என்றும் இதுபோல் எங்குமே வாழ்வு நன்றாய் இருந்திட என்றுமே வாழ்த்துகள்!

Wednesday, 13 January 2021 11:51 - பதிவுகள்.காம் - கவிதை
Print

கதிரவன் நோக்கி உழவர் பொங்கும்
களிப்புப்  பொங்கல் இன்பப் பொங்கல்
பொங்கல் நாளில் அனைவர் வாழ்வில்
பொங்கி இன்பம் வழிந்திட வாழ்த்துகள்.

அன்பும், பண்பும் மிகுந்து பொங்கிட,
அகிலம் முழுதும் ஆனந்தம் பொங்கிட,
நெஞ்சம் நிறைந்து கூறுவோம் வாழ்த்துகள்.
நெஞ்சம் நிறைந்து கூறுவோம் வாழ்த்துகள்.

சூரியன் நோக்கிப் பொங்கிடும் நாளில்
நேரிய எண்ணம் எழுந்து பொங்கவே!
நேரிய எண்ணம் எழுந்து பொங்கினால்
காரியம் யாவிலும் வெற்றி நிச்சயம்.

நண்பர் இல்லில் இன்பம் பெருகட்டும்.
நானிலம் எங்கும் களிப்பே துள்ளட்டும்.
என்றும் இதுபோல் எங்குமே வாழ்வு
நன்றாய் இருந்திட என்றுமே வாழ்த்துகள்.

 

Last Updated on Wednesday, 13 January 2021 11:57