல். கண்டவர்: கே.எஸ்.சுதாகர் 1. உங்கள் பெயரின் முதல் எழுத்துக்களான வ.ந என்பவை எதனைக் குறிக்கின்றன?

உண்மையைக் கூற வேண்டுமானால் நான் பால்யப் பருவத்தை வவுனியாவில் கழித்தேன். எனது ஆரம்பக் கல்வியை , ஏழாம் வகுப்பு வரை, வவுனியா மகா வித்தியாலயத்தில் மேற்கொண்டேன். எனது அம்மா , நவரத்தினம் டீச்சர், அங்கு ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அக்காலகட்டத்தில் எங்கள் வீடு முழுவதும் தமிழகத்தில்  வெளியான பத்திரிகை, சஞ்சிகைகளால் குவிந்து கிடந்தது. ஈழத்துப்பத்திரிகைகளான ஈழநாடு, சுதந்திரன் பத்திரிகைகளும் அவற்றில் அடங்கும். அப்பாவே என் பால்யகாலத்து வாசிப்புப் பழக்கத்துக்கு முக்கிய காரணம். எனக்கு எழுத வேண்டுமென்ற ஆர்வம் அதனாலேயே ஆரம்பமானது. வவுனியா குளங்கள் மலிந்த , இயற்கை வளம் மிக்க மண். நாங்கள் அப்பொழுது வசித்து வந்த குருமண்காடு பகுதி ஒற்றையடி பாதையுடன் கூடிய , வனப்பிரதேசம். பட்சிகளும், வானரங்களும் இன்னும் பல்வகைக் கானுயிர்களும் நிறைந்த பகுதி. அதன் காரணமாகவே ந.கிரிதரன், கிரிதரன் என்று மாணவப்பருவத்தில் எழுத்துலகில் காலடியெடுத்து வைத்த எனக்கு வன்னி மண்ணான வவுனியாவின் முதலெழுத்தை என் பெயருடன் சேர்க்க வேண்டுமென்ற ஆர்வமெழுந்தது. அதன் விளைவாகவே அக்காலகட்டத்தில் வ என்னும் எழுத்தை என் பெயரின் முன்னால் சேர்த்து எழுத ஆரம்பித்தேன். ந.என்பது என் தந்தையாரான நவரத்தினத்தைக் குறிக்கும். இதிலொரு ஆச்சரியம் என்னவென்றால் நான் பிறந்த இடம், என் தந்தையார் பிறந்த இடம் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை. அதன் முதல் எழுத்தும் வ. அந்த வகையிலும் வ.ந. என்பது பொருந்திப் போகின்றது. இருந்தாலும் வ என்னும் எழுத்தை நான் தேர்வு செய்ததற்குக் காரணம் வவுனியாவும் இயற்கை வளம் மலிந்த வன்னி மண்ணுமே. அப்பொழுது நான் நான் பிறந்த இடம் வண்ணார்பண்ணை என்பதற்காகத் தெரிவு செய்யவில்லை. ஏனென்றால் அப்பெயரில் எழுதத்தொடங்கியபோது நான் பதின்ம வயதினைக்கூட அடைந்திருக்கவில்லை. நான் அப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்த , எனக்கு மிகவும் பிடித்த வன்னி மண்ணான வவுனியா என்பதால், அதன் முதல் எழுத்தினை என் பெயரில் முன் சேர்க்க வேணடுமென்ற எண்ணமே எனக்கு அப்போதிருந்தது. ஆனால் அவ்விதம் தேர்வு செய்த வ நான் பிறந்த, என் தந்தையார் பிறந்த ஊரின் பெயரின் முதலெழுத்துடன் இணைந்து போனது தற்செயலானது.

•Last Updated on ••Friday•, 01 •September• 2017 12:19•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 258: 32 நாடுகளைச்சேர்ந்த 1000 கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு!

•E-mail• •Print• •PDF•

1000 கவிஞர்களின் கவிதைத்தொகுப்புஎழுத்தாளர் யோ.புரட்சி32  நாடுகளைச்சேர்ந்த 1000 தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து செல்லமுத்து வெளியீட்டகம் (வள்ளுவர்புரம்) என்னும் பதிப்பகம் வெளியிடவுள்ளது. இத்தொகுப்பின் வெளியீட்டுக்கான செயலியக்குநராக இருக்கின்றார் இளம் எழுத்தாளர் யோ.புரட்சி. ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டத்தில் பங்கு பற்றி, சிறை சென்று மீண்டு வந்த இவரைப்போன்ற பலர் தமிழ் இலக்கியத்தில் தம்மை ஈடுபடுத்தித் தடம் பதித்து வருவது பாராட்டத்தக்கது. இதுபோன்றதொரு தொகுப்பு சங்க காலத்தொகுப்புகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் இவ்வளவு எண்ணிகையான கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கி வெளிவருவதாக நான் கருதுகின்றேன்.

பொதுவாகக் குழுக்களாக இயங்கும் அமைப்புகளால், எழுத்தாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளே வெளிவருவதால் பெரும்பாலும் இலை, மறை காயாக இருக்கும் கவிஞர்கள் பலரின் கவிதைகளை அத்தகைய தொகுப்புகளில் காண முடிவதில்லை. இவ்விதமானதொரு சூழலில் 1000 தமிழ்க்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு என்பது இக்காலகட்டத்தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை வரலாற்றில் ஆவணப்படுத்தும் தொகுதியாக நிச்சயமாக விளங்குமென்று கருதுகின்றேன்.

இன்று எவ்விதம் நூற்றுக்கணக்கான சங்ககாலக் கவிஞர்களின் கவிதைகளை ஆவணப்படுத்தி எமக்கு வெளிப்படுத்தும் அகநானூறு, புறநானூறு, நற்றினை, ஐங்குறுநூறு  போன்ற சங்க காலத்துத் தொகுப்புகள்  விளங்குகின்றனவோ அவை போன்று இத்தொகுப்பும் விளங்கும். இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்களின் பின்னரும் இக்காலகட்டத்துத் தமிழ்க்கவிஞர்களை அவர்களது கவிதைகளுடன் எதிர்காலத்துத் தமிழர்களுக்கு  அறிமுகப்படுத்தும்  தொகுப்பாக இத்தொகுப்பு  விளங்கும். வாழ்த்துக்கள். இவ்விதமானதொரு தொகுப்புக்காகத் தன் கடும் உழைப்பை வழங்கும் எழுத்தாளர் யோ.புரட்சியின் முயற்சி நிச்சயம் வெற்றியடையும். கடும் உழைப்புக்கேற்ற பயன் நிச்சயம் கிடைக்கும். வாழ்த்துக்கள்.

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Monday•, 31 •July• 2017 01:14••
 

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும் ! - பகுதி 2: அகிலாவின் கதை (1 - 5)

•E-mail• •Print• •PDF•

- தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். இந்த நாவல் பிறந்த கதை தற்செயலானது. என்னுடைய பால்ய காலத்து நண்பர்களிலொருவர் கீதானந்தசிவம் சிவனடியான். இவர் யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். பலவருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் நன்மை, தீமை பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் எனக்கு இந்நாவலின் மையக்கருத்து மனதிலுதயமானது. எதற்காக மனிதர்கள் தவறுகள் செய்கின்றார்கள்? என்ற கேள்வியின் விளைவாக எழுந்த தர்க்கமே 'கணங்களும், குணங்களும்' நாவலாக உருவெடுத்தது. ஒரு சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக 'பதிவுகளி'ல் வெளியாகின்றது.


பகுதி இரண்டு  - அகிலாவின் கதை: அத்தியாயம் ஒன்று -   குழம்பிய நெஞ்சம்

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி ஒன்று - கருணாகரன் கதை ( 1-6)படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தது தான் மிச்சம். நித்திரையோ வரவே மாட்டேன் என்கிறது. இரவோ நள்ளிரவையும் தாண்டி விட்டது. அப்பா கூடத்தில் குறட்டை விட்டுத் தூங்குவது இலேசாகக் கேட்கிறது. என் நெஞ்சிலோ அமைதியில்லை. அமைதி எப்படி வரும்? நத்து ஒன்று விட்டு விட்டுக் கத்துவது இரவின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு காதில் கேட்கிறது. மீண்டுமொரு முறை புரண்டு படுக்கிறேன். பல்வேறு வகைப்பட்ட எண்ணங்கள். எண்ணங்கள். மனது அன்று மாலை குளக்கரையில் நடந்த சம்பவத்தையே அசை போட்டபடி. கருணாகரனின் உருவம் நெஞ்சில் வந்து சிரிக்கின்றது. உயர்ந்து திடகாத்திரமான அந்த உருவம். இதயத்தையே துளைத்து விடும் அந்தக் கண்கள். சதா சிந்தனையிலேயே மூழ்கிவிடும் அந்த அழகு வதனம். என்னால் நம்பவே முடியவில்லை. நம்பாமலிருக்கவும் முடியவில்லை. கருணாகரன் சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளி என்பது முன்பே தெரிந்து தானிருந்தது. ஆனால் அவன் செய்த குற்றம் இத்தகைய கொடுமையானதாயிருக்குமென்று நான் கனவில் கூட எண்ணியிருக்கவில்லை. தன் குழந்தையைப் போல அவனை வளர்த்து வந்த சுப்பிரமணிய வாத்தியாரிற்கு அவன் செய்த கைம்மாறு. காயத்ரீக்கு அவன் செய்த மன்னிக்கவே முடியாத அந்தக் கொடுமை. எப்படி அவனால் அவ்விதம் செய்ய முடிந்தது. கருணாகரன். எழுத்தாளன் நீலவண்ணனின் மறுபக்கம் இத்தனை கொடுமையானதாயிருக்க வேண்டும். என்னால் நம்பவே முடியவில்லையே. அவன் முகத்தில் விழிப்பதே பாவம் போலவிருக்கின்றது. பெண்களின் உணர்வுகளைச் சிறிதும் மதிக்காத ஆண்கள் வாழும் உலகின் ஒரு பிரதிநிதிதானே அவனும். செய்த தவறிற்காக அவன் மனம் வருந்துவது உண்மையாக இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம். ஆனால் சிதைந்துவிட்ட காயத்ரீயின் வாழ்வு. நடைப்பிணமாகவே மாறிவிட்ட சுப்பிரமணிய மாஸ்டரின் நிலைமை. கருணாகரன் மேல் வெறுப்பு வெறுப்பாக வந்தது. செய்த பாவங்களிற்குப் பரிகாரமாகத்தான் சமூகவேலை. அது இதென்று அலைகின்றானோ. இருக்கலாம். சிந்தித்து சிந்தித்து புரண்டு புரண்டு படுத்தது தான் மிச்சம். தெளிவுபெறுவதற்குப் பதில் மேலும் மேலும் குழம்பிப்போனதுதான் மிச்சம். எங்கோ ஒரு சேவல் கூவியது. அதனைத் தொடர்ந்து இரண்டு மூன்று சேவல்களின் கூவல்கள்.தொடர்ந்து இரவின் நிசப்தம்.இப்படித்தான் சிலவேளைகளில் சில சேவல்கள் நேரம் மாறிக் கூவிவிடுகின்றன. சிந்திக்கச் சிந்திக்க ஆரம்பத்தில் கருணாகரன் மேல் இருந்த வெறுப்பு சிறிதுசிறிதாக குறைவதுபோல் பட்டது. மனிதர்கள் அடிக்கடி தவறு செய்துவிடுகிறார்கள். சிலவேளைகளில் செய்யும் தவறுகள் சிறிதாக இருந்துவிடுகின்றன. இன்னும் சிலவேளைகளிலோ பெரிதாக இருந்துவிடுகின்றன. ஆனால் செய்ததென்னவோ தவறு தவறு தானே. மனிதனின் மனதில் நல்ல உணர்வுகளும் கெட்ட உணர்வுகளும் உறைந்து கிடக்கின்றன. சில கணங்களில் சில கெட்ட குணங்கள்,உணர்வுகள் ஆட்சி செலுத்தி விடுகின்றன. அந்தக் கணங்களில் மனிதன் தன் மனிதத்துவத்தை இழந்து மிருகமாகி விடுகிறான். பின்னால் கிடந்து வேதனையினால் வெந்து துடித்துப் போகின்றான். கருணாகரனின் கதையும் இதுதானே.

•Last Updated on ••Sunday•, 30 •July• 2017 22:02•• •Read more...•
 

தொடர் நாவல்: மண்ணின் குரல் (6 -10)

•E-mail• •Print• •PDF•

நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன் -- 1984  இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'.  'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா)  வெளியீடாக ஜனவரி 1987இல்  கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல்.  இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல்  'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.  ஒரு பதிவுக்காகப் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -


அத்தியாயம் ஆறு: கமலா எங்கே?

நாட்கள்தான் எவ்விதம் உருண்டோடி விடுகின்றன. 'காலம் தான் காத்து நிற்பதில்லையே. கமலா ஆஸ்பத்திரியில் இருந்து வீடு வந்து ஏறத்தாள ஒரு வாரம் கழிந்து விட்டது. இந்த ஒரு வாரமாக அவளடைந்த  மன வேதனை  வார்த்தையில் அடங்காது. கிராமத்தவர்கள் ஒவ்வொரு நாளும் மாறி மாறி வந்தபடி ஆறுதல் கூறி விட்டுச் சென்றார்கள். நடராஜா வாத்தியாரோ எதிலுமே பற்றற்றவராய் சுருட்டொன்றைப் புகைத்தபடி திண்னையில் குந்திவிடுவாராயின் அவரை எழுப்புவதே பெரும்பாடாகப் போய்விடும். சாரதாதான் 'அப்பு உள்ளுக்கு வந்து இரணை”. என்று வற்புறுத்தி ஒரு மாதிரி அவரை உள்ளுக்குள் கொண்டு வந்து விடுவாள். அதன் பிறகுதான் அவளுக்கு ஓரளவாவது ஆறுதல். கமலாவின் போக்கும் முன்பு மாதிரியில்லை. பெரிதும் மாறித்தான் போய்விட்டாள். சாரதாவே வீட்டு வேலைகளையெல்லாம் கவனித்துக் கொண்டாள். எவ்வளவுதான் முற்போக்காய் இருந்தபோதிலும் கமலாவால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவளை அச்சம்பவம் பெரிதும் பாதித்து விட்டது.

எந்நேரமும் சிந்தனையில் மூழ்கியவளாகவேயிருந்தாள். ஒருகணம் "இனியும் நான் வாழ்வதில் என்ன பயன்?" என எண்ணுவாள். மறுகணமே "நான் சாவதால் மட்டும் பெண்களின். எம் தமிழ்ப் பெண்களின் அவலநிலை மாறிவிடுமா?" இவ்விதம் எண்ணமிடுவாள். 'இதுவரையில் ஈஸ்வரனின் நினைவொன்றுடன் வீட்டிற்காக உழைத்தேன். ஆனால் இனிமேலும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு பழைய வாழ்வினில் என்னால் இறங்கவே முடியாது. பெண்களும் அக்கிரமங்களுக்கெதிரான போரில் ஆண்களுடன் சேர வேண்டிய காலம் வந்துவிட்ட்து'. முரண்பட்ட எண்ணப் போக்குகளுக்குள் சிக்கியவளாக அலைமோதிக் கொண்டிருந்த கமலாவின் நிலையோ பரிதாபத்திற்குரியதாக இருந்தது. இதே சமயம் சிங்கள இராணுவத்தினரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயிருந்தன. நீண்டதொரு தற்காப்பு போர் முறையைப் பற்றியதொரு சிந்தனைக்குச் சகல தமிழர்களும் தள்ளப்பட்டிருந்தார்கள். உணர்ச்சி வெறியில் மேற்கொள்ளப்படும் சிங்கள இராணுவத்தினர் மீதான சிறுதாக்குதல்கள் ஏற்படுத்திய அழிவுகள் தமிழ் மக்களை விடுதலைப் போராட்டம் பற்றிய தீவிர சிந்தனைக்குத் தள்ளியது. பல்வேறு வகைப்பட்ட சித்தாந்த வேறுபாடுகளைக் கொண்டதாக விளங்கிய விடுதலை இயக்கங்களைப் பற்றி நன்கு புரிந்து எடை போடுவதற்கு முதன் முதலாக சகல தமிழர்களும் முயன்றார்கள். நாளுக்கு நாள் சீர்குலைந்து கொண்டுவந்த தமிழீழத்தின் நிலமை தமிழர்களை ஒற்றுமையின் அவசியம் பற்றியும் நீண்ட கால தற்பாதுகாப்புடன் கூடியதொரு போர்முறை பற்றியும் முன்னெப்போதையும் விட மிக அதிகமாகவே இப்போது சிந்திக்க வைத்தன.

•Last Updated on ••Thursday•, 03 •August• 2017 22:39•• •Read more...•
 

தொடர்நாவல்: வன்னி மண் (6 - 9)

•E-mail• •Print• •PDF•

மண்ணின் குரல் (தொகுப்பு) - வ.ந.கிரிதரன்'தாயகம்' (கனடா) சஞ்சிகையில் வெளியான என் ஆரம்ப காலத்து நாவல்கள்: 'கணங்களும், குணங்களும்', 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்'. 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. இந்நான்கு நாவல்களும் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்தது. ஒரு பதிவுக்காக அந்நாவல்கள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப் பிரசுரமாகும்.

என் பால்ய காலம் வன்னி மண்ணில் கழிந்தது. என் மனதைக்கொள்ளை கொண்ட மண். நான் முதன் முதலில் எழுதத்தொடங்கியபோது அதன் காரணமாகவே என் பெயரின் முன்னால் வ என்னும் எழுத்தைச் சேர்த்து வ.ந.கிரிதரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். 'வன்னி மண்' நாவல் என் சொந்த அனுபவத்தையும், கற்பனையையும் கலந்து பின்னப்பட்டதொரு நாவல். கற்பனைப்பெயர்களை நீக்கி விட்டால் ஒரு வகையில் என் பால்ய காலத்துச் சுயசரிதை என்றும் கூடக்கூறலாம். அவ்வளவுக்கு இந்நாவல் என் சொந்த அனுபவங்களின் விளைவு என்பேன்.ஒரு சில திருத்தங்களுடன் மீள்பிரசுரமாகின்றது.


அத்தியாயம் ஆறு: புயல் தந்த நண்பர்கள்!

இந்தப்புயலினால் ஏற்பட்ட முக்கியமான மாற்றம், சிலாபம் நீர்க்கொழும்பு பகுதிகளிலிருந்தெல்லாம் தமிழர்கள் பெருந்தொகையாக வந்து குடியேறத் தொடங்கிவிட்டார்கள். காட்டை அழிக்கும் வேலையைப் புயல் ஏற்கனவே செய்துவிட்டிருந்தது. குடியேறுவதற்குப் பெரிதும் துணையாக விருந்தது. எங்கள் வீடுகளைச் சுற்றி ஆங்காங்கே குடிசைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. அதுவரை காலமும் மனித நடமாட்டம் குன்றித் தனிமையிலிருந்த குருமண் காட்டுப் பிரதேசத்தின் நிலைமை மாறிவிட்டது. புதிய மனிதர்களின் வரவு அப்பகுதிக்குக் கலகலப்பை ஏற்படுத்திவிட்டது. அப்படி வந்தவர்களில் சிலரும் உண்மையில் கலகலப்பானவர்களாகத்தானிருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் ஆறுமுகம். ஆறுமுகம் குடும்பம் நீர்க்கொழும்புப் பகுதியிலிருந்து வந்திருந்தது. ஆறுமுகத்திற்கு ஐந்து பிள்ளைகள்; இரண்டு பெண்கள். மூன்று ஆண்கள். மூத்த பெண்ணைத் தவிர மற்றெல்லோரும் ஏறத்தாழ எங்கள் வயதை ஒத்தவர்கள். இந்தப்புயலால் வந்த இன்னுமொரு இலாபம் எமக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்.

•Last Updated on ••Saturday•, 29 •July• 2017 13:07•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 257: செழியனின் 'ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து..' (வானத்தைப் பிளந்த கதை) மற்றும் மஹாஸ்வேதாதேவியின் 'இலக்கம் 1084இன் அம்மா'

•E-mail• •Print• •PDF•

செழியனின் 'ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து..' (வானத்தைப் பிளந்த கதை)

கவிஞர் செழியன்ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து...சிறந்த நாவல்கள் பலவற்றின் தொடக்க வசனங்கள் முக்கியமானவை. வாசகர்களைத் தட்டியெழுப்பி வாசிப்பிற்குள் மூழ்க வைப்பவை. மிகவும் புகழ் பெற்ற நாவல்களிலொன்றான 'ஹெர்மன் மெல்வில்லின்' 'மோபி டிக்' நாவலின் முதல் வசனம் 'என்னை இஸ்மாயில் என்று அழையுங்கள்' (Call me Ishmael)  என்று தொடங்கும். மறக்க முடியாத முதல் வசனத்தை உள்ளடக்கிய நாவல்களில் மோபி டிக்'கிற்கு முக்கியமானதோரிடமுண்டு.

இன்னுமொரு நாவலின் தொடக்கமும் வாசகர்களைத் தட்டெயெழுப்பி நாவலுக்குள் மூழ்க வைக்கும் தன்மை மிக்கது. அது காஃப்காவின் புகழ் பெற்ற நாவலான 'உருமாற்றம்' (The Metamorphosis) அதன் நாயகனான 'கிரகர் சம்சா'வைப்பற்றி வர்ணிப்பதுடன் நாவல் தொடங்கும். அது வருமாறு:  "ஒரு காலைப்பொழுதில் கிரகர் சம்சா தொல்லைகள் நிறைந்த கனவுகளிலிருந்து விழித்தபோது அவன் தனது படுக்கையில் பூச்சி போன்ற பயங்கரமானதொரு உயிரினமாக மாறியிருப்பதைக் கண்டான்" (One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin)

சில நாவல்கள் அல்லது படைப்புகளின் முடிவுகளும் வாசகர்களைச் சுண்டியிழுப்பதாக, நெஞ்சில் நிலையாக உறைந்து விடுவதாக அமைந்து விடும். அண்மையில் கவிஞர் செழியனின் 'வானத்தைப்  பிளந்த கதை (ஈழப்போராட்ட நாட்குறிப்புகள்) ' அத்தகையதொரு படைப்பு. இது கவிஞர் செழியனின் ஒரு குறிப்பிட்ட காலத்துச் சுயசரிதை. தாயகம் (கனடா)வில் 'ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து'  என்று தொடராக வெளிவந்து 'கனேடியன் நியூபுக் பப்பிளிகேசன்' (ரொறொன்ரோ) பதிப்பகத்தால் அதே பெயரில் நூலாகவும் வெளியிடப்பட்டது. பின்னர் 'காலம்' சஞ்சிகையின் 'வாழும் தமிழ்' வெளியீடாக 'வானத்தைப் பிளந்த கதை' என்று மீண்டும் வெளியானது.  இந்நூல் பின்வருமாறு முடிகின்றது. நெஞ்சத்தைத்தொடும் முடிவு. புகலிடம் நாடிப் பிறந்த மண்ணை விட்டுப் பிரியும் மானுடர் அனைவரையும் சுண்டியிழுக்கும் முடிவு.

•Last Updated on ••Friday•, 28 •July• 2017 18:41•• •Read more...•
 

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி 1 - கருணாகரன் கதை ( 1-6))

•E-mail• •Print• •PDF•

- தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். இந்த நாவல் பிறந்த கதை தற்செயலானது. என்னுடைய பால்ய காலத்து நண்பர்களிலொருவர் கீதானந்தசிவம் சிவனடியான். இவர் யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். பலவருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் நன்மை, தீமை பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் எனக்கு இந்நாவலின் மையக்கருத்து மனதிலுதயமானது. எதற்காக மனிதர்கள் தவறுகள் செய்கின்றார்கள்? என்ற கேள்வியின் விளைவாக எழுந்த தர்க்கமே 'கணங்களும், குணங்களும்' நாவலாக உருவெடுத்தது. ஒரு சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக 'பதிவுகளி'ல் வெளியாகின்றது. -


தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி ஒன்று - கருணாகரன் கதை ( 1-6)பகுதி ஒன்று: கருணாகரன் கதை

அத்தியாயம் ஒன்று: ஒரு பயணத்தின் தொடக்கம்


ஏழு வருடங்கள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை அவ்வளவு விரைவாகக் காலம் ஒடிக்கொண்டிருக்கிறது. இரவும் பகலும் மழையும் வெயிலும்.பருவங்கள் மாறியபடி கூடவே காலமும் விரைந்தபடி...முடிவற்ற வாழ்வின் பயணங்களிற்கு முடிவு தானேது. விடிவும், முடிவும், முடிவும். விடிவும்.தொடக்கமே முடிவாகவும் முடிவே தொடக்கமாகவும்.தொடரும் பயணங்கள். தொடர்ந்தபடி.தொடர்ந்தபடி. என் வாழ்க்கையில் எதிர்பாராமல் எதிர்ப்பட்டுவிட்ட.கடந்த ஏழு வருடங்கள் வாழ்வில் மறக்கமுடியாதபடி..ஒரு விதத்தில் களங்கமாகப் படிந்துவிட்ட காலத்தின் சுழற்சிகள்.எதற்காக? ஏன்? இவ்விதம் ஏற்பட்டது. சிந்தித்துப் பார்க்கிறேன். சில சந்தர்ப்பங்களில் சில தவறுகள் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்து விடுகின்றன. உள் மனத் தூண்டுதல்களின் ஆவேசத் தூண்டுதலின் முன்னால் அறிவு அடிபணிந்து விடுகிறபோதுகளில் தவறுகள் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்து விடுகின்றன. செய்துவிட்ட தவறுகளிற்காகப் பின்னால் மனது கிடந்து அடித்துக் கொண்டுவிட்டபோதும். நடந்த தவறு என்னவோ நடந்ததுதானே. அதன் பாதிப்பும் விளைவுகளும் ஏற்படுத்திவிடும் ஆழமிக்க காயங்களிற்கு மருந்து.

பஸ் விரைந்து கொண்டிருக்கின்றது. வவுனியாவை நோக்கி.பின்புறத்தில்.மூலைசீட்டில் அமர்ந்தபடி யன்னலினூடு விரையும் காட்சிகளைப் பார்த்தபடி, சிந்தனையில் மூழ்கியவனாக சிலையாக உறைந்து போய்க்கிடக்கின்றேன். எத்தனை விதமான மனிதர்கள். எத்தனை விதமான சிந்தனைகள். உரையாடல்கள். அத்தனை பேரையும் தாங்கிக் கொண்டு அடிக்கொரு தரம் தரிப்பிடங்களில் இறங்க வேண்டியவர்களை இறக்கி, ஏற வேண்டியவர்களை ஏற்றி.வெற்றிலையைக் குதப்பித் துப்பியவாறே "அண்ணே ரைட்" என்ற கண்டக்டரின் குரலுடன்.குலுக்கலுடன் பஸ் விரைந்து கொண்டிருந்தது. பழைய நினைவுகளில் மனது மூழ்கிப் போய்விடுகின்றது. கடந்த ஏழு வருடங்களாக நேற்றுவரை நானொரு சிறைப்பறவை. நான் செய்து விட்ட அந்தக் குற்றத்திற்கு இந்த எழு வருடங்கள் போதவே போதாது. ஏழேழு பிறவிகள் எடுத்தாலும் தீரக்கூடிய பாவத்தையா நான் செய்திருக்கின்றேன். எந்த ஒரு நாகரீக மனிதனுமே செய்யக்கூசுகின்ற அஞ்சுகின்ற அந்தக் காரியத்தைச் செய்ய என்னால், மக்களிற்காக வாழ்ந்து மடிந்த தியாகி ராஜரத்தினத்தின் மகனால் எப்படி முடிந்தது? எப்படி முடிந்தது?

•Last Updated on ••Thursday•, 03 •August• 2017 22:40•• •Read more...•
 

தொடர் நாவல்: மண்ணின் குரல் (1 -5)

•E-mail• •Print• •PDF•

நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன் -- 1984  இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'.  'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா)  வெளியீடாக ஜனவரி 1987இல்  கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல்.  இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல்  'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.  ஒரு பதிவுக்காகப் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -


அத்தியாயம் ஒன்று: கமலா டீச்சர்!

மாரி தொடங்கிவிட்டதால் கடந்த இரு மாதங்களாகவே மப்பும் மந்தாரமாகத்தான் வானம் இருண்டு கிடக்கின்றது. தமிழரின் வாழ்வைப்போல், வேளைக்கே இருண்டுவிடும் பொழுதுகளில், கும்மிருளைக் கிழித்தபடி கவசவாகனங்கள் விரைவதும், கொள்ளிவாற் பிசாசுகளால் கிராமங்கள் எரிவதும்.ஆதிகாலத்தில் ‘கொள்ளிவாற் பிசாசுகளை சேற்றிலுருவாகும் வாயு ஒன்றின் விளைவே என்பதனை அறியாத மானுடர்கள் மருண்டு திரிந்தார்கள். இன்றும் 'கொள்ளிவாற் பிசாசுகளின் நடமாட்டம் தமிழீழமெங்கனுமே அதிகமாகத்தான் இருக்கின்றது.ஆமாம். இவையும் ஒருவிதச் சேற்றில்தான் உருவாகின்றன.இனவாதச்சேற்றில் உருவான 'கொள்ளிவாற் பிசாசுகள் இவை, விரைவாக வீடுசேரும் அவசரத்தில் கமலா, வயல் வெளிகளினூடே நீண்டிருக்கும் அச்சாலையில் தனிமையில் வந்து கொண்டிருந்தாள். இலேசாக இருண்டுவிட்டது. மழை வேறு மெல்லிய தூறலாக துமித்தபடி இருந்தது.ஏதோ ஒருவிதச் சோகத்தில் ஆழ்ந்திருப்பதைப்போல் பனை மரங்களெல்லாம் மெளனித்துக் கிடக்கின்றன. வழக்கமாக ஒருவித ஆனந்தத்தில் எக்காளமிடும் தவளைகள் கூட சுருதிகுறைத்து சோககீதம் இசைத்தபடி இருக்கின்றன.

கமலா ஒரு நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த இளமாது. வட்டுக்கோட்டையிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகக் கடமையாற்றுகிறாள். அவளது தந்தையும் ஒரு தமிழாசிரியரே! அவளிற்கடுத்து மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரனும் இருக்கின்றார்கள். அவளிற்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் குடும்பநிலைமை காரணமாக கிடைத்த ஆசிரியை வேலையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டாள். அவளிற்கடுத்த இரு சகோதரிகளும் பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருக்கிறார்கள். இளவயதிலேயே தாயை இழந்து விட்ட குடும்பத்தில் அவளே தாயாக, தமக்கையாக விளங்கினாள். கடைசித் தங்கையும், தம்பியும் பல்கலைக்கழக புகுமுக வகுப்பில் கல்வி பயின்று கொண்டிருக்கின்றார்கள்.

•Last Updated on ••Friday•, 28 •July• 2017 00:16•• •Read more...•
 

தொடர் நாவல்: வன்னி மண் (1 - 5)!

•E-mail• •Print• •PDF•

மண்ணின் குரல் (தொகுப்பு) - வ.ந.கிரிதரன்'தாயகம்' (கனடா) சஞ்சிகையில் வெளியான என் ஆரம்ப காலத்து நாவல்கள்: 'கணங்களும், குணங்களும்', 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்'. 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. இந்நான்கு நாவல்களும் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்தது. ஒரு பதிவுக்காக அந்நாவல்கள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப் பிரசுரமாகும். முதலில் 'வன்னி மண்' நாவல் பிரசுரமாகும்.  அதனைத்தொடர்ந்து ஏனைய நாவல்கள் பிரசுரமாகும்.

என் பால்ய காலம் வன்னி மண்ணில் கழிந்தது. என் மனதைக்கொள்ளை கொண்ட மண். நான் முதன் முதலில் எழுதத்தொடங்கியபோது அதன் காரணமாகவே என் பெயரின் முன்னால் வ என்னும் எழுத்தைச் சேர்த்து வ.ந.கிரிதரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். 'வன்னி மண்' நாவல் என் சொந்த அனுபவத்தையும், கற்பனையையும் கலந்து பின்னப்பட்டதொரு நாவல். கற்பனைப்பெயர்களை நீக்கி விட்டால் ஒரு வகையில் என் பால்ய காலத்துச் சுயசரிதை என்றும் கூடக்கூறலாம். அவ்வளவுக்கு இந்நாவல் என் சொந்த அனுபவங்களின் விளைவு என்பேன்.


'மண்ணின் குரல்' தொகுப்புக்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய அறிமுகக் குறிப்பு:

அறிமுகம்: திரு கிரிதரன் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி நன்கு அறிமுகமானவர். பின்னர் புலம்பெயர்ந்து கனடா சென்று தமது படைப்பாற்றலை அங்கும் தொடர்ந்து ஈழத்திலும் வெளிப்படுத்தி வந்துள்ளார். அத்துடன் நின்றுவிடவில்லை. தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தமிழர் தொழில்முறையாகவும் புலம்பெயர்ந்தும் வாழும் உலக நாடுகளிலெல்லாம் அறிமுகமானார். ஆயினும் நான்கு குறுநாவல்கள் அடங்கிய இத் தொகுதியே அன்னாரின் படைப்பாற்றலையும் எழுத்து வன்மையையும் எளிதில் அளவிடக்கூடியதாக அமைந்துள்ளது எனக்கூறலாம். அவரது எழுத்துக்களில் இயற்கையின் ஈடுபாட்டையும் வர்ணனையையும் பரந்து காணலாம். கவிஞர்களால் என்றும் இயற்கையின் அழகையும் எழிலையும் மறந்து விடமுடியாது என்றே கூறத்தோன்றுகிறது. 'வன்னி மண் வெறும் காடுகளின்,  பறவைகளின் வர்ணனை மட்டுமல்ல. அந்த மண்மேல், ஈழத்து மண்மேல் அவர்கொண்ட பற்றையும் கூறும். வன்னி மண் நாவலில் மட்டும் இப்போக்கு என்று கூறுவதற்கில்லை. மற்றைய மூன்று நாவல்களிலும் கூட அவரது கவித்துவப் பார்வையைக் காணலாம். அடுத்தது, மனிதாபினமானமும், செய் நன்றி உணர்வும், தவறு நடந்தபோதும் அவரது கதை மாந்தர்களின் பச்சாதாப உணர்வு முதன்மை பெற்று நிற்பதையும் நான்குகதைகளிலும். 'வன்னி மண் சுமணதாஸ் பாஸ், "அர்ச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலிலும் வரும் சிறுவன், டீச்சர், கணங்களும் குணங்களில் வரும் கருணாகரன் மண்ணின் குரலில் வரும் கமலா யாவரிலும் தரிசிக்கலாம்.

•Last Updated on ••Thursday•, 27 •July• 2017 15:56•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 256: அண்மைய நல்லூர் சூட்டுச் சம்பவங்கள் பற்றி....

•E-mail• •Print• •PDF•

Surgent Sarath Hemachandraநீதிபதி இளஞ்செழியன்யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் யாழ் நீதிபதி இளஞ்செழியனைக் காப்பாற்றத் தன் உயிரைக்கொடுத்ததாக, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன் சரத் ஹேமச்சந்திரா பற்றிச் செய்திகள் ஊடகங்களில், சமூக ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற முறையினைப் பார்க்கும்போது இச்சம்பவம் தற்செயலாக நிகழ்ந்த சம்பவங்கள் எதிர்பாராமல் விரிவடைந்ததன் அடிப்படையில் நிகழ்ந்தது போல்தான் தெரிகிறது. இச்சம்பவத்தில் உடனடியாக நீதிபதி இளஞ்செழியனை நோக்கித்தான் துப்பாக்கி பாவிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று சகலரும் எண்ணும் நிலை ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புங்குடுதீவி மாணவி வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதுதான். ஏன் இச்சம்பவம் நீதிபதியை நோக்கி நிகழ்த்தப்படவில்லை என்பதற்கான காரணங்களே அதிகமாகவுள்ளன.

ஊடகவியலாளர் டி.பி,எஸ்.ஜெயராஜின் பத்திரிகைக் குறிப்பு இச்சம்பவத்தைப்பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது:  "Seeing the group of arguing persons blocking the road, Sgt.Hemachandra got off the motor cycle and went towards the group asking them to clear the way for the Judge’s vehicle to pass. A heated exchange of words occurred between Sgt.Hemachandra and the drunken Jeyanthan. At one point Sgt.Hemachandra laid his hand on the pistol in his holster in a bid to scare Jeyanthan but did not pull it out. An enraged jeyanthan engaged in a scuffle with the Policeman who then pulled out the gun. But Jeyanthan suddenly gripped the pistol and tried to seize it. The High court judge Illanchelliyan saw what was happening and got out of the vehicle shouting at Jeyanthan “Vidadaa Pistol ai, Vidadaa pistol ai” ( Let go of the pistol) in Tamil. The other policeman sgt Wimalasiri got out of the vehicle and pushed Judge Illancheliyan back into the vehicle." [Manhunt Launched in North for Killer of Policeman in Jaffna Shooting Incident; Suspect Identified as 39 Year old Ex-Tiger Selvarasa Jeyanthan of Nallur. By DBSJeyaraj- http://dbsjeyaraj.com/dbsj/archives/54396#more-54396]

•Last Updated on ••Tuesday•, 25 •July• 2017 10:56•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 255: கனடாத் தமிழ் இலக்கியம் - 'தேடக'த்தின் 'தேடல்' சஞ்சிகை!

•E-mail• •Print• •PDF•

தேடலில் வ.ந.கிரிதரன் சிறுகதைதேடல் சஞ்சிகைதேடல் (கனடா) சஞ்சிகை 'தேடகம்' என்று அறியப்பட்ட கனடாத் தமிழர் வகைதுறை வள நிலையத்தாரால் வெளியிடப்பட்ட சஞ்சிகை. கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் 'தேடல்' மிகவும் முக்கியமான சஞ்சிகைகளிலொன்று. பதினாறு இதழ்கள் வெளியாகியுள்ளன. இதழ் 14 என்று இரு இதழ்கள் (1994 மற்றும் 1996) வெளியாகியுள்ளன. வடிவமைப்புச் செய்தவரின் தவறாக இருக்க வேண்டும். வெளிவந்த இதழ்களில் முதலிரண்டையும் தவிர ஏனையவற்றை 'படிப்பகம்' இணையத்தளத்தில் ஆவணப்படுத்தி வைத்துள்ளார்கள்.

'தேடல்' சஞ்சிகையில் கவிதைகள், மனித உரிமை சார்ந்த கட்டுரைகள் , அறிவியற் கட்டுரைகள், சினிமா பற்றிய கட்டுரைகள், நேர்காணல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள் எனப் பல்வகையான காத்திரமான ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. செழியன், விதுரன், பா.அ.ஜயகரன், வ.ஐ.ச.ஜெயபாலன், அமுதன், பாமதி, சகாப்தன், ஆனந்தபிரசாத், சிவம், கிறிசாந் பாக்கியதத்தா என்று பலர் கவிதைகள் எழுதியிருக்கின்றார்கள். மொழிபெயர்ப்புக் கவிதைகள் சிலவும் பிரசுரமாகியுள்ளன. சபா வசந்தன், விதுரன், சகாப்தன், வ.ந.கிரிதரன், ஜோர்ஜ்.இ.குருஷேவ் , கோவை றைதன் (ரதன் ஆக இருக்க வேண்டும். றைதன் என்று பிரசுரமாகியுள்ளது), அருள்தாஸ் என்று பலர் சிறுகதைகளை எழுதியுள்ளார்கள். கட்டுரைகளை செழியன் (இவரது 'ஒரு போராளியின் நாட்குறிப்பு' தொடராக வெளிவந்துகொண்டிருந்தது), பேராசிரியர் சி.சிவசேகரம், வ.ஐ.ச.ஜெயபாலன், பா.அ.ஜயகரன், வ.ந.கிரிதரன், நேசன், ரதன் , ஆரூரான், எஸ்.வி.ராஜதுரை.. .. என்று பலர் எழுதியிருக்கின்றார்கள். இவை தேடலில் எழுதியவர்களின் முழுமையான பட்டியல் அல்ல. ஓருதாரணத்துக்காகக் குறிப்பிட்டுள்ளேன்.

•Last Updated on ••Sunday•, 23 •July• 2017 09:35•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 254: கறுப்பு ஜூலை 1983 நினைவாக - ஒரு புகைப்படமும், ஒரு கவிதையும் & ஓர் ஓவியமும் மற்றும் இரு கட்டுரைகளும்!

•E-mail• •Print• •PDF•

ஓவியர் புகழேந்தியின் கறுப்பு ஜூலை 1983 பற்றிய ஓவியம்.கறுப்பு ஜூலை 1983: கோர முகம்கறுப்பு ஜூலை அஞ்சலிஈழத்தமிழர்களின் வரலாற்றில் 1958, 1977, 1983 இனக்கலவரங்கள், 2009 நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரழிவுகள் எல்லாம் இரத்தக் கரை படிந்த அத்தியாயங்கள். இவற்றுகிடையிலும் அவ்வப்போது தமிழ் மக்கள் மீது இனரீதியிலான தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. படையினரின் தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. புகழ்பெற்ற யாழ் பொதுசன நூலகம் எரிபட்டிருக்கின்றது. இவற்றில் 1983 யூலையில் நடைபெற்ற இனக்கலவரமும், சிறைச்சாலைப் படுகொலைகளும் அதுவரை உள்நாட்டுப்பிரச்சினையாகக் கருதப்பட்ட ஈழத்தமிழர்களின் பிரச்சினையை உபகண்டப்பிரச்சினையாக, சர்வதேசப்பிரச்சினையாக மாற்றி வைத்தன. ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை வீறுகொள்ள வைத்தன. இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களை அகதிகளாக உலகின் பல நாடுகளையும் நோக்கிப்படையெடுக்க வைத்தன.

இக்கலவரத்தின் குறியீடாக இருக்கும் இந்தப்புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சில் நெஞ்சில் இனம் புரியாத வேதனை பரவும். கூனிக்குறுகி அடிபணிந்து மரணத்தின் முன்னால் ஒடுங்கி நிற்கும் அந்தத்தமிழரின் நிலை ஓரினத்தின் நிலையினை வெளிப்படுத்தும் குறியீடு. கறுப்பு ஜூலையின் கோர முகத்தின் வெளிப்பாடு.  இந்தப் புகைப்படத்தினை எடுத்தவர் ஒரு சிங்களவர். சந்திரகுப்த அமரசிங்க என்னும் பெயரினைக்கொண்ட அவர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'அத்த' நாளிதழில் பணியாற்றிய பத்திரிகையாளர்களில் ஒருவர். 24.07.1983 அதிகாலையில் பொரளை சந்திக்கண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. மைக்கல் றொபேர்ட்ஸ் (Michael Roberts) எழுதிய கட்டுரைகள் மூலம் இந்த உண்மை தெரிய வந்தது.

•Last Updated on ••Sunday•, 23 •July• 2017 09:19•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 253: பசுமை நிறைந்த நினைவுகள்: லெஸ்லி ரவிச்சந்திரா (leslie Ravichandra)

•E-mail• •Print• •PDF•

 லெஸ்லி ரவிச்சந்திரா (leslie Ravichandra)நண்பர் லெஸ்லி ரவிச்சந்திராவை பல வருடங்களுக்குப் பின்னர் அண்மையில்தான் 'டொராண்டோ'வில் நடைபெற்ற 'யுகதர்மம்' நூல் வெளியீட்டின்போது கண்டேன். இவர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் என்னுடன் ஒன்றாகக் கட்டடக்கலைத்துறையில் கற்றவர். இலங்கையிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் பணியாற்றிப்பின் கனடா வந்திருந்தார். இங்கும் அத்துறையிலேயே வேலை பார்ப்பவர். இவர் பல்கலைக்கழகக்காலத்தில் நான் நன்கு பழகிய நண்பர்களிலொருவர். மட்டக்களப்பைச்சேர்ந்தவர். இவரைப்பாடச்சொல்லிக்கேட்டு இரசிப்பது எம் வழக்கம். இன்னுமொருவர் மோகன் அருளானந்தம். அவரும் மட்டக்களப்பைச்சேர்ந்தவர்தான். இருவருமே மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி முன்னாள் மாணவர்கள். மோகன் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றார். அவரும் நன்கு பாடுவார். இவர்களிருவருடன் இன்னுமொருவரும் நன்கு பாடுவார். அவர் எம்முடன் ஒன்றாகப் படித்த அமரர் சாந்தி சச்சிதானந்தன். எம்முடன் படித்த ஒரேயொரு தமிழ் மாணவி அவர். இவர்கள் மூவரையும் பாடங்களுக்கிடையில் ஓய்வாகவிருக்கும் சமயங்களில் பாடச்சொல்லிக்கேட்டு சுற்றியிருந்து இரசிப்போம்.

இவர் பாடும்போது அவ்வப்போது பாடல்களின் வசனங்களை ஆங்கிலத்துக்கு மாற்றிப்பாடிக் கலகலப்பூட்டுவார். உதாரணத்துக்கு நானூறு பூக்கள் என்று வந்தால் four hundred flowers என்று திடீரென மாற்றிப்பாடுவார். இவர் திறமையான விளையாட்டு வீரர் கூட. குறிப்பாக 100 மீற்றர் ஓட்டப் போட்டியென்றால் முதலில் வருவார்.

இவர் மிகவும் திறமையான நடிகர். பாலேந்திராவின் இயக்கத்தில் பல தடவைகள் மேடையேற்றப்பட்ட 'யுகதர்மம்' நாடகத்தின் பிரதான பாத்திரமான வியாபாரி வேடத்தில் நடித்தவர் இவரே. அக்காலகட்டத்தில் அந்நாடகம் பற்றி வெளியான 'யுகதர்மம்' பற்றிய நாடக விமர்சனங்களில் இவரது நடிப்பைப்பாராட்டி வெளிவந்த குறிப்புகள் இவரது நடிப்புத்திறமைக்குச் சான்று. 'யுகதர்மம்' நூலிலும் அவ்விமர்சனங்களில் சில வெளியாகியுள்ளன.

•Last Updated on ••Thursday•, 20 •July• 2017 23:53•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 252: ஊத்துக்காடு வெங்கட கவியின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கண்ணன் பாடல்கள்!

•E-mail• •Print• •PDF•

ஊத்துக்காடு வெங்கட கவிநான் தீவிர கர்நாடக சங்கீத இரசிகனல்லன். ஆனால் சிறு வயதிலிருந்தே ஒரு சில பாடல்களைக் கேட்டு, அப்பாடல்களுக்கு அடிமையாகிப்போனவன். பாரதியாரின் கண்ணன் பாடல்கள், கண்ணம்மாப் பாடல்கள் எவ்விதம் கேட்கையில் இன்பத்தைத் தருகின்றன. அதுபோல் இப்பாடல்களும் கண்ணனைப்பற்றியவை. கேட்கையில் இன்பத்தைத்தருபவை. பக்திப்பாடல்கள் என்பதற்காக அல்ல. மானுடர்களின் காதல், குழந்தைப்பாச உணர்வுகளை வெளிப்படுத்தும் இனிய, எளிய வரிகளுக்காக. மனத்தினை அமைதிப்படுத்தும் இசைக்காக. பாடகர்களின் குரலினிமைக்காக.

இப்பாடல்களை எழுதியவர் அண்மைக்காலத்தவரல்லர். பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். நூற்றுக்கணக்கில் கண்ணன் பாடல்களை எழுதித் தானே இசையமைத்தவர். எனக்கு மிகவும் ஆச்சரியமான விடயமென்னவென்றால்... இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்து எழுத்தே வாசிப்பதற்குக் கடினமாகவிருக்கும்போது பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இவரது பாடல்கள் எவ்வளவு எளிமையாக , இனிமையாகவுள்ளன. இப்பாடல்களின் இனிமையும், எளிமையும்தாம் இவற்றை எழுதியவர் யார் என்பதைக்கண்டறியும் ஆவலை எனக்கு ஏற்படுத்தின.

அப்பாடலை எழுதியவர் பெயர் ஊத்துக்காடு வெங்கட கவி

இவரது 'அலை பாயுதே - கண்ணா என்மனம் மிக அலைபாயுதே' பாடலைப் பாடாத கர்நாடக சங்கீதப் பாடகர்கள் எவர்? அப்பாடலின் மொழிநடை எவ்வளவு எளிமையானது. இனிமையானது. இப்பாடலின் 'தெளிந்த நிலவு பட்டப்பகல்போல் எரியுதே - உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே. கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே' என்னும் சரணத்தில் வரும் வரிகளும், 'அலை பாயுதே - கண்ணா என்மனம் மிக அலைபாயுதே' என்னும் பல்லவி வரிகளும் மானுட வாழ்வின் காதல் அனுபங்களுடனும் ஒன்றிப் போகும் வரிகள் அல்லவா.

இவரது இன்னுமொரு புகழ்பெற்ற பாடல் 'தாயே யசோதா உந்தன் மாயக் கோபாலக் கிருஷ்ணன் செய்யும் லீலையைப் பாரடி'. இதுவும் பாடகர்கள் பலரால் பாடப்பெற்ற, பாடப்படுகின்ற பாடல்தான். 'அலை பாயுதே' பாடலைப்போல் எளிய , இனிய வரிகள். குழந்தையான கிருஷ்ணன் செய்யும் குறும்புகளை அவனது தாயான யசோதையிடம் கோபியர்கள் முறையிடுவதாக அமைந்த வரிகள். மானுடக் குழந்தையொன்றின் குறும்புகளுடன் மனதை ஒன்ற வைக்கும் வரிகள்.

•Last Updated on ••Thursday•, 20 •July• 2017 08:25•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 251: முகநூற் பதிவுகள் சில...

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரன் பக்கம்: வாசிப்பும், யோசிப்பும்.எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மா

தமிழ்க்கவி அம்மாஎழுத்தாளர் தமிழ்க்கவி அம்மா அவர்களுக்கு இன்று, ஜூலை 19, 2019,  வயது 70. இந்த வயதிலும் அவர் இவ்வளவு துடிப்புடன் செயற்படுவது, தன் கருத்துகளை ஆணித்தரமாக வெளியிடுவது இவையெல்லாம் என்னை மிகவும் பிரமிக்க வைப்பவை. 'ஊழிக்காலம்' தமிழ்க்கவியை வரலாற்றில், தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலை நிறுத்தி வைக்கும். அதுவோர் இலக்கியப்படைப்பு மட்டுமல்ல , வரலாற்று ஆவணமும் கூட. இந்த வயதிலும் இவ்வளவு இளமைத்துடிப்புடன் இயங்கும் தமிழக்கவியம்மா மேலும் பல்லாண்டுகள் இதே துடிப்புடன் வாழ்ந்து, இலக்கியப்பங்காற்றிட வாழ்த்துகள்.

தமிழ்க்கவி அவர்களின் 'ஊழிக்காலம்' நூல் பற்றி முன்னர் 'பதிவுகள்' இணைய இதழில் எழுதிய குறிப்புகளிலிருந்து சில பகுதிகளை இத்தருணத்திலிங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.

"..இந்த நாவலைப் பொறுத்தவரையில் ஏனைய முக்கியமான நாவல்களைப் போல் பாத்திரப்படைப்பு, கதைப்பின்னல், உரையாடல், கூறும்பொருள், மொழி என்பவற்றின் அடிப்படையில் அணுக முடியாது. இதன் முக்கியத்துவம் நடந்து முடிந்த பேரழிவினை ஆவணப்படுத்தும் பதிவுகள் என்ற வகையில்தானிருக்கின்றது. யூதச்சிறுமி ஆன் ஃபிராங்கின் புகழ்பெற்ற 'தினக்குறிப்புகள்' எவ்விதம் ஆவணச்சிறப்பு மிக்கவையாக இருக்கின்றனவோ (அத்தினக்குறிப்புகள் அச்சிறுமியின் பதின்ம வயது உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இலக்கியச்சிறப்பும் மிக்கவை) அதுபோல்தான் தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' நாவலும் ஆவணச்சிறப்பு மிக்கதாகவிருக்கின்றது. அதன் காரணமாகவே ஈழத்தமிழர் இலக்கியத்தில் முக்கியமானதொரு படைப்பாகத் தன்னை நிலைநிறுத்துக்கொள்கின்றது.

இந்த நாவலில் யுத்தக்காலகட்டத்தில் மக்களின் இடம்பெயர்வுகளை, கூவிவரும் எறிகணைகளிலிருந்து தப்புவதற்காக அவர்கள் படும் சிரமங்களை, அன்றாட வாழ்வியற் பிரச்சினைகளை, இயக்கத்தவரின் செயற்பாடுகளை, இயக்கத்தைக் காரணமாக வைத்துச் சிலர் அடையும் ஆதாயங்களை .. இவற்றையெல்லாம் தமிழ்க்கவி இயலுமானவரையில் பதிவு செய்திருக்கின்றார். இயக்கத்தின் செயற்பாடுகளைப் பாராட்ட வேண்டிய இடங்களில் பாராட்டியும், கண்டிக்க வேண்டிய இடங்களில் கண்டித்துமுள்ளார். ...

•Last Updated on ••Wednesday•, 19 •July• 2017 21:36•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 250 : எழுத்தாளர் R.P.ராஜநாயஹம் பற்றி....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 250 : எழுத்தாளர் R.P.ராஜநாயஹம் பற்றி....எழுத்தாளர் R.P.ராஜநாயஹத்தின் எழுத்தை ஒருமுறை வாசித்தாலும் , வாசித்தவர் அதற்கு அடிமையாகிவிடுவார். இவர் புகழ் பெற்ற தமிழ் வலைப்பதிவர்களில் முக்கியமானவர்களிலொருவர். சிற்றிதழ், என்று தொடங்கி தமிழ் / உலகக் கலை, இலக்கிய உலகு பற்றி, இலக்கிய ஆளுமைகள் பற்றி, அவர்கள்தம் வாழ்வில் நடைபெற்ற பலருக்குத் தெரியாத சம்பவங்கள் பற்றியெல்லாம் , சுவையாக, நெஞ்சைக்கவரும் வகையில் கூறுவதில் வல்லவர் R.P.ராஜநாயஹம். தன் பெயரை R.P.ராஜநாயஹம் என்றுதான் எழுதுவார். ராஜநாயகம் என்று எழுதுவதில்லை. ஒருமுறை இவரது கட்டுரையைப் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியிட்டபோது ராஜநாயகம் என்று எழுதியபோது அதனைத்திருத்தி ராஜநாயஹம் என்று போடுமாறு எழுதி என் தவறினைத்திருத்தினார்.

சினிமாவில் உதவி இயக்குநராக, நிதி நிறுவனம் நடத்தியவராக, நடிகராக.. என இவர் செய்த பல்வேறு வேலைகள் காரணமாக இவரது தமிழகக் கலை, இலக்கிய அனுபவ அறிவு பரந்தபட்டது. ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த புலமை மிக்கவர். இவரது வலைப்பதிவில் வெளியான தமிழ்ச்சினிமா பற்றிய தகவல்களைக் 'குமுதம்' சஞ்சிகை திருடிப்பாவித்திருப்பதை இவரது பதிவுகள் மூலம அறிய முடிகின்றது.

இவரது மாமனார் எம்ஜிஆர் காலத்தில் முக்கிய பிரமுகர்களிலொருவராக விளங்கியவர். அதனால் தமிழக அரசியல் பற்றிய பலருக்குத் தெரியாத தகவல்களெல்லாம் இவருக்குத் தெரிந்திருக்கின்றது.

எழுத்தாளர் அமரர் அசோகமித்திரன், சி.சு.செல்லப்பா மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர்.

'பதிவுகள்' இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் இவரது கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

இவரது எழுத்துகள் இலக்கியச் சிறப்பு மிக்கவை அவை எழுதப்படும் எழுத்து நடையால், வெளிப்படுத்தும் இலக்கிய அறிவினால். இவரது கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றிய அனுபவப்பதிவுகள் இலக்கியச்சிறப்பு மிக்கவையாக விளங்கும் அதே சமயம், கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆய்வுகளுக்கு, கலை, இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு உதவியாக விளங்கும் ஆவணப்பதிவுகளும் கூட.

•Last Updated on ••Wednesday•, 19 •July• 2017 15:46•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 249 : கனடாவில் பேராசிரியர் இ.பாலசுந்தரத்தின் 'கனடாவில் இலங்கைத்தமிழரின் வாழ்வும், வரலாறும்' நூல் வெளியீடு!

•E-mail• •Print• •PDF•

முனைவர் இ.பாலசுந்தரம்முனைவர் இ.பாலசுந்தரத்தின் 'கனடாவில் இலங்கைத்தமிழரின் வாழ்வும், வரலாறும்' நூல் முனைவர் இ.பாலசுந்தரத்தின் 'கனடாவில் இலங்கைத்தமிழரின் வாழ்வும், வரலாறும்' நூல் வெளியீடு இன்று, ஜூலை 16, 2017, பெரிய சிவன் ஆலயக் கலாச்சார மண்டபத்தில் ,  சுவாமி விபுலாநந்தர் தமிழியல் ஆய்வு மையம் (ரொறன்ரோ) ஆதரவில் நடைபெற்றது.  மண்டபம் நிறைந்து வழிந்த நூல் வெளியீடு எனலாம். கனடா எழுத்தாளர் இணையத்தலைவர் சின்னையா சிவனேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பேராசிரியர் யோசப் சந்திரகாந்தன் அடிகள், கனடாத்தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் இளையபாரதி, இளமாறன் பாலசுந்ததரம், குமரகுரு, முன்னாள் யாழ் பல்கலைக்கழகப்பெண் விரிவுரையாளர் (பெயர் சரியாக ஞாபகத்துக்கு வரவில்லை) எனப் பலர் உரை நிகழ்த்தினார்கள். இறுதியில் பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்கள். அதனைத்தொடர்ந்து மேடையிலிருந்து நூலாசிரியரான பேராசிரியர் பாலசுந்தரத்திடமிருந்து ஒவ்வொருவரும் வரிசையில் நின்று , சென்று நூலைப்பெற்றுக்கொண்டார்கள்.

இது வித்தியாசமான நடைமுறை. வழக்கமாக நூலின் சிறப்புப் பிரதிகளைக் குறிப்பிட்ட சிலர் (பொதுவாக வர்த்தகர்கள் போன்ற சிலர்) பெற்றுக்கொள்வார்கள். அதனைத்தொடர்ந்து சபையோர் நூலை அரங்கின் முன்னாள் அமர்ந்திருக்கும் ஒருவரிடமிருந்து  வாங்கிக்கொள்வார்கள்.  நூலைப்பெற்றுக்கொண்ட ஒவ்வொருவருடனும் நூலாசிரியரும், மனைவியாரும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். இவ்விதமானதொரு நடைமுறையினை எதிர்பார்த்துப் பலர் சென்றிருக்கவில்லை. நானும்தான். அங்கிருந்த ஒருவரிடமிருந்து தபால் உறை வாங்கி, இன்னுமொருவரிடம் பேனா கடன் வாங்கி , உறையினுள் பணத்தை வைத்துக்கொடுத்தேன். இவ்விதமான நடைமுறையில் நூல்கள் விற்கப்படுவதாக இருந்தால், நிகழ்வு பற்றிய அறிவித்தலிலேயே இது பற்றி அறிவித்தால் அது நிகழ்வுக்கு வருபவர்கள் போதிய ஆயத்தங்களுடன் வருவதை இலகுவாக்கும். இருந்தாலும் இவ்விதமான நடைமுறையிலுள்ள நன்மைகளிலொன்று நூலாசிரியருடன் ஒவ்வொருவரும் புகைப்படம் எடுக்க முடிகின்றது என்பதுதான்.

•Last Updated on ••Monday•, 17 •July• 2017 21:55•• •Read more...•
 

வாசிப்பும் யோசிப்பும் 248: கணையாழியும், ஈழத்துப்படைப்புகளும்!

•E-mail• •Print• •PDF•

கணையாழி ஜூன் 1996கணையாழி ஜூன் 1996 பொருளடக்கம்தமிழகச்சிற்றிதழ்களில் 'கணையாழி' இதழும் முக்கியமான இதழ்களிலொன்று. ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மட்டுமல்ல, மலேசியா, ஆஸ்திரேலியா என வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள்தம் இலக்கியத்துக்கும் முக்கிய இடத்தைக்கொடுத்து, அந்நாடுகளில் வாழும் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பிரசுரித்து வந்த, வருகின்ற சஞ்சிகை 'கணையாழி'. என்னைப் பொறுத்தவரையில் 'கணையாழி' சஞ்சிகைக்கு என் மனதில் முக்கியமானதோரிடமுண்டு. காரணம்: இது வரையில் நான் எழுதிய ஐந்து படைப்புகளை அது வெளியிட்டுள்ளது. அதற்காக என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கணையாழியில் வெளியான எனது படைப்புகள் வருமாறு: நான்கு கட்டுரைகள்: பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு`, `சூழற் பாதுகாப்பு` , `ஆர்தர்.சி.கிளார்க்`, மற்றும் `ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவம்` போன்ற விடயங்களைப்பற்றிய கட்டுரைகள்; கணையாழியின் 'கனடாச்சிறப்பித'ழில் வெளியான 'சொந்தக்காரன்' என்னும் சிறுகதை.

தற்செயலாகப் 'பதிப்பகம்' இணையத்தளத்தில் கணையாழி சஞ்சிகையின் சில இதழ்களைப்பார்த்தேன். அவற்றிலொன்று கணையாழி - யூன் 1996 சஞ்சிகை. அதில் வெளியான படைப்புகளைப் பார்க்கும்போது கணையாழி சஞ்சிகை ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். இந்த இதழில் வே.சபாநாயகம் அவர்கள் எழுத்தாளர் தேவகாந்தனின் 'நெருப்பு' , மற்றும் ச.கணேசலிங்கன் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் 'மல்லிகை முகங்கள் ஆகிய நூல்களுக்கு நல்ல நூல் அறிமுகக் கட்டுரைகளை எழுதியுள்ளனர். மேலும் மேற்படி இதழில் எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் 'அவர்க்கென்று ஓர் குடில்' சிறுகதை, எழுத்தாளர் கே.விஜயனின் 'இலங்கைச்செய்தி மடல்' அத்துடன் எனது 'பண்டைய இந்துக்களின் கட்டடக்கலையும், நகர அமைப்பும்' என்னும் கட்டுரை ஆகிய படைப்புகளும் வெளியாகியுள்ளன.

•Last Updated on ••Thursday•, 13 •July• 2017 21:13•• •Read more...•
 

வாசிப்பும் யோசிப்பும் 247: 'The Exception and the Rule' மற்றும் 'யுகதர்மம்' பற்றிச் சில வார்த்தைகள்...

•E-mail• •Print• •PDF•

நூல்: யுகதர்மம்அண்மையில் நடைபெற்ற 'யுகதர்மம்' நிகழ்வின் போது பேர்டோல்ட் பிறெக்ட் எழுதிய  'The Exception and the Rule'  நாடகத்தின் பெயரை மொழிபெயர்த்தவர்கள் எதற்காக 'யுகதர்மம்' என்று மொழிபெயர்த்தார்கள் என்றொரு கேள்வி பலருக்கு எழுந்திருக்கக்கூடும். பெயரை வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் இவ்விதம் மொழிபெயர்த்திருக்கலாமா என்றொரு கேள்வி சிலருக்கு எழுந்திருக்கும். ஏற்கனவே திறனாய்வாளர்கள் சிலருக்கு இக்கேள்வி எழுந்ததை முதலில் 'யுகதர்மம்' மேடையேற்றியபோது வெளிவந்த நாடகம் பற்றிய விமர்சனங்களில்  அவதானிக்க முடிகின்றது.

அது பற்றி கருத்தைக் கூறுவதற்கு முன்னர் 'யுகதர்மம்' நாடகத்தை மொழிபெயர்த்தவர்கள் யார்? என்ற கேள்விக்கு முதலில் வருவோம். நாடகம் வெளிவந்த காலகட்டத்தில் நாடகத்தை மொழிபெயர்த்தவராக நிர்மலா நித்தியானந்தனையும், பாடல்களை மொழிபெயர்த்தவராக அமரர் ச.வாசுதேவனையுமே குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் நாடக மொழியாக்கத்தைச் செய்தவர் ச.வாசுதேவன் என்பதை அண்மையில் நாடகத்தின் இயக்குநர் பாலேந்திராவுடன் கதைத்துக்கொண்டிருந்தபோது அறிய முடிந்தது. 'யுகதர்மம்' நூலின் தொகுப்புரையிலும் பாலேந்திரா அவர்கள் "வாசுதேவனே முதலில் முழு நாடகத்தையும் மொழிபெயர்த்துத்தந்தார். அப்போது நாங்கள் இருவரும் கொழும்பில் வசித்து வந்தோம். 'யுகதர்மம்' என்ற தலைப்பும் அவராலேயே இடப்பட்டது." என்று குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் "நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க நிர்மலா நித்தியானந்தன் பிரதியைச் செம்மைப்படுத்தினார்" என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் "முதல் நாடக மேடையேற்றத்தின்போது  தமிழாக்கம் நிர்மலா நித்தியானந்தன் என்றும் பாடல்கள் மட்டுமே வாசுதேவன் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த நாடகத்தை வாசுதேவன் முதலில் மொழிபெயர்த்தமையை மு.நித்தியானந்தன் எமது சுவிஸ் நாடக விழா - 1994- மலரில் பதிவு செய்துள்ளார்." என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். இவற்றின் அடிப்படையில் வாசுதேவனே முதலில் நாடகத்தை முழுமையாக மொழிபெயர்த்தவர் என்ற முடிவுக்கு வருவதில் எந்தவித ஆட்சேபணையுமில்லை நிர்மலா நித்தியானந்தன் எந்தவித எதிர்க்குரலும் எழுப்பாதவிடத்து. இதுவரையில் அவர் அவ்விதம் எதிர்க்குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை.

மேற்படி 'யுகதர்மம்' நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய ஆங்கில-தமிழ் மொழிபெயர்ப்பில் வல்லுநரான எழுத்தாளர் என்.கே.மகாலிங்கமும், நாடகவியலாளர் பி. விக்கினேஸ்வரனும் நாடகத்தின் பெயரை வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் 'யுகதர்மம்' என்று மொழிபெயர்த்ததைச் சிலாகித்துப் பேசினர். பி.விக்கினேஸ்வரன் நாடகம் கூறும் கதை தற்போது நடைபெறும் கலியுகத்தின் தர்மத்தை வெளிப்படுத்துவதால் 'யுகதர்மம்' என்னும் பெயர் பொருத்தமானது என்று குறிப்பிட்டிருந்தார். கலியுகத்தில் அதர்மங்கள் மேலோங்கும் என்பது நம்பிக்கை.

•Last Updated on ••Thursday•, 13 •July• 2017 11:10•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 246: 'டொரான்டோ'வில் பிரெக்ட்டின் 'யுகதர்மம்' நூல் வெளியீடு பற்றிய சிறு குறிப்பு..

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 246: 'டொரான்டோ'வில் பிரெக்ட்டின் 'யுகதர்மம்' நூல் வெளியீடு பற்றிய சிறு குறிப்பு.. இன்று , ஜூலை 9, 2016, நடைபெற்ற 'யுகதர்மம்' நாடகப்பிரதி நூல் வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன். நீண்ட நாள்களுக்குப் பிறகு பலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. 'காலம்' சஞ்சிகையின் ஆதரவில் நடைபெற்ற நிகழ்வு இது. கூடவே'காலம்' சஞ்சிகையின் 'வாழும் தமிழ்' புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வினை ஒழுங்கு செய்து நடத்தியதற்காக 'காலம்' செல்வத்துக்குப் பாராட்டுகள். எனக்கு மிகவும் பிடித்த நாடகங்களிலொன்றான அவைக்காற்றுக் கழகத்தின் தயாரிப்பான 'யுகதர்மம்' நாடகப்பிரதியினை நூலாகப்பெறும் வாய்ப்பு கிட்டியது மகிழ்ச்சியினைத்தந்தது. இவ்விதம் அவைக்காற்றுக் கழகத்தயாரிப்புகளின் நாடகப்பிரதிகளை நூலாக்கும் எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பதை நிகழ்வின் இறுதியில் உரையாற்றிய பாலேந்திரா, ஆனந்தராணி தம்பதியினர் தமது உரையில் குறிப்பிட்டனர். தாம் அண்மையில் இலங்கை சென்றிருந்த போது பலருக்குத் தமது நாடகங்கள் பற்றிய முழுவிபரங்களும் , பிரதிகளும் கிடைக்கவில்லையென்பதை அவர்கள் மூலம் அறிந்ததாகவும், அவர்கள் இவர்கள் தயாரிப்பில் வெளியான நாடகப்பிரதிகளை நூல்களாக்கினால் , அவை ஆவணங்களாக இருக்கும் அதே சமயம், நாடக ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையுமென்றும் குறிப்பிட்டதாகவும், அதன் பின்பே தமக்கும் இவ்விதமான ஆர்வம் ஏற்பட்டதாகவும், அதன் விளைவுதான் 'யுகதர்மம்' நூல் என்னும் கருத்துப்பட உரையாற்றினர். உண்மையில் இது வரவேற்கத்தக்க மிகவும் பயனுள்ள முயற்சியென்றே கூறுவேன். அத்துடன் ஆனந்தராணி பாலேந்திரா  இன்றைய இளம் சமுதாயம் இந்நாடக முயற்சிகளில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை விளக்கியதுடன், இதற்காக அவைக்காற்றுக்கழகம் எடுத்த, எடுக்கின்ற செயற்பாடுகளையும் தனது உரையில் விபரித்தார். உண்மையில் நாடகக்கலையில் ஆர்வமுள்ள இருவரும் நிஜ வாழ்விலும் ஒன்றிணைந்ததும் அவைக்காற்றுகழகத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களிலொன்று என்பேன்.
•Last Updated on ••Monday•, 10 •July• 2017 08:15•• •Read more...•
 

கவிதை: நள்யாமப்பொழுதொன்றில்...

•E-mail• •Print• •PDF•

கவிதை: நள்யாமப்பொழுதொன்றில்... - வ.ந.கிரிதரன் -

சொல்லவிந்து, ஊர் துஞ்சும்
நள்யாமப்பொழுதுகளில்
விசும்பு நீந்தி ஆங்கு
நீந்தி விளையாடிடும் விண்மீன்கள்தம்
வனப்பில் எனை மறக்கும்
தருணங்களில்,
இராப்பட்சிகள் குறிப்பாக
ஆந்தைகள் சிந்தனைச்சிறகடிக்கும்.
கூரிய அவைதம் பெருங்கண்
விரித்து
இரை தேடி இரவு முழுக்கப்
பறந்து திரியும்.
ஆந்தைகளுக்குப் போட்டியாக
அவ்வப்போது நத்துகளும்
குரல் கொடுக்கும்.
மீன்களே! உங்கள் நீச்சலின் காரணத்தை
விளக்குவீரா?
ஆந்தைகளே! நத்துகளே! உங்கள்
இருப்பின் காரணத்தை எனக்கும்
சிறிது பகர்வீரா?
இரவுவான் வியக்கும் பண்பு
தந்தாய்! எந்தையே
இத்தருணத்தில் உனை நான்
என்
நினைவில் வைக்கின்றேன்.

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Friday•, 07 •July• 2017 15:34••
 

கவிதை - விடைகளற்ற விடுக(வி)தைகளும்! விதிமுறைகளற்ற விளையாட்டும்!

•E-mail• •Print• •PDF•

கவிதை -  விடைகளற்ற விடுக(வி)தைகளும்! விதிமுறைகளற்ற விளையாட்டும்!

விடுகதை போடுவதில் எனக்கு நாட்டமில்லை;
சொற் சிலம்பம் ஆடுவதிலும் பெரிதும்
ஆர்வமில்லை.
விடுகதை போடுபவர்களுக்கு நிச்சயம்
விடுகதைக்கான பதில் நிச்சயம் தெரிந்திருக்க
வேண்டும்.
சொற் சிலம்பம் ஆடுபவர்களுக்கு அச்
சிலம்பாட்டத்தின் விதி முறைகள்
நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.
அவ்விதம் பதில் தெரிந்தவர்கள்
போடும் விடுக(வி)தைகளை
நான் வெறுப்பதில்லை.
அவ்விதம் விதி முறைகள் தெரிந்து
சிலம்பாட்டம் ஆடுபவர்களின்
ஆட்டத்தை நான் இரசிப்பதுண்டு.
ஆனால் விதிமுறையும் தெரியாமல்,
விடுக(வி)தைக்கான பதிலும் தெரியாமல்
போடுவது விடுக(வி)தையுமல்ல.
ஆடுவது சொற் சிலம்பாட்டமும்
அல்ல.
விடுகதைகளும், சிலம்பாட்டமும்
இணைந்துவரின் அதுவுமளவுடன்
அவற்றை நான் இரசிப்பதுண்டு.

•Last Updated on ••Saturday•, 11 •July• 2020 00:51•• •Read more...•
 

கவிதை: இன்பத்திற்குண்டோ இணை!

•E-mail• •Print• •PDF•

கவிதை: இன்பத்திற்குண்டோ இணை!

அடிவானணைக்கும்
நீள் வெளி, நீல வெளி.
விரையும் வெண் மேகம்,
என்னகம் கவர்ந்தன;
கவர்வன.
எப்பொழுதும்!
எப்பொழுதும்!
பதின்மப்பொழுதுகளில்
கல்லுண்டாய் வெளிதனில்
நடாத்திய
நீண்ட பயணங்கள்!
அடிவானணைக்கும் கடல் நங்கை
ஒருபுறம்.
விரியும் விரிவெளி
மறுபுறம்.
காற்றிலாடும் வயல்வெளிகள்,
ஆங்கு சிறகடிக்கும் கிளிக்கூட்டம்,
தூரத்தில் தவமியற்றும்
நவாலி மண்மேடுத்துறவிகள்,
நெஞ்சினில் களியேற்ற,
தண்தென்றல்
மேனி வருடிச்செல்லும்.
இன்பத்திற்குண்டோ
இணை.

•Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 245: 'நானே நானா? யாரோ தானா?'

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 245: 'நானே நானா? யாரோ தானா?'சென்ற வெள்ளிக்கிழமை , 23.06.2017 , எனக்குச் சிறியதொரு சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த சில வருடங்களாகவே என் கண்களிரண்டும் அவ்வளவு ஆரோக்கியமான நிலையிலில்லை. இரு கண்களிலும் 'கட்ராக்ட்' அதாவது கண் புரை  என்னும் நிலை தோன்றியிருந்தது. அண்மைக்காலமாக இரவில் வாகனம் செலுத்தும்போது , எதிரில் பிரகாசமான வெளிச்சம் தென்படுகையில் , வாகனத்தைச்செலுத்துவது சிரமமாக இருப்பதை அறிந்தேன். எனவே முதலில் என் இடது கண்ணில் அதற்கான சத்திர சிகிச்சையினைச் செய்ய இசைந்தேன்.

சத்திரசிகிச்சைக்கு முதலிரு தினங்களும் கண் துளிகளிட்டேன். சத்திரசிகிச்சை நாளும் ,சத்திரசிகிச்சைக்கு முன் மேலும் சில துளிகள் இடப்பட்டன. Intravenous (IV) முறையில் இடது கை வழியாகத் திரவங்கள் செலுத்தப்பட்டன வலி தெரியாதிருப்பதற்காக. அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். படுக்க வைத்தார்கள். கண்களை இன்னுமொரு திரவம் கொண்டு துடைத்தார்கள். சிறு துவாரம் மிக்க துணி கொண்டு இடது கண்ணை மூடினார்கள். என் முன்னே குனிந்திருந்த கண் வைத்தியரும், அவரது உதவியாளர்களும் தெரிந்தார்கள். ஏதோ செயற்படுகின்றார்கள் என்பதை மட்டும் அறிய முடிந்தது. பத்து அல்லது பதினைந்து நிமிடங்களிருக்கும். 'எல்லாம் முடிந்தது' என்றார்கள். கண் மேல் போர்த்தியிருந்த துணியை அகற்றினார்கள். உலகம் கண் முன்னே முன் எப்போதையும் விட அழகாக, பிரகாசமாக, வர்ணங்களுடன் விரிந்தது. மேலுமிரு மணி நேரம் தங்கியிருந்தேன். கண்ணைப் பரிசோதித்தார்கள். நன்றாக இருப்பதாகத் திருப்திப்பட்டார்கள். ஒருவாரம் கழித்து மீண்டும் கண் மருத்துவரைச் சந்தித்துப் பரிசோதிக்கும்படி கூறினார்கள். முதல் நாள் முழுவதும் கண்ணை மறைத்திருக்கும் வகையில் பிளாஸ்டிக் கண்ணாடியால் மூடி விட்டார்கள். ஒரு வாரம் வரையில் இரவில் படுக்கச்செல்லும்போது அவ்விதமே மூடிப்படுக்கும்படி கூறினார்கள். முதல் 24 மணி நேரம் கவனமாக இருக்கும்படி கூறினார்கள். தொடர்ந்து கண் துளிகளை ஒவ்வொரு நாளும் நான்கு தடவைகள் இட்டு வரும்படி கூறினார்கள். 26ந்திகதியிலிருந்து முகநூலில் பதிவுகள் இடத்தொடங்கினேன். அடுத்த நாளே கண்ணாடியில்லாமல் காரை ஓட்டிப் பார்த்தேன். வலது கண்ணுக்கும் கண்ணாடி தேவை என்பதால், புதுக்கண்கண்ணாடி எடுக்கும் வரையில் , கண்ணாடி அற்றே இன்று வரை வாகனம் ஓட்டுகின்றேன். இப்பொழுதுதான் தெரிகின்றது இது நாள் வரையில் நான் பல வர்ணங்களை இழந்த உலகையே பார்த்து வந்திருக்கின்றேன் என்று.

•Last Updated on ••Monday•, 03 •July• 2017 18:46•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 244: வட மாகாண சபை வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பற்றிச் சில நினைவுகள்.....

•E-mail• •Print• •PDF•

பொ.ஐங்கரநேசன்

வட மாகாண சபை வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பற்றிச் சில நினைவுகள்.....

அண்மைக்காலமாக இலங்கையின் வட மாகாணசபையில் இடம் பெற்று வந்த கூட்டமைப்புக்கும், முதல்வருக்குமிடையிலான இழுபறியினைத்தொடர்ந்து, மாகாண சபை அமைச்சர்களிருவர் மீதான ஊழல், அதிகாரத்துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் பரிந்துரையின்பேரில் அமைச்சர்களிலொருவரான இலங்கை, வட மாகாண சபை வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதவி விலகியுள்ளார். இதுவரையில் இந்த இழுபறி பற்றித் தமிழ் ஊடகங்களில் ஆய்வாளர்கள் (?) ஆளுக்காள் தமது கருத்துகளைத்தெரிவித்துக்கொண்டிருந்த நிலையில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதவி விலகியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்கள், மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அளித்த விளக்கங்களுக்கான காணொளிகளையும், வடக்கு மாகாண சபையில் நடைபெற்ற அவரது தன்னிலை விளக்கத்துக்கான காணொளியினையும் பார்த்தேன்: கேட்டேன்.

இவற்றிலிருந்து நான் புரிந்தவை எவையென்றால்... அவர் மீதான குற்றச்சாட்டுகளை நீருபிக்காத விசாரணக்குழு அவர் பதவி விலக வேண்டுமென்று முடிவு செய்திருக்கின்றது. இது அமைச்சரின் குற்றச்சாட்டு. அடுத்தது அவர் முதல்வர் விக்கினேஸ்வரன் மீது மிகுந்த மதிப்பும், நம்பிக்கையையும் வைத்திருப்பதையும் அறிய முடிகின்றது. இலங்கை மத்திய அரசால் அதன் எண்ணங்களுக்கேற்ப ஆடுவாரென்று ஆரம்பத்தில் கருதப்பட்ட முதல்வர் பின்னர் மக்களின் துயரங்களை நேரில் கேட்டுப்பின்னர் சுதந்திரமாகத் தமிழ் மக்களுக்காகச் செயற்படத்தொடங்கிவிட்டாரென்றும், அதனால் அதிருப்தியுற்ற இலங்கை மத்திய அரசின் சதியே கூட்டமைப்புக்கும், முதல்வருக்குமிடையிலான பிளவுகளுக்குக் காரணமென்றும், முதல்வரை நீக்குவதே இலங்கை மத்திய அரசின் நோக்கமென்றும் அமைச்சர் ஐங்கரநேசனின் உரையிலிருந்து ஊகிக்க முடிகின்றது. ஏற்கனவே இவ்வகையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் சிலரைக்கொண்டுள்ள விசாரணக்குழுவின் மீது அமைச்சர் சந்தேகம் மிக்கவராக இருப்பதையும் ஊகிக்க முடிகின்றது. மேலும் தன்னைச்சந்தித்த முதல்வர் வடக்கு மாகாண சபையினைக்காப்பதற்குப் பதவி விலகித்தியாகம் செய்யுமாறு கேட்டதன அடிப்படையிலேயே தான் பதவி விலக முன்வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
•Last Updated on ••Monday•, 03 •July• 2017 09:55•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 243 : எழுத்தாளர் அருண்மொழிவர்மனுடன் சில மணித்துளிகள்.......

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் அருண்மொழிவர்மன்இன்று மாலை (ஜூன் 29, 2017) எழுத்தாளரும், புதிய சொல் ஆசிரியர் குழுவைச்சேர்ந்தவரும், இணையச் சுவடிகள் காப்பகத் தளமான 'நூலகம்' தளத்திட்டத்தின் பங்காளர்களிலொருவருமான அருண்மொழிவர்மனுடன் சுமார் இரு மணித்தியாலங்கள் வரையில் , பிரிம்லி மற்றும் லோரன்ஸ் வீதிச்சந்திப்பிலுள்ள 'டிம் கோர்ட்ட'னில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. மறைந்திருக்கும் ஈழத்தவர்களின் படைப்புகளையெல்லாம் இணையத்தில் ஆவணப்படுத்தி வரும் 'நூலகம்' தளம் பற்றி, நூல் வெளியீடுகள் பற்றி, அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அனைவருக்கும் பொதுவாக நூல்கள், ஓலைச்சுவடிகள், கலை, இலக்கிய ஆளுமைகளின் இறுதிக்காலக் கையெழுத்துக் குறிப்புகள், ஆக்கங்கள் போன்றவையெல்லாம் ஆவணப்படுத்தும் பணியினைச் செய்துவரும் இணையச் சுவடிகள் அமைப்பான 'நூலகம்' தளத்தின் முக்கியத்துவம் பற்றி இவ்விதம் பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடல் தொட்டுச் சென்றது.

நூலகம் தளத்தின் சுவடிகளை ஆவணப்படுத்தும் திட்டம் பற்றி, அதனை எவ்விதம் செய்வது பற்றி, இதற்காக இலங்கையில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளைப்பற்றி இவர் இச்சந்திப்பின்போது எடுத்துரைத்தார். நூலகம் தளத்தின் முக்கியமான ஆவணப்படுத்தல் செயற்பாடுகளில் இவ்வோலைச்சுவடிகளை ஆவணப்படுத்தலும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க செயற்பாடு.

•Last Updated on ••Friday•, 30 •June• 2017 09:00•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 242: நனவிடை தோய்தல்: க.பாலேந்திரா பற்றிய சிந்தனைகள் சில.....

•E-mail• •Print• •PDF•

பாலேந்திராயூலை 9, 2017 அன்று 'டொராண்டோ'வில் பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brect) எழுதிய புகழ் பெற்ற நாடகங்களிலொன்றான The Exception and The Rule என்னும் நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான 'யுகதர்மம்' நூலின் வெளியீடு நடைபெறவுள்ளது. அன்று மாலை 3800 Kingston Road , Toronto என்னும் முகவரியில் அமைந்துள்ள Scarborough Village Community Centre மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்காகத் திரு. பாலேந்திரா அவர்கள் தற்போது 'டொரோண்டோ' வருகை தந்திருக்கின்றார். அவரது நூல் வெளியீடு வெற்றியடைய வாழ்த்துகள். பாலேந்திராவின் வருகை அவர் பற்றிய சிந்தனைகளை ஏற்படுத்திவிட்டது. அது பற்றிய நினைவுப்பதிவே இது.



உலகத்தமிழர்கள் கலை, இலக்கிய வரலாற்றில் , நாடகக் கலையைப்பொறுத்தவரை க.பாலேந்திராவுக்கு முக்கியமானதோரிடமுண்டு. இலங்கையிலும் , புகலிடத்தமிழச்சூழலிலும் அவரது குழுவினரின் அவைக்காற்றுக்கழகத்தின் பங்களிப்பு முக்கியமானது. இத்தருணத்தில் அவரைப்பற்றிச் சிறிது என் சிந்தனையினையோட்டுகின்றேன்.

நான் அவரை முதன் முதலில் சந்தித்தது மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில்தான். அப்பொழுதுதான் நான் அங்கு கட்டடக்கலைப்பிரிவுக்குத் தெரிவாகியிருந்தேன். அவர் பொறியியற் கல்வி கற்று, பொறியியலாளராக வெளியேறியிருந்தார். இருந்தாலும் அவர் அடிக்கடி பல்கலைக்கழகத்துக்கு வருவார். பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்துக்காக அவரது நாடகங்கள் பல அக்காலகட்டத்தில் மேடையேறின. நான் நாடகங்களை இரசிப்பவனாகவிருந்தேன். நடிப்பவனாக இல்லாத காரணத்தால் அச்சமயத்தில் அவருடன் நெருங்கிப்பழக முடியவில்லை. ஆயினும் காணும் தருணங்களில் எப்பொழுதும் அவருக்கேயுரிய , இதழ்க்கோடியில் மலரும், அனைவரையும் ஈர்க்கும் புன்னகையுடன்தான் தோன்றுவார். எனக்கு அவரைப்பற்றி நினைத்தவுடன் முதலில் தோன்றுவது அந்தப்புன்னகை தவழும் முகமும், அதனைத்தொடர்ந்து அவர் இயக்கி , ஈழத்தமிழ் நாடக உலக்குக்கு அறிமுகப்படுத்திய நவீன நாடகங்களும்தாம்.

•Last Updated on ••Thursday•, 29 •June• 2017 22:32•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 241: நான் மதிக்கும் இலக்கிய ஆளுமைகள்: எழுத்தாளர் நந்தினி சேவியர்

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் நந்தினி சேவியர்!அண்மைக்காலமாக எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூற் பதிவுகளை ஆர்வத்துடன் படித்து வருகின்றேன். அதிகமான இவரது முகநூல் பதிவுகள் இவரது கலை, இலக்கியம் மற்றும் சமூக நீதி, பொதுவுடமை சமுதாய அமைப்பு ஆகியவை பற்றிய, ஆளுமைகள் பற்றிய விமர்சனக் குறுங்குறிப்புகளாக அமைந்திருக்கின்றன. இலங்கை அரசின் சாகித்திய விருது, கொடகே அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்ற ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளிகளிலொருவர்.

இவரது படைப்புகள் பலவற்றை நான் இன்னும் விரிவாக வாசிக்கவில்லை. ஆயினும் அவற்றை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன இவரது முகநூற் குறிப்புகள். இவரது முகநூற் குறிப்புகள் மூலம் நான் இவரைப்பற்றி அறிந்து கொண்ட இவரது ஆளுமை பற்றிய பிரதான அம்சங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்:

1. மானுட சமூக விடுதலைக்காக இவர் வரித்துக்கொண்ட கோட்பாடு மாரக்சியக் கோட்பாடு. இலங்கையில் சீனசார்புக் கம்யூனிச அமைப்பினூடு, மானுட சமூக, பொருளாதார விடுதலைக்காக, கட்சியில் இணைந்து செயற்பட்ட இலக்கியப்போராளிகளிலொருவர் இவர். இவ்விடயத்தில் , தான் பின்பற்றும் கோட்பாடு விடயத்தில் இவர் மிகவும் தெளிவாக இருக்கின்றார். தீண்டாமை போன்ற சமூகப்பிரச்சினைகளுக்கு மார்க்சியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட கட்சியொன்றினூடு இணைந்து போராடுவதே ஒரே வழி என்பதில், வர்க்கப்போராட்டமே ஒரே வழி என்பதில் உறுதியாக இருக்கின்றார். இந்த அடிப்படையில் இவர் அரசியல் ஸ்தாபனங்களைப்பற்றி, ஆளுமைகளைப்பற்றித் தன் விமர்சனங்களை முன் வைக்கின்றார்.

2. அடுத்த இன்னுமொரு விடயம். இவர் யாருக்காகவும் தனக்குச் சரியென்று பட்டதை எடுத்துரைக்கத் தயங்குவதில்லை. தான் தெளிவுடன் அணுகும் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் தன் வாதங்களை ஆணிதரமாக முன் வைப்பவர் இவர்.

3. தன் தனிப்பட்ட உடல்நிலை, பொருளியல் நிலை போன்ற விடயங்கள் தன் கலை, இலக்கியச் செயற்பாடுகளை, எண்ணங்களைத் திசை திருப்பி விடாதவாறு பார்த்துக்கொள்கின்றார்.

4. முகநூலை ஆக்கபூர்வமாகத் தொடர்ச்சியாகப் பாவித்துத் தன் எண்ணங்களை எடுத்துரைத்து வருகின்றார்.

5. கடந்த காலக் கலை, இலக்கிய மற்றும் அமைப்புகளின் செயற்பாடுகளை அவ்வப்போது இவ்விதமான குறிப்புகள் மூலம் பதிவு செய்வதோடு, அவை பற்றிய தன் விமர்சனங்களையும் முன் வைக்கின்றார்.
•Last Updated on ••Friday•, 16 •June• 2017 22:41•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 240 : தேவை அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலின் அத்தியாயம் முப்பது; ;புறம் கூறுதல் பற்றி....

•E-mail• •Print• •PDF•

தேவை அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலின் அத்தியாயம் முப்பது.

'மனக்கண்' நாவலிலிருந்து..1967இல் தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளிவந்த , அறிஞர் அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்'. இந்நாவல் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களிலொன்று. அதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்: சுவையாகப் பின்னப்பட்ட கதை, அ.ந.க.வின் துள்ளுதமிழ் மொழி நடை மற்றும் நாவலில் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கும் பல்வேறு தகவல்கள். இந்நாவல் பற்றி விரிவானதொரு கட்டுரை எழுதியிருக்கின்றேன். அது 'ழகரம்' சிறப்பிதழில் மற்றும் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியுள்ளது. அதற்கான இணைய இணைப்பு: http://www.geotamil.com/index.php…

இந்நாவலுக்கு நாவல் பற்றிச் சிறப்பானதொரு ஆய்வுக் கட்டுரையினையும் அ.ந.க எழுதியுள்ளார்.
அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலைப் 'பதிவுகள்' இணைய இதழிலிலுள்ள அ.ந.க பக்கத்தில் வாசிக்கலாம்: அதற்கான இணைப்பு: http://www.geotamil.com/index.php…

மேற்படி 'மனக்கண்' நாவலின் அத்தியாயம் முப்பது இன்னும் எமக்குக் கிடைக்கவில்லை. அதனை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம். இந்நாவல் தொடராகத் தினகரனில் வெளியாகியபோது தொடராக நாவலைச் சேகரித்து யாராவது வைத்திருந்தால் அந்த அத்தியாயத்தை எமக்குத் தந்தால் நன்றியாகவிருப்போம். மே 31, 1967 தினகரன் பத்திரிகையில் 'மனக்கண்' நாவலின் அத்தியாயம் 29 வெளியாகியுள்ளது. ஜூன் 13, 1967 தினகரன் பத்திரிகையில் அத்தியாயம் 31 வெளியாகியுள்ளது. ஆக, அத்தியாயம் 30 மே 31 , 1967 - ஜூன் 13, 1967 காலகட்டத்தில் வெளியான தினகரன் பத்திரிகையில் வெளியாகியிருக்க வேண்டும்.

இந்த அத்தியாயத்தை எற்கனவே இலங்கைச் சுவடிகள் திணைக்களத்தில் தேடிப்பார்த்திருக்கின்றோம். ஏனைய அத்தியாயங்களையெல்லாம் அங்கிருந்து பெற முடிந்தது. இதனை மட்டும் பெற முடியவில்லை.

யாராவது இலங்கை லேக் ஹவுஸ் நிறுவனத்துடன் தொடர்புகொண்டு , இந்த அத்தியாயத்தைப் பெற்றுத்தந்தால் அவ்வுழைப்புக்குரிய சன்மானம் வழங்கவும் தயாராகவிருக்கின்றோம். ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• .

•Last Updated on ••Friday•, 16 •June• 2017 01:06•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 239 : நான் மதிக்கும் இலக்கிய ஆளுமைகள் - எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம்

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம்இவரது சிறுகதைகள் அடங்கிய `தியானம்` தொகுதி `பூரணி` வெளியீடாகவும்எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் இலங்கையிலிருந்த காலத்திலேயே 'பூரணி' சஞ்சிகையின் இணையாசிரியர்களிலொருவராக இருந்தவர். எழுத்தாளர் அமரர் மு.தளையசிங்கத்தின்பால் பெருமதிப்புக் கொண்டவர். கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் மொழிபெயர்ப்பு என்று பன்முக இலக்கியப்பங்களிப்பாற்றி வருபவர். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய இவரது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கான மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை. சின்னுவ அசுபேயின் 'Things Fall Apart' ennum புகழ்பெற்ற நாவலைத் தமிழில் 'சிதைவுகள்' என்று மொழிபெயர்த்திருக்கின்றார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலது. `ஆடும் குதிரை` (நற்றிணை பதிப்பகம்) `, 'இரவில் நான் உன் குதிரை' என்பன இவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் அடங்கிய குறிப்பிடத்தக்க நூல்கள். இவரது சிறுகதைகள் அடங்கிய `தியானம்` தொகுதி `பூரணி` வெளியீடாகவும், `உள்ளொளி` கவிதத்தொகுப்பு `காலம்` சஞ்சிகை வெளியீடாகவும் வெளிவந்துள்ளன. கனடாவிலிருந்து மாதாமாதம் வெளியாகும் டிலீப்குமாரை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'தாய்வீடு' பத்திரிகையில் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வருகின்றார்.

இவர் பல இலக்கிய அமர்வுகளை நடாத்தியிருக்கின்றார். இவர் இலக்கிய அமர்வுகளைத் தலைமையேற்று நடாத்துவதற்கு மிகவும் பொருத்தமான படைப்பாளிகளொருவர். கலை, இலக்கியம் பற்றிய இவரது கருத்துகளில் தத்துவார்த்தரீதியில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருப்பினும் , அவற்றையும் மீறி இவரது இலக்கியப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. விதந்தோடப்பட வேண்டியது.

•Last Updated on ••Monday•, 12 •June• 2017 21:54•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 238 : சுரதாவும், ஆசிரியப்பாவும்..; கவிதை: ஒரு சிற்றுலகப்பறவையின் பேருலகம்; கூத்தாடி அரசியல்; மனிதாபிமான நோக்கில் அணுகுவோம்!!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் சுரதாஅண்மையில் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் முன்பொருமுறை அமரர்களான சோவுக்கும், கவிஞர் சுரதாவுக்குமிடையில் கவிதை பற்றி நடைபெற்ற வாதப்பிரதிவாதங்களைக் குறிப்பிட்டு, கவிஞர் சுரதா சோவின் கவிதை பற்றிய கூற்றுக்கெதிராக எழுதிய கவிதையினையும் தனது முகநூல் பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தார். 'பழுதென்ன கண்டீர் என் பாட்டில்?' சுரதா எழுதிய கவிதையின் இடையில்

"ஆனந்த விகடனில்யான் எழுது கின்ற
ஆசிரியப் பாக்களிலே, எதுகை மோனை
ஊனமுண்டா? ஓட்டையுண்டா? "


என்று குறிப்பிட்டிருப்பார்.

அது பற்றிய என் கருத்தினைப் பின்வருமாறு முன் வைத்திருந்தேன்.அதற்கு கவிக்கோ ஞானச்செல்வன் பதிலளித்திருந்தார். ஒரு பதிவுக்காக அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

கிரிதரன் நவரத்தினம்: "ஆசிரியப்பாவில் எதுகை, மோனை அவசியமில்லை. இயல்பாக இருந்தால் நல்லது, ஆனால் அவசியமில்லை. ஆசிரியப்பாவில் முக்கியமானது பாவிக்கப்படும் சீர்களும் (பெரும்பாலும் தேமா, புளிமா போன்ற ஈரசைச்சீர்களாக இருக்க வேண்டும்) . தளைகளும் (பெரும்பான்மையாக நேரொன்றிய ஆசிரியத் தளையும் நிரையொன்றிய ஆசிரியத் தளையும் வரவேண்டும் ஆனால் வஞ்சிச்சீர்கள் வரவே கூடாது). எதற்காகக் கவிஞர் சுரதா 'ஆசிரியப் பாக்களிலே, எதுகை மோனை ஊனமுண்டா? என்று கேட்கின்றார் இங்கே?"

•Last Updated on ••Saturday•, 10 •June• 2017 22:13•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 238 : பன்முக ஆற்றல் வாய்ந்த கலைஞர்!

•E-mail• •Print• •PDF•

கலைஞர் கருணாநிதிகலைஞர் கருணாநிதியின் தொண்ணூற்று நான்காவது வயதினைக் கொண்டாடுகின்றார்கள். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, அறிஞர் அண்ணா இவர்களைப் போன்றவர்களின் வரலாற்று பன்முகப்பட்டது. அரசியல், கலை, இலக்கியம் எனப்பன்முகமானது. எனவே இவர்களது சமுதாயப்பங்களிப்பு பற்றிய விமர்சனங்களைத் தனியே அரசியலுடன் மட்டும் நிறுத்திவிட முடியாது. அந்த வகையில்தான் நான் கலைஞரின் வரலாற்றை அணுகுகின்றேன்.

அவரது தமிழ்த்திரைப்படத்துறையில் அவரது பங்களிப்பை மறக்க முடியாது. ஒரு காலத்தில் தமிழ்த்திரையுலகைப் பாடல்கள்  ஆட்டிப்படைத்தன. எம்.கே.தியாகராஜா பாகவதர், பி.யு.சின்னப்பா என்று தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் கோலோச்சிய காலகட்டம் அது. பின்னர் தமிழ்த்திரையுலகை வசனங்கள் ஆட்டிப்படைத்தன. இளங்கோவனின் கண்ணகி அதற்கு நல்லதோர் உதாரணம். அதன் பின்னர் தமிழ்த்திரையுலகைக் கலைஞரின் வசனங்கள் ஆட்டிப்படைத்தன. 'பராசக்தி' நல்லதோர் உதாரணம். சமுதாயச்சீர்திருத்தக் கருத்துகளைத்தமிழ்த்திரையுலகில் விதைத்தவைத் திமுகவினரின் திரைப்படங்கள். அந்த வகையிலும் சமுதாய அநீதிகளைத் தட்டிகேட்ட 'பராசக்தி' போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை. 'பூம்புகார்' திரைப்படமும் அவரது முக்கியமான திரைப்படங்களிலொன்று. தமிழ் நாடகத்துறையிலும் திமுகவினரின் அத்துறைக்கான பங்களிப்பு விரிவாக ஆராயப்பட வேண்டியது. தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியராகவும் கலைஞர் பல முக்கியமான பாடல்களை எழுதியுள்ளார். அவற்றையும் தவிர்ப்பதற்கில்லை.

தமிழ் இலக்கியத்திலும் கலைஞரின் எழுத்து நடை முக்கியமானது. ஒரு காலத்தில் வாசகர்களைக் கட்டிப்போட்ட நடை. அடுக்கு மொழிகள், எதுகை மோனைகளால் நிறைந்த வாசிப்பவர் நெஞ்சினை அள்ளும் நடை அது. கூறும் பொருளைச் சுவையான தமிழில் கூறுவதில் வல்லவர் கலைஞர். தமிழ் இலக்கிய வரலாற்றில் திமுகவினரின் எழுத்துக்கும் ஒரு குறிப்பிட்ட காலப்பங்களிப்பு உண்டு. அவற்றைத்தவிர்க்க முடியாது.

•Last Updated on ••Monday•, 05 •June• 2017 00:13•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 237 : இயற்கையின் அனர்த்தங்கள் , மானுட அழிவுகள் மற்றும் மானுடரின் சமூக வன்முறைகள் பற்றி..

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 237 : இயற்கையின் அனர்த்தங்கள் , மானுட அழிவுகள் மற்றும் மானுடரின் சமூக வன்முறை பற்றி..அண்மையில் தென்னிலங்கையில் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் நூற்றுக்கணக்கில் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். மானுட அழிவுகள் பற்றி முகநூலில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகள் பல இனரீதியில், இனவாதம் மிக்கவையாக இருப்பது மிகவும் துரதிருஷ்ட்டமானது. மானுட அழிவுகளை மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் அணுகும் பண்பினை நாம் இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லையென்பதையே இவ்வகையான கருத்துகள் எடுத்துக்காட்டுகின்றன.  மானுடர்கள் தமக்குள் நிலவும் பல்வேறு வகையான பிரிவினைகள் காரணமாக ஏற்படுத்தும் அழிவுகள் காரணமாக நாடோறும் பல்லாயிரக்கணக்கில் மானுடர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றார்கள். அவற்றுக்கெதிராக, அனைத்து மானுடர்களின் உரிமைகளுக்காகவும் நீதி கேட்டுப் போராடும் நாம், இயற்கை அழிவுகளினால் பலியாகும் மானுடர்களின் அழிவுகளை இனியாவது மனிதாபிமானத்துடன் அணுகுவோம். மரண வீட்டில் ஏற்பட்ட இழப்புகளை, அவற்றால் துயருறும் உறவுகளை நினைவு கூர்வோம். இயலக்கூடிய உதவிகளைச் செய்வோம்.

இது போல் இன்னுமொரு நிகழ்வு பற்றியும் பலர் தெரிவித்திருந்த கருத்துகள் எவ்வளவுதூரம் நாம் இன்னும் மத, இன ரீதியாகப் பிளவு பட்டிருக்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டின. திருமலையில் தமிழ்ச்சிறுமிகள் பாலியல் வன்முறைக்குள்ளாகியுள்ளதாகவும், அதனைப்புரிந்தவர்கள் முஸ்லீம் இளைஞர்கள் இருவர் என்றும் வெளியான செய்திகளுக்குக் கருத்துகளைத்தெரிவித்திருந்த பலர் அனைத்து முஸ்லீம் இன மக்களையும், அவர்களது மதத்தினையம் புண்படுத்தும் வகையில் தமது கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள். இரு மனிதர்கள் புரிந்த சமூக விரோதச் செயலுக்கு எதிராகக் கருத்துக்கூறுவதற்குப் பதில் தமிழ், முஸ்லீம் மக்களை இன, மதரீதியாகப் பிளவுபடுத்தும் இவ்விதமான கருத்துகளை வெளியிடுவதை அனைவரும் கண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ்ச் சிறுமிகளுக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும், அச்சிறுமிகள் மீது வன்முறையினைப்புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டு, நீதியின் முன் நிறுத்தபட்டுத் தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட வேண்டும் . இதுவே அனைவரினதும் நோக்கமுமாகவும் இருக்க வேண்டும்.

•Last Updated on ••Monday•, 29 •May• 2017 21:33•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 236: மார்க்ஸ்: வாழ்க நீ எம்மான்!

•E-mail• •Print• •PDF•

கார்ல் மார்க்ஸ்இந்த உலகத்து மானுடர்களின் துன்பங்களுக்கு அடிப்படைக்காரணம் வர்க்கங்களாகப் பிரிந்து கிடத்தலே. மானுடரின் சகல துயரங்களுக்கும் அடிப்படை பொருளே. பொருள் பிரச்சினை என்பது மானுடர் தாமே தமக்குள் கட்டி அமைத்த சமுதாய அமைப்பு என்ற விளையாட்டே. இது ஒரு விதத்தில் 'பாம்பும் ஏணியும்' போன்றதொரு விளையாட்டே. ஏறுவதும், இறங்குவதும், ஏறுவதுமாக அமைந்த ஒரு விளையாட்டே. இந்த விளையாட்டு மானுடரின் வரலாற்று வளர்ச்சியில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சிப்போக்கின் விளைவே. இவ்வித வர்க்கங்களாக மானுடரின் பிரிவுதனை நிலை நிறுத்தி வைப்பதற்குத் துணை போகும் முக்கிய காரணங்களாக மானுடரின் மத்தியில் காணப்படும் ஏனைய பிரிவுகளைக் (மதம், மொழி, இனம், சாதி போன்ற பல) கூறலாம்.

மானுடரின் பிரச்சினைய நன்கு உணர்ந்து மதவாதிகள் பலர் தீர்வுகள் கூறி வருகின்றார்கள். ஆனால் அவர்களின் தீர்வு இறுதித்தீர்வினை ஒருபோதும் அடையப்போவதில்லை. காரணம்: அவர்கள் யாருமே மானுடரின் பிரச்சினைகளுக்கு அடிப்படைக்காரணமான வர்க்கங்களாகப் பிரிவு பட்டிருக்கும் சமுதாய அமைப்பினை அடியோடு மாற்றுவதைப்பற்றி கூறுவதில்லை. வலியுறுத்துவதில்லை.
•Last Updated on ••Saturday•, 27 •May• 2017 21:08•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 236 : சில முகநூல் பதிவுகள்...

•E-mail• •Print• •PDF•

பாரதி ஒரு கருத்து முதல்வாதியா அல்லது பொருள் முதல்வாதியா

பாரதி ஒரு கருத்து முதல்வாதியா அல்லது பொருள் முதல்வாதியா'முகநூல்' நண்பர்களிடம்  ஒரு கேள்வி. நான் அறிந்த வரையில் பாரதி ஒரு கருத்து முதல்வாதியா அல்லது பொருள் முதல்வாதியா என்னும் நோக்கில் குறிப்பாக அவரது 'நிற்பதுவே நடப்பதுவே' என்னும் கவிதை கூறும் பொருளின் அடிப்படையில் 1981/1982 வெளியான மொறட்டுவைப் பல்கலைகழகத்தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்' இதழில் நான் எழுதிய 'பாரதி கருத்துமுதல்வாதியா அல்லது பொருள்முதல்வாதியா' என்னும் கட்டுரையே முதன் முதல் எழுதப்பட்டதாகத் தெரிகின்றது. வேறு யாராவது இதே கவிதையினை , இதே நோக்கில் கட்டுடைத்துள்ளார்களா? அவ்விதம் யாராவது எழுதியிருந்தால் 1981ற்கு முன்னர் எழுதியிருக்கின்றார்களா? இந்நோக்கில் பாரதியை முதலில் அணுகியவர்கள் யார் யார் என்று அறிய ஆவலாயுள்ளேன். அறிந்திருந்தால் அறியத்தரவும். முற்கூட்டியே நன்றி பல நண்பர்களே. [என் முகநூல் நண்பர்களாக ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், இதழாசிரியர்கள், முனைவர்கள், நாடறிந்த எழுத்தாளர்கள்.. எனப்பலர் இருக்கின்றார்கள். அதனால்தான் நண்பர்களே உங்களிடம் கேட்கின்றேன்.]

'பதிவுகள்' இணைய இதழில்: பாரதியின் பிறந்ததின நினைவுக் கட்டுரை: 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' பாரதியின் பிறந்ததின நினைவுக் கட்டுரை: 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' -வ.ந.கிரிதரன் -http://www.geotamil.com/index.php…

•Last Updated on ••Saturday•, 27 •May• 2017 07:39•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 235 (அன்னையர்தினச்சிந்தனை) - தாயே! உன் நினைவாக.....; மோடியின் இலங்கைப் பயணமும், முள்ளிவாய்க்கால் படுகொலையும், மே மாதமும், மகிந்த பற்றிச் சில சிந்தனைகள்...

•E-mail• •Print• •PDF•

அம்மா: நவரத்தினம் டீச்சர்.அம்மாவை ('நவரத்தினம் டீச்சர்') நினைத்ததும் நினைவுக்கு முதலில் வருவது குடும்பத்துக்கான அவரது அர்ப்பணிப்புத்தான். வவுனியாவில் அவர் வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகக் கடமையாற்றிய சமயம் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்த அந்தக்காலம்தான் முதலில் நினைவுக்கு வரும். அதிகாலையில் மூன்று மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். சமையல் அனைத்தையும் (காலை, மதியம்) சலிக்காமல் செய்வார். எங்கள் எல்லாருக்கும் மதிய உணவை வாழை இலையில் வைத்துக்கட்டி எடுத்து வருவார். சில நாள்களில் வெள்ளிப்பாத்திரங்களாலான உணவுத்தூக்கியில் மதிய உணவை எடுத்து வருவார். மதிய உணவைப் பாடசாலையில் ஒன்றாக இருந்துதான் உண்போம். மறக்க முடியாத பசுமையான நினைவுகள் அவை.

ஒரு நாள் , இரண்டு நாள் அல்ல , ஆண்டுக்கணக்காய் , காலையில் உதிக்கும் சூரியனைப்போல் அலுக்காமல், சலிக்காமல் இவ்விதமே அதிகாலையில் எழுந்து , நீராடி, உணவு சமைத்து, எல்லாருக்கும் உணவை வாழையிலைப் பொதிகளாக அல்லது வெள்ளியாலான உணவுத்தூக்கியில் எடுத்து வருவதை எப்பொழுது நினைத்தாலும் எனக்கு வியப்பும், அவரது அர்ப்பணிப்பு மிக்க அன்பினை எண்ணிப் பெருமிதமும் ஏற்படும்.

அதிகாலைகளில் அப்பொழுதெல்லாம் அவருடன் கூடத்தான் செல்வோம். வயல்களும், வனங்களும், குளங்களும் மலிந்த வவுனியாவின் தெருக்களினூடு அதிகாலைகளில் அவ்விதம் நடந்து செல்வதே நெஞ்சில் பசுமரத்தாணியாகப்பதிந்து விட்ட அனுபவம்.

அவ்விதமாக அதிகாலைகளில் பாடசாலை நோக்கி ஸ்டேசன் வீதி வழியாக எதிர்ப்புறமாக ஒருவர் மடித்துக் கட்டிய வேட்டியும், வெறும் தோளுமாக, வேப்பங்குச்சியால் பற்களை விளக்கியபடி செல்வார். பார்த்தால் அசல் என்.எஸ்.கிருஷ்ணனைப்போலவே இருப்பார். அவரைப்பார்க்கும் நேரமெல்லாம் நான் அம்மாவிடம் 'என்.எஸ்.கிருஷ்ணன் வாறார்' என்று கூறுவேன். ஒருநாள் அம்மா அவரிடம் 'இவர் உங்களைப்பார்க்க என்.எஸ்.கிருஷ்ணனைப்போல இருக்குதாம் என்று கூறுகிறான்' என்று கூறி விட்டார். அதைக்கேட்டதும் பல்லை விளக்கியபடி வந்து கொண்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனின் 'வாயெல்லாம் பல்'. :-) இப்பொழுதும் நினைவில் பசுமையாக நினைவிலுள்ளது.

•Last Updated on ••Monday•, 15 •May• 2017 23:42•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 234 : அறிஞர் அண்ணா மற்றும் கவிஞர் கண்ணதாசன் சர்ச்சை பற்றி...; மார்க்சை நினைவு கூர்வோம்!; சற்சொரூபவதி நாதன் மறைவு!

•E-mail• •Print• •PDF•

கவிஞ்ர கண்ணதாசன்அறிஞர் அண்ணாபேரறிஞர் அறிஞர் அண்ணா அவர்களை அவமானப்படுத்தும் அவரது எதிரிகள் அவரைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்போது ஒரு விடயத்தைக் குறிப்பிடுவார்கள். சட்டசபையில் ஒருமுறை அவருக்கும் ஒரு நடிகைக்குமிடையில் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் குற்றஞ்சாட்டியதாகவும் அப்பொழுது அவர் \அண்ணாவின் பதில்:
'நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவரும் இல்லை. அவள் ஒன்றும் படி தாண்டா பத்தினியும் இல்லை' என்று குறிப்பிட்டதாகவும் குறிப்பிடுவார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் அடுக்கு மொழிகளைக்கொண்டு வசனங்களை உருவாக்கிப் பதிலளிப்பதில் பெயர் போனவர். 'மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்' என்று 'ம'வில் வரும் அடுக்கு மொழிகளைக் கொண்டு ஒரு முறை அவர் கூறியிருக்கின்றார். அதுபோல் யாரோ ஒருவர் சினிமாக்காரர்களைப்பற்றி வரும் கிசுகிசுக்களின் அடிப்படையில் அவ்விதம் கேட்டிருக்க வேண்டும். அதற்கு அவர் அண்ணாவும் வேடிக்கையாக 'நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல' என்று கூறியிருக்க வேண்டும். அதில் தவறில்லை. ஆனால் அவர் 'அவள் ஒன்றும் படி தாண்டாப் பத்தினியும் இல்லை' என்று கூறியிருந்தால் தவறு. ஆனால் அப்படி அவர் கூறியிருப்பாரா அல்லது இதுவும் அவரைப்பற்றி உலாவிய கிசுகிசுக்களிலொன்றா என்பது தெரியவில்லை.

யாராவது அறிஞர் அண்ணாவைப்பற்றிக் குற்றஞ் சாட்டுவதாகவிருந்தால் ஆதாரம் இல்லாமல் கிசுகிசுக்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டாதீர்கள். சட்டசபையில் இவ்விதம் விவாதம் நடந்திருந்தால் அவற்றை ஆதாரங்களுடன் முன் வையுங்கள். அறிஞர் அண்ணா உட்படப் பல திமுகவினர் தமிழ் சினிமாவில் இயங்கியவர்கள். சினிமாக்காரர்களைப்பற்றி கிசுகிசுக்கள் எழுதுவதற்கென்றேயொரு கூட்டம் இருக்கிறது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தி அவற்றின் மூலம் ஒருவரைக் களங்கப்படுத்துவதென்பது கீழ்த்தரமானது.

•Last Updated on ••Saturday•, 06 •May• 2017 05:24•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 233 : வாழ்த்துகின்றோம்: யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் புதிய தணைவேந்தர் கலாநிதி இரத்தினம் விக்கினேஸ்வரன்!

•E-mail• •Print• •PDF•

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் புதிய தணைவேந்தர் கலாநிதி இரத்தினம் விக்கினேஸ்வரன்!இன்று காலை நண்பர் கனகவரதா (கட்டடக்கலைஞர்)  அலைபேசியில் அழைத்திருந்தார். அதனை நான் தவற விட்டு விட்டேன். ஞாயிற்றுக்கிழலைக் காலைப்பொழுதில் யாருடைய அலைபேசி அழைப்பையும் எதிர்பார்த்திராததே அவ்வழைப்பினைத் தவற விட்டதற்குக் காரணம். 'என்ன காரணமாகவிருக்கலாம்? என்றொரு சிந்தனையோட அவரை அலைபேசியில் அழைத்தேன்.

கன்கவரதா (மறுமுனையில்):  "என்ன் விசயமென்றால்... உமக்கு எங்களோடை 'ஹின்டு கொலிஜ்'ஜில் படித்த விக்கியை ஞாபகமிருக்குதா?"

நினைவுக்குருவி காலவெளியில் சிறகடித்துப் பின்னோக்கிச் சிற்கடித்துப் பறந்தது. மெல்ல மெல்ல ஞாபகத்தில் அந்தவுருவம் புலப்பட ஆரம்பித்தது. சராசரி உயரம். எப்பொழுதும் சிரிப்பு பூத்திருக்கும் முகம். நெற்றியில் புரளும் தலை முடி. விக்கினேஸ்வரனின் உருவம் ஞாபகத்தில் அன்றைய கோலத்தில் மலர்ந்து சிரித்தது.

நான் கேட்டேன்: "கனகவரதா, யார் அந்த இணுவில் விக்கியையாச் சொல்லுறீர்?"

கனகவரதா: "பார்த்தீரா நீர் சொன்ன உடனேயே பிடித்து விட்டீர்?"

எப்படி மறகக முடியும்? பாடசாலைக் காலத்து நண்பர்களைப் பல வகைகளில் பிரிக்கலாம். ஆனால் அப்பிரவுகளில் இரு பிரிவுகள் முக்கியமானவை.  ஒரு பிரிவு ந்ண்பர்களின் சகவாசம் பாடசாலையுடன் நின்று விடும். பாடசாலையில் அவர்களுடனான நட்பு கொடிகட்டிப் பறக்கும். பெரும்பாலும் இவ்விதமான நண்பர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வருவதால், பாடசாலைக்கு வெளியில் அதிகம் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவிருக்கும். மேலும் இவர்கள் படிப்பதில் அதிக ஆர்வமாகவிருப்பவர்கள். வயதுக்குரிய கேளிக்கை, விநோதங்கள் போன்ற சமூகச்செயற்பாடுகளில் வீணாக நேரத்தைச் செலவிட விரும்பாதவர்கள். அடுத்த வகையினருடனான நண்பர்களுடனான நட்பு பாடசாலையிலும், வெளியிலும் தொடரும். வயதுக்குரிய கேளிக்கை, விநோதங்களில் கும்மாளமடிப்பதில் வல்லவர்கள் இவ்விதமான நண்பர்கள். இவர்களில் இணுவில் விக்கினேஸ்வரன் முதற் பிரிவைச்சேர்ந்தவர். யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் நெருங்கிப்பழகிய நண்பர்களில் முக்கியமானவர்களிலொருவர். பழகுவதற்கு இனிய பண்பாளர். அமைதியானவர். இவர் ஆத்திரமடைந்து நான் பார்த்ததில்லை.

•Last Updated on ••Monday•, 01 •May• 2017 06:47•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 232 : அமரர் வெங்கட் சாமிநாதன் - சில நினைவுகள்...........

•E-mail• •Print• •PDF•

அமரர் வெங்கட் சாமிநாதன் இணையம் மூலம் என்னுடன் தொடர்புகொண்டு நெருங்கிப் பழகிய இலக்கிய ஆளுமைகளில் முக்கியமானவர். 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தன் படைப்புகளை மறைவதற்கு ஓஇரு நாள்கள் வரையில் அனுப்பிக்கொண்டிருந்தவர். அவர் 'பதிவுகள்' இணைய இதழ்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர்களிலொருவ்வர் அவர். திரு.வெ.சா அவர்கள் கனடா வந்திருந்தபொழுது நான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. அது பற்றி அவர் அடிக்கடி மின்னஞ்சல்களில் குறிப்பிட்டு வருந்தியிருப்பார். அவ்விதமானதொரு மின்னஞ்சலில் அவர் "மறுபடியும் தங்கள் அன்புக்கு நன்றி. கனடா வந்தபோது தங்களுடன் சந்திப்பு நிகழவில்லையே என்ற வருத்தம் இப்போது மேலும் அதிகமாகிறது. இனி அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை" என்று எழுதியிருந்தார். இப்பொழுது அதனை நினைத்தால் சிறிது வருத்தமாகவுள்ளது. பொதுவாகக் கனடாவுக்கு வரும் பல இலக்கிய ஆளுமைகளை அழைத்திருக்கும் அமைப்புகளுடன் செலவழிப்பதிற்கே அவர்களது நேரம் சரியாகவிருக்கும். இவ்விதமான சூழ்நிலையில் நானும் அவர்களைச் சந்திக்க முயற்சி எடுப்பதில்லை. உண்மையில் நான் கனடா வந்த கலை, இலக்கிய ஆளுமைகளில் ஒரு சிலரைத்தான் தனிப்பட்டரீதியில் சந்தித்து , நீண்ட நேரம் உரையாடியிருக்கின்றேன். எழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் சோமகாந்தன், எழுத்தாளர் 'நந்தலாலா' ஜோதிக்குமார் ('தேடல்' நண்ப்ர் குமரன் ஏற்பாட்டில்)  , கலை, இலக்கிய விமர்சகர் யமுனா ராஜேந்திரன் (எழுத்தாளர் தேவகாந்தன் ஏற்பாட்டில், அவரது இல்லத்தில்)  மற்றும் 'உயிர்நிழல்' கலைச்செல்வன் (அமரர் கவிஞர் திருமாவளவன் இருப்பிடத்தில், அவரது ஏற்பாட்டில்). வேறு பலரை அவர்களுடனான சந்திப்புகளில் கூட்டத்திலொருவனாகக் கலந்து, அவர்தம் உரைகளைச் செவிமடுத்திருக்கின்றேன். ஆனால் தனிப்படச் சந்தித்ததில்லை. எழுத்தாளர் சுந்தர ராமசாமி வந்திருந்தபொழுது அவருடன் நடைபெற்ற கலந்துரையாலின் இடைவேளையொன்றில் அவருடன் சிறிது நேரம் உரையாடியிருக்கின்றேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்தாளர்கள் பலருடன் நான் நேரில் சந்தித்திருக்காவிட்டாலும் இணையத்தினூடு தொடர்புகளைப்பேணி வருகிறேன்.

•Last Updated on ••Sunday•, 30 •April• 2017 07:40•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 231: தமிழ்க்கவியின் கட்டுரையும் அது தொடர்பான சர்ச்சையும் பற்றி...

•E-mail• •Print• •PDF•

தமிழ்க்கவிதமிழ்க்கவியின் கிளிநொச்சியும், மலையகத்தமிழரும் -தமிழ்க்கவி' என்ற கட்டுரை வாசித்தேன். நல்லதோர், ,அரிய தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை. நல்லதோர் ஆய்வுக்கட்டுரையாக வந்திருக்க வேண்டிய கட்டுரை மேலும் பல தகவல்களை உள்ளடக்காமல் போனதால் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளிலொன்றாக வரமுடியாமல் போய்விட்டது. குறிப்பாக வட, கிழக்கில் பெருமளவு மலையகத்தமிழர்களை எழுபதுகளில் குடியேற்றிய காந்திய அமைப்பு பற்றி எந்தவிதத்தகவல்களுமில்லை.
அது தவிர கட்டுரை சிறப்பானதொரு கட்டுரை.

கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கீழுள்ள விடயங்களுக்காக இணையத்தில் பலர் தமிழ்க்கவியைத் தாக்கி வருகின்றார்கள்.

1. "மலையகத்தில் இருந்தது போலத் தான் இப்பவும் இருக்கிறோம். என்ன அங்கை குளிர் இங்கை வெயில். அவ்வளவுதான் என்றார் ஒரு முதியவர். இவர்களது பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங் கள் இல்லாதவர்கள் அதிகம். ஒரு குடும் பத்தில் பதினைந்து பதினெட்டு வயதிலுள்ள பிள்ளைகளுக்கு பிறப்பு அத் தாட்சி இல்லை என்றபோது அப்பிள்ளை களின் தாய், தந்தை இருவருக்குமே இல்லை என்பதை அறிந்த போது திடுக்கிட்டோம்.

•Last Updated on ••Thursday•, 20 •April• 2017 07:19•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 230: போராட்ட அனுபவங்களை ஆவணப்படுத்தல் பற்றி..

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும்எழுத்தாளர் கடல்புத்திரன் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் 1984 -1987 வரையிலான காலப்பகுதியில் வடக்கு அராலிப்பொறுப்பாளராக இயங்கியவர். இவரைப்போல் பல இளைஞர்கள், சிறுவர்கள் அக்காலப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் போராளிகளாக யாழ்ப்பாணத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இயங்கியவர்கள். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் படிப்படியாக போராட்டம் சென்று கொண்டிருந்த வேளை அது. இருந்தாலும் வடகிழக்கில் பல்வேறு பகுதிகளிலும் இவர்களைப்போன்றவர்கள் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சின்னமெண்டிஸின் மறைவு வரை மட்டும் இயங்கிப் பின் முற்றாக இயக்க நடவடிக்கைகள் ஸ்தம்பிக்கப்பட்ட நிலையில் மனத்தளர்ச்சியுடன் போராட்டத்திலிருந்து அமைதியாக ஒதுங்கிப்போனவர்களில் இவருமொருவர்.

அண்மையில் இவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது நான் கூறினேன் " நீங்கள் ஏன் உங்கள் காலகட்ட இயக்கச் செயற்பாடுகளை எழுதி ஆவணப்படுத்தக் கூடாது " என்று. இவரைப்போல் பின் தளத்தில் இறுதிவரை இயங்கிய போராளிகள் யாரும் தம் அனுபவங்களைப் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. இதுவரை பதிவு செய்தவர்கள் அனைவரும் பல்வேறு இயக்கங்களிலும் முன்னணியில் இருந்த ஆரம்பக்காலத்தைச் சேர்ந்தவர்களே (எல்லாளன் ராஜசிங்கத்தின் போராட்ட அனுபவக்குறிப்புகள் தவிர) என்று நினைக்கின்றேன்.

இவரைப்போன்றவர்கள் பதிவு செய்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றையாவது பின்வருமாறு பட்டியலிடலாம்:

•Last Updated on ••Thursday•, 20 •April• 2017 22:04•• •Read more...•
 

அருவியில் நீராடியபோது அருவியெனக் கொட்டியது கண்ணீர்! முடிவில் ஆனந்தக்கண்ணீர். 'அருவி' குறும்படம் பற்றிய குறிப்புகள்.

•E-mail• •Print• •PDF•

அருவியில் நீராடியபோது அருவியெனக் கொட்டியது கண்ணீர்! முடிவில் ஆனந்தக்கண்ணீர். 'அருவி' குறும்படம் பற்றிய குறிப்புகள்.அருவி என்னும் குறும்படத்துக்கான இணைப்பினை நண்பர் ரதன் அனுப்பியிருந்தார். இன்றுதான் அக்குறும்படத்தினைப்பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பார்கள். அத்துணை சிறப்பாக ஒரு நீள்படத்தை விட இக்குறும்படம் விளங்கியது. அம்புலி மீடியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குறும்படமான 'அருவி' இன்றைய சூழலில் புகலிடச்சூழலில் வாழும் தமிழ்ப்பெற்றோர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

இக்குறும்படம் டொராண்டோவில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ்த்திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதினைப் பெற்றுள்ளதையும், நோர்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் உத்தியோகபூர்வத் தேர்வு விருதினையும் மற்றும் டொரோண்டோவில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ்த்திரைப்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதினையும் பெற்றுள்ளதையும் குறும்படத்திலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.

பணம், பணம் என்று ஓடி அலையும் பலர் குழந்தைகளை, அவர்களது விருப்பு வெறுப்புகளைக் கவனிக்கத்தவறுகின்றார்கள். குழந்தைகளின் திறமைகளைப் புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்து கொண்டும் அவை பற்றிக்கவனத்திலெடுக்காமல், தம் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப குழந்தைகளை வளர்க்க முற்படுகின்றார்கள். தம் விருப்பு வெறுப்புகளை அவர்கள் மேல் திணிக்கின்றார்கள்.

•Last Updated on ••Sunday•, 16 •April• 2017 08:01•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 229 : எழுத்தாளர் ஜோர்ஜ்.இ.குருஷேவின் தாயகம் (கனடா) புகலிடத்தமிழர்களின் முக்கியமான பத்திரிகை / சஞ்சிகைகளிலொன்று.

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ்.'தாயகம்' சஞ்சிகை அட்டை...புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை / சஞ்சிகைகளில் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. இந்தப்பத்திரிகை /சஞ்சிகையினை நடத்தியவர் எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ்.

ஜோர்ஜ் இ.குருஷேவ் விடுதலைப்புலிகள் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், விடுதலைப்புலிகளை விமர்சித்து எழுதியவர். இன்று பலர் விடுதலைப்புலிகளின் ஆயுதபோராட்டம் முடிந்து, மெளனித்ததன் பின்பு ஆக்ரோஷமாக விமர்சித்து வருவதைப்போல் அல்லாமல் , விடுதலைப்புலிகளின் காலகட்டத்திலேயே விடுதலைப் புலிகளை விமர்சித்து எழுதியவர். அதேசமயம் தான் ஆசிரியராக, பதிப்பாளராகவிருந்து வெளியிட்ட தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் அனைத்து அரசியல் கருத்துகளைக் கொண்டவர்களுக்கும் இடம் கொடுத்தார். அவர்கள்தம் படைப்புகளைப் பிரசுரித்தார். தாயகம் (கனடா) ஆரம்பத்தில் வாரப்பத்திரிகையாக வெளியானது. பின்னர் தனது வடிவமைப்பை மாற்றி வார சஞ்சிகையாக வெளிவந்தது.

தானே ஆசிரியராகவிருந்து, பதிப்பாளராகவிருந்து, தட்டச்சு செய்பவராகவிருந்து, அச்சடிப்பவராகவுமிருந்து (இதற்காக சிறியதொரு அச்சியந்திரத்தையும் தன்னிருப்பிடத்தில் வைத்திருந்தார். ஒருவரே கைகளால் இயக்கக்கூடிய அச்சியந்திரம். வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பான 'எழுக அதிமானுடா!' தொகுப்பினை அச்சிட்ட அச்சியந்திரமும் அதுவே. அந்த அச்சியந்திரம் இன்னும் அவரிடம் ஞாபகச்சின்னமாக இருக்கக்க்கூடும்) )சுமார் ஐந்து வருடங்கள் வரையில் 'தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையினைக் கொண்டு வந்தார். முப்பது வருடங்களில் ஐம்பது இதழ்களைக்கொண்டு வருவதைப்பார்த்து மூக்கில் விரலை வைத்து வியக்கும் நம்மவர்கள் , ஐந்து வருடங்களில் இருநூறுக்கும் அதிகமாகச் தாயகம்(கனடா)வினைத் தனியொருவராக வெளிக்கொணர்ந்தவர் இவர் என்பதை அறிந்தால் வியப்பின் எல்லைக்கே சென்று விடுவார்கள்.

தாயகம் (கனடா) பத்திரிகை /சஞ்சிகையின் 50 இதழ்களைப் 'படிப்பகம்' (http://padippakam.com ) இணையத்தளத்தில் வாசிக்கலாம். தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையிலேயே கவிஞர் கந்தவனம் அவர்களின் மணிக்கவிதைகள்' முதலில் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

•Last Updated on ••Friday•, 07 •April• 2017 22:07•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 228: கவிஞர் பிரமிள் சுட்ட 'தவளைக்கவிதை'யும், அதற்கான மூலமும் பற்றி.....

•E-mail• •Print• •PDF•

பிரமிள்:  கவிஞர் பிரமிள் சுட்ட 'தவளைக்கவிதை'யும், அதற்கான மூலமும் பற்றி.....' பிரமிளின் தவளைக்கவிதை பற்றியதொரு புரிதல்.' என்னுமொரு கட்டுரையினை ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்திருந்தேன்.முகநூலிலும் பதிவு செய்திருந்தேன். அதில் மேற்படி கவிதை பற்றிய எனது புரிதலை எழுதியிருந்தேன். அதற்கான இணைய இணைப்பு: http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1539:-17-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54


அந்தக் கட்டுரையில் நான் பிரமிள் அவர்களின் 'தவளைக்கவிதை' பற்றிக்குறிப்பிட்டிருந்ததுடன் இப்பதிவினை வாசிப்பது நல்லதென்பதால் அக்கட்டுரையில் அக்கவிதை பற்றிய எனது புரிதலின் சாரத்தை ஒருமுறை பார்த்துவிட்டு மேலே செல்வோம். ஏனெனில் இப்பதிவானது அவரது அக்கவிதையின் தோற்றத்துக்கான மூலம் பற்றியது என்பதால் அக்கட்டுரை பற்றி மீண்டுமொருமுறை பார்ப்பதும் அவசியமானதே. அக்கட்டுரையின் அக்கவிதை பற்றிய கருத்துகளின் சாரம் வருமாறு:

"நூறு புத்தி உள்ள மீனை எடுத்துக் கோத்திட முடிந்தது ஈர்க்கில். மீன் பெருமைப்பட்ட புத்தியால் அதனைக் காப்பாற்ற முடியவில்லை. இது போல் தன் புத்தி அதனிலும் அதிகமென்று பெருமைப்பட்ட ஆமையை மல்லாத்தி விட்டால், அதன் மேல் கல்லை ஏற்றி வைத்து விட்டால், அதன் கதை அவ்வளவுதான். அதனால் மீண்டும் நிமிர்ந்திட முடிகிறதா? ஆமை பெருமைப்பட்ட அதன் புத்தியால் அதனைக் காப்பாற்ற முடியுமா? ஆனால் இவற்றுடன் ஒப்பிடும்பொழுது குறைந்தளவே புத்தி உடையதாகக் கூறிக்கொள்ளும் தவளையை மட்டும் பிடிக்க முடிந்ததா? இங்கு கவிஞர் தவளையைக் கவிதையாக உருவகிக்கின்றார். அந்தத் தவளையோ கைகளுக்கு அகப்படாமல் தத்தித் தத்திச் செல்கிறது. இலக்கியத்தின் ஒரு பிரிவான கவிதையைத் தவளையாக உருவகித்திருப்பதால் (தவளை கவிதை என்று கூறாமல் , தவளைக்கவிதை என்று கூறியிருப்பதால்; தவளை கவிதை என்று கூறியிருந்தால், தவளையும் கவிதையும் என்று பொருளாகியிருக்கும்), நூறு புத்தியுள்ள மீனையும், ஆயிரம் புத்தியுள்ள ஆமையையும் ஏனைய பிரிவுகளாகக் கருதலாம். ஒரு விதத்தில் நூறு புத்தியுள்ள மீனை சிறுகதைக்கும், ஆயிரம் புத்தியுள்ள ஆமையை (ஆடி அசைந்து நிதானமாகச் செல்வதால்) நாவலுக்கும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். சிறுகதை எழுதுவதற்குரிய அறிவுத் தேடலை விட நாவல் எழுதுவதற்குரிய தேடல் மிக அதிகம். அதனால்தான் சிறுகதைக்குரிய அறிவுத் தேடலை நூறு புத்தியாகவும், நாவலுக்குரிய தேடலை ஆயிரம் புத்தியாகவும் எழுத்தாளர் கருதுகின்றார். ஆனால் கவிதைக்குரிய அறிவுத் தேடல் அதிகமாக இல்லாவிட்டாலும் (அதனால்தான் தவளைக் கவிதை தனக்கு ஒரு புத்தி என்கின்றது), மேலும் ஏனைய பிரிவுகளை விட , கவிதையானது உணர்ச்சியின் விளைவாக உருவாவது. இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளுக்குத் தேவையான அறிவுத்தேடலும், ஆக்குவதற்குரிய நேரமும் இதற்குத் தேவையில்லை. ஆனால் , நல்லதொரு கவிதையினை உருவாக்குவது சிறுகதையினை எழுதுவதை விட, நாவலொன்றினை எழுதுவதை விடச் சிரமமானது. அதனால் தான், கவிதையானது எழுத்தாளரின் பிடிக்குள் அகப்படாமல் தத்தி, நழுவிச் செல்கிறது. அதனால்தான் எழுத்தாளர் கவிதையினைத் தவளையாக உருவகிக்கின்றார்...... கவிதையைப் பொறுத்தவரையில் இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளைவிட எழுதுவது மிகவும் இலகுவானதென்று பலர் எண்ணி விடுகின்றார்கள். அதனால்தான் புற்றீசல்கள்போல் தமிழ் இலக்கியப் பரப்பில் கவிஞர்கள் முளைத்து விடுகின்றார்கள். உண்மையில் பிரமிள் புற்றீசல்கள்போல் படையெடுத்த புதுக்கவிஞர்களால் நிறைந்துவிட்ட அன்றைய தமிழ் இலக்கியப் பரப்பின் மீதான விமர்சனமாகத்தான் மேற்படி 'தவளைக்கவிதை' என்னும் கவிதையினை எழுதியிருக்கின்றாரென்று படுகிறது. கவிதை எழுதுவதை மிகவும் இலகுவாக எண்ணி ஆயிரக்கணக்கில் கவிதைகளைப் பொழிந்து தள்ளும் கவிஞர்களை நோக்கி, 'நீங்கள் மிகவும் இலகுவாகக் கருதிப் படைக்கின்றீர்களே கவிதைகள். அவை கவிதைகளே அல்ல. இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளை விடக் கவிதை எழுதுவதுதான் மிகவும் சிரமமானது.' என்று சாடுகின்றார் பிரமிள். ........ ஆயிரக்கணக்கில் புற்றீசல்களைப் போல் பெருகியிருக்கும் தமிழ்க் கவிஞர்கள். கவிதையோ இவர்களின் கைகளில் அகப்படாமல் தத்தித் தத்தி ஓடுகிறது. இவர்களும் அதன் பின்னால் தத்தித் தத்தி ஓடுகின்றார்கள். ஆனால் கவிதைதான் இவர்கள் கைகளுக்கு அகப்படவில்லை. இவர்கள் கவிஞர்களா? பித்தர்கள் இவர்கள் என்று சாடுகின்றார். மேற்படிக் கவிதைக்குத் 'தவளைக் கவிதை' என்று தலைப்பிட்டுள்ளதால் கவிதையின் முதன்மைப் பொருள் சமகாலத் தமிழ்க் கவிதையும் அதனைப் படைக்கும் கவிஞர்களும். மேலும் மேற்படி கவிதையினை இன்னுமொரு கோணத்திலும் அணுகலாம். எதற்காகக் கவிதையினைத் தவளைக் கவிதை என்றார்? குறைந்த அளவு அறிவுத் தேடலும் ஆயிரக்கணக்கில் பிரசவிக்கப்படும் இன்றைய தவளைக் கவிதையானது தத்தித் தத்தித் தப்பிப் போகுது. எதனிடமிருந்து உண்மைக் கவிதையிடமிருந்து. தவளைக்கு இன்னுமொரு பெயர் மண்டூகம். மண்டூகம் என்பதற்கு இன்னுமொரு பொருள்: மண்டுகளின் ஊகம். அதாவது முட்டாள்களின் ஊகம். ஆக, இன்றைய தமிழ்க் கவிதையானது மண்டுகளின் ஊகம் என்று சாடுகிறாரோ பிரமிள்?"

இவ்விதம் அப்பதிவினில் எழுதியிருந்தேன். இனி இப்பதிவுக்கு வருவோம்.

•Last Updated on ••Sunday•, 02 •April• 2017 02:22•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 227 : அழியாத கோலங்கள் - வெகுசன இதழ்களின் பொற்காலப்படைப்புகள்!

•E-mail• •Print• •PDF•

ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்'

* 'அழியாத கோலங்கள்: வெகுசன இதழ்களின் பொற்காலப்படைப்புகள்' இப்பகுதியில் அக்காலகட்டத்தில் நான் வாசித்த தொடர்கள் பற்றிய விபரங்கள், ஓவியங்கள், அட்டைப்படங்கள் என்பவை நன்றியுடன் பிரசுரமாகும். *


ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்''கல்கி' சஞ்சிகை தனது வெள்ளிவிழாவினையொட்டி நடாத்திய நாவல் போட்டியில் முதற்பரிசினை உமாசந்திரனின் 'முள்ளும் மலரும்' நாவலும், இரண்டாம் , மூன்றாம் பரிசுகளை ர.சு,நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்', மற்றும் 'பி.வி.ஆர் எழுதிய 'மணக்கோலம்' ஆகிய நாவல்கள் பெற்றன.

'முள்ளும் மலரும்' நாவலுக்கு ஓவியர் கல்பனாவும், 'கல்லுக்குள் ஈரம்' நாவலுக்கு ஓவியர் வினுவும், 'மணக்கோலம்' நாவலுக்கு ஓவியர் விஜயாவும் ஓவியங்கள் வரைந்திருப்பார்கள்.

என் அப்பாவின் கருத்துப்படி முதற் பரிசு பெற்றிருக்க வேண்டிய நாவல் ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்'. என் கருத்து மட்டுமல்ல பலரின் கருத்தும் அதுவே. உண்மையில் 'முள்ளும் மலரும்' நாவல் 'பாசம்' திரைப்படத்தில் வரும் உப கதையான அசோகன்/கல்யாண்குமார்/ஷீலா கதையின் தூண்டுதலால் உருவானதோ என்று கூட எனக்குச் சந்தேகம் வருவதுண்டு. அது பற்றி இன்னுமொரு சமயம் என் கருத்தினை விரிவாகவே பகிர்வேன்.

உமாசந்திரனின் 'முள்ளும் மலரும்' சமூக நாவல். ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்' இந்திய சுதந்திரப்போராட்டத்தின் அகிம்சை மற்றும் ஆயுதப் போராட்டங்களை மையமாக வைத்துப் படைக்கப்பட்ட சமூக, அரசியல் வரலாற்று நாவலென்று கூறலாம். நாவல் இறுதியில் மகாத்மாவின் மரணத்தை மையமாக வைத்து நடைபோடும். நாவலின் பிரதான பாத்திரங்களான ரங்கமணி, திரிவேணி ஆகிய பாத்திரங்கள் மறக்க முடியாத பாத்திரங்கள்.

•Last Updated on ••Tuesday•, 28 •March• 2017 07:05•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 226 : கலாப்ரியாவின் 'உருள் பெருந்தேர்' ஓடிய என் மனப்பாதையில் அது பதித்த தடங்கள்....

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் கலாப்ரியாஎழுத்தாளர்களின் பால்ய காலத்து அனுபவங்களை, வாசிப்பு அனுபவங்களை, மொத்தத்தில் அவர்கள்தம் வாழ்க்கை அனுபவங்களை வாசிப்பதில் எனக்கு எப்பொழுதுமே ஆர்வமுண்டு. முக்கிய காரணம் எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்கள் வெறும் அபுனவுகளாக  மட்டும் இருந்து விடாமல் இலக்கியச்சிறப்பு மிக்கதாக, கலைத்துவம் மிக்கதாகவும் இருக்கும். ஒளிவு, மறைவு இல்லாமல் அவர்கள் எழுத்தில் வெளிப்படும் நேர்மை நெஞ்சினைத்தொடும்.

எழுத்தாளர்களின் அபுனைவுகளில் மட்டுமல்ல அவர்கள்தம் புனைவுகள் கூட சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாக அப்புனைவுகள் இருந்து விடுவதுதான். புகழ் பெற்ற உலகப்பெரும் எழுத்தாளர்களின் சிறப்பான படைப்புகள் அவர்கள் சிந்தனைகளின், வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாகவே அமைந்திருப்பதை அவர்களது படைப்புகளை வாசிக்கும்போது அறிய முடிகின்றது.

மேலும் அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் தெரிவிக்கும் புதுத்தகவல்கள் ஒரு காலகட்ட வரலாற்றுச்சின்னங்களாக விளங்கும். காலமாற்றத்தில் காணாமல் போனவற்றையெல்லாம் அவர்கள்தம் எழுத்துகளில் வாசிக்கும்போது வாசிப்பின்பத்துடன் எம்மையும் எம் கடந்த காலத்துக்கே அழைத்துச்சென்று விடுகின்றன.

