திரை விமர்சனம்: பைரவா ! ஒரு பார்வை!

Monday, 23 January 2017 22:48 - இணுவையூர் சக்திதாசன் (டென்மார்க்)- சினிமா
Print

திரை விமர்சனம்: பைரவா ! ஓர் பார்வை!கடந்த வாரம் 2017 தைப்பொங்கலோடு உலகமெங்கும் தைப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது . இளைய தளபதி விஜய் நடித்த பைரவா திரைப்படம் திரைக்கு வந்தது. உலகமெங்கும் திரைக்கு வந்த அந்தப் படம் டென்மார்க்கிலும் பல இடங்களில் திரையிடப்பட்டது.

என் மகன் விஜய் ரசிகன் என்பதால் அவன் பைரவா தியட்டரில் பார்க்க வேண்டும் என்று ஒரு மாசத்துக்கு முன்னமே என்னை நச்சரித்துக் கொண்டே இருந்தான் ஓம் ஓம் என்று சொல்லி காலத்தை கடத்தலாம் என்று நினைத்து வந்த எனக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வசமாக மாட்டிக்கொண்டு விட்டேன். எனது வீட்டில் இருந்து 40 km  தொலைவில் இருக்கின்ற அந்த தியட்டரில் “பைரபா” பார்பதற்காக நுழைந்தேன் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் மக்கள்  இருந்தார்கள். அதிகமாகப் பிள்ளைகளின் கட்டாயத்தின் பேரில் வந்தவர்கள்தாம் அதிகமாக இருந்தார்கள்.

இந்தியாவில் பல தனியார் கல்வி நிறுவனங்களின் பிற்போக்குத்தனத்தைச்  சொல்லும் கதைக் களத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் விஜய் ,கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க, ஜேகபதிபாபு,டேனியல் ,பாலாஜி ,தம்பி ராமையா சதீஸ் மற்றும் பலரது நடிப்பில் இருந்தது அந்தப்படம் ஒளிப்பதிவு பாடல்கள் சிறப்பாக இருந்தன.  கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார்

சொந்தம் பந்தம் என யாருமே இல்லாத ஓர் அனாதையான விஜய் தன் நண்பனோடுசென்னையில் அறையொன்றில்  ஒன்றாக இருக்க அறிமுகமாகிற விஜய  வங்கியொன்றில் வராத கணக்குகளை வசூலிக்கும் வேலை பார்த்து வருகிறார். வங்கி அதிகாரியான ஒய் ஜி மகேந்திரன் 'மைம்' கோபிக்கு கொடுத்த  பல லட்சம் பணம் வட்டி ஒழுங்காக கட்டாததால் ஒய் ஜி மகேந்திரன் திருப்பி கேக்க போய் தருவதாக கூறி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு காசும் கொடுக்காமல் அவமானப் படுத்தி திருப்பி அனுப்பிவிட ,அவர் வந்து விஜயின் உதவியை நாடுகிறார்.

விஜய் தனி ஒருவராகப் போய் அந்த பல அடியாட்களை கிரிக்கற் மட்டையாலேயே அடித்து பணத்தை திருப்பி பெற்று வந்தவிதம் சிறுவர்களை விறுவிறுப்படைய  வைத்தாலும் தியேட்டரில் இருந்த பெரியவர்கள் பலரையும் முகம் சுழிக்க வைத்தது எப்பவடா அந்த சண்டை முடியுமென்ற அளவுக்கு இருந்தது

ஒய் ஜி மகேந்திரனின் மகளின் திருமணத்துக்கு கீர்த்தி சுரேஷ் சென்னைக்கு வருகிறார் வரும் வழியில் ரவுடிகளால் கீத்தி சுரேசுக்கு ஒரு பிரச்சனை வர அதற்கும் ஒய்ஜி மகேந்திரனால் உதவிக்கு விஜய் அழைக்கப்பட கீர்த்தியைப் பார்த்தவுடனேயே காதல் வசப்படுகிறார் விஜய் பிறகென்ன சொல்ல வேண்டுமா காதல் டூயற் .. கனவுகளாக தொடர கீர்த்தியையே பின் தொடர்ந்து ஒரு தலைக் காதல் இரு தலையாக கீர்த்தியின் பின் தொடர்கிறார் விஜய் அங்கு பஸ் தரிப்பு நிலையத்தில் தன் காதலை சொல்லவென பூக் கொத்தோடு போக அதற்கு முன்னமே மத்திய அமைச்சரின் மகன் பூகொத்து கொடுக்க அதை வாங்கப் போகும் நேரத்தில் அந்த அமைச்சரின் மகனின் கையை ஒரு கும்பல் வெட்டி விட்டது. இதை விஜய் பார்த்து விட, அந்த கும்பலில் இருந்து தப்பிவிட கீர்த்தி சுரேஷ் ஓடுகிறார். அப்போ கீர்த்தி சுரேசிடம் நீ யார் உனகென்ன பிரச்சனை என வினாவ அப்போ கீர்த்தி தனது வாழ்க்கைக் கதையை பிளாஷ்பேக்கில் சொல்கிறார்.

பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் கிடைத்தும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத்தால் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார் கீர்த்தி. அதே கல்லூரியில் கேரளாவைச் சேர்ந்த அபர்ணா வினோத்தும் சேர்கிறார். நன்கொடையாக பல லட்சங்களை கட்டித்தான் இருவரும் சேர்க்கப்படுகிறார்கள். அங்கே அந்த கல்லுரிகளுக்கான எந்த அடிப்படை வசதிகளுமற்ற கல்லுரி என தெரிய வந்தும் எதுவுமே செய்யமுடியாமல் போக மாணவர்கள் கிளந்தேளுந்து மீடியாக்கள் மூலமாக செய்தி கசிந்து இந்திய மருத்துவ கவுன்சிலில் இருந்து சோதனைக்காக வந்து கல்லூரியின் வண்டவாளங்களை தெரிந்து கொள்கின்றனர். தொடந்து கல்லுரி மூடப்படும் நிலை வரப்போகுது என தெரிந்து அவர்களின் பலவீனம் அறிந்து அங்கு படிக்கின்ற மாணவிகளை அவர்களின் ஆசைக்கு இணங்க விட்டு தங்கள் கெளரவத்தை காப்பாற்ற முற்பட்டு அதற்கு இரையாக  அபர்ணா வினோத் பலியாகிறார். இதைக் கண்டு கொண்ட கீர்த்தி அபர்ணா வினோத்தின் பெற்றோர் துணையுடன் இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் இதற்கு உதவியாக தன்னுடைய தந்தை காவல் அதிகாரி அவர்களிடம் தனக்கு உதவி செய்யுமாறு கேக்க அவரும் அந்த வழக்கை நடாத்த உதவ முன்வர அவரும் கொல்லபடுகிறார்.  அந்த ரவுடிகள்தான் இப்போது என்னை எங்கே போனாலும்  பின் தொடந்து வருவதாகச் விஜய்யிடம் சொல்கிறார் கீர்த்தி அந்த பிளஸ் பாக்கை தொடந்து பிரச்சனையை தன் பிரச்சன்யாக எடுத்து அளவுக்கு மிஞ்சிய பில்லப் காட்டி வழமையான திரைப்படங்களாக அனைத்திலும் வென்று முடிக்கிறார். இதுதான் படம் இதுக்குள்ள ஒரு கண் நித்திரையும் கொண்டு எழும்பியிட்டன் * விடுபட்ட இடங்கள் அதுதான் “இதில நகைச்சுவை பாத்திரங்களாக வருகின்ற தம்பி ராமையா ,சதிஷ் ஆகியோருடைய நகைச்சுவை ரசிக்கும்படி இல்லை படத்தில தம்பி ராமையாவுக்கு சிரிப்பதற்கு ஒரு மருந்து மூக்குக்குள்ளே அடிப்பார்கள் அந்த மருந்தை தியேட்டருக்குள் படம் பார்க்க இருந்தவர்களுக்கும் கொடுத்திருந்தால் தான் ஒரு வேளை சிரித்திருப்பார்கள் சமூகத்தில் நடந்த பல அநியாயங்கழுக்காக குரல் கொடுப்பதாக விஜயின் வசனங்கள் அமைகின்றன பெரிய கல்வி அதிகார வர்க்கங்கள் எல்லாம் முன்னாளில் ரவுடிகள் என்பதை சொல்லாமல் சொல்கிறது படம் விஜய் ரசிகர்களை மட்டும் திருப்திப்படுத்தி இருக்கும்  ஒருவர் மட்டும் பலரை அடித்து கீரோவாக காட்டுகின்ற திரைப்படங்கள் இளையவர்கள் மட்டத்தில் ஒரு வித மாஜையை தான் தோற்றுவிக்கும் அம்மணி ,அப்பா, அம்மா கணக்கு இப்படியான படங்கள் இன்னும் நிறைய வரவேண்டும் என்பது என் கணக்கு.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Monday, 23 January 2017 23:02