தமிழ் மரபுத்திங்கள் சிறப்பு பட்டி மன்றம் (இலண்டன்)

Sunday, 24 January 2021 00:06 - சிவநேசன் சிவலீலன் - நிகழ்வுகள்
Print

ZOOM Online Event | ID : 882 3310 2574 | Password : soaslondon

Date:Sunday, 31st January 2021. Time: 1PM (London) -

உலகெங்கும் இருக்கும் அன்பு உறவுகளே! வணக்கம்  தொன்மையும் செம்மையும் கொண்ட தமிழ் மொழியைப் பேணுவது எங்கள் ஒவ்வொருவரது கடமையாகும். அந்த வகையில் இலண்டன் மாநகரின் மத்தியிலே அமைந்துள்ள SOAS பல்கலைக்கழகத்தில் 1916 ஆம் ஆண்டு தொடங்கி இயங்கி வந்த தமிழ்த்துறை நிதிப்பற்றாக்குறையினால் மூடப்பட்டுள்ளது. அதனை மீளவும் உருவாக்க  £10,000 000 பணம் தேவையாகவுள்ளது.

தமிழ்த்துறை நிறுவப்பட்டால் பயனடையப் போவது எமது பிள்ளைகளே. ஏனெனில் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும் இப்பல்கலைக்கழகத்திற்கு வந்து தமிழை ஒரு பாடமாக படிப்பதுடன் ஆராய்ச்சிப் படிப்பும் மேற்கொள்ளலாம்.

எனவே, எங்கள் தமிழைப் பேணவும் தக்க வைக்கவும் எடுக்கும் பாரிய முயற்சிக்கு உங்களால் முடிந்த தொகையைத் தந்து பங்களிப்பைச் செய்யுங்கள். ''சிறுதுளி பெருவெள்ளம்'' என்பதற்கிணங்க உங்கள் ஒவ்வொருவரது பங்களிப்பும் இப்பாரிய முயற்சியை முன்னெடுக்கப் பெரிதும் உதவுமென நம்புகின்றேன்.

நீங்கள் செலுத்தும் பணம் நேரடியாகவே SOAS பல்கலைக்கழக தமிழ்த்துறை வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்படும். அத்துடன் உங்களின் பெயர் விவரம் நிரந்தரமாகப் பங்களித்தோர் பட்டியலில் ஆவணப்படுத்தப்படும்.

இணைந்து பயணிப்போம்; வாரீர். நன்றி

இன்றே உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்
https://soas.hubbub.net/p/debate310121/

 

Sivanesan Shivaleelan < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >

Last Updated on Sunday, 24 January 2021 00:18