••Wednesday•, 27 •May• 2020 01:55•
??- ஆங்கில மூலம்: கவியோகி இரவீந்தரநாத் தாகூர்| தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா. -??
உலக இலக்கியம்
 எழுத்தாளரும் , அறிவியல் அறிஞருமான ஜெயபாரதன் அவர்கள் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிக் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். மிகுந்த வரவேற்பைப்பெற்ற அக்கவிதைகள் திண்ணை இணைய இதழில் வெளியானவை. பின்னர் நூலுருப்பெற்றவையும் கூட. அவற்றை மீள்பிரசுரமாகப் பதிவுகளில் வெளியிடுகின்றோம். சில மீள்பிரசுரங்கள் உலக இலக்கியத்தின் வளத்தை அறிவதற்கு உரியவை. இம்மொழிபெயர்ப்பும் அத்தகையது. இக்கவிதைகளுக்காகவே அவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரைப்பற்றி குறிப்பாக இக்கவிதைகளைப்பற்றி 'இரவீந்திரநாத் தாகூர்' என்னும் விக்கிபீடியாக் கட்டுரை பின்வருமாறு குறிப்பிடுகின்றது: " கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். [3] இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.[4] தாகூரின் படைப்புகள்ஆன்மீகததை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும், கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது.[5]சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார்.[6] இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. . இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரது நூல்களில் சிலவற்றை த. நா. குமாரசாமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்." - பதிவுகள் -
கீதாஞ்சலி (6): மாலையில் சேராத மலர்
சிறிய இப்பூவைப் பறித்து மாலை தொடுக்க எடுத்துக்கொள் தாமதப் படுத்தாமல்! இல்லாவிடில் இம்மலர் வளைந்துபோய் கீழே வீழ்ந்து புழுதி மண்ணில் துவளும், என்று அஞ்சும் என் மனம்! இப்போது நீ பறிக்கா விட்டால் கோர்க்கும் உன் ஆரத்தில் அம்மலர் ஓரிடம் பெறாமல் போய்விடலாம்! சிறிது சிரமப்பட்டு பொறுமையுடன் உந்தன் கையால் பறித்திடு அம்மலரை அதற்குரிய மரியாதை அளித்து!
•Last Updated on ••Wednesday•, 27 •May• 2020 02:03••
•Read more...•
••Sunday•, 10 •May• 2020 02:37•
??- ஆங்கில மூலம்: கவியோகி இரவீந்தரநாத் தாகூர்| தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா. -??
உலக இலக்கியம்
 எழுத்தாளரும் , அறிவியல் அறிஞருமான ஜெயபாரதன் அவர்கள் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிக் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். மிகுந்த வரவேற்பைப்பெற்ற அக்கவிதைகள் திண்ணை இணைய இதழில் வெளியானவை. பின்னர் நூலுருப்பெற்றவையும் கூட. அவற்றை மீள்பிரசுரமாகப் பதிவுகளில் வெளியிடுகின்றோம். சில மீள்பிரசுரங்கள் உலக இலக்கியத்தின் வளத்தை அறிவதற்கு உரியவை. இம்மொழிபெயர்ப்பும் அத்தகையது. இக்கவிதைகளுக்காகவே அவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரைப்பற்றி குறிப்பாக இக்கவிதைகளைப்பற்றி 'இரவீந்திரநாத் தாகூர்' என்னும் விக்கிபீடியாக் கட்டுரை பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
" கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். [3] இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.[4] தாகூரின் படைப்புகள்ஆன்மீகததை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும், கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது.[5]சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார்.[6] இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. . இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரது நூல்களில் சிலவற்றை த. நா. குமாரசாமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்." - பதிவுகள் -
காவியக் கவியோகி தாகூர் (1861-1941)
பாரத நாட்டில் இராமயணம் எழுதிய வால்மீகி, பாரதம் படைத்த வியாசர் ஆகியோருக்குப் பிறகு ஆயிரக் கணக்கான பாக்களை எழுதியவர், இதுவரைத் தாகூரைத் தவிர வேறு யார் இருக்கிறார் என்று தெரியவில்லை எனக்கு. எண்பது ஆண்டுகள் சீருடன் வாழ்ந்த தாகூரின் அரிய காவியப் படைப்புகள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு நீடித்தன. கவிதை, நாடகம், இசைக்கீதம், கதை, நாவல், என்னும் பல்வேறு படைப்புத் துறைகளில் ஆக்கும் கலைத் திறமை கொண்ட தாகூருக்கு ஈடிணையானவர் உலகில் மிகச் சிலரே! ஏழை படும்பாடு (Les Miserables), நாட்டர் டாம் கூனன் (The Hunchback of Notre Dame) போன்ற நாவல்கள் எழுதிய, மாபெரும் பிரெஞ்ச் இலக்கியப் படைப்பாளி விக்டர் ஹூகோ [Victor Hugo (1802-1885)] ஒருவர்தான் தாகூருக்குப் படைப்பில் நிகரானவர் என்று சொல்லப்படுகிறது.
