- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள்.காம் நவம்பர் 2003 இதழ் 47
ஊடறு. அருமையானதொரு தலைப்பு. தேவா(யேர்மனி), நிரூபா(யேர்மனி), விஜி(பிரான்ஸ்) றஞ்சி(சுவிஸ்) ஆகியோரின் கடின உழைப்பில் முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களைத் தன்னகத்தேயும், அருந்ததிராஜ் இன் கைவண்ணத்தை முன் அட்டைப் படமாகவும், வாசுகி ஜெயசங்கரின் கைவண்ணத்தை பின் அட்டைப் படமாகவும் கொண்டு பதிவானதே ஊடறு. இப் பதிப்பின் வடிவமைப்புக் கூட வழமையான வெளியீடுகளிலிருந்து வித்தியாசமாகவும் அழகாகவும் அமைந்துள்ளது. றஞ்சிக்கு ஒரு பாராட்டு கொடுக்கத்தான் வேண்டும். பெண்களின் ஆக்கங்களை மட்டும் கொண்டு சக்தி வெளியீடான ..புது உலகம் எமை நோக்கி.. புலத்தில் வெளி வந்த போது ஆண்கள் மத்தியில் இருந்து சற்று அதிருப்தியான கண்டனங்கள் வரத் தவறவில்லை. அது ஏன்..? பெண்களுக்கென்று மட்டுமாக ஒரு தொகுப்புத் தேவைதானா...? என்று சினக்கவும் அவர்கள் பிந்தவில்லை. இது ஒன்றும் பெண்களைப் பொறுத்த வரையில் புதிதில்லை. தம்மைத் தாண்டி பெண்கள் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆண்களிடமிருந்து எழும் அச்சத்துடனானன அதிகார மிரட்டல்கள்தான் இவை. .
ஏதோ.... எழுத்தும் இலக்கியமும் ஆண்களுக்கு மட்டுந்தான் சொந்தமானவை என்பது போலத்தான்; எமது சமூகத்தின் மத்தியில் ஒரு மாயை ஏற்படுத்தி வைக்கப் பட்டுள்ளது. ஆனால் சங்க காலத்திலேயே நிறையப் பெண்கள் எழுதியிருக்கிறார்கள். தமிழ் மொழியில் வழங்கும் அறத்துறை இலக்கியங்கள் போன்று உலகில் வேறு எங்கும் இல்லையென்று மேல் நாட்டு அறிஞர்களாகிய பெஸ்கி, போப் முதலியோரால் பாராட்டப் பட்ட எமது பழந்தமிழ் இலக்கியத்தின் அனைத்து தளங்களிலும் பெண்பாற் புலவர்களும் இருந்திருக்கின்றார்கள்.
•Last Updated on ••Monday•, 01 •June• 2020 14:56••
•Read more...•
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
From: "Jeya J Mohan" <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
Sent: Thursday, May 16, 2002 10:14 PM
அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு , பதிவுகளில் தேவகாந்தனின் எதிர்வினை படித்தேன். எனக்கு அவரது கருத்துக்களுடன் மாறுபாடு உள்ளது .அவர் எழுதிமுடித்தபிறகு எழுதுகிறேன். அவரது கட்டுரையை முழுமையாக வெளியிட்டிருக்கலாம் . பதிவுகள் அடிக்கடி renew செயயப்படுவதில்லை . ஆகவே அடுத்த பகுதிக்காக காத்திருந்து எத்தனைபேர் படிப்பார்கள் என்பது கேள்விக்குறிதான் .இதை கவனிக்கவும்
[உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு நன்றி. தேவகாந்தனின் கட்டுரையினை முழுமையாக வெளியிடாதது எங்கள் தவறு தான். பதிவுகளுக்கு ஆக்கங்கள் அனுப்பும் போது நாங்கள் குறிப்பிட்டுள்ளவாறு tscu_inaimathi அல்லது inaimathitsc போன்றவற்றிலேதாவது எழுதி அனுப்பினால் எமக்கு முழுமையாகப் பிரசுரிப்பதில் சிரமமிருக்காது. திரும்பவும் தட்டச்சு செய்ய வேண்டிய சிரமமிருக்காது. இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகளைக் குறைக்க
முயற்சி செய்கின்றோம்.-ஆசிரியர்]
From: jeya mohan nagercoil
To:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
Sent: Thursday, September 02, 2004 11:31 PM
டி செ தமிழன் எம் ஜி சுரேஷ் என்னை 'அம்பலப்படுத்தி விட்டது 'குறித்து புளகாங்கிதம் அடைவது ஆச்சரியம் அளிக்கவில்லை. இப்படி அடைபவர்களை முன்னால் கண்டுதான் சுரேஷ் அந்த அப்பட்டமான அவதூறை எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த தயக்கமும் இல்லாமல் எழுதியிருக்கிறார். அந்த தரத்திலான அவதூறுகளை அவர் கவிதா சரண் காலச்சுவடு இதழ்களின் எல்லா இதழ்களிலும் கண்டு மேலும் மேலும் [மாதாமாதம் ] புளாகாங்கிதம் அடையலாம். - ஜெயமோகன் -
•Last Updated on ••Monday•, 01 •June• 2020 14:37••
•Read more...•
••Wednesday•, 18 •December• 2019 03:33•
??- நேசகுமார் , சுப்ரபாரதிமணியன், சீர்காழி தாஜ் -??
'பதிவுகளில்' அன்று
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் மார்கழி 2005 இதழ் 72 1. சு.ரா - ஒரு சாமன்யனின் குறிப்புகள்! - நேசகுமார் - சுந்தர ராமசாமி இறந்ததை எனக்கு முதலில் அறிவித்தது அரவிந்தன் நீலகண்டன் தான். நாகர்கோவிலிலிருந்து அழைத்து, “சுரா இறந்துவிட்டாராம்” என்றார். நான் அவரது குரலில் வேறேதேனும் தொணி தென்படுகிறதா எனக் கவனிப்பதில் மும்முரமானேன். எதிர் முனையில் தென்பட்ட அமைதி, அவரும் என் மனவோட்டத்தை கணிக்க முற்படுகின்றார் என்பதைக் காட்டிற்று. அதன் பின்னரே ஏனைய நண்பர்களின் தொலைபேசிகள், சன் டிவி செய்தியில் அவரது கண்ணாடிக்குள்ளிருக்கும் உடல், மிகச் சிலரே அவ்வுடலைச் சுற்றியிருக்கும் காட்சி போன்றவற்றைக் காணவும், மத-சாதி அடையாளங்களும் சம்பிரதாயங்களுமின்றி அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம் என்பதை சன் டிவி செய்தி வழியாக கேட்டறியவும் முடிந்தது.
சுந்தர ராமசாமி பற்றி எப்போது அறிந்தேன்? காலச்சுழலில் பின்னோக்கிப் பயணித்தால் வைதேகிக்கும் ஷோபனாவுக்கும் இடையே இருந்த பகைமைதான் சு.ராவை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தது என்பது நினைவிற்கு வருகிறது. வைதேகி தனது தாழ்வுணர்ச்சிகளை மீறி வெளிவருவதற்கு பயன்படுத்திய பல ஆயுதங்களுள் சுந்தர ராமசாமியும் ஒன்று - அவரது ".ஜே சில குறிப்புகளையும்", புளியமரத்தின் கதையையும் அடிக்கடி கையில் வைத்திருப்பார் - என் போன்ற ஞானசூன்யங்களுக்கும் அவற்றை அறிமுகப் படுத்தி வைத்தார். வைதேகி, தொண்டாம்புதூர்க்காரர். ஷோபனாவோ, திருச்சிக்காரர். ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பாக நவநாகரிக நங்கைக்கான குணாதிசயங்கள் மற்றும் அழகென நாங்கள் கருதிய அம்சங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்தவர் - பாலகுமாரன் ரசிகை.
•Last Updated on ••Thursday•, 26 •December• 2019 01:03••
•Read more...•
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் : புதிய நாளை இனிய நினைவுகளுடன் வரவேற்போம்!
[பதிவுகள் விவாதக்களம் இயங்கிக்கொண்டிருந்த காலத்தில் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் பற்றி 'இந்திரன் சந்திரன்' என்பவர் அவரைக்களங்கப்படுத்தும் வகையில் பதிவுகளை இட்டிருந்தார். அவை பற்றிக் கவிஞர் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கடிதமொன்றினை எழுதியிருந்தார். பின்னர் பதிவுகள் விவாதத்தளத்திலிருந்து 'இந்திரன் சந்திரன்' எழுதியவை பொய் என நிரூபிக்கப்பட்டதால் நீக்கப்பட்டன. அது பற்றிய கவிஞரின் மின்னஞ்சலிது. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது.]
From: "Jayapalan" <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
> To: "NAVARATMAM GIRITHRAN" <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
> Sent: Tuesday, November 01, 2005 2:38 AM Subject: DepavaL Wal vAzththukkalOdu
புதிய நாளை இனிய நினைவுகளுடன் வரவேற்போம்! - கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் -
அன்புக்குரிய நண்பர் கிரிக்கு, நான் கேட்டுக் கொண்டபடி என்னால் கவிதைப் பரிசோதனையாக எழுதப் பட்ட வரிகளை நீக்கியதற்க்கு நன்றி. பதிவுகளில் வெளியான உங்கள் கடிதம் தொடர்பாக எனக்கு நிறைய கடிதங்கள் வந்துள்ளன. பெரும்பாலான விடயங்களில் பலரும் மகிழ்ச்சியும் திருப்தியும் தெரிவித்துள்ளனர். எனினும் சில விடயங்கள் தொடர்பாக அவர்கள் வருத்தப் பட்டு எழுதியிருந்தார்கள். இதுதொடர்பாக "நான் பதிவுகள் ஆசிரியரின் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறேன். சம்பவம் தொடர்பான நிலைபாடு ஆசிரியரின் பிரச்சினை" என்றும் அவர்களுக்கு பதில் அனுப்பினேன். உங்கள் கருத்து நிலைபாடு தொடர்பாக தலையிடுவது எனது நோக்கம் இல்லை. அவை வெளியிடப் பட்டதில் எனக்கு ஆட்சேபனையும் இல்லை. என்மீது அக்கறை உள்ள நண்பர்கள் மின் அஞ்சலிலும் தொலை பேசியிலும் அடிக்கடி குறிப்பிட்ட மூன்று முக்கியமான விடயங்களை தகவலுக்காக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.
•Last Updated on ••Wednesday•, 25 •December• 2019 23:33••
•Read more...•
••Friday•, 13 •December• 2019 10:22•
??- ராகவன் தம்பி (யதார்த்தா கி.பென்னேஸ்வரன்) -??
'பதிவுகளில்' அன்று
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102 1. "டோபா டேக் சிங்' - உருது மூலம் ஸதத் ஹஸன் மண்ட்டோ| ஆங்கிலம் வழித் தமிழில் ராகவன் தம்பி
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறைக் கைதிகளைப் போல, இருநாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் விடப்பட்ட பைத்தியங்களையும் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என இருநாடுகளும் முடிவெடுத்தன
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறைக் கைதிகளைப் போல, இருநாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் விடப்பட்ட பைத்தியங்களையும் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என இருநாடுகளும் முடிவெடுத்தன.இந்த முடிவு சரியானதா இல்லையா என்று சொல்வது சற்றுக் கடினமான காரியம்தான். ஆனால் . இந்த முடிவுக்கு வருவதற்கு, இருநாடுகளின் மிக முக்கியமான உயர் அதிகாரிகள் பல ஆலோசனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, பலமுறை கூடி மிகக் கடுமையாக ஆலோசித்தும், விவாதித்தும் எடுக்கப்பட்ட முடிவு இது என்பதை மட்டும் தெளிவாகச் சொல்ல முடியும். இந்த முக்கியமான பரிமாற்றம் செயல்படுத்தப்படும் இறுதிநாள் மற்றும் பிற முக்கியமான விபரங்களும் மிகவும் கவனத்துடன் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் வசிக்கும் உறவினர்களைக் கொண்ட முஸ்லிம் பைத்தியங்களை எவ்விதத் தொந்தரவும் இன்றி அங்கேயே வசிக்க விடுவதென்றும், மற்ற பைத்தியங்களை பரிமாற்றத்துக்காக எல்லைக்குக் கொண்டு செல்வதென்றும் இந்திய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
பாகிஸ்தானிலோ, இந்து மற்றும் சீக்கியர்களின் மக்கள் தொகை முழுக்கவும் ஏற்கனவே இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து விட்டதனால், நிலைமை சற்று மாறுபட்டு இருந்தது. முஸ்லிம் அல்லாத பைத்தியங்களை பாகிஸ்தானில் வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பது போன்ற சிக்கல் அங்கு எழவில்லை. இரு அரசுகளின் இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவில் என்னவிதமான எதிர்வினை இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் லாகூரின் பைத்தியக்கார விடுதிகளில் செய்தி பரவியதுமே அது மிகவும் பரபரப்பினைக் கிளப்பியது.
•Last Updated on ••Friday•, 13 •December• 2019 10:30••
•Read more...•
••Friday•, 13 •December• 2019 09:57•
??- சந்திரவதனா செல்வகுமாரன் - யேர்மனி -??
'பதிவுகளில்' அன்று
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் மார்ச் 2005 இதழ் 63 - 1. சிறுகதை: வேஷங்கள்! - -சந்திரவதனா செல்வகுமாரன் (ஜேர்மனி)-
காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது மட்டும் அந்தக் காலைக்குச் சிறிதும் பொருந்தாது புழுங்கிக் கொண்டிருந்தது. கோபத்தில் தகித்தது என்று கூடச் சொல்லலாம்.
"எப்படி அவனால் முடிந்தது...! எப்படித் துணிந்து சொன்னான்...!" காலையில் சந்துரு சொன்ன செய்தியில் கொதிப்படைந்த அவள் கோபத்தை அக்சிலேட்டரில் காட்டினாள்.
சந்துரு வேறு யாருமல்ல. அவள் கணவன்தான். 15வருடத் திருமண வாழ்க்கை. அன்புக்குச் சின்னமாக நிலாவினி அவர்களின் செல்ல மகள்.
"நேற்று இரவுவரை அன்பாகத்தானே இருந்தான்...! நடித்தானா...?" காலையில் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவான் என அவள் கனவில் கூட நினைக்கவில்லை.
"உமா உம்மோடை நான் கொஞ்சம் கதைக்கோணும்." காலையில் தேநீருடன் சென்ற உமா, படுக்கையிலிருந்த அவனை எழுப்பிய போது குழைந்தான். அவனது வார்த்தையின் பரிவில் நெகிழ்ந்து, அப்படியே அவனருகில் கட்டில் நுனியில் அமர்ந்து, அவன் மார்பின் சுருண்ட கேசங்களைக் கோதியபடி "சொல்லுங்கோ" என்றாள் மிக அன்பாக.
•Last Updated on ••Friday•, 13 •December• 2019 10:06••
•Read more...•
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் அக்டோபர் 2003 இதழ் 46 - 1. ' ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும்' - - ஆபிதீன் -
வாப்பா தன் கடைசி காலத்தில் அணிந்திருந்த மோதிரம் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றிற்று. (உலகத்தில் வேற விஷயமே இல்லை , பாருங்கள்!) மோதிரத்தை எங்கே வாங்கினார்கள் , யாரிடம் கொடுத்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்களா என்பதற்காக அவர்களின் டைரி ஒன்றை புரட்டினேன். வருடா வருடம் எழுதும் டைரி அல்ல அது. கிழிந்துபோன வாழ்க்கை மொத்தத்திற்கும் ஒன்று. ஊரில் பால் பண்ணை வைத்து சொந்தக்காரர்களால் ஏமாந்தது, நாகப்பட்டினத்திற்கு கப்பலில் வந்து இறங்கிய காலத்தில் திமிர் பிடித்த கஸ்டம்ஸ்காரன் போட்ட டூட்டி, பினாங்கில் வாங்கிய தொப்பித் துணி சாயம் போயிருந்தது , பூட்டியா ஆயிஷாம்மா கனவில் சொன்ன சில செய்திகள் பின் உண்மையாகிப் போனது, குணங்குடியப்பாவின் எக்காலக்கண்ணி ஒரிரண்டு, கையானம் காய்ச்சுவது எப்படி?, நான் பிறந்தபோது அசல் சீனாக்காரன் சாயலில் இருந்தது, 'கடவுள் மனது வைத்தால் கழுதை கூட குஸ்தி போடும்' என்ற கனைப்புகள் என்று பலதும் அதில் இருக்கும். மோதிரம் பற்றி மட்டும் இல்லை. 'கமர் பஸ்தா ஹோனா' என்று தலைப்பிட்டு , எந்த ஆலிம்ஷாவோ பேசியதை பேசியதுபோலவே எழுதி அடிக்கோடிட்டும் வைத்திருந்த 786வது பாரா மட்டும் என்னைக் கவர்ந்தது. 'மாக்கான் வருவான்' என்று பிள்ளைகளுக்கு - நாலு வருடத்திற்கு ஒருமுறை ஊர் வந்து- பூச்சாண்டி காட்டிய வாப்பா பயந்ததின் அடையாளங்களில் ஒன்று.
'நாம பயப்படுறதுலெ 99.99% நடக்குறதில்லை. எது நடந்துடுமோண்டு நினைக்கிறோமோ அது நடக்காது. பயம் வருதுல்லெ? ஒரு தாள்லெ எழுதி வச்சுக்குங்க. இப்படி ஒரு பயம் வருது...இப்படி ஆயிடுமோண்டு தோணுதுண்டு குறிச்சி வச்சிக்குங்க. அப்புறமா அதை எடுத்துப் பாருங்க. ஒண்ணும் நடந்திருக்காது!. இப்படி உள்ள பயம்தான் நம்ம லை·ப்லெ முக்காவாசி நேரத்துலெ செஞ்சிட்டு வரோம்ட்டு புரியும்..வேற வார்த்தையிலெ சொன்னா உங்க லை·ப்லெ இதே மாதிரி முட்டாள்தனமான காரியத்துக்குத்தான் டைம் செலவு பண்ணியிருக்கீங்கண்டு புரியும். 'புள்ளக்கி அம்மை வாத்துடுமோண்ட நினைப்பு..அந்த நினைப்புலெ சோறு உண்ண முடியாம போறது...பேச வேண்டிய செய்தியை பேசாம போறது..·போன் call-ஐ அட்டென்ண்ட் பண்ண முடியாம ஆயிடுறது...நல்லா பேசுறாவங்கள்ட்டெ கூட தூக்கியெறிஞ்சி பேசுறது..இந்த reactionலாம் வரும். எழுதிவைங்க. அப்பவே பயம் பாதி குறைஞ்சி போயிடும்!'
•Last Updated on ••Friday•, 13 •December• 2019 09:52••
•Read more...•
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் ஜூலை 2005 இதழ் 67 1. ஒரு சாண் மனிதன்! - செழியன் -
சாதாரணமாக ஒரு புகையிரத நிலையத்தில் நிகழ்வது போலத்தான் இது நடந்து வந்தது. ஏழு வித்தியாசங்கள் சொல்லலாம் என்றாலும் அதில் முக்கியமானது, இது அங்கு நடப்பது போல, இங்கு தினமும் நடைபெறுவதில்லை. வாரத்திற்கு ஒரு
தடவை வருகின்ற புதன்கிழமைகளில் மட்டுமே நடக்கின்றது.
கண் இமைக்கும் நேரத்தில், மிக வேகமாக வருகின்ற புதையிரதத்தில் இருந்து, புகையிரத நிலைய அதிபரின் கைக்கு மாறுகின்ற அந்த வளையம் போல, கணநேரத்தில் இது கைமாறுகின்றது. பார்க்கின்ற போதெல்லாம், ஒரு கைதேர்ந்த சர்க்கஸ்காரர்
நடத்துகின்ற அற்புதமான மாயாஜாலக் காட்சி போல எனக்குள் அதிசயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதிசயம் மட்டுமல்ல, யாராவது ஆசிரியர்கள் கண்டுவிட்டால் என்ன நடக்குமோ என்ற பெரும் பதைபதைப்பும், நடுக்கமும் எப்போதுமே எனக்குள் இருக்கும்.
புதன்கிழமைகளில் இரண்டாவதும், மூன்றாவதுமான தொடர் பாடமாக எமக்கு வருவது சுகாதாரம். இந்தப் பாடத்திற்காக பத்து- யு வகுப்பில் இருந்து பத்து- ஊ வகுப்புக்கு, எமது வகுப்பில் இருந்த பாதி மாணவர்கள் அணிவகுத்துச் செல்லவேண்டும்.
மிகுதி பாதிப்பேரும் பிரயோக கணிதத்திற்காக பெளதீக ஆய்வு கூடத்திற்குச் சென்று விடுவார்கள்.
இந்தப் புதன் கிழமை எப்போது வரும் என்று வகுப்பு முழுதும் காத்திருக்கும். சிலர் வெளிப்படையாக உணர்ச்சி வசப்பட்டுப் போய் நிற்பார்கள். இன்னும் சிலர் வெளியில் வேண்டா வெறுப்பாக இருப்பது போல காட்டிக் கொண்டு உள்@ர ஆசை ஆசையாக உமிழ்நீர் வடித்துக் கொண்டிருப்பார்கள்.
•Last Updated on ••Friday•, 13 •December• 2019 02:30••
•Read more...•
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் யூன் 2007 இதழ் 90 மேலெல்லாம் கொதித்துக் கொண்டிருப்பதுபோல் இருந்தது. இரவு பெரும்பொழுதும் தூக்கமற்றதாய்க் கழிந்திருந்ததில் விழித்தவளின் இமைகள் கனத்து, கண்களும் எரிச்சலாகியிருந்தன. இரவு எழுச்சி கண்டிருந்த உணர்ச்சி வேறு உள்கனன்றுகொண்டிருந்தது. அடக்கப்படாத் தாபம் எரிச்சலாய், கோபமாய் அவளில் பொங்கியது. அடைந்த மனவலி முக்கியம். அதை வெளிப்படுத்த முடியாததில் அழுகைதான் வரப்பார்த்தது.
சிந்தியா படுத்திருந்த சோபாவிலிருந்து தலையை நிமிர்த்தினாள்.
ஜன்னலூடாக வெளிச்சமடித்துக்கொண்டிருந்தது.
நேரம் என்னவாகவிருக்கும்? பத்து மணிக்கு மேலேயாய் இருக்கும் என வெளிச்சத்தில் ஊகம் கொண்டாள். தலையை இன்னும் கொஞ்சம் திருப்பி சுவர் மணிக்கூட்டைப் பார்ப்பதற்குமான அலுப்பு.
மேலே மாடியில் நடமாட்டத்தின், உடம்பசைவின் மரத்தள அதிர்வினோசை எழுகிறதா என்று கிரகிக்கப் பார்த்தாள். இல்லை, எந்த அசைவின் அறிகுறியும் இல்லை. கணேஷ் அந்தநேரமளவுக்குக்கூட எழுந்திருக்கக்;கூடிய நிலையில் இரவு வந்திருக்கவில்லைத்தான்.
இரவோ பகலோ, காலையோ மாலையோ வேலை செய்வதினூடாகத்தான் புதிதாக மோட்கேஜில் வாங்கிய அந்தப் பிரமாண்டமான வீட்டின் தவணைத் தொகையைச் செலுத்திக்கொண்டிருக்க முடிகிறது. மாதம் இரண்டாயிரத்து நானூறு டொலர் சாதாரணமான தொகையில்லை. அது ஒன்றே மட்டுமெனில் அவளுக்கும் கணேஷ்க்கும் கொஞ்சப் பொழுதெனினும் ஆறுதலாயிருக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால், கார் இன்சூரன்ஸ், ஹைட்ரோ பில், ரெலிபோன் செல்போன் பில்கள், கேபிள் ரீவி, இன்ரநெற் கனெக்சன் பில்கள் என இரண்டுபேர் சம்பளங்கள்கூட பற்றாக்குறையாய் இருக்கின்றன.
•Last Updated on ••Friday•, 13 •December• 2019 02:29••
•Read more...•
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் பெப்ருவரி 2005 இதழ் 62
ஆகஸ்ட் மாதத்தில் ஓலைச்சுவடி இதழில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆனால் அதன் தேதியைத் துல்லிதமாகச் சொல்ல முடியவில்லை. ஆகஸ்டின் முற்பகுதியாகத்தான் இருக்க வேண்டும். அருமையான அச்சு வார்ப்புள்ள அந்த இதழில் அந்தக்கதை தோற்றம் பெற்றிருந்தது. மிகுந்த உயிர்த் துடிப்புடன் இருந்தது அந்தக் கதை. அதன் நடை சுண்டி வசீகரிக்கும் அழகு. அந்தக் கதையை முதன் முதலில் படித்தவர்கள் அது ஒரு பெரும் மாயத் தோற்றம் என்றும் அதன் பின் பெரும் மர்மங்கள் அடங்கியிருப்பதாகவும் நம்பினார்கள். மிகவும் படித்தவர்களும் இலக்கிய ரசிகர்களாக உள்ளவர்களையுமே அந்தக் கதை கவர்ந்தது. அந்தக் கதையைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர் தங்கள் காலண்டர்களைத் திருப்பிப் பார்த்துவிட்டு அந்தக் கதை வெளிப்படுவதற்கு இது சிறந்த மாதமே என்றார்கள். இந்த மாதத்தில்தான் பல காலனித்துவ நாடுகள் சுதந்திரம் அடைந்ததெனவும், அதுவும் பல சுதந்திரங்கள் நள்ளிரவில் பெறப்பட்டன என்றும் அதற்கும் இதற்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உள்ளன என்றும் அவர்கள் தங்கள் இளைய தலைமுறையினருக்கும் வாசக சகாக்களுக்கும் தெரிவித்துக் கொண்டார்கள். சிலர் அந்தக் கதையைப் படித்து கண்கள் கலங்கினார்கள். இப்படியும் ஒரு கதை இருக்க முடியுமா என அழுது குரல் கம்மிப் பிறருக்குச் சொன்னார்கள். அவர்கள் கண்கள் கதையில் நிலைகுத்தி இருந்ததோடு படபடக்கும் மார்பை வலது கைகளினால் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
•Last Updated on ••Thursday•, 12 •December• 2019 11:35••
•Read more...•
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் ஏப்ரல் 2005 இதழ் 64
1. பெற்றோர் பருவம்!
"புள்ளெ வந்துட்டாளா?"
தனது இரண்டு சக்கர லாரியை போர்ட்டிகோவில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திக்கொண்டே கேள்வியை தூக்கி வீட்டுக்குள் வீசினார் அப்துல் காதிர். ஸ்கூலில் இருந்து ட்யூஷனெல்லாம் முடிந்து அருமை மகளார் ஆறுமணிக்கு மேல்தான் வருவாள் என்று அவருக்கும் தெரியும். ஆனால் அலுவலகம் விட்டு வந்து அவர் வீட்டுக்குள் புகுவதற்கு முன் 'புள்ளெ வந்துட்டாளா' என்ற கேள்வி புகுந்துவிடும்.
வீரபத்ரனின் கழுத்தில் லாவகமாக மாட்டியிருந்த அவரது தோள் பையை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தார். அவர் கேள்விக்கு வீட்டிலிருந்த யாரும் பதில் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும். அது ஒரு கேள்வியே அல்ல. அது ஒரு பழக்கம். வைத்த நேரத்துக்கு அலாரம் அடிப்பது மாதிரி, வீட்டுக்குள் நுழைந்ததும் அவர் வாயிலிருந்து அந்த கேள்வி புறப்பட்டுவிடும்.
"புள்ளெ வந்துட்டாளான்டு கேட்டேன்" என்று மனைவியைப் பார்த்துக் கொஞ்சம் கடுமையாகச் சொன்னார். அடுப்பங்கரையில் அவருக்காக டீ போட்டுக்கொண்டிருந்த ஹஸீனாவின் இதழோரம் கோணலாக ஒரு புன்னகை ஊர்ந்தது.
"அவ ஆரறை மணிக்கித்தான் வருவான்னு தெரியும்ல, ஏன் சும்மா கேட்டுக்கிட்டே இரிக்கிறீங்க? மணி இப்ப அஞ்சறெதானே ஆவுது?"
•Last Updated on ••Thursday•, 12 •December• 2019 10:55••
•Read more...•
பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் யூன் 2004 இதழ் 54
குப்பையை அளைந்தபடியே மறுபடியும் தலைதிருப்பி பார்த்தபோது, அவன் இன்னும் அதே மரத்தடி திண்டில், காவி-வெள்ளையடித்த சிமெண்டுச் சிறு தெய்வத்தினருகில் அவளை பார்த்தபடி குந்தியிருப்பது தெரிந்தது. அவள் பார்பதை உணர்ந்ததும், பார்வையை விலக்கி வானத்தை பார்த்தபடி தன் மந்தமான தாடியை சொரிந்து விட்டு கொண்டான். எதிர்பக்கம் கூடியிருந்த செருப்பு தைக்கும் குடும்பத்திலிருந்து, தமிழ் சினிமா வசனம், சற்று தள்ளி இருவர் புகைத்து கொண்டிருந்த கஞ்சா புகைமணத்துடன் கலந்து, கேட்டுகொண்டிருந்தது. சாலையில் காய்கறி வண்டியுடன் சென்றுகொண்டிருந்த தமிழ் சிறுமியை பார்த்ததும் எழுந்து கைதட்டி அழைத்தான். அவள் இவனை பார்த்ததும் ஒரு கேரட்டை கொண்டு வந்து நீட்டினாள். கேரட்டை கடித்தபடியே, இயல்பானது போல் பவனை செய்தபடி மீண்டும் அவள் பக்கம் பார்வையை செலுத்தி, அவள் இன்னும் பார்த்து கொண்டிருப்பதை அறிந்து பழையபடி வானம்பார்கலானான்.
"பரதேசி நாய்க்கு ரோஷத்த பாரு!" முகத்தை அலட்சியமாய் வைத்தபடி கிளறுவதை தொடர்ந்தாள். சோம்பல் தரும் குளிர்காற்று சோம்பேரித்தனமாய் வீசிகொண்டிருந்தது. வெகுநேரமாய் தள்ளி நின்று யோசித்துகொண்டிருந்த தெருநாய், முகரும் நோக்கத்தோடு சோம்பலான உறுமலுடன் அவள் அருகில் வர, மடித்த காலி அட்டைபெட்டியால் அலட்சியமாய் அதன் முகத்திலடித்தாள். நாய் நொடிபொழுதில் தலையை பின்னுக்கிழுத்து, இரண்டடி பின்னகர்ந்து மீண்டும் புடவையருகே முகத்தை கொண்டுவந்தது.
•Last Updated on ••Thursday•, 12 •December• 2019 00:55••
•Read more...•
பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் மார்ச் 2005 இதழ் 63
1. நாகதோஷம்! - - சுமதி ரூபன் -
கலைந்து போன அவளின் கருங்கூந்தல் நீண்டு பரந்து அந்த அறைப் பரப்பை மூடிக்கொள்ள சாளரத்தினூடே ஊடுருவிப் புகுந்து கொண்ட மெல்லிய நீல நிலவொளி அவளின் நிர்வாண உடல்பரப்பில் பட்டுத் தெறித்து விட்டத்தில் ஏற்ற இறக்கங்களை காட்டி நின்றது. அவள் மோகித்திருந்தாள்.. அண்டத்தின் அனைத்தும் அவளின் காலடியில் என்பதாய் மமதையில் மரணத்திற்கும் வாழ்விற்குமான இடைவெளியை ரசித்தபடியே அவள் கலைந்தாள். நாகம் அசைந்தது.. மென் கறுப்புத் தோலைக் களைந்து விட்ட நாகம் தனது நுண்மையான கரும் நாக்கால் அவளின் பாதம் தொடங்கித் தலைவரை மெல்ல நகர்ந்து, முகர்ந்து, புகுந்து, நழுவ சூரியனைத் தொட்டுவந்தவள் போல் உடல்த் தணதணப்பில் அவள் சிணுங்கினாள்.. நாகத்திற்கு கோபம் தலைக்கேறியது.. என்றோ தான் ஏங்க வைக்கப்பட்டு ஏமாந்தது போல் ஆவேசம் வந்தது.. நாகம் வேகம் கொண்டு அவள் உடலை சுற்றி ஆவெசமாய் இறுக்க எலும்புகள் மெல்ல நொறுங்கத் தொடங்கின.. அவள் உச்சத்தின் வேதனையில் வாய்விட்டுக் கதறினாள்.. நாகத்தின் பார்வையில் குரோதம் தெரிந்தது.. மூடிக்கிடந்த அவள் கண்களை தனது நாக்கால் எச்சில் படுத்தி அவள் கண்விழிகளுக்குள் தனது பார்வையைச் செலுத்தியது.. அவள் வார்த்தைகளற்று வதைபட்டாள்.. அவள் வளைவுகளை அழுத்தி தனக்கான மோகத்தில் திளைத்து எழுந்தது நாகம்.. அவள் மூச்சுக்காற்று மெல்ல மெல்ல அடங்க களைப்புற்ற நாகம் விலகி அவள் கூந்தலுக்குள் நுழைந்து புரண்டு தனது தோலுக்குள் புகுந்து நகர்ந்து கொண்டது.. வரண்டு போய் அசைவின்றிக் கிடந்தாள் அவள். கண் விழித்தாள்.. தெளிவற்று குத்தி நின்றது பார்வை.. பல வருட கேள்விகளுக்கு விடைதேடிக்களைத்து இன்று பதில் கிடைப்பதாய் நம்பி மீண்டும் கலைந்து போனாள். மனதுக்குள் குரோதம் வளர்ந்தது.. ஆண்மையின் மிதப்பில் நாகம் அசைந்தது. விம்மிப்புடைந்து நிற்கும் தனது மார்புகளிளைத் தடவிக்கொடுத்து அதிசயித்தாள்.
நீள்சதுர கண்ணாடி பிம்பத்தை தனக்குள் வாங்கிப் பிரதிபலிக்க, இருப்பதால் இடையளவிலிருந்து தலைமட்டும் கண்ணாடிக்குள் அடங்கிப்போய், இடுப்பில் பிதுங்கும் தசை.. பதிவாய் தொங்கும் பருத்த மார்பகங்கள்.. உச்சியில் ஊடுருவும் வெள்ளை மயிர்;கள்.. கண்கள் உடலில் அர்த்தமின்றி மேய்ந்து வலம்வர குளிர்காற்று ஊடுருவி தலைமயிரைக் கலைத்துக் கன்னத்தில் போட்டது..
