பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

இலக்கியம்


திரு டொமினிக் ஜீவா அவர்களுடனான எனது இலக்கியத் தொடர்பு!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் டொமினிக் ஜீவா- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்- அண்மையில் இவ்வுலகை விட்டு மறைந்த திரு டொமினிக் ஜீவா அவர்கள் இலங்கையின் முற்போக்கு இலக்கியத்துறையில் மிகவும் முக்கியமான ஆளுமைகளில் ஒருத்தராகும். 27.6.1927-ல் பிறந்து 28.1. 2021 மறைந்த மதிப்புக்குரிய எழுத்தாளரின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கற் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். இச்சிறு கட்டுரையில அவருடன் எனக்கிருந்த இலக்கிய உறவு தொடக்கம் அவரின் இலக்கியப் பயணத்தின் எனக்குத் தெரிந்த சில விடயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். இன்று அன்னாரின் மறைவுக்கு,உலகம் பரந்த விதத்தில் அஞ்சலி செலுத்துக்கொண்டிருக்கிறார்கள். பல்வேறு பத்திரிகைகளில் அவரைப் பற்றிய பல தகவல்கள் இலக்கிய ஆர்வலர்களால் எழுதப் படுகின்றன.

அவர் 1950-1960;ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த சாதிக்கொடுமையின் விகார முகத்தை, வக்கிரமான நடவடிக்கைகளை எதிர்த்த பல முற்போக்கு படைப்பாளிகளில் முக்கியமானவராகும். அவரின் காணொலி ஒன்றில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிக் கொடுமையின் தாக்கத்தால் அவர் பாடசாலைப் படிப்பையே பன்னிரண்டு வயதில் அதாவது 1939ம் ஆண்டு துறந்து வெளியேறியதைப் பற்றிச் சொல்கிறார். அதைத் தொடர்ந்து, அன்று யாழ்ப்பாணத்தில் இடதுசாரிக் கொள்கைகளுக்கு 1947ம் ஆண்டு முதல் அத்திவாரமிட்ட அண்ணல் மு. கார்த்திகேசு மாஸ்டரின் சமத்துவத்திற்கான முக்கிய வேலைகள் யாழ்ப்பாணத்தில் பரந்தபோது அதனால் ஈர்ப்பு வந்து இடதுசாரிப் பணிகளில் முக்கிய பங்கெடுத்த சரித்திரத்தைச் சொல்லியிருக்கிறார்.

கார்த்தகேசு மாஸ்டரின் கருத்துக்களில ஈர்ப்பு கொண்டவர்களில் நானும் அடங்குவேன். திரு கார்த்திகேசு மாஸ்டரைப் பற்றி,அவரின் மாணவராகவிருந்த, பாலசுப்பிரமணியம் அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது,அக் கருத்துக்கள்,சமத்துவம்,மனித நேயம் என்பவற்றிற்கு மிக முக்கியமானவையாக எனது சிந்தனையில் பதிந்தன.அந்த சிந்தனைக்கு மதிப்புக் கொடுத்து, லண்டனில் புலம் பெயர் முதல் தமிழ் நாவலாக 'லண்டன் முரசு' பத்திரிகையில் பதிவாகிய எனது,முதலாவது நாவல்,'உலகமெல்லாம் வியாபாரிகள்' கதாநாயகனுக்குக் 'கார்த்திகேயன்' என்ற பெயரை வைத்தேன். இலங்கையில் வெளியிடப் பட்ட முதலாவது புலம் பெயர் தமிழ் நாவலான 'ஒருகோடை விடுமுறை' நாவலின் கதாநாயகிக்குக் 'கார்த்திகா' என்ற பெயரைக் கொடுத்தேன். கார்த்திகேயனைத் தெரிந்தவர்களுக்கு,டொமினிக் ஜீவா போன்றவர்கள் எப்படியான முற்போக்குப் பரம்பரையைக் 'குருகுலமாகக்' கொண்டிருந்தார்கள் என்று புரியும்.

•Last Updated on ••Monday•, 08 •February• 2021 11:37•• •Read more...•
 

ஈழத்து நாடக மரபும் அதன் தொடர்ச்சியும்

•E-mail• •Print• •PDF•

நவஜோதி யோகரட்னம்தமிழியல் துறை தமிழியற்புலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,மதுரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை, சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்,ஹ_ஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமெரிக்கா, உகண்டா தமிழ்ச்சங்கம், உகண்டா கிருஷ்ணகிரி மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள்   நலச்சங்கம் இணைந்து நடாத்தும் 100 நாள் தேசிய நாடகவிழா மற்றும் நாடகமும் பண்பாடும், திறன் மேம்பாட்டுத் தேசிய பயலரங்கம் நிகழ்வைச் சிறப்பித்துக்கொண்டிருக்கும் தமிழில்துறை தலைவர் முனைவர் யோ.சத்தியமூர்த்தி, கலைமணிச்சுடர் ம.வெ.குமரேசன், நாடக ஆசிரியர் மாதையன், நாடக மனேஜர் பெ.முருகேசன் மற்றும் கலைஞர்கள், நடிகர்கள்,  கலை ஆர்வலர்கள், இளையவர்கள் அனைவருக்கம் எனது இனிய வணக்கம்!

‘ஈழத்து நாடக மரபும் அதன் தொடர்ச்சியும்’ என்ற தலைப்பில் பேச உள்ளேன்.  யாழ்ப்பாண வரலாறு ஆய்வுகளில் அக்கறை கொண்ட என் தந்தை அகஸ்தியர் யாழ்ப்பாணக் கூத்து வடிவங்கள் பற்றி அதாவது வடபாங்கு, தென்பாங்கு, மன்னார் கூத்து வடிவங்கள், மட்டக்களப்பு கூத்து, காத்தவராயன் கூத்து, மலையக வடிவங்கள், கண்டிய நடனங்கள் என்று பேசுவதை அவதானித்து வந்திருக்கிறேன். அத்தோடு அவர் சிறந்த பாடகர். தாள லயம் குன்றாது நாட்டுக் கூத்து மெட்டுக்களை பாடக்கூடியவர். அத்தோடு மிருதங்கக் கலையை முறைப்படி கற்றவர். அவரது மிருதங்கக் கச்சேரிகளையும் நான் நேரில் பார்த்து ரசித்திருக்கிறேன். எனது பாட்டனாரான சவரிமுத்துவும் கலையார்வம் கொண்டவர். அவர் உண்மையான குதிரையை மேடையில் ஏற்றி நடித்தவர் என்று எனது தயார் நவமணி கூறியதைக்கேட்டு வியந்திருக்கிறேன். அவர் நடித்தவற்றை நான் நேரில் பார்க்காவிட்டாலும் கூத்துப் பாடல்கள் பாடியதைக் கேட்டிருக்கிறேன். எனது பெரிய தந்தை எஸ் சிலுவைராஜாவும் சிறந்த நாட்டுக்கூத்து கலைஞன். ‘சங்கிலி மன்னன்,  ‘கண்டி அரசன்’ போன்ற நாட்டுக்கூத்து நாடகங்களில் அரசனாகி கொலுவில் உட்கார்ந்து அவர் கர்ஜித்ததை நான் மேடைகளில் பார்த்து அனுபவித்திருக்கிறேன். அத்தோடு எனது மகன் அகஸ்ரி யோகரட்னம் லண்டனில் மிருதங்கக் கலையைப் பயின்று அரங்கேற்றம் கண்டு, லண்டன் மேடைகளில் தனது கலைத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றான். இத்தகைய கலைச் சூழலின் பின்னணியிலிருந்து  வந்தவள் என்றவகையில் இங்கு பேசுவது பொருத்தமாகி மகிழ்விக்கின்றது.

•Last Updated on ••Thursday•, 04 •February• 2021 12:09•• •Read more...•
 

துயர் பகிர்வோம்: இனிய நண்பர் கலாநிதி எஸ். சிவநாயகமூர்த்தி

•E-mail• •Print• •PDF•

துயர் பகிர்வோம்: இனிய நண்பர் கலாநிதி எஸ். சிவநாயகமூர்த்திஎமது இனிய நண்பர் கலாநிதி சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி அவர்கள் சென்ற சனிக்கிழமை 30-1-2021 ஆண்டு எம்மைவிட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி எமக்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றது. இலங்கையில் பிரதி கல்விப்பணிப்பாளராகவும், ரொறன்ரோவில் பகுதிநேர ஆசிரியராகவும் கடமையாற்றியிருந்த இவரை முதன் முதலாக 1990 களில் ‘கனடா தமிழ் பெற்றோர் சங்க நிகழ்வு ஒன்றில்தான் சந்தித்தேன். இவர் பெற்றோர் சங்க நிர்வாகக் குழுவில் இடம் பெற்றிருந்தார். திரு சின்னையா சிவநேசன், திரு கே. கனகரட்ணம், திரு. இராமநாதன் ஆகியோர் அக்காலகட்டத்தில் தலைவர்களாக இருந்தார்கள். நான் முதலில் பொருளாளராகவும், பின் செயலாளராகவும் கடமையாற்றினேன். அதிபர் பொ. கனகசபாபதி, பேராசிரியர் இ. பாலசுந்தரம், திரு. சாள்ஸ் தேவசகாயம், திரு. இராமச்சந்திரன் போன்றோர் நிர்வாகசபையில் இருந்தார்கள். அக்காலத்தில் இருந்தே, தன்னார்வத் தொண்டரான நண்பர் சிவநாயகமூர்த்தி இது போன்ற ‘இலங்கை பட்டதாரிகள் சங்கம்’ மற்றும் பல சங்கங்களில் இணைந்து கடைசிவரை தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திலும் இவர் அங்கத்தவராக இணைந்திருந்தார். தற்போது இருக்கும் நிர்வாகக் குழுவில் உப செயலாளராகக் கடமையாற்றினார். இவர் எழுத்தாளர் இணையத்தின் தலைவராக 2015 ஆம் ஆண்டு இருந்த போது, எனது 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டி விழா எடுத்திருந்தார். ‘கனடா தமிழர் இலக்கியத்தில் குரு அரவிந்தனின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் 286 பக்கங்களைக் கொண்ட நூல் ஒன்றையும் அந்த விழாவில் கனடா எழுத்தாளர் இணையத்தின் சார்பில் வெளியிட்டு வைத்திருந்தார். சர்வதேச இலக்கிய உலகிற்கு இந்த நூல் மூலம் எனது இலக்கியப் பணி பற்றி அறிய வைத்திருந்தார். இந்த இதழில் ‘குரு அரவிந்தன் அவர்களின் 25 ஆண்டுகால எழுத்துப் பணியும், சமூகசேவையும்’ என்ற தலைப்பில் விரிவான ஒரு கட்டுரையும் எழுதியிருந்தார். கனடாவில் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்களில் அனேகமானவர்களுடன் நட்புறவு கொண்டிருந்ததால், அவர்களுடைய வாழ்த்துச் செய்திகளையும் இதில் இடம் பெறச் செய்திருந்தார். தனது காலத்திலேயே சிறுகதைப் பட்டறை ஒன்றை நடத்தும்படி என்னிடம் கேட்டு, சிறப்பாக அதை நடத்தியும் வைத்தார்.

•Last Updated on ••Thursday•, 04 •February• 2021 12:07•• •Read more...•
 

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets)

•E-mail• •Print• •PDF•

எழில் இனப் பெருக்கம்

ஷேக்ஸ்பியர்

- சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா -

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது.  1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது.  அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள்.  அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும்.  அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர்களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது.  ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை.  ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார்.  எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்..  ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை.  அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

•Last Updated on ••Monday•, 01 •February• 2021 06:57•• •Read more...•
 

ஜெமினியின் மறைவு தரும் பாடம் ! ?

•E-mail• •Print• •PDF•

தேனீ ஆசிரியர் ஜெமினி கங்காதரன்ஸ்டுட்காட்டில் (Stuttgart, Germany) நண்பர் யோகநாதன் புத்திராவின் வீட்டில் பத்துப்பேர் சில வருடங்கள் முன்பாக என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள் அவர்கள் பலரில் ஒருவர், தலையில் கருமையான தொப்பியணிந்தபடி ஓரத்தில் அமர்ந்திருந்தார். அப்போது யோகநாதன் “இவர்தான் தேனி ஜெமினி “ என அறிமுகப்படுத்தியபோது “தேனியை நடத்திக் கொண்டு ஜெர்மனியில் எப்படி உங்களால் உயிர்வாழ முடிகிறது?” எனக் கேட்டேன். ஆரம்பத்தில் அவரிடமிருந்து புன்சிரிப்பு மட்டும் வந்தது. சிறிது நேரத்தின் பின் “ எவரையும் எனது வீட்டுக்கு அனுமதிப்பதில்லை. ஒருவரையும் நம்பமுடியாது “ என்றார் . எனக்கு ஜெமினி தொடர்ச்சியாக வீரமும் விவேகமுமாக போரை நடத்தும் ஒரு தளபதியாகத் தெரிந்தார். “ நானும் அப்படித்தான். மெல்பனில் நானும் பெரும்பாலானவர்களை எனது கிளினிக்கில் வைத்துத்தான் பேசுவேன். முக்கியமாகத் தமிழர்களை, “ என்றேன்.

பாம்பு இறந்துவிட்டது என்பதால் பலர் முகநூலில் வீரவசனம் பேசும் இக்காலமல்ல, அக்காலம் . நாடு கடல் , கண்டம் கடந்து ஆலகால விஷம் கொண்ட அரவமாக முழு நஞ்சை காவியபடி இரைதேடி வேட்கையுடன் சீறிக்கொண்டு உலகமெங்கும் திரிந்த காலம். விதுரராக வில்லை ஒடித்துவிட்டு ஒத்துழைக்காதவர்கள் சிலர் இருந்தாலும் , விடுதலைப் புலிகளை நேராக விமர்சித்தவர்கள் மிகக் குறைவு. அதிலும் தொடர்ச்சியாக அவர்களை விமர்சித்து உயிர் தப்பியவர்கள் ஒற்றைக்கை விரலில் எண்ணக்கூடியவர்கள்.

•Last Updated on ••Sunday•, 31 •January• 2021 08:59•• •Read more...•
 

திருக்குறளும் வாழ்வியலும்

•E-mail• •Print• •PDF•

நவஜோதி யோகரட்னம்திருவள்ளுவர், முப்பானூல், உத்தரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, பொதுமறை என்று பல்வேறு நாமங்கள்  சூட்டிப் போற்றப்படுகின்றது திருக்குறள். மனிதகுலம் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் எந்தச் சூழலில் வாழ்க்கை முறையை மெற்கொண்டிருந்தாலும் அங்கெல்லாம் ஒளியைப் பாய்ச்சி வாழ்வு சிறந்து விளங்க வழிகாட்டும் நூல் திருக்குறளாகும்.   இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்துக் குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால். இன்பத்துப்பால் என்று மூன்று பிரிவுகளாக வருகின்றன.  

இலக்கிய அழகு பொலிய அமைந்த மொழிநடை, காலந்தோறும் புத்தம் புதிய சிந்தiயைத் தூண்டும் அருள்வாக்கு ஆகியவை திருக்குறளின் தனித்தன்மையின் வெளிப்பாடாகத் திகழ்கின்றது. சாதி சமயங்களால் வேறுபட்டவர்கள் அனைவரும் ஏற்கும் கருத்துப் பொதுமை, கற்பவர் நெஞ்சில் ஆழப்பதியும் வண்ணம் எடுத்துரைக்கும் வெளிப்பாடும் இத்திருக்குறளின் அற்புத வெளிப்பாடு.  

அந்த வகையில் முதற் பாவலர் என்றழைக்கப்படுகின்ற திருவள்ளுவரின் சில திருக்குறள்களை முன்வைத்துப் பேசலாம் என்று நம்புகிறேன். அறத்தை வலியுறுத்துகின்ற அதிகாரத்தை எடுத்துக்கொண்டால்  

‘மனதுக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்  
ஆகுல நீர பிற’  (34)  

ஒருவன் தான் மனதில் குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அதுவே அறம் ஆகும். மற்றவையெல்லாம் ஆரவாரத் தன்மை உடையவையாகும் என்று மிகச் சிறப்பாக எமது வாழ்வில் மனதளவில் நாம் குற்றமற்றவர்களாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார். மனதில் நாம் பல குற்றங்களுக்குக் காரணமாகிக் கொண்டும் குற்றம் இழைத்துக்கொண்டும் மற்றவர்களுக்கு எப்படி நாம் நன்மை புரிய முடியும் என்பதைச் சிந்திக்க வைக்கும் திருக்குறளாகும்.

•Last Updated on ••Wednesday•, 27 •January• 2021 12:02•• •Read more...•
 

பெண்ணே நீ அடிமைதான்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை :
- சௌ. சிவசௌந்தர்யா,  ஆய்வியல் நிறைஞர்,  தமிழ்த்துறை,  காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம்,      காந்திகிராமம்,    திண்டுக்கல் -பெண்ணியம் என்ற சொல் 1890 களில் இருந்து பாலின சமத்துவ கோட்பாடுகளையும், பெண்ணுரிமைகளைப் பெறச் செயற்படும் இலங்கங்களையும், குறிக்கப் பயன்பட்டு வருகிறது. தமிழில் பெண்ணியம், பெண்நிலை வாதம், பெண்ணுரிமை ஏற்பு என்ற சொற்கள் பயன்பட்டு வருகிறது. பெண்ணியம் பெண்கள் அனுபவிக்கும் எல்லா விதமான அடக்குமுறைகளையும், எதிர்ப்பது மட்டுமன்றி, பெண்களின் மேம்பாட்டிற்குரிய வழிமுறைகளையும் ஆராய்ந்து செயற்படுத்துகின்றது. இதனையே புட்சர் “பெண்ணியம் என்பது, பெண்கள் பாலின பாகுபாட்டால் அனுபவிக்கும் தனிப்பட்ட பொருளாதாரத் துன்பங்களை எதிர்த்து மேற்கொள்ளும் இயக்கமே” என்கின்றார். பெண்ணியவாதிகள் ஆண்களை வெறுப்பவர்கள் அல்லர். இருப்பினும் ஆண் நாயகத்தையும் வெறுப்பவர்கள். பெண்ணியம் ஆண்களுக்கும்ää பெண்களுக்கும் பொதுவான நேர்மையான சமத்துவத்துடனும், சுதந்திரத்துடனும் கூடிய சமூகம் உருவாக வேண்டுமென்று விரும்புகின்றது.

பெண்களின் அவலநிலை :
உயிரற்ற ஒரு பொருளுக்கு தரும் மதிப்பையும்ää மரியாதையும் இந்த சமூகம் உயிருள்ள ஒரு பெண்ணுக்குத் தருவதில்லை. ஆனாதிக்கத்தினால் பெண்கள் ஊமையாய் போகின்றார்கள். இந்தியாவிற்கு இந்தியா என்ற பெயர்தான் புதியதே தவிர அடிமைத்தனம் என்பது புதிதல்ல. வெள்ளைக்காரனுக்கு இந்தியனும் அடிமைதான். பணக்காரனுக்கு ஏழை மக்கள் அடிமைதான். ஆணுக்கு பெண்ணும் கடைநிலை அடிமைதான். வாடிய பயிரைக் கண்டு வாடிய இந்த மனித சமுதாயம் ஏன் ஆனாதிக்க அடக்குமுறையால் வாடும் பெண்ணையும் அவள் உணர்வையும் ஏன் மதிக்கவில்லை. இந்நிலை இன்றும் மாற்றம் பெற்றாலும் இன்னும் நாட்டில் சில ஆணாதிக்க நரிகளும், நாய்களும் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றது. நடைமுறை வாழ்வில் தலைகீழ் மாற்றம்தான் பெண்ணே பெண்களை கீழ்நிலைக்குத் தள்ளி நீ மெண்மையானவள், உறுதியற்றவள் என்று உணர்வை கொன்று புதைக்கும் தாய்மார்கள் இன்றும் இருக்கின்றனர்.

வண்டி ஓட்டிகளான ஆண்கள் இனியாவது வண்டி மாடுகளில் ஒன்றாக மாற வேண்டும். மனித சமுதாயத்தில் ஆணும்ää பெண்ணும் இணைந்து உணர்வுகளை பரிமாறி வாழ்வது தான் தன் குடும்ப வாழ்க்கை ஆணுக்கு ஒரு நீதி வழங்கி பெண்ணுக்கு அநீதி வழங்கிடக்கூடாது. படுக்கை அறையை பங்குபோடும் ஆண் சமுதாயம் பெண்ணின் உணர்வுகளை மதித்துக் குடும்பச் சுமையையும் பங்கிட வேண்டும். சந்தேகம் என்பது தீயைவைக்கும். நம்பிக்கைத்தான் கணவன் மனைவியை வாழ வைக்கும். கற்பு என்பது இருவருக்கும் பொதுவானது. சீதையை சந்தேகத் தீயில் இறக்கிய ராமன் உண்மையில் உத்தமனா? உலகினைக் காக்கும் இறைவனாக இருந்தாலும் கட்டிய மனைவி மீது சந்தேக அம்புகளை தொடுப்பதில் குறைந்தவரில்லை. மனிதனுக்கும் ஆணுக்கும் பெண் சமம் என்று வேடமிடும் ஆண் சமூகமே நாணயமற்ற முறையில் விமர்சனம் செய்யும் பெயர்கள் அனைத்தும் உங்களை பொருத்த வரை அவை வெறும் சொற்கள் ஆனால் பெண்ணுக்கு அவை ஒவ்வொன்றும் காயப்படுத்தும் கற்கள்.

•Last Updated on ••Wednesday•, 27 •January• 2021 12:02•• •Read more...•
 

ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள் இருவர்: இலங்கையர்கோன் & சாகித்திய இரத்தினா" பண்டிதர் க. சச்சிதானந்தன்!

•E-mail• •Print• •PDF•

1. பல்திறன் கொண்ட படைப்பாளி இலங்கையர்கோன்..!!

வி.ரி,இளங்கோவன்ஈழத்தில் 1930 முதல் சிறுகதைகள் புதிய வடிவமும் சமூக சீர்திருத்தப் பார்வை கொண்டனவாகவும் வெளிவரத்; தொடங்கின. முன்னோடிப் படைப்பாளிகளாகத் திகழ்ந்தவர்களின் ஆங்கில மொழிப் பயிற்சியும், தமிழக இதழ்களில் வெளியான சிறுகதைகள் மீதான பார்வையும் அவர்கள் சிறந்த கதைகளைப் படைக்க ஏதுவாகவிருந்தன. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மூலவர்களில் ஒருவராகவும் அன்றுதொட்டு இன்றுவரை இலக்கிய வரலாற்றில் முக்கியமானவராகவும் பலராலும் குறிப்பிடப்படுபவர் இலங்கையர்கோன. இவரது இயற்பெயர் த. சிவஞானசுந்தரம். ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.  ஆங்கில மொழிமூலம் கல்விகற்று நிர்வாக சேவைக்குத் தெரிவுசெய்யப்பட்டுக் காரியாதிகாரியாக (னு.சு.ழு.) கடமையாற்றியவர். சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞராகவும் திகழ்ந்தவர்.

இவர் ஆங்கிலப் படைப்புகளின் நோக்குகளை நன்கு புரிந்துகொண்டு முதலில் மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டார். வெளிநாட்டுச் சிறந்த கதைகள்,  நாடகங்கள் சிலவற்றை மொழிபெயர்த்துத் தமிழ் வாசகர்களுக்கு வழங்கியுள்ளார்.18 வயதுக் காலத்திலேயே இவர் எழுதத் தொடங்கிவிட்டார். புராண, இதிகாச, வரலாற்றுக் கதைக் கருக்களைக்கொண்டு         சிறுகதைகளை முதலில் எழுதினார்.

•Last Updated on ••Wednesday•, 23 •December• 2020 09:56•• •Read more...•
 

அனார் கவிதைகள்- ஒரு சுருக்கமான அறிமுகம்

•E-mail• •Print• •PDF•

-  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய அனார் கவிதைகள் பற்றிய இணையவழி காணொளி அரங்கில் சமர்பிக்கப்பட்ட அறிமுகம் -


எழுத்தாளர் அனார்அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் அனார் கவிதைகள் பற்றிய கலந்துரையாடலைத் தொடக்கிவைக்கும் முகமாக அனாரை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு சிறு குறிப்பை அனுப்பிவைக்குமாறு நண்பர் நடேசன் என்னைக் கேட்டுக்கொண்டார். அனாருக்கு புதிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை எனினும், கருத்தரங்கச் சம்பிரதாயத்துக்காக நான் இந்தச் சிறிய அறிமுகக் குறிப்பை உங்கள் முன்வைக்கின்றேன்.

அனார் 1990 களின் நடுப்பகுதியில் கவிதை எழுதத் தொடங்கினார் என்று நினைக்கிறேன். எனினும் அவருடைய ஆரம்ப காலத்திலேயே, 2004 இல் வெளிவந்த அவருடைய முதலாவது கவிதைத் தொகுதி ஓவியம் வரையாத துரிகை இலங்கை சாகித்திய விருதும், மாகாண இலக்கிய விருதும் பெற்றது.

கடந்த சுமார் பதினைந்து ஆண்டுகளில் ஓவியம் வரையாத தூரிகை உட்பட அவரது ஐந்து கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. எனக்குக் கவிதை முகம் (2007), உடல் பச்சை வானம் (2008 ), பெருங்கடல் போடுகிறேன் (2013), ஜின்னின் இரு தோகை (2017) என்பன அவை. இந்த ஐந்து தொகுதிகளிலும் மொத்தம் 151 கவிதைகள்தான் உள்ளன.

அவர் எழுதத் தொடங்கி கடந்த சுமார் இருபத்தைந்து ஆண்டுகளில் அவர் எழுதியவை அதிகம் இல்லை. ஆயினும், இன்று அவர் இலங்கையில் மட்டுமன்றி ”தமிழ் கூறும் நல்லுலகு“ எங்கும் நன்கு அறியப்பட்டவராக, ஈழத்து முன்னணிக் கவிஞர்களுள் ஒருவராக அங்கீகாரம் பெற்றிருக்கிறார். கவிதைக்கான கனேடிய இயல்விருது, விஜய் தொலைக்காட்சியின் இலக்கியத் துறைக்கான சாதனைப் பெண் விருது, கவிஞர் ஆத்மாநாம் விருது, ஸ்காபரோ இலக்கிய விருது என பல விருதுகள் பெற்றிருக்கிறார்.

•Last Updated on ••Sunday•, 13 •December• 2020 00:56•• •Read more...•
 

எழுத்தாளர் அகஸ்தியர் 25ஆவது வருட நினைவுக் கட்டுரை!

•E-mail• •Print• •PDF•

- எஸ்.அகஸ்தியர் அவர்களின் சிந்தனையை நிறுத்திய 25ஆவது வருட நினைவு தினத்தையொட்டி (29.08.1926 – 08.12.1995) அம்பலவாணர் சிவராசா எழுதிய கட்டுரையைப் பதிவுகள் இதழுக்கு அனுப்பு வைத்துள்ளார்  அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி யோகரட்ணம். அவருக்கு நன்றி. - பதிவுகள் -


- எழுத்தாளர் அகஸ்தியர் -கவிதை புனைவதோடு இலக்கிய உலகில் பிரவேசித்துää சுமார் முப்பதாண்டுக் காலமாகத் தமிழ் சிருஷ்டி இலக்கியத்தின் சகல கூறுகளிலும் தன் கைவண்ணத்தைக் காட்டி அவற்றில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்துள்ள ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவரான அகஸ்தியர் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அண்மையில் எனக்குக் கிட்டியது. எடுத்த எடுப்பிலேயே. எழுத்துத் துறையில் புகுவதற்கு எவை தூண்டுதலாக இருந்தன என அவரைக் கேட்டேன். அடக்கு முறைகளையும். ஒடுக்கு முறைகளையும். சுரண்டலையும் நேரடியாகக் கண்டு அவற்றுக்கு எதிராகப் பணியாற்ற வேண்டுமென்ற அவாவே அவரை எழுதத் தூண்டியது என்றும். தான் சேர்ந்த முற்போக்கு இயக்கமும் அவ்வியக்கத்துத் தோழர்களிடமிருந்து தான் பெற்ற போதமும். மக்களிடமிருந்து கற்றவையுமே சரியான பாதை எது என்பதை அவருக்குக் காட்டித் தந்தன எனச் சுட்டிக் காட்டினார்.

தமிழ் இலக்கிய உலகில் வியத்தகு சாதனைகளைச் செய்துள்ள இவ்வெழுத்தாளரின் படைப்புகளைப் பட்டியல் போட்டுக்காட்டுவது எனது நோக்கமல்ல. ஆயினும் முந்நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும்ää ஒன்பது நாவல்களையும். எட்டுக் குறுநாவல்களையும். பத்துக்கு மேற்பட்ட உணர்வூற்றுச் சித்திரங்களையும் இலக்கிய உலகுக்கு ஆக்கித் தந்த இந்த எழுத்தாளர் அவற்றினூடாக மக்களுக்கு என்ன சொல்ல முற்பட்டார் என்பதே முக்கியமாகும். ஆதனைவிட அவற்றை எவ்வாறு சொன்னார் என்பதே மிக முக்கியமானதாகும். இவரது படைப்புக்களின் உள்ளடக்கம் சாதாரணமான மக்களது. குறிப்பாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்க்கைப் பிரச்சனைகளையும். மன அவசங்களையும் பிரதிபலிப்பனவாகவும்ää அவற்றுக்கான தீர்வுகளைக் காட்டுவனவாகவும் அமைந்தன. அவை சொல்லப்பட்ட விதமே அவரை ஒரு தலைசிறந்த இலக்கிய சிருஷ்டிகர்த்தா ஆக்கியது. அகஸ்தியர் தான் வாழ்கின்ற காலப் பகுதியின் சமூக. பொருளாதார. அரசியல் பிரச்சினைகளை அவற்றுக்குரிய பகைப் புலங்களை மையமாகக் கொண்டு மிக நுணுக்கமாகச் சித்தரிப்பதில் வெற்றி கண்டவர். களத்திற்கேற்ப உரைநடையைக் கையாள்வதிலும். பாத்திரங்களின் இயல்பான பேச்சு மொழியை ஒலி வடிவத்தில் யதார்த்த பூர்வமாக வளர்ப்பதிலும். குறிப்பாக யாழ்;பாணத்தின் பல்வேறு கிராமங்களிலும் நிலவுகின்ற பேச்சு வழக்கினை யதார்த்தங்களினுடாக வெளிக்கொணர்வதில் மிகவும் வல்லவர்.

•Last Updated on ••Wednesday•, 02 •December• 2020 13:29•• •Read more...•
 

மூத்த பத்திரிகையாளர் - எழுத்தாளர் ''சசிபாரதி" நினைவுகள்..!

•E-mail• •Print• •PDF•

மூத்த பத்திரிகையாளர் - எழுத்தாளர்  ''சசிபாரதி" நினைவுகள்..!வி.ரி,இளங்கோவன்மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான 'சசிபாரதி" சபாரத்தினம் ஈழத்தில் பத்திரிகைத் துறையினர் - இலக்கியவாதிகள் யாவருக்கும் நன்கு அறிமுகமானவர். 'சசிபாரதி" சபாரத்தினம் 1951 -ம் ஆண்டு 'வீரகேசரி" பத்திரிகையில் ஒப்புநோக்காளராக பணியில் சேர்ந்தவர். 1961 - ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 'ஈழநாடு" பத்திரிகை  தினசரியாக ஆரம்பிக்கப்பட்டதும் அதில் இவர் இணைந்துகொண்டார். 'ஈழநாடு" பத்திரிகையில் உதவி ஆசிரியராக - செய்தி ஆசிரியராகப் பின்னர் வாரமலர் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். பத்திரிகையில் எழுத்துப்பிழைகள் - வசனங்களில் இலக்கணப் பிழைகள் ஏற்படாது மிகச் சிறப்பாகத் திருத்தங்கள் செய்வதில் வல்லவர் எனப் பாராட்டுப் பெற்றவர். பல பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாகவிருந்து வளர்த்துவிட்டவர்.
இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி எழுதவைத்தவர்.

இன்று புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள பல எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் இவரை நன்றியோடு நினைவுகூர்வர். ஈழநாடு பத்திரிகை நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர்   யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிய எஸ். திருச்செல்வம் ஆசிரியராக விளங்கிய 'முரசொலி"ப்  பத்திரிகையிலும் சிறிது காலம் பணிபுரிந்தார். சிறுகதைகள் - குட்டிக்கதைகள் பல எழுதியவர். அவை நூல்களாகவும் வெளிவந்தன. இவரது குட்டிக் கதைகள் நூல் ஆங்கிலத்திலும் வெளியாகிப் பாராட்டுப் பெற்றது.

•Last Updated on ••Tuesday•, 01 •December• 2020 12:53•• •Read more...•
 

ஈழத்து முற்போக்கு இலக்கிய முன்னோடி..! பல்துறை ஆற்றலாளர் அ. ந. கந்தசாமி..!!

•E-mail• •Print• •PDF•

அறிஞர் அ.ந.கந்தசாமிவி.ரி,இளங்கோவன்ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவர், பல்துறை ஆற்றலாளர் அ. ந. கந்தசாமி. பத்திரிகைத்துறை ஜாம்பவான். எழுத்தாளர், கவிஞர். வீரகேசரி, தேசாபிமானி, சுதந்திரன், மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளான ஒப்சேவர், ரிபுயூன் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரிய பீடங்களில் பணியாற்றியவர். இலங்கை அரசாங்கத் தகவற்பிரிவின் வெளியீடான 'ஸ்ரீ லங்கா"   என்ற இதழின் ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும்   பணியாற்றியுள்ளார். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு,  பத்திரிகைத்துறை என யாவற்றிலும் தனக்கெனத் தனிமுத்திரை பதித்தவர்.

சிறந்த கவிதைகள் பலவற்றைப் படைத்துள்ளார். துறவியும் குஷ்டரோகியும், சத்திய தரிசனம், எதிர்காலச் சித்தன் பாட்டு என்பன அவரது பாராட்டுப்பெற்ற கவிதைகளில் சிலவாகும். கவீந்திரன் என்ற பெயரிலும் மற்றும் சில புனைபெயர்களிலும் சர்ச்சைக்குரிய கவிதைகளையும் பல கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். புகழ்பெற்ற 'மதமாற்றம்" என்ற நாடகத்தைப் படைத்தளித்தவர். 'மனக்கண்" என்ற நாவலையும் எழுதியுள்ளார்.

தனது பதினேழாவது வயதில் 'ஈழகேசரி"ப் பத்திரிகையில் சிறுகதை எழுதியதின்மூலம் எழுத்துத்துறையில் நுழைந்தவர். பத்திரிகை ஆசிரியபீடங்களில் பணியாற்றிய காலத்தில் நாற்பது சிறுகதைகள் வரையில் படைத்துள்ளதாகத் தெரியவருகிறது. நள்ளிரவு, இரத்த உறவு, ஐந்தாவது சந்திப்பு என்பன குறிப்பிடத்தக்க சிறந்த கதைகளாகும்.

அன்று யாழ்ப்பாணத்தில் இளம் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய முதலாவது எழுத்தாளர் அமைப்பெனக் குறிப்பிடப்படும் 'மறுமலர்ச்சிச் சங்கத்தில்" (1943) ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவராக இணைந்து செயற்பட்டவர். ஈழத்துச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் முற்போக்குச் சிந்தனையுடன் சிறுகதைகளைக் கலையழகுடன் படைத்தவர். முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியாக, அறிஞராகக் கருதப்பட்டவர்.

•Last Updated on ••Tuesday•, 01 •December• 2020 12:52•• •Read more...•
 

சுருக்கெழுத்துக்கலை மறக்கப்பட்டுவிட்டதா..? “ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் தந்தை” சி. இராமலிங்கம் அவர்களின் பணி.

•E-mail• •Print• •PDF•

சுருக்கெழுத்துக்கலை மறக்கப்பட்டுவிட்டதா..? “ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்துத்  தந்தை”  சி. இராமலிங்கம் அவர்களின் பணி.வி.ரி,இளங்கோவன்இலங்கையில் தமிழ்ச் சுருக்கெழுத்தின் தந்தையெனக் கருதப்படத் தக்கவர் அன்பர் இராமலிங்கம். அவர் நம்மவரின் மதிப்புக்குரியர்." இவ்வாறு பேராசிரியர் க. கைலாசபதி குறிப்பிட்டுள்ளார். இன்றைய நவீன கணினி - கைத்தொலைபேசி யுகத்தில் சுருக்கெழுத்தின் தேவை அருகிவிட்டது.  இலங்கையில் சுயமொழியில் நிருவாக அலுவல்கள் ஆரம்பித்த காலத்தில் தமிழ்ச் சுருக்கெழுத்தின் தேவை அவசியமாகப்பட்டது.

தமிழ்மொழியில் தமிழகத்து மூன்று பெரியவர்கள் (எம். சீனிவாசராவ் - என். சுப்பிரமணியம் - பி. ஜீ. சுப்பிரமணியம்) மூவகைச் சுருக்கெழுத்து முறைகளை உருவாக்கித் தமிழுக்கு அணி செய்தனர். இலங்கைக்கு 1950 -ம் ஆண்டுக்கு முன்னர் இச்சுருக்கெழுத்து முறைகள் எட்டவில்லை. 1951 -ம் ஆண்டில் இலங்கை வானொலி நிலையம் ஒரு தமிழ்ச் சுருக்கெழுத்தாளரையும் இரண்டு தமிழ்த் தட்டெழுத்தாளர்களையும் நியமனம் செய்தது.  இதில் ஒரு தட்டெழுத்தாளராக நியமிக்கப்பட்ட சி. இராமலிங்கமே பிற்காலத்தில் 'ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் தந்தை"யெனப்    போற்றப்பட்டார். தமிழகத்தில் சி. இராமலிங்கம் சுருக்கெழுத்தை நன்கு கற்றுத் தேறியிருந்தார்.

1952 -ம் ஆண்டு மே மாதத்தில் அரசாங்க மொழிகள் கமிசனின் மேற்பார்வையில் மருதானை ஆனந்தாக் கல்லூரியின் ஒரு பகுதியில் சிங்கள - தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு முதன்முதலாகச் சிங்களச் சுருக்கெழுத்துப் போதிப்பதற்கு ஒருவரும் - தமிழ்ச் சுருக்கெழுத்துப் போதிப்பதற்கு சி. இராமலிங்கமும் நியமிக்கப்பட்டனர். இந்நியமனத்திற்கெனத் தமிழில் நடாத்தப்பட்ட தேர்வில் பலர் போட்டியிட்டும் வேகப் பரீட்சையில் முதன்மையானவராகத் திகழ்ந்ததின் மூலமே இவர் தெரிவுசெய்யப்பட்டார்.

•Last Updated on ••Monday•, 30 •November• 2020 08:57•• •Read more...•
 

ஈழத்து இலக்கியத்திற்கு வளமான பங்களிப்புச் செய்தவர் யோ. பெனடிக்ற் பாலன்!

•E-mail• •Print• •PDF•

யோ. பெனடிக்ற் பாலன்..!"நான் யாழ்ப்பாணத்திலே ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். ஏழைகளின் துன்ப துயரங்களையும்,  அவலங்களையும்,  பசிபட்டினிகளையும் அவர்களது கல்வி அறிவின்மையையும் நான் அனுபவரீதியாக அறிவேன். நாம் வாழும் இலங்கைச் சமூகம் மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கின்ற ஓர் அமைப்பாகும். பெரும்பான்மை மக்களின் வாழ்வு துன்ப துயரங்கள்,  அமைதியின்மைகள், வறுமையின் தாக்கங்கள் நிறைந்ததாயிருப்பதற்கு மனிதனை மனிதன் சுரண்டுகின்ற வர்க்க சமுதாயமே காரணமென்பதை அறிந்தேன். அரசியலே சகலவற்றையும் தீர்மானிக்கின்றது. இந்த ஓர வஞ்சகமான சமுதாயத்தை மாற்றி அமைப்பதற்கு உழைக்கும் மக்களின் அரசியலாலேயே முடியும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில்,  இச்சமுதாய அமைப்பை மாற்றி அமைத்து, சகலரும் சரிநிகர் சமானமாக,  சுபீட்சமாக வாழத்தக்க ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்காக மக்களைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபட்டிருந்த மார்க்சிய இயக்கத்திலே இணைந்து உழைத்தேன். அந்த இயக்கம் எனக்கு ஒரு சரியான உலகப் பார்வையை அளித்தது. மக்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்தது.  மக்களிடம் கற்று மக்களிடமே மீண்டும் அளித்தல் வேண்டும் என்ற கோட்பாட்டைப் போதித்தது. இவைகளால் தெளிவும், பரந்த உணர்வும் பெற்ற நான் மனிதனை மனிதன் சுரண்டுவதை அம்பலப்படுத்தவும், சுரண்டலினால் மக்கள் வாழ்வில் விளைகின்ற துன்ப துயரங்கள், அவலங்கள், ஏக்கங்கள், கல்வி அறிவின்மை, அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படுதல் முதலியவைகளை வெளிப்படுத்தவும் நான் எழுதத் தொடங்கினேன்." எனப் பிரகடனப்படுத்துகிறார் சிறந்த முற்போக்கு எழுத்தாளர் யோ. பெனடிக்ற் பாலன்.

ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக எழுதிவந்தவர் பெனடிக்ற் பாலன். சிந்தனைத் திறனும் செயல் திறனும் மிக்கவர். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குட்டிக் கதைகள் போன்ற தனது படைப்புகள் மூலம் ஈழத்து இலக்கியத்திற்கு வளமான பங்களிப்புச் செய்தவர். யாழ் இளம் எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்து, அதன் வெளியீடான "மலர்" என்னும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். அன்று இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க யாழ் கிளையின் தீவிர செயற்பாட்டாளராகவும் விளங்கினார். தினகரன்,  வீரகேசரி, சிந்தாமணி,  ஈழநாடு, முரசொலி ஆகிய பத்திரிகைகளிலும் தாமரை, தாயகம், வசந்தம், குமரன், சிரித்திரன் ஆகிய சஞ்சிகைகளிலும் இவரது கதைகள் பிரசுரமாகின.

•Last Updated on ••Saturday•, 10 •October• 2020 21:49•• •Read more...•
 

மானுடவியல் பார்வையில் முருகன்!

•E-mail• •Print• •PDF•

   - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-எம்.ஏ (மானுட மருத்துவ வரலாறு) -- கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும்,ந.சுப்புரெட்டியார் 100 கல்வி அறக் கட்டளையும் இணைந்து நடத்தும்,இணையவழிப் பண்பாட்டுக் கருத்தரங்கத் தொhடர் நிகழ்ச்சிகள் -

'முருக இலக்கியங்கள்' - 15.9.2020---20.9.2020

இங்கு என்னையழைத்த முருகேசன் அய்யா அவர்கட்கும்,என்னை அறிமுகம் செய்த எனது அன்புள்ள பிரியா அத்துடன், இந்நிகழ்வுக்குச் சமூகமளித்திருக்கும் முனைவர்கள், பார்வையாளர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எனது மாலை வணக்கங்கள்.

மானுடவியல் என்பது, விஞ்ஞான பூர்வமாக,ஒரு சமுதாயத்தின் கலாச்சாரத்தையும் அதன் வளர்ச்சிக்கு உந்துதலாக இருந்த சமுதாயத்தின் இனரீதியான தொன்மை. மொழி வளர்ச்சி,அத்துடன் மனரீதியான பரிமாணங்களையும் இணைத்துப் பரிசோதனை செய்தலாகும. மானுடவில் ரீதியில் முருகனைப் பற்றிய தகவல்களைப் படிக்கும்போது, அவை வேறெந்த குழுக்களுடனும் சம்பந்தப்படாமல்,தொல்காலம் தொடக்கம்
தமிழரின் தொன்மை,மொழி, வரலாறு,கலாச்சாரம்,பக்தி வழிபாடு எனப் பல அம்சங்களுடன் பின்னிப் பிணந்திருப்பது தெரிய வரும்.அவை வாய்வழியாக மட்டுமல்லாமல், வணக்கமுறையாக,இசை இயல் நாடகத்தோடு தொடர்ந்து இணைந்திருக்கின்றன.

கடவுளைப் பற்றிய ஆய்வை'இறைமை நூல்'அதாவது 'தியோலயி' என்று அழைப்பார்கள். ஆதி மனிதர்கள்,தாங்கள் வாழும் இயற்கைச் சூழ்நிலையின் நல்ல கெட்ட இயற்கை சக்திளை வணங்கினார்கள் என்பது மானுடவியல் ஆய்வுகளிற் தெரிய வருகிறது.

•Last Updated on ••Wednesday•, 23 •September• 2020 01:44•• •Read more...•
 

பயனுள்ள மீள்பிரசுரம்: ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் மார்க்சிய இலக்கிய பரிச்சயம்!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் நந்தினி சேவியர்இலங்கை முற்போக்கு இலக்கியம் பற்றிய முக்கியமான ஆய்வுக்கட்டுரையினை எழுத்தாளர் நந்தினி சேவியர் எழுதியிருக்கின்றார். இதனைத் தினக்குரல் பத்திரிகை வெளியிட்டிருந்தாலும் நான் அறிந்துகொண்டது வசந்தன் பக்கம் வலைப்பூ மூலமே. அதற்காக அவ்வலைப்பூவுக்கு நன்றி. இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முற்போக்கு இலக்கியமென்றால் அது ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மார்க்சியக் கருத்துகளை விதைத்த முன்னோடிகளிலிருந்து தொடங்க வேண்டும். சிலர் இலங்கையின் முற்போக்குத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதுகையில் 1956ற்குப்பிற்பட்ட எழுத்தாளர்களை மட்டும் பட்டியலிடுவதையும் கண்டிருக்கின்றேன். ஆரம்பகாலப் படைப்பாளிகளை இருட்டடிப்பு செய்திருப்பதையும் கண்டிருக்கின்றேன். அவ்வகையில்தான் இக்கட்டுரை முக்கியத்துவம் பெறுகின்றது. விரிவான ஆய்வு நூலொன்றினை இலங்கை முற்போக்குத் தமிழ்  இலக்கியம் பற்றிய விரிவானதோர் ஆய்வுக்கு உதவக்கூடிய ஆரம்ப ஆய்வுக்கட்டுரையிது. இதற்காக நந்தினி சேவியருக்கு நன்றி.

இக்கட்டுரையில் நந்தினி சேவியர் அவர்கள் 'மறுமலர்ச்சி கால எழுத்தாளராக கணிக்கப்படும் அ.ந. கந்தசாமி, பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சாமியார் அல்வையூர் அருளம்பலம் சுவாமிகள்தான் என்பதை தெளிவுற நிலைநாட்டியவராகும்' என்று கூறியுள்ளது ஓரளவுக்குத்தான் சரி. ஶ்ரீலங்கா சஞ்சிகையில் (ஆகஸ்ட் 1961)  வெளியான 'பாரதியாரின் ஞான குருவான யாழ்ப்பாணத்துச் சாமி' என்னும் கட்டுரையின் ஆரம்பத்தில் : "பாரதியின் 'யாழ்ப்பாணத்துச் சுவாமி யார்?' என்ற கேள்வியை  அ.ந.கந்தசாமி அவர்கள் எழுப்பியிருந்தார். அதற்கு மேலைப்புலோலியைச் சேர்ந்த திரு.பொ.சபாபதிப்பிள்ளை ஸ்ரீலங்கா ஏப்ரில்,1962 இதழில் எழுதிய எதிர்வினைக் கட்டுரையான 'பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணச் சாமி' என்னும் கட்டுரையில்  'யாழ்ப்பாணத்து சுவாமிகளே அருளம்பல சுவாமிகள் என ஆதாரங்களுடன் கூறியிருந்தார். ஆக பாரதியாரின் ஞானகுரு யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு அ.ந.கந்தசாமியின் கட்டுரை முக்கிய தூண்டுதலாகாவிருந்தது என்பதே சரியான நிலைப்பாடாகவிருக்க முடியும்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கீதத்தை எழுதியவர் அ.ந.கந்தசாமி.இதனையும் நந்தினி சேவியர் கவனத்துக்குக்  கொண்டு வருகின்றேன். - வ.ந.கிரிதரன் -


ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் மார்க்சிய இலக்கிய பரிச்சயம் - நந்தினி சேவியர்

கடந்த நூற்றாண்டின் மத்திய பகுதியிலேயே மார்க்சிய இலக்கிய பரிச்சயம் ஈழத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டது. இலங்கையின் முதல் இடதுசாரிக் கட்சியான சமசமாஜக் கட்சி ஒரு மார்க்சியக் கட்சியாக 1935 இல் உருவாக்கப்பட்டது. 1935 இல் ஐக்கிய சோஷலிசக் கட்சியாகவும் பின்னர் 1943 இல் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியாகவும் மார்க்சிய இயக்கம் வளர்ந்தது. பொன்னம்பலம் கந்தையா, அ. வைத்தியலிங்கம், கார்த்திகேசன், வி. பொன்னம்பலம், நா. சண்முகதாசன் போன்றவர்களே மார்க்சிய சிந்தனையை தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்தவர்களாவர். 1946 இல் கே. கணேஸ், கே. ராமநாதன் போன்றவர்களால் வெளியிடப்பெற்ற "பாரதி" எனும் சஞ்சிகையே தமிழின் முதல் முற்போக்குச் சஞ்சிகை என கருதப்படுகின்றது. இதன் ஆசிரியர்கள் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாகும். கே. ராமநாதன் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியின் தமிழ் பத்திரிகையான `தேசாபிமானி'யின் ஆசிரியராகவும் விளங்கினார். இலங்கை எழுத்தாளர் சங்கத்தை 1947 இல் உருவாக்கியவர்களும் இவர்களே. `பாரதி' சஞ்சிகையில் அ.ந. கந்தசாமி, அ.செ. முருகாநந்தன், கே. கணேஸ், மகாகவி போன்றவர்கள் எழுதியுள்ளனர்.

•Last Updated on ••Wednesday•, 02 •September• 2020 01:14•• •Read more...•
 

நாவலின் வரலாறு

•E-mail• •Print• •PDF•

- நடேசன் -- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் ( ஓகஸ்ட் ) 15 ஆம் திகதி நடத்திய – போர்க்கால இலக்கியம் – தொடர்பான  இணைய வழி காணொளி அரங்கில் நிகழ்த்தப்பட்ட தொடக்கவுரை. -


நாவல் இலக்கிய வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்து கொண்டு மேலே செல்வோம்.

100000 வருட மனித வரலாறு கதைகளால் நிரம்பியுள்ளது. மொழி தோன்றாத காலங்களில் பாறைகளிலும் குகைகளிலும் எமது முன்னோர்கள் எழுதினார்கள் . எகிப்தியர் பப்பரசு என்ற புல்லிலும், இன்காக்கள் நூல் முடிச்சுகளாகவும் , நாம் ஓலைகளிலும் எழுதினோம் . கனடாவிலும் அலாஸ்காவிலும், அங்குள்ள ஆதிக்குடிகள் தங்கள் கதைகளை மரக்கம்பங்களில் , ஓவியங்களாக வரைந்தும் செதுக்கியுமிருந்தார்கள்.

நம்மைப் பொறுத்தவரை தமிழ் எழுத்தின் தோற்றக்காலத்தைச் சொல்லமுடியாதபோதிலும்,  நம் கதைகள் 20000-30000 வருடங்களிலிருந்து அவை செய்யுள் எனப்படும் வார்த்தைகளாக  இராகத்துடன் பாடல்களாக உச்சரிக்கப்பட்டிருக்கின்றன. காரணம் இராகம் எமது மூளையின் மடிப்புகளில் படிந்திருக்கும். இதனால் பழைய பாடல்களை இன்னமும் குளியலறையில் முணுமுணுக்கிறோம்.

ஒருவரது  மூளையிலிருந்து அடுத்தவரது மூளைக்கு இராக லயத்தோடு மந்திரங்கள் கடத்தப்படுவதை இந்த வருடமும் இந்தியாவில்  கங்கை நதிக்கரையில் பார்த்தேன் . Wi fi காலத்திலும்  இந்தப் பழையமுறை மாறவில்லை.

•Last Updated on ••Sunday•, 23 •August• 2020 10:21•• •Read more...•
 

எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

•E-mail• •Print• •PDF•

31.07.2020
எழுத்தாளர் சா.கந்தசாமி

சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 1968-ஆம் ஆண்டு வெளியான "சாயாவனம்" நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் பிரபலமான சா.கந்தசாமி, 1997-ஆம் ஆண்டு எழுதிய "விசாரணை கமிஷன்" என்ற நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்றார். நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கிய விமர்சனம் என இடையறாது எழுதிக்குவித்த சா.கந்தசாமியின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

•Last Updated on ••Friday•, 31 •July• 2020 21:37•• •Read more...•
 

நூல் நயப்புரை: அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவும் முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல்

•E-mail• •Print• •PDF•

நூல் நயப்புரை: அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவும் முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல்பொதுவாக துறைசார் பாடநூல்கள் தவிர்ந்தவை இலக்கிய நூல்களாகவோ ஆய்வு நூல்களாகவோ அமையும் . இலக்கியம் மனித மெல்லியல்புகளின் வெளிப்பாடு . இதயத்துடன் தொடர்புபட்டது. ஆய்வு அறிவின் தொழிற்பாடு . மூளையுடன் தொடர்புபட்டது . கோபம் , குரோதம் போன்ற தீய இதய வெளிப்பாடுகள் மூளையை மழுங்கடையச் செய்வதால் வேண்டத்தகாத சம்பவங்கள் இடம்பெறும்.  அதுபோல் அறிவு, தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்தும்போது இன்னல்களிலிருந்து காப்பாற்றப்படுவோம் .அதனால்தான்போலும் ஆரம்பத்தில் சிற்றிலக்கியம் படைப்பவர்கள் அறிவு முதிர்ச்சி ஏற்பட விமர்சனம் ,மதிப்பீடு போன்ற ஆய்வுகளில் ஈடுபடுவர்.

சிற்றிலக்கியம் அகம் சார்ந்தது . ஆய்வு புறம் சார்ந்தது . வெளிதேடல்களுடன் தொடர்புபட்டது . மு .வரதராசன் கரித்துண்டு , கள்ளோ காவியமோ போன்ற பல சிற்றிலக்கியங்களை ஆரம்பத்தில் வெளியிட்டாலும் , மொழி நூல் , மொழி வரலாறு , தமிழ் இலக்கிய வரலாறு போன்ற ஒப்பற்ற ஆய்வு நூல்களை வெளியிட்டபின் எந்த சிற்றிலக்கியமும் படைக்கவில்லை . ஆனால், முருகபூபதி அவர்கள் சிற்றிலக்கியப் பரப்பிற்குள் செயற்பட்டுக்கொண்டே மிகச்சிறந்த ஆய்வு நூலையும் வரவாக்கியுள்ளார் . ஆய்வு என்பது அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவ வேண்டும் . அவ்வகையில் அவர் எழுதியிருக்கும் இலங்கையில் பாரதி எனும் நூல் சிறந்த ஆய்வு நூலாகும் .

