உங்கள் இதழில் ரிஷான் ஷெரீஃபின் கவிதை நவீனத்துவத்தின் வீச்சுடன் பதிவாகி இருக்கிறது. முதலில் கவிதையை வாசிப்போம்: கறுத்த கழுகின் இறகென இருள் சிறகை அகல விரித்திருக்குமிரவில் ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில் ரட்சகனின் மந்திரங்கள் விசிறி கிராமத்தை உசுப்பும் சிக்குப் பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல் ஒருபோதும் இமைத்திராப் பேய் விழிகள் குருதிச் சிவப்பு வழியப் பரந்த உதடுகள் முன் தள்ளிய வேட்டைப் பற்கள் விடைத்து அகன்ற நாசியென நெற்றியில் மாட்டப்பட்ட முகமூடியினூடு கூத்துக்காரனின் முன்ஜென்மப் பெருந் துன்பம் சனம் விழித்திருக்கும் அவ்விரவில் பேரோலமெனப் பாயும்
•Last Updated on ••Thursday•, 02 •February• 2017 22:50••
•Read more...•
சி.சு. செல்லப்பா - பழுப்பு நிறப் பக்கங்களில் சாரு நிவேதிதா
நவீன இலக்கியம் (கவிதை கதைகளில் நவீனத்துவம்), விமர்சன இலக்கியம், வணிக இதழ்களுக்கு மாற்றான தீவிர இலக்கியம் இவற்றை 'எழுத்து' என்னும் பத்திரிக்கை மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்த சி.சு.செல்லப்பா சுதந்திரப் போராட்டதில் பங்கேற்று சிறை சென்றவர். அவர் இன்று தமிழில் தீவிர இலக்கியம் வணிக இலக்கியத்தைத் தாக்குப் பிடித்து நிமிர்ந்து நிற்கும் காலத்துக்கு அடித்தளமிட்ட முன்னோடி. சாரு நிவேதிதா அவரது பணி, ஆளுமை, படைப்புகள் மற்றும் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் யாவற்றையும் விரிவாக ஒன்பது பகுதிகளில் தினமணியின் இணையதளத்தில் எழுதி இருக்கிறார். எட்டாம் பகுதியில் அவருடைய சாதனைகள் என்ன என்னும் சாருவின் பார்வையைக் கீழே பகிர்கிறேன்:
மேற்கு நாடுகளில் பல்கலைக்கழக மொழியியல் துறையில் பணிபுரிபவர்கள் அனைவருமே சிந்தனையாளர்களாகவும், விமரிசகர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு நிலைமை வேறு. இங்கே விமரிசனம் என்றால் என்னவென்றே தெரியாது. வியாக்கியானமும் உரை விளக்கங்களும் மட்டுமேதான் இங்கே உண்டு. இப்படிப்பட்ட சூழலில் விமரிசனம் என்ற புதிய விஷயத்தை ஆரம்பித்த சி.சு. செல்லப்பாவின் விமரிசனப் பயணம் அவர் காலத்திலேயே - அதுவும் ‘எழுத்து’ பத்திரிகையிலேயே பெரும் விபத்துக்குள்ளாகியது. அவருடைய மாணாக்கர்களான வெங்கட் சாமிநாதனும் தர்மு சிவராமுவும் செல்லப்பாவின் பாணியிலேயே சென்று விமரிசனக் கலையை வம்புச் சண்டையாக மாற்றினர். ‘நமக்கு நட்பாக இருந்தால் நல்ல எழுத்தாளர்; இல்லாவிட்டால் போலி’ என்பதுதான் இவர்களது விமரிசனப் பாணியாக மாறியது. அவர்களின் விமரிசனத்தில் வேறு எந்தவித இலக்கியக் கோட்பாடுகளோ ரசனையோ இருந்ததில்லை. க.நா.சு. பரவாயில்லை. தன்னுடைய ரசனைக்கு ஏற்றபடி அவர் உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். ஆனால் விமரிசனக் கலைக்கு அவர் பங்காற்றவில்லை. உலக இலக்கியத்தை வாசித்தால் நம்மால் நல்ல இலக்கியத்தை இனம் காண முடியும் என்று மட்டுமே குறிப்பிட்டார். அதன்படியே வாழ்நாள் முழுதும் வாசித்தார்; நமக்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் செல்லப்பாவும் சாமிநாதனும் சிவராமுவும் விமரிசனக் கலைக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்யவில்லை.
அசோகமித்திரனை மட்டுமல்ல; ஞானக்கூத்தன் உட்பட அவர்கள் காலத்திய பல எழுத்தாளர்களைப் போலி என்றார்கள் சாமிநாதனும் சிவராமுவும். ந. பிச்சமூர்த்தியின் இலக்கியத் தகுதியை சந்தேகித்து எழுதினார் நகுலன். அதுவும் ‘எழுத்து’ பத்திரிகையில். ஆக, மேற்குலகைப் போல் ஓர் ஆரோக்கியமான இலக்கிய வடிவமாக ஆகியிருக்க வேண்டிய விமரிசனக் கலை அடிதடி சண்டையாக மாறியது.