•Last Updated on ••Thursday•, 12 •December• 2019 10:31••
•Read more...•
••Wednesday•, 11 •December• 2019 10:17•
??- மார்கரெட் லாரன்சு (கனடா) | தமிழில்: டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர் -??
'பதிவுகளில்' அன்று
பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் ஆகஸ்ட் 2003 இதழ் 44 -
நீங்கள் பார்ப்பதற்கு எப்படி இருப்பீர்கள் என்று எணக்குத் தெரியாது. நாம் சந்திக்க மாட்டோம். உங்கள் வயது எனக்குத் தெரியாது. என் வயதினராக இருப்பீர்களென நினைக்கிறேன். எனக்கு நாற்பத்தோரு வயதாகிறது. உங்களுக்கு எவ்வளவு குழந்தைகளிருக்கிறார்கள் என்றும் எனக்குத் தெரியாது. எனக்கு இரண்டு பிள்ளைகளிருக்கிறார்கள். என் மகளுக்கு பதினைந்து வயதாகிறது.என் மகனுக்கு பன்னிரண்டு வயசாகிறது. உங்களுக்கும் பன்னிரண்டு வயதில் ஒரு மகனிருக்கிறான்.
என் மகன் கானாவில் பிறந்தான். அப்போது மருத்துவர் அருகிலில்லை. நான் நலமாக இருந்தாலும் டாக்டருக்கு அதிக வேலைகள் இருந்ததாலும், ஒரு மருத்துவச்சி தான் என்னை கவனித்துக் கொண்டாள். அவள் ஒரு கானிய குடும்பத் தலைவி. நான்கு குழந்தைகளுக்குத் தாய். எனவே எந்த மருத்துவருக்கும் அவருக்குத் தெரிந்த அளவு தெரிந்திருக்க நியாயமில்லை. நேரம் செல்லச் செல்ல அவர் எனக்கு உறுதியளித்தார். "இது ஒரு ண் குழந்தையாகத் தானிருக்கும். ஒரு ஆணால் தான் இவ்வளவு பிடிவாதமாக இருக்க முடியும்". நான் வலியால் துடித்த போது அந்த பெண்மணி நான் பிடித்துக் கொள்ள தனது கைகளை நீட்டினாள். அந்தக் கைகள் மட்டுமே வாழ்வின் கடைசி நம்பிக்கைச் சின்னங்களாக நினைத்து நான் பற்றிக் கொண்டேன். "இதோ விரைவில் முடிந்து விடும். நான் உன்னிடம் பொய் செல்வேனா. இதோ பார். எனக்குத் தெரியும். நானும் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறேன்," என்று கூறினார்.
•Last Updated on ••Wednesday•, 11 •December• 2019 10:33••
•Read more...•
பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் ஜூலை 2002 இதழ் 31
1 தவிப்பு - - டானியல் ஜீவா - என்னெண்டு தெரியல நாரி போட்டு விண்விண்ணென்று குத்தி, உளைஞ்சு கொண்டு இருக்கு. கால்வேற மசிலி இறிகி நொந்து கொண்டிருக்கு. நேற்று வேலை தேடி அதிகம் அலைந்ததாலோ இந்த உடல் வலியோ... கொஞ்சம் நோ எடுபடுமெண்டு நினைச்சுத்தான் சுடு தண்ணீயில கொஞ்சம் பச்சத்தண்ணீ கலந்து குளிச்சுட்டு வந்தனான்.நல்ல வெக்கையாய் இருக்குது. குளிச்சிட்டு வந்தாலும் உடம்பு பிசு பிசுத்தபடி. அப்பாட்மென்காரி கீற்றரை நல்லாக் கூட்டிப் போட்டாள் போல இருக்கு. அவ கூட்டினாப் போல என்ன எங்கட கீற்றரால குறைச்சால் ரியாய் போய்விடும் எண்டு நினைச்சுத்தான் குளிச்சிற்று வெளியில வரக்கில கீற்றரை நல்லாக் குறைச்சுப் போட்டு வந்தனான். அப்படியிருந்தும், இப்புடி வெக்கையாய் இருக்கு.... உடம்பிலே வேற சேட்டு போட்டிருக்க வேண்டிய நிலை. மாமி எந்த நேரமும் வீட்டில் இருக்கும் போது கொஞ்சம் கூச்சமாய் இருக்கும் அதனால் என்டில்ல, ஊரில இருக்கும்போது கூட அப்படித்தான் எந்த வெக்கையாய் இருந்தாலும் உடம்பில் இருக்கிற சேட்டை கழட்ட மாட்டேன். அது என்ர பரவனி புத்தியெண்டு அம்மா சொல்லுவ. இப்ப முப்பது வயதாகிட்டு, உடம் பெல்லாம் மசுக்குட்டி மயிர் படர்ந்து கிடக்கிறது போல. என் உடம்பு முழுவதும். அதுவும் கூச்சத்துக்கு காரணமாயிருக்கலாம். சீச்...சீ... அப்படியும் சொல்ல ஏலாது. நான் பிறப்பாலே கொஞ்சம் கூச்சப்பட்டவன் தான். ஒரு தாழ்வுச் சிக்கல் எண்டுகூட சொல்லலாம். என்ர மனசு தேவையில்லாமல் எதை எதை யோவெல்லாம் அலட்டிக்கொண்டு இஇருக்குது என்று என் மனம் சொல்லியது.
தொங்கப் போடப்பட்ட என் தலையை மேலே தூக்கிக் கொண்டு சோபாவில் இருந்த மாமியை நோக்கி என் கண்களின் பார்வையை நிலை நிறுத்தினேன். ஏதோ ஆழ்ந்த யோசினையிலிருந்த மாமி என்னை நோக்கி பார்வை வீச்சால் ஒரு தடவை உலாவவிட்டுவிட்டு, ”தம்பி ஏதும் குடியுமென்?” என்று கேட்டாள்.
”வேண்டாம் மாமி. காலையில எழும்பின கையோடு ஒரு தேத்தணீ போட்டுக் குடிச்சிட்டன். நேற்று ஸ்¡£ல் பக்கமாக வேலைக்கு அலைஞ்சதில கால் சாடையாய் நோகுது”.
•Last Updated on ••Wednesday•, 11 •December• 2019 10:07••
•Read more...•
••Wednesday•, 11 •December• 2019 02:49•
??- நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்) -??
'பதிவுகளில்' அன்று
'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் பெப்ருவரி 2003 இதழ் 38
கா காகா கா.. என்ற சத்தம் அவர் வீட்டின் பின் பக்கமிருந்து வந்திருக்க வேண்டும். கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்துக் கொண்டார். மணி காலை 5.30 என்றது. தன்னிடமிருந்த மாற்றுத் திறப்பின் மூலம் கதவினைத் திறந்துகொண்டு வீட்டிற்குள் நுழைந்தார். கா.. கா என்ற குரல் இந்தமுறை அதிக வன்மையுடன் அவரைத் தொட்டது. பின்புறம் சென்று பார்க்கலாமா? என்று நினைத்து மீண்டும் அந்த குரல் வந்தால் போய்ப் பார்க்கலாம் எனத் தீர்மானித்தார். உறங்கிக் கிடந்த வீட்டை எழுப்ப நினைத்து ஸ்விட்சைத் தட்டினார். வெளிச்சம் நிரம்பி வழிந்தது. ஜன்னல் கண்ணாடிகளுக்கு வெளியே இருந்த பிவிசி திரைகளை மின்சாரப் பொத்தானை அழுத்தி சுருட்டினார். உள்ளே இருந்த மெல்லிய பிரெஞ்சுத் திரைச் சீலைகளும் நீக்கபட்டன. வெளியே ஆரவாரமற்ற ஐரோப்பிய வைகறை. தலையில் ஒளியைச் சுற்றிய வண்ணம் மெல்லிய உறுமலோடு குப்பைக்கூடைகளை ஒரு பகாசூரனின் பசி ஆர்வத்தோடு வயிற்றில் இட்டுக் கொள்ளும் குப்பையள்ளும் லாரி. சிறிது நேரம் அந்தக் காட்சியில் லயிப்பற்றுக் கவனம் செலுத்த, மறுபடியும் பின்பக்கமிருந்து கா கா என்ற அந்தக் குரல். இந்தியாவில் மட்டுமே அவர் கேட்டிருக்கின்ற ஓசை. குரலா? ஓசையா? எப்படி இனம் பிரிப்பது என்ற கேள்வி தேவையில்லாமல் எழுந்தது. சற்று கவனமாகக் கேட்டார். ஆச்சரியமாக இருந்தது. அது ஒரு காகத்தின் குரல் தான். இங்கே எப்படி?
இந்தியாவிற்குப் போகும் போதெல்லாம் அந்த குரலின் அல்லது ஓசையின் சுகத்திற்காகவே வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் புழக்கடைப் பக்கம் சென்று படுப்பது வழக்கம். அதிகாலையில் எங்கேயோ ஒரு சேவல் "கொக்கரிக்கோ " எனத் தொண்டை கமறலோடு ஆரம்பித்துவைக்க அது ஊரெல்லாம் எதிரொலித்துவிட்டு இவரது சகோதரர் வீட்டு கோழிக்கூண்டில் வந்து முடியும். இந்த நிகழ்வுக்காகவே காத்திருந்தது போல, ஒரு காகம் கா.. கா என ஆரம்பித்துக் கொடுக்க, அதனைத் தொடர்ந்து, அடுத்த அரை மணி நேரத்திற்கு கா.. கா என்ற கச்சேரி. " இந்தப் பாழாப்போன காக்கைகள், தூக்கத்தைக் கெடுக்குதே! உள்ளே வந்து படுக்கக் கூடாதா? என்று அங்கலாய்க்கும் அவரது அம்மாவிற்குத் தெரியுமா? இந்தியாவிற்கு அவரை இழுத்துவருகின்ற விஷயங்களில் இதுபோன்ற ஓசைகளும் உள்ளடக்கம் என்று.
இந்தியாவில் இருக்கும் வரை, அமாவாசை கிருத்திகை எனக் கடவுள்களுக்கோ, முன்னோர்களுக்கோ வீட்டில் படைக்கும் போதெல்லாம் காக்கைக்குச் சாதம் வைப்பது இவராகத்தான் இருக்கும். பூவரச இலையைக் கிள்ளி ஒரு கவளப் படையலை ஏந்தி பின்புறமிருக்கும் கிணற்றடிச் சுவரில் கையிலிருக்கும் குவளைநீரைத் தெளித்து, சோற்றுக் கவளத்தை வைத்துவிட்டுக் காகத்தைத் தேடி அது ஒன்று பத்தாகும் ரசவாதத்தை மெய்மறந்து கண்களை விரியவிட்டிருக்கிறார். கடைசியாக அவரது அப்பா இறந்தபோது,காரியப் பிண்டத்தைக் குளத்தங்கரையில் வைத்துவிட்டு துக்கத்தை மறந்து, காகங்களின் ஆள் சேர்ப்பில் சந்தோஷம் கண்டது ஞாபகத்திற்கு வந்து போனது..
•Last Updated on ••Wednesday•, 11 •December• 2019 02:51••
•Read more...•
'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் செப்டெம்பர் 2001 இதழ் 21 -
-ஒன்று-
பாற்கடலின் விளிம்பில் ரத்தச் சிவப்பு படர்ந்தது. சூரியன் மறையப்போகும் நேரம். அலைகளின் இரைச்சலை மீறிக் கொண்டு அசுரர்களின் இரைச்சல் வானில் மோதியது. ஒருபுறம் மார்பு பிளந்த மகாபலியின் அலறல். இன்னொருபுறம் நமுசியும் சம்பரனும் இதயத்தில் தைத்த வேல்களைப் பிடுங்கும்போது எழுப்பிய மரணக் கூச்சல். மற்றொரு புறத்தில் வேரற்ற மரம் போல விழுந்த அயோமுகனின் சத்தம். அச்சத்தத்தில் நெஞ்சம் துடித்தது. தன்னைச் சுற்றிலும் அசுரர்கள் அபயக் குரல் எழுப்பியபடி ஓடுவதைக் கண்டன ராகுவின் கண்கள். உடல் இரண்டு துண்டுகளாக அறுபட்ட நிலையில் முன்னால் வேகவேகமாக மாறிக் கொண்டிருந்த காட்சிகளைத் துயரத்துடன் நோக்கினான் அவன். கடலின் செந்நிறம் ஏறிக் கொண்டே இருந்தது. ரத்தம் கலந்த கடற்பரப்பில் மரணதேவதையின் முகம் தெரிந்தது. ஒரு பெரிய மிருகத்தின் முகம் போல இருந்தது அவள் முகம். அந்த வெறி. அந்தச் சிவப்பு. அவள் கோரைப் பற்கள். உயிரற்ற உடல்களை அள்ளி எடுக்க நீண்டன அவள் கைகள். அக்கை கடலையே துழாவிக் கரையைத் தொட்டது. யாரோ தாக்கியது போல உடல் அதிர்ந்தது. "ஐயோ" என்றான்.
விழிப்பு வந்துவிட்டது. பீதியில் இதயம் துடிக்கச் சுற்றியும் இருந்த கூடாரங்களைப் பார்த்தான் ராகு. உண்ணாநோன்பினால் சோர்ந்திருந்தாலும் மோகினியின் அங்க அழகுகளைச் சுவையோடு பேசிக் கொண்டிருக்கும் சக வீரர்களின் குரல்கள் கேட்டன. அனைவரும் கொல்லப்படுவதாக எப்படி நினைத்தோம் என்று ஆச்சரியமாக இருந்தது. உடனே அந்தக் கனவின் காட்சி மீண்டும் விரிந்தது. மெல்ல எழுந்து கூடாரத்தைவிட்டு வெளியே வந்தான். வெயில் ஏறிய வானம் கண்களைக் கூசவைத்தது. அருகில் இரைச்சலிடும் அலைகளையே வெகுநேரம் பார்த்தான். அவனுக்குத் தன் மனத்தில் கவிந்திருக்கும் குழப்பம் பற்றிக் கவலை உண்டானது. "அபசகுனம்" என்று முணுமுணுத்துக் கொண்டான். எழுந்து கைகளை வானை நோக்கி உதறினான். அவசரமாகப் பணியாள் ஓடிவந்து அருகில் நின்றான். "துணைக்கு வரவேண்டுமா அரசே?" என்றான். ராகுவின் பார்வை அவன் தோள்களில் பட்டு மீண்டது. அவன் காட்டும் பணிவு நடிப்பா உண்மையா புரிந்துகொள்ள முயற்சி செய்து தோற்றான். புன்னகையோடு தலையசைத்தபடி தொடர்ந்து தனியாக நடக்கத் தொடங்கினான்.
•Last Updated on ••Wednesday•, 11 •December• 2019 02:50••
•Read more...•
••Wednesday•, 11 •December• 2019 02:15•
??-ஷோவென் ழான்-ரொபெர்| தமிழில் -நாகரத்தினம் கிருஷ்ணா??
'பதிவுகளில்' அன்று
'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் மே 2003 இதழ் 4
-1-
தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் எல்ஸாவுக்கு வயது 5. சுருள் சுருளாக, பழுப்பு நிறத்தில் நீண்டமுடி. படிகம் போன்ற தெளிவான விழிகள். மண்ணில் விளையாடியதால் அழுக்கடைந்த கால்கள். எல்ஸாவின் தோட்டம் உயரமான மரங்களும், எண்ணிக்கையற்ற பூவகைகளும் நிறைந்த தோட்டம். எல்ஸாவின் சிறியக் கண்களுக்குள் அடங்காத மிகப்பெரியத் தோட்டம். ஆனால் அவள் கற்பனையில் விரிந்தக் கதைகளுக்கும், துடுக்கான விளையாட்டிற்கும், அவ்விளையாட்டுக்கெனவே கற்பனையில் உதிக்கின்ற அவளது தோழர்களுக்கும் ஏற்றத் தோட்டம்.
மரங்கள் தோறும் தாவிச் செல்லும் சித்திரக் குள்ளன். அழகான மலர்களிலிருந்து சுகந்தத்தை மட்டுமே சேகரிக்கின்ற குட்டி தேவதைகள். வழக்கம்போல வசிய மருந்துகக்காக கள்ளிச் செடிகளையும், அழுகியப் பழங்களையும் தேடுகின்ற சூனியக்காரிகள் என அவளது கற்பனைக் கேற்றவாறு தோட்டத்தின் பங்களிப்பு மாறும். மணல் நிரப்பப்பட்டத் தொட்டியில், அவள் கட்டுகின்ற மணற்கோட்டைகளில் சூரியனின் கதிர்களும், மேகத்தின் நிழல்களும் வாசம் செய்யும். பூமியில் காதினை வைத்து மண்ணில் வாழும் புழுக்களும் வண்டுகளும் இடும் இரைச்சலைக் கேட்டு, அவைகளை ஆச்சரியப் படுத்துவாள். சிறிது நேரம் அவள் ஆடுகின்ற ஊஞ்சலின் மூலம் உயரே பறக்கின்ற 'மேசான்ழ்' குருவியை பிடித்திட முயல்வாள். பின்னர் இறங்கி 'ராஸ்பெரி' பழங்களைப் பறித்து 'மாக்பை' குருவியோடு பங்குபோட்டுக் கொள்வாள். 'மாக்பை' குருவி அமர்ந்திருக்கும் சுவர்தான் வீதியிலிருந்தும், வெளி மனிதர்களிடமிருந்தும் தோட்டத்தைப் பாதுகாக்கிறது. தோட்டத்து அமைதியை எப்போதும் பூட்டி வைத்திருக்கிறது.
•Last Updated on ••Wednesday•, 11 •December• 2019 02:23••
•Read more...•
- பதிவுகள் இணைய இதழ் புகலிடத் தமிழ் இலக்கிய இதழ்களில் நூற்றுக்கணக்கான கவிஞர்களின் நூற்றுக்கணக்கான கவிதைகளை இதுவரை பிரசுரித்துள்ளது. பெருமைப்படத்தக்க பங்களிப்பு அது. இப்பகுதியில் தொடர்ந்து வெளியாகும் கவிதைகள் வாசித்துப்பாருங்கள். புரிந்து கொள்வீர்கள். அவற்றை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பதிவுகள் இணைய இதழுக்குத் தம் கவிதைப் பங்களிப்பை வழங்கியுள்ளார்கள் கவிஞர்கள். - பதிவுகள் -
பதிவுகள் ஆகஸ்ட் 2004 இதழ் 56 1. எங்கள் தேசம் இந்திய தேசம்!
(NCERTவெளியிட்டுள்ள 'ஜிந்த் தேஷ்கீ நிவாஜி' எனும் இந்திப் பாடலின் 'இசைபெயர்ப்பு' )
பல்லவி எங்கள் தேசம் இந்திய தேசம் வாழ்க வாழ்க வாழ்கவே! இந்து முஸ்லீம் கிறிஸ்துவர்கள் எல்லாரும் சகோதரர்கள்!
சரணங்கள் வேறு வேறு வண்ணப் பூக்கள் சேர்ந்த வாச மாலை நாங்கள்! வண்ணம் வேறு வேறென் றாலும் வாசம் நெஞ்சில் ஒன்றுதான்! (எங்கள் தேசம்...
சிந்து கங்கை பிரம்ம புத்ரா கிருஷ்ணா காவேரி சென்று சேரும் கடலில் என்றும் நீரின் தன்மை ஒன்றுதான்! (எங்கள் தேசம்...
•Last Updated on ••Tuesday•, 10 •December• 2019 11:14••
•Read more...•
-பதிவுகள் இணைய இதழ் புகலிடத் தமிழ் இலக்கிய இதழ்களில் நூற்றுக்கணக்கான கவிஞர்களின் நூற்றுக்கணக்கான கவிதைகளை இதுவரை பிரசுரித்துள்ளது. பெருமைப்படத்தக்க பங்களிப்பு அது. இப்பகுதியில் தொடர்ந்து வெளியாகும் கவிதைகள் வாசித்துப்பாருங்கள். புரிந்து கொள்வீர்கள். அவற்றை ஆவணப்படுத்த வேண்டுயது அவசியம். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பதிவுகள் இணைய இதழுக்குத் தம் கவிதைப் பங்களிப்பை வழங்கியுள்ளார்கள் கவிஞர்கள். - பதிவுகள் -
1. பதிவுகள் மார்ச் 2005 இதழ் 63 அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்...
அன்புக் குழந்தைகளே! நம்பிக்கை தரும் எந்த அழகிய வார்த்தைகளும் என்னிடமில்லை,
கவித்துவமற்ற மொழியூடு வாழ்வின் கரடுமுரடான பகுதிகளை வழக்கொழிந்த வார்த்தைகளாய் கொட்டுவதைத் தவிர
நீண்ட சோகம் கப்பிய எதிர்காலத்தைப் போக்கி ஒளிமிக்க நம்பிக்கையை கொணர்வதற்கு எம்மிடம் எந்த மந்திரமுமில்லை
•Last Updated on ••Tuesday•, 10 •December• 2019 23:58••
•Read more...•
பதிவுகள் மார்ச் 2003 இதழ் 39
எங்கள் பரமபிதாவே!
சீதனத்தில் பாதித்தொகை ஏஜென்சிக்குப் போய்விட்டது.
அரைவருடச் சம்பளத்தின் மிச்சம் சீட்டுக் கழிவுக்குப் போய்விட்டது.
ஒரு மாதச் சம்பளம் இயக்கத்திற்குப் போன பின் எனக்கென்று ஆணிச் செருப்புக்கூட வாங்க முடியாதிருப்பதேன்?
•Last Updated on ••Thursday•, 07 •November• 2019 02:38••
•Read more...•
1.
பதிவுகள் செப்டம்பர் 2003 இதழ் 45 மனசு! சூனிய வெளிக்குள்....... மனசு சூனிய வெளிக்குள் சிக்கித் தவிக்கிறது. உன்னவள் உன் அஸ்தியை ஊருக்கு அனுப்புவது பற்றிப் பேசினாள். அவள் புண்ணியவாட்டி. உன் அருகிருந்து தன் கடன் முடித்து விட்டாள்.
நான் எதுவுமே செய்யாதிருந்து விட்டு இப்போ.......... சூனிய வெளிக்குள் நின்று சுற்றிச் சுழல்கிறேன்.
•Last Updated on ••Thursday•, 07 •November• 2019 02:13••
•Read more...•
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் --
- எழுத்தாளர் திலகபாமா கவிதை, சிறுகதை, விமர்சனம் எனப் பன்முக இலக்கியப் பங்களிப்பு செய்து வருபவர். பட்டி வீரன் பட்டியில் பிறந்து சிவகாசியில் வசித்து வருபவர். இவரது கவிதைத்தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள் , கட்டுரைத்தொகுப்புகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. 'கழுவேற்றப்பட்ட மீன்கள்' என்பது இவரது வெளிவந்த நாவலாகும். 'பதிவுகள்' இணைய இதழின் ஆரம்ப காலத்தில் இவர் தன் எழுத்துலகப் பயணத்தைத்தொடங்கியவர். பதிவுகள் இணைய இதழிலும் இவரது படைப்புகள் பல வெளியாகியுள்ளன. அவ்விதம் வெளியான கவிதைகளே இங்கு பதிவாகின்றன. இவரைப்பற்றிய விரிவான விக்கிபீடியாக் குறிப்புகளுக்கு: https://ta.wikipedia.org/s/olr -
1. பதிவுகள் ஏப்ரில் 2002 இதழ் 28 தவம் கிடக்கும் கல் சாபம் தந்ததாய் உன் சாணக்கிய சிரிப்பு கட்டிய தாலிக்காய் உடைமை ப் பொருளாய் எனை சந்தித்த உன்னிடமிருந்து விமோசனம் தந்த வரமாய் என் சிந்திப்பின் தித்திப்பு காலால் தீண்டி பெண்ணாய் மாற்றும் அவதாரம் நாடாது கலையை நெஞ்சில் கொண்டு சிலையாய் மாற்றும் சிற்றுளிக்கும் தாங்கிய கைதனுக்கும் காத்திருக்கும் என் தவம்
•Last Updated on ••Saturday•, 02 •November• 2019 07:57••
•Read more...•
••Friday•, 01 •November• 2019 08:38•
??- பதிவுகளில் அன்று: நட்சத்திரவாசி (பேராசிரியர் எச்.முஜீப் ரஹ்மான்) -??
'பதிவுகளில்' அன்று
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் --
- பேராசிரியர் எச்.முஜீப் ரஹ்மான் உலக இலக்கியம், இலக்கிய கோட்பாடுகள், அறிவியற் கோட்பாடுகள், கலை, இலக்கிய ஆளுமைகள் என ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடான கட்டுரைகளை மற்றும் கவிதைகளை எழுதிவருபவர். நட்சத்திரவாசி என்னும் புனைபெயரில் இவர் அன்று பதிவுகள் இணைய இதழில் எழுதிய கவிதைகளிவை. இவரது வலைப்பதிவு: நட்சத்ரவாசியின் தளம் (https://natchathravasi.wordpress.com/). -
பதிவுகள் டிசம்பர் 2010 இதழ் 132 கடைசி வேட்டை -
ஆறு கடல்களுக்கு அப்பால் தனியொரு தீவில் தனித்தலைகிறேன்\ பளிங்கு மண்டபத்தில் என் உயிர் கிளியாய் சிறை வைக்கப்பட்டிருக்கிறது யாரவனோ இப்படியொரு விதி செய்து மாயத்தை புரட்டுகிறான் மெல்ல தென்றல் வீசுகையில் நான் நினைவுகளில் என்னை காண்கிறேன் எனது தேசத்தில் எனக்கிருந்த வீடும்,ஊரும் இல்லாமல் போயிற்று என்னை ஆண்ட காதலியவளின் முகமும் கூட ஒரு மின்னல் வெட்டென வந்து போகிறது அவ்வப்போது நினைவுகள் எனது குழந்தைகளிடன் நான் கொண்ட பாசம் கண்ணீராய் வானத்தில் ஊர்ந்து போகிறது வெண்ணிற மேகக் கூட்டமாய் அது எங்கோ மழையாய் பெய்யக் கூடும் என் சோகம் சொல்லி எனினும் வறண்ட பாலையில் தூசிக்காற்றாய் சுழலும் உயிரின் பொடிதுகள்கள் உயிராக வேண்டி தியானிக்கின்றன அவனோ ஏழு வானங்களுக்கு மேல் இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கிறான் அவனுக்கு தெரியாததல்ல தனிமையும்,உவர்ப்பும் மந்திரத்தால் அவனை வசியம் செய்து எனதுயிரை என்னிடம் சேர்க்கும் வல்லமையுடையவன் யாரோ எப்போது வர கூடுமோ எனினும் நான் காத்திருக்கிறேன் எனது ஊரின் ரம்மியமான பொழுதுகளை குடித்து காதல் போதையை கிரகித்து ஊன் அழிய சிதிலமாய் போகுமிந்த உயிர்கூட்டில் கடைசி வேட்டை எப்போதோ சொல்லிவிடு அதற்கு முன்னால் எனக்கொரு சேதியனுப்பவேண்டும்.
•Last Updated on ••Friday•, 01 •November• 2019 08:49••
•Read more...•
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
- எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் எழுத்தாளர் மட்டுமல்லர்; சமூக அரசியற் செயற்பாட்டாளரும் கூட. எழுத்துத்துறையுடன் பதிப்பகத்துறையிலும் நாட்டம் மிக்கவர். கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பு எனப் பன்முகப்பங்களிப்பு ஆற்றி வருபவர். தனது சொந்தப்பதிப்பகமான 'அநாமிகா ஆல்ஃபெட்ஸ்' பதிப்பகத்தினூடு நூல்களை வெளியிட்டு வருமிவர் ரிஷி, அநாமிகா போன்ற புனைபெயர்களிலும் எழுதி வருகின்றர். -
1.
பதிவுகள் நவம்பர் 2000 இதழ் 11 நந்தவனத்திலோர் ஆண்டி - ரிஷி -
உலகின் அரும்பூக்கள் பல கோடி பூத்துக் குலுங்கும் திருப் பூங்காவனம் உனது. துலங்கும் அவற்றின் தனிநிறங்களும், நறுமணங்களும் உயிரைத் துளிர்க்கச் செய்ய தோட்டமும், தென்றலும் தம்முள் கலந்து கிளையசைத்துத் தந்தவை சிலவும் நாட்டம் மிக நான் கொய்தவை சிலவும் சுடர்க்கொடி யாகி நின்றேன் சூடி. வாடியழுதாய் நீ வழிதொலைந்ததாய் அடர்காட்டில். 'அடிக்கு அடி ஊற்றுக்கேணி யிருக்கும் அகன்று படர்ந்த சர்க்கரைத் தேனாற்றில் அட, ஒரு கை யள்ளினாலென்ன கொள்ளை போய் விடுமா சொல்? வெள்ளையாய் கேட்டது உள். (வினாவும் விடையும் எல்லாம் வெறும் பாவனையின்றி வேறில்லை கொள்.) - கொள் இன்றில் தன் தேடலின் நல்வரவாய் இன்னொரு கரம் என் பூவனம் பரவப் பெறும் பாழ்வெளியில் தன் கால்மாற்றிக் கொண்டுணரும் உன் வலியின் கனபரிமாணங்களை.
•Last Updated on ••Thursday•, 31 •October• 2019 23:18••
•Read more...•
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா பிரான்ஸில் வசிக்கின்றார். கவிதை, நாவல், புனைகதை என இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்தது.. பிரெஞ்சு எழுத்தாளர் மார்கெரித் த்யூரா எழுதிய நாவலொன்று 'காதலன்' என்னும் பெயரில் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு இவ்விதம் கூறுகின்றது:
"இவர் தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சில் ஸ்ட்ராஸ்பூர்க் என்ற நகரில் வசித்துவருகிறார். சமூகவியலில் முதுகலை, பிரெஞ்சு-ஆங்கிலம் மொழிபெயர்ப்பில் டிப்ளோமா ஆகியவற்றைப் பெற்றுள்ளார். தொழில் வாணிபம். பகுதிநேர மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம். இணையம், சிற்றிதழ்களில் எழுதிவருபவர். எழுபதுகளில் கவிதைகளில் இவரது இலக்கிய பயணம் தொடங்கிற்று. சிறுகதைகள் குமுயதம், விகடன், கல்கி எனத்தொடங்கித் தற்போது இணைய தளங்கள், சிற்றிதழ்களில் எழுதிவருகிறார். பிரான்சு நாட்டில் ' நிலா' என்கிற இருமாத இதழைத் தொடங்கிப் பின்னர் அதனை மாத இதழாகவும் மூன்றாண்டுகாலம் நடத்தினார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகளென படைப்பிலக்கியத்தின் பல துறைகளிலும் இயங்கிவருபவர்.. முதல் நாவல் "நீலக்கடல்" தமிழக அரசின் பரிசினைனையும், இரண்டாவது நாவல் 'மாத்தா கரி' கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசினையும், மூன்றாவது நாவல் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழக அரசின் பரிசினையும் பெற்றுள்ளன. ஓர் அறிவியல் சிறுகதை உட்பட இதுவரை ஐன்து சிறுகதை தொகுப்புகள்; ஐந்து நாவல்கள்; மூன்று பிரெஞ்சு நாவல்கள், மூன்று சிறுகதைதொகுப்புகள் உட்பட ஏழு மொழிபெயர்ப்புகள்; எட்டு கட்டுரை தொகுப்புகள், அம்பை சிறுகதைகளின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு ஆகியவை இவரது உழைப்பில் வந்துள்ளன. தவிர இவருடைய மாத்தாஹரி நாவல் பிரெஞ்சு மொழியில் வந்துள்ளது. "
முழுமையான விக்கிபீடியாக் குறிப்புக்கான இணைய இணைப்பு: https://ta.wikipedia.org/s/tqe
'பதிவுகள்' இணைய இதழில் அன்று இவர் எழுதிய கவிதைகளிவை.
1.
பதிவுகள் சித்திரை 2001 இதழ்-16 எத்தனை முகங்கள் எத்தனை முகங்கள்..
நேற்றைய கனவில் நீங்கா முகமும் நெடு நாளாக தேடும் முகமும் சோற்று வாழ்வில் சுகப்படும் முகமும் சொந்தம் வேண்டாம் சொல்லிடும் முகமும்
ஏக்கக் கேணியில் இறங்கிய முகமும் ஏப்பம் கண்களில் நிறுத்திய முகமும் எல்லாம் எனக்கே என்றிடும் முகமும் எல்லாம் தனக்குள் பேசிடும் முகமும்
கூடும் முகமும் குலவும் முகமும் குறைகளை நிறைவாய் காட்டும் முகமும் வாடும் முகமும் வணங்கும் முகமும் வாழ்வுக்காக ஏங்கும் முகமும்
•Last Updated on ••Thursday•, 31 •October• 2019 19:50••
•Read more...•
••Thursday•, 31 •October• 2019 09:12•
??- இரமணிதரன் கந்தையா ( சித்தார்த்த 'சே' குவேரா) -??
'பதிவுகளில்' அன்று
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
- எழுத்தாளர் இரமணிதரன் கந்தையா புகலிடப் படைப்பாளிகளில் முக்கியமானவர்களிலொருவர். கவிதை, கட்டுரை, சிறுகதை என இவரது இலக்கியபங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது. சித்தார்த்த 'சே' குவேரா, சிசேகு, ரமணிதரன் போன்ற பெயர்களில் இவர் 'பதிவுகள்' இணைய இதழில் எழுதிய கவிதைகள் இவை. இவரது கவிதைகளின் மொழி சொற்களைக் கையாள்வதில் தனித்துவம் வாய்ந்தது. இவரது இன்னுமொரு பெயர் எனக்கு மிகவும் பிடித்த புனைபெயர்களிலொன்று. 'திண்ணைதூங்கி' என்னும் புனைபெயரில் இணையத்தில், இணைய இதழ்களில் இவர் விவாதங்கள் பலவற்றில் கலந்துகொண்டிருக்கின்றார். சமூக, அரசியல் மற்றும் கலை, இலக்கியம் சம்பந்தமான கருத்துகள் பலவற்றை இவர் திண்ணைதூங்கி என்னும் பெயரில் பதிவு செய்திருக்கின்றார். பதிவுகள் இணைய இதழின் விவாதங்களிலும் (ஆரம்ப காலகட்டத்தில்) இவர் கலந்துகொண்டிருக்கின்றார். விவாதத்தளத்தை நிர்வகித்தவர்களில் இவருமொருவர். பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரியான இவர் அமெரிக்காவில் அத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர். பதிவுகள் மூலம் எனக்கு அறிமுகமான எழுத்தாளர்களில் இவருமொருவர். - பதிவுகள் - -
1.