1913 ஆம் ஆண்டில் அவரது ஆங்கிலக் கீதாஞ்சலி இலக்கியத்துக்காக நோபெல் பரிசு பெற்றவர் இரவீந்தரநாத் தாகூர். அவர் ஒரு கவிஞர், இசைப் பாடகர், கதை, நாவல் படைப்பாளர், ஓவியர், கல்வி புகட்டாளர், இந்தியாவிலே வங்காள மொழியில் மகத்தான பல காவிய நூல்கள் ஆக்கிய மாபெரும் எழுத்தாளர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஏறக் குறைய இருபது பெரு நாடகங்கள், குறு நாடகங்கள், எட்டு நாவல்கள், எட்டுக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புத் தொடர் நூல்கள் எழுதியவர். எல்லாப் பாடல்களை எழுதி அவற்றுக்கு ஏற்ற மெட்டுகளையும் இட்டவர் தாகூரே. அத்துடன் அவரது ஓவியப் படைப்புகள், பயணக் கட்டுரைகள், ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
•Last Updated on ••Wednesday•, 27 •May• 2020 01:58••
•Read more...•
••Saturday•, 29 •December• 2012 18:20•
??- ஞாலன் சுப்பிரமணியன் - ??
உலக இலக்கியம்
மார்கெஸ்: மகாகவி, மாமுனிவர், ஒப்பற்ற ரசவாதி
 புனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’ வடிவில் கதை சொல்லி வருபவரிடையே அல்லது இடையிடையே மிகையான அல்லது அறிவுக்குப் பொருந்தாத நிகழ்வுகளைச் சேர்த்து வழங்குதல், புத்திலக்கிய மரபு ஒன்றை உருவாக்கியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளில் ஜெர்மானியப் புதினங்களில் இப்போக்கு காணப்பட்டது. ஆனால் இன்று மத்திய அல்லது லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த புகழ்பூத்த நாவலாசிரியர்கள், குறிப்பாக, ஆஸ்துரியாஸ் (Miguel Angel Asturias), கார்பென்டியர் (Alejo Carpentier), மார்கெஸ் (Gabriel Garcia Marquez) ஆகியோரின் படைப்புகளில்தான் இந்த அடையாளங்கள் சிறப்பாக, பாங்குடன் காணப்படுகின்றன. மார்கெஸின் ஒரு நூறாண்டுத் தனிமை (Cien anos de soledad)யில் மாயப் புறவாய்மை (Magic அல்லது Magical realism) சிறப்பிடம் பெறுகிறது. சான்றாக, இந்தப் புதினத்தில் ஒரு பாத்திரம், தோய்த்தெடுத்த துணியை வரிசையில் உலர்த்தும்போது வானுலகம் நோக்கிப் புறப்படும்! இந்த ‘மாயப் புற வாய்மை’ எனும் சொல் அல்லது தொடர், வேறுபட்ட பண்பாடுகளைப் புலப்படுத்தும் படைப்புகளைத் தொட்டு விரிகிறது. அதாவது, ‘எதார்த்தம்’ (புறவாய்மை) எனும் கூட்டை உடைத்து வெளியே வந்து பழங்கதை (Fable), மக்கள் மரபுக்கதை (Folktale) இல்பொருட் கற்பனை (Myth) ஆகியவற்றின் உயிராற்றல்களிலிருந்து ஆக்கம் பெற்று அதே பொழுதில் நிகழ்காலச் சமூகத்துக்கு இயைந்ததொரு கூற்றை உள்ளார்ந்த கருவாக இறுத்துதல் ஆகும்.
