எழுத்தாளர் முருகபூபதியின் கடிதமொன்று!

Sunday, 12 January 2020 02:33 administrator வாசகர் கடிதங்கள்
Print

Letchumanan Murugapoopathy < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >
To:Navaratnam Giritharan
Jan. 7 at 11:23 p.m.

அன்புள்ள நண்பர் கிரிதரன் வணக்கம். உங்களது வீடற்றவன் கதை பிறந்த கதை படித்தேன். சுவாரசியமாக இருந்தது. உண்மைக்கும் புனைவுக்குமிடையே வீடற்றவர்கள் குறித்து எழுதும்போது அதன் வலியையும் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள். அவுஸ்திரேலியா  மெல்பனிலும் நாம் மாநகர ரயில் நிலையங்களுக்கு அருகில் வீடற்றவர்களை தினம் தினம் பார்க்கின்றோம்.

"இவர்களுக்கும் ஒரு குடும்பம் - பெற்றோர் - சகோதரர்கள் - உறவுகள் இருப்பார்கள்"   என்ற நினைப்போடு கடந்துவிடுகின்றோம். ஆனால், அவர்களுக்குள்ளும் எத்தனை கதைகள் இருக்கும்..?!   என்ற உணர்வு எப்போதம் உள்மனதில் சஞ்சரித்துக்கொண்டே இருக்கும். நீங்கள் உங்கள் உள்மன சஞ்சரிப்பை  - அதிலும் செய்தியில் இடம்பெற்ற ஒரு வீதியோரத்து வேட்பாளரையே வைத்து நல்ல சிறுகதையை  படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்
முருகபூபதி

Last Updated on Sunday, 12 January 2020 03:03