அண்மையில் என் நெஞ்சினைத்தொட்டதொரு எழுத்தாளரின் வாழ்க்கை அனுபவங்களினை வெளிப்படுத்தும் புத்தகமொன்றாக எழுத்தாளர் கலாப்ரியாவின் வாழ்வு அனுபவங்களின் தொகுப்பான '  ' என்னும் நூலினைக் குறிப்பிடலாம். இன்றுதான் டொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் அதனை இரவல் பெற்றேன். வாசித்துக் கொண்டிருக்கின்றேன். இதுவரை வாசித்த நூலில் வரும் அவர் வாழ்வில் வந்து போன மனிதர்கள் பற்றிய அனுபவங்கள் நெஞ்சினைத்தொட்டன என்று மட்டும் கூறிவிடமுடியாது. வாசித்த பின்னரும் நெஞ்சினை வாட்டும் வகையில் கலாப்ரியாவின் அனுபவங்கள் நெஞ்சினை உலுக்கு விட்டன என்றே கூற வேண்டும்.

•Last Updated on ••Wednesday•, 15 •March• 2017 23:43•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 225 : சாத்திரியின் 'ஆயுத எழுத்து'

•E-mail• •Print• •PDF•

சாத்திரியின் 'ஆயுத எழுத்துசாத்திரிஅண்மையில் சாத்திரியின் 'ஆயுத எழுத்து' வாசித்தேன் அவ்வாசிப்பு பற்றிய என் கருத்துகளே இப்பதிவு. சாத்திரியின் 'ஆயுத எழுத்து' நூலின் முக்கியம் அது கூறும் தகவல்களில்தானுள்ளது.தமிழினியின் அபுனைவான 'கூர்வாளின் நிழலில்' நூலின் ஞாபகம் சாத்திரியின் புனைவான 'ஆயுத எழுத்து' நாவலை வாசிக்கும்போது எழுந்தது. தமிழினியின் அபுனைவு சுயசரிதையாக, தான் சார்ந்திருந்த அமைப்பின் மீதான சுய விமர்சனமென்றால், 'ஆயுத்த எழுத்து' தான் அமைப்பிலிருந்த அனுபவங்களின் அடிப்படையில் தன்அனுபவங்களை, தான் அறிந்த விபரங்களைக்கூறும் புனைவாகும். புனைவென்பதால் இந்நாவல் கூறும் விடயங்கள் சம்பந்தமாக யாரும் கேள்வி எழுப்பினால், 'இது அனுபவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட நாவல்' என்று கேள்வி கேட்டு தப்பிப்பதற்கு நிறையவே சாத்தியமுண்டு. தமிழினியின் 'கூர்வாளின் நிழலில்' ஆவணச்சிறப்பு மிக்கதாக, கவித்துவ மொழியில் ஆங்காங்கே மானுட உணர்வுகளை வெளிப்படுத்துவதாக, மானுட நேயம் மிக்கதாக, இலக்கியச்சிறப்பு மிக்கதாக அமைந்திருக்கும் அபுனைவுஎன்றால், சாத்திரியின் 'ஆயுத எழுத்து'ம் தவிர்க்கப்படக்கூடியதல்ல. ஆவணச்சிறப்பு மிக்க புனைவான 'ஆயுத எழுத்து' நாவலில் ஆங்காங்கே அங்கதச்சுவை மிக்கதாக, மானுட உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன.

அங்கதச்சுவையுடன் ஆரம்பத்தில் 'டெலி' ஜெகன் பற்றிய பகுதி அமைந்திருக்கின்றது. அவ்விதமான அங்கதச்சுவை மிக்கதாகவே முழு நாவலும் அமைந்திருந்தால் 'ஆயுத எழுத்து' அற்புதமான, இலக்கியச்சிறப்பு மிக்கதொரு பிரதியாகவும் அமைந்திருக்குமென்பது என் தனிப்பட்ட கருத்து. உண்மையில் அங்கதச்சுவை மிக்கதாக 'டெலி' ஜெகன் பற்றிய பகுது இருப்பதால், நூலினை படித்து முடிந்தும் கூட, நூலில் கூறப்பட்ட முக்கியமான பல தகவல்களையும் விட 'டெலி' ஜெகனின் இயக்க நடவடிக்கைகள் பற்றிய விபரிப்புகளும், அவரது துயரகரமான முடிவும் நெஞ்சில் நிற்கவே செய்கின்றன. அவரது இயக்க நடவடிக்கைகளை ஆசிரியர் அங்கதச்சுவை மிக்கதாக விபரித்திருந்தாலும்,வாசிக்கும் ஒருவருக்கு ஜெகனின் தாய் மண் மீதான பற்றும், அதற்கான விடாப்பிடியான போராட்ட முன்னெடுப்புகளும் நெஞ்சில் படமென விரிகின்றன. அதுவே ஆசிரியரின் எழுத்துச்சிறப்பு. அதனால்தான் கூறுகின்றேன் சாத்திரி அந்த நடையிலேயே முழு நாவலையும் படைத்திருக்கலாமே என்று.
•Last Updated on ••Thursday•, 02 •March• 2017 23:15•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 224: கவிதை - கவிஞனொருவனின் நினைவுக் குறிப்புகள்..

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 224: கவிதை - கவிஞனொருவனின் நினைவுக் குறிப்புகள்..இந்தக் கவிதை கவிஞனொருவனின் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளிலொன்று. இது போன்ற அனுபவங்களை பலவற்றை இன்று இணையம் சாத்தியமாக்கியிருக்கின்றது. நண்பனொருவனை நீண்ட காலத்தின் பின் சந்தித்தபொழுது அவன் தன் முதற் காதல் பற்றியும், முகநூல் அனுபவம் பற்றியும் தன் உணர்வுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டான். அப்பொழுது அவன் கூறினான் 'ஒரு காலத்தில் அவன் நெஞ்சினை ஆட்டி வைத்த அந்தப்பெண் இன்று குடும்பம், குழந்தைகள் என்று மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதாகவும், அவளைத்தான் முகநூலில் மீண்டும் சந்தித்தபொழுது அது தனக்கு மகிழ்ச்சியினைத் தந்ததாகவும், உண்மையில் அவள் மகிழ்ச்சியுடன் வாழ்வது தனக்கு இன்பத்தைத்தந்ததாகவும்' அவன் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டான்.

உண்மையில் முகநூல் ஆரோக்கியமான பல விடயங்களைச் சாதித்திருக்கின்றது. என் பால்ய காலத்து நண்பர்கள் பலரை மீண்டும் சந்திக்க வைத்திருக்கின்றது. இழந்த உறவுகள் பலவற்றை மீண்டும் புதுப்பித்திருக்கின்றது. புதிய உறவுகளை அறிய வைத்திருக்கின்றது.

அந்த நண்பனுக்காக , அவன் உணர்வுகளுக்காக எழுதிய சிறு கவிதை இது.

கவிதை: கவிஞனொருவனின் நினைவுக் குறிப்புகள்..

- வ.ந.கிரிதரன் -

இன்னும் ஞாபகத்திலிருக்கிறது
அதிகாலைகளில்
அந்திப்பொழுதுகளில்
நீ
ஆடி அசைந்து நடை பயின்ற
அந்தப்பொழுதுகள்.
உனது அந்தக் காந்தக் கண்கள்,
ஓரக்கண்களால் பார்த்தும் பார்க்காததுபோல்
பார்த்து நீ
சந்திகளில் திரும்புவது,
இன்னும் நினைவுப்பூங்காவில்
மணக்கும் மலர்களிலொன்றாக
பூத்துத்தான் குலுங்குகிறது.
எனக்கு உன்னிடம் பிடித்ததே
உனது அந்தப்புன்னகைதான்.
கண்களும், உன் இதழ்களும்
கூடி உருவாகுமொரு கவிதை அது.
மின்னலென என் இதய வானில்
வந்ததுபோலவே நீ
ஒரு நாள் ஒளிந்து போனாய்.

•Last Updated on ••Wednesday•, 22 •February• 2017 21:24•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 223 : 'The Dark Night of the Soul : A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan' by Dr.R.Dharani

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 223 : 'The Dark Night of the Soul : A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan' by Dr.R.Dharaniமுனைவர் ஆர்.தாரிணிமுனைவர் ஆர்.தாரிணி அவர்கள் என் படைப்புகள் பற்றித் தமிழகத்தில் ஆய்வுகட்டுரைகளை ஆய்வரங்குகளில் சமர்ப்பித்திருக்கின்றார். அவர் பெப்ருவரி 11, 2017 அன்று தமிழகத்தில் நடந்த ஆய்வரங்கொன்றில் கடந்த வருடம் வெளியான 'குடிவரவாளன்' (Am Immigrant) நாவல் பற்றியும் ஆய்வுக்கட்டுரையொன்றினை 'The Dark Night of the Soul : A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan' என்னும் தலைப்பில் சமர்ப்பித்திருப்பதாக அறியத்தந்திருந்தார். அந்த ஆய்வுக்கட்டுரையானது 'Scholarly International Multidisciplinary Print Journal' ஆய்விதழின் ஜனவரி-பெப்ருவரி 2017 இதழில் பிரசுரமாகியுமுள்ளது. அவ்வாய்விதழின் முகப்புப் படத்தையும், அதில் பிரசுரமாயுள்ள முனைவர் தாரிணியின் கட்டுரையின் முதற்பக்கப் போட்டோப்பிரதியையும் ஒரு பதிவுக்காக இங்கே பதிவு செய்வதுடன் , 'பதிவுகள்' வாசகர்களுடனும் பகிர்ந்துகொள்கின்றேன்.

•Last Updated on ••Monday•, 20 •February• 2017 06:36•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 222 : சண்முகம் முத்துலிங்கம் மறைவு (Sanmugam Muttulingam)

•E-mail• •Print• •PDF•

சண்முகம் முத்துலிங்கம்சண்முகம் முத்துலிங்கம்நண்பர் எழுத்தாளர் மைக்கல் தனது முகநூல் பதிவொன்றில் சண்முகம் முத்துலிங்கம் (Sanmugam Muttulingam) அவர்களின் மறைவு பற்றிய செய்தியினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அறிந்தபோது உண்மையிலேயே அதிர்ச்சியாகவிருந்தது. இரு நாட்களுக்கு முன்புகூடத் தனது முகநூலில் பதிவுகள் பலவற்றை இட்டிருந்தாரே. மிகவும் துயர் தருவது. அண்மையில்கூட எழுத்தாளரும் இவரது நண்பருமான நந்தினி சேவியர் அவர்களின் இவரது உடல் நலம் பற்றிய குறிப்பொன்றுக்கான தனது பதிலினைத் தனது முகநூலில் பின்வருமாறு பகிர்ந்துகொண்டிருந்தார்.

"//விரைந்து குணமடைக முத்தரே. (நந்தினி)// அப்பனே நந்தினி, 52 வருடத்தோழனே, உன் அன்புக்கு ... நன்றி ... மூன்றாவது மார்படைப்பிலிருந்து மீண்டுள்ளேன். உடல், மனம், இரண்டுக்கும் போதிய ஓய்வு கொடுக்கிறேன். முகநூல் -- எனது மூளைக்குத் தேவையான உயிர்ப்பைத் தருகிறது ... எனது உடல் யாழ் மருத்துவ பீடத்துக்குத் தானம் என்றும், மரணச்சடங்கு என எதுவிதமான கேலிக்கூத்தும் இருக்கக்கூடாது எனவும், வீட்டில் உறுதியாகச் சொல்லி வைத்துள்ளேன். உடல் இயங்கும் போதே உனக்கும், என்மீது அன்புள்ள யாவர்க்கும், உங்கள் அன்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன் ! இறுதி மூச்சு வரை -- "மீண்டும் தொடங்கும் மிடுக்குடன் ..." வாழ்வேன் ! :-) 'கிழட்டுக்கிளி' சண்முகம் முத்துலிங்கம்."

•Last Updated on ••Wednesday•, 15 •February• 2017 05:27•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 222 : தமிழக அரசியல் நெருக்கடியும், சசிகலாவும்.

•E-mail• •Print• •PDF•

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா'சின்ன அம்மா' சசிகலாவுக்கு அ.தி.மு.கவினரின் சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் தமிழக ஆளுநர் அவரை அழைத்து அவருக்குப் பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்க அழைப்பு விடுக்க வேண்டும். சசிகலாவால் முடியாவிட்டால் தற்காலிக முதல்வர் பன்னீர்செல்வத்தை அவருக்குத்தான் அ.தி.மு.க சட்டசபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென்பதை நிரூபிக்க அழைப்பு விடுக்க வேண்டும். இருவருக்கும் தம் கட்சிச் சட்டசபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காத பட்சத்தில் தி.மு.க.வினருக்குச் சந்தர்ப்பம் வாய்க்கலாம். ஒருத்தராலும் இப்பரீட்சையில் வெற்றியடைய முடியாவிட்டால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டு, சட்டசபைத்தேர்தல் நடத்தப்படலாமென்று கருதுகின்றேன். ஆனால் இதுபற்றி இந்தியத் தேர்தல் சட்டதிட்டங்களை அறிந்த வல்லுநர்கள்தாம் சரியான கருத்துகளை முன் வைக்க வேண்டும்.

'அரசியல் கோமாளி' என்று சுப்பிரமணிய சுவாமியைக் கூறினாலும், அவர் இந்தியச் சட்டதிட்டங்களை அறிந்த அரசியல்வாதி.  அவர் சசிகலாவை அழைப்பதில் ஆளுநர் ஏன் தாமதம் செய்கின்றார் என்று கருத்துத்தெரிவிக்கின்றார். அதில் நியாயம் இருப்பதாகவே கருதுகின்றேன்.

தமிழக ஆளுநரின் பொறுப்பு தன் கடமையைச் சட்டரீதியாகச்செய்வது. சசிகலா, பன்னீர்ச்செல்வத்தின் மீதான தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மக்கள் கூறுவதை வைத்து அவர் செயற்பட முடியாது. அவ்விதம் அரசியல்ரீதியாக அவர் செயற்படுவதை அனுமதிக்கவும் கூடாது. அவ்விதம் அனுமதிப்பது பின்னர் பாரதூரமான விளைவுகளைத் தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்தும்.

•Last Updated on ••Sunday•, 12 •February• 2017 21:18•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 221: வரதபாக்கியானின் (புதுவை இரத்தினதுரை) கவிதை ஒன்று: 'புலிகள் ஆவோம்'

•E-mail• •Print• •PDF•

கவிஞர் புதுவை இரத்தினதுரைஈழத்துக் கவிஞர்களில் கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு முக்கியமானதோரிடமுண்டு. அவரது கவிதைகள் ஈட்டி போல் நெஞ்சினைக் குற்றுபவை. உணர்ச்சிமிக்க உரிமைக் குரலாக ஒலிப்பவை. அவரது எழுத்துப் பங்களிப்புக்கான காலகட்டத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். வர்க்க விடுதலைப்போராட்டக் காலகட்டம். தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டம். ஆரம்பத்தில் இடதுசாரிக் கருத்துகளால், மார்க்சியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுக் கவிதைகள் படைத்தவர் புதுவை. பின்னர் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். முள்ளிவாய்க்காலில் சரணடைந்து காணாமல் போனவர்களில் அவருமொருவர். அவரது அரசியற் கருத்துகளுக்கு அப்பால் ஈழத்துத தமிழ்க் கவிதையுலகில் தடம் பதித்த முக்கியமான கவிஞர்களில் அவருமொருவர். முக்கியமான கவிஞர் ஒருவர் சரணடைந்திருக்கின்றார். அவரைப்பற்றிய எவ்விதத்தகவல்களும் இதுவரை இல்லை. இலங்கை அரசாங்கம் இறுதியில் காணாமல் போனவர்கள் பற்றி வாய் திறப்பதற்கு இறுதியில் புதுவை இரத்தினதுரையின் காணாமல் போதல் வழி வகுக்கலாம். புதுவை இரத்தினதுரையை ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகம் அவ்வளவு இலேசாக மறந்து விடப்போவதில்லை. தேசிய அரசியலுக்கு அப்பால் ஈழத்தின் வர்க்க விடுதலைக்காகப்போர்க்குரலாக ஒலித்த அவரது குரலை ஈழத்து முற்போக்கு இலக்கியம் அவ்வளவு இலேசில் மறந்து விடாது.

எழுபதுகளில் இலங்கையிலிருந்து வெளிவந்த எழுத்தாளர் செ.கணேசலிங்கன் வெளியிட்ட 'குமரன்' இதழில் நிறைய கவிதைகளை வரதபாக்கியான் என்னும் பெயரில் எழுதியிருக்கின்றார். அவரது அக்காலகட்டத்துக் கவிதைகளினூடாக அவரை அணுகுவது அவரது கவிதைகள் பற்றிய திறனாய்வுக்கு , அவரது போர்ச்சுவாலைகளாகத் திகழ்ந்த கவிதைகளை அறிந்து கொள்வதற்குரிய நல்லதோர் அணுகுமுறை.

•Last Updated on ••Saturday•, 28 •January• 2017 22:35•• •Read more...•
 

வாசிப்பும்,யோசிப்பும் 220: முருகபூபதியின் 'சொல்ல மறந்த கதைகள்' பற்றி நான் சொல்ல மறக்காத எண்ணங்கள் சில.. -

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும்,யோசிப்பும் 220: முருகபூபதியின் 'சொல்ல மறந்த கதைகள்' பற்றி நான் சொல்ல மறக்காத எண்ணங்கள் சில.. - வ.ந.கிரிதரன் =எழுத்தாளர் முருகபூபதிஎழுத்தாளர் முருகபூபதியின் எழுத்துகளை நான் விரும்பிப்படிப்பவன். குறிப்பாக அண்மைக்காலமாக அவர் எழுதிவரும் கட்டுரைகள் பல காரணங்களினால் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆவணப்பதிவுகளாகவும், இலக்கியச்சிறப்பு மிக்க பிரதிகளாகவும் அவை இருப்பதற்கு முக்கிய காரணம் அவர் சிறந்த ஊடகவியலாளராகவும், அதே சமயம் இலக்கியப்படைப்பாளியாகவும் இருப்பதுதான். இதனால்தான் அவரது எழுத்து வாசிப்பதற்குச் சுவையாகவும், அவற்றில் காணப்படும் ஆவணப்படுத்தப்பட வேண்டிய தகவல்கள் பிரமிப்பூட்டுவனவாகவும் இருக்கின்றன. அவரது 'சொல்ல மறந்த கதைகள்' தொகுதியினை அண்மையில் வாசித்தேன். தமிழகத்திலிருந்து சிபிச்செல்வனின் 'மலைகள்' பதிப்பகத்தினூடு மிகவும் நேர்த்தியாக வெளிவந்துள்ள நூலிது. இத்தொகுதியிலுள்ள கட்டுரைகள் யுகமாயினி (சஞ்சிகை), உதயம் (இதழ்) ஆகிய இதழ்களிலும், தேனீ இணையத்தளம், அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணையத்தளம் மற்றும் பதிவுகள் இணைய இதழ், நடேசனின் வலைப்பதிவு மற்றும் மேலும் சில இதழ்கள், இணையத்தளங்களில் வெளிவந்ததாகத் தனது முன்னுரையில் மறக்காமல் பதிவு செய்திருக்கின்றார். 'இலக்கியத்தால் ஒன்றுபடுவோம்' என்று அம்முன்னுரையினை முடித்திருக்கும் முருகபூபதி மேற்படி நூலினை 'கொடிய போர்களினால் உலகெங்கும் மடிந்த இன்னுயிர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்' என்று சமர்ப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்நூலிலுள்ள கட்டுரைகள் கூறும் விடயங்கள் பல் வகையின. முருகபூபதி ஊடகவியலாளராகவிருந்ததால், அரசியல்ரீதியாகவும், இலக்கியரீதியாகவும் அவருக்கு இன, மத, மொழி கடந்து பலருடனும் தொடர்புகள் இருந்திருக்கின்றன, அதனால் பலருடன் அவர் பழகும், பணி புரியும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதன் விளைவாக வாசகர்களான எமக்கு நல்ல பல அனுபவப் பதிவுகள் கட்டுரைகளாகக் கிடைத்திருக்கின்றன.

•Last Updated on ••Friday•, 27 •January• 2017 23:34•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 219: தி.ஜா.வின் 'அன்பே! ஆரமுதே!'

•E-mail• •Print• •PDF•

தி.ஜா.வின் 'அன்பே! ஆரமுதே!'

தி.ஜா.வின் 'அன்பே! ஆரமுதே!'தமிழில் எனக்குப் பிடித்த முக்கியமான நாவலாசிரியர் தி.ஜானகிராமன். இவரது 'செம்பருத்தி', 'மோகமுள்', 'மலர் மஞ்சம்', மற்றும் 'அன்பே ஆரமுதே' ஆகிய நாவல்கள் இவரது நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை. 'அன்பே ஆரமுதே' நாவலை என் பதின்ம வயதுகளில் வாசித்திருக்கின்றேன். கல்கி சஞ்சிகையில் தொடராக வெளிவந்த நாவலை அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட நிலையில், ஓவியங்களுடன் வாசித்திருக்கின்றேன். அன்று இந்த நாவலை வாசித்ததற்கும், இன்று வாசிப்பதற்குமிடையில் நாவலை அனுபவிப்பதில், புரிந்து கொள்வதில் நிறையவே வித்தியாசங்களுள்ளன. ஏனென்றால் இந்த நாவலின் பிரதான பாத்திரங்கள் இளம் வயதினரல்லர். முதுமையை எட்டிப்பிடிக்கும் நடுத்தர வயதினர். இவ்வயதினரின் உளவியலை பதின்ம வயதுகளில் புரிந்து கொள்வது வேறு. பாத்திரங்களின் வயதில் புரிந்து கொள்வதென்பது வேறு :-)

கதை இதுதான். அனந்தசாமி என்னும் சன்யாசி, சென்னையில் வாழும் மக்களுக்கு வர்க்க, சமூக வேறுபாடுகளற்ற நிலையில் நாட்டு வைத்தியம் செய்பவர். பந்தங்களைத் தன் இளவயதில் துறந்தவருக்குப் பந்தங்கள் அவரிடம் வைத்தியம் பார்க்கும் சென்னைவாசிகள்தாம். நாவல் அனந்தசாமியின் தாயாரின் மரணத்துடன் ஆரம்பமாகின்றது. அவருக்குச் சகோதர, சகோதரிகள் நல்ல நிலையில் இருந்தாலும், யாருமே வயதான தாயாரைத் தம்முடன் வைத்துப்பார்க்கத்தயாரில்லை. அனந்தசாமியே தாயாரைத்தன்னுடன் கூட்டி வந்து பராமரிக்கின்றார். இந்நிலையில்தான் தாயாரும் இறந்து விடுகின்றார். இவரிடம் வைத்தியம் பார்க்கும் செல்வந்தப்பெண்மணியொருத்திதான் நாகம்மாள். அவளுக்கு ஒரு மகள் சந்திரா.  காதல் தோல்வியால் துயரத்துக்குள்ளாகியிருப்பவள் சந்திரா.

•Last Updated on ••Saturday•, 19 •January• 2019 08:20•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 218: சல்லிக்கட்டு பற்றிய சிந்தனைகள்.. ; கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) நூல் பற்றி..

•E-mail• •Print• •PDF•

சல்லிக்கட்டுக் காளை!கவிதா பதிப்பக வெளியீடாக 'தினமணி: கணையாழிக் கட்டுரைகள் (1995-2000)'சல்லிக்கட்டுத்தடையைத்தொடர்ந்து அண்மைக்காலமாகத் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த மாணவர் போராட்டம் பலரது கவனத்தையும் தமிழர்களின் பாரம்பரியக் கலைகள் பற்றிய விடயங்கள் மீது திருப்பியிருக்கின்றது. ஓரினத்தின் அடையாளங்களில் ஒன்றான அம்சமொன்றின் மீதான ஒருபக்கச்சார்பான தடையென்பது அதுவும் மத்திய அரசின் தடையென்பது நாட்டின் ஒற்றுமைக்குக் குந்தகத்தையே விளைவிக்கும். சல்லிக்கட்டு விளையாட்டானது மிருக வதையென்றால் அதற்கான காரணங்களை விளக்கி, அதனைத்தடை செய்வதற்கான மக்களின் ஆதரவைப்பெற முயல வேண்டும். அதன் பின்னரே , அதற்கான ஆதரவு கிடைத்தால் மட்டுமே அதனைத்தடை செய்ய வேண்டும்.  இன்னுமொரு முக்கியமான விடயம் என்னவென்றால்..: சல்லிக்கட்டு என்பது மிருக வதையென்று மட்டும் கூறி விட முடியாது மனித வதையும் கூடத்தான். இவ்விளையாட்டில் மாடும் உயிரிழக்கலாம். அதனை அடக்க முயலும் மனிதரும் உயிரிழக்கலாம். அல்லது மாடும் படு காயமடையலாம். மனிதரும் படு காயமடையலாம். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் காளையை அடக்கப்புறப்படும் காளையர்கள் இவ்விளையாட்டில் தாம் எதிர்நோக்கும் வெற்றி, தோல்விகளை, அபாயங்களை உணர்ந்தே இறங்குகின்றார்கள். ஆனால் காளைகள் (எருதுகள் அல்லது காளைகள்) அவ்விதம் உணர்ந்தே இறங்குகின்றனவா என்பதை ஒருபோதுமே உணர முடியாது. ஆனால் அவை ஆக்ரோசமாகத் தம்மை எதிர்ப்போர் மீது பாய்வதைப்பார்க்கும்போது அவையும் இந்த விளையாட்டில் தீவிரமாகத் தம்மை ஈடுபடுத்துக்கொள்கின்றன என்பதை மட்டும் உணரலாம்.

•Last Updated on ••Sunday•, 22 •January• 2017 19:32•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 217 : 'மகுடம்' இதழின் கனடாச்சிறப்பிதழ். பற்றி......

•E-mail• •Print• •PDF•

'மகுடம்' இதழின் கனடாச்சிறப்பிதழ்'மகுடம் (கனடாச்சிறப்பிதழ்)' எழுத்தாளர் களப்பூரான் தங்கா அவர்கள் மூலம் கிடைத்தது. வி.மைக்கல் கொலின் அவர்களை ஆசிரியராகக் கொண்டு , இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியாகும் கலை, இலக்கியச் சிற்றிதழான 'மகுடம்' இதழின் ஏப்ரல் - டிசம்பர் 2016 இதழ் கனடாச்சிறப்பிதழாக  கவிதைகள், சிறுகதைகள், மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கி வெளியாகியுள்ளது. சிறப்பிதழினை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. வாசித்ததும் விரிவாக என் கருத்துகளைப் பதிவிடுவேன். இதுவரையில் வாசித்த ஆக்கங்கள் பற்றிய கருத்துகளை மட்டும் இங்கு குறிப்பிடுவேன்.

கவிதைகளைப் பிரதீபா , தான்யா, இரா.குணசீலன், களப்பூரான் தங்கா, மாவலி மைந்தன் சி.சண்முகராசா, வல்வைக் கமல், முரளிதரன், த.அகிலன், அமரர் நா.ஜெயபாலன், எஸ்.லிங்கேஸ்வரன் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். மகனது பிறப்பு பற்றிய அனுபவம் தன்னைக் கவிஞனாக்கிய அனுபவத்தை இரா.குணசீலனின் 'வயிற்றறுத்து வரும் வம்சங்களுக்காக..' கவிதை வெளிப்படுத்துகிறது. வல்வைக் கமலின் 'காணாமல் போனவர்' கவிதை யுத்தம் முடிவடைந்து ஆண்டுகள் ஏழினைக் கடந்த நிலையிலும் , காணாமல் போனவர் இன்னும் திரும்பாத நிலையினை எடுத்துரைத்து நீதி கேட்கின்றது. சர்வதேச மனிட உரிமை அமைப்புகளிடமெல்லாம் முறையிட்டும், இதுவரை எதுவுமே நடக்கவில்லை. நீதி இன்னும் காணாமல் போய்த்தானுள்ளது என்பதை எடுத்துரைக்கும் கவிதை.

எஸ். லிங்கேஸ்வரனின் 'எறும்புகள்' கவிதை வானிலை அறிக்கை எதுவுமேயற்ற சூழலில் எறும்புகள் எவ்விதம் மழை வரப்போவதை அறிந்து ஒளிந்து கொண்டன என வியக்கின்றது. இவ்வகையான அனுபவங்கள் அவ்வப்போது அனைவருக்கும் ஏற்படுபவைதாம். சுனாமி ஏற்பட்ட சூழலில் மானுடர் அழிந்த அளவில் மிருகங்கள் அழியவில்லையென்றும், அவை சுனாமி வரப்போவதை உள்ளுணர்வால் அறிந்து , மேட்டு நிலங்களை நாடிச்சென்று தப்பி விட்டன என்றும் கூறக்கேட்டிருக்கின்றேன். அதனையே கவிதை நினைவூட்டியது. சாதாரண மானுட அனுபவமொன்று இங்கே கவிதையாகியிருக்கின்றது. இனிக்கின்றது.

•Last Updated on ••Sunday•, 22 •January• 2017 19:31•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 216 : எழுத்தாளர் மைக்கலின் முகநூல் கருத்துகள் பற்றி...; மஹாகவியின் 'புள்ளி அளவில் ஒரு பூச்சி!'; தமிழ்த்திரையுலகில் உண்மையான சகல கலா வல்லுநர் எஸ்.பாலச்சந்தர்!; இசை கேட்கும் நேரம் இது: உனது மலர் கொடியிலே. எனது மலர் மடியிலே. உனது

•E-mail• •Print• •PDF•

1. எழுத்தாளர் மைக்கலின் முகநூல் கருத்துகள் பற்றி...

- வ.ந.கிரிதரன் -நண்பர் எழுத்தாளர் மைக்கல் தனது முகநூல் பதிவொன்றில் "தமிழிலக்கியம் ஏன் எப்போதுமே வாழ்வின் இருளையும்/துன்பங்களையும் பேசுகிறது? " என்றொரு கேள்வியினையும், "ஜப்பானில் காமிக்ஸ் நூற்கள்தான் மிக விற்பனையாகின்றனவாம். அப்படியொரு வாசிப்பை நாம் வழமைபடுத்தவேண்டும்." என்றொரு கருத்தினையும் "ஒரு படைப்பு, மனுஷவாழ்க்கைக்கு நம்பிக்கை தரவேண்டும். தொய்ந்த மனதை ஆரவாரித்து ஆர்முடுகலாக்க வேண்டும்."என்றொரு கருத்தினையும் கூறியிருந்தார். அவை என் சிந்தையில் ஏற்படுத்திய சிந்தனைகளை அப்பதிவுகளுக்கு எதிர்வினைகளாகக் கொடுத்திருந்தேன். அவற்றை ஒரு பதிவுக்காக இங்கே பதிவிடுகின்றேன்.

1. நண்பரே! மானுட வாழ்வு என்பது பல்வேறு முரண்பட்ட உணர்வுகளையும் உள்ளடக்கியதுதான். இதுவரை கால உங்களது வாழ்க்கையை மட்டுமே நினைத்துப்பாருங்கள். அந்த வாழ்வு இன்பகரமான உணர்வுகளாலும், துன்பகரமான உணர்வுகளாலும், நேர்மறை / எதிர்மறை உணர்வுகளாலும், வெற்றி/ தோல்விகளாலும், இறப்பு/பிறப்புகளாலும் உள்ளடக்கியிருப்பதைக் காண்பீர்கள். அனைவர் நிலையும் இதுதான்.,... இவைபோன்ற முரண்பட்ட விடயங்களை உள்ளடக்கியதுதானே மானுட வாழ்வு. தமிழிலக்கியம் மட்டுமல்ல உலக இலக்கியம் அனைத்துமே தத்யயேவ்ஸ்கியிலிருந்து, சேக்ஸ்பியரிலிருந்து,.. தகழி சிவசங்கரம்பிள்ளை வரை. கோகுலம் சுப்பையா வரை, சிவராம் காரந் வரை, வைக்கம் முகம்மது பஷீர் வரை மானுடத்தின் இருண்ட, ஒளிர்ந்த பக்கங்களைத்தாம் பேசுகின்றன.

•Last Updated on ••Friday•, 13 •January• 2017 06:25•• •Read more...•
 

எனது குறிப்பேட்டுப் பதிவுகள்.. (ஓர் ஆவணப்பதிவு) - 1

•E-mail• •Print• •PDF•

எனது குறிப்பேட்டுப் பதிவுகள்.. (ஓர் ஆவணப்பதிவு)....எண்பதுகளின் ஆரம்பத்தில் மார்க்சிய நூல்களை வாங்கிப்படிக்கத்தொடங்கிய காலகட்டம். அதுவரை தமிழ், இனம், பழம் பெருமை என்று உணர்வுகளின் அடிப்படையில் சமுதாய அரசியற் பிரச்சினைகளை அணுகிக்கொண்டிருந்தவனை , தர்க்கரீதியாக, அறிவு பூர்வமாக அணுகத்தூண்டியவை மேற்படி மார்க்சிய நூல்களே. 'சி.ஆர்.கொப்பி' என்று அழைக்கப்படும் நீண்ட தாள்களை உள்ளடக்கிய பேரேட்டில் (பொதுவாகக் கணக்கு வழக்குகளை எழுதக் கடை வியாபாரிகள் பாவிக்கும் குறிப்புப் புத்தகம் என்று நினைக்கின்றேன்) நேரம் கிடைத்தபோதெல்லாம் பல் வேறு விடயங்களைப்பற்றிய என் எண்ணங்களை எழுதிவரத்தொடங்கினேன். முகப்பு அட்டையில் எனக்குப் பிடித்த பாரதியாரின் , அறிஞர்களின் கருத்துகளை எழுதி, உள்ளட்டை மற்றும் முதற் பக்கத்தில் எனக்குப் பிடித்த ஆளுமைகளின் படங்களை ஒட்டி அக்குறிப்புப்புத்தகங்களை அலங்கரித்தேன்.

ஒவ்வொரு குறிப்புப் புத்தகத்தையும் தனி நூலாக, தலைப்புக்கொடுத்து வடிவமைத்தேன். இவ்விதம் எழுதிய நூல்களில் ஒரு சில இன்னும் என் கை வசமுள்ளன. ஏனையவை 83 இனக்கலவரத்துக்குப் பின் தோன்றிய அரசியற் சூழலில் தொலைந்து போய்விட்டன. அல்லது யார் கைகளிளாவது அவை இன்னுமுள்ளனவா தெரியவில்லை.

1. நூல் 1 : இயற்கையும், மனிதனும் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
2. நூல் 2: பிரபஞ்சமும் , மனிதனும் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
3. நூல் 3: தத்துவம், அரசியல், காதல் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
4. நூல் 4: கதை, கட்டுரை, கவிதைகள், எண்ண உருவகங்கள்

தற்போது இந்நூல்களின் அட்டைகள் கழன்று, தாள்களெல்லாம் ஒழுங்குமாறிக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் இயலுமானவரையில் ஒழுங்குபடுத்தி, இவற்றிலுள்ளவற்றை அப்படியே எவ்வித மாற்றமும் இல்லாமல் மீண்டும் ஒரு பதிவுக்காகப் பிரசுரிப்பதா அல்லது பிழை, திருத்தம் செய்து பிரசுரிப்பதா என்றொரு சிந்தனை வளையவருகின்றது. ஏனெனில் அக்காலகட்டத்திலிருந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்நூல்களிலுள்ள ஆக்கங்களில் பாவிக்கப்பட்டுள்ள சொற்கள், கருத்துகள் சிலவற்றை இக்காலகட்டத்தில் நான் பாவிப்பதில்லை. ஆனால் ஆக்கங்களின் அடிப்படைக்கருத்துகளில் பெரிதாக மாற்றமேதுமில்லையென்றே தோன்றுகின்றது. பிழை, திருத்தி எழுதினால் ஒரு காலகட்டப்பதிவுகளின் உண்மைத்தன்மை தொலைந்துபோகும் அபாயமுள்ளது. இது விடயத்தில் இன்னும் தெளிவான முடிவெதுவும் எடுக்கவில்லை.

•Last Updated on ••Friday•, 30 •December• 2016 06:14•• •Read more...•
 

எழுத்தாளர் ஜெயபாரதனின் மொழிபெயர்ப்பில் ஜான் டிரிங்வாட்டரின் 'ஆப்ரஹாம் லிங்கன்'

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் ஜெயபாரதனின் மொழிபெயர்ப்பில் ஜான் டிரிங்வாட்டரின் 'ஆப்ரஹாம் லிங்கன்' அறிவியல் அறிஞர் ஜெயபாரதன்எனக்கு மிகவும் பிடித்த அமெரிக்க அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் ஆப்ரஹாம் லிங்கன். அதற்கு முக்கிய காரணம் சிறு வயதிலிருந்தே பாடப்புத்தகங்களில் அவரைப்பற்றிப் படித்ததனாலேற்பட்ட பிம்பமாக இருக்கலாம். வறிய சூழலில் , விறகு வெட்டி, தெருவிளக்கில் பாடங்கள் படித்துப் படிப்படியாக முன்னேறி அமெரிக்க ஜனாதிபதியாகியவர் என்று படித்தது, அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த கறுப்பின மக்களின் விடுதலைக்காக உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டதுடன், அதன் காரணமாகவே அமெரிக்காவின் தென் மாநிலத்தைச்சேர்ந்த தீவிரவாத எண்ணம் மிக்க நாடகக் கலைஞனான வில்லியம் பூத்தினால் சுட்டுகொல்லப்பட்டு , தன் கொள்கைக்காகத் தன் உயிரையே தந்தவர் என்று அறிந்தது போன்ற காரணங்களினால் சிறு வயதிலிருந்தே ஆப்ரஹாம் லிங்கன் எனக்குப் பிடித்த அமெரிக்க அரசியல் தலைவர்களிலொருவராக விளங்கி வருகின்றார்.

ஆப்ரஹாம் லிங்கனைப்பற்றியொரு நூலினை அண்மையில் வாசித்தேன். அதுவோர் அபுனைவல்ல. வரலாறுப்புனைவு: ஒரு நாடகம். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. ஜான் டிரின்ன்க்வாட்டர் (John Drinkwater) ஆங்கிலத்தில் எழுதி பல தடவைகள் பல்வேறு நகரங்களில் மேடையேறிய புகழ் பெற்ற நாடகமான 'ஆப்ரகாம் லிங்கன்' என்னும் நாடகத்தின் மொழிபெயர்ப்பான இந்த நூலினைத் தமிழில் தந்திருப்பவர் எழுத்தாளரும் , அறிவியல் அறிஞருமான ஜெயபாரதன் அவர்களே.

இந்நாடகம் திண்ணை இணைய இதழில் தொடராக வெளிவந்து தமிழகத்தில் தாரிணி பதிப்பக வெளியீடாக (மே 2014)  வெளிவந்துள்ளது. இப்பிரதியினைப் பற்றிய எனது கருத்துகளைக் கூறுவதற்கு முன்னர் திரு.ஜெயபாரதனைப்பற்றிச் சிறிது கூறுவதும் அவசியமானதே.

•Last Updated on ••Thursday•, 22 •December• 2016 18:44•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 215 : புலம்பெயர் இலக்கியம் பற்றிய அலசல்...

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரன்அண்மையில் முகநூலில் எழுத்தாளர் கோ.நாதன் "புலம் பெயர்ந்தவர் முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி படைத்தால் புலம் பெயர்வு இலக்கியமாகுமா?" என்றொரு  கேள்வியினைக் கேட்டிருந்தார். அது பற்றிய எனது கருத்தும் அதனைத்தொடர்ந்து முகநூலில் நடைபெற்ற சிறு கருத்துப்பரிமாற்றம் பற்றிய தகவல்களை இங்கு பதிவு செய்கின்றேன்.

எனது பதில்: "புலம் பெயர்ந்து வாழும் தமிழர் படைக்கும் எதுவுமே புலம் பெயர் இலக்கியம் என்ற வரையறைக்குள்தான் வரும். புலம்பெயர் இலக்கியம் என்பது புலம் பெயர்ந்து வாழும் எவரும் படைக்கும் இலக்கியம். அவ்விலக்கியம் அக்கரை மண்ணின் வாழ்வினை விபரிக்கலாம். இழந்த மண்ணின் மீதான கழிவிரக்கத்தை வெளிப்படுத்தலாம். பிறந்த மண்ணைக்களமாகக்கொண்டும் படைக்கப்படலாம்.

புகழ்பெற்ற யூத இனத்தைச்சேர்ந்த அமெரிக்கரான ஜேர்சி கொசின்ஸ்கி இரண்டாம் உலக மகாயுத்தக் காலத்தில் பெற்றோரிடமிருந்து பிரிந்த நிலையில் , சிறுவனாக ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் தப்பிப்பிழைப்பதற்காக அந்நியர்களுடன் அலைந்து திரிந்திருக்கின்றார். யூதச்சிறுவனான அவரைப்பெற்றோர் முகம் தெரியாத அந்நிய மனிதர்களுடன் அவராவது தப்பிப்பிழைக்கட்டுமென்று அனுப்பி விடுகின்றார்கள். . தன் இளமைக்கால அனுபவங்களை அவர் தனது புகழ் பெற்ற நாவல்களிலொன்றான 'The Painted Bird'  என்னும் நாவலில் விபரித்திருக்கின்றார்.  இவ்விதம் சிறுவனான அவர் அலைந்து திரிந்த  சமயம் யூத மக்கள் படும் துன்பங்களை, அவர்கள் மீது நடைபெறும் படுகொலைகளை, யூதப்பெண்கள் மீது புரியப்படும் கூட்டுப்பாலுறவு வன்முறைகளை, இவை போன்ற கொடிய அனுபவங்களையெல்லாம் அப்படி அப்படியே  வாசிப்பவர் தம் இதயங்களை உலுக்கும் வகையில் விபரிக்கின்றார்  அந்த நாவலில் ஜேர்சி கொஸின்ஸ்கி. இன்று அந்தப்படைப்பு அமெரிக்க இலக்கியத்தின் முக்கிய படைப்புகளிலொன்றாகக் கருதப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் குணா கவியழகன், சோபா சக்தி, தமிழ்நதி, சயந்தன், விமல் குழந்தைவேலு...  எனப் புலம் பெயர்ந்த படைப்பாளர்கள் பலரின் படைப்புகளின் கதைக்களங்களும்  பிறந்த மண்ணின் மீதான சமூக அரசியல் நிகழ்வுகள்தாமே. அவர்கள் யாவரும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் என்றுதானே அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் படைக்கும் இலக்கியம் புலம்பெயர் தமிழ் இலக்கியமாகத்தானே அழைக்கப்படுகின்றது."

•Last Updated on ••Wednesday•, 21 •December• 2016 04:26•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 214 : தற்போதுள்ள தமிழக அரசியல் சூழல் பற்றியொரு பார்வை...

•E-mail• •Print• •PDF•

முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும்தீபா ஜெயகுமார்ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவைப்பற்றி பல்வேறு ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வருவதைப்பார்த்து அப்படி என்னதான் இவரிடம் இருக்கிறது என்று பார்ப்போமேயென்று அவரது நேர்காணல்களுள்ள காணொளிகள் சிலவற்றைப் பார்த்தேன், பார்த்தபோது அவருக்கும் , மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குமிடையிலுள்ள பல ஒற்றுமைகள் புலப்பட்டன. தமிழ் மொழியைப்பாவிக்கும் முறையிலும், உரையாடும் முறையிலும், நிதானமாகக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முறையிலும் ஜெயலலிதாவை தீபா நினைவுறுத்துவதை அவதானிக்க முடிந்தது.

இந்தியா வாரிசு அரசியலுக்குப் பெயர் போன நாடுகளிலொன்று. பிரதமர் இந்திராகாந்தி மரணமடைந்தபோது எந்தவித அரசியல் அனுபவமுமற்ற ராஜிவ் காந்தி முன்னுக்குக் கொண்டுவரப்பட்டு இந்தியாவின் பிரதமாரானது யாவரும் அறிந்ததே. எனவே ஜெயலலிதா மறைந்த சோகத்திலிருக்கும் பெரும்பாலான மக்களுக்குத் தீபாவைப்பார்க்கும்போது ஜெயலலிதாவையே பார்ப்பது போலிருக்கும் உணர்வு தோன்றுவதும், அந்த உணர்வின் அடிப்படையில் அவரையே அதிமுகவின் அடுத்த தலைவராக எண்ணினாலும், ஆதரவு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எம்ஜிஆரின் மறைவின் போது ஜெயலலிதா பலராலும் ஓரங்கட்டப்பட்டார். அது போல் ஜெயலலிதாவின் மறைவின்போதும் தீபா ஜெயலலிதாவின் இறுதிக்காலத்தில் தனது அத்தையைப் பார்ப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

•Last Updated on ••Thursday•, 22 •December• 2016 06:33•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 213: பாரதியார் நினைவாக..: திக்குகள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

•E-mail• •Print• •PDF•

பாரதியார்எனக்குப் பிடித்த இயற்கை நிகழ்வுகளிலொன்று கொட்டும் மழையினை இரசிப்பது. வயற்புறத் தவளைகளின் கச்சேரிகளை இசைத்தபடி, ஓட்டுக் கூரையில் பட்டுத்தெறிக்கும் கொட்டும் மழையொலியை , இரவின் தனிமையில் படுக்கையில் படுத்திருந்தபடி இரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்களிலொன்று. மழை பற்றிய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகள் இரண்டிலொன்று மகாகவி பாரதியாரின் 'திக்குகள் எட்டும் சிதறி' கவிதை. எனக்குப் பிடித்த இயற்கை நிகழ்வுகளிலொன்று கொட்டும் மழையினை இரசிப்பது. வயற்புறத் தவளைகளின் கச்சேரிகளை இசைத்தபடி, ஓட்டுக் கூரையில் பட்டுத்தெறிக்கும் கொட்டும் மழையொலியை , இரவின் தனிமையில் படுக்கையில் படுத்திருந்தபடி இரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்களிலொன்று. மழை பற்றிய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளிலொன்று மகாகவி பாரதியாரின் 'திக்குகள் எட்டும் சிதறி' கவிதை.

டிசம்பர் 11 மகாகவி பாரதியாரின் பிறந்த தினம். அதனையொட்டி அவர் நினைவாக எனக்குப் பிடித்த அவரது கவிதைகளிலொன்றான 'திக்குகள் எட்டும் சிதறி' கவிதையினயும் கேட்க விரும்பியதன் விளைவு இந்தப்பதிவு.

•Last Updated on ••Tuesday•, 13 •December• 2016 01:09•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 212: மக்கள் கவிஞன் இன்குலாப் மறைவு!

•E-mail• •Print• •PDF•

அண்மையில் மறைந்த அமரர் இன்குலாப்அண்மையில் மறைந்த அமரர் இன்குலாப் நினைவாக எனக்கு மிகவும் பிடித்த அவரது கவிதைகளிலொன்றான 'ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்' என்னும் கவிதையையும், அவர் பற்றிய விக்கிபீடியாக் குறிப்பினையும் பகிர்ந்துகொள்கின்றேன். 'சமயம் கடந்து மானுடம் கூடும், சுவரில்லாத சமவெளி தோறும், குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்; மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்' என்று பாடிய மக்கள் கவிஞன் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டான். ஆனால் அவன் தன் எழுத்துகளோடு என்றும் வாழ்வான்.

ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
.
நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்

•Last Updated on ••Tuesday•, 13 •December• 2016 01:05•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 211 : ஜெயலலிதா மறைவு: சில சந்தேகங்களும்.. கேள்விகளும்...

•E-mail• •Print• •PDF•

முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும்அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா வருவது அக்கட்சியினரின் பிரச்சினை. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இறுதிவரையில் எதற்காக யாரையும் சந்திக்காத வகையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்? எதற்காக அப்பலோ மருத்துவ நிலையம் அடிக்கடி அவரது உடல் நிலை பற்றி சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட வேண்டும். இச்சந்தேகங்கள் அனைத்தையும் தீர்க்கும் வகையில் அப்பலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமரர் ஜெயலலிதாவின் நிலையினை வெளிப்படுத்தும் காணொளிகள் வெளியிடப்பட வேண்டும். இச்சந்தேகங்கள் தீர்க்கப்பட்டால் மட்டுமே சசிகலா அதிமுகவின் அடிமட்டத்தொண்டர்களின் ஆதரவைப் பெற முடியும். ஜனநாயக நாடொன்றில் மாநிலமொன்றின் முதல்வர் இவ்விதம் நடத்தப்பட்டிருப்பது கேள்விக்குரியது மட்டுமல்ல கேலிக்குரியதுமாகும்.

பல சந்தேகங்களை ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்தியிருப்பதால் அவரது உடல் நிலை பற்றிய சந்தேகங்கள் தீர்க்கப்படாமல், அதிமுகவின் அடிமட்டத்தொண்டர்களைப்புறக்கணித்து அதிமுகவின் முக்கிய புள்ளிகள் செயற்படுவார்களென்றால் , எதிர்காலச்சட்டசபைத்தேர்தலில் அதிமுக பல பிரிவுகளாகப் பிரிபடுவது தவிர்க்க முடியாதது.

உண்மையில் ஜெயலலிதாவின் உடல் நிலை ஆரம்பத்திலிருந்தே மிகவும் ஆபத்தான கட்டத்திலிருந்திருக்கலாம். அவரது உண்மை நிலை மக்களுக்கூ தெரிந்தால் மக்கள் கொதித்தெழலாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சிரமமாயிருக்கும். எனவே மக்களை ஜெயலலிதாவின் முடிவுக்குத் தயார் செய்து அவரது முடிவினை அறிவித்திருந்தால் மக்கள் பொங்கியெழ மாட்டார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குலைந்தால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி ஏற்படலாம். அதனைக்காரணம் காட்டி மத்திய அரசு அதிமுக அரசைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கலாம். முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை நிலை பிரதமர் மோடிக்குத் தெரிந்திருந்த காரணத்தினால் போலும் அவர் ஜெயலலிதாவை அப்பலோ மருத்துவ நிலையத்துக்கு வந்து பார்க்கவில்லையோ தெரியவில்லையோ?

•Last Updated on ••Tuesday•, 13 •December• 2016 01:53•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 210: இசை கேட்கும் நேரம் இது!

•E-mail• •Print• •PDF•

பாலமுரளி கிருஷ்ணா1. இசை கேட்கும் நேரம்: இசைச்சிகரம் சரிந்தது: பாலமுரளிகிருஷ்ணா மறைவு! அமரர் சங்கீதக் கலாநிதி பாலமுரளி கிருஷ்ணா நினைவாக...

பிரபல கர்நாடக இசைக்கலைஞரான கலாநிதி பாலமுரளி கிருஷ்ணா இன்று (நவம்பர் 22) சென்னையில் மறைந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கர்நாடக இசையின் சிகரங்களில் ஒருவராக விளங்கிய பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் இந்தியத் திரைப்படத்துறையிலும் தன் பங்களிப்பினை வழங்கித் தடம் பதித்தவர். இது பற்றி தினமணி இணையத்தளத்தில் '400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள பாலமுரளி கிருஷ்ணா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் பாடியுள்ளார். பக்த பிரகலாதா என்கிற தெலுங்குப் படத்தில் நாரதராக நடித்தார். 1976-ல் சிறந்த பாடகருக்கான விருதை, ஹம்சகீதே என்கிற கன்னடப் படத்துக்காகப் பெற்றார். 11 வருடங்கள் கழித்து, மாதவச்சாரியா என்கிற படத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலமுரளிகிருஷ்ணா எனக்கு மிகவும் பிடித்துப்போனதுக்கு முக்கிய காரணங்களாக அவரது அனைவரையும் ஈர்க்கும் முகராசி, எந்நேரமும் இதழ்க்கோடியில் ஒளிரும் காந்தப்புன்னகை, நெஞ்சினையள்ளும் இன்குரல், வித்துவச்செருக்கு அற்ற பெருந்தன்மை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். திருவிளையாடல் படத்தில் இவர் பாடிய 'ஒரு நாள் போதுமா? ' பாடலை யார்தான் மறப்பர்? இவரது பாடல்களைக் கேட்டு இரசிப்பதற்கு நிச்சயம் ஒரு நாள் போதாதுதான்.

இன்று முழுவதும் அடிக்கடி சிந்தையில் 'ஒரு நாள் போதுமா/', 'தங்கரதம் வந்தது' மற்றும் 'சின்னக்கண்ணன் அழைக்கின்றான்' ஆகிய பாடல்களே தோன்றுவதும், மறைவதுமாகவிருந்தன. அப்பொழுதுதான் தெரிந்தது என் ஆழ்மனத்தில் எவ்வளவுதூரம் அமரர் பாலமுரளிகிருஷ்ணாவின் இன்குரல் பதிந்துபோய்க்கிடக்கின்றது என்ற உண்மை. தமிழ்த்திரையுலகின் முக்கியமான இசைச்சாதனையாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆகியோர். இம்மூவரின் இசையமைப்பிலும் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் மெல்லிசைப்பாடல்கள் பாடியிருக்கின்றார். அவை அனைத்துமே மிகுந்த வரவேற்பினைப்பெற்ற பாடல்கள். எழுபதுகளில் 'சின்னக்கண்ணன் அழைக்கின்றான்' பாடல் இலங்கை வானொலியின் தமிழ்ப்பகுதியில் ஒலிக்காத நேரமேயில்லை என்னும்படியாக ஒலித்துக்கொண்டிருந்தது.

•Last Updated on ••Sunday•, 27 •November• 2016 07:31•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 209: அன்பரசியின்(அன்பு) தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்..' பற்றிய கருத்துகள் பற்றி....

•E-mail• •Print• •PDF•

அன்பரசி உரைஅண்மையில் டொராண்டோவில் நடைபெற்ற தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் பற்றிய கலந்துரையாடலில் உரையாற்றிய அன்பரசி (அன்பு) அவர்களின் கூறிய கருத்துகள் பற்றிச் சில கருத்துகளைக் கூறலாமென்று மீண்டுமொரு தடவை அவரது உரையினை உள்ளடக்கிய காணொளியினை (வடலி அமைப்பினர் யு டியூப்பில் வெளியிட்ட காணொளி) பார்த்தபொழுது தோன்றியது.

தனதுரையின் உரையின் ஆரம்பத்தில் அவர் தமிழினியக்கா என்று விளித்துக் கூறிய கருத்தொன்றில் நூல் பற்றிக் குறிப்பிடும்போது 'தமிழினியக்கா அவரது அறிவுக்கும், ஆளுமைக்கும் உட்பட்டு அவர் அறிந்த தரவுகள், தகவல்கள், அடிப்படையாக வைத்து நகர்கின்றது இந்நூல் என்றும், 'போர் கொடுமையானது. அதை ஒரு போராளியாக நேர்மையாகப் பதிவு செய்கின்றார் தமிழினி' என்றும் கூறுவார். ஆனால் காணொளியில் இந்த அவரது முடிவைத்தொடர்ந்து அவர் கூறிய பெரும்பாலான கருத்துகள் இக்கருத்துகளுக்கு எதிராகவே இருந்தன. எவ்விதம் அவரால் இந்த நூல் பற்றி இவ்விதமான இரு முரண்பட்ட கருத்துகளுக்கு வர முடிந்தது? அதனை அவர்தான் விளக்க வேண்டும்.

மேலும் மேற்படி நிகழ்வில் கலந்துரையாடலுக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்த நூல் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட பிரதி அல்ல. கிளிநொச்சியில் வெளியான நூலின் பிரதி அது. ஆனால் தனதுரையை ஆரம்பித்ததுமே காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டதன் காரணமாக, காலச்சுவடு பதிப்பகத்தின் அரசியல் காரணமாக, அந்த அரசியலைத் தான் ஏற்காததன் காரணமாக காலச்சுவடு பதிப்பகப் பிரதியாக ஏற்கனவே எண்ணியிருந்ததால், அவ்வுணர்வுகளின் அடிப்படையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரையினை அந்நோக்கில் வைத்து ஆரம்பித்தார். இலங்கைப்பதிப்புக்கும் , காலச்சுவடு பதிப்புக்கும் இடையில் ஏதாவது வேறுபாடுகள் உண்டா? (பின் அட்டைப்பட அறிமுகத்தில் காலச்சுவடு பதிப்பகப் பிரதியிலுள்ள தவறு அனைவரும் அறிந்ததே.). அறிந்தவர்கள் அறியத்தரவும். ஏனெனில் நான் இன்னும் காலச்சுவடு பதிப்பகப்பிரதியினை வாசிக்கவில்லை. இரு பிரதிகளின் உள்ளடக்கமும் ஒன்றாக இருந்தால் காலச்சுவடு அரசியல் செய்கிறதென்ற தர்க்கம் வலுவாக இருப்பதற்குச் சாத்தியமில்லை.

•Last Updated on ••Sunday•, 27 •November• 2016 06:19•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 208 : டொராண்டோ: தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி ஜான் மாஸ்ட்டர்!

•E-mail• •Print• •PDF•

ஜான் மாஸ்ட்டர்அண்மையில் டொராண்டோவில் தேடகம் ஆதரவில் நடைபெற்ற தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் பற்றிய நூல் வெளியீட்டில் அரசியற் செயற்பாட்டாளர் திரு.ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ட்டர்) ஆற்றிய உரை பற்றிய எனது சிந்தனைத்தெறிப்புகள் இவை. அவரது முழுமையான உரையினைக்கீழுள்ள காணொளியில் கேட்கலாம்.

எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து இவரை எனக்குத்தெரியும். ஆனால் புலம் பெயர்ந்து குடி புகுந்த நாடான கனடாவில்தான் இவரது முழுமையான ஆளுமையினை என்னால் , கடந்த பல வருடங்களாக இவரை , இவரது செயற்பாடுகளை அவதானித்ததன் மூலம் அறிய முடிந்தது. மிகுந்த தேடல் மிக்க இவரது சிந்தனையும், செயற்பாடும் எப்பொழுதும் உலகின் பல பாகங்களிலும் வாழும் மக்களின் மானுட உரிமைகளுக்காகத் தான் கற்று, உணர்ந்து, சிந்தித்துத் தெளிவடைந்த சமூக, அரசியல் தத்துவ நோக்கில் குரல் கொடுப்பதும், எழுதுவதும்தாம். இவ்வளவு வருடங்களாக அந்த விடயத்தில் இவர் மிகவும் தெளிவாகவே இருக்கின்றார். இவரது தான் நம்பும் சித்தாந்தம் பற்றிய தெளிவும், அதன் மீதான தொடர்ச்சியான இவரது தேடலும், புரிதலும், தெளிதலும் இவரது அத்தத்துவம் பற்றிய புரிதலைப் பண்படுத்துகின்றன. எனவே இவருடன் தர்க்கிப்பது மிகவும் இன்பமளிக்கக்கூடிய, பயன்மிக்க, ஆரோக்கியமானதொரு விடயமாக நான் உணர்வதுண்டு. ஆனால் அதிகம் பல்வேறு விடயங்களைப்பற்றித் தர்க்கிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் வருவதில்லை. இனிமேல் அவ்விதமான வாய்ப்புகளை அதிகம் உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்பதை இவரது இக்காணொளியிலுள்ள உரை தூண்டுகின்றது.

இங்கு இவர் தமிழினியின் நூல் பற்றிய விமர்சனத்தை ஏனையவர்களிடமிருந்து வித்தியாசமானதொரு கோண்த்தில் நடாத்துகின்றார். தமிழினியின் நூல் பற்றிய முக்கியமான கருத்துகள் பற்றி ஆரம்பத்திலும், இடையில் அவ்வப்போதும் கூறி விடுகின்றார். தமிழினியின் நூலைப் பல்வேறு சக்திகளும் பல்வேறு வழிகளில் தமக்குச் சார்பாகப் பாவிக்கும். தமிழினியின் நூலில் கூறப்பட்டுள்ள சில விடயங்களில் தனக்கும் உடன்பாடில்லை. ஆனால் அவ்விதம் கூறுவதற்குத் தமிழினிக்குள்ள உரிமையினை மறுக்க முடியாது. இவ்விதமாகத் தமிழினியின் நூல் பற்றிய கருத்துகளைக் கூறும் ஜான் மாஸ்ட்டர் அதன் பின் தான் நம்பும் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் நூலைப்பற்றி ஆராய்கின்றார். அந்த ஆய்வினைச் செவிமடுக்கும் ஒருவருக்கு இதென்ன இவர் தமிழினியின் நூலைப்பற்றி விமர்சிப்பதாகக் கூறி விட்டு., தனது அரசியல் கருத்துகளையெல்லாம் மடை திறந்த வெள்ளமென அள்ளி விடுகின்றாரே என்றொரு எண்ணம் தோன்றக்கூடும். ஆனால் சிறிது கூர்ந்து பார்த்தால் அவர் தமிழினியின் நூலில் கூறப்பட்டுள்ள விடயங்களைத்தாம் தான் புரிந்த ஏற்றுக்கொண்ட அரசியற் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்கின்றார் என்பது புரிய வரும்.

•Last Updated on ••Saturday•, 26 •November• 2016 23:10•• •Read more...•
 

தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?

•E-mail• •Print• •PDF•

தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி]- இன்று , நவம்பர் 13, 2016, டொராண்டோவில் தமிழர் வகைதுறைவள நிலைய ஆதரவில் நடைபெற்ற தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் வெளியீடு மற்றும் கலந்துரையாடலில் நான் ஆற்றிய உரையின் முழு வடிவம். - வ.ந.கி ]


தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' சுயசரிதை பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பினாலும், தமிழர் இலக்கிய உலகில் முக்கியமானதொரு நூலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இதனது சிங்கள மொழிபெயர்ப்பும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.

தமிழினியின் சுய விமர்சனம் பற்றிக்குறிப்பிடுகையில் தேசம் ஜெயபாலன் 'இது கூர்வாளல்ல. மொட்டை வாள்' என்று குறிப்பிட்டிருப்பார். அண்மையில் தமிழினியின் கணவர்ஜெயக்குமரனுடனான நேர்காணலொன்றில்தான் இவ்விதம் குறிப்பிட்டிருக்கின்றார். மேலோட்டமாகப் பார்த்தால் தமிழினியின் இயக்கம் பற்றிய விமர்சனங்கள் காரமாக இல்லாதிருப்பதுபோல் தென்பட்டாலும், சிறிது ஊன்றிக்கவனித்தால் மிகவும் கடுமையான விமர்சனங்கள் அவை என்பது தெரியவரும். ஆனால் அவர் முட்டி மோதிக்கொண்டு மோதும் விமர்சனத்தை இங்கு வைக்கவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவரைத் தனிப்பட்டரீதியில் விமர்சிக்கவில்லை. அதனால் ஜெயபாலன் அவ்விதம் நினைத்திருக்கக்கூடும். ஆனால் தமிழினி விமர்சனத்தை முன் வைக்கும்போது கோட்பாட்டு ரீதியில் முன் வைக்கின்றார். விடுதலைப்புலிகள் என்னும் அமைப்பு பின்பற்றிய கொள்கைகள் அடிப்படையில் அவற்றை விமர்சிக்கின்றார். அந்த அமைப்பில் போராடி, இறுதியில் நிராதரவாகக் கைவிடப்பட்டு, இராணுவத்திடம் சரணடைந்து,  சிறைவாழ்க்கை, தடுப்புமுகாம் வாழ்க்கை, புனர்வாழ்வு என்று பல படிகளினூடு சென்று மீண்டும் சமூகத்திற்குள் வருகின்றார். அவ்விதம் வந்தவரைச் சமூகம் எதிர்கொண்ட முறை அதிர்ச்சியூட்டுகின்றது. இந்நிலையில்  அவரது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் தமிழினி என்னும் முன்னாள் பெண் போராளியொருவருக்கு மனம் திறந்த நிலையில் நடந்தவற்றை ஆராய்ந்து முடிவுக்கு வருவதற்குப் பூரண உரிமையுண்டு. அவரது கருத்துகளை ஏற்கலாம். ஏற்காமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு அவர் தான் நினைத்தவாறு கருத்துகள் கூற உரிமையுள்ளது என்பதை ஏற்கவேண்டும்.

இச்சுயசரிதையில் தான் ஏன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையின் கீழ் ஆயுதம் தாங்கிப்போராடப்புறப்பட்டேன் என்பதிலிருந்து , 2009இல் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், அதன் பின்னரான அவரது தடுப்புமுகாம் அனுபவங்களின் பின்னர், சிறை வாழ்வின் பின்னர் அவர் தன் கடந்த கால வாழ்க்கையினை மீளாய்வு செய்தது வரை தோன்றிய உணர்வுகளை அவர் விபரித்திருக்கின்றார். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது இச்சுயசரிதை. அதே சமயம் தமிழினியின் எழுத்தாற்றல் இப்பிரதியை இலக்கியச்சிறப்புமிக்கதொரு பிரதியாகவும் உருமாற்றியிருக்கின்றது.

சுருக்கமாகக் கூறுவதானால் இந்நூலைப் பலவேறு கோணங்களில் வாசகர் ஒருவர் அணுகலாம்.

1. ஒரு நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் சூழல் காரணமாக ஒரு போராளி ஏன் உருவாகின்றார் என்பதற்கான உளவியல் காரணங்களை விபரிப்பதால் இந்நூல் அப்போராளியின் வாக்குமூலமாக முக்கியத்துவம் பெறுகின்றது. ஆரம்பத்தில் கல்வி கற்று சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்த தமிழினியை இராணுவத்தினரின் எறிகணைத்தாக்குதல்கள், இந்தியப்படையினரின் தாக்குதல்கள், போரில் மரணத்தைத்தழுவிக்கொண்ட ஆண், பெண் போராளிகளின் நிலை, ,,இவையெல்லாம் அவரது மனதைப்படிப்படியாக மாற்றுவதை நூல் விபரிக்கின்றது. பாடசாலையில் படிக்கும்போது புலிகளின் மாணவர் அமைப்பில் இணைந்து செயற்படுகின்றார். ஒரு கட்டத்தில் அவர் இவ்விதம் நினைக்கின்றார்:

•Last Updated on ••Wednesday•, 16 •November• 2016 21:42•• •Read more...•
 

தமிழினியும், பெண் விடுதலையும்!

•E-mail• •Print• •PDF•

தனது 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூலில் தமிழினி பெண் விடுதலை பற்றித்தெரிவித்திருந்த கருத்துகள் அந்நூலை வாசிக்கும்போது என் கவனத்தஈ ஈர்த்தன. அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். . குறிப்பாகக்கீழுள்ள சிலவற்றைக் கூறலாம்:தனது 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூலில் தமிழினி பெண் விடுதலை பற்றித்தெரிவித்திருந்த கருத்துகள் அந்நூலை வாசிக்கும்போது என் கவனத்தஈ ஈர்த்தன. தமிழினியின் இக்கருத்துகள்  ஓர் ஆயுதமெடுத்துப்போராடிய அமைப்பின் போராளி என்ற வகையில் முக்கியமானவை. அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். . குறிப்பாகக்கீழுள்ள சிலவற்றைக் கூறலாம்:

1. :" எனது பாடசாலைக் காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தனிப்பெரும் விடுதலை இயக்கமாகப் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தது. மகளிர் படையணிகள் கள முனைகளில் வீர, தீரச் சாதனைகளையும் , உயிர் அர்ப்பணிப்புகளையும் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். நான் இயக்கத்தில் இணைந்து கொண்டமைக்குப் பொதுவான போராட்டச்சூழ்நிலைகளே காரணமாக இருந்த போதிலும், ஒரு பெண் என்ற நிலையில் எனது குடும்பத்தினதும், என்னைச்சூழ்ந்திருந்த சமூகத்தினதும், எப்ண் சார்ந்த கருத்து நிலையை உடைத்து ஒரு புரட்சி செய்யக்கூடிய சந்தர்ப்பமாகவும் அதைக்கருதினேன். நான் இயக்கத்தில் இணைந்த பள்ளிப்பருவத்தில் ஒரு வேகமும், துடிப்பும் என்னிடம் இருந்ததே தவிர , அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் நிலைமைகள் மற்றும் சமூகம் பற்றிய எவ்விதமான புரிதலும் எனக்கிருக்கவில்லை." ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 73)

2. "பெண்கள்  ஆயுதப்பயிற்சி பெற்றபோது, அவர்களால் தமது உடல் வலிமையை நிரூபிக்கக்கூடியதாக இருந்த போதிலும், அவர்களுடைய அடிப்படைச்சிந்தனைகளில் எந்தளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருந்தது என்பது கேள்விக்குரியதாயிருந்தது.   குடும்பம் என்ற அமைப்புக்குள்ளிருந்து  வெளியே வந்து, இயக்கம் என்ற அமைப்பிற்குள் புகுந்து கொண்ட  புலிப்பெண்கள் அனைவருமே புரட்சிகரமான  புதிய சிந்தனை மாற்றத்திற்கு உட்பட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. எவ்வாறு  ஒரு கட்டுக்கோப்பான குடும்பப்பெண்ணாக  வீட்டில் வளர்க்கப்பட்டோமோ, அதேபோலக் கடினமான இராணுவப்பயிற்சிகளைப்பெற்ற, கட்டுக்கோப்பான மகளிர் படையணிப்போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம். " ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 75 & 76)

3. "பெண்களிடையே சுதந்திரமான ஒரு மனோபாவத்தை வளர்ப்பதற்குரிய தீர்க்கமான கொள்கைத்திட்டங்கள் எவையும் எங்களிடமிருக்கவில்லை.  பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்து ஆயுதமேந்துவதன் மூலம், சமூகத்தையே நாம் மாற்றி விடலாம் எனக்கனவு கண்டோம். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், பெண் போராளிகள் ஆயுதமேந்திப் போராடியதால், போர்க்களத்தின் பல வெற்றிகளுக்குக் காரணகர்த்தாக்களாக இருக்க முடிந்ததே தவிர, சமூகத்தில் பெண்கள் சார்ந்த கருத்தமைவில் எவ்விதமான மாற்றங்களையும் எங்களால் ஏற்படுத்திவிட முடியவில்லை. தமிழ் சமூகத்தில் பெண்களின் விடுதலைக்கான பாய்ச்சல் வளர்ச்சியானது ஆயுதப் பெண்களின் பிம்பமாகவே தொடங்கி ஆயுதப் போராட்டத்தின் தோல்வியுடனே அது முடிந்தும் போனது." ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 76)

•Last Updated on ••Friday•, 11 •November• 2016 06:57•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 207: ஹிலாரி கிளிண்டனின் கனவாகிய கனவும், டொனால்ட் ட்ரம்ப்பின் நனவாகிய கனவும்

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 207: ஹிலாரி கிளிண்டனின் கனவாகிய கனவும், டொனால்ட் ட்ரம்ப்பின் நனவாகிய கனவும்நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை மக்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு அளித்துள்ளனர். விபரங்கள் வருமாறு:

ஹிலாரி ஹிளிண்டன்: 59,626,052 votes (47.7%) | டொனால்ட் ட்ரம்ப்: 59,427,652 votes (47.5%)

ஆனால் அமெரிக்கத் தேர்தலில் அதிகப்படியான மக்களின் வாக்குகளை ஹிலாரி கிளிண்டன் பெற்றுள்ளார்.

Hillary Clinton 228 | Donald J. Trump 279

ஆனால் அமெரிக்கத்தேர்தல் சம்பந்தமான சட்ட விதிகளின்படி அதிகளவு மக்களால் விரும்பப்படும் ஒருவர்தான் ஜனாதியாகவும் வரவேண்டும் என்பதில்லை. யாரும் 270 எண்ணிக்கையில் 'எலக்டோரல் (Electoral) வாக்குகளை, குறைந்தது 270 வாக்குகளைப் பெற வேண்டும். அப்பொழுதுதான் அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலில் அவரால் வெற்றிபெற முடியும்.

இம்முறை தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை நிர்ணையித்தது சில தேர்தல் தொகுதிகள்தாம். அமெரிக்காவைப்பொறுத்தவரையில் குடியரசுக்கட்சியினருக்கு எப்பொழுதும் ஆதரவு தெரிவிக்கும் தொகுதிகளும், ஜனநாயகக் கட்சியினருக்கே ஆதரவு தெரிவிக்கும் தொகுதிகளும் உள்ளன. அவை தவிர்ந்த ஏனைய தொகுதிகள்தாம் எப்பொழுதும் ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி , தோல்வியை நிர்ணயிப்பவையாக எப்பொழுதும் விளங்குகின்றன. சில வேளைகளில் குடியரசுக்கட்சியினரின் தொகுதிகள் சில ஜனநாயகக் கட்சியினருக்கும், ஜனநாயகக் கட்சியினரின் தொகுதிகள் சில குடியரசுக்கட்சியினருக்கும் போவதுண்டு. அவ்விதம் நடப்பது அரிதாகத்தானிருக்கும். பெரும்பாலும் இரு கட்சியினரினதும் ஆதரவுத்தொகுதிகள் தவிர்ந்த ஏனைய தொகுதிகளான ஓகியோ, மிச்சிகன்,, புளோரிடா, போன்ற கடும் போட்டி நிலவும் தொகுதிகளை வென்றெடுக்கத்தான் இரு கட்சியினரும் கடுமையாகப்போட்டியிடுவார்கள். இம்முறையும் அவ்விதமே போட்டி நிலவியது.

ஹிலாரி கிளிண்டன் டொனால்ட் ட்ரம்பை விட அதிகளவு ஆதரவு பெற்றவராக தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்னர்வரையில் திகழ்ந்தார். அச்சமயம் பார்த்து அமெரிக்க மத்திய புலனாவுத்துறையின் இயக்குநர் ஏற்கனவே முடிவுக்கு வந்திருந்த , ஹிலாரி கிளிண்டன் தன் பதவிக்காலத்தில் அந்தரங்கமாகப் பாவித்த மின்னஞ்சல் சேர்வர் பற்றிய விசாரணையை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருந்தார். அதனையடுத்து குடியரசுக்கட்சியினரின் கடுமையான பிரச்சாரத்தினால் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவு அதிகரிக்கத்தொடங்கியது. அதுவரையில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராகப்பிரிந்திருந்த குடியரசுக்கட்சியினரை அவருடன் மீண்டும் ஒன்றுபட்டு தேர்தலைச் சந்திக்க ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணை பற்றிய அறிவிப்பு உதவியது. தேர்தலுக்கு ஓரிரு நாட்களின் முன்னரே மத்தியப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணையை மீண்டும் முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தார். இதற்கிடையில் தேர்தலில் முன்னதாக வாக்களிக்கும் சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி சுமார் 25 மில்லியன்களுக்கு அதிகமான வாக்காளர்கள் வாக்களித்து விட்டார்கள். மத்தியபுலனாய்வுத்துறை இயக்குநரின் ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணை பற்றிய அறிவிப்பும் இறுதி நேரத்தில் புளோரிடா போன்ற எந்தக் கட்சியினரினதும் கோட்டையாகக்கருதப்படாத தொகுதிகளைச்சேர்ந்த வாக்காளர்கள் மனம் மாறுவதற்குக் காரணமாக அமைந்து விட்டது.

•Last Updated on ••Thursday•, 10 •November• 2016 19:07•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 206 : கவிஞர் நுஃமானின் 'தாத்தாமாரும் பேரர்களும்' பற்றி.....; முனைவர் சி. மெளனகுருவின் 'சங்காரம்' கவிதை நாடகம் பற்றி...

•E-mail• •Print• •PDF•

1. கவிஞர் நுஃமானின் 'தாத்தாமாரும் பேரர்களும்' பற்றி.....

வாசிப்பும், யோசிப்பும் 206 : கவிஞர் நுஃமானின் 'தாத்தாமரும் பேரர்களும்' பற்றி.....; முனைவர் சி. மெளனகுருவின் 'சங்காரம்' கவிதை நாடகம் பற்றி...ஈழத்துத்தமிழ்க் கவிதையுலகில் எம்.ஏ.நுஃமானின் 'தாத்தாமாரும் பேரர்களும்' முக்கியமான கவிதைத்தொகுதி. நுஃமானின் ஐந்து நெடுங்கவிதைகளை உள்ளடக்கிய தொகுதி. வாசகர் சங்க வெளியீடாக (கல்முனை) வெளியானது.

இத்தொகுப்பிலுள்ள நெடுங்கவிதைகள் வருமாறு:

1. உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்
2. அதிமானிடன்
3. கோயிலின் வெளியே
4. நிலம் என்னும் நல்லாள்
5. தாத்தாமரும் பேரர்களும்

இந்நூலை நுஃமான் கவிஞர் மஹாகவிக்கும், நீலாவணனுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கின்றார்.

இன்று கவிதைகள் என்னும் பெயரில் நூற்றுக்கணக்கில் எழுதிக்குவிப்போர் ஒரு கணம் நுஃமான் போன்றோரின் கவிதைகளை வாசித்துப்பார்க்க வேண்டும். அப்பொழுது புரிந்து கொள்வார்கள் ஒருவருக்கு மரபுக்கவிதையின் அறிவு எவ்விதம் இன்றைய கவிதையினை எழுத உதவியாகவிருக்கும் என்பதை. உதாரணத்துக்கு நூலிலுள்ள நுஃமானின் 'அதிமானிடன்' கவிதையிலிருந்து ஒரு பகுதியைப்பார்ப்போம்:

•Last Updated on ••Sunday•, 30 •October• 2016 16:44•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 205: தமிழினியை நினைவு கூர்வோம்!..

•E-mail• •Print• •PDF•

தமிழினி ஜெயக்குமாரனின் நிதமிழினி ஜெயக்குமாரனின் நினைவு தினம் அக்டோபர் 18. தமிழினிக்கும் எனக்குமிடையிலான தொடர்பு அரசியல்ரீதியிலானதல்ல. சக எழுத்தாளர்களுக்கிடையிலான தொடர்பு, இணைய இதழ் ஆசிரியருக்கும், எழுத்தாளருக்குமிடையிலான தொடர்பு. உண்மையில் அவருடன் தொடர்பு ஏற்பட்டதற்குக் காரணம் இணையம் மற்றும் முகநூலே.

அவரது கணவர் ஜெயக்குமாரன் ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழுக்கு அறிமுகமானவர். அவரது ஆக்கங்கள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியிருக்கின்றன. முகநூலிலும் என் நண்பராக இருப்பவர். அவர்தான் தமிழினியின் கணவர் என்னும் விடயமே  தமிழினியின் மறைவுக்குப் பின்னர்தான் தெரிய வந்தது.

தமிழினி ரொமிலா ஜெயன் என்னும் பெயரிலும் முகநூலில் கணக்கு வைத்திருந்தார். ஆனால் அது எனக்குத் தெரியாது. எனக்கும் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அந்தபெயர் எனக்கு அறிமுகமில்லாததால் நீண்ட காலமாக அந்த நட்பு அழைப்பினை ஏற்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. பின்னர் அவரது சிறுகதையொன்று 'அம்ருதா' (தமிழகம்) சஞ்சிகையில்யில் வெளியான பின்னர்தான் அந்தப்பெயரில் கவனம் செலுத்தினேன். ரொமிலா ஜெயன் சக எழுத்தாளர்களிலொருவர் என்பது விளங்கியதால், அவரது நட்புக்கான அழைப்பினை ஏற்றுக்கொண்டேன். அதன்பின்னர் தமிழினி தனது சொந்தப்பெயரிலேயே முகநூலில் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அப்பொழுதும் ரொமிலா ஜெயனும், தமிழினியும் ஒருவரே என்பது தெரிந்திருக்கவில்லை. அவரது மறைவுக்குப் பின்னரே இருவரும் ஒருவரே என்பதும் புரிந்தது.

தமிழினி என்ற பெயரில் முகநூல் அழைப்பு அனுப்பியபோது அவரது முகநூலில் அவர் பாவித்திருந்த படம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது.  பல்வேறு கைகள் இணைந்து நிற்கும் காட்சி அது. பல்வேறு கருத்துள்ளவர்களுடனும் நட்புக்கரம் கோர்த்து, ஒன்றுபட்டுச் செயற்பட அவர் விரும்பியதை வெளிப்படுத்தும் படம் அது. அதனால்தான் அவரது முகநூல் நண்பர்களாகப் பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கிவர்களும் இணைந்திருக்க முடிந்தது.  படத்திலுள்ள கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அளவுகளில் வேறுபட்டவை. அவை அனைத்தும் ஒன்றுபட்டு ஆக்கபூர்வமாக இயங்குவதைப்போல், முரண்பட்ட கருத்துள்ளவர்களாலும் ஒன்றுபட்டு , முரண்பாடுகளுக்குள் ஓர் இணக்கம் கண்டு இயங்க முடியும். சமூக ஊடகமான முகநூலில் அவரது செயற்பாடுகள் இதனைத்தான் எமக்குக் கூறி நிற்கின்றன. பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கியவர்களெல்லாரும் அவருடன் முகநூலில் கைகோர்த்திருந்தார்கள். அனைவருடனும் அவர் நிதானமாக, உணர்ச்சிவசப்படாமல் கருத்துகளைப் பரிமாறியிருக்கின்றார். அதனால்தான் அவரது மறைவு அனைத்துப்பிரிவினரையும் பாதித்திருக்கின்றது.

•Last Updated on ••Tuesday•, 18 •October• 2016 01:16•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 204 : முகநூற்பதிவுகள்! - யாழ்ப்பாணத்தில் அன்று: 'டபுள் டெக்கர் பஸ்'ஸில் போனேனடி!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 204 : முகநூற்பதிவுகள்!  - யாழ்ப்பாணத்தில் அன்று: 'டபுள் டெக்கர் பஸ்'ஸில் போனேனடி!ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்துத் தெருக்களில் 'டபுள் டெக்கர் பஸ்'கள் ஓடித்திரிந்தன. எழுபதுகளின் இறுதிவரையில் ஓடியதாக ஞாபகம். கே.கே.ஸ். வீதிவழியாக மானிப்பாய் வரையில் அவ்விதமோடிய 'டபுள் டெக்கரில்' சில தடவைகள் பயணித்திருக்கின்றேன். 'டபுள் டெக்கரில்' பயணிக்கையில் எனக்கு எப்பொழுதுமே மேற்தட்டில் பயணிப்பதுதான் விருப்பம். 'டிக்கற்' எடுத்ததுமே மேலுக்கு ஓடிவிடுவேன். மேல் தட்டிலிருந்தபடி இருபுறமும் விரியும் காட்சிகளைப்பார்த்தபடி, அவ்வப்போது பஸ்ஸுடன் உராயும் இலைகளை இரசித்தபடி செல்வதில் அப்பொழுது ஒரு 'திரில்' இருக்கத்தான் செய்தது.

'டொராண்டோ'வில் உல்லாசப்பிரயாணிகள் நகரைச்சுற்றிப்பார்ப்பதற்காக இவ்விதமான 'டபுள் டெக்கர்' பஸ்களை இன்னும் பாவிக்கின்றார்கள். அவற்றைப்பார்க்கும் சமயங்களிலெல்லாம் அன்று யாழ்ப்பாணத்தில் 'டபுள் டெக்கரி'ல் பயணித்த பால்ய காலத்து அனுபவங்கள்தாம் நினைவுப் புற்றிலிருந்து படம் விரிக்கும். 'டபுள் டெக்கரில்' பயணிப்பதைப்பற்றி ஏன் துள்ளிசைப்பாடகர்கள் 'டபுள் டெக்கரில்' பஸ்ஸில் போனேனடி!' என்று  பாடல்கள் எதுவும் எழுதவில்லை என்று இவ்விதமான சமயங்களில் தோன்றுவதுண்டு.

'டபுள் டெக்கர்' பஸ் என்றதும் ஞாபகத்துக்கு வரும் இன்னொரு விடயம். நண்பரொருவர் மானிப்பாய்ப்பக்கமிருந்து வருபவர். அவரது High school sweet heart' ஒருவர் யாழ் வேம்படியில் படித்துக்கொண்டிருந்தார். இவர் என்ன செய்வாரென்றால் பாடசாலை முடிந்து அந்தப்பஸ்ஸில் பயணிக்கும் அந்தப்பெண்ணைப்பார்ப்பதற்காக, அவரது கவனத்தைக் கவர்வதற்காக யாழ் பொது சனநூலகத்துக்குச் சென்று , காத்திருந்து, பாடசாலை முடிந்து அந்த  பஸ்ஸில் பயணிப்பார். ஒருபோதுமே நூலகப்பக்கமே செல்லாத நண்பன் இவ்விதம் நூலகம் சென்றது அக்காலத்தில் எமக்கு வியப்பினைத்தந்தது. பின்னர்தான் உண்மை புரிந்தது. ஆனால் அவரது முயற்சி அவருக்கு வெற்றியளிக்கவில்லை.  இவ்விதம் யாழ்ப்பாணத்து 'டபுள் டெக்கர்'களில் பல காதல் காவியங்களும் நிகழ்ந்ததுண்டு :-) காதல் காவியங்கள் எல்லாமே தோல்வியில் முடிபவைதாமே. :-) அந்த வகையில் நண்பரின் காதலும் காவியமாகிவிட்டது. :-)

•Last Updated on ••Friday•, 14 •October• 2016 22:08•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 203: எழுத்தாளர் சொக்கன் முற்போக்கிலக்கியவாதிகளிலொருவர்!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் சொக்கன்சொக்கனின் 'சீதா' நாவல் (வீரகேசரி பிரசுரம்)- யாழ் இந்துக்கல்லூரி (கனடா) அமைப்பினரின் வருடாந்த நிகழ்வான 'கலையரசி 2016' விழா மலருக்காக, எழுத்தாளர் சொக்கனைப்பற்றிச் சுருக்கமாக எழுதிய கட்டுரையிது. -


ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு யாழ் இந்துக்கல்லூரியின் மாணவர்கள் பலர், ஆசிரியர்கள் பலர் காத்திரமான பங்களிப்புகளைச் செய்திருக்கின்றனர். அவர்களில் சொக்கன் என்றழைக்கப்படும் கலாநிதி கந்தசாமி சொக்கலிங்கம் அவர்களுமொருவர். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் , நல்லூரை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்தவர் சொக்கன்.  யாழ் ஸ்ரான்லி கல்லுரியில் இடைநிலைக்கல்வியைக்கற்ற இவர் பின்னர் தமிழ் வித்துவான், இளநிலை, முதுகலை ஆகிய பட்டங்களுடன் கெளரவக் கலாநிதி பட்டங்களையும் பெற்றவர். யாழ் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகப்பணியாற்றியவரிவர்.

ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறையில் சிறுகதை, நாவல், நாடகம் , இலக்கிய ஆய்வு என சொக்கனின் பங்களிப்பு பரந்து பட்டது. தமிழ் மொழிக்கு மட்டுமல்லாமல், சைவ மதத்துக்கும் மிகுந்த பங்களிப்பு செய்திருக்கின்றார் சொக்கன். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் 'தமிழ்மாமணி', இந்துக் கலாச்சார அமைச்சின் 'இலக்கியச்செம்மல்' , அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் 'மூதறிஞர்' பட்டத்தினையும், விடுதலைபுலிகள் அமைப்பு வழங்கிய மாமனிதர் பட்டத்தையும்  பெற்றவர்..

இவரது 'கடல்' சிறுகதைத்தொகுப்பு 1972ஆம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப்பரிசினைப்பெற்றுக்கொண்டது. 'வீரத்தாய்', 'நசிகேதன்', 'நல்லூர் நான் மணிமாலை', 'நெடும்பா' ஆகிய கவிதைத்தொகுதிகள், 'சிலம்பு பிறந்தது', 'சிங்ககிரிக் காவலன்' ஆகிய நாடகங்கள், 'சீதா', 'செல்லும் வழி இருட்டு' ஆகிய நாவல்கள் மற்றும் 'ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி' (முதுகலைமானிப் பட்டப்படிப்புக்காக எழுதப்பட்ட ஆய்வு நூல்) ஆகியவவை அவரது இலக்கிய வரலாற்றைச்சிறப்பிப்பவை.

•Last Updated on ••Monday•, 10 •October• 2016 05:46•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 202: என் குருமார்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!

•E-mail• •Print• •PDF•

என்னைப்பொறுத்தவரையில் என் குருமார்கள் நூல்களே! அவற்றை எழுதிய எழுத்தாளர்கள், அறிஞர்களே! அவர்களின் இருப்பிடமான நூலகங்களே என் ஆலயங்கள்.
எனது குருமார்களின் உதவியினால் அறிவியல் , அரசியல், வரலாறு, தத்துவம், இலக்கியம் எனப்பல்வேறு துறைகளையும் அறிய முடிந்தது.
ஐனஸ்டைன், கார்ல் மார்க்ஸ், சிக்மண்ட் ஃபிராய்ட், லெனின், மேரி கியூரி, ஸ்டீபன் ஹார்கிங், என் மனதைத்தொட்ட பல புனைகதை எழுத்தாளர்கள் எனப்பலரையும் அறிந்துகொள்ள, புரிந்து கொள்ள முடிந்தது. இந்த உலகை, இந்தப்பிரபஞ்சத்தை, உள்ளே விரிந்திருக்கும் உள்ளத்தை, அதன் ஆற்றலை , அண்ட வெளியில் பரந்து கிடக்கும் பிரமிப்பினையூட்டும் புதிர்களை இவற்றையெல்லாம் அறிய வைத்தவர்கள் எனது குருமார்களே!

"உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே" என்று என்னை நெஞ்சு நிமிர்த்தி ஆட வைத்தவர்கள் எனது குருமார்களே!

"மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்"

என்று என் சிந்தையைப்புடம் போட்டவர்கள் எனது குருமார்களே!

"மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்"

என்று போதித்தவர்கள் என் குருமார்களே!

'இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்ந்திட' வைத்தவர்கள் என் குருமார்களே!

என் சிந்தனையை விரிவு படுத்திய, எப்பொழுதுமே விரிவு படுத்திக்கொண்டிருக்கும் குருமார்களே, இருப்பினைத் தெளிவுடன், நம்பிக்கையுடன் எதிர்கொண்டிட என்னை உருமாற்றிய குருமார்களே, இருப்பில் இன்பத்தைத்தந்த, தருகின்ற குருமார்களே! உங்களுக்கு என் நன்றி! மனமார்ந்த நன்றி! நன்றி! நன்றி! நன்றி!

•Last Updated on ••Friday•, 07 •October• 2016 05:12••
 

வாசிப்பும், யோசிப்பும் 201: ஜெயலலிதா என்னும் எழுத்தாளர் பற்றி......

•E-mail• •Print• •PDF•

ஜெயலலிதாவின் கட்டுரைத்தொகுப்பு.ஜெயலலிதா அன்று.'காவிரி தந்த கலைச்செல்வி' என்னும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பற்றிய தொடரொன்றின் முதற்பகுதியை யு டியூப்பில் பார்த்தேன். அந்நிகழ்வினைத்தொகுத்து வழங்கியவர் எழுத்தாளர் சுதாங்கன். அதில் ஜெயலலிதாவின் எழுத்து முயற்சிகளைப்பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவார். .

எண்பதுகளில் 'எண்ணங்கள் சில' என்னும் தொடர் எழுதினார்  அதனைத் 'துக்ளக்' சஞ்சிகையில். எழுதியிருக்கின்றார்.

'தாய்' வார இதழில் 'எனக்குப் பிடித்த ஊர்', 'எனக்குப் பிடித்த வாத்தியார்', 'எனக்குப் பிடித்த ஓவியர்', 'எனக்குப் பிடித்த எழுத்தாளர்', 'எனக்குப் பிடித்த நாவல்', 'எனக்குப் பிடித்த தத்துவஞானிகள்' என 45 கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். அவையே 'மனதைத்தொட்ட மலர்கள்' என்ற நூலாக வெளிவந்தது. மேற்படி நூலில் தனக்குப் பிடித்த ஓவியராக லியனார்டோ டாவின்சியை குறிப்பிட்டிருக்கின்றார். தனக்குப் பிடித்த நாவலாக சார்ள்ஸ் டிக்கன்ஸின் 'டேவின் காப்பர்ஃபீல்ட்' டைக்குறிப்பிட்டிருப்பார். பதினாறு பக்கங்களில் நாவலைச்சுருக்கமாகக் குறிப்பிட்டு விமர்சித்திருப்பார்.

68இல் பொம்மை இதழுக்காக எம்ஜிஆரிடம் நேர் காணல் எடுத்திருக்கின்றார். 63 கேள்விகளை அவரே தேர்ந்தெடுத்து நேர்காணல் செய்திருக்கின்றார்.'இவை 'காவிரி தந்த கலைச்செல்வி' காணொளியில் கிடைக்கப்பெற்ற தகவல்கள்.

•Last Updated on ••Thursday•, 06 •October• 2016 22:11•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 200: மீண்டு வருக!

•E-mail• •Print• •PDF•

தமிழக முதல்வரின் சிறு வயதுத்தோற்றம்.தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாதமிழக முதல்வர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 இலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார். தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரும் கட்சி பேதமின்றி அவர் விரைவில் பூரண நலத்துடன் மீண்டு வரவேண்டுமென்று வாழ்த்தியிருக்கின்றனர். இது தமிழக அரசியலில் காணாத விடயம். அரசியல் நாகரிகம் இன்னும் சிறிதாவது இருப்பதை எடுத்துக்காட்டும் பண்பு இவ்வாழ்த்துதலில் தெரிகிறது. "மகிழ்ச்சி!"

தமிழக முதல்வர் பற்றிய அரசியல்ரீதியிலான கருத்துகளுக்கு அப்பால் அவர் தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப்பெற்ற வசீகரம் மிக்க தலைவர். அந்த மக்களின் உணர்வுகளைப்புரிந்துகொள்ள வேண்டும். அவரை உயிருக்குயிராக விரும்பும் அந்த மக்களுக்காக அவர் விரைவில் பூரண சுகமடைந்து வருவார் என்று எதிர்பார்போம். ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல் சுகவீனம் சாதாரணமானதல்ல. அது பற்றிய விரிவான தகவல்கள் எதுவும் வெளியில் வராது மறைக்கப்பட்டிருந்தாலும், அவர் கடுமையானரீதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்பதுதான் அது. ஏதாவது தொற்றுநோயாகக்கூட இருக்கலாம். சவால்களை எதிர்த்து மீண்டு வரும் ஆளுமை மிக்கவர் அவர். இம்முறையும் மீண்டு வருவாரென்று எதிர்பார்ப்போம்.

பெண் சிசுக்கொலையைத்தடுக்க எடுத்த நடவடிக்கை,  மாணவர்களுக்குப் பல்வேறு வழிகளிலும் உதவும் திட்டங்கள். போன்ற அவரது திட்டங்கள் வறிய மக்களுக்கு மிகவும் உதவும் திட்டங்கள் என்பதில் மாற்றுக்கருத்துகள் ஏதுமில்லை.

•Last Updated on ••Wednesday•, 05 •October• 2016 20:17•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 199 : இலங்கைச்சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள்!

•E-mail• •Print• •PDF•

அஸ்வின் சுதர்சனின் கேலிச்சித்திரம்"கூற்றுவனின் வாசலிலே
குற்றமற்றவர்
சுற்றமிழந்து இன்னுமெத்தனை
நாள் வாடுவதோ ?
"

அண்மையில் அகால மரணமடைந்த பின்னர்தான் பலருக்குக் கேலிச்சித்திரக்காரர் (Cartoonist) அஸ்வின் சுதர்ஸன் பற்றி தெரியவந்தது. அவரது படைப்புகள் மீது பலரின் கவனமும் திரும்பியது. என்னையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்.

அவரது இங்குள்ள கேலிச்சித்திரம் (நன்றி: தமிழ்வின்) அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. மகிந்த ராஜபக்சவின் கையிலிருந்த ஆட்சி அமைதியான முறையில் மைத்திரி பால சிறிசேனாவின் கைக்கு மாறியது. ஆனால் இன்னும் அரசியல் கைதிகளின் நிலை மாறாதது ஆச்சரியத்தையும், ஆத்திரத்தையும் ஒருசேர எழுப்புகிறது. ஏன் என்ற கேள்விக்குத் தர்க்கரீதியான விடையேதும் கிடைக்கவில்லை.

யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளைக் கடந்து விட்டன. அரசை எதிர்த்துப்போரிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடமெல்லாம் அஞ்சாத அரசு எதற்காகச் சந்தேகத்தின்பேரில் கைது செய்தவர்களையெல்லாம் ஆண்டுக்கணக்காக இன்னும் சிறைகளில் வைத்திருக்கின்றது? உண்மையில் அவர்களைச்சிறைகளில் வைத்துப் பராமரிப்பதால் அரசுக்கு வீண் செலவுதான் ஏற்படுகிறது.

இவ்வளவு காலமும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்ட அவ்வரசியல் கைதிகள் பலர் சொல்லமுடியாத சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருப்பார்கள். அவர்களை வெளியில் விட்டால் மேலும் பல குற்றங்களை அரசுக்கு எதிராக அவர்கள் கூறுவார்கள் என்று அரசு நினைக்கின்றதோ? பின் எதற்காக அவர்களை இன்னும் சிறைகளில் அடைத்து வைத்திருக்கின்றார்கள்?

•Last Updated on ••Sunday•, 02 •October• 2016 06:03•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 198: 'முறிந்த பனையின்' நினைவு தினம் செப்டம்பர் 21!

•E-mail• •Print• •PDF•

'முறிந்த பனையின்' நினைவு தினம் செப்டம்பர் 21! இன்று (செப்டம்பர் 21) ராஜினி திரணகமவின் நினைவு தினம். மனித உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மானுடநேயப்போராளியாக அவரை வரலாறு என்றென்றும் நினைவில் நிறுத்தி வைத்திருக்கும். மருத்துவத்துறைப்பேராசிரியையாகத் தான் கற்றதை தன் மண்ணின் மாணவர்களுக்குப் போதித்த அதே சமயம் , தான் பிறந்த மண்ணில் புரியப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காகவும் போராடியவர் அவர். அவற்றை எந்தவிதப்பாரபட்சமுமில்லாமல் ஆவணமாக்கிப் பதிவு செய்தவர்களிலொருவர். அவர் நினைத்திருந்தால் அவரது படிப்புக்கு மேனாடொன்றில்  செல்வச்செழிப்புடன் வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவற்றையெல்லாம் துறந்துவிட்டு, தான் பிறந்த மண்ணுக்குத் திரும்பியவர். அதுவும் மண் போர்களினால் கொந்தளித்துக்கொண்டிருந்த சமயம் திரும்பினார். அச்சூழலுக்குள் நின்று உரத்துத் தன் குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர் அவர்.

அவரைக்கொன்றவர்கள் யார்? பலர் பலரைக்கூறுகின்றார்கள். என்னால் அவ்விதம் யாரையும் குறிப்பிட்டுக்கூற முடியாது. என்னிடம் அவற்றுக்கான ஆதாரங்கள் இல்லை. அவை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில் அவை நிரூபிக்கப்படாதவரையில் என்னால் யாரையும் குறிப்பிட்டுக் குற்றஞ்சாட்ட முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ராஜினி திரணகம தான் இறப்பதற்கு முன்னர் தன் மரணம் தன் மண்ணைச்சேர்ந்த ஒருவராலேயே புரியப்படும் என்று எழுதியிருக்கின்றார். அவ்விதமே நடந்தது என்பதில் மட்டும் யாருக்கும் சந்தேகமிருக்காது.

அவரைக்கொன்றவர்கள் யார் என்று தெரிந்தவர்கள் அவ்வப்போது பொதுவாகக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, ஆதாரங்களுடன் தெரியப்படுத்துங்கள். ஆய்வுக்கட்டுரையாக எழுதுங்கள். ஆதாரங்கள் இருந்தால் நீதித்துறையினை நாடுங்கள். இவை எவற்றையும் செய்யாமல் பொதுவாகக் கூறுவதால் எந்தவிதப்பயனுமில்லை. இன்று இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் சென்றுவிட்டன. இந்நிலையில் இது போன்ற யுத்தக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி ஆதாரங்களை வைத்திருப்பவர்கள் அவ்வாதாரங்களை வெளிப்படுத்த வேண்டும். இலங்கை அரசுக்கெதிரான யுத்தக்குற்றங்களை வலியுறுத்துவதுபோல், இவ்விதமான படுகொலைகளுக்கும் ஆதாரங்கள் இருந்தால் அவற்றை வெளிப்படுத்த வேண்டும்.

•Last Updated on ••Sunday•, 02 •October• 2016 06:00•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 197 : ஆதிசங்கரரின் அத்வைதமும், அ.ந.க.வும்! -

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 197 : ஆதிசங்கரரின் அத்வைதமும், அ.ந.க.வும்! -தேடி எடுத்த கவிதை இது. இது ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை. இந்தக்கவிதையை எழுதியவர் ஆதிசங்கரர். இந்து சமயத்தில், ஆதிசங்கரருக்கு முக்கியமானதோரிடமுண்டு. அவர் இருப்பை விளக்க உருவாக்கிய தத்துவம் அத்வைதம். அவரது கொள்கையின்படி இப்பிரபஞ்சத்தைப்படைத்தவரும், இங்குள்ளவர்களும் ஒரே சக்தியின்  வடிவங்களே. ஜீவாத்மா (சகல உயிரினங்களும்) , பரமாத்மா (இறைவன்) இரண்டும் ஒன்றே என்று கூறுவது அத்வைதம். கருத்துமுதல்வாதம் கடவுளை வேறான தனியானதொரு சக்தியாகவும், கடவுளால் படைக்கப்பட்டதே நாம் காணும் இப்பிரபஞ்சமும் என்று கூறும். பொருள்முதல்வாதமோ நாம் காண்பது மட்டுமே உண்மை. அதற்கும் வேறாக ஒன்றுமேயில்லை என்று கூறும். ஒருவிதத்தில் மாகவி பாரதியை அத்வைதவாதி என்று கூறலாம். அவனது 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையின் இறுதி முடிவு 'காண்பது சக்தியாம் ... இந்தக் காட்சி நித்தியமாம்' என்று முடிவதைப்பார்க்கையில் அவ்விதம்தான் எண்ணத்தோன்றுகின்றது. அக்கூற்றின்படி காணும் பொருளும், அதனை உருவாக்கிய சக்தியும் ஒன்று. இதனைத்தானே ஆதிசங்கரரின் அத்வைதமும் கூறுகின்றது.

ஆதிசங்கரின் அந்த மொழிபெயர்ப்புக் கவிதையை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான அறிஞர் அ.ந.கந்தசாமி. அவர் மேற்படி கவிதையினை 'ஏகசுலோகி' என்னும் பெயரில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கின்றார்.லது  தினகரன் வாரமஞ்சரி மே 31, 1967 பதிப்பில் வெளியாகியுள்ளது. அந்தக் கவிதையைக் கீழே தருகின்றேன்.

•Last Updated on ••Tuesday•, 20 •September• 2016 04:25•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 196: பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 11; அறிஞர் அண்ணா நினைவாக...;இந்தி இசை கேட்கும் நேரம் இது!

•E-mail• •Print• •PDF•

ஓவியம் - புதுவை ராமன்; நன்றி.என் பிரியத்துக்குகந்த மகா கவிஞன் பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 11. . எனக்குப் பிடித்த அவனது கவிதை வரிகள் சிலவற்றை அவனது நினைவாகப் பகிர்ந்து கொள்கின்றேன்.

"மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்"

"நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்"

"தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்..."

•Last Updated on ••Monday•, 19 •September• 2016 20:51•• •Read more...•
 

எழுத்தாளர் குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்) அமரரானார்!

•E-mail• •Print• •PDF•

குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்)எழுத்தாளர் குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்) அவர்களின் மறைவு பற்றிய செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். ஈழத்தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளரிவர். குறிப்பாக ஈழத்தமிழ் இலக்கியத்திற்கு வளமை சேர்ந்த ஆரம்பகாலப்பெண் படைப்பாளிகளில் முக்கியமானவர்களிலொருவர் இவர்.இறுதிவரை சளைக்காது இலக்கியப்பங்களிப்பு செய்து வந்தவர்.

இத்தருணத்தில் இளவாலை ஜெகதீசனை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த பொதிகை (கனடா) சஞ்சிகைக்காக இவருடனான நேர்காணலுக்காக இவரைச்சந்தித்திருந்ததை நினைவுகூர்கின்றேன்.

எழுத்தாளர் எஸ்.பொ. கனடா வந்திருந்தபோது அவருடனான உரையாடலின்போது அவர் இவரைப்பற்றிப்பெருமையாகக் கூறிய பல விடயங்கள் நினைவுக்கு வருகின்றன. இவருடன் இணைந்து மேலும் மூவருடன் சேர்ந்து 'மத்தாப்பு' என்னுமொரு குறுநாவலை வீரகேசரியில் எழுதியதை அவர் அப்பொழுது நினைவு கூர்ந்திருந்தார்.

மேலுமவர் கூறிய இன்னுமொரு விடயமும் நினைவிலுள்ளது. அக்காலத்தில் பெண்கள் இலக்கியம், இலக்கியக்கூட்டங்களுக்கெல்லாம் செல்வது மிகவும் அரிதாகவிருந்த காலகட்டம். அக்காலகட்டத்தில் குறமகள் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் அவ்விதமான இலக்கியக்கூட்டங்களிலெல்லாம் கலந்து கொண்டிருந்தார் என்பதையும், அவ்விதமான சமயங்களில் கூட்டம் முடிந்ததும் தாங்கள் அவருக்குத்துணையாகச் சென்று பஸ்ஸில் ஏற்றிவிட்டு வருவது வழக்கமென்றும் குறிப்பிட்டதைத்தான் கூறுகின்றேன்.

இவரது இழப்பு தமிழ் இலக்கியத்துக்கு, முக்கியமாக ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பே. இவரது இழப்பால் வாடும் அனைவர்தம் துயரிலும் பங்குகொள்கின்றேன்.

•Last Updated on ••Friday•, 16 •September• 2016 20:23•• •Read more...•
 

குட்டிச்சிறுகதை: : வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்!

•E-mail• •Print• •PDF•

1.
சிறுகதை வாசிப்போமா?பல்கலாச்சாரச் சமூகங்கள் நிறைந்தொளிரும், உலகிற்கொரு முன்மாதிரியான மா நகரிந்தத் 'தொராண்டோ' மாநகர். பாதாளப் புகையிரதங்கள், நவீன வாகனங்கள்,  விண்முட்டும் உயர் கட்டடங்கள், உலகில் அதியுயர்ந்த சுயதாங்கிக் கோபுரம் (CN Tower), இயங்கும் தன்மை மிக்க 'குவிகூரை' விளையாட்டு மண்டபம் (SkyDome), மாபெரும் அங்காடிகள், பூங்காக்களென ஒளிருமிந்தப் பெருநகருக்கு உலகில் நல்லதொரு பெயருண்டு: இந்நகரொரு குட்டிப் பூகோளம்.

2.
இம்மாநகரில்தான் நானும் இத்தனை வருடங்களாகக் 'குப்பை' கொட்டிக் கொண்டிருக்கின்றேன். இந்த நாட்டின் குடிமகனென்ற பெயரும், உரிமையும் கொண்ட எனைப் பார்த்து மூன்றாம் உலகத்து வாசிகளுக்குப் பொறாமையும், ஏக்கமும் அதிகம். அதிலும் தென்னிந்தியச் சினிமாக்களில் இந்நகரைக் காணும் தருணங்களிலெல்லாம் அவ்வுணர்வுகளதிகமாகும்.

3.
இந்தவிருபது வருடங்களில் தானெத்தனை எத்தனை மாற்றங்களை இம்மாநகர் கண்டுவிட்டது. இருந்தும் இன்னும் மாறாதவையுமுள சில.அவை:

3.1
அன்றெனை மறித்த காவல்துறையதிகாரி இன்று ஓய்வுபெற்றுப் போயிருக்கலாம். மரித்திருக்கலாம். இருந்தாலும் அன்றெனை மறித்த தருணத்தில் அவன் முகத்தில் படர்ந்த  அலட்சியம் ஒருவேளை அக்காலகட்டத்தின் எனது குடியுரிமை நிலை காரணமாக இருக்கலாமென்றெண்ணி ஆறுதலைடைந்ததுண்டு.

3.2.
ஆயின் பின்னர் குடியுரிமைபெற்றுப் பெருமிதத்தில் நடைபயின்றவென்னை இன்னுமொரு அதிகாரி அதுபோன்றதொரு அலட்சியத்தில் நடத்தியபோது, அவனுக்குமென் குடியுரிமை நிலை தெரியாமலிருந்திருக்கலாமென எண்ணினேன்.

•Last Updated on ••Sunday•, 11 •September• 2016 22:17•• •Read more...•
 

பொப் இசைச்சக்கரவர்த்தி நித்தி கனகரத்தினம் தம்பதியினருடன் ஒரு மாலைப்பொழுது! -2

•E-mail• •Print• •PDF•

நித்தி கனகரத்தினம்நித்தியின் பாடல்கள் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினைப் பெறத்தொடங்கின. 1970இல் பம்பலபிட்டி சரஸ்வதி மண்டபத்தில் 'தமிழ் பாப் 70' என்னும் பெயரில் இசை நிகழ்ச்சியொன்றினை தினபதி பத்திரிகையில் பணி புரிந்த ஜெயசீலன் என்பவர் , சீதா பத்திரிகையினை அக்காலகட்டத்தில் நடத்திக்கொண்டிருந்த தமிழ் நெஞ்சன் என்பவருடன் இணைந்து நித்தி கனகரத்தினத்தின் பங்களிப்புடன் நடத்தினார்.  எஸ்.டி.துரைசாமி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அந்நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச்சேர்ந்த அப்துல் ஹமீட் மற்றும் புவனலோசனி வேலுப்பிள்ளை ஆகியோர் மேடைக்குப் பின்புறம் நின்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.

இந்த நிகழ்வில் நிகழ்வு முழுவதும் நித்தி கனகரத்தினம் அவர்கள் 'சின்ன மாமியே' , 'கள்ளுக்கடைப் பக்கம் போகாதே' மற்றும் 'ஊரே கெட்டுப் போச்சு' ஆகிய மூன்று பாடல்களை மட்டுமே திருப்பித்திருப்பிப் பாடி இரசிகர்களைக் களிப்பிலாழ்த்தியதுதான். இரசிகர்களும் அவர் அவ்விதம் திரும்பத்திரும்பப் பாடுவதை வரவேற்று இரசித்தனர்.  

இந்நிகழ்வு பற்றிய இன்னுமொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால் அந்நிகழ்வுக்காக அவருக்குக் கொடுக்கப்பட்ட பணம் பதினைந்து ரூபா மட்டுமே. நிகழ்வின் மூலம் கிடைத்த பணத்தினை தினபதி ஜெயசீலனும், 'கீதா' பத்திரிகை தமிழ் நெஞ்சனுமே பங்கு போட்டுக்கொண்டர்.

இந்நிகழ்வில் பின்னாலிருந்து நிகழ்ச்சிகளைத்தொகுத்து வழங்கிய அப்துல் ஹமீட் அவர்கள் பின்னர் தானே முன்னின்று நித்தி கனகரத்தினத்தின்  இசை நிகழ்ச்சியினை நடத்திக்கொடுத்ததாகக் குறிப்பிட்டதாகவும் அது உண்மையில்லை என்பதைப்பதிவு செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் நித்தி கனகரத்தினம் அவர்கள் பாப் 71, பாப் 72, பாப் 73 ஆகிய பாப் இசை நிகழ்ச்சிகளை எம்.எஸ்.பெர்ணாண்டோ ,மற்றும் இந்திராணி பெரேரா ஆகியோருடன் இணைந்து கொழும்பில் நடத்தியதையும் குறிப்பிட்டார். இறுதி நிகழ்ச்சி BMICH மண்டபத்தில் நடைபெற்றதையும் நினைவு கூர்ந்தார். அத்துடன் முதலிரு நிகழ்வுகளும்
கொழும்பு நவரங்கல மண்டபத்தில் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார்.

•Last Updated on ••Monday•, 19 •September• 2016 05:11•• •Read more...•
 

பொப் இசைச்சக்கரவர்த்தி நித்தி கனகரத்தினம் தம்பதியினருடன் ஒரு மாலைப்பொழுது! - 1

•E-mail• •Print• •PDF•

பொப் இசைச்சக்கரவர்த்தி நித்தி கனகரத்தினம் தம்பதியினருடன் ஒரு மாலைப்பொழுது! - 1இன்று கனடாவுக்கு வருகை தந்திருக்கும் பொப் இசைச்சக்கரவர்த்தி திரு.நித்தி கனகரத்தினம் தம்பதியினரை ஸ்கார்பரோவிலுள்ள மக்னிகல் ஜோஸ் (McNicoll Joe's)  உணவகத்தில் சந்தித்தோம்.

நண்பர எல்லாளன், எழுத்தாளர் கடல்புத்திரன் ஆகியோர் என்னுடன் நித்தி கனகரத்தினம் தம்பதியினருடனான சந்திப்பில் இணைந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரச்சந்திப்பில் திரு.நித்தி கனகரத்தினம் எம்முடன் தனது பொப்பிசை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இலங்கையிலேயே முதன் முதலாக ஆங்கில இசைக்குழுவொன்று Living Fossils என்னும் பெயரில் 1965 இல் ஆரம்பமானது. அதனை ஆரம்பித்தவர்கள் மூவர். ஒருவர்: மருத்துவர் சூரியபாலன் (டொராண்டோவில் அண்மையில் அமரரானவர்), நித்தி கனகரத்தினம் இவர்களுடன் லக்சுமன் ஞானப்பிரகாசம்.

1967இல் நித்தி கனகரத்தினம் அவர்கள் அம்பாறை தொழில்நுட்பக் கல்லூரியான ஹாடியில் கல்வி பயின்றபோது இவரது சீனியர்களிலொருவரான பாலச்சந்திரன் மூலமே முதன் முதலில் சின்ன மாமியே பாடலைக்கேட்டு அறிமுகமாகின்றார். அச்சமயம் சின்ன மாமியே பாடலில் பல தூஷணச்சொற்கள் நிறைந்திருந்தன. அவற்றை நல்ல பாவனைக்குரிய தமிழுக்கு மாற்றிப் பாடத்தொடங்கினார் நித்தி கனகரத்தினம். இவை தவிர இவர் கலந்து கொண்ட பல இசை நிகழ்ச்சிகள் பற்றி, பாடல்கள் உருவாகக்காரணமான நிகழ்வுகள் பற்றி மற்றும் அண்மைக்காலமாக இலங்கையில் இவர் இலாப நோக்கற்ற நிலையில் ஆற்றி வரும் பங்களிப்புகள் பற்றி, அவற்றாலடைந்த அனுபவங்கள் பற்றியெனப் பலவேறு விடயங்களைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

•Last Updated on ••Monday•, 19 •September• 2016 05:11•• •Read more...•
 

'டொராண்டோ' தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற செங்கை ஆழியான் பற்றிய இலக்கிய நிகழ்வு பற்றி.....

•E-mail• •Print• •PDF•

செங்கை ஆழியான்இன்று செங்கை ஆழியான் பற்றிய கருத்தரங்கு 'டொராண்டோ' தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நடைபெறும் மாதாந்த இலக்கியச் சந்திப்பில் நடைபெற்றது. எழுத்தாளர் அகில், மருத்துவர் லம்போதரன், முனைவர் நா.சுப்பிரமணியன் தம்பதியினர், கவிஞர் வி.கந்தவனம் ஆகியோரை இவ்விதம் நிகழ்வினை நடத்துவதற்காகப் பாராட்ட வேண்டும்.இன்றைய நிகழ்வில் கவிஞர் கந்தவனம் அவர்கள் 'செங்கை ஆழியானின்' கல்விப்பங்களிப்பு பற்றியும், முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் 'செங்கை ஆழியானின் இலக்கியப் பங்களிப்பு' பற்றியும், எழுத்தாளர் வ.ந.கிரிதரன் 'எனது பார்வையில் செங்கை ஆழியான்' என்னும் தலைப்பிலும் உரையாற்றினர்.

கவிஞர் கந்தவனம் தனதுரையில் செங்கை ஆழியான் பாடசாலைக் கல்விப் பாடத்திட்டங்களுக்காக எழுதிய நூல்கள் பற்றிய தனது கருத்துகளை முன் வைத்தார். அத்துடன் செங்கை ஆழியான் தொடர்ச்சியாக வாசித்து, கற்று, தனது அறிவை விருத்தி செய்து கொண்டேயிருக்குமொருவர். அதனால்தான் இவ்வளவு எண்ணிக்கையில் அவரால் எழுத முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் வ.ந.கிரிதரன் தனக்குப்பிடித்த செங்கை ஆழியானின் நகைச்சுவை நாவல்கள் , வரலாற்று நாவல்கள் , சமூக நாவல்கள் பற்றிக்குறிப்பிட்டார். அத்துடன் செங்கை ஆழியானின் ஆச்சி பயணம் போகின்றாள் நாவலுக்கு எவ்விதம் ஓவியர் செளவின் படைப்பாற்றல் மேலதிகமாக உதவியது என்பதையும் உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். அத்துடன் நல்லதொரு நகைச்சுவை விவரணச்சித்திரமாக வந்திருக்க வேண்டிய நடந்தாய் வாழி வழுக்கியாறு படைப்பில் , தேவையற்ற உபகதையொன்றைச் சேர்த்ததன் மூலம் செங்கை ஆழியான் ஊறு விளைவித்திருக்கின்றார் என்னும் கருத்துப்பட அவரது உரை அமைந்திருந்தது. மேலும் செங்கை ஆழியான் தன் படைப்புகள் சீதனம், வறுமை, சாதி போன்ற பிரச்சினைகளை ஒழிப்பதற்கு உதவும் என்று கூறுகிறார். ஆனால் அவரது படைப்புகள் சிலவற்றில் அவற்றுக்கான சந்தர்ப்பம் வந்தபோது , நாவலில் வரும் பாத்திரங்கள் அவ்விதம் நடக்கவில்லையே என்று சுட்டிக்காட்டிய கிரிதரன், இடப்பெயர்வு அவலங்களை விபரிக்கும் முக்கியமானதோர் ஆவணப்படைப்பாக வந்திருக்க வேண்டிய போரே நீ போய் விடு நாவலிலும் தேவையற்ற முறையில் உபகதையொன்று சேர்க்கப்பட்டிருக்கின்றது. மேலும் கதாசிரியர் கூற்று, கதை சொல்லியின் கூற்று ஆகியன தன்னிலையில் வரும்; சில நேரங்களில் படர்க்கையில் வரும். பிரதி எழுதப்பட்ட பின் பிழை, திருத்தம் பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தனது கருத்தினைத்தெரிவித்தார். அத்துடன் செங்கை ஆழியான் வர்க்கப்போராட்டத்தைப் பிரச்சினைகளுக்கான தீர்வாகக் காணவில்லையென்றும் , கல்வி, தொழில், செல்வத்தின் மூலம் சாதிப்பிரச்சினையை ஒழிக்க முடியுமென்பது அவரது கருத்து என்பதையும் அவரது படைப்புகளூடு சுட்டிக்காட்டிய கிரிதரன், அது உண்மையாயின் இந்தியாவில் எப்பொழுதோ சாதிப்பிரச்சினை தீர்ந்திருக்க வேண்டுமே என்றார். செங்கை ஆழியானின் வரலாற்று நாவல்களில் நந்திக்கடலைச் சங்கிலியனுக்குக் குறியீடாகப் பாவித்திருந்த நந்திக்கடல் உணர்ச்சியின் அடிப்படையில் தனக்குப் பிடித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
•Last Updated on ••Saturday•, 27 •August• 2016 22:59•• •Read more...•
 

'டொராண்டோ' தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற செங்கை ஆழியான் பற்றிய இலக்கிய நிகழ்வு பற்றி.....

•E-mail• •Print• •PDF•

செங்கை ஆழியான்இன்று செங்கை ஆழியான் பற்றிய கருத்தரங்கு 'டொராண்டோ' தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நடைபெறும் மாதாந்த இலக்கியச் சந்திப்பில் நடைபெற்றது. எழுத்தாளர் அகில், மருத்துவர் லம்போதரன், முனைவர் நா.சுப்பிரமணியன் தம்பதியினர், கவிஞர் வி.கந்தவனம் ஆகியோரை இவ்விதம் நிகழ்வினை நடத்துவதற்காகப் பாராட்ட வேண்டும்.இன்றைய நிகழ்வில் கவிஞர் கந்தவனம் அவர்கள் 'செங்கை ஆழியானின்' கல்விப்பங்களிப்பு பற்றியும், முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் 'செங்கை ஆழியானின் இலக்கியப் பங்களிப்பு' பற்றியும், எழுத்தாளர் வ.ந.கிரிதரன் 'எனது பார்வையில் செங்கை ஆழியான்' என்னும் தலைப்பிலும் உரையாற்றினர்.

கவிஞர் கந்தவனம் தனதுரையில் செங்கை ஆழியான் பாடசாலைக் கல்விப் பாடத்திட்டங்களுக்காக எழுதிய நூல்கள் பற்றிய தனது கருத்துகளை முன் வைத்தார். அத்துடன் செங்கை ஆழியான் தொடர்ச்சியாக வாசித்து, கற்று, தனது அறிவை விருத்தி செய்து கொண்டேயிருக்குமொருவர். அதனால்தான் இவ்வளவு எண்ணிக்கையில் அவரால் எழுத முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் வ.ந.கிரிதரன் தனக்குப்பிடித்த செங்கை ஆழியானின் நகைச்சுவை நாவல்கள் , வரலாற்று நாவல்கள் , சமூக நாவல்கள் பற்றிக்குறிப்பிட்டார். அத்துடன் செங்கை ஆழியானின் ஆச்சி பயணம் போகின்றாள் நாவலுக்கு எவ்விதம் ஓவியர் செளவின் படைப்பாற்றல் மேலதிகமாக உதவியது என்பதையும் உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். அத்துடன் நல்லதொரு நகைச்சுவை விவரணச்சித்திரமாக வந்திருக்க வேண்டிய நடந்தாய் வாழி வழுக்கியாறு படைப்பில் , தேவையற்ற உபகதையொன்றைச் சேர்த்ததன் மூலம் செங்கை ஆழியான் ஊறு விளைவித்திருக்கின்றார் என்னும் கருத்துப்பட அவரது உரை அமைந்திருந்தது. மேலும் செங்கை ஆழியான் தன் படைப்புகள் சீதனம், வறுமை, சாதி போன்ற பிரச்சினைகளை ஒழிப்பதற்கு உதவும் என்று கூறுகிறார். ஆனால் அவரது படைப்புகள் சிலவற்றில் அவற்றுக்கான சந்தர்ப்பம் வந்தபோது , நாவலில் வரும் பாத்திரங்கள் அவ்விதம் நடக்கவில்லையே என்று சுட்டிக்காட்டிய கிரிதரன், இடப்பெயர்வு அவலங்களை விபரிக்கும் முக்கியமானதோர் ஆவணப்படைப்பாக வந்திருக்க வேண்டிய போரே நீ போய் விடு நாவலிலும் தேவையற்ற முறையில் உபகதையொன்று சேர்க்கப்பட்டிருக்கின்றது. மேலும் கதாசிரியர் கூற்று, கதை சொல்லியின் கூற்று ஆகியன தன்னிலையில் வரும்; சில நேரங்களில் படர்க்கையில் வரும். பிரதி எழுதப்பட்ட பின் பிழை, திருத்தம் பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தனது கருத்தினைத்தெரிவித்தார். அத்துடன் செங்கை ஆழியான் வர்க்கப்போராட்டத்தைப் பிரச்சினைகளுக்கான தீர்வாகக் காணவில்லையென்றும் , கல்வி, தொழில், செல்வத்தின் மூலம் சாதிப்பிரச்சினையை ஒழிக்க முடியுமென்பது அவரது கருத்து என்பதையும் அவரது படைப்புகளூடு சுட்டிக்காட்டிய கிரிதரன், அது உண்மையாயின் இந்தியாவில் எப்பொழுதோ சாதிப்பிரச்சினை தீர்ந்திருக்க வேண்டுமே என்றார். செங்கை ஆழியானின் வரலாற்று நாவல்களில் நந்திக்கடலைச் சங்கிலியனுக்குக் குறியீடாகப் பாவித்திருந்த நந்திக்கடல் உணர்ச்சியின் அடிப்படையில் தனக்குப் பிடித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
•Last Updated on ••Saturday•, 27 •August• 2016 22:59•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 195 : 'குடிவரவாளன்' நாவலும் , 'அந்தாதி' இலக்கிய வடிவமும்!

•E-mail• •Print• •PDF•

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

அண்மையில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான எனது 'குடிவரவாளன்' நாவலைப்பற்றி எழுத்தாளர் குப்பிழான் சண்முகம் அவர்கள் தனது கருத்துகளை முகநூலில் பதிவு செய்திருந்தார். அது வருமாறு:

"மே மாதம் 24, இன்று வ.ந. கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலை வாசித்து முடித்தேன். சட்ட பூர்வமாகக் கனடாவுக்கு புலம் பெயரும் வழியில், எதிர் பாராத விதமாக அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோர நேரிடுகிறது. ஒரு வருடம் அமெரிக்காவில் சட்ட பூர்வமற்ற அகதியாக வாழ்ந்த அனுபவங்களை நாவல் பேசுகிறது. புலம்பெயர் அகதி வாழ்வின் வித்தியாசமான அனுபவங்கள், வித்தியாசமான மனிதர்கள். எதனாலும் சலிக்காத கதாநாயகனின் உறுதி. இயற்கைக் காட்சிகளின் இரசிப்பு. தமிழ் கவிதைகளினதும்- குறிப்பாக பாரதி- இசை, இயற்கை மீதான ஈடுபாடு.. என விரியும் கதை. ' மீண்டும் தொடங்கும் 'மிடுக்காய்' தொடரும் வாழ்வு. இந் நூலில் அமெரிக்க அகதி வாழ்வின் அனுபவங்களையே கிரிதரன் முக்கியப்படுத்துகின்றார். இதனால் நாவலின் வடிவம் கேள்விக்குறியாகிறது. இந்த இடத்தில் பெர்லின் வாழ்வு அனுபவங்களைப் பேசும் கருணாகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் 'நாவல்' தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது. குடிபெயரும் வாழ்வின் அனுபவங்களைப் பேசும் இவர்கள் எங்கள் பாராட்டுக்குரியவர்களாகிறார்கள்."

திரு.குப்பிழான் சண்முகம் அவர்களின் கருத்துகளுக்கு நன்றி. இப்பதிவில் அவர் நாவலின் வடிவம் பற்றி 'இந் நூலில் அமெரிக்க அகதி வாழ்வின் அனுபவங்களையே கிரிதரன் முக்கியப்படுத்துகின்றார். இதனால் நாவலின் வடிவம் கேள்விக்குறியாகிறது' என்று குறிப்பிட்டிருந்தது என் கவனத்தை ஈர்த்தது. அவரது கூற்றினை மீண்டுமொருமுறை சிந்தித்துப்பார்த்தேன்.

உண்மையில் இந்த நாவலுக்கு ஒரு வடிவம் உண்டு. அந்த வடிவத்துக்குள் தான் அனுபவங்கள் விபரிக்கப்படுகின்றன. ஒரு சட்டம் அமைக்கப்பட்டு , அதற்குள் ஓவியம் இருப்பதுபோல்தான் நான் நாவலின் வடிவத்தை அமைத்திருந்தேன். இந்த வடிவத்தை நான் இந்த நாவலுக்குப் பாவிக்க முனைந்ததற்கு முக்கிய காரணம் தமிழ் மரபுக் கவிதையினோர் வடிவம்தான்.

மரபுக்கவிதையில் ஒரு வடிவம் உண்டு. அது அந்தாதித்தொடை. 'யாப்பருங்கலக்காரிகை' 'அந்தாதித்தொடை' பற்றி 'அந்தம் முதலாத் தொடுப்பதந் தாதி' என்று கூறும். அடி தோறும் இறுதியாக (அந்தம்) நிற்கும் சீர், அசை, அல்லது எழுத்து ஆகியவற்றையே அடுத்த அடியின் முதலாக (ஆதி) வைத்துப் புனையப்படும் கவிதையில் பாவிக்கப்படும் தொடை அந்தாதித்தொடை என்பதிதன் பொருள்.

அபிராமி அந்தாதியில் அபிராமிப்பட்டர் ஒவ்வொரு பாடலின் இறுதிச் சொல்லாக வரும் சொல்லையே அடுத்த பாடலின் முதற் சொல்லாக வைத்து முழுப்பாடல்களையும் அமைத்திருப்பார். அதனாலேயே அப்பாடல்களின் தொகுதி அபிராமி அந்தாதி ஆயிற்று.

•Last Updated on ••Friday•, 19 •August• 2016 05:48•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 194 : 'ராஜசிங்கம் 'மாஸ்ட்டர்' மறைவும் சில எண்ணங்களும்...

•E-mail• •Print• •PDF•

அமரர் ராஜசிங்கம் 'மாஸ்ட்டர்'நண்பர் எம்.பெளசரின் முகநூல் பதிவு மூலம் ராஜசிங்கம் மாஸ்ட்டர் மறைந்த செய்தி அறிந்தேன். இவர் ஈழத்தின் முக்கிய பெண் ஆளுமைகளின் (நிர்மலா இராஜசிங்கம், ராஜனி திரணகம,  சுமதி சிவமோகன், வாசுகி இராஜசிங்கம்)  தந்தை. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரின் உப அதிபராக நீண்ட காலம் பணி புரிந்தவர். இவருடன் எனக்கு நேர்முக அறிமுகம் கிடையாது. ஆனால் முதன் முதலாக இவரை நான் கண்ட போது இவரது  புதல்விகளின் பெயர்களை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அது எழுபதுகளின் ஆரம்பக் காலகட்டம். பதின்ம வயதில், நண்பர்களுடன் கும்மாளமடித்துச்சிட்டுக் குருவிகளாகச் சிறகடித்துப் பறந்து திரிந்த காலகட்டம். அப்பொழுதெல்லாம் யாழ் கே.கே.எஸ் வீதியிலே  எப்பொழுதும் பல்வேறு காரணங்களுகாகத் திரிந்துகொண்டிருப்போம். அப்பொழுதுதான் இவரை முதல் முதலாக அறிந்து கொண்டேன்.

அப்பொழுது இவர் யாழ்ப்பாணக்கல்லூரிக்குச் செல்வதும், சென்று திரும்புவதும் கே.கே.எஸ் வீதி வழியாகத்தான். ஸ்கூட்டரில் சென்று திரும்புவார். ஸ்கூட்டரில் சென்று திரும்பும் இவர் மாணவர்களான எம் கவனத்தை ஈர்த்ததற்கு முக்கிய காரணமொன்றிருந்தது. இவர் தனது மகள்களில் ஒருவரான சுமதி சிவமோகன் (அப்பொழுது அவர் சுமதி ராஜசிங்கம், மாணவி) ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருக்க, ஒரு பக்கமும் பார்வையைத் திருப்பாமல், செல்லும் பாதையிலேயே கவனத்தை வைத்தவராக விரைந்து கொண்டிருப்பார். பின்னால் அமர்ந்திருக்கும் மகளின் சுருண்ட தலைமுடி காற்றில் அலைந்து பறக்கும். தந்தைக்குத் தெரியும் பின்னால் அமர்ந்திருக்கும் தன் மகளை மாணவர்கள் பார்ப்பது. ஆனால் அதனைக் காட்டிக்கொள்ளாது ஸ்கூட்டரின் ஆர்முடுகலை அதிகரித்துச்செல்வார். மகளோ வீதியெங்கும் தன்னை நோட்டமிடும் இளவட்டங்களை இலேசாகப்பார்த்துப் புன்னகைத்தபடி செல்வார். இவர்கள் இருவரும் அவ்விதம் காலையும், மாலையும் செல்லும் காட்சிகள் அக்காலகட்டத்தில் பதின்ம வயதில் திரிந்து கொண்டிருந்த மாணவர்களுக்கு மறக்க முடியாத அழியாத கோலங்கள்.

பின்னர் ஒருமுறை சந்தித்து ஓரிரு வார்த்தை பேசியிருக்கிறேன். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகை சம்பந்தமாக விரிவுரையாளராக அக்காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த திரு.மு.நித்தியானந்தனைச் சந்திப்பதற்காகச் சென்றபோது வைமன்ட் வீதியிலிருந்த அவரது வீட்டுக்குச் சென்றபோது என்று நினைவு. அப்பொழுது பிரதான வீட்டில் ராஜசிங்கம் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். வளவிலிருந்த இன்னுமொரு வீட்டில்  நித்தியானந்தனும், நிர்மலா நித்தியானந்தனும் வசித்து வந்தனர். முதலில் பிரதான வீட்டுக்குச் சென்றபொழுது, அங்கிருந்த ராஜசிங்கம் அவர்கள் அருகிலிருந்த வீட்டைக்காட்டி அனுப்பி வைத்தார்.

•Last Updated on ••Monday•, 15 •August• 2016 22:19•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 193: தேவகாந்தனின் கந்தில் பாவை பற்றிச்சில கருத்துகள்.

•E-mail• •Print• •PDF•

தேவகாந்தனின் கந்தில் பாவைஎழுத்தாளர் தேவகாந்தன்எழுத்தாளர் தேவகாந்தனின் 'கந்தில்பாவை'யை இன்று வாசித்தேன். இது நாவல் மீதான முதற் கட்ட வாசிப்பு. ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைகளை உள்ளடக்கிய நாவல் இது. வெவ்வேறு காலகட்டங்களை உள்ளடக்கிய நான்கு பகுதிகள். ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு அத்தியாயமாக்கி நூலை வகுத்திருக்கின்றார் தேவகாந்தன். பொதுவாக பகுதி 1, பகுதி 2, பகுதி 3 மற்றும் பகுதி 4 என்று பகுதிகளாகப் பிரித்திருப்பார்கள். அப்பகுதிகள் மேலும் அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு பகுதிகள் அத்தியாயங்களாகியிருக்கின்றன. தேவகாந்தன் இவ்விதம் நூலினை வகுத்ததற்கு ஏதாவது காரணம் இருக்குமோ அல்லது தற்செயலாக நடந்த நாவலின் பிரிப்பா என்பதை நாவலாசிரியரே அறிவார்.

இந்த நாவல் ஒரு குடும்பத்தின் பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கையை விபரிக்கும் வகையில் பின்னப்பட்டிருப்பதால்,  ஒவ்வொரு 'அத்தியாய'மும் (அல்லது 'பகுதியும்') பல்வேறு காலகட்டத்து ஆளுமைகளின் வாழ்வினை விபரிப்பதால், நாவல் கூறும் பொருளையும், பாத்திரப்படைப்புகளையும் , கதைப்பின்னலையும் தெளிவாக அறிவதற்கு, நாவல் மீதான முழுமையான வாசிப்பு அவசியமானது. அத்தியாயங்களில் ஒன்றைத்தவற விட்டாலும் நாவலின் முழுப்பரிமாணத்தையும் அடைவதில் சிரமம் ஏற்படும் சாத்தியமுள்ளது.

இந்த நாவலின் கூறு பொருள், பாத்திரப்படைப்பு, நான்கு தலைமுறைகளையும் உள்ளடக்கிய கதைப்பின்னல் (Plot) ஆகியவை நன்கு அமைந்திருக்கின்றன. அவை எழுத்தாளர் தேவகாந்தனின் எழுத்துச்சிறப்பினை வெளிப்படுத்துகின்றன. மேலும் இந்த நாவல் பல்வேறு காலகட்ட வாழ்வியல் அனுபவங்களை உள்ளடக்கியதால் பன்முகப் பரிமாணங்களைக்கொண்டதொரு நாவலாக உருவாகியிருக்கின்றது.

இந்த நாவலை வாசிக்க முன் . முன்னுரையில் நாவலாசிரியர் கூறும் பின்வரும் கூற்றினைச் சிறிது கவனியுங்கள்:

•Last Updated on ••Saturday•, 13 •August• 2016 06:20•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 192: ஜான் மாஸ்ட்டருடனான மாலை நேரச்சந்திப்பொன்று!

•E-mail• •Print• •PDF•

Uncle Rajanathan Muthusamippillai.எழுத்தாள நண்பர் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவலை வாங்கி வைத்திருக்கும்படியும் , டொராண்டோ வரும்போது நூலினைப்பெற்றுக்கொள்வதாகவும் நண்பரும், அரசியற் செயற்பாட்டாளருமான ஜான் மாஸ்ட்டர் கூறியிருந்தார். அவ்விதம் வாங்கி வைக்கப்பட்டிருந்த நூலை இன்றுதான் அவரிடம் கொடுக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.

விக்டோரியா பார்க் மற்றும ஃபிஞ்ச் வீதிகள் சந்திக்குமிடத்தில் அமைந்திருக்கும் மக்டானல்ஸ்ட்ஸ் உணவகத்தில் மாலை எட்டு மணியளவில் சந்தித்தோம்.

வழக்கம் போல் பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடினோம். உயிர்ப்பு 5இல் வெளிவந்த தன்னியல்பு, பொதுப்புத்தி பற்றிய ஏகலைவனின் நீண்ட பயனுள்ள கட்டுரை பற்றி, உயிர்ப்பு இதழ்களின் தொகுப்பின் வெளியீடு பற்றி, எண்பதுகளிலிருந்து இன்று வரையிலான கலை, இலக்கிய மற்றும் அரசியல் விடயங்களை உள்ளடக்கியதாக உரையாடல் அமைந்திருந்தது.

உரையாடலின் முக்கிய பங்கினை சம்பூரில் அமையவிருக்கும் அனல் மின் நிலையம் எடுத்துக்கொண்டது. விரைவில் இது பற்றியொரு கலந்துரையாடல் நடக்கவிருப்பதாகவும், தானும் அந்நிகழ்வில் உரையாட இருப்பதாகவும் ஜான் மாஸ்டர் எடுத்துரைத்தார். சீனாவுக்குப் போட்டியாக ஏற்கனவே வடக்கில் கா பதித்த இந்தியாவின் பதில் நடவடிக்கையாகவே ஜான் மாஸ்ட்டர் கருதுவதை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களைப்பை இணைக்கும் வகையில் புகையிரதப்பாதை அமைப்பதில் கவனம் செலுத்துவது பற்றியும் , இலாபநோக்கற்ற நிலையில் இயங்கும் அமைப்புகளின் செயற்பாடுகள் பற்றியும், ஜான் மாஸ்ட்டருடன் கருத்துகளைப்பகிர்ந்துகொண்டேன்.

•Last Updated on ••Monday•, 08 •August• 2016 04:36•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 191: எழுத்தாளர் ஜெயமோகனும், இனப்படுகொலையும் பற்றிய ஒரு பார்வை!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் ஜெயமோகன்ஜெயமோகன் இனப்படுகொலை பற்றிக்கூறிய கருத்துகளுக்கு உணர்ச்சி வசப்பட்டுப்பலர் இணையத்தில் அவரைத்தூற்றிக் காரசாரமாக எதிர்வினையாற்றி வருகின்றார்கள். அவரது பேட்டியினை நான் இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் இணையத்தில் வெளியான அந்நேர்காணல் கேள்வி/ பதிலை வாசித்திருக்கின்றேன். முதலில் அவரது கேள்வியினைப் பார்ப்போம்.


"விகடன் தடம்: ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்குப் பின்னால் இந்திய அரசின் கரங்கள் இருந்தன’ என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவர் என்ற முறையில் இதுகுறித்த உங்கள் கருத்து என்ன? உங்களது ‘உலோகம்’ நாவல், இந்திய அமைதிப்படை குறித்த கட்டுரை ஆகியவை தொடர்ச்சியாக ஈழவிடுதலைக் குரல்களுக்கு எதிராக இருக்கின்றனவே?’’
ஜெயமோகன்: ``முதலில், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது. 1960, 70-களில் புரட்சிகரக் கருத்தியல் காலகட்டம் உருவானபோது, உலகம் முழுக்க அரசுக்கு எதிரான பல புரட்சிகள் நடந்தன. காங்கோ, பொலிவியா, இந்தோனேஷியா, மலேசியா என அது ஒரு பெரிய பட்டியல். இந்தியாவில் நக்சலைட் இயக்கங்களைச் சேர்ந்தவர்களை இந்திய அரசு கொன்றொழித்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்றுதானே இந்தியாவில் நக்சலைட் போராட்டத்தை ஒழித்தார்கள். அதை எந்த இனப்படுகொலை என்று சொல்வது? இதேமாதிரியான செயல்பாட்டைத்தான் இலங்கை அரசும் மேற்கொண்டது. எனவே, அரசு தனக்கு எதிரானவர்களைக் கொன்றது என்றுதான் பார்க்கிறேனே தவிர, அதை இனப்படுகொலை என்று பார்க்கக் கூடாது. இலங்கை அரசு, தமிழர்களை மட்டும் கொல்லவில்லை. இலங்கையைச் சேர்ந்த இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி-யைச் சேர்ந்த 72,000 பேரையும் அதே அரசுதானே கொன்றழித்தது? கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள்தானே? எங்கே இரக்கம் காட்டியது சிங்கள அரசு? ஜே.வி.பி-க்கு ஓர் அணுகுமுறை, புலிகளுக்கு ஓர் அணுகுமுறை என்றால்தான், அது சிங்கள இனவாதமாக இருக்க முடியும். ஆக, அங்கே நடந்தது அரச வன்முறை."


 

இனப்படுகொலை பற்றிய இது போன்ற கேள்விகளுக்குப்பதிலளிக்கும்போது நம்மவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுகின்றார்கள். உணர்ச்சி கண்ணை மறைக்கும். அறிவையும் தடுமாறச்செய்யும். வார்த்தைகள் வராமல், போதிய தர்க்கிக்கும் வல்லமை அற்று ஜெயமோகனின் கூற்றினை வரிக்கு வரி எதிர்ப்பதற்கான காரணங்களைக் கூறுவதற்குப் பதில் கொதித்தெழுகின்றார்கள்.

ஜெயமோகன் இனப்படுகொலை பற்றித்தான் தான் நம்பும் காரணங்களைக் குறிப்பிடுகின்றார். இந்தியா, இலங்கை உட்படப்பல நாடுகளில் நடைபெற்ற ஆயுதக் கிளர்ச்சிகளில் பலர் அரசபடைகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இலங்கையில் கூட சிங்களவர்களான ஜேவிபியினர் படுகொலை செய்யபட்டிருக்கின்றார்கள். இவையெல்லாம் இனப்படுகொலைகளா? இவற்றை அரசு தனக்கெதிராகப் போரிடும் குழுக்களுடனான மோதல்கள் என்றுதான் தான் பார்ப்பதாகவும், இனப்படுகொலையாகப் பார்க்கவில்லையென்றும் கூறியிருக்கின்றார்.

•Last Updated on ••Monday•, 08 •August• 2016 22:12•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 190: 'ஆவணப்பதிவு: கனடாவின் முதலாவது தமிழ்க் கவிதைத்தொகுப்பு எது?

