தமிழகம்: சிறப்புடையாரியச் சீர்மையை அறியார்!

••Saturday•, 07 •June• 2014 17:14• ??- R.P. ராஜநாயஹம் , அசோகமித்திரன், ரவி ஸ்ரீனிவாஸ் -?? 'பதிவுகளில்' அன்று
•Print•

- பதிவுகள் இணைய இதழில் 2005 காலகட்டத்தில் விவாதங்கள் பல நடைபெற்றன.  எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் காரசாரமாக வாதிட்டுக்கொண்டார்கள்.  முட்டி மோதிக்கொண்டார்கள். இங்கு வெளிப்படும் கருத்துகள் பதிவுகள் இதழின் கருத்துகளல்ல. வாதங்களில் பங்குபற்றிய கட்டுரையாளர்களின் கருத்துகளே.  உயிர்மை ஏப்ரல் 2005  இதழில் ‘அசோகமித்திரன் படைப்பு மீதான அவதூறு’ என்று கட்டுரையொன்றினை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்தார். அது தொடர்பாக R.P. ராஜநாயஹம் 'சிறப்புடையாரியச் சீர்மையை அறியார்! ' என்றெழுதிய கட்டுரையும் , அதனைத் தொடர்ந்து வெளியான எதிர்வினைகளும்  ஒரு பதிவுக்காக  'பதிவுகள் அன்று' பகுதியில் மீள்பிரசுரமாகின்றன. - ஆசிரியர் -

தமிழகம்: சிறப்புடையாரியச் சீர்மையை அறியார்!  - R.P. ராஜநாயஹம் -

1_ashokamitran_b.jpg - 12.73 Kb R.P. ராஜநாயஹம்மிழ் இலக்கியச் சூழலை நாட்பட நாட்பட நாற்றமும் சேறும் பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் நோய்க்களமாக்கி அழிப்பதுதான் தன்னுடைய நோக்கமென்பதை ஜெயமோகன் மீண்டும் நிரூபித்துள்ளார். உயிர்மை ஏப்ரல் 2005 இதழில் ‘அசோகமித்திரன் படைப்பு மீதான அவதூறு’ என்பதாக இவர் எழுதியுள்ள கட்டுரை இவருடைய நேர்மையின்மையின் வெளிப்பாடு. ‘அசோகமித்திரன் - 50’ ஒளிப்பேழையை காலச்சுவடு மூலமாக கிழக்கு பதிப்பகத்திடமிருந்து பெற்று அந்த நிகழ்ச்சியை முழுமையாக, மூன்றுமுறை ஆழ்ந்து பார்த்தேன். சுந்தர ராமசாமி தன் பேருரையில் அசோகமித்திரனுக்கு பூரண மஹா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்து கௌரவித்திருக்கிறார். பேசியவர், பேசப்பட்டவர் இருவரையும் பற்றி எண்ணும்போது தியாகய்யரின் ஸ்ரீராகக் கீர்த்தனை ‘எந்த்தரோ மஹானுபாவலு அந்தரிக்கி வந்தனமு’ என்நெஞ்சை நிறைத்துப் பொங்கி வழிந்தது. சுந்தர ராமசாமி பேசியதின் சுருக்கம் கீழ்வருமாறு: ‘மிக முக்கியமானவராக அசோகமித்திரனை நான் கருதுகிறேன். நண்பர் ஒருவரிடம் விசாரித்தபோது 200 கதைகள் எழுதியிருக்கிறார் என்று அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன். இந்நிகழ்ச்சிக்காக இப்போது எண்பது கதைகளை என்னால் வாசிக்க முடிந்தது. இந்த சிறுகதை உருவத்தின் மீது இந்த கலைஞன் கொண்டிருக்கிற தீராத ஆசை. ஒரு நுட்பமான கலைஞனைப் பற்றிப் பேச நாம் இங்கே கூடியிருக்கிறோம். அசோகமித்திரன் 1950 வாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறார். இலக்கிய இயக்கங்கள், அரசியல் இயக்கங்களின் பாதிப்பு அவரிடம் இல்லை. அவருடைய எழுத்தால் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்களை அவரால் கவரமுடியவில்லை. இடதுசாரி, முற்போக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் போன்றவர்களுக்கு இவருடன் உறவு திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. வாழ்க்கை பற்றி ஓயாத கவலை, வாழ்க்கை திருப்தியாக இல்லை என்ற இவருடைய அக்கறையை அவர்கள் பரிசீலனை செய்யாதது ஏன்? வாசகர்கள் இரண்டு வகை 1. இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்கள். 2. விசுவாசமான வாசகர்கள். இவர்களில் இலக்கியத்தை நேசிக்கிற வாசகர்களால் இனி அசோகமித்திரனின் செல்வாக்கு அதிகமாக இருக்கும். அசோகமித்திரனின் படைப்புகள் சுவாரசியமாக, உறுத்தல் இல்லாதவை. வாழ்க்கையின் சாராம்சத்தை படைப்பாக மாற்ற இவரால் முடிந்திருக்கிறது'.

