••Tuesday•, 15 •December• 2020 09:28•
??- வடகோவை வரதராஜன் -??
சுற்றுச் சூழல்
எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்கள் சிறுகதை, கவிதை மற்றும் கட்டுரை என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் இயங்கி வருபவர். சூழற் பாதுகாப்பில் மிகுந்த ஈடுபாடு மிக்கவர். அவர் அண்மைக்காலமாகப் பறவைகளைப் பற்றி எழுதி வரும் கட்டுரைத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததொரு தொடர். வாரம் ஒரு பறவையெனப் பறவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றார். அவர் தனது முகநூற் கட்டுரைகளைப் பதிவுகள் இணைய இதழில் பதிவு செய்வதற்கு அனுமதித்துள்ளார். அவருக்கு எம் நன்றி. - வ.ந.கிரிதரன், பதிவுகள்.காம் -
வாரம் ஒரு பறவை (5) :மீன்கொத்தி அல்லது மீன் குத்தி
மீன்கொத்திப் பறவைகளில் பல இனங்கள் இருந்தாலும் யாழ்ப்பாணதில் உங்கள் வீட்டு வளவுகளில் காணப்படும் மீன்கொத்தி பறவை 'வெண்கழுத்து மீன்கொத்தியாகும்' ( White throated Kingfisher ) ஆகும் . மீன்கொத்தி என்றும் சில இடங்களில் மீன்குத்தி எனவும் தமிழ் நாட்டில் சில இடங்களில் விச்சிலி அல்லது கிச்சிலி அழைக்கப்படும் இப்பறவையின் விஞ்ஞானப் பெயர் Halcyon smyrnensis என்பதாகும் . க்விக் க்விக் என உரத்த குரலில் ஒலி எழுப்பியபடி பறந்து திரியும் வர்ண மயமான இப்பறவையின் முதுகு , இறக்கைகள் ,வால் என்பன அடர் நீல வர்ணத்திலும் , அடிவயிறு ,கழுத்து , தோள் என்பன கடும் மண்ணிறத்திலும் , கழுத்துக்கு கீழே மார்புப் பகுதி வெள்ளையாகவும் காணப்படும் . ஆண் பெண் பறவைகளுக்குக்கிடையில் சிறிய நிற வித்தியாசம் காணப்படும் . ஆண் பறவை அடர் வர்ணாமாய் இருக்க , பெண் பறவை சிறிது வெளிறிய வர்ணத்தைக் கொண்டது . இதன் சொண்டுகள் பெரிதாக தடித்து செம்மஞ்சள் நிறமாக காணப்படும் . ஏறத்தாழ 28 CM நீளம் வளரும் இப்பறவை பெரிய தலையையும் குறுகிய வாலையும் , கட்டையான கால்களையும் கொண்டது . சிறிய பல குளங்கள் உள்ள கோப்பாயில் இப்பறவையே சர்வசாதாரணமாக கண்டுள்ளேன் . குளங்கள் எதுவுமே அற்ற ஏழாலையில் இப்பறவைக் கண்டு 'இவருக்கு இங்கே என்னவேலை' என்று ஆச்சரியப்பட்டேன் .
எனது வாழைத் தோடத்தில் வேலை முடித்து வைத்திருக்கும் மண்வெட்டி பிடியின் மீது சர்வ சாதாரணமாய் வந்தமர்ந்திருக்கும் இப் பறவை , குளம்கள் இல்லாத ஊரில் ,உணவுக்கு என்ன செய்யும் என்று யோசித்தேன் . இதன் பின் இதை அவதானிக்கத் தொடங்கினேன் . ஆச்சரியமாக இவை , வெட்டுக்கிளி , சிறு பூச்சிகள் , மண்புழு , வண்டுகள் , சிறு ஓணானான் , அரணை என்பவற்றை உண்பதை கண்டு வியப்படைந்தேன் . இது மாத்திரமல்ல சிறிய பறவைகளைக்கூட இது பிடித்து உண்ணுகிறது . நீரிலே மீன் பிடிக்க இதை இயற்கை தகவமைத்தாலும் , ஆகாத உணவு போட்டியில் இது சூழலுக்கேற்ப தன்னை மாற்றியமைத்து தனது வழமையான உணவல்லாத பூச்சிகளை பிடித்து உண்டு தக்கன தப்பி பிளைக்கும் என்ற டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கைக்கு வாழும் சான்றாக இருப்பது ஓர் ஆச்சரியமான விடயமல்லவா ?
•Last Updated on ••Tuesday•, 15 •December• 2020 10:09••
•Read more...•
••Tuesday•, 08 •December• 2020 02:26•
?? - வடகோவை வரதராஜன் -??