பதிவுகள் தை 2001 இதழ்-13 சித்தார்த்த 'சே' குவேராவின் (அ)கவிதைகள்
பழைய தெருவுக்கு மீண்டும் தயிருடன் கூவிக்கொண்டு வருகின்றான் இடையன்.
கடையக் கடைய வழிந்த வெண்ணெயைத் தொலைத்தபின்னால், முன்னர் மீந்த தயிரை பின்னும் இன்னும் விற்றுப் பிழைக்கும் கலைஞன்.
தெரு தூங்கிக்கிடக்கின்றது கிடையாய்க் கைவிரித்து, அடித்தோய்ந்து தூங்கிய அரவச்சாட்டையாய் செட்டைச்செதில் உதிர்த்தும் உரிக்காமலும்.
மேலே விரலொட்ட வொட்ட விற்றுப் போவான், புளி சொட்டிக் கண் சுருக்கும் தயிர் - இடையன்.
வீதிக்கு, வீட்டுக்கு விலைப்படுகின்றபோதும் இவனுக்கு எண்ணமோ, இன்னும் கடையச் சடைத்துத் தொலைந்த கட்டி வெண்ணெயில்.
காலமும்கூடக் கடவாய் கசியக்கசியப் புசிக்கும் வெண்ணெய்.
2. விரல்கள் மட்டுமே இருக்கின்றவர்களுக்கு, சொற்கள் மட்டுமே தேறும். கோர்த்த சொற்களைக் குலைத்து, குலுக்கிப் போட்டு மீட்டுக் கோர்த்தாலும் சேர்ப்பது விரல்கள் மட்டுமே என்றானால், சொற்கள் மட்டுமே குவியற்கற்களாய்த் தேறும்.
விற்காத சொற்களையும் வினையாத விரல்களையும் வீணுக்கு வைத்துக்கொண்டு விளைமீனுக்காய்க் காத்திருக்கும் கொக்கொன்றினது எனது கால்.
•Last Updated on ••Thursday•, 31 •October• 2019 19:50••
•Read more...•
பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர்
பதிவுகள் மே 2008 இதழ் 101
பெண் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்ல எங்கெங்கும் இரண்டாவது பிரஜையாக, இரண்டாவது பாலினமாக குறைத்து மதிப்பிடப் படுவதும், வாய்ப்புகள் மறுக்கப் படுவதும் உடைமைப் பொருளாக ஆக்கப் படுவதும் அவளது உடல் நுகர்வுப் பொருளாக உருமாறியிருப்பதும் கண்கூடு. இத்தன்மை ஒட்டு மொத்த சமூகத்தின் நாளைய எதிர்கால வளர்ச்சிக்கு எதிரான ஒன்றாகும். எந்த ஒரு மனிதனும் இன,பால் அடையாளங்களினாலோ அல்லது சாதிய , வர்க்க , மத வேறு பாடுகளினாலோ குறைவாக மதிப்பிடப் படுதல் , ஆதிக்க மனோ நிலைக்கு வித்திடுமொன்றாகிப் போகின்றது. ஆதிக்க மனோ நிலை அடிமைத் தனம் உருவாவதற்கு காரணமுமாகின்றது அதுவும் நமது கலாசாரத்திற்குள் இருந்தும் நமது வாழ்வியலில் இருந்தும் பெண் எந்தெந்த இடத்தில் எல்லாம் வேதனைக் குள்ளாக்கப்படுகின்றாள் என்பதை இக்கட்டுரை பேசுகின்றது. காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் என்று பாரதி சொன்னதற்கிணங்க நமக்கு பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணங்களை உணராததையே இயல்பாக மாற்றிக் கொண்டிருப்பதையும் யோசிக்க வேண்டியிருக்கின்றது. சம்பவங்களின் இடமும் சாட்சியங்களின் நிகழ்வும் பிரதேச அரசியலை பேசினாலும் அதன் உணர்வுகள் பிரதேச இன எல்லைகளை கடந்து ஒடுக்கப் படுபவர்களின் அடிமைத் துயரங்களை சொல்லி ஆதிக்க மனோ நிலைக்கெதிரான குரலாக, பொதுமையடையக் கூடும் சுயமிழத்தல் மனிதன் எனும் ஒட்டு மொத்தத்திற்குள் பெண் தன்னை காலம் காலமாக இரண்டறக் கலந்தபடியும் பெண் தன் சுயத்தை இழந்து ஆணுக்கானவளாக வடிவமைக்கப் பட்ட படியும் இருந்திருக்கின்றாள். அவளுக்கான மனித இருப்பு சமூகம் கலாசாரம் , பண்பாடு என்னும் பெயரால் மறுக்கப் பட்ட படியே இருக்கின்றது. காலம் காலமாக முன்னோர்களால் சமூக நல்வாழ்விற்காக வடிவமைக்கப் பட்ட கலாச்சாரங்களும் , பண்பாடும் மாறுகின்ற காலங்களின் போது அதன் மாறுதல்களை மறந்து மறுத்து காலாவதியாகி வெறும் சடங்குகளாக பலநேரங்களில் கடைப் பிடிக்கப் பட்டு வருகின்றது. வெற்றுச் சடங்குகள் சிந்தனையின் திசை மாற்றி மேலும் மேலும் பெண்ணை புதிய மாற்றங்களோடு ஒத்திசைந்து போக முடியாதவளாக உறைய வைத்து விடுகின்றது ஆயிரம் அறிவியல் தொழில் நுட்பங்களின் பின்னரும் சுயாதீனமாக செயல் பட முடியாதவளாக பெண்ணை முடக்கி விடுகின்றது.
•Last Updated on ••Wednesday•, 09 •October• 2019 21:57••
•Read more...•
'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர்
பதிவுகள் , ஏப்ரல் 2008 இதழ் 100 பிரித்தானிய ஈழவர் இலக்கியச்சங்கத்தின் 'பூந்துணர்'!நல்ல கலைஇலக்கியங்களை வளம்படுத்தவெண்ணி கலையார்வம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டதுதான் பிரித்தானிய ஈழவர் இலக்கியச்சங்கம். எழுத்தாளர்களின் ஒருங்கினைப்பினால் மாதாமாதம் இலக்கிய நிகழ்வுகளை நடாத்தி அதன் மூலம்பெறப்பட்ட இலக்கியவடிவங்களை புடம்போட்டு கனகச்சிதமாக ‘பூந்துணர்’ எனும் நூலாக வெளிக்கொணந்துள்ளனர். பலரைச் சொன்னாலும் பேராசிரியர் கோபன் மகாதேவாவின் தொடர்ச்சியான முயற்சியினால் இவ் இலக்கிய வட்டம் தொடர்கிறது. ஈழத்து மட்டுவிலில் 1934 ல் பிறந்த பேராசிரியர் கோபன் மகாதேவா தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் மிக்கவராக இங்கிலாந்திலும் தன் இலக்கிய பயணத்தைத் தொடர்கிறார்;. இவர் ஏற்கனவே ஆறு நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் பன்முகஆற்றல் உள்ளவர். நேரம் தவறாமை என்பது இவரது கொள்கைகளில் ஒன்றாகும்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் யுகசாரதி என்னும் பெயரில் அறியப்பட்ட திரு. எஸ் .கருணானந்தராஜா இவரது பாரதியின் குயில்பாட்டின் தத்துவ மர்மம் எனும் ஆய்வுநூலுக்காக தமிழக ஸ்ரீராம் நிறுவனத்தினரால் ‘பாரதி இலக்கிய செல்வர்’ எனும் பட்டம் பெற்றவர். நடிப்பிலும் ஆற்றல் மிக்க இவர் ஏற்கனவே நான்கு நூல்களை வெளியிட்டவர்.திரு.க. சிவானந்தன் அவர்கள் தமிழ் ஈழத்து யாழ்ப்பாணத்து நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பிரித்தானியாவில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார். பேராசிரியர் கைலாசபதி மீது அபிமானம் கொண்டவர். சிறந்த பேச்சாளர்… விமர்சகர்…. தமிழை இலாவகப்படுத்துவதில் வல்லவர். இவரது ஈழத்தாயின் சபதம் இன்றும் பலராலும் பேசப்படுகிறது. திரு.க. சிவானந்தன் அவர்கள் தமிழ்ஈழத்து யாழ்ப்பாணத்து நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பிரித்தானியாவில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார். பேராசிரியர் கைலாசபதி மீது அபிமானம் கொண்டவர். சிறந்த பேச்சாளர்… விமர்சகர்…. தமிழை இலாவகப்படுத்துவதில் வல்லவர்.
•Last Updated on ••Wednesday•, 09 •October• 2019 09:00••
•Read more...•
'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர்
பதிவுகள் ஏப்ரில் 2008 இதழ் 100 ஹவானாவின் வீதிகளில் நடக்கும் பொழுது இரண்டாம் உலக போரின் அழிவுகளில் இருந்து இந்த நகரம் இன்னமும் மீளவில்லை என்ற எண்ணமே தோன்றும். அதிகாலை அத்திலாந்திக் கரையோரம் நடந்த பொழுது. என்னுடன் நடந்து வந்தவருடன் கதைக்க ஆரம்பித்தேன். அவரது உரையாடல் முதலில் சில ஆச்சரியங்களை எனக்கு ஏற்படுத்தியது. ஆங்கிலம் சரளமாக கதைத்தார். அடுத்து அவர் ஓர் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் என்பது. மூன்றாவது ஹவானாவின் அதி உயர் கட்டிடம் ஓர் வைத்தியசாலை என்பது. கியுபாவில் ஊதியம் ஓரளவிற்கு அனைவருக்கும் ஒரே தளத்தில் வைத்திருக்கப்படும். இதனால் தொழில் நிலை மாற்றங்கள்- ஏற்ற இறக்கங்கள் குறைவு. ஏங்கு சென்றாலும் சேகுவராவின் படங்களை காணலாம். ஹவானாவிற்கு செல்வதற்கு முன்பாக ஜமெக்காவுக்கும் சென்றுள்ளேன். பாழடைந்த தண்டவாளங்கள். எங்கு பார்ப்பினும், உல்லாச விடுதிகள். அமெரிக்க டொலரைத்தான் எங்கும் பயன்படுத்த வேண்டும். அதி உயர் வளங்கள் கொண்ட ஜமேக்கா தீவு, இன்று அமெரிக்கர்களின் அந்தப்புர உல்லாச விடுதியாகிவிட்டது. அமெரிக்காவிற்கு மிக அருகில் உள்ள (90 கி.மீ) கியுபா தன்னிறைவுள்ள நாடாக மாறிவிட்டது. என்னுடன் நடந்து வந்த வைத்தியர் கூறிய கூற்று “இன்னமும் நாலு சந்ததிகளுக்கு தேவையான வசதிகள் இப்பொழுதே ஏற்படுத்தியாகிவிட்டது “ என்பதேயாகும்.
கியுபா சென்ற பல நண்பர்கள் கியுபா மிகவும் ஏழ்மையான நாடு எனக்கூறுவார்கள். அமெரிக்கா போன்ற நாடுகள் வெளிப்பூச்சுக்கு, வான் உயர் கட்டிடங்கள், ராஜ, ராஜ சோழக்காலத்து கட்டிடங்கள், அந்தப்புரங்கள், புஷ்பக விமானங்கள். உள்ளே சென்று மிச்சிகனின் அந்தப்புரங்களையும், சிக்காகோவின் வெளி வட்டங்களையும் பார்ப்போருக்கு அமெரிக்கர் பலர் வறுமையால் வாடுவது தெரியும். உடுக்க உடை, உண்ண உணவின்றி, “தனியொருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினையே அழித்து விடுவோம்” எனக் கூறி, ஈராக்கிய மக்கள் மீது குண்டு மழை பொழியும், வெற்றி பெறாத ஜனாதிபதிகளின் பேச்சுகளைக் கேட்டு பேஸ் போல் விளையாடித் திரியும் மக்களது அவலங்கள் தெரியும்.
அமெரிக்காவிற்கு அருகில் தொடாச்சியான, பயமுறுத்தல்களை சந்தித்து, தொடர்ந்து 12 அமெரிக்க ஜனாதிபதிகளால் பயமுறுத்தப்பட்டு. தலை நிமிர்ந்து வாழும் நாடு கியுபா. சோவியத் யூனியன் போன்ற பலம், பொருந்திய நாடுகளே, அமெரிக்காவிற்கு எதிரான போரில் வீழ்ச்சி கண்ட பொழுதும், கியுபாவை அமெரிக்காவால் வீழ்த்த முடியவில்லை. வியட்நாமில் தோல்வி கண்டுவிட்டு, ரம்போ போன்ற படங்களிற்கூடாக ஆத்ம திருப்திக் காணும், அமெரிக்காவால். திரையில் கூட கனவு காணமுடியவில்லை. கியுபாவின் இந்த ஏற்ற வாழ்விற்கு காரணகர்த்தாவிற்குள் ஒருவரான பிடல் கஸ்ரோவைப்பற்றி, அமெரிக்காவின் பிரபல இயக்குநர்களுள் ஒருவரான ஒலிவர் ஸ்ரோன், ஹவானா சென்று இரண்டு விவரணத்திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டார். இவற்றை அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்ப மறுத்து விட்டன. வழமை போல் சி.பி.சி தஞ்சம் கொடுத்து ஒளிபரப்பியது. இதனை பல அமெரிக்கர்களும் கண்டுகளித்தனர்.
•Last Updated on ••Wednesday•, 09 •October• 2019 02:20••
•Read more...•
'பதிவுகளின் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
பதிவுகள் தை 2009 இதழ் 109 அமெரிக்க கறுப்பின விடுதலைக்காக உழைத்த மல்கம் எக்ஸ் ஒரு தடவை சொல்லியிருந்தார் “ முதுகில் ஒன்பது அங்குலங்களுக்குக் கத்தியைப் பாய்ச்சிவிட்டுப் பின்னர் ஆறு அங்குலங்களை வெளியே இழுத்துக் கொள்வதை முன்னேற்றம் என்று சொல்ல முடியாது” என்று. ஒபாமாவின்-அடுத்த அமெரிக்க ஜனாதிபதிக்கான-தெரிவை நான் இப்படித்தான் பார்க்கிறேன். புஷ் ஆட்சியின் போது ஜனநாயக உலகின் மார்பில் செருகப்பட்ட கத்தியை மக்கெயினைத் தோற்கடித்ததன் மூலம் அமெரிக்க மக்கள் ஆறு அங்குலங்களால் இழுத்திருக்கிறார்கள். ஒபாமாவின் தெரிவு இக் கத்தி இழுப்பின் ஒரு பக்க விளைவே.
அதிசயமேதான். இந்த நூற்றாண்டில் இது நடை பெற்றிருக்க முடியாதுதான், ஆனால் நடைபெற்றிருக்கிறது. மாற்றம் வேண்டுமென்றார், மக்கள் கொடுத்திருக்கிறார்கள்-ஒரு இனத்தால், மதத்தால், நிறத்தால் கலவை செய்யப்பட்ட ஒரு மனிதரிடம். பராக் ஹுசெய்ன் ஒபாமா கலவை செய்யப்பட்ட பிறவி சரி ஆனால் கொள்கைகளாற் சலவை செய்யப்பட்டவரா? அவகாசம் வேண்டும்.
சரி பாதியாகப் பிளந்த ஜனநாயக அமெரிக்காவின் உதரத்திலிருந்து தோன்றிய இந்த மாயக் குழந்தையின் பிறப்பு இயற்கையாயின் அது நிச்சயமான மாற்றமேதான். ஆனால் பிரசவத்தின் பின்னர் உறவு முறை சொல்லிக்கொண்டு முண்டியடித்துக்கொண்டு முகாமிட்டிருக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது குழந்தை பரிசோதனைக் குழாயில் உருவாக்கப்பட்டதா அல்லது புஷ் குடும்பத்தின் ‘குளோனிங்’ வாரிசா என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒபாமாவின் தெரிவிற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அமெரிக்காவின் பொருளாதாரக் குழப்பநிலை, போட்டியாளரின் தகைமை, ஒபாமாவின் திறமை இவற்றுக்கு மேலாக அதிர்ஷ்டம். என்னைப் பொறுத்த வரையில் ‘எல்லாம் அவர்கள் செயல்’ என்பதே மறுமொழி.
‘தக்கன வாழும்’ என்பது பரிணாமக் கொள்கை. இன்றய ஒரு துருவ உலகில் நவ-பழைமைவதிகளின் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும்போது உலகை அழிக்க வல்ல சகல வல்லமை பொருந்திய அணுவாயுத வல்லரசின் ஆட்சியை ஒரு கறுப்பரிடம் கையளிக்க உலகம் தயாராகவிருந்திருக்குமா? ‘அமெரிக்காவை ஆழ்பவர் உலகை ஆழ்பவர். அதற்குத் தேவையான அனுபவம் ஒபாமாவிடம் இல்லை’ என்று தேர்தலுக்கு முன்னர் ஒபாமாவின் எதிர் முகாம் கர்ச்சித்தது. அதற்கு ஒரு பத்தி எழுத்தாளர் பதில் எழுதியிருந்தார் ‘ அமெரிக்காவின் கொள்கைகள் ஜெருசலெம் நகரில் வகுக்கப்படும்போது அனுபவம் வாய்ந்த ஜனாதிபதிக்கான தேவை என்ன இருக்கிறது?’ என்று. ‘அவர்கள்’ செயல் எல்லாம் புரிந்தவராக இருந்திருக்க வேண்டும் அந்த எழுத்தாளர்!
•Last Updated on ••Sunday•, 15 •September• 2019 09:35••
•Read more...•
'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
பதிவுகள் ஆகஸ்ட் 2005 இதழ் 68 மன வெளிப்பாடுகளுக்கான ஒரு உயரிய சாதனம் கவிதை மொழியாகும் . கவிதை செய்தல் என்பது கலை . கலை அழகின் செறிவு , கருத்தின் பதிவு : மகிழ்ச்சியின் உறைவிடம் ப:ண்பாட்டின் , வளர்ந்த நாகரிகத்தின் சின்னம் . இந்தக் கலையின் பிறப்பிருப்பிடம் இயற்கை இந்த இயற்கை முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிற கொடைக்கானல் மலைத்தொடரில் அமைந்திருக்கும் கானல் காட்டில் கவிதைகளும் , கவிகளும் ஜுன் 18 , 19 தேதிகளில் முகாமிட்டிருந்தனர் . கல் கற்பிக்கிறது சிற்பிக்கு . வர்ணங்கள் ஓவியனுக்கு என சொல்லிக் கொண்டு போகும்போது சிற்பம் , ஓவியம் , இசை , நடனம் , பஞ்சபூதம் , மனித தேக விஞ்ஞானம் , மரம் , செடி கொடி , சின்ன ரீங்காரத்திலிருந்து நுட்பமான பறவை ஒலிகள் , உயர்ந்த மரங்கள் வண்ணப்பூக்கள் , முட்புதர்கள் என இயற்கை சார்ந்த அத்தனையும் கவிஞனுக்கு ஏதாவதொன்றை கற்பித்துக்கொண்டேயிருக்கிறது . பலசமயம் இயற்கையின் சமீபம் கிட்டாமல் , ஒரு அறைக்குள் முடங்கிக் கொண்டு , ஜன்னல் வழியே தவணை முறையில் இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்கு நல்லதொரு செறிவான , மாறுபட்ட , சந்தோஷமான அனுபவமாக அமைந்தது இந்த இரண்டு நாள் மூகாம் .
18 ஆம் தேதி காலை பட்டிவீரன்பட்டியில் நடந்த காலை கூட்டத்தில் , அந்தப் பகுதியைச் சார்ந்த கவிஞர்களின் கவிதை வாசிப்பும் , தொடர்ந்து திரு. மாலன் ,திரு. பொன்னீலன் அவர்களின் உரையும் இடம் பெற்றது . பகல் உணவிற்கு, ஒரு வேன் மற்றும் இரண்டு கார்களில் கானல் காடு பயணம் . பகல் உணவை முடித்துக் கொண்டு ,“அறிதலும் ஆக்கமும்” என்ற அறிமுக , மற்றும் கவிதை பற்றிய விவாதத்திற்கான அமர்வை எழுத்தாளர் திரு . மாலன் தொடங்கிவைத்தார் . கவிஞர்கள் சுய அறிமுகம் செய்து கொண்டு கவிதைகள் { இரண்டு மட்டும் }வாசிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் . கவிதை வாசிப்பில் பங்கு பெற்றவர்கள் வைகை செல்வி , கிருஷாங்கிணி , திலகபாமா , தேவேந்திர பூபதி , பா . வெங்கடேசன் ,நித்திலன் , மதுமிதா , இந்திரன் , பா. சத்திய மோகன் , ஆர் . வெங்கடேஷ் , மாலன், ரெங்கநாயகி . அறிமுக உரையுடன் நிறுத்திக்கொண்டார் பிரம்மராஜன் . திரு . பழமலய் எழுதிய கவிதையை அவர் மாணவர் ஒருவர் ஒப்பித்தார் { பாராமல் } என்ன காரணமோ வாசித்த கவிதைகள் விவாதத்திற்கு எடுத்துச் செல்லப்படவில்லை.
கவிதை வாசிப்புக்குப்பின் திரு . மாலன் 'கவிதை செய்தல் / கவிஞனின் பார்வை' என்ற பொதுவான அம்சங்களோடு விவாதத்தை தொடங்கிவைத்தார் . மரபிலிருந்து விலகி ,நகர்ந்து கொண்டிருக்கும் கவிதை பற்றியும் , புதுக்கவிதை தனக்கென்று ஏதாவதொரு இலக்கணத்தைக் கொண்டிருக்கிறதா என்பது பற்றியும் பேசினார்கள் . தற்போது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கவிதைகளை “நவீன கவிதை “ என்றே குறிப்பிடவேண்டும் என்றார் பிரம்மராஜன் . இந்த நவீன கவிதைபற்றிய விவாதம் “private poetry & public poetry” என்று தொடர்ந்தது . private poetry என்பதை கடுமையாக சாடி அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்துப் பேசினார் கவிஞர் பழமலய் . தற்போதைய கவிதைகள் private poetry என்று சொல்லும்படியாக , அக வயக் கவிதைகளாக இருக்கின்றன . தன் விருப்பம் , தன் சோகம் , தன் கோபம் என்று கவிஞன் தன்னைப்பற்றிய பிரஸ்தாபிக்கும் private poetry யை விட , சமுதாயப் பிரக்ஞை கொண்ட public poetry {?} மேலானது என்ற ரீதியில் பேசினார் பழமலய் . இதற்கு எதிர்வினையாக தன்வயப்பட்டு கவிதை செய்யும் அத்தனை கவிஞனும் கவிஞனின் கனவு திரும்பத் திரும்ப கவிதை வழியாகச் சொல்லப்படும்போது சுற்றி நடக்கும் தவறுகள் நின்று போகவும் வாய்ப்பு உண்டு . கிட்டத்தட்ட கவிஞன் ஒரு influence ஆகச் செயல் படுகின்றான் என்ற ரீதியில் பேசியவர் , கவிஞனின் பிரக்னை , ஆதர்சம் எல்லாமே உலகம் முழுவதும் இனிமையும் அமைதியும் பரவ வேண்டும் என்ற கனவு மட்டுமே இந்தக் கனவு காண்பது , கவிதை வழி அதை express செய்வதுதான் கவிஞனின் வேலை என்று ஏன் இதை நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் பேசினார் . அப்போதுதான் கவிஞர்களைச் சுற்றியிருக்கும் “ஒளிவட்டம்” பற்றிய பேச்சு மறுபடியும் எழுந்தது . {தொடக்கத்தில் திரு . மாலன் குறிப்பிட்ட ஒளிவட்டம் மொழியின் உயரிய வெளிப்பாடன கவிதையாத்தலை செய்து வரும் , “இருண்மைத்தன்மை” என்ற வாசகக் கருத்துக்கு பதிலாகவே இந்த “ஒளிவட்டம் “ என்ற அம்சத்தை நாம் எடுத்துக்கொள்ளக்கூடும் : வித்வத்கர்வமே அந்த ஒளிவட்டம் மற்றும் அதில் தவறில்லை என்பதான விவாதம் தொடர்ந்தது . கவிஞர் , மதுமிதாவிற்கு இந்த “ஒளிவட்டம்” பற்றிய ஐயம் கடைசிவரை இருந்துகொண்டே இருந்தது . மறுபடியும் , மரபு மீறல் மட்டுமே புதுக்கவிதையாகுமா என்ற விவாதம் மேற்கொள்ளப்பட்டது (. ஒரு 'இன்ஃபார்மல்' முகாம் என்பதால் அட்டவணைப்படியான விவாதங்களோ , கலந்திரையாடலோ நடக்க வாய்ப்பில்லை } வெறும் மரபு மீறல் கவிதையாத்தலில் இருக்க முடியாது : கூடாது . மரபுடைத்தல் என்பது மற்ற டிஸிப்ளினில் {அதாவது இசை , ஓவியம் என்ற மற்ற கலைகளில் நடக்கும் பொழுதுதான் (நடந்தாலொழிய) இலக்கியத்தில் , குறிப்பாக கவிதையில் , :வரலாறு ரீதியான “ மரபுடைத்தல் சாத்தியமாகாது என்று குறிப்பிட்டார் பிரம்மராஜன் .
•Last Updated on ••Sunday•, 15 •September• 2019 09:17••
•Read more...•
'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர்
-பதிவுகள் மே 2005 இதழ் 65 வாழ்வில் என்றும் மாறாதிருப்பது மாறுதலே என்றொரு சொற்றொடர் உண்டு. தாயாண்மை சமுதாயம் தொடங்கி தாயின் பின்னால் சமூகம் பயணிக்கத் துவங்கிய காலம் தொட்டு இன்று வரை எத்தனை மாறுதல்கள் வாழ்வியலில், கலாசாரத்தில், கொண்டிருக்கின்ற கருத்தியலில். ஆனால் மாறுகின்ற எல்லாவற்றிலும் பின்னும் மாறாமல் இருப்பது வாழ்வதற்கான ஆர்வம் மட்டுமே. அந்த வாழ்தலுக்கான ஆர்வமே கவிதையென்று எனக்குத் தோன்றுகின்றது. இந்த சமூகத்தில் உருவாக்கப் பட்டிருக்கின்ற வாழ்க்கை என்பது காலத்திற்கேற்ப பல்வேறு கருத்தியல்கள் விழுமியங்கள் இவற்றால் கட்டமைக்கப் படுகின்றது. மாறுகின்ற காலங்களில் கட்டமைக்கப் பட்ட நமது பலங்கள்,.., பலவீனங்களாக உருமாறும், காலாவதியாகும். அதை அடையாளம் கண்டு புணரமைப்பது காலத்தின் கட்டாயமாக சமூக பிரக்ஞை உள்ளவர்கள் உள்ளத்தில் விதையாக விழுகின்றது. அப்படியான வாழ்க்கை , இயல்பாய் இருக்கின்ற உணர்வுகளின் பேரில் முரண்படுகின்ற போது மனிதனது சிந்தனைகள் கேள்விகள் எழுப்புகின்றன. பொருளை , வணிகமயமாக்களை அடிப்படையாகக் கொண்ட இன்றைய வாழ்வில் உருவாக்கப்பட்ட வாழ்வின் பிண்ணணியில் நன்மை, தீமை , இருள் ஒளி என்று எல்லாமே விரவிக் கிடக்க நன்மைகளை இருத்த வைக்க ஒளியோடு வாழ்ந்து விட என்று இருவேறு முரண்பாடுகளின் பிண்ணணியில் நிகழும் போராட்டங்கள் உணர்வுகளுக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
அப்படிப்பட்ட உணர்வுகள் எழுப்பும் கேள்விகள் விசாரணைகள் பதிவுகள் , கட்டுரைகளக, செய்தியாக கதைகளாக நாவல்களாக வரலாம் . ஆனால் அவற்றின் சாராம்சம் மனதுக்குள் தேங்கிக் கிடந்து இதுதான் காரணம், இதுதான் தேவை என்று ஒரு மையப் புள்ளியை சுற்றிக் கடைய எங்களுக்குக் கிடைக்கின்ற தேவாம்ரிதமே கவிதை என்று எனக்குத் தோன்றுகின்றது.
அக உணர்வுப் பாடல்களிலிருந்தும் பிரிக்க முடியாது அரசியலையும் சமூகத்தையும் பிரதி பலித்து , கவிதையை காலத்தின் பதிவாக தந்து விட்டுப் போன சங்கப் பாடல்கள், கணிகையர் குல வழக்கத்திருந்து மீண்டு வர கேள்விகளும் , எத்தனையோ காலங்களின் பின்னும் காலாவதியாகாத கண்ணகி மணி மேகலை பாத்திரங்களை தந்து போன சிலம்பும், இசையை அடிப்படையாக கொண்டிருந்த கவிதை விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் பண்டிதர்க்கான சொத்தாக இருந்த இடமிருந்து பாமரனை வந்து சேர்ந்தடையச் செய்த பாரதி கவிதைகளும், பின்னாளில், விடுதலைக்குப் பின்னான வாழ்வியலில், மேலைத் தேயப் போக்குகள் உள் வந்த போதும், சங்க இலக்கியத்தின் மரபுத் தொடர்ச்சியே புதுக் கவிதை என அதற்கொரு அங்கீகாரம் தேடித் தந்த பிச்சமூர்த்தியின் கவிதைகள் இப்படியான ஒரு கவிதை பாரம்பரியத்திற்கு பிறகு, இன்று உத்திகளை மட்டுமல்லாது மேலைத் தேயநாடுகள் உபயோகப் படுத்தி, தேயப் பண்ணி தூர எறிந்த விடயங்கள் உள்ளே வர கவிதை பற்றி பேசி விட வேண்டிய சூழல் , விமரிசகனுக்கும், படைப்பாளிக்கும் நேர்ந்திருக்கின்றது.
என் வரையில் வெகு இயல்பாகச் சொல்லப் போனால் ஏற்கனவே இருக்கின்ற ஒன்றோடு புதிதாய் வாழ்வின் நிர்பந்தங்களின் பிண்ணணியில் வந்து நிற்கும் என் சிந்தனைகள் , முரண்படத் துவங்கும் இடத்தில் என் கவிதைபிறக்கின்றது என்றே உணர்கின்றேன்.
•Last Updated on ••Wednesday•, 09 •October• 2019 21:51••
•Read more...•
'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
பதிவுகள் பெப்ருவரி 2008 இதழ் 98 (2006, அக்டோபர் 13,14 களில் பாரீஸில் நடந்த 26வது பெண்கள் சந்திப்பில் வாசித்த கட்டுரை. அ. மங்கையின் தொகுப்பில் , 'மாற்று' பதிப்பக வெளியீடாக வெளியான 'பெயல் மணக்கும் பொழுது' ஈழப் பெண் கவிஞர்கள் கவிதைகள் நூல் பற்றியது.)
1986ல் வெளிவந்த 'சொல்லாத சேதிகள்' வெளிவந்தப் பிறகு தனித்தனியாகவும் கூட்டு முயற்சியாகவும் பல்வேறு தொகுப்புகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. 80களில் ஈழத்தில் தொடங்கிய ஆயுதப்போராட்டம், தமிழ்த் தேசிய இயக்கத்தின் எழுச்சி மாணவியரிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தின. சில கூட்டு முயற்சிகளும் அமைப்புகளும் தோற்றம் கண்டன. பெண் விடுதலை, தாகம், தோழி, விளக்கு, செந்தழல், சுதந்திரப்பறவைகள், நங்கை, இசுலாமிய பெண்கள் மத்தியிலிருந்து வெளிவந்த மருதாணி ..போன்ற பத்திரிகைகள் தான் பெண் எழுத்துகளுக்கு கவிதைகளுக்கு மிகப்பெரிய தளம் அமைத்துக் கொடுத்தன.
பேராசிரியை அ.மங்கை அவர்கள் ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து "பெயல் மணக்கும் பொழுது" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். அத்தொகுப்பிலிருக்கும் கவிதைகளை முன்வைத்து சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
யுத்த கால சூழலில் ஆண்களின் பங்களிப்பு பெண்களின் பங்களிப்பை விட அதிகம்தான். இதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்தச் சூழலின் பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிகமாக உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகளை விளைவித்தது. அந்த வலியை உணரும் போதுதான் காலம் காலமாய் யுத்தக்களத்தில் பெண்ணும் பெண்ணின் உடலும் எதிரிகளின் வன்மம் தீர்க்கும் ஒரு பொருளாக இருப்பதைத் தலையில் அடிக்கிற மாதிரி உணர்த்தியது.சண்டை நடக்கிறது, வெட்டு, குத்து, ஒருவர் பிணத்தின் மீது ஒருவர் விழுந்து சாகட்டும், ஏன் பெண்ணின் உடலை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க வேண்டும்? ஆடு, மாடுகளைக் கவர்ந்து செல்லும்போது அந்தப்புரத்து பெண்களையும் எதிரி நாட்டு அரசன் தன் அடிமைப்பெண்களாக சிறை எடுத்துச் சென்றான் என்று வரலாறு எழுதப்பட்டிருக்கிறதே.. இந்த இடத்தில் அந்தப்புரத்து பெண்களை அடிமைகளாக சிறைப்பிடித்து சென்றான் என்று பொய்த் தோற்றம் தரும் வார்த்தைகளில் எழுதப்பட்டிருந்தாலும் நம்மால் புரிந்து கொள்ள முடியும், அந்தப் பெண்களைத் தங்கள் பாலியல் இச்சைகளைத் தீர்த்து கொள்ளும் பொருட்டு, சிறை எடுத்துச் செல்லப்பட்டதை அறிகிறோம். புராண இதிகாசக் காலம் முதற்கொண்டு போர்க்காலத்தில் பெண் அனுபவிக்கும் வலி அவளே அவளுக்கானதாக அமைந்துவிட்டது. இந்தச் சுழலில் தான் போர்மேகங்கள் சூழ்ந்த ஈழத்து மண்ணில் எழுதப்பட்ட பெண் கவிஞர்களின் எழுத்துகள் தனித்து கவனம் பெறுகின்றன. அவர்களின் பெண்ணியம், அமைதிக்கான கருத்துகள் யாவுமே மேற்கத்திய இசங்களின் தாக்கமின்றி சுயம்புவாக இருப்பதன் அடிப்படைக் காரணம் இதாகத் தான் இருக்க முடியும்.
