••Saturday•, 06 •May• 2017 05:04•
??-புலோலியூர் ஆ இரத்தினவேலோன்-??
இ(அ)க்கரையில்...
கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளில் போராட்ட நிகழ்வுகள் மற்றும் புலப்பெயர்வுகளின் விளைவுகளால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் புதிய வரவுகளில், இனங்கானப்பட்ட உணர்திறன் முறைமை மாற்றமானது, புனை கதைகளின் பரிணாம வளர்ச்சிக்குப் புது இரத்தம் பாய்ச்சியது. போராட்ட இலக்கியங்களைப் போலன்றி, புலம் பெயர் இலக்கியங்களில் வாசகர் அனுபவித்த வாழ்க்கையானது அவர்களது இயல்பான வாழ்க்கைக் கோலங்களுக்கு முற்றிலும் அந்நியமாகத் திகழ்ந்ததற்கும் அப்பால், புலம் பெயர் இலக்கியங்களில் தரிசித்த புதிய காட்சிகளும் மொழி நடையும், புதியதோர் உலகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றதே, அவ்விலக்கியம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணமாக அமைந்திருந்தது.
புலம்பெயர் இலக்கியத்தில் காணப்பட்ட இத்தகைய வித்தியாசமான, தனித்துவமான அம்சம்தான் அதற்கோர் சர்வதேசிய அந்தஸ்தைக் கொடுத்ததோடு, புதிய யுகத்தில் அதுவே கிரீடம் சூடிக் கொள்ளும் என்று எஸ்.பொ. போன்றவர்கள் கூறுமளவிற்கு நிறைய நம்பிக்கையையுந் தந்தது. பொ.கருணாகரமூர்த்தி, க.கலாமோகன், ஷோபாசக்தி, தேவகாந்தன், கே.எஸ்.சுதாகர், வி. ஜீவகுமாரன் போன்றவர்களுடன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் எழுத ஆரம்பித்து தொண்ணூறுகளின் பிற்பகுதியில் உணர்திறன் முறைமை மாற்றத்தில் புதிய பரிமாணம் பெற்ற அ.முத்துலிங்கம் முதலானோர் புலம்பெயர் இலக்கியத்தில் ஆழத்தடம் பதித்ததோடன்றி, மேலும் தமது தொடர்ச்சிகளை உருவாக்க முனைந்தனர். அ.முத்துலிங்கத்தின் கூறுபாட்டின் ஒரு தொடர்ச்சியாகவே ஆசி கந்தராசாவை நான் காண்கின்றேன். உண்மையில் முத்துலிங்கத்தின் உணர்திறன் முறைமையினை மேலும் அகலப்படுத்தும் ஓர் பண்பினையே ‘ஆசி’ யின் ஆக்கங்களில் என்னால் தரிசிக்க முடிகின்றது.
•Last Updated on ••Saturday•, 06 •May• 2017 05:09••
•Read more...•
••Saturday•, 11 •June• 2016 07:04•
?? எஸ்.எழில்வேந்தன் -- அவுஸ்திரேலியா??
இ(அ)க்கரையில்...
அண்மையில் எனது ஊடக நண்பர் ஒருவரின் நூல்வெளியீடொன்று மெல்பேனில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட இலக்கிய நண்பர் ஒருவர் “வானொலிகள் நகரவில்லை” என்ற குற்றச்சாட்டை வெளிப்படையாக மேடையில் தெரிவித்ததாக நண்பர்கள் கூறக்கேட்டேன். நகரவில்லையெனில் அது பக்க வாட்டிலா அல்லது மேல்நோக்கியா என அவரேதும் கூறினாரா என அவர்களிடம் நான் பதிலுக்குக் கேட்டேன். அண்மைக்காலமாக வானொலி ஊடகத்தைச் சாராத பல அன்பர்கள் பொத்தாம்பொதுவில் இவ்வாறான குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் முன்வைத்து வருகின்றனர். கடந்த சுமார் 4 தசாப்த காலமாக வானொலி மற்றும் தொலக்காட்சித் துறையில் ஈடுபட்டு வருகின்ற ஒருவன் என்ற ரீதியில் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் கூறவேண்டிய கடப்பாடு எனக்கு இருப்பதாக உணர்கிறேன். இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களின் அளவுகோல் எது என்ற கேள்வி என் முன்னே வந்து நிற்கின்றது. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தே இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுகின்றன என்ற ஓர் அடிப்படை உண்மையையும் நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. வானொலி தொடர்பான இந்தக் குற்றச்சாட்டுகள் எழுவதற்கான பின்னணி என்ன என்பதை நாம் முதலில் பார்க்கவேண்டியுள்ளது.
புலம்பெயர்ந்த நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட வானொலிகளின் பின்னணிகள் எவையெனப் பார்க்கும்போது அடிப்படையில் அவற்றை ஆரம்பித்தவர்கள் இவற்றை ஒரு வர்த்தக முயற்சியாகவே ஆரம்பித்தனர் எனத் தெரிகிறது. பணம் பண்ணவேண்டும் அல்லது புகழடையவேண்டுமென்ற ஓர் ஆதார நோக்கையே கொண்டு ஆரம்பிக்கப்பட்டவையாக இந்த வானொலிகளை நான் காண்கிறேன். பலசரக்குகளை விற்கும் பல்பொருள் அங்காடிக்கும் அல்லது ஸ்பைஸ் ஷொப்பிற்கும் வானொலி நிலையத்திற்குமிடையில் இவற்றை ஆரம்பித்தவர்கள் பெரிய வித்தியாசத்தைக்காண்பிப்பதாக எனக்குத் தெரியவில்லை. வானொலி தொடர்பான அரைகுறை அறிவுடையவர்கள் அல்லது பகுதிநேரமாக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டவர்கள் அல்லது வேறு இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு அவற்றின்மூலம் புகழடைய முடியாதவர்கள் என பலதரப்பட்டவர்கள் வானொலிகளை ஆரம்பித்து அல்லது அவற்றில் இணைந்து தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை வெளிக்காட்டும் சாதனமாக அவற்றைப் பயன்படுத்தினர், பயன்படுத்திவருகின்றனர், ஏன் வானொலியில் பிறந்தநாள் வாழ்த்து மரண அறிவித்தல் கொடுப்பதற்காக இலங்கை வானொலிப் படிகளை மிதித்தவர்கள்கூட பின்னர் இலங்கை வானொலி புகழ்.. இன்னார் எனக் கூச்சமின்றிக் கூறியே ஒலிபரப்பு நிலையங்களை ஆரம்பித்த சோகமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இன்று பல ஒலிபரப்பு நிலையங்கள் இவ்வாறு ஒலிபரப்புப் பயிற்சியற்றவர்களால் நடத்தப்படுவது கவலைக்குரியதே.