சுற்றுச் சூழல்
எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்கள் சிறுகதை, கவிதை மற்றும் கட்டுரை என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் இயங்கி வருபவர். சூழற் பாதுகாப்பில் மிகுந்த ஈடுபாடு மிக்கவர். அவர் அண்மைக்காலமாகப் பறவைகளைப் பற்றி எழுதி வரும் கட்டுரைத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததொரு தொடர். வாரம் ஒரு பறவையெனப் பறவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றார். அவர் தனது முகநூற் கட்டுரைகளைப் பதிவுகள் இணைய இதழில் பதிவு செய்வதற்கு அனுமதித்துள்ளார். அவருக்கு எம் நன்றி. - வ.ந.கிரிதரன், பதிவுகள்.காம் -
வாரம் ஒரு பறவை (1) மாம்பழக்குருவி
இரண்டு வருடங்களுக்கு முன் மதிப்புறு நண்பர் Giritharan Navaratnam அவர்களின் பதிவு ஒன்றில் நான் போட்ட பறவைகளைப் பற்றிய பின்னுட்டம் ஒன்றைப் பார்த்த நண்பர் கிரி, "நீங்கள் அறிந்த பறவைகளைப் பற்றி நீங்கள் கட்டாயம் எழுதவேண்டும் " என்று அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார் .பதிகிறேன் என ஒத்துக்கொண்ட நான் எனது வழமையான எழுத்துச் சோம்பலால் அதை எழுதவில்லை . அண்மையில் நண்பி J P Josephine Baba அவர்கள் பகிர்ந்த பறவையின் படமொன்றில் அப்பறவையின் பெயரை , நம்மவர்கள் தப்புத் தப்பாக குறிப்பிட்டிருந்தைப் பார்த்து வேதனையடைந்தேன் . எமது வீடுகளில் கூடுகட்டி வாழும் 'பிலாக்கொட்டை'க் குருவி எனச் செல்லமாக அழைக்கப்படும் தேன்சிட்டைக் கூட நம்மவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லையே என்ற கவலை மேலோங்கியது . எனவே வாரம்தோறும் புதன் கிழமைகளில் நான் அறிந்த பறவைகளைப் பற்றி எழுதலாம் என ஆர்வமுற்றுள்ளேன் .
சிறு வயது தொடக்கம் பலவகைப் பறவைகளையும் விலங்குகளையும் செல்லப் பிராணிகளாக வளர்ந்தவன் என்ற ஒரே ஒரு தகுதிதான் இப் பதிவை எழுத எனக்குள்ள தகுதியாகும். மற்றும்படி நான் பறவைகள் ஆராச்சியாளனோ பறவைகள் அவதானிப்பாளனோ அல்ல .இப்பதிவை என்னை எழுதத் தூண்டிய நண்பர் கிரிதரன் நவரத்தினம் , நண்பி Malini Mala ஆகியோருக்கு நன்றி கூறி தொடர்கிறேன் .
•Last Updated on ••Tuesday•, 15 •December• 2020 10:02••
•Read more...•
••Wednesday•, 29 •June• 2016 19:47•
??- பிலோ இருதயநாத்.-??
சுற்றுச் சூழல்
[ எமக்கு பிலோ இருதயநாத் அவர்களது பயணக்கட்டுரைகள் மிகவும் பிடிக்கும். கானுயிர் பயணங்கள் மற்றும் மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடியாகக் கருதப்படுபவர். அவர் ஞாபகமாக 'எங்கள் புளக்' (engalblog.blogspot.com) வலைப்பதிவில் 1965இல் வெளியான மஞ்சரி இதழில் வெளியான 'நாய் கற்பித்த பாடம்' மீள்பிரசுரமாகியிருந்தது மகிழ்ச்சியினைத்தருகின்றது. அந்தக் கட்டுரையினை இங்கு மீள்பதிவு செய்கின்றோம் பதிவுகள் -.]
ஆபத்தில் உதவாத நண்பர்களிடம் நாயானாலும் ஆத்திரம் வராதா?
அன்று மைசூரிலிருந்து சென்று கூடலூரில் ஒரு நண்பரின் இல்லத்தில் தங்கினேன். மறுநாள் காலையில் சுல்தான்பத்திரி, தேவர்சோலை ஆகிய இடங்களுக்குச் சென்றேன். தேவர் சோலையில் என்னை நீண்ட நாட்களாக அழைத்துக் கொண்டிருந்த நண்பரான ரூப் சிங் என்பவருடைய இல்லத்தில் தங்கினேன். அவர் சிறந்த வேட்டைக்கார். அவரிடம் கன்றுக்குட்டியைப்போல ஒரு வேட்டை நாய் உண்டு. வேட்டைக்கு ரூப் சிங் செல்லும்போதெல்லாம் அந்த நாயும் அவருடன் செல்லும்.