•Last Updated on ••Sunday•, 22 •May• 2016 01:01••
•Read more...•
பதாகை இணைய இதழில் 'எதற்காக எழுதுகிறேன்?' தொடர்
'காசுக்குப் பிரயோஜனமில்லாத காரியம்' என்று நிச்சயமாக எந்த ஒருவருமே ஒப்புக் கொள்வார்கள் என்றால் அது கட்டாயமாக பேனா பிடித்து எழுதுவது தான். தமிழ்ச் சூழலில் இது மிகவும் கேவலமான போக்கத்த தனமான கிறுக்கு வேலை என்றே கருதப்படுகிறது. குடும்பத்தினரால் காயப்படுத்தப் படாத எழுத்தாளர் ஆணாயிருந்தால் ஆயிரத்தில் ஒருவர். பெண்ணாயிருந்தால் யாருமே இல்லை. பதிப்பாசிரியர்களால் விமர்சகர்களின் புறக்கணிப்பால் மனச்சோர்வடையாத எழுத்தாளரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
இத்தனையையும் மீறி சமகாலத்தில் எழுதுபவர்கள் எதற்காக எழுதுகிறார்கள்? அவர்களின் தரப்பை ஒரு தொடராக பதாகை இணைய தளம் வெளியிடத் துவங்கி இருக்கிறார்கள். இந்தத் தொடரைத் தொடங்கத் தூண்டுதலாயிருந்த ஒரு சிறு நூலின் பகுதிகளை மேற்கோள் இடுகிறார் நரோபா. அது கீழே:
அண்மையில், சந்தியா வெளியீடாக வந்துள்ள “எதற்காக எழுதுகிறேன்” என்ற சிறு நூலை வாசிக்க நேர்ந்தது. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சி,சு,செல்லப்பா, க,நா.சு, ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, லாசரா, ஆர்.ஷண்முகசுந்தரம் உட்பட அக்காலகட்டத்து எழுத்தாளர்கள் பலரும் இந்த கேள்வியை எதிர்கொண்டு எழுதி (பேசி) இருக்கிறார்கள். அன்றைய காலத்தில் பிரபலமாக இருந்த தொடர்கதை எழுத்தாளர் ஆர்.வியின் கட்டுரை கூட இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு தொனி.
“எனக்கே எனக்காக எழுதுவதைப்பற்றி என்ன சொல்ல முடியும்? விஸ்தாரமாக சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதிலிருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை- எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியை காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன.,“ என்று எழுத்து அளிக்கும் கிளர்ச்சியை, அதனால் தனக்கு கிடைக்கும் இன்பத்தை, அந்த நிலையை மீண்டும் மீண்டும் அடைந்து நிலைத்திருக்கும் வேட்கையை எழுதுகிறார் தி. ஜானகிராமன்..
ஜெயகாந்தன் அவருக்கே உரிய முறையில் தனது தரப்பை வலுவாக வைக்கிறார். எழுத்தாளன் தனக்குள் சுருண்டுகொள்ளும் குகைவாசி அல்ல என்று அவனை இழுத்து கொண்டுவந்து நிறுத்துகிறார்-
•Last Updated on ••Monday•, 16 •May• 2016 03:36••
•Read more...•
யுவனின் நீள் கவிதை "இருத்தலும் இலமே"
காலச்சுவடு ஏப்ரல் 2016 இதழில் யுவனின் நீள்கவிதைக்கான இணைப்பு இது. தமிழ்ச் சூழலில் கவிதை வாசிப்பு, விமர்சனம், கவிதை பற்றிய புரிதல் இவை படைப்பாளிகளுக்கே பிடித்தமான ஒன்று இல்லை. தனக்குக் கவிதை பற்றியும் கொஞ்சம் தெரியும் என்று காட்டிக் கொள்வதற்காக ஒரு பார்வையைப் பதிவு செய்பவர்களே விரல் விட்டு எண்ணக் கூடிய மூத்த படைப்பாளிகளில் வெகு சிலர். பிறர் நேர்மையாளர்கள். கவிதை என்ற ஒன்று இலக்கியத்தில் இருக்கிறது என்றெல்லாம் குழப்பிக் கொள்ளாத நிம்மதி உடையவர்கள்.
கவிதை வெளிப்படுவது புனைகதை படைப்பாக்கத்தை விட அடிப்படையில் கற்பனை, காட்சிப்படுத்துதல் மற்றும் ஆன்மீகம் ஆகிய மூன்று புள்ளிகளில் வேறுபடுவது. ஒரு குழந்தையின் பார்வையுன் உலகைப் பார்ப்பவன் கவிஞன். அவனுக்கு காட்சிகளில் இருந்து சாதாரண விழிகளுக்கு அன்னியமான, மிகவும் புதுமையான, கொப்பளிக்கும் கற்பனை விளம் மிகுந்த தரிசனங்கள் கிடைக்கின்றன. அந்தப் புள்ளியிலிருந்து அவன் நகர்ந்து அந்த மனவெளி அனுபத்தை கவிதையாகப் படைக்கும் போது சொற்களின் இயலாமையைக் கடக்க முயல்கிறான். இப்படிக் கடக்கும் முயற்சி புதிய சொல்லாடல்களுக்கு, மொழிக்கு அசலான வளம் சேர்க்கும் பயன்படுத்துதலுக்கு அவனை இட்டுச் செல்கிறது. புனைகதை வாசகன் பழகிய சொற்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் முன்னெச்சரிக்கையோடு நகர்வது. கவிதை சொற்களை, மொழியைப் பயன்படுத்துவதில் வாசிப்பதில் கற்பனையும் புதுமையுமான தளத்துக்கு வாசகரை இட்டுச் செல்வதாகும். ஆன்மீகத்துக்கும் கவிதைக்கும் அடிப்படையான ஒற்றுமை இரண்டுமே வாழ்க்கையின் புதிர்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதை முன் வைப்பதே. வாழ்க்கையின் விடை தெரியாத கேள்விகளை, வாழ்க்கையின் அடிப்படையான கேள்விகளை ஆன்மீகமும் கவிதையும் எப்போதும் தொடுகின்றன. குறிப்பாக நவீன கவிதை இந்த இயங்குதலினாலேயே முக்கியத்துவம் பெறுவது.
யுவனின் நீள் கவிதை பற்றிய மனத்தடை ஒன்றே. அதை நான் கடக்கவில்லை. ஆனாலும் இன்னும் மீள் வாசிப்பில் எனக்குள் விவாதித்தபடி இருக்கிறேன். கவிதையின் மிகப்பெரிய பலம் அது சொற்களை விரயம் என்னுமளவு வாரி இறைக்கும் புனைவு எழுத்தை - கதை அல்லது கட்டுரை - தனது சொற்சிக்கனத்தில் எள்ளுவது. குறிப்பாக யுவன் புனைகதை, கவிதை இரண்டுமே கைவரும் அபூர்வ உயிரினமானவர். காவியமாயில்லாத ஆன்மீகப் பொறியின் அடிப்படையிலான கவிதை எழுதியவர் ஏன் நீள் கவிதை எழுதினார்? இந்தக் கேள்வி என்னுள் இன்னும் நெருடியபடி தான் இருக்கிறது.