•Last Updated on ••Saturday•, 29 •December• 2012 18:35••
•Read more...•
••Sunday•, 11 •March• 2012 20:09•
??by Shawn Syms??
உலக இலக்கியம்
 Kim Thúy’s autobiographical debut novel, Ru, describes a life-changing voyage from a childhood in strife-filled postwar Vietnam to a new beginning in 1970s Quebec. Unflinching in content and strikingly unique in form, the novel is itself an ambitious journey. Despite some moments of digression and occasional instances of thematic overreach, Ru is a poetic and highly individual exploration of what it can mean to straddle multiple cultures and identities simultaneously. The word “Ru” is Vietnamese for lullaby. In French it can signify a stream or flow. A fitting title for this book, given both Ru’s haunting and incantatory writing style and the migratory passage the Montreal-based novelist describes. Sensitively rendered in English by celebrated translator Sheila Fischman, Thúy’s novel originated with a French edition that won the Governor General’s Literary Award for fiction in 2010. Although the first-person narrator of Ru identifies herself in the novel’s opening pages as a woman named Nguyen An Tinh, the author has told the Quebec press that the book’s events accurately reflect her personal recollections of a life characterized by dramatic environmental shifts. That harrowing travelogue includes fleeing from an opulent lifestyle as a South Vietnamese child of privilege, to an overcrowded Malaysian refugee camp, to eventual settlement in and acculturation to Bill 101-era Quebec. In unadorned and dignified prose, Thúy spares no detail about the harsh passage by overfull boat, marked by abundances of scabies and excrement, and equal measures of terror and hope.
•Last Updated on ••Monday•, 12 •March• 2012 01:52••
•Read more...•
••Monday•, 16 •January• 2012 22:22•
??- ஜெயமோகன் -??
உலக இலக்கியம்
கற்பனாவாத எழுத்தின் முக்கியமான சிறப்பியல்பு என்ன? அது வெகுதூரம் தாவ முடியும் என்பதே. உணர்ச்சிகள் சார்ந்து, தத்துவ தரிசனங்கள் சார்ந்து, கவித்துவமாக அதன் தாவல்களுக்கு உயரம் அதிகம். அந்த உயரத்தை யதார்த்தவாதம் ஒருபோதும் அடைந்துவிடமுடியாது. ஆகவேதான் முற்றிலும் யதார்த்தத்தில் வேரூன்றிய ஆக்கங்களை விட ஒரு நுனியில் கற்பனாவாதத்தையும் தொட்டுக்கொள்ளும் ஆக்கங்கள் பெரிதும் விரும்ப்பபடுகின்றன – சிறந்த உதாரணம் தஸ்தயேவ்ஸ்கி. அவரது கற்பனாவாதம் மானுட உணர்வுகளையும் தரிசனங்களையும் உச்சப்படுத்தி முன்வைக்கும் விதத்தில் உள்ளது.
•Last Updated on ••Monday•, 16 •January• 2012 22:29••
•Read more...•
••Monday•, 16 •January• 2012 20:19•
??- ஜெயமோகன் -??