தொடர்ந்து சு.ரா தன் பேச்சில் ஒருதவளைப் பாய்ச்சலாக அசோகமித்திரனின் நுட்பங்கள், தந்திரங்கள், பதிவுகள் பற்றி சிலகாட்சிகளை நினைவுபடுத்திப் பார்த்திருக்கிறார். அசோகமித்திரன் சினிமா கனவுகளை மெதுவாக அசைக்கப் பார்க்கிறார். அவருக்கு நேசிக்கத் தகுந்த வாகனம் சைக்கிள். அவரால் சுயநலம் சார்ந்த வன்முறைபற்றி அழுத்தமாக சொல்ல முடிகிறது. எந்தப் பொருள் எடுத்துக் கொண்டாலும் அதன் உறவு சார்ந்த கவித்துவங்கள், உறவு சம்பந்தப்பட்ட பயங்கள் பற்றிய நுட்பமான எழுத்து. செயற்கைத்தனம் என்பது அசோகமித்திரனிடம் இயற்கையாகவே இல்லை. நகைச்சுவை இருக்கிறது.

Literature brings into your consciousness what you don’t know you knew

இந்த வாக்கியத்தை அவருடைய கதை ஒவ்வொன்றைப் படிக்கும் போதும் என் நினைவுக்கு வருகிறது. அவருடைய காலத்தில் எழுதவந்த நான் அவரை சிபாரிசு செய்கிறேன். 80 கதைகள் படித்தேன் இப்போது. எந்தக் கதையிலும் வன்முறையில்லை. எங்கோ ஒரு கோடரி வருகிறது. அரிவாள் வந்திருக்கலாம். அரிவாள்மனை வருகிறது. அதுகூட காய்கறி நறுக்குவதற்குதான். கத்திரிக்கோல், சுத்தியல் போன்ற உபகரணங்கள் வருகின்றன. அவருடைய தனித்தன்மை கதாபாத்திரங்கள் சார்ந்து, தீர்மானம் சார்ந்து இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை முன்வைப்பவர்.

இதனைத் தொடர்ந்து சுந்தர ராமசாமி செய்கிற ஒரு DEMONSTRATION மிகவும் சுவாரசியமானது. அசோகமித்திரன் கதையில் வருகிற ஒரு ‘நான்’ எப்படி சிந்திப்பார் என்பதை சு.ரா. விவரித்துக் காட்டினார். ரொம்ப அபூர்வமான சுவை நிறைந்த இந்த விவரிப்பை நேரில் பார்க்க பாக்கியம் கிடைக்கவில்லையே என்பதற்காக எனக்கு ஏக்கமாயிருக்கிறது. அசோகமித்திரன் இந்த விவரிப்பின் போது குலுங்கி குலுங்கி சிரித்து ரசித்திருக்கிறார் என்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்களே சொல்கிறார்கள். நிகழ்வுக்கு வந்திருந்தவர்களும் மிகவும் ரசித்து சிரித்து கைதட்டுகிறார்கள். இலக்கிய ரசனை என்பதற்கு சு.ரா.வின் இந்த விவரிப்பு முழு உதாரணம். அசோகமித்திரனை முழுமையாக உள்வாங்கியிருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி இது.

அசோகமித்திரனின் இந்த பாணியின் முக்கியத்துவம் பற்றி, முடிவற்ற சாத்தியக்கூறுகள் மிகப் பெரிய வாழ்க்கை சார்ந்து இருப்பதை சு.ரா. மிகவும் சிலாகிக்கிறார். வாழ்க்கை சார்ந்து, மனித மனத்தை சார்ந்து எளிய தீர்மானத்திற்கு வருவது விவேகமான செயல்பாடு அல்ல என்பதை அசோகமித்திரனின் எழுத்து உணர்த்துகிறது என்று சு.ரா. முழுமனதோடு பாராட்டுகிறார்.

அவருடைய படைப்புத்திறனுக்கு மதிப்பை அளித்திருக்கிறோமா? இது சு.ரா.வின் கேள்வி. அசோகமித்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவம் போதுமானதல்ல. இது சு.ரா.வின் அபிப்ராயம். பல்கலைக்கழகங்களில் ‘படைப்புக்கலை’ சார்ந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டால் அதன் இயக்குனராக இருப்பதற்கு இவரைத் தாண்டி வேறு எந்தப் பேரும் இல்லை. பேச்சை முடிக்குமுன் சு.ரா. வாசகர்களுக்கு வைத்த வேண்டுகோள். ‘அசோகமித்திரனை ஒரு தீவிரமான எழுத்தாளனாக எடுத்துக்கொண்டு படிக்க வேண்டும்.’

ஜெயமோகனுக்கு தலைக்கு வெளியே மூளை தொங்குகிறது. கூட்டத்திற்குப் போகாமல், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் முட்டாள்களாக்கி சு.ரா.வின் மீது இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். சு.ரா.வின் கருத்தாக 1. அசோகமித்திரன் மத்தியவர்க்க மக்களின் அன்றாட வாழ்வின் சிறிய சிக்கல்களைமட்டும் எழுதுபவர். அவரால் அடுத்தகட்ட ஆழங்களுக்குள் செல்ல முடியாமைக்குக் காரணம் மனித வாழ்வின் பல்வேறு சிக்கல்களைக் காணும் கண் அவருக்கு இல்லை என்பதுதான். சு.ரா. மேற்கண்டவாறு பேசவேயில்லை என்பது கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும், இந்த ஒளிப்பேழையைப் பார்ப்பவர்களும் அறிந்த உண்மை மறுக்க முடியாத உண்மை.

