••Saturday•, 06 •June• 2020 12:03•
?? - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - ??
முனைவர் ர. தாரணி பக்கம்
- முடிவுக்கு வந்தது தொடர் நாவல் மார்க் ட்வைனின் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்). கொரோனா தந்த விடுமுறையினை நன்கு பயன்படுத்தி முனைவர் ஆர்.தாரணி மிக விரைவாக, சிறப்பாக நாவலைத் தமிழாக்கம் செய்துள்ளார். அதனை அவர் மிகவும் விருப்புடன், மகிழ்ச்சியுடன் செய்துள்ளார். ஜூலை மொழிபெயர்ப்பு நூலுருப்பெறவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மேனாட்டு இலக்கியங்களைத் தமிழ் மொழிக்குக் கொண்டு வரவேண்டுமென்று பாடினான் மகாகவி பாரதி. அதற்கமைய நல்லதொரு ஆங்கில நாவலைத்தமிழுக்குக் கொண்டு வருவதற்குப் 'பதிவுகள்' களமாக இருந்ததையிட்டு உண்மையிலேயே மகிழ்ச்சியடைகின்றது. உண்மையிலேயே மகிழ்ச்சியும், திருப்தியும் தந்த பங்களிப்பு. இவ்விடயத்தில் முனைவர் தாரணியும் நிச்சயம் பெருமையும், மகிழ்ச்சியுமடையலாம். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் அவர் இது போல் மேலும் பல நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவரவேண்டுமென்று வாழ்த்துகின்றோம். - - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் நாற்பத்தி மூன்று
முதல் தடவையாக, டாமை நான் தனிமையில் சந்திக்க முடிந்தது. அவனின் ஏய்ப்பு வேலை சமயத்தில் அவனின் மனதில் ஓடிய எண்ணங்கள்தான் என்ன என்று அவனிடம் வினவினேன். ஏய்ப்பு செய்தது வெற்றியடைந்து அவனும் எப்படியோ சமாளித்து முன்பே சுதந்திரம் அடைந்த ஒரு நீக்ரோவை மீண்டும் ஒரு முறை விடுவித்திருந்தால் அதன் பின் என்ன செய்யவேண்டும் என்று அவன் திட்டம் தீட்டியிருந்தான்? முதலில் இருந்து ஆரம்பித்து அதே விஷயத்தை பின்பற்றி, மீண்டும் அந்தத் திட்டத்தை செயல்படுத்தியிருப்பேன் என்று அவன் பதில் கூறினான். எங்களின் பாதுகாப்பில் ஜிம் இருந்திருந்தால், நதியின் கீழ் பக்கமாக தோணியில் பயணம் செய்து, தப்பி ஓடி வந்த அவனைக் காப்பாற்ற வழி முழுதும் சாகசங்கள் செய்து நதியின் கரையை அடைந்திருப்போம் என்று கூறினான்.
அதன் பின்னர் ஜிம் ஒரு சுதந்திர மனிதன் என்ற உண்மையைக் கூறி, அவனை அங்கிருந்து ஒரு நீராவிப் படகில் ராஜமரியாதையோடு பாங்குடன் அழைத்து சென்றிருக்கலாம் என்றான். அவன் தொலைத்த நேரங்களை ஈடு கட்டப் பணம் கொடுத்து, அந்த ஊரின் அனைத்து நீக்ரோக்களையும் அழைத்து வரச் செய்து, ப்ராஸ் இசைக்குழுவினர் பாட்டிசைக்க, அவர்களை ஊரின் நடுவே ஒளிவிளக்கு அணிவகுப்பு மற்றும் வால்ட்ஸ் நடனம் ஆட வைத்திருக்கலாம் என்றான். அந்த ஆட்டத்தின் முக்கிய நாயகன் ஜிம்தான் என்றும் அப்புறம் துணை நாயகர்கள் நாங்கள் தான் என்றும் சொன்னான். ஆனால், திட்டம் அத்தனையும் தலைகீழாக மாறிவிட்டாலும், இத்தோடு முடிந்தது நல்லது என்றே நான் கருதினேன்.
கண் இமைக்கும் நேரத்திற்குள், சங்கிலிகளை கழற்றி வீசி ஜிம்மை விடுவித்தோம். டாமை நல்ல நிலைக்கு கொண்டு வர மருத்துவருக்கு ஜிம் செய்த உதவிகள் மற்றும் டாமுக்கு அவன் செய்த பணிவிடைகள் ஆகியவை அனைவருக்கும் தெரிய வந்ததும், போல்லி பெரியம்மா, சைலஸ் சித்தப்பா மற்றும் சேல்லி சித்தி ஆகியோர் ஜிம்முக்கு கணக்கிலடங்கா புகழாரம் சூட்டினார்கள். மிகச் சிறந்த முறையில் அவனை அவர்கள் நடத்தினார்கள். அவனுக்கு சாப்பிடத் தேவையான அனைத்தையும் கொடுத்து, அவன் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய்யும் சுதந்திரத்தையும் வழங்கினார்கள். சில முக்கியமான காரியங்களை விவாதிக்க, நோயாளி அறைக்கு அவனை நாங்கள் வரச் செய்தோம். சிறைக் கைதி பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாகவும், பொறுமையுடனும் நடத்திக் கொடுத்ததைப் பாராட்டி, டாம் அவனுக்கு நாற்பது டாலர்கள் பரிசு கொடுத்தான். மட்டற்ற மகிழ்ச்சியில் ஜிம் உயிரையே விட்டுவிடுவான் போல இருந்தது. ஆனந்தத்தில் இவ்வாறு கூவினான்:
•Last Updated on ••Tuesday•, 09 •June• 2020 00:42••
•Read more...•
••Saturday•, 23 •May• 2020 22:54•
?? - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - ??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் நாற்பத்தி இரண்டு
காலை உணவுக்கு முன்னதாக, அந்த முதியவர் திரும்பவும் ஊருக்குள் சென்று பார்த்தார். ஆனால், டாம் இருக்கும் இடம் பற்றி எந்தத் தகவலும் அவருக்குக் கிடைக்கவில்லை. அவரும், சேல்லி சித்தியும் மேசையினருகே சோகமாக அமர்ந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் உணவருந்தவில்லை. அவர்கள் முன் வைத்திருந்த காப்பியும் அருந்தப்படாமல் சில்லிட்டுப் போயிருந்தது. இருவரும் ஒன்றுமே பேசாது அமைதியாக இருந்தார்கள். இருவர் முகத்திலும் சோகம் ஒரு மெல்லிய திரை போலப் படிந்திருந்தது. சீக்கிரமே அந்த முதியவர் கேட்டார்: "நான் உன்னிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்தேனா?"
"என்ன கடிதம்?"
"நேற்று அஞ்சலகத்திலிருந்து நான் பெற்று வந்த கடிதம்."
"இல்லை. எந்தக் கடிதமும் நீங்கள் எனக்குக் கொடுக்கவில்லை."
"நல்லது. ஒருவேளை நான் மறந்து போயிருக்கலாம்."
தனது சட்டைப்பைக்குள் கை விட்டுத் துழாவி எதையோ தேடினார். அது கிடைக்காது போகவே, உள்ளே எங்கோ அதை வைத்த இடத்திற்குச் சென்று பார்த்தார். பின்னர், அதை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார்.
"ஏன், இது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து இருந்து வந்துள்ளது. இது சகோதரியிடம் இருந்து வந்திருக்கிறது." என்று அவள் கூறினாள்.
•Last Updated on ••Tuesday•, 09 •June• 2020 00:35••
•Read more...•
••Saturday•, 23 •May• 2020 22:54•
?? - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - ??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் நாற்பத்தி ஒன்று
வயதான அந்த மருத்துவர் மிகவும் கனிவு ததும்பும் முகத்துடன் நல்லவராகக் காணப்பட்டார். நானும், எனது சகோதரனும் ஸ்பானிஷ் தீவில் நேற்று வேட்டையாடிக்கொண்டு, நாங்கள் கண்டெடுத்த சிறு தோணியில் இரவு தங்கினோம் என்று அவரிடம் கூறினேன். இரவுத் தூக்கத்தில் ஏதோ கனவு கண்டதன் காரணமாகத் தெரியாத்தனமாக தனது காலால் துப்பாக்கியின் விசையை உதைத்ததால், அது விடுபட்டு அவனின் கெண்டைக்காலில் தோட்டா பாய்ந்து விட்டது என்றும் சொன்னேன். எனவே, என்னுடன் அந்த தீவுக்கு வந்து அவனின் காலைச் சரி செய்ய வேண்டும் எனவும், இது பற்றி யாருக்கும் தெரிவிக்கக் கூடாதென்றும் நான் அந்த மருத்துவரிடம் வேண்டிக் கொண்டேன். ஏனெனில், அன்றைய மாலை வேளையில் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் அளவு நாங்கள் தயாராகி, வீட்டில் உள்ளோர் அனைவரையும் வியப்பிலாழ்த்தப் போவதாக நாங்கள் திட்டமிட்டு வைத்திருக்கிறோம் என்று மேலும் கூறிச் சமாளித்தேன்.
"உங்கள் வீட்டில் உள்ளவர்கள் யார்?"
"கீழ் பக்கமாக வசிக்கும் பிலிப்ஸ் குடும்பத்தார்."
"ஓ!" அவர் ஆச்சரியமடைந்தார். ஒரு நிமிடம் யோசித்த அவர் மீண்டும் கேட்டார், "துப்பாக்கிக் குண்டு அவனை எப்படித் துளைத்ததென்று நீ கூறினாய்?"
"அவனுக்கு ஒரு கனவு வந்தது," நான் கூறினேன்," அதனால், அந்த துப்பாக்கி வெடித்து தோட்டா அவனைத் துளைத்தது."
"உண்மையிலேயே மிகவும் விசித்திரமான கனவுதான்" அவர் கூறினார்.
இவ்வாறு கூறியவாறே, அவரின் லாந்தர் விளக்கை ஏற்றி வைத்து, குதிரைச் சேணத்தில் பைகளை வைத்துத் தயாராகி, எங்களின் சிறிய படகு இருக்கும் திசை நோக்கி வந்தோம். ஆனால், படகைப் பார்த்ததுமே அதன் தோற்றம் அவருக்குப் பிடிக்கவில்லை. ஒருவர் அமர்ந்து செல்ல அதிகப்படியான இடம் கொண்ட படகானாலும், இருவர் அமர்ந்து செல்லப் பாதுகாப்பானது அல்ல என்று அவர் கூறினார்.
•Last Updated on ••Tuesday•, 09 •June• 2020 00:36••
•Read more...•
••Saturday•, 23 •May• 2020 22:54•
?? - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - ??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் நாற்பது
காலை உணவுக்குப் பின், நாங்கள் இருவரும் மிகவும் சந்தோசமாக உணர்ந்தோம். என்னுடைய சிறு படகை எடுத்துக் கொண்டு ஆற்றில் மீன் பிடிக்க ஒரு சுற்று சுற்றிவரச் சென்றோம். மதிய உணவை எங்களுடனேயே எடுத்துக் கொண்டு வந்து விட்டபடியால், பொழுது இனிமையாகவே கழிந்தது. என்னுடைய தோணிக்கும் சென்று சரிபார்த்தோம். நல்ல நிலையிலேயே அது இருந்தது. பின்னர், வெகு நேரம் கழித்து இரவு உணவு சமயம் வீடு திரும்பிய நாங்கள், மிகவும் கலவரமடைந்த நிலையில் அந்தக் குடும்பம் உள்ளதைக் கண்டோம். தங்களுக்கு நடக்கவிருக்கும் ஆபத்தை நினைத்துக் குழம்பித் திகைத்து செய்வதறியாது கலங்கி இருந்தார்கள். எது அவர்களைக் குடைகிறது என்று அவர்கள் வெளியே கூறாவிடினும், அனைவரும் இரவு உணவு அருந்தி முடித்த கையோடு, நேராக அவரவர் படுக்கைக்குச் சென்றார்கள். மற்ற அனைவரையும் விட எங்களுக்கு அங்குள்ள நிலைமை புரிந்திருந்ததால், அவர்களின் பிரச்னை என்ன என்று அவர்கள் எங்களுக்கு சொல்லத் தேவையில்லை.
கடைசியாக சேல்லி சித்தி தனது பின்புறத்தைக் காட்டியபடி சென்று மறைந்ததும், மாடிப்படிக்கட்டு பாதி ஏறிக் கொண்டிருந்த நாங்கள், திருட்டுத்தனமாக கீழே இறங்கி வந்து, பாதாள அறையின் அலமாரிக்குள் நுழைந்து கொண்டோம். எங்களின் உணவுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்து மூட்டை கட்டிக்கொண்ட பின் எங்களின் அறைக்குச் சென்றோம். எங்களின் படுக்கையில் படுத்துப்புரண்டு கொண்டிருந்த நாங்கள், இரவு பதினொன்றரை அளவில் மீண்டும் எழுந்து கொண்டோம். சேல்லி சித்தியின் உடையை டாம் அணிந்து கொண்டான். உணவுப் பொட்டலங்களைக் கையிலெடுத்துக் கொண்டு நகரும் வேளையில், டாம் கேட்டான்: "வெண்ணை எங்கே?"
“ஒரு பெரிய கட்டியை நான் எடுத்து வைத்திருந்தேனே" நான் கூறினேன் "அந்த மக்காச்சோள ரொட்டித் துண்டு மீது வைத்திருந்தேன்."
"ஓ, நல்லது. அதை நீ அங்கேயே விட்டுவிட்டு வந்திருக்க வேண்டும். ஏனெனில் அது இங்கே இல்லை."
"அது இல்லாமலும் நாம் இருக்கலாம்." நான் கூறினேன்.
•Last Updated on ••Tuesday•, 09 •June• 2020 00:36••
•Read more...•
••Saturday•, 23 •May• 2020 22:53•
?? - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - ??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் முப்பத்தி ஒன்பது
அன்று காலை ஊருக்குள் சென்று கம்பிகளோடு கூடிய எலிபிடிக்கும் கருவி நாங்கள் வாங்கினோம். அதை இருப்பதிலேயே பெரிய எலி வங்கின் அருகே வைத்து காத்திருந்தோம். ஒரு மணி நேரத்திற்குள்ளாகவும், புஷ்டியாய் தென்பட்ட பதினைந்து எலிகள் பிடித்து விட்டோம். பின்னர், எலி பிடிக்கப் பயன்படும் அந்தக் கருவியை, சேல்லி சித்தியின் படுக்கையின் கீழ் மறைத்து வைத்தோம்.ஆனால், கொஞ்ச நேரம் கழித்து, நாங்கள் சிலந்திகளைப் பிடிக்க அலைந்து கொண்டிருந்த நேரத்தில், குட்டி பிராங்கிளின் பெஞ்சமின் ஜெபர்ஸன் எலெக்சாண்டர் பிலிப்ஸ் அந்தக் கருவியைக் கண்டுபிடித்து, அந்த எலிகளால் வெளியே வர முடியுமா என்று சோதிக்க எண்ணி அதனின் கதவை திறந்து விட்டிருக்கிறான். அவைகளும் வெளியே வந்திருக்கின்றன. அந்த சமயத்தில் சேல்லி சித்தியும் அவள் அறைக்குள் வந்திருக்கிறாள்.
பிறகென்ன? நாங்கள் வீடு திரும்பிய வேளையில், அவள் தனது படுக்கையின் மீது நின்று கொண்டு தலை வெடித்துவிடும் போலக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள். அவள் களைப்படைந்து போகாவண்ணம், அந்த எலிகளும் அவளுக்குத் தண்ணி காட்டிக் கொண்டிருந்தன. நல்லதொரு மூங்கில் விளாறு கொண்டு சித்தி எங்கள் இருவரையும் வெளுத்து வாங்கினாள். அதெல்லாம் போக, மீண்டும் ஒரு பதினைந்து அல்லது பதினாறு எலி பிடிக்க எங்களுக்கு இன்னொரு இரண்டு மணி நேரம் பிடித்தது. முதல் முறையே நாங்கள் புஷ்டியான எலிகள் பிடித்து விட்டுவிட்டதால் இந்த முறை அவை எங்கள் கைக்குச் சிக்கவில்லை. முதலில் எங்களுக்குச் சிக்கிய குண்டு எலிகள் போன்றவை அதன் பிறகு என்னால் காண முடியவில்லை. எல்லாம் பாழாய்ப் போன அந்த வாண்டுப் பையன் செய்த வேலை!
சிலந்திகள், மூட்டைப்பூச்சிகள், தவளைகள், வெட்டுக்கிளிகள் என இது போன்ற பல உயிரினங்கள் கலந்த கலவையை நாங்கள் தயார் செய்து விட்டோம். தூக்கணாங்குருவிக்கூடு ஒன்று எங்களுக்குத் தேவைப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டில் அந்தக் குருவிக் குடும்பம் இன்னமும் வசித்துக் கொண்டிருந்ததால், அதை நாங்கள் கலைத்து எடுக்க விரும்பவில்லை. அதற்காக அந்தக் கூட்டை அப்படியே விட்டுவிடவும் எங்களுக்கு மனமில்லை. எங்களால் முடிந்த அளவு அந்த இடத்திலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தோம். ஒன்று அவைகளை நாங்கள் சலித்துப் போக வைக்க வேண்டும் அல்லது அவைகளால் நாங்கள் சலித்துப் போகவேண்டும் என்று கணக்கிட்டுக் கொண்டிருந்தோம்.
•Last Updated on ••Tuesday•, 09 •June• 2020 00:36••
•Read more...•
••Saturday•, 23 •May• 2020 22:53•
?? - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - ??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் முப்பத்தி எட்டு
எழுதுகோலைத் தயாரிப்பது மற்றும் மரம்அறுக்கும் ரம்பம் ஏற்பாடு செய்வது போன்றவை எங்களின் சக்திக்கு மீறிய செயலாக இருந்தது. உண்மையாகவே, ஒரு சிறைக் கைதி போன்றே தன்னைப்பாவித்துக் கொண்டு எழுதுகோலைக் கொண்டு சுவற்றில் எழுத்துக்களைப் பொறிக்கும் வேலை தனக்கும் மற்ற அனைத்தையும்விட மிகவும் சவாலான வேலையாக இருக்கும் என்று ஜிம்மும் கருதினான். ஆனால், அதைக் கண்டிப்பாகச் செய்துதான் ஆகவேண்டும் என்று டாம் உறுதியாகக் கூறிவிட்டான். தங்களுடைய பெருமை மிகுந்த குடும்பப் பெயருடன் சேர்த்து சில கருத்துக்களைச் சுவற்றில் பொறித்து வைக்காமல் எந்த ஒரு மாநிலக் கைதியின் சிறை நிகழ்வும் இருந்ததில்லை என்று டாம் கூறினான்.
"உதாரணத்துக்கு, சீமாட்டி ஜேன் க்ரே (இங்கிலாந்து நாட்டு உயர் குடிப்பெண் - முதலில் சிறையிலிடப்பட்டு பின் தூக்கிலிடப்பட்டாள்) அவர்களை எடுத்துக் கொள்ளலாம்," அவன் சொன்னான் "அல்லது பழைய நார்தும்பர்லாண்ட் நாட்டைச் சார்ந்த கில்ஃபோர்ட் டட்லி (ஜேன் க்ரேயின் கணவர் - அவரும் மனைவியுடன் சிறையிலடைக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்) என்பாரை எடுத்துக் கொள்வோம். ஏன், அவர்கள் அப்படிச் செய்யவில்லையா? இதில் என்ன கஷ்டம் இருக்கப் போகிறது? நாம் என்ன செய்ய முடியும்? இதை எப்படித் தவிர்க்க முடியும்? ஜிம்மும் அதே போன்றே தனது குடும்பப் பெருமை மற்றும் கூட சில விஷயங்களை பொறித்துத்தான் ஆக வேண்டும் . அவர்கள் எல்லாம் செய்தார்கள் அல்லவா!"
"ஆனால், மாஸ்டர் டாம்! எனக்குக் குடும்பப் பெருமை என்றெல்லாம் ஒன்றுமே இல்லை. இந்த கிழிந்த பழைய சட்டையைத் தவிர என்னிடம் வேறு ஒன்றும் இல்லை என்று உங்களுக்குத் தெரியும். அதிலும் நான் குறிப்பு எழுத வேண்டும்" ஜிம் பரிதாபமாகக் கூறினான்.
"அய்யோ, உனக்கு ஏன் புரிவதே இல்லை, ஜிம்! குடும்பப் பெருமை என்பது வேறு விஷயம். சட்டை பற்றிய விஷயம் இல்லை." டாம் கூறினான்.
•Last Updated on ••Saturday•, 06 •June• 2020 15:54••
•Read more...•
••Saturday•, 23 •May• 2020 22:53•
?? - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - ??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் முப்பத்தி ஏழு
அனைத்தும் தயாரான நிலையில் இருந்தது. வீட்டை விட்டுக் கிளம்பி, பழைய கால்செருப்புகள், கம்பளிகள், காலியான சீசாக்கள், பழுதடைந்த தகரங்கள் மற்றும் வேண்டாத பொருட்கள் குவித்து வைத்திருக்கும் குப்பைகள் பின்கட்டுக்குச் சென்றோம். சமையல் பாத்திரங்கள் கழுவிப் போட்டு வைக்கும் பெரிய தகரப் பாத்திரம் ஒன்றைக் குப்பைகளை நன்கு கிளறிப் பார்த்து கண்டெடுத்தோம். அதினுள்ளே இருந்த ஓட்டைகளை எங்களால் முடிந்தவரை அடைத்து, அதை கேக் தயாரிக்கும் பாத்திரமாக மாற்றினோம். வீட்டின் கீழ்புறம் உள்ள மளிகைப் பொருட்கள் வைக்கும் அறைக்கு அந்தப் பாத்திரத்தை எடுத்துச் சென்று மாவு நிறையத் திருடி அதில் வைத்து நிரப்பினோம். பின்னர், காலை உணவு சாப்பிடத் தயாரானோம்.
நீண்ட ஆணிகள் ஒரு சிலதும் நாங்கள் கண்டெடுத்தோம். ஒரு சிறைக் கைதி தன்னுடைய பெயரையும், துன்பங்களையும் பற்றிச் சுவற்றில் கிறுக்க அந்த ஆணிகள் சிறந்ததாக இருக்கும் என்று டாம் கூறினான். தப்பி ஓடிவந்துள்ள நீக்ரோவை அன்று காலை அவர்களின் அப்பாவும் அம்மாவும் பார்க்கவிருப்பதாக அங்கிருந்த குழந்தைகள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். எனவே, அந்த ஆணிகளை சித்தப்பா சைலஸ் உடையிலும், சேல்லி சித்தி உடையிலும் எனப் பிரித்து மறைத்து வைத்தோம். அங்கிருந்த இருக்கையில் தொங்கிக் கொண்டிருந்த சேல்லி சித்தியின் சமையலறை உடையின் பையில் ஒரு ஆணியை டாம் போட்டு வைத்தான். இன்னொன்றை அலமாரியில் இருந்த சித்தப்பா சைலஸின் தொப்பியின் கயிற்றில் சிக்க வைத்தோம். அத்தோடு, மேசைக் கரண்டி ஒன்றையும் சித்தப்பா சைலஸின் மேல் சட்டைப் பையில் வைத்தான். பின்னர், சேல்லி சித்தி திரும்பி வரும்வரை காத்திருந்தோம்.
சேல்லி சித்தி திரும்பி வந்தபோது மிகவும் கோபத்துடனும் எரிச்சலுடனும் காணப்பட்டாள். சாப்பிடும் முன் சொல்லும் பிரார்த்தனையை சொல்லி முடிக்கும் வரை கூட காத்திருக்க அவளுக்குப் பொறுமையில்லை. ஒரு கையால் காப்பியை அனைவருக்கும் கோப்பையில் ஊற்றிக் கொண்டே, இன்னொரு கையில் அணிந்திருந்த மோதிரம் போன்ற விரல் முனைப்பூண் கொண்டு அருகிலிருந்த குழந்தையின் தலையை நிமிண்டினாள்.
•Last Updated on ••Saturday•, 06 •June• 2020 15:23••
•Read more...•
••Friday•, 22 •May• 2020 11:33•
?? - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - ??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் முப்பத்தி ஆறு
அன்றிரவு அனைவரும் உறங்கி விட்டார்களா என்று உறுதி செய்துகொண்ட பிறகு, நாங்கள் அந்த இடிதாங்கிக் கம்பியைப் பிடித்து இறங்கி மேலிருந்த நிழல் சாளரத்தினுள் சுருண்டு ஒளிந்து கொண்டோம். சிறிது நேரத்திற்குப் பின்னர், அந்த நரித்தீ பூஞ்சைகளை எடுத்துக் கொண்டு எங்களின் வேலையைப் பார்க்கச் சென்றோம். சுவற்றின் கீழ்ப்பகுதியில் உள்ள மரக்கட்டையின் மத்தியில் ஒரு நான்கு அல்லது ஐந்தடி நீளம் முழுதும் இருந்த அனைத்துக் குப்பைகளையும் சுத்தம் செய்து அகற்றினோம். ஜிம்மின் படுக்கைக்கு நேர் பின்பக்கமாக நாங்கள் இருக்கிறோம் என்று டாம் கூறினான். அந்த இடத்தில் நாங்கள் பள்ளம் தோண்ட ஆரம்பித்தோம். ஜிம்மின் படுக்கையிலிருந்து கீழே தொங்கும் போர்வை தரையைத் தொட்டு அந்த பள்ளத்தை மறைத்து விடுமாதலால், அங்கே அப்படி ஒரு ஓட்டை இருப்பதே யாருக்கும் தெரியவராது என்று டாம் கூறினான். அந்தப் போர்வையை மேலே உயர்த்திப் பார்த்தால் மட்டுமே அந்த ஓட்டையைக் காண முடியும் என்றான். எனவே, நள்ளிரவு ஆகும்வரை பேனாக்கத்திகள் கொண்டு தோண்டினோம். அதன்பின், கடுமையான களைப்படைந்து, கைகள் தோல் உரிந்து காயமாக ஆரம்பித்தன. ஆயினும், எங்களை பார்த்தால் கடுமையாக உழைத்தது போல் தோன்றாது. இறுதியாக நான் சொன்னேன்:
"இது ஒன்றும் முப்பத்தியேழு வருட வேலை இல்லை. இது முப்பத்தியெட்டு வருட வேலை, டாம் சாயர்!"
அவன் எதுவும் சொல்லாமல் பெருமூச்சு விட்டான். சில நொடிகளிலேயே தோண்டுவதையும் நிறுத்தி விட்டான். சிறிது நேரத்திலேயே, அவன் என்ன நினைக்கிறான் என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன். பின்னர், அவன் கூறினான்:
"இது பிரயோசனப்படாது, ஹக்! இது ஒண்ணும் வேலைக்காகாது. சிறைக் கைதிகளாக நாம் இருந்திருந்தால், நமக்கு தேவையான அளவு வருடங்கள் எடுத்துக் கொண்டு தோண்டியிருக்கலாம். இப்படி அவசரப்பட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அத்தோடு, சிறைக் காவலர்கள் தங்களின் கண்காணிப்பு நேரத்தை மாற்றிகொள்ளும் சமயமாகப் பார்த்து ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் மட்டுமே தோண்டியிருக்கலாம் அப்படி இருந்திருந்தால், நமது கைகள் இப்படிக் காயமடைந்திருக்காது. ஒரு வருடம் உள்பக்கம், ஒரு வருடம் வெளிப்புறம் என்று மாற்றி மாற்றித் தோண்டிக் கொண்டே இருந்திருக்கலாம். எந்த முறையில் செய்ய வேண்டுமோ, அந்த முறையில் சரியாகச் செய்திருக்கலாம். ஆனால், அவ்வாறு இங்கே நாம் செய்து கொண்டிருக்க முடியாது. சீக்கிரம் நாம் வேலையை முடிக்க வேண்டும். நேரத்தை வீணடிக்க நமக்கு அவகாசம் இல்லை. மேலும், இனி ஒரு இரவு இதே போல் தோண்டினால், நம்முடைய கைகளின் காயங்கள் ஆற ஒரு வாரமாவது காத்திருக்க வேண்டும். அதற்கு முன்பாக, கத்தியைக் கையால் கூடத் தொட முடியாது."