உலக இலக்கியம்
‘பாதேர் பாஞ்சாலி’யின் [ வங்கத்தில் பொதேர் பஞ்சாலி .பாதையின் குரல்கள்] ஆசிரியர்’ யார் என்று கேட்டால் கணிசமானோர் `சத்யஜித்ரே’ என்று கூறக்கூடும். அப்புகழ்பெற்ற திரைப்படத்தின் பாதிப்பு அத்தகையது. அந்த விரிவான பாதிப்பிற்கு படம் மட்டும் காரணமில்லை என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அது ஓர் அழகிய திரைப்படம்-அவ்வளவுதான், தீவிரமானதோ மகத்தானதோ அல்ல. அதன் காட்சிப்படிமங்களில் நம் ஆழ்மனத்துக்குள் செல்லும் மறைபிரதி இல்லை. எது காட்டப்படுகிறதொ அதுவே அப்படம். ஆனால் அப்படம் பலவகையிலும் முன்னோடியானது. மேற்கத்திய புது யதார்த்தபாணி திரைப்படங்களை அடியொற்றி இந்திய திரைப்படத்துறை தன் படிமமொழியை கண்டடைந்தது. அத்திரைப்படம் வழியாகத்தான். மிதமிஞ்சிய உற்சாகத்துடன் நாற்பது வருடங்களாக பாதேர் பாஞ்சாலி திரைப்படம் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு அடிப்படையாக அமைந்த விபூதி பூஷன் பந்த்யோபாத்யாயவின் அபூர்வமான நாவல் பேசப்பட்டது மிகவும் குறைவு. என் கணிப்பில் கலைப்படைப்பு என்று பார்த்தால் விபூதி பூஷனின் நிழல்தான் சத்யஜித்ரே.
•Last Updated on ••Monday•, 16 •January• 2012 20:49••
•Read more...•
••Thursday•, 05 •January• 2012 22:59•
??- Mark Medley -??
உலக இலக்கியம்
Nov 18, 2011 - Umberto Eco has never heard of Q.R. Markham. The “author” of Assassin of Secrets, Markham’s been much-discussed in literary circles since it was discovered his thriller was almost entirely stitched together, like a quilt, from the works of such authors as Robert Ludlum, Charles McCarry and even the James Bond novels of John Gardner.
In the bar of his Toronto hotel on Wednesday afternoon, I explain the Markham fiasco to Eco, who has been too busy touring his new novel to keep up with literary gossip. The timing of our conversation is interesting considering the man at the centre of The Prague Cemetery steals work in a similar fashion. The author leans forward, listening intensely, but shakes his head in disagreement when I compare Markham to The Prague Cemetery’s anti-hero, a talented forger named Simone Simonini. To Eco, the plagiarist is a thief while the forger is an unappreciated artist.
•Last Updated on ••Thursday•, 05 •January• 2012 23:17••
•Read more...•
••Thursday•, 05 •January• 2012 20:07•
??- sam solecki -??
உலக இலக்கியம்
Josef Skvorecky’s life was divided almost evenly between Czechoslovakia and Canada. He lived in the former from 1924 to 1968, and for the next 44 years here, until his death Tuesday in Toronto at age 87. Though he and his wife Zdena visited Prague often after 1989, and though his books are Czech bestsellers, and though there is a university named after him, he told me that there was never any question in their minds that Canada was now home. He once joked that his destiny was to be a Czech-Canadian writer, a term that implied either that he was in two places at once (an Aristotelian impossibility) or, more likely, that he was nowhere. When Skvorecky was awarded the Neustadt International Prize for Literature in 1980, two letters of congratulation were read at the awards ceremony. One was from Graham Greene and praised two of his novellas as “in the same rank as James Joyce’s The Dead and the very best of Henry James’s shorter novels.” The other was from Czeslaw Milosz, who was awarded the Nobel Prize that same year. The Polish writer, living in exile in the United States, reminded the audience of Skvorecky’s Czech roots and addressed him as a representative of “our part of Europe.” Read side by side, the two letters reminded the audience that Skvorecky was, in his own words, a writer “between two worlds.”