"இந்த நாயை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்?" என்று அவரிடம் கேட்டேன்.ரூப் சிங் சொல்லலானார். "அது ஒரு பெரிய கதை. இந்த நாயின் குடும்பத்தைச் சேர்ந்த முன்னூறு நாய்கள் என் நண்பருள் ஒருவரிடம் இருக்கின்றன. அவர் ஒரு செல்வர். இந்த நாயை அவர்தான் எனக்குக் கொடுத்தார். அவர் நல்ல வேட்டைக் காரர். அது மட்டுமல்ல; நாய் வளர்ப்பிலும் அவருக்கு அளவு கடந்த ஆசை. நாய்களைக் கவனிப்பதற்கு மட்டும் சுமார் இருபது ஆட்களுக்கு மேல் வைத்திருக்கிறார். இரவில் அந்தச் செல்வர் தமது பங்களாவில் எந்தக் கதவையும் மூடுவதே இல்லை. எந்த எந்தக் கதவுகளின் மூலம் அந்தச் செல்வரின் இல்லத்துக்குள்ளும், காம்பௌன்டுக்குள்ளும் அந்நியர் வர இயலுமோ, அந்தக் கதவு வாயிற்படிகளை எல்லாம் நாலு நாலு நாய்கள் காவல் புரியும். இரவு 7 மணிக்குத் தம் காவல் நாய்களைச் செல்வர் தடவிக் கொடுப்பார். பிறகே உறங்கச் செல்வார். செல்வர் தடவிக் கொடுத்த பிறகு, நாய் வளர்ப்பு வேலைக்காரனுங்கூட எந்த வழியாகவும் உள்ளே புக முடியாது.
•Last Updated on ••Wednesday•, 29 •June• 2016 20:01••
•Read more...•
••Monday•, 28 •December• 2015 02:27•
??- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை.-??
சுற்றுச் சூழல்
சூழப்பல தேசங்களிலும் என் தேசத்திலும் மழை விடாமல் பொழிவதாயும், வீடுகள்,வீதிகள், மரங்கள் அனைத்துமென வெள்ளம் வழிவதாயும் செய்தித்தாள் சொல்லிற்று. தடவிப் பார்த்தேன். ஈரத்தின் சுவடுகள் விரல்களில் பொசிந்தன. காலம் காலமாக என் வானில் பெய்த மழை இன்று நான் வாழும் இப் பாலைவன தேசத்தில் பொய்த்தது. சூழலை இருட்டாக்கி, தேகங்களை வெம்பச் செய்து, மேகக் கூட்டங்கள் கருக்கட்டி, வான நடை போட்டுப் பார்த்துப் பல காலமாயிற்று.
மழையின் துளிகளை முகத்தில் வாங்கி , அன்னை கூப்பிட்டலுத்து அன்பால் திட்டித் திட்டித் தலை துவட்டி விடும் சிறுபராயம் நினைவுகளில் இடறுகிறது. தலையின் பின்புறம் கட்டாயம் துடைக்கவேண்டும். ஈரத்தின் சாயல் கண்டு தடிமன் வரும். பின்னர் காய்ச்சல் வரும். நீர் தேங்கி நிற்கும் குட்டைகள் தோறும் விஷக்கிருமிகள் பெருகித்தொற்றி விதவிதமான நோய்கள் வரும் என்றெல்லாம் தந்தை மடியிலிருத்தி மழை குறித்த கதைகள் சொன்னதும் ஞாபக அடுக்குகளிலிருந்து மீளெழும்பிக் கிளர்த்துகிறது.
பல காலமாக மழையற்ற எனது சிறுவயதின் காலமொன்று நினைவுக்கு வருகிறது. ஊரின் குறுக்கே ஓடும் பேராற்றில் நீர் வரண்டு நிறைந்திருந்த மணல்மேட்டில் ஊரின் இளைஞர்கள் கிரிக்கெட்டும் கால்பந்தும் விளையாடினர். சிறுவர்கள் பட்டம் விட்டனர். மரங்கள், செடி கொடிகள் வாடிய அக்காலத்தில் பட்டாம்பூச்சிகளும், மழைக்குருவிகளும் கூட வேறெங்கோ பறந்திருக்கவேண்டும். தண்ணீருக்குக் கடும்பஞ்சம். எங்கும் கடும்வெயில். சொன்னது கேட்காப்பிள்ளையை பிசாசுகளை நினைவுருத்தி வெருட்டுவது போலச் சூடும் வெயிலும் எல்லாவற்றையும், எல்லோரையும் மிரட்டியபடி அலைந்தது.
