பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

எழுத்தாளர் முருகபூபதி பக்கம்

கருத்துக்கள் சங்கமித்த மல்லிகை ஜீவா நினைவேந்தல்! முரண்அறுத்து முன்னோக்கிச்செல்லும் இயக்கம்!

•E-mail• •Print• •PDF•

கருத்துக்கள் சங்கமித்த மல்லிகை ஜீவா நினைவேந்தல்! முரண்அறுத்து முன்னோக்கிச்செல்லும் இயக்கம்!

அண்மையில் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், மல்லிகை ஆசிரியரும், மூவினத்தையும் சேர்ந்த கலை, இலக்கியவாதிகளாலும் , கலை இலக்கியப் பேராசிரியர்களாலும் ஆழ்ந்து நேசிக்கபட்ட, அடிநிலை மக்களின் எழுச்சிக்குரலாக திகழ்ந்த டொமினிக்ஜீவா அவர்களின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் அஞ்சலி நிகழ்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஒரு வருடகாலத்தையும் கடந்து நீடித்துச்செல்லும் கண்ணுக்குத் தெரியாத கொரோனே வைரஸ் தொற்று அச்சுறுத்தலினால், சமூக இடைவெளிபேணி வாழவேண்டிய சூழலுக்குள் முழு உலகமும் உள்வாங்கப்பட்டுள்ள பின்னணியில், டொமினிக்ஜீவாவின் ஆளுமைப்பண்புகளை, மாற்றுக்கருத்தியல்கொண்டிருந்தவர்களிடத்திலும் அவர் காண்பித்த மனிதநேய ஜனநாயகப்பண்புகளையும் நினைவுபடுத்தும் வகையில் நேற்று 14 ஆம் திகதி லண்டன் விம்பம் அமைப்பின் சார்பில் எழுத்தாளரும் சமூகச்செயற்பாட்டாளருமான எம். பௌசர் ஏற்பாடு செய்திருந்த இணையவழி காணொளி அரங்கில் , பிரித்தானியா, கனடா, நோர்வே, ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, தமிழ்நாடு, இலங்கை எங்குமிருந்தும் எழுத்தாளர்களும், கலை, இலக்கிய ஆர்வலர்களும் பங்கேற்றனர்.

•Last Updated on ••Monday•, 15 •February• 2021 02:33•• •Read more...•
 

மல்லிகை ஜீவாவின் மறைவில் இன்னுமொரு வரலாறு எழும் ! முன்னாள் மலையக எம். பி. யும் எழுத்தாளருமான திரு. மல்லியப்பு திலகராஜ் அனுதாபச் செய்தி

•E-mail• •Print• •PDF•

“ சிறு வயதிலேயே தானும் தனது சமூகமும் முடக்கப்படுகிறோம் என தான் உணர்ந்த நாளில் இருந்து தான் இறக்கும் நாள் வரை ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தின் குரலாக ஒலித்தவர் 'மல்லிகை' இலக்கிய இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவா. அன்னாரின் மறைவில் இருந்து இன்னுமொரு வரலாறு எழும் “ என்று எழுத்தாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் விடுத்திருக்கும் அஞ்சலிக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கிய உலகில் வலம் வந்த எழுத்தாளரும் இலக்கிய செயற்பாட்டாளருமான டொமினிக் ஜீவா தனது 94 வது வயதில் கடந்த வியாழன் அன்று கொழும்பில் காலமானார். அன்னாரின் மறைவை அடுத்து விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பிலேயே எம். திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“ ஜீவா என்றதும் ஈழத்து இலக்கிய பரப்பில் முதலில் நினைவுக்கு வரும் தோற்றம் அந்த வெள்ளைக் கதராடையும் வேட்டியும் அணிந்த கம்பீரத்தோற்றம். அவரது நடையில், உடையில், பேச்சில் என எல்லாவற்றிலும் ஒரு கர்வம் கலந்த கம்பீரம் இருந்து கொண்டே இருக்கும்.

இலக்கிய உலகில் சிறு சஞ்சிகைக்கு என தனி வரலாறு உண்டு. தொடங்கி இரண்டு மூன்று இதழ்களில் நின்று போவதுதான் அந்த வரலாறு. ஆனால், தான் தொடங்கிய ' மல்லிகை' எனும் இலக்கிய இதழை பல ஆண்டுகாலம் வெளியிட்டு சாதனை படைத்தவர் டொமினிக் ஜீவா.

•Last Updated on ••Sunday•, 31 •January• 2021 08:49•• •Read more...•
 

மல்லிகை ஜீவாவுக்கு இலங்கை அரசு நினைவு முத்திரை வெளியிடவேண்டும்! யாழ்ப்பாணத்தில் நினைவு மண்டபமும் அமைக்கப்படல் வேண்டும்! நேற்றைய நினைவேந்தல் நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்பு!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் டொமினிக் ஜீவா“ மல்லிகை ஜீவா அவர்கள் ஈழத்து தமிழ்த்தேசிய இலக்கிய வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர்.  ஈழத்து எழுத்தாளர்கள் பலருக்கு களம் வழங்கி ஈழத்து இலக்கிய செல்நெறிக்கு உந்துசக்தியாக விளங்கியவர். சாதாரண அடிநிலை சமூகத்தில் பிறந்து அச்சமூகத்தின் குரலாக இலக்கியத்தில் ஒலித்தவர். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு வளம்சேர்ப்பதற்காக யாழ்ப்பாணத்தில் 1966 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மல்லிகை மாசிகையை ஆரம்பித்தவர். இடையில் போர்க்காலம் தோன்றியவேளையிலும் சளைக்காது குறைந்த வளங்களுடன் மல்லிகையை வெளிக்கொணர்ந்தவர். இலங்கையில் தமிழ் படைப்பு இலக்கியத்திற்கு முதல் முதலில் தேசிய சாகித்திய விருதும் பெற்றவர்.  அத்துடன் தேசத்தின் கண் என்ற உயரிய விருதையும் சாகித்திய இரத்தினா விருதையும், கனடா இலக்கியத்தோட்டத்தின்  "இயல்விருது “ உட்பட பல விருதுகளும் பெற்றவர். மூவின இலக்கியவாதிகளால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இன நல்லிணக்கத்திற்காக மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கும் தமது மல்லிகை இதழில் முன்னுரிமை வழங்கியவர். நூற்றுக்கணக்கான மூவின கலை, இலக்கிய ஆளுமைகள் மற்றும் சமூகப்பணியாளர்கள் மற்றும் இலக்கிய பேராசிரியர்களின் படங்களை மல்லிகை இதழ்களின் முகப்பில் பதிவுசெய்து பாராட்டி கௌரவித்து மல்லிகை இதழிலே அவர்கள் பற்றிய கருத்துச்செறிவு மிக்க ஆக்கங்களையும் வெளிவரச்செய்தவர். இலங்கையின் அனைத்து பிரதேச எழுத்தாளர்களுக்கும் மல்லிகையில் சிறந்த களம் வழங்கியவர்.

அத்துடன் மல்லிகை ஜீவாவின் சிறுகதைகள் பல்கலைக்கழக மாணவர்களினால் இலக்கிய ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன. மல்லிகை ஜீவாவின் சிறுகதைகள் சிங்கள – ஆங்கில மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. அவருடைய சுயசரிதையும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளதுடன், சில கதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தனி நூலாகவும் வெளிவந்துள்ளது. மல்லிகை இதழ்கள் பல்கலைக்கழக கலைப்பீட தமிழ்த்துறை மாணவர்களுக்கு உசாத்துணையாகவும் விளங்கியவை. 1966 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுவரையில் வெளியான மல்லிகை இதழ்களை நூலகம் ஆவணகத்தில் பார்வையிடமுடியும். “

இவ்வாறு நேற்று நிகழ்ந்த மல்லிகை ஜீவா நினைவேந்தல் நிகழ்வு இணையவழி காணொளி ஊடாக நடைபெற்றபோது இரங்கல் தெரிவித்த மூவினத்தையும் சேர்ந்த எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஏககுரலில் தெரிவித்தார்கள்.

•Last Updated on ••Sunday•, 31 •January• 2021 08:41•• •Read more...•
 

வரலாறாகிவிட்ட ஈழத்தின் இலக்கியக்குரல்: மல்லிகை ஜீவா ( 1927 – 2021 ) விடைபெற்றார்!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் டொமினிக் ஜீவாஇன்று 29 ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் எனது கைத்தொலைபேசி சிணுங்கியது. இந்த அகாலவேளையில் யார்…? எனப்பார்த்தேன். மறுமுனையில் இலக்கிய நண்பர் தெய்வீகன், “உறக்கத்தை குழப்பியதற்கு மன்னிக்கவும்“ எனச்சொல்லிவிட்டு, எங்கள் மல்லிகை ஜீவா கொழும்பில் மறைந்துவிட்டார் என்ற ஆழ்ந்த துயரம்மிக்க செய்தியை சொன்னார். அத்துடன் எனது உறக்கம் முற்றாக களைந்துவிட்டது. தனது வாழ்நாள் முழுவதும் களைக்காமல் ஓடி ஓடி ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு அயராமல் உழைத்த மல்லிகை ஜீவா இனியாவது நிரந்தரமாக ஓய்வுபெறட்டும். என்று என்னை நானே தேற்றிக்கொண்டு, பொங்கிவந்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கியவாறு இந்த நினைவுப்பதிகையை அஞ்சலிக்குறிப்பாக சமர்ப்பிக்கின்றேன்.

யாழ்ப்பாணத்தில் ஜோசப் – மரியம்மா தம்பதியருக்கு 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி பிறந்திருக்கும் டொமினிக் ஜீவா, கொழும்பில் தனது ஏகபுதல்வன் திலீபனின் இல்லத்தில் இன்று 29 ஆம் திகதி ( 29 ஜனவரி 2021 ) தமது 93 வயதில் மறைந்தார்.


யாழ்ப்பாணம்  அரியாலையில்  நாவலர்  வீதியில்  அமைந்த  ஸ்ரான்லி  கல்லூரியில் (தற்பொழுது  கனகரத்தினம்  மத்திய  கல்லூரி) 1962  ஆம்  ஆண்டளவில்  எனக்கும்   எனது  மச்சான்  முருகானந்தனுக்கும்  ஆறாம்  வகுப்பில்    புலமைப்பரிசில்  அனுமதி  கிடைத்தது.   அப்பொழுது    எனக்கு    பதினொரு  வயதிருக்கும். நான்    முதல    தடவையாக  பனைமரங்களைப் பார்த்தது    அக்காலத்தில்தான்.  அதற்கு  முன்னர்  அந்தக்கற்பகதருவை  பாடசாலை  பாடப் புத்தகங்களில்தான்   பார்த்திருக்கின்றேன். ஈழவிடுதலைப்போராட்டம்     ஆரம்பமானதன்பின்பு    பல  இலக்கிய  மற்றும்  ஆய்வு  நூல்களில்  பனைமரங்கள்    அட்டைப்படமாகின. ரஜனி  திராணகம  சம்பந்தப்பட்ட  யாழ்.  பல்கலைக்கழக  மனித  உரிமை  ஆசிரியர்  சங்கத்தின்    வெளியீடான    முறிந்த  பனை,  மூத்த   பத்திரிகையாளர்  கார்மேகத்தின்    ஈழத்தமிழர்  எழுச்சி,   செ.யோகநாதன்     தொகுத்த  ஈழச்சிறுகதைகள்  வெள்ளிப்பாதசரம்,     ஜெயமோகனின்    ஈழத்து  இலக்கியம்,   பேராசிரியர்   கா.  சிவத்தம்பியின்    யாழ்ப்பாணம்   சமூகம் - பண்பாடு – கருத்துநிலை  உட்பட   பல  நூல்கள்  பனைமரத்தை  ஒரு  குறியீடாகவே   அட்டைகளில்  சித்திரித்துள்ளன. வவுனியாவைக்கடந்தவுடன்   ஏ9  பாதையின்  இருமருங்கும்    தென்பட்ட  பனைமரங்களை     கல்விக்காக    பயணித்த    அக்காலத்தில்  பரவசத்துடன்   பார்ப்பேன். அவ்வாறு    அந்த  மண்ணில்  நான்  பரவசத்துடன்   பார்த்த  ஒரு  மனிதரின்  பெயர்  டொமினிக்ஜீவா.

எங்கள்  மாணவர்  விடுதியின்  சார்பாக  மாதாந்தம்  நடத்தப்படும்  ஒரு  நிகழ்வுக்கு  அவர்  பிரதம   பேச்சாளராக  அழைக்கப்பட்டிருந்தார். அதற்கு  முன்னர்  நான்  அவரைப்பார்த்தது  இல்லை.   அவர்  அருந்துவதற்கு  ஒரேஞ்பார்லி  போத்தல்  ஒன்றை  மேசையில்   வைத்திருந்தார்கள். வெள்ளை   வேட்டி   வெள்ளை  நஷனல்  அணிந்து  வந்திருந்தார்.  மேடையில்   உரத்த  குரலில்  பேசினார்.   அவ்வப்போது  கைகளை  உயர்த்தினார். அமெரிக்க   முன்னாள்    ஜனாதிபதி  ஆப்ரகாம்  லிங்கனின்  வாழ்க்கைச்சம்பவங்களை  விபரித்தார்.   சங்கானையில்   நடந்த    ஒரு    சாதிக்கலவரம்   பற்றிச்சொன்னார். எனக்கு    ஏதோ  கொஞ்சம்   புரிந்தது. அவரது  முகத்தையும்  மேசையிலிருந்த  குளிர்பானப்போத்தலையும்   பார்க்கிறேன்.  அவரது  நெற்றி  இடைக்கிடை  புடைத்து  நரம்புகளும்   தெரிந்தன. எனக்கு   அந்த  வயதில்,   அவர்  ஏதோ  கோபத்தில்  பேசுவதாகவே  புரிந்தது. தனது  உரை  முடியும்   வரையில்   அவர்  அந்த  குளிர்பான   போத்தலை  தொடவே  இல்லை.  நீண்டநேரம்  பேசியும்   அவரது   நா  வரண்டுவிடவில்லை   என்பதும்    எனக்கு    ஆச்சரியமானது.

•Last Updated on ••Sunday•, 31 •January• 2021 08:39•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்

•E-mail• •Print• •PDF•

படித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்“ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா…? “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.

எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “

இவ்வாறு தனுஜா, தன்வரலாற்று நூலில் பேசும் வரிகள் 133 ஆம் பக்கத்தில் இடம்பெறுகின்றன.

ஆம் , எமக்கும் திருநங்கை ஜமாத் பற்றி எதுவுமே அதன் அரிச்சுவடியே தெரியாதுதான்.

தமிழ்த்திரைப்படங்களில் திருநங்கைகளை ரசிகர்களை சிரிக்கவைக்கும் பாத்திரமாக படைத்து இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் பணம் சம்பாதித்தனர்.

திருநங்கைகள் யார்..? அவர்கள் எத்தகைய பாதையை கடந்து வருகிறார்கள் என்பது பற்றியோ, அவர்களின் வலிகளையோ எவரும் அறிவுபூர்வமாகவும் உணர்ச்சியின் பாற்பட்டும் பதிவுசெய்து , நாம் படிக்காத சூழ்நிலையில் தனுஜாவின் நூல் எம்மை பேரதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் வேதனைக்கும் ஆளாக்கியிருக்கிறது.

நண்பர் தெய்வீகன், சுமார் 150 கிலோ மீற்றர் தூரம் பயணித்து வந்து இந்த நூலை என்னிடம் தந்துவிட்டு விடைபெற்ற கணம் கையில் எடுத்து சில மணிநேரங்களில் படித்து முடித்தேன்.

ஒரு ஈழத்திருநங்கையின் பயணமும் போராட்டமும் எப்படி இருந்திருக்கிறது..? உலகடங்கிலும் வாழும் அனைத்து திருநங்கைகளின் வாழ்வோடும் எவ்வாறு பொருந்துகிறது,,? அவர்களுக்கும் எத்தகைய பண்பாட்டுக்கோலங்கள் அமைந்துள்ளன..? அவர்கள் தங்களை இச்சமூகத்தில் அடையாளப்படுத்தி , அங்கீகாரம் பெற்று வாழ்வதற்கு எத்தகைய போராட்டங்களையும் தியாகங்களையும் சந்திக்கிறார்கள்..? முதலான பல வினாக்களுக்கு இந்த நூல் விடையளித்துள்ளது.

இலங்கை வடபுலத்தில், புத்தரும் காந்தியும் வந்த திசையிலிருந்து அமைதிகாக்கவென வந்தவர்களுக்கும் மக்களுக்கு விடுதலை தேடித்தரப்போகின்றோம் எனச்சொன்னவர்களுக்கும் இடையில் மூண்ட போரின் பின்னணியில், “ இரண்டாவது ஈழப்போர் “ தொடங்கிய காலகட்டத்தில் அதாவது 1991 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் தனுஜன் எவ்வாறு தனுஜாவாக மாறினார் என்பதை பேசும் கதை இது!

•Last Updated on ••Sunday•, 24 •January• 2021 01:19•• •Read more...•
 

இலங்கையில் பாரதி......

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர்  முருகபூபதி- அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம்.  நலம்தானே...? உடல் நலத்தில் அவதானமாக இருக்கவும்.  இங்கு நாம் நலம். தங்கள் பதிவுகளில் தங்களின் வாசிப்பும் யோசிப்பும்  பகுதியில் ( 366 ஆவது அங்கம் )  எழுதப்பட்ட குறிப்புகளைப்படித்துவிட்டு,  -  கடந்த 2019 இல் வெளியான எனது இலங்கையில் பாரதி நூலில்  இடம்பெற்ற இரண்டு அங்கங்களை தங்கள் பார்வைக்கு இத்துடன் இணைத்துள்ளேன்.  நன்றி - அன்புடன் , முருகபூபதி -


இலங்கையில் பாரதி - அங்கம் - 10

ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் இலக்கியப்படைப்பாளிகள், கலைஞர்கள், நடன நர்த்தகிகள், ஊடகவியலாளர்கள், இதழாசிரியர்கள் பாரதியின் தாக்கத்திற்குட்பட்டதனாலேயே பாரதியியலிலும் ஈடுபாடுகொண்டிருந்தனர். ஈழத்தில் பாரதி இயல் என்ற பிரயோகத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் பேராசிரியர் க. கைலாசபதி. எமது நாட்டில் இலக்கியச்சிற்றேடுகளில் பாரதி ஏற்படுத்திய பெரிய தாக்கத்தைப்பற்றி எழுதுவதாயின் பல அங்கங்கள் தேவைப்படும். ஏராளமான இலக்கிய சிற்றேடுகள் இலங்கையில் வெளிவந்ததே அதற்கு அடிப்படைக்காரணம். ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் வரலாற்றை ஆய்வுசெய்ய முன்வந்தால் அதற்கு உரமிட்டவை இலக்கியச்சிற்றேடுகளே என்ற முடிவுக்கும் வரமுடியும். இலங்கையில் பாரதியின் சிந்தனைகள் விகசிக்கத்தொடங்கிய 1922 ஆம் ஆண்டிற்குப்பின்னர், 1940 முதல் வெளிவரத்தொடங்கிய சிற்றிதழ்களின் எண்ணிக்கை நூறுக்கும் அதிகம். தமிழ்த்தேசியப்பத்திரிகையின் வளர்ச்சியில் உதயதாரகை முதல் தற்பொழுது வெளிவரும் காலைக்கதிர் வரையில் கால வரிசைப்படி ஆய்வுசெய்யலாம்.

அதேபோன்று இலக்கியச்சிற்றேடுகளை அவதானித்தால் 1940 இற்குபின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து மறுமலர்ச்சி, கிழக்கிலங்கை மண்டுரிலிருந்து 'பாரதி' கொழும்பிலிருந்து மற்றும் ஒரு இதழ் 'பாரதி' முதலானவற்றிலிருந்து தற்போது கொழும்பில் வெள்ளவத்தையிலிருந்து ஞானம், யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து ஜீவநதி, கிழக்கில் மட்டக்களப்பிலிருந்து ' மகுடம்' அநுராதபுரத்திலிருந்து 'படிகள்' - ஆகியனவற்றின் வளர்ச்சியையும் நாம் கண்டுகொள்ளமுடியும். இவைதவிர கவிதைக்கான இதழ்களும் வருகின்றன.

இவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் கலைச்செல்வி, மரகதம், மல்லிகை, புதுமை இலக்கியம், வசந்தம், விவேகி, அஞ்சலி, பூரணி, நதி, களனி, அக்னி, நோக்கு, வாகை, மாருதம், கீற்று, மாற்று, ஊற்று, பாடும்மீன், ரோஜாப்பூ, கதம்பம், பூமாலை, குமரன், தமிழமுதம், தமிழின்பம், மாணிக்கம், அலை, குன்றின் குரல், கொழுந்து, தாரகை, புதுசு, அலை, தீர்த்தக்கரை, பொதுமக்கள் பூமி, சுவர், சமர், சிரித்திரன், வெளிச்சம், களம், சுவைத்திரள், கலகலப்பு, அக்கினிக்குஞ்சு, அமிர்தகங்கை, தாயகம்.... இவ்வாறு எண்ணற்ற இதழ்கள் தோன்றி மறைந்தன. பூரணி என்னும் பெயரிலேயே இரண்டு சிற்றிதழ்கள் வந்திருப்பதும் அக்கினிக்குஞ்சு என்னும் பெயரில் யாழ்ப்பாணத்திலும் அவுஸ்திரேலியா மெல்பனிலிருந்தும் சிற்றிதழ்கள் வெவ்வேறு காலப்பகுதிகளில் வந்துள்ளன.

•Last Updated on ••Wednesday•, 20 •January• 2021 22:04•• •Read more...•
 

அற்பாயுளில் உதிர்ந்த மலர்: வருண்ராஜ் ஞானேஸ்வரனுக்கு இதய அஞ்சலி !

•E-mail• •Print• •PDF•

அற்பாயுளில் உதிர்ந்த மலர்: வருண்ராஜ் ஞானேஸ்வரனுக்கு இதய அஞ்சலி !நான் அவுஸ்திரேலியா மெல்பனில் வசிக்கும் புறநகரமான மோர்வெல்லிலிருந்து சுமார் 65 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் மற்றும் ஒரு புறநகரமான சேல் என்ற ஊருக்கு கனத்த மனதுடன் சென்றுகொண்டிருக்கின்றேன்.

அந்தப்பாதையால் அதற்கு முன்னர் பலதடவைகள் அவுஸ்திரேலியாவின் மாநிலத்தலைநகரம் கன்பராவுக்கு சென்றிருந்தபோது இருந்த மனநிலையில் நேற்றைய தினம் மேற்கொண்ட இந்தப்பயணம் அமைந்திருக்கவில்லை.

இந்த 2020 ஆம் ஆண்டு பிறந்தது முதல் எனக்குத் தெரிந்த சில கலை, இலக்கிய ஆளுமைகள் மறைந்ததையடுத்து அஞ்சலிக்குறிப்புகள் எழுதியிருக்கும் நான், எதிர்பாராதவகையில் எனக்கு என்றைக்குமே அறிமுகமில்லாத ஒரு தமிழ் இளைஞன் குறித்த அஞ்சலிக்குறிப்புகளை எழுதநேர்ந்துவிட்டதும் விதிப்பயனா ? அல்லது உலகெங்கும் அகதிகளாக அலைந்துழலும் மனித குலத்தின் சோகக்குரலின் எதிரொலியா..?

இலங்கையில் நீடித்த போரின் முடிவுடன், அங்கிருந்து இந்தியாவுக்கும் பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கும் படகேறி வந்து குவிந்த மக்கள் திரளின் ஒரு பிரதிநிதியான செல்வன் வருண்ராஜ் ஞானேஸ்வரன் இம்மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் ஒரு உயரமான கட்டிடத்திலிலிருந்து குதித்து தற்கொலைசெய்துகொண்டார்.

அவருடைய இறுதி நிகழ்வுக்குத்தான் அவருடையதும் அவரது தாயார் மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் அவரது தங்கையினதும் புகலிடக்கோரிக்கை விண்ணப்பத்தில் கவனம் செலுத்தும் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் மற்றும் அவருடை துணைவியார் ஜெஸி ரவீந்திரன், புதல்வன் அரூரண் ரவீந்திரன் ஆகியோருடன் அவர்களின் காரில் சென்றுகொண்டிருக்கின்றேன்.

•Last Updated on ••Friday•, 18 •December• 2020 11:58•• •Read more...•
 

அஞ்சலிக்குறிப்போடு, அக்கா எழுதிய ஆக்கம்! நாடகமேடையில் பாண்டியன் செழியனாக கனல் கக்கும் வசனம் பேசிய செல்வி அக்கா!

•E-mail• •Print• •PDF•

 திருமதி  “ செல்வி   “ சண்முகவடிவம்பாள் சண்முகம்

எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரி செல்வி அக்கா திருமதி சண்முகவடிவம்பாள் இம்மாதம் ( டிசம்பர் ) 01 ஆம் திகதி இலங்கையில் நீர்கொழும்பில் திடீரென மறைந்துவிட்டார். எனது எழுத்துலக வாழ்வில், தொடர்ந்தும் கலை, இலக்கிய, கல்வி சார்ந்த ஆளுமைகள் மறைந்தவேளைகளில் அவர்தம் நினைவுகளை பதிவுசெய்து அஞ்சலிக்குறிப்புகள் எழுதிவந்திருக்கும் நான், முதல் தடவையாக எனது உடன்பிறப்பு குறித்து எழுதநேர்ந்துள்ளதும் விதிப்பயன்தான்.

அக்காவுக்கு பேச்சாற்றல் எழுத்தாற்றல், வாதிடும் திறமை இருந்தது. ஆனால், திருமணத்தோடு இல்லறத்தை நடத்தும் ஆற்றலை வளர்ப்பதில்தான் கவனம் செலுத்தினார்.

அக்காவின் இயற்பெயர் சண்முகவடிவம்பாள். வீட்டில் செல்லமாக செல்வி என அழைக்கப்பட்டு, அதுவே ஊரிலும் உறவினர் மத்தியிலும் நிலைத்தபெயராகியது.

எங்கள் பாடசாலைக்கு ஒரு தடவை தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த குன்றக்குடி அடிகளார், அக்காவின் பேச்சாற்றலை வியந்து பாராட்டிவிட்டு, “ உனது பெயரின் தமிழ் அர்த்தம் - அறுவதன எழிலரசி – “ என்றார்.

அக்காவுக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தபோது நான்தான் மாப்பிள்ளைத்தோழன். அக்காவின் திருமணம் பேசித்தான் நடந்தது. பரஸ்பரம் மணமக்களின் படங்கள் காண்பிக்கப்படாமல் ஒருவரோடு ஒருவர் பேசாமல் நடந்த அக்காலத்தைய திருமணம்.

வீட்டில் நடந்த பதிவுத்திருமணத்தின்போதும், அதன்பிறகு சில மாதங்கள் கழித்து நீர்கொழும்பு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடந்த திருமணத்தின்போதும்கூட, அக்கா, தனக்கு வரப்போகும் மணமகனை ஏறிட்டும் பார்க்கவில்லை. பேசவில்லை !

•Last Updated on ••Friday•, 18 •December• 2020 11:58•• •Read more...•
 

அஞ்சலிக்குறிப்பு : ருஷ்யப்பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி! மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் !

•E-mail• •Print• •PDF•

அஞ்சலிக்குறிப்பு : ருஷ்யப்பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி! மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் !கண்ணுக்குத் தெரியாத எதிரி கொரோனோ என்ற பெயரிலும் கொவிட் 19 என்ற புனைபெயருடனும் வந்ததே வந்தது, உலகெங்கும் தனது கோரத்தாண்டவத்தை அலுப்பு சலிப்பின்றி ஆடிக்கொண்டிருக்கிறது. அது பலியெடுத்த அறிவுஜீவிகளின் வரிசையில் நேற்று நவம்பர் 18 ஆம் திகதி மற்றும் ஒருவரும் விடைபெற்றுவிட்டார். நேற்று முன்தினம் நவம்பர் 17 ஆம் திகதி அதிகாலை சென்னையில் மூத்த பதிப்பாளரும் இலக்கியவாதியுமான க்ரியா இராமகிருஷ்ணனின் திடீர் மறைவு தந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கிடையில், மற்றும் ஒரு சோவியத் அறிஞரை நேற்று நவம்பர் 18 ஆம் திகதி பறிகொடுத்துவிட்டோம். 1941 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 27 ஆம் திகதி ருஷ்யாவில் பிறந்திருக்கும் இவரது முழுப்பெயர்: அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்ஸ்கி. நேற்று தமது 79 வயதில் கொரோனோ தொற்றின் தாக்கத்தினால் மறைந்துவிட்டதாக செய்தி வௌிவந்துள்ளது. இவர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நெருக்கமானவர். இவரை இவ்வாறு எமது மொழியுடனும் எமது இனத்துடனும் நெருங்கவைத்தவர் மகாகவி பாரதியார்.

துபியான்ஸ்கி, மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆபிரிக்க நாடுகள் தொடர்பான ஆய்வுப்பிரிவில் ஆய்வாளராகவும் விரிவுரையாளராகவும் முன்னர் பணியாற்றியவர். அங்கு அவர் மாணவராக பயின்றபோது, 1974 ஆம் ஆண்டு “ முல்லைத்திணையில் பிரிவு “ என்ற தலைப்பில் தமது ஆய்வேட்டை சமர்ப்பித்து கலாநிதியானவர். நிலத்தை அடிப்படையாக வைத்து பகுக்கப்பட்ட ஐவகைத்திணைகள் பற்றி கற்றறிந்துள்ள இவர், காடும் காடு சார்ந்த நிலமும் பற்றி ஆய்வுமேற்கொண்டிருப்பது இலங்கை , இந்திய தமிழர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கும் தகவல். இவர் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியத்தை மாணவர்களுக்கு கற்பித்தவர். தமிழ் மொழி வரலாறு, தமிழியலுக்கு ஐரோப்பிய அறிஞர்கள் ஆற்றிய பங்களிப்பு , திருக்குறளும் தமிழ் நீதி நூல் மரபும் முதலான பல்வேறு தலைப்புகளில் விரிவுரையாற்றி வந்திருப்பவர். சங்க இலக்கியம் என்ற நூலையும் இவர் ருஷ்யமொழியில் எழுதியுள்ளார். விஞ்ஞானபூர்வமாக பண்டைக்கால தமிழ்க்கவிதைகளையும் ஆய்வுசெய்து கட்டுரைகள் எழுதியவர். 1978 – 79 காலப்பகுதியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியியல் பற்றிய ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டவர். மேல்நாடுகளில் வாழ்ந்த மொழியியல் வல்லுனர்களுடன் தமிழ் மொழியின் பயன்பாட்டில் இலக்கியத் தமிழ் மற்றும் மக்களின் பேச்சுத் தமிழ் குறித்தெல்லாம் தமிழிலிலேயே கலந்துரையாடும் இயல்பையும் கொண்டிருந்தவர்.

•Last Updated on ••Monday•, 23 •November• 2020 00:34•• •Read more...•
 

அஞ்சலிக்குறிப்பு: ‘ க்ரியா ‘ எஸ். ராமகிருஷ்ணன்! தற்காலத் தமிழ் அகராதியை நீண்ட கால உழைப்பில் வரவாக்கிய இலக்கிய ஆளுமை !

•E-mail• •Print• •PDF•

க்ரியா ராமகிருஷ்ணன்க்ரியா இராமகிருஷ்ணன் இன்று நவம்பர் 17 ஆம் திகதி, அதிகாலை சென்னையில் கொரோனோ தொற்றின் தாக்கத்திலிருந்து மீளாமலேயே நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. க்ரியா இராமகிருஷ்ணனின் திடீர் மறைவு தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடத்தை இனி யார் நிரப்புவார்கள்..? என்ற வினா மனதில் நிழலாட இந்த அஞ்சலிக்குறிப்பினை பதிவுசெய்கின்றேன். மகாகவி பாரதியின் அந்திமாகாலத்திற்கு முக்கிய காரணமாக விளங்கிய சென்னை  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் பிரகாரத்தில், எழுபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்துடன் இந்த அஞ்சலிக்குறிப்பினை ஆரம்பிக்கின்றேன்.

ஒரு  பெரிய குடும்பம்  அங்கு தரிசனத்துக்கு  சென்றது.   அதில்   பத்துப்பதினைந்து  பேர்   ஆண்கள், பெண்கள் , குழந்தைகள்,  முதியவர்கள்  இருந்தார்கள். அதில்  அத்தை   உறவான  ஒரு  பெண்  சற்று  நோய்வாய்ப்பட்டு எப்பொழுதும்  சோர்வாக  இருப்பவர்.   நோஞ்சான்  என்று வைத்துக்கொள்ளுங்கள்.   ஒரு  சிறிய  குழந்தை  வாட்டசாட்டமான அத்துடன்,  கொழு  கொழு என்று  கொழுத்த  குழந்தை. தூக்கினால் சற்று  பாரமான  குழந்தை. இருவரையும்   அழைத்துக்கொண்டு  அந்தக்கோயிலை  சுற்றிவந்து  தரிசிப்பது  அந்தப் பெரியகுடும்பத்திற்கு  சிரமமாக இருந்திருக்கிறது.   நோய்வாய்ப்பட்ட  அத்தை  " தன்னிடம்  குழந்தையை    விட்டு விட்டு  போய்வாருங்கள்  நான் பார்த்துக்கொள்கின்றேன்"   என்றார்.   உடனே   மற்றவர்களும்  அதற்கு சம்மதித்து   குழந்தைய ஒரு படுக்கை விரிப்பில்  கிடத்திவிட்டு அத்தையை  பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு  சென்று  விட்டார்கள். அத்தைக்கு  உறக்கம்  கண்களை   சுழற்றியிருக்கிறது.  அந்தக்கோயில் தூணில்    சாய்ந்துவிட்டார்.   தரையில்  குழந்தையும்  ஆழ்ந்த  உறக்கம்.

•Last Updated on ••Tuesday•, 17 •November• 2020 10:05•• •Read more...•
 

நீர்கொழும்பு : வாழ்வும் வளமும் - அங்கம் -02 - நிகும்பலையூர் குளங்களின் மறுபக்கம் !

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர்  முருகபூபதி- எழுத்தாளர்களே! இவ்விதழில் எழுத்தாளர் முருகபூபதி அவரது பிறந்த ஊரான நீர்கொழும்பு பற்றி எழுதுகின்றார். ஏன் நீங்களும் உங்கள் ஊர்களைப்பற்றி எழுதக்கூடாது. எழுதுங்கள்! 'பதிவுகள்' உங்கள் மண்ணைப்பற்றி, அம்மண் எவ்விதம் உங்கள் இலக்கிய ஆர்வத்துக்கு உதவியது என்பது பற்றியெல்லாம் அறிய ஆவலாகவுள்ளோம். அதே சமயம் உங்கள் ஊர்களைப்பற்றிய முக்கிய தகவல்களையும் உங்கள் கட்டுரைகளில் உள்ளடக்குங்கள். உங்கள் ஊர் பற்றிய உங்கள் எண்ணங்களை •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். - ஆசிரியர், பதிவுகள்.காம் -


நீர்கொழும்புக்கு நிகும்பலை என்றும் ஒரு பெயர் கம்பராமாயணத்தில் சூட்டப்பட்டுள்ளது.

இராவணன் புதல்வன் இந்திரஜித்தன் இவ்வூரில் ஐந்து இடங்களில் குளங்கள் வெட்டி நிகும்பலை யாகம் வளர்த்தானாம்.

அவ்விடங்களில் மழைக்காலங்களில் நீர்பெருகிவிடுவதையும் அவதானித்துள்ளோம். பிற்காலத்தில் அதில் ஒன்று தூர்வாராமல் மண் நிரப்பப்பட்டு பஸ் நிலையமும் அமைந்தது. மற்றும் ஒன்று விளையாட்டு மைதானமாகியது. மற்றும் இரண்டு இடங்கள் மக்கள் குடியிருப்பானது. பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலிருந்த குளத்தில் யானையை அழைத்துவந்து அதன் பாகன் குளிக்க வைத்ததால் நடந்த விபரீதத்தில் எனது பொலிஸ் தாத்தாவும் சிக்கி உயிர்தப்பினார்.

அந்தக்குளமும் தூர்வாரப்படாமல் நுளம்புகள் குடியிருந்து மக்கள் அவதிக்குள்ளானார்கள். இதனைக்கண்ட எனது தாத்தா ( அவர் பொலிஸ் சார்ஜன்டாக நீர்கொழும்பில் பணியாற்றியவர். – அது பிரிட்டிஷாரின் காலம் )

அங்கு யானையை தோய வார்க்கவேண்டாம் என்று எங்கள் பொலிஸ் தாத்தா அந்த யானைப்பாகனை கண்டித்துள்ளார்.

அதனை அவதானித்த அந்த யானை, தனது எஜமானனை கண்டிக்க இவர்யார்…? இவர் யாருக்கு பொலிஸ்காரன்…? என்று நினைத்ததோ என்னவோ , தும்பிக்கையினால் தாத்தாவை சுழற்றி எடுத்து தூக்கி எறிந்துள்ளது. தாத்தா பொலிஸ் நிலைய கூரையில் விழுந்து சுருண்டு தரைக்கு வந்துள்ளார்.

•Last Updated on ••Friday•, 13 •November• 2020 09:36•• •Read more...•
 

எங்கள் ஊர்: நீர்கொழும்பு - இலங்கை திரைப்படத்துறைக்கும் பங்களிப்பு செய்த நகரம் !

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர்  முருகபூபதி- எழுத்தாளர்களே! இவ்விதழில் எழுத்தாளர் முருகபூபதி அவரது பிறந்த ஊரான நீர்கொழும்பு பற்றி எழுதுகின்றார். ஏன் நீங்களும் உங்கள் ஊர்களைப்பற்றி எழுதக்கூடாது. எழுதுங்கள்! 'பதிவுகள்' உங்கள் மண்ணைப்பற்றி, அம்மண் எவ்விதம் உங்கள் இலக்கிய ஆர்வத்துக்கு உதவியது என்பது பற்றியெல்லாம் அறிய ஆவலாகவுள்ளோம். அதே சமயம் உங்கள் ஊர்களைப்பற்றிய முக்கிய தகவல்களையும் உங்கள் கட்டுரைகளில் உள்ளடக்குங்கள். உங்கள் ஊர் பற்றிய உங்கள் எண்ணங்களை •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். - ஆசிரியர், பதிவுகள்.காம் -


இந்து இளைஞர் மன்றத்தில் இயங்கிய நூல் நிலையத்தில் பெரும்பாலும் சமயம் சார்ந்த நூல்களே இருந்தமையினால் நண்பர்கள் இணைந்து வளர்மதி நூலகம் அமைத்தார்கள். மிகவும் குறைந்த கட்டணத்தில் உறுப்பினர்கள் இணைந்தார்கள். மாதம் 25 சதம்தான் அறவிட்டனர். செல்வரத்தினம் தன்னிடமிருந்த ராணிமுத்து நாவல்களையெல்லாம் தந்தார். இந்நிலையில் இலக்கிய ஆர்வம் மிக்கவர்களின் படைப்புகளுடன் வளர்மதி என்ற கையெழுத்து சஞ்சிகையை வெளியிட்டோம். தற்பொழுது ஜெர்மனியில் வதியும் தேவாவின் கையெழுத்து அழகானது. அவரே பல பக்கங்களையும் எழுதினார். படங்கள் வரைந்தும் ஒட்டியும் முதலாவது இதழை வெளியிட்டோம். அதில் சிறுகதை, கட்டுரை, கவிதை என்பன வெளியாகின. அப்பொழுது நீர்கொழும்பு பிரதேசத்திலிருந்து நீர்கொழும்பூர் முத்துலிங்கம், மு.பஷீர் ஆகியோர் பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்தனர். இவர்களே நீர்கொழும்பின் மூத்த எழுத்தாளர்கள். வளர்மதி நூலகத்தின் உறுப்பினர்களின் முதலாவது ஒன்றுகூடல் சந்திப்பில் நீர்கொழும்பூர் முத்துலிங்கமும் மு. பஷீரும் கலந்துகொண்டனர்.

எமது இலக்கிய நண்பர்களின் வட்டம் பெருகியது. வளர்மதியின் இரண்டாவது இதழை முத்துலிங்கம் வடிவமைத்தார். அவர் சிறந்த ஓவியருமாவார். கேலிச்சித்தரங்களும் இடம்பெற்றன. 1971 இல் இலங்கையில் ஏப்ரில் கிளர்ச்சியினால் நாடெங்கும் உரடங்கு உத்தரவு இரவுவேளைகளில் பிறப்பிக்கப்பட்டது. அதனால் வீட்டிலிருந்தவாறே பல படைப்பிலக்கிய நூல்களை படித்தோம்.

•Last Updated on ••Sunday•, 08 •November• 2020 00:00•• •Read more...•
 

இணைய ஊடகத்துறையில் இணைந்திருக்கும் தோழர் ஜெமினி! தோழர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் !

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர்  முருகபூபதிஎனது எழுத்துலக வாழ்வு வெள்ளீயத்தில் தயாரிக்கப்பட்ட அச்சு ஊடகங்களில் ஆரம்பமாகி, பின்னாளில் இணைய ஊடகத்தை நோக்கி வளர்ந்தது. 1970 களில் எனது எழுத்துக்கள் வீரகேசரி, தினகரன் முதலான நாளேடுகளிலும் மல்லிகை, பூரணி, புதுயுகம், கதம்பம், மாணிக்கம் முதலான சிற்றிதழ்களிலும்தான் வெளிவந்தன. அவுஸ்திரேலியாவுக்கு வரும்வரையில் ஒவ்வொரு வெள்ளீய அச்சு எழுத்துக்களினால் கோர்க்கப்பட்டு அச்சாகிய எனது படைப்புகள், 2000 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கணினியில் பதிவாகி இணைய ஊடகங்களிலும் பரவத்தொடங்கியது. இணையத்தின் வருகையுடன், தமிழ் எழுத்து உருபுகளும் அறிமுகமானதும் அதுவரை காலமும் நடைமுறையிலிருந்த பேனையை எடுத்து, காகிதத்தில் எழுதி, தபாலில் அனுப்பும் வழக்கம் முற்றாக மறைந்தது.

முதலில் பாமினி உருபுகளில் கணினியில் எழுதத்தொடங்கியதும், எனது மனைவி வழி உறவினரான திருமதி பாமினி என்பவர் , தனது அண்ணாதான் அந்த தமிழ் உருபை கண்டுபிடித்து, அதற்கு தனது பெயரையும் சூட்டினார் என்று சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதன்பின்னர் யூனிகோட்டில் எழுதிப்பழகினேன். இவ்வாறு எழுதிக்கொண்டிருந்தபோதுதான் மெல்பன் நண்பர் எழுத்தாளர் நடேசன், எனக்கு தேனீ இணைய இதழை அறிமுகப்படுத்தினார். முதலில் அவர் ஊடாகவே எனது ஆக்கங்களை ஜெர்மனியிலிருந்து வெளிவந்த தேனீ இணைய இதழுக்கு அனுப்பினேன். அவற்றை ஏற்று தொடர்ச்சியாக பிரசுரித்த தேனீ இணையத்தளத்தை நடத்தும் ஜெமினி கங்காதரன், என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தோழமை பூண்டார். அதன்பிறகு நானே நேரடியாக அவருக்கு எனது ஆக்கங்களை அனுப்பத்தொடங்கினேன். இவ்வாறு தொடங்கிய எமது தோழமையினால், எனது இலக்கிய மற்றும் அரசியல் ஆய்வாளர்களான நண்பர்களின் ஆக்கங்களையும் தேனீக்கு அறிமுகப்படுத்தினேன். அவற்றையும் தேனீ ஆசிரியர் ஜெமினி கங்காதரன் மனமுவந்து ஏற்று பதிவேற்றினனார்.

•Last Updated on ••Monday•, 02 •November• 2020 23:01•• •Read more...•
 

தர்மிஸ்டர் ஜே.ஆர்.ஜெயவர்தனா: சாணக்கியரா? சாதுரியக்காரரா?

•E-mail• •Print• •PDF•

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் நினைவு தினம் நவம்பர் 1.

ஜே.ஆர்.ஜெயவர்தனா

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1943 ஆம் ஆண்டு நடந்த சட்ட சபைத்தேர்தலில் ஒருவர் வெற்றிபெற்றார். களனி பிரதேசத்திலிருந்து முதல் முதலாக அவர் தெரிவாகும்போது அவரது வயது 37. இலங்கையில் நீதித்துறை சார்ந்த ஒரு பெரியவருக்கும் செல்வந்த குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண்மணிக்கும் பிறந்தவர்தான் அந்த களனி தொகுதியை பின்னாளில் பிரதிநிதித்துவப்படுத்தியவர். அவர் பிறந்த இல்லம் எது...? என்பதைச் சொன்னால் எவருக்கும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை! அந்த இல்லம் கொழும்பு வடக்கில், களனி கங்கைக்கும் ஆமர் வீதிக்கும் நடுவில் வரும் கிராண்ட்பாஸ் வீதியில் 185 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ளது. இன்றும் நீங்கள் அந்த இல்லத்தின் முகப்பினை பார்க்கலாம். அந்த இல்லத்தில், நீதிக்கும் செல்வச்செழிப்பிற்கும் பெயர் பெற்ற அந்தக்குடும்பம் வாழ்ந்த காலத்தில் 1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி பிறந்த குழந்தையின் பெயர் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்தனா.

இலங்கை அரசியல் வரலாற்றின் ஏடுகளில் இவரது ஆளுமை குறிப்பிடத்தகுந்தது. எத்தனையோ சவால்களை முறியடித்து, தான் நினைத்தவற்றை பல்வேறு தந்திரோபாயங்களுடன் சாதித்தவர். இவரை ஜே.ஆர். எனவும் ஜே.ஆர். ஜெயவர்தனா எனவும் அழைப்பர். 1977 இல் நடந்த பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து, தார்மீக சமுதாயம் அமைப்பதுதான் தனது நோக்கம் என்றும் சொல்லி, அதனை தமது தாய் மொழியில் தர்மிஷ்ட சமாஜய என வர்ணித்தார். ஆனால், அந்த தார்மீக ஆட்சியில் 1977 – 1981 -1983 ஆம் ஆண்டுகளின் காலப்பகுதியில் நடந்த பல சம்பவங்களை பார்க்கும்போதும் அகில இலங்கை எங்கும் நிகழ்ந்த வன்முறைகள், தீவைப்புகள், படுகொலைகள் அனைத்தையும் சீர்தூக்கிப்பார்க்கும்போதும், அதுதான் அவர் கனவு கண்ட தார்மீக சமுதாயமா..? எனவும் கேட்கத்தோன்றும்.

இவரது பதவிக்காலத்தில்தான் யாழ்ப்பாணம் பொதுநூலகமும் கயவர்கள் ஏவிவிட்ட தீ அரக்கனுக்கும் பலியாகியது. அவரது அரசியல் எதிரிகள் அவரை "மிஸ்டர் தர்மிஸ்டர்" எனவும் அழைத்தனர். பதினொரு பிள்ளைகளில் மூத்த புதல்வனாக அவர் பிறந்த இல்லம்தான் ஒன்பது தசாப்தங்களுக்கு முன்பிருந்து வீரகேசரி நாளிதழ் வெளியாகும் கட்டிடம்!

இலங்கை பிரித்தானியரின் ஆளுகைக்குள் இருந்த காலப்பகுதியில் பிறந்திருக்கும் ஜே.ஆர்., ஒரு கத்தோலிக்க குடும்பப்பின்னணியை கொண்டிருந்தவர். அவரது பெயரிலிருந்தே அதனையும் தெரிந்துகொள்ளமுடிகிறது. அவர் மட்டுமல்ல, சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா, ஃபீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா ஆகியோரும் கத்தோலிக்கப் பின்னணி கொண்டிருந்தவர்கள்தான்.

•Last Updated on ••Saturday•, 31 •October• 2020 22:13•• •Read more...•
 

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை வழங்கும் சான்றோர் சந்திப்பு: "பெண்களும் நவீனத் தமிழ் நாடகங்களும்"

•E-mail• •Print• •PDF•

Sivanesan Shivaleelan < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >

•Last Updated on ••Sunday•, 25 •October• 2020 08:24••
 

படித்தோம் சொல்கின்றோம் : மெல்பன் - ஜேகே எழுதிய சமாதானத்தின் கதை ஆக்க இலக்கியத்தில் பிரதேச மொழிவழக்குகளின் வகிபாகம்

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர்  முருகபூபதிஎன் கொல்லைப்புறத்துக் காதலிகள் எழுதிய ஜே.கே.யின் இரண்டாவது கதைத்தொகுதி சமாதானத்தின் கதை. எவரும், நூலின் தலைப்பினைப் பார்த்ததும், “ இது ஏதோ இலங்கையில் நீடித்த போர்க்காலத்தில் இடையில் வந்த சமாதான காலத்தின் கதையோ..? “ என்றுதான் எண்ணக்கூடும். இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் வீதியிலும் நகரம், கிராமத்திலும் நாம் அன்றாடம் காணக்கூடிய பரிதாபத்துக்குரிய பாத்திரம்தான் அந்த சமாதானம். அத்தகைய பாத்திரங்களின் நதிமூலம், ரிஷி மூலம் எவருக்கும் தெரியாது.

ஆக்க இலக்கியப் படைப்பாளி ஒருவர், தான் எழுதும் கதைகள் யாருக்காக எழுதப்படுகின்றன..? என்ற முன்தீர்மானங்கள் எதுவும் இல்லாமல்தான் எழுதுகிறார். வாசகரிடத்தில் அவற்றின் ஆயுள் எவ்வளவு காலம் என்பதையும் படைப்பாளி அறிய மாட்டார்.

இன்று ஈழத் தமிழர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புகலிட இலக்கியம், ஆறாம் திணைவகை சார்ந்த இலக்கியம் எனப்படும் புதிய வாசிப்புக்களம் தோன்றி மூன்று தசாப்த காலமாகிவிட்டது. நாம் ஒரு காலகட்டத்தில் ஜெயகாந்தனின் படைப்புகளில் சென்னைத் தமிழையும், தி. ஜானகிராமனின் படைப்புகளில் தஞ்சை – கும்பகோணத் தமிழையும், கி. ரா. வின் எழுத்துக்களில் கரிசல் தமிழையும் பிரபஞ்சனின் எழுத்தில் புதுவைத்தமிழையும் வண்ணதாசனின் எழுத்தில் திருநெல்வேலித் தமிழையும், சுந்தரராமசாமியின் எழுத்தில் நாகர்கோயில் தமிழையும் படித்து புரிந்துகொண்டோம். அவ்வாறு எமது அயல்நாட்டின் தமிழக வாசகர்கள், ஈழத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த தமிழ்மக்களின் ஆத்மாவையும் மண்வாசனையையும் பேச்சு மொழி வழக்கினையும் புரிந்துகொள்கின்றார்களா…? என்ற கேள்வி, எங்கள் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்து அவுஸ்திரேலியாவில் வதியும் ஜேகேயின் கதைகளை படிக்கும்போது எழுந்தது.

•Last Updated on ••Sunday•, 25 •October• 2020 08:17•• •Read more...•
 

வாசகர் முற்றம் – 10 : வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்த பெற்றோரை ஆதர்சமாக கொண்டிருக்கும் சுபாஷினி சிகதரன் ஜெயகாந்தனிலிருந்து ஜெயமோகன் வரையில் பயணிக்கும் தேர்ந்த வாசகி

•E-mail• •Print• •PDF•

சுபாஷினி ஶ்ரீதரன்எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்  2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்ட வானவில் கவிதைத் தெகுப்பில் 31 கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. அதில் இறக்கைகள் விரியட்டும் என்ற கவிதையை எழுதியிருந்தவர் மெல்பனில் வதியும் சுபாஷினி ஶ்ரீதரன்.   “ கவிதை எழுதத்தெரியாத முருகபூபதி,  இந்த நூலை தொகுப்பதற்கு முன்வந்தார்  “  என்றும் அச்சமயத்தில் என்மீது விமர்சனமும் ஒரு சிலரால் வைக்கப்பட்டபோது மௌனமாக சிரித்தேன்.

கவிதை நயம் நூலை கவிஞர் முருகையனுடன் இணைந்து எழுதியிருக்கும் பேராசிரியர் க. கைலாசபதியும் கவிதை எழுதிப்பழகித்தான் அந்த நூலை எழுதினாரோ தெரியவில்லை!  குறிப்பிட்ட வானவில் கவிதைத் தொகுப்பிற்கு முன்னர் உயிர்ப்பு என்ற கதைத் தொகுதியையும் எமது சங்கத்தின் சார்பில் 2005 இல் வெளியிட்டபோது,  எனது கதை அதில் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டேன். ஆனால், எவரும் அது பற்றி விமர்சிக்கவில்லை. நடிக்கத்தெரியாத பல இயக்குநர்கள் நெறிப்படுத்திய படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. ஆனால், அவர்கள் மீது நடிக்கத் தெரியாதவர் இயக்கவந்துள்ளார் என்று எவரும் முறைப்பாடு சொல்லவில்லை. சரி… அதுபோகட்டும் !  இந்த வாசகர் முற்றத்துக்கு வருகின்றேன்.

இங்கு நான் நினைவுபடுத்தும் கவிஞர் இ. முருகையனின் பூர்வீகமான தென்மராட்சியில் சாவகச்சேரி சரசாலையில்  ஶ்ரீதரன் – நகுலேஸ்வரி தம்பதியரின் அருமை மகளான சுபாஷினி, 2004 ஆம் ஆண்டு  நடுப்பகுதியில் குளிர்காலத்தில் மெல்பனுக்கு வந்தவர்,  பதினாறு வருடங்கள் கடந்த பின்னரும்,   உடல் இங்கும் மனம்  தாயகத்திலுமாக  வாழ்ந்துகொண்டிருக்கும்  கலை – இலக்கிய ஆர்வலர். அண்மையில் இவர் எழுதிய  திருவண்ணாமலை தரிசனம் பற்றிய பயண இலக்கியம் படித்து வியந்தேன்.  அழகியல் நேர்த்தியுடன்  அதனை  படைத்திருந்தார்.  அதில் பொதிந்திருந்த  தீவிரமான தேர்ந்த  வாசிப்பு அனுபவமும் எனக்கு புலப்பட்டது. அதனால் நான் எழுதிவரும்  வாசகர் முற்றம் தொடருக்காக அவருடன் தொடர்புகொண்டு பேசநேர்ந்தது.

•Last Updated on ••Tuesday•, 06 •October• 2020 03:10•• •Read more...•
 

ஆங்கிலத்தில் அமரர் யுகமாயினி சித்தனின் மொழிபெயர்ப்பில் நடேசனின் நாவல் 'அசோகனின் வைத்தியசாலை' (King Asoka’s Veterinary Hospital)!