•Last Updated on ••Monday•, 18 •April• 2016 21:35••
•Read more...•
ஜெயந்தி சங்கரின் சிறுகதை கடத்தல்காரன் - நவீனத்துவத்தின் நுட்பம்
யதார்த்தவாதம் என்னும் புனைவு மற்றும் வாசிப்பு இன்றும் இருப்பதே. நவீனத்துவம் அதன் மாற்றாக அதை அனுப்பி விட்டு வந்ததல்ல. நவீனத்துவம் வாசகரின் வாசிப்பும் புரிதலும் செறிவு பெற்றதன் அடையாளம்.. இன்று படைப்பாளிகளுக்கு யதார்த்த நவீனப் புனைவு இரண்டுமே உள்ளடக்கம் அல்லது மையக்கருவை ஒட்டி பாங்காகப் பயன்படுகின்றன.
ஒரு பிரதிக்குள் என்ன வர வேண்டும் என்பது ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட சுதந்திரமான தேர்வு. அவர் சிந்தனையைத் தூண்டும், மனமாற்றத்தை வேண்டும் ஒரு கருத்தை முன் வைக்கலாம். அது அவர் மனதில் தீவிரமாகப் படும் ஒன்றை அவர் வாசகருடன் பகிர்வது இயல்பானதே. அது பிரசாரமாக இல்லாமல் கலையாக நுட்பமாக வெளிப்படும் போது இலக்கியத்துக்கு அணி சேர்க்கும் பங்களிப்பாகிறது.
முதலில் ‘கடத்தல்காரன்’ சிறுகதையை வாசிப்போம். அதற்கான இணைப்பு -- இது.
முதல் வாசிப்பில் நாம் இதை என்னவாகக் காண்கிறோம்? கதை சிங்கப்பூரில் நடப்பதை நாம் ரயில் பயணத்தின் ஊடேயும் மற்றும் உரையாடல்கள் வழியும் அறிகிறோம். இல்லையா? சீன முதியவர் பலரிடமும் மிகவும் அடக்கமான குரலில் மெலிதாகக் கேட்டது என்ன என்பதும் நமக்குத் தெரியும். அதை ஏன் மெலிதான குரலில் கேட்டார் என்பதும். சிங்கப்பூரில் பிச்சை எடுப்பது சட்டரீதியாகக் கடுமையாகத் தடை செய்யப்பட்டது. பிச்சை போட்டவரும் விதிவிலக்கல்ல. தண்டனை உண்டு. பலரிடமும் கேட்டவர், மலாய், சீன, தமிழ் பயணிகளிடம் அவர் பாரபட்சமின்றிக் கேட்கிறார். இறுதியில் ஒரு தமிழ்ப் பயணி பயந்து பயந்து ஆனால் தவறாமல் தந்து செல்கிறார். இதற்குப் பிறகு நாம் கதையின் தலைப்பைப் படிக்கிறோம். கடத்தல்காரன். யார் கடத்தினார்? எதைக் கடத்தினார்? கடத்தல் என்பது என்ன? ஒரு ஊரில் கிடைக்க அரிதான ஒன்றை, வேறு ஊரிலிருந்து கள்ளத்தனமாகக் கொண்டு வருவது இல்லையா? சிங்கப்பூரில் சட்டம் மற்றும் பண்பாட்டு அடிப்படையில் பிச்சைக்காரர்களை ஊக்குவிக்காத பாரம்பரியம் இருக்கும் போது தமிழ் ஆள் அங்கே தமது ஊர்க் கலாச்சாரமான பிச்சை போடுவதைக் கடத்தி விட்டார்.
கதையின் மிகப்பெரிய பலம் தலைப்பு கதையின் மீது வைக்கப்பட்ட ஒரு திலகம் போலில்லாமல் கதையின் முக்கியமான அங்கமாக கதாசிரியர் தம் பதிவைப் புரிந்து கொள்ள வைத்திருக்கிற முக்கியமான பதப் பிரயோகமாக வந்திருப்பது கவிதைகளில் மட்டுமே காணப்படுவது. சிறுகதைகளில் அபூர்வமாகவே கிடைப்பது. மிகவும் பாராட்டத்தக்கது.
•Last Updated on ••Sunday•, 10 •April• 2016 05:18••
•Read more...•
குட்டி ரேவதியின் கவிதை "சாம்பல் பறவை"
கீற்று இணைய தளத்தில் வெளியான குட்டி ரேவதியின் கவிதை "சாம்பல் பறவை" கவிதைக்கான இணைப்பு -- இது.
சின்னஞ்சிறிய கவிதை. கவிதையின் பெரும்பகுதி நேரடியானது. ஒரு இளம் பெண் தனது நம்பிக்கைகளையெல்லாம் குவித்து ஒரு இளம் பெண் காத்திருக்கிறாள் தனது காதலனுக்காக. அவளது எதிர்பார்ப்புக்கள், மனதில் பொங்கும் உற்சாகம் இவை ஒரு பெண்ணின் தரப்பிலிருந்து மிகவும் நுட்பமாகவும் அழுத்தமாகவும் தரப்பட்டிருக்கிறது. சரி நான் இதை எந்த அளவு புரிந்து கொள்வேன்? அனேகமாகப் புரிந்து கொள்ளவே மாட்டேன். ஏனென்றால் நான் ஆண். தனது காதலனை எந்த அளவு ஒரு காதலி தன் வாழ்க்கையின் மையமாக்கி, அர்ப்பணிப்புடன் அவனே யாவுமாக ஒரு வாழ்க்கையைத் தொடங்க விரும்புவாள் என்பது எனக்குப் புரிதலுக்கான ஒன்று அல்ல. என் காதலி என்னிடம் அப்படித்தான் இருக்கிறாள் என்பது கூட எனக்கு ஒரு பொருட்டல்ல. என்ன? பெண்களின் உணர்வுகள் தானே ஆண் புரிந்து கொள்ளும் கட்டாயம் என்ன இருக்கிறது என்பதே காரணம்.
