பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

நூல் அறிமுகம்

முருகபூபதியின் 25 ஆவது நூல் 'நடந்தாய் வாழி களனி கங்கை'

•E-mail• •Print• •PDF•

முருகபூபதியின் 25 ஆவது நூல்  'நடந்தாய் வாழி களனி கங்கை'கொழும்பு - பார்ப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை சொல்லும் ஒரு மண். இலங்கையின் தலைநகர் என்பதற்கு அப்பால் இலங்கையின் சரித்திரத்தில் மிக முக்கியத்துவம் கொண்ட ஒரு மாநகரம். இலங்கை வாழ் தமிழரைப் பொறுத்தவரையிலும் கூட அவர்களின் தாயகம் வெவ்வேறு நகரங்களாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் கடந்த காலங்களில் அவர்களின் கதையோடு இணைந்துவிட்ட ஒரு ஊர் அது.

தமிழர் சந்தித்த கலவரங்கள் பெரும்பாலும் மையம் கொண்ட இடமாக கொழும்பு இருந்துள்ளது. அவர்களது வாழ்விடமாக அது இருந்துள்ளது. அவர்களுக்கு பொருளாதார ரீதியாக வளம் கொடுத்த மண்ணாக அது இருந்துள்ளது.

வடக்கு - கிழக்கில் இருந்தும் மலையகத்தில் இருந்தும் தலைநகர் வாழ்க்கையை நோக்கி ஓடிவருவோருக்கு கொழும்பு காண்பிக்கும் கோலங்கள் பல. ஆனால், எங்களைவிட, கொழும்புக்கு அண்மித்த நகரான நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி அண்ணனுக்கு அது கொடுத்த காட்சிகள் வேறானவை. அனுபவங்கள் வேறானவை.

அவற்றைக் கொண்டு கொழும்பின், அதன் அடிநாதமான களனி கங்கையின் தீரத்தில் நடந்த நிகழ்வுகளை இங்கு காவியமாக வடிக்க அவர் முயற்சித்திருக்கிறார்.

வீரகேசரி பல எழுத்தாளர்களை விளைவித்த ஒரு களம். அங்கு உருவானவர்களில் மிகவும் முக்கியமானவர்களில் ஒருவர் முருகபூபதி அண்ணர். அவர் அங்கு பணியாற்றிய காலத்தில் நான் அங்கு இல்லை.

ஆனால், அவரோடு அந்தக் காலங்களில் பணியாற்றிய பலர் பெரும் ஆளுமைகள். ஆனால், அவரது அனுபவம், கற்கை ஆகியன வெறுமனே வீரகேசரியை மாத்திரம் மையம் கொண்டவை அல்ல. அதனையும் கடந்து தான் பிறந்த மண்முதல் தான் இப்போது வாழும் ஆஸ்திரேலியா வரை உலகெங்கும் அவர் கண்ட அனுபவங்கள் அவரது எழுத்தில் தெரியும்.

•Last Updated on ••Thursday•, 04 •February• 2021 11:52•• •Read more...•
 

அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள்!

•E-mail• •Print• •PDF•

- நடேசன் -'ஆயிரத்தொரு இரவுகள்'  என்ற புனைவைப் பற்றி நாம் கேட்டிருப்போம். ஃபிரேம் (Frame) வகையான கதை சொல்லல் முறையில்,  அதாவது திரைப்படத்திற்கான  காட்சிகள்  ஒன்று – இரண்டு என எழுதப்படுவதுபோல் கதைக்குள் கதை வைத்துக் (Genre )கதை சொல்லல்.

ஆயிரத்தொரு இரவுகள்  அரபிக் கதையல்ல.  இந்தியாவிலிருந்து மேற்காக நகர்ந்தது . பஞ்சதந்திரம் மற்றும் ஜாதகக்கதைகள் இப்படியான பிரேம் கதைகளாக உருவாகி பாரசீகத்துடாக அரேபிய வியாபாரிகளால்  வியாபாரப் பொதிகளோடு எடுத்துச் செல்லப்பட்டது.  இப்படியான கதை சொல்லல் ஐரோப்பாவுக்குச் சென்று அங்குள்ள எழுத்தாளர்கள் மீது தாக்கத்தை உருவாக்கியது . கன்ரபரி கதைகள் (The Canterbury tales) போன்றவை ஆயிரத்தொரு இரவுகளின்  தாக்கமே .

மாலையில் கன்னிப்பெண்yணை திருமணம் செய்து,  இரவில் புணர்ந்து விட்டு கொலை செய்யும் பக்தாத் அரசனிடமிருந்து ( Caliph of Baghdad- Harin el- Rashid 786-809) ஷரசாட் (Shahrazad) என்ற மந்திரியின் பெண்  உயிர் தப்புவதற்காக அரசனின் கட்டிலின் கீழ் உள்ள தங்கைக்குச் சொன்ன கதைகளின் தொகுப்பே ஆயிரத்தொரு இரவுகள் . ஒவ்வொரு இரவிலும் கிளைமாக்ஸில் கதை நிறுத்தப்படும்.  ஆனால்,  அதைக் கேட்பதற்காக அரசன் அடுத்த நாள் காத்திருப்பதால் கொலை நடக்காது. இப்படி ஆயிரத்தொரு இரவுகளின் பின்பு அரசன் திருந்தி ஷரசாட்டை மணமுடிக்கிறான்.

அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள்  அவரது சுயசரிதை . அந்த சுயசரிதை தமிழகத்தில் மாத சஞ்சிகைகளில்  சிறுகதைகளாக வெளிவந்தது.  வெவ்வேறு துண்டுகளாக நான் படித்திருந்தேன் . ஒன்றாகவே படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது,   அவரது நினைவுகளைக் கதைகளாக்கி அதற்குள் கதையை வைத்துள்ளது,  எனக்கு உயிருக்குப் பயந்து ஷரசாட் சொன்ன கதைகளை நினைவூட்டியது. இதை நான் சொல்லக் காரணம் ஒவ்வொரு பகுதியிலும் சுவை குன்றாது எழுதியிருக்கிறார் . அத்துடன் ஒவ்வொரு கதையிலும் உள்ளே பல உப கதைகளை உள்ளே          ( there are frame stories that contain nested narratives.) வைத்திருக்கிறார்.

•Last Updated on ••Monday•, 04 •January• 2021 21:57•• •Read more...•
 

சு. குணேஸ்வரனின் “மண்ணில் மலர்ந்தவை” இலக்கியக் கட்டுரைகள் - ஒரு பார்வை

•E-mail• •Print• •PDF•

சு. குணேஸ்வரனின் “மண்ணில் மலர்ந்தவை” இலக்கியக் கட்டுரைகள் - ஒரு பார்வை-     பா. இரகுவரன் -சு. குணேஸ்வரன் எழுதிய “மண்ணில் மலர்ந்தவை” என்ற நூல் அண்மையில் கிடைக்கப் பெற்றேன். முன்அட்டைப்படமாக தொண்டைமானாற்றின் அருகாமையில் மரபுரிமைச் சின்னமாக அமைந்திருக்கும் கரும்பாவளிக்கேணி மிக அழகாக அச்சில் பதிவாக்கப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் Book Lab இன் வெளியீடாக வந்துள்ள இந்த நூலை, யாழ்ப்பாணம் “குரு பிறின்டேர்ஸ்” மிகச் சிறப்பாக அச்சாக்கம் செய்துள்ளது.

சமூக முன்னோடி ஓய்வுபெற்ற அதிபர் திரு செ. சதானந்தன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூலில், சிறுகதை பற்றிய இரண்டு கட்டுரைகளும் நாவல் பற்றிய மூன்று கட்டுரைகளும் கவிதைத் தொகுதிகள் பற்றிய ஆறு கட்டுரைகளும் “கரும்பாவாளி” ஆவணப்படம் மற்றும் “ஆஸ்திரேலியவில் தமிழ் கற்பித்தல்” ஆகிய கட்டுரைகளுடன் கலை இலக்கிய ஆளுமைகளான கவிஞர் மு. செல்லையா , வே. ஐ வரதராஜன், கண. மகேஸ்வரன், நந்தினி சேவியர், பேராசிரியர் செ. யோகராசா ஆகியோர் பற்றிய ஐந்து கட்டுரைகளுமாக மொத்தம் பதினெட்டுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

சிறுகதைகள் பற்றி…

இந்த நூலில் முதலாம், மூன்றாம் கட்டுரைகள் ‘குந்தவை’ (சடாட்சரதேவி) என்ற புனைபெயர் கொண்ட தொண்டைமானாற்றைச் மூத்த பெண் எழுத்தாளரின் சிறுகதைகள் பற்றியதாக அமைந்துள்ளன. “யோகம் இருக்கிறது”, “ஆறாத காயங்கள்” ஆகிய சிறுகதைத் தொகுதிகளைத் தந்த குந்தவையின் “பாதுகை” என்ற சிறுகதை பற்றி முதலாவது கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட மகனை இழந்த ஒரு தாயின் அவல நிலையை “பாதுகை” என்ற சிறுகதை வெளிப்படுத்தி நிற்பதை குணேஸ்வரன் சிறப்பான முறையில் பதிவு செய்திருக்கிறார்.

•Last Updated on ••Friday•, 18 •December• 2020 21:59•• •Read more...•
 

திருமதி. பெரேரா - புதிய நூல் வெளியீடு

•E-mail• •Print• •PDF•

திருமதி. பெரேரா' எனும் எனது சமீபத்திய மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. இலங்கையில், யாழ்ப்பாணத்திலுள்ள  'ஆதிரை பதிப்பகம்' இந்த சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது. சிங்கள இலக்கியவுலகின் நவீன தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான இஸுரு சாமர சோமவீரவை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முடிந்ததிலும், அவரது சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து, அது ஒரு நூலாக வெளிவருவதையிட்டும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

'திருமதி. பெரேரா' எனும் இந்தத் தொகுப்பில் இதுவரையில் சிங்கள மொழியில் வெளிவந்துள்ள அவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. 'திருமதி. பெரேரா' எனும் இந்த நூலை முழுமையாக வாசித்து முடிக்கும்போது சிறுகதைகளால் பின்னப்பட்ட ஒரு நாவல் போல இந்தத் தொகுப்பை நீங்கள் உணரக் கூடும். காரணம், ஒரு சிறுகதையில் சிறு கதாபாத்திரமாக வந்து போகும் நபர், அடுத்தடுத்த சிறுகதைகளில் பிரதான கதாபாத்திரமாக தனது கதையைச் சொல்லியிருப்பார். இந்தக் கதாபாத்திரங்களோடு கை கோர்த்துக் கொண்டு நீங்களும் இறப்பர் தோட்டங்களில், நீரணங்குத் தீரங்களில், நகரத்துத் துணிக்கடைகளில், சேனைப் பயிர்நிலங்களில், ரயில் நிலையங்களில், பிணங்கள் மிதந்து செல்லும் ஆற்றின் கரைகளில், போர் தின்ற நிலங்களில், விகாரை பூமியில் என ஒன்றுக்கொன்று வித்தியாசமான தளங்களில் ஒரு சஞ்சாரியாகத் திரியலாம்.

மிகவும் சூட்சுமமாக, மனித ஜீவிதத்தில் யாரும் காணும் எனினும் எவருக்கும் தென்படாத அல்லது எவராலும் கண்டுகொள்ளப்படாத விடயங்களை, இஸுரு தனது சிறுகதைகளின் மூலமாக மனித உள்ளங்களின் மென்மையான இடங்களைத் தொட்டு, காண்பித்திருக்கிறார். கதையை, கதை சொல்லும் விதத்தை, கதைக்குத் தேவையான மொழிநடையை சரியான விதத்தில், சரியான இலக்கில் குவித்து எழுதும்போது சிறுகதை வழியே சாதாரண ஒரு விடயத்தைக் கூட, மிக ஆழமாக உணரச் செய்யலாம் என்பதற்கு  இந்தத் தொகுப்பிலுள்ள இஸுருவின் சிறுகதைகளை உதாரணமாகக் கொள்ளலாம்.

•Last Updated on ••Thursday•, 10 •December• 2020 00:26•• •Read more...•
 

மண்ணில் மலர்ந்தவை – புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு

•E-mail• •Print• •PDF•

மண்ணில் மலர்ந்தவை – புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு

நவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும். இவர் இதுவரைக்கும் “மூச்சுக்காற்றால் நிறையும்வெளிகள்” (2008), “அலைவும் உலைவும்” (2009), “புனைவும் புதிதும்” (2012), “உள்ளும் வெளியும்”(2014), “இலக்கியத்தில் சமூகம் – பண்பாடு சார் கட்டுரைகள்” ( 2016), “அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்” (2016), ஆகிய ஆறு நூல்களை வெளியிட்டுள்ளார். “மண்ணில் மலர்ந்தவை – இலக்கியக் கட்டுரைகள்” இவரது ஏழாவது நூல் வரவாகின்றது. இவரது தொடர்ச்சியான தேடலுக்கும் ஓய்வற்ற செயற்றிறனுக்கும் இந்நூல் வரவுகளே சான்று பகருவனவாகும்.

•Last Updated on ••Friday•, 13 •November• 2020 03:03•• •Read more...•
 

முன்னுதாரணமான முயற்சி செ. யோகநாதன் (நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்புக்கு எழுதிய அணிந்துரை)

•E-mail• •Print• •PDF•

செ.யோகநாதன்- எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலுக்குச் சிறப்பானதோர் அணிந்துரையினை எழுத்தாளர் செ.யோகநாதன் எழுதியிருந்தார். அவரை நான்  ஒருபோதுமே சந்தித்ததில்லை. அவரது படைப்புகள் மூலமே அவரை அறிந்திருக்கின்றேன். இருந்தும் அவர் அந்நூலுக்கு அணிந்துரை எழுதியதை எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூர்வேன். இதற்காக நூலைத் தமிழகத்தில் வெளியிட்ட ஸ்நேகா பதிப்பகத்தாருக்கு என் நன்றி.

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு பற்றி இதுவரையில் நானறிந்தவரையில் கணையாழி (தமிழகம், தொல்லியல் அறிஞர் எஸ். ராமச்சந்திரன் எழுதியது), டெய்லி நியூஸ் (கே.எஸ்.சிவகுமாரன் எழுதியது), Friday (கே.எஸ்.சிவகுமாரன் எழுதியது)  மறுமொழி (கனடா- 'அசை'சிவதாசன் எழுதியது), இ-குருவி (கனடா) , லக்பிமா (காத்யானா அமரசிங்க நூல் பற்றி எழுதிய விரிவான கட்டுரை) ஆகியவற்றிலேயே விமர்சனங்கள் பிரசுரமாகியுள்ளன. ஆனால் இந்நூலைப் பலர் தம் ஆய்வுகள் பலவற்றுக்குப் பாவித்துள்ளார்கள்.  நூல் பற்றிய விமர்சனங்களை வெளியிட்ட ஊடகங்கள் அனைத்துக்கும் நன்றி. நூலுக்கு எழுத்தாளர் செ.யோகநாதன் எழுதிய சிறப்பான அணிந்துரையினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். - வ.ந.கிரிதரன் -


வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்துதமிழர் இலங்கையில் பண் பாட்டு வளர்ச்சி பெற்ற மக்களாய் வாழ்ந்து வந்திருக்கிறாரென்பதற்கு உறுதியான வரலாற்றுச்சான்றுகள் உள்ளன. கி.மு. மூன்றாம்நூற்றாண்டு காலத்துதமிழ் பிராமிக்கல்வெட்டுகள் அகழ்வாராய்வில் ஈழத்தமிழ்ப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கந்தரோடை, ஆணைக் கோட்டை ஆகிய இடங்களில் நிகழ்ந்த அகழ்வாராய்வுகள் பெருங் கற்கால (MEGALTHC)நாகரிக மக்களாய்தமிழர்வாழ்ந்து, வளர்ச்சியும் பண்பாட்டு மேன்மையும் பெற்ற விதத்தினை உறுதி செய்கின்றன. தமிழகத்தில் ஏற்பட்ட அதே விதமான நாகரிகம், பண்பாட்டு வளர்ச்சி என்பன, மேற்கூறிய காலப்பகுதியில் இலங்கையின் பாரம்பரித் தமிழ்ப்பிரதேசத்தில் இருந்து, தென்னிந்திய நாகரிகத்திற்கு சமனாக வளர்ச்சியும், பண்பாட்டுப்பாய்ச்சல்களும், கல்வெட்டுகளும் போதிய உறுதியைக் கொடுக்கின்றன. கடல்வழி வாணிபம், ஈழத்தமிழரோடு ரோமர்கள் கொண்டிருந்தனர், அராபிய, சீனருடனான வணிக உறவு களையும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் முதிர்ந்த பண்பாட்டு வளர்ச்சி பெற்றிருந்த ஈழமக்கள்நடத்தியதற்கான பதிவுகளும் உள்ளன.

•Last Updated on ••Monday•, 12 •October• 2020 15:03•• •Read more...•
 

படுகொலைகளை எழுதுதல்: ரவியின் ‘குமிழி’ நாவல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!

•E-mail• •Print• •PDF•

"வரலாற்றைக் காட்டிலும் நினைவு என்பது மிகவும் சிக்கல்கள் நிறைந்த நிகழ்வாகும் "– தீபேஷ் சக்ரபர்த்தி (வரலாற்றாசிரியர்)

சுவிஸ் ரவியின் குமிழிசுமார் 25 வருடங்களுக்கு முன்பு ஈழத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த  தினமுரசு இதழில் ‘அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை’ என்ற தொடரினை எழுதும்போது தோழர் அற்புதன் அதனை  பின்வருமாறு ஆரம்பிக்கிறார். “’அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை’  என்னும் இந்த அரசியல் தொடரில் தமிழர் போராட்ட வரலாற்றை விரிவாக விளக்குவது என் நோக்கமல்ல. அது ஒரு கடினமானதும் கால அவகாசம் தேவையானதுமான சுமையான முயற்சி. மாறாக இத்தொடரில் முக்கியமான அரசியல்வாதிகளது கொலைகள் பற்றியே சொல்லப்படும்.அவற்றை ஓட்டி அந்தக் கொலைகள் நடந்த காலச் சூழலின் அரசியல் வெப்ப தட்ப நிலைகள் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப்படும்.” –  இன்று தோழர் அற்புதன் படுகொலை செய்யப்பட்டு சுமார் 2௦ வருடங்களுக்கு மேலாகின்றன. ஆயினும் அவர் கூறியபடி ஈழ விடுதலைப் போராட்ட வரலாறானது இன்னமும் எழுதப் படாமலேயே இருக்கின்றது. இப்போராட்ட வரலாறு குறித்து இதுவரை ஏராளமான நூல்கள், தொடர்கள் வெளி வந்து கொண்டிருக்கின்ற போதிலும் அவைகள் அனைத்துமே வெறும் சாட்சியங்களாகவும் அனுபவங்களாகவும்  மட்டுமே எஞ்சி நிற்கின்றன. சி.புஷ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ கணேசன் ஐயரின் ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ செழியனின் ‘வானத்தைப் பிளந்த கதை’  தமிழினியின் ‘கூர்வாளின் நிழலில்’ என்று விரல் விட்டு என்ன முடியாதளவிற்கு சாட்சியங்களினால் நிறைந்திருக்கும் ஈழ விடுதலைப் போராட்ட நூல்கள் ஒரு குறிப்பிட்ட மனிதரின் அனுபவங்களை  அல்லது ஒரு ஒரு குறிபிட்ட காலப்பகுதியில் இடம் பெற்ற சம்பவங்களை  மட்டுமே மீண்டும் மீண்டும் கூறி நிற்கின்றன.

இப்போது மீண்டும் ஈழ விடுதலைப் போரின் சாட்சியமாக புதியதொரு  நூலாக  ரவி எழுதிய ‘குமிழி’ என்ற நாவல் வெளிவந்துள்ளது. ‘விடியல்’ பதிப்பகத்தினரால் மிகக் குறைந்த எழுத்துப் பிழைகளுடன் பதிப்பிக்கப்பட்டுள்ள 225 பக்கங்களை உள்ளடக்கிய இந்நாவலில் ரவி, ஈழ விடுதலைப் போரில்  தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஒரு Semi Autobiography  வடிவில் எழுதியுள்ளார்.

•Last Updated on ••Saturday•, 10 •October• 2020 21:09•• •Read more...•
 

வாழ்த்துகிறோம்: மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) தமிழ் மொழிபெயர்ப்பு!

•E-mail• •Print• •PDF•

 மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) தமிழ் மொழிபெயர்ப்பு!

பதிவுகள்' இணைய இதழில் தொடராக , முனைவர் ஆர்.தாரணியின் மொழிபெயர்ப்பில் வெளியான மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) நாவல் தற்போது நூலாகத் தமிழகத்தில் எழிலினி பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.

•Last Updated on ••Sunday•, 13 •September• 2020 23:42•• •Read more...•
 

அல்பேட் காமுவின் (Stranger) அந்நியன்

•E-mail• •Print• •PDF•

- நடேசன் -அக்கால செக்கோஸ்லேவியாவில் பணம் சேர்ப்பதற்காக ஒரு இளைஞன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். பல வருடங்கள் பணத்தைச் சேர்த்து, திருமணமாகி குழந்தையுடன் குடும்பஸ்தனாகிறான். பணத்துடனும் மனைவி குழந்தையோடு தனது பிறந்த வீட்டை நோக்கிப் புறப்படுகிறான். ஊரை அடைந்தபோது குழந்தையையும் மனைவியையும் ஒரு ஹோட்டலில் விட்டு விட்டு, தனது வீட்டை நோக்கிச் சென்றபோது, அங்கு அவனது சகோதரியும் தாயும் அந்த வீட்டை ஹோட்டேலாக நடத்துகிறார்கள். அவர்கள் அவனை அடையாளம் காணவில்லை. தன்னை அடையாளம் காட்டாமல் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்ததுடன் தனது பணத்தை அவர்களுக்குக் காட்டினான். அன்றிரவு தாயும் சகோதரியும் அவனைக் கொலை செய்து பணத்தைத் திருடினார்கள். அடுத்த நாள் கணவனைத்தேடி வந்த மனைவி அவனை அடையாளம் சொன்னபோது தாய் கயிற்றில் தொங்கி உயிர்விட்டார். சகோதரி கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்தார்.

இந்த சம்பவம் வெளிவந்திருந்த பத்திரிகையைச் சிறையில் பல தடவை மீசோல்ட என்ற அல்பேட் காமுவின் (Albert Camus)) கதாநாயகன் படிப்பதாக The Stranger(அந்நியன்)என்ற நாவலில் வருகிறது. சாதாரணமான பத்திரிகை செய்தியாக ,
இந்தச் சம்பவம் சொல்லப்பட்டபோதும் பல கோணங்களில் மனிதர்களது உறவுகளை நமக்குச் சிந்திக்க வைக்கிறது.

இருத்தலியல் கோட்பாட்டின் குருவாகிய அல்பேட் காமுவின் இரு புத்தகங்களில் படிக்கக் கிடைத்தது. பிளேக் எனப்படும் கொள்ளை இருத்தலியலின் முன்னுதரணமாகதாகவும் அந்நியன் அதற்கு எதிராக எப்படியும் வாழமுடியும் என வாழ்வானது மனஓடையை நமக்குக் காட்டும் நாவலாக அமைந்துள்ளது.

•Last Updated on ••Sunday•, 06 •September• 2020 22:32•• •Read more...•
 

நூலாய்வு – ‘நிறங்களின் மொழி' ,'நிறங்களின் உலகம்'

•E-mail• •Print• •PDF•

       முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.'நிறங்களின் மொழி' ,'நிறங்களின் உலகம்' என்ற புதினம் இரு ஆளுமைகளின் இரண்டு படைப்புகள் அடங்கியது. இதனை, ஆனந்த விகடன் ஒரு தொகுப்பினுள் முன் பாதி, பின் பாதியாக ஓவியங்களுடன் வெளியிட்டுள்ளது. நிறங்களால் மொழியையும் உலகத்தையும் படைத்துள்ள படைப்பாளர்களின் ஓவியங்கள் அட்டையில் இடம் பெற்றுள்ளன.

மனோகர்தேவதாஸ் ஓவியம் வரைவதில் வல்லவர். பார்வை இழந்த நிலையிலும் இவரது தூரிகை மிக நேர்த்தியாக வண்ணங்களைக் காட்சிப்படுத்துகிறது. வண்ணங்களை வடிவங்களாக்கி தனது நினைவு மண்டலத்திற்குள் வசப்படுத்தியுள்ள இவரது ஓவியங்கள் அத்தனையும் அருமை.

பார்வை இருந்த போது தான் கண்ட இடங்கள் பழமையான, மதுரை ஆட்சியர் அலுவலகம், மாநகர வீதி, உயர்ந்த மாடங்கள், மயில், மயிலிறகு, வண்ணத்துப் பூச்சிகள், மல்லிகைப் பூக்கள், மாடுகள், நாய், கழுதை, இயற்கைக்காட்சிகள் எனப் பல்வேறு பரிமாணங்களில் பார்வையற்றபோதும் இவரது தூரிகையின் 'நிறங்களின் மொழி’யால் நம்மை வசப்படுத்துகின்றன.

•Last Updated on ••Sunday•, 23 •August• 2020 11:02•• •Read more...•
 

நூல் அறிமுகம்: தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள்- நடேசன் -எழுவைதீவில் இருந்த காலத்தில் நான் கேட்டு வளர்ந்த பல தமிழ்ச் சொற்களை பின்பு அரைநூற்றாண்டுகளாக நான் கேட்டதில்லை. அதனால் அவை மூளையில் புதைபொருளாகிவிட்டன. தமயந்தி எழுதிய ஏழு கடல்கன்னிகள் என்ற சிறுகதைத் தொகுப்பின் பக்கங்களில் அந்த சொற்கள் மீண்டும் எழுந்து வந்தபோது மனம் புல்லரித்தது.

மீனவர்கள் மத்தியில் வளர்ந்தேன். சோளகம் , வாடை என்று பருவக்காற்றைச் சொல்வதும், அணியம் – சுக்கான் என மீன் பிடிக்கும் வள்ளங்களின் பாகங்களைக் குறிப்பதும், படுப்புவலை களங்கண்டி மீன்பிடிக்கும் முறையை அவர்கள் வர்ணிப்பதையும் மற்றும், அவர்களின் புழக்கத்திலிருந்த மண்டா போன்ற சொற்களையும் மறந்துவிட்டேன். இத்தொகுப்பில் மண்டாவை மீண்டும் வாசித்தபோது சிறுவயதில் ருசித்த கடற்தாமரை மீண்டும் நாக்கில் சுவையூட்டியது.

கம்யூனிசத்திற்கு எதிரான விலங்குப்பண்ணைபோல் T S எலியட்டின் புகழ்பெற்ற கொடுமையான சித்திரை மாதம் ( April is the Cruelest month) என்ற ஆங்கிலக் கவிதையும் சோவியத்தின் போல்சுவிக்குக்கு எதிராக எழுதப்பட்டது. இவை தொடர்ச்சியாக இலக்கியமாக மட்டுமல்ல சாதாரணமான மக்களது அன்றாட வார்த்தைகளிலும் வந்துவிட்டது. இலங்கையின் வடபகுதியில் இந்திய மீன்பிடி வள்ளங்கள் ஆக்கிரமித்து, கடற்சூழலை அழிப்பதற்கு எதிராக எழுதப்பட்டிருப்பதே தமயந்தியின் ஏழு கடற்கன்னிகள். நம்மைப் பொறுத்தவரை இது முதலாவது சூழலியல் இலக்கியம்

இலங்கையில் வடபுலத்தில் உள்ள ஏழு தீவுகளின் மையத்தில் வந்து கடல் நீரோட்டம் ஒன்றோடு ஒன்று மோதும்போது அலைகள் எழுந்து இயந்திர வள்ளங்களை தூக்கித் தூக்கிக் குத்தும். அப்பொழுது பயணம் செய்யும் எனக்கு வயிற்றைக் குமட்டியபடி வாந்தி வரும் . எழுவைதீவிலிருந்து ஒவ்வொரு கிழமையும் நயினாதீவுக்கு படிக்கப் போகும்போது அதை அனுபவித்தவன். கடல் என்பது உப்புத் தண்ணீர் மட்டுமல்ல. அங்கு வாழும் மீன், நண்டு, இறால் போன்ற உயிரினங்களோடு கடல் ஆமைகள், நட்சத்திர மீன்கள் போன்றவை வாழ்வதற்கான பளிங்குப்பாறைகளை உருவாக்கும் தாவரங்களையும் கொண்டது . இவற்றின் இடையே உள்ள கடல்பாசிகள் உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படையானவை. இவற்றை அழித்தால் மீன்கள் முட்டையிடாது, இறால் குஞ்சு பொரிக்காது, கடல் ஆமை வாழமுடியாது. கடல் பாலைவனமாகிவிடும்.

•Last Updated on ••Friday•, 07 •August• 2020 22:20•• •Read more...•
 

நூல் அறிமுகம்: இமயத்தின் கோவேறு கழுதைகள்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: இமயத்தின் கோவேறு கழுதைகள்- நடேசன் -இருட்டறையில் பல வருடங்கள் பாதுகாக்கப்பட்ட வைன் நாக்கில் மட்டுமல்ல, சுவை நரம்புகள் அற்று அறியமுடியாத அடித்தொண்டையிலும் சுவைக்கும். அதுபோல் பலகாலமாக எனது அலமாரியில் இருந்து பின் பெட்டிகளில் புகுந்து ஒளித்திருந்த நாவல் இமயத்தின் கோவேறு கழுதைகள். 25 வருடங்களுக்கு முன்பாக அவர் எழுதியது என்றபோது ஆச்சரியமாக இருந்தது. அதேவேளையில் அக்காலத்தில் வாசித்திருந்தால் சில மணிநேரத்தில் வாசித்துவிட்டு வைத்திருப்பேன். தற்போது வாசிப்பதற்கு ஒரு கிழமை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். நல்ல இலக்கிய வாசிப்பும் கலவி மாதிரி.

நான் அறியாத ஒரு புதிய சமூகத்தின் தரிசனங்கள், தொடர்ச்சியாக அவிழ்ந்த பாஞ்சாலியின் வண்ணச் சேலைபோல் பக்கம் பக்கமாக நகர்ந்தது. சமூகத்தின் வரலாறாக ஆரம்பத்தில் விரிந்து பின்னர், பாத்திரத்தின் அக புற செயல்களையும், அக உணர்வின் குரலோடு (Stream of Consciousness) விவரித்தபடி வாழ்வின் தத்துவத்தைச் சொல்லியபடி முடிகிறது.

மனிதர்கள் வாழ்வதற்கு இந்தப்பிறவியிலே மட்டுமே காரணங்கள் உள்ளன. இந்த உலகத்தைவிட வேறு உலகம் நமக்கு கிடையாது. அதனால் ஆவலோடு மனநிறைவாக ( Passion) வாழ்ந்து விடவேண்டும். வாழ்விற்கான காரணங்கள், வாழும் சூழ்நிலை, வயது, மற்றும் எமது நோக்கத்திற்கு ஏற்ப வேறுபடலாம். ஆனால், வாழ்வதற்கான தூண்டல்களைப் பற்றிக்கொண்டு முழுமனதோடு வாழவேண்டும் என்ற இருத்தலியலின் தத்துவத்தை இந்த நாவல் சொல்கிறது.நாவல், ஒரு கிறிஸ்துவ வண்ணாரக் குடும்பத்தில், முனைப்பான ஆளுமைகொண்ட பெண் பாத்திரமாக ஆரோக்கியத்தை உருவாக்கி, அவள் எப்படி மருமகள், பிள்ளைகள், மற்றும் கணவனுடன் மல்லுக்கட்டியபடி தனது தனித்துவத்தை நிலை நிறுத்துகிறாள் என்பதை விளக்குகிறது.வழமையான சமூகத்தால் கணவனால் அல்லல்படும் பெண் பாத்திரங்கள்( கண்மணி குணசேகரனின் கோசலை ) போல் அல்லாது தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளின் மூலம் குடும்பத்தை கொண்டுசெல்லும் பாத்திரமாக ஆரோக்கியம் வாசிப்பவர்கள் மனதில் அகற்ற முடியாதபடி உறைந்துவிடுகிறாள்.

•Last Updated on ••Friday•, 07 •August• 2020 22:20•• •Read more...•
 

நூல் அறிமுகம்: தீரதம் - நௌஸாத்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: தீரதம் - நௌஸாத்- நடேசன் -குடும்பத்தில் அமைதி நிலவவேண்டுமென்ற காரணத்தால் நான் எனது மனைவியுடன் இலக்கிய விடயங்கள் பேசுவதில்லை. ஆனால், தொடர்ந்தும் நான் எதனையாவது படித்துவிட்டு, சிரித்தபடியே இருந்தால் “ என்னவென்று…? “ கேட்பாள். அவ்வாறுதான் ஒரு தருணம் மீண்டும் வந்தது, நௌஸாத் எழுதிய தீரதம் படித்துவிட்டும் சிரித்தேன். 'என்ன விடயம்..? என்று கேட்டபோது, நௌஸாத்தின் கபடப் பறவைகள் கதையைப் பற்றி சுருக்கமாகச் சொன்னேன். இருவரும் சிரித்தோம்.

இந்தக் கதையில் வரும் ஒரு எழுத்தாளன், தனது புத்தகங்களைத்தான் தனது பொக்கிஷமாகச் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறான். ஆனால், அவனது குடும்பத்தினர் அதற்குள் பணமேதாவது இருக்கிறதா…? எனத் தேடுகிறார்கள். இறந்தவனது நாற்பதாம் நாள் செலவைச் செய்வதற்கு அவர்களுக்குப் பணம் தேவைப்படுகிறது.

அந்த எழுத்தாளன் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து அவனது ஆவி வெளியே வந்து வீட்டில் நடப்பதைப் பார்க்கிறது. அவனது நண்பர்கள் மூவர் குந்தியிருந்து இறந்த எழுத்தாளனுக்கு தாங்கள் கதை, கவிதை, என எழுதிக் கொடுத்ததாகவும் பேசிக்கொள்கின்றனர். அதில் ஒருவர், தனது சிபார்சிலேதான் அந்த எழுத்தாளனுக்கு கலாபூஷணம் பட்டம் கிடைத்ததாகவும் பேசிக்கொள்கிறார்.

குடும்பத்தினர் பணத்திற்காக அவனது அறையைத் தேடுகின்றனர். அவன் எழுதியவற்றை ஒழுங்காக வாசிக்க முடியவில்லை என்றும் ஆதங்கப்படுகின்றனர். தனது புத்தகங்களை “ எல்லோருக்கும் ஓசியில் கொடுத்து விட்டு ஒன்றே ஒன்று மிஞ்சியிருந்தது. அது அவனது சாகித்திய விருது பெற்ற கபடப்பறவைகள் கவிதைத் தொகுதி. அதன் மீது அவனது பேரக்குழந்தையொன்று பீ மூத்திரமடித்து நக்கரைத்துக்கொண்டிருந்தது( நக்கரைத்தல்......கால்களை மடித்து பூமியில் பிட்டம் பதிய நடத்தல்..அல்லது இழுபட்டுச் செல்லுதல்.....இன்னொரு கருத்து...மிக அதிகமாக ஒரு வீட்டுக்கு வருதல் ) இதற்கு மேலும் என்னால் இதுகளைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. என்று அவனது ஆவியின் உணர்வு பேசுகிறது.

என் உயிர்ப்பறவை பறந்தபின் வீட்டில் வாழும் கபடப்பறவைகளின் நடத்தைகளைக் கண்டு சகியாமல் வீரெனப்பறந்து என் புதைகுழிக்குள் புகுந்தேன்-- என்னை மௌத் ஆக்கியதற்கு மிக்க நன்றி இறைவனே . என்று துதிசெய்து கொண்டு நெடும்தூக்கத்தில் ஆழ்ந்தேன்” என நௌஸாத் அக்கதையை முடிக்கிறார்.

•Last Updated on ••Friday•, 07 •August• 2020 22:20•• •Read more...•
 

ஒரு மொழி வழிப் பயணத்தில்..: வி.இ.குகநாதனின் ‘தெரிந்தும் தெரியாத தமிழ்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்.

•E-mail• •Print• •PDF•

ஒரு மொழி வழிப் பயணத்தில்..: வி.இ.குகநாதனின் ‘தெரிந்தும் தெரியாத தமிழ்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்.- வி.இ.குகநாதன் -Covid 19 வைரஸ் பரம்பலினையிட்டு ஒரு உள்ளிருப்பு வாழ்வினை வாழ்கின்ற ஒரு நெருக்கடி மிகுந்த கால கட்டத்தில், எத்தனையோ உயிர்ப்பலிகளும் இழப்புகளும் துன்பங்களும் துயரங்களுமாகத் தொடர்கின்ற வாழ்க்கையிலும், வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்துமுகமாக சில புதிய சிந்தனைப் போக்குகளும் செயற்பாடுகளும் உருவாகி வருவது உண்மையில் மனதிற்கு ஒரு சிறிய ஆறுதலையும் ஆசுவாசத்தினையும் ஏற்படுத்தி நிற்கின்றது. இவ்வகையில் புதிய வகை எழுத்துக்களும், படைப்புக்களும் காணொளி வாயிலான உரையாடல்களும் நேர்காணல்களும் பல்வேறு தளங்களிலும் உருவாகி உலா வந்து கொண்டிருப்பதானது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயங்களாகும். (இங்கு நான் அண்மையில் உருவாகி மறைந்து போன யாழ் நூலக திறப்பு விழா குறித்த அலப்பறை உரையாடல்களையும் சர்ச்சைகளையும் கணக்கில் எடுக்கவில்லை). இவ்வகையில் இலண்டனைத் தளமாக கொண்டு இயங்கி வரும் மக்கள் கலை பண்பாட்டுக் களமானது இந்நெருக்கடி மிகுந்த காலகட்டத்திலும் மிகக் காத்திரமாக செயற்பட்டு வந்த அமைப்பாகும். அவர்களது செயற்திறன் மிக்க ஒரு வினையாற்றுகையின் வடிவமாக அவ்வமைப்பினர் தோழர் வி.இ. குகநாதனின் ‘தெரிந்தும் தெரியாத தமிழ்’ என்ற நூலினை வெளியிட்டு, உள்ளிருப்புக் காலகட்டத்தில் புகலிடத்தில் வெளிவந்த ஒரேயொரு நூலினை வெளியிட்ட பெருமையினையும் தக்க வைத்துக் கொண்டுள்ளனர், இன்று அச்சக – பதிப்பக துறைகள் முற்று முழுதாக முடங்கிப் போயுள்ள காரணத்தினால் அவர்கள் இந்நூலினை ஒரு மின்னூலாக அமேசன் இணையத்தளம் மூலமாக வெளியிட்டுள்ளனர்.

தோழர் வி.இ.குகநாதன் அவர்கள் மக்கள் கலை பண்பாட்டுக் களத்தின் முக்கியமான செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர். இடதுசாரிய, திராவிட சிந்தனைகளின் பின்புலத்தில் தனது ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அவர் தமிழ் மொழி மீதான ஆய்வுகளில் எப்போதுமோ ஒரு விரிந்ததும் ஆழமுமான பார்வையினைச் செலுத்தி வருபவர். தமிழ் மொழி மீதான பற்றுதலை பலரும் இன்று மொழி வெறியாக இனவெறியாகக் கட்டமைத்து வரும் இக் கால கட்டங்களில் குகநாதன் வரலாற்று ரீதியான ஆய்வு முறைமையின்படி நம்பகத்தன்மையான ஆதாரங்களின் அடிப்படியில் வெளிப்படுத்தி வருபவர். அத்துடன் இன்று சமூக அரசியல் தளங்களில் தமிழின் மீதான சிதைப்புக்களை இருட்டடிப்புக்களை அம்பலப்படுத்தி அதற்கெதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருபவர். வினவு, கீற்று, குளோபல் தமிழ் நியூஸ், இனியொரு, புதிய கலாச்சாரம் போன்ற இதழ்களில் தொடர்ந்தும் எழுதி வரும் இவரது இரண்டாவது நூலாக இந்நூல் அமைகின்றது. அவரது முதலாவது நூலாக ‘கிரந்தம் தவிர்’ என்ற நூல் பல வருடங்களுக்கு முன் வெளி வந்ததினையும் இங்கு குறிப்பிடுவது அவசியம்.

‘தெரிந்தும் தெரியாத தமிழ்’ – ஒரு சிறு திகைப்பினை ஏற்படுத்தி நிற்கும் தலைப்புடன் வெளிவரும் இந்நூலானது ஒரு தொகுப்பு நூல் என்று கூறுவதே மிகப்பொருத்தமானதாகும். பல்வேறு அறிஞர்களும் சிந்தனையாளர்களும் வெளியிட்ட கருத்துக்களினதும் அவர்களிடையே இன்றளவும் உலா வரும் விவாதங்களினதும் தொகுப்பாக, ஆனால் சாதாரண மக்களும் வெகு எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக குகநாதன் இந்நூலினை எழுதியுள்ளார். அதுவே இந்நூலின் சிறப்பெனவும் குறிப்பிடலாம். இந்நூலினை இவர் 5 படலங்கலாக அதாவது அத்தியாயங்களாக எழுதியுள்ளார்.

•Last Updated on ••Thursday•, 09 •July• 2020 15:14•• •Read more...•
 

உமையாழின் `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை

•E-mail• •Print• •PDF•

நான் என்னும் பெருங்கனாக் கொண்ட உமையாழின் எழுத்துக்கள் ஏற்கெனவே எனக்கு பரிச்சயமானவைதான். வழமையாக எனக்குக் கிடைத்த எழுத்துக்களிலிருந்து சற்று மாறுபட்ட, சுவாரஸ்யமான அந்த எழுத்துக்களில் ஒருவித வசீகரம் இருக்கிறது. நேர்மை இருக்கிறது. பெண்களை மதிக்கும் தன்மை இருக்கிறது. பெண்களின் மீதான கரிசனை இருக்கிறது.

இந்த உமையாழ் என்ற பெயரும் பெண்கள் பற்றிய உமையாழின் பல்விதமான பதிவுகளும் இவரொரு பெண்ணா ஆணா என்ற குழப்பத்தையும் அவ்வப்போது என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. எதுவாயினும் எவராயினும் என்ன? உமையாழின் எழுத்துக்கள் எனக்குப் பிடித்தன. ஒரு பொழுதில் ஒன்று விடாமல் படித்துத் தீர்த்தேன்.

அந்த வகையில் சில ஆண்டுகள் கழித்து என் கரம் கிட்டிய உமையாழின் `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை` நூலை பெரும் ஆவலுடன் கைகளில் எடுத்தேன்.

அட்டைப்படம் ஆர்ப்பட்டமில்லாத, அமைதியானதொரு நீரோவியம். அதை வரைந்தவர் பற்றியோ, வடிவமைத்தவர் பற்றியோ எந்த ஒரு குறிப்பையும் புத்தகத்தில் நான் காணவில்லை. ஒருவேளை றஷ்மியாக இருக்கலாம்.

பின்னட்டையில் உமையாழின் படத்துடன்

எங்களூரின் மொழியும், இந்தத் தமிழை நாங்கள் உச்சரிக்கும் முறையும் எனக்கு எப்போதும் உவப்பானது. கொஞ்ச நாட்களாக என்னுடைய தனிப்பட்ட பாவனையில் இருந்து நழுவிக்கொண்டிருக்கும் அந்தத் தமிழை, எழுதிக் கடக்கிற போது நான் அடைகிற ஆனந்தம் அளவிட முடியாதது. அவற்றின் எச்சங்களை நான் பதிவுசெய்ய வேண்டாமா! போலவே அரேபிய பாலைவனங்களில் அலைந்த திரிந்த ஆறாண்டுகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகளும் ஆச்சரியங்களையும் நான் எங்கே போய் வெளிப்படுத்துவேன்! இப்போது, நீலக்குளிர் பிரதேசம் எனக்குள் பொழிகிற, உறைய வைக்கும் இந்தக் குளுமை எனக்கானதுதானா! அல்லது நான் ‘வேரோடி’ எனது கரையை போய்ச் சேர்ந்து விட வேண்டுமா?

கடந்து வந்த நிலமெல்லாம் பெரும் ஆச்சரியங்கள்தான். ஆகவே நிலங்களை எழுதுவதுதான் எனது பணியாக இருக்கிறது. அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்தக் கதைகளுக்குள் உலவுகின்ற மனிதர்கள் எங்கிருந்து வந்து சேர்ந்தவர்கள்!  அவர்களுக்கும் எனக்குமான பந்தம் என்ன என்கிற கேள்விகள்தான் என்னை அலைக்கழிக்கின்றன.

என்ற உமையாழின் மனவரிகள் பதிக்கப் பட்டிருக்கின்றன.

•Last Updated on ••Tuesday•, 30 •June• 2020 16:49•• •Read more...•
 

தறி நாடா : சுப்ரபாரதிமணியன் நாவல்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்1971ல் திருப்பூரில் நடந்த நெசவாளர் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாவல். நெசவாளர்கள் பற்றிய நாவல்கள்  தமிழில் குறைவுதான். அதில் இதுவும் ஒன்று

இந்த லாரியை கொஞ்சம்  நகர்த்தி நிறுத்தி நிறுத்துங்கப்பா.. பாவு நீட்டணும்.

ரங்கசாமி கூறினார்.

” ஏய் யாரப்பா.. அது ரோடு . எங்களுக்கும் சொந்தம் தான் நீங்க வேற  எடம் பாரப்பா “ என்ற கவுண்டரின் பதில் இடையில் பேச வந்த  ரங்கசாமியின் மனைவி நாகமணி ஏதோ கூற வந்தவளை ஜாடை காட்டிப் பேசாதிரு என்றார் .ரங்கசாமி.


இது நாவலில் ஒரு பகுதியில் வருவது.

இவர்கள் பொதுவாகவே எதிப்பு சக்தியற்ற கூட்டம்.  கைத்தறி நெசவாளர்கள போராட்ட குணம் இல்லாதவர்கள் என்ற நிலையில் இல்லாமல் கூலியை உயர்த்திக் கொடு என்ற போராட்டம் தொடங்குகின்ற சமயம்  அவர்கள் மனநிலை வெவ்வேறானது.

நெசவாளர்களின் வாழ்க்கை என்பது தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழ்கின்ற அப்பாவி மக்கள். சினிமா சீட்டாட்டம் அமாவாசை நாளைக்கு என்றால் இரவு பெருக்கான் எலி வேட்டைக்குத் கிளம்புவார்கள். ராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்ற உலக அறிவே  இல்லாத அளவில் தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள்.

•Last Updated on ••Thursday•, 18 •June• 2020 22:51•• •Read more...•
 

நூல் அறிமுகம் - ஏதிலிகள்

•E-mail• •Print• •PDF•

- நடேசன் -1945 ஆகஸ்ட் 6 ம் திகதி காலை 8.15 மணிக்கு ஹீரோசிமா மீது அமெரிக்கர்களால் அணுக்குண்டு போடப்படுகிறது. 1946 ஆம் ஆண்டு ஜோன் ஹேசி (John Hersey) இதைப்பற்றி எழுதுவதற்கு நியூயோக்கர் சஞ்சிகையால் யப்பானுக்கு அனுப்பப்படுகிறார். அமெரிக்கா அணுக்குண்டை ஹீரோசிமாவில் போட்ட அன்று காலையில் 8.15 மணியிலிருந்து ஒரு இலட்சம் பேருக்கு மேல் இறக்க , உயிர் தப்பிய ஆறு யப்பானியர்களின் வாழ்வு ஜோன் ஹேசியால் விவரிக்கப்படுகிறது. அந்த விவரிப்பு நியூயோக்கர் சஞ்சிகையில் வேறெந்த விடயங்களுமில்லாது முழுவதுமாக பிரசுரிக்கப்படுகிறது. அந்த ஆறு யப்பானியர்களும் தாங்களாகவே பேசுகிறார்கள். அந்த விவரிப்பை எழுதும் ஜோன் ஹேசி, அதில் தனது கருத்துக்களாக எதனையும் புகுத்தாமல், அந்த அறுவரையும் பேசவைக்கிறார் . குண்டுவீச்சென்ற மையப்புள்ளியில் உருவாகும் மனிதர்கள் ஆறுபேரது வாழ்வு சுழலும் வட்டங்களாகும். பத்திரிகையாளராக புனைவற்று எழுதப்படும் முறைமையில் புனைவு நாவலுக்கான வரைவிலக்கணம் அழிந்து புனைவற்ற நாவல் (Non fiction novel) என விமர்சகர்களால் பெயரிடப்படுகிறது.

இந்த குண்டுவீச்சில் ஆரம்பத்தில் வீடுகள் உடைந்து நெருப்பு பற்றுகிறது. அதன்பின்பு கதிரியக்கம் , தொடர்ந்து பெய்யும் மழை அதனால் வெள்ளம் என்பன வரும்போது - இதில் வரும் பாத்திரங்களது செய்கையும் சிந்தனையும் கதாசிரியரது இடையூறு அற்று ஹீரோசிமா என்ற புத்தகத்தில் வருகிறது. குண்டுபோட்ட அமெரிக்காவின் அரசியல் தலைமை , இதுவரையும் அந்த குண்டுவீச்சு பல அமெரிக்க உயிர்களைப் பாதுகாக்கவே அவசியப்பட்டது என்றே தர்க்கித்து வந்தது. அந்தக் கற்பனைவாதம் இந்தப் புத்தகத்தால் உடைகிறது.

தமிழில் இப்படியான புத்தகங்கள் உருவாகியதா…? என்பது தெரியாது. சமீபத்தில் நான் படித்த ‘ஏதிலி’ தமிழ்நாட்டின் அகதி முகாம்களில் வாழும் மக்களின் பதினான்கு கதைகளைக் கொண்டது. இதற்கு முன்னுரை எழுதிய சோளகர் தொட்டி நாவலைப் படைத்திருக்கும் பாலமுருகன் , இது ஒரு நாவலென சொல்லிவிட்டு இலகுவாகக் கடந்து செல்கிறார். இந்த புத்தகத்தில் சில புனைவுகள் இருக்கலாம். கடைசிப் பகுதியில் சில இடங்களில் கதாசிரியர் தனது தலையை நீட்டிய போதிலும் இதில் உள்ளவை எல்லாம் உண்மையானவை.

•Last Updated on ••Friday•, 07 •August• 2020 22:20•• •Read more...•
 

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா

•E-mail• •Print• •PDF•

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா- நடேசன் -போரின் விளைவால் புலம் பெயர்ந்து சென்ற எழுத்தாளர்களின் வரிசையில் இலங்கைத் தமிழர்களாகப் பலர் உண்டு . அதில் ஏற்கனவே எழுத்தாளராகப் புலம் பெயர்ந்தவர்களும், புலம் பெயர்ந்த பின்பு எழுத்தாளர்களானவர்களும் அடக்கம்.

இவர்களில் ஒற்றைக் கை விரல்களில் எண்ணக்கூடியவர்களே புலம்பெயர்ந்த இலக்கியம் என்று சிந்தித்துப் படைப்பவர்கள். மற்றையோர் கண்டங்கள் கடந்திருந்து , கால் நூற்றாண்டுகள் மேல் பாரிஸ் , லண்டன் , ரொரண்ரோ என வாழ்ந்தபோதிலும் ஊர் நினைவுகளை மீட்டுகிறார்கள்

அது அவர்களது தவறல்ல . ஊர் நினைவுகள் ஒரு எலும்பில் புகுந்த சன்னம் போன்றது. இன்னும் அழுத்தமாகச் சொன்னால் அடிமை கொள்ளும் போதை போன்றது. விலகுவது சுலபமல்ல. நண்பர் ஷோபாசக்தி நேர்மையாக அதை சமீபத்திய செவ்வியில் ஒப்புக்கொண்டார். பலர் அதை ஏற்றுக்கொள்ளாமல் புலம்பெயர்ந்தவர்கள் என்ற லேபலுக்குள் இருந்து பால்ய கால நினைவுகளையும் இலங்கையில் நீடித்த போர் பற்றியும் எழுதுகிறார்கள் . நான்கூட அசோகனின் வைத்தியசாலை , உனையே மயல்கொண்டேன் முதலான அவுஸ்திரேலியாவின் வாழ்வு சார்ந்த நாவல்களை எழுதிவிட்டு மீண்டும் கானல் தேசம் என்ற போரக்கால நாவலை எழுதினேன்.

போதையெனச் சொன்னேன் அல்லவா?

இந்த நிலையில் நாம் இங்கிலாந்தில் வதியும் இராஜேஸ்வரி பலசுப்பிரமணியத்தை மட்டுமே புலம்பெயர்ந்த இலக்கியத்தைப் படைப்பவராகச் சொல்லமுடியும் . போரின் மணம் வீசாத காலத்தில் இங்கிலாந்து சென்றவர். அங்கு இங்கிலாந்தவர்களோடு வேலைசெய்து , அவர்கள் மத்தியில் வாழ்ந்ததால் அவரது மனதில் அங்குள்ளவை கருப்பொருளாக வருகிறது . முக்கியமாக அவரது சிறுகதைகளின் ஊடாக அவரை தமிழில் எழுதும் இங்கிலாந்தவர் என்றே அடையாளம் காணமுடியும். அவர் மனதில் அக்கரைப்பற்றிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளைவிட மற்றவை விலகிவிட்டது. அவரது கதை மாந்தர்களாக ஆங்கிலேயர் மற்றும் தென்னாசியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்களை சித்திரிக்கிறார். இதற்கு அவரது மானிடவியல் கல்வியும் வைத்தியசாலையிலும் வெளியிலும் மருத்துவத்தாதியாக கடமை புரிந்த அனுபவம் கைபிடித்துச் செல்கிறது .

•Last Updated on ••Friday•, 07 •August• 2020 22:20•• •Read more...•
 

வாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்

•E-mail• •Print• •PDF•

வாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்மீனா கந்தசாமி“மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின.

புகையொடு விடிந்த போதில்
ஊர்க்காரர் திரண்டு வந்தார்.

