••Sunday•, 23 •August• 2020 10:48•
??- குரு அரவிந்தன் -??
குரு அரவிந்தன்
ஊர்விட்டு ஊர் வந்தகதையை கதாபாத்திரம் சொல்லும்போது, இதே போலத்தான் ஈழத்தமிழர்களும் இராணுவ ஆக்கரமிப்பில் இருந்து தப்பிப் பிழைபதற்காக, சொந்த மண்ணைவிட்டு அல்லற்பட்டு வன்னி மண்ணுக்குப் புலம் பெயர்ந்து சென்ற ஞாபகம் நெஞ்சில் முட்டிக்கனக்கிறது.
ஊர் அழிஞ்சுபோச்சு, வீடு வாசல் இல்லை, மாடு கன்டு இல்ல, குடி தண்ணிக் கெணத்தில பச்சநாவியக் கலந்துட்டுப் போயிட்டாங்க பாவிக. ஒரு ஈகாக்கா குருவி இல்ல, ஊரு காலியாயிருச்சு! என்று ஆசிரியர் வேதனையோடு குறிப்பிடுகின்றார்.
தமிழீழ மண்ணில் நடந்தது, இன்று நடப்பது இதைவிடக் கேவலமானது. ஊரையே விமானத் திலிருந்து குண்டு போட்டுச் சீரழித்தது மட்டுமல்ல, தமிழ்ப்பெண்களைக் கற்பழித்து, மானபங்கப்படுத்தி, பச்சைப்பாலகர் களையும், இளைஞர்களையும் குத்தியும் வெட்டியும் கொன்று குவித்த அரச பயங்கரவாதத்தின் கண்ணீர்க்கதை சொல்லிமாளாது. எத்தனை தலைமுறைபோனாலும் மறக்கமுடியாதது!
சரித்திரம் மறந்தாலும், ஒவ்வொரு தமிழனின் நெஞ்சமும் மறக்காது!
‘அய்யா நாங்க பொன்ன எழப்போம், பொருளை எழப்போம், மண்ண எழப் போம், மானத்தை எழக்கமாட்டோம், போயிட்டுவாங்க’ என்று பெண்ணாசையால் வீடுதேடிவந்த சமீந்தாரைப் பார்த்துக் கதிகலங்கிச் சொல்கிறார் ஒரு பெண்ணைப் பெற்ற தந்தை.‘பெண்ணை தூக்கிக் கொடுக்கிறியா? தூக்கிட்டுப் போகவா?’ பெண்ணாசை அவன் கண்ணை மறைக்க தந்தையை மிரட்டுகின்றான்.
•Last Updated on ••Sunday•, 23 •August• 2020 12:44••
•Read more...•
••Monday•, 03 •August• 2020 21:12•
??குரு அரவிந்தன் -??
குரு அரவிந்தன்
ஒருவர் இறந்தால் இறுதிச் சடங்குகள் செய்யும் முறையில் தமிழீழக் கலாச்சாரம் சற்று மாறுபட்டிருக்கிறது. கோயிலுக்கு சரீரத்தொண்டு செய்யும் குறிப்பிட்ட சிலபிரிவினரும், கிழக்குமாகாணத்தில் சில பகுதிகளில் சில பிரிவினரும் இறந்தவரை இப்படியான அமர்ந்த திருக்கோலத்தில் அலங்காரம் செய்து, தேர்கட்டி மயானத்திற்கு எடுத்துச் செல்வார்கள். பொதுவாக மற்றவர்கள் பாடைகட்டிப் பிணத்தைச் சுமந்து செல்வதுதான் வழக்கம்.
பாடையைப் பற்றிப் பேசும்போது, ‘பாடைகட்டி ஊர்சுமந்து போகும் போதும் பைந்தமிழின் ஓசையாங்கொலிக்கவேண்டும்,’ ‘ஓடையிலே என் சாம்பல் கரையும்போதும் ஒண்டமிழின் ஓசையங்கு கேட்கவேண்டும்’ போன்ற தமிழீழக் கவிஞர்களின் உணர்ச்சிக்கவிதை வரிகள்தான் நினைவிற்குவருகின்றன. பொதுவாகப் பெண்கள் மயானத்திற்குச் செல்வதில்லை. பிணத்தைப் பெட்டியில் படுக்கவைத்து,பெட்டியை மூடித்தான் மயானத்திற்குக் கொண்டு செல்வார்கள். இந்துக்களில் பெரும்பாலானோர் பிணத்தைத் தகனம் செய்வதுதான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இறுதியாக வாய்க்கரிசி போடுவது முக்கியமாகக் கருதப்படுகிறது. தகப்பனுக்கு மூத்தமகனும், தாய்க்கு இளைய மகனும் கொள்ளி வைப்பதுதான் இன்றும் சம்பிரதாயமாக இருக்கிறது. எட்டாம் நாள் செய்யும் சடங்கை 'எட்டுச் செலவு' என்பார்கள். சிலபகுதிகளில் காடாத்துவது என்றும் சொல்வார்கள். சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு ஏற்ப நாட்கள் மாறுபடலாம். இறந்தவரைப்போல ஒரு உருவம் செய்து, அவருடைய புகைப்படத்தையும் வைத்து அவருக்குப் பிடித்தமான உணவு வகைகளைப் படைத்து, அவரது ஆத்மா சாந்தியடைய குடும்பத்தவர்கள் பிரார்த்திப்பார்கள். முப்பத்தி யோராம் நாள் சடங்கை அந்தியேட்டி என்பார்கள்.
•Last Updated on ••Monday•, 03 •August• 2020 21:14••
•Read more...•
••Monday•, 27 •July• 2020 00:56•
??- குரு அரவிந்தன் -??
குரு அரவிந்தன்
அது வேறு உலகம். பூமிப்பரப்பில் இன்னொரு கிரகம். மேகங்களால் நிராகரிக் கப்பட்டு இயற்கையால் சபிக்கப்பட்டு கடக்கும்போது தேவதைகள் கண்மூடிக் கொள்ளும் வறண்ட நிலம்.
இப்படித்தான் இந்த கள்ளிக்காடு இதிகாசம் தொடங்குகிறது!
வேறு உலகம் என்றதும் தமிழீழம் தான் மனக்கண் முன்னால் வந்து நிற்கின்றது. தமிழர்கள் அதிகமாக வாழும் இலங்கையின் வட, கிழக்குப்பகுதிகளில் ஒன்றான யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வன்னி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை போன்ற இடங்களைச் சுற்றிவர இருக்கும் பகுதிகளில் ஏதோ ஒன்றைப் பற்றித்தான் இந்தக்கதை சொல்லப்படுகிறதோ என்ற எண்ணம் சட்டென்று எழுகிறது. வறண்டநிலம் என்று ஆசிரியரால் சொல்லப்பட்டாலும் இவைஎல்லாம் என்றுமே மறக்கமுடியாத தமிழர்களின் பாரம்பரிய சொர்க்கபூமியல்லவா?
கருவேலமரம்,பொத்தக்கள்ளி, கிலுவை, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, இலந்தை, நெருஞ்சி, சில்லி, பிரண்டை, இண்டஞ்செடி, சூரன்கொடி, முதலான வானத்துக்குக்கோரிக்கைவைக்காத தாவரங்களும்
நரி, ஓணான், அரணை, ஓந்தி, பூரான், பாம்பு முதலான விலங்கினங்களும் - கழுகு, பருந்து, காடை, கௌதாரி, சிட்டு, உள்ளான், வல்லூறு முதலிய பறவை இனங்களும் மற்றும் மனிதர்களும் வாழும் மண்மண்டலம்.
•Last Updated on ••Monday•, 03 •August• 2020 21:13••
•Read more...•
••Saturday•, 18 •July• 2020 12:31•
??- குரு அரவிந்தன் -??