அதே சமயம் குட்டி ரேவதி ஒரு எளிய காதல் கவிதையை எழுத இந்தக் கவிதை வழியாக முயலவில்லை என்பதே இதை வாசிப்பதில் நாம் கவனப்படுத்திக் கொள்ள வேண்டியது. கவிஞர் ஒரு இளம் பெண்ணின் உற்சாகத்துக்குப் பின் இருக்கும் மன எழுச்சியை மட்டும் சுட்டிக் காட்ட விரும்பவில்லை. அவர் அந்தப் பெண்ணுக்காகக் காத்திருக்கும் நிச்சயமின்மையை, அவளது பரிபூரண அர்ப்பணிப்பு எதிர் கொள்ளப் போகும் அடக்குமுறைகளையும் சேர்த்தே சொல்ல விரும்புகிறார். கவிதையின் துவங்கு பத்தியையும் இறுதி பத்தியையும் இதற்கான பதிவுகளாகத தருகிறார்.
•Last Updated on ••Thursday•, 10 •March• 2016 19:00••
•Read more...•
இடாலோ கால்வினோவின் சிறுகதை - நூலகத்தில் ஒரு தளபதி
வாசிப்பு என்பது புத்தகப் பிரியர்களுக்கு வேறு எதையும் விட உவப்பானது. ஆனால் வாசிப்பு என்பதை அதன் பயன் (அல்லது கெடுதல்) என்ன என்பதை ஒரு அதிகார அமைப்பால் நிறுவ முடியுமா? இந்த ஆர்வமூட்டும் சரடை மையமாகக் கொண்ட இடாலோ கால்வினோ படைப்பான "நூலகத்தில் ஒரு தளபதி" என்னும் கதையை சொல்வனத்தில் மாது மொழி பெயர்ப்பாகத் தருகிறார். அதற்கான இணைப்பு இது. ராணுவ ஆட்சியிலிருக்கும் பாண்டூரியாவின் ராணுவத் தலைமைக்கு தமது அதிகாரத்துக்கு எதிரான கருத்துக்கள் புத்தகங்கள் வழி பரவுகின்றனவோ என்னும் ஐயம் எழுகிறது. எனவே அவர்கள் அந்த நாட்டின் மிகப் பெரிய நூலகத்தில் உள்ள புத்தகங்களை வாசித்து ஆராய்ந்து அவற்றை ஆபத்தானவை மற்றவை என இரு பிரிவுகளாகப் பிரித்து ஒரு அறிக்கை தருவதற்கு ஒரு சிறிய படையையே அனுப்புகிறது.
ஒரு சின்னஞ்சிறிய கதை வழியே நம்மை ஒரு மிகப் பெரிய கேள்விக்கு நெருக்கமான அண்மையில் கொண்டு நிறுத்துகிறார் கால்வினோ. வாசிப்பு என்பதில் நாம் எதைத் தேர்வு செய்கிறோம்? எதை வாசிக்கிறோம்? ஆரம்ப நிலை வாசகர் யாருமே மனதைக் கிளர்ச்சியுடன் வைத்து நீண்ட நேரம் வாசிக்கத் தக்க ஒரு பொழுது போக்கான கதையை மட்டுமே வாசிப்பார். ஆனால் அதற்கு அடுத்த நிலை வாசிப்பு நமக்கு அனேகமாக விமர்சகர்கள் பரிந்துரைத்தவை என்னும் அடிப்படையில் அல்லது தற்செயலாக ஒரு நண்பர் வியந்து வாசித்து நமக்கு இரவலும் கொடுத்தது என்னும அடிப்படையிலேயே அமைகிறது. இல்லையா?
•Last Updated on ••Wednesday•, 02 •March• 2016 01:15••
•Read more...•
சார்வாகனின் சிறுகதை "கனவுக் கதை"
சார்வாகன் பற்றிய அறிமுகமே இல்லாதிருந்தேன். சென்றமாதம் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கட்டுரைகள் வந்த போது அவருடைய படைப்புக்களை வாசிக்கவில்லையே என்னும் வருத்தம் ஏற்பட்டது. காலச்சுவடு அவருக்கான அஞ்சலியுடன் அவரது சிறுகதையையும் பிப்ரவரி 2016 இதழில் வெளியிட்டிருக்கிறார்கள். அஞ்சலிகளுக்கு இது ஒரு மாதிரியாக இருக்கும். அஞ்சலி செலுத்தும் போது கூட ஒரு எழுத்தாளர் வாசிக்கப் படவில்லையென்றால் அவர் கவனம் பெறவில்லை என்னும் அஞ்சலி ஆதங்கமும் பொருளற்றுப் போகிறது இல்லையா?
இந்த இடத்தில் நாம் ஆளுமை வழி வாசிக்கும் மனப்பாங்கினால் மட்டுமே சார்வாகன் போன்ற நவீனத்துவ முன்னோடிகளைப் பற்றி அறியாமல் போகிறோம் என்பதைப் பற்றியும் வேண்டும். ஒரு ஆளுமை கவனிக்கப்படுவது தம்மை கவனப்படுத்த முயற்சி எடுப்பது இவை எழுதப்படாத விதிகளாக ஆகி விட்டன. எழுதும் எந்த ஒரு படைப்பாளியின் தடமும் முயற்சிகளால் ஆன ஒரு சங்கிலியே. அதன் ஒரு கண்ணி தங்கமாகவும் மற்றொன்று பித்தளையாகவும் பிறிதொன்று இரும்பாகவும் இருக்கலாம். ஒரு படைப்பின் வெற்றி அதைப்படித்த பின் நம்முள் தொடரும் சிந்தனையின் சரட்டிலேயே வெளிப்படுகிறது.