•E-mail• •Print• •PDF•

சுதா குமாரசாமியின் 'முடிவில் ஓர் ஆரம்பம்' கவிதைத்தொகுப்புமுன்பொருமுறை இது பற்றி முகநூலில் தர்க்கித்தது நினைவுக்கு வருகிறது.     தமிழர் தகவல் (கனடா) இதழின் இருபத்து ஐந்தாவது ஆண்டு மலரில் வெளியான முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்களின் 'கனடாவில் தமிழ் இலக்கியம்' என்னும் கட்டுரையில் '"கவிதைத்தொகுதி என்ற வகையில் கனடாவில் வெளியிடப்பட்ட முதலாவது ஆக்கம் கவிஞர் சேரன் அவர்களுடைய 'எலும்புக் கூடுகளின் ஊர்வலம்' ஆகும். இது 1990இல் வெளிவந்தது.' என்று குறிப்பிட்டிருந்தது பற்றித் தர்க்கித்தது நினைவுக்கு வருகின்றது. முனைவர் நா.சுப்பிரமணியன் 'காலம்' செல்வம் போன்றவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அம்முடிவுக்கு வந்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையில் கவிஞர் சேரனின் 'எலும்புக் கூடுகளின் ஊர்வலம்' வெளியாவதற்கு முன்னர் 14.01.1987 மங்கை பதிப்பக வெளியீடாக வெளியான 'மண்ணின் குரல்' தொகுப்பு எட்டுக் கவிதைகளையும் உள்ளடக்கி வெளியாகியுள்ளது. அக்கவிதைகளின் விபரங்கள் வருமாறு:

1. மாற்றமும் , ஏற்றமும்
2. அர்த்தமுண்டே..
3. விடிவிற்காய்..
4. புல்லின் கதை இது..
5. ஒரு காதலிக்கு...
6. மண்ணின் மைந்தர்கள்..
7. புதுமைப்பெண்
8. பொங்கட்டும்! பொங்கட்டும்!

இக்கவிதைகள் அனைத்தும் மான்ரியாலிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச்சஞ்சிகையில் வெளியானவை. பத்து அத்தியாயங்களை உள்ளடக்கிய 'மண்ணின் குரல்' நாவலும் அதே ' புரட்சிப்பாதை' கையெழுத்துச்சஞ்சிகையில்தான் வெளியானது.

•Last Updated on ••Saturday•, 06 •August• 2016 22:40•• •Read more...•
 

வாசிப்பும் , யோசிப்பும் 189: ஜெயமோகனின் கருத்துகளும், எதிர்வினைகளும் பற்றிய சிறு குறிப்பு.!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் ஜெயமோகன்எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எந்தவொரு விடயத்தைப் பற்றியும் ஒருவித கருத்திருக்கும். சில கருத்துகள் எம்முடன் ஒத்துப்போகக்கூடியவையாகவிருக்கும். வேறு சில கருத்துகள் முற்றிலும் ஒத்துப்போகாதவையாகவிருக்கும். அதற்காக அவரைத்தனிப்பட்டரீதியில் தாக்குவது முட்டாள்தனமானது. அவரது கருத்துகளை அவரது கருத்துகளினூடு எதிர்கொள்வது மிகவும் அவசியம். உதாரணமாக அவரது கருத்தான இந்திய அமைதி காக்கும் படையினர் பற்றிய கருத்து. அதற்காக நாம் ஆத்திரப்பட வேண்டிய தேவையில்லை. அவரது கூற்று தவறானதென்பதை தர்க்கரீதியாக ஆணித்தரமாக நிரூபிப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக அவரைத்தனிப்பட்டரீதியில் தாக்குவதென்பது எதிர்மறையான விளைவுகளையே தரும்.

அதுபோல் அவருக்கு ஒவ்வொரு படைப்பாளி பற்றியும் ஒவ்வொருவித கருத்து இருக்கும். அவரது கருத்து தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அல்லது அவர் தன் எழுத்தை அவமதித்து விட்டார் என்பதற்காகத் துள்ளிக்குதிக்க வேண்டியதில்லை. அவரது கருத்தை மாற்றும்படி வற்புறுத்த முடியாது. அது அவரது கருத்து.  அது அவரது கருத்துரிமை..

அவர் ஒரு படைப்பைப்பற்றி உயர்த்திக் கூறுவதாலோ அல்லது தாழ்த்திக் கூறுவதாலோ அந்தப் படைப்பின் தரம் குறைந்து போய்விடப்போவதில்லை. உண்மையிலேயே அந்தப் படைப்பு தரமானதாகவிருப்பின் நிச்சயம் காலத்தை வென்று வாழும். மாகவி பாரதியைப்பற்றியே அவர் ஒரு மகாகவி அல்ல என்று வாதிட்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களெல்லாரும் காலத்தின் முன் மண்டியிட, இன்றும் பாரதி மாகவியாக உயர்ந்து நிற்கின்றார். இதுபோல் பல உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.

•Last Updated on ••Wednesday•, 03 •August• 2016 18:33•• •Read more...•
 

சுய வாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை, தெளிந்த இலகுவான மொழிநடை மிக்க நுணாவிலூர் கா.விசயரத்தினத்தின் எழுத்தாற்றல்!

•E-mail• •Print• •PDF•

சுய வாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை, தெளிந்த இலகுவான மொழிநடை மிக்க நுணாவிலூர் கா.விசயரத்தினத்தின் எழுத்தாற்றல்!- விரைவில் வெளிவரவிருக்கும் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் சங்கத்தமிழ் இலக்கியக் கட்டுரைத்தொகுப்பு நூலுக்கு எழுதிய  கட்டுரை இக்கட்டுரை. இத்தொகுப்பிலுள்ள பதினான்கு கட்டுரைகளில் எட்டு கட்டுரைகள் ஏறகனவே 'பதிவுகள்' இணைய இதழில் வெளியானவையென்பதும் குறிப்பிடத்தக்கது. - வ.ந.கி -


தொல்காப்பியம் என்றால் உடனே எனக்கு நினைவுக்கு வருபவர் நுணாவிலூர் கா.விசயரத்தினம். அதற்குக் காரணம் 'பதிவுகள்' இணைய இதழில் இவர் எழுதிய , எழுதிவரும் தொல்காப்பியம் பற்றிய, சங்கத்தமிழ் நூல்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளும், ஏற்கனவே நூலுருப்பெற்ற இவரது 'தொல்காப்பியத்தேன் துளிகள்..' என்னும் நூலும்தாம். ஆரம்பத்தில் இவர் 'பதிவுகள்' இணைய இதழுக்கு இலக்கியக்கட்டுரைகள் அனுப்பியபோது இவர் தமிழ்ப்பேராசிரியர்களுள் ஒருவராக இருக்கக்கூடுமென்று எண்ணியிருந்தேன். பின்னர்தான் தெரிந்தது இவர் தமிழ்ப்பேராசிரியரல்லர் ஆனால் ஓய்வு பெற்ற ஒரு கணக்கியல் பட்டதாரி; கணக்காய்வுத் திணைகளத்தில் (இலங்கை) கணக்காய்வு அத்தியட்சகராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவரென்பது.

கணக்கியல் பட்டதாரியான இவர் எவ்விதம் இவ்விதம் சங்கத்தமிழ் இலக்கிய நூல்கள் பற்றிய ஆய்வில் ஆர்வம் கொண்டார்? ஆனால் அந்த ஆர்வம் இவரது ஓய்வுக்காலத்தைப் பயனுள்ளதாக மாற்றித் தமிழ் இலக்கிய உலகுக்கு வளம் சேர்க்குமொன்றாக மாற்றி விட்டது. தமிழ்ப்பேராசிரியர்களே எழுதாத எண்ணிக்கையில் சங்கத்தமிழ் நூல்கள் பற்றியும், குறிப்பாகத் 'தொல்காப்பியம்' பற்றியும் இவர் எழுதி வருவது பாராட்டத்தக்கது. தன் பிறந்த மண்ணை நினைவுபடுத்தும் வகையில் 'நுணாவிலூர் கா.விசயரத்தினம்' என்னும் பெயரில் இலக்கியக் கட்டுரைகளை எழுதி வரும் நுணாவிலூராரின்  சுயவாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை மற்றும், சாதாரண வாசகர்களுக்கும் புரியக்கூடிய தெளிந்த இலகு நடை ஆகியவை அவரது எழுத்துகள் சிறப்புற்று விளங்குவதற்கு முக்கிய காரணங்கள். இத்தொகுதியிலுள்ள பதினான்கு கட்டுரைகளில் எட்டு கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளிவந்தவை என்பதும் மகிழ்ச்சிக்குரியது.

•Last Updated on ••Tuesday•, 02 •August• 2016 00:09•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 188: 'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' பற்றிய குறிப்புகள் சில!

•E-mail• •Print• •PDF•

'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' பற்றிய குறிப்புகள் சில!'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' பற்றிய குறிப்புகள் சில! 2012 ஆம் ஆண்டு இலங்கை சென்ற நண்பர் ஒருவரிடம் என்னிடம் கொடுத்து விடும்படி திரு.கே.எஸ்.சிவகுமாரனால் கொடுத்து விடப்பட்டிருந்த 'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' நூல் அண்மையில்தான் என் கைகளை வந்தடைந்தது. :-) மறக்காமல் நினைவில் வைத்திருந்து நூலை என்னிடம் சேர்ப்பித்த  நண்பருக்கு நன்றி. :-)

இது போல் இன்னுமொருவரிடமும் திரு.கே.எஸ்.சிவகுமாரன் நூல்கள் சிலவற்றைக் கொடுத்திருந்த விபரத்தை நண்பர் சில வருடங்களுக்கு முன்னர் அறியத்தந்திருந்தார். ஆனால் நூல்கள் இன்னும் என் கைகளுக்கு வந்து சேரவில்லை. :-)

இன்னுமொருவரிடம் கொடுத்திருந்த நூல் பொதி பெற்றவர் இன்னுமொருவரிடம்  கொடுத்து சிறிது காலம் தாழ்த்தியென்றாலும் வந்து சேர்ந்து விட்டது.

'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' நூல் கைக்கடக்கமானது. கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பதற்கொப்ப மிகுந்த பயன் மிக்கது. குறிப்பாக ஆவணச்சிறப்பு மிக்கது. இந்நூலில் கே.எஸ்.எஸ் அவர்கள் எழுத்தாளர்களைபற்றி, வெளிவந்த நூல்கள் பற்றி, தன்னைப் பாதித்த அண்மைக்கால நாடகங்கள், சிங்களத்திரைப்படம் பற்றி, என்று பல விடயங்களைப்பற்றி , எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

அமரர் சோமகாந்தன் தினகரன் வாரமஞ்சரியில் எழுதிய 'காந்தன் கண்ணோட்டம்' என்னும் பத்தி எழுத்துகள் பற்றியொரு கட்டுரை தொகுப்பிலுள்ளது. இச்சிறு கட்டுரை சோமகாந்தனின் பத்தி எழுத்துகளை விபரிப்பதுடன், பத்தி எழுத்துகள் பற்றிய கே.எஸ்.எஸ் அவர்களின் கருத்துகளையும் உள்ளடக்கியிருப்பது இதன் சிறப்பு.

'காந்தனின் கண்ணோட்டம்' பத்தி எழுத்துகளைப்பற்றி கே.எஸ்.எஸ் அவர்கள் பின்வருமாறு கூறுவார்:

" நான் இந்த எழுத்துகளை வெகு ஆவலுடனும், ஆர்வத்துடனும் வாசித்து வந்தேன். விளைவு: ஆனந்தம், தகவற்கள விரிவாக்கம், செயற்பாட்டுப்பயன். ஆனந்தம் ஏனெனில் தமிழ்மொழியின் சொல்வளம் பத்தி எழுத்தாளரின் கை வண்ணத்தால் பல பரிமாணங்கள் எடுப்பதை அனுபவித்து புளகாங்கிதம் நான் அடைந்தமை. தெரியாத சில விபரங்களைக்கோர்த்து அவர் தரும் பாங்கு எனது அறிவை விருத்தி செய்ய உதவியமை சொல்லப்பட வேண்டும்.  காந்தனின் சிந்தனைகள் செயற்பாட்டுத் தன்மை கொண்டவையாதலால், அவருடைய பத்திகளைப் படிக்கும் நான் செயலூக்கம் பெறுகின்றேன்."

•Last Updated on ••Monday•, 01 •August• 2016 17:48•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 187 : கறுப்பு ஜுலை 1983: மானுட அவலம் என்பதன் வடிவம! | கறுப்பு ஜூலை 83: சில கேள்விகளும், இழைக்கப்பட்ட அநீதியும் கிடைக்க வேண்டிய நீதியும்!|பெட்டிக்கு வெளியில் நின்று சிந்திக்கப்பழகுவோம் (Think outside the box)!

•E-mail• •Print• •PDF•

1. கவிதை: கறுப்பு ஜுலை 1983: மானுட அவலம் என்பதன் வடிவம! 

கறுப்பு ஜூலை 1983எண்ணிப் பார்க்கையில் எத்தனை நினைவுகள்.
கண்ணீர்த் தீவின் வரலாற்றை மாற்றிய
கறுப்பு ஜீலை எண்பத்து மூன்று.
மானுட அவலம் என்பதன் வடிவம்.

மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால்
மொழியின் பெயரால் நாட்டின் பெயரால்
இதுவரை மானுடர் மடிந்தது போதும்.
இனியும் வேண்டாம் இந்த அவலம்.

இனத்தின் பெயரால் இங்கே ஒருவர்
கூனிக் குறுகி அவமா னத்தால்
இருக்கும் காட்சி காணும் போதினில்
சிந்தையில் எழும் வினாக்கள் பற்பல.
யாரிவர்? எங்கி ருந்து வந்தார்?
குடும்பம் ஒன்றின் தலைவரா அல்லது
உறவுகள் அற்ற மானுடர் ஒருவரா?

இனவெறி மிகுந்து இங்கு வெறியுடன்
ஆடி நிற்கும் காடையர் முகங்கள்
மானுட அழிவின் பிரதி பலிப்புகள்.
இந்த மனிதர் இங்கே தனிமையில்
நாணி, வாடி, ஒடிந்து கிடக்கின்றார்.
இவரை இவ்வித மழித்த மானுடர்
மானுட இனத்தின் அவமானச் சின்னங்கள்..
மானுட உரிமை ஆர்வலர் மற்றும்
அனைவரு மெழுவீர்! எழுவீர்! எழுந்து
நீதி கிடைத்திட ஒன்றெனத் திரள்வீர்!

நடந்த வற்றில் பாடத்தைப் படித்து
நல்வழி தேர்ந்து பயணம் தொடர்வோம்.
சிறிய கோளில் மோதல்கள் எதற்கு.
அறிவுத் தளத்தில் அனைத்தையும் அணுகின்.

இதுவரை மோதலில் போரினில் மற்றும்
அனைத்து அழிவினில் மடிந்த துடித்த
மக்களை எண்ணியே பார்ப்போம். பார்த்து
இம்மண் மீதினில் புதிய பாதை
சமைப்போம். வகுப்போம். தொடர்வோம், மகிழ்வோம்.

•Last Updated on ••Tuesday•, 26 •July• 2016 16:36•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 186: தேடகம் (கனடா) மற்றும் கரவெட்டி கலாசாரப்பேரவை ஆதரவில் 'டொராண்டோ (கனடா)வில் நடைபெற்ற அமரர் 'செ.கதிர்காமநாதன் படைப்புகள்' நூல் வெளியீடு பற்றியதொரு பதிவு!!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் செ.கதிர்காமநாதன்இன்று 3600 கிங்ஸ்டன் வீதியில் அமைந்திருக்கும் 'ஸ்கார்பரோக் கிராமச்சமுக' நிலையத்தில் கலாச்சாரப்பேரவை, கரவெட்டி மற்றும் தேடகம் - கனடா ஆகியவற்றின் ஆதரவில் வெளியிடப்பட்ட அமரர் 'செ.கதிர்காமநாதன் படைப்புகள்' என்னும் நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். நிகழ்வுடன் கூடவே 'காலம்' செல்வம் அவர்களின் 'வாழும் தமிழ்' புத்தகக்கண்காட்சியும் நடைபெற்றது.

செல்லும்போது சிறிது தாமதமாகிவிட்டது. நிகழ்வு எழுத்தாளர் பா.அ.ஜயகரன் தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளர் அ.கந்தசாமி உரையாற்றிக்கொண்டிருந்தார். தனக்கேயுரிய கவித்துவ மொழியில் அவரது உரை அமைந்திருந்தது. அவர் தனதுரையில் செ.கதிர்காமநாதனின் குடும்பச்சூழல் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். செ.க.வே முதன் முறையாக பிறநாட்டுப்பாத்திரங்களை வைத்துப் புனைகதை எழுதியவராக அவர் தனதுரையில் குறிப்பிட்டார். அதற்குதாரணமாக செ.க.வின் 'வியட்நாம் உனது தேவைதைகளின் தேவவாக்கு' என்னும் சிறுகதையினைச் சுட்டிக்காட்டினார். அதன் பின்னர் செ.கதிர்காமநாதனின் தமக்கையாரான இந்திராணி மகேந்திரநாதன் அவர்கள் தனது தம்பி பற்றிய உணர்வுகளைப்பகிர்ந்து கொண்டார். மிகவும் மெதுவான குரலில் அவரது உரை அமைந்திருந்ததால் பலருக்கும் ஒழுங்காகக் கேட்டிருக்குமோ என்று சந்தேகமாயிருந்தது. அவர் தனதுரையில் இளமைக்கால வாழ்வு, இலக்கிய முயற்சிகள் பற்றியெல்லாம் விரிவாகவே எடுத்துரைத்தார்.

அவரைத்தொடர்ந்து எழுத்தாளர் 'அலை' யேசுராசா அவர்கள் செ.கதிர்காமநாதனின் புனைகதைகள் பற்றி, மொழிபெயர்ப்புக் கதைகள் பற்றி விரிவாகவே எடுத்துரைத்தார். செ.கதிர்காமநாதன் நல்லதொரு வாசகராகவும், எழுத்தாளராகவுமிருந்ததாலேயே தரமான பிறமொழி ஆக்கங்களையெல்லாம் அவரால் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்க முடிந்தது என்பதைச்சுட்டிக்காட்டினார். அவரைத்தொடர்ந்து நூல் வெளியீட்டுக்குத் தேடகம் (கனடா)வுடன் இணைந்து ஒத்துழைத்த கரவெட்டி கலாச்சாரப் பேரவையினைச்சேர்ந்த அம்பிகைபாலன் செ.கதிர்காமநாதன் பற்றிய தனதுரையினை ஆற்றினார்.
•Last Updated on ••Monday•, 18 •July• 2016 21:00•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 185: ஆய்வாளர்கள் கவனத்துக்கு: ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகும், கவீந்திரனின் (அறிஞர் அ.ந.கந்தசாமியின்) பங்களிப்பும்!

•E-mail• •Print• •PDF•

அறிஞர் அ.ந.கந்தசாமி

ஈழத்து இலக்கிய உலகில் கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, இலக்கியத்திறனாய்வு மற்றும் நாடகம் என அனைத்துப் பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்பினைச் செய்து சாதனை புரிந்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள். அவர் முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் கருதப்படுபவர். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் விமர்சனங்கள், திறனாய்வுகள் செய்பவர்கள் பலருக்குப் போதிய தேடுதல் இல்லை என்பதென் கருத்து. இதனால் அவரது இலக்கியப் பங்களிப்புகள் பற்றிய போதிய புரிதல் இல்லை அவர்களுக்கு. இதனால் ஏற்கனவே யாரும் அவரைப்பற்றிக் கூறியதை எடுத்துரைப்பதுடன் நின்று விடுகின்றார்கள். அவர்களைப்போன்றவர்களுக்காக அ.ந.கந்தசாமி அவர்களின் கவிதைப் பங்களிப்பை எடுத்துரைப்பதுதான் இப்பதிவின் நோக்கம். அ.ந.க எத்தனை கவிதைகள் எழுதியிருக்கின்றார் என்பது சரியாகத்தெரியவில்லை. ஆனால் இதுவரை அவர் எழுதிய கவிதைகளில் எமக்குக் கிடைத்த கவிதைகளைப்பற்றிய விபரங்களைக் கீழே தருகின்றோம். அ.ந.க.வின் ஏனைய கவிதைகள் பற்றி அறிந்தவர்கள் அறியத்தரவும். ஈழத்தில் அவர் காலத்தில் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றைத்தேடிப்பார்ப்பதன் மூலமே அவர் எழுதிய கவிதைகள் பற்றிய மேலதிக ஆய்வினைத்தொடர முடியும்.

அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) எழுதிய கவிதைகளில் எம்மிடமுள்ள கவிதைகள் பற்றிய விபரங்கள்:

•Last Updated on ••Sunday•, 17 •July• 2016 07:07•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 184 : தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' பற்றிச்சில வார்த்தைகள்....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 183 : தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' பற்றிச்சில வார்த்தைகள்.... - வ.ந.கிரிதரன் -அண்மையில் வெளியான தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவலின் முதற்கட்ட வாசிப்பின்போது அதன் வெளியீட்டு விழாவில் ஜான் மாஸ்ட்டர் கூறிய கருத்தொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவர் இதனை ஒரு கோணத்தில் பார்த்தால் ஒரு காதல் கதையாகவும் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எனக்கு வித்தியாசமான காதற்கதையாகத்தான் நாவலில் விபரிக்கப்பட்டிருந்த காதற்கதையும் தென்பட்டது.

நாவலின் பிரதான பாத்திரமான புலிகள் இயக்கத்தில் பரணி என்றழைக்கப்படும் போராளிக்கும், வானதி என்னும் பெண்ணுக்குமிடையிலான காதல் வாழ்வின் தொடக்கத்தில் அவன் இயக்கத்தில் சேர்ந்து , இந்தியாவுக்குப் பயிற்சிக்காகச் செல்கின்றான். செல்லும்போது 'எனக்காகக் காத்து நிற்பீர்களா?' என்று கேட்கின்றான். இவளும் அவனுக்காகக் காத்து நிற்பதாக உறுதியளிக்கின்றாள். அவ்விதமே நிற்கவும் செய்கின்றாள். இது உண்மையில் எனக்கு மிகுந்த வியப்பினைத்தந்தது. சொந்த பந்தங்களை, பந்த பாசங்களையெல்லாம் விட்டு விட்டு இயக்கத்துக்குச் செல்லும் ஒரு போராளி தான் விரும்பியவளிடம் தனக்காகக் காத்து நிற்க முடியுமா என்று கேட்கின்றான். போராட்ட வாழ்வில் என்னவெல்லாமோ நடக்கலாம், நிச்சயமற்ற இருப்பில் அமையப்போகும் வாழ்வில் இணையப்போகுமொருவன் தன் குடும்பத்தவர்களை விட்டுப் பிரிவதைப்போல, தன் காதலுக்குரியவளையும் விட்டுப்பிரிவதுதான் பொதுவான வழக்கம். ஆனால் இங்கு நாவலில் தன் வாழ்க்கையையே விடுதலைக்காக அர்ப்பணிக்கப்போகும் ஒருவன் , ஏதோ வெளிநாட்டுக்கு வேலை பெற்றுச்செல்லும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியிடம் கேட்பதுபோல் கேட்டு உறுதிமொழி பெற்று விட்டுச் செல்கின்றான். இது நாவலின் புனைவுக்காக எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். உண்மையில் அவ்விதமான சூழலில் பிரியும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியைப் பார்த்து தன் எதிர்காலம் நிச்சயமற்றிருப்பதால், மீண்டும் வந்தால் , இலட்சியக்கனவுகள் நிறைவேறினால் , மீண்டும் இணையலாம் அல்லது அவள் தனக்காகக் காத்து நின்று வாழ்வினை வீணாக்கக் கூடாதென்று அறிவுரை செய்திருக்கத்தான் அதிகமான வாய்ப்புகளுள்ளன. போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ளச் சென்றுவிட்ட அவனுக்காக அவளும் கனவுகளுடன் மீண்டும் இணைவதையெண்ணிக் காத்திருக்கின்றாள். இவ்விதமாக நகரும் வாழ்வில் அவள் யாழ் பல்கலைக்கழக அனுமதி பெற்றுச் செல்கின்றாள்.

நாட்டின் அரசியல் சூழல் மாறுகின்றது.  அமைதி காக்கும் படையினர் என்ற போர்வையில் இந்தியா தன் படைகளை இலங்கைக்கு அனுப்புகின்றது. அக்காலகட்டத்தில் நிகழ்ந்த அமைதிப்படைக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையிலான மோதல்கள், அக்காலகட்டத்தில் நடைபெற்ற ஏனைய இயக்கங்களுக்கும் , புலிகளுக்குமிடையிலான மோதல்கள் (வடக்கில் நிகழ்ந்த ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடனான  மோதல்கள், வன்னியில் நிகழ்ந்த தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகத்துடனான மோதல்கள்) விடுதலைப்புலிகளின் பார்வையில் விபரிக்கப்படுகின்றன.  அக்காலகட்டத்தில் நடைபெற்ற இந்திய அமைதிப்படையினர் புரிந்த படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் போன்றவற்றைப்பற்றி நாவல் எடுத்துரைக்கின்றது. மோதல்களினால், சிங்கள இனவாதிகளின் தாக்குதல்களினால் அடிக்கடி இடம் பெயர்ந்து செல்லும் வானதியின் குடும்பத்தினரின் நிலையும் நாவலில் விபரிக்கப்படுகின்றது.

•Last Updated on ••Monday•, 30 •September• 2019 23:52•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 183: மணி வேலுப்பிள்ளையின் 'மொழியினால் அமைந்த வீடு'

•E-mail• •Print• •PDF•

மணி வேலுப்பிள்ளைஎழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான மணி வேலுப்பிள்ளை தற்போது டொராண்டோவில் வசித்து வருகின்றார். எழுத்தாளர் மணி வேலுப்பிள்ளை நல்லதொரு மொழிபெயர்ப்பாளரும், கட்டுரையாளருமாவார். சிலிய ஜனாதிபதி அலந்தே, டெங் சியாவோ பிங், அம்மாவின் காதலன் மாயாகோவஸ்கி மற்றும் ரோசா லக்சம்பேர்க் போன்ற கட்டுரைகளும், தமிழ் மொழிபெயர்ப்பு (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு..) பற்றிய மொழிபெயரியல்பு, மொழியினால் அமைந்த வீடு, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு, விபுலானந்த அடிகளின் கலைச்சொல்லாக்க வழிமுறைகள் போன்ற கட்டுரைகள் அதனையே வெளிப்படுத்துகின்றன.

மொழிபெயர்ப்பாளர்கள் பலர் மொழிபெயர்ப்புகளுடன் நின்று விடுகையில், இவர் மொழிபெயர்ப்பு பற்றிய ஆழமான கட்டுரைகளைத் தந்திருப்பது பாராட்டுக்குரியது. இவை படைப்புகளை மொழிபெயர்க்க விரும்பும் எழுத்தாளர்களுக்கு பயன் மிக்க ஆலோசனைகளை வழங்குகின்றன.

ஆழமான கட்டுரைகளைச் சுவையாக எழுதுவதில் வல்லவர் இவர். உதாரணத்துக்கு 'மொழியினால் அமைந்த வீடு' கட்டுரை கீழுள்ளவாறு முடிவதைப்பாருங்கள்:

"உள்ளதை உள்ளபடி உரைப்பதற்கு மொழி ஒரு போதும் தடையாய் இருக்கப் போவதில்லை. உள்ளதை உள்ளபடி உரைக்க முற்படாதவர்களுக்கே மொழி தடங்கல் விளைவிக்கும். ஆதலால்தான் ஆட்சியாளரும், அரசியல்வாதிகளும் , விமர்சகர்களும், அவர்களுக்கு உடந்தையாய் விளங்கும் செய்திமான்களும் மொழியைத் திரித்து வருகின்றார்கள். மொழித் திரிபுவாதிகள் கட்டியெழுப்பிய வீட்டிலேயே பரந்துபட்ட பாமர மக்கள் வாடகைக் குடிகளாய் வாழ்ந்து வருகின்றார்கள்."
•Last Updated on ••Tuesday•, 12 •July• 2016 21:15•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 182: தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவல் வெளியீட்டு நிகழ்வு குறித்து...

•E-mail• •Print• •PDF•

நாவல்: பார்த்தீனியம்தமிழ்நதிதமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நூல் வெளியீடு சென்றிருந்தேன், கனடாத்தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தரப்பினரையும் காண முடிந்தது. நிகழ்வுக்குத் தலைமை தாங்கவென்று யாருமில்லை. இதற்கொரு காரணத்தைத்தனது ஏற்புரை/நன்றியுரையில் தமிழ்நதி தெரிவித்தார். அதாவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகளை ஆண்கள் ஆக்கிரமித்திருப்பார்கள். அதற்குப் பதிலாகவே தனது நூல் வெளியீடு எந்தவிதத்தலைமையுமற்று நடை[பெற்றதாக என்று. தலைமையில்லாத நிகழ்வினைச் சிறப்பாக்குவதற்காகத் தன்னுடன் இணைந்த தனது சிறு வயதுத்தோழியர்களிலொருவரான அன்பு-அன்பு நன்கு செயற்பட்டதாகக்குறிப்பிட்டார். ஏன் பெண் ஆளுமையொருவரின் தலைமையில் நிகழ்வினை நடாத்தியிருக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்படுவதைத்தவிர்க்க முடியவில்லை. வழக்கமாக ஆண்களின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறுவதால், பெண்களுக்குரிய இடம் கிடைக்கவில்லையென்று கருதும் தமிழ்நதி பெண்களின் தலைமையில் நிகழ்வினை நடத்த வந்த வாய்ப்பினைத் தவற விட்டுவிட்டாரே?

நிகழ்வு நடைபெற்ற மத்திய ஸ்கார்பரோ சமூக நிலையம் கலை, இலக்கிய ஆர்வலர்களால் நிரம்பி வழிந்தது.  எழுத்தாளர்களான அ.யேசுராசா, கவிஞர் கந்தவனம், கற்சுறா, ரதன், மா.சித்திவிநாயகம், வல்வை சகாறா, கவிஞர் அவ்வை, எஸ்.கே.விக்கினேஸ்வரன், கவிஞர் அ.கந்தசாமி, குரு அரவிந்தன் தம்பதியினர், முனைவர் பார்வதி கந்தசாமி, டானியல் ஜீவா, தீவகம் வே.ராஜலிங்கம், ந.முரளிதரன், தேவகாந்தன், பிரதிதீபா தில்லைநாதன் சகோதரிகள்,..,.. என்று பலரைக் காண முடிந்தது.

நிகழ்வில் ஜான் மாஸ்ட்டர், பொன்னையா விவேகானந்தன், முனைவர் அ.ராமசாமி, முனைவர் இ.பாலசுந்தரம், அருண்மொழிவர்மன், தமிழ்நதியின் தோழி அன்பு, தமிழ்நதி ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியினை எழுத்தாளர் கந்தசாமி கங்காதரன் தொகுத்து வழங்கினார்.

பொன்னையா விவேகானந்தன் நல்லதொரு பேச்சாளர். தமிழ்நதி கவிஞர் கலைவாணி ராஜகுமாரனாக அறியப்பட்ட காலகட்டத்திலிருந்து தான் அறிந்த கவிஞரின் கவிதைகளை உதாரணங்களாக்கித் தன் உரையினை ஆற்றித் தமிழ்நதி பற்றிய நல்லதோர் அறிமுகத்தை வழங்கினார். அவர் தனதுரையில் 'கவிஞர்கள் சிலரே மெட்டுக்குப் பாடல்களையும், நல்ல கவிதைகளையும் எழுத வல்லவர்கள். அவ்வகையான கவிஞர்கள் கவிஞர் சேரனும், கலைவாணி ராஜகுமாரனுமே' என்னும் கருத்துப்பட தன் கருத்துகளைத்தெரிவித்தார். அத்துடன் ஆரம்பத்தில் கலைவாணி ராஜகுமாரன் தேசியம் சார்ந்தவராக இருந்த காரணத்தால் ஏனைய இலக்கியவாதிகள் பலரால் புறக்கணிக்கப்பட்டதாகவும் குறைப்பட்டுக்கொண்டார்.

•Last Updated on ••Sunday•, 10 •July• 2016 17:17•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 181: பேராசிரியர் நிமால் டி சில்வாவும், 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பும்''

•E-mail• •Print• •PDF•

பேராசிரியர் நிமால் டி சில்வாநல்லூர் ராஜதானி நகர அமைப்பு - வ.ந.கிரிதரன்மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்று கொண்டிருந்த காலத்தில் எமக்குக் கற்பித்த பேராசிரியர்களில் எப்பொழுதும் என் நினைவில் முதலில் வருபவர் பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள். இவர் சொந்தமாகக் கட்டடக்கலைஞராகத் தொழில் பார்த்து வந்த அதே சமயம் எமக்கு 'பாரம்பர்யக் கட்டடக்கலை' என்னும் பாடத்தினையும் எடுத்து வந்தார்.

இலங்கையின் பாரம்பரியக் கட்டடக்கலை எவ்வாறு சூழல்களுக்கேற்ற வகையில் வேறுபடுகின்றது, குறிப்பாகத்தென்னிலங்கையின் பாரம்பரியக் கட்டடக்கலை பற்றியெல்லாம் விரிவாகக் கற்பித்த அதே சமயம், மாணவர்களை அவர்கள் வாழும் பகுதிகளுக்குரிய கட்டடக்கலை பற்றிய கட்டுரைகளை எழுதும்படி ஊக்குவிப்பார். நான் யாழ்ப்பாணத்துக்குரிய பாரம்பரியக் கட்டடக்கலை பற்றி, குறிப்பாக நாற்சார வீடுகள் பற்றி, பாவிக்கப்படும் கட்டடப்பொருள்கள் பற்றி எழுதிய கட்டுரையைப் பாராட்டியது இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளது.

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவர் மூலம் தாம் முதல் முறையாக ரோலன் டி சில்வாவின் பண்டைய அநுராதபுர நகரின் நகர அமைப்பு பற்றிய ஆய்வுக் கட்டுரையினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. பெளத்தர்களின் கட்டடக்கலை, நகர அமைப்பில் எவ்விதம் வட்ட வடிவம் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பதைப் புரிய வைத்த கட்டுரை அது. பண்டைய அநுராதபுர நகர அமைப்பைப்பொறுத்த வரையில் நகரின் மத்தியில் சந்தையினையும், நகரைச் சுற்றி வட்ட ஒழுங்கில் ஆங்காங்கே தாதுகோபுரங்களையும் கொண்டிருந்த நகர அமைப்பாக இருந்தது என்பதைத் தனது ஆய்வின் மூலம் எடுத்துரைத்திருப்பார் அந்தக் கட்டுரையில் ரோலன் டி சில்வா.

இந்த விடயத்தில் இந்துக்களின் நகர அமைப்பு, கட்டடக்கலை ஆகியவற்றில் சதுரம் (அல்லது செவ்வகம்) வகித்த பங்கு முக்கியமானது.

பெளத்தர்கள் வட்ட வடிவத்தையும், இந்துக்கள் சதுரத்தையும் தேர்தெடுத்ததற்கு அவர்களது சமயத்தத்துவங்கள் காரணமாக அமைந்திருந்தன. வட்ட வடிவம் இயக்கத்தை உணர்த்தும். தோற்றமும், அழிவும், இரவும், பகலும் இவ்விதமாக ஒருவித வட்ட ஒழுக்கில் நகரும் காலத்தை மேற்படி வட்டவடிவம் உணர்த்தும். மேலும் இவ்வட்ட வடிவம் நாம் வாழும் பூமிக்குரிய வடிவ இயல்பையும் குறிக்கும். பொருள் முதல்வாதக் கோட்பாட்டினை அதிகம் நம்பும் பெளத்தர்கள் வட்டவடிவத்தைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமானதொன்றல்ல.

•Last Updated on ••Monday•, 11 •July• 2016 22:47•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 180: வாழ்த்துகிறோம் கட்டடக்கலைஞர் சிவகுமாரன் திருவம்பலத்தை, அவர்தம் கட்டடக்கலைத்துறைச் சாதனைகளுக்காக!

•E-mail• •Print• •PDF•

கட்டடக்கலைஞர் சிவகுமாரன் திருவம்பலம்ஜூலை 6, 2016 அன்று பல வருடங்களுக்குப் பின்னர் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தில் கட்டடக்கலைஞர்கள் பலருடன் சந்தித்த கட்டடக்கலைஞர்களில் சிவா(குமாரன்) திருவம்பலமும் ஒருவர். நான் கட்டக்கலை மாணவனாக மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் அடியெடுத்து வைத்தபோது மயூரதநாதன், கலா ஈஸ்வரன் இருவரும் தமது  இளமானிப்பட்டப்படிப்பை முடித்து வெளியேறியிருந்தார்கள். சிவா திருவம்பலம், 'தமிழர் மத்தியில்' நந்தகுமார் ஆகியோர் இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்தார்கள். எமக்கு மென்மையான 'ராகிங்' தந்தவர்களிவர்கள்.

தனது கட்டடக்கலைப் படிப்பை முடித்து வளைகுடா நாடுகளில் பணியாற்றிக் கனடா வந்து இங்குள்ள புகழ்பெற்ற கட்டடக்கலை நிறுவனங்களில் பணியாற்றி, இங்கும் , ஒண்டாரியோவில், கட்டடக்கலைஞருக்குரிய அங்கீகாரத்தைப்பெற்று தற்போது புகழ்பெற்ற கனடியக்கட்டடக்கலை நிறுவனங்களிலொன்றான Hariri Pontarini Architects இல் பணியாற்றி வரும் சிவகுமாரன் திருவம்பலத்தைப்பற்றிப் பெருமைப்படத்தக்க விடயங்கள் பல. அவற்றிலொன்று Hariri Pontarini Architects நிறுவனத்தின் கட்டடக்கலைத்திட்டங்களிலொன்றான வெஸ்டேர்ன்  பல்கலைக்கழகத்தின் வர்த்தகத்துறைக்கான கல்வி நிலையமான ரிச்சர்ட் ஐவி கட்டடத் (Richard Ivey Building) திட்டத்தில் (33,000 சதுர மீற்றர்கள் பரப்பளவைக்கொண்ட இத்திட்டம் 2013இல் முழுமை பெற்றது.) பங்குபற்றிய முக்கியமான கட்டடக்கலைஞர்களில் இவருமொருவர்.

இத்திட்டமானது சர்வதேசக்கட்டடக்கலை நிறுவனங்கள் சமர்ப்பித்த கட்டட வடிவமைப்புகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட திட்டமென்பதும் பெருமைக்குரிய விடயம்.

இது பற்றி 'ஆர்க்டெய்லி.காம்' (archidaily.com) பிரசுரித்துள்ள கட்டுரையொன்றில் 'ஒரு சிறப்பான வர்த்தகத்துக்குரிய கல்வி நிலையமானது கவர்வதாக, ஆக்க எழுச்சி மிக்க உணர்வுகளை எழுப்புவதாக, மற்றும் அதனைப்பாவிக்கும் அனைவருக்கும் மத்தியில் சமூக உணர்வினை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே சர்வதேசரீதியில் பெறப்பட்ட வடிவமைப்புகளிலிருந்து ரிச்சர்ட் ஐவி கட்டட வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்டது. பிரதான நோக்கமானது சர்வதேசரீதியில் இது போன்ற ஏனைய நிறுவனங்கள் விடுக்கும் சவால்களுக்கு ஈடுகட்டுவதைச் செயற்படுத்தத்தக்க சூழலை உருவாக்குவதும், பல்கலைக்கழகத்தின் கோதிக் கட்டடக்கலைப் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதும், லண்டன் நகருக்கு முத்திரைபதிக்கத்தக்கக் கட்டடமொன்றினை உருவாக்குவதுமே ஆகும்' என்று 'த ஆர்கிடெக்ட்' சஞ்சிகையினை ஆதாரமாக்கிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

•Last Updated on ••Friday•, 08 •July• 2016 21:11•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 179: வழக்கறிஞர் செந்தில்நாதன் என்றொரு வானியல் ஆர்வலரும், 'கட்டைச்சுப்பரும்'.......

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 179: வழக்கறிஞர் செந்தில்நாதன் என்றொரு வானியல் ஆர்வலரும், 'கட்டைச்சுப்பரும்'.......எழுதுபதுகளில் யாழ் கஸ்தூரியார் வீதியில் (நாவலர் வீதிக்கு அண்மையில்) செந்தில்நாதன் என்னும் வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவரது வீடு மூன்று தளங்களை உள்ளடக்கிய (மொட்டை மாடியையும் உள்ளடக்கி) வீடு. இவர் தனது தொழிலான சட்டத்துறையில் எவ்விதம் மிளிர்ந்தார் என்பது தெரியாது. ஆனால் ஒரு விடயத்தில் இவர் என் கவனத்துக்குரியவரானார். தனது வீட்டின் மொட்டை மாடியில் இவர் தொலைக்காட்டியொன்றினை வைத்து இரவுகளில் நட்சத்திரங்களை ஆராய்வது வழக்கம். யாழ்ப்பாணத்தில் வானியற் கழகமொன்றினையும் இவர் நிறுவி நடாத்தி வந்ததை பத்திரிகைச்செய்திகள் வாயிலாக (அநேகமாக ஈழநாடு பத்திரிகை) அறிந்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில் வானியலில் ஈடுபாடு கொண்டிருந்த இந்த வழக்கறிஞர் மாணவர்களாகிய எமக்கு வியப்புக்குரியவராக இருந்தார்; வித்தியாசமானவராகவுமிருந்தார்.

எனக்கு வானியல், வானியற்பியல் ஆகியவற்றில் என் மாணவப் பருவத்திலேயே மிகுந்த ஈடுபாடு. எனக்கு வானியற்பியல் பற்றிய ஆர்வத்துக்கு முக்கியமான காரணங்களில் சில: யாழ் பொது நூலகத்தில் நான் வாசித்த விஞ்ஞான நூல்களும், அப்பாவும்தாம். என் குழந்தைப்பருவத்தில் இரவுகளில் அப்பாவின் சாறத்தைத்தொட்டிலாக்கி, அப்பாவுடன் சேர்ந்து இரவு வானையும், அங்கு கொட்டிக்கிடக்கும் சுடர்களையும் இரசிப்பதுண்டு.

வானியற்பியல் என்றதும் இன்னுமொருவர் ஞாபகமும் வருகின்றது. யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில், உயிரியல் என்னும் பாடத்துக்கு ஆசிரியராக வந்தவர் 'கட்டைச்சுப்பர்' என்ற பட்டப்பெயருக்குரிய ஆசிரியர். பிறவுண் வீதியில் இருந்தவர். நீண்ட 'தேர்மாஸ் பிளாஸ்கி'ல் 'கோப்பி' கொண்டு வருவார். அவருக்கு வானியலென்றால் உயிர். எங்களுக்கு உயிரியல் படிப்பிக்க வந்தவர், உயிரியல் பாடத்துக்கான நூலின் முன்னுரையில் இருந்த வானியல் பற்றிய ஒரு வசனத்தை எடுத்து, வானியல் பற்றி விரிவாக உயிரியலுக்குப் பதில் படிப்பிக்கத் தொடங்கி விட்டார். இரவு வானில் தெரியும் நட்சத்திரங்களை , நட்சத்திரக் கூட்டங்களைப் பற்றியெல்லாம் படிப்பிக்கத்தொடங்கியதால் எமக்குக் கற்பிக்க வேண்டிய உயிரியல் பாடத்தைத்தவற விட்டு விட்டார். இறுதியில் இதன் காரணமாக அவரை மாற்றி சகாதேவன் மாஸ்ட்டரை உயிரியல் பாடத்துக்குக்கொண்டு வந்தார்கள்.

'கட்டைச்சுப்பர்' இவ்விதம் வானியல் பற்றிப்படிப்பித்ததை நான் உண்மையிலேயே விரும்பிப் படித்தேன். ஏனெனில் எனக்கு மிகவும் அத்துறையில் ஆர்வமிருந்ததால்தான். அதன் காரணமாகவே இன்றும் அவர் என் நினைவில் பசுமையாக இருக்கின்றார்.

•Last Updated on ••Monday•, 04 •July• 2016 19:15•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 178: நூல் அறிமுகம்: 'தோழர் பால'னின் 'இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு' பற்றி....

•E-mail• •Print• •PDF•

பாலன் தோழர்தோழர் பாலனின் 'இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு' என்னும் சிறிய நூல் தோழர் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. 'கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது ' என்பார்கள். அதற்கொப்ப அளவில் சிறியதானாலும், கூறும் பொருளில் காத்திரமானதாக, புரட்சிகரமானதாக அமைந்துள்ள நூலிது. இலங்கை மீதான இந்தியாவின் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவரீதியிலான தலையீடுகளை விபரிப்பதும், இவற்றால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்களை வெளிப்படுத்துவதும், எவ்விதம் இந்தியத்தலையீட்டிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கு இலங்கையின் மக்கள் அனைவரும் இன, மத , மொழி ரீதியிலான பிரிவுகள் ஏதுமற்று , ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதையும் தர்க்கரீதியாக விபரிப்பதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும். இது தன் நோக்கத்தில் வெற்றியே அடைந்திருக்கின்றது என்பதை இதனை வாசிக்கும்போது உணர முடிகின்றது.

பொதுவாக இந்தியாவின் தலையீடு இலங்கையிலுள்ளது என்பது யாவரும் அறிந்ததே. இந்தியாவை மீறி இலங்கையால் எதுவுமே செய்ய முடியாது என்பதும் யாவரும் அறிந்ததே. இந்தியாவைப்பொறுத்தவரையில் அதன் அயல் நாடுகளுடனான வெளிநாட்டுக்கொள்கை அதன் தேசிய நலன்களுக்கு அமையவே அமைந்துள்ளது. அயல் நாடுகள் அதன் தேசிய நலன்களுக்கு முரணாகச் செயற்படும்போது அது அந்நாடுகளை ஆக்கிரமிக்கவும் தயங்காது என்பதை வரலாறு காட்டி நிற்கிறது. அயல் நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தனது நலன்களுக்குச் சார்பாகப் பயன்படுத்துவதில் இந்தியா ஒருபோதுமே தயங்கியதில்லை. இதனை இந்நூல் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இதுவரை காலம் இலங்கையின் மீதான இந்தியத்தலையீட்டினை வரலாற்றுக்கண் கொண்டு , சுருக்கமாக ஆராயும் இந்நூல், , இந்தியா எவ்விதம் தன் அயல்நாடுகளில் தன் நலன்களுக்காகத்தலையிடுகின்றது என்பதையும் புள்ளி விபரங்களுடன் வெளிப்படுத்துகிறது

அண்மைக்காலமாகவே , குறிப்பாக இலங்கையில் யுத்தம் மெளனிக்கப்பட்ட காலகட்டத்திலிருந்து இந்நாள் வரையில் உபகண்ட அரசியலைக்கூர்ந்து நோக்கினால், இந்தியா இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளைத்தன் மாநிலங்களைப்போலவே பயன்படுத்தி வருவதைப்போன்றதொரு நிலையினை அவதானிக்க முடிகின்றது. தன் நலன்களுக்கேற்ப அது ஈடுபட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் பார்க்கும்போது (காங்கேசன் துறைத்திட்டம், பலாலி விமான நிலையத்திட்டம், புகையிரத்தப்பாதை மீளமைப்புத்திட்டங்கள், சம்பூர் அனம் மின்சார நிலையத்திட்டம், திருகோணமலை எண்ணெய்ச்சுத்திகரிப்பு நிலையத்திட்டம் என இவை போன்ற பல திட்டங்கள்) எவ்வளவு தூரம் இந்தியாவின் தலையீட்டில் இலங்கை அகப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது.

•Last Updated on ••Monday•, 04 •July• 2016 18:45•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 177: எழுத்தாளர் டொமினி ஜீவாவுக்கு வயது எண்பத்தியொன்பது! நவீன ஈழத்தமிழ் நாடகமும், க.பாலேந்திராவும்!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் டொமினி ஜீவாவுக்கு வயது எண்பத்தியொன்பது!

எழுத்தாளர் டொமினிக் ஜீவா!ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்கள் ஜூன் 27 அன்று தனது  எண்பத்தியொன்பதாவது வயதில் காலடியெடுத்து வைக்கின்றார். ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில்  எழுத்தாளராக, இதழாசிரியராக, பதிப்பாளராக மற்றும் சமூகப்போராளியாக இவரது பன்முகப்பட்ட பங்களிப்பு எப்பொழுதும் நினைவு கூரப்படும். பெருமைப்படத்தக்க பங்களிப்பு அது. வளமுடன், நலமுடன் நீண்ட காலம் வாழ்ந்திட வாழ்த்துகிறோம்..

இது பற்றி எழுத்தாளர் மேமன்கவி அவர்கள் பின்வரும் தகவலை முகநூலில் பகிர்ந்துள்ளார். அதனை நாம் இங்கு மீள்பதிவு செய்கின்றோம்.

"எதிர்வரும் 27.06.2016 அன்று தனது 89வது பிறந்த தினத்தை கொண்டாடும் டொமினிக் ஜீவா அவர்களை அன்று காலை 9.30 முதல் 11.30 வரை COLOMBO15. MATTAKULIYA CROW ISLAND BEACH PARK. யில் சந்தித்து நண்பர்கள் அவரை வாழ்த்தலாம். தொலைபேசி யில் வாழ்த்த விரும்பும் நண்பர்கள் அல்லது குறுஞ்செய்தி(தமிழிலோ ஆங்கிலம் இரண்டிலும்) அனுப்பி வாழ்த்த விரும்பும் நண்பர்கள் 94778681464 இலக்கத்திற்கு தொடர்புக் கொள்ளலாம்." -
மேமன்கவி-

•Last Updated on ••Monday•, 27 •June• 2016 05:57•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 176: அ.யேசுராசாவின் 'தெரிதலும்' , புரிதலும். மற்றும் வெகுசனப்படைப்புகளும்!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும்ழகரம் 5 இதழ் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் அ.யேசுராசா அவர்கள் தனது 'தெரிதல்' என்னும் செய்திக்கடித வடிவமைப்பில் கடந்த பல வருடங்களாக வெளியாகி வரும் சிற்றிதழினைத்தந்தார். 'இளைய தலைமுறைக்கான இரு திங்கள் கலை, இலக்கிய இதழ்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகும் இதழ் 'தெரிதல்'.

'தெரிதல்' மூலம் பல கலை, இலக்கிய விடயங்களை தெரிந்துகொள்ள முடிகின்றது என்பதை இதழைப்புரட்டியபோதுதான் புரிந்தது. 12 பக்கங்களில் எவ்வளவு விடயங்களைத் தர முடியுமோ அவ்வளவு விடயங்களையும் தருகின்றது 'தெரிதல்'. உதாரணத்துக்கு நிகழ்வில் யேசுராசா அவர்கள் வழங்கிய தெரிதல் வைகாடி- ஆனி 2016 இற்குரிய இதழ். மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கை: 12. இதழில் மூன்று கவிதைகள் (மஞ்சுளா வெடிவர்த்தனாவின் 'சப்பாத்து' என்னும் சிங்களக் கவிதை எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில், லதுரு மதுசாங்க லியனாராய்ச்சியின் 'நண்பா..' லறீனா அப்துல் ஹைக் மொழிபெயர்ப்பில், மற்றும் தீபிகாவின் 'நகரம்' ஆகியவை வெளியாகியுள்ளன.

இவை தவிர இதழிலுள்ள முக்கியமான படைப்புகள் பற்றிய விபரங்கள் கீழே பட்டியலிடப்படுகின்றன:

1. நயநீக்கப் புனைவால் திரவநேர அழகியல் - இ.சு.முரளிதரன் -
2. மிக்கயீல் ஷோலக்கவ் - சோ.பத்மநாதன்
3. சீறி ஓயாத வருங்கால மனிதநதி - சோலைக்களி
4. எஸ்.பொ. என்னும் ஆளுமை: இலக்கிய ஆய்வரங்கு - இறமணன் -
5. சிறுகதை: நிழல் தேடி - பைந்தமிழ்க்குமரன் -
6. சிறுகதை: ஒளி - மருதூர்க்கொத்தன் -
7. எழுகையும் - நா.நவராஜ்
8. அறிதலுக்கான புதியதோர் வாசல்: இலங்கை சமகால கலை, கட்டட வடிவமைப்பு - கிருபாலினி பாக்கியநாதன்
9. தகவற் களம் : பல கலை, இலக்கியத்தகவல்களின் சுருங்கிய வடிவிலான தொகுப்பு

செய்திக்கடிதமளவில் தரமான கலை, இலக்கிய விடயங்களைத்தாங்கி வெளிவந்திருக்கும் 'தெரிதல்' நிச்சயம் நம் ;புரிதலை' அறிதலை அதிகரிக்கவே செய்யுமென்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமேயில்லை. கீழுள்ள இணைய இணைப்பில் ஏனைய இதுவரை வெளிவந்த இதழ்களைப் படிக்கலாம்:
•Last Updated on ••Friday•, 24 •June• 2016 05:21•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 175: ழகரம் 5 இலக்கிய இதழ் (மலர்) பற்றி... (1)

•E-mail• •Print• •PDF•

நன்றி: றஷ்மியின் அ.யேசுராசா ஓவியம் (கோமகன் வலைப்பதிவு)ழகரம் 5 இலக்கிய மலரின் வடிவமைப்பைப் பொறுத்த அளவில் ஓரிரு புறக்கணிக்கத்தக்க குறைபாடுகள் இருந்தாலும், மொத்தத்தில் நிறைவான வடிவமைப்பு. இதுவரை கனடாவில் வெளியான இலக்கிய இதழ்களில் தரத்தில் இதனை முதல் நிலையில் வைப்பதில் எனக்கு எந்தவிதத்தயக்கமுமில்லை. சிறிய குறைபாடுகள் என்றால்.. அதற்கு உதாரணமாக இதழில் வெளியான எனது கட்டுரையான அ.ந.க.வின் 'மனக்கண்' கட்டுரையைக் குறிப்பிடலாம். இந்தக் கட்டுரைக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. அது: இதுவரையில் அ.ந.க.வின் ஒரே நாவலான 'மனக்கண்' நாவலுக்கு யாருமே விமர்சனம் எழுதவில்லை என்னைத்தவிர. அதற்கு நாவல் தொடராக வெளிவந்தபோதும் இதுவரையில் நூலாக வெளிவராததும் காரணங்களிலொன்றாக இருக்கலாம்.

இதழில் கட்டுரையில் எனக்கு நாவல் பிடித்திருப்பதற்கு நான்கு காரணங்களைக் குறிப்பிட்டிருப்பேன். அதில் முதல் மூன்று காரணங்களையும் உரிய சிறிது பெரிய , தடித்த எழுத்துருக்களைப்பாவித்து வடிவமைத்திருக்கின்றார்கள். நான்காவது காரணமான 'நாவல் கூறும் பொருள்' என்பதற்கும் அவ்விதம் பாவிக்க மறந்து விட்டார்கள். மேலும் கட்டுரையில் 'மனக்கண்' நாவலிலிருந்து சில பகுதிகளை உதாரணத்துக்காகப் பாவித்திருக்கிறேன். அப்பகுதிகளை ஏனைய பகுதிகளிலிருந்து சிறிது வேறுபடுத்திக்காட்டியிருக்க வேண்டும். அதனைச்செய்யத்தவறி விட்டார்கள். ஆனால் இந்தக் குறைகள் முன்பே கூறியுள்ளதுபோல் புறக்கணிக்கத்தக்கவை.

மலரின் முதலாவது கட்டுரையான 'தமிழ்நதி'யின் 'எழுத்தின் பாலினம்' இதழின் முக்கியமான கட்டுரைகளிலொன்று. மேனாட்டு இலக்கியத்தில் அன்றிலிருந்து இன்றுவரை, எவ்விதம் பெண் எழுத்தாளர்கள் அவர்கள் பெண்களாக இருக்கின்ற காரணத்தினால் ஆண் பெயர்களில் மறைந்திருந்து எழுதினார்கள், எழுதி வருகின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் நல்லதொரு கட்டுரை. கட்டுரை புகழ் பெற்ற ஆண் எழுத்தாளர்கள் பலரால் காலத்துக்குக் காலம் பெண் எழுத்தாளர்கள் எவ்வளவுதூரம் அவர்களது பால் (Gender)  காரணமாகக் கீழத்தரமாக எள்ளி நகையாடப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கட்டுரை உதாரணங்களுடன் வெளிப்படுத்துகிறது.

உதாரணமாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான வி.எஸ்.நைபாலின் பின்வரும் கூற்றுடன் கட்டுரை ஆரம்பமாகின்றது:

•Last Updated on ••Wednesday•, 22 •June• 2016 05:50•• •Read more...•
 

'ழகரம் 5' சிற்றிதழ் சஞ்சிகை வெளியீட்டில் எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் சில நிமிடங்கள்...

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் ...எழுத்தாளர் அ.கந்தசாமி அவர்களின் 'ழகரம்' சஞ்சிகை தனது ஐந்தாவது இதழுடன் மீண்டும் தனது பயணத்தைப்பல வருடங்களுக்குப் பின்னர் ஆரம்பித்திருக்கின்றது. அரங்கு நிறைந்து நடைபெற்ற நிகழ்வில் எழுத்தாளர்கள் பலரையும் (அ.யேசுராசா, ரதன், குரு அரவிந்தன், கற்சுறா, ப.ஶ்ரீகாந்தன், தேவகாந்தன், அருண்மொழிவர்மன், எஸ்.கே.விக்கினேஸ்வரன், கவிஞர் அவ்வை, கவிஞர் சேரன், பி.விக்கினேஸ்வரன், பொன்னையா விவேகானந்தன், தமிழ்நதி, ஞானம் இலம்பேட், கடல்புத்திரன் , சிவகுமார் (கட்டடக்கலைஞர்), கலா ஈஸ்வரன் (கட்டடக்கலைஞர்), திலீப்குமார், என்.கே.மகாலிங்கம் என்று பலரையும் காண முடிந்தது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும், இறுதியிலும் சில நிமிடங்களே எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் உரையாடுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் இயல்பாக, நீண்ட நாள் அறிந்தவர் ஒருவருடன் உரையாடியது போன்ற உணர்வினை அந்தச்சில நிமிடங்கள் தந்தன. நிகழ்வின் பிரதம பேச்சாளராக அவர் விளங்கினார். சஞ்சிகையின் அட்டைப்பட நாயகனாகவும் அவரே விளங்கினார்.

நிகழ்வில் பலர் உரையாற்றினார்கள். ஆரம்பத்தில்,  நிகழ்வினைத் தலைமை தாங்கி நடத்திய கவிஞரும் பேராசிரியருமான சேரன் வரச் சிறிது தாமதமாகி விட்டதால் அந்த இடத்தை எழுத்தாளர் கங்காதரன் நிரப்பினார். பின்னர் சேரன் வந்து பொறுப்பேற்றி நிகழ்வினைச் சிறப்பாக வழி நடத்தினார். பொன்னையா விவேகானந்தன், 'காலம்' செல்வம், உமை, ஞானம் இலம்பேட், என்று நிகழ்வில் உரையாற்றிய பலரும் சிற்றிதழ்கள் பற்றிய தமது எண்ணங்களைப்பகிர்ந்து கொண்டார்கள்.

நிகழ்வின் பிரதம பேச்சாளரான எழுத்தாளர் அ.யேசுராசா சிற்றிதழ்கள் பற்றிய தனது உரையில் தனது இலக்கியச் செயற்பாடுகள் பற்றி ஆரம்பத்திலிருந்து விரிவாகவே பல ஆரம்பகாலத்துச் சிற்றிதழ்கள் பற்றி எடுத்துரைத்து உரையினை நிகழ்த்தினார். எழுத்தாளர் நா.பார்த்தசாரதி எவ்விதம் 'தீபம்' சிற்றிதழினைத் தனித்துத் தொடங்கினார் என்பது பற்றியும், எவ்விதம் இவ்வகையான சிற்றிதழ்கள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன என்பது பற்றியும், இவற்றை பேரார்வத்துடன் வாசித்த தமது அனுபவங்களையெல்லாம் விபரித்தார்.
•Last Updated on ••Monday•, 20 •June• 2016 17:23•• •Read more...•
 

வ.ந.கிரிதரனின் கவிதைகள் இரண்டு!.

•E-mail• •Print• •PDF•

கவிதை: மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ? - வ.ந.கிரிதரன் -

உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?
நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம்
உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று.உண்மையாக
நீ இருக்கின்றாயென்று.
என்னை விட்டுத் தனியாக எப்பொழுதுமே
இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.

•Last Updated on ••Sunday•, 19 •June• 2016 06:33•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 174: செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்';

•E-mail• •Print• •PDF•

செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்'

செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்'செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' நாவல் அவரது முதலாவது நாவல். 'கலைச்செல்வி' நாவல் போட்டியில் பாராட்டுப்பெற்ற நாவல். பின்னர் யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக நூலாக வெளிவந்த நூல். என் மாணவப்பருவத்தில் நான் வாங்கி வைத்திருந்த இலங்கையைச்சேர்ந்த வரலாற்று நாவல்களிலொன்று 'நந்திக்கடல்' . அதனை செங்கை ஆழியானின் தமையனாரான புதுமைலோலனின் 'அன்பு புத்தகசாலை'யில் வாங்கியிருந்தேன். அடுத்த வரலாற்று நாவல் வ.அ.இராசரத்தினத்தின் 'கிரெளஞ்சப்பறவைகள்'. ஒரு ஞாபகத்துக்காக இந்த நந்திக்கடல் நாவலைத் தேடிக்கொண்டிருந்தேன். இந்த நாவல் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பின்னணியாகக் கொண்டு , சங்கிலிகுமாரனை நாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.

ஒருமுறை நூலகம் கோபி நூலகம் பற்றிய பதிவினையிட்டிருந்தபோது அந்நூலைப்பற்றியும் தெரிவித்திருந்தேன். உடனேயே 'நந்திக்கடல்' யாரிடமாவது இருந்தால் நூலகத்துக்குத் தந்து உதவவும் என்று அவர் முகநூலில் அறிவித்திருந்தார். அண்மையில் அவரிடமிருந்து வந்த தகவலில் மகிழ்ச்சிக்குரிய விடமொன்றிருந்தது. அது: 'தற்போது நூலகத்தில் 'நந்திக்கடல்' நூல் வாசிக்கக் கிடைக்கிறது என்பதுதான்.

ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் இன்னும் நூலுருப்பெறாமல் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் படிப்படியாக 'நூலகம்' தளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன ( 'மறுமலர்ச்சி', 'கலைச்செல்வி' இதழ்கள் உட்பட).

இவ்விதமாக 'நூலகம்' தளமானது ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் ஆவணச்சுரங்கமாக உருமாறிக்கொண்டிருக்கின்றது. இலங்கைப்பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையில் கல்வி கற்கும் பட்டப்படிப்பு மாணவர்களை அவர்களை வழி நடாத்தும் பேராசிரியர்கள் 'நூலகம்' போன்ற தளங்களைப்பாவித்து, ஈழத்துத்தமிழ்ப்படைப்பாளிகள் பற்றி, ஈழத்தில் வெளியான தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் பற்றி ஆய்வுகளைச்செய்யத்தூண்ட வேண்டும். அவ்விதம் செய்யப்படும் ஆய்வுகளை நூலாக வெளியிட வேண்டும். அவ்விதம் செய்தால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு மிகுந்த வளம் சேர்த்ததாக அவ்வாய்வுகள் அமையும்.

•Last Updated on ••Saturday•, 18 •June• 2016 18:02•• •Read more...•
 

'குடிவரவாளன்' பற்றி குப்பிழான் சண்முகம்!; கனடாவில் 'தாய்வீடு'!

•E-mail• •Print• •PDF•

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

எழுத்தாளர் குப்பிழான் சண்முகம் அவர்கள் அண்மையில் தனது முகநூல் பதிவொன்றில் எனது 'குடிவரவாளன்' நாவல் பற்றிய தனது கருத்துகளைப்பகிர்ந்திருந்தார். அப்பதிவினை இங்கு நான் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

எழுத்தாளர் குப்பிழான் சண்முகத்தின் குறிப்பு!

மே மாதம் 24, இன்று வ.ந. கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலை வாசித்து முடித்தேன். சட்ட பூர்வமாகக் கனடாவுக்கு புலம் பெயரும் வழியில், எதிர் பாராத விதமாக அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோர நேரிடுகிறது. ஒரு வருடம் அமெரிக்காவில் சட்ட பூர்வமற்ற அகதியாக வாழ்ந்த அனுபவங்களை நாவல் பேசுகிறது. புலம்பெயர் அகதி வாழ்வின் வித்தியாசமான அனுபவங்கள், வித்தியாசமான மனிதர்கள்.

எதனாலும் சலிக்காத கதாநாயகனின் உறுதி. இயற்கைக் காட்சிகளின் இரசிப்பு. தமிழ் கவிதைகளினதும்- குறிப்பாக பாரதி- இசை, இயற்கை மீதான ஈடுபாடு.. என விரியும் கதை. ' மீண்டும் தொடங்கும் 'மிடுக்காய்' தொடரும் வாழ்வு.

•Last Updated on ••Thursday•, 09 •June• 2016 06:20•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 174: போராளிகளின் வீடுகளைக் கையளிக்காத அரச அதிபர்!| மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட நூல்கள் | கடல்புத்திரனின் 'வேலிகள்'!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 174: போராளிகளின் வீடுகளைக் கையளிக்காத அரச அதிபர்!| மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட நூல்கள் | கடல்புத்திரனின் 'வேலிகள்'!1. போராளிகளின் வீடுகளைக் கையளிக்காத அரச அதிபர்! எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மாவின் முகநூற்பதிவு!

எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மா தனது முகநூலில் பின்வருமாறு பதிவொன்றினையிட்டிருந்தார்.

"கிளி நொச்சியில் மு்னனாள் போராளிகளின் வீடுகளை இராணுவம் கையளித்த ஓருமாதமாகியும் அங்கு குடியேறவோ காணியுள் பிரவேசிக்கவோ அரச அதிபர் தடை விதித்துள்ளார். காணியை பார்க்கச் சென்றவர்களை பொலீசை வைத்து மிரட்டி வெளியேற்றியுள்ளனர். அத்தனை குடும்பங்களும் குடும்பத்தலைவரை இழந்த குடும்பங்கள் என்பதும் தனித்து பெண்களும் குழந்தைகளுமே உள்ள குடும்பங்களாகும். பல லட்சம் செலவளித்து கட்டிய வீடுகள் இவை என்பதுடன் ஆதரவற்ற நிலையில் இவர்கள் அல்லல் படுகிறார்கள் என்பதும் உண்மை ஒவ்வொரு காரியாலயங்களாக இழுத்தடிக்கப்பட்டு அலைக்களிந்தாலும் காணிகளை தர மறுக்கிறார்கள். இக்காணிகளை யாராவது ஆட்டையப் போட நினைக்கிறாங்களா? சாக்குப்போக்குகள் சந்தேகமாகத்தான் உள்ளன...இச் செய்தியை ஊடகங்களும் ஏனைய வலைத்தளங்களும் பகிர்ந்து கொள்வதன்மூலம் அநாதரவான பெண்களுக்கு உதவமுடியும் நண்பா்களே"

உதவிதான் செய்யவில்லை. உபத்திரவமாவது செய்யாமலிருக்கலாம். பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்த கதைதான். முன்னாள் போராளிகள் அனைவரின் நல்வாழ்வுக்காகத்தானே போராடினார்கள். எல்லாவற்றையும் இழந்து, எல்லாவற்றையும் துறந்து போராடினார்கள். யுத்தம் மெளனிக்கப்பட்டு அவர்கள் அநாதரவாகவிடப்பட்டபோது சமூகம் அவர்களைப்புறக்கணிக்கிறது. இது வருந்தத்தக்கது.

•Last Updated on ••Friday•, 27 •May• 2016 06:01•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 173 : பால்ய காலத்து நண்பர்களும், முகநூலும்!

•E-mail• •Print• •PDF•

ஆர்.விக்கினேஸ்வரன்ஆர்.விக்கினேஸ்வரன்முகநூல் செய்துள்ள பல நன்மைகளிலொன்றாக என் வாழ்வில் சந்திக்கவே சந்தர்ப்பங்கள் அரிதாகவிருந்த என் பால்ய காலத்து நண்பர்கள் சிலருடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தித்தந்ததைக் குறிப்பிடுவேன். குறிப்பாக சண்முகராஜா , திருநாவுக்கரசு, சிவகுமார், விக்கினேஸ்வரன் மற்றும் ராஜரட்னம் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களில் முதல் மூவரும் ஏழாம் வகுப்பு வரையில் வவுனியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர்கள். மற்றவர் ராஜரட்னம் யாழ் இந்துக்கல்லூரியில் 9, 10ஆம் வகுப்புகளில் படித்தவர்.

விக்கினேஸ்வரன் தற்போது திருநெல்வேலி (தமிழகம்) நகரில் வசிக்கிறார். புகைப்படக்கலைஞரான இவர் அங்கு புகைப்பட ஸ்டுடியோ நடாத்தி வருகின்றார். அண்மையில் முகநூல் மூலம் மீண்டும் என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்திய விக்கினேஸ்வரன் (முகநூலில் Srirham Vignesh என்னும் பெயரில் அறியப்படுபவர்) தனது முகநூல் பக்கத்தில் தன்னைப்பற்றிய அறிமுகத்தைபகிர்ந்திருக்கின்றார்.

அந்த அறிமுகத்தின் மூலம் இவர் எழுத்துத்துறையிலும் ஈடுபட்டு வருவதை அறிந்தேன். மகிழ்ச்சி தருவது. அந்த அறிமுகக்குறிப்பின் இறுதியில் இவர் கூறிய விடயம் என்னை ஆச்சரியபட வைத்ததுடன் மகிழ்ச்சியையும் தந்தது. அந்த அறிமுகக் குறிப்பின் இறுதியில் இவர் குறிப்பிட்டிருந்தது இதுதான்:

"எனது இலக்கியத்துறை ஆர்வத்துக்கு அடிப்படைக் காரணமாயிருந்தவர்  வவுனியா மகா வித்தியாலயத்தில் 3 - 6ம் வகுப்புவரை என்னோடு படித்த சக மாணவர் ஒருவர்தான்.அவர் 4ம் வகுப்பு படிக்கும்போதே கவிதை,கதை என எழுத ஆரம்பித்துவிட்டார். அதுபோல எழுதவேண்டும் என எழுந்த ஆர்வம் நிறைவேறியது, நான் 11ம் வகுப்பு (+1) படிக்கும்போதுதான். அந்த மாணவர் வேறு யாருமல்ல....கனடாவிலிருந்து வெளிவரும், பிரபல இலக்கிய (இணைய) இதழான ''பதிவுகள்'' இதழின் ஆசிரியர் ''கிரி'' (Navratnam Giritharan) அவர்கள்தான். சமீபத்தில்தான் அவருடைய தொடர்பு (முக நூலில்) கிடைத்தது."

•Last Updated on ••Friday•, 27 •May• 2016 06:02•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 172 :இரும்புப்பெண்மணி இரோம் சானு சர்மிளா! | தமிழகமும், திராவிடக்கட்சிகளும், மூன்றாவது அணியினரும்.. | 'டொராண்டோவில் மகிந்த ராஜபக்சவும், முள்ளிவாய்க்காலும்'

•E-mail• •Print• •PDF•

1. இரும்புப்பெண்மணி இரோம் சானு சர்மிளா!

இரும்புப்பெண்மணி இரோம் சானு சர்மிளா!நாம் வாழும் இக்காலகட்டத்தில் வாழும் மானுட உரிமைப்போராளியான இரோம் சானு சர்மிளாவின் உண்ணாவிரதப்போராட்டம் மனித உரிமைகளுக்காகப்போராடும் அனைவரும் அறிந்திருக்க வேண்டியதொன்று.  2.11.2000ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து வருகின்றார் இரோம் சானு சர்மிளா.

2.11.2000 அன்று மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கிலுள்ள மலோம் என்னும் ஊரில் இந்தியப்படைத்துறையின் துணைப்படையான 'அசாம் ரைபிள்சி'னால் பத்துப் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை எதிர்த்து இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்ட் இரோம் சானு சர்மிளா. இன்றுவரை தன் முடிவில் எந்தவிதத் தளர்வுமில்லாமல் இருந்து வருகின்றார்.

இவரைப்பற்றி இரா.கலைச்செல்வன் அண்மைய விகடனொன்றில் நல்லதொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அதிலவர் எவ்விதம் அவரை அவரிருக்கும் மருத்துவ மனையில் சந்தித்தது என்பது பற்றியும், இரோம் சானு சர்மிளாவின் தனிப்பட்ட அந்தரங்கள் உணர்வுகள் பற்றியும் (காதல் போன்ற) அவர் எழுதியிருக்கின்றார். அவரது காதல் (இன்னொரு தேசத்தைச் சேர்ந்த ஒருவருடான) காரணமாகப் பல எதிர்ப்புகளை அவர் சந்தித்திருக்கின்றார். அவர் யாருக்காகப் போராடுகின்றாரோ அந்த மக்களில் பலருக்கே அவரது போராட்டம் பற்றித் தெரியாமலிருக்கின்றது. ஆனால் இவற்றாலெல்லாம் மனம் சோர்ந்து விடாமல், தன் கொள்கைகளுக்கேற்பத் தன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகின்றார் இரோம் சானு சர்மிளா.

இவருக்கு வலுக்கட்டாயமாக, மூக்கு குழாய் வழியே உணவு வழங்கப்படுகின்றது. ஆனாலும் இவரது உடலுறுப்புகள் இவரது தொடர்ச்சியான உண்ணாவிரதப்போராட்டம் காரணமாகப் பழுதடைந்து போய் விட்டன. மாதவிடாய் கூட இதன் காரணமாக நின்று போய் விட்டது.      

போராளி எனச்சந்தேகிக்கப்படும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்க உதவும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 (AFSPA) மீளப்பெற வேண்டுமென்பதே இவரது முக்கியமான கோரிக்கை.

•Last Updated on ••Tuesday•, 24 •May• 2016 18:29•• •Read more...•
 

கவிதை 1: முள்ளிவாய்க்கால்! (* மே 18 நினைவுக்கவிதை.)

•E-mail• •Print• •PDF•

கவிதை: முள்ளிவாய்க்கால் நினைவுக்கவிதை - வ.ந.கிரிதரன்

முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
மானுடத்தின் கோர முகத்தை
மானுடத்தின் தீராச்சோகத்தினை
வெளிப்படுத்துமொரு நினைவுச் சின்னம்.

முள்ளிவாய்க்காலில் தர்மம்
அன்று.
தலை காத்திருக்கவில்லை.
தலை குனிந்திருந்தது.

அதர்மத்தின் கோலோச்சுதலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?

•Last Updated on ••Tuesday•, 17 •May• 2016 05:10•• •Read more...•
 

நனவிடை தோய்தல்: குருமண்காட்டு நினைவுகள் (1)

•E-mail• •Print• •PDF•

குருமண்காட்டுப்பாதையும், மன்னார் றோட்டும் சந்திக்கும் இடத்தில் தற்போது காளி கோயிலுள்ளது.அண்மையில் கூகுள் நிலவரைபட வீதித்தோற்றம் மூலம் பார்த்தபொழுதுதான் காலம் எவ்வளவு விரைவாக மாறுதல்களுடன் ஓடி விட்டது என்பது புலப்பட்டது. என் பால்ய காலத்தில் பதிந்து கிடக்கும் குருமண்காட்டுப் பிரதேசத்தின் இன்றைய நிலையைப்பார்த்தபொழுது அடையாளமே காணமுடியாத வகையில் அப்பிரதேசம் மாறிக்கிடப்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. அதற்கு முக்கிய காரணங்களிலொன்றாக இலங்கையில் நடைபெற்ற யுத்தமும், அக்காலகட்டத்தில் வவுனியாப்பகுதி அடைந்திருந்த முக்கியத்துவமும்தாம் என்று நினைக்கின்றேன். வடக்குக்கும் தெற்குக்குமிடையில் அனைவரும் வந்து செல்லக்கூடிய முக்கிய நகராக வவுனியா உருமாறியிருந்ததால், யுத்தம் நடைபெற்ற பகுதிகளிலிருந்தெல்லாம குடிபெயர்ந்த மக்களால் நகர் நிறைந்து விட்டதுடன், மாற்றங்கள் பலவற்றையும் அடைந்து விட்டதெனலாம்.

ஆனால் இன்னும் என் நெஞ்சில் படம் விரித்திருப்பது என் பால்ய காலத்த்துக் குருமண்காடுதான். அந்தக் காலத்துக் குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த எங்கள் வாழ்வு பற்றி, அங்கு வாழ்ந்த மனிதர்களைப்பற்றி நினைவில் பதிந்து கிடப்பதையெல்லாம் எழுத்தில் பதிவு செய்தாலென்ன என்றொரு எண்ணம் அண்மைக்காலமாகவே அடிக்கடி தோன்றி மறைகிறது.

என்னைப்பொறுத்தவரையில் குருமண்காடு என்பது என் பால்ய பருவத்தின் சொர்க்க பூமி. ஒரு காலகட்டத்தினை வெளிப்படுத்தும் குறியீடு. மறக்க முடியாத அந்த அனுபவங்களுக்குச் சொந்தமான அந்தப்பிரதேசம் இன்று முற்றாக மாறி விட்டது. நாம் வாழ்ந்ததை வெளிப்படுத்தும் எந்தவித அடையாளங்களுமேயற்ற புதியதொரு நகராக, குடியிருப்புகளுடன், வர்த்தக நிலையங்களுடன், வீதிகளுடன் புதிய பிறப்பெடுத்து நிற்கிறது.

இந்நிலையில் என் மனதில் அழியாத சித்திரமாக விரிந்து கிடக்கும் குருமண்காடு பற்றிய நினைவுகளைப் பதிவு செய்தல் அவசியமென்று நினைக்கின்றேன். இந்தப்பகுதி பற்றியதொரு ஆவணமாகவும் இந்த நனவிடை தோய்தல் விளங்குமென்பதால் இத்தகைய பதிவுகள் அவசியமேயென்றும் தோன்றுகிறது.

குருமண்காட்டு அனுபவங்களை மையமாக வைத்து ஏற்கனவே ஒரு நாவல் எழுதியிருக்கின்றேன். அது 'வன்னி மண்'. 'தாயகம் (கனடா)' சஞ்சிகையில் தொடராக வெளியாகி, தமிழகத்தில் குமரன் பப்ளீஷர்ஸ் மூலம் வெளிவந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலுள்ள நாவல்களிலொன்று.

நாங்கள் இருந்த காலகட்டத்தில் குருமண் காடு ஒற்றையடிப்பாதையுடன் கூடிய காட்டுப்பிரதேசம்.

நாங்கள் அப்பகுதிக்குக் குடி பெயர்ந்தபோது மொத்தம் இருந்த மானிடக் குடியிருப்புகள் ஒன்பதுதான்.
•Last Updated on ••Monday•, 16 •May• 2016 03:31•• •Read more...•
 

இலங்கையில் நடைபெறவுள்ள வ.ந.கிரிதரனின், (தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள) 'குடிவரவாளன்' நாவலின் வெளியீட்டு நிகழ்வு பற்றி...

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'இலங்கையில் வ.ந.கிரிதரனின், தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள  'குடிவரவாளன்' நாவலின்  வெளியீட்டு நிகழ்வு பற்றி...

நண்பர்கள் மற்றும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் வணக்கம். எதிர்வரும் 15.05.2016 , ஞாயிற்றுக்கிழமை அன்று  மாலை 3.30 மணிக்கு, ஞானாலயம், பருத்தித்துறை என்னும் முகவரியில் என்னுடைய நாவலான 'குடிவரவாளன்' நாவலின் வெளியீடும், கருத்தரங்கும் நடைபெறவுள்ளன.

எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில், எழுத்தாளர் அறிமுகவுரையினை சு.குணேஸ்வரனும்,  அவரைத்தொடர்ந்து நூல் மதிப்பீட்டு உரைகளை திரு.ஜி.ரி. கேதாரநாதன் ,  வேல். நந்தகுமார் ஆகியோரும் ஆற்றுவார்கள். நிகழ்வின் முடிவில் நன்றியுரையினை சித்திராதரன் ஆற்றுவார்.

அதற்கான அழைப்பிதழினை இத்துடன் இணைத்துள்ளேன். கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரினதும் ஆக்கபூர்வமான பங்களிப்பில் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்ததற்காக 'உயில் & சித்தம்' குழுவினருக்கும், எழுத்தாளர் சு.குணேஸ்வரனுக்கும், மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் எழுத்தாளர்கள் குப்பிளான் ஐ.சண்முகன், ஜி.ரி.கேதாரிநாதன், வேல்.நந்தகுமார் மற்றும் சித்திராதரன் ஆகியோருக்கும் நன்றி! நன்றி! நன்றி!

இந்நிகழ்வில் நூல் விற்பனையில் கிடைக்கப்பெறும் பணம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விச்செலவுக்கு வழங்கப்படும்.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் கலை, இலக்கிய ஆர்வலர்கள்  அனைவருக்கும் நன்றி!


'குடிவரவாளன்' நாவலின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகள் இலங்கையிலும் விற்பனைக்குள்ளன. நூலின் பிரதிகளை வாங்க விரும்புபவர்கள் எழுத்தாளர் குணேஸ்வரன் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். அவருடைய அலைபேசி இலக்கம்: +94776120049

கனடா நண்பர்கள் கவனத்துக்கு: இந்நாவலை வாங்க விரும்பும் நண்பர்கள் முகநூலின் தகவல் பெட்டி மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். எனது மின்னஞ்சல் முகவரி: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

தமிழகம் மற்றும் ஏனைய நாடுகளில் வசிக்கும் , நூலினை வாங்க விரும்பும் நண்பர்கள் ஓவியா பதிப்பகத்தாருடன் தொடர்பு கொள்ளுங்கள். அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள் வருமாறு:

வதிலைப்பிரபா: Oviya Pathippagam, 17-16-5A, K.K.Nagar, Batlagundua - 642 202 Tamil Nadu, India. Phone: 04543 - 26 26 86 | Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52. email: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• | •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Tuesday•, 10 •May• 2016 04:35•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 171: திருமதி லக்சுமி ஹோல்ம்ஸ்ரோமின் மறைவுச்செய்தியும், சில நினைவுகளும்! | அன்னையர் தினப்பதிவொன்று.......

•E-mail• •Print• •PDF•

- வாசித்தவை, யோசித்தவை மற்றும் வாசித்து யோசித்தவை ஆகியவற்றின் பதிவுகளிவை. -

திருமதி லக்சுமி ஹோல்ம்ஸ்ரோம்தமிழ்ப்படைப்புகள் பலவற்றை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்ப்புச்செய்து , தமிழ் இலக்கியத்தை உலகளாவியரீதியில் அறிமுகப்படுத்தும் பணியினைச்செய்த திருமதி லக்சுமி ஹோல்ம்ஸ்ரோம் தனது எண்பதாவது வயதில் இலண்டனில் மறைந்ததாகச்செய்திகள் தெரிவிக்கின்றன. இவரது இழப்பு முக்கியமானதோரிழப்பு. ஆனால் தனது மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழ் இலக்கிய உலகத்துக்கு ஆற்றிய இவரது சேவையினைத்தமிழ் இலக்கிய உலகம் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரும். அதே சமயம் இவரது மறைவு பற்றிய செய்தி சில நினைவுகளை மீண்டும் அசை போட வைத்து விட்டது.

தமிழ் இலக்கியத்தோட்டம் வருடா வருடம் வழங்கும் இயல் விருதான  2007ற்குரிய வாழ்நாள் சாதனையாளர் விருது மொழிபெயர்ப்பாளரான திருமதி லக்சுமி ஹோல்ம்ஸ்ரோமுக்குக் கிடைத்தது. அந்த வருடத்துக்குரிய சாதனையாளரைத்தேர்வு செய்யும் தெரிவுக்குழுவில் ஒருவராக நானுமிருந்தேன். ஏனையவர்களாக  பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதி, கவிஞரும், எழுத்தாளருமான மு. பொன்னம்பலம் ஆகியோரிருந்தனர்.

நான் இவரைத்தெரிவு செய்திருந்ததற்கு முக்கிய காரணம் இவரது மொழிபெயர்ப்புச்சேவைதான்.  இன்றைய உலகில் சுமார் எண்பது மில்லியன் தமிழர்கள் பூமிப்பந்தெங்கும் சிதறி வாழ்ந்திருந்தும் உலக இலக்கிய அளவில் தமிழ் இலக்கியத்தின் முக்கியத்துவம் இன்னும் பூரணமாக அறியப்படவில்லை. இந்நிலையில் தமிழ்ப் படைப்புகளை ஆங்கில மொழி மாற்றம் செய்து, அதன் மூலம் தமிழ் இலக்கியத்தின், மொழியின் பங்களிப்பை உலக இலக்கிய அரங்கில் நிறுவும் வேலையினைத் தனியொருவராக நின்று இவர் ஆற்றிவந்ததற்காகவும்,  தமிழ் இலக்கியத்தின் பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளை, நவீனப் படைப்புகளை, தமிழின் நவீன நாடக முயற்சிகளை, பெண்ணியம் மற்றும் தலித் இலக்கியப் படைப்புகளையெல்லாம் ஒரு பரந்த அளவில் மொழிபெயர்த்ததன் மூலம் தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்தை ஒரு பரந்த அளவில் சர்வதேசமயப்படுத்தியதன் மூலம் இவர் ஆற்றியுள்ள பங்குக்காகவும் இவரது மொழிபெயர்ப்புப்பணி என்னைப்பொறுத்தவரையில் முக்கியமாகப்பட்டது.

•Last Updated on ••Tuesday•, 10 •May• 2016 04:47•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 170 : யாழ் இந்துக்கல்லூரி வருடாந்த இராப்போசன இரவினில்....

•E-mail• •Print• •PDF•

- வாசித்தவை, யோசித்தவை மற்றும் வாசித்து யோசித்தவை ஆகியவற்றின் பதிவுகளிவை. -

யாழ் இந்துக்கல்லூரிச்சங்க வருடாந்த இராப்போசன நிகழ்வினில்..

நேற்று நடைபெற்ற யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தினரின் வருடாந்த இராப்போசன இரவு  'ஸ்கார்பரோ கொன்வென்சன் சென்ட'ரில் நடைபெற்றது. வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளைத்தவிர்ப்பவன் நான். ஆனால் இம்முறை நண்பர்கள் பிறேமச்சந்திரா, கனகவரதா ஆகியோர் கூடுதலாக யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தில் இணைந்து செயற்பட்டதாலும், நண்பர் கீதானந்தசிவமும் செல்வதற்கு ஆவலுடன் இருந்ததாலும் செல்வதற்கு முடிவெடுத்தேன்.

பாடசாலைக்காலத்து நண்பர்கள் பலரைச் சந்திக்கலாம், எமக்குக்கற்பித்த ஆசிரியர்கள் பலரைச்சந்திக்கலாம் என்பதாலும் செல்வது நல்லதே என்று தோன்றியது.

கூடவே நண்பர் கனகவரதாவின் பரிந்துரையின் பேரில் ஈழத்துத்தமிழ்த்துள்ளிசைப்பாடகரான அமுதன் அண்ணாமலையின் இசைக்கச்சேரியும் நடைபெற ஏற்பாடாகியிருந்ததால், அவரது பாடல்களையும் நேரில் மீண்டுமொருமுறை கேட்டு மகிழலாம் என்ற எண்ணமும் மேற்படி நிகழ்வில் கலந்துகொள்ளும் ஆவலைத்தூண்டியது.

கனடாத்தேசிய கீதம், கல்லூரிக்கீதம் மற்று, தமிழ்த்தாய் வணக்கம் ஆகியவற்றை முறையே செல்வி வைசாலி கிருஷ்ணானந்தன், கலாநிதி மைதிலி தயாநிதி மற்றும் சிவை சுபதரன் ஆகியோர் பாடி நிகழ்வினைத்தொடக்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் தம்மைப்பலிகொடுத்த போராளிகள் அனைவருக்கும், பொதுமக்கள் அனைவருக்கும் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. வரவேற்புரையினை திரு. ரவீந்திரா கந்தசாமி நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து வரவேற்பு நடன நிகழ்வு நடைபெற்றது.  தொடர்ந்து சங்கத்தலைவர் திரு. மோகன் சுந்தரமோகனின் தலைமையுரையும், அதனைத்தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட திரு.பிரபா சந்திரனின் உரை நிகழ்ந்தது.  இவர் அமெரிக்க மத்திய அரசின் பாதுகாப்புத்திணைக்களத்தில் பணிபுரிகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

•Last Updated on ••Monday•, 02 •May• 2016 21:19•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 169: நாவல் 'குடிவரவாளன்' பற்றிய வாசிப்பனுவமும், புலம் பெயர் அனுபவங்களும்...

•E-mail• •Print• •PDF•

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

நேற்று நண்பர் எல்லாளன் தொலைபேசியில் அழைத்தார். அழைத்தவர் வழமைக்கு மாறாக நீண்ட நேரம் உரையாடினார். எதனைப்பற்றியென்று நினைக்கின்றீர்கள்? எல்லாம் அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்திருந்த என் நாவலான 'குடிவரவாளன்' பற்றித்தான்.
நாவலை வாசித்தபொழுது தன் நெஞ்சினைத்தொட்டு விட்டதாகக் கூறினார். தன் கடந்த கால வாழ்க்கை அனுபவங்களை மீண்டும் அசை போட வைத்துவிட்டதென்றார். இந்த நாவல் புலம் பெயர்ந்த தமிழர்களில் முதலாம் தலைமுறையினர் பலரும் அனுபவங்களை விபரிப்பதால் பலருக்குத் தம் வாழ்வின் அனுபவங்களை நிச்சயமாக நினைவூட்டியிருக்கும்.

மேலும் தனது அனுபவங்கள் பலவற்றை விபரித்தார். 'காலம்' செல்வம் 'தாய் வீடு' பத்திரிகையில் இது போன்று தன் அனுபவங்களை எழுதியிருக்கின்றார் என்று நினைவு கூர்ந்தார். ஆனால் அவரது அபுனைவு. இது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட புனைவு. அதுதான் வித்தியாசம்.

அவர் அப்பொழுது பகிர்ந்துகொண்ட அவரது அனுபவங்களில் ஒன்றினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். ஒருமுறை அவர் வன்கூவரில் வேலை தேடி மோட்டேல்கள் (Motel) ஏறி இறங்கியிருக்கின்றார். சென்ற இடங்களிலெல்லாம் மோட்டேல்களில் Vacancy என்ற அறிவிப்பு இருப்பதைக்கண்டு அவ்விதம் அறிவிப்புக்காணப்படும் இடங்களிலெல்லாம் வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றார். ஆனால் ஓரிடத்திலும் வேலை கிடைக்கவில்லை. இவருக்கு ஒரே ஆச்சரியம் : 'என்ன இது எல்லா இடத்திலும் 'வேகன்ஸி'யென்று அறிவித்திருக்கின்றார்களே. ஆனால் ஓரிடத்திலும் வேலை இல்லையென்று கூறுகின்றார்களே' என்று. எப்பொழுதுமே பத்திரிகைகளில் வேலைக்கான 'வேகன்ஸி' விளம்பரங்களைப்பார்த்துப்பார்த்து 'வேகன்ஸி' என்றதும் மனது தவறுதலாக மோட்டேல்களில் அறைகளுக்கான 'வேகன்ஸி' அறிவிப்பை வேலைக்கானதாக எண்ணிவிட்டது.

புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் புகலிடத்தமிழர்களின் இழந்த ஊர் நினைவுகள் பற்றிய கழிவிரக்கம், புதிய இடத்தில் காணப்படும் நிறவேற்றுமை போன்ற மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை எழுதுவதில் மட்டும்தான் கவனம் செலுத்துகின்றார்கள். ஆனால் இவ்விதமான அனுபவங்களும் புகலிடத்தமிழர்களின் அனுபவங்களே.

Bum / Bomb ( வீதி வழியே, பிச்சையெடுத்துக்கொண்டு அலைந்து திரிபவர்களையும் Bum என்று கூறுவது மேற்கு நாடுகளில் வழக்கம்.) இரண்டு சொற்களும் கேட்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால் தமிழ் பாதுகாவல் அதிகாரியொருவர் அடைந்த அனுபவத்தை 'புலம் பெயர்தல்' என்னும் என் சிறுகதையொன்றில் விபரித்திருக்கின்றேன். வாடிக்கையாளர்களொருவர் இரண்டாம் தளத்தில் Bum இருப்பதாகக் கூறியதைக்கேட்ட அந்த அதிகாரி Bomb இருப்பதாகக்கருதி அடையும் பதற்றத்தை விபரிக்கும் கதை அது. இது போன்ற புகலிட அனுபவங்கள் பல சிரிப்பை வரவழைக்கும்.

•Last Updated on ••Monday•, 18 •April• 2016 00:14•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 168: 'தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி' சின்னத்தம்பி சண்முகநாதன் நினைவாக.....

•E-mail• •Print• •PDF•

நெடுந்தீவு சண்முகநாதன்இன்று தோழர் சின்னத்தம்பி சண்முகநாதன் அவர்களின் இறுதி அஞ்சலிக்காக எழுத்தாளர் தேவகாந்தனுடன் சென்றிருந்தேன். தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் ஆரம்பகர்த்தாக்களில் முக்கியமான ஒருவர் சண்முகநாதன். இவரை நான் ஒருமுறை 81.82 காலகட்டத்தில் சந்தித்திருந்த விடயத்தை இன்றுதான் உணர்ந்தேன். அவருக்கு அஞ்சலி செய்வதற்காக வந்திருந்த வந்திருந்த 'ஜான் மாஸ்ட்டர்' பழைய நிகழ்வொன்றினை நினைவு படுத்தியபோதுதான் அதனை உணர்ந்தேன். ஒருமுறை 81/82 காலகட்டத்தில் வவுனியா இறம்பைக்குளத்தில் அமைந்திருந்த அநாதைகள் இல்லத்தில் நடைபெற்ற, காந்தியம் அமைப்பினால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த   'தமீழீழ விடுதலை' பற்றிய மூன்று நாள் கருத்தரங்கில் பல்வேறு  அமைப்புகளைச்சேர்ந்த பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அந்நிகழ்வில் சண்முகநாதனும் கலந்து கொண்டிருந்தார். அந்த ஒரு நிகழ்வில் மட்டும்தான் அவரைச்சந்தித்திருக்கின்றேன். நீண்ட நேரம் அவருடன் உரையாடியுமிருக்கின்றேன். அதன் பின்னர் அவர் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் கோப்பொன்றினை (ரோனியோப் பிரதி) எனது கொழும்பு முகவரிக்கு அனுப்பியிருந்தார். அது பற்றி 'தாயகம்' (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் கட்டுரையொன்றினை 'நாவலர் பண்ணை நினைவுகள்' என்று எழுதியிருந்தேன். பின்னர் அதனைப் 'பதிவுகள்' இணைய இதழிலும் மீள்பிரசுரம் செய்திருந்தேன். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கும்"

"அந்தக் கருத்தரங்கில் 'தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி' என்று தன்னை அறிமுகப்படுத்திய நெடுந்தீவைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவரை சந்தித்ததும் நினைவிற்கு வருகின்றது. பின்னர் இவர் 'றோனியோ' பிரதியாக தமது கட்சியின் கொள்கைப்பிரகடன அறிக்கையினைத் தபால் மூலம் கொழும்பு முகவரிக்கு அனுப்பியிருந்தார்.." (பதிவுகள், 'நாவலர் பண்ணை நினைவுகள்' - 24 ஏப்ரில் 2012).

ஆரம்பத்தில் அவரது பெயர் உடனடியாக ஞாபகம் வர மறுத்தது. நெடுந்தீவு ராமநாதன் என்று எண்ணியிருந்தேன். பின்னர்தான் 'நெடுந்தீவு சண்முகநாதன்' என்பது ஞாபகத்துக்கு வந்தது. ஆனால் 'தேடகம்' நிகழ்வுகளில் அவ்வப்போது கண்டிருக்கும் சின்னத்தம்பி சண்முகநாதன்தான் அவர் என்பது இன்றுவரை தெரியாமலே இருந்தது இன்று ஜான் மாஸ்ட்டர் நினைவுபடுத்தும்வரை.

•Last Updated on ••Sunday•, 17 •April• 2016 05:09•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 167: தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்..' பற்றிய குறிப்புகள்!

•E-mail• •Print• •PDF•

தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி1. தவளைப்பாய்ச்சல்'

தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்.' அதில் கூறப்பட்டுள்ள சுய விமர்சனங்களுக்காக அந்நூலினை எதிர்ப்பவர்களால் கடுமையாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் அந்நூல் விமர்சனங்களுடன் பல தகவல்களையும் ஆவணப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப்புலிகளின் பல வெற்றிகரமான தாக்குதல்களை, அவை வெற்றிகரமானவையாக அமைவதற்காகப்போராளிகள் செய்த பயிற்சிகள், கொடுத்த விலைகள் ,இவற்றைப்பற்றியெல்லாம் விரிவாகவே விபரிக்கின்றது நூல். தமிழினியின் எழுத்தாளுமை நூலுக்கு மேலும் இலக்கியச்சிறப்பினை அளிக்கின்றது. யுத்தங்களை விபரிக்கையில் ஏற்படும் சக தோழிகளின் இழப்புகள் நெஞ்சைத்தொடும் வகையில் நூலில் விபரிக்கப்பட்டுள்ளன. போதிய உணவின்றி, போதிய ஆடைகளற்று பல சிரமங்களுக்குள்ளான நிலையிலும், தமது இலட்சியத்துக்காகப்  போராடும் அவர்களது நடவடிக்கைகள், உணர்வுகள் ஆகியனவும் நூலில் விரிவாகவே விபரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நூலின் ஆவணச்சிறப்பு அதிகரிக்கின்றது.

நூலில் பூநகரி முகாம் மீதான 'தவளைப்பாய்ச்சல்' பற்றி விரிவாகவே விபரிக்கப்பட்டுள்ளது. அதற்காகப் போராளிகள் சுமார் ஒரு வருடமாக எடுத்த பயிற்சி பற்றியெல்லாம் விபரிக்கப்பட்டுள்ளது. பூநகரிச்சமர் பற்றி நூலிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகின்றேன்:

"1993 இறுதிப் பகுதியில் அச்சுவேலிப்பகுதியில் வல்லை வெளியோடு சேர்ந்திருந்த கடல் நீரேரியில் ஒரு மாதிரி இராணுவ தளம் அமைக்கப்பட்டு எமது அணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அது எந்த இராணுவத்தளத்தின் மாதிரி வடிவம் என்பது அபோது தான் எங்களுக்குப் புரிந்தது. நான் முதன் முதலாகப் பங்கெடுத்த தாக்குதல் பூநகரி இராணுவ முகாம் மீதானதாகும்." (பக்கம் 55; இலங்கைப்பதிப்பு)

" இத்தாக்குதல் நடவடிக்கைக்காக  விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு வருடத்திற்கும் மேலான தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்தது.. வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலிருந்து தாக்குதல் பயிற்சி பெற்ற  ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளைக்கொண்ட  தாக்குதலணிகள்  இந்தச் சமரில்  ஈடுபடுத்தப்பட்டன." (பக்கம் 56)

இந்தச் சமருக்குத் 'தவளைப்பாய்ச்சல்' என்று விடுதலைப்புலிகள் பெயர் வைத்திருக்கின்றார்கள். அவ்விதமான பெயரை அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணம் சுவாரசியமானது. அது பற்றித் தமிழினி பின்வருமாறு விபரிப்பார்:

"புலிகளின் தாக்குதல் வரலாற்றிலேயே முதல் தடவையாக ஒரு இராணுவ- கடற்படைக்கூட்டுப் படைத்தளம் மீது நடாத்தப்பட்ட ஈரூடகத் தாக்குதல் இதுவாகும். இதனால் இந்நடவடிக்கைக்கு 'ஒப்பரேசன் தவளை' என இயக்கம் பெயர் சூட்டியிருந்தது." (பக்கம் 56)

தவளையானது நீரிலும், நிலத்திலும் வாழும் வல்லமை மிக்கது. மேற்படி தாக்குதலும் நீரிலும், நிலத்திலுமுள்ள படைகள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல். விடுதலைப்புலிகள் நீரிலும், நிலத்திலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடாத்தும் வல்லமை மிக்கவர்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட பெயர்தான் 'தவளைப்பாய்ச்சல்'.

•Last Updated on ••Sunday•, 17 •April• 2016 05:00•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 166: முனைவர் தாரணியும், புகலிடத்தமிழ் இலக்கியமும்...

•E-mail• •Print• •PDF•

Dr. R. Dharaniமுனைவர் ஆர் .தாரணி (Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D) அவர்களை எனக்குக் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத்தெரியும். இணையம் மூலம் அறிமுகமான இலக்கியவாதிகள், கல்வியாளர்களில் இவரும் முக்கியமான ஒருவர். இவரை நான் முதலில் அறிந்துகொண்டதே சுவாரசியமானதோர் அனுபவம். இணையத்தின் முக்கியமான பயன்களை எனக்கு உணர்த்திய அனுபவம் அது. அப்பொழுது நான் இணையத்தில் எனக்கொரு பக்கத்தை வைத்திருந்தேன். அதில் என் சிறுகதைகள் மற்றும் ஏனைய ஆக்கங்கள் பலவற்றைப் பதிவு செய்திருந்தேன். அக்காலகட்டத்தில் மான்ரியாலிலுள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் இணைந்து கனடிய எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றி , கனடிய அரசின் நிதி உதவியுடன் Bibliography of Comparative Studies in Canadian, Québec and Foreign Literatures!' என்னும் தலைப்பில் ஆய்வுத்திட்டமொன்றிலீடுபட்டுக்கொண்டிருந்தன. அதற்காக அவர்கள் கனடிய எழுத்தாளர்களின் விபரங்கள் அடங்கிய இணையத்தளப்பக்கமொன்றினை ஏற்படுத்தியிருந்தார்கள். அதில் கனடாவில் வாழும் பல்லின எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள், அவர்கள்தம் இணையத்தளங்கள் மற்றும் அவ்விணையத்தளங்களுக்கான இணைப்புகள் என அப்பக்கத்தில் தகவல்களைப்பதிவு செய்திருந்தார்கள். (இந்தத்தளம் இப்பொழுது இயங்குவதில்லை.)

அக்காலகட்டத்தில்  புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுக்கட்டுரையொன்றினை எழுதுவதற்காக, அது பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தார் முனைவர் தாரணி. அவர் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் பற்றியே அச்சமயம் இணையத்தில் தேடிக்கொண்டிருந்ததாகப்பின்னர் என்னுடன் தொடர்பு கொள்ளும்போது தெரிவித்திருந்தார். அச்சமயம் அவரது கண்களில் மான்ரியால் பல்கலைக்கழகம் மேற்பார்வையில் இயங்கிக்கொண்டிருந்த கனடிய எழுத்தாளர்கள் பற்றிய இணையத்தளமும், அதிலிருந்த என் பக்கத்துக்கான இணைப்பும் பட்டிருக்கின்றது. என் பக்கத்திலிருந்த புகலிட வாழ்வினை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்த கதைகளை, சிறு நாவலான 'அமெரிக்கா' ஆகியவற்றை வாசித்திருக்கின்றார்.அவற்றை வாசித்ததும் என் கதைகளையே மையமாக வைத்துத் தான் எழுதவிருந்த புகலிட ஆய்வுக்கட்டுரையினை எழுதுவதாகத்தீர்மானித்து என்னுடன் தொடர்புகொண்டிருந்தார். அப்பொழுது அவர் எழுதிய என் படைப்புகளைப்பற்றிய ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு "‘Seeking the invisible Humanness in an Alien Land' :  A review of the Diasporic issues as revealed through the selected Short stories of V.N. Giridharan" . இவ்வாய்வுக் கட்டுரையினைத் தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்கொன்றில் சமர்ப்பித்திருந்தார்.

•Last Updated on ••Monday•, 11 •April• 2016 06:38•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 165: ஹைக்கூக் கவிதைகள் பற்றியதொரு 'ஹைக்கூ'ப் புத்தகம்!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 157: இலக்கியச்சிறப்பு மிக்க 'தமிழர் தகவல்' மலர்!கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பார்கள். கவிதையுலகில் ஹைக்கூக்களும் கடுகைப்போலிருந்தாலும், வாசிப்பவருக்கு ஏற்படுத்தும் தாக்கத்தில் மிகவும் வலிமையானவை.

ஹைக்கு வகைக்கவிதைகளை இயற்ற விரும்புபவர்கள், இவ்வகைக்கவிதைகளை வாசிக்க விரும்புபவர்கள் எனப்பல்வகைக் கவிதைப்பிரியர்களுக்கும் உறுதுணையாகவிருந்து வழிகாட்டும் நல்லதொரு வழிகாட்டிதான் ' Haiku in English' (ஆங்கிலத்தில் ஹைக்கூ) என்னும் கைக்கடக்கமான இச்சிறு நூலும். இதனை எழுதியவர் ஹரோல்ட் ஜி. ஹென்டெர்சன் ( Hraold G.Henderson. இச்சிறுநூலினை வெளியிட்டிருப்பவர்கள் இச்சிறுநூலினை வெளியிட்டிருப்பவர்கள்: Charles E. Tuttle Co.

நூல் அறிமுகக் குறிப்பு, ஜப்பானியக் ஹைக்கு, ஆங்கிலத்தில் ஹைக்கூ, ஹைக்கூவை எழுதுதலும்,  கற்பித்தலும், அநுபந்தம் ஆகிய பிரிவுகளாக விளங்குகின்றது.

ஹைக்கூவானது ஜப்பானியர்களால் பல நூறு வருடங்களாகப் பாவிக்கப்பட்டுவரும் கவிதை வடிவம். தமிழில் திருக்குறள் ஈரடிகளில் , குறள் வெண்பாவாக , ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அமைந்திருப்பதுபோல் , ஜப்பானியக் ஹைக்கூவும் மூன்று அடிகளில் , சில கட்டுப்பாடுகளுக்கு அமைய எழுதப்படும் குறுங்கவிதை வடிவம். ஜப்பானியக் கவிதையின் பொதுவான அம்சங்களாக அல்லது விதிகளாகப் பின்வருவனற்றைக் கூறலாம்:

1. மூன்று அடிகளில் 17 அசைகளைக்கொண்டதாக இருக்க வேண்டும். முதல் அடியில் 5 அசைகளையும், இரண்டாவது அடியில் 7 அசைகளையும், மூன்றாவது அடியில் 5 அசைகளையும் கொண்டதாக ஜப்பானியக் ஹைக்கூ இருக்க வேண்டும்.

2. ஹைக்கூவானது இயற்கையுடன் சம்பந்தப்பட்டதாக நிச்சயம் இருக்க வேண்டும்.

3. ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைப் (event) பற்றியதாக இருக்க வேண்டும்.

4. அந்தச் சம்பவமானது நிகழ்காலத்தில் நடப்பதாக நிச்சயம் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நடப்பதாக இருக்கக்கூடாது.

•Last Updated on ••Thursday•, 07 •April• 2016 17:05•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 164: கலாநிதி க. கைலாசபதியின் பிறந்தநாள் இன்று! நினைவு கூர்வோம்!

•E-mail• •Print• •PDF•

கலாநிதி க. கைலாசபதியின் பிறந்தநாள் இன்று! நினைவு கூர்வோம்!கலாநிதி கைலாசபதியின் நூல்களை வாசித்திருக்கின்றேன். ஆனால் அவரை ஒருமுறைதான் என் வாழ்நாளில் நேரில் சந்தித்திருக்கின்றேன். 'மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க'த்தின் வருடாந்த வெளியீடான 'நுட்பம்' இதழுக்காக ஆக்கம் வேண்டி, யாழ் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை சந்தித்திருக்கின்றேன். இதழுக்குக் கட்டுரை தர ஒப்புக்கொண்ட அவர் குறிப்பிட்ட திகதியில் கட்டுரையைத் தரவும் செய்தார். அது மட்டுமின்றி 'நுட்பம்' மலர் கிடைத்ததும் அது பற்றிய சிறு விமர்சனக்குறிப்படங்கிய கடிதமொன்றினையும் அனுப்பி வைத்தார். அக்கடிதம் இன்னும் என்னிடமுள்ளது. நேரத்தை மதிக்கும், சொன்ன சொல் தவறாத அவரது பண்பு என்னைக்கவர்ந்ததொன்று.

கைலாசபதியவர்கள் தினகரனில் ஆசிரிய பீடத்தை அலங்கரித்த காலகட்டம் தினகரனின் இலக்கியச்சிறப்பு மிக்கதொரு காலம் என்று கூறலாம். ஈழத்துத்தமிழ் முற்போக்கிலக்கியத்துக்கு அதுவொரு பொற்காலம் என்றும் கூறலாம்.

அவரது எழுத்தில் எனக்குப் பிடித்த அம்சம்: தெளிவான நடையில், தர்க்கச்சிறப்பு மிகுந்திருப்பதுதான். கூறிய பொருள் பற்றிய அவரது தர்க்கம் எப்பொழுதும் என்னைக் கவர்ந்தது. வேறு சிலர் ஒரு பொருளைக்கூற வந்து, பலரின் மேற்கோள்களுடன் , வாசிப்பவரைக்குழப்புமொரு மொழி நடையில் எழுதுவார்கள். அவர்கள்தம் கட்டுரைகளை வாசிப்பவர்கள் பிரமித்துப்போவார்கள் அவர்கள் மேற்கோள்களைக்கண்டு, ஆனால் வாசித்து முடித்ததும் தங்களது தலைகளைச்சொறிந்துகொள்வார்கள் கூறும் பொருள் அறியாது. ஆனால் கைலாசிபதியின் எழுத்து இதற்கு நேர்மாறானது. தெளிவான நடையில், ஆழமான மொழியில், தர்க்கம் செய்யும் எழுத்து அவருடையது.

அவர் மார்க்சியக் கோட்பாட்டினை ஏற்றுக்கொண்டவர். அதனால் அழகியலை மையமாக வைத்து எழுதப்படும் எழுத்துகளை மக்களுக்குப் பயன்படாத எழுத்துகள் என்று கருதினார். அதனால் அவற்றை அவர் வன்மையாகச் சாடினார். அவர் இருந்திருந்தாலும் ஏனைய சிலர் மாறியதுபோல் தன் கொள்கையிலிருந்தும் அவர் மாறியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.
•Last Updated on ••Tuesday•, 05 •April• 2016 22:17•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 163: ஞானம் சஞ்சிகையின் தலையங்கமும், மறுமலர்ச்சிச்சங்கமும், அ.ந.க.வும்...

•E-mail• •Print• •PDF•

ஞானம் ஆசிரியத்தலையங்கம்அறிஞர் அ.ந.கந்தசாமிஅண்மையில் கோப்பாய் சிவம் , செல்லத்துரை சுதர்சன் ஆகியோரால் தொகுக்கப்பட்டு வெளியான 'மறுமலர்ச்சிச் சஞ்சிகைகளின் தொகுப்பு' பற்றிய ஞானம் சஞ்சிகை ஏபரல் மாத இதழின் தலையங்கத்தில் வாழ்த்தியிருக்கின்றது. மேற்படி ஞானம் சஞ்சிகையின் வாழ்த்துச்செய்தி வரவேற்கத்தக்கது. ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள , குறிப்பிடப்படாத விடயங்கள் பற்றிச் சுட்டுக்காட்டுவது முக்கியமென்று எனக்குத் தோன்றுகின்றது.  'அ.செ.மு , வரதர் போன்ற 'ஈழத்து நவீன எழுத்தாளர்களின் இரண்டாவது பரம்பரையினரில் பலர் மறுமலர்ச்சி உருவாக்கிய எழுத்தாளர்களே. என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அ.செ.மு போன்றவர்கள் மறுமலர்ச்சி  சஞ்சிகையின் வரவுக்கு முன்னரே ஈழகேசரி மூலம் எழுதத்தொடங்கி ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர்கள். அவர்களில் அ.செ.முருகானந்தன், தி.ச.வரதராசன், க.செ.நடராசா, அ.ந.கந்தசாமி, பஞ்சாட்சரசர்மா போன்ற ஐவருமே மறும்லர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியவர்கள். இதனால்தான் இவர்கள் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று கூறப்படுகின்றார்களே தவிர 'மறுமலர்ச்சி' சஞ்சிகையில் எழுதியதனால் அல்ல.

மறுமலர்ச்சிச் சங்கத்திற்குள் பஞ்சாட்சர சர்மாவை இழுத்தவர் அ.ந.கந்தசாமி. பஞ்சாட்சர சர்மாவே தனது கட்டுரைகள் பலவற்றில் தன்னை எழுத்துத்துறையில் ஊக்கப்படுத்தியவராகக் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் 'பஞ்சாட்சரம்' நூல் முன்னுரையிலும் தன்னை எழுதுமாறு தூண்டிய இருவர்களாக அ.ந.கந்தசாமியையும், பண்டிதர் பொ.கிருஷ்ணபிள்ளையையும் குறிப்பிட்டுள்ளார். அதிலவர் அவர்கள் தன்னை எழுதுமாறு தூண்டித் தன்னம்பிக்கையூட்டி எழுத வைத்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாட்சர சர்மா அவர்களின் மகனான கோப்பாய் சிவம் அவர்கள் தனது தந்தையின் எழுபதாண்டு வயதினையொட்டி வெளியிட்ட 'பஞ்சாட்ஷரம்' நூலில் , பஞ்சாட்சர சர்மா அவர்களுக்கு ஏனைய கலை, இலக்கியவாதிகள் எழுதிய கடிதங்களையும் இணைத்துள்ளார். மேற்படி நூலை நூலகம் இணையத்தளத்தில் எழுத்தாளர் கோப்பாய் சிவம் அவர்களின் படைப்புகளுக்கான பக்கத்தில் காணலாம்.

மேலும் மேற்படி நூலிலுள்ள பஞ்சாட்சர சர்மா அவர்களைப்பற்றிய கட்டுரையில் எழுத்தாளர் வரதர் அவர்கள் மறுமலர்ச்சிச்சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்கள் ஐவரென்றும், அவர்களிலொருவராக அ.ந.கந்தசாமியையும் குறிப்பிட்டிருப்பார்.

பஞ்சாட்சரம் தொகுப்பு நூலில் பலர் பஞ்சாட்சர சர்மா அவர்களுக்கு எழுதிய கடிதங்களையும் சேர்த்திருக்கின்றார்கள்.  அதிலொன்று அ.ந.க எழுதிய கடிதம்.  அதிலவர் பஞ்சாட்சர சர்மாவை மறுமலர்ச்சிச்சங்கத்தில் இணைந்து பணியாற்றும்படி அழைப்பு விடுத்திருக்கின்றார். அக்கடிதத்தில் அ.ந.க குறிப்பிட்டுள்ள விடயங்கள் சில வருமாறு:

1. மறுமலர்ச்சிச்சங்கம் அமைக்கப்பட வேண்டுமென்ற அவசியத்தை முதலில் வலியுறுத்தியவர் அ.செ.முருகானந்தன். ஈழகேசரி பத்திரிகையில் அவரது பத்தியான 'பாட்டைசாரியின் குறிப்புக'ளில் இவ்விதம் மறுமலர்ச்சி சங்கத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தியிருக்கின்றார். இதனை அக்கடிதத்தில் அ.ந.க குறிப்பிட்டிருக்கின்றார்.

2 . இவ்விதமாக மறுமலர்ச்சிச்சங்கத்தினை அமைக்கும் முயற்சியில் தனது நண்பர்களான அ.செ.மு.வும், வரதரும் ஈடுபட்டிருப்பதாகவும் , அவர்களுடன் ஒத்துழைத்துச் சங்கத்தை வெற்றியாக்க வேண்டுமென்பது தனது அவாவென்றும் அ.ந.க அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் 'மறுமலர்ச்சிச்சங்கம் மறுமலர்ச்சி இலக்கிய ஆர்வமுள்ள உத்தம ரஸிகர் திருக்கூட்டமாக இருக்க வேண்டும். தாங்கள் அத்தகையார் ஒருவர். எனவே தங்கள் ஒத்துழைப்பை நான் அதிகம் விரும்புகின்றேன்' என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். அக்கடிதம் எழுதப்பட்ட திகதி: 01.06.48. (பஞ்சாட்சர்மா; பக்கம் 169]

•Last Updated on ••Tuesday•, 05 •April• 2016 22:23•• •Read more...•
 

இலங்கைக்கு விஜயம் செய்த திரு.'குடிவரவாளன்'.

•E-mail• •Print• •PDF•

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

இலங்கையில் அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'குடிவரவாளன்' நாவலின் குறிப்பிட்ட எண்ணிகையிலான பிரதிகள் இலங்கையிலும் விற்பனைக்குள்ளன. நூலின் பிரதிகளை வாங்க விரும்புபவர்கள் எழுத்தாளர் குணேஸ்வரன் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். அவருடைய அலைபேசி இலக்கம்: +94776120049

•Last Updated on ••Thursday•, 31 •March• 2016 06:48••
 

திரு 'குடிவரவாளன்' இன்று கனடா வந்து சேர்ந்தார்!

•E-mail• •Print• •PDF•

வ.ந.கி

தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான எனது நாவலான 'குடிவரவாளன்' நாவலில் குறிப்பிட்ட எண்ணிகையிலான பிரதிகள் இன்று கிடைக்கப்பெற்றேன், நான் எவ்விதம் என் நாவல் வெளிவர வேண்டுமென்று விரும்பினேனோ அவ்விதமே அட்டைப்படம் முதல், நூலின் வடிவமைப்பு வரை அமைந்திருப்பது மகிழ்ச்சியினைத்தருகின்றது. நூல் இவ்விதம் வெற்றிகரமாக வெளிவருவதற்கு இணையம் மிகவும் கை கொடுத்தது என்றுதான் கூற வேண்டும். நூலின் ஆரம்ப நிலையிலிருந்து, வெளியாகும் வரையில், ஓவியா பதிப்பக உரிமையாளர் திரு. வதிலைப்பிரபா அவர்கள் அலுக்காமல், சலிக்காமல் என் கருத்துகளை உள் வாங்கி, விவாதித்து வந்துள்ளதை இத்தருணம் நினைத்துப்பார்க்கின்றேன். இவ்விதமான கருத்துப்பரிமாறல்கள் இந்நூல் சிறப்பாக வெளிவந்திருப்பதற்கு மிகவும் உதவியிருக்கின்றன.

FedEx 'கூரியர்' மூலம் வதிலைப்பிரபா 20.03.2016 அன்று அனுப்பிய புத்தகப்பொதி , இன்று 24.03.2016 என் கைகளை வந்தடைந்தது. அனுப்பியதிலிருந்து எனக்குக் கிடைக்கும் வரையிலான அதன் வரலாற்றை இணையத்தின் மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாகவிருந்தது. உலகமயமாக்கலின் பாதக விளைவுகளுக்கு மத்தியில் இவ்விதமான நன்மைகளுமுள்ளன.

கனடா நண்பர்கள் கவனத்துக்கு:
இந்நாவலை வாங்க விரும்பும் நண்பர்கள் முகநூலின் தகவல் பெட்டி மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். எனது மின்னஞ்சல் முகவரி: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

தமிழகம் மற்றும் ஏனைய நாடுகளில் வசிக்கும் , நூலினை வாங்க விரும்பும் நண்பர்கள் ஓவியா பதிப்பகத்தாருடன் தொடர்பு கொள்ளுங்கள். அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள் வருமாறு:

•Last Updated on ••Sunday•, 27 •March• 2016 05:43•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 163: அம்மாவின் நினைவாக...;தமிழ்வாணன்: தன்னம்பிக்கையின் சிகரம்!:கவிதைப்பிரியர்களுக்கோர் சஞ்சிகை: மகாகவி!

•E-mail• •Print• •PDF•

திருமதி நவரத்தினம்1. அம்மாவின் நினைவாக...

அவர் ஓர் ஆசிரியையாக விளங்கியவர். யாழ் இந்துக்கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, வவுனியா மகா வித்தியாலயம் மற்றும் அராலி இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆசிரியையாகக் கடமையாற்றியவர். 'நவரத்தினம் டீச்சர்' என்றால் தான் அவரைப் பலருக்குத்தெரியும். யாழ் இந்து மகளிர் கல்லூரிக் காலகட்டத்தைச்சேர்ந்த அவரது சக ஆசிரியர்களுக்கு அவரை 'மங்கை' அல்லது 'மங்கையற்கரசி' என்றால்தான் தெரியும். அதுதான் அவரது வீட்டுப்பெயர். ஆனால் அவரது இயற்பெயர் மகேஸ்வரி. அது யாருக்குமே தெரியாது. கண்டிக்கவே தெரியாத ஆசிரியர்களில் அவருமொருவர். புவியியல், ஆங்கிலம் மற்றும் Home Science ஆகிய துறைகளில் பாடங்களை அதிகமாகக் கற்பித்தவர்.

வவுனியாவில் இருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் அதிகாலைகளில் நேரத்துடன் எழுந்து, அனைவருக்கும் உணவு தயாரித்து, மதிய நேர உணவினை அனைவருக்கும் தயார் செய்வார். அதிகாலைகளில் நாங்கள் குழந்தைகள் அனைவரும் அவர் பின்னால் கோழிக்குஞ்சுகளாகச் சென்ற காலைகள் இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன. மாலை நேரங்களில் வீடு திரும்பும்போது நான் என் நண்பர்களுடன் திரும்பி விடுவேன். ஆனால் காலைகளில் பாடசாலை செல்லும்போது அவருடனேதான் செல்வதுண்டு.

நன்கு பாடும் திறமை மிக்கவர். சிறுவயதில் அவர் பாடும் பாரதியார் விடுதலைக்கீதங்களை (குறிப்பாகத் 'தாயின் மணிக்கொடி பாரீர்), 'மிஸ்ஸியம்மா' திரைப்படப்பாடலான 'பிருந்தாவனமும் நந்தகுமாரனும்' ஆகிய பாடல்களை அவர் அவ்வப்போது பாடக்கேட்டு இரசித்திருப்பதும் இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளது.

•Last Updated on ••Friday•, 08 •February• 2019 20:26•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 162 : தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி,,,; தமிழினி சாகாள்!; கார்ல் மார்கஸ் - 'சரித்திர வளர்ச்சியிலே சமுதாய விதிகளைச்சரியாக உய்த்துணர்ந்தவன்'!

•E-mail• •Print• •PDF•

தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி1. தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி,,

சிவகாமி ஞாபகார்த்த நிறுவகம் வெளியிட்டுள்ள தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூலின் இலங்கைப்பதிப்பின் பின் அட்டையில் பின்வருமாறுள்ளது"

"உயிருடனிருக்கும் ஒரு போராளி மக்களோடு சேர்ந்து வெளியேற வேண்டும் அல்லது தன்னத்தானே அழித்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான போராளிகளும் மக்களோடு இணைந்தே வெளியேறத்தயாராகியிருந்தார்கள். ஆபத்துக்காலத்தில் கோழி தன் சிறகுகளுக்குள் குஞ்சுகளை இழுத்துக்கொள்வதுபோல் தமிழ் மக்கள் தம்முடனே போராளிகளையும் பாசத்துடன் அரவணைத்து உள்வாங்கிக்கொண்டார்கள்.  யாரெண்ரே தெரியாமல் காயமடைந்து அனாதரவாகக் கிடந்த பல போராளிகளையும் மக்களில் சிலர் தூக்கிச் சுமந்துகொண்டு வெளியேறத்தயாரானார்கள்."

இதற்குக் கீழே தமிழினி பற்றிய சிறு குறிப்பொன்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட மேற்படி நூலின் பின் அட்டையில் வேறு யாரோ எழுதியதைத் தமிழினி எழுதியுள்ளதாகக் குறிப்பி்டப்பட்டுள்ளதை முகநூலில் பலர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அது கண்டிக்கத்தக்கது. காலச்சுவடு பதிப்பகத்தார் இதற்கான பதிலை நிச்சயம் கூறவே வேண்டும்.

தமிழினியில் சுயசரிதையில் நான் வாசித்த வரையில் ஈழத்தமிழர் போராட்டத்தைக்கொச்சைப்படுத்தியதாக எதனையும் நான் காணவில்லை. அவர் தன் அனுபவங்களை , போராட்ட அனுபவங்களை, விடுதலைப்புலிகளின் பிரமிக்கத்தக்க போர் வெற்றிகளை எல்லாம் விபரிக்கின்றார். இறுதியில் இவ்விதமான வெற்றிகளுடன் கூடிய போராட்டமானது , முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதுடன் முடிவடைந்தது அவருக்கு அதிர்ச்சியைத்தருகிறது. யுத்தத்தின் பின்னரான, மக்களின் முன்னாள் போராளிகள் மீதான புறக்கணிப்பு குறிப்பாகப் பெண் போராளிகள் மீதான புறக்கணிப்பு இதுவரை காலமும் யாருக்காகப் போராடினேன் என்ற கேள்வியை அவரிடத்தில் எழுப்புகிறது. அதன் பின்னரான அவரது அனுபவம் அவரை இதுவரை காலமும் நடந்த போராட்டம் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. அச்சிந்தனையை அவர் தன் சுயசரிதையில் வெளிப்படுத்துகிறார்.

அவ்விதம் வெளிப்படுத்தும்போது தலைமையின் பலமான அம்சங்களை ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் விபரித்த அவர் , முழு அமைப்புமே தலைமையை மையமாக வைத்துக்கட்டியெழுப்பப்பட்டிருந்ததால், தலைமையுடன் முடிவுடன் ஆயுதங்கள் மெளனிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கான போராளிகளும் கை விடப்பட்ட நிலையும் உருவானபோது அந்நிலை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றார்.

என்னைப்பொறுத்தவரையில் இவ்விதமான கேள்விகள், சுய பரிசோதனைகள் ஆரோக்கியமானவை. ஏன் இவ்வளவு வெற்றிகளுடன் விளங்கிய அமைப்பானது, முற்று முழுதாக இயங்க முடியாதவாறு, ஆயுதங்கள் மெளனிக்கப்பட வேண்டிய நிலையுடன் முடிவுக்கு வரவேண்டி வந்தது என்ற கேள்விகளுக்கான நியாயமான சுய ஆய்வே தமிழினியின் சுயசரிதை.

•Last Updated on ••Saturday•, 19 •March• 2016 19:54•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 161 : நவகாலத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் இணைய இதழ்கள்!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 157: இலக்கியச்சிறப்பு மிக்க 'தமிழர் தகவல்' மலர்!நவகாலத்தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் முனைவர்கள் பலர் தமக்குக் கிடைக்கும் நூல்களை மையமாக வைத்தே பெரும்பாலும் எழுதுவது வழக்கம். இதனால் நவகாலத்தமிழ் இலக்கியத்தின் விரிந்த பரப்பினை அவர்கள் பலரின் எழுத்துகள் காட்டத்தவறிவிடுகின்றன. இணையத்தில் குறிப்பாக இணைய இதழ்களில் வெளியாகும் பல படைப்புகளை இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட முனைவர்கள் பலர் தவற விட்டு விடுகின்றார்கள்.  ஆனால், அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு இணைய இதழ்களில் வெளியான படைப்புகளை, கட்டுரைகளை மையமாக வைத்தும் முனைவர்கள் சிலர் ஆய்வுகளைச் செய்யத்தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது. ஆரோக்கியமான செயற்பாடிது.

முனைவர் நா.சுப்ரமணியன், முனைவர் இ.பாலசுந்தரம் போன்றவர்கள் கனடாத்தமிழ் இலக்கியம் பற்றிய தமது கட்டுரைகளுக்கு 'பதிவுகள்' போன்ற இணைய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளை, படைப்புகளை மையமாக வைத்து ஆய்வினைச்செய்திருப்பது அவதானிப்புக்குரியது. இணைய இதழ்களின் இலக்கியப்பங்களிப்பினை இவர்கள் புரிந்து கொண்டிருப்பது நல்லதொரு விடயம்.

அண்மைக்காலமாக இணைய இதழ்களில் வெளியாகிய பல்வகைப்படைப்புகள் நூலுருப்பெற்று வெளிவருவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்புகள் பல (நீலக்கடல் நாவல் உட்பட) திண்ணை இணைய இதழில் வெளியாகிப்பின் நூலுருப்பெற்றவைதாம். 'பதிவுகள்' இணைய இதழிலும் இவரது இலக்கியக் கட்டுரைகள், பிரெஞ்சுப்படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள் பல வெளியாகியுள்ளன. எழுத்தாளர் இரா.முருகனின் 'அரசூர் வம்சம்' 'திண்ணை' இணைய இதழில் வெளியாகி நூலுருப்பெற்றது. அறிவியல் அறிஞர் ஜெயபாரதன் அவர்களின் அறிவியற் கட்டுரைகள் பல திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியாகி நூலுருப்பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவரது இலக்கியப்படைப்புகள் பல திண்ணை இணைய இதழில் வெளியாகி நூலுருபெற்றுள்ளன. இவை தவிர நடேசன் (ஆஸ்திரேலியா) அவர்களின் 'அசோகனின் வைத்தியசாலை' 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகிப்பின்னர் நூலுருப்பெற்றதையும், அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவல் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியாகி நூலுருப்பெற்றது என்பதையும் மறந்து விட முடியாது. மேலும் அண்மையில் வெளியான தமிழினியின் 'போர்க்காலம்' கவிதைத்தொகுதி 'பதிவுகள்' மற்றும் தமிழினியின் முகநூல் பக்கம் ஆகியவற்றில் வெளியாகிப்பின்னர் நூலாக வெளிவந்ததும் கவனத்திற்கொள்ள வேண்டியதொன்று.

•Last Updated on ••Saturday•, 12 •March• 2016 22:29•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 160 : 'ராமச்சந்திரன்' ஆட்சி செய்த மண்ணில் 'ரவிச்சந்திரன்கள்' மடியும் நிலை இனியும் வேண்டாம். | எழுத்தாளர் 'சீர்காழி' தாஜ்.......

•E-mail• •Print• •PDF•

1.  'ராமச்சந்திரன்' ஆட்சி செய்த மண்ணில் 'ரவிச்சந்திரன்கள்' மடியும் நிலை இனியும் வேண்டாம்.

ரவிச்சந்திரன் என்ற மனிதர் , தன்னுடன் வாழும் மக்களின் உரிமைகளைச் சுட்டிக்காட்டி, அவலங்களைச்சுட்டிக்காட்டிபோராளியாகத்தன்னை மாய்த்துக்கொண்டிருக்கின்றார். அவரது இந்தப்போராட்டம் , இந்த முடிவு தமிழகத்தில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இனியாவது விடிவொன்றினைக்கொண்டு வரட்டும்.

அண்மையில் கனடா அரசு 25,000 சிரிய அகதிகளைப் பெரும் ஆரவாரத்துடன் கை நீட்டி, அரவணைத்து அழைத்தபோது எனக்குத் தமிழகத்தில் அகதிகள் முகாம் என்ற பெயரில் நடாத்தப்படும் தடுப்பு முகாம்களில் வாடும் எம் நாட்டுத்தமிழ் அகதிகளின் நிலைதான் ஞாபகத்துக்கு வந்தது. ஈழத்தில் நிலவிய கொடிய அடக்குமுறைகள் காரணமாகத் தாய்த்தமிழகம் என்ற பெரும் நம்பிக்கையுடன் , அபயம் நாடித்தமிழகம் வந்த அப்பாவி அகதிகள் அவர்கள். அவர்களை இருகரம் நீட்டி அரவணைத்து ஆறுதல் கூறுவதற்குப்பதிலாகத் தடுப்பு முகாம்கள் என்ற ஒருவகைச்சிறைக்கூடங்களில் தடுத்து, உளரீதியாகத்துன்பங்களை அனுபவிக்க வைத்து, அதிகாரிகளின், காவல்துறை அதிகாரிகளின் அடக்கு முறைகளுக்குள் பல்வகைத்துன்பங்களை அனுபவிக்க வைத்து ஏன் தமிழக அரசு இவ்விதம் அந்த அகதிகளுடன் வாழ்வுடன் விளையாடுகிறது?

தமிழக அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் , நடிகர்கள் போன்ற பலர் இவர்களைப்பற்றி எதுவுமே பெரிதாகக் கதைப்பதேயில்லை. இவர்களுக்காகக் குரல் கொடுப்பதேயில்லை. இவ்வளவுக்கும் இவர்களது நிலை பற்றி மானுட உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் சிலர் அவ்வப்போது குரல் எழுப்பித்தான் வருகின்றனர். , ஊடகங்கள் சில இவர்களது நிலை பற்றிக் குரல் கொடுத்துத்தான் வருகின்றன. இருந்தும் ஏன் எல்லாரும் இவர்களின் நிலையினை மாற்றி, பூரண சுதந்திரம் மிக்கவர்களாக இவர்கள் வாழ அனுமதிக்கவில்லை?

அகதி முகாமுக்குத் தாமதமாக வந்த ரவிச்சந்திரனை அதுவும் மிகவும் நியாயமான காரணத்துக்காகத் தாமதமாக வந்தவரைக் கண்டித்து, அவமானப்படுத்தி, அகதி முகாமுக்குள் ஏற்க முடியாது என்று மறுத்த அதிகாரி ராஜேந்திரன் , ரவிச்சந்திரனை 'வாழ்க்கையின் ஓரத்துக்கே' ஓடும்படி விரட்டியிருக்கின்றார். அவர் மீது பொலிஸார் வழக்குத்தொடுத்திருப்பதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரைப்போன்ற அதிகாரிகள் மிகவும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். தன் வாழ்வையே மாய்த்துக்கொண்ட ரவிச்சந்திரனின் குடும்பத்துக்குப் போதிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும். எந்தக் காரணத்துக்காக ரவிச்சந்திரனுக்கு இந்த நிலை ஏற்பட்டதோ? அந்தக்காரணங்கள் உடனடியாகக் களையப்பட வேண்டும். அகதிகள் பூரண சுதந்திரம் மிக்கவர்களாக வாழ்வதற்கு உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும். அதிகாரிகளின் எந்தவிதக் கட்டுப்பாடுகளுமற்று, சாதாரணை குடிமக்களைப்போல் தாம் விரும்பிய இடங்களில் அல்லது அகதி முகாம்களில் சுதந்திரமாக வாழ்வுதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

•Last Updated on ••Monday•, 07 •March• 2016 22:56•• •Read more...•
 

நன்றி! நன்றி! நன்றி!

•E-mail• •Print• •PDF•

தமிழகத்தில் தற்போது ஓவியா பதிப்பக வெளியீடாக விற்பனைக்கு வந்துள்ள எனது நாவலான 'குடிவரவாளன்' பிரதியுடன் பதிப்பக உரிமையாளர் திரு.வதிலைப்பிரபா இருக்கும் காட்சியினையே இங்கு காண்கின்றீர்கள்.தமிழகத்தில் தற்போது ஓவியா பதிப்பக வெளியீடாக விற்பனைக்கு வந்துள்ள எனது நாவலான 'குடிவரவாளன்' பிரதியுடன் பதிப்பக உரிமையாளர் திரு.வதிலைப்பிரபா இருக்கும் காட்சியினையே இங்கு காண்கின்றீர்கள். மிகவும் சிறப்பாக நூலினை வெளியிட்டுள்ள ஓவியா பதிப்பகத்துக்கும், அதன் உரிமையாளர் வதிலைப்பிரபாவுக்கும் நன்றி. எழுத்தாளர் ஒருவருக்கு அவரது படைப்பொன்றினை நூலுருவாகப்பார்க்கும்போது ஏற்படும் இன்பத்தை விபரிக்க வார்த்தைகளில்லையென்பேன். 'குடிவரவாளன்' நாவலினை வதிலைப்பிரபா கைகளில் பார்க்கையில் ஏற்படும் களிப்பும் அவ்வகையானதே.

நூலினைப்பெற்றுக்கொள்ள விரும்புவோர் ஓவியா பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

முகநூல் பல ஆக்கபூர்வமான நன்மைகளை அதன் அங்கத்தவர்களுக்குத்தருகிறது. தம் பால்ய காலத்து நண்பர்களுடன், நண்பர்களுடன், சக எழுத்தாளர்களுடன், பதிப்பகத்தாருடன் எனப் பலருடன் ஆக்கபூர்வமான தொடர்ப்புகளைப் பேணுதற்கு உதவுகின்றது. ஓவியா பதிப்பகத்தையும், அதன் உரிமையாளர் திரு.வதிலைப்பிரபா அவர்களையும் நான் அறிந்து கொண்டதும் முகநூல் வாயிலாகத்தான். அதற்காக முகநூலுக்கும் நன்றி. முகநூல் மூலம் நான் அடைந்த நன்மைகளில் இதுவுமொன்று.

நீண்ட காலமாக நூலாக வெளிவரவேண்டுமென்று நான் விரும்பிய நாவல் 'குடிவரவாளன்' அதனைச் சாத்தியமாக்கிய ஓவியா பதிப்பகத்துக்கு மீண்டுமொருமுறை நன்றி. நூலின் அட்டைப்படத்திலிருந்து, பிழை திருத்தம் செய்வதுவரை, வதிலைப்பிரபா காட்டிய சிரத்தை என்னைப் பிரமிக்க வைக்கிறது. இயலுமானவரையில் எழுத்துப்பிழைகளைக் களைந்துள்ளோம். நூல் சிறப்பாக வெளிவந்துள்ளது.

•Last Updated on ••Friday•, 04 •March• 2016 20:19•• •Read more...•
 

அஞ்சலி: அமரர் செங்கை ஆழியான் நினைவாக....

•E-mail• •Print• •PDF•

செங்கை ஆழியானின் 'ஆச்சி பயணம் போகின்றாள்'செங்கை ஆழியான்எழுத்தாளர் செங்கை ஆழியான் இன்று மறைந்ததாக முகநூல் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். அண்மையில் எழுத்தாளர் முருகபூபதியின் பதிவொன்றில் செங்கை ஆழியான் உடல்நலமிழந்து இருந்த விபரத்தை அறிந்தபோது அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுமென வேண்டி முகநூலில் பதிவொன்றினையிட்டிருந்தேன். அது தவிர அவர் பற்றி அவ்வப்போது வேறு சில பதிவுகளையும் முகநூலில் இட்டிருக்கின்றேன். அப்பதிவுகள் செங்கை ஆழியான் எவ்விதம் என் இளம் பருவத்தில் என்னைப்பாதித்தார் என்பதை வெளிப்படுத்தும் பதிவுகள் என்பதாலும், அவை அவரது பன்முக இலக்கியப்பங்களிப்பினைப் புலப்படுத்துவதாலும், அவற்றைத்தொகுத்து என் அஞ்சலியாக இங்கு பதிவிடுகின்றேன்.

ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் செங்கை ஆழியானுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. ஈழநாடு சிறுகதைகள், மறுமலர்ச்சி சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள் போன்ற தொகுப்புகளை வெளியிட்டதன் மூலம், ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகினை ஆவணப்படுத்தி மிகுந்த பயனுள்ள பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

புனைவு, அபுனைவு என இவரது பங்களிப்பு பரந்தது. ஈழத்தமிழர்தம் வரலாறு பற்றி இவர் எழுதிய கட்டுரைகளும், நூல்களும் முக்கியமானவை. புனைவுகளிலும் சமுகக்கதைகளுடன், வரலாற்றுக்கதைகளையும் எழுதியுள்ளார். அத்துடன் 'ஆச்சி பயணம் போகின்றாள்', 'நடந்தாய் ஆறு வழுக்கியாறு!' மற்றும் 'கொத்தியின் காதல்' ஆகிய நகைச்சுவைப்புனைவுகளையும் எழுதியிருக்கின்றார்.

இலங்கை அரச படைகளினால் யாழ்ப்பாணம் எரியுண்டபோது நீலவண்ணன் என்னும் பெயரில் அவற்றை ஆவணப்படுத்தும் அபுனைவுகளை எழுத்தாளர் அமரர் வரதர் அவர்களின் வேண்டுகோளின்பேரில் எழுதியிருக்கின்றார்.

•Last Updated on ••Monday•, 29 •February• 2016 00:01•• •Read more...•
 

தமிழகத்தில் மார்ச் முதல் திகதி அன்று வெளியாகின்றது 'குடிவரவாளன்'

•E-mail• •Print• •PDF•

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

'பதிவுகள்' வாசகர்களுடன் மகிழ்ச்சிகரமான செய்தியொன்றினை பகிர்ந்துகொள்கின்றோம். வ.ந.கிரிதரனின் நாவலான 'குடிவரவாளன்' தமிழகத்தில் மார்ச் 1, 2016 அன்று விற்பனைக்கு வருகின்றது. ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரும் இந்த நாவலினைப்பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் திரு. வதிலைப்பிரபா, ஓவியா பதிப்பகம் அவர்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும்.

ஓவியா பதிப்பக விபரங்கள்: Oviya Pathippagam, 17-16-5A, K.K.Nagar, Batlagundua - 642 202 Tamil Nadu, India
Phone: 04543 - 26 26 86 |  Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52
email: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• | •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

இந்நாவல் வ.ந.கிரிதரனின் ஆறாவது  நாவலாகும். இதுவரை வெளியானவை:

1. மண்ணின் குரல் (1987) - கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். புரட்சிப்பாதை (மான்ரியால்) கையெழுத்துச்சஞ்சிகையில் 84.85 காலப்பகுதியில் தொடராக வெளிவந்து , மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் நூலாக வெளிவந்தது.
2. கணங்களும், குணங்களும் - தாயகம் (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1998இல் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக 'மண்ணின் குரல்' என்னும் பெயரில் வெளியான நான்கு நாவல்களின் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள நாவல்களிலொன்று. தொடராக வெளியானபோது 'மணிவாணன்' என்னும் பெயரில் வெளியானது.
3. அருச்சுனனின் தேடலும்! அகலிகையின் காதலும்! - தாயகம் (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்து 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
4. வன்னி மண்! - தாயகம் (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்து 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
5. அமெரிக்கா. -  தாயகம் (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்து 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
6. குடிவரவாளன். - பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் தொடராக வெளிவந்து தற்போது தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவருகின்றது. தொடராக வெளியானபோது 'அமெரிக்கா 2', 'அமெரிக்கா: சுவர்களுக்கப்பால்' என்னும் பெயர்களில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயருக்கு மாற்றமடைந்த நாவலிது.

•Last Updated on ••Sunday•, 28 •February• 2016 23:20•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 159: கனடாவின் முதலாவது தமிழ்க்கவிதை நூலெது?