குரு அரவிந்தன்
எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் புதன்கிழமை 15-7-2020 மாலை கொழும்பில் காலமாகியதாகத் தெரிவித்திருந்தார்கள். இவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமதி பத்மா சோமகாந்தன், மிகவும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். மூத்த எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளருமான இவர் தனது எழுத்து ஆளுமையால் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல கட்டுரைகளை ஊடகங்களில் எழுதியது மட்டுமல்ல, நூலாகவும் வெளியிட்டிருந்தார். ஈழத்து சோமு என்று இலக்கிய உலகில் அழைக்கப்பட்ட திரு. நா. சோமகாந்தன், திருமதி பத்மா சோமகாந்தன் ஆகிய இருவரும் 2004 ஆம் ஆண்டு உதயன் கலைவிழாவில் பங்குபற்ற கனடா வந்திருந்த போது அவர்களைச் சந்தித்து உரையாடியிருந்தேன். அவர்களுடன் இரவு விருந்துபசாரத்திலும் அதிபர் பொ. கனகசபாபதியுடன் நானும் மனைவியும கலந்து கொண்டிருந்தோம். அன்று தொட்டு அவர்களுடனான எங்கள் இலக்கிய நட்புத் தொடர்ந்தது.
2006 ஆம் ஆண்டு அவரது கணவர் சோமகாந்தனின் மறைவு அவருக்குப் பெரும் இழப்பாக இருந்தது. அதன்பின் ஒருமுறை கனடாவில் உள்ள பிள்ளைகளைச் சந்திக்க அவர் கனடா வந்திருந்த போது, எனது மனைவி அவரை வீட்டிற்கு அழைத்து விருந்துபசாரம் செய்திருந்தார். 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் எங்களைப் போலவே இவர்களும் கொழும்பில் இருந்தனர். நாரஹேன்பிட்டி தொடர் மாடிக் குடியிருப்பில் இருந்த அவரது குடும்பத்தினரும் பாதிக்ப்பட்டதைப் பற்றி நிறையவே சொன்னார். அதனாலோ என்னவோ புலம் பெயர்ந்த தமிழர்களின் மொழி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டினார். என்னிடம் இருந்த எனது சிறுவர் பாடல்கள் அடங்கிய ஒளித்தட்டையும், எனது ‘தமிழ் ஆரம்’ சிறுவர் பாடநூல்களையும் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தேன். தனது பேரப்பிள்ளைகளுக்கு அவற்றைச் சொல்லிக் கொடுத்ததாகவும், புலம் பெயர்ந்த மண்ணில் தமிழ் வளர்ப்பதில் எமது தன்னார்வத்தொண்டைப் பாராட்டியும் எழுதியிருந்தார்.
சென்ற வருடம் இலங்கைக்குச் சென்றபோது, ஞானம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் எனது நூல்களான ‘சொல்லடி உன் மனம் கல்லோடீ?’ மற்றும் ‘என்ன சொல்லப்போகிறாய்?’ ஆகிய இரண்டு நாவல்களைக் கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியிட்டிருந்தேன். அந்த விழாவில் கலந்து கொண்ட திருமதி பத்மா சோமகாந்தன் தானே முன்வந்து தமிழ் வாழ்த்து இசைத்து வாழ்த்துரையும் ஆற்றியிருந்தார்.
•Last Updated on ••Saturday•, 18 •July• 2020 12:35••
•Read more...•
••Monday•, 15 •June• 2020 02:24•
??- குரு அரவிந்தன் -??
குரு அரவிந்தன்
பழகுவதற்கு மிகவும் இனிமையான நண்பர் ஆனந்தின் பிரிவு கனடா தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். புலம்பெயர்ந்த ஆரம்ப காலங்களில் மிகவும் வீரியத்துடன் ரொறன்ரோவில் இலக்கிய முன்னெடுப்புகளில் முன்னின்றவர். அதன்பின் மொன்றியலுக்குச் சென்று அங்கும் இலக்கிய சேவைகளை முன்னின்று தொடர்ந்து செய்தவர். 1990 களில் கனடாவில் இருந்து வெளிவந்த ரோஜா என்னும் தமிழ் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து பலருடைய ஆக்கங்களை வெளியிட்டவர். வசதிகள் குறைந்த அந்தக் காலத்தில் இலக்கிய ஈடுபாடுகாரணமாக மிகச் சிறப்பாக அந்த இதழ்களை வடிவமைத்திருந்தார். எனது சிறுகதைகளும் சில அந்த இதழ்களில் வெளிவந்து பல வாசகர்களையும் சென்றடைந்தன. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திலும் ஆரம்பகாலத்தில் இவர் அங்கத்தவராக இருந்தார்.
எனது முதல் நாவலான ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ என்ற போராட்ட சூழலில் எழுதப்பட்ட முதல் நாவலுக்கு, மிக அழகான அட்டைப்படம் வடிவமைத்துக் கொடுத்தது இவர்தான். முதல் பதிப்பு கனடாவிலும், இரண்டாவது பதிப்பு சென்னை, மணிமேகலைப்பிரசுர வெளியீடாகவும் வெளி வந்தது. மொன்றியலில் இருந்து வெளிவந்த இருசு பத்திரிகையின் ஆசிரியராக இவர் இருந்தபோது, இருசு பத்திரிகைக்குத் தொடர்கதை ஒன்று எழுதித்தரும்படி கேட்டிருந்ததால், ‘என்ன சொல்லப் போகிறாய்?’ என்ற தொடரை எழுதியிருந்தேன். பின்பு மணிமேகலைப் பிரசுரத்தால் அந்தத் தொடர் நூலாக வெளியிடப்பட்டிருந்தது. எனது சிறுகதைகள் சிலவற்றைத் தெரிவு செய்து, தானே குரல் கொடுத்து இசையும் கதையுமாக அலையோசை வானொலியில் ஒலிபரப்பியிருந்தார். ‘இங்கேயும் ஒரு நிலா’ என்ற தலைப்பில் அந்தக் கதைகள் ஒலிப்புத்தகமாக வெளிவந்தன. ஆரம்ப காலங்களில் ரோஜா இதழ், அலையோசை வானொலி, இருசு பத்திரிகை போன்றவற்றின் மூலம் மிகப்பெரிய அளவில் கனடிய தமிழ் வாசகர்களை எனக்கு உருவாக்கித்தந்த பெருமை நண்பர் ஆனந்திற்கும் உண்டு.
•Last Updated on ••Saturday•, 18 •July• 2020 12:34••
•Read more...•
••Monday•, 24 •February• 2020 10:40•
??- குரு அரவிந்தன் -??
குரு அரவிந்தன்
தமிழ் இலக்கியத்தில் ஒரு சந்தேகம் உங்களிடம் கேட்டுப் பார்க்கலாமா?, ‘ஆறாம் நிலத்திணை’ என்றால் என்ன, சங்க இலக்கியத்தில் தேடிப்பார்த்தேன், அப்படி ஒரு பதம் இருப்பதாகத் தெரியவில்லை’ என்று நண்பர் ஒருவர் கேட்டார். ஆறாம்திணை என்பதற்கு ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்ததை வெவ்வேறு வகையான விளக்கத்துடன் தருவார்கள், அது அவர்களது சொந்தக் கருத்தாகும். ஆனாலும் ‘ஆறாம் நிலத்திணை’ என்றால் இப்படியும் இருக்கலாம் என்று எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன் என்று எனது கருத்துக்களையும் அவருடன் நான் பகிர்ந்து கொண்டேன். எனவேதான் கருத்துப் பரிமாறல் மூலம் இந்தக் கட்டுரையை மேலும் மெருக்கூட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன், ஆவணப் படுத்துவதில் தமிழர்தகவல் ஆண்டு மலர்கள்; முன்னிற்பதால் எனது கருத்தை இந்த மலரில் பதிவு செய்கின்றேன்.
தமிழர்களின் வரலாற்றில் ‘தமிழ் இலக்கியம்’ எப்பொழுதும் முக்கியமான இடத்தை வகித்திருக்கின்றது. தமிழ் மொழியின் காலத்தையும் தமிழர்களின் பண்பாடு நாகரிகம் போன்றவற்றையும் கலை, இலக்கிய வடிவங்களையும் அறிந்து கொள்ள பழம்பெரும் இலக்கியங்கள்தான் எங்களுக்கு உதவியாக இருந்தன. புலவர்களும், அரசர்களும், சான்றோர்களும் தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்தியதால் தான் இன்று எமது மொழியின் தொன்மையை, எமது இனத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்ல முடிகின்றது. அக்காலத்தில் எழுதப்பட்ட ஏடுகளும், கல்வெட்டுக்களும், புடைப்புச் சிற்பங்களும், ஓவியங்களும் எம்மை அடையாளப்படுத்த மிகவும் உதவியாக இருந்தன.