சமயமுள படிக்கெல்லாம் பொய் கூறி அறங்கொன்று சதிகள் செய்யும் ஜெயமோகனின் இந்த அபவாதம் சு.ரா.வின் மீது கொண்ட துவேசம் காரணமாக அரங்கேறியிருக்கிறது. இரண்டாவது குற்றச்சாட்டு அசோகமித்திரனின் படைப்புகளில் வாழ்வின் வன்முறை வெளிப்படவில்லை. அதிகபட்சம் அவர் படைப்புலகில் உள்ள ஆயுதம் அரிவாள்மனை மட்டுமே. இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலாக அசோகமித்திரன் படைப்புகளில் வன்முறை எங்கெல்லாம் வருகிறது என்று அகாடமிக் தனமான உளறல், சு.ரா., அப்படி பல எழுத்தாளர்களைப் பொறிகளில் சிக்க வைத்துள்ளார் என்று பழிபோட்டு முடிக்கப்படுகிறது. வன்முறை என்று எப்படி, எதை சொல்வது? Non Violence Itself is A Violence. இந்தக்கூட்டத்திற்கு போயிருந்தாலோ, ஒளிப்பேழையைப் பார்த்திருந்தாலோ சு.ரா. தன் பேச்சில் ‘அசோகமித்திரனால் சுயநலம் சார்ந்த வன்முறை பற்றி அழுத்தமாக சொல்ல முடிகிறது’ என்று குறிப்பிட்ட விஷயம் காதில் விழுந்திருக்கும். ஜெயமோகனின் உள வன்முறை உளறல் நமக்கு புரியாத தெரியாத விஷயமா?

அசோகமித்திரனையும் அவருக்கு நடந்த விழாவையும் கூட ஜெயமோகன் அவமானப்படுத்தியிருக்கிறார் என்பது தான் மறைக்க முடியாத உண்மை. சு.ரா.வின் அற்புதமான சொற்பொழிவை அசோகமித்திரனே ஆத்மார்த்தமாகப் பாராட்டியிருக்கிறார். ‘சுந்தர ராமசாமியாலேதான் இதைத் தொட்டுக் காட்ட முடியும்’ என்று நெகிழ்ந்து சொல்லியிருக்கிறார்.

இப்படி அசோகமித்திரன் தெளிவாகப் பேசியதற்காக அவரையும் அவமானப்படுத்தி ‘சு.ரா.வின் இக்கருத்தைக்கூட அவர் மறுத்துச் சொல்லவில்லை; ஏற்றே கூறுகிறார். அதுவே அவரது இயல்பு’ என்று அசோகமித்திரன் ஏதோ கபட நாடகவேடதாரி என்பது போல ஜெயமோகன் குறிப்பிடுகிறார். அசோகமித்திரனுக்கு ஒவ்வாத துவேசம், அபவாதம் இரண்டின் மொத்த உருவம்தான் ஜெயமோகன். வாசகர்கள் இத்தகைய உள்நோக்கத்திட்டங்களை எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டும். ஏனென்றால் ‘சு.ராவின் பொறிகளில் சிக்கி சீரழிந்த எழுத்தாளர்கள்’ என்று ஜெயமோகனின் அடுத்த அணுகுண்டு விழுந்தாலும் விழும்.

JEYAMOHAN IS A DABBLING DILETTANTE மட்டுமல்ல. சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்ற சிறப்புடையோரின் சீர்மையை அறியாது, அவர்களுடைய ஆளுமையை சீர்குலைக்கத் துடிக்கும் ஜெயமோகனுக்கும், உண்மை, நேர்மை என்ற உன்னதங்களுக்கும் ஸ்நான ப்ராப்தியே கிடையாது என்பது மற்றுமொரு முறை நிரூபணமாகியிருக்கிறது.

பாரதியின் தீர்க்க தரிசனம் புல்லரிக்க வைக்கிறது!
மெய்சிலிர்க்க வைக்கும் ஞான த்ருஷ்டி!!
“பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர்
சிறப்புடையாரியச் சீர்மையை அறியார்.”

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•      பதிவுகள் யூன் 2005 இதழ் 66 -மாத இதழ்


Re-Joinder: Controversy Surrounding Su.Ra and Ashokamitran!
NOT A WORD IS WRITTEN BY THE  INTERVIEWEE !

- ASHOKAMITRAN -

ASHOKAMITRAN (J. THIYAGARAJAN
FLAT -7, 1A, 9TH CROSS AVENUE,
DANDEESWARAM, VELACHERY,
CHENNAI-600 042.
 Date: 31.05.2005
SHRI R.P.RAJANAYAHEM
Tubeknit Fashions Ltd’
1,C.K.K INDUSTRAIAL COMPLEX
DHARAPURAM ROAD,
TIRUPUR- 641 608

1_ashokamitran_b.jpg - 12.73 KbDEAR R.P.RAJANAYAHEM, Your kind letter. I am extremely pained at the reactions of some friends to my ‘article’ in the Delhi Magazine. I am a computer illiterate and I have no way of knowing what appeared in the internet magazine. But both pieces are the result of a ten-minute telephone conversation with the correspondent. Nothing was put on paper, neither the questions nor the answers. In the printed article, there are quite a few terms i do not use at all. Also the tone is not mine. Since the questions were focussed on Tamil Brahmins, naturally the answers related to them. My concerns have always been about the not-so-brilliant, not-so-successful people of all sections of people. Not just Brahmins. 