•E-mail• •Print• •PDF•

கனடாவின் முதலாவது தமிழ் நாவல்" மண்ணின் குரல் பற்றிச் சில வார்த்தைகள். - வ.ந.கிரிதரன் -கனடாவின் முதல் தமிழ் நாவலாக வெளிவந்த ஆக்கம் எனது 'மண்ணின் குரல்' இந்த நூலுக்கு இன்னுமொரு முக்கியத்துவமும் உண்டு. இந்நூல் 'மண்ணின் குரல்' நாவலையும் 8 கவிதைகளையும் மற்றும் 2 கட்டுரைகளையும் கொண்ட சிறு தொகுப்பாக வெளிவந்தது.  அந்த வகையில் இதனை முதலாவது நாவலாகவும் கருதலாம். அதே சமயம் கவிதைகளை உள்ளடக்கிய நூலாகவும் கருதலாம். கட்டுரைகளை உள்ளடக்கிய நூலாகவும் கருதலாம். இந்நூல் 87 தை மாதம் வெளியானது. அந்த வகையில் கனடாவில் வெளியான முதலாவது கவிதை நூலாகவும் இதனை ஒருவிதத்தில் கொள்ளலாமோ?

சுதா குமாரசாமியின் 'முடிவில் ஓர் ஆரம்பம்' கவிதைத்தொகுப்பும் றிப்ளக்ஸ் அச்சகத்தால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அது வெளிவந்த ஆண்டு சரியாகத்தெரியவில்லை. 87ற்கு முன் வெளிவந்திருந்தால் அதனையே முதலாவது கவிதைத்தொகுதியாகக் கருதலாம். முகநூலில் இக்கவிதைத்தொகுப்பினைப்பற்றிச்சுட்டிக் காட்டியிருந்தார் நண்பர் கனடா மூர்த்தி. அவருக்கு நன்றி.

'மண்ணின் குரல்' றிப்ளக்ஸ் அச்சகத்தினரால் அச்சிடப்பட்டது. இதிலுள்ள கவிதைகள், கட்டுரைகள் மற்றும் 'மண்ணின் குரல்' நாவல் ஆகியன 'புரட்சிப்பாதை' (மான்ரியால்) கையெழுத்துச் சஞ்சிகையில் 84/95 காலப்பகுதியில் வெளியாகிய படைப்புகள். அக்காலத்து என் உணர்வுகளைப்பிரதிபலிப்பவை. அன்றுள்ள என் அறிவு மட்டத்திற்கேற்ப சில சொற்கள் பாவிக்கப்பட்டிருக்கலாம்.

இத்தொகுப்பிலுள்ள நாவலின் பெயர் மண்ணின் குரல். அதனால் இத்தொகுப்புக்கு இந்தப்பெயர் மிகவும் பொருத்தம். அதே சமயம் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மற்றும் கட்டுரைகள் ஆகியவையும் மண்ணின் குரல்களாகத்தாம் ஒலிக்கின்றன. அந்த வகையில் மண்ணின் குரல் என்னும் நூலின் பெயர் நூலின் படைப்புகள் அனைத்துக்கும் பொருத்தமான தலைப்பென்பேன்.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளின் விபரங்கள் வருமாறு:

1. மாற்றமும் , ஏற்றமும்
2. அர்த்தமுண்டே..
3. விடிவிற்காய்..
4. புல்லின் கதை இது..
5. ஒரு காதலிக்கு...
6. மண்ணின் மைந்தர்கள்..
7. புதுமைப்பெண்
8. பொங்கட்டும்! பொங்கட்டும்!

•Last Updated on ••Sunday•, 28 •February• 2016 03:02•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 158 : கனடாவில் வெளியான கவிதைத்தொகுதிகள்...; பள்ளிக்கூடமா? பல்கலைக்கழகமா?

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரனின் 'எழுக அதிமானுடா!'

வாசிப்பும், யோசிப்பும் 148 :அண்மையில் வாசித்த அறிவியல் கட்டுரையொன்று - ' நித்திய வாழ்வு காணலாம்'

1. கனடாவில் வெளியான கவிதைத்தொகுதிகள்....

முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்களின் 'கனடாவில் தமிழ் இலக்கியம்' என்னும் கட்டுரையில் கனடாவில் வெளியான கவிதை நூல்களைப்பற்றிய குறிப்பொன்று வருகின்றது. அது வருமாறு:

"கவிதைத்தொகுதி என்ற வகையில் கனடாவில் வெளியிடப்பட்ட முதலாவது ஆக்கம் கவிஞர் சேரன் அவர்களுடைய  'எலும்புக் கூடுகளின் ஊர்வலம்' ஆகும்.  இது 1990இல் வெளிவந்தது.  இதனையடுத்து கெளரி என்பாரின் 'அகதி' என்ற நெடுங்கவிதை நூலும், அ.கந்தசாமி , மலையன்பன் மற்றும் ரதன் ஆகிய மூவரின் தொகுப்பான 'காலத்தின் பதிவுகள்' என்ற தொகுதி 1991இலும், ஆனந்தபிரசாத் என்பாரின் 'சுயதரிசனம்' என்ற தொகுதி 1992இலும் வெளிவந்தன. அடுத்த நான்காண்டுகளில் என்.கே.மகாலிங்கம் அவர்களின் 'உள்ளொளி' (1993), அ.கந்தசாமி அவர்களின் 'கானல் நீர்க்கனவுகள்' (1994), நிலா குகதாசன் அவர்களின் 'இன்னொரு நாளில் உயிர்த்தேன்' (1996) முதலிய சில கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன.  இத்தகவல்களைத் தந்துதவியவர்கள் காலம் இதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தம் மற்றும் எழுத்தாளர் திரு.ப.ஶ்ரீஸ்கந்தன் ஆகியோராவார்."

சேரனின் கவிதைத்தொகுதியான 'எலும்புக்கூடுகளின் ஊர்வலம்' தேடகம் அமைப்பினரால் வெளியிடப்பட்டது.

•Last Updated on ••Saturday•, 27 •February• 2016 21:29•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 157: இலக்கியச்சிறப்பு மிக்க 'தமிழர் தகவல்' மலர்!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 157: இலக்கியச்சிறப்பு மிக்க 'தமிழர் தகவல்' மலர்!கனடாவிலிருந்து வெளிவரும் 'தமிழர் தகவல்' இதழின் பெப்ருவரி (2016) மாத இதழ் அதன் இருபத்து ஐந்தாவது ஆண்டு மலராக வெளிவந்துள்ளது. இதனை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவ்விதம் ஈழத்துப் பத்திரிகை உலகில் நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளரான எஸ்.திருச்செல்வத்தை ஆசிரியராகக்கொண்டு அவரால் வெளியிடப்படுவது.

மாதா மாதம் வெளியாகும் இதழ்கள் கனடாத் தமிழருக்கு, புதிய குடிவரவாளர்களுக்குப்பயனுள்ள விபரங்களை, ஆக்கங்களைத்தாங்கி வெளிவருவன. அவற்றை இலக்கியச்சிறப்பு மிக்கவை என்று கூற முடியாது.. ஆனால் இவ்விதழின் ஆண்டு மலர்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அவை நிச்சயம் இலக்கியச்சிறப்பு மிக்கவை என்று கூறலாம். அந்த வகையில் இலக்கியச்சிறப்பு மிக்க மலராக இம்மாத இதழும் வெளிவந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

இம்மலர் கனடாத்தமிழர் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் வகையில் வெளியாகியிருக்கும் அதே சமயம், உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர் பற்றிய விபரங்களையும் தாங்கி வெளிவந்திருக்கின்றது.  அவ்வகையில் புலம் பெயர் தமிழர் சிறப்பு மலராகவும் இவ்விதழைக்கூறலாம். மலரின் கலை, இலக்கியச்சிறப்பு மிக்க கட்டுரைகளாகப்பின்வரும் கட்டுரைகளைக்குறிப்பிடுவேன்.

1. கனடாவில் தமிழ் ஒலிபரப்பு கால் நூற்றாண்டு வரலாறு - பொன்னையா விவேகானந்தன். கனடாவில் தமிழ் ஒலிபரப்பு வளர்ந்த கதையினை விரிவாக விபரிக்கும் கட்டுரை இது.

2. திரை விலகுகிறது.. மேடை நாடகங்கள் - ப.ஶ்ரீஸ்கந்தன். இக்கட்டுரையும் கனடாத் தமிழரின் நாடக வரலாற்றை விரிவாகப்பேசுகிறது; ஆவணப்படுத்துகிறது.

3.  இது படமல்ல. புலம்பெயர் திரைப்பட கவழிகை. - ரதன்.  திரைப்படங்களைப்பற்றிய பொதுவான கட்டுரை. இறுதியில் கனடாவில் வெளிவந்த திரைப்படங்களைப்பட்டியலிடுகிறது. இதற்குப்பதிலாக கட்டுரை முழுவதுமே கனடாவில் வெளியான தமிழ்த்திரைப்படங்களைப்பற்றியதாக இருந்திருக்கும் பட்சத்தில், கனடாத்தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய நல்லதோர் ஆவணக்கட்டுரையாக விளங்கியிருக்கும். கவழிகை என்றால் திரைச்சீலை. 'புலம்பெயர் திரைப்பட கவழிகை' என்ற தலைப்பு 'புலம்பெயர் திரைப்படத்திரைச்சீலை' என்ற பொருளினைத்தருகின்றது. அது பற்றிய குழப்பகரமான சிந்தனையைத்தருகிறது. இன்னும் எளிமையாகத் தலைப்பினை வைத்திருக்கலாமென்று தோன்றுகிறது.

•Last Updated on ••Monday•, 22 •February• 2016 06:50•• •Read more...•
 

அஞ்சலி: அம்பர்தோ எகோ!

•E-mail• •Print• •PDF•

அம்பர்தோ எகோஅம்பர்தோ எகோஅம்பர்தோ எகோ

அம்பர்தோ எகோ பல் துறைகளில் தன் ஆளுமையினைப்பதித்த முக்கியமானதோர் ஆளுமை. இலக்கிய விமர்சனம், ஊடகப் பண்பாடு, குறியியல், மானுடவியல், படைப்பு இலக்கியம் மற்றும் மத்தியகாலத்து அழகியல் பற்றிய ஆய்வுகள் என இவரது பங்களிப்பு பரந்தது; முக்கியமானது; தவிர்க்க முடியாதது.

தமிழில் இவரைப்பற்றிய விரிவான நூல்கள் அல்லது இவரது நூல்கள் அதிகம் வந்ததாகத்தெரியவில்லை. ரஃபேலின் (வின்சென்ட் பால்) 'அம்பர்தோ எகோ :சில நேர்காணல்களின் மொழிபெயர்ப்பு' என்றொரு நூல் , அகம்புறம் பதிப்பகத்தின் மூலம் 2010இல் வெளிவந்திருக்கின்றது. அண்மைக்காலத்தில் தமிழகத்தில் மேலும் பல நூல்கள் வந்திருக்கக்கூடும்.

இவரது இழப்பு மிகப்பெரியதோர் இழப்பு என்றால் அது மிகையான வார்த்தைகளல்ல. ஆழ்ந்த அஞ்சலிகள்.

•Last Updated on ••Saturday•, 20 •February• 2016 18:29••
 

வாசிப்பும், யோசிப்பும் 156: சிற்பியின் 'கலைச்செல்வி'

•E-mail• •Print• •PDF•

சிற்பியின் 'கலைச்செல்வி''கலைச்செல்வி' சஞ்சிகை ஈழத்தில் வெளிவந்த தமிழ்ச்சஞ்சிகைகளில் முக்கியமானதொரு சஞ்சிகை. 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்' என்னும் தாரக மந்திரத்துடன் , சிற்பி சரவணபவனை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த சஞ்சிகை அது. கலைச்செல்வி சஞ்சிகையை நினைத்தால் எனக்கு ஞாபகம் வரும் விடயம் என் மாணவப்பருவத்தில் அச்சஞ்சிகையின் ஓரிதழொன்றினை வாசித்த சம்பவம்தான். கூடவே அவ்விதழில் வெளியான சொக்கன் அவர்களின் சிறுகதையொன்றும் ஞாபகத்துக்கு வரும்.

அச்சிறுகதையின் கரு இதுதான்: தமிழ் ஆசிரியர் ஒருவரின் மகளுக்கு , அவரின் மாணவனொருவன் காதல் கடிதம் எழுதி விடுகின்றான். ஆனால் அந்தக் காதல் கடிதத்தை எழுதியவன் தன் மாணவனே என்பதை அவ்வாசிரியர் கண்டு பிடித்து விடுகின்றார். எப்படி? வழக்கமாக அவன் தமிழில் எழுதும் போது விடும் எழுத்துப்பிழையொன்றினை அந்தக் காதல் கடிதத்திலும் விட்டிருப்பான். அதிலிருந்து அந்த மாணவனை அத்தமிழாசிரியர் கண்டு பிடித்து விடுகின்றார்.

எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் வாசித்த எழுத்தாளர் சொக்கனின் அச்சிறுகதையினை, இப்பொழுது நினைத்தாலும் இதழ்க்கோடியில் இலேசாக முறுவலொன்று ஓடி மறையும். காதல் கடிதம் பற்றிய தமிழ் வாத்தியாரான சொக்கனின் தமிழ் வாத்தியார் பற்றிய சிறுகதையை நினைக்குந்தருணங்களில் அது வெளியான 'கலைச்செல்வி' சஞ்சிகையும் ஞாபகத்துக்கு வந்து விடுகின்றது.

'கலைச்செல்வி' சஞ்சிகையின் சில இதழ்களை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்க முடிகிறது.

இவ்விதழ்களில் அறிந்து கொண்ட விடயங்கள் சில வருமாறு: இவ்விதழ்களில் புதுமைப்பிரியை (பத்மா சோமகாந்தன்), , எஸ்.பொ., வ.அ.இராசரத்தினம், சிற்பி சரவணபவன், மு.தளையசிங்கம், கவிஞர் நீலவாணன், கவிஞர் பரமஹம்சதாசன், தேவன் (யாழ்ப்பாணம்), ஆதவன், அ.க.சர்மா எனப்பலர் எழுதியுள்ளார்கள். [ஆதவன் என்னும் பெயரிலும் அக்காலகட்டத்திலும் ஒருவர் எழுதிக்கொண்டிருந்திருக்கின்றார்.]

'உனக்காகக் கண்ணே' என்னும் தலைப்பில் நாவலோன்றினைச் சிற்பி என்னும் பெயரில் சரவணபவன் அவர்கள் எழுதியுள்ளார். அ.க.சர்மா 'அணுவுள் ஓர் அதிசயம்' என்னும் தலைப்பில் அறிவியற் கட்டுரைத்தொடரொன்றினை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர்கள் 'எழுத்துலகில் நான்' என்னும் தலைப்பில் தம் எழுத்துலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருப்பதையும் அறிய முடிகின்றது.

•Last Updated on ••Saturday•, 20 •February• 2016 18:42•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 155 : மேலும் சில முகநூல் பதிவுகளும், பின்னூட்டங்களும்!

•E-mail• •Print• •PDF•

'மூத்த' எழுத்தாளர்களும், முகநூலும்!

எஸ்.எல்.எம்.ஹனீபாசமூக ஊடகங்களை அண்மைக்காலமாகப்பல மூத்த எழுத்தாளர்கள் பலர் பாவித்து வருவது ஆரோக்கியமானதொரு செயற்பாடாகவே நான் கருதுகின்றேன். இங்கு நான் பாவித்துள்ள மூத்த எழுத்தாளர்கள் என்னும் பதம் அமரர் எஸ்.பொ. அவர்களுக்குப் பிடிக்காததொரு பதம். அவருடன் ஒருமுறை ஆறுதலாக உரையாடிக்கொண்டிருந்தபொழுது 'அதென்ன மூத்த எழுத்தாளர்' என்று அவர் பரிகாசம் செய்தது ஞாபகத்துக்கு வருகின்றது. மூத்த என்னும் சொற்பதத்தை வயதில் மூத்த, எழுத்துத்துறை அனுபவத்தில் மூத்த என்னும் கருத்துப்பட பாவிக்கலாம் என்பதால் அவ்விதம் பாவிப்பதில் தவறில்லையென்றே கருதுகின்றேன். அதனாலேயே இங்கும் அப்பதத்தைப்பாவிக்கின்றேன்.

அந்த வரிசையில் அண்மைக்காலமாக முகநூலில் அதிகம் சந்திக்கக்கூடியவர்களிலொருவராக எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களையும் குறிப்பிடலாம். இன்னுமொருவர் எஸ்.எல்.எம் ஹனீபா. மேலும் 'அலை' யேசுராசா, மேமன்கவி, வி.ரி.இளங்கோவன் என்று பல ஈழத்து எழுத்தாளர்களைக்குறிப்பிடலாம். இவர்களைப்போன்றவர்களுடனெல்லாம் கருத்துகள் பரிமாறுவதைச் சாத்தியமாக்கியுள்ளது முகநூல்.  மேலும் பல்வேறு நாடுகளிலும் வாழும் பல்வேறு தலைமுறைகளைச்சேர்ந்த எழுத்தாளர்கள் சந்திக்குமோரிடமாக விளங்குகின்றது முகநூல். இது முகநூலின் முக்கியமான பயன்களிலொன்று. இவற்றை மூத்த எழுத்தாளர்கள் எல்லாரும் விளங்கியுள்ளார்கள் என்பதற்கில்லை. ஆனால் அவ்விதம் விளங்கிய சிலர் , இவ்விதமான சமூக ஊடகங்களை ஆக்கபூர்வமாகப்பாவிக்கின்றார்கள். இது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது; ஆரோக்கியமானது.

எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களின் சிறுகதைத்தொகுப்பான 'மக்கத்துச்சாலை'யினி 'நூலகம்' தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தள முகவரி: http://www.noolaham.net/project/01/90/90.htm

நந்தினி சேவியர் அவர்களின் 'அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்' சிறுகதைத்தொகுப்பினையும் 'நூலகம்' இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான முகவரி: http://noolaham.net/project/03/230/230.pdf'

'அலை' யேசுராசா அவர்களை அவரது எழுத்தினூடு அறிந்திருக்கின்றேன். அவருடனான கருத்துப் பரிமாறல்களைச் சாத்தியமாக்கியுள்ளது முகநூல். பதிவுகள் இடுவதுடன், அவ்வப்போது ஏனைய பதிவுகளுக்குத் தன் கருத்துகளையும் தெரிவிக்கத்தயங்காதவர் இவர்.

•Last Updated on ••Sunday•, 21 •February• 2016 18:11•• •Read more...•
 

தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!

•E-mail• •Print• •PDF•

தமிழினி ஜெயக்குமாரன்- 'போர்க்காலம் - தோழிகளின் உரையாடல்' என்னும் தலைப்பில் அண்மையில் மறைந்த தமிழினி ஜெயக்குமாரனின் கவிதைகள் அடங்கிய தொகுப்பொன்றினை, அவரது கணவர் திரு.ஜெயக்குமாரனின் உதவியுடன், சிவகாமி ஞாபகார்த்த நிறுவகம் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தத்தொகுப்புக்கு வ.ந.கிரிதரன் எழுதிய முன்னுரையினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். - பதிவுகள் -


தமிழினி விடுதலைப்புலிகளின்  மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். அத்துடன் இராணுவத்தாக்குதல்களிலும் பங்கு பற்றியவர். யுத்தத்தின் பின்னர் சிறிது காலம் சிறை வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர். அதன் பின்னர் அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியத்தில் தன் பங்களிப்பினை ஆற்றத்தொடங்கியிருந்தார். தமிழினி எழுதுவதில் திறமை மிக்கவர். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்துக் கவிதைகள், சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். 'பதிவுகள்' இணைய இதழுக்கும் அவர் தன் படைப்புகளை அவ்வப்போது அனுப்புவார். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்து இன்னும் பல படைப்புகளைத்தருவார் என்றெண்ணியிருந்த சமயத்தில் அவரது மறைவுச்செய்தி வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உண்மையில் ஈழத்துத்தமிழ் இலக்கிய வானில் கணப்பொழுதில் ஒளி தந்து மறையும் மின்னலைப்போல் , தன் குறுகிய வாழ்வினுள் ஒளிர்ந்து மறைந்தவர் தமிழினி. இவரது படைப்புகள் குறைவாக இருந்தபோதிலும், அவை நூலுருப்பெற வேண்டியதவசியம். தமிழினியின் கவிதைகளைத்தொகுத்து சிறு தொகுப்பாக வெளிக்கொணர முனைந்திருக்கும் அவரது கணவர் திரு.ஜெயக்குமாரனின் இந்த முயற்சியானது மிகவும் பாராட்டுதற்குரியதும், பயனுள்ளதுமாகும். முக்கியமானதொரு தொகுப்பாக விளங்கப்போகும் தொகுப்பிது என்றும் கூறலாம்.

தமிழினி அண்மைக்காலமாகத்தான் எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்தினாரா? உண்மையில் அவர் கடந்த காலத்திலும் பல்வேறு பெயர்களில் அவர் எழுதியிருப்பதை அவரே ஒருமுறை தன் முகநூலில் பகிர்ந்திருக்கின்றார். அவரது 'மழைக்கால் இரவு' சிறுகதையின் வரிகளிலிருந்து 'யுத்தம்' என்றொரு கவிதையினை உருவாக்கிப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்திருந்தேன். அது பற்றித் தன் முகநூலில் கருத்துத்தெரிவித்திருந்தபோது தன் கடந்த காலத்து இலக்கிய முயற்சிகளைப்பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

•Last Updated on ••Sunday•, 14 •February• 2016 00:26•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 154: இலக்கியத்தில் தடம் பதித்துவரும் சகோதரிகள் இருவர்!

•E-mail• •Print• •PDF•

ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் (புகலிடம் இலக்கியத்தையும் உள்ளடக்கி)  தடம் பதித்துvவரும் பெண் எழுத்தாளர்களில் இருவர் சகோதரிகள். ஒருவர் சந்திரா ரவீந்திரன். மற்றவர் சந்திரவதனா செல்வகுமாரன். நீண்ட நாள்களாக சந்திரா ரவீந்திரன், சந்திரா தியாகராஜா, சந்திரவதனா செல்வகுமாரன் ஆகிய மூவரும் சகோதரிகள் என்று நினைத்திருந்தேன். இவர்களில் சந்திரா தியாகராஜாவே மூத்தவராக இருக்க வேண்டுமென்றும் எண்ணியிருந்தேன். பின்னர்தான் தெரிந்தது சந்திரா தியாகராஜாவும், சந்திரா ரவீந்திரனும் ஒருவரே என்பது. சந்திரா தியாகராஜா எண்பதுகளிலிருந்தே ஈழத்துத் தமிழ் வெகுசன ஊடகங்களில் நன்கு அறியப்பட்ட ஒருவராக விளங்கியவர் என்பதாலேயே அவ்விதம் எண்ணியிருந்தேன்.

தற்போது சந்திரா ரவீந்திரனாக அறியப்படும் இவரது 'நிலவுக்குத்தெரியும்' சிறுகதைத்தொகுதி அண்மையில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாகத்தமிழகத்தில் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவர் சந்திரா தியாகராஜா என்னும் பெயரில் எழுதிய காலகட்டத்தில் வெளியான 'நிழல்கள்' சிறுகதைத்தொகுப்பு பருத்தித்துறையில் யதார்த்தா வெளியீடாக 1988இல் வெளியாகியுள்ளது. அத்தொகுப்பில் சிரித்திரனில் பரிசு பெற்ற இவரது சிறுகதைகளும், யாழ் இலக்கிய வட்டம் / வீரகேசரி இணைந்து நடாத்திய குறுநாவல் போட்டியில் (1984 / 1985) இரண்டாம் பரிசு பெற்ற 'நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்' என்னும் குறுநாவலும் அடங்கியுள்ளன.

'நிழல்கள்' என்னும் இத்தொகுப்பினை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தொடுப்பு: http://noolaham.net/project/45/4435/4435.pdf

சகோதரிகள் இருவரும் தொடர்ச்சியாக ஆற்றி வரும் இலக்கியப்பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சந்திரவதனா செல்வகுமாரனும் 1975 தொடக்கம் எழுதி வருகின்றார். இருவருமே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலமாகவே தம் இலக்கிய வாழ்வினைத்தொடங்கியவர்கள் என்பதை இவர்களைப்பற்றிய விக்கிபீடியாத்தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

•Last Updated on ••Thursday•, 11 •February• 2016 20:29•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 153 :இலங்கைத் தமிழ்ப்பொப் இசையும், நித்தி கனகரத்தினமும்!

•E-mail• •Print• •PDF•

நித்தி கனகரத்தினம் இளமையில்நித்தி கனகரத்தினம்இலங்கைத்தமிழ்ப்பொப் இசையென்றால் முதலில் ஞாபகத்துக்கு வருபவர் நித்தி கனகரத்தினம்தான். அமரர் கமலநாதன் எழுதிய 'சின்ன மாமியே!' பாடல் மூலம், அதனைப் பாடி, அதனை பட்டி தொட்டியெங்கும் அறிய வைத்து, அதன் காரணமாகவே  இலங்கைத்தமிழ்ப்பொப் இசையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் நித்தி கனகரத்தினம். நான் முதலில் கேட்ட ஈழத்துப்பாடல் 'சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?' பாடல்தான்.

நித்தி கனகரத்தினம் பாடிய மூன்று பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை என்பேன். 'சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?' , 'கள்ளுக்கடைப் பக்கம் போகாதே! உன் காலைப்பிடித்துக்கெஞ்சுகிறேன்.' மற்றும் 'லண்டனிலை மாப்பிள்ளையாம் பெண்ணு கேட்கிறாங்க' ஆகிய பாடல்கள்தாம் அவை.

தனித்துவம் மிக்க இலங்கைத்தமிழ்ப்பொப் இசையின் வளர்ச்சிக்கு, இலங்கைத்தமிழரின் யாழ்ப்பாணத் தமிழ்ச்சொற்கள் அடங்கிய இவர் பாடிய பொப் இசைப்பாடல்கள்  முக்கிய பங்காற்றியுள்ளன. 'ஊர் சுழலும்   பொடியளெல்லாம்', ' ஏனணை மாமி', 'இஞ்சினியர் என்று சொல்லி புளுகித்தள்ளினாராம்' போன்ற சொற்பிரயோகங்கள் மேற்படிப்பாடல்களுக்குச் சுவை சேர்ப்பவை.

இலங்கைத்தமிழ்ப்பொப் இசைக்குப் பலர் பங்களிப்பு செய்திருக்கின்றார்கள். ஆனால் அவர்களில் முன்னணியில் நிற்பவர் நித்தி கனகரத்தினம் என்பேன். அதற்குக் காரணமாகப் பொப் இசைப்பாடல்களுக்கேற்ற அவரது குரல், துடிப்பான இசை, பாடல் வரிகளில் விரவிக்கிடக்கும் நகைச்சுவை ஆகியவற்றையே  குறிப்பிடுவேன்.

•Last Updated on ••Thursday•, 11 •February• 2016 21:16•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 152 : 'சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?' பாடலுக்குச் சொந்தக்காரர் யார்?

•E-mail• •Print• •PDF•

நித்தி கனகரத்தினம் , கமலநாதன்அண்மையில் மறைந்த கமலநாதன்தான் 'சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே?' பாடலை இயற்றிய விடயமே பலருக்கும் அவரது மறைவுக்குப்பின்னர்தான் தெரிய வந்து வியப்பினை ஏற்படுத்தியது. பலரும் இதனை நித்தி கனகரத்தினமே எழுதியதாக நினைத்திருந்தார்கள். நானும் அவ்விதமே எண்ணியிருந்தேன். இது பற்றி வானொலி நிலையமொன்றுக்கு அளித்த நேர்காணலொன்றில் நித்தி கனகரத்தினம் அளித்த விளக்கத்தில் தனக்கு இப்பாடலை எழுதியவர் கமலநாதனே என்ற விடயம் 2001இல் தான் தெரிய வந்தது என்று கூறியிருக்கின்றார். அதே சமயம் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான பாடலுக்கு அவரைக்குறிப்பிடுவதுபோல், இந்தப்பாடலையும் தான் இசைமைத்து, மெருகூட்டிப்பாடிப் புகழடைய வைத்ததால் தனக்குத்தான் அந்தப்பெருமை இருக்க வேண்டும் என்னும் கருத்துப்படக் கருத்தொன்றினையும் உதிர்த்துள்ளார். அந்த வானொலி நேர்காணலுக்கான இணைப்பினை எழுத்தாளர் முருகபூபதி மின்னஞ்சல் மூலம் அறியத்தந்திருந்தார். நன்றி திரு. முருகபூபதி அவர்களுக்கு.

http://www.sbs.com.au/yourlanguage/tamil/en/content/chinna-maamiye-controversy

ஒரு பாடலின் இசைக்கு இளையராஜா பொறுப்பாக இருந்தாலும், அதற்குரிய பாடலை எழுதியவரின் பெயரை அவர் மறைப்பதில்லையே. அது போல் இந்தச் 'சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?' பாடலை இசையமைத்துப்பாடிப் புகழடைய வைத்தவர் நித்தி என்றாலும், அப்பாடலை எழுதிய பாடலாசிரியரான அமரர் கமலநாதனின் பெயர்  உரிய முறையில் குறிப்பிடப்பட்டுக் கெளரவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

2001ஆம் ஆண்டிலிருந்து நித்தி கனகரத்தினத்துக்குத் தெரிந்திருப்பதால், அதன் பிறகு நடைபெற்ற நித்தியின் நிகழ்ச்சிகள் , நேர்காணல்கள் எல்லாவற்றிலும் பாடலாசிரியர் கமலநாதனின் பெயர் குறிப்பிடப்பட்டு , நிகழ்ச்சிகளில் உரிய முறையில் விளக்கமளிக்கப்பட்டு, . அவருக்கு  நன்றி தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

•Last Updated on ••Sunday•, 07 •February• 2016 22:41•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 151 : ஜும்பா லாகிரியின் 'திரு.பிர்ஷடா உணவுண்ண வந்தபோது'!

•E-mail• •Print• •PDF•

ஜும்பா லாகிரியின் 'திரு.பிர்ஷடா உணவுண்ண வந்தபோது'

Jhumpa Lahiri'Interpreters Of Maladies.' சிறுகதைத்தொகுதிகாகப் புலியட்சர் விருதினைப் பெற்றவர் ஜும்பா லாகிரி. இவரது எழுத்து நடை, கதைப்பின்னல் ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் சுவையாக, வாசிப்பவர் நெஞ்சினை அள்ளும் வகையில் அமைந்திருக்கும் இவரது எழுத்து நடை.

இவரது மேற்படி தொகுப்பிலுள்ள சிறுகதையொன்று அன்றிலிருந்து இன்று வரை மனதில் பசுமையாகவுள்ளது. அது மேற்படி தொகுப்பிலுள்ள சிறுகதைகளிலொன்றான 'திரு.பிர்ஷடா உணவுண்ண வந்தபோது' (When Mr.Pirzada Came to Dine.) என்னும் சிறுகதை  திரு.பிர்ஷடா கிழக்குப் பாகிஸ்தானைச்சேர்ந்தவர். பாகிஸ்தான் அரசின் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்கா வந்திருப்பவர். அவரது குடும்பத்தினர் டாக்காவிலுள்ள அவரது மூன்று மாடி வீட்டில் வசித்து வருகின்றார்கள், அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் உயிரியலில் விரிவுரையாளராக இருப்பவர். திருமணமாகி இருபது வருடங்களாக அவருக்கு ஆறிலிருந்து பதினாறு வரை வயதினரான ஏழு பெண் குழந்தைகள். எல்லாருடைய பெயரும் A என்னும் முதல் எழுத்தில் ஆரம்பமாகும்.

திரு.பிர்ஷ்டா அமெரிக்காவிலிருக்கும் சமயம் பாகிஸ்தான், சுயாட்சி கேட்டுப்போராடிய கிழக்குப் பாகிஸ்தான் மீது அடக்குமுறைகளைக்கட்டவிழ்த்து விடுகிறது. இக்காலகட்டத்தில் கிழக்குப்பாகிஸ்தானில் மக்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்படுகின்றனர். இக்காலகட்டத்தில் நடைபெறும் கதைக்களத்தைக்கொண்ட கதை 'திரு.பிர்ஷ்டா உணவருந்த வந்தபோது.'

•Last Updated on ••Sunday•, 07 •February• 2016 20:04•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 150: ரகுமான் ஜானுடன் ஒரு சந்திப்பு!

•E-mail• •Print• •PDF•

ரகுமான் ஜான்கடந்த ஞாயிறு அன்று மாலை ரகுமான் ஜானுடன் நீண்ட நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. காலத்தின் கோலத்துடன் பலர் காணாமல் போய் விடுவதைத்தான் பொதுவாகப் பார்த்திருக்கின்றோம். ஒரு சிலர்தாம் தம் சிந்தனையில் தெளிவு மிக்கவர்களாக , சிந்தனையில் பரிணாம வளர்ச்சி பெற்றவர்களாக , எப்பொழுதும் கற்றலை விடாது கடைப்பிடிப்பவர்களாக இருப்பதைப்பார்த்திருக்கின்றோம். அவர்களில் ஒருவர்தான் ரகுமான் ஜான்.

ஈழத்தமிழர்களின் வரலாறு பற்றிய விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டியதன் அவசியம் பற்றி ரகுமான் ஜான் ஆர்வமுள்ளவராகவிருக்கிறார். இதற்காக அவ்வப்போது பல்வேறு வழிகளில் , கடந்த காலங்களில் தான் எடுத்த முயற்சிகள் பற்றி உரையாடலில் எடுத்துரைத்தார். இன்றும் அதே ஆர்வத்துடன் தமிழர் வரலாறு முறையாக , ஆய்வுக்கண்ணோட்டத்தில் எழுதப்பட வேண்டியது அவசியம் என்னும் கண்ணோட்டத்தில் இருக்கிறார் ஜான். குறிப்பாக ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்ட வரலாறு உட்பட ஈழத்தமிழர்களின் வரலாறு முறையாக எழுதப்பட வேண்டியது அவசியம் என்னும் அவரது கொள்கையுடன் எனக்கும் உடன்பாடே. ஆயுதப்போராட்டத்தின் அடிப்படைக்காரணிகள், போராட்ட அமைப்புகள் பற்றிய விபரங்கள், அமைப்புகளுக்கிடையில் நிலவிய அக / புற முரண்பாடுகளும், மோதல்களும், அமைப்புகளின் அரசியல் மற்றும் போராட்டச்செயற்பாடுகள் எனப்பல்வேறு விபரங்களையும் உள்ளடக்கியதாக அவ்வரலாற்று நூல் அமைய வேண்டும். மேலும் ஈழத்தமிழர் வரலாறு பற்றிய நூல்கள், ஆவணங்களைச்சேகரித்துக்கொண்டிருக்கின்றார் ரகுமான் ஜான்.
•Last Updated on ••Thursday•, 04 •February• 2016 21:50•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 149 :'சைபர் வெளி'யில் அமரர் வெங்கட் சாமிநாதனுடன் சில கணங்கள்......

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -'கட்டோடு குழலாட ஆட' என்ற இந்தப்பாடல் 'பெரிய இடத்துப்பெண்' என்னும் திரைப்படத்திலுள்ள பாடல். ஜோதிலட்சுமி, மணிமாலா , எம்ஜிஆர் ஆகியோரின் நடிப்பில் வெளியான பாடல். இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. ஆனால் தற்போது இந்தப்பாடல் இன்னுமொரு காரணத்துக்காகவும் பிடித்துப்போனது. அதற்குக் காரணம் அண்மையில் மறைந்த அமரர் வெங்கட் சாமிநாதன். இன்று இந்தப்பாடலைக்கேட்கும் சமயங்களில் திரு.வெங்கட் சாமிநாதனின் நினைவும் கூடவே தோன்றி விடுகின்றது.

திரு. வெங்கட் சாமிநாதன் என் முகநூலில் நண்பர்களிலொருவராக இருந்தாலும் முகநூலில் நான் அவரது பதிவுகளைக்காண்பதில்லை. என்னுடன் தொடர்புகொள்வதென்றால் மின்னஞ்சல் மூலம்தான் அவர் தொடர்பு கொள்வார். ஆனால் இந்தப்பாடலுக்கு மட்டும் அவர் தற்செயலாக இதனைப்பார்த்துவிட்டுத் தம் கருத்தினைத்தெரிவித்திருந்தார். அந்தக் கருத்துப்பரிமாறல்களையும் , அந்தப்பாடலையும் மீண்டுமொருமுறை 'பதிவுகள்' வாசகர்களுடன்  அவர் ஞாபகார்த்தமாகப்பகிர்ந்து கொள்கின்றேன்.

Venkat Swaminathan இது எப்படி? இப்போது தான் தற்செயலாக எங்கோ ஒரு மூலையில் ஒடுங்கிக்கிடக்கும் உங்கள் பதிவை. எல்லாம் எம்ஜிஆர் பாட்டுக்களாக இருக்கின்றனவே என்று ஆச்சரியப்பட்டு. ஒன்றைப் போட்டுப் பார்த்தேன். கட்டோடு குழல் ஆட பாட்டு அது. மிக நன்றாக இனிமையாக இருக்கிறது. இதையெல்லாம் எப்படி ஒன்று சேர்த்து வைத்திருக்கிறீர்கள் எம்ஜிஆர் ரசிகரா நீங்கள்? அல்லது அப்பழங்கால சினிமாப் பாட்டுக்களின் ரசிகரா? எம்ஜிஆர் பாட்டுக்களாக ஒன்று சேர்க்க எப்படித் தோன்றியது? எப்படியிருந்தாலும் ஒரு வித்தியாசமான தேடலுக்கு நன்றி. சந்தோஷமாக இருக்கிறது.

•Last Updated on ••Thursday•, 04 •February• 2016 21:51•• •Read more...•
 

சிறுகதை: மணல் வீடுகள்!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 147: எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூல் பதிவு பற்றி....என் ஆரம்ப காலத்துச்சிறுகதைகளிலொன்று 'மணல் வீடுகள்'.  19.06.1977 வெளியான ஈழநாடு வாரமலரில் பிரசுரமான சிறுகதையிது. அப்பொழுது நான் யாழ் இந்துக்கல்லூரியில் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் (G.C.E - Advanced Leval) படித்துக்கொண்டிருந்தேன். ஈழநாடு வாரமலரில் அக்காலகட்டத்தில் வெளியான எனது நான்கு சிறுகதைகளில் 'மணல் வீடுகள்' சிறுகதையுமொன்று. தமிழக வெகுசன ஊடகங்களின் ஆதிக்கத்தில் மூழ்கிக் கிடந்த பருவத்தின் பாதிப்பை இச்சிறுகதையில் நீங்கள் அவதானிக்கலாம். அந்த வயதுக்குரிய உணர்வுக்கொந்தளிப்புகளை வெளிப்படுத்தும் சிறுகதை. மல்லிகையில் வெளியான ஈழநாடுச்சிறுகதைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரையில் செங்கை ஆழியான் அவர்கள் (முனைவர் க.குணராசா) ஈழநாடு பத்திரிகையின் ஏழாவது தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவராக என்னைக்குறிப்பிட்டு, இச்சிறுகதையினையும் குறிப்பிட்டிருப்பார். ஒரு பதிவுக்காக இச்சிறுகதையினை இங்கு பதிவு செய்கின்றேன்.

•Last Updated on ••Tuesday•, 02 •February• 2016 19:19•• •Read more...•
 

தேவன் (யாழ்ப்பாணம்)!

•E-mail• •Print• •PDF•

தேவன் (யாழ்ப்பாணம்)![ யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தின் வருடாந்தக் கலைவிழாவான 'கலையரசி 2015' நிகழ்வினையொட்டி வெளியான 'கலையரசி' மலரில் வெளியான தேவன் (யாழ்ப்பாணம்) பற்றிய சுருக்கமான கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம். - வ.ந.கி]

ஈழத்துத்தமிழ் இலக்கிய வரலாற்றில் யாழ் இந்துக்கல்லூரியின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. யாழ் இந்துக்கல்லூரியின் மாணவர்கள் தொடக்கம் ஆசிரியர்கள் வரை பலர் ஈழத்துத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார்கள். இது பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். அந்த வகையில் யாழ் இந்துக்கல்லூரியின் ஆசிரியரான தேவன் - யாழ்ப்பாணம் அவர்களின் இலக்கியப்பங்களிப்பு பற்றிச் சுருக்கமாக ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

தேவன் - யாழ்ப்பாணம் மிகச் சிறந்த பேச்சாளர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்கு பேசும் ஆற்றல் வாய்த்தவர். இதனால் அன்றைய காலகட்டத்தில் யாழ்நகரில் நடைபெற்ற கலை, இலக்கிய நிகழ்வுகளில் , அந்நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கும் பிரதான தொகுப்பாளராக அப்பொழுது அவர் அனைவராலும் அழைக்கப்பட்டுக்கொண்டிருந்தார்.

இது தவிர தேவன் - யாழ்ப்பாணம் என்றால் உடனே ஞாபகம் வருவது அவரது புகழ்பெற்ற 'ஸ்கோடா' (Skoda) மோட்டார் வாகனமாகும். அதன் காரணமாக அன்றைய காலகட்டத்து மாணவர்களால் அவர் 'ஸ்கோடா' என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்பட்டதும் நினைவுக்கு வருகின்றது. அந்தக் கண்ணாடி அணிந்த முகமும், அந்த 'ஸ்கோடா' மோட்டார் வாகனமும் இப்பொழுதும் ஞாபகத்திலிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் 1924இல் பிறந்த இளையப்பா மகாதேவன் தன் புனைபெயராக தேவன் என்று வைத்துக் கொண்டார். தேவன் - யாழ்ப்பாணம் அவர்களின் முதலாவது நினைவு மலரில் தேரடியான் என்னும் பெயரில் தேவன் அவர்களின் தமையனாரான இளையப்பா தர்மலிங்கம் அவர்கள் கட்டுரையொன்று எழுதியிருக்கின்றார். அது  தேவன் அவர்களின் பெயருக்கான காரணங்கள் பற்றிய மேலதிகத் தகவல்களை வழங்குகின்றது. [இது பற்றிய தகவல்களை வழங்கிய என் முகநூல் நண்பர்களில் ஒருவராகிய திருமலை மூர்த்தி அவர்களுக்கு நன்றி.]

•Last Updated on ••Monday•, 01 •February• 2016 06:44•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 148 :அண்மையில் வாசித்த அறிவியல் கட்டுரையொன்று - ' நித்திய வாழ்வு காணலாம்'

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 148 :அண்மையில் வாசித்த அறிவியல் கட்டுரையொன்று - ' நித்திய வாழ்வு காணலாம்'அண்மையில், வாசித்த அறிவியல் கட்டுரைகளில் என் கவனத்தை ஈர்த்த கட்டுரைகளிலொன்று யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவரும், பொறியியலாளருமான திரு. ப. தயாநிதி , சென்ற வருடம் யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தினரால் , யாழ் இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டினை சிறப்பிக்குமுகமாக நடாத்திய 'கலையரசி' நிகழ்வு மலரில் எழுதிய 'இன்னும் சில தசாப்த காலத்திற்கு வாழ்வீர்களாயின் நித்திய வாழ்வு காணலாம் (Live long enough to live for ever) என்னும் கட்டுரைதான் அது.

தானியங்கியியல் (Robotics), நனோ தொழில் நுட்பம் (nano thechnology) மற்றும் மரபுப்பொறியியல் (Genetic engineering) ஆகிய தொழில் நுட்பங்கள் இணைந்த அடுத்த கட்ட அறிவியல் வளர்ச்சியே இவ்விதம் மானுடர் நீண்ட காலம் அல்லது நித்திய வாழ்வு வாழ்வதற்குரிய சாத்தியத்தைக்கொண்டு வந்துள்ளதை , அழகு தமிழில் , தர்க்கச்சிறப்புடன் விபரிக்கின்றது தயாநிதியின் இந்தக்கட்டுரை.

நனோ தொழில் நுட்பத்தினைப்பாவித்து மானுடரின் கண்களுக்குப்புலப்படாத 'நுண் தானியங்கி' (nanobot) எனப்படும் தானியங்கியை  (robot) உருவாக்க முடியும். இந்த 'நுண்தாங்கிகளை' வைரஸ்கள், பக்ரீயியாக்களைப்போல் தம்மைத்தாமே பிரதியெடுத்துப் பெருகும் வகையில் உருவாக்க முடியும். இதன் மூலம் இவ்விதமான 'நுண் தாங்கிகள்' கொண்டு பல்வேறு நோய்களை உருவாக்கும் வைரஸ்களை, பக்ரீறியாக்களை மற்றும் புற்று நோய்க்கலங்களை அடையாளம் கண்டு அழிக்க முடியுமென்பதை, பல்வேறு நோய்களுக்குக் காரணமான மரபணுக்களைச்சரி செய்ய முடியுமென்பதை எளிமையாக விபரிக்கின்றது மேற்படி கட்டுரை.

அத்துடன் நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இருதயம் போன்ற உறுப்புகளுக்குப் பதிலாக , அவற்றின் வேலைகளைச்செய்வதற்கு இவ்வகையான நுண்தாங்கிகளை இரத்தத்துக்குப் பதிலாகப்பாவிக்கக்கூடிய நிலையும் உருவாகுமென்றும் கட்டுரை விபரிக்கின்றது.

அத்துடன் கட்டுரை கூறும் இன்னுமொரு விடயமும் என் கவனத்தைக்கவர்ந்தது. அது மானுடர் செய்யும் வேலைகள் அனைத்தையும் தானியங்கிகள் செய்வதால், தற்போது நிலவும் பொருளாதார நிலை முற்றாக அழிந்து, எல்லாருக்கும் எல்லாப்பொருள்களும், சேவைகளும் கிடைக்க வழி பிறக்குமாம்.

•Last Updated on ••Sunday•, 31 •January• 2016 07:36•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 147: எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூல் பதிவு பற்றி....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 147: எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூல் பதிவு பற்றி....எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் தனது முகநூல் பதிவொன்றில் விமர்சனம் பற்றிக்குறிப்பிடும்பொழுது குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் என் கவனத்தைக்கவர்ந்தது. அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: "டானியல் யார் ..அவரது கொள்கை என்ன என்பது உங்களுக்குத் தெரியும் வீரகேசரி நிறுவனம் யாருடையது என்றும் உங்களுக்குத்தெரியும்..... அந்த நிறுவனம் டானியலின் நாவலை வெளியிடுகிற தென்றால் ஒன்று வீரகேசரி டானியல் பக்கம் மாறி இருக்கவேண்டும் அல்லது டானியல் வீரகேசரியின் பக்கம் மாறி இருக்கவேண்டும்.. இதில் யார் யார் பக்கம் மாறியுள்ளார்கள் என்பதை நீங்களே தீர்மானியுங்கள் என்றேன். கூட்டம் நிசப்தமாக இருந்தது."

இருவருமே ஒருவர் ஒருவர் பக்கம் மாறியிருக்க வேண்டுமென்று எந்தவிதக் கட்டாயமுமில்லை. டானியலுக்குத் தன் படைப்பு பல வாசகர்களிடம் செல்ல வேண்டும். வீரகேசரி நிறுவனத்துக்கு எந்தவொரு படைப்பும் இலாபம் ஈட்டி வருமானத்தைத்தர வேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் பாவித்துக்கொள்கின்றார்கள். ஆனால் டானியல் வீரகேசரி நிறுவனத்துக்காகத் தன் படைப்பின் உள்ளடக்கத்தை அல்லது வரிகளை மாற்றிச் சமரசம் செய்திருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

எவ்வளவோ நல்ல மார்க்சிய நூல்களை மேற்கு நாடுகளின். இலாபம் ஈட்டிச் சம்பாதிப்பதையே அடிப்படையாகக்கொண்ட பதிப்பகங்கள் பல வெளியிட்டுள்ளன. மார்க்சின் மூலதனம், மார்க்சின் வரலாறு போன்றவற்றையெல்லாம் , கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை எல்லாவற்றையும் அவை வெளியிட்டுள்ளன. அதற்காக அந்நிறுவனங்கள் எல்லாம் மார்க்சியத்தத்துவத்துக்குத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டுவிட்டன என்று கூற முடியுமா?

•Last Updated on ••Friday•, 29 •January• 2016 21:56•• •Read more...•
 

இலங்கை அரசியல்: இலங்கையின் மிகவும் மோசமான தலைவர்கள் இருவர்!

•E-mail• •Print• •PDF•

'தம்மிஷ்ட்டர்' ஜே.ஆர்.ஜெயவர்த்தனே.மகிந்த ராஜபக்சஇலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்று வரையிலான காலகட்டத்தில், இலங்கையின் ஆட்சிக்கட்டிலில் இருந்தவர்களில் மிகவும் கீழ்த்தரமான அல்லது மோசமான தலைவர்களாக நான் கருதும் இருவர்:

1. ஜே.ஆர்.ஜெயவர்த்தனே
2. மகிந்த ராஜபக்ச


ஏன் ஜே,ஆர்?

1. ஜே.ஆர். ஐம்பதுகளின் இறுதியில் கண்டிக்குப்பாத யாத்திரை சென்று பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக்கிழிக்கக் காரணமாகவிருந்தவர்.

2. 1977இல் பிரதமராகப் பதவியேற்றதும், நடைபெற்ற இனக்கலவரத்தின் போது 'போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்' என்று முழங்கிக் கலவரத்தைப்பற்றியெரிய வைத்தவர்.

3. 'தர்மிஷ்ட்டர்' என்று தன்னை அழைத்துக்கொள்வதை விரும்பும் இவர் தம்மிஷ்ட்டராகி, சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதியாகத்தன்னைப்பிரகடனப்படுத்தி, தன் ஆட்சிக்காலத்தை அதிகரித்தவர்.

4. சிறிலங்காவின் முதலாவது ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி பெற்ற ஜே.ஆர். தன் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் தன் கட்சியைச்சேர்ந்த அமைச்சர்கள் பலரின் ஆதரவுடன் ( குறிப்பாக சிறில் மத்தியூ வெளிப்படையாகவே தமிழர்களுக்கெதிராக இனவாதத்தை நிகழ்த்தி வந்தார்) தமிழர்களுக்கெதிராக மிகப்பெரிய இனக்கலவரத்தை 1983இல் ஏற்படுத்தி, இலங்கை அரசுக்கெதிரான தமிழர்களின் ஆயுதப்போராட்டம் சர்வதேசப்பரிமாணங்கள் பெற்று வெடிக்கக்காரணமாகவிருந்தவர்.

•Last Updated on ••Friday•, 29 •January• 2016 23:02•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 146 : சரத்சந்திரரின் தேவதாஸ் பற்றி...

•E-mail• •Print• •PDF•

சரத்சந்திரரின் தேவதாஸ்சரத்சந்திரர்அண்மையில் மறைந்த எழுத்தாளரும், பிரபல மொழிபெயர்ப்பாளருமான சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில்  வெளியான வங்க நாவல்கள் அல்லது படைப்புகள் எதனையாவது எங்கு கண்டாலும் எடுத்து வாசிக்கத்தவறுவதேயில்லை. அவரது மொழிபெயர்ப்பில் வெளியான வங்க நாவலான 'நீல கண்டப்பறவையைத்தேடி ' வாசித்ததிலிருந்து ஆரம்பித்த என் விருப்பங்களில் இதுவுமொன்று. மொழிபெயர்ப்பு என்பதே தெரியாத வகையில் அற்புதமாக விளங்குபவை இவரது மொழிபெயர்ப்புகள். அதுவே இவரது மொழிபெயர்ப்பின் சிறப்பும் கூட.

இவரைப்போல் இன்னுமொருவர் ஞாபகமும் கூட வருகிறது. எழுபதுகளில் என் மாணவப்பருவத்தில் கா.ஶ்ரீ.ஶ்ரீ.யின் மொழிபெயர்ப்பில் வெளியான பிரபல மராட்டிய நாவலாசிரியரான காண்டேகரின் படைப்புகளை ஒரு வித வெறியுடன் தேடிப்பிடித்து வாசித்திருக்கின்றேன். காண்டேகரின் நாவல்களில் வரும் 'வாழ்க்கையென்றால் புயல்' போன்ற வசனங்களை விரும்பி வாசித்த அப்பருவத்து நினைவுகள் இப்பொழுதும் அவ்வப்போது தோன்றுவதுண்டு.

அண்மையில் டொராண்டோவிலுள்ள பொதுசன நூலகத்தின் ஸ்கார்பரோ கிளையொன்றில் சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளியான தேவதாஸ் நாவலின் பிரதியொன்றைக்கண்டபோது , அம்மொழிபெயர்ப்பு சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளியான காரணத்தினால் எடுத்து வாசிக்க விரும்பி இரவல் பெற்று வந்தேன். , 'நல்லநிலம்' பதிப்பக வெளியீடாக வெளீவந்த பிரதி இது.  தேவதாஸ் நாவலை எழுத்தாளரும் , மொழிபெயர்ப்பாளருமான த.நா.குமாரசாமியும் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார். ஆனால் அந்த மொழிபெயர்ப்பினை நானின்னும் வாசிக்கவில்லை.

ஏற்கனவே திரைப்படம் மூலம் எல்லாருக்கும் நன்கு அறிமுகமான கதை. வாசிப்பதில் அப்படியென்ன பெரிதாக இருக்கப்போகின்றது என்றொரு எண்ணமும் கூட எழுந்தாலும். மொழிபெயர்ப்பாளரின் மேலிருந்த விருப்பு காரணமாக எடுத்து வந்து வாசித்தேன்.

சிறிய நாவல். விரிந்த , ஐந்நூறு பக்கங்களைக்கடந்த பெரிய நாவல்களிலொன்றல்ல. மானுட உளவியல் போராட்டங்களை விரிவாக, பக்கம் பக்கமாக விவரித்துச்சொல்லும் படைப்புமல்ல. எனக்கு அதிகம் பிடித்த இயற்கை வர்ணனைகள் நிறைந்த நாவலுமல்ல. ஆனாலும் வாசித்த பொழுது முக்கியமாக நாவலின் முடிவினை வந்தடைந்த பொழுது நெஞ்சினை அதிர வைத்த படைப்பு சரச்சந்திரரின் தேவதாஸ்.

ஏன் இந்தப்படைப்பு மிகுந்த வரவேற்பினையும், ரோமியோ-யூலியட், லைலா- மஜ்னு , அம்பிகாபதி- அமராவதி வரிசையில் மக்கள் மனதில் நிலையான இடத்தைப்பெற்றது என்று சிந்தனையோடியது.

•Last Updated on ••Wednesday•, 27 •January• 2016 02:28•• •Read more...•
 

இறுதிக்கட்டத்தில் 'குடிவரவாளன்'!

•E-mail• •Print• •PDF•

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

அப்பாடா! ஒரு வழியாக எனது 'குடிவரவாளன்' நாவலை இயலுமானவரையில் பிழை திருத்தி ஓவியா பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன். பிழை திருத்துவது போல் மிகவும் சிரமமான காரியம் வேறொன்றுமில்லை என்றே தெரிகிறது. ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு பிழை தப்பிப்பிழைத்து விடும் அதிசயத்தை என்னவென்பது. இந்நூலைத் தமிழகத்தில் வெளியிடும் ஓவியா பதிப்பகத்துக்கும், அதன் உரிமையாளர் திரு. வதிலைப்பிரபா அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

83 இனக்கலவரத்தைத்தொடர்ந்து அகதியாகப்புகலிடம் நாடிப்புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழ் அகதியொருவன் எவ்விதம் சட்டவிரோதக்குடிவரவாளனாக நியூயார்க் மாநகரில் சுமார் ஒரு வருடம் வரையில் இருப்பினை எதிர்கொண்டு தப்பிப்பிழைக்கின்றான் என்பதை விபரிக்கும் நாவல் இது.

நாவலின் ஆரம்பத்தில் சில அத்தியாயங்கள் 83 இனக்கலவர நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் அத்தியாயங்களாக இருந்தபோதிலும், நாவல் முழுவதும் புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த ,மண்ணையே கதைக்களமாகக்கொண்டு, அங்குள்ள பல்வகை மாந்தர்களைப்பாத்திரங்களாகவும் கொண்டு நடைபோடுகிறது. அந்த வகையில் முக்கியமானதோர் ஆவணமாகவும் இந்த நாவல் நிச்சயம் விளங்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஏற்கனவே எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டு, என் மகள் தமயந்தியால் சரி, பிழை பார்க்கப்பட்டு வெளியிடுவதற்குத் தயார் நிலையிலுள்ளது. அதனை மின்னூல் வடிவில் என் வலைப்பதிவான http://vngiritharan23.wordpress.com தளத்தில் வாசிக்கலாம். காலம், நேரம் கூடி வரின் அம்மொழிபெயர்ப்பும் நூலுருப்பெறும்.

விரைவில் 'குடிவரவாளன்' தமிழகத்தில் வெளிவரும். நூல் வெளிவந்ததும் நூல் பற்றிய மேலதிகத்தகவல்களை அறியத்தருவேன். ஓவியா பதிப்பகத்துக்கும் அதன் உரிமையாளர் திரு. வதிலைப்பிரபா அவர்களுக்கு மீண்டுமொருமுறை நன்றி!

•Last Updated on ••Tuesday•, 26 •January• 2016 06:59•• •Read more...•
 

புலம்பெயர் தமிழர்தம் படைப்புகள் 1: பனியும் பனையும் - புகலிடக்கதைக்களங்களையும், பாத்திரங்களையும் உள்ளடக்கிய புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் புனைகதைகளின் தொகுப்பு. -

•E-mail• •Print• •PDF•

புலம்பெயர் தமிழர்தம் படைப்புகள் 1: பனியும் பனையும் - புகலிடக்கதைகளளங்களையும், பாத்திரங்களையும் உள்ளடக்கிய புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் புனைகதைகளின் தொகுப்பு. - வ.ந.கிரிதரன் - வாசிப்பும், யோசிப்பும் 144 : பழைய புத்தக விற்பனையில்.....; புகலிடப்படைப்புகளைப்பற்றி...; "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!" ;முகநூல் பதிவுகள் பற்றி....இத்தொகுப்பிலுள்ள 39 கதைகளைப்பற்றியும் சுருக்கமான குறிப்புகளை அவ்வப்போது  பதிவு செய்யப்போகின்றேன். 1994இல் வெளியான இத்தொகுதி பற்றிய முழுமையானதொரு ஆய்வுக்கட்டுரைக்கு முதற்படியாக இவ்விதம் செய்வது பயனுள்ளது என்பது என் கருத்து. இது போல் தொடர்ந்தும் வாசிக்கவுள்ள அனைத்துப் புகலிடத்தமிழ்க் கதைகள் பற்றிய குறிப்புகளையும் அவ்வப்போது பதிவு செய்வேன். காரணம்: புகலிடம் நாடிப்புலம் பெயர்ந்தவர்களின் கதைகள் புகலிடக் கதைகளங்களை உள்ளடக்கியுள்ளனவா அல்லது இழந்த மண் மீதான கழிவிரக்கங்களை மட்டுமே வெளிப்படுத்துகின்றனவா என்பதை அறியும் பொருட்டுத்தான். தொடர்புகள் காரணமாகத் தமக்குக் கிடைக்கும் புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் ஒரு சில கதைகளை மட்டும் படித்துவிட்டுப் புலம்பெயர் தமிழர் படைப்புகள் புகலிடக் கதைக்களங்களை, பாத்திரங்களை வெளிப்படுத்தவில்லை என்று கிளிப்பிள்ளைபோல் கூறிவரும் கூற்றுகளில் எவ்வளவு உண்மையுள்ளது என்பதை ஆராய்வதும் இவ்விதமான என் பதிவுகளுக்கு முக்கிய காரணங்களிலொன்றாகும்.

கதை ஒன்று:  'பனியும், பனையும்" தொகுப்பில் முதற் தொகுதிக்கதைகள் அவுஸ்திரேலியக் கதைகள். மொத்தம்: ஒன்பது. முதலாவது கதையின் தலைப்பு: ...பனையும். எழுதியவர்: சந்திரிகா ரஞ்சன். அச்சிறுகதை பற்றிச்சிறிது பார்ப்போம்:

'பனியும், பனையும்': ஆஸ்திரேலியாக் கதைகள் 1- சந்திரிகா ரஞ்சனின் '...பனையும்'.

இந்தக்கதை கூறும் பொருள்தானென்ன? நிறுவனமொன்றில் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை பார்க்கும் இலங்கைத்தமிழர் ஒருவரின் பார்வையில் கதை கூறப்படுகிறது. கதை சொல்லி தன்னைப்பற்றிக் கதையின் தொடக்கத்தில் பின்வருமாறு கூறுகின்றார்:

•Last Updated on ••Saturday•, 23 •January• 2016 23:51•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 145: புகலிடப்படைப்புகளைப்பற்றி...

•E-mail• •Print• •PDF•

 வாசிப்பும், யோசிப்பும் 144 : பழைய புத்தக விற்பனையில்.....; புகலிடப்படைப்புகளைப்பற்றி...; "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!" ;முகநூல் பதிவுகள் பற்றி....'எதுவரை' இணைய இதழில் எழுத்தாளர் முருகபூபதியுடனான நேர்காணலொன்று  வெளியாகியுள்ளது. அதனைக்கண்டவர் எழுத்தாளர் கோமகன். அந்நேர்காணலில் ஒரு கேள்வி. அது:

"புலம் பெயர் இலக்கிய சூழலில் இருந்து வெளியாகின்ற படைப்புகளில் ஒரு சிலதைத்தவிர அநேகமான படைப்புகள் மலரும் நினைவுகளையொத்த படைப்புகளாகவே வெளிவருகின்றன. இவர்களால் ஏன் புலம் பெயர் கதைக்களங்களையும், கதைமாந்தர்களையும் வாசகர்களுக்குக் கொடுக்க முடியாது இருக்கிறது ?"

இவ்விதமான கேள்விகளை எதிர்கொள்ளும்போதுகளில் நான் எனக்குள் சிரித்துக்கொள்வதுண்டு. இந்தக்கேள்வியில் கூறப்பட்டிருப்பதுபோல்தான் உண்மையான நிலை உள்ளதா? 'இவர்களால் ஏன் புலம் பெயர் கதைக்களங்களையும், கதைமாந்தர்களையும் வாசகர்களுக்குக் கொடுக்க முடியாது இருக்கிறது' என்ற கூற்றில் எவ்வளவு உண்மை உள்ளது. இவ்விதமான கேள்விகளுக்கு முக்கிய காரணம்: இவ்விதமான கேள்விகளைக்கேட்பவர்கள் குறிப்பிட்ட சிலரின் படைப்புகளையே முக்கியமான , தரமான படைப்புகளாகக்கருதிக்கொண்டு, அவர்களது படைப்புகளை மட்டுமே படிப்பார்கள். அவ்விதம் படிப்பதால் , இவர்களால் ஏனைய படைப்பாளிகள் பலரின் படைப்புகளைப்படிக்க முடிவதில்லை என்றெண்ணுகின்றேன். உண்மையில் புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பல புலம் பெயர் கதைக்களங்களையும், மாந்தர்களையும் கொண்டு படைக்கப்பட்டுள்ளன.

புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத்தாங்கி வெளியான தொகுப்புகளில் முதலாவதும், முக்கியத்துவம் பெற்றதுமான தொகுப்பு: 'பனியும், பனையும்' அதிலுள்ள கதைகளை ஒருமுறை இந்த நேர்காணலைக்கண்ட கோமகன் வாசித்துப் பார்த்தால் தெரியும் அவற்றில் எவ்வளவு கதைகள் புகலிடச்சூழலைக் கதைக்களங்களாக்கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றன என்று.

•Last Updated on ••Friday•, 22 •January• 2016 02:33•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 144 : பழைய புத்தக விற்பனையில்....; "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!" ;முகநூல் பதிவுகள் பற்றி....;'பனியும், பனையும்' தொகுப்பு பற்றி...

•E-mail• •Print• •PDF•

பழைய புத்தக விற்பனையில்.....

 வாசிப்பும், யோசிப்பும் 144 : பழைய புத்தக விற்பனையில்.....; புகலிடப்படைப்புகளைப்பற்றி...; "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!" ;முகநூல் பதிவுகள் பற்றி....எனக்கொரு பழக்கமுள்ளது. அது எங்காவது பாவித்த பழைய புத்தகங்கள் விற்பனைக்குப் போட்டிருந்தால் , அவற்றில் பிடித்த புத்தகங்களை வாங்குவதுதான். இங்குள்ள கிளை நூலகங்களுக்கு ஒரு பழக்கமுள்ளது. நல்ல தரமான புத்தகங்களைக்கூட, அவை அதிகம் பாவிக்கப்படாமலிருந்தால் விற்பனைக்குப்போட்டு விடுவார்கள். ஏன் அவற்றைப் பிற கிளைகளுக்கு அனுப்பக்கூடாது? எனென்றால் நல்ல நிலையிலுள்ள பல புத்தகங்களை இவ்விதம் விற்பனைக்குப்போட்டிருப்பதைப்பல தடவைகள் பார்த்திருக்கின்றேன்.

நேற்றும் ஸ்கார்பரோவிலுள்ள ஏஜின்கோர்ட் கிளைக்குச் சென்றிருந்தபொழுது அங்கும் புத்தகங்கள் பலவற்றை விற்பனைக்குப் போட்டிருந்தார்கள். அவற்றிலிருந்து ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் வெளியான உலகச்சிறுகதைத்தொகுப்பொன்றையும், க.நா.சு மொழிபெயர்ப்பில் வெளியான Animal Farm நூலின் தமிழ் மொழிபெயர்ப்பினையும் வாங்கினேன். ஒவ்வொன்றும் விலை ஒரு டாலர்தான். அம்ருத பதிப்பக வெளியீடாக வெளிவந்த நூல் 'மிருகங்களின் பண்ணை'. நூலின் அட்டையில் 'மிருகங்களின் பண்ணை' என்று தலைப்பினையிட்டிருந்தவர்கள், நூலின் உள்ளே 'மிருகங்கள் பண்ணை' என்று குறிப்பிடிருக்கின்றார்கள்.

அங்கிருந்த மேலுமொரு தமிழ்ப்புத்தகமும் என் கவனத்தைக்கவர்ந்தது. அது அமெரிக்காவில் வாழும் பெண் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைத்தொகுப்பு. ஏற்கனவே அவரது படைப்புகளை வாசித்திருக்கின்றேன். அந்தத்தொகுப்பு நூலை எடுத்துப் புரட்டிப்பார்த்தேன். நூலின் உள்ளே, முதல் பக்கத்தில் முத்து முத்தான எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த ஒரு விடயம் என் கவனத்தை ஈர்த்தது. அந்த நூலின் ஆசிரியரே அதிலிருந்த குறிப்பினை எழுதியிருந்தார். அந்தக் குறிப்பிலிருந்து ஒரு விடயத்தை அறிய முடிந்தது. அந்த நூலினை அவர் இங்கு, கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் ஒருவருக்கு அன்பளிப்பாகப் பரிசளித்திருக்கின்றாரென்பதை அக்குறிப்பு வெளிப்படுத்தியது. அந்தக் கனடா எழுத்தாளர் இங்கிருந்து வெளியாகும் சஞ்சிகையொன்றின் ஆசிரியரென்பதும் தெரிந்திருந்தது. அத்துடன் அவரது சஞ்சிகையில் அமெரிக்காவில் வசிக்கும் அந்தப்பெண் எழுத்தாளர் எழுதியிருக்கின்றார் என்பதையும், அதற்காக அவர் கனடா எழுத்தாளருக்கு நன்றி கூறுவதையும் அந்தக் குறிப்பு வெளிப்படுத்தியது.

•Last Updated on ••Friday•, 22 •January• 2016 02:33•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 143 : பரதன் நவரத்தினத்தின் 'மரண தேவன்' முகநூல் பதிவு பற்றி....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும்!அண்மையில் பரதன் நவரத்தினம் தனது முகநூல் பதிவாக 'மரணதேவன்' என்னும் சிறு கதையொன்றினைப் பதிவு செய்திருந்தார். டொரான்டோ பாதாள இரயிலில் பயணிக்குமோர் இளைஞனை, அந்த இரயில் முன் விழுந்த மரணித்த மானுடர் ஒருவரின் நிலை எவ்விதம் பாதிக்கின்றது என்பதைப்பற்றிய சிறியதொரு விபரிப்பே அக்கதை. கதை சிறியதாக இருந்தாலும் வாசிப்பவரை ஈர்க்கும் தன்மை மிக்கது. மழை பெய்யும் இரவொன்றில் , கடையொன்றில் பணியாற்றும் தொழிலாளி ஒருவர், வீடு திரும்புவதை விபரிக்கும் கதை. அவ்விதம் இரவில் தனியே திரும்பும்போது , நகரத்து இரவில் ஒருவர் அடையும் பயப்பிராந்திகளையும் அழகாக விபரித்திருக்கின்றார். வாசிப்பவரையும் அந்தப்பயப்பிராந்தி பீடித்து விடுவதுதான் அவரது எழுத்தின் சிறப்பு.

மேலும் நல்ல எழுத்து நடை. கூடவே சூழலை அவதானிக்கும் ஆற்றலுடன் கூடிய சம்பவ விபரிப்பு. இவை அனைத்தும் சேர்ந்து நல்லதொரு சிறுகதையாக மலர்ந்திருக்கின்றது. இன்னுமொன்று நகரத்தின் தன்மையினை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ள எழுத்து. பகலில் வெறும் கட்டடங்களும், விரையும் மனிதர்களுமாகக்காட்சியளிக்கும் நகரின் இரவு வித்தியாசமானது. விபரிக்கும் வரிகள் சிறக்கின்றன.

'டிராகுலா'த்திரைப்படங்களில் அல்லது அது போன்ற திகிலூட்டும் திரைப்படங்களில் ஒவ்வொரு சிறு சிறு சம்பவத்தையும் பார்வையாளரின் அச்சத்தினைப் படிப்படியாக அதிகரிக்கும் வண்ணம் அமைத்திருப்பார்கள். அது போன்ற எழுத்துப்பாணியினைப் பரதன் இக்கதையில் கையாண்டிருக்கின்றார்.

எழுத்தில் சிறப்புண்டு. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். ஒரு பதிவுக்காக அவரது அக்கதையினை இப்பதிவின் இறுதியில் பதிவு செய்திருக்கின்றேன். நீங்களும் ஒருமுறை வாசித்து அந்த இரவில் அவரது கதையின் நாயகன் அடைந்த உணர்வினை நீங்களும் அடையுங்கள்.

•Last Updated on ••Saturday•, 16 •January• 2016 07:50•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 142 : றியாஸ் குரானாவின் தமயந்தி பற்றிய குறிப்பு பற்றி....

•E-mail• •Print• •PDF•

தமயந்திஅண்மையில் றியாஸ் குரானா தமயந்தியின் படைப்புகளைப்பற்றிப்பின்வருமாறு தன் முகநூல் குறிப்பொன்றில் கூறியிருந்தார்:

"சில விசயங்கள் ஆச்சரியமானதுதான். அவ்வப்போது உதிரியாக இதழ்களில் சில கதைகளைப் படித்திருக்கிறேன். ஓரிண்டு கவிதைகளும் அதிலடங்கும். ஆனால், அவர் ஈழத்து இலக்கியப் பரப்பில் முக்கியமானவர்தான். ஆர்வமூட்டும் கதைசொல்லி. அவருடைய கதைகள், கவிதைகள் தொகுப்பாக்கம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஈழத்து இலக்கிய வெளியில் தொகுப்பாக்கம் செய்வதே பெரும் சவாலான விசயம். சிலர் அதை அவ்வளவாக பொருட்படுத்துவதே இல்லை. "

இங்கு விமர்சகர்கள் என்ற பெயரில் உலா வருபவர்களில் பலர் தம் அங்கீகாரத்துக்காக தம் சிஷ்யகோடிகளாகச்சிலரைத்தூக்கிப் பிடிப்பார்கள். சிஷ்யகோடிகளும் அவர்களைத்தூக்கிப்பிடிப்பார்கள். ஒருவரையொருவர் முதுகு சொறிந்து கொள்வதில் குளிர்காய்வார்கள். இவர்கள் வெளியிடும் தொகுப்புகளும் அவ்விதமாகவே இருப்பதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் யாருக்கும் அடி பணியாத, வளைந்து கொடுக்காதவர்களை இந்த முதுகு சொறியும் கூட்டம் கண்டு கொள்வதில்லை. மேலும் அவர்களும் இவர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதில்லை. மேலும் வளைந்து கொடுக்காதவர்களைப்பற்றி அங்கீகாரத்தை நாடுமொரு விமர்சகர்  தூக்கி வைத்து எழுதினாலும், தம்மை அவ்விதம் எழுதி விட்டார்களே என்று வளையாதவர்கள் பதிலுக்கு அவர்களைத்தூக்கி வைப்பதில்லை வழக்கமான சிஷ்யகோடிகளைப்போல். இதனால் அவ்வகை விமர்சகர்களுக்கு எந்தவித ஆதாயமுமில்லை. ஆனால் உண்மையான படைப்பாளிகளை அவர்களது படைப்புகளினூடு தரமான வாசகர்கள் கண்டு கொள்வார்கள். இன்று நீங்கள் கண்டு கொண்டதைப்போல. அவ்விதமான படைப்புகள் கால ஓட்டத்தில் நின்று பிடிக்கும்.

மேலும் இக்காலத்தில்  தொகுப்புகள் வரவில்லையே  என்று குறைபடுபவர்கள் தேடுதலற்றவர்கள். அதிகமான படைப்புகளை இணையத்தில் காண முடியும். தேடினால் இணையத்தில் நிறையவே கிடைக்கிறது. தொகுப்புகள் வந்தால்தான் வாசிப்பேன் என்று அடம் பிடிக்காதீர்கள். இணையத்தில் தேடிப்பாருங்கள். கண்டு பிடியுங்கள். வாசியுங்கள். இன்று ப்ரதிலிபி போன்ற தளங்களின் எழுத்தாளர்களின் மின்னூல்கள் வெளியாகின்றன. பல எழுத்தாளர்கள் வலைப்பதிவுகளை வைத்திருக்கின்றார்கள். பலர் இணைய இதழ்களில் எழுதி வருகின்றார்கள். தொகுப்புகளில் வரும் படைப்புகளை விடப்பல மடங்கு அதிகமான படைப்புகளை இணையத்தில் தேடுதல் மிக்க ஆய்வாளர் ஒருவரால் கண்டு பிடிக்க முடியும்.

•Last Updated on ••Saturday•, 16 •January• 2016 07:49•• •Read more...•
 

அழியாத கோலங்கள்: நா.பா.வின் 'குறிஞ்சி மலர்' - நிலவைப் பிடித்துச் - சிறு கறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதிந்த முகம்.| பூங்குழலி - அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?

•E-mail• •Print• •PDF•

1. நா.பா.வின் 'குறிஞ்சி மலர்' - நிலவைப் பிடித்துச் - சிறு கறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதிந்த முகம்,

நா.பார்த்தசாரதியின் 'குறிஞ்சி மலர்'நா.பார்த்தசாரதிஎன் பதின்ம வயதுகளில் எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் நாவல்களை நான் இரசித்து வாசித்திருக்கின்றேன். அவர் தமிழ்ப்பண்டிதராதலால், பழந்தமிழ் இலக்கியத்தில் அவருக்குள்ள புலமையினை அவரது படைப்புகளினூடு உணர முடியும். சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் எனத்தமிழரின் பல்வகை இலக்கியப்படைப்புகளின் தாக்கங்களும் அவற்றினூடு விரவிக்கிடக்கும்.

பாத்திரப்படைப்பு, மொழி ஆகியவற்றுக்காக அவரது படைப்புகளை நான் என் பதின்ம வயதுகளில் விரும்பி வாசித்திருக்கின்றேன். அவரது படைப்புகளில் வரும் மாந்தர்களெல்லாரும் , சாதாரண மானிடர்களை விட ஒரு படி மேலானவர்கள்; இலட்சிய நோக்கு மிக்கவர்கள்; குறிஞ்சி மலர், பொன் விலங்கு நாவல்களில் வரும் அரவிந்தன், பூரணி, சத்தியமூர்த்தி போன்றவர்கள். இது பற்றி அவரிடமே ஒருவர் கேள்வி கேட்டிருந்தபோது அதற்கு அவர் அவ்விதமான பாத்திரங்களை வைத்து எழுதுவதிலென்ன தவறு என்று கேட்டதை எங்கோ வாசித்திருக்கின்றேன்.

அவரது நாவல்கள் அதிகமானவற்றில் முடிவு அவலச்சுவையிலிருக்கும். [ இவரைப்போன்ற இன்னுமொருவர் அக்காலகட்டத்தில் கொடி கட்டிப்பறந்த எழுத்தாளர் ஜெகசிற்பியன். அவரது படைப்புகளும் பெரும்பாலும் துன்பத்திலேயே முடிவுறும்.]

எழுத்தாளர் நா.பா.வும் நல்ல கவிஞர்களிலொருவர். மணிவண்ணன் என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். அப்பெயரிலேயே ஆரம்பத்தில் கல்கியில் நாவல்களையும் படைத்து புகழடைந்தவவர் அவர்.

அவரது நாவலான குறிஞ்சி மலரில் நாயகனான அரவிந்தன் அவ்வப்போது தன் மனதிற்குகந்த நாயகியான பூரணியைப்பற்றி எழுதிய கவிதை வரிகள் ஆங்காங்கே நாவலில் வரும். அவரது படைப்புகளை விரும்பி வாசித்த காலகட்டத்தில் இவ்விதமாக குறிஞ்சி மலர் நாவலில் ஆங்காங்கே காணப்படும் அரவிந்தனின் கவிதை வரிகளையும் விரும்பி வாசித்ததை இப்பொழுதும் நினைத்துப்பார்க்கின்றேன்.

•Last Updated on ••Saturday•, 16 •January• 2016 02:54•• •Read more...•
 

பொங்கலோ! பொங்கல்! பொங்கலோ! பொங்கல்!

•E-mail• •Print• •PDF•

பொங்கலோ! பொங்கல்! பொங்கலோ! பொங்கல்!ஞாயிறு போற்றுதும்!
ஞாயிறு போற்றுதும்! இந்
நானிலம் காத்திடும்
ஞாயிறு போற்றுதும்!
ஞாயிறு போற்றுதும்!


நானறிந்த வரையில் தைப்பொங்கலை ஈழத்தமிழர்கள் யாவரும் தமிழர்தம் திருவிழாவாகத்தான் கொண்டாடி வருகின்றார்கள். அவ்விதமே தொடர்ந்தும் கொண்டாடுவோம். தமிழர்தம் திருவிழாக்களில் இந்தத்தைத்திருநாள் எனக்கு மிகவும் படித்த திருவிழா என்பேன். இவ்வுலகின் உயிர்களுக்குக் காரணமான இரவியினை நோக்கி, மானுடர்தம் வாழ்வுக்கு அத்தியாவசியமான உணவினை அளிக்கும் உழவரை எண்ணி,  உலகு இயந்திரமயமாகுவதற்கு முற்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை உழவருக்கும், அனைவருக்கும் பல்வகைகளில் உறுதுணையாகவிருந்துவரும்  மாடுகளைப்போற்றித் தமிழர் அனைவரும் (உழவருட்பட) வருடா வருடம் தம் நன்றியினைத்தெரிவிப்பதற்காகக்கொண்டாடும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

பொங்கல் என்றதும் என் பால்ய காலத்து நினைவுகள் படம் விரிக்கின்றன. அப்பொழுது நாம் வவுனியாவில் குடியிருந்தோம். பொங்கல் அன்று முற்றத்தில் புதுப்பானையில் அதிகாலையிலேயே எழுந்து , நீராடி, அம்மா பொங்குவதும், பொங்கும் சமயங்களில் சிறுவர்களாகிய நாம் வெடிகொளுத்தி மகிழ்வதும் இன்னும் நெஞ்சினில் படம் விரிக்கின்றன. எழுபதுகளில் ஈழத்தமிழர் வாழ்வில் ஏற்பட்ட அரசியல் ரீதியிலான மாற்றங்கள் ஏற்பட்டதைத்தொடர்ந்து இவ்விதமான திருவிழாக்களில் வெடி கொளுத்துவதும் இல்லாமலாகிப்போனது. என் பால்ய காலத்து வாழ்வில் இவ்விதமான திருவிழாக்களைக்கொண்டாடி மகிழ்ந்த காலமென்றால் அது நாம் வவுனியாவில் இருந்த காலம்தான். இவ்விதமான பண்டிகைக்காலங்களில் அக்காலகட்ட நினைவுகளை மீளவும் அசைபோடுவதும் வழக்கமாகிப்போனது.

•Last Updated on ••Thursday•, 14 •January• 2016 00:16•• •Read more...•
 

'காவியத்துக்கு ஒரு மஹாகவி!' - வ.ந.கிரிதரன் -

•E-mail• •Print• •PDF•

- கவிஞர் மஹாகவியின் பிறந்த தினம் ஜனவரி 9. அதனையொட்டிய பதிவிது.-

கண்மணியாள் காதை -- மஹாகவி -கவிஞர் மஹாகவி -
'காவியத்துக்கு ஒரு மஹாகவி' என்று அழைக்கப்படக்காரணமாக இருந்த காவியம் மஹாகவியின் 'கண்மணியாள் காதை' காவியம். அவலச்சுவை மிக்க காவியம். தீண்டாமைக்கொடுமையினை விபரிக்கும் குறுங்காவியமிது. கவிஞர் 'சடங்கு' என்று 'விவேகி'யில் எழுதிய தனது குறுங்காவியத்தின்  நாயகனான செல்லையாவை வைத்து , லடீஸ் வீரமணிக்காக வில்லுப்பாட்டாக , இன்னுமொரு கோணத்தில் எழுதிய துயர காவியம் 'கண்மணியாள் காதை' . குறுங்காவியமானாலும் அதில்வரும் பாத்திரங்களான கண்மணியாளையும், செல்லையனையும் படித்தவர்களால் மறக்கவே முடியாது. அவ்வளவிற்குப் பாத்திரப்படைப்பு நன்கு அமைந்திருந்த காவியமது. இக்காவியம் முதலில் அன்னை வெளியீட்டகம் (யாழ்ப்பாணம்) என்னும் பதிப்பகத்தால் நவம்பர் 1968இல் நூலாக வெளிவந்தது. மேலும் 'கண்மணியாள் காதை' தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் லடீஸ் வீரமணி குழுவினரால் வில்லுப்பாட்டாக மேடையேறியபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அது பற்றி 'ஈழநாடு' பத்திரிகையின் வாரமலரில் வெளிவந்த 'தேனி'யின் விமர்சனம்  'காவியத்துக்கு ஒரு மஹாகவி; வில்லுப்பாட்டுக்கு ஒரு வீரமணி' என்ற தலைப்புடன் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்படி 'கண்மணியாள் காதை'யும் எனக்கு மிகவும் பிடித்த காவியங்களிலொன்று. அதில்வரும் 'கண்மணி', 'செல்லையன்' ஆகியோர் மறக்க முடியாதவர்கள். ஒரு விதத்தில் வாசிக்கும்போது அதன் பெயரும், பாடு பொருளும், காவியத்தில் வரும் சில கவிதை வரிகளும் சிலப்பதிகாரத்தை நினைவுக்குக் கொண்டுவரும் குறுங்காவியமது. காவியத்தை இரு கூறுகளாகக் கவிஞர் பிரித்திருப்பார். முதலாம் கூறு: வெண்ணிலவு காவியத்தின் இன்பமான பக்கத்தை விபரித்தால், இரண்டாம் கூறான 'காரிருள்' காவியத்தின் துன்பகரமான பக்கத்தை விபரிக்கும்.  அக்காவியத்தில் என்னை மிகவும் கவர்ந்த வரிகளாகக் கீழுள்ளவற்றைக் குறிப்பிடலாம்:

"யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு
யாசகன் மன்ன னிடம் இருந்தோர்
பாழைப் பரிசு பெற் றான்!" எனக் கூறிடும்
பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு -
பாழைப் பரிசு பெற் றாலும், அப் பாலையைப்
பச்சைப் படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத னால், இன்று
வையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்!

•Last Updated on ••Saturday•, 09 •January• 2016 19:43•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 141 : பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி....

•E-mail• •Print• •PDF•

ஓவியம் - புதுவை ராமன்; நன்றி.மகாகவி பாரதியார் 'சுயசரிதை' என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார். பாரதியாரின் ஆளுமையை அறிந்து கொள்வதற்கு உதவும் கவிதைகளிலொன்று அவரது இந்தக்கவிதை. இதுவொரு நீண்ட கவிதை. கவிதையின் ஆரம்பம் "பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே." என்ற பட்டினத்துப்பிள்ளையாரின் கவிதை வரிகளுடன் ஆரம்பமாகின்றது. பாரதியார் தன்னைச் சித்தர்களிலொருவராகக்கருதுபவர். சித்தர்களிலொருவரான பட்டினத்தாரின் இருப்பு பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பமாகியிருப்பது ஒன்றினை நன்கு புலப்படுத்துகின்றது. அது பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனையினைத்தான். 'பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்னும் கூற்றுக்கேற்ப அவரது வாழ்வில் கடந்து போன இழப்புகளைப்பற்றிச் சுயசரிதை விபரிக்கின்றது. நிறைவேறாத பிள்ளைக்காதல் அதாவது மானுடரின் முதற் காதல், அவரது ஆங்கிலக்கல்வி கற்றல், அவரது திருமணம் மற்றும் அவரது தந்தை வியாபாரத்தில் நொடிந்துபோய் வறுமையுறல்போன்ற விடயங்களைக்கவிதை விபரிக்கின்றது ஆனால் இந்த வாழ்வே இவ்விதமானதொரு கனவுதான் என்பதை அவர் நன்கு புரிந்திருக்கின்றார். ஆனால் அதற்காக அவர் வாழ்விலிருந்து ஓடி, ஒதுங்கிப்போய் விட்டவரா?

இவ்விதமாக இழந்தவை பற்றியெல்லாம் விபரிக்கும் அவர், ஆரம்பத்தில் 'உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி லுங்கன வாகும்' என்று கூறும் அவர்,  தன் கவிதையின் இறுதியில் உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி னுங்கன வாகும்' என்று மானுட வாழ்வே ஒரு கனவு என்பார். ஆனால் அதற்காக , அதனை நினைத்து , நினைத்து வருந்துவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 'இதற்குநான் பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்? பண்டு போனதை எண்ணி யென்னாவது? சிலதி னங்கள் இருந்து மறைவதில் சிந்தை செய்தெவன் செத்திடு வானடா' என்று கூறித் தன் சுயசரிதையினை முடிப்பார்.

•Last Updated on ••Tuesday•, 05 •January• 2016 07:09•• •Read more...•
 

அழியாத கோலங்கள்: சாண்டில்யனின் கடல் புறா, ஓவியர் லதாவின் ஓவியங்களுடன்.

•E-mail• •Print• •PDF•

அக்காலகட்டத்தில் குமுதத்தில் வெளியான ஓரிரு   அத்தியாயங்களை (பாலூர்ப் பெருந்துறையில் இளைய பல்லவனின் வீர சாகசங்களை விபரிக்கும் ஓவியர் லதாவின் ஓவியங்களுடன் கூடிய)   வாசித்துவிட்டு வாசிப்பதற்காகத் தேடி அலைந்திருக்கின்றேன். அண்மையில் இணையத்தில் ஓரத்தநாடு கார்த்திக் என்னும் அன்பரின் வலைப்பதிவில் என் பால்ய காலத்தில் நான் வாசித்த பல வெகுசனப்படைப்புகளை மீண்டும் அவை தொடராக வெளிவந்தபோது வெளியான ஓவியங்களுடன் வாசிக்க முடிந்தது. அக்காலகட்டத்தில் கல்கி, விகடன், குமுதம், கலைமகள், தினமணிக்கதிரி, ராணி , கல்கண்டு என வெளியான வெகுசன இதழ்களில் தொடராக வெளிவந்த படைப்புகள் பலவற்றை நான் சேகரித்து, 'பைண்டு' செய்து வைத்திருந்தேன். அவையெல்லாம் 1983-2009 வரையில் ஈழத்தில் நிலவிய அரசியல் சூழலில் அழிந்து விட்டன. இந்நிலையில் அண்மையில் அன்பர் ஓரத்தநாடு கார்த்திக்கின் தளத்தில் பல படைப்புகளைக்கண்ட போது , அதுவும் வெளியானபோது வெளிவந்த ஓவியங்களுடன் பார்த்தபோது என் சிந்தனைக்குருவி மீண்டும் அந்தக்காலத்துக்கே சிறகடித்துச்சென்று விட்டது. அவ்விதம் வெளியான படைப்புகளில் ஒருபோதுமே சாண்டில்யனின் 'கடல்புறா'வினை என்னால் மறக்க முடியாது.

நான் ஆறாம் வகுப்பிலிருந்தே கல்கி, விகடனில் வெளியான படைப்புகளை வாசிக்கத்தொடங்கி விட்டேன். ஆனால் குமுதம் சஞ்சிகையில் வெளியான படைப்புகளை வாசிக்கத்தொடங்கியது வவுனியா மகாவித்தியாலயத்தில் அக்காலத்தில் என்னுடன் படித்துக்கொண்டிருந்த ரிஷாங்கன் என்னும் பால்யகாலத்து நண்பர் மூலம்தான். அவரது வீட்டில் அக்காலகட்டத்தில் குமுதம் சஞ்சிகையினை எடுத்துக்கொண்டிருந்தார்கள். எனவே அவர் அதில் வெளியான பி.வி.ஆரின் 'கூந்தலிலே ஒரு மலர்', சாண்டில்யனின் 'ராஜமுத்திரை', சித்திரக்கதையான 'கடற்கன்னி' ஆகியவற்றைப் பற்றிக்கூறியிருந்ததாக ஞாபகம். அல்லது அவை வெளிவந்த குமுதம் சஞ்சிகையினை எனக்கு அறிமுகம் செய்திருக்க வேண்டும். அதன்பின்னரே குமுதத்தின்பால் என் கவனம் திரும்பியது. அதன் பின்னர் ரிஷாங்கனை நான் சந்திக்கவில்லை. அவர் தற்போது மருத்துவராகப் பணிபுரிவதாகக்கேள்விப்படுகின்றேன். மருத்துவரான என் கடைசித்தங்கை அவரது பல்கலைக்கழகக்காலகட்டத்தில் ஒருமுறை அவரைச்சந்தித்திருப்பதாகக்கூறியிருக்கின்றார். முகநூல் மூலம் மீண்டும் அறிமுகமான என் பால்யகாலத்து நண்பர்களிலொருவரான சண்முகராஜாவும் ரிஷாங்கன் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிப்பதாகக் கூறியிருக்கின்றார்.

•Last Updated on ••Saturday•, 02 •January• 2016 06:56•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 140 : எழுத்தாளர் என்றால் யார்? யார்? முகநூலில் ஓர் அலசல்!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும்  140 : எழுத்தாளர் என்றால் யார்? யார்? முகநூலில் ஓர் அலசல்!எழுத்தாளர் பற்றி எழுத்தாளர் குப்பிளான் சண்முகம் தனது முகநூற் பதிவொன்றில் "கதை. கவிதை, கட்டுரை எழுதுபவர்களையே "எழுத்தாளர்" எனக் கொள்லாமென நம்பியிருந்தேன். அண்மைகாலங்களில் கட்டுரை எழுதுபவர்களுயும் எழுத்தாளர் எனக் கொள்ளலாமென ஒரு கருத்து மேலோங்கி இருக்கிறது என்னால் இதுபற்றி தீர்மானிக்க முடியாமல் இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?." என்றொரு வினாவினை எழுப்பியிருந்தார். அது பற்றிய எனது சிந்தனை கீழே.

எழுத்தாளன் என்பதற்குப் பல அர்த்தங்களுள்ளன. எழுத்தை ஆள்பவர் என்பது ஓர் அர்த்தம். ஆனால் எழுத்தாளன் என்னும் சொல் உருவானது அந்த அர்த்தத்தில் மட்டுமல்ல. ஆளன் என்பது விகுதி. அந்த விகுதியைக்கொண்டு அமைக்கப்பட்ட சொல்தான் எழுத்தாளன் என்பதுவும். அந்த அர்த்தத்தில் இங்கு எழுத்து என்பதுடன் ஆளன் என்னும் விகுதியைச்சேர்த்து உருவாக்கப்பட்ட சொல்லாக எழுத்தாளன் வருகின்றது. உதாரணமாக பேச்சு + ஆளன் = பேச்சாளன். எனவே கட்டுரை மட்டுமல்ல எழுத்தின் எந்த வடிவத்தினையும் கையாள்பவனை எழுத்தாளன் என்றும், பொதுவாக எழுத்தாளர் என்று அழைப்பதில் எந்த விதத்தவறுமில்லை.

Rajaji Rajagopalan ஆளன் என்னும் விகுதிக்கு நீங்கள் தந்த விளக்கம் அர்த்தமுள்ளது. எழுதும் எல்லாரும் எழுத்தையே தமது சிந்தனைக்கு உருவம் கொடுக்கும் ஆயுதமாகக் கொள்கிறார்கள்.

Sri Sritharan ஆங்கிலத்தில் writer, author என இரண்டு வெவ்வேறு சொற்கள் உள்ளன. https://en.wikipedia.org/wiki/Author

Jeeva Kumaran எனக்கு அறிவு தெரிந்த காலத்தில் புனைவு இலக்கியம் (FICTION: சிறறுதை-கதை-நாவல்-கவிதை-நாடகம்) போன்ற இலக்கிய வடிவங்களைப் படைத்தவர்களை ஆக்க (CREATIVE WRITERS) எழுத்தாளர்கள் என்றும்.... மற்றைய வகை நூல்களை எழுதியவர்களை நூலாசிரியர் என்றும் அழைத்ததாக ஞாபகம்.

F.ex: Writer Mr. Jeyakanthan: Authour Mr. Sivathamby

ஆனால் பத்தி எழுத்துகளும்... புனைவு இலக்கிய ஆசிரியர்களே பத்தி எழுத்துக்குள் வந்ததும் அவர்களை அங்கே வேறுபடுத்தாது அதே எழுத்தாளர்கள் தலையங்கத்துடன் பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. இன்று எழுதுபவன் எல்லாம் எழுத்தாளராயும் கவிஞனும் என்றாகி விட்டது என்று நினைக்கின்றேன்

•Last Updated on ••Friday•, 01 •January• 2016 02:40•• •Read more...•
 

இன்று புதிதாய்ப்பிறந்தோமென்று இன்புற்றிருப்போம்!

•E-mail• •Print• •PDF•

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

இன்று பிறக்குமிப்புத்தாண்டில்
இன்று புதிதாய்ப்பிறந்தோமென்று
இன்புற்றிருப்போம்!
கொன்றழிக்கும் கவலை நீக்கி,
எண்ணமதைத் திண்ணமுற
இசைத்துக்கொண்டு,
மனதினில் உறுதி கொண்டு,
வாக்கினில் இனிமையேற்றி,
நினைவு நல்லது நாடி,
மண் பயனுற வேண்டி,
இன்று புதிதாய்ப்பிறந்தோமென்று
இன்புற்றிருப்போம்!
இன்புற்றிருப்போம் இனிவருமாண்டில்.
இன்புற்றிருப்போம்! இன்புற்றிருப்போம்!
பதிவுகள் வாசகர்கள் அனைவருக்குமெம்
அகம் திறந்து வாழ்த்துகின்றோம்:
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

பதிவுகள்' வாசகர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் தனது இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. அனைவரது வாழ்விலும் அவர்தம் எண்ணங்கள் இப்புதிய ஆண்டில் ஈடேறட்டும். தொடர்ந்தும் தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் ஈழத்தமிழர்கள் வாழ்வில் இந்த வருடமாவது நல்லதொரு முடிவினைக்கொண்டு வரட்டும். அல்லவற்றைத் தவிர்த்து, நல்லவற்றை நாடிப் பயணங்கள் தொடரட்டும்; பிறப்பு சிறக்கட்டும்

•Last Updated on ••Sunday•, 03 •January• 2016 18:27•• •Read more...•
 

அழியாத கோலங்கள் : யாழ் றியோவில் பார்த்த சார்ல்ஸ் புரோன்சனின் 'ரெட் சன்' (Red Sun)

•E-mail• •Print• •PDF•

அழியாத கோலங்கள் 1 : யாழ் றியோவில் பார்த்த சார்ல்ஸ் புரோன்சனின் 'ரெட் சன்' (Red Sun)

என் பதின்ம வயதினில் , யாழ் றியோ திரையரங்கில் (திரையரங்காக மாற்றப்பட்ட யாழ் நகரசபை மண்டபங்களிலொன்று, யாழ் சுப்பிரமணியம் பூங்காவுக்கு அண்மையிலிருந்தது) , என் நண்பர்களுடன் பார்த்த 'வெஸ்டேர்ன்' திரைப்படங்களில் மறக்க முடியாத திரைப்படம் 'Red Sun'. நான் பார்த்த முதலாவது சார்ஸ்ல்ஸ் புரோன்சனின் திரைப்படம் இதுதான். இதனைத்தொடர்ந்து அவரது திரைப்படங்களைத்தேடிப்பார்த்தது நினைவுக்கு வருகிறது.

என் பதின்ம வயதினில் , யாழ் றியோ திரையரங்கில் (திரையரங்காக மாற்றப்பட்ட யாழ் நகரசபை மண்டபங்களிலொன்று, யாழ் சுப்பிரமணியம் பூங்காவுக்கு அண்மையிலிருந்தது) , என் நண்பர்களுடன் பார்த்த 'வெஸ்டேர்ன்' திரைப்படங்களில் மறக்க முடியாத திரைப்படம் 'Red Sun'. நான் பார்த்த முதலாவது சார்ஸ்ல்ஸ் புரோன்சனின் திரைப்படம் இதுதான். இதனைத்தொடர்ந்து அவரது திரைப்படங்களைத்தேடிப்பார்த்தது நினைவுக்கு வருகிறது.என் பதின்ம வயதினில் , யாழ் றியோ திரையரங்கில் (திரையரங்காக மாற்றப்பட்ட யாழ் நகரசபை மண்டபங்களிலொன்று, யாழ் சுப்பிரமணியம் பூங்காவுக்கு அண்மையிலிருந்தது) , என் நண்பர்களுடன் பார்த்த 'வெஸ்டேர்ன்' திரைப்படங்களில் மறக்க முடியாத திரைப்படம் 'Red Sun'. நான் பார்த்த முதலாவது சார்ஸ்ல்ஸ் புரோன்சனின் திரைப்படம் இதுதான். இதனைத்தொடர்ந்து அவரது திரைப்படங்களைத்தேடிப்பார்த்தது நினைவுக்கு வருகிறது.

கதை இதுதான்: கொள்ளையர்களான சார்ல்ஸ் புரோன்சனும், அலென் டெலோன் (Alain Delon) குழுவினரும் விரைந்து கொண்டிருக்கும் புகையிரதமொன்றைக் கொள்ளையிடுகின்றார்கள். அந்தப்புகையிரத்ததில் ஒரு பெட்டியில் யப்பானிய தூதுவர், ஜனாதிபதிக்கு அன்பளிப்பாகக்கொடுப்பதற்காக ஒரு தங்க வாளொன்றினையும் கொண்டு வருகின்றார். அவருக்குப்பாதுகாப்பாக அவருடன் கூட 'சாமுராய்' போர் வீரர்கள் சிலரும் வருகின்றார்கள். கொள்ளையடித்துச்செல்கையில் அலென் டெலொன் யப்பானியத்தூதரிடமிருந்த தங்க வாளினையும் சார்ள்ஸ் புரோன்சனுக்குத்தெரியாமல் கொள்ளையடித்துக்கொண்டு செல்கின்றார். அவரது குழுவினர் சார்ள்ஸ் புரோன்சனிருந்த புகையிரதப்பெட்டியின் மீது குண்டுகளை வீசிவிட்டுச் செல்கின்றார்கள். சாகக்கிடந்த சார்ல்ஸ் புரோன்சனை  யப்பானியத்தூதுவர் காப்பாற்றுகின்றார். அவ்விதம் காப்பாற்றிய யப்பானிய தூதுவருக்கு உதவும் பொருட்டு, ஏழு நாள்களுக்குள் அவர் இழந்த அந்த அந்தத்தங்க வாளினை மீளக்கைப்பற்றி அவரிடம் ஒப்படைப்பதற்காகச் செல்லும் சார்ல்ஸ் புரோன்சனுக்குத் துணையாக யப்பானியத்தூதுவர் தன் பாதுகாவலர்களில் ஒருவரையும் கூட அனுப்பி வைக்கின்றார். அந்தச் சாமுராயாக யப்பானிய நடிகர் Toshiro Mifune அற்புதமாக நடித்திருப்பார்.

•Last Updated on ••Thursday•, 31 •December• 2015 21:40•• •Read more...•
 

அழியாத கோலங்கள்: சாகாதவரம் பெற்ற வேதாள மாயாத்மா!

•E-mail• •Print• •PDF•

அழியாத கோலங்கள்: சாகாதவரம் பெற்ற வேதாள மாயாத்மா!

வேதாள மாயாத்மா ஆழநடுக்காட்டில்...எம் பால்ய காலத்தில், குறிப்பாகப் பதின்ம வயதுப்பருவத்தில் நான் வாசித்த 'காமிக்ஸ்'களின் அளவு கணக்கிலடங்காதவை. ஆரம்பத்தில் விகடன், கல்கி, குமுதம் போன்றவற்றில் வெளியான சித்திரக்கதைகளுடன் என் 'காமிக்ஸ்' வாசிப்பு ஆரம்பமாகிவிட்டது. குமுதத்தில் வெளியான 'கடற்கன்னி', விகடனில் வெளியான 'கிங்கரனும், சங்கரனும்', மற்றும் கல்கியில் வெளியான 'ஓநாய்க்கோட்டை' இவ்விதமான ஆரம்பமான என் சித்திரக்கதைகளின் மீதான ஆர்வத்தை டால்டன் பிரசுரமாக வெளிவந்த பொன்மலர் , பால்கன் மற்றும் இந்திரஜால் காமிக்ஸ்ஸில் வெளியான வேதாள மாயாத்மாவின் சாகசக்கதைகள் ஆகியன ஆக்கிரமித்துக்கொண்டன.

பொன்மலர், பால்கன் ஆகிய இரு இதழ்களும் மாத இதழ்களாக வெளிவந்ததாக ஞாபகம். அவை 'Tabloid' அளவில் ஏனைய இதழ்களை விடப் பெரிதாக வெளிவந்ததாக ஞாபகம். இவற்றில் பல சித்திரக்கதைத்தொடர்கள் (எல்லாமே மேனாடுகளில் வெளியான காமிக்ஸ்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளே), மற்றும் நாகரிகத்தின் வரலாறு, சாகசம் மிக்க கடற்பயணங்களின் வரலாறு போன்ற அம்சங்களை உள்ளடக்கிய ஆக்கங்கள் மிகவும் அழகான வர்ண ஓவியங்களுடன் வெளியாகிய இதழ்கள் அவை. ஆனால் அவற்றில் ஒரிதழைக்கூட இணையத்தில் இதுவரையில் என்னால் தேடி எடுக்க முடியவில்லை என்பது இன்னும் ஒரு குறையாகவேயுள்ளது.

•Last Updated on ••Thursday•, 31 •December• 2015 20:46•• •Read more...•
 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலின் இரு அத்தியாயங்கள்...

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'விரைவில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியாகவுள்ள  எனது 'குடிவரவாளன்' நாவலின் அத்தியாயம் பதினெட்டு: ஹென்றியின் சாமர்த்திய(ம். / மா?), அத்தியாயம் பத்தொன்பது: கோஷின் காதல்! ஆகிய இரு அத்தியாயங்களை உங்கள் வாசிப்புக்காக இங்கு தருகின்றேன்.

அத்தியாயம் பதினெட்டு: ஹென்றியின் சாமர்த்திய(ம். / மா?)

நான்காவது வீதி மேற்கு , ஏழாவது அவென்யு, கிறிஸ்தோபர் வீதி ஆகிய வீதிகள் சந்திக்கும் சந்திப்பிலுள்ள நடைபாதையொன்றில் நடைபாதை வியாபாரம் செய்து கொண்டிருந்த ஹென்றியை முதலில் ஹரிபாபுதான் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்: "இவன்தான் நான் கூறிய ஹென்றி. எஸ்கிமோ ஹென்றி." அவ்விதம் கூறியபொழுது ஹரிபாபுவின் வதனத்தில் இலேசானதொரு பெருமிதம் கலந்த முறுவலொன்று ஓடி மறைந்ததுபோல் இளங்கோவுக்குப் பட்டது. அந்தப் பெருமிதம் அவனது குரலிலும் தொனித்ததாகவும் பட்டது. ஒருவேளை 'பார்த்தாயா என் சாமர்த்தியத்தை, மராத்தியனான நான் கண்டம் கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து வந்து, இங்கு இந்த நாட்டின் ஆதிக்குடிகளிலொருவனைக் கட்டி வைத்து வேலை வாங்குகின்றேனே! என்ன நினைத்துக் கொண்டாய் என்னைப் பற்றி..'யென்று அவன் கருவத்துடன் உள்ளூர நினைத்துக் கொண்டிருக்கலாமோவென்று இளங்கோ தனக்குள்ளே எண்ணிக் கொண்டான். அதே சமயம் குள்ளமாகவும், குட்டையான கால்களுடனும் அந்த எஸ்கிமோ இருந்தான். இளங்கோவுக்கு அவனை அங்கு பார்த்ததும் ஆச்சரியமாகவிருந்தது. அந்த ஆச்சரியம் தனது குரலில் தொனிக்க வேடிக்கையாக, "எஸ்கிமோவான உனக்கு இங்கென்ன வேலை. துருவத்தை விட்டு நீயும் புலம்பெயர்ந்து விட்டாயா? உன்னையும் நாகரிக மோகம் பற்றிக் கொண்டு விட்டதாயென்ன?" என்றான். அதைக் கேட்டதும் எஸ்கிமோ ஹென்றியும் இலேசாகச் சிரித்துக் கொண்டான்: "எத்தனை நாள்தான் துருவத்திலேயே சஞ்சரிப்பது. குளிர் அலுத்து விட்டது. துருவம் விட்டுத் துருவமாகப் பறவைகளே வருடா வருடம் இடம்மாறும்போது மனிதனான நான் மாறுவதிலென்ன தப்பு? ஒரு மாறுதலுக்காக இந்த மாநகருக்கு வந்தவனை இந்த ஹரிபாபு இவ்விதம் வளைத்துப் பிடித்துக் கொண்டான்" என்றும் சிறிது மேலதிகமாகத் தகவல்களைப் பகிரிந்தும் கொண்டான்.

இளங்கோ: "என்ன எஸ்கிமோவுக்குக் குளிர் அலுத்துவிட்டதா? ஆச்சரியமாகவிருக்கிறதே.."

"இதிலென்ன ஆச்சரியம். என்னைப்போலிங்கு இந்த மாநகரை நோக்கிப் பல எஸ்கிமோக்கள் படையெடுத்திருக்கின்றார்கள்" என்ற எஸ்கிமோ ஹென்றியைப் பார்த்து இப்பொழுது அருள்ராசா இடைமறித்திவ்விதம் கேட்டான்: "நானறிந்தவரையில் எஸ்கிமோக்களால் குளிர்பிரதேசங்களைக் கடந்து வேறிடங்களுக்குச் சென்று வாழ அவர்களது உடலமைப்பு இடம் கொடுக்காதென்றல்லவா இதுவரையில் எண்ணியிருந்தேன். உன்னைப் பார்த்தால் அவ்விதம் தெரியவில்லையே"

இதற்கு ஹென்றியின் பதில் அறிவுபூர்வமானதாகவும், தர்க்கச் சிறப்பு மிக்கதாகவுமிருந்தது: "வெப்பமான காலநிலையில் சஞ்சரித்த உன்னால் இந்தக் குளிர்பிரதேசத்திற்கு வந்து வாழ முடியுமென்றால் இந்தக் கண்டத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு இதே கண்டத்தின் இன்னுமொரு பகுதியில் வசிப்பதிலென்ன கஷ்ட்டமிருக்க முடியுமென்று நீ நினைக்கின்ன்றாய்?"

•Last Updated on ••Monday•, 28 •December• 2015 04:24•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 139 _ ஒரு பதிவுக்காக: வியாளம் பற்றிய அமரர் வெ.சா.வின் கேள்வியும், சில கருத்துகளும்....

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்'தமிழ் ஹிந்து' இணைய இதழில் (அக்டோபர் 16, 2013)  அமரர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் 'தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்' என்றொரு கட்டுரையினை எழுதியிருந்தார். அதில் அவர் 'வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும்.' என்று எழுதியிருந்தார்.\

அவர் குறிப்பிட்டிருந்த 'வியாளம்' என்னும் சொல் பற்றிய எனது கருத்துகளை அங்கு பதிவு செய்திருந்தேன். அதனையும், அது பற்றிய கருத்துகளையும் (அமரர் வெங்கட் சாமிநாதனின் கருத்து உட்பட) இங்கு பதிவு செய்கின்றேன்.


வ.ந.கிரிதரன் on October 21, 2013 at 8:30 am
வெ.சா.வின் ‘தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்’ கட்டுரையும், வியாளம், வியாளி பற்றிய கருத்துகள் சிலவும். \

வெ.சா.அவர்கள் தனது ‘தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்’ கட்டுரையில் “வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும்.” என்று வேண்டுகோளொன்றினை விடுத்திருந்தார். அது பற்றிச் சில வார்த்தைகளைப் பதிவு செய்வதே இக்குறிப்புகளின் நோக்கம். தமிழ் இலக்கியத்தில் வியாளம் என்ற சொல் பாம்பு, புலி, யாளி, கெட்ட குணமுள்ள யானை போன்ற பல அர்த்தங்களில் கையாளப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. தோலாமொழித்தேவர் இயற்றிய ‘சூளாமணி’யில் 912 பாடலாகப் பின்வரும் பாடல் வருகிறது.

அடுகடா மாவி நாறு மழிமதங் கருவி வீழத்
தொடுகடா வயிரத் தோட்டி யுடையன 3தொடர்க ளூன்ற
விடுகொடா வியாள நிற்ப மெல்லவன் பணிகள செய்யும்
படுகடாக் களிறுந் தேரும் புரவியும் பண்ணு கென்றான்.

•Last Updated on ••Monday•, 28 •December• 2015 04:12•• •Read more...•
 

நாவல்: அமெரிக்கா! (8)

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'- மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிக்கம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது 'அமெரிக்கா' என்னும் நாவலையும் (அளவில் சிறியததானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே 'பொந்துப்பறவைகள்' மற்றும் 'மான் ஹோல்' தவிர , கனடாவிலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின, மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் 'அமெரிக்கா' என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன் இன்றைய தலைமுறையினரும் , அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். இறுதி அத்தியாயம் மீளத்திருத்தி, எழுதப்பட்டுள்ளது.  - வ.ந.கி. -


அத்தியாயம் எட்டு: விஜயபாஸ்கரனின் வரவும்., விடிவும்!

இவ்விதமாக எங்கள் தடுப்பு முகாம் வாழ்வில் சுவையான சம்பவங்களும் இல்லாமலில்லை. வாழ்வு தொடர்ந்து கொண்டிருந்தது.  நம்பிக்கையை நாங்கள் இன்னும் முற்றாக இழக்கவில்லை.  'ஃபாதர்' ஏபிரகாம் அடிக்கடி கூறுவார்: "ஒன்றிற்குமே கவலைப்படாதீங்க. இமிகிரேசனிலை இதைத்தான் சொல்லுறாங்க." ஒவ்வொருமுறை அவருக்குத் தொலைபேசி எடுக்கும்போதும் இதைத்தான் அவர் கூறுவார். ஃபாதர் பாவம். அவருக்கு நல்ல மனது.  ஆனால் எங்களுக்குப்புரிந்திருந்தது ஃபாதரிக்கு நம்பிக்கை போய்விட்டதென்று. ஃபாதருக்கும் புரிந்திருந்தது எங்களுக்குச்சூழலில் யதார்த்தம்  தெரிந்து விட்டதென்பது.  இருந்தும் சுதந்திரம் மறுக்கப்பட்டு, கூண்டுக்கிளிகளாகவிருந்த நிலையில் எங்களுக்கும் அத்தகைய  ஆறுதல் வார்த்தைகளின் தேவையிருந்தது.  அதே சமயம் நம்பிக்கையை இழந்துவிட நாங்களும் விரும்பவில்லை.  நம்பிக்கையின் அடிப்படையில்தானே இருப்பே நிலைநிறுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. இவ்விதமாக உப்புச்சப்பற்று போய்க்கொண்டிருந்த இருப்பினை மாற்றி வைத்தது விஜயபாஸ்கரனின் வரவு.

•Last Updated on ••Friday•, 25 •December• 2015 21:26•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 138 : உதித்தெழுந்தது அறிவென்னும் இரவி!! ; மின்னூல்கள் பற்றிய எழுத்தாளர் மாலனின் கூற்றும், அது பற்றிய சில எண்ணங்களும்....

•E-mail• •Print• •PDF•

உதித்தெழுந்தது அறிவென்னும் இரவி!

'எழும் பசும் பொற்சுடர் எங்கனும் பரவி
எழுந்து விளங்கியது அறிவென்னும் இரவி!' -பாரதியார் -

இத்தாரக மந்திரத்துடன் மே-யூன்1998, யூலை-ஆகஸ்ட் 1998 என இரு இதழ்கள் ,டொராண்டோ, கனடாவில், வெளிவந்ததொரு மாதப்பத்திரிகைதான் இரவி. அக்காலகட்டத்தில் தொடர்ந்தும் வெளிவராது நின்று போனாலும், என் ஆர்வம் இன்றுவரை நின்று விடவில்லை. என் ஆர்வத்தின் வெளிப்பாடுகள்தாம் 'கணினி உலகம்', 'நமது பூமி' ஆகிய செய்திக்கடிதங்களும், 'குரல்' கையெழுத்துச்சஞ்சிகையும், 'இரவி', 'கல்வி' ஆகிய பத்திரிகைகளும் பதிவுகள் இணைய இதழும்.

'இரவி' பத்திரிகையின் முதற் பக்கத்திலுள்ள இரவி என்னும் பத்திரிகையின் எழுத்துருவினை வடிவமைத்துத் தந்தவர் எழுத்தாளர் 'அசை; சிவதாசன். அதற்காக அவருக்கு நன்றி. அவரும் அக்காலகட்டத்தில் மறுமொழி சஞ்சிகையினை வெளிக்கொணர்ந்தவர். இன்று வெளிவரும் 'தாய் வீடு' பத்திரிகையின் தாயான 'வீடு' பத்திரிகையினைத்தொடங்கி வெளியிட்டவர். சிறுகதைகள், கட்டுரைகள் பல பல்வேறு சஞ்சிகைகளில் எழுதியவர். 'தாயகம்' சஞ்சிகையில் அவர் எழுதிய 'அசை மறுபக்கம்' பத்தியின் மூலம் 'அசை' சிவதாசன் என்று அழைக்கப்பட்டவர். தொலைக்காட்சி நிகழ்வுகளில் அரசியல் ஆய்வாளராக அடிக்கடி வலம் வருபவர்.

•Last Updated on ••Thursday•, 24 •December• 2015 00:04•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 137: ஞானியின் ஞானச்செருக்கில் விளைந்த ஞானச்சிறுமை!

•E-mail• •Print• •PDF•

இசைஞானி இளையராஜா!அண்மையில் இசைஞானி என்றழைக்கப்படும் இளையராஜா அவர்கள் சென்னை வெள்ளப்பாதிப்பு உதவி சம்பந்தமாகக்கலந்துகொண்ட் நிகழ்வொன்றில் கலந்துகொள்ள வந்திருந்தபொழுது அவரிடம்  ஊடகவியலாளரொருவர் சிம்பு/அநிருத்தின் 'பீப்' பாடல் பற்றிக்கேட்டார். அதனைச்செவிமடுத்த உடனேயே இளையராஜா அந்த ஊடகவியலாளரைப்பார்த்து 'உனக்கு அறிவிருக்கா?' என்று எரிந்து விழுந்தார். இது சமூக ஊடகங்களிலும், வெகுசன ஊடகங்களிலும் பரபரப்பு மிக்க செய்திகளிலொன்றாக மாறிவிட்டிருக்கின்றது. இளையராஜா 'சரி'யென்று ஒரு குழுவும், 'சரியில்லை அது பிழை' என்று இன்னுமொரு குழுவும் கோதாவில் இறங்கியிருக்கின்றன.

நிகழ்வொன்றுக்குக் கலந்து கொள்ளவரும் கலை,இலக்கியவாதிகள் தொடக்கம் அரசியல்வாதிகள் வரை , எல்லாருமே இவ்விதமான சர்ச்சைகள் மிகுந்த சம்பவங்கள் பற்றிய கேள்விகளை எதிர்கொள்பவர்கள்தாம். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் என்னும் நிலையில் இவ்விதமான வினாக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் பண்பட்ட கலை, இலக்கியவாதிகளோ, அரசியல்வாதிகளோ இவ்விதம் இளையராஜா எரிந்து விழுந்ததைப்போன்று எரிந்து விழுவதில்லை. நிதானமாகக் கேள்விகள் எதுவானாலும் அவற்றை எதிர்கொண்டு பதிலளிக்கத்தவறுவதில்லை. உதாரணமாக மேற்படி நிகழ்வில், கலந்துகொண்ட நிகழ்வுக்குச்சம்பந்தமற்ற கேள்வியினை அந்த ஊடகவியலாளர் கேட்பது தனக்குப் பிடிக்கவில்லை என்று இளையராஜா அவர்கள் கருதியிருந்தால், அவர் அந்த ஊடகவியலாளரிடம் ஆத்திரப்படாமல், நிதானமாக தற்போது தான் கலந்துகொள்ள வந்துள்ள நிகழ்வுக்குச்சம்பந்தமற்ற எந்தவொரு கேள்வியினையும் தான் எதிர்கொள்ள விரும்பவில்லையெனவும், இன்னுமொரு உரிய நிகழ்வில் இது பற்றிப்பதிலளிப்பதாகவும் கூறியிருக்கலாம்.

இசைஞானிக்கு அந்த ஊடகவியலாளரின் மேற்படி கேள்வி ஏன் அவ்வளவு ஆத்திரத்தை ஏற்படுத்தியது என்று நினைத்துப்பார்க்கின்றேன். தான் இசையமைத்திருந்த 'நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்!' பாடலை ஒருமுறை அவர் நினைத்திருக்கலாம். 'நேற்று ராத்திரி யம்மா'வில் ஜானகியம்மாவின் முக்கல், முனகல்களில் வெளிப்படும் உணர்வுகளின் பாவங்களை எண்ணியிருக்கலாம். இவ்விதமான கேள்விக்குப்பதிலளிப்பது இறுதியில் தன் மீதே வந்து பாயுமென்று கருதியிருக்கலாம். ஒருவேளை அவர் சிம்புவின் 'பீப்' பாடலுக்கு எதிர்ப்பினைத்தெரிவித்திருந்தால், அடுத்த கணமே அந்த ஊடகவியலாளர் 'அப்படியென்றால் 'நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்' பாடலின் இறுதியில் ஆண், பெண் உறவின் உச்சக்கட்ட உணர்வாக வெளிப்படும் ஜானகி அம்மாவின் குரலைப்பாடிக்காட்டியிருக்கலாம். அந்தச்சமயத்தில் இசைஞானி பதிலெதுவும் கூற முடியாமல் , திக்குமுக்காடிப்போயிருக்கலாம். கண்ணாடி வீட்டினுள்ளிருந்து கல்லெறிய இசைஞானி விரும்பவில்லை. அதனால்தான் அவருக்கு அந்த இளம் ஊடகவியலாளரின் அந்தக் கேள்வி ஆத்திரத்தை எழுப்பியதுடன் , அந்த ஊடகவியலாளரின் அறிவு பற்றி மட்டம் தட்டவும் தூண்டியிருக்க வேண்டும்.

•Last Updated on ••Wednesday•, 23 •December• 2015 07:42•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 136 : அச்சில் வெளியான எனது முதற்சிறுகதை 'சலனங்கள்'; மாணவப் பருவத்தில்: 'கண்மணி'யில் எனது சிறுவர் கதை 'அரசாளும் தகுதி யாருக்கு?'; வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதை பற்றி.... ; மயக்கமா? கலக்கமா?; யானை பார்த்த குருடர்கள்

•E-mail• •Print• •PDF•

அச்சில் வெளியான எனது முதற்சிறுகதை 'சலனங்கள்'

சிரித்திரனில் வெளியான என் முதற் கதை.அச்சில் வெளியான எனது முதலாவது சிறுகதை 'சலனங்கள்'. 1975 பங்குனி மாதச் 'சிரித்திரன்' இதழில் வெளியானது. அப்பொழுது நான் யாழ் இந்துக்கல்லூரி மாணவன். முள்ளியவளையைச்சேர்ந்த முல்லைத்திலகன் என்னும் மாணவர் அப்பொழுது யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தர மாணவராகப்படித்துக்கொண்டிருந்தார். நடிப்புத்திறமை மிக்கவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீரபாண்டியக்கட்டப்பொம்மன், ராஜாராணி ( 'சோக்கிரடிசு') வசந்தமாளிகை திரைப்பட வசனங்களை அழகான , உச்சரிப்புடன் பேசிக்காட்டுவார். ' ஏதென்சு நகரத்து ஏற்றமிகு வாலிபர்களே' என்று ராஜாராணி சோக்கிரடிசு வசனங்களை, கட்டப்பொம்மன் வசனங்களை மீண்டும், மீண்டும் அவரைப்பேசச்சொல்லிக் கேட்டு இரசிப்பதுண்டு. அவற்றை மாணவர்களாகிய நாம் இரசிப்பதுண்டு.

ஒருமுறை அவரது ஊரான முள்ளியவளைக்கும் சென்று ஒரு வாரமளவில் அவர் வீட்டில் தங்கியிருந்து திரும்பியிருக்கின்றேன். அப்பொழுது ஆழநடுக்காட்டினுள் 'கள்ளூறல்' என்னும் எப்பொழுதும் வற்றாத நீர்நிலையினைத்தேடி அலைந்து, திரிந்ததை இப்பொழுதும் மறக்க முடியாது. எனது வன்னி மண் நாவலில் அந்த ஆழ்நடுக்காட்டின் அனுபவங்களைச்சிறிது கற்பனையையும் கலந்து பதிவு செய்திருக்கின்றேன். அவரது கையெழுத்தும் அழகானது. அவரைக்கொண்டு எனது முதற்சிறுகதையான 'சலனங்கள்' சிறுகதையினைப் பிரதியெடுத்து, 'சிரித்திரன்' சஞ்சிகை நடாத்திய 'அறிஞர் அ.ந.கந்தசாமி' சிறுகதைப்போட்டிக்கு அனுப்பியிருந்தேன். அது பாராட்டுக்குரிய சிறுகதைகளிலொன்றாகத்தெரிவு செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. அச்சிறுகதை வெளியான சிரித்திரன் பக்கத்தின் ஒரு பகுதியினையே இங்கே காணுகின்றீர்கள். இது அச்சில் வெளியான முதற் சிறுகதையான போதிலும், கதைகள், நாவல்களென்று பாடசாலை அப்பியாசக் 'கொப்பி'களில் எனது பத்தாம் வயதிலிருந்து நிறையவே எழுதி, எழுதிக் குவித்திருக்கின்றேன். இந்தச்சிறுகதை மூலமே எனக்குச் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்துடனான அறிமுகமும், நட்பும் ஆரம்பமானது. அப்பொழுது அவர் யாழ் ஐயனார் கோயிலருக்கில் வசித்து வந்தார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் இடம் மாறி வந்திருந்தார். பின்னர் எண்பதுகளின் ஆரம்பத்தில்தான் யாழ் கே.கே.எஸ்.வீதியில் வீடு கட்டிக் குடிபுகுந்திருந்தார். அவரது அந்த வீட்டினை வடிவமைத்திருந்தவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் குணசிங்கம் ஆவார். நான் அக்காலகட்டத்தில் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றுகொண்டிருந்தேன். விடுமுறைக்கு யாழ்ப்பாணம் சென்றிருந்தபொழுது அவரை அவ்வீட்டில் சென்று சந்தித்தேன். அப்பொழுதுதான் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டினை எனக்குச் சுற்றிக்காட்டினார். அப்பொழுதுதான் அதனை வடிவமைத்தவர் குணசிங்கம் என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அதுவே நான் அவரை இறுதியாகச் சந்தித்தது.

•Last Updated on ••Saturday•, 19 •December• 2015 00:21•• •Read more...•
 

நாவல்: அமெரிக்கா! (7)

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது 'அமெரிக்கா' என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே 'பொந்துப்பறவைகள்' மற்றும் 'மான் ஹோல்' தவிர , கனடாவிலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின,  மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் 'அமெரிக்கா' என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன்  பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் ஏழு: நைஜீரியனைப் பிடித்த பேயும், தடுப்புமுகாம் கணக்கெடுப்பும்!

இவ்விதமாக எங்கள் தடுப்பு முகாம் வாழ்க்கை வரவேண்டிய விருந்தாளிகள் வராத நிலை, எதிர்பாராத விருந்தாளிகளின் வரவு ஆகிய சந்தர்ப்பங்களை எதிர்கொண்டு தொடர்ந்தபடியிருந்தது. இதே சமயம் உலக நடப்பிலும் குறிப்பிடும்படியான சம்பவங்கள் சில நிகழ்ந்தன.  பிரயாணிகளுடன் சோவியத் நாட்டு எல்லைக்குள் அத்து மீறிப்பறந்த கொரிய விமானமொன்று ரஷ்யப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.  இச்செயல் சர்வதேசரீதியில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  பெரும்பாலான நாடுகள் மத்தியில் ரஷ்யாவுக்கெதிரான உணர்வுகளைக்கிளர்ந்தெழ வைப்பதற்கு இச்சம்பவம் பெரிதும் துணையாக இருந்தது. இதே சமயம் எம் நாட்டைப்பொறுத்தவரையில் கொழும்பு சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் தாக்கப்பட்டதும், வவுனியாவில் இரு தமிழ் இளைஞர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதும் குறிப்பிடும்படியான செய்திகள்.

•Last Updated on ••Tuesday•, 15 •December• 2015 22:02•• •Read more...•
 

நாவல்: அமெரிக்கா (6)

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது 'அமெரிக்கா' என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே 'பொந்துப்பறவைகள்' மற்றும் 'மான் ஹோல்' தவிர , கனடாவிலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின,  மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் 'அமெரிக்கா' என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன்  பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் ஆறு: தமிழகத்துப் பாதிரியார் ஏபிராகாமின் வருகை!

ஒவ்வொரு நாளையும் ஒரு புது நாளாகக்கருதி , எங்கள் தடுப்புமுகாம் வாழ்வை மறக்க எண்ணி, ஏனையவற்றில் கவனம் செலுத்த முயன்றுகொண்டிருந்தபோதும் முற்றாக எங்களால் அவ்விதம் செய்ய முடியவில்லை.  எத்தனை நேரமென்றுதான் தொலைக்காட்சி பார்ப்பது? 'டேபிள் டென்னிஷ்' விளையாடுவது?  தேகப்பயிற்சி செய்வது? சுதந்திரமற்ற தடுப்பு முகாம் வாழ்வின் கனம் இடைக்கிடை எம்மை மேலும் மேலும் அமுக்கத்தொடங்கிவிடும். இத்தகைய சமயங்களில் படுக்கைகளில் வந்து புரண்டு கிடப்போம். இதே சமயம் வெளியில் இல்லாததைவிட அதிக அளவில் உள்ளே எங்களுக்கு ஒரு வசதி இருக்கத்தான் செய்தது.  உலகின் எந்த மூலை முடுக்கில் உள்ளவர்களுடனும் தொடர்பு கொள்ள எங்களால் முடிந்தது. சட்டவிரோதமாகத்தான். பெரிய பெரிய நிறுவனங்கள் பலவற்றின் தொலைபேசிக்குரிய கடனட்டை இலக்கங்கள் ஏதோ ஒரு வழியில் முகாமில் உள்ளவர்களுக்குக் கிடைத்தவண்ணமிருந்தன. எப்படிக்கிடைத்ததோ அவர்களுக்கே வெளிச்சம். யாரோ ஒரு மேற்கு இந்தியன் ஒருவனின் பெண் நண்பர் தொலைபேசி நிறுவனமொன்றில் 'ஒபரேட்டரா'க வேலை செய்வதாகவும், அவள் மூலம் அவன் பெற்றுக்கொள்வதாகவும் கதை அடிபட்டது. அத்தொலைபேசி இலக்கங்களை அவன் அங்குள்ளவர்களுக்கு குறைந்த அளவு பணத்துக்கு விற்றுக்கொண்டிருந்தான். சிலருக்கு இலவசமாகவும் கொடுத்தான். இவ்விதம் கிடைக்கும் இலக்கங்களைக்கொண்டு உலகின் மூலை , முடுக்குகளையெல்லாம் தொடர்புகொள்ள முடிந்ததால், தடுப்பு முகாம் வாசிகள் தம் நாடுகளிலுள்ள தம் உறவினர்கள், நண்பர்களுடன் நாள் முழுவதும் உரையாடிக்கொண்டிருப்பார்கள்.  இவ்விதமாக யாழ்ப்பாணத்திலுள்ளவர்களுடன் கூடத்தொலைபேசி மூலம் கதைக்கக்கூடியதாகவிருந்தது. ரவிச்சந்திரனின் வீட்டில் தொலைபேசி வசதி இருந்தது.  ஓரிரு சமயங்களில்  காலை ஏழு மணிக்குப் பொங்கும் பூம்புனலைத்தொலைபேசியினூடு கேட்டுக்கூட மகிழ்ந்ததுண்டு.  இச்செயலில் சட்டவிரோதத்தன்மை எம் தடுப்பு முகாம் வாழ்வின் உளவியல் வேதனையின் முன்னால் உருண்டோடிவிட்டது.

•Last Updated on ••Monday•, 14 •December• 2015 21:51•• •Read more...•
 

நாவல்: அமெரிக்கா (5)

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'- மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது 'அமெரிக்கா' என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே 'பொந்துப்பறவைகள்' மற்றும் 'மான் ஹோல்' தவிர , கனடாவிலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின,  மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் 'அமெரிக்கா' என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன்  பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் ஐந்து: முகாமின் பொழுதுபோக்கு அனுபவங்கள் சில....

ஆரம்பத்தில் முதலிரண்டு கிழமைகளிலும் எங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்தது. ஜன்னலினூடு தொலைவில்  விமானங்கள் சுதந்திரமாக கோடு கிழிப்பதைப்பார்க்கும்போது  , தொலைவில் வறிய கறுப்பினத்துக் குழந்தைகள் விளையாடுவதைப்பார்க்கும்போது  சுதந்திரமற்ற எங்களது நிலை நெஞ்சினை வருத்தியது.  விசர் பிடித்தவர்களைப்போல்  நாம் ஐவரும் எங்கள் எங்களது படுக்கைகளில் புரண்டு கிடந்தோம்.

ஊர் நினைவுகள் நெஞ்சில் பரவும்.  வீட்டு நினைவுகள் , கெளசல்யாவின் நினைவுகள்  சிறகடிக்கும்.  கலவர நினைவுகளின் கொடூரம் கண்களில் வந்து நிற்கும்.  எத்தனையோ கனவுகள்,  எத்தனையோ திட்டங்கள், பொறுப்புகள் இருந்தன.  வெளியில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் இருண்ட பகுதிக்குள் வந்து இப்படி மாட்டுப்படுவோமென்று யார் கண்டது. இவர்களால் ஏன் எங்கள் நிலைமைகளை உணர முடியவில்லை. எல்சல்வடோர் , ஆப்கானிஸ்தான் இளைஞர்களின் வாழ்க்கை எவ்விதம் வீணாக்கிக்கொண்டிருக்கின்றது. குற்றச்செயல் புரிந்தவர்களையும், கொடுமை காரணமாக நாடு விட்டு நாடு ஓடி வந்தவர்களையும் ஒன்றாக வைத்திருக்கின்றார்கள். கைதிகளைப்போல் சட்டதிட்டங்கள். காவலர்களின் அதட்டல்கள், உறுக்கல்கள், தத்தமது நாடுகளில் நிகழும் , நிகழ்ந்த அனர்த்தங்களிலிருந்து , உற்றார் , உறவினரைப்பிரிந்து , நொந்த , மனத்துடன் வரும் அகதிகளை இவர்கள் மேலும் வருத்தும் போக்கு.....   எம்மைப்பொறுத்தவரையில் நாம் இன்னும் கலவரத்தின் கொடூரத்திலிருந்து மீண்டிருக்கவில்லை.  அதற்குள் எங்களுக்கு இங்கு ஏற்பட்டுவிட்ட நிகழ்வுகள் மேலும் எம்மை வருத்தின.

•Last Updated on ••Monday•, 14 •December• 2015 04:27•• •Read more...•
 

நாவல்: அமெரிக்கா (4)!

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் நான்கு: தடுப்புமுகாம் வாழ்வு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'நாங்கள் தங்கியிருந்த தடுப்பு முகாமில் ஆண்கள் இருநூறு வரையிலிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் ஆபிரிக்க, தென்னமெரிக்காவைச்சேர்ந்தவர்கள்.  நாடென்று பார்த்தால் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களே அதிகமானவர்களாகவிருந்தார்கள்.  இலங்கையைப்பொறுத்தவரையில் நாம் ஐவர்தாம். பங்களாதேஷ், இந்தியாவைச்சேர்ந்தவர்கள் இருவர் மட்டுமேயிருந்தார்கள். எல்சல்வடோர், கெளதமாலா போன்ற மத்திய அமெரிக்காவைச்சேர்ந்தவர்களுமிருந்தார்கள். 

விமான நிலையங்களில் போதிய கடவுச்சீட்டுகள், ஆவணங்களின்றி அகப்பட்டவர்கள், அகப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்கள், சட்ட விரோதமாக வேலை செய்து அகப்பட்டவர்கள், போதைவஸ்து முதலான குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாடு கடத்தப்படுவதற்காகக் காத்து நிற்பவர்கள்.. இவ்விதம் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த பல்வேறு விதமான கைதிகள் அங்கிருந்தார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டவர்களின் நிலை பெரிதும் பரிதாபத்துக்குரியது.

பெரும்பாலானவர்கள்  இரண்டு வருடங்களாக உள்ளே கிடக்கின்றார்கள். இங்குள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் போதிய ஆவணங்களின்றி அகப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்கள்தாம்.  உறவுகள் பிரிக்கப்பட்ட நிலையில், உணர்வுகள் அழிக்கப்பட்ட நிலையில் வாழும் இவர்களின் நிலை வெளியில் பூச்சுப்பூசிக்கொண்டு, மினுங்கிக்கொண்டிருந்த உலகின் மாபெரும் வல்லரசொன்றின் இன்னுமொரு இருண்ட பக்கத்தை எனக்கு உணர்த்தி வைத்தது.  அமெரிக்கர்களைப்பொறுத்தவரையில் இவர்கள் புத்திசாலிகள்; கடின உழைப்பாளிகள்; விடா முயற்சி, அமோபலம் மிக்கவர்கள்; எத்தனையோவற்றில் உலகின் முன் மாதிரியாகத்திகழுபவர்கள், ஆனால் அதே அமெரிக்காவில்தான் உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மனோ வியாதி பிடித்த 'டெட் பண்டி' போன்ற கொலையாளிகளும் இருக்கின்றார்கள். உரிமைகள் மறுதலிக்கப்பட்ட நிலையில் அகதிகளும் தடுப்பு முகாம்களென்ற பெயரில் திகழும் சிறைகளில் வாடுகின்றார்கள். வாய்க்கு வாய் நீதி, நியாயம், சமத்துவமென்று முழங்குமொரு நாட்டில் காணப்படும் மேற்படி நிலைமைகள் ஆய்வுக்குரியன.

•Last Updated on ••Sunday•, 13 •December• 2015 06:19•• •Read more...•
 

நாவல்: அமெரிக்கா (3)

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'- மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது 'அமெரிக்கா' என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே 'பொந்துப்பறவைகள்' மற்றும் 'மான் ஹோல்' தவிர , கனடாவிலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின,  மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் 'அமெரிக்கா' என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன்  பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். - வ.ந.கிரிதரன் - -

அத்தியாயம் மூன்று: புரூக்லீன் தடுப்பு முகாம்.

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது எங்கள் விடயத்தில் சரியாகி விட்டது. இரண்டு நாள்கள் ஹில்டன் ஹொட்டலில் வைத்திருந்தார்கள்.  பொஸ்டன்  குளோப் பத்திரிகையில் எங்களைப்பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படத்துடன் பிரசுரித்திருந்தார்கள். 'வோய்ஸ் ஒவ் அமெரிக்கா , பி.பி.ஸி ஆகியவற்றிலெல்லாம் எங்களைப்பற்றிய செய்தியை ஒலிபரப்பினார்கள்.  இலங்கை இனக்கலவரம் சர்வதேச வெகுசனத் தொடர்பு சாதனங்களில் பரபரப்பாக அடிபட்டுக்கொண்டிருந்த  சமயத்தில்தான்  எங்களது பயணமும் தொடங்கியிருந்தது.  இதனால்தான்  எங்களைப்பற்றிய செய்தியும் பிரபலமாகியிருந்தது.  எங்களைப்பற்றிய பூர்வாங்க விசாரணைகள் முடிந்ததும் எங்களை நியூயார்க்குக்கு அனுப்பினார்கள். அப்பொழுதுகூட எங்களுக்குத்தடுப்பு முகாமுக்கு அனுப்பும் விடயம் தெரிந்திருக்கவில்லை.

பிரத்தியேக பஸ்ஸொன்றில் எங்களை நியூயார்க் அனுப்பியபொழுது ஏற்கனவே இரண்டு நாள்கள்  ஆடம்பர ஹொட்டலான ஹில்டனில் இருந்த சந்தோசத்தில் நாங்கள் சந்தோசமாகவேயிருந்தோம்.  நியூயார்க் நகரைப்பற்றி, அதன் பிரசித்தி பற்றி இலங்கையிலேயே அறிந்திருந்தோம். அத்தகையதொரு நகருக்குச் செல்வதை நினைத்ததுமே நெஞ்சில் களிப்பு. பல்வேறு கனவுகள், திட்டங்களுடன் படம் விரித்தன.  அன்று மட்டுமல்ல இன்றும் கூட என் நெஞ்சை ஒரு கேள்வி குடைந்தபடிதானிருக்கின்றது.  பொஸ்டனில் ;பிடிபட்ட எங்களை எதற்காக நியுயார்க் அனுப்பினார்கள்.  பொஸ்டனில் தமிழ் அமைப்புகள் மிகுந்த செல்வாக்குடன் விளங்கின.  இந்நிலையில் எங்களை அங்கேயே வைத்திருந்தால் அரசியல்ரீதியில் அமெரிக்க அரசுக்குப் பிரச்சினை வரலாமென்று அமெரிக்க அரசு எண்ணியிருந்திருக்கலாம் என்ற ஒரு காரணம்தான் எனக்குப்படுகின்றது.

•Last Updated on ••Friday•, 11 •December• 2015 23:03•• •Read more...•
 

நாவல்: அமெரிக்கா! (1-8)

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'- மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது 'அமெரிக்கா' என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே 'பொந்துப்பறவைகள்' மற்றும் 'மான் ஹோல்' தவிர , கனடாவிலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின,  மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் 'அமெரிக்கா' என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன்  பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன்.  இறுதி அத்தியாயம் மீளவும் திருத்தி எழுதப்பட்டுள்ளது- வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று: இளங்கோவின் பயணம்!
உலகப்புகழ்பெற்ற நியூயார்க் மாநகரின் ஒரு பகுதி புரூக்லீனின் ஓர் ஓரத்தே, கைவிடப்படும் நிலையிலிருந்த , பழைய படையினரால் பாவிக்கப்பட்ட கட்டடத்தின் ஐந்தாம் மாடி. அந்தக்கட்டடத்திற்கு எத்தனை மாடிகள் உள்ளன என்பதே தெரியாது. எனக்குத்தெரிந்ததெல்லாம் நான் இருந்த கட்டடத்தின் பகுதி ஐந்தாவது மாடி என்பது மட்டும்தான். என்னைப்பொறுத்தவரையில் இந்த ஐந்தாவது மாடி அமெரிக்காவைப்பொறுத்தவரையில் இன்னுமோர் உலகம். 'ஒய்யாரக்கொண்டையாம், தாழம்பூவாம். உள்ளேயிருப்பது ஈரும், பேனும்' என்பார்கள். எனது அமெரிக்கப்பிரவேசமும் இப்படித்தான் அமைந்து விட்டது. உலகின் செல்வச்செழிப்புள்ள மாபெரும் ஜனநாயக நாடு! பராக்கிரமம் மிக்க வல்லரசு! இந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கும் மட்டும் எனக்கு அமெரிக்கா ஒரு சொர்க்க பூமிதான். மனித உரிமைகளுக்கு மதிப்புத்தருகின்ற மகத்தான பூமிதான். ஆனால், என் முதல் அனுபவமே என் எண்ணத்தைச்சுட்டுப்பொசுக்கி விட்டது. ஒரு வேளை என் அமெரிக்க அனுபவம் பிழையாகவிருக்குமோ என்று சில வேளை நான் நினைப்பதுண்டு. ஆனால் மிகுந்த வெற்றியுடன் வாழும் என்னினத்தைச்சேர்ந்த ஏனைய அமெரிக்கர்களை எண்ணிப்பார்ப்பதுண்டு. உண்மைதான்! பணம் பண்ணச்சந்தர்ப்பங்கள் , வெற்றியடைய வழிமுறைகள் உள்ள சமூகம்தான் அமெரிக்க சமூகம். ஆனால் அந்தச் சமுதாயத்தில்தான் எனக்கேற்பட்ட அனுபவங்களும் நிகழ்ந்தன என்பதையும் எண்ணித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. சுதந்திரதேவி சிலை நீதி, விடுதலை, சம உரிமையை வலுயுறுத்துகிறது. அமெரிக்க அரசியலமைப்பும்  மனிதரின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்துகிறது.  இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. வெளியிலிருக்கும் மட்டும் அப்படித்தானிருந்தது. எல்லாம் உள்ளே வரும் மட்டும்தான்.

•Last Updated on ••Saturday•, 17 •December• 2016 00:23•• •Read more...•
 

கவிதை: கழியும் பொழுதில் சிறக்கும் வாழ்வில்..

