சங்கம் மருவிய காலத்தின் பின்தான் நீதி இலக்கியங்கள் எழுந்தன. பல நீதிநூல்களைத் தமிழில் குழந்தைகளுக்காக எழுதிப் படைத்தவர்களில் முன்னிலையில் நின்றவர் ஒளவைப் பாட்டியாவார். அவர் வழியில் நின்று செயற்பட்டோர் பலராவர். அவர்களில் ஒருவர் சிவப்பிரகாசர் என்னும் தமிழ்ப் புலவராவர். இவர் காஞ்சிபுரம் வேளாளர் மரபினருக்குக் குருவாக விளங்கிய குமாரசாமி தேசிகருக்கு மூத்த மகனாக 17ஆம் நூற்றாண்டு நடுப்பகுதியில் பிறந்தவர். இவர் சிறு வயதிலேயே தமிழில் புலமை பெற்று விளங்கியதோடு கவிதை இயற்றும் திறமையும் பெற்றிருந்தார். இவர் இல்வாழ்க்கையில் ஈடுபடாது துறவறத்தை மேற்கொண்டவர். தாமிரவருணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றுத் தேர்ந்தவர். இவரைச் சிவப்பிரகாச சுவாமிகள், துறைமங்களம் சிவப்பிரகாசர், கற்பனைக் களஞ்சியம், சிவானுபதிச் செல்வர், சைவசித்தாந்திப் புலவர், மெய்நூல் அறிஞர், அரங்கப் புலவர் ஆகிய பெயர்களைக் கொண்டு அழைப்பர். இவர் 34 நூல்களுக்கு மேற்பட எழுதியுள்ளார். இவர் தனது 32ஆம் வயதில் சிவபதம் அடைந்தார். இனி, சிவப்பிரகாச சுவாமிகள் அருளித் தந்த நன்னெறி நூலில் காட்டப்படும் கடவுள் வாழ்த்துத் தவிர 40 பாடல்களில் அமைந்த நல்ல நெறிகளை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்காகும்.
கடவுள் வாழ்த்து:- நன்னெறியின் நூலாசிரியர் சிவப்பிரகாச சுவாமிகள் மரபுவழி நின்று, வினாயகப் பெருமானை வணங்கி, நூலின் 40 நன்னெறிப் பாடல்களையும் பாடி முடித்தார்.
'மின்எறி சடாமுடி வினாயகன் அடிதொழ நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே!'
பூங்கை நாவிற்கு ஊட்டும் உணவு:- அந்த அழகிய பூங்கையானது எதிப்பார்ப்பு ஒன்றும் கருதாது, சுவை மிக்க உணவை எடுத்து நாவிற்கு ஊட்டி விடுகின்றது. இதே போன்று தீதற்ற பெரியோர் தம்மை உபசாரமொழிகள் கூறிப் புகழாதவர்களுக்கும் விருப்புடன் பொருள் கொடுத்து உதவுவர் என்று பாடல் அமைத்தார் சிவப்பிரகாச சுவாமிகள்.
•Last Updated on ••Wednesday•, 02 •August• 2017 16:24••
•Read more...•
எம் முன் காலத்தில் வாழ்ந்த பெரியோர்கள் தம் மக்களின் நல்வாழ்வுக்காகப் பல நீதிநூல்களை யாத்து விட்டுச் சென்றுள்ளனர். அவர்களுள் முதன்மையானவர் ஓளவைப் பாட்டியாவார். அவர் வழியில் நின்று ஆன்றோர் பலர் நீதி நூல்களைப் பாடித் தந்துள்ளனர். அவர்களில் ஒருவர் உலகநாதர் என்னும் தமிழ்ப்புலவராவர். அவர் 'உலகநீதி' என்ற ஓர் அரிய நூலை அருளித் தந்துள்ளார். இதுவே இங்கு கட்டுரையின் பேச்சுப் பொருளாகின்றது. இதில் பதின்மூன்று (13) பாடல்கள் அமைந்துள்ளன. இவர் பாடல்கள் மிகவும் எளிமையானவை. கடுஞ்சொற்கள் அற்றவை. பொருள் விளக்கத்துக்கு எவரிடமும் போகத் தேவையில்லை. இந்த நூலை எழுதுவதற்கு முன், கலைகளின் வடிவமாகத் திகழும் கரிமுகனுக்கு மருபுவழி நின்று கடவுள் வணக்கச் செய்யுள் பாடித் தொடங்குகிறார். 'விக்னவிநாயகனே! வினைதீர்க்கும் கணேசா! வேழ முகத்தானே! உன் துணை கிடைக்க வேண்டும், இந்த நூலை நான் பாடுவதற்கு' என்று வேண்டுகிறார்.
'உலகநீதி புராணத்தை உரைக்கவே கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு.'
1. ஓதாமல் இருக்க வேண்டாம்:- ஒரு காலும் படிக்காமல் இருக்க வேண்டாம். பிறர் மனம் வருந்தும்படியான சொற்களைச் சொல்ல வேண்டாம். மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம். கெட்டவர்களுடன் பழக வேண்டாம். கீழ் மக்கள் கூடியுள்ள இடங்களுக்குப் போக வேண்டாம். பிறர் குணங்களைப் பற்றிப் பேச வேண்டாம். இதில் செய்ய வேண்டாமென்று ஆறு வகைகள் சொல்லப்பட்டுள்ளன. அழகு மிக்க குறவர்களின் மகளாகிய வள்ளியை அருகில் வைத்துக்கொண்டு, மயிலை வாகனமாகக் கொண்டுள்ள முருகனை வாழ்த்துவாயாக மனமே!
'ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் வஞ்சனை செய்வாரோடு இணங்க வேண்டாம் போகாத இடம்தனிலே போக வேண்டாம் போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் மயில்ஏறும் பெருமானை வாழ்ந்ததாய் நெஞ்சே!'
•Last Updated on ••Thursday•, 20 •July• 2017 17:29••
•Read more...•
எட்டுத் தொகையும், பத்துப் பாட்டும் சங்க இலக்கியங்களாகும். இப் பதினெட்டு நூல்களையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர். அதே போல சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய 1. திருக்குறள், 2. நாலடியார், 3. நான்மணிக்கடிகை, 4. இன்னா நாற்பது, 5. இனியவை நாற்பது, 6. திரிகடுகம், 7. ஆசாரக் கோவை, 8. பழமொழி நானூறு, 9. சிறுபஞ்சமூலம், 10. ஏலாதி, 11. முதுமொழிக் காஞ்சி, 12. ஐந்திணை ஐம்பது, 13. திணைமொழி ஐம்பது, 14. ஐந்திணை எழுபது, 15. திணைமாலை நூற்றைம்பது, 16.கைந்நிலை, 17.கார் நாற்பது, 18. களவழி நாற்பது ஆகிய பதினெட்டு நூல்களைச் சேர்ந்த தொகுதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்பர். இப் பதினெட்டு நூல்களையும் ஒரு நான்கடி வெண்பாவில் அமைத்திருக்கும் சிறப்பினையும் காண்போம்.
'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி – மாமூலம் இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.'
மேலும், இப் பதினெட்டு நூல்களையும் முப்பகுதிகளான 1. நீதி சார்ந்த 11 நூல்கள், 2. அகம் சார்ந்த ஆறு (06) நூல்கள், 3. புறம் சார்ந்த ஒரு (01) நூல் என்று வகுத்துக் கூறுவர்.
1. நீதி சார்ந்த 11 நூல்கள் - திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி.
2. அகம் சார்ந்த ஆறு (06) நூல்கள் - ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது.
3. புறம் சார்ந்த ஒரு (01) நூல் - களவழி நாற்பது.
இனி, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றானதும், நீதி சார்ந்த பதினொரு (11) நூல்களில் ஒன்றானதுமான சிறுபஞ்சமூலம் என்ற நூலில் எவ்வாறான அறம் சார்ந்த விடயங்கள் பேசப்படுகின்றன என்பதையும் காண்பதே இக் கட்டுரையின் நோக்காகும்.
•Last Updated on ••Thursday•, 13 •July• 2017 11:53••
•Read more...•
தம் உடம்பை ஆடவர்க்கு விற்கும் பெண்களைப் பரத்தை, விபச்சாரி, விலைமகள், பொதுமகளிர், வரைவின் மகளிர், பொருட்பெண்டிர், வேசி, தாசி, கற்பற்றார் எனப் பல பதங்களால் அழைப்பர். உலகில் மனிதப் பிறவியே ஓர் உயர்ந்த நுணுக்கமான தத்துவப் படைப்பாகும். ஆணைப் பெண்ணுக்காகவும், பெண்ணை ஆணுக்காகவும் படைக்கப்பட்டமை ஓர் அரிய உண்மையாகும். இனிச் சங்க இலக்கியங்களிற் பரத்தமை பற்றிப் பேசப்படும் பாங்கினையும் காண்போம்.
தொல்காப்பியம் இடைச்சங்க காலத்தில் எழுந்த மூத்த நூலான தொல்காப்பியத்தைத் தொல்காப்பியனார் (கி.மு. 711) எனும் புலவர் யாத்துத் தந்தனர். தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே பரத்தையிற் பிரிவு தோன்றிவிட்டது. தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையை நாடிச் சென்று விட்டான். சென்ற காலை, தலைவி பூப்பெய்திய செய்தி கேட்டுத் தலைவியை நாடிச் சென்று, முதல் மூன்று நாளும் அவள் சொற்கேட்டு, ஒழுகி நின்று, பிற்பட்ட பன்னிரண்டு நாளும் அவளைப் பிரியாது கூடி நிற்பான். பரத்தையிற் பிரிவைத் தணிக்க இவ்வரையறை வேண்டற்பாலதாகும். அக்கால மக்கள் குழந்தைப் பேற்றிற்குக் கொடுத்துள்ள சிறப்பும், சீரும், முக்கியத்துவமும் தெளிவாகின்றது. இதைத் தொல்காப்பியச் சூத்திரம் இவ்வண்ணம் கூறுகின்றது.
'பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் நீத்தகன்று உறையார் என்மனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலை யான.' - (பொருள். 185)
தொல்காப்பியர் காலத்தில் பரத்தையர் மாட்டு வாயில்களை அனுப்புதல், நான்கு இனத்தார்க்கும் உரித்து என்பதைக் கீழ் வரும் சூத்திரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இங்கு நால்வர் என்பது (1) அந்தணர் (2) அரசர் (3) வணிகர் (4) வேளாளர் எனும் நால்வகுப்பினரைக் குறிக்கின்றது.
•Last Updated on ••Sunday•, 02 •July• 2017 13:03••
•Read more...•
எட்டுத் தொகையும், பத்துப் பாட்டும் சங்க இலக்கியங்களாகும். இப் பதினெட்டு நூல்களையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர். அதே போல, சங்க மருவிய காலத்தில் எழுந்த பதினெட்டு நூல்களான திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபங்சமூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது ஆகிய தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று. இப் பதினெட்டு நூல்களையும் குறிக்கும் நாலடி வெண்பா ஒன்றையும் காண்போம்.
'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுங் கோவை பழமொழி – மாமூலம் இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.'
மேலும், இப் பதினெட்டு நூல்களையும் முப்பகுதிகளான 1. நீதி கூறும் 11 நூல்கள், 2. அகம் சார்ந்த ஆறு (06) நூல்கள், 3. புறம் சார்ந்த ஒரு (01) நூல் என்று வகுத்துக் கூறுவர்.
1. நீதி கூறும் 11 நூல்கள் - திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி.
2. அகம் சார்ந்த ஆறு (06) நூல்கள் - ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது.
3. புறம் சார்ந்த ஒரு (01) நூல் - களவழி நாற்பது.
இனி, மேற்கூறிய நீதி கூறும் நூல்களில் ஒன்றான திரிகடுகம் என்ற நூல் கூறும் செய்திகளை ஆய்வதுதான் இக்கட்டுரையின் நோக்காகும். இந் நூலை நல்லாதனார் (நல் 10 ஆதனார்) என்னும் புலவர் இயற்றினார். இவர் வைணவ மதத்தைச் சார்ந்தவர். இவர் திரிகடுகத்தில் காப்புப் பாடலைத் தவிர, நூறு (100) பாடல்களைப் பாடியுள்ளார். திரிகடுகம் ஸ்ரீ திரி 10 கடுகம். திரி ஸ்ரீ மூன்று. கடுகம் ஸ்ரீ மருந்து. சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய முப்பொருள்களால் ஆகிய மருந்து உடல் நோயைத் தீர்ப்பன. அதேபோல், இந்நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப் பெறும் மூன்று கருத்துக்கள் உள்ளன. அவை நோயைப் போக்கும் தன்மை கொண்டன.
•Last Updated on ••Wednesday•, 10 •May• 2017 05:35••
•Read more...•
சங்க இலக்கியங்களில் மிகுந்த அறிவியல் சார்ந்த பதிவுகள் செறிந்துள்ளன. அவற்றை நாம் அறிவியற் கண்ணோடு பார்ப்பதில்லை. நம்மவர்கள்; இலக்கியப் பார்வையோடு நின்று விடுகின்றனர். இலக்கியங்களில் உள்ள அறிவியல்தான் விஞ்ஞானிகளின் ஆய்வுக்கும் உறுதுணையாகின்றன. இன்றைய மக்கள், தம் வாழ்வியல் மேம்படவும், வளம் பெறவும், நலமுறவும், வசதிகள் எய்தவும், உதவக் கூடியது அறிவியலாகும். விஞ்ஞானம், நுணங்கியல், இயல்நூல், புவியியல், இயற்பியல், வேதியியல், வானியல், உயிரியல், பயிரியல், மண்ணியல் முதலான பலதுறைகளை உள்ளடக்கியதுதான் அறிவியல். இவ்வாறான அறிவியல் உருவாக, வளர, மலர உலகின் பல விஞ்ஞானிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இனி, தமிழர்களின் தொன்மை வாய்ந்த வானியல் அறிவு பற்றிய செய்திகளைச் சங்க இலக்கியத்திற் காண்போம்.