குருவிகள் இவைகள் என்றார்
குழந்தைகள் இவைகள் என்றார்
பெண்களோ இவைகள்? காலி
கன்றுகள் இவைகள் என்றார்.
இரவிலே பொசுக்கப் பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க”


உலக மனச்சாட்சியை, அதன் நாகரிங்களை உலுக்கும் வகையில் கீழ்வெண்மணி படுகொலைகள் குறித்து கவிஞர் ஞானக்கூத்தன் எழுதிய கவிதை இது. இந்தப் படுகொலை நிகழ்ந்து இப்போது 5௦ வருடங்களையும் கடந்துள்ள நிலையிலும் இந்தப் படுகொலைகளிற்கு எதிராக கவிஞர்களும் கலைஞர்களும் கலை இலக்கியச் செயற்பாட்டாளர்களும் எழுப்பிய உரத்த குரல்கள் இன்னமும் தொடர்ந்தும் எதிரொலித்த வண்ணமே உள்ளன. இவ்வகையில் இப்படுகொலைகளின் சாட்சியங்களாக இதுவரை வெளிவந்த படைப்புக்களில், பதிவுகளில், ஆவணங்களில் இறுதியாக வந்த பிரதியாக மீனா கந்தசாமி எழுதிய ‘The Gypsy Goddess’ என்ற நூலின் தமிழ் வடிவமாகிய ‘குறத்தியம்மன்’ நூலினைக் குறிப்பிடலாம்.

கீழ்வெண்மணி படுகொலை குறித்து இன்று அறியாதவர்கள் எவரும் எமது சமூகத்தில் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். தமிழகத்தின் கீழத்தஞ்சை பகுதிகளில் ஒன்றான கீழ்வெண்மணி கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ந்தேதியன்று நிலப்பிரபுக்களுக்கு எதிரான, ஆண்டுகளாகத் தொடர்ந்த நீண்ட நெடிய போராட்டத்தில், ஏற்றிய செங்கொடியை இறக்க மறுத்த காரணத்திற்காக அக்கிராமத்தில் உள்ள குழந்தைகளும் பெண்களுமாகச் சேர்த்து 44 பேர் ஒரு குடிசையொன்றினுள் வைத்து உயிரோடு எரித்துக் கொளுத்தப்படுகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த கோரச் சம்பவமானது இன்றளவும் பல்வேறு அரசில்வாதிகளினதும் அரசியல் கட்சிகளினதும் பல்வேறு சித்தாந்தங்களினதும் கோட்பாடுகளினதும் போலி முகங்களை எடுத்துக் காட்டிய வண்ணமே உள்ளது. பல ஆளுமைகளின் வரலாற்றில் கறுப்புப் புள்ளிகளாகவும் பக்கங்களாகவும் இடம் பிடித்துசம் சென்றுள்ளது.

•Last Updated on ••Wednesday•, 27 •May• 2020 21:15•• •Read more...•
 

நூல் அறிமுகம்: பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்

எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம்

பரதநாட்டியத்தின் தனிநட்சத்திரமாகத் திகழ்ந்த பாலசரஸ்வதி குறித்து அவரின் மகளைத் திருமணம் செய்த அமெரிக்கரான டக்லஸ் எம் நைட் என்ற சிறந்த ஒரு கலைஞர்  பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும் என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். Balasaraswati :HerArt and Life.   இந்த நூலை    மிகுந்த செழுமையுடன் டி.ஐ.அரவிந்தன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 392 பக்கங்களை அடக்கியுள்ள இந்நூலை க்ரியா பதிப்பகம் மிக நேர்த்தியாக 2017 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட்டுள்ளது. பாலசரஸ்வதியின் மகள் லட்சுமி நைட் நினைவாக வெளியிட்டிருப்பது என்னை மிகவும் கவனத்தில் நிறுத்தியது. பல்வேறு கலை ஜாம்பவான்களின் மிக அரிய புகைப்படங்களுடன் இணைத்திருப்பது மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.

இசையும் நடனமும் கலந்த பரதநாட்டியம் என்றழைக்கப்படும் கலை தென்னிந்தியாவில் உருப்பெற்று இன்று உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறது. தேவதாசி சமூகத்தைச் சோர்ந்த சேர்ந்த பாலசரஸ்வதி 18 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் அரண்மனையில் இருந்த பாப்பம்மாள் என்னும் இசை நடனக் கலைஞரின் 7ஆவது தலைமுறையைச் சேர்ந்தவர். அன்றைய கால கட்டத்தில் இந்த இசை நடனக் கலைஞர்கள் தவறான கண்ணோட்டத்துடனும், உதாசீனத்துடனும் மக்களால் பார்க்கப்பட்டனர். இந்நிலையில் 1950 களில் குடும்ப மரபிலிருந்து சிறிதும் விலகாமல் முழுமைத் தன்மையுடன் நடனக் கலையில் புகழ்பெற்றுத் திகழ்ந்தவர்தான் தஞ்சாவூர் பாலசரஸ்வதி.

புகழ்பெற்ற வீணை தனம்மாளின் பேத்தியான பாலசரஸ்தி அவர்கள் உலக அளவில் நினைவில் வைத்துப் போற்றக்கூடியவராகவும், சிறந்த முறையில் வாழ்ந்த மாபெரும் பரதநடனக் கலைஞராக இந்நூல் எனக்கு உணர்த்தியது.

18 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் அருண்மனையிலிருந்த பாப்பம்மாளின் கொள்ளுப்பேத்திதான் இந்த வீணை தனம்மாள். 1867 ஆம் ஆண்டில் பிறந்த வீணை தனம்மாளின் ரத்தத்திலேயே இசை ஊறியிருந்ததாம். அவர் குடும்பத்தின் தலைவராகவும் இருந்தார். பாலசரஸ்வதியின் கதையும் தாய்வழி மரபுக் கோட்பாடுகளின் சமூக அமைப்பைப் பின்புலமாகக் கொண்டது. பாலசரஸ்வதி குடும்பம் கலையைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட அதாவது இசை நடனக் கலைகளை ‘தொழில்முறை’யாகக் கொண்ட கலைஞர்களாகத் திகழ்ந்தார்கள்.

•Last Updated on ••Sunday•, 24 •May• 2020 03:18•• •Read more...•
 

நூல் அறிமுகம்: பவானியின் ‘சில கணங்கள்’ கவிதைத் தொகுப்புப் பற்றி...

•E-mail• •Print• •PDF•

பெண் கவிஞர்களிடம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல்வேறு தளங்களில் சிந்தனைகள் பரிணமிக்கின்றன. கருத்தின் மீது ஆத்மா போய் உட்காந்து கொண்டு மனிதனின் மனதை விசாலிக்கும் ஒரு அழகியற்கலையாகக் கவிதையை என்னால் பார்க்க முடிகிறது. கவிதை என்பது எந்த வகைமைக்குள்ளும் அடங்காத உணர்வாக எண்ணுகின்றேன். கவிதையை வாழ்க்கையின் அனுபவங்கள் என்று வகுத்துக்கொண்டாலும் மனம் நிறைய சமூகத்தின்மீது பேரன்பு கொண்டவர்களால்தான் கவிதைகளைப் படைத்துவிட முடியும் என்று கருதுகின்றேன். கவிதை ஒரு பயணம். அந்த வகையில் பவானியின் ‘சில கணங்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு ‘கால ஓட்டத்தில் கிறுக்கி வைத்திருந்ததை தொகுப்பாக்கியிருக்கிறேன்’ என்கிறார் பவானி. ஈழத்தில் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பவானி சற்குணசெல்வம் நெதர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார். இலங்கையில் விவசாய விஞ்ஞானத்துறையில் பட்டம்பெற்று அங்கு விரிவுரையாளராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்ட பவானி நெதர்லாந்துக்கு வந்த பின்னர்; டச்சு மொழியிலும் ஆளுமை பெற்று மொழிபெயர்ப்பாளராகச் செயற்பட்டு வருபவர். ஈழத்தின் பிரபல கவிஞர் சேரனின் கவிதைகள் சிலவற்றை தெரிந்தெடுத்து ‘கடலின் கதை’ , ‘அன்பு திகட்டாது’ போன்ற நூல்களை டச்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்.

‘சில கணங்கள்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பில் எண்பது கவிதைகள் எண்பத்தியேழு பக்கங்களில் அடக்கமான அழகான நூலாக வெளிவந்திருக்கின்றன. ஒவ்வொரு கவிதைக்கும் பவானி தான் எண்ணுவது போன்ற புகைப்படங்களுடன் இணைத்திருப்பது வாசிக்கத்தூண்டும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

•Last Updated on ••Saturday•, 23 •May• 2020 23:29•• •Read more...•
 

நூல் அறிமுகம்: பிம்பச் சிறை - எம்.ஜி.ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும் -

•E-mail• •Print• •PDF•

- முனைவர் பி.ஜோன்சன் -நூல்:  பிம்பச் சிறை - எம்.ஜி.ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்
எழுத்தியவர்:  எம்.எஸ்.எஸ். பாண்டியன் (பூ.கொ. சரவணன்)

தமிழகத்தின் மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் அஇஅதிமுக-வினை நிறுவிய எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய நூலே இது. The Image Trap: M G Ramachandran in Flims and Politics என்ற ஆங்கில நூலினைத் தமிழில் பூ.கொ. சரவணன் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலின் முற்பகுதி எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கையையும், அதன்மூலம் மக்களின் மனங்களில் அவர் எவ்வாறு பதிவானார் என்பதையும் காட்டுகிறது. பிற்பகுதியில் அவரின் அரசியல் பயணமும்,, அதிகார வர்க்கத்தின் தலைமையாக இருந்தும், மக்களின் பொதுபுத்தியில் ஏழைகளின் பங்காளனாக அவர் எவ்வாறு பரிணமித்தார் என்ற செய்தியும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. சாதிய ஒடுக்கத்திற்கு ஆளான மக்களின் வாழ்க்கையை நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய போக்கு, பிற்காலத்தில் திரைக்காவியங்களாக உருமாற்றம் பெறத்தொடங்கியது. அதில் வரும் கதைத்தலைவனான எம்.ஜி.ஆர். அவரின் உடைகளிலும், தான் ஏற்கும் பாத்திரங்களிலும் அதற்கேற்றாற்போல் தன்னைத் தகவமைத்துக்கொண்டார். அவர் நடித்த பல திரைப்படங்களில், விவசாயி, தொழிலாளி, ஓட்டுநர், மீனவர், படித்த கிராமத்து ஏழை என இது போன்ற அடித்தட்டு மக்களின் மனங்கவர்ந்தவராகக் காட்சிப்படுத்தப்பட்டார். அவ்வாறு திரைக்கதை அமையவில்லை எனில், தானே அதனை அவ்வாறாக மாற்றியும் அமைத்துள்ளமையும் நோக்கத்தக்கது. பாடல்களின் மூலமும் தன்னுடைய எண்ணங்களை வெளிக்கொணர்ந்தவர். தன்னுடைய உடல் கவர்ச்சியையும், தன்னுடைய பிம்பத்தைக் கட்டமைக்கவும் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். இவைபோன்ற பலவும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன (சில ஆய்வுகள் வெளிவராமல் கூட போயிருக்கின்றன).

திரையில் இவரின் பங்களிப்பை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய திமுக அதனை வைத்தே தன்னுடைய தேர்தல் பணிகளைக் கவனிக்கத் தொடங்கியது. இவருக்காகவே சில கதைகள் எழுதப்பட்டன. இவருடைய பல்வேறு படங்களில் திமுக-வினுடைய கொடியும், சின்னமும் காட்டப்பட்டன. அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அஇஅதிமுக என்ற கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்ததும் திரைத்துறையின் மூலமே என்பது நினைவுகூரத்தக்கது. அரசின் எந்தவொரு திட்டமும் தொடங்கும்போது, அது ஏன் தொடங்கப்பட இருக்கிறது என்பதைத் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் மூலம் மக்களிடம் தெரிவிப்பது அவருடைய நடைமுறையாக இருந்தது (எடுத்துக் காட்டு: சத்துணவுத் திட்டம்).

•Last Updated on ••Wednesday•, 22 •April• 2020 02:10•• •Read more...•
 

நிலங்களை எழுதுதல் : உமையாழின் ‘Cass அல்லது ஏற்கனவே சொல்லப்பட கதையில் சொல்லப்படாதவை’ சிறுகதைத்தொகுதி குறித்து----

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் உமையாழ்‘Cass அல்லது ஏற்கனவே சொல்லப்பட கதையில் சொல்லப்படாதவைநேற்றிரவு உமையாழின் சிறுகதைத்தொகுதியான ‘Cass அல்லது ஏற்கனவே சொல்லப்பட கதையில் சொல்லப்படாதவை’ படித்து முடித்தேன். இந்த Covid 19 வைரஸ் பரம்பலையிட்டு வீட்டினுள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையில் அச்சவுணர்வு கொஞ்சம் தலையெடுத்தாலும், பல்வேறுவிதமான நெருக்கடிகளிலும் இருந்து விடுபட்ட ஏகாந்த நிலையில் இது போன்ற நூல்களை வாசிப்பதென்பது ஒரு அலாதியான அனுபவம்தான். வாசித்து முடித்ததும் ஒரு உண்மை துலக்கமாகப் புலப்பட்டது. ஈழ- புகலிட சிறுகதையாசிரியர் வரிசையில் உமையாழ் தன்னையும் ஒரு சிறந்த சிறுகதையாளனாக இறுக்கமாகப் பிணைத்துக் கொள்கிறார். நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு மிகச் சிறந்ததொரு சிறுகதையாளன் கிடைத்துவிட்டான்.

இது உமையாழின் முதலாவது சிறுகதைத் தொகுதி. 9 சிறுகதைகள் அடங்கிய இந்தச் சிறுகதைத் தொகுதியை ‘யாவரும்’ பதிப்பகத்தினர் பல்வேறு எழுத்துப் பிழைகள் இருந்தாலும் மிக அழகாகவும் சிறப்பாகவும் வெளியிட்டுள்ளனர். இந்தச் சிறுகதைகளில் அநேகமானவை, இன்று நவீனத்தமிழ் இலக்கிய உலகில் வலம் வரும் பல்வேறு இலக்கிய சஞ்சிகைகளிலும் ஏற்கனவே பிரசுரிமாகியிருந்தபடியால் அதற்குரிய அங்கீகாரத்தை அவை ஏற்கனவே பெற்று விட்டிருக்கின்றன.

“கடந்து வந்த நிலமெல்லாம் ஆச்சரியங்கள்தான். ஆகவே நிலங்களை எழுதுவதுதான் எனது பணியாக இருக்கிறது.” என்று தனது முன்னுரையில் கூறும் உமையாழ் தான் பிறந்து வளர்ந்த கிழக்கிழங்கையில் இருந்து, ஆறாண்டுகள் அலைந்து திரிந்த அரேபிய பாலைவங்கள் ஊடாக இன்று தான் வசிக்கின்ற பனி படர்ந்த நிலமாகிய பிரித்தானியா வரை பல்வேறு பிரதேசங்களிலும் தனது கதையின் களங்களை படர விட்டிருக்கிறார். வாழ்வும் வாழ்வுடன் தொடர்கின்ற அலைவுகளும் துயரங்களுமாக தொடர்கின்ற இக்கதைகள் வாழ்வு குறித்தும் வாழ்வின் அர்த்தங்கள் குறித்ததுமான விசாரணைகள் ஆக வெவ்வேறு அனுபவங்களுடன் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

•Last Updated on ••Wednesday•, 22 •April• 2020 01:30•• •Read more...•
 

நூல் அறிமுகம்: சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை- நடேசன் -19 ஆம் நூற்றாண்டில் வந்த சிறந்த நாவல்களான மேடம் பாவாரி – அனா கரினினா இரண்டிலும் திருமண பந்தத்திற்கு அப்பால் உடலுறலில் ஈடுபட்ட பெண்கள் நாவலாசிரியர்களால் கொலை செய்யப்படுகிறார்கள் . ஒரு இடத்தில் ஆசனிக் கொடுக்கப்படுகிறது . மற்றயதில் ரயிலின் முன் தள்ளப்படுகிறாள் . தி.ஜானகிராமன் தனது மோக முள் நாவலில் வரும் நாயகன் பாபுவுடன் ஆரம்பத்தில் உடலுறவு கொண்ட பெண்ணை நதியில் தள்ளி கொலை செய்துவிட்டு மிகுதித் கதையைத் தொடர்கிறார் . இவர்கள் மூவரும் ஆண்கள். கை நடுங்காது செய்ய முடியும். ஆனால் சல்மாவுமா? சல்மாவின் இரண்டாம் ஜாமங்களில் கதையில் காபிரோடு உடலுறவு கொண்ட பிர்தவ்ஸ் என்ற பெண் பெற்ற தாயாலேயே வலுக்கட்டாயமாக எலிபாஷாணம் குடிக்க வைக்கப்பட்டபோது எனக்கு நெஞ்சம் அதிர்ந்தது . மற்றைய பெண் பாத்துமா வீட்டை விட்டு வாழ்வதற்காக ஓடினாள் . இறுதியில் வாகனத்தால் தாக்குப்பட்டு இறப்பதாக வருகிறது . அங்கு சுலைமான் ஒழுக்கம் கெட்டவளுக்கு அல்லாவால் கொடுக்கப்பட்ட தண்டனை என புளகாங்கிதமாகக் கூறுகிறான்.

சல்மாவை தொலைபேசியில் அழைத்து “பெண் எழுத்தாளராக இருந்துகொண்டு இப்படிச் செய்துவிட்டீர்களே? “ என ஆதங்கத்தோடு கேட்டேன். “அதுதானே ரியலிட்டி” என சல்மாவிடமிருந்து பதில் வந்தது. உண்மைதான் . நாவலுக்கு நம்பும்படியாகவும் அத்துடன் திருப்தியாகவும் இருக்கவேண்டுமென்பார்கள் (Believability and satisfaction).

•Last Updated on ••Friday•, 07 •August• 2020 22:20•• •Read more...•
 

நூல் அறிமுகம்: எங்கு செல்கிறோம்? தற்கால வரலாறும் சில பார்வைகளும்

•E-mail• •Print• •PDF•

நூல்: எங்கு செல்கிறோம்? தற்கால வரலாறும் சில பார்வைகளும்! | ஆசிரியர்: பி.ஏ.கிருட்டிணன்       முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.நூல்: எங்கு செல்கிறோம்? தற்கால வரலாறும் சில பார்வைகளும்! | ஆசிரியர்: பி.ஏ.கிருட்டிணன்
வெளியீடு : தி இந்து தமிழ்த்திசை சென்னை - 2.

'தி இந்து தமிழ்த்திசை' நாளிதழில் பி.ஏ.கிருட்டிணன் அவர்கள் 'இந்தியாவும் உலகமும்' என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி வெளியிட்டுள்ளது தி இந்து குழுமம். அரசியல் மற்றும் பண்பாடு சார்ந்த கட்டுரைகள். படிப்பதற்கு மிக விறுவிறுப்பாகவும் காத்திரமான உண்மைகளையும் இக்கட்டுரைகள் பேசுகின்றன. இந்திய அரசியல், காசுமீர் பிரச்சினை, அமெரிக்க அரசியல் உள்ளிட்ட பல்வேறு கட்டுரைகளை அவரது பயண அனுபவத்தின் வழியே ஆதாரங்களோடு புனைவுகளற்ற இயல்பான மொழிநடையில் தந்திருக்கிறார். நான்கு பகுதிகளைக் கொண்ட இந்நூலில் அரசியல்தான் விரிவாகப் பேசப்பட்டாலும் முக்கியமான அரிய / பயனுள்ள தகவல்கள் பல கொட்டிக்கிடக்கின்றன. தனது பயண அனுபவத்தில் கண்டு பழகிய மக்களின் பண்பாடு நாகரிகம் மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவற்றையும் கலந்தே இந்நூலில் தந்துள்ளார். அவரது மிளிர்ந்த நடையழகில் நாமும் பயணித்த உணர்வை இந்நூல் ஏற்படுத்துகிறது.

உலகிலேயே இயற்கை எழில் மிகுந்து, எண்ணற்ற வளங்கள் கொட்டிக்கிடக்கும் ஒரே இடம் காசுமீர். காமீர் பார்பதற்கு கொள்ளை அழகு. இங்கு நம் மனத்தை ஈர்க்கும் பச்சைப் பசும்புல்வெளிகள், கரும்பச்சைக் கூம்பு வடிவ பீர் மரங்கள், வெண்பனிப்பாறைகள், உயர்ந்த மலைச்சிகரங்கள், குதிரை வண்டிப்பயணம், குல்மார்கின் கேபிள் பயணம் என கொட்டிக்கிடக்கும் கொள்ளை அழகில் அவர் பயணித்ததோடு நம்மையும் பயணப்பட வைக்கிறார். காசுமீரில் நடப்பது என்ன என்பதையும் நமக்கு விவரிக்கிறார்.

காசுமீர் மக்கள் அமைதியானவர்கள் / அமைதியை விரும்புவர்கள். இங்கு முசுலிம்களே அதிகம். இப்பெண்கள் பர்தா அணிவதில்லை. கேலி, கிண்டல்களுக்கும் அஞ்சாதவர்கள். துணிச்சல் மிக்கவர்கள். காசுமீர்மக்கள் சுதந்திரமின்றி தவிக்கின்றனர். அவர்களைச்சுற்றிப் பாதுகாப்புப் படைகளும் மத்திய அமைதிப்படைகளும் சூழ்ந்துள்ளனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் இளைஞர்கள் பயங்கரவாதம் என்ற பெயரிலும் தாக்கப்படுகின்றனர். மனித உயிர்களுக்கு இங்கு மதிப்பில்லை. வேலைவாய்ப்பின்றி இளைஞர்கள் தவிக்கின்றனர். அரசாங்கமும் அரசு ஊழியர்களும் மக்களுக்கு ஆதரவாக இல்லை. பாகிசுதானையோ, இந்தியாவையோ அவர்கள் ஆதரிக்கவில்லை. காசுமீர் எங்களுக்குச் சொந்தமானது. பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ விரும்புகின்றனர். வேலை வாய்ப்பு அதிகரித்தால் பயங்கரவாதம் குறையும். காஷ;மீர் விடுதலைக்கு 95 சதவீத மக்கள் ஆதரவாக உள்ளனர் என்பதோடு காசுமீர் மக்களுக்கான தீர்வையும் முன் வைக்கிறார்.

•Last Updated on ••Wednesday•, 22 •April• 2020 01:31•• •Read more...•
 

கறுப்பர் நகரம் – கரன் கார்க்கி

•E-mail• •Print• •PDF•

கரன் கார்க்கியின் 'கறுப்பு நகரம்'

சென்னை என்றதுமே நம் நினைவில் வருவது நீண்ட கடற்கரை, துறைமுகம், பழங்காலக் கட்டடங்கள், சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள், நினைவு இல்லங்கள், கோட்டைகள், கூவம் நதி என விரியும். ஆனால், கூவம் நதிக்கரை ஓரமாகவிருக்கும் ஆயிரக்கணக்கான குடிசைகளும், அவற்றுக்குள் வாழும் மனிதர்களையும் யாரும் நினைத்துக்கூடப் பார்ப்பது கிடையாது. அவர்களை மையப்படுத்தி எழுதப்பட்டது இந்நாவல். அதிலும் குறிப்பாக வட சென்னை மக்களைப் பற்றிய பதிவாக இது அமைந்துள்ளது. முதலாளி தொழிலாளி வர்க்கத்தின் முரண்பாடும்,  அதன் விளைவாக எழுந்த புரட்சியும் பற்றி இந்நாவல் பேசுகிறது. இவற்றுக்கிடையில் செங்கேணி – ஆராயி இவர்களின் காதல் வாழ்வும், அவர்கள் குடும்பத்தோடு இணைந்த மற்றவர்களின் பிணைப்புமாக நாவல் விரிகிறது. அடிமை வாழ்வில் இருந்து கொண்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் இருக்கும் மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் அவர்களைக் குறிப்பிட்ட சில வேலைகளுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் நபர்கள் குறித்து விரிவாகப் பேசுகிறது. அதோடு மட்டுமல்லாமல் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசப்படுகிறது. இளமையில் கல்வி கற்க வாய்ப்பிருந்தும் அதனைப் பயன்படுத்தாமல் இருந்தமையால் உருவான வெறுமையைப் பதிவு செய்கிறது. ஆற்றோரத்தில் வசிக்கும் மனிதர்கள் அரசு வேலைக்குச் சென்ற பிறகு அதனை மறந்து சென்றுவிடும் நிலையில், அரசுப்பணியில் இருக்கும் சிலரின் உதவியோடு அங்கு படிப்பு மையம் திறக்கப்பட்டு தினக்கூலிகளின் இரவுப்பொழுதைப் பயனுள்ளதாக்கிக் கொண்டிருக்கும் போக்கு நினைவிற்கொள்ளத்தக்கது. உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றோடு நடத்தப்படும் இரவுப்பள்ளி சிறப்புடன் செயல்படும் விதத்தினையும், அதில் பணிபுரிந்த வேலுவுக்கு அரசுப்பணி கிடைத்ததையும் நாவல் சுட்டிக்காட்டியுள்ளார் ஆசிரியர்.

•Last Updated on ••Wednesday•, 22 •April• 2020 02:11•• •Read more...•
 

''வலிகள் சுமந்த தேசம்'' கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

•E-mail• •Print• •PDF•

மீரா மொஹிதீன் ஜமால்தீன் என்ற இயற் பெயரையுடைய கவிஞர் மருதூர் ஜமால்தீனின்மீரா மொஹிதீன் ஜமால்தீன் என்ற இயற் பெயரையுடைய கவிஞர் மருதூர் ஜமால்தீனின் ''வலிகள் சுமந்த தேசம்'' கவிதை நூல் நூலாசிரியரின் 8 ஆவது நூல் வெளியீடாக வெளிவந்துள்ளது. சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும், ஏறாவூரை வசிப்பிடமாகவும் கொண்ட இவரது இந்த நூலை ஏறாவூர் வாசிப்பு வட்டம் வெளியிட்டுள்ளது.

இந்த நூலில் மறக்க முடியவில்லை, தெளிந்து கொள், உங்களுக்கின்னும், ஏன் விடிகிறாய், அபாபீல்கள், கழுகுப் பார்வைக்குள் நீ, என்றும் நானே தலைவனாக, ஏமாளிகள், உடன் பிறப்பே, ஆத்மாக்களே, நிலை மாறுகின்றேன், எதை எதிர்பார்க்கிறாய், நாளைய அபாபீல்களாக, நிம்மதி ஏது?, நாளை முதல், எம்மிலக்கு, காத்திருக்கிறது, சொல்லிக் கொடு, வாடிக்கிடக்கிறது, நினைவிருக்கட்டும் எம்மை ஆகிய தலைப்புக்களில் 20 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன. இந்த நூலுக்கான முன்னுரையை தீரன் ஆர்.எம். நௌசாத்தும் பின்னட்டைக் குறிப்பை ஏறாவூர் தாஹிரும் வழங்கியுள்ளார்கள்.

சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக  இலக்கியப் பணியாற்றி வந்த இவர் தனது கன்னிக் கவிதைத் தொகுதியை 2008 இல் புரவலர் புத்தகப் பூங்கா மூலம் வெளியீடு செய்தார். அதனைத் தொடர்ந்து மருதூர் ஜமால்தீன் ரமழான் ஸலவாத் (2010), கிழக்கின் பெரு வெள்ளக் காவியம் (2010), முஹம்மத் (ஸல்) புகழ் மாலை (2011), இஸ்லாமிய கீதங்கள் (2012), தாலாட்டு (2015), பத்ர் யுத்தம் (2016) ஆகிய நூல்களையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார். புதுக் கவிதை, மரபுக் கவிதை ஆகிய இரண்டு வடிவங்களிலும் கவிதை எழுதுவதில் சமர்த்தரான இவரது கவிதை, சிறுகதை, கட்டுரை, இஸ்லாமியப் பாடல்கள் போன்ற ஐநூறுக்கு மேற்பட்ட படைப்புக்கள் தேசிய பத்திரிகைகளிலும் பல்வேறு சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எந்த மெட்டுக்கும் உடனடியாக பாடல் வரிகளை மிகவும் இலகுவாக எழுதும் ஆற்றல் கை வரப்பெற்ற இவர் தற்போது முகநூலிலும் பல்வேறு வலைத்தளங்களிலும் பல படைப்புக்களை எழுதி அதிக ஈடுபாடுகாட்டி வருகின்றார்.

•Last Updated on ••Thursday•, 16 •April• 2020 09:30•• •Read more...•
 

வாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்

•E-mail• •Print• •PDF•

வாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’  ஓர் அறிமுகம்எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்`சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ - கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தனது 25 வருட நிறைவை முன்னிட்டு, 2019 ஆம் ஆண்டு நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டியில் தேர்வான சிறுகதைகளின் தொகுப்பு. இனிய நந்தவனம் பதிப்பகத்தினால் இவ்வருடம்(2020) இத்தொகுப்பு வெளிவந்திருக்கின்றது.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய தலைவர் குரு அரவிந்தன் இந்தக் கதைகளைத் தொகுத்திருக்கின்றார். இவர் ஏற்கனவே மகாஜனக்கல்லூரி 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அகில இலங்கை மாணவர்களுக்கான சிறுகதைப்போட்டியொன்றை வெற்றிமணி இதழ் மூலம் நடத்தியிருந்தார். கனடாவில் சிறுகதைப் போட்டி மூலம் தமிழ் பெண்கள் எழுதிய `நீங்காத நினைவுகள்’ என்ற  முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர். இணையத்தின் செயலாளர் ஆர். என். லோகேந்திரலிங்கம் உதயன் பத்திரிகை மூலம் பல சிறுகதைப் போட்டிகள் வைத்து ஊக்குவிக்கின்றார். இவர்களது அனுபவங்கள் தான் இந்தத் தொகுப்பு வெளிவருவதைச் சாத்தியமாக்கியிருக்கின்றன.

மொத்தம் 16 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பின் முதல் பரிசு பெற்ற கதை ‘தாள் திறவாய்’. கதாசிரியர் எஸ்.நந்தகுமார் (நந்து சுந்து), சென்னை. நல்லதொரு சிறுகதைக்குரிய பல அம்சங்கள் கொண்டது இக் கதை. வாசகரை உள்ளே இழுத்துப் பிடித்து நகரவிடாமல் செய்கின்ற நடை. ரஞ்சனி நீதி நேர்மை நியாயம் கொண்டவள். மற்றவர்களிடமும் அவற்றை எதிர்பார்ப்பவள். தனது கணவன் பிள்ளையுடன் மதுரைக்குப் புறப்படுவதற்காக பஸ் ஸ்ராண்டில் நிற்கின்றாள். கணவன் கிருபாகரன் பயந்த சுபாவம் கொண்டவன். அவர்களது இரண்டுமாதக் குழந்தைக்குப் பசி வந்துவிட்டது. தாய்ப்பால் குடுக்க வேண்டும். புட்டிப்பாலும் எப்போதாவது குடுப்பாள். மறைவான இடம் தேடி அலையும்போது `தாய்மார்கள் பாலூட்டும் அறை’ தென்படுகின்றது. ஆனால் அது பூட்டிக்கிடக்கின்றது. அதைத் திறந்துவிடும்படி பொறுப்பானவர்களிடம் கேட்கின்றாள் ரஞ்சனி. அவர்களிடம் திறப்பு இல்லை. தட்டிக் கழிக்கின்றார்கள். குழந்தை வீரிட்டு அழுகின்றது. கணவனிடம் குழந்தைக்கு புட்டிப்பாலைக் குடுக்கும்படி சொல்லிவிட்டு அவர்களுடன் போராடுகின்றாள். அப்போது மதுரைக்குப் புறப்படும் பஸ் புறப்படவே கணவன் அவளை வந்து ஏறும்படி சொல்கின்றான். ரஞ்சனி பஸ்சிற்கு முன்பாகக் குந்தியிருந்து போராட்டம் நடத்துகின்றாள். விறுவிறுப்பாக நகரும் கதை அவளது பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுடன், எல்லாத் தாய்மார்களுக்குமான முடிவு ஒன்றைக் காண்பதுடன் நிறைவுக்கு வருகின்றது. சமுதாயத்துக்கு நல்லதொரு கருத்தைச் சொல்லிச் செல்லும் சிறப்பான கதை இது. ஆனால் கதையின் இறுதிப்பகுதியில் கிருபாகரன் என்ற கணவன் பாத்திரத்தை மறந்துவிடுகின்றார் கதாசிரியர். அல்லது வேண்டுமென்றே தவிர்த்து விடுகின்றார்.

இலங்கையில் நாட்டுப் பிரச்சினைகள் உக்கிரமடைந்திருந்த காலம். மலருக்கும்(வயது 18) ரஞ்சித்திற்கும் (22) திருமணம் நடக்கின்றது. மூன்று வருடங்களாக அவர்களுக்குக் குழந்தைப் பாய்க்கியம் இல்லை. பின்னர் அவள் கருவுற்றபோது, கடவுளுக்கு நன்றி சொல்வதற்காக கோயிலுக்குப் போகின்றான் ரஞ்சித். போனவன் போனதுதான். அப்புறம் வரவேயில்லை. இப்போது மலரின் மகளுக்கு 13 வயது ஆகின்றது. மலர் வேலைக்குப் போய் மகளை நல்ல நிலையில் வைத்துப் பார்க்கின்றாள். ஆனால் ஊர் மக்கள் அவளைப் பற்றி வேறுவிதமாகக் கதைக்கின்றார்கள். இதைப் பொறுக்கமுடியாத அவளின் நண்பி ராணி, மகளின் நன்மை கருதி மலரை மறுமணம் செய்யும்படி வற்புறுத்துகின்றாள். அதற்கு மலர் தரும் விளக்கம் தான் கதையின் உச்சம். காணாமல் போனவர்கள் பற்றிய தொடரும் கதைகளில் இதுவும் ஒன்று. டலின் இராசசிங்கம் இந்தக் கதையை எழுதியிருக்கின்றார். நல்ல தெளிவான நடை. ஆவலைத் தூண்டும் கதை.

•Last Updated on ••Monday•, 30 •March• 2020 10:01•• •Read more...•
 

ஈழத்து ஆளுமைகளின் ஒப்பபுதல் வாக்கு மூலங்கள்: எம்.பௌசரின் ‘ஈழத்து இலக்கியத்தின் சமகால ஆளுமைகளும் பதிவுகளும்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்

•E-mail• •Print• •PDF•

‘நேர்காணல்’ இன்று தவிர்க்க முடியாதபடி நவீன இலக்கியத்தில் ஒரு கலை வடிவமாக உருப்பெற்றுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக்கலை, நாடகம் போன்றே ஆளுமைகளின் நேர்காணல்கள் யாவும் தொகுப்புக்களாக ஒரு கலை வடிவமாக  உருமாற்றம் அடைந்துவரும் மேற்கத்தைய சூழலில், அதற்கு சளைக்காத வகையில் தமிழ் இலக்கியச் சூழலிலும் நேர்காணல் வடிவம் ஆனது தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நேர்காணல்கள்   ஆனது பிரதிகள் மூலமே அறியப்பட்ட ஒரு ஆளுமையின், அறியப்படாத பல பரிமாணங்களை வெளிக்கொணரும் சந்தர்ப்பங்களை எமக்கு உருவாக்கித் தருகின்றன. இவை  முக்கியமாக ஒரு ஆளுமையின் வாழ்க்கைப் பின்னணி, தத்துவ நோக்கு, மாறுபடும் கால, சூழலிற்கு ஏற்ப மாறுபடும் அவரது சிந்தனைகள், செயற்பாடுகள் என்பன குறித்த ஒரு நேரிடையான, தெளிவான பார்வைகளை  வெளிப்படுத்தி நிற்கின்றன.

90 களின் ஆரம்பித்தில் இருந்தே நேர்காணல் ஆனது நவீன தமிழ் இலக்கியச் சூழலில், அதிலும் முக்கியமாக சிறுபத்திரிகைச் சூழலில் ஒரு முக்கியமான இடத்தைச் சுவீகரித்துக் கொண்டது. பல தருணங்களில் இலக்கியச் சூழலில் ஏற்படுகின்ற சோர்வினையும் அயற்சியினையும், நேர்காணல்கள் ஆனது அது ஏற்படுத்திய சர்ச்சைகள் மூலமும் பரபரப்புக்கள் மூலமும் விரட்டியடித்த வரலாறினை பல்வேறு காலகட்டங்களிலும் நாம் அவதானித்து வந்திருக்கின்றோம். இவ்வகையில் தமிழகத்தில் சுபமங்களா, புதிய பார்வை, தீராநதி போன்ற இதழ்கள் நேர்காணல்களை சிறப்பித்த இதழ்களாக அல்லது நேர்காணல்கள் மூலம் சிறப்புற்ற இதழ்களாக நாம் வரையறுத்துக் கொள்ளலாம். இந்த நேர்காணல்களுக்காக மட்டுமே இவ்விதழ்களை காசு கொடுத்து வாங்கிப் படித்தவர்களும் உண்டு. இவ்விடயத்தில் ஈழத்தமிழ் இலக்கியமானது தனது கவனிப்பினை சரியாக செய்யாத நிலையில் , 90 களின் இறுதியில் இருந்து வெளிவர ஆரம்பித்த எம்.பௌசரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘மூன்றாவது மனிதன்’ இதழானது தனது ஒவ்வொரு இதழிலும் ஒன்று அல்லது இரண்டு இலக்கிய ஆளுமைகளுடனான  நேர்காணல்களுடன் வெளிவந்து நேர்காணல்களுக்கும் இலக்கியத்திற்குமான உறவை பலப்படுத்தி நின்றது. இவற்றிடையே  மூன்றாவது மனிதன் பதிப்பகம் ஆனது இந்நேர்காணல்கள் பலவற்றினதும்  தொகுப்பாக ‘ஈழத்து இலக்கியத்தின் சமகால ஆளுமைகளும் பதிவுகளும்’ என்ற நூலினை வெளியிட்டு ஈழத்தமிழ் இலக்கிய உலகில் நேர்காணலுக்கான ஒரு நூலினை  முதலாவதாக வெளியிட்டு இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான தடத்தைப் பதித்து விட்டிருந்தது.  இங்கு தோழர் பௌசரினால் தொகுத்தளிக்கப்பட்ட இந்நூல் குறித்து ஒரு பார்வையினையும் சில கருத்துக்களையும்  முன் வைப்பதே எமது நோக்கமாகும்.

•Last Updated on ••Sunday•, 02 •February• 2020 11:02•• •Read more...•
 

நூல் நயப்புரை: இலங்கையில் மகாகவி பாரதி வியாபித்திருந்த வரலாற்றைக்கூறும் நூல்! முருகபூபதியின் நாற்பது ஆண்டுகால உழைப்பின் வரவு: இலங்கையில் பாரதி!

•E-mail• •Print• •PDF•

நூல் நயப்புரை: இலங்கையில் மகாகவி பாரதி வியாபித்திருந்த வரலாற்றைக்கூறும் நூல்! முருகபூபதியின் நாற்பது ஆண்டுகால உழைப்பின் வரவு: இலங்கையில் பாரதி!"தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"

இந்த பாரதியின் வரிகள் எத்தனை கம்பீரமானவை. வாழ்வின் அத்தனை நம்பிக்கையையும் ஊட்டும் அருங்கவிதை.

2020 ஆம் வருடத்தை இப்படி ஒரு புத்தகத்துடன் துவங்குவது மனதிற்கு ஒரு தெம்பையும் நம்பிக்கையும் ஊட்டியது என்று சொல்லலாம். அந்தப் புத்தகம் ஈழத்து புலம்பெயர் மூத்த எழுத்தாளர் முருகபூபதி அவர்களின் படைப்பான "இலங்கையில் பாரதி" என்பதாகும்.

சமூகத்தின் பொதுவுடமைக்காக எழுதிய மகாகவி பாரதி, நாட்டு சுதந்திரத்திற்காகவும், நலிவுற்றோர் சுதந்திரத்திற்காகவும் பாடிய பாடல்களும் கவிதைகளும்  ஏ. வி. மெய்யப்ப செட்டியாரின்  ( ஏவிஎம்) கையில் காப்புரிமை எனும் பெயரில் சிறைப்பட்டுக் கிடந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர்தான் அவற்றுக்கு சுதந்திரம் கிடைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல!

மகாகவி பாரதியை ஈழத்து மக்கள் எப்படி எல்லாம் வாசித்து நேசித்து வாழ்ந்து வந்தனர், வருகின்றனர் என்பதையும் அந்தத் தேசியக் கவியின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டத்தை ஈழப் பத்திரிகைகளும், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகளும் எப்படி எல்லாம் பெருவிழாவாக கொண்டாடினார்கள் என்பதையும் நல்முத்துக்கள் கோர்த்து எடுத்தார் போல் மிக அழகாக முருகபூபதி பதிவு செய்துள்ளார்.

•Last Updated on ••Sunday•, 26 •January• 2020 12:29•• •Read more...•
 

விலக்கப்பட்ட வேதாகமங்கள்: சயந்தன் கதிரின் ‘அர்த்தம்’ சிறுகதைத்தொகுதி குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்

•E-mail• •Print• •PDF•

எதேச்சையாகத்தான் அந்த நூல் எனது கண்ணில் பட்டது. ஆனாலும் புறந்தள்ள முடியவில்லை. எமது மறக்கப்பட்ட, அல்லது மறக்கடிக்கப்பட்ட வரலாற்றின் பெரும்பகுதி இது போன்ற இலக்கியப்பிரதிகளுக்குள்தான் புதையுண்டு கிடப்பதாக எனக்குள் ஒரு நம்பிகை. எனவே இது பற்றி ஒரு சிறு குறிப்பொன்றினை எழுதலாம் எனது மனதில் தோன்றியதால், அதனை எழுதுவதற்கு எண்ணாமல் துணிந்தேன். இதற்குமப்பால் அந்த நூலின் வடிவமைப்பும் மிகவும் விசித்திரமாக இருந்தது. மற்றைய நூல்களைப் போல் அல்லாமல், 6’*6’ என்ற அங்குல அளவுத்திட்டத்தில் பதிப்பிக்கப்பட்ட அந்நூலானது அச்சு அசலாக ஒரு இறுவெட்டு(DVD) அல்லது குறுந்தகடு(CD) ஒன்றின் உறையின் வடிவத்திலேயே மிகவும் சிறியதாகவும் கவர்ச்சிகரமாகவும் தோற்றமளித்தது. அந்த நூலின் பெயர் : அர்த்தம் ஆசிரியர் : கதிர் சயந்தன் (இப்போது சயந்தன் கதிர் ) வெளியீடு : நிகரி பதிப்பகம் (2003)

சயந்தன் கதிரிற்கு இப்போது அறிமுகம் தேவையில்லை. ஆரம்பத்தில் பல்வேறுபட்ட சிறுகதைகளையும் எழுதிய அவர் இன்று ‘ஆறாவடு’ ‘ஆதிரை’ போன்ற நாவல்களின் மூலம் நவீன தமிழ் இலக்கிய உலகில் தனது தடத்தை ஆழமாகப் பதித்து, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக உருப்பெற்றுள்ளார்.

6 சிறுகதைகளை மட்டும் கொண்ட இந்த 84 பக்கங்கள் அடங்கிய இந்த நூல் பற்றி நான் எழுத ஆரம்பிக்கும் போதே என்னுள் ஏதோ உறைத்தது. பல வருடங்களுக்கு முன்பு சயந்தனின் ‘ஆதிரை’ நாவல் வெளிவந்த போது ‘பதிவுகள்’ இணையத்தளத்தில் ஒரு சிறு குறிப்பொன்றினை எழுதியிருந்தேன். அந்த குறிப்பின் ஆரம்பத்தில் பின்வருமாறு எழுதியிருந்தேன். “இன்றைய நவீனதமிழ் இலக்கிய உலகில் சயந்தன் மிகவும் கவனத்திற்குரிய ஒரு எழுத்தாளர். இவரது ஏனைய நூல்களை நாம் கண்ணுற்ற போதும் அது மிகப் பெரிய பாதிப்புக்களை எம்மிடையே ஏற்படுத்தவில்லை. ‘அர்த்தம்’ சிறுகதைத்தொகுதி தமிழ்த்தேசியத்தின் பிரச்சார ஊதுகுழல்களாக விளங்கிய பல சிறுகதைகளையும் ‘ஆறாவடு’ நாவல் பலத்த சிரமமான வாசிப்பனுபவத்துடன் கடக்க வேண்டிய ஒரு நாவலாகவும் விளங்கியது”. இப்போது நினைத்துப் பார்க்கும் போது ஒரு தவறான தகவலை இதனை வாசித்தவர்களிடம் பகிர்ந்து கொண்டதற்காக மனம் மிகவும் வருந்தியது. நான் அதில் எழுதியது போல் இந்தச் சிறுகதைகள் ஆனது தமிழ்த்தேசியத்தின் அல்லது விடுதலைப்புலிகளின் பிரச்சார ஊது குழழ்களாக அமைந்திருக்கவில்லை. மாறாக தம்மீது வலிந்து திணிக்கப்பட்ட போரை எதிர்கொண்ட மக்களின் போராட்ட வாழ்வினையும், அவ்வாழ்வில் அவர்கள் எதிர்கொண்ட வலிகளையும் துயரங்களையும் கூடவே அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் வெற்றியை நோக்கிய அவர்களது கனவுகளையும் குறித்தே இது பேசுகின்றது.

•Last Updated on ••Wednesday•, 01 •January• 2020 02:10•• •Read more...•
 

நூல் அறிமுகம்: ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்எல்லாளன்இந்த வருடம்(2019) கனடா சென்றபோது எல்லாளன் ராஜசிங்கம் அவர்களைச் சந்தித்திருந்தேன். அவர் எழுதிய `ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்’ நூலை ஏற்கனவே வாசித்திருந்தேன். முன்னணி வெளியீடாக 2015 ஆம் ஆண்டு   வந்திருந்தது. அந்தப் புத்தகம் பற்றிய உரையாடல் வந்தபோது, அவர் அது பற்றி மேலும் சில தகவல்களைக் குறிப்பிட்டிருந்தார். அவர் இந்தியாவை விட்டுப் புறப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், அந்தப் புத்தகத்தின் மூலம் அவருடைய பழைய நண்பர்கள் மீண்டும் இணைந்துள்ளார்கள்  என்ற செய்திதான் அது. ஒரு புத்தகம் அந்த வேலையைச் செய்திருக்கின்றது என்றபோது மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. தமிழீழப்போராட்டம் பற்றி பலரும் புத்தகங்கள் எழுதிவிட்டார்கள். சில சச்சரவை ஏற்படுத்தின. சில வரவேற்பைப் பெற்றன. எதுவாக இருப்பினும் அவை ஒவ்வொன்றும் அவர்களின் அனுபவம் சார்ந்த வெளிப்பாடுகள், கற்றுக் கொண்ட பாடங்கள், வருங்கால மூலதனம், அரசியல் ஆவணம்.

தனது ஏழு வயதில் தந்தையைப் பறிகொடுத்த எல்லாளனுக்கு எல்லாமே அம்மாதான். சொந்தக்காலில் நிற்பதற்கு இளமையிலேயே கற்றுக் கொடுக்கின்றார் அம்மா. சிறுவயதில் தேவாலயத்தைச் சுற்றிச் சுற்றி வந்த எல்லாளன் ஈழமாணவர் பொதுமன்றம் (GUES) நடத்திய அரசியல் வகுப்புகளில் கலந்து கொள்கின்றார். 83ஆம் ஆண்டு இனக்கலவரம் பலரை அகதிகளாக்கி ஊருக்கு அனுப்பி வைத்தது. அவர்களுள் மதகுருமாரும் அடக்கம். அப்படியே இவர்களது கோப்பாய் தேவாலயத்திற்கும் ஒரு மதகுரு வருகின்றார். அப்போதுகூட வடபகுதிகளில் இருந்து பேக்கரி போன்றவற்றை நடத்திவந்த சிங்களவர், அவர்களது உடைமைகள் எதுவும் தாக்கப்படவில்லை. 84 ஆம் ஆண்டு, இராணுவத்தின் வற்புறுத்தலின் பின்னர்தான் அவர்கள் வடபகுதியை விட்டுச் சென்றார்கள். 84 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து வடபகுதி வந்த சிங்கள பிஷப், இவர்களின் தேவாலயத்திற்கு வந்தபோது கறுப்புக்கொடி கட்டி அவரை வரவேற்கின்றார் எல்லாளன். பட்டயக்கணக்காளர் படிப்பை ஆரம்பித்த இவரை 83 இனக்கலவரம் திசை திருப்புகின்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (TELO) இணைகின்றார். இந்தியா செல்கின்றார். `சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆரம்பித்த எனது போராட்டம் பின்னர் இயக்க தலைமைகளுக்கு எதிரான போராட்டமாக மாறியது’ என்கின்றார் எல்லாளன். மறு வருடமே அதிலிருந்து விலகிக் கொள்கின்றார். அந்தக் குறுகிய கால இடைவெளிக்குள் நடந்த தனது அனுபவத்தை `சரிநிகர்’ பத்திரிகையில் 2000ஆம் ஆண்டு தொடராக எழுதினார். பின்னர் திருத்தங்கள் செய்து `தமிழரங்கம்’ இணையத்தளத்தில் வெளியிட்டார். அதுவே பின்னர் இந்த நூலாக வந்திருக்கின்றது.

•Last Updated on ••Friday•, 20 •December• 2019 10:45•• •Read more...•
 

மின்னூல்: காணாமல் போன தேசங்கள்!

•E-mail• •Print• •PDF•

- நூல் அறிமுகம் பகுதியில் உங்கள் நூல்கள், மின்னூல்கள் மற்றும் ஏனைய நூல்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தலாம். அறிமுகத்தை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•   - பதிவுகள் -


மின்னூல்: காணாமல் போன தேசங்கள்! - நிர்மல் -

மின்னூல்: காணாமல் போன தேசங்கள்!

அன்பு வணக்கம், என் பெயர் நிர்மல், நான் உங்கள் இணைய தளத்தை இணையத்தில் தேடும் பொழுது கண்டடைந்தேன். மிக்க தரமான தகவல்களை சிரத்தையோடு தரும் தளமாக இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன்.  நான்  கிண்டிலில் ஒரு புக் வெளியிட்டுள்ளேன் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.  காணாமல் போன தேசங்கள் என்கிற தலைப்பிலான என் புத்தகத்தில் எப்படி தேசங்கள்  அழிந்தன என்பதையும் , நில வளங்களை சரியாக பங்கீட்டு பல மொழி இனம் கொண்ட நாடுகள் சிறப்பாக வாழ்கின்றன என்பதையும்  எட்டு நாடுகளின் வரலாற்றை   எளிமையாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்கு ஏற்றது போல எழுதியுள்ளேன். யுகோஸ்லாவியா சிதறியது, கொசோவாவில் நடந்த இன அழிப்பு பற்றி எழுதியுள்ளேன்.

•Last Updated on ••Friday•, 06 •December• 2019 09:22•• •Read more...•
 

நூல் அறிமுகம் - நிலம் பூத்து மலர்ந்த நாள்

•E-mail• •Print• •PDF•

இந்நாவலை மலையாளத்தில் எழுதியவர் மனோஜ் குரூர், தமிழாக்கம் கே.வி. ஜெயஸ்ரீ , வம்சி பதிப்பகம் திருவண்ணாமலை.இந்நாவலை மலையாளத்தில் எழுதியவர் மனோஜ் குரூர், தமிழாக்கம் கே.வி. ஜெயஸ்ரீ , வம்சி பதிப்பகம் திருவண்ணாமலை.

சங்கக் கால மக்களின் வாழ்வியலை நவீன மொழியோடு  எடுத்துரைக்கும் நாவல். தமிழரின் தொன்மையான பண்பாடு சங்கக் காலப் பண்பாடு. இதனை எடுத்துக் கூறும் அகச் சான்று சங்க இலக்கியம். சங்கக் கால மக்கள் மனித வாழ்க்கையை இரண்டு பிரிவாகப் பிரித்துச் சிந்தித்துள்ளனர். ஆண் பெண் உறவைக் கூறுவது அக வாழ்க்கை என்றும் மன்னர்களின் போர் வீரம் பற்றிப் பேசுவது புற வாழ்க்கை என்றும் பதிவு செய்துள்ளனர். இந்த இலக்கியப் பதிவுகள் அக்கால மக்களின் எண்ண ஓட்டங்களை மன உணர்வுகளை வரலாற்றுப் பின்புலத்தை அறிந்து கொள்ள உதவுகிறது. இத்தகைய பின்புலத்தைக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது.

சங்கப் புலவர்கள் கபிலர், பரணர், ஒளவை இவர்கள், கடையெழு வள்ளல்களில் வேள்பாரி, நன்னன், அதியமான் போன்றோரைப் புகழ்ந்து பாடியுள்ளனர். இவர்களின் நட்புக்குப் பாத்தியப்பட்டவர்களாக இருந்து வந்தனர். நன்னனின் நட்புக்குப் பரணரும் , பாரியின் நட்புக்குக் கபிலரும், அதியமானின் நட்புக்கு ஒளவையும் விளங்கியதை அவர்களின் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

நவிற மலையை ஆட்சி செய்தவன் நன்னன், பறம்பு மலையை ஆண்டவன் பாரி, குதிரை மலையை ஆண்டவன் அதியமான் இவர்கள் அனைவரும் கலை இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள், அதே வேளையில் அரசியல் போர் முதலியவற்றிலும் சிறந்து விளங்கினர். மக்களின் நலன் கருதி புலவர்களின் அன்பு பெற்றுச் செம்மையாக அரசியல் வாழ்வை முன்னெடுத்தவர்கள் இவர்கள். என்றாலும் இம்மன்னர்களின் வாழ்க்கைப் பின்புலத்தைக் கொண்டு பாணர்களின் வாழ்வியலோடு கதைக் கூறுவது இந்நாவல்.