•Last Updated on ••Saturday•, 06 •June• 2020 15:10••
•Read more...•
••Friday•, 22 •May• 2020 11:32•
?? - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - ??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் முப்பத்தி ஐந்து
காலை உணவு தயாராக இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் போல இருந்தது. எனவே, வீட்டை விட்டுக் கிளம்பி அருகிலிருந்த வனத்தை நோக்கி நடந்தோம். இரவு பள்ளம் தோண்டும் வேளையில், எங்களுக்கு கொஞ்சம் வெளிச்சம் தேவைப்படும் என்று டாம் சொன்னான். லாந்தர் விளக்கின் ஒளி வெள்ளம் அதிகமாக இருந்து அதனால் நாங்கள மாட்டிக்கொள்ளக்கூடும் என்று அவன் கூறினான். நரித்தீ என்றழைக்கக்கூடிய காடுகளில் கிடைக்கும் அழுகிப் போன பூஞ்சைக் காளான்கள் இருளில் ஒளிர்ந்து வெளிச்சம் கொடுக்கும் தன்மையை கொண்டவை என்பதால் அவைகள் எங்களுக்குத் உதவும் என்று நினைத்தோம். கை நிறைய அவற்றை அங்கே சேகரித்து மரங்களுள் ஒளித்து வைத்தோம். பிறகு, அங்கே அமர்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தோம். நடக்கும் நிகழ்வுகள் எதிலும் டாமுக்கு திருப்தியே இல்லை.
எனவே சலித்துக் கொண்டே இவ்வாறு கூறினான் "போய் தொலையட்டும்! மொத்த சூழ்நிலையும் ரொம்ப சாதாரணமாக உள்ளது. கஷ்டமான ஒரு திட்டத்தைச் செயல்படுத்தவே முடியாது போலுள்ளது. ஒரு காவலாளி இருந்தால் அவனுக்கு ஏதேனும் மயக்க மருந்து கொடுக்கலாம். அப்படி ஒரு காவலாளி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! மயக்க மருந்து கொடுக்க ஒரு நாய் கூட இங்கில்லை. அத்தோடு ஜிம்மை அவனின் படுக்கை உள்ள கட்டில் காலில் ஒரு சின்ன பத்தடி நீளம் உள்ள சங்கிலியில்தான் பிணைத்திருக்கிறார்கள். நான் சொல்வதன் அர்த்தம் என்னவென்றால், அவனை விடுதலை செய்ய அந்தக் கட்டிலைக் கொஞ்சம் உயர்த்தி அதனடியிலிருக்கும் அந்தச் சங்கிலியை சும்மா அப்படியே இழுத்து விட்டால் போதும். சித்தப்பா சைலஸ் அனைவரையும் அதிகமாக நம்புவதால், யார் கண்காணிப்பும் இல்லாமலேயே, அந்த பரங்கித்தலை நீக்ரோவிடம் சாவியைக் கொடுத்து விடுகிறார். உயரத்திலுள்ள அந்த சன்னலின் ஓட்டை வழியாக ஜிம்மே குதித்துப் போயிருப்பான். என்ன, அவன் காலில் உள்ள பத்தடி நீளமுள்ள சங்கிலியை இழுத்துக் கொண்டு அவனால் வெகுதூரம் பயணம் செய்திருக்க முடியாது. அவ்வளவுதான்! தண்டம்! தண்டம்! இவ்வளவு கேவலமான ஏற்பாடு நான் எங்கேயும் கண்டதேயில்லை.”
•Last Updated on ••Saturday•, 23 •May• 2020 20:49••
•Read more...•
••Friday•, 22 •May• 2020 11:32•
?? - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - ??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் முப்பத்தி நான்கு
நாங்கள் பேசுவதை நிறுத்திவிட்டு சிந்திக்க ஆரம்பித்தோம். வெகு விரைவிலேயே டாம் இவ்வாறு கூறினான்:
“இங்கே பார், ஹக்! இது பற்றி முன்னமே சிந்திக்காத நாம் முட்டாள்கள்தான். ஜிம் எங்கே உள்ளான் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்.”
“இல்லை. உனக்குத் தெரியுமா? எங்கே?”
“சாம்பலில் சோப்பு தயாரிக்கும் அந்த இயந்திரத்தின் அருகே கீழ்புறமாக உள்ள குடிசையில்தான் அவன் இருக்கிறான். நன்றாக யோசித்துப் பார்! நாம் உணவு உண்ணும்போது, அந்தக் குடிசையை நோக்கி ஒரு நீக்ரோ மனிதன் உணவு எடுத்துச் சென்றதை நீ காணவில்லையா?”
“ஆம்”
“நல்லது. அந்த உணவு யாருக்கென்று நீ நினைத்தாய்?”
“ஒரு நாய்க்கு என்று.”
“நானும் அப்படித்தான் நினைத்தேன். நல்லது. உண்மையில் அது ஒரு நாய்க்கு அல்ல என்று நான் நினைக்கிறேன்.”
“ஏன்?”
“ஏனெனில், அந்த உணவில் கொஞ்சம் தர்பூசணிப் பழங்களும் இருந்தது.”
“ஆம். நீ சொல்வது சரிதான். நானும் அதைக் கவனித்தேன். நல்லது. நாய்கள் தர்பூசணிப்பழம் சாப்பிடாது என்று எனக்குத் தோன்றாமலே போனது வேடிக்கைதான். உன்னால் மட்டும் இவ்வாறு சில விஷயங்களை நன்கு காண முடிகிறது என்பதை இது காட்டுகிறது. ஆனால் எல்லா நேரமும் இப்படிக் காண முடியுமா என்று தெரியாது.”
•Last Updated on ••Saturday•, 23 •May• 2020 20:51••
•Read more...•
••Friday•, 22 •May• 2020 11:32•
?? - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - ??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் முப்பத்தி மூன்று
இவ்வாறாக முடிவு கட்டிய நான், குதிரை இழுத்துச் செல்லும் பாரவண்டியில் ஏறி ஊரை நோக்கிச் சென்றேன். பாதிதூரம் செல்லும்போதே, எனக்கு எதிரே ஒரு பாரவண்டி வருவதைக் கண்டேன். கண்டிப்பாக அது டாம் சாயர்தான். அவன் என் அருகே வரும்வரைக் காத்திருந்து பின்னர் கூறினேன், "நிறுத்துங்கள்" என்று. வண்டி என்னருகே நின்றது. என்னைக் கண்டதும் டாம் சாயரின் வாய் ட்ரங்க் பெட்டியின் மூடி போலப் பிளந்து அப்படியே நின்றும் விட்டது. தொண்டை வறண்டு போனவன் போல இரண்டு மூன்று முறை சிரமப்பட்டு எச்சிலை விழுங்கி விட்டு பின்னர் கூறினான்:
"உன்னைக் காயப்படுத்தும் எந்த விஷயமும் நான் உனக்குச் செய்ததில்லையே. அது உனக்கே தெரியும். எனவே ஏன் நீ இப்படித் திரும்ப வந்து என்னை இவ்வாறு பயமுறுத்துகிறாய்?"
"நான் திரும்ப வரவில்லை. உண்மையில் நான் போகவே இல்லை." நான் கூறினேன்.
எனது குரல் கேட்டு அவனது மண்டை கொஞ்சம் தெளிந்தது போலத் தோன்றியது. ஆயினும் அவன் முழுமையாகத் திருப்தி அடையவில்லை.
"என்னை முட்டாளாக்க முயற்சிக்காதே. உனக்கு நீயே அப்படிச் செய்வாயா என்ன? உண்மையில் நீ ---- நீ ஒரு பேய் அல்லவே?"
"சத்தியமாக நான் பேய் அல்ல." நான் கூறினேன்.
"நல்லது. நான் .........நான் ...........நல்லது. இது கொஞ்சம் சமாதானப்படுத்துகிறது. ஆனால் என்னால் எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. இங்கே பார். நீ கொலை செய்யப்படவில்லையா?"
"இல்லை. நான் கொலை செய்யப்படவில்லை. அது எல்லாமே மற்றவர்களை நம்ப வைக்க நான் நடத்திய நாடகம். இன்னும் நீ நம்பவில்லையென்றால், இங்கே அருகில் வந்து என் சருமத்தைத் தொட்டுப் பார்."
•Last Updated on ••Saturday•, 23 •May• 2020 20:51••
•Read more...•
••Friday•, 22 •May• 2020 11:32•
?? - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - ??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் முப்பத்தி இரண்டு
பிலிப்ஸின் பண்ணைக்கு நான் சென்று சேர்ந்த போது, சூரிய வெளிச்சத்துடன் வெப்பம் அதிகமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை நாட்களின் தேவாலயம் போல அங்கே அனைத்தும் அசையாது அமைதியாக இருந்தது. பண்ணையாட்கள் தங்கள் வேலையில் மும்முரமாக இருந்தார்கள். வண்டுகளும், ஈக்கூட்டங்களும் காற்றில் மொய்த்துத் தொடர்ச்சியான ரீங்காரத்தை எழுப்பியது ஏதோ நீங்கள் இறந்து அங்கிருந்து அகன்று விட்டதைப் போன்றதொரு தனிமை உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தியது. மெல்லிய தென்றல் காற்று அங்கிருந்த இலைகளைத் தாலாட்டி அசைப்பது உங்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தும். ஏனெனில் இறந்து பல வருடங்கள் ஆன ஆவிகள் உங்களுடன் கிசுகிசுப்பாக ஏதோ ரகசியம் உங்களைப் பற்றி பேசுவது போன்று அது தோன்றும். பொதுவாக, அது போன்ற விஷயங்கள் நீங்கள் இறந்து இந்த பூவுலகை விட்டு தொலைந்தது போன்றதொரு மாய உணர்ச்சியை ஏற்படுத்தும் வல்லமை மிக்கவை.
முழு இடமும் ஒன்று போலவே தென்படும் பஞ்சு உற்பத்தி செய்யும் ஒரு சிறிய பண்ணைதான் பிலிப்ஸுக்கு சொந்தமானது. இரண்டு ஏக்கர் பண்ணையை ஒரு கஜ அகலத்தில் உள்ள கம்பி வேலி சுற்றி வளைத்திருந்தது. பல்வேறு நீளங்களில் காணப்படும் பீப்பாய்கள் போன்றே, அறுக்கப்பட்டிருந்த மரக் கட்டைகளைக் கொண்டு, விலங்குகள் ஏறிவர இயலாது மனிதர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய வெவ்வேறு நீள அகலங்களில் உள்ள ஏணிகள் போன்ற படிக்கட்டுகள் அமைத்திருந்தார்கள். வேலியைத் தாண்டி மனிதர்கள் உள்ளே வருவதற்காக மட்டும் அல்லாது, பெண்கள் அதைப் பயன்படுத்தி குதிரை மீது ஏறி அமரவும் ஏதுவாக அவை அமைக்கப்பட்டிருந்தது. முன்பக்கத் தோட்டத்தில் அங்கங்கே சோகைபடிந்த புல்திட்டுகள் காணப்பட்டன. அவற்றில் பெரும்பான்மையானவை பழைய கிழிந்த தொப்பி போல வெறுமையாகவும், வழவழப்பாகவும் இருந்தன.
வெள்ளைக்கார அமெரிக்க மக்கள் வசிப்பதற்காக மரக்கட்டைகளால் கட்டப்பட்ட இரண்டடுக்கு மர வீடு ஒன்று அங்கே காணப்பட்டது. கோடரி போன்ற ஆயுதம் கொண்டு செதுக்கப் பட்ட மரக்கட்டைகளை அடுக்கி, அதனிடையே ஏற்படும் பிளவுகளை மண் அல்லது சுண்ணாம்புக் கலவை கொண்டு பூசி மெழுகி அந்த வீடு எழுப்பப்பட்டிருந்தது. பிளவுகளை அடைத்த மண் மீது ஏதோ ஒரு சமயத்தில் வெள்ளைச் சாயம் அடித்திருக்க வேண்டும். மேற்கூரையிடப்பட்ட வழியின் மூலம் அந்த வீட்டுடன் இணைந்தாற்போல் இருந்த ஒரு பெரிய அகலமான திறந்திருந்த சமையல் கட்டு அங்கிருந்தது. பெரிய மரக்கட்டை புகைபோக்கி ஒன்று அந்த சமையலறையின் பின்பக்கமாக இருந்தது. அந்த புகைக்கூண்டுப் பகுதியின் இன்னொரு புறமாக மரக்கட்டைகளால் அமைக்கப்பட்ட மூன்று நீக்ரோ அறைகள் இருந்தன. அத்துடன் பின்பக்க வேலியின் அருகே ஒரு குடிசை தனித்து நின்றது தெரிந்தது.
•Last Updated on ••Saturday•, 23 •May• 2020 20:51••
•Read more...•
••Wednesday•, 13 •May• 2020 10:33•
?? - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - ??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் முப்பத்தி ஒன்று
அடுத்து வந்த சில நாட்களில் நாங்கள் எந்த ஊரிலும் நிற்காமல் நதியில் மிதந்து கொண்டே இருந்தோம். மேற்கொண்டு தெற்கு நோக்கியே நாங்கள் சென்று கொண்டிருந்ததால், காலநிலை கொஞ்சம் சூடாகவே இருந்து வந்தது. எங்களது வீட்டிலிருந்து மிக நீண்ட தொலைவில் நாங்கள் இருந்தோம். நரைத்த தாடி போல மரத்தின் கொப்புகளிலிருந்து தொங்கி கொண்டிருக்கும் கிளைகளைக் கொண்ட ஸ்பானிஷ் மோஸ் என்ற மரங்களை எல்லாம் எங்களின் பயணத்தில் காண ஆரம்பித்தோம். அவை அப்படி வளர்ந்து தொங்கி கொண்டிருப்பதையும் அவைகளின் அடர்ந்த தோற்றத்தால் காடுகளை இருண்டதாவும், அச்சமூட்டுகிறவிதமாகவும் மாற்றியது என்பதையும் என் வாழ்வில் முதல் முறையாக அப்போதுதான் கண்டேன். ஆபத்துகளைக் கடந்து வந்து விட்டோம் என்று கணக்கிட்ட அந்த மோசடிப் பேர்வழிகள் வரும் வழியில் உள்ள சிறு கிராமங்களில் மீண்டும் தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தார்கள்.
முதலில் மதுத் தடுப்புக் கூட்டங்கள் நடத்த முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்களின் மது வாங்கக் கூடத் தேவையானாக வருமானம் அதில் கிடைக்கவில்லை. இன்னொரு கிராமத்தில் நடனப் பள்ளி ஒன்று தொடங்கினார்கள். ஆனால் ஒரு கங்காரு நடனமாடுவதை விடச் சிறப்பாக அவர்கள் ஆடத் தெரியாதவர்கள். எனவே, முதல் தடவை பொது மக்கள் முன்னிலையில் அவர்கள் துள்ளிக் குதித்து, நடனம் என்ற பெயரில் ஏதோ முயன்றபோது, மக்கள் உள்ளே நுழைந்து அவர்கள் மீது ஏறிக் குதித்து ஒரு வழி செய்து அங்கிருந்து துரத்தி அடித்தார்கள். இன்னொருமுறை, தங்கள் பேச்சாற்றல் திறமையை வெளிப்படுத்தும் தொழிலை முயற்சித்தார்கள். ஆனால், அவர்கள் தங்களின் பேச்சுத் திறமையை முழுதும் வெளிப்படுத்தும் முன்பே மக்கள் எழுந்து நின்று தகாத வார்த்தைகளால் அவர்களை அர்ச்சித்து, அங்கிருந்து ஓட ஓட விரட்டினார்கள்.
மதப் பிரச்சாரம், மனோவசியம், மருத்துவத் தொழில், குறி சொல்பவர்கள் இன்னும் என்னவெல்லாம் அவர்களால் முடியுமோ, அதையெல்லாம் முயற்சித்துப் பார்த்தார்கள். ஆனால் எதிலுமே அதிர்ஷ்டம் அவர்களுக்கு துணை நிற்கவில்லை. நாங்கள் அப்படியே தோணியில் மிதந்து கொண்டிருக்கும்போது, தொடர்ந்த ஏற்பட்ட தோல்விகளால் மனம் உடைந்த அந்தக் கயவர்கள், அவர்களிடம் இருந்த அனைத்து உடமைகளையும் தோணியின் மீது வீசிவிட்டு சோர்ந்து போய் பேசாது இருந்தார்கள். தைரியத்தை இழந்து, நம்பிக்கையற்ற தோற்றத்துடன் அரை நாளுக்கு ஒரு வார்த்தை என்ற வகையில் பேச்சைக் குறைத்துக் கொண்டு தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருந்தார்கள்.
•Last Updated on ••Saturday•, 23 •May• 2020 20:33••
•Read more...•
••Tuesday•, 12 •May• 2020 17:32•
?? - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - ??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் முப்பது
அவர்கள் தோணியில் ஏறியதும் முதல் வேலையாக ராஜா என்னை நோக்கி வந்தார். எனது மேல் சட்டையின் கழுத்துப் பட்டையைப் பிடித்து உலுக்கியவாறே என்னிடம் கேட்டார்:
"எங்களை விட்டு ஓட முயன்றிருக்கிறாய், இல்லையா, பையா? எங்களின் நட்பு உனக்கு சலிப்புத் தட்டிவிட்டதா? ஹாஹ்?"
நான் கூறினேன் "அப்படி இல்லை அரசே! நாங்கள் அப்படி நினைக்கவில்லை. தயை கூர்ந்து அப்படி நினைக்காதீர்கள், மாட்சிமை பொருந்திய மன்னரே!"
"நல்லது. அப்படியானால், நீ என்ன செய்ய முயற்சித்தாய் என்று கூறி விடு. இல்லாவிட்டால், உன் உடலில் உள்ளிருக்கும் அனைத்தையும் வெளியே உருவி விடுவேன்."
"சத்தியமாக என்னவெல்லாம் நடந்ததோ அதை அப்படியே கூறிவிடுகிறேன், மேன்மை பொருந்திய ராஜாவே! என் கரத்தைப் பிடித்து அழைத்துச் சென்ற அந்த மனிதன் என்னிடம் மிகவும் அன்பாக இருந்தான். கடந்த வருடம் என் வயதில் ஒரு சிறுவன் இறந்து போனது பற்றி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். அதே போன்றதொரு பயங்கரமான ஆபத்தில் இன்னொரு சிறுவன் இப்போது இருப்பதைப் பார்க்க அவனுக்கு வருத்தமாக உள்ளது என்று கூறினான். தங்க மூட்டையைக் கண்டதும் அனைவரின் கவனமும் சிதறி சவப்பெட்டியை நோக்கி ஓடிய சமயம், அவன் என் கையை விடுத்து, "ஓடிச் செல். இல்லாவிடில், அவர்கள் உன்னைத் தூக்கில் போடுவது நிச்சயம்." என்று என் காதில் கிசுகிசுத்தான். எனவேதான் நான் அங்கிருந்து ஓட்டம் எடுத்தேன்.”
“அங்கேயே நிற்பது எனக்கு நல்லதல்ல என்று தோன்றியது. என்னால் எதுவும் செய்ய முடியாது. தப்பிக்காமல் அங்கேயே இருந்து தூக்கில் தொங்குவதை நான் விரும்பவில்லை. கண் மண் தெரியாது ஓடி இங்கே வந்து தோணியைக் காணும் வரை நான் ஓட்டத்தை நிறுத்தவில்லை. இங்கே வந்து சேர்ந்ததும் ஜிம்மை அவசரமாகத் தோணியை செலுத்தச்சொன்னேன். இல்லாவிடில், நான் பிடிபட்டு தூக்கில் தொங்க நேரிடும் என்ற பயத்தால்தான். நீங்களும், பிரபுவும் இறந்திருப்பீர்கள் என்று நான் அஞ்சினேன் என்றும் கூறினேன். உங்களின் பரிதாப நிலைக்காக நான் மிகவும் மனம் வருந்தினேன். ஜிம்மும் அப்படியே வருந்தினான். இப்போது நீங்கள் வந்து கொண்டிருப்பதைக் கண்டவுடன் நாங்கள் இருவரும் கட்டுக் கடங்காத மகிழ்ச்சியை அடைந்தோம். இது உண்மையா என்பதை ஜிம்மிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்."
•Last Updated on ••Wednesday•, 13 •May• 2020 10:43••
•Read more...•
••Tuesday•, 12 •May• 2020 17:31•
?? - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - ??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் இருபத்தி ஒன்பது
நேர்த்தியான தோற்றம் உடைய ஒரு முதிய கனவானையும், கூடவே காயம்பட்ட வலது கையை தாங்கி நிறுத்தும் ஒரு தூக்கி மாட்டியுள்ள இன்னொரு இளம் வாலிபனையும் அந்தக் கூட்டம் கூட்டி வந்தது. ஓ! என்ன ஒரு காட்சி அது! கூட்டம் கொக்கரித்துக் கொண்டு சிறிது நேரம் சிரித்துத் தீர்த்தது. அங்கே வேடிக்கையாய் சிரிக்க என்ன உள்ளதென்று எனக்குப் புரியவில்லை. ராஜாவும், பிரபுவும் என்னைப் போன்றுதான் யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணினேன். அவர்கள் முகம் வெளுத்துப் போயிருக்கும் என்று நினைத்து அவர்களை நோக்கினேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அவர்கள் பயத்தில் வெளுத்துப் போகவில்லை. சந்தேகிக்கும் நிலையை பிரபு அங்கே உண்டு பண்ணவேயில்லை. பதிலாக வாயில் வெள்ளை நுரை தள்ளியவாறு கூ கூ என்று இன்னும் அதிகமாக சத்தமிட்டார்.
புதிதாக வந்த மனிதர்களை ஏதோ நயவஞ்சகர்கள் இந்த உலகத்தில் மோசடி செய்ய வந்தது தனது இதயத்தை வேதனைப் படுத்துவது போல ராஜாவோ மிகவும் சோகமாக அவர்களை நோக்கிக் கொண்டிருந்தார். ஓ! ரசிக்கும்படியான நடிக்கும் தொழிலை அவர் அங்கே செய்தார், தெரிந்து கொள்ளுங்கள்! ஊரில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தாங்கள் ராஜாவின் பக்கம் என்பதைக் காட்டிக் கொள்வது போல அவர் பக்கம் கூடி நின்றார்கள்.
புதிதாக வந்த முதிய கனவானோ குழப்ப மிகுதியால் மண்டை உடைந்துவிடும் நிலையில் இருந்தார். இறுதியாக அவர் பேசத் தொடங்கியதும், அவரின் பேச்சில் ஆங்கிலேயர்களின் உச்சரிப்பை என்னால் உணர முடிந்தது. ராஜாவும் ஆங்கிலேயர்களின் உச்சரிப்பை அப்படியே பின்பற்றி நடித்து வந்தாலும், இந்த புதிய மனிதனின் உச்சரிப்பு ராஜா பேசுவது போன்று இல்லை. அந்த முதிய கனவான் என்ன வார்த்தைகள் சொன்னார் என்பது என் நினைவில் இல்லை. அவர் போன்று நான் பேசிக் காட்டவும் முடியாது. ஆனால் அவர் கூட்டத்தை நோக்கி பின்வருமாறு கூறினார்:
•Last Updated on ••Wednesday•, 13 •May• 2020 10:30••
•Read more...•
••Tuesday•, 12 •May• 2020 17:31•
?? - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - ??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் இருபத்தி எட்டு
வெகு சீக்கிரமே நான் விழித்தெழும் காலைவேளை வந்து விட்டது. ஏணியில் இறங்கி கீழ்தளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அவ்வாறு செல்லும் போது அந்த பெண்களின் அறைக் கதவு திறந்திருப்பதை எதேச்சையாக நான் காண நேர்ந்தது. அறையினுள் திறந்திருந்த பழைய ட்ரங்க் பெட்டியருகே மேரிஜேன் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அந்தப் பெட்டியில் தன் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டு இங்கிலாந்து செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். அந்த வேலையைப் பாதியில் நிறுத்தி விட்டு, தன் மடியில் ஒரு நீண்ட மேலங்கியை மடித்து வைத்துக் கொண்டு, தனது இரு கரங்களையும் கொண்டு முகத்தை மூடிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள். அது என் மனதைக் கரைத்தது. யாருக்குமே அதைப் பார்த்தால் மனம் இளகத்தான் செய்யும். எனவே, உள்ளே நான் சென்றேன்.
"மிஸ். மேரிஜேன்! சக மனிதர்களின் துன்பத்தை நீ பொறுத்துக் கொள்ளக் கூடியவள் அல்ல. நானும் அப்படிதான். என்னிடம் உன் துன்பத்தைப் பற்றிக் கூறு." அன்புடன் நான் வினவினேன்.
எனவே, அவள் கூற ஆரம்பித்தாள். நான் சந்தேகித்தது போலவே அவள் அந்த நீக்ரோக்களைப் பிரிந்த வேதனையிலேயே அழுது கொண்டிருந்திருக்கிறாள். அவள் செல்லவிருக்கும் இனிமையான இங்கிலாந்து பயணத்தையே இந்த வேதனை குலைத்து விடும் என்று அழுது கொண்டே கூறினாள். அந்த நீக்ரோ குழந்தைகளும் அவர்களின் அம்மாவும் இனி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே முடியாது என்று தெரிந்த கொண்டபின் அவளால் எப்படி அவளது வாழ்வில் சந்தோசத்துடன் இருக்க முடியும் என்று கேட்டாள். பின்னர் முன்பை விட அதிக தீவிரத்துடன் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.
"ஓ! அன்புக்குரியவனே! அவர்கள் ஒருபோதும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே மாட்டார்கள் என்பதை எண்ணும்போது." கைகளை வேகமாக அசைத்துக்கொண்டே கூறினாள்.
"ஆனால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்- அதுவும் இன்னும் இரண்டு வாரங்களுக்குளாகவே. எனக்குத் தெரியும்." நான் கூறினேன்.