(1) தொல்காப்பியம்
இடைச்சங்க காலத்தில் எழுந்த தொல்காப்பியம் என்ற தமிழின் முதல் இலக்கண, இலக்கிய நூலைத் தொல்காப்பியர் (கி.மு.711) என்ற முதுபெரும் புலவர் யாத்துத் தந்தனர். தொல்காப்பியர் உலகிலுள்ள உயிர்களின் வளர்ச்சி பற்றி ஆராய்ந்து, உயிர்களின் பாகுபாட்டை ஓரறிவிலிருந்து ஆறறிவுவரை வகைப்படுத்தி ஒரு சிறந்த விஞ்ஞானியை விஞ்சும் முறையில் நிரல்படுத்தி மரபியலில் கூறியுள்ள பாங்கினையும் காண்கின்றோம். மரபியல் என்பது பண்டுதொட்டு வழிவழியாக வரும் முறைமை, பழக்கவழக்கங்கள் பற்றிக் கூறுவதாகும். இன்னும், உலகிலுள்ள எல்லா உயிரினங்களையும் ஆறு வகைகளில் அடக்கிய சீர் பெருமைக்குரியது. 'ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.' - (பொருள். 571)
•Last Updated on ••Monday•, 20 •February• 2017 06:14••
•Read more...•
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது ஆகிய பதினெட்டு நூல்களைச் சேர்ந்த தொகுதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று. இப் பதினெட்டு நூல்களையும் ஒரு நான்கடி வெண்பாவில் அமைத்திருக்கும் சீரினையும் காண்போம்.
'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி – மாமூலம் இன்னிசைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.'
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்ற பதினொரு நூல்களை நீதி கூறும் அறம் சார்ந்த நூல்களாகவும், ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது என்ற ஆறு நூல்களை அகம் சார்ந்த நூல்களாகவும், களவழி நாற்பது என்ற ஒரு நூலைப் புறம் சார்ந்த நூலாகவும் வகுத்துள்ளனர்.
அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற (நான்கு அடிக்கு மிகாமல்) உரைப்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும்.
•Last Updated on ••Friday•, 13 •January• 2017 05:48••
•Read more...•
பண்டைத் தமிழ் ஆன்றோரும், சான்றோரும் தம்வாழ்வியலை அகம், புறம் என இருவகைப் படுத்தி ஆய்வு மேற்கொண்டனர். அகம் என்ற அகவாழ்வில் எழும் காதலன்பு, அன்பின் எழுச்சி, நெறியோடு சேர்ந்த வாழ்வின் தகைமை ஆகியவை இப்பகுதியிற் பேசப்படுவதைக் காணலாம். புறம் என்ற புறவாழ்வில் மேற்கொள்ளவேண்டிய முறைகள், ஆண்மை சார்ந்த பணிகள், போரியல் மரபு, கைக்கொள்ள வேண்டிய அறநெறிகள் ஆகியவை இப்புறத்திற் கூறப்படுவதைக் காண்கின்றோம். அகம் என்ற பகுதியை ஒருதலைக் காமம் என்றும், அன்புடைக் காமம் என்றும், பொருந்தாக் காமம் என்றும் மூன்று பகுதிகளாகக் காட்டுவர். இன்னும் இவற்றை முறையே கைக்கிளை என்றும், அன்பின் ஐந்திணை என்றும், பெருந்திணை என்றும் தொல்காப்பியர் (கி.மு.711) ஏழு (07) திணைகளை எடுத்துக் காட்டுவர்.
'கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப.' - (பொருள். 01)
மேற்கூறப்பட்ட ஏழு திணைகளுள், நடுவென்று கூறப்பட்ட பாலைத்திணை ஒழியக், கைக்கிளை பெருந்திணைக்கு நடுவாகி நின்ற ஐந்திணைகளும், கடல்சூழ்ந்த உலகம் பகுக்கப் பட்டிருக்கும் இயல்பாகும்.
'அவற்றுள், நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே.' - (பொருள். 02)
மேற்காட்டிய 'நடுவண் ஐந்திணை' – குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்பனவாம்.
பெரியோரின் செய்யுளை ஆராய்ந்தால், முதற்பொருள் எனவும், கருப்பொருள் எனவும், உரிப்பொருள் எனவும் கூறப்பட்ட மூன்று பொருள்களுமே காணப்பெறும் என்று தொல்காப்பியர் சூத்திரம் கூறும்.
'முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை.' – (பொருள். 03)
•Last Updated on ••Thursday•, 08 •December• 2016 21:43••
•Read more...•
சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு (18) நூல்களைச் சேர்ந்த தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று. அப் பதினெட்டு நூல்களையும்,
'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி – மாமூலம் இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.'
இவ் வெண்பாவில் காண்கின்றோம். திருக்குறள் இப் பதினெட்டு நூல்களுள் ஒன்றாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்ற பதினொரு (11) நூல்களும் நீதி/அற நூல்களாகும். கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறு (06) நூல்களும் அகம் சார்ந்தவை. களவழி நாற்பது என்ற ஒரு (01) நூல் புறம் சார்ந்ததாகும்.
திருக்குறள் உலகப் பொதுமுறை என்னும் சிறப்பினைப் பெற்று உலாவுகின்றது. உலகத்திலுள்ள எல்லாச் சமயத்தாரும் திருக்குறளைப் போற்றுகின்றனர். மேனாட்டு அறிஞர்கள் திருக்குறளைத் தம் மொழிகளில் மொழிபெயர்துள்ளனர். இது அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பாலைக் கூறுகின்றது. அறத்துப்பால் மனிதன் வாழ்வியலின் மேன்மையைக் குறிக்கும். பொருட்பால் சமுதாய வாழ்க்கையைக் காட்டும். காமத்துப்பால் அகவாழ்வின் வெற்றியை எடுத்துக் கூறும். 'கொல்லாமை', 'கள்ளுண்ணாமை' என்னும் இரு அதிகாரங்களும் திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்த நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இவர் இதைத் தனித்து நின்று செயற்பட்டு வெற்றியும் கண்டுள்ளார். திருவள்ளுவ மாலையில், சீத்தலைச் சாத்தனார், திருக்குறளின் சிறப்பைக் கூறும் பாங்கினையும் காண்போம்.
'மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும் மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும் தாமுடைய மன்னர் தடமுடிமேல் தார்அன்றோ யாமுரைதேர் வள்ளுவர்முப் பால்.'
இனி, பொருட்பாலில் வரும் நட்பியல் பற்றித் திருவள்ளுவர் கூறுவதை விரிவுபடுத்திக் காண்போம்.
•Last Updated on ••Thursday•, 17 •November• 2016 07:03••
•Read more...•
கடைச்சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானது பரிபாடல் என்ற நூலாகும். 'பரிபாடல்' என்னும் பாவினத்தால் ஆகிய பாடல்களின் தொகுதி இந்நூலாகும். அதனால், பரிபாடல் என்ற பெயரை இந்நூல் பெற்றது. பண்ணமைதியான இப்பாக்களைப் பயபக்தியோடு மனமுருகிப் பாடியும் பயின்றும் வந்தனர். அதனால் இப்பாடல்களை 'ஓங்கு பரிபாடல்' என்ற பெரும் புகழையும் பெற்றுக்கொண்டது. எட்டுத்தொகை நூல் விவரங்களை,
'நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஓத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோ டகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை.'
என்ற வெண்பா உணர்த்துகிறது.
இப் பரிபாடல், தொகுக்கப்பட்ட காலத்தில் எழுபது (70) பாடல்களுடன் இருந்துள்ளது. இதனை,
'திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகிழாட் கொன்று – மருவினிய வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப செய்ய பரிபாடல் திறம்.'
vன்னும் ஒரு பழம் செய்யுளால் அறியக்கிடக்கின்றது. இவற்றுள், இந்நாளில் 22 பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன. மற்றைய 48 பாடல்களும் காலத்தால் மறைந்து போயின. எஞ்சிய 22 பாடல்களையும் பண்களின் அமைப்பில் அமைத்துள்ளனர். இதன் முதற் பன்னிரு பாடல்களும் பாலையாழ் என்ற பண்ணிலும், அடுத்து வரும் ஐந்து பாடல்களும் நோதிறம் என்ற பண்ணிலும், அடுத்து வரும் நான்கு பாடல்களும் காந்தாரம் என்ற பண்ணிலும் அமைந்துள்ளன. இறுதிப்பாடலின் பண் தெரியவில்லை.
•Last Updated on ••Monday•, 07 •November• 2016 00:12••
•Read more...•
இடைச் சங்ககாலத்தில் எழுந்த தொல்காப்பியம் என்ற அரும் பெரும் மூத்த நூலை 'ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்' எனப் போற்றப்பெறும் தொல்காப்பியனார் (கி.மு. 711) என்பவர் யாத்துத் தந்தனர். தொல்காப்பியம் -எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் அதிகாரங்களைக் கொண்டJ. அவை ஒவ்வொன்றும் ஒன்பது இயலாக வகுக்கப் பட்டுள்ளன. இதில், பொருளதிகாரத்தை அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்களாக அமைக்கப்பட்டுள்ளன. மெய்ப்பாடு என்ற சொல்லுக்கு, புகழ், உண்மை, உள்ளத்தின் நிகழ்வு புறத்தார்க்கு வெளிப்படுத்தல், இயற்கைக் குணம் ஆகியவற்றை அகராதி கூறும். இதில் மெய்ப்பாட்டியல் என்ற இயல் கூறும் தன்மையினை ஆய்வதே இக் கட்டுரையின் நோக்காகும்.
மெய்ப்பாட்டியலை- மெய்ப்பாடுகளின் வகை, எண்வகை மெய்ப்பாடுகள், ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள், ஏனைத் திணைக்குரிய மெய்ப்பாடுகள், புறனடை என ஐவகையாக வகுத்துக் காண்பர் தொல்காப்பியர்.
(1) மெய்ப்பாடுகளின் வகை 1. விளையாட்டு ஆயத்தின்கண் தோன்றிய முப்பத்திரண்டு பொருளையுங் குறித்ததன் புறத்து நிகழும் பொருள் பதினாறு என்று கூறுவர்.
'பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் கண்ணிய புறனே நானான் கென்ப.' – (பொருள். 245)
2. மேற்கூறப்பட்ட பதினாறு பொருளும், எட்டாக வரும் இடமும் உண்டு. அவையாவன, குறிப்புப் பதினெட்டனையும் சுவையுள் அடக்கிச் சுவையை எட்டாக்கி நிகழ்த்துவதாகும்.
'நாலிரண் டாகும் பாலுமா ருண்டே.' – (பொருள். 246)
•Last Updated on ••Monday•, 07 •November• 2016 00:12••
•Read more...•
பறை என்பதை ஆதிகாலம் தொடக்கம் இற்றைவரை தென் இந்தியத் தமிழ் நாட்டு மக்களும், சிறி - இலங்காவின் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களும் தம் இசைக் கருவியாகப் பாவித்து வருகின்றனர். பறை என்பதற்கு முரசு, முரசொலி, தட்டு, கொட்டு, மிடா, முரசடிப்பவர் என்றும் அகராதிச் சொற்கள் உள. பறை என்றால் 'அறிவித்தல்' என்ற பொருளும் உண்டு. இது தமிழரின் பாரம்பரிய இசைக் கருவியுமாகும். இது எல்லாத் தோல் இசைக் கருவிகளுக்கும் தாய்க் கருவியாகும். இதன் ஒலி அரைக் கி.மீ. தூரம் வரை சென்று அங்குள்ளோரைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது.
ஆதிகாலத்தில் கூத்தாடல், பிண ஊர்வலம், கோயில் திருவிழா, விளையாட்டு நிகழ்ச்சிகள், அறுவடை காலத்தில் விழா நடத்துவதற்கும், பறவைகளைத் துரத்துவதற்கும், போர் காலத்தில் வெற்றி தோல்வி அறிவிக்கவும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கட்டளைகள், செய்திகள். உத்தரவுகள் ஆகியன அறிவிக்கவும், இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றிற்குப் பறையினைப் பெரும்பாலும் பாவித்தனர். மேலும், சுகப் பிரசவம் வேண்டிக் கோயில்களில் பறை முழக்குவதும் அன்றிலிருந்து இற்றைவரை காணக்கூடிய தெய்வ நம்பிக்கைக்குரிய ஒரு நிகழ்ச்சியாகும். இன்னும், ஒரு சிலர் கோயிற்; பூசை நிகழ்வின்போது தெய்வ உருவெடுத்துக் குறி கூறுவதையும் காண்கின்றோம். இதன்போது பறையை அடித்து அடித்து உருவேற்றுவர் பறையடிப்பவர்கள்.
பறை பசுவின் தோலால் ஆக்கப்பட்டது. அதை இரண்டு தடிகளால் அடித்து முழக்குவர். அதில் ஒரு தடி 28 செ.மீ. நீளமுடையது. மற்றத் தடி 18 செ.மீ. நீளமுடையது. இரு தடிகளும் மூங்கில் தடிகளாகும். பறையை நின்று கொண்டும், நடந்து கொண்டும், இருந்து கொண்டும் அடிப்பார்கள். பறையின் முரசறைவை 1. ஒத்தையடி என்றும், 2. தென்மாங்கு என்றும், 3. சாமியாட்டம் என்றும், 4. துள்ளல் என்றும், 5. உயிர்ப்பு என்றும் வுகுத்துக் கூறுவர்.
பறையில் பல்வேறுபட்ட பறைகள் உள்ளன. அவற்றில் 1. ஆரியப் பறை, 2. ஆறிருப் பறை, 3. உவகைப் பறை, 4. சாப் பறை, 5. வெற்றியின் பறை, 6. மீன்கோற் பறை, 7. மருதநிலப் பறை, 8. குறவைப் பறை, 9. தடாருப் பறை, 10. குறும் பறை, 11. கேற் பறை, 12. தடாரிப் பறை, 13. நிசாளம் பறை, 14. தலைப் பறை, 15. பண்டாரப் பறை, 16. பான்றிப் படை, 17. முருகியம் பறை, 18. வெறியாட்டுப் பறை, 19. வீரணம் பறை, 20. பஞ்சமாசதம் பறை என்பவை ஒரு சிலவாகும்.