•E-mail• •Print• •PDF•

- வ.ந.கிரிதரன் -

எக்கணமும் இக்குமிழி உடைந்து விடலாம்.
அவ்விதமே எனக்குத்தோன்றுகிறது.
தற்செயற் சாத்தியங்களில் சுழலுமிருப்பில்
அவ்விதம்தான் எனக்குத்தோன்றுகிறது.
சிறு மாற்றம் கூட சில வேளைகளில்
இருப்பினைக் கேள்விக்குறியாக்கும்
அபாயமுண்டு என்பதை
உணர்வதற்கு இயலாத
ஆட்டங்களில், ஓட்டங்களில்
விரைந்து செல்லும் வாழ்வு
இதனைத்தான் எனக்கு உணர்த்துகிறது.

•Last Updated on ••Tuesday•, 08 •December• 2015 03:48•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 135: பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது 'கருடா! செளக்கியமா?' ருஷ்யக் கரடியைச் சீண்டியது துருக்கி!

•E-mail• •Print• •PDF•

ருஷ்ய அதிபர் புடின்துருக்கி அதிபர்அண்மையில் ருஷ்ய விமானப்படையினரின் விமானமொன்றினை துருக்கி சுட்டு வீழ்த்தியது யாவரும் அறிந்ததே. துருக்கியால் ஒரு போதுமே ருஷ்யாவுடன் நேருக்கு நேர் மோத முடியாது. இருந்தாலும் ஏன் துருக்கி இவ்வளவு துணிவாக ருஷ்ய விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. ருஷ்ய அதிபர் புட்டின் குற்றஞ்சாட்டுவது போல் துருக்கி திரை மறைவில் இசிஸுடன் (ISIS) நட்பாகவிருக்கிறது. அவர்கள் விற்கும் எண்ணெயினை வாங்குகின்றது. சிரியாவின் தன்னின மக்களைக்கொண்ட போராளிகளுக்கு ஆதரவளிக்கிறது. அதே சமயம் துருக்கி நேட்டோ என்னும் மேற்கு நாடுகளின் கூடாரத்தில் அங்கம்  வகிக்கும் நாடு. துருக்கிக்கும் , ருஷ்யாவுக்குமிடையிலான மோதல் வளர்ந்து ருஷ்யாவுக்கும் நேட்டோவுக்குமிடையிலான மோதலாக வெடிக்கும் ஆபத்து உண்டு.

இவ்விதமானதொரு சூழலில்தான் துருக்கி ருஷ்ய விமானத்தைச்சுட்டு வீழ்த்தியுள்ளது. இது துருக்கியுடன் நட்பாகவிருக்கும் இசிஸின் ஆலோசனையாகவிருக்க வேண்டும். துருக்கி ருஷ்ய விமானத்தைச்சுட்டு வீழ்த்துவதன் மூலம் அம்மோதலை நேட்டோவுக்கும், ருஷ்யாவுக்குமிடையிலான மோதலாக மாற்றிடலாமென்று துருக்கியும், இசிஸும் திட்டமிட்டிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஆனால் அவர்கள் விரித்த வலைக்குள் ருஷ்யா விழவில்லை என்பதை அவதானிக்க முடிகிறது. அது மட்டுமல்ல உடனடியாகவே ருஷ்யா சிரியாவில் இசிஸின் எண்ணெய்க்கிணறு நிலைகள் மீது தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளது.

•Last Updated on ••Monday•, 07 •December• 2015 03:08•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 134 : பொன் குலேந்திரனின் 'முகங்கள்'

•E-mail• •Print• •PDF•

பொன் குலேந்திரனின் 'முகங்கள்'கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் பொன்.குலேந்திரனின் 'முகங்கள்' சிறுகதைத்தொகுதியினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. 'ஓவியா பதிப்பகம்' (தமிழகம்) வெளியீடாக , அழகான அட்டையுடன் வெளிவந்திருக்கின்றது. தான் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களை மையமாக வைத்து அவரால் எழுதப்பட்ட 21 சிறுகதைகளின் தொகுப்பிது.

இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளை பின்வருமாறு வகைப்படுத்த முடிகிறது: குறிப்பிட்ட ஆளுமை மிக்க ஒருவர் பற்றிய விவரணச்சித்திரங்களாச் சில கதைகள் அமைந்துள்ளன. சந்திக்கடை சங்கரப்பிள்ளை, வைத்தியர் வைத்திலிங்கம், சண்டியன் சங்கிலி இஸ்மாயில், நாட்டாண்மை நாச்சிமுத்து, நாவிதர் நாகலிங்கம், பியூன் பிரேமதாசா, அரசாங்க அதிபர அபயசேகரா, சின்னமேளக்காரி சிந்தாமணி போன்ற சிறுகதைகளை இவ்வகையில் அடக்கலாம். இவ்விதமான சிறுகதைகள் பொதுவாக ஒருவரைப்பற்றி அல்லது ஒரு பிரதேசமொன்றினைப்பற்றிய விவரணைகளாக, ஆரம்பம் , முடிவு போன்ற அம்சங்களற்று அமைந்திருக்கும். இதற்கு நல்லதோர் உதாரணமாகப் 'புதுமைப்பித்தனின்' புகழ் பெற்ற சிறுகதைகளிலொன்றான 'பொன்னகரம்' சிறுகதையினைக் குறிப்பிடலாம்.

இன்னும் சில சிறுகதைகள் குறிப்பிட்ட ஆளுமை மிக்க ஒருவரைபற்றிய விவரணையாக இருக்கும் அதே சமயம், எதிர்பாராத திருப்பமொன்றுடன், அல்லது முக்கியமானதொரு நீதியினைப் புகட்டும் கருவினைக்கொண்டதாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இவ்விதம் அமைந்துள்ள கதைகளின் மேலும் சில அம்சங்கள் முக்கியமானவை. கதைகள் கூறும் நடை, மற்றும் கதைகளில் விரவிக்கிடக்கும் பல்வகைத்தகவல்கள். எளிமையான ஆனால் ஆற்றொழுக்குப் போன்ற நடை ஆசிரியருக்குக் கை வந்திருக்கின்றது. அந்நடையில் அவ்வப்போது அளவாக நகைச்சுவையினையும் ஆசிரியர் கலந்து வெளிப்படுத்தியிருக்கின்றார். தொகுப்பிலுள்ள பல்வேறு ஆளுமைகளும் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களது காலங்களில் நிலவிய சமூகப்பழக்க வழக்கங்கள், குறிப்பிட்ட இடம் அல்லது கட்டடங்கள் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் எனப்பல்வகைத்தகவல்கள் இக்கதைகள் எங்கும் பரந்து கிடக்கின்றன.

•Last Updated on ••Sunday•, 06 •December• 2015 07:16•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 133 : சென்னை வெள்ளமும், நகர் அமைப்பு பற்றிய சிந்தனைகளும்...

•E-mail• •Print• •PDF•

சென்னையில் வெள்ளம்!சென்னையில் விரைவில் இயல்பு நிலை தோன்றி , அனைவரினதும் சிரமங்கள், துன்பங்கள் நீங்கிட அனைவரும் வேண்டுவோம். விமானநிலையம் போன்ற கட்டடங்களுக்குள் எல்லாம் எவ்வளவு வெள்ளம்! இந்திய மத்திய , மாநில அரசுகள் இதிலிருந்து பாடம் படிக்க வேண்டும். இவ்விதமான இயற்கைச்சீற்றங்களைச் சமாளிக்கும் வரையில், நகரைத்தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில் நகர அமைப்புத்திட்டங்களை வடிவமைத்து அமுல் படுத்த வேண்டும். இந்த மாமழை ஒன்றை அனைவருக்கும் புரிய வைத்திருக்கின்றது. காங்கிரீட் வனமாக மாறிக்கொண்டிருக்கும் நகருக்கு, இவ்விதமான சமயங்களில் விரைவாக நீர் வடிந்து போவதற்குரிய வடிகால்கள் போதுமான அளவுக்கு இல்லை என்பதுதான் அந்தப்புரிதல்.

டொராண்டோ, கனடாவிலும் இதுபோன்ற நிலையுண்டு. ஒரு மணித்தியாலம் விடாது மழை பெய்தால் போதும் நகரம் வெள்ளக்காடாக மாறிவிடும். குறிப்பாக 'டொன் வலி பார்க்வே' கடுகதி நெடுஞ்சாலை வெள்ளத்தால் நிறைந்துவிடும். இதற்குக்காரணமும் இங்கும் போதிய அளவு குறுகிய நேரத்தில் அதிகமாகப்பெய்யும் மழை நீர் விரைவாக வடிந்து போவதற்குரிய வடிகால் வசதிகள் போதுமான அளவு இல்லை என்பதுதான். சென்னையில் தற்போது பெய்யும் மழைபோல் பல நாள்களாக மழை பெய்தால், 'டொராண்டோ'வுக்கும் இந்த நிலைதான் எதிர்காலத்தில் ஏற்படும்.

இந்த இயற்கையின் சீற்றத்திலிருந்து இந்திய மத்திய , மாநில அரசுகள் பாடம் படிக்க வேண்டும். நகரத்திட்டமிடல் வல்லுநர்கள் நகரொன்றுக்குப்போதிய அளவில் வடிகால்கள் இருக்கும் வரையில் அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும். சூழற் பாதுகாப்பினை மையமாக வைத்துத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். மக்களை நகரங்களை நோக்கிப் படையெடுக்காத வண்ணம், பிற பகுதிகளிலும் வேலை வாய்ப்புகள் உருவாகும் வகையிலான திட்டங்களை உருவாக்க வேண்டும்.

•Last Updated on ••Friday•, 04 •December• 2015 07:19•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 132: ஜெயமோகனின் குணா கவியழகனின் படைப்புகள் பற்றிய கருத்துகள் பற்றி...., அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா!

•E-mail• •Print• •PDF•

ஜெயமோகனின் குணா கவியழகனின் படைப்புகள் பற்றிய கருத்துகள் பற்றி....,

ஜெயமோகன் ஜெயமோகன் அண்மையில் தனது வலைப்பதிவில் குணா கவியழகனின் படைப்புகளைப்பற்றிக் கூறிய கருத்துகளையிட்டுப்பலர் முகநூலில் வாதிட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.ஜெயமோகனுக்குத் தன் கருத்துகளைக்கூறும் முழு உரிமை உண்டு. பேச்சுரிமை, எழுத்துரிமையினை வலியுறுத்தும் அனைவரும் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு படைப்பு எல்லோருக்கும் ஒரே விதமான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதில்லை. ஒருவருக்குப்பிடித்த படைப்புகள் இன்னுமொருவருக்குப் பிடிக்காது. ஜெயமோகனுக்கு சயந்தனின் படைப்புகள் பிடித்திருக்கின்றன. கவியழகனின் படைப்புகள் அவ்விதம் பிடித்திருக்கவில்லை. ஜெயமோகன் போன்றவர்களிடம் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதும், கிடைக்கவில்லையென்றால் கடுமையாக எதிர்வினையாற்றுவதும் ஆரோக்கியமான இலக்கியச் செயற்பாடுகளல்ல. ஜெயமோகன் கவியழகனின் படைப்புகள் ஏன் தன்னைக் கவரவில்லை என்பதற்குக் காரணங்கள் கூறியிருக்கின்றார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவர் கவியழகனின் படைப்புகளை உதாரணங்களாக்கி, ஏன் ஜெயமோகனின் கூற்றுகள் தவறென்று தர்க்கபூர்வமாக வாதிட வேண்டும். இவற்றை எதுவும் செய்யாமல் ஜெயமோகனுக்கு எதிராக வார்த்தைகளை அள்ளிக்கொட்டுவதில் அர்த்தமில்லை. ஜெயமோகனின் கட்டுரையினை நானும் வாசித்தேன். அதன் இணைப்பினைக் கீழே தருகின்றேன். இதனை வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை ஜெயமோகனின் கருத்துகளின் அடிப்படையில் கூறுவீர்களென்றால் விவாதம் மேலும் சிறக்கும்.

விமர்சனங்களை அவை எவ்விதமிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் ஒருவரின் விமர்சனமென்பது அவர் குறிப்பிடும் படைப்பு பற்றிய முற்று முழுதான உண்மையல்ல. விமர்சனங்கள் எப்பொழுதுமே சார்பானவை. அவரது வாசிப்பு அனுபவம், கலை, இலக்கியம் பற்றிய கருத்தியல் போன்ற காரணங்களுக்காக அவரது விமர்சனம் இன்னுமொருவரிடமிருந்து வேறுபடும். அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

•Last Updated on ••Thursday•, 26 •November• 2015 20:55•• •Read more...•
 

'ஓவியா பதிப்பக' வெளியீடாக வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'

•E-mail• •Print• •PDF•

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக டிசம்பர் 2015இல் வெளிவரவுள்ள எனது 'குடிவரவாளன்' நாவலில் மொத்தம் 27 அத்தியாயங்கள். 'இன்று புதிதாய்ப்பிறந்தேன்' என்று முதலாவது அத்தியாயத்தில் ஆரம்பமாகும் நாவல் இறுதி அத்தியாயமான அத்தியாயம் 27இல் 'இன்று புதிதாய்ப்பிறந்தேன்' என்று முடிவடையும்.

இந்நாவல் பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது. அகதிகள், சட்டவிரோதக்குடிவரவாளர்கள் பற்றி அமெரிக்காவில் நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் பற்றி இந்நாவல் கேள்வியினை எழுப்புகின்றது. இவ்விதமாக அமெரிக்க மண்ணில் தம் இருப்பிற்காய்ப் போராடும் குடிவரவாளர்கள் எவ்விதம் அங்கு அவர்கள் நிலை காரணமாகப் பல்வேறு வழிகளிலும் பாதிப்புக்குள்ளாகின்றார்கள் என்பதை இந்நாவல் விபரிக்கின்றது. குறிப்பாக இவ்விதமான குடிவரவாளர்களை எவ்விதம் அவர்களைப் பணியிலமர்த்துவோர் அதிக வேலை வாங்கிப் பிழிந்தெடுக்கின்றார்கள் என்பதை, வேலை வாய்ப்பு முகவர்கள் எவ்விதம் இவ்விதமான தொழிலாளர்களின் நிலையைத்தமக்குச் சாதகமாக்கி வேலை வாய்ப்பென்னும் ஆசை காட்டி, பணத்துக்காக ஏமாற்றுகின்றார்கள் என்பதையெல்லாம் நாவல் விபரிக்கின்றது. இவ்வளவுதூரம் அலைக்கழிக்கும் வாழ்வினைக் கண்டு அஞ்சாது, துவண்டு விடாது இந்நாவலின் நாயகன் எவ்விதம் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தன் பயணத்தைத் தொடர்கின்றான் என்பதை நாவல் கூறும். அதே சமயத்தில் இலங்கையின் வரலாற்றில் களங்கமாகவிருக்கும் 1983 ஜூலைக்கலவரத்தை வெளிப்படுத்தும் ஆவணப்பதிவாகவும் இந்நாவல் விளங்குகின்றது.

•Last Updated on ••Monday•, 23 •November• 2015 22:29•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 131: ராஜாஜி ராஜகோபாலனின் 'குதிரையில்லாத ராஜகுமாரன்' பற்றிச்சில குறிப்புகள்...

•E-mail• •Print• •PDF•

ராஜாஜி ராஜகோபாலனின் 'குதிரையில்லாத ராஜகுமாரன்' ராஜாஜி ராஜகோபாலனின் சிறுகதைத்தொகுப்பான 'குதிரையில்லாத ராஜகுமாரன்'  படித்தேன். இன்னும் முடிக்கவில்லை. ஆனால் தொகுப்பில் நான் வாசித்த கதைகளின் அடிப்படையில் என் கருத்துகளை இங்கு பதிவு செய்கின்றேன். தொகுப்பினை முழுமையாகப்படித்த பின்னர் என் முழுமையான கருத்துகளைப் பகிர்ந்துகொள்வேன். நான் வாசித்த சிறுகதைகளின் அடிப்படையில் என் கருத்துகளைப் பற்றிப்பின்வருமாறு கூறுவேன்:

நான் வாசித்த கதைகளில்  மிகச்சிறந்த சிறுகதைகளாக நான் கருதுவது 'பத்தியம்' மற்றும் 'கடவுளும் கோபாலபிள்ளையும்' ஆகிய கதைகளைத்தாம். 'பத்தியம்'  ஆயுர்வேத வைத்தியர் மயில்வாகனம் அவர்களைப்பற்றியது. கதையில் ஒன்றிற்கும் அதிகமான இடங்களில் ஆயுள்வேத வைத்தியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பரியாரியார் அல்லது வைத்தியர் மயில்வாகனம் என்றழைக்கப்படும் ஆயுர்வேத வைத்தியரின் இன்றைய நிலை 'மேனாட்டு' வைத்திய முறையின் காரணமாகப்பாதிக்கப்பட்ட நிலையில் , வறுமையில் அவர் வாடுகின்றார். அவ்விதம் வாடும் நிலையில், அவரிடம் அவரது ஊரைச்சேர்ந்த இரு இளைஞர்கள் வருகின்றார்கள். எதற்கு? கொழும்பில் வேலை பார்க்கும் அவர்கள் , விடுமுறைக்காக ஊருக்கு வருகின்றார்கள். வந்தவர்கள் விடுமுறைக்காலத்தைச்சிறிதி நீட்டி விட்டார்கள். அதற்குக்காரணத்தைக்கூற வேண்டுமே? அதற்காக ஆயுர்வேத வைத்தியரிடம் ஒரு 'மெடிக்கல் ரிபோர்ட்' காசு கொடுத்து வாங்க வருகின்றார்கள். ஆனால் அவர்களோ தமது நோய்களுக்காக ஆங்கில வைத்தியத்தை நாடுபவர்கள் என்பதை அறிந்ததும் மயில்வாகனத்தார் ' சேர்ட்டிபிக்கட்டை நம்பி வந்தால் போதுமோ? வைத்தியத்தை நம்பியல்லோ வரவேணும்" என்கின்றார். அதற்கு அவர்கள் காசு எவ்வளவென்றாலும் தரத்தயார் என்கின்றார்கள். அதற்கு அவரோ "அது எனக்குத்தேவையில்லை. நான் வைத்தியத்துக்கு மாத்திரம் காசு வாங்குவன். போட்டு வாருங்கோ" என்று கூறி அனுப்பி விடுகின்றார். ஒரு சிறுகதைக்குரிய அம்சங்களுடன் , நவீனத்தொழில் நுட்பம் எவ்விதம் பாரம்பரியத்தொழில் நுட்பத்தினைப் பாதிக்கின்றது என்பதை எடுத்தியம்பும் 'பத்தியம்' அதே சமயம் வைத்தியர் மயில்வாகனத்தாரின் தன் தொழில் மீதான பக்தியினையும், கொள்கைப்பிடிப்பினையும் எடுத்துக்காட்டுகிறது. வறுமைப்பிடியில் வாடும் சமயத்தில் கூட அவர் பணத்துக்காகத் தன் னை விற்றுவிடவில்லை. கதை 'டாக்டர் மயில்வாகனம் புரண்டு படுத்தார்' என்று ஆரம்பமாகின்றது. ஆயுர்வேத வைத்தியரான, பரியாரியான மயில்வாகனத்தாரை வைத்தியர் மயில்வாகனத்தார் புரண்டு படுத்தார் என்று ஆரம்பித்திருக்கலாமென்று தோன்றியது. ஆங்கில வைத்திய முறையினை எதிர்ப்பவர் அவர். அவரை அறிமுகப்படுத்தும்போது ஆங்கிலத்தைத்தவிர்த்திருக்கலாமே.

•Last Updated on ••Sunday•, 22 •November• 2015 06:53•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும்130: விமர்சகர்கள் பல விதம்! ஒவ்வொருவரும் ஒரு விதம்!; மீண்டும் வெளிவரவிருக்கும் 'ழ'கரம்!;...

•E-mail• •Print• •PDF•

1. விமர்சகர்கள் பல விதம்! ஒவ்வொருவரும் ஒரு விதம்!

-V.N.Giritharan -நாம் அன்றாடம் வாசிக்கும் சஞ்சிகைகள், பத்திரிகைகள், சமூக ஊடகங்கள், மேலும் ஏனைய வெகுசன ஊடகங்கள் பலவற்றில் பல்வேறு வகையினரான விமர்சகர்களின் எழுத்துகளை வாசித்திருப்போம் அல்லது அவர்தம் உரைகளைக்கேட்டிருப்போம். அப்பொழுதெல்லாம் பலருக்கும் ஆச்சரியமாகத் தென்படும் விடயம் படைப்பொன்றினைப்பற்றி எவ்விதம் இவ்விதம் பல்வகை விமர்சனங்கள் வெளியாகின்றன என்பதுதான். அதற்கு முக்கிய காரணங்களில் சில:

விமர்சகர்கர்களின் இலக்கியப்புலமைக்கேற்ப அவர்களது விமர்சனங்களும் வேறுபட்டிருக்கும்.  சிலரது விமர்சனங்கள் தாம் சார்ந்த சமூக, அரசியல் , கலை, இலக்கியக்கொள்கைகளுக்கேற்ப மாறுபட்டிருக்கும். கலை மக்களுக்காக, கலை கலைக்காக என்று வாதிடுபவர்களின் விமர்சனங்களும் அக்கொள்கைகளுக்கேற்ப வேறுபட்டிருக்கும். விமர்சனங்கள் எவ்வகைப்பட்டதாகவுமிருந்தாலும், அவ்விமர்சனங்களின் தரம், முக்கியத்துவம் , அவை எவ்விதம் தாம் விமர்சிக்கும் படைப்புகளை உள்வாங்கி, தர்க்கச்சிறப்புடன் ஆராய்கின்றன என்பதில்தான் தங்கியுள்ளது. உதாரணமாக மார்க்சிய அடிப்படையில் விமர்சிக்கும் ஒருவர் , மார்க்சியத்தின் கலை, இலக்கியச்சிந்தனைகளுக்கேற்ப, குதர்க்கமற்று, தர்க்கச்சிறப்புடன் விமர்சிக்கும் படைப்பினை விமர்சித்திருந்தால் அவ்விமர்சனம் நல்லதொரு விமர்சனமே.

அதுபோல் கலை கலைக்காக என்னும் அடிப்படையில் அவ்விமர்சனத்தை குதர்க்கமற்று, தர்க்கச்சிறப்புடன் விமர்சித்திருந்தால் அதுவும் தரமான விமர்சனமே. இப்பொழுது பலருக்கு ஒரு கேள்வி எழலாம். அதெப்படி இருவகையான போக்குள்ளவர்களின் இருவேறு வகைப்பட்ட விமர்சனங்களும் தரமானவை என்று கூறுகின்றீர்களே என்ற கேள்விதானது. என்னைப்பொறுத்தவரையில் விமர்சனமானது எப்பொழுதுமே ஒரே மாதிரி இருக்க வேண்டிய தேவையில்லை. ஒரு படைப்பினை அணுகும் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமானவர்கள். அவர்களது அறிவு, வாசிப்பு அனுபவம், கல்வி என்று பல்வேறு காரணங்களினால் அவர்களது விமர்சனங்களும் வேறுபடும். ஆனால் விமர்சனங்கள் வேறு பட்டாலும், அவ்விமர்சனங்கள் விமர்சிக்கப்படுபவர்களால் படைப்புகள் முழுமையாக உள்வாங்கப்பட்டு, அவர்களது சிந்தனைகளுக்கேற்ப புரிந்துகொள்ளப்படுவதன் விளைவான வெளிப்பாடுகளாக இருப்பின், அவை தரமான விமர்சனங்களே என்பதென் கருத்து.

•Last Updated on ••Sunday•, 22 •November• 2015 18:52•• •Read more...•
 

டிசம்பர் 2015 இல் தமிழகத்தில் 'ஓவியா பதிப்பக' வெளியீடாக வெளிவரவிருக்கும் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவல் பற்றி மேலும் சில குறிப்புகள்.....

•E-mail• •Print• •PDF•

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

இளங்கோ ஓர் ஈழத்துத்தமிழ் அகதி. இலங்கையின் 1983 இனக்கலவரத்தைத்தொடர்ந்து அகதியாகக் கனடா நோக்கிப் புலம்பெயர்கின்றான் கதையின் நாயகனான இளங்கோ. ஆனால் அவனது பயணம் அமெரிக்காவின் பாஸ்டன் நகருடன் நின்று விடுகின்றது. அவனை கனடாவின் மான்ரியாலுக்கு ஏற்றிச்செல்லவிருந்த விமானம் நிறுவனம் மறுத்து விடுவதால் அவன் அமெரிக்காவிலேயே அகதிக்கோரிக்கை விடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றான். அவனை நியுயார்க்கிலுள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்பி விடுகின்றார்கள். அங்கு சுமார் மூன்று மாதங்கள் வரையில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றான். சட்ட விரோதக்குடிவரவாளனாக நியுயார்க் மாநகரில் சுமார் ஒரு வருடம் வரையில் அலைந்து திரிகின்றான்  எந்தவிதச் சட்ட ஆவணங்களுமற்ற நிலையில், சுமார் ஒரு வருடம் வரையில் அவன் எவ்விதம் நியூயார்க் மாநகரில் தப்பிப்பிழைக்கின்றான் என்பதுதான் 'குடிவரவாளன்' நாவலின் பிரதான கரு.

இந்நாவல் அக்காலகட்டத்தில் அவன் வாழ்வில் எதிர்ப்படும் பல்வேறு வேற்றின மக்களுடனான அனுபவங்களை விவரிக்கின்றது. அமெரிக்காவுக்கு அகதியாக ஜேர்மனியிலிருந்து வரும் ரஞ்சிற்சிங், அவன் தடுப்பு முகாமிலிருந்து வெளியே வந்ததும் தங்கியிருக்கும் வீட்டுச்சொந்தக்காரரான இந்தியத்தம்பதியினர் அஜித்/பத்மா தம்பதியினர் அங்கு அவனுக்கு அறிமுகமாகும் வங்காளியான கோஷ், அங்கு தங்கியிருக்கும் ட்ரக் சாரதியான பஞ்சாபைச்சேர்ந்த மான்சிங், வேலை வாய்ப்பு பெற்றுத்தரும் முகவன் பீற்றர், அவனிடம் பணி புரியும் ஹென்றி, நியூ ஜேர்சியிலுள்ள கடலுணவு உணவகத்தின் பிரதான சமையல்காரன் கிரேக்கனான நெப்போலியன், அவனது உதவியாளன் மார்க், குடிவரவுத்திணைக்கள அதிகாரி டிம் காங்கின், நடை பாதைத்தம்பதியினரான மராத்திய ஹரிபாபு  தம்பதியினர், அவர்களிடம் பணிபுரியும் எஸ்கிமோ ஹென்றி, தோலாடைகளை விற்பனை செய்யும் இத்தாலியக்கடைக்காரனான கார்லோ, நியூயார்க் சட்டத்தரணி அனிஸ்மான், சட்டவிரோதக்குடிவரவாளர்களின் நிலையை வைத்துச் சுரண்டிப்பிழைப்பை நடாத்தும் ஸ்பானிஸ் வேலை வாய்ப்பு முகவனான பப்லோ  எனப்பல்வேறு இனங்களைச்சேர்ந்த கதாபாத்திரங்கள் நாவல் முழுவதும் வருகின்றன.

இவர்களுடனான இளங்கோவின் அனுபவங்களை விபரிப்பதே 'குடிவரவாளன்' நாவலின் முக்கிய நோக்கம்.

நாவலின் ஆரம்பத்தில் இளங்கோவின் 1983 காலகட்டத்துக் கலவர அனுபவங்கள் விரிவாக விபரிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் நியூயார்க் மாநகரத்தில் தப்பிப்பிழைப்பதற்காக அவன் செய்யும் தொழில்கள் பற்றி நாவல் விபரிக்கின்றது. கூடவே அமெரிக்க அரசின் சட்டவிரோதக்குடிகள், அகதிகள் பற்றிய சட்ட திட்டங்களை விமர்சிக்கின்றது நாவல். தப்பிப்பிழைப்பதற்காக நடைபாதைகளில் பல்வேறு தொழில்கள் செய்கின்றான்; உணவகங்களில் வேலை செய்கின்றான். இவ்விதம் இளங்கோவின் அனுபவங்களை விபரிக்கும் நாவல் அவனது உறுதியான, வாழ்வினை எதிர்நோக்கும் உள்ளத்தினையும் விபரிக்கின்றது.

Oviya Pathippagam
17-16-5A, K.K.Nagar,
Batlagundua - 642 202
Tamil Nadu, India

Phone: 04543 - 26 26 86
Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52
email: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• | •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Thursday•, 19 •November• 2015 19:27••
 

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

•E-mail• •Print• •PDF•

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

நீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவரவுள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.

இலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் டிஸம்பர் முதல் வாரத்தில் விற்பனைக்கு வெளிவரவுள்ளது.

Oviya Pathippagam
17-16-5A, K.K.Nagar,
Batlagundua - 642 202
Tamil Nadu, India

Phone: 04543 - 26 26 86
Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52
email: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• | •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Monday•, 09 •November• 2015 17:55••
 

கவிஞர் புவியரசின் மொழிபெயர்ப்பில் தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்.....

•E-mail• •Print• •PDF•

கவிஞர் புவியரசின் மொழிபெயர்ப்பில் தத்யயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்.....'கரமசோவ் சகோதரர்கள்' தஸ்தயேவ்ஸ்கியின் மிகச்சிறந்த நாவல் மட்டுமல்ல. உலக இலக்கியத்தின் சிறந்த நாவலாகவும் கருதப்படுவது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பினை 'நியூ செஞ்சுரி புக்ஸ்' பதிப்பகமும் (கவிஞர் புவியரசு மொழிபெயர்ப்பிலும்) , காலச்சுவடு பதிப்பகமும் (நேரடியாக ருஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து 'கரமஸாவ் சகோதரர்கள் என்னும் தலைப்பில்) வெளியிட்டுள்ளன.

நம்மவர்கள் பலர் அவ்வப்போது ஏன் அவரைப்போல் அல்லது இவரைப்போல் எழுத முடியவில்லையே என்று கண்ணீர் வடிப்பதுண்டு. அவர்கள் முதலில் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை வாசிக்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்விதம் வாசித்தால் அவர்கள் ஏன் அவர்கள் குறிப்பிடும் படைப்பாளிகளால் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளைப்போன்ற படைப்புகளை வழங்க முடியவில்லை என்பது புரிந்து நிச்சயம் கண்ணீர் விடுவார்கள்.

மானுட வாழ்வின் இருப்பை, இருப்பின சவால்களை, இருப்பின் இன்பதுன்பங்களை, இருப்பின் நன்மைக்கும் தீமைக்குமிடையிலான மோதல்களை, இருப்பின் நோக்கம் பற்றிய தேடலை தஸ்தயேவ்ஸ்கி எழுதியதுபோல் வேறு யாருமே இதுவரையில் எழுதவில்லை என்பது இதுவரையிலான என் வாசிப்பின் அடிப்படையில் எழுந்த கருத்து. தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளின் ஒவ்வொரு பக்கத்தையும் ஒதுக்கித்தள்ள முடியாது. அது அவரது எழுத்தின், சிந்தனையின் சிறப்பு.

வக்கிரமான உணர்வுகளும், காமமும் மிகுந்த ஒரு பணக்காரத்தந்தை, அவரது மூன்று வகைக்குணவியல்புகளுள்ள மூன்று புத்திரர்கள், அவருக்கும் பிச்சைக்காரியொருத்திக்குமிடையில் முறை தவறிப்பிறந்ததாகக் கருதப்படும் இன்னுமொரு புத்திரன், அவரது வேலைக்காரன், மூன்று புத்திரர்கள் வாழ்விலும் புகுந்துவிட்ட பெண்மணிகள், அந்தப்பெண்மணியிலொருத்திக்கும் மூத்த புத்திரனுக்கும், தந்தைக்குமிடையிலுமான காதல், காம உணர்வுகள், மேலுமிரு சகோதரர்களுக்குமிடையில் வரும் இன்னுமொரு பெண்மணி , ஒரு துறவி என வரும் முக்கியமான பாத்திரங்களை உள்ளடக்கிப் பின்னப்பட்டிருக்கும் மகாநாவல் கரமசோவ் சகோதரர்கள்.

நாவலின் பின்பகுதியில் வரும் தந்தையின் மரணமும் , சந்தர்ப்பசூழ்நிலைகளால் மூத்தமகன் குற்றஞ்சாட்டப்படுவதும், உண்மையில் அக்கொலையின் சூத்திரதாரியான முறைதவறிப்பிறந்த புத்திரன் தற்கொலை செய்வதும், இருந்தும் நீதிமன்றத்தால் மூத்தவன் தண்டிக்கப்படுவதும், அது பற்றி நிகழும் நீதிமன்ற வாதிப்பிரதிவாதங்களும் வாசித்து அனுபவித்து மகிழ வேண்டியவை.

•Last Updated on ••Wednesday•, 28 •October• 2015 21:13•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 129 : என்னருமை யாழ்ப்பாணமே! | சாகித்திய விருதும் , திருப்பிக்கொடுத்தலும்! | எழுத்தாளர் டிசெதமிழன் 'காந்தியம் அமைப்பைப்பற்றி....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்ஈழத்துத்தமிழ்ப்பகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். தனித்துவம் மிக்கவை. நில அமைப்புகளும் வித்தியாசமானவை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் ஈழத்தமிழர்களாகிய நாம் அவற்றை முறையாகப்பயன்படுத்துகிறோமா? உதாரணத்துக்கு யாழ்ப்பாணத்தை எடுத்துக்கொள்வோம்.

வான் பார்க்கும் வட மாகாணத்தின் பிரதான நகர்தான் யாழ்ப்பாணம். அந்நகர அமைப்பினை நினைக்கும் தோறும் எனக்கு 'டொராண்டோ' நகரின் நகர அமைப்பு ஞாபகத்து வருவதுண்டு. 'டொராண்டோ' நகரின் உள்நகரின் (downtown) பிரதான அம்சங்களிலொன்று: பிரதான விளையாட்டு அரங்குகள், சுற்றுலாப்பயணிகளுக்கு முக்கியவத்துவம் வாய்ந்த கட்டடங்கள் மற்றும் வாவிக்கரை போன்றவையெல்லாம் ஓரிடத்தில் அமைந்திருக்கும். யாழ்ப்பாணத்தைப் பார்ப்பீர்களென்றால் இது போன்ற ஓர் ஒழுங்கமைப்பினை அவதானிக்கலாம். பிரதான விளையாட்டரங்கு, முற்றவெளி, திறந்த பிரதான திரையரங்கு, சுப்பிரமணியன் பூங்கா, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த டச்சுக் கோட்டை, அழகான பண்ணைக்கடலும், பாலம், மேலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல கட்டடங்கள் (உதாரணத்துக்குப் போர்த்துக்கேயர் காலத்துக் கிறிஸ்தவ ஆலயங்கள், ஆங்கிலேயர் காலத்து வீடுகள் போன்றவை), மணிக்கூட்டுக்கோபுரம், முறையாகப்பாவித்திருக்க வேண்டிய புல்லுக்குளம், யாழ் பொதுசன நூலகம், தந்தை செல்வா சமாதி எனப் பல முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையெல்லாம் ஓரிடத்தில் அமைந்திருக்கும் ஒழுங்கமைப்பினையே கூறுகின்றேன்.

'டொராண்டோ' நகரினை மக்கள் பாவிப்பதுபோல் யாழ்நகரை மக்கள் பாவிப்பதில்லை. இதற்குக்காரணம் நகரினைப் பரிபாலிக்கும் ஆட்சியிலிருக்கும் அமைப்புகளெல்லாம் தொலைநோக்கில் சிந்தித்து நகரினை மக்கள் அதிகமாகப்பாவிக்கும் வகையில் பிரதானப்படுத்திச் செயற்பாடுகளை எடுக்கவில்லை என்பதால்தான் என்பதென் கருத்து.

•Last Updated on ••Tuesday•, 27 •October• 2015 23:35•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 128: தமிழினி (சிவகாமி) ஜெயக்குமாரனின் கொண்டாடப்பட வேண்டிய இருப்பு!

•E-mail• •Print• •PDF•

தமிழினி (சிவகாமி) ஜெயக்குமாரனின் கொண்டாடப்பட வேண்டிய இருப்பு!

வாசிப்பும், யோசிப்பும் 128: ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்! | தமிழினி (சிவகாமி) ஜெயக்குமாரனின் கொண்டாடப்பட வேண்டிய இருப்பு!அண்மையில் மறைந்த தமிழினியின் வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டியதே தவிர , அநுதாபத்துக்குரியதல்ல. யுத்தம் முடிவடைந்த பின்னர் சுமார் நான்கு வருடங்கள் சிறையிலிடப்பட்டு வெளிவந்த தமிழினி தனக்கேற்பட்ட இன்னல்களையே எண்ணி மனந்தளர்ந்திடவில்லை. 'சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாமல் , 'இன்றுபுதிதாய்ப்பிறந்தோம் என்று எண்ணமதைத் திண்ணமுற இசைத்து' வாழ்ந்தவர்.

தமிழினியின் இறுதிக்கிரியைகள் பற்றிய நிகழ்வுகளிலும் சரி, அவர் பற்றி நினைவு கூர்ந்தவர்களின் நினைவுகளிலும் சரி தமிழினியின் கடந்த காலப்போராட்ட வாழ்வு பற்றிய விபரங்களே இடம் பெற்றிருந்தன. ஆனால் அவர் சிறையினின்றும் மீண்டு , வாழ்வை நம்பிக்கையுடன் எதிர் கொண்ட அவரது நிலை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருக்கவில்லை.

தமிழினி ஏற்கனவே வேறொரு பெயரில் எனக்கு முகநூலில் நட்புக்கரம் நீட்டி அழைப்பு விடுத்திருந்தார். பொதுவாக எனக்கு வரும் அழைப்புகளைச் சிறிது காலம் அவதானித்து விட்டு, அவர்களிடும் பதிவுகளின் அடிப்படையிலேயே அவர்களை நட்பு வட்டத்தில் சேர்ப்பது பற்றி முடிவெடுப்பேன். அவ்விதமே வேறொரு பெயரில் அழைப்பு விடுத்த அவரையும் அந்தப்பெயரிலேயே என் நட்பு வட்டத்தில் இணைத்துக்கொண்டேன். அவரது மறைவுக்குப்பின்னரே அந்தப்பெயரில் இயங்கியவர் தமிழினி என்று அறிந்து கொண்டேன்.

பின்னர் தமிழினி என்னும் பெயரில் அழைப்பு அனுப்பியிருந்தார். அந்த அழைப்பு அனுப்பியபோது அவரது முகநூலில் அவர் பாவித்திருந்த படம் (image) என்னை மிகவும் கவர்ந்திருந்தது.  பல்வேறு கைகள் இணைந்து நிற்கும் காட்சி அது. பல்வேறு கருத்துள்ளவர்களுடனும் நட்புக்கரம் கோர்த்து, ஒன்றுபட்டுச் செயற்பட அவர் விரும்பியதை வெளிப்படுத்தும் படம் அது. அதனால்தான் அவரது முகநூல் நண்பர்களாகப் பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கிவர்களும் இணைந்திருக்க முடிந்தது. அவ்விதமாக அனைத்துப் பிரிவினருடனும் ஆக்கபூர்வமாக இணைந்து கலந்துரையாட அவர் முனைந்தது கூறும் செய்திதானென்ன?

படத்திலுள்ள கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அளவுகளில் வேறுபட்டவை. அவை அனைத்தும் ஒன்றுபட்டு ஆக்கபூர்வமாக இயங்குவதைப்போல், முரண்பட்ட கருத்துள்ளவர்களாலும் ஒன்றுபட்டு , முரண்பாடுகளுக்குள் ஓர் இணக்கம் கண்டு இயங்க முடியும். சமூக ஊடகமான முகநூலில் அவரது செயற்பாடுகள் இதனைத்தான் எமக்குக் கூறி நிற்கின்றன. பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கியவர்களெல்லாரும் அவருடன் முகநூலில் கைகோர்த்திருந்தார்கள். அனைவருடனும் அவர் நிதானமாக, உணர்ச்சிவசப்படாமல் கருத்துகளைப் பரிமாறியிருக்கின்றார். அதனால்தான் அவரது மறைவு அனைத்துப்பிரிவினரையும் பாதித்திருக்கின்றது.

இன்னுமொரு விடயத்தையும் நாம் கவனத்திலிருத்த வேண்டும். தமிழினி சிறை மீண்டு ஆரம்பித்த வாழ்வில் , திருமணம் முடித்துத் தன் மண வாழ்வினையும் ஆரம்பித்துள்ளார். இலண்டனில் வசிக்கும் ஜெயக்குமாரன் அவர்களை அவர் மணம் புரிந்து தன் வாழ்வின் அடுத்த கட்டத்தினை ஆரம்பித்துள்ளார். அவரது நோய் காரணமாக அவரால் இலண்டனுக்குச் செல்ல முடியாதிருந்திருக்கலாம்; அல்லது அரசியல் காரணங்களினால் இலண்டனுக்குக் குடிபெயர்வதில் சிரமங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவை பற்றி எமக்கு எதுவும் தெரியாது. அவரது குடும்பத்தவர்களுக்கு மட்டுமே உண்மை விபரங்கள் தெரியும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சிவகாமி சிவசுப்பிரமணியம் இறக்கும்போது சிவகாமி ஜெயக்குமாரனாக மறைந்திருக்கின்றார்.

முகநூலில் கணவன், மனைவியாக இருவரும் ஆக்கபூர்வமாகச் செயற்பட்டிருக்கின்றனர் என்பதையே என்னால் அவதானிக்க முடிகிறது. தன் மனைவியின் இலக்கியச் செயற்பாடுகளை ஆதரித்து, அவரை அதில் தீவிரமாக ஈடுபட வைத்ததில் அவரது கணவர் ஜெயக்குமாரனின் பங்களிப்பை என்னால் அவர்கள்தம் முகநூல் குறிப்புகளிலிருந்து அவதானிக்க முடிகிறது. ஆனால் இலண்டனில் வசிக்கும் ஜெயக்குமாரன்தான் அவரது கணவர் என்னும் விடயத்தையும் நான் தமிழினியின் மறைவின்பின்னரே அறிந்து கொண்டேன்.

சிறை மீண்டதன் பின்னர் தன்னைப் புரிந்து கொண்ட ஒருவரை மணம் புரிந்து, அண்மையில் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையிலும் தன் எழுத்தாற்றலை வீணாக்காமல், தன் கடந்த காலத்து அனுபவங்களைக் கவிதைகளாகவும், புனைகதைகளாகவும் பதிவு செய்ததோடு, முரண்பாடுகளைக்கடந்து அனைவருடனும் கை கோர்த்து இருப்பினை ஆக்கபூர்வமாக மாற்றி நடைபோட்ட தமிழினியின் (சிவகாமி ஜெயக்குமாரனின்) வாழ்வு கொண்டாடப்பட வேண்டியது. அதிலிருந்து முரண்பாடுகளை மற்றும் அவரது மரணத்தைத் தமது நலன்களுக்காக ஊதிப்பெரிதாக்கி ஆதாயம் தேடுவோர் தொடக்கம் அனைத்துப் பிரிவினரும் கற்க வேண்டியவை நிறையவே உள.

முகநூலில் வெளியான அவரது படைப்புகள் அனைத்தும் (அவரது பெயரிலும், புனைபெயரிலும்) வெளியான படைப்புகள் (சிறுகதைகள், கவிதைகள்) எண்ணிகையில் குறைவாக இருந்தபோதும் தமிழ் இலக்கியப்பரப்பில் தமக்கென்றோரிடத்தைப் பெற்றுள்ளவையாக நிலைத்து நிற்கும் தன்மை மிக்கவை.


சு.ரா.வின் பார்வையில் தாஸ்தயேவ்ஸ்கியின் கனவு!

வாசிப்பும், யோசிப்பும் 128: ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்! | தமிழினி (சிவகாமி) ஜெயக்குமாரனின் கொண்டாடப்பட வேண்டிய இருப்பு!அண்மையில் சு.ரா.வின் தாஸ்தயேவ்ஸ்கி பற்றிய 'தாஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞன்' என்னும் கட்டுரையினை வாசித்தபொழுது என் கவனத்தை ஈர்த்த பகுதியினைக் கீழே பதிவு செய்கின்றேன்:

"பரிபூரணமான மனிதனை உருவாக்க வேண்டும் என்பது தாஸ்தயேவ்ஸ்கியின் பெரிய கனவாக இருந்தது.  பல்வேறு நாவல்களில் பல்வேறு கதாபாத்திரங்களைப் பரிபூரணத்தை நோக்கி நகர்த்த அவன் முயல்கிறான். ஆனால் தாஸ்தயேவ்ஸ்கி ஆசைகளால் ஆட்டுவிக்கப்படும் பக்தியுகக் காவியகர்த்தா அல்லன்.  அவன் ஒரு நாவலாசிரியன்; மற்றொரு விதத்தில் சொன்னால் யதார்த்த வாழ்க்கையைக் கண்டு சொல்ல வந்தவன். அதன் ஆழத்தையும் ஒளியையும் இருளையும் மனிதனின் பார்வை இன்று வரையிலும் படாத மூலைகளையும் பதிவு செய்ய வந்தவன். கரமசோவ் சகோதரர்களில் அலெக்சியையோ அல்லது 'மூடன்' என்ற நாவலின் இளவரசன் மிஷ்கின் என்ற கதாபாத்திரத்தையோ பரிபூரணத்தின் ஜீவ இயக்கமாக உருவாக்குவதில் அவன் வெற்றி பெறவில்லை. இந்தத்தோல்வி யதார்த்தத்தைப் பற்றிய அவனின் அறிவின் வெற்றியாகும்.  யதார்த்தத்தில் பரிபூரணம் என்பது இல்லாதவரையிலும்  படைப்பிலும் பரிபூரணம் என்பது சாத்தியமில்லை. உண்மையின் பாரத்தைச்சுமந்து செல்லும் கலைஞன் வாழ்வின் இயற்கை விதிகளுக்கு உட்பட்டே தொழில் புரிகிறான்."

சுராவின்,  ஒருவரின் படைப்புகளைப்பற்றிய இந்த அவதானிப்பு வாசிப்புக்கு இன்பமூட்டுவது; சிந்தனைக்கு வேலை தருவது. பரிபூரணமான மனிதரைக்காண முடியாது என்பதுபோல் பரிபூரணமான படைப்பாளியொருவரையும் காண முடியாது சு.ரா உட்பட. முரண்பாடுகள் எப்பொழுதும் கூடவே வருபவை. ஆனால் அவ்வகையான முரண்பாடுகளினூடு படைப்பாளியொருவரின் சிறப்பு என்பது அவரது ஆழ்ந்த வாசிப்பு, சிந்தனை, தர்க்கச்சிறப்பு மிக்க வாதங்கள் மற்றும் பாவிக்கப்படும் மொழி  ஆகியவற்றில்தான் தங்கியுள்ளது. சுராவும் அவ்வகையான படைப்பாளிகளிலொருவர் என்பதை வெளிப்படுத்தும் சான்றுகளிலொன்றுதான் மேலுள்ள அவரது தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் பற்றிய அவதானிப்பும்.


எழுத்தாளர் மைக்கல் (மான்ரியால்) ஓர் அறிமுகம்.

வாசிப்பும், யோசிப்பும் 128: ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்! | தமிழினி (சிவகாமி) ஜெயக்குமாரனின் கொண்டாடப்பட வேண்டிய இருப்பு!எழுத்தாளர் மைக்கல் (மான்ரியால்) கனடாத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் படைப்பாளிகளிலொருவர். மைக்கல் சமகால இலக்கிய நடப்புகளை அறிவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். இலக்கியத்துறையில் நடமாடும் பலரிற்கு தமது படைப்புகளை வாசிப்பது மட்டுமே இலக்கியத் தேடலாக இருந்து விடுகின்றது. இன்னும் சிலரிற்கோ ஒரு குறிப்பிட்ட அங்கீகாரம் பெற்ற படைப்பாளிகளின் எழுத்துகளை மட்டும் படிப்பது தான் இலக்கிய உலகில் தங்கள் புலமையைக் காட்டி நிலை நிறுத்திக் கொள்வதற்குரிய வழிகளிலொன்றாக இருந்து விடுகின்றது. இந் நிலையில் விருப்பு வேறுபாடின்றி சகல படைப்புகளையும் தேடலுடன் , ஒரு வித தீவிரமான ஆர்வத்துடன் வாசித்தறிபவர்கள் சிலரே. மைக்கல் அத்தகையவர்களில் ஒருவர். நவீன இலக்கிய முயற்சிகள் பற்றிய இவரது கடிதங்கள், கட்டுரைகள் எல்லாம் இவரது புலமையை வெளிக்காட்டுவன. ஒரு நல்லதொரு இலக்கிய விமர்சகராக, படைப்பாளியாக விளங்குவதற்குரிய தகைமைகள் பெற்று விளங்கும் வெகு சில கனேடிய இலக்கியவாதிகளில் மைக்கல் குறிப்பிடத்தக்கவர்.

இவரது 'யாத்ரா மார்க்கம்' என்னும் பத்தி எழுத்து ஆறு கட்டுரைகளாகப் 'பதிவுகள்' இணைய இதழில் ஆகஸ்ட் 2002 இதழ் 32 தொடக்கம் பெப்ருவரி 2003 இதழ் 38 வரை தொடராக வெளிவந்தது. அதில் 'நடுகல்', 'வான்கோழி நடனம்', 'காடேறி வலயம்', 'சூரையங்காடு', 'காற்றிலேறி நிலவைக் கொய்தல்' மற்றும் 'வீரன்' ஆகிய கட்டுரைகள் வெளியாகியிருந்தன.

இவரது நாவலான 'ஏழாவது சொர்க்கம்' 'பதிவுகள்' இணைய இதழில் பத்து அத்தியாயங்களாக ஆகஸ்ட் 2001 ,இதழ்-20 தொடக்கம் ஏப்ரல் 2002 இதழ் 28 வரையில் தொடராக வெளிவந்தது.

இவை மீண்டும் 'பதிவுகள்' இணைய இதழில் தமிழ் ஒருங்குறி எழுத்தில் பிரசுரமாகும்.

மீண்டும் புத்துணர்வுடன் மைக்கல் இலக்கியப்பங்களிப்பு செய்வதற்கு வரவேண்டுமென்பதே எமது அவா. அவ்விதமே வருவதாக 'மீண்டும் தொடங்கும் மிடுக்கு' என முகநூல் வாயிலாக அறிவித்திருக்கின்றார். நண்பரின் வருகை நல்வரவாகட்டும். கனடியத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கட்டும். வாழ்த்துகிறோம்.

•Last Updated on ••Monday•, 04 •November• 2019 22:07••
 

அஞ்சலி: தமிழினி மறைவு!

•E-mail• •Print• •PDF•

தமிழினி ஜெயக்குமாரன்நண்பர் கற்சுறா முகநூலில் அனுப்பியிருந்த தமிழினியின் மறைவு பற்றி அனுப்பியிருந்த தகவல் உண்மையிலேயே அதிர்ச்சியினைத்தந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. சிறிது நாள்களுக்கு முன்னர் கூட எழுத்தாளர் தாமரைச்செல்வி பற்றி நான் எழுதிய முகநூல் பதிவினைத்தனது முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன்  பின்வருமாறும் எழுதியிருந்தார்:

"அக்காவின் எழுத்துக்களை சிறு வயதிலிருந்தே நான் ஆர்வத்துடனும். ஆசையுடனும் வாசிப்பதுண்டு. வளர்ந்த பின்பும் அக்காவின் வன்னி மண்ணினதும் அதன் மக்களின் இயல்புகளையும் பற்றிய புரிதலை எனக்குள் ஏற்படுத்தியவை அக்காவின் எழுத்துக்கள் தான். அவை பற்றி அருமையான குறிப்பொன்றைத் தந்தமைக்கு சகோதரன் கிரிதரனுக்கு எனது மனமார்ந்த நன்றி."

தமிழினி விடுதலைப்புலிகளின்  மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். யுத்தத்தின் பின்னர் சிறிது காலம் சிறை வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர். அதன் பின்னர் அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியத்தில் தன் பங்களிப்பினை ஆற்றத்தொடங்கியிருந்தார். தமிழினி எழுதுவதில் திறமை மிக்கவர். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்துக் கவிதைகள், சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். பதிவுகள் இணைய இதழுக்கும் அவர் தன் படைப்புகளை அவ்வப்போது அனுப்புவார். பதிவுகள் இணைய இதழ் மேல் மிகுந்த மதிப்பு கொண்டிருந்ததோடு அல்லாமல் தன் முகநூல் பக்கத்தில் பதிவுகளில் அவரது படைப்புகள் பற்றி வெளியாகியுள்ள குறிப்புகளை பிரசுரிப்பதுடன் அதற்காக நன்றியும் கூறியிருப்பார். அவர் நோய் வாய்ப்பட்டிருந்த விடயம் அவரது மறைவின் பின்னர்தான் தெரிந்தது.

அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்து இன்னும் பல படைப்புகளைத்தருவார் என்றெண்ணியிருந்த சமயத்தில் அவரது மறைவுச்செய்தி வந்திருக்கின்றது. ஆனால் அவர் எழுதிய அனைத்துமே தமிழ் இலக்கியப்பரப்பில் முக்கியமானவையாக விளங்கப்போகின்றன என்பது மட்டும் நிச்சயம்.

•Last Updated on ••Friday•, 23 •October• 2015 04:30•• •Read more...•
 

கவிதை: அலைந்து 'திரி'யும் பாணன்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: அலைந்து 'திரி'யும் பாணன்!வரலாற்றினைத் திரிப்பது
பற்றிக்கூறினேன்.
அதற்குக் கவிஞர் கூறினார்
'திரிப்பதற்கு வரலாறு ஒன்றும் கயிறல்ல'.
இன்னுமொரு இலக்கியவாதி கூறினார்
'திரிப்பதற்கு வரலாறு ஒன்றும்
உளுத்தம் மாவுமல்ல'.
இடையில் புகுந்து மேலுமொரு
திறனாய்வாளர் செப்பினார்:
"திரிப்பதற்கு
வரலாறு ஒன்றும்
விளக்குத்திரியோ அல்லது
வெடிகுண்டுத்திரியோ ,
வெடிக்கும் பட்டாசுத்திரியோ அல்ல"
இன்று நான்
இம்பர் வானெல்லை
இராமனையே பாடிய
பாணனாக அலைந்து
'திரி'கின்றேன், மேலுமேதாவது
'திரி'ப்பதற்குக் கிடைக்குமா
என்று.

•Last Updated on ••Thursday•, 15 •October• 2015 21:22••
 

வாசிப்பும், யோசிப்பும் 127 : டேவிட் ஐயா பற்றிய சில நினைவுகள்.....| 'ஆச்சி' மனோரமா மறைவு!

•E-mail• •Print• •PDF•

டேவிட் ஐயா அவர்கள்டேவிட் ஐயா கிளிநொச்சியில் காலமானார் என்ற செய்தியைக்கேட்டபோது அவரது பெருமைமிகு வாழ்வையெண்ணி மனது அசை போட்டது. தன் சொந்த நாட்டில் அவர் ,மறைந்தது ஒருவித நிறைவினைத்தந்தது. ஒரு காலத்தில் சர்வதேசரீதியாகப்புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கியவர் டேவிட் ஐயா என அன்பாக அழைக்கப்பட்ட எஸ்.ஏ.டேவிட் (சொலமன் அருளானந்தம் டேவிட் ) அவர்கள். அவர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சமயம் அவர் தங்கியிருந்த கொழும்பு Y.M.C.A கட்டடம் அவரால் வடிவமைக்கப்பட்ட கட்டடங்களிலொன்று என்பதால், அதன் காரணமாக அந்த நிறுவனத்தால் அவர் இருக்கும் வரையில் அங்கு தங்கியிருப்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். யாழ் பல்கலைக்கழக நூல் நிலையக்கட்டடம் அவரது வடிவமைப்பில் உருவான கட்டடங்களிலொன்று என்றெண்ணுகின்றேன்.

இவரைப்பற்றி நான் விரிவாக அறிந்து கொண்டது எண்பதுகளின் ஆரம்பத்தில் மருத்துவர் ராஜசுந்தரம் மூலம்தான். மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்தினர் அக்காலகட்டத்தில் காந்தியம் அமைப்புடன் இணைந்து தன்னார்வத்தொண்டினை ஆற்றிவந்தார்கள். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த நாவலர் பண்ணைக்கு மருதோடை என்னுமிடத்திலிருந்து இலகுவாகச்செல்வதற்கேற்ற வகையில் பாதையொன்றை உருவாக்குவதும் அத்தொண்டுகளிலொன்று. அதற்காக வார இறுதி நாள்களில் மாணவர்கள் பலர் செல்வதுண்டு. அவ்விதம் செல்லும் சமயங்களில் புகைவண்டி வவுனியாவை அடைய நள்ளிரவாகிவிடும். வவுனியாவில் இறங்கி மருத்துவர் இராஜசுந்தரத்தின் வீட்டில் தங்கி, மறுநாள் காலை அவரது ஜீப்பில் நாவலர் பண்ணைக்குச்செல்வது வழக்கம். செல்லும் வழியெல்லாம் இராஜசுந்தரம் அவர்கள் வாய்க்கு வாய் டேவிட் ஐயா என்று கூறிக்கொண்டே அவரது சேவைகளைப்பற்றிக்கூறிக்கொண்டு வருவார். அப்பொழுதுதான் விரிவாக அவரைப்பற்றி அறிந்து கொண்டது. அதற்கு முன்னர் சில தடவைகள் அவரைப்பற்றிக்கேள்விப்பட்டிருந்தாலும் அவராற்றும் பல்வகையான சேவைகளின் தன்மையினை அறிந்திருக்கவில்லை.

•Last Updated on ••Sunday•, 11 •October• 2015 23:35•• •Read more...•
 

வாசிப்பும்,, யோசிப்பும் 126: தாமரைச்செல்வியின் படைப்புகள் பற்றி.....

•E-mail• •Print• •PDF•

தாமரைச்செல்விஈழத்துப்பெண் எழுத்தாளர்களில் தாமரைச்செல்வியின் கதைகளுக்கு முக்கிமானதோரிடமுண்டு. அந்த இடத்துக்கு முக்கிய காரணங்களிலொன்று இவர் தான் வாழ்ந்த காலகட்டத்து சமூக, அரசியல் பின்புலத்தில் தன் கதைகளைப்புனைந்திருப்பதுதான். இவரது கதைகள் பலவற்றில் தொண்ணூறுகளில் ஏற்பட்ட ஈழத்துத்தமிழ் மக்களின் இடப்பெயர்வுகள், நிலவிய போர்க்காலச்சூழல் மற்றும் இயற்கை அழிவுகள் அதிக அளவில் விபரிக்கப்படுகின்றன. இவரது கதைகள் பொதுவாக பரந்தன், கிளிநொச்சி மட்டும் வன்னிபிரதேசத்தை மையமாக வைத்துப்பின்னப்பட்டவை. போர்ச்சூழல் மக்களுக்கு, பல்வேறு வயதினருக்கும் ஏற்படுத்திய பாதிப்புகள், குறிப்பாக உளவியற் பாதிப்புகள் பற்றியெல்லாம் வெளிப்படுத்துபவை. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து , ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துத் தமிழ் மக்களின் இருப்பினை, அவர்கள காலகட்டத்துச் சமூக, அரசியற் சூழல் ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாகவும் இவரது படைப்புகள் இருக்கின்றனவென்றும் கூறலாம்.

அண்மையில் என் சேகரிப்பிலிருந்த புத்தகங்கள் மத்தியில் தேடிக்கொண்டிருந்தபொழுது இவரது 'வீதியெல்லாம் தோரணங்கள்' குறுநாவல் மற்றும் 'வன்னியாச்சி' (சிறுகதைத்தொகுப்பு) ஆகியவை மீள அகப்பட்டன. அவற்றை வாசித்தபொழுதே மேற்படி எண்ணங்கள் முகிழ்த்தன. மேற்படி 'வீதியெல்லாம் தோரணங்கள்' குறுநாவல் வீரகேசரி நிறுவனம் யாழ் இலக்கிய வட்டத்துடன் இணைந்து நடாத்திய கனகசெந்திநாதன் குறுநாவல் போட்டியில் இரண்டாவது இடத்தைப்பெற்ற குறுநாவல்.

இந்தக் குறுநாவல் கூறும் கதை இதுதான்: வெளிநாட்டில் வாழும் தமிழ் இளைஞனொருவனுக்கு ஊரில் தாயார் சீதனத்துடன் திருமணம் பேசுகின்றார். இரு குடும்பத்தாரும் சம்மதிக்கின்றார்கள். மணப்பெண்ணின் சகோதரன் வெளிநாட்டு இளைஞனின் நண்பன் கூட. யாழ்நகரில் நடைபெற்ற இராணுவத்தாக்குதலொன்றில் அந்த நண்பன் இறந்து விடுகின்றான். அவன் இறந்ததால் இனி யாரும் அந்த மணப்பெண்ணுக்குரிய சீதனத்தைத்தரமாட்டார்கள் என்பதால் வெளிநாட்டு இளைஞனின் தாயார் அந்தத்திருமணத்தை நிறுத்திவிடத்திட்டமிடுகின்றார். இன்னுமொரு காரணமும் உண்டு. படையினரின் தேடுதல்கள் அந்த மணப்பெண்ணிருந்த பகுதியில் நடைபெற்றதால் அந்த மணப்பெண்ணுக்கு என்னவெல்லாமோ நடந்திருக்கலாம் என்று வேறு சந்தேகத்தைக்கிளப்பி விடுகின்றாள் அந்தத்தாயார். ஆனால் ஊர் திரும்பும் வெளிநாட்டு இளைஞனோ இவ்விதமான சூழலில்தான் நண்பனின் குடும்பத்துக்குக் கை கொடுக்க வேண்டுமென்று கைவிடக்கூறிய தாயாரிடம் கூறிவிட்டு, நண்பனின் வீடு செல்வதுடன் குறுநாவல் முடிவடைகின்றது.

•Last Updated on ••Saturday•, 10 •October• 2015 07:02•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 125 : திருமாவளவனின் கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு பற்றி...

•E-mail• •Print• •PDF•

1. திருமாவளவனின் 'தமிழ்க்கனேடியனும் நானும்' மற்றும் இருப்பு பற்றி....

வாசிப்பும், யோசிப்பும் 125 : திருமாவளவனின் கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு பற்றி...இருப்பு நிரந்தரமானதல்ல. இருக்கும் மட்டும் பலர் இதனை உணர்வதில்லை. மனிதர் உருவாக்கிய அமைப்பானது பொருளுக்கு முதலிடம் தருகிறது. அதுதான் இருப்பின் பயன் என்பதாக இருப்பினைச் சித்திரிக்கிறது. விளைவு? பொருள் தேடுவதே வாழ்க்கையாகப் பலருக்குப் போய் விடுகிறது. அதிலும் பொருள்மயமான மேற்குலகு நாடுகளின் சமுதாய அமைப்பு மானுட இருப்பினை அந்த அமைப்பின் சிறைக்கைதியாகவே ஆக்கி விடுகிறது. உழைப்பது இருப்புக்கு என்பதாக மாறி விட்டது. அவ்விதம் இருக்க விரும்புவோர், அதுதான் இருப்பின் நோக்கம் என்போர், அதுவே இருப்பின் பயன் என்போர் அவ்விதமே இருந்து போகட்டும். அது அவர்தம் உரிமை. ஆனால் உண்மைக்கலைஞர்கள், இலக்கியவாதிகள் இருப்பினை இவ்விதம் எண்ணுவதில்லை. இவர்களை பொருள்மயமான இருப்பு என்றுமே சிறைப்பிடிப்பதில்லை. இந்த இருப்பினை இவர்கள் தம் இருப்புக்கேற்றபடி மாற்றிவிடுவதில் வல்லவர்கள்.

இவர்களைச்சுற்றி இருப்பவர்களுக்கு இவர்களைப்பார்த்தால் பரிதாபம். இவர்களைப்பார்க்குபோதெல்லாம் 'இந்தக் கலை, இலக்கியமெல்லாம் சோறு போடுமா? இவற்றால் எவ்வளவு உழைக்கிறாய்?' என்பதாகவே அவர்களது கேள்விகள், அனுதாபங்கள் மற்றும் ஆலோசனைகளெல்லாமிருக்கும்.

எனக்குத்தெரிந்த பலர் இங்கு வந்து பொருளியல்ரீதியில் உயர்ந்து தொழிலதிபர்களாக விளங்குகின்றார்கள். இன்னும் பலர் சொத்துகளைச்சேர்ப்பதிலேயே குறியாகவிருக்கிறார்கள். அவ்விதமிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியினைத்தருகிறது. பாராட்டுகள். ஆனால் அவ்விதம்தான் எல்லாரும் இருப்பார்களென்று அவர்களெண்ணுவதுதான் நகைப்புக்கிடமானது.

•Last Updated on ••Thursday•, 08 •October• 2015 22:10•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 124 : 'நிலக்கிளி' நாவல் பற்றிய சிந்தனைத்துளிகள்.....; சிறிது இலக்கணம் படிப்போமா?;

•E-mail• •Print• •PDF•

ஈழத்துத்தமிழ் நாவல்களில் அனைத்துக்குழுக்களாலும் தவிர்க்க முடியாததொரு படைப்பாகக்கருதக்கூடிய படைப்பு அ.பாலமனோரகனின் 'நிலக்கிளி'. அந்த ஒரு படைப்பின் மூலம் ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் தனக்கென்றோரிடத்தைப்பிடித்துக்கொண்டவர் அவர். வன்னி மண்ணின் மணம் கமழும் நல்லதொரு நாவல்.

நிலக்கிளி நல்லதொரு படிமம். நிலத்தில் பொந்துகள் அமைத்து கூடுகட்டி வாழும் அழகிய பறவைகள் நிலக்கிளிகள். இவை தாம் வசிக்கும் வளைகளை விட்டு அதிக உயரம் பறப்பதில்லை. இவ்விதம் நிலக்கிளிகளைப்பற்றிக்குறிப்பிடும் ஆசிரியர் பதஞ்சலியையும் அவ்விதமானதொரு நிலக்கிளியாக நாவலில் உருவகித்திருக்கின்றார்.

இந்த நாவல் என்னைக்கவர்ந்ததற்கு முக்கிய காரணங்கள்: வன்னி மண் வாசனை தவழும் எழுத்து மற்றும்பாத்திரப்படைப்பு (நாவலின் பாத்திரங்கள் அனைத்துமே உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றன).

இந்த நிலக்கிளிகளைப்பற்றி நான் இந்நாவலைப்படிப்பதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. எனது பால்ய காலம் வன்னியின் ஒரு பகுதியாக வவுனியாவில் கழிந்திருந்தாலும் அங்கு நான் வாழ்ந்திருந்த காலத்தில் இவ்விதமானதொரு பறவையைப்பற்றிக்கேட்டதேயில்லை. நிலக்கிளி என்பது இன்னுமொரு பறவைக்கு பால மனோகரன் வைத்த பெயரா அல்லது உண்மையிலேயே அப்பெயரில் அழைக்கப்படுமொரு பறவை உள்ளதா? ஏனெனில் இன்று வரை எனக்கு 'நிலக்கிளி' என்னும் பறவை பற்றி 'நிலக்கிளி' நாவலில் வருவதை விட மேலதிகமான தகவல்களெதுவும் கிடைக்கவில்லை. 'நிலக்கிளி' பற்றி வன்னி நண்பர்கள் யாராவது மேலதிகத்தகவல்களிருப்பின் பகிர்ந்து கொள்ளவும்.

இந்த நாவலின் ஆரம்பம் முரலிப்பழம் பற்றிய வர்ணனையுடன் 'கார்த்திகை மாதத்தின் கடைசி நாட்கள்! அடிக்கடி பெய்த பெரு மழையில் குளித்த தண்ணிமுறிப்புக் காடுகள் பளிச்சென்றிருந்தன. ஈரலிப்பைச் சுமந்துவந்த காலையிளங் காற்றில் முரலிப் பழங்களின் இனிய மணம் தவழ்ந்து வந்தது' என்று ஆரம்பிக்கின்றது. நல்லதோர் ஆரம்பம். அந்த ஆரம்பமே நாவல் இயற்கை எழில் ததும்பும் வன்னி மண்ணின் மணம் கமழும் நாவலென்பதை எடுத்துக்காட்டி விடுகிறது. தொடர்ந்து வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

•Last Updated on ••Sunday•, 04 •October• 2015 18:59•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 123 : பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை பற்றிச் சில குறிப்புகள்.....

•E-mail• •Print• •PDF•

ஒல்லாந்தர் பார்வையில் 'யாழ்ப்பாணத்தவர்'!

பேராசிரியர் கணபதிப்பிள்ளைபேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை எனத் தமிழ் இலக்கிய உலகில் கணபதிப்பிள்ளைகள் பலர். யாழ் இந்துக்கல்லூரியிலும் ஆசிரியரொருவரின் பெயர் கணபதிப்பிள்ளை. அவருமொரு பண்டிதரென்று நினைக்கின்றேன். அவரும் பத்திரிகைகளில் இலக்கியக்கட்டுரைகள் எழுதியதாகக்கூறக் கேட்டிருக்கின்றேன். இவ்விதம் கணபதிப்பிள்ளைகள் பலர் இருந்ததால் ஆரம்பத்தில் எனக்குப் பெருங் குழப்பமேயிருந்தது. நான் முதலில் அறிந்த கணபதிப்பிள்ளை அவர்கள் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள். அவரை அவரது சங்கிலி நாடகத்தினூடாகத்தான் முதலில் அறிந்து கொண்டேன். அந்தச் சங்கிலி நாடகப்பிரதி எனக்குக் கிடைத்தது தற்செயலானதொன்று. யாழ்ப்பாணத்திலிருந்த ஆச்சி வீட்டிலிருந்த பரண் மேலிருந்து கிடைத்த புத்தகங்களில் சில: மறைமலை அடிகளாரின் நாகநாட்டரசி குமுதவல்லி, திப்புசுல்தான் (பெரிய அதிக பக்கங்களுள்ள நாவல்), தேவன் (யாழ்ப்பாணம்) எழுதிய மொழிபெயர்ப்பு நாவலான 'மணிபல்லம்' அடுத்தது பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் சங்கிலி.

என் மாணவப்பருவத்தில் நீண்ட நாள்களாக நான் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளைதான் 'சங்கிலி' நாடகத்தை எழுதிய பேராசிரியர் கணபதிப்பிள்ளை என்று எண்ணியிருந்தேன். இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை பற்றிப்போதுமான நூல்கள் வெளிவந்திருக்கவில்லை என்பதுதான்.

பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் 'ஈழத்து வாழ்வும் வளமும்' நூலினை அண்மையில் வாசித்துக்கொண்டிருந்தேன். ஈழத்தமிழர் வரலாறு பற்றி, அவர்தம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் பற்றி, அவர்தம் வாழ்வு பற்றி, அவர்தம் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள், அவர்தம் கிராமியத்தெய்வ வழிபாடு, அவர்தம் இசை, சிற்பக்கலை பற்றி இவ்விதம் பல்வேறு விடயங்களைப்பற்றி அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். குமரன் புத்தக இல்ல வெளியீடாக, கலாநிதி கா.சிவத்தம்பி அவர்களின் முன்னுரையுடன் வெளிவந்திருக்கின்றது.

இந்த நூலில் பேராசிரியர் 'யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர்' என்றொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அதில் ஒல்லாந்தர் பார்வையில் யாழ்ப்பாணத்தவர் எவ்விதம் தோன்றினார்கள் என்பது பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார். அதனை வாசித்ததும் வந்த சிரிப்பினை அடக்க முடியவில்லை. அது இது:

•Last Updated on ••Tuesday•, 29 •September• 2015 00:20•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 122 : 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான நூல் மதிப்புரைகள் சில/......

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்ப காலகட்டத்தில் நூல் மதிப்பரைகளை வெளியிட்டு வந்தது. நூல் மதிஉப்புரைக்காக தமது படைப்புகளின் இரு பிரதிகளை அனுப்பி வைககவும் என்ற எமது வேண்டுகோளினையேற்று, எழுத்தாளர்கள் தமது படைப்புகளைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைத்தார்கள். நூல் மதிப்புரை பகுதிக்காக அவ்வப்போது பல்வேறு புனைபெயர்களில் மதிப்புரைகள் எழுதுவதுண்டு. அவ்விதம் அவதானி, திருமூலம், மார்க்சியன், ஊர்க்குருவி, வானதி  போன்ற புனைபெயர்களில் எழுதிய நூல் மதிப்புரைககளில் சில 'வாசித்ததும், யோசித்ததும் பகுதிக்காக மீள்பிரசுரமாகின்றன ஒரு பதிவுக்காக.

பின்வரும் நூல்களுக்கான மதிப்புரைகளை இங்கு நீங்கள் வாசிக்கலாம்: கே.எஸ்.சிவகுமாரனின் 'அசையும் படிமங்கள் , ஆழியாளின் 'உரத்துப் பேச..., ' நடேசனின் 'வாழும் சுவடுகள்', பாரிஸிலிருந்து வெளிவரும் உயிர் நிழல்!,  அசை அரையாண்டிதழ், ஊடறு: பெண்படைப்பாளிகளின் தொகுப்பு, திலகபாமாவின் கவிதைகள்!, பா.அ. ஜயகரனின் 'எல்லாப் பக்கமும் வாசல்'! , ஆசி. கந்தராஜாவின் 'பாவனை பேசலன்றி..', செ.க.வின் 'சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை', நடேசனின் வண்ணத்திக்குளம்: சில குறிப்புகள்! & காஞ்சனா தாமோதரனின் 'இக்கரையில்..'

மதிப்புரைகளுக்காக நூல்கள் அதிக அளவில் வரத்தொடங்கியதால் அப்பகுதியினை நிறுத்தி வைத்தோம். அதற்குப்பதிலாகத் தற்பொழுது பதிவுகள் இணைய இதழுக்கு நூல்கள் பற்றி அனுப்பப்படும் மதிப்புரைகளை 'நூல் அறிமுகம்' என்னும் பகுதியில் வெளியிட்டு வருகின்றோம். ஏற்கனவே 'பதிவுகளி'ல் வெளியான மதிப்புரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் ஒரு பதிவுக்காக அவ்வப்போது மீள்பிரசுரமாகும்.



1. . கே.எஸ்.சிவகுமாரனின் 'அசையும் படிமங்கள்'

வெளியீடு: மீரா பதிப்பகம், 191/23 ஹைலெவல் வீதி, கொழும்பு -06, இலங்கை. தொலைபேசி: 826336. விலை: 150 ரூபா
ஆசிரியரின் மின்னஞ்சல்: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• . - பதிவுகள், ஜூன் 2003 இதழ் 42 -

தமிழில் திரைப்படங்கள் பற்றி அண்மைக் காலமாகத் தான் மிகவும் விரிவாக யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் எழுதி வருகின்றார்களெனெ நினைத்தேன். ஆனால் அண்மையில் கே.எஸ்.சிவகுமாரனின் 'அசையும் படிமங்கள்' நூலினை வாசித்த பொழுதுதான் புரிகின்றது சிவகுமாரன் அறுபதுகளிலிருந்தே திரைப்படக் கலை பற்றி அவ்வப்போது தமிழில் எழுதி வந்துள்ள விடயம். இதுவரை காலமும் இலக்கியப் படைப்புகள் பற்றியே இவர் அவ்வப்போது தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருவதாகக் கருதியிருந்த எனக்கு 'அசையும் படிமங்கள்' வியப்பினையே தந்தது.

•Last Updated on ••Saturday•, 10 •October• 2015 07:03•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 121: செங்கை ஆழியான் பற்றிய நினைவுகள்... விரைவில் பூரண குணமடைய வேண்டுகின்றோம்!

•E-mail• •Print• •PDF•

செங்கை ஆழியான்செங்கை ஆழியானின் 'ஆச்சி பயணம் போகின்றாள்''பதிவுகள்' இணைய இதழில் வெளியாகும் தனது பத்திக்காக எழுத்தாளர் முருகபூபதி அனுப்பிய கட்டுரையில் செங்கை ஆழியானைப்பற்றி எழுதியிருந்தார். அதிலவர் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் அதிர்ச்சியைத்தந்தது. செங்கை ஆழியான் அவர்கள் சுகவீனமுற்று, பேசுவதற்கும்  முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பதாகக் குறிப்பிட்டிருந்த விடயமே அது.

இலங்கைத்தமிழ் இலக்கியத்தைப்பொறுத்தவரையில் செங்கை ஆழியானுக்கு (கலாநிதி. க. குணராசா) அவர்களுக்கு முக்கியமான பங்குண்டு. புனைகதை, தமிழர்தம் வரலாறு பற்றிய ஆய்வு, அரசியல் மற்றும் இலக்கிய ஆவணச்சேகரிப்பு ஆகிய துறைகளில் அவரது பங்களிப்பு முக்கியமானது.  புனைகதையைப்பொறுத்தவரையில் சமூக (வாடைக்காற்று, காட்டாறு, , வரலாறு (கடற்கோட்டை, நந்திக்கடல், கந்தவேள் கோட்டம்) மற்றும் நகைச்சுவை (ஆச்சி பயணம் போகின்றாள், கொத்தியின் காதல், நடந்தாய் வாழி வழுக்கியாறு போன்ற)  ஆகிய துறைகளில் பல முக்கியமான நாவல்களை அவர் படைத்துள்ளார். 1977 மற்றும் 1981 காலகட்டத்தில் யாழ் நகரம் பொலிஸாரினால் எரிக்கப்பட்டபோது அவற்றைப் பதிவு செய்ய வரதரின் வேண்டுகோளின்பேரில் ஆவணப்படைப்புகளாக உருவாக்கினார். அவற்றை அவர் நீலவண்ணன் என்னும் புனை பெயரில் எழுதியதாக ஞாபகம். இவரது பல குறுநாவல்கள் தமிழகத்துச் சஞ்சிகைகளில் பரிசுகளைப்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவை தவிர மறுமலர்ச்சி, சுதந்திரன், மல்லிகை மற்றும் ஈழநாடு சிறுகதைகளைத்தொகுத்திருக்கின்றார்.  அத்தொகுப்புகளுக்காக நிச்சயம் இவரை ஈழத்தமிழ் இலக்கிய உலகம் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரும்.

இவரது நாவலான 'வாடைக்காற்று' ஈழத்தில் வெளியான தமிழத்திரைப்படங்களிலொன்று. அதன் மூலம் ஈழத்துத் தமிழ்த்திரைப்பட உலகிலும் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இவரது மூத்த அண்ணனான புதுமைலோலனும் ஈழத்தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்த இன்னுமோர் எழுத்தாளரே. புதுமைலோலன் தமிழரசுக்கட்சிக்காக அரசியலில் ஈடுபட்டவர். காலிமுகத்திடல் சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றி அடியுதைபட்டு காயங்களுக்குள்ளாகியவர்தான் அவர். அவரது மகனும் தமிழர் விடுதலைப்போராட்டத்தில் போராடி மடிந்தவர்களிலொருவர்.

•Last Updated on ••Sunday•, 31 •January• 2016 19:24•• •Read more...•
 

சிறுகதை: போரே! நீ போய் விடு!

•E-mail• •Print• •PDF•

- வீரகேசரி நிறுவனம் ஒருமுறை இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவாகக்குறுநாவல் போட்டியொன்றினை நடத்தியிருந்தது. எண்பதுகளின் இறுதிப்பகுதியில் 87/88 காலகட்டமென்று  நினைக்கின்றேன். என்னிடம் அது பற்றியுள்ள போட்டோ பிரதியில் திகதி விடுபட்டுப்போயுள்ளதால் அது பற்றி உடனடியாக நிச்சயமாகக்கூற முடியாதுள்ளது. அந்தபோட்டிக்கு அனுப்பப்பட்ட கதையிது. சிறுகதையாகக்கணிக்கப்பட்டு பிரசுரத்திற்குரியதாக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையிது. நடுவர்களாக சிற்பி சரவணபவன் ,செங்கை ஆழியான் மற்றும் செம்பியன் செல்வன் ஆகியோரிருந்தனர். அக்காலகட்டத்து மனநிலையினைப் பிரதிபலிக்கும் எழுத்தென்பதால் ஒரு பதிவுக்காக இச்சிறுகதை பிரசுரமாகின்றது. -

1.

சிறுகதை:  போரே! நீ போய் விடு! - வ.ந.கிரிதரன் -வெளியிலோ இலேசாகத்தூறிக்கொண்டிருந்த மழை பெருக்கத்தொடங்கிவிட்டிருந்தது. புழுதி படர்ந்த செம்மண் சாலைகளிலிருந்து மழைத்தூறல் பட்டதால் செம்பாட்டுமண்ணின் மணம் பரவத்தொடங்கிவிட்டிருந்தது. கோவைப்பழங்களைப்போட்டி போட்டு தின்றபடியிருந்த கிளிகள் மழை பெருப்பதைக்கண்டவுடன் நனைந்த இறகுகளை ஒருமுறை சிலிர்த்துவிட்டு , விண்ணில் வட்டமடித்துவிட்டு, உறைவிடங்களை நாடிப்பறக்கத்தொடங்கின. எங்கோ தொலைவில் பயணிகள் பஸ்ஸொன்று  குலுக்கலுடன் இரைந்து செல்லுமோசை காற்றில் மெல்லவந்து காதில் நுழைந்தது.  திடீரென அமைதியாகவிருந்த வானம் ஒருமுறை மின்னிவிட்டுப் பயங்கரமாக அதிர்ந்தது.  மழை பொத்துக்கொண்டு வரப்போகின்றது. மழைக்காலம் தொடங்கி விட்டது. மழை தொடங்கி விட்டாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். வயிரமென நிற்கும் பாலைகள், கருங்காலிகள், முதிரைகள் கூட ஒருவித நெகிழ்வுடன் நெகிழ்ந்து நிற்கையில் , மர அணில்களோ ஒருவித எக்களிப்புடன் மாரியை வரவேற்று, கொப்புகளில் தாவித்திரியும். மணிப்புறாக்கள், சிட்டுகள், குக்குறுபான்கள்,மாம்பழத்திகள், காடைகள், கவுதாரிகள், காட்டுக்கோழிகள், ஆலாக்கள், ஊருலாத்திகள், கொண்டை விரிச்சான்கள், மயில்கள், கொக்குகள்,நாரைகள்.. பறவைகள் யாவுமே புத்துணர்வுடன் மாரியை வரவேற்றுப்பாடித்திரிகையில் ... கட்டுமீறிப்பாய்ந்து பொங்கித்ததும்பும் குளங்கள், விரால் பிடிப்பதற்காக மீனவர்களுடன் போட்டிபோடும் வெங்கணாந்திப்பாம்புகள் உண்ட அசதியில் தவிக்கும் காட்சிகள்.. மரக்கொப்புகளில் வானரங்களுக்குப் போட்டியாகத்தாவிக்குளங்களில் பாயும் சிறுவர்கள்... மாரி என்றாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். சொதசொதவென்று சகதியும், இலைகளுமாகக் கிடக்கும் காட்டுப்பிரதேசங்களில் மெல்லப்பதுங்கிப்பாயும் முயல்கள், அசைவற்று நிற்கும் உடும்புகள், கொப்புகளோடு கொப்புகளாக ஆடும் கண்ணாடி விரியன்கள்... இம்மண்ணினழகே தனிதான்.

மழையுடன் போட்டி போட்டபடி 'ஓ..வ்..வ்..'வென்று காற்று வேறு பெரிதாக அடிக்கத்தொடங்கிவிட்டிருந்தது. வானம் இருண்டுபோய் கன்னங்கரேலென்று பெரும் பிரளயமே வந்து விடுவது போன்றதொரு தோற்றத்தில் அந்தப்பிரதேசம் மூழ்கிக்கிடக்கின்றது.

•Last Updated on ••Wednesday•, 13 •July• 2016 06:11•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும்: 120 அம்பர்தோ எகோவா? அம்பர்தோ ஈகோவா?' வசீகரம் மிக்க ஆளுமைகள் பற்றிச்சில வார்த்தைகள்; தமிழகத்தில் பாலன் தோழரின் "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்" நூல் வெளியீடு!; இலங்கைத்தமிழ் எழுத்தாளர் பாலா குமாரசாமி பற்றி 'அமுதசுரபி'யில் '

•E-mail• •Print• •PDF•

அம்பர்தோ எகோபிரபல மொழியியல் அறிஞரும், எழுத்தாளருமான அம்பர்தோ எகோவுடனான நேர்காணல்கள் அடங்கிய கைக்கடக்கமான நூலொன்றினை அண்மையில் வாசித்தேன். மொழிபெயர்த்திருப்பவர் ரஃபேல். அந்நேர்காணல்களில் தன் வாழ்வு பற்றி, விருப்பு வெறுப்பு பற்றி, தன் இலக்கிய முயற்சிகள், அவற்றுக்கான தூண்டுதல்கள் பற்றியெல்லாம் மனந்திறந்து அம்பர்த்தோ எகோ கூறியிருக்கின்றார். மூலக்கட்டுரைகளை நான் வாசிக்கவில்லை. ஆனால் நூலின் நடையிலிருந்து , மொழியிலிருந்து தரமானதொரு மொழிபெயர்ப்பாகவே தென்படுகின்றது. இதில் எம்பர்தோ எகோவுடனான புனைவுக்கலை பற்றிய நேர்காணலில் அவர் கவிதையைப்பற்றிக்கூறியதை இங்கே பதிவு செய்கின்றேன். இது எம்பர்தோ எகோவின் கவிதையைப்பற்றிய கருத்து. என்னுடையதல்ல என்பதை நண்பர்கள் கவனத்தில் வைத்திருங்கள்.

கவிதை பற்றிய கேள்வியொன்றுக்கு எம்பர்த்தோ எகோவின் பதில் இதுதான்: "சில குறிப்பிட்ட வயதுகளில் ஒரு பதினைந்து பதினாறு என்று வைத்துக்கொள்வோம். கவிதை என்பது சுயமைதுனம் செய்துகொள்வதைப்போன்றது என நினைக்கின்றேன். ஆனால் நல்ல கவிஞர்கள் தாங்கள் முன்னாளில் எழுதிய கவிதைகளைப் பின்னாட்களில் எரித்து விடுவார்கள். மோசமான கவிஞர்கள் அவற்றை வெளியிடுவார்கள். நான் அவற்றையெல்லாம் வெகு விரைவாகவே கை விட்டு விட்டேன் என்பது ஒரு வகையில் நன்றிக்குரியதே."

•Last Updated on ••Tuesday•, 22 •September• 2015 22:58•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 119: தமிழினியின் 'அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்...'

•E-mail• •Print• •PDF•

தமிழினி ஜெயக்குமாரன்அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்.நிகழ்வுகளை விபரிக்கின்றது தமிழினி ஜெயக்குமாரனின் கவிதை. யுத்தத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் கவிதை. கவிதையின் ஆரம்பம் நன்றாக வந்திருக்கின்றது. கவிதையின் முதல் பகுதியே முழுக்கவிதையினதும் கூறு பொருளை நிர்ணயித்து விடுகிறது.

கவிதை

'போருக்குப் புதல்வரைத் தந்த
தாயாக வானம்
அழுது கொண்டேயிருந்தது'


என்று ஆரம்பமாகின்றது. அம்பகாமப்பெருங்காட்டில் யுத்தம் நடைபெறும் மழை பொழியும் இரவு. மழையை வானத்தாயின் அழுகையாக உவமையாக்கியிருக்கின்றார் கவிஞர்.  வானத்தாய் ஏன் அழுகின்றாள்? போருக்குத்தன் புதல்வர்களைத்தந்து விட்டதற்காகத்தான் அழுகின்றாள். யுத்தம் நடைபெறும் சமயம் கானகம் வெடியோசையால் அதிர்வுறுகின்றது. அவ்வதிர்வினால் ,மருண்ட யானைக்கூட்டங்கள் குடி பெயர்ந்தலைகின்றன. இடம் விட்டு இடம் மாறி நகரும் இருண்ட மேகங்களும் வெடியதிர்வுகளால் குடி பெயர்ந்தலையும் யானைக்கூட்டங்களாகக் கவிஞருக்குத்தென்படுகின்றன. இங்கு யானைக்கூட்டங்களின் இடப்பெயர்வினை வெறும் உவமையாகவும் கருதலாம். அத்துடன் உண்மையாகவே அவ்விதம் நடைபெறும் யுத்தத்தினால் யானைக்கூட்டங்கள் இடம் பெறுவதாகவும், அவ்விதமாக அவை இடம் பெயர்வதைப்போல் இடம் பெயரும் மேகக்கூட்டங்கள் உள்ளதாகவும் கவிஞர் கருதுவதாகவும் கருதலாம். மழை பொழியும் யுத்தம் நடக்கும் இருண்ட இரவு அச்சத்தினைத்தருவது. அந்த இரவானது அம்பகாமப்பெருங்காட்டில் நடைபெறும் யுத்தத்தின் கோரத்தை வெளிப்படுத்துவது. ஏற்கனவே அந்த இரவானது பகலை விழுங்கித்தீர்த்திருக்கின்றது. இருந்தும் அதன் பசி அடங்கவில்லை. யுத்தத்தின் பேரொலியானது பகலை விழுங்கித்தீர்த்த இரவின் கர்ஜனையாகப் பயமுறுத்துகிறது கவிஞரை. மேலும் 'காதலுறச் செய்யும் / கானகத்தின் வனப்பை / கடைவாயில் செருகிய / வெற்றிலைக் குதப்பலாக / சப்பிக்கொண்டிருந்தது / 'யுத்தம்.

•Last Updated on ••Sunday•, 20 •September• 2015 17:54•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 116: செங்கை ஆழியானின் 'ஆச்சி பயணம் போகின்றாள்',செங்கை ஆழியானின் வாடைக்காற்றும் , பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரமும்!, & நகைச்சுவை எழுத்தாளர் த.இந்திரலிங்கம்:

•E-mail• •Print• •PDF•

செங்கை ஆழியானின் 'ஆச்சி பயணம் போகின்றாள்'

செங்கை ஆழியானின் 'ஆச்சி பயணம் போகின்றாள்'தமிழில் வெளிவந்த நகைச்சுவை நாவல்களில் ஈழத்தில் வெளியான நகைச்சுவை நாவல்களுக்குமிடமுண்டு. அந்த வகையில் செங்கை ஆழியானின் 'ஆச்சி பயணம் போகின்றாள்' நாவல் முக்கியமானது. தன் வாழ்நாளில் ஒரு தடவை கூடப் புகையிரதத்தில் ஏறாத ஆச்சிக்கு அந்தச் சந்தர்ப்பம் அவரது முதிய பருவத்தில் ஏற்படுகிறது. கதிர்காமம் செல்வதற்காக அவரை அழைத்துக்கொண்டு ஆச்சியின் கடைசி மகன் சிவராசனும், சிவராசனுக்காகக் காத்திருக்கும் ஆச்சியின் தம்பி மகள் செல்வியும் (இவள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிப்பவள்) செல்கின்றார்கள். ஆச்சியின் புகைவண்டிப் பயணமும், இளங்காதலர்களின் பொய்ச்சிணுங்கல்களும், மகிழ்ச்சியான தருணங்களும், நாவல் முழுக்க விரவிக்கிடக்கும் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழும், அவற்றுக்கு மேலும் துணையாக விளங்கும் ஓவியர் செளவின் ஓவியங்களும் வாசிப்பவரைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கின்றன. இந்நாவல் முதலில் 'விவேகி' மாத சஞ்சிகையில் தொடராக வெளிவந்தது. தொடர் முடிவதற்குள் இதன் முதற் பதிப்பு (ஏப்ரில் 1969) யாழ் இலக்கிய வட்டத்தினரால் நூலாக வெளியிடப்பட்ட இந்நாவல் அதன் பின்னர் சிரித்திரன் சஞ்சிகையில் தொடராக வெளிவந்திருக்கின்றது. அதன் பின்னர் நாவலின் இரண்டாவது பதிப்பு (அக்டோபர் 1978) ஶ்ரீலங்கா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. என்னிடமிருப்பது நாவலின் மூன்றாவது பதிப்பு. செங்கை ஆழியானின் 'கமலம் பதிப்பகத்தினரா'ல் மே 2001இல் வெளியிடப்பட்ட பதிப்பு. ஓவியர் 'செள'வின் ஓவியங்களுடன் நேர்த்தியாக வெளியான பதிப்பு. நூலின் முன்னுரையில் எழுத்தாளர் செம்பியன் செல்வன் இதுவே இலங்கையில் வெளியான முதலாவது நகைச்சுவை நாவலென்று குறிப்பிட்டிருக்கின்றார்.

என்னைப் பொறுத்தவரையில் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நாவலென்று இதனைக் கூறுவேன். நூலாசிரியரின் 'நடந்தாய் வாழி வழுக்கி ஆறு'வும் எனக்குப் பிடித்த ஆசிரியரின் இன்னுமொரு நகைச்சுவை விவரணச்சித்திரம்.

•Last Updated on ••Saturday•, 26 •September• 2015 05:08•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 115 : வண. சுவாமி ஞானப்பிரகாசர். கண்டு கதைத்தது : அ.செ.மு ( மறுமலர்ச்சி இதழ் - 6 : விய ஆண்டு புரட்டாதி : 1946 )

•E-mail• •Print• •PDF•

வண. சுவாமி ஞானப்பிரகாசர்.மிகவும் அரியதொரு நேர்காணலை நண்பர்  துரைசிங்கம் குமரேசன் தனது முகநூல் பதிவாகப்பதிவு செய்துள்ளார்.  அமரர் அ.செ.மு அவர்கள் சுவாமி ஞானப்பிரகாசருடன் நடத்திய நேர்காணலை 'வண சுவாமி  ஞானப்பிரகாசர் கண்டு கதைத்தது' என்னும் தலைப்பில் 'மறுமலர்ச்சி' இதழில் (புரட்டாதி 1946) வெளியிட்டுள்ளதைத்தான் குமரேசன் அவர்கள் பதிவு செய்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் 'மறுமலர்ச்சி' சஞ்சிகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வெளியான 'மறுமலர்ச்சி' இதழ்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது அவசியம். அதனைத்தற்போது துரைசிங்கம் குமரேசன் அவர்கள் திட்டமிட்டிருக்கின்றார். அவரது முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள். இது போல் ஈழத்தில் வெளியான முக்கியமான இதழ்களின் தொகுப்புகள் வெளிவருதல் அவசியம். குறிப்பாக 'விவேகி', 'கலைச்செல்வி', 'அலை' போன்ற சஞ்சிகைகளின் தொகுப்புகள் வெளிவருதல் அவசியம். மேலும் ஓரிரு இதழ்களே வெளியான சஞ்சிகைகளை ஒன்று சேர்த்தும் வெளியிடலாம். உதாரணத்துக்கு 'பாரதி', 'கவிஞன்' போன்ற சில இதழ்களே வெளியான முக்கியமான சஞ்சிகளைகளைத்தான் குறிப்பிடுகின்றேன்.இவ்விதமான தொகுப்புகள் ஈழத்துத்தமிழ் இலக்கிய வரலாற்றை முறையாக அறிவதற்கு மிகவும் உறுதுணையாகவிருக்கும். இல்லாவிட்டால் ஆளுக்காள் அவ்வப்போது தாம் நினைத்தபடி கூட்டி, குறைத்து, வெட்டி , ஒட்டி ஆய்வுக்கட்டுரைகளென்ற பெயரில் பூரணமற்ற கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பார்கள்.

அசெமுவின் அந்த நேர்காணல் ஒரு பதிவுக்காக இங்கே பிரசுரமாகின்றது.


வண. சுவாமி ஞானப்பிரகாசர்.

கண்டு கதைத்தது : அ.செ.மு ( மறுமலர்ச்சி இதழ் - 6 : விய ஆண்டு புரட்டாதி : 1946 )

ஆறாம் வகுப்புப் படித்து விட்டு இலங்கை றெயில்வேயில் (Telegraph Signaller) உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீமான் வைத்திலிங்கம், பிறகு சுவாமி ஞானப்பிரகாசராகி எழுபது பாஷைகளைப் பற்றித் தெரிந்துகொண்டு புத்தக சாகரத்தின் நடுவே அமர்ந்து ‘தமிழ்தான் உலகத்துப் பாஷைகளில் எல்லாவற்றுக்கும் அடிப்படை’ என்று முழங்கவும், அதனை ஆராய்ச்சி பூர்வமாகக் காட்டவும் துணிவாரென்று யார் எதிர்பார்த்தார்கள்?

சுவாமிகளுக்குச் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இத்தாலி, பிறெஞ்ச், இங்கிலீஷ், தமிழ் உட்பட பன்னிரண்டு பாஷைகளைப் பிழையின்றி எழுத வாசிக்கத் தெரியும். லற்றின், பிறெஞ்ச், சிங்களம், ஆங்கிலம், தமிழ் - என்பனவற்றில் பேசவும் முடியும்.

•Last Updated on ••Saturday•, 10 •October• 2015 07:04•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 114: இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவுக்குறுநாவல் போட்டியும், 'போரே நீ போய்விடு' சிறுகதை மற்றும் நாவல் பற்றி...

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்வீரகேசரி நிறுவனம் ஒருமுறை இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவாகக்குறுநாவல் போட்டியொன்றினை நடத்தியிருந்தது. எண்பதுகளின் இறுதிப்பகுதியில் 87/88 காலகட்டமென்று  நினைக்கின்றேன். என்னிடம் அது பற்றியுள்ள போட்டோ பிரதியில் திகதி விடுபட்டுப்போயுள்ளதால் அது பற்றி உடனடியாக நிச்சயமாகக்கூற முடியாதுள்ளது.

அதற்குக் கனடாவிலிருந்து நானும் ஒரு கதையினை 'போரே நீ போய் விடு!' என்னும் தலைப்பில் எழுதி அனுப்பியிருந்தேன். வன்னியிலுள்ள அகதிகளுக்குச் சேவை புரிவதற்காகத் தம் வாழ்வினை அர்ப்பணித்த மூவரை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை அது. வாத்தியார் ஒருவர். அவரது மணவாழ்க்கை முறிவுற்று தனிமையில் வாழ்பவர். இளம் பெண் ஆசிரியை ஒருவர். நிலவிய போர்ச்சூழலினால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, நிராதரவான நிலையிலிருந்த அவரை அவரது மறைந்த தந்தையாரின் நண்பரான மேற்படி வாத்தியாரே ஆதரித்து, அகதிகளுக்குச் சேவையாற்றும்படியான சூழலை ஏற்படுத்தியிருந்தார். இளைஞரொருவன். அவனும் அகதிகளுக்குச் சேவை புரிவதற்காகத் தன் வாழ்வினை அர்ப்பணித்துச்செயற்படுபவன். ஆசிரியையான அந்தப்பெண்ணோ தன்னை ஆதரித்த ஆசிரியரைத் தன் தந்தையைப்போலெண்ணி வாழ்பவள். அந்த இளைஞன் அவள் மேல் காதலுறுகின்றான். ஆனால் அவளோ தன் மணவாழ்வு அகதிகளுக்குச் சேவை செய்வதிலிருந்து. தந்தையைப்போன்ற ஆசிரியருக்குப் பணிவிடை செய்வதிலிருந்து தன்னைத்தடுத்துவிடுமென்பதைப்பிரதான காரணங்களிலொன்றாகக்கூறி மறுத்து விடுகின்றாள். தொடர்ந்தும் நண்பர்களாக அதே சமயம் தன்னார்வத்தொண்டர்களாக இருப்பதையே அவள் விரும்புகின்றாள். அவனும் ஏற்றுக்கொள்கின்றான். இதுதான் அப்படைப்பின் கதைச்சுருக்கம்.

•Last Updated on ••Thursday•, 24 •September• 2015 03:07•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 113: எழுத்தாளர் கெளதம நீலாம்பரனுக்கு எமது அஞ்சலி! Terry Fox: கனடாவின் நாயகர்களிலொருவன்!!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் கெளதம நீலாம்பரனுக்கு எமது அஞ்சலி!

எழுத்தாளர் கெளதம நீலாம்பரன்ஈழவேந்தன் சங்கிலி'சரித்திர நாவலாசிரியரும், மூத்த எழுத்தாளருமான திரு. கௌதம நீலாம்பரன் இன்று (14.09.2015) அதிகாலை 3.30 அளவில் சென்னையில் காலமானார்' என்னும் பதிவினைத் தடாகம் அமைப்பாளர் எழுத்தாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள் தனது முகநூல் பதிவிலிட்டிருந்தார்.

அது எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் அவர்கள் பற்றிய சிந்தனையை ஏற்படுத்திவிட்டது.  உண்மையில் எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் அவர்கள் சரித்திரக்கதைகள் எழுதுமோர் எழுத்தாளர் என்பதைப்பார்த்திருக்கின்றேன் ஆனால் அவரது படைப்புகள் தொடர்களாக வெளிவந்த காலத்தில்  படித்ததில்லை. முக்கிய காரணம் நான் வெகுசன ஊடகங்களின் தீவிர வாசகனாக இருந்த காலகட்டத்தில் அவர் கோலோச்சிக்கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக என் வெகுசன ஊடக வாசிப்புக்காலகட்டமான என் மாணவப்பருவத்தில் எனக்குப் பிடித்த சரித்த நாவலாசிரியர்களாக கல்கி, சாண்டில்யன், ஜெகசிற்பியன், அகிலன், மற்றும் நா.பார்த்தசாரதி ஆகியோரே விளங்கினார்கள் என்பேன். அக்காலகட்டத்தின் பின்னர் அறிமுகமானவர்களில் ஒருவரே எழுத்தாளர் கெளதம நீலாம்பரன்.  ஆனாலும் அவரது நாவலொன்றினை வாசிக்க வேண்டுமென்று எனக்கு ஆர்வம் பிற்காலத்தில் ஏற்பட்டது. அதற்குக்காரணம் கூகுள் தேடுதலொன்றின்போது ஈழத்து மன்னன் சங்கிலியன் பற்றியொரு சரித்திர நாவலொன்றினை அவர் எழுதியிருந்த விபரம் கிடைத்ததுதான். அந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் அதனால்தான் ஏற்பட்டது. ஆனால் அந்த நாவல் இணையத்தில் கிடைக்குமா என்று தேடியபோது முதலில் எனக்கு அப்பெயரில் அவர் எழுதிய நாடகம்தான் கிடைத்தது.

உண்மையில் 1983 இனக்கலவரத்தைத்தொடர்ந்து தமிழகம் நோக்கி ஈழத்தமிழ் அகதிகள் படையெடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழகம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. அதன் விளைவாக எழுந்த உணர்வுதான் 'ஈழமன்னன் சங்கிலி' என்னும் நாடகத்தை எழுத அவரைத்தூண்டியதாக அவரே குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த நாடகமே எழுத்தாளர் மணியனின் 'இதயம் பேசுகிறது' சஞ்சிகையில் தொடர் நாடகமாகப்பிரசுரமாயிற்று. அப்பொழுது எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் 'இதயம் பேசுகிறது' சஞ்சிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்துகொன்டிருந்தார்.

•Last Updated on ••Monday•, 14 •September• 2015 19:55•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 112: பேராசிரியர் கா.சிவத்தம்பியும், கலாநிதி க.கைலாசபதியும், பிலோ இருதயநாத்: கானுயிர் பயணங்களின் முன்னோடியா? அல்லது மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடியா? & முகநூலில் எல்லை மீறும் விவாதங்கள்... (மேலும் சில முகநூல் குறிப்புகள்)

•E-mail• •Print• •PDF•

பேராசிரியர் கா.சிவத்தம்பியும், கலாநிதி க.கைலாசபதியும்

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்இருவரையும் நான் ஒருமுறை நேரடியாகச்சந்தித்துள்ளேன். 80 /81 காலகட்டத்தில் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகைக்காக இருவரிடமும் ஆக்கங்கள் நாடிச்சந்தித்திருந்தேன். அப்பொழுது யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவரான நண்பர் ஆனந்தகுமார் என்னை அவர்களது அலுவலகங்களுக்கு அழைத்துச்சென்றார்.

கலாநிதி எங்களிருவரையும் அன்புடன் வரவேற்று வந்த காரணம் பற்றி வினவினார். நான் நுட்பம் இதழ் பற்றிக்குறிப்பிட்டு, அதற்கு அவரது கட்டுரையொன்றை நாடி வந்துள்ள விபரத்தை எடுத்துரைத்தேன். அவர் அதற்கு அவர் மகிழ்ச்சியுடன் தர ஒத்துக்கொண்டதுடன் , குறிப்பிட்ட திகதியொன்றைக்குறிப்பிட்டு அன்று வந்து கட்டுரையினைப்பெற்றுக்கொள்ளவுமென்றும் கூறினார். அதன் பிறகு பேராசிரியர் கா.சிவத்தம்பியின் அலுவலகத்துக்குச் சென்றோம். அவரும் எங்களிருவரையும் வரவேற்று, எங்கள் வருகைக்கான காரணத்தை அறிந்ததும் நுட்பம் சஞ்சிகைக்குக் குறிப்பிட்ட திகதியில் கட்டுரை தர ஒப்புக்கொண்டார்.

குறிப்பிட்ட திகதியில் பேராசிரியர் க.கைலாசபதி 'அபிவிருத்திக் கோட்பாடு - ஒரு கண்ணோட்டம்' என்னும் தலைப்பில் நீண்டதொரு ஆய்வுக்கட்டுரையினை 'நுட்பம்' சஞ்சிகைக்காகத்தந்திருந்தார். ஆனால் பேராசிரியர் கா.சிவத்தம்பியால் குறிப்பிட்ட திகதியை ஞாபகம் வைத்துக் கட்டுரையினைத்தர முடியவில்லை. அத்துடன் பேராசிரியர் கைலாசபதி 'நுட்பம்' இதழ் வெளிவந்து அவரதுக்குக் கிடைத்ததும் மறக்காமல் சிறு விமர்சனக்குறிப்பொன்றினையும் அனுப்பியிருந்தார்.

எவ்வளவோ அலுவல்களுக்கு மத்தியிலும், இதழுக்குக் கேட்ட கட்டுரை பற்றி மறக்காமல், குறித்த திகதியில் கட்டுரையினைத் தயாராக வைத்திருந்த பேராசிரியர் கைலாசபதியின் அந்த 'காலம் தவறாத பண்பு' (punctuality) அவரைப்பற்றி எண்ணும் சமயங்களிலெல்லாம் எனக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவதுண்டு.

•Last Updated on ••Monday•, 14 •September• 2015 19:55•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 111: மேலும் சில முகநூல் குறிப்புகள்!

•E-mail• •Print• •PDF•

1. 'வெங்கட் சாமிநாதன்': வாதங்களும் விவாதங்களும்'

. 'வெங்கட் சாமிநாதன்': வாதங்களும் விவாதங்களும்' கடந்த ஐம்பது வருடங்களுக்கும் அதிகமாக தமிழ்க்கலை, இலக்கிய உலகில் கலை, இலக்கிய விமர்சகராகப்பங்களித்து வருபவர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள். முதுமையின் தளர்ச்சியையும் உள்வாங்கிச்சோர்ந்து விடாமல் தொடர்ந்தும் சஞ்சிகைகள், இணைய சஞ்சிகைகள் என்று தன் எழுத்துப் பங்களிப்பினை வழங்கி வருபவர் வெங்கட் சாமிநாதன். அவருடன் கருத்து முரண்பாடு கொண்டவர்கள் கூட தமிழ்க்கலை, இலக்கியச்சூழ்நிலையில் நிராகரிக்க முடியாத அவரது ஆளுமையினை ஏற்றுக்கொள்வார்கள், 'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல வருடங்களாகத்தன் கட்டுரைகளை அனுப்பி வருபவர் அவர். 'பதிவுகள்' இணைய இதழினை மிகவும் மதிப்பவர் திரு.வெ.சா, அவர் தன் படைப்புகளை அனுப்பும்போது எப்பொழுதும் மின்னஞ்சலில் 'அன்புள்ள நண்பர், ஆசிரியர் பதிவுகள் கிரிதரன் அவர்களுக்கு' என்று விளித்துத்தான் தன் படைப்புகளை அனுப்புவார். இது அவரது பெருந்தன்மையினைக்காட்டுகிறது. என்னை அவர் தன் நண்பர்களிலொருவராக ஏற்றிருப்பது அவரது நல்ல உள்ளத்தைக்காட்டுகிறது. அது 'பதிவுகள்' இணைய இதழ் மேல் அவர் வைத்துள்ள மதிப்பினையும் எடுத்துக்காட்டுகிறது.

திரு.வெ.சா.வின் ஐம்பது வருட இலக்கியப்பணியினைச் சிறப்பிக்கும் முகமாக எழுத்தாளர்கள் பா.அகிலன், திலீப்குமார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் சந்தியா பதிப்பகம் வாயிலாக 'வெங்கட் சாமிநாதன்': வாதங்களும் விவாதங்களும்' என்றொரு தொகுப்பு நூலினை 2010இல் வெளியிட்டு வைத்தார்கள். மிகவும் நேர்த்தியான வடிவமைப்பில், தடித்த மட்டையுடன் வெளியான அந்த நூலில் கலை, இலக்கிய ஆளுமைகள் பலரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. எனது கட்டுரையான 'அறிவுத்தாகமெடுத்து அலையும் வெங்கட்சாமிநாதனும் அவரது கலை ,மற்றும் தத்துவியற் பார்வைகளும்' என்றொரு நீண்டதொரு கட்டுரையினை எழுதியிருந்தேன். மேலும் மேற்படி நூலினைப்பெற விரும்புவோர் சந்தியா பதிப்பகத்துடன் தொடர்புகொள்ளவும். முகவரி வருமாறு: சந்தியா பதிப்பகம், புது எண் 77, 53ஆவது தெரு, 9ஆவது அவென்யு, அசோக் நகர் , சென்னை 600 083 என்னு முகவரிக்கு எழுதித்தொடர்பு கொள்ளுங்கள். விலை ரூபா 300.

•Last Updated on ••Saturday•, 05 •September• 2015 19:06•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 110: ஆவணப்பதிவு- எழுக அதிமானுடா! (கவிதைகள்) - வ.ந.கிரிதரன்

•E-mail• •Print• •PDF•

நூல்: எழுக அதிமானுடா! (கவிதைகள்) - வ.ந.கிரிதரன்நூல்: எழுக அதிமானுடா! (கவிதைகள்) - வ.ந.கிரிதரன்
முதற்பதிப்பு: தை 1994
புத்தக வடிவமைப்பு: ஜோர்ஜ் இ.குருஷேவ்
அட்டை வடிவமைப்பு: பாலா ஆர்ட்ஸ்
வெளியீடு: மங்கை பதிப்பகம் ( 'டொரோண்டோ', கனடா)


எண்பதுகளில், தொண்ணூறுகளில் வீரகேசரி, தினகரன், நுட்பம், தாயகம் (கனடா) , குரல் (கையெழுத்துப்பிரதி, கனடா) ஆகிய ஊடகங்களில் வெளியான மற்றும் ஊடகங்களில் வெளிவராத எனது ஆரம்பகாலத்துக் கவிதைகளின் தொகுப்பிது. இத்தொகுப்பில் 30 கவிதைகளுள்ளன. இவை பிறந்த மண்ணின் அரசியலை, புகலிடத்திருப்பினை, ஆசிரியருக்குப் பிடித்த ஆளுமைகளைப் பற்றிய எண்ணங்களை மற்றும் சூழற் பாதுகாப்பினை விபரிக்கின்றன. இக்கவிதைகளில் சிலவற்றில் அதிமானுடா போன்ற ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் சொற்களுள்ளன. இவை அக்காலத்தின் என் எண்ணங்களின் வெளிப்பாடு. இப்பொழுது எழுதுவதாயின் மானுடம், மானிடர் போன்ற சொற்களையே பாவிப்பேன். ஆயினும் ஏற்கனவே வெளிவந்த பதிப்பிலுள்ளவற்றை மாற்ற முடியாத காரணத்தால் , அடுத்து வரும் பதிப்புகளில் இவ்விதமான சொற்கள் மாற்றப்படும். இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் சிலவற்றைத்தவிர ஏனையவற்றை கவிதை ஆர்வத்தின் வெளிப்பாடுகள் என்று கூறுவேன். என் அக்காலத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதையே முக்கியமாகக்கொண்டு உருவான சொற்களின் வெளிப்பாடுகள் என்றும் கூறுவேன். விடுதலை அமைப்புகளின் அக, புற முரண்பாடுகளை, முஸ்லீம் மக்களின் பலவந்த  வெளியேற்றத்தினை, மலையக மக்களின் துயரினையெல்லாம் கவிதைகள் தம்பொருளாகக்கொண்டுள்ளன. கனடாப்பூர்வீகக்குடியினரின் சோகங்களையும் கவிதைகள் விபரிக்கின்றன.

•Last Updated on ••Saturday•, 10 •October• 2015 07:04•• •Read more...•
 

அஞ்சலி: சாந்தி சச்சிதானந்தம் பற்றிச் சில நினைவுகள்...

•E-mail• •Print• •PDF•

சாந்தி சச்சிதானந்தம் நாடறிந்த சமூக சேவையாளர்; எழுத்தாளர். விழுது அமைப்பின் ஸ்தாபகர். இலங்கையிலேயே தொடர்ந்தும் தங்கியிருந்து பெண்களின் உரிமைக்காக, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் போராடி வந்தவர். இவரை எனக்கு 1978இலிருந்து தெரியும். என்னுடன் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றவர். இவரது தந்தையார் சச்சிதானந்தம்தான் லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் 1970இல் நல்லூர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர். சிறிது காலத்தின் முன்புதான் என் முகநூல் நண்பர்களிலொருவராக இணைந்து கொண்டார். இவரது திடீர் மறைவு யாரும் எதிர்பாராதது. நீண்ட நாள்களாக இவர் நோய்வாய்ப்பட்டிருந்த விடயமே இவரது மறைவினையொட்டி வெளியான செய்திகளின் வாயிலாகவே அறிந்துகொண்டேன். இவரது திடீர் மறைவானது பழைய நினைவுகள் சிலவற்றை அசைபோட வைத்துவிட்டது.

மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் எங்கள் வகுப்பில் இவர் ஒருவரே தமிழ்ப்பெண். மிகவும் துணிச்சல் மிக்கவர். மிகவும் இனிமையாகப்பாடும் குரல் வளம் மிக்கவர். மொறட்டுவைப்பல்கலைக்கழக நிகழ்வுகளில் தமிழ்த்திரைப்படப்பாடல்களைப்பாடி அனைவரையும் கவர்ந்திருக்கின்றார். பெண் உரிமை பற்றி அக்காலகட்டத்திலேயே தீவிரமாக வாதிடுவார். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்தில் நான் இதழாசிரியர் குழுத்தலைவராக இருந்தபொழுது இவர் சங்கத்தின் உபதலைவராகக்கடமையாற்றினார்.

ஒருமுறை எம் வகுப்பைச்சேர்ந்த சிங்கள, தமிழ் மாணவர்கள் அனைவரும் 'மலைநாட்டிலிருந்த World's Endற்குச் சுற்றுலா சென்றிருந்தபொழுது இவரும் வந்திருந்தார். இவர் பொதுவாக மாணவர்களின் சுற்றுலாக்களுக்கு வருவதில்லை அந்த ஒரு சுற்றுலாவைத்தவிர.

அவ்வப்போது நாம் ஓய்வாகக்கூடியிருக்கும் வேளைகளில் மட்டக்களப்பைச்சேர்ந்த மோகன் அருளானந்தனையும், இவரையும் பாடல்களைப்பாடச்சொல்லி வற்புறுத்துவோம். 'அமுதைப்பொழியும் நிலவே' பாடலை மிகவும் இனிமையாகப்பாடுவார்.

•Last Updated on ••Sunday•, 30 •August• 2015 06:52•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும்: 109: ஈழத்துத்தமிழ்க்கவிதை வாசிப்போமா? , கருந்துளைகள் பற்றி ஹார்கிங்! , ஓடையிலே என் சாம்பர் கரையும் போதும் , ஒரு கணத்து மின்னலும், அரைக்கணத்து மின்னலும் இரு கவிஞர்களும் & பதிப்பகத்தார் விடும் தவறுகள் பற்றி....

•E-mail• •Print• •PDF•

ஈழத்துத்தமிழ்க்கவிதை வாசிப்போமா? (1) : மூட்டைபூச்சியினைத்தூது விடும் கவிஞன்!

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்தமிழ்க்கவிஞர்கள் அன்னத்தைத் தூது விட்டதைப் படித்திருக்கின்றோம். வெண்ணிலாவை, வெண்முகிலை, நதி அலையினை, புறாவினையெல்லாம் தூது விட்டிருப்பதை அறிந்திருக்கின்றோம். ஆனால் மூட்டைப் பூச்சியினை யாராவது தூதனுப்பியிருப்பதைப் பார்த்திருக்கின்றீர்களா? நம்மூர்க்கவிஞனொருவன், மீன்பாடும் தேனாட்டுக் கவிஞனொருவன் மூட்டைப்பூச்சியினைத்தூதுவிட்டுக் கவி பாடியிருக்கின்றான். அவன் வேறு யாருமல்லன். அமரக் கவிஞன் இராஜபாரதிதான் அவன். 'ஓடையிலே என் சாம்பர் ஓடும்போதும், ஓண்தமிழே சலசலத்து ஓட வேண்டும்' என்று பாடிய அதே கவிஞன் இராஜபாரதிதான் அவன்.

•Last Updated on ••Saturday•, 10 •October• 2015 07:04•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 108 : திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதனை வணங்க வேண்டும்.

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்'போட்டோஷாப்' மென்பொருளை உருவாக்கியவர்களிலொருவரான தஞ்சாவூர்த்தமிழரான சீதாராமன் நாராயணன் என்னும் தமிழருடனான நேர்காணலை விகடன் பிரசுரித்திருந்தது. அதன் வாசிப்பின்போது தோன்றிய சிந்தனைத்துளிகளே எனது இக்குறிப்புகள்.

'சுந்தர் பிச்சை மற்றும் சீதா ராமன் நாராயணனைப்போன்றவர்களெல்லாரும் எதற்காகச் சொந்த மண்ணுக்குப் பயன்படாமல் பிறதேசத்தவர்களுக்குப் பயன்படும் வகையிலான வாழ்வினைத் தேர்ந்தெடுக்கின்றார்கள்? எப்பொழுது தமிழர்கள் உருவாக்கும் மென்பொருள்கள் அவர்கள் வாழும் மண்ணிலிருந்து உலகெங்கும் பரவிச்சாதிக்கப்போகின்றது? என்றெல்லாம் எண்ணுவதுண்டு. சபீர் பாட்டியா போன்று என்று நம்மவர்கள் சொந்தமாகத் தங்கள் மென்பொருள்களை உருவாக்கிச் சாதனைகள் புரியப்போகின்றார்களென்று எண்ணுவதுண்டு.

இந்தப்பேட்டியில் இவர் கூறிய கருத்தொன்று என்னைக் கவர்ந்தது. அது: "ஆர்வமும், திறமையும்,தேடலும் இருந்தால்போதும் எந்த காரணியும் முன்னேற்றத்தை பாதிக்காது. இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நானும் பத்தாவது வரை தமிழ் மீடியத்தில் தான் படிச்சேன். அதனால மொழி பற்றியெல்லாம் சாக்கு சொல்லி தப்பிச்சுகாதீங்க மாணவர்களே"

•Last Updated on ••Sunday•, 16 •August• 2015 22:23•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 107 : ஜெயபாலனின் 'கள்ளிப்பலகையும், கண்ணீர்த்துளிகளும் (மேலும் சில முகநூல் குறிப்புகள்).'

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்எழுத்தாளர் வ.ஐ.ச. ஜெயபாலனை மீண்டும் முகநூலில் சந்தித்தபொழுது எழுந்த நினைவலைகளின் பதிவிது. கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனென்று பலராலும் அறியப்படுபவர்; அண்மைக்காலமாக இந்திய மத்திய அரசின் விருதுபெற்ற நடிகராகவும் 'ஆடுகளம்' ஜெயபாலன் என்றும் அறியப்படுகின்றார். கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனென்று அறியப்பட்டாலும் , இலக்கியத்தின் பல்துறைகளிலும் தன் ஆளுமையைப்பதித்தவர், பதித்து வருபவர் இவர் என்பதால் எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலன் என்று இவரை அழைப்பதே பொருத்தமானதென்று படுகிறது.

இன்று சிறிது முரட்டுத்தனம் மிக்கவராகவும், சிறந்த கவிஞர்களிலொருவராகவும் அறியப்படும் ஜெயபாலன் நான் சந்தித்த காலகட்டத்தில் வித்தியாசமான ஆளுமை மிக்கவராகவிருந்தார். மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவராக, வாய்க்கு வாய் 'ராசா' என்று அழைக்குமொருவராக, ஈழத்துத் தமிழர்களின் சமூக, அரசியல் பற்றிய விடயங்களைச் சம்பாஷிப்பதில் மிகவும் ஆர்வம் மிக்கவராக விளங்கியவராக இவ்விதமாகவே என் நினைவினிலிருக்கின்றார். 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' பற்றிய ஆய்வுக்காக, ஈழத்தமிழர்களின் வரலாற்றினைக்கூறும் நூல்களிலொன்றான 'யாழ்ப்பாண வைபவமாலை'யினைப்பெறுவதற்காக இவரை முதன் முதலாகச்சந்தித்திருக்கின்றேன். அதன் பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகைக்கு இவரது கவிதை வேண்டிச் சந்தித்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில இவருடன் சைக்கிளில் யாழ்நகரில் திரிந்த நாள்கள் நினைவிலுள்ளன.

•Last Updated on ••Saturday•, 05 •September• 2015 18:55•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 106: கவிஞர் இந்திரனின் கவிதை கவிஞர் ஜெயபாலனின் பெயரில்....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 107: கவிஞர் இந்திரனின் கவிதை கவிஞர் ஜெயபாலனின் பெயரில்....பிரபல கலை , இலக்கிய விமர்சகரும் கவிஞருமான இந்திரன் அவர்கள் தனது முகநூல் குறிப்பில் தனது 'மியூசியம்' என்னும் கவிதையினை கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதையாகக் கனடாத் தமிழ் இலக்கியத்தோட்டத்தினால் தேர்வு செய்யப்பட்டு, தொகுத்தளிக்கப்பட்ட ''In Our Translated World" என்னும் ஆங்கிலமொழிபெயர்ப்பில் வெளியான கவிதைத்தொகுப்பில் சேர்த்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். இது பற்றி இதுவரையில் பலரிடம் முறையிட்டுள்ளதாகவும் ஆனால் பயன் எதுவுமில்லையென்றும் வருத்தப்பட்டிருக்கின்றார்.

இது பற்றிய குற்றச்சாட்டினை இப்பொழுதுதான் முதல் முதலாக நான் அறிகின்றேன். Ontario Trillium Foundation அமைப்பின் நிதி உதவியுடன் வெளியான நூலிது. இதில் இவ்விதம் தவறு ஏற்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. எவ்விதம் இவ்விதமானதொரு தவறு ஏற்பட்டிருக்கலாம் என்று சிந்தித்துப்பார்க்கிறேன். ஏன் இது பற்றி இதுவரையில் கவிஞர் ஜெயபாலன் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்றொரு கேள்வியும் எழுகிறது.

இந்த நூலின் மீள்பதிப்பு விகடன் பதிப்பாகவும் வெளியாகியிருப்பதாகவும் இந்திரன் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார். இந்தப்பிரச்சினைக்குரிய சரியான தீர்வு இந்த ஆங்கில நூலினை மீண்டும் தவறினைத்திருத்தி, தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கனடாத் தமிழ் இலக்கியத்தோட்டம் வெளியிடுவதுதான். அத்துடன் கனடாத் தமிழ் இலக்கியத்தோட்டம் பகிரங்கமாகவும் தனது தவறுக்காகவும், கவிஞர் இந்திரனுக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்காகவும் வருத்தம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

•Last Updated on ••Thursday•, 06 •August• 2015 19:23•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 105 : மேலும் சில முகநூல் குறிப்புகள்!

•E-mail• •Print• •PDF•

-*முகநூலில் அவ்வப்போது எழுதிய குறிப்புகள் ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றன. - வ.ந.கி. -

1. செர்கய் ஐஸன்ஸ்டினும் இலக்கியமும்.

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

அண்மையில் சென்னை ஃப்லிம் சொஸட்டி / சவுத் ஏசியன் புக்ஸ் இணைந்து வெளியிட்ட நூலான திரைப்பட மேதை செர்கய் ஐஸன்ஸ்டின்' நூலினை வாசித்தேன். சிஸன்ஸ்டினின் கட்டுரைகள் சிலவற்றை (எழுத்தாளர் நாகார்ஜுனன் மொழிபெயர்ப்பில்) உள்ளடக்கிய நூலிது. நூலுக்கு 'அமரக் கலைஞன் ஐஸன்ஸ்டின்' என்றொரு அணிந்துரையினை கே.ஹரிகரன் எழுதியிருக்கின்றார். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பார்கள். அதற்கொப்ப அமைந்துள்ள நூலிது. நூல் சிறியதானாலும் கூறும் பொருளில் பெரியது , சிறந்தது என்பேன்.

இத்தொகுதியிலுள்ள ஐஸன்ஸ்டினின் கட்டுரைகள் வருமாறு:

1. ஐஸன்ஸ்டினின் முன்னுரை
2. நான் இயக்குநர் ஆனது எப்படி?
3. வண்ணம் திரைக்கு வந்த கதை
4. தொழிலாளர் - திரைப்படங்களைத் தயாரிப்பது எப்படி?
5. இலக்கியத்திலிருந்து சில பாடங்கள்.
6. பொட்டம்கின் படக்கட்டமைப்பின் ஒருங்கிணைவும் உணர்வெழுச்சியும்

•Last Updated on ••Wednesday•, 05 •August• 2015 23:52•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 104 : தகுதரம், தகுந்த தரம், உரிய தரம், த(மிழ்) கு(றியீட்டுத்) தரம் பற்றிச் சில கருத்துகள்....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

திஸ்கி தகுதரம் என்று கூறுகிறோமல்லவா? ஆனால் பலருக்கு இந்தத்தகுதரம் என்பதற்கான சரியான அர்த்தம் தெரியவில்லையென்பது வியப்பினை அளிக்கிறது. யூனிகோட், திஸ்கி, அஸ்கி இவையெல்லாமே தகுதரங்கள்தாம். உண்மையில் தகுதரம் என்பதற்கான சரியான விளக்கமாக உரிய தரம் அல்லது தகுந்த தரம் என்று கூறலாம்.ஆங்கிலத்தில் Standardட் என்பதற்கான தமிழ் மொழிபெயர்ப்பாக இதனைக்கருத முடியும். ஆனால் உண்மையில் தகுதரம் என்பது இந்த அர்த்தத்தில்தானா தமிழில் முதன் முதலில் பாவிக்கப்பட்டது?

திஸ்கி (TSCII: TSCII  - Tamil Standard Code for Information Interchange. ) என்ற எழுத்துருவினை ஆக்கியவர்கள் அதன் தமிழ் மொழிபெயர்ப்பான 'தமிழ் குறியீட்டுத் தரம்' என்பதிலுள்ள முதல் இரு சொற்களின் முதன் எழுத்துகளான 'த', 'கு' ஆகியவற்றை உள்ளடக்கி 'தகுதரம்' எனச்சுருக்கி அழைத்ததாகத் தெரிகிறது.

ஆனால் தமிழ் குறியீட்டுத் தரம் என்பதிலிருந்து தகுதரம் வந்ததாக இருப்பினும் தகுந்த தரம் அல்லது உரிய தரம் என்னும் அர்த்தத்தில் பாவிப்பதே மிகவும் பொருத்தமாகத் தெரிகின்றது.

இவ்விதம் அழைப்பதன் மூலம் இதனை அஸ்கி, திஸ்கி, யுனிகோட் ஆகிய தகுதரங்கள் என்று அழைக்கலாம். இல்லாவிடில் திஸ்கி என்னும் எழுத்துருவுக்கு மட்டுமே அழைக்க முடியும்.

தகுதரம் பற்றிப் பலர் போதிய விளக்கமின்றி அறிய முடிந்ததால்தானிந்தப் பதிவு ஒரு தெளிவுக்காக மற்றும் மேலதிகப் புரிதலுக்காக.

•Last Updated on ••Wednesday•, 29 •July• 2015 20:15•• •Read more...•
 

'இணையத்தமிழ் : இணைய இதழ், வலைப்பூ, மின்னூல் மற்றும் சமூக வலைத்தளம் பற்றியதொரு பார்வை'

•E-mail• •Print• •PDF•

- 25.07.2015 அன்று 'டொராண்டோ' தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற 'கணினித்தமிழ் வரலாறும், வளர்ச்சியும்'  என்ற  நிகழ்வில் 'இணையத்தமிழ் : இணைய இதழ், வலைப்பூ, மின்னூல் மற்றும் சமூக வலைத்தளம் பற்றியதொரு பார்வை' என்னும் தலைப்பில் ஆற்றிய உரையிது. சுருக்கமாக மேற்கூறிய விடயங்களை ஆராய்கிறது. நிகழ்வில் நேரம் காரணமாகச்சில விடயங்களை முழுமையாக வாசிக்க முடியவில்லை. வாசித்த கட்டுரையின் முழு வடிவம் இங்கு ஒரு பதிவுக்காக பிரசுரமாகின்றது. - வ.ந.கி -

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

கணித்தமிழ், கணினித்தமிழ், இணையத்தமிழ் என்று பல்வேறு சொற்தொடர்களால அழைக்கப்பட்டாலும் இச்சொற்தொடர்களெல்லாம் ஒரு பொருளையே சுட்டுகின்றன. கடந்த இருபது வருடங்களில் இணையத்தமிழ் பல்வேறு துறைகளிலும் காத்திரமாகக்கால்பதித்து ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது. இணையத்தமிழின் வளர்ச்சி நம்பிக்கையூட்டுவது. மகிழ்ச்சியினைத்தருவது. ஆனால் , இணையத்தின் சகல ஆரோக்கியமான அம்சங்கள் பலவற்றை கலை, இலக்கியத்துறையிலுள்ளவர்கள் அனைவரும் முறையாகப் பாவிக்கின்றார்களா? பாவித்துப் பயனடைகின்றார்களா? என்று பார்த்தால் கிடைக்கின்ற பதில் ஏமாற்றமே. இங்குள்ள எத்தனை பேர் வலைப்பூக்களை வைத்திருக்கின்றீர்கள்? எத்தனைபேர் மின்னூல்களைப் பதிப்பித்திருக்கின்றீர்கள்? எத்தனைபேர் இணைய இதழ்களில் எழுதுகின்றீர்கள்? எத்தனைபேர் இணைய இதழ்களை நடாத்துகின்றீர்கள்? இன்று கூட இணையத்தில் தமிழில் எழுதத்தெரியாதவர்கள் பலர் இருக்கின்றார்கள். பாமினி எழுத்துருவில் எழுதியதை ஒருங்குகுறி எழுத்துக்கு மாற்றத்தெரியாதவர்கள் இருக்கின்றார்கள்? இன்று விண்டோஸ் போன்ற 'இயங்கு தளம் (ஒபரேட்டிங் சிஸ்டம்') எல்லாம் ஒருங்குறியை மையமாகக்கொண்டே இயங்குகின்றன. இருந்தும் MSWord போன்ற விண்டோஸ் மென்பொருள்களில் ('அப்ளிகேசன்களி'ல்) தமிழில் எழுத எத்தனை பேருக்குத்தெரியும்? இணையத்தில் பலருக்குத் தமிழ்ப்பாட்டுகளைக் கேட்பதும், முகநூலில் புகைப்படங்களை இடுவதும் போன்ற செயற்பாடுகளுடன் பொழுது முடிந்துவிடுகின்றது. இதற்கு முக்கிய காரணம் இணையத்தொழில்நுட்பம் வழங்கும் பயன்கள் பற்றிய பூரண அறிவில்லாமலிருப்பதும், அவற்றை எவ்விதம் பாவிப்பது என்பதுபற்றிய தெளிவில்லாமலிருப்பதும்தான் என்று கருதுகின்றேன்.

•Last Updated on ••Wednesday•, 29 •July• 2015 06:36•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 103: முகநூல் குறிப்புகள் சில.

•E-mail• •Print• •PDF•

   'ரொறன்ரோ' தமிழ்ச்சங்கத்தின் மாதாந்தக் கலைந்துரையாடல்: கணினித்தமிழ் 'வரலாறும் வளர்ச்சியும்'.

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

இவ்விதமானதொரு நிகழ்வை நடாத்தியதற்காக எழுத்தாளர் அகில், வைத்திய கலாநிதி லம்போதரன், முனைவர் நா.சுப்பிரமணியன் மற்றும் இவர்களுடன் ஒன்றிணைந்து செயலாற்றுபவர்கள் அனைவரும பாராட்டுக்குரியவர்கள்.  இச்சங்கத்தினர் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இறுதிச்சனிக்கிழமை அன்று இது போன்று கலை, இலக்கிய மற்றும் அறிவியல் நிகழ்வொன்றினை நடத்துவது வழக்கம்.

இன்று நடைபெற்ற நிகழ்வுக்கு வருவதாகவிருந்த ஐந்து பேச்சாளர்களில் மூவரே வந்திருந்தனர். எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான மணி வேலுப்பிள்ளையில் ஆரம்ப உரையினைத்தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமாகியது. பிரதம பேச்சாளரான திரு.குயின்றஸ் துரைசிங்கம் 'கணினித்த்மிழின் வளர்ச்சி,  குறிமுறை, தகுதரம், ஒருங்குறி இன்னும் இன்னோரன்ன' என்னும் தலைப்பில் நீண்டதொரு உரையினை ஆற்றினார். கணினியில் பாவிக்கப்படும் தமிழ் எழுத்துகள் பற்றிய சிக்கல்கள் பற்றியதாகவே அவரது உரை பெரும்பாலுமிருந்தது. ஒருங்குறி எழுத்துரு வந்துவிட்ட இந்நிலையிலும் கணினியில் பாவிக்கப்படும் தமிழ் எழுத்துருக்கான முழுமையான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. ஒருங்குறி ஓர் ஆரம்பமே என்னும் கருத்துப்பட அவரது உரை அமைந்திருந்தது. 'தமிங்கிலிஸ்' பாவித்துக் கணினியில் தட்டச்சு செய்வதைப்பற்றியும் அவரது உரை விமர்சனப்பார்வையுடன் அமைந்திருந்தது. அவர் transliteration என்பதைத்தான் 'தமிங்கிலிஸ்' என்று கூறிவிட்டாரென்று நினைக்கின்றேன்.   'ட்ரான்ஸ்லிடெரேஷன்' என்பது ஆங்கில எழுத்துகளைப்பாவித்துத் தமிழை அல்லது ஒரு மொழி எழுத்துக்களைப்பாவித்து இன்னுமொரு மொழியினை எழுதுவதாகும். ஆனால் 'தமிழிங்கிலிஸ்' ஆங்கிலத்தைத்தமிழில் பேசுவதைக்குறிக்கும். இவரது பயனுள்ள நீண்ட உரையானது கணினியில் பாவிக்கப்படும் எழுத்துருகள், அவை ஏற்படுத்தும் சிரமங்கள், அவை பற்றிய ஆய்வுகள் பற்றியதாகவே அமைந்திருந்தது.

•Last Updated on ••Thursday•, 30 •July• 2015 18:22•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 100: டொமினிக் ஜீவா அவர்களுக்கு அகவை 88! வாழ்த்துகிறோம்!

•E-mail• •Print• •PDF•

dominic_jeeva5.jpg - 15.40 Kbமூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்களுக்கு அகவை 88. ஈழத்தமிழ் இலக்கிய உலகில் அவருக்குச் சிறப்பானதோரிடமுண்டு. குறிப்பாக ஈழத்து முற்போக்கு இலக்கியத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது. மேலும் அவரது பங்களிப்பு பல்முனைப்பங்களிப்பாகும். புனைவு, அபுனைவு, சிற்றிதழ் வெளியீடு என அவரது இலக்கிய பங்களிப்பினைப்பிரித்துப் பார்க்கலாம். தீண்டாமைக்கெதிராக ஓங்கியொலித்த குரல் அவரது. அனுபவங்களை, அவை தந்த அவமானங்களைக்கண்டு ஒதுங்கி ஓடி விடாமல், அவற்றைச் சவால்களாக எதிர்கொண்டு, தான் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நின்று நடைபயின்றவர் ஜீவா அவர்கள்.

அவரது சிற்றிதழ்ப்பங்களிப்பு அவரது இலட்சியப்பற்றுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும். மல்லிகை என்னும் சிற்றிதழ்ப் பங்களிப்பு மேலும் பல பயன்களை விளைவித்தன எனலாம். ஈழத்துப்படைப்பாளிகளை (அமரர்களுட்பட) மல்லிகையின் அட்டைப்படத்தில் வெளியிட்டு, அவர்களைப்பற்றிய அட்டைப்படக் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்ததன்மூலம் அவர் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் அளித்தவர்கள், அளிப்பவர்களைத் தமிழ் வாசகர்களுக்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தினார்; அவற்றை ஆவணப்படுத்தினார். இளம் எழுத்தாளர் பலரை மல்லிகை சஞ்சிகை மூலம் அறிமுகப்படுத்தினார்; அவர்தம் ஆக்கங்களைப் பிரசுரித்து ஊக்கப்படுத்தினார். கலை, இலக்கியம் மற்றும் சமூக, அரசியல் பற்றி ஆக்கங்களைப் பிரசுரித்தார். பிறமொழி ஆக்கங்களைத்தமிழுக்கு மொழிபெயர்த்து வெளியிட்டார். தன் எண்ணங்களைப்பகிர்ந்துகொண்டார்.

•Last Updated on ••Saturday•, 25 •July• 2015 20:52•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 102: எழுத்தாளர் ஜெயமோகனுடனான சந்திப்பொன்று பற்றி

•E-mail• •Print• •PDF•

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடனான விசேட கலந்துரையாடல்

எழுத்தாளர் ஜெயமோகனுடனான சந்திப்பொன்று பற்றி எழுத்தாளர் இளங்கோ (டிசெதமிழன்) பின்வருமாறு முகநூலில் எழுதியிருந்தார் "நேற்று ஜெயமோகன் உரையாற்றிய நிகழ்வொன்றுக்குப் போயிருந்தேன். வழமைபோல 'நேரத்திற்குச் சென்றதால்' அவரின் உரையைத் தவறவிட்டிருந்தேன். ஆனால் கேள்வி பதில்களைக் கேட்க முடிந்தது. கவிதைகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு, பாரதி, கு.ப,ரா, வானம்பாடி எனத் தொடர்ந்து வந்து நீட்சித்த பேச்சில் ஈழக்கவிதைகளுக்கு எந்த இடமுமில்லை. தன்னைக் கவனம் கோரும் இன்றைய கவிஞர்களில் தமிழகம் சார்ந்த கவிஞர்களைத் தவிர எந்தக் கவிஞர்களும் இல்லை என்பதற்கப்பால், ஒரு பெண் கவிஞர் கூட அவருக்கு நினைவில் வரவில்லை.."

பொதுவான சந்திப்பொன்றில் எழுத்தாளர் உடனடியாக நினைவில் இருப்பவர்களைப்பற்றிக்குறிப்பிட்டிருக்கலாம். அதற்காக அவரைக் குற்றஞ்சாட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவரது ஆக்கங்களில் அவ்விதம் அவர் இருட்டடிப்பு செய்திருந்தால் அது விவாதத்துக்குரியது.

ஜெயமோகனது சந்திப்பு பற்றி யோகன் கண்ணமுத்து தனது முகப்பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

•Last Updated on ••Saturday•, 10 •October• 2015 07:04•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 101: முகநூலிலிருந்து...: தமிழினி ஜெயக்குமாரனின் 'நஸ்ரியா'

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 100: முகநூலிலிருந்து...: தமிழினி ஜெயக்குமாரனின் 'நஸ்ரியா'தமிழினியின் முகநூல் பக்கத்தில் வெளியான  'நஸ்ரியா' என்னுமிந்தக் கவிதைக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அகதிகளாக முஸ்லீம் மக்கள் யாழ் மாவ்வட்டத்திலிருந்து வெளியேறியதைப் பதிவு செய்கிறது. அதே சமயம் அவ்விதமான வெளியேற்றத்துக்குக் காரணமான அமைப்பின் முன்னாள் போராளியொருவரின் இன்றைய மனநிலையினையும், அன்று அகதியாகச்சென்ற முஸ்லீம் சமூகத்தின் வாரிசுகளிலொருவரின் எண்ணங்களையும், இருவருக்கிடையிலான மானுட நேயம் மிக்க நட்பினையும்  பதிவு செய்கின்றது. அந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் இலங்கையின் சிறுபான்மையின மக்களனைவரும் ஒன்றிணைந்து தம் உரிமைகளுக்காகப் போராட வேண்டிய இன்றுள்ள சூழலில், கடந்த கால வரலாற்றின் கசப்பான பக்கங்கள் தலையிட்டு அவ்விதமான ஒற்றுமையினைக் குலைத்து விடும் அபாயமுள்ளதொரு சூழலில்,சிறுபான்மையின மக்கள் மத்தியில் புரிதுணர்வினையும், நல்லெண்ணத்தினையும் ஏற்படுத்துவதற்கு எழுத்தாளர்களின் இதுபோன்ற தம் மீதான சுய பரிசோதனை மிக்க  படைப்புகளின் முக்கியத்துவமும் அதிகரிக்கின்றது.

இக்கவிதையில் எனக்குபிடித்த சில வரிகள் வருமாறு:

•Last Updated on ••Friday•, 08 •April• 2016 20:51•• •Read more...•
 

வாசிப்பும் யோசிப்பும் 97 , 98 & 99

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

வாசிப்பும் யோசிப்பும் 97 : ஒரு கவிதையென்ற உரைநடை பற்றிச் சில வரிகள்.....

அண்மைக்காலமாக வெளிவரும் கவிதைகள் என்ற பெயரில் வரும் படைப்புகளைப் படிக்கும்போது ஒரு விடயத்தை அவதானிக்க முடிகிறது. கவித்துவமான தலைப்புகளுக்காக நேரத்தைச்செலவிடும் அவ்விதமான படைப்புகளைப் படைப்பவர்கள் கவிதையென்ற பெயரில் எழுதுபவையெல்லாம் கவிதைகளாக எனக்குத் தெரியவில்லையே. உங்களுக்குத் தெரிகிறதா?

உதாரணத்துக்குக் கீழுள்ள கவிதையென்ற பெயரில் வந்துள்ள படைப்பினை ஒருமுறை வாசித்துப் பாருங்கள்"

கவிதையின் தலைப்பு: மெய்நிகர் தீபம்

கவிதை கீழுள்ளவாறு செல்கிறது.  வரிகளென்ற பெயரில் முறித்து முறித்து எழுதப்பட்டிருந்த படைப்பினை ஒரு மாறுதலுக்காக முறிக்காமல் எழுதியிருக்கின்றேன்.