பாடி ஆடி மக்களையும் மன்னர்களையும் மகிழ்விப்பவர்கள் பாணர்கள். இசை கூத்து கதை என்று வாழ்ந்து வரும் பாணர்கள் வறுமையில் உழன்று புகழிடம் தேடி பயணிக்கும் பயணத்தில் இந்நாவல் தொடங்குகிறது. வறுமையின் துன்பம் தாளாமல் கொடையாளரைத் தேடியதில் நன்னன் முதலிடம் பெறுகிறான்.

•Last Updated on ••Friday•, 06 •December• 2019 00:46•• •Read more...•
 

நூல் அறிமுகம்: ‘செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்’

•E-mail• •Print• •PDF•

ஆசி.கந்தராஜின் 'செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்'- தினமணி பத்திரிகையில் (தினமணி.காம்) தனது நூலான  வெளியான ‘செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்’ நூல் மதிப்புரையினை எழுத்தாளர் ஆசி.கந்தராஜா அவர்கள் எம்முடன் பகிர்ந்துகொண்டார். அதனை உங்களுடன் பகிர்ந்துகொளீன்றோம். நன்றி. -


சுஜாதா தமது ‘கற்றதும் பெற்றதுமில்’ இப்படி எழுதி இருந்தார் ஒருமுறை.. அதாவது இனிமேற்கொண்டு தனக்கு புத்தகம் அனுப்புபவர்கள் சமையல் குறித்த புத்தகங்களை அனுப்பினால் அதை வாசிக்க தனக்கு மிகவும் இஷ்டம் என்று. இதை சுஜாதாவின் மொழியில் எனக்கு இப்போது சொல்லத் தெரியவில்லை. ஆனால், அவர் சொன்னதின் அர்த்தம் இது தான். அந்த நேரத்தில் அவர் கையில் ஆசி.கந்தராஜாவின் ‘செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்’ புத்தகம் கிடைத்திருந்தால் ஒருவேளை உச்சி முகர்ந்திருப்பாராயிருக்கும். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது எனக்கு அப்படித்தான் தோன்றியது.

*‘மாமிக்கு ஊர் அரிசிப் புட்டுக்கு, நல்லெண்ணையில் வதக்கிய கத்தரிக்காய் பொரியல் வேண்டும். பொரியலுக்கு மட்டுவில் வெள்ளைக் கத்தரிக்காய் தோதுப்படாது’
*‘ஒரு வாய்க்குள் அடங்கக்கூடிய இனிப்பான சின்னச்சின்ன மோதகங்கள் அவை, பொரித்த மோதகங்கள் ஒவ்வொன்றாக வாய்க்குள் சங்கமமாகிக் கொண்டிருந்தன’
*வீரசிங்கத்தார் சாமான் வாங்குவது ஒரு தனிக்கலை. கத்தரிக்காயென்றால் ஊதா நிற லெபனீஸ் கத்தரிக்காய், கிறீஸ்லாந்து பால் வெண்டி, வியட்நாம் கட்டைப் பாவற்காய், இலங்கை பச்சை மிளகாய், கோயம்பத்தூர் உலாந்தா முருங்கை, பிஜி நாட்டு புடலங்காய் என அவரது காய்கறிப் பட்டியல் கோளமயமாகும்.
*இந்த மனுஷன் மூண்டு நேரமும் லெபனீஸ் ‘ஷவர்மா’ சாப்பிட்டு கொலஸ்ட்ரால் ஏத்திக் கொண்டு வரப்போகுது’ - என பணி நிமித்தம் மூன்று ஆண்டுகள் லெபனான் செல்லும் வீரசிங்கத்தைப் பற்றி அவரது மனைவி கொள்ளும் கவலை.

இப்படி புத்தகத்தில் ஏராளமான ருசிகரத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

•Last Updated on ••Saturday•, 23 •November• 2019 09:39•• •Read more...•
 

நூல் அறிமுகம்: ஒரு புது வெளிச்சம்

•E-mail• •Print• •PDF•

போருக்குப் பின்பான ‘படகு மனிதர்’ வாழ்வு சொல்லும் ’உயிர்வாசம்.’தாமரைச் செல்விகாலம் செதுக்கிய சிற்பி தாமரைச் செல்வி.  வன்னி மண் கடைந்தெடுத்துத் தந்த காலத்தின் கண்ணாடி. அவர் கடதாசிக்காலத்திலும், கணனிக்காலத்திலும் வன்னியின் வாழ்வைச் செவ்வனே செதுக்கும் கைதேர்ந்த கதைச்சிற்பி என அறியப்படுபவர். வன்னியின் போருக்கு முன் - போர் காலம் - போருக்குப் பின் - என்ற பெரு  மாற்றங்கள் நிகழ்ந்த முக்கிய காலகட்டத்தின் தவிர்க்க முடியாத இலக்கியப் பிரதிநிதி.

வயலும் வாழ்வும்; காடும் களனியும்; உழைப்பும் உறுதியும்;  தன்மானமும் அடங்காத் தன்மையும்; வன்னி மண்ணின் தனித்துவமான அழகு. அது யுத்தத்திற்கு முன்பும்; யுத்த காலத்தின் போதும்; யுத்தத்தின் பின்பும்; எவ்வாறாகத் தன்னை அடையாளப்படுத்தியதோடு தக்கவைத்தும் கொண்டிருந்தது; இருக்கிறது என்பதை இவரது படைப்புகளை மாத்திரம் பார்க்கும் ஒருவர், நேர்த்தியாகவும் தொடர்ச்சியாகவும் சலிக்காத வகையிலும் கலைத்துவத்தோடு உணர்ந்து கொள்ளலாம்.

அவை கதைப்புலங்களைக் கொண்டிருந்தாலும் ஆவணத்தன்மை கொண்ட வரலாற்றுத் தார்ப்பரியங்களை உள்ளே கொண்டுள்ளவை. அதன் வழியே தாமரைச்செல்வி ஒரு ’காலச் சிற்பி.’ காலத்தை மொழியால் செதுக்கியவர். அவைகளை வாசிப்பது என்பது இருந்த இடத்தில் இருந்த படி காலங்களைக் கடக்கும் ஒரு பயண அனுபவம்.

அதன் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் இன்று வெளிச்சத்திற்கு வருகிறது போருக்குப் பின்பான ‘படகு மனிதர்’ வாழ்வு சொல்லும் ’உயிர்வாசம்.’

இந் நாவல், ஊர்வாழ்வில் இருந்து தப்புதலும் மண்ணை இழத்தலின் வலிகளும், படகுப்பயண அனுபவங்களும் பயங்கரங்களும், புதியநாட்டின் வரவேற்புகளும் இங்குள்ள நிலைகளும் எனப் பயணித்தலின் வழி அகதி மாந்தர்களின் ஒரு புதிய வாழ்வியல் நெருக்கடிகளை பதிவு செய்கிறது. அவர்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தோடு கப்பல் ஏறிய சமான்யர். அந்த அபாயகரமான கடல் பயணத்தில் மாண்டு போனவர்கள் போக, உயிர் தப்பியவர்கள் வந்துவிட்டோம் என்று மூச்சுவாங்க முடியாமல் ‘எண்ணைக்குத் தப்பி நெருப்புக்குள் விழுந்த கதையாக’ ஆகிப்போன நிலையினை சொல்லுமிடங்கள் மிகுந்த வலி மிக்கவை; தமிழுக்குப் புதிதானவை; மேலும், ஏனைய தமிழர்கள் அனுபவிக்காதவையும் கூட.  இவர்களின் அனுபவங்கள் ஈழ/ புகலிட தமிழ் இலக்கியத்திற்குக்  கிட்டிய  புது வரவு; புது வெளிச்சம்; புதுப் பார்வை என்று துணிந்து கூறலாம்.

•Last Updated on ••Friday•, 22 •November• 2019 10:41•• •Read more...•
 

நூல் அறிமுகம்: பேராதனை ஷர்புன்னிஸாவின் "கிராமிய மணம்" நூலை முன்னிறுத்திய ஒரு கண்ணோட்டம்!

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: பேராதனை ஷர்புன்னிஸாவின் "கிராமிய மணம்" நூலை முன்னிறுத்திய ஒரு கண்ணோட்டம்!சித்தி ஸர்தாபி" என்ற இயற்பெயரை உடைய ஷர்புன்னிஸா 1933ஆம் ஆண்டில் ஹட்டனில் பிறந்தவர். திருகோணமலையைச் சேர்ந்த இவரது தந்தையார் மொஹிதீன் பாவா. இவரது தாயார் சுலைஹா உம்மா அநுராதபுரத்தைச் சேர்ந்தவர். இலங்கைப் பொலிஸ் சேவையில் உயர் அதிகாரியாகக் கடமையாற்றிய இவரது  தந்தையாரின் இடமாற்றம் காரணமாகவே ஷர்புன்னிஸா பல்வேறு பிரதேசப் பாடசாலைகளிலும் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார். காலப்போக்கில் கன்ஸுல் உலூம் எஸ்.எம்.ஏ. ஹஸன் அவர்களை தனது துணைவராக ஏற்றுக்கொண்டார். இலக்கியத்திலான ஈடுபாடே இவர்கள் இருவரையும் இணைத்து வைத்துள்ளது. இந்த இணைப்பே இவர்களை மென்மேலும் எழுத்துத் துறையில் ஈடுபட வைத்தது.

1948களில் எழுத்துலகில் பிரகாசித்தவரே ஷர்புன்னிஸா. முஸ்லிம் பெண்களின் கல்வி பற்றி நினைத்தும் பார்க்காத அந்தக் காலத்தில் எழுத்துலகில் ஈடுபாடுகாட்டி வந்தார். ஈழத்துப் பெண் எழுத்தாளர்களுக்கு முன்னோடியாய் அமைந்த பெண்மணியான இவர், காலத்தின் தேவை கருதி கவிதை, சிறுகதை, சிறுவர் கதை, கட்டுரை ஆகிய பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் இவரது எழுத்து முயற்சியை செவ்வனே செய்து வந்தார். மட்டுமல்லாமல் 1948 – 1952 காலப் பகுதிகளில் இவரது தந்தையாரின் பிறப்பிடமான திருகோணமலையில் வாழ்ந்த காலத்தில் இத்தகைய கிராமியப் பாடல்களைச் சேகரிப்பதில் அதிக முனைப்புடன் ஈடுபட்ட இவர் அவற்றை தனது கதைகளில் சேர்த்தும் கட்டுரைகளில் நயந்தும் நிறையவே எழுதியுள்ளார். ஆரம்ப காலத்தில் பேராதனை ஷர்புன்னிஸா என்ற யெரிலேயே தனது படைப்புக்களைக் களப்படுத்தி வந்துள்ளார். "பேசாமடந்தை" என்ற புனைப் பெயலிலும் சிலவற்றை எழுதியுள்ளார். தற்போது கண்டி மாவட்டத்திலுள்ள ஹீரஸ்ஸகல என்ற இடத்தில் வசித்து வருகின்றார்.

இவர் தினகரன், வீரகேசரி, சுதந்திரன், தினபதி, சிந்தாமணி, லங்கா முரசு, மலை முரசு, மலைநாடு இஸ்லாமிய தாரகை, புதுமைக்குரல் ஆகிய ஈழத்துப் ஊடகங்களிலும் மணிவிளக்கு, மணிச்சுடர், ஷாஜஹான் ஆகிய இந்திய இதழ்களிலும் நிறையவே எழுதிவந்துள்ளார். "முஸ்லிம் பெண்களின் கல்வி", "முஸ்லிம் பெண்களும் சமூக சேவையும்", "முஸ்லிம் பெண்களும் அரசியலும்" போன்ற தலைப்புக்களில் தொடர் கட்டுரைகளை இவர் வீரகேசரிப் பத்திரிகையின் வனிதா மண்டலத்தில் எழுதி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல்வேறு விமர்சனங்களையும் இவர் எதிர்கொண்டார். இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களில் மூத்த ஆளுமையான இவர் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் உடுநுவர தொகுதியின் செய்தியாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுஸைன் அவர்கள் அண்மையில் வெளியிட்ட "மின்னும் தாரகைகள்" என்ற இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலில் இரண்டாவது ஆளுமையாக இவர் பற்றிய தகவல்களே காணப்படுகின்றன.

•Last Updated on ••Friday•, 04 •October• 2019 22:33•• •Read more...•
 

நூல் அறிமுகம்: பாரதியும் ஷெல்லியும் – தொ.மு.சி. ரகுநாதன்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: பாரதியும் ஷெல்லியும் – தொ.மு.சி. ரகுநாதன்-  முனைவர் போ. ஜான்சன், உதவிப் பேராசிரியர் , தமிழ்த்துறை, பெட்ரீசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அடையாறு, சென்னை – உம் என்ற இடைச்சொல்லை எட்டு நிலைகளில் பயன்படுத்தலாம் என்பார் தொல்காப்பியர் (எச்சம், சிறப்பு, ஐயம், எதிர்மறை, முற்று, எண், தெரிநிலை, ஆக்கம்). நூலாசிரியர் தொ.மு.சி. அவர்கள் சிறப்பு கருதி நூலின் தலைப்பினைக் கொடுத்துள்ளார். ஒப்புமை செய்ய எடுத்துக்கொண்ட இரு கவிஞர்களுமே சிறப்பு வாய்ந்தவர்கள். ஒப்புயர்வு அற்றவர்கள். ஒப்புமையாக்க நூல்களுள் ஆகச்சிறந்த படைப்பு இந்நூல் என்பது மிகையில்லை.

பாரதிக்கும் ஷெல்லிக்கும் கிட்டத்தட்ட ஓர் நூற்றாண்டு இடைவெளி உள்ளது (90 ஆண்டுகள்). இதனால் ஷெல்லி காணத பல புரட்சிகளையும், வெற்றிகளையும், அவன் காணவிரும்பிய பல்வேறு நிகழ்வுகளையும் பாரதி கண்டான் என்பது தொ.மு.சி. அவர்களின் கூற்று. இரு கவிகளையும் ஒப்புமையாக்கம் செய்யும்போது ஷெல்லியின் கவிதைகளையும் முதலிலும் அதன்பின் பாரதியின் படைப்புகளை அதனோடு ஒப்பிட்டும் காட்டியுள்ளார். பல்வேறு தலைப்புகளில் பல்வேறு செய்திகளைப் பற்றிய விரிவான விளக்கச் செய்திகளாகப் பதிவு செய்துள்ளார்.

பாரதியையும், ஷெல்லியையும் பற்றிய அறிமுகம், அவர்களின் வாழ்க்கைச் சூழல், அவர்களின் படைப்புப் பின்னணி போன்றவற்றை ஒப்புமையோடு விரிவாகக் கூறித்தொடங்கும் நூலாசிரியர், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றில் இருவரின் மனப்பாங்கு எவ்வாறு இருந்தது என்பதை மிகவிரிவாக அழகாக எடுத்துக்காட்டுகிறார். அதேநேரத்தில் அவர்கள் எக்கருத்தில் மாறுபடுகிறார்கள் என்பதைக் காட்டி அதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார். காட்டாக, மன்னர்கள், மதகுருமார்கள் பற்றிய கருத்து நிலைப்பாடு இருவருக்கும் வெவ்வேறாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே அவரவர் காலத்தைக் காணும்போக்கில் மிகத்தீவிரமாக இருந்துள்ளனர்.

பெண்விடுதலை பற்றிய கருத்துநிலையில் ஒரேமாதிரியாக சிந்திக்கும் திறம்பெற்றும், குறிப்பாக, பாரதி அதில் தமிழக நிலையைக் கருத்தில்கொண்டு தம்முடைய படைப்புகளைப் படைத்துள்ளார் என்றும் பாரதியை உயர்த்திக் காட்டுகிறார் நூலாசிரியர். காதல் நிலையில் இருவரும் சற்று முரண்படுகின்றனர். அதற்கான காரணம், இயல்பிலேயே (இளமையிலேயே) ஷெல்லி கடவுள் மறுப்புக் கொள்கை உடையவராக இருந்து, இயற்கையையே காதல் என்று கூறியதும், பாரதி பராசக்தியையே காதல் வடிவமாகக் கண்டதுமே இம்முரண்பாடு.

உருவகங்களையும் உவமைகளையும் பயன்படுத்துவதில் ஷெல்லி முன்னனியில் இருக்கிறார். அதனை அடியொற்றியே பல்வேறு இடங்களில் பாரதி தன்னுடைய உவமைகளையும், உருவகங்களையும் படைக்கிறான். ஷெல்லியின் கவிதைகளில் மனங்கசிந்த பாரதி, ஷெல்லியின் அனைத்துத் திறங்களையும் அப்படியே தமிழில் கொண்டுவர முயற்சித்திருக்கிறான்.

•Last Updated on ••Thursday•, 29 •August• 2019 09:21•• •Read more...•
 

ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் :

•E-mail• •Print• •PDF•

ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல்நாவல்கள், எழுத்து மூலம் சமூக மாற்றததையும்   அடுத்த நிலையிலான சிந்தனையையும்  எழுப்ப முடியும் என்பதற்கான அத்தாட்சியாக பல படைப்புகள் திகழ்கின்றன.

சுப்ரபாரதிமணீயனின் ரேகை நாவலின் மையமும் இது போல் சமூகம் அடுத்த சிந்தனைத் தளத்திற்கு நகரும் போக்கை விவரிக்கிறது எனலாம். சோதிடம் பார்க்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் அதிகம் இருக்கும் ஒரு கிராம மாந்தர்களை இந்நாவல் சித்தரிக்கிறது.  அதில் சோதிடத்தை வணிக நோக்கில் பார்த்து பணம் சம்பாதிக்கிற ஒருவன் சமூகத்தில் மதிக்கப்படாமல்  போவதும் சமூகசீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிற ஒருவர் சீர்திருத்தப் பிரச்சினையில் கொல்லப்பட்டாலும் அவரின் பணிகள் சிலை போன்ற குறியீட்டாலும் அவர் வழியிலான மாந்தர்களால் தொடரப்படுவதும், சமூக விடயங்களை நாடகப்படைப்புகளில் தொடர்ந்து தரும் ஒருவரின் அடுத்த நிலையிலான வளர்ச்சியும் என்ற தன்மைகளை இவ்வகையில் இந்நாவல் குறிப்பிடுகிறது.

கணபதி என்ற கதாபாத்திரம் தன் குலத்தொழிலான சோதிடத் தொழிலை தன் மகனும் வாரிசாகத் தொடர வேண்டும் என்று விரும்பினாலும் அவர் மகன் கணினி சார்ந்தப் படிப்பாலும் வேலையாலும் தொடர்வது புதிய சமூக இளைஞர்களின் வளர்ச்சிப் போக்கை சிறப்பாகக் காட்டுகிறது. சுப்பையா என்ற நாடகக் கலைஞனின் ஆசைகளை நிறைவேற்ற அவரின் மகள் அது சார்ந்த படிப்பில் சேருவது கூட அவ்வகையில் சிறு வெளிச்சம் தான்.

இழிவாக கருதப்படும் சோதிடம் பார்க்கும் சாதி . ஆனால் பண  மதிப்பால் உயர்வதும் காட்டப்படுவது இன்னொரு கோணம்..அமலா என்ற் பூக்காரி கணவன் தன்னை விட்டுப்போன நிலையில் தன் குழந்தைகளைப் படிக்கவைக்கிற முயற்சியில் ஆங்கிலக்கல்வியில் ஈடுபடுவது ஆங்கிலமோகம் பற்றியதை சிறப்பாகச் சொல்கிறது. நதியின் சுற்றுச்சூழல் கேட்டிற்கு எதிரான செயல்களில்  ஒரு ஆசிரியர் முன்னுதாரணமாக நின்று நதியை சுத்தம் செய்ய ஆரம்பிப்பது மற்றும் அவரே வள்ளுவர் சிலை இல்லாத ஆதிக்க சாதிகள் உள்ள ஊரில் பள்ளியில் வள்ளுவர் சிலையோடு கலவி நாளைக்கொண்டாடுவதும் சிறந்த சித்தரிப்புகள். .

•Last Updated on ••Wednesday•, 17 •July• 2019 07:27•• •Read more...•
 

நூல் அறிமுகம்: முருகபூபதியின் "சொல்லத் தவறிய கதைகள்" இரண்டு தளங்களில் இயங்கும் படைப்பாளியின் வாழ்வியல் அனுபவங்களை பேசும் பதிவுகள்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: முருகபூபதியின்    "சொல்லத் தவறிய கதைகள்" இரண்டு தளங்களில் இயங்கும் படைப்பாளியின் வாழ்வியல் அனுபவங்களை பேசும் பதிவுகள் கான்பரா  யோகன் --நான் மெல்பனில் வாழ்ந்த காலத்திலிருந்து ஏறத்தாழ  முப்பது வருடங்களாக நண்பர் முருகபூபதி அவர்களை அறிந்திருக்கிறேன். அந்நாட்களிலிருந்து  இன்று வரை அவரை ஒரு இலக்கியவாதியாகவே  அறிந்தவன் நான்.  தொடர்ந்து  அயராது எழுதிக் கொண்டிருக்கும் அவரின்  பதிவுகளை நூல்களில் மட்டுமல்லாது இணையத்தளங்களிலும்  இதழ்களிலும்  நான் வாசித்திருக்கிறேன். 

பத்திரிகையாளனாகவும் இலக்கியவாதியாகவும் இரு ஆளுமை கொண்ட  அவரது  எழுத்துலக அனுபவங்கள்,   அவரது இலக்கியப்படைப்புகளுக்கு உதவுகின்றன. இந்தச்  சொல்லத் தவறிய கதைகள்  என்ற புனைவு சாரா இலக்கியத்திலும்  இந்த அனுபவ முத்திரைகளை காணலாம்.    

20 அத்தியாயங்களை கொண்ட இந்த நூல்  நினைவுகளின் தொகுப்பாக   அல்லது  நினைவுகளிலிருந்து முகிழ்க்கும் நிகழ்வுகளின்  தொகுப்பாக பார்க்கலாம். இதனைப்  பிரசுரித்ததன் மூலம் அவர் தன்  நினைவுச்  சுமையின் ஒரு பகுதியை இறக்கி வைக்க எண்ணினாரா? அல்லது,  உபயோகமான தகவல்கள் என்றெண்ணி இவற்றைப் பகிர்ந்து கொள்ள எண்ணினாரா? அல்லது நூல் ஒன்றை வெளியிடுவதனால் கிடைக்கும்  படைப்பூக்கத்தை அடைய எண்ணினாரா? இம்மூன்று சந்தேகங்களும் நியாயமானவைதான்.

இனி இந்நூலில் உள்ள  சில அத்தியாயங்களை எனது விருப்புக்குரிய ஒழுங்கில்  வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.

முதலாம் அத்தியாயத்தில்  புலம் பெயர் நாட்டு நடப்புகள் பற்றிய  குறிப்புகளை தந்திருக்கிறார்.  லெபனீஸ் பெண்ணொருத்தி தன் பையனுக்கு தெருவில் வைத்து அடித்ததை கண்ட ஒரு வழிப்போக்கர் பொலீசில் முறையிட,  அது ஏற்படுத்திய விபரீதங்கள்  அங்கதச் சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன.

குடும்ப வன்முறையில் தொடங்கி குறட்டைச் சத்த பிரச்சினை வரை கணவன்- மனைவி உறவின் விரிசல்கள் , விவாகரத்து  வரை போவது பற்றி நகைச்சுவை கலந்த குறிப்புகள் வருகின்றன.

“ திசை மாறிய பறவையின் வாக்கு மூலம்  “ என்ற தலைப்பில் தனது இடது சாரி அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகிப் பின் எவ்வாறு இலக்கியத்தின் பக்கம் திசை மாறினார் என்ற விபரங்களை பல நினைவுக் குறிப்புகளுடன் சொல்கிறார். ஈழத்து முன்னணிக்  கவிஞர் ஒருவர். பலராலும் அறியப்படாமலேயே வாழ்ந்து மறைந்த பிரமிள் என்றழைக்கபட்ட தருமு சிவராம் திருகோணமலையைச் சேர்ந்தவர். அவர் பற்றிய அத்தியாயம் ஒன்று இதில் வருகிறது. தமிழ்நாட்டில் அறியப்பட்ட,  ஆனால் எம்மவரால் அதிகம் அறியப்படாத பிரமிள் பற்றிய தகவல்களின் கச்சிதமான பதிவு இது. தமிழ் நாட்டிலேயே தன் இறுதிக்காலத்தைக் கழித்த பிரமிள் எழுதிய கவிதையின் வரியொன்றே தலைப்பாகவும் வருகிறது. கதிர்காமத்தில் பாலியல் சித்திரவதையில் கொல்லப்பட்ட அழகி பிரேமாவதி மனம்பேரி பற்றிய குறிப்புகள் வரும் அத்தியாயம் ஒன்றை எழுதியிருக்கிறார். ஜே.வி.பி ஆதரவாளர் என்பதால் பொலீசரால் கொல்லப்பட்ட மனம்பேரி குறித்து அவர் எழுதிய கங்கை மகள் என்ற சிறுகதையையும் முன்பு வாசித்திருக்கிறேன்.

•Last Updated on ••Wednesday•, 03 •July• 2019 09:01•• •Read more...•
 

மொழி எனும் போதையில் இருந்து ..... ‘இடைவெளி’ – இதழ் குறித்த ஒரு பார்வை.

•E-mail• •Print• •PDF•

மொழி எனும் போதையில் இருந்து ..... ‘இடைவெளி’ – இதழ் குறித்த ஒரு பார்வை.

‘இடைவெளி’ சிறுசஞ்சிகை ஆனது தனது 5வது இதழினை (ஜனவரி 2019) வெளியிட்டுள்ளது. மிக அண்மையில்தான் எஸ்.சம்பத்தின் ‘இடைவெளி’ நாவலை வாசித்து முடித்திருந்தேன். ‘மரணம் என்பது வேறொன்றுமில்லை. அது அது ஒரு இடைவெளி மட்டுமே’ என்ற செய்தியைச் சொல்லிச் சென்றது அது. இந்த ‘இடைவெளி’ சஞ்சிகை எத்தகைய இடைவெளியைச் சுட்டி நிற்கின்றது, அல்லது எந்த தளத்தில் இயங்குகின்றது என்ற கேள்வியுடனேயே இதழினை வாசிக்க முற்படுகின்றேன்.

தமிழகத்திலிருந்து சிவா.செந்தில்நாதனை ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் கொண்டு வெளிவருகின்ற இச்சஞ்சிகையானது அதன் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி அதன் வடிவமைப்பிலும் கூட மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டு  கையில் வைத்திருக்கும்போதே ஒரு பரவசத்தை ஏற்படுத்தும் வண்ணம் வெளிவந்துள்ளது.

•Read more...•
 

நூல் அறிமுகம்: மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்புநூருல் அயின்திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள் ஊடகத் துறையில் ஒரு பெரிய மைல்கல். புpரபல பெண் பத்திரிகையாளர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக பணியாற்றிவர். இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் கொழம்பபுவத் (கொழும்பு செய்திகள்) என்ற காலாண்டு பத்திரிகையை சிங்கள மொழி மூலம் வெளியிட்டுள்ளார். அத்தோடு ஏற்கனவே 1997 ஆம் ஆண்டில் 'பண்பாடும் பெண்' என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளிலும் இவரது இலக்கியப் பங்களிப்புக்கள் ஏராளம். ரிம்ஸா முஹம்மதைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் 08 ஆவது இதழில் இவரது சிறப்பானதொரு நேர்காணல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டமும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ள இவர் கணனித் துறையிலும் பல பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 1980 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆண்டு வரை ஷஷதினபதி - சிந்தாமணி|| ஆசிரிய பீடத்தில் பத்திரிகையாளராகவும், உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிய திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் 'ஜனனி|| என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமை புரிந்தவர். இவரது குடும்பமே ஒரு கலைக் குடும்பம் தான். சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், ரஷீத் எம். ரியால், நூலாசிரியரின் கணவர் என். நஜ்முல் ஹுசைன் ஆகியோரும் இலக்கியத் துறையில் மிகக் காத்திரமான பங்களிப்புக்களைச் செய்து வருபவர்கள். சட்டத்தரணியான நூலாசிரியரின் ஒரே மகளான நூருஸ் சப்னா சிராஜுதீனும் இலக்கியத்தில் ஈடுபாடுடையவர்.

தற்போது இலக்கியவரலாற்றில் இமாலய சாதனை புரிந்திருக்கின்றார் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள். யாருமே செய்யத் தயங்கும் ஒரு நூல் வெளியீட்டை பல வருடங்கள் தவமிருந்து துணிந்து வெற்றிகரமாக வெளியீடு செய்திருக்கின்றார். ஆம் இலங்கையில் காணப்படுகின்ற முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய பாரியதொரு ஆய்வை இவர் மேற்கொண்டு 460 பக்கங்கயில் அதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதில் எழுத்தாளர்கள், கல்வியியலாளர்கள், வானொலி, தொலைக்காட்சியைச் சேர்ந்த ஊடகவிலாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டு அவர்களின்; தகவல்கள் யாவும் திரட்டப்பட்டு நூலுருவாக்கம் பெற்றுள்ளமை இந்த நூலின் சிறப்பம்சமாகும்.

இனி இந்த நூலில் இவரால் ஆராயப்பட்டுள்ள முக்கியமான சில பெண் எழுத்தாளர்கள் பற்றிய சில தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

பக்கம் 53 இல் முதலாவதாக இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் மாதரசி ஹாஜியானி மைமூனா செய்னுலாப்தீன் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. நிந்தவூரைச் சேர்ந்த இவர் இலக்கியத் துறையிலும் கல்வித் துறையிலும் சாதனைகள் புரிந்த 86 வயதான சரித்திரநாயகி. இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் என்ற பெருமையையும் பெற்றவர்.

மர்கூமா உம்மு ரஸீனா புஹார் (பக்கம் 79) என்று நாமெலல்hம் பெயரளவில் அறிந்திருந்த ஒரு இலக்கியவாதியை எமக்கெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறார் நூலாசிரியர். மண்ணிழந்த வேர்கள் என்ற கவிதைத் தொகுதியைத் தந்த ரஸீனா புஹார் அவர்கள் லுணுகலையைச் சேர்ந்தவர். ஆசிரியையாகவும் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். சுpல வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தாலும் அவரது படைப்புக்கள் என்றும் வாழும்.

இளந்தலைமுறைப் படைப்பாளர்கள் மத்தியில் நன்கு பேசப்படும் ஒரு இலக்கியவாதி ரிம்ஸா முஹம்மத் பற்றிய தகவல்கள் பக்கம் 86 இல் தரப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் மற்றவர்களைப் புகழோங்கச் செய்வதிலும் ஆத்ம திருப்தி காண்பவர் ரிம்ஸா முஹம்மத். தன்னைச் சார்ந்தவர்களின் நலனில் அதிக அக்கறைகாட்டி அவர்களின் நலனுக்காக என்றும் பிரார்த்திக்கும் ஒரு கருணைக் கடல். இதுவரை 10 இலக்கிய நூல்களையும் கணக்கீட்டுத் துறையில் 03 நூல்களையும்  வெளியிட்டுள்ள சாதனைப் பெண். பூங்காவனம் என்றகாலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். கொழும்பு பல்கழைக்கழகத்தில் இதழில் துறை டிப்ளோமா பட்டத்தைப் பெற்றுள்ளதோடு இலக்கியத் துறையில் பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார்.

•Last Updated on ••Wednesday•, 22 •May• 2019 08:49•• •Read more...•
 

நூல் அறிமுகம்: 'உதிர்தலில்லை இனி' ஸ்ரீரஞ்சனியின் சிறுகதைத்தொகுப்பு பற்றிய சிறு குறிப்பு

•E-mail• •Print• •PDF•

'உதிர்தலில்லை இனி' ஸ்ரீரஞ்சனியின் சிறுகதைத்தொகுப்பு பற்றிய சிறு குறிப்பு.இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்புலம் பெயர்ந்த தமிழர்கள், கனடா மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் அவர்கள் புலம் பெயர்ந்து வந்த கால கட்டத்தில் முகம் கொடுத்த பிரச்சினைகள பல. கனடியத் தமிழர்களின் வாழ்க்கையின் முக்கியமான பிரச்சினைகளில் சிலவற்றை ஸ்ரீரஞ்சனி தனது கதைகளின் மையக் கருத்தாகப் படைத்திருக்கிறார். அதாவது, தமிழ்க் குடும்பங்களில் தாய் தகப்பனிடையே நடக்கும் பிரச்சினையால், சோசியல் சேர்விஸ் அவர்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கப்; பிரித்துக் கொண்டு போவதால் வரும் துயரங்ளை இரு கதைகளிற் சொல்லியிருக்கிறார். அத்தோடு, போர் காரணிகளால் இல்லல் பட்டுப் புலம் பெயர்ந்து வந்த இடத்தில் எதிர் நோக்கும் பல பிரச்சினைகளால் சில தாய்மார் மன உளைச்சல்களுக்காளாகுவதும் அதனால் குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்படுவதும் கனடா மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளில் இன,மத,நிற வேறுபாடின்றி எல்லா சமூகத்தினரிடையும் நடக்கிறது.இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் பல விதத்திலும் பாதிக்கப்படுகின்றன.

'உள்ளங்கால் புல் அழுக்கை' என்ற கதையில், குடும்பப் பிரச்சினை காணமாகத் தாய் தகப்பனைப் பிரிந்து.மன உளைச்சலால் பாதிக்கப் பட்ட ஒரு குழந்தை, 'தன் சுயமையின் வலிமை' என்ன என்பதை மற்றவர்களுக்குக் காட்ட, 'நாளைக்கு ஏதாவது சாமானை உடைக்க வேணும்' என்று தனக்குள் முடிவெடுப்பது,அக்குழந்தையின் சாதாரண மனவளர்ச்சி.அக்குழந்தையின் வாழ்க்கையில் நேர் கொண்ட குடும்பத்து வன் முறைகளால்.எப்படி அசாதாரணமாக்கப் பட்டு விட்டது என்பதைக் காட்டுகிறது. வன்முறை என்பது, ஒரு குழந்தையின் பாதுகாப்புத் தளமான குடும்பத்தில் மட்டுமல்ல, சமுதாய நல்லுணர்வு, அரசியல் முன்னெடுப்புக்களையும் அழித்துவிடும் ஒரு பயங்கர ஆயதம் என்பதை இக்கதையின் ஒரு வரி மிகத் தெளிவாக உணர்த்துகிறது.

குடும்பத்தில் நடக்கும் பல பிரச்சினைகளால், அந்தக் குடும்பத்திலுள்ள குழந்தைகளின் எதிர்காலம் சிதைவதைத் தடுக்க அரசுகள் அந்தக் குழந்தைகளைத் தாய் தகப்பனிடமிருந்து அகற்றுவது பல நாடுகளிலும் நடக்கும் விடயமாகும். ஆனால், தாய் தகப்பனிடமிருந்து குழந்தைகளை அகற்றுவதில் மேற்கு நாடுகளைப் பொறுத்தவரையில், கனடா இரண்டாமிடத்தைப் பெறுகிறது. பிரான்ஸ் நாட்டில் 1.2 விகிதமான பிள்ளைகளும்,கனடாவில் 1.1 விகிதமான குழந்தைகளும் சோசியல் சேர்விஸின் பாதுகாப்புக்குள் வளர்கிறார்கள். பிரித்தானியாவில் இந்தத் தொகை 0.55 மட்டுமே. கனடாவில் அரச பாதுகாப்புக்குள் வளரும் 30.40 விகிதமான குழந்தைகள் அந்நாட்டின் முதற்குடியினரின் குழந்தைகள் என்று சொல்லப்படுகிறது. இந்திய உப கண்டத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளின் தொகை தெரியவில்லை. தாய் தகப்பனிடமிருந்து பிரிந்து வாழ்வதால்; குழந்தைகளின் எதிர்காலம் பலவிதத்திலும் பாதிக்கப் படலாம். அவர்களின் உடல் உள.கல்வி வளர்ச்சியில் பல தளர்வுகள் நிகழலாம். உதாரணமாக ஓர் அன்பான வீட்டில் தாய் தகப்பன் இருவரின் அன்பிலும் பாதுகாப்பிலும் வளரும் குழந்தைகளை விட, ஒட்டு மொத்த அன்பற்ற யாரோ வீட்டில் வளரும்போது அவர்களின் முழுத்திறமையும் வெளிப்படாது போகலாம்.

இவருடைய பதினாறு கதைகளில் இருகதைகள் இப்படியான கதைகள் என்பதைப் பார்க்கும்போது, கனடாவில் வாழும் தமிழர்களில் 12.5 குழந்தைகள் இந்த நிலைக்கு ஆளாகிறார்களா என்ற கேள்வி வந்தது. இவர்களுக்கு உதவி செய்யும் தமிழர்களால் உண்டாக்கப் பட்ட அமைப்புக்கள் இருக்கின்றனவா என்றும் தெரியாது.

ஸ்ரீரஞ்சனியின் சிறுகதைத் தொகுப்பின் தலையங்கமான,' 'உதிர்தலில்லை இனி; என்ற பெயரைத்; தாங்கிய இவரின் ஆறாவது கதை,காதலிற் தோல்வியுற்ற ஒரு பெண்,மீண்டும் அவளது பழைய காதலரைக் காணும்போது எழுந்த மனத் துயரைத் தொடர்ந்து, சுயநலமாக என்னைப் பாவித்து முடித்த இந்த மனிதனுக்காக ஏன் நான் இவ்வளவு நாளும் என்னை வருத்தி, ஒடுக்கி வாழ்ந்தேன் என்று தன்வாழ்க்கையை அலசும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை. இது 2010; ஆண்டில் முதற்தரமும் 2014ம் ஆண்டு இரண்டு முறை பதிவாகியிருக்கிறது. 1984ல் எழுதப்பட்ட இவரின் முதலாவது கதையான,'கனவுகள் கற்பனைகள்' என்ற கதையின் கருத்துக்கும உள்ள வித்தியாசம் இந்த எழுத்தாளர் என்னவென்று படிப்படியாகத் தன் படைப்புகளில் தன்னம்பிக்கை கொண்ட பெண்களைப் பிரதிபலிக்கிறார் என்பது புரியும்.

•Last Updated on ••Wednesday•, 01 •May• 2019 08:44•• •Read more...•
 

தம்பியார்'' கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு

•E-mail• •Print• •PDF•

தம்பியார்'' கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்புஅஸாத் எம். ஹனிபாஒரு நந்தவனப் பூவில் தேனெடுக்கும் வண்டு, போர்க்களத்தில் பீறிட்டுப் பாயும் இரத்தத் துளி, வானவில்லின் அழகு, வாடாமல்லியின் வாசனை என்று ஒவ்வொரு விடயத்தையும் அழகாகவும், நுணுக்கமாகவும் நோக்கும் திறன் கவிஞனுக்கு இருக்கிறது. கவிஞனின் கற்பனையில் உதிக்கும் கவிதையாயினும் சரி, உண்மைச் சம்பவமாயினும் சரி இரண்டுமே வாசகனின் மனதில் நிறைந்துவிடக் கூடியதாக இருக்கின்றது.

இலக்கியத் துறையில் காலடி எடுத்துவைப்பவர்கள் எல்லோரும் பல்வேறு துறைகளிலும் தனித்துவமாக மிளர்பவர்களாக இருக்கின்றார்கள். ஒரு இலக்கியவாதி கவிஞனாக, கணக்காளனாக, வைத்தியனாக, வியாபாரியாக, ஆசிரியனாக, சட்டத்தரணியாக என்றெல்லம் பல்தரப்பட்ட துறைகளிலிருந்தும் இலக்கியம் படைக்கின்றான்.

அந்தவகையில் வைத்திய கலாநிதி அஸாத் எம். ஹனிபா அவர்களும் தனது தம்பியார் என்ற நூலை வெளியிட்டிருக்கின்றார். இவர் ஏற்கனவே ஆத்மாவின் புண், பிரேத பரிசோதனைகள் என்ற கவிதை நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார். இவரது கவிதை வீச்சு, வாள் வீச்சைப் போன்று வீரியமானது. எதையும் துணிந்து சொல்லக்கூடியதொரு துணிச்சல் மிக்க கவிஞர். அதேநேரம் கனிந்த இதயமும் உதவி செய்யக் கூடிய குழந்தை மனமும் படைத்த ஒரு வைத்தியராகவும் இவர் காணப்படுகின்றார்.

''தம்பியார்'' என்ற இந்தக் கவிதைத் தொகுதி இனக் கலவரங்களில் உயிர் நீத்த அனைத்து இன மக்களுக்கும் சமர்ப்பணம் செய்ப்பட்டுள்ளது.

இதிலுள்ள கவிதைகள் அப்பாவி மக்களை கூறுபோட்டுவிற்று அரசியல் செய்பவர்களுக்கு சாட்டையடியாக இருப்பதோடு சிந்தனைக்குள் சொருகி சிந்திக்க வைப்பதாகவும் காணப்படுகின்றன. சிறுபான்மைமக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களின்;போது இவரது பேனையானது ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றது. அவர்களின் நலனுக்காக பாடுபட்டிருக்கின்றது.

இதுபற்றி நூலாசிரியர் தனது உரையில் ''சிறுபான்மை என்றால் அடிமைகள் போன்று நடத்தப்பட வேண்டியவர்கள் அல்லர். இந்தநாட்டில் சிறுபான்மை இன மக்களின் இருப்பைப் படுகுழியில் போட்டு மூடிவிட்டு பெரும்பான்மையினர் என்று பெரிய அளவில் பட்டப் பகலில் அட்டூழியம் புரிபவர்களுக்கு எதிராக எனது கவிதைகள் பெரிய ஊசிபோடும்''  என்று தனது ஆழ்மனதின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

பிக்குகள் ஓதும் குர்ஆன் (பக்கம் 01) என்றமுதல் கவிதையின் தலைப்பே ஒரு வேகத்தோடும் விவேகத்தோடும் இடப்பட்டடிருப்பது நன்கு புலப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களின் புனித வேத நூலான அல்குர்ஆனை விமர்சித்து அதற்கு எதிராகப் பேசியமையை எதிர்த்து இக்கவிதை எழுதப்பட்டிருக்கின்றது.

•Last Updated on ••Tuesday•, 16 •April• 2019 02:56•• •Read more...•
 

தமிழுக்களித்த நன்கொடை!

•E-mail• •Print• •PDF•

தாமோதரம்பிள்ளை சனாதனன் எழுதிய, “நவீனத்துவமும் யாழ்ப்பாணத்தில் காண்பியக் கலைப்பயில்வும் (1920-1990)” தாமோதரம்பிள்ளை சனாதனன்தாமோதரம்பிள்ளை சனாதனன் எழுதிய, “நவீனத்துவமும் யாழ்ப்பாணத்தில் காண்பியக் கலைப்பயில்வும் (1920-1990)” எனும் பெயரிலான நூல் மிக அண்மையில் வெளிவந்து, அதை வாசிக்க நேர்ந்தது. யாழ்ப்பாணத்தின் கலை வரலாறு பற்றியதாக அமையும் இந்த ஆய்வுநூல், காலனிய மற்றும் பின்காலனியகால யாழ்ப்பாணத் தீபகற்பம், நவீன கலைப் போசிப்பிற்கும், கலைச் செயற்பாட்டுக்குமான மையமாக அமையுமாற்றையும் அவற்றிற்கான பின்புலம் மற்றும் பேறுகளை புலமைசார் விசாரணைக்கு உட்படுத்துவதாயும் அமைந்துள்ளது. காலனியவாத, தேசியவாத முரண்களின் பின்புலத்தில் தோன்றிய நவீனமயமாதல் படிமுறையில், காண்பியக் கலையில் நிகழ்ந்தேறிய பன்முகத் தன்மைமிக்க அர்த்தம், அடையாளம், அழகியல் முதலாய மாற்றங்களைத் பல்துறைறைச்சங்கம ஆய்வொழுங்குநிலை நின்று யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியும், யாழ்ப்பாணத்துக்கப்பாலான இலங்கையின் ஏனைய பிராந்தியங்கள் மற்றும் இந்தியப் பிராந்தியங்கள் ஆகியவற்றோடும் ஊடாடியும் வாசிப்பதாய் இந்நூல் அமைகிறது. 

காண்பியக் கலையின் கருத்துநிலையில் நிகழ்ந்த மாற்றங்களை, படைப்பு – படைப்பாளி - நிறுவனம் முதலாயவற்றுடன் தொடர்புறுத்தி ஆராயும் இந் நூல், பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் உருவாகிய மத்தியதரவர்க்கம் எனும் மேன்மக்கள் மற்றும் சைவ மறுமலர்ச்சி இயக்கம் முதலாக, ஆயுதப் போராட்டத்தின் எழுச்சி மற்றும் இராணுவ மயமாக்கம்வரையுமான சமூக வரலாற்று நிலவரங்கள், காண்பியக் கலைப்பயில்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் பெறுபேறுகள் குறித்தும் கவனஞ் செலுத்துகிறது. 

காண்பியக் கலைக் கல்வி, அதன் பழக்கம், அது பற்றிய நுகர்வு முதலாய நிலைகளில் உண்டான மாற்றங்களினூடு சாதி முதல் தேசியம் வரையான பல்வேறு அடையாள அரசியற் கூறுகளில் உண்டான மாற்றங்களையும் இந் நூல் ஆராய்கிறது. அந்தவகையில் கலைப்பயில்வு மாற்றங்களினூடு அடையாள அரசியல் மாற்றத்தையும் இந் நூல் இனங்காட்டுகிறது. 

யாழ்ப்பாண மத்தியதர வர்க்கம் தனது பொருளாதார மற்றும் அரசியல்சார் நலன்களினூடு, காலனியத்தின் விளைவாற் கிட்டிய ஓவியக் கல்வி மற்றும் மதமையக் கலையை மீள்வடிவமைப்புச் செய்ததைப் பற்றியும் இந் நூல் விபரிக்கிறது. 

‘மரபும் நவீனத்துவமும் குலத்தொழிலாகக் கலையும்’, ‘நவீனத்துவமும் மாயக்காட்சிவாதமும்’, ‘காலனியமும் தேசியமும் காண்பியற் கலை பற்றிய கருத்தாடற்புலமும்’, ‘கலைப்பயில்வும் அரச உத்தியோகமும்: நடுத்தர வர்க்கமும் ஓவியத்தின் கருத்துரு மாற்றமும்’, ‘நவவேட்கையும் உருவவாதமும்’ ஆகிய ஐந்து இயல்களில் (அறிமுகம், முடிவுரை நீங்கலாக) அமைந்த இந்நூல், 208+xxiv பக்கங்களில் அமைந்துள்ளது.

•Last Updated on ••Thursday•, 28 •March• 2019 20:11•• •Read more...•
 

நூல் அறிமுகம்: வாழும் சுவடுகள்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: வாழும் சுவடுகள்எழுத்துத்துறையில் இயங்கிவரும் பலரும் தமிழில் ‘இளையோர் இலக்கியம் வளரவில்லை’ என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். எந்தவோர் இலக்கியமும் வளர்வதற்கு அது சார்ந்த அடிப்படைத் தரவுகள், மேலதிகத் தகவல்கள் கிடைக்க வேண்டியது அவசியம். அவை பெரும்பாலும் அபுனைவு (Non-fiction) எழுத்துகளில்தான் நிரம்பிக்கிடக்கின்றன, அபுனைவு எழுத்திற்கும், புனைவுகளின் எண்ணிக்கைக்கும் உள்ளார்ந்த தொடர்பிருக்கிறது. உதாரணமாக, கடந்த நாற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ், தமிழ் அரசர்கள், அவர்களின் ஆட்சிமுறை குறித்த ஆய்வுசுள் பெருமளவு நடைபெற்றன. அந்த ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டறிந்த தகவல்களைப் படைப்புகளாகத் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாகவே கல்கியும், சாண்டில்யனும், பூவண்ணனும், ஏனைய பல முன்னோடிகளும் புனைவுகளை எழுதினர். இன்னொருபுறம் வெகுஜனத்தளத்தில் பண்டைய தமிழக வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட திரைப்படங்கள் வெளியாகி பெரும் வெற்றிபெற்றன.

ஏதோவொரு துறையின் ஆராய்ச்சித் தகவல்களால் சர்க்கப்படும் ஒருவர்தான் அதுபற்றிய புனைவை எழுத இயலும். கடந்த பல பதிற்றாண்டுகளாகத் தமிழில் துறைசார்ந்த அனுபவங்கள் பகிரப்படுவது குறைந்தது நமது துரதிர்ஷ்டமே. அறிவியலும் தொழில்நுட்பமும் வேறெப்போதும் இல்லாத அளவில் முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் அவை சார்ந்த படைப்புகள் உருவாக வேண்டியது மிக அவசியம், ஆனால் ஒரு துறையில் அனுபவம் கொண்டவர் எழுதும் திறன் படைத்தவராக இருப்பதில்லை. அத்திறன் கொண்டோர் பல சட்டச்சிக்கல்கள், நடைமுறை பிரச்சினைகள் காரணமாகத் தங்கள் அனுபவங்களை எழுதுவதில்லை . இதில் அரசு, தனியார்துறை என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.

மேற்கத்திய நாடுகளில் குறைந்தபட்சம் அவரவர் துறையில் சந்தித்த சவால்களை மட்டுமாவது ஆவணப்படுத்தி வருகின்றனர். இது எதிர்காலத்தில் அதே வகையான பிரச்சினைகளைச் சந்திக்க நேரும் இளையோருக்குப் பயன்தருவதோடு, அவற்றில் இருக்கும் சுவாரஸ்யம் பல புதியவர்களை அத்துறைக்குள் இழுத்துவரச் செய்கிறது. தாங்கள் படித்த புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு ஒரு கலையை, அறிவியலை, தொழில்நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்து, பிறகு படைப்பாளியாகவும் மாறிய பலரை நாம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

•Last Updated on ••Tuesday•, 26 •February• 2019 22:41•• •Read more...•
 

நூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலைக்கான பயணம்!

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலைக்கான பயணம்!

[ 'பதிவுகள்' இணைய  இதழில் தொடராக வெளிவந்து நூலுருப்பெற்ற நாவல்களிலொன்று எழுத்தாளர் நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை'. அது பற்றிய எழுத்தாளர் டாக்டர்.எம்.கே.முருகானந்தனின் கட்டுரையிது. - பதிவுகள்.காம்]


இந்தப் பயணம் என்னைச் சலிப்படைய வைக்கவில்லை. மாறாக மகிழ வைத்தது. வெளிநோயாளர் பிரிவு, வெளிநோயாளரைப் பார்வையிடும்; மருத்துவரின் அறை, சத்திரசிகிச்சைப் பிரிவு, மருந்தகம், பிரேத அறை என அந்த வைத்தியசாலை முழுவதும் சுற்றி வந்தபோதும். சோர்வு, களைப்பு எதுவும் ஏற்படவில்லை. சுமார் 40 வருடங்கள் மருத்துவனாக பணியாற்றிய, தொடர்ந்தும் பணியாற்றும் எனக்கு மருத்துவமனையை முழுமையாகச் சுற்றுவதில் சலிப்பும் களைப்பும் ஏற்படாதது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மை. முதன் முறையாக ஒன்றைப் பார்ப்பது போன்ற வற்றாத ஆர்வத்திலும், தேடுதலிலும் என்னை முற்றாக மூழ்கடித்திருந்தேன். பல புதுமைகளும் ஆச்சரியங்களும் தங்கள் ரகசிய வாயில்களைத் திறந்து எனக்காகக் காத்திருந்தன. ஆம் அசோகனின் வைத்தியசாலை விஜயத்தைத்தான் கூறுகிறேன்.

மருத்துவமனைதான் ஆனால் மனிதர்களுக்கானது அல்ல. மிருகங்களுக்கானது. சுமார் 400 பக்கங்கள் கொண்ட நீண்ட நாவல். வண்ணாத்திக்குளம் புகழ் நடேசன் அவர்களது நாவல் இது. 2013ல் வெளியாகி இருக்கிறது. இப்பொழுதுதான் படிக்கக் கிடைத்தது. இது ஒரு புலம்பெயர் எழுத்தாளரின் படைப்பு. இப்பொழுது புலன்பெயர் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளை படிக்க முடிகிறது. அவர்களில் சிலர் நன்றாகவும் எழுதுகிறார்கள். இருந்தபோதும் பெரும்பாலனாவர்கள் தமது தாயக நினைவுகளையே படைப்புகளாகத் தந்து எம்மை அலுப்படைய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாறாக ஒரு சிலர் தமது புலம் பெயர்ந்த வாழ்வைச் சொல்கிறார்கள். ஆனாலும் அங்கும் தமிழரது வாழ்வு அதுவும் ஈழத்தை தாயகமாகக் கொண்டவர்களின் வாழ்வே படைப்பாகிறது. இருந்தபோதும் தமது புதிய சூழலின் வித்தியாசமான் அனுபவங்களையும், அங்கு அவர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் படைப்பிலக்கியமாக்கி தரும்போது எங்களுக்கு சில புதிய தரிசனங்களைத் தருகிறார்கள். அவை எமது ஈழத்து தமிழரது வாழ்வின் மற்றொரு அத்தியாத்தை படைப்புலகில் அலங்கரிக்கின்றன. ஆனால் நடேசனின் அசோகனின் வைத்தியசாலை ஒரு முன்னோடியான புதுமை வரவு. முற்று முழுதாக வேறுபட்ட களத்தில் வேற்று மனிதர்களின் கதையாக அமைகிறது. அவுஸ்திரேலியர்களுடன் ஐரோப்பியா, சீனா, மத்திய கிழக்கு போன்ற பல பகுதியினர்;; கதைமாந்தர்களாக உலாவருகிறார்கள். அவர்களின் மாறுபட்ட வாழ்வையும் மனோஉணர்வுகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. இங்கு ஈழத் தமிழர் சுந்தரம்பிள்ளை என்ற மிருக வைத்தியர் மட்டும்தான். அவரது மனைவி சாருலதாவும் பிள்ளையும் ஓரிரு இடங்களில் தலையைக் காட்டினாலும் முக்கிய பாத்திரங்கள் அல்ல. அந்த மருத்துவமனை புகழ் பெற்றதாக இருந்தாலும் அதற்குள் மறைந்து கிடக்கும் உள் அரசியல், குத்துவெட்டுகள், பழிவாங்கல்கள், சிலரின் பொறுப்பற்ற தன்மை, பொறாமை, காமம், யாவும் நாவலில் பேசப்படுகிறது. அதேபோல நல்ல பக்கங்களும் கதையாகிறது. இவை எமக்கு மருந்தாகவில்லை. விருந்தாகிறது.