•E-mail• •Print• •PDF•

- 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான படைப்புகள் பல நூலுருப்பெற்று வருகின்றன. அது மகிழ்ச்சியினைத்தருவது. திலகபாமா, நாகரத்தினம் கிருஷ்ணா, பிச்சினிக்காடு இளங்கோ, வ.ந.கிரிதரன், முனைவர் ஆர்.தாரணி, நடேசன் , ஜெயபாரதன் எனப் பலரின் படைப்புகள் நூலுருப்பெற்றுள்ளன. நாவல்களைப்பொறுத்தவரையில் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்', 'அமெரிக்கா (திருத்திய இரண்டாம் பதிப்பு) , முனைவர் ஆர். தாரணியின் 'மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) தமிழ் மொழிபெயர்ப்பு! , நாகரத்தினம் கிருஷ்ணாவின் மொழிபெயர்ப்பில் மார்கெரித் த்யூரா என்னும் பிரெஞ்சு எழுத்தாளரின் நாவலான காதலன், நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை' ஆகியன நூலுருப்பெற்றுள்ளன. சீர்காழி தாஜின் குறுநாவலான 'தங்ஙள் அமீர்' நூலுருப்பெற்றுள்ளது. மேலும் பல பதிவுகளில் வெளியான படைப்புகளை (சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள்) உள்ளடக்கிய நூல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அறிவியல் அறிஞர் ஜெயபாரதனின் அறிவியற் கட்டுரைகளைக் குறிப்பிடலாம். இவ் வரிசையில் தற்போது அமரர் 'யுகமாயினி' சித்தனின் ஆங்கில மொழிபெயர்ப்பில் நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை' 'King Asoka’s Veterinary Hospital' என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. அது பற்றி எழுத்தாளர் முருகபூபதி 'எழுதிய கட்டுரையிது. - பதிவுகள்-]


 

King Asoka’s Veterinary Hospitalஅமரர் யுகமாயினி சித்தன்அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் விலங்கு மருத்துவர் நடேசன், கடந்த மூன்று தசாப்த காலமாக இலக்கியப் பிரதிகளும் ( சிறுகதை, நாவல், பயண இலக்கியம் ) பத்தி எழுத்துக்களும், தமது தொழில் சார்ந்த புனைவுசாராத படைப்புகளையும் எழுதி வருபவர். இவரது சிறுகதைகளும் நாவல்களும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர் எழுதிய 'வண்ணாத்திக்குளம்', 'உனையே மயல்கொண்டு' ஆகிய நாவல்கள் ஆங்கிலத்திலும், வண்ணாத்திக்குளம் , மலேசியன் ஏர்லைன் 370 ( கதைத் தொகுதி ) என்பன சிங்கள மொழியிலும் வெளிவந்துள்ளன. உனையே மயல்கொண்டு நாவலும் Lost in you என்ற பெயரில் ஆங்கிலத்தில் வரவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் என்ற எனது கட்டுரையில் ஏற்கனவே இந்தத் தகவல்கள் குறித்து விரிவாக எழுதியிருக்கின்றேன்.

நடேசனின் நூல்களின் வரிசையில் தற்போது அவர் சில வருடங்களுக்கு முன்னர் எழுதிய அவுஸ்திரேலியா புகலிட வாழ்வையும் விலங்கு மருத்துவப்பணியையும் சித்திரித்த 'அசோகனின் வைத்தியசாலை' நாவலும் தற்போது ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. குறிப்பிட்ட ஆங்கில மொழிபெயர்ப்பை King Asoka’s Veterinary Hospital, என்னும் பெயரில் Amazon இல் தொடர்புகொண்டால் கிடைக்கிறது.

இந்த நாவல் முதலில் கனடாவிலிருந்து நீண்ட காலமாக வெளியாகும் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவந்தது.அந்த இணையத்தளத்தை நடத்தும் வ.ந.கிரிதரன் அவர்களும் தொடர்ந்து இலக்கியப்பிரதிகள் எழுதிவருபவர். அவரது படைப்புகளும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன. அவர் தொடர்ந்தும் தரமான தமிழ் நாவல்களையும் மொழிபெயர்ப்பு படைப்புகளையும் பதிவுகளில் வெளியிட்டு வருபவர்.

•Last Updated on ••Thursday•, 17 •September• 2020 23:51•• •Read more...•
 

செப்டெம்பர் 11 ஆம் திகதி மகாகவி பாரதி நினைவு தினம்

•E-mail• •Print• •PDF•
எழுத்தாளர்  முருகபூபதி

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் “ எனச்சொன்ன பாரதியை, ருஷ்யமொழிக்கும் சிங்கள மொழிக்கும் அறிமுகப்படுத்திய தமிழ் அபிமானிகள் !

செப்டெம்பர் 11 ஆம் திகதி - மகாகவி பாரதியின் நினைவுதினத்தை முன்னிட்டு, வழக்கம்போன்று பாரதி பற்றி எழுதாமல், பாரதியை பிறமொழிகளுக்கு அறிமுகப்படுத்தி கொண்டாடிய பிறமொழிகளை தாய்மொழியாகக் கொண்டிருந்த தமிழ் அபிமானிகள் பற்றிய குறிப்புகளை பதிவுசெய்வதற்காக எழுதப்பட்டதே இந்த ஆக்கமாகும்.

இலங்கையில்   1982 -  1983    காலப்பகுதியில்   எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,      பாரதி     நூற்றாண்டு விழாக்களை   நாடு   தழுவிய    ரீதியில்     நடத்தியபொழுது,     83   ஜனவரியில்      தமிழகத்திலிருந்து      வருகைதந்த    மூத்த    படைப்பாளியும்      பாரதி    இயல்     ஆய்வாளருமான    எனது   உறவினர் தொ.மு. சி.ரகுநாதன்   அவர்கள்     எனக்காக       இரண்டு      பெறுமதியான    நூல்களை தம்மோடு எடுத்துவந்து   எனக்குத் தந்தார். ஒன்று, அவர்      எழுதிய     அவரது      நெருங்கிய     நண்பர்      புதுமைப்பித்தன்     வரலாறு       மற்றது,      மகாகவி      பாரதி     பற்றி    சோவியத்     அறிஞர்கள்     என்ற நூல். பாரதி    நூற்றாண்டை  முன்னிட்டு      சோவியத் விஞ்ஞானிகள்,கவிஞர்கள்,   எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்  இணைந்த     ஒரு குழு      நூற்றாண்டை    சோவியத்தில்   கொண்டாடுவதற்காக மாஸ்கோவில்        அமைக்கப்பட்டது. அந்தக்குழுவில்    இணைந்திருந்த     சோவியத்    அறிஞர்கள்     செர்கிஏ.பரூஜ்தீன்    -        பேராசிரியர்   -   இ.பி.    செலிஷேவ்   கலாநிதி      எம்.எஸ்.ஆந்திரனோவ்   -       கலாநிதி     விளாதீமிர்   ஏ. மகரெங்கோ,   கலாநிதி    வித்தாலி     பெத்ரோவிச்      ஃபுர்னிக்கா   -      கலாநிதி    எல். புச்சிக்கினா  (பெண்) கலாநிதி   செம்யோன்      கெர்மனோவிச்      ருதின்    (இவரது தமிழ்ப்புனைபெயர்    செம்பியன்)        கலாநிதி      அலெக்சாந்தர்     எம் துபியான்ஸ்கி   -   திருமதி     இரினா    என்.    ஸ்மிர்னோவா     ஆகியோரின் பெறுமதியான     கட்டுரைகள்      இந்தத்   தொகுப்பில்     இடம்பெற்றிருந்தன. பெறுமதியான      என்று        குறிப்பிடுவதற்குக்காரணம்        இருக்கிறது.

•Last Updated on ••Wednesday•, 16 •September• 2020 10:11•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம்: காற்றுவெளி – மொழிபெயர்ப்புச்சிறப்பிதழ்! வாசிப்பு அனுபவத்திற்கு புதிய வாசல்களை திறந்திருக்கும் சிற்றிதழ் !

•E-mail• •Print• •PDF•

காற்றுவெளி மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்

எழுத்தாளர்  முருகபூபதி

இங்கிலாந்திலிருந்து எழுத்தாளர் முல்லைஅமுதன் நீண்டகாலமாக வெளியிட்டுவரும் காற்றுவெளி இம்மாதம் ( 2020 ஆவணி ) மொழிபெயர்ப்பு சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. இவ்விதழில் ( அமரர்கள் ) பெரி.சண்முகநாதன், எம்.எச்.எம்.ஷம்ஸ் ஆகியோர் மொழி பெயர்த்த துருக்கிய கவிதை (நஸீம் ஹிக்மத்/துருக்கி), சிங்கள கவிதை (பராக்கிரம கொடிதுவக்கு ) என்பனவற்றுடன், அ.தமிழ்ச்செல்வன்(கடவுள் என்று..) முனைவர்.ர.ரமேஷ் (சந்திரா மனோகரன்), வ.ந.கிரிதரன் (பிஷ் ஷெல்லி, கவிஞர்.பைரன்), லதா ராமகிருஷ்ணன்(அன்னா அக்மதோவா), ராஜி வாஞ்சி(பிரான்ஸிஸ் எலன் வாட்கின்ஸ் ஹார்பர்), பேராசிரியர். மலர்விழி. கே (மூட்னகூடு.சின்னச்சாமி /பா.தென்றல்), தமிழ்க்கிழவி(அஜித்.சீ.ஹேரத் டீ.பிரீத்தி,எம்.கல்பனா, கூம்பியா, பேராசிரியர்.கிளார்க்), கோகிலவாணி தேவராஜா (லாரா ஃபெர்ஹஸ்/ அனிருத்தன் வாசுதேவன்),சுகிர்தா சண்முகநாதன்(ரேசா சைய்ச்சி/பேர்சிஸ்), முருகபூபதி ஆகியோரும் எழுதியுள்ளனர்.

மு.தயாளன் ( மாக்சிம்.கார்க்கி), மதுரா (Nichanor parra/ Miller Williams  ), சாந்தா தத் (எம்.எஸ்.சூர்யநாராயணா),க.நவம்(’Things you didn’t do!’), ஆகியோரின் படைப்புக்களும் வெளிவந்துள்ளன. பிறமொழி கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளும் இடம்பெற்றிருப்பதனால், முடிந்தவரையில் இதனை முழுமையான சிறப்பிதழாக்க முயன்றிருக்கும் ஆசிரியர் கவிஞர் சோபா அவர்கள் பாராட்டுக்குரியவர்.

மேனாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்ற மகாகவி பாரதியின் கனவை கவிஞர் சோபா அவர்களும் முல்லை அமுதனும் நனவாக்கியிருக்கிறார்கள். அத்துடன் பாரதி, சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று சொன்னதையும் விகற்பமாக அவதானிக்கும் எம்மவர்களில் பலருக்கு, “ ஏன்… அவர் சிங்கள இலக்கியங்களை தமிழர்களும், தமிழ் இலக்கியங்களை சிங்களவர்களும் படித்து தெரிந்துகொள்ளவேண்டும் என்ற சிந்தனையை மறைபொருளாகவும் கொண்டு சொல்லிச் சென்றார் என்ற பார்வையிலும் ஏற்கமுடியவில்லை!? என்றும் இச்சந்தர்ப்பத்தில் யோசிக்கத் தோன்றுகிறது.

•Last Updated on ••Tuesday•, 25 •August• 2020 12:09•• •Read more...•
 

அக்கினிக்குஞ்சு: 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்'

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர்  முருகபூபதி
ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் அக்கினிக்குஞ்சு இணைய இதழில் எழுத்தாளர் முருகபூபதியின் 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்' என்னுமொரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
•Last Updated on ••Thursday•, 06 •August• 2020 01:19•• •Read more...•
 

அஞ்சலி: பத்திரிகையாளர் காசி. நவரட்ணம் நினைவுகள்!\

•E-mail• •Print• •PDF•

காசி. நவரட்ணம்இந்த 2020 ஆண்டு கொரோனோவுடன் பிறந்து எனக்குப்பிரியமான சிலரையும் மரணிக்கச்செய்துவிட்டது. தொடர்ந்து வரும் மரணச்செய்திகள் மனதில் சஞ்சலத்தையும் பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி, நானும் மாரடைப்புக்குள்ளாகி, மருத்துவமனை சென்று திரும்பினாலும், துயரச்செய்திகள் அடுத்தடுத்து வந்துகொண்டுதானிருக்கின்றன. இலட்சக்கணக்காக மக்கள், கண்ணுக்குத்தெரியாத எதிரியால் கொல்லப்பட்டுக்கொண்டும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தப்பதிவினை எழுதும் ஜூலை மாதம் இறுதிவரையில் எனக்குப்பிரியமான சிலரை இழந்துவிட்டேன்.

கலைவளன் சிசு நாகேந்திரன், ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் நீர்வை பொன்னையன், பிரான்ஸில் கலைஞர் ஏ. ரகுநாதன், மற்றும் எழுத்தாளர் தமிழ்ப்பிரியா, அவுஸ்திரேலியா மெல்பனில் நாகராஜா மாஸ்டர், 3 CR வானொலி சண்முகம் சபேசன், கலை, இலக்கிய ஆர்வலர் இராஜேந்திரா, இலங்கையில் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன், தமிழகத்தில் விமர்சகர் கோவைஞானி…. இவ்வாறாக ஒவ்வொருவராக விடைபெற்றபோது, அவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலிப்பகிர்வுகளை தொடர்ச்சியாக எழுதி எழுதி மனதை தேற்றிக்கொள்ள முடிந்தாலும், இந்தத் தொடர் முற்றுப்பெறாமல் தொடருவதும் விதிப்பயன்தானோ…? என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, நேற்றைய தினம் எனது நீண்டகால நண்பரும் இலங்கையின் மூத்த பத்திரிகையாளருமான காசி. நவரட்ணமும் மறைந்தார் என்ற செய்தி வந்து சேர்ந்துள்ளது.

வீரகேசரியில் நான் பணியாற்றிய காலத்தில், அவர் அதன் யாழ்ப்பாண நிருபராகவிருந்தவர். தினமும் நான் தொலைபேசியில் உரையாடும் பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். மற்றவர்கள் வவுனியா மாணிக்கவாசகர், மட்டக்களப்பு நித்தியானந்தன், திருகோணமலை இரத்தினலிங்கம், கண்டி க.ப. சிவம், மாத்தறை முகம்மத், குண்டசாலை குவால்தீன், புலோலி தில்லைநாதன், யாழ்ப்பாணம் அரசரட்ணம். வடக்கு கிழக்கு போர்க்காலச்செய்திகளே எழுதிஎழுதி களைத்துப்போயிருக்கின்றோம். இரவில் கனவிலும் அந்தச்செய்திகள் வந்து தொல்லை கொடுக்கும். நண்பர் காசி. நவரட்ணம் அச்சுவேலி ஆவரங்காலிருந்து வீரகேசரி யாழ். கிளை அலுவலகத்திற்கு வருவார். அரசரட்ணம் மானிப்பாயிலிருந்து வருவார். அந்தக்கிளை அலுவலகம் அப்போது யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு முன்பாக இருந்தது. மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் வீடும் அந்த அலுலகத்திற்கு எதிர்ப்புறமாக முன்னால் ஒரு திருப்பத்தில் உள்ளே அமைந்திருந்தது. யாழ். செல்லும்போதெல்லாம் எனது பெரும்பாலான பொழுதுகள் அவ்விடத்தில் கரைவதுமுண்டு.

•Last Updated on ••Wednesday•, 29 •July• 2020 22:55•• •Read more...•
 

அஞ்சலிக்குறிப்பு: கோவை ஞானி நினைவுகள்! மனக்கண்ணால் இலக்கியம் பேசியும் எழுதியும் இயங்கிய ஆளுமை !

•E-mail• •Print• •PDF•

கோவை ஞானிஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கோயம்புத்தூரில் மாலைநேர தனது வீதியுலாவுக்கு என்னை அழைத்துச்சென்ற மூத்த இலக்கிய விமர்சகர் கோவை ஞானி பற்றிய நினைவுகள் மனதில் அலைமோதுகின்றன. இம்மாதம் ( ஜூலை ) முதலாம் திகதிதான் அவர் தமது 85 வயது அகவையை நிறைவுசெய்துகொண்டு, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தவர். 2013 ஆம் ஆண்டு தமிழகம் சென்றிருந்தபோது, யுகமாயினி சித்தனுடன், சென்று அவரைப்பார்த்துவிட்டுத் திரும்பி, ஒரு பதிவும் எழுதியிருக்கின்றேன். அன்றைய தினம் பசுமையானது. நெடும்பகல் பொழுது. முதல் நாள் இரவு கோயம்புத்தூரில் இறங்கி, சித்தன் இல்லத்தில் தங்கிவிட்டு மறுநாள் காலை ஞானியைப் பார்க்கப்புறப்பட்டேன். வழித்துணை சித்தன். இலக்கிய உலகில் நான் பிரவேசித்த காலப்பகுதியில் எனக்கு இரண்டுபேரின் பெயர்கள் சற்று மயக்கத்தை கொடுக்கும். ஒருவர் பரீக்ஷா ஞாநி. மற்றவர் கோவை ஞானி.

பரீக்ஷா ஞானி நாடக எழுத்தாளராக இயக்குநராக பிற்காலத்தில் பத்திரிகையாளராக எனக்கு அறிமுகமானவர். பல வருடங்களுக்கு முன்னர் அவர் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு வந்தபோது, சுபமங்களா ஆசிரியரிடம் எனது தொலைபேசி இலக்கத்தை பெற்றுவந்து குவிண்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து தொடர்புகொண்டார். நான் அப்போது “ நீங்கள் பரீக்ஷா ஞாநியா, அல்லது கோவைஞானியா?” என்று கேட்டதும் தற்போது நினைவுக்கு வருகிறது. இன்று இரண்டுபேரும் இல்லை. யுகமாயினி சித்தனும் இல்லை. வெறுமை சூழ்ந்திருக்கும் உணர்வோடுதான் கோவை ஞானியை மீண்டும் நினைவுகூருகின்றேன்.

வீரகேசரி வாரவெளியீட்டுக்குப் பொறுப்பான ஆசிரியர் பொன்.ராஜகோபால் எனக்கு இலக்கியப்பலகணி பத்திகளை எழுதுவதற்கு ரஸஞானி என்ற புனைபெயரைச்சூட்டியது பற்றி அன்று கோவை ஞானியிடம் சொன்னபோது, வாய்விட்டுச்சிரித்து, “ மற்றும் ஒரு ஞானியா..? “ எனக்கேட்டவர், இன்றில்லையென்றாகிப்போனது ஆழ்ந்த துயரத்தை தந்தாலும், நீண்ட நெடுங்காலமாக கண்பார்வையுமின்றி, ஆத்மபலத்துடன் இயங்கிவந்து, “ இனிப்போதும் “ என்று அவர் விடைபெற்றிருப்பதாவே கருதிக்கொண்டு, மனதை தேற்றமுடிகிறது.

•Last Updated on ••Wednesday•, 22 •July• 2020 22:58•• •Read more...•
 

அஞ்சலிக்குறிப்பு: பெண்களின் தார்மீகக் குரலாக ஒலித்த இலக்கிய சகோதரி பத்மாசோமகாந்தன் மெளனமானார் ! ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இலக்கிய உலகில் வலம்வந்த அயராத உழைப்பாளியை இழந்தோம் !!

•E-mail• •Print• •PDF•

அஞ்சலி:  எழுத்தாளர் 'புதுமைப்பிரியை' (பத்மா சோமகாந்தன்) மறைவு!ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பை வழங்கியவரும், தனது பள்ளிப்பருவத்திலிருந்தே இலக்கிய எழுத்தூழியத்தில் ஈடுபட்டவருமான சகோதரி திருமதி பத்மா சோமகாந்தன் நேற்றையதினம் ஜூலை 15 ஆம் திகதி கொழும்பில் மறைந்தார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்தது. இறுதியாக கடந்த ஆண்டு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்த எனது “ இலங்கையில் பாரதி “ நூலின் வெளீயீட்டு அரங்கில்தான் சந்தித்தேன். ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக அவரை நன்கு அறிவேன். நெருங்கிய உறவொன்றை இழந்த உணர்வோடு, இந்த அஞ்சலிக்குறிப்பினை கனத்த மனதுடன் எழுதுகின்றேன். அவர் இருக்கும்போது நான் அவரைப்பற்றி எழுதிய ஒரு கட்டுரையை வாசித்துவிட்டு, மிகுந்த உற்சாகத்துடன் கொழும்பிலிருந்து தொலைபேசி ஊடாக என்னை வாழ்த்தி பாராட்டினார். எங்கள் நீர்கொழும்பூரின் சமய - தமிழ்ப்பணிக்கெல்லாம் அவரும் அவரது கணவர் மறைந்த சோமகாந்தனும் நீண்ட காலமாக முன்னின்று பங்களிப்பு செய்தவர்கள். அதனால், எங்கள் ஊர் மக்கள் சார்பாகவும் நான் எழுதவேண்டும். முன்னர் நான் அவர் பற்றி எழுதிய ஆக்கத்தை படித்துவிட்டு, அவ்வெழுத்துக்களில் தான் பழைய நினைவுகளில் சஞ்சரித்ததாகச் சொன்னார். அவர் அன்று சஞ்சரித்த அந்த கடந்த கால செய்திகளுடன் மீண்டும் இந்த குறிப்புகளை பதிவுசெய்கின்றேன்.

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இன்றுவரையில் தீராதிருப்பதற்கு பலரும் பல காரணங்களைச்சொல்லி வருகிறார்கள். விதேசியர்கள் வந்து சூறையாட வேண்டியதையெல்லாம் அள்ளிக்கொண்டு, இனி எக்கேடும் கெட்டுப்போங்கள் என புறப்பட்டார்கள். அவர்கள் தந்த சுதந்திரம் எமது அரசியல்வாதிகளுக்கு தந்திரமானதுதான் மிச்சம். இந்தப்பின்னணியில் முதல் பிரதமராக பதவிக்கு வந்த டீ.எஸ். சேனாநாயக்கா, 1952 இல் காலிமுகத்திடலில் குதிரை சவாரிக்குச்சென்று விழுந்து இறந்ததும், அடுத்த பிரதமர் யார்…? என்ற பதவிப்போட்டியில் வேரோடியிருந்த இனப்பிரச்சினை இன்னமும் தீரவில்லை. சிங்களத்தலைவர்கள் பதவிக்கு வரவேண்டுமானால் இலங்கை தேசிய சிறுபான்மை இனங்கள் பலிக்கடாவாகவேண்டும்.

1955 இல் பிரதமராக யாழ்ப்பாணம் சென்ற சேர். ஜோன் கொத்தலாவலை, வடபுலத்து மக்கள் வழங்கிய மாலை மரியாதை வரவேற்பினால் மனம் குளிர்ந்து, ” தமிழுக்கும் சிங்களத்திற்கும் சம அந்தஸ்து வழங்க சட்டம் கொண்டுவருவேன்” என்றார். இதனை தவறாகப்புரிந்துகொண்ட எச். எல். மேத்தானந்தா என்ற ஒரு பௌத்த மத தீவிரவாதி ” சரிதான், இனிமேல் சிங்களவர்களும் தமிழ்தான் படிக்கவேண்டிவரும் ” என்று தென்னிலங்கையில் வகுப்புவாதம் கக்கத்தொடங்கினார். அதனை தனக்குச்சாதமாக்கினார் பண்டாரநாயக்கா. இதனைப்புரிந்துகொண்ட கொத்தலாவலை, தாமதிக்காமல் ஒரு பல்டி அடித்தார். 1956 இல் களனியில் ஐ.தே.கட்சி மாநாட்டில், தனிச்சிங்களமே ஆட்சி மொழி என்றார். பண்டாரநாயக்கா அதன் பிறகும் சும்மா இருப்பாரா…? தாம் பதவிக்கு வந்தால் 24 மணிநேரத்தில் சிங்களத்தை ஆட்சிமொழியாக்குவேன் என்றார். ஐ.தே.க.வை தோற்கடிக்க ஐம்பெரும் சக்திகளை (பஞ்சமா பலவேகய) திரட்டிக்கொண்டு தேர்தலில் வென்ற பண்டாரநாயக்காவுக்கு உண்மையில் அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை. டீ.எஸ். சேனாநாயக்காவுக்குப்பிறகு தனக்கு வரவேண்டிய சந்தர்ப்பம் டட்லிக்கும் அவரையடுத்து கொத்தலாவலைக்கும் சென்றதுதான் அவரை சிங்கள தீவிரவாதம் பேசக்காரணமாக இருந்திருக்கிறது. அதற்குப்பின்னாலிருந்து நெருப்பு மூட்டியவர்கள் மேத்தானந்தா, புத்தரகித்த தேரோ ஆகியோர். இன்றும் இந்தக்கதைதான் வேறு வேறு ரூபத்தில் இலங்கையில் நீடிக்கிறது. ஏறச்சொன்னால் எருதுக்குக்கோபம் இறங்கச்சொன்னால் முடவனுக்கு கோபம் என்பார்களே… அவ்வாறு யாராவது ஒரு சிங்களத்தலைவர் இனப்பிரச்சினைக்கு தீர்வுகொண்டுவந்தால் மற்ற சிங்களத்தலைவர் எதிர்ப்பார். இன்று எதிர்ப்பவர் நாளை பதவிக்கு வந்து நல்ல தீர்வு சொன்னால், முன்னர் நல்ல தீர்வுகொண்டுவர விரும்பியவர், அதனை ஆதரிக்காமல் எதிர்ப்பார். இது முற்றுப்பெறாத கதை.

•Last Updated on ••Thursday•, 16 •July• 2020 21:26•• •Read more...•
 

கலைஞர் லடீஸ் வீரமணி நினைவுகள்

•E-mail• •Print• •PDF•

லடீஸ் வீரமணிஎழுத்தாளர்  முருகபூபதிஅன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். ஈழத்துக் கலைஞர் நடிகவேள் லடீஸ் வீரமணி பற்றிய இரண்டு பதிவுகளை தங்கள் பதிவுகளில் படித்தேன். பழைய நினைவுகளை அந்தப்பதிவுகள் நனவிடை தோயவைத்துள்ளன. லடீஸ் வீரமணி சிறந்த கலைஞர்.  நாடகக் கலைக்கு புத்துயிர்ப்பூட்டியவர்.

அ.ந. கந்தசாமி நினைவரங்கு கொழும்பு கொள்ளுப்பிட்டி தேயிலை பிரசார சபை மண்டபத்தில் நடந்தபோது , அந்நிகழ்வுக்கும் லடீஸ்தான் தலைமை தாங்கினார். மூத்த எழுத்தாளர்கள் கே. டானியல், சில்லையூர் செல்வராசன், கைலாசபதி, எம். எஸ். எம். இக்பால் உட்பட பலர் கலந்துகொண்டார்கள். இக்கூட்டத்தில் எம்.எஸ். எம். இக்பால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சிலரைத்தாக்கிப்பேசினார். அறிஞர்கள் கைலாசபதி, கமாலுதீன் முதலானவர்கள் மீதும் அவர் கண்டனக்கணைகளை எய்தார். கைலாஸ் இதுபோன்ற தருணங்களில் விலகிச்செல்லும் இயல்புகொண்டவர். கைலாஸ், கூட்டத்தின் நடுவே எழுந்து சென்றுவிட்டார். லடீஸ், என்னசெய்வது என்று தெரியாமல் அமைதி காத்தார்.

லடீஸ் எங்கள் நீர்கொழும்பூர் ஶ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் ஒரு திருவிழாவின்போது மஹாகவி  உருத்திரமூர்த்தியின் கண்மணியாள் காதை யை வில்லுப்பாட்டாக திறம்பட நடத்தியதை நேரில் பார்த்துள்ளேன். அவரது குரல்வளம்  அத்தகையது.கலைச்செல்வனும் அதில் பங்கேற்றார். இரவு 11 மணியிலிருந்து அதிகாலை வரையில் அந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, ஆலயத்தின் முன்பாக கடற்கரை வீதியில் அமைக்கப்பட்ட தற்காலிக மேடையில் ஏராளமான மக்களின் மத்தியில் நடைபெற்றது.லடீஸ் வீரமணி, ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன், நாவலையும் நாடகமாக்கி கொழும்பில் மேடையேற்றியவர். அதன்பின்னர்தான், ஜெயகாந்தனால், அக்கதை திரைப்படமாகி பிராந்திய மொழிப்படம் என்ற ரீதியில் தேசிய விருது பெற்றது. அக்கதையில் வரும் சிட்டி என்ற சிறுவனின் பாத்திரத்தில் பின்னாளில் பரவலாக அறியப்பட்ட கலைஞன் ஶ்ரீதர் பிச்சையப்பா நடித்திருந்தார்.

•Last Updated on ••Sunday•, 12 •July• 2020 00:06•• •Read more...•
 

அஞ்சலிக்குறிப்பு: தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம்

•E-mail• •Print• •PDF•

அஞ்சலிக்குறிப்பு: தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம்மெல்பனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக என்னுடனும் மற்றும் அனைவருடனும் சிரித்த முகத்துடனும் பண்பான இயல்புகளுடனும் உறவாடிய அன்பர் இராஜநாயகம் இராஜேந்திரா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.

அவரை, இறுதியாக கடந்த ஆண்டில் இங்கு நடைபெற்ற நடன ஆசிரியை திருமதி அகிலா விக்னேஸ்வரனின் நடனப்பள்ளியின் ( Narthana Sorubalaya Classical Dance - NSCD ) மாணவர்களின் வருடாந்த நடன ஆற்றுகையின்போது சந்தித்து உரையாடியதுதான் உடனடியாக நினைவுக்கு வந்தது.

எங்கே காண நேர்ந்தாலும், எனது எழுத்துக்கள் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை அவர் சொல்வதற்கு தவறுவதில்லை. அவர் சிறந்த தமிழ் கலை, இலக்கிய பற்றாளர் என்பதை அவரது உரையாடலிலிருந்து தெரிந்துகொள்ளமுடியும்.

அவர் முகநூலிலும் அவ்வப்போது தனது கருத்துக்களை பதிவிடுபவர் என்று, எனது நண்பர்கள் சொல்லி அறிந்துள்ளேன். என்வசம் முகநூல் இல்லாதமையால் அதுபற்றி வேறு எதுவும் மேலதிகமாக என்னால் சொல்ல முடியவில்லை.

மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்த காலப்பகுதியில் 1989 ஆம் ஆண்டு, நண்பர் இராஜரட்ணம் சிவநாதனின் ஏற்பாட்டில் தமிழ்க்கலை மன்றத்தினால், பார்க்வில் பல்கலைக்கழக உயர்தரக் கல்லூரியில் ஒரு நவராத்திரி காலத்தில் கலைமகள் விழாவை நடத்தினோம்.

அக்காலப்பகுதியில் மெல்பனுக்கு என்னைப்போன்று வருகை தந்திருந்த கலை ஆர்வம் மிக்க இளைஞர்கள், கலையும் கண்ணீரும் என்ற நாடகத்தை அவ்விழாவுக்காக மேடையேற்றத் தயாரானார்கள் அதில் ஒரு பரத நாட்டியம் இடம்பெறவேண்டிய காட்சியும் உள்ளடக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்ற நடனம் நன்கு தெரிந்த ஒரு இளம்பிள்ளை தேவைப்பட்டது.

•Last Updated on ••Sunday•, 20 •September• 2020 11:09•• •Read more...•
 

எதிர்வினை : 'வரலாற்றுச் சுவடுகள் - இவர் ஒரு பல்கலைக்கழகம்' பற்றி...

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர்  முருகபூபதிஅன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். இலக்கிய நண்பர் மல்லிகை ஜீவா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நீங்கள் எழுதியிருந்த குறிப்புகளைப்படித்தேன். அவர் பற்றி ஏற்கனவே நிறைய எழுதியிருக்கின்றேன். மல்லிகை ஜீவா நினைவுகள் என்ற நூலையும் 2001 ஆம் ஆண்டு எழுதி வௌியிட்டு, அந்த நூலை அவரது துணைவியாருக்கும் மூன்று பிள்ளைகளுக்கும்தான் சமர்ப்பணம் செய்துள்ளேன்.

உங்கள் பதிவுகள் இணைய இதழிலும் முருகபூபதி பக்கத்தில் நீங்கள் பதிவிட்டுள்ள எனது சில ஆக்கங்களிலும் ஜீவா பற்றி நான் எழுதியிருப்பவை, இன்னமும் வாசகரின் பார்வைக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறது.

மல்லிகை ஜீவாவின் பிறந்த தினம் வரும் நாட்களிலெல்லாம் முகநூல் எழுத்தாளர்கள் பலர் அவர்பற்றிய தமது நினைவுகளை பகிரவும் மறக்கமாட்டார்கள்.

ஆனால், வெளியுலகில் – இணைய உலகில் என்ன நடக்கிறது…? என்பது தெரியாமலேயே அவர், கொழும்பின் புறநகரில் மட்டக்குளி பிரதேசத்தில் ஏக புதல்வன் திலீபனின் இல்லத்தில் அஞ்ஞாதாவாசத்தில் சுவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டும் அவரைச்சென்று பார்த்துவிட்டுத்திரும்பி எழுதியிருந்தேன்.

மல்லிகை என்று பெயரில் ஒரு இலக்கிய இதழையே அவர்தான் நாற்பது வருடங்களுக்கு மேலாக நடத்தினார் என்பதையோ, யாழ். பல்கலைக்கழகத்தை முன்வைத்து அதனோடு ஜீவாவின் அளப்பரிய தொடர்பணிகளையும் ஒப்பீடு நீங்கள் செய்திருப்பதை இன்று அவரிடத்தில் எவரேனும் சொன்னால், “ அப்படியா…? . “ என்று அப்பாவித்தனமாகத்தான் அவர் திருப்பிக்கேட்பார்.

•Last Updated on ••Saturday•, 11 •July• 2020 22:23•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம் : வனவாசமும் - மனவாசமும்

•E-mail• •Print• •PDF•

* ஜூன் 24 - கவியரசு கண்ணதாசன் ( 1927 – 1981 ) பிறந்த தினம்

எனது வாழ்நாளில் நான் சந்தித்து பேசுவதற்கு பெரிதும் விரும்பியவர்கள் பலர். குறிப்பாக கவிஞர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்களைத்தான் நான் சந்திப்பதற்கு மிகவும் விரும்புவேன். ஏனென்றால் நானும் அவர்களின் வர்க்கத்தைச் சேர்ந்தவன்.

கவிஞர் வாலியை சந்தித்திருக்கும் நான் அவர் பற்றி ஒரே ஒரு கட்டுரைதான் எழுதியிருக்கின்றேன். ஆனால், கவியரசு கண்ணதாசனை சந்திக்கமுடியாமலேயே அவரது எழுத்துக்களைப் படித்தும் அவரது பாடல்களில் லயித்தும் அவரது மனைவியார் பார்வதி அம்மா, மற்றும் அவரது மகன்மார் காந்தி, கலைவாணன், அண்ணாத்துரை, மற்றும் பேரப்பிள்ளைகள், மருமகள் மீனா காந்தி கண்ணதாசன், சகோதரர் இராம கண்ணப்பன் ஆகியோருடன் உறவாடியும் உரையாடியும் - அவர்களின் அன்பான உபசரிப்பில் திழைத்தும், பல கட்டுரைகளை கடந்த காலங்களில் எழுதியுள்ளேன்.

எனது மனைவி மாலதியின் தம்பி கவிஞர் “காவ்யன் “ முத்துதாசன் விக்னேஸ்வரன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில், கண்ணதாசன் இல்லத்தில் அமைந்திருந்த கண்ணதாசன் பதிப்பகத்திலும் பணியாற்றியிருப்பவர். அத்துடன் இயக்குநர் கலைவாணன் கண்ணதாசனின் வா அருகில் வா திரைப்படத்திலும் சில காட்சிகளில் நடித்திருப்பவர். அதன் துணை இயக்குநருமாவார். பலரது பார்வையில் கண்ணதாசன் என்ற நூலின் தொகுப்பாசிரியருமாவார்.

அவரே எனக்கு கண்ணதாசனின் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினார். 1984 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் திருமதி பார்வதி அம்மா கண்ணதாசன் அவர்களை சந்தித்துவிட்டு வந்து, இலங்கை வீரகேசரி பத்திரிகையிலும் விரிவான கட்டுரை எழுதியிருக்கின்றேன். அதனை சிங்கப்பூர் பத்திரிகை ஒன்றும் மறுபிரசுரம் செய்துள்ளது. மீண்டும் 1990 ஆம் ஆண்டு எனது குழந்தைகளுடன் அங்கே சென்றும் அவரைப் பார்த்துள்ளேன். அவ்வேளையில்தான் அவர் நோய்வாய்ப்பட்டு சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

•Last Updated on ••Thursday•, 25 •June• 2020 00:51•• •Read more...•
 

அஞ்சலிக்குறிப்பு: தமிழ் ஈழக்கனவுடன் வாழ்ந்த மண்டூர் மகேந்திரன்

•E-mail• •Print• •PDF•

மண்டூர் மகேந்திரன் தமிழ் ஈழக்கனவுடன் வாழ்ந்த மண்டூர் மகேந்திரன் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்துள்ளது.

1970 இல் உருவான ஶ்ரீமா – என். எம். பெரேரா – பீட்டர் கெனமன் கட்சிகளின் கூட்டரசாங்கம் ஜனநாயக சோஷலிஸ குடியரசை நிறுவியதையடுத்து., சட்டமேதை என நன்கு அறியப்பட்ட கொல்வின் ஆர். டீ. சில்வா எழுதிய புதிய அரசியல் அமைப்பின் எதிரொலியாக , அதுவரையில் சமஷ்டி கோரிவந்த தமிழரசுக்கட்சியினரும் தமிழ் இளைஞர் பேரவையினரும் அந்த அரசியல் அமைப்பினை தீவிரமாக எதிர்க்கத் தொடங்கினர்.

அதே சமயம் , அந்த கூட்டரசாங்கம் சில முற்போக்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியது. உள்நாட்டு உற்பத்தியை பெருக்கியதுடன், பல நிறுவனங்களை அரசுடைமையாக்கி இலங்கை வானொலியை – ஒலிபரப்புக்கூட்டுத்தாபனமாக்கியது. திரைப்படக்கூட்டுத்தாபனம் அமைத்து உள்ளுர் சிங்கள – தமிழ் சினிமாவுக்கும் ஊக்கம் கொடுத்தது.

அத்துடன் தென்னிந்திய வணிக இதழ்களின் மீதும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதனால், இலங்கையில் பல தமிழ் சிற்றிதழ்களும் வெளிவரத்தொடங்கின. வீரகேசரி நிறுவனமும் மாதம் ஒரு நாவல் திட்டத்தில் பல ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்களை வெளியிடத்தொடங்கியது.

அஞ்சலி, ரோஜாப்பூ , மாணிக்கம் , தமிழமுது, பூரணி முதலான கலை இலக்கிய இதழ்களும் வெளிவரத்தொடங்கின.

இக்காலப்பகுதியில் கொழும்பில் இயங்கிய தமிழ் இளைஞர் பேரவையின் செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் இணைந்து இயங்கியவர்தான் மண்டூர் மகேந்திரன்.

•Last Updated on ••Thursday•, 25 •June• 2020 00:37•• •Read more...•
 

வாசகர் முற்றம் – அங்கம் 08: தமிழ்நாடு திருநெல்வேலி தினமலர் நாளேட்டிலிருந்து….. தேர்ந்த வாசகராகி…. படைப்பாளியாக உருமாறிய மணியன் சங்கரன் ! குற்றாலம் குளிர் சாரலிலிருந்து மெல்பன் குளிருக்கு வந்தவரின் இலக்கியப்பாதை ! !

•E-mail• •Print• •PDF•

எனது வாசகர் முற்றம் தொடரில் கடந்த காலங்களில் சாந்தி சிவக்குமார், ரேணுகா தனஸ்கந்தா, விஜி. இராமச்சந்திரன், கருப்பையா ராஜா, இரகுமத்துல்லா, அசோக், ‘வீடியோ ‘ கிருஸ்ணமூர்த்தி ஆகியோரைப்பற்றியும், இவர்களின் வாசிப்பு அனுபவங்களின் செல்நெறி பற்றியும் எழுதியிருந்தேன். இடையில் கொரோனா காலம் வந்தமையினால், நான் மேலும் எழுதவேண்டியவர்கள் பற்றிய பதிவு சற்று தாமதமானது. மீண்டும், அவுஸ்திரேலியாவில் எனக்கு அறிமுகமான இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் இணைந்திருப்பவர்களின் வாசிப்பு அனுபவங்களை எழுதத் தொடங்குகின்றேன். அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர், எனது இனிய நண்பரும், எமது அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், நடப்பாண்டின் துணைத்தலைவருமான திரு. மணியன் சங்கரன் அவர்கள். ஆங்கில – தமிழ் மொழிபெயர்ப்பில் வல்லுநராகவும் திகழும் இவர், விக்ரோரியா கலாசாரக்கழகத்திலும் தலைவராக பணியாற்றியவர். ஆங்கிலப்புலமை மிக்க இவரிடத்தில் நானும் சில மொழிபெயர்ப்புச் சுமைகளை ஏற்றியுள்ளேன். எனினும் முகம் கோணாமல் , சற்றும் தாமதியாமல் அச்சுமைகளையும் மனமுவந்து ஏற்று, இறக்கிவைத்திருப்பவர். பழகுவதற்கு எளிமையானவர். தமிழகம் பற்றிய அரிய பல தகவல்களை இவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதும் எனது வழக்கம். தமிழ்நாடு திருநெல்வேலித் தமிழின் மணத்தை இவரிடம் நுகர்ந்திருக்கின்றேன்.

•Last Updated on ••Friday•, 12 •June• 2020 20:14•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம்: கனடா - ஶ்ரீரஞ்சனியின் மூன்று நூல்கள் மீதான வாசிப்பு அனுபவம். முல்லைக்குத் துணையாகிய தேரும் பலமரங்களின் அழிவினால்தானே உருவானது…!? வாழ்வின் தரிசனங்களை சமர்ப்பிக்கும் கதைகள்

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர்  முருகபூபதிஒரு கிராமத்தில் மரத்தடியில் ஊர் மக்களை அழைத்து வைத்துக்கொண்டு, “ கற்பில் சிறந்தவள் யார்..? “ என்று அவர் கேட்பார். அங்கிருந்த ஆண்கள் ஒவ்வொருவரும் காவியப்பெண்ணின் பெயரைச்சொல்வார்கள்! கண்ணகி, மாதவி, சீதை, சாவித்திரி, தமயந்தி, சகுந்தலை, சந்திரமதி… என்பார்கள். உடனே அங்குநின்ற பெண்களைப்பார்த்து, “ பாருங்கள் உங்கள் கணவர்மாருக்கு முன்பின் தெரியாத அந்தப்பெண்கள்தான் கற்பில் சிறந்தவர்களாகத் தெரிகிறார்கள். வாழ்நாள் பூராவும் அருகில் இருக்கும் நீங்கள் எவரும் கற்புக்கரசிகளாகத் தெரியவில்லை “ என்பார். உடனே அந்தப்பெண்கள் ருத்ர தாண்டவம் எடுத்து கணவர்மாரைப்பார்த்து, “ யோவ்… நாங்களெல்லாம் உங்க கண்ணுக்கு கற்புக்கரசிகள் மாதிரி தெரியல்லையா..? “ என்று ஏககுரலில் சத்தம்போடுவார்கள். இந்தக்காட்சியை பலவருடங்களுக்கு முன்னர் வெளியான விதி திரைப்படத்தில் நீங்கள் பார்த்து ரசித்திருப்பீர்கள். அவ்வாறு குறும்புத்தனமான கேள்வியை கேட்பவர் இயக்குநர் பாக்கியராஜ். கனடாவில் வதியும் ஶ்ரீரஞ்சனியின் பின்தொடரும் குரல் நூலில், புலம்பெயர் வாழ்வில் கண்ணகியும் மாதவியும் என்ற கட்டுரையை படித்துக்கொண்டிருந்தபோது, எனக்கு அந்த விதி திரைப்படக்காட்சிதான் மனதில் நிழலாடியது. இந்த நூல் வௌிவரவிருந்த வேளையில் நானும் ஒரு குறிப்பினை அவருக்கு அனுப்பிவைத்தேன். அதனையும் இந்நூலின் பின்புற அட்டையில் பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர்.

ஆறாம் திணையில் வாழ்ந்தவாறு, ஆயிரம் பிரச்சினைகளை அலசும் ஶ்ரீரஞ்சனியை அவரது ஆறு வயதிலிருந்து பார்க்கின்றேன். வாழ்க்கை மீதான தேடலும் அவரது தேட்டம் என்பதையும் அறிவேன். எமது தமிழ்ச்சமூகம் தன் தாயகத்திலும் ஆறாம் திணையான புகலிடத்திலும் எதிர்கொள்ளும் சவால்கள், அனுபவங்கள், காயங்கள் உட்பட அனைத்திற்கும் உளவியல் ரீதியில் தனது தரப்பு சிந்தனையை முன்வைத்து ஶ்ரீரஞ்சனி எழுதியிருக்கும் கட்டுரைகள், சமூகத்திற்காக பேசுகின்றன. சமூகத்தையும் அவை பேசவைக்கும் என்பது திண்ணம்.

•Last Updated on ••Thursday•, 04 •June• 2020 03:27•• •Read more...•
 

யாழ்.பொது நூலகம் எரிப்பு நினைவுகள் ( யாழ் பொதுசன நூலகம் எரிந்த தினம்: 1981 மே 31 )

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர்  முருகபூபதிமுப்பத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர்  இன்றைய தினம், மே 31 ஆம் திகதி,  யாழ்ப்பாணம் பொது நூலகம் பற்றி எரிகிறது   எனக் கேள்விப்பட்டதும், அங்கிருந்த பதட்டமானசூழ்நிலை களையும் பொருட்படுத்தாமல், வீட்டிலே தடுத்தபோதும்  கேளாமல், மறுநாளே யாழ்ப்பாணம் புறப்பட்டுச்சென்று மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவுடன் நேரில் சென்று அந்தக் கொடுமையைப் பார்த்தேன். எனக்கு என்ன நேரமோ காலம் கடந்துதான் (2003இல்)  மாரடைப்பு வந்தது. அந்தச்சாம்பர் மேட்டைப் பார்த்தபோது  வந்த நெஞ்சுவலியை பின்னர் ஒரு Activist ஆக மாறியே போக்கிக்கொண்டேன்.

யாழ்.பொதுநூலகம்எரிக்கப்பட்டதை அறிந்தவண.பிதா தாவீதுஅடிகள் மாரடைப்பால் காலமான செய்தி ஜீவா  சொல்லித்தான் எனக்குத் தெரியும். அவரதுபடத்தை மல்லிகை முகப்பில் பார்த்துள்ளேன். யாழ்ப்பாணத்தில் நாலாதிசையிலும் நடமாடிக்கொண்டிருந்த மிலிட்டரி பொலிஸ்காரர்கள் மக்களை மிரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களின் நடமாட்டமே மிரட்சியை ஏற்படுத்தியிருந்தது. நூல் நிலையத்தை எரித்தவர்கள்,   யாழ். எம். பி. வெற்றிவேல் யோகேஸ்வரனின் வீட்டையும் எரித்திருந்தார்கள்.  யோகேஸ்வரனும் அவரது மனைவி சரோஜினியும் பின்புறத்தால் தப்பி ஓடியதாக அறிந்தேன்.  அச்சம்பவத்தின் பின்னர் யோகேஸ்வரனை அச்சமயம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் அவர்களின் கொழும்பு வாசஸ்தலத்தில்தான் சந்தித்தேன்.

•Last Updated on ••Sunday•, 31 •May• 2020 23:13•• •Read more...•
 

அஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார்! இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்!

•E-mail• •Print• •PDF•

விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனை தளமாகக்கொண்டிருந்து இயங்கிய தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர் வாழ்வுக்கழகம், மற்றும் 3 CR வானொலி தமிழ்க்குரல் ஒலிப்பரப்புச்சேவை முதலானவற்றில் நீண்டகாலமாக ஈடுபட்டுழைத்திருக்கும் சண்முகம் சபேசன் இன்று ( 29 -05 – 2020 ) ஆம் திகதி அதிகாலை மெல்னில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்தது.

அவுஸ்திரேலியாவுக்கு நான் புலம்பெயர்ந்து வந்தபின்னர் எனக்கு அறிமுகமாகி, நான் உறவாடி மகிழ்ந்தவர்களில் கலை, இலக்கியம், கல்வி, ஊடகம் முதலான துறைகளிலும் மற்றும் சமூகப்பணிகளிலும் ஈடுபட்ட பலரைப்பற்றி தொடர்ச்சியாக எழுதிவந்துள்ளேன்.

அந்த வரிசையில் தீவிரமான வாசிப்பு பயிற்சியிலிருப்பவர்கள் தொடர்பாக வாசகர் முற்றம் என்ற தலைப்பிலும் சிலரது வாசிப்பு அனுபவங்களை கேட்டு எழுதி பதிவுசெய்து வந்துள்ளேன்.

அந்த வரிசையில் மெல்பனில் நீண்டகாலமாக என்னுடன் உறவு பாராட்டிவரும் நண்பர் சண்முகம் சபேசன் பற்றியும், அவரது வாசிப்பு அனுபவங்களையும் பற்றியும் விரிவாக எழுதவேண்டும் என்ற எண்ணத்திலிருந்தபோது, இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் செறிவு குறையட்டும் சந்தித்துப்பேசுவோம் என்று சொன்னார்.

இன்னமும் அந்த வைரஸின் அச்சுறுத்தல் முடிவுக்கு வராமலிருக்கும் இக்காலப்பகுதியில், நண்பர் சபேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி செவிக்கு எட்டி மிகவும் வருந்தினேன். அதனையடுத்து, நேற்று நள்ளிரவு சபேசனின் நீண்டகால நண்பரும் தமிழ்நாடு திராவிட இயக்கப்பேரவையின் தலைவருமான பேராசிரியர் சுபவீரபாண்டியனுக்கும் தகவல் தெரிவித்தேன். அவரும் வருந்தியதுடன் மேலதிக தகவலை கேட்டறிந்து சொல்லுமாறு தெரிவித்தார்.

•Last Updated on ••Friday•, 29 •May• 2020 12:33•• •Read more...•
 

அஞ்சலிக்குறிப்பு: தமிழ்ப்பிரியா ( 1952 – 2020)

•E-mail• •Print• •PDF•

இவ்வேளையில் தான் தமிழ்ப்பிரியாவின்(புஸ்பராணி இளங்கோவன்) ரசனைமிக்க பாடல்களுடன் இசையும் கதையும் கேட்போம்.அடுத்து எப்போது ஒலிபரப்பும் என்றும் காத்திருப்போம்.

ஈழத்து எழுத்தாளர் தமிழ்ப்பிரியா இம்மாதம் 07 ஆம் திகதி பிரான்ஸிலிருந்து விடைபெற்றுவிட்டார். தமிழ்ப்பிரியா, இலக்கியம் மாத்திரம் படைத்துக்கொண்டிருந்தவர் அல்ல. அதற்கு அப்பாலும் மனிதநேயச்செயற்பாடுகளில் தன்னார்வத் தொண்டராகவும் தன்னை ஈடுபடுத்தி வந்திருப்பவர். இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடத்திலிருந்து வாழ்வாதார உதவிகளை வழங்கிய கருணை உள்ளம் கொண்டவர்.

வீரகேசரி பத்திரிகையில் நான் பணியாற்றிய காலத்தில், தமிழ்ப்பிரியாவின் எழுத்துக்கள் அச்சில் வரும்போது அவற்றை ஒப்பு நோக்கியிருக்கின்றேன். எம்முடன் பணியாற்றிய மட்டக்களப்பு கிரானைச்சேர்ந்த திரு. கனகசிங்கம் ( தற்போது – அவுஸ்திரேலியா சிட்னியில் வசிப்பவர் ) பொன்னரி என்ற புனைபெயரில் ஓவியங்களும் வரைந்துகொண்டிருந்தார். கொழும்பிலிருந்து வெளியான சுதந்திரன் பத்திரிகையின் மற்றும் ஒரு வெளியீடான சுடர் மாத இதழின் ஆசிரியராகவும் கனகசிங்கம் இயங்கியபோது, தமிழ்ப்பிரியாவின் படைப்புகள் சுடரில் வெளிவந்து பார்த்திருக்கின்றேன்.

தொலைக்காட்சியின் வருகைக்கு முன்னர் இலங்கை மக்கள் அனைவருக்கும் இலங்கை வானொலிதான் சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக விளங்கியது. அதில் ஒலிபரப்பான இரண்டு சேவைகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவை. வர்த்தக சேவையும் தேசிய சேவையும் கடல் கடந்து தமிழ்நாட்டு நேயர்களையும் பெரிதும் கவர்ந்தது. அக்காலப்பகுதியில் இசையும் கதையும் என்ற நிகழ்ச்சியை நேயர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் விரும்பிக்கேட்டவர்களும் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருந்தார்கள். அத்துடன் மங்கையர் மஞ்சரி – பூவும் பொட்டும். முதலான நிகழ்ச்சிகள். அந்த நிகழ்ச்சிகள் பல பெண்நேயர்களை பேனா நண்பிகளாகவும் மாற்றியிருப்பதுடன், ஆரோக்கியமான தொடர்பாடல்களையும் அவர்களிடத்தில் ஏற்படுத்தியது. மின்னஞ்சல் - முகநூல் – வாட்ஸ் அப் இல்லாதிருந்த அக்காலப்பகுதியிலேயே அந்த பெண் நேயர்களுக்கிடையில் அந்த இசையும் கதையும் நெருக்கமான உறவினை உறுதியாக்கியிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. எனினும், வளர்ந்த மூத்த எழுத்தாளர்கள், முற்போக்கு – நற்போக்கு - சோஷலிஸ யதார்த்தப்பார்வை முதலான இஸங்களைப் பேசிக்கொண்டிருந்தவர்கள் அந்த இசையும் கதையும் நிகழ்ச்சியில் ஆர்வம் காண்பிக்கவில்லை. காரணம், அதற்கு எழுதியவர்கள் ஒரு கதையை அனுப்புவார்கள். நிகழ்ச்சித்தயாரிப்பாளர் கதையின் சம்பவங்களுக்குப் பொருத்தமான ஒரு திரை இசைப்பாடலை அதற்கு எற்றவாறு பொருத்தி ஒலிப்பதிவுசெய்து வானலைகளில் பரவ விடுவார். அதனைக்கேட்கும் அபிமான நேயர்கள் தங்கள் கருத்தை கடிதமாக எழுதி நிலையத்திற்கு அனுப்புவார்கள். அவை தேர்ந்தெடுக்கப்பட்டு ஒலிபரப்பாகும். அதனால், வான் அலைகளில் கதை எழுதியவரின் பெயர் மட்டுமன்றி நேயர்களின் பெயரும் - ஊரும் கூட பரவிவிடும். நேயர் கடிதங்களை எழுதி தபாலில் அனுப்பிவிட்டு, அது எப்போது ஒலிபரப்பாகும் என்று வானொலிப்பெட்டிக்கு அருகிலிருந்து காத்திருப்பார்கள்.

•Last Updated on ••Tuesday•, 12 •May• 2020 11:33•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம்: ஜீவநதி 136 ஆவது இதழ்- சிறந்த சிறுகதைகளை வரவாக்கியிருக்கும் 13 ஆவது ஆண்டு மலர்

•E-mail• •Print• •PDF•

ஜீவநதி 13ஆவது ஆண்டு மலர்ஜீவநதி ஆசிரியர் :  பரணீதரன்மகாகவி பாரதியின் ஞானகுரு அல்வாய் அருளம்பலம் சாமி அவர்கள் தோன்றிய இலங்கையின் வடபுலத்தில் அல்வாய் பிரதேசம், பல கலை, இலக்கியவாதிகளையும் தமிழ் அறிஞர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவ்வூரிலிருந்து 2007 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல் வெளிவரத்தொடங்கிய ஜீவநதி கலை, இலக்கிய மாத இதழ் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தனது 136 ஆவது இதழை ஆண்டுமலராக வெளிக்கொணர்ந்துள்ளது. இதன் ஆசிரியர் கலாமணி பரணீதரன் ஈழத்து இலக்கிய உலகில் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர். யாழ்குடா நாட்டிலிருந்து மறுமலர்ச்சி முதல் மல்லிகை வரையில் பல இதழ்கள் தோன்றி காலப்போக்கில் மறைந்துவிட்ட சூழலில் அங்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜீவநதியாக ஊற்றெடுத்து வந்தது இந்த இதழ். இலங்கையில் நீடித்த போர்க்காலம் முடிவுறாத காலப்பகுதியில் வடக்கிலிருந்து வெளிவரத்தொடங்கிய ஜீவநதி, ஈழத்து சிற்றிதழ் இலக்கிய வரலாற்றில் கூடுதலான சிறப்பிதழ்களை வெளியிட்டிருக்கும் பெருமையும் பெற்றது. கடந்த பதின்மூன்று ஆண்டுகளுக்குள் இருபது சிறப்பிதழ்களையாவது ஜீவநதி வெளியிட்டிருக்கும் என்பது எமது கணிப்பு. ஜீவநதி அவுஸ்திரேலியா – கனடா சிறப்பிதழ்களையும் முன்னர் வெளியிட்டு இந்த நாடுகளிலிருந்து எழுதிவரும் படைப்பாளிகளையும் ஊக்கிவித்துள்ளது. அத்துடன் சில ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் வரிசையில் எழுத்தாளர்கள் கே.எஸ். சிவகுமாரன், க. சட்டநாதன், செங்கைஆழியான், தெணியான், குழந்தை சண்முகலிங்கம் ஆகியோரை கௌரவிக்கும் வகையிலும் சிறப்பிதழ்களையும் வெளியிட்டிருக்கிறது. இவை தவிர, பெண்கள் சிறப்பிதழ் , கவிதைச் சிறப்பிதழ் , உளவியல் சிறப்பிதழ் , இளம் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் , சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் , மலையக சிறப்பிதழ் , திருகோணமலை சிறப்பிதழ் , ஈழம்- கவிதை சிறப்பிதழ் , ஈழத்து பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ், சிறுவர் இலக்கிய சிறப்பிதழ், ஈழம் ஹைக்கூ கவிதைச் சிறப்பிதழ்   முதலானவற்றையும் வெளியிட்டுள்ளது.

