'நிழல்' இணைய இதழ் வெளிவந்து விட்டது.....

Tuesday, 16 August 2011 23:35 - 'நிழல்' திருநாவுக்கரசு - சினிமா
Print

'நிழல்' சினிமா இதழ் தனது உத்தியோகபூர்வமான இணைய இதழினை வெளியிட்டுள்ளது. இணையத் தள முகவரி: http://www.nizhal.in  அனைவரையும் இணையத் தளத்திற்கு வருகை தருமாறு அழைக்கின்றோம். உங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் அறியத் தாருங்கள்.

'நிழல்' சினிமா இதழ் தனது உத்தியோகபூர்வமான இணைய இதழினை வெளியிட்டுள்ளது. இணையத் தள முகவரி: http://www.nizhal.in  அனைவரையும் இணையத் தளத்திற்கு வருகை தருமாறு அழைக்கின்றோம். உங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் அறியத் தாருங்கள். 

 'நிழல்' நவீன சினிமாவுக்கான களம்….

'நிழல்': திரைப்பட இதழ்: நடமாடும் திரைப்பட சங்கம்; வெளியீட்டு நிறுவனம்.

'நிழல்' திருநாவுக்கரசுசினிமாவுக்கு நூற்றாண்டான 1994 ஆண்டு முதல் இன்று வரை 420 கிராமங்களில் உலக புகழ் பெற்ற செவ்வியல் படங்கள்; குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை திரையிட்டு, எது நல்ல சினிமா என்பதை பார்வையாளர்களே உணரும்படி செய்து வருகிறது. தமிழகத்திலுள்ள 23 மாவட்டங்களில் குறும்படப் பயிற்சிப் பட்டறை நடத்தி, சாதாரண கிராமப்புற இளைஞனுக்கும் திரைப்பட தொழில் நுட்பத்தை கற்று கொடுத்துள்ளது. 3000 -துக்கும் மேற்பட்டோர் பட்டறை முலம் பலன் அடைந்துள்ளனர். பலர் இன்று திரைப்பட துறையிலும்/ குறும்பட துறையிலும் பணி ஆற்றி வருகின்றனர். குறும்படம் மற்றும் ஆவணபடத் துறை பற்றிய புரிதலை லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் கொண்டு சென்றுள்ளது. தமிழக இளைஞர்கள் தயாரித்த குறும்படங்களை உலக அளவில் எடுத்து சென்று பரிசுகளும், விருதுகளும் பெற நிழலே முதன் முதலில் வழி வகுத்தது. பத்து ஆண்டுகளாக பல்வேறு இழப்புகளையும் தாங்கிக்கொண்டு நிழல் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருகிறது. இதில் திரைப்பட வரலாறு, தொழில் நுட்ப கட்டுரைகள், விமர்சனம், பயிற்சி திரைக்கதைகள், பழைய நடிகர்கள் பற்றிய கட்டுரைகள், நேர்முகங்கள், கலந்துரையாடல்கள், உலக திரைப்பட விழாக்கள் பற்றிய செய்திகள் போன்றவை வெளியிடபடுகின்றன

நிழல் வெளியிட்டு நிறுவனம் மூலம் ..

௧. சொல்லப் படாத சினிமா (குறும்பட, ஆவணப்பட வரலாறு),
௨. மக்களுக்கான சினிமா
௩. இரானிய சினிமா
௪. தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்
௫. மாயவிளக்கு ( பெர்க்மன் வாழ்க்கை வரலாறு )
௬. போர்க்கப்பல் பொடம்கின் ( Battleship Potemkin ) (shot by shot விமர்சனம் )

தமிழகத்தில் பல கிராமங்களில், கிராமப்புற திரைப்பட சங்கங்களை தோற்றுவித்துள்ளது.

திரைப்பட துறையைப் பற்றிய ஆவண காப்பகம் ஒன்றை நிழல் நிறுவி உள்ளது. இதில் உலக திரைபடங்கள் / குறும்படங்கள் / ஆவணப்படங்கள் / திரைப்பட புத்தகங்கள் / இதழ்கள் / புகைப்படங்கள் / இசை தட்டுகள் / பாட்டு புத்தகங்கள் முதலியவற்றை நிழல் விரும்பி சேகரித்து வருகிறது. வாசகர்களுக்கு கிடைக்கும் மேல்கண்டவற்றை நிழலுக்கு அனுப்பி வைக்கும்படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

ப. திருநாவுக்கரசு
31/48 ராணி அண்ணா நகர், கே கே நகர், சென்னை – 600078 / arasunizhal@gmail.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 16 August 2011 23:46