In India, with a lot of construction work going on, it is a good period for tradesmen, plumbers, carpenters, electricians, masons, etc. But how much of what they earn goes to the well-being of their families, the education of their children? This applies to brahmins also, especially cooks. Much of their hard-earned money goes for gambling and having a merry time. 

All that appears in a periodical, Tamil or English, need not be cent percent authentic and true, especially when not a word is written by the interviewee. It is very difficult to convey the tone of the answers. 

As a general rule, no magazine publishes an originally written article unless the editor determines the theme. The correspondents execute the theme by interviews. In my case, it was a telephone interview and so prone to distortion and errors. And i had no control over what finally appeared in print. 

This makes it all the more important for a reader to exercise her or his own judgement, not merely go by what is published.

Yours Sincerely,
ASHOKAMITRAN

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
யூன் 2005 இதழ் 66 -மாத இதழ்


Rejoinder2: Ashokamitran's letter! 
STRANGE CRITERION MEASURE AND FUNNY REASON!

- R.P.Rajanayahem -

 R.P. ராஜநாயஹம்Ashokamitran has written a short, straight and crisp riposte on Outlook polemics. As a matter of fact he never writes rejoinder to anybody and to any magazine. It's a scoop to pathivukal, he gives his rejoinder as a letter written to R.P.Rajanayahem. Ashokamitran's letter focusses entirely on his Outlook Interview only.It is very funny to question why he forgot to mention Bathri and Venkatesh in his letter. This has become a global phenomenon, intellectuals always try to outsmart others with their criterion measures and  reasons. Why don't they think practically? Ashokamitran has given his honest explanation properly. I can find no logic,  should one write such repetitve, monotonous cock and bull stories as a rejoinder to Ashokamitran's letter.  Now I can understand why Su.Raa avoids  responding any criticism. In fact Su.Raa  is being inflicted with vehement, cruel attacks for the past fifty years. He refused to respond  fifty criticisms on "JJ sila kurippukal". Both Su.Raa and Ashokamitran have no faith in writing a chain of rejoinders. They have foreseen the consequences  and they know it will be a herculian task to convince and satisfy the typical intellectuals, stuffed with strange criterion measures and funny reasons.

let me quote from Shakespeare.

King Lear : Let us take our supper in the morning !
Clown: And I will go to bed in the noon !!
This is the spectacular,impressive and stunning response !!!
யூன் 2005 இதழ் 66 -மாத இதழ்


எதிர்வினை: அசோகமித்திரன் கடிதமும், சில கேள்விகளும்!
- ரவி ஸ்ரீனிவாஸ் -

எதிர்வினை: அசோகமித்திரன் கடிதமும், சில கேள்விகளும்! ஒரு வழியாக அசோகமித்திரன் தன் மெளனத்தினைக் கலைத்து தன் தரப்பு நியாயத்தினை ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.31 மே 2005 தேதியிட்ட கடிதம் பதிவுகளில் வெளியாகியுள்ளது. அதில் அசோகமித்திரன் கூறுகிறார்: 'I am a computer illiterate and I have no way of knowing what appeared in the internet magazine.'

அவுட்லுக்கில் அவருடன் ஒரு செவ்வி அச்சிலும், இணையத்திலும் வெளியாகியது. இது குறித்து பத்ரி கூறுகிறார்" அவுட்லுக் செவ்வி அச்சில் ஒன்றும், வெளியானது. இணையத்தில்தான் முக்கியமாக இந்த ஒரு விஷயம் இருந்தது. 'If a nonbrahmin has a windfall he just spends it on meat and drink. The Brahmin always saves for the rainy day.'

ஆனால் இந்த ஒரு விஷயம் அச்சில் இல்லை. இதை அசோகமித்திரனிடம் சொன்னேன். "அய்யய்யோ, நான் அப்பிடிச் சொல்லவே இல்லையேப்பா" என்றார். "

[http://thoughtsintamil.blogspot.com/]

அசோகமித்திரனின் கடிதத்தில் மேற்கூறியது குறித்து ஒரு விளக்கம் இருக்கிறது. பேட்டியில் அவர் கூறியதாக வெளிவந்த பிற கருத்துக்கள் குறித்து அவர் எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

பத்ரியின் பதிவில் அசோகமித்திரனுக்கு செவ்வி இணயத்தில் வந்திருப்பது அவருக்கு தெரிய வந்ததாக பொருள் கொள்ளும் வகையில் வாக்கியங்கள் உள்ளன.