இந்த ஆய்வினை அவர் முதலில் இலங்கை யாழ்ப்பாணத்தில் வெளியாகும் காலைக்கதிர் பத்திரிகையிலும், அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் தமிழ்முரசு இணைய இதழிலும் நாற்பது வாரங்கள் தொடராக எழுதினார். பாரதி தொடர்பாக இலங்கையிலிருந்து வெளிவந்த சிற்றேடுகள்  அனைத்தும் ஆக்கங்களை வெளியிட்டன.

இலங்கையில் பலரின் கூட்டு முயற்சியுடன் வெளிவந்த மறுமலர்ச்சி , பூரணி,  அலை , தாயகம் போன்ற பல சிற்றேடுகள் குறுகிய காலப்பகுதியில் தமது ஆயுளை முடித்துக்கொண்டன. இதற்குக் காரணம் எழுத்தாளனின் அவனுக்கே உரிய எழுத்தோர்மம் . அல்லது அவனது ஆணவம். இப்பண்பு தனித்துவமானது. எனினும்  10, 20, 40 ஆண்டுகளைக் கடந்தும்  ஜீவநதி , ஞானம், மல்லிகை முதலான தனிமனித வெளியீடுகள்  தொடர்ந்தும் வெளிவந்தன . மல்லிகை அதன் ஆசிரியராலேயே நிறுத்தப்பட்டது. ஏனைய இரு இதழ்களும் தொடர்ந்து வெளிவருகின்றன. இதற்கும் ஓர்மமே காரணம் . இவ்விதம் இலங்கையில் பாரதி எனும் இந்நூலில் மிக விரிவாக முன்வைக்கப்பட்டுள்ள சிற்றேடுகளின் வரலாறு தனிமுயற்சியே பயனளிக்கும் கூட்டு முயற்சி தோல்வியடையும் என்பதை எழுத்துத்துறையில் இதழ் வெளியீட்டில் ஈடுபடும் இளம்தலைமுறையினருக்கு அறியவைக்கின்றது.

•Last Updated on ••Monday•, 27 •July• 2020 01:35•• •Read more...•
 

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நோக்கி மரியாளும், சூசையும் அடைந்த மகிழ்ச்சி (தேம்பாவணி மகவருள் படலத்தை அடிப்படையாகக் கொண்டு)

•E-mail• •Print• •PDF•

- சிவராசா ஓசாநிதி, உதவி விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை -தேம்பாவணி பெருங்காப்பிய மரபிற்கேற்ப கொன்ஸ்ரைன் ஜோசப் என்னும் இயற்பெயர்கொண்ட வீரமாமுனிவரால் ஆக்கப்பட்டது. இதன் ஆசிரியரான வீரமா முனிவர் தமிழ் நூல்களை ஐயந்திரிபுறக் கற்று தமிழ்ப் பணி பல புரிந்துள்ளார். எனவே இலக்கிய இலக்கண மரபுகளை நன்கு அறிந்து அம்மரபுகளுக்கேற்ப தனது தேம்பாவணி என்னும் காப்பியத்தை ஆக்கியளித்துள்ளார்.

3615 பாடல்களையும் 36 படலங்களையும் கொண்டு விளங்கும் தேம்பாவணியை ஆசிரியர் காண்டங்களாக வகைப்படுத்தவில்லையாயினும் கதை நிறைவு அடிப்படையில் காப்பியத்தின் உரையாசிரியர் மூன்று காண்டங்களாகப் பாகுபாடு செய்துள்ளார். இந்நூல் 90 சந்த வேறுபாடுகளைக்கொண்டு விளங்குகின்றது. இந்நூலில் கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரைத் தலைவனாகக் கொண்டு நாட்டு, நகரச் சிறப்புக்கள் பலவற்றை எளிய நடையில் பல அணிகள் செறிந்து நயம்பட எடுத்துரைத்துள்ளார். தேம்பாவணி என்றால் வாடாத மாலை என்றும் தேன் போன்ற பாக்களால் ஆன மரியாள் என்றும் பொருள் உண்டு. இக்காப்பியம் மரியாள் என்னும் கன்னியாஸ்திரி ஸ்பானிய மொழியில் எழுதிய “THE CITY OF HOD” என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டது.

18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த வீரமாமுனிவர் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் போன்றவற்றை விரும்பிக் கற்று பெருங்காப்பிய விதிக்கிணங்க இந்நூலை இயற்றியுள்ளார். இது வேத நூல்களையும் கர்ண பரம்பரைக் கதையையும் கூறுகின்றது. அத்தோடு புனைந்துரைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

•Last Updated on ••Wednesday•, 22 •July• 2020 23:24•• •Read more...•
 

’எனது எழுத்துக்களும் சமுதாயப் பணிகளும்’

•E-mail• •Print• •PDF•

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா‘பெண்ணியம்.இலக்கியம்,ஊடகம்,சமூகம்’என்ற தலையங்கத்தில் காந்தி கிராமமப் பல்கலைத் துறைத் தமிழ்த் துறையினர் ஐந்து நாட்களுக்கு நடத்தும் இணையவழி சிறப்புத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் என்னைக் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்ட முனைவர் இரா பிரேமா அவர்களுக்கு நன்றி. அத்துடன் அறிமுக உரைதந்த போராசிரியர்.திரு பா ஆனந்தகுமார்,தமிழ்,இந்தியமொழிகள் அன்ட் கிராமியக்கலை புலம்.அவர்கட்கும்,நன்றியுரை சொல்லவிருக்கும் முனைவர்.மீ சுதா அவர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர்களான போராசிரியர்.வீ.நிர்மலராணி அவர்களுக்கும், இணையவழி ஒருங்கிணைப்பு செய்யும் உதவிப் பேராசிரியர் திரு சி.சிதம்பரம் அவர்களுக்கும் மற்றைய பேராசிரியர்கள்,பங்கெடுக்கும் ஆய்வாளர்கள், மாணவர்கள், யாவருக்கும் எனது மனமார்ந்த காலைவணக்கம்.

ஒரு நாட்டின் பெருமையும்,கலாச்சார மகிமையும் அந்த நாட்டில் பெண்களின் வாழ்க்கைநிலையும்,அவர்கள் வாழும் சமுதாயத்தில் அவர்களின் ஈடுபாடும்;சமுதாய மேம்பாட்டின் அவர்களின் பங்கும் எப்படியிருக்கிறது என்பதைப் பொறுத்திருக்கிறது. நான் நீண்டகாலமாப் புலம் பெயர்ந்து வாழுபவள். ஒரு தமிழ் எழுத்தாளர். பலர் தங்களை அடையாளப் படுத்துவதுபோல் நான் என்னை ஒரு பெண்ணிய பிரசார எழுத்தார் என்று அடையாளப் படுத்திக் கொள்வதில்லை. நான் ஒரு மனித உரிமைவாதி.; பல காரணங்களால் பல சமூகங்களில் ஒடுக்கப்பட்டவர்களாக வாழும் பெண்களைப் பற்றி. நிறைய எழுதியிருக்கிறேன். பெண்ணியத் தத்துவங்களும் கோட்பாடுகளும்; பல தரப்பட்டவை. அவை யாரால் எந்தக் குழுவால் முன்னெடுக்கப் படுகிறது என்பதைப் பொறுத்து அந்தக் கருத்தை ஆய்வு செய்யலாம். அவை,அந்தப் பெண்களி வாழும் சமூவாயத்தின்,சமயக் கட்டுப்பாடுகள், பாரம்பரிய நம்பிக்கைகளினதும்,கலாச்சாரக் கோட்பாடுகளின் தொடர்பாகும்.அவை,சிவேளைகளில் அந்தச் சமூகம் முகம ;கொடுக்கும் தவிர்க்கமுடியாத காணங்களால் மாற்றமடையலாம். அதாவது அரசியல் நிலை காரணமாகப் புலம் பெயர்தல்.தொழில் வளர்ச்சியின் நிமித்தம் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்,காலனித்துவ ஆளமையின் அதிகாரம்,என்பன சில காரணங்களாகும்.

•Last Updated on ••Wednesday•, 08 •July• 2020 16:58•• •Read more...•
 

'தமிழ்ப் புனைகதைகளில் பெண்; பாத்திரப் படைப்பு'.

•E-mail• •Print• •PDF•

26.6.2020.
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியாஅய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி,தமிழ்த்துறை,தமிழ் ஆய்வு மையம் மூன்று நாட்களாக இங்கு நடந்துகொண்டிருக்கும் 'தமிழில் புனைகதைகள்' என்ற கருத்தரங்கில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு எனது நன்றியை,முனைவர் செ. அசோக் அவர்களுக்கும்,அத்துடன்,

திரு.கி.அபிரூபன் தாளாளர், முனைவர் ந.அருள்மொழி-இணை ஒருங்கிணைப்பாளர், முனைவர்க.சிவனேசன், தலைவர்,தமிழ்த்துறை மையம், திரு பா .இராமர், உதவிப் பேராசிரியர், கணனி அறிவியற் துறை, தொழில் நுட்ப உதவியாளர், முனைவர்.சோ.முத்தமிழ்ச் செல்வன் ஒருங்கிணைப்பாளர், அவர்களுக்கும் இந்த மூன்று நாள் நிகழ்வுகளில் அளப் பெரிய உரையாற்றிய ஆளுமைகள் அத்தனைபேருக்கும்,இந்த நிகழ்ச்சியல் கலந்து  கொண்டிருக்கும், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எனது அன்பான காலை வணக்கம்.

புனைகதைகளில் 'பெண்பாத்திரப் படைப்பு' என்ற தலையங்கத்தில் ஆய்வு செய்ய முனையும் இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்கள் ஒரு மிகப் பிரமாண்டமான ஆராய்ச்சி ஒன்றைச் செய்யலாம். பெண்பாத்திரங்கள் இல்லாமல் புனைகதைகள் படைப்பது அரிது.'புனைகதைகள'; என்பவை யாரோ ஒருத்தரால் 'புனையப் பட்டிருந்தாலும்' அவை ஒட்டுமொத்தமான 'கற்பனைக் கதைகள்' அல்ல. கதை எழுதியவரின் கால கட்டத்தில் நடந்த அல்லது அவருக்குத் தெரிந்த ஒரு சம்பவத்தை அப்படியே உண்மையாகப் பதிவிடாமல் அவர் சில, கற்பனைகளையும் உள்ளடக்கி ஒரு விடயத்தை மற்றவர்களுக்குச் சொல்ல வருகிறார் என்பது எனது அபிப்பிராயம்.அந்த விடயம் பல வடிவங்களில் அங்கு புனையப் பட்டிருக்கலாம்.அந்தப் புனைகதைகள் எக்கால கட்டத்தில் யாரால் எழுதப் பட்டது,என்ன விடயத்தைச் சொல்கிறது, என்று ஆரம்பிப்பதிருந்து அது யாருக்காக எழுதப்பட்டது என்பதையும் பொறுத்து அந்தத் தலையங்கத்தின் ஆய்வைத் தொடரலாம்.

ஏனென்னறால்,ஒரு எழுத்தாளன் எப்போதும் அவனின் சிந்தனையைத் தூண்டும்; தன்னைச் சுற்றிய உலகத்தைப் பற்றியே ஆரம்பத்தில் எழுதத் தொடங்குவான்.ஆனாலும் அந்த எழுத்தாளனின் படிப்பு நிலை, வாழ்க்கைத் தரம்,சமூக அடையாளம். அரசியலுணர்வு, அத்துடன் எழுத்தானின் சமுதாயக் கண்ணோட்டங்கள் என்பன அவனது படைப்புக்கு உருவமும் உணர்வும் கொடுக்கிறது என்பது எனது கருத்து.

•Last Updated on ••Wednesday•, 08 •July• 2020 15:42•• •Read more...•
 

கனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்

•E-mail• •Print• •PDF•

கனிமொழிமுன்னுரை
ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டுக் கிடந்த பெண்கள் வெறும் போகப் பொருளாகவும் சுமைதாங்கிகளாகவும் குடும்பச் சுமையைச் சுமக்கும் பார வண்டிகளாகவும் இருந்து வருகின்றனர். ஆணுக்குத் தரும் சுதந்திரம், கல்வி, காதல் உணர்வுகள், வீரம் போன்ற உணர்வுகள் பெண்களுக்குத் தருவதில்லை.  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கும் பெண்ணுக்குரிய அணிகலனாகவும் ‘கற்பு’ என்பது பெண்ணிற்கிடப்பட்ட தடுப்புச் சுவராகவும் பூட்டப்பட்டன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் கல்வி பயின்று தங்களின் சுயத்தை அறிந்து கொண்டனர். இதனால் தங்களுக்கு ஏற்படும் உணர்வுகள், வலிகள், சமூகக் கொடுமைகள், பாலியல் சிக்கல்கள், உடல் உணர்வுகள் ஆகியவற்றை ஆண்கள் போன்றே பெண்களும் எடுத்துக் கூறலாம் என்ற நிலைக்கு வந்து விட்டனர்.  ஆண்கள் குறியீட்டாக்கிய சொற்களை எல்லாம் உடைத்தெறிந்து விட்டு தங்களுக்கென புதுமொழியைப் படைக்க ஆரம்பித்து விட்டனர். ஆண்கள் உருவாக்கிய தொன்மங்களை உடைத்து கருத்துக்களைக் கேள்விக்குரியதாக்கினர்.  தங்களுக்கென தேடல்களைத் தேடினர். தமக்கென கருத்துச் சுதந்திரம், புதிய பொன்மொழி, பெண்புனைவுகளை உருவாக்குகின்றனர்.  பெண் கவிஞர்களில் ஒருவரான கனிமொழி தம் கவிதை வாயிலாக வெளிப்படுத்தும் பெண் மொழியையும் கருத்துச் சுதந்திரத்தையும் வெளிப்படுத்துவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

கனிமொழியின் கவிதைகள்
கனிமொழி நான்கு ( கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள், & கருக்கும் மருதாணி) கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.  இத்தொகுதிகளில் பெண்ணியச் சிந்தனைகள், சமூகச் சிந்தனைகள் அதிகமாக கையாளப்பட்டுள்ளன.  மிக எளிமையான சொற்களைக் கையாண்டு கருத்துக்களைச் செறிவாகவும் கோர்வையாகவும் படைத்துள்ளார். இவரது கவிதைகளில் தீவிரவாத பெண்ணிய கருத்துக்கள் இடம்பெறவில்லை. சோசலிச – மிதவாத பெண்ணய கருத்துக்களே அதிகம் இடம்பெறுகின்றன.

•Last Updated on ••Thursday•, 28 •May• 2020 16:13•• •Read more...•
 

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் முகநூல் எதிர்வினையொன்று...

•E-mail• •Print• •PDF•

- அண்மையில் முகநூலில் அஞ்சலி' சஞ்சிகையின் ஆகஸ்ட் 1971 இதழில் வெளியான கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் 'ஒரு வரலாறு ஆரம்பமாகின்றது' சிறுகதை பற்றிய பதிவொன்றினையிட்டிருந்தேன். இங்கும் பதிவு செய்திருந்தேன்.அதற்கான ஜெயபாலனின் அவரது முகநூற் பக்கத்தில் வெளியான எதிர்வினையிது. - வ.ந.கி -


இக்கதை வெளிவந்தபோது என்னை பாராட்டிய கலாநிதி கைலாசபதி உலக மொழிகளில் மொழிபெயர்க்க இக்கதையை சிபார்சு செய்ததாக சொன்னார். என்னுடைய கதைகள் 1969 - 1974 காலக்கட்டத்தில் விவேகி, தினகரன், அஞ்சலி போன்ற பல சஞ்சிகைகளில் வெளிவந்தது. யாராவது தேடித் தர முடியுமா?
.
கிரிதரன் இக்கதையை முடிந்தால் தட்டச்சு பிரதியாக அல்லது செறெக்ஸ் பிரதியாக எனக்கு அனுப்பி உதவுங்கள்..
எங்கள் மண்ணதும் முன்னோரதும் கதைகளின் சுமை தாங்கமுடியல. இறக்கி வைக்க வழியில்லை. எப்படியும் எழுதித்தான் தீர்க்க வேணும். லண்டன் கொழும்பு முடிந்தால் கேக் ஆவணக் காப்பகங்களில் வாசிக்க வசதியில்லாத துயரில் சோம்பிப்போனேன். எப்படியும் மீண்டும் கதை எழுத ஆரம்பிக்க வேணும்
,
பருத்திக்கும் மந்தை வளர்ப்புக்கும் பேர்பெற்று பசுத்தீவு எனவும் பருத்தித்தீவுஎனவும் 1600 வரை அழைக்கபட்ட எங்கள்தீவுக்கு போத்துகீசரும் பசுத்தீவு என்றே (Ilha das Vacas ) பெயர் வைத்தனர். நெடுந்தீவில் வளமாக பள்ளத்தாக்கின் பெயர் வெல்லை. வெல்லை குதிரைகளின் வளமான மேச்சல் நிலம் என்பது மட்டும்தான் எனக்கு ஆரம்பத்தில் தெரியும்.
.
1970பதுகளில் எல்லோரையும் போலவே வெல்லை வெள்ளை மணல் என்கிற சொல்லின் திரிபு எனத்தான் நானும் எண்ணினேன். நெடுந்தீவு தெற்கில் இருந்து தென் கிழக்கு வரை நீண்ட நீவளமும் மண்வளமும் நிறைந்த பள்ளத்தாக்கான வெல்லை அண்ணளவாக 6 கிலோமீட்டர் நீழமும் 2 - 3 கிலோமீட்டர் அகலமுமுள்ள வளமான நிலமாகும்.
•Last Updated on ••Friday•, 29 •May• 2020 14:03•• •Read more...•
 

அஞ்சலி: ஏழாலை தந்த தமிழ்மகள்:தமிழ்ப்பிரியா

•E-mail• •Print• •PDF•

இவ்வேளையில் தான் தமிழ்ப்பிரியாவின்(புஸ்பராணி இளங்கோவன்) ரசனைமிக்க பாடல்களுடன் இசையும் கதையும் கேட்போம்.அடுத்து எப்போது ஒலிபரப்பும் என்றும் காத்திருப்போம்.

- எழுபதுகளில் இலங்கை வானொலியில் தன் இலக்கிய பயணத்தை ஆரம்பித்துப்பின் பத்திரிகை, சஞ்சிகை எனத் தன் பயணத்தை விரிவு படுத்தியவர் எழுத்தாளர் தமிழ்ப்பிரியா (முத்தையா புஷ்பராணி). இலங்கையில் ஏழாலை , சுன்னாகத்தைச் சேர்ந்தவர். சிந்தாமணி, சுடர், சிரித்திரன், ஈழநாடு , வீரகேசரி போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் இவரது படைப்புகள் வெளியாகின. குங்குமம் (தமிழகம்) வெளியிட்ட அக்கரைச்சிறப்பு மலரைத்தயாரித்தவர் இவரென்று எங்கோ வாசித்த நினைவு. அதிலும் இவரது சிறுகதையொன்று வெளியாகியுள்ளது. சுடரில் சிறுகதைகளுடன் இவரது நாவலொன்றும் தொடராக வெளியானது. சுடரின் 'சந்திப்பு' பகுதிக்காகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன், எழுத்தாளர் குறமகள் ஆகியோருடன் இவர் நடாத்திய நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. புலம் பெயர்ந்து பாரிசில் வாழ்ந்து வந்த இவரது மறைவுச் செய்தியினை முகநூலில் இவரது நெருங்கிய தோழிகளிலொருவரான எழுத்தாளர் தாமரைச்செல்வி பகிர்ந்திருந்தார். எழுத்தாளர் முல்லை அமுதன் இவர் நினைவாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்குக் கட்டுரையொன்றினை அனுப்பியிருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். - பதிவுகள் -


உலகம் கைகளுக்குள் வந்தமை ஆச்சரியம் தான். வாழ்வில் பலரைச் சந்திக்கமுடியாமலேயே போய்விடுமோ என்கிற ஆதங்கம் மனதில் எழுந்துகொண்டே இருக்கும்.சிலசமயம் எல்லாம் கைகூடி வந்திருக்கும்.பலதடவைகள் கைகளுக்கு எட்டாதவையாகவே காலம் முடிந்திருக்கும். ஊரில் ஒவ்வொரு மாலைப்பொழுதுகளையும் ஆக்கிரமித்திருந்த பல நிகழ்ச்சிகளை வழங்கிக்கொண்டிருந்த இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் சிறு நாடகங்கள்,தொடர் நாடகங்கள் இவற்றுக்கப்பால் என் போன்றவர்களை அதிகம் வசீகரித்த நிகழ்வு எதுவெனில்  'இசையும் கதையும்' நிகழ்ச்சியாகும்.கதைக்கேற்ற பாடல்களுடன் மனதுள் இறங்கி நாளெல்லாம் அசைபோடவைக்கும்.பல நாட்கள் அவை பற்றியே பேசுவோம்.நண்பர்களின் வீட்டில் அல்லது யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவிலோ உட்கார்ந்து கேட்போம்.பொழுது போவதே தெரியாது..வேறு தெரிவுகளும் இல்லாத நாட்கள்.

அதே சமயம் யார் என்கிற தேடலும் நண்பர்களிடையே எழும். அந்த வேளையில் தான் ஈழநாடு, சுடர், கலாவல்லி, இலங்கை வானொலி, வீரகேசரி, சிந்தாமணி, அமிர்த கங்கை, மல்லிகை, சிரித்திரன் , குங்குமம்(இந்தியா), இதயம் பேசுகிறது  போன்ற இதழ்களில் எழுதிய கதைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்படப் பலரும் வாசிக்கும் படைப்பாளராக நாம் கண்டோம்.சுடரில் வெளிவந்த 'வீணையில் எழும் ராகங்கள்' மறக்கமுடியாத தொடராகும். அதே போலத் தினகரன் போன்ற பத்திரிகைகளிலும் எழுதத்தொடங்கினார். அப்போது  'நெஞ்சில் வரைந்த ஓவியம்', 'உண்மை அன்பிற்கு ஊறு ஏற்படாது', 'இறைவன் கொடுத்த வரம்' போன்ற தொடர்களை எழுதி எம்மை வியப்பில் ஆழ்த்தினார்.நாமும் எழுதத்தொடங்கிய காலம். அதே சமயம் கவிதைகள், கட்டுரைகள் எனவும் எழுதினார். குங்குமம் இலங்கைச் சிறப்பிதழுக்குத் தொகுப்பாசிரியராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ்வேளையில் தான் தமிழ்ப்பிரியாவின்(புஸ்பராணி இளங்கோவன்) ரசனைமிக்க பாடல்களுடன் இசையும் கதையும் கேட்போம்.அடுத்து எப்போது ஒலிபரப்பும் என்றும் காத்திருப்போம்.

•Last Updated on ••Monday•, 11 •May• 2020 23:07•• •Read more...•
 

நூல் மதிப்புரை : “உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்“

•E-mail• •Print• •PDF•

       முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத் தமிழ்ப்பிரிவின் சார்பாக 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் “உலக, இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் - என்ற பொருண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

இந்நூலில் மொத்தம் இருபத்து மூன்று கட்டுரைகள். தமிழில் பதினைந்து. ஆங்கிலத்தில் எட்டு. கட்டுரை வாசித்த அனைவருமே தில்லிப்பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்புலத்தில் தமிழோடு இன்னொரு மொழி பயின்ற மாணவர்கள். பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த பிறகு எங்கெங்கோ பணியாற்றுபவர்கள். திருக்குறள் உலக அளவில் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினால் மொழிபெயர்க்கப்படாத மொழி எது இருக்கிறது என்று பதில் சொல்ல வேண்டியிருக்கும்  என்றாலும் எழுத்தும் இலக்கியமும் படைத்த மொழிகள் அனைத்திலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதுவும் பலமுறைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் நாற்பது முறை. இந்தியில் இருபது முறை. நமக்கு வியப்பு ஏற்படுகிறது. இந்தியில் இருபது முறைகளா? என்றும் ஆதிக்க மொழி இந்தி என்று கருதி நாம் எரிச்சலடைகிறோம். இந்தி மக்கள் மீது நமக்கு எந்த வகையிலும் கோபமில்லை. மக்கள் சார்பில் இருபது முறை மொழிபெயர்க்கப்பட்டது வியப்பில்லை.

கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகள் இந்திய மொழிகள், அயல்மொழிகளாக உள்ளன. இந்திய மொழிகளில் மலையாளம், கன்னடம், கொங்கணி, மராத்தி, உருது, சமற்கிருதம், இந்தி, ஒடியா, பஞ்சாபி எனப் பல மொழிகள். இவற்றோடு அயல் மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு, போலிஷ், ஜப்பான், இரஷ்யன் போன்றன.

•Last Updated on ••Sunday•, 03 •May• 2020 20:18•• •Read more...•
 

கலைஞர் இரகுநாதனுக்கு இதய அஞ்சலி ! என்னை வாழ்த்திய எந்தன் இரகு, இன்று நினைவாகிப்போனார்!

•E-mail• •Print• •PDF•

“ சிறு நண்டு மணல்மீது
படம் ஒன்று கீறும்
சிலவேளை அலை வந்து
அதுகொண்டு போகும்….”


கவிஞர் அம்பிகடல் ஓரத்திலே கடற்கரை மணலிலே படம் வரையும் சிறு நண்டுகளின் அற்புதமான கற்பனைப் படங்களை, கடற்கரையின் குளிர் காற்றை அனுபவிக்கச் சென்றவர் பலரும் பார்த்து மகிழ்ந்திருப்பர். அந்தப் படம் வரையும் சிறு சிறு நண்டுகள் தமது உள்ளத்து எண்ணங்களை ஓவியமாக மணலிலே அழகாக வரைகின்றன. ஆனால் சில வேளைகளில்…….!? கடல் அலைகள் பெருமூச்சுடன் கரையில் வந்து மோதி, சிறு நண்டுகளின் மாதிரிப் படங்களை மட்டும் அல்ல, அந்த நண்டுகளையுமே அடித்துச் சென்றுவிடும். இதை தமது கவித்திறனால் அன்று தமிழ் செய்தவர் அன்று வாழ்ந்த கவிஞர் (இன்று அமரர்) மஹாகவி உருத்திரமூர்த்தி. அவரின் பாடலடிகளை நான் ஏன் தற்போது நினைவுட்டுகிறேன் தெரியுமா.. ? ஆமாம்…. முன்பு, ஈழத்திரு நாட்டில் வாழ்ந்து பின்பு பிரான்ஸ் நாட்டில் குடியேறி வாழ்ந்த எனது நீண்ட கால நண்பரும் கலை ஆசனுமாகிய இரகுநாதனுக்கும் அப்பாடல் அடிகள் மிகவும் பொருத்தமாக உள்ளன.

ஓர்கால் நான் அரசியலில் ஊன்றி நின்ற காலம். 1950 களில் சிறுகதை எழுதுவதுடன் எழுத்துலகில் அடி எடுத்து வைத்த நான், பின்பு விஞ்ஞானக் கட்டுரை, கவிதை என விரிவாக்கம் செய்து, ஈழத்து பேனா மன்னன் எனவும் இரசிகமணி கனக செந்திநாதன் அவர்களால் விதந்துரைக்கப்பட்டேன். அதுமட்டுமல்ல. 1968 ஆம் ஆண்டு, புகாரில் ஒரு நாள் என்ற நான் எழுதிய கவிதைக்கு தமிழ்நாட்டிலே அறிஞர் அண்ணா முதலமைச்சராக பதவியில் இருந்தபோது நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் கையால் தங்கப் பதக்கம் பரிசும் பெற்றேன். அப்போதுதான், அன்பர் இரகுவுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. நிழல் நாடக மன்றத்தின் ஸ்தாபகராகிய அவர், கவிதை நாடகம் ஒன்றை மேடையேற்றுதற்கு என்னிடம் வந்தார். அத்தொடர்பால் “வேதாளம் சொன்ன கதை” என்ற எனது கவிதை நாடகத்தின் பிரதியை அவரிடம் கொடுத்தேன். நிழல் நாடக மன்றம் அதனைத்தயாரித்து 1970 இல் மேடையேற்றியது. நானும் நாடகத்துறையில் காலடி எடுத்து வைத்தேன். பின்னாளில் அவர் 'தெய்வம் தந்த வீடு' என்ற திரைப்படத்தை எடுத்தபோதும் என்னிடமிருந்தும் ஒரு பாடலைப் பெற்றுக்கொண்டார். காலத்தின் கோலத்தில், வீடு, ஊர், சொந்தம், சுற்றம், உறவு, விளைநிலம் எல்லாம் விட்டு ஏதிலிகளாக, புலம் பெயர்ந்த அவர், பிரான்ஸ் நாட்டிலே தஞ்சம் புகுந்தார். நான் அவுஸ்திரேலியாவின் கரையேறினேன். அதேசமயம் எமது உறவு நீடித்து நிலைத்தது. அவர் புகலிடத்திலும் தன் கலைப் பணிகளைத் தொடர்ந்தார். காலஞ் சுழன்றது காட்சிகள் மாறின.

•Last Updated on ••Tuesday•, 28 •April• 2020 13:32•• •Read more...•
 

ஆபிரிக்க இலக்கிய மொழி, அரசியல் குறித்து கூகி வா தியாங்கோவின் ( Ngugi wa Thiong’o) சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

கூகி வா தியாங்கோ ( Ngugi wa Thiong’o)

- ஞா.டிலோசினி, கிழக்குப் பல்கலைக்கழகம் -

கூகி வா தியாங்கோ கிழக்கு ஆபிரிக்காவில் கென்யாவில் தோன்றிய திறமையான, தரம்வாய்ந்த எழுத்தாளராகக் காணப்படுகிறார். பல பல்கலைக்கழகங்களில் கடமையாற்றிய இவர், ஒப்பிலக்கியம் மற்றும் அளிக்கைகள் தொடர்பான பேராசிரியராகவும் கடமையாற்றினார்.

தியாங்கோ நாவல், நாடகம், சிறுகட்டுரை முதலானவற்றையும் இலக்கிய விமர்சனம், சமூக விமர்சனம், சிறுவர் இலக்கியம் முதலான துறைகளிலும் எழுதியுள்ளார். 1977 இல் நாவல் எழுத ஆரம்பித்தார். தியாங்கோ சாதாரண மக்களைக் கருத்திற் கொண்டே தனது படைப்புக்களை எழுதினார்.  'அழாதே, குழந்தாய்!' (Weep not Child), 'இடைப்பட்ட  ஆறு' (The River Between) , 'கோதுமைத் தானியமணி' ( a Grain of Wheat) , 'இரத்த இதழ்கள்" ( Petals of Blood), 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' (Devil on the Cross ) ஆகியவை இவரது நாவல்களாகும்.

தியாங்கோவின் படைப்புக்கள் ஆபிரிக்க இலக்கியம், அரசியல், மற்றும் அடிமை வாழ்க்கை குறித்து எழுதப்பட்டவையாகும். ‘அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல்’ என்ற கூகி வா தியாங்கோவின் நூலை அடிப்படையாக வைத்து ஆபிரிக்க இலக்கிய மொழி, அரசியல் குறித்து தியாங்கோவின் சிந்தனைகளை அறியமுடியும்.

காலனிய ஆதிக்கத்தில் இருந்து தமது மொழியையும், இலக்கியத்தையும், பண்பாட்டையும் மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் ஆபிரிக்கப் படைப்பாளிகள் மேற்கொண்ட முயற்சிகள் அடையாள மீட்பின் மகத்துவத்தை உணர்த்துகின்றன. கென்ய மொழி எழுத்தாளரான கூகி வா தியாங்கோ ‘அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல்’ என்ற தமது நூலில் ஆபிரிக்க அடையாளத்தை ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கக் கூறுகளில் இருந்து மீட்டெடுக்க மேற்கொண்ட எதிர்ச் செயற்பாடுகளை விபரித்துள்ளார்.

•Last Updated on ••Saturday•, 18 •April• 2020 21:07•• •Read more...•
 

யூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் ! அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் !!

•E-mail• •Print• •PDF•

நீர்வை பொன்னையன்- பேராசிரியர் மெளனகுரு -இலியட் ஒடிஸி எனும் கிரேக்க காவியத்தில் ஹோமர் படைத்த பாத்திரம் யூலிசஸ். ஹெலன் எனும் அரச குமாரியை மீட்க பத்து ஆண்டுகள் கிரேக்கத்தில் நடை பெற்ற போர் பிரசித்தமானது. கிரேக்க மக்களின் பண்டைய வீரயுக வாழ்வோடு அது சம்பந்தமாக எழுந்த கதைகள் பின்னிப் பிணைந்தவை. பத்து ஆண்டுகள் போரிலும் பத்து ஆண்டுகள் பிரயாணத்திலும் கழித்தவன் யுலிஸஸ்.  ஓய்வு என்பதே அறியாதவன், சும்மா இருக்கத் தெரியாதவன். புதிய, புதிய அனுபவங்களைத் தேடுபவன். புதிய புதிய திசைகளை நோக்கிச் செல்ல விரும்புவன். தேடல் நோக்கு அவனோடு பிறந்த ஒன்று. கிழப்பருவமெய்திய யூலிசஸ் நாட்டுக்கு மீள்கிறான்.

இளமைப் பருவத்தில் துடிதுடிப்போடு ஓடி ஆடித் திரிவதைப் போல இப்போது இருக்க அவன்முதுமை உடல் இடம் தருவதாயில்லை. எனினும் நாடுவந்து. ஓய்வு பெற்ற அவனால் எல்லோரையும் போல உண்டு, உடுத்து உறங்கி வறிதே இருக்க முடியவில்லை. சுறுசுறுப்பான அவன் மனம் அதற்கு இடம் தரவில்லை. மற்றவர்கள் “சும்மா” வாழ்வது அவனுக்கு வறிதாகத் தெரிகிறது. தெனிசன் பாடிய இலியட் ஒடிசியில் வரும் யூலிசஸ் கூற்றை மொழி பெயர்த்துத் தந்துள்ளார் விபுலானந்த அடிகளார். சும்மா இருப்பதை வெறுத்த யூலிசஸ், “ பெறுபயன் சிறிதே, பெறுபயன் சிறிதே வறிதிங்குறையும் மன்னன் யானே “ எனத் தன்னைத்தானே விமர்சித்துக் கொள்கிறான். விளைவு குன்றிய களர் நிலமும் புகைபடிந்த சாப்பாடும், மூப்பு வந்து சேர்ந்த மனைவியும் வந்து சேர, எதுவும் செய்யாமல் வறிதேயிருப்பது அவனுக்கு வாழ்க்கையில் அலுப்பையே தருகின்றது.

•Last Updated on ••Friday•, 27 •March• 2020 17:48•• •Read more...•
 

துயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்

•E-mail• •Print• •PDF•

நீர்வை பொன்னையன்காலம் விரைந்து கொண்டே இருக்கிறது என்பதை எமக்குத் தெரிந்தவர்கள் எங்களை விட்டுப் பிரியும் போது மீண்டும் நினைவூட்டுகின்றது. கொரோனா வைரஸ்ஸின் பாதிப்பால் உலகமே உறைந்து போயிருக்கும் இச்சந்தர்ப்பத்தில், தாயகத்தில் வாழ்ந்த 90 வயதான எழுத்தாள நண்பரின் மறைவும் இதைத்தான் எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

எழுத்தாளர் நீர்வை பொன்னையன் அவர்களை நான் நேரில் சந்தித்ததில்லை. அவரது ஆக்கங்களை மாணவப்பருவத்தில் படிக்க நேர்ந்ததால் அவரது எழுத்துக்களால் கவரப்பட்டேன். எமது முன்னோடிகளான ஏனைய எழுத்தாளர்களைப் போல அவரிடமும் ஒரு தனிப்பட்ட எழுத்துநடை இருந்தது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் எனது முதலாவது கதை வெளிவந்து எனக்கு தளம் அமைத்துக் கொடுத்ததுபோலவே அவரது முதலாவது கதைக்கும் ஈழநாடு தளமமைத்துக் கொடுத்திருந்தது. நீர்வேலியில் பிறந்த இவர் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் ஆரம்ப கல்வியைப்பெற்றார். அதன்பின் கல்கத்தா சென்று பட்டப்டிப்பை நிறைவேற்றினார். இவரது மேடும் பள்ளமும், ஜென்மம், காலவெள்ளம், பாஞ்சான், வந்தனா போன்ற ஆக்கங்கள் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்கன.

சிறந்த எழுத்தாளர்களும், தரமான எழுத்துக்களும் குறைந்து வரும் இக்காலத்தில் சாகித்ய ரத்னா விருது பெற்ற இவரது இழப்பு ஈழத்தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். இச்சந்தர்ப்பத்தில் அவரது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் எங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

குரு அரவிந்தன்
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Friday•, 27 •March• 2020 17:10••
 

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்

•E-mail• •Print• •PDF•

- ஞா.டிலோசினி -“ பெண்ணியம் என்பது ஆண்கள் எந்தளவுக்கு சமூக அமைப்பிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் ஈடுபட்டு உரிமை கொண்டாடுகிறார்களோ, அந்தளவுக்குப் பெண்களுக்கும் மேற்கூறிய துறைகளில் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் “ என்று கூறுகின்றது பெண்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு புதிய இயக்கம். அத்தோடு பெண்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் சமுதாய, அரசியல், பொருளாதார சூழ்நிலையிலும் அவர்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்னும் உயர்நெறியை நிலைநாட்டுவதைக் கருவாகக் கொள்கிறது என விளக்குகிறது" (பிரேமா, இரா., பெண்ணியம் - அணுகுமுறைகள் : 13).

புலம்பெயர் சூழலில் பெண்களின் எண்ணிக்கை கணிசமானளவு காணப்படுகிறது. ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த ஆண்களின் சகோதரிகளாகவும், மணப் பெண்களாகவும் பெண்கள் புலம்பெயர்ந்து சென்றனர்.

பின்னர் கல்வி, வேலைவாய்ப்பு என வேறு தேவைகளுக்காகப் புலம்பெயர்ந்தனர். இலங்கையை விட புலம்பெயர் சூழலில் பெண்கள் தொடர்பான பண்பாட்டுக் கூறுகளை தமிழர் சமூகம் கட்டிறுக்கமாக வைத்திருக்கிறது. பெண்களது நடைமுறைகள், திருமணம் ஆகியவை தொடர்பாக அதிகாரம் மிக்க போக்குடன் நடந்து கொள்ள முனைகிறது.

தனிமைத் துயர், மொழி, அந்நியத் தன்மை, நிறவாதம் ஆகிய பிரச்சினைகளுக்கும் பெண்கள் ஆளாகின்றனர். இத்தகைய சூழலில் பெண்களே, பெண்களது பிரச்சினைகள் குறித்து சிந்திக்கவும், செயலாற்றவும் துணிந்தனர். இதனால் வெவ்வேறு நாடுகளில் பெண்கள் அமைப்புக்கள் உருவாகியதோடு, பெண்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றதோடு, பெண்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தி விழிப்புணர்வூட்டும் வெளியீடுகளும் வெளிவந்தன. (நூல்கள், சஞ்சிகைகள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள்). இத்தகைய வெளியீடுகளில் இராஜேஸ்வரி பாலசுப்பிர மணியத்தின் நாவல்களும் குறிப்பிடத் தக்கன.

இராஜேஸ்வரி, கணவர்களின் கொடுமைகளால் பெண்கள் தஞ்சம் புகும் ஸ்தாபனம் ஒன்றில் சிறிது காலம் வேலை செய்தவர். பெண்களுக்கான துயர்களும், கொடுமைகளும் இன, மத, மொழி, வர்க்கங்களைத் தாண்டியவை என்பதை உணர்ந்தவர். பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவி செய்யும் நோக்கில் ‘கிரேட் லண்டன் கவுன்சிலில் (GLC) வேலை செய்தார்.

•Last Updated on ••Tuesday•, 24 •March• 2020 11:24•• •Read more...•
 

கப்பலில் கரையொதுங்கியவர்கள்

•E-mail• •Print• •PDF•

கப்பலில் கரையொகப்பலில் கரையொதுங்கியவர்கள்துங்கியவர்கள்

“2009, 2010 ஆம் ஆண்டுகளில் இரண்டு கப்பல்களில் புகலிடம் தேடி வந்திறங்கிய தமிழர்களை நாங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தினோம். அவர்களது குடும்பங்களைப் பிரித்தோம். குழந்தைகள் உட்பட, சகலரையும் சிறையில் அடைத்தோம். இவர்கள் சிறையில் நலிவுற்றிருந்த இதே ஆண்டுகளில்தான் –  கொசொவோ அகதிகளை விமானங்களில் மீட்டெடுத்துக் கொண்டுவந்த பத்தாவது ஆண்டு நிறைவையும், வியட்நாமிலிருந்து தப்பியோடி வந்த அகதிகளை வரவேற்ற நாற்பதாவது ஆண்டு நிறைவையும், ஹங்கேரியப் புரட்சியின்போது இடம்பெயர்ந்த அகதிகளை உள்ளெடுத்த ஐம்பதாவது ஆண்டு நிறைவையும் நினைவுறுத்திக் கொண்டாடி மகிழ்ந்தோம். கடந்த காலங்களில் அகதிகள் மீது காண்பித்த அனுதாபத்தையிட்டும் இரக்கத்தையிட்டும் எங்கள் முதுகில் நாங்களே தட்டிப் பெருமிதமடைந்தோம். அதே சமயம், புதிதாக வந்திறங்கிய தமிழ் அகதிகளிடம் கொடூரமாக நடந்துகொண்டோம். கனடியர்களான நாங்கள் உண்மையில் யார் என்பதிலும், உலகுக்கு எங்களை எப்படி நாங்கள் காட்டிக் கொள்கிறோம் என்பதிலும் உள்ள இந்த முரண்நிலையை நான் ஆராய்ந்தறிய விரும்பினேன்.”

The Boat People என்னும் தமது முதலாவது நாவலூடாக ஆங்கில இலக்கிய உலகில் இன்று பிரபலம் அடைந்திருக்கும் தமிழ்க் கனடியரான ஷரோன் பாலா (Sharon Bala) அந்த நாவலைத் தாம் எழுதுவதற்குக் கால்கோளமைத்த அருட்டுணர்வின் பின்னணியை இவ்வாறுதான் குறிப்பிடுகின்றார்.

தொழிலின் நிமித்தம் டுபாயில் வசித்துக்கொண்டிருந்த தமிழ்ப் பெற்றோரின் பிள்ளையாக அங்கு பிறந்தவர், ஷரோன். பின்னர் எழுபதுகளின் நடுப்பகுதி வரை ஐக்கிய அரபு நாடுகளில் (UAE) வாழ்ந்து வந்த அவரது குடும்பம், இலங்கையில் நிலவிய பாதுகாப்பின்மை காரணமாக ஊர் திரும்ப விரும்பாமல், ஷரோனின் ஏழாவது வயதில் கனடாவுக்கு இடம் பெயர்ந்தது. ஒன்ராறியோ மாகாணத்தின் பிக்கறிங்ஸ் நகரில் வளர்ந்த ஷரோன், உலகின் சகல திசைகளிலிருந்தும் வந்து குடியேறிய மக்களை உள்ளடக்கிய அன்றைய கனடிய பன்முகக் கலாசாரச் சூழலே, தமது இன்றைய ஆளுமைக்கும் எழுத்தார்வத்துக்கும் வித்தூன்றியதாகக் கூறுகின்றார்.

•Last Updated on ••Friday•, 21 •February• 2020 04:39•• •Read more...•
 

'முற்போக்கு இலக்கிய முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி'

•E-mail• •Print• •PDF•

''முற்போக்கு இலக்கிய  முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி'

எழுத்தாளர் வி.ரி.இளங்கோவன்  அவர்கள் ஐபிசி தமிழ் பத்திரிகையில் ஈழத்து இலக்கியச் சிற்பிகள் என்னும் தலைப்பில் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில், இலங்கை இலக்கியத்தில் தடம் பதித்த ஆளுமைகள் பற்றி எழுதி வருகின்றார். இதுவரை பெப்ருவரி மாத இதழில் அவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி பற்றி 'முற்போக்கு இலக்கிய  முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி' என்னும் தலைப்பில்  எழுதியிருக்கின்றார், அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அதிலெங்கும் அ.ந.க.வின் நினைவு நாள் பெப்ருவரி 14 என்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனால் பெப்ருவரி மாதம் அ.ந.க.வை நினைவு கூர்ந்திருப்பதும், அம்மாதத்திலேயே அவரது நினைவு தினம் வருவதும் பொருத்தமானது.

•Last Updated on ••Tuesday•, 18 •February• 2020 10:32•• •Read more...•
 

தமிழிலக்கியங்களில் அறச்சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

       முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.பல்லாயிரம் ஆண்டுத் தொன்மையும் மேன்மையும் உடையது தமிழ். இவ்வகையில் தமிழ் ஈடு இணையற்ற மொழி. பழந்தமிழர்கள் இனக்குழுக்களாகப் பகுத்துண்டு வாழ்ந்தனர். அறம், இசை, ஈதல், கல்வி, காதல், வீரம், போர்த்திறன் எனப் பல்வேறு சிறப்புகளோடு வாழ்ந்ததை இலக்கியங்கள் நமக்குப் பறைசாற்றுகின்றன. தமிழ்இலக்கியங்களில் காணப்படும் சிறப்புகளில் ஒன்று அறம். இந்த அறம் சங்க இலக்கியம் தொடங்கிக் காப்பியம், அறஇலக்கியம், சிற்றிலக்கியம் என நீண்டு இன்றைய நவீன இலக்கியம் வரை தமிழின் மரபு அறுபடாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய அறச் சிந்தனைகளில் சிலவற்றை இங்குக் காணலாம்.

முதலில் சங்க இலக்கியத்தை எடுத்துக் கொள்வோம். சங்கக் காலத்தில், உறையூரில் கோப்பெருஞ் சோழன் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். புலவர்களைப் பெரிதும் போற்றினான். மிகுந்த பொருள்களை நல்கினான். இதனைக் கண்ட அவன் மக்கள் வெதும்பினர். தந்தைக்குப் பிறகு நாட்டில் நமக்கு எதுவும் இராது. எல்லாவற்றையும் புலவர்களும் பாணர்களும் எடுத்துக் கொள்வர். இதன்காரணமாகப் படைத்திரட்டிக் கொண்டு தந்தைக்கு எதிராகக் கிளம்பினர். போர் மூழ்வதற்குரிய சூழ்நிலை நிகழ்ந்தது. இதைக் கேள்விபட்ட புல்லாற்றூர் எயிற்றியனார் புலவருக்குப் பொறுக்க முடியவில்லை.  சோழரை அவர் சந்தித்தார். நீங்கள் போர் புரிகிறீர்கள், உங்களுக்குப் பிறகு இந்த நாட்டை யாருக்கு ஒப்படைக்கப் போகிறீர்கள்? அந்தப் போரில் தோற்றால் யாருக்கு என்னாகும்? மக்களுக்கு எதிராகப் போரிடுவது முறையன்று. போரிடுவதைக் கைவிட்டு உன் ஆட்சியின் கீழ் வாழும் மக்களுக்கு நல்லது செய்து வானுலகம் போற்றும்படி வாழ்வாயாக! என நல்லறம் உரைக்கின்றார். அவர் பாடிய பாடல் வருமாறு:

‘மண்டுஅமர் அட்ட மதனுடைய நோன்தாள்,
வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே!
பொங்கு நீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து,
நின்தலை வந்த இருவரை நினைப்பின்,
தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்,
அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர்பு
-- -- - - - - - -
ஓழித்த தாயம் அவர்க்கு உரித்து அன்றே;
ஆதனால் அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும்’  (புறம்.213)

•Last Updated on ••Monday•, 20 •April• 2020 08:42•• •Read more...•
 

மதுரைக் காஞ்சி வெளிப்படுத்தும் நிருவாக மேலாண்மைத்திறன்

•E-mail• •Print• •PDF•

       முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.சங்க இலக்கியத்தின் பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் ஆறாவதாக இடம்பெறும் மதுரைக்காஞ்சி அளவில் பெரியதாகும். பாண்டிய நாட்டுத் தலைநகரான மதுரையின் மாண்பையும், அதனை ஆண்ட தலையானங்கானத்து செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் செம்மாந்த பண்புகளையும் மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் பாடுகிறார். காஞ்சித் திணையின் பாடுபொருளான நிலையாமையையும் பாண்டிய மன்னனுக்கு அறிவுறுத்துகிறார். மேலும் பாண்டிய மன்னனின் நிருவாக மேலாண்மைதிறன்  சிறப்பாக / செம்மையாக விளங்கியதை இவர் பாடலில் காணமுடிகிறது. இவற்றை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது. பாண்டிய மன்னராட்சியில் நிலவிய சங்கக் காலத்துச் சமூக நிலை, அரசியல் நிலை, நீதி வழங்கும் நெறி முறைகள்,  அறங்கூறும் அவையம், வணிகநிலை சமய நிலை, தொழிலாளர் நிலை, பெண்களின் நிலை, விழாக்கள், மன்னனின் கொடை போன்ற பல்வேறு நிருவாகத்திறன்களை மதுரைக்காஞ்சி வாயிலாக அறியமுடிகிறது.

சமூகஅமைப்பு:
பழந்தமிழர் சமுதாயத்தில் சாதிப்பிரிவினை இருந்தமைக்குச் சான்றுகள் இல்லை மக்கட்பாகுபாடு, இயற்கையையும் தொழிற்பண்பையும் அடிப்படையாகக் கொண்டே அமைந்தது. நிலஅமைப்புக்கு ஏற்ப மக்கட்பாகுபாடு இருந்தது. இயற்கையோடு இயைந்த இன்ப வாழ்வையே மேற்கொண்டனர்.

நீர்வளமும் நிலவளமும்:
ஒரு நாடு நன்னாடாக விளங்குதற்கு மக்கள் உணவுக் குறையின்றி வாழ்தல் வேண்டும் எள்பதே மன்னரின் தலையாய கடமையாக இருந்தது. எனவே நீர்வளமும் நிலவளமும் பெருக்குதலைத் தமது கடமையாகக் கொண்டனர். இயற்கைப் பகையாகிய பசி ஒழிதல் வேண்டும். உணவுப் பொருளைப் பெருக்குவதற்கு நிலத்தை வளப்படுத்தல் வேண்டும். இத்தகைய வளமை பாண்டிய நாட்டில் நிறைந்து இருந்ததையும் காணமுடிகிறது.

•Last Updated on ••Sunday•, 02 •February• 2020 11:55•• •Read more...•
 

என் எழுத்துலக அனுபவங்கள் பற்றிய நனவிடை தோய்தல்!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் த.இந்திரலிங்கம்எழுத்தாளர் த.இந்திரலிங்கம் பற்றி..

இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் த.இந்திரலிங்கத்துக்கு முக்கிய பங்குண்டு. இவரது நகைச்சுவைப்புனைகதைகள் முக்கியமானவை. அவை தவிர அறிவியற் கட்டுரைகளும், சிறுகதைகளும் முக்கியமானவை. உண்மையில் எனக்கு இவரை எனது பால்யபருவத்திலிருந்து தெரியும். ஆனால் இவர்தான் எனது அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான த.இந்திரலிங்கம் என்பது அண்மையில்தான் தெரிய வந்தது. இவரது படைப்புகள் இதுவரையில் நூலுருபெறாத காரணத்தால் பலருக்கு இவரது பிரமிக்கத்தக்க பங்களிப்பு தெரிவதில்லையென்று நினைக்கின்றேன். இவரது படைப்புகள் சிறுகதைகள், கட்டுரைகள், நகைச்சுவைப்புனைகதைகள் , அறிவியற் கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பட வேண்டும். குறைந்தது மின்னூல்களாகவாவது தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். சிந்தாமணியில் எழுபதுகளில் தொடராக வெளியான இவரின் 'தம்பரின் செவ்வாய்ப்பயணம்'  சாவியின் 'வாசிங்டனில் திருமணம்' நாவலையொத்த படைப்பு. வெளியான காலகட்டத்தில் விழுந்து விழுந்து சிரித்து வாசித்த அனுபவமுண்டு. அண்மையில் இவரிடமொரு நேர்காணலைச் செய்யும் ஆர்வத்தால் கேள்விகள் சிலவற்றை அனுப்பியிருந்தேன். அவற்றை உள்வாங்கிச் சுருக்கமாகத் தன் எழுத்துலக அனுபவங்களை இக்கட்டுரை வாயிலாகப் பகிர்கின்றார் த.இந்திரலிங்கம் அவர்கள். இக்கட்டுரை எழுத்தாளர் த.இந்திரலிங்கத்தைப்பற்றிய சுருக்கமான அறிமுகத்தை நமக்குத் தருகின்றது. அவ்வகையில் முக்கியமானதோர் ஆவணம். - வ.ந.கிரிதரன் -


எனது முதலாவது கட்டுரை 'ஈழநாடு' மாணவர் பக்கத்தில் 1965ஆம் ஆண்டு பிரசுரமானது. என்னுடைய பால்ய நண்பரும் , சமகால மணவருமான புருஷோத்தமனுடைய 'ரோஜாவின் ராஜா நேரு'  என்ற கட்டுரை மாணவர் பக்கத்தில் பிரசுரமான காரணமே நான் எனது கட்டுரைரையை 'ஈழநாட்டு'க்கு அனுப்புவதற்குக் காரணமாக அமைந்தது.  புருஷோத்தமன் பிறகு வேறொரு கட்டுரையும் எழுதவில்லை.  அவர் அந்தக் கட்டுரையை எழுதிய காரணமே என்னை எழுத்துலகுக்கு இழுத்து விடுவதற்காகத்தானோ என்று இப்போது நினைக்கிறேன்,

'ஈழநாடு' வாரமலரும் பின்னர் எனது கட்டுரைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தது.  வறட்டுக் கட்டுரைகளை எழுதுவதில் எனக்கு அதிக நாட்டம் இல்லை. என்பதை நான் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். 1966ம் ஆண்டு 'வீரகேசரி' வார வெளியீடு எனது கட்டுரையை வெளியிட்டு எனக்குச்  சன்மானப் பணமாக பத்து ரூபாவும் அனுப்பியிருந்தது. அதன் பின்னர்  இலக்கியக் கட்டுரைகளையும் 'வீரகேசரி'யில்  எழுதினேன். பின்னர் தினகரனும் எனது கட்டுரைகளையும் , 'சொர்க்கத்தின் கதவுகள்' என்ற சிறுகதையையும் பிரசுரித்தது. 'தினகரன்' தீபாவளி, பொங்கல், புதுவருடம் போன்ற தினங்களில் விசேட அனுபந்தம் பிரசுரிப்பதுண்டு. அதுவும் வர்ணத்தில் வரும். அந்த விசேட இதழ்களில் எனது நகைச்சுவை கலந்த நடைச்சித்திரங்கள் பிரசுரமாகின.