•Last Updated on ••Sunday•, 15 •September• 2019 09:17••
•Read more...•
'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
பதிவுகள் மார்ச் 2007 இதழ் 87 இலங்கையில் தடை செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய சிங்கள திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் அசோக கங்கம. இலங்கையில் தடை செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய சிங்கள திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் அசோக கங்கம. ஏனையோர் பிரசன்ன விதானக, விமுக்தி ஜயசுந்தர ஆகியோர். இவாகளது படங்களின் தடைக்கு எதிராக, மூத்த திரைப்பட இயக்குனரும், சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றவருமான லெஸடர் ஜேம்ஸ் பீரிஸ் கருத்து தெரிவித்தபொழுது, இவ்வாறான தடைகள் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்துக்கு நாட்டை இட்டு செல்கின்றமைக்கான அறிகுறியாகும் என தெரிவித்துள்ளார். The Chairman of the National Film Corporation (NFC) Sunil S. Sirisena (who is also a secretary to the Defence Ministry) கருத்து தெரிவிக்கையில் படைப்பாளிகளுக்கு எல்லைகள் வகுப்பது தரமான படங்கள் வெளிவருவதை தடைசெய்யும் என்றார். தனது 'Handa Kaluwara’ படத்துக்கு எதிரான தடைக்கு உயர் நீதி மனறம் சென்றவரும் சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றவருமான பிரசன்ன விதானக கருத்து தெரிவிக்கையில் அரசியல்வாதிகள், தங்களின் சப்பாத்துக்களின் கீழ், படைப்பாளிகள் தமது கருத்துக்களை, கொள்கைகளை போட்டுவிடவேணடும் என நினைக்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் படைப்பாளிகள் அடிபணியப் கூடாது. கிட்லர், ஸ்ராலினுக்கு எதிராக நிமிர்ந்து நின்ற படைப்பாளிகளை இன்றும் உலகம் மதிக்கின்றது என்றார். ஆனாலும் பெரும்பாலான வெகுசனத் தொடர்பு சாதனங்கள், இத்தடையை ஆதரித்து மௌனம் தெரிவித்தன. இவற்றையும் மீறி இந்த படைப்பாளிகள் தொடர்ந்து படங்களை தயாரிக்கின்றனர்.
இதில் அசோக கங்கமவும் ஒருவர். இவர் இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமாக முதலில் This is my moon (இது என் நிலா) என்ற படத்தையும், பின்னர் சுனாமி பற்றிய கிழக்கிலங்கையை மையமாகக் கொண்ட 'Neganahira Weralen Asena' or 'The East is Calling' என்ற தொலைக் காட்சி தொடரையும் இயக்கியுள்ளார்இதில் அசோக கங்கமவும் ஒருவர். இவர் இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமாக முதலில் This is my moon (இது என் நிலா) என்ற படத்தையும், பின்னர் சுனாமி பற்றிய கிழக்கிலங்கையை மையமாகக் கொண்ட 'Neganahira Weralen Asena' or 'The East is Calling' என்ற தொலைக் காட்சி தொடரையும் இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து 'Me Paren Enna' (இவ்வழியால் வாருங்கள்- Take This Road) என்ற தொலைக் காட்சி தொடரையும் இயக்கியுள்ளார். இந்த தொடரைப்பற்றி பார்ப்பதற்கு முன்னர், இவர் தமிழ் தேசியம் பற்றி தெரிவித்த கருத்துக்களை பார்ப்பது அவசியம். அவற்றில் சில:
•Last Updated on ••Wednesday•, 09 •October• 2019 01:59••
•Read more...•
'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102
ஊரை விழிகளால் அள்ளி ஞாபகப்பெட்டகத்துள் பூட்டிவைக்க வேண்டியிருக்கிறது. அந்நிய நிலங்களில் விழுந்து காயப்படும்போது மருந்தாகப் பூசிக்கொண்டு மீண்டுமொரு பொய்மிடுக்கில் உலவ அது உதவலாம். சில நண்பர்களைப் போல நாடு,இனம்,மொழி இன்னபிற கரைதல்களை அறுத்தெறிந்து விட்டேற்றியாகும் 'பெரும்போக்கு' மனம் இன்னமும் கூடவில்லை. அறைச்சுவர் தடவி, வேம்பின் பச்சையை விழிநிரப்பி, பூனைக்குட்டிகளின் கால்மிருதில் யாருமறியாதபடி முத்தமிட்டு விடைபெற்றேன். பேரறிவாளர்கள் இந்நெகிழ்வை பெண்ணியல்பு எனக்கூடும். பெருநகருக்கேயுரித்தான பைத்தியக்காரப் பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்த கொழும்பில் நுழையும்போது மகிழ்ச்சியாகத்தானிருந்தது. தேவைகளின் குரல்களால் ஓயாமல் அழைத்துக்கொண்டேயிருக்கும் குடும்பம் அற்ற 'தனியறை நாட்கள்' என்னளவில் கொண்டாடத்தக்கன. மடிக்கணனி, சில புத்தகங்கள், இசைத்தட்டுக்கள், கடலோரம் மாலை நடை இவை போதும் தனியறை நிரப்புதற்கு. கனடா கடவுச்சீட்டிற்கு இந்திய விசா தர ஒரு வாரம் வேண்டுமென்றது ஒருவகையில் நல்லதாயிற்று.
இரண்டு நாட்கள் இனிதே கழிந்தபின் உண்டியல்காரர் வடிவில் வந்தது வினை. "இந்த அறையில் தனியே இருக்கிறீர்களா?"புருவங்களை உயர்த்திக் கேட்டார். ஆமென்றேன். "இப்படியான இடங்களில் தனியே இருப்பது பிழை. தேவையற்ற பிரச்சனை வரும்"என்றார். நான் தங்கியிருந்தது யாழ்ப்பாணத்தவர் ஒருவரின் - ஒரு நட்சத்திர குறியும் அற்ற விடுதியொன்றில். 2001ஆம் ஆண்டிலிருந்து கொழும்பு வரும்போதெல்லாம் அதுவே என் தங்ககமாயிருந்தது. விடுதிப் பையன்கள் கோழிப்பார்சல் சொல்லியனுப்பினால் கூடவே பழங்களும் வாங்கிவருவார்கள். அடிக்கடி படுக்கை விரிப்பு மாற்றி, என் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து பெரிய குவளையில் பிரத்தியேகமாகத் தேநீர் தந்து 'ஆதரவாக'க் கவனித்துக்கொள்வார்கள். அதற்காக நான் சில நூறு ரூபாய்களை உவந்தளித்திருந்தேன் எனச் சொல்ல வேண்டியதில்லை. உண்டியல்காரர் போனபிறகு பயம் ஒரு குளவியைப் போல அறையினுள் சொய்யிட்டுக்கொண்டிருந்தது. அதற்குத் துணையாக அறையின் வசதிக்குறைவு தன்னைப் புதுப்பித்துக்கொண்டு கண்ணெதிரில் நின்றது. மேலும், அந்தத் தெருமுனையில் நிற்குமொரு ஆட்டோக்காரன் என்னை ஏற்றிக்கொண்டு போனபோது தனது சகாவை அவசரமாக வரும்படி அழைத்திருந்தான். நான் கைப்பையை இறுக்கிக்கொண்டு ஆட்டோவை சடுதியாக நிறுத்தி போகுமிடத்திற்கு முன்னதாகவே இறங்கிவிட்டேன். ஒன்றைச் செய்ய முடிவெடுத்துவிட்டால், அதனை வழிமொழியும் காரணங்களைக் கற்பித்துக்கொள்வதொன்றும் சிரமமில்லை.மறுநாள் காலை நான்கு நட்சத்திர விடுதியொன்றின் ஆளை அமிழ்த்தும் கட்டிலின் மென்மையை வியந்தபடி படுத்திருந்தேன். நேர்த்தியாக தரை ஓடு பதிக்கப்பட்டிருந்த விசாலமான குளியலறைப் பீங்கான் மீதமர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பதற்கான ஒருநாள் கட்டணம் 6,800ரூபாய்கள். குற்றவுணர்வைத் தூண்டும் தொகைதான். எனினும், 'உயிருக்கு விலையில்லை' என்ற மகாதத்துவத்தின் முன் யாதொன்றும் செய்வதற்கில்லை.
இப்போது பிரச்சனைப் பூதம் இல்லாத யன்னலிலிருந்து கிளம்பியது. நான் இருந்த 308இலக்க அறையிலிருந்து அலையெறியும் கடலைப் பார்க்க முடியாது. குறைந்தபட்சம் தெருவைக்கூடப் பார்க்க முடியாது. எஞ்சியிருந்த இடத்தை என்ன செய்வதென்றறியாமல் கட்டிய அறைபோலிருந்தது அது. என் வயிற்றெரிச்சலைக் கிண்டுவதற்கென்றே ஏப்ரலிலும் அதிசயமாக மழை வேறு பெய்துகொண்டிருந்தது. அறையை மாற்றித் தரும்படி கேட்டேன். விடுதி நிறைந்திருப்பதால் இல்லையென்றார்கள். யன்னலற்ற அறையொன்றினுள் குருட்டு வெளவாலைப்போலமுட்டிமோதிக்கொண்டிருப்பது 'வாராமல் வந்த மாமணியாகிய'ஓய்விற்கு இழைக்கும் துரோகமெனப்பட்டது.
•Last Updated on ••Friday•, 13 •September• 2019 08:46••
•Read more...•
'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
பதிவுகள் ஏப்ரல் 2007 இதழ் 88
கருமையத்தின் 3வது ஆண்டு நாடக நிகழ்வுகள் மார்ச் 31 சனிக்கிழமையே பார்க்கக் கிடைத்தன. பெண்கள் பயிற்சிப் பட்டறையிலிருந்து மூன்று நாடகங்களும் செழியன், தர்சன் ஆகியோரின் இரு நாடகங்களும் சுதர்ஷனின் நாட்டிய நாடகமும் நிகழ்ந்தன. ஏறக்குறைய இரண்டரை மணித்தியாலங்கள். பெண்கள் பட்டறையின் நாடகங்கள் சிறியவை என்றாலும் தாம் சொல்ல வந்த செய்தியை சுருக்கமாக நடித்துக் காட்டி விடை பெற்றன. முதலாவது நாடகம், இன்னும் எங்கள் காதில். தனா பாபுவின் ஆக்கம், நெறியாள்கை. தமிழீழப் போராட்டத்தை ஆதரிக்கும் புலம்பெயர்ந்தவர்கள் சிலரின் இரட்டை வேடத்தையும் போலித்தனத்தையும் புட்டுக் காட்டியது இந்நாடகம். யுத்தத்தில் இறக்கும் தம் உறவினரின் பெயரை வைத்துத் தாம் ஏதோ செய்ததாகப் பீத்திப் பெருமை கொள்ளும் ஒரு குடும்பத்தின் கதை இது. தன் மகனை யுத்தத்திற்கு அனுப்ப நொண்டிச் சாக்குக் காட்டுவதும், இயக்கத்தில் இருந்து வெளியேறிய பெண் என்றவுடன் திருமணம் செய்ய அஞ்சி ஒதுங்கும் மகனையும் பெற்றோரையும் காட்டும் கதை இது. தம் கருத்தைச் சுருக்கமாகவே வெளிப்படுத்தி எம் மக்களின் மனங்களை போலித்தனங்களை விமர்சித்து விட்டு, தீர்ப்புக் கூறாமல் விலகிச் செல்கிறது நாடகம். அந்தளவில் அது வெற்றியே.
தாலாட்டு நாடகம் இரண்டாவது. பெண்களின் நுண் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் குழந்தைகளைப் பெறும் பொறியாகப் பெண்களை நடத்துவதைக் காட்சிப்படுத்தியது நாடகம். அதில் இறுதியாக வந்து குழந்தைகளையும் பெண்களையும் அருமையான, இனிமையான, சோகமான குரலில் தாலாட்டுப் பாடினார் அம்மா யோகேஸ் பசுபதி. அவர் பாடிய குரலும் பாட்டும் பெண்களின் சோகத்துக்கு உயிரூட்டியதுடன் பார்வையாளர்களையும் அதனுடன் ஒன்றச் செய்தது. நாடகத்திற்கும் உயிர் கொடுத்தது. அதீதாதாவின் தாலாட்டுப் பாடல் இனித்தது. அடுத்தது, சுயம் என்ற சிறிய நாடகம். ஆரம்பத்தில் அசையாமல் உறைநிலையில் பல நிமிசங்கள் நின்றபோதிலும் அந்நிலையிலிருந்து மீள வெளிக்கிட்டவுடன் அது நாடகமாக உருவெடுத்தது. இளம் பெண்களை அப்படி நிற்காதே, இப்படி நிற்காதே, இப்படி உடுக்காதே, அப்படி அழகுபடுத்தாதே என்று கட்டுப்படுத்துவது எம் சமூகம், ஆனால் மறுதலையாக, ஆண்கள் விரும்புவது பெண்கள் அரைகுறையாக ஆடை அணிந்து ஆட்டம் போடும் நடனங்களையே. இது என்ன இரட்டை வேடம்? அதையே சுயம் என்ற இந்நாடகம் தெளிவாகவும் நாடகத்திற்கேற்ற அளவுடனும், சிறந்த உத்திகளுடன் மையக் கருத்தை விட்டு நகராமல் சுருக்கமாக மனதைத் தைக்கக் கூடியதாக மௌனமாகக் கேட்டு விட்டு நகர்ந்து விடுகிறது. ஆக்கி அளித்த பெண்கள் பயிற்சிப் பட்டறைக்கு ஒரு கைதட்டல். பாராட்டு.
•Last Updated on ••Friday•, 13 •September• 2019 08:12••
•Read more...•
••Friday•, 13 •September• 2019 07:50•
??- ஊர்வசி (இலங்கை) | அனுப்பியவர்: ரஞ்சி (சுவிஸ்) -??
'பதிவுகளில்' அன்று
'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
பதிவுகள் டிசம்பர் 2006 இதழ் 84
இது- கண்ணீரும் கவலையும் கழிந்து புத்துயிர்ப்புடன் வீறு கொண்டெழும் எல்லாப் பெண்களினதும் சார்பான குரலாக ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!’ சோம்பலுடன் சுருண்டு தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியைச் சிலிர்த்துக் கொள்ளச் செய்யும் ஒரு நேசமான தடவலைப்போல பெண்ணியாவின் கவிதைவரிகள் ஆங்காங்கு மனதைச் சிலிர்க்கச் செய்கின்றன. வீடு, வேலை, முற்றம, சுற்றம் என்று மட்டும் வட்டங்களிடப்பட்ட பெண்களின் வாழ்வில், இயல்பான நேசத்துடன் உணர்வுச் சூழல்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய நட்புக்காக ஏங்குவதே வழக்கமாகி விட்டபின், நம்பிக்கையான நட்பாகுபவை இரண்டுதான். ஒன்று மொழி புரியாத குழந்தை மற்றையது இயற்கை. முற்றத்து மரங்களுக்கும் பெண்களுக்கும் உள்ள நேசம் அலாதியானது. மிக இயல்பானது. அவற்றில் வந்து தங்கும் பறவைகளும் அணில்களும்தான் ஆத்மார்த்த நண்பர்கள். வீட்டிலுள்ள உறவினர்க்கும் புரியாத உணர்வுகளை துல்லியமாக புரிந்து கொண்டவையும் கூட. இப்படித்தான் பெண்ணியாவின் முதலாவது கவிதை ‘நேசம் அல்லது நெல்லிமரம்’ வெளிப்படுகின்றது. அடக்கி வளர்க்கப்பட்ட பெண்களின் உணர்வுப் பிரதிபலிப்பாக தன்மீதே நம்பிக்கையிழந்த வாழ்வின் கருத்தாக ஆரம்பிக்கின்றது.
‘என்னையே பார்க்கும் நெல்லிமரம் என்ன வடிவாய்த்தான் உள்ளது. என் முகத்தை விட!’ (நேசம் அல்லது நெல்லிமரம்)
என்கிற வரிகள்.
இன்றைய சமூகத்தில் பெண்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் திகழ்வது வெளிப்படை எனினும் பெரும்பாலான நடுவயதுப் பெண்களிடையே இத்தகைய உணர்வுகளே காணப்படுகின்றன. இங்கு தொனிக்கும் சோக உணர்வை ஊசலாடும் நம்பிக்கையின்மையை இன்னும் வலிதாக வெளிப்படுத்துகின்றன.
ஒரு உருண்டையின் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கிறேன்’ (மாதராய்ப் பிறந்திட)
என்ற வரிகள்.
உருண்டைக்கு நுனி இருக்காது. இருந்தாலும் வலுவாகப் பற்றிக் கொள்ளக் கூடியதாக அமையாது. அதில் தொங்கும் ஒரு மனதில் ஊசலாடும் நம்பிக்கைகளும் மிக மெல்லியவையே.வீட்டிற்குள் மனைவி, தாய், தாதி என்ற வகைகளில் வளைய வரும்போது, பழக்கப்பட்ட ஒரு தடத்தில் எந்த மாற்றமும் இல்லாத வாழ்க்கை முறையில் இயங்கும் மரத்துப்போன உள்ளத்திலும் ஒரு தேடல்; என்னவென்றே இனம்புரியாத தேடல். சராசரியாக எல்லாப் பெண்களின் வாழ்விலும் காணப்படக்கூடிய உணர்வுதான். மாற்றங்களை எதிர்பார்த்த போதும் மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும்போது சமூகத்திற்கான அச்சம் அவர்களை சிலையாக்கிவிடும்.
•Last Updated on ••Friday•, 13 •September• 2019 08:06••
•Read more...•
'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
பதிவுகள் ஜனவரி 2007 இதழ் 85 1998 இன் நடுக்கூறில் நான் கனடாவிற்குள் நுழைந்த பின் அரசியல் தஞ்சம் கேட்டு 40 நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தேன். அதன் பின் ஏறத்தாள இரண்டரை மாதங்கள் வரை கனடியச் சிறைகளுள் அடைக்கப்பட்ட பின்னர் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் கனடிய டாலர்கள் பிணை(ஒரு இலட்சம் வீடு, ஐம்பதினாயிரம் பணம்) அரசியல் செயல்பாடுகள் தொடர்பான 14 நிபந்தனைகள் உட்பட இரு வாரங்களுக்கு ஒரு தடவை “இமிக்கிரேசன்” அலுவலகத்திற்குச் சென்று கையெழுத்திடல் போன்ற கண்டிப்பான நீதிமன்ற உத்தரவுகளின் பேரிலேயே நான் விடுதலை செய்யப்பட்டிருந்தேன். அதன் பின் ஏழரை வருடங்களின் பின் இவ்வருட மத்தியில் எனது பெயருக்கு முதற் தடவையாக ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகக் கூடிய வேலை செய்ய அனுமதிக்கும் பத்திரம் வழங்கப்பட்டது. ஆயினும் இது வரை இலவச மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கான “ஹெல்த் கார்ட்” எனக்கு வழங்கப்படவில்லை. எனது மகள் உயர் கல்வி பெறுவதற்காக பல்கலைக் கழகத்துள் உட்புகுந்த போது அவளால் எந்தக் கடனுதவியையும் “ஒன்ராரியோ” அரசிடமிருந்து பெற முடியாமல் போனது. மாறாக “வெளிநாட்டு மாணவர்” என்ற இலச்சினை பொறிக்கப்பட்டு இரண்டரை மடங்குக்கு மேலான (குடியுரிமை பெற்ற அல்லது நிரந்தர வதிவிட உரிமை பெற்ற மாணவர்களோடு ஒப்பிடுகையில்) கட்டணத்தைப் பல்கலைக்கழகத்திற்குச் செலுத்துமாறு நிர்பந்திக்கப்பட்டாள். இவ்வாறான கழுத்தை நெரிக்கும் பொருளாதார நெருக்கடிகள் ஒரு புறமிருக்க அரசியல் செயல்பாடுகள் தொடர்பான நீதிமன்றத்தின் கண்டிப்பான 14 நிபந்தனைகளும் எத்தகைய மீறல்களுக்கும் உட்படுத்தப்படாமல் என்னால் பேணப்பட வேண்டியவை. அல்லாவிட்டால் எனது பிணைகள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டு நானும் சிறையுள் மீண்டும் தள்ளப்படலாம். அத்தகைய நிபந்தனைகளுள் “விடுதலை புலிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாக ஆதரிக்கும் கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் போன்றவற்றில் நான் பார்வையாளனாகவோ அல்லது பங்காளனாகவோ கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை என்பது முக்கியமான ஒன்று. அரசியல் வேலைத் திட்டங்களை ஆழ்மனதில் புதைத்துக் கொண்டு கனடாவுக்கு நான் வந்ததாக யாரும் என்னை சந்தேகிக்கத் தேவையில்லை. ஆயினும் “மாவீரர் நாள்” வந்து போகும் வேளைகளில் அவ்வாறான நிகழ்வொன்றுக்கு நான் போக முடியாதது குறித்து எனது மனம் துயருறுவது வழக்கம். இத்தகைய எனது துயரத்துக்கு “அரசியல் முலாம்” பூசி விட முடியாது. நான் சார்ந்த அல்லது சார முயலுகின்ற அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டுச் சாதாரண தனி மனிதனாவே அந்த வேதனையின் வெளிப்பாடுகளைச் சுமந்து செல்ல நேருகிறது. ஈழப் போராட்ட களம் பல்லாயிரக்கணக்கான மக்களின் உடல்களில் இருந்து கொப்பளித்துப் பாய்ந்த குருதி வெள்ளத்தினால் சேறாகிய “குருஷேத்திரமாகவே” கடந்த இரு தசாப்தங்களாகக் காட்சியளிக்கிறது. அந்த மண்ணில் வாழ்ந்த, வாழும், வீழ்ந்த, வெளியேறிய மண்ணின் மைந்தர்கள் யாவருக்கும் அந்த மண்ணோடு பிணைந்த சொல்ல முடிந்த, சொல்லில் வடிக்க இயலாச் சரிதங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்றாக என்னை மிகவும் பாதித்து நிற்கின்ற ஈழப் போர்க்களத்தில் வீழ்ந்து மடிந்த எனது நண்பன் “லிங்கம்” பற்றிய எண்ண அலைகள் சிலவற்றையே இங்கு மீட்க முயலுகின்றேன்.
•Last Updated on ••Friday•, 13 •September• 2019 08:07••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
பதிவுகள் செப்டம்பர் 2005 இதழ் 69 -
உக்கிரமான போர்க்காலத்தில் வன்னியிலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்று ஏனைய நாடுகள் ஒப்புக்கொள்வதற்கு அந்த மக்கள் சமாதானக்காலம் வரை காத்திருக்கவேண்டி வந்தது. அதேபோன்று அந்தக் கடும் நெருக்கடிக் காலகட்டத்தில் வன்னிப்பெரும் நிலப்பரப்பிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பல படைப்பாளிகள் தோன்றியிருந்தனர் என்று புலம்பெயர்ந்தவர்கள் அறியவும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று. நானறிந்தவரையில், போர்க்காலத்தில் மூன்றாவது மனிதன் ஓரளவு வன்னியிலிருந்து எழுதிய படைப்பாளிகளைப்பற்றி குறிப்புக்களை எழுதியதை வாசித்திருக்கின்றேன். அதில் சி.சிவசேகரம், மு.பொன்னம்பலம் போன்றவர்கள் வன்னியிலிருந்து முகிழ்ந்த படைப்புக்களுக்கு விமர்சனங்களை அவ்வவ்போது எழுதியிருந்தனர்.
அமரதாஸின் இயல்பினை அவாவுதல் (1999), நிலாந்தனின் யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (2002), தானா.விஷ்ணுவின் நினைவுள் மீள்தல் (2003) போன்றவை வன்னிப்பெரும் நிலப்பரபிலிருந்து அச்சிட்டு வெளியிடப்பட்டாலும், படைப்பாளிகள் வன்னிக்குள்ளும் வெளியிலும் வாழ்ந்தவர்கள்; வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். வன்னியிலிருந்து பதிக்கப்பட்டதால், அவற்றை வன்னிப்படைப்புக்கள் என்ற ஒரு இலகுவான பிரிப்புக்குள் கொண்டுவரலாம் என்று நினைக்கின்றேன்.
இயல்பினை அவாவவுதல் தொகுப்பை வெளியிட்ட அமரதாஸ் ஒரு போராளியாக இருந்தவர். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் களத்தில் நேரடியாக நின்றவர். சண்டிலிப்பாய் - அளவெட்டிப்பகுதியில் நடைபெற்ற புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் காலில் படுகாயம் அடைந்து இன்றும் ஒருகால் சரியாக இயங்காது அவதிப்படுபவர். இன்றையபொழுதில் போராட்ட அமைப்பிலிருந்து முற்றாக விலகி சாதாரண ஒரு பொதுமகனாக, துணைவி, பிள்ளை என வாழ்ந்துகொண்டிருக்கின்றார். அவருடம் நேரடியாகப் பேசியபோது தன்னை ஒரு சுயாதீன பத்திரிக்கையாளர் (Freelance Journalist) என்றே அடையாளப்படுத்த விரும்புவதாய்க் கூறியது நினைவு.
அமரதாஸ் என்னும் படைப்பாளி பற்றி, கருணாகரன் இந்தத் தொகுப்புக்கான முன்னுரையில் இப்படிக் கூறுகின்றார். 'அமரதாஸ் 23 வயது இளைஞர்; ஈழக்கவிஞர்; தொண்ணூறுகளில் ஆரம்பத்திலிருந்து எழுதத்தொடங்கியவர்.; இலக்கியத்தின் பிற துறைகளிலும் ஈடுபடுபவர்; வாழ்வின் சகல விடயங்கள் பற்றியும் தீர்க்கமாக உரையாடுபவர்; புரிந்துணர்வோடும் விரிந்த சிந்தனையோடும் உறவாடுபவர். இவரின் கவிதைகளிலும் இந்தப் பின்புலங்களை உணரமுடியும். இவற்றுக்கப்பாலான அம்சங்களையும் அடையாளங்களையும் இவருடைய கவிதைகளில் வாசகர்கள் உணரக்கூடும்.'
•Last Updated on ••Friday•, 13 •September• 2019 02:08••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
பதிவுகள் ஜூலை 2008 இதழ் 103
[ சு.வில்வரெத்தினத்தின் இசைப்பாட்டுக்கள் இப்பொழுது மற்றவர்கள் பாடி வெளிவருகின்றன ஒரு இசைப்பேழையில். அது காலத்துக்குத் தேவையான ஒரு செயற்பாடு. அந்த ஒலிப்பேழையில் 11 பாடல்கள் இருக்கின்றன. பலர் பாடியிருக்கின்றனர். எஸ்.வி.வர்மன் இசை அமைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை , 22 ஜூன் 2008, மாலை ஐந்து மணிக்கு கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடக்கவிருக்கிறது. .]
சு.வில்வரெத்தினம்என்.கே.மகாலிங்கம்சுப்புரெத்தினத்துக்கு, பாரதிதாசன் என்று தன் புனைபெயரை ஆக்கிக் கொள்வதற்கு முன்பு, பாரதியாரை ஒரு கல்யாண விழாவில் தற்செயலாகச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. சுப்புரெத்தினம் ஏற்கெனவே பாரதியாரின் சுதேசிய கீதங்களைப் படித்து, அவற்றால் கவரப்பட்டிருக்கிறார். பாரதியாரை அவர் தெருக்களில் கண்டிருக்கிறார். அவரை ஓவியர் ரவிவர்மாவின் ‘பரமசிவம்’ என்று மட்டும் மனதில் பதிவும் செய்திருந்திருக்கிறார். அவரும் அந்த விழாவுக்கு வந்திருந்தார். ஆனால் அவர் தான் அந்தத் தேசிய கீதங்களைப் பாடியவர் என்று சுப்புரெத்தினத்திற்குத் தெரியாது. அந்த விழாவில் சுப்புரெத்தினம், ‘வீரசுதந்திரம் வேண்டி நின்றார் வேறொன்று கொள்வாரோ’ என்ற பாடலைப் பாடுகின்றார். பாரதியாh,; ‘யார் இவர்? இவர் பாடல்களை உணர்ந்து பாடுகிறார்’ என்கிறார். அவரைத் தன் வீட்டுக்குக் கூட்டி வரச் சொல்லித் தன் நண்பருக்குக் கூறுகின்றார். சுப்புரெத்தினம் அங்கு போன போது பாரதியார் இன்னொருவர் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தச் சந்திப்பு சுப்புரெத்தினத்தைப் பாரதிதாசனாக்கியது என்பது வரலாறு. இரண்டு கவிஞர்களுமே பாடல்களை வாய் திறந்து இசையுடன் பாடக் கூடியவர்கள் என்பது மேலதிகச் செய்தி.
பாரதியார் பாடுவார் என்பதை யதுகிரியம்மாள், வ.ரா. பத்மநாதன் போன்றோர் பதிவு செய்துள்ளனர்;. ஒருமுறை, தற்செயலாக பாரதியாரை வழியில் சந்தித்த வையாபுரிப்பிள்ளை கூட தன் அறைக்கு அவரைக் கூட்டிப் போய் பாட வைத்தார் என்பதும் இன்னொரு செய்தி.
கவிதைகளைப் பாடுவதும் இசையுடன் பாடும் வழக்கமும் இருந்திருக்கிறது. எம் சங்கப் பாடல்கள் பாடப் பட்டவையே என்று தமிழறிஞர் தொ.பரமசிவன் கூறுவார், அதன் ஏகார முடிவுகளை வைத்து. வாய் மொழிக் கவிதை இலக்கிய வரலாற்றுக் காலத்தில் அதை நம்புவதற்கு அதிக இடமும் இருக்கிறது.
பாரதியார், தனது பாடல்கள் பலவற்றுக்கு ராகம், தாளம் என்னென்ன என்றும், பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் என்றும், சிந்து, கும்மி, வகைப் பாடல்கள் என்றும், நந்தனார் வர்ண மெட்டு, ஆனந்தக் களிப்பு மெட்டுப் பாடல் போல பாட வேண்டும் என்றெல்லாம் எழுதியுள்ளார். அதேபோல சுத்தானந்த பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் கூட இப்படியாகப் பாடப்பட்டுள்ளன. எம்மூர் சோமசுந்தரப் புலவர் கூட அப்படிப் பாடப்படக் கூடிய பாடல்களையே பாடி உள்ளார். ஓசை நயமுள்ள எதுகை, மோனைகளில் எழுதப்பட்ட மரபுக் கவிதைகளை இசை அமைத்துப் பாடுவது சாத்தியம். அதேபோல, தாலாட்டு, ஒப்பாரி போன்ற பாடல் வகைகளிலும் பாடப்பட்டுள்ளன. செய்யுளில் எழுதுவது மனனம் செய்ய இலகுவானது மட்டுமல்ல, பாடுவதற்கும் வசதியானதே. அதிக அளவில் ஏடுகளோ நூல்களோ இல்லாத காலத்தில் அதற்கு இடமிருக்கிறது. ஆனால் புதுக் கவிதைகளை அப்படிப் பாடுவதற்கு அதிக சாத்தியமில்லை. ஓசை நயக்குறைவு காரணமாக.
•Last Updated on ••Friday•, 13 •September• 2019 01:47••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
பதிவுகள் ஜனவரி 2007 இதழ் 85
நாம் எல்லோரும் நம் வாழ்வில் கள்ளம் செய்துகொண்டே இருக்கின்றோம். பெற்றோருக்குத் தெரியாமல், துணைக்குத் தெரியாமல், குழந்தைகளுக்குத் தெரியாமல், நண்பர்களுக்குத் தெரியாமல் என நுட்பமாய் எமக்கான கள்ளங்களைச் செய்து கொண்டிருக்கின்றோம். கள்ளங்கள் பிடிபடும்போது அவமானப்பட்டும், பிறரின் பார்வைக்கு அது அகப்படாதபோது குறுகுறுப்பான மகிழ்ச்சியுடன் அதைக் கடந்தபடியும் போய்க் கொண்டிருக்கின்றோம். தஞ்சை ப்ரகாஷின் 'கள்ளம்' நாவலும் பலரது கள்ளங்களை நம்முன் நிலைக்கண்ணாடியாக -அரிதாரங்களையின்றி- முன் நிறுத்துகின்றது. எனினும் வாசிக்கும் நமக்குத்தான் அவை கள்ளங்களாய்த் தெரிகின்றனவே தவிர, இந்நாவலிலுள்ள பல பாத்திரங்களுக்கு அவை இயல்பான வாழ்க்கை நடைமுறைகளாகத் தெரிகின்றன.