•Last Updated on ••Saturday•, 11 •June• 2016 07:12••
•Read more...•
87, 88இல் இருந்து புகலிடச் சூழலையும், வாழ்வனுபவங்களையும் பாடுகளமாகவும், பாடுபொருளாகவும் வைத்து அன்றைய புகலிடச் சஞ்சிகைகளில் ஏராளமான கதைகள் வெளியாகியிருக்கின்றன. முயன்றால் ஆயிரம் இத்தகைய கதைகளைத் தொகுக்க முடியும். நோர்வேயிலிருந்து வந்த சுவடுகள், சுமைகள், சக்தி, உயிர்மெய் எனப் பார்த்தாலே நூற்றுக்கு மேற்பட்ட கதைகளைச் சொல்ல முடியும். தவிர தாயகம், தூண்டில், ஓசை, மனிதம், தேடல், தேனீ, அக்கினி, எக்ஸில், உயிர்நிழல், சஞ்சீவி, சிந்தனை, அஆஇ, உயிர்ப்பு, ஊதா, இனி, காகம், கண், பள்ளம், மற்றது, நம்மொழி, தேசம், பனிமலர் என இன்னும் பல புலம்பெயர் சஞ்சிகைகள் பத்திரிகைகள் இத்தகைய கதைகளுக்கு பெரும் தளத்தை அமைத்திருந்தன. சிறுகதைகளுக்காகவே பிரான்ஸிலிருந்து "அம்மா" இதழ் வெளியானது. 'ஓசை'யூடாக புலம்பெயர் சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியிருந்தது. சக்தி பெண்கள் சஞ்சிகையின் வெளியீடாக "புது உலகம் எமை நோக்கி" பெண்கள் சிறுகதைகள் வெளியானது.
அப்படி எதுவும் வந்தாக இல்லை எனப் பதிவு செய்பவர்கள் தேடலற்ற, வாசிப்பனுபவம் அற்றவர்கள் என்றுதான் சொல்ல முடியும். வேறென்னத்தைச் சொல்ல...? அப்படி புலம்பெயர் கடந்தகாலச் சஞ்சிகைகளைத் தட்டிப் பார்க்க ஆர்வமுள்ள புதிய ஆய்வாள ஜெர்னலிஸ்டுக்கள் தொடர்பு கொள்ளுங்கள் என்னிடம் இருக்கும் எல்லாவற்ரையும் தட்டிப் பார்க்கத் தருகிறேன். சொந்தமாக வேண்டுமானாலும் எடுத்துப் போகலாம். பயன்படும்.
புலம்பெயர் பத்திரிகைகள் பற்றிய ஆய்வு இன்று மிக மிக அவசியமான ஒன்று. ஆனால் அது இலகுவான கருமமும் அல்ல. 30இற்கு மேற்பட்ட சஞ்சிகைகள், பத்திரிகைகள் வந்தன. அன்று வெளியான எல்லாப் பிரதிகளுமே குறிப்பிட்ட ஒருசில விடயத்தில் ஒத்த கருத்தில் நகர்ந்தன. "எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போர்க்குரல்" என. ஆனால் இப்போ அந்த சஞ்சிகைகளை நடாத்திய பலர் தமது அரசியல் நிலைப்பாடுகளையும் மாற்றிக் கொண்டு விட்டனர். எமக்கு அது பிரச்சனை இல்லை. ஆனால் அந்தந்தக் காலத்தில் வெளியான இந்த சஞ்சிகைகளின் பணி மிக அளப்பரியது. நிச்சயம் இவை பற்றிய விரிவான பதிவொன்று வந்தேயாக வேண்டும்.
•Last Updated on ••Saturday•, 23 •January• 2016 23:04••
இலக்கியமும் வாசிப்பும் பலகாலமாக எழுதி வரும் அல்லது வாசித்து வரும் நண்பர்களிடம் நான் சில குழப்பங்களைக் கவனித்ததுண்டு. ஓர் இலக்கிய வாசிப்பு எப்படி நிகழ்கிறது; அது பொதுவான பிற வாசிப்பிலிருந்து தன்னை எப்படி வேறுபடுத்திக்கொள்கிறது என்ற அடிப்படையான கேள்விக்குப் பதில் இல்லாமலேயே பலகாலமாக தங்கள் வாசிப்புப் பணியை மேற்கொள்வர். ‘ஒரு பிரதியில் உள்ள சொற்றொடர்களை வாசித்தால் புரிகிறது’ எனும் ரீதியில் அவர்கள் பதில்கள் இருக்கும்.
ஒரு நகைச்சுவைத் துணுக்கு: டாக்டர் : உங்களுக்கு ஆப்ரேஷன் செய்தால்தான் பிழைக்க முடியும். நோயாளி : நானா அல்லது நீங்களா டாக்டர்.
இதை வாசித்தவுடன் நமக்குச் சிரிப்புவரக் காரணம் என்ன என்று கொஞ்சம் ஆராய்ந்தாலே அதில் உள்ள இடைவெளிதான் என்பது சட்டெனப் புரியும். ‘எனக்கு அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கப் போகிறீர்கள்’ என்பதுதான் நோயாளியின் பதிலின் சாரம். ஆனால் அந்தப் பதிலில் உள்ள மௌனமாக்கப்பட்ட பகுதிகளில்தான் வாசகரான நாம் நமது கற்பனையைத் திணிக்கிறோம். அதில் பங்கெடுக்கிறோம். நோயாளி பதிலில் உள்ள விமர்சனத்தை நாம் சட்டென சுவீகரித்துக்கொள்கிறோம். ‘அறுவை சிகிச்சை செய்யாமல் கூட நான் உயிர் பிழைக்க முடியும் எனும் சூழல் இருந்தாலும் நீங்கள் பணம் சம்பாதிக்க அதை செய்ய மெனக்கெடுகிறீர்கள்’ என பதில் கொடுத்திருந்தால் நமக்குச் சிரிப்பு வந்திருக்காது. இதை வாசக பங்கேற்பு எனலாம். நகைச்சுவைத் துணுக்கு என்பதே இந்த வாசக பங்கேற்பு நிகழ்ந்தால்தான் வெற்றிப்பெறுகிறது.