அவற்றைக் கவனமாகப் பாதுகாத்தவர்களும், தமிழ் பிரமி எழுத்துக்களை வாசித்து நவீன முறையில் எல்லோரையும் சென்றடையக் கூடிய வகையில் பதிப்பித்தவர்களும் எம்மினத்தின் பாராட்டுகுரியவர்கள். தற்போது மதுரைக்கு அருகே உள்ள கீழடி அகழாய்வுகள் எம்மினத்தின் தொன்மையைத் தெளிவாக எடுத்துக் காட்டுவனவாக இருக்கின்றன. இவற்றை எல்லாம் தேடி எடுத்து வெளியே கொண்டு வந்து, தமிழ் மெழியைச் செம்மொழியாக்கி எம்மினத்திற்கும் முகவரி தந்தவர்கள் இவர்களைப் போன்றவர்களே என்றால் மிகையாகாது.
•Last Updated on ••Monday•, 24 •February• 2020 10:43••
•Read more...•
••Sunday•, 28 •July• 2019 22:48•
??- குரு அரவிந்தன் -??
குரு அரவிந்தன்
எழுத்தாளர் உதயணன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். அவர் தனது கடைசிக் காலத்தைக் கனடாவில் செலவிட்டபோது தன்னால் இயன்ற அளவு கனடிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டார் என்றே குறிப்பிட வேண்டும். கனடா எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக நான் இருந்த போதுதான் உதயணன் என்ற புனைபெயரைக் கொண்ட எழுத்தாளர் சிவலிங்கம் அவர்கள் எனக்கு அறிமுகமானார். பின்லாந்தில் இருந்து கனடாவுக்கு ஒருமுறை அவர் வருகை தந்தபோது கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற் கூடாகத் தனது நூல் ஒன்றை அறிமுகம் செய்திருந்தார். தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் அதிக கவனம் செலுத்துவதால், அவரது விருப்பத்திற்கு ஏற்ப அவரது நூலை இங்குள்ள ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தோம். அதன்பின் சமீப காலங்களில் இலக்கிய நிகழ்வுகளிலும், தாய்வீடு பத்திரிகையின் ஒன்றுகூடல்களின் போதும் அடிக்கடி சந்தித்து அவருடன் உரையாடியிருக்கின்றேன்.
இவரது ஆக்கங்கள் பல இலங்கை, இந்தியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பத்திரிகைகள், இதழ்கள் போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன. இவரது நாவல்களில் ஒன்றான ‘பொன்னான மலரல்லவோ’ என்ற நாவலை வீரகேசரி பிரசுரம் அப்போது வெளியிட்டிருந்தது. 1957 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்து இவர், நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து, பின்லாந்திற்குப் புலம்பெயர்ந்தார். சுமார் 25 வருடங்கள் வரை பின்லாந்தில் வசித்தபோதும் தாய் மொழியை மறக்காது, தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
பின்லாந்தின் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளராகவும், பகுதி நேர தமிழ்மொழி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய இவர், பின்லாந்தின் தேசிய காவியமான ‘கலேவலா’ என்ற நூலை 1994 ஆம் ஆண்டு பின்னிஷ் மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி மாற்றம் செய்திருந்தார். இதன்பின் கனடா நாட்டிற்கு வந்து தனது இறுதிக் காலத்தைக் கழித்தார். கடைசி காலத்தைத் தமிழ் இலக்கிய முயற்சிகளிலேயே செலவிட்டார். சமீபத்தில் இவர் ‘பிரிந்தவர் பேசினால்’, ‘உங்கள் தீர்ப்பு என்ன?’ என்ற தலைப்புகளில் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருந்தார். இவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும் என்பதில் ஐயமில்லை.
•Last Updated on ••Sunday•, 28 •July• 2019 22:51••
•Read more...•
••Tuesday•, 26 •February• 2019 00:45•
??- குரு அரவிந்தன் -??
குரு அரவிந்தன்
ஓவியர் இயூஜின் கருணா வின்சென்ட் அவர்களின் மறைவு (22-02-2019) அவரை அறிந்தவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.' நேற்றிருந்தார் இன்றில்லை' என்ற வாக்கியம் எவ்வளவு உண்மை என்பதை இந்த மரணம் எல்லோருக்கும் நினைவூட்டியது. எந் தவொரு தற்பெருமையும் இல்லாது, மிகவும் அன்பாகவும், அமைதியாகவும் வார்த்தைகளை அளந்து பேசும் இவர் எங்கள் மத்தியில் இன்று இல்லாதது ஓவியக் கலைக்கு மட்டுமல்ல, எமது சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும்.
கனடாவில் தை மாதத்தை மரபுத்திங்களாகக் கனடிய அரசு பிரகடனப்படுத்தியதில் இருந்து தமிழர் கலாச்சார நிகழ்வுகள் எல்லாவற்றிலும் இவரது ஓவியங்கள் இடம் பெறத் தொடங்கியதால் தமிழ் ஆர்வலர்கள் பலரின் பார்வையும் இவரது நவீன ஓவியங்கள் மீது திரும்பியிருந்தன. மிக அற்புதமாக ஓவியம் வரைவதில் வல்லவர் மட்டுமல்ல, நவீன யுகத்திற்கு ஏற்ப கணனியின் பாவனை மூலம் இவர் தனது ஓவியங்களுக்கு மெருகூட்டுவதில் வல்லவர். எனது நண்பர் பி. விக்னேஸ்வரனின் ‘வாழ்ந்துபார்க்கலாம்’ என்ற நூலுக்கான அட்டைப் படத்தை டிஜிட்டல் முறையில்தான் வடிவமைத்திருந்தார். இது போன்ற பல நூல்களுக்கு இவர் அட்டைப்படம் வரைந்திருக்கின்றார். மார்க்கம் நகரசபை மண்டபத்தில் இவரது ஓவியக் கண்காட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்ற போது அந்த ஓவியங்களைப் பார்த்து ரசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. பெரிதும் சிறிதுமாகச் சுமார் 40 ஓவியங்கள்வரை அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
தமிழ் படைப்பிலக்கியத்தில் கொண்ட ஆர்வம் காரணமாக அவர் ஏதாவது நூல்களுக்கு அட்டைப் படம் வரைந்திருந்தால் அவரைச் சந்திக்கும் போதெல்லாம், அதைப்பற்றி நான் பாராட்டுவேன். நூலின் உள்ளடக்கம் என்ன என்பதை இவரது அட்டைப்படம் அப்படியே எடுத்துச் சொல்லும் வகையில் இவரது ஓவியங்கள் கதை சொல்லும். தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் கணையாழி இதழின் தமிழ் மரபுத் திங்கள் சிறப்பு மலரின் அட்டைப்படமாக ஓவியர் கருணாவின் ஓவியமே இடம் பெற்றிருந்தது.
கனடாவில் வசித்த இயூஜின் கருணா அவர்கள் கரவெட்டியைச் சேர்ந்த இளைப்பாறிய தலைமை ஆசிரியரான காலஞ்சென்ற வின்சென்ற் சின்னப்பு, இளைப்பாறிய ஆசிரியை நெஜினா வின்சென்ற் ஆகியோரின் அன்பு மகனாவார். இரண்டு வாரங்களுக்கு முன் அவருடன் உரையாடியபோது, ஓவியக்கலை பற்றி, குறிப்பாக நூல்களுக்கு அட்டைப்படம் வரைவது பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்திருந்தார். ஒரு நூலின் நீளம், அகலம் மட்டுமல்ல எத்தனை பக்கங்கள் என்பதும், எத்தகைய தாளில் அச்சடிக்கப்படுகிறது என்பதும் அவசியம் என்பது போன்ற பல நுணுக்கமான விடயங்களைத் தனது அனுபவத்தின் மூலம் தெளிவு படுத்தியிருந்தார். தாய்வீடு பத்திரிகையில் ஓவியம் பற்றிய தனது அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதியிருக்கின்றார். ஓவியக் கலை அருகிவரும் இக்கால கட்டத்தில் அனுபவம் மிக்க இவரது இழப்பு எம்மினத்திற்குப் பெரும் இழப்பாகும்.
•Last Updated on ••Tuesday•, 26 •February• 2019 00:48••
•Read more...•
••Friday•, 21 •December• 2018 23:33•
??- குரு அரவிந்தன் -??