•Last Updated on ••Thursday•, 06 •October• 2016 18:15••
•Read more...•
நம் பண்டைத் தமிழர்கள் தம் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் மிக்க ஆர்வங்கொண்டு தாமனைவரும் ஆடிப் பாடிக் களிப்புற்றிருக்கக் கூத்துக்களை அமைத்துக் கூத்தும் ஆடிக் குலாவி மகிழ்ந்திருந்தனர். அன்று துணங்கைக் கூத்தும், குரவைக் கூத்தும் அவர்கள் மத்தியில் நிலவியிருந்தன. இவற்றில் துணங்கைக் கூத்து முன்னிலையில் சிறப்புற்றிருந்தது. துணங்கைக் கூத்து:- மகளிர் பலர் ஒன்று சேர்ந்து இரு கைகளையும் மடக்கி விலாவிடத்து அடித்துக் கொண்டு ஆடுவர். இவர்களுக்குத் தலைக்கை கொடுத்துத் தொடங்கி வைப்பர் ஆடவர். இதனைப் பேய்க் கூத்தென்றும், சிங்கிக் கூத்தென்றும் கூறுவர். 'நிணந்தின் வாயள் துணங்கை தூங்க.' (திருமுருகு. 56) என்னும் அடிக்கு 'பழுப்புடையிருகை முடக்கியடிக்க, துடக்கிய நடையது துணங்கையாகும்' என நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இதுதான் துணங்கையின் இலக்கணமாகும். குரவைக் கூத்து:- துன்பம் வந்தவிடத்தும், இன்பம் பெருகிய பொழுதும், பக்தி மேலிட்டாலும் ஆயர்கள், வேடர்கள், குறவர்கள் முதலானோர் குரவைக் கூத்தாடுவது வழக்கம். மகளிர் பலர் சேர்ந்து கைகோத்து ஆடும் கூத்தைக் குரவைக் கூத்தென்பர். புதுமலர் மாலை சூடிய ஆடவர் வளையல் அணிந்த மகளிர்க்கு முதற்கை கொடுத்துக் குரவைக் கூத்தைத் தொடக்கி வைப்பர்.
இனி, தமிழ் இலக்கியங்களில் துணங்கை, குரவை ஆகிய இருவகைக் கூத்துக்களும் எவ்வாறு பேசப்படுகின்றன என்பது பற்றி ஆராய்வாம். புறநானூறு கடைச்சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு எனும் நூலில், வெம்மையான மதுவை விரும்பி உண்ட ஆடவர் புன்னைமரப் புதுமாலை அணிந்து, வளையல் அணிந்த மகளிர்க்கு முதற்கை கொடுத்துக் குரவைக் கூத்தும் ஆடுவர் என இப்பாடலை யாத்த மாங்குடி மருதனார் (இவரை மதுரைக் காஞ்சிப் புலவர் எனவும், மாங்குடி கிழார் எனவும் உரைப்பர்) என்ற புலவர் கூறியுள்ளார்.
'வெப் புடைய மட் டுண்டு, தண் குரவைச் சீர்தூங் குந்து; தூவற் கலித்த தேம்பாய் புன்னை மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து;' - (பாடல் 24-5-9)
•Last Updated on ••Sunday•, 04 •September• 2016 05:09••
•Read more...•
சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தொன்மை வாய்ந்த தமிழ் நாட்டை அரசாண்டு வந்தனர். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்ற மூன்று நாடுகளிலும், பாண்டிய நாடுதான் மிகப் பழமை பெற்ற நாடாகக் கருதப்பட்டது. 'பாண்டிய நாடே பழம்பதி யென்ன' என்ற சான்றோர் வாக்கு ஆதாரம் காட்டுகின்றது. பாண்டிய மன்னர்கள் தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் ஆகிய முச்சங்கங்களை அமைத்துத் தமிழை வளர்த்து வந்தனர். முச்சங்கங்களில் எழுந்த நூல்கள் பல. ஆவற்றுள் எஞ்சிய நூல்களைவிட அழிந்த நூல்களே அதிகமாகும். கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் சிறப்புற்ற சங்க காலமாகும். அன்றுதான் கடைச் சங்கம் நிலவியிருந்தது. அச்சங்கத்தில் எழுந்த பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் ஆகிய பதினெட்டு நூல்களும் நிகரற்ற இலக்கியங்களாய் இன்றும் உலாவி வருகின்றன. அதன்பின்னான சங்கம் மருவிய காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெரும் காப்பியங்கள்;, ஐஞ்சிறு காப்பியங்கள் ஆக ஒருமித்து இருபத்தெட்டு நூல்கள் எழுந்தன. இனி, அன்றைய மன்னர்களின் அரண் அமைப்புக்களின் சிறப்பினை இலக்கியங்கள் பேசும் திறன் பற்றி விரிவு படுத்திப் பார்ப்போம்.
தொல்காப்பியம் இடைச் சங்க காலத்தில் எழுந்த மூத்த நூலான தொல்காப்பியத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகை மக்கள் இருந்துள்ளதாகத் தொல்காப்பியர் (கி.மு. 711) கூறியுள்ளார். இவர்களில் அந்தணர் முதல் இடத்திலும், அரசர் இரண்டாம் இடத்திலும், வணிகர் மூன்றாம் இடத்திலும், வேளாளர் நான்காம் இடத்திலும் வைக்கப்பட்டுள்ளனர். தெய்வ வழிபாட்டுத் தொடர்பான பிரிவில் மேற் கூறப்பட்ட நால்வகையினரும் பங்குபற்றலாம் என்று சூத்திரம் கூறுகின்றது.
'மேலோர் முறைமை நால்வர்க்கும் எரித்தே.' – (பொருள். 31)
அந்தணர்:- 'நூலே கரகம் முக்கோல் மணையே, ஆயுங் காலை அந்தணர்க் குரிய.' (பொருள். 615) என்று தொல்காப்பியர் சூத்திரம் அமைத்தார். அவர்கள் அறநெறி வாழ்முறையில் ஈடுபடுவர்.
•Last Updated on ••Sunday•, 04 •September• 2016 05:09••
•Read more...•
சங்க காலத்தில் மன்னர் ஆட்சி நடந்தேறிக் கொண்டிருந்தது. அவர்கள் மக்களைச் சீரும் சிறப்புமாகப் பேணிக்காத்து நாட்டை அரசாண்டு வந்தனர். நாடு செழித்தது, வளம் பெருகியது, அறம் நாட்டில் நிலைத்தது, மக்கள் இன்புற்றிருந்தனர். நாட்டு மக்கள் மன்னன் புகழ் பாடினர். இன்னும் படை, கொடி, குடி, முரசு, குதிரை, களிறு, தேர், தார், முடி ஆகிய ஒன்பதையும் செங்கோலையுடைய அரசர்களுக்கு உரியவைகளாக்கினார் தொல்காப்பியர்.
'படையுங் கொடியுங் குடியும் முரசும் நடைநவில் புரவியும் களிறுந் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய' – (தொல். பொருள். 616)
மேலும; 'நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்!' – (மோசி கீரனார்- புறம் 186) என்ற பாடலும் ஆதாரம் காட்ட எழுந்தது. மன்னன் நாட்டுக்கும், மக்களுக்கும், தனக்கும் ஏற்ற வகையில் சட்ட திட்டங்களை உருவாக்கிச் செங்கோலை நிலைநாட்டினான். இனி, மூதானந்தம், பாலை, தாபத, முதுபாலை நிலைகள் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பேசும் பாங்கினையும் காண்போம்.
தொல்காப்பியம் கணவனோடு சேர்ந்து இறந்தாள் மனைவி. இவ்விறப்பைக் கண்டவர்கள் மற்றையோருக்கு எடுத்துக் கூறினர். இவ்வாறு கணவனும், மனைவியும் சேர்ந்து இறந்ததை 'மூதானந்தம்' என்று கூறுவர். கொடிய பாலை நிலத்தில் தன் கணவனை இழந்து தனித்து நின்று வருந்திய தலைவியின் நிலையை 'முதுபாலை' என்றழைப்பர். தன் ஆருயிர் மனைவியை இழந்து தனித்து நின்று துயர்படும் கணவன் நிலையைத் 'தபுதார' எனக் கூறுவர். காதலன் இறந்த பொழுது அவன் மனைவி உடன்கட்டையேறாது கைம்மை பூண்டு தவம் மேற்கொள்வதைத் 'தாபத' நிலை என்றுரைப்பர். இன்னும் காதலைனை இழந்த மனைவி அவன் சிதையில் விழுந்து இறந்துபட முன்வந்த பொழுது அவளைத் தடுத்து நின்றவர்களோடு மாறுபட்டுக் கூறியதைப் 'பாலை நிலை' என்பர்.
•Last Updated on ••Monday•, 08 •August• 2016 04:20••
•Read more...•
ஆண், பெண் ஈர்ப்பு ஒரு மனித வாழ்வியலை உருவாக்கித் தந்துள்ளது. இதன் ஊற்றால் அவர்கள் இன்ப வெள்ளத்தில் மூழ்கிக் குடும்ப வாழ்வைத் தொடங்கி, உற்றார் உறவினர் என்று குடும்பமாகச் சுற்றியிருந்து வாழ்வர். ஒருவரை ஒருவர் நேசித்து, அன்பு சொரிந்து, பாசம் காட்டி, உதவு கரம் கொடுத்து, அறநிலை நின்று வாழ்வதையே விரும்பினர். அவர்கள் எட்டச் சென்று தனித்து வாழார். இவ்வண்ணம் வாழ்ந்து பழகியவர்கள் ஒரு சில நாட்கள்தானும் பிரிந்து சென்று வாழவிரும்பமாட்டார். இனித் தொல்காப்பியu; காட்டும் பிரிவிற்குரிய நிமித்தங்களையும் காண்போம்.
தொல்காப்பியம். இடைச் சங்ககாலத்தில் எழுந்த நூலான தொல்காப்பியம் என்ற நூலைத் தொல்காப்பியர் (கி.மு.711) எனும் புகழ் பூத்த புலவர் யாத்துத் தந்தனர். அதில் அவர் பிரிவொழுக்க முறைகளையும், பிரிவுக்குரிய நிமித்தங்களையும் காட்டியுள்ளார். கல்வி கற்பதற்காகப் பிரிதல், பகை காரணமாகப் பிரிதல், தூது போவதற்காகப் பிரிதல் ஆகிய மூவகைப் பிரிதல்களுக்கும் தொல்காப்பியச் சூத்திரம் அமைத்துதுத் தந்துள்ளார்.
'ஓதல் பகையே தூதுஇவை பிரிவே.' – (பொருள். 27)
மேற் காட்டிய மூவகைப் பிரிதலில், கல்வி கற்பதற்காகப் பிரிதலும், தூது செல்வதற்காகப் பிரிதலும் ஆகிய இரு பிரிதல்களும் உயர்ந்தோராகிய மக்களுக்கே உரியனவாமென்றும் கூறியுள்ளார். குணம், ஒழுக்கம், செல்வம், கல்வி, ஞானம் முதலியன நிறைந்த மக்களே உயர்ந்தவர்களாகக் கணிக்கப்பட்டனர்.
'ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன.' – (பொருள். 28)
•Last Updated on ••Monday•, 13 •June• 2016 22:51••
•Read more...•
நம் பண்டைத்தமிழ்ச் சான்றோர்கள் தம் வாழ்வியலை அகம், புறம் என இரு கூறாக வகுத்து அமைத்தனர். புறம் புறவாழ்வில் மேற்கொள்ளும் இனப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, அறநெறிப்பற்று, ஆண்மை, போரியல் மரபு ஆகியவை இப் புறத்தில் அடங்கும். அகம் அக வாழ்வில் தமிழர்கள் அன்போடும், பண்போடும், அறநெறியோடும் வாழ்ந்ததன் சீரினைக் கூறுகின்றது. இங்குள்ள குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களிலும் தலைவன், தலைவியர் உலாவலம் வந்து அவர்தம் உள்ளத்தில் எழும் உணர்வெழுச்சிகளிற் பங்கேற்றுப் பரவசமடைவர். இதைத் தொல்காப்பியச் சூத்திரத்தில் காண்போம்.
'புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.' ------- (பொருள். 16)
இவ்வண்ணம் அவர்கள் குறிஞ்சியில் புணர்தலும், பாலையில் பிரிதலும், முல்லையில் இருத்தலும், நெய்தலில் இரங்கலும், மருதத்தில் ஊடலும் ஆகிய வேறுபட்ட உணர்வுகளோடு வாழ்வியலை நடாத்தி வெற்றியும் கண்டுள்ளனர். தலைவன் தலைவியர் காதலித்துக் களவொழுக்கத்தில் நின்று, 'பகற்குறி', 'இரவுக்குறி' அமைத்துக் கூடுவர். இதை அறிந்த இரு பக்கப் பெற்றோரும் அவர்களுக்குக் கரணத்தொடு கூடிய திருமணம் செய்து வைப்பர். ஆனால் சில பெற்றோர் தம் பிள்ளைகள் மேற்கொண்ட காதலை ஏற்க மாட்டார். எனவே தலைவன் தலைவியர் ஒன்றிணைந்து தனிவழி சென்ற பொழுதும; கொடுத்தற்குரிய தலைவியின் தமர் இல்லாதவிடத்தும், சடங்கோடுகூடிய மணநிகழ்வு நடைபெறுதலும் உண்டாம். இங்குதான் கரணத்தின் சிறப்பைக் காண்கின்றோம்.
'கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான.' – (பொருள். 141)
இனி, தலைவன் தலைவியர் பாலைவழி தனித்து உடன்போக்கில் சென்ற காட்சிகளைச் சங்ககால இலக்கியங்கள் காட்டும் பாங்கினையும் காண்போம்.
•Last Updated on ••Saturday•, 14 •May• 2016 22:34••
•Read more...•
பாண்டிய மன்னர்கள் தாம் அரசாண்ட காலத்தில் முச் சங்கங்களான தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் ஆகிய சங்கங்களை அமைத்து இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்து வந்தனர். அதில் தலைச் சங்கம், இடைச் சங்கம் ஆகியவற்றில் எழுந்த பல சிறந்த நூல்கள் யாவும் (தொல்காப்பியம் ஒன்றைத் தவிர) கடலன்னையின் சீற்றத்தால் அழிந்து விட்டன. இருந்தும் கடைச் சங்கக் காலத்தில் எழுந்த ஒரு சில நூல்களைச் சங்க இலக்கியங்கள் என்று அழைத்தனர். இச் சங்க இலக்கியங்களான பத்துப் பாட்டு, எட்டுத் தொகை ஆகிய நூல்களைப் பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனவும், சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதினெட்டு நூல்களைச் சேர்ந்த தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் வகுத்துக் காட்டுவர் ஆன்றோர்.
