பதிவுகளின் வாசகர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! உங்கள் இல்லங்களில் இன்பப்பூக்கள் பூத்திடட்டும்! உங்கள் எண்ணங்கள் யாவும் எண்ணியவாறே நிறைவேறிடட்டும்! ஆரோக்கியமான எண்ணங்களுடன், உடல் நலத்துடன் உங்கள் வாழ்க்கை தொடரட்டும்! சிறக்கட்டும்!
•Last Updated on ••Thursday•, 31 •December• 2020 21:29••
•Read more...•
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
•Last Updated on ••Monday•, 28 •December• 2020 01:43••
•Read more...•
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" என்பதைத்தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு மார்ச் 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' (பதிவுகள்.காம்). 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மின்னூற் தொகுப்புகளாக வெளியாகும். இது அவ்வகையில் வெளியாகும் நான்காவது சிறுகதைத்தொகுப்பு.
பதிவுகள் இணைய இதழ் இணையத்தில் தமிழ் காலூன்றிட உழைத்த ஆரம்ப காலத் தமிழ் இணைய இதழ்களிலொன்று. அக்காலகட்டத்திலிருந்து இன்றுவரை பதிவுகள் இணைய இதழுக்குப் பங்களித்த, பங்களித்துவரும் படைப்பாளிகள் நன்றிக்குரியவர்கள். அவர்கள்தம் படைப்புகள் இயலுமானவரையில் ஆவணப்படுத்தப்படல் வேண்டும். அவ்வகையில் வெளியாகும் தொகுப்புகளே பதிவுகள் தொகுப்புகள்.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்களின் படைப்புகள்:
1. பறவைப்பூங்கா - சித்ரா ரமேஷ் (சிங்கப்பூர்) - 2. அப்பாச்சி -எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை. 3. 3. ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து - அ.முத்துலிங்கம் - 4. லூசியா - அ.முத்துலிங்கம் - 5.இழப்பு - குரு அரவிந்தன் 6. றைட்டோ - சாந்தினி. வரதராஐன் 7. வீட்டுக்கு வந்த வால் நட்சத்திரம் -- புதுவை எழில் - 8. அலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம் - திலகபாமா
•Last Updated on ••Tuesday•, 10 •November• 2020 23:58••
•Read more...•
பதிவுகள் இணைய இதழ் இணையத்தில் வெளியான ஆரம்பகாலத்து இணைய இதழ்களிலொன்று. இதன் முக்கிய நோக்கங்களிலொன்று இணையத்தில் தமிழ் எழுத்தாளர்கள் தம் படைப்புகளை எழுதுவதைத் தூண்டுவது. அவ்விடயத்தைப்பொறுத்தவரையில் நிச்சயமாக எனக்குத் திருப்தி உண்டு. வளர்ந்த எழுத்தாளர்களிலிருந்து வளரும் எழுத்தாளர்களை வரை பதிவுகள் இணைய இதழுக்குத் தம் ஆக்கங்களை அனுப்பி வைத்தார்கள்; வருகின்றார்கள். அவற்றையெல்லாம் இயலுமானவரையில் முதலில் ஆவணப்படுத்த வேண்டுமென்பதின் விளைவே இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இம் மின்னூல்கள். உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் ஆர்வத்துடன் பதிவுகள் இணைய இதழுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வருகின்றார்கள். இதுவரை வெளியான பதிவுகள் தொகுப்புகளிலுள்ள படைப்பாளிகள் மற்றும் அவர்கள்தம் படைப்புகளைப் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியான ஏனைய படைப்புகளும் காலப்போக்கில் மின்னூல்களாக ஆவணப்படுத்தப்படும்.
