தற்போது வெளியாகும் 'பதிவுகள்' இணைய இதழ் ஜும்லா தொழில் நுட்பத்தின் (JOOMLA) பழைய பதிப்பில் (Version 1.5.26) இயங்கிக்கொண்டிருக்கின்றது. ஜூம்லா தொழில்நுட்பத்தின் புதிய பதிப்புக்கு (Version 3.94) மாற்றுவது பெரியதொரு வேலை. பழைய பதிப்பிலுள்ள கட்டமைப்பு புதிய பதிப்பில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. பழைய கட்டமைப்பிலுள்ள தரவுத்தளத்தை அப்படியே பாவிக்க முடியாது. புதிய பதிப்புக்கு மாற்றுவது இலகுவானதல்ல. அதே சமயம் புதிய ஜூம்லாப்பதிப்புக்கு மாற்றுவது காலத்தின் கட்டாயம். புதிய பதிப்புக்கு மாற்றுவதால் பல நன்மைகளுள்ளன.அவற்றிலொன்று அலைபேசிகளில் இலகுவாக வாசிக்கும் வகையிலான 'ரெஸ்பொன்சிவ் டெம்பிளேட்டை ( Responsive Template) புதிய பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு கொண்டிருப்பதுதான். மேலும் புதிய வடிமைப்பில் பராமரிப்பது, பாதுகாப்பது எல்லாமே பல நன்மைகளைக்கொண்டுள்ளன.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•Last Updated on ••Monday•, 15 •February• 2021 04:24••
தட்டையர்கள் உலகுக்கு விஜயம் செய்வதென்றால் எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. பரிமாண வித்தியாசங்கள் எங்களுக்கிடையில் ஏற்படுத்திய வித்தியாசங்கள் எங்களுக்கு மிகவும் சாதகமாகவிருந்தன. அதனால் தட்டையர்கள் உலகு எப்பொழுதும் எனக்கு உவப்பானதாகவே இருந்ததது. தட்டையர்கள் உலகில் நான் எப்போதுமே உவகையுறுவதற்கு முக்கிய காரணங்களிலொன்று என்னவென்று நினைக்கின்றீர்கள்? மானுடப் படைப்பிலுள்ள பலவீனங்களிலொன்றுதான். ஏனெனில் அங்கு நான் அவர்களைவிட எல்லாவகையிலும் உயர்ந்தவன். என்னை மீறி அங்கு எவையுமேயில்லை.
•Last Updated on ••Saturday•, 13 •February• 2021 10:39••
•Read more...•
எனக்குக் காப்பியங்களில் மிகவும் பிடித்த காப்பியம் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம். முதன் முதலாக எனக்குச் சிலப்பதிகாரம் அறிமுகமானதுக்கு முக்கிய காரணம் எனது தந்தையார். என் பால்ய பருவத்தில் நான் அனைத்துத் தமிழ் வெகுசன இதழ்கள், புனைகதைகளில் மூழ்கிக் கிடந்தேன். அவற்றையெல்லாம் வாங்கிக்குவித்த அப்பா தமிழ் இலக்கிய நூல்களையும் அக்காலகட்டத்தில் வாங்கித் தந்தார். புலியூர்க் கேசிகனின் பொழிப்புரையுடன் கூடிய சிலப்பதிகாரம், மணிமேகலை, நற்றிணை ஆகிய நூல்களையும் வாங்கித்தந்தார். கூடவே பாரதியாரின் பாடற் தொகுப்பினையும் வாங்கித்தந்தார். இவற்றுடன் ராஜாஜியின் 'வியாசர் விருந்து' (மகாபாரதம் என்னும் பெயரில் பின்னர் பெயர் மாற்றம் பெற்ற நூலின் ஆரம்பகாலத்தலைப்பு), 'சக்கரவர்த்தித்திருமகன்' (இராமாயணம் என்னும் பெயர் மாற்றம் பெற்ற நூலின் ஆரம்ப காலத்தலைப்பு) ஆகிய இதிகாச உரைநடை நூல்களையும் வாங்கித்தந்தார். இதனால் என் பால்ய பருவத்திலேயே இந்நூல்களெல்லாம் அறிமுகமாகிவிட்டன.
•Last Updated on ••Sunday•, 07 •February• 2021 09:34••
•Read more...•
அந்த உலகம் எனக்குப் பலவிதங்களிலும் பிடித்த உலகம் என்பேன். என் மனத்தில் சஞ்சலங்கள் அலையடிக்கத்தொடங்குகையில், என் மனத்தில் சஞ்சலப்புயல்கள் வீசத்தொடங்குகையில், என் மனத்தின் அமைதி சீர்குலையத்தொடங்குகையில், நான் அந்த உலகை நோக்கிப் பயணமாகத் தொடங்குகின்றேன். அந்த உலகப்பயணம் தரும் திருப்தியை எனக்கு வேறெந்தப் பயணமும் தருவதில்லை. அந்த உலகில் நானும் காட்சிகள் அற்புதமானவை. பறவைகளைப் பற்றிய புரிதல்களை, அறிவியற் சாதனைகளை வெளிப்படுத்தும் அந்த உலகில் நான் எவ்வளவு நேரமானாலும் என்னை மறந்து பயணிப்பேன்.
•Last Updated on ••Friday•, 05 •February• 2021 13:27••
•Read more...•
அண்மைக்காலமாக அடிக்கடி கனவுகள் வருகின்றன. சிலவேளைகளில் அவை கனவுகளா நனவுகளா என்பதில் கூட என்னால் வேறுபாடுகளைக் காண முடிவதில்லை. முன்பெல்லாம் ஆழ்ந்துறங்கையில் வரும் கனவுகள் இப்போதெல்லாம் அரைத்தூக்கத்திலும் வருகின்றன. நம்பவே முடியவில்லை. நிஜமா? நிழலா? என்பதை. ஆனால் கனவுகள் நனவுகள் அல்ல என்பதை உணர்கையில் ஏற்படும் திருப்தி இனியதோர் அனுபவம். அப்பாடா என்று எத்தகையதோர் நிம்மதி! ஏன் கனவுகள் எம்மை ஆட்டிப்படைக்கின்றன? என்று அவ்வப்போது எண்ணுவதுண்டு. அறிவுணர்வின் புரிதல்கள்தமை ஆழ்வுணர்வுக்கவி வடித்திடும் கவிதைகளா? அல்லது அக்கதாசிரியர் வடித்திடும் புனைவுக் காட்சிகளா?
•Last Updated on ••Wednesday•, 03 •February• 2021 21:48••
•Read more...•
எனக்குப் பிடித்த விடயங்களிலொன்று பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது. புதுக் கடைகளில் வாங்குவதை விடப் பழைய புத்தகக் கடைகளில் வாங்குவதிலுள்ள இன்பமே தனி. பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பதைப்போல் எல்லாவகைப் புத்தகங்களும் புதுப்புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை. உதாரணத்துக்கு ஒன்று கூறுவேன். உங்களால் பழைய புத்தகக் கடைகளில் வாங்குவதைப்போல் புதுப்புத்தகக் கடைகளில் பால்ய பருவத்தில் பிடித்தமான இதழொன்றில் தொடராக வெளியான, ஓவியங்களுடன் கூடிய , அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட நூல்களை ஒருபோதுமே பெற முடியாது. அந்நூல்களைக் கைகளால் அளைகையிலுள்ள சுகம் இருக்கிறதே அதுவொரு பெரும் சுகமென்பேன். அவ்வகையான சுகத்தினை ஒருபோதுமே உங்களால் புதுப்புத்தகக் கடைகளில் பெற முடியாது.
•Last Updated on ••Saturday•, 06 •February• 2021 09:25••
•Read more...•
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் மறைவுச் செய்தியினை முகநூல் கொண்டு வந்தது. அவரது மறைவு துயரினைத் தந்தாலும் அவரது நிறைந்த வாழ்வு மகிழ்ச்சியைத் தந்தது. அவர் பூரணமான, நிறைந்ததொரு வாழ்வினை வாழ்ந்து முடித்துள்ளார். தான் விரும்பியதை, விரும்பியவாறு எவ்வித சமரசங்களுக்கும் இடங்கொடுக்காது செய்து , வரலாற்றில் ஆழமான தடத்தினைப் பதித்துச் சென்றுள்ளார். அது மகிழ்ச்சியைத் தந்தது.
எழுத்தாளராக, இதழாசிரியராக, அறச்சீற்றம் மிக்க சமூக, அரசியற் செயல் வீர்ராக அவரது இருப்பு பெருமைப்படத்தக்கதோர் இருப்பு. எத்தனை பேருக்கு இவ்விதமானதோர் இருப்பு அமையும்?
இருப்பில் நிலவிய சமூக, அரசியல் பிரச்சினைகளை, வர்ண, வர்க்க வேறுபாடுகளைக்கண்டு ஒதுங்கிச் செல்லாமல் , இறுதிவரை உறுதியாக, தெளிவாகத் தனது எழுத்துகளூடு, இதழினூடு , தத்துவார்த்த அடிப்படையில் , சமரசங்கள் எவற்றுக்கும் இடங்கொடாது முடிந்தவரை போராடிச் சென்றார். இதிலிருந்து நாம் படிக்க வேண்டியவை பற்பல. தன் இருப்பினூடு மானுட இருப்புக்கான அர்த்தம்தனை அனைவருக்கும் எடுத்துக் காட்டியவர் டொமினிக் ஜீவா அவர்கள்.
'மல்லிகை' மூலம் அவர் இலக்கியத்தில் விழுதுகள் பலவற்றை உருவாக்கிய ஆலமரம்! அந்த ஆழமரம் தந்த நிழலில் இளைப்பாறியவர்கள்தாம் எத்தனை! எத்தனை!
•Last Updated on ••Friday•, 29 •January• 2021 12:17••
•Read more...•
1. 'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு!
இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை அறிஞர் அ.ந.கந்தசாமி. சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என அவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகப்பட்டது. பத்திரிகையாசிரியராக, இதழாசிரியராகவும் அவரது பங்களிப்பைப் புறக்கணித்து விட முடியாது. தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை மிக்கவர். அவரது படைப்புகளெல்லாம் பலவேறு பத்திரிகைம் சஞ்சிகைகளில் சிதறிப்போய்க் கிடப்பது துரதிருஷ்ட்டமானது. இவற்றை முழுமையாகச் சேகரித்து வெளியிடுவது மிகவும் அவசியமானதொன்று. 'பதிவுகள்' இணைய இதழ் ஏற்கனவே அ.ந.கந்தசாமியின் படைப்புகள் பலவற்றைத் தேடிப்பிடித்து ஆவணப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது ('மனக்கண்' நாவலுட்பட). தற்போது அவரது பதினான்கு கட்டுரைகள் அடங்கிய மின்னூற் தொகுதியினைக் கிண்டில் பதிப்பாக 'நான் ஏன் எழுதுகிறேன்' என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது. இந்நூல் அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அ.ந.க்.வின் ஏனைய படைப்புகளும் கிண்டில் பதிப்புகளாக வெளிவரவுள்ளன என்பதையும் அறியத்தருகின்றோம்.
அ.ந.க.வின் 'நான் ஏன் எழுதுகிறேன்' கட்டுரைத்தொகுதியில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் விபரங்கள் வருமாறு:
1. நான் ஏன் எழுதுகின்றேன்? 2. தொடர் நவீனம் 'மனக்கண்' முடிவுரை! 3. நாடகத் தமிழ் 4. கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை நினைவுக் கட்டுரை: புத்தர் வாழ்வை விளக்கும் புதுமைத் தமிழ்க் காப்பியம். 'ஆசிய ஜோதி'யின் அருங்கனிச் சிறப்பு! 5. எமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி 'நானா' மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா! 6. தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்! 7. நாடக விமர்சனம்: "மதமாற்றம்" 8. சுதந்திரனில் (8.7.51) அ.ந..கந்தசாமி : கண்ணகி பாத்திரம் பெண்மையின் சிறப்பைக் காட்டுகிறதா? 'பெண்ணடிமையின் சிகரம்' என்பதே பொருந்தும். மன்னைன் தவறுக்காக மக்களைத் தீயிலிட்டுக் கொழுத்திய கொடுமை! புதிய கோணத்தில் சிலப்பதிகார ஆராய்ச்சி! 9. சுதந்திரனில் அ.ந.க: புதுமைத் தமிழ்ப் பூங்கா - சஞ்சீவி மாமலையியே கண்டெடுத்த 'ரேடியோ டெலிவிஷன்' மூலிகைகள்! 10. சுதந்திரனில் அ.ந.க: புதுமைத் தமிழ்ப் பூங்கா - காதலும் அறிவும் களிநடம் புரியும் 'சஞ்சீவி பார்வதத்தின் சாரல்' புதுவைப் பூங்குயிலின் மனோகரத் தமிழிசையின் மகத்துவம். கொஞ்சும் தமிழிலே கொட்டும் பாரதிதாசனின் பைந்தமிழ்க் காப்பியம். 11. வெற்றியின் இரகசியங்கள்: அத்தியாயம் மூன்று - எமில்கூ காட்டிய வழி! 12. பாரதி இதழ்: புரட்சிப்படம் 13. நூல் மதிப்புரை: "தீ" 14. சுயவசியம் செய்வதெப்படி? - 'வெற்றியின் இரகசியங்கள்' நூலிலிருந்து..
•Last Updated on ••Tuesday•, 26 •January• 2021 12:41••
•Read more...•
பதிவுகள்.காம் கிண்டில் பதிப்புகளாக பல் துறைகளில் 16 மின்னூல்களை (தமிழில் 11 நூல்கள் & ஆங்கிலத்தில் 4 நூல்கள்) வெளியிட்டுள்ளது. அவை தற்போது அமேசன் தளத்தில் விற்பனைக்குள்ளன. வெளியிட்ட மின்னூல்களின் விபரங்கள் வருமாறு:
நாவல்: 1. அமெரிக்கா - வ.ந.கிரிதரன் 2. குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் 3. வன்னி மண் - வ.ந.கிரிதரன் 4. மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன் 5. அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் 6. கணங்களும் குணங்களும் - வ.ந.கிரிதரன் (தாயகம் பத்திரிகையில் மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய , தாயகம் பத்திரிகையில் வெளியான முதலாவது நாவல்.)
கட்டுரை: 7. வ.ந.கிரிதரனின் கட்டுரைகளின் தொகுப்பு
சிறுகதை: 8. கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் - வ.ந.கிரிதரன் (25 புகலிடச் சிறுகதைகளின் தொகுப்பு)
கவிதை: 9. ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - வ.ந.கிரிதரன் (44 கவிதைகளின் தொகுப்பு)
கட்டடக்கலை: 10. நவீன கட்டடக்கலைச் சிந்தனைகள் - வ.ந.கிரிதரன் (கட்டடக்கலை, நகர அமைப்புக் கட்டுரைகளின் தொகுப்பு)
வரலாறு / நகர அமைப்பு: 11. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) - வ.ந.கிரிதரன்
அறிவியல்: 12. அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் - (அறிவியற் கட்டுரைகள்,கவிதைகள் & கட்டுரைகளின் தொகுப்பு)
•Last Updated on ••Friday•, 29 •January• 2021 20:40••
•Read more...•
கவிஞர் ச.வே.பஞ்சாட்சத்திரத்தின் கவிதைத் தொகுதியொன்றின் பெயர் 'இன்ப வானில்' (1971). அகத்துறைக்கவிதைகள் என்று அவற்றைக் குறிப்பிட்டிருப்பார். புதுமைலோலனின் அன்பு வெளியீடாக வெளியான தொகுப்பு அது. காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் , பிரிவினை வெளிப்படுத்தும் கவிதைகள் பல அக்காலச் சூழலில் வைத்துச் சுவையாகப் பின்னப்பட்டிருக்கும்.
அதிலொரு கவிதை 'கொழும்பில் வேலை என்றால்..'. கொழும்பில் பல சிரமங்களுக்கு மத்தியில் வேலை பார்க்கும் கணவன் படும் சிரமங்களை எண்ணியெண்ணி மனைவியொருத்தி வருந்துவதை விபரிக்கும் கவிதை. அதிலுள்ள ' .. பாக்குக் கலப்படச் சோற்றைக் கடைகளில் விழுங்கிக், காற்றினை அங்கே குடிப்பரே! பாவம்!' என்னும் வரிகள் என் கொழும்பு வாழ்க்கையை நினைவு படுத்தின.