•Last Updated on ••Monday•, 04 •May• 2020 23:36•• •Read more...•
 

திரும்பிப்பார்க்கின்றேன் – அங்கம் 08: சொல்ல மறந்த பல கதைகளைச்சொல்லும் பண்டாரநாயக்கா மாவத்தை !

•E-mail• •Print• •PDF•

இன்று மே மாதம் 01 ஆம் திகதி. உலகத்தொழிலாளர் தினம்! உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற கோஷத்துடன் எமது தாயகம் இலங்கையில், தொழிலாளர்கள் ஒன்றுபடாமல், பிளவுபட்டு, ஏழெட்டு ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நடத்தும் நாள். கொரொனா வந்து அந்தத் தொழிலாளர்களையும் ஒன்றுபடவிடாமல் தடுத்து வீடுகளில் முடங்கியிருக்கச் செய்துள்ளது. ஒரு காலத்தில் தந்தை செல்வநாயகமும் பிரதமர் பண்டாரநாயக்காவும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக பண்டா – செல்வா ஒப்பந்தம் என்ற இன்றும் வரலாற்றில் பேசப்படும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டபோது ஜே.ஆர். ஜெயவர்த்தனா அதனை எதிர்த்து பிக்குகளையும் அழைத்துக்கொண்டு, கண்டி தலதா மாளிகை நோக்கி பாதயாத்திரையை ஆரம்பித்தார். அக்காலப்பகுதியில் நடந்த மேதின ஊர்வலங்களில் அவருடைய யூ. என். பி. கட்சியினர் “ பண்டாரநாயகம் – செல்வநாயகம் ….  ஐயா…. தோசே மசாலவடே “ என்று இனவாதம் கக்கி கோஷம் எழுப்பிச்சென்றனர். அந்த ஒப்பந்தம் பின்னர் கிழித்தெறியப்பட்டது. ஆனால், பண்டாரநாயக்காவும் செல்வநாயகமும் தமது காணிகளை பூர்வீக சொத்துக்களாக ஒரே வீதியில் முன்னர் வைத்திருந்தனர் என்ற செய்தி யாருக்காவது தெரியுமா..?
அந்த வீதிக்குப்பெயர்தான் பண்டாரநாயக்கா மாவத்தை!

அண்மைக்காலமாக உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் நெருக்கடியை ஏற்படுத்தியதனால், நாடாளுமன்றமும் இயங்காமல் முடங்கியிருப்பதுடன், தலைநகரத்தில் பல பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை அறிவோம். கொழும்பில் உயர் நீதிமன்றம் உட்பட மேலும் சில நீதிமன்றங்கள் அமைந்துள்ள பிரதேசம் உட்பட அதற்கு அண்மித்த பண்டாரநாயக்கா மாவத்தையிலிருந்த ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பு தரப்பினர், அழைத்துச்சென்று முல்லைத்தீவில் தனிமைப்படுத்தி தடுத்து வைத்துள்ளனர். அவ்வாறு அங்கு சென்றவர்களில் எனது உறவினர்கள், நண்பர்கள் பலரும் அடங்கியுள்ளனர். ஒரு காலத்தில் தட்டாரத்தெரு என அழைக்கப்பட்ட இந்தப்பிரதேசத்தில் தமிழ் - முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். இந்தப்பிரதேசத்திற்கும் எனக்கும் நீண்டகாலமாக நெருக்கமான உறவு நிலைத்திருக்கிறது. அதனால், அவ்வாறு முல்லைத்தீவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட எனது சித்தப்பாவின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் தொடர்புகொண்டு உரையாடினேன். தம்மை முகாமில் தடுத்துவைத்து நன்கு பராமரிப்பதாகவும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி படுக்கை தரப்பட்டு தினமும் மூன்று வேளையும் மருத்துவர்களும் தாதியர்களும் சிகிச்சை தந்து கண்காணிப்பதாகவும் தெரிவித்தனர்.

•Last Updated on ••Friday•, 01 •May• 2020 21:51•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம்: வாசித்துப் பயன் பெறத்தக்க ஆக்கங்களின் வரவுடன்… ஞானம் 2020 ஏப்ரில் மாத இதழ்

•E-mail• •Print• •PDF•

ஞானம் சஞ்சிகை ஏப்ரில் 2020'ஞானம்' ஆசிரியர்: ஞானசேகரன்இலங்கையில் கொழும்பிலிருந்து நீண்டகாலமாக வெளிவந்துகொண்டிருக்கும் ஞானம் மாத இதழின் இம்மாதத்திற்குரிய ( 2020 ஏப்ரில் ) பிரதி கிடைக்கப் பெற்றோம். உலகெங்கும் அச்சுறுத்திவரும் கண்ணுக்குத் தெரியாத எதிரியை முறியடிக்க ஒவ்வொரு தேசமும் போராடிக்கொண்டிருக்கும் சமகாலத்தில், இந்த எதிரியின் தோற்றம் வளர்ச்சி குறித்த விரிவான பார்வையுடன், இம்மாதம் 01 ஆம் திகதிவரையில் கிடைக்கப்பெற்ற பாதிப்பு தொடர்பான புள்ளிவிபரங்களுடனும், இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடியை சமாளிப்பதற்கு பொதுமக்கள் எவ்வாறு தங்களது அன்றாட வாழ்க்கை முறைகளை தேசத்தின் நலன் கருதி மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதை அறிவுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்  ஆசிரியர் தி. ஞானசேகரன் விரிவானதோர் ஆசிரியத்தலையங்கம் எழுதியுள்ளார். ஆசிரியர் தி. ஞானசேகரன் தொழில்முறையில் முன்னர் மருத்துவராக இலங்கையின் மலையகப்பிரதேசங்களில் பணியாற்றியவர் என்பதும்  குறிப்பிடத்தகுந்தது. முன்னைய காலங்களில் சில வைரஸ் அச்சுறுத்தலை சந்தித்த  சில உலக நாடுகளில் நேர்ந்த  தாக்கங்கள் குறித்தும், அதிலிருந்து அந்நாட்டு மக்கள் மீண்டெழுவதற்கு தேவைப்பட்ட காலப்பகுதி  பற்றியும்  விரிவாக பதிவுசெய்துள்ளார். சமூகப்பிரக்ஞையுடன் ஒரு கலை, இலக்கிய இதழாசிரியர் இந்த ஆசிரியத் தலையங்கத்தை எழுதியிருப்பது பாராட்டத்தக்க செயலாகும்.

•Last Updated on ••Tuesday•, 28 •April• 2020 14:22•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம்: விடுதலைப்புலிகளின் சிறையிலிருந்தவரின் வாக்குமூலம் ! அஜித் போயகொட எழுதிய ”நீண்ட காத்திருப்பு”

•E-mail• •Print• •PDF•

- நூல்: 'நீண்ட காத்திருப்பு' (A Long Watch) - ஆங்கிலத்தில்:  அஜித் போயகொட | தமிழில்: தேவா - வெளியீடு: வடலி பதிப்பகம் -


படித்தோம் சொல்கின்றோம்: விடுதலைப்புலிகளின் சிறையிலிருந்தவரின் வாக்குமூலம் ! அஜித் போயகொட எழுதிய ”நீண்ட காத்திருப்பு”“சிறை – நாங்கள் எல்லோருமே ஏதோ ஒரு சிறையினுள்தான் எப்பொழுதும் வாழ்ந்தபடி உள்ளோம். என்று நாம் சிறிய அளவுகொண்ட இடப்பரப்பினுள் அடைபடுகின்றோமோ அன்றுதான் சிறையை உணர்கிறோம்.” கொமடோர் போயாகொடவின் A Long Watch பிரதியின் வாசிப்பனுபவமும் இவ்வாறானதாகத்தான் அமையப்போகின்றது. சமகாலத்தில், கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலினால், நமக்கு நாமே உத்தரவிட்டு, வீட்டுக்குள் சிறைப்பட்டுள்ள இவ்வேளையில் இந்த நூலையும் வாசித்து அதன் அனுபவத்தை எழுத நேர்ந்துள்ளமையும் எதிர்பாராததுதான். இலங்கைத் தீவினைச்சுற்றியிருந்த இந்து மகா சமுத்திரத்தில் ஊர்ந்தும் விரைந்தும்கொண்டிருந்த சாகரவர்த்தனா கப்பல் பற்றி அறிந்திருப்பீர்கள். அது மன்னார் கடல் பரப்பில் 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி கடற்புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் பாரிய சேதத்திற்குள்ளாக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் வசமும் மன அழுத்தங்களுடன் சில வருடங்கள் வாழ்ந்திருக்கும் இவர், விடுதலையாகி வந்தபின்னரும் இலங்கை அரசின் பாராமுகத்தினாலும் புறக்கணிப்புகளினாலும் மன அழுத்தங்களுக்கு ஆளாகியிருந்தவர். அனைத்து அழுத்தங்களிலுமிருந்து விடுதலை பெறவேண்டுமானால், அந்த அழுத்தங்களினால் பெற்ற அனுபவங்களை பதிவு செய்யவேண்டும். அதனால், நீண்ட மௌனத்தின் பின்னர் அஜித் போயாகொட மனம் திறக்கிறார். அவர் சொல்லச்சொல்ல கேட்டு எழுதுகிறார் சுனிலா கலப்பதி.

A Long Watch என்ற பெயரில் எழுதப்பட்ட இந்த நூலின் தமிழாக்கமே நீண்ட காத்திருப்பு. தமிழில் வரவாக்கியவர் தேவா. இந்நூலை வடலி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தேவா, சிறந்த மொழிபெயர்ப்பாளர். ஏற்கனேவே இவர் மொழிபெயர்த்த குழந்தைப்போராளி ( சைனா கெய்ரெட்சி எழுதியது ) நூல் பற்றியும் எனது படித்தோம் சொல்கின்றோம் தொடரில் எழுதியிருக்கின்றேன். நீண்ட காத்திருப்பு நூலை மொழிபெயர்க்கும் பணியில் தேவாவுடன் இணைந்திருந்தவர்களும் எழுதியிருக்கும் மொழிபெயர்ப்பாளரின் பதிவு, இவ்வாறு தொடங்குகிறது. இந்த நூலின் பதிப்புரையின் தொடக்க வரிகளை இங்கு அவசியம் கருதி பதிவுசெய்கின்றோம்:

அறுபதுகளில் யுத்த எதிர்ப்புப் பாடலொன்றில் சர்வதேச இராணுவ சிப்பாய்கள் குறித்து பூர்விகக்குடி பாடகி பஃபி செயின்ற் மேரி (Buffy Sainte-Marie) இவ்வாறு பாடுவார்: “ தனதுடலை ஆயுதமாய் யுத்தத்துக்கு தருகிறவன் எவனோ, அவனில்லையேல் எவராலும் எங்கும் எந்தப்போரையும் நடத்திட இயலாது. “ போரில் ‘ இது இப்படித்தான் ‘ ‘போராட்டங்களில் இவை சகஜம் ‘ என்றெல்லாம் குற்றங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் மத்தியில் ( Apologists of War Crimes) தனிநபரது பொறுப்பினைத்தான் ( Individual Responsibility ) அப்பாடலில் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டிருப்பார். அரசாங்கங்களின் திட்டங்களைக் கொண்டு செல்வதில் அதன் ஊழியருக்குப் பெரும் பங்குண்டு. அதிகாரங்களுக்குச் சிப்பாய்கள் வெறும் கருவிகளே என்கிறபோதும் எல்லாக் கருவிகளும் கட்டளையை அப்படியே பின்பற்றுபவை அல்ல. சிப்பாய்களதும் அரசாங்கத்தின் கருத்தியலும் அதன் பெரும்பான்மை சமூகங்களின் கருத்தியலுடன் ஒத்துப்போவதாலேயே சிறுபான்மைச் சமூகங்கள் மீதான வன்முறை உலகமெங்கிலும் என்றும் தொடருதல் சாத்தியப்படுகிறது.

அஜித் போயாகொட , மத்திய இலங்கையில் கண்டியில் ஒரு மத்தியதரக் குடும்பத்தில் பிறந்தவர். அதனால் கடற்படையினரை தனது இளம்பராயத்தில் அங்கு அரிதாகவே கண்டிருப்பவர். சிறிய பராயத்தில் ஒரு மகா நாயக்கதேரரின் இறுதி ஊர்வலத்தில்தான் அவர் கடற்படையினரின் சீருடையை முதல் முதலில் பார்த்திருக்கிறார்.

 

•Last Updated on ••Tuesday•, 28 •April• 2020 14:17•• •Read more...•
 

அஞ்சலிக்குறிப்பு: கலைஞர் ஏ. ரகுநாதன் மறைந்தார்! ஈழத்து தமிழ்த்திரைப்படங்களின் வளர்ச்சியின் ஊடாக ஒரு நினைவுப்பகிர்வு!

•E-mail• •Print• •PDF•

அஞ்சலிக்குறிப்பு: கலைஞர் ஏ. ரகுநாதன் மறைந்தார்! ஈழத்து தமிழ்த்திரைப்படங்களின் வளர்ச்சியின் ஊடாக ஒரு நினைவுப்பகிர்வு!இலங்கையின் மூத்த தமிழ் நாடக, திரைப்படக்கலைஞர் ஏ.ரகுநாதன் பிரான்ஸில் மறைந்தார் என்ற அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. சமீபகாலமாக உலகெங்கும் அச்சுறுத்திவரும் கண்ணுக்கு புலப்படாத எதிரி, எங்கள் தேசத்தின் கலைஞனையும் புலத்தில் காவுகொண்டுவிட்டது. இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு முற்பகுதியில் பாரிஸ் சென்றபோது, அங்கிருக்கும் நண்பர் எழுத்தாளர் ‘ ஓசை ‘ மனோகரனுடன் ரகுநாதனைப் பார்க்கச்சென்றேன். பாரிஸிலும் வைரஸின் தாக்கம் உக்கிரமடைந்தபோது, அங்கிருக்கும் கலை, இலக்கிய நண்பர்களிடம் ரகுநாதன் குறித்தும் விசாரிக்கத்தவறுவதில்லை. காரணம், அவர் கடந்த சிலவருடங்களாக சிறுநீரக உபாதையினால் தொடர்ந்து சிகிச்சைக்கு சென்று வந்துகொண்டிருந்தவர். கடந்த சில நாட்களாக நான் அடிக்கடி நினைத்துக்கொண்டிருந்த நண்பர் ரகுநாதனும் தற்போது நிரந்தரமாக நினைவுகளாகிவிட்டார் என்பதை கனத்த மனதுடன் உள்வாங்கிக்கொண்டு இந்தப்பதிவை எழுதுகின்றேன்.

அன்றைய தினம் எம்முடன் மனோகரனின் நண்பர் ஶ்ரீபாஸ்கரனும் உடன்வந்தார். அன்று, ரகுநாதன் எம்மைக்கண்டதும் மிகுந்த உற்சாகத்துடன் தான் சம்பந்தப்பட்ட நிர்மலா, தெய்வம் தந்த வீடு முதலான திரைப்படங்களில் ஒலித்த பாடல்களை பாடத்தொடங்கிவிட்டார். நண்பர்களைக்கண்டதும் அவர் உற்சாகமுற்றார். அவுஸ்திரேலியா சிட்னியில் கவிஞர் அம்பியின் 90 வயது விழா நடக்கவிருப்பது பற்றிச்சொன்னதும், பல விடயங்களை நனவிடை தோய்ந்தார். சிறுநீரக சிகிச்சைக்காக அடிக்கடி அவர் மருத்துவமனை சென்று வருகிறார் என்பதை அப்போதுதான் அறிந்தேன். நண்பர்களைக்கண்டதும் அவருக்கு வந்த உற்சாகத்தை எவ்வாறு வர்ணிப்பது? முதுமையிலும் தனிமையிலும் இருப்பவர்களுக்கு நண்பர்களின் சந்திப்புத்தான் சிறந்த ஊக்கமாத்திரை! அண்மையில் நான் எழுதிய உள்ளார்ந்த ஆற்றலுக்கு முதுமை தடையில்லை என்ற ஆக்கத்திலும் நண்பர் ரகுநாதன் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அதனை அவர் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. இலங்கையில் தமிழ் சினிமா, நாடக வளர்ச்சிக்கு பாடுபட்ட ரகுநாதன், புகலிடத்திலும் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தியவர். வயதும் மூப்பினால் வரும் பிணிகளும் அவரை முடங்கியிருக்கச்செய்தாலும், நினைவாற்றலுடன் பல சம்பவங்களை அன்றைய தினம் நினைவுகூர்ந்தார். அவரது நெருங்கிய நண்பர் கவிஞர் அம்பியின் 90 விழா மலருக்கும் அவர் ஒரு ஆக்கம் எழுதியதும் அவரது துணைவியாரின் துணையினால் என்பதை பின்னர்தான் அறிந்தேன்.

கலைஞர் ரகுநாதனை நான் முதல் முதலில் சந்தித்தது நேற்று நடந்த நிகழ்வுபோன்று இன்னமும் எனது மனதில் பசுமையாக பதிந்திருக்கிறது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ரகுநாதன், கொழும்பில் ஒரு அரசாங்கத் திணைக்களத்தில் பணியிலிருந்தார். ஒரு நாள் மதியம் நண்பர் மு.கனகராஜன் என்னையும் அழைத்துக்கொண்டு ரகுநாதனிடம் வந்தார். அங்கே கலைஞர் டீன்குமாரும் இன்னும் சிலரும் அச்சமயம் இலங்கையில் வெளியான ஒரு தமிழ்த்திரைப்படக்காட்சிகள் தொடர்பாக உரையாடிக்கொண்டிருந்தனர். அங்கே டீன்குமார்தான் அதிகமாகப்பேசினார். குறிப்பிட்ட படத்தைப்பற்றிய தமது கடுமையான விமர்சனங்களை மிகவும் கேலியாக முன்வைத்துக்கொண்டிருந்தார்.

•Last Updated on ••Friday•, 29 •May• 2020 12:32•• •Read more...•
 

திரும்பிப்பார்க்கின்றேன்: கொரோனோவும் கொலைகாரர்களும் - நீதியற்ற தேசத்தில் நாதியவற்றவர்களின் நிலை!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர்  முருகபூபதிகொரோனோ வைரஸின் உக்கிர தாண்டவத்திற்கு மத்தியில், இலங்கையில் ஒரு மரணதண்டனை கைதி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகியுள்ளார். தற்போதைய ஜனாதிபதிக்கு முன்பிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலத்தின் இறுதிப்பகுதியில், போதைவஸ்து குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிப்பேன், எவர் தடுத்தாலும் நிறைவேற்றுவேன் எனச்சொல்லிக்கொண்டே இருந்தவர். மரண தண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

தற்போது இலங்கை சிறைகளில் நூற்றுக்கணக்கான மரணதண்டனைக்கைதிகளும் ஆயுள்கைதிகளும் இருக்கின்றனர். அவர்களில் பலர் கொலை, கூட்டு பாலியல் வன்முறை முதலான குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றங்களினால் மரணதண்டனை தீர்ப்புக்குள்ளாகியவர்கள். அவர்களில் இலங்கை பாதுகாப்புத்துறையைச்சேர்ந்த படையினரும் இடம்பெற்றிருந்தனர். தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ 2015 இற்கு முன்னர் பதவியிலிருந்த அரசில் பாதுகாப்புச்செயலாளராக இருந்தவர். அதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி தென்மராட்சி மிருசுவிலில் ஐந்து வயது குழந்தை உட்பட எட்டுத்தமிழர்கள் கொலைசெய்யப்பட்டு, ஒரு வீட்டின் மலகூட குழியில் புதைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் நினைவூட்டவேண்டிய செய்திக்குறிப்பு பின்வருமாறு:

வடஇலங்கையில் நீடித்திருந்த போர்க்காலத்தின்போது தென்மராட்சியில் தமது வீடுகளை விட்டு வெளியேறிய சிலர் தமது வீடுகளை மீளச்சென்று பார்ப்பதற்காகச் சென்றனர். அவர்களின் வீடுகள் மிருசுவிலில் அமைந்திருந்தன. அவ்வாறு சென்றவர்களை, அங்கிருந்த இராணுவத்தினர் கைதுசெய்தனர். இச்சம்பவம் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி நடந்திருப்பதாக அறியப்படுகிறது. அத்துடன் மறுநாள் கைதானவர்கள் எட்டுப்பேரும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. இவர்கள் உடுப்பிட்டிக்கு முன்னர் இடம்பெயர்ந்து சென்றவர்கள். தாம் விட்டுவந்த உடைமைகளையும் வீடுகளையும் பார்க்கச்சென்றபோது, அங்கே அவர்கள் கண்ட காட்சியினால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்தப்பகுதியில் ஒரு இளம்பெண்ணின் சடலம் அரைகுறையாக புதையுண்டிருந்ததை கண்டுவிட்டனர். இதுபற்றி, தமது குடும்ப உறவுகளுக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றனர். மறுநாள் குறித்த சடலத்தை அடையாளம் காண்பதற்காக சென்றவர்களை அங்கிருந்த இராணுவம் பிடித்துக்கொண்டது. அவ்வாறு பிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் காயங்களுடன் தப்பி வந்துள்ளார். ஏனையோர் எட்டுப் பேரும் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியிலுள்ள பொதுமகனொருவரது வீட்டு மலசலகூடக் குழியினுள் வீசப்பட்டிருந்தனர். பலத்த காயங்களுடன் தப்பிவந்த பொன்னுத்துரை மகேஸ்வரன் என்பவர் தமது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததை அடுத்தே இக்கொலைகள் பற்றிய விபரங்கள் வெளியே தெரிய வந்தது. அவர் வழங்கிய தகவலினால், படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் மலசலகூட குழியிலிருந்து பின்னர் காவல்துறையினரால் மீட்கப்பட்டன. முதலில் காணப்பட்ட இளம்பெண்ணின் சடலத்தை நீதிமன்றத்தினாலும் பொலிஸாரினாலும் இறுதிவரையில் கண்டுபிடிக்கமுடியாமல் போய்விட்டது. யார் அந்த இளம் பெண்…? இன்னமும் மர்மம் தொடருகிறது!

•Last Updated on ••Thursday•, 23 •April• 2020 08:43•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம்: தாமரைச்செல்வியின் உயிர்வாசம் ( நாவல்)! அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையிலிருந்து படகில் வந்த மக்களின் வாழ்வியல் கோலம் !

•E-mail• •Print• •PDF•

தாமரைச்செல்வியின் உயிர்வாசம் ( நாவல்)! தாமரைச்செல்விதற்காலத்தில் கொரோனா என்ற நாமத்தை முழு உலகமும் சுமந்துகொண்டிருக்கிறது! அதே சமயம் அகதி என்ற நாமத்தை சுமந்துகொண்டிருப்பவர்கள் உலகெங்கும் நெடுங்காலமாக வாழ்ந்துவருகின்றனர். இரண்டு நாமங்களும் மறையவேண்டும். எனினும், உலக அரங்கில் மறக்கமுடியாத, மறைக்கமுடியாத தடங்களாகவே அவை இரண்டும் நிலைகொண்டிருக்கும். பசுமைநிறைந்த வயல் வெளிகளையும், போர்க்காலத்தில் காடுறைந்த மக்களையும், கொல்லப்பட்ட உறவுகளைப்பார்த்து அழுவதற்கும் நேரம் இல்லாமல், இடம்பெயர்ந்து ஓடியவர்களையும், வன்னிபெருநிலப்பரப்பில் வாழ்ந்த ஆச்சிமாரையும் , அவர்களின் வாழ்வுக்கோலங்களையும் பற்றி இதுவரையில் எழுதிவந்திருக்கும் தாமரைச்செல்வி, அவுஸ்திரேலியாவுக்கு கனவுகளை சுமந்துகொண்டு படகுகளில் வந்து வலிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் கதையை எழுதியிருக்கிறார். அவருடைய உயிர்வாசம் என்ற புதிய நாவல், ஏறக்குறைய ஐநூறு பக்கங்களுக்கும் மேல் விரிகிறது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்தவர்களின் ஆசைகள் நிராசையாகிவிடலாகாது என்ற அவதிதான் இந்நாவலின் பக்கங்களில் இழையோடியிருக்கும் நாம் நுகரும் வாசம்! காந்தன், மதி, செந்தில், செழியன், சுதா, இளங்கோ, தேவகி, தவம், உருத்திரன், கார்த்தி, செல்வி, செபமாலை, பார்த்தி, நிரஞ்சன், பரஞ்சோதி, குழந்தைகள் துஷி, சாரா உட்பட பலரதும் அகதிவாழ்வுக்கதைகளின் ஊடே நகர்ந்து விரியும் நாவல். அவர்களின் கதைகள் 500 பக்கங்களில் எழுதித்தீராதவை! இவர்களில் பரஞ்சோதி என்பவர் நடுக்கடலில் படகில் இறந்து ஜலசமாதியாகிறார். உறவுகள், நண்பர்கள் இருந்தும், இறுதி நிகழ்வில் எவருமே இல்லாமல் அனாதைகள் போன்று சமகாலத்தில் உலகெங்கும் ஆயிரக்கணக்கில் எரிக்கப்படுபவர்கள் புதைக்கப்படுபவர்கள் கதைகளை கேட்டு பதற்றத்திலிருக்கும் நாம், படகுகளில் வந்து கடலில் மூழ்கி ஜலசமாதியானவர்கள் பற்றிய செய்திகளையும் கடந்து வந்திருக்கின்றோம்.

•Last Updated on ••Wednesday•, 15 •April• 2020 02:24•• •Read more...•
 

கண்ணுக்கு தெரிந்த எதிரியும் – கண்ணுக்குத் தெரியாத எதிரியும்!! "ஏலி! ஏலி! லாமா சபக்தானி " - " என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் "

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர்  முருகபூபதிஇயேசு கிறிஸ்து ஆறுமணி நேரம் சிலுவையில் தொங்கினார். முதல் மூன்று மணி நேரங்கள் அவர் ரோம வீரர்களாலும், மற்றவர்களாலும், அடிக்கப்பட்டு, இழிவாக பேசப்பட்டு, எள்ளி நகையாடப்பட்டு, வேதனைகளை அனுபவித்தார். அவற்றை எல்லாம் பொறுமையாக பொறுத்துக் கொண்டார். ஆறாம் மணி நேரம் முதல், ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் அந்தகாரம் பூமியை மூடி கொண்டது. அந்த ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ! “ஏலி! ஏலி! லாமா சபக்தானி “ என்று உரத்துச் சத்தமிட்டுக் கூப்பிட்டார் ! அதற்கு “ என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்..? “ என்று அர்த்தம். – (மத்தேயு 27:45-46)  இந்த வாசகங்களை ஏற்கனவே படித்திருப்பீர்கள். கடந்த வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி யேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட தினம். அதனால் அதனை பெரிய வெள்ளி என்று தமிழிலும் Good Friday என்று ஆங்கிலத்திலும் அழைப்பர்.

அத்தகைய ஒரு துக்க தினத்தில் தேவாலயங்கள் சென்று வழிபட்ட மக்கள், யேசுபிரான் உயிர்த்த ஞாயிறு தினத்தில் காலையிலேயே அங்கு மீண்டும் வந்து பிரார்த்தித்துவிட்டு, சம்மனசுகள் புடைசூழ யேசுவின் திருச்சொரூபம் பவனிவரும் காட்சியை கண்டுகளிப்பார்கள். வழக்கமாக உலகெங்கும் நடக்கும் இந்த நிகழ்வு இந்த வருடம் வழக்கம்போன்று வெளியே பகிரங்கமாக நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை.

யேசுவை சிலுவையில் அறைவதற்கு அன்று கண்ணுக்குத்தெரிந்த எதிரிகள் இருந்தனர். இன்று உலகமக்களை கொன்றழிப்பதற்கு கண்ணுக்குத் தெரியாத எதிரி தோன்றியுள்ளான். யேசு இரண்டு நாட்களில் உயிர்ப்பித்தார். ஆனால், மக்கள்…?! சமகாலத்தில், கொரோனே எதிர்பாராமல் வந்து முழு உலகத்தையும் முடக்கியிருக்கிறது. அதனால் உயிர்தெழுந்த யேசுபிரானும் சம்மனசுகளுடன் வெளியே செல்லாமல் தேவலாயங்களில் தங்கிவிட்டார்.

•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 00:08•• •Read more...•
 

இலக்கியத்திற்கு அப்பால் மல்லிகை ஜீவா நேசித்த பறவை

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் டொமினிக் ஜீவாஎழுத்தாளர் முருகபூபதியாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில் (இன்றைய கனகரத்தினம் கல்லூரி) நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த (1962 )காலத்தில் எங்கள் ஆண்கள் விடுதியின் சார்பாக ஒரு நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டிருந்த டொமினிக் ஜீவாவை வெள்ளை நேஷனல், வெள்ளை வேட்டியுடன்தான் முதல் முதலில் பார்த்தேன். இந்த ஆடைகள் அவருடைய தனித்துவமான அடையாளமாகவே இன்றுவரையில் இருந்துவருகிறது.

அப்பொழுது அவர் எழுத்தாளராக இருந்தார். ஏறக்குறைய பத்து ஆண்டுகளின் பின்னர் அவரை 1971 இல் நீர்கொழும்பில் எதிர்பாராதவிதமாக சந்தித்தபொழுது, அவர் மல்லிகை இதழின் ஆசிரியராகவே எனக்கு அறிமுகமாகி, அன்று முதல் எனது பாசத்துக்குரிய நேசராகவும் குடும்ப நண்பராகவும் திகழ்கின்றார்.

என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது மல்லிகை ஜீவாதான் என்பதை தொடர்ச்சியாக பதிவுசெய்துவருகின்றேன். அவர் பற்றிய விரிவான மல்லிகை ஜீவா நினைவுகள் நூலையும் 2001 இல் எழுதியிருக்கின்றேன். அதற்கு முன்பும் பின்னரும் அவர் பற்றிய பல கட்டுரைகளை பத்திரிகைகள், இலக்கியச்சிற்றேடுகள், இணைய இதழ்களிலெல்லாம் எழுதியுள்ளேன். அவை இலங்கை, தமிழகம், கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா முதலான நாடுகளிலிருந்து வெளியான ஊடகங்களில் பதிவுபெற்றுள்ளன.

அதனால் மீண்டும் அவர் பற்றி இலக்கிய ரீதியில் புதிதாக சொல்வதற்கு என்ன இருக்கிறது...? என ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருக்கையில், இலக்கியத்திற்கு அப்பால் அவர் ஆழ்ந்து நேசித்த பறவை பற்றிய நினைப்பு வந்தது. நூற்றுக்கணக்கான வகைகளைக்கொண்ட பறவை இனம் புறா மீது அவருக்கு அளவுகடந்த பிரியம். உலகில் சமாதானத்தின் சின்னமாக கருதப்படும் புறா, முற்காலத்தில் நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற்றத்திற்கும் உதவியிருக்கிறது. நாமறிந்த புறா இனங்கள்: மணிப்புறா, மாடப்புறா, விசிறிப்புறா, ஆடம்பரப்புறா. ஆனால், இதற்கு மேலும் பல புறா இனங்கள் உலகெங்கும் வாழ்கின்றன. அவற்றில் சில படிப்படியாக மறைந்து வருகின்றன.

•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 00:01•• •Read more...•
 

வவுனியாவில் நலிவுற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் உதவி

•E-mail• •Print• •PDF•

வவுனியாவில் நலிவுற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் உதவிஅவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை 06 ஆம் திகதி வவுனியாவில் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

கடந்த 32 வருடங்களாக அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வவுனியா மாவட்டத்தின் நீண்ட கால தொடர்பாளர் அமைப்பான நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பணிமனையில் நேற்றைய தினம் அதன் தலைவர் திரு. த. கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி நிதியத்தின் உதவிகளைப்பெறும் மாணவர்களின் தாய்மார் அழைக்கப்பட்டு, உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தில் அமைந்துள்ள பணிமனையில், முகாமைக்குழு உறுப்பினர்கள் திருவாளர்கள் சுப்பிரமணியம், அறிவழகன், கள உத்தியோகத்தர் திருமதி பிரேமா ஆகியோர் குறிப்பிட்ட தன்னார்வத் தொண்டு அமைப்பின் பணியாளர்களுடன் இணைந்து இதனை வழங்கினார்கள்.

•Last Updated on ••Tuesday•, 07 •April• 2020 15:13•• •Read more...•
 

அஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு! முற்போக்குச்சிந்தனைகளிலிருந்து தடம் புரளாதவர்!

•E-mail• •Print• •PDF•

நீர்வை பொன்னையன்இலங்கையின் மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று  ( மார்ச் 27 ஆம் திகதி)  வியாழக்கிழமை மாலை கொழும்பில் தமதில்லத்தில் மறைந்தார். உலகெங்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இலங்கையிலும் ஊரடங்கு உத்தரவு  நடைமுறையிலிருக்கும் இக்காலப்பகுதியில் நீர்வை பொன்னையன் அவர்களின் மறைவும் எதிர்பாராமல் நிகழ்ந்துள்ளது. நாளை மறுதினம் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இறுதி நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாக அறியப்படுகிறது.

இம்மாதம் 24 ஆம் திகதிதான் நீர்வைபொன்னையன் தமது 90 வயதையும் பூர்த்திசெய்திருந்தார்.  இறுதியாக அவர் எழுதி முடித்திருந்த நூலொன்றும்  அச்சாகி வெளிவரவிருந்தது. கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலின் பதட்டமான சூழ்நிலையினால் தமது புதிய நூலையும் பார்க்கமுடியாமல் நிரந்தரமாக கண்களை மூடிக்கொண்டார். இனி எம்மிடம் எஞ்சியிருக்கப்போவது நீர்வை பற்றிய நினைவுகள் மாத்திரமே.  அவர் பற்றி முன்னர் நான் பதிவுகளில் எழுதிய குறிப்புகளை கீழே பார்க்கவும்.


திரும்பிப்பார்க்கின்றேன். அறுபது ஆண்டுகாலமாக அயர்ச்சியின்றி எழுதிவரும் இலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன்.

இலங்கையில்  தமிழ்  கலை,  இலக்கிய  பரப்பில்  மாவை,   வல்வை, கரவை,    சில்லையூர்,  காவலூர்,  திக்குவல்லை,  நீர்கொழும்பூர், நூரளை,    நாவல்  நகர்,  உடப்பூர்,  மாத்தளை   முதலான  பல  ஊர்கள் பிரசித்தமாவதற்கு   அங்கு  பிறந்த  பல  கலைஞர்களும் படைப்பாளிகளும்   காரணமாக  இருந்துள்ளனர். ஊரின்  பெயரையே   தம்முடன்  இணைத்துக்கொண்டு இலக்கியப்பயணத்தில்   தொடரும்  பலருள்  நீர்வை   பொன்னையனும்   ஒருவர்.   இலங்கையில்  மூத்த இலக்கியப்படைப்பாளியான   அவர்  சமீபத்தில் அவுஸ்திரேலியாவுக்கு   வருகை  தந்து  சிட்னியில்  தமது  புதல்வியின்   குடும்பத்தினர்களுடன்  தங்கியிருப்பதாக  தகவல் கிடைத்து   அவருடன்  தொடர்புகொண்டேன். வடபுலத்தில்    நீர்வேலியில்  1930   ஆம்  ஆண்டு  பிறந்த  நீர்வை பொன்னையன்,    தமது    ஆரம்பக்கல்வியை    நீர்வேலி    அத்தியார் இந்துக்கல்லூரியில்    ஆரம்பித்து   பின்னர்    மட்டக்களப்பு  - கல்லடி சிவானந்தா   கல்லூரியிலும்  தொடர்ந்து  பயிற்றப்பட்ட  ஆங்கில ஆசிரியராக   கிழக்கிலங்கையில்  சம்மாந்துறை   முஸ்லிம் பாடசாலையில்    பணியாற்றிவிட்டு    இந்தியாவில்   கல்கத்தா பல்கலைக்கழகத்தில்   பயின்று  பட்டதாரியாக  தாயகம்  திரும்பினார்.

•Last Updated on ••Friday•, 27 •March• 2020 00:58•• •Read more...•
 

மலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு

•E-mail• •Print• •PDF•

மலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 32 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் இலங்கை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் தெரிசெய்யப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான முதல் கட்ட நிதிக்கொடுப்பனவு அண்மையில் வழங்கப்பட்டது.

•Last Updated on ••Tuesday•, 07 •April• 2020 15:13•• •Read more...•
 

இலங்கை தினகரனுக்கு 88 வயது! இலங்கையில் தினகரனும் பாரதியும்!

•E-mail• •Print• •PDF•

கலாநிதி கைலாசபதிஏரிக்கரை பத்திரிகை ( Lake House) என வர்ணிக்கப்படும் தினகரன் 1932 ஆம் ஆண்டு முதல் நாளிதழாக வெளியாகிறது. 23-05-1948 ஆம் திகதியன்று தனது முதலாவது தினகரன் வாரமஞ்சரியை தமிழ் வாசகர்களுக்கு  அறிமுகப்படுத்தியது. ஆங்கில, சிங்கள ஏடுகளையும் சஞ்சிகைகளையும் வெளியிட்டுவரும் ஏரிக்கரையிலிருந்து இயங்கும் Lake House  என்ற  பெரிய நிறுவனத்தின் ஒரே ஒரு தமிழ்த்தினசரி  தினகரன். அது வெளிவரத்தொடங்கிய காலகட்டத்தில் மற்றும் ஒரு இந்திய ஊடகம் என்ற மாயைதான்  இலங்கை வாசகர்களிடம் உருவாகியிருந்தது.   தினகரனை இலங்கையின் தமிழ்த் தேசியப்பத்திரிகையாக்கிய  பெருமை பேராசிரியர் க. கைலாசபதியையே சாரும். இவருக்கு முன்னர் கே.க.ப. நாதன் தினகரன் ஆசிரியராக பணியாற்றினார். பின்னாளில் இவர் கொழும்பில் தினபதி, சிந்தாமணி,  வெளியிட்ட  சுயாதீன பத்திரிகை சமாஜத்தின் தந்தி மாலைத்தினசரியின்  ஆசிரியரானார். பாரதி ஆய்வாளராகவும் அறியப்படும் பேராசிரியர் க. கைலாசபதியின்  தினகரன் ஆசிரியப்பணி குறித்தும் இருவேறு கருத்தியல்கள்  இலக்கிய உலகில் நிலவியதை அறிவோம்.

" பல்கலைக்கழகத்திலிருந்து  தமிழ்ச்சிறப்பு  பட்டதாரியாக  அவர் முதல் வகுப்பில்  சித்தியெய்திய பின்னர், அன்று உயர்வாக மதிக்கப்பட்ட அரச நிர்வாகப்பதவியொன்றினைத் தேடியிருக்கவோ  அல்லது  உயர் கல்வி  ஆராய்ச்சித்துறையில் இந்நாட்டிலோ   வெளிநாடு சென்றோ, மேலுக்கு வந்திருக்கவோ கூடும்.  ஆனால், கைலாஸ் அவ்வாறு செய்யாது பத்திரிகையுட் புகுந்தார். அதனை வருவாய்க்கு வழியாக அன்றி, அதன் வாய்ப்புகளை  உகந்தவாறு  பயன்படுத்துவதில்  கைலாஸ் குறியாயிருந்தமை  தெளிவாகும்.

•Last Updated on ••Wednesday•, 18 •March• 2020 01:19•• •Read more...•
 

வாசகர் முற்றம் - அங்கம் 06: சங்க இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம் வரையில் வாசித்து தேர்ந்திருக்கும் அசோக் ! தாஸ்தாவஸ்கியை ஆதர்சமாக கொண்டிருக்கும் இளம்தலைமுறை வாசகர்!

•E-mail• •Print• •PDF•

அசோக் - வாசகர்சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதை நாவல் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்வு, மெல்பனில் கடந்த ஆண்டு ( 2019 ) நடந்தவேளையில் நான் முதல் முதலில் சந்தித்த இலக்கிய வாசகர் அசோக். எமது 19 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் நிகழ்ந்த வாசிப்பு அனுபவப்பகிர்வு அரங்கில், இவர் மறைந்த தோப்பில் முகம்மது மீரானின் ஒரு கடலோரக்கிராமத்தின் கதை நாவலைப்பற்றி பேசினார். தமிழகம்  - மதுரையில் பிறந்து வளர்ந்தவர். பொறியியல் துறையில் கற்றுத் தேர்ந்தவர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மெல்பன் வாசியாகிவிட்டவர். தன்னை தீவிர வாசகனாக்கியவர், மதுரையில் தனது தமிழ் ஆசானாக விளங்கியவரான  குமரேசன் அய்யா என நன்றியோடு சொல்லிவருகிறார்.

சமூகத்தில் ஒரு நல்லபிரஜை உருவாவதற்கு பெற்றவர்களும்  ஆசிரியர்களும் நல்ல உறவுகளும் சிறந்த நட்புகளும், படிக்கும் புத்தகங்களும்தான் பிரதான காரணம் என்பார்கள். பள்ளிப்பருவத்தில் அசோக்கின் தமிழ் ஆர்வத்தை அவதானித்த ஆசான் குமரேசன், பரீட்சைகளில் தமிழ்ப்பாடத்தில் அசோக் சிறந்த மதிப்பெண்கள் பெறும்போதெல்லாம், பேனை வாங்கி பரிசளித்து பாராட்டி ஊக்குவித்தவர். இதனை இங்கு அசோக் நினைவூட்டுவதன் ஊடாக அன்றைய ஆசிரியர்களின் அடிப்படை இயல்புகளை இக்காலத்தலைமுறையினருக்கும் இக்கால ஆசிரியர்களுக்கும் நல்லதோர் செய்தியாகத்  தருகின்றார். அந்த ஆசான், அசோக்கிற்கு  செய்யுள் மற்றும் சங்கத்தமிழ் பாடல்களையும் இலக்கியப்பாடல்களையும் சொல்லிக்கொடுத்துள்ளார்.

•Last Updated on ••Wednesday•, 18 •March• 2020 01:01•• •Read more...•
 

இன்று கவிஞர் அம்பியின் 91 ஆவது பிறந்த தினம்! அம்பி எழுதிக்கொண்டிருக்கும் “சொல்லாத கதைகள்“புதிய தொடர் !! எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை !!!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் அம்பி“எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை.“  இந்த வரிகளை மறந்துவிடாதீர்கள். உங்கள் வாழ்க்கை பயணத்திலும்  ஏதோ ஒரு வடிவத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழும்! கடந்த  வாரம் சிட்னியில் திடீரென மறைந்த கலைவளன் சிசு. நாகேந்திரன் அய்யாவின் இறுதி நிகழ்வு கடந்த 15 ஆம் திகதி சிட்னியில் நடந்து முடிந்தபின்னர்,  நேற்று சிட்னியில் Hurstville என்ற பிரதேசத்தில்,  தனது  மனைவி,  பிள்ளைகள்,  மருமக்கள், மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசிக்கும் எங்கள் மூத்த கவிஞர் அம்பி அவர்களை பார்ப்பதற்குச்சென்றேன்.

அம்பிக்கு இன்று 17 ஆம் திகதி 91 வயது பிறக்கும் செய்தியறிவேன். இதனை சிட்னியில் வதியும் எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான எனது அருமைத்தம்பி கானா. பிரபா அவர்களிடம் சொன்னதும், தானும் இச்சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புவதாக தெரிவித்து, என்னையும் அழைத்துச்சென்றார்.

அவர் முன்னேற்பாட்டுடன் வந்து என்னையும் அம்பியையும் கலந்துரையாடச்செய்து, எமது உரையாடலை ஒளிப்பதிவு செய்து காணொளியாக்கி இன்று அம்பியின் பிறந்த தின நாளிலேயே வெளியிட்டும்விட்டார். இந்த சந்திப்பும், காணொளியும் அம்பி எதிர்பார்த்திருக்காத ஒரு திடீர் நிகழ்வு.

கானா பிரபாவும் அம்பியுடன் கலந்துரையாடிவிட்டு, அம்பி குழந்தைகளுக்காக வண்ணப்படங்களுடன் சில வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட கொஞ்சும் தமிழ் நூலின் பிரதியை, தனது குழந்தை இலக்கியாவுக்காக அம்பியின் கையொப்பத்துடன் பெற்றுக்கொண்டு விடைபெற்றுச்சென்றதன் பின்னர், மாலை 6.00 மணி வரையில் அம்பியுடன் இலக்கியப்புதினங்களை பரிமாரிக்கொண்டிருந்தபோது,  சிட்னியில் வதியும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் திருமதி கார்த்திகா கணேசர், செல்வி ஜெயசக்தி பத்மநாதன் ஆகியோரும் அம்பிக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்களை முற்கூட்டியே தெரிவித்தனர்.

•Last Updated on ••Monday•, 17 •February• 2020 12:04•• •Read more...•
 

அஞ்சலி: கலைவளன்' சிசு நாகேந்திரன் மறைந்தார்! பல்துறை ஆற்றல் மிக்க கலைஞரை இழந்தோம்!

•E-mail• •Print• •PDF•

அஞ்சலி:  கலைவளன்'  சிசு நாகேந்திரன் மறைந்தார்! பல்துறை ஆற்றல் மிக்க கலைஞரை இழந்தோம்!தனது 99 வயதினை நெருங்கும் வேளையில் எம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார் மூத்த எழுத்தாளரும்  நாடக, கூத்து கலைஞரும் சமூகப்பணியாளரும் ஒளிப்படக்கலைஞருமான கலைவளன் சிசு நாகேந்திரன். நீண்டகாலம்  அவுஸ்திரேலியா மெல்பனை வதிவிடமாகக்கொண்டிருந்தவர்.   ஒரு சில வருடங்களுக்கு முன்னர்  அவரது புதல்வியும் பேரப்பிள்ளைகளும்  அவரை சிட்னிக்கு அழைத்துச்சென்று, அங்கு ஒரு முதியோர் காப்பகத்தில் பராமரித்துக்கொண்டிருந்தனர். கடந்த சனிக்கிழமை திடீரென சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 10 ஆம் திகதி திங்கட்கிழமை மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி எம்மை வந்தடைந்தது.  யாழ். நல்லூர்    இவரது  பூர்வீகம்  எனச்சொல்லப்பட்டாலும்,  பிறந்தது கேகாலையில்  1921 ஆம்  ஆண்டில்.   இவரது பிறந்த தினம் ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி.

அந்நாளைய  அரிவரி  தொடக்கம்  லண்டன் மற்றிக்குலேஷன்    வரையில்  யாழ்.  பரமேஸ்வரா       கல்லூரியில் ( இன்றைய யாழ்.  பல்கலைக்கழகம்)   படித்த  நாகேந்திரன்,   பின்னர்  யாழ். மத்திய  கல்லூரியில்  வர்த்தக  முகாமைத்துவம்  கற்று, London Chamber of Commerce  உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றினார். 1944   இல்  மன்னார்  அரசாங்க  அதிபராக  கடமையாற்றிய சிற்றம்பலம்  அவர்களிடம்  தட்டச்சாளராக  பணியாற்றும்  அரச நியமனம்   கிடைத்தது.   பின்னர்  கொழும்பில்  அரச  திணைக்களம் ஒன்றில்    பணிபுரியும்போது  கணக்காய்வாளராக  பதவி  உயர்வு பெற்றார்.    அதனைத்தொடர்ந்து,  1979  இல்   சேவையிலிருந்து ஓய்வுபெறும்   வரையில்    பல்வேறு  திணைக்களங்களில் பணியாற்றியிருக்கிறார்.

நான்கு    பிள்ளைகளின்  தந்தை.  ஒரு  சாதாரண எழுதுவினைஞருக்குரிய  ஊதியம்.   எளிமையான  வாழ்க்கை. இவற்றுக்கு   மத்தியில்  பிள்ளைகளை  படிக்கவைத்து  நல்ல நிலைமைக்கு    அவர்களை   உயர்த்தியவர். தனது வாழ்வை தமிழ் சமூகத்திற்கு  பலவழிகளிலும்  பயன்படும்விதமாக    அமைத்துக்கொண்டிருந்ததுதான்   அவரது  தனிச்சிறப்பு.    அத்துடன்  மற்றவர்களுக்கு  முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர். இளமைக்காலத்தில்  படிப்பில்  படு  சுட்டி  எனப்பெயரெடுத்த  இவர், மாணவர்    தலைவராகவும்  பல்துறை  விளையாட்டு  வீரராகவும் திகழ்ந்திருக்கிறார்.   உதைபந்தாட்டம்,    கரப்பந்தாட்டம்,  டெனிஸ், டேபிள்   டெனிஸ்  முதலானவற்றிலும்  வல்லவராகியிருக்கிறார். அயராது    இயங்கிய   இவரது  சூட்சுமும்  இந்தப்பின்னணிகள்தான் என்பது    எமக்குப்புரிகிறது.

•Last Updated on ••Wednesday•, 12 •February• 2020 04:39•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம்: ஏ.ஏ.ஹெச்.கே.கோரி எழுதியிருக்கும் “காணாமல் போகவிருந்த கதைகள்“! சமூகம் எப்படி இருக்கவேண்டும்..? என்பதை ஆதங்கத்துடன் சொல்லும் வாழ்வின் தரிசனங்கள்!

•E-mail• •Print• •PDF•

முருகபூபதிசமூகம்  இப்படித்தான் இருக்கும். ஆனால், சமூகம் எப்படி இருக்கவேண்டும் என தமது கற்பனையில் நினைத்துப்பார்ப்பவர்கள்  ஆக்க இலக்கியப்படைப்பாளிகள். அந்தப்படைப்பாளிகள் தீவிரமான மனிதநேயர்களாக இருப்பின், அவர்களது படைப்பிலக்கிய எழுத்துக்களில் அவர்கள் எதிர்பார்க்கும் கதாமாந்தர்கள் வருவார்கள். அசாதாரண சம்பவங்கள், திடீர் திருப்பங்கள்  நிகழும். பெரும்பாலான ஆக்க இலக்கியப்படைப்பாளிகளுக்கு அவர்தம் வாழ்க்கைத்  தரிசனங்களே அவர் எழுதும் கதைகளாகிவிடும். சொந்த வாழ்வில், பயணத்தில், சந்திப்புகளில், அனுபவங்களில்,  தரிசிக்கும் மனிதர்களில் , உறவாடும் நட்புகளில் , உயிரினங்களில்  இன்ன பிற காட்சிகளில்  கிடைக்கும் சித்திரம்  மனதில் பதிந்துவிடும். தருணம் வரும்போது அவை, சிறுகதையாக, கவிதையாக, நாவலாக, நாடகமாக, ஏன் திரைப்படமாகவும் உருமாறிவிடும்.

இலங்கையிலும் உலக அரங்கிலும் காணாமல் போன மனிதர்கள் பேசுபொருளாகியிருக்கும் காலப்பகுதியில், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் ஓரே காலப்பகுதியில் அறிமுகமான படைப்பிலக்கியவாதி ஏ.ஏ.ஹெச்.கே.கோரி எழுதியிருக்கும் காணாமல் போகவிருந்த கதைகள் தொகுதி எனக்கு தபாலில் வந்து சேர்ந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவரும் இவரை,  நான் நேரில் பார்த்திராதபோதிலும், இவரது கதைகளை முன்னர் இலங்கை மல்லிகையில் படித்திருக்கின்றேன். ஒருசமயம் இவர் மல்லிகை அட்டைப்படத்தையும் அலங்கரித்து, அதிதியானவர். அதில் இவரைப்பற்றி எழுதியவர் ஈழத்து எழுத்தாளரும்  அண்மையில் சாகித்திய ரத்னா விருதுபெற்றவருமான  ஐ. சாந்தன். சாந்தனுக்கு கோரியை   அக்காலப்பகுதியில் கொழும்பில் அறிமுகப்படுத்தியவர் இலங்கை வானொலி, லண்டன் பி.பி.ஸி புகழ்   அப்பல்லோ சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள்.

•Last Updated on ••Thursday•, 06 •February• 2020 11:14•• •Read more...•
 

தமிழ்த்திரையுலகில் இயக்குநர்களின் ஆளுகைக்குள் அகப்படாத நாகேஷ் ( 1933-2009)! ஆயிரம் படங்களுக்குமேல் அயராமல் நடித்த அபூர்வ கலைஞன்! இன்று ஜனவரி 31 நினைவு தினம்!

•E-mail• •Print• •PDF•

தருமியாக திருவிளையாடல் திரைப்படத்தில்...“ தன் வாழ்க்கையில் என்ன அவலங்கள் இருந்தாலும் தன் மனதில் எத்தனை சோகச்சுமையிருந்தாலும் அதையெல்லாம் மறைத்து தன் நகைச்சுவையால் மக்களை விலா நோகச்சிரித்து மகிழச்செய்பவர்தானே மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்  “ -என்று நடிகர் சிவகுமாரால் 1986 இல் விதந்து எழுதப்பட்டவர்தான் நடிகர் நாகேஷ்.  சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இலட்சக்கணக்கான ரஸிகர்களை தனது அபாரமான நடிப்பினால் கவர்ந்தவர் நாகேஷ். நாகேஷ், தமிழ்நாடு,தாராபுரம்பகுதியில் கன்னட மாத்வர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில்   1933 ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் திகதி  பிறந்தார். 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி மறைந்தார்.

ஆங்கில திரைப்பட உலகில் புகழ்பெற்ற ஜெர்லூயிஸைப் போன்று தமிழ்த்திரையுலகில் தனது ஒடிசலான தேகத்தையும் அம்மைத்தழும்புகள் ஆக்கிரமித்த முகத்தையும் வைத்துக்கொண்டு அஷ்டகோணலாக உடலை வளைத்தும் நெளித்தும் கருத்தாழமிக்க வசனங்களை உதிர்த்தும் தமிழ்த்திரையுலகில் புகழ்பெற்ற நட்சத்திரமாகத் திகழ்ந்த நாகேஷ்  அவர்கள் , கமல்ஹாஸன் தயாரித்த ‘மகளிர் மட்டும்’ படத்தில் பிரேதமாகவும் நடித்தவர்.

குண்டுராவ் என்ற இயற்பெயரைக்கொண்ட நாகேஷ், நடித்த முதல் திரைப்படம் தாமரைக்குளம்.  ஆரம்பத்தில் மேடைநாடகங்களில் நடித்தும் திருமண வைபவங்களில் நகைச்சுவைநிகழ்ச்சிகளை நடத்தியும் வாழ்க்கையைச்சிரமப்பட்டு ஓட்டிய நாகேஷை தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராக மட்டுமன்றி சிறந்த குணச்சித்திர நடிகராகவும் மாற்றிய பெருமை பாலச்சந்தர் மற்றும் ஜெயகாந்தனையே சாரும்.  பாலச்சந்தரின் நீர்க்குமிழி,  எதிர்நீச்சல், ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான்  என்பன அவரது குணச்சித்திர நடிப்புக்குச்சிறந்த சான்று. ஸ்ரீதரின் காதலிக்கநேரமில்லை, ஊட்டிவரை உறவு, ஏ.பி. நாகராஜனின் திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள்  மற்றும் சர்வர் சுந்தரம் உட்பட பல நூறு படங்கள் நாகேஷின் தனித்துவமான நடிப்பாற்றலுக்கு சான்று பகர்பவை.