இலங்கை அரசியல், ஈழத்தமிழர் பிரச்சனை எதுவும் அழுத்தமாகப் பேசப்படவில்லை. இன்றைய ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புலுகப் போக்கில் இது மிகவும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயமாகும். தனது படைப்பு பேசும் விடயத்திற்கு தேவையற்றதை வலுக்கட்டாயமாகக் கொண்டுவந்து இணைத்து வாசகனைக் கவர வேண்டிய அவசியம் நாவலாசிரியருக்கு வேண்டியிருக்கவில்லை. மாற்றாக ஒரு பரந்த உலகை எங்கள் முன் விரித்து வைக்கிறார் நடேசன். தமிழர்கள் என்ற கூட்டிற்குள் முடங்கிக் கிடந்த எங்களை இறக்கை கட்டிப் பறக்கவிட்டு உலகளாவிய மாந்தர்களிடையே சுற்றுலா செல்ல வைத்துள்ளார். புதிய அனுபவங்களைப் பெற முடிந்தது.

•Last Updated on ••Thursday•, 14 •February• 2019 09:07•• •Read more...•
 

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'விடியல்' ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்

•E-mail• •Print• •PDF•

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'விடியல்' ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்பன்னூலாசிரியராகத் திகழும் வெலிகம ரிம்ஸா முஹம்மத் தனது கலையுலகப் பயணத்தின் அடுத்த கட்டமாக 'விடியல்' எனும் தலைப்பிடப்பட்ட நூலை வெளியிட்டுள்ளார். அழகானதொரு முன்னட்டைப் படத்தைக் கொண்ட 'விடியல்' ஓர் ஆய்வு நூலாகத் திகழ்கின்றது.

கவிஞர் மூதூர் முகைதீனின் பிட்டும் தேங்காய்ப் பூவும், இழந்துவிட்ட இன்பங்கள், ஒரு காலம் இருந்தது ஆகிய மூன்று கவிதை நூல்களை அழகாக ஆய்வு செய்யும் இந்த விடியல் ஆய்வு நூல் இலக்கிய அபிமானிகளுக்கு மட்டுமன்றி மாணவர் உலகிற்கும் பயனளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. ஐந்து அத்தியாயங்களை அடுக்கடுக்காகக் கொண்ட 'விடியல்', ஆய்வு நூலின் ஒழுங்கு முறைகளுக்கு இசைவாக அமைந்திருப்பதுடன் கட்டுக்கோப்பான ஒரு நூலுருவில் நூலாசிரியரால் யாத்தமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன ஒற்றுமைக்குப் பாலமிடும் கவிதைகளை தனது ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்திருப்பது இக்கால கட்டத்திற்கு உசிதமான ஓர் அம்சமாகும்.

வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன் சிறப்பானதொரு முன்னுரையை இந்நூலிற்காக வழங்கியுள்ளார். அதில் அவர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். 'இளம் - வளர்ந்து வரும் எழுத்தாளர் அதேநேரம் கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் கதை என்ற இலக்கிய உலகிற்கு அப்பால் கணக்கியல் துறையிலும் படைப்பாற்றல் பெற்ற பெண் எழுத்தாளரின் இப்புதிய நூலுக்கு முன்னுரை எழுதக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது' என தனது சந்தோசத்தை வெளிப்படுத்தியவராக, தொடர்ந்து பல கருத்துக்களைக் கூறிக்கொண்டு செல்லும் அவர் இன்னுமோர் இடத்தில், 'ஆய்வுக்காக கடமை நிமித்தம் படித்து எழுதியது போலன்றி ஒவ்வொரு கவிதையிலும் மூழ்கி முத்தெடுத்து சிலாகித்து எம்மையும் அக்கவிஞரின் உலகிற்குள் அழைத்துச் செல்கிறார்.' என ரசனையுடன் படித்ததை சுவாரஸ்யமாகக் குறிப்பிடுகின்றார்.

மேலும் வைத்தியக் கலாநிதி முருகானந்தன் தன் முன்னுரையில், 'இன ஒற்றுமைக்குப் பின்பு தவறான முடிவுகளால் சந்தேகமும் பிரிவும் ஏற்பட்டமை, இதனைத் தாண்டி மீண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை கவிதைகள் ஊடாக மூதூர் முகைதீன் எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதை வெலிகம ரிம்ஸா முஹம்மத் சிறப்பாக எடுத்துச் சொல்கிறார்.' எனத் தொடர்ந்து செல்லும் அவர், 'ஆய்வு நூல் என்பதற்கப்பால் சகல தரப்பு வாசகர்களும் சுவாரஷ்யமாக வாசிக்கக்கூடிய முறையில் இந்த நூலை ஆக்கிய நூலாசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்| என்றவாறு தனதுரையை முடிக்கின்கிறார்.

கிண்ணியா எஸ். பாயிஸா அலி தனது வாழ்த்துரையில், 'சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மத் நம் நாட்டு முஸ்லிம் பெண் படைப்பாளிகள், இலக்கியச் செயற்பாட்டாளர்கள் வரிசையில் முன்னிலையில் தனித்துவப் போக்கோடு மிளிர்பவர். கவிதை, மெல்லிசைப்பாடல், சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் என சமூகத் தளத்தில் தனக்கெனப் பல அடையாளங்களை வெளிப்படுத்தி வருபவர். பூங்காவனம் எனும் கலை இலக்கியச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு பல்வேறு படைப்பாளிகளுக்குக் களம் அமைத்துக் கொடுப்பவர்.' எனக்கூறிச் சென்று இறுதியில் 'இன ஒற்றுமையையும் சமூக நல்லுறவையும் வலியுறுத்தும் மூதூர் முகைதீனின் கவிதைகள் பல்வேறு இலக்கியத் திறனாய்வாளர்களினாலும் ஆராயப்பட்டிருப்பினும் சகோதரி ரிம்ஸாவின் திறனாய்வுப் பார்வையும் அவரது அழகிய மொழி நடையும் கவிஞர் மூதூர் முகைதீனின் கவிதைகளுக்கு மென்மேலும் அழகையும் பொலிவையும் புதுப்புது ஆற்றல்களையும் காட்டி நிற்பதனைக் காண முடிகின்றது.' என்று முடிக்கிறார்.

•Last Updated on ••Saturday•, 18 •May• 2019 08:08•• •Read more...•
 

ரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல்! காலம் உருவாக்கிய எழுத்து!

•E-mail• •Print• •PDF•

ரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல்! காலம் உருவாக்கிய எழுத்து!இயல்புவாத எழுத்து இரண்டு வகையானது. வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பது ஒரு வகை. இந்த வகையான எழுத்தில் பெரும்பாலும் தனிநபர் துயரங்களும், உறவுச்சிக்கல்களும், சம்பவங்களும் மட்டுமே இடம்பெறும். ஒரு புகைப்படத்தைப் போல குறிப்பிட்ட சூழலைப் பிரதிபலிக்கக் கூடியது இந்த எழுத்து. குறிப்பிட்ட சம்பவங்களை விவரிப்பதை மட்டுமே தனது நோக்கமாகக் கொண்டு இருப்பதால் இந்த எழுத்தாளர்கள் மென்மேலும் தங்கள் எழுத்தின் நயத்திலும் நுட்பங்களிலும் கவனம் செலுத்துகின்றனர். மொழியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதில் இந்த எழுத்து முக்கிய பங்காற்றுகிறது.

இன்னொரு வகையான இயல்புவாத எழுத்து என்பது நிகழ்வுகளை அரசியல் பொருளாதாரப் பின்னணில் ஆராயக் கூடியது. உள்ளதை உள்ளபடி கூறுவது என்பதைக் கடந்து எழுத்தாளர் காரணங்களைத் தேடிச் செல்கிறார். எடுத்துக்கொண்ட காலம், புவியியல் அமைப்பு, பங்குபெறும் மனிதர்களின் மனக்கட்டமைப்பு ஆகியவற்றை ஊருடுருவிப் பார்த்து தனது முடிவுகளை இலக்கியமாக முன்வைக்கிறார். இங்கே நிகழ்வுகள் தனித் தீவுகளாகக் கருதப்படுவதில்லை. சமூக வளர்ச்சிப் போக்கில் அங்கமாக, பின்விளைவாகக் கருதப் படுகின்றன. மனித உணர்வும் கூட ஒரு குறிப்பிட்ட சூழலின் வி்ளைபொருளாக இருக்கிறது. ஒரு கலவரச்சூழலில் நாம அடையும் உணர்வுகளை அனுமதி பெற்று நடத்தும் ஆர்ப்பாட்டத்திலோ, உண்ணாவிரதத்திலோ அடைவது சாத்தியமில்லை. எனவே உணர்வுகள் சூழலில் இருந்து விளைந்து வருபவை. இந்த வகையான எழுத்தில் தனிமனிதனை விட சமூகச்சூழலே முக்கியத்துவம் பெறுகிறது. சமூக வரலாற்றுக்குப் பொக்கிஷமாக இருக்கக் கூடியவை இந்த எழுத்துக்கள்.

சுப்ரபாரதி மணியன் இந்த வகையான எழுத்துக்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களின் ஒருவர். நவீன ஆலைகளைக் கோவில்களாகப் பார்த்தது ஒரு தரப்பு. உரிமைப் போராட்டங்களுக்கான களமாகப் பார்த்தது இன்னொரு தரப்பு. இரண்டையும் கடந்து அது இந்த மண்ணின் மீது ஏற்படுத்திய பாதிப்பை முதலில் உணர்ந்து கொண்ட நுண்ணுணர்வு கொண்ட எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன். இன்று சுற்றுச்சூழல் பார்வை கொண்ட புனைவுகளும், அபுனைவுகளும் தமிழிலக்கியத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. ஆனால் இந்த விழிப்புணர்வு வருவதற்கு முன்பே அவரின்  ” சாயத்திரை  “ நாவல் வந்தது. பின்பு நொய்யல் ஆறு சந்திக்க இருந்த மாபெரும் அழிவையும், ஓரத்துப்பாளையை அமில அணை உருவாக இருந்ததையும் குறித்த முன்னுணர்வை அளித்தது அந்த நாவல்.

•Last Updated on ••Sunday•, 14 •October• 2018 21:34•• •Read more...•
 

கவிஞர் கவி கலியின் “பனிவிழும் தேசத்தில் எரிமலை” ! வாழ்வை நேசிக்கும் வசீகரம்!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் கவி கலியின் “பனிவிழும் தேசத்தில் எரிமலை” !  வாழ்வை நேசிக்கும் வசீகரம்! கவிஞனின் கால்கள் மண்ணில் நடமாடினாலும் அவன் உள்ளம் வானில் பறக்கவேண்டும் என்றார் கவிஞர் தாகூர். அதனாலேயே இலக்கியமும் உலகளாவிய பண்பு கொண்டதாக அமைந்திருக்கிறது. வட்டாரம், தேசம்; தாண்டி பல்கலாசாரத்தினது அனுபவங்களையும் அது கொண்டு வந்து சேர்க்கிறது. 

கவிஞர் கவி கலியின் “பனிவிழும் தேசத்தில் எரிமலை” என்ற கவிதைத்தொகுப்பு அவரின் இரண்டாவது நூலாகும். கவிஞர் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் அவரின் உள்ளம் தாயகத்தின் மீது நம்பிக்கையுடன் சஞ்சரித்தவண்ணமே உள்ளது. 

ஆறறிவு படைத்த மனிதர்களால் வியக்கத்தக்க பல செயல்களைச் செய்ய முடிந்திருக்கிறது. அச்செயல்கள் இந்த உலகெங்கும் பரந்து விரிந்து பலருக்கு அதிசயத்தையும் வியப்பையும் தருகின்றன. உலகப்போரை நிகழ்த்தி மனிதர்களை அழிவுக்குத் தள்ளியவனும் மனிதன்தான். பூமியதிர்ச்சியிலிருந்தும் கடல்கோள்களிலிருந்தும் நோய்களிலிருந்தும் அல்லற்பட்டவர்களை மீட்டெடுத்தவனும் மனிதன்தான். இவையெல்லாவற்றுக்கும் காரணம் மனிதர்களின் அகமும் புறமும் விரவிய எண்ணங்கள்தான். 

அந்த எண்ணங்களின் செயல்வடிவங்கள் இந்த உலகுக்கு, பல செய்திகளைக் கூறுகின்றன. ஒரு விதத்தில் அனுபவத்தின் தொற்றுதல்களுக்கு அவை வழிவகுக்கின்றன. கலைப்படைப்புக்களும் இவ்வாறானவையே. கலைகள் மனிதர்களின் பல்வேறு உணர்வுகளுக்கும் வெளிப்பாடுகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கின்றன. அழகிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் ஒரு சிலையைச் செதுக்குபவனும் கலைஞன்தான். கவிதையை வடிப்பவனும் கலைஞன்தான். 

புராண இதிகாசங்கள் கற்பித்தவைபோல் இந்த உலகை உற்றுநோக்கும் படைப்பாளிகளும் மூன்றாவதுகண் உடையவர்கள்தான். அவர்கள் தங்கள் அகக்கண்ணால் தம்மையும், சார்ந்த சூழலையும், உலகையும்கூட உற்றுநோக்குகின்றனர். வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் நோக்குகின்றனர். அப்போது அவை மொழிவடிவம் பெற்றுக் கவிதைக் கலைப்படைப்புகளாகின்றன. 

கவிதைகள் எப்போதும் நான்குவிதமாக செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. கவிதை ஒரு அனுபவத்தைத் தருகிறது. அது உலகளாவிய தன்மையைக் கொண்டிருக்கிறது. அடுத்து, அரசியற்தன்மையைக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பண்படுத்தும் ஒருமைப்பண்பைக் கொண்டிருக்கிறது. இவை எல்லாப் படைப்புக்களிலும் ஒரே அளவில் இருக்கும் என எதிர்பார்க்கமுடியாது. கருத்தியல், மனநிலை, இரசனை ஆகியவற்றுக்கும் ஏற்ப வாசகர்களிடமும் இவற்றைப் புரிந்து கொள்வதில் வித்தியாசம் இருக்கக்கூடும்.

•Last Updated on ••Friday•, 03 •August• 2018 21:49•• •Read more...•
 

நூல் அறிமுகம்: கடல் முற்றம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: கடல் முற்றம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம் எஸ். பாயிஸா அலிஇயற்கையோடு வாழும் வாழ்க்கை அலாதியானது. ரம்மியமான சூழலும், அதை ரசிக்கக் கூடிய மனமும் இருந்தால் ஒரு மனிதன் கலைஞனாகின்றான். அந்தக் கலைஞன் ஒரு எழுத்தாளனாக மாறும்போது அவனது சிந்தனைகளில் இயற்கை சூழலோடு இணைந்த மானிடர்களின் நிலையும் ஊடுறுவுகின்றது. அதனால் பிரச்சினைகளைப் பற்றி தனது படைப்புக்களில் நுணுக்கமாக எழுதி அதைப்பற்றி தனது தரப்புத் தீர்வையும் எழுத்தாளன் முன்வைக்கின்றான்.

கிண்ணியா எஸ். பாயிஸா அலியும் இயற்கையை ரசித்து மகிழும் ஒரு கவிஞர். அவரது அநேக கவிதைகளில் வந்து வீழுந்த சொற்களும், உவமைகளும் வாசகனுக்கு மிகுந்த சந்தோசத்தைத் தரவல்லன. இவர் ஒரு பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர். சிகரம் தொட வா, தங்க மீன் குஞ்சுகள், எஸ். பாயிஸா அலி கவிதைகள் ஆகிய மூன்று தொகுதிகளை ஏற்னவே வெளியிட்டிருக்கும் இவர் கடல் முற்றம் என்ற இன்னொரு கவிதை நூலையும் தனது நான்காவது நூல் வெளியீடாக வெளியிட்டிருக்கின்றார். இனி இறுதியாக வெளிவந்துள்ள ஷஷகடல் முற்றம்|| கவிதைத் தொகுதியிலுள்ள சில கவிதைகளை இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.

விடியல் (பக்கம் 14) எனும் கவிதை அதிகாலை நேரத்தை கண்முன்னே கொண்டு வருகின்றது. மெல்லிய வெளிச்சமும், இருளும் கலந்த அந்த நேரத்தில் இருண்டு கிடக்கின்ற கடல் மீதான உணர்வு மெய் சிலிர்க்க வைக்கின்றது. மீனவர்களின் அரவமோ, வள்ளங்களோ எதுவமற்ற அந்த நிர்ச்சலமான பொழுதின் நிசப்தத்தை இக்கவிதையை வாசிக்கும்போது எம்மாலும் உணர முடிகின்றது.

அக்கறையின் வெகு தொலைவில்
சிறு புள்ளியாய் தெரிகிறது
விடியல்

பேயுலவும் கரிய இரவாய்
இருண்டு கிடக்கிறது
மா கடல்

•Last Updated on ••Friday•, 08 •June• 2018 20:56•• •Read more...•
 

பிரமிளா பிரதீபனின் கட்டுபொல் நாவலும் ஈழத்துப் பின்காலனிய இலக்கியமும்

•E-mail• •Print• •PDF•

பிரமிளா பிரதீபன்பிரமிளா பிரதீபனின் கட்டுபொல் நாவலும் ஈழத்துப் பின்காலனிய இலக்கியமும்முதலில் இந்த நாவல் வெளியீட்டைப்பற்றிச் சிறிது சொல்ல வேண்டும். இந்த நாட்டின் முக்கியமான ஒரு தனியார் புத்தக வெளியீட்டு நிறுவனமான கொடகே புத்தக நிறுவனம் வருடந்தோறும் நூற்றுக்கான நூல்களை வெளியீட்டு வருகிறது. அது சிங்களம் மற்றும் ஆங்கில நூல்களை மட்டுமே வெளியிடாது, கடந்த 8 வருடங்களாக மேலாகச் சுயமான தமிழ் நூல்களைவெளியீட்டதும், தமிழ் நூல்களைச் சிங்களத்திலும், சிங்கள நூல்களைத் தமிழிலும் வெளியிட்டதும், அவர்கள் நடத்தும் கொடகே சாகித்திய விழா, கையெழுத்துப் பிரதிகளுக்கான போட்டிகள் நடத்தி விருதுகளும் பணப்பரிசில்கள் வழங்கல் மற்றும் மூத்த எழுத்தாளர்களைக்கெளரவித்தல் போன்ற சகல நிகழ்வுகளிலும் தமிழ் எழுத்தாளர்களை இணைத்துக் கொண்டு சிங்கள எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் அதே அளவான கெளரவத்தையும் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 2017 ஆம் ஆண்டுக்கான கையெழுத்துப் போட்டியில் சிறந்த நாவலுக்கான விருதினைப் பெற்றுக்கொடகே நிறுவனத்தினாலேயே நூலாக பிரமிளாபிரதீபனின் கட்டுபொல் எனும் இந்த நாவல் பிரசுரமாகி இருக்கிறது.

கட்டுபொல் எனும் இந்த நாவல் ஈழத்து நாவல் இலக்கியத்தில் குறிப்பாக மலையக நாவல் இலக்கியத்தில் மிகக்கவனத்தினைப் பெறுவதற்குக் காரணம் இது வரை காலம் மலையகச் சமூக அரசியல் துறையினராலும் மலையக இலக்கியத்தின் புனையாக்கத்துறையிலும் பேசப்படாத ஈழத்தின் தென்பகுதி பெருந்தோட்டப் பகுதி ஒன்றின் மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது என்ற வகையிலும், இதுவரை இந்தப் பெருந்தோட்டத்தின் பயிர் செய்கையான கட்டுபொல்(முள் தேங்காய்) எனும் பயிர் செய்கை பற்றிப் பேசுகின்ற,அப்பயிர் செய்கையில் ஈடுபடும் மக்களின் வாழ்வியலையும் பேசுகின்ற முதல் மலையக நாவல் என்ற வகையிலும் இந்த நாவல் நமது கவன ஈர்ப்பைப் பெறுகிறது.

அடுத்து ஈழத்துப் பின்காலனிய இலக்கியமாகவும் இந்த நாவல் வெளிப்பட்டிருப்பதும் இந்த நாவல் முக்கியத்துவம் பெறுவதற்கான பிரதானக் காரணியாகிறது.

ஈழத்துப்பின்காலனிய இலக்கியம் என்ற நோக்கில் 60களுக்கு பின்னான ஈழத்து மலையகத் தமிழ் இலக்கியம் முன்னிலை வகிக்கின்றது. ஈழத்து மலைய தமிழ் இலக்கியத்தை ஈழத்துப் பின்காலனிய இலக்கியமாகப் பார்ப்பதற்கு என்ன தேவை, என்ன பொருத்தப்பாடு இருக்கிறது என்பது கேள்விகள் எழலாம்.

பின்காலனிய நிலவரத்தின் முக்கிய ஒர் அம்சமாக நிலம் இழந்தவர்களின் குரல் என்பது சொல்லப்படுகிறது. காலனியத்தால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக ஈழத்து மண்ணுக்குக் கொண்டு வரப்பட்டு, பெருந்தோட்டப் பயிர் செய்கையில் ஈடுபடுத்தப்பட்டு, பல தலைமுறையாக இலங்கையில் வாழ்ந்து மடிந்து, சுதந்திர இலங்கை என்ற என்று சொல்லப்பட்டாலும் காலனிய மனோபாவம், காலனியச் சமூகக் கட்டமைப்பின் எச்சொச்சங்கள், காலனிய அரசியல் சட்ட அமைப்பின் தொடர்ச்சி போன்ற நிலவரங்களின் காரணமாக அந்த மலையக மக்கள் இலங்கை தேசத்திலிருந்து நாடு கடத்தப்பட, காலனிய ஆட்சி தொடக்கம் பின்காலனிய கால ஆட்சி வரை பல இன்னல்களையும் துயரங்களை அனுபவித்த, அத்தகைய நிலைமைகளுக்கு எதிராகப் போராடிய, நிலம் இழந்தவர்களின் குரலாக மலையகத் தமிழ் இலக்கியம் வெளிப்பட்டதன் காரணமதாக அது ஈழத்துப் பின்காலனிய இலக்கியப் போக்கில் முதன்மையான அடையாளத்தினைப் பெறுகிறது.

•Last Updated on ••Saturday•, 19 •May• 2018 06:39•• •Read more...•
 

பூங்காவனம் இதழ் 30 பற்றிய கண்ணோட்டம்

•E-mail• •Print• •PDF•

பூங்காவனம் இதழ் 30 பற்றிய கண்ணோட்டம்பூங்காவனம் கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் 30 ஆவது இதழ் வெளிவந்திருக்கிறது. பிரபல எழுத்தாளரும் உளவளத் துணையாளருமான திருமதி. கோகிலா மகேந்திரனின் முன் அட்டைப் படத்துடன் வெளிவந்திருக்கும் இவ்விதழில் வழமை போன்று நேர்காணல், கவிதை, சிறுகதை, கட்டுரை, நூலகப் பூங்கா போன்ற பிரதான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

பூங்காவனம் இதழ் மூத்த எழுத்தாளர்கள், சாதனையாளர்கள் என பிரபலமானவர்களது நேர்காணலுடன் வெளிவருவது அதன் சிறப்பம்சமாகும். அந்த வகையில் இவ்விதழில் திருமதி. கோகிலா மகேந்திரன் தனது இலக்கிய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

திருமதி. கோகிலா மகேந்திரன் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் சிவசுப்பிரமணியம் - செல்லமுத்து தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர். தந்தை தமிழாசிரியர், அதிபராகப் பணி புரிந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கிராம பள்ளிக்கூடத்தில் கற்ற கோகிலா மகேந்திரன் இடைநிலை மற்றும் உயர் நிலைக் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். 1974 இல் விஞ்ஞான ஆசிரியையாக நியமனம் பெற்று 1989 இல் அதிபரானார். 1999 முதல் வலிகாமம் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமை புரிந்ததோடு இடையில் விஞ்ஞான பாடச் சேவைக் கால ஆலோசகராகவும், விரிவுரையாளராகவும், கடமையாற்றியிருக்கிறார். பாடசாலைக் காலத்திலேயே இலக்கியம் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவருக்கு அக்கால அறிஞர்களும் வித்துவான்களும் பக்க பலமாக இருந்திருக்கின்றார்கள்.

இதுவரை 02 நாவல்களையும், 07 சிறுகதைத் தொகுதிகளையும், 03 நாடகத் தொகுதிகளையும், 01 விஞ்ஞானப் புனை கதை நூலையும், 04 தனிமனித ஆளுமை நூல்களையும் 11 உளவியல் நூல்களையும், 01 பெண்ணிய உளவியல் நூலையும்  01 புனைவு இலக்கிய நூலையும் வெளியிட்டுள்ளார். நீண்ட கால எழுத்தனுபவம் கொண்ட இவருக்கு இலக்கிய வித்தகர், கலைச்சுடர், சமூக திலகம், கலைப் பிரவாகம் என்ற கௌரவப் பட்டங்களும் பல விருதுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

பூங்காவனம் இதழ் 30 இல் பதுளை பாஹிரா, மருதூர் ஜமால்தீன், எம்.எஸ்.எம். சப்ரி, எஸ். முத்துமீரான், ஆ. முல்லைதிவ்யன், சந்திரன் விவேகரன், சப்னா செய்னுல் ஆப்தீன், பூகொடையூர் அஸ்மா பேகம், வெலிப்பன்னை அத்தாஸ், என். சந்திரசேகரன், கிண்ணியா ஜெனீரா ஹைருல் அமான், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோரது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

•Last Updated on ••Tuesday•, 17 •April• 2018 08:49•• •Read more...•
 

அறிமுகம்: புதிய சொல் – இதழ் 7 (ஜூலை- செப் 2017)

•E-mail• •Print• •PDF•

‘புதிய சொல்’ தனது 7 வது இதழினை வெளியிட்டுள்ளது. வழமையான சிற்றிதழ் மரபின்படியே இதழ் தாமதம் குறித்த கவலையுடனும் பதிப்புத்துறையில் ஏற்படுகின்ற சிக்கல்களையும் சவால்களையும் குறித்த ஆசிரியர் குழுவின் அங்கலாய்ப்புக்களுடனும் இவ் இதழும் வெளிவந்துள்ளது. இப்போதெல்லாம் கையில் கிடைத்தவுடன் ஆணியடித்தால் போல் இருந்து படித்து முடிக்கும் வண்ணம் ஒரு சில இதழ்களே வெளிவருகின்றன. அந்த வகையில் புதிய சொல்லும் தனது 7வது இதழினை சமகால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் மிகச் சிறந்த சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளுடன் மிக நேர்த்தியாக வெளியிட்டுள்ளது

சிறுகதைகள்
கிஸ்டீரியா – கற்சுதா - ஆயுதப்போராட்ட ஆரம்ப காலத்தில் ஆயுதக் குழுவொன்றினால் உளவாளியாகச் சந்தேகப்பட்டு ஒரு சிங்களப் பெண்ணிற்கு வழங்கப் பட்ட கொடூரமான தண்டனை குறித்து பேசுகின்றது.

ஏவல் - பாத்திமா மாஜிதா - முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் சமூக அவலங்களையும் மதத்தலைவர்களின் போலித்தனங்களையும் சாடுகின்றது.

உறுப்பு - அனோஜன் பாலகிருஷ்ணன் -சிறு வயதில் சிங்கள இராணுவ வீரன் ஒருவனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படும் சிறுவன் ஒருவன் எதிர்காலத்தில் எதிர்நோக்கும் ஆண்மை குறைவு குறித்து பேசுகின்றது.

•Last Updated on ••Wednesday•, 04 •April• 2018 18:24•• •Read more...•
 

தமிழ்நதியின் பார்த்தீனியம்

•E-mail• •Print• •PDF•

தமிழ்நதியின் பார்த்தீனியம்தமிழ்நதிஇரண்டு விதமான எழுத்தாளர்கள் உண்டு. ஒருவகையினர் நரிகள் மாதிரி அவர்களுக்கு முழுக்காடும் பாதுகாப்பை அளிக்கும். எங்கும் நுளைந்து வருவார்கள். மற்றவர்கள் முள்ளம்பன்றிபோல். அவர்களது பாதுகாப்பு அவர்களது முட்கள் மட்டுமே. ஆனால் அது வலிமையாகவிருக்கும். இந்த உதாரணம் ஈழத்து மற்றும் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் பொதுவானது. பெரும்பாலானவர்களது பேசுபொருள் ஈழப்போராட்டமே.போர் முடிந்தாலும் இந்த போர் நிழலாகத் தொடர்ந்து வருகிறது. போரைவைத்து சிறப்பாக பலர் இலக்கியம் படைத்திருக்கிறார்கள். நெப்போலியனது படையெடுப்பு நடந்து நூறு வருடங்கள் பின்பாகவே டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் எழுதப்பட்டது. இதனால் இன்னமும் தொண்ணுறு வருடங்களுக்கு போர்காலத்தை நம்மவர் எழுதக்கூடும். இலங்கைப்போரால் ஈழத்தமிழர்கள் களைத்து சோர்ந்தாலும் சினிமாவில் மட்டும் போரைப் பார்த்த தமிழகத்து உறவுகளுக்கு ஈழப்போராட்டம், திருநெல்வேலி அல்வா மாதிரி. சில செவ்விகளையும் கட்டுரைகளையும் பார்த்தபின் ஈழப் போராட்டம் முடிந்ததே தெரியாமல் தமிழக சஞ்சிகையாளர்கள் உள்ளார்களா என எனக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு. சமீபத்தில் நான் படித்த தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் 500 பக்கங்கள் கொண்டது. படிக்கும்போது தொடர்சியாக வாசிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. அதில் உள்ள சம்பவங்கள் விடுதலைப்புலி இயகத்தினரால் நடத்தப்பட்ட உண்மையான சம்பவங்களாக இருந்ததே அதன் காரணம். சம்பவங்கள் நாவலாசிரியரால் நகர்த்தப்படாது, விடுதலைப்புலித்தலைவர் பிரபாகரனால் நாவலில் நடத்தப்படுகிறது. கிரேக்க மொழி அறிவு மட்டுமல்ல, படிப்பே இல்லாத மத்தியூவிற்கு புதிய விவிலியத்தை எழுதும்போது துணை நின்ற தேவதை போன்று விடுதலைப்புலிகள் தமிழ்நதிக்கு துணை நிற்கிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை விடுதலைப்புலிகளின் முகாம்கள் இந்தியாவில் இருந்தபோது கேள்விப்பட்டவை. அதை நிர்வகித்தவர்களில் முக்கியமாக பொன்னம்மான், ராதா என்பவர்கள் என் கல்லூரித்தோழர்கள். அவர்களைப் பல முறை இந்தியாவில் சந்தித்ததால் அவர்கள் பற்றிய விடயங்கள் வாசிப்பதற்கு சுவையாக இருந்தது. பின்பகுதிகள் இந்திய சமாதானப்படையினரால் நடந்த விடயங்கள்.அறிந்தவை. நமது நாட்டுச் செய்திகள் தொகுக்கப்பட்ட கதை என்பதால் சுவாரசியமாக வாசிக்க முடிந்தது.உண்மையான சம்பவத்தில் பாத்திரங்களை நடமாடவிட்டிருப்பது வாசிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அந்தவிதத்தில் தமிழ்நதியின் மொழி ஆளுமையும் நன்றாக உள்ளது. ஒரு விதத்தில் தமிழ் காட்டாறாக ஓடுகிறது. பாரத்தீனியத்தில் குறைகள் இருந்தாலும் நாம் படிக்கவேண்டிய ஒரு புத்தகம். பொதுவான அபிப்பிராயத்தின் அப்பால் நாவலை உட்புகுந்து பார்ப்போம்

•Last Updated on ••Monday•, 30 •September• 2019 23:52•• •Read more...•
 

நூல் அறிமுகம்: தன்வரலாற்றுப் படைப்புகளில் தயாபாயின் 'பச்சைவிரல்'

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: தன்வரலாற்றுப் படைப்புகளில் தயாபாயின் 'பச்சைவிரல்'* நூல்: பச்சை விரல் | பதிவு செய்தவர்: வில்சன் ஐசக் | தமிழில்: ராமன் | வெளியீடு: காலச்சுவடு

கேரளா மாநிலம் பாலாவில் பூவரணி என்னும் கிராமத்தில் 1941 ல் பிறந்தவர் தயாபாய். அவரின் இயற்பெயர் மேர்சி மாத்யூ ஆகும். அவர் பீகார் மாநிலம் ஹஸாரிபாக்கில் ஒரு கிருஸ்தவ மடாலயத்தில் கன்னியாஸ்திரி பயிற்சிக்காகச் சேர்ந்த போதிலும் பயிற்சி முடிவதற்கு முன்பே மடாலயத்திலுள்ள பழங்குடியினப் பகுதியான மாஹோடாவில் கல்விப்பணி புரிந்தார். அன்று தொடங்கிய கல்விப்பணி இன்று வரை தொடர்ந்து நடத்தி வருகிறார். கோண்டு பழங்குடிகளின் ஒருத்தியாகவே மாறி பெண்களின் உரிமைகளுக்காகப் போராடிய பெண்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராட்டக்களம் தான் ‘‘பச்சை விரல்’’ . காடு சார்ந்த வாழ்க்கையால் விலங்குகளாகவே வாழச் சபிக்கப்பட்ட பழங்குடி இன மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி அவர்களுக்கு அடிப்படை உரிமைகளைப் பெற்றுத்தந்த ஒரு போராளியின் கதை தான் இந்த 'பச்சை விரல்'.

1980-ல் Master of Social Work  படிப்பின் ஆய்வேட்டுக்காக மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாடா மாவட்டத்திலுள்ள சுர்லாகாப்பகம் என்னும் பழங்குடி கிராமத்திற்குச் சென்றார். அவர் மதலில் சென்ற பழங்குடி கிராமம் ஆகும். கோண்டு இனத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் இந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களுடன் பழகி எல்லாருக்கும் படித்தமான சகோதரி (பஹன்ஜி) ஆகிவிட்டாள். 1981-ல் தீபாவளி தினத்தன்று தனக்கு மிகவும் பிடித்தமான ‘‘தின்ஸை’’ என்றும் பழங்குடி கிராமத்துக்குச் சென்றார். அவர் தொடர்ந்து 1981 முதல் 1995 வரை 14 ஆண்டுகள் அக்கிராமத்தின் கோண்டு பழங்குடிகளில் ஒருவராகவே மாறிப்போனார். அந்தப் பழங்குடிகளின் உரிமைகளுக்காகவும் கலாசாரம் பாதுகாப்புக்காகவும் போராடினார். அவர்களுடைய முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றினார்.

தயாபாயின் தோற்றம்
தயாபாயின் கழுத்திலும் கைகளிலும் இரும்பு வளையங்கள், நெற்றியில் அரையாணா அகலத்துக்கு பொட்டு, முகத்திலடிக்கும் நிறத்தில் உடம்பைச் சுற்றிய கசங்கிய காட்டன் புடவை என்று காட்சியளிக்கும் ஒரு நாடோடிப் பெண்ணை போன்ற தோற்றம் அவள் தோற்றத்தால் பல சிக்கல்கள் அவளைத் தேடி வந்தன. அனால் இது போன்ற தோற்றத்துடன் ஒரு ஆண் இருந்தால் பல சிக்கல்கள் வருமா என்று நினைத்தால் அது கோள்விக்குறிதான்?

தோற்றத்தால் வரும் சிக்கல்கள்
இரயில் பயணத்தின் போது தயாபாயை பார்த்து ஒரு பிராணி இருக்கிறது. இது எங்கிருந்து வந்ததோ என்று ஒரு பெண் இழிவாக அவள் காதில் கேட்கும் அளவுக்கு பேசி சிரிக்கின்றனர். பெண்ணை ஆண் இழிவு படுத்தியதைக் காட்டிலும் ஒரு பெண்ணே பெண்ணை இழிவுபடுத்துவது இன்றைய சமுதாயத்தில் நிகழ்ந்து வருகிறது. அதையும் அவள் சாதாரனமாக எடுத்துக் கொள்கிறார்.  கிராமத்திற்கு செல்லும் சாதாரணமான பேருந்தில் கூட அவள் தோற்றத்தைப் பார்த்து ஏற அனுமதிக்கப்படுவதில்லை. அதையும் தாண்டி ஏறினாலும் நடத்துனர் அவளை பாதிவழியில் வலுக்கட்டாயமாக இறக்கி விடப்படுகிறார். பெண்கள் எதிர்த்து பேசமாட்டார்கள் என்ற துனிச்சளில் இது போன்று நடக்கிறது. தயாபாய் நடத்துனரைப் பார்த்து ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தை பேசியதும் அவர் அமைதியாக அந்த இடத்தை விட்டு அகன்று விடுகிறார்.  அவளை மிக எளியவளாக கருதுவதனாலேயே இப்படிப்பட்ட சம்பவங்கள் ஏற்படுகின்றன. எளியவரையும் ஏழைபாழைகளையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் காலச்சாரம் இப்போது எங்கும் பரவிவிட்டது. சொல்லப்போனால் ஒரு விதத்தில் இதுவும் ஒரு அடக்கு முறைதான்.

•Last Updated on ••Monday•, 26 •February• 2018 13:34•• •Read more...•
 

நூல் அறிமுகம்: வலிகள் சுமந்த தேசம்' கவிதை நூல் பற்றிய பார்வை

•E-mail• •Print• •PDF•

வலிகள் சுமந்த தேசம்' கவிதை நூல் பற்றிய பார்வைமீராமொஹிதீன் ஜமால்தீன்மீராமொஹிதீன் ஜமால்தீன் என்ற இயற் பெயரையுடைய கவிஞர் மருதூர் ஜமால்தீனின் ''வலிகள் சுமந்த தேசம்'' கவிதை நூல் நூலாசிரியரின் 8 ஆவது நூல் வெளியீடாக வெளிவந்துள்ளது. சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும், ஏறாவூரை வசிப்பிடமாகவும் கொண்ட இவரது இந்த நூலை ஏறாவூர் வாசிப்பு வட்டம் வெளியிட்டுள்ளது.

இந்த நூலில் மறக்க முடியவில்லை, தெளிந்து கொள், உங்களுக்கின்னும், ஏன் விடிகிறாய், அபாபீல்கள், கழுகுப் பார்வைக்குள் நீ, என்றும் நானே தலைவனாக, ஏமாளிகள், உடன் பிறப்பே, ஆத்மாக்களே, நிலை மாறுகின்றேன், எதை எதிர்பார்க்கிறாய், நாளைய அபாபீல்களாக, நிம்மதி ஏது?, நாளை முதல், எம்மிலக்கு, காத்திருக்கிறது, சொல்லிக் கொடு, வாடிக்கிடக்கிறது, நினைவிருக்கட்டும் எம்மை ஆகிய தலைப்புக்களில் 20 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன. இந்த நூலுக்கான முன்னுரையை தீரன் ஆர்.எம். நௌசாத் அவர்களும் பின்னட்டைக் குறிப்பை ஏறாவூர் தாஹிர் அவர்களும் வழங்கியுள்ளார்கள்.

சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இவர் இலக்கியப் பணியாற்றி வந்தாலும் தனது கன்னிக் கவிதைத் தொகுதியை 2008 இல் புரவலர் புத்தகப் பூங்கா மூலமே வெளியீடு செய்தார். அதனைத் தொடர்ந்து மருதூர் ஜமால்தீன் ரமழான் ஸலவாத் (2010), கிழக்கின் பெரு வெள்ளக் காவியம் (2010), முஹம்மத் (ஸல்) புகழ் மாலை (2011), இஸ்லாமிய கீதங்கள் (2012), தாலாட்டு (2015), பத்ர் யுத்தம் (2016) ஆகிய நூல்களையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

புதுக் கவிதை, மரபுக் கவிதை ஆகிய இரண்டு வடிவங்களிலும் கவிதை எழுதுவதில் சமர்த்தரான இவரது கவிதை, சிறுகதை, கட்டுரை, இஸ்லாமியப் பாடல்கள் போன்ற ஐநூறுக்கு மேற்பட்ட படைப்புக்கள் தேசிய பத்திரிகைகளிலும் பல்வேறு சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எந்த மெட்டுக்கும் உடனடியாக பாடல் வரிகளை மிகவும் இலகுவாக எழுதும் ஆற்றல் கை வரப்பெற்ற இவர் தற்போது முகநூலிலும் பல்வேறு வலைத்தளங்களிலும் பல படைப்புக்களையும் அதிக ஈடுபாடுகாட்டி எழுதி வருகின்றார்.

•Last Updated on ••Saturday•, 16 •December• 2017 14:20•• •Read more...•
 

மட்டைவேலிக்குள் தாவும் மனசு - சிவசேகரன் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

“கவிதை என்பது உயர்ந்த உணர்விலே தோன்ற உண்மையான அமைதியில் உண்டாவது” என்றார் வோர்ட்ஸ்வொர்த். எமது வாழ்வில் எத்தனையோ உணர்வுகள் தோன்றுகின்றன. சில சம்பவங்களுக்காகக் கோபப்படுகிறோம். சிலவேளைகளில் துக்கப்படுகிறோம். இன்னும் சிலவற்றுக்காக மகிழ்ச்சிக்கடலில் தத்தளிக்கிறோம். ஆனால் எல்லாமே கவிதையாவதில்லை. அந்த உணர்வுகள் அமைதியில் கலந்து மொழியாகும்போதே கவிதையாகின்றன. இளங்கவி சிவசேகரனும் தன் வாழ்க்கை அனுபவங்களையும் கனவுகளையும் தாங்கிக் கொண்டு “மட்டைவேலிக்குள் தாவும் மனசு” கவிதைகளோடு வந்திருக்கிறான். இக்கவிதைகளில் அவன் மகிழ்ந்த காலங்கள் உள்ளன. துக்கப்பட்ட காலங்கள் உள்ளன. இன்னமும்  ஈடேறாத வாழ்க்கை முரண்கள் உள்ளன.

ஒரு சிறந்த கவிதையானது வாழ்வில் இன்பமும் துன்பமும் சேர்ந்த அனுபவங்களை மட்டுமல்லாமல் வாழ்வில் ஏற்படுகின்ற விலகல்களின் இடைவெளிகளையும் சொல்லநினைப்பது. 

இளங்கவி சிவசேகரன், மக்கள் போரும் வாழ்வும் அலைக்கழிப்புமாக வாழ்ந்த காலங்களைத் தரிசித்திருக்கிறான். எப்போது இந்த வாழ்வு முழுமை பெறும் என்ற எதிர்ப்பார்ப்புடனேயே  வாழ்ந்து வரும் மாந்தர்கள் போலவே அவனின் கிராம மாந்தர்களும் எப்போதும் நிரப்படாத வாழ்க்கை இடைவெளிகளுடனேயே கடந்து கொண்டிருக்கிறாhர்கள். அவ்வாறான வாழ்க்கைப் பின்னணியிலிருந்து வரும் கவிஞனிடமும் சொல்வதற்கு ஏராளம் வார்த்தைகள் உள்ளன.

இத்தொகுப்பிலும் தான் வாழ்ந்த கிராம, குடும்ப உறவின் அன்பையும் அரவணைப்பையும் மீட்டுப் பார்க்கின்ற அதேவேளை; காலம் மனிதர்களிடம் ஏற்படுத்திய வடுக்களையும் இன்னமும் தீர்க்;கப்படாத மனிதர்களின் வாழ்வின் பற்றாக்குறைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்;.

“இனிமேல் ஒன்றுமில்லை என்றெண்ணி
கண்ணீர் விடும் தருணங்களில்
ஏதோ ஒரு ரூபத்தில்
மனவயலுக்குள் முளைதள்ள
எத்தணித்துத் தோற்றுப்போகின்றன
வெட்கம் கெட்ட ஆசை விதைகள்”
(பசுமை தொலைத்த மரம்)

“ஆண்டுகள் பலவாய்
நிமிர்ந்து நிற்கத் தெம்பின்றி
கூனாகிப் போன முதுகு
கொஞ்சம் நிமிரப் பார்க்கும்”
(எழுநூற்றிமுப்பது ரூபாய் மட்டும்)

•Last Updated on ••Saturday•, 09 •December• 2017 08:13•• •Read more...•
 

நூல் அறிமுகம்: ரிஷான் ஷெரீப் மொழிபெயர்த்த ''இறுதி மணித்தியாலம்''

•E-mail• •Print• •PDF•

நூல்  : இறுதி மணித்தியாலம்.- மேமன்கவி -ஈழத்தில் உலக மொழி படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் 50கள் தொடக்கம் நடைபெற்று வருகின்றன. ஆனால் சிங்கள இலக்கியங்கள் சிங்களத்திலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி என்பது 70களின் மத்தியம் தொடக்கம் பரவலாகியது எனலாம். சமீபத்தில் 10 சமகால நவீன சிங்களக் கவிஞர்களின் சுமார் 70 கவிதைகள் அடங்கிய தொகுப்பாக ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பில் வம்சி வெளியீடாக''இறுதி மணித்தியாலம்'' எனும் தலைப்பில் இக்காலகட்டத்தில் நமக்குக் கிடைத்திருக்கிறது. இத்தொகுப்பிலும் அடங்கிய சிங்கள நவீன  கவிதைகள் நேரடியாகச் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொகுப்பின் முதல் சிறப்பு என்று சொல்வது என்றால் இத்தொகுப்புக்கு இவர் தெரிவு செய்திருக்கும் கவிஞர்கள் சிந்தனையில் ஒன்றுபட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான்.  மேலும் இவர்கள் மாற்றுக் கருத்தாளர்களாக இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். மனித உரிமைகள் பேணுதல், சகல இனங்களுக்கான உரிமைகளை மதித்தல். மேலும் இனம் மதம் சாதி மொழி பேதமற்ற நிலையில் சகல இனங்களுடன் ஊடாட விரும்புகின்றவர்களாக இருக்கிறார்கள். அத்தோடு தாம் சார்ந்த சமூகக் கட்டமைப்பைக் கடுமையாக விமர்சிக்கின்றவர்களாக இருக்கிறார்கள்.

இத்தொகுப்பில் அமைந்துள்ள கவிதைகள் மேலும் இரு விதத்திலும் சிறப்பு பெறுகின்றன. ஒன்று, அவற்றை மொழிபெயர்த்திருக்கும் முறைமை. அக்கவிதைகளைத் தமிழ் மயப்படுத்தாமல் தமிழில் சிங்களக் கவிதையை வாசிக்கிறோம் என்ற உணர்வினை ஏற்படுத்து வகையில் அவற்றை மொழிபெயர்த்திருக்கும் முறைமை. மூல மொழி கவிதைகளில் வெளிப்பட்ட இருண்மையைக் கூட அதே சொற்களுடன் மொழிபெயர்த்திருப்பது என்பது ஒரு சிறப்பாக நான் பார்க்கிறேன். இரண்டாவது அக்கவிதைகளில் கவிஞர்கள் பேசியிருக்கும் விடயங்கள். மேலெழுந்தவாரியாகப் பேசும் பொழுது இந்த நாட்டின் சிங்கள-தமிழ் மொழி பேசும் மக்கள் பிரச்சினைகள் பொதுவானவை என்று சொல்லப்படுவதுண்டு. இக்கருத்து போர் காலச் சூழலில், உயிர்-உடைமை இழப்பு காணாமல் போனவர்கள் விதவைகள், அனாதைகள் போன்றவற்றின் உருவாக்கம் என்ற வகையில் பொதுவானவையாக இருக்கலாம். ஆனால் மேலும் சில அம்சங்களில் மூவின மக்களின் பிரச்சினைகள் வெவ்வேறானவை என்பது தெரிய வரும். அவை ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும் அந்தப் பிரச்சனைகளுக்குக் காரணமான காரணிகள் எதிர் நிலையாகவும், தாம் சார்ந்த சமூகத்தை மட்டுமே சார்ந்தவையாக அமைந்திருப்பதைக் காணலாம்.   அத்தகைய கவிதைகள் இத்தொகுப்பில் நிறைந்தே காணப்படுகின்றன.

•Last Updated on ••Tuesday•, 28 •November• 2017 07:05•• •Read more...•
 

நூல் அறிமுகம் : பெருமாள் முருகன் எழுதிய பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை

•E-mail• •Print• •PDF•

 - நடேசன் -பெருமாள் முருகன் தனது முன்னுரையில் தான் அறிந்த ஐந்து விலங்குகளில் மாடுகளை பன்றிகளை பற்றி எழுதமுடியாது. நாய்களும் பூனைகளும் கவிதைக்கானவை என்கிறார். வெள்ளாடுகள் சுறுசுறுப்பானவை என்பதால் அவற்றை வைத்து நாவல் எழுதியிருக்கிறார். தெய்வங்களைப்பற்றி எழுத பேரச்சம் எனவே அசுரர்களை பற்றி எழுதுகிறேன் என்கிறார். இப்படி அவர் எழுதிய நாவல் புனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை . கோகுல் எழுதிய ஓவர்கோட்டை(Gogol’s ‘Overcoat’)ஆவிகளின் கதை என்றால் பெருமாள் முருகன் எழுதியது ஆடுகளின் கதை. ஆனால் ஓவர்கோட்டை மற்றவர்கள் ரஷ்ஷியாவில் நிலவிய வறுமையை எடுத்துரைக்கும் குறியீட்டு சிறுகதையாக நினைத்தால் , பெருமாள் முருகனும் தமிழகத்தின் வறுமையையும் அரசியலில் மக்களுக்கும் அரசுக்கும் உள்ள தூரத்தையும் எழுதியிருக்கிறார் எனலாம். அவரது நாவலைப் பார்ப்போம்

எங்கே பிறந்தது எனத்தெரியாத ஒரு நாள் வயது ஆட்டுக்குட்டியை வளர்ந்தால் ஒரே ஈற்றில் ஏழு குட்டிகள்போடும் என்று சொல்லி எங்கிருந்தோ வந்த ஒருவனால் ஒரு கிழவனுக்கு கொடுக்கப்படுகிறது. அந்த ஆட்டுக்குட்டியை ஒரு கிழவனும் கிழவியும் வளர்க்கும் கதையே இந்த நாவல். இந்நாவலை ஆட்டுக்கதை என நினைக்கலாம். ஆனால், இது ஒரு அரசியல் குறியீட்டு நாவல். மழையற்று வரண்ட மக்களது கதை. பட்டினி பஞ்சம் என்பது என்ன என்பதை மட்டுமல்ல அங்குள்ள மக்களது வாழ்வின் போராட்டமும் அவைதான் என்பதையும் படம் பிடித்துக்காட்டியுள்ளார். எந்த விவசாயிக்கும் சாதாரணமாகத் தோன்றும் கனவே இங்கு நாவலாக விரிகிறது. இதை நாவல் என்று சொல்வதைவிட ‘நொவலா’ எனலாம். கிழவன் கிழவி மற்றும் அந்த ஆட்டுக்குட்டியே பிரதான பாத்திரங்கள். மற்றவை இவர்களுக்காக உருவாக்கப்பட்டவை. நாவலுக்கான உச்சமோ முரண்பாடுகளோ அற்ற நேர்கோட்டுக்கதை. பெருமாள்முருகன் அதை மிகத்திறமையாக, கதையை ஆவலோடு வாசிக்க எம்மை ஒரு மழையற்ற கிராமத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்.

அரசியல்
சர்க்காரது பிடி எப்படி மக்களின் மேல் வலையாக பின்னப்பட்டிருக்கிறது என்பதை ஆடுகளை கணக்கெடுத்து பதிவதிலும், அவற்றிற்கு காதுகுத்தி அடையாளமிடுவதிலும் சொல்லப்படுகிறது. அதற்கு மேல் அரசாங்கத்தின் கொடுமையை புரியவைக்க பாவித்த வார்த்தைகள் சில:

•Last Updated on ••Tuesday•, 21 •November• 2017 10:45•• •Read more...•
 

பழமைக்கும் – புதுமைக்கும் பாலம் இடும் படைப்புகள்

•E-mail• •Print• •PDF•

நீங்காத நினைவுகள்கனடாவின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு, கனடாவில் வாழும் 15 பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளே முதல் சிறுகதைகள் என்று எடுத்துக் கொண்டால், இத்தொகுப்பு அவர்களுக்கொரு வெற்றி. தொடர்ந்து எழுதுவதற்கான ஒரு படிக்கல்.

தொகுப்பில் சிறுகதை என்னும் வடிவம் கைவரப்பெற்ற பல புதிய எழுத்தாளர்களின் கதைகளைக் காணக்கூடியதாக உள்ளது. சிவானி – மிருபா சிவசெல்வசந்திரன், மாலினி அரவிந்தன், காயத்ரி வெங்கடேஸ், திவாணி நாராயணமூர்த்தி போன்றவர்களின் கதைகள் அப்படிச் சொல்கின்றன. மற்றவர்களும் இன்னும் சற்றே சிரத்தை எடுத்துக் கொள்வார்களாயின், அவர்களாலும் நல்ல கதைகளைப் படைக்க முடியும் என்பதை இத்தொகுப்பில் உள்ள கதைகள் காட்டி நிற்கின்றன. இனி தொகுப்பில் உள்ள சிறுகதைகளைப் பார்ப்போம்.