•Last Updated on ••Tuesday•, 28 •January• 2020 12:37•• •Read more...•
 

ராஜேஸ் பாலாவின் 50 ஆண்டுகால எழுத்தியக்கம் : சில குறிப்புகள்

•E-mail• •Print• •PDF•

இடமிருந்து வலமாக: ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், அகஸ்தியர் & நவஜோதி யோகரட்னம்

என் தந்தை அகஸ்தியரின் மூலமாகவே ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தை அறிய வந்தேன். லண்டனிலிருந்து ராஜேஸ் பாலா என் தந்தையைச் சந்திப்பதற்காக அடிக்கடி பாரிஸிற்கு வந்திருக்கிறார். எங்கள் வீட்டில் தங்கியிருந்து முற்போக்கு இலக்கிய அரசியல் விவகாரம் குறித்து நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்திருக்கிறார்கள். ஜேர்மனியில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பின்போது அகஸ்தியருக்கு வழங்கப்பட்ட கௌரவ நிகழ்ச்சியில் ராஜேஸ் பாலாவும் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார். அதே போன்று லண்டனில் அகஸ்தியர் நூல் வெளியீட்டின்போது ராஜேஸ் பாலா அந்த வெளியீட்டுக் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதில் முன்னின்று செயற்பட்டிருக்கிறார். அகஸ்தியரையும் ராஜேஸ் பாலாவையும் இணைத்த ஒரு புள்ளி இலக்கியத்தில் அவருள் கொண்டிருந்த முற்போக்கு அணுகுமுறையாகும்.

இடதுசாரி நிலைப்பாட்டிலிருந்து அகஸ்தியர் எழுதிய எழத்துக்களை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் நடைபெற்றிருந்தன. பாரிஸில் ‘தாயகம்’ என்ற சஞ்சிகையில் எழுதிய ‘சுவடுகள்’ என்ற தொடர் நாவல் இடையில் நிறுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதே நிலைமையை ராஜேஸ்வரியும் எதிர்கொண்டிருந்தார். அவரது முற்போக்கு சார்ந்த எழுத்துக்களுக்கு திட்டமிடப்பட்ட இருட்டடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. என் தந்தை அகஸ்தியர் ராஜேஸ் பாலாவின் மீதும் அவரது எழுத்துக்கள் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். ஒரு பெண் எழுத்தாளராக முற்போக்கு பாதையில் பயணித்ததிற்கு அகஸ்தியர் உயர்ந்த கௌரவம் கொடுத்திருந்தார். பெண்களின் எழுத்தாக்க முயற்சியில் அவர் எப்போதுமே கொண்டிருந்த பேரார்வத்திற்கு இது இன்னுமொரு சாட்சியமாகும்.

•Last Updated on ••Saturday•, 04 •January• 2020 01:57•• •Read more...•
 

சிறுவர் இலக்கியத்தில் மொழிநடைச் சிக்கல்கள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள்


இலக்கியப் படைப்பாக்கம் என்பது வாசகரை மையமிட்டு அமைவது. அவ்வகையில் சிறுவர்களை மையமிட்டு இயற்றப்பெறும் சிறுவர் இலக்கியங்கள் சிறுவர்களுக்கானவையாகவும், சிறுவர்களைப் பற்றியவையாகவும் இருவேறு கோணங்களில் அமைகின்றன. தமிழ் இலக்கியப் பரப்பில் சிறுவர்களைப் பற்றிய இலக்கியங்கள் சிறந்த சிறுவர் இலக்கியங்களாக ஏற்றுக்கொள்ளப்பெற்றுள்ளன. சிறுவர்களைப் பற்றிய இலக்கியங்கள் பெரும்பாலும் அவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. இந்நிலையில் சிறுவர்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்துவனவாகச் சிறுவர் இலக்கியங்கள் அமைய வேண்டும் என்ற கருத்தாக்கமும் உள்ளது. இந்நிலையில் சிறுவர்களின் மனம் எத்தகையது? அவர்கள் பெரியவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்கள்? சிறுவர்கள் இப்பிரபஞ்சத்தோடு கொள்ளும் உறவுநிலை எத்தகையது? என்பன போன்ற குறிப்பிட்ட சில கேள்விகளுக்குப் பதில் கூறும் வகையில் சிறுவர்களைப் பற்றிய இலக்கியங்கள் அமைகின்றன. இப்போக்கை அடியொற்றிய படைப்புகளைச் சிறுவர் இலக்கியங்கள் என்று ஏற்றுக்கொள்வது சிக்கலுக்குரியது. காரணம், சிறுவர்களின் மனத்தை அறிந்து கொள்ளாதவர்கள் பெரியவர்கள். சிறுவர்களைப்; பெரியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகப் படைக்கப்பெறுபவை. ஆனால், இதனைப் பெரும்பாலான படைப்பாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. படைப்பாளர்களின் நிலை இத்தகையது எனில் வாசகர்களின் மனநிலையைச் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனவேதான், கு.அழகிரிசாமியின் அன்பளிப்பு, புதுமைப்பித்தனின் மகாமசானம், கி.ரா.வின் கதவு போன்ற சிறுகதைகள் சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்புகளாக இன்றுவரை கருதப்பெற்று வருகின்றன.

•Last Updated on ••Saturday•, 28 •December• 2019 01:41•• •Read more...•
 

ஆய்வு: மலையாளிப் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியப் பண்பாடு

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள்


சமுதாயத்தின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுக்கூறுகளையும் பண்பாட்டு உள்ளோட்டங்களையும் நாட்டார் வழக்காற்று இலக்கியங்கள் கொண்டு திகழ்கின்றன. இவ்விலக்கியப் பரப்பில் கல்வராயன் மலைவாழ் மலையாளி பழங்குடிகளின் பழமொழிகள் இக்கட்டுரையில் விளக்கம்பெறும்.


மூதறிவிலிருந்து தோன்றிய மொழி பழமொழி. நினைப்பிற்கும் எட்டாத பழங்காலத்திலிருந்தே மக்கள் வாழ்வில் வாழ்ந்து வருபவை என்பதை அதன் பெயரே உறுதிப்படுத்துகிறது.

தமிழில் பழமொழிக்கு மூதுரை, முதுமை, மொழிமை, முன்சொல், முதுசொல், பழஞ்சொல் என ஆறுபொருள் இருப்பதாகச் சேந்தன் திவாகரம் கூறுகின்றது.

பழமொழி என்ற சொல்லே பழமொழி பற்றிய சிறந்த வரையறையாக அமைந்துள்ளது என்கிறார் ஜான் லாசரஸ் அவர்கள். பழமொழி என்பது உலகுக்கு உணர்த்தும் உண்மையை ஒரு சிறிய வாக்கியத்தின் மூலம் சுருக்கிக் கூறுவது ஆகும் (2003:104).

தொல்காப்பியர் பழமொழியை, 'முதுசொல்' 'முதுமொழி' என்று குறிப்பிடுகிறார்

•Last Updated on ••Saturday•, 28 •December• 2019 01:08•• •Read more...•
 

குறுந்தொகையில் பண்பாட்டுப் பதிவுகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள்


முன்னுரை:

மனிதர்களின் அகவாழ்வை எடுத்துரைக்கும் அற்புத இலக்கியமான குறுந்தொகையில் நிறைந்திருக்கும் பண்பாட்டுப் பதிவுகளைப் பார்வையிடும் நோக்கில் இக்கட்டுரை பயனிக்கின்றது.

பண்பாடு:

'பண்பாடு' என்பதைப் பொதுவாக நோக்கினால் பண்பினை வெளிப்படுத்துதல் என்று பொருள்படும். ஆனால் 'பண்பு' என்பது வேறு. 'பண்பாடு' என்பது வேறு. தனிமனிதனின் குணங்களைக் குறிப்பது பண்பு. ஒரு கூட்டத்தின் நிலைப்பாட்டைக் குறிப்பது பண்பாடு. 'பண்படு' என்பதே 'பண்பாடு' என்று மாறியிருக்கக்கூடும்.

பண்பாட்டுப் பதிவுகள்:

பண்டைக்காலத்தில் மணமாகாத பெண்கள் தம் காலில் ஒருவகைச் சிலம்பினை அணிந்திருந்தனர். மணமான பின்பு அதைக் கழற்றி விடுவார்கள். இதற்கெனச் 'சிலம்புகழி நோன்பு' எனும் சடங்கு உண்டு. பெண்ணின் காலை நோக்கிய அளவிலேயே அவள் திருமணமானவளா? இல்லையா? என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

•Last Updated on ••Saturday•, 28 •December• 2019 01:03•• •Read more...•
 

ஆய்வு: குறிஞ்சிப்பாட்டில் இயற்கை பண்பாட்டு வாழ்வியல் நெறிமுறை

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள்


முன்னுரை

மானிடரின் காதல் ஓவியங்களுக்கு மிகச் சிறந்த பண்பாட்டுப் பின்னணியாக அமைவது இயற்கைக் காட்சி. இவ்வகையில் ஐந்து நிலத்துக் காட்சிகளையும் அழகுபடத் தீட்டியுள்ளர் சங்ககாலப் புலவர்கள். ஆயின், அவற்றைக் காதல் நாடகத்துக்கு ஏற்ற அரங்கு என்ற அளவோடு அவர்கள் நிறுத்திவிடவில்லை. துலைவன் தலைவியர் தம் உள்ளத்தே தோன்றும் திளைப்பையும் களைப்பையும் இயற்கைக் காட்சிகளிலே கண்டார்கள். சூழ்ந்துள்ள இயற்கையெல்லாம் அவர்களோடு ஒன்றிவிட்டதாக உணர்ந்தார்கள். தலைவன் தலைவியரின் உள்ளத்து உணர்வுகளை இயற்கை உணர்ந்து, இயைந்து ஒன்றித்துவிட்டதுபோல் அவர்கள் உணர்ந்தனர். அவர்கள் மகிழ்ந்தபோது இயற்கையும் துயரால் துவண்டது என்றனர். காதலரின் களிப்பைப் பெருகவிட்டது. அவர்களோடு ஒன்றிவிட்ட இயற்கை, காதலர்கள் வாடி வருந்தியபோதும் அந்த இயற்கையும் சேர்ந்து வாடியது. தனி இதயங்களின் துடிப்பைப் பரந்து விரிந்திருக்கும் புறவுலகம் புரிந்து கொண்டது போன்ற ஒருவகை அனுபவம் இந்த நிலையில் ஏற்படுகின்றது. இந்த அனுபவம் கைவரும் போது இயற்கையும் மனிதனும் இரண்டறக் கலந்திடும் ஒன்றிய நிலை ஏற்படுவதைக் காணலாம். சில வேளைகளில் தலைவி முதலானவர்களின் உணர்ச்சிகளை இயற்கையோடு இயைந்து விடுவதற்காக இயற்கைப் பொருள்களுக்கு உயிரும் உணர்வும் கொடுத்துப் பாடுவது உண்டு. இதுபோன்ற பாடல்களில் உள்ளத்து உணர்வின் ஆழமும், அதனோடு பிணைந்த நம்பிக்கையின் உறுதிப்பாடும் புலப்படும். மேலும் மனித உணர்வின் மறு பதிப்பாகவே இயற்கை வருணிக்கப்படுவது தமிழ் இலக்கியங்கியங்களில் உண்டு. அது போலவே குறிஞ்சிப்பாட்டில் இயற்கையோடு மனிதன் கொண்ட பண்பாட்டுப் பிணைப்புகளையும்இ இயற்கை நெறிகளொடு சோந்த தமிழர்ப் பண்பாட்டு வாழ்வியல் முறைகளும் இக்கட்டுரையில் தரப்படுகின்றன.

•Last Updated on ••Wednesday•, 18 •December• 2019 03:12•• •Read more...•
 

ஆண்டாளும் தமிழும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள்


முன்னுரை

தமிழ்நாட்டின் அரசு முத்திரையாக விளங்கக்கூடியவை ஆண்டாள்கோவில் கோபுரம் ஆகும். இது வரலாற்று புகழ்பெற்ற ஒரு தலமாக விளக்குகிறது. இத்தலம் மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் நடுவில் அமைந்துள்ளது. சென்னை செங்கோட்டை இருப்பாதையில் இவ்வூரில் ஒரு புகைவண்டி நிலையம் அமைந்துள்ளது. வியாபாரத்தலமான இராஐபாளையத்திற்கும் புகழ்பெற்ற சங்கரநாராயணர் வீற்றிற்கும் சங்கரன் கோவிலுக்கும் நடுவில் அமைந்துள்ளது. இன்றும் என்றும் சித்தர்கள் உலவிவரும் சித்தர்மலை எனப் பெயர்பெற்ற சதுரகிரி மலைக்கு அருகில் இவ்வூர் அமைந்துள்ளது.

திருவில்லிபுத்தூர் உருவான வரலாறு

ஒரு சாபத்தின் காரணமாக வில்லி, புத்தன் என்ற இரு முனிவர்கள் வேடர்களாகப் பிறந்தனர். புத்தன் என்பவரை ஒரு நாள் ஒரு புலி அடித்துக் கொன்றுவிட்டது. புத்தனைத் தேடியலைந்த வில்லி ஆல மரங்கள் நிறைந்த இக்காட்டில் திருமால் சிலையொன்றையும் அருகில் புதையலையும் கண்டெடுத்தான். தங்கப் புதையலைக் கொண்டு ஒரு கோவில் கட்டி அதில் திருமாலை பிரதிஷ;டை செய்தான். காட்டைத் திருத்தி நகரினை உண்டாக்கினான். அதுவே புத்தன் பெயரில் புதுவை என்றும். அவனது பெயரில் வில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்பட்டது. மல்லி அறை அரசியார் ஆண்டு வந்த மல்லி நாடு இதுவாகும் இவ்வூரின் அருகில் 'மல்லி' என்ற சிற்றூர் உள்ளது. இதை மெய்ப்பிக்கிறது அங்கிருந்தபட பெருங்கோவிலே வடபத்ரசாயி திருக்கோவில் என்பர். வில்லி - கண்டெடுத்த திருமால் சிலை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனலாம்.

•Last Updated on ••Wednesday•, 18 •December• 2019 03:03•• •Read more...•
 

சிலப்பதிகாரத்தில் மருதத்திணை

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள்


சங்க இலக்கியங்களில் காணப்படும் தொன்மைகளை காப்பியக்காலத்திற்கு கொண்டு செல்லும் பாலமாக சிலப்பதிகாரம் அமைகிறது. அதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் மருதத்திணையின் முதற்பொருள் கருப்பொருளைப் பற்றிமட்டும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

மருதம் என்பதுவயலும் வயல் சார்ந்த இடமும்,வைகறைபொழுது மருதத்தின் சிறுபொழுது, தெய்வம் இந்திரன் எனவும்,வாழும் மக்கள் உழவர்,உழத்தியர், கடையர்,கடைசியர். இம்மக்கள் செந்நெல் அரிசி வெண்ணெல் அரிசிபோன்ற உணவுகளை உட்கொண்டனர். பறவைகள், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, குருகு,தாராஆகும். விலங்குகள் எருமைநீர்நாய் ஆகியனவாகும். பேரூர், மூதூர் என்னும் ஊர்களும் உள்ளன. பூக்கள் தாமரைப்பூ, குவளைப்பூ, கழுநீர்ப்பூ முதலியவையாகும். நெல்லரிகிணை பறை, மணமுழவுபறைகளும் மருதயாழ், மருதப்பண் போன்றவைகள் காணப்படுகின்றன. இந்நிலத்தில் வயற்களைக்கட்டல் நெல்லரிதல் போன்றதொழில்கள் முதன்மையானதாகும். மருதம் என்பதுவயலும் வயல் சார்ந்தபகுதியாகும்.

•Last Updated on ••Wednesday•, 18 •December• 2019 02:57•• •Read more...•
 

மணிமேகலை உணர்த்தும் வாழ்வியல் நெறிப் பயணம்

•E-mail• •Print• •PDF•

செ.மகாலட்சுமிகாப்பியத் தலைவியின் பெயரையே இந்நுாலுக்கு ஆசிரியர் சூட்டியுள்ளார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட இனத்தில் பிறந்தவரை காப்பியத் தலைவியாக அமைத்தது சாத்தனாரின் சிறப்பாகும். கணிகை மகளை காப்பியத் தலைவியாக்கியதுடன் திறன் அவருடைய பெயரையே நூலுக்கு சூட்டுவது என்பது ஒரு புரட்சி. மனிதனின் வாழ்வியல் சிந்தனைகள் மணிமேகலையில் மிகுதியாக உள்ளன. அத்தகைய வாழ்வியல் சிந்தனைகளை விளக்குவதே கட்டுரையாகும்.

மனிதனுடைய அன்றாட தேவைகளான உணவு உடை இருப்பிடம் போன்றவற்றில் பூர்த்தி செய்து வாழ வேண்டும். அதனை நல்ல நெறியில் பெற வேண்டும் என்பதை மணிமேகலை வலியுறுத்துகிறது. அதுமட்டுமல்ல இத்தகைய மூன்றும் இல்லாதவர்களுக்கு அவர்களை கொடுத்த வாழ வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. அதனைத்தான்,

“அறமெனப் படுவது யாதுயெனக் கேட்பின்
மறவா திதுகேள் மண் உயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையும் அல்லது
கண்டது இல்”  (மணி 25 – 228-231)


என்ற வரிகளின் மூலம் கூறுகிறார். அறத்தின் இலக்கணத்தை வள்ளுவர் வரையறுத்ததைப் போல சாத்தனாரும் கூறியுள்ளது சிறப்புக்குரியதாகும் அதுமட்டுமல்லாது,

“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
(மணி 11 – 95-96)

என்ற வரிகளின் மூலம் உணவு கொடுத்தவர்கள் பிறருக்கும் உயிர் கொடுத்தவர்கள் என்று கூறுகிறார். இந்நுாலில் மணிமேகலை அட்சய பாத்திரம் கொண்டு உணவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

•Last Updated on ••Friday•, 06 •December• 2019 08:28•• •Read more...•
 

பல முதல்களின் முதல்வர் மு.க.சு.சிவகுமாரன் BFA

•E-mail• •Print• •PDF•

பல முதல்களின் முதல்வர் மு.க.சு.சிவகுமாரன் BFA- சந்திரகெளரி சிவபாலன் -பல முதல்களின் முதல்வராகிய வெற்றிமணியின் ஆசிரியரும் சிவத்தமிழ் சஞ்சிகையின் ஆசிரியருமான கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் செய்யும் தொழிலும் செயலும் திறம்பட வேண்டுமானால், செய்பவர் திறமை திறம்பட இருக்க வேண்டியது அவசியம். கருவி அற்புதமானால், கருத்தா கருவிக்கு ஆற்றிய அர்ப்பணிப்பும் போற்றப்படவேண்டியதும் புரியப்பட வேண்டியதுமாகும். படைப்பாளியின் திறமை அறியப்பட்டாலேயே அந்தப் படைப்பின் வெற்றி புரியப்படும் வெற்றிமணியான விபரமும் புரியும்.

வெற்றிமணி பத்திரிகை தாயகத்தில் ஆரம்பித்து 69 வருடங்கள் ஆகின்றன. அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் 1950 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்த வெற்றிமணி அவர் மறைவின் பின் நின்று போக அவருடைய மகன் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் மீண்டும் தாயகத்தில் வெற்றிமணி மாணவர் காலாண்டு இதழாக இன்றும் வெளியீடு செய்து கொண்டு வருகின்றார். தாயகத்தில் ஏற்பட்ட சில பல  சூழ்நிலைகள் காரணமாக தாமதங்கள் அங்கு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

ஆனால், ஐரோப்பாவில் இவர் புலம்பெயர்ந்து தன்னுடைய வாழ்க்கையைத் தளம் அமைத்த பின்  மீண்டும் வெற்றிமணி பத்திரிகையை யேர்மனியில் ஆரம்பித்து இம்மாதம் (ஆனிமாதம் 1994 - ஆனிமாதம் 2019) 25 வருட வெற்றி காண்கின்றார். தற்போது இலண்டன், சுவிஸ், யேர்மனி ஆகிய நாடுகளில் பலரும் தேடும் சிறப்புப் பெற்ற இலவச வண்ணப் பத்திரிகையாக இப்பத்திரிகை வெளிவருகின்றது. இப்பத்திரிகை எவ்வாறு ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்டது என்னும் வரலாற்றை இத்தருணத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்.

•Last Updated on ••Wednesday•, 20 •November• 2019 09:35•• •Read more...•
 

முருகபூபதியின் “இலங்கையில் பாரதி” ஆய்வு நூல் மதிப்பீடு: நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய வரலாற்றை நயமுடன் பதிவுசெய்கிறது.

•E-mail• •Print• •PDF•

முருகபூபதியின் 'இலங்கையில் பாரதி' - ஞா. டிலோசினி ( இலங்கை - கிழக்கு பல்கலைக்கழகம்) -அவுஸ்திரேலியப் புகலிட எழுத்தாளராகிய முருகபூபதி அவர்கள், ஈழத்து இலக்கியம் மற்றும்  ஊடகத்துறை வளர்ச்சியில்  முக்கிய பங்காற்றியுள்ளார். பல்வேறு இலக்கிய வடிவங்களுக்கூடாக  தனது இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்திய இவர்,   இருபதுக்கு மேற்பட்ட நூல்களை   இலக்கிய உலகிற்கு தந்துள்ளார். முருகபூபதியின் அயராத முயற்சியினால் இலங்கையில் பாரதி என்ற ஆய்வு நூல், முகுந்தன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.  இலங்கையில் பாரதி , மகாகவி பாரதி பற்றிய பல்வேறு விடயங்களை  நீண்ட காலமாக  தேடித்தொகுத்து  ஆராய்ச்சி பூர்வமாக எழுதப்பட்டுள்ள    ஆய்வு நூலாகும்.

இந்நூலில்  பாரதியை அறிமுகம் செய்யும்  அங்கம் 01  இல், பாரதியின் நண்பர்கள் பற்றிக் கூறப்படுகிறது. பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட பாரதியின் நண்பர்களை விபரிக்கும் இப்பகுதியில் சித்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், வக்கீல்கள், வர்த்தகர்கள், தீவிரவாதிகள், விடுதலைப்போராளிகள், பத்திரிகையாளர்கள், சாதாரண ஹரிஜனங்கள், பாமரர்கள் எனப் பலதரப்பட்டவர்களும்  வருகிறார்கள். அங்கம் 02  இல் மதம் பிடித்த யானையிடம் இருந்து பாரதியைக் காப்பாற்றிய குவளைக்கண்ணன் என்கின்ற கிருஷ்ணமாச்சாரியார் பற்றியும், பாரதியின் மறைவு பற்றியும், பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சாமி பற்றியும் கூறப்படுகின்றது. இப்பகுதியில் பாரதியின் ஞானகுரு இலங்கையர் என்ற பெருமையையும் பாரதி நேரில் சந்தித்த ஒரேயொரு இலங்கையர் யாழ்ப்பாணத்துச் சாமி என்பதையும்  நூலாசிரியர் அழுத்திக் கூறுகின்றார். பாரதியின் ஞானகுரு பற்றி  ஈழத்து இலக்கிய வரலாற்றில் பல இடங்களில் பதிவுகள் இடம்பெற்றிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  பாரதியின் ஞானகுரு பற்றி செங்கைஆழியான் எழுதிய திரிபுகள் பற்றியும் இப்பகுதியில் விமர்சிக்கப்பட்டுள்ளது. வேறொரு சாமியாரை பாரதியின் ஞானகுருவாக நிரூபிக்க ஏன் செங்கைஆழியான் முயன்றார் என்ற கவலைக்குரிய விமர்சனமும் இடம்பெற்றுள்ளது.

•Last Updated on ••Thursday•, 21 •November• 2019 09:01•• •Read more...•
 

வெளிநாட்டுக் கலாச்சாரங்களில் வாஸந்தியின் நாவல்கள்

•E-mail• •Print• •PDF•

கட்டுரை: வெளிநாட்டுக் கலாச்சாரங்களில் வாஸந்தியின் நாவல்கள்“சென்றிடுவீர் எட்டு திக்கும்
கல்விச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர் “

என்பதற்கேற்ப இன்றைய நாளில் நம் நாட்டு மக்கள் பல நாடுகளுக்கும் தங்கள் கல்வி அறிவைக் கொண்டு செல்கிறார்கள்.பல நாடுகளுக்குப் படிக்கவும் செல்கிறார்கள்.சிலர் குடியுரிமை பெற்று அங்கேகே தங்கிவிடுகிறார்கள். சிலர் திரும்பி வருகிறார்கள். இப்படி வெளிநாடுகளுக்குச் செல்வதும் வருவதும் இன்றைய நாளில் சுலபமாகி விட்டது.அதனால் வெளிநாட்டுக் கலாச்சாரங்கள் நம் நாட்டுக் கலாச்சாரங்களுக்குள் நுழைந்து பல நவீனத் தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பது கண்கூடு. வெளிநாட்டுக் கலாச்சாரத்தால் பல மாற்றங்களை அடைந்திருந்தாலும் பண்பாடு என்ற ஒன்றால் நம்முடைய அடையாளங்கள் நமதாகக் காக்கப் படுகின்றன.அதனைச் சொல்வதில் நாவல்கள் முக்கிய இடம்பெறுகின்றன.

மனிதனின் அறிவு வளர வளர சிந்தனைகளும் தேடல்களும் அதிகமாகி அவனுடைய மனத்தை விரியச் செய்கின்றன. குறுகிய வட்டத்திற்குள் சுழன்று கொண்டிராமல் அடுத்தடுத்துச் சென்று பல்வேறு பரிமாணங்களை அடைந்து முழுமனிதனாக வேண்டும் என்பது நம் மண்னின் மகிமையாக சுடர்விடுகிறது. எங்கு சென்றாலும் நம் மண்ணின் வேர் அங்கும் பிடித்து நின்று நம்மை வேறுபடுத்திக் காட்டுகின்றன. அதற்கு வாஸந்தியின் நாவல்கள் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளன.

பத்திரிக்கையாசிரியரும் எழுத்தாளருமான வாஸந்தி பல ஊர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும் வாய்ப்புக் கிடைத்ததால் அதனால் கிடைத்த அனுபவங்களைத் தமது நாவல்களில் பகிர்ந்துள்ளார்.வெளிநாட்டுக் கலாச்சாரங்களைச் சொல்வதில் தனக்கென்று தனியிடத்தைப் பெற்றுள்ளார். பல நாவல்கள் அதற்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன. அவற்றில் ‘சந்தியா’; ‘காதல் என்னும் வானவில்’ ஆகியவற்றை சிறந்த எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

•Last Updated on ••Monday•, 11 •November• 2019 08:19•• •Read more...•
 

ஊடகவியலாளர் எஸ்.திருச்செல்வம்!

•E-mail• •Print• •PDF•

ஊடகவியலாளர் எஸ்.திருச்செல்வம்!- நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -பத்திரிகையாளர்கள் ஐம்பது ஆண்டுகால தொடர் சாதனையைச் சாதிப்பது என்பது அபூர்வமான ஒரு விஷயம் அல்ல. ஆனால் திருச்செல்வம் என்ற ஒருவரின் ஐம்பது ஆண்டு கால பத்திரிகைச் சாதனை என்பது அபூர்வமானதுதான். அசாதாரணமான சாதனைதான். அரசபடைகளும், அந்நிய படைகளும், விடுதலைக் குழுக்களும் கொடூரமாக மோதிக்கொண்ட ஒரு கால கட்டத்தில் கோரமான ஒரு யுத்த சூழலில் தினமும் கணமும் சாவு நிழல் போலத் தன்னைச் சூழவரும் நிலையில் ஒரு பத்திரிகையாளனாக வாழ்வதென்பது சாதனைதான்.

ஈழநாடு, தினகரன் ஆகிய பத்திரிகையில் பத்திரிகையாளராக தன் தொழிலை ஆரம்பித்த திருச்செல்வம் அவர்கள், இந்திய அமைதிப்படைகள் யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்த காலப்பகுதியில் ஈழமுரசு, முரசொலி ஆகிய ஆகிய பத்திரிகைகளின் ஸ்தாபன ஆசிரியராகவும்,  முரசொலியின் பிரதம ஆசிரியராகவும் பணிபுரிந்த காலங்கள் ஈழத்துப் பத்திரிகை வரலாற்றில் நின்று நிதானித்துச் செல்லவேண்டிய காலப்பகுதிகளாகும்.

1986ஆம் ஆண்டில் முரசொலி அதன் இரண்டாவது ஆண்டை எட்டியபோது பதினாராயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன என்பது ஈழத்தின் பிரதேச சஞ்சிகை ஒன்றின் சாதனையாகும்.

உலகின்  பத்திரிகையாளர்களுக்கு ஆபத்துக்களில் மலிந்த அபாயகரமான நாடுகளில் ஒன்றாக இலங்கை பிரபலம் பெற்றிருந்த நேரம் அது. சிங்களப் பத்திரிகையாளர்களும் அரசாங்கத்தின் அராஜகங்களுக்கு இரையாகினார்கள் என்றாலும் தமிழ் பத்திரிகையாளர்கள் பெருந் தொகையில் தம் உயிரைப் பலியிட நேர்ந்தது.

1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் பத்தாம் திகதி இந்தியா அமைதி காக்கும் படையினர் முரசொலிப்;பத்திரிகை அலுவலகத்தையும் ஈழமுரசு பத்திரிகை அலுவலகத்தையும் குண்டு வைத்துத் தகர்த்த நிகழ்வு,  உலகின் பத்திரிகை வரலாற்றின் கறை படிந்த பகுதியாகும்.

•Last Updated on ••Friday•, 08 •November• 2019 09:10•• •Read more...•
 

முனைவர் நா. நளினிதேவியின் 'இலக்கியப் போராளி எஸ்.பொ. படைப்பாளுமையும் பன்முகப்பார்வையும்' என்ற நூலை முன்வைத்து..

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் எஸ்.பொ.வின் நினைவு தினம் நவம்பர் 26. அவர் நினைவாக..

எஸ்.பொமுனைவர் நா. நளினிதேவியின் 'இலக்கியப் போராளி எஸ்.பொ. படைப்பாளுமையும் பன்முகப்பார்வையும்' என்ற நூலை முன்வைத்து..ஈழத்தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஆளுமை எஸ். பொன்னுத்துரை ஆவார். தமிழிலக்கியத்ததின் அனைத்துத் துறைகளையும் இவர் தொட்டவர். நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளைப் படைத்துள்ளார். இவரது படைப்புகள் தமிழுலகில் பேசப்படும் ஆகச் சிறந்த இலக்கியங்களாகும். இவை காலங்கடந்தும் நிலைத்து நின்று இமாலய வெற்றி பெறும் என்பதை  ஆராய்ந்து இந்நூலில் நிறுவியுள்ளார்.

எஸ்.பொ.அவர்களின் படைப்புகளான சிறுகதை, புதினம், நாடகம்;, கவிதை, உரைநடை, காவியம், வரலாறு மற்றும் மொழிபெயர்ப்புகள் என ஒவ்வொன்றையும் தீவிரமாகப் படித்து, அலசி ஆராய்ந்து, 'இலக்கியப்போராளி எஸ்.பொ. படைப்பாளுமையும் பன்முகப் பார்வையும்' என்ற தலைப்பில் நூலாக்கம் செய்தவர் முனைவர் நா.நளினிதேவி. இவரது பல சிறந்த ஆக்கங்களில் இந்நூல் குறிப்பிடத்தக்கது.

2014ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே எஸ்.பொவின் நூல்கள் முழுமையும் நளினிதேவி ஆய்வுக்குட்படுத்தியதை அறிந்த எஸ்.பொ. மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்று, இக்கட்டுரைகளை மித்ர பதிப்பகத்திலேயே நூலாக்கம் செய்யலாம் என்பதை மகிழ்வோடு தெரிவித்தார்.

நளினிதேவி அவர்கள் எஸ்.பொ.வின் ஒவ்வொரு படைப்புகளையும் படித்ததோடு உடனுக்குடன் ஐம்பதுஃஅறுபது பக்கங்களுக்கு மிகாமல் எழுதி ஞானிஅய்யாவிற்கு அனுப்பிவிடுவார். எஸ்.பொ.வின் அனைத்துப் படைப்புகளையும் குறைந்தது அறுநூறு பக்கங்களுக்கு மேல் எழுதியிருந்தார்.  அக்கட்டுரைகளை ஒளியச்சு செய்வதற்காக வாங்கிச் சென்ற நபர் எந்த தொடர்பும் கொள்ளமுடியாமல் போனதால்,  கையெழுத்துப் பிரதிகள் எதுவும் கைக்குக் கிட்டவில்லை. மிகுந்த மனவருத்தம் கொண்டார் நளினிதேவி. எஸ்.பொ. ஆசுரேலியா சென்றுவிட்டார். உடல்நலம் குன்றிவிட்டார். எஸ்.பொ.அவர்கள் தன்கட்டுரையைப் பார்த்துவிடவேண்டும் என்று அதி விரைவாகச் செயல்பட்டார் நளினிதேவி.

•Last Updated on ••Saturday•, 02 •November• 2019 09:33•• •Read more...•
 

எட்டுத்தொகை நூல்களில் அக வாழ்வுமுறை

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


முன்னுரை
எட்டுத்தொகை நூல்களில் அகவாழ்வுமுறையானது திருமணத்திற்கு முந்தைய ஆண் பெண் இணைவைக் 'களவு' என்றும் திருமணத்திற்குப்பின் ஆண் பெண் இணைவைக் 'கற்பு' என்றும் குறிப்பிட்டது. இவ்விரண்டும் ஏற்புடைய மரபுகளாகச் சங்க காலத்தில் இருந்தன. பெண்ணின் வாழ்வு, மகிழ்ச்சி, வாழ்வதன் அர்த்தம் அனைத்தும் ஆண் மகனை மையமிட்டதாக ஆண்வழிச் சமூகம் கட்டமைத்திருந்தன. இத்தகைய கட்டமைப்பின் வழி தமிழரின் அகமரபினுள் காணப்படுகின்ற குறிதன்மை (பகற்குறி, இரவுக்குறி), வெறியாடல், அலருக்கு அஞ்சுதல், அறத்;;தோடு நிற்றல் உள்ளிட்டவை என்று அகநூல்களில் சொல்லப்படுகின்ற அக வாழ்வு எனலாம். அத்தகைய அகவாழ்வுமுறையினைக் கட்டமைப்ப இக்கட்டுரையின் நோக்கமாகும்.

•Last Updated on ••Wednesday•, 18 •December• 2019 02:50•• •Read more...•
 

சங்க இலக்கியத்தில் மருத நில வேளாண்மைப்பண்பாடு (11) -

•E-mail• •Print• •PDF•

'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


 

முன்னுரை:
சங்க இலக்கியங்கள் பழந்தமிழர்களின் வாழ்க்கை பண்பாட்டை விளக்குவதாக அமைந்துள்ளன.  சங்க காலத்தில் வேளாண்மைப்பண்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.  வேளாண்மை சமூக மாற்றத்திற்கான அடிகோலாய் தோன்றின எனலாம்.  சங்கச் சமுதாயம் இனக்குழு வாழ்விலிருந்து அரசு உருவாக்கத்திற்கும், நகரமயமாதலுக்கும் அடிப்படையாய் அமைந்தன.  இவ்வேளாண்மைப்பண்பாட்டை பற்றிக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.

பண்பாடு
பண்பாடு எனும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் 'உரடவரசந' என்று கூறுவர்.  பண்பாடு எனும் சொல் 'பண்படு' என்னும் சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது எனலாம்.  நல்ல பழக்க வழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் மனிதனைப் பண்பட்ட மனிதன் எனலாம்.  பண்பட்ட உள்ளம் கொண்டவரைப் பண்பாட்டைப் பின்பற்றுவர்கள் எனலாம்.  பண்பாடு எனும் சொல்லிற்கு 'செம்மைப்படுத்தல்' என்னும் பொருளும் இச்சொல்லுக்கு அமையப்பெற்றுள்ளதை அறியலாம்.  'பண்பாடு என்பது எண்ணற்ற கூறுகளால் இணைக்கப்பெற்ற ஒழுங்கமைப்பு ஆகும்.  கற்றுணர்ந்து பகிர்ந்து கொள்ளப்படும் நடத்தை முறைகளின் தொகுப்பே பண்பாடு என மானிடவியலாளர் கூறுவர்.  மேலும், சீர்படுதல், பண்ணுதல் என்ற பொருளும் பண்பாட்டிற்கு வழங்கப்படுகிறது.

மருத நில ஊர்கள்
மருத நில ஊர்கள் மருத நில வேளாண்மை பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் காட்டு நிலத்திற்கும், கடலோர நிலத்திற்கும் இடைப்பட்ட நீர் வளமிக்க ஆற்றுப்படுகையில் அமைந்த ஊர்களை மருத நில ஊர்கள் என அழைக்கபடுகிறது.  இப்பகுதியில் மருத மரங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன.  இந்நிலப்பகுதி பல்வேறு பயிர் வகைகளை வேளாண்மை செய்ய ஏற்ற நிலவளமும் நீர் வளமும் கொண்ட பகுதியாக உள்ளன.  மருத நில ஊர்களைச் சுற்றிலும் குளிர்ந்த வயல் பரப்புகள் காணப்பட்டன.  பல்வகை உணவுப் பொருட்கள் கொண்ட (நெற்கூடுகள்) குதிர்கள் வீடுகளில் இருந்தன.  மக்கள் வாழ்கை வேண்டிய பல் பொருளும் நிரம்பியிருத்தலினாலே மருத மக்கள் பசியின் கொடுமையை அறியாதிருந்தனர் என்பதை

•Last Updated on ••Thursday•, 10 •October• 2019 00:54•• •Read more...•
 

சூரியனிலிருந்து வந்தவர்கள்

•E-mail• •Print• •PDF•

- பொ. கருணாகரமூர்த்தி , பெர்லின் -‘சூரியனிலிருந்து வந்தவர்கள்’ என்றொரு குறுநாவலை நான் 2000 ஆண்டு எழுதியிருந்தேன். விடுதலைப்புலிகளின் பல மனிதவுரிமைகளுக்கெதிரான செயற்பாடுகளை அந்நாவல் விமர்சிப்பதால் அப்போது அதனைப்பிரசுரிக்க பத்திரிகைகள்  தயங்கின. பின்னர் அதனை ஷோபாசக்தியும் சுகனும் சேர்ந்து தொகுத்த   கருப்பு    இலக்கியமலரில் 2003 வெளியிட்டனர்.

அதில் ஒரேயொரு ஆண்பாத்திரம், இலேசான  மனப்பிறழ்வு கொண்டவர். அவருக்கு காசி என்று பெயர், எப்போதும் கையில் தன் உயரமொத்த ஒரு  ‘கழி’யை வைத்திருப்பார். அவர் விரும்பும் வேளைகளில் முன்னால் ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ , தரையில் அதை ஊன்றிவிட்டு அதையே ஒலிவாங்கியாக   எண்ணிப் பேசத்தொடங்கிவிடுவார். அரசியல், ஆன்மீகம், சமூகவியல், அறிவியல், தர்க்கம், மெய்யியல் என்று செறிவாகவும் மணிக்கணக்காகவும் அவரது பேச்சுக்கள் நீளும். பெம்மானின் தொண்டைத்தண்ணீர் வற்றி உலர்ந்து குரல் வராதபோது  பேச்சை நிறுத்திவிட்டு  அடுத்த  ஊருக்குப்  போய்விடுவார். சாப்பாட்டைக் கருதி  அவரை எவ்வூரிலும் கோவில் வட்டகைகளிலேயே காணலாம்.

அந்நாவல் எனது ஒரு பரிசோதனை முயற்சி. அதில் நிறைய உரையாடல்கள் இடம்பெறும், அவ்வுரையாடல்களாலேயே நாவல் முழுவதும் நகரும், ஆனால் பிற பாத்திரங்கள் எவரும்  அதில்    வெளிப்படுத்தப்பட மாட்டார்கள். ஆனாலும் அப்பாத்திரம் தன்னை வெளிப்படுத்தினால் எதிர்நோக்கும் அபாயத்தை வாசகன் உணர்ந்துகொள்வான்.

•Last Updated on ••Tuesday•, 08 •October• 2019 23:18•• •Read more...•
 

மானுட ஈரம் கசியும் தமிழச்சியின் (தமிழச்சி தங்கபாண்டியன்) ' எஞ்சோட்டுப் பெண்'

•E-mail• •Print• •PDF•

மானுட ஈரம் கசியும் தமிழச்சியின்  ' எஞ்சோட்டுப் பெண்'  முனைவர் சு. செல்வகுமாரன்,  இணைப் பேராசிரியர், தமிழியல் துறை,  அண்ணாமலைப் பல்கலைகவிஞனின் ஆழ்மனக்கடலில் நிகழ்ந்த அதிர்வில் மேலெழுந்த அலை வீச்சே கவிதைமொழி. ஆழிப்பேரலையாய் கவிஞனிடமிருந்து வெளிப்பட்டு வாசகனை தம்வசப்படுத்தும் ஆற்றல் கவிதைக்கு உண்டு. கவிதை மானுடத்தின் ஈரத்தை மெல்ல தம் மௌன மொழிகளால் கசியச்செய்யும். தேவைப்படின் இரத்தத்தையும் கசியச் செய்யும். இரத்தக் கசிவினுள் மானுடத்தின் அடிமைச் சங்கிலிகளின் கண்ணிகள் நெகிழ்ந்து அவிழ்படும் ஓசையை கேட்கமுடியும். கவியின் மனதில் கன்னல்பட்டு கருக்கொண்ட நிகழ்வு / அனுபவங்களின் மொழியே கவிதையாகிறது. கவியின் மனச்சட்டகத்தைப் பொறுத்து வார்க்கப்படும் கவிதைகள் கவிக்கு கவி வேறுபடுமெனின் அது மிகையல்ல. தமிழச்சியின் எஞ்சோட்டுப் பெண்ணோ முழுமையும் மானுட ஈரம் கசிந்து பெரும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.

“எஞ்சோட்டுப் பெண்” தமிழச்சியின் முதல் கவிதைத் தொகுப்பாக அமைகிறது. முற்றிலும் தன்னைச் சுற்றியே நகரும் இக் கவிதைகள் அப்பா, அம்மா, அப்பத்தா, தோழி, அக்கா, காமாச்சிப்பாட்டி, சிலம்பாயி, சேத்தூர் சித்தப்பா, சித்தி, முடியனூர்க்கிழவி, கொத்தனார் பாக்கியம், கச்சம்மா, கருப்பையா, குழந்தை வேல் ஆசாரி எனும் மனிதச்சித்திரங்களோடு தமக்கிருந்த அன்பை, அவர்கள் தம்மீது கொண்டிருந்த அன்பை கவிதையில் பரிமாறுகிறது.

கவிதையில் ஒவ்வொரு மனிதனும் மானுட ஈரத்தை நேசமாய் கசிவிப்பது என்னமோ அருவி நீரின் குளிர்ச்சியாய் உள்ளுணரச் செய்கின்றது. கவிதையில் உலாவும் மனிதர்கள் கல்வியின் மூலம் சூட்சுமங்களை கற்றுக் கொள்ளாத, மனதில் கபடமற்ற, உண்மையான அன்பை ஒளிரச் செய்பவர்களாக காட்சிப்படுகின்றனர். நெஞ்சில் ஈரம் கசியும் அந்த மனிதர்கள் குறித்த காட்சிப் படிமங்களின் வழியாக தமிழச்சியின் மானுட ஈரமும் நம்மை கவர்கின்றன. இது ஒருநிலை.

இன்னொருபுறம் தீப்பெட்டி பொன்வண்டு, கம்பங்கூழ், பனைநுங்கு, பதனீர், பெயர் எழுதிப்பார்த்த நெட்டிலிங்கம் மரம், சினை வயிற்றோடு மேய்ந்த சிவப்பி, ஆலமரம், கனகாம்பரம், கலர்ப்பூந்தி, அணில், வெண்கலச் செம்பு, பாம்படம், மார்கழி காலையின் பூசணிப்பூ, மருதாணி விரல்கள், காத்து கருப்பு, மயிற்பீலி, பரண், பொங்கல், திண்ணை, கைக்கடிகாரம், வளையல், கிளி, சாமியாகிப்போன தங்கச்சிப்பாப்பா, சைக்கிள் என கவிஞரின் வாழ்வைக் கொண்டு செலுத்திய பலவும் கவிதையை சுவீகரித்து நிற்கின்றன.

•Last Updated on ••Monday•, 19 •August• 2019 05:35•• •Read more...•
 

அஞ்சலி: தமிழால் உயர்ந்த உதயணன் (இராமலிங்கம். சிவலிங்கம்)

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் உதயணன்- எழுத்தாளர் உதயணன் ;டொரோண்டோ அவர்கள் 23.7.2019 காலமானார். அவரைப்பற்றி ஏற்கனவே எழுத்தாளர் கே.எஸ்,.சுதாகர்  அவரது சுருதி வலைப்பூவில் எழுதிய இக்கட்டுரையினை அவரது நினைவாகப் பதிவு செய்கின்றோம். - பதிவுகள் -


கடந்த வருட ஆரம்பத்தில் ’பின்லாந்தின் பசுமை நினைவுகள்’ என்ற புத்தகத்தை வாசித்திருந்தேன். உதயணன் என்னும் புனைபெயரைக் கொண்ட ஆர்.சிவலிங்கம் என்பவர் அதன் ஆசிரியர். கனடாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்திருந்த, பல்கலைக்கழகத்தில் என்னுடன் ஒன்றாகப் படித்திருந்த நண்பன்---ஆசிரியரின் மருமகன்--அந்தப் புத்தகத்தை எனக்குத் தந்திருந்தார்.

உதயணன் 1957 – 1980 காலப்பகுதிகளில் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், ஈழநாடு, சிந்தாமணி, தினபதி மலர், சுடர், அஞ்சலி, கலைச்செல்வி, தமிழோசை, தமிழின்பம் போன்றவற்றில் எழுபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிக் குவித்தவர். கல்கி, குமுதம் போன்ற இந்திய இதழ்களிலும் சில படைப்புகள் வந்துள்ளன. கலைச்செல்வியில் ‘இதய வானிலே’, ‘மனப்பாறை’ ஆகிய நாவல்களும், வீரகேசரிப் பிரசுர நாவல்களாக ‘பொன்னான மலரல்லவோ’, ‘அந்தரங்ககீதம்’ (சில மாறுதல்களுடன் ’மனப்பாறை’) போன்ற நாவல்களையும் எழுதியிருக்கின்றார். மேலும் மித்திரன் நாளிதழில் ‘மனக்கோட்டை’ தொடர்கதை, சிந்தாமணியில் ‘கொடிமல்லிகை’ குறுநாவல் வந்துள்ளன. அத்துடன் நகைச்சுவைக் கட்டுரை, இதழியல், மொழிபெயர்ப்பு என்பவற்றிலும் சிறந்து விளங்குகின்றார்.

ஆரம்பத்தில் ஆசிரியராக நாவலப்பிட்டியிலும், பின்னர் அரசாங்க எழுதுவினைஞராக பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றினார். சில வருடங்கள் ஈராக்கில் பணி புரிந்தார்.

களுத்துறையில் வெளிவந்த ‘ஈழதேவி’ இதழின் வளர்ச்சிக்கும், அது பின்னர் இடம் மாறி - சிற்பி சி. சிவசரவணபவனை ஆசிரியராகக் கொண்டு 1958 முதல் 1966 வரை வெளிவந்த ’கலைச்செல்வி’ சஞ்சிகையின் வளர்ச்சியிலும் முன்னின்று உழைத்தவர். இவரது நண்பர் பாலசுப்பிரமணியம் களுத்துறை தமிழ்க்கழகத்தின் சார்பில் ’ஈழதேவி’ இதழை நடத்தி வந்தார். 1956 இல் வந்த ‘சிங்களம் மட்டும்’ சட்டமும் 1958 இனக்கலவரமும் தென் இலங்கையில் ஒரு தமிழ்ச்சஞ்சிகையை நடத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கியபோது, இவர்கள் இருவரும் சிற்பியைச் சந்தித்தார்கள். அந்தச் சந்திப்பே ‘கலைச்செல்வி’ இதழ் வெளிவர அத்திவாரமானது.

இவர் தனது எழுத்துலகிற்கு வித்திட்டவர்களாக யாழ்.பரமேஸ்வராக் கல்லூரி தமிழாசிரியர் இ.கேதீஸ்வரநாதன், மற்றும் வித்துவான் வேந்தனார், பண்டிதர் மு.ஞானப்பிரகாசம் என்பவர்களை நினைவு கூருகின்றார்.

1983 இல் இருந்து 25 வருடங்கள் பின்லாந்தில் வசித்துவந்த உதயணன், தற்போது கனடாவில் வசிக்கின்றார் என்ற செய்தியை நண்பர் சொன்னார். அவரது ‘பின்லாந்தின் பசுமை நினைவுகள்’ நூலை வாசிக்கத் தொடங்கியதும் பின்லாந்து நாட்டினுள் நான் பயணமாகத் தொடங்கினேன். வாசிக்கத் தூண்டும் விதத்தில் நகைச்சுவை உணர்வுடன் அந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தது.

•Last Updated on ••Friday•, 26 •July• 2019 09:04•• •Read more...•
 

குணா கவியழகனை வாசித்தலும், புரிந்துகொள்ளுதலும்

•E-mail• •Print• •PDF•

குணா கவியழகன்குணா கவியழகனின் நூல்கள்குணா கவியழகன் இப்போது அதிகம் எழுதுகிறார். அவரது படைப்புக்கள் குறித்த ஆரவாரங்களும் இப்போது கொஞ்சம் அதிகமாகிவிட்டன. இப்போது அவரது  5 வது நாவலினையும் அவர் எழுதி முடித்துவிட்ட நிலையில் அவர் குறித்த சர்ச்சைகளும் அவர் மீதான விமர்சனங்களும் கூட  இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிட்டன. ஒரு படைப்பாளிக்கு செய்யப்படும் அநீதிகளிலேயே மிகப்பெரியது அவனை ஒற்றை வரியில் ஒரு படிமத்திற்குள் அடக்கி  அவன் மீதான ஒரு ஆழமான முத்திரையை பதித்து விடுவதுதான். அவன் எத்தனை ஆயிரம் படைப்புகளை வெவ்வேறு தளங்களில் படைத்திருந்தாலும் இத்தகைய ஒற்றை வரிப் படிமத்தில் அவனைக் கூண்டில் அடைக்கும் செயலானது  உலகளாவிய ரீதியில் காலாகாலமாக நடக்கின்ற ஒரு செயற்பாடு. இது பாரதியாரிலிருந்து இன்றைய அனோஜன் பாலகிருஷ்ணன் வரை ஒவ்வொரு படைப்பாளியும் எதிர்கொண்ட, எதிர்கொள்கின்ற அவலம். இதில் ஈழ – புகலிட இலக்கிய உலகம் இன்னுமொரு படி மேலே. அரசியல் நெருக்கடிகளுக்குள் அதிகம் சிக்கித் தவித்து வரும் எம் சமூகமானது, தமது நெருக்கடிகளின் மூச்சுத்திணறலினை படைப்பாளியின் மீது பிரயோகிப்பது இன்று சர்வ சாதரணமாகிவிட்டது.  இதில் முக்கியமாக புலி எதிர்ப்பு, புலி ஆதரவு என்ற இரு துருவ எதிர்முனைப்புடன் இயங்கும் எம் சமூகத்தினர்  ஒவ்வொரு படைப்பாளியையும் இந்த நுண்நோக்கி கருவியுடனேயே ஆராய முற்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு படைப்பாளியும் பலத்த நெருக்கடிகளுக்குள்ளும் சிக்கல்களுக்கும் ஒரு வித மன உளைச்சல்களுக்கும் ஆளாகின்றனர். மேற்குறித்த  சிக்கல்களுக்கும் நெருக்கடிகளுக்குள்ளும் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு படைப்பாளியையும் அவன் மீது போர்த்தப்பட்டிருக்கும் ஒற்றைப்பரிமணா படிமங்களை உடைத்து அதில்  இருந்து அவனை மீட்டெடுத்து அவனது பன்முகப் பரிமாணங்களை வெளிப்படுத்தி,  மீண்டும்  வாசகர்கள் முன் அவனை மீள் அறிமுகம் செய்வதும் இன்று எம்முன் உள்ள தலையாய கடைமையாகும்.  

இங்கு குணா கவியழகனும் மேற்குறித்த சுழிகளுக்குள் சிக்குண்டே கிடக்கின்றார். அவர் மீது வாசிக்கபப்டும் குற்றப்பத்திரிகையும் மிகக் குறைவானவையல்ல. எனவே  குணா கவியழகனையும் கூட  ஒரு மீள் வாசிப்பிற்கு உட்படுத்தி அவர் சிக்குண்டு கிடக்கும் படிமக் கூண்டிற்குள் இருந்து அவரை மீட்டெடுத்து அவரது பண்முகப் பரிமாணங்கள் மீதான ஒரு கறாரான விமர்சனத்தை முன் வைக்க வேண்டிய தேவையை வலியுறுத்துவதே  இக்கட்டுரையின் நோக்கமாகும். குணா கவியழகன்  நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம், கர்ப்ப நிலம், போருழல் காதை எனும் 5 நாவல்களை எழுதி முடித்துள்ளார். அவரால் எழுதப்பட்ட படைப்புக்கள் மூலம் அவரை அறிய முற்பட்ட அனைவரும் அவரை ஒரு தமிழ்த் தேசிய தளத்தில் இயங்கும் ஒரு புலி ஆதரவுப் படைப்பாளியாக அடையாளங் காணுகின்றனர். அதனால் புலி ஆதரவு தளத்தில் இயங்கும் வாசகர்கள் அவரை ஒரு ஈழ விடுதலைப் போராட்டத்தின்  உன்னத  வரலாற்றை எழுதும் ஒரு படைப்பாளியாகக் கண்டு புளகாங்கிதம் அடைகின்றனர். புலி எதிர்ப்புத் தளத்தில் இயங்குபவர்கள் அவரை புலிகளின் அராஜகங்களையும் மனித உரிமை மீறல்களையும் ஆதரிக்கும் அல்லது நியாயப்படுத்தும், இறந்து போன தமிழ்த் தேசியத்திற்கு உயிர் கொடுக்க முனையும்  ஒரு பாசிச எழுத்தாளராக அடையாளப்படுத்துகின்றனர்.  குணா கவியழகன் மீது குத்தபட்ட இந்த முத்திரையை அகற்றுவது என்பது இலகுவான விடயம் அல்ல. இதற்கு இவரது வாழ்வு, சூழல், பின்புலம் குறித்த விசாரணையுடன்  இவரது நூல்களையும் மீள் வாசிப்பிற்கு உட்படுத்தி ஒரு மீள் பரிசீலனை செய்வது மிகவும்  அவசியமானதாகும்.

•Last Updated on ••Tuesday•, 16 •July• 2019 22:21•• •Read more...•
 

என் பார்வையில் கண்ணதாசன்

•E-mail• •Print• •PDF•

கவிஞர் கண்ணதாசன்காலத்தை வென்றவன்.காவியம் ஆனவன். வேதனை தீர்ப்பவன். வெற்றித்திருமகன் எனப் பலவித முகங்களில் கண்ணதாசனை நான் பார்க்கின்றேன்.சிறுகூடல் பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து சிந்தனைகளின் ஊற்றாக புறப்பட்டவர்தான் கவி அரசர்.முத்தையா- கண்ணதாசன் ஆனதே ஒரு முக்கிய சம்பவம்தான். "முத்தைத்தரு" என்று அருணகியாரைப் பாடவைத்து - அவரது வாழ்க்கையையே மாற்றியது ஆண்டவனது அனுக்கிரகம். முத்தையா என்று தந்தை வைத்தபெயரும்அவரைச் சமூகத்தில் ஒரு முத்தாகவே மிளிரச்செய்தது.கண்ணதாசன் என்னும் பெயரும் அவருக்குஉலகில் பெரும் புகழைத்தேடித்தந்தது.இவையாவும் ஆண்டவனின் அனுக்கிரகத்தால் ஆகியிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. அருணகிரியார் முருகன் அருள் பெற்றதால் மடைதிறந்த வெள்ளமெனச் சந்தப்பாடல்கள் வந்து குவிந்தன. எங்கள் கவியரசரும் ஆண்டவனின் வரம்பெற்று வந்தவராகையால் கம்பனுக்குப் பிறகு " சந்தத்தை " தமிழில் கையாண்ட பெருமைக்கு உரியவர் ஆகின்றார்.