•Last Updated on ••Wednesday•, 13 •May• 2020 10:23••
•Read more...•
••Tuesday•, 12 •May• 2020 17:30•
?? - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - ??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் இருபத்தி ஏழு
அவர்களின் அறைக்கு நகர்ந்து சென்று நோட்டமிட்டபோது அவர்களின் குறட்டைச் சத்தம் கேட்டது. எனவே மெல்ல அடிமேல் அடி வைத்து பத்திரமாகப் படிக்கட்டில் இறங்கினேன். மொத்த வீடும் நிசப்தமாக இருந்தது. ஒரு சிறு சத்தம் கூட கேட்கவில்லை. உணவருந்தும் அறையின் சின்ன சந்து வழியாக நுழைந்து பார்த்தபோது சடலம் வைத்திருக்கும் அறையில் பாதுகாவலாக இருந்த மனிதர்கள் அனைவரும் அவரவர் இருக்கைகளிலேயே தூக்கத்தால் ஊசலாடிக் கொண்டிருந்தார்கள். சவம் வைக்கப்பட்டுள்ள முன்னறையிலிருந்து வெளியே வராந்தாவுக்குச் செல்லும் கதவு திறந்திருந்தது. ஒவ்வொரு அறையிலும் ஒரு மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கதவின் வழியே புகுந்து வராந்தாவுக்குள் நுழைத்தேன். அங்கேயும் யாருமில்லை. பீட்டரின் மிச்சம் மட்டுமே இருந்தது. அதையும் தாண்டி வாசலுக்குச் செல்லும் முன்புறக் கதவு பூட்டியிருந்தது. அதனின் சாவியும் அங்கே இல்லை.
அந்த சமயத்தில் யாரோ என் பின்புறமுள்ள படிக்கட்டுகளில் இறங்கிவரும் சத்தம் கேட்டது. அங்குமிங்குமாக ஓடி நான் ஒளிந்து கொள்ள இடம் தேடியபோது முன்னறையில் சவப்பெட்டி அருகே மட்டுமே கொஞ்சம் இடம் இருந்தது. அந்தப் பெட்டியின் மேல்மூடி ஒருக்களித்துத் திறந்தவாறு இருந்ததால், ஈரத்துணியால் மூடி வைத்திருக்கும் இறந்த மனிதனின் முகத்தையும், அவன் மேல் மூடப்பட்டிருந்த சவச்சீலையையும் என்னால் நன்கு காண முடிந்தது. காசு மூட்டையை சவத்தின் கைகள் குறுக்காக வைக்கப்பட்டுள்ள பகுதியின் மேல் மூடியினுள் செருகி வைத்தேன். அந்தக் கரங்கள் மிகவும் குளிர்ந்தாக இருந்து என்னையும் உறைய வைத்தது. பின்னர் அறையின் குறுக்காக ஓடிச்சென்று கதவின் பின் மறைந்து கொண்டேன்.
படிக்கட்டுகளில் மேரிஜேன் இறங்கி வந்துகொண்டிருந்தாள். சவப்பெட்டி அருகே மெதுவாகச் சென்று, மண்டியிட்டு, உள்ளே பார்த்தாள். பின்னர் தனது கைக்குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவள் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. அவளின் பின்புறமாக நான் நின்றிருந்ததால், அவளின் அழுகைச் சத்தம் எனக்கு கேட்கவில்லை. எனது மறைவிடத்திலிருந்து நான் வெளியே வந்தேன். உணவருந்தும் அறையைத் தாண்டிச் செல்கையில் சவப்பெட்டி அருகே இருந்த இரண்டு ஆண்களும் என்னை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டேன். அந்தச் சந்து வழியாக அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று நோக்கினேன். யாரும் அசையக் கூட இல்லை.
•Last Updated on ••Wednesday•, 13 •May• 2020 10:24••
•Read more...•
••Tuesday•, 12 •May• 2020 17:06•
?? - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - ??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் இருபத்தி ஆறு
கூட்டம் கலைந்து போனதும், அந்த வீட்டில் படுக்கை அறைகள் மிகைப்படியாக உள்ளதா என்று ராஜா மேரி ஜேனை வினவினார். அதிகப்படியாக உள்ள ஒரு அறையில் சித்தப்பா வில்லியம் உறங்கலாம் எனக் கூறினாள். அவளது பெரிய படுக்கை அறையை ஹார்வி சித்தப்பாவுக்குக் கொடுத்து விட்டு அவளும், அவளது சகோதரிகளும் சிறிய அறையில் உள்ள கட்டிலில் படுத்துக் கொள்ளப் போவதாக மேரி ஜேன் கூறினாள். பரணில் உள்ள சிறு மூலையில் ஒரு வைக்கோல் படுக்கையில் ராஜாவின் வேலைக்காரனான நான் படுத்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்று ராஜா கூறினார்.
எனவே ராஜாவையும், பிரபுவையும் மேல் மாடிக்கு அழைத்துச் சென்று எளியதாகவும் ஆனாலும் நன்றாகவும் இருந்த அவர்கள் அறைகளைக் காட்டினாள் மேரி ஜேன். சித்தப்பா ஹார்வியின் வழியில் இருந்த தன்னுடைய நீண்ட அங்கி போன்ற ஆடைகளையும் மற்ற அலங்காரப் பொருட்களையும் அங்கிருந்து வெளியே எடுத்துச் சென்றுவிடுவதாக மேரி ஜேன் கூறியபோது வேண்டியதில்லை என்று ஹார்வி கூறிவிட்டார். நீண்டு தரையைத்தொடும் காலிகோ வகைத் துணியாலான திரைச்சீலையின் பின்புறம் உள்ள சுவற்றில் அவளின் நீண்ட அங்கிகள் மாட்டிவைக்கப் பட்டிருந்தன. ஒரு பழைய ட்ரங்க் பெட்டி ஒரு மூலையிலும், கிடார் இசைக் கருவி இன்னொரு மூலையிலுமாக வைக்கப்பட்டிருந்தன. பெண்கள் உபயோகப் படுத்தும் அலங்காரப் பொருட்கள், மேலும் அது போன்ற சில பொருட்கள் அறை முழுதும் இறைந்து கிடந்தன. இவ்வாறு அறை இருப்பது அவருக்கு சொந்த வீட்டிலுள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதால் அங்கிருக்கும் பொருட்களை வேறு எங்கும் எடுத்துப் போகவேண்டாம் என்று ராஜா (ஹார்வி) கேட்டுக் கொண்டார். பிரபுவின் அறை கொஞ்சம் சிறியதுதான் என்றாலும் மிகவும் வசதியாகவே இருந்தது. அது போன்றே பரணிலிருந்த என்னுடைய சிறு மூலை அறையும்தான்.
•Last Updated on ••Wednesday•, 13 •May• 2020 10:24••
•Read more...•
••Sunday•, 03 •May• 2020 22:25•
??- ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி -??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் இருபத்தி ஐந்து
அந்தச்செய்தி ஊர் முழுதும் இரண்டு நிமிடங்களில் காட்டுத்தீ போலப் பரவியது. நாலாத்திசைகளிலிருந்தும் மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்த காட்சியைத்தான் நீங்கள் காணவும் வேண்டுமே. சிலர் அவ்வாறு ஓடி வரும் போதே தங்களின் மேல் கோட்டை அணிந்தவாறே வேகமாக ஓடி வந்தனர். தட் தட் என்ற அவர்களின் காலடிச் சத்தம் ஏதோ வீரர்கள் போருக்கு அணிவகுத்து செல்லும்போது கேட்பது போலக் கேட்டது. விரைவிலேயே அங்கு கூடியிருந்த கூட்டத்திற்கு எங்களை அழைத்துப் போனார்கள். கூட்டம் கூடியிருந்த இடத்தைச் சுற்றியுள்ள வீடுகளின் கதவுகளும், ஜன்னல்களும் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களின் கும்பலால் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் மதில் மேல் எட்டிப் பார்த்து விட்டு இவ்வாறு கூறுவார் "இது அவர்கள்தானா?" என்று அங்கே கும்பலாக மற்றவர்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் யாரோ ஒருவர் பதில் கூறுவார் "அடித்துச் சொல்கிறேன். அவர்கள்தான் அது."
நாங்கள் அந்த வீடு இருந்த தெருவை அடைந்து வீட்டை நெருங்கும்போது, அந்த வீட்டின் முன் கூட்டம் அடைந்து கிடந்தது. மூன்று பெண்களும் கதவினருகே நின்று கொண்டிருந்தனர். மேரி ஜேன் சிவப்பு நிற முடியுடன் இருந்தாலும், அது பெரிய வித்தியாசத்தை காட்டாது மிகவும் அழகாகவே காணப்பட்டாள். அவள் முகத்திலும் கண்களிலும் தெய்வீக ஒளி குடிகொண்டிருந்தது. அவளுடைய உறவினர்கள் வந்துவிட்ட சந்தோசம் அவல் முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது. ராஜா தன் கைகளை அவளுக்காக விரித்தார். அவளும் அதில் ஓடி வந்து ஐக்கியமானாள். பிளவுபட்ட உதடுடைய பெண் பிரபுவை நோக்கி ஓடி அவரை அன்போடு தழுவிக் கொண்டாள். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடியதைப் பார்த்த அங்கிருந்த அனைவரும், அதிலும் குறிப்பாகப் பெண்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்கள்.
ராஜா பிரபுவைத் தனியாக அழைத்துச் சென்றதை நான் கவனித்தேன். சுற்றிலும் அங்கே தேடிய ராஜா மூலையில் சவப்பெட்டி இரண்டு நாற்காலிகள் மீது வைத்திருப்பதை, கடைசியாகக் கண்டுகொண்டார். எனவே அவரும் பிரபுவும் கண்களுக்கு நேராகக் குறுக்கே ஒருவரின் தோள் மீது இன்னொருவர் கரத்தை வைத்து மிகவும் பதவிசாகவும், மெதுவாகவும் நடந்து சென்று சவப்பெட்டி முன் நின்றார்கள். அங்கிருந்த கூட்டம் அவர்கள் நிற்க வழிவிட்டது. அங்கே பேசிக்கொண்டிருந்த அனைவரும் பேச்சை நிறுத்தி அமைதியானார்கள். அங்கு கூடியிருந்தோர் அனைவரும் "உச்" என்று பரிதாப ஒலி எழுப்பினார்கள். அனைத்து ஆண்களும் தங்களின் தலையிலிருந்து தொப்பியைக் கழற்றி தலையை மரியாதையை செலுத்தும் வண்ணமாக குனிந்து நின்றார்கள்.
•Last Updated on ••Monday•, 04 •May• 2020 15:19••
•Read more...•
••Sunday•, 03 •May• 2020 22:24•
??- ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி -??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் இருபத்தி நான்கு
அடுத்த நாள் இரவு நேரம் நெருங்கி வருகையில், நதியின் மத்தியப் பகுதியில், கரையின் இருபுறங்களிலும் கிராமங்கள் காணப்பட்ட இடத்தில் ஒரு சிறிய மணல்திட்டில் இருந்த அடர்ந்த வில்லோ மரங்களின் கீழ் எங்களின் தோணியை மறைத்து வைத்தோம். அந்த ஊர்களில் உள்ள மக்களை தங்களின் நடிப்பில் நம்ப வைக்க நமது ராஜாவும் பிரபுவும் நல்லதொரு திட்டம் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே சிறிது நேரம் மட்டுமே நிறுத்தி வைக்கப் போவதாக ஜிம் பிரபுவிடம் கூறினான். மறைக்கப் பட்டுள்ள தோணியில் உள்ள கூம்பு வடிவக் குடிலுக்குள் முழு நேரமும் கட்டிவைக்கப்பட்டு மறைந்து கிடப்பது ஜிம்முக்கு மிகவும் அலுப்புத் தட்டியிருக்க வேண்டும். தோணியில் நாங்கள் தனியாக அவனை விட்டுச்செல்லும் வேளையில் கட்டிவைத்துவிட்டுப் போவது வழக்கம். யாரேனும் எதேச்சையாக அவனைக் கண்டுபிடித்தால் கூட, தப்பி ஓடிப்போன நீக்ரோவை நாங்கள் பிடித்துக்கட்டி வைத்திருப்பதாகத் தோன்றும் என்ற காரணத்திற்காக அவ்வாறு செய்வது வழக்கம். அப்படி கைகால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் முழு நாளும் கிடப்பது மிகவும் கடினமான விஷயம்தான் என்று அந்தப் பிரபு ஒத்துக்கொண்டார். அதற்கும் கூடிய விரைவிலேயே ஒரு வழி கண்டுபிடிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.
பிரபு மிகுந்த அறிவுக் கூர்மை வாய்ந்தவராதலால், விரைவிலேயே அதற்கான ஒரு திட்டம் தயாரித்தார். ஜிம்முக்கு ராஜா லியரின் – King Lear (ஷேக்ஸ்பியர் நாடகத்தின் ஒரு முக்கியக் கதாநாயகன்) ஆடைகளை அணிவித்து விட்டார். நீண்ட திரைச்சீலையால் தைக்கப்பட்ட ஒரு காலிகோ கவுன் ஜிம்முக்கு அணிவித்து, தலைக்கு வெள்ளை நிற குதிரை முடிகளால் ஆன விக் பொருத்தி, வெள்ளை நிற ஓட்டு மீசையும் வைத்து விட்டார். பின்னர் நாடகத்திற்குப் பயன்படுத்தும் வர்ணக் கலவைகளுள் உள்ள மந்தமான இளம் நீல நிறத்தை எடுத்து ஜிம்மின் முகம், கைகள், காதுகள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசிவிட்டார். நீரில் மூழ்கியதால் இறந்து ஒன்பது நாட்களுக்கும் மேலாக நீலம் பாரித்துக் கிடக்கும் ஒரு மனிதனின் சடலம் இருப்பதைப்போல் ஜிம் தோற்றமளித்தான். இதுவரை நான் கண்ட விஷயங்களிலேயே மிகவும் கோரமான விஷயம் அவனின் தற்போதைய தோற்றம்தான். பின்னர் ஒரு சிறு விளம்பரப் பலகை மரப்பட்டைகளால் பிரபு தயாரித்தார். அது கூறியதாவது:
•Last Updated on ••Monday•, 04 •May• 2020 15:06••
•Read more...•
••Sunday•, 03 •May• 2020 22:23•
??- ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி -??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் இருபத்தி மூன்று
மேடை அமைப்பதிலும், அதில் திரைச்சீலை கட்டிவிடுவதிலும், மேடையில் தோன்றும் நடிகர்களின் பாதங்களை முன்னிலைப்படுத்திக் காட்டும் விதமாக மெழுகுவர்த்திகள் வரிசையாக வைப்பதிலும் ராஜாவும் பிரபுவும் மிகுந்த ஆர்வம் காட்டி உழைத்தார்கள். அன்றிரவு அங்கு கண்மூடித் திறப்பதற்குள் ஆண்கள் கூட்டம் வந்து கூடிவிட்டது. அதற்குமேல் இனியும் அந்த இடம் கூட்டம் கொள்ளாது என்ற நிலைக்கு வந்தபின் பிரபு அனுமதிச் சீட்டு கொடுப்பதை நிறுத்தினார்.. பின்னர் பின்புறமாக வந்து மேடையின் மீது ஏறினார். மூடியிருந்த திரைச்சீலையின் பின் நின்று தங்களின் சோக காவியம் இதுவரை யாருமே கண்டிராத அளவு மிகவும் பரபரப்பாக இருக்கப் போகிறது என்று ஒரு சிறு உரை நிகழ்த்தினார். நாடகம் பற்றியும், அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள முதிய எட்மண்ட் கீன் பற்றியும் புகழ்ந்து அவர் சொல்லிக்கொண்டே போனார். கடைசியாக அனைவரது எதிர்பார்ப்பையும் போதுமான அளவு நன்கு தூண்டியபிறகு, திரைச்சீலையை உருட்டி மேலே உயர்த்தினார்.
அடுத்த நொடி நான்கு திசைகளிலும் திரும்பியவாறு துள்ளுநடை போட்டு ஆடையற்ற நிலையில் ராஜா மேடை மேல் தோன்றினார். அவரின் ஆடையற்ற உடல் முழுதும் வட்டங்கள், கோடுகள் என்ற வடிவங்கள் அனைத்து வண்ணங்களிலும் பூசப்பட்டு ஒரு வானவில்லைப் போன்று ஒளி வீசினார். அப்புறம் உடலின் மற்ற இடங்கள் பற்றி கவனிக்காதீர்கள். பார்க்கக் காட்டுத்தனமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. ஆனாலும் அது சிரிப்பு மூட்டும் விதமாக இருந்தது.
பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ராஜா தனது துள்ளல் நடையில் மேடையை ஒரு முறை சுற்றிவந்தபின், குதித்துக் கொண்டே ஒரு ஆட்டம் போட்டவாறு, அந்த மேடையின் பின்புறம் சென்றார். அவர் திரும்ப வந்த அதே போல் செய்யும் வரை, மக்கள் உரக்கச் சிரித்து. கூச்சல் ஒலியிட்டு, கைகளைத் தட்டி ஆரவாரம் செய்து அதை ரசித்தார்கள். அதே போன்று மீண்டும் செய்து காட்டச் சொல்லி விரும்பிக் கேட்டுப் பார்த்தார்கள். உண்மையாகச் சொல்லவேண்டுமென்றால், அந்த முதிய முட்டாள் செய்து காட்டிய விஷயங்களைப் பார்த்து மக்கள் தரையில் உருண்டு புரண்டு சிரித்தார்கள்.
•Last Updated on ••Monday•, 04 •May• 2020 14:53••
•Read more...•
••Sunday•, 03 •May• 2020 22:19•
??- ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி -??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் இருபத்தி இரண்டு
தேனீக்கள் போன்ற மக்கள் கூட்டம் காட்டுமிராண்டிகள் போல் ஊளையிட்டுக் கொண்டும், கோஷமிட்டுக் கொண்டும் ஷேர்பம் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்தக் காட்சி பார்க்கவே மிகவும் பயங்கரமாக இருந்தது. வழியில் இருந்த அனைத்து மக்களும் தங்களின் பொருட்களை எடுத்துக் கொண்டு தங்களை அந்தக் கூட்டம் மிதித்து விடும் என்ற பயத்துடன் வேகமாக நகர்ந்தார்கள். தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் அந்தக் கூட்டத்தை முந்திக் கொண்டு ஓடி வேறு பக்கம் ஒளிந்து கொண்டார்கள். தெருவின் பக்கங்களில் இருந்த வீட்டுச் சன்னல்களின் வழியாக தங்களின் தலையை நீட்டியவாறு பெண்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறு நீக்ரோ சிறுவர்கள் மரத்தின் மீது ஏறி அமர்ந்திருக்க, இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் வீட்டின் மதில்சுவர் பக்கமிருந்து அதன்மேல் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கட்டுக்கடங்கா கூட்டம் அவர்களின் பக்கமாக வர, அவர்களின் பிடியில் மாட்டிகொள்ளாதிருக்க பின்தள்ளி நின்று கொண்டார்கள். பெரும்பான்மையான பெண்களும், சிறுமிகளும் பீதியுடன் அழுதுகொண்டிருந்தார்கள்.
ஷேர்பம்மின் வீட்டு மதில் அருகே கூட்டமாய் குவிந்தனர். அதனுள்ளே செல்லும் இருபதடிப் பாதையில் தள்ளமுள்ளு செய்து கொண்டு அனைவரும் நுழைந்தனர். அந்தக் கூட்டம் போட்ட அளவுகடந்த கூச்சலில் நீங்கள் பேசுவது கூட உங்களுக்கே கேட்காது என்பது போல் இருந்தது. "மதிலை அடித்து நொறுக்குங்கள். மதிலை அடித்து நொறுக்குங்கள்" என்று சிலர் கத்தினர். உடனே மதிலில் உள்ள மரப்பட்டைகளை கிழித்து அடித்து துவம்சம் செய்து நொறுக்கும் ஓசை காதில் கேட்டது. இப்போது மதில் காணாமலே போய்விட்டது. மதில் போல் நின்ற மக்கள் கூட்டம் அலையெனத் திரண்டு தள்ளிக் கொண்டு முன்னே வர முயன்றது.
அந்தச் சமயத்தில் வீட்டின் முன்வராந்தாவின் கூரையின் கீழ், இரட்டைக் குழல் துப்பாக்கியைக் கையிலேந்தியவாறு ஷேர்பம் வெளியே தோன்றினார். ஒரு வார்த்தை கூட பேசாது மிகவும் அமைதியுடனும், நிதானத்துடனும் அங்கே நின்றார். அடித்துப் பிடித்து அலைகடல் போன்று முன்னேறிக் கொண்டிருந்த கூட்டம் அப்படியே நின்று பின்வாங்க ஆரம்பித்தது.
ஒரு வார்த்தை கூட ஷேர்பம் பேசவில்லை. அமைதியாய் அங்கே நின்றவாறு கூட்டத்தின் மீது மெதுவாக தன் கண்களை ஓட்டினார். அந்த அமைதி அச்சமூட்டுவதாகவும், தர்மசங்கடத்தை விளைவிப்பதாகவும் இருந்தது. அவரின் தீர்க்கப் பார்வையைச் சந்திக்க மக்கள் முயன்றார்கள். ஆனால் அது மிகவும் கடினமான இருந்தது. எதையோ மறைக்க முயல்பவர்கள் போல அவர்கள் தங்களின் பார்வையை கீழ் பக்கமாகத் தாழ்த்தி நின்றார்கள். அடுத்த கணத்திலேயே, ஷேர்பம் உரத்த குரலில் சிரித்தார். அது சந்தோசமான சிரிப்பாக இல்லாது ரொட்டியை சாப்பிடும்போது அதில் மணல் இருந்தால் எப்படி இருக்குமோ அவ்வாறு மிகவும் கடுமையாக இருந்தது.
•Last Updated on ••Monday•, 04 •May• 2020 14:34••
•Read more...•
••Sunday•, 03 •May• 2020 17:16•
?? ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி -??
முனைவர் ர. தாரணி பக்கம்
அத்தியாயம் இருபத்தி ஒன்று
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
சூரியன் உதித்து வெகு நேரம் ஆகி விட்டது. ஆனால் இன்னமும் தோணியைக் கரையில் கட்டாது அப்படியே அது போன போக்கிலேயே நதியில் மிதந்து கொண்டிருந்தோம். ராஜாவும், பிரபுவும் காலை கண்விழித்த பிறகும் இரவு குடித்த மதுவின் போதையால் தள்ளாடிக் கொண்டே இருந்தனர். ஆயினும் தோணியிலிருந்து நதியில் குதித்து நல்லதாக ஒரு நீச்சல் போட்டபிறகு அவர்களின் போதை தெளிந்து உற்சாகமாகி விட்டார்கள். காலை உணவிற்குப் பிறகு தோணியின் ஒரு மூலையில் அமர்ந்த ராஜா அவரின் கால் பூட்சுகளை கழற்றினார். கால் சாராயின் கால் பகுதிகளை முட்டிவரை உயர்த்தி விட்டுக்கொண்டு கால்களை நீரில் தொங்க விட்டு வசதியாக அமர்ந்தார்.
பின்னர் புகை பிடிக்கும் குழாயில் புகையிலை அடக்கிப் பற்றவைத்து புகை இழுத்துக் கொண்டே ரோமியோ ஜூலியட் நாடகத்தின் வரிகளை மனப்பாடம் செய்தார். அவர் அவ்வாறு செய்து முடித்தவுடன் ராஜாவும், பிரபுவும் ஒன்று சேர்ந்து அந்தக் காட்சிகளைப் பயிற்சி செய்து பார்த்தனர். பிரபுவானவர் ஒவ்வொரு வரியையும் எவ்வாறு பேசவேண்டும் என்று ராஜாவுக்கு சொல்லித் தர வேண்டியிருந்தது. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு தனது கரத்தை தன் நெஞ்சில் வைத்துக் கொண்ட பிரபு சிறிது நேரம் கழித்து ராஜா நன்கு நடிக்கிறார் என்றார்.
"இருந்தாலும்" அவர் கூறினார் "எருமை மாடு அல்லது அதைப் போன்றதொரு மிருகம் கத்துவது மாதிரி “ரோமியோ” என்று கத்திக் கூப்பிடக்கூடாது. மிக மென்மையாக, இனிமையாக நீங்கள் மயங்கி விழும்போது சக்தியில்லாது மெதுவாகச் சத்தமிடுவதைப் போன்று ரோ ..மி ....யோ.... என்று அழைக்க வேண்டும். இப்படி, இப்படித்தான் கூப்பிடவேண்டும். ஜூலியட் என்பவள் ஒரு அழகான மருளும் மான்குட்டியாக இருக்கவேண்டும். கழுதை மாதிரி அவள் கனைக்கக் கூடாது."
அடுத்ததாக அவர்கள் இரண்டு நீண்ட மரப்பட்டைகளால் செய்யப்பட்ட வாள்களை எடுத்துக் கொண்டார்கள். அதை வைத்து கத்திச் சண்டை பயிற்சி செய்தார்கள். அந்தச் சண்டை முழுக்க பிரபு தன்னை மூன்றாம் ரிச்சர்ட் என்று கூறிக் கொண்டார். அவர்கள் இருவரும் தோணியின் இந்தப் புறம், அந்தப் புறம் என மாறி மாறி குதித்து தங்களின் வாள்களைச் சுழற்றியது பார்க்க மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே, ராஜா கால்தடுக்கி நதியினுள் விழுந்து விட்டார். எனவே, அதன் பிறகு அவர்கள் அதை நிறுத்திவிட்டு, ஓய்வாக அமர்ந்து தங்கள் வாழ்வில் நதியின் மேல்புறப் பகுதியிலும் கீழ்புறப் பகுதியிலும் தாங்கள் வாழும்போது எதிர்கொண்ட விதவிதமான சாகசங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
•Last Updated on ••Sunday•, 03 •May• 2020 22:01••
•Read more...•
••Monday•, 27 •April• 2020 19:54•
?? ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி -??
முனைவர் ர. தாரணி பக்கம்
அத்தியாயம் இருபது
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
மிகவும் தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டு, அவர்கள் எங்களைப் படுத்தி எடுத்தார்கள். நாங்கள் ஏன் தோணியிலேயே ஒளிந்து கொண்டிருக்கிறோம், ஏன் பகல் முழுதும் பயணம் செல்லாமல் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கிறோம் என்று தொணப்பினார்கள். இடையில் அவர்களுக்கு ஜிம்மின் மீது சந்தேகம் எழுந்தது. அவன் தப்பித்து ஓடிப்போகும் நீக்ரோவா என்று வினவினார்கள். நான் கூறினேன் "சரியாகப் போச்சு! தப்பித்து ஓடும் நீக்ரோ தெற்குப் பகுதிக்கா ஓடுவான்?" இல்லை. அங்கே அவன் போகமாட்டான் என்றார்கள். எப்படியாவது சில விஷயங்களை அவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும் என்பதால் நான் இவ்வாறு கூற ஆரம்பித்தேன்.
"என்னைச் சார்ந்தவர்கள் அனைவரும் வசிப்பது நான் பிறந்த மிஸ்ஸோரியில் உள்ள பைக் நாட்டில்தான். ஆனால் என் அப்பா, எனது சகோதரன் ஐக் என்னைத்தவிர மற்ற அனைவரும் இறந்து விட்டார்கள். நியூ ஆர்லியன்ஸ் நகருக்கு நாற்பது மைல் கீழாக நதியின் மேற்புறம் இருக்கும் ஒரு சிறிய குதிரைப் பண்ணை வைத்திருக்கும் எனது சித்தப்பா பென் என்பவருடன் வசிக்கச் செல்லலாம் என்று என் அப்பா முடிவெடுத்தார். வறுமையில் இருந்த என் அப்பாவுக்கு கடன் அதிகம் என்பதால் எங்களிடம் இருந்த அனைத்தையும் விற்று அந்தக் கடனை அடைத்தபின் எங்களிடம் மீதம் பதினாறு டாலர்கள் பணம் எஞ்சியிருந்தது . அத்துடன் எங்களின் நீக்ரோ ஜிம் எங்களுடன் இருந்தான்.”