இதுவரை இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பதிவுகள்.காம் வெளியிட்டுள்ள 19 மின்னூல்களின் விபரங்கள் வருமாறு,
1. பதிவுகள் சிறுகதைகள் - மூன்று தொகுப்புகள்: பதிவுகள் 55 சிறுகதைகள், பதிவுகள் 27 சிறுகதைகள் & பதிவுகள் 36 சிறுகதைகள் 2. பதிவுகள் கட்டுரைகள் - மூன்று தொகுப்புகள்.: பதிவுகள் 59 கட்டுரைகள், பதிவுகள் 27 கட்டுரைகள் & பதிவுகள் 25 கட்டுரைகள் 3. பதிவுகள் - கவிதைகள் - மூன்று தொகுப்புகள்: பதிவுகள் 100 கவிதைகள், பதிவுகள் 95 கவிதைகள் & பதிவுகள் 101 கவிதைகள் 4. பதிவுகள் - ஆய்வுக்கட்டுரைகள் - ஒரு தொகுப்பு: பதிவுகள் 25 ஆய்வுக் கட்டுரைகள்
•Last Updated on ••Wednesday•, 04 •November• 2020 08:20••
•Read more...•
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" என்பதைத்தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' (பதிவுகள்.காம்). 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மின்னூற் தொகுப்புகளாக வெளியாகும். இது அவ்வகையில் வெளியாகும் மூன்றாவது கவிதைத்தொகுப்பு. இதுவொரு பதிவுகள்.காம் வெளியீடு.
இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் மூன்று தொகுதிகள் (107 கட்டுரைகள்) , ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதி ஒன்று , பதிவுகள் 100 கவிதைகள் (தொகுதி ஒன்று),, பதிவுகள் 95 கவிதைகள் (தொகுதி இரண்டு) & பதிவுகள் 101 கவிதைகள் (தொகுதி மூன்று) ஆகியவை இணையக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதிவுகள் 101 கவிதைகள் (தொகுதி மூன்று) மின்னூலினை வாசிக்க, பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_poems_101_volume3-revised_revised
•Last Updated on ••Thursday•, 05 •November• 2020 12:49••
•Read more...•
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" என்பதைத்தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' (பதிவுகள்.காம்). 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மின்னூற் தொகுப்புகளாக வெளியாகும். இது அவ்வகையில் வெளியாகும் இரண்டாவது கவிதைத்தொகுப்பு. இதுவொரு பதிவுகள்.காம் வெளியீடு.
இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் மூன்று தொகுதிகள் (107 கட்டுரைகள்) , ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதி ஒன்று , பதிவுகள் 100 கவிதைகள் (தொகுதி ஒன்று) மற்றும் பதிவுகள் 95 கவிதைகள் (தொகுதி இரண்டு) ஆகியவை இணையக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதிவுகள் 95 கவிதைகள் (தொகுதி இரண்டு) மின்னூலை வாசிக்க & பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_poems_volume2_toc_revised_202011
•Last Updated on ••Monday•, 02 •November• 2020 13:06••
•Read more...•
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" என்பதைத்தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு மார்ச் 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' (பதிவுகள்.காம்). 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மின்னூற் தொகுப்புகளாக வெளியாகும். இது அவ்வகையில் வெளியாகும் முதலாவது கவிதைத்தொகுப்பு.
பதிவுகள் கவிதைகள் (தொகுதி ஒன்று) தற்போது இணையக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. கவிதைகளை நீங்கள் வாசிப்பதற்கும், பதிவிறக்கம் செய்வதற்குமான இணைய இணைப்பு: https://archive.org/details/pathivukal_poems_volume1a_revised_2/page/n1/mode/2up
இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் மூன்று தொகுதிகள் (107 கட்டுரைகள்) , ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதி ஒன்று ஆகியவை இணையக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
•Last Updated on ••Friday•, 30 •October• 2020 22:27••
•Read more...•
'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'பதிவுகள் இணைய இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளின் முதலாவது தொகுதி தற்போது மின்னூலாக இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் இணைய இதழில் வெளியான பல்வகைப்படைப்புகளும் (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் & ஆய்வுக் கட்டுரைகள் போன்ற) மின்னூல்களாக தொடந்தும் ஆவணப்படுத்தப்படும்.
இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் இரு தொகுதிகள் (82 கட்டுரைகள்) & 27 ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவை இணையக்காப்பகத்தில் (archive.org) மின்னூல்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில் வெளியாகும் மூன்றாவது கட்டுரைத்தொகுதி இத்தொகுதி. இதுவரை வெளியான மூன்ற கட்டுரைத் தொகுதிகளிலும் 108 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மின்னூலை வாசிக்க, பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_collections_3_toc
இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள படைப்புகளின் விபரங்கள் வருமாறு:
1. நவீன பெண் கவிஞைகளும் பெண்ணியமும் - - நவஜோதி ஜோகரட்னம் (இலண்டன்) - 2. .கொடு மனக் கூனி தோன்றினாள் முனைவர் மு. பழனியப்பன் ( இணைப்பேராசிரியர் ,மா. மன்னர் கல்லூரி புதுக்கோட்டை ) - 3. தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள் - முனைவர். துரை. மணிகண்டன் , உதவிப் பேராசியர், தமிழ்த்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி,பெரம்பலூர் - 4.‘‘நாவல் ராணி வை.மு.கோதைநாயகி அம்மாள்’’ - முனைவர் சி. சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை - 5. என் ஆதர்ஸம் என் ஆசான் என் நண்பன் - பொ. கருணாகரமூர்த்தி (பேர்லின்) -. 6 .கனடியத் தமிழ் சினிமா! உறவு: கனடியத் தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்புமுனை! - - குரு அரவிந்தன் - 8. பிரஞ்சு சினிமா: வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் மௌனகீதம்- ‘கில்லீசின் மனைவி’ - எம்.கே.முருகானந்தன் - 9. ராஜா ராஜாதான். -- பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின் - 10. A.N.KANTHASAMY: a rationalist of a fine order by K.S. Sivakumaran 11. (மீள்பிரசுரம்) நான் ஏன் எழுதுகிறேன்? அறிஞர் அ.ந.கந்தசாமி -
•Last Updated on ••Wednesday•, 28 •October• 2020 12:33••
•Read more...•
'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'பதிவுகள் இணைய இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளின் முதலாவது தொகுதி தற்போது மின்னூலாக இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் இணைய இதழில் வெளியான பல்வகைப்படைப்புகளும் (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் & ஆய்வுக் கட்டுரைகள் போன்ற) மின்னூல்களாக தொடந்தும் ஆவணப்படுத்தப்படும்.
இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் இரு தொகுதிகள் (82 கட்டுரைகள்) ஆகியவை இணையக்காப்பகத்தில் (archive.org) மின்னூல்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
மின்னூலை வாசிக்க, பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_research_volume1/mode/2up
பதிவுகள் 27 ஆய்வுக் கட்டுரைகள் (தொகுதி ஒன்று) மின்னூலில் இடம் பெற்றுள்ள படைப்புகள் பற்றிய விபரங்கள்:
1. பாலவியாகரணத்தில் தொல்காப்பியத் தாக்கம் (மொழித்தூய்மைக் கொள்கை) - முகப்பு - த. சத்தியராஜ் முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 2. தொல்காப்பியமும் பாலவியாகரணமும்:சொற்பாகுபாடு - - த. சத்தியராஜ் ,முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா 3. வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள் - - பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி , தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி) - 4. ஏழாம் இலக்கணம் மரபா? நவீனமா? - - த.சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்,தமிழ்நாடு, இந்தியா - 5. தேவன் - யாழ்ப்பாணம்! - வ.ந.கிரிதரன் -
•Last Updated on ••Wednesday•, 28 •October• 2020 12:29••
•Read more...•
'பதிவுகள்' இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்றாவது தொகுப்பில் 36 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள எழுத்தாளர்கள் / படைப்புகள் பற்றிய விபரங்களைக் கீழே தந்திருக்கின்றேன். இத்தொகுப்பினைத் தற்போது இணையக் காப்பகம் தளத்தில் வாசிக்கலாம்; பதிவிறக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே பதிவுகள் இணைய இதழில் வெளியான இரண்டு தொகுப்புகள் (55 & 27) இணையக்காப்பகத்திலுள்ளன. தொகுப்பினை வாசிக்க: https://archive.org/details/pathivukal_stories_volume3a
இதுவரை மூன்று தொகுப்புகளிலும் உள்ளடங்கியுள்ள சிறுகதைகளின் எண்ணிக்கை: 118. பதிவுகளில் வெளியான சிறுகதைகளின் ஏனைய தொகுப்புகளும் மின்னூல்களாக ஆவணப்படுத்தப்படும். இவை 'பதிவுகள்.காம்' வெளியிட்டுள்ள மின்னூல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு மூன்றில் வெளியாகிய படைப்புகள்:
1. உண்மையான ஆரியன்! - மொஹமட் நாஸிகு அலி (Mohammed Naseehu Ali)- மிழில்: அ.முத்துலிங்கம் 2. உற்றுழி - கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) - 3. என்ன தவம் செய்தனை - பாரதிதேவராஜ் எம். ஏ (கோவை) 4. காவி அணியாத புத்தன். - குரு அரவிந்தன் - 5. எதிர்காலச் சித்தன்! - வ.ந.கிரிதரன் ( கவீந்திரனின் (அறிஞர் அ.ந.கந்தசாமி) 'எதிர்காலச் சித்தன் பாடல்' கவிதையின் சிறுகதை வடிவம். சிறுகதையாக்கியிருப்பவர்: வ.ந.கிரிதரன்) - 6. ஒரு புதிய உலகம் அல்லது புதியதோர் உலகம் - ஆங்கிலத்தில் எழுதியவர் : சிவகாமி விஜேந்திரா & தமிழில் : லதா ராமகிருஷ்ணன்
•Last Updated on ••Wednesday•, 28 •October• 2020 02:09••
•Read more...•
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள் அதிக அளவில் வருவதால் உடனுக்குடன் பிரசுரிப்பதில் சிறிது சிரமமிருப்பதைப் புரிந்து கொள்வீர்களென்று கருதுகின்றோம். கிடைக்கப்பெறும் படைப்புகள் அனைத்தும் தரம் கண்டு படிப்படியாகப் 'பதிவுகள்' இதழில் பிரசுரமாகும் என்பதை அறியத்தருகின்றோம். உங்கள் பொறுமைக்கும் ஆக்கப்பங்களிப்புக்கும் எம் நன்றி.