அக் கோடையில் அத்தியவசியத் தேவைகளுக்கே நீரற்றுப் போனதனால் விவசாயங்கள் பொய்த்துப் போயிற்று. வளர்ப்புப் பிராணிகள் மெலிந்து கொண்டு வந்தன. நீரோடி வற்றிய ஆற்றில் ஆழக்குழி தோண்டி உள்ளே ஊறித் தெரிந்த நீரை அகப்பையிலள்ளிக் குடங்களுக்கு சேலைத் திரையிட்டு அதனூடாக வடிகட்டி நீரைச் சேகரித்ததையும் கண்டிருக்கிறேன். தெளிந்த நீர்க் கிணறு உள்ளதென அறிந்து வெகுதூரம் நடந்தும், சைக்கிள்களிலும் தேடிப் போய்த் தண்ணீர் காவி வந்தனர் ஊரார். நாடு முழுதும் இதே நிலைமை. எல்லா நீர்த் தேக்கங்களிலும் தண்ணீரின் மட்டம் குறைந்ததனால் மின்சாரம் வழங்குவது கூட அரசுக்குச் சிக்கலாயிற்று. நாளொன்றின் பெரும்பகுதிகள் மின்சாரமற்றுப் போக விதிக்கப்பட்டன. நாட்டின் பெரும் பாகங்கள் இருளுக்குள் மூழ்கின.
•Last Updated on ••Monday•, 28 •December• 2015 02:33••
•Read more...•
••Thursday•, 12 •November• 2015 21:33•
?? - காட்டாறு -??
சுற்றுச் சூழல்
சூழலைக் கெடுக்கும் 3 இலட்சம் டன் பட்டாசுப்புகை! 7 இலட்சம் பேரைக் காவு வாங்கும் காற்று மாசுபாடு! இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி நாட்களில் பட்டாசுகளால் 3 இலட்சம் டன் பட்டாசுப் புகை, அதாவது 300 கோடி கிலோ பட்டாசுப் புகை காற்றில் கலக்கிறது. இதனால் புகையாகப் போகும் தொகை எவ்வளவு தெரியுமா? ஏறத்தாழ 8000 கோடி ரூபாய். இந்தப் பணத்தைக் கொண்டு 60 கல்லூரிகள் கட்டலாம். 1200 பள்ளிக்கூடங்களைக் கட்டலாம். பட்டாசு விபத்துக்களால் ஒவ்வோர் ஆண்டு சராசரியாக 400 பேர் மரணமடை கின்றனர். 1,15,000 பேர் படுகாயமடைகின்றனர்.
தீபாவளிப் பட்டாசுகளில் வண்ணங்களை உருவாக்கவும், சத்தத்தை அதிகரிக்கவும் மிகவும் நச்சுத் தன்மை கொண்ட நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கந்தக டை ஆக்சைடு, உலோக ஆக்சைடுகள் போன்ற வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. அவை கீழ்க்கண்ட பாதிப்பு களை ஏற்படுத்துகின்றன:
சுவாசப் பாதையில் எரிச்சல், ரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு, நரம்பு மண்டலப் பிரச்சினைகள், உலோகப் புகை காய்ச்சல், உளவியல் தொந்தரவு, பக்கவாதம், வலிப்பு, ஈரப்பதம் காற்றுடன் வினைபுரிந்து தோல் பாதிப்புகள், குமட்டல், வாந்தி, மூளை வளர்ச்சி பாதிப்பு, கோமா நிலை. குழந்தைகளுக்கு நுரையீரல்நோய்கள், மூச்சிளைப்பு, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் கோளாறுகள், சுவாசக்கோளாறுகள். நோய் எதிர்ப்புத்திறன் குறைவு ஆகியவற்றை உண்டாக்கும். தீபாவளிக் காலங்களில் இவ்வித நோய்கள் 40% அதிகரிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
கடந்த ஒருசில ஆண்டுகளில் இவ்வகைக் காற்று மாசுபாட்டால் உண்டான நோய்களால் இந்தியாவில் 7 இலட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்.
மனிதனின் காதுகள் தாங்கக்கூடிய ஒலி அளவு 30 டெசிபல் மட்டுமே. ஆனால் தீபாவளி பட்டாசுகளில் மிக எளியதான குழந்தைகள் கையில் துப்பாக்கி மூலம் வெடிக்கும் கேப், பொட்டு வெடியே 70 டெசிபல் ஒலியை எழுப்பும் தன்மை கொண்டது.
•Last Updated on ••Thursday•, 12 •November• 2015 22:17••
•Read more...•
••Wednesday•, 04 •November• 2015 23:38•
??- கவரிமான் -??
