முகநூற் பதிவுகள்: செம்மீனில் கடற்கரையின் அந்தகாரத்தில் வசந்தத்தின் வடிவமாய் உருவெடுத்து உலாவிய அந்தக் குரலை மறக்க முடியுமா? புகழ் பெற்ற திரைப்பட பாடகர் மன்னா டே காலமானார்

Thursday, 24 October 2013 21:25 - சுப்பிரமணியம் ரவிகுமார் - சினிமா
Print

முகநூற் பதிவுகள்: செம்மீனில் கடற்கரையின் அந்தகாரத்தில் வசந்தத்தின் வடிவமாய் உருவெடுத்து உலாவிய அந்தக் குரலை மறக்க முடியுமா? புகழ் பெற்ற திரைப்பட பாடகர் மன்னா டே காலமானார்பெங்களூர், அக். 24, 2013 - புகழ்பெற்ற திரைப்பட பாடகர் மன்னா டே பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் வியாழனன்று காலமானார். அவருக்கு 94வயது நீண்டகாலம் நோய்வாய்பட் டிருந்த அவர் 5 மாதங்களுக்கு முன்னர் சுவாசப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அதிகாலை 3.50 மணிக்கு மராடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது உயிர் பிரிந்த போது மகள் சுமிதா தேப் மற்றும் அவரது மருமகன் ஞானராஜன் தேப் ஆகியோர் அருகில் இருந்தனர். அவரது இறுதிச் சடங்கு மாலையில் நடைபெற்றது. மன்னா டேவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங் களூரில் உள்ள ரவீந்திரா கலாஷேக்த்ராவில் வைக்கப்பட்டுள்ளது. மன்னா டே கொல்கத்தாவில் 1919ம் ஆண்டு பிறந்தார். அவர் நாட்டின் உயரிய தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர்.அவர் தனது இறுதி காலத்தில் பெங்களூரில் இருந்தார்.

மும்பையில் 50க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தார்.  இந்தி மற்றும் பெங்காலி அசாமிஸ், மலையாளம், கன்னடம் குஜராத்தி, மராத்தி மொழிகளில் 3500 திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார். அவர் ஷோலே படத்தில் “ யே தோஸ்தி “என்ற புகழ்பெற்ற பாடலையும் ஆனந்த் படத்தில் “ஜிந்தகி “என்ற பாடலையும் பாடியுள்ளார்.  புகழ்பெற்ற மலையாளப் படமான ராமு காரியத்தின் 'செம்மீன்' திரைப்படத்திலும்  இவர் பாடியுள்ளார்.  அவர் 50ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படப் பாடல்களை பாடி வந்தார். அவரது குரல் தனித்துவம் மிக்கதாக திகழ்ந்தது.

அவரது குரலை வேறுஎந்த பாடகரும் பிரதிபலிக்க முடியாதவகையில் சிறப்பு மிக்கதாக காணப்பட்டது. எந்த பாடலை பாடுவதற்கு முன்பாகவும் அவர் அந்தப்பாடலை அதிக அளவில் பாடி தன்னை தயார் படுத்திக்கொள்வார்.

நன்றி: முகநூல் நண்பர்கள்

Last Updated on Thursday, 24 October 2013 21:43