ஓர் இலக்கியப் பிரதியும் இந்த வாசகப் பங்கேற்புக்கான இடைவெளியுடன் படைக்கப்படும்போதே அதில் வாசகன் தனது கற்பனையை உபயோகித்து படைப்பு முழுவதும் பயணிக்க இயல்கிறது. ஒரு வாசகனாகிய நான் சொல்லப்படாமல் எனக்கான இடைவெளியைவிட்டு உணர்த்த முயலும் படைப்புகளையே முக்கியமானதாகக் கருதுகிறேன். அந்த இடைவெளிகளில் புகுந்து விரித்தெடுக்கும்போதுதான் நான் அந்தப் படைப்பை எனக்குரியதாக ஆக்கிக்கொள்கிறேன்.
•Last Updated on ••Friday•, 27 •November• 2015 07:15••
•Read more...•
இங்கே வாசிக்க இருக்கும் இந்தக் கட்டுரையின் தலைப்புக்கேற்ப தமிழ் புதினங்கள் அதாவது நாவல்கள் கனடாவில் வெளியீடு செய்யப்பட்டதாகவும், கனடிய எழுத்தாளர்களுடையதாகவும் இருக்கவேண்டும் என்ற ஒரு வரையறைக்குள்தான் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. வேறு பல புதினங்கள் இங்கே பலராலும் வெளியிடப் பட்டாலும் அவை இந்த வரையறைக்குள் உட்படாததால் அவற்றை இங்கே குறிப்பிடவில்லை. எனது தேடதல் மூலம் கிடைத்த தகவல்களை மட்டுமே இங்கே தருகின்றேன். எதையாவது தவறவிட்டிருந்தால், அவற்றை எனக்குத் தெரியப்படுத்தினால் அவற்றை எனது முழுமையான கட்டுரையில் இணைத்து கொள்ள முடியும் என்பதையும் அதன் மூலம் கட்டுரை முழுமை பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
1983 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் அநேகமான ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் வாழ்ந்த இடத்தைவிட்டு எண்ணிக்கையில் பெரிய அளவில் புலம்பெயர்ந்து சென்றார்கள். தொடக்கத்தில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் அனேகமாக தாயக நினைவுகளை மீட்பதாகவே இருந்தன. தாயகத்தைப் பற்றிய புதினங்களாக இருந்தாலும், புலம் பெயர்ந்தோர் படைப்புக்களாகவே இவை கணிக்கப்பட்டன. தொடர்ந்து புகுந்த மண்ணில் பரீட்சயமானபோது வெளிவந்த பல படைப்புக்கள் புகுந்த மண்ணைப் பற்றியதாகவோ அல்லது இரண்டும் கலந்ததாகவோ இருந்தன. புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்றோ அல்லது புகலிட தமிழ் இலக்கியம் என்றோ இதுவரை காலமும் இவை அழைக்கப்பட்டாலும், அவர்கள் கனடாவிற்குப் புலம் பெயர்ந்து சுமார் முப்பது வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று அவர்களின் படைப்புக்கள் கனடியத் தமிழ் புதினங்களாகக் கணிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, கனடியத் தமிழ் இலக்கியத்தில் இவை முக்கிய இடம் வகிக்கின்றன. காரணம் தாயகத்து எழுத்தாளர்களால் சொல்லத் தயங்கிய பல விடையங்களை இந்தப் புதினங்கள் இந்த மண்ணில் துணிவோடு எடுத்துச் சொன்னது மட்டுமல்ல, புகுந்த மண்ணின் புதிய அனுபவங்களையும் எடுத்துச் சொல்லத் தொடங்கின. கனடாவிற்குப் புலம் பெயர்ந்த பழைய எழுத்தாளர்கள் மட்டுமல்ல, இன்று அடுத்த தலை முறையினரும் இங்கே எழுதத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் புதிய தலைமுறையினரின் எழுத்துக்கள் அனேகமாக ஆங்கிலத்திலேயே வெளிவருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த நிலை நீடிக்குமானால் எதிர் காலத்தில் அடுத்த தலைமுறையினரிடம் இருந்து தமிழ் புதினங்கள் வெளிவருமா என்பது சந்தேகத்திற்குரியதே!
•Last Updated on ••Saturday•, 29 •November• 2014 21:37••
•Read more...•
[ஜூலை 2009 இதழ் 115 மார்ச் 2010 இதழ் 123 வரை , பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை' என்னும் தலைப்பில் எட்டு எழுத்தாளர்களைப் பற்றி எழுதியிருந்தார். அத்துடன் அறிமுகம் செய்விக்கப்பட்ட எழுத்தாளர்களினதும் படைப்புகளையும் அவர்களைப் பற்றிய குறிப்புகளில் உள்ளடக்கியிருந்தார். ஒரு பதிவுக்காக, பதிவுகளின் புதிய வடிவமைப்பிக் அவை பதிவுசெய்யப்பட வேண்டிய அவசியம் கருதி, அவை இங்கு, படைப்புகள் தவிர்த்து , மீள்பிரசுரமாகின்றன. - பதிவுகள்-]
1. அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் சித்ரா ரமேஷ்
சித்ரா ரமேஷ் இலக்கியத்தைக் குறித்துப் பேசுமிடத்தில், 'இறைவன் இலக்கியம் இரண்டுமே இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பரம்பொருள் தானே!', என்று சொல்லியிருப்பார். சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் 'வாழ்க்கையில் இலக்கியம்' என்ற தலைப்பில் விறுவிறுப்பாகவும் சரளமாகவும் உரையாற்றி எல்லோரையும் அசத்தியவர். இவருக்கு எழுத வேண்டும் என்பதில் மிகப் பெரிய குறிக்கோள் இல்லாததால் அதிகமாக எழுதுவதை விட அதிகமாகப் படிக்க விரும்பும் வாசகியாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். படிப்பது என்ற விஷயம் பொழுது போக்கிற்காக சில சமயம் நிகழலாம். ஆனால், எழுதுவது என்பது வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் செய்யப்படும் விஷயம் இல்லை என்று சொல்வார் சித்ரா, பதின்ம வயதிலேயே இவரது கட்டுரைகள் தமிழாசிரியையை விட இவருடைய தோழிகளுக்கு மிகவும் பிடித்திருக்கும். அந்தக் கட்டுரைகள் எந்த இலக்கண வரையறைக்குள்ளும் வராமல் சித்ராவின் பாணியில் அமைந்தவை. வெகுஜனப் பத்திரிகை ரசனையிலிருந்து விலகிநின்ற மேம்பட்ட எழுத்துக்களை இவரது மூத்த சகோதரர்தான் இவருக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.