•Last Updated on ••Thursday•, 05 •January• 2012 23:11••
•Read more...•
••Saturday•, 29 •October• 2011 21:43•
??- டி.செ. தமிழன் -??
உலக இலக்கியம்
ஹருகி முரகாமியின் புதிய சிறுகதையான 'பூனைகளின் நகரம்' (Town of Cats), ஒரு தந்தையிற்கும் மகனிற்கும் இடையினான உறவையும் விலகலையும், விடை காணமுடியா சில கேள்விகளையும் முன்வைக்கிறது. மிக ஏழ்மையில் வாழ்ந்த தகப்பன் தன் மகனையும் ஏழ்மை தெரிந்து வாழவேண்டும் போல வளர்க்கின்றார். தகப்பன் ஒரு ஜப்பான் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, அவர்களின் வாடிக்கையாளரின் வீடுகளுக்குச் சென்று சேவைக்கான பணத்தை சேகரிக்கும் தொழிலைச் செய்கின்றார். எல்லோரும் விடுமுறையில் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வீடுகளைத் தட்டி பணத்தை அறவிடுகின்றார். ஞாயிற்றுக்கிழமைகளில் பாடசாலை இல்லாததாலும், சிறுவன் பிறந்த சில மாதங்களிலே தாய் இறந்துவிட்டதால் வீட்டில் ஒருவரும் இல்லையென்றபடியாலும், மகனையும் ஞாயிற்றுக்கிழமைகளில் தன் வேலைக்குத் தகப்பன் கூட்டிச்செல்கின்றார்.
•Last Updated on ••Saturday•, 29 •October• 2011 21:59••
•Read more...•
••Friday•, 09 •September• 2011 18:44•
??- பிரம்மராஜன் -??
உலக இலக்கியம்
வில்லியம் ஃபாக்னர் நவீன அமெரிக்க நாவலாசிரியர்களில் மிக உயர்ந்த இடத்தைப் பெறுபவர். இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1950ஆம் ஆண்டு ஃபாக்னருக்கு வழங்கப்பட்டது. பத்து நாவல்களையும், ஒரு சிறுகதைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார். முதல் உலகப் போரின் போது Royal Air Forceஇல் விமான ஓட்டுனராகப் பணியாற்றினார். எழுத்தின் மூலம் பணம் வருவது தட்டுப்பட்ட போது, ஹாலிவுட்டில் எம். ஜி. எம். நிறுவனத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதினார். சினிமாவுகாக அவர் செய்த வேலைகள் அவரது இலக்கியத் தரத்தைப் பாதிக்கவில்லை. விமானம் ஓட்டுதல், வீடுகளுக்கு வாணம் பூசுதல், படகு ஓட்டுதல் போன்ற தொழில்களைச் செய்து, தனக்கு வேண்டிய சிறிது விஸ்கி, புகையிலை, எழுதுதாள்கள், உணவு ஆகியவற்றைப் பெறுவதற்கான பணத்தைச் சம்பாதித்துக் கொண்டார்.
•Last Updated on ••Friday•, 09 •September• 2011 19:09••
•Read more...•
••Wednesday•, 31 •August• 2011 20:36•
??- பிரம்மராஜன் -??
உலக இலக்கியம்
 “கோடோவுக்காகக் காத்திருத்தல்(Waiting for Godot)என்ற பிரசித்தமான அபத்த நாடகத்துடனே இணைத்துப் பார்க்கப்படுகிறது சாமுவெல் பெக்கெட்டின் பெயர். இந்த நாடகத்தில் கோடோ என்ற நபருக்காக இருவர் காத்திருக்கின்றனர். நாடகம் முடியும் போதும் கோடோ வருவதில்லை. 1953ஆம் ஆண்டு இந்த நாடகம் பாரிஸில் மேடை ஏற்றப்படுவதற்கு முன்பு சாமுவேல் பெக்கெட்டைத் தெரியாதவர்கள் அவரை தெரிந்து கொள்ள வைத்தது. இருப்பினும் நவீனத்துவ இலக்கியத்தில், பெக்கெட் பிரதானமாய் நாவலாசிரியராக மதிப்பிடப்படுகிறார். ஜேம்ஸ் ஜாய்சுக்குப் பிறகு நவீனத்துவ இலக்கியத்தில் உச்ச ஸ்தானத்தைப் பெறுபவர் பெக்கெட். நாவல், நாடகம், கவிதை, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பெக்கெட்டின் பங்களிப்பு சாதாரணப்படுத்த முடியாதது. ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் சரிசமமான சரளத்துடன் படைப்புகளை எழுதியவர். நடிகர்களே இல்லாத நாடகங்கள், வார்த்தைகளே இல்லாத நாடக அங்கங்கள், கதைத் திட்டமே (Plot)இல்லாத நாவல்கள் ஆகியவற்றின் முன்னோடி பெக்கெட்.