எமக்குப் படைப்புகளைப் பலர் அனுப்புகின்றார்கள் என்பதைக்கவனிக்கவும். சிலர் பாமினி எழுத்துருவில் அனுப்புகின்றார்கள். சிலர் ஒருங்குறி எழுத்துருவில் அனுப்பினாலும், அவற்றில் பல எழுத்துப்பிழைகளுடன் அனுப்புகின்றார்கள். அவர்கள் பாமினியில் எழுதி விட்டு, எழுத்துரு மாற்றி மூலம் ஒருங்குறிக்கு மாற்றி விட்டு, அவ்விதம் மாற்றுகையில் ஏற்படும் எழுத்துப்பிழைகளைத்திருத்தாமலே அனுப்புகின்றார்கள் என்று நினைக்கின்றோம். இவ்விதமான தவறுகள் திருத்தப்பட வேண்டும்.
மேலும் கிடைக்கும் படைப்புகள் வாசிக்கப்பட்டு, பதிவுகள் இதழில் பிரசுரிப்பதற்கு உரியனவா என்பது முடிவு செய்யப்பட்ட பின்னரே அவை வெளியாகும் என்பதை அவர்கள் கவனத்துக்கெடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எமக்கும் கிடைக்கும் படைப்புகள் , பிரசுரத்துக்கு உரியனவாகத்தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் பிரசுரமாகும். படைப்புகள் எப்பொழுது வெளியாகும் என்று விசாரித்து மீண்டும் மீண்டும் கடிதங்களை அனுப்பாதீர்கள் என்று தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்புவோர் கவனத்துக்கு: 'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள், கடிதங்கள் அனுப்புவோர்
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
ஆரம்ப காலத்து ''பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011) இணைய இதழில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில், எழுத்துருவில் (திஸ்கி எழுத்துரு, அஞ்சல் எழுத்துரு) நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே: இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011) : கடந்தவை
•Last Updated on ••Monday•, 02 •November• 2020 13:42••
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்! ("Sharing Knowledge With Every One")" - பதிவுகள்
பதிவுகளிற்கு வரும் ஆக்கங்களை மூலக் கருத்துச் சிதையாத வண்ணம் திருத்துவதற்கு ஆசிரியருக்குப் பூரண அதிகாரமுண்டு. அது ஆசிரியரின் உரிமை. ஆனால் அதனை விரும்பாவிட்டால் படைப்புகளை அனுப்பும் பொழுது 'வெளியிடுவதானால் திருத்தாமல் மட்டுமே வெளியிடவும்' எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். இதன் மூலம் பல தவறுகளை நீக்கி விட முடியும். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்ப விரும்பினால் லதா (யூனிகோடு) எழுத்தினை அல்லது ஏதாவதொரு tsc எழுத்தினைப் பாவித்து தட்டச்சு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்ப முன்னர் எழுத்துப் பிழைகளை, இலக்கணப் பிழைகளைச் சரி பார்த்து அனுப்பி வையுங்கள். மேற்படி பிழைகளுக்குப் படைப்புகளை அனுப்பும் படைப்பாளர்களே பொறுப்பு. தற்போதைய சூழலில் 'பிரதியைச் சரிபாத்தல்' எமக்கு மிகவும் சிரமமானது. இருந்தாலும் முடிந்தவரை திருத்த முயல்வோம். முக்கியமான இலக்கணப் பிழையாக பன்மை எழுவாயும், ஒருமைப் பயனிலையும் கொண்டமைத்த வாக்கியங்களைக் கூறலாம். 