சங்க இலக்கியங்களில் தமிழர் தம் வாழ்வியல், அறவியல், அறிவியல், தொன்மை வாய்ந்த மொழி, பெருமை மிகுந்த பண்பாட்டுச் சிறப்பு, சிந்தனை வளமுடைய இலக்கண இலக்கியங்கள், இயற்கை வளம், நாகரிகம், கலாசாரம், களவியல், கற்பியல், பழக்க வழக்கங்கள், தலைமுறைத் தத்துவங்கள், கரணத்தோடு கூடிய சடங்கு முறைகள் ஆகியன பரந்து செறிந்து கிடக்கின்றன. இவற்றில் மடலேறல் பற்றி ஆய்வதுதான் இக் கட்டுரையின் நோக்காகும்.
மடலேறல் தான் காதலித்த தலைவியை அடைய முடியாத நிலையில் உள்ள தலைவன் ஒருவன் இரு பக்கங்களிலும் கருக்குள்ள காய்ந்த பனை மட்டையால் குதிரை ஒன்றை அமைத்து, அதை அலங்கரித்து, சிறு மணிகள் பூட்டி, மயிற் பீலி சூட்டி, பூமாலை தொடுத்து, தன் காதலியின் படம் வரைந்து குதிரையின் கழுத்தில் தொங்க விட்டு, தலைவன் தன் கழுத்தில் எருக்கலம் பூமாலை அணிந்து கொண்டு குதிரையில் ஏறி அமர, பக்கத்திலுள்ள சிறுவர்கள் அக் குதிரையை இழுத்துக் கொண்டு தெரு வழியே செல்வார்கள். தெருவிலுள்ளோர் இக் காட்சியைப் பார்த்துச் சிலர் மகிழ்வதும், வேறு பலர் பார்த்து மனம் குலைவதும் நிகழும். குதிரையை இழுத்துச் செல்லும் பொழுது பனங்கருக்குத் தலைவனை வெட்டி உதிரம் பெருக்கெடுப்பதும் நிகழும். தலைவன் காமவெறியுடன் இருப்பதினால் இதனை அவன் பொருட்படுத்த மாட்டான். இவற்றைக் கவனித்த ஆன்றோர் இரு பக்கத் தமருடன் கதைத்து இருவருக்கும் திருமணம் நடாத்தி வைப்பதும் நிகழும். இனி, சங்க இலக்கியங்கள் மடலேறல் பற்றிப் பேசும் பாங்கினையும் காண்போம்.
•Last Updated on ••Wednesday•, 06 •April• 2016 04:59••
•Read more...•
உலகிலுள்ள உயிரினங்கள் அத்தனையும் தத்தம் ஆண், பெண் பாலார்மேற் காதல் கொண்டு, ஒன்றறக் கலந்து, தம் இன விருத்தியைப் பெருக்கி, உலகை உயிருடன் நிலைநாட்டிப் பூமித்தாய்க்குப் பெரும் பங்காற்றி வருகின்றன. அதில், மற்றைய உயிரினங்களை விட மனித இனம் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிக விமரிசையாகத் திருமணம் நடாத்தி இன்புறுவர். திருமணங்கள் நாட்டுக்கு நாடு, காலத்துக்குக் காலம் வேறுபட்டிருக்கின்றதையும் காண்கின்றோம். இனி, திருமணங்கள் பற்றிப் பண்டைத்தமிழர் இலக்கியங்கள் பேசும் பாங்கினையும் ஆராய்வோம்.
தொல்காப்பியம் (1) எண்வகை மணங்கள்:- ஒத்த ஆணும் பெண்ணும் தம்முள் நட்புக் கொண்டு ஒழுகிய காதலை 'களவு' என்று அழைத்தனர். பின்வரும் சூத்திரத்தில் 1) அசுரம், 2) இராக்கதம், 3) பைசாசம், 4) காந்திருவம், 5) பிரமம், 6) பிரசா பத்தியம், 7) ஆரிடம், 8) தெய்வம் ஆகிய எண் வகை மணங்கள் பற்றிக் கூறுகின்றார். இவற்றுள் முதல் மூன்றான அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகியவை கைக்கிளையைச் சாரும் ('முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே-' –பொருள்.102) என்றும், கடைசி நான்கான பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகியவை பெருந்திணையைச் சாரும் ('பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே' – பொருள்.103) என்றும் சூத்திரம் அமைத்தவர் தொல்காப்பியர். எண்வகை மணத்துள் எஞ்சிய 'காந்திருவம்'- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைக்குரியதாகும். இவ்வண்ணம் எண்வகை மணத்தையும் கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை ஆகிய ஏழு திணைகளுக்கும் வகுக்கப்பட்டமை சிறப்பாகும்.
(2) கரணம்:- ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதற்கு, முதல் நிலையாய் இருந்த நிகழ்ச்சியைத் தமிழர் 'தீருமணம்' என்று அழைத்தனர். 'கரணம'; என்பது சடங்கொடு கூடிய மணநிகழ்வாகும். 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம் என்ப' – (பொருள். 143) என்கின்றது தொல்காப்பியம். தலைவன் தலைவியரிடையே பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஆன்றோரும், சான்றோரும் சடங்கு முறைகளை வகுத்து, வரையறைகளையும் அமைத்தனர்.
•Last Updated on ••Tuesday•, 16 •February• 2016 05:04••
•Read more...•
ஓத்த காதலர்கள் பிறர் அறியாதவாறு தங்கள் திருமணத்திற்கு முன்பாகத் தனியிடத்திற்; கூடி இன்புற்று மகிழ்வதைக் காதற் களவியல் எனக் கூறுவர். ஓத்த தலைவனும் தலைவியும் எதிர்ப்படும் நிலையில் காதற்களவு ஏற்படும். இதிற் தொடர்புடைய தலைமகன், தலைமகள் ஆகிய இருவரின் இயல்பினை நன்கறிந்து, அவர்களுக்கு இவ்வண்ணம் இலக்கணம் அமைத்துத் தந்துள்ளார் தொல்காப்பியர். தலைமகன் இலக்கணமாக 'பெருமையும் உரனும் ஆடூஉ மேன'- (பொருள்.95) என்று – 'பழிபாவங்களுக்கு அஞ்சி, குற்றச் செயல் புரியாது, அறிவுடையவனாய் இருத்தல் தலைவனுக்குரிய இயல்பாகும்' என்று கூறுகின்றார். இதனால், தலைமகள் வேட்கைக் குறிப்பை உணர்ந்த தலைமகன், அந்நிலையில் புணர்ச்சியை உடன் நிகழ்த்தாது வரைந்து கொண்டதன் பின்பே அதை நிகழ்த்துவோம் என்பதும் தெளிவாகின்றது. தலைமகளுக்கும் இவ்வாறு இலக்கணம் அமைத்துத் கூறுகின்றது தொல்காப்பியம்.
'அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய என்ப.' - (பொருள்- 96)
அச்சம், நாணம், மடம் (பேதைமை) ஆகிய முக்குணங்களும் தலைவியருக்கு என்றும் முந்தி நிற்றல் மகளிர்க்குரிய ஒரு சிறப்பாகும். அதனால் அவர்கள் வேட்கையுற்றவிடத்தும் புணர்ச்சிக்கு இசையாது வரைந்தெய்தலையே வேண்டி, ஒதுங்கி நிற்பர். தொல்காப்பியர் காலத்து மகளிர்க்கு அச்சம், நாணம், மடம் ஆகிய முக்குணங்கள் மட்டுமே இருந்துள்ளமையும் தெளிவாகின்றது. தற்கால மகளிர்க்கு உள்ள 'பயிர்ப்பு' என்ற நான்காவது குணம் பின்னெழுந்ததாகக் கருதலாம்.
தலைவன் தலைவியர் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது குறியிடம் அமைத்துக் கூடுவர். பகலிற் கூடுமிடம் 'பகற்குறி' என்றும், இரவிற் கூடுமிடம் 'இரவுக்குறி' என்றும் கூறுவர்.
'குறியெனப் படுவது இரவினும் பகலினும் அறியக் கிளந்த ஆற்ற தென்ப.' – (பொருள். 128)
இரவுக்குறிக்குரிய இடமானது, இல்லத்துக்கு அண்மித்ததாகவும் அவர்கள் பேசுவதை வீட்டிலுள்ளோர் கேட்குமாறு அமைந்ததாகவும் இருக்க வேண்டுமென்று சூத்திரம் கூறும்.
•Last Updated on ••Saturday•, 06 •February• 2016 20:05••
•Read more...•
தொல்காப்பியம்
'ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்' எனப் போற்றப்பெறும் தொல்காப்பியனார் (கி.மு. 711) எனும் புலவர் தொல்காப்பியம் என்ற நூலை யாத்துத் தந்தனர். இந்நூல் தொன்மை, செப்பம், வளம், செழுமை, வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஓர் அரிய இலக்கண இலக்கிய உயிர் நூலாய் எம் மத்தியில் பவனி வருகின்றது. 'இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்' என்பது நக்கீரனாரின் கூற்றாகும். இன்னும், 'தொல்காப்பியம் பண்டைத் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்' என்று டாக்டர் மு. வரதராசன் கூறியுள்ளார். இனி, பொருளதிகாரத்தில,; அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு திணைகள் பற்றித் தொல்காப்பியம் கூறுவதையும் காண்போம். அகத்திணையியல்- பழந்தமிழர் வாழ்வியலை அகம் எனவும், புறம் எனவும் வகுத்து இயற்கை வழி நின்று வாழ்ந்து காட்டினர். அகம் இன்ப ஒழுக்கத்தின் இணைந்த இல்வாழ்வு பற்றியதாகும். அதை மேலும் ஒருதலைக் காமம், அன்புடைக் காமம், பொருந்தாக் காமம் என மூன்று பகுதிகளாகக் காட்டி, அவற்றை முறையே கைக்கிளை, அன்பின் ஐந்திணை, பெருந்திணை எனக் கூறி, அவற்றை ஒருமித்து ஏழு திணைகளாக ஆன்றோர் எடுத்துக் காட்டுவர். இதைத் தொல்காப்பியர் சூத்திரத்தில் பின்வருமாறு அமைத்துள்ளார்.
'கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப.' – (பொருள் 01)
மேற்கூறிய அன்புடைக் காமம், அன்பின் ஐந்திணை என்பன ஐவகை நெறி பற்றிய கூற்றாகும். அவை ஐவகை நிலங்களான முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகியவற்றின் சூழல், சுற்றாடல் ஆகியவற்றோடு இணைந்தனவாய் நிகழ்வனவாம். இவற்றை ஐந்திணைகளான முல்லைத்திணை, குறிஞ்சித்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை என்றழைப்பர். இதிற் காட்டிய ஐந்திணைகளுக்கும், ஐவகையான நிலங்களை ஒதுக்கியமை கண்டீர். ஆனால் கைக்கிளைக்கும், பெருந்திணைக்கும் நிலங்கள் ஒதுக்கப்படாதமையும் காண்பீர்.
•Last Updated on ••Monday•, 11 •January• 2016 06:54••
•Read more...•
தலைசிறந்த காப்பியங்கள் அனைத்தும் கற்பனைக் களஞ்சியமாகவே தோன்றுகின்றன. கற்பனையின் சொல்லாற்றல் இலக்கியமாகின்றது. அந்த இலக்கியங்கள் சிறந்த காப்பிய நூலாய் மிளிர்கின்றன. அக் காப்பியங்களுள் தலை சிறந்தது சீவக சிந்தாமணியாகும். இது ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றானது. இதைக் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருத்தக்க தேவர் எனும் புலவர் யாத்துத் தந்தனர். இக் காப்பியத்தின் தலைவன் சீவகன் என்ற அரசன் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களை ஒன்றன்பின் ஒன்றாகத் திருமணம் புரிந்து அவர்களுடன் ஒன்றுபட்டுக் கூடி மகிழ்வுற்று ஏமாங்கத நாட்டின் தலைநகரான இராசமாபுரத்தில் இருந்து அரசாண்டு வந்தான் என்று கதை நீண்டு போகின்றது. இனி, கதைப் போக்கைத் தவிர்த்து, வாழ்வியல் தொடர்பில் சீவக சிந்தாமணி பேசும் பாங்கினையும் பார்ப்போம்.
மாநகரின் சிறப்பு:- மலைகள், குன்றுகள், பொய்கைகள், குளங்கள், வாவிகள், ஏரிகள், ஆறுகள், நீர் வீழ்ச்சிகள், மரங்கள், சோலைகள் ஆகிய இயற்கை வளங்கள் நிறைந்துள்ள நாடுகளையும் காண்கின்றோம். நகரைச் சுற்றி வன்மையான கல் மதில்கள், அவற்றின் மீது பல்வேறு போர்க் கருவிகள், மதில்களைச் சூழ்ந்து அகழிகள் போன்றனவும் அமைத்திருந்தனர். அந்நகரத்தைக் கடைநகர், இடைநகர், உள்நகர் என மூன்று பிரிவாக வகுத்துள்ளனர். கடைநகரில் யானையின் மருப்பிற்குப் பூண் இடுவோர் வாழும் வீதிகள் அமைந்திருந்தன. அங்கு தேர் ஏறும் இடமும், வாட்போர் பயிலும் இடங்களும் இருந்தன. இடைநகரில் அழகிய மாடங்கள், அதன் உச்சியில் நீல மணியால் செய்யப்பட்ட அழகிய இடங்களும் அமைந்திருந்தன. உள்நகரில் பரத்தையர் சேரி அமைந்திருந்தது. கடைகளின் தரையை நாள் தோறும் மெழுகி, அகிற்புகை, சந்தனப் புகை இட்டு, குலதெய்வங்களை வணங்கி நிற்பர்.
அரசன் அரண்மனையைச் சுற்றி ஆழமான அகழி அமைந்துள்ளது. தற்பாதுகாப்பிற்காக அந்த அகழியில் முதலைகள் நிறைந்திருக்கும். கால்வாய்களில் எவரும் விழாதபடி என்றும் மூடப்பட்டிருக்கும். அரசன் தங்குவதற்குப் பூங்காவில் பள்ளிமாடம் அமைந்திருக்கும். ஆங்கே கண்கவர் சிலைகள் காணப்படும். அரசன் அரண்மனையில் என்றும் இன்னிசை, யாழ் ஒலி, முரசொலி, நடன ஒலி நிறைந்திருக்கும்.