தான் பார்த்த ஒன்றை, தம்மை பாதித்த ஒன்றைப் பகிர்ந்து கொள்ளும் எளிய முயற்சி தான் எழுத்து என்பது மிகவும் எளிமையான புரிதல். தனது சிந்தனை மற்றும் கற்பனையின் பொறி ஒன்றின் வழி வாசகனை ஒரு ஆழ்ந்த தரிசனத்துக்கு இட்டுச் செல்லும் இலக்கியமாக்கும் முயற்சிதான் எழுத்து. புதிய தரிசனத்துக்கு ஆழ்ந்த புரிதலுக்கு தீவிரமான சிந்தனைக்கு இட்டுச் செல்லும் ஒரு படைப்பு வாசித்து முடித்தவுடன் நம்முள் இயங்குகிறது. வாசிக்கும் போது படைப்பாளி தென்படுவதில்லை. வாசித்த பின் படைப்பும் தென்படாமல் அது முன் வைத்த தரிசனமே நம்முள் தொடர் சிந்தனையில் இயங்குகிறது.
•Last Updated on ••Monday•, 22 •February• 2016 23:16••
•Read more...•
அறைக்குள் புகுந்த தனிமை- சந்திராவின் மைல் கல்லான சிறுகதை
தமிழின் நவீனப் புனைகதைகளில் மைல் கல்லான கதைகள் என எப்போது தேர்வு செய்தாலும் சந்திராவின் 'அறைக்குள் புகுந்த தனிமை இடம் பெறும். சந்தேகமே கிடையாது. ஆறு வருடங்கள் ஆகிவிட்டன வெளியாகி. இப்போது வாசிக்கும் என்மீது அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையான கதை. முதலில் வாசியுங்கள். இணைப்பு இது.
ஆணாதிக்க மனப்பான்மை (male chaunism) என்பது தான் என்ன? அது ஒரு நோயா? இல்லை காலம் காலமாக ஊறிய மனப்பான்மையா? இவை எல்லாமேயா? இதுதான் ;அனேகமாக எல்லா ஆண்களிடமுமே இருக்கிறதே. கொஞ்சம் பெண்கள் சகித்துக் கொண்டு போனால் தான் என்ன?
மேற்கண்ட கேள்விகளுக்கு இப்போது நாம் விடைகளை அறிவோம். ஏனெனில் கதையை நீங்கள் படித்து விட்டீர்கள்.
எனக்கு வாயில் வந்த படி அடுத்தவர்கள் பற்றி எதாவது மட்டமாகப் பேசுவதில் மிகவும் லயிப்பு அதிகம். போகிற போக்கில் உங்கள் மத குரு, உங்க:ளுக்குப் பிடித்த சிந்தனையாளர், அரசியல் தலைவர் என யாரைப் பற்றி வேண்டுமானாலும் மிகவும் மட்டமான மொழியில் ஏதேதோ பேசிக் கொண்டே போகிறேன். உங்களுக்குள் அது என்ன மாதிரியான வேதனையை, வலியை, காயத்தை, அவமதிப்பை, அவமானத்தை, ஆத்திரத்தை, கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது என்பது பற்றி எனக்கு என்ன அக்கறை. வாயில் வந்த படி பேசுவது என் அடிப்படை உரிமை இல்லையா?
மேலே உள்ள உதாரணம் சொரணை பற்றியது. பெண்களுக்கென சில பிரத்யேக சொரணைகள் (finer sensitivities or unique senstitivities) உண்டு. அதை நாம் தெரிந்து கொள்ள முயல்வதே இல்லை. ஏனென்றால் நான் ஆண். பெண் என்னைப் பொறுத்துக் கொண்டு தான் போக வேண்டும். அதனால் அவளது சொரணைகள் பற்றி எனக்கு என்ன தெரிய வேண்டும்? ஒன்றும் தேவையே இல்லை. சரி. அவளை நான் புண்படுத்தி விட்டால் தான் என்ன? ஆண் துணையில்லாமல் பெண்ணால் வாழ முடியுமா? இத்யாதி இத்யாதி சிந்தனைகள் எனக்குள் ஊறி இருக்கின்றன.
•Last Updated on ••Monday•, 22 •February• 2016 23:10••
•Read more...•
பெண் உலகம் பற்றி ஒரு புரிதல் -நைஜீரிய எழுத்தாளர் சிமமாண்டா நகோஜி அடிச்சி (Chimamanda Ngozi Adichie)
ஆண் பெண் இரு வேறு உலகங்கள் என்பது கால காலமாக நிலைத்து விட்ட ஒன்று. அது இயல்பானதுமே. அதில் தவறொன்றுமில்லை. ஆனால் குறைந்த பட்சப் புரிதல் ஒருவர் உலகை பற்றி இன்னொருவருக்குத் தேவை. அன்பில் பிணைய, புண்படுத்தாமல் இருக்க, சேர்ந்து பணியாற்ற, பரஸ்பரம் உற்ற துணையாய் நிற்க எனக் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நாம் காண்பது என்ன? பெண்ணுக்கு ஆணின் உலகைப் புரிந்து கொள்வதில் அக்கறை அதிகமாக இருக்கிறது. அதற்குக் கட்டாயம் மட்டுமே காரணம். இல்லையேல் அந்தப் பெண் உணர்வு பூர்வமாகக் குடும்பத்துக்குள்ளும் நிராகரிப்பும் கொச்சைப்படுத்தப் படுதலுமென சமூகத்துக்குள்ளும் தாக்குதலுக்கு ஆளாவாள்.
அடிச்சி சமகால நைஜீரிய எழுத்தாளர். Purple Hibiscus, Half of a yellow sun, Americana ஆகிய இவருடைய நாவல்கள் மிகவும் புகழ் பெற்றவை. பெண்ணாயிருப்பது என்பது என்ன அதன் வலியும் அவள் மீதான வன்முறைகளும் எத்தகையவை என்பதை ஒரு சொற்பொழிவில் நமக்குப் புரிய வைக்கிறார். நகைச்சுவையும் நுட்பமாக வெளிப்படும் அறச்சீற்றமுமான அந்த உரைக்கான இணைப்பு -- இது.