'பாமினி' எழுத்தினைப் பாவித்து அனுப்பி வைப்பதைத் தவிர்க்க முனையுங்கள். 'பாமினி' எழுத்தில் வரும் படைப்புகள் பதிவுகளில் உடனடியாகப் பிரசுரமாவதில் தாமதம் ஏற்படலாம். அவற்றை tscற்கு மாற்றும் பொழுது பல எழுத்துகள் , 'இ', 'அ','ஆ', மற்றும் 'ஞ' போன்றன காணாமல் போய் விடுவதால் மீண்டும் அவ்வெழுத்துகளைத் தட்டச்சு செய்ய வேண்டிய மேலதிக வேலை எமக்கு ஏற்பட்டு விடுகிறது. ஒருங்குறி (யூனிகோட்) எழுத்துக்கு மாற்றுகையில் தேவையற்ற எழுத்துகளை இடையிடையே தூவி விடுகின்றது. அவற்றை நீக்குவதென்பது மேலதிக வேலை. குறிப்பாகப் படைப்பானது மிகவும் நீண்டதாகவிருந்தால் தேவையற்ற சிரமத்தைத் தருகிறது.'பாமினி'யில் எழுத விரும்புவர்கள் அவற்றை ஏதாவதொரு 'உருமாற்றி' (Converter) மூலம் ஒருங்குறிக்கு மாற்றி, அவற்றை மின்னஞ்சல் செய்தியாக அனுப்பி வையுங்கள். பதிவுகளில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் பதிவுகளின் கருத்தாக இருக்க வேண்டியதில்லை. எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் கருதி படைப்புகள் பதிவுகளில் வெளியாகும்.
•Last Updated on ••Monday•, 31 •August• 2020 09:29••
•Read more...•
'பதிவுகள்' பற்றி தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பயிலும் பலர் இணைய இதழ்கள் பற்றி ஆய்வுகளுக்காக ஆராய்ந்திருக்கின்றார்கள். எழுத்தாளர் அண்ணா கண்ணன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் ஆய்வுக்காக தான் எழுதிய ஆய்வில் பதிவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாய்வு நூல் அமுதசுரபி வெளியீடாக வெளிவந்துள்ளது. மேலும் பலர் தமது பல்கலைக்கழகப் பட்டபடிப்பில் 'தமிழ் இணைய இதழ்கள்' ஆய்வுக்காக 'பதிவுகள்' பற்றியும் ஆராய்ந்துள்ளார்கள். சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., ஆசிரியப் பயிற்றுநர், வட்டார வள மையம், புதுக்கோட்டை அவர்களும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள இந்தக் களத்தை எடுத்துக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி அவர் திண்ணை இணைய இதழில் கட்டுரையொன்றினை அண்மையில் எழுதியுமிருந்தார். எழுத்தாளர் சோழநாடனும் (ப.திருநாவுக்கரசு) இணையத்தில் தமிழ் பற்றிய ஆய்வு நூலொன்றினை வெளியிட்டுள்ளார். அதில் 'பதிவுகள்' இணைய இதழ் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலர் அவ்வப்போது இவ்வாய்வு சம்பந்தமாக எம்முடன் தொடர்பு கொள்வதுமுண்டு. தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழ் இலக்கியமும் ஒரு பிரிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதையே மேற்படி ஆய்வுகளும், தமிழ் இணைய இதழ்கள் மீதான கவனமும் காட்டுகின்றன. இன்று கணித்தமிழ் இலக்கிய உலகில் இணைய இதழ்கள், வலைப்பூக்கள், விவாதக்குழுக்களெல்லாம் முக்கிய பங்கினையாற்றி வருகின்றன. குறுகிய காலத்தில் கணித்தமிழ் அடைந்துள்ள வளர்ச்சி நம்பிக்கையினையும், பிரமிப்பினையும் ஊட்டுகின்றது.
•Last Updated on ••Monday•, 02 •March• 2020 10:04••
•Read more...•
|