•Last Updated on ••Saturday•, 01 •February• 2020 12:27•• •Read more...•
 

எமது இலக்கிய சகோதரன் மல்லிகை சி. குமார் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபம்

•E-mail• •Print• •PDF•

எமது இலக்கிய சகோதரன் மல்லிகை சி. குமார் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபம்

ஜனவரி. 28, 2020
எமது இலக்கிய சகோதரன் மல்லிகை சி. குமார் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து ஆழ்ந்த துயரமடைந்தோம். கடந்த 2018 ஆம் ஆண்டில்தான் அவர் தனது மனைவியையும் இழந்திருக்கிறார் என்பது தெரிகிறது. மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் 1972 காலப்பகுதியில் அட்டனில் நடத்திய மாநாட்டில்தான் அவரை முதல் முதலில் சந்தித்தேன். அக்காலப்பகுதியில் இலக்கியப்பிரவேசம் செய்தவர்களில் அவரும் ஒருவர். குறிப்பிடத்தகுந்த மலையக படைப்பாளி. கொடகே விருதும் கிடைக்கவிருந்த தருணத்தில் - அவரது மற்றும் ஒரு நூல் வெளியாகவிருக்கும் வேளையில் அதனையெல்லாம் பார்க்காமல் விடைபெற்றுள்ளார்.

•Last Updated on ••Wednesday•, 26 •February• 2020 10:03•• •Read more...•
 

கிழக்கில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி

•E-mail• •Print• •PDF•

கிழக்கில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி
அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக  இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான  இலங்கை மாணவர் கல்வி நிதியம், அண்மையில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை – மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டில் வாழும் மாணவர்கள் சிலருக்கு 2019 – 2020 ஆண்டிற்கான சில மாதங்களுக்குரிய நிதிக்கொடுப்பனவை வழங்கியது. இந்நிகழ்வு,  கல்முனை கோட்டக்கல்வி அலுவலகத்தில் ( தமிழ் பிரிவு)  கோட்டக்கல்வி அதிகாரி திரு. எஸ். சரவணமுத்து அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

•Last Updated on ••Sunday•, 19 •January• 2020 11:27•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம்: அம்ரிதா ஏயெம்மின் கதைத் தொகுதி - விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்

•E-mail• •Print• •PDF•

படித்தோம் சொல்கின்றோம்: அம்ரிதா ஏயெம்மின் கதைத் தொகுதி - விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்கிளிநொச்சி அறிவியல் நகரில் நடைபெற்ற 49 ஆவது இலக்கியச் சந்திப்பிற்கு வடக்கு, கிழக்கு, தலைநகரத்திலிருந்தும் கனடா, லண்டன், மற்றும் தமிழ்நாட்டிலிருந்தும் பல கலை, இலக்கிய ஆளுமைகள் வந்திருந்தனர். நண்பர் கருணாகரனின் அழைப்பில் அங்கு சென்றிருந்தேன். அவுஸ்திரேலியா திரும்பியது முதல் பல்வேறு பணிகள் இருந்தமையால் அந்த இரண்டு நாள் சந்திப்பு குறித்து எந்தவொரு பதிவும் எழுதுவதற்கு கால அவகாசம் கிடைக்கவில்லை. ஆனால், அதற்கு வந்திருந்த பலரும் தத்தமது முகநூல் வழியாக படங்களையும் குறிப்புகளையும் வெளியிட்டிருந்ததாக அறிந்தேன். என்னிடம் முகநூல் கணக்கு இல்லையென்பதனால், வேறு எதுவும் தெரியவில்லை!

குறிப்பிட்ட 49 ஆவது இலக்கியச்சந்திப்பில் உரையாற்றிய இலக்கிய நண்பர் எஸ். எல். எம். ஹனீபா அவர்கள், அந்த சந்திப்புக்கு வருகை தந்திருந்த அம்ரிதா ஏயெம் எழுதிய விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் என்ற கதைத்தொகுதி பற்றி ஒரு வரியில் சிலாகித்துச்சொன்னார். அன்றுதான் அம்ரிதா ஏயெம் அவர்களை முதல் முதலில் சந்திக்கின்றேன். அவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் விலங்கியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் எனவும் இயற்பெயர் ஏ.எம். றியாஸ் அகமட் எனவும் அறிந்துகொண்டடேன்.

அங்கு நின்ற இரண்டு நாட்களும் அவருடன் பழகியதனால், அவரது எளிமையான சுபாவங்களும் அதிர்ந்து பேசாத இயல்புகளும் என்னை பெரிதும் கவர்ந்தன. இலக்கிய சந்திப்பில் எஸ். எல். எம். ஹனீபா, இவரது கதைத் தொகுதி பற்றிச்சொல்லும்போது அதில் வரும் இரண்டு பாத்திரங்களின் பெயர்களைச் சொன்னதும் அரங்கம் சிரித்தது. ஒன்று ராஜபக்‌ஷ. மற்றது விக்னேஸ்வரன்.

மதிய உணவு இடைவேளையில், அம்ரிதா, எனக்கு தனது கதைத்தொகுதியை தந்தார். எனது புகலிட நாடு திரும்பியதும் படித்துவிட்டு எழுதுவேன் எனச்சொல்லியிருந்தாலும், ஏற்கனவே குறிப்பிட்ட பணிச்சுமைகளினால் எழுதுதற்கான நேரம்
கடந்துகொண்டேயிருந்தது.

•Last Updated on ••Monday•, 13 •April• 2020 23:32•• •Read more...•
 

திரும்பிப்பார்க்கின்றேன்: பாரதீய சங்கீதம் இசைமேதை எம்.பி. ஶ்ரீநிவாசனும் நடன நர்த்தகி கார்த்திகா கணேசரும் இணைந்த கவிஞனின் கனவு !

•E-mail• •Print• •PDF•

முருகபூபதி" இசை வெறும் உணர்ச்சியைத்தரக்கூடிய போதையல்ல. அது நலிந்துபோன இதயத்திற்கு நம்பிக்கையை ஊட்டுகிறது. மனிதனின் தத்துவார்த்த வாழ்வை வளப்படுத்தும் வலிமை அதற்குண்டு. எனவே மனித நாகரீகத்தின் செல்வமான இசையின் உயிரை அகற்றி, அதன் வெறும் சடலத்தை மாத்திரம் காட்டும் நிலையை இசையமைப்பாளர்கள் கைவிடவேண்டும். மக்கள் கவிஞன் பாரதி கூறியதைப்போலவே இசையின் வாயிலாக நவரசங்களை பிரதிபலிக்கச்செய்யவேண்டும். அதைச்செய்ய முன்வரும் இசையமைப்பாளர்களையும் மக்களையுமே நான் விரும்புகின்றேன்."

இவ்வாறு பாரதி நூற்றாண்டு காலகட்டத்தில் இலங்கை வந்திருந்த இந்திய இசைமேதை எம்.பி. ஶ்ரீநிவாசன் ( மானாமதுரை பாலகிருஷ்ணன் ஶ்ரீநிவாசன்) வீரகேசரி வாரவெளியீட்டிற்கு ( 20-12-1981) வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.
இவரை பேட்டிகண்டவர் வீரகேசரி பத்திரிகையாளர் சுபாஷ் சந்திரபோஸ்.

யார் இந்த ஶ்ரீநிவாசன்...?

ஒரு   கால கட்டத்தில்  சென்னையில்  இடதுசாரி  கலை இலக்கியவாதிகள்   கூட்டாக  இணைந்து  தயாரித்து  வெளியிட்ட பாதை   தெரியுது  பார்    திரைப்படத்தின்  இசையமைப்பாளர். இந்தப்படத்தில்   சில   காட்சிகளில்   ஜெயகாந்தனும்    வேண்டா வெறுப்பாக   தோன்றி  நடித்திருந்தார்.  எனினும்  படத்தின்  நீளம்  கருதி   அதனை  சுருக்கும்பொழுது  தான்  வரும்  காட்சிகளை ஜெயகாந்தன்   நீக்கச்சொன்னார்.

ஜெயகாந்தனின் அருமை நண்பரான எம்.பி.ஶ்ரீநிவாசன், தமிழ், மலையாளம், வங்காளம் உட்பட சில இந்திய மொழிகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருப்பவர்.

•Last Updated on ••Thursday•, 06 •February• 2020 11:05•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம்: பெண்களை காவியமாந்தர்களாக படைத்தவர்களும், பெண்ணாகவே பார்த்த சிந்தனையாளர்களும் ஓவியா எழுதிய “ கருஞ்சட்டைப் பெண்கள் “

•E-mail• •Print• •PDF•

முருகபூபதிஇராமாயணத்தில் வரும் சீதை, மகாபாரதத்தில் வரும் குந்தி, காந்தாரி, திரௌபதி, சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, மாதவி, நளவெண்பாவில் வரும் தமயந்தி பற்றியெல்லாம் அறிந்திருப்பீர்கள். இவர்களை படைத்தவர்கள் யார்…? என்று பார்த்தால், வால்மீகி – கம்பர் – வியாசர் – இளங்கோவடிகள் - புகழேந்தி முதலான ஆண்கள்தான். காளிதாசர்தான் சகுந்தலையையும் படைத்தார். இந்தப்பெண்களையெல்லாம் கஷ்டப்படுத்திய இந்த ஆண்களின் படைப்புகளுக்கு எமது சமூகம் காவியம் என்றும் பெயர் சூட்டிக்கொண்டது. வள்ளுவரும் என்ன செல்கிறார்: அடிசிற்கினியாளே… அன்புடைய மாதே பதிசொற் தவறாத பாவாய்… அடிவருடி பின்தூங்கி முன் எழுந்த பேதையே…. “ என்று தனது மனைவி வாசுகி மரணித்த பின்னர் அவளை சிதையிலே வைத்து தீவைப்பதற்கு முன்னர் பாடினாராம்! அவளது மரணத்தின் பின்னர் வள்ளுவருக்கு அடிவருடியது யார்..? என்பது தெரியவில்லை. இந்தக்கதைகளைப்பற்றியெல்லாம் யோசிக்கவைத்திருக்கிறது - மறுவிசாரணைக்குட்படுத்துகிறது ஓவியாவின் கருஞ்சட்டைப்பெண்கள் நூல்.

எமது வாழ்நாளில் பலதரப்பட்ட இஸங்களை பார்த்துவருகின்றோம். கம்யூனிசம், மார்க்ஸிசம், ஷோசலிஸம், இவை தவிர, கிளாசிசம் - மேனரிஸம் - ரொமாண்டிசிசம் - மொடர்னிசம், எக்ஸ்பிரஷனிசம் - ரியலிசம் - நச்சுரலிசம் – சிம்பலிசம் – இமேஜிசம் - எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்றெல்லாம் ஏராளமான இஸங்கள் இருக்கின்றன. ஆனால், ஆணிஸம் – பெண்ணிஸம் என்று எதுவுமில்லை. பெண்ணியம் இருக்கிறது. ஆண்ணியம் இருக்கிறதா..?

கம்யூனிஸ்ட்டுகளின் அடையாளம் சிவப்பு என்றால் சுயமரியாதை இயக்கத்தினரது அடையாளம் கருப்பு!  தந்தை “ பெரியார் பெரியார் “ என்று காலம்பூராவும் சொல்லிவருகின்றோம். சுயமரியாதை இயக்கத்தின் தந்தை எனப்போற்றுகின்றோம். ஆனால், அவருக்கு பெரியார் என்ற பட்டத்தை யார் சூட்டினார்கள்..? என்று பார்த்தால், 1938 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில்தான் அவருக்கு அந்தப்பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி இந்நூலில் தெரியவருகிறது.

•Last Updated on ••Thursday•, 12 •December• 2019 11:19•• •Read more...•
 

வாழ்வை எழுதுதல் -- அங்கம் –06: தேவாலயங்களில் இறுதிமூச்சை காணிக்கையாக்கிய ஆத்மாக்கள் ! அரசியல்வாதிகளே…. நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்…!?

•E-mail• •Print• •PDF•

முருகபூபதிஅந்த   தேவாலயத்தின் முன்னால் நிற்கின்றேன்.  சில மாதங்களுக்கு முன்னர்தான் ஏப்ரில் மாதம் 21 ஆம் திகதி அங்கு பலர் தங்கள் இறுதிமூச்சை காணிக்கையாக்கினர். அவர்களின் பெயர்ப்பட்டியல் பதிவான காட்சிப்பலகையின் முன்னால் நின்று மௌனமாக பிரார்த்தித்தேன்.  பிரார்த்தனையின்போது அமைதி அவசியம்  என்று  சிறுவயதில் எனது அம்மாவும் பாட்டியும் அடிக்கடி சொல்லித்தந்திருக்கிறார்கள். எங்கள் வீட்டில்  நவராத்திரி , கந்தசஷ்டி விரத காலங்களில் பிரார்த்தனை வழிபாடு நடக்கும்போது அதற்கு இடையூறு தரும்வகையில் சத்தம் போடக்கூடாது, குழப்படி செய்யக்கூடாது என்று அம்மாவும் பாட்டியும் எச்சரித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்குப்பயந்து  அமைதியாக இருப்போம். வெள்ளிக்கிழமைகளிலும் திருவிழாக்காலங்களிலும் கோயில்களுக்கு செல்லும்போதும், அங்கே அமைதியாக இருக்கவேண்டும் என்றுதான் புத்தி சொல்லி அழைத்துப்போவார்கள். செவ்வாய்க்கிழமைகளில் அம்மா, எங்கள் ஊரில் சிலாபம் செல்லும் பாதையில் தழுபொத்தை என்ற இடத்தில் வரும் அந்தோனியார் கோயிலுக்கு அழைத்துச்செல்வார்கள். அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கும்போது, அம்மா கையோடு எடுத்துவரும் தேங்காய் எண்ணெய் போத்திலை என்னிடத்தில் தந்து அங்குள்ள தீபவிளக்கிற்கு எண்ணெய் வார்க்குமாறு சொல்வார்கள்.

அந்தோனியார் கோயில் மிகவும்  அமைதியாக இருக்கும். வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அங்கு செல்வோம். கோயில்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்வோம். ஊரின் புறநகரத்திலிருக்கும் பௌத்த விகாரைக்கு வெசாக், பொசன் பண்டிகை  காலங்களில் செல்வோம். எனினும் அங்கிருந்த பள்ளிவாசல்களுக்கு செல்லும் பழக்கம் இருந்ததில்லை. ஆயினும்,  அங்கிருந்த  அல்கிலால் மகா வித்தியாலயத்தில் மேல் வகுப்பு படிக்கும்போது, அவர்களின் பிரார்த்தனைகளை கேட்பதுண்டு. எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களில் அநேகர் இஸ்லாமியர். மூவினத்தவர்களும் செறிந்து வாழ்ந்த பிரதேசமாக  எங்கள் ஊர்  விளங்கியமையால், மூவினத்து நண்பர்களையும் சம்பாதித்திருக்கின்றேன்.

•Last Updated on ••Thursday•, 12 •December• 2019 11:13•• •Read more...•
 

வாழ்வை எழுதுதல் -- அங்கம் 05 : சாய்வுநாற்காலியில் தஞ்சமடைந்திருக்கும் மூத்த எழுத்தாளர் மு. பஷீர் மனிதநேயமும் போர்க்குணம்தான் என்பதை கதைகளில் சித்திரித்த இலக்கியவாதி

•E-mail• •Print• •PDF•

மூத்த எழுத்தாளர் மு. பஷீர்எமது  நீர்கொழும்பூரில் கலை, இலக்கியவாதிகள் இணைந்து இலக்கிய வட்டம் என்ற அமைப்பை 1975  களில் தொடங்கினோம். அதன் தலைவராக இயங்கியவர் எழுத்தாளர் மு. பஷீர். இந்த அமைப்புக்கு முன்னோடியாக எமது இல்லத்தில் வளர்மதி நூலகம் என்ற  நூல் நிலையத்தையும் தொடக்கியிருந்தேன். வளர்மதி நூலகம் 1971 இல் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி தொடங்கப்பட்ட காலத்தில் உருவானது. மாலையானதும் ஊரடங்கு உத்தரவு அமுலாகிவிடும். வெளியே செல்லமுடியாது. அக்காலத்தில் தொலைக்காட்சியும் இல்லை.

இலக்கிய நண்பர்கள் மத்தியில் நூல்களை பரிமாரிக்கொள்வதற்காகவே வளர்மதி இயங்கியது. வளர்மதி கையெழுத்து சஞ்சிகையும் நடத்தினோம்.  இக்காலப்பகுதியில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவும்  எங்கள் ஊருக்குவந்து அறிமுகமானார்.மல்லிகை நீர்கொழும்பு  சிறப்பிதழும் வெளியிட்டோம். அதற்கு முன்னர் எமது மாமா முறையானவரான அ. மயில்வாகனன் தனது சாந்தி அச்சகத்திலிருந்து அண்ணி என்ற மாத இதழை சில மாதங்கள் நடத்தினார். அதன் முதல் இதழின் வெளியீட்டு விழாவுக்கு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்லையா இராசதுரை தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியின்போதுதான் பஷீர் எனக்கு அறிமுகமானார். எனினும் அப்போது நான் இலக்கியப்பிரவேசம் செய்திருக்கவில்லை. பழைய பஸ்நிலையத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த மாநகர சபையின் பொது நூலகத்தில் பஷீரை அவ்வப்போது சந்திப்பேன். அவருக்குத் தெரிந்த தொழில் பீடி சுற்றுவது. அவரது வாப்பா கேரளத்திலிருந்து வந்தவர்.

•Last Updated on ••Thursday•, 28 •November• 2019 00:47•• •Read more...•
 

மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு!

•E-mail• •Print• •PDF•

முருகபூபதி(  வெட்ட வெட்ட தழைக்கும் வாழை மரம்  போன்று காலத்துக்குக் காலம் சோதனைகள் – வேதனைகளைச்  சந்தித்தாலும்  மீண்டும் மீண்டும் புத்துயிர்ப்புடன் மலர்ந்துகொண்டிருப்பதுதான் யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை.   இலங்கையில் அதிபர் தேர்தல் அமளிகளுக்கு மத்தியில்  யாழ்.  ஈழநாடு பிரைவேட்  லிமிட்டட்  நிறுவன இயக்குநரும் டான் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவருமான மூத்த ஊடகவியலாளர் எஸ். எஸ். குகநாதன்,  இந்த வாரம் யாழ். ஈழநாடு வார இதழை  யாழ்ப்பாணத்தில்  வெளியிட்டுள்ளார். லண்டன் நாழிகை இதழ் ஆசிரியர் மாலி மகாலிங்கசிவம், அதிபர் தேர்தல் வேட்பாளர் சிவாஜிலிங்கம், ஈழநாடு ஸ்தாபக இயக்குநர் டொக்டர் சண்முகரட்ணத்தின் புதல்வர் எஸ். ரட்ணராஜன் ஆகியோருட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். முருகபூபதி எழுதி,  அண்மையில் வெளியான இலங்கையில் பாரதி என்னும் ஆய்வு நூலில், முன்னைய ஈழநாடு குறித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரை இங்கு பதிவாகின்றது. )

"  கே.சி.தங்கராஜா, கே.சி.சண்முகரத்தினம்  ஆகிய  இரு சகோதரர்களின்  உள்ளத்தில் முகிழ்த்த பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனை 1958 இல் யாழ்ப்பாணத்தில், கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித்தூன்றப்பட்டு, 1959 பெப்ரவரியில் முளைவிட்டு வாரம் இருமுறையாக “ஈழநாடு” என்ற பெயரில்  வெளிவரத்  தொடங்கி,  நாளும் பொழுதும்  உரம்பெற்று வளர்ந்து,  ஈற்றில் 1961இல் முதலாவது பிராந்தியத் தமிழ்த் தினசரியாக  சிலிர்த்து  நிமிர்ந்தது. அன்று தொட்டு இறுதியில் யாழ் மண்ணில்  தன் மூச்சை நிறுத்திக்கொள்ளும் வரை அதன் இயங்கலுக்கான போராட்டம்  ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன்  பின்னிப் பிணைந்ததாகவே  நகர்ந்துவந்துள்ளது. ஜுன் 1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தையும், பூபாலசிங்கம் புத்தகசாலையையும் கொழுத்திய பேரினவாதத்தின் கண்களுக்கு ஈழநாடு காரியாலயமும்  தப்பிவிடவில்லை. அதன் பின்னர் ஈழப் போராளிகளின் குண்டுத் தாக்குதலுக்கும் இலக்காகி, 1988 பெப்ரவரியில்  தன்னைக் காயப்படுத்திக் கொண்டது. பின்னர் தொடர்ச்சியான பத்திரிகைச் செய்தித் தணிக்கைகள், அச்சுறுத்தல்கள், பொருளாதார நெருக்கடிகள் என்று சுற்றிச் சூழ்ந்த நிலையில்  தொண்ணூறுகளின்  ஆரம்பத்தில்  தன்  இயக்கத்தை நிறுத்திக் கொண்டது." இவ்வாறு யாழ்ப்பாணத்தில் ஈழகேசரியின் மறைவிற்குப்பின்னர் உதயமாகிய ஈழநாடு பத்திரிகையின் தோற்றத்தையும் அஸ்தமனத்தையும் லண்டனில்  வதியும் நூலகர் நடராஜா செல்வராஜா " ஈழநாடு என்றதோர் ஆலமரம்" என்னும் கட்டுரையில் உணர்வுபூர்வமாகவும்  அறிவார்ந்த  தளத்திலும்  பதிவுசெய்துள்ளார்.

•Last Updated on ••Wednesday•, 13 •November• 2019 02:08•• •Read more...•
 

வாழ்வை எழுதுதல் அங்கம் – 04: வழிகாட்டி மரங்கள் போன்று நகராமலிருக்கும் வாழ்க்கையில்தான் எத்தனை அவலங்கள் ? எழுச்சியும் வீழ்ச்சியும் புத்துயிர்ப்பும் சொல்லும் கதைகள் !!

•E-mail• •Print• •PDF•

முருகபூபதிநீண்ட காலத்திற்குப்பின்னர் அவன் என்னைப்பார்க்க வந்தான்.  அவனை     “ அவர்  “ என்று அழைக்காமல் மரியாதைக் குறைவாக   “அவன்  “ என்று அழைப்பதாக வருந்தவேண்டாம். அவன் பிறப்பதற்கு முன்னர் – நூறாண்டுகளுக்கு முன்பு நான் பிறந்தமையால், அவ்வாறு அழைக்கின்றேன்.

பல முன்னோர்களையும்  “ அவன்  “ என்றுதானே விளிக்கிறார்கள். ஏன்… சில சந்தர்ப்பங்களில் எம்மைப்படைத்த ஆண்டவனைக்கூட “ அவன்  படைத்தான்  “ எனத்தானே சொல்கிறார்கள்.

நான், அவன் அப்பன் பிறப்பதற்கு முன்பே பிறந்திருக்கின்றேன். என்னைப்படைத்தவர்களினால்   என்னிடம் வந்து செல்பவர்களுக்காக  உருவாக்கப்பட்ட  குழந்தைகள் வந்து திரும்பிய  அக்காலத்தில், அவன் பாட்டன் பிறந்த ஊர்க்காரர்கள் கல்லெறிந்து  என்னைக் களைக்கப்பார்த்தார்கள்.

அவனது பாட்டி அந்தக்கதைளை அவனிடம் அவனது சிறுவயதில் சொல்லியிருக்கிறாள். நீண்ட காலத்திற்குப்பின்னர் என்னை அன்று பார்க்க வந்திருந்த அவன், எனது மேனியை தொட்டுப்பார்த்து பரவசமடைந்தான்.

அவனுக்கு அந்தநாள் நினைவுகள் வந்திருக்கவேண்டும். அவனை  அன்று அழைத்துவந்தவர்கள், என்னிடத்தில் விட்டுச்சென்றுவிட்டார்கள். அவன் என்னிடமிருந்து விடைபெற்றுச்செல்வதற்கு இன்னும் பல நிமிடங்கள் இருந்தன. அதனால்,  என்னருகில் வந்து எனது அங்க இலட்சணங்களை ரசித்தான். இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் கதைகள் இருக்கின்றன. அதுபோன்று எனக்கும் ஒரு கதை நீண்ட வரலாறாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 1902 ஆம்  ஆண்டில் பிறந்த எனக்குள்ளும் ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கின்றன.  நான் பல தடவைகள் செத்துப்பிழைத்திருக்கின்றேன். அன்று என்னைப்பார்க்க வந்திருந்த அவன் அறிந்துவைத்திருக்கும் ஒருவரின் மகனும் எழுத்தாளன்தான். கவிதையும் எழுதியிருக்கின்றான். அவனுக்கு அன்று என்னைப்பார்த்ததும் அந்த அன்பரின் மகன் எழுதிய கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.

•Last Updated on ••Wednesday•, 13 •November• 2019 02:16•• •Read more...•
 

வாழ்வை எழுதுதல் - அங்கம் 03: கண்களுக்கு இமைகள் தெரிவதில்லை ! நெஞ்சுக்குள்ளே சுமந்த பாரதியும் முதுகிலே சுமந்த சித்தரும் !!

•E-mail• •Print• •PDF•

முருகபூபதிமகாகவி பாரதிக்கு கிடைத்த நண்பர்கள் பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். அவர்களில் சித்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், வக்கீல், வர்த்தகர், தீவிரவாதிகள், விடுதலை வேட்கை மிக்கவர்கள், பத்திரிகாசிரியர்கள், சாதாரண அடிநிலை மக்கள் , பாமரர்கள் என பலதரத்தவர்களும் இருந்தனர். அவர் சந்தித்த சித்தர்கள் அவருக்கு ஞானகுருவாகியுமிருக்கின்றனர்.

அவ்வாறு அவரது வாழ்வில் மாற்றங்களையும் சிந்தனைப்போக்கில் புதிய திசைகளையும் தந்தவர்களின் வரிசையில்தான் எங்கள் யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் அவர்களும் வருகிறார்.

பாரதி தனது வாழ்நாளில் சந்தித்த சித்தர்களில் மாங்கொட்டைச்சாமி என அழைக்கப்பட்ட குள்ளச்சாமி புதுச்சேரியில் அறிமுகமாகிறார். நாளரை அடி உயரமுள்ள அவருடைய ரிஷி மூலம் எவருக்கும் தெரியாது.

வீதியோரத்தில் படுத்துறங்குவார். மண்ணில் புரள்வார். நாய்களுடனும் அவருக்கு சண்டை வரும். கள்ளும் அருந்துவார். கஞ்சா புகைப்பார். பிச்சையும் எடுப்பார். இருந்தும் அவர் துணி வெளுக்கும் தொழிலாளி. ஒரு சமயம் பாரதியிடத்தில் " நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய், நான் முதுகின் மேல் சுமக்கிறேன்" என்றார்.

மற்றும் ஒருநாள் பாரதி, அந்தக்குள்ளச்சாமியிடம், " ஞானநெறியில் செல்லவிரும்புபவன் எந்தத்தொழிலைத் தேர்ந்தெடுக்கவேண்டும்...? " என்று கேட்கிறார்.

அதற்கு அந்தச்சாமியார், " முதலில் நாக்கை வெளுக்கவேண்டும், பொய், கோள், கடுஞ்சொல், இன்னாச்சொல், தற்புகழ்ச்சி என்பன கூடாது. உண்மையைத்தவிர வேறொன்றும் இந்த நாக்கு பேசலாகாது. அச்சத்தை அகற்றவேண்டும். அதற்கு மனதினுள் இருக்கும் இருளைப்போக்கவேண்டும்" எனச்சொல்லியிருக்கிறார். அதன் பிறகு,

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்.....
அச்சமில்லை... அச்சமில்லை....
மனதிலுறுதி வேண்டும்...   முதலான சாகாவரம் பெற்ற வரிகள் பாரதியிடத்தில் பிறக்கின்றன.

•Last Updated on ••Wednesday•, 13 •November• 2019 02:16•• •Read more...•
 

வாழ்வை எழுதுதல் - அங்கம் 02: அஞ்சலிக்குறிப்புகள் - இலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி மறைந்தார்

•E-mail• •Print• •PDF•

எமது  இலக்கியக்குடும்பத்தின் சகோதரி தங்கேஸ்வரி மட்டக்களப்பில் மறைந்தார் என்ற செய்தி வந்ததும் சற்று அதிர்ச்சியாக இருந்தது. இலங்கைப்பயணத்தில் இம்மாதம்   ( ஒக்டோபர் ) 08 ஆம் திகதி அவரை, அவரது மட்டக்களப்பு  இல்லத்தில் சந்தித்தேன். அவர் கடந்த சில வருடங்களாக  இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்தவர். அவ்வப்போது தொலைபேசியில் உரையாடி அவரது உடல்நலம்  பற்றிக்கேட்பதுண்டு. அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தமையால், எனக்குத்  தெரிந்த சில அரசியல் பிரமுகர்களிடம் அவர் பற்றிச்சொல்லி, சென்று பார்ப்பதற்கு ஆவனசெய்யுமாறும், அவரது மருத்துவ சிகிச்சைக்கு உதவுவதற்கு ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தேன்.  எனினும் எவரும் அவரைச்சென்று பார்த்திருக்கவில்லை என்பதை அன்றைய தினம் அறிந்துகொண்டேன். நண்பர் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனுடன் அவரை பார்க்கச்செல்லும்போது பிற்பகலாகியிருந்தது.

வீட்டின் கதவை தட்டியபோது,  உள்ளிருந்து  “ யார்..?  “ என்ற அவரது குரல் கேட்டது. எமது பெயரைச்சொன்னதும்  “ கதவு சும்மாதான் சாத்தியிருக்கிறது வாருங்கள்  “  என அழைப்புக்குரல் கொடுத்தார். அவர், தரையில் ஒரு துணியை விரித்து படுத்திருந்தார். பார்த்ததும் நெகிழ்ந்துவிட்டேன். “  என்னம்மா… இப்படி தரையில் படுத்திருக்கிறீர்கள்..?  “ எனக்கேட்டேன்.

“தரையில் படுத்திருப்பது சுகமாக இருக்கிறது “  என்றார். நாமும் அவர் அருகில் தரையில் அமர்ந்துகொண்டோம்.  

“ அவருக்கு வாழைப்பழம் ஒவ்வாமையானது. வாங்கவேண்டாம். “  என்றார் நண்பர். அதனால் அப்பிள் பழங்களுடன் சென்றேன்.

“ உங்களுக்கு ஏனம்மா வாழைப்பழத்தின் மீது கோபம் ? “  எனக்கேட்டேன்.

“ அதில் அதிகம் பொட்டாசியம் இருக்கிறது. சிறுநீரக உபாதையுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய பழம்.  அதில் அதிகமாக நார்ச்சத்து இருப்பதனால், குடலிலிருந்து அதிகம் தண்ணீரை உறிஞ்சிவிடும்   “  என்றார்.  அவரது உடல்நிலையறிந்து கவலைப்பட்டோம். எஞ்சியிருந்த ஒரு பூர்வீக காணியையும் விற்று மருத்துவச்செலவுகளை கவனித்ததாகச் சொன்னார்.  கதிர்காமம் பற்றிய பூர்வீக வரலாற்றை எழுதி முடித்திருப்பதாகவும், என்னுரைதான் எழுதவேண்டியிருக்கிறது. அதற்கிடையில் கண்பார்வை குறைந்துவிட்டதாகவும், இனி கண் சிகிச்சையும் மேற்கொள்ளவேண்டியிருக்கிறது என்றார்.

•Last Updated on ••Sunday•, 03 •November• 2019 02:58•• •Read more...•
 

வாழ்வை எழுதுதல் 01: பலருக்கு இலக்கிய அடையாளம் வழங்கிய டொமினிக் ஜீவாவிடமிருந்து கற்றதும் பெற்றதும்! வெள்ளீய அச்சு எழுத்துக்களில் மலர்ந்து, கணினி யுகத்திலும் மணம்வீசிய மல்லிகை!

•E-mail• •Print• •PDF•

வாழ்வை  எழுதுதல் 01: பலருக்கு இலக்கிய அடையாளம் வழங்கியவரிடத்திலிருந்து கற்றதும் பெற்றதும்! வெள்ளீய அச்சு எழுத்துக்களில் மலர்ந்து, கணினி யுகத்திலும் மணம்வீசிய மல்லிகை!

அவரை  முதல் முதலில் நான் சந்தித்த இடம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரி.  அங்கு நான் கற்றவேளையில்  அதன்  பெயர் கனகரத்தினம் மத்திய கல்லூரி என மாற்றம் கண்டது. நீர்கொழும்பிலிருந்து ஆறாம்தர புலமைப்பரிசில் பெற்று அக்கல்லூரி ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து  படித்துக்கொண்டிருந்தபோது, ஒருநாள் எங்கள் விடுதியின் சார்பில் எழுத்தாளர் டொமினி ஜீவாவை அழைத்து,   கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மேடையேற்றி பேசவைத்தார்கள். ஒரு துவிச்சக்கர வண்டியில் வந்து பேசினார்.  வெள்ளை நிறத்தில் வேட்டியும் நேஷனலும் அணிந்திருந்தார். எனக்கு யாழ்ப்பாணம் அப்போது புதியது. அங்குதான் முதல் முதலில் அவரையும் பனைமரத்தையும் பார்த்தேன். எனக்குத் தெரியாத சங்கானை சாதிக்கலவரம் பற்றியும் ஆப்ரகாம் லிங்கன் பற்றியும் அவர் அன்று பேசியது மாத்திரமே இன்றும் நினைவில் தங்கியிருக்கிறது. அந்த வருடம் 1963.

அவர் அன்றுசொன்ன சாதிவேற்றுமை சமூக ஏற்றத்தாழ்வு என்பன பற்றிய புரிதல் அக்காலத்திலேயே அந்தக்கல்லூரி அமைந்திருந்த அரியாலைப்பிரதேசத்தில் நேரடியாக எனக்கு  கிட்டியது.  எந்தவொரு  சொந்த பந்தங்களும் இல்லாதிருந்த அந்தப்பிரதேச வாழ்க்கை எனக்கு,   எனது பூர்வீக ஊர்மீதும் வீட்டின் மீதும் ஏக்கத்தையே வளர்த்தது. என்னுடன் படித்த எனது மாமா மகன் முருகானந்தனுக்கும் தனது குடும்பத்தை விட்டு வந்த ஏக்கமிருந்தது. 1965 இல் அங்கிருந்து விடைபெற்று ஒரு நாள் இரவு புறப்படும் தபால் ரயிலில் கொழும்பு வந்து எங்கள் ஊர் திரும்பிவிட்டோம்.

அதன்பின்னர் 1975 ஆம் ஆண்டுவரையில் யாழ்ப்பாணத்தையே நான் திரும்பிப்பார்க்கவில்லை. சுமார் பத்தாண்டுகளின் பின்னர் என்னை யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிப் பார்க்கவைத்தவர்தான் அவர்.  ஒரு மாணவனாக  அங்கு சென்று திரும்பிய என்னை ஒரு படைப்பிலக்கியவாதியாக மாற்றி  மீண்டும்  அங்கு அழைத்து எனது முதல் கதைத்தொகுதிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அறிமுகநிகழ்வு நடத்தி பாராட்டியவர்தான் அவர்.

•Last Updated on ••Tuesday•, 22 •October• 2019 07:30•• •Read more...•
 

முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “! இலங்கையர்கள் எவ்வாறு பாரதியைக் கொண்டாடினார்கள் ?

•E-mail• •Print• •PDF•

ஞானம் சஞ்சிகை ஆசிரியர் ஞானசேகரன் உரை( கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதன் மண்டபத்தில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் நிகழ்த்திய மதிப்பீட்டுரை)

பாரதிதான் முதன்முதலில் சாதாரண மக்களின் சமூக வாழ்வை கவிதையில் பாடு பொருளாக்கியவன். அதற்கு முன்னர் கவிதை நிலப்பிரபுத்துவ வாழ்க்கையை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. சமயச் சார்புடையதாக இருந்தது.

பாரதிதான் அரசியல் சமூக வாழ்வைக் கவிதையில் கொண்டுவந்தவன். “ எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நம் தாய் மொழிக்கு புதிய உயிர் தருவோன் ஆகிறான் " என்று கூறியவன் பாரதி.

எனவே இலக்கியத்தில் நவீனத்தை புகுத்தியவன் பாரதி. அதாவது நவீனத்தை பாடு பொருளிலும் எடுத்துரைப்பு முறையிலும் புகுத்தி புதுமை செய்தவன் பாரதி. இலக்கியத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியவன் பாரதி. அவன் காட்டிய வழியில் புதிய யுகத்திற்குள் படைப்பாளிகள் புகுந்தனர்.

இந்தப்பின்னணிகளுடன் முருகபூபதி எழுதியிருக்கும் புதிய நூல் இலங்கையில் பாரதி. பாரதி ஏற்படுத்திய தாக்கம் எத்தகையது? பாரதியை இலங்கையர்களாகிய நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம் என்பதை இந்நூல் விரிவாகப் பேசுகிறது.

•Last Updated on ••Wednesday•, 16 •October• 2019 09:42•• •Read more...•
 

ஒரு இலக்கியனின் பருதிப்பார்வை - அங்கம் 05 தமிழ் – சிங்கள இலக்கிய உறவுக்கு பாலமாக விளங்கும் திக்குவல்லை கமால்

•E-mail• •Print• •PDF•

திக்குவல்லை கமால்.இலங்கையில் முஸ்லிம்கள் என்றாலே – அவர்கள்  ‘ வர்த்தக சமூகத்தினர் ‘ என்ற கணிப்பு பொதுவானதாக நிலைபெற்றிருந்த காலமொன்றிருந்தது. அக்கணிப்பு பின்னாளில் பொய்யானது. அவ்வாறான மாற்றத்திற்கு அச்சமூகம் கல்வி மீது கொண்டிருந்த நாட்டம்தான் அடிப்படைக்காரணம். அவர்கள் மத்தியிலிருந்து ஆசிரியர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள்   தோன்றினார்கள். இலங்கையில் பெரும்பான்மையினத்து பௌத்த  சிங்கள மக்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசங்களில் அவர்கள் தமிழில் பேசினார்கள். எழுதினார்கள். அத்துடன் சிங்களம் பேசுவதற்கும் எழுதுவதற்கும்  தெரிந்துகொண்டார்கள். அதனால் எமது ஈழத்து தமிழ் இலக்கியவளர்ச்சியில் அவர்களும் உந்துசக்திகளாக மாறினார்கள். தென்னிலங்கையில் மாத்தறைக்கு சமீபமாக இருக்கும் திக்குவல்லை என்ற ஊரின் பெயரை தமிழ் இலக்கிய உலகிற்கு பிரசித்தம் செய்த முன்னோடியாக எம்மத்தியில் திகழ்ந்துகொண்டிருப்பவர்தான்  இலக்கிய நண்பர் திக்குவல்லை கமால்.

ஒரு கடலோரக்கிராமம் தமிழ் இலக்கியத்தில் தனது பெயரை தக்கவைத்துக்கொண்டதற்கு அங்கு பிறந்து ஆசிரியராகவும் இலக்கிய கர்த்தாவாகவும் அறிமுகமான நண்பர் எம். எச். எம். ஷம்ஸ் எமக்கு அறிமுகப்படுத்திய  திக்குவல்லை கமாலின் ஆசிரியர்களும் எழுத்தாளர்கள்தான் என்பதும் ஆச்சரியமானது.

ஏ. இக்பால், சந்திரசேகரன் ஆகியோரிடம் கல்வி கற்றிருக்கும் திக்குவல்லை கமாலின் இயற்பெயர்  முகம்மது ஜலால்தீன் முகம்மது கமால். 1950 ஆம் ஆண்டு, திக்குவல்லையில் பிறந்திருக்கும் கமால், அவ்வூர் மக்களின் பேச்சுத்தமிழை இலக்கியத்திற்கு வரவாக்கியவர்.

1970 களில் தமிழகத்திலும் இலங்கையிலும் புதுக்கவிதைத் துறை பெரும் வீச்சாக வளர்ந்தது. புதுக்கவிதையை ஏற்கலாமா? நிராகரிக்கலாமா? என்ற சர்ச்சைகளும் எழுந்தன. அதனை குளியலறை முணுமுணுப்புகள் என்றும், ஆற்றுவெள்ளம் எனவும் சிலர்  எதிர்வினையாற்றினார்கள். ஆனால் புதுக்கவிதை புற்றீசல்போன்று பரவியது. இரண்டு வரிகளில் பல அர்த்தங்கள் தரக்கூடிய புதுக்கவிதைகளும் வந்தன. வல்லிக்கண்ணன், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தொடரையும் எழுதினார். பின்னர் அத்தொடரும் நூலாகியது.  தமிழகத்தில் வானம்பாடிகள் இந்தத் துறையில் சிறகடித்துப்பறந்தனர்.  புதுக்கவிதைகளுக்காகவும் சிற்றேடுகள் மலர்ந்தன.  மல்லிகையில் நான் எழுதத்தொடங்கிய காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து பல படைப்பாளிகளும் அறிமுகமாகியிருந்தனர்.  இலங்கையில் அவ்வேளையில்  எனக்கு படிக்கக்கிடைத்த முதலாவது புதுக்கவிதை நூல் எலிக்கூடு. அதனை நூல் எனச்சொல்வதிலும் பார்க்க சிறிய பிரசுரம் என்றுசொல்வதுதான் பொருத்தம். சின்னச்சின்ன கவிதைகளுக்கு அத்தகைய சிறு பிரசுரங்கள் போதுமானதாகவுமிருந்தது.

•Last Updated on ••Wednesday•, 25 •September• 2019 07:37•• •Read more...•
 

அஞ்சலி: நினைவுகளில் ஓவியமாகிவிட்ட ஓவியர் மொராயஸ்! நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களின் கதைகளுக்கு உயிர் வழங்கிய ஓவியர்! எம்.ஜி.ஆரின் விருப்பத்தில் அவரது ' தாய் ' இதழுக்கும் படம் வரைந்தார்!

•E-mail• •Print• •PDF•

நினைவுகளில் ஓவியமாகிவிட்ட  ஓவியர் மொராயஸ்! நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களின் கதைகளுக்கு உயிர் வழங்கிய ஓவியர்!  எம்.ஜி.ஆரின் விருப்பத்தில் அவரது ' தாய் ' இதழுக்கும் படம் வரைந்தார்!உலகப்பிரசித்திபெற்ற ஓவியர் பிக்காசோ, மொனாலிசா ஓவியம் பற்றி அறிந்திருப்போம். ஆனால், இந்தப்பெயர்களை லங்கையில் பிறந்து, தனது வாழ்நாள் முழுவதும் ஓவியராகவே வாழ்ந்த ஒருவர் தமது பிள்ளைகளுக்கு வைத்து அழகு பார்த்த செய்தி தெரியுமா...? வீரகேசரியுடன் எனக்கு உறவும் தொடர்பும் ஏற்பட்ட 1972 ஆம் ஆண்டு முதல் என்னுடன் நட்புறவாடியவரான  ஓவியர் மொராயஸ்  கடந்த 26 ஆம் திகதி  திங்கட்கிழமை  மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். சிலர் தமது முன்னாள் காதலிகள், காதலர்களின் அல்லது தமது விருப்பத்துக்குரிய கடவுள்களின் பெயர்களை -வாசித்து அனுபவித்த கதைப்பாத்திரங்களின் பெயர்களை அல்லது குடும்பத்தின் பரம்பரை பெயரை தமது பிள்ளைகளுக்கு வைப்பார்கள். அவ்வாறு தமக்குப் பிடித்த ஓவியத்துறை சார்ந்த பெயர்களை மொராயஸ் தமது பிள்ளைகளுக்குச் சூட்டியது வியப்பல்ல.

வத்தளை புனித அந்தோனியார் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியை முடித்திருந்த மொராயஸ் விரும்பியவாறு இவரது தந்தையார் தமிழ்நாட்டுக்கு இவரை அனுப்பி படிக்கவைத்தார். இளம் வயதுமுதலே இவருக்கு ஓவியம் வரைவதில் இருந்த நாட்டம்தான் பின்னாளில் ஓவியக்கல்லூரியிலும் இணையச் செய்திருக்கிறது. பொதுவாக எமது தமிழ் சமூகத்தில் தமது பிள்ளைகள் மருத்துவர்களாக பொறியியலாளராக சட்டத்தரணிகளாக கணக்காளராக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புத்தான் அந்நாளைய பெற்றோர்களிடம் இருந்தது. காரணம் இந்தத்துறைகளில் நிறைய சம்பாதிக்கமுடியும் சமூக அந்தஸ்தை வளர்த்துக்கொள்ளவும் முடியும் என்ற மனப்பான்மைதான். ஓவியம், கலை, ஊடகம் முதலான துறைகள் புகழை மட்டும்தான் தரும், சோற்றுக்கு திண்டாட்டத்தைதான் தரும் என்று அந்நாளைய பெற்றோர்கள் நினைத்தார்கள்.

தமது மகனின் விருப்பம் அறிந்து தமிழ்நாட்டில் ஓவியக்கல்லூரியில் இணைத்துவிட்ட அந்தத் தந்தை சற்று வித்தியாசமானவர்தான். அத்துடன் மொராயஸின் அண்ணன் லெனின் மொராயஸ், இலங்கையில் பிரபலமான சினிமா இயக்குநர். சுமார் நாற்பது சிங்களப்படங்களை இயக்கியிருப்பவர். அவர் இறுதியாக இயக்கிய படம் 'நெஞ்சுக்குத்தெரியும்' என்ற தமிழ்ப்படம். ஆனால், அது வெளியாகவில்லை. எஸ்.ரி.ஆர். பிக்சர்ஸ் ( எஸ்.ரி. தியாகராஜா தயாரித்த) படம் வத்தளை சினிமாஸ் ஸ்டுடியோவில் 1983 வன்செயலில் எரிந்து சாம்பரானது.

ஒகஸ்டின் மொராயஸ் இலங்கை பத்திரிகை ஊடகத்துறையில் ஓவியர் மொராயஸ் என்றே அறியப்பட்டவர். அண்ணன் காட்டிய வழியில் அவர் தம்பி மொராயஸ_ம் ஆரம்பத்தில் இலங்கையில் திரைப்படத்துறையில் கலை இயக்குநராகவும் திரைப்படங்களுக்கு டைட்டில் எழுதுபவராகவும் தொழிற்பட்டிருக்கிறார்.

தமிழ்நாடு ஓவியக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் ஓவியம் பயின்றுவிட்டு அங்கேயே இரண்டு ஆண்டுகாலம் ஓவிய ஆசிரியராகவும் பணியாற்றிய பின்னரே நாடு திரும்பிய மொராயஸ், கொழும்பில் வெளியான சிங்களப்படங்களுக்கு சுவரொட்டிகள் வரைந்தார். அக்காலத்தில் வெளியான  தமிழ்ப்படம் 'மஞ்சள் குங்குமம்'. இந்தப்படத்திற்குரிய சுவரொட்டிகளை வரைந்துகொண்டிருந்தபொழுது, அதில் நடித்த நடிகர் ஸ்ரீசங்கர், இவரை அழைத்துக்கொண்டு வீரகேசரி  அலுவலகம் வந்து, அச்சமயம் அங்கு செய்தி ஆசிரியராக இருந்த டேவிட் ராஜூவிடம் அறிமுகப்படுத்தினார். 1969 இலிருந்து வீரகேசரியில் ஓவியராக பணியாற்றிய மொராயஸ்1982 ஆம் ஆண்டிலேயே அங்கு நிரந்தர ஊழியரானார்.

•Last Updated on ••Thursday•, 29 •August• 2019 00:31•• •Read more...•
 

அஞ்சலி: தமிழ், சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைக்கு பாலமாக விளங்கிய உபாலி லீலாரத்ன ! தமிழக, இலங்கை மற்றும் புகலிடத் தமிழ் படைப்புகளைச் சிங்களத்திற்கு வரவாக்கிய இலக்கியத் தொண்டன் !

•E-mail• •Print• •PDF•

உபாலி லீலாரத்னபுன்னகை தவழும் முகம். தமிழில் பேசினால் குழந்தையின் மழலை உதிரும். ஆழ்ந்த அமைதி. இலக்கிய நண்பர்களை அரவணைக்கும் வார்த்தைகள். இந்த அடையாளங்களுடன் வாழ்ந்த நண்பர் உபாலி லீலாரத்ன அவர்களை இனிமேல் ஒளிப்படங்களில்தான் பார்க்கமுடியும்! இனிமேல்  நிகழும் மொழிபெயர்ப்பு சார்ந்த உரைகளில் பேசுபொருளாவார். தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை முன்னர் ஒருவழிப்பாதையாகத்தான் இருந்தது. அந்தப்பாதையை இருவழிப்பாதையாகவும் இருகை ஓசையாகவும் மாற்றியவர்களில்  குறிப்பிடத்தகுந்த ஒருவர் உபாலி லீலாரத்ன. அவரது மறைவுச்செய்தி எமக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் மலையகம்,   உயிர்த்தியாகங்களினால் பசுமையானது மட்டுமல்லாமல்,  இலங்கைப் பொருளாதாரத்திற்கு அறுபது சதவீதமான அந்நிய செலவாணியையும் ஈட்டித்தந்தது. ஆனால், அதற்குக் காரணமாக இருந்த மக்கள்  அவலமான வாழ்க்கைதான் வாழ்ந்தனர். இன்றும்கூட  ஒரு ஐம்பது ரூபாவுக்காகவும் போராடவேண்டி நிலையில் வாழ்கின்றனர்.

1977 இல் பதவியிலிருந்த அம்மையாரின் ஏகபுதல்வனுக்காகவே நுவரேலியா – மஸ்கெலிய என்ற புதிய தேர்தல் தொகுதி சிங்களப்பேரின ரீதியாக உருவாக்கப்பட்டது. அதன் பின்னணியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட தமிழ்மக்கள் வாழ்ந்த மலையகக் காணிகளை அபகரித்து, பெரும்பான்மை இனத்தவருக்கு வழங்கும் சதியை அன்றைய அரசு மேற்கொண்டதால் வெடித்த போராட்டத்தில்  பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவர்தான் சிவனு லெட்சுமணன் என்ற தொழிலாளி. அந்த டெவன் தோட்டப்போராட்டம் குறித்து கதைகள் எழுதப்பட்டுள்ளன. தி. ஞானசேகரன் எழுதிய குருதிமலை அந்தப்பின்னணியில் எழுதப்பட்ட குறிப்பிடத்தகுந்த நாவல்.

இனநெருக்கடி உச்சம் பெற்ற அந்தப்பிரதேசத்தில் பிறந்து இலக்கியப்பிரவேசம் செய்தவர்தான் அண்மையில் மறைந்துவிட்ட உபாலி லீலாரத்ன. ஆனால், அவரிடம் இனக்குரோதம் இருக்கவில்லை. அப்பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் – சிங்கள மக்களிடத்தில் தோன்றிய இனமுறுகளினால் அவருக்குக்கிடைத்த புத்திக்கொள்முதல் இன ஐக்கியம்தான். அங்கு நீண்டகாலம் வாழ்ந்தமையால், தமிழை பேசுவதற்கும் வாசிப்பதற்கும்  கற்றுக்கொண்டார்.  ஆனால், தனது தனிப்பட்ட தேவைக்காக அவர் கற்கவில்லை. அவரிடத்தில் சமூகம் சார்ந்த ஆழமான பார்வை இயல்பிலேயே இருந்திருக்கிறது. மலையக தமிழ்மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டமையால்தான் அவரால்  தே கஹட்ட – தேயிலைச்சாயம்  என்ற நூலையும் எழுதமுடிந்தது. தனது தொடக்ககால வேலையை தலவாக்கலையில் ஒரு அச்சகத்தில் ஆரம்பித்திருக்கிறார். இங்கு மலையகத்தமிழ் மக்கள் செறிந்து வாழ்கிறார்கள். இங்கிருந்து நாடாளுமன்றத்திற்கும் பிரதிநிதிகள் தெரிவாகின்றனர். சி.வி. வேலுப்பிள்ளையிலிருந்து  சந்திரசேகரனிலிருந்து இன்றைய மல்லியப்பூ திலகர் வரையில் அதனை நாம் அவதானிக்கலாம். உபாலி லீலாரத்ன பணியாற்றிய  அச்சகத்தில் தமிழ்ப்பிரசுரங்களும் அச்சடிக்கப்பட்டமையால்  அவரால், தமிழை எளிதாக புரிந்துகொள்ளவும் முடிந்திருக்கிறது. அதிர்ந்து பேசத்தெரியாதவர். அதனால் எளிமை அவரது இருப்பிடமாகியது. பின்னாளில் அவரது வாழ்க்கை தலைநகரில் மருதானையில் அமைந்துள்ள கொடகே புத்தகசாலையிலும்  அதன்பதிப்பகம் சார்ந்தும்  தொடங்கியதும் தென்னிலங்கையில் வசித்த தமிழ் – முஸ்லிம் எழுத்தாளர்களதும் நண்பரானார்.

•Last Updated on ••Monday•, 05 •August• 2019 22:21•• •Read more...•
 

மீட்பரை இழந்தோம்! சமூகத்திற்காகப் பேசியதுடன் , சமூகத்தையும் பேசவைத்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர்! மெல்பன் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் பகிர்ந்துகொள்ளும் நினைவுகள்!

•E-mail• •Print• •PDF•

மீட்பரை இழந்தோம்! சமூகத்திற்காகப் பேசியதுடன் , சமூகத்தையும் பேசவைத்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர்! மெல்பன் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் பகிர்ந்துகொள்ளும் நினைவுகள்!தமிழாராய்ச்சிக்கென உலகப்பொது நிறுவனம் அமைத்தவர் அமரர் தனிநாயகம் அடிகளார் எனச்சொல்வோம்.   இன்னலுற்ற தமிழ் சமூகத்திற்காக அயராது பாடுபட்டவர்கள் வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் எனச்சொன்னால் அது  அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களையே குறிக்கும். கடந்த 11   ஆம் திகதி மாலை கொழும்பில் மறைந்தார் என்ற துயரச்செய்தி வந்தது. இலங்கை வடபுலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட நெடுங்காலமாக பங்குத்தந்தையாக ஆன்மீக பணிகளை முன்னெடுத்துவந்தவர். அதேசமயம், தான் வாழ்ந்த பிரதேசத்து மக்களின் நலன்கள் குறித்து அக்கறையோடு செயற்பட்டவர். இலங்கையில் தமிழ் சமூகத்திற்கும்  தமிழர்தம் உரிமைக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளின்  வாழ்வாதாரத்திற்கும் சமூக நீதிக்கும் இனங்களின் நல்லிணக்கத்திற்கும் அயராமல் பாடுபட்டவர்களின் வரிசையில் பல கத்தோலிக்க அருட்தந்தைகளை நாம் காணமுடியும். தவத்திரு தனிநாயகம், மேரி பஸ்டியன், ஆபரணம் சிங்கராயர், அன்டனி ஜோன் அழகரசன், சந்திரா பெர்ணான்டோ உட்பட பலரை நாம் இனம்காண்பிக்கமுடியும். எனினும் இவர்களைப்பற்றி இதுவரையில் முழுமையாக எவரும் ஆவணப்படுத்தவில்லை. தனிநாயகம் அடிகளார் குறித்து பல நூல்களும் ஆவணப்படங்களும் வெளியாகியுள்ளன. இலங்கையில் மக்கள் சேவையே மகேசன் சேவையென வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர். இவர் குருத்துவப்பட்டம் பெற்று 49 ஆண்டுகளாகின்றன. பொன்விழா ஆண்டை நெருங்கும் வேளையில் விடைபெற்றுவிட்டார்.

போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் 2009 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் முல்லைத்தீவு   வலைஞர்மடம் கத்தோலிக்க தேவாலயம் மீது படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் பங்குத்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரும் ஒருவர். அம்பலவன்பொக்கணை, வலைஞர் மடம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதரின் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் புகலிடம் பெற்று வசிக்கின்றனர். அவர் நினைத்திருந்தால், அந்த போர் நெருக்குவாரத்திலிருந்து விடுபட்டு, தமது உறவுகள் வாழும் தேசங்களிற்கு வந்து இங்கிருக்கும் தேவாலயங்களில் ஆன்மீகப்பணியை தொடர்ந்திருக்கமுடியும். அவர் தமிழர் புகலிட நாடுகளுக்கு வந்தார். ஆனால், நிரந்தரமாக தங்குவதற்கு வரவில்லை. அவர் மெல்பனுக்கு வரும் சந்தர்ப்பங்களில் மக்களை சந்தித்து, தனது பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகளையே சேகரித்து எடுத்துச்சென்று வழங்கினார்.