தஞ்சாவூர் ஓவியங்களை பராம்பரியமாகச் செய்துகொண்டு வருகின்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ராஜூ என்கின்ற கலைஞன், எந்த மாற்றமும் இல்லாமல் புராதனத்தை அப்படியே பின்பற்றி ஓவியஞ் செய்கின்ற தந்தையோடு முரண்படுகின்றான். சுயாதீனமாய் எதுவுஞ்செய்யாது, வெட்டி ஒட்டி கண்ணாடிச் சில்லுகளால் அலங்கரித்து வெளிநாட்டில் அவற்றை நல்லவிலைக்கு விற்று பணஞ்சம்பாதிக்கும் தனது தந்தையை மிக வெறுக்கும் ராஜு குடியிலும், கஞ்சாவிலும் மிதக்கின்றான். ராஜூ தனது மகன் என்ற காரணத்திற்காகவும், தனது கெளரவம் பாதிக்கப்படக்கூடாது என்றவகையிலும் ராஜூவின் 'அடாவடிகளை' சகித்து அவனது செலவுகளுக்கு கேட்ட நேரத்துக்கு எல்லாம் காசு கொடுத்து கவனிக்கின்றார் ராஜூவின் தந்தை. ஒருநாள் சிதைந்து போய்க்கொண்டிருக்கும் தஞ்சாவூர் அரண்மணையின் சிக்கலான தெருக்களில் ஒன்றில் பாலியல் தொழிலாளியான பாபியைச் சந்திக்கின்றான் ராஜூ. ஆனால் அவளை விட அந்தப் பாலியல் தொழிலாளிக்கு கூடமாட ஒத்தாசை செய்து சமைத்துக் கொண்டிருக்கும் ஒரு மராட்டியப் பெண் மீது ராஜூவுக்கு மையல் வருகின்றது. பாபியால் -தான் தெரிந்து வைத்திருக்கின்ற பாலியல் தொழிலால் எந்த ஆணையும் அடித்து வீழ்த்த முடியும் என்ற எண்ணத்தை-ராஜூவை நுட்பமான விதத்தில் ஈர்த்து ஜூம்னா வெற்றி கொள்கின்றாள். பாபிக்கு பொறாமை தீயாய் எழுகின்றது.
ஜும்னாவுடன் சேர்ந்து சேரியில் வாழத்தொடங்கும் ராஜூ சேரி மக்களின் கடவுள்களான சுடலை மாடனையும், காடனையும், இராயனையும், சூரனையும் தஞ்சாவூர் கண்ணாடிச்சில்லுகள் தெறிக்க தெறிக்க பிரமாண்டமாய் கட்டி எழுப்புகின்றான். அவனின் ஆளுமை கண்டு சேரிப் பெண்கள் பலர் அவனில் மையல் கொள்கின்றனர். தம் விருப்பங்களை நாகரீகம் பூசி மினுக்காமல் நேரடியாக ராஜூவிடம் தெரிவிக்கவும் செய்கின்றனர். ராஜூவை அந்தச் சேரிப் பெண்கள் மட்டுமில்லை அந்தச் சேரி ஆண்களும் தலையில் வைத்துக்கொண்டாடுகின்றனர். அன்றைய நாளின் பசியை எப்படித் தீர்ப்பது என்ற கவலையைப்போல அன்றைய நாளின் காமத்தைத் தீர்ப்பது அன்றைய நாளுக்குரியது என்பதாய் சேரி மக்களுக்கு வாழ்க்கை முறை இருக்கின்றதே தவிர கடந்தகாலம்/நிகழ்காலம் குறித்த எந்தப்பிரக்ஞையும் அம்மக்களுக்கு இருப்பதில்லை. தமக்கான -ஒழுங்கு நடைமுறைப்படுத்திய சமூகம் கூறும்- கள்ளங்களைத் தெரிந்தே செய்கின்றனர். ராஜூ தன்னில் மையல் கொள்ளும் பெண்களுக்கு -உடலகளைக் கலக்கச் செய்யாமல் ஆனால் ஒருவித காமத்தைத் தக்கவைத்தபடி- தனது தஞ்சாவூர் ஓவியக் கலையைக் கற்றுக்கொடுக்கின்றான். 'கருப்பையைக் கழற்றி வைக்காதவரை உங்களுக்கு எங்களைப் போன்ற ஆண்களிலிருந்து சுதந்திரம் இல்லையடி' என்று ராஜூ கூறிக்கொண்டாலும் பல பெண்களைத் தேர்ச்சியுள்ளவர்களாய், தமது உழைப்பிலேயே வாழ்வை நகர்த்தக்கூடிய கலைஞர்களாய் வளர்த்துவிடுகின்றான். அவர்கள் தங்கள்பாட்டில் கண்ணாடிச் சில்லுகளில் படம் வெட்டி ஒட்டி தஞ்சாவூரிலும் அதற்கு அண்மையிலுள்ள ஊர்களிலும் விற்று காசு உழைக்கத் தொடங்குகின்றார்கள்.
•Last Updated on ••Friday•, 13 •September• 2019 01:48••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
பதிவுகள் ஜனவரி 2005 இதழ் 61 -
ஜெயமோகனின் நாவல்களில், 'ஏழாம் உலகம்' தவிர்த்து அனைத்தையும் வாசித்திருக்கிறேன். விஷ்ணுபுரத்தில் ஆரம்பித்து, கொழும்பில் நின்றபோது தமிழ்ச்சங்கத்தில் பின் தொடரும் நிழலின் குரல், ரப்பர், கன்னியாகுமாரி எல்லாம் எடுத்து வாசித்து, இப்போது காட்டில் வந்து நிற்கிறேன். ரப்பர் 90களில் எழுதப்பட்ட ஜெயமோனின் முதலாவது நாவல். நாவல் என்பதை விட நாவலிற்கான ஒரு முயற்சி என்றே என் வாசிப்பில் அடையாளப்படுத்துகிறேன். அங்கே சாதிப்பெயர்களால் உருவகிப்பட்ட பாத்திரங்கள் இப்போதும் காட்டிலும் அவ்வாறே அடையாளப் படுத்தப்படுவதால், தசாப்தம் தாண்டியும் ஜெயமோகன் எங்கே நிற்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஜெயமோகனின் நாவல்களை இலகுவாய் ஒருவிதமான வகைக்குள் அடக்கிவிடலாம். எப்போதும் அவரின் நாவல்கள் ஊடாடிக்கொண்டிருப்பது பெருங்கனவும் அதன் தவிர்க்கமுடியாத வீழ்ச்சியும். எல்லா நாவல்களும் ஒருவிதமான சோகத்துடனும் இயலாமையுடனும் முடிகின்றன.
ரப்பரில் எந்தப்பாத்திரமும் மனதில் நிற்கமுடியாமல் வாசித்தவுடன் மறைந்துவிடுகின்றனர். நாவல் முழுவதும் கனக்க கதாபாத்திரங்கள். ஒரு விதமான தொடர்பை/நீட்சியை ரப்பரிலும் காட்டிலும் வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். ஆனால், தனது நாவல் என்ற கட்டுரைத்தொகுப்பில் 90களிலே நாவல்கள் தமிழில் முகிழத்தொடங்குகின்றன என்று குறிப்பிடுகையில் அவர் எதைக்குறிவைத்து சொல்கிறார் என்று சொல்லத்தேவையில்லை.
விஷ்ணுபுரம் அவரின் அடுத்த நாவல் என்று நினைக்கிறேன். உண்மையில் சொல்லவேண்டும் என்றால், நான் முதல் பாகமும் இறுதிப்பாகமும் மட்டுமே வாசித்திருக்கிறேன். தத்துவப்பகுதியில் என்னால் நுழையவே முடியவில்லை. விஷ்ணுபுரம் ஒரு இந்துத்துவ பிரதியை 'நடுநிலைமை' என்று வாசிப்பவர்கள் எண்ணும்படி கவனமாகப்பின்னப்பட்டிருக்கிறது. அரவிந்தன்(காலச்சுவடு ஆசிரியர்) அண்மையில் காட்டிற்கும் ஏழாம் உலகத்திற்கும் விமர்சகம் எழுதுகையில் விஷ்ணுபுரம் மட்டுமே ஜெயமோகனின் சிறந்தபிரதி என்கின்றபோது பிரதியின்நிலை என்னவென்று கூறத்தேவையில்லை. ஒருகாலத்தில் ஜெயமோகனின் நெருங்கிய நண்பனாகவும், RSSன் தீவிர அங்கத்துவராயும் அரவிந்தன் இருந்திருக்கிறார் என்பதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
•Last Updated on ••Friday•, 13 •September• 2019 01:11••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
கனடாவில் 05-06-2005ல் ஸ்காபறோ சிவிக் சென்ரரில் (scarborough sivic Center ) எனது 'மீண்டும் வரும் நாட்கள்' கவிதைத் தொகுதியின் வெளியீடீடு நிகழ்வும் விமர்சன உரைகளும் ரதன் தலைமையில் நடைபெற்றன. அங்கு நான் சமூகமளிக்காத நிலையில் கவிதைத் தொகுப்பின்மீதும் என்மீதும் முன்வைக்கப்படீட விமர்சனங்களுக்கு பதிலாக இதனைப் பயன்படுத்திக் கொள்கிறேன். சம்பிரதாயமான தலைவா¢ன் ஆரம்ப உரை எதுவுமின்றி கூடீடம் ஆரம்பமாகியது. அதிகாரங்களையும் மரபுகளையும் மீறுதல் இலக்கியத்தில் இனைந்த அம்சமாதலால் அதன் வெளிப்பாடாக முதலில் இதனைக் கருதினேன்.ஒவ்வொருவர் உரைக்குப் பின்னும் தலைவர் உதிர் உதிரியாக தனது கருத்துக்களை முன்வைத்தார். அதில் என்மீது வைக்கப்பட்டவைகள் இவை:
- நான் கனடா வந்தபொழுது ஒரு தடவைகூட தங்களைச் சந்திக்கவில்லை. செல்வத்திடம் கேட்டபொழுது அவர் விடுதலைப் புலி ஆதரவாளர் என்றார். அது இப் புத்தகத்தில் அடிநாதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. -
'அலை' வெளிவந்த காலத்தில் தீண்டாமை பற்றிய போராட்டம் மிகத் தீவிரமடைந்திருந்தது. ஆது பற்றி வந்த கட்டுரைகளைவிட மார்க்சிய எதிர்ப்புக் கட்டுரைகளே அலையில் கூடுதலாகக் காணப்பட்டது. -
இதில் எனது கவிதை சார்ந்து ஒரே ஒரு கருத்துத்தான். அது நான் புலி ஆதரவாளன் என்பது எனது கவிதையில் அடிநாதமாக ஒலிக்கிறது என்பதே.
எனது கவிதைகளை அவ்வாறு குறுக்கிவிட முடியாது என்பதுதான் எனது பதில். தவிரவும் ஒவ்வெருவருக்குமான ஒரு அரசியல் நிலைப்பாட்டின் சாத்தியதிதை மறுக்கும் போக்கிலிருந்தே இது எழுகிறது. அதன் அரசியல் தன்மைகளுக்கு அப்பால் அவை கவிதைகளாக இருக்கின்றனவா என்பதே முக்கியமானது. எனது முன்னுரையில் இதனைக் கூறியுள்ளேன். ரதன் அவ்வாறான எதனையும் முன் வைக்கவில்லை.
கனடா வரும்போது அதன் மோசமான காலநிலையையும் மீறி கலை இலக்கிய ஆர்வலர்களை அவர்கள் எந்த மாற்றுக் கருத்துக் கொண்டவர்களாக இருந்தாலும் சந்தித்திருக்கிறேன். இதில் எந்த மனத்தடையும் எனக்கு இல்லை.
1975ன் கார்த்திகையில் 'அலை'யின் முதலாவது இதழ் வெளிவந்தது. தீன்டாமைக்கு எதிரான போராட்டம் மிகத் தீவிரமடைந்த காலம் 1968, 69களிலாகும். 1968ஆடியில் மாவிட்டபுர ஆலயப் பிரவேசப் போராட்டம் அரம்பமாகியது. இதனால் இதற்கு முன்னும் பின்னும் எதுவுமில்லை என்று அர்த்தமல்ல. இன்றைய போராட்ட காலத்திலும் நிலத்திற்கடியில் நீர்போல் ஓடிக்கொன்டுதான் இருக்கிறது. சமயத்ததில் அது மேலாலும் ஓடுகிறது. எனவே ரதனின் காலப் பிரக்ஞை என்பது முற்றிலும் தவறானது. அலை'யில் மார்க்சிய எதிர்ப்புக் கடீடுரைகள் வெளிவந்தால் அதை ஆதாரங்களுடன் முன்வைக்கவேன்டும். 'அலை'யில்தான் றேமன்டீ வில்லியம்சின் 'மார்க்சிய பண்பாட்டுக் கோட்பாட்டில் அடித்தளமும் மேற்கட்டுமானமும்' ,மைக்கல் லோவியின் 'மார்க்சியவாதிகளும் தேசிய இனப் பிரச்சனையும்' கட்டுரைகள் மொழிபெயர்ப்புக்களாக வெளிவந்தன. கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முற்பட்ட விடயங்களை இன்று பிழையாக அர்த்தப் படுத்துவது ரதன் தன்னை ஒரு மார்க்சியவாதி என நிறுவ காரணம் கண்டுபிடிக்கிறாரா? சரி அவர் மார்க்சியவாதியாக இருந்துவிட்டுப் போகட்டுமே அதற்காக பிழையான காரணங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதில்வையே. கூட்டம் முழுவதும் இவர் நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கையில் அசல் 'Eugene Ionesco'வின் 'The Leader' ஆகவே இருந்தார்.
•Last Updated on ••Friday•, 13 •September• 2019 00:49••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
பதிவுகள் மார்ச் 2002 இதழ் 51 [திண்ணை இணைய இதழின் விருந்தினர் பகுதியில் இடம்பெற்ற விவாதத்திலிருந்து சில பகுதிகள். பதிவுகளில் ஏற்கனவே வெளியான பகுதி. பதிவுகளின் வாசகர்களுக்காக மீண்டுமொருமுறை இங்கு பிரசுரிக்கின்றோம். இவ்விவாதத்தில் தொடர்ந்தும் பங்கு பற்ற விரும்பினால் எமக்கொன்றும் ஆட்சேபனையில்லை.]
நரேஷ்: ஜெயமோகன் - மாலன் கட்டுரைகள் தொடர்ந்து கலாச்சாரம் பற்றிய விவாதங்களைப் படித்து வருகிறேன். உண்மையில் எனக்கு மட்டும் தான் புரியவில்லையா , அல்லது எல்லோருக்குமே இதே கதியா என்று தெரியவில்லை. மாலன் தமிழ்க்கலாச்சாரம் என்பதனை ஆடியன்ஸ் என்ற பொருளில் பயன்படுத்துகிறார் போலத்தோன்றுகிறது. ஜெயமோகன் தமிழ்க்கலாச்சாரம் என்பதனை, ஜெயமோகன் தான் எந்த நோக்கில், அல்லது உருவாக்கப்பட வேண்டிய ஐடியல் என்ற நோக்கில் புரிந்து எழுதுவது போலத் தோன்றுகிறது. இருவருக்கும் மனப்பகையால் ஒருவர் எழுதுவதை மற்றொருவர் புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்து கொள்ள முடியாமல் வார்த்தைகளில் சிக்கிக்கொண்டுவிட்டார்களா, அல்லது எனக்குத்தான் பத்தவில்லையா என்று புரியவில்லை. இருவரும் என்ன பேசுகிறார்கள் என்பதை யாரேனும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முடியுமா? மிகுந்த நன்றி உடையவனாக இருப்பேன்.
ஜெயமோகன்: அன்புள்ள நண்பருருக்கு, தங்கள் குழப்பம் சற்று அதிகமானதே. மாலன் கலாச்சாரம் என்றால் நெறிகள், அறங்கள், ஒழுக்கங்கள், விதிகள், நம்பிக்கைகள் ஆகியவற்றி¢ன் தொகுப்பாக மட்டும் பார்க்கிறார் [அதாவது ஒட்டு மொத்தமாக விழுமியங்கள்]அவை சமூகத்தின் பொருளாதாரக் கட்டுமானத்தால் ,அதை நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டு ,உருவாக்கப்படுபவை என்கிறார் .இது ஒரு மரபான பொருளாதார அடிப்படைவாத பார்வை. பொதுவாக பலராலும் நம்பப்படும் தளம் இது. இவர்கள் இலக்கியமென்றாலே உயரிய கருத்து மட்டுமே என்று எப்போதும் சொல்வதை பார்க்கலாம்.இலக்கியம் என்றால் கருத்து மட்டுமல்ல அக்கருத்துக்களை உண்டு பண்ணும் அகம் குறித்த புரிதலுக்கான முயற்சி அது என்ற எண்ணம் தேர்ந்த வாசகனுக்கே ஏற்படுகிறது. இலக்கியம் குறியீட்டு இயக்கமான மனத்தை அக்குறியீட்டு வடிவிலேயே போய் அறிந்து கொள்வதற்கான முயற்சி என்று சொல்லிப்பர்க்கலாம் இந்த முரண்பாட்டின் தொடர்ச்சியே இந்த விவாதம். நான் கலாசாரம் என்பது விழுமியங்கள் மட்டுமல்ல என்கிறேன். எந்தெந்த விஷயங்களை ஒரு சமூகம் தொடர்ந்து தலைமுறைமுறையாக பேணுகிறதோ அவையெல்லாம் கலாசாரத்தின் கூறுகளே என்று சொல்கிறேன்.அவை வெறுமே பொருளாதார காரணங்களால் மட்டும் உருவாக்கப்பட்டு நிலை நிறு¢த்தப்படுபவை அல்ல . சமூகத்தின் எதிர் காலக்கனவுகள் , இறந்த கால நினைவுகள் என எண்ணற்ற கூறுகளால் ஆனவை அவை. தனிமனத்திலும் ,சமூக மனத்திலும் உள்ள குறியீட்டு ரீதியான இயக்கங்களை அவை தீர்மானிக்கின்றன.விழுமியங்களும் அவற்றின் விளைவுகளே .அந்த செயல்பாடுகளுடன் எல்லாம் தொடர்பு படுத்தி மட்டுமே கலாச்சாரம் என்றால் என்ன என்று தீர்மானிக்க முடியும். கலாச்சாரம் என்பது மிக வும் சிக்கலான ஓர் கூட்டு அகவய இயக்கம் என்ற புரிதலே அச்செயல்பாடுகளை புரிந்து கொள்ள உதவிகரமானது . ஒரு இடத்தில் அதை நாம் நெறிகளாக அறிகிறோம்.இன்னொரு இடத்தில் அதை அடையாளங்களாக. இன்னொரு இடத்தில் பழக்கவழக்கமாக. இவை அனைத்தையும் இணைத்தே யோசிக்கவேண்டும் என்கிறேன் , இவ்வளவுதான் ஆகவே விழுமியங்களை பிரச்சாரம் செய்வது மட்டுமல்ல கலாசார செயல்பாடு. அடையாளங்களை மீட்பது ,நிலைநிறுத்துவது,தகர்ப்பது ,மேலும் நுட்பமாக்குவது,பழக்கங்களின் உள்ளர்த்தங்களை அறிவது எல்லாமே கலாச்சார இயக்கங்களே . ஈவேராவின் சீர்திருத்த குரல்போலவே ஆபிரகாம் பண்டிதரின் இசை நுட்ப ஆராய்ச்சியும் கலாச்சார செயல்பாடேயாகும். தமிழுக்கு பாரதி அளித்த கொடை உலக இலக்கியத்துக்கும் உலக கலாசாரத்துக்கும் உரியதேயாகும். பிறிதொரு தருணத்தில் இதை மேலும் விரிவாக விவாதிக்கலாம். ஒன்றுண்டு , விவாதங்களே நம்மை தெளிவாக சிந்திக்க வைக்கும். ஒரு அசலான கருத்தை உருவாக்கியெடுத்து ஒரளவு தெளிவுடன் முன்வைப்பது எளிய விஷயமல்ல .நான் எந்த விவாதத்திலும் எப்போதும் தயங்காமல் கலந்து கொள்பவனாகவே இருந்திருக்கிறேன். அதற்கு காரணம் என் சிந்தனையை அவ்விவாதங்களே ஒழுங்கு படுத்துகின்றன ,தெளிவாக்குகின்றன என்பதே. மாலனுடனான விவாதமும் அப்படித்தான்.ஆனால் அதில் விவாதத்துக்கு அப்பால் சில சிறு கோபங்களும் உருவாகிவிட்டன என்பதை மறுக்க முடியாதுதான்.அதை தவிர்க்க முடிவது இல்லை .
•Last Updated on ••Friday•, 13 •September• 2019 07:33••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
பதிவுகள் இணைய இதழில் வெளியான எழுத்தாளர் மாலனின் எதிர்வினையொன்று.
பதிவுகள் யூன் 2002 இதழ் 30
ஜூன் 3,2002
அன்புள்ள வி.என்.ஜி, கலாசாரம் குறித்த என் கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பதற்காகவும் அவற்றைப் பதிவு செய்யவும் முன் வந்துள்ளமைக்கும் நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொள்கிறேன். விவாதங்களில் - குறிப்பாக தமிழ் இலக்கிய உலகில்/ தமிழ் இணைய இதழ்களில் நிகழும் விவாதங்களில் இரு வகை அணுகுமுறைகள் காணப்படுகின்றன. தான் இருபது முப்பது ஆண்டுகளில் படிதறிந்தவற்றையெல்லாம், விவாதப் பொருளுக்குத் தேவையோ இல்லையோ, கொட்டி இரைத்து, விவாதத்தை அதன் தடத்திலிருந்து பிறழச் செய்வது. 'எனக்கு என்னவெல்லாம் தெரியும் பார்' என்ற மனோ பாவத்தில் மறுதரப்பை அச்சுறுத்தும் போக்கு அது. ஆங்கிலத்தில் sabre rattling என்றழைக்கப்படும் போக்குஅது. மற்றொன்று விவாதத்தை ஒரு இகழ்ச்சித் தொனியோடு அணுகி பொறுப்பற்ற, (flippant) சாரமற்ற கருத்துக்களைப் பொழிவது. பெரும்பாலும் தாங்கள் போதிய கவனம் பெறவில்லை என்ற மனக்குறை உள்ளவர்கள் பின் பற்றும் அணுகுமுறை இது.
இது தவிர இன்னொரு அணுகுமுறை உண்டு.விவாதங்களின் போது உலகெங்கும் பின் பற்றப்படும் முறை அது. தான் படித்தறிந்த கருத்துக்களை, தன் அனுபவத்தின், விழுமியங்களின் அடிப்படையில் தொடர்ந்து சிந்தித்து, அதைத் தன்வயமாக்கிக் கொண்டு விவாதங்களில் வெளிப்படுத்துவது. இஇவர்கள் நான் இன்னின்ன படித்துள்ளேன் என்று சட்டையில் அந்து கொள்வதில்லை. குத்துச் சண்டைக்குப் போவதைப் போல ஒரு 'தயாரிப்போடு' 'களம்' இறங்குவதில்லை.விவாதத்தில் 'வெற்றி' 'தோல்வி'களை எதிர்பார்ப்பதில்லை. காரணம் விவாதத்தையும் ஒரு கற்றல் அனுபவமாகக் கருதுபவர்கள் இவர்கள்.
எனக்கு என்ன தெரியும் பார் என்பது ஒரு அணுகுமுறை. இந்த விஷயத்தில் என் நிலை என்ன என்பது இன்னொரு அணுகுமுறை.ஜெயமோகன் விவாதங்களை கவனித்து வருபவர்கள் அவரது பாணி என்ன என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள். நீங்களும், சதுக்க பூதமும் அவரிடம் அடிப்படையான விஷயங்கள் குறித்துக் கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள். விரைவில் நீங்களே அவரது அணுகுமுறை பற்றி அனுபவ பூர்வமாக அறிந்து கொள்வீர்கள்.
•Last Updated on ••Thursday•, 12 •September• 2019 08:24••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
பதிவுகள் ஆகஸ்ட் 2002 இதழ் 32
செவ்விலக்கியங்கள் இன்று எதற்கு?
செவ்விலக்கியங்களை ஏன் படிக்கவேண்டுமென பலசமயம் கேட்கப்படுவதுண்டு . இலக்கிய அரங்குகளில் இளம் கவிஞர்கள் அடக்கமுடியாத கோபத்துடன் " நான் என் அனுபவங்களை என் கண்ணோட்டங்களை எழுதுகிறேஎன். என குரல் அந்தரங்க சுத்தியுடன் இருக்கவேண்டுமென்பதே எனக்கு முக்கியம் . எதற்காக நேற்று என்ன எழுதினர்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும்? " என்று கேட்பார்கள் . இதன் மறுபக்கமாக வாசகர்கள் "நான் அறிந்து கொள்ள விரும்புவது இன்றைய வாழ்க்கையை.அதன் இன்றைய சிக்கல்களை .ஏன் நான் நேற்று எழுதப்பட்டவற்றை படிக்கவேண்டும் ?" என்பார்கள் . இவை முதல் பார்வைக்கு உண்மைபோலதெரியும் கூற்றுக்கள் . ஆனால் மிக ஆழமான சில அடிப்படைக் கேள்விகளை அதை ஒட்டி எழுப்பிக்கொள்ளும்போது அர்த்தமற்ற ஒன்றாக மாறிவிடக்கூடியவை.
நமது உணர்வுகளை நாம் இக்கணமே பிறந்து வந்த ஒரு புத்தம்புதிய ஊடகம் மூலம் வெளிபடுத்தவில்லை .இன்று நாம் எழுதுவது நேற்றுமுதலே இருந்துவந்த மொழியில் . நாம் பயன்படுத்தும் அனைத்து சொற்களும் நேற்றிலிருந்து வந்தவை . ஆகவே நேற்றுடன் அவற்றுக்கு உள்ள ஆதாரமான உறவை நாம் எவ்வகையிலும் மறைக்க முடியாது .இலக்கியம் என்பது கணந்தோறும் புதியதும் அறுபடாத காலம் கொண்டதுமான ஒரு பிரவாகம் என்பதில்தான் அதன் அனைத்து அழகுகளும் மகத்துவங்களும் அடங்கியுள்ளது .
இயல்பாகவும் தன்னிச்சையாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதாகச்சொல்லும் ஒரு இளம் கவிஞனையே எடுத்துக் கொள்வோம் . அவன் குறைந்த பட்சம் மொழியையாவது கற்றிருக்க வேண்டும். மொழி எனும் போது சொற்கள் அவற்றின் அர்த்தங்கள் இரண்டும் கொள்ளும் உறவை இங்கு உத்தேசிக்கிறோம். இந்த உறவு பலவகை நுட்பங்கள் கொண்டது .தொடர்ந்து கண்ணுக்குதெரியாமல் மாறிக் கொண்டிருப்பது . இந்த மாற்றங்களை நிகழ்த்துபவை அன்றாட புழக்கமும் ஆக்க இலக்கியங்களும் தான். அதாவது ஓர் இளம் கவிஞன் அவன் எந்த பண்டைய இலக்கியங்களையும் கற்காவிட்டால் கூட பண்டைய இலக்கியங்களால் கட்டமைக்கப்பட்ட மொழியையே அடைகிறான், அதையே பயன்படுத்துகிறான் . அதற்குள் தான் அவன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்.
இலக்கியம் படைக்கும்போது அவன் உண்மையில் செய்வதென்ன? ஏற்கனவே அர்த்த்ப்படுத்தப்பட்டு தன்னை வந்தடைந்த சொற்களை தன் அனுபவத்தின் இயல்புக்கும் வெளிப்படுத்தல் தேவைக்கும் ஏற்ப அவன் வேறு இரு வகையில் அடுக்கி வைக்கிறான். அதன் மூலம் இன்னொரு தளத்தை உருவாக்குகிறான் , அவ்வளவுதான் .இந்த அர்த்த தளத்தின் ஒரு பகுதியாக இருக்கையில் அதன் சொற்களில் சில மெல்லிய அர்த்த மாற்ந்த்தை அடைகின்றன . இந்த சிறு மாற்றமே உண்மையில் அக்கவிஞனின் பங்களிப்பு . அதை அவன் அடுத்த தலைமுறைக்காக விட்டுச் செல்கிறான் .
•Last Updated on ••Thursday•, 12 •September• 2019 07:29••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
பதிவுகள் ஜூலை 2003 இதழ் 43
1. மய்யமுடைத்தல்
- தேவகாந்தன் (கொழும்பு) -
நான் இலங்கை வந்து ஏறக்குறைய ஒன்றரை மாதங்களாகி விட்டன.இக் காலத்தில் நிறையவே நாடளாவிய நண்பர்களையும் , பொதுமக்களையும் , அரசியல்வாதிகளையும் சந்தித்திருக்கிறேன். அவர்களின் அறிக்கைகளையும் பரவலாகவே வாசித்திருக்கிறேன். வெளியேயிருந்து ஒரு கருடப் பார்வையில் இலங்கையின் அரசியல் நிகழ்வுகளை அவதானித்துக்கொண்டிருந்து கருத்துகளை அடைவதைவிட ,இங்கிருந்தே - மக்களுடன் இந்த மண்ணில் நேரடியாகவிருந்தே - முடிவுகளுக்கு வந்தடைதல் சுலபமாகவேயுள்ளது. எனினும் பத்திரிகை / பத்திரிகை சாராத நண்பர்களுடனான ஒரு கலந்தாலோசிப்பினதும் விவாதத்தினதும் மேலேயே எனக்கு இக் கண்டடைதல்கள் சாத்தியமாயிற்று என்பதையும் இங்கு நான் கூறியாகவேண்டும்.
அண்மையில் நடந்து முடிந்த கொடையாளி நாடுகளின் ரோக்கியோ மாநாட்டிலிருந்து விஷயத்தைத் தொடங்கலாமென நினைக்கிறேன்.
இம்மாதம் 10ம் 11ம் தேதிகளில் நடைபெற்ற அன்னதான -மன்னிக்கவும்- அந்நியதான மகாநாட்டுக்கு எல்லா நாடுகளும் , நிறுவனங்களுமே வந்திருந்தன. நோர்வே மிகவும் சரியான நிலைப்பாடெடுத்து ஒதுங்கி இருந்திருக்கிறது.
4.5 பில்லியன் டொலர்களுக்கும் கூடுதலாகவே கட்டம்கட்டமான உதவி வழங்கலோடும் , இன்னும் ஒரு பெரிய தொகைக்கான ஆசை வார்த்தைகளோடும் , தமிழீழப் புலிகளின் முன் சில உறுக்காட்டியமான வார்த்தைகளோடும் சில வேண்டுதல்களோடும் மாநாடு முடிவடைந்திருக்கிறது.
மாநாடு காரணமாக நடந்த ஒரு சிறப்பு நிகழ்வுதான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட ஆசியநாயகன் விருது. நல்லவேளையாக இது ஆட்டநாயகன் விருதாக வழங்கப்படவில்லை. சோவியத் யூனியனின் சிதைவுக்கு முன் போலந்திலும் , கிழக்கு ஜேர்மனியிலும் கிளர்ச்சிகள் தோன்றிய காலத்தில் 'கிளஸ்னோ' கொள்கையைக் கடைப்பிடித்து அனைத்து அழிவுகளுக்கும் வித்தூன்றிய சோவியத் பிரதர் கோர்ப்பசேவிற்கு man of tha year கௌரவப் பட்டம் வழங்கியதும் இதே டைம்ஸ் நிறுவனம்தான்.
அதிலிருந்து நடந்த நிகழ்வுகள் .....அப்பப்பா...!உலகமே அறியும்!
ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த சியநாயகன் விருது வழங்கப்பட்டமையை , அதுவும் டைம்ஸ் நிறுவனத்தாலேயே வழங்கப்பட்டமையை , நினைக்க எனக்கு மனதெல்லாம் திகில் வந்து பரவுகிறது.
அவர்கள் மிகவும்தான் தமது அவசரங்களைக் காட்டியிருந்தார்கள். மாநாட்டில் தத்தமது வியாபாரத்தை இலங்கையில் ஆரம்பிப்பதற்குத்தான். இந்த விஷயத்தில் மௌனமாய் , அதேவேளை உன்னிப்பாய்ச் சகலரின் செயற்பாடுகளையும் கவனித்துக்கொண்டிருந்த ஒரே நாடு இந்தியா மட்டுதான். இந்தோ- லங்கா எண்ணெய் நிறுவனத்தின் வியாபாரத்தை மாநாட்டுக்கு ஒரு வாரம்/ பத்து நாட்களுக்கு முன்னதாகவே திருகோணமலையில் ரம்பித்து வைத்துவிட்டிருந்ததே அதன் காரணம். இந்திய மத்திய அமைச்சர் ராம் நாயக்கே வந்து ஒரு வண்டிக்கு எண்ணெய் நிரப்பி கைவியள வியாபாரத்தை ரம்பித்து வைத்தார்.
•Last Updated on ••Thursday•, 12 •September• 2019 07:06••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
பதிவுகள் மார்ச் 2004 இதழ் 51
'இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும், விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும், சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே.' -சுப்ரமணிய பாரதியார்-
"பாரதியால் தமிழ் உயர்ந்ததும், தமிழால் பாரதி உயர்ந்ததும் இன்று யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். பாரதி மக்கள் கவி. மானுடம் பாட வந்த மாக்கவி. புது நெறி காட்டிய புலவன். தன்னைப் பின்பற்றித் தமிழ் வளர்க்க ஒரு பரம்பரையைத் தோற்றுவித்த ஓர் உயர்கவி. எண்ணத்தாலும், எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர். பல்துறை அறிஞர், தொலை நோக்கினர், அறிவியல் பார்வை நல்கிய கவிஞானி. மெய்ஞ்ஞான விஞ்ஞானங்களின் கூட்டுச் சேர்க்கை அவர் படையல். புதிய தமிழகத்தை உருவாக்கக் கனவு கண்ட கவிக்குயில். சுதந்திரப் போரில் பாரதியின் பாடல் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத் தீயாய், சுதந்திரக் கனலாய்ப், புனலாய்த் தமிழ் நாட்டை வீறுகொள்ளச் செய்தது...". -ச. மெய்யப்பன், எம்.ஏ. [அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]
பாரதி மகாகவியா இல்லையா வென்று பாரதியின் படைப்புகளைத் திறனாய்வு செய்து, பாராட்டுக்குரிய ஒரு கட்டுரையைக் கோவை ஞானி திண்ணை அகிலவலையில் [டிசம்பர் 12, 2003] வெளியிட்டு இருந்தார். மகாகவிகள் எனப் போற்றப்படும் காளிதாசர், கம்பர், வால்மீகி, வியாசர், தாகூர், ஷெல்லி, ஷேக்ஸ்பியர், காய்தே, பைரன் வரிசையில் பாரதியார் நிற்கத் தகுதி பெற்றவரா அல்லது பாரதியை வெறும் தேசீயக் கவி என்று ஒதுக்கி விடலாமா என்னும் கேள்வி ஒரு சமயம் எழுந்திருக்கிறது! பாரதிக்கு மகாகவி என்னும் பட்டமளிப்பது முறையா அல்லது தவறா என்று ஆய்வதற்கு முன்பு மேற்கூறப்பட்ட கவிஞர் காளிதாசர், வால்மீகி, கம்பர், வியாசர், ஷெல்லி, ஷேக்ஸ்பியர், காய்தே, பைரன் ஆகியோர், பாரதி தனது காவியத்தில் கையாண்ட நூற்றுக் கணக்கான பல்வேறு நிகழ்கால, மெய்யான, முரணான மனிதக் குறைபாடுகளை, மானிடப் பண்புகளை நடைமுறைகளைத், தேசீயப் போராட்டங்களை எந்த வகையிலாவது தொட்டிருக்கிறார்களா என்று பார்ப்பது முதற்கண் அவசியம். அதாவது மற்ற மகாகவிகளை ஒப்பிட்டுப் பாரதியை எடை போடாமல், பாரதியை ஓர் அளவு கோலாக எடுத்துக் கொண்டு மற்ற கவிஞர்களின் தரத்தை, நயத்தை, உயரத்தைத் திறனாய்வு செய்ய ஒருவர் விரும்பலாம்! பாரதியைத் தராசின் ஒரு தட்டில் அமர வைத்து, மற்ற கவிஞர் ஒவ்வொருவரையும் நிறுத்துப் பார்த்துத் தரத்தை அறிய முற்படலாம்!