•Last Updated on ••Wednesday•, 31 •August• 2011 21:19••
•Read more...•
••Sunday•, 28 •August• 2011 21:37•
??- பிரம்மராஜன் -??
உலக இலக்கியம்
பிரைமொ லெவியின் இலக்கிய முக்கியத்துவம் மற்றும் அவருடைய எழுத்துக்களுக்கான அங்கீகாரம் ஆகியவை, 1987 ஆம் ஆண்டு அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாகவே உணரப்பட்டிருந்தது. Umberto Eco மற்றும் Italo Calvino போன்ற நவீன இத்தாலிய எழுத்தாளர்கள் பரவலாக தெரியவந்து விட்ட அளவுக்கு பிரைமோ லெவியின் எழுத்துக்கள் தமிழில் தெரியவரவில்லை. வாஸ்தவத்தில் Umberto Ecoவும் மறைந்த Italo Calvinoவும் லெவியை நவீன இத்தாலிய இலக்கியத்தின் பிரதான உந்துசக்தியாகக் கருதினர். லெவியின் எழுத்துக்கள் பன்முகம் வாய்ந்தவை. சுயசரிதைக் குறிப்புகள், நாவல்கள், சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகிய துறைகளில் அவர் தடம் பதித்திருக்கிறார். ஒரு இரசாயன விஞ்ஞானியாக படித்துப் பட்டம் பெற்று பணி புரிந்த காரணத்தினால், அவரின் மொழிப்பயன்பாடு சுயப்பிரக்ஞை மிக்கதாயும் கச்சிதத்தன்மை கொண்டதாகவுமிருக்கிறது. அதிகபட்சமான, அவசியத்திற்கு மேற்பட்ட அலங்காரமான வரிகளை அவர் எழுத்துக்களில் காண்பதற்கு முடியாது. முழுநேர எழுத்துப்பணிக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டது அவருடைய அறுபதாம் வயதில் என்கிற தகவல் இன்னும் வியப்பளிக்கிறது. நவீன ஐரோப்பிய-யூத எழுத்தாளர்கள் வரிசையில் லெவி தனித்துத் தெரிகிறார். எனினும் நாஜிகள் ஏற்படுத்திய சாவு முகாம்களில் இருந்து தப்பித்து வெளியே வந்து பின்னர் தற்கொலை செய்து கொண்ட வகையில் போலந்தின் நவீன யூத எழுத்தாளரான Tadeusz Borowski யுடன் ஒப்புமைப்படுகிறார். ஆனால் Borowski யின் மொத்தப் படைப்பே his Way For the Gas, Ladies and Gentlemen என்ற ஒற்றை நூலில் அடங்கிவிடுகிறது. மேலும் Borowski தனது 33 வது வயதிலேயே தற்கொலை செய்து கொண்டது அவரது எழுத்து சாதனைகளை திடீரென நிறுத்திவிட்டது.
•Last Updated on ••Wednesday•, 31 •August• 2011 19:15••
•Read more...•
••Saturday•, 13 •August• 2011 18:33•
??இடாலோ கால்வினோ;தமிழில் பிரம்மராஜன்??