•Last Updated on ••Tuesday•, 01 •December• 2015 22:25••
•Read more...•
'மரபு', 'மரபியல்' என்பதற்கு 'முறைமை, இயல்பு, பெருமை, நியாயம், வழிபாடு, நல்லொழுக்கம், வழக்கம், வாடிக்கை, பழக்கம், சட்ட மதிப்புடைய வழக்கம், செயல் வழக்காறு, அடிப்பட்ட வழக்காறு, கர்ண பரம்பரை, nவிவழி மரபுரை, வழிவழிச் செய்தி, வாய்மொழிக் கட்டளைமரபு, மரபுத் தொகுதி, மரபுரை வகுப்பு, தலைமுறைத் தத்துவம், ஐதிகம், பரம்பரை வழக்கங்கள், முன்னோர் சொல்வழக்கு, தொல்காப்பிய இலக்கணப் பகுதி ஆகிய சொற்பதங்களை அகராதி கருத்துரையாகக் கூறுவதைக் காண்கின்றோம்.
தமிழ் இலக்கியங்களில் காலத்தால் மூத்த தொல்காப்பியம் எனும் பெருநூலைத் தொல்காப்பியர் (கி.மு.711) எனும் புகழ் பூத்த புலவர் யாத்துத் தந்துள்ளார். அதில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய முப்பெரும் அதிகாரங்களில் ஒருமித்து ஆயிரத்து அறுநூற்றிரண்டு (1,602) சூத்திரங்கள் உள்ளன. இனி, பொருளதிகாரத்தில் உயிரினம் சார்ந்த மரபியல் பற்றிக் கூறப்படுவதைச் சற்று விரிவுபடுத்திப் பார்ப்போம்.
1. இளமைப் பெயர்கள்
பார்ப்பும் (பறவைக் குஞ்சு), பறழும், குட்டியும், குருளையும், கன்றும், பிள்ளையும், மகவும், மறியும், குழவியும் என்னும் ஒன்பதும் இளமை குறிக்கும் சிறப்பினையுடைய மரபிலக்கணப் பெயர்களாகும். இதைத் தொல்காப்பியர் சூத்திரத்திற் காண்போம்.
'மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பில் பார்ப்பும் பறழுங் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென்று ஒன்பதுங் குழவியோ டிளமைப் பெயரே.' ..... (545)
•Last Updated on ••Friday•, 06 •November• 2015 23:59••
•Read more...•
'கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.'
திருக்குறளுக்கு அமைய அப்துல் கலாம் கசடறக் கற்றார் கற்றபின் அவை கூறிய ஒழுக்க நெறியில் வழுவாது ஒழுகி நின்றார். அதுவும் காணாதென்று மேலும் தொடர்ந்து செயற்பட்டு உலக மேதையானார். அவர் வரலாற்றைச் சற்று விரிவு படுத்திக் காண்போம்.
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள் ஜைனுலாப்தீனுக்கும் ஆஷியம்மாவுக்கும், நான்கு சகோதரர்களுடனும், ஒரு சகோதரியுடனும் ஆறாவது குழந்தையாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் 15-10-1931 அன்று அவதரித்தார். இவர் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு படகோட்டியின் மகனாவார். இவர் குடும்பம் ஏழ்மையில் வாடியதால், இவர் செய்தித்தாள்களை விநியோகம் செய்தார். இவர் ஒரு பழுத்த பிரமச்சாரியாவார்.
இவர் தன் பள்ளிப்படிப்பை முடித்தபின், திருச்சினாப்பள்ளியிலுள்ள 'செயின்ட் ஜோசேப் கல்லூரியில்' இயற்பியல் பயின்று 1954-ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆனால் இயற்பியற் துறையில் ஆர்வம் காட்டாத இவர், 1955-ஆம் ஆண்டு தன்னுடைய 'விண்வெளிப் பொறியியற் படிப்பை' சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
விஞ்ஞானியாக அப்துல் கலாம் 1960-ஆம் ஆண்டில் 'பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்' (Defence Research and Development Organisation = DRDO ) எனும் பிரிவில் விஞ்ஞானியாக ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்து இந்திய ராணுவத்துக்கு வழங்கினார். பின்னா;, 'இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்' (Indian Space Research Organisation = ISRO) எனும் பிரிவிலும் தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து, 'துணைக்கோள் ஏவுகணைக் குழுவில்' (Satalite Launch Vehicle = SLV) செயற்கைக்கோள் ஏவுதலிலும் முக்கிய பங்காற்றினார். இவர் 1980-ஆம் ஆண்டு SLV-111 ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-1 என்ற துணைக்கோளை விண்ணில் ஏவச்செய்து வெற்றியும் கண்டார். இது இந்தியாவுக்கே ஒரு பெரும் சாதனையாக அமைந்தது. இச் செயலைப் பாராட்டி இந்திய மத்திய அரசு இவருக்கு 1981-ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான 'பத்ம பூஷன்' என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.
•Last Updated on ••Saturday•, 26 •September• 2015 17:51••
•Read more...•
சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில், பூமிக் கோளில் மாத்திரம்தான் உயிரினங்கள் பிறக்கின்றன் வாழ்கின்றன் இறக்கின்றன. மற்றைய எட்டுக் கோள்களில் உயிரினங்கள் வாழமுடியாது. பூமிக்கு இஃது ஒரு தனிச் சிறப்பாகும். இதனால் பூமியானது ஒரு பூவுலகாய் மிளிர்கின்றது. பூமியில் உயிரினங்கள் இல்லையெனில் அஃது ஒரு வனாந்தரமே. உயிருள்ள ஒன்றுதான் பிறக்கவும், இறக்கவும் முடியும். உயிரில்லையெனின் பிறப்பும், இறப்பும் இல்லை. மனிதன் மட்டும்தான் பிறக்கின்றான், இறக்கின்றான் என்றில்லை. ஓரறிவுள்ள புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியவற்றிலிருந்து ஆறறிவுள்ள மனிதன்வரை பிறப்பதும;, இறப்பதும் உலக நியதியாகும்.
பிறப்பும் இறப்பும் இல்லாதவன் இறைவன் என்பர். அவன் அருவானவன்; உருவற்றவன். மனிதன்தான் அவனுக்கு உருவமைத்தவன். தன் சிந்தைக்கெட்டியவரை தன்னைப்போன்ற ஒரு மனித உருவமைத்துக் கடவுளுக்குக் கொடுத்தவன் மனிதன்தான். இறைவனுக்குப் பிறப்பு உண்டென்றால் அவனும் நம்மைப்போல் இறப்பவனாகி விடுவான் அல்லவா? எனவேதான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சிவபெருமான் பெயர் சொல்லி அழைக்காமல் 'பிறவா யாக்கைப் பெரியோன்' என்று கூறியுள்ளார். இன்னும் 'பெம்மான் முருகன் பிறவான் இறவான்' என்பது அருணகிரியார் வாக்கு. பிறப்பும் இறப்பும் இல்லாதவனிடம் சென்று சேர்ந்தால் நமக்கும் பிறப்பும் இறப்பும் அறும் என்று கூறுகின்றார் பட்டினத்தார்.
'பிறப்பு இறப்பு என்னும் இரண்டின் கடற்படாவகை காத்தல் நின் கடனே.' பிறப்பு, இறப்புப் பற்றித் திருமூலர் கூறும் திருமந்திரங்களின் பாங்கினையும் காண்போம். 'முடிவும் பிறப்பையும் முன்னே படைத்தவன்' (20) என்றும், 'பிறவா இறவாப் பெருமான்' (25) என்றும், 'பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னை' (86) என்றும், 'முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்... பட்டது பார்மணம் பன்னிரண்டு ஆண்டினில் கெட்டது எழுபதில் கேடு அறியீரே!' (163) என்றும், 'பகலும் இரவும் போலப் பிறப்பும் இறப்பும்' (164) என்றும், 'பிறப்பின் நோக்கம் பெருமானை வணங்குதல்' (190) என்றும், 'பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி' (789) என்றும், 'பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும்' (1524) என்றும், 'இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கி' (1614) என்றும், 'பிறப்பறியார் பல பிச்சைசெய் மாந்தர் ... பிறப்பினை நீங்கும் பெருமை பெற்றாரே' (1626) என்றும், 'பிறவா நெறிதந்த பேரரு ளாளன்' (1803) என்றும் கூறிய திருமூலர் முதல்வன் முக்கண்ணன் திருவடிக்கு எம்மையும் ஆற்றுப்படுத்திச் செல்கின்றார்.
•Last Updated on ••Saturday•, 12 •September• 2015 17:49••
•Read more...•
இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டும் தலைசிறந்த பழம்பெருங் காப்பியங்களாய்த் திகழ்கின்றன. வால்மீகி என்னும் முனிவர் இராமாயணத்தை வடமொழியில் எழுதியுள்ளார். இதைத் தழுவிக் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தியான கம்பர் 'கம்பராமாயணம்' என்ற நூலைத் தமிழில் யாத்துள்ளார். 'கல்விச் சிறந்த தமிழ்நாடு, புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்று பாரதியார் சிறப்பித்துக் கூறியுள்ளார். கம்பராமாயணத்தில் ஆறு காண்டங்கள், 112 படலங்கள், 10,569 பாடல்கள் உள்ளன. ஆறு காண்டங்களோடு தெய்வப் புலவர் ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டமும் சேர்த்துக் காண்டங்கள் ஒருமித்து ஏழாகின்றன. இனி, கம்பராமாயணம் பேசும் மகளிர் பெருமை பற்றிக் காண்போம்.
பட்டத்தரசிகள்
கோசலை, கைகேயி, சுமத்திரை ஆகிய மூவரும் கோசல நாட்டின் தசரத மன்னனின் பட்டத்தரசிகளாவர். இவர்களுக்கு மகப்பேறு இல்லாதலால் தசரத மன்னன் கவலையுற்றான். இதையறிந்த கலைக்கோட்டு முனிவர் புத்திர காமேஷ்டி யாகம் செய்து ஒரு கிண்ணத்தில் அமிர்தத்தை மன்னரிடம் கொடுத்துத் தேவியர்களக்குக் கொடுக்கும்படி பணித்தார். தசரத மன்னன் தன் மனைவியர் மூவருக்கும் அமிர்தத்தைப் பகிர்ந்து கொடுத்து, கிண்ணத்தில் ஒட்டியிருந்த அமிர்தத்தைச் சுமந்திரைக்கு மீண்டும் கொடுத்தான். மூவரும் கர்ப்பமுற்று, கோசலை- இராமன் என்ற குழந்தையையும், கைகேயி- பரதன் என்ற குழந்தையையும், சுமத்திரை- இலக்குவன், சத்துருக்கன் என்ற இரு குழந்தைகளையும் பெற்றெடுத்தனர்.
•Last Updated on ••Thursday•, 21 •May• 2015 22:34••
•Read more...•
'கதை' என்ற சொல்லுக்கு சிறுகதை, குறுங்கதை, தொடர்கதை, பெரியசரித்திரம், காப்பியம், சிறு காப்பியம், சென்றகால வரலாறு, கட்டுக்கதை, உரையாடல், மனத்தை நெகிழ வைக்கும் கதை, நிகழ்வொன்றினைக் கற்பனை கலந்து சுவைபடக் கூறுவது, நிகழ்ச்சி, செய்தி, கட்டுரை, நிகழ்ச்சி விவரம், விரிவுரை, விளக்கம், நொடிக்கதை, உபகதை, சாட்டுரை, புனைவுரை, பழங்கதை, புனைகதை, அருங்கதை ஆகியவற்றைப் பொருளாகக் கூறுவர். மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரு நூல்களும் பாரதநாட்டின் இரு கண்கள். இவ்விரு நூல்களும் உலகம் போற்றும் ஒப்பற்ற இதிகாசங்கள். இதிகாசம் என்பது பழங்காலச் சரித்திரம். இதிகாசம் என்பதின் பொருளே 'இவ்வாறு நடந்தது' என்பதாகும். மகாபாரதம், இராமாயணத்தை விடப் பெரியது. இதில் ஓர் இலட்சம் சுலோகங்கள் உள்ளன. ஆனால் இராமாயணம் காலத்தால் முந்தியது. மனிதகுல தர்மங்களை, வாழ்வியல் நீதிகளை, அறநெறிகளை வியாச பகவான் மகாபாரதம் வாயிலாகவும், வால்மீகி இராமாயணம் வாயிலாகவும் வழங்கியுள்ளனர்.
இன்னும், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. அதுபோலவே சங்கமருவிய காலத்திலெழுந்த திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னிலை (இதைச் சிலர் சேர்ப்பதில்லை) ஆகிய பதினெட்டு நூல்கள் சேர்ந்த தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று வழங்கலாயிற்று. இவைகளும் சங்க இலக்கியங்களே. இவ்வாறான முப்பத்தாறு (36) நூல்களையும் சங்க இலக்கியங்கள் என்று கூறிப் பெருமைப்படுபவன் தமிழனே. இவற்றையடுத்து எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகிய ஐந்து பெரும் நூல்களையும் ஐம்பெரும் காப்பியங்கள் என்றழைத்தனர். மேலும், சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயகுமார காவியம் ஆகிய ஐந்து சிறு நூல்களையும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் அழைத்தனர்.
•Last Updated on ••Saturday•, 25 •July• 2015 21:03••
•Read more...•
மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரண்டும் உலகம் போற்றும் உயர்ந்த இதிகாசங்களாகும். மகாபாரதம் இராமாயணத்தைவிடப் பெரியது. அதில் சுமார் முப்பதாயிரம் (30,000) பாடல்கள் உள்ளன. வியாச மகரிசி அவர்களால் மகாபாரதம் எழுதப்பட்டது. இந்நூல் எழுந்த கால எல்லையைக் கணக்கிட்டுக் கூறமுடியாது. ஆனாலும் மகாபாரதம் கி.மு. 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலென்று சிலர் கருத்துரைப்பர். வியாசர் பாரதத்தைத் தழுவித் தமிழில் முதன் முதலில் எழுந்த காப்பியம் வில்லிபுத்தாழ்வாரால் இயற்றப்பட்ட வில்லி பாரதம் ஆகும். இதையடுத்து, 'நல்லாபிள்ளை பாரதம்', பாரதியாரின் 'பாஞ்சாலி சபதம்', மூதறிஞர் ராஜாஜியின் 'வியாசர் விருந்து', பல்கலை அறிஞர் ''சோ' அவர்களின் 'மஹாபாரதம் பேசுகிறது', திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளின் 'மகாபாரதம்', அறிஞர் அ. லெ. நடராசன் அவர்களின் 'மகாபாரதம்', சுவாமி சித்பவானந்தர் அவர்களின் 'மகாபாரதம்', பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் அவர்களின் 'மகாபாரதம் உரைநடையில்' ஆகிய நூல்களும் எழுந்தன.