வறுமையின் தியாகம் (அன்னலிங்கம் கிருஷ்ணவடிவு) கதை என்னை எந்தோ காலத்திற்கு பின்னோக்கி அழைத்துச் சென்றது. எழுத்து நடையிலும் தான். நீண்டகால இடைவெளிக்குள் நடக்கும் கதை. ஒரு நாவலுக்குரிய கரு. புளி மாங்காய் (மாலினி அரவிந்தன்) பூடகமாக பல விடயங்களைத் தொட்டுச் செல்கின்றது. கழித்த கல்லும் ஒருநாள் உதவும் என்பதுமாப் போல், புளிமாங்காயும் ஒரு கட்டத்தில் தேவைப்படுகின்றது. எட்டாத பழம் புளிக்குமென்பார்கள். இங்கு எட்டிய பழமும் புளிக்கின்றது. ஒருவேளை பிஞ்சிலே பழுத்த பழமோ? கதையில் நட்பு தன் வேலையைச் செய்வதினின்றும் தவறிவிடுகின்றது. நட்பின் சந்திப்பு (தமிழ்மகள்) பள்ளித் தோழிகள் இருவர் நீண்ட நாட்களின் பின்னர் பூங்கா ஒன்றில் தமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சகிதம் சந்தித்துக் கொள்கின்றார்கள். தமது குடும்பம், முதுமை, கனடா வாழ்க்கை என அவர்களிடையே நடைபெறும் ஊடாட்டத்தைக் கதை சொல்லிச் செல்கின்றது. மூச்சுக்காற்று (ஜெயசீலி இன்பநாயகம்) சின்னஞ்சிறிய கதை. கதையுடன், சுற்றுப்புறச்சூழலைப் பேண வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றது. ஆசிரியர் தனது இரண்டாவது பந்தியில் இருந்தே வாசகரை உள்ளே இழுத்து விடுகின்றார் சற்றே ’த்றில்’ உடன். அந்த இரண்டு நாட்கள் (சறோ செல்வம்) எடுத்த எடுப்பிலேயே வாசகரை உள் இழுத்து விடுகின்றது. தாயகத்தில் ஊரடங்கு, ஆமியின் தொந்தரவுகளைச் சொல்லும் கதை. காவோலை (கனகம்மா) முதுமையில் புலம்பெயர் வாழ்வைச் சித்தரிக்கின்றது.

•Last Updated on ••Wednesday•, 16 •August• 2017 16:41•• •Read more...•
 

நூல் அறிமுகம்: பெர்லின் நினைவுகள்

•E-mail• •Print• •PDF•

பெர்லின் நினைவுகள்பொ கருணகரகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் மற்றைய புலம்பெயர்ந்த அனுபவங்கள்போல் சிதைந்து நாவல், சிறுகதை என உருமாறாது, கற்பனை கலக்காமல் அபுனைவாக தமிழ் இலக்கியப்பரப்பிற்கு வரவாகியுள்ளது.இதனால் இது நமது புலப்பெயர்ந்தோரது இலக்கியத்தில் முக்கியமான ஓரிடத்தைப் பிடித்துள்ளது. வாசிப்பதற்கான அவகாசத்தைத்தேடிப் பல காலங்களாக அடைகாத்து வைத்திருந்தேன். கடைசியில் அது கை கூடியது. நிச்சயமாக ஒரு டாக்சி ஓட்டுனராக அவர் முகம் கொடுத்த அனுபவங்கள் பலதரப்பட்டவை. டாக்சி ஓட்டுனராகப் பலரோடு பல தருணங்களில் ஏற்படும் சம்பவங்கள் மற்றவர்களுக்கு எக்காலத்திலும் ஏற்படாது. அதிலும் எத்தனை டாக்சி ஓட்டுனர்கள், அவர்போல் தனது அனுபவங்களை இலக்கியமாக்கும் மொழி தெரிந்தவர்கள்? அவரது மருத்துவராகும் எண்ணம் ஈடேறவில்லை என்பது உண்மை, ஆனால் அது தமிழ் இலக்கிய உலகத்திற்கு அதிஷ்டமாக அமைந்தது. மருத்துவரது நினைவுகள் அவர் இறந்தபின்போ அல்லது அவரது நோயாளிகள் இறந்தபின்போ மறைந்துவிடும். ஆனால் டாக்சி ஓட்டுனரான நண்பர் கருணாகரமூர்த்தியின் நினைவுகள் அழிவற்றவை. குறைந்தபட்சம் தமிழ்மொழியிருக்கும் வரையில் வாழும். இந்தப் புத்தகத்தில் இலங்கை நினைவுகளையும் பெர்லின் நினைவுடன் குழைத்து எழுதியது சுவையானது. அத்துடன் பல இலங்கையரது வாழ்வுகளை மற்றவர்களுடன் கலந்தது அவரது அகதித்தமிழ் வாழ்க்கையும் பதிவாக்கியுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் ஐரோப்பியநாடுகளுக்கு செல்லுவது எண்பத்து மூன்றுக்கு முன்பாகவே நடந்தது. ஓரளவு ஆங்கிலம் படித்தவர்கள் மேற்படிப்புக்காக மாணவர் விசா எடுத்துக்கொண்டு இங்கிலாந்து செல்வதும், மற்றவர்கள் ஜெர்மனி, பிரான்ஸ் எனச் செல்லத் தொடங்கியதற்கு 72 களில் உருவாகிய தரப்படுத்தலே முதலாவதாகவும், சீதனச் சந்தையில் சகோதரிகளின் வாழ்வு இரண்டாவதாகவும், உந்து சக்திகளாகின. ஆரம்பத்தில் விமான கட்டணத்திற்கு பணம் உள்ள பெற்றோர்கள், பிள்ளைகளை அனுப்பத்தொடங்கினார்கள். அதில் முக்கியமாக நான் பிறந்த தீவுப்பகுதியினரே முன்னணிப்படையினர். விவசாயம் செய்யாத தீவுப்பகுதியினர் அதுவரையிலும் இலங்கையின் தென்பகுதியில் புகையிலைக் கடை, உணவுக்கடைகளை நோக்கித் தொடங்கிய பிரயாணம் இன முறுகல்களால் தடைப்பட்டதும் ஐரோப்பா சென்றனர். அக்காலத்தில் ஏரோபுளட் என்ற சோவியத் விமானத்தில் ஏறி கிழக்கு பெர்னிலில் இறங்கிய பின், மேற்கு பெர்லினில் செல்வதற்கு அக்கால கிழக்கு- மேற்கு அரசியல் பனிப்போர் உதவியது. அப்படியாகச் சென்றவர்கள் போட்ட பாதையால் 83 பின்பு மற்றயவர்கள் நடந்தார்கள்.

•Last Updated on ••Thursday•, 03 •August• 2017 00:19•• •Read more...•
 

நூல் அறிமுகம்: தழும்பு நாவல் பற்றிய கண்ணோட்டம்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: தழும்பு நாவல் பற்றிய கண்ணோட்டம்புரவலர் புத்தகப் பூங்காவின் 38 ஆவது வெளியீடாக மா. பாலசிங்கம் எழுதிய தழும்பு என்ற நாவல் வெளி வந்திருக்கிறது. இதுவரை ஒரு நூலைத் தானும் வெளியிடாத பல புதிய எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள புரவலர் புத்தகப் பூங்கா இதுவரை 38 எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டிருப்பது சாதனைக்குரிய விடயம். தன் தாய் மொழியாகத் தமிழைக் கொண்டில்லாதபோதும் நம் தாய் மொழித் தமிழுக்கு புரவலர் புத்தகப் பூங்காவின் நிறுவுனரான புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் ஆற்றிவரும் சேவை மகத்தானது. போற்றப்பட வேண்டியது.

தழும்பு என்ற இந்நூலில் வீடு வந்த வசந்தம், தழும்பு ஆகிய இரண்டு நாவல்கள் உள்ளடக்கப்பட்டு 196 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. இந்நூலாசிரியரான மா. பாலசிங்கம் அவர்கள் ஈழத்து இலக்கியத் துறையில் என்றும் நினைவுகூரத்தக்கவர். நூல் விமர்னங்கள் பலதை எழுதி வருவதுடன், நூல் வெளியீடுகளுக்கு சமூகமளித்து அந்நூல் வெளியீடு பற்றிய அனைத்துத் தகவல்களையும் பத்திரிகையில் காத்திரமாக எழுதி வரும் ஒரு சமூகப் பொறுப்பு மிக்கவர். சற்றும் தளராது இலக்கியத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு எழுத்தாளர்களை நாடறியச் செய்து கொண்டிருப்பவர். இவர் ஏற்கனவே இப்படியும் ஒருவன், எதிர்க்காற்று, மா.பா.சி. கேட்டவை ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நூலில் காணப்படும் முதல் நாவலான வீடு வந்த வசந்தம் என்ற நாவலே எனது ரசனைக் குறிப்புக்காக இங்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

இலங்கைத் திருநாட்டில் ஏற்பட்டு யுத்தமும் அது தந்த வடுக்களும் அனுபவித்தவர்களுக்கு அதை வாழ்நாளிலேயே மறக்க முடியாது. நாடுவிட்டு நாடு ஓடி அகதிகளாக புகலிடங்களில் தஞ்சம் புகுந்து ஏராளம் துன்பங்களை அனுபவித்துள்ளார்கள் அந்த மக்களில் பலர். அந்நிய நாட்டிலிருந்துகொண்டு சொந்த நாடு பற்றிய ஏக்கங்களைச் சுமந்து பிறந்த மண்ணை மீண்டும் பார்ப்போமா என்றே தெரியாமல் வாழ்ந்து மடிந்தவர்களும் ஏராளம். அத்தகையதொரு சூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலே வீடு வந்த வசந்தம் என்ற நாவலாகும்.

•Last Updated on ••Friday•, 28 •July• 2017 09:07•• •Read more...•
 

நூல் அறிமுகம்: நெஞ்சக்கதவை கொஞ்சம் திறந்த நூல் ….”பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது”

•E-mail• •Print• •PDF•

பிச்சினிக்காடு இளங்கோசிங்கப்பூர் தேசிய நூலகம் நுழைந்து நூலடுக்குகளைப் பார்வையிட்டுக்கொண்டு வந்தேன். என் கண்ணில் பட்ட நூல் “பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது” எனும் கவிதை நூல். கையிலெடுத்துக் கொஞ்சம் புரட்டினேன். அது மலாய்மொழிக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு. நூல் கனமாக இல்லையென்றாலும் என் கவனத்தைக் கவர்ந்துவிட்டது. படிப்பதா? இல்லை அங்கேயே விட்டுவிடுவதா என யோசித்துப் பின் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து படிக்கத்தொடங்கினேன். நூலாசிரியரின் முன்னுரை என்னைப்படிக்கத்தூண்டியது. அடக்கமும் எழுத்தின்மீது அக்கறையும் கவனமும் தொனித்த நடை அவர்மீதான மரியாதையைக்கூட்டியது. அதனாலயே தொடர்ந்து இருக்கையிலும் இருகையிலிருந்த நூலிலும் கவனம் பதிந்தது. மலாய்மொழிக்கவிதைகளையும் மலாய்க்கவிதைகளின் ஆங்கிலமொழிபெயர்ப்பையும் தமிழில் பெயர்த்து தந்திருந்தார் ஆசிரியர் பா. சிவம்.  கவிதை நூலில் ஒரு புதிய சொல் விளைந்திருப்பதைக் உணர்ந்தேன். அது ‘நகர்ச்சி’. நுகர்ச்சி நமக்கு அறிமுகமான சொல். ஆனால் இது நகர்ச்சி. பல கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.

“ இரத்தக்கறை படிந்த
நினைவுகளைக் கழுவுவதற்காக
நானும் திரும்பவேண்டும்
நதியிடம்”-

இது அவாங் அப்துல்லாவின் கவிதை. நதியில் கழுவும் அளவுக்கு இரத்தக்கறையென்றால் அந்தக்கனமான நினைவுகளை எண்ணி மனம் அசைபோடத்தவறவில்லை. அவருடைய இன்னொரு கவிதை:

“ இரவின் மெல்லிய துணி
காயத்திற்கு
ஒருபோதும் மருந்தாகாது”.

இது அழகாக மிக அழகாக மனதைச்சீண்டுகிறது. நிலவின் ஒளியை ஆடையாய்ப்போர்த்திய கற்பனை நம்முடையது. இது இரவையே போர்த்திய சிந்தனை இங்கே. இதன் பன்முகப்பார்வையைப் பதிவுசெய்யாமல் தப்பிக்கிறேன் நான். இன்னொரு அழகிய கவிதையைத்தந்திருக்கிறார் அப்துல்கபார் பகாரி.

•Last Updated on ••Saturday•, 15 •July• 2017 16:58•• •Read more...•
 

பூங்காவனம் 28 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை

•E-mail• •Print• •PDF•

பூங்காவனம் 28 ஆவது இதழ் மீதான ஒரு பார்வைபூங்காவனத்தின் 28 ஆவது இதழ் ஓய்வு பெற்ற அதிபரும், இலக்கிய ஆர்வலருமான திருமதி மர்ளியா சித்தீக் அவர்களின் புகைப்படத்தை அட்டைப்படமாகத் தாங்கி வந்திருக்கிறது.

இதழின் பிரதம ஆசிரியர் தனது ஆசிரியர் கருத்துப் பக்கத்தில் குடிநீரின் முக்கியத்துவத்தைப் பற்றிய கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மார்ச் மாதம் 22 ஆம் திகதி குடிநீர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் நீரின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து நீர்ப்பாவனையை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் முற்று முழுதான நீரின் 03 சதவீதமே மனிதனது பாவனைக்கு உள்ள நீரின் அளவான படியினால் நீரின் பாவனை எந்தளவுக்கு சிக்கனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனை எடுத்து விளக்கியிருக்கின்றார். நீர் போட்டிப் பொருளாகவும், வியாபாரப் பொருளாகவும் இன்று மாறியிருப்பதால் சில வேளைகளில் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள மென்பானங்களை உட்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன என்பதனையும் நினைவுபடுத்தியிருக்கிறார். எனவே வாசகர்களாகிய நாமும் அவரது கருத்துக்களை மனதில் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லலாம்.

இனி பூங்காவனத்தின் உள்ளே வழமைபோன்று நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப்பூங்கா ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

நேர்காணலில் இம்முறை திருமதி மர்ளியா சித்தீக் அவர்களின் நேர்காணல் இடம் பெற்றிருக்கிறது. அதேபோன்று பதினொரு கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிதைகளை பதுளை பாஹிரா, ஆ. முல்லைதிவ்யன், மருதூர் ஜமால்தீன், எம்.எஸ்.எம். சப்ரி, ஷப்னா செய்னுள் ஆப்தீன், டாக்டர் நாகூர் ஆரீப், ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, எம்.எம். அலி அக்பர்,  ஆர். சதாத், எச்.எப். ரிஸ்னா, குறிஞ்சி தென்றல் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

இந்த இதழில் நான்கு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை வெலிப்பன்னை அத்தாஸ், சூசை எட்வேட், சுமைரா அன்வர், எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோரும், உருவகக் கதையை எஸ். முத்துமீரானும் எழுதியிருக்கின்றனர். கவிஞர் ஏ. இக்பால், கா. தவபாலன், ஆஷிகா ஆகியோர் கட்டுரைகளைத் தந்திருக்கின்றார்கள். கிச்சிலான் அமதுர் ரஹீமின் நூல் மதிப்பீடும் நூலில் இடம் பிடித்திருக்கிறது.

•Last Updated on ••Saturday•, 17 •June• 2017 08:42•• •Read more...•
 

நூல் அறிமுகம்: “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம்சமூகமொன்றின் இயக்கத்துக்கும் நீடித்து நிலைபெறலுக்கும், வரலாறு என்பது அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. ஆனால் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, ஒரு ஆய்வாளன் ஆராய்கின்ற வழக்கிழந்த நடைமுறை ஒன்று, புவியியலால் தனித்த வேறொரு பகுதியில் இன்றும் மருவிய நிலையில் வழக்கில் இருக்கலாம். ஆனால், விரிவான தளத்தில் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளும் போது அந்த மிகச்சிறு அம்சம் கவனிக்கப்படாமல் போக வாய்ப்புகள் உண்டு.

இந்த இடத்தில் தான் நுண்வரலாறுகள் (Micro histories) கைகொடுக்கின்றன. ஒரு ஆய்வுப்பொருள் பரந்த எல்லைக்குள் அடங்கும்போது, அதை தனிநபர் அல்லது தனிச்சமூகம் அல்லது குறித்த புவியியல் பிராந்தியம் சார்ந்து வரையறை செய்து கட்டியெழுப்புவதே, நுண்வரலாறு எனப்படுகின்றது. இத்தகைய நுண்வரலாறுகளின் தொகுப்பாக முழு வரலாறு உருவாக்கப்படும்போது, அது ஐயத்துக்கிடமற்ற நம்பகத்தன்மையையும் துல்லியத்தையும் கொண்டிருக்கும். அண்மையில் சொ.பிரசாத், க.சபாரெத்தினம் ஆகியோரால் எழுதப்பட்டு, மறுகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள “ஆரையூர் கண்ணகை - வரலாறும் வழிபாடும்” நூலை, இத்தகைய ஒரு நுண்வரலாறு என்ற கண்ணோட்டத்தில் தான் அணுகவேண்டும்.

கண்ணகி வழிபாட்டுக்கும் கிழக்கிலங்கைக்கும் இடையேயான பிரிக்கமுடியாத பந்தம், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. சிங்களவர், வடபகுதித் தமிழர் என்போரிடமும் கண்ணகி தெய்வமாக விளங்கினாலும், கீழைத்தமிழருடனான அவளது நெருக்கத்துக்கு விடை தேடும் ஆய்வுகள், அறிவார்ந்த பார்வையில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. கீழைக்கரையின் ஒவ்வொரு கண்ணகி ஆலயங்களும் தத்தம் நுண்வரலாறுகளை முறைப்படிப் பதிவு செய்யும் போது, இக்கேள்விக்கு நம்மால் இலகுவாகப் பதில்காண முடியும் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே 1985களில், “செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வரலாறும் வழிபாடும்” எனும் நூல், அவ்வாலய பரிபாலன சபையினரால், வெளியிடப்பட்டிருந்தது. அதேபோல், 1998இல் ந.நவநாயகமூர்த்தியால் “தம்பிலுவில் கண்ணகி வழிபாடு” எனும் நூல் வெளியிடப்பட்டது. இன்னொரு முக்கியமான நூலாக, 2014இல் வெளியான காரைதீவுக் கண்ணகி அம்மன் ஆலயக் கும்பாபிஷேக மலரைக் குறிப்பிடலாம். இந்த வரிசையில் அடுத்ததாக வந்து இணைந்திருக்கிறது “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” நூல்.

•Last Updated on ••Saturday•, 17 •June• 2017 08:20•• •Read more...•
 

சுப்ரபாரதிமணியனின் 'ஓ.. செகந்திராபாத்' : தனக்கேயான முகம்

•E-mail• •Print• •PDF•

சுப்ரபாரதிமணியனின் 'ஓ.. செகந்திராபாத்' : தனக்கேயான முகம்மனிதன்பேசித்திரியும் விலங்கு என்றொரு பழமொழி உன்டு. இடம்பெயர்தல் ஆங்கிலத்தில் மைகிரேசன் என்பார்கள் காக்கை தன் ஊரைவிட்டு வெகுதொலைவு செல்லாது.புறா,கொக்கு,நாரை, பல கிலோமீட்டர் சென்று திரும்பும்.சுப்ரபாரதிமணியன் மைகிரேசன் கொண்ட மனிதர்.திருப்பூரில் பிறந்து குன்னூர் , ஹைதராபாத் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை என பல ஊர்களில் பணி செய்த அனுபவம் கொண்டவர் ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் உண்டு அது தனக்கேயான முகம்.எனினும் பின்னால் பல முகங்கள் கொண்டவர்கள் என்பதே உண்மை.

சுப்ரபாரதிமணியனின் தொலைநோக்குப்பார்வை இந்த நூலில் தெளிவாய்த் தெரிகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கைப் பயணத்தில் உடன் நடக்கும் மனிதர்களோடு தனக்கேயான உறவை அளவிட்டு வைத்துக் கொள்வார்கள்.தனக்கும் தன் நண்பர்களுக்குமான உறவைத் தன் தனித்தன்மையான எழுத்தில் வெளிப்படுத்தியிருப்பதில் அவர் வெற்றியடைந்திருக்கிறார் என்பது இந்நூலை படிக்கும்போது தெறிகிறது.அவர்களை நினைவு கூர்ந்து கொள்கிறார்,

ஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறந்திருக்கிறது..சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது  கிடைத்த  அனுபவங்களைத் தந்திருக்கிறார்.

அனைவருக்கும் அனுபவம் இருக்கிறது,தன் அனுபவத்தை எழுத்தில் கொண்டுவரும் திறமை சுப்ரபாரதிமணியனுக்கு இருக்கிறது என்பதற்கு இந்நூல் உதாரணம். தன் எண்ணங்களை இவர்கள் படிப்பார்கள் என்று தெரிந்தும் ராசி சிமெண்ட் அமிர்தனோ,ராமாநாயுடுஸ்டுடியோ மணியோ,நா.கதிர்வேலனோ,அவர்களின் குணங்களை பட்டியலிட்டிருக்கிறார் நாளை அவர்களை நேரில் சந்திக்கும் போதும்எதிர்கொள்ளும் துணிவு இவர் எழுத்தில் திடமாய்த் தெரிகிறது.அதி லேசாக எடுத்துக் கொண்டிருக்கிறாரோ என்று படுகிறது.

•Last Updated on ••Friday•, 16 •June• 2017 22:50•• •Read more...•
 

நூல் அறிமுகம்: ஒரு சகலகலாவல்லவனின் ஆடுகள வித்தை: யமுனா ராஜேந்திரனின் ‘உத்தமவில்லன்- The Anti Hero’ நூல் குறித்த சில பார்வைகளும் குறிப்புக்களும்

•E-mail• •Print• •PDF•

ஒரு சகலகலாவல்லவனின் ஆடுகள வித்தை:  யமுனா ராஜேந்திரனின் ‘உத்தமவில்லன்- The Anti Hero’ நூல் குறித்த சில பார்வைகளும் குறிப்புக்களும்“இந்த இராவணனின் எந்த தலை உண்மையானது?” – இது மூன்றாவது மனிதன் பெப்ரவரி 2003 இதழில் பாலு மகேந்திரா குறித்து உமா வரதராஜனால் எழுதப் பட்ட ஒரு கட்டுரையின் தலைப்பு. மேற்குறித்த கேள்வி பாலு மகேந்திரா மீது மட்டும் தொடுக்கப்படும் கேள்வி அல்ல.  இப்படியான கேள்விகளை  பன்முகத்தன்மை கொண்ட  ஒவ்வொரு கலைஞனும் தன் படைப்பிலும் வாழ்விலும் மக்களிடமிருந்து தினந்தோறும் எதிர்கொண்ட வண்ணமே இருக்கின்றான். மேலும் அவனது படைப்புக்கும் வாழ்விற்கும் இடையேயான இடைவெளிகள் அதிகரிக்கும் பட்சத்தில் இது போன்ற கேள்விகளின் வீச்சு இன்னும் பலமானதாகவும் வீரியம் மிக்கதாகவும் விளங்கும். இதே போன்ற  பல்வேறு விதமான கேள்விகளை உள்ளடக்கி, அன்று தொடக்கம் இன்றுவரை  தனது திரைப்படங்களிலும் நிஜவாழ்க்கையிலும் என்றுமே சர்ச்சைகளை உருவாக்கி வரும்  நடிகர் கமல்ஹாசன் மீதும் அவர் உருவாக்கிய பாத்திரங்கள்,படைப்புக்கள்  மீதும் யமுனா ராஜேந்திரனால் வைக்கப்பட்ட விமர்சனக்கட்டுரைகளின் தொகுப்பாக ‘உத்தமவில்லன் – The Anti-Hero ‘  என்னும் 12௦ பக்கங்கள் அடங்கிய சிறு நூலொன்று பேசாமொழி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.


யமுனா ராஜேந்திரன் தமிழக-ஈழ, புகலிட அரசியல் கலாச்சாரத் தளத்தில் பன்முகத்தன்மையுடன் இயங்கும் ஒரு படைப்பாளி, இடதுசாரி செயற்பாட்டாளர், சிந்தனையாளர். இதுவரை முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் சினிமா குறித்த விமர்சங்களையும் ஆய்வுகளையும் முன்னெடுப்பதில் எப்போதும் முழு மூச்சாக உழைப்பவர். ஒரு இடதுசாரி செயற்பாட்டாளராக இருந்தபோதிலும் வரட்டுத்தனமான கொள்கைகளினாலும் வரட்சி நிறைந்த கருத்துக்களினாலும் தனது நிலைப்பாட்டினை முன்னெடுக்காமல், உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மூன்றாம் உலகம் குறித்த கலை, இலக்கிய, பண்பாட்டுக் கூறுகளை தமிழிற்கு அறிமுகம் செய்ததில் முதன்மையானவர். இன்று பல்வேறு விதமான பிற்போக்கு சக்திகளின் ஊடாக கொந்தளிப்புக்குள்ளாகி வரும் ஈழ-தமிழக அரசியல் சூழலில் தனது எழுத்துக்களின் மூலம் ஒரு கருத்துமையமாகத் திகழும் இவர், இத்தளத்தில் ஒரு அசைவியக்கமாகத் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். இத்தகைய பல்வேறு பரிமாணங்களில் தொடர்ந்தும் செயலாற்றி வரும் யமுனா ராஜேந்திரன், தமிழக அரசியல் கலாச்சாரத் தளத்தில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிவரும் கமல்ஹாசனை தனது கவன வட்டத்திற்குள் எடுத்துக் கொண்டது ஒன்றும் வியப்பான விடயம் இல்லை.

•Last Updated on ••Friday•, 16 •June• 2017 22:34•• •Read more...•
 

நூல் அறிமுகம்: எகிப்திய வரலாறு

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: எகிப்திய வரலாறுஎழுதப்பட்டது அல்லது பதியப்பட்டதே வரலாறு. மற்றவை ,வரலாறுக்கு முந்தியவை என வரையறுக்கப்படுகிறது வரலாறு என்பதன் ஆங்கிலப்பதம் (History) கிரேக்க மொழியில் இருந்து வந்தது. இதன் கருத்து அறிந்து ஆராய்தல் – அல்லது விசாரித்து அறிதல் எனப்பொருள்படும். இதற்கு கிளையோ (Clio) என்ற பெண்தெய்வம் அருள் பாலிப்பதாக கிரேக்கர்களால் உருவகிக்கப்படுகிறது.

எகிப்திய வரலாறு மிகத்தொன்மையானது மட்டுமல்ல, பல புதிர்களையும், ஆச்சரியங்களையும் தொடர்ச்சியாக கொண்டிருக்கிறது. வரலாற்றாசிரியர்களால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக புதிர்களும், மர்மங்களும் கட்டுடைக்கப்பட்டுகிறது. இதனால் இந்த வரலாறு எகிப்தில் தற்காலத்தில் தொடர்ச்சியாக வளர்ந்து பெருகிக் கொண்டு வருகிறது.எகிப்திய நாட்டின் உருவாக்கம் கிறீஸ்துவுக்கு முன்பாக 3000 ஆண்டுகள் முன்பே தொடங்கியது.

ஹேரெடொரஸ் ( Herodotus) ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றாசிரியர். இவரே வரலாற்றின் தந்தையாக கருதப்படுபவர். அவர் எகிப்து சென்று அங்கு கேட்டவை, கண்டவை என எழுதிய பல விடயங்கள் இக்காலத்தில் தவறாகிப் போய்விட்டது. தற்போதைய எகிப்தியலாளர்கள் விஞ்ஞானத்தின் பயனாக கிடைத்த பல கருவிகளின் துணைகொண்டு பல புதிய விடயங்களை அறிகிறார்கள் . அதே நேரத்தில் இன்றைக்கு அறிந்து கொள்ளும் விடயங்கள் பிற்காலத்தில் தவறாகவோ அல்லது மேலும் புதிய விடயங்களை இணைப்பதாகவோ மாறலாம். அப்பொழுது எகிப்தின் வரலாறு குறித்த பார்வை எமது இளம் சந்ததியினருக்கு மாறுபடலாம்.

எனது எகிப்திய பயணத்தின் நோக்கம் எகிப்தின் வரலாற்று சின்னங்களான பிரமிட், அக்கால மன்னர்களின் மம்மிகள் மற்றும் கோயில்களை நேரடியாக பார்ப்பதாகவே இருந்தது. காலம் காலமாக அங்கே சென்ற இலட்சக்கணக்கான உல்லாசப்பயணிகள்போலத்தான் நானும் அங்கு சென்றேன். நான் எதிர்பார்த்துச் சென்றவற்றைப் பார்த்ததும் – அவற்றின் தோற்றம், பின்புலம் என்பவற்றை வழிகாட்டி மூலம் அறிந்தபோது அவைகளின் மீது மீளமுடியாத காதல் தோன்றியது. எனது இந்தவயதில் எகிப்திய ஆராய்ச்சியாளனாகவோ அல்லது சிலகாலம் எகிப்தில் வாழ்வதாகவோ விரும்பினாலும் சாத்தியமற்றது என்பதை உணர்ந்தேன்.

•Last Updated on ••Tuesday•, 23 •May• 2017 09:02•• •Read more...•
 

சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவல்

•E-mail• •Print• •PDF•

சுப்ரபாரதிமணியனின் “  முறிவு “ நாவல்  பெண்கள்  என்ற குழந்தை உழைப்பாளிகள் :
சுப்ரபாரதிமணியனின் நாவல்களில் பெண்ணிய அம்சங்களை நுணுக்கமாக்க் காணலாம் . இதிலும் முத்துலட்சுமி என்ற பெண் தொழிலாளி மூலம் அந்த அம்சங்கள் வெளிப்படுகின்றன. சுமங்கலித்திட்டம், கல்யாணத்திட்டம் போன்றவற்றில்  சலுகைகள் என்ற பெயரில் திட்டமிட்ட சுரண்டல் எப்படி நிகழ்கின்றன என்பது சொல்லப்பட்டிருக்கிறது. நிலவுக்கு ஓரமாய் ஒற்றைப்பனையொன்று சூட்டுகோலாய் நின்று கொண்டிருந்தது என்ற உவமை போல் அந்தப் பெண் நாவலில் விளங்கிகிறாள். வறுத்த விதைகள் முளைக்குமா .நாம் வறுத்த விதைகள் என்று அவர்களே நொந்து கொள்கிறார்கள்.

சுமங்கலித்திட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் பல இளம் பெண்கள் பற்றி மேரியின் டைரிக்குறிப்பு என்ற வகையில்  இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கின்றன. அதே சமயம் முத்துலட்சுமி  என்ற இளம் பெண்ணின் கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்து வந்து வாழும் வாழ்க்கை விரிவாகப்பதிவாக்கியுள்ளது.அவர் அதிகப்படியான வேலை, சோர்வு,மனஅழுத்தத்தால் கை ஒன்று இயந்திரத்தில் சிக்கி  வெட்டுப்பட்ட பின் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படுகிறாள். அதன் பின் அவளின் அலைக்கழிப்பும் இறுதியில் நம்பிக்கையாய் இருப்பது பற்றியும் நாவல் சொல்கிறது. சுமங்கலித்திட்டம், கல்யாணத்திட்டம், கண்மணித்திட்டம், தாலிக்குத்தங்கம் போன்ற திட்டங்களின் பெயரில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை ., திருவாரூர் போன்ற பல மாவட்டங்களிலிருந்து இளம் பெண்களை வேலைக்கு அழைத்து சென்று தஙக வைப்பது போன்று ஐந்து வருடத்திற்கு மேல் வேலைவாங்குகிறார்கள். தாலிக்குத் தங்கம் தருகிறோம். திருமணத்திற்கு பணம் தருகிறோம் என்று பெரும்பாலும் மோசடிகளாக இருக்கிறது.அப்படி அந்தக் குறிப்பிட்ட  காலம் முடிவதற்குள் தப்பித்து காலோடிந்து கை ஒடிந்து நோயாளிகள் ஆகிறவர்கள் பலர். இரண்டு அரை லட்சம் பெண்கள் இந்நிலையில் தமிழகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் ஒரு பெண்தான்

•Last Updated on ••Thursday•, 30 •March• 2017 23:06•• •Read more...•
 

நவஜோதி ஜோகரட்னத்தின் மகரந்தச் சிதறல்கள்

•E-mail• •Print• •PDF•

- கலாநிதி பார்வதி கந்தாமி., கனடா. -அழகான தலைப்புக்கொண்ட நூல். மகரந்தம் பறந்து சிதறிப் பூக்களிலிருந்து பூக்களுக்குத் தாவிச் சூல் கொள்ள வைக்கின்றது. நவஜோதி ஜோகரட்னம் ஈழத்தில் தோன்றிய மகரந்தம். இன்று பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இலண்டனில் தன் மகரந்தத்தைப் பலவாயிரம் புலம்பெயர் பெண்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தவும் தமிழ் பணியை உறுதியுடன் செய்யவும் பயன்படுத்துவது யாவரும் அறிந்ததே. பிரித்தானியாவில் பெண்கள் உயர்வுக்காகக் குரல் கொடுக்கும் நவஜோதி ‘மகரந்தச் சிதறல்’ ஊடாக வானொலியால் பெண்களின் பங்களிப்பை முன்னிலைப்படுத்திப் பின்னர் நூல்வடிவில் நூல்வடிவில் பதிவுகளாக  வெளிக்கொணர்ந்து பேசாப் பொருளைப் பேசத் துணிந்து தூண்டியுள்ளார்.

பௌவியமாகத் தெரிவு செய்து எழுதப்பட்ட இந்நூலில் உள்ளடக்கப்பட்டவர்கள் பற்றிய விமர்சனங்கள் மூன்று விடயங்களை விவாதத்திற்கு உள்ளாக்கலாம். முதலாவதாக இலைமறைகாய்களாக இருந்த சில பெருமாட்டிகள் பற்றி எழுதப்படவில்லை எனவும், வாழ்ந்துகொண்டிருப்போரில் முக்கியமான சிலர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை எனவும் அடுத்ததாக, அடுத்தவர் அறியாது பிரித்தியானியாவில் வந்து அவலப்பட்ட அகதிகளுக்கான உதவிகளைச் செய்தவர்களையும், பெண்கள் மீதான வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருந்தும், தாய் மண்ணின் அநாதைகளின் வாழ்வு உயரவும், கல்வி பெறவும் பணி செய்து வாழ்ந்த, வாழும் உத்தமிகளது பதிவுகள் இடம்பெறவில்லை என்ற ஆதங்கங்களும் எழலாம். ஒரே நூலில் எல்லாமுமே இடம்பெறமுடியாது. அவை இடம்பெறவேண்டும் என்ற தேவையை இந்நூல் வற்புறுத்துகிறது எனலாம்.

•Last Updated on ••Friday•, 17 •March• 2017 01:05•• •Read more...•
 

நூல் அறிமுகம்: பூவிதழும் புனிதமும் சிறுகதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: பூவிதழும் புனிதமும் சிறுகதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்  - வெலிகம ரிம்ஸா முஹம்மத் சமூகத்தில் நடக்கின்றவற்றை படம்பிடிக்கும் கருவியாக எழுத்தாளன் செயற்படுகின்றான். அந்த வகையில் இலக்கியத்தின் கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் என்ற பல்வேறு தளங்களிலும் செயல்படும் உ. நிசார் தன் எளிமையான எழுத்துக்களினூடாக வாசகரைக் கவர்ந்தவர். சமூகம் சார் சிறுகதைகள் இவரது ஆளுமைக்கு கட்டியம் கூறுவனவாக அமைந்திருக்கின்றன. இதுவரை 19 நூல்களை வெளியிட்டிருக்கும் இவரது 20 ஆவது நூலாக பூவிதழும் பூனிதமும் என்ற நூல் 09 சிறுகதைகளை உள்ளடக்கியதாக 96 பக்கங்களில் பானு வெளியீட்டகத்தின் மூலம் வெளிவந்திருக்கின்றது.

பூவிதழும் புனிதமும் (பக்கம் 13) என்ற சிறுகதை பிரிந்து போன காதலின் சோகத்தை சொல்லி நிற்கின்றது. தன்னிடம் படித்த மாணவி அமீனாவைக் காதலித்ததற்காக ரானா சேர் அமீனாவின் சகோதரனால் தாக்கப் படுகின்றார். பின் அந்த ஊர் எம்பியின் சூழ்ச்சியால் ரானா சேருக்கு தனது சொந்த ஊருக்கே இடமாற்றம் கிடைக்கின்றது. அதற்கிடையில் அமீனாவுக்கு வேறொரு இடத்தில் திருமணமாகி அவள் கணவனுடன் சிங்கப்பூருக்குச் செல்கின்றாள். ஆனால் அவளது மனதில் ரானா சேர் தன்னை ஏமாற்றிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டதான எண்ணம் வலுப் பெறுகின்றது.

பல வருடங்கள் கழிந்த நிலையில் இருவரும் எதேச்சையாக மலேசியாவில் சந்தித்து தம் சோகங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்கள். அமீனாவின் கணவன் விபத்தொன்றில் இறந்துவிட்டதாகவும், அவனது சொத்துக்களில் அமீனாவுக்கு பங்கு கொடுக்காமல் தற்போது அமீனா தாயுடன் வந்து தங்கியிருப்பதாகவும் அறியக் கிடைக்கின்றது. தன்னால் அவளது வாழ்வு கருகிவிட்டதை அறிந்த பின்பு ரானா சேருக்கு கவலை மேலிடுகின்றது. அவரும் அதுவரை மணமுடித்திருக்கவில்லை. ஆதலால் மீண்டும் அமீனாவை மணமுடிக்க சம்மதம் கேட்கின்றார். அதற்கு அமீனா கூறும் கூற்றிலிருந்து காதலின் புனிதம் உணர்த்தப்படுகின்றது.

•Last Updated on ••Tuesday•, 24 •January• 2017 07:25•• •Read more...•
 

நூல் அறிமுகம்: அக்கினியாய் வெளியே வா கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

•E-mail• •Print• •PDF•

எங்கோ ஓர் மூலையில் இலை மறை காயாக இருந்து கொண்டு இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களை உலகறியச் செய்யும் பணியை புரவலர் புத்தகப் பூங்கா மேற்கொண்டு வருகிறது. இவ்வமைப்பு மூலம் இதுவரை 37 நூல்கள் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றன.  இவ்வமைப்பின் நிறுவனரான புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் இலக்கிய உலகுக்கு தன்னாலான பல பங்களிப்புக்களை செவ்வனே செய்து வருபவர். இதுவரை பல முதற் பிரதிகளைப் பெற்று எழுத்தாளர்களை ஊக்குவித்து வருவதனூடாக ஒரு வரலாற்று சாதனையாளராக திகழ்கின்றார். புரவலர் புத்தகப் பூங்காவின் 37 ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கிறது இராகலை தயானியின் அக்கினியாய் வெளியே வா கவிதைத் தொகுதி. 57 கவிதைகளை உள்ளடக்கி 72 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்தத் தொகுதியில் மலையகம் சார்ந்த, பெண்கள் சார்ந்த கவிதைகளே விரவிக் காணப்படுகின்றன.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட புறூக் சைட் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தயானி விஜயகுமார் தற்போது அரசியல் விஞ்ஞான முதுமாணிப் பட்டம் கற்றுக் கொண்டிருக்கிறன்றார். ஒரு எழுத்தாளன் தன் படைப்பினூடாக தனது வாழ்க்கை முறை பற்றியும், அதில் அவன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் முழு சமுதாயத்துக்கும் அறியத் தருகின்றான். அன்றாட வாழ்வில் தன்னைச் சார்ந்தோர் படும் இன்னல்களையும் துன்பங்களை காணச் சகிக்காது அவனது பேனா மைகொண்டு அழுகின்றது. அத்தகையதொரு எழுத்தாளராக இராகலை தயானி காணப்படுகின்றார். நாட்டுக்காக உழைத்துக் களைத்து, கறுத்துச் சிறுத்துப் போன தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்வியல் குறித்து இவர் எழுதியிருக்கும் கவிதைகள் மனதைப் பிசைகின்றன. அபலையாய் விடப்பட்ட பெண்கள் பற்றியும் இவரது கவிதைகள் நிறையவே பேசியிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவற்றுக்குக் காரணமானவர்கள் மீது கோபாவேசம் கொள்வதையும் கவிதையின் வரிகளில் காணமுடிகிறது.

அக்கினியாய் வெளியே வா (பக்கம் 11) என்ற கவிதை ஒரு தாயின் மனக்குமுறலாகக் கொந்தளிக்கின்றது. வயிற்றில் சுமக்கும் குழந்தைக்கு தாய் கூறும் அறிவுரையாக அல்லது வலிகளின் வெளிப்பாடாக இக்கவிதை அமைந்திருக்கின்றது. அடிமையாக வாழ்ந்தே பழக்கப்பட்டுப் போன மலையக மக்கள் இனிமேலாவது தமது எதிர்கால சந்ததிகளை சுதந்திரப் பிரஜைகளாக வளர்க்க வேண்டும் என்பதை தயானி இக்கவிதையினூடே உணர்த்தியிருப்பது சிறப்புக்குரியது.

•Last Updated on ••Thursday•, 08 •December• 2016 22:18•• •Read more...•
 

நூல் அறிமுகம்: அர்த்தமுள்ள அனுபவங்கள் நூல் பற்றிய கண்ணோட்டம்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: அர்த்தமுள்ள அனுபவங்கள் நூல் பற்றிய கண்ணோட்டம்திரு. ஈஸ்வரன் அவர்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். வல்லநாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் 1949 இல் கொழும்புக்கு வந்தார். புனித பெனடிக்ஸ் பள்ளியில் படித்த இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்தார். தற்போது ஈஸ்வரன் பிரதர்ஸ் என்ற தேயிலை நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் இவர் பேருபகாரியும் கூட. எழுத்தாளரான இவர் ஏனைய எழுத்தாளர்களுக்கும் கரம் கொடுத்து உதவும் ஒரு வள்ளல். பல முக்கிய சம்மேளனங்களில் தலைவராகவும் இருக்கிறார்.

இலங்கையின் இந்துக் கலாசார அமைச்சின் இறைப்பணிச் செம்மல் விருது, சிறந்த வணிக ஏற்றுமதியாளருக்கான இலங்கை ஜனாதிபதி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இவரது அனுபவங்களைக் கூறும் நூலாக அர்த்தமுள்ள அனுபவங்கள் என்ற கனதியான தொகுதி 264 பக்கங்களில் காந்தளகம் வெளியீடாக வெளிவந்துள்ளது. முயற்சி திருவினையாக்கும் (பக்கம் 19) என்ற அவரது முதலாவது அனுபவத்தில் பல வியக்கத்தகு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதாவது இறைவனின் சித்தம் இருந்தால் எந்தக் காரியமும் கைகூடும் என்பது எல்லா மதத்தவரதும் நம்பிக்கை. திரு. ஈஸ்வரன் அவர்கள் தொழில் செய்துகொண்டிருந்த ஆரம்ப காலத்தில் இலங்கை அரசாங்கத்தைச் சேர்ந்த மாவு திரிக்கும் கூட்டுத்தாபனத்தினால் அனுப்பப்பட்ட மூடைகளில் பல இறாத்தல் எடை குறைவாக இருந்திருக்கின்றது. அதற்கு எதிராக செயல்பட்டால் அரசாங்கத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அந்த சந்தர்ப்பத்தில் தான் அவர் தனது தந்தையைப் பார்;க்கச் செல்லும் நேரம் அங்கிருந்த வரதராஜ விநாயகர் ஆலயத்திலிருந்து கேட்ட மணியோசை அவரை ஈர்த்திருக்கிறது. அப்போது ஒரு சட்டத்தரணியைச் சந்தித்துப் பேசியதில் அவரது பிரச்சினை தீரும் வழி கிடைக்கின்றது. இது வரதராஜ விநாயகரின் அருள் என்று எண்ணிய ஈஸ்வரன் அவர்கள் கோயிலுக்கு தன்னாலான பங்களிப்பை நல்கினார். ஆனால் அவரைவிட இன்னொருவர் பெரிய தொகையைக் கொடுத்த போது தன் இறைவனுக்கு அதைவிட மேலானதைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிய இவர், தான் அடிமைப்பட்டிருந்த விஸ்கி குடிக்கும் பழக்கத்தை அன்று முதல் விட்டொழித்தாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

முயற்சி திருவினையாக்கும் என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் விளக்கம் சிந்திக்கத்தக்கது. இதை நூலாசிரியருக்குக் கற்றுக்கொடுத்தவர் சுவாமி வாகீசானந்தர். முயற்சி வினையாக்கும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. முயற்சி திருவினையாக்கும் என்றுதான் சொல்லப்படுகின்றது. திரு என்பதன் அர்த்தம் இறைவனின் ஆசி என்பதாகும். முயற்சியும், இறைவனின் ஆசியும் இருந்தால்தான் எந்த காரியமும் வெற்றியடையும் என்கிறார் நூலாசிரியர்.

•Last Updated on ••Wednesday•, 07 •December• 2016 19:49•• •Read more...•
 

நூல் அறிமுகம்: நெய்தல் நிலத்துக் கவிதைகள் - மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்’ கவிதைத்தொகுதி குறித்த ஒரு பார்வை.

•E-mail• •Print• •PDF•

நெய்தல் நிலத்துக் கவிதைகள்: மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்’ கவிதைத்தொகுதி குறித்த ஒரு பார்வை. மு.புஷ்பராஜன்போர் என்பது ஒரு பிரதேசத்தில் பிரவேசித்து விட்டால் அந்நிலமானது மரணங்கள் மலிந்த பூமியாக மாறிவிடுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். கூடவே இழப்புக்களும் இடப்பெயர்வுகளும் கூட அங்கு நியதிகளாகவும் நிரந்தரங்களாகவும் மாறி விடும். இத்தகைய மரணங்கள் மலிந்த பூமியிலிருந்து இன்னல்களுடனும் இழப்புக்களுடனும் இப்பூமிப்பந்தெங்கும் சிதறிப் போன பல லட்சம் ஈழமக்களினது சாட்சியங்களாகவும் குரல்களாகவும் மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்‘ எனும் கவிதைகளின் தொகுதியொன்று வெளிவந்துள்ளது.

மு.புஷ்பராஜன் நாடுகள் கடந்த கவிஞர், விமர்சகர், ஆய்வாளர். அத்துடன் கலை, இலக்கியம், திரைப்படம் எனப் பல்வேறு தளங்களிலும் இயங்குபவர். இவரது நூல்களாக ‘அம்பா’ என்ற மீனவர் பாடல்களின் தொகுப்பும் ‘வாழ்புலம் இழந்த துயரம்’ என்ற கட்டுரைத் தொகுப்பொன்றும் இதுவரை வெளிவந்துள்ளது. ஈழத்தில் ஒரு குறுகிய காலகட்டத்திற்குள் மட்டுமே வெளிவந்தாலும் ஈழ இலக்கிய உலகில் பலத்த அதிர்வுகளையும் எதிர்வினைகளையும் ஆற்றிய ‘அலை’ சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். ஈழம், தமிழகம், புகலிடம் என்ற முக்கோணத் தளப் பரப்பில் உயிர்ப்புடன் இயங்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.  இது இவரது முதலாவது கவிதைத்தொகுதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்று பல நூறு கவிஞர்களால் இயங்குகின்ற நவீன தமிழ் கவிதை உலகில் மு.புஷ்பராஜன் அவர்கள்  முற்றிலும் வேறுபட்டவராக காணப்படுகிறார். இதற்கு இவரது இந்த மரபு குறித்த அறிதலும்  புரிதலுமே  முக்கிய காரணமாக விளங்குகின்றது. நவீன தமிழ் கவிதை மரபானது 150 வருடங்களுக்குள் மட்டுமே உட்பட்ட மிகக் குறுகிய ஆயுட்காலத்தை கொண்டதாக இருப்பினும் இது  உலக அரங்கில் தனக்கென ஒரு தனியான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளமைக்கு, இம்மரபானது தன்னகத்தே ஒரு மூவாயிரம் வருட பழமையும் செழுமையும் வாய்ந்த ஒரு கவித்துவ பாரம்பரியத்தையும் மரபையும் கொண்டிருப்பதே ஒரு முக்கிய காரணமாகும். இம்மரபு குறித்த புரிதலும் அறிதலும் கொண்டவர்களே ஒரு சிறந்த கவிஞராக இருக்க முடியும் என்பது இன்று நிதர்சனமான உண்மையாகிவிட்டது. இதனால்தான் என்னவோ எந்தவிதமான மரபு சார்ந்த அறிவோ எண்ணங்களோ  இன்றி மேலைத்தேய சிந்தனையில் மட்டும் தடம் புரண்டு எழுதும் இன்றைய பல கவிஞர்கள் அவர்களது கவிதைகளை படிமங்கள் என்னும் பம்மத்துக்களால் மட்டும் காட்சிப் படுத்துகின்றனர். இத்தகைய பயமுறுத்தும்  கரடு முரடான காட்சிப் படிமங்களின்றி மிக எளிமையானதும் சிக்கல்கள் இல்லாததுமான  சொற்களால் மட்டுமே இக்கவிதைத் தொகுதி நிரம்பியிருக்கின்றது.

•Last Updated on ••Saturday•, 03 •December• 2016 01:56•• •Read more...•
 

நூல் அறிமுகம்: வெளிவிட்ட ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் பொக்கிஷம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: வெளிவிட்ட ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் பொக்கிஷம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம் - வெலிகம ரிம்ஸா முஹம்மத் -ஓர் அபலையின் டயரி, இது ஒரு ராட்சஷியின் கதை, 37 ஆம் நம்பர் வீடு, அவளுக்குத் தெரியாத ரகசியம் ஆகிய நான்கு நாவல்களைத் தொடராக வெளியிட்டு நாவல் துறையில் பிரபலமான ஒரு நாவலாசிரியராக மிளிர்ந்துகொண்டிருக்கும் திருமதி ஏ.சீ. ஜரீனா முஸ்தபா நாவல்கள் தவிர ரோஜாக் கூட்டம் என்ற சிறுவர் கதைத் தொகுதியையும், யதார்த்தங்கள், மீண்டும் ஒரு வசந்தம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். பொக்கிஷம் இவரது கவிதைத் தொகுதியாகும்.

இலக்கியத் துறையில் சுமார் 30 வருட காலம் அநுபவம் மிக்கவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பிட்டகோட்டையில் பிறந்து, கடுவெல வெளிவிட்டயில் தற்போது வசித்து வருகின்றார். தமிழ் மொழி மூலம் கற்காத இவர் சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் சிங்கள மொழியிலேயே கல்வி கற்றுள்ளார். தன்னார்வத்தோடு தமிழைக் கற்று தமிழ் மொழியிலேயே இலக்கியம் படைத்து வருகின்றார். 1985 – 1987 காலப்பகுதிகளிலேயே வெண்ணிலா, மதூகரம் போன்ற சஞ்சிகைகளுக்கு இணை ஆசிரியராக செயல்பட்டு வந்துள்ளார். அந்தக் காலங்களிலேயே இலங்கை வானொலிக்கு நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி தனது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார். பிற்பட்ட காலங்களில் இவரது நாவல்கள் வீரகேசரி, மித்திரன் ஆகிய பத்திரிகைகளில் தொடராக பிரசுரமாகியுள்ளன.

பேனா வெளியீட்டகத்தின் மூலம் 80 பக்கங்களை உள்ளடக்கியதாக பொக்கிஷம் என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இந்த நூலில் 38 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. அறிவுறை கூறும் வகையிலும், சமூக நோக்கிலும் எழுதப்பட்ட கவிதைகளே நூலெங்கும் விரவிக் காணப்படுகின்றன. இன்னும் சில படைத்துப் பரிபாலிக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்காகவும், இறைவனுடனான அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளன.

இந்த நூலுக்கு, 'ஜரீனா முஸ்தபா தந்த பா பொக்கிஷம்' என்ற தலைப்பில் கவிஞர் கிண்ணியா அமீர் அலி வாழ்த்துரையொன்றையும், தென்னிந்தியாவின் பிரபல எழுத்தாளர் நஸீர் அஹமட் (ஆலயம்பதி ராஜா) அவர்களின் மதிப்புரையொன்றையும் வழங்கியுள்ளார். நூலாசிரியர் தனதுரையில் 30 வருட காலம் இலக்கியம் படைத்து வந்தாலும் கவிதை நூலொன்றை வெளியிட முன்வராமல் தாமதித்து இருந்ததற்கான காரணத்தை முன்வைத்துள்ளார்.

இனி இவரது சில கவிதைகளைப் பார்ப்போம்.

நீதான் (பக்கம் 17) என்ற கவிதை இறைவனின் தயவை வேண்டி நிற்பதாக அமைந்திருக்கின்றது. மனிதனுக்கு துன்பங்கள் ஏற்படும் போது இறைவனின் உதவியை நாடுவதும் இன்பங்களின் போது இறைவனை மறப்பதும் மனித இயல்பாக மாறிவிட்டது. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் இறைவனின் கருணையை நாம் எதிர்பார்த்து அவனிடமே மீள வேண்டும் என்பதை இக்கவி வரிகள் நன்கு உணர்த்துகி;ன்றன.

•Last Updated on ••Tuesday•, 18 •October• 2016 19:38•• •Read more...•
 

நூல் அறிமுகம்: வாழ்வின் கசந்த உண்மைகளிலிருந்து கிளர்ந்தெழும் துவாரகனின் கவிதைக்குரல்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: வாழ்வின் கசந்த உண்மைகளிலிருந்து கிளர்ந்தெழும் துவாரகனின் கவிதைக்குரல்மொழி என்பதோர் திரவிய கூடம் தாகத்தோடும் தேடலோடும் அதன் உட்புகுந்து தெரிதல் நிகழ்த்தும் ஒருவன் மொழிசார் கலைவடிவங்கள் எதையேனும் தனது படைப்புகளைத் தரும் ஒரு ஊடகமாகக் கொள்ளுதல் இயலும். அத்தகைய ஒரு தெரிதலின்போது, அவன் தனது அனுபவங்கள் மூலம் வடிவமைத்துக் கொண்ட நுண்புலனின் திறனைப் பிரயோகிக்கிறான். அந்த நேரத்தில் அவன் தெரிவு செய்கிற சொற்கள் தேர்ந்து கொள்கிற சொல்முறை வெளிப்படுத்துகிற உணர்வுகள் எல்லாம் ஒருங்கிணைந்து அவனுக்கான கலைவடிவ உருவாக்கத்தைத் தீர்மானிக்கின்றன.