"மெட்ரோபாலிடன் நகரின் வேகம் பரபரக்கும் சாலை அது. பின்னிருக்கையில் உட்காரப் பழகாத மலரொன்றை அமர்த்தியிருக்கிறான் தகப்பனெனப்படுபவன். செல்பேசியில் தன் காதலியோடு உல்லாசித்தபடியே செலுத்துகிறான். இருசக்கர வாகனத்தை. இடையிடையே வெடித்துச் சிரிக்கிறான். அப்போதெல்லாம் வாகனம் சமன் குலைகிறது."

•Last Updated on ••Thursday•, 18 •June• 2015 04:28•• •Read more...•
 

சிறுகதை: எதிர்காலச் சித்தன்!

•E-mail• •Print• •PDF•

man.jpg - 5.39 Kb[ ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் பல்துறைகளிலும் சுடர்விட்டு அமரரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளில் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை என்னைக் கவர்ந்த அவரது கவிதைகளிலொன்று. ஈழத்துத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த கவிதைகளிலொன்று. எந்த ஒரு ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய தொகுப்பிலும் தவறாமல் இடம் பெற வேண்டிய கவிதைகளிலொன்று. அக்கவிதையைத் தழுவி இச்சிறுகதை எழுதப்பட்டுள்ளது.  மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மீராவின் 'எனக்கும் உனக்கும் ஒரே ஊர். வாசுதேவ நல்லூர்' என்பதையே முதலாவது தமிழில் வெளிவந்த அறிவியற் கவிதையாகக் குறிப்பிடுவார். ஆனால் அதற்கும் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்' கவிதையினையே தமிழின் முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுகின்றேன். சுஜாதாவுக்கும் அ.ந.க.வின் மேற்படி கவிதை பற்றி தெரிந்திருந்தால் அவரும் அவ்விதமே கூறியிருப்பார். மேற்படி கவிதை நிகழ்கால மனிதன் எதிர்கால மனிதன் ஒருவனைச் சந்தித்து, உரையாடித் திரும்புவதைப் பற்றி விபரிக்கிறது.]

எதிர்காலத்திரை நீக்கி நான் காலத்தினூடு பயணித்தபொழுதுதான் அவனைக் கண்டேன். அவன் தான் எதிர்கால மனிதன். இரவியையொத்த ஒளிமுகத்தினைக் கொண்டிருந்த அந்த எதிர்கால மனிதனின் கண்களில் கருணை ஊறியிருந்தது. அவன் கூறினான்: "நிகழ்கால மனிதா! எதிர்கால உலகமிது. இங்கேன் நீ வந்தாய்? இங்கு நீ காணும் பலவும் உன்னை அதிர்வெடி போல் அலைக்கழிக்குமே. அப்பனே! அதனாலே நிகழ்காலம் நீ செல்க!"
•Last Updated on ••Wednesday•, 13 •July• 2016 07:02•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 96:குணா கவியழகனின் 'விடமேறிய கனவு' நூல் மற்றும் வாசிப்பு பற்றிய எண்ணங்கள்...

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

நேற்று குணா கவியழகனின் 'விடமேறிய கனவு' நூல் வெளியீடு நிகழ்வுக்குத். தவிர்க்க முடியாத காரணங்களினால் செல்ல முடியவில்லை. நண்பரும் எழுத்தாளருமான தேவகாந்தன் சென்றிருந்தார். எனக்கும் ஒரு பிரதி வாங்கி வருமபடி கூறியிருந்தேன். அதனைப்பெற்றுக்கொள்ள நேற்றிரவு அவர் இருப்பிடம் சென்றிருந்தேன். சிறிது நேரம் பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடினோம். நூல் வெளியீடு, முகநூல், தமிழகத்தில் அவரது அனுபவங்கள் என்று பல்வேறு விடயங்கள் உரையாடலில் வந்து போயின.

நா.பா.வின் மணிபல்லவம் நாவலைச் சுருக்கி வைத்திருப்பதாகக் கூறினார். தனக்கு ஒரு காலத்தில் பிடித்த நாவலது என்றார். இப்பொழுது வாசிக்கும்போது அன்றிருந்த பிடிப்பு ஏற்படுவதில்லை என்றார். சிலப்பதிகாரம் போல் மணிபல்லவம் நாவலுக்கு ஒரு சிறப்புண்டு. அக்காலத்து மக்களை மையமாக வைத்து உருவான நாவலது. எனக்கு நா.பா.வின் தமிழ் பிடிக்கும். அக்காலகட்டத்தில் அவரது பொன்விலங்கு நாவலின் 'பைண்டு' செய்யப்பட்ட பிரதியொன்று என்னிடமிருந்தது. இலட்சிய வேட்கை கொண்ட நாயகனான சத்தியமூர்த்தி மல்லிகைப்பந்தல் கிராமத்து ஆசிரியர் வேலைக்கான நேர்முகப்பரீட்சைக்காகச் செல்வதுடன் ஆரம்பமாகும் நாவலின் இடையில் வரும் கருத்தாழம் மிக்க வசனங்களை அப்போது விரும்பி வாசிப்பதுண்டு. இன்று அக்காலகட்டத்தில் வாழ்வில் இன்பமேற்றிய நினைவுச்சின்னங்களாக அன்று வாசிப்பில் இன்பம் தந்த நூல்கள் விளங்குகின்றன.

•Last Updated on ••Monday•, 08 •June• 2015 05:44•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 95: சமகால ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய பென்குவின் (இந்தியா) தொகுப்பு பற்றி....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 95: சமகால ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய பென்குவின் (இந்தியா) தொகுப்பு பற்றி....அண்மையில் French Insititute of pandicherry மற்றும் 'பென்குவின் (இந்தியா) அமைப்புகள் இணைந்து வெளியிட்டிருந்த Time will write A SONG for you என்னும் ஈழத்தமிழ் இலக்கியத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகளை உள்ளடக்கிய நூலொன்றினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந் நூலைப் பற்றி முன் அட்டையில் Contemporary Tamil Writing from Sri lanka  என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்படி தொகுப்பிலுள்ள படைப்புகளுக்குச் சொந்தக்காரர்களின் எழுத்துத்திறமை பற்றிய சந்தேகம் எதுவும் எனக்கில்லை. அவர்கள் அனைவரும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பு செய்தவர்கள். ஆனால் இத்தொகுப்பு தொகுக்கப்பட்ட விதம் மிகவும் ஆச்சரியத்தையும், தொகுப்பின் தரம் பற்றிய சந்தேகத்தினையும் எழுப்புகிறது.

தொகுப்பில் மொத்தம் 68 படைப்புகள் (கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என) உள்ளன. அவற்றில் கீழுள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டும் முப்பதுக்கும் அதிகமானவையாக இருக்கின்றன: வ.ஐ.ச. ஜெயபாலன், சிவரமணி, பா.அகிலன், கருணாகரன், சு.வில்வரத்தினம், எஸ்.விநோதினி, எஸ்.செழியன், கி.பி.அரவிந்தன், போஸ் நில்கலே, வி.கெளரிபாலன், நிலாந்தன், மஜீத், ஃபகீமா ஜகன், சண்முகம் சிவலிங்கன்

ஶ்ரீலங்காத்தமிழரின் சமகால எழுத்து என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு தொகுப்பிலுள்ள 68 படைப்புகளில் முப்பதுக்கும் அதிகமானவை மேலுள்ள எழுத்தாளர்களின் படைப்புகளே. இவர்களின் ஒன்றுக்கும் அதிகமான பல படைப்புகளைத் தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.

•Last Updated on ••Saturday•, 06 •June• 2015 22:43•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 94: நாவல்: ஒரு ஶ்ரீலங்கன் அகதியின் கதை.

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரனின் நாவல்: ஒரு ஶ்ரீலங்கன் அகதியின் கதை!காலம் கைகூடின் எதிர்காலத்தில் வெளியாகவுள்ள இந்த நாவலின் இரு பகுதிகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. 1983இல் இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான இனக்கலவரத்தைத்தொடர்ந்து , இலங்கையில் அரச திணைக்களமொன்றில் உயர் பதவியிலிருந்த இளங்கோ அகதியாகக் கனடா நோக்கி புலம்பெயர்கின்றார். இடையில் அவரது பயணம் அமெரிக்காவின் பாஸ்டனில் தடைப்படுகின்றது. அங்கிருந்து அவரை கனடாவுக்கு ஏற்றிச்செல்லவேண்டிய டெல்டா நிறுவனம் மறுத்து விடவே அங்கு அரசியல் அடைக்கலம் கோருகின்றார். இவ்விதம் அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் கோரிய அவர் நியூயார்க் நகரிலுள்ள புரூக்லீன் தடுப்புமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றார்.

அவரது புரூக்லீன் நகரத்துத்தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் முதல் பகுதியான 'அமெரிக்கா' 'டொராண்டோ'விலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியாகிப் பின்னர் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளிவந்தது.

தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட இளங்கோ மேலும் ஒருவருட காலம் நியூயார்க் மாநகரில் சட்டவிரோதக்குடிமகனாக, எந்தவிதக்குடிவரவு ஆவணங்களுமின்றி தன் இருப்புக்காகப் போராடுவதை விபரிக்கும் பகுதியே 'குடிவரவாளன்'. இருபத்தேழு அத்தியாயங்களை உள்ளடக்கிய இப்பகுதி திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது. இப்பகுதி எதிர்காலத்தில் நூலுருப்பெறவுள்ளது.

•Last Updated on ••Saturday•, 06 •June• 2015 05:34•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 93: தொகுப்புகள் பற்றிய சிந்தனைகள்....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

ஒரு நாட்டின் இலக்கியம் பற்றி வெளிவரும் தொகுப்பு நூலானது அந்த நாட்டு இலக்கியத்தின் சரியான குறுக்கு வெட்டாக இருக்க வேண்டும். உதாரணமாக ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி வெளியாகும் தொகுப்பு நூலாக இருப்பின் அத்தொகுப்பு நூலொன்றினை வாசிக்கும்போது ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய சரியான குறுக்கு வெட்டினைப் பிரதிபலிப்பதாக அந்தத் தொகுப்பு நூல் இருக்க வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டிலிருந்து இதுவரையிலான ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை முறையாகப் பிரதிபலிக்கும் வகையில் வெளிவந்த தொகுப்பு நூல்கள் ஏதாவதிருக்கின்றனவா என்று பார்த்தால் பொதுவாக ஏமாற்றமே ஏற்படுகின்றது. செ.யோகநாதனின் சிறுகதைத்தொகுப்பு நூல்கள் , செங்கையாழியானின் பல்வேறு காலகட்டங்களைப் பிரதிபலிக்கும் (சுதந்திரன் சிறுகதைகள், ஈழநாடு சிறுகதைகள், மறுமலர்ச்சிச்சிறுகதைகள் போன்ற) தொகுப்பு நூல்கள் இவ்விதமான சூழலில் வெளிவந்த முக்கியமான தொகுப்புகள். அது போல்  மித்ரவின் 'பனியும் பனையும்', ஞானம் புலம்பெயர் தமிழர்களின் படைப்புகளை உள்ளடக்கிய தொகுப்பு ஆகியவற்றையும் குறிப்பிடலாம்.

•Last Updated on ••Thursday•, 04 •June• 2015 21:31•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 92: டெறிக் த சில்வாவின் 'தொன்மம்' மற்றும் உதய பிரசாந்த மெத்தகமவின் 'முன்னோர்' பற்றி.....

•E-mail• •Print• •PDF•

டெறிக் த சில்வாவின் 'தொன்மம்' மற்றும் உதய பிரசாந்த மெத்தகமவின் 'முன்னோர்' பற்றி.....

இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்குமிடையில் நிலவும் முரண்பாடுகள் அண்மைக்காலத்தில் ஏற்பட்டவையல்ல. இரண்டாயிரம் வருடங்களுக்கும் அதிகமானவை. குடங்கிப் படுத்திருக்கும் சிறுவன் துட்டகெமுனு அதற்குக் காரணமாகக் கூறுவான் " தெற்கில் கடலும், வடக்கில் தமிழரும் இருக்கையில் எவ்விதம் நீட்டி நிமிர்ந்து படுப்பது?" என்று. துட்டகெமுனுவை சிங்கள தேசிய விடுதலை வீரனாகச்சித்திரிக்கும் சிங்கள மக்களின் வரலாற்று நூல்கள் தமிழர்களை எதிரிகளாகவும் சித்திரிக்கும். குழந்தைப் பருவத்திலிருந்தே தமிழர்களைச் சிங்கள மக்களின் எதிரிகளாகச் சித்திரிக்கும் இவ்விதமான வரலாற்று நூல்கள் திருத்தி எழுதப்பட வேண்டியது அவசியம். டெறிக் த சில்வாவின் 'தொன்மம்' என்ற இந்தக் கவிதை அந்த வரலாற்றைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. [இங்குள்ள மொழிபெயர்ப்புக் கவிதைகள் சோ.பத்மநாதனின் 'தென்னிலங்கைக் கவிதை' நூலிலுள்ள மொழிபெயர்ப்புக்கவிதைகளாகும்.]

ஒரு பிள்ளையின் அச்சமாகிய

அந்தகாரத்தில்

பளபளக்கும் வாள்கள் தந்த

அழிவு எவ்வளவு?

ஆறாய் ஓடிய குருதி

எவ்வளவு?

•Last Updated on ••Sunday•, 31 •May• 2015 23:45•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 91: கதைக்குள் ஒரு கவிதை!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

அண்மையில் தமிழினி ஜெயக்குமாரன் 'மழைக்கால இரவு' என்றொரு சிறுகதையினைப் 'பதிவுகள்' இணைய இதழில் எழுதியிருந்தார். இதுவே தமிழினியின் முதலாவது சிறுகதை என்று கருதுகின்றேன். இந்தச்சிறுகதையின் இறுதியில் வரும் வரிகள் அழகானதொரு கவிதையாக அமைந்திருந்தன. 'பசியடங்காத பூதம்' போல் மீண்டும் பயங்கரமாக வாயைப்பிளந்து கொண்டது யுத்தம். உவமையில் வெளிப்படும் நல்லதொரு படிமம் இது. எவ்வளவு பேரைக்கொன்றொழித்தும் யுத்தமென்ற பூதத்தின் பசி அடங்கவில்லை. கண் முன்னால் நிணமும், குருதியும் கடை வாயில் ஒழுகக்காட்சிதரும் பூதமாக யுத்தம் விசுவரூபமெடுத்து நிற்கிறது.

பசியடங்காத பூதம்!

கரு மேகங்கள் சூழ்ந்த வானம்

இருள்மூடிக் கிடந்தது.

நசநச வென்று வெறுக்கும்படியாக

மழை பெய்து கொண்டேயிருந்தது,

இடை வெளியில்லாமல் காது கிழியும்படி

பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன.

நிணமும் குருதியும் கடைவாயில்

வழிய வழிய

பசியடங்காத பூதம்போல மீண்டும்

பயங்கரமாக வாயைப்

பிளந்து கொண்டது

யுத்தம்.

•Last Updated on ••Saturday•, 30 •May• 2015 18:36•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 90: அண்மையில் வாசித்தவை மற்றும் யோசித்தவை பற்றிய குறிப்புகள் சில....

•E-mail• •Print• •PDF•

தேவகாந்தனின் 'கனவுச்சிறை' மகாநாவல் வெளியீடு!

தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவல் வாசித்துக்கொண்டிருக்கின்றேன். நாவலுக்கு சிறந்ததொரு முன்னுரையினை எழுதியிருக்கின்றார் எழுத்தாளர் தேவிபாரதி. ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றினை நன்கு புரிந்துகொண்ட ஒருவராக அவரை இனங்காட்டுகிறது அந்த முன்னுரை. நாவலைப்பற்றிய அவரது திறனாய்வில் நாவலின் நாயகியான ராஜியை மணிமேகலையுடன் ஒப்பிட்டு, மணிபல்லவத்தில் (நயினாதீவில்) நடைபெறும் நாவலைச் சுட்டிக்காட்டியிருப்பது அவரது இலக்கியப்புலமையினைக் காட்டுகிறது. ஈழத்துத்தமிழ் இலக்கியக்களத்திலிருந்து தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் வகையில் வெளிவந்திருக்கிறது 'கனவுச்சிறை' நாவல். அதனை எழுதிய எழுத்தாளர் தேவகாந்தன் பாராட்டுக்குரியவர்.

இந்த நாவல பற்றிய எழுத்தாளர் தேவிபாரதியின் கருத்தொன்றினையும், , நாவலின் இயற்கை வர்ணனையொன்றினையும் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

" ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக்காலகட்டத்தைத் தன் படைப்புக்கான பின்புலமாகக்கொள்ளும்போது அந்தக்காலகட்டத்தின் மிகமுக்கியமான சமூக அரசியல் நிகழ்வுகளைப்பற்றிய பதிவுகள் இடம் பெறுவது ஒரு ஒத்துக்கொள்ளப்பட்ட, வெற்றிகரமான இலக்கியக்கோட்பாடு. வரலாற்றின் வசீகரங்களிலிருந்து வாழ்வின் அர்த்தத்தை அல்லது அர்த்தமின்மையை உருவாக்கியவர்கள் டால்ஸ்டாயும், மீகயில் ஷோலக்காவும் ஹெமிங்வேயும். 'புயலிலே ஒரு தோணி'யை முன்னிட்டு ப.சிங்காரம் இந்தப்பட்டியலில் சேரக்கூடியவர். கல்கி போன்றவர்கள் வரலாற்றின் வசிகரங்களை வணிக உத்தியாகப்பயன்படுத்திக்கொண்டார்கள். போர் அதன் இயல்பிலேயே மனித மனங்களைக்கிளர்ச்சியுறச்செய்வது. அந்தக் கிளர்ச்சியிலிருந்து தப்பிச்செல்வது எழுத்தாளன் முன்னுள்ள சவால். அந்தச் சவாலை எதிர்கொள்வதில் தேவகாந்தன் பெற்றுள்ள வெற்றியே இந்த நாவலை முக்கியமானதாகக்கருதச் செய்வதில் முதன்மையான பங்கு வகிக்கின்றது." (தேவிபாரதியின் முன்னுரையிலிருந்து)

•Last Updated on ••Sunday•, 31 •May• 2015 17:08•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 89: 'தொராண்டோ'வில் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவல் வெளியீடு பற்றி......

•E-mail• •Print• •PDF•

தேவகாந்தனின் 'கனவுச்சிறை' மகாநாவல் வெளியீடு!

-  எழுத்தாளர் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவல் வெளியீடு பற்றிய எனது முகநூல் குறிப்பும், அது பற்றிய எழுத்தாளர் தேவிபாரதியின் கருத்தும் இங்கு ஒரு பதிவுக்காகப் பதிவு செய்யப்படுகிறது. -

பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்டிருந்த தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவல் கடந்த மே 16, 2015 அன்று 'டொராண்டோ'வில் வெளியானது. தேவகாந்தன் திருப்தியும், மன நிறைவும் அடையக்கூடிய விதமாக நூல் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக, நேர்த்தியான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது.

அன்று தவிர்க்க முடியாத காரணங்களினால் சிறிது தாமதமாகவே செல்ல முடிந்தது. நான் சென்றுகொண்டிருந்தபொழுது எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் நாவலைப்பற்றிய தனது உரையினை ஆற்றிக்கொண்டிருந்தார். எழுத்தாளர் அருண்மொழிவர்மன் தனது உரையினை ஏற்கனவே ஆற்றியிருந்திருக்க வேண்டும். ஏனெனில் அதன்பின் அவர் அங்கு உரையாற்றவில்லை.

நிகழ்வினைத்தலைமை தாங்கி சிறப்புறச்செய்தவர் கலாநிதி மைதிலி தயாநிதி.

என்.கே.மகாலிங்கத்தைத்தொடர்ந்து அடிகளார் சந்திரகாந்தன் அவர்கள் தனது உரையினை ஆற்றினார். அவரது உரையினைத்தொடர்ந்து முனைவர் சேரன் நூலினை வெளியீட்டு வைக்க சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் முதற் பிரதியினை வாங்கினார். அவரைத்தொடர்ந்து சிறப்புப் பிரதிகளைக் குறிப்பிட்ட சிலர் வாங்கினார்கள்.

•Last Updated on ••Wednesday•, 20 •May• 2015 19:23•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 88 : நூல் அறிமுகம் - வேலணையூர் தாஸின் 'மழைக்காலக்குறிப்புகள்' பற்றி....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

வேலணையூர் தாஸின் 'மழைக்காலக் குறிப்புக்கள்' நூலினை அண்மையில் பெற்றுக்கொண்டேன். வேலணையூர் தாஸ் 'யாழ் இலக்கியக் குவியம்' அமைப்பின் ஸ்தாபகர். இணைய இதழ்கள், அச்சிதழ்கள் பலவற்றில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. 'யாழ் இலக்கியக் குவியம்' அமைப்பின் அழகிய வெளியீடாக மேற்படி நூல் வெளியாகியிருப்பது திருப்தியைத்தருவது. நூலின் ஆரம்பத்தில் 'பதிவுகள்' இணைய இதழுட்பட தனது படைப்புகள் வெளிவந்த ஊடகங்களுக்கு நன்றியினை நூலாசிரியர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பல,விடயங்களை பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன. யுத்தத்தில் தந்தையை இழந்த, மகனை இழந்த, கணவனைஇழந்த எனப் பல்வேறு இழப்புகளைப் பற்றிக் கவிதைகள் விபரிகின்றன. காதல், மழைக்காலத்து அனுபவங்கள், இழந்த நிலம், அன்னை மீதான அன்பு, மழை அனுபவங்கள் எனக் கவிதைகள் பன்முகத்தன்மை மிக்கவை. கவிதைகளும் சொற் சிக்கனம் மிகுந்தவை, சொற்சிக்கனம் சிறிது தளர்ந்தவை எனப்பன்முகமானவை.

•Last Updated on ••Wednesday•, 20 •May• 2015 05:28•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 87: எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!

•E-mail• •Print• •PDF•

- விரைவில் வெளிவரவிருக்கும் எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' நூலுக்காக எழுதிய அறிமுகக்குறிப்புகள் இங்கு ஒரு பதிவுக்காகப் பிரசுரமாகின்றது. -

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவெடுத்து  இன்று முற்றாக மெளனிக்கப்பட்டுவிட்டது. அகிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம், இலங்கையை ஆண்ட அரசுகளின் இனவாதக்கொள்கைகளாலும், காலத்துக்குக்காலம் தமிழ் மக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளினாலும், அரசுகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இனக்கலவரங்களினாலும் தனிநாட்டுபோராட்டமாக பரிணாமடைந்ததன் விளைவே ஈழ்த்தமிழர்களால் குறிப்பாக இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைக்கான ஆயுதப்போராட்டமாகும். இவ்விதமாகப்பரிணாமடைந்த விடுதலைப்போராட்டமானது மிகவும் குறுகிய காலத்தில் பல்வேறு குழுக்களாக வீங்கி வெடித்ததற்கு முக்கிய காரணி இந்திரா காந்தி தலைமையிலான பாரத அரசாகும். ஆரம்பத்தில் விடுதலைக்காக ஆயுதம் தூக்கியவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிளவுண்டு மோதிக்கொண்டதன் விளைவாக விடுதலைப்புலிகள் பலம்பொருந்திய ஆயுத அமைப்பாக உருவெடுத்தார்கள். இறுதியில் அவர்கள் ஆயுதங்களை மெளனிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் யுத்தத்தில் பலியானார்கள்; காணாமல் போனார்கள். சரண்டைந்த பின் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். மேலும் பலர் கைது செய்யப்ப்பட்டார்கள். பலர் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலையாகியுள்ளார்கள்.  இவ்விதமானதொரு சூழலில் இன்று பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் தமது கடந்த கால அனுபவங்களைப்பதிவு செய்து வருகின்றார்கள். இவ்வகையான பதிவுகள் அபுனைவுகளாக, புனைவுகளாக என வெவ்வேறு வடிவங்களில் வெளிவருவதைக்காணக்கூடியதாகவுள்ளது. இவர்கள் தாம் சேர்ந்திருந்த அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் இயங்கியவர்கள். சிலர் அடிமட்டப்போராளியாக இருந்தார்கள். சிலர் அவ்விதமிருந்து இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களாக மாறியவர்கள். சிலர் மாற்று இயக்கங்களினால் சிறைப்பிடிக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு தப்பியவர்கள்; இன்னும் சிலர் தாம் சார்ந்திருந்த அமைப்புகளில் நிலவிய உள் முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள். இவ்விதமான முன்னாள் போராளிகளின் சுய பரிசோதனைகள் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் என்பதை நிர்ணையிப்பதற்கு இவை போன்ற போராளிகளின் அனுபவங்களை உள்ளடக்கிய நூல்கள் பல வரவேண்டும். இன்றுதான் ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்து விட்டதே இனியும் எதற்கு இவை பற்றி ஆராய வேண்டிய தேவை என்று சிலர்  குதர்க்கக்கேள்வி கேட்கலாம். ஆனால் இத்தகைய அனுபவப்பதிவேடுகளின் முக்கியத்துவம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிலவிய ஈழதமிழர்களின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் பற்றிய ஆவணப்படுத்தலில்தான் தங்கியுள்ளது. இவ்விதமான அனுபவப்பதிவேடுகள்தாம் ஆயுதம் தாங்கிப்போராடிய ஈழத்தமிழர்களின் விடுதலை அமைப்புகள் பற்றிய புரிதல்களை, அவற்றின் ஆக்கபூர்வமான , எதிர்மறையான செயற்பாடுகளை விளக்கி நிற்கும் வரலாற்றின் ஆவணப்பதிவுகள்.

•Last Updated on ••Wednesday•, 06 •May• 2015 20:10•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 86: தமிழினியின் 'போராடப்போன மனது'

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்தமிழினியின் கவிதையொன்று அவரது முகநூலில் வெளியாகியுள்ளது. குறுங்கவிதை. கவிதை இதுதான்:

துளி -01

காலநதிக்கரையில்
எஞ்சிக்கிடக்கிறது
இத்துப்போனவொரு வாழ்க்கை.
இடைவிடாது கொட்டிக்கொண்டிருக்கும்
விசத்தேள்களாக நினைவுகள்
குடைவதால் நெஞ்சினில்
நீங்காத மரணவலி.
"சாகத்தானே போனதுகள்.
சாகாமல் ஏன் வந்ததுகள்."
குறுக்குக்கேள்விகளால்
கூண்டுக்குள்ளேயே
பிணமாகிக்கனக்கிறது
போராடப்போன மனம்.

இதுதான் அந்தக்குறுங்கவிதை. கவிதையென்பது உணர்வின் வெளிப்பாடு. ஆழமனத்தில் குடிகொண்டிருக்கும் வேதனை வார்த்தைகளில் வெளிப்படுகிறது. கவிதையில் உண்மை இருப்பதால் சுடுகிறது. வலி தெரிகிறது. கூடவே மானுடரின் சுயநலமும் தெரிகிறது.  போராடப்புறப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் தம் கடந்த கால அனுபவங்களைப்பல்வேறு வழிகளில் பதிவு செய்து வருகின்றார்கள். தமிழினி இங்கு தன் நிகழ்கால அனுபவத்தைக் கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

•Last Updated on ••Saturday•, 02 •May• 2015 22:10•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 85: ஆனந்த் பிரசாத்தின் 'ஒரு சுயதரிசனம்'

•E-mail• •Print• •PDF•
எழுத்தாளர் ஆனந்த் பிரசாத் கவிதைகள் புனைவதிலும் வல்லவர். இவர் எழுதிய 21 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்று 'ஒரு சுயதரிசனம்' என்னும் பெயரில் 1992இல் கனடாவில் 'காலம்' சஞ்சிகையின் வெளியீடாக வெளிவந்துள்ளது. அக்காலகட்டத்தில் 'காலம்' சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும், 'காலம்' சஞ்சிகை வெளிவருவதற்கு முக்கிய காரணகர்த்தாக்களிலொருவராகவும் இவர் விளங்கியிருப்பதை நூலின் ஆரம்பத்தில் 'காலம்' சஞ்சிகை ஆசிரியர் செல்வம் எழுதிய குறிப்பிலிருந்து அறிய முடிகின்றது.

மேற்படி நூலினை அவர் சமர்ப்பித்துள்ள பாங்கு நினைவிலெப்போதும் நிற்க வைத்துவிடும் தன்மை மிக்கது. நூலுக்கான சமர்ப்பணத்தில் அவர் "அதிருஷ்ட்டங்கள் வந்து நான் அறியாமைக்குள் அமிழ்ந்து போகாது என்னைத்தடுத்தாட்கொண்ட துரதிருஷ்ட்டங்களுக்கு' என்று நூலினைத்தனக்கேற்பட்ட துரதிருஷ்ட்டங்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். நான் அறிந்த வரையில் இவ்விதம் துரதிருஷ்ட்டங்களு நூலொன்றைச் சமர்ப்பணம் செய்த எழுத்தாளரென்றால் அவர் இவராக மட்டுமேயிருப்பாரென்று எண்ணுகின்றேன்.

இக்கவிதைத்தொகுதியிலுள்ள் இவரது கவிதைகள் பல புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வு பற்றிப்பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக 'பொறியியலாளன்',  'அகதி', 'ஒரு சுயதரிசனம்', மற்றும் 'ஒரு Academic இன் ஆதங்கம்'(நூலில் acadamic என்று அச்சுப்பிழையேற்பட்டுள்ளது) ஆகிய கவிதைகளைச்சுட்டிக்காட்டலாம். கவிஞர் கனடாவுக்கு வந்த புதிதில் எழுதப்பட்ட கவிதைகள் என்பதால் அக்காலகட்டத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாகவுமிவற்றைக்கொள்ளலாம்.
•Last Updated on ••Saturday•, 25 •April• 2015 23:11•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 84 : நூல் அறிமுகம் - எழுத்தாளர் ராஜாஜி ராஜகோபாலனின் ' ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்' பற்றிச் சில சிந்தனைகள்.

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்எழுத்தாளர் ராஜாஜி ராஜகோபாலனின் ' ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்' அண்மையில் வாசித்தேன். கவிஞரின் கவிதைகள் ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றி, அதன் விளைவுகள் பற்றி, காதலைப்பற்றி, அதன் இழப்பு பற்றி, சூழற் பாதிப்பைப்பற்றி, புலம் பெயர் தமிழர்களின் வாழ்க்கை பற்றி, ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவும் உணவு மற்றும் போக்குவரத்து போன்றவை பற்றி, பெண் உரிமை பற்றி, தமிழர்களின் மத்தியில் நிலவும் எதிர்மறையான அமசங்கள் பற்றி, வாழ்வுக்கு உதவிடும் ஆரோக்கியமான சிந்தனைகள், உடற் பயிற்சி பற்றி.....  இவ்வாறு பல்வேறு விடயங்களையும் பற்றி எனப்பலவற்றைக் கூறுபொருளாகவெடுத்து விபரிக்கின்றன. கவிஞரின் பலவகைப்பட்ட சிந்தனைகள் வாசிப்புக்கு விருந்தாகின்றன.

தொகுப்பிலுள்ள கவிதைகளில் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் பற்றி, யுத்தத்தின் முடிவின் பின்னரான அவர்களது நிலைமை பற்றிக்கூறும் கவிதைகளாக 'அம்மா மெத்தப் பசிக்கிறதே', 'ஓ தமிழகமே', 'தசாவதாரம்', யாரடியம்மா ராசாவே', போன்றவற்றைக்குறிப்பிடலாம். .'அரசடி வைரவர்' தமிழர்கள் மத்தியில் நிலவும் வைரவ வழிபாடு பற்றி அங்கதச்சுவையுடன் விபரிக்கும்.

•Last Updated on ••Monday•, 20 •April• 2015 18:24•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 83 திறனாய்வு, விமர்சனம் மற்றும் அணிந்துரை பற்றி தெணியான்.

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்'திறனாய்வு என்றால் என்ன?' என்னும் நூலுக்கான அணிந்துரையில் கலாநிதி கா.சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு கூறுவார்: '... இந்த எழுத்துக்கள் பற்றிய சுய மதிப்பீட்டில் இவர் விமர்சனம் திறனாய்வு (Criticism)) என்ற பதத்தைத்தவிர்த்து மதிப்புரை (Review)  என்ற பதத்தினையே பயன்படுத்தி வருகின்றார்...'  இக்கூற்றில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் 'விமர்சனம்', 'திறனாய்வு' ஆகிய பதங்களை ஒரே அர்த்தம் கொண்டவையாகப் பயன்படுத்துகின்றார்.

கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் "திறனாய்வு (தமிழ்) விமர்சனம் (வடமொழி)  ஆகிய இரண்டு பதங்களும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. நமது பழைய தமிழ் நூல்களில் 'விமரிசன்', 'விமரிசனம்' என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  ' என்பார் ['திறனாய்வு என்றால் என்ன'; பக்கம் 27].

எழுத்தாளர் சுபைர் இளங்கீரனும் தனது 'திறனாய்வு' என்னும் கட்டுரையில் திறனாய்வு , விமர்சனம் என்னும் சொற்பதங்களை ஒரே அர்த்தத்தில் மாறி மாறிப்பயன்படுத்துவதை அவதானிக்கலாம் ('நூல்: தேசிய இலக்கியமும், மரப்புப்போராட்டமும்'; பக்கம் 88]. இக்கட்டுரையின் மூல வடிவம் 'புதுமை இலக்கிய மலர் (1962)' தொகுப்பில் வெளியானதென்பதும் குறிப்பிடத்தக்கது.

•Last Updated on ••Thursday•, 16 •April• 2015 21:33•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 82: கனடாத்தமிழ் இலக்கியம் பற்றி....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி அறிய வேண்டுமானால் இதுவரையில் கனடாவில் வெளிவந்த தமிழ்ப்பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள், இணைய இதழ்கள், கையெழுத்துச்சஞ்சிகைகள் போன்றவற்றைப்பற்றிய முழு விபரங்களும் அறியப்பட்டு அவை பற்றி மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். அவ்விதம் செய்யாமல் பொதுவாக அறிந்த விடயங்களை மையமாக வைத்துக் கட்டுரைகள் எழுதுவது உண்மை நிலையினை எடுத்துக்காட்டுவதாக அமையாது. கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி அறிய விரும்புபவர்களுக்குப் 'படிப்பகம்' மற்றும் 'நூலகம்' இணையத்தளங்கள் நல்லதோர் ஆரம்பமாக அமையுமென்பதென் எண்ணம். ஏனெனில் மேற்படி இணையத்தளங்களில் புலம் பெயர்ந்த தமிழர்கள் வெளியிட்ட சஞ்சிகைகள், ஈழத்தில் வெளியான சஞ்சிகைகள் போன்ற பலவற்றை ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்; வருகின்றார்கள். இவை பற்றிய முழுமையான ஆவணக்காப்பகங்களாக மேற்படி தளங்களைக்கூற முடியாவிட்டாலும், இயலுமானவரையில் கிடைத்தவற்றைப் பதிவு செய்திருக்கின்றார்கள். உதாரணமாகக் கனடாவிலிருந்து வெளியான பின்வரும் ஊடகங்களைப்பற்றிய பதிவுகளை 'படிப்பகம்' இணையத்தளத்தில் காணலாம்:

•Last Updated on ••Sunday•, 12 •April• 2015 04:15•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 81: ஜெயகாந்தன் பற்றிய நினைவுகள் சில ..

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 81: ஜெயகாந்தன் பற்றிய நினைவுகள் சில ..அறுபதுகளின் இறுதியில் என்று நினைக்கின்றேன் அப்பொழுதுதான் நான் முதன் முதலாக எழுத்தாளர் ஜெயகாந்தனை அறிந்துகொண்டது. ஆனந்த விகடனில் முத்திரைக்கதைகளாக வெளிவந்த ஜெயகாந்தனின் 'கோகிலா என்ன செய்து விட்டாள்?'. 'ஆடும் நாற்காழிகள் ஆடுகின்றன' போன்ற குறுநாவல்களைப்பற்றி அப்பாவும், அம்மாவும் உரையாடிக்கொண்டிருந்தபோதுதான் அவரது பெயரினை நான் அவ்விதம் அறிந்துகொண்டேன். ஆனால் நான் முதலில் வாசித்த அவரது முதலாவது படைப்பு ராணி முத்து வெளியீடாக வெளிவந்த 'காவல் தெய்வம்' என்ற தொகுப்புத்தான். அந்தத்தொகுப்பில் காவல் தெய்வம் குறுநாவலுடன் அவரது இன்னுமொரு குறுநாவலான 'கருணையினால் அல்ல' குறுநாவலையும் இணைத்து ராணிமுத்து பதிப்பகம் வெளியிட்டிருந்தது. கை விலங்கு என்ற பெயரில் வெளியான அவரது குறுநாவல்தான் காவல் தெய்வம் என்ற பெயரில் ராணிமுத்து பிரசுரமாகவும், திரைப்படமாகவும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவரது இன்னுமோர் ஆரம்பகாலத்து நாவலான 'வாழ்க்கை அழைக்கிறது' நாவலும் ராணி முத்து வெளியீடாக வெளியானது.

இவ்விதமாக ஜெயகாந்தனுடன் எனது பயணம் ஆரம்பமாகியது. அதன் பின்னர் தினமணிக்கதிர் ஜெயகாந்தனின் புகழ்பெற்ற சிறுகதைகள் பலவற்றை மீள்பிரசுரம் செய்தபொழுது அவற்றை வாசித்தேன். 'ஒரு பிடி சோறு', 'மவுண்ட்ரோடு மைக்கல்', 'டிரெடில்', 'பிணக்கு', 'ராசா வந்திட்டாரு' போன்ற சிறுகதைகளைப்படித்தது அப்பொழுதுதான். தினமணிக்கதிரில் தொடராக வெளிவந்து பலத்த வாதப்பிரதிவாதங்களை எழுப்பிய ஜெயகாந்தனின் 'ரிஷி மூலம்' குறுநாவலினையும் மறப்பதற்கில்லை. அக்காலகட்டத்தில் ஆனந்த விகடனில் வெளியான அவரது சிறுகதையான 'ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது' வாசித்தது நினைவிலுள்ளது.

•Last Updated on ••Sunday•, 12 •April• 2015 16:45•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 80 : பொதுவான தலைப்புகளும், தொகுப்புகளும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகளும் பற்றி........

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்இலங்கைத்தமிழ்க்கவிதை வரலாறு, இலங்கைத்தமிழ்க்கவிதை போன்ற தலைப்புகளில் தொகுப்புகளை வெளியிடுவோர் கவனத்துக்கு சில கருத்துக்களைக்கூற விரும்புகின்றேன். இவ்விதமான பொதுவான தலைப்புகளைக்கொடுத்துவிட்டு, இதுவரை கால இலங்கைத்தமிழ்க்கவிதைக்கு வளம் சேர்த்த கவிஞர்களின் கவிதைகள் எதுவுமின்றித்தொகுப்புகளை வெளியிடுவதன் மூலம் நீங்கள் புரியும் முக்கியமான தவறாக நான் கருதுவது எதிர்காலச்சந்ததிக்கு ஈழத்துத்தமிழ்க்கவிதை பற்றிய பிழையான பிம்பத்தினைச்சித்திரிக்கின்றீர்கள் என்பதாகும். அடுத்த தவறாக நான் கருதுவது: எந்தவிதப்பயனையும் எதிர்பாராது தம் வாழ்வினை எழுத்துக்காக அர்ப்பணித்து மறைந்த படைப்பாளிகளின் படைப்புகளை இருட்டடிப்பு செய்வதன் மூலம் அவர்களை அவமதிப்பு செய்கின்றீர்கள் என்பதாகும்.  முக்கியமான காரணங்களிலொன்று: இவ்விதமான தொகுப்புகளுக்காகப் படைப்புகளைச் சேகரிப்பவர்கள் முறையான ஆய்வுகளைச்செய்வதில் ஆர்வமற்று, நூல்களாகக வெளிவந்த கவிஞர்களின் தொகுப்புகளை மட்டுமே கவனத்திலெடுத்து,  தொகுப்புகளை விரைவிலேயே கொண்டுவந்து அத்தொகுப்புகள் மூலம் தம்மை இலக்கியத்தில் நிலைநிறுத்த வேண்டுமென்ற அவாவுடன் செயற்படுவதுதான். ஈழத்துத்தமிழ்க்கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் , விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று பல் துறைகளிலும் நூல்களாக வெளிவராத எத்தனையோ படைப்பாளிகளின் படைப்புகள் சஞ்சிகைகள், பத்திரிகைகள், மலர்கள் என்று பல்வேறு வகைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கை தேசிய சுவடிகள் திணைக்களம் மற்றும் படிப்பகம், நூலகம் போன்ற இணைய நூலகங்கள், வலைப்பூக்கள், இணைய இதழ்கள் என்று பல்வேறு ஊடகங்களில் கூகுள் தேடுபொறி மூலம் சிறிது தேடினாலே உங்களால் பல படைப்புகளை எடுத்துக்கொள்ள முடியும்.

•Last Updated on ••Friday•, 03 •April• 2015 20:03•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 79 : மேலும் சில கருத்துகள்!

•E-mail• •Print• •PDF•

முல்லை அமுதனின் இலக்கியச்செயற்பாடுகளின் முக்கியத்துவம்!

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்எழுத்தாளர் முல்லை அமுதனைப் பலரும் அறிவர். எழுத்தாளர், சஞ்சிகை / இணைய சஞ்சிகை ஆசிரியர் / வெளியீட்டாளர், புத்தகக்கண்காட்சி நடத்துபவர், இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய 'இலக்கியபூக்கள்' தொகுப்புகளைத்தொகுத்து வெளியிட்டவர், எழுத்தாளர் விபரத்திரட்டினை வெளியிட்டவர் இவ்விதம் தமிழ் இலக்கிய உலகில் இவருக்குப் பன்முகங்களுள்ளன. அண்மையில் வெளியான ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப்புலம்பெயர் இலக்கியத்தொகுப்பில் இவரது கவிதை, சிறுகதை மற்றும் மேற்படி தொகுப்புக்காக இளைய அப்துல்லாஹ் (இலண்டன்) கண்ட நேர்காணல் ஆகியன இடம் பெற்றுள்ளன. மேற்படி நேர்காணலில் புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர் இலக்கியம் பற்றி பல தகவல்களைக்காணலாம். அதற்காக இவருக்கு நன்றி. மேற்படி தலைப்பில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதிய பலரின் கட்டுரைகளில் ஆவணப்படுத்தப்படாத பல விடயங்கள் ,  உதாரணமாக இணைய இதழ்கள் பற்றிய விபரங்கள் ,இவரது பதில்கள் முலம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனக்கு ஆச்சரியம் தந்த விடயங்களிலொன்று. 1987இல் நான் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கொண்டுவந்த கையெழுத்துச்சஞ்சிகையான 'குரல் பற்றியும் மறக்காமல் இவர் தன் பதிலில் குறிப்பிட்டிருந்ததுதான். 'குரலு'க்காய்க் குரல் கொடுத்த ஒருவர் இவர் ஒருவராகத்தானிருக்க முடியும். :-)  அத்தகவலை ஆவணப்படுத்தியதற்காக நண்பருக்கு நன்றி.

•Last Updated on ••Saturday•, 10 •October• 2015 07:05•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 78: ஈழத்துப் புலம்பெயர் இலக்கியத்தின் முதல் தமிழ் நாவலெது? 'வித்தியாசப்படும் வித்தியாசங்களா? அல்லது மண்ணின் குரலா'?

•E-mail• •Print• •PDF•

1_manninkural_original59.jpg - 35.02 Kbமண்ணின் குரல் (நாவல் தொகுப்பு)ஞானம் புலம்பெயர் இலக்கியத்தொகுப்பின்  'ஈழத்துப்புலம்பெயர் இலக்கியம்' என்னும் முன்னுரையில் ஞானம் இதழின் பிரதம ஆசிரியரான ஞானசேகரன் புலம்பெயர் தேசத்தின் முதலாவது நாவ;ல் பற்றிப்பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

"புலம்பெயர் தேசத்திலிருந்து வெளிவந்த முதலாவது நாவல் என்ற வகையில் 1987இல் வெளிவந்த பார்த்திபனின் 'வித்தியாசப்படும் வித்தியாசங்கள்'  என்ற நாவல் அமைகிறது."

ஆனால் பார்த்திபனின் நாவல் 4.1.1987ற்கு முன்னர் வெளிவந்திருந்தால் மட்டுமே மேற்படி கூற்று பொருந்தும். ஏனெனில் 4.1.1987 அன்று 'டொராண்டோ', கனடாவில் 'மண்ணின் குரல்' என்னும் என்ற எனது நாவலொன்று றிப்ளக்ஸ் அச்சகத்தால் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. மேற்படி 'மண்ணின் குரல்' நாவல் 1984/1985 காலகட்டத்தில் மான்ரியால், கனடாவிலிருந்து வெளிவந்த 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் தொடராக 9 அத்தியாயங்கள் வரையில் வெளிவந்து. பின்னர் இறுதி அத்தியாயமான பத்தாவது அத்தியாயம் சேர்க்கப்பட்டு, நூலாக வெளிவந்தது. நூலாக வெளிவந்தபொழுது 'புரட்சிப்பாதை'யில் வெளியான கட்டுரைகள் இரண்டு, கவிதைகள் 8 ஆகியவற்றினையும் உள்ளடக்கி, ஒரு சிறு தொகுப்பாக வெளிவந்தது. [1998இல் தமிழகத்தில் குமரன் பப்ளீஷர்ஸ் வெளியீடாக மண்ணின் குரல் என்றொரு எனது நான்கு நாவல்களை உள்ளடக்கிய தொகுப்பொன்று வெளிவந்துள்ளது. அது வேறு ; இது வேறு. ஆனால் இந்த மண்ணின் குரல் நாவலானது அத்தொகுப்பிலும் உள்ளது.] மேற்படி 'மண்ணின் குரல்' நூலுக்கான அட்டைப்படத்தை கட்டடக்கலைஞர் பாலேந்திரா வரைந்திருந்தார். அதனையே இங்கு இடது பக்கத்தில் முதலாவதாகக் காண்கின்றீர்கள் (தமிழகத்தில் வெளியான மண்ணின் குரல் தொகுப்புக்கு இதே அட்டைப்படத்தையே அடிப்படையாகக்கொண்டு, வேறு ஓவியரொருவரால் வரையப்பட்ட ஓவியத்தைக் குமரன் பப்ளிஷர்ஸ் பயன்படுத்தியிருந்தது. அதனை இரண்டாவதாகக்காண்கின்றீர்கள்.)

•Last Updated on ••Tuesday•, 24 •March• 2015 00:14•• •Read more...•
 

'வாசிப்பும், யோசிப்பும் 77: டொராண்டோ'வில் நடைபெற்ற ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப்புலம்பெயர் இலக்கியச்சிறப்பிதழ் வெளியீட்டு விழா பற்றிய சிறு குறிப்பு!

•E-mail• •Print• •PDF•

ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் ஞானம் சஞ்சிகையின் 'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்' சிறப்பிதழ் அறிமுக விழாஇன்று ஞானம் தனது 175 இதழாக வெளியிட்டிருந்த சிறப்பு இதழான 'ஈழத்துப்புலம் பெயர் இலக்கியச் சிறப்பிதழின் வெளியீட்டு விழா 'டொராண்டோ'வில் நடைபெற்றது. கனடாத்தமிழ்ச்சங்க ஆதரவில் வைத்திய கலாநிதி லம்போதரனுக்குச்சொந்தமான 'டொராண்டோ' தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில். எழுத்தாளர் அகில் தொடக்கவுரையினையும், வைத்திய கலாநிதி இ.லம்போதரன் தலைமையுரையினையும் ஆற்ற அறிமுக உரையினைப் பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன் ஆற்றினார். அதன்பின்னர் நூல் நிகழ்வுக்கு வந்திருந்தோருக்கு விற்பனைக்கு விடப்பட்டது. தொடர்ந்த நிகழ்வில் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரையினையும், இறுதியாக நன்றியுரையினை எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திராவும் ஆற்றினார்கள். நிகழ்வில் கலாநிதி சுப்பிரமணியன் அவர்கள் நீண்டதொரு , சிந்தனையைத்தூண்டும் உரையினை ஆற்றியதும் குறிப்பிடத்தக்கது. அதிலவர் புலம்பெயர் தமிழர்களின் இலக்கியத்தில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரையில் கருப்பொருளாக அமைந்த பொருளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி  விரிவாக  அவற்றைப்பிரிவுகளாக்கி எடுத்துரைத்தார். ஆரம்பத்தில் வெளியான படைப்புகள் தாயகமண் பற்றிய கழிவிரக்கமாக அமைந்திருந்தன; அதன் பின்னர் ஈழம் மற்றும் புகலிடச்சூழல்களை உள்வாங்கியவையாக விளங்கின; அதன் பின்னர் புகலிடத்தில் காலூன்றியவர்கள், புகலிடத்தில் தம் தாயகத்தில் நிலவிய பண்பாட்டுச்சூழலை மீண்டும் உருவாக்க முனைவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அதே சமயம் பெண்ணியம், சாதியம் போன்றவை புலம்பெயர் இலக்கியத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் எத்தகையன என்பதுபற்றியும் அவரது உரை ஆராய்திட முற்பட்டது. இவ்விதமாகத்தனது நீண்ட உரையினை ஆற்றிய கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் இறுதியில் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பற்றி எழுத்தாளர்களான  தேவகாந்தன் , ஜெயமோகன் ஆகியோர் முறையே 2000ஆம் ஆண்டிலும், 2010இலும் தெரிவித்த கருத்துகளையும் குறிப்பிட்டார். அத்துடன் அவர் எஸ்.பொ/ இந்திரா பார்த்தசாரதியால் தொகுத்து வெளியிடப்பட்ட 'பனியும், பனையும்' சிறுகதைத்தொகுப்பு பற்றியும் குறிப்பிட்டார். அத்தொகுப்பில் படைப்புகள் வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்று அன்றே குறிப்பிடப்பட்டிருந்ததை எடுத்துரைத்து, இன்று மீண்டும் அவ்விதமான பிரிவுகளை நோக்கித்தான் எமது புலம்பெயர் இலக்கியமும் சென்று கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

•Last Updated on ••Sunday•, 22 •March• 2015 05:40•• •Read more...•
 

தமிழ்க்கவிதைகளில் 'நகரம்'

•E-mail• •Print• •PDF•

தமிழ்க்கவிதைகளில் 'நகரம்' - வ.ந.கிரிதரன் -தமிழ்க்கவிதைகள் சங்ககாலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு விடயங்களைப்பற்றி விபரித்திருக்கின்றன. சங்காலக்கவிதைகள் , காப்பியங்கள் பல அக்காலகட்டத்து நகர்களைப்பற்றிய  தகவல்கள் பலவற்றைத்தருகின்றன. குறிப்பாக சிலப்பதிகாரம் அக்காலகட்டத்தில் புகழ்மிக்க கோநகர்களாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம், மதுரை மற்றும் வஞ்சி பற்றி, அந்நகர்களில்  வாழ்ந்த மக்கள் பற்றி, அவர்கள் ஆற்றிய பல்வேறு தொழில்கள் பற்றியெல்லாம் விரிவாகவே தகவல்களைத்தருகின்றது. அக்கால நகரங்களின் நகர வடிவமைப்பு பற்றி, வாழ்ந்த மக்கள்  புரிந்த தொழில்கள் பற்றி, நடைபெற்ற விழாக்கள் பற்றி, பிற நாடுகளுடன் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகள் பற்றி.. என்று பல்வேறு வகைப்பட்ட தகவல்களை அவற்றின் மூலம்  அறிந்துகொள்ளலாம். இதனைப்போல் அண்மைக்காலத் தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளில் நகரம் கூறு பொருளாக அமைந்துள்ளதா என்று சிறிது சிந்தனையையோட்டியதன் விளைவுதான்  இக்கட்டுரை. இதுவொரு விரிவான ஆய்வல்ல. எதிர்காலத்தில் மேலும் பல படைப்புகளை ஆராய்ந்து  காலத்துக்குக்காலம் விரிவுபடுததப்படுத்தக்கூடியதொரு ஆரம்பக்கட்டுரையே.

இக்கட்டுரைக்காக ஆராய்ந்த  கவிஞர்களின் கவிதைகள் நகரங்களைப்பற்றி விபரிக்கையில் அங்கு வாழ்ந்த பல்வகைப்பட்ட மக்களைப்பற்றி, சமூக வாழ்க்கை முறைபற்றி, நகரங்கள் சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்பு பற்றி,  நகரங்களில் நிலவிய சமூக வாழ்வின் இயல்பினால் மனிதர்களின் உளவியலில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி, அங்கு நிலவிய வர்க்கங்கள் மானுட வாழ்விலேற்படுத்தும் பாதிப்புகள் பற்றி,  நகரச்சூழல் ஏற்படுத்தும் உடல் உபாதைகள் பற்றி, மானுட சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நகரத்தில் ஏற்படுத்திய போர்ப்பாதிப்புகளைப்பற்றி.... எனப்பல்வேறு விடயங்களை  வெளிப்படுத்தி நிற்கின்றன. இவற்றை எடுத்துக்கொண்ட படைப்புகளினூடு இனங்காணுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

•Last Updated on ••Tuesday•, 17 •March• 2015 23:49•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 76 : பூங்குழழி வீரனின் 'இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை' என்னும் 'வல்லின'ச்சஞ்சிகைக்கட்டுரை பற்றிச்சில குறிப்புகள்....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 76 : பூங்குழழி வீரனின் 'இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை' என்னும் 'வல்லின'ச்சஞ்சிகைக்கட்டுரை பற்றிச்சில குறிப்புகள்....'இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை' என்னும் தலைப்பில் பூங்குழழி வீரன் என்பவரால் 'வல்லினம்.காம்' இணையச்சஞ்சிகையில் கட்டுரையொன்று எழுதப்பட்டுள்ளது.

கட்டுரையில் "1943-இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட மறுமலர்ச்சிச் சங்கமும் அவர்களால் வெளியிடப்பட்ட ‘மறுமலர்ச்சி’ சஞ்சிகையும் இலங்கையில் நவீன கவிதை முயற்சிக்கான களத்தினைத் திறந்து விட்டிருந்தது. இதன் விளைவாக மஹாகவி, முருகையன், சில்லையூர் செல்வராசன், நாவற்குழியூர் நடராசன், அ.ந.கந்தசாமி போன்ற பலர் நவீன கவிதை முயற்சிகளில் இறங்கினர்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"பாவலர் துரையப்பாப் பிள்ளை, சுவாமி விபுலாநந்தர், புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை, பேராசிரியர் க.கணபதிப் பிள்ளை, அழக.சுந்தரதேசிகர் போன்ற பல கவிஞர்கள் இவ்வாறு மரபுக்கும் புதுமைக்கும் இடையிலான ஊடாட்டத்தினைக் கொண்டிருந்த நிலையில், நீலாவாணன், மஹாகவி, முருகையன் போன்றோரும் முதன்மை பெறுகின்றார்கள்." என்றூ குறிப்பிடப்பட்டுள்ளது.

•Last Updated on ••Thursday•, 26 •February• 2015 00:11•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 75 கருணாகரனின் 'இலங்கையின் தமிழ் இலக்கியம்' பற்றிச்சில குறிப்புகள்.....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 75  கருணாகரனின் 'இலங்கையின் தமிழ் இலக்கியம்' பற்றிச்சில குறிப்புகள்.....அண்மையில் 'வல்லினம்' இணையத்தளத்தில் கருணாகரனின் ' இலங்கையின் தமிழ் இலக்கியம்' என்ற கட்டுரையினை வாசித்தேன். கட்டுரையின் ஓரிடத்தில் கட்டுரையாளர் 'மணிக்கொடியில் புதுமைப்பித்தனைப்போல மறுமலர்ச்சியில் அ.செ.மு இருந்தார். புதுமைப்பித்தன் எழுத்தின் உச்சத்தைத் தொட்டார். அ.செ.மு பத்திரிகையாளராகவே தன்னை நிறுத்திக்கொண்டார். இதனால் தன்னை முழுமையாக இலக்கிய எழுத்தில் ஈடுபடுத்திக்கொள்வதற்கே அ.செ..முவினால் முடியாமற் போய்விட்டது. மறுமலர்ச்சி முக்கியமான பல படைப்பாளிகளை உருவாக்கியது' என்று குறிப்பிடுவது ஆச்சரியத்தைத்தருகின்றது. அக்கூற்று அ.செ.மு பற்றிய போதிய ஆய்வின்றி கூறப்பட்ட கூற்றாகவே எனக்குத்தென்படுகின்றது.

அ.செ.மு புனைகதையில் சாதனை புரிந்தவர். அவரது சிறுகதைகள் முக்கியமானவை. அவரது படைப்புகள் பல இன்னும் நூலுருப்பெறவில்லையென்பதற்காக அவரது பங்களிப்பை மறந்துவிடவோ அல்லது மறைத்து விடவோ முடியாது. ஒரு படைப்பாளியின் படைப்புகளின் எண்ணிகையை மட்டும் வைத்து அவரது சாதனையையோ அல்லது பங்களிப்பினையோ மதிப்பிடுவதில்லை. அ.செ.மு பத்திரிகையாளராக இருந்த அதே சமயம் ஈழத்தமிழ் இலக்கியத்தின் புனைகதைத்துறையிலும் காத்திரமாகக் கால் பதித்தவர். அவரது சிறுகதைத்தொகுதியான 'மனித மாடு' (யாழ் இலக்கியக் கலாச்சாரபேரவையினால் வெளியிடப்பட்டது) நூலுக்கு விடுதலைப்புலிகளின் கலைப்பண்பாட்டுக்கழகத்தினர் பணமுடிப்பு வழங்கிக்கெளரவித்ததாக அவர்கள் வெளியிட்ட எரிமலை சஞ்சிகையில்  வாசித்திருக்கின்றேன்.

•Last Updated on ••Thursday•, 19 •February• 2015 19:32•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 74 : அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல் கிடைத்த கதை. அ.ந.க.வின் படைப்புகளை வைத்திருப்போர் தொடர்புகொள்ளவும்.

•E-mail• •Print• •PDF•

தொடர் நாவல்: மனக்கண்அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகளில் இதுவரையில் வெற்றியின் இரகசியங்கள் (உளவியல் நூல்; தமிழகத்தில் பாரி பதிப்பாக வெளிவந்தது.), மதமாற்றம் (நாடகம்) தேசிய கலை இலக்கியப் பேரவையினால் வெளியிடப்பட்டது. ஏனைய படைப்புகள் இதுவரையில் நூலுருப்பெறவில்லை. மொழிபெயர்ப்பு நாவலான நாநா, குழந்தைகளுக்கான நாவல் 'சங்கீதப் பிசாசு', தினகரனில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பினைப்பெற்ற 'மனக்கண்' நாவல், அவரது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனக்குறிப்புகள் என அனைத்தும் நூலுருப்பெற வேண்டியது அவசியம்,

அ.ந.க.வின் படைப்புகளைப்பெறுவதற்காக இலங்கையிலுள்ள எழுத்தாளர்கள் பலருடன் தொடர்புகொண்டேன். உழைப்புக்கேற்ற ஊதியம் தருவதாகவும் குறிப்பிட்டேன். எதுவுமே சரிவரவில்லை.

பின்னர் அமரர் சில்லையூர் செல்வராஜனின் துணைவியார் திருமதி கமலினி செல்வராஜனுடன் தொடர்புகொண்டபோது அவர் தன்னிடம் நாவலின் பிரதி இருப்பதாகவும், தொடர்புகொள்ளும்படியும் கூறியிருந்தார். அவ்விதமே தொடர்புகொண்டபோது அவர் அப்பிரதிக்கு வைத்த விலை அக்காலகட்டத்தில் என்னால் கொடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. மீண்டும் தொடர்புகொண்டபோது அவர் தன்னிடமிருந்த பிரதியைக் கிழக்கு மாகாணப்பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்துக்குக் கொடுத்து விட்டதாகக் கூறினார். அதன் பின்னர் அப்பிரதியைப் பல வழிகளில் தேடியும் கிடைக்கவில்லை.

•Last Updated on ••Wednesday•, 18 •February• 2015 23:53•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 73 குமரன் பொன்னுத்துரையின் 'நான் நடந்து வந்த பாதை': ஒரு நிகழ்வும் சில நினைவுகளும்....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 73 குமரன் பொன்னுத்துரையின் 'நான் நடந்து வந்த பாதை': ஒரு நிகழ்வும் சில நினைவுகளும்....பெப்ருவரி 8 அன்று,  டொரான்டோவில் தமிழர் வகைதுறை வளநிலைய (தேடகம்) ஏற்பாட்டில் நடந்த தோழர் குமரன் பொன்னுத்துரையின் 'நான் நடந்து வந்த பாதை' நூல்  வெளியீடும், கலந்துரையாடலும் நடைபெற்றன. நிகழ்வில் பலரைக் காண முடிந்தது. குமரன், சேணா உட்படப்பல தேடக நண்பர்கள், பரதன் நவரத்தினம், 'ஜான் மாஸ்டர்', எஸ்.கே.விக்னேஸ்வரன், சுவிஸ் முரளி மற்றும் முகநூல் நண்பர்கள் எனப் பலரைக்காண முடிந்தது.  குமரன் பொன்னுத்துரை அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் ஆரம்ப காலகட்டத்திலிருந்து இயங்கி, ஒதுங்கியவர்களில் ஒருவர். கழகத்தின் முக்கிய பொறுப்புகள் பலவற்றில் இருந்ததுடன், கழகத்தின் மத்திய குழு உறுப்பினர்களிலொருவராகவும் விளங்கியவர். தனது மறைவுக்கு முன்னர் அவர் எழுதி வைத்த அனுபவக்குறிப்புகளை அவரது குடும்பத்தினர் குறிப்புகளை அப்படியே (எந்தவித எழுத்துப்பிழைகள் / இலக்கணப்பிழைகளைத்திருத்தாமல்) வெளியிட்டிருக்கின்றார்கள். தன்னைச்சுற்றிய எந்தவித 'நாயக'க்கட்டமைப்புமின்றி, உள்ளது உள்ளபடி, தன் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அதன் மூலம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஒரு காலகட்டத்து வரலாற்றினைத் தன் பார்வையில் பதிவு செய்துள்ளார்.

•Last Updated on ••Monday•, 16 •February• 2015 01:51•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 72: பதினொரு பேய்கள் - அ.முத்துலிங்கம் (காலச்சுவடு இதழில் வெளியான சிறுகதை)

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 72: பதினொரு பேய்கள் - அ.முத்துலிங்கம் (காலச்சுவடு இதழில் வெளியான சிறுகதை)ஜெயமோகன் வழியை முத்துலிங்கமும் பின்பற்றுகின்றார் போல் தெரிகிறது. உடனடியாகத் தன்னைப்பற்றிப் பலர் கதைக்க வேண்டுமென்றால் மிகவும் பிரச்சினையான ஒரு கருத்தை அவர் கூறுவார். உடனே அது தீ பற்றியெரியும். விகடனில் எம்ஜிஆர்/சிவாஜி பற்றி அவர் எழுதியதை உதாரணத்துக்குக் கூறலாம். அ.மு.வும் அந்த வழியைப் பின்பற்றி 'பதினொரு பேய்கள்' கதையை எழுதினாரோ தெரியவில்லை. ஈழவிடுதலைப் போராட்ட அமைப்பொன்றான 'ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அமைப்பினை இவ்வளவு தூரம் கொச்சைப்படுத்தி எழுதியிருப்பதை அவர் தனது கருத்துச்சுதந்திரம் என்று கூறலாம். ஆம், அது அவரது கருத்துச்சுதந்திரம். .  தகவல்களைத்திரித்து, பிழையான தகவல்களை, ஊகங்களை மையமாகக்கொண்டு, விடுதலைக்குப் போராடிய அமைப்பொன்றினைச் சிறுமைப்படுத்தி, ( போராடிய அமைப்புகள்  யாவும் மனித உரிமை மீறல்கள் பலவற்றைப் புரிந்துள்ளன. அவற்றில் ஏதாவதொன்றினை மையமாக வைத்து அவர் இக்கதையினை எழுதியிருந்தால் அது வரவேற்கப்பட்டிருக்கும்)புனைவென்ற பெயரில் இவ்விதம் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தி எழுதியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதென் கருத்து. இதனைக்கூறுவது எனது கருத்துச்சுதந்திரம். பதினொரு பேய்கள் சிறுகதையைப் படிக்க: http://www.kalachuvadu.com/issue-181/page86.asp

•Last Updated on ••Monday•, 16 •February• 2015 01:52•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 71: எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் முடிவு! / குப்பிழான் ஐ.சண்முகத்தின் 'தலை மன்னார் ரெயில்'

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - 71:  எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் முடிவு! / குப்பிழான் ஐ.சண்முகத்தின் 'தலை மன்னார் ரெயில்'[ வாசித்தவை, யோசித்தவை, வாசித்து யோசித்தவை எனப்பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியது இந்த 'வாசிப்பும், யோசிப்பும்' பகுதி. - பதிவுகள். ]

எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் முடிவு!

எனக்குப் பொதுவாக எழுத்தாளர்கள், கலைஞர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு, சுயசரிதை நூல்கள் ஆகியவற்றை வாசிப்பது பிடிக்கும். அவற்றில் அவர்களின் பல்வேறுபட்ட ஆளுமை இயல்புகள், வாழ்க்கைப் போராட்டங்கள், அவற்றை அவர்கள் எதிர்கொண்ட விதங்கள் எனப் பல்வேறு பட்ட விடயங்களை அறிந்து கொள்ள முடியுமென்பது முக்கிய காரணம். அண்மையில் இவ்விதமான பல்வேறு ஆளுமைகள் பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் 'இவர்கள் இருந்தார்கள்' என்னும் , நற்றிணை பதிப்பாக வெளிவந்த நூலினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.  அதில் எழுத்தாளர் சு. சமுத்திரம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்த தகவலொன்று நெஞ்சினை ஓங்கி அறைந்தது. அது:

"..சென்னையில் ஒருசாலை விபத்தில் சிக்கிய சமுத்திரம் சாலையில் நெடுநேரம் நினைவிழந்து ரத்தம் பெருகக்கிடந்திருக்கின்றார். அவரை அருகே இருந்த ஆஸ்பத்திரியில் கொண்டெ சென்று சேர்த்திருக்கின்றார்கள். அவர் யாரென்று தெரியவில்லை என்பதனால் அவரிடம் கட்டணம் வசூலிக்க முடியாது என எண்ணி அவசியமான அறுவைச் சிகிச்சை செய்யாமல் இரண்டரை மணி நேரம் சும்மாவே ஒரு கட்டிலில் போட்டிருக்கின்றார்கள். உறவினர்கள் வந்து பார்க்கும்போது அவர் இறந்திருந்தார்."

•Last Updated on ••Friday•, 06 •February• 2015 00:48•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 70: சிறிலங்காவின் அரசியல் மாற்றம் பற்றிய சிந்தனைகள்...

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 70: \சிறிலங்காவின் அரசியல் மாற்றம் பற்றிய சிந்தனைகள்...

[ வாசித்தவை, யோசித்தவை, வாசித்து யோசித்தவை எனப்பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியது இந்த 'வாசிப்பும், யோசிப்பும்' பகுதி. - பதிவுகள். ]

அன்று ரணில் பிரதமராக இருந்தபோது ஏற்பட்ட 'சமாதானப் பேச்சு வார்த்தைகள்' அன்று நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதியாக விளங்கிய சந்திரிகா குமாரதுங்க அம்மையாரால் நிறைவேற்ற முடியாமல் செய்யப்பட்டது. இன்று ஆட்சி மாறி மீண்டும் பிரதமராக ரணில்....  சந்திரிகா குமாரதுங்கவோ எந்தவித அதிகாரங்களுமற்ற முன்னாள் ஜனாதிபதி. ஆனால் அவர் ரணிலுடன் கூட்டுச்சேர்ந்திருக்கின்றார். அன்று சமாதான உடன்படிக்கையைச் சீர்குலைத்து மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்கட்டிலில் ஏற வழி வகுத்த அவர். இன்று மகிந்தாவைப் பதவியை விட்டே ஓட வியூகம வகுத்து வெற்றியும் அடைந்திருக்கின்றார்.  இன்று ஜனாதிபதியாக எதிர்கட்சியின் தலைவரான மைத்திரிபால சிரிசேன. இருக்கிறார்.

அன்று ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை சீர்குலைந்ததால் ஏற்பட்ட விளைவு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் வந்து முடிந்தது. அத்துடன் விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களையும் மெளனிக்க வைத்தது.

•Last Updated on ••Wednesday•, 21 •January• 2015 01:05•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 69 : முருகனின் 'மாதொருபாகன்' பற்றிச் சில குறிப்புகள்....

•E-mail• •Print• •PDF•

I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it. - Voltaire

வாசிப்பும், யோசிப்பும் 69 : முருகனின் 'மாதொருபாகன்' பற்றிச் சில குறிப்புகள்....பெருமாள் முருகனின் கருத்துகளை நாம் ஏற்கலாம் அல்லது ஏற்காமலிருக்கலாம். ஆனால் அவரது கருத்துகளைத் தர்க்கரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர அவரது எழுத்தின்மேல் வன்முறையினைப் பிரயோகிக்க யாரையும் தூண்டக்கூடாது. அவரது கருத்துகளைக்கூறும் அவரது அடிப்படை உரிமையினை மதிக்கும் அதே சமயம், அவரது கருத்துகளைத் தர்க்க ரீதியாக எதிர்வு கொள்ளும், அமைதியான வழிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாற்றுக்கருத்தாளர்களினது உரிமையினையும் மதிப்போம். கருத்தை கருத்துரீதியாக எதிர்கொள்ளாமல், எழுத்தாளர் ஒருவரின்மேல் வன்முறையினைப் பிரயோகிப்பது அல்லது தூண்டிவிடுவது, அனைவராலும் எதிர்க்கப்பட வேண்டியது. தர்க்கரீதியாக படைப்புகளை அணுகுங்கள்; உணர்ச்சிவெறியூடாக ஒருபோதுமே அணுகாதீர்கள். எழுத்தாளர் ஒருவரின் படைப்புச் சுதந்திரம் முக்கியமானது' மதிக்கப்பட வேண்டியது. அதே சமயம் எழுத்தாளரொருவர் இவ்விதமான எதிர்ப்புகளைக் கண்டு தளர்ந்து விடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

•Last Updated on ••Friday•, 23 •January• 2015 23:46•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 68: One flew over the cuckoo's nest. குயிற் கூட்டின் மேலால் பறந்த ஒன்றா? அல்லது குயிற் கூட்டின் மேலால் ஒரு பறப்பா?

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 66:  கடல்புத்திரனின் 'வெகுண்ட உள்ளங்கள்' தவிர்க்க  முடியாததோர் ஆவணப்பதிவு!னடாவிலிருந்து வெளியாகும் 'உரையாடல்' சஞ்சிகையில் கையெழுத்து என்றொரு கட்டுரையினை அ.இரவி எழுதியிருக்கின்றார். அதிலவர் குறிப்பிட்டிருந்த விடயமொன்று என் கவனத்தைக் கவர்ந்தது. ஜாக் நிக்கல்சனின் நடிப்பில் வெளிவந்து மிகுந்த பாராட்டினையும், ஐந்து ஆஸ்கார் விருதுகளையும் வென்ற ஆங்கிலத்திரைப்படமான One flew over the cuckoo's nest திரைப்படம் பற்றிய , மல்லிகை சஞ்சிகையில் வெளிவந்த தனது விமரிசனத்தில் திறனாய்வாளர் ஏ.ஜே. கனகரத்தினா One flew over the cuckoo's nest என்பதை குயிற் கூட்டின் மேலால் பறந்த ஒன்று என்று மொழிபெயர்ப்பு செய்திருந்ததாகவும், ஆனால் 'சரிநிகர்' பத்திரிகையில் தான் எழுதிய கட்டுரையில் குயிற் கூட்டின் மேலால் பறந்த ஒன்று என்பதைக் குயிற் கூட்டின் மேலால் ஒரு பறப்பு என்று திருத்தி வெளியிட்டிருந்ததாகவும், இதில் எது சரி என்பதை நீங்கள் விவாதித்துக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

என்னைப்பொறுத்தவரையில் குயிற் கூட்டின் மேலால் பறந்த ஒன்று என்பதே சரியென்று கருதுகின்றேன். குயிற் கூட்டின் மேலால் ஒரு பறப்பு என்பது பறப்பு பற்றியதொரு பொதுவான கருத்தாகக் கருதப்படும். ஆனால் குயிற் கூட்டின் மேலால் பறந்த ஒன்று என்பது குயிற் கூட்டின் மேலால் பறந்த ஒன்று என்பது பற்றியது என்னும் கருத்தினைத்தருவதால் அதுவே பொருத்தமாக எனக்குத் தென்படுகிறது. இதுவே திரைக்கதைக்கும் பொருந்துகிறது. திரைப்படத்தில் அவ்விதம் குயிற்கூட்டின் மேலாகப் பறந்த ஒருவராக ஜாக் நிக்கல்சன் வருகின்றார்.

•Last Updated on ••Thursday•, 18 •December• 2014 00:52•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 67: எஸ்.பொ எழுதிய கடிதமொன்று....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 67: எஸ்.பொ எழுதிய கடிதமொன்று....2000ஆம் ஆண்டில் மதிப்புக்குரிய எஸ்.பொ. அவர்கள் உலகப் பயணமொன்றினை ஆரம்பித்து டொராண்டோ வந்திருந்தார். வருவதற்கு முன்னர்  என் முகவரிக்குக் கடிதமொன்றினை எழுதியிருந்தார். நான் அதுவரையில் எஸ்.பொ. அவர்களை நேரில் சந்தித்ததில்லை. அவரது படைப்புகள்வாயிலாகவே எனது அவருடனான அறிமுகமிருந்தது. அக்கடிதமானது அவரது பெருந்தன்மையினையும், இளம் எழுத்தாளர்களைச் சந்திக்க அவர் கொண்டிருந்த விருப்பினையும் புலப்படுத்தியது. இதனால் அவர் மீதான மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. இதற்கு முன்னர் அவரும், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியும் இணைந்து வெளியிட்டிருந்த 'பனியும் பனையும்' தொகுப்பு நூலில் எனது சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' சிறுகதையினையும் சேர்த்திருந்தார். அவ்விதம் அவர் அந்தச்சிறுகதையினை அத்தொகுப்பில் உள்ளடக்கியிருந்த விடயம் எனக்கு அந்த நூல் வெளிவந்து பல வருடங்களுக்குப் பின்னரே தெரிய வந்தது. அச்சிறுகதை அத்தொகுப்பில் வெளிவந்ததற்குக் காரணகர்த்தாக்கள் எஸ்.பொ.வும், இந்திரா பார்த்தசாரதியுமே என்று நினைக்கின்றேன். அத்தொகுப்பு மூலம் எஸ்.பொ. புலம் பெயர் தமிழர்களின் இலக்கியத்துக்கு மிகப்பெரிய, ஆக்கபூர்வமான பங்களிப்பினை  ஆற்றியிருக்கின்றாரென்பதே என் கருத்து.

•Last Updated on ••Friday•, 28 •November• 2014 20:15•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 66: கடல்புத்திரனின் 'வெகுண்ட உள்ளங்கள்' தவிர்க்க முடியாததோர் ஆவணப்பதிவு!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 66:  கடல்புத்திரனின் 'வெகுண்ட உள்ளங்கள்' தவிர்க்க  முடியாததோர் ஆவணப்பதிவு!புலம்பெயர் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் பாலமுரளிக்கும் (கடல்புத்திரன்) ஓரிடமுண்டு.  இவரது சிறுகதைகள் சில  கனடாவில் வெளிவந்த 'தாயகம்' சஞ்சிகை / பத்திரிகையில் வெளிவந்திருக்கின்றன. அத்துடன் அவரது சிறு நாவல்களான 'வேலிகள்' மற்றும் 'வெகுண்ட உள்ளங்கள்' ஆகியனவும் 'தாயக'த்தில் தொடராக வெளிவந்தன. இவையனைத்தையும் பின்னர் ஒரு தொகுப்பாக மங்கை பதிப்பகம் (கனடா) தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் மூலம் , அவர்களுக்குத் தமிழகத்தில் விற்பனை உரிமையினைக் கொடுத்து வெளியிட்டது. இவரது சிறுகதைகள் பல 'பதிவுகள்' இணையத்தளத்தில் வெளிவந்துள்ளன.  'சிறுகதைகள்.காம்' இணையத்தளத்திலும் இவரது சிறுகதைகள் சில பிரசுரமாகியுள்ளன. எனது இந்தப் பதிவு கடல்புத்திரனின் 'வேலிகள்' தொகுப்பிலுள்ள நாவல்களிலொன்றான 'வெகுண்ட உள்ளங்கள்' பற்றியது. ஈழத்துத் தமிழ் அரசியல் நாவல்களென்றால் நிச்சயம் இந்த நாவலும் குறிப்பிடப்பட வேண்டியது அவசியமென்று கருதுகின்றேன்.

•Last Updated on ••Wednesday•, 26 •November• 2014 18:06•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 65: அ.முத்துலிங்கத்தின் 'கோப்பைகள்' சிறுகதை பற்றிச் சில வார்த்தைகள்.

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 65:  அ.முத்துலிங்கத்தின் 'கோப்பைகள்' சிறுகதை பற்றிச் சில வார்த்தைகள்.வெகுசன பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்காகத் தொடர்ச்சியாக எழுதும் நிர்ப்பந்தத்திலுள்ள எழுத்தாளர்கள் பலர் தம் எழுத்துகளில் அடிக்கடி தவறுகள் பலவற்றை இழைத்து விடுகின்றார்கள். வாசகர்களைக் கவர வேண்டுமென்ற நோக்கில் இவர்கள் வார்த்தை ஜாலங்களைப் புரியும்போது, தம்மையறியாமலேயே இழைத்துவிடும் இவ்வகையான தவறுகள் படைப்பொன்றில் பல இருப்பின் அப்படைப்பின் தரம் தாழ்ந்துபோய் விடும் அபாயமிருப்பதைப் புரிந்துகொண்டால், எழுதும் ஒவ்வொரு வார்த்தைகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்து எழுதினால், இவ்வகையான தவறுகளுக்கு இடமில்லை. அண்மையில் விகடன் தீபாவளி மலரில் வெளியான எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் 'கோப்பைகள்' சிறுகதையினை வாசித்தபோது இவ்வகையான எண்ணங்கள் ஏற்பட்டன.

ஒரு புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழ் அகதி ஒருவனைப் பற்றிய கதையிது. நெல்லியடி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் அவன். அவனைப் பற்றிய அறிமுகத்தில் இவ்வாறு கூறப்பட்டிருக்கின்றது:

•Last Updated on ••Monday•, 17 •November• 2014 22:33•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 64: என்னைக் கவர்ந்த ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்'.

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 64: என்னைக் கவர்ந்த ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்'.ஜெகசிற்பியன்எனது மாணவப் பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களிலொருவர் ஜெகசிற்பியன். அவரது சரித்திரக் கதைகளில் 'நந்திவர்மன் காதலி', 'பத்தினிக்கோட்டம்' ஆகியவை எனக்கு அக்காலகட்டத்தில் பிடித்த நாவல்கள். சமூக நாவல்களைப் பொறுத்தவரையில் கல்கியில் தொடராக வெளிவந்த 'கிளிஞ்சல் கோபுரம்', 'ஜீவகீதம்' ஆகியவை மிகவும் பிடித்திருந்தன. நா.பார்த்தசாரதி, அகிலன் போன்ற வெகுசனப் படைப்புகளை வழங்கிய பலரின் படைப்புகளை அக்காலகட்டத்தில் பிடித்திருந்தாலும், தற்போது வாசிக்கும்போது அன்று என்னைக் கவர்ந்ததைப்போல் இன்று பெரிதாகக் கவர்வதில்லை. ஆனால் ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்' நாவலை அண்மையில் வாசித்தபொழுது அன்று என்னைக் கவர்ந்ததுபோல் இன்றும் என்னைக் கவர்ந்திருந்தது எனக்கே ஆச்சரியத்தைத் தந்தது. இதற்குக் காரணமென்னவாகவிருக்குமெனச் சிறிது சிந்தித்துப் பார்த்தேன். ஜெகசிற்பியனின் படைப்புகள் இன்றும் என்னைக் கவர்வதற்கு முக்கிய காரணங்களாக அவரது நாட்டுப்பற்று மிக்க, சமுதாயப் பிரக்ஞை மிக்க எழுத்து , பாத்திரப்படைப்பு, படைப்பினூடு அவர் தெரிவிக்கும் கருத்துகள் மற்றும் வர்ணனைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாமென்று நினைக்கின்றேன்.

•Last Updated on ••Tuesday•, 18 •November• 2014 17:45•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 63: எம்.வி.வி'யின் 'வேள்வித் தீ' பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 63: எம்.வி.வி'யின் 'வேள்வித் தீ' பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்....எம்.வி.வெங்கட்ராம்அண்மையில் எம்.வி.வெங்கட்ராமின் 'வேள்வித் தீ' வாசித்தேன். காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ள நாவலிது. மணிக்கொடி எழுத்தாளரான எம்.வி.வெங்கட்ராம் தமிழ் இலக்கிய உலகின் முக்கிய படைப்பாளிகளிலொருவர். எம்.வி.வெங்கட்ராம் அப்பாவுக்குப் பிடித்த எழுத்தாளர்களிலொருவர். எழுபதுகளில் ஆனந்த விகடனில் மாத நாவலென்றொரு தொடர் வெளிவந்துகொண்டிருந்தது.  அதில் பல எழுத்தாளர்களின் மாத நாவல்கள் தொடராக வெளிவந்தன. நான்கு அல்லது ஐந்து அத்தியாயங்களில் முடியும் தொடர்களவை. அம்மாத நாவல்களிலொன்றினை எம்.வி.வெங்கட்ராம் எழுதியிருந்ததாக நினைவு. அத்தொடர் கோபுலுவின் ஓவியங்களுடன் வந்ததாகவும் நினைவு. அம்மாத நாவலின் பெயர் 'தேவி மகாத்மியம்' என்றிருந்ததாகவும் ஞாபகம். அந்நாவலினை அப்பா விரும்பி வாசித்ததாகவும் ஞாபகம். ஆனால் நான் அந்நாவலை வாசித்ததாக ஞாபகமில்லை என்றுமொரு ஞாபகம். அவ்விதம்தான் எனக்கு எம்.வி.வெ'யின் அறிமுகம் ஏற்பட்டதாகவும் ஞாபகம். அண்மையில் எம்.வி.வெ'யின் 'வேள்வித்தீ' நாவலை வாசித்தபொழுது எம்.வி.வெ பற்றிய , ஆழ்மனதில் ஆழ்ந்து கிடந்த மேற்படி ஞாபகப்பறவைகளெல்லாம் மெல்ல மெல்லச் சிறகடித்து மன வானில் பறக்க ஆரம்பித்தன.

•Last Updated on ••Friday•, 14 •November• 2014 12:04•• •Read more...•
 

நனவிடை தோய்தல்: யாழ் இந்துக்கல்லூரி - சில நினைவுகள்.......

•E-mail• •Print• •PDF•

kalaiyarasi595.jpg - 14.84 Kb - யாழ் இந்துக்கல்லூரிச் சங்கம் (கனடா) வருடந்தோறும் நடாத்தும் கலைவிழாவான கலையரசி 2014 நிகழ்வினையொட்டி வெளியான மலருக்காக எழுதிய கட்டுரை. ஒரு பதிவுக்காக இங்கே. -

ஒவ்வொருவருக்கும் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானதும், இனிமையானதுமான பருவம். எத்தனை வருடங்கள் சென்றாலும், மனதில் பசுமையாக இருக்கும் மாணவப்பருவமும், படித்த பாடசாலைகளும் எப்பொழுதுமே அழியாத கோலங்களாக நெஞ்சில் இருப்பவை. பாடசாலையில் மாணவர்கள் கல்வி மட்டும் கற்பதில்லை. கல்வியுடன் விளையாட்டு, வாழ்வின் சவால்களை எதிர்த்து நடைபோடும் ஆளுமையினையும் கூடவே பெறுகின்றார்கள். இதற்கு முக்கியமானவர்கள் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள். என்னைப் பொறுத்தவரையில் என் கல்வி எட்டாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் செல்வது வரை யாழ் இந்துக் கல்லூரியிலேயே கழிந்தது. எப்பொழுதும் நெஞ்சில் உவகையினை ஏற்படுத்தும் யாழ் இந்துக் கல்லூரிக் காலம் பற்றி என் சிந்தையிலெழும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதே இப்பதிவின் நோக்கம்.

•Last Updated on ••Saturday•, 11 •October• 2014 17:38•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 62: கனடாத் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் புத்தகக்கடை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 62: கனடாத் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் புத்தகக்கடை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி....கனடாத் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் புத்தகக்கடை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி....'டொராண்டோ'வில் 300,000ற்கும் அதிகமான தமிழர்கள் இருக்கிறார்கள். அரங்கேற்றங்கள், நூல் வெளியீடுகள், விருதுகள் வழங்கும் விழாக்கள் என்று ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுகின்றன. என்ன பயன்? டொராண்டோவிலுள்ள நூலகக் கிளைகளுக்கு இங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வாங்கும் வசதிகள் இல்லை. தமிழகத்திலுள்ளதைப்போல் இங்குள்ள நூலகக் கிளைகளுக்கு இங்கு வாழும் எழுத்தாளர்கள் வெளியிடும் நூல்களை வாங்கும் வசதி செய்யப்பட்டால் , அதன் மூலம் எழுத்தாளர்கள் தங்களது நூல்களைத் தொடர்ந்தும் வெளியிடும் நிலை ஏற்படுமல்லவா.  இது போல் மார்க்கம் நகரிலும் நூலகக் கிளைகள் பல உள்ளன. அங்கும் கனடாத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அந்நூலகக் கிளைகளுக்கு விற்பதற்கு வழி வகைகள் செய்தால் எவ்வளவு நன்மையாகவிருக்கும். ஏன் இதனை இங்குள்ள நூலகங்கள் செய்யவில்லை. பிரச்சினை இதுதான்: இங்குள்ள நூலகங்கள் நூல் வாங்குவதற்குப் பொறுப்பான தமிழ் பேசும் அதிகாரிகளை நம்பியுள்ளன. இவர்கள்தான் இந்த விடயத்தைப நூலகங்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும். ஆனால் இவர்கள் செய்கிறார்களில்லை. ஏன்? அவ்வப்போது இங்குள்ளவர்களின் ஓரிரு புத்தகங்களை வாங்குவதோடு சரி.

•Last Updated on ••Tuesday•, 07 •October• 2014 01:17•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 61: பல்லவராயன் கட்டில் ஒரு பொழுது....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 61: பல்லவராயன் கட்டில் ஒரு பொழுது....'பொல' 'பொல'வென்று பொழுது விடியும் சமயம்.. 'மாசிப்பனி மூசிப்பெய்துகொண்டிருக்கும். புலரும் பொழுதினை வரவேற்றுப்பாடுபவவை .. சேவல்களா? இல்லை.. பின்.. மயில்கள்தாம். மயில்கள் அகவிக் காலையினை வரவேற்கும் பாங்கினை 'முழங்கா'விலில்தான் காணலாம். முழங்காவில் என்றதும் ஞாபகம் வருபவை.. முழங்காவிற் சந்திக்கோவில், தேநீர்க்கடை, குழாய்க்கிணறுகள், பெண்கள் குடியேற்றத்திட்டம்... இவைதாம். இவை எண்பதுகளின் ஆரம்பகாலகட்டத்து நினைவுகள். மன்னார்ப்பகுதிக்கும் சங்குப்பிட்டிக்கும் இடையில் அமைந்துள்ள முழங்காவிற் கிராமத்தின் முதற் பஸ் தரிப்பிடம் 'பல்லவராயன் கட்டு' என்று அழைக்கப்படும் பகுதியிலுள்ளது.

என் நண்பனொருவன் 'சிறீ' (மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் தொழில்நுட்பத்துறையில் படித்திக்கொண்டிருந்வன்) குழாய்க்கிணறுத்திட்டத்தில் பயிற்சிக்காகச்  சேர்ந்திருந்த சமயம், அவனது அழைப்பின்பேரில் அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வூர் மக்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிட்டியது. அச்சந்திப்புகளின்போது அறிந்த சில தகவல்களை பகிர்ந்துகொள்வதுதான் இப்பதிவின் நோக்கம். அத்துடன் நனவிடைதோய்தலும் இதனுள் அடக்கம்.

•Last Updated on ••Wednesday•, 01 •October• 2014 22:44•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 60 - : கனடாத் தமிழ் இலக்கியம்: 'ழகரம்' சஞ்சிகை.

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 60 - : கனடாத் தமிழ் இலக்கியம்: 'ழகரம்' சஞ்சிகை.வாசிப்பும், யோசிப்பும் 60 - : கனடாத் தமிழ் இலக்கியம்: 'ழகரம்' சஞ்சிகை.கனடாத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் 'ழகரம்' சஞ்சிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு.  ஆனி 1997, ஆடி 1997, ஆவணி/புரட்டாதி 1997 & ஐப்பசி 1997 என நான்கு இதழ்களே வெளிவந்துள்ள போதிலும், தவிர்க்க முடியாத சஞ்சிகை. 'ழகரம்' சஞ்சிகையினை எழுத்தாளர் அ.கந்தசாமி அவர்களே வெளியிட்டு வந்ததாக நான் கருதுகின்றேன். எழுத்தாளர் அ.கந்தசாமி எழுபதுகளில் யாழ் நகரில் புகழ்பெற்ற பெளதிக ஆசிரியராக விளங்கியவர். கனடா வந்த பிறகுதான் இவரது இலக்கியப் பங்களிப்பு பற்றி அறிந்து கொண்டேன். 'ழகரம்' சஞ்சிகை 4 இதழ்களே வெளிவந்தாலும், கனடாத்தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளிலொன்று. கவிதைகள், தொடர்கதைகள் கனடாவில் வெளிவந்த சஞ்சிகைகள், பத்திரிகைகளில் தொண்ணூறுகளில் எழுதியிருக்கின்றார். இந்தப்பதிவின் நோக்கம் கனடாத் தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்த பத்திரிகைகள், சஞ்சிகைகளை பற்றிய விபரங்களை ஆவணப்படுத்துவதுதான். குழு மனப்பான்மையுடன் பலர் செயற்படுவதால், பலரது ஆக்கபூர்வமான பங்களிப்புகள் பற்றிய விபரங்களும் மறைக்கப்பட்டு விடுகின்றன. இவ்விதமான சஞ்சிகைகள், பத்திரிகைகள் பலவற்றில் எழுதியவர்களே மேற்படி சஞ்சிகைகள், பத்திரிகைகள் பற்றி எழுதுதில்லை; பேசுவதில்லை. இந்நிலை ஆரோக்கியமானதொன்றல்ல.

•Last Updated on ••Wednesday•, 17 •September• 2014 17:26•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 59 : மேலும் சில முகநூற் குறிப்புகள்!

•E-mail• •Print• •PDF•

எனக்குப் பிடித்த நாவல்களில் சில.

வாசிப்பும், யோசிப்பும் : மேலும் சில முகநூற் குறிப்புகள்!இது ஒரு தர அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலல்ல. நான் வாசித்த படைப்புகளில் என் மனதில் முதலில் தோன்றிய படைப்புகளிவை. இங்குள்ள படைப்புகள் அனைத்துமே எனக்கு மிகவும் பிடித்தவை.

1. டால்ஸ்டாய் - புத்துயிர்ப்பு
2. தத்தயேவ்ஸ்கி - குற்றமும், தண்டனையும்
3. அதீன் பந்த்யோபாத்யாய - நீலகண்ட பறவையைத் தேடி..
4. தி.ஜானகிராமன் - மோகமுள்
5. எம்.டி.வாசுதேவன் நாயர் -  காலம்
6. ஹெமிங்வே - கடலும், கிழவனும்

•Last Updated on ••Saturday•, 13 •September• 2014 00:10•• •Read more...•
 

வாசிப்பும் யோசிப்பும் 58: கனடாத் தமிழ் இலக்கியமும் 'குரல்' கையெழுத்துச் சஞ்சிகையின் பங்களிப்பும்.

•E-mail• •Print• •PDF•

kural_issues.jpg - 65.78 Kbகனடாத் தமிழ் இலக்கியமென்றால் 'தாயகம்', 'காலம்', 'தேடல்', 'ரோஜா', 'பொதிகை' போன்ற சஞ்சிகைகளும், 'பதிவுகள்' இணைய இதழும், 'தாய் வீடு', 'ஈழநாடு', 'சுதந்திரன்', 'வைகறை' போன்ற இலவசப்பத்திரிகைகளும், எழுத்தாளர்கள், அமைப்புகளினால் வெளியிடப்பட்ட நூல்களும் ஞாபகத்துக்கு வரும். அவை பற்றிய போதிய பதிவுகள் ஏற்கனவே பல்வேறு ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரையில் எங்கும் பதிவு செய்யப்படாத (பதிவுகள் இணைய இதழ் தவிர்ந்த) ஒரு சஞ்சிகை பற்றிய பதிவு இது. அது ஒரு கையெழுத்துச் சஞ்சிகை. செப்டெம்பர் 1987 தொடக்கம் ஜனவரி 1989 வரையில் 11 இதழ்கள் வெளியான சஞ்சிகை. (செப்டெம்பர் 1987 தொடக்கம்  ஆகஸ்ட் 1988 வரை 10 இதழ்களும், பின்னர் ஜனவரி 1989 இல் இன்னுமொரு இதழும் மொத்தம் 11) வெளியான 'குரல்' கையெழுத்துச் சஞ்சிகையினை நான் ஆசிரியராக இருந்து வெளியிட்டேன். 'குரல்' கையெழுத்துச் சஞ்சிகையின் ஒவ்வொரு இதழும் 100 பிரதிகள் எடுக்கப்பட்டு, 'டொராண்டோ'விலுள்ள தமிழ் வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் விநியோகிக்கப்பட்டன. வெளியான 11 இதழ்களில் இதழ் 9, இதழ் 10 ஆகியன கூட்டு முயற்சியாக வெளிவந்தன. 'குரல்' கையெழுத்துச் சஞ்சிகையினை வாசித்த, எழுத்து மற்றும் வாசிப்பு ஆர்வம் கொண்ட இளைஞர்கள் சிலர் (சுகுமார், குலம், ஜெயராஜ், கீதானந்த சிவம்) தாங்களும் சேர்ந்து 'குரல்' சஞ்சிகையினை வெளியிட ஒத்துழைப்பதாகக் கூறி அவ்விரு இதழ்களையும் வெளிக்கொணர ஒத்துழைப்பு நல்கினர். அந்த இரு இதழ்களும் வடிவமைப்பில் ஏனைய இதழ்களை விடச் சிறிது சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவர்களின் ஒத்துழைப்பே. 'குரல்' கையெழுத்துச்சஞ்சிகையின்  இறுதி இதழ் ஜனவரி 1989 வெளியான இதழ் 11. 'குரல்' கையெழுத்துச் சஞ்சிகை , கையெழுத்துச் சஞ்சிகை என்பதால், இலக்கிய ஆர்வம் காரணமாக வெளியிடப்பட்ட சஞ்சிகை.

•Last Updated on ••Sunday•, 16 •July• 2017 21:12•• •Read more...•
 

தொடர் நாவல்: 1983

•E-mail• •Print• •PDF•

தொடர் நாவல்: 1983  - தாயகம் (கனடா)வில் தொண்ணூறுகளில் தொடர்நாவலாகப் பிரசுரிக்கப்பட்ட எனது நாவலான 1983 தாயகம் சஞ்சிகை நின்று விடவே இடையில் எட்டு அத்தியாயங்களுடன் நின்று போனது. வெளிவந்த அத்தியாயங்களின் விபரங்கள் வருமாறு:  அத்தியாயம் ஒன்று,  அத்தியாயம் இரண்டு,  அத்தியாயம் மூன்று,  அத்தியாயம் நான்கு.,  அத்தியாயம் ஐந்து: பிரச்சினைக்குரிய தீர்வு?,  அத்தியாயம் ஆறு: நடைமுறையும், தத்துவமும்,  அத்தியாயம் ஏழு: போரும், மனிதனும் , சூழலும்.,  அத்தியாயம் எட்டு: அகதி முகாம். இந்த நாவல் 1983 கறுப்பு 'ஜுலை'க் கலவர நிகழ்வுகளைப் பதிவு செய்யும் நோக்கத்திற்காக எழுதப்பட்டது; முற்றுப்பெறவில்லை. ஒரு பதிவுக்காக வெளியான எட்டு அத்தியாயங்களும் மீள்பிரசுரமாகின்றன. இந்த நாவலினை மீண்டும் எழுதுவதற்கான நோக்கமெதுவும் தற்போதில்லை என்பதால் இந்தப் பதிவு முக்கியமானது. - வ.ந.கி -

அத்தியாயம் ஒன்று!

வாழ்க்கை சில வேளைகளில் சலிப்புற்றுப் போய்விடுகின்றது. இனம் புரியாத சோர்வும், தளர்வும் உடல் முழுக்கப் பரவிவிடுகின்றன. ஏனென்று  புரியாததொரு ஏக்கம் , எதற்காக  இந்தப் பிறப்பு? , பிறப்பின அர்த்தமென்ன? என்பன போன்ற விடை தெரியாக்கேள்விகளால் நெஞ்சு நிறைந்து விடுகின்றது.  சிறு கிரகம். சிறு தீவு. இதற்குள் ஒரு வாழ்க்கை. பிறகேனிவ்விதம் மோதலும், இரத்தக்களரியும்... ஆனந்தமாக அனுபவிக்க வேண்டிய பொழுதுகளைச் சிதைத்துச் சீரழிக்கின்றோம். ஏன்? இனம், மதம், மொழி போன்ற விடயங்களில் மனிதர்கள் இன்னமும் மந்தைக் கூட்டம் போன்றுதான் செயற்படுகின்றார்கள். ஆறாவது அறிவைப் பாவிக்க விடாமல் உணர்வுகள் தடுத்து விடுகின்றன. சரி, பிழை எல்லாம் தெரிந்துதானிருக்கின்றது. ஆனாலும் அவற்றை உணர்ந்து வாழ முடிவதில்லை. அண்மைக்காலமாகவே மீண்டும் தமிழ் மக்கள் மீதான் ஆட்சியாளர்களின் அடாவடித்தனங்கள் தொடரத்தொடங்கி விட்டன. காந்தியம் போன்ற அமைப்புகள் தடை செய்யப்பட்டுத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். ஆங்காங்கே படையினரால், காடையினரால் அப்பாவிகள் மீதான தாக்குதல்கள் தொடரத்தொடங்கி விட்டன. குடும்பத்தவரை நினைத்தால்தான் கவலையாகவுள்ளது. என்னையே நம்பிக் கனவுகளுடனிருக்கின்றார்கள். எத்தனை வருடங்கள் எங்களிற்காக அம்மா மாடாய் உழைத்திருப்பா. ஒரே மகனையும் கொழும்புக்கு வேலைக்கு அனுப்பிவிட்டு நாடிருந்த நிலையில், குமருகளுடன் கிராமத்தில் தவித்துக்கொண்டிருக்கும் அந்த உள்ளத்தை நினைத்தால்தான் கவலையாகவுள்ளது.  கணவனையிழந்த நிலையில் , தன்னந்தனியாக, எவ்வளவு நெஞ்சுரத்துடன் எங்களை வளர்த்து வந்திருக்கின்றா. அந்தக் கருணைக்கு நாங்கள் எவ்விதம் கைம்மாறு செய்யப்போகின்றோம்? இதற்கிடையில் மல்லிகா வேறு. இவள் என்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களில் ஒருத்தி.  சிங்களப் பெண்.  கள்ளங்கபடமற்ற அவள் சொல்லும், செயலும் , நெஞ்சும் என்னை ஏனோ தெரியவில்லை ஈர்க்கத்தான் செய்து விடுகின்றன.  இவள் விடயத்தில் நான் என்னை மிகுந்த சிரமப்பட்டுத்தான் அடக்க வேண்டியிருக்கின்றது.  வாழ்க்கையைத் தொலை நோக்குடன் சிந்திப்பவன் நான். அதிலும் அதிகமாக சமுதாயப் பிரக்ஞையென்று சொல்லுகின்றார்களே அதில் கொஞ்சமும் என்னிடமுமிருப்பதாகக் கருதுபவன்.  நாடிருக்கும் நிலையில் எப்படியெப்படியெல்லாம் என் வாழ்க்கை சுழன்றடிக்கப்போகின்றதோ தெரியவில்லை. இந்த நிலையில் இவளை என்னுடன் இணைத்துப்பார்க்கவே முடியாமலிருக்கின்றது. யதார்த்தத்தில் சாத்தியமாகக் கூடிய விடயமாகவும் தெரியவில்லை.

•Last Updated on ••Monday•, 08 •September• 2014 16:39•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 57: மேலும் சில முகநூற் குறிப்புகள்!

•E-mail• •Print• •PDF•

கனடாத் தமிழ் இலக்கிய வரலாற்றில் 'தாயகம்' சஞ்சிகையின் பங்களிப்பு.

வாசிப்பும், யோசிப்பும் 57: மேலும் சில முகநூற் குறிப்புகள்!கனடாத் தமிழ் இலக்கியத்துக்குத் 'தாயகம்' சஞ்சிகை ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது. ஐந்து வருடங்கள் வரையில் 200ற்கும் அதிகமான இதழ்கள் வெளியாகியது மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரின் படைப்புகளையும் தாங்கி வெளியான சஞ்சிகை / பத்திரிகை அது. மாத்தளை சோமு , பேராசிரியர் சிவசேகரம், கலா மோகன் (பல படைப்புகள்: ஜெயந்தீசன் என்னும் பெயரில் எழுதிய குட்டிக்கதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் போன்ற), தி. உமாகாந்தன்,  செல்வம் (இவரது 'கிழுவை மரச் சிலுவை' என்னும் நாடகம் தாயகத்தில் தொடராக வெளிவந்தது), ரதன், ஆனந்தபிரசாத் ('ஆடலுடன், பாடலைக்கேட்டு' தொடர்), வ.ந.கிரிதரன் (பல படைப்புகள்: சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடர் கட்டுரைகள் ஆகியன), கவிஞர் கந்தவனம் (இவரது 'மணிக்கவிகள்' தாயகம் சஞ்சிகையில்தான் முதலில் வெளியாகின), ஜி.மொனிக்கா (இவரது பல சிறுகதைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன), நேசமித்திரனின் பல படைப்புகள், சின்னத்தம்பி வேலாயுதத்தின் 'ஈழம் ஒரு தொடர்கதை'த் தொடர்) கனடா மூர்த்தி 'முனி' என்னும் பெயரில் அளித்த சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பதில்கள் , ஜோர்ஜ் குருஷேவ்வின் 'சிறுகதைகள்' .. என பலரின் படைப்புகளைத் தாங்கி வெளிவந்த பத்திரிகை / சஞ்சிகை 'தாயகம்'. 'தாயகம்' பத்திரிகை. சஞ்சிகையினைத் தவிர்த்துக் கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிக் கதைக்க முடியாது. இங்கு குறிப்பிட்டவர்களைப் போல் இன்னும் பலர் 'தாயக'த்துக்குப் பங்களிப்பு செய்துள்ளார்கள். அதன் மூலம் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார்கள். 'தாயகம்' சஞ்சிகை பற்றிய விரிவான ஆய்வொன்றின் அவசியம் (கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு அது ஆற்றிய பங்களிப்பு பற்றி) தவிர்க்க முடியாது. 'படிப்பகம்' இணையத்தளத்தில் 'தாயகம்' சஞ்சிகையில் சுமார் 50 வரையிலான இதழ்களுள்ளன. 'தாயகம்' சஞ்சிகை தனது அரசியல் கருத்துகளைப் படைப்பாளிகளின் மேல் ஒருபோதுமே திணித்ததில்லை. அதனால்தான் பல்வேறு அரசியல் கருத்துள்ளவர்களின் படைப்புகளை பலவற்றைத் தாங்கி அதனால் வெளிவர முடிந்திருக்கின்றது. ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து , மிக அதிகமான இதழ்களை வெளியிட்ட இலக்கியச் சஞ்சிகை / பத்திரிகை அது.

•Last Updated on ••Wednesday•, 03 •September• 2014 20:50•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 56 :விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை'!

•E-mail• •Print• •PDF•

- வாசித்தவை, யோசித்தவை, வாசித்து யோசித்தவை எனப்பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியது இந்த 'வாசிப்பும், யோசிப்பும்' பகுதி. -

வாசிப்பும், யோசிப்பும் 56 :விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை'!அண்மையில் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. உயிர்மை வெளியீடாக வெளிவந்துள்ள நாவல் அண்மைக்காலத்தில் வெளியான தமிழ் நாவல்களில் முக்கியமான, கவனிக்கப்பட வேண்டிய நாவல்களிலொன்று. மொழியில் எந்தவிதப் புதுமையுமில்லை. தமிழக வெகுசனப் பத்திரிகைகளை வாசிக்கும் வாசகர் ஒருவருக்கு நன்கு பழகிய மொழிதான். இந்த நாவல் முக்கியத்துவம் பெறுவது இது கூறும் பொருளினால்தான். அப்படி எதனைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது? சுருக்கமாகக் கூறப்போனால் உலகமயமாதலுக்குத் தன்னைத் திறந்து விடும் வளர்ந்து வரும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடொன்றில் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சூழல்களில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை விமர்சிக்கும் நாவலிதுவென்று கூறலாம். இத்தருணத்தில் கறுப்பு 'ஜூலை' 1983யினைத் தொடர்ந்து, உலகின் நானா பக்கங்களையும் நோக்கி, அகதிகளாகக்ப் படையெடுத்த ஈழத்தமிழர்களைப் பற்றி சில விடயங்களை எண்ணிப்பார்ப்பது 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் கூறும் பொருளைப்பொறுத்தவரையில் முக்கியமானது; பயன்மிக்கது.

•Last Updated on ••Saturday•, 30 •August• 2014 20:05•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 55 - : முகநூற் குறிப்புகள் சில!

•E-mail• •Print• •PDF•

- வாசித்தவை, யோசித்தவை, வாசித்து யோசித்தவை எனப்பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியது இந்த 'வாசிப்பும், யோசிப்பும்' பகுதி. -

யாழ் இந்துக்கல்லூரி: புண்ணயலிங்கம் 'மாஸ்டர்'!

வாசிப்பும், யோசிப்பும் 54: சீனத்துப் பைங்கிளி கூறிய இலக்கணம்!

நான் யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற காலகட்டத்தில் அங்கு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த இலக்கிய ஜாம்பவான்கள் பலர் ஆசிரியர்களாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். சொக்கன், தேவன் (யாழ்ப்பாணம்) ஆகியோரைக் குறிப்பிடலாம். பண்டிதர் கணபதிப்பிள்ளை என்பவரும் அவ்வப்போது தமிழப்பத்திரிகைகளில் இலக்கியக் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்ததாக ஞாபகம். ஆனால் இவர்கள் யாரிடமும் எனக்குக் கல்வி கற்கச் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதில்லை. ஆனால் இவர்களில் தேவன் (யாழ்ப்பாணம்) அவர்களின் 'மணிபல்லவம்' என்னிடம் இருந்தது.  ஆங்கில 'கிளாஸி'க்குகளிலொன்றான 'ரொபேர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன்' எழுதிய 'புதையல் தீவு' (Treasure Island) நாவலின் தமிழாக்கமது. சுவையாக மொழிபெயர்ப்பு இருந்ததாக ஞாபகம். ஏனெனில் அச்சமயம் 'மணிபல்லவம்' நாவலை விரும்பி வாசித்திருக்கிறேன்.

யாழ் இந்துக் கல்லூரி என்றதும் எனக்கு நினைவில் வரும் ஆசிரியர்களிலொருவர் புண்ணியலிங்கம் 'மாஸ்டர்'. இணுவில் பக்கமிருந்து வந்தவரென்று ஞாபகம். உயரமான ஆகிருதி. சிரித்த  முகமும், சந்தனப்பொட்டுமாகக் காட்சியளிப்பார். அவர் சிரிக்கும்போது வாயெல்லாம் பற்கள் தெரியும். விகடன் 'கார்ட்டூன்'களில் வருபவர்கள் சிரிப்பதுதான் ஞாபகத்துக்கு வரும். அவர் எங்களுக்கு ஒன்பதாம் வகுப்பில் பெளதிகவியல் பாடம் எடுத்தவர். அந்த ஒரு வருடம்தான் அவரிடம் நான் பாடம் எடுத்திருக்கின்றேன். ஆனால் அவர் மறக்க முடியாத ஆசிரியர்களிலொருவராக என் நினைவில் பதிந்து விட்டதற்குக் காரணம் அவர் பாடங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறைதான். அவர் கற்பிக்கும்போது கற்பிக்கும் விடயங்களை நடைமுறையில் செய்து காட்டிக் கற்பிப்பதில் விருப்பமுள்ளவர்.

•Last Updated on ••Thursday•, 11 •September• 2014 21:32•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 54: சீனத்துப் பைங்கிளி கூறிய இலக்கணம்!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 54: சீனத்துப் பைங்கிளி கூறிய இலக்கணம்!

'டொராண்டோ' போன்ற பல் கலாச்சார மக்கள் வாழும் நகரங்களில் வசிப்பதால் ஏற்படும் நன்மைகளிலொன்று: உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் பழகுவதற்கு, அவர்களைப் பற்றி அறிவதற்குச் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதாகும். பல்வேறு நாட்டு மக்களின் உணவு வகைகளை ருசிப்பதற்குச் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதாகும். எல்லாவற்றிலும் மேலாக இப்பூவுலகு பற்றிய சிந்தனை முதிர்ச்சி ஏற்படுவதாகும். இத்தாலியர்கள் சிறிது ஆச்சரியம் அடையும்போது 'மம்மா மியா' என்பார்கள். ஸ்பானிஷ்காரர்கள்  'நண்பனே' என்பதற்கு 'அமிகோ' என்பார்கள். எனக்குத் தெரிந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆசிரியனொருவன் தமிழ் உட்படப் பல்வேறு மொழிகளில் சிறிதாவது உரையாடுவதற்குப் போதுமான மொழியறிவு பெற்றிருக்கிறான். என்னைக் கண்டால் தமிழில் நலம் விசாரிப்பான். பாகிஸ்தானியர்களைக் கண்டால் 'அஸ்ஸலாமு அழைக்கும்' , கியா ஹால் கை', 'சுக்ரியா' போன்ற உருது சொற்களைக் கூறுவதற்குத் தெரியும். போர்த்துகேயர்களைக் கண்டால் அவர்கள் ஒரு காலகட்டத்தில் எங்களூரில் செய்த அட்டுழீயங்களை விபரிப்பேன். மேலும் ஜன்னல், சப்பாத்து என்று தமிழில் கலந்துவிட்ட போர்த்துகேய சொற்களைப் பற்றிய எனது பாண்டித்தியத்தையும் சிறிது 'அவிழ்த்து' விடுவேன். 'ஆ'வென்று வாயைப் பிளப்பார்கள். ஆங்கிலேயர்களிடம் 'எங்கள் மொழியிலிருந்தும் நீங்கள் சொற்களைக் கடன் வாங்கியிருக்கிறீர்கள் தெரியுமா?' என்பேன். 'என்ன" என்று தலையைச் சொறிவார்கள். அவர்களுக்கு 'கட்மரான்' கட்டுமரத்திலிருந்து வந்ததுதானென்பேன்.  அவர்களும் தம் பங்குக்கு வாயைப் பிளப்பார்கள்.

•Last Updated on ••Saturday•, 16 •August• 2014 23:02•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 53: கவிதை பற்றிச் சில வரிகள் .....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 53: கவிதை பற்றிச் சில வரிகள் .....

இன்று கவிதைகளை எழுதித் தள்ளுகின்றார்கள் பலர். நூற்றுக்கணக்கில் கவிஞர்களும், அவர்கள்தம் நூல்களும் வெளிவருகின்றன. கவிதைகளைப் பற்றிய அடிப்படை அறிவில்லாதவர்களெல்லாரும் கவிதைகளைத் தொகுத்து தொகுப்புகளை வெளியிடுகின்றார்கள். இவர்கள் எல்லாரும் இவ்விதம் கவிதைகளை எழுதித் தள்ளுவதற்கு முக்கிய காரணங்களிலொன்று: மரபுக் கவிதையிலிருந்து புதுக்கவிதைக்குக் கவிதை பரிணாமமடைந்து விட்டது. இனி ஒன்றைபற்றியும் கவலைப்படத்தேவையில்லை.' இவ்விதம் எண்ணிக்கொண்டு எழுதித்தள்ளூகின்றார்கள். இவர்களது கவிதைகளை முறிக்காமல் எழுதி விட்டு வாசித்துப் பாருங்கள்.  அவை கவிதைகளல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம். இவர்களெல்லாரும் ஒன்றினைப் புரிந்துகொள்ள வேண்டும். கவிதையிலிருந்து கவிதையானது புதுக்கவிதைக்கு மாறிவிட்டது உண்மைதான். ஆனால் கவிதையானது தனது அடிப்படைத் தன்மைகளிலிருந்து மாறிவிடவில்லை என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள். கவிதை மரபுக் கவிதையோ அல்லது மரபு மீறிய நவீன கவிதையோ கவிதையாக இருக்க வேண்டும். அது கவிதையாக இருப்பதற்கு கவிதையில் பாவிக்கப்படும் மொழி முக்கியம். மரபுக் கவிதையில் மட்டுமல்ல மரபினை மீறிய நவீன கவிதையிலும் ஓசை நயமுண்டு. உதாரணமாகச் சேரனின் ஒரு கவிதையினை எடுத்துப் பார்ப்போம்:

•Last Updated on ••Saturday•, 16 •August• 2014 22:51•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் -52: மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' இதழ் பற்றி...

•E-mail• •Print• •PDF•

magazine_nutpam1981ab.jpg - 34.65 Kbமொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் 1980/1981 ஆண்டுக்கான செயற்குழுவில் , சங்கம் வருடா வருடம் வெளியிடும் 'நுட்பம்' சஞ்சிகைக்கான இதழாசிரியர் குழுத் தலைவராக நானிருந்தேன்.  இதழாசிரியர் குழுவில் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த சு.வித்தியானந்தன், கட்டடக்கலைப் பீடத்தைச் சேர்ந்த அ.மகேந்திரன் ஆகியோரிருந்தனர்.

"ஒரு நாள் வரும்.
எழுதுகோல் நிற்கும்.
பின் கைகள் ஆயுதங்களைத் தாங்கும்.
இலக்கியம் இயல்பாகவே யுத்தத்திற்கு
இட்டுச் செல்லும்" - Jean Paul Satre

என்னும் சார்த்தரின் கூற்று முதல் பக்கத்தில் தமிழ்ச்சங்க இலச்சினையுடனிருக்கும். மேற்படி சஞ்சிகை நல்ல முறையில் வெளிவரப் பெரிதும் உதவியவர்கள் விரிவுரையாளர் மு.நித்தியானந்தன், மற்றும் யாழ் பல்கலைக்கழக நூலகத்தைச் சேர்ந்த மூர்த்தி ஆகியோரே. மேற்படி சஞ்சிகையின் அட்டைப்படத்தினை வரைந்தவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் குணசிங்கம். ஓவியத்திலிருக்கும் ஆண்டினை உற்றுக் கவனித்தீர்களென்றால் அது ஒருவிதத்தில் 1980 ஆகவும், இன்னொரு விதத்தில் 1981 ஆகவுமிருக்கும். 1980 / 1981 நடப்பாண்டுச் செயற்குழுவின் வெளியீடு என்பதால் 'நுட்பம்' இதழின் அட்டைப்பட ஓவியத்தில் ஓவியர் காட்டிய நுட்பம் அது. சஞ்சிகையில் வெளிவந்த ஆக்கங்கள் வருமாறு:

•Last Updated on ••Monday•, 11 •August• 2014 21:06•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 51: கே.எஸ்.சிவகுமாரன் என்னும் கலை, இலக்கியத்திறனாய்வாளர்!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பு, யோசிப்பும் - 51:  கே.எஸ்.சிவகுமாரன் என்னும் கலை, இலக்கியத்திறனாய்வாளர்!ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் இலக்கியத் திறனாய்வில் தங்கள் பங்களிப்பை நல்கியவர்களில் கே.எஸ்.சிவகுமாரனுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அவரது கட்டுரைகளைப் பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் இணைய இதழ்கள் பிரசுரித்து வருகின்றன. அவரது பங்களிப்பு எத்தகையது என்பதைச் சிறிது ஆய்வுக்கண்ணோட்டத்தில் சிந்திப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம். இவரது பத்தி எழுத்துகள் அதிகமாக வெளிவருவதால் இவர் தன்னையொரு பத்தி எழுத்தாளராகவே அடிக்கடி கூறிக்கொள்கின்றார். தான் எழுதுவது இலக்கியத் திறனாய்வுகளல்ல வெறும் மதிப்பரைகள்தாம் என்று கூறிக்கொள்கின்றார். இவர் எழுத்துகள் வெறும் புத்தக மதிப்புரைகளா? அல்லது காத்திரமான இலக்கியத் திறனாய்வுகளா? இவ்வகையான எண்ணம் பலருக்கும் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணங்களிலொன்று இவர் அடிக்கடி தான் எழுதுவது வெறும் மதிப்பபுரைகள்தாம் என்று கூறிக்கொள்வதுமென்பதென் கருத்து. இது பற்றிக் கலாநிதி கார்த்திகேச சிவத்தம்பி அவர்களும் 'திறனாய்வுப்பார்வைகள்'' - பத்தி எழுத்துகளும் பல் திரட்டுகளும் 1 -(1966இல் வெளிவந்த நூல்) என்னும் கே.எஸ்.எஸ். அவர்களின் கட்டுரைத் தொகுப்பு நூலொன்றுக்கு எழுதிய முன்னுரையில் பின்வருமாறு கூறியிருப்பார்:

•Last Updated on ••Monday•, 11 •August• 2014 20:12•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 50: தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்'

•E-mail• •Print• •PDF•

1_book_uuzikkaalam5.jpg - 10.04 Kbதமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' நேற்றுதான் என் கையில் கிடைத்தது. இந்த நாவலைப் பற்றி வெளிவந்த விமர்சனக் குறிப்புகள் காரணமாக இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. அதற்கு வடிகாலாகப் புத்தகம் இங்குள்ள புத்தகக் கடையொன்றில் நேற்றுத்தான் கிடைத்தது. இந்த நூலினை வாசிக்க வேண்டுமென்று நான் நினைத்ததற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

1. தமிழ் மக்கள் எதிர்நோக்கிய, முள்ளிவாய்க்காலில் முடிந்த யுத்தக் காலகட்டத்தில் , எவ்விதமான சிரமங்களை அவர்கள் எதிர்நோக்கினார்கள். வெளிவரும் காணொளிகள் அழிவுகளைத்தாம் காட்டும். ஆனால் அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த மக்களின் அன்றாடச் செயற்பாடுகளை, அழிவுகளை அவர்கள் எதிர்நோக்கியது எவ்வாறு போன்றவற்றை அக்காணொளிகள் காட்டுவதில்லை. இதனை அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த ஒருவரின் நாட்குறிப்புகள் அல்லது பதிவுகள்தாம் புலப்படுத்தும். இதுவுமொரு காரணம் இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற என் ஆவலுக்கு.

2. தமிழ்க்கவி விடுதலைப் புலிகள் அமைப்பிலும் இணைந்து இயங்கிய ஒருவர். அதனால் அவரது பதிவுகள் இயக்கம் சார்ந்ததாக இருக்குமா அல்லது நடுநிலையுடன் இருக்குமா என்பது பற்றி அறிய எனக்கிருந்த ஆர்வம் இன்னுமொரு காரணம்.

இதுபோன்ற மேலும் சில காரணங்களைக் குறிப்பிடலாம். ஆனால் மேலுள்ள காரணங்கள்தாம் முக்கியமானவை.

•Last Updated on ••Thursday•, 07 •August• 2014 05:54•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 49: கவிதை நயம், கவிதை, Two Women & குட்டிக்கதை!

•E-mail• •Print• •PDF•

கவிதை நயம் மற்றும் கவிதைத்தொகுப்பு பற்றி....
 

வாசிப்பும், யோசிப்பும் - 49

கவிதையை நயப்பதற்குக் கடுமையான பயிற்சி வேண்டும். கவிதையிலுள்ள உவமை, உருவகம், குறியீடு, கற்பனை வளம், சொல் வளம் இவையெல்லாவற்றையும் அறிந்து , உணர்ந்து, சுவைப்பதற்குக் கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமெ சாத்தியம்.  எனவேதான் கவிதைகளைத் தொகுப்பவர்களுக்குக் கவிதையைச் சுவைக்கத்தெரிந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் நாம் காண்பதென்ன? கவித்துவமில்லாத கவிதைகளெல்லாவற்றையுயும் தொகுத்திருப்பார்கள். இதற்குக் காரணம் இவ்விதமாகக் கவிதைகளைத் தொகுப்பவர்கள், தொகுக்கப்படும் கவிதைகளின் நயத்தை அறிந்து , சுவைக்கத்தெரியாதவர்களாக இருப்பதுதான்..
 
இவ்விதம் தொகுக்கப்படும் கவிதைத்தொகுப்புகளை அவர்களது குழுவினருக்கு ஆதரவாக இயங்கும் திறனாய்வுப் பெருந்தகைகளை அல்லது தமிழகத்து இலக்கிய ஆளுமைகளை அழைத்துச் சிறப்பித்து நூல்களை வெளியிட்டு வைப்பார்கள். அவ்விதம் அழைக்கப்பட்ட ஆளுமைகளும் தம் பங்குக்கு ஏதாவது கூறி வைப்பார்கள். அத்துடன் சரி. ஒரு சில மாதங்களில் மறக்கடிக்கப்பட்ட தொகுப்புகளாக அவை மாறிவிடும்.

•Last Updated on ••Friday•, 01 •August• 2014 05:15•• •Read more...•
 

கதை பிறந்த கதை: ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை.

•E-mail• •Print• •PDF•

கதை பிறந்த கதை: ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை.

எழுத்தாளர் ஒருவரின் படைப்பு உருவாகுவதற்குப் பல அடிப்படைக்காரணங்களுள்ளன. அப்படைப்பானது அதனைப் படைத்தவரின் கற்பனையாகவிருக்கலாம். அல்லது நடைபெற்ற சம்பவங்கள் ஏதாவது ஏற்படுத்திய பாதிப்புகளின் விளைவாக இருக்கலாம். அல்லது பத்திரிகை , சஞ்சிகைகளில் வெளிவந்த செய்தியொன்றின் தாக்கத்தின் விளைவாகவிருக்கலாம். இவ்விதம் பல்வேறு காரணங்களிருக்கலாம். புகழ்பெற்ற எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் மிகவும் புகழ்பெற்ற படைப்பான 'கிழவனும், கடலும்' நாவல் தோன்றியது ஒரு பத்திரிகைச்செய்தியின் விளைவாகவென்று ஹெமிங்வேயே ஒருமுறை கூறியிருக்கின்றார். பத்திரிகையொன்றில் வெளியான 'புளூ மார்லின்' மீனொன்றால் கடலில் பல நூறு மைல்கள் இழுத்துச் செல்லப்பட்ட போர்த்துக்கேய மீனவன் ஒருவன் பற்றி வெளியான செய்தியொன்றின் தாக்கத்தின் விளைவே அவரது 'கிழவனும், கடலும்' நாவலின் அடிப்படை.

இச்சமயத்தில் எனது சிறுகதையொன்றான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' உருவான விதம் பற்றிச் சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ளலாமென நினைக்கின்றேன். கனடாவுக்கு வந்த காலகட்டத்தில் என் வேலை காரணமாக டொராண்டோவின் மேற்குப் புறத்திலிருக்கும் 'கீல்' வீதியும், 'சென்ட் கிளயர் மேற்கு' வீதியும் சந்திக்கும் சந்தியை ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் சந்தர்ப்பமேற்பட்டது. இன்று மிகவும் அபிவிருத்தி அடைந்துள்ள பகுதியாக விளங்கும் அப்பகுதியில் அன்று கனடா பக்கர்ஸ் நிறுவனத்தின் கசாப்புக் கூடம் மிகப்பெரிய அளவில் அமைந்திருந்தது. ஒவ்வொரு முறை அக்கசாப்புக் கூடத்தைக் கடக்கும்போதும் மூக்கைத்துளைக்கும் மணமும், அங்கு வெட்டுவதற்காக அடைப்பட்டுக் கிடக்கும் மாடுகளின் நிலையையும் மனதில் பல்வேறு சிந்தனைகளை உருவாக்கும்.  மனம் அக்காலகட்டத்தில் இலங்கைச் சிறைக்கூடங்களில் அடைப்பட்டுக்கிடக்கும் தமிழர்களின் நிலையுடன் அக்கசாப்புக்கூடத்தில் அடைபட்டுக்கிடக்கும் மாடுகளின் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்.

•Last Updated on ••Saturday•, 26 •July• 2014 22:14•• •Read more...•
 

அ.ந.க.வின் 'மனக்கண்'

•E-mail• •Print• •PDF•

அறிமுகம்
தொடர் நாவல்: அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்'அ.ந.கந்தசாமிஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியெனக் கருதப்படுபவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், விமர்சனம், நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஈடுபட்டு ஆழமாகத் தன் தடத்தினைப் பதித்தவரிவர். இவர் எழுதிய ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. இந்த 'மனக்கண்' நாவல் பற்றிய எனது விமர்சனக் குறிப்புகளே இவை. எனக்குத் தெரிந்த வரையில் அ.ந.க.வின் 'மனக்கண்' நாவல் பற்றி வெளிவந்த விரிவான, முதலாவதான,   விமர்சனக் கட்டுரை இதுவாகத்தானிருக்கும். அந்த வகையில் இக்கட்டுரைக்கொரு முக்கியத்துவமுண்டு. இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று: நமது விமர்சகர்களுக்கு நூலாக வெளிவந்த நூல்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதிப்பழக்கம். இன்னுமொரு காரணம் பெரும்பாலான விமர்சகர்களுக்குத் தேடுதல் மிகவும் குறைவு. தமக்கு அனுப்பி வைக்கப்படும் நூல்களுக்கு மட்டுமே அவர்களது கவனம் திரும்பும். அவ்விதம் கிடைக்கும் நூல்களைத் தம் புலமையினை வெளிப்படுத்துவதற்குத் தொட்டுக்கொள்ளப்படும் ஊறுகாயைப்போல் பாவித்துக்க்கொள்வார்கள்.  மிகச்சிலர்தாம் நூலாக வெளிவராத பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளுக்கும் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள்.இவர்களை உண்மையில் பாராட்டத்தான் வேண்டும். [ தனது இறுதிக்காலத்தில் இவர் மலையகத்தமிழர்களை மையமாக வைத்து கழனி வெள்ளம் என்றொரு நாவலினை எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாவல்  எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், அது 1983 இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறியப்படுகிறது]. 'மனக்கண்' ஈழத்திலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூன் 29, 1967 வரையில் தொடராக வெளிவந்து இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர்களின் ஆதரவினைப் பெற்றதொரு நாவல். இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று அ.ந.க நாவலில் வரும் பாத்திரங்களுகிடையிலான உரையாடல்களில் பேச்சுத்தமிழைக் கையாளுவதற்குப் பதில் , பல்வேறு பகுதிகளிலுமிருந்து வாசிக்கும் அனைவருக்கும் புரியவேண்டுமென்பதற்காகச் 'சரளமான ஒரு செந்தமிழ் நடையினைப்' பாவித்திருப்பதுதான்.

•Last Updated on ••Friday•, 18 •March• 2016 04:16•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 48: பறவைகளின் துயரங்களை நாமறிவதில்லை!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 48: பறவைகளின் துயரங்கள் நாமறிவதில்லை!

'மேலும் அறியாத ஒன்று' இத்தலைப்பிலுள்ள கவிதை கருணாகரனின் 'ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள்' தொகுப்பிலுள்ள கவிதைகளிலொன்று. இக்கவிதையினை வாசிக்கும்போது ஏற்பட்ட என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் இப்பதிவின் நோக்கம். அதற்கு முன:

பால்யகாலத்தில் என் வாழ்வு வவுனியா நகரிலுள்ள குருமண்காடு என்னும் காடு மண்டிக்கிடந்ததொரு சூழலில் கழிந்தது. பல்லினப் பறவைகளும், மிருகங்களும் மலிந்த கானகச்சூழல். எங்கள் வீட்டிலிருந்த கொவ்வை மரத்தில் எப்பொழுதும் கிளிகள் படையெடுத்த  வண்ணமிருக்கும். மாம்பழத்திகளும், மைனாக்களும், குக்குறுபான்களுமெனப் பறவைகளின் இராச்சியத்தில் மூழ்கியிருந்த கானகச்சூழல். ஆனால் அக்காலகட்டத்தில் நான் இயற்கையை இரசித்த அளவுக்கு, அங்கு வாழ்ந்த புள்ளினங்களின், மிருகங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியெல்லாம் சிந்தித்ததில்லை. ஆனால் இன்று நான் உலகின் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற மாநகரொன்றில் வசிக்கின்றேன். ஆரம்பத்தில் இயற்கையுடன் வாழ்ந்த சூழலைத் தவற விட்டு விட்டேனோ என்று மனம் சஞ்சலப்பட்டதுண்டு. ஆனால் மாநகரினைக் கூர்ந்து அவதானிக்கத் தொடங்கியதும் எனக்குப் பிரமிப்பே ஏற்பட்டது. குழி முயல்கள், சிறு நரிகள், கயோட்டி என்னும் ஒருவகை நாயின மிருகங்கள், கடற் பறவைகள், புறாக்கள், பல்வேறு வகையான வாத்தினங்கள், பல்வேறு வகையான சிட்டுக்குருவிகள், 'ரொபின்' பறவைகள், பருந்தினங்கள், அணில்கள், ரக்கூன்கள், மான்கள்..இவ்விதம் பல்வேறு வகையான பறவைகளை, மிருகங்களை அவதானிக்க முடிந்தது.

•Last Updated on ••Sunday•, 29 •June• 2014 05:19•• •Read more...•
 

கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....

•E-mail• •Print• •PDF•

கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய ;ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....   - வ.ந.கிரிதரன் -dr_n_subramaniyan.jpg - 12.37 Kbகலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' என்னும் நூலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததது. குமரன் புத்தக இல்லம்' பதிப்பகத்தினரால் தமிழகத்தில்; 2009இல் வெளியான நூலது. இதுவரையில் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றிப் பலர் எழுதியிருக்கின்றார்கள். இரசிகமணி கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராசன் என்று பலர், அவர்களது நூல்கள் பெரும்பாலும் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றிய பொதுவான அறிமுக நூல்களாகத்தான் அமைந்துள்ளன. அவற்றின் முக்கியம் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றீய தகவல்களை வழங்குகின்றன என்பதில்தான் தங்கியுள்ளது. ஆனால் கலாநிதி நா.சுப்பிரமணியனின் மேற்படி நூல் அவற்றிலிருந்தும் பெரிதும் வேறுபடுவது நூலாசிரியரின் ஈழத்து நாவல்கள் பற்றிய திறனாய்வில்தான். ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிய தகவல்களை வழங்கி நல்லதோர் ஆவணமாக விளங்கும் அதே சமயம் ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிய நல்லதொரு திறனாய்வு நூலாகவும் இந்நூல் விளங்குகின்றது. அந்த வகையில் இந்த நூலின் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது. இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களிலொன்று: நூலாசிரியரின் இந்த நூலானாது அவர் தனது முதுகலைமானிப் பட்டப்படிப்புக்காக, இலங்கைப் பல்கலைக்கழகப் பேராதனை வளாகத்தில் , ஈராண்டுகள் (1970- 1972) நடாத்திய ஆய்வின் விளைவாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையாகும். வெறும் ஆய்வுக்கட்டுரையாக இல்லாமல் அவரது கடும் உழைப்பினால் நல்லதொரு திறனாய்வு நூலாகவும் மேற்படி கட்டுரை வளர்ச்சியுற்றிருக்கின்றது.

•Last Updated on ••Monday•, 23 •June• 2014 19:33•• •Read more...•
 

கனடாவின் முதலாவது தமிழ் நாவல்" மண்ணின் குரல் பற்றிச் சில வார்த்தைகள்...

•E-mail• •Print• •PDF•

கனடாவின் முதலாவது தமிழ் நாவல்" மண்ணின் குரல் பற்றிச் சில வார்த்தைகள். - வ.ந.கிரிதரன் -கனடாவிலிருந்து வெளிவந்த முதலாவது தமிழ் நாவல் நானறிந்தவரையில் நான் எழுதிய சிறு நாவலான 'மண்ணின் குரல்' நாவலே. இதனைப் பற்றி ஒரு பதிவுக்காகக் குறிப்பிட விரும்புகின்றேன். இந்த நாவல் பத்து அத்தியாயங்களை உள்ளடக்கிய சிறு நாவல். நாற்பது பக்கங்களைக் கொண்டது. இந்நாவலின் முதல் ஆறோ அல்லது  ஏழோ அத்தியாயங்கள் மான்ரியாலிலிருந்து 1984, 1985 காலப்பகுதியில் வெளியான 'புரட்சிப்பாதை' என்னும் கையெழுத்துச்சஞ்சிகையில் வெளியாகின. 'புரட்சிப்பாதை' என்னும் கையெழுத்துப் பத்திரிகை அக்காலத்தில் மான்ரியாலில் இயங்கிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக் கிளையினரின் கையெழுத்துச் சஞ்சிகையாக வெளியானது, அக்காலகட்டத்தில் கனடாவில் பல்வேறு ஈழ விடுதலைச் சார்ப்பு அமைப்புகளும் இயங்கி வந்தன. இந்தச் சஞ்சிகையை அக்காலகட்டத்தில் ஜெயந்தி, ரஞ்சன், சுந்தரி ஆகிய இளைஞர்களுடன் சேர்ந்து மேலும் சில இளைஞர்கள் நடாத்தி வந்தனர். இந்தக் கையெழுத்துப் பிரதியில் கவிதைகள் சில, கட்டுரைகள் சில மற்றும் 'மண்ணின் குரல்' என்னுமிந்தச் சிறு நாவல் ஆகியவற்றையும் எழுதியிருந்தேன். அக்காலகட்டத்தில் வெளியான எனது படைப்புகள் அனைத்தும் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை வலியுறுத்துபவையாகவே அமைந்திருந்தன. அதற்காகவே எழுதப்பட்டவை அவை. 'மண்ணின் குரல்' சிறுநாவல் முடிக்கப்பட்டு , 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான கவிதைகள், கட்டுரைகள் சிலவற்றை உள்ளடக்கி 'மண்ணின் குரல்' தொகுப்பு கனடாவில் 4.1.1987 அன்று வெளியானது. கனடாவில் றிப்ளக்ஸ் அச்சகத்தினரால் அச்சடிக்கப்பட்டு, மங்கை பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது.  எனது நாவல்களான 'மண்ணின் குரல்', 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' , மற்றும் 'கணங்களும் குணங்களும்' ஆகியவை ஒரு தொகுப்பாக 'மண்ணின் குரல்' என்னும் பெயரில் தமிழகத்தில் 1998இல் 'குமரன் பப்ளீஷர்ஸ்' நிறுவனத்தால் வெளியிப்பட்டது.  இரண்டு 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்புகள் என் படைப்புகளைத் தாங்கி வெளிவந்துள்ளன. இரண்டு தொகுப்பிலும் உள்ள பொதுவான ஒரே படைப்பு 'மண்ணின் குரல்' நாவல்தான்.

•Last Updated on ••Sunday•, 16 •July• 2017 21:11•• •Read more...•
 

தந்தையர் தினத்தினிலே....

•E-mail• •Print• •PDF•

நான் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவனாகவிருந்தபோது என் தந்தையாரை (நடராஜா நவரத்தினம்) இழந்து விட்டேன்.. அவர் ஒரு நில அளவையாளராகவிருந்தார்.  அவர் மிகவும் உயரமானவர் (சுமார் ஆறடி உயரமெனலாம்; நான் அவரைவிட ஒர் அங்குலம் உயரத்தில் சிறியவன்.) எனக்கு எழுதுவதிலும் , வாசிப்பதிலும் இவ்வளவு தூரம் ஈடுபாடு தோன்றியதற்குக் காரணமே அப்பாதான். சிறுவயதிலிருந்தே வீடு நிறைய புத்தகங்களும் , சஞ்சிகைகளும்தாம். பொன்மலர், பால்கன் காமிக்ஸ் , அம்புலிமாமா தொடக்கம், விகடன், கல்கி, கதிர், கலைமகள், ராணி, ராணிமுத்து, மஞ்சரி, கலைக்கதிர், ஈழநாடு, சுதந்திரன், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் என்று வீடே நிறைந்து கிடக்கும்.  எனது ஐந்து வயதிலேயே நாங்கள் வவுனியாவுக்கு இடம் மாறிச் சென்று விட்டோம், அம்மா ஆசிரியையாக வவுனியா மகா வித்தியாலயத்தில் பணிபுரிந்த காரணத்தால். வவுனியாவில் நாங்கள் குருமண்காடு என்னும் பகுதியில் அப்பொழுது வசித்து வந்தோம். ஒற்றையடிப் பாதையாகவிருந்த வீதியினைக் கொண்டிருந்தது குருமண்காடு அக்காலகட்டத்தில். சுற்றிவர விரிந்திருந்த கானகச் சூழல். பல்வேறு விதமான பறவையினங்கள் (நீர்க்காககங்கள், ஆலா, பருந்து, மாம்பழத்தி, நீண்ட வாற் கொண்டைக்குருவிகள், வவ்வால்கள், குக்குறுபான்கள், மரங்கொத்திகள், மீன் கொத்திகள், பலவேறு வகையான பாம்பினங்கள், குரங்கினங்கள் என விளங்கிய கானகச் சூழலில்
எம் வாழ்வு கழிந்தது.

•Last Updated on ••Saturday•, 21 •June• 2014 23:39•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 47: கனடாத் தமிழ்ச் சிறுகதைகள் மற்றும் தொகுப்புகள் பற்றிச் சில வார்த்தைகள்....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 47: கனடாத் தமிழ்ச் சிறுகதைகள் மற்றும் தொகுப்புகள் பற்றிச் சில வார்த்தைகள்....

புகலிடத் தமிழ்ச் சிறுகதைகளில் கனடாத் தமிழ்ச் சிறுகதைகளுக்கும் முக்கியமானதொரு பங்குண்டு. புகலிடத் தமிழர் படைத்த சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றை உளளடக்கிய தொகுப்புகள் பல வெளிவந்திருக்கின்றன. ஆனால் அண்மைக்காலமாக வெளிவரும் தொகுப்புகள் சிலவற்றில் வெளியாகும் படைப்புகளைப் பார்க்கும்போது ஒரு குழுவாக இயங்கும் சில எழுத்தாளர்கள் தங்களைச் சுற்றி அமைத்துக்கொண்ட வட்டத்தைச் சார்ந்தவர்களின் படைப்புகளை மட்டுமே தெரிவு செய்து தொகுப்புகளில் சேர்க்கும் போக்கு தென்படுகின்றதோ என்று ஐயுறுகின்றேன். இந்நிலை இலக்கியத்துக்கு ஆரோக்கியமானதொரு போக்கல்ல. 'காலம்' செல்வம், எழுத்தாளர் அ.முத்துலிங்கம், இவர்களைச் சுற்றியுள்ள சில எழுத்தாளர்களின் படைப்புகள், கவிஞர்கள் இவர்களின் படைப்புகளை மட்டுமே திரட்டித் தொகுத்து வருகின்றார்களோ என்று ஐயுற வேண்டியிருக்கிறது. கடந்த முப்பது வருடங்களில் 'காலம்' செல்வம் எத்தனை சிறுகதைகள், கவிதைகளை எழுதியிருக்கின்றார்? ஆனால் அண்மைக்காலத் தொகுப்புகளில் தவறாமல் இவரது கவிதை, சிறுகதைகள் சேர்க்கப்படுகின்றன.  ஒரு தொகுப்பானது தொகுக்கப்படும்போது குழு மனப்பான்மையுடன் தொகுக்கப்படுமானால் அது வரவேற்கத்தக்கதல்ல.

•Last Updated on ••Sunday•, 15 •June• 2014 16:09•• •Read more...•
 

வ.ந.கிரிதரனின் கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரனின் கவிதைகள் இரண்டு!

கவிதை: ஒரு கவிஞனின் (மனிதனின்) பெருங்கவலை!

- வ.ந.கிரிதரன் -

ஒரு சாதாரண 'காலக்சி'யினோரத்தே - சுழலும்
ஒரு சாதாரணச் சூரிய மண்டலத்தே -  சுழலும்
ஒரு சாதாரணக் கோளத்தில் - வாழும்
ஒரு சாதாரணக் கவிஞனொருவனுக்கு- அல்லது
ஒரு சாதாரண மனிதனொருவனுக்கு
ஒரு பெருங்கவலை. அது என்ன?

•Last Updated on ••Saturday•, 14 •June• 2014 16:45•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 46 : வாண்டுமாமா (கெளசிகன்) நினைவாக......

•E-mail• •Print• •PDF•

வாண்டுமாமாசிறுவர் இலக்கியமென்றால் முதலில் நினைவுக்கு வருமிருவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. மற்றவர் வாண்டுமாமா ( இயற்பெயர் வி.கிருஷ்ணமூர்த்தி ). அழ வள்ளியப்பா குழந்தைகளுக்காக , குழந்தைகள் இரசிக்கும்படியான அற்புதமான கவிதைகள் எழுதியவர். வாண்டுமாமாவோ குழந்தைகளுக்காக கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியதுடன் குழந்தைகளுக்கான சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் (பூந்தளிர், கோகுலம்) தன் பணியினைத் தொடர்ந்தவர். அறிவியல், இலக்கியம், வரலாறு எனப் பல்வேறு துறைகளிலும் குழந்தைகளுக்கு எளிமையாக, சுவையுடன், புரியும் வண்ணம் கட்டுரைகளை, கதைகளைப் படைத்தவர் வாண்டுமாமா. இவரது நூல்கள் பலவற்றை வானதி பக்கம் மிகவும் அழகாக, சித்திரங்களுடன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பா சொன்ன கதைகள், தாத்தா சொன்ன கதைகள், பாட்டி சொன்ன கதைகள் என்று பல தொகுதிகளை வானதி பக்கம் வெளியிட்டது நினைவுக்கு வருகிறது. வாண்டுமாமா சிறுவர்களுக்காக எழுதியதுடன் பெரியவர்களுக்காகவும் எழுதியிருக்கின்றார். கல்கி சஞ்சிகையுடன், அதன் இன்னுமொரு வெளியீடான கோகுலம் சஞ்சிகையுடன் இவரது வாழ்வு பின்னிப் பிணைந்துள்ளது. கல்கியில் இவர் எழுபதுகளில் கெளசிகன் என்னும் பெயரில் எழுதிய சுழிக்காற்று, சந்திரனே நீ சாட்சி ஆகிய மர்மத் தொடர்கதைகளும், பாமினிப் பாவை என்ற சரித்திரத் தொடர் நாவலும் இன்னும் ஞாபகத்திலுள்ளன.