சகோதரர்களான கௌரவர் குடும்பத்துக்கும், பாண்டவர் குடும்பத்துக்கும் இடையில் தோன்றிய குடும்பப் பிரச்சினைகள் பெரும் யுத்தமாக உருக்கொண்டு பதினெட்டு நாட்கள் மகாபாரதப் போர் நடந்தது. அப்போரில் பதினெட்டு அக்ரோணிப் படைவீரர்கள் (முப்பத்தொன்பது இலட்சத்து முப்பத்தாறாயிரத்து அறுநூறு – 39,36,600) பங்கேற்று, அதில் பத்துப் பேர் தவிர மற்றைய அனைவரும் இறந்துபட்டனர். இறுதியாகப் பாண்டவர்கள் வெற்றி பெற்றுத் தருமர் முடிசூடி அத்தினாபுரத்தைத் தன் சகோதரரான பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோருடன் ஆட்சி புரிந்து வந்தான். அத்தினாபுரத்து மக்களும் மகிழ்ச்சியில் மூழ்கி இன்புற்று வாழ்ந்து வந்தனர்.
•Last Updated on ••Sunday•, 11 •January• 2015 20:22••
•Read more...•
தொழில் நுட்பம் பற்றி அலசுவதன்முன் அது எழுந்த கால எல்லை, எழவேண்டிய காரணம், அதனால் ஏற்பட்ட நன்மைகள், அதன் தற்போதைய வளர்ச்சி நிலை ஆகியவற்றைப் பார்ப்பது உசிதமென மனம் அவாக் கொள்கின்றது. கதிரவன் 460 கோடி ஆண்டுகளுக்குமுன் ஒரு நட்சத்திரம் தீப்பிடித்து எரிந்து உருவாயிற்று என்பது வானூலாரின் கணிப்பாகும். அதன்பின் கதிரவன் குடும்பத்திலுள்ள ஒன்பது (09) கோள்கள் தோன்றின. அதில், மக்கள் வாழக்கூடிய ஒரேயொரு கோளான பூமியானது 454 கோடி ஆண்டுகளுக்குமுன் தோன்றினாள்.
பூமிக்குரிய ஒரு நிலா 453 கோடி ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. பூமியில் 400 கோடி ஆண்டளவில் உயிரினங்கள் தோன்றத் தொடங்கின. முதல் மனிதன் 20 இலட்சம் ஆண்டளவில் தோன்றினான். மேலும், இரண்டு (02) இலட்சம் ஆண்டளவில் உறுப்பியல் அமைப்பான புது நாகரிகப் பண்பான மனிதன் தோன்றினான். இன்று பூமியில் ஓரறிவிலிருந்து ஆறறிவுடைய உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றில் ஓரறிவு உயிர்களிலிருந்து ஐந்தறிவு உயிர்கள் வரையானவை ஒரே விதமான வாழ்க்கை முறைகளை என்றும் நடாத்திக் கொண்டு, எதுவித முன்னேற்றமுமின்றி மாண்டு மடிவதை எம்மால் பார்க்கமுடிகின்றது.
•Last Updated on ••Friday•, 21 •November• 2014 21:31••
•Read more...•
பரந்து விரிந்த எல்லையற்ற பெரும் வெட்டவெளியான வானத்தில் ஒரு சூரிய குடும்பம் அந்தரத்தில் மிதந்து குதூகலமாகப் பறந்து திரிந்த வண்ணமுள்ளது. ஆங்கே சூரியன், நிலாக்கள், விண்மீன்கள், ஒன்பது கோள்களாகிய புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், வியாழன், சனி, விண்மம் (Uranus – யுறெனஸ்), சேண்மம் (Neptune – நெப்டியூன்), சேணாகம் (Pluto – புளுடோ) ஆகியவை அந்தரத்தில் ஒவ்வொன்றின் ஈர்ப்புச் சக்தியால் மிதந்த வண்ணமும், சுழன்ற வண்ணமும் உள்ளன. இதில் சூரியன் சுமார் 460 கோடி (460,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினான் என்றும், பூமி சுமார் 457 கோடி (457,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினாள் என்றும், பூமி நிலா சுமார் 453 கோடி (453,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினாள் என்றும் அறிவியல் கூறுகின்றது. மேற்கூறிய ஒன்பது கோள்களில் பூமிக் கோளில் மாத்திரம்தான் உயிரினங்கள் வாழ முடியும். பூமிக் கோளில் சுமார் 400 கோடி (400,00,00,000) ஆண்டளவில் ஒரு கலத்தைக் கொண்ட உயிரினமான அணுத்திரண்மம் (Molecule) முதன்முதலாகத் தோன்றி உயிர் மலர்ச்சி (Evolution of Life) முறையை ஆரம்பித்தது. இதையடுத்துப் புல், பூண்டு, செடி, கொடி, தாவரம், மரம், ஊர்வன, நீர்வாழ்வன, பறவை, விலங்கு ஆகிய ஓரறிவிலிருந்து ஐயறிவுவரையான உயிரினங்கள் தோன்றியபின், அவற்றின் உச்சமாக ஆறறிவு படைத்த மனித இனமான ஆண், பெண் ஆகிய இருவரும் இரண்டு இலட்சம் (2,00,000) ஆண்டளவிற் தோன்றி, பூமியில் பல மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்களுடன் இற்றைவரை தமது ஆட்சியைப் பூமியில் நிலை நிறுத்தி வருகின்றனர்.
•Last Updated on ••Sunday•, 02 •November• 2014 21:06••
•Read more...•
நாம் வாழும் பூமியானது நானூற்றி ஐம்பத்து நாலு (454) கோடி ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. அதில் இருபது (20) இலட்சம் ஆண்டளவில் முதல் மனிதன் ஆபிரிக்காக் கண்டத்தில் தோன்றினான். அதிலும் இரண்டு (2) இலட்சம் ஆண்டுகளுக்குமுன்தான் உறுப்பியல் சார்ந்த அமைப்பியலான நவ நாகரிகப் பண்பாடுடைய மனிதன் தோன்றினான். 'மனிதன் தோன்றிdhd;' என்பது ஆணும், பெண்ணும் தோன்றினர் என்பதுதான் பெருள். அவர்கள் தோன்றிய பொழுது பூமியில் ஓரறிவான புல்லும், மரமும், பிறவும், ஈரறிவான நந்தும், முரளும், பிறவும், மூவறிவான சிதலும், எறும்பும், பிறவும், நான்கறிவான நண்டும், தும்பியும், பிறவும், ஐயறிவான மாவும், புள்ளும், பிறவும், ஆகியவை வாழ்ந்து கொண்டிருந்தன. மனிதன்தான் உயிர்கள் வாழும் பூமிக்கோளை உலகம் என்று கணித்தான். அவனில் அமைந்த ஆறறிவு உலகத்தை நவீனமுறைப்படுத்தி, அறிவியல் முன்னிலை பெற்று, மக்கள் வாழ்வியலில் முன்னேறி வருவதை அவதானிக்க முடிகின்றது.
உலகத்திலுள்ள உயிரினங்கள் அத்தனைகளிலும் ஆண் இனமும், பெண் இனமும் உள்ளன. இந்த ஆண், பெண் இனங்களின் இணைவும், உறவும்தான் அந்தந்த உயிரினங்கள் அழியாது காப்பாற்றப்படுகின்றன. ஆண், பெண் ஆகிய இரு இனங்களில் ஓர் இனந்தானும் இல்லையெனில் அந்த உயிரினம் அழிந்து போவது திண்ணமாகும். எனவேதான் ஆண் இனத்தையும், பெண் இனத்தையும் இயற்கை தந்துதவுகின்றது. ஆணில் ஆண்மையும், வீரமும் அமைந்துள்ளதுபோல், பெண்ணில் பெண்மையும், அழகும், சாந்தமும் அமைந்துள்ளன. ஆண் பெண்மையையும், பெண் ஆண்மையையும் விரும்பி ஒன்றுபட்டு வாழ்வியலில் இறங்குவர். ஆணின்பின் பெண்ணும், பெண்ணின்முன் ஆணும் சேர்ந்து ஓடுவதுதான் வாழ்க்கையாகும். ஆணும், பெண்ணும் இந்த ஓட்டத்தில் வெற்றிவாகை சூட 'ஒருத்திக்கு ஒருவன், ஒருவனுக்கு ஒருத்தி' என்ற தாரகமந்திரத்தைக் கடைப்பிடிப்பர். அதில் நிச்சயம் வெற்றியும் காண்கின்றனர்.
•Last Updated on ••Tuesday•, 26 •August• 2014 20:25••
•Read more...•
அறிவியல் என்பதற்கு விஞ்ஞானம், நுணங்கியல், இயல்நூல், ஆய்வுத்துறை, அறிவு, பொருளாய்வுத்துறை, புறநிலை ஆய்வுநூல், அறிவு பற்றிய துறை, பருப் பொருள்களை ஆயும் நூல் தொகுதி ஆகிய கருத்துக்கள் அகராதியை அலங்கரித்து நிற்கின்றன. மனித இனம், வாழ்வு, வளம், நலம், பண்பு, வசதிகள் யாவும் மேன்னிலையடைவதற்கு உறுதுணையாயிருப்பது உலகில் உலாவும் அறிவியலாகும். மண்ணியல், வானியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பல துறைகள் அறிவியலில் அடங்கும். இவ்வாறான அறிவியலைப் பூமித் தாயின் மக்களில் ஒரு சிலர் அறிவியற் பூங்காவில் நுளைந்து தத்தமக்கான துறைகளில் ஆர்வங் கொண்டு உலக முன்னேற்றத்தில் உதவிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சேவை மகேசன் சேவையாகும். இனி, பண்டைத் தமிழர்களின் பழமை வாய்ந்த அறிவியல் பற்றிய செய்திகள் பழந் தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பேசப்படுகின்றன என்ற பாங்கினையும் காண்போம்.
தொல்காப்பியம் தொல்காப்பியம் இடைச் சங்க காலத்தில் எழுந்த முதல் இலக்கண, இலக்கிய நூலை யாத்த தொல்காப்பியர் (கி.மு. 711) இவ்வுலகத்தின் ஐம்பெரும் பூதங்களான சேர்க்கைத் தோற்றம் பற்றியும், உலகிலுள்ள ஆறறிவு உயிர்களின் வளர்ச்சி பற்றியும் ஆய்ந்து, தொகுத்து மரபியலில் சூத்திரம் அமைத்த சிறப்பினையும் காண்கின்றோம். மரபியலென்பது முன்னோர் சொல் வழக்கு, அன்றுதொட்டு வழிவழியாக வரும் பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறப்படுவதாகும்.
•Last Updated on ••Wednesday•, 02 •July• 2014 22:25••
•Read more...•
ஆறறிவு படைத்த ஆண், பெண் ஆகிய இரு பாலாரும் மற்றைய ஓரறிவிலிருந்து ஐயறிவு வரையான உயிரினங்களைவிட மிகவும் விஞ்சிய நிலையில் இருந்து வாழ்ந்து வருகின்றனர். ஓரறிவிலிருந்து ஐயறிவு வரையான எல்லா உயிரினங்களிலும் ஆண், பெண் ஆகிய இனங்கள் உள்ளதென்பதும் நாம் அறிந்த உண்மையாகும். இவ்வாறான உயிரினங்கள் நிறைந்ததுதான் உலகம் என்றாகின்றது. இந்த ஆண், பெண் உறவுதான் உலகை நிலைக்க வைக்கின்றது. இவ்வுறவுக்கு ஏதுவான ஆண், பெண் இனங்களில் ஓர் இனம்தானும் இல்லையெனில் எல்லா இனங்களும் அழிந்து விடும். உயிரினங்கள் இன்றேல் உலகமும் இல்லையெனலாம்.
களவொழுக்கம் பண்டைத் தமிழர் தம் வாழ்வியலை அகம், புறம் என இரு கூறாய் வகுத்து அறநெறியோடு, இயற்கை வழி நின்று வாழ்ந்து காட்டியுள்ளனர். புறம்- புறவாழ்வியலோடு இணைந்த ஆண்மை சார்ந்த பல்வேறு பணிகளும், வீரம் செறிந்த போரியல் மரபு பற்றியும் எடுத்துக் கூறும். இவை பற்றிச் சங்க நூலான புறநானூறு திறம்பட எடுத்துக் கூறுகின்றது. இங்கே ஆண்கள் முன்னிலை வகிப்பர். அகம்- அகவாழ்வான இன்ப உணர்வுகளோடு இணைந்த இல்வாழ்வு பற்றிய தகைமையைக் கூறும். இவை பற்றி அகநானூறு என்ற சங்க நூலில் விவரமான செய்திகளைக் காணலாம். இதில் ஆண்களும் பெண்களும் பங்கேற்பர்.
•Last Updated on ••Wednesday•, 04 •June• 2014 05:36••
•Read more...•
பரந்து விரிந்த நீண்ட பிரபஞ்சவெளியில் ஒரு சூரிய குடும்பம் பறந்து திரிந்து உலா வந்த வண்ணமுள்ளது. ஆங்கே சூரியன், நிலாக்கள், விண்மீன்கள், ஒன்பது கோள்கள் ஆகிய புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், வியாழன், சனி, விண்மம் (யுறேனஸ்- Uranus), சேண்மம் (நெப்டியூன் - Neptune), சேணாகம் (புளுடோ – Pluto) ஆகியவை அந்தரத்தில் ஒவ்வொன்றின் ஈர்ப்புச் சக்தியால் மிதந்த வண்ணமும், சுழன்ற வண்ணமும் உள்ளன. சூரியன் நானூற்றி அறுபது கோடி (460,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினான் என்றும், பூமியானது நானூற்றி ஐம்பத்துநாலு கோடி (454,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினாள் என்றும், பூமி நிலாவானது நானூற்றி ஐம்பத்து மூன்று கோடி (453,00,00,000) ஆண்டளவில் தோன்றினாள் என்பதும் அறிவியலாரின் கூற்றாகும். சுமார் முன்னூற்றி எழுபது கோடி (370,00,00,000) ஆண்டளவில் பூமித்தாயில் நுண்ம உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன.