•Last Updated on ••Saturday•, 06 •April• 2013 03:00••
•Read more...•
••Saturday•, 23 •March• 2013 17:40•
??- முனைவர் எச். முஹம்மது சலீம், சிங்கப்பூர் -??
இ(அ)க்கரையில்...
சீனர், மலாயர், இந்திய வம்சாவழியினர் , யுரேஷியர் மற்றும் இதரர் என்னும் பல்வேறு இனம் மற்றும் மொழிபேசுகின்ற குடிமக்களையும் நிரந்தரமாய்த் தங்கி வாழ்வோரையும் கொண்ட சிங்கப்பூரின் இன்றைய மக்கள் தொகை 53 லட்சம். இவர்களுள் இந்திய வம்சாவழியினர் மட்டும் சுமார் 9 விழுக்காடு. இவர்களுள் தமிழ் பேசுவோர் 3.2 விழுக்காட்டினர். இவ்வாறு குறுகிய எண்ணிக்கையில் தமிழரும் தமிழ் பேசுவோரும் வாழ்கின்ற நாடாக வளமிக்க சிங்கப்பூர் இருந்தாலும் மலாயாவிலிருந்து பிரிந்து சுதந்திரக் குடியரசாக 1965 ல் பிரகடனப்படுத்தப்ட்டதிலிருந்து கீழ்த்திசை நாடுகளின் வளர்ச்சிச் சுடரொளியாய் பரிணமிக்கும் இந்நாடு தமிழ் மொழிக்குத் தந்திருக்கும் தகுதி உயர்வானதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். சிங்கப்பூர் அரசின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரத்துவ மொழிகளுள் தமிழும் ஓன்று . ஆங்கிலம் , சீனம், மலாய் என்பன பிற அதிகாரத்துவ மொழிகள். கல்வித்துறையில் இங்குள்ள பாலர் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகம் வரை தமிழைப் பாடமாகப் பயில முடியும். பொது ஊடகங்களில் சிங்கை வானொலியின் ஒலி 96.8 அல்லும் பகலும் தமிழை ஏந்தி வருகிறது. தொலைகாட்சியின் வசந்தம் சென்ட்ரல் தமிழ் நிகழ்சிகளை நள்ளிரவு வரை நல்கிடக் காண்கிறோம். அச்சு ஊடகங்களில் தமிழவேள் கோ. சாரங்கபாணியவர்களால் 1935-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ் முரசு நாளேடு இன்றும் தொடர்ந்து வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழாக இங்குள்ள தமிழ் சமூகத்தின் அடையாளமாகத் திகழக் காண்கிறோம்.
•Last Updated on ••Saturday•, 23 •March• 2013 18:13••
•Read more...•
••Saturday•, 09 •March• 2013 01:59•
??- நவஜோதி ஜோகரட்னம் ,லண்டன்- ??
இ(அ)க்கரையில்...
“கோயில்களில் பாட்டுக்கள் பாடி நாட்டியம் ஆடுகின்ற நாட்டியப் பெண்களைத் தவிர, மற்றையோரில் தமிழை எழுத வாசிக்கத் தெரிந்த இரு பெண்களை மாத்திரம் யாழ்ப்பாணத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்களுள் ஒருத்தி அளவெட்டியிலும் மற்றவள் உடுப்பிட்டியிலும் இருக்கிறாள். வேறும் ஒருத்தி இருப்பதாக கேள்விப்படுகிறேன். இன்னமும் அவளைச் சந்திக்கவில்லை” என்று 1816 ஆம்; ஆண்டில் அமெரிக்க சமயக் குழுவின் பாதிரியார் வண.மெயிக் எழுதிய குறிப்புகள் ( “யாழ்ப்பாணத்துச் சமூகத்தில் பெண்கல்வி, வள்ளிநாயகி இராமலிங்கம்”) யாழ்ப்பாணத்தில் நிலவிய பெண்கல்வி நிலைமையைச் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் உடுவில், வேம்படி, உடுப்பிட்டி, பருத்தித்துறை, சுண்டுக்குளி, இளவாலை ஆகிய இடங்களில் தோன்றிய பெண் பாடசாலைகள் யாழ்ப்பாணத்துப் பெண்களின் கல்வி வளாச்சியை மிக உன்னத நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றது. இன்று மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பத்திரிகை ஆசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாவும், பொறியியலாளர்களாகவும், பல்கலைக்கழக உபவேந்தர்களாகவும், வங்கி அதிகாரிகளாகவும், வருமானவரி மதிப்பீட்டாளர்களாகவும் என்று சமூக வாழ்வின் எல்லாத் தளங்களிலும் பெண்கள் உயர்ந்த நிலையில் உள்ளனர். இந்த உயர்ந்த கல்வியின் ஒரு வெளிப்பாடாக வெளிநாடுகளுக்குச் சென்று தொழில்புரியும் சாத்தியங்களையும் யாழ்ப்பாணப் பெண்கள் கொண்டிருந்தனர். இங்கிலாந்திற்கும் இலங்கைக்குமான தொடர்பு ஒரு காலனித்துவ தொடர்பாக ஒரு நீண்ட சரித்திரத்தைக் கொண்டிருக்கிறது. உயர் கல்வி கற்ற ஈழத்துப் பெண்மணிகள் இங்கிலாந்திலேயே திருமண தொடர்புகள் மூலமாக புலம்பெயர ஆரம்பித்து இங்கிலாந்திலும் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொண்டனர். அந்த வகையில் சுதந்திரத்திற்குப் பின்னர் இங்கிலாந்தை நோக்கிய ஈழத்தின் புலப்பெயர்வு எண்பதுகளை அடுத்த காலப்பகுதியில் மிக வேகமாக அதிகரிக்கலாயிற்று. இந்நிலையில் எழுத்து, இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட பெண்மணிகள் இங்கிலாந்தில் கணிசமான அளவில் சாதனைகள் புரிந்திருக்கிறார்கள்.