உயர்பதவிகளில் இன்றைய நிலவரம் கூடப் பெண்கள் மிகவும் குறைவானோரே. உண்மையில் யார் தலைமை ஏற்று வழி நடத்த முடியும்? அதை அவர் ஆண்பால் அல்லது பெண்பால் என்னும் பால் அடிப்படையில் முடிவு செய்ய இயலுமா? தனது குழுவை சகபணியாளர்களை வழி நடத்தக் கூடியவர், கற்பனை வளமும், புதிய இலக்குகளை எட்டும் உற்சாகமும் உடையவர் என்பதே அடிப்படையாக இருக்க முடியும். இன்றைய சிந்தனை அவ்வழியிலேயே செல்வது. ஆனால் நாம் இன்னும் பெண்கள் தலைமை ஏற்கும் ஒரு சூழலை உருவாக்கவே இல்லை. அடிச்சி நாம் பெண்களை குழந்தைப்பருவத்திலிருந்தே எப்படி நடத்துகிறோம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
இன்றைய சூழலில் நாம் அனைவருமே பெண்ணியவாதிகளாக மாற வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். பெண்ணியம் பேசுவது மேற்கத்திய சிந்தனை என்னும் அணுகுமுறையைக் கண்டிக்கிறார். திருமணத்துக்கு முன் ஒரு பெண் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு நாம் தரும் முக்கியத்துவம் அவளுக்குத் தரும் போதனைகள் ஏன் ஒரு இளைஞனுக்கு நாம் தருவதே இல்லை என்னும் கேள்வியை அவர் எழுப்புகிறார்.
•Last Updated on ••Wednesday•, 27 •January• 2016 20:10••
•Read more...•
ரிஷான் ஷெரிஃபின் 'காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்' - மாயயதார்த்தத்தின் வலிமை
ரிஷான் ஷெரிஃபின் 'காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்' சிறுகதைக்கான இணைப்பு ----- இது
வாசிப்பிலும் படைப்பிலும் சிறுகதையின் இடமே முதன்மையானது. இருப்பினும் படைப்பாளிகளால்சிறுகதை என்னும் உருவம் உள்ளடக்கத்தை ஒட்டியே தேர்ந்தெடுக்கப் படுகிறது. நவீனத்துவத்தில் சிறுகதையின் வீச்சு மேம்பட்டு ஆகச்சிறந்த வடிவம் இதுதானோ என்று அதிசயிக்க வைக்கிறது. ஆனால் சிறுகதை வடிவத்துக்கு வரம்புகள் உண்டா? என்ன வரம்புகள்? படைப்பாளிக்கு மட்டும் சில இடத்தில் முட்டி நின்றுவிட நேர்வதா? ஏன் அப்படி ஆக வேண்டும்? அடுத்ததாக வாசகனுக்கு சில தடைகள் உண்டா? சொற்களின் ஆற்றலுக்கும் வாசகனுக்கும் கூட தாண்டிச்செல்ல முடியாத இடங்கள் உண்டா?
உண்டு. நம்மால் நுட்பமாகப் புரிந்து கொள்ள முடியாத உணர்வுக் கோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளிகள் உண்டு. நுட்பமான தருணங்கள் ஆழ்மன பிரக்ஞை அல்லது வெளிமனப் பிரக்ஞை எனப் பகுத்தறிய முடியாத தளத்தில் சலனப்பட்டு மறைபவை. அவற்றை நாம் புழங்கும் சொற்களால் நம் மனம் பழக்கப்படுத்தப்பட்ட வாசிப்பு மற்றும் உள்வாங்குவது நம் உள்ளார்ந்த தடைகளால் இயலாத ஒன்று.
இந்த இடத்தில் தான் மாயயதார்த்தத்தின் வீச்சு படைப்பாளி வாசகன் இருவருக்கும் இவற்றைத் தாண்டிச் செல்ல உதவுகிறது., காட்சி என்னும் ஊடகம் வாசிப்பு ஊடகத்தை ஒப்பிட நுட்பங்களைப் புரிய வைப்பதில் கையாலாகாதது. மாய யதார்த்தம் வார்த்தை என்னும் வடிவம் செயலிழக்கும் இடத்தை எளிதாகக் கடந்து செல்லுகிறது. நவீன கவிதையின் பலம் நாம் பழக்கப்பட்ட காட்சி அல்லது உரையாடலைக் காட்டி நாம் தடுமாறும் புள்ளியைத் தாண்டி ஒரு ஆழ் தரிசனத்துக்கு இட்டுச் செல்வது. மாய யதார்த்தம் காட்சி வழி நவீன கவிதை நம்மை உடன் அழைத்துச் செல்லும் மாயத்தை புனைகதைக்குள் கொண்டு வருவது.
•Last Updated on ••Thursday•, 21 •January• 2016 07:26••
•Read more...•
நவீன கவிதை - காட்சிப்படுத்துதலிலிருந்து தரிசனமும் புரிதலும்
என் நூற்றாண்டு / MY CENTURY என் நூற்றாண்டு – தேவதச்சன் –
துணியால் வாயைப் பொத்தி அழுதபடி ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள் என் பஸ் நகர்ந்து விட்டது. படிவங்களை நிரப்பத் தெரியாமல் ஒரு முதியவர் மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார் என் வரிசை நகர்ந்து விட்டது. தண்டவாளத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு தண்ணீர் தண்ணீர் என்று கையசைத்துக் கொண்டிருக்கிறான் என் டிரெயின் நகர்ந்து விட்டது எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ அவ்வளவு நேரம்
தேவதச்சனின் கவிதை அதன் ஆங்கில் மொழிபெயர்ப்பு மற்றும் கவிதை பற்றிய விமர்சனம் இவை மூன்றுமே பதாகை இணைய தளத்தில் வாசிக்கக் கிடைத்தன. அவற்றிற்கான இணைப்பு : இது.
•Last Updated on ••Wednesday•, 13 •January• 2016 05:41••
•Read more...•
விமுக்தா – மீட்சி (சாகித்திய அகாதமி விருது கதை)
இந்த வாரம் நாம் சொல்வனம் 20.12.2015 இதழில் வெளியாகி இருக்கும் தெலுங்குப் பெண் எழுத்தாளர் வோல்காவின் மீட்சி என்னும் சிறுகதையை வாசிப்போம். இந்த சிறுகதையின் தலைப்பிலான தொகுதிக்காக அவருக்கு 2015 சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. புராணங்கள் அல்லது இதிகாசங்களிலிருந்து தேர்ந்தெடுத்த ஒரு கதையை, கதாபாத்திரங்களை நவீனக் கதையில் மையப்படுத்தி எழுதும் முறை நமது பண்பாடு பற்றிய ஒரு புதிய கோணத்திலான பார்வையை நமக்கு அளிப்பது.