“ஆயிரத்து நானூறு மைல்கள் கடந்து செல்ல ஒரு படகின் அடிமட்ட இடத்தில் தங்குவதற்கான கட்டணத்தொகை கூட எங்களிடம் இல்லை. இருக்கட்டும். ஒரு நாள் நதி பெருகி வருகையில் அதிர்ஷ்டவசமாக அப்பாவுக்கு இந்தத் தோணி தட்டுப்பட்டது. எனவே நாங்கள அனைவரும் இந்தத் தோணியிலேயே நியூ ஆர்லியன்ஸ் புறப்படுவது என்று முடிவு கட்டினோம். ஆனால் அப்பாவின் அதிர்ஷ்டம் நிலைக்கவில்லை. ஒரு நீராவிப் படகு இந்தத் தோணியின் முன்பகுதி ஓரத்தில் ஏறியதால் நாங்கள் அனைவரும் நீருக்குள் விழுந்தோம். நீராவிப்படகின் துடுப்புச் சக்கரத்தின் கீழ் அனைவரும் விழுந்தோம் என்றாலும் நானும் ஜிம்மும் திரும்ப மேலேறி வந்து விட்டோம். ஆனால் அப்பா நன்கு குடித்திருந்ததாலும், எனது தம்பி ஐக் நான்கு வயதுக் குழந்தை என்பதாலும், அவர்களால் மேலே வர முடியவில்லை. நல்லது. அடுத்த நாள் அதிக அளவில் மக்கள் படகில் வந்து எங்களுக்குத் தொந்திரவு கொடுத்து ஜிம்மை என்னிடமிருந்து பிரித்துக் கூட்டிப் போகப் பார்த்தார்கள். ஜிம்மை தப்பி ஓடிப்போன நீக்ரோ என்று அவர்களும் நினைத்து விட்டார்கள். அதனால்தான் பகல் பொழுதுகளில் நாங்கள் நதியில் மிதந்து செல்வதில்லை. இரவுகளில் எங்களுக்கு எந்தத்தடையும் இருக்காது.”
"என்னைக் கொஞ்சம் தனியாக சிந்திக்க விட்டால், பகல் பொழுதிலும் நமக்குத் தேவையானால் தோணியில் பயணம் செய்ய நல்ல ஒரு வழி கண்டுபிடிப்பேன். திரும்ப ஆழமாக யோசித்து சீக்கிரமே ஒரு நல்ல திட்டம் தயாரிக்கிறேன். இன்று விட்டுவிடலாம். அந்த நகரின் வழியாக பகல் வெளிச்சத்தில் போகாதிருப்பது நல்லதுதான். அது நமக்கு ஆபத்தாகக் கூட விளையும்" பிரபுவானவர் கூறினார்.
•Last Updated on ••Tuesday•, 28 •April• 2020 13:39••
•Read more...•
••Monday•, 27 •April• 2020 19:50•
??- ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி -??
முனைவர் ர. தாரணி பக்கம்
அத்தியாயம் பத்தொன்பது
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
சில சமயங்களில் காட்டுத் தவளைகள் கத்தும் ஒலியைத் தவிர்த்து மற்ற அனைத்தும் நிச்சலனமாக, ஏதோ இந்த உலகம் முழுதும் அயர்ந்து தூங்குவதைப் போல தென்படும். அடுத்த கரையில் மரங்கள் அடர்ந்திருப்பதால், நீரின் மேல் நீங்கள் காணும் விடிகாலை முதல் காட்சி ஒரு மந்தமான கோடு போன்ற ஒளி மட்டுமே. நீங்கள் முதலில் அது மட்டுமே காண முடியும். பின்பு வானத்தில் வெளுத்துப் போனது போன்றதொரு புள்ளி தோன்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பரவ ஆரம்பிக்கும். பிறகு சிறிதாக நதிக்கு வெளிச்சம் கிடைக்க ஆரம்பிக்கும். கருப்பு நிற நதி சாம்பல் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். நதியின் மேல் வெகு தொலைவில் வணிகக் கப்பல்கள் கறுப்புப் புள்ளிகளாக மிதந்து கொண்டிருக்கும். அதே போன்றே கறுப்புக் கோடுகளாகத் தொலைவில் தென்படுவது தோணிகளாக இருக்கும். சில சமயங்களில் அந்தப் பிரதேசமே அரவமற்று இருப்பதால் வெகு தூரத்திலிருந்து கூட துடுப்புகள் நீரை உடைத்துத் துழாவும் ஒலி அல்லது அது போன்ற பல ஒலிகள் கலந்த ஓசைகளை நீங்கள் நன்றாகக் கேட்கலாம்.
இரண்டு மூன்று நாட்கள் அப்படியே கடந்தது. மிகவும் சீராகவும், அமைதியாகவும், இனிமையாகவும் கடந்து போனதால் அது அழகாக நீந்திப் போனது என்று நீங்கள் குறிப்பிடலாம். எப்படி நேரத்தைக் கடத்துவது என்று எங்களுக்குத் தெரிந்து விட்டது. நாங்கள் இருந்த இடத்தில் நதி மிகவும் பூதாகரமாக அகன்று, சில சமயங்களில் ஒன்று அல்லது ஒன்றரை மைலுக்கு விரிந்து கிடந்தது. இரவு நேரங்களில் பயணம் செய்து கொண்டும் பகல் நேரங்களில் மறைந்து கொண்டும் இருந்தோம். இரவு நேரம் முடித்தவுடன் வழிதேடிச் செல்லும் பயணத்தை நிறுத்திவிட்டு, கரையின் அருகே, பெரும்பாலும் மணல்திட்டுகளுக்கு அடியில் தேங்கி நிற்கும் நீரில் தோணியை கட்டிவைப்போம். இளம் பஞ்சுப்பொதி மரங்கள் மற்றும் வில்லோ மரங்களின் கிளைகளை வெட்டி அவற்றை வைத்து தோணியை மறைத்து வைப்போம். பிறகு மீன்களுக்காக வலையை அமைத்து வைத்து விட்டு நதி நீருக்குள் சறுக்கி நன்கு விளையாடிக் களித்து எங்களைப் புதுப்பித்துக் கொள்வோம். அதன் பின்னர் கணுக்கால் அளவே நீர் நிறைந்து மணல் பரந்து கிடக்கும் ஆழமற்ற நீரில் கால்களை நனைத்தபடி அமர்ந்து சூரிய உதயத்தை ரசிப்போம்.
அடுத்து வெகு சீக்கிரமே வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நீரின் விசையை தடுத்து நிறுத்தும் ஏதோ தடை நீரின் உள்ளே மறைந்துள்ளது என்ற அர்த்தம் கொள்ளும் வகையில், நதியின் மீது நீண்ட கோடு ஒன்றை நீங்கள் காண முடியும். அதனுடன் நதியின் மீது மூடிய பனிமூட்டம் அப்படியே சுருண்டு நதியை விட்டு மேல் நோக்கிச் செல்வதையும் காணலாம். கிழக்கு வானின் சிவப்பு இன்னும் அதிகமாகி, நதியின் மீது ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி அதன் மூலம் நதியின் அடுத்த கரையில் உள்ள மரங்களின் விளிம்பில் இருக்கும் மரவீடுகளைக் கூட நமக்குக் காண்பித்துக் கொடுக்கும். அவைகள் மர அறுவை மற்றும் விற்பனை நிலையங்களாக இருக்கக்கூடும்.
•Last Updated on ••Tuesday•, 28 •April• 2020 13:40••
•Read more...•
••Monday•, 27 •April• 2020 19:43•
??- ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி -??
முனைவர் ர. தாரணி பக்கம்
அத்தியாயம் பதினெட்டு
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
கர்னல் க்ராஞ்போர்ட் ஒரு மேன்மை பொருந்திய கனவான், தெரியுமா! உண்மையாகவே அவர் ஒரு கனவான்தான். அவரின் குடும்பமும் அவரைப் போன்றே மேன்மையானது. கேள்விப்பட்டவரை அவர் நல்லகுடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்று கூறுகிறார்கள். பந்தயக் குதிரையின் வளர்ப்பு எத்தனை மதிப்பு வாய்ந்ததோ அதே அளவு மதிப்பு நல்ல குடும்பத்தில் வளர்க்கப்பட்ட மனிதனுக்கு உண்டு என்று அந்த விதவை டக்லஸ் எப்போதுமே கூறுவாள். எங்கள் நகரிலேயே அவள் ஒரு மிகச்சிறந்த மேல்குடிவகையை சார்ந்த பெண்மணி என்பதை யாரும் ஒருபோதும் மறுக்கவே மாட்டார்கள். ஏன், மண்ணில் புரளும் கெளுத்திமீன் போன்ற வகைப் பரம்பரையைச் சார்ந்த என் அப்பா கூட அவ்வாறுதான் கூறுவார். கர்னல் க்ராஞ்போர்ட் நல்ல உயரத்துடன், ஒல்லியான தேகத்துடன் மாநிறத்துடன் தோற்றம் அளிப்பார். அவர் முகத்தில் எந்தப் பகுதியிலும் சிவப்புத் திட்டுக்களுக்கான அறிகுறி இருக்கவே இருக்காது. தினமும் காலை முகச்சவரம் செய்து அவரின் முகத்தைச் சுத்தமாக வைத்திருப்பார். மெல்லிய உதடுகள் மற்றும் மூக்குத் துவாரங்கள், உயர்ந்த நாசி, கெட்டியான புருவங்கள் இவற்றுடன் ஏதோ இருட்டுக் குகைக்குள் இருந்து உங்களை நோக்குவது போன்றே காணப்படும், மேல்நெற்றிக்குள் உள்ளடங்கி இடுங்கி இருக்கும் கறுத்த கண்கள் ஆகியவை அமையப் பெற்றவராக அவர் இருப்பார். அவரின் நெற்றி உயர்ந்திருக்கும். அவரின் தலைமுடி கருமை நிறத்துடன் நீண்டு அவரின் தோள்ப்பட்டைகளில் புரண்டு வீழும். அவரின் கைகள் சன்னமாக நீண்டு இருக்கும்.
தினமும் சுத்தமான மேல்சட்டையை அணிந்து அதன் மேல் முழுதும் மூடக் கூடிய லினன் துணியாலான சூட் உங்களின் கண்ணை உறுத்தும் தூய வெள்ளை நிறத்தில் அணிந்து இருப்பார். பித்தளை பொத்தான்களுடன் உள்ள, முன்புறம் குறைந்தும் பின்புறம் வால் போன்று இரண்டாகப் பிரிந்து இருக்கும் நீல நிற வால் கோட் ஞாயிற்றுக் கிழமைகளில் முறைப்படி அணிவார். வெள்ளிப் பூணுடன்கூடிய மஹோகனி மரத்தாலான தடி ஒன்றை கையில் பிடித்துச் செல்வார். ஒரு சிறுதுளி அளவு கூட அற்பத்தனமான விஷயங்களை அவரிடம் காண முடியாது. அவர் என்றுமே உரத்துப் பேசவே மாட்டார். மிகவும் அன்பான மனிதன் என்பதை நீங்கள் உணர முடிவதால் நீங்கள் அவரிடம் கொஞ்சம் நிம்மதியாகப் பழகமுடியும். சில சமயங்களில் அவரின் மெல்லிய புன்னகை பார்க்க மிகவும் அழகாக இருக்கும். ஆனால் ஒரு சுதந்திரத் தூண் போன்று அவர் நிமிர்ந்து நின்று, அவரின் புருவங்களுக்குக் கீழிருந்து மின்னல் சுடர்விடுவது போன்ற கோபம் தெறித்தோடுகையில், முதலில் ஓடிப் போய் ஒரு மரத்தில் தொத்தி உங்களை முதலில் காத்துக்கொண்டு, பின்னர்தான் என்ன சேதி என்று கேட்க முடியும்.
•Last Updated on ••Tuesday•, 28 •April• 2020 13:40••
•Read more...•
••Monday•, 27 •April• 2020 19:32•
??- ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி -??
முனைவர் ர. தாரணி பக்கம்
அத்தியாயம் பதினேழு
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அடுத்த ஒரு நிமிடத்தில், திறந்திருந்த சன்னல் வழியாக தன் தலையை நீட்டாமல் ஒரு குரல் மட்டும் பேசியது.
"போதும் நிறுத்துங்க, பசங்களா! யார் அங்கே?"
நான் கூறினேன் "அது நான்தான்."
"யார் அந்த நான்?"
"ஜார்ஜ் ஜாக்சன், சார்!"
"உனக்கு என்ன வேண்டும்?"
"எனக்கு ஏதும் தேவை இல்லை சார். இந்தப்பக்கமாக நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். உங்களின் நாய்கள் என்னை அனுமதிக்கவில்லை."
"இந்த இரவு வேளையில் அனாவசியமாக எதற்கு இந்தப்பக்கம் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறாய்? ஹே!"
"நான் சுற்றித் திரியவில்லை சார். நீராவிப்படகின் மேலிருந்து தவறி நீரில் வீழ்ந்து விட்டேன்."
"ஓ! உண்மையாகவா? யாரேனும் தீக்குச்சி உரைத்து லாந்தரைப் பற்றவைக்கலாமே? உன் பெயர் என்னவென்று சொன்னாய்?"
"ஜார்ஜ் ஜாக்சன், சார்! நான் ஒரு சிறுவன்.".
"இங்கே கவனி. உண்மையை மட்டும் நீ சொன்னால், பயப்படவேண்டிய அவசியம் இல்லை. யாரும் உன்னை எதுவும் செய்யமாட்டார்கள். ஆனால் அங்கிருந்து நகரப் பார்க்காதே. எங்கே இருக்கிறாயோ, அங்கேயே நில். உங்களில் ஒருத்தர் சென்று பாப் மற்றும் டாம் இருவரையும் தூக்கத்திலிருந்து எழுப்பி , துப்பாக்கியையும் எடுத்து வாருங்கள். ஜார்ஜ் ஜாக்சன்! வேறு யாரேனும் உன்னோடு இருக்கிறார்களா?
•Last Updated on ••Tuesday•, 28 •April• 2020 13:43••
•Read more...•
••Monday•, 20 •April• 2020 14:48•
??- ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி -??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் பதினாறு
பெரும்பாலான பகல்நேரங்களை நாங்கள் தூங்கிக்கழித்துவிட்டு இரவு நேரங்களில் வெளியே புறப்பட்டோம். இறுதி ஊர்வலத்திற்குச் செல்வதை போன்ற ஒரு மிகப்பெரிய படகின் பின்னே நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அதன் ஒவ்வொரு திசைப்பகுதியிலும் நான்கு நீண்ட துடுப்புகள் இருந்தன. எனவே அதில் குறைந்த பட்சம் முப்பது மனிதர்களாவது இருக்கவேண்டும் என்று கணக்கிட்டோம். படகின் மேற்பரப்பில் ஐந்து கூம்புக்குடில்கள் மிகுந்த இடைவெளியுடன் ஒன்றொக்கொன்று தள்ளிப் போடப்பட்டிருந்தது. அவற்றின் நடுவில் திறந்தவெளியில் குளிர்காயும் தீ மூட்ட வசதியாக ஒரு அமைப்பு இருந்தது. உயர்ந்த கொடிக் கம்பங்கள் ஒவ்வொரு இறுதி முனையிலும் இருந்தன. அந்தப் படகுக்கென்று தனி நேர்த்தி இருந்தது. நீங்கள் மட்டும் இப்படிப்பட்ட ஒரு படகைச் செலுத்தும் நபர்களுள் ஒன்று என்றால் நீங்கள் கண்டிப்பாக தனித்துவம் வாய்ந்தவர்தான்.
இரவு மிகவும் சூடாகவும், மேகமூட்டத்துடனும் இருந்தபோது, ஒரு மிகப்பெரிய வளைவில் கீழ்நோக்கிய திசையில் நாங்கள் மிதந்து கொண்டிருந்தோம். பரந்து விரிந்த நதியின் கரைகளில் இருபுறமும் அடர்ந்த காடுகள் அரண் போல் தென்பட்டன. அந்த காடுகளில் எங்கேயும் இடைவெளியோ அல்லது ஏதேனும் ஒளிக் கீற்று உள்ளே நுழைவதையோ காணவே முடியாது. கைரோ நகரைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, உண்மையில் அந்த நகரை அடைந்தால் அதை எங்களால் இனம் காணமுடியுமா என்று நாங்கள் வியந்து கொண்டிருந்தோம். ஒரு டசன் வீடுகளுக்கு மேல் அங்கே இருக்க வாய்ப்பில்லை என்று நான் முன்னமே கேள்விப்பட்டிருந்ததால், ஒருக்கால் அதைத் தெரிந்து கொள்ள முடியாது போகலாம் என்று நான் கூறினேன். அதுவும் அந்த வீடுகளில் விளக்குகள் ஏற்றப்படாமல் இருந்தால், அந்த நகரைக் கடந்து செல்வது எங்களுக்கு எப்படித் தெரியும்? அந்த நகரின் அருகேதான் இரண்டு பெரிய நதிகளும் சந்திக்கின்றன என்பதால் அதை வைத்து நாம் கண்டுபிடித்துவிடலாம் என்று ஜிம் கூறினான். அவ்வாறு நதிகள் சந்திக்கும்போது ஏற்படும் மணல் குவியலை, நதியின் மத்தியில் இருக்கும் தீவின் பாதம் என்று நினைத்து அதைக் கடந்து செல்வதாக நாங்கள் தவறுதலாக நினைத்து விடக் கூடாது என்று நான் எச்சரிக்கை விடுத்தேன். இந்த விஷயம் எங்கள் இருவரையும் கவலை கொள்ள வைத்தது.
எனவே நாங்கள் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. கரையில் ஏதேனும் விளக்கு காணப்பட்டால், முதலில் தெரியும் விளக்கை நோக்கி துடுப்பு வலித்து நாங்கள் கரைசேரவேண்டும். பின்னர் அங்குள்ள எல்லோரிடமும் எனது அப்பா வணிகப்படகு ஒட்டிக் கொண்டு எங்களைத் தொடர்ந்து வருவதாகத் தெரிவிக்க வேண்டும். அவர் புதிதாகத் தொழில் தொடங்கியுள்ளதால், கைரோ எத்தனை தொலைவில் உள்ளது என்று தெரிந்து கொள்ள விரும்புவதாக அனைவரிடமும் கூறுவோம் என்று யோசனை சொன்னேன். ஜிம்முக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. எனவே திருப்தியாகப் புகைப்பிடித்துக் கொண்டு இருவரும் காத்திருந்தோம்.
•Last Updated on ••Tuesday•, 21 •April• 2020 20:08••
•Read more...•
••Monday•, 20 •April• 2020 14:44•
??- ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி -??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் பதினைந்து
தெற்கு இல்லினோயில் உள்ள கைரோ நகருக்குச் சென்று சேர இன்னும் மூன்று இரவுகள் பிடிக்கும் என்று நாங்கள் கணக்கிட்டோம். அங்கேதான் ஒஹையோ நதி மிஸிஸிப்பி நதியில் வந்து கலக்கிறது. அங்கே செல்லத்தான் நாங்களும் விரும்பினோம். அங்கே இந்தத் தோணியை நல்ல விலைக்கு விற்று விட்டு, ஒரு நீராவிப்படகு எடுத்துக் கொண்டு ஒஹையோ நதியில் பயணம் செய்து, அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களுக்குச் செல்ல விரும்பினோம்.
இரண்டாம் நாளிரவு பனிமூட்டம் ஆரம்பித்தது. கடுமையான பனிமூட்டத்தினூடே படகைச் செலுத்திச் செல்வது அறிவீனமான செயல். எனவே சிறிய தீவு போன்ற பகுதிக்கு சென்று அங்கே காத்திருப்பது என்று முடிவு செய்தோம். தோணியை அந்தத் தீவில் கட்டக் கயிற்றுடன் துடுப்பை வலித்துக் கொண்டு செல்லும்போது அங்கே சிறு சிறு செடிகள் மட்டுமே இருந்தன. நதிக்கரையின் ஓரத்தில் இருந்த இளம் செடிகளை நோக்கி கயிற்றை வீசினேன். ஆனால் நதி நீரின் விசை மிகவும் வலுவாக இருந்ததால், தோணி இழுத்துக்கொண்டு கயிறு சுற்றியிருந்த செடிகளை வேரோடு அறுத்துக் கொண்டு வந்து விட்டது. கடுமையான பனிமூட்டம் முற்றிலும் சூழ்ந்து கொண்டுவர நான் பீதியில் வலுவிழந்தேன்.
தோணி கண்ணைவிட்டு மறைந்தது. இருபது அடிகளுக்கு முன் இருப்பது எனக்குத் தெரியாத அளவு பனிமூட்டம் மறைத்திருந்தது. ஒரு நிமிடம் அச்சத்தில் உறைந்து நின்ற நான், அடுத்த நொடி சுதாரித்துக் கொண்டு நான் இருந்த இலேசான படகிலிருந்த துடுப்பை இறுகப் பற்றி வேகமாய் வலிக்கலானேன். ஆனால் அது நகரவேயில்லை. அவசரத்தில் அந்த படகைக்கட்டியிருந்த கயிறை அவிழ்க்க மறந்திருக்கிறேன். வெளியே குதித்து அதன் கயிற்றை அவிழ்க்க முயற்சி செய்தேன். ஆனால் மிகுந்த பரபரப்பில் நடுங்கிக் கொண்டிருந்த எனது கரங்கள் அக்காரியம் செய்யப் பயனற்றுப் போயின.
கயிற்றை அவிழ்த்த உடனே, எங்களது தோணியை நோக்கி செலுத்தினேன். தீவின் கரையை ஒட்டி மிகுந்த சீற்றத்துடன் துடுப்பை வலித்தேன். அந்த விஷயம் சரியாகத்தான் சென்றது. ஆனால் அந்த சிறு தீவின் நீளம் அறுபது அடி கூட இல்லாததால் அதன் கடைசிப் பகுதிக்குச் சென்றவுடன், திடமான வெள்ளைப் பனி மூட்டத்தில் நான் சிக்கினேன். ஒரு இறந்த மனிதனுக்குக் கூட தான் எங்கே செல்கிறோம் என்று தெரிந்திருக்குமோ என்னவோ, எனக்கு அந்தக் கணம் எதுவுமே புலப்படவில்லை.
இனி துடுப்பு வலித்தால். கரையில் முட்டுவேனோ அல்லது தீவில் கொண்டு இடிப்பேனோ என்று தெரியாததால், துடுப்பு வலிப்பதை நான் நிறுத்தினேன். அந்த சமயத்தில் என் கைகளைச் சேர்த்துப் பிடிக்கக் கூட இயலாத அளவு அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்த நான் அப்படியே அசையாமல் உக்கார்ந்து மிதந்து கொண்டிருப்பது என்று முடிவு கட்டினேன். நதியில், தூரத்தே இருந்து ஒரு விளிச்சப்தம் கேட்டதும், எனது உற்சாகம் மீண்டும் தொற்றியது. அந்த ஒலியை மீண்டும் கேட்பதற்காக கவனமாக துடுப்பு வலிக்க ஆரம்பித்தேன். அடுத்த முறை அந்த ஒலியைக் கேட்டவுடன், அந்த ஒலியை நோக்கித் தான் செல்லவில்லை என்றும் அதனின் வலது புறம் சென்று கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். அடுத்த முறை கேட்டபோது அதனிலிருந்து இடது பக்கம் போய்க்கொண்டிருந்தேன். அந்த ஒலியை தொடர்ந்து செல்வதை விட்டுவிட்டு அங்கேயே எல்லா இடங்களிலும் சுற்றி வந்திருக்கிறேன் என்பதால் அந்த ஒலி கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு நீங்கியது.
•Last Updated on ••Tuesday•, 21 •April• 2020 20:07••
•Read more...•
••Monday•, 20 •April• 2020 14:42•
??- ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி -??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் பதினான்கு
உறக்கம் நீங்கி கண்விழித்து எழுந்ததும், உடைந்திருந்த படகிலிருந்து நாங்கள் எடுத்து வந்திருந்த கொள்ளையர்களின் பொருட்களை ஆராய்ந்து பார்த்தோம். பூட்ஸ்கள், துணிமணிகள், புத்தகங்கள், ஒரு தொலைநோக்கிக் கண்ணாடி, மூன்று பெட்டி சிகரெட்டுகள் இன்னும் இது போன்ற எத்தனையோ பொருட்களைக் கண்டோம். நாங்கள் இருவருமே எங்கள் வாழ்க்கையில் இதுவரையில் இத்தனைப் பொருட்களுடன் பணக்காரர்களாக இருந்ததில்லை. சிகரெட்டுகள் அத்துணை அருமையாக இருந்தது. காட்டினுள் அமர்ந்து அன்று மதியம் முழுதும் நாங்கள் பேசிக் கொண்டே இருந்தோம். அந்த புத்தகங்களைப் படித்துப் பார்த்தேன். எங்களின் பொழுது நன்கு கழிந்தது.
அந்த உடைந்த படகில் நடந்த அனைத்து விஷயங்களையும் மற்றும் அந்த நீராவிப்படகு விஷயத்தையும் நான் ஜிம்மிடம் கூறினேன். இவையெல்லாம் சாகசங்கள் என்று நான் அவனுக்கு விளக்கினேன். ஆனால் அவனோ இது போன்ற சாகசங்கள் தனக்கு இனி வேண்டாம் என்று பதிலுரைத்தான். நான் திரும்ப அந்தக் கேபினுள் சென்ற பின் அவன் தவழ்ந்து தோணிக்குச் சென்றபோது, அங்கே தோணியைக் காணவில்லை என்று தெரிந்ததும், தான் இறந்தே விட்டோம் என்று நினைத்துக் கொண்டதாக ஜிம் கூறினான். எல்லாவழிகளும் அடைபட்டுத் தான் சிக்கிவிட்டதாக அவன் கருதியிருக்கிறான். யாருமே அவனைக் காப்பாற்ற இல்லையெனில் அவன் நீரில் மூழ்கி இறந்து விடுவான். ஆனால் யாராவது அவனைக் காப்பாற்றினால் அவன் ஜிம்முக்காக அறிவித்திருக்கும் பணப்பரிசுக்கு ஆசைப்பட்டு காட்டிக் கொடுத்துவிடுவான். பின்னர் மிஸ். வாட்ஸன் அவனைத் தெற்கில் இருக்கும் யாருக்கேனும் கண்டிப்பாக நல்ல விலைக்கு விற்று விடுவாள். நல்லது. சந்தேகமில்லாமல் அப்படித்தான் நடந்திருக்கும். உண்மையில் ஜிம் நீக்ரோக்களின் மத்தியில் ஒரு சிறந்த அறிவாளிதான்.
ராஜாக்கள், ராணிகள், நிலப்பிரபுக்கள், ஜமீன்தார்கள் மற்றும் அது போன்ற பலரைப் பற்றி உள்ள கதைகளை நான் ஜிம்முக்குப் படித்துக் காட்டினேன். எப்படி ஆடம்பரமாக அவர்கள் உடை உடுத்துவார்கள், எவ்வாறு பந்தா செய்து கொள்வார்கள், எப்படி அவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் மிஸ்டர் என்று அழைப்பதற்கு பதிலாக மாண்புமிகு, கனம் பொருந்திய, கருணைப் பிரபு, எங்கள் கடவுளே என்றெல்லாம் அழைத்துக் கொண்டார்கள் என்று படித்துக் காட்டினேன். மிகவும் ஆச்சரியமடைந்த ஜிம்மின் கண்கள் விரிந்தன. அவன் சொன்னான்."