கொழும்பில் நகர அதிகார சபையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது நானும் ஏனைய நண்பர்களும் மதிய உணவுக்காக அதிகம் செல்லுமிடங்கள்: அருகிலிருந்த புகையிரதத்திணைக்களக் 'கண்டீன்', கோட்டையிலுள்ள 'நெக்டர் கபே & சுத்தானந்தபவன் (சுத்தானந்தபவனா அல்லது ஆரியபவனா என்பதை நினைவு படுத்துவதில் சிறிது குழப்பம்). சுத்தானந்தபவனுக்குச் செல்வது பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில். அப்போது தமிழ் உணவகங்களில் மதிய உணவின்போது நீங்கள் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் சோற்றினை முடிய முடிய வாங்கிச் சாப்பிடலாம். மேலதிகக் கட்டணம் ஏதுமில்லை. இவ்விதம் மதிய உணவுக்காக வரும் ஒவ்வொருவரும் முடிய முடிய சோற்றினை வாங்கிச் சாப்பிட்டால் வியாபாரம் என்னவாவது. இதற்காகத் தமிழ் உணவக முதலாளிகள் செய்யும் தந்திரமே சோற்றில் பாக்கு போட்டுச் சமைப்பது. அப்படிச் சமைத்தால் அவ்விதம் சமைத்த சோற்றினை அதிகமாகச் சாப்பிட முடியாது. பெரும்பாலும் முதற் தடவையிலேயே வயிறு நிறைந்து விடும். இதனைத்தான் கவிஞரும் 'பாக்குக் கலப்படச் சோற்றைக் கடைகளில் விழுங்கிக், காற்றினை அங்கே குடிப்பரே' என்கின்றார். அனுபவம் பேசும் கவிஞரின் வரி.
•Last Updated on ••Tuesday•, 12 •January• 2021 11:17••
•Read more...•
முகமொழித்து வாழ்தல் இலகுவானது.
உணர்வுகளை அடக்குதல் இலகுவானது.
வன்மம் உள்வைத்து புன்னகைப்பதொன்றும்
அடக்குதலும் இலகுவானதுதான்
எள்ளி நகையாடியவர்களைக் காலம்
முகமூடி அணிய வைத்துவிட்டதை
இன்று நான் முகமூடிகளின் உலகிலிருந்து
எண்ணிப்பார்க்கின்றேன்.
•Last Updated on ••Sunday•, 10 •January• 2021 09:33••
•Read more...•
கவிஞர் கெளரியைப்பற்றி முதலில் எழுத்தாளர் கடல்புத்திரன் மூலம்தான் நான் கேள்விப்பட்டேன். அவர் கெளரியின் 'சோகங்களிலும் துயரமானது' என்னும் கவிதையைப்பற்றி விதந்து கூறுவார். அத்தலைப்பில் கெளரியின் கவிதைத்தொகுப்பொன்றும் 1988இல் வெளியானதாக நான் அறிந்திருக்கின்றேன். அதன் பின்னர் கெளரியை நான் தொண்ணூறுகளில் தாயகம் (பத்திரிகை -> சஞ்சிகை) கனடாவில் வெளியானபோது வெளியான அவரது படைப்புகளினூடு அறிந்திருக்கின்றேன். அவரது படைப்புகள் தாயக'த்தில் வெளியாகியுள்ளன. 'டொராண்டோ'விலிருந்து வெளியான ஏனைய ஊடகங்கள் சிலவற்றிலும் வெளியாகியுள்ளன. தாயகம் பத்திரிகையில் தாயகம் பத்திரிகையில் அதிகமாக எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களைப்பற்றி 'தாயக எழுத்தாளர்கள்' என்னும் கட்டுரையொன்றும் எழுதியுள்ளார். அதில் என்னையும் உள்ளடக்கியிருந்தார். அக்கட்டுரையும் நினைவிலுள்ளது. அக்காலகட்டத்தில் அவரது நெடுங்கவிதையான 'அகதி' நூலுருப்பெற்றது. அதனை வடிவமைத்துக்கொடுத்திருந்தவர் சகலகலாவல்லவரான 'தாயகம்' ஆசிரியரான ஜோர்ஜ்.ஜி.குருஷேவ்தான். அவர்தான் எனது 'எழுக அதிமானுடா' கவிதைத்தொகுப்பினையும் வடிவமைத்துத் தந்திருந்தார். அக்காலகட்டத்தில் அவரே தனது இருப்பிடத்தில் தாயகத்தை 'ஆப்பிள்' கணினியில் வடிவமைத்து, தன்னிடமிருந்த சிறிய அச்சியந்திரம் மூலம் அச்சிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தார்.
'அகதி' கவிதைத்தொகுப்பினை வடிவமைத்தவர் 'தாயகம்' ஆசிரியர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவ் என்றால், அதன் அட்டைப்படத்தை வடிவமைத்துக்கொடுத்தவர் கனடா மூர்த்தி (யாழ் இந்து நாராயணமூர்த்தி). அக்காலகட்டத்தில் தாயக'த்தில் வெளியாகிக்கொண்டிருந்த முனியின் கேள்வி பதில்கள் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டவை. சிரித்திரனின் மகுடி பதில்களைப்போல், சுதந்திரனின் குயுக்தியார் பதில்கள் போல் , 'தாயக'த்தின் 'முனி' பதில்களும் முக்கியமானவை. சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பவை. முனி என்றால் ஏதோ ஆலமரத்து முனியென்று நினைத்து விடாதீர்கள். முனிவர் என்பதன் சுருக்கமான முனியே இந்தத் தாயகத்து முனி.
கெளரியின் 'அகதி' கவிதை நூலை வெளியிட்டிருப்பது 'டொராண்டோ'வில் இயங்கிக்கொண்டிருந்த 'சமூக ஆய்வு மையம்' (Social Research Circle) என்னும் அமைப்பாகும். வெளியிட்ட ஆண்டு: ஏப்ரில் 1991.
•Last Updated on ••Sunday•, 10 •January• 2021 01:52••
•Read more...•
இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் முக்கியமான சஞ்சிகை இது. யாழ்ப்பாணத்தில் 'மறுமலர்ச்சி' சஞ்சிகை அச்சில் வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன் வெளியான சஞ்சிகை. அச்சஞ்சிகைதான் எழுத்தாளர்கள் கே.கணேஷ், கே.ராமநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இணைந்து வெளியிட்ட 'பாரதி' சஞ்சிகை. ' 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்' நூலை எழுதிய முனைவர்கள் சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான் ஆகியோர் இச்சஞ்சிகையின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதனால்தான் அவர்களது ஆய்வு நூலில் இச்சஞ்சிகை பற்றி 'பாரதியில் கட்டுரைகள் வெளிவந்தன' என்று ஒரு வரி மட்டுமே காணப்படுகின்றது. இவர்கள் பாரதியை மறைத்ததற்கு முக்கிய காரணங்களிலொன்றாக நான் கருதுவது இலங்கைத் தமிழிலக்கியத்தில் முற்போக்குத் தமிழிலக்கியத்துக்கு பாரதியாற்றிய பங்களிப்புத்தான். இவர்கள் யாருமே இதுவரையில் இலங்கைத் முற்போக்குத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த இலக்கிய முன்னோடிகள் பற்றி இதுவரையில் விரிவான ஆய்வுக்கட்டுரைகள் எவற்றையும் நானறிய எழுதவில்லை. அந்த அடிப்படையில் இவர்கள் பாரதி சஞ்சிகையின் முக்கியத்துவத்தையும் புறக்கணித்திருக்கலாம் அல்லது மறைத்திருக்கலாம் என்றும் கருதவேண்டியுள்ளது.
இவர்கள் பாரதி சஞ்சிகையின் முக்கியத்துவத்தை மறைத்தாலும் பேராசிரியர் கா.சிவத்தம்பி, எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் , எழுத்தாளர் நந்தினி சேவியர் மற்றும் எழுத்தாளர் டொமினிக் ஜீவா போன்றோர் மறக்கவில்லை. தெளிவத்தை ஜோசப் தினகரனில் 'ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட 'பாரதி' என்னும் தலைப்பில் முக்கியமானதோர் ஆய்வுக் கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரை தினகரனில் செப்டம்பர் 1984 - நவம்பர் 1984 வரை வெளியாகியுள்ளது. இக்கட்டுரையினை எழுத்தாளர் டொமினிக் ஜீவா தொகுத்து மல்லிகைப்பந்தல் வெளியீடாக வெளியிட்ட "நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்' கட்டுரைகளின் தொகுப்பு நூலில் உள்ளடக்கியுள்ளார்.
இந்நீண்ட கட்டுரையின் ஆரம்பத்தில் பாரதி பற்றிய பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கூற்றினைத் தெளிவத்தை ஜோசப் சுட்டிக்காட்டியுள்ளார்:
•Last Updated on ••Friday•, 08 •January• 2021 02:35••
•Read more...•
1981-1982 காலகட்டம் என் வாசிப்பைப்பொறுத்த வரையில் மிகவும் முக்கியமானது. அக்காலகட்டத்தில்தான் எனக்கு மார்க்சிய நூல்களுடனான அறிமுகம் ஏற்பட்டது. சிந்தனையை விரிவடைய வைத்த நூல்கள். மானுட சமூக, அரசியல் மற்றும் பொருளியல் பிரச்சினைகளப்பற்றிய தெளிவினை ஏற்படுத்திய நூல்கள். கொம்பனித்தெருவிலுள்ள மார்க்சிய நூல்களை விற்கும் புத்தகைக்கடையொன்றிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, டூரிங்கிற்கு மறுப்பு, வரலாற்றுப் பொருள்முதவாதமும், இயக்கவியல் பொருள்முதல்வாதமும் (ருஷிய அறிஞர்களின் கட்டுரைகளின் தொகுப்பு), லெனின் நூல்கள் பல என்று வாங்கி வாசித்தேன். கூடவே டால்ஸ்டாயின் புத்தியிர்ப்பு', தத்யயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும், துர்க்னேவின் நாவல்கள், அன்டன் செகாவின் சிறுகதைகள், புஷ்கினின் படைப்புகளை உள்ளடக்கிய நூல் என்று புனைகதைகளையும் வாங்கி வாசித்தேன். இவ்விதமாக அவற்றில் மூழ்கியிருந்த நான் அவற்றை வாசித்ததால் என்னுள் எழுந்த எண்ணங்களை 'சிஆர் கொப்பி'களில் எழுதத்தொடங்கினேன். இலங்கைத் தமிழ்ப்பிரச்சினை பற்றிய மார்க்சிய அடிப்படையிலான எனது எண்ணங்கள், கவிதைகள், என் தனிப்பட்ட உணர்வுக்கவிதைகள் என்று நேரம் கிடைத்தபோதெல்லாம் எழுதினேன். அக்குறிப்பேடுகளில் சில என்னிடமின்றும் உள்ளன. அவற்றை அப்படியே எனது கையெழுத்துப்பிரதிகளாகவே இங்கு பதிவு செய்தால் என்ன என்றொரு எண்ணம் எழுந்தது. அதன் முதல்படியாக இந்நீண்ட கட்டுரையினை உங்களுக்கு வாசிக்கத் தருகின்றேன். இதனை எழுதிய காலத்தில் என் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் இக்கட்டுரையினை வாசியுங்கள். உங்கள் கருத்துகளை நேரம் கிடைக்கும்போது பகிர்ந்துகொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்து என் உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாடு என்னும் வகையில் இவை என்னைப்பொறுத்தவரையில் மிகவும் முக்கியம் மிக்கவை. என் குறிப்பேட்டிலுள்ள இக்கட்டுரையை எழுதிய நிலையிலேயே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். எழுத்துப்பிழைகள் இருக்கக்கூடும். இருந்தால் அறியத்தாருங்கள். கருத்துகளில் ஏதாவது குழப்பங்கள் இருப்பினும் அறியத்தாருங்கள். இக்கட்டுரை அன்று என் மனத்தில் எழுந்த சிந்தனைகளின், கேள்விகளின் பிரதிபலிப்பு. இக்கட்டுரை எழுதிய திகதி 29.12.1982
•Last Updated on ••Tuesday•, 05 •January• 2021 02:29••
•Read more...•
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வானியற்பியல் பற்றிய எனது ஐந்து அறிவியற் கட்டுரைகள் வீரகேசரியில் வெளிவந்துள்ளன. அவை பற்றிய விபரங்கள்:
1. விளக்கங் காணும் வெளிநேரம் பிரபஞ்சம்! அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்! - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 15.9.1991)
2. பிரபஞ்சத்து மாயங்கள்! கரும் ஈர்ப்பு மையங்கள்! விண்ணிலே சூழ உள்ளவற்றைப் பொறிவைத்துப் பிடிக்கும் ஈர்ப்பு வலயங்கள்! - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 10.11.1991)
3. சூத்திரங்களினால் துலங்கும் பேரண்டச் சூக்குமங்கள்! அச்சை விட்டு விலகிச் செல்லும் பிரபஞ்சக் குடும்பங்கள். - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 8.12.1991)
4. அதிசயமான அடிப்படைத் துணிக்கைகள்! பெளதிகக் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தும் அடிப்படை உண்மைகள்! விசைகளே! பிரபஞ்சத்தின் அத்திவாரங்கள்! - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 2.2.1992)
5. அடர்த்தியுள் ஒளிந்திருக்கும் பிரபஞ்சச் சூனியங்கள்! ஆறுதல் அற்று விரையும் அண்டப் பொருட்கள்! - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 5.4.1992)
•Last Updated on ••Monday•, 04 •January• 2021 12:04••
•Read more...•
'சாமி அக்கவுண்டிங் சேர்விஸ்' நிறுவனத் ('டொராண்டோ', கனடா) தலைவரும், கணக்காளருமான திரு.சார்ள்ஸ் நிமலரஞ்சன் அவர்களின் மறைவு அதிர்ச்சியைத் தந்தது. கடந்த இருபது வருடங்களாக நான் இவரை அறிந்திருக்கின்றேன். வருமானவரி சம்பந்தமான ஆலோசனைகள் எவையாயினும் முதலில் நான் நாடுவது இவரைத்தான். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நண்பர் சார்ள்ஸ் பழகுவதற்கு இனியவர். சார்ள்ஸ் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். நண்பர் சார்ள்ஸின் எதிர்பாராத மறைவு பலருக்கும் அதிர்ச்சியைத் தந்திருக்கும். இவரது மறைவு பற்றிய செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து நானின்னும் மீளவில்லை.
சில நாட்களுக்கு முன்னர் இவருடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டிருந்தேன். இதுவரையில் எனது மின்னஞ்சல்கள் எவற்றுக்கும் அவர் பதிலளிக்காமல் விட்டதில்லை. ஆனால் இதற்கு அவரிடமிருந்து எவ்விதப் பதிலும் வரவில்லை. வேலையில் 'பிசி'யாக இருக்கக்கூடுமென்று நினைத்திருந்தேன். நத்தார் தின வாழ்த்து மடலும் அனுப்பியிருந்தேன். அதற்கும் அவரிடமிருந்து பதிலெதுவும் வரவில்லை. அவரது வழமைக்கு மாறான நடத்தை சிறிது வியப்பைத் தந்தது. அவரது நிறுவன இணையத்தளத்தையும் வடிவமைத்துக்கொடுத்திருந்தேன். அதுவும் கடந்த சில நாட்களாக இயங்காமலிருப்பதை அறிந்தேன். அவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்தேன். இன்று மாலை செய்தி அறிந்தேன். கடந்த இரு வாரங்களாக வைத்தியசாலையில் கோவிட் நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டு, 'வெண்டிலேட்டர்' பொருத்தப்பட்ட நிலையில் இன்று இவர் மறைந்ததாக அறிந்து திகைப்பும், துயரும் அடைந்தேன்.
அவரது எதிர்பாராத மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவர்தம் துயரில் நானும் பங்குகொள்கின்றேன்.