குரு அரவிந்தன்
எங்கள் காலத்தில் வாசிப்பு முக்கியமானதொன்றாக இருந்தது. ஒருவரோடு உரையாடும் போது அவரிடம் இலக்கியத்தேடல் இருக்கிறதா இல்லையா என்பதை அவருடைய வாசிப்பு அனுபவத்தில் இருந்துதான் பெறமுடிந்தது. இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் நிறைய வாசித்துக் கொண்டே இருந்தார்கள். இதனால் அவர்களின் கல்வி அறிவை மட்டுமல்ல, அவர்களின் பொது அறிவையும் இனம் காண முடிந்தது. சிறுகதை, நாவல் போன்றவற்றில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கினேன். அந்த வரிசையில்தான் பிரபஞ்சனின் ஆக்கங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். சுருங்கச் சொன்னால், முகம் தெரியாத பிரபஞ்சனின் வாசகர்களில் ஒருவனாக இருந்த எனக்கு, அவர் 2011 ஆம் ஆண்டு கனடாவிற்கு வந்த போது, அவரை நேரிலே சந்தித்து உரையாடச் சில சந்தர்ப்பங்கள் கிடைத்தன.
எழுத்தாளர் பிரபஞ்சனை நான் சந்தித்ததற்கு இன்னும் ஒரு காரணம் இருந்தது. சமீபத்தில் அமரரான சித்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘யுகமாயினி’ குறுநாவல் போட்டியில், ‘அம்மாவின் பிள்ளைகள்’ என்ற எனது குறுநாவல் பரிசு பெற்ற போது, அந்தக் குறுநாவல் போட்டிக்கு பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தான் நடுவர் குழுவுக்குப் பொறுப்பாக இருந்தாகவும் தெரிவித்திருந்தார். அதனால்தான் கனடாவுக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் வந்திருந்த சமயம், அவரைச் சந்தித்து உரையாடினேன். அப்போது அந்த ‘அம்மாவின் பிள்ளைகள்’ குறுநாவலின் சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டியிருந்தார். போர்க்காலச் சூழலில் எழுந்த அந்த நாவலின் கருப்பொருளையும், சிறப்பு அம்சங்களையும் சொன்ன போது, அவருடைய ஞாபக சக்தியையும், முழுமையாக வாசித்துத்தான் அதைத் தெரிவு செய்திருந்தார் என்பதையும் நினைத்து பெருமைப்பட்டேன்.
•Last Updated on ••Friday•, 21 •December• 2018 23:35••
•Read more...•
••Saturday•, 17 •November• 2018 01:27•
??- குரு அரவிந்தன் -??
குரு அரவிந்தன்
யுகமாயினி இதழ் தொடங்கிய போது, சுமார் பத்து வருடங்களுக்கு முன், சித்தன் பிரசாத் என்பவர் பிரதம ஆசிரியராக இருப்பதாகவும், சிறந்த இலக்கி ஆளுமை கொண்டவர் என்றும் அவரைப்பற்றிய அறிமுகம் எழுத்தாளர் கே.ஜி. மகாதேவாவிடம் இருந்து கிடைத்தது. முடிந்தால் யுகமாயினிக்கு ஆக்கங்கள் ஏதாவது அனுப்பி வைக்கும்படியும் அவர் கேட்டிருந்தார். தமிழ் நாட்டு வர்த்தகப் பத்திரிகைகளுடன் போட்டி போடுவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை அறிந்து வைத்திருந்தாலும், ‘நல்ல முயற்சி எனது வாழ்த்துக்கள்’ என்று பாராட்டி, வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தேன். ரொறன்ரோ முருகன் புத்தக சாலையில் யுகமாயினி கிடைத்ததால், தரமாக இருந்ததால் அவ்வப்போது அதை வாங்கி வாசிப்பேன்.
ஒருநாள் எழுத்தாளர் கே. ஜி. மகாதேவாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. யுகமாயினி இதழ் குறுநாவல் போட்டி ஒன்ற நடத்த இருப்பதாகவும் அதில் கட்டாயம் கலந்து கொள்ளும் படியும் கேட்டிருந்தார். கனடிய சூழலை கருப்பொருளாகக் கொண்டு எழுதி அனுப்பவா என்று கேட்டபோது, ஈழத்து நிலைமையைச் சிற்றிலக்கியப் பத்திரிகை படிக்கும் தமிழ் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அங்கு எதிர்கொண்ட உங்கள் அனுபவத்தைக் குறுநாவலாக எழுதுங்கள் என்றார். அதேசமயம் எழுத்தாளர் எஸ். பொ. அவர்களிடம் இருந்தும் இது பற்றிக் குறிப்பிட்டு மின்னஞ்சல் ஒன்று எனக்கு வந்திருந்தது. ஏற்கனவே ஆனந்தவிகடன், குமுதம், கல்கி போன்ற வர்த்தக இதழ்களில் ஈழத்து யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி நான் எழுதிய சிறுகதைகள் பல்லாயிரக் கணக்கான வாசகர்களைச் சென்றடைந்திருந்தாலும், இது குறுநாவல் என்பதால், யுத்தம் ஈழத்தமிழருக்குத் தந்த வலியை, அவர்களின் உணர்வுகளை வெளிப்படையாக எழுதலாம் என்ற நோக்கத்தோடு இந்தப் போட்டியில் பங்கு பற்றினேன்.
யுகமாயினி குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற, ஒரு ஈழத்துத் தாயின் வலிகளை எடுத்துச் சொன்ன ‘அம்மாவின் பிள்ளைகள்’ என்ற குறுநாவல் அப்படித்தான் உருவானது. போட்டியில் எனது குறுநாவலுக்குப் பரிசு கிடைத்திருப்பதாக யுகமாயினி ஆசிரியர் சித்தன் அறிவித்திருந்தார். போட்டியின் போது, பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் நடுவர் குழுவுக்குப் பொறுப்பாக இருந்தாகவும் தெரிவித்திருந்தார். கனடாவுக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் வந்திருந்த சமயம், அவருடன் உரையாடிய போது அந்தக் குறுநாவல் பற்றி என்னைப் பாராட்டியிருந்தார்.
•Last Updated on ••Saturday•, 17 •November• 2018 01:30••
•Read more...•
••Monday•, 12 •March• 2018 16:14•
??- (குரு அரவிந்தன் (கனடா) -??
குரு அரவிந்தன்
- சென்ற மாதம் அமரரான திரு. ஈஸ்வரன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு பற்றி எழுதிய கட்டுரை ஒன்று அவரது நினைவாக இக்கட்டுரை! -
மதிப்புக்குரிய மனிதர் தெ. ஈஸ்வரன் அவர்கள் கொழும்பில் இருந்து தனது சிறுகதைத் தொகுப்பைத் தனது நண்பர் மூலம் எனக்கு அனுப்பியிருந்தார். அதனால் அவரது சிறுகதைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. முதற்கதையை வாசித்ததில் ஏற்பட்ட ஆர்வம் எல்லாக் கதைகளையும் வாசிக்கத் தூண்டியது. வர்த்தகத் துறையில் ஈடுபட்டிருக்கும் இவரது எழுத்தாற்றல் இவரை ஒரு படைப்பாளியாக இனங்காட்டி என்னை வியக்க வைத்தது. தனது வாழ்க்கை அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியிருக்கும் மனிதாபிமானியின் இந்த நூலைப்பற்றி எழுத வேண்டும், இதைக் கட்டாயம் ஆவணப் படுத்த வேண்டும், இச்சிறுகதைகளை வாசிப்பதால் வாசகர்கள் பலனடைய வேண்டும் என்பதால் இதை எழுதுகின்றேன்.
