அஞ்சலி: உதைபந்தாட்ட வீரர் மரடோனா மறைவு!

Saturday, 28 November 2020 11:22 - குருவி - விளையாட்டு
Print

அஞ்சலி: உதைபந்தாட்ட வீரர் மரடோனா மறைவு!

உலகமெங்கும் வாழும் உதைபந்தாட்ட வீரர்களின் ஆதர்சபுருஷரான மரடோனா தனது அறுபதாவது வயதில் மாரடைப்பு காரணமாக மறைந்த செய்தியினை ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆர்ஜென்டீனைவைத் தெரியாதவர்களுக்கும் மரடோனாவைத் தெரியும். அவரது உதைபந்தாட்டத்திறமையான நகர்வுகள் ஆர்வத்துடன் கூடிய அனுபவத்தின் , கடுமுழைப்பின் வெளிப்பாடுகள்.

துடுப்பெடுத்தாட்டமென்றால் முதலில் நினைவுக்கு வருபவர் பிராட்மென். அதுபோல் உதைபந்தாட்டமென்றால் முதலில் நினைவுக்கு வருபவர் மரடோனா. அவர் மறைவால் வாடும் அனைவர்தம் துயரிலும் அவரது அபிமானிகளிலொருவனான நானும் இணைந்து கொள்கின்றேன்.  
மரடோனா

https://www.youtube.com/watch?v=VmyssDtOiLM

 

Last Updated on Saturday, 28 November 2020 11:49