•Last Updated on ••Saturday•, 09 •March• 2013 17:31••
•Read more...•
[புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நாவல்கள் எனும்போது அவர்கள் தாயகத்தில் இருக்கும்போது எழுதி வெளியிட்ட நாவல்களை இங்கு நான் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் இங்கே குறிப்பிடும் எல்லா நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் தரவிற்காக அவற்றையும் சேர்த்துள்ளேன்.] உலகில் எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், சமகால தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றன. காலத்துக்குக் காலம் மக்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் தமிழர்கள் படைக்கும் படைப்புகளை ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ எனவும் ‘புகலிட தமிழ் இலக்கியம்’ எனவும் இரு தொடர்களால் அழைக்கின்றோம். இதில்கூட சில மாற்றுக்கருத்துகள் நிலவுவதைக் காணலாம். திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன், ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்று கூறுவது தவறு என்றும், அதை ‘அந்தந்த நாட்டு தமிழ் இலக்கியம்’ என்று சொல்லலாம் என்றும் சொல்கின்றார். அவர் கூறும் சொற்றொடர் ஓரளவிற்கு ‘புகலிட தமிழ் இலக்கியம்’ என்பதையே சுட்டி நிற்கின்றது.
•Last Updated on ••Monday•, 24 •March• 2014 03:31••
•Read more...•
••Friday•, 14 •December• 2012 16:35•
??- நாகரத்தினம் கிருஷ்ணா -??
இ(அ)க்கரையில்...
[பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் பரந்து சிதறி வாழும் தமிழ் மக்களிடமிருந்து அவர்கள் வாழும் பகுதிகளில் படைக்கப்படும் கலை, இலக்கியச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்தும் அல்லது ஆய்வுக்குட்படுத்தும் கட்டுரைகளை 'பதிவுகள்' எதிர்பார்க்கின்றது - பதிவுகள் - ]
மேற்கத்திய நாடுகளில் தற்போதைக்கு இலக்கியம் என்பதற்கு எழுதப்படாத விதியொன்றிருக்கிறது. - மொழி ஆளுமைகொண்டதும், வாசகன் சிந்தனையை மேம்படுத்தக்கூடியதும் இலக்கியம்; - தீவிர இலக்கிய விமர்சகர்கள் ஏற்றுக்கொள்வது இலக்கியம்; பெருவாரியான மக்கள் நிராகரிப்பது இலக்கியம். - இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கியம்: இந்திய இலக்கியம், ஈழ இலக்கியம், சிங்கப்பூர் இலக்கியம், மலேசிய இலக்கியமென்றிருந்தது, பின்னர் கடந்த இருபது ஆண்டுகளாக அக்களத்தை தலித் இலக்கியமும், பெண்ணிலக்கியமும் பாகம் பிரித்துக்கொண்டிருக்கின்றன. "அகதியாக இருப்பதற்கு மைல் தொலைவு அவசியமில்லை இரண்டு மைல்களே போதும். பழக்கப்பட்ட, பரிச்சயப்பட்ட மனிதர்களையும் பொருள்களையும் மண்ணையும் வானத்தையும் குடிதண்ணீரையும் கோயிலையும் இழக்க வேண்டி நேரிடும் பொழுது, இழந்து அதன்பின் தொடர்ந்து வாழுதல் வேண்டும் என்ற நினைப்பில் தொழிற்படுகிற பொழுது அகதி உருவாகிறான்/ள் - என்கிறார் முனைவர் கா. சிவத்தம்பி. பேராசிரியர் கருத்தின்படி பிரான்சு நாட்டில் வாழ்கிற தமிழர்கள் பூர்வீகம் எதுவென்றாலும் புலம்பெயர்ந்ததற்கான காரணம் எதுவாயினும் அனவருமே ஒருவகையில் அகதிகளே.
•Last Updated on ••Friday•, 14 •December• 2012 16:54••
•Read more...•
தமிழகத்திலிருந்து வெளிவரும் கணையாழி இதழ் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஜீவநதி சஞ்சிகை ஆகியவை கனடாச் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளன. எஸ்.பொ.வின் மித்ர பதிப்பகம் வெளியிட்ட 'பனியும் பனையும்' சிறுகதைத் தொகுப்பிலும் கனடாத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவை பற்றிப் பதிவுகள் இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகள், குறிப்புகள் ஆகியவற்றின் தொகுப்பிது; ஒரு பதிவுக்காக. இவை கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய ஒரு பார்வையினை வெளிப்படுத்துவன. இவை எழுதப்பட்ட காலங்களில் அதிகம் எழுதாத பல புதிய படைப்பாளிகள் பலர் இன்று எழுதுகின்றார்கள். இவர்களைப் பற்றிய குறிப்புகள், கட்டுரைகள் எமக்குக் கிடைக்கும்போது அவையும் இங்கு தொகுக்கப்பட்டுப் பதிவு செய்யப்படும். கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகளை எழுத்தாளர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். ஒரு பதிவுக்காக அவை மிகவும் அவசியம். பதிவுகள் -
•Last Updated on ••Saturday•, 15 •December• 2012 20:01••
•Read more...•
[பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் பரந்து சிதறி வாழும் தமிழ் மக்களிடமிருந்து அவர்கள் வாழும் பகுதிகளில் படைக்கப்படும் கலை, இல்க்கியச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்தும் அல்லது ஆய்வுக்குட்படுத்தும் கட்டுரைகளை 'பதிவுகள்' எதிர்பார்க்கின்றது. ஏற்கனவே நாம் வேண்டியதைக் கருத்தில்கொண்டு மலேசியத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரையினை எழுத்தாளர் வே.ம.அருச்சுனன் எழுதியிருந்தார். அக்கட்டுரை ஏற்கனவே பதிவுகள் இணைய இதழில் வெளிவந்திருக்கின்றது. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் எழுதிய ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் பற்றி கட்டுரையின் இரண்டாம், மூன்றாம் பகுதிகள் இவை. ஏற்கனவே அக்கட்டுரையின் முதற்பகுதி பதிவுகளில் வெளியாகியுள்ளது. அவருக்கு எமது நன்றி. இதுபோல் ஏனைய நாடுகளிலுள்ள எழுத்தாளர்களிடமிருந்தும் கட்டுரைகளை எதிர்பார்க்கின்றோம் ஒரு பதிவுக்காக.- பதிவுகள்-] அவுஸ்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர்களைக் கருத்தில் கொண்டு காலத்துக்குக்காலம் சில இலக்கியச்சஞ்சிகைகள் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளன. 'அம்மா', கணையாழி, மல்லிகை, ஞானம், ஜீவநதி போன்ற இந்த வெளியீடுகளுக்குப் பொறுப்பாக அருண் அம்பலவாணர் (நட்சத்திரன் செவ்விந்தியன்), ஆசி கந்தராஜா, லெ.முருகபூபதி, அருண்.விஜயராணி போன்றோர் உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள். இந்தக்கட்டுரை அதிலுள்ள படைப்புக்களை விமர்சனம் செய்வதை விடுத்து, அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் பற்றியும் அந்த சிறப்பிதழில் எழுதிய அவுஸ்திரேலியத் தமிழ்ப்படைப்பாளர்கள் பற்றியதுமான ஒரு அறிமுக நோக்கில் எழுதப்படுகிறது.