நெற்றியில் விபூதியும், வாயிலே முருகனது நாமத்தையும் துணையென எண்ணி இருந்தவர் கண்ணதாசன். சேரக்கூடாத கூடாரத்துக்குள் சேர்ந்ததால் அவரின் பேச்சும் போக்கும் , ஏன் எழுத்தும் கூட மாறியது. ஆனால் அவரின் அடிமனத்தில் ஆழமாகப் பதிந்து நின்ற ஆண்டவன் நினைப்பு மட்டும் அப்படியேதான் அடங்கிக்கிடந்தது. கால மும்கனிந்துவரக் கடவுள் நம்பிக்கை கண்ணதாசனிடம் மேலோங்கத்தொடங்கியது.

நாத்திகம் பேசி நாத்தழும் பேற்றியும், கடவுள் கண்டனம் செய்தும் நின்ற கண்ண தாசன் கடவுளே கதியென்னும் நிலைக்கு வந்து விட்டதை அவர் வாயிலாகவே நாங்கள் அறிந்து கொள்ளமுடிகிறது." நாத்தினாக இருந்தது இரண்டு, மூன்று , ஆண்டுகளே "  கந்தபுராணம் , பெரியபுராணம், கம்பராமாயணம், திருவாசகம், திருப்பாவை, நாலாயி ரத்திவ்யபிரபந்தம், வில்லிபாரதம் ,இவற்றை எல்லாம் கண்டனம் பண்ணப் படித்தேன் ஆனால் அவற்றைப் படிக்கப் படிக்க என்மனம் அவற்றில் ஆழ்ந்து விட்டது என்று அவரே சொல்லுகின்றார்." நாத்திக வாதம் என்பது அரசியல் நோக்கங் கொண்டது என்பதையும், உள்மனத்தின் உண்மையான உணர்வல்ல என்பதையும் உணர்ந்தேன் " என்பது கண்ண தாசனின் வாக்குமூலமாகும்.

கண்ணதாசன் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல் என்ன தெரியுமா ? " திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா " என்பதாகும்.அவரின் படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் " கிருஷ்ணர்" படமாகும்

•Last Updated on ••Tuesday•, 25 •June• 2019 08:26•• •Read more...•
 

கவியரசர் கண்ணதாசன் 'தென்றல்' என வந்த தீந்தமிழ்க் கவிஞன்..! (கண்ணதாசன் பிறந்த தினம் - யூன் 24)

•E-mail• •Print• •PDF•

கவியரசர் கண்ணதாசன் 'தென்றல்' என வந்த தீந்தமிழ்க் கவிஞன்..! (கண்ணதாசன் பிறந்த தினம் - யூன் 24) - வி. ரி. இளங்கோவன். -கவியரசர் கண்ணதாசனின் 'தென்றல்' பத்திரிகை அறுபதுகளின் முற்பகுதியில் அரசியல் - இலக்கிய ஆர்வலர்களின் கைகளில் தவழ்ந்தது. ஒவ்வொரு தமிழாசிரியர் கைகளிலும் 'தென்றல்' தடவிச் சென்றது எனச் சொல்வார்கள்..! அவர் தி. மு. க.வைவிட்டு வெளியேறி ஈ. வி. கே. சம்பத்தின் தலைமையில் 'தமிழ்த் தேசியக் கட்சி'யைக் கட்டியெழுப்பிச் செயற்பட்ட அக்காலத்தில் காரசாரமான அரசியல் கட்டுரைகளைத் தென்றலில் எழுதிவந்தார். அண்ணாத்துரையையும் அவர்தம் தம்பிமாரையும் 'கோயபல்சும் கூட்டாளிகளும்' என்று திமுகவின் திராவிட நாடுக் கோரிக்கையைக் கடுமையாகத் தாக்கி எழுதினார். தன் மனதில் தோன்றுவதை அப்படியேபேசுவது - எழுதுவது அவரது குணாம்சம். வஞ்சகமற்ற இதயமுள்ளவர் என அவரைப் புரிந்துகொண்டவர்கள் கூறுவார்கள்.

காமராசரைத் திட்டினார் - புகழ்ந்தார்.
அண்ணாவைப் புகழ்ந்தார் - திட்டினார்.
நேருவைத் திட்டினார் - புகழ்ந்தார்.
இந்திராவைத் திட்டினார் - புகழ்ந்தார்.
கருணாநிதியைப் புகழ்ந்தார் - திட்டினார்.
எம். ஜி. ஆரைத் திட்டினார் - புகழ்ந்தார்.

அவரின் தாக்குதலுக்கு இலக்காகாத தலைவர்களே தமிழகத்தில் இல்லையெனலாம். ஆனால் யாரும் அவர்மீது கோபங்கொண்டு வசைபாடவில்லை. அவரது அழகு தமிழ்த் தாக்குதல்களை அவர்கள் இரசித்தனர் என்றே கூறலாம். இதனை எம். ஜி. ஆரே கூறியுள்ளார். சீனப்பெருந்தலைவர் மாஓ - வை 'மா சே தூ' என்று 'ராக் அன் ரோல்' நக்கல் கவிதை பாடினார். 'சிவப்பு நிலா மாஓ' எனப் புகழ்ந்தும் பாடினார்.

'பஞ்சைப் பராரிகள் ஒன்று பட்டால்
அது கோட்டை தகர்த்திடும் கூட்டு
அதைக் கூட்டட்டும் நாட்டில் என் பாட்டு'..

என எழுச்சிக் கவிதையும் படித்தார்.

கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம் மறைந்தபோது ஆறாத்துயர்கொண்டு எழுதினார்.

''மேடையில் ஓர் வேங்கை பாயுமே கைகளை
விண்ணோக்கி வீசி வருமே
வீறுகொண் டோர்யானை போரிற் கிளம்புமே
வெஞ்சேனை முறுக்கேறுமே... ..."

எனத் தொடர்ந்தது அவர் எழுத்து..!

•Last Updated on ••Tuesday•, 25 •June• 2019 08:25•• •Read more...•
 

பாலகுமாரனின் தாயுமானவன் நாவலில் பெண் சித்திரிப்பு

•E-mail• •Print• •PDF•

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -பெண் மென்மையானவள், அமைதியானவள், அடக்கமானவள், சிந்திக்கும் தகுதியுற்றவள், ஆணைச் சார்ந்தே வாழ வேண்டியவள் என்று உருவாக்கி வைத்த கருத்தாக்கங்களும் அதனை நடைமுறைப்படுத்திய சமூகமும் இன்று மாற்றம் அடைந்து வருகின்றன. மக்கள் வாழ்வை வெளிப்படுத்துவதில் மற்ற இலக்கியங்களைக் காட்டிலும் நாவல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. எனவே சமுதாயத்தில் மகளிரின் நிலை குறித்தும் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் தாயுமானவன் நாவலில் கூறும் செய்திகள் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.

பாலகுமாரனின் பெண்ணியச்சிந்தனை
பாலகுமாரன் அடிப்படையில் பெண்ணியச் சிந்தனையாளராக இருக்கிறார். அவருடைய எல்லாப் படைப்புகளும் பெண்களுக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டவைகளாக இருக்கின்றன. பெண்கள் தம் வாழ்வில் எதிர்நோக்கும் வாழ்வியல் சிக்கல்கள் பல உள்ளன. பெண் என்பவள் குடும்பத்தைத் தாங்கும் தூண் போன்றவள். அவளாளையே குடும்பம் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் தூய்மையானதாகவும் பாசத்தின் பிறப்பிடமாகவும்  நம்பிக்கையின் தாயகவும் விளங்குகின்றது. இதனை, பாலகுமாரன்.

”யப்பா…! வேலை செய்யற இடம் முன்ன பின்ன இருக்கலாம் சரசு.வீடுன்ற இடம் நெஞ்சுக்கு இதமா இருக்கணும்.வீடு இதமா இருந்துச்சுன்னா எத்தினி துக்கமும், எவ்வளவு கஷ்டமும் சமாளிச்சுட முடியும். வீட்டை வீடா வச்சுக்கற பொம்பளை இருந்தா போறும், ஆயிரம் யானை பலம்.”( பாலகுமாரன், தாயுமானவன். பக்.127)

இவ்வாறு தம் 'தாயுமானவன்' எனும் நாவலில் கூறியுள்ளார். வாழ்வின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அவைத் தொடர்ந்து வருகின்றன. சிக்கல்களை அவர்கள் எதிர்க்கும் போது அவர்கள் ஆடவருக்கு எதிராகப் போராடுகின்றனர் எனும் நிலையும் உருவாகியது. மேலும், பெண் கணவனை நினைத்து தினமும் பயப்படுகின்றாள் என்பதை, ”உங்களையும் சுருட்டி கைக்குள்ள போட்டுக் கிட்டாங்களோன்னு பயம்தான்.” (மேற்படி. பக்.237) என்று கூறுகின்றார். பெண்களின் சிக்கல் என்பது வெறுமனே பெண்களின் சிக்கல்களாகா. அவை வாழ்க்கையின் சூழ்நிலைகளில் இருந்து வந்தவைகள் தான். அவற்றை பாலகுமாரன் தன் நாவல்களில் கீழ்க்காணுமாறு விளக்குகிறார்.

"வாழ்க்கை நாடகம்தான். எல்லாரும் எங்கோ ஓரிடத்தில் நடிக்க வேண்டியிருக்கிறது என்பது உண்மை தான்.ஒரு சபை உன்னிப்பாய் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிற உணர்வு நடிகனுக்கு அவசியம்.அந்த உணர்வுக்குப் பெயர்தான் மென்டல் பேலன்ஸ். சபையின் நாடித் துடிப்பை உணர்ந்தபடியே நடிப்பவன்தான் சிறக்க முடியும்."(மேற்படி. பக்.66)

"மேல மேலன்னு போறவனுக்கு இடறத்தான் செய்யும்.கைபிடிச்ச பிடி நழுவிரத்தம் வரும்.சறுக்கின இடத்துலேர்ந்து நகரணும்.பல்லைக் கடிச்சுக்கிட்டு மேலே ஏறணும்.மலையேறி நிக்கறதுதான் வாழ்க்கைன்னு வந்துட்டா சறுக்கலுக்குப் பயப்படக் கூடாது சரசு.”(மேற்படி. பக்.125)

”சிங்கத்தைக் கூண்டில் அடைத்து வளர்த்தாலும் சீறும்.சற்று பிடி நெகிழ சிதற அடிக்கும்.வேலியில் அமர்ந்த ஓணானை விலைக்கு வாங்குவானேன்.”( (மேற்படி. பக்.140)

வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை பாலகுமாரன் குறிப்பிடுவதைப்போல மிக லாவகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் நாவல் இலக்கியங்கள் பொதுமைப்படுத்துகின்றன.

•Last Updated on ••Wednesday•, 19 •June• 2019 09:48•• •Read more...•
 

பண்பாட்டுக்கூறுகள் மோதும் முரண்புள்ளிகளில் தவம் கலைக்கும் கதையாளன் ஆசி. கந்தராஜா

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் ஆசி.கந்தராஜாதாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த பின், வசிக்கும் நாட்டின் பண்பாட்டை தன்னிலை சார்ந்து விவாதித்துக் கொள்ளுதல் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய கூறு. அதாவது தனது பண்பாட்டை மற்றையை நாட்டின் பண்பாட்டுடன் விவாதித்து மதிப்பிட்டுக் கொள்ளுதல். மனிதன் ஒரு பண்பாட்டின் சிறுதுளி. அவன் எங்கு சென்றாலும் தனது பண்பாட்டை சுமந்துகொண்டே செல்வான். அப்பண்பாடு அகத்தில் புதைந்து -அவனுக்குள்ளே தூங்காமல் - நெளிந்தவாறே இருக்கும். செல்லும் இடத்தில் அவன் எதிர்நோக்கும் பண்பாட்டுடன் அவனுள்ளே புதைந்திருக்கும் அவனது பண்பாடு விழித்து மோதும். இந்த இரண்டு பண்பாடுகளின் மதிப்பீடுகள்தான் மானுட தரிசனத்தை முன்வைக்கக் கூடியன.

அ.முத்துலிங்கம் பெரும்பாலான நாடுகளுக்கு பயணம் செய்தவர். குறிப்பாக ஆபிரிக்க நாடுகளுக்கு. அங்கு தான் சந்திந்த - அவதானிந்த - மனிதர்களின் ஊடாக கண்டடைந்த தரிசனத்தை கதைகளாகப் புனைந்தார். ஏராளமான நுண்தகவல்களும் நகைச்சுவை உணர்வும் கதையை மேலோட்டமாக நகர்த்தினாலும் உள்ளே இருக்கும் மானுட நாடகீயம் அந்நியப் பண்பாட்டைப் பற்றிப் பேசுபவைதான்.

ஏறக்குறைய ஆசி.கந்தராஜவுக்கும், அ.முத்துலிங்கம் போன்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வசித்த வாழ்க்கை அமைந்தது. அங்கு வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் ஊடாக கிடைத்த தரிசனத்தை அ.முத்துலிங்கம் போன்று கதையாக எழுதியிருக்கிறார். இருவருக்கும் இடையே ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் உண்டு. ஆசி.கந்தராஜாவின் கதைகளிலும் அ.முத்துலிங்கத்தின் கதைகள் போல ஏராளமான நுண்தகவல்கள் பின்னிப்பிணைந்து வரும். குறிப்பாக தாவரவியல், விவசாயம் சார்ந்த இடங்களில் ஆசி.கந்தராஜா ஏராளமான தகவல்களை அள்ளி வழங்குவார். சில நேரங்களில் வரைவிலக்கணம் போன்ற தன்மையை இந்த தகவல்கள் பெற்று விடுகின்றன. அ.முத்துலிங்கத்தின் எழுத்துகளில் இந்த வரைவிலக்கணத் தன்மைகள் இருப்பதில்லை. கதையோடு இயல்பாக அவை பொருந்திப் போகின்றன.எஸ்.பொன்னுத்துரைக்குப் பின்னர் யாழ்ப்பாண வட்டார வழக்கின் செழுமையை ஆசி.கந்தராஜாவின் கதைகளில் நோக்க இயலுகிறது.

சமீபத்தில் வெளியாகிய ஆசி.கந்தராஜாவின் ‘கள்ளக் கணக்கு’ தொகுப்பில் மொத்தம் பதின்மூன்று சிறுகதைகள் உள்ளன. புலம்பெயர் நிலங்களில் பெரும்பாலான கதைகள் நிகழ்கின்றன. பெரும்பாலும் அவுஸ்ரேலியாவில்.

இத்தொகுப்பின் கதை சொல்லிகள் 1983 ஆம் ஆண்டு ஜூலை வன்செயலால் நேரடியாகப் பாதிக்கப்பட்டோ அல்லது அந்தக் காலப்பகுதியை ஒட்டி நாட்டை விட்டு புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்களாகவோ இருக்கிறார்கள். இவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பல்கலைக்கழக வாழ்க்கையை நிறைவு செய்து தொழில் ரீதியாக முன்னே பாய முற்படுபவர்கள்.

•Last Updated on ••Friday•, 14 •June• 2019 07:06•• •Read more...•
 

அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா என்னும் யுகபுருஷர்

•E-mail• •Print• •PDF•

அல்வாயூர்க் கவிஞர்  மு. செல்லையா என்னும் யுகபுருஷர்அறிமுகம்
வண்டுவிடுதூதும் வளர்பிறையும் அறியாதார் ஈழத்து இலக்கிய உலகில் இருக்கமுடியாது. சிறந்ததொரு கவிஞராகக் கால்பதித்து வேரூன்றிய திரு மு.செல்லையா அவர்களின் நுண்மதியும் பன்முக ஆளுமையும் அவரை ஓர் யுகபுருஷராக மிளிரச் செய்துள்ளது. நல்ல தமிழ் ஆசிரியராக, நிருவாகியாக, தலைசிறந்த கவிஞராக. சோதிடராக ஆற்றல் மிகுந்த தலைமைத்துவப் பண்புடையவராக வாழ்ந்து காட்டியமை அவருடைய பல்பரிமாணத் திறன்களுக்குச் சான்றாகும். கவிஞர் அவர்களுடைய தொலைநோக்கும் அவற்றை அடைவதற்குரிய காலத்தோடு ஒட்டிய செயற்பாடுகளும் முழுத்தமிழ்ச் சமுதாயமே போற்றுமளவுக்கு அமைந்திருந்தமை அவரது வெற்றியாகும். எமது சமுதாயங்களின் வளர்ச்சிப் பாதைகள் ஒவ்வொன்றிலும் கவிஞர் அவர்களின் பாதச்சுவடுகள் பதிந்துள்ளன. அவருடைய வகிபாகங்கள் ஒவ்வொன்றினதும் முக்கியத்துவம் காலச்சூழலோடு ஒட்டிப் பார்க்கும்போது தெளிவாகப் புலப்படும்.

மு. செல்லையாவின் சமூக அசைவியக்கத்துக்கான கல்விச் செயற்பாடுகள்
திரு மு.செல்லையாவின் சமூக அசைவியக்கத்துக்கான கல்விச் செயற்பாடுகளை அவர் தலைமை ஆசிரியராகச் செயற்பட்டமை, ஆசிரியர்களை உருவாக்கியமை,  பாடசாலையை உருவாக்கியமை மற்றும் கல்வி மேம்பாடு குறித்து மாணவர்களை ஊக்குவித்தமை முதலிய விடயங்களின் கீழ் ஆராயலாம்.

வடமராட்சியில் செயற்பட்டுவந்த பல உயர்சைவப் பாடசாலைகள் மிகவும் மட்டுப்படுத்திய நிலையில் சிறுபான்மை மக்களுக்குக் கல்வி வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருந்தாலும் அவை உரியமுறையில் உரிமைகளை அனுபவிக்க இடமளிக்கவில்லை. அக்காலத்தில் கிறீத்தவ மதநிறுவனங்கள் உருவாக்கிய பாடசாலைகள்கூட உயர் சமூகத்தவரின் எதிப்புகளுக்கு அஞ்சியவையாக கற்கும் வாய்ப்புகளை விரிவுபடுத்த விரும்பாத சூழலில், எமது சமூகத்தவர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவுசெய்ய வேண்டுமானால் தனியானதொரு பாடசாலை அமைக்கப்படுதல் வேண்டும் என்பதில் மிகஉறுதியாக இருந்தனர். இத்தகைய முனைப்பான சிந்தனையே சைவகலைஞான சபையின் வழிநடத்தலால் தேவரையாளிச் சைவவித்தியாசாலை உருவாகக் காரணமாயிற்று. எமது சமூகத்தவர்களின் கல்வி முன்னேற்றத்தில் தேவரையாளிச் சைவ வித்தியாசாலையும் பிற்காலங்களில் தேவரையாளி இந்துக் கல்லூரியும் செய்த  பங்களிப்புப்பற்றி நாம் எல்லோரும் அறிந்துள்ளோம். தேவரையாளிச் சைவ வித்தியாசாலையில் உபாத்தியாயர் அவர்கள் 24 ஆண்டுகள் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுச் சிறந்தமுறையில் அதனை நடாத்தி வெற்றிகள் கண்டார். இக்காலத்தில் தேவரையாளி சைவ வித்தியாசாலை ஓர் ஆரம்பப் பாடசாலையாக இருந்தாலும் பாடசாலையின் அயற்சூழலில் இருந்த பிள்ளைகள் எல்லோரும் கல்வியில் பங்கேற்பதற்குரிய விழிப்புணர்வு உண்டாயிற்று. பெற்றோரும் பிள்ளைகளும் கல்வியில் ஊக்குவிக்கப்பட்டனர்.

ஆயினும், இப்பாடசாலை எதிர்நோக்கிய முக்கியமான அறைகூவலாக சைவசமயம் கற்பிப்பதற்குப் போதிய ஆசிரியர்கள் இன்மை அமைந்தது. ஏனைய பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இருந்தார்கள் எனினும் சைவப்பாடசாலை ஒன்றின்; அடிப்படைத் தேவைகளை அவ்வாசிரியர்களால் நிறைவுசெய்ய முடியவில்லை   

இத்தருணத்தில் உபாத்தியாயர் அவர்களின் முதன்மையானதும் முக்கியமானதுமான பணி பாடசாலைக்குத் தேவையான சைவஆசிரியர்களை உருவாக்குதலாக அமைந்தது. திரு கா.சூரன் அவர்களின் வழிகாட்டலில் தமிழை நன்கு கற்று,  தமது ஆற்றலை மேம்படுத்திக் கொண்ட உபாத்தியாயர் அவர்கள் தாமே முன்னின்று தமது மாணவர்களுக்கும் கற்பித்து அவர்களை ஆசிரியர்களாக உருவாக்கினார். ஆசிரியர் தொழிலுக்கு மெருகூட்டும் வகையில் அன்றைய காலச் சூழலுக்கேற்ற எதிப்பார்ப்புகளைத் துரிதமாக மேம்படுத்தும் என்ற தொலைநோக்கு இங்கு வெற்றி காணப்பட்டுள்ளமை சமூக அசைவியக்கத்திற்கான அடிப்படையாகும். இன்று எங்கள் சமூகங்களில் அநேகர் ஆசிரியர்களாக இருப்பதற்கும் அவர்களின் வழிகாட்டலில் அநேகமானோர் கல்வியில் முன்னேறியிருப்பதற்கும் இப்பணி மூலக்கல்லாய் அமைந்தது.

•Last Updated on ••Tuesday•, 11 •June• 2019 08:01•• •Read more...•
 

புகலிட இலக்கியத்தில் மூத்த பெண்ணிய எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் படைப்புகள்: ஒரு பார்வை

•E-mail• •Print• •PDF•

புலம்பெயர் எழுத்தாளரான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் , அக்கரைப்பற்று - கோளாவில்  கிராமத்தில் 01.01.1943 இல் பிறந்தார்புலம்பெயர் எழுத்தாளரான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் , அக்கரைப்பற்று - கோளாவில்  கிராமத்தில் 01.01.1943 இல் பிறந்தார். இராஜேஸ்வரி, கந்தப்பர் குழந்தைவேல் - கந்தையா மாரிமுத்து ஆகியோரின் மூன்றாவது குழந்தையாவார். இராஜேஸ்வரி  1969 ஆம் ஆண்டு பாலசுப்பிரமணியம் அவர்களை திருமணம் செய்து,  இராஜேஸ்வரி மூன்று பிள்ளைகளுக்குத் தாயானவர். 1970களில் இருந்து இன்றுவரை இலண்டனில்   வசித்து வருகிறார். இலண்டனிலே இவர் தம்மை முழுமையாக இலக்கிய உலகில் அர்ப்பணித்துள்ளார். இவர் சிறுகதை,  நாவல், கட்டுரைகள் முதலான ஆக்க இலக்கியங்களைப் படைத்துள்ளார். இராஜேஸ்வரி,  யாழ்ப்பாணத்தில் தாதியாகப் பணி புரிந்தார். பின்னர்,  இலண்டன் சென்று பல ஆண்டுகளுக்குப் பின், தமது குழந்தைகள் வளர்ந்த பின் பல துறைகளில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். இங்கிலாந்தில் திரைப்படத்துறையில் சிறப்புப் பட்டம் (BA) (London College of Printing 1988)  பெற்ற முதல் ஆசியப் பெண்மணியாகக் கருதப்படுகிறார். மானிட மருத்துவ வரலாற்றுத் துறையில் முதுமாணிப் பட்டம் (MA) (1996 London University) பெற்ற முதல் ஆசியப் பெண்ணாகவும் கருதப்படுகிறார்.

இலங்கையில் 1960 களுக்குப் பின்னர், பல பெண் எழுத்தாளர்கள் இலக்கியத் துறையில் பிரவேசிக்கத் தொடங்கினர். இக்காலப்பகுதியில் இலக்கிய ரீதியான தமிழகத் தொடர்பு நெருக்கமுற்றமையும் எழுத்தாளர்களின் உருவாக்கத்திற்கு துணை புரிந்தது. இக்காலப் பகுதியில் பெண்கள் தொடர்பாக அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடிய கதைகளை முதல் முதலாக எழுத முற்பட்டவர் பவானி ஆழ்வாப்பிள்ளை. இக்கால கட்டத்திலே இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அன்னலட்சுமி இராசதுரை, நயீமா சித்திக், இராஜம் புஸ்பவனம், பூரணி, பத்மா சேமகாந்தன், தாமரைச் செல்வி, மண்டூர் அசோகா போன்ற பெண் எழுத்தாளர்களையும் விதந்து கூறலாம். அதிகளவு புலம்பெயர் நாவல், சிறுகதைகளைப் படைத்த பெண்ணிய எழுத்தாளராகவும் இன்றுவரை இலக்கிய உலகில் எழுதுபவராகவும் ஈழத்துப் புலம்பெயர் எழுத்தாளராகவும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,   தமது எழுத்துக்களால் பிரபல்யம் அடைந்துள்ளார். மருத்துவ நூல்கள், ஆராய்ச்சி நூல் முதலானவற்றையும் சிறுகதை, நாவல் முதலிய ஆக்க இலக்கியங்களையும் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளார். 

மருத்துவ நூல்கள்

1.    தாயும் சேயும்
இவரது ‘தாயும் சேயும்’ என்ற மருத்துவ நூல் 2002ஆம் ஆண்டு மீரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஒரு பெண்ணின் முக்கிய சவால்களான கருத்தரித்தல், கர்ப்ப காலம், மகப்பேறு, புதிய சிசுவை வளர்த்தெடுத்தல் முதலானவற்றை இராஜேஸ்வரியின் தாயும் சேயும் என்ற நூல் எடுத்துக் கூறுவதாக அமைகின்றது. இந்நூலில் தாயினதும் சேயினதும் உடல், உள வளர்ச்சி பற்றி விபரிக்க முனைந்துள்ளார். இந்நூல் தாய்மையின் ஆரம்பத்தில் இருந்து குழந்தை பிறந்து முதல் ஐந்து வருடங்களையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.

2.    உங்கள் உடல் உளம் பாலியல் நலம் பற்றி
மருத்துவ அறிவியல் வகையைச் சேர்ந்த இந்நூல் 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது. இது இவரது இரண்டாவது மருத்துவ நூலாகும். இது தமிழ் மக்களின் ஆரோக்கிய விருத்தியை நோக்காகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.  இருதய நோய்கள், நீரிழிவு, உளவியல், பாலியல் முதலானவை பற்றி இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது. இவை பல ஆங்கிலப் புத்தகங்களில் உள்ள விடயங்களைத் தழுவி எழுதப்பட்டுள்ளன.

•Last Updated on ••Saturday•, 11 •May• 2019 06:11•• •Read more...•
 

அஞ்சலி: தோப்பில் முஹம்மது மீரான்!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான்நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளிகளில் முக்கியமானவர்களிலொருவர் தோப்பில் முகம்மது மீரான். அவர் மறைந்த செய்தியினை முகநூலில் நண்பர்கள் பலரின் பதிவுகள் தாங்கி வந்தன.  அமைதியாக எழுத்துலகில் இயங்கிக்கொண்டிருந்த படைப்பாளி தோப்பில் முகம்மது மீரான். பல்வகையான இன, மத ரீதியாக இன்னல்கள் பலவற்றை முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும்  இன்றைய காலகட்டத்தில் தோப்பில் முகம்மது மீரானின் படைப்புகள் இன்னுமொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. அது: அது அவரது படைப்புகள் முஸ்லீம் மக்களின் சமுதாயத்தை, அவர்கள் மத்தியில் நிலவும் பல்வகைக் கருத்துகளை, அவர்கள் மத்தியில் பேசப்படும் மொழியினை இவற்றுடன் அவர்கள்தம் வாழ்வினை வெளிப்படுத்தும் படைப்புகள். அவை இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினையும் இலக்கியச் சுவைத்தலுக்கு மேலதிகமாகத் தருகின்றன. அத்துடன் அவரது படைப்புகள் முஸ்லீம் மக்கள் மத்தியில் நிலவும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் விமர்சிப்பதையும் காண முடிகின்றது. அவ்வகையிலும் அவர் படைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

படைப்பாளியொருவருக்கு நாம் செய்யும்  முறையான அஞ்சலி அவரது  படைப்புகளை வாசிப்பதுதான். அவ்வகையில் அவருக்கு அஞ்சலி செய்யும் இத்தருணத்தில் அவரது வலைப்பதிவான 'வேர்களின் பேச்சு தோப்பில் முஹம்மது மீரான்' பக்கத்திலிருந்து அவரது நேர்காணலொன்றினையும், அவரது முக்கிய மூன்று நாவல்களில் இரண்டான 'துறைமுகம்', 'சாய்வு நாற்காலி' ஆகிய நாவல்கள் பற்றிய சுருக்கமான அறிமுகக் கட்டுரைகளிரண்டையும் இங்கு தொகுத்துத் தருகின்றேன். அஞ்சலி செய்யும் ஒவ்வொருவரும் இத்தருணத்தில் அவற்றைப்படிப்பது அவசியம். அவரை, அவரது படைப்புகளை மற்றும் அவரது எண்ணங்களைப் புரிந்துகொள்வதற்கு இது மிகவும் அவசியமென்று கருதுகின்றேன்.

இவரைப்பற்றிய கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாக் குறிப்பு: தோப்பில் முகமது மீரான் https://ta.wikipedia.org/s/11kk

தோப்பில் முகமது மீரான் என்பவர் (செப்டம்பர் 26, 1944 - மே 10, 2019)[1] தமிழ், மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார். முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் ஜலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997 இல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.

விருதுகள்: சாகித்திய அகாதமி விருது - சாய்வு நாற்காலி (1997),  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது,  இலக்கியச் சிந்தனை விருது,  லில்லி தேவசிகாமணி விருது,  தமிழக அரசு விருது, அமுதன் அடிகள் இலக்கிய விருது &  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது

எழுதிய நூல்கள்: (முழுமையானதல்ல)
புதினங்கள்: ஒரு கடலோரக் கிராமத்தின் கதை (1988),  துறைமுகம் (1991), கூனன் தோப்பு 1993),  சாய்வு நாற்காலி (1997), அஞ்சுவண்ணன் தெரு,  குடியேற்றம்(2017)
சிறுகதைத் தொகுப்புகள்: அன்புக்கு முதுமை இல்லை,  தங்கரசு, அனந்தசயனம் காலனி, ஒரு குட்டித் தீவின் வரிப்படம், தோப்பில் முகமது மீரான் கதைகள், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
மொழிபெயர்ப்புகள்:  தெய்வத்தின் கண்ணே (என்பி. முகமது), வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கை வரலாறு (ஆய்வுக் கட்டுரை) ( எம். என். கரச்சேரி)

•Last Updated on ••Friday•, 10 •May• 2019 09:10•• •Read more...•
 

பாலியல் வன்முறை

•E-mail• •Print• •PDF•

- ஸ்ரீரஞ்சனி -- நெதர்லாந்தில் நிகழ்ந்த 34வது பெண்கள் சந்திப்பின் போது வாசிக்கப்பட்ட கட்டுரை -

பாலியல் வன்முறை என்பது பாலியல் இலக்கை நோக்கிய உடல்ரீதியான மற்றும் உளரீதியான ஒரு துன்புறுத்தல் ஆகும். எங்களுடைய கலாசாரம் மற்றும் அமைப்புமுறைக் கட்டமைப்புகளால் ஆதரிக்கப்படும் இது அதிகாரத்தின் ஒரு வகையான வெளிப்படுத்தலாக இருக்கிறது. பால்மயமாக்கப்பட்ட இந்த வன்முறையைச் சமூகத்தில் இருந்து அகற்றுவதற்கு, அதன் பல்வகைமையான தோற்றுவாய்களை அடையாளம்காணல், அவை பற்றிப் பேசல்,  அவற்றை அகற்றுவதற்கான தீர்வுகளை இனம்கண்டறிதல் போன்றவை முக்கியமானவையாக இருக்கின்றன.

வாழ்க்கைக் காலத்தின் ஏதோ ஒரு கட்டத்தில் மூன்றில் ஒரு பெண்ணும், ஆறில் ஒரு ஆணும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆண் எனத் தன்னை அடையாளம் காண்பவர்களுக்கும் பெண் எனத் தன்னை அடையாளம் காண்பவர்களுக்கும் பாலியல் வன்முறை பொதுவானதாயினும், இன்றைய எனது பார்வை தமிழ் பெண்களாகிய எங்களை நோக்கியதாகத்தான் இருக்கப்போகிறது.

இலங்கையில் வாழ்ந்த எங்களுக்கு ரெயினில், பஸ்சில் போகும்போது நிகழ்ந்த பலவகையான பாலியல் வன்முறைகள் நினைவிருக்கலாம். ஆனால், அந்த நேரம் அது பற்றி நான் எதுவுமே செய்யவில்லை. அப்படித்தான் எங்களில் பலர் இருந்திருப்போம். அப்படியான நேரங்களில் முடிந்தால் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருப்போம்; நகரவே முடியாத நெருக்கடி எனில், அது எவ்வளவுதான் அருவருப்பைத் தந்திருந்தாலும் அதைச் சகித்திருப்போம். இவ்வகையான சம்பவங்கள் நாங்களும் அவற்றை விரும்புகிறோம் என்ற எண்ணத்தை அல்லது நாம் எதுவும் செய்யமாட்டோம் என்பதால் என்னவும் செய்யலாமென்ற தைரியத்தை அந்தப் பாலியல் வன்முறையாளர்களுக்குக் கொடுத்திருக்கக்கூடும். அதனாலும் அந்தப் பாலியல் வன்முறையாளர்கள் அப்படியான செயல்களை மேலும் மேலும் செய்திருக்கலாம். எனவே முடிந்தவரை உடனடியான எதிர்ப்பைச் சொல்லல் மிகவும் முக்கியமாகும். முடியாதபோது அவரவர் விருப்பத்துக்கும் செளகரியத்துக்கும் ஏற்ப அதனை எப்படி மேவுவது என ஆராய்வது நல்லது.

பாலியல் வன்புணர்வு, பாலியல் தொந்தரவு, பாலியல் உறுப்புக்களை வெளிக்காட்டல், விரும்பத்தகாத கருத்துரைகள் சொல்லல், இரத்த உறவுள்ளவர்களுக்குள் வன்புணர்வு எனப் பலவகைகளில் பெண்கள் மீது இந்தப் பாலியல் வன்முறை நடாத்தப்படுகிறது. 

ஆரம்ப காலங்களில் துணையை இழந்த பெண்ணை அவனுடன் உடன்கட்டை ஏற்றுதலில் ஆரம்பித்த பால் அடிப்படையிலான இந்தப் பாலியல் வன்முறை, பின் கைம்மைகாப்பது எனத் தரையில் படுக்கும்படி, தலைக்கு மொட்டையடிக்கும்படி, சுகங்களைத் துறக்கும்படி அறிவுறுத்தி, அதன்பின் வெள்ளைச் சீலை, பூ, பொட்டு இன்மையுடனான ஓர் அபசகுணமாக பெண்ணை உருவகப்படுத்தியது. தற்போது, காலத்துடனான மாற்றமாக மேலும் பல்வேறு புது வடிவங்களில் இந்தப் பாலியல் வன்முறை உருவெடுத்திருக்கிறது. வடிவங்கள் மாறியிருக்கின்றனவே அன்றி பெண்கள் மேலான இந்தப் பாலியல் வன்முறையின் தீவிரம் குறையவில்லை.

•Last Updated on ••Thursday•, 09 •May• 2019 22:59•• •Read more...•
 

தமிழ் மொழியின் எதிர்காலம்!

•E-mail• •Print• •PDF•

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்ஓரு சமுதாயத்தின் பல தரப்பட்ட வளர்ச்சிகளும் நாகரீகமும் அந்தச் சமுதாயத்தின் முக்கிய அங்கமான மொழியின் ஆளுமையிலும் பாவனையிலும் தங்கியிருக்கின்றன. மொழி என்பது மனித உணர்வின் பன்முகத் தேவைகளைச்செயற்படுத்தும் தரகராக வேலை செய்கிறது. தரகர் என்பவர் ஒரு விடயத்தின் அடித்தளத்திலும் தொடர்புகளிலும மாற்றங்களிலும் முக்கிய புள்ளியாகக் கருதப் படுபவர். அப்படியே மொழியும் மக்களின் சாதாரண அடிப்படைத் தேவைகள் தொடங்கி , அம்மக்கள் வாழும் சமுதாயத்தின் கலை கலாச்சார, அரசியல்,பொருளாதார வளர்சியிலும் பெரும் பங்கெடுக்கிறது. இதற்கு உதாரணம் இன்று உலகின் முக்கிய மொழியாகக் கருதப் படும் ஆங்கில மொழியாகும். பதினைந்தாம் றூற்றாண்டிலிருந்து இன்று வரை ஆங்கிலம் உலகிலுள்ள கணிசமான மக்களின் தொடர்பு மொழியாக இருப்பது மட்டுமன்றி தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாத 'தரகனாகவும்;' செயற் படுகிறது. இந்த அணுகு முறையில் மட்டுமன்றி, தமிழ் மொழியின் கலாச்சார ஈடுபாடு, அரசியலில் தமிழுக்கு உள்ள இன்றைய ஆளுமையும் அதன் எதிர்கால இருப்பும் பற்றிப்பேசுவது தமிழார்வலர்களாற் தவிர்க்க முடியாத விடயமாகும். தமிழின் உயர்வுக்கும் வளர்ச்சிக்குமாக ஒன்று பட்டு இணையும் சில அமைப்புக்களின் முயற்சிகளாலும் தனிப்பட்டவர்களின் ஊக்கங்களாலும், தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றிய ஒரு ஆழமான சர்ச்சைகள் நடக்கின்றன.. அந்த முயற்சிகளுக்கு, நேரடியாகவும் மறைமுகமானவும் பல தடைகள் வரும்போதும், மொழியில் ஆர்வம் கொண்டுள்ள 'புத்திஐPவிகளின்;' சிந்தனைக்கு இருட்டடிப்பு நடப்பதாலும் பல ஆக்க பூர்வமான படைப்புக்கள் வெளிவருவது, கருத்தரங்கங்கள் நடைபெறுவது, புதிய சிந்தனைகள் துளிர்ப்பது, சிறந்த படைப்புக்கள் வெளிவருவது என்பன தடைபடுகின்றன என்பதையும் மனதிற் கொள்ளவேண்டும்.

ஓரு மொழி என்பது, ஒரு சமுதாயத்தின் உயிர்நாடியாகவிருக்கும்போது, சில குறுகிய கால நலன்களுக்காக அந்த மொழியைக் 'குறிப்பிட்ட'காரணத்திறகாக மட்டும் பாவனையில் கொண்டுவருவதால் அம்மொழி; மக்களின் தேவையிலிருந்து தானாகவே மறைந்து விடும் என்பதற்கு, ஒருகாலத்தில் கொடி கட்டிப் பறந்த பல மொழிகள் இன்று மக்களுக்குத் தெரியாத சரித்திரமாகப் போனவை ஒரு சில சான்றுகளாகும். காலம் காலமாகப் பல அரசியற் சிந்தனையாளர்கள், சமுதாய மாற்றங்களுக்கான திட்டங்களைத் தங்கள் படைப்புக்கள் மூலம் மக்கள் மனதில் படைத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் பல் விதமான அடக்கு முறைகளுக்கும் எதிரான ஆயுதமாகச் செயற்பட்டவை, சிந்தனையாளர்களின் பேனாக்களாகும். அவற்றின் தூய படைப்புக்கள் தமிழின் எதிர்காலம்பற்றி எழுதுவது இக்காலத்தின் மிகப்பெரிய தேவையாகும்.

இன்று வலிமைபெருகிய சக்திகளான, தொழில் விஞ்ஞான வளர்ச்சிகளாலும், தமிழ்பற்றிய பெருமைதெரியாத அறியாமையினாலும் தமிழ் ஒரு தேக்கநிலையை அடைவது தவிர்க்க முடியாது. அதேமாதிரி, இலங்கை போன்ற நாடுகளில் தமிழ் ஒரு அரசகருமமொழியாக இருந்தாலும் அதன் பாவனையும் பராமரிப்பும் திருப்திதரும் வகையில் இல்லை என்பதையும் கருத்திற் கொள்ளவேண்டும்.

•Last Updated on ••Tuesday•, 16 •April• 2019 02:42•• •Read more...•
 

ஈழத்துக்கவிதை இதழ்கள் (மீள்பிரசுரம்)

•E-mail• •Print• •PDF•

- 'திறனாய்வுக் கட்டுரைகள்' நூலிலிருந்து பெறப்பட்ட இக்கட்டுரையினை நன்றியுடன் காலத்தின் தேவை கருதி மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் -

-எம்.ஏ.நுஃமான் -அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைத் தேயங்களில் சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பிருச்தே கவிதைக்கென்று தனிச்சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்கின. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “பொயற்றி”, என்ற கவிதைச் சஞ்சிகை 1912ஆம் ஆண்டு முதல் வெளிவருகின்றது. 1909ஆம் ஆண்டு முதல் “பொயற்றி றிவியு” என்னுஞ் சஞ்சிகை இங்கிலாந்தில் இருந்து வெளிவருகின்றது. கவிதைகளையும், கவிதை பற்றிய விமர்சனங்களையும், புத்தக மதிப்புரைகளையும் இச் சஞ்சிகைகள் தாங்கி வருகின்றன.

தமிழில், கவிதைகளை மாத்திரம் தாங்கிய ஒரு இதழை வெளிக்கொண்டு வரும் முயற்சி, முதன்முதல் தமிழ் நாட்டிலேயே தொடங்கியது. பாரதிதாசனே இதைத் தொடங்கி வைத்தவர். அவர் வெளியிட்ட குயில் பத்திரிகையே தமிழின் முதலாவது கவிதை இதழ் என்று தெரிகின்றது. குயில், பாரதிதாசனின் படைப்புக்களையே பெரும்பாலும் தாங்கி வந்தது. குயிலைத் தொடர்ந்து கவிதை, சுரதா, வானம்பாடி முதலிய கவிதை இதழ்கள் தமிழகத்தில் இருந்து வெளிவந்தன. வானம்பாடி அண்மைக் காலத்து முயற்சியாகும். தமிழ் நாட்டுக் கவிதை உலகில் பரபரப்பை ஏற்படுத்திய வானம்பாடி, வானம்பாடிக் குழுவினருக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நின்று விட்டதாகத் தெரிகின்றது.

ஆசிரியத் தலையங்கம் முதல் அடுத்த இதழுக்கான அறிவித்தல் வரை அனைத்தையும் செய்யுளிலேயே எழுதுவது தமிழ் நாட்டுக் கவிதை இதழ்களின் பிரதான பண்பாகக் காணப்பட்டது. பாரதிதாசனே இப்போக்கைத் தொடங்கி வைத்தவர் எனலாம். “சுரதா தன் கவிதைப் பத்திரிகையில் விளம்பரத்தைக் கூடக் கவிதையில் தான் பிரசுரிக்கிறார்” என்று நண்பர் ஒருவர் என்னிடம் சிலாகித்துப் பேசினார். அந்த அளவுக்கு ஆசிரியத் தலையங்கம், போட்டி அறிவித்தல், வர்த்தக விளம்பரங்கள் அனைத்தையும் அவை செய்யுளில் எழுதப்பட்ட காரணத்தால் கவிதையோடு சமமாக மதிக்கும் ஒரு சமரச மனப்பான்மை இவ்விதழ்களில் காணப்பட்டது. வானம்பாடி இதில் இருந்து வேறுபட்டது. முற்றிலும் புதுக்கவிதைக்கான ஒரு வெளியீட்டுக் களமாக அது அமைந்தது. ஆயினும் டாம்பீகமான மொழிப் பிரயோகம் அதன் பிரதான பண்பாகக் காணப்பட்டது. சமூக சமத்துவ நோக்கை வானம்பாடிக் குழுவினர் தங்கள் உட்பொருளாகக் கொண்டிருந்த போதிலும் சமூகத்தின் பொது வழக்குக்குப் புறம்பான மொழிப்பிரயோகத்தயும், சிந்தனை முறையையும், கற்பனைப் படிமங்களையும் பெருமளவு கையாண்டதால் வானம்பாடி எழுப்பிய குரல் சமூகத்தோடு ஒட்டாது அந்நியமாகவே ஒலித்தது. வானம்பாடியில் இதற்குப் புற நடைகள் உண்டு. எனினும் இதுவே பொதுப்பண்பு என எனக்குத் தோன்றுகின்றது.

தமிழ் நாட்டைப்போல், ஈழத்தில் இருந்தும் கவிதைக்கென்றே சில கவிதை இதழ்கள் வெளிவந்தன. ஈழத்துக் கவிதை இதழ்களுக்கு ஒரு இருபது வருட வரலாறு உண்டு. 1955ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் “தேன்மொழி”யின் முதல் இதழ் வெளிவந்தது. தேன்மொழியே ஈழத்தின் முதலாவது தமிழ்க் கவிதை இதழாகும். மஹாகவி, வாதர் ஆகிய இருவரும் சேர்ந்து சோமசுந்தரப் புலவரின் நினைவுச் சின்னமாகத் தேன்மொழியை வெளியிட்டனர். “கட்டிளமை செட்டுகின்ற கன்னிகையும் காதலனும் ஒன்று சேர்ந்தது போல எமது உள்ளத்திலே தோன்றிப் பேராவலாய் நிறைந்த இரு எண்ணங்களின் சேர்க்கைதான் இந்த இதழ். கவிதைகளை மாத்திரமே தாங்கிய ஒரு இதழை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பது மற்ற எண்ணம். நவாலியூர் சோமசுந்தரப் புலவருக்கு ஒரு நல்ல நினைவுச் சின்னம் உருவாக்க வேண்டும் என்பது மற்ற எண்ணம். இந்த இரண்டு எண்ணங்களும் சேர்ந்து தேன்மொழியை உருவாக்கிவிட்டன.” என்று முதலாவது இதழில் ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

•Last Updated on ••Monday•, 01 •April• 2019 00:11•• •Read more...•
 

(கீற்று.காம்) ‘ஈழத் தமிழ் நாவல் இலக்கிய முன்னோடி’ செ.கணேசலிங்கன்

•E-mail• •Print• •PDF•

செ.கணேசலிங்கன்“கலை, இலக்கியம், நாடகம், வெகுசன ஊடகம், தீண்டாமை, சுரண்டல், வன்முறை, சித்திரவதை, சிறுவர் மீதான கொடுமை, பெண்கள் மீதான கொடுமை, ஆதிக்கம், தேசிய இனப் பிரச்சினையால் தமிழ் மக்கள் குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் தோன்றியுள்ள அவலங்கள். தொழில்மயமாக்கலும், நகரமயமாக்கலும், நவீனமயமாக்கலும் தோற்றுவித்துள்ள மாறுதல்களும், பிரச்சினைகளும், மனித பலவீனங்களை வளர்த்துச் சுரண்டும் சந்தைப் பொருளாதார வியாபாரங்கள். நுகர்வுப் பண்பாட்டின் மனித விரோதப் போக்கு, பன்னாட்டு நிறுவனங்களின் மேலாதிக்கம், நவீன ஏகாதிபத்தியச் சுரண்டலின் பன்முகப் பரிமாணங்கள், உலகமயமாதல் என்ற பெயரில் நடைபெறும் அராஜகம். இப்படியான பல்வேறு விடயங்கள் பற்றிய விளக்கங்களாகவும், விமர்சனங்களாகவும் செ.கணேசலிங்கன் எழுத்துக்கள் அமைந்துள்ளன ” எனப் பேராசிரியர் சி.தில்லைநாதன் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

“மனிதனைப் பிணைத்திருக்கின்ற அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறிவதற்கான எழுச்சி நசுக்கப்பட்டு, மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு, அவர்களது விடுதலைக்கான போராட்ட உணர்வைத் தட்டி எழுப்பி உத்வேகப்படுத்தும் பண்பு மானிட நேயப்படைப்பாளிகளிடமுண்டு. சமூக, பொருளாதார அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை ஒரு பெரும் சக்தியாக திரட்டுவதற்கு மக்களுக்கு உத்வேகத்தைக் கொடுப்பவனே மானிடநேயப் படைப்பாளி. தோல்வியிலும், அடிமை மனப்பான்மையிலும் நீண்டகாலமாகப் பீடிக்கப்பட்டு, விரக்கியடைந்த நிலையிலுள்ள மக்களின் ஆத்மாவைத் தட்டி எழுப்பி விழிப்படையச் செய்து போராட்டப் பாதையில் அவர்களை இட்டுச் செல்லும் வல்லமை படைத்தவனே மனிதநேயப் படைப்பாளி. ”

மேலும், “ மனித குலத்திற்கு விசுவாசமாக நடப்பது, மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுவது, கசப்பான உண்மையானாலும் அதனைத் துணிவுடன் கூறுவது, மனிதர்களின் உள்ளத்திலே எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை ஊட்டி அதனை உறுதிப்படுத்துவது, அதைக் கட்டுவதிலே அவர்களுக்குள்ள ஆத்மசக்தியைப் பலப்படுத்துவது, உலக சமாதானத்துக்கும், சாந்திக்குமாகப் போராடுவது, எங்கெல்லாம் சமாதானத்துக்கான குரல் ஒலிக்குமோ அங்கெல்லாம் சமாதான வீரர்களை அந்தரங்க சுத்தியுடன் ஆதரிப்பது. முன்னேற்றத்திற்கான உண்மையான நேர்மையான முயற்சியில் மக்களை ஒன்று திரட்டுவது இதுதான் மானிடநேயனின் கடமை. ” என்று ‘ டான் நதி அமைதியாகப் பாய்கின்றது’ என்ற உலகப் புகழ்பெற்ற நாவலைப்படைத்த மிகையில் ஷொலகோ கூறியதை உள்ளத்தில் ஏற்று இலக்கியம் படைத்தவர் செ.கணேசலிங்கன்.

செ.கணேசலிங்கன் இலங்கையில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள உரும்பிராய் என்னும் கிராமத்தில் 09.03.1928 ஆம் தேதியன்று, க. செல்லையா-இராசம்மா தம்பதியரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

தமது ஆரம்பக் கல்வியை உரும்பிராய் கிராமத்து கிறிஸ்துவப் பள்ளியில் கற்றார்.  சந்திரோதய வித்தியாசாலையில் ஆறாவது வகுப்பு பயின்றார். பின்னர், யாழ்ப்பாணம் பரமேசுவரக் கல்லூரியில் சேர்ந்து எச். எஸ்.சி. பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். மேலும், இவர் லண்டன் மெட்ரிகுலேசன் தேர்விலும் தேர்ச்சியடைந்தார். நாள்தோறும் காலையில் வயலில் விவசாய வேலைகளை செய்த பின்னர், கல்லூரிக்கு நடந்தே சென்று படித்தார்.  இவர் கல்வியில் மிகத் திறமை பெற்ற மாணவராக விளங்கியதால் சிறப்பு வகுப்பேற்றம் ( னுடிரடெந யீசடிஅடிவiடிn) செய்யப்பட்டார்.

எச்.எஸ்.சி. எனும் தேர்வில் தேர்ச்சியடைந்த பின் 1950 ஆம் ஆண்டு இலங்கை அரசின் பாதுகாப்புத்துறையில் எழுத்தராக பணியில் சேர்ந்து கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில்  1981 ஆம் ஆண்டுவரை பணியாற்றினார்.

மகாத்மா காந்தி 30.01.1948 அன்று படுகொலை செய்யப்பட்டதையொட்டி தமது உரும்பிராய் கிராமத்தில்  நண்பர்களுடன் இணைந்து நினவேந்தல் கூட்டம் நடத்தினார். அந்த நினைவேந்தல் கூட்டத்தில், “ மகாத்மா காந்தியின் உடல் யமுனா நதிக்கரையில் இப்போது எரியூட்டப்பட்டிருக்கும், அவர் மறைந்தாலும் அவரது கொள்கைகளை நாம் கடைபிடிப்பதனால் இங்கே நிலவும் சாதிவெறி ஒழிக்கப்பட வேண்டும். இங்குள்ள கோவில்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கூறப்படும். மக்களுக்குத் திறந்துவிடப்பட வேண்டும். ” என்று தீவிரமாக உரையாற்றினார்.

•Last Updated on ••Sunday•, 31 •March• 2019 08:06•• •Read more...•
 

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடான 'புதுமை இலக்கியத்தில்'யில் வெளியான அ.ந.க'வின் 'கவிதை' கட்டுரையிலிருந்து சில பகுதிகள்! (பெப்ருவரி 14 அ.ந.க.வின் நினைவு தினம்)

•E-mail• •Print• •PDF•

அறிஞர் அ.ந.கந்தசாமிஅண்மையில் ஜெயமோகன் ஈழத்துக் கவிஞர்கள் பற்றிச் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி வாதப்பிரதிவாதங்களை  எதிர்கொண்டு வருமிச்சூழலில் எனக்கு அறிஞர் அ.ந.கந்தசாமி 1962இல் வெளியான 'புதுமை இலக்கியம்' சஞ்சிகையில் (இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடு)  வெளிவந்த 'கவிதை' என்னும் தலைப்பிலான கட்டுரையின் ஞாபகம் வந்தது. அக்கட்டுரையில் அவர் தெரிவித்திருக்கும் ஈழத்துக் கவிதை பற்றிய கருத்துகள் சிலவற்றைத் தொகுத்திங்கே தருகின்றேன். பெப்ருவரி 14 அ.ந.க.வின் நினைவு தினம் என்பதால் அதனையொட்டிய நினைவு கூர்தலாகவும் இப்பதிவினைக் கருதலாம்.


அ.ந.க.வின் 'கவிதை' கட்டுரையிலிருந்து:

"செந்தமிழின் பொற்காலம் என்று புகழப்படும் சங்க காலத்தில் கூட , ஈழத்துக் கவிதையின் நன்மணம் கடல் கடந்து பரவியிருந்தமைகுப் போதிய சான்றுகள் உள்ளன. தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதிலும் நடைபெற்ற இலக்கிய முயற்சிகளின் போக்கை  எடுத்து விளக்க நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு, கலித்தொகை போன்ற கவிதைத்திரட்டுகளைத் தமிழ்ச் சங்கம்  வெளியிட்டது.  இவற்றில், குறுந்தொகை, அகநானூறு ஆகிய நூல்களில் ஈழத்துப் பூதந்தேவனார் எழுதிய அழகிய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

ஈழத்துப் பூதந்தேவனார் காலத்தைக் கடந்து நிற்கின்றார்.  தமிழிலக்கியத்தின் சுவையறிந்து போலும் அவாமேலிட்டு நீலக்கடல் அதனைப் பெரும்பாலும்  உட்கொண்டுவிட்டது.  பெரியதோர் கவிஞர் பட்டியலில்  எஞ்சியிருக்கும் ஒரு சில நூற்றுவரில் பூதந்தேவனாரும் ஒருவர்.  ஆனால் அவர் மட்டுந்தானா முன்னாளில் தமிழ்க் கவிதைச் சங்கூதிய பெருமகன்? இன்னும் பலர் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களைப்பற்றி நாம் இன்று ஒன்றும் அறிய முடியாதிருக்கின்றது.