•Last Updated on ••Friday•, 13 •June• 2014 23:19•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 45: கவிஞர் வி.கந்தவனத்தின் கவிதைகள் பற்றி....

•E-mail• •Print• •PDF•

கவிஞர் கந்தவனம்இலங்கையின் மரபுக் கவிஞர்களில் கவிஞர் வி.கந்தவனத்துக்கு முக்கியமானதோரிடமுண்டு. 'கவியரங்குக்கோர் கந்தவனம்' என இரசிகமணி கனகசெந்திநாதனால் விதந்துரைக்கப்பட்டவர் கவிஞர் கந்தவனம். என் பால்ய காலத்திலேயே இலங்கையில் வெளியாகிய பத்திரிகைகள், சஞ்சிகைகளினூடாக இவரது பெயர் எனக்கு அறிமுகமானது. கவீந்திரன் (அறிஞர் அ.ந.கந்தசாமி), நிலாவணன், திமிலைத்துமிலன், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, மஹாகவி, இ.முருகையன், மதுரகவி இ.நாகராஜா,  வேந்தனார், அம்பி என்று தொடரும் இலங்கைத்தமிழர் கவிதையுலகில் கவிஞர் கந்தவனத்துக்கொரு நிலையான இடமுண்டு.

கவிஞரின் படைப்புகளில் எனக்குப் பிடித்த மிக முக்கியமான தொகுப்புகளாக நான் கருதுவது 'பாடு மனமே', 'இலக்கிய உலகம்', மற்றும் 'கீரிமலையினிலே' 'பாடு மனமே' தொகுப்பிலுள்ள நல்லதொரு கவிதை 'பாவலனாகிடல் வேண்டும்'.

'காலை, மாலை மற்றும் இரவு வேளைகளிலெல்லாம் மானுடர் வேலை செய்கின்றார். காலம் முழுவதும் இவர் செய்யும் வேலை எந்தவிதப் பயனுமற்றது. இவ்விதமாக வேலை , வேலை என்று நாளும் பொழுதும் வாழும் மானிடர் வாழ்வில் துயரம் சூழ்ந்துள்ளது. சோலி, சுரட்டில் அவர்தம் வாழ்வு சோர்ந்து தளர்ந்திடுகின்றது. வஞ்சகமும், சூதும், களவும் நிறைந்தவர் தஞ்சம் பெறுமுலகில், அவர்களுக்கஞ்சி நீதியும் மறைந்து விடுகிறது. பஞ்சக் கொடுமைகள், சாதிச்சண்டைகள் மலிந்த இவ்வுலகு கண்டு நெஞ்சம் வெடிக்கிறது.'

•Last Updated on ••Wednesday•, 11 •June• 2014 05:01•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 44: நாஞ்சில் நாடனின் பட்டியல் மற்றும் பட்டியல் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்.....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 44:  நாஞ்சில் நாடனின் பட்டியல் மற்றும் பட்டியல் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்.....

நாஞ்சில் நாடனின் இளம் எழுத்தாளர்கள் பற்றிய ஆனந்த விகடன் பட்டியல் பற்றிய தனது கருத்தினை தனது வலைப்பதிவில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கின்றார். அதிலவர் 'முதல்கேள்வி இப்படி பட்டியல்போடுவது சரியா என்பது. உலகமெங்கும் எங்கு இலக்கியம் உள்ளதோ அங்கெல்லாம் இப்படி பட்டியல் போடப்பட்டுக்கொண்டே இருக்கிறதென்பதையும், இலக்கியம் தோன்றியநாள் முதல் இப்படிப்பட்ட பட்டியல்கள் வழியாகவே அது தரம் காணப்பட்டு தொகுக்கப்பட்டு முன்வைக்கப்படுகிறது என்பதையும் கோயிந்துக்களுக்கு கொட்டை எழுத்தில்தான் சொல்லவேண்டியிருக்கிறது. சங்ககால நூல்களெல்லாம் அப்படிப்பட்ட பட்டியல்களே. ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் பன்னிரு திருமுறைகள் என்பவை எல்லாம் பட்டியல்களே' என்று கூறியிருக்கின்றார்.

'ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் பன்னிரு திருமுறைகள் என்பவை எல்லாம் பட்டியல்களே' என்று ஜெயமோகன் பொதுவாகக் கூறியிருக்கிறார். இது தவறு. இதற்கான ஆதாரங்களை வைத்து அவர் கூறியிருக்க வேண்டும். ஐம்பெருங்காப்பியங்களெல்லாம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நின்ற இலக்கியப் படைப்புகள். அதன் பின்னர்தான் பதினான்காம் நூற்றாண்டில் ஐம்பெருங்காப்பியங்களென்ற பெயரில் மயிலைநாதர் என்பவரால் அழைக்கப்பட்டதாக, - சொ.ஞானசம்பந்தன் என்னும் தமிழறிஞர் தனது 'இலக்கியச் சாரல்' என்னும் வலைப்பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

•Last Updated on ••Tuesday•, 10 •June• 2014 19:50•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 43: முகநூற் குறிப்புகள் சில.

•E-mail• •Print• •PDF•

கவிதை: பேராசை மிக்க கவிஞன்

- அவ்வப்போது முகநூல் பக்கங்களில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட பல்வேறு விடயங்கள் பற்றிய குறிப்புகளில் சிலவற்றை இம்முறை பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமெனக் கருதுகின்றேன்.  -

 

நல்ல எழுத்தும், வாசிப்பும்!
 
நல்ல எழுத்து என்பது எப்பொழுதும் , வாழ்க்கை முழுவதும் ஒரு நண்பரைப்போல் கூட வருவது. இவ்விதம் வரக்கூடிய எழுத்துகளைத்தான் நான் நல்ல எழுத்து என்பேன். என்னைப் பொறுத்தவரையில் தத்தயேவ்ஸ்கியின் 'குற்றமும், தண்டனையும்', 'அசடன்', 'கரமசோவ் சகோதரர்கள்', டால்ஸ்டாயின் போரும், சமாதானமும், அன்னா கரீனினா, புத்துயிர்ப்பு , வால்ட்டயரின் 'கேண்டிட்', டானியல் டிபோவின் ராபின்சன் குரூசோ, ஹெமிங்வேயின் 'கடலும், கிழவனும்', ஜான் மாட்டலின் 'பை'யின் வாழ்வு, எம்.டி.வாசுதேவன் நாயரின் 'காலம்', எஸ்.கே.பொற்றேகாட்டின் 'ஒரு கிராமத்தின் கதை', அதீன் பந்த்யோபாத்யாய'வின் 'நீல கண்டப் பறவையைத் தேடி', பாரதியார் கவிதைகள், 'மோபிடிக்', ஜானகிராமனின் 'மோகமுள்', 'செம்பருத்தி', அறிஞர் அ.ந.கந்தசாமியின் எழுத்துகள், ஜெயகாந்தனின் சிறுகதைகள், 'ஒரு மனிதன், ஒரு வீடு , ஒரு உலகம்' (நாவல்), ஜேர்சி கொசின்சிகியின் Being There போன்ற புத்தகங்களைக் கூறலாம். இவர்களை ஓர் உதாரணத்துக்குக் கூறினேன்.

•Last Updated on ••Wednesday•, 04 •June• 2014 21:03•• •Read more...•
 

புகலிடத் தமிழ் நாவல் முயற்சிகள்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: பேராசை மிக்க கவிஞன்

  - இன்று - மே 31, 2014 -'டொராண்டோ'வில் எழுத்தாளர் அகில், மருத்துவர் லம்போதரன் ஆதரவில் நடைபெற்ற மாதாந்த இலக்கிய நிகழ்வில் ஆற்றிய உரையின் முழுமையான வடிவம். நிகழ்வில் நேரப் பற்றாக்குறை காரணமாக கட்டுரை முழுவதையும் வாசிக்க முடியவில்லை. அதற்காக இக்கட்டுரை இங்கு முழுமையாக மீள்பிரசுரமாகின்றது. - வ.ந.கி -

புலம் பெயர் தமிழ் இலக்கியமும், புகலிடத் தமிழ் இலக்கியமும், புகலிட நாவல்களும் பற்றி....

இன்று உலகெங்கும் தமிழர்கள் புலம் பெயர்ந்து பரந்து வாழ்கின்றார்கள். சங்க காலத்திலிருந்து காலத்துக்குக் காலம் தமிழர்கள் புலம் பெயர்வது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. 'திரை கடலோடித் திரவியம் தேடினார்கள் அற்றைத் தமிழர்கள். பொருளியல் காரணங்களுகாக அன்று தமிழ் மன்னர்கள் அயல் நாடுகளின் மீது படையெடுத்து தமது ஆட்சியினை விஸ்தரித்தார்கள். அதன் காரணமாகத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். அந்நியர் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு , நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது தமிழகத்திலிருந்து தமிழர்கள் பலர் இலங்கை, மலேசியா என்று பல்வேறு நாடுகளுக்குத் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இவ்விதமாகத் தொடர்ந்த தமிழ் மக்களின் புலம்பெயர்தலில் முக்கியமானதொரு நிகழ்வு கடந்த நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஆரமபித்த ஈழத்தமிழரின் பல்வேறு திக்குகளையும் நோக்கிய புலம் பெயர்தல்.

•Last Updated on ••Monday•, 02 •June• 2014 21:47•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 42: சயந்தனின் 'ஆறா வடு'வும் ஷோபா சக்தியின் 'கொரில்லா'வும் பற்றி...

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 42: சயந்தனின் 'ஆறா வடு'வும் ஷோபா சக்தியின் 'கொரில்லா'வும் பற்றி... அண்மைக்காலத்தில் பரவலாக வரவேற்பினையும், விமர்சனங்களையும் பெற்ற சயந்தனின் 'ஆறா வடு' புகலிட நாவல்களில் தவிர்க்க முடியாத இன்னுமொரு படைப்பு. இந்த நாவலை முதலில் வாசித்ததும் ஏனோ தெரியவில்லை உடனடியாகவே எனக்கு 'ஷோபா சக்தி'யின் 'கொரில்லா' ஞாபகத்துக்கு வந்தது. அதற்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. இரு நாவல்களுமே முன்னாள் விடுதலைப் புலி ஒருவரின் கடந்த கால, புகலிட அனுபவங்களை மையமாகக் கொண்டவை இரண்டிலுமே அவ்வப்போது பட்டும் படாமலும் இயக்கத்தின் நடவடிக்கைகள் விமர்சிக்கப்படுகின்றன.  அதே சமயம் இரண்டிலும் இயக்கத்தின் ஆரோக்கியமான பக்கங்களும் சுட்டிக் காட்டப்படுகின்றன.

2. கொரில்லாவில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப்போராளியால் இந்திய அமைதிப்படையின் மேஜர் கல்யாணசுந்தரம் கொல்லப்படுகின்றார். பிரின்ஸியை விசாரணக்குட்படுத்தும் சமயம், மேஜர் அவளது மார்புகளைக் காமத்துடன் பார்த்து "இங்கே என்ன பாம் வைச்சிருகேயா?" என்று கேட்கும் சமயம், மார்பினில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளுடன் அவனைப் பாய்ந்து கட்டிக்கொள்கின்றாள் பிரின்ஸி. குண்டுகள் வெடிக்கின்றன. 'ஆறா வடு'வில் வரும் நிலாமதி என்னும் பதின்ம வயதுப் பெண் வயதுக்கு மீறிய மார்பகங்களின் வளர்ச்சியைப் பெற்றவள். அதன் காரணமாகவே 'குண்டுப் பாப்பா' என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படுபவள். அவளது குடும்பம் விடுதலைப் புலிகளுக்கு அவ்வப்போது உதவி செய்யும் தமிழ்க் குடும்பம். வெற்றி என்று அழைக்கப்படும் விடுதலைப் புலி உறுப்பினன் ஆரம்பத்தில் திலீபன் நினைவுதினத்துக்காக அச்சடித்த துண்டுப்பிரசுரங்களை நிலாமதியிடன் பாதுகாப்பாக வைத்துத் தரும்படி வேண்டுகின்றான். இவ்விதமாக ஆரம்பிக்கும் தொடர்பு ஆயுதங்களை அவர்களது இடத்தில் மறைத்து வைக்கும் அளவுக்கு வளர்கிறது. ஒரு முறை இந்திய அமைதிப்படை இராணுவத்தின் தேடுதலில் அவளது வீடு அகப்பட்டுக்கொள்கிறது. அதற்குச் சற்று முன்னர்தான் போராளிகள் அங்கிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டிருந்தார்கள். ஆனால் கிரேனைட் குண்டொன்று தவறுதலாக விடுபட்டுப் போகிறது. அதே சமயம் இந்தியப் படைச் சிப்பாய்கள் வீட்டினுள் நுழைகின்றார்கள். நிலாமதி கிரேனைட்டினைத் தனது மார்பகங்களுக்குள் மறைத்து நிற்கின்றாள். வந்திருந்த சிப்பாய்களில் ஒருவன் அறையைச் சோதிக்கும் பாவனையில் அறையினுள் அவளைத் தள்ளி அவளைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குகின்றான். அச்சமயம் அவளது பிராவினைப் பற்றி இழுக்கும்போது உள்ளிருந்த கிரேனைட் குண்டு கீழே விழுகிறது. அதிர்ச்சியுற்ற அந்தப் படையினன் கிரேனைட் குண்டினை எடுத்து, கிளிப்பை நீக்கி, நிலாமதி மீது வீச எத்தனிக்கையில், நிலாமதி அவனைப் பாய்ந்து கட்டிக்கொள்கின்றாள். வெடிப்பில் இருவருமே கொல்லப்படுகின்றனர்.

•Last Updated on ••Wednesday•, 28 •May• 2014 21:24•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 41 : ஷோபாசக்தியின் 'கொரில்லா' பற்றி.....

•E-mail• •Print• •PDF•

1_gorilla5.jpg - 2.70 Kbபுகலிடத் தமிழ் இலக்கியத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டதும், அதிகமானவர்களின் கவனத்தைப் பெற்றதுமாக ஷோபாசக்தியின் 'கொரில்லா' நாவலைக் குறிப்பிடலாம். இந்த நாவல் கூறப்பட்ட மொழியினாலும், கூறப்பட்ட விடயங்களினாலும், கூறப்பட்ட முறையினாலும் பலரைக் கவர்ந்திருக்கலாமென நினைக்கின்றேன். கதை சொல்லி பேச்சுத் தமிழைப் பாவித்துக் கொரில்லாவின் கதையினைக் கூறியிருக்கின்றார். இவ்விதமான நடையினை, மொழியினைப் பாவிப்பதிலுள்ள அனுகூலம் இலக்கணம் பற்றியெல்லாம் அதிகம் கவனிக்கத்தேவையில்லை. அவ்விதம் கூறும்போது பாத்திரங்களை அவர் விபரிக்கும் விதம் வாசிப்பவருக்கு ஒருவித இன்பத்தினை எழுப்பும். அதன் காரணமாகவே பலருக்கு இந்த நாவல் பிடித்திருப்பதாக உணர்கின்றேன். பேச்சு வழக்கில் ஒருவருக்கொருவர் உரையாடும்பொழுது 'மசிரை விட்டான் சிங்கன்', 'ஆள் பிலிம் காட்டுறான்' போன்ற வசனங்களைத் தாராளமாகவே பாவிப்பது வழக்கம். அவ்விதமானதொரு நடையில் கொரில்லாவின் கதை விபரிக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கதையில் ஈழத்து விடுதலைப் போராட்ட நிகழ்வுகள், புகலிட நிகழ்வுகள் ஆகியவை விபரிக்கப்பட்டுள்ளன.

•Last Updated on ••Saturday•, 24 •May• 2014 22:33•• •Read more...•
 

கவிதை: பேராசை மிக்க கவிஞன்

•E-mail• •Print• •PDF•

கவிதை: பேராசை மிக்க கவிஞன்

கரும்போர்வை போர்த்திக் கிடக்குது
அலைகளற்ற நீலவண்ண ஆழி.
படகோட்டியற்ற படகின் மீது
பயணிக்க நெடுநாள் ஆசை
கொண்டான் கவிஞனொருவன்.
ஆழியின் ஆழத்தே ஒளிரும்
'ஆங்கிளர்' மீன்கள்
கவிஞனின் ஆசை புரிந்து
புன்முறுவல் புரிகின்றன.
ஆழிகடந்து புதிய உலகம்
காண்பதற்குப் பேராசை கொண்டான்
கவிஞன்.
காலவெளி அடுக்குகள்தமை
அடக்கிய ஆழி.
ஆழி கடத்தல் பற்றிய கனவினிலே
இன்னும் மூழ்கிக் கிடக்கின்றான்
கவிஞன்.

•Last Updated on ••Saturday•, 17 •May• 2014 04:18•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 40 : எஸ்.பொ. பற்றிய தர்மகுலசிங்கத்தின் 'தேடல்

•E-mail• •Print• •PDF•

எஸ்.பொஅண்மையில் த.தர்மகுலசிங்கத்தின் மித்ர வெளியீடாக வெளிவந்த 'தேடல்: சில உண்மைகள்' என்னும் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய , குறிப்பாக மூத்த எழுத்தாளர் திரு.எஸ்.பொ.வின் பங்களிப்பு பற்றிய நூலினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இந்த நூலுக்கு முக்கியமானதொரு சிறப்பு உண்டு. எஸ்.பொ. பற்றிய மறைக்கப்பட்ட பல உண்மைகள் அவருடனான நூலாசிரியரின் நேர்காணலினோடு வெளிப்படுவது...தான் தானந்தச் சிறப்பு. எஸ்.பொ. அவர்களின் உரையினை அவர் பல வருடங்களுக்கு முன்னர் கனடா வந்திருந்த சமயம் வந்திருந்தபோது கேட்டிருக்கின்றேன். நூலாசிரியர் பல இடங்களில் குறிப்பிடுவதுபோல் எஸ்.பொ. அவர்கள் மிகச்சிறந்த பேச்சாளர். ஆசிரியராக இருந்தபடியால் அவரது உரையும் மாணாக்கர்களுக்கு பாடங்கள் எடுப்பதுபோல் தர்க்கச்சிறப்பு மிக்கதாக இருந்ததாக அச்சமயம் உணர்ந்தேன். அதன்பின்னர் அவரை அவரது சகோதரரின் இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. தன் வாழ்க்கை பற்றி, திருமணம் பற்றி, ஈழத்து மற்றும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றியெல்லாம் மனந்திறந்து உரையாடினார். மறக்க முடியாத சந்திப்பு.

•Last Updated on ••Saturday•, 10 •May• 2014 20:55•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 39 : அறிஞர் அ.ந.கந்தசாமியின் மலையக இலக்கியப் பங்களிப்பும், சாரல் நாடனின் 'மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்' நூல் பற்றிய குறிப்புகளும்!

•E-mail• •Print• •PDF•

அ.ந.கந்தசாமிசாரல்நாடலின் 'மலைய இலக்கியம் தோற்றமும், வளர்ச்சியும்' என்னும் சிறு நூலினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. 'சாரல் வெளியீட்டகம்' (கொட்டகலை, இலங்கை)  வெளியீடாக வெளிவந்த இந்த நூலில் சாரல்நாடன் மலையக இலக்கியத்தின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்றார். இந்நூலில் மலையக இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்த பிறபகுதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களைப் பற்றியும் ஓரளவு குறிப்பிட்டுள்ளார் சாரல்நாடன். மலையக இலக்கியத்துக்குப் பிற பகுதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பங்களிப்பு பற்றிய விடயத்தில் அவருக்குப் போதிய பரிச்சயமில்லையென்பதை நூல் வெளிப்படுத்துகின்றது.  மலையக மக்கள் பற்றிய நாவல்கள் படைத்த எழுத்தாளர் நந்தி, புலோலியூர் சதாசிவம் பற்றிக் குறிப்பிடுகின்றார். அட்டனின் நடைபெற்ற 'ஏனிந்தப் பெருமூச்சு' கவியரங்கில் பங்குபற்றிய கவிஞர் கந்தவனத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது மலையகம் பற்றிப் பாடிய வி.கந்தவனம் என்று குறிப்பிடுகின்றார். அட்டன் கல்லூரியில் ஆசிரியர்களாகக் கடமையாற்றிய எழுத்தாளர் சொக்கன், நவாலியூர் நா.செல்லத்துரை பற்றிக் குறிப்பிடுகின்றார். ஆனால் மலையகத் தொழிலாளர்களுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்குபற்றிய முக்கியமான ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர் ஒருவரைப் பற்றி, மலையக மக்கள் பற்றிக் கவிதைகள், சிறுகதைகள் படைத்த எழுத்தாளரைப் பற்றி , இறப்பதற்கு முன்னர் தோட்டத்தொழிலாளர்கள் பற்றிய நாவலொன்றினை எழுதிய முக்கியமான எழுத்தாளரைப் பற்றி நூலாசிரியர் சாரல்நாடனுக்குத் தெரியவில்லையென்பது ஆச்சரியத்தைத் தருகின்றது. இவ்விதமான விடுபடுதல்களால் நட்டப்படுவது இவ்விதமான நூல்கள்தாம். இவ்விதமான நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள்தாம். இவ்விதம் சாரல்நாடனின் கண்களில் தென்படாமல் விடுபட்டுப் போன எழுத்தாளர் வேறு யாருமல்லர் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவராகக் கருதப்படும் அறிஞர் அ.ந.கந்தசாமிதான். 

•Last Updated on ••Saturday•, 10 •May• 2014 20:57•• •Read more...•
 

இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் , ஒரு பதிவுக்காக.....

•E-mail• •Print• •PDF•

இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் , ஒரு பதிவுக்காக.....இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் , ஒரு பதிவுக்காக, இங்கு தரப்படுகின்றன. பதிவு செய்தல் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை. பதிவு செய்தலென்பது விமர்சனமல்ல. இணையத்தில் வலைப்பதிவுகளினூடு, மின்சஞ்சிகைகளினூடு எனப் பல்வேறு வழிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தையும் பதிவு செய்கின்றார்கள். இணையம் தரும் வசதியினைப் பாவித்துப் படைப்புகள் பற்றிய விபரங்களைப் பலருடனும் பகிரிந்துகொள்வதன் மூலம் ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள முடிகிறது.  அது பயனுள்ளது. ஆக்கபூர்வமானது. படைப்புகள் வாசகர்களைச் சென்றடைவதற்கு இவ்விதமான பதிவுகள் முக்கியமானவை. இன்று காலம் மாறி விட்டது. இணையம் படைப்புகளை உடனுக்குடன் உலகின் சகல மூலைகளுக்கும் கொண்டு செல்கின்றது. மிகுந்த வல்லமை மிக்க ஊடகமான இணையத்தைத் திறனாய்வாளர்கள் மிக அதிக அளவில் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நினைக்கின்றேன்.

•Last Updated on ••Saturday•, 05 •April• 2014 04:56•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 38 : நட்சத்திரத் துணையுடன் தொடரும் பயணம்!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 38 : நட்சத்திரத் துணையுடன் தொடரும் பயணம்!சஞ்சிகைகளில் 'கணையாழி' எனக்கு மிகவும் பிடித்த சஞ்சிகைகளிலொன்று. இம்மாத (மார்ச் 2014) இதழில் வெளிவந்திருந்த கவிதைகளிலொன்று அன்பாதவனின் 'நட்சத்திரத் துணை'. இந்தக் கவிதை இவ்விதழ்க் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதையென்று கூறுவேன். கவிதை இதுதான்:

நட்சத்திரத் துணை

- அன்பாதவன் -

அகாலத்தில் தொடங்கியதென் பயணம்
பயணப் பைக்குள் ஞாபகச் சுமைகள்
மவுனத்தில் மனைவி உறைய
மகனுக்கோ இறுக்க முகம்...
மகள் விழிகளில் சோகநீரின் பளபளப்பு
வாலாட்டும் வளர்ப்புகளின் கேவல்களை
உதறி
வாகனமேற
இயலுமோ துயில...
துணைக்கு வரும் நட்சத்திரங்களுடனான
உரையாடலோடு
அகாலத்தில் தொடங்கியதென் பயணம்.

•Last Updated on ••Wednesday•, 02 •April• 2014 16:43•• •Read more...•
 

எழுத்தாளர் சீர்காழி தாஜ் 'அமெரிக்கா' தொகுப்பு பற்றி 24.8.1998இல் எழுதிய கடிதம்.

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் சீர்காழி தாஜின் 'அமெரிக்கா' தொகுப்பு பற்றி 24.8.1998இல் எழுதப்பட்ட கடிதம். - தமிழகத்தில் 'ஸ்நேகா' பதிப்பகத்தாரால் 1996இல் வெளியிடப்பட்ட எனது சிறுகதைகளும், குறுநாவல் 'அமெரிக்கா'வும் அடங்கிய தொகுப்பான 'அமெரிக்கா' பற்றி எழுத்தாளர் சீர்காழி தாஜ் எனக்குத் தொகுப்பு பற்றிய தனது கருத்துகளைத் தெரிவித்துக் கடிதமொன்றினை அனுப்பியிருந்தார். அதன் பின்னர் அவர் இன்னுமொரு கடிதத்தினை எனது நல்லூர் நகர அமைப்பு ஆய்வு பற்றிய நூலான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு'  பற்று எழுதி அனுப்பியிருந்தார். எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்த கடிதமது. என்னை யாருக்குமே தமிழக்த்தில் தெரிந்திருக்கச் சாத்தியமில்லாத சந்தர்ப்பத்தில், என நூல்களை வாசித்துவிட்டுச் சீர்காழியிலிருந்து எனக்குக் கடிதங்கள் சில அனுப்பியிருந்தார் எழுத்தாளர் சீர்காழி தாஜ். அக்குறிப்புகள் ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றன. அவரது இன்னுமொரு கடிதமான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' பற்றிய கடிதம் பின்னொரு சமயம் பதிவுகளில் பிரசுரமாகும். மேற்படி கடிதத்தில் ஒரு சில சொற்கள் தெளிவாகத் தெரியாததால், அவை கூறும் கருத்துக்கு இடையூறு செய்யாமலிருப்பதால் தவிர்த்திருக்கின்றேன்.  - வ.ந.கி -

'மனித மூலம்' தத்துவம் பேசினாலும் இனிக்கும் தகவல்கள் ஓர் ஆறுதல். 'சுண்டெலிகள்' அப்படியல்ல. மிக உயர்ந்த கதை வடிவம். சரியான குறியீட்டுத்தளத்தில் நேர்த்தியான பின்னல். உயரத்துக்குகாகப் போராடும் கீழ்த்தட்டு நசிந்த உடல்களைப் படம் பிடித்துக் காட்டும் முற்போக்குக் கதைவடிவம். 'கணவன்' நெகிழ்ச்சி கூடிய கதை.  மானிட வர்க்கத்திற்குச் சந்தேகம் ஒரு பாணி. குடிக்கிறபோதுதான் இந்தத் தடுமாற்றமென்பதில்லை. நல்ல நிலையில் கூட  நாலுகால் பாய்ச்சலில்  மூளையைப் பற்றும்.  கதை தெரிவு  தேடிகொண்டிருக்கிற வாதம் பெண்ணியத்தை மதிப்பதாக இருந்தது. 'இல்லாள் வருவதற்கு ' என்றொரு சொற்சிலம்பு இந்தக் கதையில் ருசிக்க வைத்த நடை. 'ஒரு முடிவும் விடிவும்' யமுனா தி.ஜானகிராமனின் மோகமுள் ஜமுனாவை ஞாபகமூட்டியது.  மறு பிறவி போலும். பெண்கள் எப்பவும் பாவங்கள்தாம்.

•Last Updated on ••Sunday•, 30 •March• 2014 23:28•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 37 : எமது மாறிய உலகினுள் (In Our Translated World)

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 37 : எமது மாறிய உலகினுள் (In Our Translated World)In our Translated World என்னும் கவிதைத்தொகுதி அண்மையில் வெளிவந்த இரு-மொழிக் கவிதைத்தொகுதி. 'டொராண்டோ' பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்வா கனகநாயகத்தைத் தொகுப்பாசிரியராகக்கொண்டு வெளிவந்துள்ள இரு-மொழிக் கவிதைத்தொகுதி. 'தமிழ் இலக்கியத்தோட்டம்(கனடா);  'டிரில்லியம் அறக்கட்டளையி'ன்'   நிதியுதவியுடன் வெளியிட்டுள்ள தொகுப்பு. இவ்விதமானதொரு தொகுதிக்கு நிதியுதவி வழங்கிய 'டிரில்லியம் அறக்கட்டளையும், இவ்விதமானதொரு தொகுதியினை வெளியிட முனைந்த தமிழ் இலக்கியத் தோட்டமும், வெளியிட்ட பதிப்பகமான TSARஉம் பாராட்டுக்குரியவை. இந்த நூலினை எனக்கொரு பிரதியினை அனுப்பிய எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துக்கும் எனது நன்றி. இத்தொகுப்பினை நான் வாசித்தபொழுது இதனை நான் அணுகியது பின்வருமாறு: இத்தொகுப்பின் தொகுப்பாசிரியரின் தொகுப்பு பற்றிய நோக்கம், இத்தொகுப்புக்கான படைப்புகளைத் தேர்ந்தெடுத்தவர்கள், மொழிபெயர்ப்பு மற்றும் படைப்புகள். தொகுப்பாளரின் நோக்கத்துக்கமைய படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனவா என்று இவ்விதமான அணுகுமுறையின் மூலம் தர்க்கரீதியாகச் சிந்தித்து முடிவெடுத்தேன். அது பற்றிய எனது கருத்துகளின் பதிவுகளே இக்கட்டுரை.

•Last Updated on ••Sunday•, 02 •February• 2014 17:54•• •Read more...•
 

வ.ந.கிரிதரனின் நான்கு ஆங்கிலக் கவிதைகளும், தமிழ் மொழிபெயர்ப்புகளும்!

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரனின் நான்கு ஆங்கிலக் கவிதைகளும், தமிழ் மொழிபெயர்ப்புகளும்![ அணமையில் எனது வலைப்பதிவுக்காக எழுதிய ஆங்கிலக் கவிதைகளும், நானே மொழிபெயர்த்த அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளும் ஒரு பதிவுக்காக இங்கு பதிவுகள் வாசகர்களுக்காக பிரசுரமாகின்றன. - வ.ந.கி. ]

1. ஒரு பொறாமைமிக்க கவிஞன்!

- வ.ந.கிரிதரன் -

எனக்குப் பறவைகளின்மேல் பொறாமையாகவுள்ளது.

சிலநேரங்களில் என்னை அவற்றிடத்திலிருத்தியுள்ளவாறு
கனவு காண்கின்றேன்.

நிலமானது வசந்தத்தில் பூத்துக்குழுங்கும்போது
அவை இங்கு, வடக்குக்கு தெற்கிலிருந்து
வருகின்றன.

அவை களைப்பற்றுப் பறப்பவை.

•Last Updated on ••Saturday•, 25 •January• 2014 23:50•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 36 : கோபிநாத்தின் 'நீயா நானா' பற்றி நான்!

•E-mail• •Print• •PDF•

கோபிநாத்தின் 'நீயா நானா' பற்றி நான்! ஆழி பதிப்பக உரிமையாளர் செந்தில்நாதன்நண்பர் ஆழி பதிப்பக உரிமையாளர் செந்தில்நாதன் கூறியதால் இன்று (ஜனவரி 19, 2014)  கோபிநாத்தின் 'நீயா நானா' பார்க்கவேண்டுமென்று நினைத்தேன். சந்தர்ப்பமும் அமைந்தது. இதுதான் நான் முதல்முறையாக 'நீயா நானா' நிகழ்வொன்றினை முழுமையாகப் பார்ப்பது. கல்லூரியில் படிக்கும் ஏழை , பணக்கார மாணவர்களின் உளவியலை அவர்களுடனான உரையாடல் மூலம் கோபிநாத் வெளிக்கொணர்ந்தார். இந்நிகழ்வின் முக்கியமானதோர் அம்சமாக அவர் ஏழை மாணவர்கள் பக்கத்திலுள்ளவர்களிடம் 'நேரு இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்பு பற்றியும், பணக்கார மாணவர்கள் பக்கத்திலிருந்தவர்களிடம் 'அம்பேத்கார் சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்பு பற்றியும் இரண்டு நிமிடங்களாவது பேசக் கூறியபோதூ அவர்களிலொ ருவராளாவது பேச முடியவில்லை. அப்பொழுது கோபிநாத் மாணவர்களைப் பார்த்து இதனைப் பார்வையாளர்களிடமே மதிப்பிட விட்டுவிடுகின்றேன். என்று கூறியதுடன் மாணவர்களைப் பார்த்து இதே நேரம் உங்களிடம் இரு நடிகர்களைப் பற்றிப் பேசுமாறு கூறினால் பேச மாட்டீர்களா என்று கேட்பார். மாணவர்களை ஆழமாகச் சிந்திக்க வைக்கும் கேள்வியது. இன்னுமொரு மாணவர் அரசியல்வாதியாகப் போக விரும்புவதாகக் கூறியிருப்பார். அவராலும் நேரு, அம்பேத்கார் பற்றிச்சிறிது நிம்மிடங்களாவது பேச முடியவில்லை. வெட்கப்பட வேண்டிய விடயமிது. அதனையும் கோபிநாத் சுட்டிக்காட்டியிருப்பார்.

•Last Updated on ••Monday•, 20 •January• 2014 00:22•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 35: வீரகேசரியில் வேலை தேடிய அனுபவம்!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - 35: வீரகேசரியில் வேலை தேடிய அனுபவம்!மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலைப் படிப்பினை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த சமயம். அக்காலகட்டத்தில் இலங்கையிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளெல்லாம் புதுக்கவிதைகக்கென்று ஒரு பகுதியினை ஒதுக்கி நிறைய கவிதைகளை வெளியிட்டு வந்தன. வீரகேசரியும் தனது வாரவெளியீட்டில் 'உரை வீச்சு' என்னும் தலைப்பிட்டு கவிதைகளை வெளியிட்டு வந்தது. அக்காலகட்டத்தில் வீரகேசரியின் 'உரை வீச்சில்' எனது ஆரம்பகாலக் கவிதைகள் பல வெளிவந்திருந்தன. அதுபோல் தினகரன், சிந்தாமணி, ஈழமணி போன்ற பத்திரிகைகளிலும் எனது ஆரம்பகாலக் கவிதைகள் பல வெளியாகியிருந்தன.
 
அச்சமயத்தில் வீரகேசரியில் ஓர் அறிவித்தல் வெளிவந்திருந்தது. வீரகேசரிக்கு 'உதவி ஆசிரியர்' வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பதுபற்றிய அறிவித்தல். எனக்கு அக்காலகட்டத்தில் பத்திரிகையொன்றில் வேலை பார்ப்பது பற்றிய கனவொன்றுமிருந்தது. அச்சமயத்தில் வீரகேசரியின் ஆசிரியராகவிருந்தவர் சிவப்பிரகாசம் அவர்கள். வீரகேசரிக்கு உதவி ஆசிரியர் தேவை என்ற அறிவித்தலைப் பார்த்ததும் எனக்கோர் ஆசை. உடனடியாக வீரகேசரியின் அலுவலகத்துக்குச் சென்றேன். அப்பொழுது ஆசிரியர் அங்கில்லை. அங்கிருந்த ஏனையவர்களிடம் உதவி ஆசிரியர் வேலை பற்றி விசாரித்தேன். என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். அவர்களும் என் எழுத்தனுபவம் போதும். ஆசிரியருடன் வந்து கதையுங்கள் என்றார்கள். ஆசிரியர் விடுமுறையிலிருப்பதாகவும் மீண்டும் வேலைக்கு வரும்போது  வந்து கதைக்கும்படியும் கூறினார்கள்.

•Last Updated on ••Thursday•, 16 •January• 2014 20:43•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 34: பால்ய காலத்து வாசிப்பனுபவம் - பிள்ளைப் பிராயத்திலே......

•E-mail• •Print• •PDF•

- என் பால்ய காலத்து வாசிப்பனுபவத்தை விபரிக்குமிக்கட்டுரை ஏற்கனவே 'பதிவுகள்' , 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளியான கட்டுரைகளிலொன்று. தற்போது மேலும் சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. -

பால்ய காலத்து வாசிப்பனுபவம்: பிள்ளைப் பிராயத்திலே.....அப்பொழுது நான் வவுனியாவில் என் பெற்றோருடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். வவுனியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். என் அம்மாவும் அங்குதான் ஆசிரியையாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பொழுதுதான் நான் எழுத்துலகில் மெல்ல மெல்ல காலடி வைத்துக் கொண்டிருந்தேன். எனது 'பொங்கல்' பற்றிய சிறுவர் கவிதையொன்றினை 'பொங்கலோ பொங்கல்' என்னும் தலைப்பில் சுதந்திரன் தனது பொங்கல் மலரில் பிரசுரித்திருந்தது. உயர்வகுப்பு மாணவர்களுக்காக ஈழநாடு வாரமலர் நடாத்திய 'தீபாவளி இனித்தது' என்னும் கட்டுரைப் போட்டிக்காக ஆறாம் வகுப்பு மாணவனாக நான் இனிக்க இனிக்க எழுதி அனுப்பிய கட்டுரையினைப் பிரசுரிக்கா விட்டாலும் பாராட்டி என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது ஈழநாடு. ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம், தினமணிக் கதிர், அம்புலிமாமா, பொம்மை, பேசும்படம், தினமணி, ராணி, ராணிமுத்து, மற்றும் ஈழத்துப் பத்திரிகைகளான சுதந்திரன், ஈழநாடு, அந்தனிசிலின் 'தீப்பொறி' என்று வீடு முழுவதும் பத்திரிகை, சஞ்சிகைகளால் அப்பா நிறைத்து வைத்திருந்தார். அனைத்துச் சஞ்சிகைகளினதும் தீபாவாளி மலர்களையெல்லாம் அப்பா வாங்கியிருந்தார். அவை தவிர பொன்மலர், பால்கன், வேதாள மயாத்மாவின் இந்திரஜால் காமிக்ஸ் எனப் பல்வேறு 'காமிக்ஸ்' வெளியீடுகளையும் அப்பா மறந்திருக்கவில்லை. இவை தவிர ராஜாஜியின் 'வியாசர் விருந்து' (மகாபாரதம்), 'சக்கரவர்த்தித் திருமகன்' (இராமாயணம்), சேக்கிழாரின் பெரியபுராணம், பாரதியார் கவிதைகள் என மேலும் பல நூல்கள். அப்பாவுக்கு இரு பெரும் இதிகாசங்களான 'இராமாயணம்', 'மகாபாரதம்' ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு. அதன் காரணமாகவே எங்களுக்குப் பெயர்களை (கிரிதரன், பாலமுரளி, சசிரேகா, மைதிலி, தேவகி) வைத்தபொழுது அவ்விரு இதிகாசங்களிலிருந்தே வைத்ததாக அம்மா கூறியிருந்தார்.  

•Last Updated on ••Friday•, 17 •January• 2014 18:32•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 33 : புஷ்பராணியின் 'அகாலம்: ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்'

•E-mail• •Print• •PDF•

a_pushparanee.jpg - 4.87 Kbbook_akaalam.jpg - 10.53 Kbஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அதில் முன்னணியிலிருந்த பெண்களில் மயிலிட்டி  புஷ்பராணி முக்கியமானவர். பின்னர் பல்வேறு அமைப்புகள் உருவாகக் காரணமாகவிருந்த ஆரம்பகாலத் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் அமைப்பான தமிழ் மகளிர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை அமைப்பிலும் (TLO) தீவிரமாக இயங்கியவர். புலோலி வங்கிக் கொள்ளையில் சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு காவற்துறையினரின் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானவர். 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்னும் நூலை எழுதிய புஷ்பராஜாவின் சகோதரி. இவரது 'அகாலம் (ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்)' என்னும் நூலை அண்மையில் வாசித்தேன். 'கருப்புப் பிரதிகள்' வெளியீடாக வெளிவந்த நூல்.  

•Last Updated on ••Sunday•, 12 •January• 2014 19:58•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 32: நா.பா.வின் 'நித்திலவல்லி' தந்த நினைவுகள்...

•E-mail• •Print• •PDF•

நா.பார்த்தசாரதி கடந்த சில வருடங்களில் கல்கி, நா.பார்த்தசாரதி போன்ற பல எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழக அரசினால் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளதால் அவை தமிழகத்தின் பல பதிப்பகங்களுக்கும் அவர்களது வியாபாரத்துக்கு உதவி வருகின்றன. அண்மையில் டொராண்டோ நூலகத்தில் நா.பார்த்தசாரதியின் 'நித்திலவல்லி' 'கபாடபுரம்' போன்ற நாவல்களின் கவிதா பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்த புதிய பதிப்புகளைப் பார்த்தேன். அழகாக அச்சிட்டு, வெளியிட்டிருக்கின்றார்கள். இவற்றில் 'நித்திலவல்லி'  நாவலை, ஓவியர் கோபுலுவின் அழகான ஓவியங்களுடன் எனது மாணவப் பருவத்தில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது வாசித்திருக்கின்றேன். வெகுசன படைப்புகளைத் தந்த எழுத்தாளர்களில் எனக்கு நா.பார்த்தசாரதியும் பிடித்த எழுத்தாளர்களிலொருவர். அவரது சமூக மற்றும் சரித்திர நாவல்களான குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம், நித்திலவல்லி போன்ற நூல்களை நான் அன்று விரும்பி வாசித்திருக்கின்றேன். நா.பா.வின் எழுத்து வாசிப்பதற்கு இனிமையானது. அவர் ஒரு தமிழ்ப் பண்டிதர் என்பதால் நெஞ்சைனையள்ளும் இனிய தமிழில் அவரது படைப்புகள் விளங்கும். அந்தத்தமிழுக்காகவே வாசிக்கலாம். உதாரணமாக 'நித்திலவல்லி' பின்வருமாறு தொடங்குகின்றது:

•Last Updated on ••Saturday•, 14 •December• 2013 06:11•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 31: எனக்குப் பிடித்த திரைப்படப் பாடல்கள்!

•E-mail• •Print• •PDF•

- அண்மையில் முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட 'எனக்குப் பிடித்த திரைப்படப்பாடல்கள்' பற்றீய கருத்துகளை 'வாசிப்பும், யோசிப்பும்' பகுதியில் ஒரு பதிவுக்காகப் பகிர்ந்து கொள்கின்றேன். 'வாசிப்பும் யோசிப்பும்' பகுதியில் வாசித்தவற்றையும், யோசித்தவற்றையும், வாசித்து யோசித்தவற்றையும் பகிர்ந்துகொள்கின்றேன். இத்திரைப்படப்பாடல்கள் கேட்டு யோசித்தவையென்பதால் யோசிப்பும் பகுதிக்குள் அடக்கலாம், அத்துடன் பாடல் வரிகளை வாசித்ததால் 'வாசிப்பும், யோசிப்பும்' பகுதிக்குள்ளும் அடக்கலாம். எனவே இப்பகுதிக்கும் இவை பொருத்தமானவையே. - வ.ந.கி- 

ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி!

எனக்கு மிகவும் பிடித்த பழைய திரைப்படப் பாடல்களிலொன்று 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி'. எம்.எஸ்.வி/ டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின் இசையில் எஸ்.ஜானகியின் நெஞ்சையள்ளும் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் எம்ஜிஆர்/சரோஜாதேவி இணைந்து நடித்த 'பாசம்' திரைப்படத்தில் வருகிறது. டி.ராமண்ணாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மேற்படி 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி' பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் மருதகாசி. இந்தத் திரைப்படத்தில் எம்ஜிஆர் திருடனாக நடித்திருப்பார். அத்திருடனைக் காதலிக்கும் நாயகியாக வரும் சரோஜாதேவி மாட்டு வண்டியில் மேற்படி பாடலைப் பாடியபடி வருவார். திருடனைக் காதலிக்கும் நாயகி தன் காதலைப் கூறும் பாங்கு சுவையானது. ஒரு திருடனின் வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருக்கும் விடயங்களைக் கொண்டே கவிஞர் மருதகாசி இப்பாடலை இயற்றியிருப்பார். காட்டில் நாயகியைக் கண்ட திருடனான நாயகன் தன் இயல்பின்படி அவளிடன் உள்ளதைக் கொடு என்று வற்புறுத்தவே நாயகியோ கையில் எதுவும் இல்லாத காரணத்தால் தன் கண்ணில் உள்ளதைக் கொடுத்து விட்டேன் என்று பின்வருமாறு பாடுகின்றாள்எனக்கு மிகவும் பிடித்த பழைய திரைப்படப் பாடல்களிலொன்று 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி'. எம்.எஸ்.வி/ டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின் இசையில் எஸ்.ஜானகியின் நெஞ்சையள்ளும் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் எம்ஜிஆர்/சரோஜாதேவி இணைந்து நடித்த 'பாசம்' திரைப்படத்தில் வருகிறது. டி.ராமண்ணாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மேற்படி 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி' பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் மருதகாசி. இந்தத் திரைப்படத்தில் எம்ஜிஆர் திருடனாக நடித்திருப்பார். அத்திருடனைக் காதலிக்கும் நாயகியாக வரும் சரோஜாதேவி மாட்டு வண்டியில் மேற்படி பாடலைப் பாடியபடி வருவார். திருடனைக் காதலிக்கும் நாயகி தன் காதலைப் கூறும் பாங்கு சுவையானது. ஒரு திருடனின் வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருக்கும் விடயங்களைக் கொண்டே கவிஞர் மருதகாசி இப்பாடலை இயற்றியிருப்பார். காட்டில் நாயகியைக் கண்ட திருடனான நாயகன் தன் இயல்பின்படி அவளிடன் உள்ளதைக் கொடு என்று வற்புறுத்தவே நாயகியோ கையில் எதுவும் இல்லாத காரணத்தால் தன் கண்ணில் உள்ளதைக் கொடுத்து விட்டேன் என்று பின்வருமாறு பாடுகின்றாள்:

•Last Updated on ••Friday•, 13 •December• 2013 23:17•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 30: 'சோபி'யின் உலகம் ( தத்துவத்தின் வரலாறு பற்றிய நாவல்); அபுனைவின் புனைவு!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - 30: 'சோபீஸ் உலகம் ( தத்துவத்தின் வரலாறு பற்றிய நாவல்); அபுனைவின் புனைவு!எனக்கொரு பழக்கமிருக்கிறது. எங்கே நூல்கள் விற்பனைக்குக் கழிவு விலையிலிருந்தாலும் விடுவதில்லை.  ஒரே நூலின் பல்வேறு பதிப்பகங்களின் வெளியீடுகளென்றாலும் வாங்கிவிடுவேன். குறிப்பாக இங்கு 'டொராண்டோ'வில் கோடைக் காலமென்றால்  பலர் வீடுகளில் 'கராஜ் சேல்ஸ்' நடக்கும். அவ்விதமான விற்பனை நிகழ்வுகளில் நூல்களிருந்தால் சென்று பார்க்காமல் இருப்பதில்லை. அவ்விதமான கழிவு விற்பனை நிகழ்வுகளில் இருபத்தைந்து சதம், ஐம்பது சதத்துகெல்லாம் நூல்களை வாங்க முடியும். மிகவும் நல்ல தரமான நூல்களையெல்லாம் வாங்கும் சந்தர்ப்பங்களுண்டு. பல ஆங்கில செவ்விலக்கியப் படைப்புகள் பலவற்றை அவ்விதமான நிகழ்வுகளில் வாங்கியிருக்கின்றேன். அதுபோல் இங்குள்ள நூலகக் கிளைகளில் அவ்வப்போது நடைபெறும் நூல் விற்பனை நிகழ்வுகளில் நூல்கள் வாங்கத் தவறுவதில்லை. அவ்விதமான சில விற்பனை நிகழ்வுகளில் மூன்று டாலர்களுக்கு நூலகம் விற்கும் துணிப்பையினை வாங்கினால், அந்தப் பை கொள்ளூம் அளவுக்கு நூல்களை அள்ள விடுவார்கள். புனைவு, அபுனைவு என்று பல்துறைகளிலும் மிகவும் தரமான நூல்களை நான் நூல் நிலைய விற்பனை நிகழ்வுகளில் வாங்கியிருக்கின்றேன். காப்ரியல் கார்சியா மார்கெவ்ஸ், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய், ஜேர்சி கொசின்ஸ்கி, ஜான் மார்டெல், சார்ள்ஸ் டிக்கன்ஸ், ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, ஸ்டீன்பெக், கார்ல் மார்க்ஸ், சிக்மண்ட் பிராய்ட், காலிட் ஹுசைன்..  என்று பலரது புகழ்பெற்ற படைப்புகளை வாங்கியிருக்கின்றேன். நூலகங்கள் விற்பனையில் மிகவும் நல்ல நிலையிலுள்ள நூல்கள் கிடைக்கும். நல்ல நூல்களென்றாலும், அந்தக் கிளையில் அந்நூல் அதிகம் வாசகர்களால் பாவிக்கப்படாமலிருந்தால் குறிப்பிட்ட காலத்தின்பின் விற்று விடுகின்றார்கள் போலும். ஏனெனில் நான் வாங்கிய பல நூல்கள் புதியவையாகவே காணப்பட்டன. ஒருமுறை ஸ்நேகா பதிப்பகத்தில் அக்காலகட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த நண்பர் பாலாஜி ஜேர்சி கொசின்ஸ்கியின் 'நிறமூட்டிய பறவைகள்' நாவலினைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடவிருப்பதாகக் கூறியபோது என்னிடமிருந்த அந் நூலின் இரு பிரதிகளிலொன்றினை அனுப்பி வைத்தேன். அவ்விரு நூல்களையும் நூலகமொன்றின் புத்தக விற்பனையில்தான் வாங்கியிருந்தேன். அத்தமிழாக்கம் அண்மையில் வெளிவந்திருப்பதாக அறிந்தபோது மகிழ்ச்சியாகவிருந்தது.

•Last Updated on ••Monday•, 09 •December• 2013 18:04•• •Read more...•
 

கவிதை: பொருள் சார்ந்த நிரல்! (An object oriented program)

•E-mail• •Print• •PDF•

- எனது வலைப்பதிவுக்காக எழுதிய 'An object oriented program' கவிதையின் தமிழாக்கம். - வ.ந.கி - -

பொருள் சார்ந்த 'புறோகிறாம்' (An object oriented program)

வீழும் இலை, பாடும் புட்கள்,
நீல வான், மரங்கள், சுடரும் நட்சத்திரங்கள்,
மானுடர்....
நாம் இயங்கும் வெளி-நேர
நிரலினை
எழுதியது யார்?

•Last Updated on ••Monday•, 11 •November• 2013 22:23•• •Read more...•
 

இரவு!

•E-mail• •Print• •PDF•

எனது வலைப்பதிவுக்காக Night  என்னும் தலைப்பிலெழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு.

Poem: The  (M) Other land!  By V.N.Giritharan

தாய்ப்பறவை தனது
சிறகுகளைப் பரந்து
விரிக்கிறது.

கருமையின் சிறகுகள்.

•Last Updated on ••Thursday•, 24 •October• 2013 23:09•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 29 : வெ.சா.வின் 'தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்' கட்டுரையும், வியாளம், வியாளி பற்றிய கருத்துகள் சிலவும்.

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் - 29 : வெ.சா.வின்  'தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்' கட்டுரையும், வியாளம், வியாளி பற்றிய கருத்துகள் சிலவும்.வெ.சா.அவர்கள் தனது  'தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்' கட்டுரையில் "வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும்." என்று வேண்டுகோளொன்றினை விடுத்திருந்தார். அது பற்றிச் சில வார்த்தைகளைப் பதிவு செய்வதே இக்குறிப்புகளின் நோக்கம்.  தமிழ் இலக்கியத்தில் வியாளம் என்ற சொல் பாம்பு, புலி, யாளி, கெட்ட குணமுள்ள யானை போன்ற பல அர்த்தங்களில் கையாளப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.  தோலாமொழித்தேவர் இயற்றிய 'சூளாமணி'யில் 912 பாடலாகப் பின்வரும் பாடல் வருகிறது.

•Last Updated on ••Wednesday•, 16 •October• 2013 17:22•• •Read more...•
 

கவிதை: ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்!

•E-mail• •Print• •PDF•

'ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்!' என்னுமிக் கவிதை எனது வலைப்பதிவுக்காக நான் எழுதிய A Refugee’s Thoughts On Birds என்னும் ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கவிதை 'சிறிலங்கா கார்டியன்' (The Srilanka Guardian) இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது.

'ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்!' என்னுமிக் கவிதை எனது வலைப்பதிவுக்காக நான் எழுதிய A Refugee’s Thoughts On Birds என்னும் ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கவிதை 'சிறிலங்கா கார்டியன்' (The Srilanka Guardian) இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது.

சிறியதிலிருந்து பெரியதுவரை,
மெதுவானதிலிருந்து
விரைவானதுவரை,
அவதானிப்புகள் பறவைகள்
பற்றிய,
அவை பறக்கும் வெளி-நேரம் பற்றிய
அதிக விபரங்களைக்
கற்றுத்தந்துள்ளன.

•Last Updated on ••Wednesday•, 13 •July• 2016 06:07•• •Read more...•
 

கவிதை: போர்முனைப்புக் கொண்ட இவ்வுலகத்தின் ஆட்சியாளர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்.

•E-mail• •Print• •PDF•

மகா அசோகா,

- இந்தக் கவிதை எனது வலைப்பதிவுக்காக எழுதிய My humble request to the bellicose rulers of the world என்னும் ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கவிதை 'சிறிலங்கா கார்டியன்' (The Srilanka Guardian) இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது.

கவிதை: போர்முனைப்புக் கொண்ட இவ்வுலகத்தின் ஆட்சியாளர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்.

- வ.ந.கிரிதரன் -

போர்முனைப்புக் கொண்ட இவ்வுலகத்தின்
ஆட்சியாளர்களுக்கு எனது
பணிவான வேண்டுகோளிது.

உங்களுக்கு அசோகாவைத் தெரியுமா?

மகா அசோகா,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
இந்தியாவை ஆண்ட
உன்னதம்மிக்க
இந்தியச் சக்கரவர்த்தி.

•Last Updated on ••Sunday•, 06 •October• 2013 21:16•• •Read more...•
 

தேவன் - யாழ்ப்பாணம்!

•E-mail• •Print• •PDF•

தேவன் (யாழ்ப்பாணம்)[ தேவன் (யாழ்ப்பாணம்) பற்றிய இக்கட்டுரையை  அவரைப் பற்றிய விரிவானதொரு ஆய்வுக்கு அடிகோலுமொரு ஆரம்பக் கட்டுரையாகக் குறிப்பிடமுடியும். இக்கட்டுரை எழுத்தாளர் முல்லை அமுதனால் தொகுக்கப்பட்டு வெளிவரவிருக்கும் 'இலக்கியப் பூக்கள் -2' நூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை. ஏற்கனவே முல்லை அமுதனால் தொகுக்கப்பட்டு வெளியான 'இலக்கியப் பூக்கள்' தொகுப்பு நூலின் தொடர்ச்சியாக வெளிவரவுள்ள நூலிது. - வ.ந.கி ] நான் யாழ் இந்துக் கல்லூரியிலும், வவுனியா மகாவித்தியாலயத்திலும் கல்வி பயின்றிருக்கின்றேன். இவற்றில் என் எழுத்தார்வம் தொடங்கியது வவுனியா மகா வித்தியாலய மாணவனாகவிருந்த சமயத்தில்தான். அப்பொழுதுதான் ஈழநாடு, சுதந்திரன் ஆகியவற்றில் என் ஆரம்பகால, சிறுவர் படைப்புகள் வெளிவந்தன.  அப்பொழுதுதான் அகில இலங்கைரீதியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதலாவதாக வந்ததும் நிகழ்ந்தது. பின்னர் என் உயர்தரக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் தொடர்ந்தபொழுது அங்கே இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கால் பதித்த எழுத்தாளர்கள் சிலர் ஆசிரியர்களாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். சொக்கன் என அறியப்பட்ட சொக்கலிங்கம், தேவன் - யாழ்ப்பாணம் என்று அறியப்பட்ட மகாதேவன் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். எனக்கு எப்பொழுதுமே ஒரு வருத்தம். என் எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்த எழுத்தாளர்கள் எவரிடமும் மாணவனாகக் கல்வி கற்கவில்லையே என்பதுதான் அந்த வருத்தம். என எழுத்தார்வதிற்கு முழுக்க முழுக்கக் காரணமாகவிருந்தது என் வீட்டுச் சூழலே. அப்பாவின் வாசிக்கும் பழக்கமும், வீடு முழுக்க அவர் வாங்கிக் குவித்த பத்திரிகைகள், சஞ்சிகைகளும்தாம் என் எழுத்தார்வத்தின் பிரதானமான காரணங்கள். இருந்தாலும் யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியர்களாக அப்பொழுது கடமையாற்றிக் கொண்டிருந்தவர்களில் ஒருவரான தேவன் - யாழ்ப்பாணம் அவர்களை அவ்வப்போது யாழ்நகரில் நடைபெற்ற நிகழ்வுகளின் மூலம், அவரது படைப்புகளின் மூலம் அறிந்து கொண்டிருந்தேன். ஆச்சியின் வீட்டில் கிடந்த பரணைத் தேடியபொழுது பழைய தினத்தந்தி பத்திரிகைப் பிரதிகள், மறைமலையடிகளின் நாகநாட்டரசி குமுதவல்லி, கோகிலாம்பாள் கடிதங்கள், திப்புசுலதான் கோட்டைமற்றும் தேவன் -யாழ்ப்பாணம் அவர்களால்  தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 'மணிபல்லவம்' என்னும் பெயரில் வெளியாகியிருந்த ' புகழ்பெற்ற ஆங்கில செவ்விலக்கியங்களிலொன்றான Treasure Island நாவல் என பல படைப்புகள் கிடைத்தன. மேற்படி மணிபல்லவம் நாவலை அன்றைய காலகட்டத்தில் விரும்பி வாசித்துள்ளேன்.

•Last Updated on ••Sunday•, 27 •September• 2015 19:03•• •Read more...•
 

Poem: The (M) Other land! By V.N.Giritharan

•E-mail• •Print• •PDF•

Poem: The  (M) Other land!  By V.N.Giritharan

எனது ஆங்கில வலைப்பதிவுக்காக எழுதிய இன்னுமொரு கவிதை  The (M) Other land. அதனைப் 'பதிவுகள்' வாசகர்களுக்காக இங்கு பதிவு செய்கின்றேன்.

•Last Updated on ••Wednesday•, 18 •September• 2013 22:16•• •Read more...•
 

'The body' presents us with a mature writer looking back on his past. - By V.N.Giritharan -

•E-mail• •Print• •PDF•

'The body' presents us with a mature writer looking back on his past. -  By V.N.Giritharan -Writer Stephen King.The novella , 'The body' which is the centre piece of the book , 'Different Seasons' by Stephen King is the story about a mature writer Gorden Lachance who is also a famous horror writer like Stephen King, and his childhood traumatic experience with the body of dead human being. Subtitled 'Fall From Innocence', it is a story about man's search for the meaning of his life. As Stephen King points out 'to the three Ds - death, destruction and destiny where would be without them?', this short novella is about the death and uncertainty of life. It is an autobiographical novel, told by narrator Gordon Lachance. Gordon Lachance looks back on his past and analyzes the events which happened on that labor weekend when he is twelve years old. Why does he look on his past? What is the purpose of looking back? The four main reasons are imposing control over the events which have troubled him for years, rediscovering the lost passion and pleasure of the writing, reliving the past to get some kind of wholeness in his life, and understanding the past in order to get ready for some future mortality. The first reason is imposing control over the events which have troubled him over the years in a new , fictional form and getting a kind of happiness, and dreadful exhilaration. Gordon Lachance's childhood experience with the dead body of Ray Brower is the  one that urges him to become a writer. It troubles him over the years. Gordon Lachance's childhood experience with the dead body of Ray Brower is the one that urges him to become a writer. He wants to get rid of the pain and suffering caused by that experience. He finds some kind of pleasure , happiness and exhilaration by controlling those event as a writer. The following remarks of Gordon Lachance prove that the above mentioned reason is true. "But it was the first time I had ever really used the place I knew and the things I felt in a piece of fiction and there was a kind of dreadful exhilaration in seeing things, that had troubled me for years come out in a new form, a form over which I had imposed control." ('Different Seasons', 323)

•Last Updated on ••Tuesday•, 13 •October• 2015 21:08•• •Read more...•
 

'Apt Pupil' is a symbolic novella about American society, Nazis' atrocities and human life. - By V.N.Giritharan

•E-mail• •Print• •PDF•

'Apt Pupil' is a symbolic novella about American society, Nazis' atrocities and human life.  - By V.N.GiritharanWriter Stephen King.'Apt Pupil' is a symbolic novella about American society, Nazi atrocities and human life. 'Life is a tiger you have to grab by the tail, and if you don't know the nature of the beast, it will eat you up' says Dick Bowden, Todd's father. It is true. In 'Apt Pupil', Stephen King shows how Todd Bowden loses his hold on the tiger and becomes the nightmare of American society. The author analyzes the ups and downs of American society,  the great human tragedy of the 20th century and   human existence through the symbolic characters Todd Bowden,  Kurt Dussander and Morris Heisel.

Stephen King uses a two way approach to criticize  Americans. He creates Todd Bowden as a symbol for America. Todd Bowden's personality reflects the positive and the negative aspects of his own society.  If you compare Todd Bowden and America, you could easily see the similarities between them. Like America  he is so young, healthy, energetic, hard working and positive. At the same time, his fondness for violence reflects the dark side of America.  When Todd reads the war magazines, he reads with 'a mixture of revulsion and excitement' (King, 118). When he listens to the stories from Dussander , he is not concerned about the sufferings of the victims. Instead, he wants to hear  about 'the firing squads. The guys who had to dig their own graves... German doctors trying to mate women with dogs, putting identical  twins into  refrigerators to see whether they would die at the same time.' ( King, 127, 128). Yes, he wants to hear about all the gooshy stuff. When he listens 'his tongue came out and wetted his lips '(King, 127).  

•Last Updated on ••Monday•, 16 •September• 2013 19:46•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 28: வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்' கவிதையும் மேலுமிரு ஆங்கிலக் கவிதைகளும்!

•E-mail• •Print• •PDF•

பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102 இதழில் வெளியான எனது 'வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்' கவிதையினையும், எனது வலைப்பதிவுக்காக எழுதிய மேலுமிரு ஆங்கிலக் கவிதைகளையும் இம்முறை 'வாசிப்பும், யோசிப்பும்' பகுதியில் பதிவு செய்கின்றேன்.

கவிதை: வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்!

- வ.ந.கிரிதரன்

பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102 இதழில் வெளியான எனது 'வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்' கவிதையினையும், எனது வலைப்பதிவுக்காக எழுதிய மேலுமிரு ஆங்கிலக் கவிதைகளையும் இம்முறை 'வாசிப்பும், யோசிப்பும்' பகுதியில் பதிவு செய்கின்றேன்.

•Last Updated on ••Wednesday•, 11 •September• 2013 23:26•• •Read more...•
 

வ.ந..கிரிதரனின் ஆங்கிலக் கவிதைகள் சில...

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 27: கனடிய பல்லின இலக்கியம் பற்றிய 'டொராண்டோ ஸ்டார்' ஆசிரியருக்கான கடிதமும், 'A Refugee’s Thoughts On Birds' (ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்')  மற்றும் A SQUIRREL AND I (ஓர் அணிலும் நானும்) ஆகிய ஆங்கிலக் கவிதைகளும்.

'A Refugee’s Thoughts On Birds' (ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்'), A SQUIRREL AND I , The damsels of the night sky and their giggles மற்றும் My Belief on E.T   ஆகிய கவிதைகளை அண்மையில் எனது படைப்புகளை உள்ளடக்கியுள்ள ஆங்கில வலைப்பதிவுக்காக எழுதினேன். வலைப்பதிவின் இணைய முகவரி: http://vngiritharan23.wordpress.com/
அக்கவிதைகள் கீழே:

•Last Updated on ••Wednesday•, 11 •September• 2013 23:14•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 27: கனடிய பல்லின இலக்கியம் பற்றிய 'டொராண்டோ ஸ்டார்' ஆசிரியருக்கான கடிதம் பற்றி..

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 27: கனடிய பல்லின இலக்கியம் பற்றிய 'டொராண்டோ ஸ்டார்' ஆசிரியருக்கான கடிதமும், 'A Refugee’s Thoughts On Birds' (ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்')  மற்றும் A SQUIRREL AND I (ஓர் அணிலும் நானும்) ஆகிய ஆங்கிலக் கவிதைகளும்.அண்மையில் 'டொராண்டோவி'ருந்து வெளிவரும் 'டொராண்டோ ஸ்டார்' தினசரியில் ஏப்ரல் 2, 2013இல் வெளியான 'தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதுகள்' பற்றி 'டெப்ரா பிளாக்' ((Debra Black) எழுதிய கட்டுரை பற்றி,  கனடிய பல்லின இலக்கியம், மற்றும் கனடிய இலக்கியம்' பற்றிய எனது கருத்துகளைச் சிறியதொரு வாசகர் கடிதமாக எழுதி அனுப்பியிருந்தேன். அதனை 'டொராண்டோ ஸ்டார்' தனது ஏப்ரல் 4, 2013 பதிப்பிற்கான ஆசிரியர் கடிதத்தில் 'Shedding light on ethnic literature' என்னும் தலைப்பில் பிரசுரித்திருந்தது. அக்கடிதத்தையும், அது கூறும் கருத்துகளையும், அத்துடன் எனது வலைப்பதிவுக்காக எழுதிய ஆங்கிலக் கவிதையினையும் இம்முறை ஒரு பதிவுக்காகப் பதிவு செய்கின்றேன். மேற்படி கடிதம் சிறியதாகவிருந்தாலும் அது கூறும் விடயம் மிகவும் முக்கியமானது. கனடாவின் உத்தியோக மொழிகள் ஆங்கிலமும், பிரெஞ்சும் ஆனபடியால் கனடிய இலக்கியமென்றால் மேற்படி மொழிகளில் வெளியாகும் படைப்புகளைப் பற்றி மட்டுமே கொண்டதாகப் பலர் கருதிவிடுகின்றார்கள். ஆனால், கனடா பல்லின மக்கள் அதிகமாக வாழும் நாடுகளிலொன்று. இங்கு வாழும் பல்லின மக்களால் அவர்களது மொழிகளில் வெளியாகும் இலக்கியப் படைப்புகளைப் பற்றிக் கனடாவின் பெரும்பான்மைச் சமூகமான ஆங்கிலேயர்களோ அல்லது பிரெஞ்சு சமூகத்தவரோ அதிகமாக அறியமுடியாத நிலையே நிலவுகின்றது.

•Last Updated on ••Wednesday•, 04 •September• 2013 03:31•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 26 யோ.கர்ணனின் 'தேவதைகளின் தீட்டுத் துணி'

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 26 யோ.கர்ணனின் 'தேவதைகளின் தீட்டுத் துணி'யோ.கர்ண்னின் 'தேவதைகளின் தீட்டுத்துணி' வடலி பதிப்பக வெளியீடாக வெளிவந்த சிறுகதைத் தொகுதி. அண்மையில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளில் முக்கியமானதோரிடம் இதற்குண்டு. அதற்கு முக்கியமானதொரு காரணம் இதன் ஆசிரியர்தான். முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த யுத்தத்தின் பாதிப்பை நேரில் கண்டவர் இவர். அதுவரை நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தில் நேரில் பங்குபற்றிய சாட்சியாக இருந்தவர் இவர். அக்காலகட்டத்திலும், அதன் பின்னர் யுத்த காலகட்டத்திலும் நடைபெற்ற மனித உரிமை மீறல்களையெல்லாம் சாட்சியாக நின்று அவதானித்தவர் இவர். யுத்தம் காரணமாகக் காலினை இழந்தவர் இவர். இவற்றின் காரணமாக இவரது அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு உருவான கதைகளிவையென்பதால் முக்கியத்துவம் வாய்ந்தவை இத்தொகுதிக் கதைகள். யோ.கர்ணனின் கதைகள் ஆயுதப் போராட்ட நிகழ்வுகளை, யுத்த காலகட்டத்தின் அவலங்களை, 'மனிக் பார்ம்' தடுப்புமுகாம் அனுபவங்களைப் பதிவு செய்யும் ஆவணங்களாக விளங்குகின்றன. அதே சமயம் நடைபெற்ற நிகழ்வுகளின் மீதான விமர்சனங்களாகவும் விளங்குகின்றன. இத்தொகுப்பு பல்வேறுபட்ட அவலங்களை, நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்பனுவங்களை விபரிக்கும் சிறுகதைகள், யுத்த்தில் மக்கள் அடைந்த துன்பங்களையும், அழிவுகளையும் வெளிப்படுத்துகினறன. போராளிகளுக்கும், படையினருக்குமிடையில் நடைபெற்ற ஆயுத மோதல்களை எந்தவிதப் பிரச்சார நோக்கமுமின்றி விபரிக்கின்றன. உதாரணமாகத் தொகுதியின் முதலாவது கதையான 'ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்' கதையினை எடுத்துக்கொண்டால் அக்கதையிலிருந்து பல்வேறு தகவல்களைப் பெற முடியும். அக்காலகட்டத்தில் வன்னிப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆள்சேகரிப்புக்கான தெருக்கூத்துகள் பற்றி, போராளிகளுக்கான நான்கு மாதப் பயிற்சி பற்றி, அதன் பின்னர் அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஆயுதங்கள் பற்றி, ஜெயசிக்குறு காலகட்ட இராணுவத்துடனான மகளிர் அணியொன்றின் போராட்ட நடவடிக்கைகள் பற்றி, தன்னை அழிப்பதற்கு முன்னர் பொறுப்பாளருடன் 'வாக்கி டோக்கி'யில் தொடர்புகொண்டு 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' என்று கூறிவிட்டுத் தன்னை அழிப்பது போன்ற நடைமுறைகள் பற்றி பல்வேறு தகவல்களை இச்சிறுகதையினை வாசிக்குமொருவர் அறிந்துகொள்ள முடியும். இவ்விதமான தகவல்கள் மிகவும் முக்கியமானவை. அந்தச் சூழலில் வாழாத ஒருவரால் இதுபோன்ற தகவல்களையெல்லாம் விபரிக்க முடியாது. அந்த வகையில் யோ.கர்ணனின் சிறுகதைகள் கூறும் தகவல்கள் ஈழத்தமிழர்களின் யுத்தகாலகட்டத்து வாழ்வை மையமாக வைத்துப் புனைவுகளைப் படைக்க விரும்பும் எழுத்தாளர்களுத் துணைபுரியும் ஆவணங்களாகவிருக்கின்றன.

•Last Updated on ••Saturday•, 10 •August• 2013 22:38•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 25: பொ. ஐங்கரநேசனின் 'ஏழாவது ஊழி'!

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் 25: பொ. ஐங்கரநேசனின் 'ஏழாவது ஊழி'!பொ.ஐங்கரநேசன்தமிழில் சூழற் பாதுகாப்பு பற்றிய விரிவான தகவல்களுடன் கூடிய, சாதாரண வாசகர்களுக்குரிய நூல்கள் மிகவும் குறைவு. இவ்விதமானதொரு நிலையில் வெளிவந்திருக்கும் பொ.ஐங்கரநேசனின் 'ஏழாவது ஊழி' மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  இந்த நூலினை அண்மையில் வாசித்தபோது இவ்விதம்தான் தோன்றியது. தாவரவியலில் முதுநிலைப் பட்டதாரியான பொ.ஐங்கரநேசன் மேற்படி சூழல் பாதுகாப்பு பற்றிய துறையிலுள்ள தன் புலமையினை நன்கு பயன்படுத்திப் பொதுவான வாசகரொருவருக்கு மிகவும் இலகுவாக விளங்கும் வகையில், செறிவானதொரு நூலினைப் படைத்துள்ளார். சூழற் பாதுகாப்பு பற்றிய நாற்பத்தியொரு கட்டுரைகளை உள்ளடக்கிய 'ஏழாவது ஊழி' நூலினைத் தமிழகத்திலிருந்து சாளரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இன்றைய மனிதரின் செயற்பாடுகளினால் நாம் வாழும் இந்த அழகிய நீல்வண்ணக்கோள் எவ்விதம் பாதிக்கப்படுகின்றது, இதனைத் தவிர்க்க சர்வதேச உலகம் என்ன செய்ய வேண்டும், தனிப்பட்ட மனிதர்கள் எவ்விதம் பங்களிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் மிகவும் விரிவாக, அரிய பல தகவல்களுடன் நூலினைப் படைத்துள்ள ஐங்கரநேசன் முயற்சி காலத்தின் தேவைக்குரிய பயனுள்ள முயற்சி. இந்த நூல் சூழற் பாதுகாப்பு பற்றி விரிவாக விளக்குவதுடன், சூழற் சீரழிவுக்குக் காரணமான நாடுகள், நிறுவனங்கள் (குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்கள் ) பற்றியதொரு விமர்சனமாகவும் அதே சமயத்தில் இந்த விடயத்தில் இன்னும் நம்பிக்கையினை இழக்காததொரு நம்பிக்கைக் குரலாகவும் விளங்குகின்றது. பெரும்பான்மையின் பெயரால் நிலம், இயற்கைச் சூழல் அபகரிக்கப்படும்போது, பாதிக்கப்படும் சிறுபான்மையினமும் சூழற் சீரழிவுக்குக் காரணமாகவிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

•Last Updated on ••Monday•, 05 •August• 2013 04:46•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 24: கவிஞர் சேரனின் பன்முக இலக்கியப் பங்களிப்பு.

•E-mail• •Print• •PDF•

கவிஞர் சேரன் கவிஞர் சேரன் இன்று சர்வதேசரீதியில் நன்கறியப்பட்ட தமிழ்க் கவிஞர்களிலொருவர். வின்சர் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகச் சமூகவியல், மானுடவியல் மற்றும் குற்றவியல் துறைகளை உள்ளடக்கிய பிரிவில் பணிபுரிபவர்.  இரண்டாவது சூரிய உதயம், யமன், கானல் வரி, எலும்புக் கூடுகளின் ஊர்வலம், எரிந்து கொண்டிருக்கும் நேரம், நீ இப்பொழுது இறங்கும் ஆறு, உயிர் கொல்லும் வார்த்தைகள், மீண்டும் கடலுக்கு என இவரது பல கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அண்மையில் இவரது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் 'எரிந்து கொண்டிருக்கும் நேரம்' (IN A TIME OF BURNING), 'இரண்டாவது சூரிய உதயம் ( A SECOND SUNRISE), தொகுதிகளாக வெளிவந்து வரவேற்பினைப் பெற்றுள்ளன. செல்வா கனகநாயகத்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சேரனின் கவிதைகள் You Cannot Turn Away என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. இத்தொகுதி சேரனின் நாற்பது கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. அத்துடன் தொகுதி தமிழ் / ஆங்கிலத்தில் இருமொழித் தொகுப்பாக வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  'எரிந்து கொண்டிருக்கும் நேரம்' என்னும் லக்சுமி ஹோம்ஸ்றம்ம்மின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியான சேரனின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் இங்கிலாந்து பேனா அமைப்பினரின் மொழிபெயர்ப்புக்கான 2012 ஆண்டு விருதினைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி தொகுப்பும் தமிழ் / ஆங்கில இருமொழித் தொகுப்பாக வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

•Last Updated on ••Friday•, 19 •July• 2013 22:44•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 23: எனது குறிப்பேட்டுப் பதிவுகள்

•E-mail• •Print• •PDF•

மறக்க முடியாத 'ஈழநாடு' மாணவர் மலர்....

எண்பதுகளில் குறிப்பேடுகளில் என் உள்ளத்து உணர்வுகளையெல்லாம் கவிதைகளாக, உரைச்சித்திரங்களாக, கட்டுரைகளாக என்றெல்லாம் எழுதி வைப்பது வழக்கம். அவை ஒருவிதத்தில் உணர்வுகளின் வடிகால்களாக அன்று விளங்கின. அவ்விதம் அன்றைய காலகட்டத்தில் அறிந்தவற்றை , புரிந்தவற்றைப் பற்றிச் சிந்திப்பதை குறிப்பேடுகளில் எழுதுவதென்பது எனக்கு மிகவும் பிடித்தமானதொரு செயல்.  அவ்விதம் எழுதிய குறிப்பேடுகளில் பல நாட்டுச்சூழலில் தொலைந்துவிட்டன. எஞ்சிய குறிப்பேடுகளை மீண்டும் வாசிக்கும்போது அவை அன்றைய காலகட்டச் சமூக, அரசியல் சூழல் என்மேல் ஏற்படுத்திய தாக்கங்களின் பிரதிபலிப்புகளாக விளங்கியதை அறியமுடியும். அவற்றை எந்தவித மாற்றமுமின்றிப் பதிவு செய்வது அவசியமென்று பட்டதன் விளைவாக, அக்குறிப்பேட்டுக் குறிப்புகள் சிலவற்றை பதிவுகள் இணைய இதழிலும், அண்மையில் முகநூலிலும் பதிவு செய்திருந்தேன். அவ்விதம் அண்மையில் முகநூலில் பதிவு செய்தவற்றை ஒரு பதிவுக்காக இம்முறை வாசிப்பும், யோசிப்பும் பகுதிக்காகப் பதிவிடுகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் இந்தக் குறிப்புகள் ஒருவிதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் இவை அன்றைய காலகட்டத்து என் உணர்வுகளை, சிந்தனைப் போக்குகளைப் பிரதிபலிப்பவை. ஒரு பதிவுக்காக இங்கே.

•Last Updated on ••Monday•, 15 •July• 2013 16:49•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 22: லக்சுமி ஹாம்ஸ்றம் அவர்களின் தொடரும் மொழிபெயர்ப்புப் பணி: 'எரிந்து கொண்டிருக்கும் நேரம்' என்னும் கவிஞர் சேரனின் கவிதைளை வெளியிட்ட ஆர்க் வெளியீட்டகத்துக்கு இங்கிலாந்தின் பேனா அமைப்பின் மொழிபெயர்ப்புக்கான விருது!

•E-mail• •Print• •PDF•

லக்சுமி ஹாம்ஸ்றம் (Laksmi Holmstrom)'எரிந்து கொண்டிருக்கும் நேரம்' என்னும் கவிஞர் சேரனின் கவிதைகளை லக்சுமி ஹாம்ஸ்றம் (Laksmi Holmstrom) அவர்களின் மொழிபெயர்ப்பில் 'ஆர்க்' வெளியீட்டகம் வெளியிட்டிருந்தது. இதற்காக அப்பதிப்பகத்துக்கு  இங்கிலாந்துப் பேனா அமைப்பினரின் (PEN - UK) மொழிபெயர்ப்பு நூல்களுக்கான 2012ற்குரிய விருது கிடைத்துள்ளது. லக்சுமி ஹாம்ஸ்றம் அவர்களுக்குக் கனடாவின் 2007ற்கான இயல்விருது கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்த விருது கிடைத்தபோது எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் கடுமையாக அந்த விருதினையும், லக்சுமி ஹாம்ஸ்றம் அவர்களின் அதற்கான தகுதி பற்றியும், அவரை அவ்விருதுக்குத் தேர்ந்தெடுத்த நடுவர்கள் பற்றியும் விமர்சித்துத் தனது வலைப்பதிவில் எழுதியிருந்தார். அந்நடுவர்களில் நானுமொருவனாக இருந்ததனால் அது பற்றி பதிவுகள் இணைய இதழில் எழுதிய பதில் கட்டுரைகளிலொன்றினை ஒரு பதிவுக்காக இம்முறை வாசிப்பும், யோசிப்பும் பகுதியில் பகிர்ந்துகொள்கின்றேன்.

•Last Updated on ••Thursday•, 13 •June• 2013 17:58•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 21: கவிதை பற்றிச் சில கருத்துகள்....

•E-mail• •Print• •PDF•

மறக்க முடியாத 'ஈழநாடு' மாணவர் மலர்....

என்னைப் பொறுத்தவரையில் கவிதையென்பது உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒருவரின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிவருவது. அவ்விதம் வெளிவரும் கவிதையினைப் படைக்கும் கவிஞரின் மொழி ஆற்றல், படைப்புத் திறன், வாசிப்பறிவு, வாழ்வனுபவம், அவற்றால் அவரடையும் பாதிப்பு , இவ்விதம் பல விடயங்களுக்கேற்ப அக்கவிதை சிறக்கிறது அல்லது சிறுக்கிறது. பெரும்பாலான இன்றைய கவிஞர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால் தங்களது கவிதை பிறரால் பாராட்டப்பட வேண்டும், விமர்சகர்களால் விதந்துரைக்கப்பட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு சொற்களைத் தேடித்தேடி எடுத்துக் கவிதைகளைக் கோர்க்கின்றார்கள். இவ்விதம் கோர்க்கப்படும் கவிதைகளில் மொழி அழகாக இருக்கும். ஆனால் அவ்விதமான கவிதைகள் அவற்றை ஆக்கும் கவிஞர்களின் உள்ளத்தின் உண்மையான உணர்வுகளிலிருந்து வெளிவராததால் வாசிப்பவரின் உள்ளத்தை அசைப்பதில்லை; தொடுவதில்லை. இவ்விதமான கவிஞர்களுக்கும் அன்றைய பண்டிதக் கவிஞர்களுக்கும் வித்தியாசமில்லை. இரு சாராரும் தமது வித்துவச் செருக்கைக் காட்டுவதற்காகவே கவிதைகளை உற்பத்தி செய்கின்றார்கள்; கவிதைகளைப் படைப்பதில்லை.

•Last Updated on ••Monday•, 10 •June• 2013 03:20•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 20: மறக்க முடியாத 'ஈழநாடு' மாணவர் மலர்....

•E-mail• •Print• •PDF•

- அவ்வப்போது வாசிக்கும் விடயங்களின் யோசிப்பு, மற்றும் யோசிப்பு (நனவிடை தோய்தல்)  பற்றிய சிறு குறிப்புகளிவை. -

மறக்க முடியாத 'ஈழநாடு' மாணவர் மலர்....

என் வாழ்க்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகைக்கும் , குறிப்பாக அதன் 'மாணவர் மலர்' பகுதிக்கும் முக்கியத்துவமுண்டு. அப்பொழுது நான் வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். ஈழநாடு மாணவர் மலரில் 'தீபாவளி இனித்தது' என்றொரு கட்டுரைப் போட்டியினை உயர்தர மாணவர்களுக்காக அறிவித்திருந்தார்கள். அதற்கு நானுமொரு கட்டுரையினை ...'தீபாவளி இனித்தது' என்னும் தலைப்பில் அனுப்பினேன். அப்போட்டியில் தெரிவான கட்டுரை கண மகேஸ்வரனின் கட்டுரை. அவர் அப்பொழுது உயர்தர மாணவராகப் படித்துக்கொண்டிருந்தார். எனது கட்டுரை பிரசுரமாகவில்லையென்றாலும், வவுனியா மகா வித்தியாலயத்து ஆறாம் வகுப்பு மாணவன் கிரிதரனின் கட்டுரை நன்றாக இருந்தது என்னும் அர்த்தத்தில் குறிப்பொன்றினை ஈழநாடு மாணவர் மலர் வெளியிட்டிருந்தது. அந்த வயதில் அது எனக்கு மிகவும் ஊக்கத்தைத் தந்தது. அதன் பின்னர் சுதந்திரனுக்குப் பொங்கல் கவிதையொன்றினை எனது ஏழாம் வகுப்பு மாணவனாக இருந்த சமயம் அனுப்பினேன். அது தான் முதன் முதலாகப் பத்திரிகையொன்றில் வெளியான எனது கவிதை. இதன் பின்னர் அவ்வப்போது ஈழநாடு மாணவர் மலருக்குக் கவிதைகள், கட்டுரைகள் அனுப்பியிருக்கிறென். அவற்றையும் ஈழநாடு மாணவர் மலர் பிரசுரித்து என்னை ஊக்கப்படுத்தியிருந்தது. பீன்னர் எனது பதின்ம வயதில் எனது சிறுகதைகள் நான்கு ஈழநாடு வாரமலரில் பிரசுரமாகியிருந்தன. கட்டுரைகள் சிலவும் ,'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு', மற்றும் 'பழைமையின் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதன் அவசியம்' பற்றி எழுதியவை, ஈழநாடு வாரமலரில் பிரசுரமாகியுள்ளன. அப்பொழுது ஈழநாடு வாரமலரின் ஆசிரியராகப் பெருமாள் என்பவர் இருந்தார். அவரை நான் ஒருமுறையும் சந்தித்ததில்லை. ஆனால் அவர்தான் என் சிறுகதைகளைப் பிரசுரித்து ஊக்குவித்தவர். அண்மையில் எழுத்தாளர் செங்கை ஆழியானின் 'ஈழநாடு சிறுகதைகள்' பற்றிய ஆய்வுக் கட்டுரையினை 'மல்லிகை ஆண்டு மலரொன்றில் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதில் அவர் என்னை ஈழநாடு பத்திரிகையின் ஏழாவது தலைமுறைப் படைப்பாளிகளிக்லொருவராகக் குறிப்பிட்டு, எனது 'மணல்வீடுகள்' என்னும் சிறுகதை பற்றியும் குறிப்பிட்டிருந்தார். ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் ஈழநாடு பத்திரிகையின் பங்களிப்பை இன்னும் நினைவு வைத்து இதுபோன்றதொரு கட்டுரையினை எழுதிய செங்கை ஆழியான் பாராட்டுக்குரியவர். இது போல் 'இலங்கையில் வெளியான ஏனைய பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான புனைகதைகள் பற்றியும் (சிறுகதை, நாவல் போன்ற) யாராவது எழுதினால் நல்லது. அவை பயனுள்ள ஆவணப் பதிவுகளாகவிருக்கும்.

•Last Updated on ••Thursday•, 06 •June• 2013 17:08•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 19: யாழ் பொதுசன நூலக எரிப்பும், நினைவுகளும்...

•E-mail• •Print• •PDF•

- அவ்வப்போது வாசிக்கும் விடயங்களின் யோசிப்பு, மற்றும் யோசிப்பு (நனவிடை தோய்தல்)  பற்றிய சிறு குறிப்புகளிவை. -

இன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம். நாகரிகத்தின் உச்சியிலிருப்பதாகக் கூறிப் பெருமிதமுறும் மனித இனமே நாணித்தலை குனிய வேண்டிய தினம். நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதிகளெல்லாம் நெருப்போடு நெருப்பாக அழிந்தே போய்விட்டன. இவற்றின் அழிவினைத் தாங்க மாட்டாத பாதிரியார் ஒருவரும் , தாவீது அடிகள், மாரடைப்பால் இறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இந்த யாழ் பொதுசன நூலகம் என்னைப் பொறுத்தவரையில் என் வாழ்க்கையில் ஒரு அங்கமே என்று கூறிக்கொள்ளும் வகையில் ஆகியவொன்று. ஒவ்வொரு வாரமும் பல தடவைகள் அங்கு செல்வதுண்டு. என்னைப் பொறுத்தவரையில் நான் வணங்கும் ஆலயங்கள் என்றால் அவை நூலகங்களே. அதிலும் இந்த யாழ் நூலகத்துக்குத் தனி முக்கியத்துவமுண்டு. சிறுவர் நூல்கள், அறிவியல் நூல்கள், வெகுசன நாவல்கள், கவிதைகள், நாடகங்கள், இலக்கிய நூல்கள் ... என எத்தனை வகையான நூல்கள். நான் ஒன்பதாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது இந்த நூலகத்தில் எத்தனையோ அறிவியல் நூல்களைப் படித்திருக்கின்றேன். மிகவும் அழகாக விஞ்ஞானத்தின் பல்வேறு பிரிவுகளிலும் நூல்களை அக்காலகட்டத்தில் சென்னையிலுள்ள பதிப்பகமொன்று வெளியிட்டுக்கொண்டிருந்தது. பெளதிகத்தின் வரலாறு, கடலின் வரலாறு, உயிரினங்களின் வரலாறு,.. என்பது போன்ற தலைப்புகளிருக்கும். பெளதிகத்தின் வரலாறு என்னுமந்த நூலில் ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற சக்திக்கும், பொருளுக்குமிடையிலான தொடர்பினை வெளிப்படுத்தும் சூத்திரத்தை, ஒளித்துகளுக்கு உந்தம் மற்றும் இயக்கச்சக்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய சூத்திரங்களை ஒன்றிணைப்பதன் மூலம் நிறுவியிருந்தது இன்னும் பசுமையாக மனதிலுள்ளது. 'நீங்களும் விஞ்ஞானியாகலாம்' என்றொரு நூல் மிகவும் அழகான சித்திரங்களுடன் வெளியாகியிருந்தது. அக்காலகட்டத்தில் மிகவும் பிடித்த புத்தகங்களில் அதுவுமொன்று. அதில் உருப்பெருக்கும் கண்ணாடியுடன் சிறுவர்கள் வீட்டின் பின்புறத்தே ஆய்வில் ஈடுபட்டிருக்கும் காட்சியினைச் சித்திரிக்கும் வகையில் சித்திரங்களிருந்தன. மாணவர்களுக்கு விளங்கும் வகையில் விஞ்ஞானப் பரிசோதனைகள் பல அந்நூலில் விபரிக்கப்பட்டிருந்தன. அவை எங்கள் ஆர்வத்தைத் தூண்டி விட்டன. மேற்படி விஞ்ஞான நூல்களில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் பிரசுரமான அறிவியல் நூல்களின் தரமான மொழிபெயர்ப்புகளே. இவை போன்று ஏன் இன்று தரமான நூல்கள் மாணவர்களுக்காக வெளிவருவதில்லை?

•Last Updated on ••Thursday•, 06 •June• 2013 17:08•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 18: பாலியப் பிராயமும், யாழ்ப்பாணமும், ஆங்கிலப் படங்களும்.

•E-mail• •Print• •PDF•

- அவ்வப்போது வாசிக்கும் விடயங்களின் யோசிப்பு, மற்றும் யோசிப்பு (நனவிடை தோய்தல்)  பற்றிய சிறு குறிப்புகளிவை. -

அது ஒரு காலம். அப்பொழுது யாழ்ப்பாணத்தில் றீகல் (வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைந்திருந்த றீகல் இப்பொழுது இல்லை), மனோஹரா தியேட்டர்களில் மட்டுமே அதிக அளவில் ஆங்கிலப் படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பின்னர் அதில் ரியோ திரைப்பட அரங்கும் சேர்ந்து கொண்டது. யாழ் நகர மண்டபத்தின் பகுதியே அவ்விதம் ரியோ தியேட்டராக மாறியது. ஆங்கிலப் படங்கள் காட்டப்படும் திரையரங்குகள் பாடசாலை மாணவர்களால் நிறைந்திருக்கும். கலரி, இரண்டாம் வகுப்பு மட்டுமே எப்பொழுதும் நிறைந்திருக்கும். பாடசாலை விட்டதும் றீகலுக்கும், மனோஹராவுக்கும் மாணவர்கள் படையெடுப்பார்கள். அன்று பார்த்த ஆங்கிலப் படங்கள் பல இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளன. அத்திரைப்படங்களினூடு எனக்கு அறிமுகமான நடிகர்கள் பலர். அந்தனி குயீன், சாள்டன் கெஸ்டன் (இவர்களெல்லாரும் என் அப்பாவின் காலகட்டத்து நடிகர்கள். என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த நடிகர்கள். எங்கள் காலகட்டத்திலும் நடித்துக்கொண்டிருந்தார்கள்.), மைக்கல் கெயின், ஜான் வெய்ன், கிறிஸ்தோபர் லீ, லீ வான் கிளீவ், ஜீன் போல் பெல் மாண்டோ , யூல் பீரயினர், சீன் கானரி (ஷான் கானரி), ஜீனா லொல்லோ பிரிஜிடா (இவரது ஒரேயொரு படத்தைத்தான் பார்த்திருக்கின்றேன். அது விக்டர் ஹியுகோவின் புகழ் பெற்ற நாவலான The Hunch Back a Notre Dame , தமிழில் அதன் தழுவல் கல்யாணகுமார் நடிப்பில் மணியோசை என்று வந்தது.), உர்சுலா அன்ரெஸ், சார்ள்ஸ் பிரோன்சன், அலன் டிலோன், ஜூலியனா ஜெம்மா, கேர்க் டக்ளஸ், ஹென்றி ஃபொண்டா, ஹரி கூப்பர் (இவர் எங்களது அப்பாவின் பால்ய காலத்து நாயகர்களில் ஒருவர்; எங்களது காலத்திலும் இவரது புகழ்பெற்ற திரைப்படமான High Noon திரையிட்டபோது பார்த்திருக்கின்றேன்.), கிரகரி பெக், கிளிண்ட் ஈஸ்ட்வூட், டெலிச விலாஸ் என்று பெரியதொரு நடிகர்/ நடிகைகளின் பட்டாளம் அறிமுகமானது அக்கால கட்டத்தில்தான். சிசில் டிமில் (Cecil DeMille ) ஹாலிவூட்டின் புகழ்பெற்ற தயாரிப்பாளர்; இயக்குநர்; வசனகர்த்தா. 'பென்ஹர்' , 'டென் கமாண்ட்மென்ட்ஸ்' , 'த கிரேட்டஸ்ட் ஷோ ஒன் ஏர்த்' ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தவர். இவரது மகளே அந்தனி குயீனின் முதல் மனைவி என்று அப்பா அடிக்கடி கூறுவார்.

•Last Updated on ••Thursday•, 06 •June• 2013 17:08•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 17 : பிரமிளின் தவளைக்கவிதை பற்றியதொரு புரிதல்.

•E-mail• •Print• •PDF•

தவளைக் கவிதை

- பிரமிள் -

பிரமிள்தனக்கு புத்தி
நூறு என்றது மீன் -
பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில்
தனக்குப் புத்தி
ஆயிரம் என்றது ஆமை -
மல்லாத்தி ஏற்றினேன்
கல்லை.
‘எனக்கு புத்தி
ஒன்றே’
என்றது தவளை,
எட்டிப் பிடித்தேன் -
பிடிக்குத் தப்பித்
தத்தித் தப்பிப்
போகுது தவளைக்
கவிதை -
’நூறு புத்தரே!
கோர்த்தரே!
ஆயிரம் புத்தரே!
மல்லாத்தரே!
கல்லேத்தரே!
ஒரு புத்தரே!
தத்தரே!
பித்தரே!

•Last Updated on ••Monday•, 27 •May• 2013 16:06•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 16: பிரக்ஞை, பிரக்ஞையின்மை, நனவு மனம் மற்றும் நனவிலி மனம்!

•E-mail• •Print• •PDF•

மீராபாரதிநண்பர் மீராபாரதியின் 'பிரக்ஞை' அண்மையில் வாசித்தேன். தமிழில் இதுபோன்ற நூல்களை எழுதுபவர்கள் ஆன்மிக அடிப்படையில் எழுதுவார்கள். அறிவியலை மறந்துவிடுவார்கள் அல்லது தவிர்த்து விடுவார்கள். மீராபாரதி இந்தத் தவறினைச் செய்யவில்லை. மேற்படி நூலில் பிரக்ஞை பற்றிய மேலை நாட்டு அறிஞர்களின் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே மீராபாரதி பிரக்ஞையினை அணுகியிருக்கின்றார். அவ்வப்போது பிரக்ஞை பற்றிய கீழை நாட்டுத்தத்துவங்களையும் குறிப்பிட்டிருப்பார். எதிர்காலத்தில் பிரக்ஞை பற்றிய கீழை நாட்டுத்தத்துவங்களின் அடிப்படையிலான நூலொன்றினை எழுதவுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். மேற்படி நூலில் ஒரு விடயம்தான் எனக்குச் சிறிது நெருடலாக இருக்கிறது. சிந்திக்கும் மனதை, உணர்வுள்ள மனதை பிரக்ஞை என்போம். அதனை நனவு மனமென்றும் கூறுவர். உளவியல் அறிஞர்களின் ஆய்வுகளின்படி மனித மனமானது இரு தளங்களை உள்ளடக்கியுள்ளது. சிந்திக்கும் மனம் (Conscious Mind), சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஆழ்மனம் (Unconscious Mind). இவ்விதமான மனதின் பிரிவுகளை மீராபாரதி முறையே பிரக்ஞை என்றும், பிரக்ஞையின்மை என்றும் குறிப்பிடுகின்றார். பிரக்ஞை என்பது சிந்திக்கும், உணரும் மனம் என்றால் (Conscious Mind), பிரக்ஞையின்மை என்பது சிந்திக்கும் மனம் அற்ற என்றுதான் பொருள்படும். அவ்விதம்தான் ஒரு சாதாரண மனிதர் புரிந்துகொள்வார். இதனை மீராபாரதியும் புரிந்துகொண்டிருக்கின்றார். அதனால்தான் அதுபற்றிய விளக்கமொன்றினையும் மேற்படி நூலின் பக்கம் 61இல் கீழ்வருமாறு தருகின்றார்:

•Last Updated on ••Monday•, 20 •May• 2013 21:03•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 15: பிரமிளின் 'காலவெளி': 'கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'

•E-mail• •Print• •PDF•

பிரமிள்[பதிவுகள் இணைய இதழின் ஆகஸ்ட் 2007 இதழ் 92  இதழில் வெளியான பிரமிள் பற்றிய கட்டுரையினை இம்முறை வாசிப்பும், யோசிப்பும் பகுதிக்காகப் பதிவு செய்கின்றோம். எம்மைப் பொறுத்தவரையில் மகாகவி பாரதிக்குப் பின்னர் தமிழ் இலக்கிய உலகில் பாரதியைப் போன்றதொரு தேடல் மிக்க படைப்பாளிகளில் முதன்மையானவராகப் பிரமிளையே காண்கின்றோம். பிரமிளும் பாரதியைப் போல் தான் வாழ்ந்த சமூகத்தின் பல்வேறு சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த அதே சமயம் இருப்பு பற்றிய தேடலிலும் தனது கவனத்தைச் செலுத்தியவர். அவரது கருத்துகள் எதுவாகவிருந்தபோதிலும் அவரது பன்முக வாசிப்பும், தேடலும், அவற்றை வெளிப்படுத்தும் அவரது படைப்புகளும் முக்கியமானவை. - பதிவுகள் -] அண்மையில் பிரமிளின் 'வானமற்ற வெளி' (கவிதை பற்றிய கட்டுரைகள்) என்னும் தொகுதியினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. தமிழில் புதுக்கவிதையென்றால் படிமங்களுக்குப் பெயர் போன பிரமிளின் கவிதைகளைக் குறிப்பிட யாரும் மறுப்பதில்லை. குறிப்பாக 'பூமித்தோலில் அழகுத் தேமல், பரிதிபுணர்ந்து படரும் விந்து' என்னும் கவிதையினைக் குறிப்பிடாத விமர்சகர்களே இல்லையெனலாம். இத் தொகுதியிலுள்ள கட்டுரைகள் பிரமிளின் எழுத்துச் சிறப்பினைப் புலப்படுத்துவன. அவரது ஆழ்ந்த சிந்தனையினையும், வாசிப்பினையும் கூடவே புலமைத்துவத்துடன் கூடியதொரு கர்வத்தினையும் வெளிப்படுத்துவன. அந்தக் கர்வம் அளவுமீறி சில சமயங்களில் அணையுடைத்துப் போவதுமுண்டு என்பதற்கும் சான்றாக சில கட்டுரைகளில் வரும் கூற்றுக்கள் விளங்குகின்றன. அவ்விதம் கர்வம் அளவு மீறி விடும்போது, 'தனக்கு எல்லாமே தெரியுமென்ற அதிமேதாவித்தனத்தினைக் காட்ட முற்படும்பொழுது'  அதுவே அவர்மேல் எதிர்மறைவான விளவுகளை ஏற்படுத்தி விடுவதற்கு இத்தகைய கூற்றுகள் காரணமாகிவிடுகின்றன. இந்தக் கட்டுரை பிரமிளின் மேற்படி 'வானமற்ற வெளி' நூல் பற்றிய மதிப்புரையோ அல்லது விரிவான் விமரிசனமோ அல்ல. இது பிரமிளின் கவிதைகள் பற்றிய விரிவான விமரிசனமுமல்ல. மேற்படி நூலிலுள்ள சில கருத்துகள் ஏற்படுத்திய என் மன உணர்வுகளின் வெளிப்பாடாகவே இதனைக் குறிப்பிடலாம்.

•Last Updated on ••Monday•, 28 •September• 2015 23:02•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் -14: கலாநிதி இ.பாலசுந்தரத்தின் 'புகலிட மண்ணில் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்' கட்டுரை பற்றி....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும், யோசிப்பும் -14: கலாநிதி இ.பாலசுந்தரத்தின் 'புகலிட மண்ணில் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்' கட்டுரை பற்றி...கனடாவிலிருந்து வெளிவரும் 'தமிழர் தகவல்' மாத இதழின் 22வது ஆண்டு மலரை அண்மையில் வாசிக்க முடிந்தது. அந்த மலரைப் பற்றிய விமர்சனமல்ல இது. அதில் வெளிவந்திருந்த இரு கட்டுரைகள் பற்றிய சில குறிப்புகளே இநத என் எண்ணப்பதிவு. பொன்னையா விவேகானந்தன் 'கனடியத் தமிழர் வாழ்வும் வளமும்' என்றொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அக்கட்டுரையின் தலைப்பு இதே தலைப்பில் தமிழகத்திலிருந்து ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட 'தமிழ்க்கொடி 2006' ஆண்டு மலரில் நான் எழுதிய கட்டுரையான 'கனடாத் தமிழர் வாழ்வும் வளமும்' என்னும் கட்டுரையின் தலைப்பினையே எனக்கு ஞாபகப்படுத்தியது  மேற்படி எனது கட்டுரையினைக் கனடாவிலிருந்து ஆண்டுதோறும் வெளிவரும் 'தமிழர் மத்தியில்' வர்த்தகக் கையேடும் சில வருடங்களுக்கு முன் தனது கையேட்டில் மீள் பிரசுரம் செய்திருந்தது. இது போன்ற கட்டுரைகளை எழுதுபவர்கள் ஏற்கனவே அத் தலைப்புகளில் கட்டுரைகள் வெளிவந்திருந்தால் இயலுமானவரையிலும் தவிர்ப்பது நல்லதென்பதென் கருத்து. மேற்படி மலரில் கலாநிதி இ.பாலசுந்தரம் 'புகலிட மண்ணில் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்' என்றொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அக்கட்டுரை பற்றிய சில கருத்துகளே எனது இந்தப் பதிவு.

•Last Updated on ••Thursday•, 16 •May• 2013 00:31•• •Read more...•
 

வாசிப்பும் , யோசிப்பும் - : கா.சிவத்தம்பியும் '50 வருட ஈழத்துத் தமிழ் இலக்கியமும்'

•E-mail• •Print• •PDF•

 பேராசிரியர் கா.சிவத்தம்பிபேராசிரியர் கா.சிவத்தம்பியின் பிறந்த தினமான மே 10 அன்று அவரை நினைவு கூரும் முகமாக நிகழ்வுகள் பல நிகழ்ந்தன. தமிழ் இலக்கியச் சூழலில் தவிர்க்க முடியாத முக்கியமான ஆளுமைகளிலொருவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். எழுத்தாளர் ஜெயமோகன் தனது கட்டுரையான 'கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு' என்னும் கட்டுரையில் பேராசிரியர் பற்றிய தனது கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருப்பார். அதில் அவர் பேராசிரியர் கா.சிவத்தம்பியை இலக்கியத் திறனாய்வாளராக இனங்காண்பதற்குப் பதில் இலக்கியக் கோட்பாளராகவே இனங்கண்டிருப்பார். மேலும் பேராசிரியரின் தேடல் பற்றிய கேள்வியினையும் பேராசிரியரின் ‘தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்’ நூலிலுள்ள் இறுதிக்கட்டுரையினை ஆதாரமாகக் கொண்டு எழுப்பியிருப்பார். அதில் ஜெயமோகன் கீழ்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

•Last Updated on ••Sunday•, 12 •May• 2013 18:29•• •Read more...•
 

வ.ந.கிரிதரனின் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. சுடரும் இரகசியங்கள்!.

வ.ந.கிரிதரனின் கவிதைகள்!இருண்டு கிடக்கிறது இரவு வான்.
சுடரும் பெண்கள்; விரியும் வெளி.
தனிமையின் மோனம். இலயிப்பினில்
இருப்பு. பெண்களே! பெண்களே! பகர்ந்திடுவீரா உம்
இரகசியத்தை? 'அஞ்சுதலற்ற கதிர்கள்.சூனியத்தைத்
துளைத்து வருமொளிக் கதிர்கள்.
அட, அண்டத்திலார்க்கும் அஞ்சுவமோ?
ஓராயிரம் கோடி ஆண்டுகள்
ஓடியே வந்தோம்; வருகின்றோம்;
வருவோம். காலப் பரிமாணங்களைக் காவியே
வந்தோம்; வருகின்றோம்; வருவோம்.
வெளியும் விரவிக் கிடக்கும்
சூனியமும் கண்டுதான் துவண்டோமோ?
அஞ்சுதலற்ற நெஞ்சினர் எம்முன்னே
மிஞ்சி நிற்பவர்தானெவருமுண்டோ?
தெரிந்ததா? விளக்கம் புரிந்ததா?
நொக்குங்கள்! நோக்குங்கள்!
நோக்கம்தான் புரிந்ததுவோ?'
புரிந்ததில் இனித்தது இரவுப்
பொழுது.

•Last Updated on ••Wednesday•, 08 •May• 2013 15:55•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 12: வர்த்தமான மகாவீரனின் (மாரப்பன்) 'டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம்'

•E-mail• •Print• •PDF•

 வர்த்தமான மகாவீரனின் (மாரப்பன்) 'டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம்'அண்மையில் இளங்கோவின் 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றபோது நிகழ்வு முடியும் நிலையிலிருந்தது. வன்முறையும் எழுத்தும் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இளங்கோவின் நூலினை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. வாசித்து முடித்ததும் பின்னர் அதுபற்றி எழுதுவேன். ஆனால் வாசித்த அளவில் இளங்கோவின் கதைகள் கூறும் பொருள் முக்கியமானதென்று உணர்ந்தேன். புலம்பெயர்ந்த சூழலில் நிலவிய இளைஞர் குழுக்கள் பற்றிய பதிவுகளை அவரது சிறுகதைகள் பல செய்துள்ளன. இவ்விதமான ஆவணப்பதிவுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானவை. இது போல் அண்மையில் வடலி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட கருணை ரவியின் 'கடவுளின் மரணம்' சிறுகதைத் தொகுப்பும், யோ.கர்ணனின் 'சேகுவேராவின் வீடு' தொகுப்பும் ஆவணப்படுத்தும் விடயங்கள் முக்கியமானவை. ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் காலகட்டத்தில் , சிறு துண்டு நிலத்தினுள் அடைந்து கிடக்கும் மக்கள் அடையும் துயர், அன்றாட அத்தியாவசியக் கடமைகளைச் செய்வதற்காக அவர்கள் (குறிப்பாகப் பெண்கள்) அடையும் சிரமங்கள் இவற்றையெல்லாம் கருணை ரவியின் சிறுகதைகள் ஆவணப்படுத்துகின்றன.  மேற்படி இளங்கோவின் நூல் வெளியீட்டில் 'காலம்' செல்வத்தின் 'வாழும் தமிழ்' புத்தகக் கண்காட்சியும் / விற்பனையும் நடைபெறறது. இம்முறை எனக்கொரு புதையல் அங்கு கிடைத்தது. வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்) எழுதி, தானே வெளியிட்ட 'டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம்' நெடுங்கவிதையின் மொழி பெயர்ப்பும், அது பற்றிய விரிவான திறனாய்வும் அடங்கிய நூல். நீண்ட நாட்களாக யாரும் வாங்காமல் இருந்திருக்கவேண்டும், செல்வம் அதற்கு $5 என்று விலையிட்டிருந்தார். 516 பக்கங்களை உள்ளடக்கிய நூலின் விலை $ 5.  அந்த நூலுக்காக, அந்த விலைக்காக,  'காலம்' செல்வத்தைப் பாராட்டுகின்றேன். அந்த நூலுக்கு அந்த விலை மிகவும் குறைவு. ஆனால் வாசகர்களின் தேவையினைப் பொறுத்தவரையில் (Demand) அது குறைவாகவிருந்த காரணத்தினால் அவர் அந்த விலையினை நிர்ணயித்திருக்கவேண்டும்போல் படுகின்றது. ஏனெனில் பல அண்மைக் காலத்து நூல்களெல்லாம் மிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அதனால்தான் அவ்விதம் கருதினேன்.

•Last Updated on ••Monday•, 29 •April• 2013 22:02•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 11: 'பென்குவின் பதிப்பகம் வெளியிட்ட தமிழ்க் கவிதைத் தொகுப்பு பற்றி..'

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும் யோசிப்பும் - 11அண்மையில் The Rapids Of A Great River கவிதைத் தொகுப்பினைப் பார்த்தேன். உலகப் புகழ்பெற்ற 'பென் குவின்' நிறுவனத்தாரின் இந்தியக் கிளையினரால் வெளியிடப்பட்ட தொகுப்பு. தமிழக மற்றும் இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. மொழிபெயர்த்துத் தொகுத்திருப்பவர்கள்: லக்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம், சுபஸ்ரீ கிருஷ்ணசாமி K.. ஸ்ரீலதா ஆகியோர். பென்குவின் தமிழ்க் கவிதைத் தொகுப்பு என்று முன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக் கவிஞர்களில் சேரன், சோலைக்கிளி, அவ்வை, திருமாவளவன், செழியன், சிவசேகரம், சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ.நுஃமான், பிரமிள், சு.வில்வரத்தினம், கி.பி.அரவிந்தன் என்று பலரின் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. தமிழக மற்றும் இலங்கைக் கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கியதாகத் தொகுப்பு வெளிவந்திருப்பது மகிழ்ச்சியளிப்பது. ஆனால் இந்தத் தொகுப்பில் கவிதைகள் தொகுக்கப்பட்ட விடயம் பற்றிச் சில கேள்விகள் என் மனதிலெழுந்தன. அதனை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென்று எண்ணுகின்றேன்.

•Last Updated on ••Sunday•, 21 •April• 2013 21:23•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 10: அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின், எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்'

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும் யோசிப்பும் - 10அண்மையில் அ.முத்துலிங்கத்தின் நூலான 'ஒன்றுக்கும் உதவாதவன்' படித்தேன். அதிலொரு கட்டுரை 'கிழங்கு கிண்டியபோது கிடைத்த ரத்தினக்கல்'. பேராசிரியர் ம.இலே.தங்கப்பாவின் மொழிபெயர்ப்பில் சங்கப்பாடல்கள் சில Love Stands Alone என்னும் பெயரில் வெளிவந்திருந்தது பற்றிய தனது கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதில் மிகவும் நன்கறியப்பட்ட பாரி மகளிரின் கவிதையான புறநானூறுப் பாடலான 'அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்' பாடலின் மொழிபெயர்ப்பைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

•Last Updated on ••Sunday•, 14 •April• 2013 18:21•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 9: அ.மு.வின் அனுபவங்கள் அபுனைவுகளா? அல்லது புனைவுகளா?

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும் யோசிப்பும் - 9தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர்களில் முதலிடத்தில் இருப்பவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம். எந்தவொரு விடயத்தையும் மிகவும் சுவையாக, நெஞ்சில் உறைக்கும் வகையில் எழுதுவதில் வல்லவரிவர்.  மிகவும் சாதாரணவொரு விடயத்தைக்கூட மிகவும் சுவையானதாக, முக்கியத்துவம் வாய்ந்ததாக தனது எழுத்தாற்றல் மூலம் மாற்றிவிடுவதில் அசகாய சூரரிவர். இவரது அபுனைவுகளை வாசிக்கும்போது எனக்கு தோன்றும் முதல் எண்ணம் அவை உண்மையிலேயே அபுனைவுகளா? அல்லது புனைவுகளா? ஏனென்றால் அவரது ஒவ்வொரு அனுபவமும் மிகவும் சுவையாக, புனைகதைக்குரிய திருப்பங்கள், சம்பவங்களுடன் இருப்பதுதான் அந்த எண்ணம் தோன்றக் காரணம். பொதுவாக ஒவ்வொருவர் வாழ்விலும் பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கும். அவற்றில் சில வேண்டுமானால் புனைகதைக்குரிய சம்பவங்கள், திருப்பங்களுடன் இருக்கும். ஆனால் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் அவ்விதமிருப்பதில்லை. ஆனால், அ.மு.வின் அபுனைவுகளென்று எண்ணிக்கொண்டு வாசிக்கும் பெரும்பாலான படைப்புகள் அற்புதமான புனைவுகள போலிருப்பதை நான் உணர்ந்திருக்கின்றேன்.

•Last Updated on ••Thursday•, 11 •April• 2013 17:21•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 8: மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் 'வேர் மறந்த தளிர்கள்' பற்றிய குறிப்புகள்!

•E-mail• •Print• •PDF•

[தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கும் மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுனனின் 'வேர் மறந்த தளிர்கள்' நாவல் விரைவில் நூலாக வெளிவரவுள்ளது. அதற்காக எழுதிய முன்னுரை இது. - வ.ந.கி-]   [தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கும் மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் 'வேர் மறந்த தளிர்கள்' நாவல் விரைவில் நூலாக வெளிவரவுள்ளது. அதற்காக எழுதிய முன்னுரை இது. - வ.ந.கி-]   இன்று இணையத்தின் வரவு ஏற்படுத்தியிருக்கும் நல்விளைவுகளிலொன்று பல்வேறு நாடுகளிலும் வாழும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மிகவும் இலகுவாக்கி விட்டது என்பதுதான். தகவல் பரிமாற்றம் எத்துறையினைச் சேர்ந்ததாகவிருந்தாலும், அதனை மிகவும் இலகுவாக்கிவிட்டது. இதனை அனைவரும் புரிந்துகொண்டு மிகவும் ஆரோக்கியமாகச் செயற்படுவது அவசியம். இந்த இணையத்தின் வரவு இலக்கியத்தைப் பொறுத்தவரையிலும் பல நல்ல விடயங்களை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாடுகள் பலவற்றில் வாழும் எழுத்தாளர்களின் படைப்புகளை, அவர்கள் வெளியிடும் இணைய இதழ்களை, அச்சூடகங்களின் இணையப் பதிப்புகளை .. இவற்றையெல்லாம் இலகுவாகக் கண்டடைய முடிகிறது. வாசிக்க முடிகிறது. அந்த வகையில் எத்துறையினைச் சேர்ந்ததாகவிருந்தாலும் (இலக்கியமுட்பட) அத்துறைமீதான ஆய்வினை இணையம் மிகவும் இலகுவாக்கி விட்டது. இந்த இணையத்தின் விளைவாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பல்வேறு காலகட்டங்களில் புலம்பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியத்தை அறிய, வாசிக்க முடிகிறது. இதன் மூலம் பல்வேறு தகவல்களை அப்படைப்புகளினூடு அறிய முடிகிறது. இவ்விதமாக அண்மைக்காலத்தில் நான் அறிந்துகொண்ட மலேசிய எழுத்தாளரே வே.ம.அருச்சுணன். இவரது சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் மற்றும் 'வேர் மறந்த நாவல்' பற்றியெல்லாம் 'பதிவுகள்' இணைய இதழ்மூலம் அறிந்துகொண்டேன். அந்த நாவல் நூலாகவும் வெளிவரவிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இந்த நாவலைப் படித்தபொழுது எழுந்த சில என் உணர்வுகளின் வெளிப்பாடே இக்கட்டுரை.

•Last Updated on ••Saturday•, 13 •April• 2013 17:34•• •Read more...•
 

கனடாத் தமிழ் இலக்கியம்: எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் மூலை (Canadian Tamil Literature: Writer V.N.Giritharan's Corner)

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் ப்டைப்புகள் சிலவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும், அவை பற்றி வெளிவந்த ஆய்வு மற்றும் விமர்சனக் கட்டுரைகளையும் Canadian Tamil Literature: Writer V.N.Giritharan's Corner என்னும் வலைப்பதிவில் நீங்கள் வாசிக்கலாம்.  'இத்தளத்தில் அவரது 'அமெரிக்கா' என்னும் சிறு நாவல் மற்றும் 'குடிவரவாளன்' என்னும் தமிழ் நாவலின் மொழிபெயர்ப்பான 'An Immigrant ஆகிய நாவல்களையும் கூட வாசிக்கலாம்

எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் படைப்புகள் சிலவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும், அவை பற்றி வெளிவந்த ஆய்வு மற்றும் விமர்சனக் கட்டுரைகளையும் Canadian Tamil Literature: Writer V.N.Giritharan's Corner என்னும் வலைப்பதிவில் நீங்கள் வாசிக்கலாம்.  'இத்தளத்தில் அவரது 'அமெரிக்கா' என்னும் சிறு நாவல் மற்றும் 'குடிவரவாளன்' என்னும் தமிழ் நாவலின் மொழிபெயர்ப்பான 'An Immigrant ஆகிய நாவல்களையும் கூட வாசிக்கலாம். இத்தளத்தினை மேய விரும்பும் வாசகர்கள் இங்கு அழுத்தவும்.

•Last Updated on ••Saturday•, 30 •March• 2013 23:28••
 

‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan.

•E-mail• •Print• •PDF•

அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள எனது நாவலான 'குடிவரவாளன்' நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'An Immigrant' நாவலுக்காக முனைவர் தாரணி அவர்கள் நல்லதொரு விமர்சனமொன்றினை எழுதியிருக்கின்றார். மின்னூலாக வெளிவந்துள்ள 'An Immigrant' நாவலுக்கான, அந்த விமர்சனத்தினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்கின்றோம்.


“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested” -Sir Francis Bacon English author (1561 - 1626)

‘An Immigrant’: A poignant autobiographical sketch of  V.N. Giritharan.

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

- R.  Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for WomenAn Immigrant is a giant leap in fiction for the Canadian writer of Sri Lankan Tamil origin  V.N. Giritharan. Thiis is a book to be read with utmost “diligence and attention”, as it deals with the existential crisis of a desperate soul in an alien land. The story is inspiring and lights up the spirit of every heart. Although the emphasis of this work is more on the survival struggle of a man known as Ilango, the protagonist, it bears a strong testimony to the brutal genocide of Sri Lanka, which is still infuriating to people across the world. The author V.N. Giritharan has presented in his book, his first hand experience of how the Tamil people are being victimized by the brutalities of the Sinhalese hoodlums who harrass the Tamil. It is also a unique tribute to those Tamil people who lost their lives, families, belongings, nationality and even the identity of being a human in the 1983 July riot that took place in Sri Lanka. In the first few chapters of the book, the author vividly illustrates the plight of the young man, Ilango, who is caught in the riot. In his own land, Ilango feels trapped by the racists and tries his best to escape the monsters. It is a heartrending narration of the author of the riot through the eyes of Ilango.

To the casual reader, this book will be exciting because of its straightforwardness both in the theme as well as in the style. However, it is so astonishing that the book carries multiple layers of meanings, dynamic profundity in the description of the details and critical complexity of notions. It is not just the story of Ilango who escapes the riot in 1983 to reach Canada.  But, the author discusses various challenging issues like the illegal immigrant status forced on an innocent man, denial of the Human Rights in a developed country like the USA, the horrible life in the detention camp, job-seeking crisis of a man without a Social Insurance Card, the tricks of the road side vendors, like Haribabu and Henry, the exploitation of agents like Peter and Pablo, the cowardice of Anisman, the advocate, and most of all, the denunciation of the so-called illegal immigrants who live in the City of New York. The other side of the fascinating City jolts not only the protagonist, but also the readers.

Ilango is seen as a simple innocent youth of Sri Lanka in the initial chapters of the book, who, then, develops into an extraordinary man with impressive qualities even amidst of his adversities. He is a poet, pragmatist, writer, idealist, humanist and an optimist too. In a somber state of affairs in his life, he recalls his readings of the poems of Bharathiar, the renowned poet of Eelam, V.I.S.Jeyabalan and another Eelam poet ‘Kavindran’ (A.N.Kandasami). These renderings provide him with immense strength. When Ilango is not certain about the resolution of the unbalanced predicaments of his life, he gets himself transformed to a philosopher. He considers his life like a tree log that swims along the current of water. Ilango’s positive approach to life is another trait that needs to be appreciated, which is very rare in most human beings.

•Last Updated on ••Friday•, 15 •April• 2016 04:54•• •Read more...•
 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவல் பற்றி...

•E-mail• •Print• •PDF•

குடிவரவாளன் பற்றிச் சில குறிப்புகள்......

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'இந்த நாவல் என் வாழ்வின் அனுபவங்களை மையமாக வைத்து உருவானது. இலங்கையில் நிலவிய அரசியல் சூழல்களினால் உலகின் நானா திக்குகளையும் நோக்கிப் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் நானுமொருவன். கனடா நோக்கி, மேலும் 18 ஈழத்தமிழர்களுடன் பயணித்துகொண்டிருந்த எனது பயணம் இடையில் தடைபட்டது. பாஸ்டனிலிருந்து கனடாவிற்கு எம்மை ஏற்றிச்செல்லவிருந்த டெல்டா 'எயார் லைன்ஸ்' எம்மை ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டது. அதன் காரணமாக, மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரினோம். இவ்விதமாக பாஸ்டனில் அகதிக்காக விண்ணப்பித்த எம்மை அமெரிக்க அரசு நியூயார்க்கிலுள்ள புரூக்லீனிலிருந்த தடுப்பு முகாமினுள் அடைத்து வைத்தது. சுமார் மூன்று மாதங்கள் வரையில் அத்தடுப்பு முகாம் வாழ்வினுள் எம் சுதந்திரத்தை இழந்திருந்தோம். அதன் பின்னர் எம்மை விடுதலை செய்தார்கள்.

•Last Updated on ••Sunday•, 04 •January• 2015 06:29•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் -9: எதுவரை.நெட் இணையத்தளத்தில் கே.எஸ்.சுதாகர் எழுதிய 'புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்' என்னும் கட்டுரை பற்றிச் சில குறிப்புகள்.

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும் யோசிப்பும்!//இன்னமும் புகலிடப்படைப்புகளையோ அறிவியல் புதினங்களையோ எழுத வேண்டும் என்று அவர்களுக்கு உறைக்கவில்லை. உண்மையில் புலம்பெயர்ந்தநாடுகளில் கிடைக்கும் புதிய சூழல், சுதந்திரம், வாய்ப்புவசதி போன்றவற்றை வைத்துக் கொண்டு நல்ல புகலிடப் படைப்புகள் வந்திருக்க வேண்டும். ஆனால் இன்னமும் சாதிப்பிரச்சினை, சீதனக்கொடுமை போன்றவற்றையே நாவல்கள் சுற்றி வருகின்றன.// - 'புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்' கட்டுரையில் கே.எஸ்.சுதாகர் -

இன்னமும் புகலிடப்படைப்புகளையோ அறிவியல் புதினங்களையோ எழுத வேண்டும் என்று அவர்களுக்கு உறைக்கவில்லை.' என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இக்கூற்றானது 'இன்னும் அதிக அளவில் புகலிடப் படைப்புகள் அல்லது அறிவியல் புதினங்கள் வந்திருக்கவேண்டும்' என்று வந்திருக்க வேண்டும். சிறுகதைகளைப் பொறுத்த அளவில் அதிக அளவில் புகலிட அனுபவங்களை மையமாக வைத்து வெளிவந்துள்ளன. நாவல்களைப் பொறுத்த அளவில் அதிக அளவில் வரவில்லையென்று கூறலாம். ஆனால் அது தவறல்ல. அதற்காக வெளிவந்த படைப்புகளின் தரத்தை அதனடிப்படையில் அளவிடுவது தவறென்பது என் கருத்து. ஈழத்தில் நிலவிய அரசியல் சூழல் காரணமாகப் புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகளின் பிரதான அமசங்களாக இழந்த மண் பற்றிய கழிவிரக்கம், கனவுகள் மற்றும் புகலிட அனுபவங்களெல்லாமிருக்கும். அவ்விதமிருப்பதுதான் புகலிடப் படைப்புகளின் பிரதானமான பண்பு. அதே சமயம் அடுத்த தலைமுறையினரிடமிருந்து அதிக அளவில் புகலிட நாட்டின் அனுபவங்கள் வெளிப்படும். அதுவும் இயற்கை. இரண்டாவது தலைமுறையினரிலும் இரு வகையினர். சிறுவயதில் பெற்றோருடன் புகலிடம் நாடிச் சென்றவர்கள். புகலிட நாடுகளில் பிறந்தவர்கள். இவர்களது அனுபவ்ங்களும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. அவற்றின் அடிப்படையில் அவர்களது அனுபவங்கள் அவர்களது படைப்புகளில் வெளிப்படும். அடுத்தது 'ஆனால் இன்னமும் சாதிப்பிரச்சினை, சீதனக்கொடுமை போன்றவற்றையே நாவல்கள் சுற்றி வருகின்றன.' என்ற கூற்றையும் என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவற்றுடன் ஈழத்து அரசியல் நிகழ்வுகளையும் சுற்றி வருகின்றன என்றிருந்தால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவிருக்கும்.

•Last Updated on ••Wednesday•, 13 •February• 2013 22:18•• •Read more...•
 

நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) ஆசிரியர்: வ.ந.கிரிதரன்

•E-mail• •Print• •PDF•

I have already written a novella , AMERICA (Within The Walls), in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,AMERICA (Beyond The Walls) , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN

[ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு  முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் அமெரிக்கா என்னும் பெயரில் 2007 ஆம் காலப்பகுதியில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.- ஆசிரியர்]

நியூயார்க் மாநகரத்தின் புரூக்லின் நகரின்கண் ஃப்ளஷிங் வீதியில் அமைந்திருந்த சீர்திருத்தப் பள்ளியாகவும், அவ்வப்போது சட்டவிரோதக் குடிகாரர்களின் தடுப்புமுகாமாகவும் விளங்கிய அந்த யுத்தகாலத்துக் கடற்படைக்கட்டடத்தின் ஐந்தாவது மாடியின் பொழுதுபோக்குக் கூடமொன்றிலிருந்து இருள் கவிந்திருக்குமிந்த முன்னிரவுப் பொழுதில் எதிரே தெரியும் 'எக்ஸ்பிரஸ்' பாதையை நோக்கிக் கொண்டிருக்குமிந்த அந்தக் கணத்தில் இளங்கோவின் நெஞ்சில் பல்வேறு எண்ணங்கள் வளைய வந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரு மாதங்களாக அவன் வாழ்வினோர் அங்கமாக விளங்கிக் கொண்டிருந்த இந்தத் தடுப்புமுகாம் வாழ்க்கைக்கோர் விடிவு. நாளை முதல் அவனோர் சுதந்திரப் பறவை. சட்டவிரோதக் குடியாக அச்சிறையினுள் அடைபட்டிருந்த அவனைப் பிணையில் வெளியில் செல்ல அனுமதித்துள்ளது அமெரிக்க அரசின் நீதித்துறை. அவனது அகதி அந்தஸ்துக் கோரிக்கைக்கானதொரு தீர்வு கிடைக்கும் அவன் வெளியில் தாராளமாகத் தங்கித் தனது வாழ்வின் சவால்களை எதிர்நோக்கலாம். அவனைப் பற்றிச் சிறிது இவ்விடத்தில் கூறுவது வாசகருக்கு உதவியாகவிருக்கலாம்... மேலும் வாசிக்க

•Last Updated on ••Monday•, 11 •February• 2013 03:15••
 

குருமண்காட்டு நினைவுகள்....

•E-mail• •Print• •PDF•

குருமண்காட்டு நினைவுகள்.... - வ.ந.கிரிதரன் -சில வேளைகளில் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு: என் எழுத்து மற்றும் வாசிப்பின் மீதான ஆர்வத்திற்கு முக்கிய காரணங்கள் எவை , காரணமானவர்கள் யார் என்று. என் வீட்டுச் சூழல்தான் முதல் காரணம். வீடு முழுவதும் தமிழ்ச் சஞ்சிகைகளும், நூல்களுமாக விளங்கியதற்குக் காரணம் அப்பாதான். எனது பால்யகாலத்தில் வீடு முழுவதுமே தமிழகத்திலிருந்து வெளிவந்த சஞ்சிகைகள், பத்திரிகைகளென்று விளங்கியதற்குக் காரணம் அப்பாதான். இதனால் சிறுவயதிலேயே எங்களுக்கு வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது. இவ்விதம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கிய அப்பா ஒருபோதுமே எங்களது வாசிப்புக்குத் தடை போட்டதில்லை. எனது பாடசாலை வாழ்க்கையில் அப்பா வாங்கித் தந்த நூல்கள் பத்திரிகைகளுடன் அன்றைய காலகட்டத்தில் புத்தகக் கடைகளில் தொங்கிக் கிடக்கும் 'பாக்கட் சைஸ்' துப்பறியும் நாவல்களையெல்லாம் வாசித்துத் தள்ளினேன். அப்பாவுக்கு நான் மர்ம நாவல்களை வாசிப்பது தெரிந்திருந்தாலும் ஒருநாளும் 'அவற்றை வாசிக்காதே' என்று அணை போட்டதில்லை. இப்பொழுது நினைத்துப் பார்க்கும்போது அவரது பரந்த மனது விளங்குகின்றது. அன்னம் பாலையும் , நீரையும் பிரித்துப் பார்ப்பதைபோல் நாங்களும் பரந்து பட்ட வாசிப்பின்மூலம் நல்லதைத் தேர்ந்தும், அல்லதைத் தவிர்த்தும் விடுவோமென்று அவர் திடமாக நம்பியிருந்ததாகவேபடுகிறது. அந்த நம்பிக்கைக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் நாங்களும் வாசிப்பில் பரிணாமமடையவில்லையென்பதை இப்பொழுது உணரமுடிகிறது.

•Last Updated on ••Tuesday•, 05 •April• 2016 06:09•• •Read more...•
 

பொங்கல் கவிதை: 'இன்று புதிதாய்ப் பிறந்தோ மென்று' பொங்கல் செய்வோம்; களிப்போம்.

•E-mail• •Print• •PDF•

'இன்று புதிதாய்ப் பிறந்தோ மென்று'  பொங்கல் செய்வோம்; களிப்போம்.

உலகப் பந்தின் திக்குக ளெங்கும்
பரந்து வாழும் தமிழர் வாழ்வில்
முக்கிய நாளே! பொங்கல் நாளே!
அதிலும் கதிரின் கருணை வாழ்த்தி
உழுது வாழும் உழவர் போற்றும்
உன்னத நாளிது வாழ்த்தி நிற்போம்
இந்த நாளில் இன்பமும் பொங்கிட
வேண்டி நிற்போம். வேண்டி நிற்போம்.
யுத்தம் மலிந்த பூமியில் இனிமேல்
நித்தமும் அமைதி நிலவிட வேண்டும்
என்றே நாமும் வேண்டி நிற்போம்.
மானிடர் யாவரும் அன்பு கொண்டு
மதங்கள், மொழிகள், இனங்கள் மற்றும்
நிலவிடும் பிரிவுகள் நீங்கி அன்புடன்
வாழ்ந்திட வேண்டி நிற்போம் நாமே.

•Last Updated on ••Saturday•, 12 •January• 2013 21:46•• •Read more...•
 

வாசிப்பும் , யோசிப்பும் - 8: 'ராஜ்சிவா'வின் 'சிருஷ்டியின் இரகசியமும், ஸ்ட்ரிங்க் தியரியும்' உயிர்மை (டிசம்பர் 2012) கட்டுரை பற்றி...

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும் யோசிப்பும்!டிசம்பர் 2012 உயிர்மை இதழில் வெளியாகியுள்ள 'ராஜ்சிவா'வின் 'சிருஷ்டியின் இரக்சியமும், ஸ்ட்ரிங்க் தியரியும்' என்னும் கட்டுரை என் கவனத்தைக் கவர்ந்தது. பொதுவாக வானியற்பியல் (Astro-Physics) பற்றிய ஆழமான கட்டுரைகள், அபுனைவுகள் போன்றன என்னை மிகவும் கவர்பவை. அவை நாம் வாழும் இவ்வுலகைப் பற்றி, இப்பிரபஞ்சத்தைப் பற்றி, பல்பரிமாணங்களுக்கான சாத்தியங்கள் பற்றியெல்லாம் ஆழமாக, தத்துவார்த்த நோக்கில் எம்மைச் சிந்திக்க வைப்பவை. இக்காரணங்களுகாகவே அவை என்னை அதிகமாகக் கவர்பவையாகவிருந்து விடுகின்றன.

•Last Updated on ••Tuesday•, 01 •January• 2013 23:13•• •Read more...•
 

பாரதியின் பிறந்ததின நினைவுக் கட்டுரை: 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'

•E-mail• •Print• •PDF•

பாரதியின் பிறந்ததின நினைவுக் கட்டுரை: 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' - வ.ந.கிரிதரன் -['பாரதி கருத்துமுதல்வாதியா? பொருள்முதல்வாதியா?' என்னும் தலைப்பில் , அவனது 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையினை முன்வைத்துக் கட்டுரையொன்றினை மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ் சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையில் எழுதியிருக்கின்றேன். 1981 அல்லது 1982ஆம் ஆண்டு வெளிவந்ததாகவிருக்க வேண்டும். அப்பொழுது அதன் ஆசிரியராகவிருந்தவர் பொறியியலாளர் பிரேமச்சந்திரன். எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரனை நான் முதன் முதலில் அறிந்துகொள்ளக் காரணமாகவிருந்ததும் அக்கட்டுரையே. 'நுட்பத்தில்' வெளிவந்த அக்கட்டுரையினை வாசித்துவிட்டு என்னுடன் தொடர்புகொண்டார். அதன் பின்னர் அக்கட்டுரை கைவசமில்லாத காரணத்தால் மீண்டும் 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு' என்னும் தலைப்பில் 'டொராண்டோ'வில் வெளிவந்த 'தாயகம்' (சஞ்சிகை/ பத்திரிகை)யில் எழுதினேன். பின்னர் அக்கட்டுரை 'பதிவுகள்' இணைய இதழிலும், 'திண்ணை' இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது. அக்கட்டுரையினை எழுத்தாளர் (சீர்காழி) தாஜ் தனது வலைப்பதிவான 'தமிழ்ப்பூக்க'ளிலும் மீள்பிரசுரம் செய்து அது பற்றிய தனது கருத்தினையும் பதிவு செய்திருக்கின்றார். பாரதியின் பிறந்த நாளையொட்டி (டிசம்பர் 11) அக்கட்டுரை மீண்டும் பதிவுகளில் பாரதியின் நினைவுக்காகவும், ஒரு பதிவுக்காகவும் பிரசுரமாகின்றது. - வ.ந.கி]  தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சரியானதொரு தீர்வில்லை. 'இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள்,இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை' என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் 'கருத்து முதல்வாதிகள்'. இவர்கள் 'சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது' என்றும், 'இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு' என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல 'இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே' என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் 'பொருள் முதல்வாதம்' எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் 'பொருள்முதல்வாதிகள்' எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி 'ஆன்மா நிலையானது, அழிவற்றது என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே'. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் 'அப்படி எதுவுமில்லை' என்கின்றார்கள். 'இவ்வியற்கையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களே உயிரினங்கள் உருவாகக் காரணம்' என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியை ஆராய்வோமாகில் அவனும் இந்தப் பிரச்சினையை அசட்டை செய்து விடவில்லை என்பதைக் கண்டு கொள்ளலாம். பாரதியின் கீழுள்ள கவிதை வரிகள் அவனை ஒரு கருத்து முதல்வாதியாகக் காட்டுகின்றன. 'அல்லா' என்ற கவிதையில் பாரதி பின்வருமாறு பாடுகின்றான்:

•Last Updated on ••Tuesday•, 11 •December• 2012 23:48•• •Read more...•
 

நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் 'கெவின் லிஞ்ச்' இன் நகரொன்றின் பிம்பக்' கோட்பாடு பற்றிய புரிதலும்!

•E-mail• •Print• •PDF•

நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் 'கெவின் லிஞ்ச்' இன் நகரொன்றின் பிம்பக்' கோட்பாடு பற்றிய புரிதலும்! - வ.ந. கிரிதரன் -நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம் வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றனவோ அவ்விதமே நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களையும் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. நகர மாந்தரின் நகர் பற்றிய உளப்பதிவுகள் அவர்களது அந்நகரினுடான அனுபவங்கள். அதன் விளைவாக உருவான நினைவுகள், அந்நகரிலுள்ள கட்டடங்கள். முக்கியமான இடங்கள், அங்கு வாழும் ஏனைய மக்கள், அங்கு நிகழும் பலவேறு விதமான செயற்பாடுகள். நகரின் முக்கியமான அடையாளங்களாகத் திகழும் சின்னங்கள்,... ... என இவை போன்ற பல காரணிகளின் விளைவாக உருவாகுகின்றன. நகர அமைப்பு வல்லுநர்கள் நகர்களைப் புனர் நிர்மாணம் செயகையில் அல்லது புதியதொரு நகரமொன்றினை நிர்மாணித்திடும்போது அங்கு வாழும் மாந்தரின் மேற்படி மனப்பிம்பங்கள் அல்லது பதிவுகள் பற்றிய போதிய அறிவினைப் பெற்றிருப்பது அவர்களது பணிக்கு மிகவும் இன்றியமையாதது மட்டுமல்ல பயனுள்ளதுமாகும். இவ்விதமாக நகர மாந்தரின் அவர் வாழும் நகர் பற்றிய மனப்பிம்பங்களை மையமாக வைத்து அந்நகரினை அறிவதற்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முயனறவர்தான் பேராசிரியர் கெவின் லிஞ்ச் Professor Kevin Lynch).

•Last Updated on ••Monday•, 10 •December• 2012 19:48•• •Read more...•
 

வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்!

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் ஒன்று : கட்டடங்களும், தொழில் மயப்படுத்தலும்.

வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! - வ.ந.கிரிதரன் -[-பதிவுகள் இணைய இதழின் அக்டோபர் 2008 , இதழ் 106இல் வெளியான இக்கட்டுரை இங்கு ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. இக்கட்டுரை ஏற்கனவே 'தாயகம் ' சஞ்சிகையிலும் வெளிவந்திருக்கிறது. -  பதிவுகள்] இலங்கை இந்தியா போன்ற வளர்முகநாடுகளில் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இந்த வீட்டுப் பிரச்சினை. இத்தகைய வளர்முகநாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள். இதனால் வீடுகளைக் கட்டினால் மட்டும் போதாது? குறைந்த செலவிலும் கட்ட வேண்டும். இதன் காரணமாகக் 'குறைந்த செலவு வீடுகளின்' (Low Cost Housing) தேவை வளர்முகநாடுகளைப் பொறுத்த வரையில் மிகவும் அவசியமாகின்றது. பல்வேறு வளர்முக, அபிவிருத்தியடைந்த நாடுகளிலெல்லாம் இத்தகைய குறைந்த செலவுக் குடிமனைகளைக் கட்டுவதெப்படி என்பது பற்றியெல்லாம் ஆய்வுகள், பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. வெற்றியடைந்திருக்கின்றன. மேலும் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுமிருக்கின்றன. இத்தகைய வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வீடமைப்புத் திட்டங்கள் மிகுந்த அவதானத்துடன் உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்களை அதிக அளவு பாவிக்கக்கூடியதாக, அதே சமயம் உருவாகக் கூடிய சேதங்களின் அளவைக் குறைக்கக் கூடியதாக, மேலும் கூடிய அளவு பயனைத் தரக்கூடியதாக, கட்டடம் கட்டுவதற்குரிய கால அளவைக் குறைக்கக் கூடியதாக இத்திட்டங்கள் அமைந்திருக்க வேண்டும். வீட்டைக் கட்டுவதுடன் மட்டும் பிரச்சினை தீர்ந்து போய்விடுவதில்லை. அவற்றில் வாழப்போகும் மக்களுக்கேற்றபடி வீடுகள் அமைந்திருக்க வேண்டும். இத்தகைய வீடமைப்புத் திட்டங்களை அமைக்கும்போது அவற்றில் வாழப்போகும் மக்களின் சமூக வாழ்க்கை முறை, அவர்களின் தேவைகள், மற்றும் வீடுகள் அமையவிருக்கின்ற பிரதேசங்களின் காலநிலை, அப்பகுதிகளில் கிடைக்கக்கூடிய மூலவளங்கள் என்பன பற்றியெல்லாம் கவனத்தில் கொண்டே அத்தகைய திட்டங்களை அமைக்க வேண்டும்.

•Last Updated on ••Wednesday•, 12 •December• 2012 06:22•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் 7: வெ.சா.வின் 'க.நா.சு.வும் நானும் 3' பற்றிய சில குறிப்புகள்...

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும் யோசிப்பும்!பதிவுகள் இணைய இதழில் வெளியாகியிருக்கும் மதிப்பிற்குரிய திரு. வெ.சா. அவர்களின் க.நா.சுவும் நானும் கட்டுரையின் இறுதிப்பகுதியில் கலாநிதி கைலாசபதி பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதைப் படித்தபொழுது சிறிது திகைப்பும், வருத்தமும் ஏற்பட்டன. அதிலவர் கலாநிதி கைலாசபதி பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

1. "ஆனால் இலங்கையில் பெரிய சட்டாம்பிள்ளையாக வலம் வந்த ஒரு பேராசிரியர், பர்மிங்ஹாமில் ஜார்ஜ் தாம்ப்சனின் கீழ் ஆராய்ச்சி செய்தவர், இலங்கையில் தம்மை அண்டியவர்களுக்கெல்லாம் இலக்கிய தீக்ஷை அளித்து தம் பக்தர் கூட்டத்தை பெருக்கிக் கொண்டவர், ஏன் க.நா.சு.வைக் கண்டு எரிச்சல் பட வேண்டும்?"