மேற்சொன்ன கிரியை கவிதை படைத்தல் குறித்து நிகழ்த்தப்படும்போது, ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பாளுமையின் வலிமையைப் பிரயோகிக்க நேர்கிறது. அது ஒரு திட்டமிட்ட பொறிமுறையுமல்ல. கவிதை படைத்தலுக்கான கணங்கள் சம்பவிக்கையில் ஒரு நுண்மையான உட்புலனுணர்வின் உந்துகை அவனது படைப்பை வெளிக்கொணர்கிறது. ஒரு குறித்த சொல் அல்லது ஒரு தொடர், ஒரு நினைவுக்கீற்று எதுவாயினும் அந்தப் படைப்பின் அடிப்படையாக அமையமுடியும். அதனை அடியொற்றி அவன் கட்டமைக்கின்ற கவிதையின் வைப்பொழுங்கு அதில் வெளிப்படுகின்ற உணர்வு அந்த உணர்வு வெளிப்படுத்தப்படுகின்ற முறைமை என்பனவெல்லாம் இணைந்து அந்தப் படைப்பின் சிறப்பைத் தீர்மானிக்கின்றன. படைப்புக்கான உந்துதல் ஒருவனைக் கவிதையில் வழிநடத்தும்போது அவனது பார்வை அங்கு பிரதானத்துவம் கொள்கிறது.

குறித்த ஒரு விடயம் பற்றிய பார்வை அல்லது அணுகுமுறை ஆளுக்காள் வேறுபட முடியும்.  உதாரணத்துக்கு காகக்கூட்டில் ஜனித்து, காகங்களாலேயே போஷிக்கப்பட்டு வளர்கிற ஒரு குயிற்குஞ்சு இனங்காணப்படுகின்ற தருணம், தாயென்றும் தந்தையென்றும் எண்ணிக் கொண்டிருந்த காகங்களின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாகிக் கொத்தித் துரத்தப்படுகின்ற அந்தப்போதுகள்… ஒரு கலைஞனால் பார்க்கப்படுவதற்கும் சாதாரண மனிதனால் பார்க்கப்படுவதற்கும் ஒரு கவிஞனால் பார்க்கப்படுவதற்கும் இடையில் நிறைய வித்தியாசங்களிருக்கின்றன.

இத்தகைய ஒரு தவிப்பும் துயரும் சவாலும் நிரம்பிய தருணம் குறித்துத் தனது உணர்வுகளைப் பதிவு செய்ய விழையும் ஒரு கவிஞன் அற்புதமானதோர் கவிதையைப் படைத்துவிடமுடியும்.

•Last Updated on ••Saturday•, 08 •October• 2016 20:29•• •Read more...•
 

“விந்தைமிகு விண்வெளி விபத்து” விஞ்ஞான நாவல் - நூல் விமர்சனம்

•E-mail• •Print• •PDF•

“விந்தைமிகு விண்வெளி விபத்து”   விஞ்ஞான நாவல் - நூல் விமர்சனம் ஈழத்தில் இருந்து கனடாவிற்குப் புலம்பெயர்ந்து தமிழ் மொழியில் விஞ்ஞானத்தை வாசகர்களிடம் இலகு தமிழில் எடுத்துச் செல்லும் நோக்குடன் பல அறிவியல் நூல்களை உருவாக்கியதோடு தொடர்ச்சியாக அறிவியல் கட்டுரைகள், கவிதைகள், தொடர்கதைகள் போன்றவற்றைப் படைத்து வரும் எழுத்தாளர் கனி விமலநாதன் அவர்களின் “விந்தைமிகு விண்வெளி விபத்து” என்ற தலைப்புக் கொண்ட விஞ்ஞான நாவல் எனது கையில் கிடைத்ததும் மிக்க ஆவலுடன் படிக்கத் தொடங்கினேன். நாவலைப் படித்து முடித்ததும் நாவலைப் பற்றி ஒரு விமர்சனக் கட்டுரையை எழுத வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஊற்றெடுத்தது. நாவலை வாசிக்கத் தொடங்கியதும் நான் முழுமையாக வாசித்திட வேண்டும் என்ற ஆவலை எனக்குக் கொடுத்ததை வைத்துக் கொண்டே நூலாசிரியர் வாசகர்களிற்கு ஆவலைத் தூண்டும் வகையில் இந்த நாவலைப் படைப்பதில் வெற்றி கொண்டுள்ளார் என்று திடமாக என்னால் கூற முடிகின்றது.

கனி விமலநாதன் ஒரு முழுமையான கலைஞர். வில்லுப்பாட்டு, நாடகம், இசைப்பாடல் எனப் பல்வேறு பரிமாணங்களில் தனது திறமையை மேடைகளில் இவர் காட்டி வருவதை நான் நன்கு அறிவேன். நாவலில் வரும் உரையாடல்களில் இவர் கையாளும் வாக்கிய அமைப்புக்கள் இவரின் கலைத்திறமையை வெளிக்காட்டுகின்றன.
நாவல் ஆப்பரே~ன், ஆச்சிவீடு, கனடாவில் இனியன், இன்னொரு, இன்னமும் முடியவில்லை என ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டதோடு ஒவ்வோரு பாகங்களும் தனித்தனி குறுநாவல்களுக்கான கட்டமைப்புடன் அமைவதோடு வாசகர்களிற்கு விறுவிறுப்பையும், எதிர்பாராத திருப்பங்களையும் கொடுக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நாவலின் “இன்னமும் முடியவில்லை” என்ற இறுதிப் பாகம் இந்த நாவல் இன்னும் தொடரப் போகின்றதா? ஏன்ற கேள்வியையும் எழுப்பி அறிவியல் பாடத்தையும் வாசகர்களுக்கு அள்ளி வழங்கி நிறைவு பெற்றுள்ளது.

“ஆப்பரே~ன்” என்ற தலைப்பில் அமைந்துள்ள முதலாம் பாகத்தில் வைத்தியர் மகாதேவன் என்ற உயர்ந்த இலட்சியம் கொண்ட கதாபாத்திரத்தை நாவலாசிரியர் கவனமாக தனது கற்பனைத் திறனோடு கையாண்டிருக்கின்றார். இவர் போன்ற வைத்தியர்கள் நமது சமூகத்தில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை நாவலாசிரியர் இந்த நாவலின் ஊடாகப் பதிவு செய்கின்றார். சோதிடர் நீலகண்ட கணியர்  என்ற கதாபாத்திரத்தை நாவலில் கொண்டு வந்து “ஒரு கல்லால் இரண்டு மாங்காய்கள்” என்ற முதுமொழி போன்று இரண்டு விடயத்தை நாவலாசிரியர் சாதித்திருக்கின்றார். சோதிடர்கள் கூறும் எச்சரிக்கைகளை மனதில் கொண்டு வைத்தியர்களின் அறிவுரைகளைப் புறக்கணிக்கக் கூடாது என்ற அறிவுரையையும் வழங்கி, சோதிடம் என்ற விஞ்ஞானமும் முற்றிலும் பொய்யானதல்ல என்ற நடுநிலைப் போக்கையும் வெளிக்காட்டியிருக்கிறார்.

•Last Updated on ••Saturday•, 24 •September• 2016 04:54•• •Read more...•
 

நூல் அறிமுகம்: விடியலைத் தேடி’ ஊடாக, செங்கை ஆழியானை நினைவுகூர்தல்

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் க.நவம்‘‘போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை; தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது!’ இரண்டாம் உலகப் போருக்குத் தீ மூட்டியவரும், ஜேர்மன் சர்வாதிகாரியுமான அடொல்ஃப் ஹிற்லர்தான் இதைச் சொன்னவர். ‘2009 மே 18இல் முடிவுக்கு வந்த தமிழீழப் போரில் விடுதலைப் புலிகள் எப்படித் தோற்றுப் போயினர்?’ என்ற வினாவுக்கு விடையளிக்கக்கூடாது என்பதற்காகவே அவ்வமைப்பின் மூலவர்கள் பலரும் கூட்டாக உயிரிழந்தார்களோ என இக்கூற்று எண்ணத் தூண்டுகின்றதல்லவா? இதேவேளை, விடுதலைப் புலிகளின் தோல்வி குறித்து, போரியல் வல்லுனர்களும் அரசியல் ஆய்வாளர்களும் புதிய புதிய எடுகோள்களையும் அனுமானங்களையும் ஊகங்களையும் முன்வைப்பதில் ஆளுக்காள் இதுவரைக்கும் சளைக்கவுமில்லை; இன்னமும் களைக்கவுமில்லை. எது எவ்வாறாயினும், நந்திக்கடலில் நடந்துமுடிந்த அவலத்தின் காரணங்களை ஒரு சாமானியனின் நோக்கில், நறுக்கென்று சொல்லிவிடும் சாமர்த்தியம், நான்கே நான்கெழுத்து வார்த்தை ஒன்றிடம் உண்டு. அதுதான் ‘துரோகம்!’

துரோகத்தின் ஒட்டுமொத்த விளைச்சலான முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற ஈழப்போரினால், ஈழத்தில் வாழ்ந்துவரும் தமிழ்பேசும் மக்களுக்கு இன்னல்களைத் தவிர இலாபமேதும் கிட்டியதில்லை. ஆயினும் இப்போரின் மூலமாக ஒருசில நல்ல இலக்கியங்களாவது வந்து கிடைத்திருக்கின்றனவே என எண்ணி ஓரளவு மனதைச் சமாதானப் படுத்திக்கொள்ள முடிகிறது. குறிப்பிட்ட காலம்வரை இருபக்கச் சமச்சீர்க் கொடுக்குப் பிடிகளுக்கிடையிலிருந்து இலக்கியம் படைக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் பலருக்கும் இருந்து வந்தது. ஒருபக்கக் கெடுபிடிகள் ஓய்ந்து தளர்ந்துள்ள போதிலும், மறுபக்க அச்சுறுத்தல்கள் முற்றாக மறைந்தமைக்கான அறிகுறிகள் ஏதுமில்லை. இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில்தான், தமிழிலக்கிய வரலாற்றில் மிக நீண்ட காலத்தின் பின்னர், போரிலக்கியத்திற்குப் புதியதொரு பரிமாணம் ஈழப்போரினால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கின்றது என்ற உண்மையைத் தமிழிலக்கியத் துறைசார் விற்பன்னர்கள், விமர்சகர்கள் பலரும் ஒப்புக்கொள்ளத் துவங்கியுள்ளனர்.

•Last Updated on ••Friday•, 02 •September• 2016 19:05•• •Read more...•
 

நூல் நயப்புரை: சமூகப்பயம், மதிப்பின் பாதிப்புக்கு அப்பால் அறத்தைப்பேசும் ' சொல்ல மறந்த கதைகள் '

•E-mail• •Print• •PDF•

அவுஸ்திரேலியாவில்  வசிக்கும்  எழுத்தாளரும்  ஊடகவியலாளருமான லெ.முருகபூபதி  அவர்கள்   நீண்ட  காலமாக  உள்ளத்தில்  பூட்டி வைத்த  பல  இரகசியங்களை  சொல்ல  மறந்த  கதைகள்  என்று கோடிட்டு   சொல்லியுள்ள  நூல்தான்  சொல்ல  மறந்த  கதைகள். ஒவ்வொரு  ஆண்   பெண்ணிடமும்  மனம்  என்னும்  அதளபாதாளத்தில் பல  இரகசியங்களைக்  கொண்ட  பல  அடுக்குகள்  தொல்பொருள் போல   புதைந்து  கிடக்கின்றன.

" நான்  வெளிப்படையானவன் "  எனச் சொல்லும்  ஒவ்வொரு மனிதனும்  உண்மையில்  வெளிப்படையானவர்கள்தானா ? என்ற சந்தேகம்  இருக்கவே  செய்கின்றது.
பொதுவாழ்வில்  ஈடுபடுவோரும்  எழுத்து,  ஊடகத்துறையில் ஈடுபடுவோரில்   அங்கொன்றும்  இங்கொன்றுமாக  சிலரும்  தமது அனுபவங்களை   வெளிப்படையாக  எழுத்து  மூலமாக பொதுவெளிக்குக்  கொண்டு வந்திருக்கிறார்கள். சில  உண்மைகளை  காலம்  வெளிக்கொண்டு  வரும்  என்பதற்கு உதாரணமாக   இருப்பதுதான்  லெ.முருகபூபதி  அவர்களின்  சொல்ல மறந்த கதைகள்   என்ற  நூலாகும்.

மண்ணுக்கு  மேல்  கற்களைப்  பரப்பி  வைத்தாலும்  புதையுண்டு கிடக்கும்   விதை,  கற்களுக்கிடையில்  கிடைக்கும்  இடைவெளிக்கூடாக   முளையாகி  வீரிட்டு  எழுவது  போல் எழுந்திருக்கிறது.   இந்நூலில்  கிட்டத்தட்ட  19  தலைப்புகளில்  தனது அனுபவங்களைப்   பகிர்ந்திருக்கிறார்  நூலாசிரியர். நம்பிக்கை,   எதிர்பாராதது,  காவி  உடைக்குள்  ஒரு  காவியம், காலிமுகம்,   கண்ணுக்குள்  சகோதரி,  உயிர்ப்பிச்சை,  கண்டம், விபத்து,   தமிழ்  மூவேந்தர்களும்  ருஷ்ய  மன்னர்களும்,  அநாமதேய தொலைபேசி   அழைப்பு,  வீணாகிப்  போன  வேண்டுகோள்,   லிபரேசன்  ஒப்பரேசன்  ஒத்திகை,  நிதானம்  இழந்த  தலைமை, வழிகாட்டி  மரங்கள்  நகருவதில்லை,   காத்திருப்பு - புதுவை இரத்தினதுரை,    ஏரிக்கரைச்  சிறைச்சாலை,   மனமாற்றமும் மதமாற்றமும்,   மரணதண்டனைத் தீர்ப்பு ,  மனிதம்,  பின் தொடரும் வியட்நாம்  தேவதை  ஆகிய  தலைப்புகளில்  எழுதப்பட்ட  ஒவ்வொரு அனுபவக் கட்டுரையும்   ஒரு  சிறுகதை  வடிவத்தைப்  பெற்று நிற்கின்றன.
உண்மைகளைப்   பேசுவதற்குத்  துணிவு  வேண்டும். ஆவணப்படுத்தலில்   இது  ஒரு  தனிரகம்.   எழுத்து  ஊடகங்கள் சிந்தனை   விரிவாக்கத்தால்  புதுப்புது  கிளைகளாக  வளர்ந்து நிற்கின்றன.

•Last Updated on ••Thursday•, 04 •August• 2016 19:22•• •Read more...•
 

நூல் அறிமுகம்: கே.எஸ்.சிவகுமாரனின் 'முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம்'; எஸ். முத்துமீரானின் 'கக்கக் கனிய' சிறுகதை நூல் பற்றிய இரசனைக் குறிப்பு; தெ. ஈஸ்வரனின் 'அர்த்தமுள்ள அனுபவங்கள்'

•E-mail• •Print• •PDF•

வெலிகம ரிம்ஸா முஹம்மத்சினிமாக்கள் மனித வாழ்வோடு ஐக்கியமான ஒரு ஊடகமாகும். பொழுதுபோக்கிற்காக சினிமாவைப் பார்ப்பதாக பலர் கூறினாலும் சினிமாவில் சில யதார்த்தங்களும், சில யதார்த்த மின்மைகளும் காணப்படுவது கண்கூடு. வாழ்க்கையில் நடக்கின்ற சிலதையும், நடக்க வேண்டும் என்ற சிலதையும், நடக்கவே முடியாத சிலதையும் கூட திரைப்படங்கள் வாயிலாக நாம்  கண்டுகளித்து வருகின்றோம்.

சினிமாக்களைப் பார்ப்பது அன்றைய காலத்தில் மிகப் பெரிய சாதனையாக இருந்து வந்தது. அதாவது ஊருக்கே ஒரு திரையரங்கு.. அதில் திரைப்படக் காட்சிகள்! இன்று ஒவ்வொரு வீட்டிலும் சினிமாக்களைப் பார்க்கக் கூடிய சூழ்நிலை தோன்றியிருக்கின்றது. இறுவட்டுக்களாகட்டும், யூடியூப்களில் ஆகட்டும், ஆன்லைனிலாகட்டும், கேபிள் தொலைக்காட்சி அலைவரிசைகளாகட்டும் சினிமாக்களை நாம் விரும்பிய வகைகளில் பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

பொதுவாக சினமா என்று தமிழ்பேசும் மக்களிடம் சொன்னால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இந்திய சினிமாக்கள்தான். இந்திய சினிமாக்கள் தொழில்நுட்ப ரீதியில் பல மைல் தூரம் சென்றுவிடடதாலும், காட்சி அமைப்புக்களில் காணப்படும் வசீகரத் தன்மையினாலும் இவ்வாறாதோர் பிம்பம் தோற்றுவிக்கப் பட்டுள்ளது. அதையும் தாண்டி நல்ல சினிமாக்கள் நம் இலங்கை தேசத்திலும் வெளி;வந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் தற்போது தயாரிக்கப்படும் திரைப்படங்கள் முன்னைய நிலைகளிலிருந்து மாறுபட்டு புதிய வீச்சுடன் வெளியிடப்படுவது கண்கூடு. ஆனால் வெளிநாட்டுத் திரைப்படங்கள் மிகச் சிறப்பான கதையம்சம் கொண்டவைகளாக காணப்படுகின்றமை பலரும் அறியாத ஒரு விடயமாகும்.

இந்த வகையில் தான் ரசித்த அனைத்து தர சினிமாக்கள் பற்றிய பதிவுகளாகத்தான் கே.எஸ் சிவகுமாரனின் இத்தொகுப்பு 36 தலைப்புக்களில் 136பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.-

சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் நம் வாழ்வோடு ஒன்றியவை. எம்மால் கூற முடியாதவற்றை ஒரு கலைஞன் தன் கலைப் படைப்புகளினூடாக வெளிப்படுத்தும்போது அதை நாம் ரசிக்கின்றோம். தமக்கு ஏற்படும் இன்னல்களை எப்படி சமாளிக்கின்றார்கள்? அவர்கள் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுகின்றார்கள் போன்றவற்றை நாம் அறிவதற்கு ஆவலாக இருப்பதால் சினிமாக்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாக நாம் ஏன் திரைப்படம் பார்க்கிறோம் (பக்கம் 01) இல் நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார்.

•Last Updated on ••Monday•, 01 •August• 2016 21:48•• •Read more...•
 

நூல் அறிமுகம்: மெல்லிசைத் தூறல்கள் பாடல் நூல் பற்றிய கண்ணோட்டம்

•E-mail• •Print• •PDF•

ஊவா மாகாணத்தின் தியத்தலாவையை தனது சொந்த இடமாகக் கொண்ட  எச்.எப். ரிஸ்னா எழுதிய மெல்லிசைத் தூறல்கள் என்ற பாடல்களடங்கிய நூல், கொடகே பதிப்பகத்தினால் 36 அழகிய பாடல்களை உள்ளடக்கியதாக 88 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இந்த நூல் மூலம் அவர் பாடலாசிரியராக புதுப் பிறவி எடுத்திருக்கின்றார்.

இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை), வைகறை (சிறுகதை), காக்காக் குளிப்பு (சிறுவர் கதை), வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை), இதோ பஞ்சுக் காய்கள் (சிறுவர் கதை), மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை), திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை (விமர்சனம்), நட்சத்திரம் (சிறுவர் பாடல்) ஆகிய 08 நூல்களை ஏற்கனவே ரிஸ்னா வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயமாகும். கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம், இதழியல் ஆகிய துறைகளில் தடம்பதித்திருக்கும் இவர் பூங்காவனம் என்ற காலாண்டு இலக்கியச் சஞ்சிகையின் துணை ஆசிரியராவார்.

மெல்லிசைத் தூறல்கள் நூலுக்கான பிற்குறிப்பை வழங்கியுள்ள கவிஞர், திரைப்பட நடிகர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்கள் ``கவிதாயினி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களது இனிய பாடல்களை மகிழ்ச்சியுடன் ஆங்காங்கு மனசுக்குள் பாடிப் பார்த்து ரசித்தபடி வாசித்தேன். இந்தப் பாடல் தொகுதியில் ஆன்மீகப் பாடல்களும், குடும்ப உறவுகள் பற்றிய பாடல்களும், ஈரம் சொட்டும் காதல் பாடல்களும், நன்நெறிப் பாடல்களும் நிறைந்துள்ளன. இவரது பாடல்களில் தன்னுணர்வு கவிதை மொழி தூக்கலாக இருப்பது போற்றத்தக்க சிறப்பு'' என்று சிலாகித்து குறிப்பிட்டுள்ளார்.

இதே போல நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராதனைப் பல்கலைக் கழக பேராசிரியர் துரை மனோகரன் அவர்கள் ``மெல்லிசை இயல்பாகவே எவரையும் கவரக்கூடியது. இதுவே பல்வேறு பக்திப் பாடல்கள், திரைப்படப் பாடல்கள், சமுதாய எழுச்சிப் பாடல்கள், அரசியல் பிரசாரப் பாடல்கள் முதலியவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது. இலங்கையில் 1970கள் முதலாக மெல்லிசைப் பாடல்கள் பெரும் வளர்ச்சி பெறத் தொடங்கின. இத்தகைய வளர்ச்சிக்கு இலங்கை வானொலி ஒரு முக்கிய களமாக விளங்கியது. அது வழங்கிய ஊக்கத்தின் மூலம் ஏராளமான கவிஞர்களின் மெல்லிசைப் பாடல்கள் (எனது உட்பட) இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகத் தொடங்கின. தற்போது மெல்லிசைப் பாடல்கள் தொடர்பில் பெரும் உற்சாகத்தை இலங்கை வானொலியில் காண முடியாவிடினும், ஒருகாலத்தில் அதன் பங்களிப்பு உச்சநிலையில் இருந்தது. எவ்வாறாயினும், இலங்கையில் மெல்லிசைப் பாடல் வளர்ச்சியில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இவ்வகையில், இத்துறை தொடர்பாக தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.  இலக்கியத் துறையில் இளம் படைப்பாளியான ரிஸ்னா குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களைச் செய்து வருகின்றார்.

•Last Updated on ••Friday•, 15 •July• 2016 01:14•• •Read more...•
 

நூல் அறிமுகம்: அம்மாவின் கண்கள் ;ஒரு பார்வை!

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: அம்மாவின் கண்கள் ;ஒரு பார்வை! - முல்லைஅமுதன் -தமிழின்  வரப்பிரசாதம்  தமிழர்  வாழும்  பரப்பெல்லை  விரிவுபட்டுள்ளது.  இன  முரண்பாடு உள்ளக  வெளியக இடப்பெயர்வுகளை  அதிகமான  மக்களை  பெயர்த்திருக்கிறது  அல்லது வேரோடு  பிடுங்கி  எறிந்திருக்கிறது. ஆதலினால்  மக்களின்  பரப்பளவின்  அதிகமும் அதிகமாக  அவர்களுக்கிடையேயான  மொழி  வளம் ஆளுமை கற்றுக்கொள்ளும் வல்லமை கல்வியின்  மேலோங்கிய  பயிற்சி கைகளுக்குள்  உலகையே  கொண்டு வரும்  கணினியியல் நெறிகளின்  கற்கைகள்  ஒவ்வொரு வரும்  தங்களின்  திறமைகளை  வெளிக்கொணரும் துணிச்சலையும்  கொண்டு வந்துள்ளமை கண்கூடு.

இங்கு  பன்முக  அளுமை மிக்க  படைப்பாளிகளும்  அபரிமிதமாக  தங்களை  இனங்காட்டியே வந்துமுள்ளனர். இப்போது நமக்குப் புதிதாய் அறிமுகமாகிறார் திருமதி.வத்சலா ரமேஷ். சொல்வதை சுவை படச் சொல்வதில் தன் கவிதை மூலம் சாத்தியமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்தபடி எழுதியிருக்கிறார்.வாசகனிடம் அழைத்துச் செல்லும் கவிதைகளுக்குள் நாமும் மூழ்கிபோவது அதிசயம் தான்.தமிழ் மீதான அளப்பரிய பிரியம் தமிழை அழகாகாவும் எழுத முடிந்திருக்கிறது. வாழ்க்கை மீதான நம்பிக்கைகள்,விருப்புக்கள்,கனவுகள்,தன் மீதான கழிவிரக்கம்,தன்னையே உரசிப்பார்க்கும் சமூகவெளி தருகின்ற அனுபவம்,தாயின் ஸ்பரிசம்,கற்பனை வெளியில் தானே துள்லி ஓடுகின்ற ஆட்டுக்குட்டி போலவும்,பதுமையாய் ஒதுங்கிப்போகிற பெண்ணாய், உறவை,உலகை உற்றுப்பார்க்கிற அனுபவஸ்தியாக படைப்பைத் தந்திருக்கிற வத்சலா அவர்களின் கவிதைகள் ஒரு விசாலமான உலகைத் தரிசிக்க முனைந்து நிற்கின்றன.

"ஏகாந்த காற்றில்
பறக்கும்
பால்யத்தின் நினைவுகள்
றெக்கை முளைத்த சருகுகளாய்."
ஒரு சோறே பதம்பார்க்க உதவுகிறது.
"ஒரு கோப்பைத் தேநீரை
என் இதழ் கேட்கும் சூட்டோடு
சினேகிதமாய் பருகிக் கொண்ருந்தேன்.
வெளியில் பொழிகிறது மழை
என் தேநீர்க் கோப்பையை
நிறைக்கும் வரை"

•Last Updated on ••Sunday•, 26 •June• 2016 07:01•• •Read more...•
 

சண்முகம் சிவலிங்கம் அவர்களது காண்டாவனம் குறித்து ……..

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் க.நவம்சண்முகம் சிவலிங்கம் அவர்களது காண்டாவனம் குறித்து ……..போர் பழம்பெரும் உலக மகா காவியங்கள், இதிகாசங்கள் பலவற்றின் பிரதான பேசுபொருளாக இருந்து வந்திருக்கின்றது. இராமாயணம், மகாபாரதம் முதற்கொண்டு, இலியட், ஒடிஸ்ஸி வரை இதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளார்களான லியோ ரோல்ஸ்ரோய், ஃப்ரான்ஸ் காஃப்கா, எர்னெஸ்ற் ஹேர்மிங்வே, ஜோசெஃப் கிப்ளிங் போன்றோர் உட்பட, அண்மைக்காலப் பலஸ்தீனியப் படைப்பாளிகளான சமி அல்-காசிம், ஸியாட் கட்டாஷ் போன்றோர் பலரும் தமது போர்க்கால அனுபவங்களை இலக்கியங்களாக்கிப் புகழ் பெற்றவர்கள். தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்தவரை, காதலையும் வீரத்தையும் விதந்து பேசும் சங்க இலக்கிய காலத்தில் போர் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. அதன் பின்னர்  மிக நீண்ட காலமாகத் தமிழிலக்கியத்தின் ’பிரதான பேசுபொருளாக’ இடம்பெறாதிருந்த போர், கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஒரு மாறுபட்ட வடிவத்தில் மீண்டும் தமிழிலக்கியத்தினுள் தடம் பதித்துக்கொண்டது. ஈழத்தமிழரது தமிழ்த் தேசிய விடுதலை எழுச்சியே அதற்கு வழிகோலிக் கொடுத்தது.

ஈழப்போர்க்கால இலக்கியத்தின் புதுவரவாக, சண்முகம் சிவலிங்கம் அவர்களது ‘காண்டாவனம்’ எனும் சிறுகதைத் திரட்டின் முதல் (வட அமெரிக்க) பதிப்பு, அவரது புதல்வர்கள் வித்தியானி, மகரிஷி ஆகியோரது முயற்சியில், கலிஃபோர்னியாவிலுள்ள iPMCG Inc. வெளியீடாக மார்கழி 2014இல் வெளிவந்திருக்கிறது. அண்மையில் பிரதி ஒன்று எனது கையை வந்தடையக் காரணமாயிருந்தவர், பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள். ‘சசி’ என்று நண்பர்களாலும், ’ஸ்டீஃபன் மாஸ்ரர்’ என்று மாணவர்களாலும், பெற்றோர்களாலும், உறவினர்களாலும், ஊரவர்களாலும் அழைக்கப்பட்டுவந்த சண்முகம் சிவலிங்கம் எனது நண்பர்; சக ஆசிரியர். இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தின் கல்முனை நகரிலுள்ள ஸாஹிரா கல்லுரியில் கடந்த எழுபதுகளில் இருவரும் அறிவியல் ஆசிரியர்களாகப் பணியாற்றினோம். அறிவியல் ஆசிரியர்களாக இருந்தபோதிலும், மாணவர்களுக்கு நவீன தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்தோம். மாணவர் மன்றம் அமைத்து, இலக்கியம் தொடர்பான வாசிப்புக்கள், உரையாடல்கள், சந்திப்புக்களை நிகழ்த்தினோம். நாடகங்களைத் தயாரித்தோம். கலை இலக்கிய நிகழ்ச்சிகளை இணைந்து நடத்தினோம். சமூகம், அரசியல், இலக்கியம் உட்பட, பல்வேறு விடயங்கள் குறித்து எமக்குள் விவாதித்தோம், உரையாடினோம்; உடன்பட்டோம், முரண்பட்டோம் - நல்ல நண்பர்களாக.  

இலங்கையின் வடபிரதேசத்தில் நான் பிறந்து வளர்ந்த ஊரைத் தவிர, கிழக்கு மாகாணத்தையும், கண்டி, பேராதனை நகரங்களை உள்ளடக்கிய மத்திய மாகாணத்தையுமே எனக்கு மிகவும் பிடித்தமான பிரதேசங்களெனக் குறிப்பிட்டுச் சொல்வேன். கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரங்களில், நான் கடமையின் நிமித்தம் சில வருடங்கள் வாழ்ந்துவந்த கல்முனையும் ஒன்று. காண்டாவனம் கதைத் திரட்டினூடாக, சுமார் 40 வருடங்களின் பின்னர், மீண்டும் ஒருமுறை கல்முனை போய்வந்தேன். வங்கக் கடலும், கரைமணலும், வானுலவும் வட்ட நிலவும், வாடிவீடும், வயல்வெளியும், சம்பா அரிசியில் சமைத்த சோறும், கஜுவும், கட்டித் தயிரும், கைத்தறி ஆடைகளும், வேற்றுமைகளுக்குள்ளும் ஒற்றுமையாய் வாழும் சனசமூகங்களும் மீண்டும் என் மனக்கண் முன்னே வந்து போயின. எனக்குப் பிடித்தமான, கிழக்கு மாகாணப் பேச்சுமொழி, கலை, பண்பாடு, விருந்தோம்பல், வாழ்க்கைமுறை என்பன மீண்டும் என் மனத்திரையில் தோன்றி மறைந்தன. எனக்குத் தெரிந்தவர்கள், என்னோடு பழகியவர்கள், எனது  நண்பர்கள் சிலர்கூட, காண்டாவனம் கதை மாந்தர்களாக வந்து போயினர்.

•Last Updated on ••Sunday•, 26 •June• 2016 07:07•• •Read more...•
 

நூல் அறிமுகம்: இளந்தளிர் சிறுவர் கதைகள் நூல் பற்றிய பார்வை

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: இளந்தளிர் சிறுவர் கதைகள் நூல் பற்றிய பார்வைபாடசாலை காலத்து நினைவலைகள் எம் நெஞ்சுக்குள் அலையாக அடிக்கும் போது ஏற்படும் பரவச நிலை வார்த்தைகளில் சொல்ல முடியாதவொன்று. அக்காலத்தில் நம்முடனிருந்த நண்பர்கள், நம் ஆசிரியர்கள், சக மாணவர்கள் என எல்லோருமே எம் இதயத்தின் மூலையில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். நினைத்தாலும் மீண்டும் பாடசாலை வாழ்க்கைக்கு மீண்டுவிட முடியாத யதார்த்தம் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், ஆசிரியர்கள் அந்த அதிர்ஷ்டத்தை அடைந்து விடுகின்றார்கள் என்பதுதான் நிதர்சனம்.

மாணவர்களுடனேயே நேரகாலம் போவதும், அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு துணை புரிவதும், அவர்களது வளர்ச்சிக்காக உழைப்பதும் ஆசிரியர்களின் தலையாய கடமையாகவே மாறிவிடுகின்றது எனலாம். அவ்வாறு மாணவர்கள் மீது அதிக கரிசனை கொண்ட ஆசிரியர்கள் படைப்பிலக்கியத் துறையில் ஈடுபடும்போது ஒவ்வொரு மாணவரினதும் ஒவ்வொரு போக்குகளையும் கதையின் கருக்களாக மாற்ற முடியும். அவை வாசிக்கின்ற ஏனையவர்களின் மனதில் சிறிய அதிர்வலைகளை ஏற்படுத்த முடியும்.

குருநாகலை மாவட்டத்தைச் சேர்ந்த சியம்பலகஸ்கொட்டுவையைப் பிறப்பிடமாகவும், இஹல கினியமயைப் வசிப்பிடமாகவும் கொண்ட பஸீலா அமீர் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் இளந்தளிர் எனும் பெயரில் சிறுவர் கதை நூலை வெளியிட்டிருக்கின்றார். இவர் ஏற்கனவே அமுது என்ற சிறுவர் உருவகக் கதை நூலொன்றை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஈரமுள்ள நெஞ்சம், மனித நேயம், முயன்றால் முடியும், நழுவிய சந்தர்ப்பம், ஒழிந்தது பிடிவாதம், பெருநாள் வந்தது, பிறந்தநாள் பரிசு, ரவியின் ஆசை, திருந்திய உள்ளம், தோழியர் மூவர் ஆகிய 10 கதைகளை உள்ளடக்கி 44 பக்கங்களில் அமைந்துள்ள இளந்தளிர் எனும் இந்த நூலுக்கு ஆசியுரை வழங்கியிருக்கும் சட்டத்தரணி ஏ.எஸ்.எம். மின்வர் நூலாசிரியர் பற்றி கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

தனது சிறுவயது முதற்கொண்டு  கல்வியோடு கலைத் துறையிலும் ஆர்வம் காட்டி வரும் இந்நூலாசிரியை தனது திறமைகளை தன்னில் முடக்கிக்கொள்ளாது வளரும் சிறார்களின் திறன்களை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற பரந்த நோக்குடன் செயற்படுபவர். பிறந்து வளர்ந்து, வாழ்ந்து, வெறுமனே மறைந்து போவதை விரும்பாது தன்னால் தன் சமூகம் நலன்பெற வேண்டும் என்ற நன்நோக்கில் இவ்வாசிரியை மேற்கொண்டு வரும் பணிகள், முயற்சிகள் பாராட்டத்தக்கதே.

தனது சூழலில் அன்றாடம் நிகழ்பவற்றையும், சந்திப்பவைகளையும், தன் மனதில் ஆழப் பதிந்து தடம் பதித்த ஞாபகங்களையும் சிறுவர் விரும்பத்தக்க வகையில் இரசனையுடனும் சுவாரஷ்யமாகவும் குட்டிக் கதைகளாக சிறப்பாக வடிவமைத்துள்ளார். தன் வாழ்நாளில் பல வருடங்களைப் பள்ளிச் சிறார்களுக்காக அர்ப்பணித்து அவர்களுக்கு அன்பு காட்டி ஆதரவு வழங்கி அழகிய முறையில் தன்னுள்ளம் திருப்தி காண அறிவமுதமூட்டி நல்லதொரு வழிகாட்டியாகத் திகழ்ந்து ஓய்வு பெற்றவர். என்றாலும் தனது மெய்வருத்தம் பாராது நேரம் பொன்னெனக் கருதி சிறுவர் கதை நூல்களை எழுதி வருவது பாராட்டுக்குரியது.

•Last Updated on ••Tuesday•, 14 •June• 2016 19:46•• •Read more...•
 

நூல் அறிமுகம்: காபீர்கள் எழுதிய இஸ்லாமியக் கதைகள்{ கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்தளித்த ‘காபிர்களின் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: காபீர்கள் எழுதிய இஸ்லாமியக் கதைகள்{ கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்தளித்த ‘காபிர்களின் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!“இந்தியா போன்ற கொந்தளிப்பான தேசத்தில் இது போன்ற நூறு தொகுப்புகள் வரவேண்டிய அவசியம் இருகின்றது”  மேற் கூறிய  எடுகோளுடன்   கீரனூர் ஜாகீர் ராஜாவின் முயற்சியில் எதிர் வெளியீடாக ‘காபிர்களின் கதைகள்’  என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பொன்று வெளிவந்துள்ளது. இன்று இந்திய உபகண்டத்தில் கொழுந்து விட்டெரியும் இந்து-முஸ்லிம் பிரச்சினையானது சிக்கலும் நெருக்கடியும் மிகுந்த காலகட்டங்களை எல்லாம் கடந்து   அபாயகரமானதோர் காலகட்டத்திற்குள் பிரவேசித்துள்ளது. இந்தியப் பெருந்தேசியம் என்ற கட்டமைப்பை செயலுறுத்த இந்துமதம் என்ற பேரமைப்பை பிணைப்பு சங்கிலியாக வலியுறுத்தும் அதிகார வர்க்கம், அதற்கு இந்திய தேசத்திற்கு உள்ளும் புறமுமாக  இஸ்லாமியர்களை ஒரு எதிர்சக்தியாக பகைமுரனாக காட்டி வருகினறது. பாபர்மசூதி தகர்ப்பும், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் அதைத் தொடர்ந்து வந்த தொடர் கலவரங்களும்  இதை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றன. ஈழத்திலும் இத்தகைய பதற்றமான ஒரு சூழ்நிலையே இன்று நிலவுகின்றது. அங்கு பல நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்த தமிழ்-முஸ்லிம்களின் சகோதரத்துவ உறவானது, முஸ்லிம் ஊர்காவல் படையினரின் உருவாக்கத்துடன் முறுகல் நிலையை அடைந்து, பின்பு விடுதலைப் புலிகளின் முஸ்லிம் மக்கள் வெளியேற்றம், காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் எனும் சம்பவங்களின் ஊடாக மாபெரும் விரிசல் நிலையை அடைந்துள்ளது.  இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் மற்றைய சமூகங்களின் எதிர்ப்புணர்வுகளின் மத்தியில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு முஸ்லிம் சமூகங்களும் மற்றவர்களில் இருந்து தம்மைத் தாமே தனிமைப்படுத்தியும் வேறுபடுத்திக் காட்டும் முகமாகவும்  ஆடை அணிகலங்கலிருந்து  மற்றைய பழக்க வழக்கங்கள் வரை வித்தியாசமாக தம்மை அடையாளப்படுத்திக் காட்டுவதும் மத அடிப்படைவாதிகளாகவும் வஹாபிகளாகவும் மாறும் போக்கும் இன்று அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தகைய காலமும் சூழலும் உவப்பாக இல்லாத ஒரு கால கட்டத்தில் காலத்தின் தேவை கருதியும் சூழலின் அவசியத்தை உணர்ந்தும் ஜாகீர் ராஜா அவர்கள் இத்தொகுப்பினை வெளிக்கொணர்ந்துள்ளார்.

•Last Updated on ••Monday•, 13 •June• 2016 21:39•• •Read more...•
 

நூல் அறிமுகம்: மானிடம் உயிர் வாழ்கிறது சிறுகதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்!

•E-mail• •Print• •PDF•

மானிடம் உயிர் வாழ்கிறது சிறுகதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்!எஸ். முத்துமீரான்நல்ல சிந்தனைகள் மனித மனதை வலுப்படுத்துகின்றன. அவ்வாறு தோன்றும் சிந்தனைகளை ஏனையோருக்கும் தெரியப்படுத்தும் பணியை ஒரு எழுத்தாளன் தன் எழுத்துக்களுக்கூடாக செய்கின்றான். உள்ளத்தில் தோன்றிய உணர்வுகள் ஏனைய வாசகர்களோடு சங்கமிக்கும் போது யதார்த்த வாழ்வியல் குறித்த உண்மையை அறிய அது காரணியாக அமைந்து விடுகின்றது. சிறுகதைகள் அப்பணியை செவ்வனே நிறைவேற்றுகின்றன. சொல்ல வந்த விடயத்தை ஆழமாகவும் நேர்த்தியாகவும் பாத்திரங்களினூடாக அல்லது கதாசிரியரே கதைசொல்லியாக திறம்பட சொல்லும் போது அச்சிறுகதை உயிர் பெறுகின்றது.

இவ்வாறான சிறுகதைகள் மண் வாசனை கலந்த மொழியில் வெளிவரும்போது அது மனதுக்குள் குதூகலத்தை ஏற்படுத்துகின்றது என்பது நிதர்சனம். இலங்கை எழுத்தாளர்களைப் பொறுத்த வரையில் விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய சிலரால் மாத்திரம்தான் அவ்வாறான மண்வாசனை மணக்கும் சொல்லாடல்களுடன் கூடிய படைப்புக்களைத் தர முடிகின்றது. அந்த வரிசையில் நிந்தவூரைச் சேர்ந்த சட்டத்தரணி முத்துமீரான் அவர்களின் மானிடம் உயிர் வாழ்கிறது என்ற சிறுகதைத் தொகுப்பு அவதானத் துக்குரியது.

இத்தொகுதியில் காணப்படுகின்ற சிறுகதைகள் கிராமிய மணம் கமழ்வதாகவும், யதார்த்தங்களை அப்படியே உள்வாங்கியும் எழுதப்பட்டிருக்கின்றமை கூடுதல் சிறப்பு. மனித வாழ்வோடு ஒன்றிணைந்தவற்றை சிறுகதைகளினூடாக படைப்பாக்கம் செய்வது முத்துமீரான் என்ற படைப்பாளிக்கு கைவந்த கலையாக அமைந்திருக்கின்றது. அதே போல கதைகளில் கதாசிரியரே கதைசொல்லியாக இருக்கின்றார்.

அவனொரு நேசமுள்ள மனிதன் (பக்கம் 23) என்ற சிறுகதையின் முக்கிய பாத்திரம் காதர் என்பவனாவான்.  கதாசிரியரின் வீட்டில் ஒரு ஊழியனாக செயற்பட்டாலும் அவனை எல்லோரும் தங்கள் குடும்ப அங்கத்தவனைப் போல்தான் நினைக்கின்றார்கள். மந்திரங்கள், பேய்கள், ஜின்கள் எல்லாவற்றிலும் அதிக நம்பிக்கையும் ஈடுபாடும் காதரிடம் அதிகமாகவே காணப்பட்டன. கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் அவனது கனவில் வந்து போவதாக சொல்லிக்கொண்டிருப்பான். அவ்வாறு வரும் ஜின்களில் ஒன்றுதான் சாதிக் ஜின். எனவே எப்போது பார்த்தாலும் 'ஜின் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்' என்று அடிக்கடி உச்சரித்துக்கொண்டிருப்பான். அவ்லியாக்கள், கூறாணிகள் எல்லாம் தனக்கு மிக நெருங்கியவர்களாக சித்தரித்துக்கொண்டிருப்பான். நல்ல உழைப்பாளியான அவன் கொடுக்கப்படும் எந்த வேலை என்றாலும் சலிக்காமல் செய்வான். மீன் வாங்கி வருமாறு அவனுக்கு பணிக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் அவன் இவ்வாறு பதிலளித்திருப்பது இதழோரத்தில் சிரிப்பை வரவழைத்துவிடுகின்றது.

•Last Updated on ••Wednesday•, 11 •May• 2016 23:28•• •Read more...•
 

நூல் அறிமுகம்: இவன்தான் மனிதன் சிறுகதைத் தொகுதி பற்றிய பார்வை! | ஒரே பூமியில் நானும் நீயும் கவிதைத் தொகுதி மீதான பார்வை!| நெஞ்சினிலே கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்!

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம் 1: இவன்தான் மனிதன் சிறுகதைத் தொகுதி பற்றிய பார்வை!  -- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் -சூசை எட்வேட் என்பவர் நாடறிந்த எழுத்தாளர். அவரது சிறுகதைகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. பத்திரிகைகளில் அவரது படைப்புக்கள் அதிகமான அளவில் வெளியிடப்பட்டு வருவதும் அவரது எழுத்துத் திறமையை வெளிக் காட்டுகின்றது.

கருத்துக் கலசம் என்ற பெயரில் இவர் வெளியிட்ட புத்தகம் மிக அருமையானது. திருக்குறள் இரண்டு அடிகளில் எழுதப்பட்டிருப்பது போல அன்றாட வாழ்வில் நடக்கும் விடயங்களை மையப்படுத்து இரு அடிகளில் அவர் கூறும் நற்சிந்தனைகள் மிகப் பிரபலமானவை.

அஸ்ரா பிரிண்டர்ஸ் மூலம் 216 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இவன்தான் மனிதன் என்ற அவரது சிறுகதைத் தொகுதியில் பதினைந்து சிறுகதைகள் இடம்பிடித்திருக்கின்றன.

மகுடத் தலைப்பான முதல் கதை (பக்கம் 11) அருமை நாயகம் என்ற மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தனித்துவ வாழ்க்கை குறித்தும் பேசியிருக்கின்றது. பெயருக்கு ஏற்றாற்போன்ற நல்ல குணங்களை உடைய மனிதர் அவர். நேரத்துக்கு வேலை என்ற கட்டுப்பாடான மனிதர். கண் விழித்தவுடனேயே சாமி படத்தருகில் போய் நின்று ஆண்டவா எல்லோருக்கும் நல்லறிவைக் கொடு என்று பிரார்த்திப்பார். நல்லறிவு கிடைத்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து போகும் என்பது அவரது நம்பிக்கை. அப்புறமாக அருகில் இருக்கும் சிறிய அறைக்குப் போய் வயதான தன் தாய் தந்தையை முதல் காட்சியாக கண்டால்தான் அன்றைய பொழுது இனியதாக அமையும் என்பது அவரது மனிதநேயத்தை குறித்து நிற்கின்றது. இன்று தாய் தகப்பனைப் பாரமாகக் கருதும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறிருக்க தாய் தந்தை மீது அதிகளவு பரிவும் பாசமும் காட்டும் அருமை நாயகத்தின் செயல் சந்தோசமாகயிருக்கின்றது.

•Last Updated on ••Monday•, 29 •February• 2016 01:00•• •Read more...•
 

நூல் அறிமுகமும் விமர்சனமும்: நுணாவிலூர் கா. விசயரத்தினத்தின் 'காலத்தை வென்ற (70) காவிய மகளிர்' (70) IMMORTAL WOMEN OF THE TAMIL EPICS

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகமும் விமர்சனமும்: நுணாவிலூர் கா. விசயரத்தினத்தின் 'காலத்தை வென்ற (70) காவிய மகளிர்'

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

-பேராசிரியர் கோபன் மகாதேவா -எமது ஈலாப் [ELAB] மூத்த எழுத்தாளர் சங்கத்தின் இன்றைய இணைப்பாளர் கா.வி.யின் மேற்படி நூல் அண்மையில் அவரின் விஜய் வெளியீட்டகத்தால் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தின் உதவியுடனும் ஈலாப்பின் ஆசீர்வாதத்துடனும் வெளியிடப்பட்டுள்ளது.  சங்ககால தமிழ் இலக்கியங்களில் வரும் 70 கதாநாயகிகளைப் பற்றி ஆழ்ந்து சுழியோடிப் பெற்ற தன் முத்தான கருத்துக்களை நூலாசிரியர் ஒளிபாய்ச்சி உலகிற்கு ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டுகிறார்.  அத்துடன் நம்ஆசிரியர் அந்த 70 கதாநாயகிகளின் திருநாமங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தன்நூலின் பின்அட்டையில் வரிசையாக அச்சிட்டும் இருக்கிறார். 

இக் காவிய அரிவையரின் அணிவகுப்பில் கங்காதேவி, சத்தியவதி, அம்பை, அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி ஆகிய மகாபாரதக் கதை-மகளிரில் தொடங்கி குண்டலகேசி, பத்தாதீசா, மாதிரி என்னும் எழுபதின்மர் இடம்பிடித்துப் பிரகாசிக்கின்றனர்.

ஆசிரியர் தன் கோதையரைத் தேடிக் கண்டுபிடித்த முக்கிய இலக்கியப் பெட்டகங்களாவன: முன்கூறிய மகாபாரதம், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, கம்பராமாயணம் ஆகும். அவற்றுள் 53 பேரையும், அதன் பின், தமிழர் வரலாற்றில் நிலைத்து மினுங்கிய பெண்-புலவர்களாகிய ஒளவையார், ஒக்கார் மாசாந்தியார் முதல்... வெறிபாடிய காமக்கண்ணியர் வரை... மிகுதி 17 பேரையும் எம் ஆசிரியர், விதைகளை மணந்து சென்று பொறுக்கித் தேர்ந்தெடுக்கும் ஓர் அணிலைப் போல் பொறுக்கி எடுத்திருக்கிறார் என்றால் மிகையாகாது.

•Last Updated on ••Sunday•, 28 •February• 2016 04:18•• •Read more...•
 

நூல் மதிப்புரை: முனைவர் துரை குணசேகரனின் 'தமிழ்ச்சொற்பிறப்பியல் வளர்ச்சி வரலாறு!'

•E-mail• •Print• •PDF•

நூல் மதிப்புரை: முனைவர் துரை குணசேகரனின் 'தமிழ்ச்சொற்பிறப்பியல் வளர்ச்சி வரலாறு!'“இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே”

என்னும் கூற்றுக்கேற்ப, அதன் பொருளை உணர்ந்து கொண்ட நிகழ்வு என் வாழ்வில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தமிழின் தொன்மையினை அதன் கால நிலையில், அந்தந்த காலத்தில் நிகழ்வுகளுக்கு ஏற்றாற்போல் புவியின் தன்மையை உணர்ந்துகொண்டும் சூரியனை நோக்கிய பூமியின் நீள்வட்டப் பாதையில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சுழலும் நடு நிலைக் கோட்டுக்குச் சற்று அருகில் கடலை வேலியாக் கொண்டு வள்ளுவர்களும்

`        மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடைய அறன்(குறள் 742)

என்னும் குறளுக்கு ஏற்றாற்போல் ஐவகைத் திணைகளைக் கொண்டும் சூரியனின் வட, தென் செலவை மையமாகக் கொண்டும் ஆண்டுக்கு ஆறு பெரும் பொழுதுகள், நாளுக்கு ஆறு சிறுபொழுதுகளைக் கொண்ட இந்த நிலத்தில் அதன் கால நிலையில் இங்குப் பேசப்பட்ட பல்வேறு நாட்டார் வழக்கினைக் கொண்ட தமிழ் மொழி, அதை உலகமெங்கும் முதன் முதலாக கடலில் சென்று திரும்பி தன் நிலத்திற்குத் திரும்பி உலகக் கடல் வணிகத்தை உருவாக்கிய திரை மீளர்கள் என்ற தமிழர்களின் வரலாற்றை (டாக்டர் கால்டுவெல் திரமிளர் என்பார்) உலகெங்கும் பேணி வரும் என்போன்றவர்களுக்கு தமிழ் நிகண்டுகள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் போன்றவற்றைப் படிப்பவர்களுக்கு ஏற்படும் ஓர் ஐயம் 1700 ஆண்டு தமிழ் வரலாற்றில் பிற மொழிகளில் அவற்றைத் தெளிவாகக் காணமுடிகிறது.

•Last Updated on ••Monday•, 04 •January• 2016 19:41•• •Read more...•
 

லண்டன்காரரும் BMM புரட்சியும். சேனன் எழுதிய ‘லண்டன்காரர்’ நாவல் குறித்த ஒரு பார்வை.

•E-mail• •Print• •PDF•

லண்டன்காரரும் BMM புரட்சியும். சேனன் எழுதிய ‘லண்டன்காரர்’ நாவல் குறித்த ஒரு பார்வை.நவீன தமிழ் இலக்கிய மரபானது  புலம்பெயர்  இலக்கியப் படைப்புக்களினால்  இன்னொரு பரிமாணத்திற்கு நகர்த்திச் செல்லப் பட்ட போதிலும்  இதுவரை வெளிவந்த அநேகமான  புலம்பெயர் இலக்கியப் படைப்புக்கள் யாவும்  தாயகம் நோக்கிய எண்ணங்களையும் ஏக்கங்களையும் பிரதிபலிப்பவையாக அல்லது  புலப்பெயர்ந்த ஒரு  நிலத்தில்  அவர்கள் எதிர்நோக்கிய புதிய நெருக்கடிகளின் வெளிபாடுகளாகவும் மட்டுமே  அமைந்திருந்தன.  இவற்றிற்கு மாறாக  இப்புலம்பெயர் மண்ணில்  தாம் எதிர் நோக்குகின்ற நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர் கொள்கின்ற மற்றைய சமூகங்களையும் கதை மாந்தர்களாகக் கொண்டு அம்மண்ணின் மைய அரசியலையும் சமூக பொருளாதார பின்னணிகளையும்   களமாககொண்டு  ஒரு புதிய படைப்பாக சேனன் அவர்கள் எழுதிய ‘லண்டன்காரர்’ நாவல் வெளிவந்துள்ளது. இந்நாவலானது புலம் பெயர் இலக்கிய மரபை  இன்னொரு தளத்திற்கு நகர்த்தி சென்றுள்ளதாகவும் அதற்கு இன்னொரு பரிமாணத்தை வழங்கியுள்ளதாகவும்  இலக்கிய விமர்சகர்களினாலும் ஆய்வாளர்களினாலும் மிக அண்மைக்காலமாக  மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது.