2004 ஆம் ஆண்டு இறுதியில் சுனாமி கடற்கோள் அநர்த்தத்தின்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்கள் ஊடாகவே நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்தோம். அவர் மெல்பன் வந்த சந்தர்ப்பங்களிலும் சுனாமி வந்த காலத்தில் கொழும்பில் அவர் தங்கியிருந்த குருமனையிலும் சந்தித்து பேசியிருக்கின்றேன். மக்களின் பிரச்சினைகளே அவரது பேசுபொருளாகவிருக்கும். அவர்  புனித இறைபணிக்கு அப்பால்  தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கள் குறித்தே சிந்தித்தார்.

இவரது தங்கை ஜெஸியை மணந்தவரான மெல்பனில் வதியும் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன்,  அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் குறித்த நினைவுகளை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

•Last Updated on ••Sunday•, 14 •July• 2019 07:05•• •Read more...•
 

அரைநூற்றாண்டுக்கும் மேலாக அயராது எழுத்தூழியத்தில் ஈடுபடும் ஊடகவியலாளன் ‘ எஸ்தி'! “ வீழ்வேனென்று நினைத்தாயோ? வீழ்ந்தாலும் எழுந்திருப்போம்! “ ஊடகத்திரு “ எஸ்தி 50 + “ மலர் தந்த மலரும் நினைவுகள்

•E-mail• •Print• •PDF•

அன்பிற்கினிய நண்பர் பூபதி அவர்கட்கு , நீண்ட….. நீண்ட….. காலத்திற்குப் பின்னர் தங்கள் கடிதம் படித்து நேரில் கண்டு உரையாடிய மகிழ்வடைந்தேன். “  எனத் தொடங்கும்  05-08-1999 ஆம் திகதி  எழுதப்பட்ட  ஒரு கடிதம் எனக்கு தபாலில் வந்திருந்தது.  கனடாவிலிருந்து வந்திருந்த அக்கடிதத்தை எழுதியவர் எனது நீண்ட கால நண்பர் எஸ்.தி என எம்மால் அழைக்கப்படும் மூத்த  ஊடகவியலாளர் எஸ். திருச்செல்வம். இவருக்கும் எனக்குமிடையே நட்பு மலர்ந்த காலம் 1980 களாயிருக்கலாம். அவர் எனக்கு முன்பே ஊடகத்துறையில் பிரவேசித்தவர். அவரது பெயருடன் (By line) வெளிவந்த பல முக்கியமான தலைப்புச்செய்திகளுடன் அன்றைய தினகரன் நாளேட்டினை எனது பாடசாலைப்பருவத்திலேயே படித்திருக்கின்றேன். அவரது ஊடகப்பணிக்கு அரைநூற்றாண்டு காலம் வயதாகிவிட்டது. அதனை முன்னிட்டு கனடாவில் நடந்த சேவை நலன் பாராட்டுவிழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட  ஊடகத்திரு  ‘ எஸ்தி 50 + ‘ என்ற நூலும் கடிதங்கள் என்ற  2001 ஆம் ஆண்டு வெளிவந்த எனது நூலும் எனது மேசையில் கணினிக்கு அருகிலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

‘ எஸ்தி 50 + ‘ மலர்,  எஸ்தியின் வாழ்வையும் பணிகளையும் பலரதும் கருத்துக்களுடன் ஆவணப்படுத்தியிருக்கிறது. இற்றைக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் எஸ்தி எனக்கு எழுதிய கடிதம் அவரது திறந்த மனதை படம்பிடித்துக்காண்பிக்கிறது. கொழும்பில் 1980 காலப்பகுதியில் நாம் வாரம்தோறும் சந்திப்போம். அங்கு அவர் கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் என்ற அமைப்பை உருவாக்கி பல கலை, இலக்கிய ஊடகம் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். இச்சந்திப்புகளை பெரும்பாலும்  பம்பலப்பிட்டி கிறீண்லண்ட்ஸ் உணவு விடுதியிலும்  சாந்திவிஹார் உணவுவிடுதியிலும்  தமிழ்ச்சங்கத்திலும் நடத்துவார். ஆழிக்குமரன் ஆனந்தன் பாராட்டு நிகழ்வு, மூத்த பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் பிரிவுபசார விழா, பேராசிரியர் சு. வித்தியானந்தன் மணிவிழா, பாரதி நூற்றாண்டு விழா உட்பட பல நிகழ்ச்சிளை அழகாக ஒருங்கிணைத்திருப்பார். இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு  பாரதியார் சம்பந்தப்பட்ட பல அரிய ஒளிப்படங்களை தருவித்து காட்சிப்படுத்தி,  எஸ்தி நடத்திய பாரதி நூற்றாண்டு விழா மிகவும் சிறப்பானது!

பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு அக்காலப்பகுதியில் தினகரன் பிரதம ஆசிரியராக பணியாற்றிய ( அமரர் ) இ. சிவகுருநாதன் தலைமை தாங்குவார். அவர் சுவாரசியமான மனிதர். அவர் தலைமை தாங்கினால் சபையில் சிரிப்பொலிக்கு குறைவிருக்காது. பேச்சாளர்களையும் சபையோரையும் அங்கதச்சுவையால் அரவணைத்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். அவரையும் மறக்காமல்  ‘எஸ்தியின் குருநாதர்கள் வரிசையில் ‘ எஸ்தி 50 + ‘ மலரில் படத்துடன் நினைவூட்டியிருக்கிறார்கள் மலர்க்குழுவினர். ஏனையவர்கள்: கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி சரவணபவன் – யாழ். ஈழநாடு ஆசிரியர் கே.பி ஹரன்.

•Last Updated on ••Thursday•, 11 •July• 2019 15:27•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம்: கவிஞர் அம்பி அகவை 90 பாராட்டு விழா மலர் “ அன்புக்கோர் அம்பி “ யின் ஆளுமையைப்பற்றி பேசும் ஆவணம்

•E-mail• •Print• •PDF•

படித்தோம் சொல்கின்றோம்: கவிஞர் அம்பி அகவை 90 பாராட்டு விழா மலர் “ அன்புக்கோர் அம்பி  “ யின் ஆளுமையைப்பற்றி  பேசும் ஆவணம் சமூகத்தில் கல்வி, கலை இலக்கியம், ஊடகம்,  மருத்துவம், அரசியல், பொதுநலத் தொண்டு முதலான துறைகளில் ஆளுமைகளாக விளங்கியிருப்பவர்கள் குறித்த பதிவுகள் பெரும்பாலும் அவர்களின் மறைவுக்குப்பின்பே அஞ்சலிக்குறிப்புகளாக வெளிவருகின்றன.

தற்கால மின்னியல் ஊடகத்தில் வலிமையான தொடர்பாடலாக விளங்கும் முகநூலில் அத்தகைய சிறு குறிப்புகளை  பதிவேற்றிவிட்டு, உள்ளடங்கிப்போகின்ற கலாசாரம்  வளர்ந்திருக்கிறது.

அவை பெரும்பாலும் எழுதப்படுபவருக்கும் மறைந்தவருக்கும் இடையே நிலவிய உறவு குறித்தே அதிகம் பேசும்.

ஆனால், மறைந்துவிட்டவர் அவற்றை  பார்க்காமலேயே நிரந்தர உறக்கத்தில் அடக்கமாவார். அல்லது தகனமாவார்.

இந்தத்  துர்ப்பாக்கியம் காலம் காலமாக எல்லா சமூக இனத்தவர்களிடமும் நிகழ்ந்து வருகிறது.

ஒரு இலக்கிய படைப்பாளி மறைந்துவிட்டால், அதுவரையில் அவர் எழுதிய எழுத்துக்களை படிக்காதவரும் அவற்றைத்  தேடி எடுத்துப்படிக்கச்செய்யும் வகையில் சிலரது அஞ்சலிக்குறிப்புகள் அமைந்துவிடும்.
ஒரு ஆளுமையை  வாழும் காலத்திலேயே கனம் பண்ணி போற்றி பாராட்டி விழா எடுப்பதையும் அதற்காக சிறப்பு மலர் வெளியிடுவதையும் மேற்குறித்த பின்னணிகளிலிருந்துதான் அவதானிக்கவேண்டியிருக்கிறது.
அவுஸ்திரேலியா -  சிட்னியில் சுமார் மூன்று தசாப்தகாலமாக வதியும் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி அவர்கள் ஆசிரியராகவும் பாட விதான அபிவிருத்தியில் நூலாக்க ஆசிரியராகவும் படைப்பிலக்கியவாதியாகவும் ஆய்வாளராகவும் தமிழ் உலகில் அறியப்பட்டவர்.

அகவை தொன்னூறை நிறைவுசெய்துகொண்டு, ஏறினால் கட்டில் இறங்கினால்,  சக்கர நாற்காலி என வாழ்ந்துகொண்டு கடந்த காலங்களை நனவிடை தோய்ந்தவாறு சிட்னியில் வசிக்கின்றார்.

அவருக்கு 90 வயதாகிவிட்டது என அறிந்ததும், சிட்னியில் வதியும் கலை, இலக்கிய, ஊடகத்துறை சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து விழா எடுத்தனர்.

விழாவில் காற்றோடு பேசிவிட்டுச்செல்லாமல்,  ஒரு சிறப்பு மலரையும் வெளியிட்டு, கவிஞர் அம்பியின் பன்முக ஆளுமைப்பண்புகளை பதிவுசெய்துள்ளனர்.

இச்செயல் முன்மாதிரியானது. ஒருவர் வாழும் காலத்திலேயே பாராட்டி கௌரவிக்கப்படல் வேண்டும் என்ற எண்ணக்கருவை சமூகத்தில் விதைக்கும் பண்பாட்டினையும் கொண்டிருப்பது.

அதற்காக முன்னின்று உழைத்தவர்களை பாராட்டியவாறே மலருக்குள் பிரவேசிப்போம்.

இம்மலரை அவுஸ்திரேலியாவில் தமிழர் மத்தியில் நன்கறியப்பட்ட ஞானம் ஆர்ட்ஸ் பதிப்பகத்தின் சார்பில் ஞானசேகரம் சிறீ றங்கன் அழகாக வடிவமைத்துள்ளார்.

“ பன்முக ஆளுமை அம்பி ஐயாவை வாழ்த்த வயதில்லை! வணங்குகிறோம் “ என்ற தலைப்பில் மலருக்கான முன்னுரை எழுதப்பட்டுள்ளது.

தமிழ்க்கலைச்சொல்லாக்கத்தில் பங்களிப்பு – உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளில் ஆய்வு சமர்ப்பித்தல் – தமிழில் விஞ்ஞான – கணித ஆசிரியர் – தமிழ் குழந்தை பாடல்களுக்காக பெயர்பெற்ற குழந்தை இலக்கியவாதி – தமிழில் மருத்துவம் கற்பிக்கப்புறப்பட்ட மருத்துவர் சமூவேல் கிறீன் பற்றிய ஆய்வு முதலான பணிகளில் அம்பி அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து இந்த  முன்னுரை பேசுகிறது.

•Last Updated on ••Monday•, 08 •July• 2019 07:56•• •Read more...•
 

இன்று ஜூன் 24 ஆம் திகதி கவியரசரின் 92 ஆவது பிறந்த தினம்! குருவின்றி வித்தை கற்ற கவிஞன்! கவியரசரின் இல்லத்தரிசனம் நினைவாக சில குறிப்புகள்!

•E-mail• •Print• •PDF•

இன்று ஜூன் 24 ஆம் திகதி கவியரசரின் 92 ஆவது பிறந்த தினம்! குருவின்றி வித்தை கற்ற கவிஞன்! கவியரசரின் இல்லத்தரிசனம் நினைவாக சில குறிப்புகள்!" ஆலையமணியின்   ஓசையை   நான்   கேட்டேன்,   அருள்மொழி   கூறும் பறவையின் ஒலி கேட்டேன் " -  இந்தப்பாடலை  எங்கள் மூத்த தலைமுறையினர்   மறந்திருக்கமாட்டார்கள். 1961 ஆம் ஆண்டு வெளிவந்த பாலும்பழமும் படப்பாடல்.  ஒரு சிறிய பூங்காவில்தான், இந்தப்பாடல் கவியரசு கண்ணதாசனிடம் பிறந்தது.  அந்தப்பூங்காவின் முன்பாகத்தான் அமைந்திருக்கிறது கவிஞரின் கவி, கலை, திரை,  அரசியல் வாழ்க்கைச் சரிதத்தில் முக்கிய இடம் வகிக்கும் அவரது இல்லம். சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) இலக்கியவாதிகளுக்கு மிகவும் வேண்டப்பட்டது.  இங்குதான் கண்ணதாசன் பதிப்பகம், கலைஞன் பதிப்பகம், மணிமேகலை பிரசுரம், நர்மதா பதிப்பகம், தமிழ்ப்புத்தகாலயம், தாமரை- ஜனசக்தி காரியாலயம்,  கணையாழி அலுவலகம் இப்படியாக பல.

கண்ணதாசன் வாழ்ந்த வீட்டில் தற்போது அவரது மகன்மார் காந்தி -அண்ணாத்துரை குடும்பத்தினர் அடுத்தடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  இங்குதான் கண்ணதாசன் பதிப்பகமும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. முன்னர் ஹென்ஸ்மன் ரோடு என அழைக்கப்பட்ட இந்த வீதி கண்ணதாசன் சாலை என மாற்றப்பட்டிருக்கிறது.  1984 ஆம் ஆண்டு முதல் காந்தி கண்ணதாசன் குடும்பத்தினருடன் எனக்கு நெருக்கமான நட்பு. கண்ணதாசனின் துணைவியார் பார்வதி அம்மா, அந்த இல்லத்தின் வாசல்படியில் அமர்ந்துகொண்டு என்னுடன், கவிஞரைப்பற்றிச்சொன்ன பல சுவாரஸ்யமான கதைகளில் ஒன்றுதான் ஆலையமணியின் ஓசையை நான் கேட்டேன்  பாடல் பிறந்த தகவல்.

ஒரு காலத்தில் கவிஞரிடம் பாடலுக்காக வந்து தத்தமது கார்களை அடுத்தடுத்து நிறுத்திவிட்டு காத்திருந்த தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அமர்ந்திருந்த அந்த இல்லத்தின் விறாந்தாவிலிருந்துதான் பார்வதி அம்மா என்னுடன் நீண்டநேரம் உரையாடினார்கள்.  இது நடந்தது 1984 ஆம் ஆண்டு.  1990 ஆம் ஆண்டு மீண்டும் அவர்களை நான் விஜயா மருத்துவமனையில்தான் பார்த்துப்பேசினேன்.  84 இல் சந்தித்தபொழுது, எத்தனை பிள்ளைகள்..? எனக்கேட்டார்கள்.  இரண்டு பெண்குழந்தைகள் என்றேன். " அப்படியா, அடுத்தது ஆண்தான். கண்ணன் பெயராக வைங்க. "   என்றார்கள். அவர்களின் வாக்கு தேவ வாக்காக இருக்கவேண்டும். எமக்கு மகன் கண்ணதாசன் பிறந்த நாளன்றே ஜூன் 24 ஆம் திகதி 87 ஆம் ஆண்டு பிறந்தான்.  முகுந்தன் எனப்பெயர் வைத்தேன்.விஜயா மருத்துவமனையில் திருமதி கண்ணதாசனிடம் “ அம்மா உங்கள் வாக்குப்படியே நடந்துவிட்டது. மகனுக்குப்பெயர் முகுந்தன் என்றேன். “அப்படியா? வந்திருக்கானா? கூட்டிக்கொண்டு வாப்பா’ என்றார்கள்.  " நாளை இரவுதான் இலங்கையிலிருந்து வருகிறான். நான் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்துவிட்டேன். நாளை நிச்சயம் அழைத்து வருவேன்” என்றேன். ஆனால், அதற்கு முன்பே கவிஞர் கண்ணதாசன் தன்னிடம் தனது காதல் மனைவியை அழைத்துக்கொண்டுவிட்டார்.  அதாவது பார்வதி அம்மா மருத்துவமனையிலிருந்து வீடு  திரும்பாமலேயே மேலுலகம் சென்றுவிட்டார். காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் என்ற பாவமன்னிப்பு திரைப்படப் பாடலை, இந்த காதல் மனைவியை மனதிலிருத்தியே கவிஞர் எழுதியிருந்தார்.

•Last Updated on ••Sunday•, 23 •June• 2019 22:47•• •Read more...•
 

அப்பாவின் நினைவுகள்: "தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்! தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்!"

•E-mail• •Print• •PDF•

அப்பாவின் நினைவுகள்அப்பொழுது எனக்கு ஐந்து வயதிருக்கும். 1956  ஆம் ஆண்டு. எனது பெயரில் " முருகன் லொட்ஜ்" என்ற சைவஹோட்டலை நீர்கொழும்பு பிரதான ( பஸாரில்) வீதியில்  நடத்திக்கொண்டிருந்த அப்பா லெட்சுமணன்,  பரோபகரா  இயல்புகளினாலும் எவரையும்  முன்யோசனையின்றி நம்பிவிடுவதனாலும்,  இரக்கசிந்தனையினாலும் ,  பொறுப்புணர்ச்சி குறைந்தைமையாலும் நட்டப்பட்டு,  அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டின் உறுதியை வைத்து கடன் பெற்று, அதனையும் மீட்க வழிதெரியாது,  கொழும்பிலிருந்த ஒரு கம்பனியில் வெளியூர் விற்பனைப் பிரதிநிதியாகி மலையகப்பக்கத்திற்கு கம்பனி வாகனத்தில் சென்றிருந்தார்.

ஒரு நாள் இரவு யாரோ சிலர் காரில் வந்து இறங்கினார்கள். அப்பாவுக்கு கடன் கொடுத்தவர்கள்தான் வந்துவிட்டார்கள் என நினைத்து  அம்மா கலங்கிவிட்டார்கள்.

வந்தவர் பெயர் ரகுநாதன் என்றும் அவர், தமிழ்நாட்டிலிருந்து அப்பாவைத்தேடி வந்துள்ளார் என்பதையும் பின்னர்தான் தெரிந்துகொண்டேன். வந்தவர் வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருந்த அப்பா - அம்மா திருமணமான புதிதில் எடுத்துக்கொண்ட படத்தைப்பார்த்துவிட்டு, " இவரைப்பார்த்து எத்தனை வருஷமாச்சு. இலங்கை வருவதை உறவினர்களிடம் சொன்னதும், இந்த ஊருக்குப்போய் இவரையும் பார்த்துவிட்டு வரச்சொன்னார்கள். அதுதான் வந்தேன்." என்றார்.
அம்மா, " நீங்கள் யார்? அவர் வெளியூர் போயிருக்கார். எப்போ வருவார் என்பது தெரியாது." என்றார்.

" எனது பெயர் ரகுநாதன். சிதம்பர ரகுநாதன் என்று சொன்னால் அவருக்குத் தெரியும். தமிழ்நாடு திருநெல்வேலியிலிருந்து வந்ததாகச் சொல்லுங்கள். " எனச்சொல்லிவிட்டு,  கையில் வைத்திருந்த ஒரு சுவீட் பொட்டலத்தை என்னிடம் நீட்டினார்.
அவர் திடுதிப்பென வந்துவிட்டதால் எவ்வாறு உபசரிப்பது என்பதும் தெரியாமல் அம்மா பதட்டத்துடன் நின்றார். அவருடன் வந்தவர்களில் ஒருவர், ஒரு துண்டில் ஏதோ எழுதி, " அவர் வந்தால் இதனைக்கொடுங்கள். இன்னும் சில நாட்களில் இவர் ஊர் திரும்பிவிடுவார் . முடிந்தால் கொழும்பு வந்து இந்த முகவரியில் சந்திக்கச்சொல்லுங்கள்." என்றார்.

சில நிமிடங்களில் அவர்கள் திரும்பிச்சென்றனர். நானும் அக்காவும் தங்கை தம்பியும் அந்த சுவீட் பொட்டலத்தை பிரித்துச் சாப்பிட்டோம். நல்ல சுவையாக இருந்தது.

இச்சம்பவம் நடந்து  நான்கு வருடங்களின் பின்னர் 1960 ஆம் ஆண்டு ஒருநாள், மதியம் நானும் அக்கா தம்பி, தங்கையும் பாடசாலை விட்டு வந்து உணவருந்திக்கொண்டிருந்தோம்.

வெளியூருக்கு வியாபாரத்திற்குச்சென்றிருந்த அப்பா, திடுதிப்பென வாகனத்தில் வந்திறங்கினார். அவரது கையில் அன்றைய வீரகேசரி பத்திரிகை. அவருடைய உதவியாளர் பெரிய பெரிய பைகளில் மரக்கறிவகைகள், பழங்கள் யாவும் எடுத்துவந்தார். பத்திரிகையைக்காட்டி, " பபா ( அம்மாவுக்கு பபா என்றும் ஒரு பெயர்) எங்கட மாமா கொழும்புக்கு வந்திருக்கிறார். இன்று காலையில் கண்டியில் நிற்கும்போதுதான் பேப்பர் படித்தேன். அவர் ஒரு கலெக்டர். பெரிய எழுத்தாளர். இன்றைக்கு கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் பேசப்போகிறார். நான் போய் இரவுச்சாப்பாட்டுக்கு அழைத்துவரப்போகின்றேன். எங்கள் ஸ்கூல் பண்டிதர் மற்றும் ஆசிரியர்களையும் விருந்துக்கு  அழைக்கப்போகின்றேன்" என்று வேகமாக சொல்லிக்கொண்டிருந்தார்.

•Last Updated on ••Thursday•, 20 •June• 2019 22:19•• •Read more...•
 

விலங்கு மருத்துவராகவிருந்து இலக்கியப்படைப்பாளியான நடேசனின் நூல்கள் பற்றிய மதிப்பீடு மெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல்

•E-mail• •Print• •PDF•

விலங்கு மருத்துவராகவிருந்து இலக்கியப்படைப்பாளியான நடேசனின் நூல்கள் பற்றிய மதிப்பீடு மெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல் - ரஸஞானிபடைப்பிலக்கியத்துறைக்கு வரும் பெரும்பாலானவர்கள் " தாங்கள் எழுத்தாளரானதே ஒரு விபத்து " என்றுதான் சொல்லிவருகிறார்கள்.  முதலில் வாசகர்களாக இருந்து, பின்னர் தாமும் எழுதிப்பார்ப்போம் என்று முனைந்தவர்கள், தமது படைப்புகளுக்கு கிட்டும் வாசகர் அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் தொடர்ந்து எழுதி பிரகாசிக்கிறார்கள். தமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்களும் வாசகர் மதிப்பீட்டை காலத்திற்குக்காலம் கணித்துவைத்துக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகருகிறார்கள். இந்தப்பின்னணியில்தான்,  அவுஸ்திரேலியா  மெல்பனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வதியும் விலங்கு மருத்துவர் நொயல் நடேசன் அவர்கள்,  இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கி சுமார் இருபது வருட காலத்துள் கவிதை தவிர்ந்த இலக்கியத்தின் இதர துறைகளிலும் தன்னை தக்கவைத்துக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இவர் இங்கு தொடங்கிய உதயம் (இருமொழிப்பத்திரிகை) மாத இதழில் தனது தொழில் சார்ந்த அனுபவமாக முதலில் எழுதிய பத்தி: நடுக்காட்டில் பிரேத பரிசோதனை. நடேசன் விலங்கு மருத்துவராக மதவாச்சி தொகுதிக்கு அருகில் பதவியா பிரதேசத்தில் பணியாற்றியபோது, தந்தங்களுக்காக ஒரு யானையை சிலர் வேட்டையாடிக் கொன்றுவிடுகிறார்கள். அவர்களை தேடிக்கைது செய்த பொலிஸார், அந்த யானையின் சடலத்தை பரிசோதனை செய்து மரணச்சான்றிதழ் பெறுவதற்காக நடேசனை  அழைத்துக்கொண்டு அந்த நடுக்காட்டிற்குச்சென்றார்கள்.

அந்த அனுபவத்தையே தனது முதல் பத்தி எழுத்தாக எழுதியிருந்தார் நடேசன். அத்தகைய புதிய பாணி எழுத்து வாசகர்களை ஈர்த்ததையடுத்து, தொடர்ந்தும் தனது தொழில் சார் அனுபவங்களை எழுதிவரலானார். அவ்வாறு எழுதப்பட்ட பத்தி எழுத்துக்களின் தொகுப்பு: வாழும் சுவடுகள். இதனை சென்னையில் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ( அமரர்) எஸ். பொன்னுத்துரை நடத்திய மித்ர பதிப்பகம் வெளியிட்டது. பின்னர்,  வாழும் சுவடுகள் தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகத்தினால் இரண்டாம் பதிப்பும் வெளியானது. அதனைத்தொடர்ந்து நடேசன் தனது பதவிய பிரதேச தொழில் சார் அனுபவங்களின் பின்னணியில் வண்ணாத்திக்குளம் என்ற நாவலையும்  எழுதினார். இதனையும் மித்ரவே வெளியிட்டது. இதன் இரண்டாம்  பதிப்பினை இலங்கையில் டொமினிக்ஜீவா அவர்களின் மல்லிகைப்பந்தல் வெளியிட்டது. வண்ணாத்திக்குளம் நாவலை மெல்பனில் வதியும் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான திரு. நல்லைக்குமரன் குமாரசாமி ஆங்கிலத்திலும் (Butter fly Lake) , இலங்கையில் வதியும் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான மடுளுகிரயே விஜேரத்தின சிங்களத்திலும் (சமணளவெவ) மொழிபெயர்த்தனர்.

•Last Updated on ••Monday•, 17 •June• 2019 07:40•• •Read more...•
 

எழுத்தாளர் லெ.முருகபூபதியுடனான நேர்காணலொன்று!

•E-mail• •Print• •PDF•

 எழுத்தாளர் லெ.முருகபூபதியுடனான நேர்காணலொன்று!

அண்மையில் இலண்டனுக்குச் சென்றிருந்த எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களை     IBC தமிழ் தொலைக்காட்சியில் எழுத்தாளர் எம்.என்.என் அனஸ் அவர்கள் நேர்காணல் செய்தார்ர். அந்நேர்காணலுக்கான  காணொளி இது. எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் பல்வேறு விடயங்களைப்பற்றி இந்நேர்காணளில் உரையாடினார். தமிழ் இலக்கியம் பற்றி, இலங்கைத்தமிழ் இலக்கியம் பற்றி , சொந்த இலக்கிய, ஊடக அனுபவங்கள் பற்றியெல்லாம் இந்நேர்காணலில் முருகபூபதி அவர்கள் விரிவாகவே தன் கருத்துகளை எடுத்துரைக்கின்றார்.  https://www.youtube.com/watch?v=Cx8X4rcYv6g

•Last Updated on ••Friday•, 17 •May• 2019 08:15••
 

காதுகளை மறைத்து மேலெழும்பும் கொம்புகள்! கேட்டதும் தப்பில்லை ! சொன்னதும் தப்பில்லை ! நடப்பதும் தப்பில்லையா?!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் முருகபூபதி -இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் சென்னையிலிருந்து ஒரு திரைப்பட நடிகரும் அவரது காதலியான நடிகையும் கொழும்புக்கு வந்து கலதாரி மெரிடீன் ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அவர்களை அழைத்தவர் செட்டியார் தெருவில் ஒரு பிரபல நகைக்கடை முதலாளி. அவர் மற்றும் ஒரு கிளையை திறக்கும்போது குறிபிட்ட நடிகரையும் அவரது காதலியையும் அந்தத்  திறப்புவிழாவுக்கு பிரதம விருந்தினர்களாக  அழைத்து,  எங்கள் பத்திரிகையில் அரைப்பக்கம் விளம்பரமும் கொடுத்திருந்தார். விளம்பரத்திற்குரிய கட்டணமும் செலுத்திய  அந்த வர்த்தகப்பிரமுகர், குறிப்பிட்ட நடிகர் - நடிகையை யாராவது ஒரு நிருபர் சந்தித்து பேட்டிகண்டு பத்திரிகையில் எழுதி,  தனது வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும்  மேலும் பரவலான தகவல் தரவேண்டும் என்று பிரதம ஆசிரியரிடம் வினயமாக கேட்டுக்கொண்டார். அந்தவேலைக்கு பிரதம ஆசிரியர் என்னை அனுப்பியபோது வேண்டா வெறுப்பாகச்சென்றேன். " ஒரு சினிமா நடிகரிடம் சென்று எதனைக்கேட்பது? அரசியல்வாதி - இலக்கியவாதியிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. அந்த சினிமா நடிகரிடம் என்ன கேட்கமுடியும்?  அடுத்து எந்தப்படத்தில் நடிக்கிறீர்கள்? உடன் வந்திருக்கும் காதலியைத்தான் மணம் முடிக்கப்போகிறீர்களா?  இலங்கை ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? " இதனைத்தானே கேட்கமுடியும். இந்த பொறுப்பான(?) கேள்விகளுக்கும் அர்த்தமுள்ள இந்தக் கடமைக்கும் (?) நானா கிடைத்தேன். வேறு எவரும் இல்லையா? என்று எனது சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தினேன். என்னை ஒரு படைப்பிலக்கியவாதியாகவும் நன்கு தெரிந்துவைத்திருந்த ஆசிரியர், " ஐஸே, நாய் வேடம் போட்டால் குரைக்கத்தான் வேண்டும். பத்திரிகையாளருக்கு எல்லோரும் ஒன்றுதான். அது நாட்டின் அதிபராக இருந்தால் என்ன, சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களாக இருந்தால் என்ன எல்லோரும் ஒன்றுதான். பத்திரிகைக்கு செய்தி முக்கியம். அத்துடன் வரும் விளம்பரங்களும் அவசியம்" என்றார்.

அலுவலக படப்பிடிப்பாளரையும் அழைத்துக்கொண்டு அந்த நடிகர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விரைந்தேன். வரவேற்பு உபசரணைப்பெண்ணிடம் தகவல் கொடுத்தேன். அங்கிருந்து நடிகர் தங்கியிருந்த அறைக்கு இன்டர்கொம்மில் தகவல் சொல்லப்பட்டதும், நடிகர் என்னுடன் பேசினார். பத்திரிகையின் பெயரும் சொல்லி வந்தவிடயத்தையும் சொன்னேன். பதினைந்து நிமிடம் கழித்து வரச்சொன்னார். அவ்வாறே நானும் படப்பிடிப்பாளரும் காத்திருந்து சென்றோம். அவரும் அந்த நடிகையும் தங்களை அலங்கரித்துக்கொண்டு தயாராக இருந்தார்கள்.

தமிழ்ப்பத்திரிகை என்றவுடன் நடிகர் தமிழ் இனம், தமிழ் மொழி என்று ஏதேதோ பேச ஆரம்பித்துவிட்டார். உடனிருந்த நடிகை தமிழ் தெரியாதவர்.  அவர் தெலுங்கில் நடிகரிடம் ஏதோ சொன்னார். எமக்குத் தெலுங்கு தெரியாது. அலுவலகத்தில் ஆசிரியரிடம் குறிப்பிட்ட கேள்விகளையே அந்த நடிகரிடமும் கேட்டேன். ஆசிரியர் சொன்னவாறு நாய்வேடம் தரித்தேன்.

" எம்.ஜி. ஆர் - ஜானகி -  என்.எஸ். கிருஷ்ணன் -  மதுரம் - எஸ். எஸ். ராஜேந்திரன் - விஜயகுமாரி - ஏ.வி. எம். ராஜன் - புஷ்பலதா - ஜெமினி கணேசன் - சாவித்திரி - ஏ.எல். ராகவன் - எம். என். ராஜம்  ஆகியோரைப்போன்று நீங்களும் மணம்முடித்து தொடர்ந்தும் திரையுலகில் நடித்துக்கொண்டிருப்பீர்களா? "

•Last Updated on ••Tuesday•, 23 •April• 2019 07:34•• •Read more...•
 

தமிழ் சினிமாவும் இலக்கியமும் ரசனையும்! இலக்கியப்பிரதிகளை திரைப்படமாக்குவதில் எதிர்நோக்கப்படும் சவால்களும் சமரசங்களும்! ( அண்மையில் மறைந்த எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவும் இயக்குநருமான மகேந்திரன் நினைவாக எழுதப்படும் குறிப்புகள்)

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் முருகபூபதி -அனைவரிடமும்    ஏதோ   ஒரு  கதையோ   அல்லது   பல கதைகளோ இருக்கும்.     ஆனால்,  இவர்களில்   சிலர்தான்    அதனை   எழுத்தில்   தருகிறார்கள்.   மற்றவர்கள்    உரையாடலின் பொழுது சொல்கிறார்கள்.   உரையாடல்களில்   ஒருவர்  சொன்ன  கதை   கேட்கப்பட்ட மற்றும்   ஒருவரினால்  வேறு  ஒரு   இடத்துக்கு காவிச்செல்லப்படும் பொழுது   அதன்   வடிவம்   மாறிவிடும்.   கண்வைத்து  காது  வைத்து மெருகூட்டி   வதந்தியாகவே   அது   பரவிவிடும்.  கேட்கப்பட்ட  வதந்தியின் அடிப்படையிலும்   ஒரு   புதிய  கதை  உருவாகிவிடும். உதாரணத்துக்கு - அவுஸ்திரேலியாவில்   ஒரு   சம்பவம்   நடந்தால்   அதனை தொலைக்காட்சி   ஊடகங்களில்   பார்த்து -   வானொலிகளில்  கேட்டு - பத்திரிகைகளில்   படித்துவிட்டு  அச்சம்பவம்   பற்றி   எதுவுமே    தெரியாத வீட்டுக்கு   வந்த   உறவினரிடம்   அல்லது  நண்பரிடம் அதனைச்சொல்லும்பொழுது   பார்த்த - கேட்ட - வாசித்த   அச்சம்பவம்   வேறு ஒரு   வடிவத்தில்   ஒரு   கதையாகவே   பின்னப்பட்டு   சொல்லப்படுவது அன்றாட   நிகழ்ச்சி.

சினிமாவுக்கு   கதை   கிடைப்பதும்  இப்படித்தான்.   முன்னர்   இந்தியாவில் பல   திரைப்பட   தயாரிப்பாளர்கள்   தத்தமக்கென  ஒரு  கதை  இலாகாவே வைத்திருந்தார்கள்.  உதாரணமாக   மனிதர்களை - மிருகங்களை நாயகராக்கியதுடன்   மட்டும்   நின்றுவிடாது    தெய்வங்களின் அதிசயங்களையும்   தனது   படங்களில்   சொன்ன  சின்னப்பாதேவர் - சந்திரலேகா  -   அவ்வையார்  -   வஞ்சிக்கோட்டை   வாலிபன்      திரைப்படங்களை    எடுத்த   ஜெமினி   வாசன்  முதலானோர்   ஒரு கதை   இலாகாவை   வைத்திருந்தனர். ஆனால்,   சுஜாதா சினி    ஆர்ட்ஸ்   என்ற   தயாரிப்பு    நிறுவனத்தை வைத்திருந்த   நடிகர்   பாலாஜி   அவ்வாறெல்லாம்   கதை    இலாகா வைத்திராமல்    வடக்கே   சென்று     ஹிந்திப்படங்களைப் பார்த்துவிட்டு   வந்து,    அந்தப்படங்களின்   அடிப்படையில்    ஏ.எல். நாராயணன்    என்பவரிடம் கதை    சொல்லி   வசனம்   எழுதவைத்து  படம்   எடுத்துவிடுவார்.

தமிழ்    சினிமாவுக்கு  கதைகள்   கிடைத்த   வரலாறு    மிகவும் சுவாரசியமானது. சினிமா    இந்த    நூற்றாண்டில்   மட்டுமல்ல    அது    உருவான    நூற்றாண்டு முதலே   வலிமையான    ஊடகமாகத்தான்    வளர்ந்து    வந்திருக்கிறது. தொடக்க காலத்தில்   சினிமா    பேசவில்லை.   தமிழ்   சினிமா     என்னும்பொழுது  இந்தியாவைத்தான்  முன்னோடியாக  சுட்டிக்காட்டும் நிலையிலிருக்கின்றோம். இந்திய    மொழிகளில்    தமிழும்   ஒன்றென்பதனால்   இந்திய   சினிமா 1931 இல்   பேசத்தொடங்கியதனால்   நாம்   இந்தியாவைத்தவிர்த்து   தமிழ்   சினிமா பற்றி   பேச முடியாது. ஆரம்பத்தில்    சொன்னவாறு    ஒவ்வொரு    மனிதரிடத்திலும்    கதைகள் இருந்தன.    இருக்கின்றன.     இருக்கும். சிறுகதையிலும்   நாவலிலும்   சொல்லப்பட்ட    அவரவர்    கதைகள் நாடகமாகும்பொழுதும்    திரைப்படமாகும்  பொழுதும்   அதன்   வடிவம் மாறித்தான்  போய்விடுகிறது. வால்மீகி     ஒரு வேடன்.   மான்  -  மரை பறவைகளை     வேட்டையாடி    வாழ்ந்த   அவர்   ஒரு வழிப்பறித்திருடனாகவும்   வாழ்ந்திருக்கிறார். எப்பொழுதும்   ஒரு   மிருகத்தை   வேட்டையாடுவதற்காக    அதனைத்துரத்திக்கொண்டு   ஓடும்பொழுதும்     மரா   மரா   என்றுதான்   சத்தம்   எழுப்பிக்கொண்டு    ஓடுவாராம்.    மரா     என்றால்    கொல்.    கொலை செய்.    என்று    அர்த்தம்.  ஒருநாள்    வால்மீகி,      அந்தக் காட்டுவழியாக    மரா   மரா எனச்சொல்லிக்கொண்டு   ஓடியபொழுது    அவரை    குறுக்கிட்டு    மறித்த   ஒரு    முனிவர்   -  இங்கே    வா.    மரா     மரா     என்று     சொல்லிக்கொண்டு    ஒரு உயிரைக்கொல்ல      ஓடுகிறாயே,   தொடர்ந்து    மரா    மரா என்று சொல்   என்றாராம். வால்மீகியும்    மரா    மரா    மரா    மரா    என்றாராம்.    எங்கே சொல்லிப்பாருங்கள்.    ராம    ராம   ராம    என்று    அந்தத்தொனி    உங்களை அறியாமலேயே    மாறும். ராமனின்    கதையை   எழுதப்பா?   என்று   சொல்லி   ராமனின்   கதையை வால்மீகிக்குச்சொல்லி,    அவரது   வேட்டையாடும் -   கொள்ளையடிக்கும் பழக்கத்தையே    மாற்றினாராம்    அந்த   முனிவர். இராமாயணம்    எழுதினார் வால்மீகி.     அதற்கு    இலக்கியச்சுவை ஏற்றினார்     கம்பர்.    எமக்கு    கம்பராமாயணம்   கிடைத்தது.    காலப்போக்கில்   நாம்    இந்த   இலக்கிய    காவியத்திலிருந்து சம்பூர்ண ராமாயணம்    -    லவ   குசா   முதலான சினிமாக்களைப்பார்த்தோம்.    தற்காலத்தில்    இராமாயணம்    பல அங்கங்களில்   தொலைக்காட்சி   சீரியலாகவும்    வந்துள்ளது.     ஹிந்தியில் எடுக்கப்பட்டு   ஏனைய   இந்திய   மொழிகளில்   டப்பிங்    செய்யப்படுகிறது.   இதற்கு    நல்ல   வரவேற்பும்    இருக்கிறது.

•Last Updated on ••Friday•, 19 •April• 2019 02:05•• •Read more...•
 

அஞ்சலி.: படித்தோம் சொல்கின்றோம்: இயக்குநர் மகேந்திரனின் (1939 - 2019) சரிதம்பேசும் " சினிமாவும் நானும்"! ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ.வின் 'மித்ர' பதிப்பித்த நூல்!

•E-mail• •Print• •PDF•

" நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை. என்றாலும்கூட எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படியிருக்கவேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானதில்லை, என் சமூகத்துக்கானதில்லை என்று அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியிலிருந்து உருவானதொரு கனவு. எனது திரைப்படங்கள் அதிலிருந்துதான் வரவாகின. இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இளைஞர்களின் கனவு அப்படிப்பட்ட கனவா? என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பிப்பார்த்துக்கொள்கிறேன்" என்று சொன்ன இயக்குநர் மகேந்திரன் நேற்று  02 ஆம் திகதி சென்னையில் மறைந்தார்.

" முள்ளும் மலரும் " மகேந்திரன் என அறியப்பட்ட இவரின் இயற்பெயர் ஜோசப் அலெக்ஸாண்டர். தமிழகத்தில்  இளையான்குடி இவரது பூர்வீகஊர். மாணவப்பருவத்திலேயே கையெழுத்து சஞ்சிகை நடத்தியிருக்கும் இவரது  எழுத்தனுபவம்,  பின்னாளில் சென்னையில் பத்திரிகை ஊடகத்துறையினுள் இவரை அழைத்துக்கொண்டது.

மதுரை அழகப்பா கல்லுரியில் இவர் படிக்கும் காலத்தில் ( 1958) எம்.ஜி. ஆர். இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைக்குவந்து வெற்றிபெறுகிறது. அந்த வெற்றிவிழாவை கொண்டாட மதுரைக்கும் வரும்போது அலெக்ஸாண்டர் படித்த கல்லூரிக்கும் அழைக்கப்படுகிறார்.

அந்த விழாவில் எதிர்பாரதவிதமாக அலெக்ஸாண்டர் பேசவேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. திரைப்படங்களில் காதலிகளுடன் ஓடிப்பிடித்து பாட்டுக்கு உதடு அசைத்து பாடும் எம். ஜி.ஆர் பற்றி இவர் இவ்வாறு பேசுகின்றார்: " நம் கல்லூரியில் காதலிக்கிறவர்கள் என்ன பாடு படுகிறார்கள். ஊரே கூடிப்பேசுகிற அளவுக்கு அவர்கள் காதலித்துவிட்டு இன்றைக்கு எவ்வளவு அவமானப்படுகிறார்கள். இது நம் எல்லோருக்கும் நல்லாத் தெரியும். ஆனால், இவர் ( எம்.ஜி.ஆரைக்காட்டி) சினிமாவில் டூயட் பாடிக்கொண்டே காதலியோடு ஊரே வேடிக்கை பார்க்கிற மாதிரி ஓடிப்பாடி ஆடிக்காதலிக்கிறார். இவர் காதலிக்கிறதைப்பார்த்து சினிமாவுலே எந்தப் பிரின்சிபாலும் கண்டுகொள்வதில்லை. கண்டிப்பதில்லை. ஊர்க்காரர்களும் இவர்கள் காதலிப்பதைப் பொருட்படுத்துவதில்லை"

மண்டபம் கைதட்டலினால் அதிர்ந்தது. எம்.ஜி.ஆர் திகைத்தார்.  தொடர்ந்து அந்தப்பேச்சைக்கேட்டு ரசித்த எம்.ஜி.ஆர்,  தனது ஏற்புரையையடுத்து விடைபெறும்போது ஒரு காகிதத்தில் " நல்ல பேச்சு. நல்ல கருத்து. நகைச்சுவையுடன்கூடிய வன்மையான உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்கத் தகுந்தவர். வாழ்க " என்று எழுதிக்கொடுக்கிறார். இச்சம்பவம் நடந்த திகதி: 30-11-1958.

இதுபோன்ற பல சுவாரசியமான தகவல்கள் அடங்கிய நூல்தான் மகேந்திரன் எழுதியிருக்கும் சினிமாவும் நானும். ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. சென்னையில் நடத்திய மித்ர பதிப்பகம் இந்த நூலை 2003 இல் வெளியிட்டது. இதன் இரண்டாவது பதிப்பு 2005 இல் வெளியானது.

•Last Updated on ••Wednesday•, 03 •April• 2019 00:17•• •Read more...•
 

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அறிக்கை -

•E-mail• •Print• •PDF•

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அறிக்கை -

இலங்கையில் நீடித்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வுகளும் நிதிக்கொடுப்பனவு மற்றும் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வுகளும் இலங்கையில் இம் மாதம் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நடைபெற்றன. நீடித்த போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததைத்தொடர்ந்து, காலத்துக்குக்காலம், கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் 2010 ஆம் ஆண்டு முதல் மேற்குறித்த நிகழ்வுகள் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் 2010 - 2011 - 2014 - 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றவாறு இந்த ஆண்டும் ( 2019 ) இலங்கையில் கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களின் ஒன்றுகூடல்கள் இடம்பெற்றன. போர் முடிவுற்றபின்னர் நடைபெற்ற ஐந்தாவது நிகழ்வு இம்முறை யாழ்ப்பாணத்திலும் - முல்லைத்தீவு விசுவமடுவிலும் - வவுனியாவிலும் - கல்முனை பெரியநீலாவணையிலும் - கம்பஹா மாவட்டத்திலும் நடைபெற்றன.

•Last Updated on ••Monday•, 01 •April• 2019 07:24•• •Read more...•
 

காலமும் கணங்களும் தோழர் வி.பொன்னம்பலம் 25 ஆவது நினைவு தினம் மார்ச் 05 (1930-1994)

•E-mail• •Print• •PDF•

அமரர் வி.பொன்னம்பலம்

" பனைமரத்துப்பாளை எல்லாம் நில மட்டத்தில் வெளியாகியிருந்தால், சாதி பேசும் உயர்குடிமக்களும் கள்ளுச்சீவியிருப்பார்கள்"  இவ்வாறு சுவாரஸ்யமாகவும் கருத்தாழத்துடனும் பேசவல்ல ஒருவர் எம்மத்தியிலிருந்தார். சிறந்த பேச்சாளர் மொழிபெயர்ப்பாளர். கல்வித்துறையில் பலருக்கும் கலங்கரைவிளக்கமாக ஒளிதந்த ஆசான். கொள்கைப்பற்றாளர். பதவிகளுக்காக சோரம்போகாதவர். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவே மரணிக்கும்வரையில் குரல் கொடுத்தவர். மாற்றுக்கருத்துள்ளவர்களையும் அரவணைத்தவர்.  இவ்வாறு பல சிறப்பியல்புகளையும் கொண்டிருந்த ஆளுமையுள்ள தலைவர் தோழர் வி. பொன்னம்பலம் பற்றி தெரிந்திருப்பவர்கள் இன்றும் எம்மிடையே இருக்கிறார்கள். வடபுலத்தில் அளவெட்டி கிராமத்தில் 1930 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18 ஆம் திகதி வல்லிபுரம் - பொன்னம்மா தம்பதியரின் புதல்வராகப்பிறந்து, அனைவராலும் வி. பி. என அழைக்கப்பட்ட தோழர் வி. பொன்னம்பலம் அவர்கள்,  1985 ஆம் ஆண்டின் பிற்கூறில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தார். தனது அரசியல் ஆசானும் அதிபருமான ஒறேற்றர் சுப்பிரமணியம் அவர்களின் நினைவரங்க நிகழ்வில்  (1994 - மார்ச் 05 ஆம் திகதி) உரையாற்றும்வேளையில், "அனைவரிடமிருந்தும் விடைபெறுகின்றேன்" எனச்சொல்லி நிரந்தரமாக விடைபெற்றார்.

பல வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் நள்ளிரவு. உறக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். தொலைபேசி அழைப்பு வந்து திடுக்கிட்டு விழித்தேன். மறுமுனையில் கனடாவிலிருந்து மறைந்த தோழர் வி.பொன்னம்பலத்தின் மகன் நமுனகுலன். தோழர் வி.பி. யின் மறைவுச்செய்தி அறிந்து யார் மூலம் அனுதாபம் சொல்வது எனத்தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த எனக்கு, நமுனகுலனின் அழைப்பு சிலிர்ப்பைத்தந்தது. “அப்பாவின் நினைவாக ஒரு மலரைத்தயாரிக்கின்றோம். நீங்களும் ஒரு கட்டுரை தரவேண்டும்.” என்றார்.

தெணியானின் தம்பி நவம் எனது தொலைபேசி இலக்கம் தந்ததாகவும் சொன்னார். எனது கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்து கட்டுரை அனுப்புவதாகச் சொன்னேன். எங்கள் வீட்டுக்கு கணினி உறவினராகாத காலம். அதனால் மின்னஞ்சலும் இல்லை. மறுநாளே கட்டுரையை தபாலில் அனுப்பிவிட்டேன். மற்றுமொரு நாள் மாலைவேளையில் வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. சென்று பார்த்தேன். தபால்சேவகர் ஒரு பெரிய பார்சலை தந்துவிட்டுப்போனார். திறந்து பார்த்தேன். பொன் மலர் பிரதிகள். சுமார் ஐம்பது இருக்கும். புலம்பெயர் வாழ்வில் என்னை விந்தையில் ஆழ்த்திய சம்பவமாக அந்தப் பிரதிகள் தாமதமின்றி எனக்குக்கிட்டியதைக்குறிப்பிடலாம். பொதுவாக என்ன நடக்குமென்றால்!? என்னிடம் ஆக்கம் கேட்பார்கள். எழுதி அனுப்புவேன். கேட்டவர்களுக்குக் கிடைக்கும். பயன்படுத்துவார்கள். அதன் பிறகு பிரதி அனுப்ப மறந்துவிடுவார்கள். அல்லது பலதடவை தொடர்புகொண்டபின்னர் அனுப்புவார்கள். இதுவிடயத்தில் யாரும் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. காரணம் தபால்கட்டணம்தான். ஆனால், நமுனகுலன் இந்த விடயத்தில் என்னை ஏமாறச்செய்து ஒரு பிரதி அல்ல 50 பிரதிகள் அனுப்பி ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார்.

அவுஸ்திரேலியாவில் வதியும் வி.பி.யின் ஆதரவாளர்கள் , அவரது முன்னாள் மாணவர்கள் , அவரை நன்கு தெரிந்தவர்கள் சிலருக்கு அந்தப்பிரதிகளை விநியோகித்தேன். தோழருடன் நன்கு பழகிய அரசியல் தலைவர்கள் , கல்விமான்கள் , இலக்கியவாதிகள் பத்திரிகையாளர்கள் சமூகப்பணியாளர்கள் பலர் பொன்மலரில் எழுதியிருந்தனர். எண்பது கட்டுரைகள் அம்மலரில் வெளியாகியிருந்தன. தோழர் பொன்னம்பலத்தின் வாழ்வும் பணியும் ஊடாக வெளிப்பட்ட முன்னுதாரணமான அருங்குணங்கள் அவற்றில் பதிவாகியிருந்தன. மலருக்கு நயப்புரை எழுதி மெல்பன் தமிழ் வானொலி நிகழ்ச்சியொன்றுக்கு பொன்மலர் பிரதியுடன் அனுப்பிவைத்தேன். ஆனால்,  அந்த நயப்புரையை அந்த வானொலி ஒலிபரப்பிற்கு ஏற்கவில்லை. சம்பந்தப்பட்டவரை நேரில் சந்தித்துக்கேட்டபொழுது, அரசியல் சார்ந்த நூல்,  மலர் விமர்சனங்களை தங்கள் வானொலி ஒலிபரப்பாது என்று சொன்னார். எனக்கு அவரது பதில் திருப்தியளிக்கவில்லை. அவர் அன்றைய சூழ்நிலையின் கைதி என்பது மாத்திரம் புலனாகியது.

•Last Updated on ••Friday•, 29 •March• 2019 07:27•• •Read more...•
 

காலங்கள் செய்யும் கோலங்கள்

•E-mail• •Print• •PDF•

முருகபூபதிதொழில் நுட்ப வளர்ச்சியினால் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுவதை அவதானித்துவருகின்றோம். கால மாற்றம் நமக்களித்த வரப்பிரசாதங்கள் அநேகம். அதேசமயம் அந்த வரப்பிரசாதங்களை புரிந்துகொள்ளமுடியாமலும் அனுபவிக்கமுடியாமல் திணறுபவர்களையும் அன்றாடம் காணமுடிகிறது. நான் வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் வெள்ளீய அச்சு எழுத்துக்கள் கோர்க்கப்பட்டு, பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுத்தான் பத்திரிகைகள் வெளியாகின. அச்சுக்கூடங்களும் கொம்பசிட்டர் என்ற அச்சுக்கோப்பாளர்ளை நம்பித்தான் இயங்கின. சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், எழுத்தாளர் விந்தன் ஆகியோர் தமது வாழ்வை அச்சுக்கூடத்தின் கொம்பசிட்டர்களாகத்தான் தொடங்கினார்கள். ஜெயகாந்தன் அச்சுக்கூடங்களில் ஒப்புநோக்காளராக (Proof Reader) இருந்தவர்.  

1988 இற்குப்பின்னர் வீரகேசரி அச்சுக்கூடத்தில் திடீரென்று எதிர்பாராத மாற்றங்கள் நேர்ந்து, பல அச்சுக்கோப்பாளர்கள் தொழிலை இழக்கநேரிட்டது. கணினியின் அறிமுகம் அவர்களை அங்கிருந்து அந்நியப்படுத்தியது. அச்சமயத்தில் நான் அவுஸ்திரேலியாவிலிருந்து அங்கு தொழிலை இழந்தவர்களுக்காக வருந்தினேன். அவர்களுக்கு தெரிந்த ஒரே தொழில் அச்சுக்கோர்ப்பதுதான். திடுதிப்பென அவர்கள் தொழிலை இழந்தபோது மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறதல்லவா? சிலர் வெளிநாடுகளுக்கு பறந்தனர். சிலர் வேறு தொழில்களுக்கு சென்றனர். சுமார் பதினொரு வருடங்களின் பின்னர் இலங்கை திரும்பி, குறிப்பிட்ட அச்சக்கோப்பாளர்களின் நிலையை ஆராய்ந்தேன். ஒருவர் எழுதும் ஆற்றலும் விளையாட்டுத்துறை பற்றிய தகவல்களும் தெரிந்தவராயிருந்தமையால், வீரகேசரி ஆசிரியபீடத்திலேயே விளையாட்டுத்துறை நிருபராகியிருந்தார்.

மற்றும் ஒருவருக்கு ஒளிப்படத்துறையில் அனுபவம் இருந்தமையால், தொடர்ந்து திருமணங்கள் மற்றும் பிறந்த தினக்கொண்டாட்டங்களுக்குச்சென்று படம்பிடித்து வாழ்க்கையை ஓட்டினார். பின்னாளில் சொந்தமாகவே ஒரு ஸ்ரூடியோவை அமைத்துக்கொண்டதுடன், வீடியோ தொழில் நுட்பத்திலும் தேர்ச்சிபெற்றார். அத்துடன் நில்லாமல், தனது மகளை கணினி தொழில் நுட்ப பயிற்சிகளுக்கு அனுப்பி, தேர்ந்த பக்க வடிவமைப்பாளராக்கிவிட்டார். அந்த யுவதி கொழும்பில் ஒரு பிரபல அச்சகத்தில் தனது பணியை மிகவும் சிறப்பாக தொடருகின்றார். பல எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் இதழ்களையும் அழகாக வடிவமைக்கின்றார்.

