
இவ்விதமாக அவற்றில் மூழ்கியிருந்த நான் அவற்றை வாசித்ததால் என்னுள் எழுந்த எண்ணங்களை 'சிஆர் கொப்பி'களில் எழுதத்தொடங்கினேன். இலங்கைத் தமிழ்ப்பிரச்சினை பற்றிய மார்க்சிய அடிப்படையிலான எனது எண்ணங்கள், கவிதைகள், என் தனிப்பட்ட உணர்வுக்கவிதைகள் என்று நேரம் கிடைத்தபோதெல்லாம் எழுதினேன். அக்குறிப்பேடுகளில் சில என்னிடமின்றும் உள்ளன. அவற்றை அப்படியே எனது கையெழுத்துப்பிரதிகளாகவே இங்கு பதிவு செய்தால் என்ன என்றொரு எண்ணம் எழுந்தது. அதன் முதல்படியாக இந்நீண்ட கட்டுரையினை உங்களுக்கு வாசிக்கத் தருகின்றேன்.
இதனை எழுதிய காலத்தில் என் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் இக்கட்டுரையினை வாசியுங்கள். உங்கள் கருத்துகளை நேரம் கிடைக்கும்போது பகிர்ந்துகொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்து என் உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாடு என்னும் வகையில் இவை என்னைப்பொறுத்தவரையில் மிகவும் முக்கியம் மிக்கவை. என் குறிப்பேட்டிலுள்ள இக்கட்டுரையை எழுதிய நிலையிலேயே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். எழுத்துப்பிழைகள் இருக்கக்கூடும். இருந்தால் அறியத்தாருங்கள். கருத்துகளில் ஏதாவது குழப்பங்கள் இருப்பினும் அறியத்தாருங்கள். இக்கட்டுரை அன்று என் மனத்தில் எழுந்த சிந்தனைகளின், கேள்விகளின் பிரதிபலிப்பு. இக்கட்டுரை எழுதிய திகதி 29.12.1982
நெடுங்கட்டுரை: மார்க்சியமும், இலங்கைத் தமிழர் பிரச்சினையும் பற்றியதொரு சிறு ஆய்வு! - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் ஒன்று: கம்யூனிஸ்ட்ட்டுகளும், கடவுளும் மதவாதிகளும், பரிணாமமும்
அத்தியாயம் இரண்டு: மார்க்ஸிசமும் , அதன் மீதான நாத்திகள், பயங்கரவாதம் பற்றிய குற்றச்சாட்டுகளும்.
அத்தியாயம் மூன்று: மானுட வர்க்கப் பிரச்சினைகளும் , அக உணர்வுகளும் பற்றியதொரு கற்பனாவாதம்.
அத்தியாயம் நான்கு: புரட்சிகளும், புரட்சிகர எதிர்ப் புரட்சிகர சக்திகளும் (இலங்கைத் தமிழர் பிரச்சினையுட்பட)

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
< Prev | Next > |
---|