இந்த நூலுக்கு ‘ஈஸ்வரனின் சிறுகதைகள்’ என்று தலைப்புக் கொடுக்கப் பட்டிருக்கின்றது. வானதி பதிப்பகத்தார் அழகாக ஒழுங்கமைத்து வெளியிட்டிருக்கிறார்கள். காந்தளகம் நிறுவனத்தினர் இந்த நூலை அச்சேற்றி இருக்கிறார்கள். இதற்கான படங்களை ஓவியர் ராஜே அவர்கள் வரைந்திருக்கிறார்கள். இதற்கான அணிந்துரைகளை சொல்வேந்தர் சுகிசிவம், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியம், வீரகேசரி பிரதம ஆசிரியர் ஆர் பிரபாகரன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். இவர் நல்ல நட்புக்கு முதலிடம் கொடுப்பதால் தனது நண்பர்களாகிய எழுத்தாளர் ஈழத்து சோமு என். சோமகாந்தன், மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகியோருக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார். திரு. ஈஸ்வரனின் பதினாறு சிறுகதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
சின்னச் சின்னச் சம்பவங்கள், சிறிய அதிர்வுகள், வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் பார்வை, மனிதவாழ்வின் தீராத பிரச்சனைகள், சோகம், ஆசை, எதிர்பார்ப்பு இவை எல்லாவற்றையும் ஆசிரியர் ஈஸ்வரன் பதிவு செய்திருப்பதாக சுகி சிவம் அவர்கள் தனது அணிந்துரையில் குறிப்பிடுகின்றார். இச் சிறுகதைத் தொகுப்பு ஆசிரியரின் கன்னி முயற்சி, இது போன்ற ஆக்கங்களை அடிக்கடி படைத்து வாசகர் மனதில் நீங்காத இடம் பெற வேண்டும் என்று வீரகேசரி வார இதழ் ஆசிரியர் ஆர். பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார். இந்தச் சிறுகதைகளைப் படிக்கும் போது இதனைப் பொழுது போக்கிற்கான படிப்பு என்று எண்ணாமல், வாழக்கைக்குப் பாடமாகத் தெரிகின்ற கதைகள் என்று எண்ணிப் படிக்குமாறு கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே நூலாசிரியர் பற்றி சிறு குறிப்பு ஒன்றைத் தருகின்றேன்.
•Last Updated on ••Monday•, 12 •March• 2018 16:23••
•Read more...•
••Monday•, 14 •November• 2016 23:07•
??- குரு அரவிந்தன் -??
குரு அரவிந்தன்
- எழுத்தாளர் அமரர் குறமகள் நினைவாக நினைவழியா நினைவுகள் என்ற நினைவு மலர் ஒன்று சென்ற சனிக்கிழமை (12-11-2016) குடும்பத்தினரால் கனடாவில் வெளியிடப்பட்டது. இந்த நினைவு மலரில் இடம் பெற்ற எனது நினைவுக் குறிப்பையும் இத்துடன் இணைத்திருக்கின்றேன். - குரு அரவிந்தன். -
திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களைப் பிரிந்து இன்று ஒரு மாதமாகிவிட்டது. இலக்கிய உலகில் குறமகள் என்று சொன்னாலே இவரைத் தெரிந்து கொள்வார்கள். சிலர் இவரைப் பெண்ணிய வாதியாகப் பார்த்திருந்தார்கள். ஆனால் பிறந்ததில் இருந்து இவருடன் கூட வளர்ந்ததாலோ என்னவே அன்புள்ளம் கொண்ட அக்காவாகவும், பாசமுள்ள தாயாகவும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட ஒருவருமாகத்தான் நான் எப்பொழுதும் இவரைப் பார்த்தேன். பொறுமையாக எதையும் ஏற்றுக் கொள்வதால், அக்கா தனது மரணத்தையும் சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டார். எப்பொழுதுமே கலகலப்பாக இருப்பதையே விரும்பினார். எங்கள் குடும்பங்களுக்குள் என்ன நடந்தாலும் எங்கள் அத்தான் அதிபர் கனகசபாபதியும், இராசாத்தி அக்காவும்தான் (குறமகள்) உடனே எங்களுக்கு அறிவிப்பார்கள். இவர்கள் இருவரும் எங்களுக்கு வழிகாட்டியாக மட்டுமல்ல, எங்களைத் தாங்கும் தூணாகவும் இருந்தார்கள்.
இவர் எனது தந்தையின் அண்ணாவின் முத்த மகள். எங்கள் இருவரின் வீடும் ஒரே காணியில் இருந்தது. நடுவில் ஒரு வேலிபோட்டு போய்வருவதற்கு வசதியாக இடம் விடப்பட்டிருந்தது. நாங்கள் வாழ்ந்த குருவீதியில், குரு விளையாட்டுக் கழகத்தை ஆரம்பிக்கும்வரை இராசாத்தி அக்கா வீட்டு முற்றமே எங்கள் விளையாட்டுத் திடலாக அமைந்தது. அவரிடம் தலைமைத்துவம் இருப்பதை அப்போதே கவனித்திருக்கின்றேன். எனது தந்தையார் குருநாதபிள்ளை காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி அதிபராகவும், காங்கேசந்துறை உள்ளுராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். அக்காவிற்குச் சிறியதந்தையான எனது தந்தையே பாடம் சொல்லிக் கொடுப்பதில் தனக்கு வழிகாட்டியாக இருந்ததாக அக்கா அடிக்கடி சொல்வார். தனது நூலான ‘மாலை சூட்டும் மணநாள்’ என்ற நூலை அவருக்கே சமர்ப்பணம் செய்து அதில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார். எங்கேயாவது வெளியே போவதானால் வீட்டிலே விடமாட்டார்களாம், அப்போதெல்லாம் எனது தந்தைதான் அனுமதி பெற்றுத் தருவதாகவும் சொல்வார். உறவு என்பதைவிட, வழிகாட்டி அறிவூட்டிய ஆசிரியர் என்பதற்கான நன்றிக்கடனே அவர் செய்த இந்தச் சமர்பணம்.
எனது பெரியப்பாவான மு.அ. சின்னத்தம்பியின் மூத்த புதல்விதான் இராசாத்தி அக்கா. அடுத்துப் பிறந்த நான்கு பெண் குழந்தைகளுக்கு ராணி, அரசி, தேவி, ரதி என்று பெயர் சூட்டினார்கள். கடைசி ஆண் குழந்தைக்கு நவநீதன் என்று பெயர் சூட்டினர். அருகே இருந்த குலதெய்வமான குருநாதசுவாமி கோயில் வீதியில் பக்தர்கள் தங்குவதற்காக ஒரு மடம் கட்டி அக்காவின் நட்சத்திரமான ரோகிணி என்ற பெயரிலே ‘ரோகிணிமடம்’ என்ற பெயரைச் சூட்டி, திருவிழாக் காலங்களில் வருடாவருடம் அந்த மடத்தில் அன்னதானமும் நடைபெற்றதை இன்றும் மறக்க முடியாது. இன்று இருந்த இடமே தெரியாமல் எல்லாமே தரைமட்டமாக்கப் பட்டு விட்டது. மூலஸ்தானத்திற்குப் பின்னால் இருந்த அரசமரம் மட்டும் அந்த இடத்தில் நிமிர்ந்து நிற்கின்றது.
•Last Updated on ••Monday•, 14 •November• 2016 23:14••
•Read more...•
••Tuesday•, 18 •October• 2016 19:16•
??- குரு அரவிந்தன் -??
குரு அரவிந்தன்
- கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தினால் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு என்ற நூல் வெளியீட்டு விழாவில் 25-09-2016 தலைமை தாங்கிய எழுத்தாளர் குரு அரவிந்தனின் தலைவர் உரையில் இருந்து ஒரு பகுதி..-
இன்றைய விழாவின் நாயகரான பேராசிரியர் இ. பாலசுந்தரம் ஆவர்களே, என்றும் அவருக்குத் துணையாக நிற்கும் திருமதி விமலா பாலசுந்தரம் அவர்களே, இன்றைய நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களே, மற்றும் மேடையில் வீற்றிருக்கும் சான்றோர்களே, சபையோர்களே உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மாலை வணக்கத்தை முதற்கண் தெவிவித்துக் கொள்கின்றேன். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் பண்டைத்தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு என்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் தலைமை தாங்கும் சந்தர்ப்பம் இன்று எனக்குக் கிடைத்திருக்கின்றது.