"இதை அசோகமித்திரனிடம் சொன்னேன். "அய்யய்யோ, நான் அப்பிடிச் சொல்லவே இல்லையேப்பா" என்றார். செவ்வி வெளியான சில நாள்களில், அசோகமித்திரனின் நெருங்கிய உறவினர் அவரிடம் வந்து "என் அலுவலகத்தில் வேலை செய்யும் பல பார்ப்பனர்களும் குடிக்கிறார்கள், மாமிசம் சாப்பிடுகிறார்கள். அவர்கள்தான் இதைச் செய்வதில் முதலில் நிற்கிறார்கள்" என்றாராம். அசோகமித்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லையாம். "ஏன் இவர் இதையெல்லாம் வந்து என்னிடம் சொல்கிறார்" என்று யோசித்துக் கொண்டிருந்தாராம். இப்பொழுது என்னிடம் முழு விவரம் கேட்டதும்தான் தன்னை ஏன் பலரும் கொலைகாரன் போலப் பார்க்கிறார்கள் என்று புரிகிறது என்றும் சொன்னார். நான் அந்த செவ்வி பற்றி முழுமையான விளக்கம் கேட்டேன். அவரும் அதைப் பற்றிய தன் கருத்தைச் சொன்னார். இணையத்தில் வந்திருப்பது பற்றி இதுநாள் வரை தனக்கு எதுவும் தெரியாது என்றார். "

அச்சில் வெளியானது கூடவா அசோகமித்திரனுக்குத் தெரியாது. அவர் அவுட்லுக்கிற்கிற்கு அச்சு இதழில் வெளியான செவ்வி குறித்து கடிதம் ஏதும் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை செவ்வி இணயத்தில் இருப்பது தெரியாவிட்டாலும் அச்சில் வெளியானதில் தன் கருத்துக்கள் திரிக்கப்பட்டிருப்பதாக அவர் அவுட்லுக்கிற்கு எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. 31 மே கடிதத்திலும் அவர் அவுட்லுக்கிற்கு கடிதம் ஏதும் எழுதியிருப்பதாகக் குறிப்பிடவில்லை. நானறிந்த வரையில் அவர் கடிதம் ஏதும் அவுட் லுக்கில் இச்செவ்வி குறித்து இதுவரையில்  வெளியாகவில்லை. ஒருவேளை கடிதம் அனுப்பி அதை அவுட் லுக் வெளியிடவில்லை என்றால் அதாவது அவர் கடிதத்தில் பதிவாயிருக்கும் என்பதால் அவர் கடிதம் எழுதவில்லை என்ற முடிவிற்கு நாம் வரமுடியும், அதற்கு முரணான சான்றுகள் தற்போது முன் வைக்கப்படாததால்.

ராயர் காப்பி கிளப்பில் வெங்கடேஷ் எழுதுகிறார்.

'அப்பாடா.. கடைசியாக அசோகமித்திரன் பதில் எழுதிவிட்டார். அவருடனும், அவரது மகனுடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். தான் சொன்ன ஒரு வார்த்தையும் பேட்டியில் வரவில்லை என்று அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். உடனே பதில் எழுதுங்கள், உங்களைச் சுற்றி இப்படிப் பல கண்டனங்கள் வருகின்றன என்று சொல்லும்போதெல்லாம், வழக்கம்போல் அமைதியே காத்தார்.

ஒரு வகையில், இந்த அமைதி, என்னைப் போன்றவர்களுக்கு எரிச்சல் தந்தாலும், அவரது அமைதிக்கு ஒரு பொருள் இருக்கும் என்றே நான் நினைத்தேன். அவரது மகன் ராமகிருஷ்ணன் என் நண்பர். அவரிடம் பேசும்போதும், இதைப் பற்றி வலியுறுத்தினேன். அவர் அப்பாவுக்கு மேல் அமைதியானவர். ஆமாம்... செய்யணும்... என்று சொல்லிக்கொண்டிருந்தார். பரபரப்பான காலகட்டத்தில் எது சொன்னாலும் புத்திக்குப் போகாது என்பதால் அமைதி காத்தாரோ என்னவோ?

இருக்கலாம். நமக்குத்தான் எதைப் பார்த்தாலும் முட்டி மோதி, வீரத்தைத் நிரூபித்துவிடும் அவசரம் உண்டாயிற்றே. அவையெல்லாம் ஒரு துளி பயனும் தரப்போவதில்லை என்ற ஞானம் அவருக்கு இருக்கவேண்டும்.

அனுபவம் தரும் பாடம், நமது அவசரங்களை விட மேலானது. நல்லவேளையாக இப்போதாவது தன் கருத்தைத் தெரிவித்தாரே என்று மகிழ்ச்சி அடைகிறேன்.

சி·பிராயன்'
[http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/11150]

வெங்கடேஷ் அச்சு வடிவில் வந்த பேட்டியினைப் பற்றி மட்டும் சொன்னாரா இல்லை இணையத்தில் வெளியானதையும் சேர்த்துச் சொன்னாரா.அ.மி தன் கடிதத்தில் தான் I am a computer illiterate and I have no way of knowing what appeared in the internet magazine. என்கிறார். அ.மி யிடனும், அவரது மகனுடனும் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த வெங்கடேஷ் இணையத்தில் வெளியானதைப் பற்றி குறிப்பிட்டிருக்க அனைத்து வாய்ய்புகளும் உண்டு. அவருக்கு இணையத்தில் வெளியான பேட்டி குறித்து தெரியாமலிருக்க முடியாது.மேலும் பத்ரி குறிப்பிடுவதையும் இங்கு கவனிக்க வேண்டும்

"ஆனால் இந்த ஒரு விஷயம் அச்சில் இல்லை. இதை அசோகமித்திரனிடம் சொன்னேன். "அய்யய்யோ, நான் அப்பிடிச் சொல்லவே இல்லையேப்பா" என்றார். " ". 