•Last Updated on ••Wednesday•, 30 •December• 2020 11:12••
•Read more...•
1906 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் தமிழ் சஞ்சிகையொன்று வெளிவந்துகொண்டிருக்கின்றது. அதுதான் இலங்கை அரசின் கமத்தொழில் திணைக்களத்தால் வெளியிடப்படும் 'கமத்தொழில் விளக்கம்' சஞ்சிகை. தமிழ் விவசாயிகள், பண்ணைகள் நடத்துவோர் போன்ற பலருக்கும் மிகுந்த பயனுள்ள கட்டுரைகளைத் தாங்கி வரும் சஞ்சிகை. 'கமத்தொழில் விளக்கம்' சஞ்சிகையின் பழைய பிரதிகள் பலவற்றை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்.
பழைய 'கமத்தொழில் விளக்கம்' சஞ்சிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தபோது கண்ட ஒரு தகவல் என்னை வியப்படைய வைத்தது. 1974இல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் அமெரிக்க இளம் விவசாயிகள் நிறுவனமான 4-ஏச் நிறுவனத்தால் நடாத்தப்பட்ட பண்ணை வாலிபர் மாற்றீட்டுத் திட்டத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றிருக்கின்றார். அவர் அமெரிக்க இளம் விவசாயிகளின் விருந்தாளியாக அமெரிக்காவில் ஆறு மாத காலம் வரை தங்கியிருந்திருக்கின்றார்.
அவர் இணுவில் ஜோதி இளம் விவசாயிகள் கழகத்தின் தலைவர். சொந்தத்தில் மிகப்பெரிய நாற்றுப் பண்ணையை நடத்தி வந்திருக்கின்றார். நல்லின மாங்கன்றுகளை ஒட்டு முறை மூலம் இன விருத்தி செய்வதில் இவர் கை தேர்ந்தவரென்று 'கமத்தொழில் விளக்கம்' கூறுகின்றது.
என்னை வியப்படைய வைத்தது இச்செய்தியல்ல. இவ்விதம் அமெரிக்காவுக்குச் சென்ற இளம் விவசாயி ஒரு நகைச்சுவைச் சஞ்சிகை ஆசிரியர் என்பதுதான். எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் வெளியாகிய நகைச்சுவைச் சஞ்சிகையான 'கலகலப்பு' சஞ்சிகையைப் பலரும் அறிந்திருப்பார். அந்தக் 'கலகலப்பு' சஞ்சிகையின் ஆசிரியர் தான் மேற்படி இளம் விவசாயி என்னும் விபரத்தையும் 'கமத்தொழில் விளக்கம்'சஞ்சிகை கூறுகின்றது.
•Last Updated on ••Monday•, 28 •December• 2020 23:41••
•Read more...•
- தினகரன் வாரமஞ்சரியில் (டிசம்பர் 20, 2020) வெளியான சிறுகதை. -
1.
கேசவன் அவன் வசிக்கும் தொடர்மாடிக்கட்டடத்தின் 'அபார்ட்மென்ட்' பல்கணிக்கு வந்துநின்று எதிரே விரிந்துகிடந்த மாலைநேரத்து வானை நோக்கினான். விரிந்துகிடந்த அந்திவான் நெஞ்சில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியது. மெல்லிய இருள் பரவிக்கொண்டு வந்தது. மெல்லிருளும் அந்தியின் வெளிச்சமும் கலந்த வானம் சிவந்துகிடந்தது. அந்தச் சிவப்பின் பின்னால் அடிவானத்திற்குள் ஒளிந்துவிட்ட கதிரவனின் கைங்கரியமிருந்தது. தொலைவில் அந்தி வானை ஊடறுத்தபடி ஜெட் விமானமொன்று நிழலாக விரைந்து கொண்டிருந்தது. கேசவனின் மனதை எப்பொழுதும் இயற்கையும், அதன் வனப்பும், வாழும் உயிரினங்களும் கவர்ந்தவை. சிட்டுக்குருவிகளை, புறாக்களை, அணில்களின் வாழ்வை இரசிப்பதில், அவதானிப்பதில் பொழுது போவதே தெரியாமல் மெய்மறந்து நிற்பான். அவ்விதமான சமயங்களில் விரிந்து கிடக்கும் விண்ணைக் கிழித்தபடி விரைந்துகொண்டிருக்கும் பூமிப்பந்தினைப் பற்றி நினைத்துக்கொள்வான். விண்வெளியில் பூமிக்கு வெளியில் நின்று கொண்டிருக்கும் ஒருவருக்கு விரையும் பூமி எவ்விதம் தெரியுமெனச் சிந்தித்துப் பார்ப்பான். சிறியதொரு வாயுக் குமிழியாக விரையுமொரு குமிழி. ஆனால் உயிர்த்துடிப்புள்ளதொரு குமிழி. அந்தக் குமிழிக்குள்தான் எத்தனை விதமான உயிரினங்கள். பல்வேறு அறிவு நிலைகளில் பல்வகை உயிரினங்கள். அறிவு நிலையில் வேறு பட்டிருந்தபோதிலும், இனத்தைப் பெருக்குவதில், குழந்தைகளை வளர்த்தெடுத்து ஆளாக்குவதிலும் அனைத்தும் காட்டும் கடமை, பாசவுணர்வு எப்பொழுதுமே அவனைப் பிரமிக்க வைத்தன. அதே சமயம் விண்ணில் விரைந்து செல்லும் இந்த நீலவண்ணக் கோளுக்கு வெளியில் கவிந்து கிடக்கும் தனிமையும், வெறுமையும் ஒருவித அச்சத்தினையும், இந்தப் பூவுலகில் வசிக்கும் ஜீவராசிகள்பால் ஒருவித பரிவினையும் ஏற்படுத்தின. வெளியினூடு ஆயிரக்கணக்கான மைல்கள் வேகத்தில் விரையுமிந்தக் கோளின் வேகத்தினையும் உணர முடியவில்லை. இதற்கு வெளியே விரிந்து, கவிந்து கிடக்கும் வெறுமையையும், தனிமையையும் உணர முடியவில்லை. உள்ளே நாடு, மதம், மொழி, இனம், சாதி.. என்று எத்தனை வேறுபாடுகள். குத்து வெட்டுகள். இந்தக் கோளும், இங்கு வாழும் உயிரினங்களும் எவ்வளவு கொடிய தனிமை சூழ்ந்த வெறுமைக்குள் வாழ்கின்றார்கள்? அதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா?
'டொராண்டோ'வில் வசிக்கும் இலட்சக்கணக்கான ஈழத்துத் தமிழ் அகதிகளில் கேசவனுமொருவன். 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து மேற்கு நோக்கிப் படையெடுத்தவர்களிலொருவன். வயது நாற்பதை எட்டிக்கொண்டிருந்தது. ஓரிரு நரைகளே தென்பட்டன. ஆனால் வலுவான உறுதியான உடல். இன்னும் திருமணம் செய்துகொள்ளாத தனிக்கட்டை. பிரமச்சாரி. அவனது பதின்ம வயதில் அனைவருக்கும் வருவது போல் அவனுக்கும் ஒரு பெண்மேல் ஈர்ப்பு வரத்தான் செய்தது. வந்த வேகத்திலேயே அது பறந்தோடி விட்டது. அதன் பிறகு நாட்டுச் சூழல் அவனை உலகின் பல்வேறு திக்குகளிலும் தூக்கியெறிந்து பந்தாடியதில் பொழுது சென்றதே தெரியவில்லை. எவ்வளவு விரைவாகக் காலம் ஓடிவிட்டது என்று பிரமித்தபோது காதோரம் நரை தட்டத் தொடங்கி விட்டிருந்தது. வயதும் நாற்பதை எட்டியிருந்தது. திருமணம் செய்யும் ஆசையே போய்விட்டது.
•Last Updated on ••Tuesday•, 22 •December• 2020 21:47••
•Read more...•
தூங்கும் நள்ளிரவு! இரவு வான்! விரிவெளி! இரவுப்பட்சிகளில்லை. மாநகரின் நள்ளிரவில். நத்துகள் எங்கே? நள்ளிரவு ஆந்தைகளெங்கே? வவ்வால்கள்தம் சலசலப்புமில்லை. தூங்கும் மாடப்புறாக்களின் அசைவுகள் மட்டும் உப்பரிகைகளில். விரிவெளி ஒளிச்சிதறல் தூண்டும் விரிவெண்ணங்கள் விரிமனவானில். எங்கோ ஒரு கோடியில்.. இங்கு நான்! அங்கு நீ! சாத்தியமுண்டா? சாத்தியமுண்டா? நானுண்டாயின் நிச்சயம் நீயுமுண்டே. நீளும் நம்பிக்கையில் நான். சந்திப்பு எப்போது? நம்பிக்கை அதிகம் எனக்குண்டு அவ்விடயத்தில் ஆனால் (If) அல்ல எப்போது (When) என்பதுதான் இப்போதுள்ள நிலை. அது புரிந்தவன் நான். நம்பிக்கை அவ்விடயத்தில் மிக்கவன் நான்.
•Last Updated on ••Sunday•, 20 •December• 2020 08:45••
•Read more...•
- கடந்தவருடம் இலங்கையில் இரண்டாவது பதிப்பாக, மகுடம் வெளியீடாக வெளிவந்த எனது (வ.ந.கிரிதரன்) 'அமெரிக்கா' நாவலுக்குப் பேராசிரியர் வழங்கிய அணிந்துரை! -
பேராசிரியர் செ.யோகராசாவின் அணிந்துரை!
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர் வரிசையில் வ.ந.கிரிதரனின் இந்நாவல் வித்தியாசமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகவுள்ளது. இதுபற்றி இவ்வேளை எடுத்துரைப்பது பொருத்தமானதென்று கருதுகின்றேன்.
புலம்பெயர் இலக்கியத்தின் பேசுபொருள் அகற்சியுடையதென்பதையும் பல உட்பிரிவுகள் கொண்டதென்பதையும் ஆழமான வாசிப்புடைய இலக்கிய ஆர்வலர் அறிந்திருப்பர். எனினும் அவற்றுள் சில விடயங்கள் இன்றுவரை போதியளவு பேசப்படவில்லை என்பதே கவனத்திற்குரியது. 'நெடுவழிப்பயண'மும் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுவதும் சார்ந்த அனுபவங்கள் இவ்விதத்தில் முக்கியமானவை. ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் போதான நெடுவழிப்பயணம் பற்றி கி.பி. அரவிந்தனின் சில கவிதைகளும், இளைய அப்துல்லாவின் பத்தி எழுத்துகளும் குறிப்பிடத்தக்கவை. கனடாப் பயணம் பற்றிய சில அனுபவங்களை அ.முத்துலிங்கம் பதிவு செய்துள்ளார். அவுஸ்திரேலிய பயண அனுபவங்கள் சில பத்திரிகைகளில் மட்டும் வெளிவந்திருக்கின்றன. அமெரிக்காவில் தடுப்பு முகாம் அனுபவங்களுக்குட்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுவது அரிதானது. இத்தகைய அபூர்வமான வாய்ப்பு அவப்பேறாகவோ அதிஷ்டகரமாகவோ இவருக்குக் கிடைத்திருக்கின்றது. இவ்விதத்தில் பேசாப் பொருளாகவிருந்ததொன்று இந் நாவலூடாக முதன் முதலாகப் பேசு பொருளாகியுள்ளமை விதந்துரைக்கப்பட வேண்டியதாகின்றது.
எண்பத்து மூன்று இனக்கலவரத்தின் விளைவாக கனடா செல்வதற்கு புறப்பட்டவர்கள் விசா இல்லாமை காரணமாக அமெரிக்காவில் தடங்களுக்குள்ளாகி திருப்பி அனுப்பப்பட வேண்டிய நிலைக்குள்ளானபோது அகதி அந்தஸ்துக் கோரியமையினரால் நியூயோர்க் மாநகரின் ஒரு பகுதியான புரூக்லீனின் ஓர் ஓரத்தே கைவிடப்படும் நிலையிலிருந்த கட்டிடத்தின் ஐந்தாம் மாடியிலே தங்க வைக்கப்படுகின்றனர். அங்கிருந்த மூன்று மாத காலத்திலும் பெற்ற பல்வேறு அனுபவங்களே இந் நாவலாக மலர்ந்துள்ளது. அவைபற்றி இவ்வேளை எதுவும் குறிப்பிடாமல் வாசகரது வாசிப்பிற்கு விட்டுவிடுவதே உசிதமானது.
•Last Updated on ••Friday•, 18 •December• 2020 22:51••
•Read more...•
மறுநாள் அதிகாலையில் நேரத்துடனேயே விழித்து விட்டான் மணிவண்ணன். சந்திரமதி என்ன பதிலைத்தரப்போகின்றாளோ என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. அவள் மட்டும் எதிர்மறையானப் பதிலைத்தந்தால் என்ன செய்வது என்றும் சிந்தித்துப்பார்த்தான். பதில் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதே சரியானது என்றும் முடிவு செய்தான். அவள் மட்டும் சம்மதிக்காவிட்டால் நிச்சயம் ஏற்றுக்கொள்வதற்குச் சிரமமாகத்தானிருக்கும். ஆனால் அதை ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று வாழ்த்திக்கொண்டே செல்ல வேண்டியதுதான். இவ்விதமாகத் தன் மனத்தைத் திடமாக்கிகொண்டான் மணிவண்ணன். மகாகவி பாரதியாருக்கே காதல் கை கூடவில்லை. அதற்காக அவர் துவண்டா போய்விட்டார் என்று எண்ணினான். இவ்விதமாக மனோதிடத்தை வளர்த்துக்கொண்டு டியூசன் வகுப்புக்குச் சென்றான். அவன் சென்றபோது யாருமே வந்திருக்கவில்லை. வாசலில் காத்திருந்தான். வழக்கமாகச் சந்திரமதி முதலாவதாக வருவாள். வந்ததும் வீட்டின் பிரதான வாசலினூடு உள்ளே சென்று டியூசன் வகுப்பு மாணவர்கள் செல்வதற்கான வாசற் கதவைத் திறந்துவிடுவாள். இன்று இன்னும் அவளையும் காணவில்லை. இவ்விதமாகக் காத்துநிற்கையில் தூரத்தில் சந்திரமதி ஆடி, அசைந்து வருவது தெரிந்தது. மணிவண்ணனுக்கு நெஞ்சு படக்படக்கென்று அடிப்பதும் தெளிவாகக் கேட்டது. அதுவரையிருந்த மனோதிடம் அவனை விட்டுப் பறக்கச் சிறகடிக்கத்தொடங்கியது. இதற்கிடையில் சந்திரமதி அருகில் வந்துவிட்டாள். அவனை ஓரக்கண்களால் நோக்கியபடியே மெலிதாகப்புன்னகையினைத் தவளவிட்டாள். எதுவுமே நடக்காததுமாதிரி உள்ளே சென்றாள். அவள் அவனுக்கு முதுகைக்காட்டியபடி உள்ளே சென்றபோது அவன் அவளது கூந்தலை ஆவலுடன் நோக்கினான். அது மல்லிகையற்று வெறுமையாகக்கிடந்தது. அவனது மனத்தில் ஒருவித ஏமாற்ற உணர்வு மேலெழுந்தது. இதற்கென்ன அர்த்தமென்று ஒருவித நப்பாசையுடன் மனம் கேட்டது. இன்னுமா உனக்கு நப்பாசை. அவள்தான் தெளிவாக உனக்குப் பதிலைக் கூறிவிட்டாளேயென்றும் கூடவே அதே மனம் கேட்டது.
மணிவண்ணனுக்கு இனியும் டியூசன் வகுப்புக்குச் செல்வதா என்றோர் உணர்வு எழுந்தது. அவளே மிகவும் இயல்பாக அவனது செயலை உள்வாங்கி, புன்னகைத்தபடி செல்கையில் தான் ஏன் எதற்குக் கலங்க வேண்டுமென்று எண்ணினான். நடந்ததைக் கனவாக எண்ணி மறந்துவிட வேண்டியதுதான் என்று திடமாக முடிவு செய்தா. இச்சமயத்தில் உள்ளிருந்து சந்திரமதி வந்து கதவைத்திறந்து விட்டாள். அவளுக்கு நன்றி கூறியவாறே அவளைத்தொடர்ந்தான். வகுப்பில் அவனும் , அவளும் மட்டுமே இருந்தார்கள். வகுப்பு ஆரம்பமாவதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. கடைசி நேரத்தில்தான் மற்றவர்கள் அரக்கப் பரக்க வருவார்கள். சேவற்கொடியோன் மாஸ்ட்டரும் சரியான நேரத்துக்குத்தான் வருவார்.