சேனன் புகலிட அரசியல் இலக்கிய சூழலில் நன்கு அறியப்பட்டவர், இடதுசாரி செயற்பாட்டாளர், நான்காம் அகிலத் தத்துவத்தை வரித்துக்கொண்ட பிரித்தானிய சோஷலிஸ்ட் கட்சியின் அங்கத்தவர், ‘நிரந்தரக்கனவு காணும் நிரந்தரப் புரட்சியாளர்கள்’ என்று மற்றவர்களால் விமர்சிக்கப்படும்  ட்ரொட்ஸ்கிய வாதிகள் மத்தியில் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு மக்களோடு  மக்களாக நின்று உழைப்பவர், ஊடகவியலாளர், விமர்சகர், கொஞ்சம் உன்மத்தம் பிடித்தவர்( உபயம்- யமுனா ராஜேந்திரன்) என பல்வேறு பரிமானங்களைக் கொண்டவர். ஆங்கிலத்திலும் உலக இலக்கியங்களிலும் வியக்கத்தகு ஆற்றல் பெற்ற இவர் இப்போது முதன் முறையாக ஒரு நாவல் மூலம் படைப்பிலக்கிய வாதியாக எமக்கு அறிமுகமாகின்றார். ஆனால் இவர் பல சகாப்தங்களுக்கு முன்பே பல இலக்கியப் படைப்புக்களைப் படைத்திருக்கிறார் என்பதும் அன்று ஷோபா சக்தியின் நண்பராக விளங்கிய இவரே ஷோபா சக்திக்கு உலக இலக்கியங்கள் மீதான பரிச்சயங்க்களை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதும் நம்மில் ஒரு சிலர் மட்டுமே அறிந்த உண்மை.  ஒரு அகதியின் வாக்குமூலமாக ஆரம்பமாகும் ‘கொரில்லா’ நாவலின் அந்த ஆரம்ப அத்தியாயமும் வடிவமும் தனது உலக இலக்கியங்களின் மீதான பரிச்சயம் உள்ள  இவரது எண்ணத்தில் உதித்த எண்ணக்கரு என்பதும், இப்படி பல வகைகளிலும் ஷோபாசக்திக்கு உறுதுணையாக இருந்த இவர் ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் ‘கொலை மறைக்கும் அரசியல்’ என்று ஷோபாசக்தியின் அரசியலை முன்வைத்து ஒரு புத்தகமே வெளியிட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதும் வேறு ஒரு சம்பவம். 

நம் மீது பிரயோகிக்கப்படும் ஒழுங்கு முறைமைகளும் நியதிகளும் நக்கெதிரானவை என்று நாம் அறியும் பட்சத்தில் அவற்றை எவ்வழியிலாவது  உடைத்தெறிய முயல்வது மனித இயல்பு.அத்தகைய உடைத்தெறியும் முயற்சியின் விளைவாக  ஒரு ஒழுங்கு முறைமையற்ற செயற்பாடாக   உருப்பெற்ற லண்டன் 2011 ஆகஸ்ட் கலவரத்தினை மையமாக வைத்து  இந்நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் ஜோய்ஸ் எழுதிய டப்லினியர் என்ற சிறுகதைத் தொகுப்பே இந்நாவலிற்கான தனது ஆகர்ஷணம் என்று குறிப்பிடுகிறார்  சேனன்.

பிரித்தானிய ஆட்சி முறைமையினையும் சட்ட முறைமைஇணையும் கேள்விக்குள்ளாக்கிய லண்டன் 2011 ஆகஸ்ட் கலவரமானது மார்க் டகன்  என்ற கறுப்பின இளைஞனை பிரிட்டிஷ் பொலிசார் சுட்டுக் கொன்றதன் பின்னணியில் ஆரம்பமாகின்றது. கோபமூட்டப்பட்ட சிறுபான்மை இன இளைஞர்களினால் மேற்கொள்ளப்பட்ட   சுமார் ஒரு வார காலம் நீடித்த இக்கலவரத்தில் சிறிய வியாபார நிலையங்களில்லிருந்து பல்பொருள் அங்காடிகள் பொது ஸ்தாபனங்கள் அரச நிறுவங்கள் என அனைத்துமே சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. இக்கலவரங்களும் வன்முறைகளும் அன்று BMM புரட்சி அல்லது கலகம் என்று சமூகவலைத்தளங்களில் வர்ணிக்கப்பட்டிருந்தது. காரணம் - மிகத் தெளிவாகவும்  திட்டமிடப்பட்டும் ஒரே நேரத்தில் பல்வேறு பட்ட இடங்களில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எந்தவித தடயங்களையும் விட்டு வைக்காமல் மேற்கொண்டு இத்தாக்குதலானது எப்படி சாத்தியமானது என்று பலரையும் வியப்பில் ஆழ்த்தி, பாதுகாப்பு புலனாய்வு பிரிவினரையும் திகைப்பில் ஆழ்த்திய போது.  இதன் பின்னால் BMM எனப்படும் பிளாக்பெரி மேசன்ஜ்சர் சேவை இருந்தது  அறிந்து கொள்ளப்பட்டது.

•Last Updated on ••Thursday•, 10 •December• 2015 20:01•• •Read more...•
 

அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்: சொ.டேவிட் ஐயா!

•E-mail• •Print• •PDF•

அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்: சொ.டேவிட் ஐயா!

சமூகம் இயல் பதிப்பகம்' வெளியீடாக வெளிவந்திருக்கிறது 'அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்' என்னும் காந்தியம் அமைப்பின் ஸ்தாபகரானடேவிட் ஐயா அவர்கள் பற்றிய இச்சிறு நூல். பதிப்பாளர் எம்.பெளசர் 'இந்தத்தொகுப்புப் பிரதி, காந்தியம் தொடர்பான , டேவிட் ஐயா தொடர்பான ஒரு வரன்முறையான ஆய்வுப் பிரதியன்று. காந்தியம் தொடர்பாகவும், டேவிட் ஐயா தொடர்பாகவும் எழுதப்பட வேண்டி உள்ள விரிவான ஆய்வு முயற்சிகளுக்கான தொடக்கப்புள்ளியை அழுத்தி வலியுறுத்துவதே இத்தொகுப்பின் நோக்கமாகும்' நூல் பற்றிய பதிப்பாளர் குறிப்பில் கூறியிருக்கின்றார். நூலின் உள்ளடக்கம் பதிப்பாளரின் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கின்றதென்று நிச்சயமாக அடித்துக்கூறலாம்.

எட்டு கட்டுரைகளையும், கவிதையொன்றினையும் உள்ளடக்கியுள்ள இச்சிறு நூலின் கட்டுரைகளை எழுதியோர் விபரங்கள் வருமாறு: மு.பாக்கியநாதன் ('டேவிட் ஐயா மற்றும் காந்தியத்துடனான அனுபவப்பதிவு'), ஜென்னி ஜெயச்சந்திரன் ('காந்தியத்தில் எனது நினைவுப்பதிவு (1979-1983), பீ.ஏ.காதர் ('மனித நேயன் டேவிட் ஐயா! நினைவுகளும் பதிவுகளும்'), பீமன் ('டேவிட் ஐயாவின் பக்கங்களில் ஒன்று.', வ.ந.கிரிதரன் ('நாவலர் பண்ணை பற்றிய நினைவுகள்'), விஜயகுமாரன் (கவிதை:'தொண்ணூறு வயதுப்பயங்கரவாதியே! போய் வாரும் அய்யா!'), நிலாந்தன் ('டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா? '), இ.பூபாலசிங்கம் ('நினைவு மீட்டல்'), மற்றும் 'காந்தளகம்' சச்சிதானந்தனின் ஆங்கிலக்கட்டுரை (David envisaged human emancipation through Tamil struggle')

காந்தியம் அமைப்பு பற்றி, அதன் ஸ்தாபகர் டேவிட் ஐயா பற்றி, மருத்துவர் ராஜசுந்தரம் பற்றி, காந்தியத்தின் நோக்கம், வேலைத்திட்டங்கள் பற்றி  எனக்காந்தியம் அமைப்பு பற்றிய பன்முகப்பார்வையினை இந்நூலின் கட்டுரைகள் வழங்குகின்றன.

பதிப்பகம் பற்றிய விபரங்கள்:
Art of Socio Publication (சமூகம் இயல் பதிப்பகம்)
166 Plum Lane, london , SE18 3HF, UK

•Last Updated on ••Saturday•, 28 •November• 2015 08:45••
 

மன்னார் அமுதனின் “அன்னயாவினும்” - காட்சி விரிக்கும் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

மன்னார் அமுதனின் “அன்னயாவினும்” - காட்சி விரிக்கும் கவிதைகள்!மன்னார் அமுதனின் ‘அக்குறோணி’ கவிதைத் தொகுதிக்கு நயவுரை வழங்கியோரில் நானும் ஒருவன். அதன் பின்னர் அமுதனின் இந்தக் கவிதைத் தொகுதி உங்கள் கரங்களுக்கு வந்திருக்கிறது. அக்குறோணி கவிதைகளின் போக்கிலிருந்து வித்தியாசப்பட்ட கவிதை சொல்லும் வகையில் இக்கவிதையில் அமைந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

‘அன்னயாவினும்’ தொகுதியின் ஒரு சில கவிதைகளை மன்னார் அமுதன் அவ்வப்போது முகநூலில் இட்டு வந்த போது படித்திருக்கிறேன், அவரைப் பாராட்டியிருக்கிறேன்.

கவிதையை முழுமையாகத் தருவதில் அமுதன் முழுமையடைந்திருக்கிறார் எனச் சொல்வதில் எனக்குள் குழப்பங்கள் கிடையாது. ஒரு கவிதை தன்னை வெளிப்படுத்திக் கொள்ள எந்தப் பாணியை விரும்புகிறதோ எந்த வார்த்தைகளை விரும்புகிறதோ எந்தச் சொற்களை விரும்புகிறதோ அவை அத்தனையையும் கொண்டதாக அமைவதே முழுமையான கவிதை. இந்த வகையில் ஒரு நல்ல கவிஞனாக அமுதன் முழுமையடைந்து விட்டார் என்று சொல்வேன்.

இந்த முழுமை அவரது வாசிப்பாலும் வயதினாலும் உணர்வினாலும் அனுபவத்தினாலும் மாத்திரம் வந்திருக்கிறது என்பதை ஓரளவுதான் ஏற்றுக் கொள்ள முடியும். அதற்கும் மேலாக கவிதை என்பது என்ன என்ற நிறைவான சிந்தனையும் உணர்வும் புரிதலும்தான் அந்த முழுமைக்குக் காரணம் என்று சொல்ல முடியும்.

தன்னைப் புரிந்து கொள்ள முடியாத மனிதன் எவ்வாறு முழுமை பெறுவதில்லையோ அப்படியேதான் கவிதை என்ற கலை வடிவமும். எல்லாக் கலை வடிவங்களுக்கும் இது பொருந்தும். ஒரு கலை வடிவம் அதன் நேர்த்தியால், வடிவத்தால் அழகும் பொலிவும் பெறுகிறது. அந்த நேர்த்தியையும் அழகையும் கவிதையில் கொண்டு வருவதற்கு கவிதை என்றால் என்ன என்ற ஆழ் உணர்வும் ரசனையும் கவிஞனுக்கு இருக்க வேண்டும். அது மன்னார் அமுதனுக்கு இருக்கிறது.

இந்தத் தொகுதியைப் படிக்க ஆரம்பித்த போது எந்தக் கவிதையில் ஆரம்பித்துப் பேசுவது என்கிற பெரிய சவாலைத்தான் நான் எதிர் கொண்டேன். அவ்வப்போது நான்கு கவிதைகளைப் படிப்பதும் மூடிவைப்பதுமாகக் காலத்தைக் கடத்தியபடியே இருந்தேன்.

இந்தக் கவிதைகள் அனைத்தும் வாழ்க்கையை, அதன் போக்கை, அதன் சவால்களை, அதன் ஆபத்துக்களைத்தான் மொத்தமாகப் பேசுகின்றன. ஆனால் எந்தவொரு பக்கத்துக்கும் சாராமல், வலிந்து இழுக்காமல் , மனம் போன போக்கில் போகாமல் ஒரே நேர் கோட்டில் இவை பயணம் செய்கின்றன. ஒரு இலங்கையனாக, ஒரு சிறுபான்மையினனாக, ஒரு தமிழனாக, ஒரு இலக்கியவாதியாக, ஒரு வடபுலத்தானாகவெல்லாம் இக் கவிதைகளில் தோற்றம் தருகிறார் அமுதன். ஆனால் எந்தப் பக்கமும் தூக்கலாகப் பேசப்படவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஓர் அம்சம்தான்.

•Last Updated on ••Sunday•, 22 •November• 2015 23:54•• •Read more...•
 

நூல் அறிமுகம்: மீண்டும் ஒரு வசந்தம் சிறுகதைத் தொகுதி மீதான பார்வை

•E-mail• •Print• •PDF•

யதார்த்தமான விடயங்களை அச்சுப் பிசகாமல் வாசகர்களிடம் முன்வைப்பது எழுத்தாளர்களால் மாத்திரமே சாத்தியமாகின்றது. அதையும் சுவாரஷ்யமான முறையில் தெளிந்த மொழிநடையுடன் சமர்ப்பிக்கும் ஆற்றல் எல்லோரிடத்திலும் வாய்த்து விடுவதில்லை. சிங்களமொழி மூலம் கல்வி கற்று தமிழ் மீது கொண்ட அபிமானத்தால் இலக்கியவாதியாக உருவெடுத்து இன்று தன் பெயரை நிலைக்கச் செய்திருப்பவர் எழுத்தாளர் ஏ.சீ. ஜரீனா முஸ்தபா அவர்கள். நாவல் துறையில் அதிக முனைப்புடன் செயற்பட்டு வருபவர். ஓர் அபலையின் டயரி, இது ஒரு ராட்சஷியின் கதை, 37ம் நம்பர் வீடு, அவளுக்குத் தெரியாத ரகசியம் ஆகிய 04 நாவல்களையும், ரோஜாக் கூட்டம் (சிறுவர் கதை), பொக்கிஷம் (கவிதைத் தொகுதி) ஆகிய நூல்களையும் அத்துடன் யதார்த்தங்கள் என்ற சிறுகதைத் தொகுதியை அடுத்து மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதியையும் இதுவரை இவர் வெளியிட்டிருக்கின்றார். மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதி நூலாசிரியரின் 08 ஆவது நூல் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.

இனி மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதியில் உள்ள 13 சிறுகதைகளில் சில சிறுகதைகளை இங்கு பார்ப்போம்.

சிதறிய நம்பிக்கைகள் (பக்கம் 13) என்ற சிறுகதை திருமணம் என்ற பெயரில் பெண் வீட்டாரிடமிருந்து சீதனம் வாங்கும் ஆண்களுக்கு சாட்டையடியாக அமைந்திருக்கின்றது. சீதனம் வேண்டாம் என்று மணமுடித்துவிட்டு அதன்பிறகு பணம் வேண்டும் வீடு வேண்டும் என்று மனைவியைத் துன்புறுத்தும் சில ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அஸ்மான் என்பவன் ஸாஹினாவைப் பின்தொடர்ந்து சென்று தன்னுடன் மீண்டும் இணைந்து வாழும்படி கெஞ்சுகின்றான். அவனது கெஞ்சுதல் ஸாஹினாவின் உள்ளத்தை உருக்கிவிடவில்லை. அவன் ஏற்கனவே அவளை அவமானப்படுத்தி இல்லாத விடயங்களை எல்லாம் இட்டுக்கட்டிய ஒரு சூத்திரதாரி. தந்தையை இழந்த அவளது குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் சுமந்துகொண்டவர் அவளது சாச்சா (தந்தையின் இளைய சகோதரர்). அவரிடமிருந்து இவர்களுக்குச் சொந்தமான சொத்தைப் பிரித்துக் கேட்குமாறு அடிக்கடி மனைவி ஸாஹினாவை அஸ்மான் வற்புறுத்துகின்றான். ஆரம்பத்தில் சீதனம் எதுவும் வேண்டாம் என்று உத்தமனாக வந்தவனை அனைவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் அவன் சொத்தாசை பிடித்த ஒரு பேய் என்பதை போகப் போக அனைவரும் உணர்ந்து கொள்கின்றனர். பின்வரும் உரையாடல் இதை நிதர்சனமாக்குகின்றது.

•Last Updated on ••Thursday•, 12 •November• 2015 20:29•• •Read more...•
 

நூல் அறிமுகம்" கோடை மழை சிறுகதைத் தொகுதி மீதான ஒரு பார்வை

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்" கோடை மழை சிறுகதைத் தொகுதி மீதான ஒரு பார்வைஉடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்துகள் சிகிச்சையளிப்பது போன்று மனதில் தோன்றும் நோய்களுக்கு இலக்கியம் சிக்கிச்சையளிக்கின்றது. இது எழுத்தை நேசிக்கும் பெரும்பாலானவர்களின் கருத்து. அவ்வாறு குணப்படுத்துபவர்களுள் வைத்திய கலாநிதி ச. முருகானந்தன் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்.

யுத்த பிரதேசங்களில் சேவையாற்றி வந்த காலத்தில் அவரும், அவர் வாழ்ந்த சூழலில் இருந்த மக்களும் எதிர்நோக்கிய இடர்களை சிறுகதைகளாகப் பதிவு செய்திருக்கின்றார். மேலும் மலையக சமூகத்தினருடன்; வாழ்ந்த காலத்தில் தோட்டத் தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் ச. முருகானந்தனின் பல சிறுகதைகள் காணப்படுகின்றன. அவரது கோடை மழை என்ற இத்தொகுதி 11 கதைகளை உள்ளடக்கி ஜீவநதி பதிப்பகத்தின் 48 ஆவது நூலாக வெளியிடப்பட்டிருக்கின்றது. இது 88 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றது.

குழந்தை உள்ளம் எப்போதும் தூய்மையாகவே இருக்கின்றது. இதில் கறைகளைப் படியச் செய்வது பெரியவர்களின் செயற்பாடுகள்தான். பிஞ்சு மனங்களில் நஞ்சைத் தூவி அவர்களை வஞ்சம் கொண்டவர்களாக வாழச் செய்வதும் பெரியவர்களே. பெரியவர்கள் தமது செயற்பாடுகளில், பேச்சுக்களில் நல்லவற்றை மாத்திரம் வெளிப்படுத்துவார்களாயின் குழந்தைகளும் அவ்வாறே நல்ல விடயங்களைச் செய்வார்கள். ஏனெனில் ஒரு குழந்தைக்கு முதல் பள்ளிக்கூடம் வீடுதான். வீட்டில் உள்ளவர்களைப் பார்த்துத்தான் குழந்தை முதன்முதலாக கற்றுக்கொள்கின்றது.  இத்தொகுதியில் காணப்படும் குழந்தைகள் உலகம் (பக்கம் 05)  என்ற சிறுகதையின் கரு சிறுவர் உள்ளங்கள் மாசு மருவற்றவை என்பதையே பறைசாற்றியிருக்கின்றது.

அகல்யா என்ற சிறுமி தன் தந்தையிடம் பேச்சுப் போட்டிக்காக பேச்சு எழுதிக் கேட்கின்றாள். அதை மனப்பாடமாக்கி பாடசாலையில் முதலாமிடமும் பெற்று விடுகின்றாள். ஆனால் பாடசாலையில் உள்ள ஆசிரியர் தனது மகனான பிரவீன் அந்தப் போட்டியில் முதலாமிடம் பெறவில்லை என்ற கோபத்தை மனதில் இருத்தி வகுப்புப் பாடவேளையின்போது அகல்யாவுக்கு தழும்பு ஏற்படும் வண்ணம் அடிக்கின்றார். ஆனால் முதலாமிடம் பெற்ற அகல்யாவுக்கு பிரவீன் கண்டோஸ் சொக்லட் கொடுத்து வாழ்த்துகின்றான். அவன் பா ஓதல் போட்டியில் பரிசு பெற்றதற்காய் அகல்யா பிஸ்கட் பக்கற் வாங்கிக் கொடுக்கின்றாள். தன் தாய் அகல்யாவுக்கு அடித்ததைப் பற்றி பிரவீனுக்கு யோசிக்கத் தெரியவில்லை. பிரவீனின் தாயான டீச்சர் தனக்கு அடித்தமை பற்றி அகல்யாவுக்கு யோசிக்கத் தெரியவில்லை. பிஞ்சு உள்ளங்கள் எத்தனை அழகானவை என்பதற்கு இக்கதை சிறந்த எடுத்துக்காட்டகும்.

•Last Updated on ••Monday•, 02 •November• 2015 05:33•• •Read more...•
 

கணங்களைக் கைதுசெய்தல் [ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ப. ஆப்டீன் அவர்களது ‘கொங்காணி’ சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரை]!

•E-mail• •Print• •PDF•

கணங்களைக் கைதுசெய்தல்! (ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ப. ஆப்டீன் அவர்களது ‘கொங்காணி’ சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரை).க. நவம்நவீனத் தமிழிலக்கியச் சூழலில் சிறுகதை இன்னமும் தனது செழிப்பையும் செல்வாக்கையும் இழந்துவிடவில்லை. ‘சிறுகதை எனப்படுவது ஒரு சிறிய கதை’ என்ற சௌகரியம் அதற்கான ஒரு புறவயமான காரணம். எனினும் அதற்கும் அப்பால், சிறந்த சிறுகதை ஒன்றினுள் அடங்கியிருக்கும் அளவிறந்த ஆற்றலே அல்லது உள்ளார்ந்த வீரியமே அதன் சிறப்பின் மூலாதாரம். ‘அணுவைத் துளைத்தலும், ஏழு கடலைப் புகுத்தலும்’ சிறுகதைக்குள்ளும் நிகழ்த்தப்படக்கூடிய சித்து வித்தைகள்தான் என்பதற்குச் சாட்சியங்கள் நிறையவுண்டு. தமிழ்ச் சிறுகதையின் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சொல்முறைமையிலும் காலநகர்வுக்கேற்ப அவ்வப்போது பரிணாம மாற்றங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றபோதிலும், அதற்கான தேவையிலும் தேடலிலும் சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஏதும் இதுவரை தென்படவில்லை!

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாறு, கடந்த நூற்றாண்டின் நடுக்கூறான ஐம்பதுக்கு முற்பட்ட, பொழுதுபோக்குக் கதைக் காலத்துடன் ஆரம்பமானது. ஐம்பதுக்குப் பின்னர் தோற்றம் பெற்றது, மறுமலர்ச்சிக் காலமாகும். இதனைத் தொடர்ந்து அறுபதுகளின் ஆரம்பத்தில் தேசிய இலக்கியக் காலம் மூன்றாவது காலகட்டமாக முகிழ்த்தது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தனித்துவங்களைத் துணிச்சலுடன் முரசறைந்து பிரகடனஞ்செய்த இக்காலகட்டத்தில் முளைதள்ளிச் செழித்து வளர்ந்து, பல நல்ல கதைகளை எமக்களித்த ஒரு மூத்த படைப்பாளி, அன்பு நண்பர் ப. ஆப்டீன் அவர்கள். ‘கொங்காணி’ எனும் இத்திரட்டு, நண்பர் ஆப்டீன் அவர்களது 12 கதைகளைக் கொண்டது. இவற்றுள் அநேகமானவை பல்வேறு சஞ்சிகைகளில் நான் ஏற்கனவே உதிரிகளாகப் படித்தவை. ஆயினும் இவ்வாறு ஒரு திரட்டாகப் படிக்கும்போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது; அது ஒட்டுமொத்த அபிப்பிராயம் சொல்ல வசதியானது. மேலும், நண்பர் ஆப்டீன் அவர்களது படைப்பாளுமையின் அடையாளம் எனும் வகையில் இத்திரட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. நண்பர் ஆப்டீன் அவர்கள் மிகவும் மென்மையான மனம் படைத்த ஒரு படைப்பாளி; பழகுவதற்கு இனிமையானவர்; பண்பானவர். எனது சுமார் ஒருவருடகால நட்புறவாடலின் கண்டுபிடிப்புக்கள் இவை. ‘இவைதவிர்ந்த அவரது இன்னொரு முகத்தை, இப்பன்னிரண்டு கதைகளூடாகக் கண்டேன்’ என்பது பச்சைப் பொய்! அவருக்குள் உள்ளது ஒரேயொரு முகம் மட்டுந்தான். அந்த முகத்தையே இக்கதைகள் பூராவும் நான் காண்கிறேன். ஆக, தம்மைச் சூழ்ந்து வாழும் மக்களது அன்றாட வாழ்வின் அவலங்களையும், அற்புதங்களையும் கண்டு சிலிர்க்கும் தமது சொந்த முகத்தையே இக்கதைகள் வழியாக அவர் காண்பித்திருக்கின்றார்.

•Last Updated on ••Friday•, 30 •October• 2015 22:31•• •Read more...•
 

நூல் அறிமுகம்: விடைதேடி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு! | மழலையர் மாருதம் நூல் பற்றிய கண்ணோட்டம்!

•E-mail• •Print• •PDF•

1. விடைதேடி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு!

விடைதேடி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு!தம்பிலுவில் ஜெகாகிழக்கிலங்கையின் தெற்கே அமைந்துள்ள தம்பிலுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரி நாதனின் கன்னிக் கவிதைத் தொகுதியே விடைதேடி எனும் கவிதை நூலாகும். 100 பக்கங்களில் அமைந்துள்ள இந்தக் கவிதை நூலில் 75 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இக்கவிதைகள் தாயன்பு, தமிழின் சிறப்பு, ஆடவரின் அடக்குமுறை, இனத்துன்புறுத்தல்கள், வன்னிப் போரின் கொடூரம், கடமையுணர்வு, ஆசிரியரின் பெருமை, வாழ்வியல் தரிசனங்கள், மனித நடத்தைக் கோலங்கள், சிறுவர் துஷ்பிரயோகம், காணாமல் போனோர் ஆகிய கருப்பொருட்களில் அமைந்துள்ளன.

தனது 12 ஆவது வயதில் எழுதத் தொடங்கிய இவர் தம்பிலுவில் ஜெகா என்ற புனைப்பெயரிலேயே அதிகம் எழுதியுள்ளார். எண்பதுகளில் எழுதத் தொடங்கிய இவர் அன்று தொடக்கம் இன்று வரை மரபுக் கவிதை வடிவங்களிலும், புதுக் கவிதை வடிவங்களிலும் தனது கவிதைகளை எழுதி வருகின்றார். இன்னும் விடியவில்லை, கண்ணாடி முகங்கள், கவிதைகள் பேசட்டும் ஆகிய நூல்களிலும் இவரது கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 1990 இல் கலைப்பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்ற இவர், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கு தமிழ்ப் பாடத்தை கற்பிப்பவர் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

இனத்தின் விடியலுக்காய் இன்னுயிர்த் துணை இழந்து மனதில் உறுதியுடன் சுமைதாங்கும் மாதருக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்து ஆறுதலடைகிறார் நூலாசிரியர். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் தனது உரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

``மரபுக் கவிதை வடிவங்களில் கவிதை எழுதுவோர் பெருகிய முன்னைய காலங்களில் கூட, கவிஞைகள் அவற்றைப் பின்பற்றி எழுதுவது அரிதாகவே இருந்தது. எழுபதுகளில் புதுக் கவிதை வடிவம் முக்கியம் பெற ஆரம்பித்தபோதுதான் கவிஞைகளும் கவிதை உலகில் பிரவேசிக்கத் தொடங்கினர். எனினும் எண்பதுகளில் கவிதை எழுதத் தொடங்கிய ஜெகா அன்று முதல் இன்று வரை மரபுக் கவிதை வடிவங்களை எழுதுகின்றார். அதேவேளை புதுக்கவிதை வடிவத்தையும் கையாளும் திறன் இவரிடம் சிறப்பாக மிளிருகின்றது. இவ்வாறு மரபுக் கவிதை, புதுக் கவிதை எனும் இருவெறு வடிவங்களையும் கையாளும் ஆற்றல் கிழக்கிலங்கைக் கவிஞைகளான மண்டூர் அசோகா முதலான ஓரிருவரையே குறிப்பிடலாம். இப்பட்டியலில் தம்பிலுவில் ஜெகாவின் பெயரும் இணைந்துகொண்டமை எனக்கு மகிழ்வைத் தருகிறது'' என்கிறார்.

•Last Updated on ••Saturday•, 24 •October• 2015 00:19•• •Read more...•
 

வாசிப்பின் சுகம்: அம்மாவின் ரகசியம்

•E-mail• •Print• •PDF•

book_ammavinrakasiyam57.jpg - 12.04 Kbவாசிக்கவென எடுத்துவைத்த நூல்களில் இன்று அதிகாலை என் கையில் அகப்பட்ட நூல் ‘அம்மாவின் ரகசியம்’. சுநேத்ரா ராஜகருணநாயகவின் இச் சிங்கள மொழியிலான படைப்பை தமிழில் தந்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். வாசிப்பை இடறல் செய்யாத மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரீப்பை இதற்காக பாராட்டலாம்.

சிங்கள மொழியிலான ஆக்கங்களின் பரிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு மிகமிகக் குறைவு. சிங்கள மக்களின் வாழ்க்கைகூட மேலோட்டமாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. வாழ்க்கை அழைக்கும் பக்கங்களுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் தேவை மூன்றாம் உலகினைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் விதியாகியிருக்கிற இன்றைய காலகட்டத்தில், தார்மீக நியாயங்களின் காரணமாய் தம் தேசத்து அரசியலை வெறுத்து பல படைப்பாளிகளும் தம் தேசத்திலேயே அடையும் துன்பங்களும், புலம்பெயர்ந்து எதிர்கொள்ளும் மனநோக்காடுகளும் பெரும்பாலும் கவனமற்றே இருக்கின்றன. இதை மிக வன்மையாக பிரக்ஞைப் படுத்தியிருக்கிறது இப் படைப்பு.

இவ்வாண்டு(2015) கான்ஸ் சர்வதேச திரப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு விவரணப் படத்தை எழுதி இயக்கிய சர்மினி பெலி என்கிற இலங்கைப் பெண் ஏப்ரல் மாத ‘தி சிறீலங்கா றிப்போர்ட்டர்’ பத்திரிகைக்கு கொடுத்துள்ள அறிமுகப் பேட்டி, இதுபோல் அறநெறிகளின் மீதாக தம் வாழ்க்கையை நிறுத்தியுள்ள பல்வேறு படைப்பாளிகள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்களின் மனநிலையின் ஒட்டுமொத்தமான வெளிப்பாடாக இருப்பதை காணமுடியும். அவர், முப்பதாண்டுகளுக்கு மேலாக தான் இலங்கையில் வசித்த காலத்தில் பல கொலைகளையே கண்கூடாகக் கண்டதாகவும், இலங்கை அரசாங்கத்தின் அவ்வகையான ஒவ்வொரு கொடுமை நிகழ்த்தலுக்கும் தானும் ஒருவகையில் காரணமென்பதை தான் உணர்ந்திருப்பதாகவும் அதில் கூறுகிறார்.

•Last Updated on ••Wednesday•, 17 •June• 2015 21:15•• •Read more...•
 

பார்வை: பாரதிநாதனின் 'வந்தேறிகள்'

•E-mail• •Print• •PDF•

பாரதிநாதனின் வந்தேறிகள்

தாஜ் (சீர்காழி)ஒரு நாவலை வாசிக்கிற போது, அதனை ரசித்து உள்வாங்கிக் கொள்வதென்பதும் அதன் கதாபாத்திரங்களோடு ஒன்றிப்போவதென்பதும் வேறு வேறு நிலைரசனை கொண்டவை. ஆழ்ந்து அவதானித்தால் இரண்டு ரசனைகளுக்கிடையே நிரம்ப வித்தியாசங்கள் உண்டென்பதைக் கணிக்க முடியும். இவ்விரண்டு நிலையுமே வாசிப்பின் நிறைவை வெளிப்படுதும் பாங்குதான் என்றாலும், நாவலோடு ஒன்றிப்போவதென்பதையே கூடுதல் ஈடுபாடாகக் கருதயிடமுண்டு!. தோழர் பாரதிநாதனின் 'வந்தேறிகள்' நாவலை வாசித்த போது என் நிறைவை, கூடுதல் ஈடுபாடுகளுடன்தாம் உணர்ந்தேன்!பேட்டை - மந்தைத்திடல், கள்ளிப்பாளைய முதலாளிகள், அவர்களது கைத்தடிகள், அவர்கள் அழைத்துவந்திருந்த போலீஸ்களென அத்தனை பேர்களோடும் நியாயத்திற்காக முரண்பட்டு சந்துரு களத்தில் முன்நிற்க, மாதேசு, ஏழுமலை, கந்தப்பன் குடும்பம் இன்னும் இன்னும் ஏராளமான ஜனங்கள் குழுமியிருந்த மந்தைதிடல் கூட்டத்தில் நானும் இருந்தேன்! என்ன யோசிக்கின்றீர்கள்! மிகைதான். ஆனாலும் இருந்தேன்! அந்த அளவில் அந்நாவலோடு என் ஐக்கியம் இருந்தது. பேட்டைப் பகுதியில், பெரும் விசைத்தறி உற்பத்தியாளர்களாக அறியப்படும் கொழுத்த முதலாளிகள், தங்களை அண்டிவாழும் சிறு விசைதறி முதலாளிகளை வஞ்சிக்கிறார்கள். அவர்களிடம் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலையற்றுப் போய், வீதிக்கு வருகிறார்கள். இச்சூழ்ச்சியில், சிறு முதலாளிகளுக்கு ஆதரவாக விசைத்தறித் தொழிலாளர்கள் களம் காண்கிறார்கள்.

•Last Updated on ••Saturday•, 13 •June• 2015 00:31•• •Read more...•
 

பூங்காவனம் 19 ஆவது இதழ் மீதான பார்வை!

•E-mail• •Print• •PDF•

பூங்காவனம் 19 ஆவது இதழ் பூங்காவனம் வாசகர் கரங்களில் தற்பொழுது மணம் பரப்பிக்கொண்டிருக்கின்றது. பூங்காவனத்தின் வழமையான அம்சங்கள் இந்த  இதழையும் அலங்கரித்திருக்கின்றன. டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் அனுஷ்டிக்கப்படுவதை வாசகர்கள் அறிவார்கள். அதனை நினைவுபடுத்துமுகமாக ஆசிரியர் பக்கத்தில் சிறந்த பல யோசனைகள் தரப்பட்டிருக்கின்றன. மனதில் உறுதியிருந்தால் உடலில் ஏற்படும் ஊனம் திறமையை பாதிப்பதில்லை என்பதையும், ஏனையவர்கள் ஊனமுற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்தவே வருடாந்தம் ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது என்ற கருத்து சொல்லப்பட்டிருக்கின்றது. மேலும், முயற்சியையே மூலதனமாகக் கொண்டுள்ள ஊனமுற்றவர்கள் உலக ரீதியாக பல சாதனைகளைப் படைத்திருக்கின்றனர். இறைவன் இவர்களுக்கு விசேட வல்லமைகளைக் கொடுத்திருக்கிறான் என்ற உண்மையும் கூறப்பட்டிருக்கிறது. ஊனம் என்பது தனிநபர் சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதால் அவர்களை அணுகி அவர்களுக்கான உளவள ஆலோசனைகளை வழங்கி நட்புடன் உறவாடி `வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற உண்மையை உணர வைக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

•Last Updated on ••Tuesday•, 26 •May• 2015 21:59•• •Read more...•
 

அன்புள்ள தோழியே கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

•E-mail• •Print• •PDF•

book_anpulla5.jpg - 10.71 Kbண்டியைப் பிறப்பிடமாகக்கொண்ட சப்ரா அக்ரம், தற்போது தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலைத்துறையில் கல்வி கற்கும் மாணவியாவார். இவரது கன்னிக் கவிதைத் தொகுதி கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் வெளிவந்திருக்கின்றது. 52 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் சிறியதும் பெரியதுமான 42 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இவர் பாடசாலைமட்ட கவிதைப் போட்டிகளிலும், மாவட்ட ரீதியான கவிதைப் போட்டிகளிலும் பங்குபற்றி பல சான்றிதழ்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக நோக்குமிடத்து சிறு வயது தொடக்கம் முதுமை வரை பெண்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். பருவ வயதை அடைந்துவிட்டால் அவள் படும் துன்பங்கள் ஏராளம். குடும்ப வாழ்க்கைக்குள்ளும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றையெல்லாம் தாண்டி வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடக்கூடிய வலிமை பெண்களுக்கு இயற்கையாகவே கிடைத்ததல்ல. தொடர் போராட்டங்களினால் கற்றுக்கொண்ட பாடங்களாக அவை அமைந்துவிடுகின்றன. சிறந்த மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக ஒரு பெண் பல பரிணாமங்களைப் பெறும்போதும் தனக்கேயுரிய தனித்துவத்தில் அவள் தலைசிறந்து விளங்குகின்றாள். தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்குவதில் படிக்கல்லாகத் திகழ்கின்றாள்.

•Last Updated on ••Thursday•, 26 •March• 2015 21:34•• •Read more...•
 

நூல் அறிமுகம்: வீடு நாவல் பற்றிய இரசனைக் குறிப்பு

•E-mail• •Print• •PDF•

வீடு நாவல் பற்றிய இரசனைக் குறிப்பு  - வெலிகம ரிம்ஸா முஹம்மத் -தென்னிலங்கையின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் மிக முக்கியமான எழுத்தாளராக விளங்கும் திக்வல்லை கமால் அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் தனது பெயரை ஆழப்பதித்தவர். சாஹித்திய விருதுகள் உட்பட பல பரிசுகளை பெற்றுள்ள இவர், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள், வானொலி நாடகங்கள், சிறுவர் இலக்கியங்கள் போன்ற துறைகளில் முனைப்புடன் செயல்பட்டு பல நூல்களை இலக்கிய உலகுக்கு தந்துள்ளார். அதுபோல் மொழியெர்ப்பு துறைகளிலும் ஈடுபட்டு பல நூல்களை பெயர்ப்பு செய்துள்ளார்.

திருமணம் என்பது ஆடம்பரத்துக்காகவும், புகழுக்காகவும் நிகழ்த்தப்படும் காலம் இது. யதார்த்தங்களைத் தொலைத்துவிட்டு மாயையகளுக்குள் ஒளிந்து கொள்ளவே பலரும் பிரியப்படுகின்றனர். சமகால நிகழ்வுகளின் ஓட்டத்தில் காசு பறிக்கும் ஒரு தொழிலாகவே திருமணத்தைப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் சராசரி ஆண்களில் இருந்தும் மாறுபட்டு பெண் வீட்டிலிருந்து ஒரு சதமும் சீதனம் எடுக்காமல் அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்துடன் திருமணம் முடிக்கும் கரீம் மௌலவி பற்றிய கதைப் பிண்ணனிதான் வீடு என்ற இந்த நாவல்.

வீடு என்ற ஒற்றை வார்த்தையில் ஒரு தனிமனிதனின் போராட்ட வாழ்க்கை மிக அழகாக அற்புதமாக இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. நமது சமூகத்தைப் பொறுத்தளவில் மௌலவி என்பவர்கள் வசதி வாய்ப்பற்றவர்கள்.. நன்றாக படிக்காதவர்கள் என்ற எண்ணப்பாடு அதிகமாக காணப்பட்ட போதிலும், அல்லாஹ்வின் தீனைக் கற்றவர்கள் என்ற அந்தஸ்து உரியவர்களுக்கு வழங்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.

•Last Updated on ••Tuesday•, 03 •March• 2015 23:20•• •Read more...•
 

நூல் அறிமுகம்: அழுகைகள் நிரந்தரமில்லை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

•E-mail• •Print• •PDF•

book_alukaihalnirantharamillai5.jpg - 11.19 Kbஈழநாதம், தினமுரசு பத்திரிகைகளில் ஒப்புநோக்காளராக, உதவி ஆசிரியராக, பிரதேச செய்தியாசிரியராக பணிபுரிந்தவர் அலெக்ஸ் பரந்தாமன். எண்பதுகளின் பிற்பகுதிகளில் இருந்து எழுதத் தொடங்கி இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கிறார். கவிதை, சிறுகதை, நேர்காணல், பத்தி எழுத்துக்கள், கட்டுரைகள் போன்றவற்றை பத்திரிகைகள் ஊடாக களப்படுத்தி வந்துள்ளார். ஜீவநதி வெளியீட்டகத்தின் 38 ஆவது தொகுப்பாக வெளிவந்துள்ளது அலெக்ஸ் பரந்தாமனின் கன்னிச் சிறுகதைத் தொகுப்பு. 58 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் 10 சிறுகதைகள் இடம் பிடித்துள்ளன.

அனலெனவாகிய நினைவுகள் (பக்கம் 01) என்ற முதல் சிறுகதை போரின் கோரத் தாண்டவத்தால் மக்கள் படும் அல்லலை சித்திரித்துக் காட்டுகின்றதெனலாம். பிள்ளைகளுடன் கொட்டிலுக்குள் வறுமை வாழ்வு கழிக்கும் சிறியதொரு குடும்பத்தின் சோக நிகழ்வுகள் இக்கதை மூலம் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகின்றது. அதில் வயதான ஒரு மாமாவின் பாத்திரமும் உள்ளடக்கப்ட்டிருக்கின்றது. அவர் முணுமுணுக்கும் வார்த்தைகள் இதுதான்..

'அவன் ஆமி வாறதைப் பார்த்தால் எல்லோரையும் புடிச்சிடுவாங்கள் போலக்கிடக்கு. புடிச்சு எல்லோரையும் சுட்டுவிட்டாங்கள் என்றால் உபத்திரவமில்லை...'

•Last Updated on ••Saturday•, 31 •January• 2015 20:42•• •Read more...•
 

நூல் அறிமுகம்: ராஜாஜி ராஜகோபாலனின் "ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்" சில இரசனைக் குறிப்புக்கள்........

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: ராஜாஜி ராஜகோபாலனின் "ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்" சில ரசனைக் குறிப்புக்கள்........ - வேலணையூர்-தாஸ் -ராஜாஜி ராஜகோபாலன் ஈழத்தில் இருந்த கனடாவுக்குச் சென்று அங்கு வசித்த வருபவர்.  அவருடைய படைப்பாக வளரி எழுத்துக்கூடம் வெளியிட்ட ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம் பற்றி சில குறிப்புக்கள் .  கவிதை என்பது உள்ளத்து உணர்வுகளை வெளிக்கொணரும் மொழியின் ஒரு அழகிய பகுதி . அந்தக்கவிதையை கையிலெடுத்த ராஜகோபாலன் ஈழத்து வாழ்வியலை அதன் பண்பாட்டம்சங்களை அழகிய கவிதைகளாக இத்தொகுதியில் தந்திருக்கிறார். "அம்மாமெத்தப் பசிக்கிறதே" என்ற கவிதை போர் முனையில் சிதைந்த ஒரு சிறுவனின் வாய்ப்பாடாக பின்வருமாறு வெளிப்படுகிறது "வானமே எங்கள் கூரையம்மா. வெண் மணலே எங்கள் கம்பளமாம். வேலிக்கு வெளியே வேறுலகம். வேதனை என்பதே நம்முலகம்.

"மரங்கள் என் நண்பர்கள்" என்ற கவிதை இயற்கையோடு இணைந்து இவர் கவி மனதை வெளிப்படுத்துகிறது. "ஒழுகும் நிழலின் அணைப்பில் அயர்வேன் .தழுவும் இதழ்களில் காதலில் கரைவேன் தேயும் மரங்களின் தியாகத்தை மதிப்பேன் .தாங்கும் தண்டினில் தந்தையை துதிப்பேன்." என தொடர்கிறது அக்கவிதை . "மங்கையராய் பிறப்பதற்கே" என்ற கவிதை பெண்ணடிமைத் தனத்தை யதார்த்தமாக எடுத்துரைக்கிறது. "மாவை அரைக்கிறாய் மாவாய் அரைபடுகிறாய் . உரலில் இடிக்கிறாய் உரலால் இடிபடுகிறாய். பகலில் முறிகிறாய் படுக்கையிலும் முறிகிறாய்." எனத் தொடர்கிறது அக்கவிதை .

•Last Updated on ••Saturday•, 31 •January• 2015 19:59•• •Read more...•
 

நூல் நயப்புரை: அமரர் பொ. கனகசபாபதியின் - மரம் மாந்தர் மிருகம் மாதுளம் கனியின் மகத்துவம் அறிந்த கிரேக்கர்களும் சீனர்களும்

•E-mail• •Print• •PDF•

அதிபர் கனகசபாபதிசுபகாரியம்   சீக்கிரம்  என்பார்கள்.  சுபகாரியம்  மட்டுமல்ல - எந்தக்காரியத்தையும்  தாமதிக்காமல்  உரியவேளையில் செய்யத்தவறிவிட்டால்  அதற்கான  பலனையும்  அடைய முடியாமல் போய்விடும்   என்பதும்  நிதர்சனமான  உண்மை. பல   மாதங்களுக்கு  முன்னர்,   எனது  அக்காவின்  சம்பந்தியான ஸ்ரீஸ்கந்தராஜா   அண்ணா,   என்னிடம்  மரம்  மாந்தர்  மிருகம்  என்ற நூலைத்தந்து,    தனது  ஆசான்  பொ. கனகசபாபதி  அவர்கள் எழுதியது  என்றார்.   அவர்  எப்பொழுதும்  நல்ல  விடயங்களை எனக்கு   அறிமுகப்படுத்துபவர்.அத்துடன்    நல்ல  இலக்கிய  ரசிகர்.  யாழ்.மகாஜனா   கல்லூரியின் பழையமாணவர்.   இக்கல்லூரியின்  பல  பழையமாணவர்கள்   கலை, இலக்கியவாதிகளாகவும்  ஊடகவியலாளர்களாகவும்  இருப்பதாக அறிவேன்.   மகாஜனா  கல்லூரியில்  விஞ்ஞானப்பட்டதாரி  அதிபராக பணியாற்றியவர்    கனகசபாபதி. மரம்  மாந்தர்  மிருகம்  நூலை   கையில்  எடுத்தவுடன்,   மரங்களின் தன்மைகளைப்பற்றிய    பட்டியல்  தரும்  நூலாக  இருக்குமோ...?  என்ற   எண்ணத்திலேயே  நூலைப்படித்தேன்.   ஆனால், அதனைப்படிக்கும்பொழுது   எனக்குள்  ஆச்சரியங்கள்  மலர்ந்தன. தனது   வீட்டில்  பெற்றவர்களினால்  வளர்க்கப்பட்ட   மற்றும் தானாகவே    வளர்ந்துவிட்ட  மரங்கள்,  செடி,  கொடிகள்  வீட்டு மிருகங்கள்    என   மரங்களையும்  மிருகங்களையும்  அவற்றை வளர்த்த    மாந்தர்களின்  மகிமைகள்  பற்றியும்  நாம் அறியத்தவறிவிட்ட   பல   அரிய  தகவல்களுடன்  நூலை   எழுதுகிறார் கனகசபாபதி.

•Last Updated on ••Friday•, 23 •January• 2015 23:12•• •Read more...•
 

நூல் நயப்புரை: பத்திரிகையாளனின் அனுபவங்களை புனைவு கலக்காமல் பகிர்ந்து சொல்வதற்கு இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்திற்கு அப்பாலிருந்து எழுந்திருக்கும் ஆத்மக்குரல் முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள்.

•E-mail• •Print• •PDF•

“சொல்ல மறந்த கதைகள்”  எழுத்தாளர்  திரு.  முருகபூபதி  அவர்களின்  இருபதாவது  நூல் ' ஜே.கே.'  ஜெயக்குமாரன் அப்போது   ஜேவிபி  கிளர்ச்சிக்காலம். 1971ஆம்  ஆண்டு. சரத்ஹாமு   தென்னிலங்கையிலே  ஹக்மண  என்ற  ஊரில் வாழ்கின்ற  தனவந்தர்.  ஊர்  மக்கள்  மத்தியில்  அவருக்கு  நல்ல பெயர்.    கௌரவமாக  வாழும்  குடும்பம்.  சரத்ஹாமுவின்  மனைவி உள்ளூர்   பாடசாலை  ஒன்றில்  ஆசிரியையாக  இருக்கிறார்.  ஒருநாள் அந்தப்பாடசாலையில்  இன்னொரு  ஆசிரியையும்  இணைகிறார். அந்த   ஆசிரியை  அண்மையில்  அந்த  ஊருக்கு  மாற்றலாகி வந்திருக்கும்    இன்ஸ்பெக்டர்  சமரநாயக்காவின்  மனைவி.  நாளடைவில்  இரண்டு  ஆசிரியைகளும் நண்பிகளாகிவிடுகிறார்கள்.  தினமும்  பாடசாலை  முடிந்தபின்  மனைவியை  ஜீப்பில் அழைத்துப்போகவரும்  இன்ஸ்பெக்டர்,  அந்த  தனவந்தரின் மனைவிக்கும்   லிப்ட்   கொடுக்க  ஆரம்பிக்கிறார்.   ஒருநாள்  அப்படி இறக்கிவிடும்போது    உள்ளே போய்  ஒரு  டீயும்  குடிக்கிறார். இன்ஸ்பெக்டர் குடும்பமும்  தனவந்தர்  குடும்பமும்  நட்பு கொள்கிறது.  டீ  குடிக்க  தினமும்  இன்ஸ்பெக்டர் வரத்தொடங்குகிறார்.  தனவந்தர்  இல்லாத  டைம்  பார்த்தும் வரத்தொடங்குகிறார்.  இன்ஸ்பெக்டரின்   சரளமான   ஆங்கிலம்,  மிடுக்கான  சீருடை. கம்பீரம்.   சரத்ஹாமுவின்  மனைவியின்  அழகு.  சிரிப்பு … இப்படி  பல காரணங்கள். இன்ஸ்பெக்டருக்கும்  சரத்ஹாமுவின்  மனைவிக்கும்  கள்ளத்தொடர்பு  உருவாகிறது. இன்ஸ்பெக்டரின்   கண்  சரத்ஹாமுவின்  மனைவிமீது  மட்டுமல்ல. சொத்திலும்தான்.   சரத்ஹாமுவை  கொலை   செய்துவிட்டு சொத்தையும்   மனைவியையும்  நிரந்தரமாக  சுருட்டலாம்  என்பது அவருடைய   எண்ணம்.  ஜேவிபி  பெயராலே  கொலை  செய்தால் யாருக்கும்   எந்த  சந்தேகமும்  வராது.  பக்காவாக  திட்டம்  திட்டி, ரவுடிகளை  அனுப்பி  தனவந்தரை   கொலை  செய்தும்  விடுகிறார். கொலை   செய்யப்போன  ரவுடி  இலவச  இணைப்பாக சரத்ஹாமுவின்  மனைவியை  பாலியல்  வல்லுறவும்  செய்துவிடவே   பிரச்சனை   சிக்கலாகிவிடுகிறது.  எப்படியே இன்ஸ்பெக்டர்    சாட்சிகளை   மடக்கி,  ஜேவிபி  மீது பழியினைப்போட்டு  தப்பி  விடுகிறார். 

•Last Updated on ••Saturday•, 03 •January• 2015 20:09•• •Read more...•
 

நூல் அறிமுகம் : அழிந்த ஜமீன்களும் - அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்!

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம் : அழிந்த ஜமீன்களும் - அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்!நீண்ட நெடிய பாரம்பரிய பண்பாட்டை கொண்டது தமிழ் மரபு. அதை ஆய்வு நோக்கில் பயணிக்கிறது. 'அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுக்களும்'. பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள், நீர்நிலைகள், நாணயங்கள், செப்பேடுகள், போர்முறைகள், இறந்த ஊர்களின் நினைவைப் போற்றும் நடுகற்கள், அவர்களின் பெயர்களும் பெருமைகளும் பேசுகிறது இந்நூல். திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சார்ந்த ஆய்வை நூலாசிரியர் மேற்கொண்டு பல அறிய செய்திகளையும் ஆதாரங்களையும், கல்வெட்டுக்கள் கொண்ட புகைப்படங்களும் இதில் தெளிவாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக வரலாற்றின் வெளிச்சத்திற்கு வராமல் போன பல செய்திகளை ஆதாரங்களுடன் கொண்டுள்ளது இந்நூல். பாண்டிய நாடும் 100 நாடுகளும், பாளையக்காரர்களும் பாண்டியனின் மீன் கொடி உருவாக்கம், 73 பாளையங்களின் பெயர்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது. ஜமீன்களின் எல்லைகள், ஊர்பெயர்களின் அர்த்தங்கள், உதாரணமாக: புரம் என்ற சொல்லும் சிறந்த ஊர்களை குறிக்கும். ஆதலால் காஞ்சிபுரம், சோழபுரம், பல்லாவரம், குள்ளப்புரம் போன்ற தகவல்களும், கூடல் என்றால் ஆறுகள் கூடிடும் துறைகளைப் பனிதமான இடங்களாகக் கருதிப் பண்டைய தமிழர்கள் கொண்டாடினார்கள் அவற்றை கூடல் என்று அழைத்துள்ளார்கள். கி.பி.1290-1296 வரை டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆட்சி செய்தார். அலாவுதீனின் படைத்தளபதி மாலிக்கபூர். சந்த்ராம் என்ற திருநங்கை மதம் மாறி மாலிக்கபூர் ஆனார் என்ற செய்தி ஆச்சரியத்தை தரும் செய்தியாக இருக்கிறது. இந்த செய்தியை வெளிக் கொணர நூலாசிரியர் எவ்வளவு மெனக்கிட்டுப்பார் என்பதனையும் உணரமுடிகிறது.

•Last Updated on ••Wednesday•, 05 •November• 2014 21:34•• •Read more...•
 

நூல் அறிமுகம்: சுப்ரபாரதிமணியனின் “ மேக வெடிப்பு ” நூல்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: சுப்ரபாரதிமணியனின் “ மேக வெடிப்பு ” நூல் சுப்ரபாரதிமணியனை  அவரின் “ சாயத்திரை”  நாவல் வழியாகவே எப்போதும் காணக்கிடைக்கிறார் என்பது அவர் சுற்றுசூழல்  பிரச்சினைகளில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருவதை அறிந்து கொள்ளலாம். அவற்றின் படைப்புகளில் அது  வெளிப்படுத்துகிறது.இவ்வாண்டின் அவரின் புதிய சுற்றுசூழல் தொகுப்பான “ மேக வெடிப்பு “ அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.அருள் எழுதிய ஒரு கட்டுரை ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு நூலையே உருவாக்கியிருக்கிறார். இதில் அமைந்துள்ள 15 கட்டுரைகளின் பாதிப்பில் இது போன்று 15 நூல்களை நாம் உருவாக்குவதம் மூலம் சுற்றுசூழல் சார்ந்த உரையாடல்களை விரித்துக் கொண்டு போகலாம். தேன் போல் பயன் உள்ளவை இக்கட்டுரைகள். தேன் யாருக்குப் பிடிக்காது. ஆனால் மீத்தேன் யாருக்கும் பிடிக்காதுதான். மீத்தேன் எடுக்க ஆயத்தப்பணிகள் நடைபெறும் இடங்களை நான் சமீபத்தில் சென்று பார்த்தேன். அந்த என் அனுபவங்களைப் பிரதிபலிப்பவை இதில் உள்ள கட்டுரை.

