மரண அறிவித்தல்: திரு.கங்காதரன் (ஜெமினி)கணேஸ்

Friday, 22 January 2021 20:06 - தகவல்: முருகபூபதி - மரண அறிவித்தல்கள்
Print

தேனீ ஆசிரியர் ஜெமினி கங்காதரன்

மரண அறிவித்தல்: திரு.கங்காதரன் (ஜெமினி)கணேஸ்
(யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவன்)
மலர்வு 09.01.1965 உதிர்வு 22.01.2021

புங்குடுதீவை பிறப்பிடமாகவும் ஜெர்மனி சுட்கார்ட் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெமினி என்றழைக்கப்படும் திரு.கங்காதரன் அவர்கள் 22.01.2021 வெள்ளியன்று ஜெர்மனியில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற கணேஷ் - மங்கையற்கரசி(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மகனும் அல்பிறட் - சுசீலா (மன்னார்)தம்பதிகளின் அன்பு மருமகனும், அமுதா அவர்களின் அன்புக் கணவரும், முரளிதரன்( ஆசிரியர் - திருமலை), சந்திரகௌரி (திருமலை) , சிறிதரன் (வைத்தியர் - யாழ்ப்பாணம்),வித்தியாதரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.  அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்பு அறியத்தரப்படும்.

தகவல்:  முருகபூபதி - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 22 January 2021 23:53