"இத்தனை நபர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவே தெரியாது. பைபிளில் நான் படித்த ராஜா சாலமனைத் தவிர வேறு எந்த ராஜாவையும் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. அது தவிர விளையாடும் சீட்டுக்கட்டுகளில் உள்ள ராஜாக்கள் வேண்டுமானால் தெரியும். ஒரு ராஜா எத்தனை பணம் சம்பாதிப்பார்?"
"சம்பாதிப்பது?" நான் சொன்னேன் "ஏன்! அவர்கள் நினைத்தால் ஒரு மாதத்திற்கு ஆயிரம் டாலர்கள் கூட சம்பாதிக்கக் கூடும். அவர்கள் நாட்டில் உள்ளது எல்லாமே அவர்களுக்குத்தான் சொந்தம் என்பதால் இன்னும் எத்தனை பணம் வேண்டுமானாலும் அவர்கள் சம்பாதிக்கலாம்."
•Last Updated on ••Tuesday•, 21 •April• 2020 20:07••
•Read more...•
••Monday•, 20 •April• 2020 14:39•
??- ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி -??
முனைவர் ர. தாரணி பக்கம்
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் பதின்மூன்று
மயங்கி விழாத குறையாக மூச்சை இழுத்துப் பிடித்து கொண்டு நான் இருந்தேன். உடைந்து மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு படகில், கொலை செய்யும் ஒரு கும்பலுடன் நாங்கள் எத்தனை வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது உணர்ச்சிவசப்படும் சமயமல்ல. அந்தப் படகைக் கட்டாயம் கண்டுபிடித்தால்தான் நாங்கள் தப்பிக்க முடியும். கிடுகிடுவென நடுங்கியபடியே வலது புறமாக நாங்கள் வழி தேடிக் கொண்டு கீழ்நோக்கி நாங்கள் சென்றோம். மிகவும் மெதுவாக இருந்தது எங்கள் நடை. படகின் பின்பகுதி சென்று சேர்வதற்குள் ஒரு வார காலம் ஆனது போல ஒரு மலைப்பு. படகு இருந்ததற்கான அடையாளமே அங்கு இல்லை. ['இதற்கு மேலும் இனி தப்பிக்க முடியும் என்று தோன்றவில்லை' என ஜிம் கூறினான். கடும் அச்சம் காரணமாக அவனின் பலம் முழுதையும் அவன் இழந்தது போல உணர்ந்ததாகக் கூறினான். ஆனால் அங்கே இருந்து பேராபத்தில் சிக்குவதை விட அங்கிருந்து தப்பிக்க முயற்சியைத் தொடர வேண்டும் என்று நான் கூறினேன். எனவே நாங்கள் மீண்டும் எங்கள் முயற்சியைத் தொடர்ந்தோம். படகின் பின்பக்க அறையை நோக்கி மெதுவாக நாங்கள் முன்னேறினோம். முன்னால் இருக்கும் வான வெளிச்சத்தைத் தவிர்க்க அறைச்சுவர்களுடன் ஒட்டி கொண்டு நகர்ந்தோம். முழுதான நிலவொளி நீரில் விழுந்து இருந்ததால், சன்னலை மூட உதவும் கண்ணாடிப் பலகையைப் பிடித்துக் கொண்டு அதன் நிழலில் நிலவொளி எங்கள் மீது படாதவாறு மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் நடந்தோம். உள்ளரங்குக் கதவின் மிக அருகே நாங்கள் சென்றபோது அந்தப்பரிசலைப் பார்த்தோம். என்னால் அதை இனம் காண முடிந்தது. அதைக் கண்டுவிட்டோம் என்றதும் நான் கடவுளுக்கு நன்றியுடையவனானேன். இன்னும் ஒரு நொடிப்பொழுதில் அந்த பரிசலில் தாவி ஏறி இருப்போம். ஆனால் அந்தச் சமயம் பார்த்து அந்தக் கதவு திறந்தது. அந்த இருவரில் ஒருவன் எனக்கு சில அடி தூரத்தில் உள்ளிருந்து தனது தலையை வெளியே நீட்டினான். நான் செத்தேன் என்று நான் நினைத்தேன். ஆனால் அவன் தன் தலையை மீண்டும் பின்னுக்கு இழுத்துக்கொண்டு கூறினான். "அந்த இழவு பிடித்த லாந்தர் விளக்கை அணைத்துவை, பில்!"
கையில் ஏதோ அடங்கியிருந்த ஒரு மூட்டையை அவன் பரிசலுக்குள் தூக்கி எறிந்தான். பின்னர் அதனுள் ஏறி உள்ளே அமர்ந்தான். அது பேக்கர்ட். பிறகு பில் வெளியே வந்து அவனும் அந்த பரிசலுக்குள் குதித்து ஏறினான். பேக்கர்ட் மிக மெல்லிய குரலில் கூறினான் "எல்லாம் சரி. நாம் புறப்படுவோம்."
எனது சக்தி முழுதும் இழந்தவனாக அந்த சன்னலின் அடைப்புப் பலகையை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். ஆனால் பில் கூறுவதையும் நான் கேட்டேன்.
"நிறுத்து. அதை நீ முடித்து விட்டாயா?"
"இல்லை. நீயும் செய்யவில்லையா?"
"இல்லை. அப்படியானால். இன்னும் அவனின் பங்குப்பணம் அவனிடமே உள்ளது.?"
"நல்லது. வா! கொள்ளையடித்த பொருட்களை எடுத்துக்கொண்டு பணத்தை விட்டுப் போவதில் ஒரு பலனும் இல்லை."
"ஹேய்! நாம் வேறு ஏதோ மறைமுகமாகச் செய்கிறோம் என்று அவன் நம்மை சந்தேகப் பட்டால்?"
"படலாம். படாமலும் இருக்கலாம். எப்படி ஆனாலும் அதை நாம் எடுத்துக் கொண்டேயாகவேண்டும். அதை இங்கே அப்படியே விட்டுவிட்டு போக முடியாது. வா என்னுடன்."
•Last Updated on ••Tuesday•, 21 •April• 2020 20:07••
•Read more...•
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் பன்னிரண்டு
விசித்திரமான முறையில் தோணி மெதுவாய் நகர்ந்தது கடைசியாக அந்தத் தீவைத்தாண்டும் வேளை நள்ளிரவு மணி ஒன்று இருக்கக்கூடும். ஏதேனும் படகு எதிரில் வந்தால் உடனடியாகத் தோணியிலிருந்து வெளியே நதிக்குள் குதித்துத் தப்பிப்பதுடன், முன்பு போட்டத் திட்டத்தின் படி இல்லினோய் கரையை அடைவதைக் கைவிடுவது என்று நாங்கள் தீர்மானித்துக் கொண்டோம். நல்ல வேளை! எந்தப் படகும் எதிரில் வரவில்லை. புறப்படும் அவசரத்தில் துப்பாக்கி, மீன்பிடிக்கும் வலை அல்லது சாப்பிட ஏதேனும் எடுத்து வைப்பதைப் பற்றி நாங்கள் இருவருமே சிந்திக்கவே இல்லை. எங்களுக்கு இருந்த பதற்றத்தில் அந்தப் பொருட்களைப் பற்றி யோசிக்கவே தோன்றவில்லை. உண்மையில் உயிர் தப்பிப் பிழைக்கும் போது எல்லாவற்றையும் எடுத்து தோணியில் திணிப்பது என்பது நல்லதொரு நியாயம் இல்லை.
அந்த மனிதர்கள் அங்கே சென்றால் நான் மூட்டி வைத்திருக்கும் அந்தத் தீயைக் காண்பார்கள் என்பது எனது கணிப்பு. இரவு முழுதும் அவர்கள் அங்கேயே அமர்ந்து, வெளியே சென்றிருக்கும் ஜிம் திரும்பி வரக் காத்திருக்கக் கூடும். நல்லது. காரணம் எதுவாகினும், அவர்கள் எங்களை விட்டு வெகு தொலைவில் இருப்பது நல்லதுதான். அவர்களை திசைதிருப்ப நான் மூட்டிய பொய்யான தீ அவர்களை முட்டாளாக்கவில்லை என்றாலும் நான் முயற்சியே செய்யவில்லை என்று யாரும் கூறமுடியாது அல்லவா! என்னால் என்ன செய்து அவர்களை முட்டாளாக்க முடியுமோ அதை நான் கண்டிப்பாகச் செய்தேன்.
அடிவானத்திலிருந்து சூரியனின் முதல்கதிர்கள் வெளியே நீண்டபோது, இல்லினோய் பகுதியில் நீண்டதொரு வளைவுடைய மிஸ்ஸிஸிசிப்பி நதியின் ஊடே அடர்ந்த பஞ்சுப்பொதி மரங்கள் சூழ்ந்த மணல் மேடு உடைய சிறு தீவில் எங்களின் தோணியைக் கட்டி வைத்தோம். பஞ்சுப்பொதி மரங்களின் கிளைகளை சிறிய கோடரி கொண்டு தறித்தெடுத்து, எங்களின் தோணி மீது முழுதும் வைத்து நன்கு மூடி நதிக்கரையில் உள்ள சிறிய குகை போலத் தோன்றுமாறு செய்தோம்.
நதியின் மிஸ்ஸோரி பகுதிக் கரை முழுதும் மலைகளும், இல்லினோய் பகுதி மொத்தமும் அடர்ந்த வனமும் என்ற வகையான அமைப்பு இயற்கையிலேயே அங்கே காணப்படும். மிஸ்ஸோரிக் கரையைச் சுற்றிவர அகன்ற வாய்க்கால் அங்கே உள்ளதால் எங்களை நோக்கி யாரேனும் வந்துவிடுவார்கள் என்ற பயமில்லாமல் நாங்கள் அமைதியாக இருந்தோம். ஓய்வாக அங்கே சாய்ந்து கொண்டு மிஸ்ஸோரி நதிக்கரையோரம் மிதக்கும் மரக்கலங்களையும், நீராவிப் படகுகளையும் முழு நாளும் பார்த்துக் கொண்டே இருந்தோம். இன்னும் சில நீராவிப்படகுகள் நதியின் மத்தியில் நீரின் விசையோடு போட்டியிட்டுக்கொண்டு இரைச்சலுடன் மெதுவாய் நகர முயற்சிப்பதையும் கண்டுகொண்டிருந்தோம்.
•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 16:50••
•Read more...•
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் பதினொன்று
உள்ளே வரலாம்,"கூறினாள் அந்தப்பெண். உள்ளே நான் நுழைந்தேன். "உக்காரு" அவள் கூறினாள்.
நான் அமர்ந்தேன். பளபளத்த அவளது சிறு கண்களால் என்னை மேலும் கீழும் நோக்கிய அவள் கேட்டாள். "உனது பெயர் என்னவாக இருக்கும்?"
"சாரா வில்லியம்ஸ்"
"எங்கே வசிக்கிறாய்? இந்த ஊரின் அருகாண்மையிலா?"
"இல்லை அம்மா. நான் ஓடையின் ஏழு மைலுக்குக் கீழே உள்ள ஹூகெர்வில் பகுதியில் வசிக்கிறேன். அங்கிருந்தே நடந்தே வந்ததால் நான் மிகவும் களைப்படைந்துள்ளேன்."
"நீ பசியோடு இருக்கிறாய் என்று நான் நினைக்கிறன். இரு சாப்பிட ஏதாகிலும் இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன்."
"இல்லை அம்மா. பசியெல்லாம் எனக்கு இல்லை. வரும் வழியில் பசித்ததால் இரண்டு மைலுக்கு முன்னால் உள்ள ஒரு பண்ணையில் நின்று அங்கே சாப்பிட்டு வருகிறேன். அதனால் பசி எனக்கு இப்போதைக்கு இல்லை. அதனால்தான் இங்கே வந்து சேர இவ்வளவு நேரம் ஆகி விட்டது. எனது அம்மா உடல்நலக்குறைவினால் படுக்கையில் இருப்பதையும் அவள் பணப்பற்றாக்குறையினால் கஷ்டப்படுவதையும் எனது மாமா அப்னர் மூர் அவர்களுக்குத் தெரிவிக்க இங்கு வந்துள்ளேன். அவர் இந்த ஊரின் வட எல்லையில் வசிப்பதாக எனது அம்மா கூறினாள். நான் இந்த ஊருக்கு வந்ததே இல்லை. உங்களுக்கு அவரைத் தெரியுமா?"
"இல்லை. இந்த ஊரில் உள்ள அனைவரையும் நான் தெரிந்து கொள்ளவில்லை இன்னும்.. இரண்டு வாரங்களாகத்தான் நான் இங்கே வசிக்கிறேன். இங்கிருந்து வட எல்லை மிகவும் தூரத்தில் இருக்கிறது. இன்றிரவு இங்கே தங்கி ஓய்வெடுத்துக் கொள். தலையைச் சுற்றியுள்ள பானட்டைக் கழற்று."
"இல்லை." நான் அவசரமாகச் சொன்னேன். "கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டுப் போகலாம் என்று நினைக்கிறேன். இருட்டைக் கண்டால் எனக்கு பயம் இல்லை."
•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 16:41••
•Read more...•
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் பத்து
காலை உணவுக்கப்புறம் இறந்த அந்த மனிதன் எப்படிக் கொல்லப்பட்டிருப்பான் என்று அவனைப்பற்றிப் பேச விரும்பினேன். ஆனால், ஜிம் அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை. அது துரதிஷ்டத்தைக் கொண்டு சேர்க்கும் என்று அவன் கூறினான். அத்துடன், இறந்த மனிதன் ஆவியாக வந்து பயமுறுத்துவான் என்றான். நல்லபடியாக ஈமச்சடங்கு செய்யப்பட்டு மண்ணில் புதைக்கபப்ட்ட மனிதனை விட அவ்வாறு புதைக்கப்படாத மனிதன் கண்டிப்பாக ஆவியாக வந்து மற்றவர்களைப் பீதியிலாழ்த்துவான் என்றான். அவன் கூறியது நியாயமாகத் தென்பட்டதால் அதைப்பற்றி மேலே பேசாது அமைதியானேன். ஆயினும், அதைப்பற்றி நினைக்காமலிருக்க என்னால் இயலவில்லை. அவன் யாரால், எதற்காகச் சுடப்பட்டு இறந்தான் என்பதைத் தெரிந்து கொள்ள நான் நினைத்தேன்.
அங்கிருந்து எடுத்து வந்த துணிகளை நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில், ஒரு பழைய கனத்த கம்பளி போன்ற மேல்ச்சட்டையின் உள்பகுதியில் தைத்து வைக்கப்பட்ட பகுதியில் மறைந்திருந்த எட்டு டாலர் வெள்ளி நாணயங்களைக் கண்டெடுத்தோம். அந்த மேல்சட்டையை அந்த வீட்டில் இருந்தவர்கள் எங்கிருந்தாவது திருடித்தான் இருக்கவேண்டும் என்றும் அப்படி இல்லாவிடில், அதனுள் இருக்கும் அந்தப் பணத்தை அவர்கள் இவ்வாறு விட்டுவைத்திருக்க மாட்டார்கள் என்று ஜிம் தன் கருத்தை உரைத்தான். அந்த மனிதனைக் கூட அவர்கள் கொன்றுதான் இருக்கவேண்டும் என்றேன் நான். ஆனால் ஜிம் அதைப் பற்றி மட்டும் பேச மறுத்து விட்டான்.
நான் கூறினேன் "இப்போது இதை கெட்ட சகுனம் என்று நினைக்கிறாய். ஆனால் முந்தாநாள் விளிம்பின் மேற்பரப்பில் கிடந்த பாம்புத்தோலை நான் கொண்டு வந்தபோது நீ என்ன கூறினாய்? பாம்புத்தோலை என் கரங்களால் தொடுவது உலகிலேயே மிகவும் மோசமான பாவப்பட்ட விஷயம் என்று நீ கூறினாயல்லவா! நல்லது. இங்கே பார் உனது துரதிஷ்டத்தை! எத்தனை கொள்ளை பொருட்களை நாம் வாரிவழித்து கொண்டுவந்ததுடன், கூட எட்டு டாலர் வேறு அதிகப்படியாக கிடைத்திருக்கிறது. இப்படியான துரதிஷ்டம் நமக்கு ஒவ்வொரு நாளும் கிடைத்தால் தேவலை என்று நான் விரும்புகிறேன், ஜிம்!"
•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 16:20••
•Read more...•
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் ஒன்பது
தீவைச் சுற்றி ஆராய்ந்து வருகையில் தீவின் மத்தியில் உள்ள பகுதியைச் சென்று பார்க்க நான் விரும்பினேன். அந்தத்தீவு மூன்றுமைல் நீளமும். கால் மைல் அகலமுமான சுற்றளவு மட்டுமே உள்ளதால், நாங்கள் புறப்பட்டு வெகுவிரைவில் அதன் மத்தியை அடைந்தோம்.
நாங்கள் சென்று பார்க்க விரும்பிய அந்த இடம் பெரிய பள்ளத்தாக்கு போன்று செங்குத்தாக நாற்பது அடி உயரத்தில் இருந்தது. அதன் இருபுறமும் மிகவும் செங்குத்தாகவும், அடர்ந்த புதர்களுடனும் இருந்ததால், அதில் ஏறிச்செல்ல நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம்.
வழித்தடங்களைத் தேடிப் பிடித்துக் கொண்டு அந்த உயரத்தை சிரமத்துடன் கடந்து சென்று அதன் உச்சியில் இருந்த பாறைகளின் மீது இல்லினோய் பக்கம் நோக்கி அமைந்திருந்த ஒரு குகையைக் கண்டோம். அந்த குகை மூன்று அல்லது நான்கு அறைகளின் அளவில் இருந்ததுடன், ஜிம் நிமிர்ந்து நின்றால் அவன் உயரத்திற்கு அது சரியாக இருந்தது. அதனுள்ளே குளுமையான தட்பவெப்பம் நிலவியது. எங்களது பொருட்களை உள்ளே வைத்துக் கொள்ளலாம் என்று ஜிம் கூறினான். ஆனால் ஒவ்வொரு முறையும் மேலும் கீழும் ஏறி இறங்க எனக்கு விருப்பமில்லை.
தோணியைமட்டும் மறைவிடத்தில் வைத்துவிட்டு, மற்ற பொருட்களையெல்லாம் அந்த குகைக்குள் மறைத்து வைத்துவிட்டால், அந்தத் தீவுக்கு யார் வந்தாலும் நாம் சுலபமாக மறைந்து கொள்ளலாம் என்று ஜிம் கூறினான். அவர்களிடம் மோப்ப நாய் இருந்தாலொழிய யாருமே என்றுமே நம்மைக் கண்டிபிடிக்கப்போவதில்லை என்றான். அத்துடன் நாங்கள் கண்ட அந்த இளம் பறவைகளின் வருகை பற்றி எனக்கு நினைவூட்டி, அவைகள் மழையின் அறிகுறிகள் என்பதால், மழை வரும் பட்சத்தில் எல்லாப்பொருட்களும் நனைந்து வீணாகப் போவதை விரும்புகிறாயா என்று என்னிடம் அவன் கேட்டான்.
எனவே நாங்கள் திரும்பிச்சென்று தோணியை குகையின் அடிப்பாகத்தில் உள்ள ஒரு இடத்திற்கு வலித்துக் கொண்டு வந்து சேர்த்தோம். பின்னர் அதில் இருந்த அனைத்துப் பொருட்களையும் மேலே எடுத்துச் சென்றோம். தோணியை மறைத்து வைக்கும் பொருட்டு வில்லோ மரங்கள் அடர்ந்து அதிகமாக உள்ள ஒரு மறைவிடத்தை தேடிக்கண்டுபிடித்து நிறுத்தினோம். மீன் பிடி வலையில் இருந்து சில மீன்களை எடுத்துக் கொண்டு, மீண்டும் மீனுக்குக் குறிவைத்து வலையைச் சரி செய்து விட்டு இரவு உணவுக்குத் தயாரானோம்.
குகையின் கதவு ஒரு பீப்பாயை உருட்டிச்செல்லும் அளவுக்குப் பெரியதாக இருந்தது. கதவின் ஒரு பக்கத்தில் உள்ள தரை கொஞ்சம் கவனிக்கப்படக்கூடியதாக இருந்தது. சம அளவிலான தரையாக அது இருந்ததால், நெருப்பு மூட்டி அதில் எங்களது இரவு உணவைத் தயாரித்தோம்.
•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 15:21••
•Read more...•
- என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் எட்டு
நான் கண்விழித்து எழுந்த போது சூரியன் மேல்வானத்தில் இருப்பதைக் கண்டு அப்போது காலை எட்டு மணி ஆகியிருக்கும் என்று கணித்தேன். குளுமையான நிழல் கவிந்த புல்வெளியில் படுத்துக்கொண்டே நடந்த விஷயங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். நான் ஓய்வாக உணர்ந்தேன் என்பதைவிட வசதியாகவும், நிறைவாகவும் அதிகம் உணர்ந்தேன். இரண்டு அல்லது மூன்று ஓட்டைகளுக்கிடையேதான் பார்க்க முடிந்தாலும் சூரியன் முழுமையாகத் தென்பட்டது. என்னைச் சுற்றிலும் அடர்ந்த மரங்களும், அதனிடையே காணப்பட்ட கும்மிருட்டும்தான் இருந்தது. சூரியன் இலைகளுக்கு உள்ளே எட்டிப்பார்த்து ஜொலித்ததால் தரையில் ஆங்காங்கே புள்ளி புள்ளியாக ஒளிவட்டங்கள். மெல்லிய தென்றல் காற்று வீசிக்கொண்டிருப்பதை அங்கிருந்த இலைகள் மெதுவாகத் தலை அசைத்து உணர்த்திக்கொண்டிருந்தன. அணில் தம்பதி இருவர் மரக்கிளையில் அமர்ந்து என்னைப்பார்த்து நட்போடு கீச்சிட்டன.
சொல்லவொணாத வகையில் நான் மிகவும் வசதியான சோம்பேறித்தனத்தை அனுபவித்துக் கொண்டிருந்ததால் எழுந்து காலை உணவு தயாரிக்க மனமில்லாது அப்படியே கிடந்தேன்.. திரும்பவும் தூக்கத்தில் சொக்கிப்போய்க்கொண்டிருக்கும்போது தூரத்திலே நதியில் இருந்து பூம் என்று முழக்கம் போன்றதொரு ஒலி கேட்டது. நான் எழுந்து முழங்கைகளால் நிலத்தில் ஊன்றி அந்தச்சத்தத்தை கவனித்தேன். வெகு விரைவிலேயே மீண்டும் அதே சத்தம் கேட்டது. மெதுவாகத் தத்திக் கொண்டே இலைகளின் வழியாக வெளியே பார்த்தேன். தூரத்தில் நதியின் மேற்புறப் பரப்பில் புகைமூட்டம் ஒன்றைக் கண்டேன். அத்துடன் ஒரு படகு நிறைய மக்கள் நதியில் மிதந்து வருவதையும் கண்டேன். என்ன பிரச்சினை என்று இப்போது எனக்குப் புரிந்து விட்டது. "பூம்." வெள்ளை நிறப்புகை அந்த படகில் இருந்து வெளியேற்றப்பட்டு வருவதைக் கண்டேன். அவர்கள் நதி நீர் மீது பீரங்கி கொண்டுவெடிக்கச் செய்து நதியினுள்ளே கிடக்கும் எனது உயிரற்ற உடல் நீர்ப்பரப்பின் மேலே வந்து மிதக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.
நான் மிகவும் பசியுடன் இருந்தேன். ஆனால் இப்போது அடுப்பு மூட்டுவது அறிவில்லாமை ஆகும். ஏனெனில் அதில் இருந்து வெளி வரும் புகையை அவர்கள் பார்த்துவிட்டால் வம்பாகி விடும். எனவே, பேசாமல் அமர்ந்து பீரங்கி வெளிவிடும் புகையையும், பூம் என்ற அந்த சத்தத்தையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். அந்த நதி அக்கணத்தில் பரந்து விரிந்ததாக காணப்பட்டது. அது எப்போதுமே கோடைகாலக் காலைவேளைகளில் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். நான் அவர்கள் எனது உயிரற்ற உடலைத் தேடிக்கொண்டிருப்பதை ஒரு குரூர திருப்தியுடன் ரசித்தேன். ஆயினும் கடிப்பதற்கு ஏதேனும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
பாதரசத்தை ரொட்டித்துண்டுகளில் வைத்து அவற்றைத் தண்ணீரில் விட்டால் அவை நேராக மூழ்கிப்போன உடலில் சென்று நிற்கும் என்று மக்கள் கடைப்பிடிக்கும் ஐதீகம் அப்போதுதான் எனது நினைவுக்கு வந்தது. எனவே, அந்த ரொட்டித்துண்டுகளைத் தேடிச் சென்று தீவின் இல்லினோய் பக்கம் நின்று கொண்டு என்னுடைய அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்த்தேன். எனக்கு ஏமாற்றம் நேரவில்லை. பெரிய இரட்டை துண்டுகள் ஒன்று அந்தப்பக்கமாக வந்தன. நான் ஒரு நீண்ட குச்சி வைத்து அதை என்பக்கம் இழுத்தேன். ஆனால், என் கால் வழுக்கியதால் அவை என்னைவிட்டு தூரத்தில் அகன்று விட்டன. நீரின் விசை கரையோரம் எதையும் அடித்து வந்து சேர்க்கும்படிதான் நான் நின்ற இடம் இருந்தது. எனக்கு அது நன்கு தெரிந்துதான் இருந்தது. விரைவிலேயே இன்னொரு ரொட்டித்துண்டு வந்தது. இந்த முறை அதை நான் பிடித்து விட்டேன். அந்தத் திடப்பொருளை எடுத்து கொஞ்சம் குலுக்கி மேலிருந்த பாதரசக் கலவையை நீக்கி, ஒரு கடி கடித்தேன். மிகப்பெரிய பணக்காரர்கள் சாப்பிடும் வகையான பேக்கர்ஸ் ரொட்டிகள் அவை. ஏழைகள் சாப்பிடும் மக்காச்சோளத்தில் செய்யப்படும் மலிவான பொருள் அல்ல.
நல்ல சௌகரியமான இடத்தில் இலைகளின் இடையில் மரக்கட்டையின் மேல் அமர்ந்து ரொட்டியை மென்றுகொண்டே அந்தப் படகை கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் நான் மிகவும் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். அதன் பின்தான் திடீரென எனக்கு அது உறைத்தது. அந்த விதவையோ, பாதிரியாரோ அல்லது வேறு யாரெனுமாவது இந்த ரொட்டித்துண்டு என்னைக் கண்டுபிடிக்கும் என்று பிரார்த்தனை செய்து போட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அது என்னைக் கண்டு பிடித்தே விட்டது இல்லையா!. எனவே பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதாவது, அந்த விதவை, பாதிரியார் போன்ற நல்ல மனிதர்களின் பிரார்த்தனைகளுக்கு ஏதோ சக்தி உண்டு போலும். எனக்கு அது சரிப்பட்டு வரவில்லை. அது ஒரு சில நல்ல இதயங்களுக்குத்தான் சரிவரும் போல.
•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 15:17••
•Read more...•
- என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
-அத்தியாயம் ஏழு
"எழுந்திரு. என்ன செய்துகொண்டிருக்கிறாய்?