•Last Updated on ••Wednesday•, 12 •December• 2012 22:11••
•Read more...•
[பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் பரந்து சிதறி வாழும் தமிழ் மக்களிடமிருந்து அவர்கள் வாழும் பகுதிகளில் படைக்கப்படும் கலை, இல்க்கியச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்தும் அல்லது ஆய்வுக்குட்படுத்தும் கட்டுரைகளை 'பதிவுகள்' எதிர்பார்க்கின்றது. ஏற்கனவே நாம் வேண்டியதைக் கருத்தில்கொண்டு மலேசியத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரையினை எழுத்தாளர் வே.ம.அருச்சுனன் எழுதியிருந்தார். அக்கட்டுரை ஏற்கனவே பதிவுகள் இணைய இதழில் வெளிவந்திருக்கின்றது. தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரையின் முதற் பகுதியினை அனுப்பியிருக்கின்றார். அக்கட்டுரை இங்கு பிரசுரமாகின்றது. அவருக்கு எமது நன்றி. இதுபோல் ஏனைய நாடுகளிலுள்ள எழுத்தாளர்களிடமிருந்தும் கட்டுரைகளை எதிர்பார்க்கின்றோம் ஒரு பதிவுக்காக.- பதிவுகள்-] அவுஸ்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர்களைக் கருத்தில் கொண்டு காலத்துக்குக்காலம் சில இலக்கியச்சஞ்சிகைகள் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளன. 'அம்மா', கணையாழி, மல்லிகை, ஞானம், ஜீவநதி போன்ற இந்த வெளியீடுகளுக்குப் பொறுப்பாக அருண் அம்பலவாணர் (நட்சத்திரன் செவ்விந்தியன்), ஆசி கந்தராஜா, லெ.முருகபூபதி, அருண்.விஜயராணி போன்றோர் உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள். இந்தக்கட்டுரை அதிலுள்ள படைப்புக்களை விமர்சனம் செய்வதை விடுத்து, அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் பற்றியும் அந்த சிறப்பிதழில் எழுதிய அவுஸ்திரேலியத் தமிழ்ப்படைப்பாளர்கள் பற்றியதுமான ஒரு அறிமுக நோக்கில் எழுதப்படுகிறது. இந்தச் சிறப்பிதழ்களில் மல்லிகை, கணையாழி, ஜீவநதி என்பவை கனதியான படைப்புகளைக் கொண்டிருந்தன.
•Last Updated on ••Wednesday•, 12 •December• 2012 22:26••
•Read more...•
••Friday•, 16 •November• 2012 02:32•
??- வே.ம.அருச்சுனன் - மலேசியா -??
இ(அ)க்கரையில்...
முன்னுரை
மலேசியத் தமிழ் இலக்கியம் ஏறக்குறைய 126ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்ததாகும். மலேசியத் தமிழ் இலக்கியத்தின் செவிலித்தாய்களாக விளங்கியவை பத்திரிக்கைகளாகும். மலாயாவில் தோன்றிய முதல் பத்திரிக்கை யாகக் கருதப்படுவது சி.கு.மகுதும் சாயபு அவர்களால் 1875-இல் வெளியிடப் பட்ட “சிங்கை வர்த்தமானி” என்னும் இதழே.( மா.இராமையா,1996) அதனை- யடுத்து மலேசியாவில், பினாங்கில் 1876 இல் “ தங்கை நேசன்” என்னும் பத்திரிக்கை வெளிவந்துள்ளது . “உலக நேசன்”, “சிங்கை நேசன்”, “இந்து நேசன்” ஆகிய பத்திரிக்கைகள் 1887-இல் வெளிவந்துள்ளன.(இரா.தண்டாயுதம்,1986). சிங்கப்பூரில் 1887-இல் சி.ந. சதாசிவப் பண்டிதரின் “வண்ணையந்தாதி”என்ற நூல் தொடக்கமாக அமைந்தது. (ஏ.ஆர்.எ.சிவகுமாரன்: “சிங்கப்பூர் மரபுக்கவிதைகள்) மலேசியாவின் முதல் தமிழ் இலக்கியப் படைப்பாகக் கருதப்படுவது நாகப்பட்டினம் மரு.வெங்கடாசலம் பிள்ளை அவர்களால் இயற்றப் பெற்ற “ ஆறு முகப் புதிகம்” என்ற கவிதை நூலாகும்.( இராஜம் இராஜேந்திரன்,1988) மலேசியத் தமிழ்ப் படைப்பிலக்கிய வகைகளுள் கவிதை இலக்கியமே முதலில் தோன்றியது. அதற்கடுத்த நிலையில் நாவலைக் குறிப்பிடலாம். மலேசியாவின் முதல் நாவல் க.வெங்கடரத்தினம் அவர்களால் 1917-இல் எழுதப்பட்ட “கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி.( வே.சபாபதி,2004).முதல்மலேசியத் தமிழ்ச் சிறுகதை வே.சின்னையா 1930 இல் வெளியிடப்பட்ட “ நவரச கதா மஞ்சரி” எனும் தொகுப்பில் அடங்கியுள்ள ஐந்து சிறுகதைகளாகும்.( ந.பாஸ்கரன்,1995).