இன்றைய ஈழத்தில் தமிழின் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணம் , ஒரு கவிவாணனின் கவிதையில் மலர்ந்த நாடு என்று கர்ண பரம்பரை கூறுகிறது. 'மணற்றி' என்ற பெயருடன் விளங்கிஅ இப்பிரதேசம், அந்தகக் கவி ஒருவனுக்கு அரசனொருவனால் அளிக்கப்பட்ட அன்பளிப்பு. எனவே தமிழ் ஈழத்தின் தந்தை  ஒரு கவிஞனென்று இலங்கைத் தமிழர்கள் பெருமைப்படலாம். "

"இதன் பின்னுள்ள காலத்தில் ஈழத்துக் கவிதை எந்நிலையில் இருந்தது?  இக்கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க முடியாதிருக்கிறது.  முற்றிலும் இருள் சூழ்ந்த பல நூற்றாண்டுகள் இவ்வாறு கழிந்து போக, அரசகேசரி என்ற குறுநில மன்னன் காலத்தில் மீண்டும் மின்னலடித்தது போல் ஒளி வீசுகிறது.  அவ்வொளியிலே நாம் ஒரு பார காவியத்தைக் காண்கிறோம்.  அப்பாரகாவியத்தின் பெயர் 'இரகுவம்சம்'. காளிதாசனை முதநூலாகக்கொண்டு புலவனும் புரவலனுமாகிய அரசகேசரியே இதனைத் தமிழுலகத்திற்கு யாத்தளித்தான். அருகிவரும் இந்நூலைத் தமிழர்கள் யாராவது மீண்டும் பதிப்பிக்க முன்வர வேண்டும்.

•Last Updated on ••Wednesday•, 13 •February• 2019 00:47•• •Read more...•
 

வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழாக்குறிப்புகள்!

•E-mail• •Print• •PDF•

வித்துவான் வேந்தனார்- வேந்தனார் இளஞ்சேய் -அன்பிற்குரிய தமிழ் நண்பர்களே! என் தந்தையாரின்  ஐந்து உரைநூல்கள், இலங்கைத் தமிழ் மாணவர்களுக்குப், பாடப் புத்தகங்களாக , 1952  ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இருந்தன. அவர் 1966  ஆம் ஆண்டே காலமாகிவிட்ட  போதும், அவரின் இப் பாட நூல்கள், பாடவிதானங்களில் மாற்றங்கள் ஏற்பட்ட போதும், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமையால், மீண்டும் மீண்டும் மீள் பிரசுரம் செய்யப்பட்டன. உங்களில் பலர் இந் நூல்களை , உங்கள் 10 ஆம், 11 ஆம், 12 ஆம் வகுப்புக்களில் படித்திருந்திருப்பீர்கள். தாம் படித்த இந்துசமயபாட நூல் , பாரதியார் பாடல்கள் விளக்கவுரை, கம்பராமாயணம் கும்பகர்ணன் வதைப்படலம், கம்பராமாயணம் - சுந்தரகாண்டம்- காட்சிப் படலமும் நிந்தனைப் படலமும், கம்பரிமாயணம் அயோத்தியா காண்டம் - மந்தரை சூழ்ச்சிப் படலமும் கைகேயி சூழ்வினைப் படலமும்  போன்ற சிறந்த உரைநூல்களைப்   பற்றிப் பலர்,  என்னுடன் மிக மிகப் பெருமையாகக் கூறியுள்ளார்கள். இந்த நூல்களை எல்லாம் , அத்துடன் என் தந்தையாரால் சேமித்து வைக்கப் பட்டிருந்த, அவரின் பல நூற்றுக் கணக்கான பத்திரிகைக் கட்டுரைகள் , அவரின் கையெழுத்துப் பிரதிகள் , அவரின் பல புகைப்படங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடைத்தற்கரிய பழம் பெரும் தமிழ் இலக்கிய நூல்கள்  , போன்ற அரும் பெரும் பொக்கிசங்களை நாம் 1995 ஆம் ஆண்டுப் பேரழிவில் , குடிப்பெயர்வில் இழந்தோம்.

என் தந்தையாரின் ஆக்கங்களை, கடந்த சில வருடங்களாக நான் மிகச் சிரமப்பட்டுத் தேடியெடுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இன்று நான் சில நல்லுள்ளங்களின் உதவியினால் , என் தந்தையாரின் 5 உரை நூல்களையும் எடுக்க முடிந்துள்ளது. நூலகம் தாபகர் திரு பத்மநாபஜயரின் உதவியினால் மூன்று உரை நூல்களும், எனது நண்பர் திரு அருண் மனோகரனின் உதவியால் ஒரு உரை நூலும், எனது நண்பர் திருமதி குகா நித்தியானந்தன் உதவியால் ஒரு  உரை நூலும்  ஆக , ஜந்து உரை நுல்களும் கிடைத்துள்ளன. இவற்றில் நான்கு நூல்கள், நூலக இணையத்தில் தற்போது பதிவிறக்கம் செய்யப் பட்டுள்ளன. மற்றைய உரைநூல் என்னிடம் கைவசம் உள்ளது.  விரைவில் நூலகம் இணையத்தில் பதிவிறக்கம் செய்ய ஒழுங்குகள் செய்யப்படும். நூலகம் இணையத்தளத்தில், வேந்தனார் அவர்களின் நான்கு உரைநூல்கள், "தன்னேர் இலாத தமிழ்" கட்டுரை நூல், கவிதைப் பூப்பொழில்(1964 & 2010), "குழந்தைமொழி"(2010" திருநல்லூர்த் திருப்பள்ளி எழுச்சி"(1962) என்பன பதிவிறக்கம் செய்யப் பட்டுள்ளன. இவற்றை வாசித்து நீங்கள் பயனடைய முடியும்.

என்னால் தொகுக்கப்பட்டு ,2010 இல் வெளியிடப் பட்ட "வித்துவான் வேந்தனார்" என்ற நூலும் , நூலகம் இணையத் தளத்தில், எனது பெயரின் கீழ் பதிவிறக்கம் செய்யப் பட்டுள்ளது. இந்த நூல் வேந்தனார் பற்றித் தமிழ் அறிஞர்கள், அவரது நண்பர்கள், மாணவர்கள் ஆகியோர் காலத்திற்குக் காலம் எழுதிய ஆக்கங்களின் தொகுப்பாகும். வேந்தனார் பற்றி வருங்காலங்களில் ஆராய விருக்கும் தமிழ் இலக்கிய மாணவர்கட்கும், வேந்தனார் பற்றி அறிய விரும்புவர்களுக்கும் இந்நூல் மிகவும் பயன்தரக் கூடியது. வித்துவான் வேர்தனார் எழுதிய ஆக்கங்களில், எமக்குத் தெரிந்த ஆக்கங்கள் பற்றிய விபரம், இந்த நூலில் பக்கம் 146 - 154 வரை, பட்டியலிடப் பட்டுள்ளன. இவற்றில் தினகரன் பத்திரிகைக் கட்டுரைகளில்  ஓர் தொகுதியும், ஈழநாடு பத்திரிகை தொல்காப்பியக் கட்டுரைகளும், வரும்  28 சித்திரை 2019 இல், இரு கட்டுரை  நூல்களாக , இலண்டனில் வெளியிடப்படவுள்ளன. இவை இலக்கியப் பிரியர்களுக்கு பெருவிருந்தாக அமையும் என்பது எனது திடமான  கணிப்பாகும். மீதமுள்ள அவரின் பத்திரிகைக் கட்டுரைகளும் இரண்டு - மூன்று  நூல்களாக , வருங் காலங்களில் வெளியிடப்படும். அவரின் குழந்தைப் பாடல்கள் 35 இல் 13 பாடல்களை, எனதருமைத் தமக்கையார் , இறுவெட்டில் வெளியிட்டிருந்தார். எனது கடந்த மூன்று வருட தேடல்களில், அவரின் மூன்று குழந்தைப் பாடல்கள்  மேலதிகமாக , ஈழநாடு , தினகரன் பத்திரிகைகளில் இருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளன . ஆக அவரின் 38 குழந்தைப் பாடல்களில், இசையமைக்கப் படாத 25 பாடல்களும், தற்போது இசையுடன் இறுவெட்டில் வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அந்தவகையில் அவரின் 38 குழந்தைப் பாடல்களும் , பிள்ளைகளின்வயதிற்கேற்ப  ,மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு , ஒவ்வொரு நூலுடனும் இறுவெட்டுக்களும் இணைக்கப்பட்டு, வரும் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்படவுள்ளன. இந்நூல்கள் இலங்கை, இந்தியா மற்றும் உலகெங்கும் சிதறுண்டு வாழும் நம் தமிழ்  சிறார்களுக்கு மிக மிகப் பயனுள்ளதாக அமையும்  என்பதில், எனக்கு எவ்வித ஜயப்பாடும் இல்லை. இவற்றில் கணிசமான பாடல்கள், கடந்த 65 வருடங்களாக, உங்களில் பலராலும், சிறுவயதில்  பாலர் பாடப் புத்தகத்தில், நீங்கள் படித்த பாடல்களாகும். ( காலைத்தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா, கும்பிடு நீ கும்பிடென்று குனிந்து சொல்லும் பாட்டி, சின்னச் சின்னப்பூனை, வெண்ணிலா, பறவைக்குஞ்சு, புள்ளிக்கோழி, மயில், கரும்பு தின்போம்  போன்ற பாடல்கள்).

•Last Updated on ••Tuesday•, 12 •February• 2019 20:32•• •Read more...•
 

அஞ்சலி: எழுத்தாளர் சீர்காழி தாஜ் மறைவு! இனிய நண்பரை, உடன் பிறவாச் சகோதரரை இழந்தோம்!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் சீர்காழி தாஜ்இன்று மாலை முகநூலுக்குள் நுழைந்த என்னை துயரகரமான, அதிர்ச்சியினையூட்டிய செய்தியொன்று எதிர்கொண்டது. எழுத்தாளரும், இனிய நண்பரும், உடன் பிறவாச் சகோதரருமான சீர்காழி தாஜ் அவர்களின் மறைவுச் செய்திதான் அது. எழுத்தாளர் அனார் தனது முகநூற் பதிவில் தாஜ் அவர்களின் மறைவுச்செய்தியினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். செய்தியினை உள்வாங்குவதற்கே சிறிது கஷ்ட்டமாகவிருந்தது. நேற்றும் தி.ஜானகிராமனின் படைப்புகள் பற்றிய முகநூற் குழுமத்தில் நான் பதிவிட்டிருந்த முகநூற் பதிவொன்றுக்குத் தன் கருத்துகளை 'அன்பு  கிரி' என்று ஆரம்பித்துப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களா மறைந்து விட்டார். அவரது அங்கத்தம் தவழும் எழுத்து நடைக்கு நான் எப்பொழுதுமே அடிமை. நண்பர் எழுத்தாளர் தாஜ் அவர்கள் மறைந்த செய்தி ஏற்படுத்திய துயரத்தை  அளவிட வார்த்தைகளேதுமில்லை.

சிந்தனைக்குருவி தன் சிறகுகளை அடிக்கின்றது. நண்பர் தாஜை முதன் முதலில் அறிந்த காலகட்டம் நினைவுக்கு வருகின்றது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது 'அமெரிக்கா (தொகுப்பு) மற்றும், மறும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூல்களைத் தமிழக நூல் நிலையக் கிளையொன்றில் கண்டு, வாசித்துவிட்டுத் தன் கருத்துகளை ஆக்கபூர்வமான முறையில் நீண்ட இரு கடிதங்களாக எழுதி அனுப்பியிருந்தார். பின்னர் வைக்கம் முகம்மது பசீரின் 'எங்கள் தாத்தாவுகு ஆனையொன்றிருந்தது' நூலினைக் கனடாவில் வசிக்கும் தனது நண்பர் ஒருவர் மூலம் அனுப்பிருந்தார்.

'பதிவுகள்' இதழில் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில் நண்பர் தாஜிம் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியினையே தந்தது. அச்செய்தினைக் கனவில் கூட எதிர்பார்த்திராத நிலையில் அச்செய்தி மிகுந்த அதிர்ச்சியினைத்தந்தது. கூடவே அளவிட முடியாத துயரையும் தந்தது.

நண்பர் தாஜின் சிறுகதைகள், குறுநாவல் ஆகியன உள்ளடங்கிய தொகுதியின அண்மையில்தான் காலச்சுவடு பதிப்பகத்தினர் வெளியிட்டிருந்தனர். தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் தொகுதிகளிலொன்று அத்தொகுதி.

சீர்காழி தாஜ் கவிதைகள், கதைகள் என்று இவரது எழுத்துப்பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இணைய இதழ்கள் (பதிவுகள் உட்பட) , தமிழகத்து வெகுசன மற்றும் சிற்றிதழ்கள் எனப்பல ஊடகங்களில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடனின் பவளவிழாப்போட்டிகளில் இவரது கவிதைகள் முத்திரைக்கவிதைகளாக வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தாஜ் அவர்கள் 'தமிழ்ப்பூக்கள்' என்னும் வலைப்பதிவினையும் நடாத்தி வருகின்றார். http://tamilpukkal.blogspot.ca/

எழுத்தாளர் தாஜ் அவர்களின் மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் (முகநூல் நண்பர்களுட்பட) அனைவருக்கும் எனது மற்றும் 'பதிவுக'ளின் ஆழ்ந்த இரங்கல்கள். கூடவே 'பதிவு'களில் , முகநூலில் வெளியான அவர் பற்றிய குறிப்புகளையும் மீண்டுமொருமுறை பகிர்ந்துகொள்கின்றேன்.

•Last Updated on ••Tuesday•, 22 •January• 2019 09:00•• •Read more...•
 

பெண் சாதனையாளர் முனைவர் நா.நளினிதேவி

•E-mail• •Print• •PDF•

பெண் சாதனையாளர் முனைவர் நா.நளினிதேவி  - முனைவர் இர.ஜோதிமீனா -சாதனைப் பெண்கள் வரிசையில், முன்னிலையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டியவர் முனைவர் நா.நளினிதேவி ஆவார். இவர் மிகச் சிறந்த ஆய்வறிஞர். படைப்பிலக்கிய வித்தகர். பெண்ணியத்தையும் பெரியாரியத்தையும் தன்னிரு விழிகளாகப் போற்றி வருகிற பேரறிஞர். எழுபதைக் கடந்த நிலையிலும் இருபதிற்கே உரிய இளமை வேகத்தோடு இவர் இலக்கிய வெளியில் இடையறாது இயங்கி வருவது பாராட்டுக்குரியது.

‘தமிழே நீ ஓர் பூக்காடு நான் அதிலோர் தும்பி’ எனும் தமிழ்ப்பற்று மிக்க பாரதிதாசனைப் போன்று தமிழுணர்வோடு தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் பணிகளைச் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கி வருகிறார் முனைவர் நா.நளினிதேவி அவர்கள்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 1945ஆம் ஆண்டு சூன் திங்கள் 26ஆம் நாள் நாகரத்தினம்-சுப்புலெட்சுமி இணையருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். உடன் பிறந்தோர் இருவர். தங்கையும் தம்பியும். இவரது துணைவர் வiலாற்றுப் பேராசிரியர்.வே.மாணிக்கம் அவர்கள். வரலாறு தொடர்பான ஆய்வு நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதியிருக்கிறார்

1962 முதல் 1968 வரை மதுரை பாத்திமா கல்லூரியில் புகுமுக வகுப்பு தொடங்கி முதுகலை வரை பயின்றுள்ளார். மதுரை பல்கலைக்கழகத்தின் முதல் முதுகலை பட்டதாரிகளுள் ஒருவரான இவருக்கு வாய்த்த பேராசிரியர்கள் அ.சிதம்பரநாத செட்டியார், அ.கி.பரந்தாமனார், சுப.அண்ணாமலை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மொ.துரையரங்கனார், விசயவேணுகோபால் முதலான தமிழ் ஆளுமைகளிடம் தமிழ் கற்றதால் இவருக்குள் இருந்த தமிழ்ப்பற்று ஆழமாக வேரூன்றிச் செழுமைப் பெற்றது.

கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் 1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு எழுச்சியில் கலந்து கொண்டு சிறை சென்றார். ஈழத்தமிழர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்ட இவர் 1980இல் நடந்த ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

1969இல் அருள்மிகு மீனாட்சி அரசு கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியேற்ற இவர் சேலம், திருப்பூர், நாமக்கல், புதுக்கோட்டை எனப் பல அரசு கல்லூரிகளில் பணியாற்றி 2004இல் பணி நிறைவு பெற்றார்.

தமிழறிவும் தமிழ்ப்பற்றும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ் தழைக்கும் என்பது இவரது கருத்து. விளைநிலங்களாகிய மாணவர் சமுதாயத்திற்கு, தமிழ்ப்பற்று, தமிழறிவு எனும் உரமிட்டு செழித்து வளம் பெறவேண்டும் என்பது இவரது நிலைப்பாடு. கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட்ட பல ஆசிரியருள் இவரும் ஒருவர். வழக்கமான ஒரு தமிழ்ப்பேராசிரியர் போல் அல்லாமல் தனக்கெனத் தனி பாதை வகுத்துக்கொண்டு, மாணவர்களிடம் நேசமும் தமிழ்உணர்வைத் தட்டியெழுப்புவதுமாய் இவரது தமிழ்ப்பணி அமைந்தது. காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த்துறைக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் என்பது உரிமையுணர்வு, தன்மதிப்புமிக்கது என்பதை உணர்த்தும் முறையில் செயல்பட்டதால் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டார்.

•Last Updated on ••Tuesday•, 15 •January• 2019 09:28•• •Read more...•
 

எண்பது அகவையில் பேராசிரியர் சண்முகதாஸ்! நினைவழியா நாட்களில் நீடித்து வாழும் கலை, இலக்கிய சகா!

•E-mail• •Print• •PDF•

பேராசிரியர் அ.சண்முகதாஸ்பேராசிரியர் சண்முகதாஸ், வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் 1950 களில் எனக்கு மூன்று வகுப்புகள் மூத்தவராகக் கல்வி பயின்றவர். நான் எனது 11ஆவது வயதில் அப்பாடசாலையுள் தயங்கித் தயங்கிக் கண் விழிக்காத பூனைக்குட்டியாகக் காலடி வைத்தபோது எனக்கு வயது 11. சண்முகதாஸுக்குவயது 14. தன் இனிய குரலால் அனைவரையும் வசீகரித்து அனைவரும் அறிந்த சிறுவனாக இருந்தார் சண்முகதாஸ். அண்ணன் என்றுதான் நாம் அவரை அன்று அழைத்தோம். என்னைப்போல அவரும் கட்டையானவர். வண்டுகள் போல நாம் அங்கு ஓடித்திரிவோம். 6 வருடங்கள் அந்த விடுதியில் நாங்கள்ஒன்றாக வளர்ந்தோம். 1954 ஆம் ஆண்டு மஹா பாரதம் தழுவிய நச்சுப் பொய்கை எனும் பாடசாலை நாடகம் ஒன்றில் 15 வயது சண்முகதாஸ் கதாயுதம்தாங்கி ஹா ஹா என்று சப்தமிட்டபடி வீமனாக மேடைப் பிரவேசம் செய்தமையும், கையினால் தண்ணீர் பருகாது பொய்கையிலிருந்த தண்ணீரைகதையினால் அடித்து அடித்து வாயினால் ஆவ் ஆவ் எனப் பருகிய காட்சியும் இப்போது ஞாபகம் வருகிறது.

திருகோணமலைக் கிராமம் ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பெற்று அக்கல்லூரிக்கு அவர் வந்திருந்தார். அவர் வந்து மூன்றுவருடங்களின் பின் மட்டக்களப்புக் கிராமம் ஒன்றிலிருந்து நான் ஐந்தாம் வகுப்புப் புலமைபரிசில் பெற்று, புலமைப்பரிசில் பெற்றோர் பயில கன்னங்கரா திட்டத்தில் உருவான அந்த மத்திய கல்லூரியில் கல்வி பயிலச் சென்றேன். விடுதி வாழ்க்கை. சண்முகதாஸ் அவரது வகுப்பில் என்றும் முதன்மாணவர். அவருடன் போட்டிக்கு நின்றார் அருணாசலம் என்ற மாணவர். படிப்பில் இருவரும் தீரர். அருணாசலம், சண்முகதாஸின் உயிர் நண்பன். திரியாயைச் சேர்ந்த இருவரும் கெட்டிக்காரர்கள். இணைபிரியா இரட்டையர்கள். அவர்களை எமக்குமுன்னுதாரணங்களாக ஆசிரியர்கள் காட்டுவர். இருவரும் ஒரு நாள் சாரண இயக்க காரியமாகச் சென்றபோது, ஒருகுளத்தில் இருவரும்சிக்குப்பட்டுக்கொண்டனர். அருணாசலம் காலமானர். சண்முகதாஸ் அதிஷ்டவசமாகத் தப்பித்துக்கொண்டார். அருணாசலத்தின் உடல் பாடசாலைமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தபோது சண்முகதாஸ் நண்பனுக்காக இரங்கி குலுங்கிக் குலுங்கி அழுத குரல் இன்னும் காதில் கேட்கிறது. கல்விப்பொது சாதாரண தர வகுப்பு சித்தியடைந்ததும், வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பு அன்று இன்மையினால் மட்டக்களப்புசிவானந்தா கல்லூரியில் இணைந்து அங்குள்ள விடுதியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் கல்வி கற்றார் சண்முகதாஸ். அது அவருக்கு இன்னுமோர் அனுபவமாயிற்று.

இராமகிருஷ்ண மிசன் வளர்ப்பு அவரை மேலும் பதப்படுத்தியது. வளப்படுத்தியது. அங்கிருந்து பல்கலைக்கழகம் தெரிவாகிப்பேராதனைப் பல்கலைக்கழகம் சென்றார். அங்கு அவர்தன் கூரிய அறிவாலும் நல்ல குணங்களாலும், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி, செல்வநாயகம் ஆகியோரின் மிக விருப்புக்குரிய மாணவரும் ஆனார். 1961 இல் அவர் பேராதனைப் பல்கலைத் தமிழ்ச்சங்கத் தலைவராயிருந்தார். அப்போது அவர் மாணவர்.

அவர் தலைமையில் பட்டப்பகலில் பாவலர்க்குத்தோன்றுவது எனும் கவி அரங்கு நடைபெற்றது. அக்கவி அரங்கப்போட்டியில் முதற்பரிசு பெற்ற என் கவிதையை நான் அரங்கேற்றினேன். மூன்றாவது பரிசு பெற்ற அவரது கவிதையை மனோன்மணி முருகேசு அரங்கேற்றினார். இவரே பின்னர் மனோன்மணி சண்முகதாஸ்  ஆனார். அது ஓர் காதல் காவியக் கதை. பேராசிரியர் வித்தியானந்தன் 1960 களில் கூத்து மீளுருவாக்க இயக்கம் ஆரம்பித்தபோது, அதன் உள் விசைகளில் சண்முகதாஸும் ஒருவரானார்.  1960 களில் பேரா.வித்தியானந்தன் தயாரிப்பில் கர்ணன் போரில் அவர் கிருஸ்ணனாக வர, நான் கர்ணனாக வந்து இருவரும் பலமேடைகளில் ஆடிப் பாடியமை ஞாபகம் வருகிறது.

•Last Updated on ••Thursday•, 03 •January• 2019 20:51•• •Read more...•
 

முகநூல்: தொடக்கமும் தொடர்ச்சியும் விடை பெறுதல் ​ - பிரபஞ்சன்

•E-mail• •Print• •PDF•

- எழுத்தாளர் பவா செல்லத்துரை எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவையொட்டி எழுதிய முகநூற் பதிவிது. நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -

நெருக்கடிமிக்க சென்னை அண்ணா சாலையின் தென்புறம் நாங்கள் நான்கைந்து நண்பர்கள் நிற்க, மார்பில் அணைக்கப்பட்ட நான்கு பீர் பாட்டில்களோடு சாலையைக் கடந்த பிரபஞ்சனிடம் அந்த இரவு பத்துமணிக்கு சிலர் நின்று ஆட்டோகிராப் கேட்டார்கள். பீர் பாட்டில்களை அவர்கள் கையிலேயே தற்காலிகமாகத் தந்துவிட்டு சாலை ஓரமாக நின்று கையெழுத்திட்டுத் தந்த பிரபஞ்சனைப் பார்த்து, “இதெல்லாம் வேணாம் சார், உங்களுக்கென்று தமிழ்நாட்டில் ஒருபெரிய இமேஜ் இருக்கு ” என்று சொன்ன என்னை தடுத்து, “அப்படி ஒரு பொய்யான இமேஜை நான் வெறுக்கிறேன் பவா. நான் எதுவாக இருக்கிறேனோ அப்படியான பிம்பம் மட்டுமே வெளியிலேயும் பதிவாக வேண்டும். நான் எப்போதாவதுதான் குடிப்பவன். அது வெளியே தெரிய வேண்டாமெனில் இதை இனி தொடக்கூடாது இல்லையா” என்ற அப்படைப்பாளியின் கையிலிருந்த பாட்டில்களை கொஞ்சநேரம் என் கைகளுக்கு மாற்றி நடந்தது நினைவிருக்கிறது. எவர் கைகளிலேயும் நிரந்தரமாக அடக்கிவிட முடியாத நீர் தான் பிரபஞ்சன் எனத் தோன்றும். என் கல்லூரிப் படிப்பை முடித்து, இலக்கியம் நோக்கி வெறிகொண்டலைந்த காலத்தில் கி.ரா. பற்றிய ஒரு இலக்கியக்கூட்டத்தில்தான் பிரபஞ்சனை முதன்முதலில் பார்த்தேன். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை போட்டு கையில் புகைந்த ஒரு சிகரெட்டோடு அரங்கவாசலில் நின்றிருந்த அவரை ஏனோ அப்படிப் பிடித்துவிட்டது. எனக்கு அது இத்தனை ஆண்டுகளாகியும் அகல மறுக்கும் அன்பின் அடர்த்தி. பத்தாயிரம் ரூபாயை கவரில் வைத்து கொடுப்பார்கள் என்ற நிச்சயத்திற்காக, ஒன்றுமேயில்லாத ஒருவனை உலகக்கவி என்றும், தன் படைப்பு அவன் அதிகாரக் காலடியில் அச்சேறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், அவன் எழுத்து நோபலுக்கும் மேலே என எழுதுகிற பலபேருக்கு மத்தியில் பிரபஞ்சன் என்ற அசல் இன்றளவும் தமிழ்வாசிக்கும் பலராலும் நேசிக்கப்படுவதற்கு அவரிடம் இயல்பிலேயே இன்றளவும் இருந்து வருகிற இந்த எளிமையும் உண்மையும்தான் காரணம்.

தகுதிபெறாத படைப்புகள் எதுவாயினும், அதை எழுதியவன் இந்தியாவின் பிரதமரேயாயினும் தன் கால் சுண்டுவிரலால் அவர் எத்தித் தள்ளிய சம்பவங்கள் இலக்கிய உலகம் அறிந்தவைதான். எதிலும் எங்கும் நிலைத்திருக்கத் தெரியாத படைப்பாளிகளுக்கேயுள்ள அலைவுறும் மனம் கொண்டவர் பிரபஞ்சன். முறையாகத் தமிழ் படித்து, முதன்முதலில் மாலைமுரசு பத்திரிகையில் ஒரு நிருபராகத் தன் வாழ்வைத் துவக்குகிறார். துவக்கத்திலேயே உண்மையின் குரூர முகம் அச்சேற்ற மறுத்து அவரை வெளியேற்றுகிறது; அல்லது அவரே வெளியேறுகிறார். மானுட ஜீவிதத்தின் இந்த எழுபத்து மூன்று வயது வரை அவருக்கு ஏற்பட்ட முரண்பாடுகளையும், சமூக வாழ்வில் ஒரு படைப்பாளியால் சகித்துக்கொள்ள முடியாத அருவருப்பு மிக்க சமரசங்களையும் உதறித் தள்ளுபவராகவும், எதிர்கால லௌகீக வசதிகளைப் பற்றி எந்தக்கவலையுமின்றி ஆரம்பத்தில் தன் உடல் மீதேறிய அதே உற்சாகத்துடன் கடற்காற்றின் குளுமையுடனும், சுதந்திரத்துடனும் நம்மோடு அலைந்து திரியும் எளிய படைப்பாளியாகவும்தான் பிரபஞ்சனை ஒவ்வொருவருமே உணரமுடியும்.

•Last Updated on ••Saturday•, 22 •December• 2018 01:27•• •Read more...•
 

தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை உலகம்! கவி காளிதாசரின் "சகுந்தலை"யை பெண்ணடிமை கோட்பாடுகளிலிருந்து விடுவிக்கும் கவிஞர்!

•E-mail• •Print• •PDF•

உயிரிபமும் எப்பொழுதே தான் வசிப்பதற்கு ஓரில்லத்தைக் கண்டடையும்.(மெல்பனில் நடைபெற்ற தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச் சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட நயப்புரை)


சாந்தி சிவக்குமார்கவிதை நான் பயணப்படாத தளம். சிறுகதைகளிலும் புதினங்களிலும் இயல்பாக இலகுவாக பயணிப்பதுபோல், கவிதை கைவரவில்லை. மனம் இன்னும் அதற்குப் பக்குவப்படவில்லை என்று நினைக்கிறேன். தமிழச்சி தங்கபாண்டியனின் பல கவிதைகள் ஒரு சிறுகதைக்குரிய கருவை தாங்கியிருப்பதும், என் மனம் அதை சிறுகதையாய் மாற்ற முயற்சித்ததும், பின் அதை நான் கட்டியிழுத்து அடுத்த கவிதைக்கு இட்டுச்செல்வதும் என முதல் நான்கு நாட்கள் ஓடியேவிட்டது. தமிழச்சி, தன் மனதிற்குள் பல நாட்களாய் பொத்திவைத்து அடைகாத்ததை கவிதை முத்துக்களாய் ஒரு சில வரிகளில் படைப்பது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பரமற்று, எளிமையான வார்த்தைகளால் எல்லோரும் அனுகும்விதமாக , எல்லோருக்கும் புரியும் விதமாக இவரது கவிதைகள் உள்ளன. எப்படி எளிமையான சொற்களால் ஆனதோ, அதேமாதிரி எளிமையான மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள், வாழ்க்கைப்பாடுகள், சின்னச்சின்ன இழப்புகள் என இவர் கவிதைகளாலும், நாம், நம் அன்றாட வாழ்க்கையுடனும் எண்ணங்களுடனும் இணைத்துக்கொள்ளலாம்.

இவரது கவிதைகளை வாசிக்கும்பொழுது, தமிழச்சி மறைந்து, கிராமத்துப்பெண்ணான சுமதியே மனதில் வலம்வருகிறார். கிராமத்திலிருந்து பெருநகரத்திற்கு இடம்பெயர்ந்தமையால் அவரது மனதிற்குள் தோன்றும் உணர்வுகளை கவிதையாக பதிவுசெய்கின்றார்.  

தீப்பெட்டி பொண்வண்டு என்ற கவிதையில்,

அதிகாலைத் தூக்கம்... அசங்கியிருக்கும்
வானம் பார்த்துக் கலைகின்ற வரம்
கிராமம்விட்டு நகரத்தில் குடிவந்த நாள் முதல்
பக்கத்துக் குடியிருப்பும் பார்க்காதிருக்க இறுகப்பூட்டப்படும்
சன்னல்களின் உயிரற்ற திரைச்சேலைகளில் நிலைக்கின்ற சாபமானது.  

இக்கவிதையில் கவிஞர், பெருநகரத்து வாழ்வில் தான் இழந்ததை கூறுகிறார். ஆனால், இன்றைய சென்னை வாழ்க்கையும் அன்று நான் வாழ்ந்த சென்னை வாழ்க்கையும் வேறு வேறு! தமிழச்சி தனது கிராமத்து வாழ்க்கையை கூறும்போது, நான் வளர்ந்த சென்னை வாழ்க்கையைத்தான் நினைத்துக்கொள்கிறேன்.

கோடைகாலம் முழுவதும் மொட்டை மாடியில் தண்ணீர் ஊற்றி தரையை குளிர்வித்து, பக்கத்து மாடியில் உள்ளவர்களிடம் கதைபேசி, Transistor இல் பாட்டுக்கேட்டு, தூங்கிய நாட்கள். காலைக்கதிரவனின் வெளிச்சம் படரும்பொழுது, விழித்ததும் - விழித்தும் விழிக்காமலும் சுகமாய் படுத்திருக்கும் அந்த பத்து நிமிடம்....! பக்கத்துவீட்டு தொலைக்காட்சி செய்திவாசிப்பதும், எங்கிருந்தோ வரும் கோயில் மணியோசையும், உடன் ஒலிக்கும் மசூதியின் பாங்கு சத்தமும் என இவரது கிராமத்து வாசனை கவிதைகள் அனைத்தும் எனக்கு என் கிராமத்து சென்னையை நினைவுபடுத்தின.

•Last Updated on ••Sunday•, 02 •December• 2018 22:35•• •Read more...•
 

தமிழ் எழுத்துலக எழிச்சியின் வடிவம் எஸ்.பொ

•E-mail• •Print• •PDF•

- புரட்சிகரமான எழுத்தால் புதுவித உத்திகளைக் கையாண்டு தமிழ் எழுத்து உலகில் தனக்கென ஒரு இடத்தினை பெற்று நின்ற ஈழத்து எழுத்துலகச் சிற்பி  எஸ்.பொ அவர்களின் நினைவு தினமான இன்று (நவம்பர் 26)  அவருக்கு இக்கட்டுரை சமர்ப்பிக்கப்படுகிறது. -

தமிழ் எழுத்துலக எழிச்சியின் வடிவம் எஸ்.பொ     - எம். ஜெயராமசர்மா... மெல்பேண் ... அவுஸ்திரேலியா , முன்னாள் கல்வி இயக்குநர் -எஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள். 1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து - சிறுகதை, நாவல் , விமர்சனம், கட்டுரை, உருவகக்கதை,மொழிபெயர்ப்பு , நாடகம், என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கிறோம். எஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு. அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சனமேயாகும். எழுத்திலோ பேச்சிலோ பயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார்.  இதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஈழத்தில் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி இருவரும் என்றுமே ஒருவரப்பிரசாதமாகவே இருந்தார்கள். அவர்களை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை.ஆனால் எஸ். பொன்னுத்துரை மட்டும் தனது ஆற்றலின் துணிச்சலால் இவர்களையே ஒருபக்கம் வைத்துவிட்டார். இதுதான் எஸ்.பொ என்னும் இரண்டெழுத்தின் வீறுகொண்ட படைப்பாற்றல் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. ஆங்கிலமொழியில் நல்ல பாண்டித்தியமும் தமிழில் அதே அளவு ஆற்றலும் மிக்கவராக இவர் இருந்தமையும் இவரின் துணிவுக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. பல தமிழ் எழுத்தாளர்கள் தம்மைப் பல்கலைக்கழக மட்டத்திலுள்ள பேராசிரியர் எதிர்த்தால் துவண்டுவிடுவார்கள். ஆனால் எஸ்.பொ இதற்கு விதிவிலக்காகி தனித்து நின்று தனக்கென ஒருவழியில் பயணித்து உச்சியைத் தொட்டு நின்றார். இவருக்கு இதனால் பல எதிர்ப்புகள் வந்தன. இதனாலேயே பல அரச விருதுகளும் வழங்கப்படாநிலையும் காணப்பட்டது. ஆனாலும் எஸ். பொ இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனது எழுத்தூழியப் பணியினை வீறுடன் செய்து வெற்றிவீரனாகவே விளங்கினார். எழுதினார் எழுதினார் எழுதிக் குவித்தார் எனலாம்.எதையும் எழுதுவார். எப்படியும் எழுதுவார். எதிர்த்தாலும் எழுதுவார். ஏசினாலும் எழுதுவார். எழுத்தை எஸ்.பொ.ஒரு தவமாகவே கருதினார் என்றுகூடச் சொல்லலாம். பொன்னுத்துரை பச்சை பச்சையாகவே எழுதுகிறார். படிக்கவே கூசுகிறது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தாலும் பொன்னுத்துரையின் எழுத்தை யாவருமே ரசித்தார்கள். 1961 ஆம் ஆண்டில் " தீ " என்னும் நாவல் வெளிவந்து யாவரையும் திக்குமுக்காடச் செய்தது. இப்படியும் எழுதுவதா ? இது ஒரு எழுத்தா ? இவரையெல்லாம் எப்படி எழுதுவதற்கு அனுமதித்தார்கள் என்றெல்லாம் மிகவும் கடுமையான, காரசாரமான, விமர்சனங்கள் எல்லாம் பறந்து வந்தன.எஸ்.பொ.வை யாவருமே வித்தியாசமகவே பார்த்தார்கள்.ஆனால் பொன்னுத்துரையின் மனமோ தான் எழுதியது தர்மாவேஷம் என்றே எண்ணியது. " தனது பலவீன நிலைகளில் செய்வனவற்றையும் அனுபவிப்பனவற்றையும் சொல்லவும், ஒப்புக்கொள்ளவும் ஏன் கூச்சப்பட வேண்டும் ? " என்று எஸ்.பொ. வே தீயின் முன்னுரையில் எழுதுவதை நாம் உற்று நோக்குதல் வேண்டும். இந்த நாவலை எஸ்.பொ இன்று உயிருடனிருந்து மீண்டும் எழுதினாலும் வேறு மாதிரியாக எழுதியிருக்க மாட்டார். காரணம் அதுதான் அவரின் எழுத்தின் சத்திய ஆவேஷம். வேஷம் தரித்து அவரால் எழுதமுடியவில்லை. முகமூடி அணிந்து எழுதுவதையும் அவர் தனதாக்கிக் கொள்வதில்லை.

•Last Updated on ••Monday•, 26 •November• 2018 07:50•• •Read more...•
 

நவீன இந்திய நாவல்கள்- எனது பார்வை

•E-mail• •Print• •PDF•

  -  நடேசன் -- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2018 இல்,  இடம்பெற்ற நாவல் இலக்கிய அரங்கில் சமர்ப்பித்த கட்டுரை -

நீலகண்டப்பறவையைத்தேடி - வங்காளம்

ஹோமரின் இலியட் மற்றும்  ஓடிசியையும் சேர்த்து பார்த்ததை விட பத்து மடங்கு பெரியது மகாபாரதம். காவியங்கள் தோன்றி காலங்கள் சரியாக கணக்கிட முடியாத போதிலும் புராதன இலக்கிய பாரம்பரியத்தின் உரிமையாளர்களைக் கொண்டது அக்காலப் பாரதம், இக்காலத் தென்னாசியா.

மிருகங்களை பாத்திரமாக்கிய  ஐதீகக்  கதைகள் இங்கேயே தோன்றின. அதன் தொடர்ச்சியாகவே உலகெங்கிலும் மிருகங்களைக் கொண்ட ஈசாப் நீதிக்கதைகளில் தொடங்கி மிக்கி மவுஸ் எனும் வால்ட் டிஸ்னியின் கதைகள் உருவாகின. மகாபாரதத்தில் தருமருடன் இறுதிவரையும் நாயொன்று சொர்க்கத்திற்கு செல்கிறது. பாரதத்திலே  இயற்கை கதைக்களமாக மாறியது. ஆறுகள்,  வனங்கள் மற்றும் கடல்கள் இந்திய இலக்கியமெங்கும் செறிந்தள்ளன. மகாபாரதத்தில் பாண்டவர் வனவாசம் சென்றதுபோல் இராமாயணத்திலும் பதினான்கு வருடங்கள் இராமன்,  சீதை, இலக்குவன் சென்ற காடு வருகிறது.  காளிதாசனின் மேகதூதம் போன்று இயற்கையையும் கொண்டாடும் கதைகள் உருவாகிய இடம் பாரதம்.
வங்காள நாவலான அதின் பந்த்யோபாத்யாயவின் நீலகண்டப்பறவையைத்தேடி நாவலை வாசித்தபோது,  புதிய முரண்பாடுகளைத் தன்னிடம் கொண்ட பழங்கால இந்திய இலக்கியத்தின் உண்மையான நேரடி வாரிசாக வங்காள இலக்கியம் இருந்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது.

வங்காளிகளான ரவீந்திரநாத் தாகூர்,  சத்யஜித்ரேய் போன்றவர்கள் சர்வதேசப் புகழையடைந்தது தற்செயலான சம்பவமல்ல. மற்றைய இந்திய மொழிகளில் நாவல்கள் வெளியாவதற்க பல வருடங்கள் முன்பாக வங்காளத்தில்  நாவலிலக்கியம் (1865 துர்கேசநந்தினி) தொடங்கிவிட்டது. முகமதிய படையெடுப்பு முக்கிய கருவாக  அமைந்தது.

வங்காள நாவல்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சம்பவங்களின் கோர்வையாக வருவதை விட்டு விலகி மனஓட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தன.  பாதர் பதஞ்சலி (1929 )அபராஜிதா(1933) கவிபூதிபூஷண் (Bibhutibhushan Bandyopadhya) போன்றவை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் உருவாகிய நாவல்களே.

இவர்களை அடியொற்றித் தோன்றிய  நாவலான அதின் பந்த்யோபாத்யாயவின் நீலகண்டப்பறவையைத் தேடி  நாவல், தற்போதைய வங்காளதேசம் எனப்படும் அக்கால கிழக்கு வங்காளத்தில் பிரித்தானியர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த கதையைச் சொல்கிறது .

•Last Updated on ••Thursday•, 15 •November• 2018 20:36•• •Read more...•
 

வித்துவான், பண்டிதர் வேந்தனார் “ஈழநாட்டின் இணையற்ற உரையாசிரியர்”

•E-mail• •Print• •PDF•

வித்துவான், பண்டிதர் வேந்தனார் “ஈழநாட்டின் இணையற்ற உரையாசிரியர்”- வித்துவான் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம் 05.11.18. அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது.  வித்துவான் வேந்தனாரை அறிஞர்கள் பலர், பல்வேறு இடங்களில் பல்வேறு கோணங்களில், விதந்து பேசியும் எழுதியும்  வந்துள்ளனர். தலைசிறந்த உரையாசிரியர், நனி சிறந்த கட்டுரையாளர், மிகச் சிறந்த குழந்தைப் பாடலாசிரியர், ஆற்றல் மிகுந்த கவிஞர், பேராண்மைமிக்க சொற்பொழிவாளர், தனித்தமிழ்ப் பற்றுமிக்க தமிழ்ப் பேரன்பர்,  சைவ சித்தாந்த தத்துவங்களை நன்கறிந்த சித்தாந்த சிரோமணி என பல துறைகளில் சிறப்புற்றிருந்த வேந்தனார் அவர்கள், மாணவர் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட பெரும் தமிழாசானுமாவார். வேந்தனாரின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி, வேந்தனாரின் உரையாசிரியத் தன்மையின் சிறப்பினை விதந்து போற்றி, அவரின் மாணவரும்,  நீண்டகாலம் வேந்தனாரை அறிந்தவருமான இளவாலை புலவர் அமுது  அவர்கள், 2006 ஆம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட ‘இந்த வேலிக்கு கதியால் போட்டவர்கள்’ நூலில் எழுதிய கட்டுரையிது -


ஈழநாட்டின் இணையற்ற உரையாசிரியர் ஒருவர், எங்கள் காலத்தில் இருந்தார் என்றால், அவர் வித்துவான் வேந்தனார் தான். வேந்தனார் ஒரு பண்டிதர், வித்துவான், சைவப்புலவர் என்றாலும் அவரை உரையாசிரியர் என்பதே முற்றும் பொருந்தும். பொதுத் தராதரப் பரீட்சைக்கு எனக் குறிப்பிட்டிருந்த இலக்கியப் பகுதிக்குப் பல ஆண்டுகளாக உரை எழுதி வந்தவர் வித்துவான் வேந்தனார்! வேறு சிலரும் இந்தத் துறையில் முயன்றனராயினும், வேந்தனாரின் உரை ஆற்றலுக்கு ஈடுகொடுக்க இயலாமற் போய்விட்டனர். பல்லாயிரம் தமிழ் மாணவர் வேந்தனாரின் உரைச்சிறப்பை அறிந்து தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும் உயர்ச்சியும் பெற அவர் வழிவகுத்தார் எனலாம். அரும்பத உரை, பொழிப்புரை, தெளிவுரை, இலக்கணக் குறிப்பு, எடுத்துக் காட்டு, வரலாறு, நயம் உரைத்தல் என்பனவாக அவர் குறிப்பிட்டு எழுதிய திரவியங்கள் தேடக் கிடைக்காதவை.

இலக்கியம் என்பது ஒரு பசு மாடு. அதிலே பழக்கமில்லாதவர்கள் பால் கறக்கமுடியாது! கண்டவர்களும் மடியில் கைவைத்தால் அது காலால் அடிக்கும், கொம்பால் குதறும் என்று அஞ்சினார்கள் சிலர். இலக்கியம் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்களுடைய முதுசம் பண்டித பரம்பரையின் சீதனம். அந்தத்துறையை கரையிலே நின்று பார்க்கலாமேயன்றி உள்ளே கால்வைப்பது ஆபத்தானது என்று எண்ணியவர்களும் இருந்தார்கள். இலக்கியம் என்பது இலக்கணத்தில் ஊறிக்கிடக்கும் ஊறுகாய். ஆழ்ந்த  அறிவும், அனுபவமும், முதிர்ச்சியும் பெற்றவர்களே அதை எடுத்து வாயில் போடலாம் என்று சிந்தித்தவர்களும் இருந்தார்கள். தேள், கொடுக்கான், சிலந்தி விடச் செந்துக்களைப்போல இலக்கியம் பாமரர்களை ஒற்றை விரல் காட்டி அச்சுறுத்தியது. கற்கக் கசடறக் கற்பவை... எனத் தொடங்கவே நாக்குத் தெறிக்கும் குறள் வரிகள், அதில் வரும் இன்னிசை அளபெடை. சொல்லிசை அளபெடை அதற்குப் பரிமேலழகர், “எவன் என்னும் வினாத்தொகை என் என்றாய் ஈண்டு இன்மை குறித்து நின்றது” என்றவாறான உரைகளும் ஊமாண்டி காட்டின. கம்பராமாயணம், திருக்குறள், கந்தப்புராணம் என்ற இலக்கிய நூல்களைப் பிஞ்சு உள்ளங்களில் இனிய ஒட்டு மாங்கனிபோல சுவை தெரிய அறிமுகம் செய்து வைத்தார் வித்துவான் வேந்தனார். அவருடைய உரையை நினைந்து கைதட்டியவர்களின் ஓசை, இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

வித்துவான் வேந்தனார், வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வேலணை, பிறநாட்டுக் கலாசாரம், பிறமொழிக் கலப்பு, பண்பாடு என்பவற்றால் பழுதடையாத மண். எனவே அவருடைய அத்திவாரம் சிறந்த நாற்றுமேடை எனலாம். வித்துவான் அவர்கள் பரமேஸ்வராக்கல்லூரி இயற்றமிழ் பேராசிரியராக நீண்டகாலம் பணிபுரிந்தவர.; நாவலர் பாடசாலையில் பண்டித வகுப்புகளுக்குப் பாடம் எடுத்தவர். இவனும் அவரிடம் தொல்காப்பியம் பொருளதிகாரம் பாடம் கேட்க வாய்ப்புப் பெற்றவர்களில் ஒருவன்.

ஒருநாள் “ஐயா! நீங்கள் யாரிடத்திலே இலக்கணம் கற்றுக் கொண்டீர்கள்?” என்று கேட்டுவிட்டேன். உடனே அவர் சிரித்தவாறு, “சிவஞான முனிவர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் என்போரிடத்திலேதான் என்றார.;; நான் திறந்த கண்களையே மூடமறந்து, ஆச்சரியத்தில் மிதந்தேன். ஏனெனில் அவர்கள் எல்லோரும் இலக்கணத்துக்கு உரை எழுதிய பெரியார்களே! வித்துவான் வேந்தனாருடைய ஞாபக சக்தி அபாரமானது. ஒருமுறை வாசித்துவிட்டு அப்பகுதியைப் பாராமல் சொல்லக்கூடிய ஆற்றலைக் கண்ட மாணவர்கள் வியப்புற்றோம்.

•Last Updated on ••Monday•, 29 •October• 2018 08:12•• •Read more...•
 

மராத்தி இலக்கியம்!

•E-mail• •Print• •PDF•

 - சே.முனியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஜெ.பீ. கலை அறிவியல் கல்லூரி, அகரக்கட்டு, ஆய்க்குடி, தென்காசி – 627852 -மராத்தி, மேற்கு இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் பேசப்படும் ஓர் இந்தோ-ஆரிய மொழியாகும். இம்மொழியானது அங்கு அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்படுகின்றது. உலகளவில் தொண்ணூறு மில்லியன் மக்களால் பேசப்படும் மொழி எனும் சிறப்பைப் பெற்றுக் காணப்படுகின்றது.

இந்திய மக்களால் பயன்படுத்தப்படும் மொழிகளுள் மராத்தி நான்காவது இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றது. இம்மொழி பாலி என்ற மொழியின் வழியாகச் சமசுகிருதத்திலிருந்து வந்தது. இது மகாராஷ்டி அல்லது மகாராஷ்டிரா அல்லது அபப்ரம்ஸா என அழைக்கப்பட்டு வந்தது. பின்பு அதன் பேச்சு மொழியில் ஏற்பட்ட படிப்படியான மாறுதல்களே இன்றைய மராத்தி மொழி உருவாக வழிவகுத்தது.

தோற்றம்
மராத்தி மொழியின் தோற்றம் கி.பி.8ஆம் நூற்றாண்டு எனச் சுட்டப்படுகின்றது. நவீனகால மராத்தி பிராகிருத மகராஷ்ட்ரி மொழியிலிருந்து வந்தது. கி.பி.875ஆம் ஆண்டு வரை சாதவாகனப் பேரரசின் அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது மற்ற பிராகிருத மொழிகளைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்த மொழியாக மேற்கு, தென்னிந்தியாவில் பேசப்பட்டு வந்தது. மேலும் இது மகாராஷ்ட்ரி அபபிராம்சா என அழைக்கப்பட்டது. மகாராஷ்ட்ராவில் வாழ்கின்ற ஐம்பது மில்லியனுக்கு மேலான மக்களுக்கு மராத்தி தாய்மொழியாகவும் திகழ்கிறது.

மகாராஷ்ட்ரிரா எனும் பெயர் மகாபாரதத்திலோ, இராமயணத்திலோ இடம் பெறவில்லை. கி.பி.17ஆம் நூற்றாண்டில் சீனப்பயணி யுவாங் சுவாங் இந்தப் பகுதியை மா-ஹா-லா-சொ (ma-ha-la-cho) என்று குறிப்பிடுகின்றார். கி.பி.10ஆம் நூற்றாண்டில் அல்பர்னி மகாராஷ்டிராவை மார்காட்டா (Marhatta) என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாராத்தி மொழியின் தோற்றத்தைப் பற்றி அறிஞர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. அதாவது, மராத்தி மொழி சமசுகிருதத்திலிருந்து வளர்ச்சியடைந்தது என சி.வை.வைத்யாவும் (C.V.Vaidya), அபபிரம்சாவிலிருந்து வளர்ச்சியடைந்தது என ஸ்டென் க்னோவும் (Sten Knonow) கூறுகின்றனர். பலர் பஞ்ச திராவிட மொழிகளில் ஒன்று எனவும் குறிப்பிடுகின்றனர்.

கைரேயின் (Khaire) கருத்துப்படி (முந்தையப் பேச்சு) மராத்தி மொழியின் பேச்சுமொழிச் சொற்கள் பல தமிழிலிருந்தும் கன்னடம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகளிருந்தும் கடன் வாங்கப்பட்டு யாதவர்களால் பேசப்பட்டதெனக் கூறுகின்றார்.

பெரும்பாலான மக்கள் மராத்தி மொழியானது பிராகிருதத்திலிருந்து வந்தது என்றே கருதுகின்றனர். ‘விஜயாஅதித்ய’ செப்புத்தகடு மற்றும் சரவணபலகோலா (கர்நாடகம்) கல்வெட்டுக்கள் பிராகிருத மொழி என்று சுட்டுகின்றது. மேலும் அது ‘உத்தியோட்டன்’ என்ற சைன மதத்துறவியின் கூற்றுப்படிக் கொங்கனி எனவும் சொல்லப்பட்டது.

கி.பி.13ஆம் நூற்றாண்டிற்கு முன் (யாதவா காலத்திற்குமுன்) மராத்தியில் எந்தவொரு படைப்புகளும் இல்லை. அதன்பின் வந்த ஆட்சியிலேஎ மராத்தி அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.

•Last Updated on ••Sunday•, 02 •September• 2018 22:03•• •Read more...•
 

எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர்: சமத்துவத்தின் வலிமையைத் தனது படைப்புக்களில் உணர்த்தியவர்!

•E-mail• •Print• •PDF•

ழுத்தாளர் அகஸ்தியர் பிறந்த தினம் ஆகஸ்ட் 29. அதனையொட்டிப் பிரசுரமாகும் கட்டுரை!

எழுத்தாளர் அகஸ்தியர்இலக்கியம் என்பது ஒரு எழுத்தாளன் வாழும் காலகட்டத்தில் அவன் கண்ட சமுதாயத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு சரித்திர ஆவணம் என்பது எனது கருத்து. தான்வாழும் சமுதாயத்தில் சாதி மத இன,நிற வர்க்க பேதங்களால் மக்களுக்கு நடக்கும் கொடுமைகயைக் கவனிக்காமல் அல்லது தெரிந்தும் தெரியாத நடித்துக்கொண்டு ஒரு எழுத்தான் தனது இலக்கியப் படைப்புக்களைச் செய்தால் அவை சமூகம் சாராத-தன்னை அந்தச் சமுகத்துடன் இணைத்துப் பாராத ஒரு படைப்பாளியின் உயிரற்ற வெற்றுப் படைப்பாகத்தானிருக்கும்.

இலக்கியங்கள் ஏதோ ஒரு வகையில் படைப்பாளியின் அடையாளத்தை அவர் யார் என்று படம் பிடித்துக் காட்டுகிறது. அரசியல் சாராத, ஒரு தனி மனிதனின் உள்ளுணர்வுகளின் பிரபலிப்பான படைப்பாக ஒரு இலக்கியம் கணிக்கப் பட்டாலும் அவனின் வரிகளில் ஒன்றிரண்டு அந்த இலக்கியததைப் படைத்தவனின் சமூகக் கண்ணோட்டதை;தைக் காட்டிக் கொடுத்து விடும்.