நான் கண்களை விழித்து சுற்றிலும் பார்த்து எங்கே இருக்கிறேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சூரியன் மேலே எழும்பிவிட்டது. நான் அயர்ந்து உறங்கி விட்டேன் போலும். கோபமும் சோர்வும் முகத்தில் தெரிய அப்பா என் முன்னே நின்று கொண்டிருந்தார். அவர் கேட்டார். "இந்த துப்பாக்கியை வைத்துக் கொண்டு என்ன செய்கிறாய்?"
கடந்த இரவு அவர் நடந்துகொண்டது அவர் நினைவில் இல்லை என்பதை உணர்ந்தேன். எனவே நான் சொன்னேன் "யாரோ கதவை உடைத்து உள்ளே நுழைய முயற்சித்தார்கள். எனவே அவன் வரும்வரை அவனுக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன்.
"ஏன் என்னை எழுப்பவில்லை?"
"நான் மிகவும் முயற்சித்தேன். நீங்கள் அசையக்கூட இல்லை."
"நல்லது. சரி. முழுநாளும் அசட்டுத்தனமாக ஏதும் செய்துகொண்டே நிற்காதே. வெளியே சென்று மீன் வலையில் மீன் ஏதேனும் உள்ளதா என்று பார்த்து எடுத்து வா. அப்போதுதான் நாம் காலை உணவு சாப்பிட முடியும். இன்னும் சில நிமிடங்களில் நான் வெளியே சென்று விடுவேன்."
அவர் கதவைத் திறந்ததும் நான் நதியின் கரை நோக்கிச்சென்றேன். நதியில் மரக்கிளைகள் மற்றும் குப்பைகளுடன் மிதந்த மரப்பட்டைகள் துள்ளிக்கொண்டு செல்வதை கண்ட எனக்கு நதியின் நீரோட்டம் அதிகரிப்பது தெரிந்தது . நான் மட்டும் இப்போது ஊருக்குள் இருந்திருந்தால், அதிகமான சேட்டைகள் செய்து மகிழ்ந்திருப்பேன். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் நீரின் வரத்து அதிகரிப்பது எனக்கு எப்போதுமே நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் நேரமாக இருக்கும். ஏனெனில் நதியில் விடப்படும் மரக்கட்டைகள் அப்போதுதான் மிதந்து வரும். சில சமயங்களில் டஜன் மரக்கட்டைகளை ஒன்றிணைத்து செய்யப்பட்டிருக்கும் மரக்கலம் மிதந்து வரும். நான் அதைப் பிடித்துச் சென்று மரஅறுவை மில்களுக்கும், மரக்கட்டைகளை வாங்கும் நிலையத்திற்கும் விற்று விடுவேன்.
கரையின் கூடவே சென்ற நான் ஒரு கண்ணால் அப்பாவைக் கண்காணித்துக் கொண்டும், இன்னொன்றால் ஏதேனும் உபயோகமானது மிதக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டே சென்றேன். அப்போதுதான் ஒரு குறுகிய மரத்தோணி மிதந்து வருவதைக் கண்டேன். பதிமூணு பதினாலு அடி நீளத்தில், குழிந்த உட்புறத்துடன் ஒரு அன்னம் போன்று மிக அழகுடன் இருந்தது. தலை குப்புற தவளை போன்று அணிந்திருந்த உடையுடனே நீரினில் பாய்ந்து அந்த மரத்தோணி நோக்கி நீந்திச் சென்றேன். அதன் உள்ளே யாரேனும் மறைந்து படுத்திருக்கக்கூடும் என்று நான் எதிர்பார்த்தேன். சில சமயங்களில் குறும்பு செய்வதற்காக உள்ளே மறைந்திருந்து, யாரேனும் அவர்கள் அருகில் சென்றால், திடீரென எழுந்து பயப்படுத்திச் சிரிப்பது போன்ற விளையாட்டு இருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் இந்த முறை அப்படி ஏதும் நடக்கவில்லை. உண்மையாகவே அது ஒரே நல்ல மரத்தோணி. எனவே நான் அதில் இறங்கி துடுப்பை வலித்து கரையை நோக்கிச் செலுத்தினேன். இதனது மதிப்பு ஒரு பத்து டாலருக்குத் தேறும் என்பதால் எனது கிழவன் இதைப் பார்த்தால் மிகுந்த மகிழ்ச்சி கொள்வான்.
•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 15:16••
•Read more...•
- என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்' -
அத்தியாயம் ஆறு
நல்லது. திரும்பவும் எனது கிழவன் பழையபடி முருங்கை மரம் ஏறி விட்டான். நீதிபதி தாட்சர் மீது அந்தப் பணத்திற்காக வழக்குப் போட்டான். நான் பள்ளிக்குச் செல்கிறேனா என்று என் பின்னால் வந்து உளவு பார்க்கவும் ஆரம்பித்தான். சில சமயங்களில் என்னைக் கைப்பிடியாகப் பிடித்து, கடுமையாக அடித்தான். ஆனால் நான் பள்ளிக்குச் செல்வதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன். ஒன்று அவனைத் தவிர்த்து விடுவேன் அல்லது அவன் என்னைப் பிடிக்கமுடியாத அளவு வேகமாக ஓடி விடுவேன். உண்மையில் பள்ளிக்குச் செல்வது எனக்கு முன்பெல்லாம் பிடிக்காத ஒன்று. ஆனால் இப்போது பள்ளிக்குச் செல்வது என் அப்பாவை கடுப்பேத்தும் என்பதை உணர்ந்து தவறாமல் செல்ல ஆரம்பித்தேன்.
என் அப்பா போட்ட வழக்கோ மிகவும் மெதுவாக நடந்து கொண்டிருந்தது. அவர்கள் வழக்கு நடத்தும் செயல்முறையை ஆரம்பிப்பதாகவே தெரியவில்லை. எனவே, அவ்வப்போது நான் நீதிபதி தாட்சரிடம் இரண்டு அல்லது மூன்று டாலர்கள் கடன் வாங்கி என்னை அடிக்காமல் இருக்க அப்பாவுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொருமுறையும் அவனுக்குப் பணம் கிடைக்கும்போதும் கண் மண் தெரியாமல் குடிப்பது மட்டும் அல்லாது கலாட்டா செய்து ஊரையே இரண்டாக்குவான். அப்படி ஊரில் கலாட்டா செய்யும் ஒவ்வொரு முறையும், அவனைச் சிறையில் அடைப்பார்கள். இந்த மாதிரி ஒரு வாழ்கை முறை அந்த மனிதனுக்கு மிகவும் சரியாகப் பொருந்தியது - அவனது பாதையைப் பொறுத்த வரை அவனுக்கு சரியாகப் பட்டது போலும்..
அந்த விதவையின் வீட்டைசுற்றியே அப்பாவின் நடமாட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், அந்த விதவை கடும் எரிச்சலுடன் இவ்வாறு தொந்தரவு செய்தால் அவன் வாழ்க்கையை கடினமாக மாற்றிவிடப்போவதாக கடைசியாக அவரை எச்சரித்தாள். அது அவனை மிகவும் கடுப்படையச் செய்தது. ஹக் ஃபின்னுக்கு யார் உண்மையான பாதுகாவலர் என்று அவளுக்குக் காட்டப்போவதாகத் தெரிவித்தான். எனவே, ஒரு வசந்த கால நாளில் மறைந்திருந்து எனக்காகக் காத்திருந்து என்னைப் பிடித்துவிட்டான். என்னை இழுத்துக்கொண்டு ஒரு தோணியில் மேல் நோக்கி ஓடும் ஆற்றின் திசையில் மூன்று மைல்கள் கூட்டிச்சென்றான். அதன் பின் இல்லினோய் மாகாணத்தை நாங்கள் கடந்து சென்றோம். அடர்ந்த மரங்களால் மறைக்கப்பட்ட மரத்தினாலான தனித்திருக்கும் சிறிய குடிலுக்கு அழைத்துச் சென்றான். அப்படி ஒரு இடம் அங்கே உள்ளது முன்னமே அறிந்திருக்காத பட்சத்தில், நீங்கள் அதை ஒருபோதும் கண்டுபிடிக்கவே இயலாது.
எல்லா நேரமும் அப்பா என்னை தன்னுடனே இருத்தி வைத்துக்கொண்டான். எனவே, தப்பி ஓட எனக்கு வாய்ப்புக் கிட்டவே இல்லை. நாங்கள் அந்த பழைய சிற்றறையில் வசித்தோம். அவன் எப்போதும் அந்த அறையைப் பூட்டி அதன் சாவியை இரவு வேளைகளில் தனது தலைமாட்டில் வைத்துக்கொள்வான். அவனிடம் ஒரு துப்பாக்கியும் இருந்தது. எங்கேயோ அதை அவன் திருடி இருக்கக்கூடும் என்று நான் யூகித்திருந்தேன். வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் அதைப் பயன்படுத்தினோம். கொஞ்ச நாட்களுக்கு ஒரு முறையாவது என்னை அந்த அறையில் விட்டுப் பூட்டிவிட்டு தோணியை எடுத்து கீழ்த்திசை நோக்கி செலுத்தி அங்குள்ள கடையில் மீன் விற்று , மது வாங்கும் விளையாட்டுக்குச் சென்று விடுவான். நன்கு மூக்கு முட்டக்குடித்து விட்டு, கையிலும் மது பாட்டில் வாங்கி கொண்டு வந்து பழைய காலம் மாதிரியே பொறுப்பற்ற ஊதாரியாக வாழ்ந்து கொண்டிருந்தான், அந்த சமயங்களில் என்னைச் சரமாரியாக அடிப்பான், இதற்கிடையில் என் இருப்பிடத்தை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த விதவை ஒரு ஆள் மூலம் என்னை திருப்பிக் கொண்டு செல்ல முயற்சி செய்தாள். ஆயினும், அந்த ஆளை அப்பா கையில் இருந்த துப்பாக்கி கொண்டு ஓட அடித்துவிட்டான். அங்கே குடியமர்ந்து நீண்ட நாள் ஆகவில்லை எனினும், எனக்கு அந்த இடம் பழக்கமாகி விட்டது. என் அப்பாவிடம் அடி வாங்கும் பகுதியைத் தவிர மற்றபடி அந்த வாழ்க்கை எனக்குப் பிடித்துத்தான் போனது.
•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 15:16••
•Read more...•
- என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்' -
அத்தியாயம் ஐந்து
அறைக்கதவை அடைத்துவிட்டு நான் திரும்பிப்பார்க்கும் வேளை, அங்கே அவர், என் அப்பா. என்னை அவர் அதிகம் அடித்துத் துன்புறுத்துவதால், அவரைக் கண்டு எல்லாக்காலங்களிலும் நான் பயம் கொண்டிருந்திருக்கிறேன். .அதே போல்தான் அன்றும் பயந்தேன். ஆனால், ஒரு நிமிடத்திற்குப் பிறகு, அவரைப் பார்த்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் பயத்தின் தன்மை சிறிது மாறியவுடன், எனது மூச்சைக் கொஞ்சம் இழுத்துப் பிடித்துத்தளர்த்தினேன். அங்கே பயப்பட ஏதுமிலை என்பதை நான் உணர்ந்தேன்.
அவருக்கு வயது ஐம்பது இருக்கும். வயதுக்கேற்ற தோற்றத்தில்தான் அவரும் காணப்பட்டார். ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து, வழுவழுப்புடன், நீண்டு கீழே விழும் தலைமுடி வழியாக பளபளத்த கண்கள் திராட்சைக்கொடியினூடே கூர்ந்து நோக்குவதைப் போல் இருந்தது. அவரது தலைமுடியும், முடிச்சு விழுந்து நீண்டிருந்த அவரது தாடியும், கொஞ்சம் கூட நரைக்காமல் கருகருவென இருந்தது. அந்த முடிக்கற்றைகளினூடே வெளிப்பட்ட அவரது முகம், நோயுற்று வெளுத்துப் போயிருக்கும் வெண்மை நிறத்தில், மரத்தின் வெள்ளைத் தேவாங்கு அல்லது நீரின் ஆழத்தில் இருக்கும் மீன் போன்றவைகளின் நிறத்தில் இருந்தது. உங்களை கடும் பீதியில் ஆழ்த்த அதுவே போதுமானது. அவரின் ஆடைகள் கந்தலாக இருந்தன. அவர் தனது ஒரு காலை எடுத்து அதன் கணுக்காலை இன்னொரு காலின் முட்டியின் மீது வைத்து அமர்ந்திருந்தார். அவர் மேலே வைத்திருந்த காலின் பூட் கிழிந்து, காலின் இரண்டு விரல்பகுதிகள் அந்த ஓட்டை வழியே வெளியே தெரிவதை நீங்கள் நன்றாகக் காண முடியும். அந்த விரல்பகுதிகளை அவர் சிறிதாக அசைக்கவும் செய்தார். மேல்பக்கம் உள்ளே குழிந்து, தளர்ந்து இருக்கும் அவரது தொப்பியானது கீழே தரையின் மீது கிடந்தது.
நான் அங்கே நின்று அவரை உற்றுப்பார்த்துக்கொண்டிருக்க, அவரும் நாற்காலியில் இருந்துஅமர்ந்தவாறே, சுழன்று திரும்பி என்னை நோக்கிக்கொண்டிருந்தார். மெழுகுவர்த்தியைக்கீழே வைக்கும் வேளையில்தான் ஜன்னல் திறந்து கிடப்பதை, நான் கவனித்தேன். அப்படியானால் அவர் அந்த கூரைக்கொட்டகை வழியாக ஏறி ஜன்னல் வழியாக உள்ளே வந்திருக்க வேண்டும். அவர் என்னை மேலும் கீழும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கடைசியில் கூறியதாவது: "சலவை செய்யப்பட ஆடைகள் உனக்கு!. நீ மிகவும் மேலிடத்தை சார்ந்ததாக உன்னை எண்ணிக்கொள்கிறாயோ?"
•Last Updated on ••Friday•, 10 •April• 2020 00:01••
•Read more...•
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்' -
அத்தியாயம் நான்கு
நல்லது. நான்கு அல்லது ஐந்து மாதங்கள் நிறைவுற்ற பின் தற்போது குளிர்காலத்தின் தொடக்கம். பெரும்பாலான சமயங்களில் நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் நான் சில வார்த்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக எழுத்துக் கூட்டி படிக்கவும், எழுதவும் கற்றுக் கொண்டேன். ஆறும் ஏழும் முப்பத்தாறு என்ற அளவில் பெருக்கல் வாய்ப்பாடும் என்னால் சொல்ல முடிந்தது. ஆனால் என் வாழ்நாள் முழுதும் வாழ்ந்தாலும், என்னால் அதற்கு மேல் போக முடியும் என்று தோணவில்லை. கணிதம் அந்த அளவுக்கு பயனுள்ளது என்று நான் கருதவில்லை. முதலில் நான் பள்ளியை வெறுத்தேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அதைப் பொறுத்துக்கொள்ள முடிந்தது. எவ்வளவு அதிகமாக பள்ளிக்குச் செல்கிறேனோ, அவ்வளவு சுகமாக அது இருந்தது. அலுப்புத்தட்டும் வேளைகளில் ஹாக்கி
•Last Updated on ••Thursday•, 09 •April• 2020 23:22••
•Read more...•
- என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்' -
அத்தியாயம் மூன்று
நல்லது. காலையில் எனது அழுக்கடைந்த உடையைக் கண்ட வயதான மிஸ். வாட்ஸன் எனக்கு அறிவுரை கூறினாள். எனினும் அதிகம் திட்டாமல், அழுக்குப் படிந்திருந்த எனது உடையில் இருந்த மண் மற்றும் திட்டான கறைகளை தேய்த்து விட்டாள். அவளின் சோகமான ஏமாற்றமடைந்த முகத்தைக்கண்டதும், கொஞ்ச நாளைக்காவது என்னால் முடிந்த அளவு இனி நான் ஒழுங்காக நடக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன். பின்னர் மிஸ். வாட்சன் அறைக்குள் அழைத்துச் சென்று எனக்காகப்பிரார்த்தனை செய்தாள். ஆனால் அதனால் எந்த நற்பலனும் விளைந்ததாகத் தெரியவில்லை. தினந்தோறும் பிரார்த்தனை செய்யும்படி எனக்கு அறிவுறுத்தியதோடு, அப்படி நான் செய்தால் நான் வேண்டுவது எல்லாம் எனக்குக்கிடைக்கும் என்றும் கூறினாள். ஆனால் அது உண்மையல்ல. நான் முயற்சி செய்திருக்கிறேன். ஒருமுறை எனக்கு மீன்பிடிக்கத் தேவையான கம்பியும் அதில் உள்ள நீளக் கயிறும் கிடைத்திருந்தது. ஆனால் மீன்பிடிக்கும் கொக்கி இல்லையெனில் அவற்றால் என்ன பயன்? நானும் மூன்று அல்லது நான்கு முறை எனக்கு மீன்பிடிக்கும் கொக்கி தேவை என பிரார்த்தனை செய்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை. ஒரு நாள் நான் மிஸ். வாட்ஸனிடம் எனக்காக மீன் பிடிக்கும் கொக்கி வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்யச் சொன்னேன். ஆனால் அவள் என்னை ஒரு முட்டாள் என்று கூறினாள். ஏன் அவ்வாறு கூறினாள் என்ற காரணமும் அவள் கூறவில்லை. அப்படி அவள் கூறியதற்கான காரணம் எனக்கும் விளங்கவில்லை.
•Last Updated on ••Tuesday•, 07 •April• 2020 16:49••
•Read more...•
- என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்' -
அத்தியாயம் இரண்டு
அந்த விதவையின் தோட்டத்தின் கடைசிக்கு அழைத்துச் செல்லும் அடர்ந்த மரங்களினூடே உள்ள பாதையில், மரத்தில் உள்ள கிளைக்கொம்புகள் எங்களது தலையை பதம் பார்த்துவிடாவண்ணம், வளைந்தவாறே நாங்கள் இருவரும் பூனை நடை போட்டுகொண்டு சென்றோம். நாங்கள் அவ்வாறு வீட்டைக் கடக்கும் வேளை, சமையலறை அருகே நகரும்போது, மரவேர் தடுக்கி, அதன் மேல் விழுந்ததால் சிறிது சப்தம் ஏற்பட்டது. உடனடியாக பதுங்கிய நாங்கள் சிறிது நேரம் அசைவற்று இருந்தோம். ஜிம் என்ற பெயர் கொண்ட மிஸ்.வாட்ஸனின் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த முதன்மைச் சமையல்காரன் சமையலறைக் கதவின் அருகே உறங்கிக் கொண்டிருந்தான்.
அவனின் பின்புறமாக விளக்கு வெளிச்சம் இருந்ததால் அவனை நாங்கள் நன்கு கவனிக்க முடிந்தது. அவன் எழுந்து, கழுத்தைக் கீறியபடியே ஒரு நிமிடம் அமைதியாக கவனித்துப் பின் கூவினான், "யாருடா அது?" இன்னும் சிறிது நேரம் அமைதியாக இருட்டைக் கவனித்த அவன், எந்த பதிலும் வராததால், மெதுவாக பூனை நடை போட்டு வந்து கதவின் வெளியே இருட்டில் நின்றிருந்த எங்கள் இருவருக்கும் இடையில் நாங்கள் கொஞ்சம் ஏமாந்தால் அவரைத் தொட்டுவிடும் தொலைவில் நின்றான்.. அந்த வேளை பார்த்துத்தானா எனது குதிகாலில் ஏதோ அரிப்பு வரவேண்டும்? நான் அதைப்பொருட்படுத்தவில்லை. ஆயினும் அதன் தொடர்ச்சியாக எனதுகாதுகளிலும், பின் எனது இரண்டு தோள்பட்டைகளுக்கிடையேயான முதுகிலும் கடுமையாக அரித்தது.
அரிப்பு எடுத்த இடங்களில் கைகளை வைத்து சொறியவில்லை என்றால் இறந்து போய்விடுவேன் என்ற அளவுக்குக் கடுமையாக இருப்பதாகத் தோன்றியது. நல்லது. நானும் பலமுறை கவனித்திருக்கிறேன். நல்ல விசேஷ இடங்களில் உள்ளபோது அல்லது ஒரு இறுதிச்சடங்கு நிகழ்வின்போது, தூக்கம் கொஞ்சம் கூட வராதபோது, தூங்கச்செல்லும்போது, எந்த இடத்திலெல்லாம் இருக்கும்போது சொறிய இயலாதோ, அந்த சமயத்தில் எல்லாம் கீழிருந்து மேலாக ஏன் இப்படி ஆயிரம் இடங்களில் அரித்துத் தொலைக்கிறது என்று புரிபடவில்லை.
•Last Updated on ••Tuesday•, 07 •April• 2020 16:49••
•Read more...•
- என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்' -
அத்தியாயம் ஒன்று: காட்சி : மிஸ்ஸிஸிபி பள்ளத்தாக்கு - காலம் : நாற்பதில் இருந்து ஐம்பது வருடங்கள் முன்பு
டாம் சாயரின் சாகசங்கள் என்ற பெயரில் உள்ள புத்தகத்தை நீங்கள் வாசித்திராவிடில், என்னைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. திரு. மார்க் ட்வைன் என்பாரால் அந்த புத்தகம் தயாரிக்கப்பட்டு இருந்தது. அவர் அதில் சத்தியத்தையே கூறி இருந்தார். சில விஷயங்களை அவர் கொஞ்சம் இழுத்துக்கொண்டு சொல்லி இருந்தபோதிலும் உண்மையையே முதன்மையாகக் கூறி இருந்தார். அது ஒன்றுமே இல்லை. போல்லி அத்தை, அந்த விதவை மற்றும் மேரி இவர்களை விடுத்து, ஒரு சமயம் இல்லாவிட்டாலும் இன்னொரு சமயம் பொய் சொல்லாமல் இருப்பவர்களை நான் கண்டதே கிடையாது. நான் முன்னமே உரைத்ததுபோல உண்மையை விளம்பும் அந்த புத்தகத்தில், கொஞ்சம் இழுவையுடன் அதிகம் சொல்லப்பட்டது போல்லி அத்தை, அதாவது டாமின் அத்தை போல்லி, மேரி, பிறகு டக்லசின் விதவை ஆகியோரைப் பற்றி மட்டுமே.
அந்த புத்தகம் கடைசியில் இவ்வாறாக முடிவடைகிறது. கொள்ளையர்கள் குகைக்குள் மறைத்து வைத்திருந்த செல்வத்தைக் கண்டுபிடித்த டாமும், நானும் செல்வந்தர்கள் ஆகிறோம். ஒவ்வொருவர் பங்கும் சேர்த்து, அத்தனையும் தங்கமாக ஆறாயிரம்டாலர்கள் எங்களுக்குக்கிடைக்கிறது. அவ்வளவு செல்வம் கொட்டி வைத்திருக்கும் அந்தக் காட்சி காணக்கிடையாத காட்சி. நல்லது!
•Last Updated on ••Tuesday•, 07 •April• 2020 15:45••
•Read more...•
••Thursday•, 26 •March• 2020 17:50•
??- ஆங்கிலத்தில்: மார்க் ட்வைன்; தமிழில்: - முனைவர் ர. தாரணி -??
முனைவர் ர. தாரணி பக்கம்
- குறிப்பு: ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளர்களின் அடிமைக் கதைகூற்றுகள் (Slave Narratives) அமெரிக்காவின் சரித்திரத்தில் அடிமைகள் அனுபவித்த பல கொடுமைகளை அடிமைகளாக இருந்தவர்கள் வாயிலாகவே விளக்கும் ஒரு வகை இலக்கியம். தற்போது அடிமைத்தனம் என்பது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டாலும், தற்போதைய ஆப்ரிக்க -அமெரிக்க எழுத்தாளர்கள் மனதிலும் அவர்களின் முன்னோர்கள் மனதிலும் உடலிலும் பட்ட காயங்களின் வடுக்கள் மிச்சம் இருக்கத்தான் செய்கிறது.
இந்தச் சிறுகதையும் அடிமைத்தனத்தின் ஒரு கொடூர முகத்தை விளக்கும் விதமாக இருந்தாலும், இதன் ஆசிரியர் மார்க் ட்வைன் கறுப்பினத்தவர் அல்லர். அவர் ஒரு அமெரிக்கர் . எனினும், இக்கதையில் அவர் ஒரு பாத்திரமாகவே மாறி (மிஸ்டோ சி) தன் வீட்டின் கறுப்பின மூதாட்டிப் பணிப்பெண்ணின் கதையைக் கேட்டு தான் அதை வார்த்தைக்கு வார்த்தை விவரிப்பதாக தலைப்பிலேயே குறிப்பிடுகிறார். மேலும், கதை முழுதும் ஆசிரியர் மார்க் ட்வைன் ஆப்ரிக்க -அமெரிக்கர்கள் (கறுப்பினத்தவர்) பயன்படுத்தும் பேச்சு வழக்கு வகையை சிறப்பாக பயன்படுத்தி உள்ளது இந்தக் கதையின் தனித்தன்மை
இந்த சிறுகதை பல கல்லூரிகளில் பாடபுத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கதையை வகுப்பில் எடுக்கும்போது மட்டும் கண்டிப்பாக என் கண்களில் தூசு விழுந்து விடும். கண்ணீர் சொரியும். ஒரு ஆசிரியராக, ஒரு மனுஷியாக என்னை மிகவும் பாதித்த கதை. மொழிபெயர்த்தல் மூலம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பது எனது விருப்பம். -
அது ஒரு கோடைகால அந்திவேளை. நாங்கள் அனைவரும் மலையின் உச்சியில் அமைந்திருக்கும் எங்களின் பண்ணைவீட்டின் முகப்பு வாயிலில் அமர்ந்திருந்தோம். நாங்கள் அத்தை என அன்புடன் அழைக்கும் எங்களின் பணிப்பெண்ணான ரேச்சல் கறுப்பினத்தவர் மற்றும் பணிப்பெண் என்ற காரணத்தினால் நாங்கள் அமர்ந்திருந்த முகப்புப்படிகளில் ஒருபடி கீழ் இறங்கி மிகவும் பவ்யமாக அமர்ந்திருந்தார். மிகவும் வலிமையான உடலும் , எடுப்பான தோற்றமும் கொண்டவர் அவர். அறுபது வயதாகி இருப்பினும் அவரது கண்களில் உள்ள ஒளி சிறிதும் குன்றாமலும், மன உறுதி குறையாதவராகவும் என்றுமே காணப்படுவார். மனநிறைவோடு கூடிய உற்சாகம் ததும்பி வழியும் மனுஷியான அவருக்கு சிரிப்பு என்பது ஒரு பறவை கீதம் இசைப்பதைப்போன்றே மிகவும் இலகுவான விஷயம்.
எப்போதும் போலவே அன்றைய நாளின் முடிவில் எங்களின் வார்த்தைத் தாக்குதலுக்கு ஆளாகி அன்றும் அமர்ந்திருந்தார். அதாவது எங்களின் கொஞ்சம் கூட கருணை காட்டாத விளையாட்டுத்தனமான கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்காகினாலும், அதை மிகவும் இலகுவாக எடுத்துக்கொண்டு ரசித்தவாறே இருந்தார். சுவாசத்திற்க்கான காற்றைக் கூட தொடர்ந்து வெளியிட இயலாத அளவுக்கு, உரத்த சிரிப்பொலியை தொடர்ந்து அலை அலையாய் எழுப்பிய அவர், அந்த இன்ப அதிர்வலை கொடுத்த அசைவின் காரணாமாக தனது முகத்தை இரு கரங்களிலும் தாங்கியவாறே அமர்ந்திருந்தார். அவ்வாறான ஒரு தருணத்தில் என் மனதில் திடீரென உதித்தது அந்த எண்ணம். நான் கூறினேன்:
"ரேச்சல் அத்தை! அறுபது வருட கால உங்கள் வாழ்வில் எவ்வித துயரையும் நீங்கள் எதிர்கொள்ளவே இல்லையா?"