கவிஞர்களைத் தனித்தனியாகப் பீடத்தில் நிறுத்தி, அவர் மகாகவியா, இவர் மகாகவியா, எவர் மகாகவி என்றெல்லாம் வர்ணம் பூசி வரிசையில் வைக்க முயல்வது, ஒருபுறம் வீணான செயலாக எனக்குத் தோன்றுகிறது! ஆயினும் தமிழ்நாட்டில் பாரதியின் திறமைப் புலமைக்கு ஓர் இடத்தை அளிக்கத் தமிழறிஞர்கள் முற்பட்டிருப்பதால், அதைப் பற்றி எனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்த ஆய்வுக்குச் சில கவிஞர் வால்மீகி, வியாசர், காளிதாசர் ஆகியோர் ஆக்கங்களைச் சிறிது ஆராய முயல்கிறேன்.
கவிஞர்கள் பலவிதக் கனி வகைகளைப் போன்றவர்கள்! கவிஞரின் தனித்துவப் படைப்புகள் எல்லாம், தனித்தனிக் கனிகளின் அரிய பழச்சுவை போல, முற்றிலும் வேறுபட்டு உள்ளத்தில் உணர்ச்சி அளிப்பவை! பலவிதக் கனிகளான மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பீச், பியர் ஆகியவற்றுள் எப்பழம் சுவையில் உயர்ந்தது, எப்பழம் சுவையில் மட்டமானது என்று கேட்டால் எவ்விதம் பதில் அளிக்க முடியும்? அவரவர் காலத்தின் கோலங்களை அவரவர் காவியத்தில், கவிதைகளில் வானவில் போல ஓவியம் தீட்டுகிறார்கள், படைப்பாளிகள்!
•Last Updated on ••Thursday•, 12 •September• 2019 02:35••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
- பதிவுகள் - யூலை 2004 இதழ் 55 1
1910-ம் ஆண்டுக்கும் 1930-க்கும் இடையே நிகழ்ந்த இந்த நூற்றாண்டின் மிகச் சக்திவாய்ந்த இயக்கமான 'நவீனத்துவ இயக்கத்திற்கு' எலியட் அளித்த பங்களிப்பு இன்னும் சர்ச்சிக்க முடியாதது. தனது சக அமெரிக்கரான எஸ்ரா பவுண்டுடன் (1885-1975) இணைந்து ஒரு புதிய புத்தம் கவிதை எழுதும் முறையைத் தொடங்கி வைத்தார் எலியட். முதலாம் உலகப்போர் நடந்த பிறகும் இயற்கை பற்றிப் பாடிக் கொண்டிருந்த ஜார்ஜிய ஆங்கிலக் கவிஞர்களின் தேய்ந்து போன, காலாவதியான கவிதை வெளிப்பாட்டு முறையையும், அவர்களின் கவிதைப் பொருள்களையும் எலியட் முற்றாக நிராகரணம் செய்தார். இந்த மாதிரிப் புரட்சிகள் இதே சமயத்தில் பிறகலைகளிலும் நிகழ்ந்து கொண்டிருந்தன. 'நவீனத்துவ கலைஞர்கள்', முன்பு ஏற்பட்ட கலை பற்றிய வரையறையை உடைத்தெறிந்தனர். உரைநடையில் James Joyce (1882-1941) என்ற ஐரிஷ் நாவலாசிரியராலும், ஓவியத்தில் பாப்லோ பிக்காசோ (1881-1973) வாலும், இசையில் Igor Stravinsky யாலும் (1882-1971) இத்தகைய புதுமையாக்கல் சாத்தியமானது. பவுண்டின் மிகப் பிரபலமான "Make it New" என்ற கொள்கையை பவுண்டின் சந்திப்புக்கு முன்பிலிருந்தே எலியட் செய்து வந்திருந்தார். ஆனால் இருவரின் சந்திப்புக்குப் பிறகு எலியட்டின் கவிதைகள் மேலும் இறுக்கமடைந்தன. புதிய படிமங்களையும், புதிய லயங்களையும் கவிதையில் வெளிப்படுத்துவதோடன்றி தினசரிப் பேச்சின் மொழியைக் கவிதையில் கையாள வேண்டும் என்றனர் 'நவீனர்கள்'. மேலும் கவிதை ஒரு கவனச் செறிவை நோக்கமாகக் கொண்டு, தெளிவற்ற பல வரிகளுக்குப் பதிலாய் ஒரே ஒரு கச்சிதமான சொல்லை, படிமத்தைப் பயன்படுத்துவதாக இருந்தால் நன்மை பயக்கும் என்றனர்.
எலியட்டின் கவிதைகளை முதலில் படிக்கும் வாசகர்கள் சந்திப்பது இரண்டு பிணைந்த அம்சங்கள்: 1. அசாத்தியத்தன்மை, 2. புரியாமை. வோர்ட்ஸ்வொர்த்தைப் படித்த வாசகர்களுக்கு நிச்சயமாக எலியட்டின் கவித்துவ வெளிப்பாட்டு முறையும், கவிதைப்பொருளும் விநோதமாய்த் தெரிவதில் ஆச்சரியமில்லை. கிராமத்து மடையர்களையும், பிச்சைக்காரர்களையும் தனது கவிதையில் இடம்பெறச் செய்த வோர்ட்ஸ்வொர்த் பதினெட்டாம் நூற்றாண்டின் ஏற்றுக் கொள்ளப்பட்ட இலக்கிய தராதரங்களுக்கு எதிர்வினை தந்தவர். எலியட்டும் இம்மாதிரியாகவே "நாற்றச் சாக்கடைகள்" மற்றும் "எரிந்துபோன சிகரெட் முனைகள்" பற்றியும் தினசரி மொழியில் கவிதைகள் எழுதியதற்காகக் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டவர். எலியட்டின் கவிதைகளில் 'அழகு' என்கிற அம்சமே இல்லை என்றும் சில விமர்சகர்கள் நிறுவ முயற்சி செய்தனர். மேலும் புரூபிராக் கவிதையில் வரும் இந்த வரிகளுக்கு வாசகன் எந்தமாதிரி எதிர்வினை தரவேண்டும் என்றே புரியாமலிருந்தது:
"நான் மூப்படைகிறேன் . . . நான் மூப்படைகிறேன். . . என் காற்சட்டைகளின் அடிப்பகுதிகளைச் சுருட்டி அணிவேன்."
தன் பெரும்பாலான வாழ்நாட்களை பிரிட்டனில் கழித்தபோதும், பிரிட்டிஷ் பிரஜையாக மாறிய போதும் தன்னை ஒரு அமெரிக்கக் கவிஞன் என்று கருதுவதை எலியட் நிறுத்தவில்லை. 1959 ஆம் ஆண்டு கொடுத்த ஒரு பேட்டியில் எலியட் கூறினார்:
•Last Updated on ••Monday•, 09 •September• 2019 08:07••
•Read more...•
- 'பதிவுகள்' இணைய இதழின் வளர்ச்சியை, அதில் இடம் பெற்ற விடயங்களை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களின் முதற் தொகுதி இது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், பாவண்ணன், அ.முத்துலிங்கம், கந்தையா ரமணீதரன், நாகரத்தினம் கிருஷ்ணா, புதியமாதவி, மான்ரியால் மைக்கல், முத்துநிலவன், டிசெதமிழன், மருத்துவர் முருகானந்தன், கவிஞர் ஜெயபாலன் , சுமதி ரூபன், வெங்கட் சாமிநாதன் , லதா ராமகிருஷ்ணன், கே.எஸ்.சிவகுமாரன், என்று இவர்களைப் போன்ற கலை, இலக்கிய ஆளுமைகள் பலரின்கருத்துகளை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களும் இவற்றிலுள்ளன. இவற்றில் சில பல முக்கியமான விவாதங்களையும் வெளிப்படுத்துகின்றன. இவற்றைப் பதிவு செய்வதன் அவசியம் கருதி இத்தொகுப்பு பதிவாகின்றது. ஏனைய கடிதங்கள் அடுத்த தொகுப்பில் இடம் பெறும். -
From: SANKAR SUBRAMANIAN To: Sent: Thursday, October 12, 2000 4:01 PM Subject: வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.
தேன் மதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிட பாரதி கண்ட கனவை மெய்ப்பிக்கும் அன்புத் தமிழ் ஆசிரியரே. "genom" சாத்தியப் பட்டால் வாழ்க நீவிர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள். உன்னை பெற்ற தமிழ்த்தாய் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பாள். 'வலை விரித்தேன்'. 'பதிவுகள்' கண்டேன். நெஞ்சம் வலையில் படிந்து விட்டது. 'பதிவுகள்' தொடர்ந்து படிப்பேனே. மனதில் பட்டதை சொல்வேனே. மீண்டும் அடுத்த பதிவுகள் பார்த்து எழுதுகிறேன். வாழ்த்துக்கள் ஐயா! வாழ்க நீவிர் பல்லாண்டுகள். அன்புடன் சங்கரன்
•Last Updated on ••Friday•, 12 •July• 2019 09:27••
•Read more...•
••Sunday•, 03 •December• 2017 14:13•
??- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-??
'பதிவுகளில்' அன்று
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
1. திருகோணமலையில் இராணுவம் செய்த அதர்மக் கொலைகள்.
வாழ வேண்டிய ஐந்து இளம் உயிர்கள் 2.01.06ல் திருகோணமலையில் இலங்கை இராணுவத்தால் பலியெடுக்கப் பட்டுவிட்டன.சண்முகராசா கஜேந்திரன்,லோகிதராஜா றோஹன்,தங்கத்துரை சிவானந்தராசா,யோகராசா ஹேமச்சந்திரன்,மனோஹரன் ராஜிகர் என்ற இளம் குருத்துக்கள், எத்தனையோ கனவுகளைத்தாங்கிக் கொண்டு எதிர்காலத்தை எதிர்நோக்கியவர்கள்,இலங்கை இராணுவத்தின் அதர்மத்தால் அழிக்கப்பட்டு விட்டார்கள். அவர்களை இழந்து துயர்படும் தாய் தந்தையர்கள் , உற்றார் உறவினர், ஊரார், ஆசிரியர்கள், ஒன்றாய்ப் படித்த சினேகிதர்களுக்கு எனது மனம் கனிந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இழப்புக்கு எனது அனுதாப வார்த்தைகள் எள்ளளவும் ஒவ்வாது.
நானும் ஒரு தாய். எங்களை மண்ணுக்குத் தியாகம் கொடுக்கவேண்டிய மகன்களை, இந்த இளம் வயதில் நாங்களே மண்ணுக்குத் தானம் செய்வதின் கொடுமையைக் கற்பனை செய்ய முடியாமலிருக்கிறது. எங்கள் வயிற்றில் தாங்கி,எங்கள் வாழ்க்கையையே அவர்களுக்குத் தியாகம் செய்த தாயின் துயரை வெற்று வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. பால் கொடுத்து, நிலவுகாட்டி உணவு கொடுத்து, எனது மகன் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும், தனது சமுதாயத்திற்கும் எவ்வளவோ நன்மை செய்வான் என்ற ஒவ்வொரு தாயின் கற்பனையையும் இப்படி அநியாயமான கொலைகளால் அழித்த இராணுவதையும் அந்த இராணுவத்தை தூண்டிவிடும் இலங்கை அரசாங்கத்தையும் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தற்போது, தமிழ் மக்களின் உயிர்கள் வெறும் ஒரு சிறு பூச்சியின் உயிரைவிட மலிவாக, அற்பமாக அழிக்கப் பாடு வருகின்றன. இதைத் தடுக்காவிட்டால் இன்னும் சில வருடங்களில் எத்தனை தமிழர்கள் இலங்கையில் வாழப்போகிறார்கள்?
இலங்கைக் கடற்படைக்குக் குண்டு எறியப் போனபோது இந்த இளைஞர்கள் கடற்படையினரின் தாக்குதலால் இறந்ததது என்று ஒரு செய்தியும் , கடற்கரையில் காற்றாட நின்ற இளைஞர்களைக் கடற் படை சுட்டுத் தள்ளியதாக இன்னொரு செய்தியும் சொல்கிறது. அவர்கள் எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்பதைபற்றிய அபிப்பிராய பேதங்களும் அதனாற் சிலரடையப் போகும் அரசியல் இலாபங்களையும் பேசுவதை விட, இதச் செய்தவர்களைக் கண்டுபிடித்து நீதிக்கு முன் நிறுத்துவது மனித உரிமைக்குப் போராடும் ஒவ்வொருத்தரின் கடமையாகும்.
•Last Updated on ••Sunday•, 03 •December• 2017 14:27••
•Read more...•
ஏப்ரில் 2003 இதழ் 40 -மாத இதழ் - பனிக்கால விடுமுறையில் உயிர்ப்பித்தலின்றி மரங்கள் அமைதியாய் உறக்கமுற்றிருந்தன. கிராமத்தின் எளிமை பார்வைமீது இதமாக வீச, தேவாலயத்தை அண்மித்தேன். எந்த அசுமாத்தமும் இல்லை. அமைதி என்னை தொந்தரவு செய்ய மண்டப வாசல் தேடினேன். நேரம் பத்து மணியை தாண்டியிருந்தது. இருள் வேண்டப்பட்ட அந்த மண்டபத்துள் நுழைந்து ஒரு இருப்பிடம் தேடவும் ஆங்கில மொழியில் விவரணம் சூழ்ந்து என்னை தனக்குள் இழுத்துக் கொண்டது. நேதாஜி சுபாஸ் சநதிரபோஸ் பற்றியும் அவரின் ஜ.என்.ஏ (இந்திய தேசிய இராணுவம்) பற்றியுமான விவரணப் படம் போய்க் கொண்டிருந்தது.
யூரோ மூவிஸ் இந்த குறும்பட விழாவை நடத்திக்கொண்டிருந்தது. இந்திய, இலங்கை, புலம்பெயர் குறும் படங்கள் (விவரணப் படங்கள் உட்பட) இந்த மண்டபத்தின் உள்ளிடத்தை திரையரங்காக மாற்றிப் போட்டிருந்தன. ஒரு இந்திய தமிழ்ச் சினிமா என்றால் அரங்கு களைகட்டியிருக்கும். திரை மட்டுமன்றி அருகில் இருப்பவனும் கதையளந்துகொண்டிருப்பான். தமிழ்த் திரையரங்குக்கு விசிலடி, கத்தல், இரைச்சல், குழந்தைகளின் அழுகுரல் என்பதெல்லாம் ஆசுவாசமான விசயம் தமிழ் ரசிகர்களுக்கு. ஆனால் இந்த குறுந்திரை அமைதி கிரகிப்பு உற்றுக் கேட்டல் என்பதையெல்லாம் எம்மிடம் தந்துவிட்டு தான் மட்டும் பேசிக்கொண்டிருந்தது. எனது எதிர்பார்ப்பையும் மீறி இருக்கைகள் நிறைந்திருந்தன. சுமார் 150இலிருந்து 200 பேர்வரை பார்வையாளர்களை உள்வாங்கியிருந்தது அந்த மண்டபம்.
•Last Updated on ••Wednesday•, 09 •August• 2017 22:48••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
- 'பதிவுகள்' மே 2003 இதழ் 41 -
யமுனா :ரொம்பவும் நேரடியாகவும் ப்ருட்டலாகவுமே தொடங்கலாம் என்று நினைக்கிறேன். .இன்றைய இந்திய சூழலில் தமிழ்த்தேசியத்தின் தேவை என்னவென்று கருதுகிறீர்கள்?
தியாகு : தமிழ்த்தேசியம் என்கிறபோது அது ஒன்றுதான் உண்மையான நேர்மறையான தேசியம்.. ஏதோ பல்வேறு தேசியங்கள் இருக்கிறமாதிரி அதில் தமிழ் தேசியம் ஒன்றாக இருந்தது அதன் இடம் என்ன அல்லது இந்திய தேசியம் என்பது என்ன என்று பேசுவதற்கான இடம் இதுவல்ல. ஒரு காலத்தில் இந்திய தேசியத்திற்கான தேவை இருந்தது. அது எதிர் மறை தேசியமாக இருந்தது. தமிழ்த் தேசியம் என்பதுதான் -மொழி- மொழி பேசுகிற இனம்- அதனுடைய நிலப்பரப்பு- அதனுடைய பண்பாடு- அதனுடைய உளவியல் உருவாக்கம்- அதனுடைய பொருளியல் பிணைப்பு என்று எல்லா அப்படைகளிலும் தேசம் என்பதற்குரிய வரலாற்று வழிப்பட்ட இலக்கணங்களின் அடிப்படையில் உண்மையான நேர்வகையான தேசம்.. தமிழ்த் தேசம் என்கிறபோது- அப்படி இருப்பது அங்கீகரிக்கப்படாமல் மறுக்கப்பட்டும் பிறிதொரு அரசமைப்புக்குடபட்டும் இருக்கிறபோது இயல்பாகவே அது ஒரு ஒடுக்குண்ட தேசத்தின் தேசியமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட தேசியத்தின் தேசியம் என்ற வகையில் தமிழ்த் தேசியம் இன்று பொருத்தப்பாடுடையது. அந்த வகையில்தான் எல்லா அடிப்படையகளிலும் இங்கு மாற்றத்திற்கான அரசியல் பேசுகிறோம்.
•Last Updated on ••Monday•, 24 •July• 2017 21:58••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
'பதிவுகள்' ஆகஸ்ட் 2002 இதழ் 32
மறுவரையறை எதற்காக?
செவ்வியல் [classic] என்பது என்ன , செவ்விலக்கியங்கள் எவை என்ற கேள்வி எல்லாக் கலாச்சார சூழலிலும் எப்போதுமே எழுந்தபடியே இருப்பதாகும்.காரணம் ஒரு சமூகம் தன் அடிப்படைகள் என்ன ,அடையவேண்டிய இலக்கு என்ன என்பவற்றை தீர்மானித்துக் கொள்வதற்காகவே இவ்வினாக்களை எழுப்பிக் கொள்கிறது.
ஓவ்வொரு புதிய கலாச்சார இயக்கம் உருவாகும்போதும் அது செவ்வியல் செவ்விலக்கியம் முதலியவற்றை மறு வரையறை செய்ய முயல்வதைக் காணலாம். தமிழ் சூழலில் கடந்த கால உதாரணங்களை எடுத்து பார்த்தால் இது தெளிவாகத் தெரியும் . நூறு வருடம் முன்பு பக்திக் காலகட்டத்தில் புராணங்கள் ,சிற்றிலக்கியங்கள் ,துதிப்பாடல்கள் முதலியவை முறையே முக்கியமான செவ்விலக்கியங்களாக கருதப்பட்டன.அடுத்த மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் பாரதி ' யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர் போல் இளங்கோவைப்போல்....' என்று ஒரு தரவரிசையை உருவாக்கி செவ்விலக்கியம் குறித்த பிரக்ஞையை மாற்றியமைத்தார். அதன் பிறகு உருவான திராவிட இயக்கம் இம்மூன்று படைப்புகளில் கம்பராமாயணத்தை வெளியே தள்ள கடுமையாக முயன்றது . வள்ளுவத்தை முதலில் கொண்டு வந்தது. அடுத்த இடத்தில் சங்க இலக்கியத்தைக் நிறுத்தியது .
ஒவ்வொரு சமூக ,அரசியல் மாற்றங்களையும் இவ்வாறு இலக்கிய அடிப்படைகளில் ஏற்பட்ட மாற்றங்களை வைத்தே நாம் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று தோன்றுகிறது . கம்ப ராமாயணத்தை வைத்து ஒரு பெரும் கலாச்சாரப் போரே தமிழில் நடந்துள்ளது. திராவிட இயக்கம் அதை இரண்டு அடிப்படைகளில் மறுத்தது . ஒன்று: அது மத இலக்கியம் . இரண்டு : அது வடமொழியில் இருந்து வந்தது , ஆகவே ஆரியக் கலாச்சாரத்தில் வேர்கொண்டது . கம்பன் தமிழ் மனத்தில் உருவாக்கிய விழுமியங்களையும் ,கம்பனின் மொழிக்கொடையையும் முக்கியமாகக் கருதிய ஒருசாரார் காரைக்குடி , சா. கணேசன் அவர்களின் தலைமையில் கம்பன் கழகம் அமைத்து கம்பனின் முக்கியத்துவத்தை வலியுறுத்த தலைப்பட்டனர்.திராவிட இயக்கம் கூறிய கருத்தின்படி பார்த்தால் கம்பனுக்காக பரிந்து பேசியிருக்க வேண்டியவர்கள் வைணவர்களும் பிராமணர்களும்தான் .மாறாக சைவர்களும் ,பிராமணரல்லாத தமிழறிஞர்களும்தான் கம்பனுக்காக பேசினார்கள் . முக்கியமான கம்பராமாயண அறிஞர்கள் மு. மு. இஸ்மாயில் , அ. ச. ஞானசம்பந்தன் , கருத்திருமன் ஆகியோர் உதாரணம். இது செவ்விலக்கியத்தின் அடிப்படைகள் குறித்து யோசிக்கும் போது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் .
•Last Updated on ••Monday•, 24 •July• 2017 21:44••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
லத்தின் அமெரிக்க கண்டத்தின் மக்கள் கூட்டம் பல தலைமுறைகளாக காலணியாதிக்கத்தின் அடக்கு முறையின் கீழ் அனுபவித்த அவலங்களைக் கண்டு பொங்கியெழுந்த புரட்சியாளர்கள் பலர். இவர்களுள் எனர்ஸ்டோ சே குவேரா போன்று தமது மக்களுடைய அவலநிலையைக் கண்டு மனம் பொறுக்காமல் அவர்களுடைய நன்மைக்காக அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் குரல் கொடுத்த காரணத்தால் கொலை செய்யப்பட்ட தலைவர்களில் ஒருவர் சிலி நாட்டின் ஜனாதிபதி சல்வடோர் அயென்டே, தமது மக்களின் நன்மைக்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதனது ஆதரவாளர்களான சுதேசியப் பெருமுதலாளிகளையும் பகைத்துக் கொண்டதால், 1973 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 11ம் திகதி சிலியின் இராணுவ ஜெனரல்களால் கொலை செய்யப்பட்டார்.
ஜனாதிபதிக்கான தேர்தலில் 1970 இல் போட்டியிட்டபோது அயென்டே தான் ஒரு மார்க்ஸிஸ்ட் எனப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அவர் தேர்தலில் வெற்றி பெற்றபோது, உலகிலேயே வாக்குச்சீட்டின் மூலம் மக்கள் தேர்ந்தெடுத்த முதலாவது மார்க்ஸிய அரசுத் தலைவராக அயென்டே புதிய வரலாற்றை உருவாக்கினார்.
லத்தீன் அமெரிக்கக் கண்டத்தில் இருந்த நாடுகளுக்கும் ஏனைய ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கும் அயென்டேயின் வெற்றி ஏகாதிபத்தியத்துக்கெதிரான ஏழை மக்களின் வெற்றியாகக் கொண்டாடப்பட்டு பெரும் ஆதர்சமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது. அரசியல் அதிகாரம் எதுவுமற்;ற சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிறிய முன்னேற்றம்கூட, அவர்கள் வாழும் சமூக அமைப்பில் ஏற்படக்கூடிய தீவிரமான மாற்றத்தின் மூலமே சாத்தியமாகுமெனில், அத்தகைய ஒரு தீவிர அமைப்பு மாற்றத்தை அமைதியான முறையில், ஜனநாயக ரீதியில், சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்ட வழிகளில் ஏற்படுத்துவது நடைமுறைச் சாத்தியமானது என்பதை அயென்டேயின் வெற்றி உலகத்திற்கு உணர்த்தியது. ஒரு மாக்ஸிஸ்ட்டை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டத ன் மூலம் சிலி, உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தது.
1908 ல் உயர் குடும்பத்தில் பிறந்த அயென்டே, தனது இருபத்தைந்தாவது வயதில் ஏனைய அரசியல் தோழர்களுடன் சேர்ந்து சிலியின் சோசலிசக் கட்சியை நிறுவினார். பாராளுமன்றம் முதலான ஜனநாயக அமைப்புகளின் மூலமாக, சோசலிசச அடிப்படையில் அமைந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அயென்டே உறுதியாக நம்பினார். வன்முறையை அடிப்படையாகக் கொண்ட புரட்சியின் மூலம் சோசலிசத்தை உருவாக்குவது, நூற்றைம்பது வருடங்களுக்கு மேலான ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்ட சிலிக்கு பொருத்தமானதல்ல என அவர் கருதினார். சோசலிசத்திற்கான சிலியின் பாதையை நாற்பது வருடங்களுக்கு மேலாக அவர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். சிலியின் உழைக்கும் ஏழை மக்களுடைய நலன்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த அயென்டே, தனது வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும், சொந்த நலன்களுக்காக, ஏழைகளின் வாழ்க்கையைப் பேரம்பேசி விட்டுக் கொடுக்காத தலைவராக இறுதிவரை வாழ்ந்தார்.
•Last Updated on ••Saturday•, 22 •July• 2017 20:12••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
எழுத்தாளர் மேரி ஆன் மோகன்ராஜ்...2005ம் ஆண்டு கோடைக்கால முடிவில் நான் விமானத்தில் பயணம் செய்தபோது எனக்கு பக்கத்திலிருந்த இருக்கையில் ஒரு வெள்ளையர் வந்து உட்கார்ந்தார். அவருடைய உடம்பு அகலம் இருக்கையின் அகலத்துக்கு சரியாக இருந்தது. ஆசன பெல்ட்டை நுனி மட்டும் சிரமப்பட்டு இழுத்து பூட்டிக்கொண்டார். உடனேயே கைப்பிடியை யார் கைப்பற்றுவது என்ற போராட்டம் எங்களுக்குள் ஆரம்பமானது. தோற்றுவிடுவேன் என்று தோன்றியபோது நான் விட்டுக்கொடுத்தேன். சிறிது நேரம் சென்று பார்த்தபோது அவருடைய முகம் இளமையானதாகத் தோன்றியது. மெல்லப் பேச ஆரம்பித்தோம். நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்று சொன்னதும் உங்களுக்கு மேரி ஆன் மோகன்ராஜை தெரியுமா என்றார். இல்லை என்றேன். கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்றார். அதற்கும் குற்ற உணர்வு மேலிட இல்லை என்றேன். இன்று Erotica (காம இலக்கியம்) எழுதுபவர்களில் அவர் முன்னணியில் இருப்பதாகவும், பல புத்தகங்களை அவர் எழுதியிருப்பதாகவும் சொன்னார். மேரி ஆன் ஓர் இணையதளம் நடத்துகிறார்; தொடர்ந்து டயரி எழுதுகிறார்; பல புத்தகங்களுக்கு தொகுப்பாசிரியராக இருக்கிறார். அவர் கடைசியாக எழுதிய Bodies in Motion புத்தகம் இரண்டு மாதங்கள் முன்புதான் வெளியானது. இவ்வளவு விபரங்களை அவர் வாய் ஓயாமல் சொல்லி முடித்ததும் அவருடைய சுற்றளவு சற்று குறைந்துவிட்டதுபோல எனக்குப் பட்டது. வீடு வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக Bodies in Motion நாவலை வாங்கிப் படித்தேன். அவர் தொகுத்து வெளியிட்ட இரண்டு காம இலக்கியப் புத்தகங்களையும் வாசித்தேன். அவை தண்ணீருக்கு வெளியே வைத்துப் படிக்கக்கூடிய புத்தகங்கள். தண்ணீருக்கு உள்ளேயும் வைத்துப் படிக்கலாம். அப்படி பிளாஸ்டிக் போன்ற ஒரு தாளில் அவை அச்சடிக்கப்பட்டிருந்தன. பாண்டவர்களும், கௌரவர்களும் அடிக்கடி ஜலக்கிரீடை செய்யும்போது இப்படியான புத்தகங்களை படித்திருப்பார்கள் போலும் என்று நினைத்துக்கொண்டேன்.
•Last Updated on ••Saturday•, 22 •July• 2017 20:11••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
மால்கம் எக்ஸின் 'என் வாழ்க்கை'“கூவர சுவாற்ஸ்” (ஊத்தைக் கறுப்பா) என்று அவன் பேசுகிறான். நான் கறுப்பா? பார் என்ரை நிறத்தை. பிரவுண். ஆபிரிக்கர்கள்தான் கறுப்பு என்கிறேன்;. சரியான பதிலாக திருப்தியடைகிறேன். வெள்ளைக்கார நண்பன் எனக்கான சான்றிதழொன்றைத் தந்து திருப்திப்படுத்த முயற்சிக்கிறான். “அவன் கறுப்புத்தான், ஆனால் மனசு வெள்ளை” என்கிறான். திருப்திப்படுகிறேன். இந்த எதிர்கொள்ளல் சரியானதா?. வெள்ளைமயப்படுத்தப்பட்ட சிந்தனையே இந்தப் பதிலில் ஊறியிருக்கிறது. அதாவது ஆணிய சிந்தனை பெண்ணிடம் ஊறியிருப்பதுபோல. இப்போ எனது பதில் இப்படியாய் வருகிறது. கூவர சுவாற்ஸ்! ...ஆம் நான் கறுப்பன்தான். உனக்கு என்ன பிரச்சினை அதிலை?. வெள்ளை மனசு!... இல்லை என்ரை மனசும் கறுப்புத்தான்... அது வெளிப்படையானது. இதை இப்படித்தான் எதிர்கொண்டாக வேண்டும் எனப் படுகிறது எனக்கு.
அன்றாடம் ஏதோவொரு வடிவில் நான் கறுப்பன் என நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் “மல்க்கம் எக்ஸ்- என் வாழ்க்கை” என்ற நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. 730 பக்கங்கள் கொண்ட இந்த நூல் எனது வாசிப்பை தீவிரப்படுத்திக் கொண்டே இருந்ததற்கு நிறவெறிமை அகலாத புகலிட வாழ்வில் எனது இருப்பு காரணமோ என எண்ணுகிறேன். சே, பனான், மார்க்கோஸ், லுமும்பா... என தத்துவவாதிகளை போராளிகளை தமிழுக்கு விலாவாரியாக அறிமுகமாக்கிக்கொண்டிருக்கும் விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது மல்கம் பற்றிய நூல். விடியல் பதிப்பகத்தின் வெளியீடுகளுடாக தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களாக வெளிப்பட்டிருப்பவர்கள் பாலச்சந்திரன், கோவிந்தசாமி ஆகியோர். இந்த நூலும் கோவிந்தசாமியால் சரளமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாசிப்பை தடங்கலின்றி இழுத்துச் செல்கிறது.
நாம் காந்தியை தெரிந்து வைத்துக் கொள்ளும் அளவுக்கு சுபாஸ் சந்திரபோஸினை தெரிந்து வைத்துக் கொண்டதில்லை. வெள்ளையர்களுடன் சமவுரிமைக்காக குடியுரிமைக்காக அகிம்சை வழியில் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கினை அறிந்திருக்குமளவிற்கு வெள்ளைக் கருத்தியலின் எதிர்மறுப்பாளனாக கலகக்காரனாக வெளிக்கிளம்பிய மல்கம் எக்ஸ் இனை நாம் தெரிந்துவைத்திருக்கவில்லை. எப்போதுமே ஒரு தலைவன் ஒரு இயக்கம் என்ற பரிமாணத்துள் -அதன் பக்க பலங்களை புறந்தள்ளி- விளக்க முயலும் மனோபாவமும், தீவிர அரசியலின் போக்கை நிறுத்த மிதவாத அரசியலை முன்நிறுத்தியவர்களை அங்கீகரிக்க வைக்கும் முதலாளிய சூழ்ச்சியும் எமது புரிதல்களை மட்டுப்படுத்திவிடுகிறது.
•Last Updated on ••Saturday•, 22 •July• 2017 19:58••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
எழுத்தாளரும், கலை, இலக்கியத்திறனாய்வாளருமான ஏ.ஜே.கனகரட்னா மறைவையொட்டிப் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான படைப்புகள் ஒரு பதிவுக்காக இங்கு பதிவாகின்றன.
ஏ.ஜே. என்ற ஆளுமைமிக்க ஆகிருதி! - மேமன்கவி -
அண்மையில் மறைந்த ஏ.ஜே.கனகரட்னா ஆளுமைமிக்க ஆகிருதி ஒன்றின் மரணம் தரும் மௌனம்- அது அதன் உடலின் நிரந்தர உறக்கம் அதுவே விழிப்பாகி.... விரிந்த மேசையின் பரப்பில் ஒடுங்கிய புத்தக அடுக்குகளில் இணைய உலாவிகளின் முடக்கங்களில் உரத்துப் பேசத் தொடங்கும் தருணமிது! "எதற்குமே உரிமைக் கோராத ஞானம்" பெற்ற ஆகிருதியின் ஆக்கங்களுக்கே அது சாத்தியம். அதன்- திறன்களின் மீது பாய்ச்சப்படும் வெளிச்சம் தரும் புலர்வு அருகே இருந்த மூளைகளில்.... பேசும் வார்த்த்தைகள் மௌனமாகிப் போக- எழுதிய வார்த்தைகள் போல் வாழ்ந்து போன வாழ்வு அந்த புலரவின் பிரகாசத்தில் உரத்து வாசிக்கப்படும். "ஏ.ஜே" எனும் மறையாத ஆளுமைமிக்க ஆகிருதியும் அதுவான ஒன்றுதான்!