‘ஈழத்தமிழரின் வரலாறு இலகு தமிழில் எழுதப்பட வேண்டும்’ என்ற மதிப்புக்குரிய விபுலாந்த அடிகளின் கனவை, அண்ணாமலை கனடா வளாகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் திரு. இ. பாலசுந்தரம் அவர்கள் இன்று இந்த வரலாற்று நூலான பண்டைத் தமிழர் பண்பாடு என்ற நூலை வெளியிடுவதன் மூலம் நிறைவேற்றியிருக்கின்றார். இந்தப் புத்தகத்தை நான் இன்னும் முழமையாக வாசிக்கவில்லை. ஆனாலும் அட்டைப் படத்தைப் பார்த்த போது மிகப் பழைய காலத்து தமிழர் வரலாற்றைச் சொல்லும் ஒரு நூலாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்த நூலுக்கான மதிப்புரையை முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் எழுதியிருக்கின்றார். கடல் கோள்களால் அழிவுற்ற குமரிக்கண்ட நாடுகளைப் பற்றியும், மெசப்பெத்தோமிய, சுமேரிய நாகரிகங்களின் அடிப்படை வரலாற்றுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும், தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்ந்தார்கள், அவர்களின் பாரம்பரியம் என்ன என்பன பற்றியும் இந்த நூல் எடுத்துச் சொல்வதை அடிக் குறிப்புகளைப் பார்த்த போது புரிந்து கொள்ள முடிகின்றது. தமிழ் மொழியின் தொன்மையையும், பண்டைத் தமிழர் வாழ்வியல் பற்றியும், தமிழ் எழுத்துக்கள் பற்றிய ஆய்வினையும், தமிழர்களின் இசையறிவு, கலையறிவு, சிற்ப அறிவு போன்றவற்றையும் இந்த நூலில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.
•Last Updated on ••Tuesday•, 18 •October• 2016 19:17••
•Read more...•
••Thursday•, 07 •July• 2016 05:47•
??- குரு அரவிந்தன் -??
குரு அரவிந்தன்
பிலோ இருதயநாத் எழுதிய ‘நாய் கற்பித்த பாடம்’ என்ற கட்டுரை பதிவுகளில் பதியப்பட்டிருந்ததை வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. மாணவப்பருவமாக இருந்தபோது விகடன் தீபாவளி மலரில் இவரது கட்டுரைகள் அடிக்கடி வெளிவரும். மிகவும் ஆர்வத்தோடு வாசிப்பேன். பதிவுகளில் வெளிவந்த இந்தக் கட்டுரையை வாசித்த போது, இதே போலத்தான கெனத் அனடர்சனின் (Kenneth Anderson) ‘சீவனப்பள்ளியின் கருஞ்சிறுத்தை’ என்ற நூல் பற்றிய எனது நினைவலைகளை மீண்டும் மீட்டுக் கொண்டு வந்ததில் மகிழ்ச்சியாக இருக்கின்றது. வேட்டையின் போது உதவியாக இருந்த நாய் குஷ்ஷி பற்றியும் கெனத் அண்டர்சனும் தனது நூலில் குறிப்பிட்டிருந்தார். ஆட்கொல்லியாக மாறும் விலங்குகளை மட்டுமே வேட்டையாடிய அவர், ஆட்கொல்லியாக விலங்குகள் ஏன் மாறுகின்றன என்பதைத் தெளிவாக அந்த நூலில் எடுத்துச் சொல்லியிருந்தது குறிப்பிடத் தக்கது.
மாணவப்பருவத்தில் எதையாவது வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுவதுண்டு. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு துறைகள் சம்பந்தப்பட்ட விடையங்களில் திடீரென ஆர்வம் ஏற்படுவதுண்டு. அப்படி ஒரு நிலை எனக்கு மகாஜனாக்கல்லூரியில் படிக்கும் போது ஏற்பட்டது. காரணம் கல்லூரியின் நூலகத்திற்குப் புதிதாக வந்த ஒரு நூல் கருஞ்சிறுத்தைகள் பற்றிய தலைப்பைக் கொண்டிருந்தது. அப்போது நூலகத்திற்குப் பொறுப்பாக இருந்த ரி. பத்மநாதன் அவர்களிடம் பதிவுக்காக நூலை நீட்டியபோது, ‘மனுசரை வாசிக்கிறதை விட்டு இப்ப விலங்குகளைப் பற்றி வாசிக்கப் போறியா?’ என்பது போல ஒரு பார்வை பார்த்தார். இயற்கைச் சூழலில் விலங்கினங்களின் வாழக்கை முறையை அவறறற்றின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ள மிகவும் உதவியாக அந்தப் புத்தகம் இருந்தது.
இந்த நூலை மிகவும் சுவாரஸ்யமாக எழுதியவர் கென்னத் அன்டர்சன் என்ற எழுத்தாளர். இதைத் தமிழில் எஸ். சங்கரன் என்பவர் மொழி பெயர்த்திருந்தார். புலி என்றால் வரிகள் இருக்கும், சிறுத்தை என்றால் புள்ளிகள் இருக்கும் என்றுதான் நான் சிறுவயதில் நம்பியிருந்தேன். ஆனால் கருஞ்சிறுத்தை என்றதும் என் ஆர்வத்தை அந்து நுர்ல் தூண்டிவிட்டது. சிங்கப்பூரில் வெள்ளை நிறப் புலிகளைக் காப்பகத்தில் கண்டபோதும் எனக்கு ஆச்சரியமாகNவு இருந்தது.
•Last Updated on ••Friday•, 08 •July• 2016 19:19••
•Read more...•
••Wednesday•, 02 •March• 2016 00:25•
??- குரு அரவிந்தன் ??
குரு அரவிந்தன்
எழுத்தாளர் செங்கையாழியான் அமரராகிவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டபோது ‘நேற்றிருந்தார் இன்றில்லை’ என்ற வாசகம்தான் நினைவில் வந்தது. யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் தலைவராக இருந்த குணராசா என்ற இயற் பெயர் கொண்ட இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். புவியியல் பட்டதாரியான இவர் புவியியல் சம்பந்தமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஈழத்து எழுத்தாளர்களில் அதிக படைப்புக்களைத் தந்தவர் என்ற பெருமையும் இவருக்குண்டு. ஆய்வு நூல்களாக நல்லை நகர், யாழ்ப்பாண அரசர் பரம்பரை, ஈழத்தவர் வரலாறு போன்ற இவரது ஆய்வு நுல்கள் வெளிவந்திருக்கின்றன. இலங்கை அரசாங்கம் தென்னிந்தியப் புத்தகங்களின் வருகையைத் தடைசெய்த காலத்தில் இவரது எழுத்துக்கள் பிரபலமாயிருந்தன. வீரகேசரி பிரசுரங்கள் மூலம் இவரது நாவல்கள் அப்போது பிரசுரமாகியிருந்தன. இவரது எழுத்தில் இருந்துதான் வழுக்கை ஆற்றைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். மாணவனாக நான் இருந்தபோது ஒரு முறை செட்டிகுளத்தில் அரச உத்தியோகத்தராக இருந்த அவரைச் சந்தித்திருந்தேன். இவர் கனடா வந்தபோது எங்கள் வீட்டிற்கும் விருந்தினராக வந்திருந்தார். அப்போது பல இலக்கிய முயற்சிகள் பற்றிக் கலந்துரையாடினோம். இவரது வாடைக்காற்று என்ற நாவல் படமாக்கப்படபோதும், எனது முள்வேலி என்ற கதை வேலி என்ற பெயரில் மதிவாசனால் படமாக்கப்பட்ட போதும் அமரர் கே. எஸ். பாலச்சந்திரன் நடித்திருந்தார்.
இச் சந்தர்ப்பத்தில் செங்கையாழியானின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
•Last Updated on ••Friday•, 08 •July• 2016 19:21••
••Tuesday•, 05 •May• 2015 17:35•
??- குரு அரவிந்தன் -??
குரு அரவிந்தன்
இழப்புக்கள் ஏற்படுவது இயற்கைதான், ஆனால் இவ்வளவு விரைவாக ஏன் என்பதுதான் புரியவில்லை. ‘இந்த மண்ணில் மாரடைப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பயமூட்டுவதாகவும், அதிர்ச்சி தருவதாகவும் இருக்கின்றது’ என்று சென்றவாரம்தான் நண்பர் பொன்னம்பலம் குகதாசனின் (பூநகரான்) மறைவு பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இலக்கிய நண்பர் புதுவை இராமனின் திடீர் மறைவு மீண்டும் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றது. சமீபத்தில் டாக்டர் சூரியபாலன், அதிபர் கனகசபாபதி, பேராசிரியர் செல்வா கனகநாயகம், பூநகரான் குகதாசன், புதுவைராமன் இப்படியே ஒவ்வொருவராக நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள். நேற்றிருந்தார் இன்றில்லை என்பது இதைத்தான் நினைவூட்டுகின்றது.