இலங்கை எழுத்தாளர்கள் பலர் 40-60ம் ஆண்டுகளில் சமுகத்தின் வேறுபாடுகளால் அடக்கப் பட்டு ஒடுக்கப் பட்ட மக்களைப் பற்றி எழுதினார்கள். அவர்களின் சமுதாய வெளியுலகத் தொடர்பால் கண்ட கொடுமைகளையுணர்ந்த உள்ளுணர்வின் கோபப்பொறிகள்,ஆதங்கங்கள், அதிர்வுகள்,என்பன அவர்களின் படைப்புக்களில் பிரதி பலித்தன.

ஒட்டுமொத்தமான மக்களின் சமத்துவ வாழ்க்கைக்கு வழிதேடியவர்களில் சமயவாதிகள்,அரசியல்வாதிகள் என்று பலர். அவர்களில் தங்கள் வாழ்க்கையையே ஒடுக்கப் பட்ட மக்களின் நிலையை மாற்றும் வித்தில் தங்கள் இலக்கியப் படைப்புக்களைச் செய்தவர்களும்; அடங்குவர்.

தமிழ் இலக்கியம் வளர்ந்த தமிழ்நாட்டில் சாதிக் கொடுமையால் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் இலக்கியத்தற் கேட்காமலிருந்த கால கட்டத்தில் அவர்களின் துயரைத் தங்கள் படைப்புக்களில் காட்டியவர்கள் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள்.

அந்த வரலாற்றைக் கொண்ட இலங்கையின் முற்போக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் முக்கியமான படைப்பாளிகளில் அகஸ்தியரும் ஒருத்தர். இவர், 28.8.1926ம் ஆண்டு யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை என்ற இடத்தில் திருவாளர் சவரிமுத்து-அன்னம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். இவரின் எழுத்தாற்றலை மதித்து இவருடன் எனக்கு ஒரு உள்ளார்ந்த ஈர்ப்பு ஏற்பட்டதற்கு என் தாயார் மாரிமுத்து பிறந்த அதே 1926ம் ஆண்டு இவரும் பிறந்தது ஒரு காரணமோ எனக்குத் தெரியாது.

பாரிசில் இவர் வாழ்ந்தபோது ஓரிரு நாட்கள் அவருடன் பழகியது எனது அதிர்ஷ்டம் என்று கருதினேன்.தன்னலமற்ற ஒரு சாதாரண தமிழன், தனது சமூகத்தில் படிந்து கிடக்கும் பன்முகக் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, ஆளும் வர்க்கம் எப்படி ஏழை மக்களை வதைக்கிறது. வாட்டுகிறது,மனிதராக மதிக்காமல் இழிவுபடுத்துகிறது என்பதைத் தனது படைப்புக்கள் மூலம் உலகுக்குச் சொன்ன முற்போக்கு எழுத்தாளர்களில் திரு அகஸ்தியரும் முன்னிலைப் படுத்தப் படவேண்டியவர்.

•Last Updated on ••Friday•, 24 •August• 2018 14:52•• •Read more...•
 

கவிஞர் பா.சத்தியசீலன்: நாம் மறந்துவிடக்கூடாத ஒரு குழந்தைக் கவிஞன்

•E-mail• •Print• •PDF•

 - என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன் -காலம் கழியும் வேகத்தில் நாம் பலவற்றையும் இலகுவில் மறந்து கடந்துசென்று விடுகின்றோம். திடீரென்று ஒருநாள் ஒரு சிறு பொறி முன்னர் கவனிக்காது கடந்துசென்றுவிட்ட  ஒரு தனி மனிதஉறவை மீண்டும் எம்மனதில்; நினைவுத்தட்டின் மேற்பரப்புக்குக் கொண்டுவந்து விடுகின்றது.

என்னுள் முகிழ்ந்த கவிஞர் ‘பாவலவன்” பா.சத்தியசீலனின் நினைவும் அவ்வாறானதே. அண்மையில் லண்டனில் ‘புத்தகப்பிரியர்” ஒருவரின் வீட்டு புத்தக அலுமாரியைக் குடைந்துகொண்டிருந்தேன். அதில் இருந்த தடித்த தமிழ் நூலொன்றை எடுத்து விரித்தபோது அதனுள் சிக்கியிருந்த மிகப்பழைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கடிதமொன்று பொத்தென நிலத்தில் வீழ்ந்தது. வாழ்த்து மட்டையின் தடிப்பு அதனை விரிக்கத் தூண்டியது. அது ஒரு கையடக்கக் கவிதை நூல். அதன் தலைப்பு ‘நத்தார் வாழ்த்து”. அந்தச் சிறிய பிரசுரம் பா.சத்தியசீலனின் சிறிய கவிதைநூல். முன்னாளில் ‘மில்க்வைற்” கனகராசா அவர்கள் ஏராளமான இலவசப் பிரசுரங்களை அமரர் க.சி.குலரத்தினம் அவர்களின் துணையோடு மில்க்வைற் விளம்பரங்களாக வெளியிட்டு விநியோகித்ததை எம்மால் மறக்கமுடியாது. பாவலவன் சத்தியசீலனின் ‘நத்தார் வாழ்த்து”க் கவிதையும் அப்படியாதொரு சிறு கவிதைநூல் தான். நத்தார் வாழ்த்துக் கவிதையை வாழ்த்து அட்டைபோன்று வடிவமைத்து சிறு பிரசுரமாக அந்நாட்களில் வெளியிட்டிருந்தார். அந்தச் சிறு பிரசுரமே இலக்கிய நண்பர் பா.சத்தியசீலன் பற்றிய மனப்பதிவுகளை இன்று இரைமீட்க வைத்துள்ளது.

பா.சத்தியசீலன் தனது நத்தார் வாழ்த்து கவிதைப் பிரசுரத்துடன் 1970களின் இறுதிக்கட்டத்தில் ஒருநாள் என்னை வந்து புங்குடுதீவு சர்வோதய நூலகத்தில் சந்தித்தார். வெறும் அட்டைவழி வாழ்த்து மரபை உடைத்து இப்படியான  தூய தமிழ் வாழ்த்து நூல்களை வாங்கி எமது சமூகம் பரிமாறிக்கொண்டால் என்ன என்ற பெரிய புரட்சிகரமான சிந்தனையுடன் தான் அவர் அன்று என்னை அணுகியிருந்தார். அவரது கைகளில் அவர் எழுதிய மேலும் பல நூல்கள். அனைத்தும் சிறு பக்க எணணிக்கையுடன் கூடியவை. அதனைத் தொடர்ந்து பொங்கல் வாழ்த்தையும் இவ்வாறு வெளியிட அவர் முனைந்ததாக எனக்குள் ஒரு நினைவு.

பா.சத்தியசீலனின் பூர்வீகம் அல்லைப்பிட்டி. யாழ்ப்பாணத் தீவுக்கூட்டத்தின் நுழைவாயில் கிராமம் அது. அவர் மணம்புரிந்தது நவாலியில். ‘கலைவண்ணம்” என்பது அவரது நவாலி இல்லத்தின் பெயர். மானிப்பாய், நவாலி தெற்கில் சின்னப்பா வீதியில் அவரது புகுந்த வீடு அமைந்திருந்ததாக நினைவு. நான் ஆனைக்கோட்டை- அயல் கிராமத்தைத் தாய்வழிப் பூர்வீகமாகக் கொண்டதாலும், யாழ்ப்பாணக் கல்லூரிக்கு அடிக்கடி நவாலியூடாகப்  பயணிப்பதாலும் 70களின் இறுதிப்பகுதியில் சத்தியசீலன் எனக்குப் பரிச்சயமான ஒரு இலக்கியவாதியாக மாறிவிட்டார்.

•Last Updated on ••Monday•, 23 •July• 2018 23:00•• •Read more...•
 

சாதாரண மக்களின் விடிவுக்காக பேனா பிடித்த படைப்பாளி நாவேந்தன்..!

•E-mail• •Print• •PDF•

'கரும்பூறும் நறும்பாகும் கற்கண்டும்
கனிரசமும் கலந் தொன்றாய்
அரும்போதின் தேனமுதோ அலைகடலின்
திருவமுதோ அன்றி வீணை
நரம்போதும் இன்னிசையோ எனவியந்து
நயந்து கடல்மடை திறந்தாலென்ன
வரும்போது அவன்பேச்சில் இறும்பூது
எய்தாதார் யாருமில்லை..!"

நாவேந்தன்கவிஞர், ஆசிரியமணி சி. நாகலிங்கம் அவர்களால் இவ்வாறு புகழ்ந்துரைக்கப்பட்ட முதுபெரும் எழுத்தாளர் - பேச்சாளர் நாவேந்தனின் பதினெட்டாவது  நினைவு    தினம் 10 - 07 - 2018 அன்று ஆகும்..! யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தாபகராகவும் அதன் முதற் செயலாளராகவும் இலங்கை இலக்கிய இரசிகர் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்ட நாவேந்தன் யாழ். மாநகரசபையின் பிரதிமேயராகவும் திகழ்ந்துள்ளார்..! சாதாரண மக்களின் விடிவுக்காகப் பேனாபிடித்த படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர் நாவேந்தன். அவர் சாதாரண மக்களின் பிரச்சினைகளை - அவர்களது ஆசாபாசங்களை வாழ்வியல் முரண்பாடுகளைத் தமது சிறுகதைகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர். அவரது சிறுகதைகள் வெறும் கற்பனைகளல்ல. அவை யதார்த்த பூர்வமானவை. சமூகத்தினரிடையே புரையோடிப் போயிருக்கும் அழுக்குகளை அப்புறப்படுத்தவும் சமூக அவலங்களையும் அறியாமைகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டி சமூக மாற்றத்தின் தேவைகளை உணர்த்தவும் அவரது எழுத்துக்கள் பெரிதும் உதவின. மானுடம் பயனுற விரும்பும் இலக்கிய ஆக்க முயற்சிகளில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகத் தம்மை அர்ப்பணித்து தொண்டாற்றியவர். அவர்    பன்முகத் திறன்கொண்ட படைப்பாளி. ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான இவர் சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், விமர்சகர், கவிஞர், பேச்சாளர், தொழிற்சங்கவாதி எனப் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். அவர் மறைந்து பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் மக்கள் மனதில் அவரது பணிகள் நிலைத்து நிற்பதை நிதர்சனமாகக் காண முடிகிறது.

அமரர் நாவேந்தன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். த. திருநாவுக்கரசு என்பது இவரது இயற்பெயராகும். இவரது பேச்சாற்றலைக் கண்டு அன்று தமிழரசுக்கட்சித் தலைவர் ''கோப்பாய்க் கோமான்'' கு. வன்னியசிங்கம் 'நாவேந்தன்'' என்று பாராட்டினார். அன்றுதொட்டு நாவேந்தன் என்னும் புனைபெயராலேயே ஈழத்திலும் தமிழகத்திலும் நன்கறியப்பட்டவராகத் திகழ்ந்தார். தமது பதினைந்தாவது வயதில் 'இந்து சாதனம்" மூலம் எழுத்துத்துறையில் புகுந்த இவர் சிறுகதை, கட்டுரை, நாவல், கவிதை, விமர்சனம் எனப் பல்வேறு துறைகளில் தமது எழுத்தாற்றலைப் புலப்படுத்தியுள்ளார். ''சுதந்திரன்'' பண்ணையில் வளர்ந்த எழுத்தாளர்களுள் நாவேந்தனுக்குச் சிறப்பிடமுண்டு. சுதந்திரன் பத்திரிகையிலேயே அவரது பெரும்பாலான படைப்புக்கள் பிரசுரமாகியுள்ளன. நாவேந்தனின் தமிழ் நடை தனித்துவமானது. கொஞ்சும் தமிழிலும் குமுறும் எரிமலை நடையிலும் எழுதும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார். அவர் நடத்திய 'சங்கப்பலகை" இதழில் எழுதிய விமர்சனங்கள் இதற்குத்தக்க சான்றாகும்.

•Last Updated on ••Monday•, 09 •July• 2018 21:44•• •Read more...•
 

அலெக்ஸி டால்ஸ்டாயின் சித்திர நடை எழுத்து

•E-mail• •Print• •PDF•

அலெக்ஸி டால்ஸ்டாய்- கீற்று.காம் இணையை இதழில் வெளியான இக்கட்டுரையினை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். -

பண்டைக் காலத்திலிருந்தே மனித குலம் தனது அறிவாற்றலையும் மனோபாவனையையும் புலப் படுத்தும் வகையில் பல இலக்கியங்களைப் படைத் திருக்கிறது. ஆயினும் தனக்கே உரிய விதிகளுடன் திகழும் நாவல் என்ற இலக்கியத்துறை தொழிற்புரட்சிச் சகாப்தத்தின் நன்கொடையேயாகும். அதை அச்சு யந்திரத்தின் சிருஷ்டி என்றும் ஒரு வகையில் குறிப் பிடலாம்.

ஒன்றோடொன்று உயிர்த்தொடர்பு கொண்டிராத பஞ்ச தந்திரக் கதைகள் முதலிய கதைக்கோவைகளைப் போலவல்லாமல், நாவல் உறுப்பழகும் ஒருமை நயமுமாய்ப் பெற்றுப் பொலியும் நெடுங்கதையாக உள்ளது. வாழ்வின் ஏதோ ஓர் அம்சத்தைத் தன் கற்பனை வளத்தால் புதிதாகச் செப்பம் செய்து தரும் சிறுகதை ஆசிரியனைப்போலவல்லாமல், அகலக்கால் விரித்து, வாழ்வின் பல்வகை அம்சங்கள் வெவ்வேறு கோணங் களிலிருந்து மனோபாவனைச் சிறப்புடன் நோக்கும் உரிமை நாவலாசிரியனுக்கு உண்டு என்பது உண்மை. ஆனால் அவன் எத்துணைதான் சஞ்சாரம் செய்த போதிலும், நாவலின் கட்டுக்கோப்பில் ஓர் உள் தொடர்பு இருப்பது அவசியம்; நாவலின் கதை நிகழ்ச்சியில் ஒருமை நயம் மிளிர்வது இன்றியமையாதது. இந்த வகையில் நாவலைக் காப்பியத்துடன் ஒப்பிடலாம். காப்பியத்தில் கிளைக் கதைகள் இருப்பினும் அவை காவியக் கதைக்கு இன்றியமையாதனவாகிக் கதை யோட்டத்தில் ஒன்றிவிடுகின்றன வல்லவா?

நாவல் இலக்கியத்தில் ஒருதுறைதான். மேலும் கவிதை, நாடகம், திரைப்படம், ஓவியம், சங்கீதம் ஆகியவற்றால், நாவலால் இயலாத அளவுக்கு நுட்ப மாகவும் திட்பமாகவும் வாழ்வின் ஒரோர் அம்சங்களை உணர்த்த முடியுமென்பதும் உண்மையே. ஆனால் ஆங்கில இலக்கிய ஆய்வுரையாளரான ரால்ப் பாக்ஸ் கூறுவதைப்போல், தனி மனிதனின் முழு வாழ்வை வெளியிடுவதில் வேறு எந்தக் கலைத்துறையாலும் நாவலை விஞ்ச முடியாது. ஒளிவு மறைவாயுள்ள அக உலக ஓட்டங்களைத் துல்லியமாகப் புலப்படுத்தும் தனித் திறன் நாவலுக்கே உரியது என்று புகழ்பெற்ற ஆங்கிலேய நாவலாசிரியர் ஈ.எம்.பார்ஸ்டர் கூறுவது முற்றிலும் உண்மையே.

நாவல்களில் பல ரகங்கள் உண்டு. படிக்கும்போது தோன்றி மறையும் உணர்ச்சியைத் தவிர வேறு எத்தகைய அனுபவத்தையும்  அளிப்பதற்கு இயலாத ‘கிளுகிளுப்பு’ நாவல்களை நாம் இரண்டாம்முறை படிக்கமாட்டோம். மறு புறத்தில், ஜனங்களின் ஆசாபாசங்களிலும் ஆர்வ அபிலாஷைகளிலும் நலன்களிலும் வாழ்விலும் போராட்டத்திலும் ஒன்றி நிற்கும் எழுத்தாளன் தன் படைப்பில் யதார்த்த உண்மையை முழுமையாகவும் நுட்பமாகவும் வெளியிடும் வல்லவன் ஆகிறான். அத்தகைய எழுத்தாளர்களில் சிறந்தவர்களது இலக்கி யங்கள், சாகாவரம் பெறுகின்றன. ஐம்புலன்களும் அறிதிறனும் ஆத்மாவும் புதிய அனுபவம் பெறுவதற்கு அவை உதவுகின்றன. அவற்றால் ஏற்படும் அனுபவத்தை மறத்தற்கியலாது. அறிவைப் பெருக்கி, மனோ பாவனையை வளம்பெறச்செய்து, இதயத்தைத் தூய்மை அடையச்செய்யும் அத்தகைய நாவல்கள் காப்பிய இயல்பினைப் பெறுகின்றன என்னலாம்.

•Last Updated on ••Thursday•, 14 •June• 2018 06:51•• •Read more...•
 

தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் உணர்த்தும் தலைமக்களுக்கு ஆகாத குணங்கள்!

•E-mail• •Print• •PDF•

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
திருமணம் என்பது பழங்காலந் தொட்டே இருந்து வருகின்ற ஒன்று. இத்திருமணம் பற்றித் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் களவியல், கற்பியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் தலைவன் தலைவிக்குரிய ஒப்புமைகளையும் ஒப்பில்லா குணங்களையும் தொல்காப்பியர்கூறியுள்ளார். அவற்றில் தலைமக்களுக்குரிய ஆகாத குணங்களை அகநானூற்றோடு ஒப்பிட்டு ‘தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் உணர்த்தும் தலைமக்களுக்கு ஆகாத குணங்கள்’ எனும் இக்கட்டுரை ஆராயவுள்ளது.

தலைமக்களுக்கு ஆகாத குணங்கள்
இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பன்னிரெண்டு தன்மைகளையும் தொல்காப்பியம் கூறியுள்ளது. தற்பெருமை, கொடுமை, தன்னை வியத்தல், புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக் கூடாது, மறதி, ஒருவரையொருவர்ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பன்னிரெண்டு தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்றார். இதனை, 

“நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறைப்போ டொப்புமை
என்றிவை யின்மை என்மனார்புலவர்.” (நூ.26)

எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். மேலும் இதனைக் குறித்து தமிழண்ணல் அவர்கள், “தொல்காப்பியர் பன்னிரண்டு ஆகாப் பண்புகளைக் கூறி, அவற்றைப் போக்க வேண்டும் என்று கூறுகிறார். திருமணத்திற்கு முன் இத்தகைய தீய குணங்கள் இல்லாதவர்களாகப் பார்த்து மணம் பேச வேண்டும். திருமணமாகிவிட்டாலோ, இத்தீய குணங்களை அறிவுரை கூறித் திருத்த வேண்டும். இன்றேல் இல்லறம் இனிதாக அமையாது.” (தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம், ப.37) எனக் கூறியுள்ளார். அதாவது மேற்கண்ட குணங்கள் இல்லாதவர்களைப் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் இல்லையேல் திருமணம் என்பது இனிமை பயப்பதற்கு பதிலாக துன்பத்தை - துயரத்தைப் பயப்பதாகவே அமையும் என்பது அவர்தம் கருத்தாக உள்ளது.

நிம்பிரி
நிம்பிரியாவது பொறாமை, பிறர்நல்வாழ்வு கண்டு பொறுக்க முடியாத சிறுமை. இதன் தோற்றத்தினை, “இளையோர்பருவத்தில் G+ப்பின் மாற்றங்கள் ஏற்பட்டு விட்ட பின்னர் எதிர்பாலினர் பற்றிய அக்கரை வளரும் போது பொறாமைக் குணங்களும் தோன்றுகின்றன.” (இளையோர்உளவியல், தொகுதி -2, ப.88) மேலும், “பொறாமை என்பது சினம், அச்சம், அன்பு, இழப்பு ஆகியவைகள் இணைந்த மனவெழுச்சியாகும்.” (மேலது, ப.87) என அ. அப்துல்கரீம் கூறியுள்ளார். இது குறித்தப் பாடல் அகநானூற்றில் காணப்படவில்லை.

•Last Updated on ••Friday•, 08 •June• 2018 20:28•• •Read more...•
 

அகப்பாடல்களில் பறவை - மனித உறவுகள் (நற்றிணையை முன்வைத்து)

•E-mail• •Print• •PDF•

- முனைவர் ப. சுந்தரமூர்த்தி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்), சங்ககிரி, சேலம் மாவட்டம். -சங்க இலக்கியங்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் சிறப்பு வாய்ந்த நற்றிணையில் அன்றில், அன்னம், ஈயல், காக்கை, காட்டுக்கோழி, கிளி, குயில் குருகு (நாரை), குருவி, கூகை, கொக்கு, கோழி (வாரணம்), சிச்சிவி (சிரல்), பருந்து (எருவை), புறா, மயில், மின்மினி, வண்டு (தும்பி, சுரும்பு), வாவல் உள்ளிட்ட 18 பறவையினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை உவமை, உள்ளுறை, இறைச்சி போன்ற நிலைகளில் இப்பறவையினங்களின் செயல்களை மனிதச் செயல்களோடு ஒப்புமைப்படுத்துகின்ற பாங்கினை நற்றிணையில் அறிய முடிகிறது. இத்தகைய பறவையினங்கள் எவ்வாறு மனித செயல்களோடு தொடர்புப்படுத்தப்படுகின்றன என்பதை ஆராயும் நிலையில் இக்கட்டுரை அமைகின்றது.

1. குருகு
நற்றிணையில் குருகைப் பற்றியப் பாடல்கள் 28 ஆகும். இதுவே அதிகமாகப் பாடப்பட்டுள்ள பறவையினமாகும். தன்னுடைய கூட்டத்தோடு கூடியிருக்கின்ற குருகினைப்பார்த்து நானும் உன்னைப்போல் அன்புடன் தலைவனோடு சேர்ந்திருக்க முடியவில்லையே என்று வருந்துதல், குருகிடம் தன் குறையினைத் தலைவனிடம் எடுத்துக்கூறுவாயாக என்று கூறுதல் என்ற இரு நிலைகளில் குருகிற்கும் தலைவிக்குமான உறவு நிலையில் பாடல்கள் நற்றிணையில் அமைந்துள்ளன.   

தலைவி ‘நாரையே நீயேனும் சென்று, என் குறையை அவர் உணரும் வண்ணம் கூறுவாயாக’ என்று தூதனுப்புகிறாள். ‘கரிய கால்களை உடைய வெண்ணிறக் குருகே நின் சுற்றத்தோடும் சென்று கடல் நீரிடத்தே மேய்ந்துவிட்டுத் தாவிப் பறத்தலினை விரும்பினையாய் உள்ளனை. ஆயினும், தூய சிறகுகளையுடையவும், மிக்க புலவைத் தின்னுபவும் ஆகிய நின் சுற்றத்தோடும் சிறிது நேரம் தங்கியிருந்து, என் சொற்களையும் கேட்பாயாக. சிறுமையும் புன்மையும் கொண்ட இந்த மாலைக் காலமானது எனக்குப் பெரு வருத்தத்தைத் தருகிறது. அதனை வேறாகக் கருதுகின்ற மனப்போக்கினைக் கொள்ளாதே, இதனைக் கேட்பாயாக. கொய்தற்குரிய குழையானது தழைத்திருக்கின்ற இளைதான ஞாழலானது, தெளிந்த கடலலையின் நீல வண்ணப் புறத்தினைத் தடவிக் கொடுக்கும், தாழை மரங்களை வேலியாகவுடைய நும்முடைய துறைக்கு உரிமையுடையவர்க்கு, என் குறைதான் இத்தன்மைத்தென அவர் உணரும்படியாகச் சென்று சொல்வாயாக’ என்று நாரையிடம் கூறுகிறாள். இதனை,

“கருங்கால் வெண்குருகு! எனவ கேண்மதி@
பெரும்புலம் பின்றே, சிறுபுன் மாலை@
அது நீ அறியின், அன்புமார் உடையை@
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என்குறை
இற்றாங்கு உணர உரைமதி”  (நற்றிணை: 54)

•Last Updated on ••Friday•, 08 •June• 2018 11:14•• •Read more...•
 

பிடித்த சிறுகதை - 1 - நந்தினி சேவியர்.

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் முகநூலில் 'எனக்குப் பிடித்த சிறுகதை'  என்னும் தலைப்பில் சிறு குறிப்புகள் பதிவிட்டு வருகின்றார். இக்குறிப்புகள் எழுத்தாளர்கள் பலரை அறிமுகம் செய்வதால் ஆவணச்சிறப்பு மிக்கவை. அவை பதிவுகள் இணைய இதழில் அவ்வப்போது பிரசுரமாகும்.  - பதிவுகள் -


 

பிடித்த சிறுகதை - 01

கருத்து வேறுபாடுகளை மறந்து. ஒரு வாசகன் என்ற வகையில் சில எழுத்தாளர்களின் (எனக்குப் பிடித்த) சிறுகதைகளை என் இளம் நண்பர்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

" அணி "

ஒரு காலம் முற்போக்கு எழுத்தாளராக இருந்து பின்னர் எதிரணிக்கு தாவி நற்போக்கு எழுத்தாளராக மாறிய  எஸ்.பொ. வின் கதை இது. அவரது 'வீ ' தொகுப்பில் இக்கதை அடங்கியுள்ளது.  'இரத்தம் சிவப்புத்தான் ' என்பது போன்ற ஒரு தலைப்பில் 'சிறுபான்மைத் தமிழர் மகாசபை மலரில் ' இக்கதையை முன்புவாசித்திருந்தேன். புதியதொரு கதை சொல்லும் முறையில் இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சலூன் தொழிலாளியின் வாய் மொழியாக எழுதப்பட்ட இக்கதை இறுதி முத்தாய்ப்பை தவிர்த்து வாசித்தால் மிகச் சிறப்பான கதை என உறுதிப்படுத்துவேன்.!


பிடித்த சிறுகதை - 02

மாகாணசபை வடக்குக் கிழக்கென பிரிபடாத கடைசி வருடம். தமிழ்த் தினவிழா எழுத்தாக்கப் போட்டி நடுவர்களில் நானும் ஒருவன்.  மாகாணப் போட்டி திருகோணமலையில் நடைபெற்றது. கோட்ட மட்டம், வலய மட்டம், பிரதேச மட்டம், மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்றவையே மாகாண மட்டப்போட்டிக்கு தேர்வுக்காக வரும். இதில் வெற்றிபெறுவதே அகில இலங்கைப் போட்டிக்கு சேர்த்துக்கொள்ளப்படும். சிரேஸ்ட பிரிவுக்கானசிறுகதைப் போட்டி,.. எனது பார்வைக்கு வந்த எட்டு மாவட்ட சிறு கதைகளில் ஒன்று இப்படி ஆரம்பித்தது.

•Last Updated on ••Monday•, 28 •May• 2018 04:54•• •Read more...•
 

தொல்காப்பியர் குறிப்பிடும் மரபுப்பெயர்கள்

•E-mail• •Print• •PDF•

தொல்காப்பியர் குறிப்பிடும் மரபுப்பெயர்கள்தமிழ் மொழியில் தோன்றிய முழுமுதற் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். இதில் உயிரினங்களின் குணங்கள் பற்றி குறிப்பிடுவதோடு தொன்றுத்தொட்டு காலம் காலமாக வழங்கி வரும் இம்மரபானது தமிழ் மொழியிலும் சொற்பொருள் நிலையிலும் மாற்றம் ஏற்படாமல் இருக்க பின்பற்றப்பட்டு வருகிறது. உலகம் தோன்றிய காலம் முதல் பல உயரினங்களுக்கு சில அடிப்படைக் குணங்கள் காணப்படுகின்றது. அவற்றை அடிப்படையாகக் கொண்டு அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். தமிழ் இலக்கிய இலக்கணங்களில் உயிரினங்களின் தோற்றம் அதன் இயல்பு, செயல் ஆகியவற்றைத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். மரபியல் கோட்பாடு என்பது உயிரினங்களின் மரபுப்பெயர்களான இளமைப்பெயர்கள், ஆண்பாற்பெயர்கள், பெண்பாற்பெயர்கள் என இவற்றை வகைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளதை இக்கட்டுரையின் வழி விளக்குவதே நோக்கமாக அமைகிறது.

மரபியல்
“சான்றோர்களும் அறிவரும் கண்ட வழக்குகளே மரபாகும். உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் காலம் காலமாகக் கடைபிடிக்கப்பட்ட ஒன்றிற்கு சொற்பொருள் உணர்த்தியதால் மரபியல் என்னும் பெயர் பெற்றது. ஒரு மரத்தின் வித்து கீழே விழுந்து மீண்டும் மீண்டும் மரமாகி தன்னுடைய சந்ததியை வளர்ப்பது போல என்றும் மாறாமல் இருப்பது மரபு” என்று தமிழண்ணல் மரபியலுக்கு விளக்கம் தருகிறார்.

“மரபென்ற பொருண்மை என்னையெனில் கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுஞ் செய்யுளின் கண் மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனுமின்றி இருதிணை பொருட் குணனாகிய இளமையும், ஆண்மையும், பெண்மையும் பற்றிய வரலாற்று முறையும், உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும், அஃறிணைப் புல்லும் மரனும் பற்றிய மரபும், அவை பற்றி வரும் உலகியல் மரபும் உலகியன் மரபும், நூன்மரபுமென இவை மரபெனப்படுமென்பது” என்று பேராசிரியர் மரபியலுக்குத் தரும் விளக்கத்தைப் பார்க்கமுடிகிறது.

இதேபோல் மரபியலுக்கு இளம்பூரணர் உரை வகுக்கையில் “இவ்வதிகாரத்தில் கூறப்பட்ட பொருட்டு மரபு உணர்த்தினமையான் மரபியல் என்னும் பெயர்த்து” என்று எடுத்துரைக்கின்றார். ஒரு பொருளுக்கு மரபாவது எதுவெனில் அப்பொருளின் குணமாகிய இளமை, ஆண்மை, பெண்மை ஆகிய பொருள் பெற்று மரபுக் குறித்துத் தொன்றுத்தொட்டு வழங்கிவருவது மரபுப்பெயர்கள் ஆகும்.

•Last Updated on ••Friday•, 11 •May• 2018 17:02•• •Read more...•
 

“கி.ரா. சிறுகதைகள் காட்டும் கரிசல் மக்களின் வாழ்வியல்”

•E-mail• •Print• •PDF•

கி.ரா.கி.ரா எனும் இரண்டெழுத்து மந்திரம் :
கி.ரா. ஒரு எளிமையான கதைச்சொல்லி. இவருடைய எழுத்துகளில்,வருணணைகளில் மாடமாளிகைகள் இருக்காது. இளவரசிகளின் பாதாதி கேச வருணணைகள் இருக்காது.ஏழை எளிய மக்களின், நடுத்தர வர்கத்தினரின் உழைப்பும், குடிசைகளின் வாழ்வும், கூழ்குடித்து ஏர்பூட்டி உழும் மக்களின் வாழ்வியல் எனும் நிழல் ஓவியங்கள் நம் மனக்கண்ணில் படரவிடுவதில் அசாத்திய திறமைமிக்க எழுத்தாளர். பல்கலைக்கழகத்தில் படிக்காவிடினும், புதுவை பல்கலைக் கழகத்தின் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றியவர். எதார்த்த எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் பால்ய காலம் முதலான நண்பர்.கரிசல் கதைகளின் தந்தையான கி.ரா. நாட்டுப்புறவியலில் சிறந்து விளங்குபவர்.கம்யூனிஸ சிந்தாந்தி. இரு முறை போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைச் சென்றவர். இவரது ‘கிடை’ குறுநாவல் ‘ஒருத்தி’ எனும் திரைப்படமாக எடுக்கப்பட்டு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நாட்டுபுறக் கதைக் களஞ்சியம் உருவாக்கியவர். சிறுகதை, நாவல், நாட்டுபுறவியல் என தமிழின் பல்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்தவர். தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்ற விருது, இலக்கியச் சிந்தனை விருது, சிறந்த எழுத்தாளர் போன்ற விருதுகளைப் பெற்றவர். அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் ‘கோபல்லபுரத்து மக்கள்’ எனும் நாவலுக்காக 1991 இல் சாகித்ய அகாதெமி விருதுப்பெற்றவர்.அவரது கதைகளில் மிளிரும் கரிசல் மக்களின் வாழ்வியலை ஆய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.

கதவு காட்டும் ஏழ்மை:
‘வித்தக கலைஞன் தொட்டுவிட்டால் விறகு கட்டைக்கூட வீணையாகலாம்’ எனும் பழமொழிக்கு ஏற்ப கதவு எனும் ஜடப்பொருள் இக்கதையில் கி.ராவின் படைப்பாளுமையால் புராதனச் சின்னமாகிறது.கதை முழுவதும் லட்சுமி, சீனிவாசன் எனும் இருசிறுவர்களின் வழி ஏழ்மை வாழ்வு சித்திரிக்கப்படுகிறது. கதவு அவர்கள் பயணம் செய்யும் பேருந்தாகிறது. அதன் சுழற்சி சுற்றளவில் திருநெல்வேலியும் சுற்று வட்டாரங்களின் தூரங்களும் அடங்கி விடுகின்றன. வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் பணக்கார பழமையை விடாது காத்துக் கொண்டிருப்பது அது ஒன்றுதான். அதன் மீது சிறுவர்கள் விளையாடி மகிழ்கிறார்கள், அதை தன் தோழனாக பாவிக்கிறார்கள். அவர்களுடைய அப்பா மணிமுத்தாறில் கூலிவேலை செய்கிறாh.; அம்மா காட்டு வேலைக்கு சென்று விடுகிறாள்.

ஒரு தீப்பெட்டியில் இருந்த நாய் படத்தைக் கம்மஞ்சோறு கொண்டு ஒட்டுகிறாள்.அதைப் பார்த்து கைத்தட்டி ஆரவாரிக்கிறார்கள். ஊர் தலையாரி வருகிறார். உங்க ஐயா எங்கே? என கேட்கிறான். குழந்தைகள் ஊருக்குப் போய் இருப்பதை கூற, வந்தா தீர்வை (வரி) கட்டச் சொல்லிவிட்டு போகிறார். மறுநாளும் வந்து கேட்கும் போது அம்மா ஐயா அவரு ஊரிலே இல்லை. மணிமுத்தாறு போயி அஞ்சு மாசமாச்சி ஒரு தகவலையும் காணோம். மூணு வருசமா மழை தண்ணி இல்லையே நாங்க என்னாத்தை வச்சி உங்களுக்கு தீர்வை பாக்கியை கொடுப்பொம்? ஏதோ காட்டிலே போய் கூலி வேலை செய்து இந்த கொளந்தைகளைப் காப்பாத்ரதே பெரிய காரியம். உங்களுக்குத் தெரியாதா? என்றாள். (ப.3 கி.ராஜநாராயணன் கதைகள்)

•Last Updated on ••Monday•, 30 •April• 2018 17:08•• •Read more...•
 

க. இரமணிதரனின் 'மொழிபெயர்ப்புக் கவிதைகள் சில!

•E-mail• •Print• •PDF•

இரபீந்திரநாத் தாகூர்க.இரமணிதரன்- புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்கப்பட முடியாத முக்கிய படைப்பாளிகளில் ஓருவர் கந்தையா இரமணிதரன், ' சித்தார்த்த சேகுவேரா', 'பெயரிலி', 'திண்ணைதூங்கி'யுட்படப் பல்வேறு புனைபெயர்களில் எழுதிவரும் இவர் தனித்துவமான மொழி நடைக்குச் சொந்தக்காரர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தன் பங்களிப்பை நல்கி வருபவர். அவரது 'அலைஞனின் அலைகள்: கூழ்' என்னும் வலைப்பதிவிலிருந்து இம்மொழிபெயர்ப்புக் கவிதைகள் மீள் பிரசுரமாகின்றன. - பதிவுகள் -



Monday, April 11, 2005

தன்கா - I
தன்கா ஐந்து.
மூலப்பெயர்ப்பு: 1997 ஜூலை,
25
திருத்திய பெயர்ப்பு: 2005 ஏப்ரில், 11

*ஒரு மொழியின் சிறப்பான கவிதை இலக்கியவடிவத்தினை அப்படியே இன்னொரு மொழியிலே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கொண்டு வரலாமென்று தோன்றவில்லை; புதிதாக அந்த வடிவத்துக்குரிய மூல மொழியல்லாத மொழியொன்றிலே படைக்கப்படும் கவிதைகளிலே சிலவேளைகளிலே இவ்வாறான படைத்தல் சாத்தியப்படலாம்; ஆனால், மொழிபெயர்ப்பிலே மூலக்கவிதையின் கருத்து, படிமம், வடிவம், சொல் ஆகிய நான்கினையும் ஒருங்குசேர உருக்கி எடுத்துப் பெயர்ப்புறும் மொழியின் தனித்துவத்தினையும் மீறாமற் தருவதென்பது அசாத்தியமானது. அதனால், மொழிபெயர்ப்பாளர் மூலக்கவிதையின் நான்கு ஆக்கு பண்புக்கூறுகளிலே எதை முக்கியப்படுத்துகிறார் என்ற தனிப்பட்ட விருப்பிலேயே பெயர்க்கப்பட்ட கவிதை அமைகிறது. என்னைப் பொறுத்தமட்டிலே, பெயர்ப்பிலே படிமம், கருத்து, சொல், வடிவம் என்கிற இறங்குவரிசையிலேயே கவிக்கூறுகளுக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறேன். (இறுகிய இலக்கணப்படி பார்த்தால், ஹைகூ, தன்கா, ஸீஜோ ஆகியவற்றிலே ஓரளவுக்கு கருத்தும் படிமமும் வடிவமுங்கூட பிணைந்தபடிதான் இருக்கின்றன என்பதையும் காணவேண்டும். ஹைகூவிலே பருவகாலம் பற்றிய கவிதை என்பதும் மீறப்படக்கூடாதென்பது, அதன் சீர்களைக் குறித்த விதிகளோடு சேர்ந்து வருகின்றதென்பது ஓர் உதாரணம்; தமிழிலேயே ஹைகூ வடிவத்தினை இலக்கணப்படுத்தலாம் என்ற வாதமும் ஹைகூ மாரிநுளம்புகள்போல பரவிய காலத்திலே மரபுக்கவிதைக்காரர்களிலே சிலராலே வைக்கப்பட்ட வாதம்).

ஆக, இந்த தன்காக்கள் அந்த வகையிலேயே பெயர்க்கப்பட்டிருக்கின்றன (ஏற்கனவே, ஐப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குப் போய், பின்னால், அங்கிருந்து தமிழுக்கு வருகின்றபோது, ஏற்பட்டிருக்கக்கூடிய சிதைவுகளையும் எண்ணிக்கொள்ளவேண்டும்; மொழிபெயர்ப்பிலே இழக்கப்படுவது கவிதை - கிட்டத்தட்ட, வேறுவேறு காவி அலைகளூடாகக் கடத்தப்படும் இசையிலே சேரும் இரைச்சலோடு கேட்பார் வானொலியிலே மீளப்பெறுதல்போல)


1.
the cold walk,
silence
between us
the creek running
under ice

கூதல் நடை,
எம்மிடை
மௌனம்
பனி கீழ்
சிற்றோடை ஓடும்


2.
hazy autumn moon
the sound of chestnuts dropping
from an empty sky
I gather your belongings
into boxes for the poor

புகார்க் கூதிர் மதி
வெற்று வான் நின்று
வாதம்பருப்பு வீழ் ஒலி
ஏழைகட்காய்ப் பெட்டிகளுள்
உன் உடமை சேர்த்து நான்

•Last Updated on ••Sunday•, 29 •April• 2018 17:59•• •Read more...•
 

ஆண்டுவட்டத்தைக் கடந்ததொரு இலக்கியப் பயணி: அ.முத்துலிங்கத்தின் இலக்கியப் பயணம் பற்றியதொரு பதிவு

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் அ.முத்துலிங்கம்தமிழரின் காலக் கணிப்பில் ஒருவரின் அறுபதாண்டு வாழ்க்கை ஒரு ஆண்டுவட்டச் சுற்றைப் பூர்த்திசெய்கின்றது என்பர். அவ்வகையில் எமது தமிழ் இலக்கியவாதியான அ.முத்துலிங்கத்தின் இலக்கியப் பயணமும் ஒரு ஆண்டுவட்டப் பயணத்தைக் கடந்து தொடர்கின்றது. அறுபதாண்டுகளாகத் தளராமல், வரட்சி காணாமல் கையிருப்பில் இன்னமும் ஏராளமான ‘விஷயங்களை” வைத்துக்கொண்டு இலக்கியப் பயணமொன்றைப் புகலிடத்திலும் தொடர்வதென்பது எழுத்தாளனுக்கு இலகுவில் கிடைக்கும் பாக்கியமொன்றல்ல.

தற்போது புகலிடத்தில் வாழும் ஈழத்துப் படைப்பாளி அ.முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் எனது அயல் கிராமத்தவர். நான் ஆனைக்கோட்டையில் வாழ்ந்த எழுபதுகளில்; அவர் எழுத்துத் துறையில் அனைவரையும் பிரமிக்கவைத்துக் கொண்டிருந்தார். அவரது முதலாவது சிறுகதைத்தொகுதி ‘அக்கா” வெளிவந்த 1964இல் எனக்கு 10 வயது. நான் தென்னிலங்கையில் பிறந்து நீர்கொழும்பில் இளம்பிராயத்தைக் கடந்தவன். அங்கும் ஒரு நீர்கொழும்பூர் முத்துலிங்கம் எழுத்தாளராக இருந்தார். நான் நூலியல்துறையிலும், எழுத்துத்துறையிலும் ஈடுபட்டிராத அக்காலத்தில் சில சமயங்களில் அறியாமையால் இருவரையும் பெயர் மாற்றிக் குழப்பிக்கொண்டதுண்டு.

நான் புலம்பெயர்ந்தபின்னர் ‘நூல்தேட்டம்” ஆவணத்தொகுப்பின் வேலைத்திட்டத்தில் ஓய்வுவேளைகளில் முழுமையாக ஈடுபடத் தொடங்கிய காலகட்டத்தில்தான் அ.முத்துலிங்கம் அவர்களின் தொடர்பினை வலிந்து தேடிக்கொண்டேன். அப்பொழுது அவர் கனடாவில் இருந்தார். சிரமம் பாராது தனது நூல்களை எனக்கு தபால் பொதிகளில் அவ்வப்போது அனுப்பியும் வைத்திருந்தார். அவரால் அனுப்பப்படும் நூல்களை அவ்வப்போது நான் ஐ.பீ.சீ. வானொலியின் காலைக்கலசம் இலக்கியத் தகவல் திரட்டு  நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி வந்துள்ளேன்.

2004இல் ஒருதடவை இலங்கை சென்றவேளையில் அமரர் பூபாலசிங்கம் அவர்களின் மகன் ராஜனை 14 ஆண்டுகளின் பின்னர் அவரது வெள்ளவத்தை புத்தகக் கடையில் சந்திக்கநேர்ந்தது. அவ்வேளையில் ராஜன் எனக்குத் தந்த நினைவுப்பரிசு ‘அ.முத்துலிங்கம் கதைகள்” என்ற பெருந்தொகுப்பாகும். அந்நாட்களில் ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளின் பெருந்தொகுப்புகள் பரவலாக வெளிவந்திருக்கவில்லை. அதனால் 2003 டிசம்பரில் தமிழினி வெளியிட்டிருந்த அப்பெருந்தொகுப்பு என்னைத் திகைக்க வைத்திருந்தது. எழுத்தாளர் அ.மு.வின் 2003 வரை வெளியான தேர்ந்த 75 சிறுகதைகளை 774 பக்கங்களில் உள்ளடக்கியதாக அந்நூல் இருந்தது.

பத்தாண்டுகளின் பின்னர் 2014இல் நூல் தேடலுக்காகத் தமிழகம் சென்றிருந்த வேளையில் ஈழநாடு பத்திரிகையாளர் அமரர் கே.ஜீ.மகாதேவாவின் அழைப்பையேற்று திருச்சிக்குச் சென்றிருந்தேன். நான் எதிர்பாராத வகையில் அன்று திருச்சிராப்பள்ளி ஆண்டவர் அறிவியல் கல்லூரியில், ஈழத்து இலக்கியத்தை தமது பட்டப்படிப்பிற்காகப் பயிலும் மாணவர்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியிருந்தார். பாடசாலை உயர்வகுப்பு மாணவர்களும் அதில் பங்கேற்றிருந்தனர். ‘புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளின் இலக்கியப் பங்களிப்பு” என்ற பொருள்பற்றிப் பேசுமாறு என்னை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கரிகாலன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, எனது அறிமுக உரையை நிகழ்த்தினேன்.

•Last Updated on ••Monday•, 23 •July• 2018 22:57•• •Read more...•
 

வெள்ளிவீதியார் பாடல்களில் சுற்றுச் சூழல் வழி வெளிப்படும் வாழ்வியற் சூழல்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் பா.சத்யாதேவி, உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி,மதுரை. -உலகில் மொழியானது மனித உயிர் தனது அனுபவங்களைக் கருத்துக்களை, நினைவுகளைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படும் கருவி ஆகும். மொழி என்ற ஒன்று இல்லையெனில் மனித உயிர்கள் இருக்கும் ஆனால் மனிதச் சமூகங்கள், வரலாறு இருக்காது. எனவே மொழி என்பது மனித உயிர்களை அவர்கள் வாழும் சமூகத்துடனும் நிலத்துடனும் பிணைப்பதாகும். மொழி வழியே சமூகம் இலக்கியம் வரலாறு தோற்றம் பெறுகிறது. இப்பின்புலத்தில் தமிழ்மொழித் தமிழ்நிலம் தமிழ் இலக்கியம் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உலக மொழிகளில் தனிச் சிறப்பினைப்பெற்ற தமிழ் மொழியின் தனித்துவத்திற்குச் சங்க இலக்கியங்கள் பெரிதும் காரணமாகின்றன. இச்சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையான பாடல்கள் இயற்கையைப் பின்புலமாகக் கொண்டே பாடல்கள் அமைத்து பாடப்பட்டுள்ளன. இயற்கையைப் போற்றிப் பேணிப்பாதுகாத்ததோடு நில்லாமல் அதனுடன் இணைந்த வாழ்வு வாழ்ந்தச் சங்க கால மக்களின் வாழ்வுச் சூழல் ஆராயப்பட வேண்டியதாகும். ஆய்வின் சுருக்கம் கருதி வெள்ளிவீதியாரின் பாடல்கள் மட்டும் ஆய்வு களமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சங்க இலக்கியப் பாடல்களில் பல பெண் கவிஞர்கள் பாடல் பாடியுள்ளனர் எனினும் வெள்ளிவிதியாரின் குரல் அழுத்தமான தெளிவான ஒரு பெண்ணின் குரலாகப் பாடல்களில் வெளிப்பட்டுள்ளன. பெண்ணின் உணர்வு நிலையை வெளிப்படுத்த எண்ணிய வெள்ளவீதி அதற்கு ஏற்றச்சூழலாக அல்லது பின்புலமாகத் தன்னைச் சுற்றியுள்ள வாழ்வுச்சூழலையும் இயற்கைச் சூழலையும் தக்கத்துணையாக எடுத்தாண்டுள்ளார்.

சான்றாக நற்றிணையில் (70) இடம்பெறும் சிறுவெள்ளாங்குருகே! பாடலை குறிப்பிடலாம். தலைவனைப் பிரிந்த தலைவி நாரையைத் தூது அனுப்புவதாகப் பாடல் பாடப்பட்டுள்ளது.

‘‘சிறு வெள்ளாங்குருகே! சிறுவெள்ளாங்குருகே!
துறைபோகு அறுவைத் தும்பி அன்ன
நிறம்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே

---------------------------------------

கழனி நல்ஊர் மகிழ்நர்க்கு என்
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே?’’ (நற். : 70)

என்பதில் சிறிய வெளிய நாரையே! நீர்த் துறையில் வெளுத்த வெள்ளாடையில் மாசற்ற மடி போன்ற வெள்ளை நிறமான சிறகுகளையுடைய சிறிய வெளிய நாரையே; நீ எம் ஊரில் வந்து எமது நீர் அருந்தும் துறைகளில் துழாவிக் கெளிற்று மீன்களை உண்கிறாய் பிறகு அவர் ஊருக்குத் திரும்பி போகிறாய். அங்கேயுள்ள இனிய நீர் இங்கே பரவிக்கிடக்கும். வயல்களையுடைய நல்ல ஊரையுடைய என் அன்பருக்கு நீ எனது அணிகள் கழன்ற நோயைச் செப்பாமல் இருக்கிறாய். நீ அத்தகைய அன்புடைய பறவையா? அல்லது மறதியுடைய பறவையா? எனக்கு விளங்கவில்லை எனத் தலைவி கூறுகிறாள்.

•Last Updated on ••Wednesday•, 04 •April• 2018 17:51•• •Read more...•
 

ஒப்பீட்டு நோக்கில் கடைநிலைத்துறை (தொல்காப்பியம், புறநானூறு)

•E-mail• •Print• •PDF•

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
இலக்கியங்களைப் பொதுவாக அகம், புறம் என்று பிரிப்பர். குடும்பம்; சார்ந்தவை அகம் என்றும் சமூகம் சார்ந்தவை புறம் என்றும் கொள்ளலாம். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் புறத்திணையியலும் சங்க இலக்கியத்தின் புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறம் சார்ந்தவை. அத்தகைய இலக்கிய இலக்கணங்களுள் தொல்காப்பியத்தின் பாடாண் திணை சார்ந்த கடைநிலைத் துறையை புறநானூற்று கடைநிலைத் துறைப் பாடல்களோடு பொருத்தி  ஆய்வதை நோக்கமாகக் கொண்டு இவ் ஆய்வு அமைகின்றது.

தொல்காப்பிய கடைநிலைத்துறை
உள்ளத்துணர்வால் உணரும் இன்பம் தவிர்ந்த அனைத்து உலக வாழ்வும் புற வாழ்வாகும். தொல்காப்பிய பொருளதிகாரத்தில் புறத்திணையியல் மட்டுமே புறம் சார்ந்தது. புறத்திணையியலில் தொல்காப்பியர் ஏழு திணைகள் பற்றிய செய்திகளைக் கூறியுள்ளார்.  அவ்வெழுவகைத் திணைகளுள் ஒன்று பாடாண் திணை. பாடாண் திணை இருபது துறைகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் கடைநிலைத் துறையும் ஒன்று.  இதனை

“கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தலும்
……   ……  …….   ……..  ……..
வழிநடை வருத்தம் வீட வாயில்
காவலர்க்குரைத்த கடைநிலையானும்
…….        …….       ……. “        (தொல்-1036)

என்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம். கடைநிலைத் துறை குறித்து தமிழண்ணல் அவர்கள்

“மிக நீண்ட தூரத்திலிருந்து வந்த வருத்தம் தீருமாறு வாயில் காவலரிடம் தன் வருகையை அரசனிம் கூறுமாறு சொல்லும் கடைநிலை”
என்று விளக்கம் அளித்துள்ளார்.

புறநானூற்றில் கடைநிலைத் துறை
புறநானூற்றில் பதினொரு பாடல்கள் கடைநிலைத் துறைப் பாடல்களாக அமைந்துள்ளன. இவை மன்னனைப் புகழ்ந்து பாடி பரிசில் பெறும் நோக்கத்துடனும் பரிசில் அளித்தமைக்காக வாழ்த்தும் நோக்கத்துடனும் பாடப்பட்டவையாக அமைந்துள்ளன. மன்னனது கொடைச் சிறப்பைப் பாடும் பாடல்களில் புலவர்கள் வற்கடம் நேர்ந்த காலத்தில் கூட புரப்போரின் வள்ளண்மையால் தான் பாதுகாக்கப்படும் உறுதியுடன்  பாடியுள்ளனர். மேலும் தனது உள்ளக் கிடக்கையினை நன்றி உணர்வினை கிணைப் பொருநன் கூற்றாக அமைத்துப் பாடியுள்ளனர்.

•Last Updated on ••Friday•, 08 •June• 2018 20:28•• •Read more...•
 

ஆற்றுப்படை நூல்கள் காட்டும் அல்திணை உயிர்கள்!

•E-mail• •Print• •PDF•

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?சங்க இலக்கியம் இயற்கையின் உயிர் அகவமைப்பை ஒளித்திரையெனக் காட்டும் தொகை இலக்கியம். சங்கத்தமிழர் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த நெறியை அது தெற்றென எடுத்துக்காட்டுகிறது. தொல்காப்பியர் உயிர் வகைக்கோட்பாட்டைக் கூறுகையில் (தொல்.மரபு.நூற்.1526 )உயர்திணை உயிர்கள், அல்திணை உயிர்கள் என்கிறார். இவற்றுள் அல்திணை உயிர்கள் பற்றிய (விலங்குகள் மட்டும்) பதிவினை ஆற்றுப்படை நூல்களில் இடம்பெற்றிருப்பனவற்றைக் குறித்து இக்கட்டுரை இயங்குகிறது. கீழ்க்காணுமாற்று விலங்குகள் ஆற்றுப்படை நூல்களுள் பதிவு செய்யப்பெற்றிருப்பனவாகக் காணப்படுகின்றன.

01.ஆடு , 02.ஆமான், 03.ஆளி, 04.எருது, 05.ஒட்டகம், 06.கரடி, 07.குரங்கு, 08.சிங்கம், 09.நாய், 10.பன்றி, 12.புரவி, 13.புலி, 14.மரையான், 15.மான், 16.முயல் என்னும் விலங்குகள் இடம்பெற்றுள்ளன. அவைகளை குறித்து விளக்கமாகக் காணலாம்.

01.ஆடு:
சங்க இலக்கியத்தில் ஆட்டை வெள்ளாடு, செம்மறி ஆடு, வருடை ஆடு, தகர், துருவை என்றெல்லாம் பதிவு செய்திருக்கிறது. முருகன் மயிலையும் குற்றமில்லாத கோழிக்கொடியோடு ஆட்டுக்கிடாவையும் கொடியாகக்கொண்டவன் என்பதனை,

“தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் கொடியன்”        திருமுருகு.210

என்கிறார் நக்கீரர். பெரிய காலை உடையதாகவும் மிக்க வலிமை உடையதும் உள்ள ஆட்டுக்கிடாயினது உதிரத்தோடு பிசைந்த தூய வெள்ளரிசியை சிறு பலியாக முருகப்பெருமானுக்கு இட்டு வழிப்பட்ட செய்தியை,

“மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடை
குருதியொடு விரைஇய தூவெள்ளரிசி”        திருமுருகு.232-233

என்கிறது சங்க இலக்கியம். சிறிய திணை அரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாக வைத்தும் மறியை அறுத்தும் அவ்விடத்தில் இறைப்பொருள் நிலைத்து நிற்க வேடர்கள் விழா செய்தனர் என்பதனை,

“சிறுதிணை மலரொடு மறியறுத்து”        திருமுருகு.218

என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. அருகம்புல்லின் பழுதையை தின்று நன்றாகக்கொழுத்த செம்மறி ஆட்டின் பருத்த மேல்தொடையின் பதமான இறைச்சியை இரும்புக் கம்பியில் கோர்த்து சுடப்பட்டதைக் கரிகால் வளவன் பொருநனுக்கு அளித்த நிகழ்வை,

•Last Updated on ••Sunday•, 04 •March• 2018 20:45•• •Read more...•
 

சவ்வாது மலை மலையாளிப் பழங்குடியினர் பற்றிய வரலாறு

•E-mail• •Print• •PDF•

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
மனித இனம் தோன்றி நாகரிக வளர்ச்சி பெற்ற அன்றே நாட்டுப்புற இலக்கியங்களும் கலைகளும் தோன்றிவிட்டன என்று கூறலாம். நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும், நம்பிக்கைகளையும் இலக்கியங்களையும் ஆராயும் இயலே நாட்டுப்புறவியலாகும். ஒரு நாட்டின் வாழ்க்கை முறைகளையும், வரலாற்றின் குறைகளையும் நிரைகளையும் தெளிவாகக் காட்டுவன நாட்டுப்புற இலக்கியங்களே எனில் மிகையன்று. அவை மக்களின் பண்பாடு, பழக்க வழக்கம் வாழ்வில் நெறிமுறைகள் ஆகியவற்றை வெளிப்படையாக காட்டும் கண்ணாடி என்று கூறலாம்.