சுற்றுச் சூழல்
வவுனியா மாவட்டம் பூவரசங்குளம் - வன்னிவிளாங்குளம் வீதியானது, வவுனியா - மன்னார் - முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் பயணிக்கக்கூடிய மிகவும் முக்கியமான போக்குவரத்து வீதியாகும். வன்னித்தொகுதி என்று அழைக்கப்படும் இம்மூன்று மாவட்டங்களையும் இணைக்கும் இத்தரைவழிப்பாதையின் மையப்புள்ளியாக பூவரசங்குளம் எனும் கிராமம் அமையப்பெற்றுள்ளது. செழிப்பு மிகுந்த வனாந்தரக் காடுகளை ஊடறுத்துச் செல்லும் பூவரசங்குளம் - வன்னிவிளாங்குளம் வீதியை அண்டிய காட்டுப்பகுதிகளிலும், பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தின் ஆளுகைக்குள்பட்ட பகுதிகளிலும் சட்டவிரோத தனிமனித காடழிப்பு நடவடிக்கைகள் பொலிஸாரின் ஒத்துழைப்போடு அசுர வேகத்தில் இடம்பெற்று வருகின்றன. பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதி வாய்ந்த பாலை, முதிரை, கருங்காலி மரங்கள் இக்காட்டுப்பகுதிகளிலிருந்து ஒவ்வொரு இரவும் பொலிஸாரின் பாதுகாப்போடு மூன்று மாவட்டங்களுக்கும் எண்ணிக்கை கணக்கின்றி விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
இது தொடர்பில் கந்தன்குளம் கிராம பொதுஅமைப்பு ஒன்றின் பிரதிநிதி தகவல் தருகையில், பூவரசங்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள அனைத்து கிராமங்களின் மக்களுக்கும் நன்கு பரிச்சயமான ‘வீரப்பன், காட்டு ராசா, காட்டு அரசன்’ என்ற பட்டப்பெயர்களால் அழைக்கப்படும் ஒரு சில நபர்களே, காடழிப்பை ஒரு தொழிலாக (பிசினஸ்) செய்து வருவதாகவும், அவர்களிடம் பணம் மற்றும் குடி வகைகள், போதைப்பொருள்களை இலஞ்சமாக பெற்றுக்கொண்டு பொஸிஸார் இவ்வாறான சட்ட விரோத காடழிப்பு நடவடிக்கைகளுக்கு சம்மதம் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும் குறித்த நபர்கள் காடுகளை அழித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், தாம் ஒரு சமுக அக்கறையோடு பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தால்… பொலிஸார் அடுத்த நிமிசமே, காடுகளை அழித்துக்கொண்டிருக்கும் அந்த நபர்களுக்கு போன் பண்ணி, ‘இன்ன நம்பரில இருந்து, இன்னாள் உங்களப்பத்தி முறைப்பாடு செய்யது. பார்த்து செய்யுங்க. கவனம். ஆளையும் கவனிச்சு வையுங்க’ என்று அறிவுறுத்துவதாகவும், காட்டிக்கொடுப்பதாகவும் குறைபட்டுக்கொண்டார்.
•Last Updated on ••Wednesday•, 04 •November• 2015 23:59••
•Read more...•
••Sunday•, 05 •January• 2014 20:24•
??- பசுமைக்குமார் -??
சுற்றுச் சூழல்
- *நம்மாழ்வார் ஐயா இயற்கை எய்துவதற்கு சில நாட்கள் முன்பு அவரைப் பற்றி முகம் இதழின் பொங்கல் மலரில் – ஜனவரி 2014 - எழுதப்பட்ட கட்டுரை. இக்கட்டுரையினைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். அவருக்கு எமது நன்றி. - பதிவுகள்- நம்மாழ்வார் இயற்கையை நேசிக்கிற, இயற்கையைப் பாதுகாக்கப் போராடுகிற, இயற்கை விவசாய விஞ்ஞானி. இவரைத் தமிழகம் மட்டுமல்ல, பிற மாநிலங்களும் நன்கறியும். தமிழகத்தில் இயற்கை விவசாய இயக்கத்தைத் தோற்றுவித்தல்; பிற மாநிலங்களுக் கும் சென்று இயற்கை விவசாயிகளுக்கு வழிகாட்டுபவர். இந்தியாவில் உள்ள அனைத்து விவசாய இயக்கங்கள் மட்டுமின்றி பிற நாடுகளிலும் இருக்கின்ற இயற்கை விவசாய அமைப்புகளும் இவரை நன்கறியும். இவர் தனி மனிதரல்லர். இவர் ஓர் இயக்கம். தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் தந்தை பெரியாரின் கால் படாத இடமில்லை. அவ்வாறே கடந்த 30 ஆண்டுகளாக தமிழக கிராமங்களில் இடைவிடாத சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இயற்கை விவசாயம் செய்ய வழிகாட்டுகிறார் நம்மாழ்வார்! விவசாயம் என்பது வியாபாரம் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை என்று கிராம மக்களி டம் எடுத்துக்கூறுகிறார். ஆண்டு முழுவதும் விவசாய நிலங்களைப் பார்வையிடுவது, ஆலோசனைகளை வழங்கு வது, விவசாயக் கூட்டங்களில் பங்கு பெறுவது, இயற்கை விவசாயத் தொண்டு நிறுவனங் களுக்கு வழிகாட்டுவது, அவற்றை ஓரணியில் திரட்டுவது, மாநகரங்களிலும் பிற மாநிலங்க ளிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்துகொள்வது என ஓய்வ றியா உழைப்பு இவருக்குச் சொந்தமானது.
•Last Updated on ••Sunday•, 05 •January• 2014 20:45••
•Read more...•
••Wednesday•, 07 •August• 2013 19:22•
??- சுப்ரமணியன் ரவிகுமார் - ??