தன்னை computer illiterate என்று அ.மி சொல்லிக் கொண்டாலும் நிச்சயம் அவருக்கு இணையத்தில் வெளியானதை குறைந்தது ஒருவராவது சொல்லியிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது அ.மி எதற்காக I have no way of knowing what appeared in the internet magazine என்று மே 31 தேதியிட்ட கடிதத்தில் கூற வேண்டும். 

மேலும் பத்ரி இது குறித்து அவரிடன் பேசியது குறித்தோ அல்லது வெங்கடேஷ் தன்னுடன் இது குறித்து தொடர்ந்து பேசியது குறித்தோ, பதில் தர வேண்டும் என அவர் கூறியது குறித்தோ அ.மி கடிதத்தில் ஒரு வாக்கியம் கூட இல்லை. ஆனால் வெங்கடேஷ் எழுதுகிறார்: "அவருடனும், அவரது மகனுடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். தான் சொன்ன ஒரு வார்த்தையும் பேட்டியில் வரவில்லை என்று அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். உடனே பதில் எழுதுங்கள், உங்களைச் சுற்றி இப்படிப் பல கண்டனங்கள் வருகின்றன என்று சொல்லும்போதெல்லாம், வழக்கம்போல் அமைதியே காத்தார்." 

தான் கணினி அறிவிலி, இணையத்தில் வெளியானதை தான் அறிய வாய்ப்பில்லை என்று கூறும் அ.மி யின் மகனுடன் இது குறித்து பேசியிருப்பதாகவும், அ.மி அமைதி காத்ததாகவும் வெங்கடேஷ் குறிப்பிடுகிறார். 

மூன்று பேர், அ.மி, அ.மி யின் மகன் ராமகிருஷ்ணன், வெங்கடேஷ் இது குறித்து தங்களுக்கிடையே பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர். அ.மி யின் பதிலில் இது ஏன் குறிப்பிடபடவில்லை.வெங்கடேஷ், பத்ரி மூலம் இதை அறிந்து கொண்டேன் என்பது கூட  ஏன் பதிவு செய்யப்படவில்லை. அ.மி. தன் கடிதத்தில் செவ்வியில் தான் கூறியது இது, தான் கூறாதது இது என்று ஏன் தெளிவாக தன் கருத்துக்கள் இவைதான் என்று சொல்லவில்லை. மாறாக கடித்ததில் This makes it all the more important for a reader to exercise her or his own judgement, not merely go by what is published. என்ற உபதேசம்தான் இருக்கிறது.

நான் சொன்னது இது, நான் சொல்லத இவை நான் சொன்னதாக வெளியாகியுள்ளன என்று அ.மி ஏன் தெள்ளத் தெளிவாக குறிப்பிடவில்லை. பேச்சின் தொனி எழுத்தில் வராது என்று மட்டும் கூறும் அ.மி தான் என்னதான் சொன்னேன் என்பதையாவது குறிப்பிடலாமே.நான் இந்தத் தொனியில் இதை கிண்டலாகக் குறிப்பிட்டேன், அது அச்சில் அந்த தொனி இல்லாதததால் இப்படி பொருள் கூறும் வகையில் உள்ளது என்று ஒருவர் குறிப்பிட்டால் அதை நாம் புரிந்து கொள்வோம்.ஆனால் அ.மி பொத்தாம் பொதுவாக தன் கடிதத்தில் கூறுகிறார்.

அ.மி கூறாததை அவுட் லுக் வெளியிட்டிருக்கும் பட்சத்தில் அவுட் லுக் மீது வழக்குத் தொடரலாம். மேலும் தொலைபேசி மூலம் செவ்வி என்னும் போது அதை செவ்வி கண்டவர் பதிவு செய்திருக்கவும், அந்தப் பதிவின் அடிப்படையில் அதை எழுதியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.அ.மி கூறுவது போல் 'prone to distortion and errors' என்பது உண்மையானால் அதை அவர்தானே தெளிவுபடுத்தி நான் கூறியது இதுதான், இதல்ல, ஆகவே அச்சில், இணையத்தில் வெளியானது தவறான புரிதலைத் தருகிறது என்று வாசகர் அறியத்தர வேண்டும். இது வரை அதை அவர் ஏன் செய்யவில்லை. மாறாக பொத்தாம் பொதுவாகப் பேசுவது ஏன். கடிதத்தில் அவுட் லுக் சார்பாக செவ்வி கண்டவர் தவறு செய்துவிட்டார், அவரின் செய்கையை நான் கண்டிக்கிறேன் என்று ஏன் அ.மி எழுதவில்லை. 