புதுமைப்பித்தனின் சாப விமோசனம் தமிழில் மிகவும் விவாதிக்கப்பட்ட சிறுகதை. அதை வாசிக்காதவர்கள் இந்த இணைப்பின் வழி வாசிக்கலாம்--- சாபவிமோசனம் இணைப்பு.
ராமனும் சீதையும் மணமுடிக்கும் முன்பே வனவாசம் புகும் முன்பே அகலிகைக்கு சாபவிமோசனம் கிடைத்து விடுகிறது. கௌதமரிடம் மன மாற்றம் இருக்கிறது. மனமறிந்து குற்றம் புரியாத அகலிகை குற்றமற்றவள் - சினத்தால் சாபமிட்ட தானே குற்றவாளி என்னுமளவு அவருள் தெளிவு பிறக்கிறது. பிர ரிஷி பத்தினிகளின் இளப்பப் பார்வையும் ஏளனமும் அகலிகையை மனமுடையச் செய்கின்றன. வனவாசம் முடிந்து வரும் சீதையைச் சந்திக்கிறாள். அவளை அக்கினிப்பிரவேசத்தின் மூலம் ஊருக்குத் தன் கற்பை நிரூபிக்கச் சொன்னார் ராமன் என்று தெரிந்ததும் மீண்டும் கல்லாகி விடுகிறாள். மற்றொரு சந்ததி சதானந்தனைத் தவிர வேண்டும் என்று அவளை அணுகும் கௌதமர் கைக்கு அவளது கற்சிலையே கிடைக்கிறது. இதுவே புதுமைப்பித்தனின் சிறுகதைச் சுருக்கம்.
ராமாயணத்தில் (பக்தியுடன்) வாசிப்பவர்களால் அனேகமாக கவனிக்கப் படாமற் போன ஒரு கதாபாத்திரம் ஊர்மிளை (லட்சுமணனின் மனைவி). மைதிலி சரண் குப்த என்னும் செவ்விலக்கிய கால ஹிந்திக் கவிஞர் 'ஊர்மிளா கா விரஹ்' என்னும் காவியம் அது வெளியான செவ்விலக்கிய காலத்தில் பக்திப் பரவசமாகாமல் ராமாயணத்தை அணுகிய முன்னோட்டமான முயற்சி என்று நாம் கருதலாம். இந்த நூல் அடிப்படையில் 'ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி என்னும் ஆய்வு நூலை நான் எழுதத் தூண்டு கோலாக அமைந்தது. ராமாயணத்தில் சீதை நடத்தப்பட்ட விதம் பெரிதும் விவாதத்துக்கு உள்ளாகிறது. அந்த நூலில் நான் எல்லா கதாபாத்திரங்களின் முரணான நிலைப்பாடுகளைக் கேள்விக்கு உள்ளாக்கி இருந்தேன்.
•Last Updated on ••Monday•, 04 •January• 2016 18:50••
•Read more...•
ஊடகங்களுக்கு மனசாட்சி உண்டா? இருக்க வேண்டுமா? - கீற்று இணையக் கட்டுரையை முன் வைத்து - சத்யானந்தன்
இந்தக் கேள்வி முதலில் எழுப்பப் படலாமா என்ற சர்ச்சைக்கே இடமுண்டு. ஊடக சுதந்திரம் என்ன விலை கொடுத்தாலும் நிலை நாட்டப்பட்டுப் பேணப் பட வேண்டியதே. ஊடகங்களே ஒரு சமுதாயத்தின் ஒற்றைச் சாளரம் என்றே சொல்லி விடலாம். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஊடகத்தில் வெளிவருபவையின் உள்நோக்கம், அரசியல், வணிக நோக்கம் எவ்வளவோ இருக்கலாம். ஆனால் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டால் சமூகத்தின் முன் எந்த விஷயமுமே வெளிச்சமுமாகாமல் விவாதிக்கவும் படாமல் பெரிய அநீதிகள், சுரண்டல்கள், மீறல்கள் எதுவுமே வெளிவராமற் போகும். தம் உரிமைகள் என்ன என்று மக்களுக்கு நினைவூட்டும் அதைப் பறிக்கும் செயல்களை வெளிச்சமிடும் அரும்பணிக்கு இடமே இன்றிப் போகும். சமுதாய மாற்றத்துக்கு நம்பிக்கை தரும் ஒரே பாதை அடைபட்டுப் போகும்.
அதே சமயம் இந்திய அரசின் ஊடகச் சட்டங்களை வாசித்தவர்கள் அறிவார்கள் சாராம்சமாக சட்டங்கள் சொல்வது சுயகட்டுப்பாடு ஒன்றையே. ஒழுங்குமுறையாளர் கேட்பது ஒரு விளக்கமே. கடும் சட்டங்கள் 1977க்கு முன் இருந்தன. இது ஒரு பெரிய சரடு. பின்னர் காண்போம்.
எனவே ஊடகங்கள் சட்ட அடிப்படையிலோ அல்லது தார்மீக அடிப்படையிலோ சுயகட்டுப்பாடு ஒன்றைக் கண்டிப்பாகக் கொள்ளத் தான் வேண்டும். ஊடகங்களில் வரும் பரபரப்பான பலவற்றை நான் வாசிப்பதே இல்லை. குற்றங்களுக்கும் வம்புகளுக்கும் வதந்திகளுக்கும் தரப்படும் முக்கியத்துவம் பல சமயங்களில் தரக்குறைவானவை. எனவே இளையராஜாவுடன் ஊடக நிருபர் ஒருவருக்கு என்ன மோதல் என்றெல்லாம் நான் ஆழ்ந்து போகவே இல்லை. தற்செயலாக இன்று (23.12.2015) தமிழ் ஹிந்து நாளிதழில் 'வெள்ளச் சேதம் பற்றிய விவாதம் திசை மாற பீப் பாடல் குறித்த சர்ச்சையே காரணமா என்று ஒரு கணிப்புக்கான கேள்வியைப் பார்த்தேன். அது என்னை உலுக்கிப் போட்டது.