பூமித்தாய் கதிரவன் மண்டலத்தின் பிறப்புத்தான் பூமிக் கோளாகும். உருண்டை வடிவான பூமி நெருப்புக் கோளமான சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனற்பிழம்பாக விண்ணிற் பல காலமாகச் சுழன்று கொண்டிருந்தது. நீண்ட காலத்தின்பின் மேற்பரப்புக் குளிர்ச்சியடைந்தது. ஆனால் பூமியின் மையப் பகுதி இன்றும் அனலாக எரிந்து கொண்டிருக்கிறது. பூமி குளிர, மேகங்களும் குளிர்ந்து, பெருமழை பெய்து, நீர் பெருங் குழிகளிற் தேங்கிக் கடல்கள் தோன்றின.
•Last Updated on ••Tuesday•, 01 •April• 2014 17:27••
•Read more...•
பண்டைத் தமிழ்ச் சான்றோர் தம் வாழ்வியலை 'அகம்' எனவும் 'புறம்' எனவும் இரு கூறாக வகுத்து இயற்கை வழி நின்று பெருவாழ்வு வாழ்ந்து, தம்மவரும் பின்னவரும் பின்பற்ற வழிவகுத்துச் சென்றுள்ளனர். புறம் புறவாழ்வியலோடு இணைந்த ஆண்மை, வீரம், இனப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, அறநெறிப்பற்று, போரியல்மரபு ஆகியவை இப் புறத்தின்கண் நன்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மட்டும் ஈடுபடுவர். அகம் அகவாழ்வான இன்ப உணர்வுகளோடு இணைந்த இல்வாழ்வு பற்றிய தகைமையை எடுத்துக் கூறுகின்றது. இதில் தலைவன் தலைவியர் ஆகிய இருவரும் ஈடுபடுவர். அன்புறு காமம் சார்ந்த இப் பகுதியை ஒருதலைக் காமம் எனவும், அன்புடைக் காமம் எனவும், பொருந்தாக் காமம் எனவும் மூன்று நிலைபற்றிப் பகுத்துக் காட்டப்பட்டுள்ளது. இவற்றை முறையே கைக்கிளை என்றும், அன்பின் ஐந்திணை என்றும், பெருந்திணை என்றும் ஒருமித்து ஏழு திணைகள் என்றும் சான்றோர் கூறியுள்ளனர். இதைத் தொல்காப்பியர் (கி.மு. 711) சூத்திரத்தில் இவ்வண்ணம் அமைத்துள்ளார்.
'கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப.' – (பொருள். 01)
இதில், அன்புடைக் காமம் என்றும், அன்பின் ஐந்திணை என்றும் கூறப்படுவது ஐவகையான நெறி பற்றிய கூற்றாம். அவை ஐவகை நிலங்களிற்கேற்ப ஒட்டிய சூழல், சுற்றாடல் ஆகியவற்றோடு இணைந்தனவாய் நிகழ்வனவாம். இவற்றை ஐந்திணைகளான குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை எனவும், ஐவகை நெறிபற்றி வகுத்தும், அவற்றைப் பற்பல துறைகளில் நின்று உள்ளத்து உணர்வெழுச்சிகளை நயம்படச் செய்யுள் அமைப்பது பண்டைத் தமிழர் மரபாகும்.
•Last Updated on ••Saturday•, 01 •March• 2014 03:46••
•Read more...•
ஒரு முளையிலையுடைய செடியானதும் ஒற்றைத்தடி மரவகையானதுமான பனை, புல்லினத்தைச் சார்ந்த ஒரு தாவரப் பேரினமாகும். பனை தானாகவே வளர்ந்து மக்களுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களையும,; பாவினைப் பொருட்களையும் அதன் வாழ்நாள் முழுவதும் கொடுத்துக் கொண்டிருப்பதால் அதைக் 'கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம்' என்றும், 'கற்பகத்தரு' என்றும் போற்றுகின்றனர். பனை கூர்மையான முனைகளைக் கொண்ட ஓலைகளையும் செதில் போன்ற கருத்த தண்டுப் பகுதியையும் உடைய உயரமான மரமாகும். இது வெப்ப மண்டலப் பரப்பெல்லைகளில் வரட்சிகளைத் தாங்கி இயற்கையில் தானாகவே வளரக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளது. பனையை ஒரு மரம் எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. ஆனால் தொல்காப்பியர் (கி.மு. 711) 'பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரம்' என்று குறிப்பிட்டுள்ளார். 'புறக்கா ழனவே புல்லெனப் படுமே' (பொருள் 630) – புற வயிர்ப்பு உடையனவற்றைப் புல்லென்று சொல்வர், அவை தெங்கு, பனை, கமுகு, மூங்கில் முதலியன என்றும், 'அகக்கா ழனவே மரனெனப் படுமே' (பொருள் 631) – உள்ளுறுதி உடையன மரமென்று கூறப்படும் என்றும் குறிப்பிட்டமை நோக்கற் பாலதாகும்.
•Last Updated on ••Sunday•, 19 •January• 2014 19:11••
•Read more...•
தமிழ்ச் சங்கத்தில் எழுந்த நூல்களில் இலக்கியம், அறிவியல், வாழ்வியல், இயற்கை வளம் போன்றவை பரவலாகப் பேசப்படும் பாங்கினைக் காணலாம். இந்நூல்கள் மக்கள் நலன் கருதியே எழுந்தனவாகும். மக்கள் இயற்கையுடன் இணைந்து, பிணைந்து வாழ்பவர்கள். அவர்கள் ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிரினங்கள்வரை அன்பு காட்டி அரவணைத்துத் தம் வாழ்வியலை நடாத்துபவர்கள். அதில் அசைவற்ற, ஊர்வன, நீர் வாழ்வன, பறப்பன, நடப்பன ஆகிய உயிரினங்கள் பற்றிய செய்திகளை நம் இலக்கியங்களில் காண்கின்றோம். இவற்றில் விலங்குகள் பற்றியும், பறவைகள் பற்றியும் சங்க இலக்கியங்களில் எவ்வண்ணம் பேசப்படுகின்றன என்பதைக் காண்பதே இக் கட்டுரையின் நோக்காகும்.
யானை, சிங்கம், புலி, குதிரை, ஆடு, மாடு, பசு, மான், கரb, முயல், பன்றி, நாய், பூனை, குரங்கு, எருமை, நரி, ஆமை, முதலை, உடும்பு, கழுதை, பாம்பு, எலி, பல்லி போன்ற விலங்கினங்களும், மயில், குயில், அன்னம், கோழி, சேவல், வாத்து, தாரா, கிளி, பருந்து, வல்லூறு, காகம், நீர்க்காகம், நாரை, கழுகு, ஆந்தை, வெளவால், கூகை, புறா, தும்பி, தேனீ, வண்டு போன்ற பறவையினங்களும் மக்களோடு தொடர்புபட்டனவாகும். இனி, விலங்கினங்களும், பறவையினங்களும் சங்க நூல்களிற் பவனி வரும் பாங்கினையும் காண்போம்.
•Last Updated on ••Sunday•, 08 •December• 2013 19:19••
•Read more...•
(குறிப்பு:- நாங்கள் இலண்டனில் ஒரு மாடி வீட்டில் வசிக்கிறோம். அந்த வீட்டின் கூரை நாலு பக்க மேற்சுவரில் அமைந்து, இரண்டு அடிகள் நீளத்துக்குக் கீழ் இறங்கி உள்ளது. மேற் சுவருக்கும் கூரைக்குமிடையில் உள்ள சிறு இடைவெளியால் பறக்கும் உயிரினங்கள் அறைக்குள் புகாதவாறு அந்த இடைவெளியைச் சுற்றிவரப் பலகையால் பெட்டி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பின் சுவர்ப்பக்கத்தில் தோட்டமும், பூந் தோட்டமும் உள்ளன. அன்றொருநாள் தோட்டத்தில் உலா வருகையில் பல தேனீக்கள் பறப்பதைக் கண்டு, மேலே அண்ணாந்து பார்த்த பொழுது கூரைப் பலகையில் இரண்டு துளைகள் இருப்பதையும் அதனூடாகத் தேனீக்கள் உட்புகுவதும், வெளியில் வருவதுமாய் இருப்பதை அவதானித்தேன். இதை வீட்டாரும் வந்து பார்த்தனர். இதை ஒரு கிழமைவரையில் பார்த்து வந்தோம். ஒரு கிழமை சென்றதும் தேனீக்கள் அங்கிருந்து வேறு இடத்துக்குச் சென்றுவிட்டன. தேனீக்கள் எங்களில் ஐயுறவு கொண்டு வேறொரு இடத்துக்குச் சென்று விட்டதை உணர்ந்து வருந்தினோம். இது என்னை மிகவும் தாக்கி விட்டது. அதனால் எழுந்தது இக் கட்டுரையாகும். – நுணாவிலூர் கா. விசயரத்தினம்.)
•Last Updated on ••Wednesday•, 02 •October• 2013 16:44••
•Read more...•
ஆரம்ப காலந்தொட்டுப் பெண்களை விட ஆண்களின் ஆற்றல் மேம்பட்டிருந்ததை அவதானிக்க முடிகின்றது. இதைக் கருத்திலெடுத்த அன்றைய ஆன்றோரும் சான்றோரும் ஆண்களுக்கென்று புறம் சார்ந்த சில இயல்புகளையும், பெண்களுக்கென்று அகம் சார்ந்த சில இயல்புகளையும் வரையறுத்துக் கொடுத்துள்ளனர். இதன் பிரகாரம் ஆண்கள் தம் குடும்பத்தைப் பேணிப் பாதுகாத்தல், பொருளீட்டல், போரிட்டு நாட்டைக் காத்தல், இனத்தைக் காத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். அதே நேரம் பெண்கள் சமைத்தல், வீட்டு வேலைகளைக் கவனித்தல், கணவர் பிள்ளைகளைப் பேணல், உற்றார் உறவினரை அரவணைத்து விருந்தோம்பல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். இவ்வண்ணம் பெண்கள் வீட்டோடு இருந்து கொள்ள, ஆண்கள் வெளி உலகத்தோடு பழகத் தொடங்கினர். இது ஆண், பெண் ஆகியோருக்கிடையில் ஏற்ற இறக்கம் உருவாவதற்கு ஏதுவாயிற்று. அக்காலப் பெண்களும் வீட்டோடு முடங்கிக் கிடக்கப் பழகிக் கொண்டனர். இதைப் பழக்கப் பட்டனர் என்றும் கூறலாம். ஆண் உதவியின்றிப் பெண்களால் தனித்து ஒரு கருமமும் ஆற்ற முடியாதிருந்தது. அவர்களுக்கு உதவத் தகப்பன், சகோதரர்கள், கணவர், பிள்ளைகள் என்று பலர் தயாராயிருந்தனர். 'பெண் தன்னை அழகுபடுத்தக் கூடாது, தனித்து வீட்டுக்கு வெளியில் வரக் கூடாது, பிற ஆடவர் கண்களில் படக் கூடாது' என்ற கடும் கட்டுப்பாடுகள் அன்றைய பெண்களை வாட்டி வதைத்தன. அவர்களும் நாளடைவில் இவற்றிற்கு அடிமையாயினர்.
•Last Updated on ••Friday•, 20 •September• 2013 21:28••
•Read more...•
[அண்மையில் இலண்டனில் ஆகஸ்ட் 14 தொடக்கம் - ஆகஸ்ட் 18 வரை நடைபெற்ற 'உலகத் தமிழியல் மாநாடு 2013'இல் ஆகஸ்ட் 15 அன்று வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை.- நுணாவிலூர் கா. விசயரத்தினம். ]
தொல்காப்பியம் என்னும் நூலை 'ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியன்' எனப் போற்றப்படுபவரும் தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) அறுநூற்றி எண்பது (680 - கி.மு.711) ஆண்டில் வாழ்ந்தவருமான தொல்காப்பியனார் இவ்வரிய இலக்கிய இலக்கண நூலைப் பாடியருளினார். இந்நூல் தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஓர் உயிர் நூலாய் நம் மத்தியில் உலா வருகின்றது. இந்நூலை யாத்த தொல்காப்பியனார் தலைச் சங்க இறுதியிலும் இடைச் சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவருமாவார். 'இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்' என்பது நக்கீரனாரின் கூற்றாகும். 'தொல்காப்பியம் பண்டைத் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்' என்று டாக்டர் மு. வரதராசனார் கூறியுள்ளார். தொல்காப்பியனார் ஒரு காப்பியக்குடியில் தோன்றியவரென்றும், அவர் இயற் பெயர் தொல்காப்பியர் எனவும் சான்றோர் கூறுவர். வேறு சிலர் இவரின் இயற்பெயர் 'திரணதூமாக்கினி' எனவும், 'சமதக்கினியாரின் புதல்வர்' எனவும் கூறுவர். குறுமுனி அகத்தியனாரின் பன்னிரு மாணாக்கர்களுள் முதல் மாணவன் தொல்காப்பியனார் எனவும் ஒரு கூற்றுண்டு. இன்னும், இவர் பரசுராமரின் உடன் பிறந்தவரென்றும் ஒரு கதையுமுண்டு.