•Last Updated on ••Tuesday•, 19 •March• 2019 00:00•• •Read more...•
 

கவிஞர் மருதூர்க்கனி (1942 - 2004) நினைவுகள்! கல்முனையில் மருதூர்கனியின் நூல்கள் வெளியீடு! கவிஞரின் ஞாபகார்த்தமாக தொடரும் சமூக நலப்பணிகள்!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் மருதூர்க்கனி (1942 - 2004) நினைவுகள்! கல்முனையில் மருதூர்கனியின் நூல்கள் வெளியீடு! கவிஞரின் ஞாபகார்த்தமாக தொடரும் சமூக நலப்பணிகள்!( இம்மாதம் 24 ஆம் திகதி கல்முனையில் கவிஞர் மருதூர்கனியின் ஞாபகார்த்தமாக நடைபெறும் நிகழ்வை முன்னிட்டு எழுதப்படும் பதிவு)

1960 களில் ஈழத்தில் அலையடித்த கவித்துவ வெள்ளத்தின் கிழக்கிலங்கை ஊற்றுக்களில் மருதூர்க்கனியும் ஒருவர். மருதூர்க்கனியின் கவித்துவம் கற்பனைகளின் இரசனைக்கூடாரமாக அமையவில்லை. அது சமத்துவமான ஒரு சமூகத்தேடலுக்கான ஒரு ஆயுதமாக அமைந்தது என்று சொல்கிறார் பேராசிரியர் கா. சிவத்தம்பி. முற்போக்கு இலக்கிய சித்தாந்தத்தின் இலட்சிய வாதத்தினால் ஈர்க்கப்பட்ட மருதூர்க்கனி தனது பிரதேசத்தில் தனது மருதமுனைக்கிராமத்தில் தான் கண்ட ஏழை மக்களை நெசவாளிகளை - மீனவர்களை - பாய்பின்னிப்பிழைத்தாலும் சுயகௌரவத்துடன் வாழ்கின்ற பெண்களை தனது கதைகள் ஊடாக இனம் காட்டுகிறார். அவர்கள் பக்கம் நின்று குரல் கொடுக்கிறார். என்று சொல்கிறார் பேராசிரியை திருமதி சித்திரலேகா மௌனகுரு. இளம் பருவத்திலிருந்தே நாடகப்பிரியர் மருதூர்க்கனி. மனித இயக்கத்தை அவரது கண்கள் நாடகமாகக் கண்டன. மனிதர்களின் குணாதிசயங்கள் - ஆளுமை - துலங்கித்தெரியும் குணப்பாங்கு - என்பனவற்றை இதனால் வெகு நுணுக்கமாக அவர் கவனிக்கலானார். என்று எழுத்தாளர் செ. யோகநாதன் தெரிவித்துள்ளார். மருதூர்க்கனி - காணும்தோறும் பேசும்தோறும் உள்நெக்க நின்று உருகும் மனிதனாக இலக்கிய உலகில் தன்னை இனங்காட்டி வந்தவர். இவரை அரசியலிருந்து பிரித்து கவிஞனாக மட்டும் காண முடியாது. இவர் ஒரு தேசிய அரசியற் கலாசாரத்தின் மூலவிசை என்கிறார் வீரகேசரி - தினக்குரல் நாளேடுகளின் முன்னாள் பிரதம ஆசிரியர் ஆ.சிவநேசச்செல்வன். புலவர்நாயகம் மருதூர்க்கனியின் கவித்துவத்தை உரைத்துப்பார்க்க எந்த ஓர் உரைகல்லும் தேவையில்லை. அவர் எப்போதோ அங்கீகரிக்கப்பட்டுவிட்டார். அவரே ஒரு கவிதைதான் என்று எம். எச். எம். அஷ்ரப் சொல்லியிருக்கிறார். மகா கவிகளான இக்பாலும் பாரதியும் காட்டிய பாதையிலே பயணம் மேற்கொள்ளவிழையும் மருதூர்க்கனி மானிட மேம்பாட்டுக்காகத் தன்னுடைய எழுத்தாற்றல் பயன்படும் என்ற வேட்கை மீதூரப்பெற்றவராகவும் காணப்படுகிறார் - என்று பேராசிரியர் எஸ். தில்லைநாதன் பதிவு செய்கிறார். முஸ்லிம்கள் மத்தியில் முன் என்றும் இல்லாத அளவு இனத்துவ உணர்வு மேலோங்கி எழுந்தவேளையில் அதன் ஸ்தாபன வெளிப்பாடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதயமாகி இக்கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே அதனுடன் இணைந்து செயற்பட்டு - அதன் மூத்த துணைத்தலைவரானவர் மருதூர்க்கனி என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான். இங்கே நான் மருதூர்க்கனி பற்றி முக்கியமான ஏழு ஆளுமைகள் தெரிவித்த கருத்துக்களைத்தான் வாசகர்களிடம் பகிர்ந்துகொண்டேன்.

மருதூர்க்கனி தொழில் ரீதியாக ஒரு பாடசாலை ஆசிரியர். அத்துடன் கவிஞர். நாடகாசிரியர். சிறுகதை எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், அரசியல் இயக்கம் ஒன்றின் ஸ்தாபகத்தலைவர். இவ்வாறு பன்முகத்தோற்றம் மிக்க ஒருவர் இன்று எம்மத்தியில் இல்லை. எனினும் அவரது நினைவுகள் எம்முடன் இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவரது இலக்கிய வாரிசுகள் இன்றும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவரது குடும்ப வாரிசுகள் இன்றும் அவரது நினைவாக அவரது படைப்புகளை அச்சிலே பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். இந்தப்பலனை வரம் என்றும் சொல்லலாம். அவருடைய அன்புத்துணைவியாரும் பிள்ளைகளும் மருமக்களும் மருதூர்க்கனிக்கு கிட்டிய பெரும் பேறு.

•Last Updated on ••Thursday•, 21 •February• 2019 22:04•• •Read more...•
 

நான்கு தசாப்த காலங்களையும் கடந்து இலக்கிய உலகில் நிலைத்துள்ள முருகபூபதி

•E-mail• •Print• •PDF•

பிரான்சில் முருகபூபதிஎமது தாயகம் ஈழத்தில் 1970 களில்  எழுத்துத்துறையில் சிறகு முளைத்து இலக்கிய வானில் இற்றைவரையில்  உயர உயர பறந்து கொண்டிருக்கும்இலக்கியப் பறவை முருகபூபதி  கங்காரு நாட்டின் சரணாலயத்திற்கு  1987 இல் புலம்பெயர்ந்தவர். கலை இலக்கியவாதிகள் நிரம்பிய  பாரிஸ் மாநகரம்  நோக்கி  இந்தப்பறவை சிறகு விரித்தது. தனது கல்வி கண்ணை திறந்த வட்டுக்கோட்டை  சித்தங்கேணிபண்டிதர் மயில்வாகனனாரின் நூற்றாண்டு நிகழ்வுக்காக பாரிஸ்  வந்த முருகபூபதியை மூன்று தருணங்கள்சந்தித்தேன் .  பல தடவைகள் தொலைபேசியில் பேசினேன். அவருடனான  சந்திப்புகளும்,உரையாடல்களும் சிந்திக்க வைத்தன.அவரது வாயிலிருந்து சிந்திய
வார்த்தைகள் அனைத்தும் எனது மனக்கணினியில் பதிந்துள்ளன.

1972 ஆம் ஆண்டு  வீரகேசரி நாளிதழ்  அவரது எழுத்து பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது. முதலில் அவரது ஊர் நீர்கொழும்பின் பிரதேச நிருபராக தனது பணியை ஆரம்பித்தார். இன்று நான்கு தசாப்தங்களுக்கும்  மேலாக அவரது  எழுத்துப் பயணம் அகன்று விரிந்து தொடர்கிறது.இந்தப் பாதை நீளமானது,அகலமானது என்பதை புரிந்து கொண்டு,  முன்வைத்த காலை பின் வைக்காது தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

எங்கே சென்றாலும் எதனைப்பார்த்தாலும் எவரைச் சந்தித்தாலும் அவருக்கு தீனிதான் !! தான் கற்றதையும் பெற்றதையும்  யதார்த்தம் குறையாமல், அற்புதமாக சுவையான ரசனையுடன்  வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வார். “பேப்பரையும் பேனாவையும் தவிர தனக்கு வேறு எதுவும் தெரியாது “என்றுதான்அவர் 1987 இல் அவுஸ்திரேலியா வந்தபோது தெரிவித்தார்.   அவர் இன்றும் எழுதிக்கொண்டே இருக்கிறார்.

வீரகேசரி வாரவெளியீட்டில்   “இலக்கியப்பலகணி “ என்ற மகுடத்தில் ரஸஞானி என்ற பெயரில்தான்அவரது எழுத்துக்களை முதலில் வாசித்தேன்.    சமீபத்தில் அவரது வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி  என்ற ஆவணப்படத்தை பாரிஸில் பார்த்து ரசித்தேன். அதனை,  அவரது அவுஸ்திரேலியா நண்பர்கள்  எழுத்தாளர்  கிருஷ்ணமூர்த்தி மற்றும்  ஒளிப்பதிவாளர் மூர்த்தி ஆகியோர் தயாரித்துள்ளனர். முருகபூபதி வீரகேசரி வாரவெளியீட்டில்  இலக்கியப்பலகணி எழுதிய காலத்தில்,  தினகரன் வாரமஞ்சரியில்  இலக்கிய விவகாரம் மற்றும்நாட்டு நடப்புகளை எஸ்தி என்னும் பெயரில்  மூத்த ஊடகவியலாளர்  எஸ். திருச்செல்வம் எழுதினார். யாழ்ப்பாணம்  ஈழநாடுவில் அதன் செய்தி ஆசிரியர் கே.ஜீ.மகாதேவா இப்படியும் நடக்கிறதுஎன்ற பத்தி எழுத்தைஎழுதினார்.   அதுபின்னர்  புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. சிந்தாமணியில் அதன் ஆசிரியர் எஸ். டீ. சிவநாயகம் இலக்கியபீடம் என்ற வாராந்த பத்தி எழுத்துக்களை எழுதிவந்தார். பின்னளில்  உதயன்-சஞ்சீவி யில் அதிரடி அரங்குஎன்ற பத்தியைமின்னல் என்ற பெயரில்  மற்றும் ஒரு மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன் எழுதினார்.தற்பொழுது  அவர் யாழ்ப்பாணம்  காலைக்கதிர் பத்திரிகையில் இனி இது இரகசியம் அல்ல என்னும் தலைப்பில் அதே மின்னலாக ஒளிர்கிறார். இத்தகைய பத்திகளை வாசிப்பதற்கென்றே ஒரு பெரிய வாசகர் கூட்டம் இருந்தது. இன்றும் அந்த எண்ணிக்கை குறையவில்லை. இந்த எழுத்துகளை வாசிப்பதால் பல செய்திகளையும் சுவாரசியமான  தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

•Last Updated on ••Saturday•, 16 •February• 2019 08:16•• •Read more...•
 

வாசகர் முற்றம் -- அங்கம் 05: எங்கள் தங்கராஜா திரைக்கு வந்தவேளையில் பிறந்த மதுரை கல்லுப்பட்டி ராஜா! மலையடிவாரங்களில் இலக்கியசுவாசத்தில் திழைத்தவரின் வாசிப்பு அனுபவங்கள்!

•E-mail• •Print• •PDF•

கருப்பையா ராஜா"இரவுக்கும் பகலுக்கும் இனியென்னவேலை 
இதயத்தில் விழுந்தது திருமண மாலை 
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக்கோலம்"


இந்த பாடல் திரையிலும் வானொலியிலும் ஒலித்தவேளையில் சங்ககால தமிழர் நாகரீகம் தழைத்த " கீழடி" அமைந்துள்ள மதுரையில் கல்லுப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்த இந்தக்குழந்தைக்கு தற்போது 45 வயதாகிவிட்டது.

இந்தப்பாடலில் கவியரசு கண்ணதாசன் இப்படியும் ஒரு வரி எழுதியிருப்பார்: "கவிஞர் சொன்னது கொஞ்சம் - இனி காணப்போவது மஞ்சம்" இதே கவிஞர், பார்மகளே பார் திரைப்படத்திலும் ஒரு பாடல்வரியை இவ்வாறு எழுதியிருந்தார். "நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே. அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே". இந்தப்பத்தியில் இடம்பெறும் முதலாவது பாடல் வரிகள் வரும் திரைப்படம் எங்கள் தங்கராஜா வெளியான காலத்தில், அந்த அம்மாவுக்கு பிரசவ வலி கண்டுள்ளது. கட்டிலில் கவிதை படித்ததால் , தொட்டிலுக்கு வந்தது அந்தக்குழந்தை. அதனால் ராஜா எனப்பெயரிட்டார்கள்.

இந்த ராஜா பிறந்த கல்லுப்பட்டியைச்சுற்றியிருக்கும் ஆறு விவசாயக் கிராமங்களைச்சேர்ந்த மக்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒன்றுகூடி கொண்டாடும் முத்தலம்மன் திருவிழாவிற்காகவும், மழைவேண்டி விழா எடுக்கும் மாரியம்மன் திருவிழாவிற்காகவும் சப்பரம் கட்டுதல், ஓவியம் தீட்டுதல், பேப்பர் கூழால் பொம்மைகள் செய்தல், கதாகாலட்சேபம் மற்றும் நாடகத்திற்கு வேஷம் கட்டி ஆடுதல் இவை அனைத்திலும் தனது பெற்றோரும் உற்றோரும் இணைந்து தணியாத ஆர்வத்துடன் கலந்துகொள்வதையே பார்த்துவளர்ந்தவர்தான் இந்த ராஜா.

தமிழர்களின் தொன்மையான கலையை ஆராதித்து கொண்டாடிய மண்ணையும் மக்களையும் நேசித்த குடும்பத்தில் கருப்பையா - லட்சுமி தம்பதிக்கு 1973 இல் கடைசியாக பிறந்த இந்த கடைக்குட்டி ராஜா, பூவுலகை கண்டு அழுது - சிரித்தவேளையில், திரையில் ஓடுகிறது சிவாஜி - மஞ்சுளா இணைந்து நடித்த எங்கள் தங்கராஜா. அது திரையில் ஓடட்டும்! 

"எங்கள் வீட்டில் ஓடவும் ஆடவும் பாடவும் வந்துபிறந்திருக்கிறான் எங்கள் தங்கராஜா. இந்தச் செல்வத்திற்கு ராஜா பெயர் சூட்டி ராஜாவாக்குவோம் என நினைத்தனர் மஞ்சத்தில் கவிதை எழுதியவர்கள்.

ராஜாவின் அப்பா, பணிநிமித்தம் திண்டுக்கல்லில் இருந்தமையால் அங்கும் வாழ்ந்திருக்கும் ராஜாவுக்கும் சகோதரங்களுக்கும் அங்கிருந்த மலைக்கோட்டை வார விடுமுறை நாட்களில் தங்களுக்கானவை என்று பெருமிதம் பொங்கச்சொல்கிறார். அங்கு அப்பா தற்புனைவுகளோடு சொல்லித்தந்த கதைகள் ஏராளம். ராஜாவின் தாய்மாமனார் இயற்கை வைத்தியர். கோயம்புத்தூரில் அவருக்கு உதவியாக இருந்த ராஜாவின் மூத்த சகோதரர்தான் இவருக்கு வாசிக்கும் ஆர்வத்தை ஊட்டியவர் என்கிறார்.

•Last Updated on ••Wednesday•, 06 •February• 2019 21:47•• •Read more...•
 

பாரிஸ் மாநகரில் பண்டிதர் மயில்வாகனனார் நூற்றாண்டு விழா! நினைவில் நிறைந்திருக்கும் பண்டிதர் அய்யா!

•E-mail• •Print• •PDF•

பாரிஸ் மாநகரில் பண்டிதர் மயில்வாகனனார் நூற்றாண்டு விழா! நினைவில் நிறைந்திருக்கும் பண்டிதர் அய்யா!இலங்கையின் வடமேற்குக் கரையில் இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்பில் திகழும் நீர்கொழும்பூருக்கு ஐதீகத்திலும் வரலாற்றிலும் அழியாத அடையாளம் இருக்கிறது. இலங்கேஸ்வரன் இராவணனின் புதல்வன் இந்திரஜித்தன் நிகும்பலை என்னும் யாகம் வளர்த்த ஊர் என்பதனால் அதற்கு நிகும்பலை என்றும் ஒரு காரணப்பெயர் இருக்கிறது. அந்த யாகத்திற்காக இந்திரஜித்தன் இவ்வூரில் ஐந்து இடங்களில் உருவாக்கிய குளங்கள் காலப்போக்கில் அடையாளம் தெரியாதவகையில் உருமாறிக் கட்டிடக்காடுகளாகிவிட்டன. எனினும், இன்றும் மழைக்காலத்தில் அந்த இடங்களில் தண்ணீர் தங்கித்  தேங்கிவிடுவதை அவதானிக்கமுடிகிறது. 

இலங்கை வரலாற்றில், இடம்பெற்ற துட்டகைமுனுவின் மனைவிக்கு வந்த உடல் உபாதையைப் போக்குவதற்கு இந்த ஊரில் தேன் கிடைத்தமையால் தேன் ஊர் என்ற அர்த்தத்தில் மீகமுவ என்றும் சிங்கள மொழியில் அழைக்கப்பட்டதுதான் இவ்வூர். அவ்வாறே Negombo என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவதற்கும் காரணங்கள் இருக்கின்றன. மன்னர் காலத்தில் தேனும் சுரந்து, ஒல்லாந்தர் காலத்தில் ஏலம், கறுவா, கராம்பு முதலான வாசனைத்திரவியங்கள் விளைந்த பிரதேசமாகவும் திகழ்ந்தமையாலும் இனிமையும் வாசனையும் நிரம்பிய நகரமாகியது. ஒல்லாந்தர்கள் நீர்கொழும்புக்  கடற்கரைக்குச்சமீபமாக ஒரு கற்கோட்டையை அமைத்து முகாமிட்டபோது, அதற்கு வடமேற்கிலிருந்து வருவதற்கு மகா ஓயா நதியிலிருந்து கிளை வெட்டி, புத்தள வெட்டுவாய்க்காலையும் அமைத்தனர். அதற்கு அணித்தாக எழுந்தருளிய ஶ்ரீசித்திவிநாயகர் கோயிலின் முன்புறம் நீண்ட காலமாக விருட்சமாக வளர்ந்திருந்த அரச மரத்தின் நிழலில் அக்காலப்பகுதியில் அங்கு வாழ்ந்த சைவத் தமிழ்ப்பெருங்குடி மக்களினால் உருவாக்கப்பட்டது இந்து வாலிபர் சங்கம். வந்தோரை வாழவைக்கும் சிங்கார நீர்கொழும்பு என்ற பெயரையும் இவ்வூர் பெற்றிருந்தது. கத்தோலிக்க மக்கள் செறிந்துவாழ்ந்த இந்த ஊருக்கு சின்னரோமாபுரி என்றும் ஒரு பெயர் வழக்கிலிருந்தது. நூற்றுக்கணக்கான கத்தோலிக்க வழிபாட்டிடங்கள் அமைந்திருந்தமையினால், இந்தக்காரணப்பெயரும் தோன்றியிருக்கிறது.

இவ்வாறு பல காரணப்பெயர்களுடன் விளங்கிய எமது ஊருக்கு காரணம் இல்லாமல் காரியம் இல்லை எனச்சொல்லத்தக்வகையில் 1954 ஆம் ஆண்டு ஒரு விஜயதசமி காலத்தில் தோன்றியதுதான் விவேகானந்தா வித்தியாலயம். முகாமைத்துவப் பாடசாலைகள் இலங்கை எங்கும் வியாபித்திருந்த காலத்தில், நீர்கொழும்பில் நீண்டகாலமாக வாழ்ந்த சைவத்தமிழ் மக்களுக்கும் வடக்கிலிருந்து தொழில், வர்த்தகம், திருமண உறவு முறைகளினால் இடம்பெயர்ந்து வருகைதந்த சைவத்தமிழ் மக்களுக்கும் ஒரு குறைபாடு நீடித்தது. அக்குடும்பங்களுக்கு கடற்கரை வீதியில் வழிபாட்டிற்கு மூன்று ஆலயங்கள் இருந்தபோதிலும், அக்குடும்பங்களின் குழந்தைகளுக்கென ஒரு சைவத் தமிழ்ப்பாடசாலை இல்லாத குறை நீடித்திருந்தது. எனினும் சைவ சமயத்தை போதிக்கின்ற - கூட்டுப்பிரார்த்தனை வகுப்புகளை நடத்துகின்ற தேவையை உணர்ந்த இந்து வாலிபர் சங்கம் சமூக அமைப்பாகவும் இயங்கியமையால் அதற்காக சாமி சாஸ்திரியார் என்ற ஆசான் மூலம் சமயபாட வகுப்பினைச் சங்க மண்டபத்தில் நடத்துவதற்கு தொடங்கியது. எனினும் அதற்கு வந்த குழந்தைகள், இதர பாடங்களை ( கணிதம், ஆங்கிலம், புவியியல், குடியியல்) படிப்பதற்கு அருகிலிருந்த புனித செபஸ்தியார் பாடசாலை, புனித மரியாள் பாடசாலை, நியூஸ்ரட் ஆங்கில மகளிர் பாடசாலை, ஆவேமரியா மகளிர் பாடசாலை ஆகியனவற்றுக்குத்தான் சென்றனர். 1954 ஆம் ஆண்டு வரையில் இந்த நிலைமைதான் நீடித்தது. இந்த நிலையை மாற்றுவதற்கு ஏதுவாக அச்சமயத்தில் இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராக இருந்த பெரியார் எஸ்.கே. விஜயரத்தினம் அவர்கள் ஒரு வழக்கறிஞராகவும் உத்தியோகப்பற்றில்லாத நீதிவானாகவும் விளங்கினார். அதேசமயம் நீர்கொழும்பு நகர பிதாவாகவும் (மேயர்) தெரிவாகியிருந்தார். தனது காலத்திலாவது இங்கு வாழும் சைவத்தமிழ் குழந்தைகளுக்காக ஒரு பாடசாலையை தங்கள் இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் தொடக்கிவைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை சங்கத்தின் உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்வைத்தார். இவ்வாறு அந்தப்பாடசாலை தொடங்கப்பட்ட அக்காலப்பகுதி, இன்று இந்தப் பதிவை எழுதும் எனக்கு நினைவாக ஆழ் மனதில் பதிந்திருக்கிறது.

•Last Updated on ••Friday•, 25 •January• 2019 22:45•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம் : நடேசனின் "எக்ஸைல்" குறித்து ஒரு பார்வை! சார்பு நிலையெடுக்காத மனிதநேயவாதியின் குரல்!

•E-mail• •Print• •PDF•

" ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும் தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்" இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில் படித்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்தான் நினைவுக்கு வந்தன. அவற்றில் பெரும்பாலானவை சுயவிமர்சனப்பாங்கில் எழுதப்பட்டிருந்தவை. இலங்கை - இந்திய பாதுகாப்புத் தரப்பைச்சேர்ந்தவர்களும் ஐக்கியநாடுகள் சபைக்காக இலங்கையில் பணிபுரிந்த மேற்குலக வாசிகளும், ஆண்கள் - பெண்கள் உட்பட முன்னாள் போராளிகளும் , படைப்பாளிகளும் எழுதும் நூல்கள், ஆவணங்கள், ஆய்வுகள் வந்தவண்ணமிருக்கின்றன. நீடித்த உள்நாட்டுப்போரின் பெறுபேறாகவும் இவற்றை ஏற்கலாம்! அவ்வாறு எழுதியவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் நடேசன். இவரது தொழில் விலங்கு மருத்துவம். அது சார்ந்த உண்மையும் புனைவும் கலந்த கதைகளையே தொடக்கத்தில் எழுதியவர். அத்தகைய எழுத்துக்களின் ஊடாகவே சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள், பயண இலக்கியங்கள் என தனது பார்வையை விரிவுபடுத்திக்கொண்டவர்.

இவரது அத்தகைய படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன. வடக்கில் சப்த தீவுகளில் ஒன்றென அழைக்கப்பட்ட எழுவை தீவில் பிறந்து, அங்கு ஆரம்பக்கல்வியைக்கற்று, யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியான இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பை தொடர்ந்த காலத்தில் இலங்கை அரசியலின் அரிச்சுவடியும் தெரியாமல், அங்கு 1974 ஆம் ஆண்டில் நடந்த நான்காவது உலகத்தமிழாரய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கச்சென்றவர். அவர் தனது வாழ்நாளில் முதல் தடவையாக துர்மரணங்களை பார்த்து திகைத்துப்போனதும் அவ்வேளையில்தான். தமிழராய்ச்சி கண்காட்சி ஊர்தியால் மின்சார வயர் அறுந்துவிழுந்து அதன் தாக்கத்தினால் துடிதுடித்து இறந்தவர்களைப்பார்த்த திகைத்துப்போன ஒரு நேரடி சாட்சிதான் நடேசன். இவரது அந்த மாணவப்பருவம், அன்றைய அரசின் கல்வி மீதான தரப்படுத்தலையும் எதிர்கொண்டது. அக்காலப்பகுதியில் வடபகுதி மாணவர்களை அரசியல் எவ்வாறு ஆட்கொண்டது என்பதை இந்த நூலில் இவ்வாறு பதிவுசெய்கிறார். " எனது வயதையொத்த இளைஞர்கள் அரசியல் சாயம் படாமல் தப்பமுடியாது. ஹோலி பண்டிகை காலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடாதவனும் வர்ணத்தை பூசிக்கொள்வதுபோல் அரசியல் வாடை என்னைத் தழுவியது."

பாடசாலைக்கு கல்லெறியத்தொடங்கிய மாணவர்கள் எவ்வாறு இ.போ. ச. பஸ்ஸிற்கு கல்லெறிந்து பிரச்சினையை மேலும் கூர்மையாக்கினார்கள் என்பதிலிருந்து தமிழ்த்தலைவர்கள் தொடங்கிய சிங்கள ஶ்ரீ கார் இலக்கத்தகடுகளுக்கு தார் பூசும் இயக்கம், மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்களையும் நினைவுபடுத்தியவாறு, தமிழகத்திற்கு தப்பிச்செல்லும் இரண்டு குழந்தைகளின் தந்தையான ஒரு இளம் குடும்பஸ்தன், எதிர்நோக்கும் சம்பவங்கள், அவலங்கள், சந்திக்கும் நபர்கள், அவர்களின் குணவியல்புகள் முதலான பல்வேறு தகவல்களை இந்த எக்ஸைல் பதிவுசெய்துள்ளது.

நடேசன், ஆயுதம் ஏந்திய எந்தவொரு தமிழ் இயக்கத்திலும் இணைந்திராதுவிட்டாலும், அவற்றின் தலைவர்கள், தளபதிகள், மற்றும் போராளிகளுடன் உறவைப்பேணியிருப்பதும் தெரிகிறது. இந்த நூலில் ஒவ்வொரு அங்கத்தையும் இலங்கை தமிழர் அரசியலில் ஈடுபட்டவர்களை சுயவிமர்சனம் செய்யத்தூண்டும் விதமாகவே எழுதியிருப்பதுடன் எமது சமூகத்தையும் கேள்விக்குட்படுத்துகிறார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாக்கு நீரிணை பிரித்தாலும் சினிமாவும், கடத்தல் சாமான்களும் எவ்வாறு நிரந்தரமாக இணைத்துவைத்தன என்பதை மிகவும் சுவாரஸ்யமாக ஒரு கதை சொல்லியாக பகிர்ந்துள்ளார். இராமேஸ்வரத்தில் இந்தியக்கரையில் இறங்கும்போது,கையில் பணம் இருந்தாலும் அதனை செலவிடாமல், எடுத்துச்சென்ற சிங்கப்பூர் குடை, லக்ஸ் சோப் முதலானவற்றைக்கொடுத்து சமாளிக்கும் காட்சியை அக்காலப்பகுதியில் இராமானுஜம் கப்பலில் பயணித்தவர்களுக்கு நினைவூட்டுகின்றார். பல இடங்களில் நடேசன், படிம உத்தியோடும், உவமான உவமேயங்களுடனும், அங்கதமாகவும் காட்சிகளை சித்திரிப்பதனால், இந்த நூலை வாசகர்கள் புன்னகையுடன் நகர்ந்து செல்ல முடியும்.

•Last Updated on ••Sunday•, 20 •January• 2019 17:29•• •Read more...•
 

வாசகர் முற்றம் - அங்கம் 04: இழப்புகளிலிருந்து உயிர்ப்பித்த இலக்கியவாதி ரேணுகா தனஸ்கந்தா! ஈழத்து இலக்கிய உலகில் பேசுபொருளான "சொல்லாதசேதிகள்" தொகுப்பிலும் இடம்பெற்ற கவிஞர்!

•E-mail• •Print• •PDF•

இலக்கியவாதி ரேணுகா தனஸ்கந்தாபுத்தர் வந்த திசையிலிருந்து, காந்தி பிறந்த தேசத்திலிருந்து அவர்கள் வந்தார்கள். அவர்களுக்கு இடப்பட்ட நாமம் " அமைதிப்படை" ! மக்கள் அவர்களை நம்பினார்கள். ஏற்கனவே, சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் போரிட்டு, தங்கள் தேசத்தின் எல்லைகளை பாதுகாத்தவர்கள் எங்களையும் காப்பாற்றுவார்கள் என போற்றினார்கள். 
அவ்வாறு வந்தவர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் அங்கு 32 மாதங்கள் தங்கியிருந்தவர். அண்மையில் அவர் மீண்டும் அங்கு வந்தபோது உதிர்த்த வாக்குமூலம் இது:  "நாங்கள் இங்கு தரையிறங்கியபின், தாக்குதல்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று நினைத்து இலங்கை இராணுவத்தினர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டார்கள். இலங்கை இராணுவத்தினருடன் கைகுலுக்கிய நாங்கள், அமைதி காக்க வந்திருக்கிறோம் என்று தெரிவித்தோம். எதுபோன்ற ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை என்பதோடு, இலங்கைக்கு புதிதான எங்களுக்கு வழிகாட்டுவதற்கு வரைபடங்களோ, மேம்பட்ட உளவுத்துறை தகவல்களோ கொடுக்கப்படவில்லை."  

இந்தியப்படை அங்கு வந்திறங்கியபோது, வட இலங்கையில் உரும்பராயில் வசித்த இரண்டு ஆசிரியர்கள் - அங்கு பிரசித்திபெற்ற கல்விமான்களாக அறியப்பட்டவர்கள், தங்கள் குடும்பத்தினரிடம் சொல்கிறார்கள்: " அமைதி காக்க வந்திருப்பவர்களை நம்பலாம். இலங்கை இராணுவத்திற்கு அவர்கள் கைகுலுக்கியது ஒருவகையில் இராஜதந்திரம். எங்கள் தமிழ் மக்களை அவர்கள் கைகுலுக்கி அரவணைப்பது தொப்புள் கொடி உறவு. அவர்கள் பிறந்த தேசத்தின் பிதாவின் அகிம்சையால், பிரித்தானிய ஆதிக்கம் வெளியேறியது. அதுபோன்று, இங்கும் எங்கள் பிரதேசத்தில் பேரினவாத ஆதிக்கத்தை வெளியேற்றுவார்கள். தைரியமாக இருங்கள். தயக்கமிருந்தால், ஊருக்குள்ளே உறவினர் வீடுகளில் சென்றிருங்கள்" என்று வழியனுப்பிவைத்தார்கள்.

அவர்களில் ஒருவர் நவரட்ணம் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கணக்கியல் ஆசிரியர். மற்றவர் தம்பையா, யாழ். ஸ்ரான்லி கல்லூரியின் முன்னாள் அதிபர்.  ஆசிரியர் நவரட்ணம் தந்தையார். முன்னாள் அதிபர் தம்பையா, தாயின் தந்தையான தாத்தா. தந்தையும் தாத்தாவும் தங்கள் மகள்மாரை அன்று பாதுகாப்பாக அனுப்பிவைத்துவிட்டு, வீட்டிற்கு காவல் இருந்தனர். அமைதிகாக்க வந்தவர்கள், தங்களையும் காத்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை தோன்றியது. அதற்காக அமைதியிழந்து அலைந்தார்கள். வேட்டுக்களை தீர்த்தார்கள். உரும்பராயில் பல அப்பாவி பொதுமக்களின் உயிர்களைப் பறித்தார்கள்.  அந்தத் தந்தையையும் தாத்தாவையும் அதன்பின்னர் காணவில்லை!
இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களின் கதைகள் எங்கள் தேசத்தில் தொடர்ந்தவண்ணமிருக்கின்றன. 

வாசகர் முற்றம் தொடரில், எதற்காக இந்தச்செய்திகள் வருகின்றன? என யோசிக்கின்றீர்களா? அந்த தாத்தாவையும் தந்தையையும் அதன்பின்னர் பார்க்கமுடியாமல்போன ஒரு தேர்ந்த இலக்கிய வாசகியைப்பற்றிய பதிவுதான் இந்த அங்கம். ஈழத்து இலக்கியவளர்ச்சியில் இன்றும் பேசப்படும் ஒரு கவிதைத்தொகுதிதான் பத்துப்பெண்கள் எழுதி, 1986 ஆம் ஆண்டில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்களினால் தொகுத்து வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள்.  அ.சங்கரி, சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, மசூரா ஏ.மஜிட், ஒளவை, மைத்ரேயி, பிரேமி, ரேணுகா நவரட்ணம், ஊர்வசி ஆகிய பத்துப் பெண்கவிஞர்களின் 24 கவிதைகளின் தொகுப்பு சொல்லாத சேதிகள். ஈழத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி என்ற பெருமையையும் இத்தொகுப்பு பெற்றிருக்கிறது.  அன்று செல்வி ரேணுகா நவரட்ணம் என்ற பெயருடன் இத்தொகுப்பில் கவிதை எழுதியிருக்கும் இவர், தற்போது மெல்பனில் திருமதி ரேணுகா தனஸ்கந்தாவாக இரண்டு பிள்ளைகளின் தாயாக எம்மத்தியில் இலக்கியம் பேசிக்கொண்டிருக்கிறார்.  பயிற்சிபெற்ற ஆங்கில ஆசிரியை. வசாவிளான் மத்தியகல்லூரியில் பணியாற்றியவர். இவரது ஆசான்கள் கவிஞர் சோ. பத்மநாதன், பேராசிரியர் மௌனகுரு. தந்தையும் தாத்தாவும் கல்விப்பின்னணிகளுடன் தேர்ந்த வாசகர்களாகவும் இருந்தமையாலும், ஆசான்கள், கலை, இலக்கியவாதிகளாகவும் படைப்பாளிகளாகவும் விளங்கியமையாலும் ரேணுகாவும் தீவிர வாசகரானார். தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதினார். ஒரு சில கதைகளும் படைத்தார். யாழ்ப்பாணத்தில் அன்று வெளியான சட்டர்டே ரிவியூ பத்திரிகையிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகின.

•Last Updated on ••Sunday•, 20 •January• 2019 16:28•• •Read more...•
 

வாசகர் முற்றம் - அங்கம் 03 : படைப்பில் காணும் பாத்திரங்களை அன்றாட வாழ்விலும் தேடும் இலக்கியவாசகர் இரகமத்துல்லா! சாகாவரம்பெற்ற நூல்களையும் சாகசக் கதைகளையும் சமகாலத்தில் படிக்கும் வாசகரின் அனுபவங்கள்!

•E-mail• •Print• •PDF•

படைப்பில் காணும் பாத்திரங்களை அன்றாட வாழ்விலும் தேடும் இலக்கியவாசகர் இரகமத்துல்லாபல வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள், மெல்பனில் எனது வீட்டுக்கு வந்தார். சிட்னியில் வசிக்கும் அவரது மகளிடம் வந்திருந்த சந்தர்ப்பத்தில் அவரை மெல்பனுக்கு அழைத்திருந்தேன். ஒருநாள் இரவுப்பயணமாக பஸ்ஸில்தான் வந்தார். அவரது கையிலிருந்தது ஒரு ஆங்கில துப்பறியும் நாவல். தந்திரபூமி, குருதிப்புனல், காலவெள்ளம், சுதந்திரபூமி முதலான பல நாவல்களும் பல கதைத்தொகுப்புகளும் சிறந்த நாடகப்பிரதிகளும் எழுதியிருக்கும் அவர் எனது அபிமான எழுத்தாளர். இவருக்கு எப்படி துப்பறியும் நாவல்களில் ஆர்வம் வந்தது எனக்கேட்டபோது, தான் பயணங்களில் விறுவிறுப்பான அத்தகைய நூல்களைத்தான் படிப்பது வழக்கம் என்றார். பயணக்களைப்பை அது போக்கிவிடுமாம். தேர்ந்த வாசகர்களினால் விரும்பிப்படிக்கப்படும் பல எழுத்தாளர்களிடத்தில் இவ்வாறு விசித்திரமான இயல்புகளும் இருக்கின்றன. ஜெயகாந்தனிடம், "நீங்கள் சரித்திர நாவல்கள் படிப்பதில்லையா?" என்று, கல்கியையும் சாண்டில்யனையும் , அகிலனையும் மனதில் வைத்துக்கொண்டு யாரோ கேட்டார்களாம். அதற்கு ஜெயகாந்தன், " நான் அவற்றை படிப்பதில்லை. அதனைவிட தனக்கு அம்புலிமாமா கதைகள்தான் விருப்பம்" என்றாராம்.

பாரதியியல் ஆய்வாளரும் , மக்ஸிம் கோர்க்கியின் தாய் நாவலை தமிழுக்குத்தந்தவரும், தமிழகத்தின் மூத்தபடைப்பாளியுமான சிதம்பர ரகுநாதனிடத்தில் வித்தியாசமான ஒரு இயல்பை அவதானித்திருக்கின்றேன். பாரதியின் பாடல்களில் பெரும்பாலானவை அவருக்கு மனப்பாடம். ஆனால், அவருக்கு மிகவும் பிடித்தமான பாடல் ஒன்றும் இருந்தது. அதுதான் இலங்கையில் புகழ்பெற்ற சிங்கள பொப்பிசைப்பாடல்: " சுராங்கணி, சுராங்கணி, சுராங்கணிட்ட மாலு கெனாவா"

தமிழ்வாசகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பல எழுத்தாளர்களிடத்தில் விசித்திரமான இத்தகைய இயல்புகளை அவதானித்திருக்கின்றேன். எழுத்தாளர்கள்தான் அப்படி இருக்கிறார்கள் எனச்சொல்லமுடியாது, சிறந்த படைப்பிலக்கிய நூல்களை விரும்பிப்படிக்கும் வாசகர்களிடத்திலும் அத்தகைய விசித்திரமான இயல்புகள் இருக்கின்றன.

சமகாலத்தில் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் படைப்புகளை படிக்கின்ற அதே சமயத்தில் ஆங்கிலத்தில் வெளிவரும் சாகசக்கதைகளை படிப்பதிலும் ஆர்வம் காண்பிக்கின்ற ஒரு வாசகர் பற்றிய அறிமுகம்தான் இந்த அங்கம். அவரது பெயர்: இரகமத்துல்லா. தமிழ்நாட்டில் செங்கல்பட்டைச்சேர்ந்த ஷேக் தாவூத் - காதர் பீ தம்பதியரின் புதல்வர். காரைக்குடியில் புகழ்பெற்ற அழகப்பா பொறியியல் கல்லூரியில் பயின்றவர்.  படிக்கின்ற காலத்தில் இவருக்கு இலக்கியத்தில் அதிகம் ஈடுபாடில்லை. தொடக்கத்தில் இடைநிலைப்பள்ளியில் பயிலும்போது தமிழ்ப்பாடத்தில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தமையால் அங்கு தமிழ் இலக்கிய மன்றத்தின் செயலாளராக பல ஆண்டுகள் இயங்கியிருக்கிறார். இரகமத்துல்லா எனக்கு அறிமுகமானது மெல்பனில்தான். வாசகி சாந்தி சிவக்குமார் மெல்பனில் மாதாந்தம் ஒருங்கிணைக்கும் வாசகர் வட்டத்தின் சந்திப்புகளில்தான் இவரை பார்த்துபேசியிருக்கின்றேன். வாசிப்பு அனுபவங்களில் மற்றவர்கள் ஒரு நேர்கோட்டில் பயணிக்கும்போது இரகமத்துல்லா மாத்திரம் வேறு ஒரு திசையில் பயணித்து கருத்துச்சொல்வார். இவரது வாசிப்பு அனுபவம் ஏனையவர்களின் அனுபவத்திலிருந்து முற்றாக மாறுபட்டிருக்கும். ஒருகாலத்தில் நக்சலைட் தீவிரவாதத்தை ஆதரித்தவரும், அதனாலேயே வீட்டைவிட்டு வெளியேறி பசி பட்டினியோடு தேசாந்தரியாக அலைந்துழன்றவரும், பின்னாளில் கேரள இலக்கிய உலகில் கவிஞராக கொண்டாடப்பட்டவரும் திரைப்பட நடிகரும் பாடலாசிரியருமான பாலச்சந்திரன் - சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர ரகசியம் நூலைப்படித்துவிட்டு, தமிழகப்பயணங்களில் பஸ்நிலையங்களில் யாராவது எழுத்தாளன் பரட்டைத்தலையுடன் சித்தன்போன்று அலைந்துகொண்டிருக்கிறானா? என்பதை கூர்ந்து அவதானித்திருப்பவர்தான் இரகமத்துல்லா.

•Last Updated on ••Sunday•, 20 •January• 2019 16:17•• •Read more...•
 

அடிநிலைமக்களின் குரலாக ஒலித்த தெணியான்! இன்று அவருக்கு 77 வயது!

•E-mail• •Print• •PDF•

அடிநிலைமக்களின் குரலாக ஒலித்த தெணியான்! இன்று அவருக்கு 77 வயது!கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையின் பிறந்த தினம் இன்றாகும். வடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசு, இலக்கிய உலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர். தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள தெணியான் மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் வர்ணிக்கப்பட்டவர். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல நாவல்கள் உட்பட சில விமர்சனக்கட்டுரைத் தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற சிறுகதை யாழ்ப்பாணம் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான விவேகி இதழில் 1964 இல் தெணியானின் முதல் சிறுகதை பிணைப்பு வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, மல்லிகை, ஞானம், யாழ். முரசொலி, வீரகேசரி, தினக்குரல் உட்பட பல இதழ்களில் அயராமல் தொடர்ந்து எழுதியிருப்பவர். இவருடைய கழுகுகள் (நாவல்) சொத்து (சிறுகதைத்தொகுதி) குடிமைகள் (நாவல்) என்பன தமிழ்நாட்டில் பிரபல பிரசுர நிறுவனங்களான நர்மதா பதிப்பகம், என்.சி.பி.எச் மற்றும் கருப்பு பிரதிகள் வெளியீடுகளின் ஊடாக தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வாழ்ந்த காலத்தில் யாழ்ப்பாணக்கிளையின் செயலாளராகவும் இயங்கியிருக்கும் தெணியான், தமது படைப்புகளுக்காக இலங்கை தேசிய சாகித்திய விருது, வடகிழக்கு மகாண அமைச்சுப்பரிசு, யாழ். இலக்கிய வட்டத்தின் பரிசு, இலங்கை தேசிய கலை இலக்கியப்பேரவை - தமிழ்நாடு சுபமங்களா இதழ் ஆகியன இணைந்து வழங்கிய பரிசு, மற்றும் தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, கொடகே விருது, கலாபூஷணம் விருது ஆகியனவற்றுடன் இலங்கை அரசின் உயர் இலக்கிய கௌரவமான சாகித்திய ரத்னா விருதும் பெற்றிருப்பவர். இலங்கை வானொலிக்காக முன்னர் பல நாடகங்களும் எழுதியிருக்கும் தெணியான், பேராசிரியர் கா. சிவத்தம்பி, மல்லிகை ஜீவா ஆகியோர் பற்றியும் விரிவான நூல்களை வரவாக்கியிருப்பவர். தான் கல்வி கற்ற, ஆசிரியப்பணியாற்றிய தேவரையாளி இந்துக்கல்லூரியின் இரண்டு வெளியீடுகள் மற்றும், மல்லிகை ஜீவாவின் ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக்குரல் நூலினதும் தொகுப்பாசிரியருமாவார்.
கனடாவில் வதியும் தெணியானின் தம்பி க. நவம் நடத்திய நான்காவது பரிமாணம் இதழின் சார்பில் வெளியான மரக்கொக்கு நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் வடபிரதேசத்தில் அடிநிலை மக்களுக்காக ஓயாது குரல்கொடுப்பதற்காக எழுதிவந்திருக்கும் தெணியான், அம்மக்களின் ஆத்மாவை வெளிப்படுத்தும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியிருப்பவர். அதேசமயம் ஆலயங்களில் பூசகர்களாக பணியாற்றும் அந்தணர்களின் உரிமைகளுக்காகவும் எழுதியவர். அம்மக்களின் துயரம்தோய்ந்த கதையை பொற்சிறையில் வாடும் புனிதர்கள் என்ற தலைப்பில் நாவலாக்கியிருக்கும் தெணியான், ஏதனம் என்ற நாவலையும் வித்தியாசமாக படைத்திருப்பவர். ஏனம் என்ற சொல் பேச்சுவழக்கில் ஏதனம் என்றே மக்கள் மத்தியில் சொல்லாடலாக இருந்துவருகிறது எனத்தெரிவித்துள்ளதுடன், இல்லங்கள் தோறும் நித்திய பயன்பாட்டுக்குரியதாக புழங்கும் பாத்திரமே ஏதனம். இங்கு பானங்கள் அருந்தக்கொடுக்கும் பாத்திரம் ஏதனம் எனக்குறிப்பிடப்படுகிறது. பேச்சுமொழியில் மாத்திரமன்றி, செம்மொழி வழக்கிலும் தமிழில் இடம்பெற்றுள்ள ஒரு சொல்" என்றும் பதிவுசெய்துள்ளார்.

•Last Updated on ••Sunday•, 06 •January• 2019 22:13•• •Read more...•
 

வாசகர் முற்றம் - அங்கம் - 02 : "தாய்மொழி கன்னடம், தமிழ்மொழியில் தீராத காதல்"! மெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்!

•E-mail• •Print• •PDF•

கன்னட இலக்கியம் அறிமுகம்

விஜி இராமச்சந்திரன்பழங்காலம் (600 - 1200)
கன்னட இலக்கியத்தின் முதல் பெரும் படைப்பாக 9 ஆம் நூற்றாண்டில் எழுந்த கவிராச மார்க்கம் கருதப்படுகிறது. இந்த நூல் கவிதையியல் பற்றியது. 10 ஆம் நூற்றாண்டில் வட்டாராதனே என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் எழுந்தது. இந்த நூல் சமண சமயக் கருத்துக்களை எடுத்துரைத்தது. இக் காலத்தில் பம்பா, இரன்னா போன்ற கன்னட மகாகவிகள் எழுதினார்கள். இதனால் கன்னட இலக்கியத்தின் பொற்காலம் என்றும் இது குறிப்பிடப்படுவதுண்டு. இக்காலத்தில் சமண சமயம் சிறப்புற்று இருந்தது.

இடைக்காலம் (1200 - 1700)
போசளப் பேரரசு எழுச்சியுடன் சமணம் வீழ்ச்சி அடைந்து, வீர சைவம் உயர் நிலை பெற்றது. இக் காலத்தில் எழுந்த இலக்கியங்களை  வீரசைவ சாகித்தியா என்று குறிப்பிடுவர். 1300 களில் இருந்து 1500 வரை விசய நகரக் கர்நாடகம்,  விசய நகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. இவர்களின் ஆதரவில் வைணவ சமயமும், கன்னட வைணவ இலக்கியமும் வளர்ச்சி பெற்றன. விசய நகர வீழ்ச்சிக்குப் பின்பு மைசூர் அரசு மற்றும் Keladi Nayaka ஆகியவை கர்நாடகத்தை ஆட்சி செய்தன. இவர்களின் ஆட்சியின் கீழும் பல கன்னட இலக்கியங்கள் படைக்கப்பெற்றன.

தற்காலம் (1700 - இன்று)
18 ஆம் நூற்றாண்டு தொடக்கம் ஐரோப்பியர் ஆட்சி இந்தியாவிலும், கர்நாடகத்திலும் நிகழ்ந்தது. ஐரோப்பியரின் தாக்கத்தில் புதினம், கலைக்களஞ்சியம், அகராதி, பத்திரிகை, இதழ் போன்ற வடிவங்கள் கன்னடத்தில் வளர்ச்சி பெற்றன. 20 ஆம் நூற்றாண்டில் பல இலக்கிய இயக்கங்கள் கன்னடத்தில் பிறந்தன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த நவ உதயம் (புதிய எழுச்சி) இலக்கிய இயக்கம் அன்றாட வாழ்வின் விடயங்கள் பற்றி, மனிதபிமான விடயங்கள் பற்றி கருக்களில் இலக்கியம் படைத்தது. 1940 களில் கன்னட முற்போக்காளர் இலக்கிய இயக்கம் எழுந்தது. இவர்கள் இடதுசாரிக் கருத்துக்களை முன்வைத்து தமது இலக்கியங்களை படைத்தனர். 1950 களில் நவ்யா இலக்கிய இயக்கம் வளர்ச்சி பெற்றது. (ஆதாரம்: தமிழ் விக்கிபீடியா)

வாசகர் முற்றம் தொடரில்  தமிழ் வாசகர்களை அறிமுகப்படுத்தும்போது, ஏன் கன்னட இலக்கியம் பற்றி வருகிறது என யோசிக்கின்றீர்களா?  கன்னட இலக்கிய மேதைகள் சித்தலிங்கையா, புரந்தர தாசர், சிவராம் கரந்த், யு.ஆர் . அனந்தமூர்த்தி, கிரிஷ் கர்னாட் முதலான பல இலக்கிய ஆளுமைகளைப்பற்றி அறிந்திருக்கின்றேன். சிவராம் கரந்த், அனந்தமூர்த்தியின் கதைகள் திரைப்படங்களாகி கவனத்தையும் பெற்றுள்ளன. கிரிஷ் கர்னாட் நாடக திரைப்படக்கலைஞர். இவர் பல தமிழ்த்திரைப்படங்களிலும் நடித்திருப்பவர். பேராசிரியர் அனந்தமூர்த்தி இலங்கைக்கும் 2003 இல் தேசிய சாகித்திய விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டவர். இந்ததகவல்களின் பின்னணியில் தாய்மொழியை கன்னடமாகக்கொண்டிருக்கும் மெல்பன் வாசகி ஒருவர்,  எவ்வாறு தீவிர தமிழ் வாசகரானார் என்பது பற்றிய பதிவுதான் இது!

தமிழ்நாட்டில், வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் பிறந்திருக்கும் விஜயலக்‌ஷ்மி அவர்கள்,  அவுஸ்திரேலியா மெல்பனுக்கு 1995 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தவர். தேர்ந்த தமிழ் இலக்கிய வாசகரான இவரை விஜி என்றுதான் அழைக்கின்றோம். தனது பள்ளிப் பருவத்திலேயே  தனக்கு தமிழில் ஆர்வம் வந்துவிட்டது எனச்சொன்னார்.  ஆனால்,  இவரது  தாய் மொழி கன்னடம்.  ஆயினும் பல தலை முறைகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த  குடும்பத்தின் புதல்வி.  தந்தையார் அரசு பணி நிமித்தமாக பல மாநிலங்களில் பணிபுரிந்தமையால் தாய் மொழி கன்னடத்துடன்  ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம்  என இதர  மொழிகளும் நன்கு பேசத் தெரிந்த இவருக்கு,  தமிழின் மீது தீராக் காதல் ஏற்பட்டதற்கு  நல்ல மாதாந்திர நூல்களை வாசித்து தன்னையும் வாசிப்பில்  ஊக்குவித்த தனது தாயாரும் 7 ஆம் வகுப்பில் தனக்கு தமிழாசிரியராக இருந்த திரு.பத்திநாதன் அய்யாவும் தான் காரணம் எனச்சொல்கிறார்.

•Last Updated on ••Tuesday•, 19 •March• 2019 00:01•• •Read more...•
 

மணிவிழா நாயகன் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்!

•E-mail• •Print• •PDF•


மணிவிழா நாயகன் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்! "யேசுபாலகன் அவதரித்த நாளன்று பிறந்தவர்கள் யேசுவைப்போன்றே சாந்தமானவர்கள். அமைதியின் உறைவிடமாக இருப்பவர்கள்" என்று எனது பாட்டி சின்னவயதில் எனக்குச்சொல்லியிருக்கிறார். சிலவேளை நான் பாட்டி வாழ்ந்த காலத்தில் பெரிய குழப்படிகாரனாக இருந்திருக்கவேண்டும். எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் யேசு பாலகன் தோன்றிய நாளில் பிறந்து, பாட்டி சொன்னவாறு அமைதியாகவும் நிதானமாகவும் வாழ்ந்திருப்பதை எனது வாழ்நாளில் பார்த்திருக்கின்றேன். அந்த வரிசையில் ஒருவர்தான் எனது நீண்ட கால இலக்கிய நண்பர் புலோலியூர் இரத்தினவேலோன். அவருக்கு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி 60 வயது பிறக்கிறது. மானசீகமாக அவரை வாழ்த்திக்கொண்டு இந்தப்பதிவை எழுதத்தொடங்குகின்றேன்.

வடமராட்சியில் பல இலக்கியவாதிகளை குடும்ப உறவினர்களாக கொண்டிருக்கும் இரத்தினவேலோன், தனது இலக்கியவாழ்வில் தான் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் புலோலியூரையும் இணைத்துக்கொண்டவர். 1977 ஆம் ஆண்டில் இவர் கல்லூரி மாணவன். தீவிர வாசிப்பில் ஈடுபாடும் இலக்கியத்தின் பால் நேசிப்பும் மாணவர்களுக்கு வருமாயின் அதற்கு ஆசிரியர்கள், அல்லது குடும்ப உறவினர்கள்தான் காரணமாகியிருக்கவேண்டும். இக்காலத்தில் மாணவர்களை இலக்கியத்துறையில் ஈடுபடுத்தும் ஆசிரியர்களை காண்பது அரிது. இரத்தினவேலோன் தனது 19 வயதில், மாணவப்பருவத்தில் தினகரன் வாரமஞ்சரியில் புரளும் அத்தியாயம் என்ற சிறுகதையை எழுதி, அது வெளிவந்தகாலத்தில் எவ்வளவு புலகாங்கிதம் அடைந்திருப்பார் என்பதை கற்பனை செய்து பார்த்துவிடலாம். அச்சில் வெளிவந்த முதல்கதையை அவரே எத்தனை முறை மீண்டும் படித்துப்பார்த்திருப்பார் என்பதையும் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், பின்னாளில் அவரது எழுத்துக்களையும் ஒரு மாணவி பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுசெய்வார் என்பதை எழுதத் தொடங்கிய காலத்தில் இவர் கற்பனையிலும் நினைத்துப்பார்த்திருக்கமாட்டார். செல்வி எம். திருமகள் என்ற யாழ். பல்கலைக்கழக மாணவி, தமிழ் சிறப்புக்கலைமாணித் தேர்வின் நிறைவாண்டுப்பரீட்சையின் ஒரு பகுதியை முழுமை செய்யும் பொருட்டு, இரத்தினவேலோனின் சிறுகதைகளை ஆய்வுசெய்து சமர்ப்பித்துள்ளார். இதில் ஒரு சுவாரசியமும் இருக்கிறது. உயர்தரப்பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப்பெற்றும், தரப்படுத்தலினால் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை இழந்தவர் இரத்தினவேலோன். எனினும், பின்னாளில் இவரது கதைகளையே ஒரு மாணவி பல்கலைக்கழகத்தில் படித்து ஆய்வுசெய்துள்ளார்.

எழுதத் தொடங்கியது முதல் நாற்பது ஆண்டுகாலத்தில் இவர் எழுதிய சிறுகதைகள் நாற்பத்திநான்குதான். அவற்றில் 41 கதைகள் ஐந்து தொகுப்புகளாக வரவாகியுள்ளன. அவை: புதிய பயணம், விடியட்டும் பார்ப்போம், நிலாக்காலம், நெஞ்சாக்கூட்டு நினைவுகள், காவியமாய் நெஞ்சில் ஓவியமாய். தினகரன், வீரகேசரி, தினக்குரல், ஈழநாடு, மல்லிகை, ஞானம், சுடர், ஜீவநதி, முதலான இதழ்களில் கதைகளையும் எழுதியிருக்கும் இரத்தினவேலோன், பத்தி எழுத்துக்களின் தொகுப்பாக மூன்று நூல்களையும், தேர்ந்தெடுத்த ஆக்கங்களின் தொகுப்புகளாக மூன்று நூல்களையும் இலக்கிய வாசகர்களுக்கு வழங்கியிருப்பவர். இவரது சில நூல்கள் வட- கிழக்கு மாகாண விருதும், வடமாகாண விருதும் பெற்றவை.