கூர்ந்து கவனித்தால் வெங்கடேஷ் கடிதம் சொல்லும் செய்தியும், பத்ரி தன் வலைப்பதிவில் கூறியதன் அடிப்படையில் நமக்கு கிடைக்கும் புரிதலும்,அ.மியின் கடிதம் தரும் செய்தியும் முரண்படுவதை அறிய முடியும். வெங்கடேஷ் "தான் சொன்ன ஒரு வார்த்தையும் பேட்டியில் வரவில்லை என்று அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்" என்கிறார். அ.மி யின் கடிதம் இப்படிக் கூறவில்லை. அது ஒரே ஒரு கருத்தினைப் பற்றி மட்டும் தன்னிலை விளக்கத்தினை தெளிவாக வைக்கிறது. அருளின் பதிவு ஏப்ரல் 3ம் தேதி இடப்படுகிறது. [http://aruls.blogspot.com/2005/04/blog-post_111253571156736199.html]

பத்ரி அசோகமித்திரனுடன் தான் மே 20ல் நடந்த எழுத்துப்பயிற்சி முகாமில் இது குறித்து பேசியதாகக் கூறுகிறார். 

"அடுத்து, நாங்கள் நடத்திய எழுத்துப் பயிற்சி முகாமில் அவரைச் சந்தித்தபோது இந்த விஷயத்தைப் பற்றி விரிவாகப் பேசினேன். .... இப்பொழுது என்னிடம் முழு விவரம் கேட்டதும்தான் தன்னை ஏன் பலரும் கொலைகாரன் போலப் பார்க்கிறார்கள் என்று புரிகிறது என்றும் சொன்னார்.நான் அந்த செவ்வி பற்றி முழுமையான விளக்கம் கேட்டேன். அவரும் அதைப் பற்றிய தன் கருத்தைச் சொன்னார். இணையத்தில் வந்திருப்பது பற்றி இதுநாள் வரை தனக்கு எதுவும் தெரியாது என்றார்."

இதையும் வெங்கடேஷ் எழுதியுள்ளதையும் ஒப்பிடுங்கள்.

"அவருடனும், அவரது மகனுடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். தான் சொன்ன ஒரு வார்த்தையும் பேட்டியில் வரவில்லை என்று அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். உடனே பதில் எழுதுங்கள், உங்களைச் சுற்றி இப்படிப் பல கண்டனங்கள் வருகின்றன என்று சொல்லும் போதெல்லாம், வழக்கம்போல் அமைதியே காத்தார். அவரது மகன் ராமகிருஷ்ணன் என் நண்பர். அவரிடம் பேசும்போதும், இதைப் பற்றி வலியுறுத்தினேன். அவர் அப்பாவுக்கு மேல் அமைதியானவர். ஆமாம்... செய்யணும்... என்று சொல்லிக்கொண்டிருந்தார். பரபரப்பான காலகட்டத்தில் எது சொன்னாலும் புத்திக்குப் போகாது என்பதால் அமைதி காத்தாரோ என்னவோ?"

இதிலிருந்து மே 20க்கு முன்னரே அமியிடம் வெங்கடேஷ் கண்டனங்கள் வருகின்றன என்று குறிப்பிட்டிருப்பார் என்று ஊகிக்கலாம், ஏனெனில் "உடனே பதில் எழுதுங்கள், உங்களைச் சுற்றி இப்படிப் பல கண்டனங்கள் வருகின்றன" ,"பரபரப்பான காலகட்டத்தில்" போன்றவை இப்படிப் புரிந்து கொள்ள இடமளிக்கின்றன. மே மாத தீராநதியில் சாருவின் கட்டுரை வெளியானது. அருளின் வலைப்பதிவு ஏப்ரல் துவக்கத்தில் ஏப்ரல் மூன்றாம் தேதி இடப்பட்டது. ஆனால் இணையத்தில் பேட்டி வெளியாகி கிட்டதட்ட 7 வாரங்கள் கழித்துத்தான் தனக்குத் தெரியும் என்கிறார் அ.மி. ஆனால் வெங்கடேஷ் அ.மியுடனும், அ.மி யின் மகனுடனும் இது குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன் என்று எழுதுகிறார். அ.மிக் கு வேண்டுமானால் இணையத்தில் பேட்டி குறித்து தெரியாமலிருக்கலாம். ஆனால் வெங்கடேஷ¤க்கும், அ.மி யின் மகனுக்குமா தெரியாது, இல்லை தெரிந்தும் அவர்கள் கூறவில்லையா. அ.மி யின் கடிதம் நம் சந்தேகங்களுக்கு விடையளிக்கவில்லை. இன்னும் சில கேள்விகளைத்தான் எழுப்புகிறது.பத்ரிக்கு அவர் என்ன விளக்கத்தினை எழுதித் தருகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். 

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
யூன் 2005 இதழ் 66 -மாத இதழ்


ASHOKAMITRAN'S LETTER WRITTEN TO R.P.RAJANAYAHEM - 
A REJOINDER TO OUTLOOK POLEMICS 

1_ashokamitran_b.jpg - 12.73 KbWhen Ashokamitran wrote me a letter and wanted me to type it and arrange to publish it in pathivukal.com, I thought of giving a resounding,booming TITLE to that historical letter and chose a sentence from the letter itself because "NOT A WORD IS WRITTEN BY THE INTERVIEWEE!" sounds a decree and verdict in it and this line has an assertive forceful claim and while pronouncing, it becomes an articulate, expressive declaration. 