•Last Updated on ••Sunday•, 01 •September• 2013 21:59••
•Read more...•
எம் மண்ணாகிய பூமி
பரந்து விரிந்த எல்லை கடந்த வெட்ட வெளியான வானத்தில் ஒரு சூரிய குடும்பம் அந்தரத்தில் மிதந்து ஊர்ந்த வண்ணமுள்ளது. அதன்கண் புதன் (Mercury), சுக்கிரன் (Venus), பூமி (Earth), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn), விண்மம் (யுறேனஸ்-Urenus), சேண்மம் (நெப்டியூன்-Neptune), சேணாகம் (புளுட்டோ-Pluto) ஆகிய ஒன்பது கோள்களும் அடங்கும். சூரியன் சுமார் 456 கோடி 80 இலட்சம் (456,80,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினான் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாகும். சூரியன், நட்சத்திரங்கள், ஒன்பது கோள்கள் ஆகிய ஒவ்வொன்றின் ஈர்ப்புச் சக்தியால் இவைகள் வானில் தரித்து நிற்கின்றன. இற்றைக்கு சுமார் 454 கோடி (454,00,00,000) ஆண்டுகளுக்குமுன் இயற்கை மாற்றத்தால் சூரியன் வெடித்த பொழுது நாம் வாழும் பூமியானது சூரியனிலிருந்து தெறித்துச் சூரியனைப்போல் எரிந்து கொண்டிருந்தது. நீண்ட காலத்தின்பின் பூமியின் மேற்பரப்பு குளிர்ச்சியடைந்தது. ஆனால் பூமியின் மையப் பகுதி இன்றும் எரிந்த வண்ணம் உள்ளது. இன்றைய ஆய்வின்படி இந்த ஒன்பது கோள்களில் பூமி ஒன்றில் மட்டும்தான் உயிரினங்கள் வாழக் கூடிய காற்று, நீர், வெப்பம் ஆகியவை உள்ளன. எனவே மற்றைய எட்டுக் கோள்களிலும் உயிர் வாழ முடியாது. இந்தவகையில் மற்றைய கோள்களிலும் பார்க்கப் பூமி பல இயற்கை அற்புதங்கள் நிறைந்து அதி சிறப்புற்று விளங்குகின்றது. பூமியைத் தோண்டத் தோண்ட வற்றாக் கனிமப்பொருள்கள் பொதிந்திருப்பதைக் காண்கின்றோம். பூமியின் 71 சத வீதப் பகுதி உப்பு நீர் கொண்ட கடலால் மூடப்பட்டுள்ளது.
•Last Updated on ••Sunday•, 01 •September• 2013 22:01••
•Read more...•
மனிதன், விலங்கு, பறவை, ஊர்வன, மரம், தாவரம், செடி, கொடி போன்ற உயிரினங்கள் வாழவேண்டுமெனில் ஓர் இருப்பிடம் தேவைப்படுகின்றது. இவை யாவுக்கும் இருப்பிடம் கொடுத்து நிற்பது அந்தரத்தில் நின்று சுழன்றுகொண்டிருக்கும் ஒன்பது கோள்களில் ஒன்றான பூமியாகும். பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் வாழமுடியும். மற்றைய எட்டுக் கோள்களிலும் உயிரினம் வாழ முடியாது. பூமியில் உள்ள நீர், காற்று, வெப்பம் ஆகியவை உயிரினங்களை வாழ வைக்கின்றன. இதனால்தான் பூமியும் உயிர் பெற்றுச் சிறப்புடன் நிலைத்துள்ளது. எனினும் சூரியன் இன்றேல் பூமியும் இல்லை. ஏன் மற்றைய எட்டுக் கிரகங்களும் இயங்காது அழிந்துவிடும். எனவே சூரியன் பிறந்த கதையையும் காண்போம். ஒரு கருநிலைக் கோட்பாட்டின்படி (Theory) 460 கோடி ஆண்டுகளுக்குமுன் ஒரு கிட்டிய நட்சத்திரம் விசையால் அழிக்கப்பட்டு அந்த வெடிப்பொலி அதிர்வு அலைகளைக் கதிரவன் முகிற் படலமூலம் வெளியேற்றி அதற்குக் கோணமுடக்கான இயங்கு விசையைக் கொடுத்தது.
•Last Updated on ••Sunday•, 01 •September• 2013 22:02••
•Read more...•
அறிவியல் தோன்றாக் காலத்துக்குமுன்பே தமிழ் இலக்கியங்களில் அறிவியல் நிறையப் பேசப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். அறிவியலாரும் இலக்கியலாரும் தனி வழிப் பயணிப்பதை நாம் அறிவோம். அவர்கள் தங்கள் தொழில் தொடர்பாக ஒருவரையொருவர் சந்திப்பதுமில்லை. சந்தித்தாலும் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதுமில்லை. அறிவியலில் இலக்கியப் படர்வு குறைவு. ஆனால் இலக்கியத்தில் அறிவியற் படர்வு நிறைய உள்ளது. இலக்கியம் படிப்போர் இலக்கியக் கண்ணோடு மட்டும்தான் அணுகுவதால் அதிலுள்ள அறிவியல் அவர்களுக்குத் தென்படுவதில்லை. அவர்களும் அறிவியற் கண்ணோடு பார்க்கப் பழக வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு இலக்கியமும் அறிவியலும் புரியும். [மின்னஞ்சல் முகவரி:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
].... முழுவதும் வாசிக்க
•Last Updated on ••Sunday•, 01 •September• 2013 22:02••
பெரும்பாலான கதிரவன் மண்டலங்கள் (எங்கள் கதிரவன் மண்டலம் உட்பட) பல கோள்களை உடையனவாய் அமைந்து, அக் கோள்கள் மையத்திலுள்ள விண்மீனைச் (சூரியன்) சுற்றி வருகின்றன. ஆனால் தனியான ஒரு கோள் பல விண்மீன்களைச் சுற்றி வரும் செய்தியானது இயல்பாக நிகழக்கூடியதென்பதை விஞ்ஞானப் புனைகதைகள் மூலம் அறிகின்றோம். இச் சமயத்தில் கதிரவன் மண்டலத்துக்கு அப்பாலுள்ள பிரபஞ்சத்தில் தனிச் சிறப்பு வாய்ந்த புதுக் கோள் ஒன்றை ஓர் அருங்கலை வான்கணிப்பாளர் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இக் கோளுக்கு நான்கு (04) வேறுபட்ட விண்மீன்கள் (சூரியன்கள்) உள்ளன. இக் கோளுக்கு பி.ஏச்1 ( PH1 =Planet Hunters1) என பெயரிடப்பட்டுள்ளது. இக் கோள் பூமியிலிருந்து 3,200 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இது சேண்மம் (நெப்தியூன் - Neptune) கோளையொத்த ‘ஆவி இராட்சதன்’ என்றும் கூறுவர். இக் கோள் நம் பூமிக் கோளை விட 6.2 மடங்கு பெரியதாகும்.
•Last Updated on ••Sunday•, 01 •September• 2013 22:02••
•Read more...•
இலக்கியங்கள் எந்த மொழியில் எழுந்தாலும் அவற்றுள் சிலவற்றில் அறிவியல் சார்ந்த கருத்துச் செறிவுகள்; பற்றிப் படர்ந்திருப்பதை நாம் காணலாம். அன்று, நம்மில் அதிகமானோர் இவ்வாறான இலக்கியங்களை, இலக்கியக்கண்கொண்டு மாத்திரம் பார்த்ததினால், இலக்கிய நயத்தை மட்டும்தான் உள்வாங்கிக் கொண்டனர். அவற்றில் அமைந்த அறிவியல் அவர்களுக்கு அன்று புலப்படவில்லை. இன்றைய மக்களின் வாசிப்புப் பழக்கம் மாறுபட்டதனாலும், அறிவியல் ஆர்வம் கூடியதனாலும், அவர்கள் விஞ்ஞானத்தையும் இலக்கியத்தையும் ஒரே தட்டில் வைத்து ஆய்வு செய்யப் பழகி வருகின்றனர். இதனால், விஞ்ஞானிகள் இலக்கியத்தில் செறிந்துள்ள அறிவியலைத் தங்கள் ஆய்வுகளுக்கு உட்படுத்திப் பல புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் புரிந்து அரும் பெரும் சாதனைகளை நிலைநாட்டி வருகின்றனர். விஞ்ஞானிகளுக்கு ஆய்வின்பொழுது பலபல சந்தேகங்கள் எழுவது இயல்பு. இவற்றை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்யும் பொழுது ஆய்வின் தரம் உயர்நிலை அடைகின்றது.
•Last Updated on ••Monday•, 09 •September• 2013 19:12••
•Read more...•
ஆண் பெண்ணை விரும்புவதுபோல், பெண்ணும் ஆணுக்கு அடுத்தபடியாகப் பொன்னை விரும்புகின்றாள். மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை ஆகிய மூவாசைகளை மனிதன் நாடித் தேடி ஓடுவது வழக்கமாகும். பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை எல்லாப் பெண்களும் விரும்பி அணிகின்றனர். பெண்களைக் குளிர வைக்க ஆண்கள் அணிகலன்களுடன் முந்தி முதல் வரிசையில் அணி வகுத்து நிற்கின்றனர். மகளுக்குப் பெற்றோரும், மனைவிக்குக் கணவனும், தாய்க்கு மகனும் வேண்டிய பொன்னாபரணங்களை வாங்கிக் கொடுத்து, அணிவித்துப் பார்த்து மகிழ்வர்.
தங்கம், பித்தளை, வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களினாற் செய்யப்பட்ட ஆபரணங்களைப் பெண்கள் அணிகின்றனர். ஆனால் தமிழ்ப் பெண்கள் தங்கத்தினாற் செய்யப்பட்ட ஆபரணங்களைத்தான் விரும்பி அணிவர். உலோகங்களினாற் செய்யப்பட்ட அணிகலன்களில் உள்ள ஈர்ப்புச் சக்தி அணிபவர்களுக்கு நன்மை பயக்கும் என்றும் கூறுவர். பித்தளையால் செய்யப்பட்ட வளையல்களை கீல்வாத நோயாளிகள் (arthritic) அணிவதையும் நாம் பார்த்திருக்கின்றோம்.
•Last Updated on ••Monday•, 09 •September• 2013 19:16••
•Read more...•
“சமய ஈடுபாடு கொண்ட சொர்க்கம், நரகம், மறுபிறப்பு அல்லது தனிப்பட்ட கடவுள் இருப்பதென்பதை ஆய்வறிவு சார்ந்த சிறு விளக்கத்தைத் தானும் என்றாவது நான் கண்டதில்லை.” - (தோமஸ் எடிசன்) - ‘உயிர்’ என்பதின் பொருளை ஓர் ஆற்றல், சக்தி, இயக்கம், துடிப்பு, செயல், சீவன், காற்று என்று கூறலாம். உயிர் தனித்து வாழாது. உயிர் வாழ்வதற்கு ஓர் உடல் வேண்டும். “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்று கூறுகின்றது திருமூலர் மந்திரம். மனிதன் பிறப்பதும், வாழ்வதும், இறப்பதும் உலக நியதி. இவ்வண்ணம் உலகத்திலுள்ள ஓரறிவிலிருந்து ஆறறிவுள்ள எல்லா உயிரினங்களும் பிறப்பதும், வாழ்வதும், இறப்பதுமாகிய ஒரு பெரும் சுற்றோட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில் மனித உயிருக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்றான் மனிதன். அவனே தனக்குச் சட்டம் வகித்து, பிறப்பவர் தொகை, இறப்பவர் தொகை, உலகச் சனத்தொகை கணித்து, வாழ்வியலையும் மேம்படுத்துகின்றான். உலகில் 701 கோடி மக்கள் வாழ்கின்றார்கள். நாளொன்றுக்கு நானூற்றித் தொண்ணூறாயிரம் (490,000) குழந்தைகள் பிறக்கின்றன. அதேநேரம் நாளொன்றுக்கு இருநூற்றி ஐம்பதாயிரத்திலிருந்து (250,000) முன்னூறாயிரம் (300,000) வரையான மக்கள் இறக்கின்றனர். இவ்வண்ணம் உலகச் சனத்தொகை கூடிக்கொண்டே போகின்றது.
•Last Updated on ••Monday•, 09 •September• 2013 19:16••
•Read more...•
சந்தேகம் என்னும் ஐயம், தயக்கம், நிச்சயமின்மை, அவநம்பிக்கை, மனவுறுதியின்மை, உறுதியற்றநிலை ஆகியவை மனித வாழ்க்கையின் வளர்ச்சியைத் தகர்த்துத் தீராத் தொல்லைகளைத் தந்த வண்ணமுள்ளது. சந்தேகம் மக்களைச் செயலிலிறங்க முடியாதவாறு தயக்கம் காட்டித் துணிவும் ஊட்டி நிற்கின்றது. இவ்வாறான செயல் சமுதாயத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. தரத்தில் விஞ்சிய மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாட்டில் ஐயுறவு எழுந்ததனால் பல ஆய்வறிவு சார்ந்த முன்னேற்றங்கள் உருவாகியன என்று விஞ்ஞான ரீதியில் கருதப்படுகிறது. எதிரி முறையில் அமைந்த அதிகமான சட்டத்தை மீறும் வழக்குகளில் வழக்குத் தொடுனர் நிலை நிறுத்த வேண்டிய செய்திகளை ஐயப்பாடேதுமின்றி வாதமூலம் நிலைநாட்ட வேண்டுமென்பது சட்டக் கோட்பாடாகும்.
•Last Updated on ••Monday•, 09 •September• 2013 19:17••
•Read more...•
உலகிலுள்ள உயிரினங்கள் அத்தனையும் அன்பு, பரிவு, பாசம் காட்டுவதால் ஆண், பெண் பாலாரிடம் காதல் எழுந்து, அவர்கள் ஒன்றறக் கலந்து, தம் இன விருத்தியை நிலைநாட்டிப் பூமித்தாய்க்குப் பெரும் பங்காற்றி வருகின்றன. மனித இனத்தைத் தவிர்ந்த, மற்றைய உயிரினங்கள் யாவும் திருமணம் என்று வெளிப்படையாக நடாத்தா விட்டாலும், அவையும் ஏதோ ஒரு வகையில் ஒரு மணம் புரிகின்றன. திருமணங்கள் நாட்டுக்கு நாடு – காலத்திற்குக் காலம் வேறுபட்டிருக்கின்றன. திருமணங்கள் அனைத்திலும் சிறந்தது காதல் திருமணமேயாகும். காதல் திருமணத்தில்தான் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கின்றன.
•Last Updated on ••Sunday•, 01 •September• 2013 22:00••
•Read more...•
தொல்காப்பியர்
தொல்காப்பியம் என்னும் நூலைத் தொல்காப்பியனார் என்ற பெரும் புகழ் பெற்ற புலவன் பாடியருளினார். தொல்காப்பியம் பல நூறு ஆண்டுகளுக்கு முன் தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஒரு பெரிய இலக்கண, இலக்கிய உயிர் நூலாய் நம் மத்தியில் உலா வருகின்றது. இந்நூலை யாத்த தொல்காப்பியனார் தலைச் சங்க இறுதியிலும், இடைச் சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவராவார். இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்' என்று நக்கீரனார் கூறியுள்ளார். மேலும், 'தொல்காப்பியம் பண்டைத் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்' என்பது டாக்டர் மு.வரதராசனாரின் கூற்றாகும்.
•Last Updated on ••Sunday•, 01 •September• 2013 22:00••
•Read more...•
|