•Last Updated on ••Thursday•, 27 •December• 2018 09:00•• •Read more...•
 

வாசகர் முற்றம் - அங்கம் 01: "வாசிப்பு மனிதர்களை முழுமையாக்கும்" - மகாத்மா காந்தி; " வாசகர் வட்டங்கள் நண்பர்களை உருவாக்கும்" - முத்துக்கிருஷ்ணன்; மெல்பனில் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சாந்தி சிவக்குமார்

•E-mail• •Print• •PDF•

முருகபூபதிமுன்னுரைக்குறிப்பு
பல வருடங்களுக்கு முன்னர் தமிழக இலக்கிய விமர்சகர் க.நா. சுப்பிரமணியம் ( க.நா.சு) - (1912-1988) அவர்கள் தொகுத்து வெளியிட்டிருந்த படித்திருக்கிறீர்களா? நூலின் இரண்டு பாகங்களும் படித்தேன். இன்றும் என்வசம் அந்த நூல்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. "பாதுகாப்பு" எனச்சொல்வதன் அர்த்தம் புரியும்தானே!?  கா. ந. சு. வாசகருக்கு மாத்திரமல்ல படைப்பாளிகளுக்கும் தரமான நூல்களை இனம்காண்பித்திருந்தார். அவர் படித்த சிறந்த தமிழ் நூல்களை நயந்து மற்றவர்களும் அவற்றைத் தேடி எடுத்துப்படிக்கத்தூண்டுவிதமாக எழுதினார். அவரிடத்தில் அங்கீகாரம் பெறுவது எளிதானது அல்ல என்பார்கள். அவரது குறிப்பிட்ட நூல்களை படித்ததுமுதல், நானும் எனக்குப்படித்ததில் பிடித்தமான நூல்களைப்பற்றி " படித்தோம் சொல்கின்றோம்" என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதிவருகின்றேன். இலங்கை, தமிழக, மற்றும் புகலிட படைப்பாளிகளின் நூல்களைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். எனது ஊடக, இதழியல் நண்பர்களும் அவற்றை விரும்பி ஏற்று பிரசுரித்தும் பதிவேற்றியும் வருகின்றனர். அவற்றைப்படிக்கும் அன்பர்களில் சிலரும் என்னுடன் தொடர்புகொண்டு தமது எதிர்வினைகளை தெரிவிப்பதுடன், குறிப்பிட்ட நூல்களை எங்கே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் விசாரிப்பதுண்டு.

அவுஸ்திரேலியாவில் எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தோன்றியது முதல் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளையும் ஒழுங்குசெய்தோம். காலத்துக்குக் காலம் இதன் ஒருங்கிணைப்பாளர்களாக யாராவது ஒருவர் இயங்குவார். எதிர்பாராதவகையில் மெல்பன் வாசகர் வட்டம் என்ற அமைப்பினை கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒருங்கிணைத்துவரும் இலக்கிய வாசகி திருமதி சாந்தி சிவக்குமார் அவர்களின் அயராத சீரிய இலக்கியத் தொண்டு என்னை பெரிதும் கவர்ந்தது. அவர் படைப்பிலக்கியவாதியல்ல. தேர்ந்த வாசகர். அதனால் இந்த வாசகர் முற்றம் என்ற எனது புதிய தொடரை அவரிலிருந்து ஆரம்பிக்கின்றேன். இதுவரைகாலத்தில் மறைந்த இலக்கிய ஆளுமைகள், சமூகப்பணியாளர்கள், மற்றும் கலை, இலக்கியவாதிகளை, பெண்ணிய ஆளுமைகளைப்பற்றியெல்லாம் நூற்றுக்கணக்கான பதிவுகளை எழுதியிருக்கின்றேன். ஆனால், தேர்ந்த வாசகர்கள் பற்றிய குறிப்புகளை இதுவரையில் எழுதவில்லை. எதற்காக இந்தக்குறையையும் வைக்கவேண்டும் என்பதற்காக எழுதும் புதிய தொடர்தான் இந்த வாசகர் முற்றம். இந்த தொடர்பத்தியில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் இடம்பெறமாட்டார்கள். எம்மத்தியில் வாழும் தேர்ந்த வாசகர்கள்தான் வருவார்கள்.

கலைஞர்களுக்கு, குறிப்பாக சினிமா நடிகர் நடிகையர்களுக்கு ரசிகர்கள் இருந்தால்தான் அவர்களின் திரைப்படம் ஓடும். அவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்தும் கிடைக்கும். தயாரிப்பாளர்களும் இந்த ரசிகர்களை நம்பித்தான் கோடிக்கணக்கில் முதலிட்டு, திரைப்படங்கள் எடுக்கிறார்கள். அந்தப்பணம் மட்டுமல்ல, திரை ரசிகர்களும்தான் சினிமாவுக்கு மூலதனம். அவ்வாறு இசை, நடனம் முதலான துறைகளையும் ரசிப்பதற்கு ரசிகர்கள் வேண்டும். அதனால், இந்தக்கலைஞர்களுக்கும் ரசிகர்கள்தான் தேவை. அப்படியானால் எழுத்தாளர்களுக்கு? அவர்களும் வாசகரை நம்பித்தான் எழுதுகின்றனர். " இன்னமும் தமிழ்நாட்டில் ஒரு சிறந்த தமிழ் இலக்கிய நூல் ஆயிரம் பிரதிகள் விற்றாலே பெரிய சாதனைதான்" என்று ஒரு சந்தர்ப்பத்தில் (அமரர்) சுந்தரராமசாமி சொன்னார்.

•Last Updated on ••Thursday•, 27 •December• 2018 08:57•• •Read more...•
 

எதிர்வினை: வாசிப்பும், யோசிப்பும் 320 - எழுத்தாளர் பிரபஞ்சனின் கனடா விஜயமும், அவமதிப்பும்!

•E-mail• •Print• •PDF•

முருகபூபதிLetchumanan Murugapoopathy < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• >
Dec. 24 at 11:51 p.m.

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம்.  தங்கள் பதிவுகளில் வாசிப்பும், யோசிப்பும் 320: எழுத்தாளர் பிரபஞ்சனின் கனடா விஜயமும், அவமதிப்பும்! என்ற தலைப்பில் நீங்கள் பதிவிட்டுள்ள உங்களதும் மற்றவர்களதும் எதிர்வினைகளைப்படித்தேன். இறுதியில் கவிஞர் சேரன் எழுதியிருக்கும் வசனங்களைப்பாருங்கள்.

"Cheran Rudhramoorthy:  பிரபஞ்சனை இங்கே அழைத்தவர் உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம். அவர் என்னுடைய முகனூலில் இல்லை என்பதால் அவரைத் தொடுக்க முடியவில்லை. கனடாவின் நல்ல இலக்கியவாதிகளின் பரிந்துரையால்தான் பிரபஞ்சன் வருகை சாத்தியமானது. எனினும் பிரபஞ்சன் வந்த பிற்பாடு எவரும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் பலமுறை லோகேந்திரலிங்கத்தை அழைத்து பிரபஞ்சனுடன் பேச வேண்டும் என்று கேட்டேன். சாத்தியப் படவில்லை. இறுதியில் அவர் தமிழகம் திரும்பும் முன்பு சிறிது நேரம் பேச வாய்ப்புக் கிடைத்தது. அப்போது பிரபஞ்சன் சொன்னதை இங்கு எழுத முடியாது. இந்த இணைப்பில் Nagamany Logendralingam, Canada Uthayan என்பதை நண்பர்கள் தொடுப்புச் செய்தால் மேலதிக விவரங்கள் தெரிய வரலாம்"

•Last Updated on ••Tuesday•, 25 •December• 2018 00:31•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம்: "சிப்பிக்குள் முத்து "! கி. லக்‌ஷ்மணன் அய்யாவின் நூற்றாண்டு வெளியீடு!

•E-mail• •Print• •PDF•

கி. லக்‌ஷ்மணன் அய்யாவின் நூற்றாண்டு வெளியீடு!" படைப்பாளிகளையும் பத்திரிகையாளர்களையும் கல்வித்துறை சார்ந்த  ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும்  பதிப்புத்துறையில்  இருப்பவர்களையும் மிரட்டிக்கொண்டிருக்கும் ஒரு  பிசாசு இருக்கிறது. கண்களுக்குத் தெரியும் பிசாசுதான்! ஆனால், எப்படியோ   கண்களுக்குத்தப்பிவிடும்! எங்கே எப்படி காலை வாரிவிடும்  என்பதைச் சொல்லமுடியாது.   மானநட்ட  வழக்கிற்கும் தள்ளிவிடும் கொடிய இயல்பு இந்தப்பிசாசுக்கு  இருக்கிறது. அதுதான் அச்சுப்பிசாசு. மொழிக்கு ஆபத்துவருவதும்  இந்தப்பிசாசினால்தான். 1990 ஆம் ஆண்டு மறைந்த எங்கள் கல்விமான்  இலக்ஷ்மணன் அய்யாவை நினைக்கும் தருணங்களில் அவர் ஓட ஓட விரட்டிய  இந்த அச்சுப்பிசாசுதான் எள்ளல்  சிரிப்போடு கண்முன்னே  தோன்றுகிறது."

இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர் எனக்குத் தெரிந்த இலக்கிய ஆளுமைகள் பற்றிய தொடரில் பெரியார் இலக்‌ஷ்மணன் அவர்களைப்பற்றிய பதிவின் தொடக்கத்தில் எழுதியிருந்தேன். அண்மையில் எனக்கு கிடைத்துள்ள  அய்யா எழுதியிருக்கும் "சிப்பிக்குள் முத்து" நூலை படிக்கின்றபோது அவர் நேரில் தோன்றி உரையாற்றுவதுபோன்ற உணர்வுதான் வருகிறது. இந்த அரிய நூலை அய்யாவின் செல்வப்புதல்வி மங்களம் வாசன் தொகுத்துள்ளார். கடந்த சில வருடங்களாக மங்களம் மேற்கொண்ட அயராத முயற்சி திருவினையாகியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கி. இலக்‌ஷ்மணன்  அய்யாவின் நூற்றாண்டு காலம் தொடங்கியிருக்கும் இக்காலப்பகுதியில் " சிப்பிக்குள் முத்து" வெளியாகியிருப்பது பெரும் சிறப்பு. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளுக்குப் பொருத்தமான  ஓவியங்களை பிரபல ஓவியர் பத்மவாசன் வரைந்துள்ளார். கி.லக்‌ஷ்மணன் அவர்கள் இலங்கை - தமிழக  தமிழ், ஆங்கில இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் முன்னர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பாக  சிப்பிக்குள் முத்து ஒளிர்கின்றது. இலங்கை தேசிய சுவடிகள் திணைக்களம் மற்றும்  பொது நூலகங்களிலிருந்து தேடி எடுத்த கட்டுரைகளின்  தொகுப்பான இந்நூலில் தமிழ், கல்வி, இலங்கை வாசனை, சமயம், தத்துவம் ஆகிய தலைப்புகளில் 64 கட்டுரைகளும் ஆங்கிலத்தில் 9 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம  ஆசிரியர் ( அமரர் ) க. சிவப்பிரகாசம், வடமாகாண முன்னாள் முதல்வர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள்( முன்னாள்) அமைச்சர் திரு. டி. எம்.சுவாமிநாதன் (அமரர்கள்) பேராசிரியர் க.கைலாசபதி,   சிரேஷ்ட  சட்டத்தரணி  நீலன் திருச்செல்வம்  ஆகியோர் உட்பட பலர் கொழும்பு றோயல் கல்லூரியில் கற்ற காலத்தில்,  இவர்களின் தமிழ் ஆசிரியராக பணியாற்றியிருக்கும் கி. லக்‌ஷ்மணன் அய்யா அவர்கள்,  தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியை சரியாகவும் பிழையின்றியும் எழுத வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருப்பவர். அவர்  1960 இல் எழுதிய இந்திய தத்துவ ஞானம் நூல் பல பதிப்புகளை கண்டுள்ளதுடன்,  இலங்கை தேசிய சாகித்திய விருதும் தமிழ்நாடு அரசின் விருதும் பெற்றது. அய்யாவை சதா அவதானி என்றும் அழைக்கமுடியும். அவர் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், ஆவணங்களை மாத்திரம் படிப்பவர் அல்ல. ரயில், பஸ் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் வீதியோரங்களிலும் இருக்கும் பெயர்ப்பலகைகள், விளம்பரங்களிலும் எழுத்துப்பிழை - கருத்துப்பிழை கண்டு பிடித்து,  உரிய இடத்தில் முறையிட்டு உடனடியாக திருத்தியும்விடுவார். சிப்பிக்குள் முத்து நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் அவர் தனது வாழ்நாளில் மேற்கொண்ட தமிழ்சார்ந்த பணிகளில் சந்தித்த அனுபவங்களை மிகவும் எளிய முறையில் வெகு சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதனால் வாசகர்களினால் இலகுவாக இந்த நூலுடன் நெருங்க முடிகிறது.

•Last Updated on ••Sunday•, 23 •December• 2018 00:32•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம்: ஆழியாள் மொழிபெயர்த்த அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள்: 'பூவுலகைக்கற்றலும் கேட்டலும்'!

•E-mail• •Print• •PDF•

ஆழியாள்பூமித்தாயை கற்கவும் அவளது உணர்வுகளை கேட்கவும் முடியுமா? ஆம்! முடியும் என்பவர்கள்தான் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான அபோர்ஜனிஸ் இனத்தவர்கள். இயற்கையை நேசித்து அதற்கியைந்து வாழ்ந்த மக்கள் கூட்டத்தினரிடமிருந்து, வந்தேறு குடிகளால் அபகரிக்கப்பட்ட பெருநிலப்பரப்பிலிருந்து குரல்கள் தொடர்ந்தும் ஒலிக்கின்றன. அங்கு இசையும் அவலமும் கண்ணீரும் இழப்பும் பண்பாட்டுக்கோலங்களும் வரலாற்றுச்செய்திகளும் வெளிப்படுகின்றன. அந்த மக்கள் குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் ஆய்வு செய்தும் வந்திருப்பவர் அவுஸ்திரேலியா கன்பரா மாநில நகரத்தில் வதியும் கவிஞர் ஆழியாள் மதுபாஷினி.

இவர், இலங்கையில் திருகோணமலையில் பிறந்து, தனது கல்வியை மூதூர் புனித அந்தோனியார் கல்லூரியில் தொடர்ந்து, பின்னர் மதுரை மீனாட்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் கலைமாணி பட்டமும், நியுசவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில முதுமாணிப்பட்டமும் பெற்றவர். தகவல் தொழில்நுட்பத்தில் பட்ட மேற்படிப்பு டிப்ளோமாவும் பெற்றவர். உரத்துப்பேச, துவிதம், கருநாவு முதலான கவிதைத் தொகுப்புகளை 2000 முதல் 2013 வரையிலான காலப்பகுதிக்குள் வரவாக்கியவர். பூவுலகைக் கற்றலும் கேட்டலும் தொகுப்பு ஆழியாளின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள ஆதிக்குடிகள் பற்றிய கவிதைகளின் தொகுப்பு. ஆழியாளின் கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், கன்னடம், சிங்களம் ஆகியமொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆழியாள் இலங்கையில் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திலும் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியாற்றியிருப்பவர். பெண்கள் சந்திப்பு, மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் முதலான கலை இலக்கிய அமைப்புகளிலும் அங்கம் வகிப்பவர். இவரது கவிதைகள் ஊடறு, காலம், அணங்கு, மூன்றாவது மனிதன், பூமராங் முதலான இதழ்களிலும் வந்துள்ளன.

'பூவுலகைக் கற்றலும் கேட்டலும்' தொகுப்பினை " அணங்கு" பெண்ணியப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

•Last Updated on ••Tuesday•, 18 •December• 2018 00:53•• •Read more...•
 

இரண்டு பேராசிரியர்கள் இணைந்து எழுதிய "பாரதி மறைவு முதல் மகா கவி வரை"! மகாகவி பாரதிக்கு 136 வயது!

•E-mail• •Print• •PDF•

மகாகவி பாரதியார்- விரைவில் வெளிவரவிருக்கும் முருகபூபதியின் இலங்கையில் பாரதி என்னும் ஆய்வு நூலின் இறுதி அங்கத்தில் இடம்பெறும் ஆக்கம் -

தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி பிறந்திருக்கும் சுப்பிரமணியன் சுப்பையாவாகி, தனது 11 வயதில் பாரதியாகி, 1921 செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி சென்னையில் திருவல்லிக்கேணியில் மறைந்தார். அவருக்கு டிசம்பர் 11 ஆம் திகதி 136 வயது! பாரதியை இன்றும் சிலர் கவிஞராக மாத்திரமே பாரக்கின்றபோதிலும் அவர் ஒரு மகாகவி என்பதை நிரூபிப்பதற்காக பலர் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வந்துள்ளனர். யார் கவிஞன் என்று பாரதியே ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு சொல்லியுள்ளார்: 

"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், எவனொருவன் வாழ்க்கையையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி ". அத்துடன், " நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் "  எனவும் சொன்னவர் அவர். பாரதி தன்னை கவிஞனாகவே பிரகடனம் செய்துகொண்டிருந்தாலும், அவர் மகாகவியா..? அதற்கான தகுதி அவருக்குண்டா என்னும் வாதங்கள் நீண்ட காலம் தொடர்ந்தன. அத்துடன் அதற்கு எதிர்வினைகளும் பெருகின.  பாரதி மகாகவிதான் என்பதை வலியுறுத்தும் வகையில் இலங்கைப்பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ( 1932-2011) அவர்களும் தமிழகப்பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களும் இணைந்து நீண்ட நாட்கள் ஆய்வுமேற்கொண்டு எழுதிய நூல்தான் பாரதி மறைவு முதல் மகா கவி வரை.  வட இலங்கையில் வடமராட்சியில் கரவெட்டியில் 1932 இல் பிறந்திருக்கும் இவர் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி, கொழும்பு சாகிறா கல்லூரி ஆகியனவற்றின் பழைய மாணவர். தொடக்கத்தில் சாகிறாவில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கும் சிவத்தம்பி அவர்கள், இலங்கை நாடாளுமன்றில் சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். சிறந்த இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர். அத்துடன் சமூகச்சிந்தனையாளர்.  பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்று இளமாணி, முதுமாணி பட்டங்களையும் பெற்று லண்டன் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கலாநிதியானவர்.  இலங்கையில் கொழும்பு , யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்களிலும் கிழக்கு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியவர். பல நாடுகளில் வருகை தரு பேராசிரியராகவும் பணியாற்றிய இவரது மாணாக்கர் பலரும் படைப்பிலக்கியவாதிகளாகவும் கலைஞர்களாகவும் இலக்கிய விமர்சகர்களாகவும் திகழுகின்றனர். நாடகத்துறையிலும் பங்களித்திருக்கும் பேராசிரியர் சிவத்தம்பி எழுதியிருக்கும் பல திறனாய்வு நூல்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உசாத்துணையாக விளங்குபவை. பல விருதுகளையும் பெற்றுள்ள பேராசிரியர் தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கியமான ஆளுமையாகப்போற்றப்படுபவர். இவர் குறித்தும் ஏராளமான கட்டுரைகள் வெளியாகியுள்ளன. கொழும்பில் 2011 ஆம் ஆண்டு மறைந்தார்.

•Last Updated on ••Tuesday•, 11 •December• 2018 01:58•• •Read more...•
 

அமரர் எஸ்.பொ 1 : சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான்! ஆக்க இலக்கியத்தில் பரீட்சார்த்தமான முயற்சிகளின் மூலவர்!

•E-mail• •Print• •PDF•

எஸ்.பொபொன்னுத்துரை  இலங்கையிலிருந்து   நைஜீரியாவுக்கு  தொழில் வாய்ப்பு  பெற்றுச் சென்ற  காலகட்டத்தில்   அங்கு  ஆபிரிக்க இலக்கியங்களை   ஆழ்ந்து   கற்றார்.  பின்னாளில்  பல  ஆபிரிக்க இலக்கியங்களையும்  அதேசமயம்  அரபு  இலக்கியங்களையும் மொழிபெயர்த்து  நூலுருவாக்கினார். ஆபிரிக்காவில்  ஒரு  தவம்  என்ற   விரிவான  கட்டுரையின்  முதல் அத்தியாயத்தை  வீரகேசரி  வாரவெளியீட்டுக்கு  அனுப்பினார்.  இதர அத்தியாயங்களும்   அவரிடமிருந்து  கிடைத்தபின்னர் வெளியிடுவதற்கு   வீரகேசரி  வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர்  பொன். ராஜகோபால்  தீர்மானித்திருந்தார். எனினும்   பொன்னுத்துரை   அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தமையினால்  அந்தத் தொடர்  வெளியாவது சாத்தியப்படவில்லை.   முதலாவது  அத்தியாயத்தின்  மூலப்பிரதி  பொன்னுத்துரையிடமும்   இருக்கவில்லை.    வீரகேசரிக்கு   அனுப்பிய பிரதியும்   காணாமல்போனது.   காலம்  கடந்து  பின்னாளில்  பல ஆபிரிக்க   இலக்கியங்களையும்   அதேசமயம்  அரபு இலக்கியங்களையும்  மொழிபெயர்த்து   நூலுருவாக்கினார். இவற்றுக்காக   அவர்   செலவிட்ட   நேரம்   மிகப்பெறுமதியானது.

மேலைத்தேய   மதங்கள்   பற்றியும்   கிழைத்தேய    மதங்கள்  குறித்தும்  அவரிடம்  ஆழமான  பார்வை  இருந்தமையினால் கிறிஸ்தவ - இஸ்லாமிய - இந்து - பௌத்த - சமண இலக்கியங்களையும்   ஆழ்ந்து   கற்றார்.    அதனால்தான்  அவரால் கீதையின்   நிழலில் (கல்கியில் தொடராக வந்தது)  மகாவம்ச -   மாயினி -  இஸ்லாமும்   தமிழும் -   பெருங்காப்பியப்பத்து-  காந்தி தரிசனம்   முதலான   நூல்களையும்   எழுத  முடிந்திருக்கிறது. கவிதையில்   ஆரம்பித்து ,  சிறுகதை,   நாவல்  எழுதிய  பொன்னுத்துரை நூற்றுக்கணக்கான    விமர்சனங்களும்  நூல்  மதிப்புரைகளும் எழுதியிருப்பவர்.   பொதுவாக  எவரும்  தமது  நூலுக்கு  முன்னுரை எழுதிக்கொண்டிருந்தபொழுது   இவர்  அதற்கு  முன்னீடு எனப்பெயரிட்டுத்தான்  எழுதியவர்.   எதிலும்  மாற்றம்  புதுமை நிகழவேண்டும்  என்ற  அவா   அவரைப்பற்றியிருந்தது. தமது   விமர்சன  முறைமையை   -  " My literary criticism is more in defence of established  creative writing institution "   என்றே குறிப்பிட்டு  வந்திருக்கிறார்.

ஆக்க   இலக்கியத்தில்  எப்பொழுதும்  பரீட்சார்த்தமான  முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர்,  தமது  படைப்புகளின்  தலைப்புகளையும்  ஒரு எழுத்தில்   அல்லது  மிகவும்  குறைந்த  எழுத்துக்களில்தான்   தெரிவு செய்வார். உதாரணம்:  தீ.  - வீ   - சடங்கு  -   முறுவல் -  ஆண்மை -  மாயினி  -    அவா - ?   (கேள்விக்குறியிலும்  ஒரு  நூல்)

படைபிலக்கியத்தில்  மட்டுமன்றி   வானொலி   நிகழ்ச்சி உரைச்சித்திரங்களிலும்   அவற்றுக்கு  சிறிய   தலைப்புகளையே சூட்டியவர்.   குறிப்பாக  அவர்  இலங்கை  வானொலியில்  1970  களில் நடத்திய   ஒரு  நிகழ்ச்சிக்கு  வேர்   எனத்தலைப்பிட்டார். குறிப்பிட்ட  வேர்   என்ற  தலைப்புக்குள்  சிலரை   வானொலியில் பேசவைத்தார்.   மனித  குலத்தின்   வேரின்  சால்பையும்  - பண்பாட்டுக்கோலங்களில்  -    இயற்கையில்   வேரின்   இன்றியமையாத    தன்மைகளையும்    அந்த  வானொலிச்சித்திரம் நேர்த்தியாகவும்   தரமாகவும்    அமைத்தது. அதனால்   அந்த உரைச்சித்திரம்   பலதடவைகள்   மறு  ஒலிபரப்புச்செய்யப்பட்டது.

அதுபோன்று   அவுஸ்திரேலியா  மெல்பனில்  ஒலிபரப்பாகும் வானொலி    ஒன்றில்   அவர்   நிகழ்த்திய   மனித   குலத்தின்    உணவு நாகரீகம்   என்ற  உரைச்சித்திரமும்  முக்கியமானது.   1989  இல் குறிப்பிட்ட   3zzz   தமிழ் ஓசை வானொலி  நிகழ்ச்சியை   நடத்தியவர் பொன்னுத்துரையின்    நீண்ட  கால  நண்பர்  நவரத்தினம்  இளங்கோ என்பதும்   குறிப்பிடத்தகுந்தது.

•Last Updated on ••Thursday•, 29 •November• 2018 08:14•• •Read more...•
 

தமிழ் கலை இலக்கிய அறிவுச்சூழலின் நிகழ்வுகளை பதிவுசெய்துவரும் அரங்கச்செயற்பாட்டாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மெல்பனில் எதிர்வரும் 25 ஆம் திகதி உரையாற்றுகிறார்.

•E-mail• •Print• •PDF•

தமிழச்சி தங்கபாண்டியன்சுமதி என்னும் இயற்பெயரைக்கொண்டிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர். விருதுநகரில் ஆரம்பக்கல்வியையும் மதுரையில் கல்லூரிப்படிப்பையும் நிறைவுசெய்துகொண்ட சுமதி,  இளம் வயதிலிருந்தே கலை , இலக்கிய ஆர்வலராகவும் சமூகச்செயற்பாட்டாளராகவும்  வளர்ந்தவர்.  கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், நடனம், ஆய்வு முதலான துறைகளில் ஈடுபாடுகொண்டிருந்தவர். தனக்கு தமிழச்சி என்ற புனைபெயரையும் சூட்டிக்கொண்டவர். சிறுகதைகளும் எழுதத் தொடங்கியிருக்கும் இவரது பாடல்கள்  திரைப்படங்களிலும் ஒலிக்கின்றன. சுமதி,  தமிழச்சி என்ற பெயருடன் எழுதத் தொடங்கியதும் இந்தப்பெயரையே  ஊடகங்களும்  அடையாளப்படுத்துகின்றன.  சென்னையில் ராணி மேரி கல்லூரிக்கு ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணி நிமித்தம் இடம்பெயர்ந்தவர்.  தான் பிறந்த  கிராமத்து மண்ணையும் மக்களையும் ஆழமாக  நேசித்துவருபவர்.  கட்டிடக்காட்டுக்குள் வாழத்தலைப்பட்டாலும், தான் வாழ்ந்த  கரிசல் காட்டின் மணத்தை தனது கவிதைகளில் தொடர்ந்து பரப்பிவருபவர். தமிழக இலக்கிய உலகில் நிரம்பவும் பேசப்படும் தமிழச்சி,  ஈழத்தமிழ் மக்கள் குறித்தும் கரிசனை கொண்டிருப்பவர். இவரது சில படைப்புகளில் ஈழத்தின் மீதான நேசமும் பதிவாகியிருக்கும்.

சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியாற்றிய வேளையில்  2005 இல் அவுஸ்திரேலியாவுக்கு தனது முனைவர் பட்ட ஆய்விற்காக முதல் முதலில் வந்திருக்கும் தமிழச்சி,  குறிப்பிட்ட ஆய்வினை பூர்த்திசெய்து, அதனை தமிழுக்கும் வரவாக்கி நூலுருவில் அறிமுகப்படுத்துவதற்கு மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார். குறிப்பிட்ட ஆய்வு நூலில்,  அவுஸ்திரேலியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்ட  கலைஞர் ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெர்க்கண்டையரை முன்வைத்து எழுதியுள்ளார். நிழல்வெளி என்னும் பெயரில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் இலங்கை அரசியல் குறித்தும் பேசப்படுகிறது. முக்கியமாக ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெர்க்கண்டையரின் பிரபல நாடகமான Rasanayagams Last Riot (1983)  பற்றியும் அவரது இதர நாடகங்கள் பற்றியும் இந்த நூல் பேசுகிறது. 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் மாண்ட  இன்னுயிர்களுக்கு இந்த நூலை சமர்ப்பித்துள்ளார்.
\
தமிழச்சியின் தந்தையார் தங்கபாண்டியன்,  அறிஞர் அண்ணாதுரை 1967 இல் தமிழகத்தின் முதல்வரான சமயத்தில்  அவரது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பதவி வகித்தவர். அருப்புக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். தி. மு.க.விலிருந்த எம்.ஜி.ஆர்., பறங்கிமலையிலும் ஆண்டிப்பட்டியிலும் தேர்தலில் நின்று வென்றவர்.  அனைத்திந்திய அண்ணா தி.மு. க. தொடங்கிய பின்னர் எம்.ஜிஆர். , அருப்புக்கோட்டையில் களத்தில் இறங்கி தங்கபாண்டியனை தோற்கடிக்கிறார். தொடர்ந்தும் தி.மு.க.விலிருந்த தங்கபாண்டியன்,  ராஜபாளயத்தில் நடந்த ஒரு கலவரத்தை நேரில் பார்த்து அங்கு அமைதியை ஏற்படுத்த சென்ற வேளையில் மாரடைப்பு வந்து காலமானார்.

•Last Updated on ••Wednesday•, 21 •November• 2018 21:38•• •Read more...•
 

அஞ்சலிக்குறிப்பு: யுகமாயினி சித்தன்! கலை, இலக்கியத்தில் பல்துறை ஆற்றல் மிக்க படைப்பாளி யுகமாயினி சித்தன்! தமிழக - இலங்கை - புகலிட எழுத்தாளர்களின் உறவுப்பாலமாக திகழ்ந்தவரும் விடைபெற்றார்!

•E-mail• •Print• •PDF•

அஞ்சலிக்குறிப்பு: யுகமாயினி சித்தன்! கலை, இலக்கியத்தில் பல்துறை ஆற்றல் மிக்க படைப்பாளி யுகமாயினி சித்தன்! தமிழக - இலங்கை - புகலிட எழுத்தாளர்களின் உறவுப்பாலமாக திகழ்ந்தவரும் விடைபெற்றார்!சித்தனின் 'யுகமாயினி'"பல மொழிகளிலும் ஒருவரது படைப்பு மொழிபெயர்க்கப்பட்டு நூலுருவில் வெளியாவதும் ஒரு வகையில் படைப்பாளிக்கு கிட்டும் அங்கீகாரம்." எனச்சொன்னார் நாமக்கல் கு. சின்னப்பபாரதி. என்னருகில் அமர்ந்திருந்த யுகமாயினி சித்தன் உடனே அதனை மறுத்துரைத்தார். “மொழிபெயர்ப்பில் ஒரு நாவல் வெளியானால் அதனை இலக்கிய அங்கீகாரம் என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு நாவல் சர்வதேச தரத்தில் எழுதப்பட்டால் மாத்திரமே அதற்கு அங்கீகாரம் தரமுடியும். ஒரு நாவல் இந்திய மொழிகளிலும் அய்ரோப்பிய மொழிகளிலும் வெளியாகிவிட்டால் , அந்தப்படைப்பு உன்னதமானது, தரமானது, உலக அங்கீகாரம் பெற்றது என்ற முடிவுக்கு வந்துவிடலாமா?” எனக்கேட்டார் சித்தன். சின்னப்ப பாரதி நிமிர்ந்து அமர்ந்தார்.

“ஒரு நாவல்,  அந்தநாவலின் படைப்பாளியின் தாய்மொழியில் எழுதப்பட்டு அதனை பிறமொழி வாசகருக்கு அறிமுகப்படுத்துவதற்காக ஒரு மொழிபெயர்ப்பாளர் பிறமொழியில் தரமுனைவதுகூட அங்கீகாரம்தான். மொழிபெயர்ப்பாளர் அந்தப்படைப்பை மொழிபெயர்க்கவிரும்பியதனால்தானே பிறமொழி வாசகனுக்கு அந்தப்படைப்பு கிடைக்கிறது. அத்துடன் மொழிபெயர்ப்புக்கு தகுதியான படைப்பு என்ற சிந்தனை மொழிபெயர்ப்பாளரிடம் இருப்பதனால் அவர் குறிப்பிட்ட படைப்பை மொழிபெயர்க்கின்றார். ஒருவகையில் இது ஒரு அங்கீகாரம்தான்.” என்றார் சின்னப்பபாரதி. “ அய்யா,  எத்தனை படைப்புகளும் மொழிபெயர்க்கப்படலாம், ஆனால்,  அவை சர்வதேச தரத்திற்கு உயர்ந்திருக்கிறதா? என்பதுதான் எனது கேள்வி.” எனக்கேட்ட  சித்தன், சற்று அட்டகாசமாகவும் சிரித்தார். அந்தச்சிரிப்பை இனி நாம் கேட்கமுடியாமல் நிரந்தரமாக மௌனித்துவிட்டார் எங்கள் சித்தன். மேற்குறிப்பிட்ட உரையாடல் சில வருடங்களுக்கு முன்னர் தமிழகம் நாமக்கல்லில் இலக்கிய நண்பர் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி அவர்களின் இல்லத்தில் ஒரு மதியவேளையில் நடந்தது. சித்தனை அன்றுதான் முதல் முதலில் சந்தித்தேன். எனது நாமக்கல் வருகை அறிந்து, கோயம்புத்தூரிலிருந்து தேடிக்கொண்டு வந்துவிட்டார். சித்தன் ஆங்கில இலக்கிய பரிச்சயம் மிக்கவர். பலர் தமிழில் மொழிபெயர்த்த பல மேலைத்தேய மற்றும் ஆபிரிக்க  இலக்கியங்களை ஏற்கனவே ஆங்கில மூலம் படித்திருப்பவர். மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபடுபட்டவர். (சித்தனின் மொழிபெயர்ப்புக்கூட  புகலிட நாட்டில்  வதியும் ஒருவரது பெயரில் வெளியாகியிருப்பது எனது காதில் விழுந்த வியப்பான தகவல்) அவர் சில நல்லமொழிபெயர்ப்புகளை குறிப்பிட்டார். எனினும் தமிழில் குறிப்பிட்டுச்சொல்லும்படியான சர்வதேச தரத்தில் அமைந்த நாவல்கள் எதுவும் இன்னமும் வரவில்லை என அன்று  தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சின்னப்பபாரதிக்கு சித்தனின் கருத்துக்கள் எரிச்சல் ஊட்டியதையும் அவதானித்தேன். அவர் திடீரென எழுந்து, “ மதியமாகிவிட்டது. சாப்பிட்டுவிட்டு பேசுவோமா?” என்றார். மதிய உணவருந்தும்போதும் சித்தன் விட்ட இடத்திலிருந்து தனது வாதத்தை வலியுறுத்தினார். “ முதலில் சாப்பிடுங்கய்யா. அதன் பிறகு பேசுவோம்” என்று சின்னப்ப பாரதி சொன்னபிறகே சித்தன் அமைதியடைந்தார்.

•Last Updated on ••Wednesday•, 07 •November• 2018 21:46•• •Read more...•
 

மெல்பனில் நடந்த 18 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா! இரண்டு அரங்கங்களில் நடந்தேறிய நிகழ்வுகள்!

•E-mail• •Print• •PDF•

மெல்பனில் நடந்த 18 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா! இரண்டு அரங்கங்களில் நடந்தேறிய நிகழ்வுகள்!  அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வான தமிழ் எழுத்தாளர் விழா நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் மெல்பனில், Keysborough Secondary College மண்டபத்தில் நடந்த  இவ்விழ, மண்டபத்தின் வெளியரங்கில் இடம்பெற்ற கண்காட்சிகளுடன் தொடங்கியது.  பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த தென்கிழக்காசிய  நாடுகளின் அமைப்புகளின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மருத்துவர் சாபாஷ் சவுத்ரி கண்காட்சிகளை திறந்துவைத்தார். விக்ரோரியா பல்தேசிய கலாசார ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு. சிதம்பரம் ஶ்ரீநிவாசன் விழா நிகழ்ச்சிகளை மங்கல விளக்கேற்றி தொடக்கிவைத்தார். விழாவின் தொடக்க நிகழ்ச்சிகளாக கண்காட்சிகள் இடம்பெற்றன. ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி, விமல் அரவிந்தனின் இயற்கை எழிலை சித்திரிக்கும் ஒளிப்படக்காட்சி மற்றும் மறைந்த தமிழ் வளர்த்த முன்னோர்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களின் குறிப்புகளுடன் அவர்களின் ஒளிப்படங்களின் காட்சி மற்றும் அவுஸ்திரேலியாவில் இதுவரையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளியான தமிழ் இதழ்கள் - பத்திரிகைகள் - நூல்களின் கண்காட்சி என்பன இடம்பெற்றன.

வள்ளுவர், கம்பர், இளங்கோ, அவ்வை உட்பட பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், ரகுநாதன், அகிலன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, முதல் இலங்கையைச்சேர்ந்த இலங்கையர்கோன், அ.ந. கந்தசாமி, மஹாகவி, கனகசெந்தி நாதன், டானியல், மு. தளையசிங்கம் உட்பட அண்மையில் மறைந்த பல எழுத்தாளர்களின் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கொல்லப்பட்ட , காணாமலாக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் - எழுத்தாளர்களின் படங்களின் வரிசையில் ரஜனி திராணகம, செல்வி, தராக்கி சிவராம், காவலூர் ஜெகநாதன், நெல்லை நடேஸ், நிமலராஜன், அஷ்ரப் ஆகியோர் உட்பட பலருடைய ஒளிப்படங்களும் இடம்பெற்றிருந்தன. அத்துடன் புகலிட நாடுகளில் ( கனடா, அவுஸ்திரேலியா, அய்ரோப்பா) மறைந்த இலக்கிய ஆளுமைகளின் ஒளிப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  நூறுக்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள் இடம்பெற்ற இக்கண்காட்சியில் மறைந்தவர்கள் பற்றிய குறிப்புகளும் படங்களின் கீழே பதிவுசெய்யப்பட்டிருந்தது.

•Last Updated on ••Wednesday•, 07 •November• 2018 09:07•• •Read more...•
 

பத்மநாப அய்யரும் கலை - இலக்கிய பதிப்புலகமும்! தமிழ் இலக்கியப்பாலமாகவும் ஆவணப்படுத்தலில் முன்னுதாரணமாகவும் திகழ்ந்தவர்!

•E-mail• •Print• •PDF•

பத்மநாப அய்யரும் கலை - இலக்கிய பதிப்புலகமும்!  தமிழ் இலக்கியப்பாலமாகவும் ஆவணப்படுத்தலில் முன்னுதாரணமாகவும் திகழ்ந்தவர்!- லண்டனில் வதியும் இலக்கிய நண்பர் பத்மநாப அய்யரிடமிருந்து 12.10.2018 அன்று எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அச்சமயம் அவரது லண்டன் நேரம் அதிகாலை 3.30 மணி. நாம் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி நடத்தவிருக்கும் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா நிகழ்ச்சிகளில் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகளின் கண்காட்சியும் நடத்தவிருக்கும் தகவல் அறிந்து அவர் தொடர்புகொண்டார். நூலகம் ஆவணக்காப்பகத்திலும் கண்காட்சியில் இடம்பெறும் ஆவணங்களை பதிவேற்றுவதற்கு ஆக்கபூர்வமாகச் செயற்படுமாறும் பத்மநாப அய்யர் விநயமாகக் கேட்டுக்கொண்டார். எமது தமிழ் மக்களின் வாழ்வில் ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்த அவரது தொடர்ச்சியான அக்கறை முன்னுதாரணமானது. அவுஸ்திரேலியா நிகழ்வு பற்றி அறிந்ததும் தனது உறக்கத்தையும் பொருட்படுத்தாமல் அவர் துயில் எழுந்து உரையாடியது எனக்கு நெகிழ்வூட்டியது. இறுதியாக அவருடைய முயற்சியும் சம்பந்தப்பட்ட தவில் மேதை லயஞான குபேரபூபதி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி - ஆவணப்படம் - இசைத்தொகுப்பையும் ரசித்திருக்கின்றேன். பத்மநாப அய்யரின் பவள விழா 2016 ஆம் ஆண்டில் நடந்தவேளையில் நான் எழுதிய பதிவை இங்கு மீண்டும் பதிவேற்றுகின்றேன். அவரது வாழ்வையும் பணிகளையும் மீண்டும் தெரிவிக்கவிரும்புகின்றேன்" - முருகபூபதி  -

" ராஜம் கிருஷ்ணனின் அலைவாய்க்கரையில் நாவலைப்படித்த பின்னர், முருகபூபதியின் சுமையின் பங்காளிகள் சிறுகதைத்தொகுதி படிக்கக்கிடைத்தது. இலங்கையில் ஒரு பிரதேசத்தில் வாழும் கடற்றொழில் புரியும் மீனவ மக்களைப்பற்றிய கதைகள். இந்த நூல் பற்றி 'தாமரை' யில் எழுதவிருக்கின்றேன்." - என்று எழுதப்பட்ட ஒரு வாசகர் கடிதம் 1975 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் மல்லிகையில் வெளியானது. அதனை எழுதியிருந்தவர், தமிழக முற்போக்கு இலக்கிய விமர்சகர் பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள். அவரை நான் பார்த்ததுமில்லை. அதனால் பேசியதும் இல்லை. என் எழுத்துக்களை எனது முதல் நூலின் ஊடாக அவருக்கு அறிமுகப்படுத்தியவர்தான் அண்மையில் பவளவிழா நாயகனாக எம்மவர்களினால் கொண்டாடப்படும் நண்பர் பத்மநாப அய்யர்.

அண்மையில் நடந்த எமது 16 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்காக குவின்ஸ்லாந்து மாநிலத்திற்கு புறப்பட்ட தருணத்தில் அவருக்கு பவளவிழா என்ற செய்தியை நண்பர் கிரிதரனின் பதிவுகளில் பார்த்தேன். உடனடியாக எனது நீண்ட கால நண்பர் பற்றிய பதிவை எழுதமுடியாதிருந்த வேலைப்பளுவுக்கு மத்தியில் அவர் பற்றிய பழைய நினைவுகளுடன் விமானம் ஏறினேன். அங்கு சென்ற பின்னர் - நண்பர் நடேசன் சொன்ன முகநூல் குறிப்புகள், என்னை வருத்தியது. என்னிடம் இந்த முகநூல் இல்லாதிருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று மீண்டும் உணர்ந்தேன். ஒரு வாழ்நாள் சாதனையாளர் - தொடர்ச்சியாக எமது கலை இலக்கியத்திற்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்த ஒருவர் கொண்டாடப்படும் அரிதான தருணம் அவர் கடக்கும் வயதின் எல்லைகள்தான்.  அத்தகைய ஒரு எல்லையில் அவரை எவ்வாறு அழைப்பது ? எப்படி எழுதுவது ? என்ன பெயர் சொல்லி விளிப்பது ? முதலான சர்ச்சைகள் அவசியமற்றவை.

•Last Updated on ••Tuesday•, 23 •October• 2018 07:30•• •Read more...•
 

நல்லிணக்கத் தூதுவரும், மனிதநேயவாதியுமான நடிகர் விஜயகுமரணதுங்கவின் நினைவு தினம் இன்று ( அக்டோபர் 9)

•E-mail• •Print• •PDF•

நல்லிணக்கத் தூதுவரும், மனிதநேயவாதியுமான நடிகர் விஜயகுமரணதுங்கவின் நினைவு தினம் இன்று ( அக்டோபர் 10) !!  இந்திரா பார்த்தசாரதி எழுதிய சுதந்திரபூமி நாவலை படித்திருக்கிறீர்களா?

இந்திய அரசியலை அங்கதச் சுவையோடு எழுதப்பட்ட இந்த நாவலில் வரும் முகுந்தன் என்ற பாத்திரம் முழுமையான சித்திரிப்பு. மத்திய அரசில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவரின் வீட்டுக்கு காப்பி தயாரிக்கும் வேலைக்காரனாக வரும் முகுந்தன், படிப்படியாக அங்குவரும் அரசியல் தலைவர்களின் நன்மதிப்பையும் பெற்று பின்னாளில் அவரது வாரிசாக அரசியலுக்குள் பிரவேசித்து தலைவனாகின்றான். அமைச்சராகின்றான். அந்த முகுந்தன், பிரதமர் தொடக்கம் பல தலைவர்களுக்கு தண்ணி காட்டும் கதை. அவர்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டும் கதைதான் சுதந்திரபூமி.

திரைப்படங்களில் தோன்றிவிட்டு, அவற்றின் வசூல் வெற்றியை கொண்டாடும் ரசிகர்களின் மோகத்தை மூலதனமாக்கி, நாளைய முதல்வர்களாக வர முயற்சிக்கும் கனவில் மூழ்கியிருக்கின்றவர்களின் கதைகளை சமகாலத்தில் படித்து வருகின்றோம். இந்தப்பின்னணிகளுடன் பல வருடங்களுக்கு முன்னர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய சுதந்திர பூமி நாவல் இன்றும்பேசப்படுவதற்குக் காரணம் அதில் வரும் பாத்திரங்கள் இன்றும் வேறு வேறு ரூபங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பிறக்கும் எவரும் எதிர்காலத்தில் எந்தநிலைக்குச்செல்வார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லமுடியாது. அரசியலும் அப்படித்தான். இ.பா.வின் சுதந்திரபூமியில் வரும் முகுந்தன், ஒரு அரசியல் தலைவரின் வீட்டில் காப்பி தயாரிக்கும் சாதாரண வேலைக்காரன். அவன் வாழ்வில் நேர்ந்த விபத்து அவனை அரசியல் தலைவனாக்கியது.

நடிகனாக வாழ்க்கையை தொடங்கிய எம்.ஜீ.ஆர், எதிர்காலத்தில் தான் தமிழக முதல்வராவேன் என்று தான் நடித்த முதல் நாடகத்தின்போதோ அல்லது முதல் திரைப்படமான சதிலீலாவதியில் தோன்றும்போதோ நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார். அதுபோன்றுதான் ஜெயலலிதாவும், என். ரி. ராமராவும்! பின்னாளில் அரசியலில் பிரகாசிக்க முனையும் சினிமாக்கலைஞர்கள் பலரதும் ஆரம்ப கால வாழ்க்கை அரசியலுடன் எள்ளவும் சம்பந்தப்பட்டிருக்காது. அதனைத்தான் இ.பா. அவர்களும் சுதந்திரபூமி நாவலில் காப்பி தயாரிக்கவந்த முகுந்தன் மூலம் சொல்லியிருப்பார். இலங்கையிலும் ஒருவருக்கு அரசியல் பிரவேசம் விபத்தாகி, இறுதியில் அதுவே விபரீதமாகியிருக்கிறது! அவருக்கு இன்றைய தினம் ஒக்டோபர் 9 ஆம் திகதி பிறந்த தினம். அவர்தான் 1945 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வடமேற்கிலங்கையில் சீதுவை என்ற ஊரில் பிறந்து, 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி, கொழும்பின் புறநகரான பொல்ஹேன்கொடவில் தனது வீட்டு வாசலில் சில மறைகரங்களின் தூண்டுதலால் சுட்டுக்கொல்லப்பட்ட விஜயகுமாரணதுங்க. இவரது இயற்பெயர் கொவிலகே அன்டன் விஜயகுமாரணதுங்க.

•Last Updated on ••Monday•, 08 •October• 2018 00:54•• •Read more...•
 

அஞ்சலிக்குறிப்பு: ஒரு தேவதைக் கனவை இலக்கியத்தில் பதிவுசெய்து, அற்பாயுளில் மறைந்த இலக்கியத்தேவதை கெக்கிராவ ஸஹானா! மல்லிகை ஜீவா, ஜெயகாந்தனின் ஆசிபெற்று வளர்ந்த இலக்கிய ஆளுமை!

•E-mail• •Print• •PDF•

திருமதி ஸஹானா"திருமதி ஸஹானாவின் 'ஒரு தேவதையின் கனவு' சிறுகதைத்தொகுதி வெளிவருவது குறித்து பெரு மகிழ்ச்சியடைகிறேன். தெளிவுற அறிந்திடவும், தெளிவுபெற மொழிந்திடவும், சிந்திப்போர்க்கு அறிவுவளர, உள்ளத்தே ஆனந்தக்கனவு பல காட்டலும் கைவரப்பெற்றவர்கள் எழுதும் படைப்புகள் காலத்தால் என்றென்றும் போற்றப்படும். அவை என்றும் புதியவை. அத்தகு இலக்கியவரிசையில் தேவதையின் கனவும் இடம்பெற வாழ்த்துகின்றேன்" என்று 22-01-1997 ஆம் திகதி சென்னையிலிருந்து ஜெயகாந்தன் வாழ்த்தியிருந்த, ஈழத்தின் இலக்கியப்படைப்பாளி கெக்கிராவ ஸஹானாவும் கடந்த மாதம் எங்கள் இலக்கிய உலகிலிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டார். "அற்பாயுள் மரணமும் மேதா விலாசத்தின் அடையாளமோ? " என்று ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில் சுந்தரராமசாமி எழுதியிருந்ததுதான் நினைவுக்கு வருகிறது. 1968 இல் பிறந்து 2018 இல் மறைந்துள்ள கெக்கிராவ ஸஹானா, குறுகிய காலத்தில் ஈழத்து இலக்கிய வானில் சுடர்விட்டு பிரகாசித்த நட்சத்திரம். எங்கள் மத்தியில் உதிர்ந்துள்ள இந்த நட்சத்திரம் எம்மிடம் விட்டுச்சென்றுள்ளவை அவருடைய அருமைக்குழந்தைகளும், இலக்கியப்பிரதிகளும்தான்.  இனி எம்முடன் பேசவிருப்பவை கெக்கிராவ ஸஹானவின் ஆக்க இலக்கியப்படைப்புகளும் ஆய்வுகளும் மொழிபெயர்ப்பு பிரதிகளும்தான்.

கவிதை, சிறுகதை, விமர்சனம், அறிவியல் கட்டுரைகள் ஊடாக பாடசாலைப்பருவம் முதலே தேடலில் ஈடுபட்டு வந்துள்ள ஸஹானா ஆசிரியையாக பணியாற்றியவர். டொமினிக் ஜீவாவின் மல்லிகை கண்டெடுத்த இலக்கிய மலர், இலங்கையிலும் தமிழகத்திலும் தமிழர்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலும் மணம்பரப்பியது. மல்லிகை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான காலத்தில், 1980 காலப்பகுதியில் 12 வயதுச்சிறுமியாக பாடசாலையில் பயிலும் காலத்தில் இவருக்கு அதனை அறிமுகப்படுத்தியவர் மர்ஹ_ம் கோயா அப்பாஸ் என்பவர் என்ற தகவலை மறக்காமல் நன்றியுணர்வோடு தனது முதல் கதைத்தொகுப்பான ஒரு தேவதைக்கனவு நூலின் என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.  

இலங்கை வானொலி, நாளாந்த தினசரிகள், தென்னிந்திய சஞ்சிகைகள் மூலமாகவும் பள்ளி ஆசிரியர்களின் உதவியுடனும் பாரதி முதல் ஜெயகாந்தன் வரையில் தேடிக்கற்றவருக்கு - இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத அந்த இளம் பருவத்தில் இவருக்கு மல்லிகை அறிமுகமாகியிருக்கிறது. மல்லிகை ஆக்கங்கள் அந்தச்சிறுமிக்கு பிரமிப்பூட்டியவை. அதனால் வாசிப்பதுடன் நின்றுகொண்டவர், அதில் எழுதுவதற்கு தயங்கியிருக்கிறார். எனினும் எழுதிப்பார்க்கத்தூண்டிய பல படைப்புகளை இனம் கண்டுள்ளார். இலங்கை வானொலி ஒலிமஞ்சரிக்கு எழுதிய முதல் கவிதையும் முதல் சிறுகதையும் ஒலிபரப்பாகியதையடுத்து, தன்னாலும் தொடர்ந்து ஆக்க இலக்கியம் படைக்கமுடியும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது. தனது ஆரம்ப இலக்கியப்பிரதிக்கு அங்கீகாரம் வழங்கி, களம் தந்திருக்கும் வானொலி அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீட் அவர்களுக்கும் தனது முதல் கதைத்தொகுப்பில் மறக்காமல் நன்றி தெரிவிக்கின்றார் ஸஹானா.

எண்பதுகளின் இறுதியில் பாடசாலை இறுதித்தேர்வை முடித்துவிட்டு கிடைத்திருந்த விடுமுறைக்காலத்தில் வீட்டில் சேகரித்துவைத்திருந்த அனைத்து மல்லிகை இதழ்களையும் மீண்டும் எடுத்துப்படிக்கிறார். மல்லிகை பற்றிய ஒரு நீள் வெட்டுமுகத்தோற்றம் அவர் மனதில் பதிவாகிறது. மல்லிகையில் வெளிவந்த இலக்கியப்பிரதிகளை விட அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவாவின் சோர்வற்ற கடின உழைப்பும் ஒவ்வொரு மாதமும் மல்லிகையை வெளியிடுவதற்கு அவர் சந்திக்கும் சவால்களும் கவனத்தை ஈர்க்கின்றன. அதுவரையில் மல்லிகையில் எழுதாமலிருந்த ஸஹானா ஒரு நீண்ட இலக்கியமடலை மல்லிகைக்கு அனுப்புகின்றார். அதனையடுத்து, மல்லிகை இதழ்கள் மட்டுமன்றி மல்லிகைப்பந்தல் வெளியீடுகளும் அவருடைய கெக்கிராவ இல்லத்திற்கு வருகின்றன.

•Last Updated on ••Wednesday•, 03 •October• 2018 06:25•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம்: பார்த்திபனின் - "கதை"! மனிதவாழ்வில் அற்றுப்போனவர்களின் அவலக்குரலை பதிவு செய்துள்ள படைப்பாளி! அந்நியமாவதற்கு தூண்டும் சமூகத்தின் வாழ்வுக் கோலங்களை சித்திரிக்கும் கதைகள்!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் பார்த்திபன்பார்த்திபனின் 'கதை'உருவம், உள்ளடக்கம், படைப்புமொழி, பாத்திர வார்ப்பு, காட்சி சித்திரிப்பு முதலான பல அம்சங்களை உள்ளடக்கியது சிறுகதை வடிவம். இலங்கையில் இந்த இலக்கியம் தோன்றிய காலத்தில், எழுத முன்வந்த எழுத்தாளர்கள் பலர், தென்னிந்திய சிற்றேடுகளில் வெளியான கதைகளின் பாதிப்பில், சென்னை மவுண்ட் ரோட்டையும் மெரீனா பீச்சையும் பின்புலமாகக்கொண்டு கதை பண்ணினார்கள்! அதற்குப்பின்னர் மறுமலர்ச்சிக்காலம் இலக்கியத்தில் பதிவானபோது இலங்கையர்கோன், சி. வயித்திலிங்கம், சம்பந்தன் ஆகியோரின் கதைகள் பரவலான வாசிப்பிற்குட்பட்டு பிரதேச மொழி வழக்குகளும் அறிமுகமாயின. இலங்கையில் இடதுசாரிகளின் இலக்கியப் பிரவேசத்தையடுத்து, முற்போக்கான சிந்தனைகளை அடியொற்றியும், சமூக ஏற்றதாழ்வு - சாதிப்பிரச்சினைகள் - வர்க்கப்போராட்டம் பற்றியும் கதைகள் தோன்றின. இக்கால கட்டத்தில் அறிமுகமான பல விமர்சகர்கள் மார்க்ஸீயப் பண்டிதர்களாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகவும் பேராசிரியர்களாகவும் விளங்கினர். இவர்கள் நமது ஆக்க இலக்கியப்பிரதியாளர்களிடம், சோஷலிஸ யதார்த்தப்பார்வையை எதிர்பார்த்தனர். இதனால் அந்தப்பார்வைக்கு ஏற்பவும் அதே சமயத்தில் அழகியல் அம்சத்துடனும் பலர் ஈழத்து இலக்கிய உலகில் தமது படைப்புகளை அறிமுகப்படுத்தினார்கள். இந்தப்பின்னணியில் தமிழகப்படைப்புகள் கலைத்துவத்தில் முன்னின்றன. ஈழத்து படைப்பு இலக்கியம் இலக்கிய விமர்சன பிதாமகர்களின் ஆசீர்வாதத்தையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து அழகியலை இழக்கநேர்ந்தது. எனினும் குறிப்பிட்ட சில அழகியல் சார்ந்த படைப்புகள் வெளிவந்தன.