அக்கணமே சிரிப்பலையின் அதிர்வை சடாரென நிறுத்தினார். ஏனோ சிறிது தயங்கினார். அங்கே மெல்லியதாய் ஒரு மௌனம் தேவையற்று நிலவியது. தன் தோள்பட்டையின் மேலாக தனது முகத்தைத் திருப்பி, என் பக்கம் நோக்கி குரலில் சிறிதளவு சிரிப்பு கூடதென்படாமல் கூறினார்:
•Last Updated on ••Monday•, 06 •April• 2020 20:52••
•Read more...•
- முனைவர் ஆர். தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட காரணத்தினால், உன்னதமான பல ஆங்கிலக் கவிதைகளை தமிழ் மக்களும் அறிய வேண்டும் என்ற துடிப்பில் அவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். இவர் மிகவும் விரும்புவது காலத்திற்கும் நிலைத்து நிற்கும் ஆங்கிலக் கவிகளான ஷெல்லி, வொர்ட்ஸ்வொர்த், பைரன், W. B. யேட்ஸ் போன்ற கவிகளின் எழுத்துக்கள். அதனுடன், கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்ற பொன்மொழிக்கேற்ப, பயணம் மேற்கொண்டு பல நாடுகளில் உள்ள மக்கள், அவர்களின் வாழ்க்கை முறை, மற்ற நாடுகளின் மேன்மைகள், மாறுபட்ட கலாச்சாரங்கள் என எல்லாவற்றையும் அறிந்து கொள்ள மிகுந்த ஆவல் கொண்டவர். இதுவரைக்கும், அமெரிக்கா, ஐரோப்பா, யுனைடெட் கிங்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வெளி நாடுகளையும் , இந்தியாவின் பல்வேறு மாநிலங்களையும் பற்றி அறிந்து கொள்ள பயணம் சென்று வந்தவர். உலகத்தில் இருக்கும் அனைத்து மொழிகளிலும் உள்ள இலக்கியங்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முனைப்புடன் இருப்பவர். அவரின் இந்தக் கட்டுரையானது பெண்ணின் படைப்பு என்பதே ஒட்டுமொத்த மனித குலத்தின் நலத்தைப் பேணிப் பராமரித்துக் காக்கத்தான் என்ற நோக்கில், இல்லத்திலும், சமூகத்திலும் பெண்கள் தங்களைச் சார்ந்திருப்போரின் உடல்நலம் காப்பதில் எவ்வாறு தங்கள் பங்களிப்பை அளிக்கிறார்கள் என்று எடுத்துக்காட்டுடன் விவரிக்கும் விதமாக அமைந்துள்ளது. -
“விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே!” - மகாகவி பாரதியார்
மனிதகுலம் உருவானது பற்றிய கற்பனைக்கதைகள் அல்லது ஒருவேளை கட்டுக்கதைகள் என்றாலும் கூட, அவற்றின் மூலம் இன்றைய சமுதாயம் ஆதி முதலாக உதித்த ஆதாம் மற்றும் அவனின் அன்புக்குப் பாத்திரமான ஏவாள் முன்னொருகாலத்தில் ஜீவித்திருந்திருப்பார்கள் என்றும் அவர்களைக் கடவுள் தனது கண்ணின் மணிகளாகக் கருதி அவரின் ஈடன் தோட்டத்தில் எல்லாவித சலுகைகளையும் பெற்று, கவலையற்று சுற்றித் திரிந்து வாழ்வை அனுபவிக்க முழுசுதந்திரமும் முதலில் கொடுத்திருந்தார் என்று இன்றளவும் பெரிதும் நம்பும்அளவு செய்திருக்கிறது. மனித குலம் முழுமைக்கும் மூதாதையரான அவர்களின் அப்படிப்பட்ட சுதந்திரமும், மற்றட்ட மகிழ்வும் இரண்டாக பிளவுபட்டு துக்கித்து நிற்கும் நிலை ஏற்பட்டதன் காரணம் பாம்பு வடிவச்சாத்தானின் கேடு விளைவிக்கும் தூண்டுதலால் என்பதும் அனைவரும் அறிவர்.
இந்தக் கதை, கற்பனையாக இருந்தாலுமே, இது தோன்றிய காலம் முதலில் இருந்தே, ஏவாள் சாத்தானின் முகஸ்துதியில் மயங்கி தன் அன்புத் தோழனை வற்புறுத்தி கடவுள் தடை செய்த கனியைச் சுவைக்கச் செய்ததினால், அவர்கள் கடவுளால் தண்டிக்கப்பட்டு, ஈடன் என்னும் சொர்க்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டு, துக்கமும், துன்பமும் நிறைந்த புதிய உலகான பூமி வாழ்வை அடைய நேரிட்ட காரியத்தைப் பற்றி பல்வேறு தீவிர விமர்சனங்கள் என்றென்றும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கற்பனைக்கதையில் வரும் ஏவாள் எனும் பெண்ணானவள் துரோகம் செய்யத்தூண்டும் குற்றவாளியாகவே சித்தரிக்கப்படுகிறாள். ஆயினும் இந்தக் கதையில் உள்ள நேர்மறையான ஒரு விஷயத்தை கூர்ந்து கவனித்தோமானால், ஏவாளின் பழம் சுவைக்கும் விருப்பம் வெளிப்படையாக மேலோங்கி நிற்பதுடன், அதிலும், மனித குலத்துக்கு மிகச் சிறந்த ஆரோக்யத்தைக் கொடுக்கக் கூடிய ஆப்பிள் கனியை, ஒரு ஆப்பிளை தினமும் சுவைத்தால், மருத்துவரை தூரத் தள்ளி வைக்கலாம் என்று இன்றளவும் உலா வரும் பழமொழிக்கேற்ப, அவளின் அன்புக்கணவனை வற்புறுத்தி சுவைக்கத் தூண்டிய செயல் தெளிவாகப்புலப்படும்.
•Last Updated on ••Sunday•, 11 •August• 2019 19:01••
•Read more...•
1. காதல் குறுங்கவிதைகள் - எட்மண்ட் ஸ்பென்ஸர் | தமிழ் மொழியாக்கம்: முனைவர் ர.தாரணி
அந்த கைதேர்ந்த வணிகர்கள் அருமந்தப்பொருடகளை நாடி கடும் பிரயத்தனம் மேற்கொண்டு லாபமடைய மேற்கிலிருந்து கிழக்கு வரை திசைகள் தோறும் திரிந்து அலைந்து பொக்கிஷங்களத் திரட்ட அலைகிறார்கள். பாவம் பித்தர்கள்! அவசியமா என்ன அத்துணை தொலைவு பயனற்ற தேடலுக்கு? இதோ! என் மனத்தின் இனியவள் கொண்டுள்ளாள் தன்னகத்தே தேசாதிதேசங்களில் தேடியும் கிடையா திரவியங்கள் அனைத்தும். நீலக்கண் மாணிக்கம், இதோ! அவளின் அந்திரக்கண்மணி ஒளிக்கற்றைகள் அவற்றை அற்பமாக்கிவிடும். ரத்த நிற கெம்பு ரூபி வேண்டுமோ, இதோ! தகதகக்கும் அவளின் சிவந்த இதழ்கள் செம்மணியைத்தோற்கடிக்குமோ? நிர்மலமான சரவரிசையில் மிளிர்ந்து ஒளிரும் அவளின் பல்வரிசை முன்நிற்கும். தந்தங்கள் தேவையோ? தந்தமே தலைவணங்கும் அவளின் தங்க நிற நுதல் கண்களைக் கவரும் பூவுலகின் மேல் இருக்கும் கலப்பற்ற தங்கம் தேவையெனில், நேர்த்தியான அவளின் தங்கக்குழல்கற்றைகள் சரிந்து விழும் அழகு காணீர்! வெள்ளி தேவையெனில் அவளின் வெளுத்த மினுமினுக்கும் வாழைத்தண்டுக் கரங்கள் வெளியிடும் பளீர் ஒளியைக்கண்டு களிக்கலாம். ஆயினும், அனைத்திலும் மேன்மையானது அனைவரும் அறிய இயலா, எண்ணிறந்த இன்னலப்பண்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள அவள் அகம்.
•Last Updated on ••Thursday•, 14 •December• 2017 20:20••
•Read more...•
சிந்தனைத்துளிகள்! 1. அவன் பக்கெட்டை உதைத்தான் (He kicked the bucket) என்று பொருள் வரும் வாக்கிய அமைப்பு ஆங்கிலத்தில் அவன் இறந்துவிட்டான் என்ற பொருள் தரும் ஒரு இடியம் (idiom).. நம்மை பொறுத்தவரை பக்கெட் (bucket) குளியலறையில் அல்லது துணி துவைக்க பயன்படுத்துவோம். ஆனால், ஆங்கிலேயர்களின் கலாச்சாரப்படி, முன்பு பன்றிகளை இறைச்சிக்காக கொல்ல வேண்டி அவற்றை மேலிருந்து கீழே வரும் மெல்லிய சுருக்கு கயிற்றில் கழுத்தைக்கட்டி அந்த பன்றிகளை ஒரு பக்கெட் மேல் நிற்கவைத்து, பின் அவற்றை பக்கெட்டை உதைக்க செய்வது என்ற செயலில் ஆரம்பித்து, பின் மனிதன் இறப்புக்கும் - அது அவன் இயல்பாக இறந்தாலுமே இவ்வாறு கூறுவது வழக்கம் ஆகி, தற்போது ஆங்கில மொழியின் வழக்கில் இருந்து வருகிறது. படித்தவர்கள் மத்தியில் அதிகம் இல்லாவிடினும், ஆங்கிலத்தில் தற்போதும் உபயோகத்தில் இருக்கும் வழக்காகவே உள்ளது. (பக்கெட் லிஸ்ட் (The Bucket List என்ற ஹாலிவுட் படம் பார்த்த பாதிப்பு)
2. எல்லாமே வலிப்பதால், எந்த வலியுமே வலிப்பதாய் உணர முடியவில்லை! ---ரிச்சர்ட் மான்டேல் எழுதிய ஓநாய் கூடம் புத்தகத்திலிருந்து Nothing Hurts, or Perhaps it's that everything hurts, because there is no separate pain that can be picked out. (Quoted from Wolf Hall by Richard Mantel)
3. தங்களுடைய குட் நேம் (good name) என்ன என்று கேட்பதும் இன்றைய அளவில் படித்தவர்கள் மத்தியில் கூட பரவலாக பயன்படும் ஒரு ஆங்கிலப்பிரயோகமாய் இருக்கிறது. உண்மையில் ஆங்கிலத்தில் அப்படி ஒரு பிரயோகமே இல்லை என்பதுதான் நிதர்சனம். இந்த குட் நேம் வந்தது ஹிந்தியில் இருந்து - ஆப்கா சுப நாம் க்யா ஹெய் (Subha naam means good name)என்ற ஹிந்தி பிரயோகத்தை அப்படியே மாத்திப்போடு என்ற மொழி மாற்றமே குட் நேம் என்னும் பிரயோகம். நேம் (Name) என்பது மட்டுமே ஆங்கிலத்தில் போதும். ஒரு ஆங்கிலேயரிடம் What is your good name? என்று கேட்டால் கொஞ்சம் திருதிருவென விழிக்கத்தான் செய்வார்.
4. எங்கேயோ பார்த்த ஞாபகம், எப்போதோ வாழ்ந்த ஞாபகம் என்று தமிழ் சினிமா பாடல் வரிகளில் வரும். அது உளவியல் ரீதியாக அனைத்து மனிதர்களின் வாழ்விலும் நேரக்கூடிய உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அனுபவத்திற்கு குறிக்க பயன்படுத்தும் சொல் தேஜா வு (Deja Vu) என்ற ஒரு பிரெஞ்சு வார்த்தை. ஆங்கிலத்தில் உளவியல் வல்லுநர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின் ஆங்கிலம் பேசும் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு வகையில் நம் தமிழில் சிலர் முகத்தில் ஜொலிக்கும் தேஜஸ் என்னும் விசயத்திற்கு கொஞ்சம் நெருங்கிய சொந்தம்தான் தேஜா வு. பிரெஞ்சு மொழியில் தேஜா வு என்றால் முன்பே பார்த்தது என்று பொருள். இந்த தேஜா வு அனுபவத்தின் உச்சக்கட்டமே பின்னால் நடைபெற இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவது போன்றதொரு அபார சக்தி - சினிமா நடிகர் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் வருவது போன்று ரயில் விபத்து விமான விபத்து போன்று பல விஷயங்களை முன்பே கூறுவது. இந்த தேஜா வு அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்யப்பட்ட ஒன்று.
•Last Updated on ••Wednesday•, 29 •November• 2017 16:18••
•Read more...•
••Wednesday•, 29 •November• 2017 15:43•
??- சோலை மாயவன் : ஆங்கில மொழியாக்கம் முனைவர் ஆர். தாரணி -??
முனைவர் ர. தாரணி பக்கம்
1. விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி - சோலை மாயவன் : ஆங்கில மொழியாக்கம் முனைவர் ஆர். தாரணி -
பனைமரத்துக் கள் பன்றிக் குடல் சுருட்டுப் பீடி கருப்பட்டி கலந்த பொங்கல் வானத்தைப் பிளக்கும் கொம்பின் பேரிசை பம்பை உடுக்கையில் மிளிரும் கொண்டாட்டத்தின் உச்சபச்ச அலங்காரம் எம் வயற்காட்டின் தேசம் முழுவதும் பரவும் பெண்கள் சமைத்த பொங்கலின் அதீத ருசி இவைகள் ஏதுமற்றுப்போன நிலத்தில் தனித்து அலைகிறான் அடிமாட்டு விலைக்கு வயற்காட்டை விற்றபின் சாத்தான் எனும் பெயரால் என் முப்பாட்டன்
•Last Updated on ••Wednesday•, 29 •November• 2017 16:08••
•Read more...•
••Tuesday•, 17 •October• 2017 16:58•
??- ராபர்ட் பிராஸ்ட் | தமிழ் மொழியாக்கம் - முனைவர் ஆர். தாரணி -??
முனைவர் ர. தாரணி பக்கம்
யாருடைய வளர்ப்பு வனமோ இவை யான் அறிகிலேன் தூரத்தே தெரியும் சிறுகிராமத்தில் அவரின் வசிப்பிடம் இருக்கக்கூடும்: அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை, இங்கே நான் அவரின் எழில் வனம் முழுதும் பனியில் நனைந்து நிரப்புவதை ரசிக்கிறேன் என்பதை
எனது சின்னஞ்சிறு புரவிக்கு விந்தையாய் தோன்றியிருக்கக்கூடும் அருகில் பண்ணைவீடு ஒன்றும் காணப்படாமல் உறைந்த பனிநிறை ஏரிக்கும், அடர் வனத்திற்கும் இடையே ஆண்டின் அப்பருவக்காலத்தின் காரிருள் சூழ் அந்தி மாலைவேளையில் அக்கணம் அங்கே நான் நிற்பது.
தனது தலையை அசைத்து, கழுத்தில் உள்ள கிண்கிணி மணியின் நாதம் எழுப்பி ஏதேனும் பிழை நேர்ந்ததா என அவன் என்னை மறைமுகமாய் வினவுகிறான். அதுவன்றி, அங்கே மெல்லிய பனிக்காற்றின் சுகமான ஓசையும், மெல்லிறகுகளாய் வீழும் பனித்துகள்களின் சீரான ஒலியும் மட்டுமே எங்கும் நிறைந்திருக்கின்றத.
ஆழ்ந்த ரகசியத்தை உள்ளடக்கி. அடர்ந்த காரிருளில் அந்த வனம் மனம்கவர் ரமணீயமாய் அங்கே நிலைத்திருக்கிறது. ஆனால், நிறைவேற்றப்படவேண்டிய என்னுடைய வாக்குறுதிகள் எனக்காய் காத்திருக்கின்றன. அதனால் நான் உறங்குமுன் பயணப்பட வேண்டிய தொலைவு மிக அதிகம் அதனால் நான் உறங்குமுன் பயணப்பட வேண்டிய தொலைவு மிக அதிகம்.
•Last Updated on ••Tuesday•, 17 •October• 2017 17:09••
•Read more...•
••Sunday•, 08 •October• 2017 15:44•
??- எட்மண்ட் ஸ்பென்ஸர் ( Prothalamion – Edmund Spenser ) | தமிழ் மொழியாக்கம் : முனைவர் ஆர். தாரணி -??
முனைவர் ர. தாரணி பக்கம்
16 - ம் நூற்றாண்டின், இங்கிலாந்து ராணி முதலாம் எலிசபெத் அவையின் கீர்த்திமிகு நடு நாயகமாய் விளங்கிய ஆங்கிலக்கவி எட்மண்ட் ஸ்பென்ஸர், பதினான்கு வரிகளில் இயற்றும் சானெட் (Sonnet) என்னும் பாட்டு வகையில் இயற்றிய காதல் பாடல்கள் (Amoretti) உலகப்புகழ் பெற்றவை. அது போன்றே, உயர்குலத்தை சார்ந்த லேடி எலிசபெத் மற்றும் லேடி காதரின் என்னும் இரு அழகிய இளம்பெண்களின் திருமண நிகழ்வுக்காக அவர் இயற்றிய இந்த வாழ்த்துப்பா மணமக்களை இரு அழகிய அன்னங்களாக்கி, திருமண நிகழ்வை வரவேற்கும் இனிய பாடலாக மட்டும் அல்லாது கண்ணுக்கினிய வர்ணங்களை கற்பனையில் குழைத்து, வர்ணத்தூரிகை கொண்டு வரைந்த சித்திரக்காட்சிகள் போல பலவித நிறங்களை இயற்கையோடு இணைத்து வழங்கியுள்ள பாணி இன்றளவும் யாரும் எட்டிப்பிடிக்க இயலா இனிமையாக மிளிர்கிறது என்றால் மிகையாகாது.
கவிதை: திருமண இன்னிசை வாழ்த்து - எட்மண்ட் ஸ்பென்ஸர் ( Prothalamion – Edmund Spenser ) | தமிழ் மொழியாக்கம் : முனைவர் ஆர். தாரணி
சலனமற்று "சிலிர்ப்பூட்டும் நாளொன்றின் தென்றலின் சில்லிப்பினூடே வரும் ஜெபெரஸ் களியாட்ட வேளையிது.
தகதக சூரியனின் கதகத ஒளிக்கற்றைகளை இயற்கை தேவதை சோம்பலாக்க அவளோடு இயைந்து உலவியபடியே துயரார்ந்த சிந்தனையில் ஆழ்த்திருந்தேன். காலங்காலமாய் அரசவையில் காலம் கனியா வெறுமையில் காத்திருந்து பயனற்று சலித்துப்போன என் மன நிறைவின்மையின் நடுவே வெறுமை சூழ் நிழல் சிறகடிக்கிறது
•Last Updated on ••Sunday•, 08 •October• 2017 16:01••
•Read more...•
1. "உங்கள் தேவை! எங்கள் சேவை!"
தங்களின் நாடு உடனடியாக பிழைக்க நடிகர்களை அழைக்க எண் ஒன்றை அழுத்தவும்.
தற்போது நடைபெறும் ஊடகக்காட்சிகள், அடிதுடிகள்அப்படியே தொடர எண் இரண்டை அழுத்தவும்.
சாப்பாடு ஒழுங்காக கிடைக்க மனைவியின் விருப்ப நாடகங்கள் மட்டுமே பார்க்க எண் மூன்றை அழுத்தவும்.
•Last Updated on ••Thursday•, 21 •September• 2017 14:44••
•Read more...•
••Saturday•, 16 •September• 2017 14:42•
??- ஆங்கிலக்கவி வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் | தமிழ் மொழியாக்கம் : முனைவர் ஆர். தாரணி -??
முனைவர் ர. தாரணி பக்கம்
இலக்கிலாது சஞ்சரித்தேன் நான் பள்ளத்தாக்கின் மீதும், மலை மீதும், உயர மிதக்கும் ஒரு வான்முகில் போல், கண்டேன் நான் அவ்வமயம் ஒருமருங்கே அனைத்தையும் ஒரு பெருந்திரள் கூட்டமாய் பொன் வண்ண எழிலில் டாப்போடில்ஸ் மலர்கள் ஏரியின் அருகாமையில், மரங்களின் கீழ்நிழலில் மென்காற்று அலையில் சிலிர்த்துப் படபடத்துக்கொண்டும், நர்த்தனமாடிக்கொண்டும் அவைகள்.
•Last Updated on ••Saturday•, 16 •September• 2017 15:09••
•Read more...•
மொழிபெயர்ப்பு 1
வனப்புடன் வளைய வருகிறாள் அவள் முகிலற்ற காலம் போலும், விண்மீன்கள் மலர்ந்த வான் போலவும் உன்னத இருளும் ஒளியும் ஒருங்கே சந்திக்கும் அவளின் தோற்றமும், கண்மலர்களும்; சுவர்க்கம் பகட்டான நாளுக்கு மறுத்த மென்மை ஒளி கனிகிறது இவ்விதம்
- லார்ட் பைரன் ( 18 -ம் நூற்றாண்டு ஆங்கிலக்கவிஞர் ) -
She walks in beauty, like the night Of cloudless climes and starry skies, And all that's best of dark and bright Meets in her aspect and her eyes; Thus mellow'd to that tender light Which Heaven to gaudy day denies.
- Lord Byron -
•Last Updated on ••Thursday•, 21 •September• 2017 14:22••
•Read more...•
- முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் 'பதிவுகள்' இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் ஆறாவது அத்தியாயம் ' மது, மதகு நீர், மாமலர்கள் "என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. - பதிவுகள் -
அத்தியாயம் ஆறு: மது, மதகு நீர், மாமலர்கள்
ஏப்ரல் 26, 2017 புதன் கிழமை உலகின் தலை சிறந்த ஓவியனின் தூரிகையை இருந்து வெளிப்படும் வர்ணஜாலமும், மனித குலத்தின் அனைத்து கேளிக்கைகளின் வெளிப்பாட்டு நகரமும் ஆன பாரிசில் இருந்து ஏப்ரல் 26 -ம் நாள் அண்டை நாடுகளுக்கு செல்ல அதிகாலையிலேயே ஆயத்தமானோம். சுறுசுறுப்பாகக் காலை உணவை முடித்து மூன்று நாட்களகச் சொந்த வீடு போல் பாவித்துப்புழங்கி வந்த விடுதி அறையை நான்கு முறை மூவரும் சுற்றிச்சுற்றி வலம் வந்து பார்த்துவிட்டு ( ஏதாவது பொருள் விட்டு விட்டோமா என்று சோதிக்கத்தான்) அனைத்து மூட்டை முடிச்சுகளையும் பேருந்தில் ஏற்றி விட்டு, பேருந்தின் உள்ளே என் அப்பா பிடித்து வைத்திருந்த இடத்தில் அமர்ந்து அடுத்த பயணத்திற்கு எங்களை தயார்ப்படுத்திக்கொண்டோம்.
நாங்கள் தங்கி இருந்த விடுதியை சுற்றி அழகான புல்வெளிகள், மரங்கள் மற்றும் குளம் அதில் கீச் கீச் என தங்களின் குரல் வளத்தை வெளிப்படுத்தும் பல்வேறு பறவைகள் என்ற மிக அருமையான அழகான சூழல். மூன்று நாட்களாக தங்கி இருந்தும் அங்கே ஒரு முறை கூட காலாற சுற்றி வந்து இந்த காட்சிகளை சிறிது நேரம் கண்டு ரசித்து அமர முடியவில்லை என்பது ஒரு குறையாகவே எனக்கு மனதில் இருந்தது. போன அத்தியாயத்தில் பாரிஸ் நகரில் மூன்று நாட்களும் மூச்சு முட்டச்சுற்றிய விவரம் கூறப்பட்டு இருந்தது அல்லவா? விடுதியில் இருந்து அதிகாலையில் கிளம்பி சென்றால் இரவு தூங்கும் திரும்ப நேரமே வந்து சேர்வதால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை. நம் ஊரில் ஊட்டி நகரில் இருக்கும் ரோஜா பூங்கா மற்றும் தாவரவியல் பூங்கா போல கொஞ்சம் பரப்பளவு மட்டுமே கொஞ்சம் வித்தியாசப்படும் பூங்காக்கள் அங்கே இருந்தன. பாரிஸ் நகரம் தனது வல்லரசான இடங்களைப் பெருமையுடன் காண்பித்து எங்களை ஒரு அரக்கனைப்போல் விழுங்கி விட்டதால் இந்த அழகிய பூங்கா மகளைக் கண்ணார, காலாற அளக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்காமல் போனதை மனதில் ஏற்பட்ட ஒரு சிறு கரும்புள்ளியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஜெர்மனி நகரம் அடுத்த இலக்கு என்றாலும், அதற்கு முன்னே நாங்கள் கடந்து செல்ல வேண்டிய அதிமுக்கியமான இடங்கள் சில இருந்தன. அவற்றைக் கடந்து செல்வது என்பது அங்கே தங்கி அவற்றின் அழகை ரசித்து செல்வது என்பதே ஆகும். பயணத்திட்டம் முதலிலேயே கொடுக்கப்பட்டு இருந்ததால் அடுத்து நாங்கள் செல்லும் நகர் என்ன என்பதைப்பற்றி ஒரு முன்னுரை எங்கள் வழிகாட்டி திரு. பாலா பயணம் செய்யும் சமயத்தில் வழங்குவார். ஒவ்வொரு இடத்தின் சிறப்பும் அங்கே நாங்கள் என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது எனவும் கிளிப்பிள்ளைக்குப் பாடம் சொல்லுவது போல் கூறுவார். ஆனால், அது நிறைய காதுகளை சேர்ந்ததாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. யாரோ யாருக்கோ சொல்வது போல் நம் குழுவினர் அவரவர் வேலையில் மும்முரமாக இருப்பர்.
•Last Updated on ••Wednesday•, 12 •July• 2017 12:54••
•Read more...•
- முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் 'பதிவுகள்' இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் ஐந்தாவது அத்தியாயம் 'ஒளிரும் மாய நகரம் - பாரிஸ் "என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. - பதிவுகள் -
அத்தியாயம் ஐந்து: ஒளிரும் மாய நகரம் - பாரிஸ்
"பாரிஸ் என்ற வார்த்தையுடன் மூன்று எழுத்துக்கள் சேர்த்தால் அது பாரடைஸ் ஆகிறது' . (Paris - Paradise )
ஏப்ரல் 23, 2017
இந்த நாள் யுனைடெட் கிங்டோம் விட்டு விலகி அண்டை நாடான பிரான்சு நோக்கி புறப்படத் தயாரானோம். எங்கள் பயண திட்டத்தில் அடுத்து நாங்கள் ரசிக்கப்போகும் நிலம் உலகப்புகழ் பெற்ற பாரிஸ் நகரம். உலகின் அதிசயம் என முதலில் ஆராதிக்கப்பட்ட ஐஃபெல் டவர் அமைந்துள்ள நகரம். அதிகாலையிலே எழுந்து புறப்பட்டு காலை உணவை முடித்து பேருந்தில் ஏறி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பயணம் செய்து நூறு மைல்கல் தொலைவில் இருந்த டோவர் துறைமுகத்தை அடைந்தோம். செல்லும் வழியில் எல்லாம் கண் கொள்ளா அழகிய வண்ணம் மிக்க சிறுசிறு பூக்கள் அதிலும் ஒரு மஞ்சள் நிற பூ கொல்லென்று எல்லா பகுதியிலும் பூத்துக்கிடக்கிறது. பேருந்து வேகமாக சென்றதால் சரியான முறையில் அப்பூக்களை நிதானமாக ரசிக்க இயலவில்லை. பெயர் தெரியாவிட்டாலும் மனத்தில் நிறைந்த மலர் அது.