•Last Updated on ••Tuesday•, 27 •November• 2012 21:35•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் -6: Jerzey kosinskiயின் Being There!

•E-mail• •Print• •PDF•

இந்தக் கட்டுரை சுபமங்களா, மார்ச் 1995 இதழில் வெளிவந்த போலிஸ் அமெரிக்கரான எழுத்தாளர் ஜேர்சி கொசின்ஸ்கியின் புகழ்பெற்ற நாவலான Being There பற்றிய அறிமுகக் கட்டுரை. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. ஜேர்சி கொசின்ஸ்கியின் இன்னுமொரு புகழ்பெற்ற நாவல் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்' (The Painted Birds). இது நவீன அமெரிக்க இலக்கியத்தின் முக்கியதொரு படைப்பாகக் கருதப்படுகிறது.  இரண்டாம் உலக யுத்தக் காலகட்டத்தில் , யூதச் சிறுவனான ஜேர்சி கொசின்ஸ்கி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அலைந்து திரிந்திருக்கின்றார். அக்காலகட்டத்தில் அவரடைந்த அனுபவங்களை மையமாக வைத்து எழுதிய நாவல் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்'. ஜேர்சி கொசின்ஸ்ஜியின் வாழ்வும் தற்கொலையிலேயே முடிந்து போனது சோகமானது. - வ.ந.கி]வாசிப்பும் யோசிப்பும்![ இந்தக் கட்டுரை சுபமங்களா, மார்ச் 1995 இதழில் வெளிவந்த கட்டுரை. 'போலிஸ் அமெரிக்க'ரான எழுத்தாளர் ஜேர்சி கொசின்ஸ்கியின் புகழ்பெற்ற நாவலான Being There பற்றிய அறிமுகக் கட்டுரை. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. ஜேர்சி கொசின்ஸ்கியின் இன்னுமொரு புகழ்பெற்ற நாவல் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்' (The Painted Birds). இது நவீன அமெரிக்க இலக்கியத்தின் முக்கியதொரு படைப்பாகக் கருதப்படுகிறது.  இரண்டாம் உலக யுத்தக் காலகட்டத்தில் , யூதச் சிறுவனான ஜேர்சி கொசின்ஸ்கி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அலைந்து திரிந்திருக்கின்றார். அக்காலகட்டத்தில் அவரடைந்த அனுபவங்களை மையமாக வைத்து எழுதிய நாவல் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்'. ஜேர்சி கொசின்ஸ்ஜியின் வாழ்வும் தற்கொலையிலேயே முடிந்து போனது சோகமானது. - வ.ந.கி]  அண்மையில் Jerzy kosinski எழுதிய Being There என்ற கைக்கடக்கமான சிறியதொரு நாவலைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. கடுகு சிறிது காரம் பெரிது என்பதற்கொப்ப அளவில் சிறியதானாலும் இந்நாவல் உள்ளடக்கத்தில் கனதியானது. மனிதனைப் பாதிக்கும் நிலைமைகளை ஒருவித கிண்டல் பாணியில் நோக்கி விமர்சிக்கும் வகையிலமைந்த நாவலை 'சட்டயர்' (Satire) என்போம். Being There அந்த வகையான நாவல்களில் குறிப்பிடத்தக்கதொன்று. உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில் இச்சிறுநாவல் இன்றைய மனிதனைப் பலமாகப் பாதிக்கும் உலக, உள்நாட்டு அரசியல் மற்றும் குறிப்பாகத் தொலைகாட்சி பற்றிப் பலமாகவே விமர்சனத்தை முன்வைக்கின்றது. உருவத்தைப் பொறுத்த வரையில் கிறிஸ்த்தவ தத்துவ சமயநூலான பைபிளினது பாதிப்பு மிக அதிகமாகவே தெரிகின்றது.

•Last Updated on ••Sunday•, 04 •November• 2012 20:29•• •Read more...•
 

வாசிப்பும் யோசிப்பும் - 5: சங்கச் செய்யுள் - நண்டுவிடு தூது.

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும் யோசிப்பும்!சங்க காலத்துச் செய்யுள்கள் எப்பொழுதுமே என்னைப் பிரமிப்பில் ஆழ்த்துபவை. ஆறுதலாக அவற்றை அவ்வப்போது வாசித்து அனுபவிப்பதில் எனக்குப் பெரு விருப்புண்டு. பொதுவாக அவை என்னைக் கவர்வதன் காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: அவற்றில் காணப்படும் வளம் நிறைந்த சொற்செறிவு, கூர்ந்த நோக்கு மிக்க இயற்கை மீதான அவதானிப்பு,  படைப்பாற்றல், கற்பனைச் சிறப்பு, மற்றும் அன்றைய கால கட்டச் சமுதாய அமைப்பு பற்றிய தகவல்கள். அண்மையில் வாசித்த சங்ககாலச் செய்யுளொன்று வாசித்தபொழுது என்னை மிகவும் கவர்ந்தது. அதன் மீதான யோசிப்பின் பதிவுகளை சிறிது பகிர்ந்துகொள்ள விழைந்ததின் விளைவே இச்சிந்தனைக்குறிப்புகள்.  இந்தச் செய்யுளினை இயற்றியிருப்பவர்  மதுரைக் கள்ளிற் கடையத்தன்  வெண்ணாகனார். திணை:  நெய்தல். தன் காதலுக்குரிய தலைவனை நீண்ட காலமாகக் காணாத தலைவி, அவனுடன் திரிந்த இடங்களையெல்லாம் சென்று பார்த்து வருந்துகிறாள். அவனைக் காணாததால் ஏற்பட்ட துயர் அவளை வருத்துகிறது. தன் துயரை அவள் தன் காதலனுக்குத் தெரியப்படுத்துவதற்காக அவள் தெரிவு செய்த உயிரினம் ஆச்சரியத்தை விளைவிக்கிறது. நளன் தமயந்திக்கு அன்னத்தைத் தூது விட்டதை நாம் படித்திருக்கின்றோம். வெண்முகிலைத் தூதுவிட்ட தலைவிமாரைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் யாராவது நண்டினைத் தூது விட்டிருக்கின்றார்களா? அது பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இந்தச் செய்யுளில் வரும் தலைவி அதனைத்தான் செய்திருக்கின்றாள். ஆம், நண்டினைத் தூது விடுகின்றாள்.

•Last Updated on ••Saturday•, 03 •November• 2012 23:27•• •Read more...•
 

Novel: AN IMMIGRANT By V.N.Giritharan

•E-mail• •Print• •PDF•

Canadian Tamil Literature!

Novel: AN IMMIGRANT By V.N.Giritharan [Translation By Latha Ramakrishnan; Proofread & Edited By Thamayanthi Giritharan ]: - I have already written a novella ,  AMERICA, in Tamil, based on a Tamil refugee's life at the detention camp.  The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then,  adding some more short-stories, a short-story collection of mine was published under the  title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes   life at the detention camp, this novel ,AN IMMIGRANT  , describes the struggles  and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN  To read more

•Last Updated on ••Monday•, 11 •February• 2013 02:34••
 

வாசிப்பும் யோசிப்பும் 4: தேவகாந்தனின் 'புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்: ஓர் ஒப்புநோக்கு' கட்டுரை பற்றி....

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும் யோசிப்பும்!'பதிவுக'ளில் வெளியாகியுள்ள எழுத்தாளர் தேவகாந்தனின் 'புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்: ஓர் ஒப்புநோக்கு' கட்டுரை பற்றிய எனது கருத்துகள் சிலவற்றைக் குறிப்பிடுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம். தேடகம் சார்பில் நடைபெற்ற மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட தனது கட்டுரையினைப் 'பதிவுகள்' இதழுக்கு அனுப்பியது பற்றிக் குறிப்பிடும்போது தேவகாந்தன் 'இதன் போதாமையை. விடுபடல்களை முன்னரே நான் கண்டிருந்தேன். ஆனாலும் இத்துறையில் மேலும் விரிவான தேடல்களுக்கும். பதிவுகளுக்கும் உதவக்கூடுமென்ற வகையில் அவ்வுரைக்கட்டை இங்கே வெளிப்படுத்த விரும்பினேன்' என்று குறிப்பிட்டிருக்கின்றார். 'மேலும் விரிவான தேடல்களுக்கும், பதிவுகளுக்கும் உதவக்கூடுமென்ற வகையில் இக்கட்டுரையினை அவர் வெளியிட விரும்பினார். அதற்கொப்பவே இக்கட்டுரை பற்றி மேலும் சில கருத்துகளை எனது இக்கட்டுரை கூறும்.

•Last Updated on ••Sunday•, 04 •November• 2012 20:30•• •Read more...•
 

அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!

•E-mail• •Print• •PDF•

அறிஞர் அ.ந.கந்தசாமி[எழுத்தாளர் முல்லை அமுதனின் காற்றுவெளி அமைப்பினால் வெளியிடப்பட்ட 'இலக்கியப் பூக்கள்  (பகுதி ஒன்று; 2009) ' நூலில் வெளியான கட்டுரையின் மூல வடிவம். பதிவுகளில் ஏற்கனவே பிரசுரமான கட்டுரையிது. தற்பொழுது ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது.]

அறிஞர் அ.ந.கந்தசாமி பல்துறை விற்பன்னராகவிருந்தவர். இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் சிறுகதை, நாவல்,நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, கவிதை எனச் சகல பிரிவுகளிலும் கொடி கட்டிப் பறந்தவர். ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப்படுபவர். தனக்குப் பின்னால் ஓர் எழுத்தாளப் பரம்பரையையே உருவாக்கிச் சென்றவர். செயல் வீரர் கூட. நாற்பதுகளில் வில்லூன்றி மயான சாதிப் படுகொலை பற்றி முதற்தடவையாகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த கவிஞன். புதுமைப் பித்தன் போன்றவர்களை மீண்டும் இனம் கண்டது போல் அ.ந.க.வையும் மீண்டும் விரிவாக இனம் காண்பது ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு முக்கியம். தான் வாழ்ந்த மிகவும் குறுகிய காலத்தில் சமூகத்திற்காக, மொழிக்காக அ.ந.க ஆற்றிய பங்களிப்பு வியப்பிற்குரியது. அ.ந.க தான் வாழ்ந்த காலத்தில் பல இளம் படைப்பாளிகளைப் பாதித்தவர். பலர் உருவாகக் காரணமாகவிருந்தவர். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரையில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு அளப்பரியது. அவரது பன்முகப் பார்வைகளையும் வெளிக்கொணரும் வரையில் படைப்புகள் நூலுருப் பெறவேண்டிய தேவையுள்ளது. அ.ந.கவின் படைப்புகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு நூல்களாக வெளிவரவேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல அந்த மகத்தான எழுத்துக் கலைஞனின் தன்னலமற்ற , இலட்சிய வேட்கை மிக்க இலக்கியப்பணிக்கு நாம் செய்யும் கைமாறுமாகும். இதுவரையில் அவரது இரு படைப்புகள் மாத்திரமே நூலுருப் பெற்றுள்ளன. அதுவும் அவரது இறுதிக் காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த 'வெற்றியின் இரகசியங்கள்'. அடுத்தது 'மதமாற்றம்' மதமாற்றம் கூடத் தனிப்பட்ட ஒருவரின் நிதியுதவியின் மூலம் தேசிய கலை இலக்கியப் பேரவையின் பெயரில் வெளிவந்ததொரு நூல்.

•Last Updated on ••Friday•, 23 •March• 2018 08:23•• •Read more...•
 

அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்[இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட 'வாதங்களும், விவாதங்களும்' நூலுக்காக எழுதப்பட்டது. நூலினை பா.அகிலன், எழுத்தாளர் திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோர் தொகுத்துள்ளார்கள். ]  -  'நான் எழுத்தாளனோ, விமர்சகனோ இல்லை' என்று ஆரம்பத்திலிருந்தே பிரகடனப்படுத்தி வருகின்றேன்" (விவாதங்கள் சர்ச்சைகள்,  பக்கம்263) என்று தன்னைப்பற்றி வெங்கட் சாமிநாதன் கூறிக்கொண்டாலும் இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற கலையின் பல்வேறு துறைகளிலும் ஆழமான, காத்திரமான பங்களிப்பினைச் செய்த கலை விமர்சகர் இவரென்பது மறுக்கமுடியாதவுண்மை மட்டுமல்ல நன்றியுடன் விதந்துரைக்கப்பட வேண்டியதுமாகும். 1960இல் 'எழுத்து' இதழில் வெளியான 'பாலையும், வாழையும்' கட்டுரையின் மூலம் எழுத்துலகிற்குக் காலடியெடுத்து வைத்த வெ.சா.வின் க்லைத்துறைக்கான பங்களிப்பு ஐம்பதாண்டுகளை அடைந்திருக்கிறது. இந்த ஐம்பதாண்டுக் காலகட்டத்தில் 'சாமிநாதனது பேனா வரிகள் புலிக்குத் தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது என்றபடி சகலதையும் பதம் பார்க்கும்' என்னும் சி.சு.செல்லப்பாவின் கூற்றின்படி அனைவரையும் பதம் பார்த்துத்தான் வந்திருக்கிறது. ஒரு சில வேளைகளில் உக்கிரமாகவும் இருந்திருக்கிறது. ஒரு படைப்பாளியின் படைப்பினை ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கி அதன் நிறைகளை மட்டுமல்லாது குறைகளையும் எந்தவிதத் தயக்கங்களுமின்றி வெளிப்படுத்தும் வெ.சா. சில சமயங்களில் அவரது விமர்சனங்களை முன்னுரைகளென்ற பெயரில் கேட்கும் சிலருக்கு நேரிடையாகவே மறுத்துமிருக்கின்றார். தனக்குச் சரியென்று பட்டதை, எந்தவிதத் தயக்கங்களுமின்றி, எந்தவித பயன்களையும் எதிர்பார்க்காதநிலையில் , துணிச்சலுடன் எடுத்துரைக்கும் வெ.சா..வின் போக்கு வெ.சா.வுக்கேயுரிய சிறப்பியல்புகளிலொன்று.

•Last Updated on ••Saturday•, 29 •September• 2012 00:43•• •Read more...•
 

வாசிப்பும் யோசிப்பும் -3: ஜீவநதியின் கனடாச் சிறப்பிதழ்

•E-mail• •Print• •PDF•

ஜீவநதியின் கனடாச் சிறப்பிதழ்!வாசிப்பும் யோசிப்பும்!கலாமணி பரணீதரனை ஆசிரியராக, 'அறிஞர் தம் இதய ஓடை, ஆழ நீர் தன்னை மொண்டு, செறி தரும் மக்கள் எண்ணம் , செழித்திட ஊற்றி ஊற்றி, புதியதோர் உலகம் செய்வோம்' என்னும் பாரதிதாசனின் பாடல் வரிகளைத் தாரகமந்திரமாக் கொண்டு அல்வாயிலிருந்து வெளிவரும் ஜீவநதி கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 48வது இதழான புரட்டாதி 2012 இதழ் கனடாச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கின்றது. இது பற்றிய ஆசிரியத் தலையங்கத்தில் 'ஜீவநதியின் கனடாச் சிறப்பிதழும் முழுமையாகக் கனடா வாழ் எழுத்தாளர்களின் படைப்புகளை மாத்திரமே தாங்கி வருகின்றது என்பது பதிவு செய்யப்பட வேண்டியதொன்றாகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்மாவட்டத்திலிருந்து ஆஸ்திரேலிய, கனேடியச் சிறப்பிதழ்களை வெளிக்கொண்டுவந்ததன்மூலம் ஜீவநதி மேற்படி நாடுகளிலுள்ள படைப்பாளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதுடன், ஈழ மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கு மேற்படி நாடுகளின் கலை, இலக்கிய முயற்சிகளையும் அறிமுகம் செய்கின்றது. இது பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். மேற்படி ஆசிரியத் தலையங்கத்தில்2011 வருட சிறந்த சஞ்சிகைக்கான கு.சின்னப்பபாரதி விருது கிடைத்த விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராட்டுகள்.

•Last Updated on ••Monday•, 24 •September• 2012 18:25•• •Read more...•
 

வாசிப்பும், யோசிப்பும் - 2: இலக்கியமென்றால் என்ன?

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும் யோசிப்பும்!ஜெயமோகனின் 'நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்' நூலின் அண்மைய பதிப்பினை வாசித்துக்கொண்டிருக்கின்றேன். அதில் மூன்றாவது அத்தியாயமான 'இலக்கியத்தை எதிர்கொள்ள'லின் இறுதியில் அவர் பின்வருமாறு கூறியிருப்பார்: "இலக்கியம் கருத்தைச் சொல்வது என்று எண்ணும் வாசகர்கள் செய்யும் தவறு என்ன? எளிமையாகக் கூறப்போனால் அவர்கள் இலக்கியத்தை அறிவுத் துறைகளில் ஒன்றாகக் கருதுகின்றார்கள். பல சமயம் தத்துவம், ஒழுக்கவியல், மதம், அரசியல் முதலிய  பிற துறைகளைச் சார்ந்து  இயங்கக் கூடிய ஓர் உப- அறிவுத்துறையாகக் கருதுகின்றார்கள். இது பெரும் பிழை. இலக்கியம் என்பது ஒரு கலை." ஜெயமோகனின் இக்கூற்றினை வாசித்தபொழுது என் உள்ளத்தில் பல்வேறு சிந்தனைகள் இலக்கியம் பற்றிச் சிறகடித்துப் பறந்தன. இலக்கியத்தை வெறும் கலையாகக் கருதும் ஜெயமோகன் இலக்கியத்தைத் தனியாகப் பிரித்து வைக்கின்றார். இலக்கியம் ஒரு கலை. ஆனால் அதே சமயம் அந்தக் கலை ஒரு போதுமே தனித்து இயங்க முடியாது. ஏனைய துறைகளெல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் இலக்கியம். பொதுவாக இலக்கியமென்றதும் பலர் அதனைக் கதை, கவிதை, நாடகம் போன்ற புனைவுகளை உள்ளடக்கியதாக மட்டுமே கருதிக்கொண்டு விடுகின்றார்கள். அந்தத் தவறினைத்தான் ஜெயமோகனும் செய்திருப்பதாக எனக்குப் படுகின்றது. இதனை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்பதற்கு இலக்கியமென்றால் என்ன என்பது பற்றிச் சிந்தனையினைச் சிறிது திசை திருப்புவது நன்மை பயக்கும்.

•Last Updated on ••Monday•, 17 •September• 2012 22:41•• •Read more...•
 

வாசிப்பும் யோசிப்பும்! - 1

•E-mail• •Print• •PDF•

வாசிப்பும் யோசிப்பும்!அவ்வப்போது வாசிக்கும் விடயங்களின் யோசிப்பு, மற்றும் யோசிப்பு (நனவிடை தோய்தல்)  பற்றிய சிறு குறிப்புகளிவை.  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் 'உயிர்மை' மாத சஞ்சிகையில் 'பறவைக்கோணம்' என்றொரு பத்தி எழுதிவருகின்றார். இம்முறை (செப்டம்பர் 2012) உயிர்மை இதழில் வெளியான பத்தி 'வல்லவன் ஒருவன் - பளிங்கினால் ஒரு மாளிகை' என்னும் தலைப்பில் வெளிவந்திருந்தது. அதில் ராமகிருஷ்ணன் 'பளிங்கினால் ஒரு மாளிகை' பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது என் கவனத்தைக் கவர்ந்தது.
அதிலவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: 'பளிங்கினால் ஒரு மாளிகை. பருவத்தால் மணி மண்டபம் என்ற வல்லவன் ஒருவன் படப்பாட்டைப் பல ஆண்டு காலமாகத் திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இப்பாடல் தரும் அனுபவம் புத்துணர்வூட்டுவதாகவே இருக்கிறது.' ஒரு பாடல் எவ்விதம் கேட்பவரைப் பொறுத்து வித்தியாசமான விளைவுகளை எற்படுத்துகிறதென்பதற்கு ராமகிருஷ்ணனின் மேற்படி பாடலைப் பற்றிய கருத்துகள் எடுத்துக்காட்டு.

•Last Updated on ••Thursday•, 06 •June• 2013 17:01•• •Read more...•
 

கோப்பாய்ப் பழைய கோட்டையின் கோலம்!

•E-mail• •Print• •PDF•

15-3-1981 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளி வந்த கட்டுரை இது. 35 ரூபா அனுப்பியிருந்தார்கள். தற்போது யாராவது இந்தக் கோப்பாய்ப் பழைய கோட்டையின் இன்றைய நிலை பற்றி அறிந்தால் அறியத் தரவும்- வ.ந.கி [ 15-3-1981 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளி வந்த கட்டுரை இது. 35 ரூபா அனுப்பியிருந்தார்கள். தற்போது யாராவது இந்தக் கோப்பாய்ப் பழைய கோட்டையின் இன்றைய நிலை பற்றி அறிந்தால் அறியத் தரவும்- வ.ந.கி -]

நல்லூர் நகர் பற்றி ஆராய விளைந்த போது, கட்டடக் கலை மாணவனான நான் உதவி நாடி கலாநிதி கா.இந்திரபாலாவை நாடிய போது தான், அவர் தனது சிரமத்தைப் பொருடபடுத்தாது தனது வேலைகளுக்கு மத்தியில் எனக்கு உதவினார். அபோதுதான் அவர் கோப்பாயில் அமைந்திருந்த தமிழ் மன்னர்களின் கோட்டையைப் பற்றியும் அது பற்றிய சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரை பற்றியும் கூறினார். தமிழரின் பழமை வாய்ந்த சின்னங்களின் பரிதாப நிலை கண்டு மனம் நொந்திருந்த எனக்கு அந்தக் கோட்டை அந்தக் கோட்டையின் இன்றைய நிலையைப் பார்க்க வேண்டும் போலிருக்கவே , கோப்பாய் விரைந்தேன். கோப்பாய் பொலிஸ் ஸ்டேசனுக்கு முன்பாயுள்ள சேர்ச்சைச் சேர்ந்த சற்குணசிங்கம் என்பவர் எனக்கு அப்பகுதியினைக் காட்டி உதவினார்.

•Last Updated on ••Friday•, 14 •September• 2012 23:02•• •Read more...•
 

கோப்பாய்ப் பழைய கோட்டையின் கோலம்!

•E-mail• •Print• •PDF•

15-3-1981 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளி வந்த கட்டுரை இது. 35 ரூபா அனுப்பியிருந்தார்கள். தற்போது யாராவது இந்தக் கோப்பாய்ப் பழைய கோட்டையின் இன்றைய நிலை பற்றி அறிந்தால் அறியத் தரவும்- வ.ந.கி [ 15-3-1981 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளி வந்த கட்டுரை இது. 35 ரூபா அனுப்பியிருந்தார்கள். தற்போது யாராவது இந்தக் கோப்பாய்ப் பழைய கோட்டையின் இன்றைய நிலை பற்றி அறிந்தால் அறியத் தரவும்- வ.ந.கி -]

நல்லூர் நகர் பற்றி ஆராய விளைந்த போது, கட்டடக் கலை மாணவனான நான் உதவி நாடி கலாநிதி கா.இந்திரபாலாவை நாடிய போது தான், அவர் தனது சிரமத்தைப் பொருடபடுத்தாது தனது வேலைகளுக்கு மத்தியில் எனக்கு உதவினார். அபோதுதான் அவர் கோப்பாயில் அமைந்திருந்த தமிழ் மன்னர்களின் கோட்டையைப் பற்றியும் அது பற்றிய சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரை பற்றியும் கூறினார். தமிழரின் பழமை வாய்ந்த சின்னங்களின் பரிதாப நிலை கண்டு மனம் நொந்திருந்த எனக்கு அந்தக் கோட்டை அந்தக் கோட்டையின் இன்றைய நிலையைப் பார்க்க வேண்டும் போலிருக்கவே , கோப்பாய் விரைந்தேன். கோப்பாய் பொலிஸ் ஸ்டேசனுக்கு முன்பாயுள்ள சேர்ச்சைச் சேர்ந்த சற்குணசிங்கம் என்பவர் எனக்கு அப்பகுதியினைக் காட்டி உதவினார்.

•Last Updated on ••Friday•, 14 •September• 2012 23:02•• •Read more...•
 

சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு

•E-mail• •Print• •PDF•

சிங்கை நகர் வன்னிப் பகுதியில் இருந்ததாக கலாநிதி குணராசா , கலாநிதி புஷ்பரட்ணம் ஆகியோர் கருதுவார்கள். ஆனால் சிங்கை நகர் [சிங்கை நகர் வன்னிப் பகுதியில் இருந்ததாக கலாநிதி குணராசா , கலாநிதி புஷ்பரட்ணம் ஆகியோர் கருதுவார்கள். ஆனால் சிங்கை நகர் வல்லுபுரத்திலேயே இருந்திருக்க வேண்டுமென்பதுதான் இக்கட்டுரையாளரின் கருத்து. நல்லூர் இராஜதானி நகர அமைப்பு ஆய்வின் இரண்டாம் பதிப்பு நூலாக வெளிவரும்போது இந்தக் கட்டுரையும் உள்ளடக்கியே வெளிவரும். இக்கட்டுரை ஏற்கனவே திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்தது. இப்பொழுது மீள்பிரசுரமாக வெளிவருகிறது ஒரு பதிவுக்காக.. - வ.ந.கி -] சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார்.

•Last Updated on ••Friday•, 08 •July• 2016 19:12•• •Read more...•
 

நிரோமி டி சொய்சாவின் 'தமிழ்ப் பெண்புலி' பற்றிய குறிப்புகள்!

•E-mail• •Print• •PDF•

Niromi De Soyzaநிரோமி டி சொய்சாவின் 'தமிழ்ப் பெண்புலி' பற்றிய குறிப்புகள்!நிரோமி டி சொய்சாவின் (Niromi De Soyza)  'தமிழ்ப் பெண்புலி' (Tamil Tigress) என்னும் ஆங்கில நூலை அண்மையில்,டொராண்டோவிலுள்ள  'The World's Biggest Book Store' இல் வாங்கினேன்; அங்கிருந்த கடைசிப் பிரதிகளான இரண்டிலொன்று. இந்த நூலினை வாங்கும் எண்ணமோ அல்லது வாசிக்கும் எண்ணமோ ஆரம்பத்திலிருக்கவில்லை. இந்நூல் பற்றிய கருத்தினைக் கூறும்படி முகநூல் நண்பரொருவர் கேட்டுக்கொண்டதன் விளைவாக வாங்கும் எண்ணம் உண்டாயிற்று. ஒரு குழந்தைப் போராளியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டதிலிருந்து , விலகியதுவரையிலான தனது அனுபவத்தினை விபரிக்கும் வகையில் ஆசிரியர் எழுதியுள்ளார். இது பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிய நூல். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் இந்நூலின் உண்மை விளம்பும் தகுதி பற்றிப் பலமாகத் தனது எதிர்ப்பினைக் கட்டுரைகள் வாயிலாகப் பதிவு செய்துள்ளார். பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் நிரோமி டி சொய்சா பற்றி ஆதரவான கருத்தினைக் கூறும் வகையில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

•Last Updated on ••Friday•, 14 •September• 2012 18:26•• •Read more...•
 

கறுப்பு ஜூலை 1983

•E-mail• •Print• •PDF•

[ கறுப்பு ஜூலை 1983 நினைவாக பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்த வ.ந.கிரிதரனின் நாவலான 'அமெரிக்கா: சுவர்களுக்கப்பால்.." இன் அத்தியாயம் மூன்று: சூறாவளி, அத்தியாயம் நான்கு: மதகுருவின் துணிவு, அத்தியாயம் ஐந்து: இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து......  ஆகிய அத்தியாயங்கள் இங்கு மீள்பிரசுரமாகின்றன. இவ்வத்தியாயங்கள் 1983 ஜூலைக் கலவர நிகழ்வுகளை விபரிக்கின்றன. இவை உண்மை நிகழ்வுகள். - ஆசிரியர் -]

அத்தியாயம் மூன்று: சூறாவளி!...

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா II" ஆழ்ந்த தூக்கத்திலுருந்த இளங்கோ மீண்டும் கண் விழித்தபோது இன்னும் பொழுது புலர்ந்திருக்கவில்லை. எல்லோரும் இன்னும் தத்தமது படுக்கைகளில் தூக்கத்திலாழ்ந்து கிடந்தார்கள். அவனுக்குச் சிறிது வியப்பாகவிருந்தது: 'இதுவென்ன வழக்கத்திற்கு மாறாக.. நித்திரையே ஒழுங்காக வர மாட்டேனென்று முரண்டு பிடிக்கிறது...' அன்று நண்பகல் அவனுக்கு அத்தடுப்பு முகாம் சிறைவாசத்திலிருந்து விடுதலை. அந்த விடுதலை அவன் ஆழ்மனதிலேற்படுத்திய பாதிப்புகளின் விளைவா அவனது தூக்கமின்மைக்குக் காரணம்? இருக்கலாம். சுதந்திரத்தின் ஆனந்தமே அற்புதம்தான். கட்டுக்களை மீறுவதிலிருக்கும் இன்பமே தனி. மீண்டுமொருமுறை அவனது பார்வை அனைத்துப் பக்கங்களையும் ஒருகணம் நோக்கித் திரும்பியது. விடிவுக்கு முன் தோன்றுமொரு அமைதியில் அப் பொழுது ஆழ்ந்திருப்பதாகப் பட்டது. சிறைப் பாதுகாவலர்களும் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிறிது நேரம்தான் பொழுது விடிந்து விடும். நகரின் பரபரப்பில் இன்னுமொரு நாள்மலர் முகிழ்த்து விடும். அதன்பின் அவனது வாழ்க்கையும் இன்னுமொரு தளத்துக்குத் தள்ளப்பட்டு விடும். அத்தளத்தில் அவனை எதிர்பார்த்து இன்னும் எத்தனையெத்தனை சம்பவங்கள், சூழல்கள் காத்துக் கிடக்கின்றனவோ? இருப்பை எப்பொழுதும் உற்சாகத்துடனும், உறுதியுடனும் ஏற்கும் உள உறுதியிருக்கும் வரையில் அவன் எதற்குமே அஞ்சத் தேவையில்லை. மிதிபட மிதிபட மீண்டும் மீண்டும் மிடுக்குடனெழும் புல்லினிதழாக அவன் எப்பொழுதும் எழுந்து கொண்டேயிருப்பான். விடிவை வரவேற்பதில் எப்பொழுதுமே தயங்காத புள்ளினம் போல விடிவுப் பண் பாடிக்கொண்டேயிருப்பான். ஒரு சில மாதங்களில்தான் அவனது இருப்பு எவ்விதம் தலைகீழாக மாறி விட்டது? அரசத் திணைக்களமொன்றில் உயர் பதவி வகித்துக் கொண்டிருந்தவனைச் சூழல் இன்று அந்நிய மண்ணின் சிறைக் கைதியாகத் தள்ளி விட்டிருந்தது. அவனது சிந்தனையில் 1983 கலவர நினைவுகள் சிறிது நேரம் நிழலாடின. அவனும், அவனது நண்பனும் அன்று தப்பியதை இன்று நினைக்கும் பொழுதும் ஆச்சரியமாகத்தானிருக்கிறது.

•Last Updated on ••Thursday•, 16 •April• 2015 23:03•• •Read more...•
 

நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் - 4

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் நான்கு: டீச்சரும், சிறுவனும்!

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்

[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்]

அன்று அவனைச் சந்திப்பதற்காக வரும்போது அவள் ஒரு முடிவுடன் வந்திருந்தாள். அவனுடன் பழகத் தொடங்கியதிலிருந்து அன்று வரையிலான தொடர்பிலிருந்து அவள் ஒன்றைமட்டும் நன்குணர்ந்திருந்தாள்.  அவன் வாழ்வில் துயரகரமான அல்லது ஏமாற்றகரமான சூழல் ஒன்றை அவன் சந்திருக்க வேண்டும். அளவு கடந்த பாசம் வைத்திருந்த அவன் தாயாரைப் பறிகொடுத்திருக்கலாம். அவன் மனைவியை அல்லது காதலியை இழந்திருக்கலாம். அல்லது இராணுவத்தின் குண்டுவீச்சுக்கு அவனது குடும்பம் பலியாகியிருக்கலாம். சமூக விரோதியென்று  மின் கம்பத்திற்கு அவனது தம்பியை அல்லது தந்தையை அல்லது தாயைப் பறிகொடுத்திருக்கலாம். அல்லது படையினரின் பாலியல் வன்முறையிலான வெறியாட்டத்தில் அவன் மனைவி அல்லது காதலி சீரழிந்திருக்கலாம்.  அல்லது அவன் படையினரால் மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு ஏதாவது காரணமாயிருக்கலாம். ஆனால் எது எப்படியோ அவன் பாதிக்கப்பட்டிருக்கிறான்.  அந்தப் பாதிப்பின் தன்மை மிக மிக ஆழமானதாக இருக்க வேண்டும். அதுதான் அவனைச் சிலையாக உறைய வைத்திருக்கிறது. சாதாரண ஒரு மனிதரிற்கு  இருக்கவேண்டிய உணர்வுகள், செயற்பாடுகள் குன்றி ஒரு விதமான கனவுலகில் , மனவுலகில் அவன் சஞ்சரிப்பதற்குக் காரணமாக அந்தப் பாதிப்புத்தானிருக்க வேண்டும்.

•Last Updated on ••Thursday•, 12 •July• 2012 17:59•• •Read more...•
 

சிறுகதை: 'டொராண்டோ'வில் மகிந்த ராஜபக்ச

•E-mail• •Print• •PDF•

டொரோன்டோவில் சேர்போன் வீதியும் குயீன் வீதியும் சந்திக்கும் அண்மைய பகுதிகளில் வீடற்றவர்களுக்கான விடுதிகள், 'சல்வேசன் ஆமி' போன்ற இலாப-நோக்கற்று இயங்கும் நிறுவனங்களென்று பல அமைப்புகளைக் காண முடியும். அண்மையிலொரு நாள் என் பணி நிமித்தமாக சேர்போன் வீதியால் நடந்து வந்து கொண்டிருந்தேன். வெப்பநிலை 34 பாகை சென்டிகிரேட்டைத் தாண்டி விட்டிருந்தது. தாங்க முடியாத அனல். வியர்வையால் உடல் குளித்துக்கொண்டிருந்தது. காற்றும் கூட அனலுக்கு அஞ்சி அமைதியாகவிருந்தது சூழலை மேலும் கொதிக்க வைத்துக்கொண்டிருந்தது. அப்பொழுதுதான் அந்தக் குரல் என்னைத் தடுத்து நிறுத்தியது.டொரோன்டோவில் சேர்போன் வீதியும் குயீன் வீதியும் சந்திக்கும் அண்மைய பகுதிகளில் வீடற்றவர்களுக்கான விடுதிகள், 'சல்வேசன் ஆமி' போன்ற இலாப-நோக்கற்று இயங்கும் நிறுவனங்களென்று பல அமைப்புகளைக் காண முடியும். அண்மையிலொரு நாள் என் பணி நிமித்தமாக சேர்போன் வீதியால் நடந்து வந்து கொண்டிருந்தேன். வெப்பநிலை 34 பாகை சென்டிகிரேட்டைத் தாண்டி விட்டிருந்தது. தாங்க முடியாத அனல். வியர்வையால் உடல் குளித்துக்கொண்டிருந்தது. காற்றும் கூட அனலுக்கு அஞ்சி அமைதியாகவிருந்தது சூழலை மேலும் கொதிக்க வைத்துக்கொண்டிருந்தது. அப்பொழுதுதான் அந்தக் குரல் என்னைத் தடுத்து நிறுத்தியது.

"அண்ணை தமிழோ?"

அழைத்தது யாராகவிருக்குமென்று எண்ணியபடியே குரல் வந்த திக்கை நோக்கித் திரும்பினேன். அழுக்கு நிறைந்த கந்தல் ஆடைகளுடன் ஓரிளைஞன்; தமிழ் இளைஞன். உரோமம் மண்டிக் கிடந்த முகம். பிய்ந்து தொங்கிய சப்பாத்துகள்.

"ஓமோம் தமிழ்தான்"

"அண்ணைக்கு என்னோடை கொஞ்சம் கதைக்க நேரம் இருக்கா?"

•Last Updated on ••Friday•, 20 •May• 2016 13:03•• •Read more...•
 

சிறுகதை: சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை!

•E-mail• •Print• •PDF•

இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிரி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின் ஹரி பாட்டர் தொடர் புத்தகங்கள் எனக்குப் பிடித்த தொடர்களிலொன்று. ஆனால் இந்தப் புத்தகத்தை மட்டும் அப்பா ஒவ்வொருமுறையும் வாங்குவதற்குச் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்துக் கொண்டு வந்தார். இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிரி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின் ஹரி பாட்டர் தொடர் புத்தகங்கள் எனக்குப் பிடித்த தொடர்களிலொன்று. ஆனால் இந்தப் புத்தகத்தை மட்டும் அப்பா ஒவ்வொருமுறையும் வாங்குவதற்குச் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்துக் கொண்டு வந்தார். காரணம் இதன் விலைதான் தான். முப்பத்தைந்து கனடியன் டொலர்கள். சென்ற முறை சாப்டர்ஸ்ஸிற்குக் கூட்டிப் போனபோது இந்தப் புத்தகத்தை வாங்கித் தருவதாகத் தான் கூட்டிப் போனார். ஆனால் வழக்கம் போல் இறுதியில் கையை விரித்து விட்டார். "உனக்கம்மா இந்த ஒரு புத்தகத்திற்குப் பதிலாக இரண்டு "துரதிருஷ்ட்டவசமான சம்பவங்கள்" (The unfortunate events) புத்தகங்களை வாங்கித் தருகிறேன்" என்று வாங்கித் தந்து விட்டார். லெமொனி சினிக்கெட்டின் "துரதிருஷ்ட்டவசமான சம்பவங்கள்" தொடரும் எனக்கு மிகவும் விருப்பமான தொடர் தான். இந்ததொடரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் மிஸ் எலிஸபெத். எனது கிளாஸ் டீச்சர். தாய் தகப்பனில்லாத வயலட், கிளாஸ், குழந்தை சனியை பொல்லாத ஓலாவ் படுத்தும் பாடிருக்கிறதே. பாவம் அவர்கள். அவர்களது அப்பா அம்மாவை இந்தப் பொல்லாத ஓலாவ்தான் கொன்று விட்டான். இப்பொழுது இவர்களின் சொத்தினை அடைவதற்கும் முயன்று கொண்டிருக்கின்றான். திரு. போ (Mr.Poe) மட்டுமில்லையென்றால் இவர்களது பாடு இன்னும் அதிகத் துன்பம் நிறைந்ததாகவிருந்திருக்கும்.

•Last Updated on ••Wednesday•, 04 •July• 2012 18:54•• •Read more...•
 

வ.ந.கிரிதரனின் அறிவியற் சிறுகதைகள் மூன்று: ' நான் அவனில்லை', 'ஆத்மாவின் புத்துயிர்ப்பு!' & தேவதரிசனம்!

•E-mail• •Print• •PDF•

- எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்திய அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டி 2009இல் வட அமெரிக்காவுக்கான விருதினைப் பெற்ற சிறுகதை! -

கி.பி.2700 ஆம் ஆண்டிலொருநாள்.... ...

- எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்திய அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டி 2009இல் வட அமெரிக்காவுக்கான விருதினைப் பெற்ற சிறுகதை! -தமிழகத்தின் சென்னையிலுள்ள மிகப்பிரமாண்டமான திறந்த வெளிச் சிறைச்சாலையில் தனக்குரிய அறையினுள் பாஸ்கரன் அமர்ந்திருந்தான். சிறைக்காவலர்களற்ற திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கைதிகளின் உடல்களிலும் அவர்களது அடையாளங்கள் பற்றிய அனைத்துத் தகவ்ல்களுடன் கூடிய சிலிக்கான் சில்லுகள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மூலம், GPS தொழில் நுட்பத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பிறிதோரிடத்தில் அமைந்திருந்த சிறைச்சாலைத் தலைமைச் செயலகத்திலிருந்து அவதானிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். செவ்வாய்க் கிரகம், சந்திரன் போன்ற கிரகங்களெல்லாம் புதிய புதிய காலனிகளால் நிறைந்து விட்டிருந்தன. சூரிய மண்டலத்தில் பல்வேறு விண்வெளிக் காலனிகள் உருவாக்கப் பட்டிருந்தன. பூவுலகின் பல்வேறு நாடுகளும் மானுடர்களென்ற ரீதியில் ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். ஒரு கிரகம்! அதன் மக்கள் நாம்! என்று பக்குவப்பட்டிருந்த மானுடர்கள் பூவுலகு மக்கள் கூட்டமைப்பு என்று ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். நாடுகளுக்கிடையில் பயணிப்பதற்குக் கடவுச் சீட்டு, விசா போன்ற எதுவுமே தேவையாகவிருக்கவில்லை. நாடுகள், தேசிய இனங்கள், தேசிய பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு நாடுகளும் தத்தமது வெளிநாட்டுக் கொள்கையினை வகுத்திருந்த காலம் எப்போழுதோ இப்பூமியில் மலையேறிவிட்டிருந்தது. இன்று விண்வெளித் தொழில் நுட்பம் மிகவும் முன்னேறி விட்டிருந்ததொரு நிலையில் வேற்றுக் கிரக வாசிகள், உயிரினங்களிலிருந்து இப்பூமிக்கான பாதுகாப்பு என்னும் அடிப்படையில் பூவுலகின் பாதுகாப்பு தீர்மானிக்கப்பட்டது. இத்தகையதொரு சூழல் நிலவும் காலகட்டமொன்றில்தான் இவ்விதம் திறந்தவெளிச் சிறைச்சாலையொன்றில் அமர்ந்திருந்தான் இயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரன். அவனது சிந்தனையெல்லாம் அடுத்த நாளைப் பற்றியதாகவேயிருந்தது. செய்யாத குற்றத்திற்காக அவனுக்கு மரணதண்டணை விதிக்கப் பட்டிருந்தது. சந்தர்ப்ப சாட்சியங்கள் சதி செய்து விட்டன.

•Last Updated on ••Friday•, 15 •June• 2012 05:19•• •Read more...•
 

சிறுகதை: அவன் 'ஐசிஎம்'மில் வேலை செய்கின்றான்!

•E-mail• •Print• •PDF•

1.

அவனிற்கு எப்படியாவது கனடாவில் நல்லதொரு வேலையில் அமர்ந்துவிட வேண்டுமென்பது நெடுநாளைய ஆசை. இலங்கையில் அவனொரு விஞ்ஞானப் பட்டதாரி. கனடா வந்ததிலிருந்து அவனும் முயற்சி செய்யாத வழிகளில்லை. எத்தனைதரம் முருங்கை மரத்தில் வேதாளம் ஏறியபோதும் அதனையிட்டுக் கவலையேதுமின்றி மீண்டும் மீண்டும் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனைப்போல் அவனும் பலவேறு வழிகளில் முயன்றுகொண்டுதானிருந்தான். அவன் பார்க்காத வேலைகளேயில்லை என்னுமளவிற்கு அவற்றின் எண்ணிக்கைதான் கூடிக்கொண்டே போனதுதான் இதுவரை கண்ட மிச்சம். இவ்விதமாக அவனது வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடிக்கொண்டிருந்தது. அவ்விதமானதொரு சூழலில்தான் அவனது நண்பனொருவன் அறிவுரையின்றினை அவனுக்குதிர்த்தான்.

அவனிற்கு எப்படியாவது கனடாவில் நல்லதொரு வேலையில் அமர்ந்துவிட வேண்டுமென்பது நெடுநாளைய ஆசை. இலங்கையில் அவனொரு விஞ்ஞானப் பட்டதாரி. கனடா வந்ததிலிருந்து அவனும் முயற்சி செய்யாத வழிகளில்லை. எத்தனைதரம் முருங்கை மரத்தில் வேதாளம் ஏறியபோதும் அதனையிட்டுக் கவலையேதுமின்றி மீண்டும் மீண்டும் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனைப்போல் அவனும் பலவேறு வழிகளில் முயன்று கொண்டுதானிருந்தான். அவன் பார்க்காத வேலைகளேயில்லை என்னுமளவிற்கு அவற்றின் எண்ணிக்கைதான் கூடிக்கொண்டே போனதுதான் இதுவரை கண்ட மிச்சம். இவ்விதமாக அவனது வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடிக்கொண்டிருந்தது. அவ்விதமானதொரு சூழலில்தான் அவனது நண்பனொருவன் அறிவுரையொன்றினை அவனுக்குதிர்த்தான்.

•Last Updated on ••Thursday•, 14 •June• 2012 16:41•• •Read more...•
 

தமிழர் மத்தியில்: நந்தா!

•E-mail• •Print• •PDF•

கனடாத் தமிழர்களுக்கு  'தமிழர் மத்தியில் நந்தா' என்னும் பெயரில் பரிச்சயமானவர் நந்தகுமார் ராஜேந்திரன்கனடாத் தமிழர்களுக்கு  'தமிழர் மத்தியில் நந்தா' என்னும் பெயரில் பரிச்சயமானவர் நந்தகுமார் ராஜேந்திரம். இவரை எனக்கு எனது மொறட்டுவைப் பல்கலைக்கழக நாட்களிலிருந்தே பழக்கம். அந்தப் பழக்கம் அண்மையில் இவரது மறைவு வரையில் தொடர்ந்தது. மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் நான் எனது கட்டடக்கலைத்துறைப் படிப்பினை ஆரம்பித்த சமயம் நந்தகுமார் கட்டடக்கலைத்துறையின் இறுதி ஆண்டு மாணவராகவிருந்தார். நான் எனது முதல் வருடத்தை பல்கலைக்கழக விடுதியிலிருந்துதான் கற்றேன். முதல் நாள் விடுதிக்குச் சென்றதிலிருந்து புதிய மாணவர்கள் அனைவரும் அங்கிருந்த  'சீனியர்களான' சிங்கள மாணவர்கள் அனைவராலும் இனவேறுபாடின்றிக் கடுமையான 'ராகிங்' எனப்படுகின்ற பகிடிவதைக்கு ஆளாக்கப்பட்டோம். அந்த வருடம் பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தடை செய்யப்பட்டிருந்த போதும் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களால் அதனிடமிருந்து தப்ப முடியவில்லை. ஆனால் எமது 'சீனியர்களான' தமிழ் மாணவர்கள் மட்டும் மிகவும் கடுமை குறைந்த பகிடி வதைக்குப் புதிய மாணவர்களை உள்ளாக்கினார்கள். நான் முதன் முறையாக நந்தாவைச் சந்தித்ததே அவ்வகையான பகிடிவதை ஓன்றின் மூலம்தான். எனது விரிவுரைகள் தொடங்குவதற்கு முதல் நாள் வெளியில் எங்கோ  சென்று விட்டு விடுதிக்குத் திரும்பியபோது அங்கு எங்களை எதிர்பார்த்து நந்தா காத்திருந்தார். விடுதியில் அப்போது தங்கியிருந்த புதிய மாணவர்களை குறிப்பாகக் கட்டடக்கலைத்துறை பயில வந்திருந்த மாணவர்களை அழைத்து இலேசாக வெருட்டலுடன் கூடிய கேள்விகளைக் கேட்டார். அன்றிலிருந்து தொடங்கிய எங்களது பழக்கம் அண்மையில் அவரது மறைவுவரை தொடர்ந்தது. நான் நகர அமைப்பு அதிகார சபையில் பணி புரிந்து கொண்டிருந்த சமயம் நந்தா மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்று திரும்பி கொழும்பில் சுயமாகத் தொழில் செய்துகொண்டிருந்ததாகவும் ஞாபகம். அப்பொழுதிருந்தே சுயமாகத் தொழில் செய்வதில் முனைப்புள்ள ஒருவராகத்தான் நந்தா விளங்கினார்.

•Last Updated on ••Monday•, 02 •July• 2012 23:06•• •Read more...•
 

ஆய்வும் திறனாய்வும், ஆவணப்படுத்தலும், என்படைப்புகளும் பற்றி....

•E-mail• •Print• •PDF•

 அமெரிக்கா மண்ணின் குரல்அண்மையில் 'டொராண்டோ' வருகை தந்திருந்த எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் 'ஈழத்து அரசியல் நாவல்' என்னும் தலைப்பில் ஆய்வுரைகள் நிகழ்த்தியதாக அறிவித்திருந்தார்கள். உண்மையில் அவர் ஆற்றியதோ சமர்ப்பித்ததோ ஆய்வுரைகளல்ல; திறனாய்வுகளே. விமர்சனம் என்னும் வடமொழியின் தமிழ் வடிவமே திறனாய்வு. திறனாய்வுக்கும் ஆய்வுக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களை அறியாமல் பலர் இடம் மாறி அவற்றைப் பயன்படுத்தி வருவதை அவ்வப்போது அவதானித்திருப்பீர்கள். ஆய்வு என்பது ஒரு விடயத்தைப் பற்றிய தகவல்களை இயலுமானவரையில் திரட்டித் தொகுப்பது. அத்தொகுப்பின் இடையில், முடிவில் அவ்வப்போது தனது ஆய்வின் விளைவாக தான் அடைந்த, அறிந்த , புரிந்த விடயங்களைப் பற்றி கருத்துகளை, விமர்சனங்களை வைக்கலாம். அவ்விதம் வைப்பதில் தவறேதுமில்லை. இருந்தாலும் அந்த ஆய்வானது அந்த ஆய்வுக்கான விடயம் பற்றித் திரட்டிய தகவல்களைத் தொகுத்து உள்ளடக்கியிருக்க வேண்டும். அவ்விதமில்லாமல். ஒரு சில குறிப்பிட்ட படைப்புகளைப் பற்றி மட்டுமே அதனைப் படைத்தவர் தனது கருத்துகளை, முடிவுகளை முன்னெடுப்பாரானால் அது வெறும் திறனாய்வே. அதனைத்தான் யமுனா ராஜேந்திரனும் அண்மையில் டொராண்டோ வந்திருந்தபொழுது செய்திருந்தார். அவர் தனக்கு, தன் இலக்கியக் கோட்பாடுகளுக்கமைய ஏற்றுக்கொண்ட படைப்புகளை மட்டுமே தெரிவு செய்து அவை பற்றிய கருத்துகளை வழங்கியிருந்தார். ஆனால் ஆய்வென்பது காய்தல் உவத்தலின்றி செய்யப்பட வேண்டியதொன்று.

•Last Updated on ••Thursday•, 31 •May• 2012 17:25•• •Read more...•
 

யமுனா ராஜேந்திரனுடன் சில மணித்தியாலங்கள்

•E-mail• •Print• •PDF•

தற்போது 'டொராண்டோ' வந்திருக்கும் கலை, இலக்கிய விமர்சகரான எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனை தமிழ் கலை, இலக்கிய உலகு நன்கறியும். கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். தற்போது 'டொராண்டோ' வந்திருக்கும் கலை, இலக்கிய விமர்சகரான எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனை தமிழ் கலை, இலக்கிய உலகு நன்கறியும். கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். அரசியல், கலை, இலக்கிய விமர்சகத்துறையில், மொழிபெயர்ப்புத் துறையில் ஓய்வற்று அவர் ஆற்றிவரும் பணி என்னைப் பிரமிக்க வைப்பதுண்டு. பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றிவருமிவரை எழுத்தாளர் 'கனவுச்சிறை' தேவகாந்தனின் இருப்பிடத்தில் சந்திக்கும் வாய்ப்பு இன்று - மே 17, 2012 -  கிடைத்தது. இவர்களுடன் எழுத்தாளர் டானியல் ஜீவாவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார். ஏற்கனவே பத்திரிகை சஞ்சிகைகள் வாயிலாக யமுனா ராஜேந்திரனை அறிந்திருந்தாலும், 'பதிவுகள்' மூலமாகத்தான் அவருடனான மின்னஞ்சல் தொடர்பு முதலில் ஏற்பட்டது. ஆனால் இன்றுதான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்திப்பு குறுகிய நேரம்தானென்றாலும் மிகவும் பயனுள்ளதாகவும், நெஞ்சில் நிலைத்து நிற்கும் சந்திப்புகளிலொன்றாகவும் அமைந்து விட்டது.

•Last Updated on ••Friday•, 31 •October• 2014 06:22•• •Read more...•
 

நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் - 3

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் மூன்று: மாமா மகன்

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்]     மேற்கு வானம் சிவந்து கிடந்தது. அரவணைப்பில் கதிரை மூடிவிட்ட ஆனந்தத்தில் வெளிப்பட்ட அடிவானப் பெண்ணின் நாணச்சிரிப்பு....  வழக்கம்போல் பார்க்கின் ஓர் ஓரத்தே வழக்கமான அவனிருப்பு; மோனித்த நிலை. அன்று வழமைக்கு மாறாகக் காலநிலை சிறிது சூடாகவிருந்தது. 'பார்க்' ஒரே கலகலப்பாக, உயிர்த்துடிப்புடன் இயங்கியபடி , டொராண்டோ நகரின் பல்லின மக்கள் கலாச்சாரத்தைப் பிரதிபலித்தபடி விளங்கியது. சீனக்குடும்பமொன்று அவனைக் கடந்து சென்றது. கையில் பலூன் வைத்திருந்த சீனக்குழந்தை அவனைப் பார்த்துக் கையசைத்து முறுவலித்தது.  மோனித்திருந்த நிலையிலும் அவனால் அந்தக் குழந்தையின் பார்வையை, சிரிப்பினை உணரமுடிந்தது. பதிலுக்கு இலேசாகச் சிரித்தபடி கையசைத்தான.  இதற்கிடையில் இவர்களிருவருக்குமிடையில் நிகழ்ந்துவிட்ட கணநேர உறவினை அவதானித்து விட்ட தாய் இவனைப் பார்த்து தாய்மைக்குரிய ஒருவித பெருமிதத்துடன் புன்னகைத்தாள்.  குழந்தையை ஏதோ அன்பாக அழைத்துத் தூக்கிக் கொஞ்சி உச்சி மோந்தாள். நாடுகள், கலாச்சாரங்கள் வேறு வேறாகவிருந்தபோதிலும் அடிப்படைப் பண்புகளில் மனிதர்கள் பெரும்பாலும் ஒன்றாகத்தான் செயற்படுகின்றார்ர்கள்.  தன் குழந்தைமேல் அளவில்லாப் பாசத்தை வைத்திருக்கிறாள் இந்தத்தாய்.  தன் குழந்தைக்குக் கிடைத்த பெருமையில் பூரித்து விடுகிறாள். குழந்தையை உச்சி மோந்த விதத்தில்  அதன் அளவினை உணரமுடிந்தது.

•Last Updated on ••Monday•, 14 •May• 2012 17:41•• •Read more...•
 

நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் - 2

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் இரண்டு: தூண்டிற் புழுவினைப் போல்....

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்]

'என் அவயங்களோ சக்தி குன்றிப் போயின.
என் உதடுகளோ ஈரமிழந்து போயின.
என் உடல் நடுங்குகின்றது.
என் கைகளை விட்டு சக்திமிக்க ஆயுதமும் நழுவிப்
போகின்றது.
என் மனமோ குழம்பிப் போயுள்ளது.
என்னால் நிலையாக நிற்கவே முடியவில்லை.
என் செய்வேன். என் செய்வேன்.
பரந்தாமா!
அனர்த்தங்களால் விளையும் அறிகுறிகள் தெரிகின்றன.
போர்க்களத்தே என் உறவினரை
என் நண்பரை, என் ஆசானைக் கொல்வதால்
என்ன பயன்? என்ன பயன்?
பாதை காட்டுவாய் பரந்தாமா?
பாதை காட்டுவாய்.'  - அருச்சுனன் (பாரதியின் 'பகவத் கீதை'யிலிருந்து) -

 பார்க்கில் சனநடமாட்டம் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டிருந்தது. வழக்கமான அதே மோன நிலையில் ஆழ்ந்த போனபடி, சூழலுக்குள் உறைந்து விட்டவனாக அவன். முழுநிலவின் தண்மையான ஒளிச்சிதறல்கள் இதமாகப் பரவிக் கிடந்தன. மனதை நன்கு ஒரு நிலையில் நிறுத்தியவளாக மெல்ல எழுந்து அவனருகே சென்றாள். அவள் வந்ததையோ, அவனருகே நின்றபடி அவனையே வைத்த கண் வாஙகாது பார்த்தபடி அவள் நிற்பதையோ அவன் கண்டு கொள்ளவேயில்லை. 

•Last Updated on ••Saturday•, 12 •May• 2012 21:44•• •Read more...•
 

நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் - 1

•E-mail• •Print• •PDF•

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்]

அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில் ...

'தோர்ன்கிளிவ் பார்க்'...  'டொன் மில்ஸ்ஸுக்கும் எக்ளின்டனுக்குமிடையில், அண்மையில்  அமைந்திருந்த பகுதி. 'ஷாப்பிங் மால்' , பாடசாலை, பூங்கா, நூலகம் எனச் சகல வசதிகளுடன், 'டொராண்டோ டவுண் டவு'னிற்கும் அருகில் அமைந்திருந்த பகுதி.  அங்குள்ள தொடர்மாடியொன்றில்தான் அவன் கனடா வந்த நாளிலிருந்து வசித்து வருகின்றான்.  அவனது மாமா மகனின் 'அபார்ட்மென்ட்'. 

•Last Updated on ••Saturday•, 12 •May• 2012 21:40•• •Read more...•
 

கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு!

•E-mail• •Print• •PDF•

- அறிஞர் அ.ந.கந்தசாமி -ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது' என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது

•Last Updated on ••Tuesday•, 24 •February• 2015 20:48•• •Read more...•
 

மீள்பதிவு: நாவலர் பண்ணை நினைவுகள்!

•E-mail• •Print• •PDF•

 ஏற்கனவே 'பதிவுகள்' இதழில் (பதிவுகள் அக்டோபர் 2003 இதழ் 46 ) வெளியான இக்கட்டுரை ஒருங்குறியில் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. ] 'நாவலர் பார்ம்' எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்தப் பண்ணையை உங்களில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்பது கேள்விக்குறி. ஆனால் காந்திய அமைப்புடன் பரிச்சயமாயிருந்தவர்களுக்கு இப்பண்ணை மிகவும் பரிச்சயமானதொன்று. இலங்கையின் பிரபல கட்டடக் கலைஞராக விளங்கிய டேவிட் அவர்களினால் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட இப்பண்ணை முல்லைத் தீவுப் பகுதியில் நெடுங்கேணிப் பகுதியினுள் அடர்ந்த காட்டின் ஒரு கோடியில் அமைந்திருந்தது. இப்பண்ணையைப் பற்றி இப்பொழுது எழுதுவதன் தேவை என்னவென்று நீங்கள் கேட்கலாம். நானும் அதையே தான் என்னையே ஒருமுறை கேட்டுக் கொண்டேன். அதன் விளைவு தான் இக்கட்டுரை. இலங்கைத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுதுபவர்களின் பார்வையிலிருந்து காந்திய அமைப்பு ஒரு போதுமே விடுபட்டு விட முடியாது. அந்த வகையில் காந்திய அமைப்பினால் பராமரிக்கபப்ட்ட பண்ணைகளிலொன்றான இந்நாவலர் பண்ணையுடனான அனுபவங்களை ஆராய்ந்து பார்த்ததில் அவ்வனுபவங்களை காந்திய அமைப்பு பற்றியதொரு விமர்சனமாக நோக்கலாமென்று பட்டதன் விளைவே இக்கட்டுரை. அத்துடன் ஒரு காலகட்ட அனுபவத்தினைப் பதிவு செய்ய வேண்டிய அவாவின் விளைவாகவும் இக்கட்டுரையினைக் கொள்ளலாம். துரதிருஷ்ட்டவசமாகப் பின்னாளில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளினால் இவ்வமைப்பு ஸ்ரீலங்கா அரசின் கொடிய இனவெறி அரசின் அடக்கு முறைக்குள் சிக்கிச் சிதைந்து போனது. [ ஏற்கனவே 'பதிவுகள்' இதழில் (பதிவுகள் அக்டோபர் 2003 இதழ் 46 ) வெளியான இக்கட்டுரை ஒருங்குறியில் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. ] 'நாவலர் பார்ம்' எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்தப் பண்ணையை உங்களில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்பது கேள்விக்குறி. ஆனால் காந்திய அமைப்புடன் பரிச்சயமாயிருந்தவர்களுக்கு இப்பண்ணை மிகவும் பரிச்சயமானதொன்று. இலங்கையின் பிரபல கட்டடக் கலைஞராக விளங்கிய டேவிட் அவர்களினால் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட இப்பண்ணை முல்லைத் தீவுப் பகுதியில் நெடுங்கேணிப் பகுதியினுள் அடர்ந்த காட்டின் ஒரு கோடியில் அமைந்திருந்தது. இப்பண்ணையைப் பற்றி இப்பொழுது எழுதுவதன் தேவை என்னவென்று நீங்கள் கேட்கலாம். நானும் அதையே தான் என்னையே ஒருமுறை கேட்டுக் கொண்டேன். அதன் விளைவு தான் இக்கட்டுரை. இலங்கைத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுதுபவர்களின் பார்வையிலிருந்து காந்திய அமைப்பு ஒரு போதுமே விடுபட்டு விட முடியாது. அந்த வகையில் காந்திய அமைப்பினால் பராமரிக்கபப்ட்ட பண்ணைகளிலொன்றான இந்நாவலர் பண்ணையுடனான அனுபவங்களை ஆராய்ந்து பார்த்ததில் அவ்வனுபவங்களை காந்திய அமைப்பு பற்றியதொரு விமர்சனமாக நோக்கலாமென்று பட்டதன் விளைவே இக்கட்டுரை. அத்துடன் ஒரு காலகட்ட அனுபவத்தினைப் பதிவு செய்ய வேண்டிய அவாவின் விளைவாகவும் இக்கட்டுரையினைக் கொள்ளலாம். துரதிருஷ்ட்டவசமாகப் பின்னாளில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளினால் இவ்வமைப்பு ஸ்ரீலங்கா அரசின் கொடிய இனவெறி அரசின் அடக்கு முறைக்குள் சிக்கிச் சிதைந்து போனது.

•Last Updated on ••Saturday•, 16 •April• 2016 21:29•• •Read more...•
 

மீள்பிரசுரம்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்! -

•E-mail• •Print• •PDF•

விஞ்ஞானப் புனைகதையுலகின் முக்கியமான படைப்பாளியான ஆர்த்ர் சி. கிளார்க்கின் படைப்புகள் மானுட இனத்தைப் பற்றிய ஆக்கபூர்வமான சிந்தனையைக் கொண்டிருப்பவை. அவரது படைப்புகள் அவற்றின் தெளிவுக்காகவும், கற்பனை வளமை மிக்க எதிர்வு கூறல்களுக்கும் பிரசித்தி பெற்றவை. ஏற்கனவே கிடைக்கப்பெற்ற அறிவியற் தகவல்களின் அடிப்படையில், அறிவுபூர்வமான, புதிய கண்டுபிடிப்புகளை எதிர்வு கூறின அவை. அத்தகையதொரு கண்டுபிடிப்பே மேற்படி 'பூமிக்கான தகவல் பரிமாற்றத்திற்குரிய செயற்கைக் கிரகமெ'ன்பதும். இப்பிரபஞ்சத்தில் மானுடர் எப்படியும் தப்பிப் பிழைத்து விடுவார்களென்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையினைப் புலப்படுத்தும் படைப்புகளை அவர் படைத்தார். மானுடர்கள் ஒருகாலத்தில் அழிந்து விடுவார்களென்பதில் அவருக்கு நம்பிக்கையில்லை. சகலபிரச்சினைகளுக்கும் மத்தியில் அவர்கள் எப்படியும் தப்பிப் பிழைத்து விடுவார்களென்று அவர் உறுதியாக நம்பினார். அவர்கள் எப்படியும் தப்பிப் பிழைப்பதற்குரிய வழியொன்றினை கண்டு பிடித்து விடுவார்களென்பதில் அவருக்குத் திடமான நம்பிக்கையிருந்தது. அத்துடன் அவர் மானுடர் மட்டும்தான் இப்பிரபஞ்சத்தின் ஒரேயொரு நுண்ணறிவுமிக்க, புத்திசாதுரியம் மிக்க உயிரினமென்றும் நம்பவில்லை. பரந்து, விரிந்து கிடக்குமிந்தப் பிரபஞ்சத்தில், நம்மைப்போன்ற புத்திசாதுரியம் மிக்க உயிரினங்கள் எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பதற்கான சாத்தியங்களை அவர் திடமாகவே நம்பினார். இத்தகைய காரணங்களினால் மானுடரின் எதிர்காலம் பற்றிய ஆக்கபூர்வமான நம்பிக்கை, தெளிவு, கற்பனை வளமிக்க அறிவுபூர்வமான எதிர்வு கூறல்கள், இவையே அவரது படைப்புகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களாக விளங்குகின்றன.- அண்மையில் மறைந்த விஞ்ஞானப் புனைகதையுலகில் முக்கிய படைப்பாளியாக விளங்கிய ஆர்தர் சி. கிளார்க்கை ஒருமுறை என் வாழ்வில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் வாழ்க்கைச் சரித்திரத்தில் அதுவொரு முக்கிய சந்திப்பாகவும் அமைந்து விட்டது. மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக்கலைப் பட்டப்படிப்பினை முடித்துப் அதற்குரிய சான்றிதழினை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பெற்றது அவரது கைகளிலிருந்துதான். அவர்தான் அப்பொழுது மொறட்டுவைப் பல்கலைக் கழகத்து வேந்தராக இருந்தார். அவரது நினைவாக இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.-  இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானப் புனைகதையுலகில் கொடிகட்டிப் பறந்த முக்கியமான மூலவர்களாக மூவர் குறிப்பிடப்படுவார்கள். ஒருவர் ஐசக் அசிமோவ். ரஷிய நாட்டவர். அடுத்தவர் அமெரிக்கரான ரொபேட் ஏ றெய்ன்லெய்ன். இவர் மிசூரியைச் சேர்ந்தவர். அடுத்தவர் ஆர்தர் சி.கிளார்க். இவர் பிரிட்டனைச் சேர்ந்தவர்.

•Last Updated on ••Thursday•, 16 •April• 2015 16:53•• •Read more...•
 

Novel: America (Beyond The Walls) 23, 24, 25, 26 & 27

•E-mail• •Print• •PDF•

23. HEADING TOWARDS LAWYER ANISMAN’S OFFICE!

I have already written a novella , AMERICA (Within The Walls), in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,AMERICA (Beyond The Walls) , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN

- I have already written a novella ,  AMERICA , in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel , AN IMMIGRANT , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN -

Distributing the advertisement pamphlets for Carlo in the evenings gave them yet another new experience. At the intersection between Fourth Street West and Sixth Avenue, Ilango began his work of distributing the advertisement pamphlets. Arulrasa worked at the junction where Christopher Road, Seventh Avenue and Fourth Street West met. They had no real stress in distribution. The initial feeling of hesitation and embarrassment were all gone with the wind in just a few minutes. “Two for one …two for one…” “Buy one; get one free!”  Such phrases were the slogans for Carlo’s “throwaway price” sales. And, soon it became easier for them to shout the slogan words and distribute them to the passersby. A few people stopped to inquire about the sales and asked for advertisement pamphlets as well. They had to distribute at least one thousand pamphlets, each. Carlo said if one thousand were distributed, at least one hundred would pay a visit to his shop. Of them, at least ten or fifteen would buy something and go. As they continued with their distributions, more andmore  the pedestrians stopped and inquired, thereby making the whole process easier with time.

•Last Updated on ••Thursday•, 14 •February• 2013 05:40•• •Read more...•
 

Novel: AN IMMIGRANT 17, 18, 19, 20, 21 & 22

•E-mail• •Print• •PDF•

CHAPTER 17: HARIBABU’S ROADSIDE BUSINESS!

I have already written a novella , AMERICA (Within The Walls), in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,AMERICA (Beyond The Walls) , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN

- I have already written a novella ,  AMERICA , in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel , AN IMMIGRANT , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN -

The whole night, Ilango’s mind wondering who and what Haribabu was.  He couldn’t wait to meet this person the next day and ask about his work.  Now and then, he couldn’t help wondering whether the person would also be a puzzle just the way his advertisement was.  Whatever the case may be, if they got a job and if it would be a permanent job, all would be good. His mother’s letter also stressed on him getting a job. He was reminded of the golden proverb, which his grandmother used to always mutter, “Wherever the cursed went, there were pits and wasteland all over.” It looked like as if the proverb had been coined just for his sake. Whenever, he would think of grandmother he would be filled with wonder and awe. grandmother belonged to the bygone golden era. More than bookish education, she had the wisdom of worldly experience. She would look bright and happy always. He had never seen her lose her cool and shadow rage. “Oh, fare thee well, my boy – my blessings are always with you,” grandma would wish them every time and hearing her words always left them feeling immensely happy. And, her cooking has no equal in the world! Her ‘Mulaikeerai’ and hot beverage and curd would prove eternally tasty, no matter how many times one had to eat it! A sturdy woman with a strong mind!  Another especial quality of grandma was her mastery over words! She was indeed a maestro in handling language and its components. In the 70s, sporting Bell-bottoms and long hair, Ilango would be roaming around and if she happened to see him she would greet him, calling out, “Hey, come – you 'Peeththal Parangi'” Hearing her words of greeting, he would enter inside, with the bottom corners of his bell-bottom looking sticky and dirty with the oily residue residing inside the cycle-chain, smiling sheepishly.

•Last Updated on ••Thursday•, 14 •February• 2013 05:39•• •Read more...•
 

Novel: AN IMMIGRANT 13, 14, 15, & 16

•E-mail• •Print• •PDF•

13. I WANT A JOB

I have already written a novella , AMERICA (Within The Walls), in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,AMERICA (Beyond The Walls) , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN

- I have already written a novella , AMERICA, in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel , AN IMMIGRANT , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN -

Another day dawned. As usual, with the always availale existential problems. Arulrasa and Ilango were deep in thought, wondering how to start the day and how to spend it. Ilango was first to speak his thoughts.

“Arul, I have to get a job really soon. What is your plan?”

“I am also seriously searching for a suitable job. But, nothing comes my way. Wherever I go, they are insisting on a Social Insurance Card. If you ask me, I think it will be better if we try to get that first. Let us go to the Immigration office and try our best to secure that Card. What do you say?”

“Arul, it’s a nice idea, but, of course, there are many obstacles.  But let’s first go there today and enquire. After that, we can then begin our job-hunting...”

"Ya, that is good. We will do that. Let us go find a solution to this problem. If we feel that it is not going to be helpful, then, like you, I should also gear myself to accept any kind of job.”

•Last Updated on ••Thursday•, 14 •February• 2013 05:41•• •Read more...•
 

Novel : AN IMMIGRANT 9, 10, 11 & 12

•E-mail• •Print• •PDF•

Chapter 9  The pride and glory of 42nd Road!

I have already written a novella , AMERICA (Within The Walls), in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,AMERICA (Beyond The Walls) , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN

- I have already written a novella , AMERICA, in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel , AN IMMIGRANT , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN -

Ilango and Arulrasa had planned to spend the day wandering in the Manhatten area of New York City. As far as Ilango was concerned, he was prepared to get into any kind of job at once. But, Arulrasa was not prepared for that. The dialogue between the two, given below, which took place that morning, is enough for anyone to understand why such a difference in opinion existed.     

“Okay Arulrasa, as Gosh said, it seems like we should seek the help of the Employment Bureau agent, Peter.”

•Last Updated on ••Thursday•, 14 •February• 2013 05:41•• •Read more...•
 

Novel: AN IMMIGRANT - 5, 6, 7 & 8

•E-mail• •Print• •PDF•

CHAPTER 5  FROM ILANGO’S DIARY…

From Ilango’s Diary…

I have already written a novella , AMERICA (Within The Walls), in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,AMERICA (Beyond The Walls) , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN

- I have already written a novella , AMERICA , in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel , AN IMMIGRANT , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN -

When they arrived at Saraswathi Camp, there were absolutely no facilities for the refugees, not even the bare essentials. My fellow-students at the University, the other Tamil youths, and I came together and formed a Volunteer Team. Then, till that time we left for Yaazhpaanam in the ship called Chidambaram,  It had been sent by the government of Tamil Nadu to evacuate the refugees,  We remained in that camp and served as volunteers. Till I reached Yaazhpaanam, my voyage in the vessel called Chidambaram was unknown to my family back home. My family was in the dark as to whether I was alive or not. I sought the help of a person belonging to my village, who was with me in the refugee camp and who found a berth in Sri Lankan government’s cargo vessel called ‘Lankarathna.’ He was returning home. I had requested him to inform my family about my condition. On reaching Yaazhpaanam, he went on to stay with his relatives there in Kaithadi and hence he couldn’t inform my family about my situation. Only after I arrived in Chidambaram and reached my home, did he return and visit my family to inform them of me being alive.

•Last Updated on ••Thursday•, 14 •February• 2013 05:41•• •Read more...•
 

'ஜான் மார்டெலி'ன் (Yann Martel) 'பை'யின் வாழ்வு (Life Of Pi)!

•E-mail• •Print• •PDF•

கனடிய எழுத்தாளரான ஜான் மார்டெல் (Yann Martel) எழுதிய புகழ்பெற்ற நாவல் 'பை'யின் வாழ்வு (Life Of Pi). இந்த நாவல் 2002ஆம் ஆண்டுக்குரிய 'புக்கர்' விருதினைப் பெற்றதுடன் பிரான்சின் புக்கர் விருதினை இதன் பிரெஞ்சிய மொழிபெயர்ப்பிற்காகப் பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்க நாவல் விருது, இலக்கியத்திற்கான ஆசிய/பஸிபிக் அமெரிக்க விருது (2001-2003)எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த நாவல் ஐந்து தடவைகள் பிரித்தானிய பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.  அண்மையில் நான் வாசித்த நாவல்களில் மட்டுமல்ல, இதுவரையில் நான் வாசித்த நாவல்களில் எனக்குப் பிடித்த நாவல்களிலொன்றாக இந்நாவலும் அமைந்து விட்டதென்று கூறினால் அது மிகையான கூற்றல்ல. ஜான் மார்டெல்லின் இந்த நாவல் பல்வேறு காரணங்களுக்காக என்னைக் கவர்ந்துள்ளது. அவற்றில் முக்கியமானவையாக நான் கருதுவது: கதை கூறப்படும் முறை, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, மானுட இருப்பு பற்றிய தேடல், இயற்கை பற்றிய சித்திரிப்பு... இவைதான் முக்கியமாக இந்நாவல் என்னைக் கவர்ந்ததற்குக் காரணம். இவையெல்லாம் சேர்ந்து இந்நாவலை வாசிக்கும் அனுபவத்தையொரு இன்பகரமானதொரு அனுபவமாக்கி விட்டன. அதன் விளைவே இந்நாவல் பற்றிய எனது இந்தக் குறிப்புகளும்.கனடிய எழுத்தாளரான ஜான் மார்டெல் (Yann Martel) எழுதிய புகழ்பெற்ற நாவல் 'பை'யின் வாழ்வு (Life Of Pi). இந்த நாவல் 2002ஆம் ஆண்டுக்குரிய 'புக்கர்' விருதினைப் பெற்றதுடன் பிரான்சின் புக்கர் விருதினை இதன் பிரெஞ்சிய மொழிபெயர்ப்பிற்காகப் பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்க நாவல் விருது, இலக்கியத்திற்கான ஆசிய/பஸிபிக் அமெரிக்க விருது (2001-2003)எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த நாவல் ஐந்து தடவைகள் பிரித்தானிய பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.  அண்மையில் நான் வாசித்த நாவல்களில் மட்டுமல்ல, இதுவரையில் நான் வாசித்த நாவல்களில் எனக்குப் பிடித்த நாவல்களிலொன்றாக இந்நாவலும் அமைந்து விட்டதென்று கூறினால் அது மிகையான கூற்றல்ல. ஜான் மார்டெல்லின் இந்த நாவல் பல்வேறு காரணங்களுக்காக என்னைக் கவர்ந்துள்ளது. அவற்றில் முக்கியமானவையாக நான் கருதுவது: கதை கூறப்படும் முறை, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, மானுட இருப்பு பற்றிய தேடல், இயற்கை பற்றிய சித்திரிப்பு... இவைதான் முக்கியமாக இந்நாவல் என்னைக் கவர்ந்ததற்குக் காரணம். இவையெல்லாம் சேர்ந்து இந்நாவலை வாசிக்கும் அனுபவத்தையொரு இன்பகரமானதொரு அனுபவமாக்கி விட்டன. அதன் விளைவே இந்நாவல் பற்றிய எனது இந்தக் குறிப்புகளும்.

•Last Updated on ••Thursday•, 09 •February• 2012 22:40•• •Read more...•
 

பயண அனுபவம்: வான் பார்க்கும் வடக்கிலிருந்து, மீன் பாடும் தேன் நாடு நோக்கி...

•E-mail• •Print• •PDF•

 தமிழ்த் தினவிழாவில் கலந்து கொள்வதற்காக 1.

நான் முதன் முதலாக மட்டக்களப்பு சென்ற அனுபவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாததொரு சுவையான அனுபவம். அப்பொழுது நான் வவுனியா மகாவித்தியாலயத்தில் ஏழாம் வகுப்பு மாணவனாகக் கல்வி பயின்று கொன்டிருந்த சமயம். விடுமுறைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த எங்களது ஆச்சி வீட்டிற்குச் செல்வோம். அல்லது ஆச்சி அம்மாவின் சகோதரி ஒருவரின் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வவுனியா வருவார். சில சமயங்களில் உறவினர்கள் யாருடனாவது அனுப்பி வைப்பார். என் வாழ்க்கையில் ஆச்சியின் பங்கும் முக்கியமானது. மிகவும் துணிச்சலான பெண்மணி. அவரைப் பற்றித் தனியொரு பதிவே இடலாம். இன்னுமொரு சமயம் அது பற்றியும் விபரிப்பேன்.

இவ்விதமானதொரு சூழலில் முதல் முறையாக மீன் பாடும் தேன் நாடு நோக்கிச் செல்லுவதற்குரிய சந்தர்ப்பம் வாய்த்ததும் எதிர்பாராத நிகழ்வொன்றின் மூலம்தான். ஆண்டு தோறும் நடைபெறும் தமிழ்த் தின விழாவுக்கான கையெழுத்துப் போட்டிக்கான தெரிவுக்காக என்னை வவுனியாவிலிருந்த சிங்களப் பாடசாலையான காமினி மகாவித்தியாலயத்திற்கு அனுப்பியிருந்தார்கள்.

•Last Updated on ••Wednesday•, 18 •January• 2012 18:48•• •Read more...•
 

'ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)' என்னுமொரு தீர்க்கதரிசனக் கவிதை பற்றி ....

•E-mail• •Print• •PDF•

அண்மையில் அடிப்படைத் துகள்களிலொன்றான நியூட்டிரினோக்கள் ஒளியை விட வேகமாகச் செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக இத்தாலிய விஞ்ஞானிகள் அறிவித்திருந்தார்கள். இன்னும் இம்முடிவு முற்று முழுதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு முன்னர் மேலும் பல பரிசோதனைகள் மேலும் பலரால் செய்யப்பட வேண்டும். இத்தகையதொரு சூழ்நிலையில் மார்ச் 6, 1983. இல் நான் குறிப்பேட்டில் எழுதிவைத்த கவிதையொன்றான 'ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)' என்னும் கவிதையினை ஒருகணம் நினைவு கூர்தல் பொருத்தமானது. இக்கவிதை ஏற்கனவே 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்தது. அத்துடன் அண்மையில் பதிவுகளிலும் 'ஒருங்குறி' எழுத்தில் மீள்பிரசுரம் செய்யப்பட்ட கவிதையாகும். மேற்படி பரிசோதனை முடிவுகளான அடிப்படைத் துகள்களிலொன்றான நியூட்டிரினோக்கள் ஒளியை விஞ்சும் வேகத்தில் செல்வது நிரூபிக்கப்பட்டால் , மேற்படி கவிதையை ஒரு தீர்க்கதரிசனமிக்கதொரு கவிதையாகவும் கொள்வதற்கு சாத்தியமுண்டு என நீங்கள் கூறினால் அதிலெனக்கு ஆட்சேபனையேதுமில்லை.'

•Last Updated on ••Monday•, 21 •November• 2011 23:44•• •Read more...•
 

தெ. வெற்றிச்செல்வனின் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்' பற்றிய சிறு குறிப்பு!

•E-mail• •Print• •PDF•

தெ. வெற்றிச்செல்வன்ஈழத்தமிழரின் புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி இதுவரையில் முறையான ஆய்வு நூலொன்று வெளிவரவில்லையே என்ற குறையினைத் தீர்த்துவைக்கின்றது தமிழகத்திலிருந்து சோழன் படைப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள தெ.வெற்றிச்செல்வனின் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்' என்னும் ஆய்வு நூல். பெயருக்கு ஒரு சில நூல்களைப் படித்து விட்டு , தங்கள் எண்ணங்களைப் பக்கம், பக்கமாக எழுதித் தள்ளும் நமது பிரபல எழுத்தாளர்களின் நுனிப்புல் மேய்தல் போலில்லாது உண்மையிலேயே மிகவும் சிரமமெடுத்து, இயலுமானவரையில் நூல்களைத் தேடிப்பிடித்து இந்த ஆய்வு நூலினைப் படைத்துள்ள வெற்றிச்செல்வனின் இந்த முயற்சி மிகுந்த பாராட்டுதற்குரியது மட்டுமல்ல இத்துறையில் விரிவான , எதிர்கால ஆய்வுகளுக்கும் வழிவகுக்கும். அந்த வகையில் இந்த நூலுக்கு முக்கியத்துவமுண்டு.

•Last Updated on ••Sunday•, 14 •October• 2012 22:58•• •Read more...•
 

Novel: AN IMMIGRANT - 4

•E-mail• •Print• •PDF•

Chapter 4:  A Courageous Priest

I have already written a novella , AMERICA (Within The Walls), in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,AMERICA (Beyond The Walls) , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN - I have already written a novella , AMERICA, in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel , AN IMMIGRANT , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN -

Even in those early hours of the morning, there were some European tourists happily taking a bath in the sea. “Foreigners are happily enjoying a bath in the sea, but myself, who is a son of the soil keeps running to escape death. I don’t have even the freedom and rights that these foreigners have.” Thus a thought invariably came to prevail upon Ilango that very moment, creating a chasm in his mind. Observing that the movements of the thugs going along the metro train routes from Colombo to Kaali was increasing, he got down into the sea-shore sands and began to walk in the direction of Ramakrishna Hall, watching the sea and its beauty and the people bathing there. Every now and then he looked back to make sure that his friend was following him. As for his friend, he looked like a rural Sinhala youth with curly hair and slightly fair skinned. Also, he can talk Sinhalese fluently. So, he could easily escape the wrath and the consequences. But, Ilango’s situation was different. Armed with only a few Sinhalese phrases, such as ‘Oeyaage nama mokkadha?” or “dikkath dikkath thennavaa,” he is completely at a loss when it comes to speaking in Sinhalese. An incident that took place in his university life would be enough to highlight his proficiency in the Sinhala tongue. Once, the senior students who ragged him, ordered him to go buy half a ‘rathal’ of sugar. He went to the grocery store near campus, which was owned by a Sinhala man.  He uttered the phrase ‘Ekka Maaraa” which is used in Sinhala to mean one-and-a-hal ‘raathal paan’ and asked for “seeni maaraa”( the correct usage is ‘seeni baagayaa”).  It is easy to see how he became the object of ridicule to those there.

•Last Updated on ••Thursday•, 14 •February• 2013 05:42•• •Read more...•
 

வ.ந.கிரிதரனின் 25 சிறுகதைகள் (பகுதி 1)!

•E-mail• •Print• •PDF•

- வ.ந.கிரிதரன் சிறுகதைகள் -[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது  சிறுகதைகள் இவை. இவற்றில் சில கனடாவிலிருந்து வெளியான 'வைகறை' மற்றும் வெளிவரும் 'சுதந்திரன்', ஈழநாடு' ஆகிய பத்திரிகைகளில் மீள்பிரசுரமானவை. ஒரு பதிவுக்காக ஒருங்குறி எழுத்தில் இங்கு மீள்பிரசுரமாகின்றன. இதில் பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த சூழலினைச் சித்திரிப்பவை. இன்னும் சில விஞ்ஞானப் புனைவுகள். மேலும் சில இழந்த மண்ணைப் பற்றிப் பேசுபவை. - ஆசிரியர், பதிவுகள்]

•Last Updated on ••Sunday•, 16 •October• 2011 23:15•• •Read more...•
 

மகாகவி பாரதியார் பற்றி மூன்று கட்டுரைகள்!

•E-mail• •Print• •PDF•

மகாகவி பாரதியார்[ஏற்கனவே பதிவுகளில் வெளியான மகாகவி பாரதியார் பற்றிய கட்டுரைகள் இங்கே ஒருங்குறியில் மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. 'பதிவுகள்' இதழில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது இவ்விதம் மீள்பிரசுரம் செய்யப்படும். அந்த வகையில் இம்முறை இக்கட்டுரைகள் ஒரு பதிவுக்காக பிரசுரமாகின்றன. மகாகவி பாரதி தான் வாழ்ந்த காலகட்டத்தில் நிலவிய சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுத்தவன். அதே சமயம் தன் காலகட்டத்தையும் மீறியும் சிந்தித்தவன்; செயற்பட்டவன்; இருப்பு பற்றிச் சிந்தித்தவன்; இவ்வுலகின் பலவேறு நாடுகள் பற்றியும், அந்நாடுகளில் வாழும் மானுடர்கள் பற்றியும், பல்வேறு அரசியல் தத்துவங்கள் பற்றியும், தேசிய மற்றும் சமூக விடுதலை பற்றியும், பெண் விடுதலை பற்றியும் சிந்தித்தவன். அவனது குறுகிய கால கட்டத்து வாழ்வில் அவன் சாதித்தவை அளப்பரியன. பிரமிப்பினை ஊட்டுபவை. அவனது பரந்த வாசிப்பும், அவனது வாழ்வனுபவமும் அதன் விளைவான அவனது தேடலும் அவனைப் புடமிட்டன. அதன் விளைவாக உருவானவைதான் அவனது படைப்புகள்.  அவை கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள், மொழிபெயர்ப்பென பரந்துபட்டவை. - பதிவுகள் -]

•Last Updated on ••Friday•, 14 •October• 2011 18:16•• •Read more...•
 

குறுநாவல்: ‘பிள்ளைக்காதல்’

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரனின் குறுநாவல்: 'பிள்ளைக் காதல்'1.ஸ்கார்பரோ நூலகக் கிளையொன்றில் பன்மொழிப் பிரிவினில் தமிழ் நூல்களைத் தேடிக்கொண்டிருந்த பானுமதியின் கவனத்தை “பானு” என்ற வியப்புடன் கூடிய ஆண் குரலொன்று கலைத்துவிடவே குரல் வந்த திசையினை நோக்கித் திரும்பினாள். அவளால் நம்பவே முடியவேயில்லை. எதிரிலிருந்தவன் சேகரனேதான். எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவனை அவள் சந்திக்கின்றாள். குறைந்தது இருபத்தைந்து வருடங்களாகவாவதிருக்கும். காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடி விட்டது. நாட்டு நிலைமை காரணமாகப் புலம்பெயர்ந்து வந்தது நேற்றுத்தான் போலிருக்கிறது. அதற்குள் இத்தனை வருடங்கள் கழிந்தோடி விட்டனவா! வியப்பு நீங்காதவளாக அவனை நோக்கிச் சில கணங்கள் பேச்சற்று நின்றாள் பானுமதி.

•Last Updated on ••Tuesday•, 26 •July• 2011 19:11•• •Read more...•
 

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு'

•E-mail• •Print• •PDF•

நல்லூர் ராஜதானி நகர அமைப்புஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).

•Last Updated on ••Friday•, 12 •June• 2020 11:18•• •Read more...•
 

Novel: AN IMMIGRANT -3

•E-mail• •Print• •PDF•

Chapter 3  Cyclone

I have already written a novella , AMERICA (Within The Walls), in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,AMERICA (Beyond The Walls) , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN - I have already written a novella , AMERICA , in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel , AN IMMIGRANT , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN -

When Ilango woke up again from deep sleep, it had not yet dawned. All the others were still in bed, fast asleep. Ilango felt a little surprised to see it. “What is this, something unusual that I am not getting sleep…?’, he wondered. That noon he was to be released from the detention camp. Could it be the impact of this realization in the innermost depth of his heart that had caused the sleeplessness in him? Possibly… The ecstasy of freedom is something miraculous; indescribable. The ecstasy of breaking the shackles is something very unique. Once again, his eyes moved in all directions. The hour of the night appeared to still be immersed in the stillness before day-break. The prison warders were also more than half-asleep. Just for a short while. The dawn would soon break. Another blossom of the day would open its petals in the all too busy city. His life would be pushed into another place. In that new place, only God knows what all events and environments await him. It doesn’t matter; as long as there is the determination and enthusiasm in him to love life and welcome it with open hands, he need not have any fear.  As the soft blades of grass, which, despite the incessant stamping of numerous feet, keep on stirring afresh, he too would be forever rising. And, as the feathered species that never get tired of hailing the day-break, he too would be singing the glory of a new day. It was during the last several months that everything in his life turned upside down.

•Last Updated on ••Thursday•, 14 •February• 2013 05:42•• •Read more...•
 

Novel: AN IMMIGRANT - 1 & 2

•E-mail• •Print• •PDF•

I have already written a novella , AMERICA (Within The Walls), in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,AMERICA (Beyond The Walls) , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN - I have already written a novella , AMERICA , in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel , AN IMMIGRANT , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN -

CHAPTER 1   I AM BORN ANEW TODAY

From the fifth floor of the wartime naval force office building, which also functioned as the Correctional Facility, Ilango looked out to the streets of great, grand New York City.  Situated on Flushing Street, the place had doubled as a detention camp for illegal immigrants and had been his only home for the past two months.  Darkness from the night continued to seep through with all kinds of thoughts swirling Ilango’s mind. At last, the dream of escaping this detention camp would soon  become a reality.From tomorrow onwards, he would be a real free bird. The Court of Justice has allowed him, who hitherto, has been detained in prison as an illegal immigrant waiting to be released on bail. Now, he could hope for the solution of demanding refugee status. He can go out without any constraint and face the challenges that life has in store for him. But before we continue, it would now be helpful to the readers to learn some details about this man.

•Last Updated on ••Thursday•, 14 •February• 2013 05:42•• •Read more...•
 

தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) -வ.ந.கிரிதரன் -( - 27

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்!
1.
நாளை மறுநாள் அவன் அமெரிக்க மண்ணில் காலடி வைத்துச் சரியாக ஒருவருடமாகப் போகின்றது. இளங்கோவுக்குக் காலத்தின் கடுகதிப் பயணம் ஆச்சரியத்தைத் தந்தது. பால்யகாலத்தில் காலம் ஆறுதலாக விரைந்ததுபோல் இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போதிருக்கிறது. எந்தவித வாழ்க்கைப் போராட்டங்களையும் சுமக்க வேண்டிய பொறுப்புகளின்றி, சுதந்திரச் சிட்டுக்களாகப் பெற்றோரின் அரவணைப்பில் பொழுது எவ்வளவு ஆறுதலாக, இனிமையாகக் கழிந்தது? இரவுகளில் கொட்டிக் கிடக்கும் சுடர்களை, மின்மினிகளை, முழுநிலவை, பெருவிழி ஆந்தைகளை, நத்துக்களை, அணில்களை, விண்ணில் கோடிழுக்கும் நீர்க்காகங்களை, குக்குறுப்பான், கொண்டைக் குருவி, மாம்பழத்திக் குருவி, ஆலா, ஆட்காட்டி, ஊருலாத்தி, கிளி, மைனா, மணிப்புறாவெனப் புள்ளினங்களையெல்லாம் இரசிப்பதற்கு நிறையவே பொழுதுகளிருந்தன. ஆனால் இன்று... இருத்தற் போராட்டத்தின் சுமைகளையெல்லாம் தாங்கவேண்டிய சூழலில், இரசிப்பதற்குக் கூடப் பொழுதுகளில்லை? அவ்வளவு விரைவாக அவற்றின் பயணம்! இருந்தாலும் இவ்வளவு இடர்களுக்கிடையிலும் ஒரு சில நூல்களையாவது படிப்பதற்கு அவனால் முடிந்தது. சிந்திப்பதற்கு முடிந்தது. இந்த ஒரு வருடத்தில் அவன் வாழ்வு ஏதாவது பயன்களைப் பெற்றிருக்கிறதா? பொருளியல்ரீதியில் பலவகை அனுபவங்களைத்தவிர எந்தவிதக் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுமில்லை. ஆனால் ஒன்று... இந்த அனுபவங்கள் மிகுந்த பயனுள்ளவை. இருப்பின் பல்முனைத் தாக்குதல்களையும் உறுதியுடன் உள்வாங்கி, நம்பிக்கையுடன் எதிர்த்து நடை பயிலும் பண்பினை அவனுக்கு அளித்துள்ளவை இந்த அனுபவங்கள்தான். 'அச்சமில்லை, அமுங்கதலில்லை. நடுங்குதலில்லை நாணுதலில்லை. பாவமில்லை, பதுங்குதலில்லை. ஏது நேரிடினு மிடர்ப்பட மாட்டோம். கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம். யார்க்கு மஞ்சோம். எதற்கு மஞ்சோம். எங்கு மஞ்சோம். எப்பொழுது மஞ்சோம். வான் முண்டு. மாரியுண்டு. ஞாயிறுங் காற்றும் நல்ல நீரும், தீயு மண்ணும், திங்களு மீன்களும் உடலுமறிவு முயிரு முளவே' என்னும் உறுதியான மனப்பாங்கினை அவை அவனுக்களித்துள்ளன.

•Last Updated on ••Friday•, 03 •June• 2016 23:33•• •Read more...•
 

தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) -வ.ந.கிரிதரன் - 26

•E-mail• •Print• •PDF•

 அத்தியாயம் இருபத்தியாறு: நடுவழியில்...

ஸ்பானிஷ்கார முகவனான பப்லோவுடனான அனுபத்தின் பின்னர் இளங்கோ முகவர்களின் மூலம் வேலை தேடும் படலத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தான். நேரடியாகவே நகரில் அலைந்து திரிந்து வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தான். சட்டவிரோதக் குடிகள் மில்லியன் கணக்கில் வசிக்குமொரு மாநகரில் தனக்கேன் வேலையொன்றை எடுப்பது சிரமமாகவிருக்கிறதென்று எண்ணியெண்ணி மனம் சலித்தான். இருந்தாலும் சோர்ந்து விடாமல் முயனறு கொண்டிருந்தான். இத்தகையதொரு சந்தர்ப்பத்தில்தான் அவன் ஜெயரடணத்தை மான்ஹட்டன் நகரத்துத் தெருக்களிலொன்றில் தற்செயலாகச் சந்தித்தான். ஈழத்தின் வன்னிமாவட்டத்தின் முக்கிய நகர்களிலொன்றான வவுனியாவைச் சேர்ந்தவனவன். நாற்பத்தியாறாவது தெருவிலுள்ள இத்தாலியனின் உணவகமொன்றில் பகல் நேரத்தில் உணவக உதவியாளனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இளங்கோ அன்றாட வாழ்வுக்கே திண்டாடுவதைப் பார்த்த அவன் இளங்கோவுக்குப் பின்வருமாறு புத்திமதியொன்றைக் கூறினான்: "இளங்கோ உனக்கு விருப்பமென்றால், பகல்நேரத்தில் ஓரிரு மணித்தியாலங்கள் செய்யக் கூடியதொரு சிறு வேலையொன்றுள்ளது, அதனை உனக்கு எடுத்துத் தரலாம். ஆனால் உன்னால் அதனைச் செய்ய முடியுமோ தெரியாது.."இவ்விதம் ஜெயரட்ணம் இழுக்கவே இளங்கோ "பரவாயில்லை ஜெயம். சொல்லு. முடிந்தால் செய்யிறேன். பார்ப்பம்" என்றான்.

•Last Updated on ••Monday•, 11 •February• 2013 02:55•• •Read more...•
 

தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) -வ.ந.கிரிதரன் -( - 25

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்!

இளங்கோவின் குறிப்பேட்டிலிருந்து..........

வாழ்க்கை வழக்கம் போலவே உருண்டோடிக் கொண்டிருக்கிறது. ஒரு சில சமயங்களில் சலிப்பு மிகவும் அதிகமாகி நம்பிக்கை தளர்ந்து விடுகிறது. அச்சமயங்களிலெல்லாம் எந்தவிதமான எதிர்மறையான சிந்தனைகளும் தாக்கவிடாமலிருப்பதற்காக நேரம் காலமென்றில்லாமல் நகர் முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருப்பேன். அருள் கூட சில சமயங்களில் என் அலைச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அறையிலேயே தங்கி விடுவான். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, சூழலை, சமூக வாழ்க்கையினை எனப் பல்வேறு விடயங்களை அறியும்பொருட்டுக் கவனத்தைத் திருப்பினேன். அவ்வப்போது நகரத்தின் பிரதான நூலகத்துக்குச் செல்வதுமுண்டு. ஒரு சில சமயங்களில் புரூக்லீன் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் நண்பர்களைச் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதலாக அளவளாவி வருவதுமுண்டுஇதே சமயம் அனிஸ்மான் கூறியபடி மான்ஹட்டனிலிருந்த பலசரக்குக் கடையொன்றை நடாத்திக் கொண்டிருந்த குஜராத் தம்பதியினரிடமிருந்து வேலை வழங்கற் கடிதமொன்றினையும் எடுத்து வேலை செய்வதற்குரிய அனுமதிப்பத்திரத்துக்காக விண்ணப்பித்தோம். அதே சமயம் அனிஸ்மான் கூறியபடியே எம் விடயத்தில் சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைத்தத்னாலேற்பட்ட மனித உரிமை மீறல்கள் விளைவித்த பாதிப்புகளுக்காக அமெரிக்க அரசிடம் நட்ட ஈடு கேட்டும் விண்ணப்பித்தோம். நாட்கள்தான் வேகமாகச் சென்று கொண்டிருந்தனவே தவிர காரியமெதுவும் நடக்கிறமாதிரித் தெரியவில்லை. இதே சமயம் மீண்டும் பகல் நேரங்களில் வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தோம்.

•Last Updated on ••Monday•, 11 •February• 2013 02:56•• •Read more...•
 

தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) - வ.ந.கிரிதரன் - 24

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை!

" வாருங்கள் என் அன்புக்குரிய நண்பர்களே! காலை வணக்கங்கள்! இன்று நான் உங்களை சந்திக்க விரும்பியதற்கொரு முக்கியமான காரணமுண்டு. அதற்குமுன்னர் உங்களது வாழ்க்கையைப் பற்றிச் சிறிது அறிய விரும்புகின்றேன். வாழ்க்கை எப்படியிருக்கிறது? என்னால் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டியதேதாவதிருக்கிறதா?" இவ்விதமாக இளங்கோவையும் அருள்ராசாவையும் வரவேற்றார் சட்டத்தரணி அனிஸ்மான். இதற்கு இளங்கோவையே பதிலளிக்குமாறு பார்வையால் உணர்த்தினான் அருள்ராசா. அதனைப் புரிந்து கொண்ட இளங்கோ சிறிது விபரமாகக் கூறத்தொடங்கினான்: "நற்காலை வந்தனங்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும் அனிஸ்மான் அவர்களே! உங்களது பரிவான விசாரணைக்கு எமது நன்றி. நீங்கள் உடனடியாக அழைத்ததால்தான் தற்போது வந்துள்ளோம். இருந்தாலும் சிறிது காலமாகவே உங்களைச் சந்திக்க வேண்டுமென்று எண்ணியிருந்தோம். அதற்குள் நீங்களே அழைத்து விட்டீர்கள் பழம் பழுவிப் பாலில் விழுந்தது மாதிரி"

•Last Updated on ••Monday•, 11 •February• 2013 02:51•• •Read more...•
 

தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) - வ.ந.கிரிதரன் -- (20 - 23)

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்!

தொடர் நாவல்: அமெரிக்கா II - வ.ந.கிரிதரன் -அடுத்த மூன்று வாரங்களும் இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் ஹரிபாபுவுடன் கழிந்தது. ஹரிபாபு கூறியபடியே அவர்களுக்குமொரு நடைபாதைக் கடையினை கிறிஸ்தோபர் வீதியும், நான்காம் வீதி மேற்கும் சந்திக்குமிடத்தில் போட்டுக் கொடுத்துவிட்டான். ஹரிபாபு, அவன் மனைவி மற்றும் ஹென்றி எல்லோரும் தமது பழைய இடங்களிலேயே தங்கள் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஹரிபாபுவுக்கு நண்பர்களிருவரும் வேடிக்கையாக வைத்த பெயர் 'நடுத்தெரு நாராயணன்'. நடுத்தெரு நாராயணன் கடையிலிருந்து நடைபாதைக்கு வந்தவன். அவனது கடையிலேயே அவனது விற்பனைப் பொருட்கள் யாவுமிருந்தன. நடுத்தெரு நாராயணன் நடைபாதை வியாபாரத்தின் பல்வேறு விதமான நெளிவு சுளிவுகளையும் கற்றுத்தேர்ந்த கில்லாடி. இந்த விடயத்தில் சில சமயங்களில் நியூயார்க் காவற்துறைக்குக் கண்களில் விரல்களை விட்டு ஆட்டிடும் வல்லமை பெற்றிருந்த அவனிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் பல இருந்தன. அவ்விதம்தான் இளங்கோ அவனைப்பற்றி எண்ணிக் கொண்டான்.

சில சமயங்களில் வார இறுதி நாட்களில் நியூயார்க் நகரின் சில வீதிகளை மூடி விட்டு அங்கு நடைபாதை வியாபாரிகளைப் பொருட்கள் விற்பதற்கு அனுமதி வழங்குவார்கள். அத்தகைய சமயங்களில் அவ்விதம் மூடப்பட்ட வீதிகளில் வைத்து விற்பதற்கு அதிக அளவில் கட்டணத்தைச் மாநகரசபைக்குச் செலுத்த வேண்டும். இத்தகைய சமயங்களில் நடுத்தெரு நாராயணனான ஹரிபாபு வின் செயற்திட்டம் பின்வருமாறிருக்கும்:

•Last Updated on ••Monday•, 11 •February• 2013 02:50•• •Read more...•
 

புலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்!

•E-mail• •Print• •PDF•

மீள்பிரசுரம்: 'கூர் 2011' மலரிலிருந்து.
புலம் பெயரும் மானுட சமுதாயம் ...[இந்தக் கட்டுரை எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகவும், எழுத்தாளர் டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டு தோறும் வெளிவரும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலருக்காக எழுதப்பட்டது. மேற்படி மலரில் ஒரு சில பிழைகள் ஏற்பட்டு விட்டதன் காரணமாக அவ்விடங்களில் அர்த்தங்கள் மாறுபட்டும், மயக்கம் தருவதாகவும் காணப்படுவதால் இக்கட்டுரையினை இங்கு மீள்பிரசும் செய்கின்றோம். மலரில் வெளியான கட்டுரையில் காணப்படும் முக்கியமான குறைகளாக பந்திகள் ஒருங்கிணைக்கப்பட்டமை, வார்த்தைகள், வசனங்கள் தவறிப் போனமை மற்றும் அடைப்புக் குறிகள் சில இடம் மாறி இடப்பட்டுள்ளமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அத்துடன் புறக்கணிக்கக் கூடிய தவறுகளாக எழுத்து, இலக்கணப் பிழைகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆயினும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலர் மிகவும் காத்திரமானதொரு மலராக வெளிவந்திருக்கின்றது. கனடாத் தமிழ் இலக்கியவுலகில் தவிர்க்க முடியாததொரு தொகுப்பிதழ் 'கூர்' கலை இலக்கிய மலரென்று நிச்சயம் கூறலாம். - ஆசிரியர் ]

•Last Updated on ••Sunday•, 14 •October• 2012 22:59•• •Read more...•
 

தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) - வ.ந.கிரிதரன் --(15 - 19)

•E-mail• •Print• •PDF•

 அத்தியாயம் பதினைந்து: நியூயார்க்கில் குடை வியாபாரம்!

தொடர் நாவல்: அமெரிக்கா II - வ.ந.கிரிதரன் -நண்பர்களிருவரும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். நாற்பத்திரண்டாவது வீத்யில் அமைந்திருந்த நூலகத்தை மையமாக வைத்து 'பிராட்வே' சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் நூலகத்திற்குச் சென்று பத்திரிகைகள், சஞ்சிகைகளைப் புரட்டினால் நல்லதுபோல் இளங்கோவுக்குப் பட்டது. அருள்ராசா இளங்கோவைப் போல் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இலக்கியெம்ன்று எதிலும் பெரிதாக ஆர்வமற்றவன். ஆனால் கல்வி சம்பந்தமான, தொழில் வாய்ப்புகள் சம்பந்தமான, வியாபாரம் சம்பந்தமான விடயங்களில் ஆர்வமுள்ளவன். அவை பற்றிய விடயங்களை படிப்பதில் அதிகக் கவனம் செலுத்துபவன். அவனுக்கும் சிறிது நேரத்துக்கு நூலகம் சென்று ஏதாவது பிடித்த விடயங்களைப் பற்றிய பத்திரிகை, சஞ்சிகைகளைப் புரட்டினால் நல்லதுபோல் பட்டது. சிறிது நேரம் ஓய்வெடுத்தததும் போலாகுமெனப் பட்டது. இதன் காரணமாக இருவருக்கும் நூலகம் செல்வதில் எந்தவிதக் கருத்து வேறுபாடுகளும் ஏற்படவில்லை. எனவே நூலகத்தை நோக்கி நடையைக் கட்டினார்கள். அப்பொழுதும் அவர்களது சிந்தனை முழுவதும் குடிவரவு அதிகாரிகளுடனான சந்திப்பு பற்றியேயிருந்தது. இளங்கோ டிம் லாங்கைன்ச் சந்தித்திருந்தான். அருள்ராசாவுக்கு வந்து வாய்த்தவனோ டிம் லாங்கினைப் போல் அவ்வளவு வேடிக்கையானவனாக இருக்கவில்லை. வழக்கம்போல் அதிகாரிகளுக்குரிய கடின முகபாவமும், வார்த்தைகளை அளந்து, அதிகாரத்துடன் கொட்டும் தன்மையும் கொண்டவனாக விளங்கினான். எனவே அவனுக்கும் அருள்ராசாவுக்குமிடையிலான உரையாலும் மிகவும் குறுகியதாகவே அமைந்து விட்டதில் ஆச்சரியமேதுமிருக்கவில்லை. அவனொரு இத்தாலிய அமெரிக்கன். கிளாட் மன்சினி என்பது அவனது பெயர். அவனுக்கும், அருள்ராசாவுகுமிடையில் நடைபெற்ற உரையாடலும் பினவருமாறு சுருக்கமாக மட்டுமே அமைந்திருந்தது:  

•Last Updated on ••Monday•, 11 •February• 2013 02:46•• •Read more...•
 

தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) -வ.ந.கிரிதரன் -(8 - 14)

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் எட்டு: விருந்தோ நல்ல விருந்து!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா II" பல்பொருள் அங்காடி நண்பர்களிருவருக்கும் பெரு வியப்பினை அளித்தது. முதன் முறையாகப் புலம் பெயர்ந்ததன் பின்னர் அவர்களிருவரும் இவ்விதமானதொரு வர்த்தக நிலையத்துக்கு விஜயம் செய்திருக்கின்றார்கள். மரக்கறி, மாமிசத்திலிருந்து பல்வேறு வகையான பலசரக்குப் பொருட்கள், பழங்கள், பியர் போன்ற குடிபான வகைகளென அனைத்தையும் அங்கு வாங்கும் வகையிலிருந்த வசதிகள் அவர்களைப் பிரமிக்க வைத்தன. நண்பர்களிருவருக்குமிடையில் சிறிது நேரம் எவற்றை வாங்குவது என்பது பற்றிய சிறியதொரு உரையாடல் பின்வருமாறு நிகழ்ந்தது:

இளங்கோ: "முதன் முறையாகப் புதிய இடத்தில் சமைக்கப் போகின்றோம். இதனைச் சிறிது வித்தியாசமாகச் செய்ய வேண்டும்? நீ என்ன சொல்லுகின்றாய் அருள்?"

•Last Updated on ••Monday•, 11 •February• 2013 02:44•• •Read more...•
 

தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) (1- 7)

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் ஒன்று: 'இன்று புதிதாய்ப் பிறந்தேன்'

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா II" [ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு  முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் அமெரிக்கா 2007 ஆம் காலப்பகுதியில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.- ஆசிரியர்]

•Last Updated on ••Tuesday•, 24 •July• 2018 14:16•• •Read more...•
 

ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'

•E-mail• •Print• •PDF•

நாவல்: கன்னியாகுமரிஜெயமோகனின் 'கன்னியாகுமரி' நாவலின் கதைச்சுருக்கத்தினைப் பின்வருமாறு கூறலாம்: மிகவும் கேவலமான ஆசாபாசாங்களுடன் கூடிய கதாநாயகன் திரைப்பட இயக்குநர் ரவிகுமார்.எந் நேரமும் காமத்தில் உழன்று கொண்டேயிருக்கும் இவன் மிகவும் ஆழமாகவும் சிந்திப்பவன்.மிகவும் அற்பமாகவும் சிந்திப்பவன்.தன் கண் முன்னால் நான்கு முரடர்களால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப் பட்ட காதலி விமலாவைக் கோழையாகக் கைவிட்டவன். அவ்வுறவில் அவளும் ஆனந்தம் அடைந்திருக்க வேண்டுமெனக் கற்பனை செய்பவன். பல வருடங்களிற்குப் பின்னர் கன்னியாகுமரியில் படத் தயாரிப்பிற்கொன்றிற்காக தயாரிப்பாளர், கதாசிரியர், நடிகை பிரவீணாவுடன் தங்கியிருக்கும் இவன், நடிகையுடன் புணர்வதுடன், பெண்களைப் பாலியல் பண்டமாகவே கருதிய,கருதும் தனது மன உளைச்சல்களையெண்ணிப் போராட்டத்தில் சிக்கியிருக்கிறான். தனது பழைய காதலியான , தன்னால் கைவிடப்பட்ட படித்த விமலாவை கன்னியாகுமரியில் சந்திக்கிறான். அவளோ விடுமுறைகளில் படிக்காத ஆண்களாகத் தேர்ந்தெடுத்து ஊர் சுற்றுமொரு பெண்ணாக மாறியிருக்கிறாள்.அமெரிக்காவிலிருந்து தனது கிரேக்க ஆண் நண்பனுடன் கன்னியாகுமரிக்கு வருகை தந்திருக்கின்றாள். அவளுடனான சந்திப்பு மீண்டும் இயக்குநர் ரவிகுமாரின் மனப் போராட்டங்களை அதிகரித்து விடுகின்றது.

•Last Updated on ••Wednesday•, 08 •February• 2012 18:18•• •Read more...•
 

விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!

•E-mail• •Print• •PDF•

விஷ்ணுபுரம்ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' பற்றிப் பலர் பலவாறு கூறியுள்ளார்கள். இவர்களது குறிப்புகளெல்லாவற்றையும் பார்க்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது. இவர்களில் பலர் யானை பார்த்த குருடர்கள். நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி. ஹேமந்தன் என்னும் பாணன் விஷ்ணுபுரம் பற்றிய கதையினைக் கூறி முடித்ததும் வசந்தன் என்னும் பாணன் கூறத்தொடங்குவதுடன் ஆரம்பமாகும் நாவல் மூன்று பாகங்களாக விரிவடைந்து வசந்தன் கதையை முடித்ததும் இன்னுமொரு பாணனான கிரிஷ்மன் மீண்டுமொருமுறை விஷ்ணுபுரம் கதையினைக் கூறத்தொடங்குவதுடன் தொடர்கிறது. நாவலைப் பற்றிப் பின் அட்டையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: ' இந்நாவலில் விஷ்ணு ஒருமுறை புரண்டு படுக்கிறார். தருக்கம், தியானம்,கற்பனை என்ற மூன்று அடிப்படையான அறிதல் முறைகளில் கற்பனையின் துணை கொண்டு , பிற இரண்டின் சாத்தியங்களை பயன்படுத்தியபடி, மானுடனின் ஞானத்தேடலின் பயணத்தைச் சித்தரிக்கிறது (சித்திரிக்கிறது). கலையும், தருக்கமும், ஆன்மீகமும், மானுட உணர்வுகளுடன் கலந்து பௌராணிகமான மாய உலகமொன்றைப் படைக்கின்றன.'

•Last Updated on ••Thursday•, 16 •April• 2015 23:04•• •Read more...•
 

ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டமும், அ.ந.க.வும்: சில குறிப்புகள்!

•E-mail• •Print• •PDF•

அறிஞர் அ.ந.கந்தசாமிஅண்மையில் நூலகம்.நெற் (Noolaham.net) இணையத் தளத்தில் 'திசை புதிது ' இதழ்-1 (2003)இல் வெளிவந்திருந்த 'மூத்த எழுத்தாளர் வரதர் ' என்னும் கட்டுரையொன்றினைப் பிரசுரித்திருந்தார்கள். அந்தக் கட்டுரையில் ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய சில குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றை வாசித்தபொழுது பெரிதும் ஆச்சரியமாகவிருந்தது. அதில் ஓரிடத்திலாவது அறிஞர் அ.ந.கந்தசாமியைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப்படவில்லை. மறுமலர்ச்சிக் காலகட்டம் என்று நாம் குறிப்பிடும்போது 'மறுமலர்ச்சிச் சங்க'த்தின் காலகட்டத்தையும், அச்சங்கத்தால் வெளியிடப்பட்ட 'மறுமலர்ச்சி ' சஞ்சிகையின் (கையெழுத்துச் சஞ்சிகை / அச்சில் வெளிவந்த சஞ்சிகை) காலகட்டத்தையும் உள்ளடக்கிய காலகட்டத்தையே குறிப்பிடுகின்றோம். சஞ்சிகை அச்சில் வெளிவந்தபோது வெளியிட ஐவர் கொண்ட குழு பண உதவி செய்ததாக வரதர் தன் நேர்காணல்களில் குறிப்பிடுவார். ஆனால் மறுமலர்ச்சிச் சங்கத்தினை 1943இல் அமைத்து 1945வரை 'மறுமலர்ச்சி ' கையெழுத்துச் சஞ்சிகையினை வெளியிட்டவர்களையே அக்காலகட்டத்தின் மூலவேர்களாகக் குறிப்பிடவேண்டும். இச்சங்கத்தை உருவாக்கியவர்கள் அவ்வப்போது கூடி இலக்கியத்த்தின் பல்வேறு வகையான போக்குகள் பற்றி, அவற்றின் தன்மைகள் பற்றியெல்லாம் விவாதித்து வந்துள்ளதோடு அச்சங்கத்தின் குறிப்பிட்ட காலத்தின் வெற்றிக்கும் காரணமாக விளங்கியிருக்கின்றார்கள். இதனை நாம் மறந்து விடக் கூடாது.

•Last Updated on ••Wednesday•, 08 •February• 2012 18:18•• •Read more...•
 

பிரபஞ்சத்து மாயங்கள்! 'கரும் ஈர்ப்பு மையங்கள்'!

•E-mail• •Print• •PDF•

பிரபஞ்சத்து மாயங்கள்! கரும் ஈர்ப்பு மையங்கள்!சாதாரண மனிதரிலிருந்து விஞ்ஞானிகள் வரை மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்துப் புதிரென்று ஒன்றிருந்தால் அது இந்தக் கருந்துளைகள் (Black Holes) தான். உண்மையில் இவற்றைத் தமிழில் கருந்துளைகள் என மொழிபெயர்ப்பதை விடக் 'கரும் ஈர்ப்பு மையங்கள் ' என மொழி பெயர்ப்பதே மிகவும் பொருத்தமாகவிருக்குமெனக் கருதுகின்றேன். ஏனெனில் இவை மிகவும் ஈர்ப்புச் சக்தி மிக்கவை. ஒளிக்கதிர்களையே வெளியேற முடியாத அளவிற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையான இவற்றை கரும் ஈர்ப்பு மையங்களென அழைப்பதே சரியென்றெனக்குப் படுவதால் இவை இனி கரும் ஈர்ப்பு மையங்கள் என்றே அழைக்கப் படும்.  ஒளிக்கதிர்களையே தப்பியோட விடாது சிறைப்பிடித்துவிடுமளவிற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையாக இவை இருப்பதால் இவை மிகவும் விந்தையானவை. இரகசியமானவை. புதிரானவை. இவற்றை நேரடியாகப் பார்க்கும் வல்லமை படைத்தவர்கள் இருப்பார்களேயானால் அவர்களால் தாங்கள் கண்டதை எமக்குத் தெரிவிப்பதற்குக் கூட முடியாது. ஊகங்கள், பக்க விளைவுகள் இவற்றைக் கொண்டு மட்டும் தான் இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள, அனுமானித்துக் கொள்ளக் கூடியதாகவுள்ளது. 
கரும் ஈர்ப்பு மையங்கள் உண்மையில் மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களே. விண்ணில் நாம் காணும் நட்சத்திரங்களை அவற்றின் திணிவினை சூரியனின் திணிவுடன் ஒப்பிட்டுப் பிரிக்க முடியும். இவ்விதம் பெறப்படும் திணிவு சூரிய திணிவு (Solar Mass) என அழைக்கப் படும்.நட்சத்திரங்களின் திணிவானது ஒரு குறிப்பிட்ட சூரியத் திணிவிலும் அதிகாக இருக்கும் பொழுது அந் நட்சத்திரம் கரும் ஈர்ப்பு மையமாக உருவாகும் வாய்ப்பு உண்டு. இத்திணிவுக்கும் நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானிகளிலொருவரான சந்திரசேகருக்கும் மிக முக்கியமானதொரு தொடர்பு உண்டு. அதுவென்ன என்பதை இக்கட்டுரையின் இறுதியில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

•Last Updated on ••Wednesday•, 25 •April• 2012 17:09•• •Read more...•
 

மனிதரின் ஆளுமையும் சிக்மண்ட் பிராய்டும்!

•E-mail• •Print• •PDF•

மனிதரின் ஆளுமையும் , சிக்மண்ட் பிராய்டும்."மனிதன் சூழ்நிலையின் கைதி" என்றொரு கூற்று நிலவுகின்றது. கூர்ந்து கவனிப்போமாயின் மனிதரின் வாழ்வின் பெரும்பாலான படிகளை நிர்ணயிப்பது அவர் வாழும் சமுதாயத்தில் நிலவிடும் புறச்சூழல்தான். இச் சூழலின் தாக்கம் அல்லது பாதிப்பு ஒவ்வொரு மனிதரின் மீதும் ஒரே விதமான தாக்கத்தினை வெளிப்படுத்துவதில்லை. மாறாக அவரது உடனடிச் சூழலான குடும்பச் சூழல், அவரது அகச்சூழல், என்பவற்றிற்கேற்பவே இப்பாதிப்பும் அவரிடத்தில் ஏற்படுத்தும் விளைவுகளும் இருந்து விடுகின்றன. வர்க்கங்களால், ஏற்றத்தாழ்வுகளால் பிளவுண்டு கிடக்கும் புறச்சூழல் மனிதரில் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் வலியவை. பெரும்பாலான தெளிவுள்ள மனிதர்களே இச்சூழலின் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்க முடியாமல் நீரோட்டத்தில் அள்ளுப்பட்டுச் செல்லும் கட்டையைப் போல் அள்ளுண்டு போகும்போது சாதாரணமனிதர்களின் நிலை என்ன? இத்தகைய பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைத்த ஒருசிலரே சூழலை மீறிய சரித்திர புருஷர்களாக, மானிட வழிகாட்டிகளாக உருவாகுகின்றார்கள்.

•Last Updated on ••Wednesday•, 08 •February• 2012 18:18•• •Read more...•
 

ஆறுதலற்று விரையும் அண்டப் பொருட்கள்! பிரபஞ்ச வடிவம் பற்றிய புரிதல்கள்!

•E-mail• •Print• •PDF•

ஆறுதலற்று விரையும் அண்டப் பொருட்கள்..இரவு நேரங்களில் அண்ணாந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப் பாருங்கள். கோடிக் கணக்கில் பரந்து கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை, கிரகங்களை உபகிரகங்களைக் கவனியுங்கள். அதே சமயம் இன்னும் ஒன்றையும் மனதிலே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு செக்கனும் பிரமாண்டமானதொரு வேகத்தில் விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்சமொன்றின் சிறியதொரு கோணத்தில் விரைந்து கொண்டிருக்கும் சிறியதொரு கோளொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதே அது. நெஞ்சினைப் பிரமிக்க வைத்து விடுகின்றதல்லவா! அப்படியானால் நம்மால் ஏனிந்த வேகத்தை உணர முடியவில்லை? மூடியதொரு புகையிரதத்தினுள் இருக்குமொருவருக்கு எவ்விதம் புகையிரதம் வேகமாகச் செல்வது தெரியாதோ அது போன்றதொரு நிலையில் தான் எம்முடைய நிலையும். பூமியைச் சுற்றிப் படர்ந்திருக்கும் வாயு மண்டலம்தான் எம்மை மூடிய புகையிரத்தைனைப் போல் இக்கோளினை வைத்திருக்கின்றது. அதனால் தான் எம்மால் எமது வேகத்தைக் கூட உணர முடியாமலிருக்கின்றது. இன்னும் ஒரு காரணம் - எம்மைச் சுற்றியுள்ள சுடர்களுக்கும், கிரகங்களுக்குமிடையிலான தொலைவு மிக மிக அதிகமானது. இத் தொலைவும் எமது வேகத்தினை உணரமுடியாதிருப்பதற்கு இன்னுமொரு காரணம். புகைவண்டியினுள் விரையும் ஒருவருக்கு அருகில் தெரியும் காட்சிகள் வேகமாகச் செல்வது போலும், மிகத் தொலைவிலுள்ள காட்சிகள் ஆறுதலாக அசைவது போலவும் தெரிவதற்கு அடிப்படைக் காரணம் தொலைவு தான்.

•Last Updated on ••Wednesday•, 03 •February• 2016 07:27•• •Read more...•
 

நூலறிமுகம்: 'மிஷியோ ஹகு'வின் 'ஹைபர் ஸ்பேஸ்'!

•E-mail• •Print• •PDF•

நாம் வாழும் இந்த உலகம், வான், மதி, சுடர், இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நமது பிரபஞ்சம் இவை யாவுமே எப்பொழுதும் எந்நெஞ்சில் பெரும் பிரமிப்பினையும், பல்வேறு வகைப்பட்ட வினாக்களையும் ஏற்படுத்தி விடுவது வழக்கம். முப்பரிமாண உலகினுள் கைதிகளாக வளைய வந்துகொண்டிருக்கும் நாம், இம்மண்ணில் நாமே உருவாக்கிய அமைப்புகள் ஏற்படுத்தும் தாக்கங்களுக்குள் சிக்கி, அவற்றுக்கு ஈடுகொடுத்துத் தப்பிப் பிழைப்பதிலேயே எம் வாழ்நாளைக் கழித்து முடிந்து விடுகின்றோம். இத்தகையதொரு நிலையில் இப்பிரபஞ்சத்தின் தோற்றம், அமைப்பு, முடிவு பற்றிய வினாக்கள், அவை பற்றிய நினைவுகள், எண்ணங்கள் எல்லாமே எப்பொழுதுமே என் நெஞ்சில் ஒருவித தண்மையான உணர்வினை ஏற்படுத்தி விடுவது வழக்கம். சகல விதமான மன அழுத்தங்களிலிருந்தும் என்னை விடுபட இவை பெரிதும் உதவுகின்றன. இதற்காகவே நகரவாழ்வின், நாகரிக வாழ்வின் இறுக்கத்தினிலிருந்தும் விடுபடுவதற்காக நேரம் கிடைக்கும் போதிலெல்லாம் இரவினில் தொலைவினில் சிரிக்கும் நட்சத்திரக் கன்னியரின் கண்சிமிட்டலில், வெண்மதிப் பெண்ணின் பேரழகில் என்னை மறந்து விடுவேன்.

•Last Updated on ••Wednesday•, 25 •April• 2012 17:09•• •Read more...•
 

அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்

•E-mail• •Print• •PDF•

ஆகஸ்ட் 2007 இதழ் 92 விலிருந்துநவீன பெளதீகம் என்றதும் நமக்கு ஞாபகத்தில் வருபவர் அல்பேர்ட் ஜன்ஸ்டைன். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரால் வெளியிடப்பட்ட 'சார்பியற் தத்துவம்' (Theory of Ralativity) பற்றிய கட்டுரைகள் பெளதீகவியலின் வரலாற்றிலேயே மாபெரும் புரட்சியை ஏற்படுத்தின. புரட்சியென்றால் சாதாரண புரட்சியல்ல. பெளதிகத்தின் அடித்தளத்தையே அடியோடு மாற்றிவைத்த புரட்சி. இச் சார்பியற் தத்துவமும், சக்திச் சொட்டுப் பெளதிகமும் (Quantum Physics) இன்றைய நவீன பெளதிகத்தின் அடித்தளங்களாகக் கருதப்படுபவை. சார்பியற் தத்துவத்தைப் பொறுத்தவரையில் அது முழுக்க முழுக்க ஜன்ஸ்டைனின் கோட்பாடே. சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப கர்த்தாவாகவும் ஜன்ஸ்டைனையே கருதலாம். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு நோபல் பரிசு கிடைத்ததே போட்டான்கள் பற்றிய கண்டு பிடிப்பிற்காகத்தான். இக் கண்டுபிடிப்பே சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப வளர்ச்சியாகும். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு சார்பியற் தத்துவத்திற்காகவும் இன்னுமொருமுறை நோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும்.

•Last Updated on ••Wednesday•, 25 •April• 2012 17:10•• •Read more...•
 



'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.022 seconds, 2.38 MB
Application afterRoute: 0.028 seconds, 3.13 MB
Application afterDispatch: 3.623 seconds, 89.44 MB
Application afterRender: 3.728 seconds, 96.06 MB

•Memory Usage•

100800832

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'kg5gaoqucng8e7ped8tmn11lm0'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1719961023' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'kg5gaoqucng8e7ped8tmn11lm0'
  4. UPDATE `jos_session`
      SET `time`='1719961923',`userid`='0',`usertype`='',`username`='',`gid`='0',`guest`='1',`client_id`='0',`data`='__default|a:10:{s:15:\"session.counter\";i:5;s:19:\"session.timer.start\";i:1719961922;s:18:\"session.timer.last\";i:1719961922;s:17:\"session.timer.now\";i:1719961923;s:22:\"session.client.browser\";s:103:\"Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)\";s:8:\"registry\";O:9:\"JRegistry\":3:{s:17:\"_defaultNameSpace\";s:7:\"session\";s:9:\"_registry\";a:1:{s:7:\"session\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:4:\"user\";O:5:\"JUser\":19:{s:2:\"id\";i:0;s:4:\"name\";N;s:8:\"username\";N;s:5:\"email\";N;s:8:\"password\";N;s:14:\"password_clear\";s:0:\"\";s:8:\"usertype\";N;s:5:\"block\";N;s:9:\"sendEmail\";i:0;s:3:\"gid\";i:0;s:12:\"registerDate\";N;s:13:\"lastvisitDate\";N;s:10:\"activation\";N;s:6:\"params\";N;s:3:\"aid\";i:0;s:5:\"guest\";i:1;s:7:\"_params\";O:10:\"JParameter\":7:{s:4:\"_raw\";s:0:\"\";s:4:\"_xml\";N;s:9:\"_elements\";a:0:{}s:12:\"_elementPath\";a:1:{i:0;s:66:\"/home/archiveg/public_html/libraries/joomla/html/parameter/element\";}s:17:\"_defaultNameSpace\";s:8:\"_default\";s:9:\"_registry\";a:1:{s:8:\"_default\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:9:\"_errorMsg\";N;s:7:\"_errors\";a:0:{}}s:16:\"com_mailto.links\";a:3:{s:40:\"4f5dbebbba24ef069a089d1f5e35be9e3fa1d6ab\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6470:2021-02-06-14-32-27&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23\";s:6:\"expiry\";i:1719961922;}s:40:\"0adae25dde402a784eac0ddde44282ffc2a6e0ae\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6326:2020-11-26-05-17-08&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82\";s:6:\"expiry\";i:1719961922;}s:40:\"20f0e6b8424b51af556b4b93b7d41a8e06c62710\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6426:2021-01-18-16-01-32&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82\";s:6:\"expiry\";i:1719961923;}}s:19:\"com_mailto.formtime\";i:1719961922;s:13:\"session.token\";s:32:\"f46d1cdb4e5a21bb3708222b90e27848\";}'
      WHERE session_id='kg5gaoqucng8e7ped8tmn11lm0'
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 54)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT c.*, s.id AS sectionid, s.title AS sectiontitle, CASE WHEN CHAR_LENGTH(c.alias) THEN CONCAT_WS(":", c.id, c.alias) ELSE c.id END AS slug
      FROM jos_categories AS c
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = c.SECTION
      WHERE c.id = 28
      LIMIT 0, 1
  11. SELECT cc.title AS category, a.id, a.title, a.alias, a.title_alias, a.introtext, a.fulltext, a.sectionid, a.state, a.catid, a.created, a.created_by, a.created_by_alias, a.modified, a.modified_by, a.checked_out, a.checked_out_time, a.publish_up, a.publish_down, a.attribs, a.hits, a.images, a.urls, a.ordering, a.metakey, a.metadesc, a.access, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, CHAR_LENGTH( a.`fulltext` ) AS readmore, u.name AS author, u.usertype, g.name AS groups, u.email AS author_email
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON a.catid = cc.id
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE 1
      AND a.access <= 0
      AND a.catid = 28
      AND a.state = 1
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-07-02 23:12:03' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-07-02 23:12:03' )
      ORDER BY  a.created DESC,  a.created DESC
      LIMIT 0, 2500
  12. SELECT cc.title AS category, a.id, a.title, a.alias, a.title_alias, a.introtext, a.fulltext, a.sectionid, a.state, a.catid, a.created, a.created_by, a.created_by_alias, a.modified, a.modified_by, a.checked_out, a.checked_out_time, a.publish_up, a.publish_down, a.attribs, a.hits, a.images, a.urls, a.ordering, a.metakey, a.metadesc, a.access, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, CHAR_LENGTH( a.`fulltext` ) AS readmore, u.name AS author, u.usertype, g.name AS groups, u.email AS author_email
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON a.catid = cc.id
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE 1
      AND a.access <= 0
      AND a.catid = 28
      AND a.state = 1
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-07-02 23:12:03' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-07-02 23:12:03' )
      ORDER BY  a.created DESC,  a.created DESC
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 54 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 54
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 39
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-02 23:12:03' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-02 23:12:03' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

   -வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  -  வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - ஜவாத் மரைக்கார்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - தகவல்: கருணாகரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - பதிவுகள்.காம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - ஷேர்லி கந்தப்பா (ஆங்கிலம்) | தமிழ்: வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 -பத்மநாபன் ஐயர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 -வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 BY V.N.GIRITHARAN [TRANSLATION BY LATHA RAMAKRISHNAN; PROOFREAD & EDITED BY THAMAYANTHI GIRITHARAN ]	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-    வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-    வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  இஸ்மாயில் ஏ.முகமட் (ISMAIL A. MOHAMED) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  வ.ந.கிரிதரன் நேர்காணல். கண்டவர்: கே.எஸ்.சுதாகர்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  வ.ந.கிரிதரன் ‍ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- BY V.N.GIRITHARAN -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- DR. R.  DHARANI M.A.,M.PHIL., M.ED., PGDCA., PH.D. ASSISTANT PROFESSOR IN ENGLISH, LRG GOVERNMENT ARTS COLLEGE FOR WOMEN	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- IN TAMIL: V.N.GIRITHARAN; TRANSLATION IN ENGLISH DR. R. DHARANI -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- V.N.GIRITHARAN -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- V.N.GIRITHARAN -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஆங்கிலத்தில்: கவிஞர் பைரன் (பைரன் பிரபு) | தமிழில்: வ.ந.கிரிதரன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- குருவி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கே.எஸ்.சுதாகர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சிங்கள மொழியில் கத்யானா அமரசிங்ஹ | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சிங்களக் கவிதையின் ஆங்கில வடிவம்: கத்யானா அமரசிங்ஹ |  தமிழில் : வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சீர்காழி தாஜ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தகவல்: காலம் செல்வம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தமிழில்: வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள்.காம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பேராசிரியர் செ.யோகராசா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பேர்ஸி பிஷ் ஷெல்லி | தமிழில்: வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந. கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரந்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன்       -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன், பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வநகி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேந்தனார் இளஞ்சேயின் கடிதங்கள் மூன்று -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேந்தனார் இளஞ்சேய் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
. வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY V.N.GIRITHARAN TRANSLATION BY LATHA RAMAKRISHNAN; PROOFREAD & EDITED BY THAMAYANTHI GIRITHARAN	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY V.N.GIRITHARAN [ TRANSLATION BY LATHA RAMAKRISHNAN; PROOFREAD & EDITED BY THAMAYANTHI GIRITHARAN ]	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY V.N.GIRITHARAN [ TRANSLATION BY LATHA RAMAKRISHNAN; PROOFREAD & EDITED BY THAMAYANTHI GIRITHARAN ]	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY V.N.GIRITHARAN [TRANSLATION BY LATHA RAMAKRISHNAN; PROOFREAD & EDITED BY THAMAYANTHI GIRITHARAN ]	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY V.N.GIRITHARAN [TRANSLATION BY LATHA RAMAKRISHNAN; PROOFREAD & EDITED BY THAMAYANTHI GIRITHARAN ]	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY V.N.GIRITHARAN [TRANSLATION BY LATHA RAMAKRISHNAN; PROOFREAD & EDITED BY THAMAYANTHI GIRITHARAN ]	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY V.N.GIRITHARAN [TRANSLATION BY LATHA RAMAKRISHNAN; PROOFREAD & EDITED BY THAMAYANTHI GIRITHARAN ]	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY V.N.GIRITHARAN [TRANSLATION BY LATHA RAMAKRISHNAN; PROOFREAD & EDITED BY THAMAYANTHI GIRITHARAN ]	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
V	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
மூலம் (ஆங்கிலம்) - கத்யானா அமரசிங்க ( KATHYANA AMARASINGHE) | தமிழில் - வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ. ந. கிரிதரன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ.ந.கிரிதரன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ.ந.கிரிதரன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ.ந.கிரிதரன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ.ந.கிரிதரன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ.ந.கிரிதரன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ.ந.கிரிதரன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ.ந.கிரிதரன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ.ந.கிரிதரன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ.ந.கிரிதரன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ.ந.கிரிதரன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ.ந.கிரிதரன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ.ந.கிரிதரன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ.ந.கிரிதரன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ.ந.கிரிதரன் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ.ந.கிரிதரன் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வ.ந.கிரிதரன் =	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

-வ.ந.கிரிதரன் -=   -வ.ந.கிரிதரன் -
-  வ.ந.கிரிதரன் -=  -  வ.ந.கிரிதரன் -
- வ.ந.கிரிதரன் -=  - வ.ந.கிரிதரன் -
- ஜவாத் மரைக்கார்  -= - ஜவாத் மரைக்கார்  -
- தகவல்: கருணாகரன் -= - தகவல்: கருணாகரன் -
- பதிவுகள்.காம் -= - பதிவுகள்.காம் -
- வ.ந.கி -= - வ.ந.கி -
- வ.ந.கிரிதரன்= - வ.ந.கிரிதரன்
- வ.ந.கிரிதரன் -= - வ.ந.கிரிதரன் -
- ஷேர்லி கந்தப்பா (ஆங்கிலம்) | தமிழ்: வ.ந.கிரிதரன் -= - ஷேர்லி கந்தப்பா (ஆங்கிலம்) | தமிழ்: வ.ந.கிரிதரன் -
-பத்மநாபன் ஐயர் -= -பத்மநாபன் ஐயர் -
-வ.ந.கிரிதரன் -= -வ.ந.கிரிதரன் -
BY V.N.GIRITHARAN [TRANSLATION BY LATHA RAMAKRISHNAN; PROOFREAD & EDITED BY THAMAYANTHI GIRITHARAN ]= By V.N.Giritharan [Translation By Latha Ramakrishnan; Proofread & Edited By Thamayanthi Giritharan ]
வ.ந.கிரிதரன் -= வ.ந.கிரிதரன் -
-    வ.ந.கிரிதரன் -=-    வ.ந.கிரிதரன் -
-  இஸ்மாயில் ஏ.முகமட் (ISMAIL A. MOHAMED) -=-  இஸ்மாயில் ஏ.முகமட் (Ismail A. Mohamed) -
-  வ.ந.கிரிதரன் -=-  வ.ந.கிரிதரன் -
-  வ.ந.கிரிதரன் நேர்காணல். கண்டவர்: கே.எஸ்.சுதாகர்  -=-  வ.ந.கிரிதரன் நேர்காணல். கண்டவர்: கே.எஸ்.சுதாகர்  -
-  வ.ந.கிரிதரன் ‍ -=-  வ.ந.கிரிதரன் ‍ -
- - வ.ந.கிரிதரன் -=- - வ.ந.கிரிதரன் -
- BY V.N.GIRITHARAN -=- By V.N.Giritharan -
- DR. R.  DHARANI M.A.,M.PHIL., M.ED., PGDCA., PH.D. ASSISTANT PROFESSOR IN ENGLISH, LRG GOVERNMENT ARTS COLLEGE FOR WOMEN=- Dr. R.  Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women
- IN TAMIL: V.N.GIRITHARAN; TRANSLATION IN ENGLISH DR. R. DHARANI -=- In Tamil: V.N.Giritharan; Translation in English Dr. R. Dharani -
- V.N.GIRITHARAN -=- V.N.Giritharan -
- ஆங்கிலத்தில்: கவிஞர் பைரன் (பைரன் பிரபு) | தமிழில்: வ.ந.கிரிதரன்=- ஆங்கிலத்தில்: கவிஞர் பைரன் (பைரன் பிரபு) | தமிழில்: வ.ந.கிரிதரன்
- குருவி -=- குருவி -
- கே.எஸ்.சுதாகர் -=- கே.எஸ்.சுதாகர் -
- சிங்கள மொழியில் கத்யானா அமரசிங்ஹ | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்=- சிங்கள மொழியில் கத்யானா அமரசிங்ஹ | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
- சிங்களக் கவிதையின் ஆங்கில வடிவம்: கத்யானா அமரசிங்ஹ |  தமிழில் : வ.ந.கிரிதரன் -=- சிங்களக் கவிதையின் ஆங்கில வடிவம்: கத்யானா அமரசிங்ஹ |  தமிழில் : வ.ந.கிரிதரன் -
- சீர்காழி தாஜ் -=- சீர்காழி தாஜ் -
- தகவல்: காலம் செல்வம் -=- தகவல்: காலம் செல்வம் -
- தமிழில்: வ.ந.கிரிதரன் -=- தமிழில்: வ.ந.கிரிதரன் -
- பதிவுகள் -=- பதிவுகள் -
- பதிவுகள்.காம் -=- பதிவுகள்.காம் -
- பேராசிரியர் செ.யோகராசா -=- பேராசிரியர் செ.யோகராசா -
- பேர்ஸி பிஷ் ஷெல்லி | தமிழில்: வ.ந.கிரிதரன் -=- பேர்ஸி பிஷ் ஷெல்லி | தமிழில்: வ.ந.கிரிதரன் -
- வ.ந. கிரிதரன் -=- வ.ந. கிரிதரன் -
- வ.ந.கி -=- வ.ந.கி -
- வ.ந.கிரிதரந்=- வ.ந.கிரிதரந்
- வ.ந.கிரிதரன்=- வ.ந.கிரிதரன்
- வ.ந.கிரிதரன்=- வ.ந.கிரிதரன் 
- வ.ந.கிரிதரன்       -=- வ.ந.கிரிதரன்       -
- வ.ந.கிரிதரன்  -=- வ.ந.கிரிதரன்  -
- வ.ந.கிரிதரன் -=- வ.ந.கிரிதரன் -
- வ.ந.கிரிதரன் -=- வ.ந.கிரிதரன் - 
- வ.ந.கிரிதரன் -.=- வ.ந.கிரிதரன் -.
- வ.ந.கிரிதரன், பதிவுகள் -=- வ.ந.கிரிதரன், பதிவுகள் -
- வநகி -=- வநகி -
- வேந்தனார் இளஞ்சேயின் கடிதங்கள் மூன்று -=- வேந்தனார் இளஞ்சேயின் கடிதங்கள் மூன்று -
- வேந்தனார் இளஞ்சேய் -=- வேந்தனார் இளஞ்சேய் -
-- வ.ந.கிரிதரன் -=-- வ.ந.கிரிதரன் -
-வ.ந.கிரிதரன் -=-வ.ந.கிரிதரன் -
. வ.ந.கிரிதரன் -=. வ.ந.கிரிதரன் -
BY V.N.GIRITHARAN TRANSLATION BY LATHA RAMAKRISHNAN; PROOFREAD & EDITED BY THAMAYANTHI GIRITHARAN=By V.N.Giritharan Translation By Latha Ramakrishnan; Proofread & Edited By Thamayanthi Giritharan
BY V.N.GIRITHARAN [ TRANSLATION BY LATHA RAMAKRISHNAN; PROOFREAD & EDITED BY THAMAYANTHI GIRITHARAN ]=By V.N.Giritharan [ Translation By Latha Ramakrishnan; Proofread & Edited By Thamayanthi Giritharan ]
BY V.N.GIRITHARAN [TRANSLATION BY LATHA RAMAKRISHNAN; PROOFREAD & EDITED BY THAMAYANTHI GIRITHARAN ]=By V.N.Giritharan [Translation By Latha Ramakrishnan; Proofread & Edited By Thamayanthi Giritharan ]
V=v
மூலம் (ஆங்கிலம்) - கத்யானா அமரசிங்க ( KATHYANA AMARASINGHE) | தமிழில் - வ.ந.கிரிதரன் -=மூலம் (ஆங்கிலம்) - கத்யானா அமரசிங்க ( Kathyana Amarasinghe) | தமிழில் - வ.ந.கிரிதரன் -
வ. ந. கிரிதரன்=வ. ந. கிரிதரன்
வ.ந.கிரிதரன்=வ.ந.கிரிதரன்
வ.ந.கிரிதரன்=வ.ந.கிரிதரன் 
வ.ந.கிரிதரன் -=வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் ==வ.ந.கிரிதரன் =