•Last Updated on ••Friday•, 16 •November• 2012 02:47••
•Read more...•
புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியச் செயற்பாடுகளைப் பதிவு செய்யும் சஞ்சிகைகள் பலவற்றை 'படிப்பகம்' இணையத்தளம் பதிவு செய்திருக்கிறது. புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிக் கட்டுரைகளைப் படிப்பவர்கள் இத்தளத்திலுள்ள ஆக்கங்களை வாசிப்பது மிகவும் முக்கியம். அதன்பொருட்டு இத்தளத்தினை இங்கு அறிமுகம் செய்கின்றோம். தள முகவரி: http://www.padippakam.com/index.php?option=com_sectionex&view=category&id=14&Itemid=54
•Last Updated on ••Saturday•, 20 •October• 2012 00:47••
இலங்கையில் நிலவிய அரசியல் சூழல்களையடுத்து உலகின் நானா பக்கங்களையும் நோக்கி ஈழத்தமிழர்கள் 1979இலிருந்து அதிக அளவில் புலம்பெயரத் தொடங்கினார்கள். அதற்கு முன்னரும் அரசியல் காரணங்களுக்காக , புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தாலும், 1979இல் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்கு வந்தபின்னர், அதன் பின்னர் 1983 ஜூலை இனக்கலவரத்திற்குப் பின்னர்தான் அதிக அளவில் இவ்விதம் புலம்பெயரத்தொடங்கினார்கள். இவ்விதம் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தமக்குள் பலவேறு திசைகளில் அரசியல்ரீதியில் பிரிந்து கிடந்தாலும், தாம் வாழும் நாடுகளிலிருந்துகொண்டு பல்வேறு கலை, இலக்கிய முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினார்கள்; ஈடுபட்டுக்கொண்டு வருகின்றார்கள். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக இவ்விதமான கலை, இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டு வரும் இவர்களின் செயற்பாடுகள் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. இவை பற்றிய கலந்துரையாடல்கள் விரிவாக, பரந்த அளவில் நடைபெற்றிருக்கவில்லை. அவ்விதம் நடைபெற்ற கருத்தரங்குகளெல்லாம் குறிப்பிட்ட குழுசார் மனப்பான்மையுடன் நடைபெற்றதால் விரிவாக, நடுநிலையுடன், எப்பொருள் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்னும் மனப்பாங்குடன் அவ்விதமான அமர்வுகள் நடைபெறவில்லை. இவ்விதமான சூழலில் உலகின் நானா பக்கங்களிலும் பரந்து வாழும் தமிழக் கலை, இலக்கியவாதிகள் படைப்புகள் அனைத்தையும் படிப்பதற்கு முயலவேண்டும். அவை பற்றிய கலந்துரையாடல்களை அமர்வுகள் வாயிலாகவோ, இணையத்தினூடாகவோ நடாத்திட வேண்டும். அவை பற்றிய ஆக்கங்களைப் பிரசுரிக்க வேண்டும். இதன்மூலம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் படைத்த, படைக்கும் கலை, இலக்கியப் படைப்புகள் பற்றிய விபரங்கள் ஆவணப்படுத்தப்படும். அவை பற்றிய விரிவான ஆய்வுகள் நடைபெறும்.
•Last Updated on ••Friday•, 19 •October• 2012 00:45••
•Read more...•
1. சமகால ஈழத்து இலக்கியம் என்பது பரந்த தளத்தில் அணுகவேண்டியது. விரிவான வாசிப்பும், ஆழமான விமர்சனப்பண்பும் இல்லாது ஒரு வாசிப்பை முன்வைத்தல் என்பது கடினமானது.. ஈழத்திலிருந்து எனக்கு வாசிக்க கிடைத்த பிரதிகள் மிகச் சொற்பமே. எனவே ஈழத்திலக்கியம் என்ற வகைக்குள் ஈழத்திலிருந்தும் புலம்பெயர்ந்தும் வந்த படைப்புக்களை சேர்த்து, சில வாசிப்புப் புள்ளிகளை முன்வைக்கலாமென நினைக்கின்றேன். அத்துடன், இது எதற்கான முடிந்த முடிபுகளோ அல்ல என்பதையும் தயவுசெய்து கவனத்திற் கொள்ளவும். மேலும் போர் தின்றுவிட்டுப் போயிருக்கின்ற ஈழத்துச் சூழலில், இன்று இலக்கியம் பேசுவது கூட ஒருவகையில் அபத்தமானதுதான். சமகால ஈழத்திலக்கியம் என்பதை 2000ம் ஆண்டுக்குப் பிறகான சில பிரதிகளினூடாக அணுக விரும்புகின்றேன். ஈழத்திலக்கியத்தில், மிக நீண்டகாலமாக புனைவுகளின் பக்கம் தீவிரமாக இயங்கியவர்கள் என, எவரேயையேனும் கண்டுகொள்ளுதல் சற்றுக் கடினமாகவே இருக்கிறது.
•Last Updated on ••Tuesday•, 01 •May• 2012 23:01••
•Read more...•
என்னை இன்று எமது கதைகளின் கதையைத்தான் பேச அழைத்துள்ளார்கள். நான் கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகளின் கதைச் சொல்கிறேன். ஊர்கள் சிறியன. பெருநாடுகளின் தள வள ஆளனி வலுக்குகளுடன் ஒப்பிடுகiயில் சிற்றூரிலும் சிறியது எமது நாடு. அதில் இலங்கை பூராவும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தமிழ்பேசும் சமூகங்கள் ஏனைய உலக சமூகங்களுடன் ஒப்பிடுகையில் கணக்கில் கொள்ள முடியாதவை. நுணுக்குக் கண்ணாடிகளால் தேட வேண்டியவை. இருந்தபோதும் நாற்திசைகளிலிருந்தும் உலகளாவ எமது குரல் ஓங்காரமாக ஒலிக்கிறது. அதுவும் இனிய தமிழில் ஒலிக்கிறது. கதைகளாக, கவிதைகளாக, ஒலிப்பேளைகளாக, ஒளிச்சித்திரங்களாக சிறகடித்து வலம் வருகின்றன. தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு நீண்டகால வாசகன் என்ற முறையில் இது எனக்கு மகிழ்வைத் தருகிறது. ஆனால் இதற்காக எமது எழுத்தாளர்கள் நெடும்பயணம் செய்ய வேண்டியிருந்தது. கிடுகு வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடந்த எமது சிறுகதைகள் பெருவீதி கடந்து வான்வெளி எட்ட பெரு முயற்சிகள் தேவைப்பட்டன.