ஆய்வு பொருள்
திருவண்ணாமலை மலை மலைவாழ் மக்களில் ஒரு பிரிவினாக விளங்கும் இந்து மலை மலையாளி மக்களின் வாழ்வியல் முறைகளை ஆய்வதே இவ்வாய்வின் பொருள் ஆகும்.

ஆய்வு நோக்கம்
திரு+அண்ணாமலை = திருவண்ணாமலை என்றாயிற்று. இந்த மாவட்டத்திலிருந்து 80 கி.மீ தொலைவில் சவ்வாது மலை உள்ளது. சந்தனம், சவ்வாது போன்ற வாசனை பொருட்கள் அங்கு விளைந்த காரணத்தால் சவ்வாது மலை என்று பெயர் பெற்றது. இந்த சவ்வாது மலையில் மலையாளி எனும் சமூகத்தினர் தங்களது வாழ்வியல் சடங்கு முறைகளை மரபு வழுவாமல் தங்கள் முன்னோர்களின் வழியே பின்பற்றி செய்து வருகின்றனர். இதுவரை எவ்வித ஆய்வும் செய்யவில்லை. இவ்வாய்வே முதன் முறையாகும். அம்மக்களின் வாழ்வில் கடைபிடிக்கும் சடங்கு முறைகளை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பிற மலைவாழ் மக்களிடமிருந்து இவ்வினத்தினர் வேறுபடும் தன்மையைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆய்வு மூலங்கள்
இக்கட்டுரையின் ஆய்விற்காக கள ஆய்வில் சேகரித்த தரவுகளே முதன்மை ஆதாரங்களாக விளங்குகின்றன.

ஆய்வுகளம்
தென் தமிழகத்தில் பரவலாக பழங்குடியினர் வசித்து வருகின்றனர். திருவண்ணாமலை மையமாகக் கொண்டு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியிலுள்ள இந்து மலையாளி, மலையாளி இன மக்களின் சடங்குகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், அன்றாட வாழ்க்கை முறை ஆகியவற்றைச் சேகரிக்க இக்களஆய்வு துணைபுரிந்தன.

ஆய்வு எல்லை
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சவ்வாது மலை.

•Last Updated on ••Thursday•, 15 •February• 2018 19:20•• •Read more...•
 

நிழல் முற்றம் புலப்படுத்தும் சிறுவர்களின் வாழ்வியல்

•E-mail• •Print• •PDF•

 நா.கிருஷ்ணராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கோயம்புத்தூர் – 641 048  -முன்னுரை
சமகால வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுவன நவீன இலக்கியங்கள். கால மாற்றத்திற்கு ஏற்ப, இலக்கண வரைமுறைகளைக் கட்டுடைத்துப் படைக்கப்பட்டவையே நவீன இலக்கியங்கள். சமூகத்தின் மூலை முடக்குகளில் காணலாகின்ற வாழ்வியல் சிக்கல்களை அடையாளப்படுத்துவதில் புனைகதைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. சிறுகதை, புதினம் எனும் பிரிவுகளைக் கொண்ட புனைகதைகளுள், சமூகத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உள்ளவறே எடுத்தியம்புவன புதினங்கள். வாழ்வியல் என்று பொதுமையோடு நோக்கும் படைப்புகள் எண்ணில. எதிர் காலத் தலைமுறைகள் என்றும் நாளைய சமூகமென்றும் கருதப்படுபவர்கள் சிறுவர்கள். அத்தகைய சிறுவர்களின் இளம் வயதுக் காலம் செம்மையாக அமைந்தால்தான், முழுமையான வாழ்க்கையினை அடைவார்கள். சிறுவர்களின் வாழ்க்கையினைக் கருவாகக் கொண்டு படைக்கப்பட்ட பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’ புதினம் புலப்படுத்தும் சிறுவர்களின் வாழ்வியலைப் பற்றி இக்கட்டுரை வழி அறிவோம்.

கதைக்களமும் கருவும் :
“வட்டார இலக்கியமானது ஒரு பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறைகளோடும் அவர்கள் வாழும் பகுதிகளின் அழகுகளோடும் எதார்த்தமாக வெளிப்படுவது”(தமிழில் வட்டார நாவல்கள், ப.2.) என்ற கூற்றுக் கேற்ப நிழல் முற்றம் புதினத்தின் கதைக்களமாக கொங்கு வட்டாரத்திற்குட்பட்ட திருச்செங்கோடு பகுதி இடம் பெற்றுள்ளது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அப்பகுதியில் உள்ள விஜயா திரையரங்கத்தில்தான் கதை நிகழ்கிறது. நவீன இலக்கியங்களில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு மிகக் குறைந்த இலக்கியங்களே,சிறுவர்களின் வாழ்வியலைக் கருவாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன என்றால் அது மிகையன்று. ‘ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?’ என்பதற்கேற்ப, இளம் வயதில் வாழ்வில் நிகழக்கூடிய நிகழ்ச்சிகளும் அமையக்கூடிய வாழ்வியல் சூழல்களும்தான், ஒரு மனிதனின் எதிர் காலத்தைத் தீர்மானிக்கும். வாழ்வின் முற்பகுதியான இளம்வயது வாழ்க்கைதான் ஒருவரது ஆயுள் முழுமைக்குமான வாழ்கையையும் வாழ்க்கை முறையையும் உருவாக்கும். சிறுவர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நிழல் முற்றம் புதினத்தில், இம்மாந்தர்களின் வாழ்வியல் சிக்கல்களைக் கொண்டே கதையை நகர்த்திச் செல்கிறார் பெருமாள் முருகன். கணேசன், சக்திவேலு, மணி,பூதன் போன்ற சிறுவர்கள் திரையரங்கிலுள்ள சோடாக் கடைகளில் பணிபுரிகின்றனர். இம்மந்தார்களையும் இத்திரையரங்கையும் மையமாகக் கொண்டே கதை சித்தரிக்கபட்டுள்ளது.

சிறுவர்களின் வாழ்வியல்
‘திரையரங்கே உலகம்; தங்கள் முதலாளியும் உடன் பணி புரியும் சிறுவர்களுமே உறவுகள்’ என்று வாழ்ந்து வருபவர்கள்தான் இச்சிறுவர்கள். இக்குழந்தைத் தொழிலாளர்களின் பணி வரையறுக்கப் பட்டதன்று. பெரியவர்களாக இருந்தால் பணிப்பளு என்பது வரையறுக்கப்பட்டிருக்கும். ஊதியமும் சரியாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆனால் சிறுவர்களுக்கு இது முற்றிலும் முரணானது. அதுவும், கேட்பதற்கு யாருமில்லையென்றால், அவர்களின் நிலை மிகவும் பரிதாபமாகத்தான் இருக்கும். திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பும், இடைவேளை நேரத்திலும் திரையரங்கில் சோடா விற்பதுதான் சிறுவர்களின் வேலை. சோடா விற்பதில் இவர்களுக்குள் போட்டியும் ஏற்படும். வாழ்க்கையில் சிக்கல்கள் இருப்பது இயல்பே. இச்சிறுவர்களுக்கு வாழ்க்கையே சிக்கலாக இருப்பதை ஆசிரியர் புதினத்தில் சித்திரித்துள்ளார். ஒரு வேலை முடியும் முன்பே, இன்னொரு வேலை தயாராக இருக்கும் இந்தக் குழந்தைத் தொழிலார்களுக்கு. அது மட்டுமன்று. கடைப் பணிகள் முடிந்தால், முதலாளியின் வீட்டுப் பணிகளியும் செய்ய வேண்டும். “ஒரு வேலையுங் கெடையதுடா, சும்மா ராஜாவாட்டம் சுத்திக்கிட்டு இருக்கற வேலதான். நாலு ஆடு இருக்குது. வெளியுட்டா அதும்பாட்டுக்கு மேயும். நெவுலுக் கண்ட எடத்துல உக்கோந்து பாத்துக்கிட்டாப் போதும் என்னோ” (நிழல் முற்றம்,ப.33) என்பது, சோடக்கடையில் வேலை செய்யும் சிறுவனை வற்புறுத்தி, ஆடு மேய்க்கத்தான் ஊருக்கு அழைத்துச் செல்வதைப் புலப்படுத்துகிறது.

•Last Updated on ••Thursday•, 15 •February• 2018 18:12•• •Read more...•
 

எழுத்தாளர் 'கவிஞர் செழியன்' அவர்களின் சிறுகதைகள் இரண்டும், கட்டுரை ஒன்றும்!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் செழியன் ஆஸ்பத்திரியில் அனுமதி!- அண்மையில் மறைந்த எழுத்தாளர் 'கவிஞர் செழியன்' அவர்களின் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான சிறுகதைகள் இரண்டும், கட்டுரை ஒன்றும் அவரது நினைவாக இங்கு மீள்பிரசுரமாகின்றன. - பதிவுகள் -


பதிவுகள்.காம், ஜூலை 2005 இதழ் 67!
சிறுகதை: ஒரு சாண் மனிதன்!    - செழியன் -

சாதாரணமாக ஒரு புகையிரத நிலையத்தில் நிகழ்வது போலத்தான் இது நடந்து வந்தது. ஏழு வித்தியாசங்கள் சொல்லலாம் என்றாலும் அதில் முக்கியமானது, இது அங்கு நடப்பது போல, இங்கு தினமும் நடைபெறுவதில்லை. வாரத்திற்கு ஒரு தடவை வருகின்ற புதன்கிழமைகளில் மட்டுமே நடக்கின்றது.

கண் இமைக்கும் நேரத்தில், மிக வேகமாக வருகின்ற புதையிரதத்தில் இருந்து, புகையிரத நிலைய அதிபரின் கைக்கு மாறுகின்ற அந்த வளையம் போல, கணநேரத்தில் இது கைமாறுகின்றது. பார்க்கின்ற போதெல்லாம், ஒரு கைதேர்ந்த  சர்க்கஸ்காரர் நடத்துகின்ற அற்புதமான மாயாஜாலக் காட்சி போல எனக்குள் அதிசயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதிசயம் மட்டுமல்ல, யாராவது ஆசிரியர்கள் கண்டுவிட்டால் என்ன நடக்குமோ என்ற பெரும் பதைபதைப்பும், நடுக்கமும் எப்போதுமே எனக்குள் இருக்கும்.

புதன்கிழமைகளில் இரண்டாவதும், மூன்றாவதுமான தொடர் பாடமாக எமக்கு வருவது சுகாதாரம். இந்தப் பாடத்திற்காக பத்து- யு வகுப்பில் இருந்து பத்து- ஊ வகுப்புக்கு, எமது வகுப்பில் இருந்த பாதி மாணவர்கள் அணிவகுத்துச்  செல்லவேண்டும். மிகுதி பாதிப்பேரும்  பிரயோக கணிதத்திற்காக பெளதீக ஆய்வு கூடத்திற்குச் சென்று விடுவார்கள்.

இந்தப் புதன் கிழமை எப்போது வரும் என்று வகுப்பு முழுதும் காத்திருக்கும். சிலர் வெளிப்படையாக உணர்ச்சி வசப்பட்டுப் போய் நிற்பார்கள். இன்னும் சிலர் வெளியில் வேண்டா வெறுப்பாக இருப்பது போல காட்டிக் கொண்டு உள்@ர ஆசை ஆசையாக உமிழ்நீர் வடித்துக்  கொண்டிருப்பார்கள்.

இதற்கு நியாயமான காரணம் ஒன்று இருந்தது. இது ஒன்றும் பெளதீக விதிகளைப் போல குழப்பமான, விளங்க முடியாத விடயம் ஒன்றும் கிடையாது. இந்தப் பாடநேரத்தின் போது மட்டும் தான்  இருபது அழகான மாணவிகளுடன் நாம் ஒன்று சேர்ந்து ஒரே வகுப்பில் படிக்கின்ற வாய்ப்புக் கிடைத்து வந்தது. இத்தனைக்கும் இரு பாலாரும் சேர்ந்து படிக்கின்ற இந்துக் கல்லூரியாம் என்று இந்தக் கல்லூரிக்கு ஒரு மட்டமான பெயர்.

கொழும்பு நாலாம் குறுக்குத் தெருவில் இருக்கின்ற குறுகலான ஒரு சந்து போல இரண்டு அடி அகலமும், பன்னிரெண்டு அடி நீளத்துடன் இந்தக் கல்லூரியிலும் ஒரு சந்து இருக்கின்றது. புதன் கிழமைகளில் இதைக் கடந்துதான் நாம் செல்லவேண்டும்.

•Last Updated on ••Tuesday•, 06 •February• 2018 17:57•• •Read more...•
 

பாரதிதாசன் கவிதைகளில் இயற்கை!

•E-mail• •Print• •PDF•

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?பாவேந்தர் பாரதிதாசன் அற்புதமான கவிதை வரிகளில் இயற்கை மூலம் நமது மானிட குலத்தின் வழி நடத்தலை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறார். அவரை இயற்கை கவிஞன் என அழைப்பது சாலச் சிறந்தது. தமிழ், தமிழன் என்னும் வார்த்தைகளை வானளாவிப் பிடித்து தமிழினத்தைத் தலை நிமிர்த்திய பாரதியின் தாசனாவார். அவருடைய கவிதை வரிகளில் இயற்கை பற்றி ஈங்கு இனி காண்போம்.

மயில்:-
மயில் என்னும் நமது தேசியப் பறவையின் அழகை வருணிக்க அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தோகை புனையா ஓவியம். முனதின் மகிழ்ச்சியை உச்சியில் கொண்டையாய் உயர்த்தி வைத்ததாகவும், ஆயிரம் ஆயிரம் அம்பொற்காசுகளைக் கொண்டதாகவும் ஆயரமாயிரம் அம்பிறை நிலவுகளின் சாயலைக் கொண்டதாகவும் கூறுகின்றார்.
மேலும், மரகதப் பச்சையை உருக்கி வண்ணத்தால் உனது மென்னுடல் அமைந்துள்ளது என்றும், நீயும் பெண்களும் நிகர் பிறர் பழி தூற்றும் பெண்களின் கழுத்து உன் கழுத்து என்றும் வருணித்துள்ளார்.

சிரித்தமுல்லை:-
மாலைப் பொழுதில் சோலையின் பக்கம் அவர் செல்லும் போது அவ்வேளையில் குளிர்ந்த மந்த மாருதம் வந்தது அது அவரைத் தழுவி வாசம் தந்தது. அந்த வாசத்தில் அதன் வசம் திரும்பியதாகவும், சோலை நடுவே பச்சைப்பட்டு உடை போர்த்தினார் போன்று புல் பூண்டுகள் படர்ந்து கிடக்க. அதில் குலுக்கென்று ஒரு முல்லைத் தன் முன்னால் சிரிப்பதைக் கண்டு மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அணில்:-
கத்திக் கொண்டு கிளைக்குக் கிளை தாவும் அணில் கீச்சென்று அதன் காதலன் வாலை வெடுக்கென்று கடித்ததாகவும் காதலன் ஆச்சென்று சொல்லி காதலியை அணைக்க நெருங்கியதாகவும் கூறியுள்ள பாவேந்தர். மேலும் கொல்லர் உலையிலிட்டுக் காய்ச்சும் இரும்பின் இடையே நீர்த்துளி ஆகக் கலப்பது போல் கலந்திடும் இன்பங்கள் எவ்வளவு துன்பத்திலும் காதலன் அணைப்பில் காதலியும் துன்பம் மறந்து மகிழ்வாள். கூச்சல் குழப்பம் கொத்தடிமைத்தனம் செய்யும் மனிதர்கள் போல் அணில் இனத்தில் அப்படி ஏதுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

வானும் முல்லையும்:-
நம் எண்ணங்களைப் போல் விரிந்துள்ள என்ன தெரியுமா?அது வான். நமது இருகண்களைக் கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்கள் சேர்ந்து தரும் ஒளி வானாகும்.
இந்த வண்ணங்களைக் கருமுகிற் கூட்டங்கள் மறைத்து இடி என்னும் பாட்டையும், மின்னலையும், வானவில்லையும் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.
மழை மேகக் கூட்டங்களைக் கண்டு தோகை விரித்தாடும். வெண் முத்து போன்ற மழைத்துளி மல்லிகை கண்டு சிரிக்கும் என்பது போன்ற இயற்கை வருணனைகள் அழகுபடப் படைத்துள்ளார்.

•Last Updated on ••Monday•, 08 •January• 2018 20:13•• •Read more...•
 

‘வேரில் பழுத்த பலா’ புதினத்தின் கருவும் உருவும்

•E-mail• •Print• •PDF•

‘வேரில் பழுத்த பலா’ புதினத்தின் கருவும் உருவும்சு.சமுத்திரம் இலக்கியத் தளத்தில் பல்வேறு விமரிசனங்களை எழுப்பியவரும் பல்வேறு விமரிசனங்களுக்கு உள்ளானவரும் ஆவார். இவரது ‘வேரில் பழுத்த பலா’ என்ற புதினம் சாகித்திய அகாதமி விருதைப் பெற்று உள்ளது. அரசு அலுவலகச் செயல்பாடுகளையும் அநீதியின் உச்சக் குரலையும் நீதியின் மெளனத்தையும் சாதியத்தின் பன்முகத்தையும் கருவாகக் கொண்டு புதினமாக உருப் பெற்று உள்ளது. சு.சமுத்திரம் இக்கருவிற்கு எங்ஙனம் உருவம் கொடுத்துள்ளார் என்பதை ஆய்வதாகக் கட்டுரை அமையப் பெறுகிறது.

தொடக்கம்
‘எல்லாக் குழந்தையும் நல்லக் குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே - அவர்
நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்
அன்னை வளர்ப்பினிலே’

என்ற வரிகளை மெய்ப்பிக்கும் வகையிலேயே புதினத்தின் தொடக்கம் அமைந்து உள்ளது. முதன்மைப் பாத்திரமான சரவணனின் அலுவலகப் புறப்பாடே, புதினத்தின் முதல் காட்சி ஆகும். புறத் தோற்றத்திற்கு முக்கியத்துவம் தராதவன். ஆனால் அகத் தோற்றத்தில் எவ்வித கறையும் படியாவண்ணம் தற்காத்துக் கொள்ளும் குணம் உள்ளவன் என்பதை தெளிவுபடுத்துவதாய்,

‘ உடை என்பது, உடம்பை உடைத்துக் காட்ட அல்ல. மறைத்துக் கொள்ளவே என்பதை சரவணன் கொள்கையாகக் கொண்டிருப்பானோ என்ற சந்தேகம் எவருக்கும் வரலாம்.’ என்ற வரிகள் அமைந்துள்ளது. ஒரு மனிதனின் குணம், பண்பு அக அழகில் இருக்கிறதே தவிர புற அழகில் இல்லை என்பதை மனத்தில் ஆழப் பதியச் செய்து வளர்த்தது தாய் முத்தம்மாவும் இரண்டாம் தாயகத் திகழும் அண்ணி தங்கம்மாளுமே ஆவர். இப்பண்பு தங்கை வசந்தவிற்கான பணித் தேடலிலும் நிலை பெற்று இருக்கிறது. தன்னிடம் அதிகாரமும் பதவியும் இருந்த நிலையிலும, “ வேலைக்குன்னு பேனாவைத் தான் தொட்டேன். எவன் காலையும் தொடலைஸ இவளுக்கும் தொட மாட்டேன். இவளுக்கு நான் வழிதான் காட்ட முடியும். கூடவே நடக்க முடியாது ? ” என்று கூறுகிறான்.

சு.சமுத்திரம் தனது படைப்பின் முதன்மைப் பாத்திரத்தை, ‘ ஊருக்குத் தான் உபதேசம். தனக்கு அல்ல’ என்றா எண்ணம் கொண்டதாக இல்லாமல் பேச்சும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகப் படைத்துள்ளார்.

தலைப்பு

படைப்பாளர் புதினத்திற்கு மேலோட்டமாக இல்லாஅமல் குறியீடாகவும் கவிதையாகவும், ‘வேரில் பழுத்த பலா’ என்று தலைப்பிட்டு உள்ளார். கதையின் மையக் கருவைக் கடந்து முதன்மைப் பாத்திரத்தின் எண்ணப் போக்கை மனத்திற் கொண்டு தலைப்பு அமைந்துள்ளது. நம்முடைய தேவைகளை நிவிர்த்தி செய்யும் காரணிகள் காலடியில் கிடப்பதைக் கவனத்தில் கொள்ளாமல் ஏழு கடல் ஏழு மலை தாண்டி மனம் தேடுவதே இயல்பாகும். அதைப் போன்று சரவணன், வாழ்க்கைத் துணையையும் பிரச்சினைகளுக்கான தீர்வையும் திறமை கொண்ட ஆளுமையையும் எங்கோ தேடிக் கொண்டிருந்தான். ஆனால், “ அலுவலக மரங்களின் உச்சாணிக் கிளைகளில் அணில் கடித்த பழங்களையும் பிஞ்சில் பழுத்த பழங்களையும் பிடுங்காமல் பார்த்த எனக்கு இவ்வளவு நாளாய் இந்த வேரில் பழுத்த பலா பார்வைக்குப் படாமல் போய் விட்டதே? இப்போ, இவளை இவளையே. . . . . இவளை மட்டுமே . . . . நாள் பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கணும் போல் தோணுதே! இதுக்குப் பெயர் தான் காதலோ ” என்று சரவணன் எண்ணுவதாகப் புதினம் அமைந்துள்ளது.

•Last Updated on ••Monday•, 08 •January• 2018 20:07•• •Read more...•
 

தமிழறிஞர் ப. மருதநாயகம்;: (1935)

•E-mail• •Print• •PDF•

கட்டுரையாளர்: * - இர.ஜோதிமீனா, முனைவர் பட்ட ஆய்வாளர்  அரசுகலைக்கல்லூரி,(தன்னாட்சி)  கோயம்புத்தூர் - 18. -முனைவர்.ப.மருதநாயகம் ஆங்கிலத்திலும் தமிழிலும் முதுமுனைவர் பட்டம் பெற்றவர் என்பது அவரது சிறப்புத்தகுதியாகும். அமெரிக்க இலக்கியத்தை ஹவாய் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பேராசிரியர் கல்வியாளர், நூலாசிரியர், ஆய்வாளர் மொழிபெயர்ப்பாளர் எனப் பல தளங்களில் பரிணமிப்பவர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில போராசிரியராகக் கல்லூரியிலும் பல்கலைகழகங்களிலும் பணியாற்றியவர். தற்போது எண்பது வயதிலும் விடாப்படியாக மிகுந்த அக்கறையோடு உலக அரங்கில் தமிழில் ஆய்வுக்கட்டுரை வழங்கி தமிழின் பெருமையை உயர்த்தி வருகிறார்.

ஆங்கிலத்தில் பத்திற்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களும், தமிழில் பதினைந்திற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களும் எழுதியுள்ளார். தொல்காப்பியம், சங்கஇலக்கியம், திருக்குறள் குறித்தும் இவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் தமிழுக்கு வளம் சேர்ப்பவை. புறநானூறு குறித்த மிக விரிவான இவரது ஆய்வு போற்றத்தக்கது. ஏனைய வடமொழி இலக்கியத்திற்கெல்லாம் மூலம் புறநானூறு தான் என்றும் சிற்றிக்கியங்களின் தோற்றத்திற்கும் புறநானூறு அடிப்டையாக அமைவதையும் வெளிப்படுத்தியுள்ளார். சம காலத்து இலக்கியவாணார்களான வள்ளலார், அயோத்திதாசர், பாராதி, பாவாணர், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், குலோத்துங்கன், ஜெயகாந்தன், ம.இல.தங்கப்பா, சிற்பி போன்றோர்களின் படைப்புகளையும் ஆய்வுக்குட்படுத்தி அவர்களின் தனிச்சிறப்பை விளக்கியுள்ளார்.

ஆங்கிலப்போராசிரியர்கள்; தமிழ்மீது அக்கறை கொள்வதில்லை அல்லது ஆங்கில இலக்கியம் முதலியவற்றைக் கற்றவர் தமிழின் மீது அக்கறை கொண்டதே இல்லை. அதேபோல் தமிழ்இலக்கியம் கற்றவர்கள் ஆங்கில இலக்கியத்தைக் கற்பதும் இல்லை. இவ்வகை தமிழ் அறிஞர்கள் இடையில் மருதநாயகம் தமிழுக்கு ஒரு கலங்கரை விளக்கமெனத் திகழ்கிறார்(த.நே.இ.43, ப.4).

ஆங்கில இலக்கியம் கற்றவர் எனினும் தாய்மொழிக்கு வளம் சேர்க்கும் ஒரு சிலரில் பேராசிரியர் மருதநாயகம் குறிப்பிடத்தக்கவர். ஆங்கில இலக்கியத்தின் மேன்மை குறித்துப் பேசுபவர்களை மறுக்கும் முறையில் ஆங்கிலத்தை ஏவல் கொண்ட தமிழ்தேடல் என்னும் தலைப்பில் 96 பக்க அளவிலான கட்டுரையை தமிழ்நேயம் (43) வது (மே 2011) சிறப்பிதழில் எழுதியுள்ளார். இக்கட்டுரையிலிருந்து மருதநாயகத்தின் ஆய்வுகள் இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன.

•Last Updated on ••Monday•, 08 •January• 2018 20:17•• •Read more...•
 

2004 சுனாமி நினைவலைகள்: அனாமிகா - கூத்தில் நிமிர்ந்து ஈழ நாட்டிய கனவை விதைத்த மகள்!

•E-mail• •Print• •PDF•

அநாமிகாபாலசிங்கம் சுகுமார்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடமொன்றின் தலைவராக இருந்தவரும், கூத்துக்கலைகளில் ஆர்வம் மிகுந்தவருமான திரு. பாலசிங்கம் சுகுமார் அவர்கள் தன் மகளைப்பற்றி அவ்வப்போது முகநூலில் பதிவுகளிடுவார். இப்பதிவுகளுக்குப் பின்னாலுள்ள வலி, சோகம், துயரம் வாசிப்பவர் நெஞ்சங்களைப் பாதிப்பவை. ஆனால் அவற்றையும் மீறி அவர் தன் மகளுக்குச் சொற்களாலான கவிமாலை புனைந்து இலக்கியத்தில் நிலையாத இடத்தை ஏற்படுத்தி விட்டார். 2004இல் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாப்பிரதேசங்களைப் பாதித்த ஆழிப்பேரலைக்குப் பலியான அவரது மகள் பற்றிய அவரது உணர்வுகளில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.

அவர் தன் மகளைப் பற்றி அண்மையில் எழுதிய பதிவொன்று கீழே:

கூத்தில் நிமிர்ந்து ஈழ நாட்டிய கனவை விதைத்த மகள்!
200ம் ஆம் ஆன்டு பேராசிரியர் மெளனகுரு இராவணேசன் தயாரிப்புக்காக கிட்டத்தட்ட ஒரு வருட பயிற்சியயை ஆரம்பித்தார்.அந்த பயிற்சியில் நான் உட்பட பல விரிவுரையாளர்களும் இணைந்து கொண்டனர் மகள் அனாமிகாவும் இணைந்து கொண்டாள் பெரும்பாலும் மாலை நேரங்களிலும் சனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் பயிற்சிகள் நடை பெறும் மிகக் கடுமையான பயிற்சிகள் நான் வேலைகள் காரணமாக பயிற்சிகளை தவற விட்டாலும் அவள் நாட் தப்பாமல் நேரம் தவறாமல் கலந்து கொள்வாள் .

பயிற்சியில் அவளது திறன் அசாத்தியமானதாக இருந்தது.அதனால் பல வேளைகளில் அவளை முன்னுக்கு விட்டு மற்றவர்களுக்கு பயிற்சியயை வழி நடத்துவார்.அவள் பரதமும் படித்தாள் என்பதால் அவள் ஆட்டத்தில் அடவுகள் அற்புதமான காட்சிகளாக விரிந்து வியப்பை தரும். வீட்டில் அவளை ஆடச் சொல்லி பார்த்து பார்த்து மகிழ்வேன். அவழின் ஆடல் திறனை நானும் பேராசிரியர் மெளனகுரு அவர்களும் அடிக்கடி பேசிக்கொள்வோம் அப்போது உருவானதுதான் என் ஈழ நாட்டியக் கனவு. 2002ஆம் ஆண்டு நடை பெற்ற கூத்து பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் மெளனகுருவின் கூத்து விளக்க செயல் முறை விளக்கத்துக்கு அனாமிகா ஆடிக் காட்டி விளக்கி நின்றாள். எப்படி பரத நாட்டியத்துக்கு தனியொருவரைக் கொண்டு அரங்கேற்றம் செய்யப் படுகிறதோ அதே போல மட்டக் களப்பு வடமோடிக் கூத்துக்கு அனாமிகாவை வைத்து ஒரு அரங்கேற்றம் செய்வது அதனை 2005 ஆம் ஆண்டு செய்வது எனவும் தீர்மானித்தோம். ஆனால் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 சுனாமி எல்லாக் கனவுகளையும் கழுவிக் கொண்டு நிர் மூலமாக்கிக் கொண்டு சென்றது

மகளைப்பற்றி அவர் முகநூலில் பதிவிட்டிருந்த கவித்துளிகள் சில கீழே:

1.
எனக்கு
எல்லாமாய் இருந்தவள்
நீ....
சொல்லாமல் வந்த
சுனாமியில்
கரைந்த
அந்த நாளோடு
நான்
இல்லாமல் போனேன்

•Last Updated on ••Thursday•, 28 •December• 2017 14:47•• •Read more...•
 

பாக்கியம் ராமசாமி (ஐ.ரா.சுந்தரேசன்) மறைவு! ஆழ்ந்த இரங்கல்!

•E-mail• •Print• •PDF•

ஐ.ரா.சுந்தரேசன்அப்புசாமி, சீதாப்பாட்டிஎழுத்தாளர் ஐ.ரா.சுந்தரேசன் அவர்கள் மறைந்த செய்தியினை முகநூலில் எழுத்தாளர் இரா முருகன் பதிவு செய்திருந்தார். ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்பது இவரது இயற்பெயர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைப்பகிர்ந்துகொள்கின்றோம். எங்களது காலகட்டத்தில் நகைச்சுவை எழுத்தென்றால் முதலில் ஞாபகத்துக்கு வருபவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி படைத்த அப்புசாமி - சீதாப்பாட்டி கதைகள்தாம். ஓவியர் ஜெயராஜின் கை வண்ணத்தில் வெளியான அப்புசாமி - சீதாப்பாட்டி ஓவியங்களை அவ்வளவு இலகுவாக மறந்துவிட முடியுமா என்ன? ஐ.ரா.,சுந்தரேசனின் புனைபெயர்களிலொன்றுதான் பாக்கியம் ராமசாமி என்பதும். ஐ.ரா.சுந்தரேசன் என்னும் பெயரிலும் இவரது தொடர்கள் எழுபதுகளில் குமுதம் இதழில் தொடராக வெளிவந்துள்ளன. அவற்றில் 'கதம்பாவின் எதிர்' அப்பருவத்தில் நாம் விரும்பிப்படித்த நாவல்களிலொன்று. தமிழ் இலக்கிய உலகில் தேவனின் 'துப்பறியும் சாம்பு' போல் பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி, சீதாப்பாட்டியும் நிலைத்து நிற்பார்கள். இவர் அப்புசாமி.காம் என்னும் புகழ்பெற்ற வலைப்பதிவொன்றினையும் நடாத்தி வந்தார். அதன் இணையத்தள முகவரி: http://www.appusami.com/nagaichuvaimenu.asp அத்தளத்தில் அப்புசாமி - சீதாப்பாட்டி நாவல்கள் பலவற்றை வாசிக்கலாம்: http://www.appusami.com/nagaichuvaimenu.asp

 

•Last Updated on ••Friday•, 08 •December• 2017 07:25•• •Read more...•
 

இலக்கியங்களில் உயிரின நடத்தையை மாந்தரோடு ஒப்புமைப்படுத்தல் (நற்றிணையை முன்வைத்து)

•E-mail• •Print• •PDF•

இலக்கியங்களில் உயிரின நடத்தையை மாந்தரோடு ஒப்புமைப்படுத்தல் (நற்றிணையை முன்வைத்து)விலங்குகள் என்பதற்குப் பொதுவாக ‘நான்கு கால்களைக் கொண்ட பாலூட்டி வகைகளைச் சார்ந்தன@ பலவகை உணவு உண்ணும் பழக்கங்களைக் கொண்டன@ இனப்பெருக்கத்துக்காக குட்டிகளை ஈன்று கொள்வன’ என்று பொதுமையான ஒரு வரையறைக் கொடுக்கலாம். நற்றிணையில் ஆடு, எருது, எருமை, கரடி, குதிரை, குரங்கு, சிங்கம், புலி, செந்நாய், பசு, பன்றி, மான், யானை உள்ளிட்ட 27 வகை விலங்கினங்கள் 221 பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆய்வுப் பொருண்மை, அதிகப்பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலங்கினம் என்ற இரண்டின் அடிப்படையில் யானை, புலி, மந்தி, மான் செந்நாய் ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட பாடல்கள் மட்டும் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ்விலங்கினங்களின் செயல்கள் மனிதச் செயல்களோடு எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகின்றன என்பதை உளவியல் நோக்கில் ஆராய முற்படுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

யானை
நற்றிணையில் யானைப்பற்றிய பாடல்கள் 70 ஆகும். களிறு, பிடி, வேழம், கோட்டுமா, ஒருத்தல், நன்மான் என்ற சொல்லாடலில் இவை குறிக்கப்படுகின்றன. விலங்குகளைப் பற்றிய செய்திகளில் யானைகளைப் பற்றியே செய்திகளே மிகுதியாகக் காணப்படுகின்றன. யானையின் செயல்கள் பெரும்பாலும் தலைவியுடன் ஒப்புமைப்படுத்திக் கூறுவதை நற்றிணையில் அறிய முடிகிறது. களிறு பிரிந்ததனால் பிடியானது தன் குட்டியுடன் வருந்தியிருக்கின்ற செயலினைக் கூறி, அதுபோல் தலைவன் பிரிந்திருப்பதனால் தலைவியும் வருந்துகிறாள் என்று அதோடு தொடர்;புப்படுத்திக் கூறுகின்ற முறையினை நற்றிணையில் காண முடிகிறது (நற்.85,114). இவை பெரும்பாலும் உவமையாகக் கூறப்படுகின்றன. யானையது வருத்தத்தை பின்வரும் பாடலால் அறியலாம்.

“பெருங்களிறு உழுவை அட்டென, இரும்பிடி
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,
நெய்தற் பாசடை புரையும் அம்செவிப்          
பைதலம் குழவி தழீஇ, ஒய்யென
அரும்புண் உறுநரின் வருந்தி வைகும்  (நற்.47)

புலியை அஞ்சிய பிடியானை, அதனை உணராத தன் இளங்கன்றைப் பேணி நிற்றலைப் போலப் பிரிவால் தலைவிக்கு வரும் துயரத்திற்கு அஞ்சிய தோழி, அதனை அறியாதே களவு உறவில் திளைக்கும் தலைவியைப் பேணிக் காத்து நிற்கின்றாள் (நற்.85).

•Last Updated on ••Wednesday•, 22 •November• 2017 09:11•• •Read more...•
 

எழுத்து ஊடகங்களில் பெண் உடல்

•E-mail• •Print• •PDF•

 -முனைவர். த. விஜயலட்சுமி, துறைத்தலைவர், தமிழ்த்துறை, கேரளப்பல்கலைக்கழகம், காரியவட்டம், திருவனந்தபுரம்-695 581-பெண்ணியம் வேரூன்றிய இக்காலகட்டத்தில் பெண் எழுத்து, பெண் மொழி, பெண் உடல் மொழி போன்ற சொல்லாடல்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இச்சொற்கள் இவற்றின் சொற்பொருளுக்கு அப்பால் சென்று பொருள் தந்து நிற்கின்றன. இக்கட்டுரையின் தலைப்பில் கூறப்பட்டுள்ள 'பெண் உடல்' என்ற சொல் அதுபோன்ற சொல்லைக் கடந்த பொருளில் இங்கு பயன்படுத்தப்படவில்லை. பௌதீகமான பெண்ணின் உடல் என்ற சாதாரணமான பொருளில்தான் கையாளப்படுகிறது. காலகாலமாக சமூகம் பெண்ணின் உடலை எவ்வாறு கண்டது என்பதையும், இன்றைய பெண்கள் பெண் உடலை எவ்வாறு காண்கிறார்கள் என்பதையும் எழுத்து ஊடகங்கள் வழி இக்கட்டுரை விளக்க முனைகிறது.

மனித உடல் பல பரிணாம வளர்ச்சிக்குப் பின் இன்றைய நிலையை அடைந்தது என்பது நாம் அறிந்ததே. வலிமையான இருகைகள் தான் மனிதனை விலங்குகளில் இருந்து மாறுபடுத்தி உழைக்கவும் செயல்களைச் செயல்படுத்தவும் உதவின என்பர். உடல் உழைப்பில் உணவைச் சேகரித்த காலகட்டத்தில் ஆண் உடல், பெண் உடல் என்று வேற்றுமைகள் இல்லாமல் இருந்தன. காமம் கூட கட்டுப்பாடற்ற ஒரு உடல் தேவையாகவும், ஆண், பெண் உடல் உறவு ஒரு இனக் கவர்ச்சியாக மட்டுமே இருந்தன. காம இச்சையை நிறைவு செய்யும் போது விபத்துக்களாக குழந்தைகள் உருவாயின. தாயின் பாதுகாப்பில் அவை வளர்ந்தன. விலங்குகளின் வாழ்க்கைக்கும் மனித வாழ்க்கைக்கும் இக்காரியங்களில் பெரும் வேறுபாடு ஒன்றும் இல்லை.

மனிதம் காமத்தை இனக்கவர்ச்சிக்கு அப்பால் ஒரு சுகமாக பொழுது போக்காக, ஒரு போதையாக என்று காணத் தொடங்கியதோ அன்றே மனித உடல் ஆண் உடல், பெண் உடல் என்ற வேறுபாட்டைப் பெற்றது. போதைப் பொருளாக காமத்தை கொள்ளும் ஒரே உயிரினம் மனிதம்தான். பிற அனைத்து உயிரினங்களும் காமம் ஒரு இனக்கவர்ச்சி, உடலின் தேவை, இனப்பெருக்கமுறை அவ்வளவிதான். காம இச்சை ஒரு போதையாக வெறியாக மாறிய போது, பெண் உடல் அதற்கான ஒரு கருவியாக மாறியது.

“கண்டு கேட்டு உற்று உண்டு உயிர்த்தல்
ஒண்டொடி மாட்டே உள"


என ஐம்புலனையும் நிறைவு செய்யும் ஒரே பொருளாக பென் உடல் சமூகத்தால் மதிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில் பெண் 'சுயம் இழக்கப்பட்டு' பெண் உடல் என்ற பௌதீஇகப் பொருள் முன்னிலைப்படுத்தப்பட்டது.

பெண் உடல் வர்ணனைகள்
சங்க காலம் முதல் நமக்குக் கிடைக்கும் எழுத்திலக்கியங்களைக் கூர்ந்து கவனித்தால் அதில் பெண் உடல், பெண் உடல் உறுப்புகள் எவ்வாறு வர்ணிக்கப்பட்டுள்ளன என்று காணலாம். இதற்கு மாறாக ஆணின் புயம் அல்லது தோள் மட்டுமே வர்ணிக்கப்பட்டுள்ளன. இதற்கு இரு வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இவ்விலக்கியங்கள் ஆண்களால் படைக்கப்பட்டன என்பதும் ஆண்களால் ரசிக்கப்பட்டன என்பதுமாகும் அவை. சமீபத்தில் ஒருவர் சங்க இலக்கிய உடல் வர்ணனைகள் ஒரு வகையான பாலியல் கல்வி என்று தனது மேதாவித் தனத்தை நிறுவியுள்ளார். உண்மையில் இக்காரணங்களுக்கும் இலக்க்கிய பெண் உடல் வருணனைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது திண்ணம்.

•Last Updated on ••Wednesday•, 22 •November• 2017 15:23•• •Read more...•
 

முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் அமரரானார்

•E-mail• •Print• •PDF•

ஈழத்தின் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் தனது 87ஆவது அகவையில்; நேற்று 15.11.2017 அன்று மட்டக்களப்பில் காலமானார். தமது இளவயதில் வீரகேசரி நாளிதழில் ஒப்புநோக்குநராக இணைந்து கொண்ட அவர் பின்னர் அங்கு உதவி ஆசிரியராகிப் பின்னர் சிரேஷ்ட உதவி ஆசிரியராகப் பதவி உயர்வுபெற்று பணிபுரிந்தார். 1958இல் ’ஈழநாடு” பத்திரிகை நாளிதழாக வெளியானபோது, அதன் செய்தி ஆசிரியராக இணைந்த கோபாலரத்தினம் 1980களின் முற்பகுதிவரை அதன் ஆசிரியபீடத்தின் பிரதானியாக இயங்கிவந்தார். 1985இல் ‘ஈழமுரசு” பத்திரிகையின் ஆசிரியராகப் பணியை ஏற்று அப்பத்திரிகையின் துரித வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தார். அவ்வேளையில்; 1987இல் இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் புகுந்து ஈழத்தின் பத்திரிகைச் சுதந்திரத்தில் கைவைத்தபோது கைது செய்யப்பட்டு பல மாதங்கள் இந்திய அமைதிப் படைகளின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் வெளியே வந்ததும் ‘ஈழமண்ணில் ஒரு இந்தியச் சிறை’ என்ற தலைப்பில் தனது அனுபவத்தினை தொடராக தமிழகத்தின் ‘ஜுனியர் விகடன்” பத்திரிகையில் இடம்பெறச்செய்து, இந்திய அமைதிப்படையின் கோரமுகத்தை வெளிப்படுத்தினார். இத்தொடர் பின்னர் ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்ற மூலத் தலைப்பிலேயே மட்டக்களப்பு றுழசடன எழiஉந Pரடிடiஉயவழைளெஇ வெளியீடாக ஆகஸ்ட் 2000 இல் நூலுருவாக வெளிவந்தது. இந்நூலில் இந்திய அமைதிப்படையினரால் தான் கைது செய்யப்பட்டதன் பின்னரான இரண்டு மாத சிறை அனுபவம் விரிவாகப் பதிவுசெய்திருந்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து விடுதலையாகும் வரை நடந்த நிகழ்வுகள், சிறையில் சந்தித்தவர்கள், அவர்களிடமிருந்து கேட்டறிந்தவை என அனைத்தும் பதிவுக்குள்ளாகியிருந்தன. 

இந்தியப்படை 1991இல் இலங்கையிலிருந்து புறப்பட்ட பின்னர், ‘ஈழநாதம்” நமது ஈழநாடு” ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றிய கோபாலரத்தினம் கொழும்பில் ‘சுடரொளி” பத்திரிகையின் ஆசிரிய பீடத்திலும் சிறிது காலம் தனது ஊடகவியல் பணியைத்; தொடர்ந்தார். பின்னர் மட்டக்களப்புக்குச் சென்று அங்கு ‘தினக்கதிர்” பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தெகிவளை, நிகரி வெளியீட்டாளர்களினால் மே 2003இல் வெளியிடப்பட்ட ‘அந்த ஒரு உயிர்தானா உயிர்” என்ற அவரது நூல், மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தினக்கதிர் நாளேட்டில் பிரதம ஆசிரியராக இருந்த வேளையில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கங்களையே பெருமளவில் உள்ளடக்கியதாக இருந்தது. இந்நூலில் யாழ்ப்பாணத்து ‘ஈழநாதம்” பத்திரிகையில் வெளிவந்த இரண்டு ஆக்கங்களும் சேர்க்கப்பட்டிருந்தன. இவரது ஆசிரியத் தலையங்கங்கள் அனைத்தும் சமகால ஈழத்து அரசியல் நிலையை வைத்து எழுதப்பட்டவையே. தமிழ்மக்களின் மன எழுச்சியையும் இவை துல்லியமாகப் பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளன.

ஈழத்தில் அனுபவம்மிக்க பத்திரிகையாளராகத் திகழும் எஸ்.எம்.ஜி. அவர்கள் வீரகேசரியில் 7 ஆண்டுகளும், ஈழநாட்டில் 21 ஆண்டுகளும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தை முன்வைத்து, ‘பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு” என்றதொரு நூலையும்  நவம்பர் 2003 இல் யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பக வெளியீடாக வெளியிட்டிருந்தார். ஈழத்தின் பத்திரிகையாளராகத் தான் வாழ்ந்துபெற்ற அனுபவங்களை இந்நூலில் சுவையாக விபரித்திருந்தார்.

•Last Updated on ••Thursday•, 16 •November• 2017 09:17•• •Read more...•
 

அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை வாழ்வும் பணிகளும்

•E-mail• •Print• •PDF•

அமரர் காரை. சுந்தரம்பிள்ளை- 11.11.2017 அன்று ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற அமரர் காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவேந்தல் நிகழ்வின் போது ஆற்றிய நினைவுப் பேருரை -

அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை (20.5.1938-21.9.2005) அவர்களின் நினைவேந்தலும், அவரது மகள் மாதவி சிவலீலனின் கவிதை நூலான இமைப்பொழுது என்ற படைப்பின் வெளியீடும் இணையப்பெற்ற இந்த இனிய நிகழ்வில் கலந்து சிறப்பிக்க வந்து அவையில் அமைந்திருக்கும் பெரியோர்களே, இங்கு மேடையில் வீற்றிருக்கும் பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் பணிவான வணக்கம். அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவுரையை வழங்குவதற்காக என்னைத் தேர்ந்தெடுத்துள்ள சகோதரி மாதவிக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

யாழ்ப்பாண மாவட்டத்தில், காரைநகரின் களபூமி என்ற ஊரில் செல்லர்-தங்கம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர், அமரர் சுந்தரம்பிள்ளை அவர்கள். தனது ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். கொழும்பு அக்குவைனாஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பின்னாளில் பெற்றார். அவரை கலாநிதி செ.சுந்தரம்பிள்ளை என்பதைவிட, கவிஞர் காரை. சுந்தரம்பிள்ளை என்றழைப்பதையே தமிழ் உலகம் வழக்கமாக்கிக்கொண்டது. இன்னும் நெருக்கமாக, ‘காரை” என்ற அடைமொழி தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிமனிதனான அமரர் காரை சுந்தரம்பிள்ளையைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஊரின் பெயரைத் தனக்கான அடையாளமாகக் கொண்ட பலரை நாம் ஈழத்துப் படைப்புலகில் காண்கின்றோம். தான் மதிக்கும் ஊரைக் குறிப்பதன் காரணமாக, அந்த ஊரின் வழியாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் எம்மவரின் மத்தியில், தன் பெயரின் முன்னால் காரைநகரைச் சேர்த்துக்கொண்ட காரை சுந்தரம்பிள்ளையால் காரைநகர் அன்னையே ‘சான்றோன் எனக் கேட்ட தாயாகிப்” பெருமிதம் கொள்வாள். காரை மண் இவரது அடையாளமாகக் கொண்டபோதிலும், இவர் காரைமண்ணுக்கு மாத்திரம் உரியவரல்ல. அந்த மண்ணுக்கு மாத்திரம் உரியவராக இவரை இனம்காண முடியாத அளவிற்கு இவரது பன்முக ஆளுமையால், உலகளாவி விகாசித்து நிற்கிறார். இவர் கற்பித்த பாடசாலைகள், நிறுவனங்கள்,ஆசிரிய கலாசாலைகள், வாழ்ந்த பிரதேசங்கள் யாவும் இவர் நம்மவர் என்று உரிமைகொள்வதில் பெருமிதம் கொள்வதை இன்றும் நாம் காண்கிறோம்.

காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ் மொழிப் பயிற்சியில் முக்கிய ஆசான்களாக பண்டித வித்வான் க.கி.நடரஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும், தமிழ் இலக்கண இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார், ஆ.சபாரத்தினம் ஆகியோரும்; விளங்கினார்கள். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், சமஸ்கிருதம், பாளி, சிங்களம் ஆகிய மொழிகளிலும் இவர் புலமை பெற்றிருந்தார்.

•Last Updated on ••Wednesday•, 15 •November• 2017 08:26•• •Read more...•
 

அஞ்சலி: மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் இன்று மட்டக்களப்பில் மறைந்தார்!

•E-mail• •Print• •PDF•

இலங்கை தமிழ்ப்பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் இன்று புதன் கிழமை காலை மட்டக்களப்பில் காலமானார். கோபு என அழைக்கப்படும் இவர் வீரகேசரியில் 1953 இல் முதலில் ஒப்புநோக்காளராகவே இணைந்தவர். அதன் பின்னர் ஆசிரிய பீடத்தில் ஒரே சமயத்தில் அலுவலக நிருபராகவும் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவர். அக்காலப்பகுதியில் அவர் பெற்ற மாதச்சம்பளம் 72 ரூபாதான். 1960 இல் வீரகேசரியில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது அந்த வேலையை இழந்து யாழ்ப்பாணம் சென்று ஈழநாடு பத்திரிகையில் இணைந்தார். கோபு, வீரகேசரி, ஈழநாடு, ஆகியனவற்றில் மாத்திரமின்றி ஈழமுரசு, தினக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், சுடரொளி முதலான பத்திரிகைகளிலும் பணியாற்றியவர். 1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையடுத்து இந்திய அமைதிப் படை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டது. இந்தியப்படையினரால் சுமார் இரண்டு மாதங்கள் சிறைவைக்கப்பட்டார்.

•Last Updated on ••Wednesday•, 15 •November• 2017 07:20•• •Read more...•
 

அமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் ஒரு நூல்வழிப் பதிவு

•E-mail• •Print• •PDF•

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சங்க இலக்கியம் பற்றிய ஆழ்ந்த தேடல் அனுபவம் மிக்கவராக 2006இல் எனக்கு அறிமுகமானவர் நுணாவிலூர் தமிழறிஞர் கா.விசயரத்தினம் அவர்கள். அவரது தொடர்பினை எனக்குப் பெற்றுத்தந்தவர் அவரது ஆஸ்தான பதிப்பாளரான மணிமேகலைப் பிரசுர அதிபர், இரவி தமிழ்வாணன் அவர்கள். நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் நூலொன்றை கணினியை விஞ்சும் மனித மூளை என்ற தலைப்பில் அவர் 2005 இல் அச்சிட்டிருந்தார். தான் வெளியிட்ட ஈழத்தவரின் பல நூல்களை எனது நூல்தேட்டம் பதிவுக்காக ரவி தமிழ்வாணன் ஒரு தடவை தமிழகத்திலிருந்து அனுப்பிவைத்திருந்தார். அதில் கிடைத்ததே நுணாவிலூராரின் இலக்கியத் தொடர்பு. அத்தொடர்பினைத் தொடர்ந்து தனது ஒவ்வொரு நூலையும் தவறாமல் எனக்குத் தபாலில் அனுப்பிவைப்பார். நூல்பற்றிய விமர்சனங்களை நேரில் கேட்டறிவதில் அலாதிப் பிரியம் கொண்ட வித்தியாசமான படைப்பாளி அவர். நானும் எனது விமர்சனங்களுடன் ஐ.பீ.சீ. காலைக்கலசம் வானொலி உரைகளில் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வந்திருந்தேன். இத்தொடர்பு காலக்கிரமத்தில் அவரை எனது வானொலிவழி நட்புவட்டத்திற்குள் கொண்டுவந்தது. அவரது மறைவுச்செய்தியை வவுனியூர் இரா.உதயணன் ஓரிரவு தெரிவித்திருந்தார். அவரது மறைவு உடனடிச் சோகத்தை எம்மிடம் விட்டுச்சென்றாலும் அவர் தன் வாழ்நாட்தேடல் வழியாக தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கிய ஒன்பது நூல்களும் அவரை நீண்டகாலம் எம்மிடையே நிலைகொள்ள வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

வடபுலத்தில் சாவகச்சேரி, மேற்கு நுணாவிலைப் பிறப்பிடமாகக்கொண்ட கா.விசயரத்தினம் அவர்கள் 02.03.1931இல் பிறந்தவர். சாவகச்சேரி ட்ரிபேர்க் கல்லூரியின் பழைய மாணவன். அரச கணக்காய்வுத் திணைக்களத்தில் கணக்காய்வு அத்தியட்சகராகப் பணியாற்றி 1991இல் ஓய்வுபெற்றவர். இரு ஆண்களும் ஒரு பெண்ணுமாக மூன்று பிள்ளைகள். மூவரையும் உயர்கல்விக்காக லண்டனுக்கு அனுப்பிவைத்த இவர், 1998இல் துணைவியார் சிவபாக்கியம் அவர்களுடன் லண்டனுக்கு வந்து தமது மூன்று பிள்ளைகளுடன் இணைந்துகொண்டார். லண்டனில் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தில் இணைப்பாளராக இயங்கி இலக்கியப் பசியாறியவர். கனடா 'பதிவுகள்” இணைய இதழின் 'நுணாவிலூர் கா.விசயரத்தினம் பக்கம்”  என்ற தனிப் பக்கத்தில் சங்க இலக்கியம் சார்ந்த தன் தேடல்களை உடனுக்குடன் பதிவுசெய்து பின்னூட்டங்களைப் பெற்றவர். அதன்வழியாகத் தன் படைப்புக்களுக்கு மெருகேற்றிக் கொண்டவர். பதிவுகள் இணையம் வழியாக பல இலக்கிய உறவுகளையும் ஏற்படுத்திக்கொண்டவர். இவரது நட்புவட்டம் விசாலமானது.  துணைவியார் சுகவீனமுற்றகாலத்தில் அவரை உடனிருந்து கண்ணும் கருத்துமாகப் பேணியவர். 22.07.2015இல் தனது அன்புத் துணைவியாரை இழந்த இரண்டாண்டுகளில் 7.10.2017இல் குடும்ப உறவுகளையும், தான் நேசித்த தமிழ் இலக்கிய உலகையும் பிரிந்து கா.விசயரத்தினம் அவர்களும் லண்டனில் அமரத்துவமடைந்துவிட்டார்.