•Last Updated on ••Sunday•, 02 •November• 2014 18:43•• •Read more...•
 

நூல் அறிமுகம்: ஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ஒரு சிறப்புப் பார்வை

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: ஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ஒரு சிறப்புப் பார்வைஇலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்த காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எம்.எஸ். அப்துல் மஜீத் என்பவர். இவர் பெரும்பாலும் தனது கவிதைகளை மதியன்பன் என்ற புனைப்பெரிலேயே எழுதிவருகின்றார். காத்தான்குடி அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகத்தின் மூலம் 97 பக்கங்களில் 36 பக்கங்களை உள்ளடக்கியதாக  ``ஆனாலும் திமிருதான் அவளுக்கு``  என்ற மகுடத்தில் அமைந்த தனது கன்னிக் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். இந்தத் தொகுதியிலுள்ள அனைத்துக் கவிதைகளும் ஏற்கனவே பத்திரிகைகள், வானொhலிகள், இணையத்தளம், முகநூல், மதியன்பனின் வலைப்பூ போன்றவற்றில் வெளிவந்த கவிதைகளாகக் காணப்படுகின்றன. 

தான் வாழுகின்ற சமூகத்தில் காணுகின்ற பிரச்சினைகளை கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்காமல் அதனை துணிவோடு யதார்த்தபூர்வமாக மக்கள் மயப்படுத்துவதே ஒரு கவிஞரின் தார்மீகப் பொறுப்பாகும் என்ற கூற்று கவிஞர் மதியன்பனுக்கும், அவரது கவிதைகளுக்கும் மிக மிகப் பொருந்திப் போகின்றது. ஏனெனில் இந்தத் தொகுதியில் உள்ள பெரும்பாலான கவிதைகள் இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகளை, அட்டூழியங்களை, அநியாயங்களைப் படம்பிடித்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளன.

•Last Updated on ••Saturday•, 04 •October• 2014 22:11•• •Read more...•
 

நூல் அறிமுகம்: பல்வேறு பயன் தரும் பனைமரம் (MAN’S TROPICAL BOON-THE PALMYRA PALM)

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: பல்வேறு பயன் தரும் பனைமரம்  (MAN’S TROPICAL BOON-THE PALMYRA PALM)நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)இலக்கிய  ஆய்வு  நூலுக்கான  'எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்'  வழங்கிய  'தமிழியல் விருது-2011' என்ற பரிசைப் பெற்ற, செந்தமிழ் செழிக்கும் யாழ் மண்ணில் நுணாவிலூர் எனும் பூங்காவில் மலர்ந்தெழுந்த நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களால்  எழுதப்பட்ட 'பல்வேறு பயன் தரும் பனைமரம்' என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இந்நூலில், பல்வேறு பயன் தரும் பனைமரம், சங்க இலக்கியங்களில் பவனி வரும் விலங்குகளும் பறந்து பறந்து கீதம் பாடும் பறவைகளும், புகழ் நாடாது ஊதியம் பெறாது தீந்தேன் தரும் தேனீக்கள், மண்ணின் மாண்பும் மரத்தின் மாட்சியும், ஐந்திணைகளில் அமைந்த பதினான்கு வகையான வேறுபட்ட கருப்பொருள்கள், தேசத்துக்குப் பொருத்தமான தொழில்நுட்ப முறைகள், தொல்காப்பியம்- அகநானூறு- சிலப்பதிகாரம் காட்டும் கரணவியல், ஆண் பெண் பேதம் பேசும் தமிழ் இலக்கியப் பாங்கு, உலகரங்கில் நேர்மையும் தலைமையும், கலப்புத் திருமணம், இயமராசன் தமிழனுக்கு அளித்த வரம், ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக நெறியான மனித நேயம், குடும்பமும் ஒற்றுமையும், கல்வியின் வருங்காலம், பூவுலகைப் படித்தல், சொர்க்கம் தரும் சுகம், இலக்கியம் சார்ந்த போட்டிகள், மனிதநேயத் தொடர்புகள், சொர்க்கம்! நரகம்! மறுபிறப்பு! கற்பனையா? நிசமா?, உலக சமாதானம் பேசும் இலக்கியங்கள், மகப்பேற்றிலும் மகத்தான உலக சாதனை படைக்கும் பெண்கள், மனித உரிமைகள் அன்றும் இன்றும், சனப்பெருக்கம் உலகிற்கோர் ஏற்றம் ஆகியவை பற்றி அலசப்பட்டுப் பேசப்பட்டுள்ளன. இவை இலக்கியம், இதிகாசம், உலகரங்கு, வாழ்வியல், மனிதநேயம், விலங்கியல், வானியல், பொருளாதாரம், தாவரவியல் ஆகிய பொருட்பிரிவுகளின் அடக்கமாகும்.

•Last Updated on ••Thursday•, 25 •September• 2014 21:00•• •Read more...•
 

நூல் அறிமுகம்: புதிதாகச் சிந்திப்போம். சமுதாயத்திற்கான கல்வி -பேராசிரியர் மா.சின்னத்தம்பி

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: புதிதாகச் சிந்திப்போம். சமுதாயத்திற்கான கல்வி -பேராசிரியர் மா.சின்னத்தம்பி- 'டொக்டர்' எம்.கே.முருகானந்தன் MBBS(Cey), DFM (Col), FCGP (col) , குடும்ப மருத்துவர் -அண்மையில் நான் படித்தவற்றில் என்னை மிகவும் கவர்ந்ததும் எமது சமுதாயத்திற்கு பெரிதும் உதவக் கூடியதும் எனச் சொல்வதானால் அது பேராசிரியர் மா.சின்னத்தம்பி எழுதிய 'புதிதாகச் சிந்திப்போம்.- சமுதாயத்திற்கான கல்வி' என்ற நூலாகும். பேராசிரியர் மா.சின்னத்தம்பி பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறைப் பேராசிரியர். எமது சமூகத்திற்கு புதிய ஊற்றுக் கண்ணைத் திறந்துவிடுவது போல எமக்குத் தேவையான கல்வி முறை பற்றி, கட்டுரைகள் மற்றும் உரைகள் வாயிலாக அறியத் தருபவராவார். நூலின் அந்தத் தலையங்கமே மிகவும் அர்த்தபுஸ்டியானது. கல்வி என்பதை அறிவுக் கண்ணைத் திறப்பதற்கானது என்பதை பாரம்பரியமாகப் போற்றி வந்தவர்கள் நாம். ஆனால் கல்வியானது தனி நபரது முன்னேற்றத்திற்கு மட்டுமே ஆனதாக எல்லைப்படுத்தப்படும் துரதிஸ்டவசமான நிலைக்கு நாம் இன்று தாழ்ந்து போயிருப்பதைக் காண்கிறோம்.

•Last Updated on ••Sunday•, 21 •September• 2014 17:19•• •Read more...•
 

சுதாராஜின் சிறுகதைகள் பற்றிய ஆளுமைகளிருவரின் பார்வைகள் ஒரு பதிவுக்காக 'பதிவுகளி'ல்!

•E-mail• •Print• •PDF•

சுதாராஜ் சிறுகதைகள்சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் சுதாராஜின் படைப்புகள் முக்கியத்துவம் மிக்கவை. 2010 ஜுனில் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட  உயிர்க்கசிவு எனும் 60 சிறுகதைகளின் தொகுப்பு நூலுக்கு, எம்.ஏ.நுஃமான் அவர்களும் பொன்னீலன் அவர்களும் எழுதிய முன்னுரைகள் அவரது சிறுகதைகள் பற்றிய விரிவான பார்வையினை அளிப்பதாலும், 'பதிவுகள்' இணைய இதழில் சுதாராஜின் சிறுகதைகள் தொடர்ச்சியாக வெளிவருவதாலும்,  பதிவுகள் வாசகர்களுக்கு எழுத்தாளர் சுதாராஜ் பற்றிய மேலதிக விளக்கங்களை இவை அளிப்பதாலும், பதிவுகளில் இம்முன்னுரைகளை மீளப்பிரசுரிப்பது பொருத்தமானதே. இவற்றை எமக்கு அனுப்பி வைத்த சுதாராஜுக்கு நன்றி. - -பதிவுகள் -

சுதாராஜ் சிறுகதைகள்

எம். ஏ. நுஃமான்

1970களில் எழுதத் தொடங்கிய சுதாராஜ், இலங்கையின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். கடந்த சுமார் நாற்பது ஆண்டுகால ஈழத்து வாழ்வின் அசைவியக்கத்தை, அதன் வரலாற்றுத் திருப்பங்களை, தனிமனித வாழ்வில், மன உணர்வுகளில் அவை ஏற்படுத்திய தாக்கங்களைத் தன் கதைகளில் அவர் பதிவுசெய்திருக்கிறார். இந்தப் பதிவுகள் உணர்வு சார்ந்த, அனுபவம் சார்ந்த பதிவுகளாக அமைகின்றன. அவற்றில் பொதிந்திருக்கும் அரசியலும் அழகியலும் அவரை சமூகப் பொறுப்புடைய ஒரு கலைஞராக இனங்காட்டுகின்றன.

•Last Updated on ••Tuesday•, 12 •August• 2014 05:15•• •Read more...•
 

பூங்காவனம் 17 ஆவது இதழ் மீதான பார்வை

•E-mail• •Print• •PDF•

பூங்காவனம் 17 ஆவது இதழ் மீதான பார்வைஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழி பெயர்ப்பாளராகத் திகழும் எழுத்தாளர் கெக்கிறாவ சுலைஹாவின் அட்டைப் படத்தைத் தாங்கி வெளிவந்திருக்கிறது பூங்காவனத்தின் 17 ஆவது இதழ். ஜுன் மாதம் 26 ஆம் திகதியான சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை நினைவூட்டி, மதுவும் போதைப் பொருள்களும் இன்று மக்கள் மத்தியில் எத்தகைய முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது என்பதையும், மாணவர்கள் மத்தியில் அது எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது, அதன் பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் ஆசிரியர் தனது ஆசிரியர் பக்கத்தில் விளக்கியிருக்கிறார். இதழின் உள்ளே பதுளை பாஹிரா, ஷெல்லிதாசன், எல்.தேனுஷா, எம்.எம். அலி அக்பர், த. ஜெயசீலன், செ. ஞானராசா, வெலிப்பண்ணை அத்தாஸ், ஹட்டன் தே. நிரோசனி ஆகியோரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் எஸ்.ஆர். பாலசந்திரன், சூசை எட்வேட், ஹட்டன் தே. நிரோசனி ஆகியோர்களது மூன்று சிறுகதைகளும் பிரசுரமாகியுள்ளன.

இன்று ஆங்கில மொழிபெயர்ப்புத் துறையில் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பாளராக இருப்பவர்கள் ஒரு சில படைப்பாளிகளே. இதில் கெக்கிறாவ சுலைஹா அத்தகையதொரு சிறந்த இலக்கியப் பங்களிப்பைச் செய்து வருகின்றார். நேர்காணலில் அட்டைப் படத்தை அலங்கரிக்கும் படைப்பாளி கெக்கிறாவ ஸுலைஹாவை, ரிம்ஸா முஹம்மத் நேர்கண்டு அவர் மூலமாக அவரைப் பற்றிய பல தகவல்களைத் தந்துள்ளார். உண்மையில் கெக்கிறாவ ஸுலைஹாவைப் பற்றி அறிந்துகொள்ள இந்தத் தகவல்கள் பெரிதும் உதவுகின்றன.

•Last Updated on ••Saturday•, 02 •August• 2014 22:29•• •Read more...•
 

சரித்திர நாவல் அறிமுகம்: பழைய வேதக் கோயில்!

•E-mail• •Print• •PDF•

எமது வாழ்வின் அழிந்த தடங்களை பற்றி அறிந்து கொள்வதில் எவருக்குமே மகிழ்ச்சி ஏற்படவே செய்யும். கல்கி சாண்டில்யன் போன்றவர்களைப் படிப்பது இளம் பிராயத்தில் பிடித்திருந்தது. அதுவும் தமிழர் வாழ்வுதான். ஆனால் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) எழுதிய பழைய வேதக் கோயில் நாவலானது எங்கள் கதை. எங்கள் சரித்திரம்.- 'டொக்டர்' எம்.கே.முருகானந்தன் MBBS(Cey), DFM (Col), FCGP (col) , குடும்ப மருத்துவர் -எமது வாழ்வின் அழிந்த தடங்களை பற்றி அறிந்து கொள்வதில் எவருக்குமே மகிழ்ச்சி ஏற்படவே செய்யும். கல்கி சாண்டில்யன் போன்றவர்களைப் படிப்பது இளம் பிராயத்தில் பிடித்திருந்தது. அதுவும் தமிழர் வாழ்வுதான். ஆனால் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) எழுதிய பழைய வேதக் கோயில் நாவலானது எங்கள் கதை. எங்கள் சரித்திரம். எமது மூதாதையர்கள் பதித்த தடங்கள். எமது பிரதேச முன்னோடிக் குடிகளின் வாழ்கையை அவர்களது பிரச்சனைகளை பேசுகிறது. இதனால் மிகவும் ஆர்வம் ஊட்டுவதாக இருந்தது. மிகக் குறைந்தளவு சரித்திரத் தரவுகளை வைத்துக் கொண்டு நம்பத்தன்மை வாய்ந்த புனைவைப் படைத்துத் தந்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர். அவர் அச்சுவேலி தோப்பு அருள்நந்தி பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றுகிறார் என்பது குறிப்படத்தக்கது. நாவல் நம்பகத்தன்மையாக இருப்பதற்குக் காரணம் அந்த பகுதி பற்றிய புவியியல், பண்பாட்டு அம்சங்கள் பற்றிய கதாசிரியரின் நேரடி அனுபவங்களாகும் அத்துடன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர் ஊடாகப் பெற்ற வாய்மொழித் தகவல்களும் கைகொடுத்துள்தைக் காண முடிகிறது. அரசமரத்துக் கோயில், மரத்தின் கீழ் கற்சிலை, உரைகல், குடுவையில் திருநீறு, அரசமிலையால் தீர்த்தம் வழங்கல் போன்ற தகவல்கள் அந்த வாழ்வைப் படம் பிடிக்கிறன. அதே போல பனம் மரத்திலிருந்து கள் இறக்கல், பாளைக் கத்தி, சுரக் குடவையில் கள்ளு, அதை அருந்துவதற்கு வடலி ஓலையில் பிளா போன்ற சித்திரிப்புகள் சிறப்பாக மண்ணின் மறைந்த வாழ்வை நாவலில் அழகாக காட்டுகின்றன.

•Last Updated on ••Friday•, 01 •August• 2014 21:47•• •Read more...•
 

தீ தின்ற தமிழர் தேட்டம்: நூல் அறிமுகக் குறிப்பு

•E-mail• •Print• •PDF•

- என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன் -ஒரு தேசத்தின் வரலாறு எப்போதும் வென்றவர்களாலேயே எழுதப்படுகின்றது. இன்று நாம் வாசிக்கும் ஆரம்பகால உலக வரலாற்று நூல்களைக் கூர்ந்து நோக்கினால் அவை ஆக்கிரமிப்பாளர்களாலும்ää காலனித்துவ ஆட்சியாளர்களாலும்,  அவர்களின் சிந்தனைப் பள்ளிகளில் மூளைச்சலவை செய்யப்பட்ட சுதேசிகளாலும் எழுதப்பட்டனவாகவே பெருமளவில் இருப்பதை அவதானிக்கலாம். ஆளும்வர்க்கத்தின்  பார்வையில் அமைந்த இத்தகைய வரலாற்று நூல்கள்  எதிர்காலம் எதைத் தெரிந்துகொள்ளவெண்டுமென அவர்கள் தீர்மானித்தார்களோ அவற்றையே உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது வழமை. தம்மால் தோற்கடிக்கப்பட்டவர்களின் நியாயங்கள்ää தியாகங்கள் எல்லாம் அவற்றில் மழுங்கடிக்கப்பட்டிருக்கும். வென்றவர்கள் இருந்தால் தோற்றுப் போனவர்களும் இருக்கவே செய்வர். இது இயற்கையின் விதி. அப்படியாயின், வரலாற்றில் அடக்கப்பட்டவர்களின் பக்க நியாயங்களை எடுத்துக் கூறும் வரலாறுகள் எங்கே புதையுண்டு போயின என்று தேடும்போது எமக்கு அவர்களால் அவ்வப்போது எழுதிவைக்கப்பட்ட ஆக்க இலக்கியங்களே பார்வைக்கு எஞ்சியிருக்கின்றன. அது நாட்டாரிலக்கியமாகலாம், கவிதையாகலாம், நாவலாகலாம்ää சிறுகதையாகலாம், ஏன் கடிதங்களாகவும்கூட இருக்கலாம். அந்த இலக்கிய வரிகளுக்குள் கூர்ந்து பார்த்தால் சொல்லப்படாத செய்திகளாக வரலாற்றுத் தகவல்கள் பல உருமறைப்புச் செய்யப்பட்டு ஒரு வரலாற்று மாணவனின் வருகைக்காகக் காத்திருப்பதைக் கண்டுகொள்ளலாம்.

•Last Updated on ••Saturday•, 26 •July• 2014 20:08•• •Read more...•
 

நூல் அறிமுகம்: ஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: ஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புகிண்ணியா ஏ. நஸ்புல்லாஹ்வின் காவி நரகம் என்ற சிறுகதைத் தொகுதி பேனா பதிப்பகத்தின் மூலம் 125 பக்கங்களில் வெளிவந்துள்ளது. பின்னவீனத்துவப் பாணியை கைக்கொண்டு மிகவும் வித்தியாசமான போக்கில் தனது சிறுகதைகளை நஸ்புள்ளாஹ் யாத்துள்ளார். பின்னவீனத்துவ பிரக்ஞை மிக்க இவர் இதற்கு முன் துளியூண்டு புன்னகைத்து, நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம், கனவுகளுக்கு மரணம் உண்டு ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். காவி நரகம் என்ற இச்சிறுகதைத் தொகுதியில் புத்தன் வந்த பூமியிலே, இவர்களை நடைபாதையாக உபயோகிக்காதீர்கள், முரண்களின் சாபம், கன்னத்தில் அறையும் கதை, நிலைகுலைவு, மனிதம், ஆறு கண்களால் எழுதிய மூன்று கடிதங்கள், இப்படிக்கு பூங்காற்று, காவி நரகம், வேரறுந்த விலாசங்கள், விதவைத் தேசம், சுதா சுங்கன் மீன் போல அழகு, ஓர் எழுத்தாளனின் கதை ஆகிய தலைப்புக்களிலான ஏ. நஸ்புள்ளாஹ்வின் 13 சிறுகதைகளைக் காண முடிகின்றது. 08 கதைகள் போர்க்காலச் சூழல் சம்பந்தமானவையாகவும், ஏனைய 05 கதைகள் இன்னோரன்ன விடயங்;கள் சம்பந்தமானவையாகவும் என்று இரண்டு பகுதிகளாகவே பிரித்துப் பார்க்கும் அமைப்பில் இந்த 13 சிறுகதைகளும் அமைந்துள்ளன. போர்க்காலச் சூழல் சம்பந்தமான கதைகள் யாவும் கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்கள்  அனுபவித்த துயரங்கள், கஷ்டங்கள் நிறைந்த வாழ்வியலை வெளிக்காட்டி நிற்கின்றன.

•Last Updated on ••Wednesday•, 02 •July• 2014 17:55•• •Read more...•
 

நூல் அறிமுகம்: என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புகிண்ணியா மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக போனா பதிப்பகத்தின் மூலம் 48 பக்கங்களில் 39 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கிறது ஜே. பிரோஸ்கானின் என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி. இந்தக் கவிதைத் தொகுதியானது ஜே. பிரோஸ்கானின் நான்காவது கவிதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே இதுவும் பிந்திய இரவின் கனவுதான் (2009), தீ குளிக்கும் ஆண் மரம் (2012), ஒரு சென்ரி மீட்டர் சிரிப்பு பத்து செகன்ட் கோபம் (2013) ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. என் எல்லா நரம்புகளிலும் பயணிக்கின்ற குருதி வார்த்தைகள் என்ற தலைப்பிட்ட தனதுரையில் பிரோஸ்கான் ''என் படைப்புக்கள் சமூகத்தை நெருங்கிவிட நம்பிக்கையூட்டும் அடையாளத்தோடு, என் தலைமீது சுமத்தப்பட்டிருக்கும் மனித உணர்வுகளின் தேடல்களை உண்மைக்கு, உண்மையாய் பகிர்ந்து கொள்வதின் மற்றுமொரு பதிவுதான் என் எல்லா நரம்புகளிலும்'' என்று குறிப்பிடுகின்றார்.

•Last Updated on ••Wednesday•, 02 •July• 2014 17:46•• •Read more...•
 

நூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை‘அசோகனின்வைத்தியசாலை’என்ற நாவல், அவுஸ்திரேலியாவில், மிருக வைத்தியராகவிருக்கும், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து அங்குவாழும் நொயல் நடேசனின் மூன்றாவது நாவலாகும். இந்த நாவலுக்கு, இதுவரை ஒரு சிலர் முகவுரை, கருத்துரை, விமர்சனம் என்ற பல மட்டங்களில் தங்கள் கருத்துக்களைப் படைத்திருக்கிறார்கள். இந்த நாவலுக்கு, இன்னுமொரு புலம் பெயர்ந்த எழுத்தாளர் என்ற விதத்தில், இவரின் நாவல் பற்றிய சில கருததுக்களையும, இவருடைய நாவலில் படைக்கப் பட்டிருக்கும் பெண் பாத்திரங்கள் பற்றி, எனது சில கருத்துக்களையும் சொல்ல வேண்டுமென்று பட்டதால், இந்தச் சிறு விமர்சனத்தை வைக்கிறேன்.  அவுஸ்திரேலியா, அமெரிக்கா,நியுசீலாந்து, கனடா போன்ற ஒரு புதிய உலகம். அவுஸ்திரேலியா கிட்டத்தட்ட இருநூறு வருடங்களுக்குக் கொஞ்சம் கூடுதலான சரித்திரத்தைக் கொண்டது. உலகின் பல தரப்பட்ட மக்களும் குடியேறிய நாடு. பல நாடுகளிலுமிருந்து போன மக்கள் தங்களுடன் தரப்பட்ட கலை,கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்டு சென்றவர்கள். தாங்கள் கொண்ட சென்ற புகைப்படத்திலுள்ள தங்களின் இளமைக் கால நினைவுகளுடன், தங்கள் பழைய சரித்திரத்தைப் பிணைத்துக் கொண்டவர்கள்.

•Last Updated on ••Wednesday•, 02 •July• 2014 17:37•• •Read more...•
 

நூல் அறிமுகம்: “உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு - தேவபாகமும் மானுடபாகமும்”

•E-mail• •Print• •PDF•

1_book_sivasampu5.jpg - 20.68 Kbஈழத்து இலக்கியச் சூழலில் மிகப் பெரும்பாலும் தொகை நூல்களின் அல்லது திரட்டு நூல்களின்  வருகை அரிதானதாகும். இதற்கு இரண்டு பிரதான காரணங்களைச் சுட்டிக்காட்டமுடியும்.

1) தொகை நூலின் உருவாக்கத்திற்கான தேடல்
2) தொகை நூலின் உருவாக்கத்திற்கான செலவு

குறித்த திரட்டு நூல் உருவாக்கத்திற்கான தேடல் என்பது அந்நூல் உருவாக்கத்தில் மிகுந்த ஈடுபாடும், அர்ப்பணிப்புணர்வும், முனைப்பும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகக் கூடியதென்று. நூலுருவாக்கத்திற்கான செலவென்பதும் ஒப்பீட்டளவில் மிக அதிகமானதொன்று. எவராவது வெளியீட்டுச் செலவினைப் பொறுப்பேற்றுக் கொள்ள முன்வந்தால் மட்டுமே இவ்வாறான நூல்கள் வெளிவருவது சாத்தியமாகும். இந்தப் பின்புலத்திலேயே அண்மையில் காங்கேயன் நீலகண்டன், செல்லத்துரை சுதர்சன் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு  வெளிவந்திருக்கும் “உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு - தேவபாகமும் மானுடபாகமும்”  எனும் திரட்டு நூல் முக்கியத்துவம் பெறுகின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்;டில் ஈழத்தில் சிறப்புற மிளிர்ந்த தமிழ்ச்சுடர் என வருணிக்கப்படும் சிவசம்புப் புலவர் (1829 -1910) யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதியில் அமைந்திருக்கும் உடுப்பிட்டியில் பெரும்பிரபு அருளம்பலமுதலியாருக்கும் கதிராசிப்பிள்ளைக்கும் மகனாகப் பிறந்தார். இவர் நல்லூர் சரவணமுத்துப் புலவர், சம்பந்தபுலவர் ஆகியோரது மாணாக்கராய்ப் பயின்றவர்.

•Last Updated on ••Wednesday•, 02 •July• 2014 00:38•• •Read more...•
 

நூல் அறிமுகம்: உள்ளும் வெளியும் - ஆய்வின் பரவசம்

•E-mail• •Print• •PDF•

உள்ளும் வெளியும் - ஆய்வின் பரவசம் ஆய்வெழுத்தின் வரையறை மற்றும் வடிவு ஒழுங்கினைக் குலைத்து தேடலைத் தூண்டும் முனைப்புடன் வெளிவந்திருப்பதுதான் “உள்ளும் வெளியும்” கொண்டிருக்கும் தனித்துவமாகிறது. புலம்பெயர் இலக்கியம் குறித்தான உரையாடலில் தவிர்த்துவிடமுடியாமல் நமக்குமுன் தோன்றுவது குணேஸ்வரனின் விம்பம்தான். அந்தளவிற்கு தாடனம் வந்துவிட்டது அவருக்கு. எந்த வகைப்பாட்டிலும் அவரால் தேய்ந்தெழுதமுடிகிறது. எனது வாசிப்பனுபவத்தில் குறிப்பிடுவதானால் அவர் தன்னையோர் ஆய்வாளனாக முன்னிலைப்படுத்தாமல் வாசகனாகவே தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தி வருகிறார். உள்ளும் வெளியும் பிரதியில் நேர்ந்திருப்பதுமிதுதான். உள்ளடக்க ரீதியில் வகைப்படுத்தினால் நான்கு உள்ளும் ஐந்து வெளியுமாக ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதிலும் இரு கட்டுரைகள் ஆய்வு நோக்கற்றவை. எவ்வாறாயினும் எல்லாக் கட்டுரைகளுமே பொதுநிலைப்பட்ட வாசிப்புக்கேற்றதாகவே எழுதப்பட்டுள்ளன.  ஒவ்வொரு பக்கத்திலும் குணேஸ்வரனின் மெய்யான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் உணர முடிகிறது. ஓவ்வொரு கட்டுரையையும் ஓர் ஆய்வாக மட்டும் அணுகாமல் தனது வாசிப்பனுபவத்தில் கிளர்ந்த பரவசத்தையும் திளைப்பையும் வாசகனிடத்தில் தொற்றவைத்துவிடும் முனைப்புடனும் அணுகுகிறார். ஓர் எளிமையானதும் நுட்பமானதுமான புனைவுத் தன்மை  கொண்ட மொழியைக் கையாள்கிறார். இம்மொழியானது வாசகனை முழு ஈடுபாட்டுடன் அணுகச் செய்வதில் பெரும்பாங்காற்றுகிறது என்பதுடன் புதிய தளங்களுக்கும் இட்டுச் செல்கிறது.

•Last Updated on ••Sunday•, 08 •June• 2014 17:37•• •Read more...•
 

நூல் அறிமுகம்: எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்

•E-mail• •Print• •PDF•

- மு. நித்தியானந்தன் - “watch our girls march fearless of the fight 
Torch of learning burning ever bright”     - இளவாலை கன்னியர் மடத்தின் பாடசாலைக் கீதம்.

இளவாலைக் கன்னியர் மடத்தில் குளிர் நிழல் பரப்பும் மகோக்கனி மரத்தில் சிறகடித்துத் திரிந்த வானம்பாடி  ஊசிப்பனித் தேசத்தில் தரித்து நின்று தன் வாழ்வின் சோபனங்களைத் தொலைத்துவிட்ட துயரங்களின் துளிகளில் இந்தக் கவிதைத் தாள்கள் நனைந்திருக்கின்றன.

      ‘நடு இரவில்
      எனக்கு மட்டும் சூரியன் உதிக்கிறான்
      சூரியன் உதிக்கும் பொழுது
      இருள் தோன்றுகின்றது’

என்ற நவஜோதியின் வரிகள் ஒரு பெண் கவியின் சூக்கும உலகின் சிக்கலான பரிமாணங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

•Last Updated on ••Wednesday•, 04 •June• 2014 21:35•• •Read more...•
 

நூல் அறிமுகம்: தன்னியல்பான கவிதைகள் (இவள் பாரதியின் 'ப்ரியங்களின் அந்தாதி' தொகுப்பை முன்வைத்து)

•E-mail• •Print• •PDF•

1_priyangalinanthahti.jpg - 26.01 Kbஒரு நல்ல கவிதை தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பார்கள். ஆனால் அது தன்னைத்தானே துவக்கிக் கொள்ளுமா? இல்லை அங்கேதான் கவியின் பங்களிப்பு தேவையாயிருக்கிறது. கவிதையின் மேலான ஈடுபாடு என்பது வெறும் வாசக-படைப்பாளி உறவு மட்டுமல்ல. அது மனித நேயத்தோடு கவிஞர் சமூகத்துடன் நடத்தும் தீராத உரையாடல். சக மானுடத்தின் மீதான கரிசனத்தை மையமாகக் கொண்ட இந்த உரையாடல் காலகாலமாக நிகழ்வது. ஆதியில் இந்த உரையாடலைப் பதிவு செய்வதில் கவிதையே பெரும் பங்கு வகித்தது. (இப்பொழுதும் கூட அப்படித்தான். ஆனால் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.) அதனாலேயே கவிதையைக் கலையின் ஆதி வடிவம் என்கிறோம். அதனாலேயே கவிதை மீது படைப்பாளிகளுக்கு ஆகப் பெரிய ஈடுபாடும் அன்பும் இருக்கிறது. இவள் பாரதி தன்னைக் கவிதை மீது காதல் கொண்டவராகவே பிரகடனம் செய்கிறார். இது மிகவும்  மகிழ்ச்சியான செய்தி. ஆனால் ஒவ்வொருவரின் கவிதை உலகமென்பதும் வெவ்வேறு மாதிரியானதாகவே இருக்கும்.

•Last Updated on ••Sunday•, 25 •May• 2014 17:33•• •Read more...•
 

நூல் அறிமுகம்: “கூடுகள் சிதைந்தபோது” – ஒரு புதிய பார்வை

•E-mail• •Print• •PDF•

1_koodukal_sithainthapothu.jpg - 12.47 Kbமுனைவர் மனோன்மணி சண்முகதாஸ்- 14.35 Kbவாசிப்பு மனிதனைச் சீர்மியம் செய்யும். ஒரு நூலை நான் அண்மையில் வாசித்தபோது இக்கருத்து எனக்குத் தெளிவாகிற்று. தமிழ் இலக்கியங்களின் ஆக்கத்தில் சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தோன்றி நீண்ட காலமாகிவிட்டது. உரைநடை இலக்கியம் என்பதால் சிறுகதையைத் தமிழ் அறிந்தவர் எல்லோருமே படிக்க முடியும். சிறுகதையை நாம் படித்து முடித்த பின்னர் அது எம் உள்ளத்திலே ஓர் எண்ணத்தைத் தோற்றுவிக்குமானால் அது ஒரு சிறந்த சிறுகதை என்பதை உணரமுடிகிறது. அத்தகைய எண்ணத்தை அண்மையில் நான் படித்த சிறுகதைத் தொகுப்பின் மூலம் பெற்றேன். அகில் என்னும் புலம்பெயர்ந்த இளம் எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பு “கூடுகள் சிதைந்தபோது” என்ற பெயரில் 2011ல் வெளியிடப்பட்டது. ஆறு மாதங்களில் இரண்டாவது பதிப்பும் வெளியிடப்பட்டது. இது வாசகரிடையே இச்சிறுகதைத் தொகுப்பின் தேவையை நிறைவு செய்துள்ளது. புலம்பெயர் எழுத்து என்ற நிலையில் மட்டுமன்றி இளம் எழுத்தாளரின் ஆக்கம் என்ற நிலையில் தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் நான் என் பார்வையைச் சற்று ஆழமாகவே பதித்தேன். 14 சிறுகதைகள். அவற்றில் இரண்டு 2008ல் எழுதப்பட்டவை. ஒன்று 2009ல் எழுதப்பட்டது. ஒன்பது 2010ல் எழுதப்பட்டவை. இரண்டு 2011ல் எழுதப்பட்டவை. இச்செய்தியைத் தொகுப்பே பதிவு செய்துள்ளது.

•Last Updated on ••Wednesday•, 07 •May• 2014 17:28•• •Read more...•
 

நூல் அறிமுகம்: கலை இலக்கியப் பார்வைகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: கலை இலக்கியப் பார்வைகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புகலை இலக்கியப் பார்வைகள் என்ற இந்தத் தொகுதி மீரா பதிப்பகத்தினூடாக வெளிவரும் கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் பதினைந்தாவது நூலாகும். மீரா பதிப்பகத்தின் 102 ஆவது வெளியீடாக 122 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் இலக்கிய விடயங்களுக்கு அப்பால் நாடகம், சினமா, உலக இலக்கியங்கள், தொடர்பாடல் என பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. நவீன இலக்கியத்தின் ஆரம்பகால செல்நெறி பற்றி அறிய முனையும் இன்றைய மூத்த இலக்கியவாதிகளுக்கும், புதியதலைமுறை இலக்கியவாதிகளுக்கும் இந்நூல் ஓர் உசாத்துணையாக திகழும் என்பதை உறுதியாகக் கூறமுடியும். 26 தலைப்புக்களில் தேசிய இலக்கியம், சர்வதேச இலக்கியம் பற்றி இந்த நூல் அலசி ஆராய்கிறது.   1989 - 2000 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் தான் பத்திரிகைகளில் எழுதி பிரசுரமான பல்வேறுபட்ட ஆக்கங்களின் தொகுப்பாகவே நூலாசிரியர் இந்த நூலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று இசைத்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு விடயம் என்றால் அது இசை என்று உறுதியாக கூறலாம். இசைக்கு கட்டுப்படாத மனங்கள் இல்லை. சினமாப் பாடல்கள் எல்லோரையும் வசியப்படுத்துபவை. சில பாடல்கள் காலத்தால் அழியாதவை. மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பவை. அது போல் சில பாடல்கள் பொப் இசைப்பாடல் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. பொப் என்ற ஆங்கிலச் சொல்லை ஏன் பாவிக்கின்றோம் என்ற கேள்வியை தொடுக்கின்றார் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். சினமாப் பாடல்களையும் 'பொப்' என அழைக்கலாமே (பக்கம் 09) என்ற தலைப்பில் அவர் தனது கருத்துக்களைத் தெளிவாக பின்வருமாறு முன்வைத்துள்ளார்.

•Last Updated on ••Sunday•, 13 •April• 2014 19:08•• •Read more...•
 

நூல் அறிமுகம்: பாலமுனை பாறூக் குறும்பாக்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: பாலமுனை பாறூக் குறும்பாக்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புதான் இதுவரை எழுதிய குறும்பாக்களில் பெரும்பாலானவற்றை தெரிவுசெய்து நூறு தலைப்புக்களில் நூறு குறும்பாக்களைத் தொகுத்து 84 பக்கங்களில் கலாபூஷணம் பாலமுனை பாறூக் அவர்கள் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் தனது நூலை வெளியீடு செய்துள்ளார். இந்த நூல் குறும்பா பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள வழியமைத்துத் தந்திருக்கிறது. இன்று பலராலும் பெரும்பாலும் அறிந்து வைக்கப்படாத ஒரு வடிவமாகவே குறும்பாவைக் கருதலாம். ஆனாலும் அனைவரும் கட்டாயம் இந்த வகையான வடிவத்தையும் தெரிந்துகொள்வது அவசியமாகின்றது. மறைந்த கவிஞர் மஹாகவி என்று அறியப்படுகின்ற து. உருத்திரமூர்த்தி அவர்ளே தமிழில் குறும்பா என்ற இலக்கிய வடிவத்தை அறிமுகப்படுத்தியவராவார். குறும்பாக்கள் குறுமையாக இருப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் குறும்பும் செய்கின்றன. அந்ந வகையில் இந்தத் தொகுதியில் உள்ள அநேகமான குறும்பாக்கள் குறும்பு, அங்கதம், கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி, எள்ளல், துள்ளல் என நகைச்சுவை ததும்புவனவாக அமைந்துள்ளன. எழுத்தினூடாக நகைச் சுவை உணர்வைக் கொண்டு வருவதென்பது காட்சி அமைப்பு, உடல் அசைவு, நடிப்பு, சம்பாஷணை என்பவற்றினூடாக அதனைக் கொண்டு வருவதை விடவும் சிரமமான காரியமாகும் என்பது புலனாகின்றது. ஆனாலும் அதனை முயற்சி செய்து பார்த்திருக்கிறார் பாலமுனை பாறூக் அவர்கள்.

•Last Updated on ••Thursday•, 03 •April• 2014 23:00•• •Read more...•
 

நூல் அறிமுகம்: 'ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ –

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: 'ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ –ஒரு ஆசுவாசமான காலைப் பொழுதில்தான், கருணாகரனின் கவிதைகள் மீது என் பார்வை பதிந்திருந்தது. ‘ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ – தலைப்பைப் போலவே, கவிதைகள் தோறும், போரின் நெடில். கவிதை மற்றும் புனைவுகளை வாசிக்கும் போது, தவிர்க்க முடியாமல் ஒரு சிக்கல் எழுவதுண்டு. பின்-நவீனத்துவவாதிகள் சொல்லுவது போன்று எல்லா சந்தர்ப்பங்களிலும், படைப்பாளி இறந்துவிடுவதில்லை. கருணாகரனின் கவிதைகள் மீது பார்வை படர்ந்த போதும், கவிதையுடன் சேர்த்து கூடவே, கருணாகரன் பற்றியும் சிலதையும், மனது அசைபோட்டுக் கொண்டது. எனக்குத் தெரிந்த கருணாகரன், புலிகளின் வன்னி முற்றங்களுக்குள் விமர்சனங்களை பவுத்திரப்படுத்தியவாறு வாழப் பழிகிக்கொண்ட சிலரில், ஒருவர். கருணாகரனுக்கும் எனக்குமான முதல் சந்திப்பு நிகழ்ந்த அந்த நாட்களை எண்ணிப்பார்ப்பது, இந்தக் கவிதைத் தொகுப்பைப் பொறுத்தவரையில் கனதியானதாகும். அந்த நாட்கள் மிகவும் இனிமையானவை. இடது, வலது என்னும் கருத்து மூட்டைகளை ஒரு பக்கமாக வீசிவிட்டு, வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தமிழ்நாடு என்று, அனைத்துப்பகுதி படைப்பாளுமைகளும் சங்கமித்துக்கிடந்த ஒரு நாளில்தான், நாங்கள் நட்பாகிக் கொண்டோம். அது ‘மானுடத்தின் தமிழ் கூடல்’ என்னும் சுலோகத்தின் கீழ் அரங்கேறியிருந்தது. பின்நாட்களில், கருணாகரனின் கிளிநொச்சி முற்றத்திலிருந்து நாங்கள் பல தடைவைகள் அளவளாவியிருக்கிறோம். முரண்பட்டுமிருக்கிறோம்.

•Last Updated on ••Friday•, 21 •March• 2014 04:11•• •Read more...•
 

தமிழ் சினிமாவில் பெண்கள்: கே..பாரதி எழுதிய நூல் (வெளியீடு - விகடன் பிரசுரம்) - ஒரு சிறு அறிமுகம்

•E-mail• •Print• •PDF•

மார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினம்.

கே.பாரதிLatha Ramakrishnanபெண்களே முன்னேறுங்கள்! முன்னேறுங்கள்!! – எங்கள் தங்க வைர நகைகளை வாங்கியணிந்து விடுதலையை உணருங்கள்!!! இப்படி பெண்விடுதலையைப் பட்டவர்த்தனமாக வர்த்தகப் பொருளாக்கும் போக்கு ஒருபுறம். மறுபுறம் சின்னத்திரை, சினிமாத்திரைப் பெண் பிம்பங்கள் கடந்த பல ஆண்டுகாலப் போராட்டங்களுக்குப் பிறகு பெண்களுக்குக் கிடைத்த வளர்ச்சி-மேம்பாடுகளையெல்லாம் நலிவுபடுத்திவரும் போக்கு…. இன்று வாழாவெட்டி, மலடி போன்ற வார்த்தைகள் இல்லாத சின்னத்திரை பெரீ…ய்…ய தொடர்நாடகங்களே கிடையாது எனலாம். இரண்டாவது ‘எபிஸோடி’லேயே இருபது வயது நிறம்பாத இளங்கதாநாயகிப் பெண்பாத்திரத்தின் கல்யாணத்தைப் பற்றி ஒரு நாற்பது பேர் நடுக்கூடத்தில் நீட்டி முழக்க ஆரம்பித்து விடுவார்கள், ’நம்ம சாதி என்ன சொல்லும்’ என்று சோகப்படுவார்கள்; ஆவேசப்படுவார்கள். அதில் ‘சாதிபேதம் தவறு’ என்று வலியுறுத்துவதைக் காட்டிலும் வலியுறுத்துவதை ‘சாதி முக்கியமல்லவா’ என்ற தொனியே தொக்கி நிற்கும். அதாவது நடப்பு வாழ்க்கையை அத்தனை துல்லியமாகப் பிரதிபலிக்கிறார்களாம். சின்னத்திரை ராணி என்று கொண்டாடப்படும் ராதிகாவின் சீரியல்களில் எத்தனை வகை ரவுடிகள் ஊரில் இருக்கலாம் என்று வகுப்பெடுக்காத குறை. நினைத்தமாத்திரத்தில்  முதுகுப்புறமிருந்து பட்டாக்கத்தியை உருவியெடுப்பவர்கள் யாருமில்லையே என்று விஜய் தொலைக்காட்சி ‘ஆபீஸ்’ தொடர்நாடகத்தை நினைத்து ஆறுதலடையலாமென்று பார்த்தால், அதில் உதாரணப் புருஷனாக அடையாளங்காட்டப்படும் மேலதிகாரி விசுவநாதன் பாத்திரம் தனக்குக் கீழே வேலை செய்பவர்களையெல்லாம் ஒருமையில் அழைக்கிறார், போய்யா வாய்யா என்கிறார். இது தான் இயல்பு என்று ஏற்றுக்கொள்ளும்படி இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்தப்படுகிறதோ, மூளைச்சலவை செய்யப்படுகிறதோ என்று தோன்றுகிறது. இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தொழிற்சங்கம் வலுவாக , நான் முன்பு வேலை பார்த்த அலுவலகத்தில் புதிதாக வந்திருந்த மேலதிகாரியொருவர் என் சக ஊழியை ஒருவரை “பத்மா” என்று அழைக்க, “மரியாதை தாருங்கள் ஸார், மிஸஸ் பத்மா” என்று கூறுங்கள்” என்று அவர் அழுத்தமாய் கூறீயது நினைவுக்கு வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு, தெனாலி படம் பார்க்க நேர்ந்த போது அதில் அண்ணா, அண்ணி, அவர்களுடைய குழந்தைகளோடு கதாநாயகி தொடையில் மேல்பாகம் தெரியும்படியான குக்குட்டைக் காற்சட்டையோடு வந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகவே இருந்தது.

•Last Updated on ••Monday•, 10 •March• 2014 18:20•• •Read more...•
 

நூல் அறிமுகம்: ஒப்பனைகள் கலைவதற்கே நாவல் விமர்சனம்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: ஒப்பனைகள் கலைவதற்கே நாவல் - விமர்சனம் - கல்பனாகடந்த ஜனவரி 2014ல் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் காவ்யா பதிப்பகம் வெளியிட்ட 'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற நாவலை கையிலெடுத்தபோது என்ன பெரியதாக / புதியதாக இருந்துவிடப் போகிறது மற்ற நாவல்களைப்போல காதல், திகில் கதையாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி வாசிப்பதற்கு சற்று அலட்சியம் கொண்டேன். ஆனால், 'ஒப்பனைகள் கலைவதற்கே' வாசித்த பிறகு தான் தாமதம் கொண்டதற்கு வருந்தினேன். தினம் தினம் எத்தனையோ காதல்கள் நம்மைச் சுற்றிப் பார்க்கிறோம். பெரும்பாலும் அதற்கெல்லாம் 'அட!!'  என்போம். வியப்போம். எக்ஸைட் ஆவோம். ஆனால் இத்தகைய காதல்களுக்குப் பின்னால் இப்படி ஒரு கோணம் இருக்குமென்று நினைத்ததே இல்லை. பெண்கள் தங்களைப் பற்றியே அறியாத பல விஷயங்களை அறிந்து அதை சமூக நலத்தின் கோணத்தில் ஆராய்ந்து,சமூக நலனுக்கு பொருந்தாதவைகளை இனம் கண்டு நாவலில் சுட்டிக்காட்டியிருக்கிறார் எழுத்தாளர். இந்த நாவலில் வரும் ஆண் - பெண் குறித்த வரிகளில் பலவற்றை வேறெந்த நாவலிலும் படித்ததில்லை. சமையலில் கூட, அதிகமாக பயன்படுத்தினால், உப்பு கரிக்கும். குறைவாகப் பயன்படுத்தினால் ருசி இருக்காது. ஆக எந்த ஒரு பொருளின் பயன்பாட்டிற்கும் மிக நுண்ணியமாக ஒரு அளவீடு இருக்கிறது. இருபது வருடங்கள் முன்பு வரை  உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்பட்ட பெண் இனம், கடந்த பதினைந்து ஆண்டுகளில் பெற்றிருக்கும் சுதந்திரத்தின் உண்மையான அளவீடு என்ன என்பதை குறிப்பாக மஞ்சு என்கிற கதாபாத்திரம், ரவி என்கிற கதாபாத்திரத்திடமிருந்து விலகிச் செல்லும் இடத்தின் மூலம் புரியவைக்கிறார் எழுத்தாளர்.

•Read more...•
 

நூல் அறிமுகம்: ஒவ்வோரு நாளும் ஆங்கிலம் பயில் (Practice English Every Day)

•E-mail• •Print• •PDF•

அண்மையில் மறைந்த மீசாலை மேற்கைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் எஸ்.எஸ்.வைரமுத்து (சங்கரப்பிள்ள வைரமுத்து) அவர்களின் ஒவ்வோரு நாளும் ஆங்கிலம் பயில் (Practice English Every Day) என்னும் நூலின் இரு தொகுதிகளும் கிடைக்கப்பெற்றோம்.நூல் அறிமுகம்: ஒவ்வோரு நாளும் ஆங்கிலம் பயில் (Practice English Every Day) அண்மையில் மறைந்த மீசாலை மேற்கைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் எஸ்.எஸ்.வைரமுத்து (சங்கரப்பிள்ள வைரமுத்து) அவர்களின் ஒவ்வோரு நாளும் ஆங்கிலம் பயில் (Practice English Every Day) என்னும் நூலின் இரு தொகுதிகளும் கிடைக்கப்பெற்றோம். இவை சாவகச்சேரியில் 114 'டச்சு றோட்'டில் அமைந்துள்ள திருக்கணித பதிப்பகத்தில் அச்சிட்டு 2008ல் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூலினை நூலாசிரியர் தனது மனைவியான காலஞ்சென்ற ஆசிரியை சேதுநாயகி வைரமுத்து அவர்களது நினைவுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார். அச்சமர்ப்பணத்தில் தனது ஆசிரியப் பணிக்கு வாழ்க்கை முழுவதும் ஆதர்சனமாகவும், உறுதுணையாகவும் விளங்கியவர் தனது மனைவியார் என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்நூலின் முதற் தொகுதி நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதி (Translation 1 & 2)  மொழிபெயர்ப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதி உரையாடலுக்கும் (Conversation) , மூன்றாவது பகுதி கடிதங்கள் எழுதுவதற்கும் (Written Message) நான்காவது பகுதி இலக்கணத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. நூலின் அநுபந்தம் ஒன்று பொன்மொழிகளுக்காகவும், அநுபந்தம் இரண்டு சிறுவர் பக்கத்துக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புப் பிரிவுகளில் ஆங்கில வசனங்களும், அவற்றுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகளும் தரப்பட்டுள்ளன. உரையாடல் பகுதியில் தொலைபேசி உரையாடல், நேரடி உரையாடல் ஆகியன விபரிக்கப்பட்டுள்ளன.  மேற்படி நூலின் இரண்டாவது பகுதி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற் பிரிவு மொழிபெயர்ப்புக்காகவும், இரண்டாவது பிரிவு இலக்கியப் படைப்புக்காகவும், மூன்றாவது பிரிவு சிறுவர் பக்கத்துக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது நூலின் இலக்கியப் படைப்புப் பகுதியில் English is a master key , Pleasures of Reading, Hobbies, The Education, My Aim in Life , Let Us Learn More English And Good English  மற்றும் Good Manners ஆகிய ஒரிரு பக்கக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

•Last Updated on ••Thursday•, 06 •March• 2014 18:52•• •Read more...•
 

நூல் அறிமுகம்: கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புபொலிகையூர் சு.க. சிந்துதாசனின் கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி 53 கவிதைகளை உள்ளடக்கியதாக, 128 பக்கங்களில் அலைகரை வெளியீட்டகத்தின் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சிந்துதாசனின் இரண்டாவது கவிதைத் தொகுதியே கடலின் கடைசி அலை என்ற இந்தக் கவிதைத் தொகுதியாகும். ஏற்கனவே இவர் 2004 இல் ஓரிடம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உட்காயங்களைப் பேசும் கவிதைகள் என்ற தலைப்பிட்டு த. அஜந்தகுமார் தனதுரையை முன்வைத்துள்ளார். அதில் சிந்துதாசன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''கவியரங்குகள் பலவற்றில் பங்குகொண்டவர். மெல்லிசைப் பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர். சிறுகதைதள், கட்டுரைகள், விமர்சனங்களும் எழுதி வருபவர். இவரது கவிதைக் குரல் அனைவரையும் கட்டுப் போடும் ஆற்றல்கொண்டது. அறிவிப்பு, பாடல் துறைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இறுதிப் போர்க் காலத்தில் வன்னியில் அகப்பட்டு வாழ்ந்தவர்.''  பொலிகையூர் சு.க. சிந்துதாசன் தனதுரையில் ''இத்தோடு என் வாழ்வு முடிந்ததாய் எண்ணிய தருணங்கள் மீண்டும் மீண்டும் என்னுள் உயிர்ப்புற அவ்வப்போது என் விழிகளுடன் சேர்ந்து நான் கொட்டியவையே இக்கவிதைகள். இவையெல்லாம் கனவுதானா என்ற சந்தேகங்கள் நம்பமுடியாதபடி அடிக்கடி இன்றும் என்னுள் வந்து போகிறது. என்னைச் செதுக்கும் ஏதோவொரு சக்தி நான் செதுக்கவும் துணை புரிவதாய் ஒரு உணர்வு. எவை எவையெல்லாம் என்னை அழுத்திப் போனதோ அவற்றையெல்லாம் கவிதைகளாக்க நான் முயன்றுள்ளேன். நெருடல்களில் உழன்று நித்திய வலியில் தவித்து எதையும் எவருடனும் பரிமாற முடியா சம்பவிப்புக்களை என் நெஞ்சத்துள் புதைத்து ஏக்கங்களை அளவுக்கதிகமாய் தேக்கி நான் வீங்கி வெடித்ததன் விளைவே இக்கவிதைகள்'' என்கிறார்.

•Last Updated on ••Friday•, 28 •February• 2014 21:20•• •Read more...•
 

இலங்கையில் இடதுசாரி இயக்க வரலாறு!

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: இலங்கையில் இடதுசாரி இயக்க வரலாறு -லெனின் மதிவானம் புதிய பண்பாட்டுக்கான வெகுசன அமைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் எனக்கு அறிமுகமானவர் தோழர் நடராஜா ஜனகன். அவர் நவ சமசமாஜக் கட்சியில் நீண்டகாலம் சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகின்றவர். தமது தேடல்களில் கிடைக்கப்பெற்ற தகவல்களையும் அனுபவங்களையும் கொண்டு History of Left Movement in Sri Lanka  என்ற நூலை எழுதியிருக்கின்றார். இந்நூல் வெளியீடு கடந்த வாரம் (30 ஜனவரி) கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. ஏதோ மறதியின் காரணமாக எனக்கு அழைப்பிதழ் அனுப்ப மறந்திருக்க கூடும்;. நண்பர் மல்லியப்பு சந்தி திலகர் தான் இது பற்றிய பத்திரிகை செய்தியை எனக்கு அறிவித்ததுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். நிகழ்வு சரியாக மாலை 5 மணிக்கு தொடங்கிவிட்டது. முதலாவது உரையினை  கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி; வழங்கினார். இடதுசாரி இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை எடுத்துக்கொண்ட முயற்சி என்பன குறித்து உரையாற்றிய அவர் - இன்று ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள் - அத்தகைய மாற்றங்களின் பின்னணியில் இடதுசாரி இயக்கங்கள் தன்னை எவ்வாறு புனரமைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி  கூறிய அவர்,மிக முக்கியமாக இடதுசா