•Last Updated on ••Monday•, 04 •January• 2016 18:47••
•Read more...•
அன்பு 'பதிவுகள்' வாசகருக்கும் உலகெங்கும் உள்ள தமிழ் நண்பர்களுக்கும் வணக்கம். அச்சில் மற்றும் இணைய வெளியில் வெளியாகும் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கவிதை, கட்டுரை யாவுமே நம் வாசிப்பை வளப்படுத்துபவை. ஒரு விமர்சகராக மற்றும் வாசகராக அவற்றுள் சிலவற்றைப் பகிர விரும்புகிறேன்.வாய்ப்பளித்த வ.ந.கிரிதரன் அவர்கட்கு நன்றிகள். அன்பு சத்யானந்தன்.
மொழிபெயர்ப்பு சிறுகதை அவள் நகரம், அவள் ஆடுகள் ( ஜப்பான் : ஹாருகி முரகாமி; ஆங்கிலம் : கிக்கி தமிழாக்கம் : ச. ஆறுமுகம் ) மலைகள் இணைத்தில் வெளிவந்திருக்கும் முரகாமியின் அற்புதமான சிறுகதைக்கான இணைப்பு இது. மொழிபெயர்ப்பு நம் தமிழில் எழுதப்பட்ட கதை இது என்னுமளவு நம்மை முரகாமிக்கு அண்மைப்படுத்துகிறது.
கதையின் இந்தப் பகுதி முத்தாய்ப்பானது மட்டுமல்ல நம் சிந்தனையைத் தூண்டுவது:
'சப்போரா விடுதியில் என்னுடைய சிறிய அறைக்கு மீண்டு வந்த நான், அந்தப் பெண்ணின் வாழ்க்கையோடு எனக்கும் தொடர்பு இருப்பதைத் திடீரென்று கண்டுணர்ந்தேன். அவளின் இருத்தலை என்னோடு பொருத்திப் பார்த்தேன். பெரும்பகுதி ஒத்திருந்தாலும் ஏதோ ஒன்று இடறுகிறது. எனக்குச் சரியாகப் பொருந்தாத ஆடையைக் கடன் வாங்கி அணிந்திருப்பதுபோல ஒரு உணர்வு. நான் இயல்பான இருப்பமைதி இல்லாததாக உணர்கிறேன். என் கால்கள் கட்டப்பட்டுள்ளன. முனை மழுங்கிய கைக்கோடாரி போன்ற ஒரு கத்தியால் அந்தக் கயிற்றை அறுப்பது குறித்து நினைக்கிறேன். அப்படி அறுத்துவிட்டால், நான் எப்படித் திரும்பி வருவேன்? அந்த நினைப்பு என்னைக் குலைக்கிறது. எப்படியானாலும் நான் அந்தக் கட்டை அறுத்தேயாகவேண்டும். அதிகமாக பீர் குடித்துவிட்டேன், அதனால் இப்படித் தோன்றலாம். பனியும் அந்த உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். என்னால் நினைக்கமுடிந்ததெல்லாம் அவ்வளவுதான். மெய்ம்மையின் இருண்ட சிறகுகளுக்கடியில் மீண்டும் நழுவி விழுந்தேன். என் நகரம். அவள் ஆடுகள்.'
•Last Updated on ••Monday•, 04 •January• 2016 18:48••
•Read more...•
சமகால எழுத்துக்களை அலுக்காமல், சளைக்காமல், அமைதியாகத்தன் போக்கில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி, விமர்சித்து, கவனப்படுத்தி வருபவர் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன் (முரளிதரன் பார்த்தசாரதி). பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீனவிருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, சங்கு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணையத்தளங்களிலும் தீவிரமாகத் தனதுபடைப்புகளைப்பிரசுரித்துள்ளார். இவரது சமீபத்திய கவிதைகள், கட்டுரைகள் பெரும்பாலும் திண்ணையில் வெளிவந்தவை. தொடராக 'ஜென் ஒரு புரிதல்', முள்வெளி- சமூகநாவல், போதிமரம்- சரித்திர நாவல், ராமாயணம் தொடங்கி வைத்த ஒரேகேள்வி என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை ஆகியவை திண்ணையில் பிரசுரங்கண்டன. இவை அச்சு வடிவில் வராதவை. புனைகதைகள், நாவல்கள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர். வாசிப்பையும் எழுத்தையும் இருகரைகளாகக் கொண்டு ஆரவாரம் இல்லாத மிக அமைதியான ஆறாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார் சத்யானந்தன். வாசகர்களும் படைப்பாளிகளும் அவரைக் குறித்து மேலும் அறிய வேண்டும் என்ற நோக்கில் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவரிடம் மின்னஞ்சல்வழி உரையாடி பதில்களைத் தொகுத்துள்ளார்.
ஜெயந்தி சங்கர்; உங்கள் புனைபெயர் குறித்த பின்னணியைச் சொல்லுங்கள்.
சத்யானந்தன்; அம்மா பெயர் சத்தியபாமா. எனது ஆதர்ச எழுத்தாளர் ஜெயகாந்தன் பெயர் போல என் பெயர் முடிய வேண்டும் என்ற ஆசை பதின்ம வயதிலேயே இருந்தது.
ஜெயந்தி சங்கர்; அண்மையில்எழுதிய, உங்களுக்கு திருப்தியளித்த உங்களுடைய விமர்சனம் எது?
சத்யானந்தன்; நவம்பர் 2015 உயிர்மையில் வந்த இமையத்தின் 'ஈசனருள்' என்ற நீள்கதைக்கு எழுதிய விமர்சனம்.
ஜெயந்தி சங்கர்; ஒரு தேர்ந்த வாசகனின் அடிப்படை அடையாளமாக எதைச்சொல்வீர்கள்?
•Last Updated on ••Tuesday•, 08 •December• 2015 22:31••
•Read more...•
|