1970 இன் பின்னர் தேசிய இனப்பிரச்சினை இனமுறுகலாகியதும் படைப்பு இலக்கியத்தில் " இஸங்கள்" குறித்த விமர்சனங்கள் கூர்மையடைந்தன. கேள்விக்குட்படுத்தப்பட்டன. போர்க்காலம் தொடங்கியதும் போர்க்கால இலக்கியமும், போரினால் மக்கள் இடம்பெயர்ந்ததும், இடம்பெயர்ந்தோர் இலக்கியமும் நாட்டைவிட்டு புலம்பெயர்ந்ததும், அவர்கள் மத்தியிலிருந்த இலக்கியவாதிகளினால் புலம்பெயர்ந்தோர் இலக்கியமும் பின்னர் புகலிட இலக்கியமும் வரவாகியது. கொட்டும் பனிக்குள்ளிருந்து நெருப்பின் தீவிரத்துடன் படைத்து, ஆறாம் திணை இலக்கியத்தை அறிமுகப்படுத்தியவர்களிடமிருந்து, வீரியம் மிக்க எழுத்துக்கள் தமிழ் இலக்கிய வாசகப்பரப்பின் பொதுவான கவனத்திற்குட்பட்டுள்ளன. தமிழகமும் இலங்கையும் விழியுயர்த்தி பார்க்கின்றன. 

வெளியுலகத்தின் கட்டற்ற சுதந்திரத்தினால் புகலிட வாழ்வுக்கோலங்களும் தாயகத்தின் நெருக்கடியிலிருந்து தப்பி ஓடுவதற்கு எத்தனித்தவர்களின் செய்திகளும் கதைகளாகின. புலம்பெயர்ந்தோர் சந்தித்த அவலங்களும் படைப்புகளில் கருப்பொருளாகின. இந்தப் பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்ட உருவம், உள்ளடக்கம், படைப்புமொழி, பாத்திர வார்ப்பு, காட்சி சித்திரிப்பு முதலான பல அம்சங்களை புகலிட படைப்பாளர்களும் நவீன முறையில் புத்தம் புதிய உத்திகளுடன் பயன்படுத்தினர். இவர்களுக்கும் ஆசிர்வாதமும் அங்கீகாரமும் தேவைப்படுகிறது. அதன்மூலம் தமக்கென ஒரு அடையாளத்தை தக்கவைப்பதற்கு பிரயத்தனப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. அவர்களுக்கு அந்த அடையாளம் கிடைத்ததும் அவர்களின் சுமாரான கதைகளுக்கும் விமர்சகர்களின் Promotion கிடைக்கிறது.  எனினும் அவ்வாறு அடையாளம் காணப்படாத ஒரு சிலர் அந்த Promotion ஐ எதிர்பார்க்காதுவிட்டாலும், தேர்ந்த வாசகர்கள், அவர்களின் படைப்புகளின் முக்கியத்துவம் குறித்து எழுதுகின்றனர்.

•Last Updated on ••Sunday•, 16 •September• 2018 22:06•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம்: நீடித்த போரின் வலி சுமந்த மக்களின் கதைகளைப்பேசும் "வன்னியாச்சி"! வன்னிபெருநிலப்பரப்பின் ஓலங்களை படைப்பிலக்கியத்தில் ஒலிக்கச்செய்த தாமரைச்செல்வி!

•E-mail• •Print• •PDF•

தாமரைச்செல்விநீடித்த போரினால் வலிசுமந்த மக்களின் கதைகளைச்சொல்லும் தாமரைச்செல்வியின் " வன்னியாச்சி" பெரும் கதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 37 கதைகளையும், ஜீவநதியில் இம்மாதம் வெளியான அவனும் அவளும் என்ற சிறுகதையையும் சேர்த்து மொத்தம் 38 கதைகளையும் படித்து முடித்த தருணத்தில், தமிழ் ஊடகங்களில் " அரசின் மகா வலி - தமிழருக்கு மன வலி " என்ற தலைப்பிலும் தொனியிலும் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மக்கள் வலிசுமந்த மேனியராகவே கடந்த மூன்றரை தசாப்த காலமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை, தனது கதைகளின் ஊடாக பதிவுசெய்துவருபவர் தாமரைச்செல்வி.  இவரது எழுத்துக்களை இலங்கையில் நான் இருந்த காலப்பகுதியில் படித்திருந்தாலும், நேரில் சந்தித்துப்பேசியது வெளிநாடான தற்போது நான் வாழும் அவுஸ்திரேலியாவில்தான்.

சில வருடங்களுக்கு முன்னர் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழாவில் அவரது சமுகம் இன்றியே அவரது பச்சை வயல் கனவு என்ற நாவலை அறிமுகப்படுத்தியிருந்தோம். அதனை இங்கு வதியும் கிளிநொச்சி பிரதேசத்தில் முன்னர் ஆசிரியராக பணியாற்றிய மரியதாசன் மாஸ்டர் அறிமுகப்படுத்தி உரையாற்றினார். இவர் பெண் போராளி தமிழினிக்கும் முன்னர் ஆசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

நான் முன்னர் எழுதிய இலக்கியத்துறையில் பெண்ணிய ஆளுமைகள் தொடரில் தாமரைச்செல்வி பற்றியும் ஒரு பதிகை எழுதியிருக்கின்றேன். இலங்கையில் சந்திப்பதற்கு வாய்ப்புக்கிட்டாது போனாலும், அதற்கான சந்தர்ப்பம் காலம் கடந்து, 2016 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில் நடந்த 16 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில்தான் கிடைத்தது. அன்று இவர்தான் விழாவை மங்கல விளக்கேற்றி தொடக்கிவைத்தார். அன்று அந்த புதிய மேடையில் அவர் உரையாற்றவில்லை என்பது எனக்கு ஆச்சரியமானது! எனினும் இவரது நேர்காணலை அவுஸ்திரேலியா எஸ்.பி. எஸ். வானொலியில் கேட்டபோது, இவரால் தாம் வாழ்ந்த பிரதேசத்து மக்களின் வலி நிரம்பிய கதைகளை யதார்த்தம் குன்றாமல் பேசவும் தெரிந்தவர் என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது.

ஈழத்தின் போர்க்கால இலக்கியம் தமிழ்ச்சூழலில் அறிமுகமாகி தற்போது சிங்களம், ஆங்கில மொழிகளுக்கும் பரவியிருக்கிறது. தாமரைச்செல்வியின் கதைகள் இலங்கையிலும் தமிழகத்திலும் பாட நூல்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு ஓவியராகவும் அறியப்பட்டுள்ள தாமரைச்செல்வியின் கதைகள் அவர் வரைந்த ஓவியங்களுடனும் வெளியாகியுள்ளன.  சில கதைகள் குறும்படங்களாக தயாரிக்கப்பட்டு வெளியாகி விருதுகளும் பெற்றுள்ளன. இந்தப்பின்னணிகளைக்கொண்டிருக்கும் - மேடைகளைத் தவிர்க்கும் - தாமரைச்செல்வியின் தன்னடக்கம், ஆழ்ந்த பெருமூச்சுக்களாக வலி சுமந்த மக்களின் ஓலங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.

" சொந்த மண்ணிலேயே இருப்பிடம் இழந்து அகதிகளாகிக் குண்டுகளின் அதிர்வும் கந்தக நெடியும் ஒரு புறம் துரத்த உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் பதற்றத்தோடும் பசி பட்டினியோடும் பதுங்கு குழிகளின் பக்கத்துணையோடும் வாழ்ந்திருந்தவர்கள். இந்த மக்களின் நடுவே நானும் ஒருத்தியாக வாழ்ந்துகொண்டேதான் இச்சிறுகதைகளை எழுதினேன். என்னைச் சுற்றிய நிகழ்வுகள் தந்த அதிர்வுகள், பாதிப்புகள், நெருடல்கள், இவைதான் இப்படைப்புகள். இம்மக்களின் துயரங்களை வார்த்தைகளில் பதியும்போது எனக்கும் வலித்திருக்கிறது. கண்களின் ஓரம் நீர் கசிந்திருக்கிறது. இந்த மக்கள் அனுபவித்த கடலளவு துயரங்களில் ஒரு சில துளிகளையே என்னால் பதிவு செய்ய முடிந்திருக்கிறது. " என்று வன்னியாச்சி தொகுப்பில் தனதுரையில் குறிப்பிட்டிருக்கும் தாமரைச்செல்வியும், குறிப்பிட்ட வன்னியாச்சி கதையில் வரும் வன்னியாச்சியைப்போன்றே அந்த மண்ணின் ஆத்மாவை நன்கு அறிந்திருப்பவர்.

•Last Updated on ••Saturday•, 08 •September• 2018 21:47•• •Read more...•
 

கடித இலக்கியம்: ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் ( 1926 - 1995) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 29)

•E-mail• •Print• •PDF•

எழுத்திலும் பேச்சிலும் தர்மாவேசம் !  இயல்பில் குழந்தை உள்ளம் ! இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அகஸ்தியர் எழுதிய கடிதங்கள்

அகஸ்தியரின் எரி நெருப்பில் இடைபாதை இல்லைஅகஸ்தியர்இலங்கையின் மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர், வடபுலத்தில் ஆனைக்கோட்டையில்  சவரிமுத்து - அன்னம்மாள் தம்பதியருக்கு 1926 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி பிறந்தவர். தனது இளம் பராயத்திலேயே இலக்கிய உலகில் பிரவேசித்து, இலங்கையில் வெளியான பல பத்திரிகைகள், இதழ்களில்  கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், கட்டுரை, உணர்வூற்று உருவகம், நாடகம், இலக்கிய வரலாறு   முதலான சகல கலை, இலக்கியத்துறைகளிலும் தொடர்ச்சியாக அயர்ச்சியின்றி எழுதியவர். தமிழக இலக்கிய இதழ்களிலும் அவரது பல படைப்புகள் வெளியாகின. இலங்கை மல்லிகை, தமிழ்நாடு தாமரை ஆகிய இதழ்கள் முகப்பில் அகஸ்தியரின் படத்துடன்  சிறப்பிதழ் வெளியிட்டுள்ளன. அவரது நூல்கள், இலங்கையிலும் தமிழ்நாட்டிலும், பிரான்ஸிலும் வெளியாகியுள்ளன.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக்குழுவில்  இணைந்திருந்தவர். தனது படைப்புகளை வெளியிடத் தயங்கிய பத்திரிகை, இதழ்களின் ஆசிரியர்களுடனும் எந்தத் தயக்கமும் இன்றி  நேரடியாக கருத்துமோதல்களில் ஈடுபடும் இயல்பும் கொண்டிருந்தவர். தர்மாவேச பண்புகள் அவரிடமிருந்தபோதிலும் குழந்தைகளுக்குரிய மென்மையான இயல்புகளினாலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி  அனைவரையும் அன்போடு அணைத்தவர். 1972 முதல் எனதும் நெருக்கமான இலக்கிய நண்பரானார். கொழும்பு வரும் வேளைகளில் நான் பணியாற்றிய வீரகேசரி அலுவலகம் வந்து சந்திப்பார். 1983 தொடக்கத்தில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டை கொண்டாடிய வேளையில் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த மூத்த எழுத்தாளர்களும் பாரதி இயல் ஆய்வாளர்களுமான தொ.மு.சி. ரகுநாதன், ராஜம் கிருஷ்ணன், பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கும் அழைக்கப்பட்டனர். யாழ். கொட்டடியில் அமைந்திருந்த பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் பூபாலசிங்கம் அவர்களின் இல்லத்தில் தமிழக எழுத்தாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, இலக்கிய கலந்துரையாடலும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அகஸ்தியர்தான் தலைமை தாங்கினார்.

1983 இனக்கலவர காலத்தில் யாழ்ப்பாணத்தில் நான் தங்கியிருந்தபோது ஒருநாள் அவரை யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் சந்தித்தேன். அதுவே அவருடனான இறுதி நேரடிச்சந்திப்பு. எனக்கு முன்னமே அகஸ்தியர் வெளிநாடு புலம்பெயர்ந்து 1986 முதல்  பிரான்ஸில் வாழத்தலைப்பட்டார்.  நானும் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர், எனது முகவரியை தேடிப்பெற்று தொடர்புகொண்டார். 1995 ஆம் ஆண்டு அவர் மறையும் வரையில் என்னுடன் கடிதத்தொடர்பிலிருந்தவர். அவர் எழுதிய பல கடிதங்கள் இன்னமும் எனது சேகரிப்பில் பத்திரமாக இருக்கின்றன.

•Last Updated on ••Tuesday•, 28 •August• 2018 21:05•• •Read more...•
 

அமரர் கி. லக்‌ஷ்மணன் நூற்றாண்டு வெளியீடு: தமிழ், கல்வி, இலங்கை வாசனை, சமயம், தத்துவம் முதலான தலைப்புகளில் 73 கட்டுரைகளின் தொகுப்பு "சிப்பிக்குள் முத்து"

•E-mail• •Print• •PDF•

அமரர் கி. லக்‌ஷ்மணன்இலங்கையின் மூத்த தமிழ் அறிஞரும் கல்வி அமைச்சின் முன்னாள் வித்தியாதிபதியுமான அமரர் கி. லக்‌ஷ்மணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு "சிப்பிக்குள் முத்து" தமிழகத்தில் வெளியாகியுள்ளது.  கட்டுரைகளுக்குப் பொருத்தமான ஓவியங்களை பிரபல ஓவியர் பத்மவாசன் வரைந்துள்ளார். கி.லக்‌ஷ்மணன் அவர்கள் இலங்கை - தமிழக தமிழ், ஆங்கில இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் முன்னர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு: சிப்பிக்குள் முத்து.

இலங்கை தேசிய சுவடிகள் திணைக்களம் மற்றும் பொது நூலகங்களிலிருந்து தேடி எடுத்த கட்டுரைகளின் தொகுப்பான இந்த அரிய நூலில் தமிழ், கல்வி, இலங்கை வாசனை, சமயம், தத்துவம் ஆகிய தலைப்புகளில் 64 கட்டுரைகளும் ஆங்கிலத்தில் 9 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. 

477 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இந்நூலை கி.லக்‌ஷ்மணன் அவர்களின் புதல்வி திருமதி மங்களம் வாசன், தொகுத்துள்ளார். கி.லக்‌ஷ்மணன் அவர்களின் நூற்றாண்டு கடந்த மே மாதம் தொடங்கியிருக்கிறது. இதனை முன்னிட்டு இந் நூல் வெளியாகியிருக்கிறது.

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ( அமரர் ) க. சிவப்பிரகாசம், வடமாகாண முதல்வர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் திரு. டி. எம்.சுவாமிநாதன் ஆகியோர் உட்பட பலர் கொழும்பு றோயல் கல்லூரியில் கற்ற காலத்தில் இவர்களின் தமிழ் ஆசிரியராக பணியாற்றியிருக்கும் கி. லக்‌ஷ்மணன் அவர்கள், தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியை சரியாகவும் பிழையின்றியும் எழுதவேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருப்பவர்.

•Last Updated on ••Thursday•, 23 •August• 2018 06:55•• •Read more...•
 

இன்று வீரகேசரிக்கு அகவை 89: கலை - இலக்கியத்தில் வீரகேசரியின் வகிபாகம்!

•E-mail• •Print• •PDF•

சொக்கனின் 'சீதா'முருகபூபதிஇந்தியா - தமிழ்நாட்டில் தனவணிகர் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் செறிந்து வாழ்ந்த செட்டி நாட்டு மண்ணில் ஆவணிப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து, வளர்ந்து கொழும்புக்கு வர்த்தகம் செய்யவந்திருக்கும், பெரி. சுப்பிரமணியம் செட்டியார், 1930 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வீரகேசரி பத்திரிகையின் முதல் இதழை வெளியிட்டார்.  முதலில் கொழும்பு செட்டியார் தெருவிலிருந்து வெளிவந்த வீரகேசரி, அதன் விரிவாக்கம் கருதி கிராண்ட்பாஸ் வீதியில் 185 ஆம் இலக்க இல்லத்திற்கு இடம்பெயர்ந்தது. அந்த இல்லமும் வரலாற்று முக்கியத்துவம் மிக்கது என்பதை பலரும் அறியமாட்டார்கள்! அங்குதான் இலங்கையின் முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்தனா பிறந்திருக்கிறார்.

இத்தகைய அரிய தகவல்களை தன்னகத்தே வைத்துள்ள வீரகேசரியின் தொடக்காலத்தில் வ.ராமசாமி அவர்களும் தமிழகத்திலிருந்து வருகை தந்து ஆசிரியராக பணியாற்றியவர். வ.ரா. என சுருக்கமாக அழைக்கப்படும் வ. ராமசாமி அய்யங்கார் மகாகவி பாரதியின் நெருங்கிய நண்பருமாவார். மகாத்மா காந்தி சென்னைக்கு வந்த சமயத்தில் அவர் தங்கியிருந்த இல்லத்தின் வாயில் காப்போனாகவும் பணியாற்றியவர். இந்தக்காட்சியை பாரதி திரைப்படத்திலும் பார்த்திருப்பீர்கள். இத்தகைய பின்புலத்தில் வெளிவந்திருக்கும் வீரகேசரிக்கு இன்று ஓகஸ்ட் 6 ஆம் திகதி 89 வயது பிறக்கிறது.

வீரகேசரி நாளிதழ், செய்திகளுக்கும் செய்தி அறிக்கைகளுக்கும் உலக விவகாரங்கள் மற்றும் உள்நாட்டு நடப்புகளுக்கும் முக்கியத்துவம் வழங்கினாலும், ஞாயிறன்று வெளியாகும் வாரவெளியீடு, மற்றும் வராந்தம் வெளிவரும் சங்கமம் முதலானவை கலை, இலக்கியம்,கலாசாரம், பண்பாட்டுக்கோலங்கள், மலையகம், சினிமா, சிறுகதை, கவிதை, தொடர்கதை, முதலான விடயதானங்களுக்கு களம் அமைத்து வெளிவருகின்றன. இலங்கையில் சிறந்த சிறுகதைகளை வெளியிட்ட இதழ் என்ற பெருமையும் வீரகேசரி வாரவெளியீட்டையே சாரும். காலத்துக்காலம் சிறுகதை, நாவல் மற்றும் கலை இலக்கியப்போட்டிகளையும் வாரவெளியீடு நடத்தியிருக்கிறது. கடந்த 88 வருடகாலத்தில் வீரகேசரியில் பல புகழ்பூத்த படைப்பாளிகள், கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள் என்பது முக்கியமான தகவல்.

வீரகேசரியில் ஈழத்து எழுத்தாளர்கள் அ.ந. கந்தசாமி, கே. கணேஷ், சில்லையூர் செல்வராசன், செ. கதிர்காமநாதன், காசிநாதன், அன்டன் பாலசிங்கம், க. சட்டநாதன், ஆ. சிவநேசச்செல்வன், சோமசுந்தரம் ராமேஸ்வரன், மூர்த்தி, தெய்வீகன், சூரியகுமாரி பஞ்சநாதன், சந்திரிக்கா சுப்பிரமணியன், ரவிவர்மா,  எஸ்.எம். கோபாலரத்தினம், முருகபூபதி, டீ.பி.எஸ்.ஜெயராஜ், சொலமன் ராஜ், ஜீ.நேசன், சுபாஷ் சந்திரபோஸ், அன்னலட்சுமி இராஜதுரை, கமலா தம்பிராஜா, யோகா பாலச்சந்திரன், கு. இராமச்சந்திரன் , வி.ஏ. திருஞானசுந்தரம் உட்பட பலர் வீரகேசரி - மித்திரன் மற்றும் முன்னர் வெளிவந்த ஜோதி முதலானவற்றின் ஆசிரிய பீடங்களில் பணியாற்றியவர்கள்தான். தமிழகத்தில் திரைப்படத்துறையில் பாடலாசிரியராக விளங்கிய கு.மா. பாலசுப்பிரமணியமும் ஒரு காலத்தில் வீரகேசரியில்தான் பணியாற்றியவர்.

•Last Updated on ••Monday•, 06 •August• 2018 01:02•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம்: அந்த்வான் து செந்த் - எக்சுபெரி எழுதிய 'குட்டி இளவரசன்' கதை! அற்பாயுளில் காணாமல்போன விமானியின் படைப்பூக்கத்தின் வெளிப்பாடு! ஜூலை 31 ஆம் திகதி நினைவு தினம்!

•E-mail• •Print• •PDF•

படித்தோம் சொல்கின்றோம்:  அந்த்வான் து செந்த் - எக்சுபெரி எழுதிய 'குட்டி இளவரசன்' கதை! அற்பாயுளில் காணாமல்போன விமானியின் படைப்பூக்கத்தின் வெளிப்பாடு! ஜூலை 31 ஆம் திகதி நினைவு தினம்!முருகபூபதிபேசும் குழந்தைகளிடம் பெரியவர்கள் அலட்சியமாக இருப்பதற்கு என்ன காரணம்? அவர்கள் பேச்சை அவதானித்து, சரியான -தெளிவான பதில் சொல்லவேண்டிவரும் என்பதனாலா?  குழந்தைகளிடம் கேள்விகள் இருந்துகொண்டே இருக்கும். அதற்குச்சரியான பதிலை சொல்வதற்கு பெரியவர்களிடம் சாமர்த்தியம் வேண்டும். நான் சந்தித்த குழந்தைகளின் மழலை மொழியில் சொக்கிப்போயிருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் பதில் சொல்ல முடியாமல் திணறியிருக்கின்றேன். எமது வாழ்வை எழுதுபவர்களும் தீர்மானிப்பவர்களும் குழந்தைகள்தான். அதனால்தான் மேதை லெனின் கூட நல்லவை யாவும் குழந்தைகளுக்கே என்று சொன்னார். நாமும் ஒரு பருவத்தில் குழந்தைகளாக இருந்து வளர்ந்தவர்கள்தான். ஆனால், அதனை பலரும் மறந்துவிடுகிறார்கள்! தனிமையிலிருப்பவர்களை சிந்திக்கவைப்பவர்களும் சிரிக்கவைப்பவர்களும் குழந்தைகள்தான் என்பது எனது அவதான அனுமானம். எமக்குள் நாம் கேட்டுக்கொள்ளவேண்டிய பல கேள்விகளை வாழ்நாளில் கேளாமலேயே உலக வாழ்விலிருந்து விடுபட்டுவிடுகிறோம். அதற்கான சந்தர்ப்பம் அதன்பின்னர் கிடைப்பதேயில்லை.

ஒரு விமான ஓட்டி, எதிர்பாரதவிதமாக சகாரா பாலைவனத்தில் தனித்துவிடப்பட்ட தருணத்தில், சுற்றிலும் மணல் தரையும் மேலே வானமே கூரையாகவும் தென்படும்போது அமானுஷ்யமாக கேட்கும் ஒரு குரல் அந்தக்குட்டி இளவரசனிடமிருந்து வருகிறது.அந்த விமான ஓட்டியின் பெயர் அந்த்வான் து செந்த் - எக்சுபெரி. உச்சரிக்க சிரமமாக இருக்கிறதா? அவர் இன்று உயிரோடு இருந்தால் அவரது வயது 118. பிரெஞ்சு இலக்கியத்தில் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட , நினைவு முத்திரையூடாகவும், குட்டிஇளவரன் கதையூடாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த்வான் து செந்த் - எக்சுபெரி இரண்டாம் உலகமகா யுத்த காலத்தில் விமானத்தை செலுத்திக்கொண்டிருந்தபோது அது விபத்துக்குள்ளாகி காணாமல் போனவர்.  

தனது 21 வயதில் பிரான்ஸ் விமானப்படையில் இணைந்து, விமானம் செலுத்துவதற்கு பயிற்சிபெற்று விமானியாகிறார். தனது தொழில் அனுபவங்களை பின்னணியாகக்கொண்டு நூல்களும் எழுதுகிறார். அவருக்கு எழுத்தாளன் என்ற அடையாளமும் கிடைக்கிறது. 1944 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி கார்ஸிகாவில் போர்கோ என்ற இடத்திலிருந்து விமானத்தை ஓட்டிச்சென்ற அவர், அன்றிலிருந்து காணாமல் போய்விட்டார். இதுவரையில் அவரது உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்படாது போனாலும், அவர் புறப்பட்டுச்சென்ற அந்த விமானத்தின் சில பாகங்கள் தீவிர தேடுதலுக்குப்பின்னர் கிடைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் மறைந்து, 74 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த மாதம் -இந்தத்தருணத்தில், மெல்பன் வாசகர் வட்டம் அவரது 'குட்டி இளவரசன்' நாவல் பற்றிய வாசிப்பு அனுபவப் பகிர்வை ஏற்பாடு செய்திருப்பது தற்செயல் நிகழ்வுதான்.

அற்பாயுள் மரணம்கூட மேதாவிலாசங்களின் அடையாளமோ என்ற சாரப்பட சுந்தரராமசாமி தனது 'ஜே.ஜே. சில குறிப்புகள்' நாவலின் தொடக்கத்தில் சொல்லும்போது , பாரதி, புதுமைப்பித்தன், மு. தளையசிங்கம், அல்பர்ட் காம்யூ பற்றிச்சொல்வார். ஆனால், நாம் இன்று அந்த மேதாவிலாசம், அந்த்வான் து செந்த் - எக்சுபெரி அவர்களுக்கும் உரியதுதான் என்று பேசுவோம்.

•Last Updated on ••Wednesday•, 01 •August• 2018 21:26•• •Read more...•
 

"தமிழ் - முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது" அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் கருத்தாடல் களத்தில் கலாநிதி அமீர் அலி உரை.

•E-mail• •Print• •PDF•

"தமிழ் - முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது" அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் கருத்தாடல் களத்தில் கலாநிதி அமீர் அலி உரை."தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர். முஸ்லிம் என்பது ஒரு மதத்தவரின் பெயர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் மொழிவாரியாக நோக்கின் தமிழரே. எனவே தமிழரென்ற பெயரை மொழிவாரியாக மட்டும் உபயோகப்படுத்தினால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் மட்டுமல்ல அம்மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட அனைவருமே தமிழராகின்றனர். அதேபோன்று இஸ்லாத்தைப் பின்பற்றும் எவ்வினத்தவராயினும் அவர்கள் முஸ்லிம்களே. ஆகவே, தமிழரென்பது எவ்வாறு ஒரு தனிப்பட்ட இனத்தவருக்குமட்டும் சொந்தமான பெயராக இருக்க முடியாதோ அதேபோன்று முஸ்லிம் என்பதும் ஒரு தனிப்பட்ட இனத்தவரின் பெயராக இருக்க முடியாது. " என்று கடந்த ஞாயிறன்று மெல்பனில் நடைபெற்ற 'தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தில் எழுத்தாளர்களின் வகிபாகம்' என்னும் தலைப்பில் உரையாற்றிய கலாநிதி அமீர் அலி தெரிவித்தார்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் மெல்பன், வேர்மண் தெற்கு சமூக இல்லத்தில் கடந்த ஞாயிறன்று மாலை நடைபெற்ற கருத்தாடல் களம், சங்கத்தின் நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதியின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது.

மேற்கு அவுஸ்திரேலியா  மேர்டொக் பல்கலைக்கழகத்தின் பொருளியற் துறை விரிவுரையாளரும் எழுத்தாளரும் ஆய்வாளருமான கலாநிதி அமீர் அலி, தொடர்ந்தும் பேசுகையில், " ஒரு திராவிடரோ சிங்களவரோ சீனரோ இஸ்லாத்தைத் தழுவிவிட்டால், அவர் தன்னை முஸ்லிமென்று அழைப்பதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை. இலங்கையைப் பொறுத்தவரை இச்சிக்கல் ஏன் தெளிவடையாமல் ஒரு தீராத பிரச்சினையாகவும் நல்லிணக்கத்தைக் குலைப்பதொன்றாகவும் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரிடையே இன்றுவரை நிலைத்திருக்கின்றது? 

தமிழ்ப் பேசும் மக்கள் என்ற போர்வைக்குள் முஸ்லிம்களை உள்ளடக்கியமை ஓர் அரசியல் உபாயமேயன்றி அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு வழியல்ல. நல்லிணக்கம் தமிழுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலா? தமிழரென்ற இனத்துக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலா? என்பதை ஆராயின், தமிழுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் நல்லிணக்கம் அன்றுமிருந்தது, இன்றுமிருக்கிறது, இன்னுமிருக்கும்.

•Last Updated on ••Wednesday•, 01 •August• 2018 21:17•• •Read more...•
 

கடித இலக்கியம்: வடமராட்சி " ஒப்பரேஷன் லிபரேஷன் "! பேரழிவுக்காக 1987 இல் நடந்த ஒத்திகை! ராஜஶ்ரீகாந்தன் (1948 - 2004) எழுதிய ஈழப்போர்க்கால கடிதம்!

•E-mail• •Print• •PDF•

ராஜஶ்ரீகாந்தன்ஈழத்து தமிழ் இலக்கியம் மற்றும் ஊடகத்துறைகளின் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்புகளை வழங்கியவர்களின் வரிசையில் ராஜஶ்ரீகாந்தன் அவர்களும் குறிப்பிடத்தகுந்தவர். வடமராட்சியில் வதிரி என்னும் கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிறந்து தனது 56 ஆவது வயதில் கொழும்பில் மறைந்தார். சிறுகதை, கட்டுரை, விமர்சனம், திறனாய்வு, இதழியல், மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் ஈடுபட்டவர். வடமராட்சியில் அடிநிலை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்த பெரியார் சூரன் அவர்களினால் எழுதப்பட்ட சுயசரிதையை கையெழுத்துப்பிரதியிலிருந்து அச்சுப்பிரதியாக பதிப்பித்து வெளியிட்டவரும் ராஜஶ்ரீகாந்தன்தான்! அழகு சுப்பிரமணியத்தினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறுகதைகள் ( நீதிபதியின் மகன்), நாவல் (மிஸ்டர் மூன்) ஆகியனவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். இவரது காலச்சாளரம்  சிறுகதைத்தொகுதிக்கும் நீதிபதியின் மகன் மொழிபெயர்ப்பு நூலுக்கும் தேசிய சாகித்திய விருதுகள் கிடைத்துள்ளன. கொழும்பில் சோவியத் தூதரகத்தின் தகவல் பிரிவில் இவர் பணியாற்றிய காலத்தில் சோவியத் நாடு, சோஷலிஸம் - தத்துவமும் நடைமுறையும், மற்றும் புதிய உலகம், சக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியர்குழுவிலும் பணியாற்றி ஊடகவியலாளராக தனது எழுத்துப் பணிகளைத் தொடர்ந்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை பாடநெறியிலும் பயிற்சி பெற்றிருந்த ராஜஶ்ரீகாந்தனின் சிறுகதைகள் ஆங்கிலம், ருஷ்யா உக்ரேய்ன், சிங்களம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சர்வதேச செயலாளராகவும் இயங்கியிருக்கும் ராஜஶ்ரீகாந்தன், கொழும்பில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியவர்.  2004 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி மறைந்தார். எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான ராஜஶ்ரீகாந்தன் மறைந்ததையடுத்து, ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளேன்.

அவுஸ்திரேலியாவுக்கு நான் 1987 இல் புலம்பெயர்ந்து வந்தபின்னர், குறிப்பிட்ட ஆண்டு முதல் அவர் மறைந்த 2004 ஏப்ரில் மாதம் வரையில் அவர் எனக்கு எழுதியிருக்கும் கடிதங்கள் ஏராளம். அவை இலக்கியம், சமூகம், அரசியல், எழுத்துலகம் பற்றிய செய்திகளையும் ஆவணப்படுத்தியிருக்கும். அழகிய சின்னச்சின்ன எழுத்துக்களில் அவரது கடிதங்கள் அவரது எளிமையான இயல்புகளையும் பேசியிருக்கும்.  1987 ஆம் ஆண்டில் அன்றைய ஜே.ஆர். ஜெயவர்தனாவின் பதவிக்காலத்தில் வடமராட்சியில் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் உத்தரவின்பேரில் இடம்பெற்ற " ஒப்பரேஷன் லிபரேஷன் " தாக்குதல் ஆக்கிரமிப்பை பற்றி ராஜஶ்ரீகாந்தன் எனக்கு எழுதிய இக்கடிதம் தெரிவிக்கும் செய்திகளிலிருந்து ஈழப்போராட்டத்தை முற்றாக நசுக்குவதற்காக 1987 இலேயே நடத்தப்பட்ட ஒத்திகையாகவும் அந்த " ஒப்பரேஷன் லிபரேஷன் " தாக்குதல் ஆக்கிரமிப்பை அவதானிக்கலாம். குறிப்பிட்ட " ஒப்பரேஷன் லிபரேஷன் " தாக்குதல் ஆக்கிரமிப்பினையடுத்தே, இந்தியா வடமராட்சியில் விமானங்கள் மூலம் உணவுப்பொட்டலங்களை வீசி மற்றும் ஒரு ஆக்கிரமிப்புக்கு அடிகோலியது. அதன்பின்னர் அமைதி காக்க வந்த இந்தியப்படைகளின் காலம், அதன் பின்னரும் நீடித்த போர்க்காலம், இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி தொடர்ச்சியாக ஆவணங்களும் நூல்களும் பத்தி எழுத்துக்களும் வெளியாகின்றன.   ராஜஶ்ரீகாந்தன் கொழும்பிலிருந்து 14-07-1987 ஆம் திகதி எனக்கு எழுதிய இக்கடிதம் அன்றைய வடமராட்சி சம்பவங்களையும் தொகுத்துச்சொல்கின்றது. 


•Last Updated on ••Tuesday•, 03 •July• 2018 19:55•• •Read more...•
 

என்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்! வடமராட்சி வராத்துப்பளையிலிருந்து கனடா டொரன்டோ வரையில் வியாபித்து நின்ற ஈழத்தின் மூத்த படைப்பாளி! நிலவிலிருந்து பேசியவர்களை பனஞ்சோலைக்கிராமத்தில் சித்திரித்த எழுத்துப்போராளி!

•E-mail• •Print• •PDF•

என்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்! வடமராட்சி வராத்துப்பளையிலிருந்து கனடா டொரன்டோ வரையில் வியாபித்து நின்ற ஈழத்தின் மூத்த படைப்பாளி! நிலவிலிருந்து பேசியவர்களை பனஞ்சோலைக்கிராமத்தில் சித்திரித்த எழுத்துப்போராளி!யாழ்ப்பாணம் அரியாலையில் செம்மணி வீதியில் சில மாதங்கள் ஒரு வாடகைவீட்டில் வசிக்க நேர்ந்தது. 1983 தென்னிலங்கை வன்செயல்களினால் இடம்பெயர்ந்திருந்தோம். இலக்கிய நண்பர்கள் மல்லிகை ஜீவா சைக்கிளிலும் கே. டானியல் தனது மோட்டார் சைக்கிளிலும் வந்து பார்த்துவிட்டுச்செல்வார்கள். தென்னிலங்கையில் நிலைமை படிப்படியாக சீரடைந்ததும் அரியாலையைவிட்டு புறப்படத்தயாரானோம். ஊரிலிருந்து எடுத்துவந்த பெருந்தொகையான புத்தகங்களையும் சில கதிரைகள் மேசையையும் அயலில் ஒரு வீட்டில் ஒப்படைத்தோம்.  1984 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அரியாலைக்கு விடைகொடுத்துவிட்டு, ஒருநாள் காலை புறப்படுவதற்கு தயாராகியிருந்த வேளையில், அதற்கு முதல் நாள் இரவு ஏழுமணியளவில் அவர் என்னைத்தேடி தனது சைக்கிளில் வந்தார்.  வந்தவரை அமரச்சொல்வதற்கும் அந்த வீட்டில் கதிரைகள் இல்லை. தரையில் ஒரு பாயைவிரித்து, " தரையிலிருந்து பேசுவோம்" என்றேன். அவர் உரத்துச்சிரித்துக்கொண்டு அமர்ந்தார். அன்று நெடுநேரம் பேசினோம். அவரது சிரிப்புக்கு காரணம் இருந்தது. அவர்தான் கனடா டொரன்டோவில் அண்மையில் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் என்.கே. ரகுநாதன். அந்தச்சிரிப்பை இனிமேல் நாம் காணமுடியாது.

அன்றைய சந்திப்பில் அவர் உரத்துச்சிரித்தமைக்கு அவர் 1960 களில் எழுதிய நிலவிலே பேசுவோம் சிறுகதைதான் அடிப்படைக்காரணம். எனது புத்தகங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் அரியாலையிலிருந்து நண்பர் புதுவை ரத்தினதுரை எடுத்துச்சென்றார். கதிரைகளையும் மேசையையும் மல்லிகை ஜீவா எடுத்துச்சென்றார்.  புத்தகங்களும் கதிரை , மேசைகளும் என்னவாயின? என்பதும் தெரியாது, புதுவை ரத்தினதுரைக்கு என்ன நடந்தது ? என்பதும் தெரியாது. அக்காலப்பகுதியில் என்னைப்பார்க்க வந்த டானியல் தமிழ்நாட்டில் மறைந்தார். மல்லிகை ஜீவா கொழும்புக்கு இடம்பெயர்ந்தார். நான் அவுஸ்திரேலியாவுக்கு முதலிலும் ரகுநாதன் அதன்பின்னர் கனடாவுக்கும் புலம்பெயர்ந்தோம். புதுவை காணாமல் போனார். எங்கள் இலக்கியவட்டத்திலிருந்து ஒவ்வொருவராக விடைபெறும்போது எஞ்சியிருப்பது அவர்கள் பற்றிய நினைவுகள் மாத்திரமே!

நாமெல்லாம் இலக்கியவாதிகளாக இருந்தபோதிலும் இஸங்களினால் பிளவுபட்டிருந்தோம். சிலர் ஒருவருடன் ஒருவர் முகம் பார்த்தும் பேசாதிருந்தனர். டானியலும் ஜீவாவும் ரகுநாதனும் அரசியலிலும் ஒன்றிணைந்திருந்து பல மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள். எனினும் மாஸ்கோ - பீக்கிங் என அரசியல் கோட்பாடுகளில் பிளவு தோன்றியவேளையில் ஜீவா மாஸ்கோ சார்பு நிலையெடுத்தார். புதுவை உட்பட ஏனைய இருவரும் பீக்கிங் அணியில் இணைந்திருந்தனர். நான் வெளிப்பிரதேசத்தைச்சேர்ந்திருந்தாலும் இவர்கள் அனைவருடனும் தோழமையுடனும் சகோதர வாஞ்சையுடனும் உறவுகொண்டிருந்தேன். அதனால் அவர்களிடையே ஏற்பட்ட ஊடல்கள் உரசல்களை போக்குவதற்கும் அவ்வப்போது முயன்றேன்.

ரகுநாதனின் நிலவிலே பேசுவோம் - டானியலின் பஞ்சமர், ஜீவாவின் மல்லிகை - புதுவை, வரதபாக்கியான் என்ற புனைபெயரில் எழுதிய கவிதைகள் - இவைதான் எங்கிருந்தோ என்னை இவர்களுடன் இணைத்தது. ஆலயப்பிரவேசம், தேநீர்க்கடை பிரவேசம் முதலான போராட்டங்களில் புதுவை தவிர ஏனையோர் ஈடுபட்டு முன்னணியில் நின்ற காலத்தில் நான் வடக்கிலிருக்கவில்லை. அங்கு படிக்கச்சென்ற பருவத்தில் எனக்கு 12 வயதுதான். இலக்கியப்பிரவேசத்தின் பின்னர் (1972 முதல்) இந்த மூத்தவர்களுடன் எனக்கேற்பட்ட உறவுக்கு என்றைக்கும் விக்கினங்கள் வரவில்லை.

•Last Updated on ••Wednesday•, 13 •June• 2018 19:39•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம்: "தங்கத்தாரகை" - தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 200 ஆண்டு கால வரலாறு! வடக்கின் கல்விப்பாரம்பரியத்தை ஆவணப்படுத்தியிருக்கும் முன்னாள் அதிபர் கதிர். பாலசுந்தரம் படைப்பிலக்கியவாதியுமாவார்!

•E-mail• •Print• •PDF•

அதிபர் கதிர். பாலசுந்தரம் கல்லிலிருந்து கணினி வரைக்கும் பாய்ந்திருக்கும் மொழிகளில் தமிழ் தொன்மையானது. இந்தத்தொன்மையிலிருந்து உருவான பழந்தமிழ் இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், என்பவற்றின் ஊடாக தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சியில் தமிழர்களின் வேட்கையையும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆசியாக்கண்டத்திலேயே முதல் முதலில் தோன்றிய இருபாலாரும் கல்வி என்னும் செல்வத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் தமிழ் சமுதாயம் அறிவார்ந்த தளத்தில் நடப்பதற்கு வெளிச்சம் வழங்கிய கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்த இலங்கையின் வடபுலத்தின் தெல்லிப்பழையில் தோன்றிய யூனியன் கல்லூரியின் வரலாற்று ஆவணம் தங்கத்தாரகை எம்மவரின் வாழ்க்கைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகவே அமைந்துள்ளது. மைல் கல் எனக்குறிப்பிடுவதற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இதனையும் நாம் கடந்துசெல்லவேண்டும். மற்றும் சில மைல்கற்களை கடக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. "எல்லாம் கடந்துபோகும்" என்பது வாழ்வின் தத்துவம். கடந்த அரைநூற்றாண்டு காலமாக படைப்பிலக்கியம், ஊடகம், சமூகப்பணி முதலான மூன்று தளங்களில் இயங்கிவருவதனால் இந்த மூன்று தளத்திலும் நின்றுதான் இந்த ஆவணத்தை அவதானிக்கின்றேன். இரண்டு நூற்றாண்டுகளையும் கடந்து இயங்கிக்கொண்டிருக்கும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியை இதுவரையில் நான் பார்க்கவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் இதுவரையில் எனக்கு கிட்டவில்லை. அதே பிரதேசத்திலிருக்கும் மகாஜனாக்கல்லூரிக்கும் ஒரே ஒரு தடவைதான் சென்றுள்ளேன். அங்கு பணியாற்றிய எழுத்தாளர் கோகிலா மகேந்திரனின் முரண்பாடுகளின் அறுவடை நூலின் வெளியீட்டுவிழா 1984 இல் அங்கு அதிபர் த. சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தபோது உரையாற்றச்சென்றேன். இந்தக்கல்லூரிக்களுக்கும் எனக்கும் இருந்த மற்றும் ஒரு தொடர்பு நாம் அவுஸ்திரேலியாவிலிருந்து மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக இயக்கும் இலங்கை மாணவர் கல்விநிதியத்தின் ஊடாக இக்கல்லூரிகளில் பயின்ற சில மாணவர்களுக்கும் உதவியிருக்கின்றோம்.

இந்த இரண்டு கல்லூரிகளுடனும் எனக்குள்ள மற்றும் ஒரு முக்கியமான உறவு: இங்கு பயின்றவர்கள், இங்கு அதிபர்களாக, ஆசிரியர்களாக இருந்த பலர் எனது நீண்ட கால இலக்கிய நண்பர்கள். இன்றும் தொடர்பிலிருப்பவர்கள். இரண்டு கல்லூரிகளினதும் வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் சுவாரஸ்யமான நிழல் யுத்தங்களையும் கேள்வி ஞானத்தில் அறிந்துவைத்திருக்கின்றேன். இந்தப்பின்னணிகளுடன்தான் எனக்கு கிடைத்திருக்கும் தங்கத்தாரகை பற்றிய எனது ரஸனைக்குறிப்புகளை பதிவுசெய்கின்றேன். எமது தமிழ் மக்கள் சந்தித்த ஐந்து காலகட்டங்களையும் இந்த ஆவணம் பேசுகிறது. சுதந்திரத்திற்கு முன்னரும் அதற்கு பின்னர் வந்த காலமும், போர்க்காலமும், அதற்குப்பிற்பட்ட சமகாலமும், மக்கள் அந்நியம் புலம் பெயர்ந்த காலமும் அதன் பின்னர் தொடரும் காலமும் சித்திரிக்கப்படுகிறது. 425 பங்கங்களில் இக்காலங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வரலாற்று ரீதியில் அவற்றை ஆவணப்படுத்தியுமிருக்கிறது. இதனைத்தொகுத்திருக்கும் பாரிய பணியை மேற்கொண்டிருப்பவர் யூனியன் கல்லூரியின் முன்னாள் அதிபர், எழுத்தாளர், ஆய்வாளர், அரசியல் பிரக்ஞையுள்ளவர். 90 வயதிலும் அயராது இயங்கிக்கொண்டிருப்பவர். இதுவரையில் நான் நேரில் பார்த்திருக்காத பேசியுமிருக்காத மின்னஞ்சலில் மாத்திரம் தொடர்பில் இருக்கும் நண்பர், மதிப்பிற்குரிய கதிர். பாலசுந்தரம் அவர்கள். அவரது படைப்பிலக்கியங்களின் வரிசையில் எழுதியிருக்கும் நாவல்கள், தமிழ் அரசியல் தலைவர்களின் வரிசையில் எழுதியிருக்கும் நூல்களையும் ஏற்கனவே படித்திருக்கின்றேன். சிலவற்றைப்பற்றி எனது அவதானக்குறிப்புகளும் எழுதியிருக்கின்றேன்.

•Last Updated on ••Wednesday•, 17 •October• 2018 22:24•• •Read more...•
 

படித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 - 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன். குறைந்த வளங்களுடன் பயணித்து அரிய தகவல்களுடன் திரும்பிய ஊர் சுற்றியின் அனுபவங்கள்.

•E-mail• •Print• •PDF•

படித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 - 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன். குறைந்த வளங்களுடன் பயணித்து அரிய தகவல்களுடன் திரும்பிய ஊர் சுற்றியின் அனுபவங்கள்.பயண இலக்கியம், அனைத்து மொழிகளிலும் இடம்பெறும் இலக்கியவகைகளில் ஒன்று. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம் முதலான துறைகளைப்போன்று பயண இலக்கியமும் வாசகர்களினால் விரும்பிப்படிக்கப்படுகிறது. சமகாலத்தில் மேலும் சில வகை இலக்கியங்கள் அறிமுகமாகிவிட்டன. அதில் ஒன்று புனைவுசாராத இலக்கியம். அனைத்து இலக்கியவகைகளிலுமே பயணம்தான் பெரிதும் தங்கியிருக்கிறது. வாழ்க்கைப்பயணத்தில் கற்றதையும் பெற்றதையும் அனுபவித்ததையுமே இலக்கிய வகைகளும் பிரதிபலிக்கின்றன.  பிரத்தியேகமான ஓர் வடிவமாக " பயண இலக்கியம்" தனது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு முக்கிய காரணங்கள் எவை என்பதை பார்த்தால், வாசகன் தான் என்றைக்குமே பார்த்தறியாத நாடுகள் பற்றியும் அந்நாடுகளின் வரலாறு , மொழி, சமூகம், அரசியல் , பண்பாடு, பொருளாதாரம், அதன் வளங்கள், குறைபாடுகள், முன்னேற்றங்கள் முதலான இன்னபிற விடயங்களையும் அறிந்துகொள்வதற்கு இந்த இலக்கியவடிவம் உகந்தது என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

வெளிநாடுகளுக்கு சென்று திரும்பித்தான் பயண இலக்கியம் எழுதவேண்டுமென்பதில்லை. உள்ளுருக்குள்ள பயணித்தும், தான் வாழும் நாட்டின் பிரதேசங்களுக்கு சென்றும் பயண இலக்கியம் படைக்கமுடியும். சமகாலத்தில் பலரதும் பத்தி எழுத்துக்களும் இந்தகைய வடிவத்திற்குள்தான் வருகின்றன.  நவீன விஞ்ஞானம் முழு உலகையும் இன்று எங்கள் கைவிரல்களுக்குள் அடக்கிவிட்டிருக்கிறது. இருந்த இடத்திலிருந்து கணினியை தட்டி, அல்லது ஸ்மார்ட் போனைத்தட்டி அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த வாய்ப்பு வசதியற்றவர்களுக்கு மற்வர்கள் எழுதும் பயண இலக்கியங்கள் துணை புரிகின்றன. இதழ்கள், பத்திரிகைகளும் பயண இலக்கியத்திற்கு களம் தருவதன் காரணத்தையும் இந்தப்பின்னணிகளிலிருந்தும் பார்க்க முடிகிறது.

பல வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆனந்தவிகடன் ஆசிரியராகவிருந்த மணியன் பற்றி அறிவீர்கள். அவர் உலகம் சுற்றிவந்து தொடர்ச்சியாக ஆனந்தவிகடனில் பயண இலக்கியம் படைத்தவர். அதற்கு அவர் சூட்டியபெயர் " இதயம் பேசுகிறது" அதனால் அவரை இதயம் பேசுகிறது மணியன் என்றும் அழைக்கத்தொடங்கினார்கள். அந்தப்பெயர் புகழ்பெற்றதனால், ஆனந்தவிகடனை விட்டு அவர் வெளியேறியதன் பின்னர் தாமாகவே தொடங்கிய வார இதழுக்கு ' இதயம் பேசுகிறது என்றும் பெயரிட்டார். இவர் எமது இலங்கைக்கும் வந்திருக்கிறார். இலங்கைப்பயணம் பற்றியும் எழுதியவர். யாழ்ப்பாணத்திற்கு இவர் வந்தபோது ஒருவர் இவரிடம் ஆறுமுகநாவலர் பற்றித்தெரியுமா? எனக்கேட்டதற்கு " தனக்கு நாவலர் நெடுஞ்செழியனைத்தான் தெரியும்" எனச்சொன்னவர். அவ்வாறு நல்லை நகர் தந்த நாவலரையும் தெரியாமல்தான் இவர் இலங்கை பயணக்கதை எழுதுகிறார் என்றும், இப்படித்தான் இவரது ஏனைய உலக நாடுகள் பற்றிய பயணக்கதைகளும் இருக்கும் என்றும் அக்காலத்தில் எதிர்வினைகள் வந்தன. மெல்பன் வாசகர் வட்டத்தில், ஏ. கே. செட்டியார் எழுதியிருக்கும் உலகம் சுற்றும் தமிழன் என்ற பயண இலக்கியத்தைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை பகிரும்போது, மேற்சொன்ன தகவல்களையும் சொல்லநேரிட்டுள்ளது.

•Last Updated on ••Wednesday•, 01 •August• 2018 21:24•• •Read more...•
 

அஞ்சலிக்குறிப்பு: " எழுத்துச்சித்தர் "பாலகுமாரன் நினைவுகள்

•E-mail• •Print• •PDF•

அஞ்சலிக்குறிப்பு: " எழுத்துச்சித்தர் "பாலகுமாரன் நினைவுகள்" என்னுடைய கன்டென்ட் கஷ்டமானது, அதனால் நடையும் அப்படித்தான் இருக்கும். " என்று சொல்லும் பாலகுமாரன், வித்தியாசமாக எழுதுகின்ற எழுத்தாளர் வரிசையில் முதன்மையானவரும் முக்கியமானவருமாவார். ஆரம்பத்தில் கணையாழியில் எழுத ஆரம்பித்த இவர், பின்னர் சாவி, மோனா, தாய், ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பரவலான சஞ்சிகைகளில் தனது வீரியமான கதைகளை விதைக்கத்தொடங்கினார். ஜிகினா வேலைசெய்து வாசகரை ஏமாற்றி இருட்டுக்கு இட்டுச்செல்லும் சில கதாசிரியர்கள் செய்யும் வேலையைச்செய்யாது, யதார்த்தங்களை அப்படியே சாயம் பூசாமல், மனதால் மட்டுமே எழுதிக்காட்டுபவர் பாலகுமாரன். இவரது நாவலான ' மெர்க்குரிப்பூக்கள்' இவருக்கு கனதியான அந்தஸ்தத்தை தேடித்தந்தது. படுத்திருந்த பல வாசகர்களை இது நிமிர வைத்தது. அயர வைத்தது. போராட்டத்தைப்பற்றி சிந்திக்கவைத்தது. சின்னச்சின்ன வட்டங்கள் இவரது முதல் சிறுகதைத்தொகுதி. அதைத்தொடர்ந்து வந்தவைய, ஏதோ ஒரு நதியில், அகல்யா, மௌனமே காதலாகி, இரும்புக்குதிரை என்பன. இதைத்தவிர, நான் என்ன சொல்லிவிட்டேன், சேவல் பண்ணை, கல்யாண முருங்கை, என்றென்றும் அன்புடன், பனிவிழும் மலர் வனம், முதலிய வித்தியாசமான மாத நாவல்களையும் எழுதியுள்ளார்.

"பாலகுமாரன் இன்னமும் பேசப்படுவார். அவரால் நாவல் இலக்கியமும் பேசப்படும் என்பது முகமூடி அணியப்படாத உண்மை" இந்த வரிகளை சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னரே வீரகேசரியில் இலக்கியச்செய்திகள் என்ற வாராந்த பத்தியில் எழுதியிருக்கின்றேன். அக்காலத்தில் அவரும் இளைஞர். கறுத்த மீசையுடன் அவரது படத்தையும் பதிவுசெய்து அந்தப்பதிவை எழுதியிருந்தேன். நேற்று 15 ஆம் திகதி அவர் சென்னையில் மறைந்தபின்னர் மீண்டும் அவர் நினைவுகளை மீட்டி இந்த அஞ்சலிக்குறிப்புகளை அவரது வெண்ணிற மீசை, தாடி தோற்றத்துடன் இந்தப்பதிவை எழுத நேர்ந்திருக்கிறது.

வாசிப்பு அனுபவமும் வயது வித்தியாசத்தினால் மாறிக்கொண்டே இருக்கும். ஜெயகாந்தனின் எழுத்துக்களை தீவிரமாக வாசித்துக்கொண்டிருக்கையில், தி. ஜானகிராமனும், கி. ராஜநாராயணனும், இந்திரா பார்த்தசாரதியும் இடையில் வந்து இணைந்தார்கள். இவர்களை வாசித்துக்கொண்டிருக்கையில் பாலகுமாரன் 1978 இற்குப்பின்னர் நெருங்கினார். அவரது எழுத்து நடை சற்றுவித்தியாசமாக இருந்தது. அவர் எழுதிய தாயுமானவன் என்ற நாவலில் என்னையும் கண்டுகொள்ளமுடிந்தது. அப்பொழுது நானும் ஒரு தந்தையாகியிருந்தமையும் முக்கிய காரணம். நான் மாத்திரமல்ல பல இளம் குடும்பத்தலைவர்களும் அந்த நாவலில் தங்களை இனம் கண்டார்கள். அதனால் பாலகுமாரன், அக்காலப்பகுதியில் என்னையும் கவர்ந்த படைப்பாளியானார்.

•Last Updated on ••Sunday•, 20 •May• 2018 17:26•• •Read more...•
 

Memories of late K.G Amaradasa -an Ardent Tamil Literary Lover & Advocate for National Unity

•E-mail• •Print• •PDF•

K.G Amaradasa“Some might say that if a Sinhala man marries a Tamil woman or a Tamil man marries a Sinhala woman, then national unity will be born. I don’t think so. If people of different ethnic origin get married, only the children would be born as a natural consequence” quipped Ven. M Ratnavansa Thero- a Buddhist monk much loved and respected by Tamil writers and community members alike.

Late K.G. Amaradasa is someone of similar calibre who also held the strong belief that national unity is not a one -way street. He is a remarkable man who learned and excelled in the Tamil literature and who pioneered the way in introducing the great Tamil national poet Mahakavi Barathiyar to the Sinhala people.

Due to the introduction of the controversial Sinhala Only legislation in 1950s and the promotion of Sinhala as a compulsory subject in the curriculum, a large number of Tamils who held government positions learned Sinhala and mastered that language. Many Tamil writers also proceeded to learn Sinhala literary forms and translated them in Tamil. Sinhala cinema and drama productions were also subject of Tamil literary critique. In contrast, there was little or no reciprocal engagement by Sinhala literary figures and community members with the Tamil language and its rich literature. K.G Amaradasa was one of the handful of Sinhala writers who deeply regretted this situation and recognized that it ought to change even as early as 1970s.

He was a man of resolution who acted on his preaching. He learned Tamil and was able to speak our language fluently. His Tamil pronunciation had the beauty a child ‘s utterances and he also had the dedication to constantly ask his Tamil friends for feedback so that he can improve his Tamil language command. The warmth and generosity of his character was something deeply endearing.

He made his entry into the literary world in 1957. Only gradually he grasped the bitter reality of the ethnic question unfolding at the time. He envisioned  that preserving the millennium long Sinhala -Tamil relationships from the devastating political catastrophe is an utmost duty of each and every writer of that divisive era.

He embarked on translating many Tamil literary works and introduced them to the Sinhala readers through newspapers. As he commenced working at the Department of Cultural Affairs he became a friend of many Tamil literary figures and writers. It is said that “Friends are not born -they are created”. The strong friendship that flourished between K.G Amaradasa and many Tamil writers was a living proof of this.

•Last Updated on ••Tuesday•, 15 •May• 2018 11:26•• •Read more...•