Now when I find this TITLE has become popular in Raayar Kaapiklub I feel great. 

But this letter also raised a row among the literarians around Tamil nadu. Why should Ashokamitran write this letter to R.P.RAJANAYAHEM ? 
That's the question ! 
JEALOUSY, RESENTMENT, DISTRUST, SUSPICION, HATRED 

Heated discussions going on and now 
ASHOKAMITRAN'S LETTER TO R.P.RAJANAYAHEM IS AT ODDS ! 
So this letter is being rejcted and ignored.

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
ஜூலை 2005 இதழ் 67 -மாத இதழ்

•Last Updated on ••Saturday•, 07 •June• 2014 17:48••  

•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.086 seconds, 2.39 MB
Application afterRoute: 0.098 seconds, 3.13 MB
Application afterDispatch: 0.246 seconds, 5.80 MB
Application afterRender: 0.281 seconds, 5.96 MB

•Memory Usage•

6320344

•12 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'equulmdaanbb5kuo5pvbhjkdh2'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1716142209' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'equulmdaanbb5kuo5pvbhjkdh2'
  4. UPDATE `jos_session`
      SET `time`='1716143109',`userid`='0',`usertype`='',`username`='',`gid`='0',`guest`='1',`client_id`='0',`data`='__default|a:10:{s:15:\"session.counter\";i:11;s:19:\"session.timer.start\";i:1716143087;s:18:\"session.timer.last\";i:1716143107;s:17:\"session.timer.now\";i:1716143108;s:22:\"session.client.browser\";s:103:\"Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)\";s:8:\"registry\";O:9:\"JRegistry\":3:{s:17:\"_defaultNameSpace\";s:7:\"session\";s:9:\"_registry\";a:1:{s:7:\"session\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:4:\"user\";O:5:\"JUser\":19:{s:2:\"id\";i:0;s:4:\"name\";N;s:8:\"username\";N;s:5:\"email\";N;s:8:\"password\";N;s:14:\"password_clear\";s:0:\"\";s:8:\"usertype\";N;s:5:\"block\";N;s:9:\"sendEmail\";i:0;s:3:\"gid\";i:0;s:12:\"registerDate\";N;s:13:\"lastvisitDate\";N;s:10:\"activation\";N;s:6:\"params\";N;s:3:\"aid\";i:0;s:5:\"guest\";i:1;s:7:\"_params\";O:10:\"JParameter\":7:{s:4:\"_raw\";s:0:\"\";s:4:\"_xml\";N;s:9:\"_elements\";a:0:{}s:12:\"_elementPath\";a:1:{i:0;s:66:\"/home/archiveg/public_html/libraries/joomla/html/parameter/element\";}s:17:\"_defaultNameSpace\";s:8:\"_default\";s:9:\"_registry\";a:1:{s:8:\"_default\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:9:\"_errorMsg\";N;s:7:\"_errors\";a:0:{}}s:16:\"com_mailto.links\";a:6:{s:40:\"082f8d948f9a7555dafa1fc934b78bf166c829a8\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5811:2020-04-20-13-15-50&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20\";s:6:\"expiry\";i:1716143088;}s:40:\"984c9c760499b504e709d78f794d13bb239a8855\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:122:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4614:q-q-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68\";s:6:\"expiry\";i:1716143088;}s:40:\"4a3e6877554c64d6679612bafa90676f3a64a778\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5278:2019-08-11-17-35-31&catid=58:2013-09-05-05-12-53&Itemid=75\";s:6:\"expiry\";i:1716143089;}s:40:\"6444bc8b7e7d5cda350b0eea76529ab43c52e81b\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2579:2015-03-07-05-46-57&catid=44:2011-04-23-22-51-51&Itemid=59\";s:6:\"expiry\";i:1716143092;}s:40:\"b96d3f82661b2690633a7cf0fcb9baac63cffe7e\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:122:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4791:-ii-&catid=49:2013-02-12-01-41-17&Itemid=63\";s:6:\"expiry\";i:1716143108;}s:40:\"08b36b41a66a56a780283e0a615e8759f8a1e689\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6388:2020-12-30-01-37-55&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82\";s:6:\"expiry\";i:1716143107;}}s:19:\"com_mailto.formtime\";i:1716143089;s:13:\"session.token\";s:32:\"7215607b0b0bb027626f55d36fcce162\";}'
      WHERE session_id='equulmdaanbb5kuo5pvbhjkdh2'
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 56)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 2132
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-05-19 18:25:09' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-05-19 18:25:09' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='2132'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 43
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-05-19 18:25:09' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-05-19 18:25:09' )
      ORDER BY a.ordering

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- R.P. ராஜநாயஹம் , அசோகமித்திரன், ரவி ஸ்ரீனிவாஸ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- R.P. ராஜநாயஹம் , அசோகமித்திரன், ரவி ஸ்ரீனிவாஸ் -=- R.P. ராஜநாயஹம் , அசோகமித்திரன், ரவி ஸ்ரீனிவாஸ் -