•Last Updated on ••Friday•, 18 •December• 2020 13:54••
•Read more...•
எழுத்தாளர் எழுத்தாளர் கத்யானா அமரசிங்ஹ அவர்களின் சிங்கள நாவலான 'தரணி' தமிழில் தற்போது 'தரணி' என்னும் பெயரில் ,எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பில், பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக வெளியாகியுள்ளது. சிங்கள் இலக்கிய உலகில் நன்கறிந்த எழுத்தாளர் கத்யானா அமரசிங்ஹ அவர்களுக்கு வாழ்த்துகள். அந்நாவலுக்கு நான் எழுதிய அணிந்துரையினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். - வ.ந.கிரிதரன் -
நூலை வாங்க: பூபாலசிங்கம் புத்தகசாலை இல. 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11.
மின்னஞ்சல் முகவரி:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
இணையத்தளம்: www.poobalasingham.com
அண்மையில் நான் வாசித்த புனைகதை 'தரணி'. இதுவொரு சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. சிங்கள இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்ஹ. புனைகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் பன்முகத்திறமை மிக்கவர் இவர். அத்துடன் ஊடகத்துறையிலும் தீவிரமாகச் செயற்படும் சமூக, அரசியற் செயற்பாட்டாளர். இலங்கையின் சமகால சமூக, அரசியற் பிரச்சினைகளில் மிகுந்த தெளிவு மிக்கவர். அவற்றை இன, மத, மொழி ரீதியாக அணுகாமல், மானுடப்பிரச்சினைகளாக அணுகுமொருவர். இதனை இவர் எழுதி அண்மையில் வெளிவந்த 'தரணி' நாவலிலும் காணலாம். இந்நாவல் இலங்கையில் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நாவலைத் தமிழுக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப். இவரும் இலக்கியத்தின் பல்வகைப்பிரிவுகளில் , மொழிபெயர்ப்பு உட்பட, காத்திரமான பங்களிப்பைச் செய்து வருபவர். ஏற்கனவே பல நூல்களை, ஆக்கங்களைச் சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கின்றார். இந்நாவலின் மொழிபெயர்ப்பும் இவரது மொழிபெயர்ப்பில் தமிழுக்குக் கிடைக்கப்பெற்ற சிறந்த படைப்புகளிலொன்றாக அமைந்துள்ளதென்பதை வாசிக்கும் எவரும் உணர்ந்துகொள்ளலாம்.
•Last Updated on ••Thursday•, 17 •December• 2020 08:52••
•Read more...•
1. சிற்பி Ron Mueck இன் 'பையன் (குந்தியிருக்கும் பையன்)'
எழுத்தாளர் ஆதவன் தன் முகநூற் பக்கத்தில் இப்புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். சிறுவனொருவன் குந்திக்கொண்டிருக்கும் புகைப்படம். இதைப்பார்த்தபோது யாரோ ஒருவரின் புகைப்படமென்று எண்ணிவிட்டேன் ஆதவன் இது பற்றி எழுதியதைப் படிக்கும் வரையில். இப்புகைப்படத்தைப் பகிர்ந்த ஆதவன் பின்வருமாறு எழுதியிருந்தார்:
•Last Updated on ••Friday•, 11 •December• 2020 13:11••
•Read more...•
எழுபதுகளில், எண்பதுகளில் ஈழநாடு வாரமலர் ஆசிரியராகவிருந்த அமரர் பி.எஸ்.பெருமாள் அவர்களை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. ஆரம்பத்தில் ஈழநாடு வாரமலர் மாணவர் மலரில் கட்டுரைகள், கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த நான் என் பதின்ம வயதுகளில் சிறுகதைகளை எழுதத்தொடங்கியிருந்தபோது அவற்றை வெளியிட்டார். எனது ஐந்து சிறுகதைகள், உருவக்கதை, நல்லூர் இராஜதானி நகர அமைப்பு, பழமையின் சின்னங்களைப் பேணுதல் பற்றிய மூன்று கட்டுரைகள் மற்றும் புதுவருடக் கவிதையொன்று (1978) ஆகியவை அவர் வாரமலர் ஆசிரியராகவிருந்த சமயமே வெளிவந்தன. நான் அவரை ஒருபோதுமே சந்தித்ததில்லை. இருந்தும் என் படைப்புகளை வெளியிட்டு , என் எழுத்தார்வத்துக்குத் தீனி போட்ட அவரை நான் ஒருபோதுமே மறக்க முடியாது.
அவர் அண்மையில் அமரரானபோது வெளியான கட்டுரைகளில் அவர் பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவிருந்த விடயம் பற்றியே பொதுவாக எழுதப்பட்டிருந்தது. ஆனால் அவர் வாரமலர் ஆசிரியராகவிருந்தபோது பேனா என்னும் பெயரில் எழுதியதாக எழுத்தாளர் இளவாலை ஜெகதீசன் அறியத்தந்திருந்தார். இவ்விபரத்தைத் தற்செயலாகத்தான் அவரிடமிருந்து அறிந்தேன்.
•Last Updated on ••Thursday•, 10 •December• 2020 19:27••
•Read more...•
நீண்டிருக்கும் நள்ளிரவு! நான் மனதொன்றிக்கிடந்தேன். நான் நினைவுக்குளத்தில் நீச்சலடித்தேன். நள்ளிரவு கவிந்த தனிமைப்பொழுதுகளில் நான் எனையிழந்திருந்தேன். நான் உணரும் நான்! பிரியம் மிக்க பொழுதுபோக்கு! விரிவெளி அடிப்படைத் துணிக்கை உலகு! நான் நம்மிருப்பு பற்றியெண்ணுவதும் நள்ளிரவுத் தனிமைகளில்தாம். நட்சத்திரத் தோழருடன் நான் சம்பாஷிக்கும் பொழுதுகள் நள்ளிரவுத் தனிமைகளில்தாம். நான் வினாக்களுக்கு விடைகள் நாடுவதும் நள்ளிரவுத் தனிமைகளில்தாம். நான் ஒரு கைதி! சிறைக்கைதி! நான் ஒரு வெளிநேரச்சிறைக்கைதி! புரிதலைத் தடுக்கும் சிறை! சுவர் பாய்தல் சாத்தியமா? சாத்தியங்களை மறுக்கும் பரிமாணச் சிறை! நான் உணர்ந்துதான் இருக்கின்றேன். நான் உணர்ந்துதான் இருக்கின்றேன். நான் உணர்ந்துதான் இருக்கின்றேன்.
•Last Updated on ••Thursday•, 10 •December• 2020 02:56••
•Read more...•
எழுத்தாளர் ஹம்சத்வனி (தமிழ்ச்செல்வன் கனகசுந்தரம்) எண்பதுகளில் என் கவனத்தையீர்த்த கவிஞர்களிலொருவர். க.தமிழ்ச்செல்வன் என்னும் பெயரில் சிறுகதைகளும் எழுதியுள்ளார். இதுவரை இவரது மூன்று கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன. 'சிறைகளில் இருந்து' , 'அக்கரைக்குப் போன அம்மாவுக்கு' மற்றும் 'முடிவிலும் அழியாதது' ஆகியவையே அவை. இவற்றில் 'அக்கரைக்குப் போன அம்மாவுக்கு' என்னிடமிருந்தது. அண்மையில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. நண்பர் யாரோ எவருக்கோ வாசிக்கக் கொடுத்திருக்க வேண்டும். யாழ் பல்கலைக்கழகக் கவிஞர்களென்றால் முதலில் நினைவுக்கு வரும் மூவர்: சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் & ஹம்சத்வனி.
அண்மையில் நூலகத்தில் இவரது 'முடிவிலும் அழியாதது' கவிதைத்தொகுப்பை வாசித்திருந்தேன். தொடர்ந்து இவரும் முகநூலினூடு தொடர்புக்கு வந்தார். இரண்டுமே தற்செயலாக நடந்தவை. ஆனால் அத்தற்செயல்களுக்கிடையில் நிலவிய ஒற்றுமை என்னை வியக்க வைத்தது.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான கவிதை நடை பிடித்திருக்கும். தேவைக்கதிகமாகப் படிமங்கள் நிறைந்து, விடுகதை போடும், வெட்டி முறித்த கவிதைகளை என்னால் ஒருபோதும் சுவைத்திட முடிந்ததில்லை. ஆற்றொழுக்குப்போன்ற தெளிந்த நடையில்., அவ்வப்போது படிமத்தாமரைகள் பூத்திருக்கும் கவிதைவாவிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. என்ன இவன் படிமங்களை எதிர்த்துகொண்டு படிமத்தாமரைகள், கவிதைவாவிகள் என்று படிமங்களை அள்ளித்தெளிக்கின்றானென்று பார்க்கின்றீர்களா? நான் கூறவந்தது தேவைக்கதிகமான படிமங்களின் தேவை தேவையில்லையென்பதையே. ஹம்சத்வனியின் கவிதைகள் அததகையவை.
•Last Updated on ••Monday•, 07 •December• 2020 11:29••
•Read more...•
கனடாவில் 1984ஆம் ஆண்டிலிருந்து தமிழ்க் கவிதைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் மொன்ரியாலில் வெளியான புரட்சிப்பாதை (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக்கிளை வெளியிட்ட கையெழுத்துச் சஞ்சிகை) , தமிழ் எழில் ஆகியவற்றில் கவிதைகள் வெளியாகின.
இது பற்றி எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கனகசுந்தரம் (ஹம்ஸத்வனி) பின்வருமாறு கூறுவார்: "1984 இல் மொன்றியாலின் தமிழ்எழில் என்னும் மாதாந்த கைஎழுத்துப்பிரதி வெளிவந்தது. முதல் தமிழர் ஒளி வானொலிச்சேவையும் தொடங்கப்பட்டது. இரண்டிலும் எனது பங்களிப்பு இருந்தது. நான் ஆசிரியர் குழு சார்பில் எழுதினேன். கவிதைகள் நாடகங்கள் வந்தன."
'புரட்சிப்பாதை' சஞ்சிகையிலும் வ.ந.கிரிதரன், ரவி அமிர்தன் , செங்கோடன், ஆ.சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் கவிதைகள் வெளியாகியுள்ளன.
நூலாக வெளியான ஆரம்பக் கவிதைத்தொகுப்புகள் என்று பார்த்தால் பின்வரும் கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன:
1. ரவி அமிர்தன் - விழிப்பூ. 11.5.1985 வெளியாகியுள்ளது. (இது பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் அருண்மொழிவர்மனுக்கு நன்றி). இது கையெழுத்துப்பிரதியாக வெளிவந்த நூலாகத் தெரிகின்றது.
2. வ.ந.கிரிதரன் - மண்ணின் குரல். இது மண்ணின் குரல் சிறு நாவல், கட்டுரைகள் & எட்டுக் கவிதைகள் அடங்கிய தொகுப்பு. இவையனைத்தும் 84-85 காலகட்டத்தில் 'புரட்சிப்பாதை' சஞ்சிகையில் வெளியானவை. 14.01.1987 அன்று மங்கை பதிப்பக வெளியீடாக வெளியானது. றிப்ளகஸ் அச்சகம் கணினி எழுத்துகள் கொண்டு அச்சடித்த கவிதைத்தொகுப்பு. இதில் அடங்கியுள்ள கவிதைகள்:
•Last Updated on ••Sunday•, 06 •December• 2020 11:58••
•Read more...•
"இடிக்கும் கேளிர்! நுங்குறை ஆக நிறுக்கல் ஆற்றினோ நன்று, மற்றில்ல, ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில், கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே" - வெள்ளிவீதியார் ((குறுந்தொகை) -
1.
இருண்டு விட்டிருந்த டொராண்டோ மாநகரத்து இரவொன்றில் தன் அபார்ட்மென்டின் பல்கணியில் வந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே விரிந்திருந்த விண்ணை நோக்கினான் கேசவன். நகரத்து இரவு வான் ஒரு சில நட்சத்திரங்களுடன் இருண்டிருந்தாலும், அன்று பெணர்ணமி நாளென்பதால் தண்ணொளியில் இரவு குளித்துக்கொண்டிருந்தது. அவனுக்குச் சிறு வயதிலிருந்தே நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானை இரசிப்பதென்றால் மிகவும் பிடித்தமான பொழுது போக்குகளிலொன்று. இரவு வானின் விரிவும், நட்சத்திரக் கன்னியர்களின் கெக்களிப்பும் எப்பொழுதும் அவனுக்குப் பிரமிப்புடன் இருப்பு பற்றிய சிந்தனைகளையும் ஏற்படுத்தின. எவ்வளவு நேரமென்றாலும் அவனால் இரவு வானை இரசித்துக்கொண்டேயிருக்க முடியும்.
வனங்களும், குளங்கும் நிறைந்த வன்னி மண்ணில் வளர்ந்தவன் அவன். எத்தனை புள்ளினங்கள்! எத்தனை மிருகங்கள்! எத்தனை வகை வகையான விருட்சங்கள்! வன்னியில் அவனை மிகவும் கவர்ந்தவை செந்தாமை, வெண்டாமரைகள் பூத்துக்குலுங்கும் குளங்களும், புள்ளினங்களும் , பல்வகை மரங்களுமே. வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கிச் செல்லும் வீதியில் அமைந்திருந்தது குருமண்காடு. அங்குதான் அவன் வளர்ந்தான். குருமண்காடு வனப்பிரதேசமாகவிருந்த காலகட்டத்தில் அவனது வாழ்க்கை அங்கு கழிந்திருந்தது. அதனால் அவனுக்கு எப்பொழுதும் குருமண்காடும், அக்காலகட்ட நினைவுகளும் அழியாத கோலங்கள்.
இரவு வானும், சுடர்களும் அவனுக்கு மீண்டும் வன்னியில் கழிந்த பால்ய பருவ நினைவுகளில் நனவிடை தோய வைத்து விட்டன.
கேசவன் பெரிய குடிகாரன் அல்லன். ஆனால் மருந்து போல் ஒரு பெக் ரெமி பிரண்டியை விழுங்கிவிட்டு, ஏற்படும் மெல்லிய கணகணப்பில் இவ்விதமாக விரிந்திருக்கும் இரவு வானை இரசிப்பதில் அவனுக்கு எப்பொழுதுமே பெருவிருப்புண்டு. தண்ணொளி பரப்பும் முழுநிலாவைக் கண்டதும் அவனுக்கு பானுமதியின் நினைவும் கூட நினைவிலெழுந்து அவனை ஆட்டி வைக்கும். பானுமதியின் நினைவும் முழுநிலவின் தண்ணொளி தரும் இதமான உணர்வினைத்தரும்.
•Last Updated on ••Friday•, 04 •December• 2020 07:41••
•Read more...•
அண்மையில் எழுத்தாளர் அன்னலட்சுமி இராஜதுரை (யாழ்நங்கை) கலைச்செல்வி ஆசிரியர் அமரர் 'சிற்பி' சிவசரவணபவன் அவர்களின் நினைவு தினத்தினையொட்டி (நவம்பர் 9) முகநூற் பதிவொன்றினை வெளியிட்டிருந்தார். அதிலவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: "நல்லாசானும் சிறந்த எழுத்தாளரும் ஈழத்துச்சிறுகதைத்தொகுதியை முதன்முதலில் வெளியிட்டவரும் கலைச்செல்வி மாத இதழின் ஆசிரியருமாக அதனை 8 வருடங்கள் தன்னந்தனியனாக நின்று வெளியிட்டவரும் (1958 - 1966 ) கலைச்செல்விமூலம் ஈழத்து இலக்கிய வரலாற்றில் புகழ் பெற்ற எழுத்தாளர்களை உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றவருமான சிற்பி சிவசரவணபவன் அவர்களது 5 ஆவது நினைவு தினம் ( 1933 - 2015 ) நாளை ஆகும் (நவம்பர் 9) தமிழகச் சிற்றிதழ்களின் செல்வாக்கு மிகப்பெரும் அளவில் இங்கு விளங்கிய வேளை ஈழத்தில் ஓர் இலக்கிய உணர்வு பொங்கி எழ கலைச்செல்வி காலாய் அமைந்தது வரலாறு.அதை ஞானம் சஞ்சிகை தக்க முறையில் பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது. நிலவும் நினைவும் சத்திய தரிசனம் நினை வுகள் மடிவதில்லை ஆகியவை இவரது சிறுகதைத் தொகுப்புகளாகும் உனக்காகக் கண்ணே சிந்தனைக்கண்ணீர் அன்பின்குரல் ஆகியவை இவரது நாவல்களாகும். உனக்காகக் கண்ணே நூலுருப்பெற்றது. வேறு பல உயரிய இலக்கியப்பணிகளையும் மேற்கொண்டு சிறப்புப் பெற்ற இவர் உயர் கௌரவங்களையும் பெற்றவர் என்பதும்தெரிந்ததே. அன்னாரை இவ்வேளை நினைவில் கொள்வோம்."
