இணையத்தள அறிமுகம்: பிரதிலிபி

Sunday, 26 April 2015 01:10 முகநூலில்: மாலன் நாராயணன் இணையத்தள அறிமுகம்
Print

இணையத்தள அறிமுகம்: பிரதிலிபி பிரதிலிபி என்றொரு இணையதளம் இந்திய மொழிகள் பலவற்றில் மின்நூலகளைத் தனது தளத்தில் வெளியிட்டு வருகிறது. இது எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களைத் தாங்களே மின்னூலாகப்... பதிப்பிக்க உதவும் தளம். என்னுடைய ஆங்கில நூலை நானே அமேசான் தளத்தில் பதிப்பித்த போது தமிழ்நூலகளையும் பதிப்பிக்க எண்ணினேன். ஆனால் அமேசான் தமிழுக்கு இடமளிப்பதில்லை

தமிழில் மின்னூல் பதிப்பிக்க வாய்ப்பளிக்கும் இணையதளங்கள் பலவற்றை ஆராய்ந்து பிரதிலிபியைத் தேர்ந்தெடுத்தேன். சுயமாகப் பதிப்பித்துக் கொள்ள உதவும் தளம் என்ற போதிலும் என்னுடைய முதல் நூலான 'தப்புக்கணக்கு' மற்றும் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை அவர்களே மின்னூலாக உருவாக்கித் தந்தார்கள்.

நீங்களும் கூட உங்கள் படைப்புக்களை மின்னூலாக அங்கு வெளியிடலாம். தொடர்புக்கு: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it  

படைப்புக்களை ஏன் மின்னூலாக வெளியிட வேண்டும்?
1.உலகில் எங்கு வசிப்பவராக இருந்தாலும் அவர் உங்கள் நூல்களை வாசிக்க முடியும். உங்கள் வாசகர் எண்ணிக்கையும் பரப்பும் அதிகரிக்கும்
2.விரும்பினால் நூல் வெளியான அடுத்த கணமே வாசிக்க முடியும். தபால் அல்லது கூரியர் புத்தக மூட்டையைக் கொண்டு வரும் வரைக் காத்திருக்க வேண்டாம்
3.நூலில் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவித்தால் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளக் கூடும்/
4.இணைய வெளியில் தமிழின் செறிவை மிகுதிப்படுத்த ஒரு வாய்ப்பு
5.காகிதங்களைச் சேமிக்கலாம்
6.வெந்தணலால் வேகாது, வெள்ளத்தில் போகாது

இணையத்தள முகவரி: www.pratilipi.com

நன்றி: மாலன் முகநூல் பக்கம்.

Last Updated on Sunday, 26 April 2015 01:24