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
பதிவுகள் டிசம்பர் 2006 இதழ் 84
•Last Updated on ••Saturday•, 22 •July• 2017 19:53••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
This is what Maalan has written in his blog:
- உவேசா மறைந்து இன்னும் அறுபது ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் அவரைப் பற்றிய செய்திகள் ஆய்வாளர்களின் வசதிக்கு ஏற்பத் திரிக்கப்படுகின்றன. இத்தனைக்கும் உவேசாவே தனது வாழ்க்கைச் சரிதத்தின் பெரும்பகுதியை எழுதியிருந்தும், அது பிரபல வார இதழான ஆனந்தவிகடனில் தொடராக வந்தும், இன்றும் அந்த நூலின் பிரதிகள் எளிதில் கிட்டும் போதும், இந்த நிலை. காலச்சுவடு இதழின் மார்ச் இதழில் பொ.வேல்சாமி எழுதுகிறார்:
"உ.வே.சாமிநாதய்யருக்கு அவர் குடும்பத்தார் இட்ட பெயர் வேங்கடராமன் என்பதாகும். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் உ.வே.சா மாணவராகச் சேர்ந்தபோது 'வேங்கடராமன்' என்னும் வைணவப் பெயரைச் சொல்லி அழைக்க அவர் மனம் இடம் தரவில்லை.ஆகவே 'சாமிநாதன்' எனப் பெயரை மாற்றினார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை."
ஆனால் உண்மை என்ன? " நான் பிறந்த போது எனக்குச் சாமிநாதன் என்னும் பெயர் இடப்பட்டது. சாமி மலை என்னும் ஸ்தலத்திலுள்ள முருகக்கடவுளுக்குச் சாமிநாதனென்பது திருநாமம். அது பற்றியே எனக்கு அப்பெயர் இட்டார்கள். எல்லோரும் என்னை சாமா என்றே அழைப்பார்கள். சாமிநாதனென்பதே மருவி அவ்வாறு ஆயிற்று" என எழுதுகிறார் உவேசா. (என் சரித்திரம் - அத்தியாயம் 9)
உவேசா இவ்வளவு தெள்ளத் தெளிவாக எழுதியிருக்கும் போது காலச்சுவடு ஏன் வரலாற்றைத் திரிக்க முயல்கிறது?. "ஒரு சூத்திரப் புலவர் இட்ட பெயரை ஆசாரமான பார்ப்பனக் குடும்பத்தினர் எந்த வித மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டனர்" என்பதை நிறுவ காலச்சுவடு ஆசைப்படுகிறது. அது வார்த்தைகளில் சொல்லாமல் மறைமுகமாக உணர்த்த முற்படும் செய்தி சூத்திரப் புலவரின் மனம், மாற்று மதம் சார்ந்த பெயரை ஏற்கத் தயங்கியது. ஆனால் பிராமணக் குடும்பம் பெருந்தன்மையுடன் சூத்திரப் புலவரின் பெயர் மாற்றத்தை ஏற்றுக் கொண்டது என்பதாகும். 'சூத்திரப் புலவர்' எனக் காலச்சுவடு குறிப்பிடும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவரையும் தனது மாணவராக ஏற்றுக் கொண்டிருந்தார். அந்த கத்தோலிக்கரின் பெயர் சவேரிநாத பிள்ளை.அவரை மீனாட்சிசுந்தரம் பிள்ளை அன்பொழுக 'அப்பா! சவேரிநாது' என்றுதான் கூப்பிட்டு வந்தார். பெயர் மாற்றம் ஏதும் செய்யவில்லை.
•Last Updated on ••Saturday•, 22 •July• 2017 20:00••
•Read more...•
- ஏப்ரில் 2003 இதழ் 40 - டிசம்பர் 2003 ; இதழ் 48 வரை வெளியான பதிவுகள் இணைய இதழில் வெளிவந்த அம்மூடனார் பக்கத்தில் பிரசுரமான கவிதைகள் மற்றும் குறிப்புகள் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன. -
இந்தக்கிழமை -I: எமக்கானது / எம்மாலானது
குழம்பியிருக்கிறேன் நிரம்ப, உட்குடம் நுரை ததும்பத் ததும்ப. நிலையால், நிகழ்வால் நீங்காக்குழப்பம்; மேலாய், எரிநாள் நெடுக்க, பேசியதை மீள மூளப் பேசவேண்டிய மிருகவதை மூளை மேல் துரத்திப் படர்வதனால். ஓங்கு தான் உள்ளே ஒரு கணம் தயங்கினாலும், ஒன்று சொல்லித்தான் ஆகவேண்டும்; "நான் குழம்பியிருக்கிறேன் - முக்கியமாய் பேசப்படும் நான் பிம்பமில்லாதானானதினால்." இடது வலது எல்லாம் நாணிக் குழைந்தொன்றாய் தெரு வழிந்தோடிப் போக, சுற்றி அவகதிலயத்திலே உயிர்கொத்தியள்ளி, அதிர்கிறது சொத்திக்கூத்து. கொள்ளிக்கையனும் அள்ளித்தின்னியும் கறைக்கையைக் கோர்த்துக்கொண்டு துள்ளித் துள்ளி ஆடும் துடிநாட்டியத்துரிதம். இடையிடையே எனதென்ற கடிதத்தில் என்னைக் கொள்ளையடித்தவனுக்கும் முகமிறுக்கி விட்டோம் முழுக்குத்தென ஏராளமிட்டுக்கொண்டார் கையொப்பம் - என் பெயரால், உன் பெயரால் ஊரிருந்தார், உருவிறந்தார் நிழல் பெயர்ந்தார், நிலைபெயரார் எல்லார் பெருகுதுயர் பெயராலும். அடுத்தவேளைக்குப் பருப்புத்தேடும் சிறுத்த மனிதப்புள்ளி அரசச்சு விளம்பரப்பொறி பரந்த தெரு அகல்சுவரில் மூச்சுத் தப்பொரு பொட்டிடுக்குத் தேடி மறுப்பறிக்கை சுழித்துக் காட்டமுடியுமா, மெய் சொல். அவனிவன்மேல் 'கொள்கைக்காரன்', 'கொள்ளைக்காரன்'
•Last Updated on ••Tuesday•, 11 •November• 2014 22:51••
•Read more...•
- பதிவுகள் இணைய இதழில் ஏப்ரல் 2004 இதழ் 52 தொடக்கம் ஜனவரி 2005 இதழ் 61 வரை வெளியான எழுத்தாளர் புதியமாதவி (மும்பை) -எழுதிய கவித்துவம் மிக்க உரை வீச்சு 'அரபிக்கடலோரம்'. தற்போது ஒரு பதிவுக்காக மீண்டும் இங்கே பிரசுரமாகின்றது. -
கவிதை: அரபிக்கடலோரம்... அலை...1
என் கடற்கரைகளை.. நான் மூன்று சக்கர வண்டிகள் ஓட்டி விளையாடிய புல்தரைகளைக் காணவில்லை.
என் கடற்கரையில் அன்று அலைவீசியது உண்மைதான். ஆனால்- அள்ளிவந்தவை முத்துக்கள் அல்ல சிப்பிகளும் கழிவுகளுமே.. என் கடலலைகள் மீண்டும் மீண்டும் அள்ளிவந்து என் மடியில் கொட்டின.
•Last Updated on ••Thursday•, 13 •November• 2014 02:23••
•Read more...•
- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -
தமிழ்ச் சூழலில் பெண்ணிய நோக்கு பெண்ணிய விமர்சனம், பெண்ணிய எழுத்துக்கள் அண்மைக்காலங்களில் வெகுவாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 1986 இல் வெளிவந்த ஈழத்துப் பெண் கவிஞர்களின் தொகுப்பான 'சொல்லாதசேதிகள்' என்னும் கவிதைப் தொகுப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். அதேபோல் புலம்பெயர் பெண்களால் வெளியிடப்பட்ட 'மறையாத மறுபாதியும்' இதற்குள் அடங்கும். 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் காவ்யா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெண் கவிதைகள் ’’பறத்தல் அதன் சுதந்திரம்’’ என்னும் கவிதைத்தொகுப்பு வெளிவந்துள்ளது. இந்நூலை அண்மையில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. இத் தொகுப்பில் 52 பெண் கவிஞர்களின் கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக் கவிதைத் தொகுப்பை மாலதி மைத்ரியின் உதவியுடன் க்ருஷாங்கினி தொகுத்துள்ளார். இதற்கு வ.கீதா முன்னுரை எழுதியுள்ளார். அத்துடன் 11 பெண் ஓவியர்கள் தம் ஓவியங்களால் இத்தொகுப்புக்கு கனம் சேர்த்துள்ளனர். பெண்களது சுயாதீனம், தனித்துவம், சுய இயல்பு, அவர்களின் அடையாளம் மற்றும் கலாச்சாரம், பாலியல், குடும்பம் ஆகியவை பற்றிய சிந்தனைகள் இன்று கட்டுரைகள், கவிதைகள் (ஹைக்கூ உட்பட), விமர்சனங்கள் நாடகங்கள், ஒவியங்கள் என தமிழ்ச் சூழலில் இன்று பெண்களின் எழுத்துத்துறை வளர்ச்சிப் பாதையில் செல்வதை நாம் காண்கின்றோம். அந்தவகையில் இத் தொகுப்பில் வெளிவந்த அனைத்துக் கவிதைகளும் சஞ்சிகைகளிலோ அல்லது பத்திரிகைகளிலோ, தொகுப்புகளாகவோ வெளி வந்துள்ளன. அவையெல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தொகுப்பாக ”பறத்தல் அதன் சுதந்திரம்” வெளிவந்துள்ளது.
•Last Updated on ••Saturday•, 05 •July• 2014 19:51••
•Read more...•
- 'பதிவுகளில் அன்று' பகுதியில் திஸ்கி மற்றும் அஞ்சல் எழுத்துருக்களில் பதிவுகளில் அன்று வெளியான படைப்புகள் ஒருங்குறிக்கு மாற்றப்பட்டு அவ்வப்போது பிரசுரமாகும். அந்த வகையில் R.P. ராஜநாயஹம் எழுதிய இக்கட்டுரையும் பிரசுரமாகின்றது. - பதிவுகள் -
பகுதி 1 Criminals are Creative Artists என்று சொல்லப்படுகிறதல்லவா? அதை ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் மெய்யாக்கியுள்ளார்கள். 'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகையின் ஒரு பகுதி காலச்சுவடு 42ல் வெளி வந்த பிறகு 43வது இதழில் மோகனரங்கன், நாஞ்சில் நாடன் அவதூறுகளுக்கு கண்ணன் எதிர்வினையாற்றிய போது புதுமைப்பித்தன் பிரச்சினையில் சொல்புதிதின் நிலைபாடு பற்றி ஒரு நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் பகிரங்கமாக சவால் விட்டிருந்தார். அதை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாத பெட்டைத்தனம் தான் 'நாச்சார் மட விவகாரம்' என்று விகாரமாக வெளிப்பட்டது. அப்போது திண்ணையில் கண்ணனின் விவாதமாக வந்ததில் கீழ்கண்டவாறு ஒரு பகுதியில் குறிப்பிட்டிருந்தார். 'ராஜநாயஹத்தை இன்றுவரை நான் சந்தித்ததில்லை. காலச்சுவடின் எந்த அரங்கிலும் அவர் கலந்து கொண்டதில்லை. ஊட்டி தளையசிங்கம் இலக்கிய அரங்கை பற்றிய ராஜநாயஹத்தின் பதிவு காலச் சுவடுக்கு வரும்வரை அவரோடு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அவரை நாங்கள் அனுப்பி வைத்ததாக ஜெயமோகன் ஆதாரமின்றி அவதூறு செய்து வருகிறார். ராஜநாயஹம் அவர் பெயரில் கட்டுரை எழுதினார். புனைபெயரில் அல்ல. கட்டுரையாக எழுதினார். புனைவாக அல்ல. ' என்று எழுதி, பின் தொடர்ந்து எழுதும்போது 'ஆர்.பி. ராஜநாயஹம் பதிவுக்கு எதிர்வினையாக நாஞ்சில் நாடன் காலச்சுவடுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஜெயமோகன் அதன் நகலை நாடனிடமிருந்து பெற்று திண்ணைக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். அதில் நாஞ்சில் நாடனின் அனுமதியின்றி ஜெயமோகன் பல சொற்களை நீக்கியும் பல இடங்களில் தன் கருத்துக்களை சேர்த்தும் அனுப்பியுள்ளார். நாஞ்சில் நாடனின் கையெழுத்துப் பிரதி என்னிடம் உள்ளது. திண்ணைக்கு அதன் புகைப்பட நகலை என்னால் அனுப்பி வைக்க முடியும். என்னுடைய இந்தக் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் மறுக்கும்படி ஜெயமோகனை கேட்டுக் கொள்கிறேன்.' என்று சவால் விட்டிருந்தார். அப்போது ஜெயமோகன் மூச்சேவிடவில்லை. தொடர்ந்து அந்தர் தியானம். தேள் கொட்டிய திருடனின் நிலை.
•Last Updated on ••Sunday•, 08 •June• 2014 00:04••
•Read more...•
••Saturday•, 07 •June• 2014 17:14•
??- R.P. ராஜநாயஹம் , அசோகமித்திரன், ரவி ஸ்ரீனிவாஸ் -??
'பதிவுகளில்' அன்று
- பதிவுகள் இணைய இதழில் 2005 காலகட்டத்தில் விவாதங்கள் பல நடைபெற்றன. எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் காரசாரமாக வாதிட்டுக்கொண்டார்கள். முட்டி மோதிக்கொண்டார்கள். இங்கு வெளிப்படும் கருத்துகள் பதிவுகள் இதழின் கருத்துகளல்ல. வாதங்களில் பங்குபற்றிய கட்டுரையாளர்களின் கருத்துகளே. உயிர்மை ஏப்ரல் 2005 இதழில் ‘அசோகமித்திரன் படைப்பு மீதான அவதூறு’ என்று கட்டுரையொன்றினை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்தார். அது தொடர்பாக R.P. ராஜநாயஹம் 'சிறப்புடையாரியச் சீர்மையை அறியார்! ' என்றெழுதிய கட்டுரையும் , அதனைத் தொடர்ந்து வெளியான எதிர்வினைகளும் ஒரு பதிவுக்காக 'பதிவுகள் அன்று' பகுதியில் மீள்பிரசுரமாகின்றன. - ஆசிரியர் -
தமிழகம்: சிறப்புடையாரியச் சீர்மையை அறியார்! - R.P. ராஜநாயஹம் -
தமிழ் இலக்கியச் சூழலை நாட்பட நாட்பட நாற்றமும் சேறும் பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் நோய்க்களமாக்கி அழிப்பதுதான் தன்னுடைய நோக்கமென்பதை ஜெயமோகன் மீண்டும் நிரூபித்துள்ளார். உயிர்மை ஏப்ரல் 2005 இதழில் ‘அசோகமித்திரன் படைப்பு மீதான அவதூறு’ என்பதாக இவர் எழுதியுள்ள கட்டுரை இவருடைய நேர்மையின்மையின் வெளிப்பாடு. ‘அசோகமித்திரன் - 50’ ஒளிப்பேழையை காலச்சுவடு மூலமாக கிழக்கு பதிப்பகத்திடமிருந்து பெற்று அந்த நிகழ்ச்சியை முழுமையாக, மூன்றுமுறை ஆழ்ந்து பார்த்தேன். சுந்தர ராமசாமி தன் பேருரையில் அசோகமித்திரனுக்கு பூரண மஹா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்து கௌரவித்திருக்கிறார். பேசியவர், பேசப்பட்டவர் இருவரையும் பற்றி எண்ணும்போது தியாகய்யரின் ஸ்ரீராகக் கீர்த்தனை ‘எந்த்தரோ மஹானுபாவலு அந்தரிக்கி வந்தனமு’ என்நெஞ்சை நிறைத்துப் பொங்கி வழிந்தது. சுந்தர ராமசாமி பேசியதின் சுருக்கம் கீழ்வருமாறு: ‘மிக முக்கியமானவராக அசோகமித்திரனை நான் கருதுகிறேன். நண்பர் ஒருவரிடம் விசாரித்தபோது 200 கதைகள் எழுதியிருக்கிறார் என்று அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன். இந்நிகழ்ச்சிக்காக இப்போது எண்பது கதைகளை என்னால் வாசிக்க முடிந்தது. இந்த சிறுகதை உருவத்தின் மீது இந்த கலைஞன் கொண்டிருக்கிற தீராத ஆசை. ஒரு நுட்பமான கலைஞனைப் பற்றிப் பேச நாம் இங்கே கூடியிருக்கிறோம். அசோகமித்திரன் 1950 வாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறார். இலக்கிய இயக்கங்கள், அரசியல் இயக்கங்களின் பாதிப்பு அவரிடம் இல்லை. அவருடைய எழுத்தால் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்களை அவரால் கவரமுடியவில்லை. இடதுசாரி, முற்போக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் போன்றவர்களுக்கு இவருடன் உறவு திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. வாழ்க்கை பற்றி ஓயாத கவலை, வாழ்க்கை திருப்தியாக இல்லை என்ற இவருடைய அக்கறையை அவர்கள் பரிசீலனை செய்யாதது ஏன்? வாசகர்கள் இரண்டு வகை 1. இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்கள். 2. விசுவாசமான வாசகர்கள். இவர்களில் இலக்கியத்தை நேசிக்கிற வாசகர்களால் இனி அசோகமித்திரனின் செல்வாக்கு அதிகமாக இருக்கும். அசோகமித்திரனின் படைப்புகள் சுவாரசியமாக, உறுத்தல் இல்லாதவை. வாழ்க்கையின் சாராம்சத்தை படைப்பாக மாற்ற இவரால் முடிந்திருக்கிறது'.
•Last Updated on ••Saturday•, 07 •June• 2014 17:48••
•Read more...•
[ சக இணையச் சஞ்சிகையான 'திண்ணை' நமது நட்புக்கும் மதிப்புக்குமுரியது. ரோஸாவசந்தின் இக்கட்டுரை ஆரோக்கியமானதொரு விவாதத்தினை ஏற்படுத்தும் சாத்தியம் கருதியும், கருத்துச் சுதந்திரம் கருதியும் [அதற்காகப் பதிவுகள் நூற்றுக்கு நூறு வீதம் கருத்துச் சுதந்திரமான சஞ்சிகை என்று மார் தட்டிக் கொள்ள நாம் வரவில்லை] பதிவுகளில் பிரசுரமாகின்றது. திண்ணையைப் பொறுத்தவரையில் இணையத் தமிழ் சஞ்சிகைகளில் முதலாவதாக வெளிவந்த/ வெளிவருகின்ற ஆரோக்கியமான, காத்திரமான தமிழ் இணையச் சஞ்சிகை என்ற பெருமை அதற்குண்டு. இணைய விவாதப் பக்கம் எம்மை நாட வைத்ததே திண்ணையின் விவாதத் தளம்தான். இக்கட்டுரையினை இங்கு பிரசுரிப்பதன் மூலம் திண்ணையையோ அல்லது அதன் படைப்பாளிகளையோ (நானும் அவர்களிலொருவன் தான்) அவதூறு செய்யும் நோக்கம் எமக்குக் கிடையாது என்பதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். - ஆசிரியர் -]
-3. எழுத மிகவும் அலுப்பாக இருக்கிறது. ஒரே மாதிரியான விஷயங்களை, அதுவும் எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை எத்தனை முறை சொல்வது! எனது பால், ஜாதி, சமூக நிலை காரணமாய் எனக்கு கிடைத்த எந்த சலுகையையும் விட்டுவிடாமல் அனுபவித்துகொண்டு, அதனால் விளைந்த ஒரு திமிரும் ஏதோ ஒருவகையில் கலந்துதான் ஒவ்வொருவார்த்தையும் என்னிடமிருந்து பிறக்கின்றன. இதில் என் குரல் திண்ணையில் அமுக்கபட்டது குறித்து ஒப்பாரி வைப்பது போன்ற ஆபாசம் கிடையாது என்று எனக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால் என் எழுத்து திண்ணையில் தடை செய்யபட்டது குறித்து, என் பொருட்டு யாரும் இரங்கல் தெரிவிக்க நியாயமான காரணங்கள் இல்லை. இந்த கட்டுரையுடன் தொடர்புள்ள 'விவாதம்', மற்றும் திண்ணை என்ற பத்திரிகை, அதில் உள்ள 'கருத்து சுதந்திரம்', அதன் 'நாட்டாமை', குறித்து பலருக்கு இருக்கும் பிம்பம் இவற்றை மனதில் வைத்து சில தகவல்களை மட்டும் குறிப்பாய் கீழே தருகிறேன்.
•Last Updated on ••Saturday•, 07 •June• 2014 17:14••
•Read more...•
- ஜூன் 2003 இதழ் 42 பதிவுகள் இணைய இதழில் வெளியான நிகழ்வுக்குறிப்பு ஒரு பதிவுக்காக. -
தமயந்தியின் நிழற்படக் கண்காட்சி 24/05/03 இலிருந்து 15/06/03 வரை , நோர்வேயில் Sunnmorsposten, Roysegt 10 இல் நடைபெறவுள்ளது. காற்றின் தழுவலில் நித்தம் சிலிர்த்து அவ்வப்போது சூரியக் குளியலிலும் மறு பொழுது பனியின் போர்வையிலுமாய் - பொழுதொரு மேனியாய், பொழுதின் மேனியாய் - துண்டம் துண்டமாய் சிதறிக் கிடக்கும் நோர்வே. பொழுதுகளின் வார்த்தைகளற்ற உலகை எங்களோடு உறவாட விட்டிருக்கிறார் தமயந்தி. புரட்சி, போராட்டம், அரசியல், ஐனநாயகம், உரிமை என ஒரு புறமும், கலை, அழகு, கவிதை, அறிவியல் இலக்கியம் என இன்னொரு புறமுமாய் அல்லலாடி சிதைந்து - இழப்பு, சோகம், நிச்சயமின்மை, கழிவிரக்கம், பச்சாதாபம், பிரிவாற்றாமை எனத் தோய்ந்து சோர்ந்த போதிலெல்லாம் ”உயிரா போய்விட்டது” என மீண்டு, ”காணுமிடமெல்லாம் நம் வசமே” என நம்பிக்கையுடன் செயற்பட்டு வருகிறார். நானும் நான் சார்ந்ததுமே சமூகம், என் படுக்கை விரிப்பில் இருந்து தொடங்கி மீண்டும் கண்ணயர முனையும் வரையான காட்சிகளே எனது சூழல் என - நேற்றையவை எல்லாம் நெஞ்சில் ஏறி பரிகசிக்க, நாளை நடுத்தெருவுக்கான வாழ்வாய் அச்சுறுத்த - கணமும் கணத்தில் விளையும் கணமுமே வாழ்வின் நிஐம் என களிப்புறும் கலைஞன்.
•Last Updated on ••Saturday•, 01 •March• 2014 04:36••
•Read more...•
[ பதிவுகள் ஜூன் 2004 இதழ் 54 இதழில் வெளியான கட்டுரை.-] இன்று பெண்மொழி, பெண்களின் எழுத்து என்பன பரவலாகப் பேசப்படுகிறது. அவை குறித்த சர்ச்சைகளும், விவாதங்களும் பரவலாக இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் மைதிலியின் 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' என்ற நு¡ல் வெளிவந்திருக்கிறது. சல்மாவின் 'ஒரு மாலையும் இன்னொரு மாலையும்' மாலதி மைத்ரியின் 'சங்கராபரணி' மற்றும் குட்டிரேவதியின் 'முலைகள்' தொகுப்பைத் தொடர்ந்து பெண்களின் வெளிப்படையான எழுத்துத் தொடர்பாய் சர்ச்சைகள் வெகுசன ஊடகங்களிலும் சிற்றிதழ்களிலும் இடம்பெற்று வருகிறது. அடக்குமுறை சார்ந்த வாழ்வின் வலியைச் சொல்லும் சல்மாவின் 'ஒப்பந்தம்' என்ற கவிதையில் கூட
'எல்லா அறிதல்களுடனும் விரிகிறதென் யோனி'
என்ற இறுதி வரிகளையே பத்திரிகைகளில் எடுத்துப் போட்டிருந்தார்கள். அதனு¡டாக சர்ச்சையில் குளிர்காயும் ஒரு வியாபாரத் தன்மைதான் தென்படுகிறது. 'காமத்துப்பால் கவிதைகள்' என்ற தலைப்பில் இந்தியா ருடே எடுத்துப் போட்டிருக்கிறது. இவற்றிலெல்லாம் மிகுந்த அக்கறையுடன் ஊடகங்கள் செயற்ப்பட்டு வருகின்றன. 'முலைகள்' போன்ற பெண்களின் தொகுப்புக்களுக்கான விமர்சனங்களைப் பார்க்கையில், முலைகள் யோனி போன்றவைகள் ஆண்களுக்குச் சொந்தமானது போலவும் அவர்கள்தான் அதைப்பற்றி எழுத முடியும் என்பது போலவும் இருக்கிறது. சமகால சூழல் இப்படியிருக்க, ஈழத்தில், தொண்ணு¡றுகளிலேயே வெளிப்படைத் தன்மை கொண்ட கவிதைகளை மைதிலி எழுதியுள்ளார்.
•Last Updated on ••Tuesday•, 29 •October• 2013 17:58••
•Read more...•
['பதிவுகளில் அன்று' பகுதியில் 'பதிவுகள்' இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]
“என் உயிரிடத்தில் நான் சொல்வேன். மெதுவாக செல்லவும். நான் குடிக்கும் கண்ணாடி டம்ளர் உலரட்டும். நான் என்னவாக இருக்கிறேன் அல்லது யாராக என்பதில் எனக்கு எந்த பங்குமில்லை. ஒரு வாய்ப்பின் பிறப்பு தவிர . இதற்கு எந்த பெயருமில்லை. என் மரணத்தின் பத்து நிமிடங்கள் முன்பாக டாக்டரை அழைக்கிறேன். பத்து நிமிடங்கள் வாழ்வதற்கான வாய்ப்பு போதும்.”
மரணப்படுக்கையின் இறுதியில் மேற்கண்ட வரிகள் பாலஸ்தீனின் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் புனைந்து சென்றவை. தன் இறுதி கட்டத்தில் வாசக சமூகத்தின் மீது கவிதை வரிகளோடு செல்லும் வாய்ப்பு சிலருக்கே மட்டுமே கிடைக்கிறது. அது அவனுக்கான வித்தியாச அனுபவம் கூட. படைப்பு மனத்தின் நெருடிய இடைவெளியில் விகசங்களின் வெளிப்பாடாக இவை அமைகின்றன. அரபு இலக்கிய வெளியில் அந்த விகசங்களை கவிதைகளாக அதிக அளவில் வெளிப் படுத்தியவர் மஹ்மூத் தர்வீஷ். அவரின் கவிதைகள் எல்லா தருணங்களிலும் மரணப்பெருவெளியில், வாழ்விலிருந்து அந்நியமாக்கலுக்கு பணிக்கப்பட்ட, அனாமதேய சூழலின் விளைபொருளாக எழுந்தவையே.
•Last Updated on ••Saturday•, 18 •May• 2013 21:53••
•Read more...•
['பதிவுகளில் அன்று' பகுதியில் 'பதிவுகள்' இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]
1) பெண்ணின் உடல் உயிரியல் உடல் கூற்றின் அடிப்படையில் ஆணின் உடலிலிருந்து வேறுபடுகிறது. மார்பகங்கள், பிறப்புறுப்பு, கருவயிறு இவற்றில் முக்கியமானதாகும். இயற்கைத் தன்மையும், இயல்பும் கொண்ட இந்த வேறுபடுதல் பெண்ணின் உடலை சிறு உயிரியை ஈன்று தரும் உயிர்ப்புத் தன்மை, வளம், மற்றும் மாறும் வடிவம் கொண்ட ஒன்றாக உருமாற்றுகிறது. ஆணின் உடலோ இதற்கு மாறாக மலட்டுத்தன்மை பொருந்தியதாக மட்டுமே இருக்கிறது. இத்தகு உயிரியல் உடல்கூறு தாண்டி வாழ்வின் இயக்கப்போக்கில் உருவாக்கப் பட்டிருக்கும் பெண்மை, தாய்மை, கற்பு என்பதுபோன்ற பண்பாடுசார்ந்த மதிப்பீடுகளின் மனக்கட்டமைப்பும் மிகமுக்கியமானது. பெண்ணிய இனவியலும், அரசியல் பொருளாதார தளங்களில் விரிந்து செல்லும் பெண்ணிய அரசியலும் இவ்வகையில் அடுத்த கவனத்தை பெறுகின்றன. இவை மேல்/கீழ் என சமூக வாழ்வில் கட்டமைக்கப் பட்டிருக்கும். பாலின படிநிலை அதிகாரத்தின் மீது தாக்குதலைத் தொடுக்கின்றன. ஒற்றைப் படுத்தப்பட்ட பெண்ணியத்தை மறுகட்டமைப்பு செய்யும் வித்தியாசப் பெண்ணியக் கருத்தாக்கம் பெண்ணியத்தில் பன்மியத் தன்மையை வலியுறுத்துகிறது. ஜுலியா கிறிஸ்தவா, லிண்டா நிக்கெல்சன், லூயி எரிகாரே உள்ளிட்ட பெண்ணியச் சிந்தனையாளர்கள் இவ்வகையில் தொடர்ந்த உரையாடலை நிகழ்த்தி உள்ளார்கள்.
•Last Updated on ••Saturday•, 18 •May• 2013 20:11••
•Read more...•
['பதிவுகளில் அன்று' பகுதியில் 'பதிவுகள்' இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]
அண்மைக் காலமாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும் , கொல்லப்படுவதும் உபகண்ட அரசியலை அவதானித்து வருபவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்து வருகின்றது. உலக அரங்கில் இராணுவ மற்றும் பொருளியல்ரீதியில் பலம் பொருந்திய வல்லரசுகளிலொன்றாகப் பரிணமித்துவரும் பாரதம் எதனால் தனது மண்ணின் முக்கியமானதோரினத்தின் கடற்றொழிலாளர்கள் மீது , அதுவும் அன்றாட வாழ்வே கேள்விக்குறியாக ஆழியினுள் அலைக்கழிந்து, வாழ்க்கையினையோட்டிச் செல்லும் வறிய தொழிலாளர்கள் மீது நடாத்தப்படும் இத்தகைய தாக்குதல்களை உறுதியாகத் தட்டிக் கேட்காமலிருந்து வருகின்றது என்னும் கேள்வி அரசியல் அவதானிகள், தமிழ் மக்கள், தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகள், மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்தியில் எழுவது நியாயமானதுதான். ஒருவரா, இருவரா ... கடந்த பல வருடங்களாக இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் வந்த தமிழக மீனவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமானதாகும். இந்திய மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்போக்கு இன்றைய அரசியல் சூழலில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகவும் அபாயகரமானதொரு சமிக்ஞை. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோதெல்லாம் காட்டிய கண்டிப்பையும், தீவிரத்தையும் ஏன் இந்திய மத்திய அரசு தமிழக மீனவர்கள் விடயத்தில் காட்டவில்லை என்ற கேள்வி நியாயமானதே.
•Last Updated on ••Saturday•, 20 •April• 2013 17:49••
•Read more...•
['பதிவுகளில் அன்று' பகுதியில் 'பதிவுகள்' இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]
புகழ்பெற்ற எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் முப்பத்தியைந்து நூல்களில் ஒரு நாடக நூல் “ மணல் வீடு “ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்று எல்லாத்தளங்களிலும் தடம் பதித்திருக்கிறார். மணல் வீடு என்ற தலைப்பில் ஜே.கிருஸ்ணமூர்த்தியின் தமிழ் நூல் ஒன்று ஞாபகம் வருகிறது. தமிழில் நாடக நூல்கள் வெகு குறைவு. எழுத்தாளர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. தி. ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, பி.எஸ். ராமையா, ஜெயந்தன், பிரபஞ்சன், இன்குலாப் போன்ற எழுத்தாளர்கள் சில நாடகங்களை எழுதியிருக்கிறார்கள். மற்றபடி நவீன நாடகங்களை நாடகக்காரர்களே படைத்துக் கொள்கிறார்கள். நவீன நாடகங்கள் உருவான பிறகு எழுத்தாளர்கள் நாடகத்துறையை திரும்பிப் பார்ப்பதில்லை. அவைகளும் மக்களை நெருங்கவில்லை. கோமல் சுவாமிநாதனின் சட்டக வடிவ நாடகங்கள் மக்களின் போராட்டங்களை சித்தரித்தன. அதனால் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றன. கோமலுக்குப்பின் சில நல்ல நாடகங்களை தஞ்சை ராமசாமி உருவாக்கி வெற்றி பெற்றார். அமைப்புகள் பின்னணி இல்லாததால் மக்களை அதிகம் சென்றடையவில்லை.
•Last Updated on ••Saturday•, 20 •April• 2013 17:50••
•Read more...•
••Wednesday•, 05 •September• 2012 17:04•
??- முனைவர் கல்பனா சேக்கிழார் -??
'பதிவுகளில்' அன்று
சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும் சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள். பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது. .பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது விருந்தோம்பலின் அருமையை அறிந்து வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார் விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக் குறித்து வழங்கலாயிற்று 'விருந்து தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237) என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம். இல்லற நெறி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும். விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது விருந்தோம்பலில் பெண் பெரும் பங்கு பெறுகிறாள் .ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும். தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது 'விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்'(கற்பியல்,11) இல்லறத்தில் கணவன் மனைவியர் இருவரும் இணைந்து விருந்தோம்ப வேண்டும் என்பதை,இளங்கோவடிகளும்,கம்பரும் தம் காப்பியங்களில் புலப்படுத்தியுள்ளனர்.