சுற்றுச் சூழல்
'தூக்கணாங்குருவிக்கூடு தூங்கக் கண்டார் மரத்திலே' என்ற பாடல் காதுக்கு இனிமையாக இருப்பது போல் கூடுகளும் கண்ணுக்கு விருந்தாக... இருக்கும். ' இன்றைய தலைமுறைக் குழந்தைகளில் எத்தனை பேர் தூக்கணாங் குருவியையும், அதன் கூட்டையும் பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக்குரியதே. ஒரு அற்புதமான கட்டிடக்கலைஞன் பறவையாய் பிறந்து விட்டதே என்று வியக்கும் வ்ண்ணம் ஒரு பறவை கூடுகட்டி வாழ்ந்து வருகிறது. ஒரு அற்புதமான கூட்டினை கட்டுவதற்கு அது பதினெட்டு நாட்கள் எடுத்துக்கொள்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வல்லுநராக இருக்க வேண்டும். வீடு கட்டியாகி விட்டது. வீட்டுக்கு விளக்கேத்த வேண்டுமே. பறவைகள் மண்ணெண்ணெய்க்கும் மின்சாரத்துக்கும் எங்கு போகும். இயற்கை அதற்கும் வழி சொல்லித்தந்துள்ளது. ஒரு மின்மினிப்பூச்சியை பிடித்து வந்து கூட்டில் வைத்துள்ள ஈரகளிமண்ணில் அதைப் பதித்து வைத்து கூட்டுக்குள் ஒளியேற்றிக் கொள்கிறது.
•Last Updated on ••Wednesday•, 07 •August• 2013 19:34••
•Read more...•
••Sunday•, 04 •August• 2013 22:11•
??- வ.ந.கிரிதரன் -??
சுற்றுச் சூழல்
தமிழில் சூழற் பாதுகாப்பு பற்றிய விரிவான தகவல்களுடன் கூடிய, சாதாரண வாசகர்களுக்குரிய நூல்கள் மிகவும் குறைவு. இவ்விதமானதொரு நிலையில் வெளிவந்திருக்கும் பொ.ஐங்கரநேசனின் 'ஏழாவது ஊழி' மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நூலினை அண்மையில் வாசித்தபோது இவ்விதம்தான் தோன்றியது. தாவரவியலில் முதுநிலைப் பட்டதாரியான பொ.ஐங்கரநேசன் மேற்படி சூழல் பாதுகாப்பு பற்றிய துறையிலுள்ள தன் புலமையினை நன்கு பயன்படுத்திப் பொதுவான வாசகரொருவருக்கு மிகவும் இலகுவாக விளங்கும் வகையில், செறிவானதொரு நூலினைப் படைத்துள்ளார். சூழற் பாதுகாப்பு பற்றிய நாற்பத்தியொரு கட்டுரைகளை உள்ளடக்கிய 'ஏழாவது ஊழி' நூலினைத் தமிழகத்திலிருந்து சாளரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இன்றைய மனிதரின் செயற்பாடுகளினால் நாம் வாழும் இந்த அழகிய நீல்வண்ணக்கோள் எவ்விதம் பாதிக்கப்படுகின்றது, இதனைத் தவிர்க்க சர்வதேச உலகம் என்ன செய்ய வேண்டும், தனிப்பட்ட மனிதர்கள் எவ்விதம் பங்களிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் மிகவும் விரிவாக, அரிய பல தகவல்களுடன் நூலினைப் படைத்துள்ள ஐங்கரநேசன் முயற்சி காலத்தின் தேவைக்குரிய பயனுள்ள முயற்சி. இந்த நூல் சூழற் பாதுகாப்பு பற்றி விரிவாக விளக்குவதுடன், சூழற் சீரழிவுக்குக் காரணமான நாடுகள், நிறுவனங்கள் (குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்கள் ) பற்றியதொரு விமர்சனமாகவும் அதே சமயத்தில் இந்த விடயத்தில் இன்னும் நம்பிக்கையினை இழக்காததொரு நம்பிக்கைக் குரலாகவும் விளங்குகின்றது. பெரும்பான்மையின் பெயரால் நிலம், இயற்கைச் சூழல் அபகரிக்கப்படும்போது, பாதிக்கப்படும் சிறுபான்மையினமும் சூழற் சீரழிவுக்குக் காரணமாகவிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.
•Last Updated on ••Sunday•, 04 •August• 2013 22:42••
•Read more...•
••Monday•, 15 •April• 2013 21:23•
??- தமிழ் கருத்துகள (முகநூல்) பக்கம் -??
சுற்றுச் சூழல்
உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துக்கொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!
யார் இவர் ?
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார். 1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!
•Last Updated on ••Monday•, 15 •April• 2013 21:42••
•Read more...•
••Friday•, 23 •December• 2011 23:13•
??- நா . தில்லை கோவிந்தன் (விவசாயி).-??