நண்பர் புதுவை இராமன் அவர்களைக் கடைசியாக எஸ் ரி. சிங்கம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவின்போது கனடா கந்தசுவாமி கோயில் கலையரங்கத்தில் சந்தித்திருந்தேன். ஸ்ரீசிவா, உதயன் ஆகியோரோடு உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் எங்களைப் புகைப்படம் எடுக்க விரும்பினார். ‘கொஞ்சம் சிரிச்சா என்ன?’ என்று புகைப்படம் எடுக்கும்போது கேட்டார். உண்மைதான் நாங்கள் இயல்பான புன்னகையை மெல்ல மெல்லத் தொலைத்து விட்டோம் என்பதை அவர் நினைவூட்டினார். மனதிலே எதையும் வைக்காது, பாரபட்சம் பாராது எல்லோரோடும் இனிமையாகப் பழகக் கூடியவர். நான் திரைக்கதை வசனம் எழுதி வெளிவந்த ஸ்ரீமுருகனின் சிவரஞ்சனி படத்தில் புதுவை இராமனும் நடித்திருந்தார். இன்று அவர் இல்லை, அவரது நினைவுகள் மட்டும் எம்மோடு இருக்கின்றது.
இச்சந்தர்ப்பத்தில் இலக்கிய நண்பர் புதுவை இராமனின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்து, அவரது மனைவி, குடுத்பத்தினருக்கும், உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் பதிவுகள் இணைய இதழ் மூலம் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
•Last Updated on ••Friday•, 08 •July• 2016 19:21••
••Monday•, 30 •March• 2015 03:11•
??- குரு அரவிந்தன் -??
குரு அரவிந்தன்
- கனடாவில் வெளிவந்த தமிழ் சிறுகதைகளின் கருப்பொருட்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் 28-03-2015 அன்று ரொறன்ரோ தமிழ் சங்கம் நடத்திய ஒன்றுகூடலின்போது வாசித்த கட்டுரையில் இருந்து சில பகுதியை மட்டும் இங்கே தருகின்றேன். - குரு அரவிந்தன் -
ஒரு சிறுகதை எழுதியவர்களே தங்களைச் ‘சிறுகதை எழுத்தாளர்கள்’ என்று சொல்லிக் கொள்பவர்கள் மத்தியில் இக்கட்டுரை எல்லோரையும் திருப்திப் படுத்த மாட்டாது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் இப்படி ஒரு கட்டுரையை யாராவது எழுதாவிட்டால் கனடிய சிறுகதை இலக்கியத்தை ஆவணப்படுத்த முடியாமல் போய்விடலாம் என்பதால் ரொறன்ரோ தமிழ் சங்கத்தினரின் விருப்பத்திற்கிணங்க இக்கட்டுரையை இங்கே வாசிக்கின்றேன். நான் வாசித்த என் நினைவில் நிற்கும் அனேகமாகக் கனடாவில் வெளிவந்த சிறுகதைகள் சிலவற்றின் கருப்பொருட்களை மட்டுமே இங்கே குறிப்பிடுகின்றேன்.
ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த பின்புதான் தமிழ் சிறுகதைகள் அவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் வளர ஆரம்பித்தன. அந்தவகையில் கனடாவில் 1980 களின் பின்தான் தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடையத் தொடங்கியது எனலாம். கனடாவில் தமிழ் சிறுகதைகளை எழுதுபவர்களில்; அனேகமானவர்கள் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்களாகவே இருக்கின்றார்கள். பொதுவாகத் தமிழ்ச் சிறுகதைகள் தாயக வாழ்க்கை அனுபவங்களையும், இந்த மண்ணில் சுமார் 30 வருடகால வாழ்வியல் அனுபவங்களையும் கொண்டனவாகவும் இருக்கின்றன. குறிப்பாக ஈழத்துப் பொதுச் சூழலில் எழுந்த கதைகள், ஈழத்துப் போராட்டச் சூழலில் எழுந்த கதைகள், புலம் பெயர்தலின் போது ஏற்பட்ட அனுபவங்கள், கனடிய சூழலில் எழுந்த கதைகள், இவை இரண்டையும் கடந்து சர்வதேச சூழலில் எழுந்த கதைகள் எனப் பல்வேறு சூழலை மையமாகக் கொண்ட கனடாவில் வெளிவந்த தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை கடந்த காலங்களில் என்னால் வாசிக்க முடிந்தது.
•Last Updated on ••Friday•, 08 •July• 2016 19:23••
•Read more...•
••Friday•, 26 •December• 2014 19:18•
??- குரு அரவிந்தன் - கனடா -??
குரு அரவிந்தன்
ஆனந்தவிகடன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் வியெஸ்வி அவர்களிடம் இருந்து அன்று எனக்கொரு கடிதம் வந்திருந்தது. நான் சற்றும் அந்தக் கடிதத்தை எதிர்பார்க்கவில்லை. கடிதத்தைப் பார்த்தபோதுதான் விகடனுக்கு நான் அனுப்பிய முதற்கதையின் ஞாபகம் வந்தது. அந்தக் கதை அனுப்பியதைகூட நான் மறந்து போயிருந்தேன். காரணம் அது தற்செயலாக ஏற்பட்ட ஒரு சம்பவமாக இருந்தது. மகாஜனக் கல்லூர் முன்னாள் அதிபர் கனகசபாபதி அவர்கள் தான் எனது ஒரு கதையை வாசித்துவிட்டு இந்தக்கதை விகடனுக்குத்தான் ஏற்றது, அனுப்பிப்பாரும் என்று வாழ்த்தி விகடன் முகவரியையும் தந்திருந்தார். அதற்கும் ஒரு காரணம் இருந்தது, அதாவது அப்பொழுதுதான் கனடா உதயன் பத்திரிகையின் சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதைக்காக எனக்குத் தங்கப் பதக்கம் பரிசாகக் கிடைத்திருந்தது. அவர் நீண்டகாலமாக விகடன் வாசகராக இருந்ததால் எனக்கும் சின்ன வயதில் இருந்தே விகடன் கதைகளை வாசிக்க நிறையவே சந்தர்ப்பம் கிடைத்தது. எனவே எனது முதற்கதையை கனடாவில் இருந்து அனுப்பிவிட்டு நான் அதில் அதிக அக்கறை செலுத்தவில்லை. விகடனில் இருந்து வந்த, என்னை ஆச்சரியத்திற்குள் ஆளாக்கிய வியெஸ்வியின் முதற் கடிதம் அதுதான்.
•Last Updated on ••Friday•, 08 •July• 2016 19:22••
•Read more...•
••Saturday•, 29 •November• 2014 21:34•
??- குரு அரவிந்தன் -??