யாழ்நங்கை அவர்கள் 'ஈழத்து இலக்கிய வரலாற்றில் புகழ் பெற்ற எழுத்தாளர்களை உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றவருமான சிற்பி சிவசரவணபவன் அவர்களது' என்று கூறுவது உண்மையான கூற்று. அதற்கு யாழ்நங்கை அவர்களே நல்லதோர் உதாரணம். மாணவியான யாழ்நங்கை அவர்களின் ஆரம்பகாலப்படைப்புகளுக்குக் களமமைத்துக் கொடுத்தது கலைச்செல்வி. தொடர்ந்து 62இல் அவர் வீரகேசரியில் உதவியாசிரியராகப் பதவி பெற்றபோது அதனை வாழ்த்தியொரு குறிப்பினையும் கலைச்செல்வி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
•Last Updated on ••Monday•, 07 •December• 2020 10:45••
•Read more...•
எழுத்தாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களைப் பதிவுகள் வாசகர்கள் நன்கறிவர். இவரது பல கவிதைகள், இலக்கிய நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள் பல 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியுள்ளன. 'தடாகம் கலை இலக்கிய வட்ட'த்தை நிறுவி அதன் மூலம் 'கலாசூரி' விருது வழங்கி எழுத்தாளர்கள் பலரை இவர் கெளரவித்துள்ளார். அவை பற்றிய தகவல்கள் 'பதிவுக'ளில் வெளியாகியுள்ளன. இவரது மறைவு பற்றிய செய்தியினை எழுத்தாளர் ஜவாப் மரைக்கார் மற்றும் 'ஞானம்' ஞானசேகரன் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். அவரிழப்பால் வாடும் அனைவர்தம் துயரிலும் பதிவுகளும் பங்குகொள்கின்றது. அவர் நினைவாக அவரது கவிதைகள் சிலவற்றையும், அவரது 'தடாகம் கலை இலக்கிய வட்ட' நிகழ்வுகள் பற்றிய அறிவுப்புகள் சிலவற்றையும் பகிர்ந்துகொள்கின்றோம்.
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி கவிதைகள்:
1. நொடிக்கு நொடி
எப்படியும் வாழ நேரிடுகிறது வாழ்க்கை
மண்ணில் மரணமே உண்மை வாழ்க்கையோ பொய்.
மகிழ்ச்சியாய் வாழலாமென்றால் வாழ் நாளோ இரவு பகலைப் போல.
இருள் வெளிச்சம் போல் நிரந்தரமற்ற மாற்றங்கள்.
•Last Updated on ••Tuesday•, 24 •November• 2020 11:04••
•Read more...•
நண்பர் குகதாசன் மறைந்து ஐந்தாண்டுகளைக் கடந்து விட்டன. அவர் யாழ் இந்துக் கல்லூரிக் கனடாக் கிளையினரின் கலைவிழா மலரின் இதழாசிரியராக விளங்கிய சமயம் அவருடனான அறிமுகம் ஏற்பட்டது. மலருக்குப் படைப்புகள் நாடி என்னுடன் தொடர்புகொண்டிருந்தார். பின்னர் அவர் பூநகரான் என்னும் பெயரில் கனடாவிலிருந்து வெளியான பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகள் எழுதி அனைவருக்கும் அறிமுகமானார். அரசியல் ஆய்வாளராக கனடாத் தமிழ் ஊடகங்கள் மத்தியில் நன்கறியப்பட்டவராகவும் விளங்கினார்.
அவரது மகளும் அவர் வழியில் ஊடகத்துறையில் புகுந்து இன்று கனடாவின் புகழ்பெற்ற செய்தி ஊடகங்களிலொன்றான CTV நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். அவர்தான் அபி குகதாசன் (Abby Kuhathasan) என்று அண்மையில்தான் அறிந்தேன். அண்மையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் உபஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ் பற்றிய செய்தியொன்றினை வழங்கிக்கிகொண்டிருக்கும் இணைய இணைப்பினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
•Last Updated on ••Tuesday•, 17 •November• 2020 10:00••
•Read more...•
என் பல்கலைக்கழக, முகநூல் நண்பர்களிலொருவரும், நகர அமைப்பு வல்லுநரும், கட்டடக்கலைஞருமான திரு. திலீனா கிரின்கொட (L.T.Kiringoda) அவர்கள் நேற்றிரவு கொழும்பில் மறைந்த செய்தியினை இன்றறிந்தேன். நகர அபிவிருத்தி அதிகார சபையில் நீண்டகாலம் பணிபுரிந்து சில வருடங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றிருந்தார்.
•Last Updated on ••Tuesday•, 17 •November• 2020 09:33••
•Read more...•
அண்மையில் அகழ் இணைய இதழில் காலம் செல்வத்துடனான நேர்காணலொன்று வந்திருந்தது. அதில் பேட்டி கண்டவர் பின்வரும் கேள்வியொன்றைக் கேட்டிருந்தார்:
"கி.பி.அரவிந்தன் புலம்பெயர் தேசத்தில் கவிதைகள் எழுத முன்னரே பாரிசில் கவிதைகள் எழுதியவர் நீங்கள். ஆண்டு வரிசையை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் தான் நமது புலம்பெயர் முன்னோடிக் கவிஞன் என்று தீர்க்கமாகச் சொல்லாம். கவிதைகள் எழுத நேர்தது எப்படி? அப்போது உங்களுக்கு ஆதர்சனங்கள் இருந்தார்களா?"
இதற்குக் காலம் செல்வம் பின்வருமாறு பதிலளித்திருந்தார்:
"கி.பி.அரவிந்தன் 90களுக்கு பிறகு, நான் கனடாவுக்கு வந்தபிறகுதான் பாரிஸ் வந்தார். அவருடைய கவிதைகள் நல்லதாயிருக்கலாம். சில சிலபேர் வேறு காரணங்களுக்காக அவர் புலம் பெயர்ந்த முதல் கவிஞன் என்று எழுதியதைப் பார்த்திருக்கிறேன்"
கேள்வி கேட்டவர் காலம் செல்வம் புலம்பெயர் முன்னோடிக் கவிஞன் என்று தீர்க்கமாகச் சொல்லலாம் என்று கூறுகின்றார். இதற்கான பதில் ஊடகமொன்றில் வெளியான காலம் செல்வத்தின் கவிதையிலுள்ளது. இது பற்றி அறிய நானும் ஆவலாகவுள்ளேன். காலம் செல்வம் எழுதிய முதலாவது கவிதை எப்பொழுது , எங்கு வெளியானது என்பதை அவர் அறியத்தந்தால் இவ்விடயத்தில் முடிவொன்றினை எடுக்க முடியும். 1984இல் மொன்ரியாலில் வெளியான புரட்சிப்பாதையில் கவிதைகள் வெளியாகியுள்ளன. எனது கவிதைகளும் அதில் இடம் பெற்றுள்ளன. வேறு சிலரின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. அதில் வெளியான எனது கவிதைகள் மண்ணின் குரல் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளன. காலம் செல்வம் புலம் பெயர் முன்னோடிக் கவிஞன் என்று தீர்க்கமாகக் கூறியிருப்பதால் அவருக்கும் காலம் செல்வத்தின் முதல் கவிதை வெளியான விபரம் தெரிந்திருக்க வேண்டும். அவரும் இவ்விடயத்தில் பதிலைக் கூறலாம்.
•Last Updated on ••Wednesday•, 11 •November• 2020 02:34••
•Read more...•
நடந்து முடிந்த அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். அரசியல் கருத்துகளுக்கு அப்பால் ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் கூட்டணியின் வெற்றி தற்போதைய சூழலில் முக்கியமானது; வரவேற்கத்தக்கது. முக்கியமாகப் பின்வரும் காரணங்களுக்காக:
1. தற்போது பதவியிலிருக்கும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த நலன்களுக்காக, பதவிலிருப்பதற்காக இனவாதத்தை, குடிவரவாளர்களுக்கு எதிரான கடுமையான கொள்கைகளைக் கடைப்பிடித்தவர். வெள்ளையின இனவாத அமைப்புகளைப் பகிரங்கமாக ஆதரித்தவர். அவரது குடிவராளருக்கெதிரான கொள்கைகள் காரணமாக ஐந்நூறு குழந்தைகள் தம் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளார்கள். மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறலது.
•Last Updated on ••Sunday•, 08 •November• 2020 03:13••
•Read more...•
அண்மையில் மறைந்த முன்னாள் ராணி வாராந்தரி ஆசிரியர் அ.மா.சாமி மறைவையொட்டிய காணொளியொன்று (எழுத்தாளர் அண்ணா கண்ணன் பதிவேற்றியது), பத்தியொன்று (எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைப்பதிவில் எழுதியது) ஆகியவற்றை வாசித்தபோது என் சிந்தனைக்குருவி சிறகடித்து என் பால்ய காலத்துக்கே சென்று, கும்மாளமிடத்தொடங்கி விட்டது. நான் வாசிக்கத்தொடங்கி அதிலேயே பித்துப்பிடித்திருந்த பால்ய பருவத்தில் எனக்கு ராணி வாராந்தரி இதழுடனும் சிறிதுகாலம் தொடர்பேற்பட்டது. அத்தொடர்பு இன்று வரைக்கும் மறக்க முடியாத தொடர்பாகவே நினைவுகளில் பதிந்து கிடக்கின்றது. ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கைப்படிகளில் பல்வேறு பருவத்து நினைவுகளும் , நினைக்குந்தோறும் இன்பமளிக்கும் நினைவுகளாக நிலைத்து நின்று விடுகின்றன. அவ்வகையில் எனக்கும் ராணி வாராந்தரியுடனான நினைவுகளும் நிலைத்து நிற்கின்றன.
ராணி வாராந்தரியில் முகப்பு எப்பொழுதும் பெண்களை, குறிப்பாக நடிகைகளின் புகைப்படங்களைத் தாண்டி வெளியாவதுதான் வழக்கம். இன்றுவரை அது தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது. மிகவும் எளிய தமிழில் , தன் வாசகர்களுக்கேற்ப பல்வகைப்பட்ட படைப்புகளையும் தாங்கி வரும் ராணியின் நடுவில் ஓரிரு பக்கங்கள் சிறுவர்களுக்கானதாக வெளியாகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நான் ராணி இதழினை விரும்பி வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் நிச்சயம் ஒரு பக்கச் சிறுவர் தொடர்கதையொன்றும் பிரசுரமாகும். அப்பொழுது அவ்விதம் பிரசுரமாகி எம்மையெல்லாம் கவர்ந்திருந்த சிறுவர் தொடர்கதை 'பேசும்சிலை'. நானும் , என் சகோதர, சகோதரிகளும் போட்டி போட்டு வாசித்த சிறுவர் தொடர்களிலொன்று அத்தொடர்நாவல். அத்தொடர் நின்று விட, நாமும் ராணி வாசிப்பதை நிறுத்தி விட்டோம். அத்தொடர்கதையை அழகாக 'பைண்டு' செய்து வைத்திருந்தோம்.
•Last Updated on ••Sunday•, 08 •November• 2020 02:55••
•Read more...•
இன்று பெட்டிகளில் பழைய நூல்களைத் தேடுகையில் நிலா குகதாசனின் 'இன்னொரு நாளில் உயிர்ப்பேன்' கவிதைத்தொகுப்பு அகப்பட்டது. ரோஜா பதிப்பக வெளியீடாக சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியான நூல். நூலுக்கு ஓவியர் கருணாவின் ஓவியங்கள் அணி சேர்க்கின்றன.
எழுத்தாளர் நிலா குகதாசன் என்றதும் அவரைப்பற்றிய நினைவுகள் படம் விரிக்கின்றன. அவருடன் நான் அதிகம் நெருங்கிப்பழகியவனல்லன். அவரை அவரது படைப்புகளூடு அதிகம் அறிந்தவன். அவ்வப்போது நிகழ்வுகளில் சந்திக்கையில் கதைத்துள்ளேன். தொண்ணூறுகளில் ஐபிஎம் / செலஸ்டிகா நிறுவனத்தில் (டொன்மில்ஸ் & எக்ளிண்டனில் அமைந்திருந்த) பணி புரிந்த காலத்தில் அங்கு இயங்கிக்கொண்டிருந்த வேர்சா உணவகத்தில் அவர் பணிபுரிந்துகொண்டிருந்தார். அங்கு செல்கையில் அவ்வப்போது சிறிது நேரம் உரையாடுவதுண்டு.
கனடாவில் முதன் முதலில் வீடியோ சஞ்சிகை இளைய நிலாவை அவர் உருவாக்கினார். இவ்விதமான சூழலில், கலை, இலக்கியத்துறையில் சாதிப்பதற்கு அதிகமிருக்கையில் இளமைப்பருவத்தில் அவர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டது துரதிருஷ்ட்டமானது. அவரை நினைக்கையில் கூடவே அவரது புன்னகை தவழும் முகம்தான் நினைவுக்கு வருகின்றது. சிலரின் முகங்களில் எப்பொழுதும புன்னகை தவழ்ந்தபடியிருக்கும், நிலா குகதாசன் அவ்வகையானவர்களிலொருவர்.
•Last Updated on ••Tuesday•, 17 •November• 2020 22:49••
•Read more...•
ஆசிய அபிவிருத்தி வங்கியில் இயக்குநராகப் பணியாற்றியவரும் , எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான திரு. கே.எஸ்.சுப்பிரமணியன் அவர்கள் மறைந்த செய்தியினை எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் அவர்கள் தனது முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். என்னை அதிர்ச்சியடைய வைத்த செய்தி. கலாநிதி கே.எஸ். சுப்பிரமணியன் அவர்களுடன் எனக்கு அண்மையில்தான் அவர் அனுப்பிய மின்னஞ்சல்கள் மூலம் தொடர்பேற்பட்டது.
'கொரோனாக் கால ஊரடங்குச் சட்ட அனுபவங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட தமிழ்க்கவிதைகளை ஆங்கிலத்துக்கு மொழிபயர்த்தவர் திரு. கே.எஸ்.எஸ் அவர்கள். அதுவொரு தொகுப்பாக 'Lockdown Lyrics' என்னும் பெயரில் நூலாகவும் வெளியாகியுள்ளது. என் கவிதையொன்றும் , ' கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்!' , அத்தொகுப்பில் இடம் பெற வேண்டுமென்று தொகுப்பாளர்கள் விரும்பினார்கள்.
எனது கவிதை: 'கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்!' என்னும் கவிதை சிறிது நீண்டது. அதனைச் சிறிது சுருக்கி , ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து Lockdown Lyrics என்னும் தொகுப்பு நூலில் வெளியிட்டுள்ளார். கவிதையினைச் சிறிது சுருக்கி வெளியிடுவதற்காக , வெளியிடுவதற்கு முன்னர் எனக்குக் கடிதம் எழுதி என் அனுமதியைக் கோரினார். பின்னர் நூல் வெளியானதும் அதனை அறிவிப்பதற்காக மின்னஞ்சலொன்றினை அனுப்பினார். அதில் தமிழக முகவரியினையும் கேட்டிருந்தார். தமிழகத்தில் வசிக்கும் என் பால்ய காலத்து நண்பரும் எழுத்தாளருமான ஶ்ரீராம் விக்னேஸ் (ஆர்.விக்கினேஸ்வரன்) அவர்களின் முகவரியையும் கொடுத்து விட்டேன். அதன்படியே நண்பர் நூலை என் சார்பில் பெற்றுக்கொண்டார்.