•Last Updated on ••Wednesday•, 15 •November• 2017 08:27•• •Read more...•
 

அஞ்சலி: பண்டிதர் ம. செ. அலெக்ஸாந்தர்

•E-mail• •Print• •PDF•

அஞ்சலி: பண்டிதர் ம. செ. அலெக்ஸாந்தர்தமிழ் சிறுவர்களுக்காக ஒரு ஒளிநாடா ஒன்று தயாரிக்க வேண்டும் என்ற எனது விருப்பதத்தை அதிபர் பொ. கனகசபாபதி அவர்களிடம் 1990 களின் நடுப்பகுதில் தெரிவித்த போது அவர் அது நல்ல முயற்சி என்று வரவேற்றார். காரணம் தமிழ் கற்பதற்கான போதிய வசதிகள் அப்போது கனடாவில் இருக்கவில்லை. அதற்காக  சில சிறுவர்பாடல்களை நானே எழுதியிருந்தேன், ஆனாலும் மற்றவர்களும் பங்கு பற்ற வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்த போது அவர் இருவரின் பெயர்களைக் குறிப்பிட்டார். அவர்களில் ஒருவர் கவிஞர் வி. கந்தவம் அவர்கள் மற்றவர் பண்டிதர் ம.சே. அலெக்ஸாந்தர் அவர்கள். அதனால்தான் அலெக்ஸாந்தர் மாஸ்டரின் வீட்டிற்குச் சென்று அவரிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பாடல் எழுதித் தருவதாக சம்மதம் தந்தார். தமிழ் ஆரம் என்ற அந்த ஒளித்தட்டில் இடம் பெற்று, இன்று பலரையும் கவர்ந்த ‘ஆடுவோம், பாடுவோம் சின்னஞ்சிறு பாலர் நாம்’ என்ற சிறுவர் பாடல் அவர் தந்த வரிகளை வைத்துத்தான் உருவானது. முல்லையூர் பாஸ்கியின் இசையமைப்பில் நேரு அவர்கள் ஒளியமைப்பு செய்திருந்தார்.  அலெக்ஸாந்தர் மாஸ்டரின் அறிவையும், ஆற்றலையம் புரிந்து கொள்ள எனக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்ததால், அவரது விருப்பத்தோடு அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் அங்கத்தவரான அலெக்ஸாந்தர் மாஸ்டர் அவர்களை அடிக்கடி அதிபரின் வீட்டில் சந்தித்து உரையாடுவேன். மிகவும் அன்பாகவும், மரியாதையோடும் பழகக் கூடிய ஒருவர். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக நான்  இருந்த போது மரபுக்கவிதையை இந்த மண்ணில் நிலைத்து நிற்கச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் காரணமாக அவரிடம் உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் அந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அதை ஏற்றுக் கொண்டார். எனவே கவிஞர் கந்தவனம், பண்டிதர் ம.சே. அலெக்ஸாந்தர் ஆகியோரின் உதவியோடு மரபுக்கவிதைப் பட்டறை ஒன்றை எழுத்தாளர் இணையத்தின் சார்பில் ஆரம்பித்தோம். கரு கந்தையா அவர்கள் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக இடத்தை ஒதுக்கித் தந்திருந்தார். அப்போது கனடாவில் இருந்த அனேகமான கவிஞர்கள் புதுக்கவிதை எழுதுவதிலேயே ஈடுபாடு கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் மரபுக்கவிதை கற்பதில் ஆர்வமாக இருந்ததால் சுமார் பதினைந்து கவிஞர்கள் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர். விரிவுரையாளர்களாக கவிஞர் கந்தவனம் அவர்களும், ம.சே. அலெக்ஸாந்தர் அவர்களும் விருப்போடு செயலாற்றினார்கள். எடுத்துக் கொண்ட பொறுப்பைத் திறம்பட செய்து பல மரபுக்கவிதைக் கவிஞர்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. இன்று 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கவிஞர் கழகத்தில் இருக்கும் பல கவிஞர்கள் அன்று அவரிடம் கவிதை கற்றவர்கள் என்பதை எண்ணி இன்றும் பெருமைப்பட முடிகின்றது. ஒக்ரோபர் மாதம் 2004 ஆம் ஆண்டு ஆரம்பித்த மரபுக்கவிதைப் பயிற்சிப்பட்டறை மார்ச் மாதம் 2005 ஆம் ஆண்டுவரை நடைபெற்று பயிற்சி முடித்தவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்பொழுது தலைவராக இருந்த சின்னையா சிவநேசன் அவர்களும் செயலாளராக இருந்த நானும் அதில் கையொப்பம் இட்டிருந்தோம். அமரர் க.பொ.செல்லையா மாஸ்டரும் அந்தப் பட்டறையில் கலந்து கொண்டு எங்களைக் கௌரவித்திருந்தார்.

•Last Updated on ••Friday•, 27 •October• 2017 08:00•• •Read more...•
 

பேராசிரியர் து. மூர்த்தி நினைவாக.. நினைவுகள் சாவதில்லை..

•E-mail• •Print• •PDF•

பேராசிரியர் து. மூர்த்தி நினைவாக..  நினைவுகள் சாவதில்லை..  பேராசிரியர் து. மூர்த்தி காலமாகி (24 - 10 - 2016) ஒரு வருடம்  கழிந்துவிட்டது..! அவரது நினைவுகளை மீட்டிப் பார்க்கின்றேன். எண்பதுகளின் முற்பகுதி. கலாநிதி து. மூர்த்தி தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றி வந்தார். அவ்வேளை பேராசிரியர் அ. மார்க்ஸ் - பொ. வேல்சாமி - து. மூர்த்தி - இரவிக்குமார் ஆகியோர் தோழமையுடன் கலை இலக்கிய அரசியல் செயற்பாடுகளில் ஒன்றுபட்டுச் செயற்பட்டு வந்தார்கள். இவ்வேளையில்தான் தோழர் கே. டானியலின் ''பஞ்சமர்" நாவலின் (இரு பாகங்கள்) அச்சுப்பதிப்பு தஞ்சாவூரில் இடம்பெற்று வந்தது. அதேவேளை அங்கு தோழமை பதிப்பகம் சார்பில் டானியலின் "கோவிந்தன்" நாவல் அச்சாகி வெளிவந்தது. "கோவிந்தன்" நாவல் வெளியீட்டு விழா - அறிமுக நிகழ்வுகள் இலங்கையில் பல இடங்களிலும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.  இந்த நிகழ்வுகளில் சிறப்புரையாற்ற சிறந்த பேச்சாளரான தோழர். கலாநிதி து. மூர்த்தியை இலங்கைக்கு வருமாறு கே. டானியல் அழைத்திருந்தார். மூர்த்தி இலங்கை வந்ததும் அவரது இலங்கைச் சுற்றுப்பயண ஒழுங்குகள் யாவற்றையும் கவனிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் - வேலணை - வடமராச்சி - திருமலை - கொழும்பு ஆதியாமிடங்கள் உட்படப் பல இடங்களில் நடைபெற்ற "கோவிந்தன்" நாவல் அறிமுக நிகழ்வுகளில் கலாநிதி து. மூர்த்தி சிறப்புரையாற்றினார். வேலணையில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் அவரை நயினாதீவுக்கு அழைத்துச் சென்றேன். அவ்வேளை நயினாதீவு மகா வித்தியாலயத்தின் அதிபராக நண்பர் கவிஞர் நாக. சண்முகநாதபிள்ளை கடமையாற்றி வந்தார். அவருக்கு து. மூர்த்தியை அறிமுகஞ்செய்து வைத்தேன். அவரது வேண்டுகோளுக்கிணங்க நயினை மகா வித்தியாலயத்தில் திடீரென ஒழுங்குசெய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் து. மூர்த்தி நல்லதோர் உரையினை வழங்கினார்.. அந்நிகழ்வில் மாணவர்கள் - ஆசிரியர்கள் உட்படப் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் எனது ஊரான புங்குடுதீவுக்கு மூர்த்தியை அழைத்துச் சென்றேன். அன்று இரவு எமது வீட்டில் இலக்கியப் பொழுதாகக் கழிந்தது. மறுநாள் எனது சகோதரர் த. துரைசிங்கம் அதிபராகக் கடமையாற்றிய புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் து. மூர்த்தி சிறப்புரையாற்றினார்.

•Last Updated on ••Thursday•, 26 •October• 2017 14:55•• •Read more...•
 

எழுத்தாளர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களுக்கான அஞ்சலி!

•E-mail• •Print• •PDF•

"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று" – குறள் 236

நுணாவிலூர் கா.விசயரத்தினம்சில சமயங்கள் நாட்கள் நகரக்கூடாது என்றே சிந்திக்கத்தோன்றும். மகிழ்வான பொழுதுகளில் இருந்து நழுவிப்போக மனது இடம் தராது.எனினும் காற்று சேதி சொல்லியது.மனதில் அதிர்வைத் தந்தது. நாட்களும் அதிகம் கடந்துவிடவில்லையே. தொலைபேசி அழைப்பு வரும் போது நான் இல்லாத பொழுதெனிலும் அவரின் குரல் பதிவை மீள கேட்கையில் ஆர்வம் மீள எழும்.பேசிக்கொண்டிருந்த நாட்களும் அதிகம்.அந்த குரல் 'பிறகு..பிறகு..' என்று பேச்சை நகர்த்தும் விதம் அலாதியானது. காற்றுவெளி மின்னிதழில் அவரின் கட்டுரைகள் அதிகமாகவே வந்திருக்கின்றன.ஆய்வுக்கட்டுரைகள் என இதழை புரட்டிப்பார்த்தால் அவர் கண்முன் வந்து நிற்பார்.அந்த வெறுமை எனி காற்றுவெளியில் தெரியும்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி/நுணாவில் மேற்கில் 02/03/2031இல் கார்த்திகேசு தங்கமுத்து தம்பதியர்க்கு மகனாக பிறந்தவர்.கார்த்திகேசு விசயரத்தினம் ஆரம்பக் கல்வியை மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாசாலையிலும்,தொடர்ந்து சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும் கற்றார்.தொஅர்ந்து மேற்படிப்பை கொழும்பில் தொடர்ந்து ஒரு கணக்கியற் பட்டதாரியானார்.கொழும்பிலேயே தன் தொழில் வாய்ப்பைப் பெற்றார். கொழும்பு கணக்காய்வு அதிபதி தினைக்களத்தில் அரச கணக்காய்வாளராக கடமையேற்றார்.மேலும், போட்டிப்பரீட்சைகளில் தோற்றி கணக்காய்வு அத்தியட்சராகவும் தரமுயர்ந்தார்.பல அரச,கூட்டுத்தாபன சேவைகளின் கணக்குகளை ஆய்வு செய்து அரச நாடாளுமன்றிற்கு சமர்ப்பிப்பதனால் நாடாளுமன்ற விவாதங்களிலும் பங்குபற்றுபவருமானார். கலை இலக்கிய ஆர்வலர்.நல்ல நூல்களை வாசிக்கும் ஆவல் மிகுந்தவர்.அதனால் தானோ இலக்கியம் படைக்கும் திறமையையும்,ஆற்றலையும் உருவாக்கிக்கொள்ள அவரால் முடிந்தது. தொல்காப்பியம்,நன்நூல், சிலப்பதிகாரம், நன்நூல்,திருக்குறள், அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, மகாபாரதம், கலிங்கத்துப்பரணி, பகவத்கீதை ,திருமந்திரம், கம்பராமாயணம் ,திருவாசகம், நாலடியார் சங்க இலகியங்கள் தொடங்கி சமகால இலக்கியங்கள் வரை ஆழமாக,நேசிப்புடன் கற்றறிந்து அதனை நம்மவர்களுக்கு கட்டுரைகளாக தந்துமுள்ளார். காதல், காமம், பிள்ளைப்பெறு, மடலேறுதல், களவியல், இன்னும் வாழ்வின் ஒழுக்கநெறிகள்,கல்வி,இசை இன்னும் இன்னும் தொட்டு மனதில் பதியும் வண்ணம் எழுதியுள்ளார். சில சமயங்களில் அவரது எழுத்துக்களைக் கண்டு பிரமித்திருக்கிறேன். ஒவ்வொரு காலங்களில் உள்வாழ்க்கை முறைமை,உணவுப்பழக்க முறைகள்,திருமண சடங்குகள்,களவியல் ஒழுக்கம்,காதல்,தலைவன் தலைவிக்கிடையேயான ஊடல்,ப்ரிவு,துன்பம் இதர சடங்குகள், அக் காலத்து அக,புறச் சூழல் ,அந்தந்தக் காலத்து மன்னர்கள் பற்றியெல்லாம் தொட்டு ஆய்ந்துள்ளமையை வாழ்த்த வார்த்தையில்லை

இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளை தினக்குரல், வீரகேசரி, தினகரன், காலைக்கதிர், தமிழர் தகவல், வடலி, பூங்காவனம், பதிவுகள் (இணையம்) ,காற்றுவெளி (மின்னிதழ்), லண்டன் இசை மகாநாட்டு மலர்  ஆகிய ஊடகங்கள் வெளியிட்டு இவருக்கு பெருமை சேர்த்தன.

•Last Updated on ••Friday•, 13 •October• 2017 12:26•• •Read more...•
 

நனவிடை தோய்தல்: அழிக்கப்பட்ட யாழ். பல்லினப் பல்கலாச்சாரக் கட்டமைப்பு!

•E-mail• •Print• •PDF•

ஜானகி பாலகிருஷ்ணன்- - ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணன் - அவர்கள் கனடியத்தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்களிலொருவர். மின்பொறியியலாளராகப் பல வருடங்கள் பணியாற்றிய இவர் தற்போது கனடாவின் மாநிலங்களிலொன்றான 'நோர்த்வெஸ்ட் டெரிடொரி'ஸிலுள்ள 'யெல்லோ நைஃப்' என்னுமிடத்தில் சமூக அபிவிருத்தி மற்றும் அதற்கான நிபுணத்துவ சேவையினை வழங்கும் நிறுவனமொன்றின் முதல்வராகப் பணிபுரிந்து வருகின்றார். இவர் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் டொராண்டோவின் 'டொன்வலிப்பகுதியில் ஒண்டாரியோ மாநிலச் சட்டசபைக்கான தேர்தலிலும் நின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் மார்க்சிய அறிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரினதும் பெருமதிப்புக்குரியவராக விளங்கியவரும், யாழ் இந்துக்கல்லூரியின் அதிபர்களிலொருவராக விளங்கியவருமான அமரர் கார்த்திகேசு 'மாஸ்ட்'டர் அவர்களின் புதல்விகளிலொருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் முகநூலில் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியினரால் ஒளிபரப்பப்பட்ட யாழ் நகரம் பற்றிய ஆவணப்படமொன்றில் விபரிக்கப்பட்டிருந்த யாழ் முஸ்லீம் மக்கள் வாழ்ந்த பகுதிகள் பற்றிய விபரங்கள் என்னை யாழ் முஸ்லீம் மக்கள் பற்றிய முகநூற் பதிவொன்றினை எழுதத்தூண்டின. அதில் என் மாணவப்பருவத்தில் அங்கு நான் சென்ற உணவகங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அம்முகநூற் பதிவின் விளைவு திருமதி ஜானகி பாலகிருஷ்ணனை யாழ் முஸ்லீம் மக்கள் பற்றிய அவரது அனுபவங்களின் அடிப்படையில் நல்லதொரு கட்டுரையினை எழுதத்தூண்டியுள்ளது. முகநூலில் சாதாரணமாக நான் எழுதிய பதிவொன்று இவ்விதமான நல்லதொரு கட்டுரையை எழுதத்தூண்டியுள்ளது உண்மையில் மகிழ்ச்சியினைத் தருகின்றது. சுவையாகத் தன் எண்ணங்களை, கருத்துகளை அவர் இக்கட்டுரையில் விபரித்திருக்கின்றார். - வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள் -


கடந்த பல வருடங்களுக்கு முன்பு “பதிவுகள்” இணைய இதழின்  பிரதம ஆசிரியர் கிரிதரன் நவரத்தினம் அவர்களும் நானும் சிறீலங்கா மொறட்டுவப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் என்ற வகையிலும், ஒன்ராறியோ, கனடாவில் ஆரம்ப வாழ்கையை 'ரொரன்ரோ' மாநகரிலுள்ள  தோன்கிலிஃப் பார்க் எனும் இடத்தில் தொடங்கியவர்கள் என்ற வகையிலும் பரிச்சயமானவர்கள். அதன் பின் அவரது சகோதரிகள் எனக்குப் பரிச்சயமானார்கள். இருப்பினும் யாழ் வண்ணார்பண்ணைவாசிகளான கிரிதரனின் தந்தையாரும் எனது தந்தையாரும் அக்காலத்தில் சகஜமான நண்பர்கள் என்பதை கிரிதரன் மூலம் அறிந்துள்ளேன். கிரிதரன் கட்டடக் கலையைப் பயின்றும், தனது கவித்துவம், எழுத்தாற்றல் என்பவற்றை முன்னெடுத்துச் சென்று முனைப்பாக, ஆனால் அமைதியாக, காத்திரமான செயற்பாடுகளுடன் அந்நாளிலிருந்தே சேவையாற்றுபவரெனவும், தனது தாய்நாட்டில் மிகவும் பற்றுள்ளவரெனவும் அவர் மேல் ஒரு தனிமரியாதை எனக்கு என்றுமுண்டு. கடந்த காலத்தில் சிறீ லங்காவில் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, மேலும் உள்நாட்டு, புலம் பெயர்ந்தோர், மற்றும் அகில உலக சேவை நிறுவனங்கள் ஆகியோரின் தம்மிடங்களை தக்க வைக்கும் முயற்சிகள், அரசியல் பொருளாதர இலாப நவடிக்கைகள் முன்னெடுக்குமென அறியாது, கிரிதரன் தனது ஆராய்ச்சி மூலம் சிறீ லங்கா போன்ற வளர்முக நாடுகளுக்குப் பொருத்தமான இயற்கையோடு சார்ந்த கட்டட முறையொன்றினைத் தனது இதழில் பதிவு செய்ததைப் படித்துப் பாராட்டியதுடன், அவ்வாறான திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டுமென முயன்றுள்ளேன். விளைவு என்னவென நான் கூறத் தேவையில்லை. அதன் பின்பாக 2003ம் ஆண்டு எனது தந்தையாரின் 25வது ஆண்டு ஞாபகார்த்த நூல் வெளியிடும் வேளையில், அவ்வறிவித்தலை தனது பதிவு இதழில் பிரசுரித்தார். இந்நாள் வரை தொடர்பு எதுவுமின்றி, எனது காலங்கடந்த ஒரு மாதத்திற்கு முன்பான முகநூல் நுழைவின் மூலம் கிரிதரனை மீண்டும் முகநூல் வாயிலாக மிக மகிழ்வுடன் சந்தித்துள்ளேன்.

இந் நீண்ட காலத்திற்குப் பின்பான சந்திப்பு, ஒரு கட்டுரையாக உருப்பெறுவதற்குக் காரணம், முகநூலில் வாசித்த கிரிதரனின் யாழ் ஐந்து சந்தி பற்றிய மனந்தொட்ட கட்டுரையே. கிரிதரன் அதுபற்றி தனது இளமைக்கால அனுபவங்களை அதிகமானோருக்குத் தெரியாத சில நுண்ணிய விபரங்களுடன் வரைந்திருந்தது, எனது மூளை உள்மனதைத் தட்டியெழுப்பி மேலும் சிலவற்றையும் தெரியப்படுத்தலாமே என்றது. அவற்றைத் தெரிவித்து அவரை விபரமான கட்டுரையை வரையுமாறு கேட்டதற்கு, கிரிதரன் ஐபீசீ காணொளித் தொடர்பினையும் அறிவித்து, ஆங்கிலத்திலானாலும் பரவாயில்லை என்னையே எழுதுமாறு கேட்டார். மிக நேர்மையான பதில், எனது மொழிப்புலமை மட்டானது. குறிப்பாக பத்திரிகை கட்டுரைக்கு ஏற்ப தரமானதல்ல. காரணம் நானொரு பொறியியலாளர், அதிகம் மொழிவளம் அவசியமில்லாத துறையில் கடமையாற்றுபவர். தமிழ் மொழயில் ஆரம்ப கல்வியினைக் கற்று, பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் கற்று, கனடாவில் நிர்ப்பந்தமாக ஆங்கிலத்தில் கடமையாற்றவது மட்டுமே.

•Last Updated on ••Wednesday•, 18 •October• 2017 18:37•• •Read more...•
 

அஞ்சலி: அறிஞர் நுணாவிலூர் கா. விசயரத்தினம்

•E-mail• •Print• •PDF•

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

எழுத்தாளர் முருகபூபதி: அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு, நூணாவிலூர் விசயரத்தினம் அவர்களின் மறைவுச்செய்தி தங்கள் அஞ்சலி ஊடாகவே தெரிந்துகொண்டேன். எனது அஞ்சலியைத்தெரிவிக்கின்றேன். அவர் பற்றிய விரிவான வாழ்க்கை சரிதம் வெளிவருதல் நன்று. உங்களுக்கு அவரைப்பற்றி நன்கு தெரிந்திருக்கிறது என்பது உங்கள் சில பதிவுகளிலிருந்து அறிகின்றேன். அவர் எங்கு வாழ்ந்தார்..? எவ்வாறு மறைந்தார்? முதலான விபரங்களை பதிவகள் வாசகர்களுக்கு அறியத்தாருங்கள். நன்றி.
அன்புடன் - முருகபூபதி •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•        

எழுத்தாளர் குரு அரவிந்தன்: எல்லோராலும் விரும்பப்பட்ட எழுத்தாளர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு பெரியதொரு இழப்பாகும்.  அவரது ஆத்மா சாந்தியடைய அவரது குடும்பத்தினருடன் இணைந்து  நாங்களும் பிரார்த்திக்கின்றோம். அவர் எம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவரது எழுத்துக்கள் என்றென்றும் வாழும். - குரு அரவிந்தன். •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

கா.மு.அன்சாரி: எனது இனிய நண்பர்  விசயரத்தினம் மரணித்துவிட்ட துயரமான செய்தியை ஒரு நண்பர் தந்த தகவல் மூலமும், பதிவுகள் மூலமும் அறிந்தேன். பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். அமரர் விசயரத்தினம் அரசாங்க சேவையிலிருந்து  ஒய்வு பெற்றபின்னர் தமிழாராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். பொதுவாக சங்ககால இலக்கியத்திலும், குறிப்பாக தொல்காப்பியத்திலும் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். தொல்காப்பியக்கடலில் மூழ்கி, சுழியோடி தான் கண்டெடுத்த நல்முத்துக்களை தமிழை நேசிக்கும் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக ஆர்வமுள்ளவராக இருந்தார். இதற்கு அவர் எழுதிய எண்ணற்ற ஆராய்ச்சிக்கட்டுரைகளும், வெளியிடப்பட்ட நூல்களும் சான்று பகரும். இதற்கான, அறிஞர் பெருமக்களின் அங்கீகாரமும் அவருக்கு  கிடைத்துக்கொண்டே இருந்தது. அவர் வாழும் காலத்திலேயே வாசகப்பெருமக்கள் அவரை வாழ்த்திக்கொண்டே இருந்தார்கள். விருதுகள் பல அவரைத்தேடிவந்தன். சமீபத்தில் அவரது அயராத, ஆக்கபூர்வமான தமிழ்த்தொண்டை நினைவு கூர்ந்து, “பதிவுகளின்” ஆலோசகர் குழுவில் சேர்த்து கெளரவிக்கப்பட்டார் . இத்தகைய நல்ல மனிதர் இன்று நம் மத்தியில் இல்லை. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். - கா.மு.அன்சாரி, •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Sunday•, 12 •November• 2017 16:10•• •Read more...•
 

அஞ்சலி: அறிஞர் நுணாவிலூர் கா.விசயரத்தினம்!

•E-mail• •Print• •PDF•

அஞ்சலி: எழுத்தாளர் நுணாவிலூர் கா.விசயரத்தினம்!

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

எழுத்தாளர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்கள் அமரரான தகவலை முகநூல் மூலம் சற்று முன்னர் அறியத்தந்திருந்தார் எழுத்தாளர் உதயணன் அவர்கள். அதிர்ச்சியாகவிருந்தது. 'பதிவுகள்' இணைய இதழுக்கு ஆக்க, ஊக்கப்பங்களிப்பு வழங்கிய நல்ல உள்ளத்தை நாம் இழந்து விட்டோம். 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தொடர்ச்சியாகத் தனது சங்கத்தமிழ் இலக்கியம் பற்றி ஆக்கங்களை அனுப்பிக்கொண்டிருந்தவர். அதற்காகவே 'பதிவுகள்' இணைய இதழில் அவருக்கென்றொரு பக்கத்தையும் உருவாக்கியிருந்தோம். அவரது படைப்புகள் சிலவற்றைப் 'பதிவுகள்' இணைய இதழின் 'நுணாவிலூர் கா.விசயரத்தினம் பக்கம்' பக்கத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு: http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=section&layout=blog&id=43&Itemid=73

'பதிவுகள்' இணைய இதழுக்கான ஆலோசகர் குழுவிலும் ஒருவராக விளங்கிய அமரர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் 'பதிவுகள்' இதழுக்கு எப்பொழுதும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கியவர். கணக்கியல் பட்டதாரியான இவர் தன் ஓய்வுக்காலத்தைச் சங்ககாலத்தமிழர்தம் இலக்கியத்தின்பால் திருப்பி ஆக்கபூர்வமாகத் தன் வாழ்வை மாற்றியவர். இத்துறையில் பல நூல்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அண்மையில் இவர் எழுதி ஒன்பதாவது நூலாக வெளிவந்த 'சங்ககாலத் தமிழர் வாழ்வியல்' நூலுக்கு 'சுய வாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை, தெளிந்த இலகுவான மொழிநடை மிக்க நுணாவிலூர் கா.விசயரத்தினத்தின் எழுத்தாற்றல்\ என்றொரு கட்டுரையினையும் எழுதியிருந்தேன். அதனை அவர் அந்நூலின் ஆய்வுக்கட்டுரையாகப்பிரசுரித்திருந்தார்.

அமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தவர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்களுடன் 'பதிவுகள்' இணைய இதழும் இணைந்து கொள்கின்றது. 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தம் இறுதிவரையில் பங்களிப்புச் செய்த அமரர் வெங்கட் சாமிநாதனைப்போல் பங்களிப்புச் செய்தவர் அமரர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள். 'பதிவுகள்' இணைய இதழ் மீது மதிப்பினையும், என் மேல் அன்பினையும் வைத்திருந்த நல்ல உள்ளமொன்றினை இழந்து விட்டோம்.

அவரது படைப்புகளினூடு அவர் தொடர்ந்தும் இலக்கியத்தில் நிலைத்து நிற்பார். அவர் நினைவாக அவரது  'சங்ககாலத் தமிழர் வாழ்வியல்' நூலுக்கான முன்னுரையினை மீள்பதிவு செய்கின்றோம்.

மீண்டுமொருமுறை தனிப்பட்டரீதியிலும், 'பதிவுகள்' சார்பிலும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

•Last Updated on ••Tuesday•, 10 •October• 2017 16:26•• •Read more...•
 

அஞ்சலி: எம்.ஜி.சுரேஷ்!

•E-mail• •Print• •PDF•

எம்.ஜி.சுரேஷ்
எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் அக்டோபர் 3 அன்று மறைந்த செய்தியினை இணையம் மூலம் அறிந்தேன். இவரது 'பின் நவீனத்துவம்' பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி மூலமே முதலில் இவருடனான அறிமுகம் ஏற்பட்டது. நண்பர் எழுத்தாளர் தேவகாந்தனிடமிருந்து பெற்று வாசித்திருந்தேன். இவரது 'சிலந்தி' நாவலும் வாசித்திருக்கின்றேன். இதே பாணியில் பின்னர் எழுத்தாளர் ஜெயமோகனும் துப்பறியும் நாவலொன்றினை எழுதியிருந்தது நினைவுக்கு வருகின்றது. தமிழில் பின் நவீனத்துவம் என்றால் மறக்க முடியாத பெயர்களிலொன்று எம்.ஜி.சுரேஷ். இவரது நூல்கள் அனைத்தையும் வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தை இவரது திடீர் மறைவு ஏற்படுத்தி விட்டது. இவரது மறைவால் துயருறும் அனைவர்தம் துயரத்திலும் நாமும் பங்குகொள்கின்றோம்.

இவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு: https://ta.wikipedia.org/s/658w

'பதாகை'யில் வெளியான 'எதற்காக எழுதுகின்றேன்' என்னும் கட்டுரைக்கான இணைப்பு: https://padhaakai.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/

 

•Last Updated on ••Friday•, 06 •October• 2017 17:55••
 

எதிர்வினை: யுகதர்மம் - நிர்மலாவின் மொழிபெயர்ப்பு

•E-mail• •Print• •PDF•

- மு.நித்தியானந்தன்பேர்டோல்ட் பிரெக்ட் என்ற ஜெர்மன் நாடகாசிரியரின் The exception and the Rule என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நாடகத்தை, தமிழில் யுகதர்மம் என்ற தலைப்பில் இலங்கை அவைக்காற்று கலைக்கழகம் 9.12.1979 இல் யாழ் வீரசிங்;கம் மண்டபத்தில் மேடையேற்றியது. இந்த நாடக மேடையேற்றத்தின் போது, இந்நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் நிர்மலா நித்தியானந்தன் என்றும் இந்நாடகத்தில் இடம் பெறும் பாடல்களை மொழிபெயர்த்தவர் ச.வாசுதேவன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நாடகம் இலங்கையில் 29 மேடையேற்றங்களைக் கண்டுள்ளது. இந்த நாடகம் அரங்கேறி 38 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், ‘யுகதர்மம் - நாடகமும் பதிவுகளும்’ என்ற தலைப்பில் அந்நாடகத்தை அச்சிட்டு, இவ்வாண்டு வெளியிட்டிருக்கிறார் நாடகநெறியாளர் க. பாலேந்திரா. அந்த நூலில் நாடக நெறியாளரின் தொகுப்புரையில் பாலேந்திரா தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சைக்குரியதாகும்.

அவர் இந்நூலின் தொகுப்புரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

‘எனது நண்பன், கவிஞன் ச. வாசுதேவனிடம் இந்த நாடகத்தைக் கொடுத்து மொழிபெயர்க்கச் சொன்னேன்... வாசுதேவனே முதலில் முழு நாடகத்தினையும் மொழிபெயர்த்துத் தந்தார்... நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ‘யுகதர்மம்’ நாடகத்தயாரிப்பின்போது நிர்மலா நித்தியானந்தன் பிரதியைச் செம்மைப்படுத்தினார்.. முதலில் நாடக மேடையேற்றத்தின்போது, தமிழாக்கம் நிர்மலா நித்தியானந்தன் என்றும் பாடல்கள் மட்டுமே வாசுதேவன் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த நாடகத்தை வாசுதேவன் முதலில் மொழிபெயர்த்தமையை மு.நித்தியானந்தன் எமது சுவிஸ் நாடக விழா (1994) மலரில் பதிவு செய்துள்ளார். தமிழ் மொழியாக்கம் வாசுதேவன் - நிர்மலா என்பதே சரியானது’ என்று எழுதுகிறார் பாலேந்திரா.

இந்த நாடகத்தை முதலில் வாசுதேவன் மொழிபெயர்த்தார் என்றும், அந்த நாடகப் பிரதியை நிர்மலா செம்மைப்படுத்திக் கொடுத்தவர் மட்டுமே என்றும் வாசுதேவன் மறைந்து 24 ஆண்டுகள் கழித்துக் கூறுகிறார் பாலேந்திரா. இந்த நாடகத்தை வாசுதேவன் முதலில் மொழிபெயர்த்துத் தந்ததை சுவிஸ் நாடக விழா (1994) மலரில் நான் பதிவு செய்திருப்பதாக பாலேந்திரா குறிப்பிட்டிருக்கிறார். க.பாலேந்திரா ஆதாரம் காட்டும் சுவிஸ் நாடக விழா மலர்க்கட்டுரையில் ‘யுகதர்மம்’ என்ற நாடக மொழியாக்கம் பற்றிக் குறிப்பிட்ட பகுதியைக் கீழே தருகிறேன்.

•Last Updated on ••Tuesday•, 03 •October• 2017 06:36•• •Read more...•
 

அஞ்சலி: 'அருவி' பாபு பரதராஜா மறைவு!

•E-mail• •Print• •PDF•

'அருவி' பாபு பரதராஜா'டொராண்டோ' கலை, இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட பாபு பரதராஜா இன்று (08-08-2017) மறைந்த செய்தியை முகநூல் தாங்கி வந்தது. பாபு பரதராஜாவின் பங்களிப்பு பற்றிய தேடகம் அமைப்பு வெளியிட்ட முகநூற் செய்தியினை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். கனடாக் கலை, இலக்கிய வரலாற்றில் நடிகராக, அருவி நிறுவனம் மூலம் 'யுத்தத்தைத் தின்போம்' கவிதைத்தொகுப்பையும், 'காற்றோடு பேசு', மற்றும் 'புலரும் வேளையிலே' இசை இறுவட்டுகளையும் வெளியிட்டதன் மூலம் பதிப்பக நிறுவனராக, மனவெளி கலையாற்றுக் குழுவைத் தன் நண்பர்கள் துணையுடன் உருவாக்கியதன் மூலம் கனடாத் தமிழ் நாடக உலகை நவீனப்படுத்தியவர்களில் ஒருவராகக் காத்திரமாகத் தடம் பதித்துச் சென்றிருக்கின்றார் பாபு பரதராஜா. அவரது இழப்பால் துயருறும் அனைவர்தம் துயரையும் பகிர்ந்துகொள்கின்றோம்.

தேடகத்தின் அறிக்கை:
" நண்பர் பாபு பரதராஜா இன்று செவ்வாய்க் கிழமை (08-08-2017) காலமானார் என்கிற துயர்மிகு செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம். தமிழர் வகைதுறைவள நிலையத்தின் ஆரம்பகால உறுப்பினராகவிருந்து நிலையத்தின் பல செயற்பாடுகளிலும் பங்காற்றியதோடு, தேடக நூலகத்தை நிர்வகிப்பதிலும், அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கும் உந்து சக்தியாக திகழ்ந்தவர். நிலையத்தின் கலை நிகழ்வுகளில் மிகுந்த உற்சாகத்தோடு செயலாற்றியதோடு மட்டுமல்லாது 'பலிக்கடாக்கள்', 'பொடிச்சி' ஆகிய நாடகங்களிலும் சிறப்புற நடித்துமிருந்தார். தேடகத்தினால் நடாத்தப்பட்ட நாடகப் பட்டறைகளிலும் பங்குபற்றி தன்னையொரு வளமிகு நடிகனாக வளர்த்துமிருந்தார். நாடகத்தின்பால் கொண்ட ஈடுபாட்டால் ரொரன்டோவில் தீவிர நாடகத்திற்காக 'மனவெளி கலையாற்றுக் குழு' வை தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து உருவாக்கி 'அரங்காடல்' எனும் தீவிர மேடை நாடக நிகழ்வை நிகழ்த்துவதுற்கு முன்னோடியாக நின்றவர். தவநி, அரங்காடல், நாளை நாடக அரங்கப்பட்டறை. கருமையம் என பல தீவிர நாடக இயக்கங்களுடன் பணியாற்றியவர்.
•Last Updated on ••Friday•, 11 •August• 2017 12:53•• •Read more...•
 

இலக்கிய அநுபவ அலசல் - 14

•E-mail• •Print• •PDF•

அஞ்சலி: மூத்த இலக்கியவாதி ஏ.இக்பால் மறைவு!- வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'பூங்காவனம்' சஞ்சிகையில் வெளியான அண்மையில் மறைந்த எழுத்தாளர் ஏ.இக்பாலின் 'இலக்கிய அனுபவ அலசல்' தொடரின் ஓர் அலசலை மீள்பிரசுரம் செய்கின்றோம். அனுப்பி வைத்த வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கு நன்றி. -பதிவுகள்  -


இலக்கிய ஈடுபாடு பல்திறப்பட்ட நுணுக்கமான பார்வைக்கு வழிவகுக்கும். ஓர் இலக்கியப் படைப்பின் இயல்புகளை இனங்கண்டு அதனை விவரிக்கவும் விளக்கவும் இலக்கிய ஈடுபாடு ஏற்படுத்தும். வாசிக்கும் வல்லமையால் மனதை உறுத்திய குறிப்புக்களை எப்போதோ எழுதி வைத்திருந்தேன். அவற்றை இப்போது அலசும்போது புதுமையான எண்ணங்கள் எழுவதால் சிலவற்றை இங்கே தருகிறேன்.

01
1967 ஆம் ஆண்டு அ.ந. கந்தசாமி தினகரனில் ''மனக்கண்'' என்னும் சிறந்த நாவல் ஒன்றை எழுதினார். இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் ஒரு வாசகன் பெறும் தகவல்கள் அளப்பரியன. அவற்றை அட்டவணை செய்து பார்த்தல் அவசியம்.

''உயிருடனிருக்கும்போது கண்தானம் சட்டப்படி செய்ய முடியாது'' என்ற உண்மை, வைத்திய சம்பந்தமான நூல் பிரான்ஸ் டாக்டர் பீஸரெரோலன்ட் என்பவர் எழுதிய புத்தகம், வைத்திய நுணுக்கங்கள், கிரேக்க நாடகாசிரியரான செபாக்கிளிஸ் எழுதிய ஈடிபஸ் ரெக்ஸ் நாடகம், துஷ்யந்தன் சகுந்தலை காதல், துட்டகைமுனுவின் மகன் சாலிய குமாரனுக்கும் பஞ்சகுலப் பெண் அசோகமாலாவுக்கும் ஏற்பட்ட காதல், இளவரசி மார்க்கிரட் காதல், அரிச்சந்திர புராணம், காந்திமகான் வாழ்க்கையை மாற்றிய காரணத்துக்கான நிகழ்வு, இளவரசர் அலிகான் ரீட்டா ஹேவொர்த் அந்யோன்யம், ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியத், அறபு நாட்டுக் கதை லைலா மஜ்னு, பெர்னாட்ஷா கூற்றுக்கள், புறநானுற்றுச் செய்யுள்கள், இராமாயனக் கதை, நளன் தமயந்தி தூது, சிலப்பதிகார இந்திரத்திரு விழா, அலெக்சாந்தர் கோடியல் சந்திப்பு, சுவாமி விபுலானந்தர் செய்யுள், வள்ளுவர் குறள்கள், பழமொழிகள், வழக்குச் சொற்றொடர்கள்,  நீட்சேயின் தத்துவ விளக்கம், சத்தியவான் சாவித்திரி கதை, ஆங்கிலக் கவிஞன் மில்டனின் கவிதைகள், பிரசித்தி பெற்ற குருடர்கள் வரிசை:- துரியோதனனுடைய தந்தை திருதராஷ்டிரன், மாளவ தேசத்து சத்தியவானின் தந்தை, தேபஸ் மன்னன் ஈடிபஸ், யாழ்ப்பாடி, ஆங்கிலப் பெருங்கவிஞன் மில்டன், சிந்தாமணி என்னும் தாசியின் தொடர்பால் தன் கண்ணைத் தானே குத்திக்கொண்ட வைஷ்ணவப் பத்தன் பில்வமங்கள் கதை, சிந்தகன் என்னும் மேலைத்தேயச் சிற்பத் தோற்றம், பட்டினத்தார் பாடல்கள், இன்னோரன்னவைகள் அந்நாவலில் விரவிக் கிடப்பதைப் படிக்க முடியும்.

•Last Updated on ••Tuesday•, 08 •August• 2017 06:33•• •Read more...•
 

அஞ்சலி: எழுத்தாளர் ஹெச்.ஜி் ரசூல் காலமானார்

•E-mail• •Print• •PDF•

- ஹெச். ஜி. ரசூல் -- எழுத்தாளர் ஹெச்.ஜி் ரசூல் காலமான தகவலினை முகநூலில் கவிஞர் மேமன்கவி அறிவித்திருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்வதுடன் , எமது அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் 'பதிவுகள்' இதழில் அன்று அவர் எழுதிய கட்டுரையொன்றினையும் இத்தருணத்தில் நினைவு கூருகின்றோம். - பதிவுகள் -

அஞ்சலி: எழுத்தாளர் ஹெச்.ஜி் ரசூல் காலமானார்! - மேமன்கவி -

தமிழகச் சூழலில் நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் இயங்கி கொண்டிருந்த நண்பர் எச். ஜி. ரசூல் அவர்கள் காலமான செய்தியினை லறீனா ஹக் அவரகளின் பதிவு வழியாக அறிந்த பொழுது அதிர்ச்சியாக இருந்த்து. இறுதி வரை அவரை சந்திக்க முடியாமல் போனது மனசை வாட்டுகிறது். அவரை சந்திக்க முடியாவிடினும் 80 கள் தொடக்கம் என் படைப்புகளை பற்றிய பார்வைகளை தன் நூல்களிலும் , கட்டுரைகளிலும் பதித்து போனவர். அவரை பற்றி சிறு பந்தியில சொல்லிவிட முடியாது் அன்னாரின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஈழத்து படைப்பாளிகள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். தமிழக முஸ்லிம் சமூகச் சூழலில் முற்போக்கு இயக்கம், நவீனத்துவம்,பின்காலனியம், பெண்ணியம், தலித்தியம், என பல்வேறு சிந்தனைத் தளங்களில் நின்று யோசித்தவர். இயங்கியவர் அவர்.


'பதிவுக'ளில் அன்று: இஸ்லாமிய நவீனப் பெண்ணியம் - - ஹெச். ஜி. ரசூல் -

) பெண்ணின் உடல் உயிரியல் உடல் கூற்றின் அடிப்படையில் ஆணின் உடலிலிருந்து வேறுபடுகிறது. மார்பகங்கள், பிறப்புறுப்பு, கருவயிறு இவற்றில் முக்கியமானதாகும். இயற்கைத் தன்மையும், இயல்பும் கொண்ட இந்த வேறுபடுதல் பெண்ணின் உடலை சிறு உயிரியை ஈன்று தரும் உயிர்ப்புத் தன்மை, வளம், மற்றும் மாறும் வடிவம் கொண்ட ஒன்றாக உருமாற்றுகிறது. ஆணின் உடலோ இதற்கு மாறாக மலட்டுத்தன்மை பொருந்தியதாக மட்டுமே இருக்கிறது. இத்தகு உயிரியல் உடல்கூறு தாண்டி வாழ்வின் இயக்கப்போக்கில் உருவாக்கப் பட்டிருக்கும் பெண்மை, தாய்மை, கற்பு என்பதுபோன்ற பண்பாடுசார்ந்த மதிப்பீடுகளின் மனக்கட்டமைப்பும் மிகமுக்கியமானது. பெண்ணிய இனவியலும், அரசியல் பொருளாதார தளங்களில் விரிந்து செல்லும் பெண்ணிய அரசியலும் இவ்வகையில் அடுத்த கவனத்தை பெறுகின்றன. இவை மேல்/கீழ் என சமூக வாழ்வில் கட்டமைக்கப் பட்டிருக்கும். பாலின படிநிலை அதிகாரத்தின் மீது தாக்குதலைத் தொடுக்கின்றன. ஒற்றைப் படுத்தப்பட்ட பெண்ணியத்தை மறுகட்டமைப்பு செய்யும் வித்தியாசப் பெண்ணியக் கருத்தாக்கம் பெண்ணியத்தில் பன்மியத் தன்மையை வலியுறுத்துகிறது. ஜுலியா கிறிஸ்தவா, லிண்டா நிக்கெல்சன், லூயி எரிகாரே உள்ளிட்ட பெண்ணியச் சிந்தனையாளர்கள் இவ்வகையில் தொடர்ந்த உரையாடலை நிகழ்த்தி உள்ளார்கள்.
•Read more...•
 

அஞ்சலி: மூத்த இலக்கியவாதி ஏ.இக்பால் மறைவு!

•E-mail• •Print• •PDF•

அஞ்சலி: மூத்த இலக்கியவாதி ஏ.இக்பால் மறைவு!- எழுத்தாளர் மேமன்கவி அவர்கள் எழுத்தாளர் ஏ.இக்பாலின் மறைவு பற்றி முகநூலில் அறியத்தந்திருந்தார். அவரது செய்தியினைப் பகிர்ந்துகொள்வதுடன் எமது ஆழ்ந்த அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றோம். - பதிவுகள் -

இக்பால், ஏ. (1938.02.11) அம்பாறை, அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும் களுத்துறை, தர்காநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர். இவர் அக்கரைப்பற்று றோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் கல்வி கற்றார். ஆசிரியராகக் கல்விச் சேவையை ஆரம்பித்த இவர், தமிழ்ப் பாடநூல் ஆலோசனை சபை உறுப்பினராகவும், இஸ்லாமிய பாடநூல் எழுத்தாளராகவும், ஆசிரிய கலாசாலையில் வருகைதரு விரிவுரையாளராகவும், கல்வியியற் கல்லூரியில் தமிழ்ப் போதனாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் மட்டக்களப்புத் தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலாளராகவும், முஸ்லிம் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும், தர்க்காநகர் பதிப்பு வட்ட பதிப்பு உதவியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

•Last Updated on ••Sunday•, 06 •August• 2017 09:14•• •Read more...•
 

இலக்கியம்: தீவகம் தந்த தேன்தமிழ்க் கவிஞர்

•E-mail• •Print• •PDF•

- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் -- முனைவர் பால. சிவகடாட்சம், மேனாள் சிரேட்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் -மரபுக்கவிதை எழுதுவது இலகுவான விடயம் அல்ல என்பது கவிதை எழுத முயன்றவர்கள் கண்டறிந்த அனுபவ உண்மை. யாப்பு எதுகை, மோனை, முரண், இயைபு எல்லாம் கவிதை இலக்க ணத்துக்கு ஏற்புடையதாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். இலக்கணம் மீறாத கவிதையாக இருந்தாலும் அந்தக்கவிதை எத னைச் சொல்ல வருகின்றது என்பதும் முக்கியம். எதுகைக்கும் மோனைக்கும் ஏற்றவாறு சொற்களைத் தேடி எடுத்துக் கவிதை யாக்கும்போது சொல்லவந்த விடயத்தைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லையோ என்ற ஏக்கம் வேறு தோன்றுவது உண்டு.  சொல்ல வந்ததைச் சுவைபடச் சொல்லிவிட்டாலே போதுமே. இதற்கு இலக்கணம் எதற்கு? எதுகையும் மோனையும் எதற்கு? என்ற உணர்வுடன் தம் எண்ணப்படி எழுதிவிட்டு இதுவும் கவிதைதான் என்று சொல்லும் கவிஞர்களும் உள்ளனர். இவர்களின் படைப்புக்களையும் இன்று இரசிப்பவர்கள் ஏராளம். இத்தகைய ஒரு காலகட்டத்தில் மரபுக்கவிதை எழுதுவதற்கும் ஒரு துணிச்சல் தேவைப்படுகின்றது.

தனது  முதற்பாடலின் முதற்சொல்லிலேயே ‘திகழ்தசக்கர’த் தைத் ‘திகடசக்கரம்’ என்று புணர்த்திப் பாடிவிட்டுத் திண்டாடிய கச்சியப்ப சிவாச்சாரியாரின் கதை பலரும் அறிந்ததே. எனினும் அந்த இலக்கணத்தை விளக்கும் வீரசோழியம் என்னும் நூல்பற்றி கச்சியப்பரே அறிந்திருக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். தமது பாட்டிலே எதுகை மோனை சரிவரவேண்டும் என்பதற்காக ‘ நாராயணன்’ என்னும் சொல்லில் ஒரு சீர் குறைத்து ‘நராயணன்’ என்று பாடிவிட்டாராம் கம்பர். அவர் மகாகவி என்பதற்காக அவரை மன்னித்து விடுவீர்களா? அப்படியானால் நான் இனிமேல் ‘ நார்’ என்ப தை ‘நர்’ என்றும் ‘வாள்’ என்பதை ‘வள்’ என்று ‘நான்’ என்பதை ‘நன்’ என்றும் பாடப்போகிறேன் என்று பயமுறுத்துகின்றார்

நாராயணனை நராயணன் என்றே கம்பன்
ஓராமல் சொன்ன உறுதியால்-நேராக
வார்என்றால் வர்என்பேன் வாள்என்றால் வள்என்பேன்
நார்என்றால் நர்என்பேன் நன்


மரபுக்கவிதை பாடுவதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் பொழுது தொடர்ந்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வெண்பா விருத்தம் அகவற்பா வஞ்சிப்பா என்றும் பாடிக்கொண்டிருக்கும் தீவகம் தந்த தேன்தமிழ்க்கவிஞர் இராஜலிங்கத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

•Last Updated on ••Thursday•, 13 •July• 2017 12:26•• •Read more...•
 

சுகுமாரன்: கவிதையின் இரு தளங்களிலான பயணத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமை!

•E-mail• •Print• •PDF•

- 2016ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்பட்டுள்ளதையொட்டி வெளியாகும் கட்டுரை இது. -

1.
சுகுமாரன்‘தினமணி கதி’ரில் எழுதத் தொடங்கிய காலத்தில் நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் மூலமாக தொடர்பேற்பட்ட முக்கியமான நண்பர்களில் ஒருவர் ராஜமார்த்தாண்டன். எனக்கும் அவருக்குமிடையில் இணைவான பழக்கங்களும், இலக்கிய ஆர்வங்களும் இருந்தவகையில் அந்தத் தொடர்பு மேலும் விரிவு கண்டது. ராயப்பேட்டை நாகராஜ் மேன்சனில் ராஜமார்த்தாண்டன் தங்கியிருந்த காலப் பகுதியில், அனேகமாக ஒவ்வொரு ஞாயிறும் சந்திப்பதாக அது வளர்ந்திருந்தது. கும்பகோணத்தில் நடைபெற்ற நிறப்பிரிகை சார்பான புதுமைப்பித்தன் கருத்தரங்கில் இருவரும் ஒன்றாகவே சென்று நிகழ்வில் கலந்து கொண்டிருந்தோம். இவை இன்னொரு நெருங்கிய வட்டத்தில் எம்மை இழுத்திருந்தன. அக்காலத்தில் ராஜமார்த்தாண்டன் மூலமாக அவரது நண்பராக எனக்கு அறிமுகமான பெயர்தான் கவிஞர் சுகுமாரன். சில ஞாயிறுகளில் சுமுமாரனும் வரவிருப்பதாக ராஜமார்த்தாண்டன் சொல்லியபோதும், என்றைக்கும் அவரை அங்கு சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை. நிறைய எழுதுகிறவரில்லை சுகுமாரன். அவரின் எழுத்தின் ஆழங்களால் இன்னுமின்னும் காணுதலின் விழைச்சல் அதிகமானபோதும், 2003இல் நான் இந்தியாவைவிட்டு புறப்படும்வரை அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் என்னை எட்டவேயில்லை. நாகர்கோவில் காலச்சுவடு தலைமை அலுவலகத்தில் 2014இல் அவரைக் காணவும் பேசவுமான முதல் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே, அவரது பெரும்பாலான நூல்களை நான் வாசித்திருந்தேன். அறிமுகப் படுத்தாமலே இருவரும் அறிமுகமாகியது அந்த ஆரம்பத்தின் முக்கியமான அம்சமெனக் கருதுகிறேன்.

2016ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது கவிஞர் சுகுமாரனுக்கு அறிவிக்கப்பட்ட சில நாள்களில், மீண்டும் அவரது கவிதைகளையும், உரைக்கட்டுத் தொகுப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் வாசிக்க உந்துதல் ஏற்பட்டது.  கவிஞராக, உரைக்கட்டாளராக, பத்தி எழுத்தாளராக, விமர்சகராக, நாவலாசிரியராக, இதழியலாளராக, மொழிபெயர்ப்பாளராக, சினிமா ஆர்வலராக,  தொலைக்காட்சி மற்றும் நூல் வெளியீட்டுத்துறைகளில் பணியாற்றியவராக பல்வேறு அம்சங்களில் அவரது இலக்கியப் பங்களிப்பு இருந்திருப்பதை அப்போது புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

•Last Updated on ••Monday•, 12 •June• 2017 00:08•• •Read more...•
 

கோபன் மகாதேவாவின் இலக்கியப் பணிகள்: சில குறிப்புகள் (2009 வரை)

•E-mail• •Print• •PDF•

-பேராசிரியர் கோபன் மகாதேவா -▬என். செல்வராஜா,  நூலகவியலாளர்,  லண்டன்▬பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களின் தமிழ்,  ஆங்கில மொழிகள் மூலமான 2009 வரை இலக்கிய முயற்சிகள் பற்றிய சிறு பதிவாக இக் கட்டுரை அமைகின்றது.

கோபன் மகாதேவா 05.01.1934 அன்று,  ஈழத்து யாழ்ப்பாணச் சாவகச்சேரி மட்டுவிலில் பிறந்தவர்.  தனது 14ஆவது வயதில், பாடசாலை நாட்களிலேயே, 1948 ஜனவரியில் மகாத்மா காந்தி  பற்றி ஆங்கிலக் கவிதை ஒன்றையும், விண்வெளி ஆராய்ச்சி  என்ற தலைப்பில் தமிழ்க் கட்டுரை ஒன்றை வீரகேசரியிலும் எழுதி இலக்கிய உலகில் கால் பதித்தவர்.

தொடர்ந்து Perennialis Schoolis (1949), A Childhood Visitor (1950) போன்ற ஆங்கிலக் கவிதைகளை எழுதித் தன் இலக்கியப் புலமையை வளர்த்து 2009 அளவில் ஆங்கிலத்திலும், ஓரளவு தமிழிலும் கவிதைகளை எழுதி வருபவர்.

முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆரம்பக் கல்வியை தமிழில் மேற்கொண்டு இருந்தாலும், பின்னாளில் பல்கலைக் கழகம் புகும் வரை ஆங்கிலமூலம் தனது இடைநிலை, உயர் கல்வியை மேற்கொண்டதால் இவரது ஆங்கில இலக்கியப் பரப்பு விரிவு கண்டது என்று கருதலாம்.

கோபன் மகாதேவாவின் கவிதைகளின் கரு, காலத்துடன் ஒத்தியைவதாக இருப்பதைப் பரவலாக அவதானிக்க முடிகின்றது.  இவர் தனது வாழ்வின் முற்பகுதியை 1961வரையும், பின்னர் இடைப்பட்ட கால கட்டத்தை 1966 முதல் 1978 வரையிலுமாக இலங்கையில் கழித்தவர்.   எஞ்சிய காலத்தை பிரித்தானியா நாட்டிலும் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான Trinidad இலும் வாழ்ந்து அவ்வந்நாடுகளில் பணியாற்றியவர்.  இவரது படைப்புக்களில் காணப்படும் தேசம் கடந்த தேடல்களுக்கும் இந்தப் பயணங்களில் ஏற்பட்ட வாழ்வனுபவங்களே காரணமாகின்றன என்று எளிதில் அனுமானிக்க முடிகின்றது.

•Last Updated on ••Sunday•, 14 •May• 2017 08:03•• •Read more...•
 

பாப்பா சொல்லும் கதை ('பாப்பா'ப் பாடல்கள்)!

•E-mail• •Print•