வானத்தில் மலர்தேவதைகள் சுமந்து சென்ற பூக்கூடைகள் அனைத்தும் கொட்டி சிதறி மஞ்சள் பாய் விரித்தது போன்ற ஒரு தோற்றம். நம் ஊரில் எல்லாம் இப்படி, இவ்வளவு கண்கவர் அழகுகளை வழிகளில் பார்த்தாக கொஞ்சம் கூட நியாபகம் இல்லை. வட இந்தியாவில் டெல்லியில் இருந்து ஆக்ரா செல்லும் வழியில் வழியெங்கும் இருக்கும் கடுகு செடியில் அமைந்த மஞ்சள் மலர்கள் நம்மூரில் அழகுதான். எனினும், இந்த மஞ்சள் மலர்கள் கொள்ளை அழகு. அதன் பெயர் காமன் ராக்ரோஸ் என்பதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். என் யூகம் தவறாகவும் இருக்கக்கூடும். இதுபற்றி விசாரித்து அறியவேண்டும்.
டோவர் துறைமுகம் தெற்கு இங்கிலாந்தில் கென்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரு பரபரப்பான துறைமுகம். அங்கிருந்து பிரான்ஸ் வெறும் 21 மைல்கல் மட்டும்தான் என்பதால் தினமும் படகு சேவை இக்கரையில் இருந்து அக்கரைக்கு மக்களை சுமந்து செல்கிறது. Ferry Service என்றே அந்த படகுகளைக் குறிப்பிடுகிறார்கள். காரணம் படகுகள் (Boats) சிறிய வகையை சார்ந்தவை. கப்பல்கள் (Ships) மிகவும் பெரியவை. கப்பல்களிலும் சேராமல், படகென்றும் ஒதுக்கிவிட முடியாமல் நடுத்தர வகைக்ச் சேர்ந்தவையே Ferry என அறியப்படுகின்றன. இந்த வகை Ferry Service பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும் மற்றும் கார்கோ (Cargo) எனப்படும் பொருட்கள் கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. நிறைய Ferry Service பேருந்துகள், பெரிய கன்டைனர் வகை லாரிகளையும் எடுத்து செல்லும் அளவு திறன் படைத்தவை.
•Last Updated on ••Saturday•, 17 •June• 2017 23:37••
•Read more...•
- முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் 'பதிவுகள்' இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் நான்காவது அத்தியாயம் '"லந்தினியம்" எனும் "லண்டன்" என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. - பதிவுகள் -
அத்தியாயம் நான்கு: "லந்தினியம்" எனும் "லண்டன்"
ஒருவன் லண்டன் வாழ்க்கையில் சலிப்புற்றானாகில், அவனது சொந்த வாழ்க்கையிலேயே சலிப்புற்று விட்டான் என்று பொருள். (When a man is tired of London, he is tired of life - Samuel Johnson - )
தமிழ் நாட்டின் அக்கினிமழையில் இருந்து தப்பி தோகா செல்லும் விமானத்தில் ஜில்லெனக் குளிர் சூழ ஆரம்பித்ததும் உறக்கத்தின் கடவுள் நம்மை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார். சின்ன தலையணை மற்றும் சிறிய சால்வை இருக்கும் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும். அதை வைத்துக்கொண்டு நன்கு தூங்கலாம். இடையிடையே சாப்பிட குளிர்பானங்கள் அல்லது காபி டீ என கொடுப்பார்கள். நம் இருக்கையின் முன் உள்ள சின்ன மானிட்டர் பெட்டியில் சினிமா படங்கள் தமிழ் படம் உட்பட (ஆனால் குறிப்பிட்ட ஒரு சில படங்கள் மட்டும் - அதில் முக்கியமானது கபாலி), பிற மொழிப் படங்கள், கணினி விளையாட்டு என அனைத்தும் இருக்கும். காதில் ஒரு ஹியர் போன் மாட்டிக்கொண்டு அதைப் பார்க்கலாம். அது வேண்டாம் எனில் ஏரோபிளான் மோட் என்று ஒரு பகுதி இருக்கும். அதைத் தேர்ந்தெடுத்தால் விமானம் பயணம் செய்யும் பாதை, எத்தனை அடி உயரத்தில் பறக்கிறது, எந்தக் கடல் மீது மற்றும் ஊரின் அருகே உள்ளது என விமானத்தின் பல கோண படங்களுடன் தகவல்களை நாம் பார்க்கலாம் கடைசி வரை. இடையில் நம்மூரில் விளம்பரங்கள் காட்டுவது போல் தோகாவில் உள்ள ஹமாத் பன்னாட்டு விமான நிலையத்தின் சிறப்புகள் பற்றி சிறிய ஒரு படம் காண முடிந்தது. அந்த விளம்பரத்திலேயே அந்த விமான நிலையத்தின் பிரமாண்டம் தென்பட்டது. எனக்கு சிறு ஆறுதல். சரி! ஆறு மணி நேரம் நன்கு இந்த விமான நிலையத்தைச் சுற்றி பார்க்கலாம். என முடிவு செய்து கொண்டேன்.
இவ்வாறாகப் பாதி உறங்கியும் பாதி தூங்கிய பிரமையிலும் பிரயாணம் செய்து காலை குறித்த நேரத்தில் தோகா வந்தடைந்தோம். விமானப்பயணம் சுகமான ஜில் தட்பவெப்பத்தில் இருந்ததால் ஒரு குறையும் தெரியவில்லை. விமானம் விட்டு வெளியேறி, விமானநிலையம் உள்ளே செல்ல மின்சார ஏறுபடிகளில் மற்ற பிரயாணிகளுடன் ஏறிக்கொண்டிருந்த எங்களுக்க்கோர் அதிர்ச்சி காத்திருந்தது. படிகளுக்கு மேலே ஒரு கத்தார் விமான சேவையைச் சேர்ந்த பெண் ஊழியர் கையில் அட்டையொன்றில் “லண்டன்” எழுதி அனைத்து பயணிகளுக்கும் கண்ணில் படும் விதமாக வைத்துக்கொண்டு இருந்தார். கூடவே "லண்டன் செல்லும் பயணிகள் யாராவது இருக்கிறீர்களா?" என்று ஆங்கிலத்தில் கேட்டுக்கொண்டிருந்தார்.
•Last Updated on ••Monday•, 12 •June• 2017 00:09••
•Read more...•
- முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் 'பதிவுகள்' இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் மூன்றாவது அத்தியாயம் 'பிரயாண முஸ்தீபுகள் ' என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. - பதிவுகள் -
"முன்கூட்டியே மனக்கலக்கம் அடைவதே முன்கூட்டியே யோசிப்பதும் திட்டம் வகுப்பதுமாக மாறும்" - வின்ஸ்டன் சர்ச்சில் [ " Let our advance worrying become advance thinking and planning. " - Winston Churchill ] என் வாழ்வின் மிகப்பெரிய வரப்பிரசாதங்கள் என்றால் என்றும் நான் முன்வைப்பது என் குடும்பம் மற்றும் என் தொழில். அதிலும் என் பெற்றோர்கள் எனக்குக் கொடுத்த சுதந்திரம் என் தோழிகள் மற்றும் என் காலகட்டத்தில் என்னுடன் இருந்த எத்தனையோ பெண்களுக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. என்னுடைய சிறகுகளை விரித்து சுதந்திரமாக வானவீதியில் பயமின்றிப் பறக்க வழிவகை செய்தவர்கள் அவர்களே. என் அப்பாவின் பயண ஆசையின் வெளிப்பாட்டின் விளைவுதான் நாங்கள் ஒவ்வொரு வருடமும் ஏதாவது புது நாடு செல்லும் பயணங்களின் மூலகாரணம். ஆனால் என் அம்மாவிற்கும் எனது கணவருக்கும் பிரயாணம் செய்வது என்பது விருப்பம் அதிகம் இல்லாத நிகழ்வு. தேவைப்பட்டால் மட்டுமே பயணம் செய்வார்கள். சுற்றுப்பிரயாணம் செய்வதில் அதிக நாட்டம் இல்லாதவர்கள். இந்தக் குணாதிசயத்தில் என் அப்பாவுக்கும் எனக்கும் அவர்கள் வேறுபடுவார்கள். அப்படியே பிரயாணம் மேற்கொண்டாலும் வீட்டுக்கு எப்போது திரும்புவோம் என்ற நினைப்புதான் அதிகம் இருக்கும். ஆனால் என் அப்பாவின் 'பாஸ்போர்ட்' மூன்று புத்தகங்கள் பல நாடுகள் சென்று வந்த காரணத்தால் பக்கங்கள் முழுதும் 'ஸ்டாம்ப்'களால் நிரம்பி வழியும். இப்போதும் பயணம் செய்வதில் அவரது ஆர்வம் எள்ளளவும் குறையவில்லை. ஜனவரி மாத வாக்கில் என்னிடம் இந்தக் கோடை விடுமுறைக்கு ஏதாவது நாடு பக்கத்தில் சென்று வரலாம் என்று ஆலோசனை கேட்டார். அதே சமயம்தான் என் ஆராய்ச்சி கட்டுரைக்காக நான் செல்ல திட்டம் வகுத்ததும் சேர்ந்தது. ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்க முடிவு செய்த காரியம் என் கனவு தேசங்களுக்கு செல்ல வழிவகுத்தது என்பதும் விதியின் ஒரு வினை என்றால் மிகையாகாது. Club7 holidays அனுப்பிய மின்னஞ்சல் இணைப்பில் பல்வேறு விதப் பயணத்திட்டங்கள் அடங்கிய குறிப்புகளும் அந்த பயணங்களுக்காகச் செலுத்த வேண்டிய தொகையும் கொடுக்கப்பட்டு இருந்தன. அதில் முதல் பயணத்திட்டமாக பதினைந்து நாட்கள் ஒன்பது நாடுகளுக்குப் பயணம் செய்யும் குறிப்பு எனக்கு மிகுந்த ஆசையை உருவாக்கியது. லண்டனில் ஆரம்பித்து பாரிஸ் நகரம் சென்று, பின் பெல்ஜியம், நெதர்லாண்ட்ஸ், ஜெர்மனி வழியாக ஸ்விட்ஸ்ர்லாண்ட் சென்று மூன்று நாட்கள் அங்கே கழித்து, அதன் பின் ஆஸ்ட்ரியா நாட்டுக்குள் கால் பதித்து பின் இத்தாலி, வாடிகன் சிட்டி மற்றும் ரோம் நகரத்தில் முற்றுப்பெறும் இந்த பிரயாணக் குறிப்பு மிகவும் கவர்ந்தது. இதற்கான தொகை ஒருவருக்க்ச் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. என் அப்பாவிடம் இந்தத் திட்டம் பற்றி கூறியபோது இதற்காகத் தொகை அதிகம் செலவு செய்ய வேண்டுமே என்ற தயக்கம் அவருள் இருந்தது. எனக்கும் இது பற்றி ஒரு முடிவு செய்ய அந்தச் சமயம் இயலவில்லை.
•Last Updated on ••Thursday•, 08 •June• 2017 22:41••
•Read more...•
- முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் 'பதிவுகள்' இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் இரண்டாவது அத்தியாயம் 'மனோவிருப்பத்தின் மூலாதாரம்' என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. - பதிவுகள் -
I
"இலக்கியமும், பட்டாம்பூச்சிகளும் மனிதன் அறிந்த இரண்டு இனிமையான உவர்ச்சிகள்" - விளாடிமிர் நபோகோவ் { Literature and butterflies are the two sweetest passions known to man. - Vladimir Nabokov } இலக்கியம் மட்டுமே மிகுந்த இணக்கத்துடன் வாழ்வின் துக்கங்களைப் புறந்தள்ள உதவுகிறது.. கனவுப்பிரதேசங்களில் சுதந்திரமாகச் சஞ்சாரம் செய்ய அனுமதிக்கிறது. தேச எல்லைகள் இலக்கியங்களில் கிடையாது. ஆங்கில கவிஞர்களோ, ரஷ்ய எழுத்தாளர்களோ, ஆப்பிரிக்க நூலாசிரியரோ அல்லது உலகின் எந்த பிரதேசத்தின் குடிமகன் ஆனாலும் இலக்கியம் நமக்கு அவர்களை பாஸ்போர்ட் விசா ஏதுமின்றி நமது கரங்களில் சேர்க்கிறது. அவர்களின் உணர்வுகள் நமக்கு புரிகிறது. ஒரு யூலிஸிஸ் - ஹோமரின் கதாநாயகன் ஆனாலும் சரி, உலகையே தன் வசப்படுத்திய ரோமானிய சீசர், ஆன்டனி போன்ற கதாநாயர்கள் ஆனாலும் சரி, உலகின் மிகச் சிறந்த அழகிகள் என வர்ணிக்கப்பட்ட கிளியோபாட்ரா, ஹெலன் போன்ற பெண்களையும் சரி இலக்கியம் அல்லவா நமக்கு அறிமுகம் செய்து வைத்தது. அதுவும் ஆங்கில இலக்கியப்படிப்பு உலக இலக்கியத்தை, இந்த அகிலத்தையே நம் நேத்ரங்கள் முன் பிரதிபலிக்க செய்யும் மாயக்கண்ணாடி என்பதை எந்த இடத்திலும் ஆணித்தரமாக அடித்துக் கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.
. ஆங்கில இலக்கியம் விருப்பப்பாடம் படிக்க எடுத்ததே ஒரு எதிர்பாராத நிகழ்வு. நான் கல்லூரி படித்த காலங்களில் ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள் பணக்காரக் குடும்பத்தை சார்ந்த பெண்களாக இருக்கும் அல்லது ஒரு பந்தாவுக்காக எடுத்து படிப்பதற்காக இருக்கும். அதுவும் நான் படித்த பெண்கள் கல்லூரி உயர் மட்ட குடும்பத்து பெண்கள் மட்டுமே அதிக அளவில் படிக்கும் இடம் ஆகும். ஒரு நடுத்தர வர்க்கத்தில் இருந்த நான், எந்த ஒரு இலக்கையும் தீர்மானிக்க முடியாத அந்த வயதில் வேதியியல் படிப்பு இளங்கலையில் படிக்க என் தகப்பனாரின் விருப்பம். இந்த படிப்புக்கு உடனே வேலை கிடைக்கும் என்பது அந்தக் கால ஐதீகம். இன்று உள்ளது போல் அன்று கணினி அறிவியல் மற்றும் ஐடி படிப்புகள் அப்போது கல்லூரிகளில் இல்லாததால் அறிவியல் பாடங்களுக்கு மிகவும் மதிப்பு அதிகம். ஆர்ட்ஸ் வகுப்புகளான ஆங்கில, தமிழ் இலக்கியம், பொருளாதாரம், வரலாறு போன்றவை வேலைவாய்ப்பு கொடுக்காத கல்விப்பிரிவுகள் என்பதும் அன்றைய காலகட்ட சூழ்நிலை. இன்று நிலைமை தலைகீழ்.
வேதியியலில் எவ்வித பிடிப்பும் இல்லாத நான் வேண்டா வெறுப்பாக அந்த வகுப்பில் அமர்ந்து மேற்கூரையையும்,, கூட அமர்ந்து இருக்கும் மாணவிகளையும் 'கமெரா'க் கண்கள் சுழல்வது போல் சுற்றி முற்றி பார்த்துக் கொள்வது மட்டுமே கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் செயல். மாணவிகளில் பலர் நல்ல 'பவர்' பொருந்திய கண் கண்ணாடிகளுடன் படிப்பில் ஆர்வமாக இருப்பார்கள். இதில் ஈடுபாடு இருப்பதாக என்னால் நடிக்கக் கூட இயலவில்லை. அந்த ஒரு மாதக் காலப் படிப்பில், பகுதி இரண்டு பொது ஆங்கில வகுப்புக்கு ஆங்கில இலக்கிய மாணவிகள் எங்களுடன் சேர்ந்து படிக்க வருவார்கள். அதில் ஒருத்தி எனக்குப் பள்ளித்தோழி. அவள் அப்பா அவள் ஆங்கில இலக்கியம் படித்து ஒரு 'டிகிரி' வாங்கினால் போதும் என்ற நோக்கத்தில் அவளை அந்தப் பிரிவில் சேர்த்திருந்தார்.
•Last Updated on ••Saturday•, 10 •June• 2017 22:05••
•Read more...•
- முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் 'பதிவுகள்' இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் முதலாவது அத்தியாயம் 'எல்லைகளை வெல்லவே…. --- -மனமும் மனம் சார்ந்த அயல்திணையும்' என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. - பதிவுகள் -
எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி மனதிற் சலன மில்லாமல் மதியில் இருளே தோன்றாமல் நினைக்கும் பொழுது நின்மவுன நிலை வந்திடநீ செயல்வேண்டும் கணக்குஞ் செல்வம் நூறுவயது இவையும் தரநீ கடவாயே- - மஹா கவி பாரதியார்
ஒரு சிறு முன்குறிப்பு
பிள்ளைப்பிராயம் தொடங்கி இன்று வரை காலம் தோறும் இடை விடாமல் மனதில் தோன்றும் ஒரு வினா - யார் வகுத்தது இந்தப் பிரபஞ்ச எல்லைகளை? பள்ளிப்பருவத்தில் உலக வரைபடம் காணுகையில் மனம் மனத்திற்கே எழுப்பிய ஒரு சந்தேகம். கடல்களைப் பிரித்தது யார்? சமுத்திரம் எனவும் மகா சமுத்திரம் எனவும் அதற்கு சக்தி வழங்கியது யார்? அட்லாஸ் உலக வரைபடம் தவிர்த்து மேலே வானவெளியில் பறக்கும்போது இது ஆசியா இது ஐரோப்பா என எழுதி அங்கே ஒட்டி இருக்குமா? என்ன? தெரியாதே அப்போது. வெளியில் கேட்டால் தப்பாக நினைப்பார்களோ என்ற பயம். இன்றும் அதே நிலைதான். ஆனால் மாற்றம் யாதெனில் இதுவரை நாம் படித்துப் பெற்ற பட்டங்கள் விடை அளிக்காவிடினும் அந்த விடயத்தை தத்துவரீதியாக, இலக்கிய ரீதியாக மற்றும் செயல் முறையாகவும் அணுக வழிவகுத்துள்ளது என்பதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை. அதன் ஒரு வெளிப்பாடே இந்த எழுத்துப்பகிர்வு.
பலமுறை இதைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்க தொடங்கிய பொழுதுதான் ஓர் உண்மை புலப்பட்டது. புவியியல் சம்பந்தமான அறிவு சிறிதும் மூளையில் எந்த மூலையிலும் தென்படவில்லை என்பது. பள்ளி தேர்வுகளில் சமுத்திர குப்தர் சாம்ராஜ்யமும், அக்பர் எல்லைக்கோடுகளும் மனப்பாடம் செய்து வரைந்து மார்க் வாங்கியாயிற்று. இது அட்லாண்டிக் பெருங்கடல் இது வட அமெரிக்கா என உலக வரைபடத்தில் கலர் அடித்தும் நிரூபித்தாயிற்று. சிறிய கலர் பென்சில்களை வைத்து இந்த வரைபடங்களில் வர்ணம் தீட்டும் போது மனம் தன்னை உலகப்புகழ் பெற்ற ஓவியராக கருதும் என்பது அனைவருக்கும் ஏற்பட்டு இருக்கும் ஒரு மிகச் சிறந்த அனுபவம். அதிலும் கடலுக்கு வர்ணம் அடிக்கும் போது, மனம் துள்ளி குதிக்கும். நீல வர்ணம், வரைபடத்தில் நீண்டு விரிந்து இருக்கும் கடற்பரப்பு, சர சர என ஒரு இலாவகத்துடன் தேய்க்கும்போது பரந்து விரிந்த சமுத்திரமே தன கைக்குள் அடங்கியதாய் ஒரு கற்பனை எழும். கலர் பென்சில்கள் அடங்கிய குப்பியில் நீல வர்ணப் பென்சில் மட்டும் அடிக்கடி சிறியதாகி விடும் என்பது அனைவர் வாழ்விலும் நடந்திருக்கும் ஒரு நிகழ்வுதான். சிறிய வயதில் இதுபற்றிச் சிந்திக்கத் தொடங்கியபோது நம் சிந்தனைகளை வலுப்படுத்த நம் காலத்தில் கூகிள் அல்லது வேறு வலைத்தளங்களோ அதை செயலாகும் இணையத்தள வசதியோ கிடையாது. உலகத்தின் எல்லைகளை வகுத்தது யார் என வெளிப்படையாக அன்று கேட்டு இருந்தால் கிடைத்திருக்கும் ஒரே பதில் என்னவாக இருக்கும் என்றால் "எல்லாரையும் படைத்த கடவுள்தான் உலகையும் படைத்தார்" என்றுதான் இருந்திருக்கும். அந்த கடவுளையே காலண்டரில், சினிமாவில், வரைபடங்களில், கற்றூண்களில் படைப்பவர்கள் ஆயிற்றே நாம். நல்ல வேளை. என் மன ஐயப்பாட்டை நான் யாரிடமும் தெளிவு படுத்திக்கொள்ள முற்படவில்லை. அதற்குக் காரணம் இந்த மாதிரி கேள்வி கேட்கும் நபருக்குக் கொடுக்கப்படும் பட்டம் "அதிகப் பிரசங்கி/" மேலும், 'இப்படி எல்லாம் தேவை இல்லாம பேசறதை விட்டுட்டு அந்த நேரத்தைப் படிப்பில் செலுத்தினால் நல்ல மார்க் வாங்கி ஸ்கூல்ல முதல் மாணவியாய் இருக்கலாமே' என்ற இலவச அறிவுரை வேறு கிடைக்கும்.
•Last Updated on ••Saturday•, 10 •June• 2017 22:11••
•Read more...•
மிக நீண்ட பயணத்தின் பல்வேறு பரிணாமங்கள் என்பதே ஒடிசி என்ற வார்த்தையின் பொருள். காலத்தால் அழியா கிரேக்க காவியமான ஹோமரின் ஒடிசி, காப்பிய நாயகனான யூலிஸிஸ் என்ற மாபெரும் கிரேக்க வீரனின் ஒரு நெடுந்தூர பயணத்தை விவரிக்கும் விதமாக அமைந்துள்ளது. கி. மு எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற ஒடிசி ஹோமரின் முந்தய காப்பியமான இலியட் என்ற புத்தகத்தின் தொடராக அமைகிறது. இலியட் காப்பியத்தில் கிரேக்கர்களும், டிராய் மக்களுக்கும் நடந்த ட்ரோஜன் போர் மற்றும் அதன் முடிவு பற்றி விவரிப்பதாக உள்ளது. எனினும், அதன் தொடர்ச்சிக்காப்பியமான ஒடிஸியில் கதாநாயகன் யூலிஸிஸ் ( இன்னொரு பெயர் ஒடிஸிஸ்) மேற்கொள்ளும் தீரம் நிறைந்த பயணங்களை எடுத்துரைப்பதாக உள்ளது. ட்ரோஜன் போரில் மிகுந்த துணிவுடன் பங்கு பெற்று தன் கிரேக்க நாட்டுக்கு மாபெரும் வெற்றிக்கனியை ஈட்டித்தரும் யூலிஸிஸ், தன் தாயகமான இதாகாவுக்கு செல்லும் வழியில் பத்து வருடங்களாக மேற்கொள்ளும் பயண சாகசங்கள் நிறைந்த காப்பியம் என்ற வகையில் ஒடிசி புதுமைக்காப்பியமாக படைக்கப்பட்டு உள்ளது.
தன் சகாக்களுடன் தாயகம் நோக்கி புறப்படும் யூலிஸிஸ் பல்வேறு விதமான விசித்திர அனுபவங்கள் நிறைந்த நெடும்பயணம் மேற்கொள்ளுகிறான். டிராய் நகரத்தில் இருந்து பன்னிரண்டு கப்பல்களில் தன் குழுவினருடன் புறப்படும் யூலிஸிஸ் சிறு தூரம் அலைக்கடலில் கடந்த பின் ஒரு சிறிய நிலப்பரப்பை காண்கிறான். சிகானீஸ் எனப்படும் அந்நிலப்பரப்புவாசிகள் இந்த குழுவினரை பார்த்து பக்கத்தில் உள்ள மலைகளை நோக்கி ஓடி தப்பிவிட, யூலிஸிஸ் தன் குழுவினருடன் அந்த நிலப்பரப்பில் இறங்கி அங்குள்ள பொருட்களை சூறையாடி தன் கப்பல்களை நிரப்புவதுடன், நல்ல உணவு மற்றும் வைன் முதலியவற்றை ருசி பார்த்து அனுபவிக்கின்றான்,
•Last Updated on ••Monday•, 29 •May• 2017 22:01••
•Read more...•
புயல் தாக்கும் பூகம்ப வேளையில், போதிமரம் என்ன செய்யும்? புத்தன்தான் என்ன செய்வான்? பொதி சுமக்கும் மனத்தின் குமுறல்கள் யாருக்கு எட்டும்? சூறாவளி சுழன்று சுழன்று அடிக்கும் மனப்பிரதேசத்தில் வசிப்பது யார்? விடையில்லா வினாக்கள் ஆண் வர்க்கத்திற்கே உரித்தாகுமா? மாயாதேவியின் மாயமகன் நீயாகின் என் வாழ்வே மாயம் ஆனது என்பதா? யாமத்திலே, மெய் மறந்த தருணத்தில் நீ நீங்கியது கடவுளர்களின் ஆணையோ? பேரொளி பிழம்பு என்னை நீ துறந்தது உன் ஞானத்தின் முதல் அடியோ? ஆறாத்துயர் அளித்து ஆறுவது சினம் என்று போதித்தாயோ? பெண் மனம் பேதை என்ற நிலைக்கு ஆட்படுத்தும் வன்செயல் நிகழ்த்தினையோ? உன் மனம் முற்றும் துறந்த வேளை என் சித்தம் அழிக்க துணிந்தனையோ ? காலம் உன்னை வேள்விகளில் நிலை நிறுத்தும் எனில் என் நிலை குலைத்த செயல் நிம்மதியோ? நிஜமாய் நீ நீடித்திருக்க நிழலாய் நான் பரிதவித்தேன் ஈர் ஐந்து வருடங்கள் நீயே என் போதி மரம் கருவின் வளர்ச்சி என் மணிவயிற்றில்! மன சுழற்சி உன்னிடத்தில்! நான் தாயாகிறேன். நீ தாயுமானவன் ஆகிறாய் உன் நிழல் எனக்கு போதித்த பாடங்கள் என் மன வேதனைகள் புலன் அடக்கிய நீ என் புலன் இச்சை அறியாதது ஏனோ? பெண்ணுக்கு மெய் பாரம் ஆகுமோ? ஆனது உன்னால் அன்றோ?
•Last Updated on ••Monday•, 29 •May• 2017 22:01••
•Read more...•
|