•Last Updated on ••Monday•, 26 •October• 2020 10:25••
•Read more...•
நான் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியதற்கான் காலகட்டம் 1979-1981. பின்னர் அத்தகவல்களின் அடிப்படையில் தொடராகத் தாயகம் (கனடா) சஞ்சிகையில் எழுதினேன். அத்தொடரே பின்னர் ஸ்நேகா (தமிழகம்) & மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளியானது.
ஆய்வாய்வுக் கட்டுரைகளை முதலில் ஈழநாடு வாரமலரில் எழுதினேன். பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகக் கட்டடக்கலைச் சரித்திரப் பாடத்துக்காகவும் ஆய்வுக்கட்டுரையாகச் சமர்ப்பித்தேன். நான் எழுதியபோது அப்போது எனக்குக் கிடைத்த நில அளவைத்திணைக்கள வரைபடங்களையும் பாவித்திருந்தேன். அண்மையில் கூகுள் மூலம் அப்பகுதியைத் தேடியபோது அப்பகுதியே முழுமையாக மாற்றமடைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக யாழ் பருத்தித்துறை வீதி நல்லூர் ஆலயத்துக்கருகாக வந்து , முத்திரைச் சந்தை நோக்கித் திரும்பும் பகுதியில் தென்னந்தோப்பொன்றிருந்தது (சங்கிலியன் வீதிக்கும், யாழ் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் மேற்குத்திசையில்) , பருத்தித்துறை வீதியை நோக்கிய அவ்வளவுப் பகுதியில் பண்டாரமாளிகை என்றொரு தூணுமிருந்தது.
அதற்கண்மையில் சிறியதொரு முகப்புடன் கூடிய வைரவர் சிலையொன்றுமிருந்தது. அதில் 'இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மன்னர் வழி காத்துப் பூஜித்த நல்லை தேரடிப் பதியுரை பண்டார மாளிகை வாசல் ஶ்ரீ பைரவர் ஆலய ஆதிமூலம் உள்ளே' என்னும் வசனங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. அதை விபரிக்கும் புகைப்படமிது. என் பெட்டிக்கமராவால் அப்போது எடுக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படம். கூகுள் வரைபடம் மூலம் பார்த்ததில் இதற்கான அடையாளத்தையே காண முடியாத அளவுக்கு அப்பகுதியே மாறியிருப்பதை அவதானிக்க முடிந்தது. யாராவது அப்பகுதியில் இப்போதும் இச்சிலையுள்ளதா என்பதை அறிந்து கூற முடியுமா? பண்டாரமாளிகை தூணையும் நான் கூகுள் வரைபடங்களில் காணவில்லை.
•Last Updated on ••Wednesday•, 14 •October• 2020 10:12••
•Read more...•
தற்போது உடல்நலமற்றிருக்கும் கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் விரைவில் பூரண சுகம் பெற்று, அதே துடிப்புடன் , உணர்வுடன் மீண்டு வந்திட வேண்டுகின்றேன்; வேண்டுவோம்.
கடந்த அறுபது வருடங்களாகக் கலை, இலக்கிய விமர்சனங்கள், குறிப்புகள் எழுதி வரும் கே.எஸ்.எஸ் அவர்கள் ஆரம்பத்தில் சிறுகதைகளும் எழுதியுள்ளார்.
சுதந்திரன் பத்திரிகையின் சிறுவர் பகுதியில் மாணவனாக எழுதிய காலத்திலிருந்து இன்று வரை தளராது ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதிவரும் அவராற்றல் எப்போதுமென்னைப் பிரமிக்க வைப்பது.
'பதிவுகள்' இணைய இதழிலும் தொடர்ச்சியாக அவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
மாணவனாக நான் கொழும்பு நகரிலுள்ள 'அமெரிக்கன் சென்ட'ருக்குச் சென்ற காலகட்டத்தில் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த கே.எஸ்.எஸ் அவர்களைப் பிரமிப்புடன் பார்த்ததுண்டு. அவரே பின்னர் பதிவுகள் இணைய இதழில் விரும்பி எழுதியபோது மகிழ்ந்தேன். இன்றவர் முகநூலில் நண்பராகவுமிருக்கின்றார். அது மேலும் மகிழ்ச்சியைத் தருவது. இதனைச் சாத்தியமாக்கிய இணையத்துக்கு நன்றி.
•Last Updated on ••Friday•, 09 •October• 2020 07:30••
•Read more...•
மலர் உதிர்ந்தது!
பொன்னியின் செல்வன் நாவலின் மையக்கரு பொன்னியின் செல்வனின் மகுடத்தை மதுராந்தகருக்கு விட்டுக்கொடுத்த தியாகத்தை ஒட்டியதாகவிருந்தாலும் நாவலின் நாயகன் பொன்னியின் செல்வனல்லன். வாணர்குலத்து வீரனான வந்தியத்தேவனே நாவலின் நாயகன். நாவல் வந்தியத்தேவன் தன் நண்பன் கந்தமாறனின் தந்தையான கடம்பூர் சம்புவரையரின் அரண்மனையை நோக்கிச் செல்வதுடன் ஆரம்பமாகும் . இடையில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் அவர்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. நாவலின் இறுதி மீண்டும் வந்தியத்தேவன் கந்தமாறனுடன் சந்திப்பதில் முடிவுறும். கந்தமாறனின் தங்கையான மணிமேகலை வந்தியத்தேவன் மீது மிகுந்த காதல் கொள்கின்றாள். அதன் காரணமாகச் சித்தப்பிரமை மிக்கவளாகின்றாள்.
இறுதியில் வந்தியத்தேவனின் அரவணைப்பில் அவன் மடியில் உயிர் துறக்கின்றாள். நாவலில் வாசிப்பவர் உணர்வுகளை அதிரவைக்கும் துயரச் சம்பவம் மணிமேகலையின் மரணம். ஐந்தாம் பாகத்தின் தொண்ணூற்றோராவது அத்தியாயத்தில் முடிவுறும் நாவலின் அத்தியாயத்தலைப்பு : மலர் உதிர்ந்தது. அந்த மலர் மணிமேகலை. மணிமேகலையின் மறைவினை வெளிப்படுத்தும் ஓவியர் வினுவின் ஓவியத்தையும் , நாவலின் இறுதிப்பக்கத்தையும் இங்குள்ள பக்கங்களில் காணலாம். தமிழர்தம் இலக்கியங்கள் காதலையும், வீரத்தையும் (அகமும், புறமும்) சிறப்பித்துக்கூறுகின்றன. பொன்னியின் செல்வனும் காதலையும், வீரத்தையும் சிறப்பித்துக் கூறுமொரு நவகால உரைநடைக் காவியமாகவே நான் கருதுகின்றேன். வந்தியத்தேவன் - குந்தவை காதல், வானதி - இராஜராஜன் காதல், மணிமேகலை - வந்தியத்தேவன் காதல், மந்தாகினி - சுந்தரசோழர் காதல் என்று மானுடர் பலரின் காதலைச் சிறப்பித்துக்கூறும் பொன்னியின் செல்வன் அக்காலத் தமிழரின் வீரத்தையும் சிறப்பித்துக் கூறுகின்றது. இதனால்தான் நாவல் தமிழர்கள் மத்தியில் தலைமுறைகள் கடந்து இன்றும் விருப்புடன் வாசிக்கப்படுகின்றது.
என்னைப்பொறுத்தவரையில் சிலப்பதிகாரம் , மணிமேகலை போல் தமிழர் வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நிற்கப்போகுமொரு உரைநடைக்காப்பியம்தான் கல்கியின் பொன்னியில் செல்வன். மக்களை அடையாத எந்தவொரு இலக்கியமும் நிலைத்து நிற்காது. பொன்னியின் செல்வன் விமர்சகர்கள் பலரின் புலமைத்துவ எதிர்ப்புகளையும் மீறி மக்களைச் சென்றடைந்த உரைநடை இலக்கியம். மக்கள் இலக்கியம் நிலைத்து நிற்கும்.
•Last Updated on ••Wednesday•, 07 •October• 2020 00:36••
•Read more...•
அத்தியாயம் ஐந்து: நினைவில் நிறைந்தவள்!
வீ்டு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த மணிவண்ணனின் நினைவெல்லாம் அடுத்து என்ன நடக்கும் என்பதிலேயே இருந்தது. சந்திரமதி அக்கடிதத்தைப் படித்திருப்பாளோ? ஒருவேளை காந்திமதியிடம் அவன் அவளுக்குக் கடிதம் எழுதிய விடயத்தைக் கூறியிருப்பாளோ? இவ்விதமான சிந்தனைகளில் மூழ்கிக்கிடந்த அவன் தான் அவசரப்பட்டு விட்டானோ என்றும் எண்ணினான். ஒருவன் ஒருத்தியை விரும்புவது மனித வாழ்க்கையில் மிகவும் சாதாரணமான ஒரு விடயம். அதனை வெளிப்படுத்துவதுக்குக் கூட எவ்வளவு தடைகள். அதனையொரு பாவ விடயமாக, ஒழுங்கற்ற நடத்தையாக உருவகித்து வைத்துள்ளதே இச்சமுதாயமென்று எண்ணமொன்று எழுந்தோடியது. அதே சமயம் இன்னுமொரு எண்ணமும் எழுந்தது. பதின்ம வயதுப்பருவம் இவ்விதமான உணர்ச்சிக்கொந்தளிப்பு நிறைந்த பருவம். இப்பருவம் தாய், தந்தையரின் அரவணைப்பில், ஆதரவில் கழியும் பருவம். வாழ்க்கையில் தனித்து நிற்கும் நிலையை அடைந்த பருவமல்ல. இப்பருவத்தில் இக்காதல் உணர்வுகள் அவசியம்தானா என்றும் எண்ணினான். உணர்வுகள் அவசியமென்றும் எண்ணிய அவன் அவை அவசியமானவைதாம். பருவத்தின் தேவைகளிலொன்றுதான். ஆனால் அதே சமயத்தில் இக்காதல் உணர்வுகள் கல்வியைத் தடுக்கும் வகையில் அமையக் கூடாது. தனித்து நின்று வாழ்வை எதிர்நோக்கும் நிலை வரும் வரையில் காதலிப்பவர்கள் காத்து நிற்க வேண்டும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். உண்மையான காதலென்றால் காத்து நிற்கும் தன்மை மிக்கதாக அமையும். அவ்விதம் காத்து நிற்க முடியாத காதல் உண்மையானதாக இருக்க முடியாது. அவ்விதம் காத்து நிற்க முடியாதென்றால் , அவ்விதம் காத்து நிற்கையில் எதிர்ப்படும் தடைகளை உறுதியுடன் எதிர்கொண்டு வெற்றியடையும் காதலே உண்மையானது என்றும் எண்ணினான். ஆனால் உண்மையான காதல் கூட சில சந்தர்ப்பங்களில் கடமைகளின் காரணமாக, உறவுகளின் மீதான பாசத்தின் காரணமாக நிறைவேறாமல் போய்விடும் சாத்தியங்களுள்ளன என்பதையும் அவன் நினைத்துப்பார்த்தான்.
இவ்விதமான எண்ணங்களின் மத்தியில் அவன் சந்திரமதி மீதான தன் காதல் உணர்வுகளை எண்ணிப்பார்த்தான். அவள் அவனது காதற் கோரிக்கைக்கு அனுமதியளிக்கும் பட்சத்தில் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன? அவன் அவளிடம் தான் படித்து முடிக்கும் வரையில் , அவள் படித்து முடிக்கும் வரையில், இருவரும் தனித்து வாழ்க்கையை எதிர்நோக்கும் நிலை வரும் வரையில் காத்து நிற்க வேண்டும். இதற்கு இருவருமே சம்மதிக்க வேண்டும். இவ்விதமான முடிவினை இருவருமே எடுக்க வேண்டும். இவ்விடயத்தில் இருவருக்கும் தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும்.
•Last Updated on ••Wednesday•, 07 •October• 2020 00:50••
•Read more...•
அத்தியாயம் நான்கு: காளையின் காதல் உணர்வுகள்!
“யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.“- செம்புலப்பெயனீரார் ( குறுந்தொகை -40) -
மணிவண்ணனுக்கு ஒரு கணம் தன்மேலேயே வெறுப்புத் தோன்றியது. எவ்வளவு தூரம் அவன் திட்டமிட்டிருந்தான் தன் கடிதத்தைச் சந்திரமதியிடம் கொடுப்பதற்காக. அவனது திட்டம் அவனது ஆழ்ந்த தூக்கத்தினால் பிழைத்துப்போய்விட்டதே. அடுத்தநாள் ஞாயிறு டியூசன் வகுப்பில்லை. இனி அடுத்த வகுப்பு திங்கள் காலையில்தான். அதுவரை காத்திருக்க வேண்டும். இம்மாதத்துடன் டியூசன் வகுப்பும் முடிந்து விடும்.அதன் பிறகு அவளைக் காண்பதற்குக் கூடச் சந்தர்ப்பங்கள் வாய்க்குமோ இல்லையோ தெரியாது. இந்நிலையில் எப்படியாவது அவளது பதிலை அறிந்து விடவேண்டுமென்று முடிவு செய்துக் கவனமாகப்போட்ட திட்டம் இப்படிப்பிழைத்துப்போய் விட்டதேயென்று மனம் எண்ணியது. மறுகணம் எல்லாமே நல்லதுக்காகத்தானிருக்கும் என்று எப்பொழுதும் இருப்பினை ஆரோக்கியமாக எதிர்கொள்ளும் அவனது மனது எண்ணி அவனை ஆறுதல்படுத்தியது.
அன்று முழுவதும் அவனால் வேறெதிலும் கவனத்தைச் செலுத்த முடியாமலிருந்தது. மனம் நிறைய அவளே நிறைந்திருந்தாள். அவனுக்கு அவனையெண்ண எண்ணச் சிறிது வெறுப்பாகக்கூடவிருந்தது. எதற்காக இக்காதல் உணர்வுகள் மனிதரைப் பிடித்து ஆட்டி வைக்கின்றன என்றொரு எண்ணமும் தோன்றியது. மானுட வாழ்க்கை பல்வகை உணர்வுகளாலும் பின்னப்பட்டதொன்று. வர்க்க வித்தியாசங்களற்று, வர்ண வித்தியாசங்களற்று, வயது வித்தியாசங்களற்று மனிதரை ஆட்டிப்படைக்கும் முக்கியமான மானுட உணர்வாகக் காதலைக் கூறலாம். குறிப்பாகத் தமிழரைப்பொறுத்து காதலும், வீரமும்தாமே அவர்தம் உணர்வுகளில் முக்கிய இடங்களைப் பிடித்திருக்கின்றன. சங்க இலக்கியங்களில் அகமும் (காதலும்) புறமும் (வீரமும்) தாமே நிறைந்து கிடக்கின்றன. இயற்கையில் உயிரினங்களின் இருப்புக்கு இனப்பெருக்கம் முக்கியமாகவிருக்கின்றது, அதற்காக இயற்கை உருவாக்கிவைத்த உணர்வுதானே இக்காதல். காமத்தின்மூலம் உயிர்கள் இனப்பெருக்கம் செய்து தம்மை நிலைநிறுத்துவதற்கு ஒரு சாதனமாக விளங்கும் உணர்வுதானே இந்தக் காதல். ஆனால் அப்படியும் கூறுவதற்கில்லை. காதலைக் காமத்துடன் ஒன்றாக வைத்து எண்ணமுடியாது. காதலில் காமம் கலந்திருந்தாலும் , அவற்றில் முன்னிலை வகிப்பது காதலே. காதலற்ற காமம் உடற்பசிக்கான உணவு மட்டுமே.
