தமிழர்கள் பெருமைப்படத்தக்க 'நூலகம்'!

Sunday, 15 January 2017 20:58 administrator கணித்தமிழ்
Print

நூலகம் இணையத்தளம்எண்ணிம நூலகச் (Noolaham Digital Library)செயற்பாடுகளில் ஆரம்பத்தில் செயற்பட்டுவந்த நூலக நிறுவனமானது இன்று மேலும் பல துறைகளில் குறிப்பாக ஆவணப்படுத்தல் , ஆராய்ச்சி அடிப்படையிலான ஆவணப்படுத்தல் துறைகளில் தன் சேவைகளை விரிவு படுத்தி ஆற்றி வருகின்றது. உலகத்தமிழர்கள் அனைவரும் பெருமைப்படத்தக்கதொரு கலைக்களஞ்சியமாக, தகவற் சுரங்கமாக, ஆய்வாளர்களுக்கு உசாத்துணை வளமாக விளங்கி வருகின்றது. நூலகம் பற்றிய விரிவான தகவல்களை http://noolahamfoundation.org/web/ta என்னும் இணையத்தள முகவரியில் காணலாம். நூலகம் தளத்துக்கு நீங்கள் பல்வேறு வழிகளில் பங்களிப்பு செய்யலாம். தன்னார்வத்தொண்டர்களாக, நிதிப்பங்காளர்களாக இன்னும் பல்வேறு வழிகளில் உங்கள் பங்களிப்பினை நீங்கள் வழங்கலாம். இவை பற்றிய விரிவான தகவல்களை இத்தளத்தில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

Last Updated on Monday, 16 January 2017 18:39