உலக இலக்கியம்
சில தெரிவிக்கப்பட்ட வரையறைகளிலிருந்து நாம் தொடங்கலாம்.
(1) கிளாசிக்குகள் என்னும் புத்தகங்கள் பற்றி நாம் பொதுவாக மக்கள் இப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறோம்: “நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். . .” என்று சொல்வதற்குப் பதிலாக “நான் மறுபடியும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். . . ” இது குறைந்த பட்சம் “மெத்தப் படித்தவர்கள்” என்று தங்களைக் கருதிக் கொள்பவர்களிடத்தில் நடக்கிறது. முதன் முதலாக இந்த உலகினை எதிர்கொள்ளும் நிலையிலிருக்கும் இளவயதுக்காரர்களுக்கு இது பொருந்தாது. மேலும் கிளாசிக்குகள் அவர்களின் அந்த உலகின் ஒரு பாகமாக இருக்கும். வாசித்தல் என்ற வினைச் சொல்லின் முன்னால் இடம் பெறும் அழுத்தத்திற்காக முன்னிடை வேண்டுமானால் ஒரு பிரபலமான புத்தகத்தினை படிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்வதற்கு அவமானமாக உணர்பவர்களின் பங்கில் இருக்கும் ஒரு சிறிதளவேயான பாசாங்காக இருக்கக் கூடும். அவர்களுக்கு மறுஉறுதிப்பாடளிக்க, நாம் அவதானிக்க வேண்டியது இவ்வளவுதான்: ஒரு மனிதனின் அடிப்படைப் படிப்பென்பது எந்த அளவு விரிவானதாக இருப்பினும் அவனால் படிக்கப்பட்டிராத அடிப்படைப் புத்தகங்கள் ஏராளமான எண்ணிக்கையில் இன்னும் பாக்கி இருக்கும்.
•Last Updated on ••Wednesday•, 31 •August• 2011 19:17••
•Read more...•
••Saturday•, 12 •March• 2011 15:38•
?? - நாகரத்தினம் கிருஷ்ணா -??
உலக இலக்கியம்
இளவரசி டயானாவின் இறப்புக்கு வயது பன்னிரண்டு. அவரது மரணம் எதிர்பாராததது. நடந்தது விபத்தெனவும், திட்டமிட்ட சதியெனவும் எதிரெதிரான கருத்துக்கள் நிலவுகின்றன. இறந்த பெண்மணி உலகமெங்கும் அறியப்பட்டவர் என்பதால் ஒருவித Myth உருவாகியுள்ளது. எதிர்பாராத எல்லா மரணங்களும் மாயைகளை கட்டமைப்பதில் வல்லவை. இறந்த உயிர்சார்ந்து மாயையின் ஆகிருதி தீர்மானிக்கப்படுகிறது. மாயையின் மைய்யப்பொருள் பெண்ணென்கிறபோது பூடகத் தகவல்களுக்குத் தடங்கலின்றி ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இளம்பெண்ணெனில் அவர் கூடுதலாகக் கவனம் பெறுவார். கற்பனைகளுக்கு கலைச்செழுமை கிடைத்துவிடுகிறது. "அற்ப ஆயுளில் போன கழுதை ஆயுசுமுடியறவரைக்கும் சுத்துவா" என்ற தமிழ் சொல்வடையை நம்பும் ஐரோப்பியர்களும் இருக்கவே செய்கிறார்கள். இருள்கவிந்த சேன் நதிகரையோரம் மென்மையும் மேட்டிமையும் கொண்ட டயானாவின் காலடிஓசை நுண்ணுணர்வு கொண்டோர்க்கு வாய்ப்பதாகக் வதந்திகள். அண்மையில் லேடி 'டி'யென்று விசுவாசிகளால் அழைக்கப்பட்ட டயானாவைக் கருப்பொருளாகக் கொண்டு இரண்டு நாவல்கள் வெளிவந்துள்ளன.
•Last Updated on ••Saturday•, 12 •March• 2011 15:46••
•Read more...•
|