•Last Updated on ••Saturday•, 26 •September• 2020 23:04••
•Read more...•
என் வெகுசன எழுத்து வாசிப்பில் எழுத்தாளர் சாண்டில்யனுக்கும் (இயற்பெயர் பாஷ்யம்) முக்கியமானதோரிடமுண்டு. என் பால்ய பருவத்தில் வீட்டில் அப்பா கல்கி, விகடன், அம்புலிமாமா, கலைமகள், தினமணிக்கதிர், மஞ்சரி என்று தமிழகச் சஞ்சிகைகள் பலவற்றை வாங்கினார். ஆனால் குமுதம் சஞ்சிகையை மட்டும் வாங்கவில்லை. அக்காலத்தில் சாண்டில்யனின் நாவல்கள் குமுதம் சஞ்சிகையிலேயே வெளியாகிக்கொண்டிருந்தன. அதனால் கல்கி, ஜெகசிற்பியன், அகிலன் , நா,பார்த்தசாரதி, மீ.ப.சோமு போன்ற எழுத்தாளர்களின் வரலாற்று நாவல்களையறிந்திருந்த எனக்குச் சாண்டில்யனின் வரலாற்று நாவல்களை அறிந்திருக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.
அச்சமயத்தில் வவுனியா மகாவித்தியாலயத்தில் என்னுடன் படித்துக்கொண்டிருந்த ரிஷாங்கன் என்னும் மாணவரின் வீட்டில் குமுதம் வாங்கிக்கொண்டிருந்தார்கள். அவர் மூலமே எனக்குக் குமுதம் சஞ்சிகை முதலில் அறிமுகமாகியது. அதில் வெளியாகிக்கொண்டிருந்த சித்திரக்கதைத்தொடரான 'கடற்கன்னி' என்னை மிகவும் கவரவே அப்பாவிடம் குமுதம் சஞ்சிகையையும் வாங்குமாறு கூறினேன். அப்பாவும் வாங்கத்தொடங்கினார். அப்பொழுது குமுதத்தில் சாண்டில்யனின் ராஜமுத்திரை வெளியாகிக்கொண்டிருந்தது. ஏற்கனவே முதற்பாகம் முடிந்து இரண்டாவது பாகம் தொடங்கியிருந்தது. இரண்டாம் பாகத்தில் இந்திரபானு என்னும் தளபதியே நாயகன். முதற்பாகத்தில் சேரமன்னன் வீரரவியால் கடத்தப்பட்ட அவனது காதலியான பாண்டிய ராஜகுமாரியை மீட்பதில் பெரும்பங்கு வகித்தவன் இந்திரபானு. நான் வாசித்த முதலாவது சாண்டில்யனின் நாவல் ராஜமுத்திரை நாவலின் இரண்டாம் பாகம்தான். வெகுகாலத்துக்குப் பின்னரே ராஜமுத்திரையின் முதற்பாகத்தைப் படித்தேன்.
அதன் பின்னர் ராணிமுத்து பிரசுரங்களாக வெளியான சாண்டில்யனின் ஜீவபூமி, உதயபானு, இளையராணி , மஞ்சள் ஆறு ஆகிய நாவல்களை வாசித்தேன். இவை பெரிய நாவல்களல்ல. இவற்றில் ஜீவபூமி என்னை மிகவும் கவர்ந்த நாவல். அதில்வரும் ராஜபுதனத்து வீரனான ரதன் சந்தாவத் சலும்பரா என்னை மிகவும் கவர்ந்த சாண்டில்யனின் நாயகர்களில் ஒருவர்.
•Last Updated on ••Sunday•, 13 •September• 2020 14:09••
•Read more...•
"போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ?" - பாரதியார் -
என்னை மிகவும் கவர்ந்த, பாதித்த இலக்கியவாதியென்றால் முதலில் நான் கருதுவது மகாகவி பாரதியாரைத்தான். முரண்பாடுகளற்ற மனிதர்கள் யாருளர். பாரதியிடமும் முரண்பாடுகளுள்ளனதாம். ஆனால் அவை அவரது அறிவுத் தாகமெடுத்த உள்ளத்தின் கேள்விகளின் பரிணாம வரலாற்றின் விளைவுகள்.
குறுகிய கால வாழ்வினுள் அவர் மானுட வாழ்வின் அனைத்து விடயங்களைப்பற்றியும் சிந்தித்தார். கேள்விகளையெழுப்பினார். அவற்றுக்குரிய விடைகளைத் தன் ஞானத்துக்கேற்ப அறிய முயற்சி செய்தார். இவற்றைத்தாம் அவரது எழுத்துகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.
பாரதியாரின் எழுத்துகளிலிருந்து நான் அறிந்த , இரசித்த, எனையிழந்த முக்கிய விடயங்களாகப்பின்வருவனவற்றைக் கூறுவேன்:
1. மானுட வாழ்க்கையைப்பற்றிய, மானுட இருப்பு பற்றிய சிந்தனைகள். 2. மானுட வாழ்வின் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் பிரச்சினைகள் பற்றிய அவற்றுக்கான தீர்வுகள் பற்றிய சிந்தனைகள். 3. மானுட இருப்பு பற்றிய, மானுட சமூக, அரசியல் மற்றும் பொருளியல் பற்றிய கோட்பாடுகள் பற்றிய சிந்தனைகள். 4. இயற்கை பற்றிய , பூவுலகின் ஏனைய உயிர்கள் பற்றிய சிந்தனைகள். 5. தமிழ் மொழி , தமிழ் இனம் பற்றிய , சக மானுடர் பற்றிய சிந்தனைகள். 6. மானுட உணர்வுகள் பற்றிய காதல், இயற்கையை இரசித்தல் போன்ற சிந்தனைகள் 7. மானுட ஆளுமைகள் பற்றிய சிந்தனைகள். 8. மானுட வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு நடைபோடுதல் பற்றிய சிந்தனைகள் 9. பிரபஞ்சம் பற்றிய அவரது சிந்தனைகள்
இவற்றை முக்கியமானவையாக கூறுவேன்.
•Last Updated on ••Sunday•, 13 •September• 2020 12:07••
•Read more...•
இலங்கையின் நகர அமைப்பு நிபுணர்கள் சபையும், இலங்கைப் பசுமைக் கட்டடச் சபையும் இணைந்து பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் 25.1.2014 நடாத்திய 'பசுமையினூடு பெறுமதியை உருவாக்குதல்' என்னும் மாநாட்டில் கட்டடக்கலைஞரும் ,நகர அமைப்பு வல்லுநருமான திரு/. பியால் சில்வா (Piyal Silva) அவர்களின் உரையினைத் தற்செயலாக 'யு டியூப்'பில் கேட்டேன். முதலில் எனக்கு மகிழ்ச்சியாகவிருந்தது. காரணம் இவர் என்னுடன் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் படித்த சக மாணவர்களிலொருவர். இவர் சூழற் பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் என்னும் (Environmental Sustainability) தலைப்பில் அம்மாநாட்டில் உரையினையாற்றினார். அபிவிருத்தி என்னும் போர்வையில் உலகம் முழுவதும் சூழற் பாதுகாப்பு சீரழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இவ்வுரை முக்கியமானதென்பதால் அவ்வுரையின் முக்கிய அம்சங்களை இங்கு குறிப்பிடலாமென்று கருதுகின்றேன்.
இவர் தனது உரையினை மேற்படி 'சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல்; என்னும் கோட்பாடு பற்றிய கேள்வியொன்றுடன் ஆரம்பித்தார். நகர்மயமாக்கல் மிகுந்த வேகத்துடன் முன்னெடுக்கப்படுகையில் நாம் அதனால் ஏற்படும் சூழல் விளைவுகளைக் கண்டுகொள்வதில்லை. பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. அவற்றாலேற்பட்ட விளைவுகளை அனுபவிக்கத்தொடங்கி விட்டோம். இப்போது ஒவ்வொருவரும் அதனைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். கடந்த ஐந்தாறு வருடங்களில் பல்வேறு இயற்கை விளைவுகளை (சுனாமி, சூறாவளி போன்ற) நாம் அனுபவித்திருக்கின்றோம். இவ்வகையான விளைவுகள் தற்போது அடிக்கடி நிகழ்கின்றன. தற்போது சூழலைப்பாதுகாப்பதென்பது ஒருவகை 'ட்ரென்ட்' ஆகிவிட்டது. எல்லோரும் சூழலின் நண்பர்களாகிவிட்டார்கள். பசுமைக் கட்டடம், பசுமை 'மோல்' .என்று பலவற்றைக் கேட்டிருக்கின்றோம். இப்போக்கானது வெறும் ஒப்பனையானதா? அல்லது நாம் உண்மையிலேயே சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் பற்றிய உண்மையான விடயங்களை அறிந்திருக்கின்றோமா? அல்லது இவ்விடயத்துடன் எம்மை அடையாளப்படுத்துவதுடன் நின்று விடுகின்றோமா" குறிப்பாக உலகமயமாக்கல் என்னும் இன்றைய நிலையில் எல்லாமே இறுதியில் பணத்தில்தான் வந்து முடிகின்றன. ஆனால் எவ்வளவு கவனத்தை நாம் இவ்விடயங்களில் காண்பிக்கின்றோம்.
•Last Updated on ••Sunday•, 06 •September• 2020 13:14••
•Read more...•
அத்தியாயம் மூன்று: நித்திராதேவியின் தழுவலில் தன்னை மறந்த காளை!
மணிவண்ணன் வீட்டை நெருங்கியபோது இரவு மணி ஒன்பதைத்தாண்டி விட்டிருந்தது. முழு நகரும் முழுநிலவின் தண்ணொளியில் குளித்துக்கொண்டிருந்தது.
"டேய் கேசவா, வீட்டை வந்து கொஞ்ச நேரம் கதைச்சுட்டுப் போயேன். அம்மா தோசை சுட்டி வைத்திருப்பா.அதையும் கொஞ்சம் சாப்பிட்டிடுப் போ"
மணிவண்ணன் இவ்விதம் கேட்கவும் கேசவனுக்கும் அது சரியென்று தோன்றியது. மணிவண்ணனின் புத்தக அலமாரியிலிருந்தும் மேலும் சில நூல்களை எடுக்கலாமென்றும் தனக்குள் எண்ணிக்கொண்டான். இதற்கிடையில் நண்பர்களிருவரும் வீட்டினுள் நுழைவதைக் கண்ட மணிவண்ணனின் அம்மா "தோசை சுட்டு சாப்பாட்டு மேசையிலை மூடி வைச்சிருக்கு. இரண்டு பேரும் எடுத்துச் சாப்பிடுங்கோ. இன்னும் தேவையென்றால் சொல்லுங்கோ. சுட்டுத்தாறன்" முன் கூடத்துக்குச் சென்று தனது சாய்வு நாற்காலியில் சாய்ந்தாள். அருகிலிருந்த மேசையில் ஏதோ படித்துக்கொண்டிருந்தாள் இந்திரா.
"ஓமம்மா.தேவையென்றால் சொல்லுறன். இல்லையென்றால் நானே சுட்டுச் சாப்பிடுறன்" என்று பதிலுக்குக் கூறியபடியே மணிவண்ணன் கேசவனை அழைத்துக்கொண்டு முன் விறாந்தையின் இடது பக்கத்திலிருந்த தனது அறைக்குள் சென்றான். அங்கு அவனுக்கென்றொரு புத்தக அலமாரியிருந்தது. நூல்கள், சஞ்சிகைகளில் வெளியாகிப் 'பைண்டு; செய்யப்பட்ட நாவல்கள் அதில் இடம் பிடித்திருந்தன.
"கேசவா, ஏதாவது குடிக்கக் கொண்டு வரட்டா?"
"எனக்குமொரு கோப்பி போட்டுக்கொண்டு வாடா மணி'
மணிவண்ணன் கோப்பிக்கு அடிமையாகிவிட்டிருந்தான். கேசவனும் அவனைப்போல் ஒரு கோப்பி பைத்தியம்தான். மணிவண்ணன் கோப்பி போட்டுக்கொண்டு வரச் சென்ற இடைவெளியைப்பாவித்து கேசவன் மணிவண்ணனின் புத்தக அலமாரியைத் துலாவத்தொடங்கினான். கல்கியில் வெளியான நாவல்கள் பல அந்த அலமாரியில் இடம் பிடித்திருந்தன. அவனுக்குப் பிடித்த ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்' , கல்கியின் 'பொன்னியின் செல்வன்' , காண்டேகரின் நாவல்கள் எனப் பல நாவல்களிருந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றைக் கேசவன் ஏற்கனவே வாசித்திருந்தான்.
•Last Updated on ••Wednesday•, 07 •October• 2020 00:51••
•Read more...•
கொரோனா ஊரடங்குச் சூழல் அனுபவங்களைப் பதிவு செய்யும் 103 தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியன் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு டிஸ்கவரி புக் பலஸ் வெளியீடாக LOCKDOWN LYRICKS என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. அத்தொகுப்பில் இக்கவிதையின் மொழிபெயர்ப்பும் இடம் பெற்றுள்ளது.
கொரோனா ஊரடகுச் சூழலால் 'டொரோண்டோ' வூட்பைன் குளக்கரையருகில் மனிதர்களின் நடமாட்டம் குறைந்த நிலையைப் பயன்படுத்தி, நரியொன்று தனக்கொரு வளையமைத்துக் குட்டிகளையீன்று வாழத்தொடங்கியதை இம்மாநகரத்து மக்கள் வியப்புடனும், அன்புடனும் பார்த்தார்கள். மான்கள் நகரின் மையத்தில் நடமாடின. அந்நரிக்குடும்பத்தின் புகைப்படத்தையே இங்குள்ள கவிதையுடன் காண்கின்றீர்கள். அதுவரை பதுங்கிக் கிடந்த மிருகங்களெல்லாம் நகரத்தின் மையத்துக்கே வரத்தொடங்கியிருந்தன. உலகின் பல பகுதிகளில் இவ்விதமான காட்சிகளைக் காண முடிந்தது. கொரோனா என்றால் எனக்கு அந்த நரிக்குடும்பமும் நினைவுக்கு வரும். அக்குடும்பம் ஓரடையாளம். இக்கவிதையிலும் அந்நரிக்குடும்பத்தைப் பதிவு செய்துள்ளேன்.
கவிதை: கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்!
- வ.ந.கிரிதரன் -
மாநகர் துஞ்சும் நள்ளிரவில் வெளியே வந்தேன். நுண்கிருமியின் தாக்கம். சுருண்டு கிடந்தது மாநகர் உந்துருளியில் நகர்வலம் வந்தாலென்ன? வந்தேன். வாகனவெள்ளம் பாயும் நதிகள் வற்றாதவை வற்றிக்கிடந்தன. கட்டடக்காட்டில் இருள் கவிந்து கிடந்தது. நிசப்தம் நிலவியது நகரெங்கும்.
•Last Updated on ••Monday•, 31 •August• 2020 02:21••
•Read more...•
இலங்கையின் பயிற்றுவிக்கப்பட்ட முதலாவது பெண் கட்டடக்கலைஞர் மின்னட் டி சில்வா உலகின் கவனத்துக்குள்ளாகிய முக்கியமான பெண் கட்டடக்கலைஞர். சுதந்திரமடைந்த இலங்கையின் கட்டடக்கலையின் முன்னோடியாகவும் கருதப்படுபவர். 1948இல் முடிக்குரிய பிரித்தானிய கட்டடக்கலை நிறுவனத்தின் (Royal Institute of British Architects - RIBA)(தோழராகத் (Associate) தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஆசிய நாட்டுப் பெண் என்னும் பெருமையும் இவருக்குண்டு. உலகக் கட்டடக்கலைத் துறையில் இவரது முன்னோடிப்பங்களிப்பு 'வெப்பமண்டலப் பிரதேச நவீனத்துவம்' ('regional modernism for the tropics') என்னும் கட்டடக்கலைப்போக்கிலாகும்.
பெப்ருவரி 1, 1918இல் கண்டியில் பெளத்தச் சிங்களத் தந்தைக்கும் (ஜோர்ஜ் ஈ.டி,சில்வா), கிறித்தவ பேர்கர் தாய்க்கும் (ஆக்னெஸ் நெல்) பிறந்த கலப்பினக் குழந்தை இவர். தந்தையார் பிரபல்யமான கண்டிய அரசியல்வாதி. இலங்கைத் தேசியக் காங்கிரஸின் தலைவராகவும், அரசில் உடல்நலத்துறை அமைச்சராகவும் விளங்கியவர். இவரது குடும்பத்தில் மூன்று குழந்தைகள். மின்னட் டி சில்வாவே கடைசிக்குழந்தை. இவரது சகோதரி அனில் டி சில்வா ஒரு கலை விமர்சகரும் , வரலாற்றாய்வாளராகவும் விளங்கியவர். சகோதரரான ஃப்ரெடெரிக் டி சில்வா வழக்கறிஞர். கண்டியின் முதல்வராகவும் விளங்கியவர். பின்னர் இலங்கைப்பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த அவர் பிரான்சுக்கான இலங்கைத்தூதுவராகவும் பின்னாளில் பதவி வகித்தார்.