குரு அரவிந்தன்
இங்கே வாசிக்க இருக்கும் இந்தக் கட்டுரையின் தலைப்புக்கேற்ப தமிழ் புதினங்கள் அதாவது நாவல்கள் கனடாவில் வெளியீடு செய்யப்பட்டதாகவும், கனடிய எழுத்தாளர்களுடையதாகவும் இருக்கவேண்டும் என்ற ஒரு வரையறைக்குள்தான் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. வேறு பல புதினங்கள் இங்கே பலராலும் வெளியிடப் பட்டாலும் அவை இந்த வரையறைக்குள் உட்படாததால் அவற்றை இங்கே குறிப்பிடவில்லை. எனது தேடதல் மூலம் கிடைத்த தகவல்களை மட்டுமே இங்கே தருகின்றேன். எதையாவது தவறவிட்டிருந்தால், அவற்றை எனக்குத் தெரியப்படுத்தினால் அவற்றை எனது முழுமையான கட்டுரையில் இணைத்து கொள்ள முடியும் என்பதையும் அதன் மூலம் கட்டுரை முழுமை பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
1983 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் அநேகமான ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் வாழ்ந்த இடத்தைவிட்டு எண்ணிக்கையில் பெரிய அளவில் புலம்பெயர்ந்து சென்றார்கள். தொடக்கத்தில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் அனேகமாக தாயக நினைவுகளை மீட்பதாகவே இருந்தன. தாயகத்தைப் பற்றிய புதினங்களாக இருந்தாலும், புலம் பெயர்ந்தோர் படைப்புக்களாகவே இவை கணிக்கப்பட்டன. தொடர்ந்து புகுந்த மண்ணில் பரீட்சயமானபோது வெளிவந்த பல படைப்புக்கள் புகுந்த மண்ணைப் பற்றியதாகவோ அல்லது இரண்டும் கலந்ததாகவோ இருந்தன. புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்றோ அல்லது புகலிட தமிழ் இலக்கியம் என்றோ இதுவரை காலமும் இவை அழைக்கப்பட்டாலும், அவர்கள் கனடாவிற்குப் புலம் பெயர்ந்து சுமார் முப்பது வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று அவர்களின் படைப்புக்கள் கனடியத் தமிழ் புதினங்களாகக் கணிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, கனடியத் தமிழ் இலக்கியத்தில் இவை முக்கிய இடம் வகிக்கின்றன. காரணம் தாயகத்து எழுத்தாளர்களால் சொல்லத் தயங்கிய பல விடையங்களை இந்தப் புதினங்கள் இந்த மண்ணில் துணிவோடு எடுத்துச் சொன்னது மட்டுமல்ல, புகுந்த மண்ணின் புதிய அனுபவங்களையும் எடுத்துச் சொல்லத் தொடங்கின. கனடாவிற்குப் புலம் பெயர்ந்த பழைய எழுத்தாளர்கள் மட்டுமல்ல, இன்று அடுத்த தலை முறையினரும் இங்கே எழுதத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் புதிய தலைமுறையினரின் எழுத்துக்கள் அனேகமாக ஆங்கிலத்திலேயே வெளிவருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த நிலை நீடிக்குமானால் எதிர் காலத்தில் அடுத்த தலைமுறையினரிடம் இருந்து தமிழ் புதினங்கள் வெளிவருமா என்பது சந்தேகத்திற்குரியதே!
•Last Updated on ••Friday•, 08 •July• 2016 19:23••
•Read more...•
••Wednesday•, 26 •November• 2014 00:55•
??- குரு அரவிந்தன் -??
குரு அரவிந்தன்
இனிய நண்பர் பேராசிரியர் செல்வா கனகநாயகத்தின் திடீர் மறைவு இலக்கிய உலகிற்கு ஒரு பேரதிர்ச்சியைத் தரும் செய்தியாகும். இலங்கைத் தமிழறிஞர் பேராசிரியர் வி. செல்வநாயகத்தின் மகனான இவர், தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக மட்டுமல்ல, சிறந்த ஆங்கில அறிவு கொண்டவராகவும் இருந்ததால் ஈழத் தமிழர்களின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்வதில் கனடாவில் முன்னோடியாக இருந்தார். பழகுவதற்கு மிகவும் இனிய நண்பரான இவரது அறிமுகம் கனடாவில்தான் எனக்கு முதலில் கிடைத்தது. கனடிய இலக்கிய மேடைகளில் அவரது சொற்பொழிவைக் கேட்டு வியந்திருக்கின்றேன். தொடக்க காலத்தில் ஆங்கில மொழியில் உரையாற்றிக் கொண்டிருந்தவர், காலத்தின் தேவை அறிந்து பின்னாளில் மேடைகளில் தமிழில் உரையாற்றத் தொடங்கியிருந்தார். எனக்கு அவர் அறிமுகமானபின் அவ்வப்போது அவரது உரைகளைக் கேட்டு அவரைப் பாராட்டியிருக்கின்றேன். எனக்கு அவர் அறிமுகமானது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம்தான். அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் தனது நூல் ஒன்றிற்கு ஆய்வுரை செய்யும்படி பேராசிரியர் செல்லவா கனகநாயகத்தைக் கேட்டிருந்தது மட்டுமல்ல அந்த நூலை அவரிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பையும் என்னிடம் தந்திருந்தார். எனது வீட்டிற்கு அருகாமையில் அவரது வீடும் இருந்ததால், அதிபர் என்னிடம் இந்தப் பொறுபப்பை ஒப்படைத்திருந்தார். எனவே பேராசிரியரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தேன். மறுநாள் மாலை நேரம் 7:00 மணியளவில் தனது வீட்டிற்கு வரும்படி சொல்லியிருந்தார்.
•Last Updated on ••Friday•, 08 •July• 2016 19:22••
•Read more...•
••Thursday•, 27 •February• 2014 04:23•
??- குரு அரவிந்தன் -??
குரு அரவிந்தன்
- நாடக, திரைப்படக் கலைஞரும், எழுத்தாளருமான கே.எஸ்.பாலச்சந்தினின் மறைவை ஒட்டி எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய இக்கட்டுரையினையினை மீள்பிரசுரம் செய்கின்றோம். அனுப்பிய குரு அரவிந்தனுக்கு நன்றி. - பதிவுகள் -
கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றி ஏற்கனவே பாரதி கலைக்கோயில் சார்பில் நண்பர் மதிவாசன் வெளியிட்ட நூலின் தொகுப்பாசிரியர் என்ற வகையில் விரிவாக ஒரு அறிமுக உரை எழுதியிருந்தேன். திறமை மிக்கவர்களை எத்தனை தடவை பாராட்டினாலும் தகும் என்பதால், அவரது சாதனைகளைப் பாராட்டி அவருக்குக் கனடாவில் ரொறன்ரோவிலும், மொன்றியலிலும் விழா எடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒருமுறை அவரைப் பாராட்டி வாழ்த்த விரும்புகின்றேன்.
அண்ணை ரைட் என்ற கணீரென்ற குரல் மூலம்தான் இவர் எனக்கு முதன் முதலாக அறிமுகமானார். அப்பொழுதெல்லாம் பேருந்து சாரதியை மரியாதை கருதி அண்ணை என்றுதான் நடத்துநர்கள் அழைப்பார்கள். அச்சுவேலியில் இருந்து சங்கானைக்கு ஒரு பேருந்து சுண்ணாகம் வந்து, காங்கேசந்துறை வீதிவழியாக மல்லாகம் சென்று, அளவெட்டி வழியாகச் சங்கானைக்குச் செல்லும். அதிலே உள்ள நடத்துநரும் இப்படித்தான் அண்ணைரைட் என்று குரல் கொடுப்பது வழக்கம். பயணிகளில் அனேகமானவர்கள் அவருக்கு அறிமுகமானவர்களாகவே இருப்பர். அவர் வாய் நிறைய வெற்றிலை பாக்குப் போட்டிருப்பார். காக்கித் துணியில் நாலு பைகள் உள்ள மேற்சட்டை அணிந்திருப்பார். வண்டி நின்றதும் அவசரமாக வேலியோரம் சென்று வாயில் குதப்பிய வெற்றிலைச் சாற்றை உமிழ்ந்துவிட்டு வந்து அண்ணைரைட் என்று கம்பீரமாகக் குரல் கொடுப்பார். பாலா அண்ணையின் அண்ணைரைட் நாடகத்தைக் கேட்கும் போதெல்லாம் நேரே பார்க்கும் காட்சிபோல, அந்த நடத்துநரின் ஞாபகம் வரும். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது தொலைக்காட்சி பிரபலமாகாததால், ஒலியை மட்டும் கேட்கக்கூடிய இலங்கை வானொலிதான் எங்கள் வீட்டிலே உள்ளகப் பொழுது போக்குச் சாதனமாக இருந்தது. இலங்கை வானொலியில் இவரது குரல் பல தடவைகள் ஒலித்தாலும் அனேகமான ரசிகர்களைக் கவர்ந்தது இவர் கதாநாயகன் சோமுவாக நடித்த தணியாத தாகமும், இவரது தனிமனித நாடகமான, பேருந்து நடத்துநராக நடித்த அண்ணை ரைட்டும்தான் (1973) என்றால் மிகையாகாது. அன்றைய காலக்கட்டத்தில், பலரை விம்மி விம்மி அழவைத்த நாடகமாத் தணியாத தாகமும்;, 500 தடவைகளுக்குமேல் மேடையேற்றப்பட்டு, பலரை வயிறு குலுங்கிச் சிரிக்க வைத்த நாடகமாக அண்ணைரைட் நாடகமும் அமைந்திருந்தன.
•Last Updated on ••Friday•, 08 •July• 2016 19:24••
•Read more...•
|