•Last Updated on ••Tuesday•, 01 •May• 2012 22:53••
•Read more...•
1
உடையார் மாமா மகா விண்ணன். அவரைச் சந்திப்பது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தரும். அவரைப்போன்று 'அச்சொட்டாக' விவசாயம் சம்பந்தப்பட்ட சங்கதிகளைப் பேச நான் வேறு ஆளைக் கண்டதில்லை. மாமா ஊரில் வாழ்ந்த காலத்தில் வயல் தோட்டம் துரவு என வசதியாக வாழ்ந்தவர். 'அரைவாசி ஊரே அவருக்குச் சொந்தமாக இருந்தது' என்று விண்ணாணம் பேசுபவர்கள் சொல்வார்கள். எப்படி இது சாத்தியமானதென ஒரு தடவை பாட்டியைக் கேட்டேன். இங்கிலீசுக்காரர் இலங்கையை ஆண்ட காலத்தில் தமது ஆட்சி அதிகாரத்தை இலகுவாக்க, மணியகாரன், உடையார், விதானையார் என்ற பதவிகளை உருவாக்கியதாகவும், பதவிக்கு வந்தவர்கள் தமது ஆட்சி அதிகாரங்களைப் பாவித்து ஊரில் உள்ள 'அடுகாணி-படுகாணிகளை' தம் வசமாக்கியதாகவும் பாட்டி சொன்னார். உடையார் மாமா வீடுகட்டியிருக்கும் 'நாவலடி வளவு' எங்கள் பாட்டனாருக்குச் சொந்தமானதென்று அம்மா சொல்லி வருத்தப்பட்டார்.
•Last Updated on ••Wednesday•, 11 •January• 2012 23:11••
•Read more...•
ஈழத்தமிழரின் புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி இதுவரையில் முறையான ஆய்வு நூலொன்று வெளிவரவில்லையே என்ற குறையினைத் தீர்த்துவைக்கின்றது தமிழகத்திலிருந்து சோழன் படைப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள தெ.வெற்றிச்செல்வனின் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்' என்னும் ஆய்வு நூல். பெயருக்கு ஒரு சில நூல்களைப் படித்து விட்டு , தங்கள் எண்ணங்களைப் பக்கம், பக்கமாக எழுதித் தள்ளும் நமது பிரபல எழுத்தாளர்களின் நுனிப்புல் மேய்தல் போலில்லாது உண்மையிலேயே மிகவும் சிரமமெடுத்து, இயலுமானவரையில் நூல்களைத் தேடிப்பிடித்து இந்த ஆய்வு நூலினைப் படைத்துள்ள வெற்றிச்செல்வனின் இந்த முயற்சி மிகுந்த பாராட்டுதற்குரியது மட்டுமல்ல இத்துறையில் விரிவான , எதிர்கால ஆய்வுகளுக்கும் வழிவகுக்கும். அந்த வகையில் இந்த நூலுக்கு முக்கியத்துவமுண்டு.
•Last Updated on ••Sunday•, 14 •October• 2012 22:58••
•Read more...•
[ஈழத்து எழுத்தாளர்களில் தனக்கென்றொரு பாணியை உருவாக்கி, தனக்கென்றொரு முகாமை உருவாக்கி வெற்றி நடை போடுபவர் எஸ்.பொ. என்று அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை அவர்கள். இவருக்கு அண்மையில் அவரது வாழ்நாள் இலக்கிய சேவையினைக் கெளரவிக்கும் முகமாக கனடாவிலிருந்து இயங்கும் 'தமிழ் இலக்கியத் தோட்டம்' என்னும் அமைப்பு 2010ற்கான இயல் விருதினை வழங்கிக் கெளரவித்தது. எஸ்.பொ. அவர்கள் தனது மித்ர பதிப்பகம் மூலம் தமிழ் எழுத்தாளர்கள் பலரின் நூல்களைப் பதிப்பித்து வருகின்றார். இவரது பதிப்பகத்தின் மூலம் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பொன்று 'பனியும் பனையும்' என்னும் தலைப்பில் வெளியாகிப் பலரின் பாராட்டுதல்களையும் பெற்றதைத் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் அறிவர். மேற்படி நூலினை 'நூலகம்' இணையத்தளத்தில் வாசிக்க முடியும். மேற்படி நூலின் நுழைவாயிலில் எஸ்.பொ. எழுதிய குறிப்புகளையும், நூலிற்கான 'நூலக' இணையத் தொடர்பினையும் 'பதிவுகளி'ன் வாசகர்களுக்காக இங்கு தருகின்றோம். மேற்படி நூலில் எஸ்.பொ. அவர்கள் சிறுகதைகளை புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் வாழும் நாடுகளுக்கேற்ப வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை இவ்விதமே அணுக வேண்டுமென்பதே எமது கருத்தும். - பதிவுகள் ]
•Last Updated on ••Thursday•, 23 •June• 2011 14:11••
•Read more...•
மீள்பிரசுரம்: 'கூர் 2011' மலரிலிருந்து. [இந்தக் கட்டுரை எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகவும், எழுத்தாளர் டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டு தோறும் வெளிவரும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலருக்காக எழுதப்பட்டது. மேற்படி மலரில் ஒரு சில பிழைகள் ஏற்பட்டு விட்டதன் காரணமாக அவ்விடங்களில் அர்த்தங்கள் மாறுபட்டும், மயக்கம் தருவதாகவும் காணப்படுவதால் இக்கட்டுரையினை இங்கு மீள்பிரசும் செய்கின்றோம். மலரில் வெளியான கட்டுரையில் காணப்படும் முக்கியமான குறைகளாக பந்திகள் ஒருங்கிணைக்கப்பட்டமை, வார்த்தைகள், வசனங்கள் தவறிப் போனமை மற்றும் அடைப்புக் குறிகள் சில இடம் மாறி இடப்பட்டுள்ளமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அத்துடன் புறக்கணிக்கக் கூடிய தவறுகளாக எழுத்து, இலக்கணப் பிழைகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆயினும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலர் மிகவும் காத்திரமானதொரு மலராக வெளிவந்திருக்கின்றது. கனடாத் தமிழ் இலக்கியவுலகில் தவிர்க்க முடியாததொரு தொகுப்பிதழ் 'கூர்' கலை இலக்கிய மலரென்று நிச்சயம் கூறலாம். - ஆசிரியர் ]
•Last Updated on ••Sunday•, 14 •October• 2012 22:59••
•Read more...•
••Sunday•, 03 •April• 2011 19:17•
??- குருபரன் கனகசபை (கனடா) -??
இ(அ)க்கரையில்...
உலகம்
இனியும் ஆயிரம் நித்தியானந்தாக்கள் பிறக்கத்தான் போகின்றார்கள் அவர்களின் பின்னால் ஆயிரமாயிரமாய் மக்கள் திரளத்தான் போகின்றார்கள் ஓரிரு கிருஸ்ணமூர்த்திகளும் இனிமேலும் பிறக்கத்தான் போகின்றார்கள் அவர்கள் யாரென்று அறியப்படாமலே மறையத்தான் போகின்றார்கள்
•Last Updated on ••Sunday•, 03 •April• 2011 19:48••
•Read more...•
|