சுற்றுச் சூழல்
“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு. எங்கள் மூதாதையர்கள் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து மறைந்ததும் இந்நாடே”
இதேபோன்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆறுகளில் மணல் எடுத்தோம் . கட்டிடங்கள் கட்ட கழல்நிலங்களை சீர்த்திருத்த , தென்னை மரங்கள் நட, ஆறுகளில்தானே மணல் எடுத்தோம். அப்பொழுதெல்லாம் ஆறுகளில் பள்ளங்கள் ஏற்படவில்லையே, எந்த ஒரு பிரச்சினையுமில்லையே. இப்பொழுது சென்ற மூன்று ஆண்டுகளாகத்தானே பிரச்சினை. பிரச்சினை என்றால் சாதாரணமானது அல்ல. மணல் திருட்டு, மணலில் கள்ளச்சந்தை, மணல் எடுத்தால் லாரிகள் பறிமுதல். ஓட்டுநர்கள் நடத்துனர்கள் கைது.. மணல் லாரி ஓட்டுநரை தடுத்த தாசில்தாரை லாரியால் கொலை . ஏன் இந்த நிலைமை ? .அரசாங்கம், பொதுமக்கள்,அதிகாரிகள் பொறியாளர்கள் ,விவசாய வல்லுநர்கள், கட்டிடத் தொழில் வல்லுநர்கள் எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் .
•Last Updated on ••Friday•, 23 •December• 2011 23:21••
•Read more...•
••Monday•, 03 •October• 2011 04:31•
??- ஊர்க்குருவி - ??
சுற்றுச் சூழல்
[ சுற்றுச் சூழல் துறைக்கு ஆற்றிய சேவைக்காக நோபல் பரிசினைப் பெற்ற 'வங்கரி மாதாய்' அண்மையில் மறைந்தார். அவரது ஞாபகமாக , அவர் நோபல் பரிசினைப் பெற்றபோது பதிவுகளில் வெளியான குறிப்பினை மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்] இம்முறை சமாதானத்துக்கான நோபல் பரிசு ஆபிரிக்காவின் பெண்ணொருத்திக்குக் கிடைத்துள்ளது. நோபல் விருதினைப் பெறும் முதலாவது ஆபிரிக்க தேசத்துப் பெண் என்ற பெருமையினைப் பெற்றிருக்கின்றார் கென்யாவைச் சேர்ந்த வங்கரி மாதாய் (Wangary Maathaai). சூழற் பாதுகாப்புடன் கூடிய அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும் அமைதி போன்றவற்றுக்கு இவர் ஆற்றிய, ஆற்றிவரும் சேவைக்காக இவர் இம்முறை இவ்விருதினைப் பெறுகின்றார். 1940இல் பிறந்த கிழக்காபிரிக்காவின் முதலாவது பெண் கலாநிதி, கென்யாவின் பல்கலைக் கழகமொன்றின் இலாகாவொன்றின் முதலாவது பெண் தலைவர் என்ற பெருமைகளையும் ஏற்கனவே பெற்றுள்ள இவர் கென்யா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவும், சூழல் மற்றும் இயற்கை/வன வளத்துறைக்குரிய இணை அமைச்சராகவும் விளங்கி வருகின்றார். இவர் உயிரியற் துறையில் பட்டப்படிப்பினை கன்சாஸிலுள்ள மவுண்ட். செயின்ற் ஸ்கொஸ்டிகா காலேஜிலும், பிட்ஸ்பார்க் பல்கலைக் கழகத்தில் முதுமானிப் (Masters) பட்டத்தினையும் பெற்றவர். அதன் பின்னர் கென்யா திரும்பிய இவர் நைரோபிய பல்கலைக் கழகத்தில் மிருக வைத்தியத் துறையில் ஆய்விலீடுபட்டுக் கலாநிதி பட்டம் பெற்றவர். சக ஆண்களின் அவநம்பிக்கையினையும், எதிர்ப்பினையும் சமாளித்து இவர் இப்பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அப்பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி மிருக வைத்தியத் துறைக்கான தலைவராக பதவி உயர்வு பெற்ருச் சாதனை புரிந்தார்.
•Last Updated on ••Monday•, 03 •October• 2011 04:46••
•Read more...•
••Thursday•, 18 •August• 2011 17:40•
??- மட்டுவில் ஞானகுமாரன் -??