•Last Updated on ••Wednesday•, 05 •September• 2012 17:11••
•Read more...•
ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர் குறமகள் என அறியப்பட்ட வள்ளிநாயகி இராமலிங்கம். பல வருடங்களாகக் கனடாவில் வசித்து வரும் இவரது 'குறமகள் கதைகள்', 'உள்ளக் கமலமடி' ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் அண்மையில் மித்ர பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. பல வருடங்களுக்கு முன்னால் இவருடன் குரும்பசிட்டி ஜெகதீசனை ஆசிரியராகக் கொண்டு கனடாவில் வெளிவந்த 'பொதிகை' மாத இதழுக்காகக் கலந்துரையாடினேன். அக்கலந்துரையாடல் 'பொதிகை'யில் பின்னர் வெளிவந்தது. அக்கலந்துரையாடலில் குறமகள் தெரிவித்த கருத்துகள் சிலவற்றைப் பதிவுகளில் ,பேச்சுத் தமிழிலேயே, பொதிகையில் வந்தமாதிரியே பதிவு செய்கின்றேன் காலத்தின் தேவை கருதி. நான் சிறுவனாக இருந்த பொழுதிலிருந்து ஈழத்துச் சஞ்சிகைகள், பத்திரிகைகள் வாயிலாக அறிந்திருந்த குறமகளைச் சந்தித்தது நல்லதொரு அனுபவம். இது போல் எஸ்.பொ.வினையும் அவர் அண்மையில் கனடா வந்திருந்த பொழுது சந்தித்திருக்கின்றேன். அப்பொழுது அவர் மனம் விட்டுக் கலந்துரையாடினார். இவர்கள் இருவரும் மேலும் மூவருடன் இணைந்து எழுதிய 'மத்தாப்பு' என்னும் குறுநாவலும் அண்மையில் மித்ர பதிப்பக வெளியீடாக வெளிவந்தது குறிப்பிடத் தக்கது.
•Last Updated on ••Sunday•, 10 •June• 2012 22:01••
•Read more...•
[அண்மையில் மறைந்த நண்பர் 'தமிழர் மத்தியில்' நந்தா முன்பொருமுறை (அக்டோபர் 2004, இதழ் 58ற்கு) 'பதிவுகள்' இணைய இதழுக்கு நேர்காணலொன்றை வழங்கியிருந்தார். அதனை ஒரு பதிவுக்காக மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் -] நந்தா என நன்கு அறியப்பட்ட திரு.நந்தகுமார் இராஜேந்திரம் ஒரு மொறட்டுவைப் பல்கலைக் கழகக் கட்டடக் கலைப் பட்டதாரி. இலங்கையில் இருந்த காலத்தில் இலங்கை அரசப் பொறியியற் கூட்டுஸ்தாபனம் (State Engineering Corporation), மற்றும் பண்டிதரட்ன-ஆதித்தியா கட்டடக் கலைஞர்கள் நிறுவனம் ஆகியவற்றில் கட்டடக் கலைஞராகப் பணிபுரிந்தவர். அச்சமயம் நிலாவெளிக் கடற்கரை விடுதி (Beach Lodge), மாளிகாவத்தை சமூக நிலையம் (Community Centre) ஆகியவற்றை வடிவமைத்தவர். பின்னர் மத்திய கிழக்கில், பஹ்ரயினில் கட்டடக் கலைஞராகப் பணி புரிந்த காலத்தில் உயர்ந்த தொடர்மாடிக் குடியிருப்புக் கட்டடங்களையும், மசூதியொன்றினையும் வடிவமைத்தவர். அதன் பின்னர் கனடா புலம் பெயர்ந்த இவர் Page & Steele கட்டடக் கலைஞர்கள் நிறுவனத்தில் வடிவமைப்பாளராகச் (Designer) சேர்ந்து, இன்று பங்காளியாக(Associate) வளர்ந்து பணிபுரிந்து வருகின்றார். இது வரையில் சுமார் இருபது தொடர்மாடிக் கட்டடங்களையும், அவற்றிலுள்ள 10,000யிரம் வரையிலான குடியிருப்புக்களையும் வடிவமைத்துள்ளார். தொடர்மாடிக் கட்டடங்களை வடிவமைப்பதில் இன்று இவர் ஒரு நிபுணராக (Specialist) விளங்குகின்றார்.
•Last Updated on ••Tuesday•, 19 •June• 2012 20:29••
•Read more...•
இருபத்தைந்து வருடத்தில் இரண்டே முக்கால் கதைகளேயே எழுதிய நான் இப்படியொரு தலைப்பில் தைரியமாக எழுத வரக்கூடாதுதான் , அதுவும் தமிழ்ச் சூழலில். எது சிறந்ததென்று எழுந்து 'லிஸ்டிக்க' நான் எந்த மலையுச்சியிலும் உட்கார்ந்திருக்கவில்லை. ஆனால் ஒரு பிய்ந்த விசிறியைக் கூட பிடிக்கா இயலா ஓரிரண்டு விசிறிகள் கிடைத்த 'தனுவு'-ல் எழுதுகிறேன். எல்லா உயிர்களுக்கும் பிடித்த மாதிரி இந்த 'இபுலீஸ்' எழுதுவதில்லையென்று இங்கிலிபீஷில் பொளந்து கட்டும் இளையவர்களுக்காகவும் எழுத நேர்ந்து விட்டது. மாப் கீஜியே பாய்...பக்தி இருப்பினும் பழசுக்கெல்லாம் போகவில்லை. 'சீறா' வின் சிறப்பைச் சொல்ல நேரமும் தகுதியும் எனக்குப் போறா. இதனாற்றான் யான் குணங்குடியப்பா , குலாம்காதரப்பா, சித்தி லெவ்வை , சித்தி ஜூனைதாவை எடுக்காதது. கடந்த கால் நூற்றாண்டாக வெளிவந்த நவீன இஸ்லாமியப் படைப்புகளை அவ்வப்போது படித்தும் வந்ததால் கொஞ்சம் சொல்லத் தோன்றிற்று.
•Last Updated on ••Thursday•, 05 •April• 2012 20:46••
•Read more...•
[ஆஸ்திரேலியாவில் வசிக்கும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கத்தைப் 'பதிவுகள்' வாசகர்கள் அறிவார்கள். அவர் தற்போது உடல்நலம் குன்றி மருத்துவநிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவரது உடல்நிலை பற்றிய தகவல்களை http://twitter.com/ParaSundha என்னும் இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம். அவர் விரைவாக உடல் நலம் தேறிட பதிவுகளும், பதிவுகளின் வாசகர்களும் வேண்டிக் கொள்கின்றார்கள். இச்சமயத்தில் அவர் பதிவுகளில் எழுதிய கட்டுரையினை மீள்பிரசுரிப்பதும் பொருத்தமானதே. - பதிவுகள்] வரலாற்றாசிரியர் ஒருவர் ஒரு நாட்டின் தற்கால வரலாற்றை எழுதுவதற்கும் அதன் புராதனகால வரலாற்றை எழுதுவதற்கும் அதிக வேறுபாடு உள்ளது. அச்சுயந்திரம், தொழில் நுட்பப் பயன் பாட்டினால் வரலாறு, மற்றும் செய்திகள், இன்று முறையாக ஆவணப் படுத்தப்படுகின்றன. ஆனால், ஏட்டுச் சுவடிகளையும் புராணக் கதைகளையும் செவிவழிச் செய்திகளையும் ஓரளவு கிடைத்த சாசனங்களையுமே ஆராய்ந்து பூர்வீக வரலாற்றை எழுதியவர்கள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.
•Last Updated on ••Sunday•, 15 •January• 2012 18:34••
•Read more...•
['பதிவுகளி'ல் வெளிவந்த கட்டுரையிது ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. வ.ந.கிரிதரனின் ஜெயமோகனின் 'கன்னியாகுமரி' நாவல் பற்றிய 'திண்ணை' விமரிசனத்தையொட்டிய எழுத்தாளர் மைக்கலின் கடிதமிது. இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் - பதிவுகள்-]சிந்தனையின் போக்குகள் வலதும் இடமுமாக மாறி மாறித்தான் பயணிக்கும் என்பதில் எனக்கும் மறுப்பு இல்லை. நேர்கோட்டுப்பாதை என்பது ஏதாவது ஒரு தத்துவத்தை, கட்சிகளை, தனிநபரை வணங்குவதில் வந்து முடிந்துபோவது எமது மார்க்சியர்களின் கறாரான விமர்சன மரபு அல்லது எமது ஈழத்து இயக்கங்கள் சொல்லித் தந்த பாடங்கள். ஆகவே குறித்த படைப்பு மீதான பல்வேறு பார்வைகள் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.
•Last Updated on ••Sunday•, 08 •January• 2012 21:39••
•Read more...•
••Saturday•, 31 •December• 2011 19:25•
??டிசே தமிழன், ஜெயமோகன், சுமதி ரூபன், சூர்யா, மாலன், வெங்கட் சாமிநாதன் -??
'பதிவுகளில்' அன்று
2004இல் எழுத்தாளரும் , கலையிலக்கிய விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் அவர்களது கனடா விஜயத்தையொட்டி டி.செ.தமிழன் 'பதிவுகள்' இணைய இதழின் விவாதத்தளத்தில் தனது கருத்துகளைப் பதிவுசெய்ததைத் தொடர்ந்து 'பதிவுகள்' இணைய இதழில் ஒரு விவாதமே நடந்தது. அதில் எழுத்தாளர்களான ஜெயமோகன், சுமதி ரூபன், மாலன், சூரியா ஆகியவர்களுடன் வெங்கட் சாமிநாதனும் கலந்து கொண்டார். ஒரு பதிவுக்காக அவ்விவாதத்தையொட்டிப் பதிவுகளில் வெளிவந்த கட்டுரைகளை மீள்பதிவு செய்கின்றோம். - பதிவுகள் -
•Last Updated on ••Saturday•, 31 •December• 2011 20:25••
•Read more...•
[* 'பதிவுகள்' மார்ச் 2005இல் வெளியான இக்கட்டுரை ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகிறது. - பதிவுகள்] இவ்வருடத்தய தாதா சாகேப் பால்கே விருது மிருனாள் சென்னுக்குக் கிடைத்துள்ளது. விக்ரம் - சிறந்த நடிகர் விருதை பிதாமகனுக்காகப் பெற்றிருக்கிறார். பாடம் ஒன்னு ஒரு விலாபம் என்ற மலையாளப் படத்திற்காக மீரா ஜாஸ்மினுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளது. மிருனாள் சென்னுக்கு விக்ரமைப் போல சரியாக இருமடங்கு வயது. (விக்ரம் 1964ம் ஆண்டு பிறந்தவர். மிருனாள் சென் 1923ம் ஆண்டு பிறந்தவர்). இன்றைய வங்காளதேசத்தில் பிறந்து பின் (இன்றைய) மேற்கு வங்கத்துக்கு குடிபெயர்ந்தவர் அவர். கம்யூனிச கட்சியின் கலாச்சாரப் பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டு மக்களின் போராட்டங்களைத் தான் கண்ட பாதிப்பில் படங்களை எடுத்தவர் ம்ருனாள் சென். கம்யூனிச கோட்பாட்டின் வர்க்க எதிரி முறையை இந்தியக் கண்ணோட்டத்தில் எதிர் கொண்டு, ஒரே வர்க்கத்தினுள் நிலவும் முரண்பாடுகளை, எதிர் சக்திகளை மையப் படுத்தி அவர் எடுத்த படங்கள் உலகளாவிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஐம்பது வருடங்களாக தொடர்ந்து சினிமாத்துறையில் தமது பங்களிப்பை செய்திருக்கின்றார் . விருதுக்குப் பின்னும் தமது பணி தொடரும் என்று தெரிவித்துள்ளார் மிருனாள் சென்.
•Last Updated on ••Friday•, 30 •December• 2011 08:03••
•Read more...•
[* பதிவுகளில் அக்டோபர் 2002இல் வெளியான கட்டுரையிது; ஒரு மீள்பதிவுக்காக மீள்பிரசுரமாக்கின்றது.- பதிவுகள்] ஏறக்குறைய மூன்றரை மாதங்களாகிவிட்டன மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கு ஊட்டியில் நடைபெற்று. இவ்வளவு காலத்துக்குப் பிறகு இப்படி ஒரு கட்டுரை அவசியமா என்று கூட ஒரு யோசனை என்னிடத்தில் தோன்றியதுதான். ஆனால் காலச்சுவடு- 43 இல் வெளியான நாஞ்சில்நாடனின் கட்டுரைக்கான ஆசிரியர் குறிப்பும் வாலாக நீண்ட செய்திகளும் இன்னும் விவாதத்துக்கும் ஆய்வுக்கும் இவ் விஷயம் இடமளிப்பதைத் தெரிவிப்பதால் இக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன்.முதலிலேயே நான் எழுதியிருக்கவேண்டும். தவறிப்போய்விட்டது. கூட்டம் நடைபெற்று ஒரு மாதத்தின் பின்தான் அங்கு நடைபெற்ற விசயங்கள் குறித்தான கட்டுரைகளும் கடிதங்களும் வெளிவரத் தொடங்கின என்பது ஒன்று. எல்லாவற்றையும் பார்க்கவும் படிக்கவும் முடிந்ததே தவிர அதுபற்றி எழுத எனக்கு அவகாசமும் வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பது இனொன்றாக என் கருத்தைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பப் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. இந்த அவகாசத்தை நான் பயன்படுத்தியே ஆகவேண்டும். அது அவசியமானது. இது ஒருவகையில் ராஜநாயகத்துக்கானதுதான்.சும்மா கிடந்த சங்கை....என்று ஏதோ சொல்வார்களே, அதைச் செய்ததே ராஜநாயகம்தானே?
•Last Updated on ••Tuesday•, 27 •December• 2011 22:39••
•Read more...•
••Tuesday•, 27 •December• 2011 20:54•
??தேவகாந்தன், ஜெயமோகன், டி.செ.தமிழன், ஜீவன் கந்தையா, வ.ந.கிரிதரன் -??
'பதிவுகளில்' அன்று
- பதிவுகள் மே 2002 மற்றும் ஜூன் 2002 இதழ்களில் 'காலம் இதழ் 15'இல் வெளியான வேதசகாயகுமாரின் 'ஈழத்துச் சிறுகதைகள்' பற்றிய விமரிசனக் கட்டுரைக்குப் பதிலாக எழுத்தாளர் தேவகாந்தன் 'சம்பூர்ண நிராகரணம்' என்னுமொரு கட்டுரையினை எழுதியிருந்தார். அதற்கு ஜெயமோகன், ஜீவன் கந்தையா, வ.ந.கிரிதரன், டி.செ.தமிழன் ஆகியோர் எதிர்வினையாற்றியிருந்தனர். மேற்படி கட்டுரையும் எதிர்வினைகளும் ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றன. - பதிவுகள் -
•Last Updated on ••Tuesday•, 27 •December• 2011 22:27••
•Read more...•
திரைப்படம்: அமெரிக்க பூதமும், கம்யூனிச பிணமும்! - சுப்ரபாரதிமணியன் - [எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் 'பதிவுக'ளில் அவ்வப்போது எழுதிய சினிமா பற்றிய கட்டுரைகளில் சில ஒரு பதிவுக்காக ஒருங்குறியில் மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. - பதிவுகள்] போலந்து திரைப்படம் ஒன்று . ஸ்டாலின் காலம் பற்றினதில் கம்ய்யூனிசத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு சிறுவன் ஒரு படத்தை பாதுகாத்து வருகிறான். அவனை வேறொரு கம்யூனுக்கு மாற்றுகிறார்கள். கம்யூன் தலைவன் கெடுபிடியான ஆசாமி. குரூரமானவன். சிறுவன் வேறொரு கம்யூனுக்குப் போவதற்காக் தனது பொருட்களை தேடி எடுத்து அவசர கதியில் புறப்படுகிறான். அவன் பாதுகாத்து வைத்திருந்த படம் எதெச்சையாய் கீழே விழுகிறது. கம்யூன் தலைவன் கால் ப்ட்டு கிழிகிறது. கம்யூன் தலைவன் கேட்கிறான். " யார் இந்த வயதானவன் " பையன் அதிர்ந்து போய் சொல்கிறான். " லெனின்" லெனின் படம் கிழிவுறுவது அவனை வெகுவாக பாதிக்கிறது. கம்யூனிசத்தில் அக்கறை கொண்ட அய்ம்பது வயது பெண் ஒருத்தி இதே போல் லெனின் சிலை தூக்கி எறியப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைவதை "குட்பை லெனின் " என்ற செர்மன் படத்தில் பார்க்கலாம். " லெனின் பிறப்பு ரஸ்யாவிற்கு ஏற்ப்பட்ட துர்பாக்கியம். அந்த நாட்டின் அடுத்த துர்பாக்கியம் அவர் மரணம் " என்று சர்சில் எழுதினாராம். ஸ்டாலின் ஆட்சியின் கொடுமைகள் சர்ச்சிலின் கருத்திற்கு முன்னுரையாக இருந்திருக்கிறது.
•Last Updated on ••Friday•, 30 •December• 2011 08:03••
•Read more...•
[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. பதிவுகள் தனது கடந்த காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய வளமான பங்களிப்பினை இவ்வித மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால், அன்றைய கணித்தமிழின் ஆரம்ப காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் எவ்வளவு ஆர்வத்துடன் பதிவுகள் இதழுடனிணைந்து தங்கள் பங்களிப்பினை நல்கினார்களென்பதையும் இவ்வகையான மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன; இவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன] ஜோர்ஜ் லூயி போர்ஹே (1899--1986) வின் பெயர் பல காரணங்களுக்காக சர்வதேசஇலக்கியத்திலும் நவீன தமிழ் இலக்கியத்திலும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஒரு நாவல் கூட எழுதாமல் நவீன- பின் நவீனத்துவ புனைகதை எழுத்தை மாற்றியமைத்த போர்ஹே, லத்தீன் அமெரிக்க நாவலின் தந்தை என்று கருதப்படுகிறார். அடிப்படையில் போர்ஹே ஒரு கவிஞர். பிறகுதான் அவர் சிறுகதை எழுத்தாளர். எப்படி ஷேக்ஸ்பியரை முதலில் கவிஞர் என்று அழைத்து பிறகு நாடகாசிரியர் என்று சொல்வோமோ அப்படி. ஆங்கில- -அமெரிக்க இலக்கியங்களின் சங்கமங்கள் நடப்பதும் போர்ஹேவின் புனைகதைகளில்தான். வாழ்தலின் பிரதான கேள்விகளையும், மர்மங்களையும், சிக்கல்களையும் போர்ஹேவால் ஒரு குண்டூசியின் தலையில் உட்கார வைக்க முடியும். தனக்கென ஒரு விவரணை மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவர் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்கும் அதன் இலக்கியத்திற்கும் பெரும் பயனை ஈட்டிக் கொடுத்தவர். அவர் எழுதத் தொடங்கிய போது இருந்த ஸ்பானிய மொழியின் போதாமையை உணர்ந்து, பிரக்ஞைபூர்வமாக இலக்கிய வகைமைகளை முன்னில்லாத வகையில் பிணைத்தும், லத்தீன் அமெரிக்காவின் பாரம்பரியங்களை மீட்டெடுத்தும், மறுகட்டுமானம் செய்தும், மொழி ரீதியான கெட்ட பழக்கங்களை ஒதுக்கியும் ஒரு துல்லியமான மொழியை உண்டாக்கினார்.
•Last Updated on ••Thursday•, 04 •August• 2011 16:22••
•Read more...•
'பதிவுகள்' இணைய இதழில் அன்று பல்வேறு எழுத்துருக்களில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது தமிழ் ஒருங்குறியில் மீள்பிரசுரமாகும்.. அந்த வகையில் எழுத்தாளர் க.அருள்சுப்பிரமணியத்தின் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான 'நண்பன்' சிறுகதை தமிழ் ஒருங்குறி எழுத்துருவில் வெளியிடப்படுகின்றது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த திருகோணமலையில் பிறந்த இவரது 'அவர்களுக்கு வயது வந்துவிட்டது' என்ற நாவல் 1974ஆம் ஆண்டிற்கான 'சாகித்திய அகாடமி'யின் விருதினைப் பெற்றதுடன் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் இலங்கைத் தமிழ் நாவலென்ற பெருமையினையும் பெறுகின்றது. 'சூரசம்ஹாரம்' என்ற இவரது நாவல் ஆனந்தவிகடனில் வார இதழில் 23 வாரங்கள் தொடராக பிரசுரிக்கப்பட்டது. இவரது சிறுகதையான 'அம்மாச்சி' ' இந்தியா டுடே' வெளியிட்ட இலக்கிய மலரொன்றில் வெளியாகியுள்ளது. அத்துடன் 'வீரகேசரி', 'தினக்குரல்' போன்ற ஈழத்துப் பத்திரிகைகளின் வாராந்த வெளியீடுகளில் மற்றும் 'திண்ணை', 'பதிவுகள்' போன்ற பல இணைய இதழ்களில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன. ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்குக் கிழக்கிலங்கை பல்வேறு துறைகளில் பிரமிள், திமிலைத் துமிலன், நிலாவாணன், நா.பாலேஸ்வரி, கலாநிதி சித்திரலேகா மெளனகுரு, கலாநிதி மெளனகுரு, கலாநிதி சி. சிவசேகரம், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, கே.எஸ்.சிவகுமாரன், மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி, கலாநிதி எம்.ஏ.நுஃமான், வ.அ.இராசரத்தினம், தமிழ்நதி, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கலாநிதி இ.பாலசுந்தரம் எனப் பல படைப்பாளிகளைத் தந்து வளம் சேர்த்துள்ளது. அவர்களில் எழுத்தாளர் க.அருள்சுப்பிரமணியமும் ஒருவர். அத்துடன் இலங்கையின் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களையும் கிழக்கிலங்கை தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளது. . - பதிவுகள் -
•Last Updated on ••Friday•, 24 •June• 2011 04:15••
•Read more...•
[சேது சமுத்திரத் திட்டமென்றதும் நினைவுக்கு வருவது உருவாகிக் கொண்டிருக்கும் சேதுக்கால்வாய்த் திட்டம்தான். உண்மையில் மாகவி பாரதியின் கனவு இத்தகைய கால்வாய் பற்றியதாகவிருக்கவில்லை. அவர் இரு நாடுகளையும் இணைக்கும் வகையிலான, சேதுவை மேடுறுத்தி அமைக்கும், பாலம் பற்றியதாகவேயிருந்தது. அதனால்தான் அவர் 'சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்! சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்!' என்று பாடினார். இது பற்றி பதிவுகள் இணைய இதழ் 39, மார்ச் 2003லொரு நேர்காணல் வெளிவந்திருந்தது. கனடாவில் வசிக்கும் கடற்துறைப் பொறியியலாளர் விஸ்வலிங்கம் வரதீஸ்வரனுடனான நேர்காணலே. அதிலவர் கூறிய கருத்துகள் முக்கியமானவை. பாரதியின் கனவை நனவாக்கும் அதே சமயம் கால்வாயையும் அமைப்பது பற்றியது. ஒரே கல்லில் இரு மாங்காய்கள் அடிப்பது பற்றியது. பதிவுகளைப் பொறுத்தவரையிலும் சேதுக்கால்வாயை அமைக்கும் அதே சமயம் இரு நாடுகளையும் இணைக்கும்வகையில் பாலத்தினையும் அமைக்க வேண்டுமென்பதே இரு நாட்டு மக்களனைவருக்கும் நல்லதாகப் படுகிறது.. இவ்விதமாக அமைக்கப்படும் பாலமானது இரு நாடுகளையும் தரைவழியில் இணைப்பதுடன், இரு நாட்டு மக்களுக்குமிடையில் கூடுதலான பிணைப்பினையும், இணைப்பினையும் அதிகரிக்கவல்லதாகவிருக்கும். அத்துடன் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் மேலும் அதிகரிக்கவும் வழிவகுக்கும். மேலும் பாரதியின் கனவு நனவாகவேண்டுமென்றால் இதுவொன்றே சரியான வழியாகவிருக்க முடியும். மேற்படி 'பதிவுகள்' இதழ் 39இல் வெளிவந்த நேர்காணல் 'பதிவுகளில் அன்று' பகுதிக்காக மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது. - ஆசிரியர்]
•Last Updated on ••Wednesday•, 10 •October• 2018 04:23••
•Read more...•
[ 'பதிவுகள்' இணைய இதழில் வெளிவந்த எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரைகள் சில. பதிவுகளின் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் ]
பதிவுகள் செப்டம்பர் 2003; இதழ் 45
சாப்ளின்
சார்லி சாப்ளின் நடித்த படத்தை நான் பார்த்தது ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது . வாழைக்குலைகள் விற்க அதிகாலைச்சந்தைக்கு போனால் இரண்டாம் ஆட்டம் படம் பார்ப்பது பொதுவான வழக்கம். குலைகளுக்கு காவலாக நிற்பவனுக்கு தலைக்கு பத்துபைசா கூலிதருவோம். அருமனையில் ஓலைக்கொட்டகைதான் . மழை பெய்ய ஆரம்பித்து விட்ட படங்கள்தான் அதிகமும் வரும் .பொதுவாக அன்றெல்லாம் புதிய படங்களைவிட பழைய படங்களைத்தான் எல்லாரும் விரும்பிப் பார்த்தார்கள். படங்கள் சாவகாசமாக இருக்கவேண்டும், கொஞ்சம் தூங்கி எழுந்தால் கூட ரொம்பதூரம் ஓடியிருக்கக் கூடாது. பன்னிரண்டுமணிக்கு தொடங்கும் ஆட்டம் காலைநான்குமணிவரை நீளவேண்டும்.ஆகவே ஓவல்டின், ரெமி முகப்பவுடர், சைபால் கால்களிம்பு முதலிய விளம்பரங்கள் முடிந்தபிறகு துண்டுபடங்கள்போடுவார்கள். லாரல் ஹார்டி நகைச்சுவை, மிக்கி மௌஸ் கார்ட்டூன் இவற்றுடன் சாப்ளின் படமும் இருக்கும். சாப்ளின் 'கோணக்கால்' என்று சொல்லப்பட்டார் . லாரல் ஹார்டி மல்லனும் மாதேவனும் என்றும் கார்ட்டூன்படங்கள் பொம்மலாட்டம் என்றும் குறிப்பிடப்பட்டன.
•Last Updated on ••Wednesday•, 27 •April• 2011 21:02••
•Read more...•
••Monday•, 04 •April• 2011 17:46•
??ஆதவன் தீட்சண்யா, R.P.Rajanayahem , ரவிக்குமார் , புதியமாதவி, மும்பை , யமுனா ராஜேந்திரன் , ??
'பதிவுகளில்' அன்று
[பதிவுகள் மே 2005 (இதழ் 65) இதழில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் 'பிள்ளை கெடுத்தாள் விளை' என்னும் சிறுகதை பற்றி ஆதவண் தீட்சண்யா எழுதிய 'படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல' என்னும் கட்டுரை தொடர்பாக சிறு விவாதமே நடைபெற்றது. அதில் எழுத்தாளர்களான ரவிகுமார், யமுனா ராஜேந்திரன், R.P.ராஜநாயஹம் மற்றும் புதியமாதவி ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு பதிவுக்காக அவ்விவாதம் இங்கே யூனிகோட்டில் மீள்பிரசுரிக்கப்பட்டுள்ளது.]
பதிவுகள் மே 2005; இதழ் 65.! தமிழ்நாடு! படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல... - ஆதவன் தீட்சண்யா -
படைப்பில் பிரச்சாரம் முதன்மையுறுமாயின் கலைநோக்கம் சிதைந்துவிடும். நாலெழுத்து படித்து பொதுவெளியில் புழங்க வரும் தலித்பெண்ணை இகழவேண்டும் என்ற சுந்தரராமசாமியின் பிரச்சாரத்தினால் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’- ஒரு கதையாக உருவாகாமல் மூளிப்பட்டுள்ளது. அது வரலாற்றையும் சொல்லவில்லை, புனைவாகவும் இல்லை. கதையின் சாரமான செய்தியிலும் புதுமையொன்றுமில்லை. வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்று ஏற்கனவே சங்கராச்சாரி அருளியதன் மறுவுருவாக்கமே. தாயம்மாளின் கதையைச் சொல்பவன் தங்கக்கண். தங்கக்கண் கதையைச் சொல்கிறான் செல்லதுரை. தங்கக்கண்ணின் முன்னோர் வாழ்ந்த மாடக்குழியும் தாயம்மாளின் மாங்குளமும் ( மாங்குழி என்கிறார் முதலில்) தான் கதை நடக்கும் ஊர்கள். கதை 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்குகிறது. அன்று தங்கக்கண்ணின் முன்னோர்களான ஆண்களின் உடை கௌபீனம். ‘பொட்டையா, போடாதே மேல்சீலை’. மேல்சீலை உடுத்த அனுமதியற்ற சாதிகளின் படிநிலையில் மேலே நாடார்களும் கீழே தலித்களும் இருந்தனர். எனவே மேல்சீலை உடுத்த அனுமதியற்ற தாழ்ந்த சாதிப்பெண் என்று தாயம்மாளை அறிமுகப்படுத்தும் தங்கக்கண் நாடார் என்றும் தாயம்மாள் தலித் என்றும் தெளிவாகிறது.
•Last Updated on ••Monday•, 04 •April• 2011 20:56••
•Read more...•
••Friday•, 01 •April• 2011 19:12•
??யமுனா ராஜேந்திரன், ஜெயமோகன், ரவி ஸ்ரீனிவாஸ், நேசகுமார்??
'பதிவுகளில்' அன்று
பதிவுகள் ஜனவரி 2005; இதழ் 61
பதிவுகள் விவாதம்: ஸைபர் வெளியும் மனித உடல்களும்!
- யமுனா ராஜேந்திரன் - முதலில் ஸைபர் வெளி ஜனநாயக வெளி என்பதை திட்டவட்டமாக தெளிவபடுத்தி விட வேண்டியிருக்கிறது. தணிக்கை என்பதைத் தகர்த்திருக்கிற வெளி இது. அமெரிக்காவும் பிரித்தானியாவும் சீனாவும் இந்தியாவும் கூட ஸைபர் வெளியைத் தம் நிலப்பிரப்பில் கட்டப்படுத்த பற்பல சட்டதிட்டங்களை வகுத்துவருவதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைய அறிவுஜீவி என்பவன் யார் எனும் பிரம்மாண்டமான கேள்வியையும் ஸைபர் வெளி எழுப்பியிருக்கிறது. கல்வித்துறைசார் பல்கலைக் கழக அறிவுஜீவிகள், வாய்ப்புப் பெற்ற மரபுசார் அறிவாளிகள் மேட்டுக்குடியினர் ஆர்வமுள்ள தேடித் திரியம் சாதாரண மனிதன் போன்றவர்களுக்கிடையிலான அறிவதிகார எல்லைகளை இவ்வெளி உடைத்திருக்கிறது. முக்கியமான ஆதார நூல்கள், சிந்தனையாளர்களின் தொகுப்பு நூல்கள், சிறப்புத்தறைசார் கட்டுரைகள் அனைத்தையும தேடலுள்ள வாசகன் இன்று எந்த அதிகார எல்லைகளையும் தாண்டாமல் ஸைபர் வெளியில் நேரடியாகப் பெற்றுவிட முடியும்.
•Last Updated on ••Friday•, 01 •April• 2011 20:02••
•Read more...•
பதிவுகளில் அன்று: பதிவுகள், ஜூன் 2006; இதழ் 78.
கிரேக்க புராணத்தில் ஒரு கதை உண்டு. இந்தக் கதைதான் திரோஜன் போர் நடப்பதற்கு காரணமாக அமைந்தது. ஒரு நாள் எல்லாக் கடவுள்களும் ஒரு விருந்தில் கலந்து கொண்டார்கள். மரணக் கடவுளான எரிஸ் அழைக்கப்படவில்லை. திடிரென்று அவள் நடுவில் தோன்றி விருந்து மேசையிலே ஒரு தங்க அப்பிளை உருட்டிவிட்டாள். அதிலே 'அழகில் சிறந்த தேவதைக்கு' என்று எழுதியிருந்தது. உடனேயே அங்கே சண்டை மூண்டது. அதீனா, ஹீரா, அஃப்ரோடைற் - இவர்கள் மூவரும் தாங்களே அழகில் சிறந்தவர் என்று தங்க அப்பிளுக்கு போட்டியிட்டார்கள். போட்டியை தீர்ப்பதற்கு பூமியில் இடையனாக வாழ்ந்துவரும் பாரிஸ் என்பவனிடம் வருகிறார்கள். பாரிஸ் திரோய் அரசனின் மகன். இளவரசன். அவனால் அந்த நகரம் முற்றிலும் அழிந்துபோகும் என்று சோதிடம் சொன்னதால் அவனை ஒரு இடையனிடம் கொடுத்து வளர்க்கச் சொல்லியிருந்தார்கள்.
•Last Updated on ••Friday•, 01 •April• 2011 16:24••
•Read more...•
பதிவுகளில் அன்று: ஜூன் 2010; இதழ் 126.
என்பது பரந்த தளத்தில் அணுகவேண்டியது. விரிவான வாசிப்பும், ஆழமான விமர்சனப்பண்பும் இல்லாது ஒரு வாசிப்பை முன்வைத்தல் என்பது கடினமானது.. ஈழத்திலிருந்து எனக்கு வாசிக்க கிடைத்த பிரதிகள் மிகச் சொற்பமே. எனவே ஈழத்திலக்கியம் என்ற வகைக்குள் ஈழத்திலிருந்தும் புலம்பெயர்ந்தும் வந்த படைப்புக்களை சேர்த்து, சில வாசிப்புப் புள்ளிகளை முன்வைக்கலாமென நினைக்கின்றேன். அத்துடன், இது எதற்கான முடிந்த முடிபுகளோ அல்ல என்பதையும் தயவுசெய்து கவனத்திற் கொள்ளவும். மேலும் போர் தின்றுவிட்டுப் போயிருக்கின்ற ஈழத்துச் சூழலில், இன்று இலக்கியம் பேசுவது கூட ஒருவகையில் அபத்தமானதுதான்.
•Last Updated on ••Friday•, 01 •April• 2011 16:23••
•Read more...•
|