கூகுல் பல்கலை ஒன்றை நடத்தி வருவது உங்களுக்கு தெரியுமா?கூகுல் கோட் யூனிவர்சிட்டி என்னும் பெயரில் கூகுல் இந்த இணைய பல்கலையை நடத்தி வருகிறது.இந்த பல்கலையில் பட்டம் வாங்க முடியாது என்றாலும் கம்ப்யூட்டர் சார்ந்த விஷயங்களை கற்று கொள்ளலாம். கம்ப்யூட்ட ர் கல்வி தொடர்பான இணைய பாடங்களை இந்த இணைய பல்கலையில் கூகுல் பட்டியலிட்டுள்ளது.புதிய புரோகிராமிங் மொழிகள், எச்.டி.எம்.எல் வடிவமைப்பு, இணையதள பாதுகாப்பு,ஆன்டிராய்டு என பல்வேறு தலைப்புகல் தொடர்பான இணைய பாடங்கள் வீடியொ விளக்கங்களோடு இடம் பெற்றுள்ளன.ஆர்வம் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான பாடத்தை கிளிக் செய்து படிக்கலாம்.கட்டணம் கிடையாது என்பதோடு உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டிய தேவையும் இல்லை.
இணையவாசிகள் தங்களுக்கு தேவையான பாடதிட்டம் உள்ளதா என்று தேடிபார்க்கும் வசதியும் உள்ளது.மாணவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டு சந்தேகத்தையும் தீர்த்து கொள்ளலாம்.பேராசிரியர்கள் மற்றும் இணைய நிபுணர்கள் தங்களது இணைய பாடங்களை இங்கே சமர்பிக்கவும் செய்யலாம்.புதிய பாட திட்டங்கள் மற்றும் பிரபலமாக உள்ள பாடங்களும் தனியே அடையாளம் காட்டபட்டுள்ளன.இணையத ள முகவரி: http://code.google.com/edu/ வீடியோ பள்ளி.யூடியூப் தயவில் வீடியோ காமிரா வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் படம் எடுத்து அதை இணையத்தில் ரீலிஸ் செய்துவிடலாம்.இந்த அமெச்சூர் கலைஞர்கள் தங்கள் திறமையை வளர்த்து கொண்டு நேர்த்தியாக படம் எடுக்க விரும்பினால் அதற்கான வீடியோ பள்ளியும் இருக்கிறது.யூடியூப் போலவே வீடியோ பகிர்வு சேவையை வழங்கி வரும் விமியோ இந்த வீடியோ பள்ளியை நடத்தி வருகிறது.விமியோ இணையதளத்தில் வீடியோ பள்ளி என்னு தலைப்பில் இதற்கான தனிப்பகுதி இடம் பெற்றுள்ளது.மிகச்சிற ந்த வீடியோ படங்களை உருவாக்க நினைப்பவர்கள் அதற்கான வழிகளை இந்த பாடங்கள் மூலம் கற்று கொள்ளலாம்.வீடியோ பாடங்கள் பல்வேறு தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள் ளன.வீடியோ படமெடுப்பதில் கில்லாடி என கருதுபவர்கள் தாங்கள் அறிந்த நுணுக்கஙக்ளை வீடியோ பாடமாக உருவாக்கி இங்கு சம்ர்பிக்கலாம்.http:
//vimeo.com/videoschool
Mujeeb Rahman (Google+) < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
< Prev | Next > |
---|