சுற்றுச் சூழல்
புல்லுக்குளத்தையும் அதனை ஒட்டிய நிலப்பரப்பையும் தென் இலங்கை நபர் ஒருவருக்குச் சுற்றுலா விடுதி அமைப்பதற்கென நீண்டகாலக் குத்தகைக்கு விடும் முயற்சிகள் திரைமறையில் இடம்பெற்று வருவதாகச் சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையின் முழு விபரம் வருமாறு: யாழ்.நகரின் மத்தியில் அமைந்திருக்கும் புல்லுக்குளத்தை உல்லாசப் படகுச் சவாரிக்குப் பயன்படுத்தும் திட்டத்தை உள்ளடக்கி, உல்லாச விடுதி ஒன்றை புல்லுக்குளத்தை ஒட்டிய நிலப்பரப்பில் நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது, யாழ்.நகரை அழகுபடுத்தவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும் உதவும் ஓர் அபிவிருத்தித் திட்டமாகவே தோற்றம் காட்டும். ஆனால், இதன் பின்னணி கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உரியதாகவே உள்ளது. உத்தேச இத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ள புல்லுக்குளமும், அதனை ஒட்டி மணிக்கூட்டுக் கோபுரப் பக்கமாக அமைந்திருக்கும் நிலப்பரப்பும் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமானது.
•Last Updated on ••Thursday•, 18 •August• 2011 18:57••
•Read more...•
••Friday•, 27 •May• 2011 19:42•
??- நுணாவிலூர் கா. விசயரத்தினம் - (இலண்டன்)??
சுற்றுச் சூழல்
அன்று கால்களுடன் நடமாடிய பாம்புகள் இன்று கால்களை இழந்து ஊர்வனவாய் ஊர்ந்து திரியும் விந்தையை விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் எடுத்துக் காட்டியுள்ளனர். மரத்தில் வாழும் ஆசிய நாட்டுப் பறக்கும் பாம்புகள் தங்கள் உடல்களைத் தட்டையாக்கிக் கொண்டு; மரத்துக்கு மரம் தாவியும், நழுவியும் செல்லக் கூடியவை. பாம்பு தோன்றிய பின்பே மனிதன் பூமியிற் தோன்றினான். அப்பொழுது மூத்த பிறப்பான பாம்பு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. மனிதனைக் கண்டதும் சீறிப் பாய்ந்து அவனைக் கொத்தி நஞ்சூட்டிக் கொன்று குவித்து வந்தது. அவன் பாம்புக்குப் பயந்தும், அதனை வணங்கியும் வந்தான். ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?’, ‘நாதர் முடி மேலிருக்கும் நாகப் பாம்பே, நச்சுப் பையை வைத்திருக்கும் நாகப் பாம்பே!’, ‘கண்ணபிரான் துயிலும் ஐந்து தலை நாகம்’, ‘பாம்பென்றால் படையும் அஞ்சும்’, ‘நாகர் கோயில், நாகதம்பிரான் கோயில், நாகம்மாள் கோயில்’ போன்ற சொற் பதங்கள் மனிதன்; பாம்பை மதித்தும், பயந்தும், வணங்கியும் வந்தான் என்பதைக் காட்டுகின்றது.
•Last Updated on ••Friday•, 27 •May• 2011 20:24••
•Read more...•
BUFFALO, N.Y. — A deer has been standing watch for several days over a female goose nesting in a city cemetery, a scene normally reserved for a children’s movie. “People always want to turn it into a Disney story and in this case it’s not far off,” said Gina Browning, director of the Erie County SPCA. For at least four days, the buck stood guard near the nest of a Canada goose as she sits on her eggs inside a large urn at Forest Lawn cemetery, home to the remains of President Millard Fillmore and rock icon Rick James. “He does appear to be guarding the goose, as it were,” Erie County SPCA Wildlife Administrator Joel Thomas said. “He’s within touching distance of her — there’s no doubt what’s going on.” The deer, which he said looks like a buck that has shed its antlers, has not strayed from his post. Employees at the cemetery were alerted to the situation after the animal positioned itself between the bird and an employee of a company that traps and relocates geese, which Thomas said have become a messy problem in large numbers.
•Last Updated on ••Saturday•, 09 •April• 2011 18:10••
•Read more...•
••Saturday•, 05 •March• 2011 14:24•
??- லதா ராமகிருஷ்ணன் -??
சுற்றுச் சூழல்
இயற்கையை தனது அடிமையாக பாவித்து மனிதன் அதை பலவிதங்களிலும் சேதப்படுத்திவருவதன் பலனை உலகமும், அதிலுள்ள உயிரினங்களும் அனுபவித்துவருகின்றன. புவி வெப்பமயமாதல் என்ற சொற்பிரயோகத்தை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கநேர்கிறது. மரம் நடுவதன் அவசியத்தைப் பேசியபடியே மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காடுவளர்ப்புப் பற்றி பேசியவாறே காடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன. புலி, யானை போன்ற எத்தனையோ விலங்கினங்களின் எண்ணிக்கை அருகிக்கொண்டே போகிறது. தட்பவெப்பநிலையில் விரும்பத்தகாத பல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழல், வாழ்க்கைச்சூழல் பராமரிப்பு, பாதுகாப்பு குறித்த தொடர்ந்தரீதியான அக்கறையும், விவாதங்கள், வழிகாட்டல்களும் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளன.
•Last Updated on ••Monday•, 07 •March• 2011 16:43••
•Read more...•
|