மின்னட் டி சில்வாவின் முக்கியமான பங்களிப்புகளாகக் கட்டடக்கலைத்துறைப்பங்களிப்பு, கட்டடக்கலை வரலாற்று ஆய்வுப்பங்களிப்பு, இதழியற் பங்களிப்பு , சமூக, அரசியற் பங்களிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இங்கிலாந்தில் புனித மேரிக் கல்லூரியில் படிப்பை முடித்துக்கொண்டு திரும்பிய மின்னட் டி சில்வா கொழும்பில் கட்டடக்கலைத்துறையில் பயிற்சியைப்பெற முடியாததால் , பம்பாயிலுள்ள 'Sir Jamsetjee Jeejebhoy' கலைக்கல்லூரியில் தன் கல்வியைத் தொடர்வதற்காகச் சென்றார். ஆனால் அவர் மெட்ரிகுலேசன் சித்தியடையாததால் அவர் ஆரம்பத்தில் பம்பாயை மையமாகக்கொண்டியங்கிய மிஸ்ட்ரி & பெட்வர் (Mistri and Bhedwar) என்னும் நிறுவனத்தில் கலைத்துறையில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அங்கு பயிற்சி பெறுகையில் பெரின் மிஸ்ட்ரி (Perin Mistry) மற்றும் அவரது நண்பரான மினூவுடன் (Minoo) நட்பையேற்படுத்தி கட்டடக்கலையினைப் போதிக்கும் கல்வி நிறுவனமொன்றில் பிரத்தியேக வகுப்புகளைக் கட்டடக்கலைத்துறையிலெடுத்தார். இதன் பின்னரே 'Sir Jamsetjee Jeejebhoy' கலைக்கல்லூரியில் தன் கல்வியைத்தொடர்ந்தார்.
•Last Updated on ••Friday•, 28 •August• 2020 10:51••
•Read more...•
என் வாழ்க்கையைச் சிறிது சிந்தித்துப்பார்த்தால் என் வாழ்வின் பெரும்பகுதி மாநகரங்களில்தாம் கழிந்திருக்கின்றது. கொழும்பு, நியூயார்க், 'டொராண்டோ' இவற்றுடன் வடக்கின் யாழ்ப்பாணம். யாழ்ப்பாணம் மாநகரில்லாவிட்டாலும், வடக்கின் முக்கிய நகர். என் நியூயார்க் மாநகர வாழ்க்கையை என் நாவலான 'குடிவரவாளன்' நாவலில் முழுமையாகப்பதிவு செய்துள்ளேன். 'அமெரிக்கா' சிறு நாவலும் நியூயோர்க் நகரின் இன்னுமோர் இருண்ட பக்கத்தைக் காட்டி நிற்கிறது. 'டொரோண்டோ' நகர வாழ்க்கையை நாவல்களில் பெரிதாகப்பதிவு செய்யவில்லையென்றாலும், சிறுகதைகள் பலவற்றில் பதிவு செய்துள்ளேன். 'டொரோண்டோ' மாநகரின் மனிதர்கள் பலவற்றை, பகுதிகள் பலவற்றை அச்சிறுகதைகளில் நீங்கள் காணலாம்.
எப்பொழுதுமே பெருநகரத்து மானுடர்தம் வாழ்க்கையை, அவர்கள்மேல் அம்மாநகர்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை. அவற்றை அவர்கள் எதிர்கொள்ளும் விதங்களை மையமாகக்கொண்ட புனைகதைகளை வாசிப்பதில் எனக்குப்பெருவிருப்பு. ஃபியதோர் தஸ்தயேவ்ஸ்கியின் 'குற்றமும், தண்டனையும்' அத்தகையதொரு நாவல். ருஷ்ய மாநகரமான புனித பீட்டர்ஸ்பேர்க் மாந்தர்களை, அம்மாந்தர்களின் மேல் அம்மாநகர் ஏற்படுத்தும் தாக்கங்களை விபரிக்கும் நாவலது.
இவ்விதமாக என்னைக் கவர்ந்த இன்னுமொரு மாநகர் சென்னை. ஆரம்பத்தில் வெகுசன இதழ்களினூடு வெளியான புனைகதைகளில் ஊறிக்கிடந்தவேளை அவற்றினூடு என்னை ஆட்கொண்ட நகர் அது. முதலில் அம்மாநகரின் என்னை ஆட்கொண்ட பகுதியாக சென்னை மெரினாக் கடற்கரையையே குறிப்பிடுவேன். அதற்குக் காரணம் எழுத்தாளர் மணியன். அதற்கு முக்கிய காரணம் அவரது அதிகமான நாவல்களில் சென்னை மெரினாக் கடற்கரையிருக்கும். சென்னையின் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய பொழுதுபோக்கு இடமே அதுதான். மணியனின் 'காதலித்தால் போதுமா' வில் மெரீனாவில் சுண்டல் போன்ற உணவு வகைகளை விற்று வாழ்வைத்தக்க வைத்துக்கொள்ளும் மானுடர்களைப்பற்றி விபரிக்கப்பட்டிருக்கும். 'உண்மை சொல்ல வேண்டும்' நாவலில் காதலர்கள் சந்திக்குமிடமாக விபரிக்கப்பட்டிருக்கும், 'காதலித்தால் போதுமா' நாவலையும் இவ்வகைக்குள்ளும் அடக்கலாம்.
•Last Updated on ••Sunday•, 23 •August• 2020 19:43••
•Read more...•
அத்தியாயம் இரண்டு: காதல் கடிதம்...
அன்று மாலை பாடசாலை விட்டு வீடுதிரும்பிக்கொண்டிருக்கையில் நண்பன் கேசவன் கேட்டான்
"என்ன மணி இன்று முழுக்க நானும் கவனித்துக்கொண்டுதானிருக்கின்றன் உன்ர முகமே சரியாயில்லையே. ஏதாவது பிரச்சினையா? அப்படியென்னடா பிரச்சினை?"
கேசவன் மணிவண்ணனின் நெருங்கிய நண்பர்களிலொருவன். அவன் இன்னுமொரு விடயத்திலும் ஏனையவர்களிடமிருந்து வேறுபட்டிருந்தான். அரசியலில் அதிக ஈடுபாடு மிக்கவனாகவிருந்த அதே சமயம் மார்க்சியத்திலும் அந்த வயதிலேயே அதிக நாட்டம் மிக்கவனாகவுமிருந்தான். மணிவண்ணனைப்பொறுத்தவரையில் தமிழரசுக் கட்சியினரின் உணர்ச்சி அரசியலில் அதிக ஈடுபாடு மிக்கவன். அவனுக்கு லெனின் , மார்க்ஸ் என்று எதுவுமே தெரியாது. ஆனால் அண்மைக்காலமாக கேசவன் அவனுக்கு இலகுவான மொழியில் மார்க்சியம் பற்றிப்போதித்துக்கொண்டு வந்தான். அதன் விளைவாக மணிவண்ணனுக்கும் மார்க்சிய நூல்களை அதிகம் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டிருந்தது. அவனது ஆர்வத்தைப்புரிந்துகொண்டு கேசவனின் அவனுக்கு மார்க்சிக் கோர்க்கியின் 'தாய்' நாவலைக்கொண்டு வந்து கொடுத்திருந்தான். அதை மணிவண்ணனும் வாசிக்கத்தொடங்கியிருந்தான். அதே சமயம் அவனுடனான உரையாடல்களின்போது மார்க்சியம் பற்றிய தனது புரிதல்களைக் கேசவன் அவனுக்கு எளிய மொழியில் விளங்கப்படுத்தவும் தொடங்கியிருந்தான். இருவருக்குமிடையில் தமிழரசுக் கட்சியினரின், ஏனைய தமிழ், சிங்கள அரசியல்வாதிகளின் உணர்ச்சி அரசியல் பற்றி சில சமயங்களில் நட்புரீதியிலான மோதல்களும் ஏற்படாமலில்லை.
அவனிடம் மணிவண்ணன் பொதுவாக எதனையும் மறைப்பதில்லை. ஏதாவது பிரச்சினையா என்று கேசவன் கேட்கவுமே ஏன் அவனிடமே தன் நிலையினை எடுத்துக்கூறி ஆலோசனை கேட்கக்கூடாதென்று தோன்றியது மணிவண்ணனுக்கு. கேசவனின் வீடு பிறவுண் வீதியிலிருந்தது. ,மணிவண்ணனின் வீடு கஸ்தூரியார் வீதியில் பாடசாலைகண்மையிலிருந்தது.
•Last Updated on ••Wednesday•, 07 •October• 2020 00:51••
•Read more...•
எழுத்தாளர் அருணகிரி சங்கரன்கோவில் 'அருணகிரி' என்னும் பெயரை வடமொழியில் வைத்திருப்பவர் இலங்கைத்தமிழர்கள் வடமொழியில் அதிகம் எழுதுகின்றார் என்று கவலைப்பட்டிருக்கின்றார். அக்கவலையை நம்மூர் எழுத்தாளர் வி.ரி.இளங்கோவனுக்குக் கூறியிருக்கின்றார். அவர் என்ன காரணமொ தெரியவில்லை பதிவுகள் கிரிதரனை அவருக்கு அறிமுகப்படுத்தி என் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துள்ளார். அருணகிரி எனக்கு எழுதி வடமொழி ஆதிக்கம் தமிழில் நிலவுவதையிட்டுக் கவலைப்பட்டிருந்தார். நான் பதிலுக்கு நான் தனித்தமிழ் ஆதரவாளனல்லன் என்று குறிப்பிட்டுப் பதில் அனுப்பியிருந்தேன். தற்போது அவர் அதற்குப் பதில் எழுதியிருக்கின்றார். அதில் அவர் பின்வருமாறு எழுதியிருந்தார்:
"கனடா பதிவுகள்.காம் திரு கிரிதரன் அவர்கள் எனக்கு எழுதி இருக்கின்ற கடிதத்தில் நான் செய்து இருக்கின்ற திருத்தங்கள்....
நான் தனித்தமிழ் ஆதரவாளனல்லன். -ஆதரவாளன் அல்லன்.
தவறேதுமில்லை ..........தவறு ஏதும் இல்லை.
என்பதென் கருத்து. -என்பது என் கருத்து
வளர்ந்திருக்கின்றது. - வளர்ந்து இருக்கின்றது.
மரபுமுண்டு.......மரபும் உண்டு..."
இவ்விதம் என் அவரது கடிதத்துக்கான பதிலில் நான் சேர்த்தெழுதியிருந்த சொற்களையெல்லாம் பிரித்துப் பிரித்து எழுதி இறுதியில் "தமிழில் இரண்டு, மூன்று, நான்கு சொற்களைச் சேர்த்து எழுதுவது தவறு." என்றும் கூறியிருக்கின்றார். இவருக்கு நான் கூறுவது இதனைத்தான். யார் உங்களுக்குக் கூறியது சொற்களைச் சேர்த்தெழுதுவது தவறென்று (இதனை அவர் 'தவறு + என்று' வாசிக்கவும். :-) ) நான் சில பந்திகளைக் கீழே தருகின்றேன். வாசித்துப்பாருங்கள்:
•Last Updated on ••Wednesday•, 19 •August• 2020 09:53••
•Read more...•
அண்மையில் திரு. அருணகிரி சங்கரன்கோவில் என்பவரிடமிருந்து கடிதமொன்று வந்தது. அதில் அவர் தனித்தமிழில் எழுதுவதன் அவசியம் பற்றி எழுதியிருந்தார். அவரது கடிதத்தையும் அதற்கான எனது பதிலையும் இங்கு நான் பதிவு செய்கின்றேன்,
On Mon, Aug 17, 2020 at 5:44 AM Arunagiri Sankarankovil <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
> wrote:
மதிப்பிற்கு உரிய நவரத்தினம் கிரிதரன் அவர்களுக்கு,
வணக்கம். இன்று காலை இந்திய நேரம் 5.30 மணி அளவில், பிரான்ஸ் நாட்டில் வசிக்கின்ற ஈழத்தமிழ் எழுத்தாளர் வி.ரி. இளங்கோவன் அவர்களுடன் நான் நிகழ்த்திய உரையாடலை, இத்துடன் தங்கள் பார்வைக்கு இணைத்து உள்ளேன். என்னுடைய முகநூல் பதிவு..... இன்று காலையில் வாட்ஸ் அப்பில் ஒரு காணொளி பகிர்ந்தேன். உடனே, எழுத்தாளர் வி.ரி. இளங்கோவன், பதிவுகள்.காம் செய்திகளையும் பாருங்கள் என குறிப்பு அனுப்பினார். அவரை அழைத்தேன். இன்னமும் விழித்து இருக்கின்றீர்களா? இப்போது ஃபிரான்ஸ் நாட்டில் மணி என்ன ஆகின்றது? என்று கேட்டேன்.
•Last Updated on ••Monday•, 17 •August• 2020 19:28••
•Read more...•
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க உப ஜனாதிபதி வேட்பாளர்!
ஜனநாயகக் கட்சியினரின் உப ஜனாதிபதி வேட்பாளராக இந்திய, ஜமேய்க்க வம்சாவழியில் வந்த அமெரிக்கரான கமலா ஹாரிஸ் (kamala Harris) தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். அவரது முழுப்பெயர் கமலாதேவி ஹாரிஸ்.
அரசியலுக்கு அப்பால், பெண்ணாக, சிறுபான்மையினச் சமூகத்திலொருவராக அவரை நோக்குகின்றேன். அவ்வகையில் அமெரிக்க உப ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் முதலாவது இந்திய, ஜமேய்க்க வம்சாவழி அமெரிக்கராகக் கமலா ஹாரிஸ் இருக்கின்றார். அவ்வகையில் அவரது தெரிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
எவ்விதம் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தெரிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததோ அவ்விதமே உபஜனாதிபதிப்பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸின் தெரிவும் முக்கியத்துவம் மிக்கது.
எவ்விதம் அமெரிக்கர்கள் பராக் ஒபாமா மேல் வீசப்பட்ட அவதூறுகளையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு அவரைப் பதவியில் அமர்த்தினார்களோ, அவ்விதமே இம்முறையும் கமலா ஹாரிஸைப் பதவியில் அமர்த்துவார்கள் என்று நம்புவோம்.
பராக் ஒபாமா ஜனாதிபதியாகவிருந்தபோது உப ஜனாதிபாதியாக இருந்தவர் ஜோ பைடென். இப்போது ஜோ பைடென் ஜனாதிபதி வேட்பாளராகப்போட்டியிடுகையில் உப ஜனாதிபதியாக இருப்பவர் கமலா ஹாரிஸ். இரு வரலாற்றுச் சாதனைகளுடனும் ஜோ பைடென் பெயர் பின்னிப்பிணைந்துள்ளது.
•Last Updated on ••Sunday•, 16 •August• 2020 01:03••
•Read more...•
அத்தியாயம் ஒன்று: அதிகாலையில் பூத்த மலர்!
நகரத்து வானமிருண்டு கிடந்தது. தான் வசிக்கும் தொடர்மாடியின் பல்கணியிலிருந்து வழக்கம்போல் நகரத்து வானை சாய்வு நாற்காலியிலிருந்து நோக்கிக்கொண்டிருந்தான் மணிவண்ணன். அவனுக்கு மிகவும் பிடித்தமான விடயங்களில் இயற்கையை இரசித்தல், குறிப்பாக இரவு வானை இரசித்தல் அடங்கும். அது அவனது சிறுவயதிலிருந்து அவனுக்கு ஏற்பட்ட பழக்கங்களிலொன்று. என்று முதன் முதலாக 'கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே! ' ('டுவிங்கிள்! டுவிங்கிள்! லிட்டில் ஸ்டார்' ) குழந்தைப்பாடலைக் கேட்டானோ அன்றிலிருந்து அவனை ஆட்கொண்ட விருப்புகளிலொன்று இவ்விருப்பு.
"கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே! நீ என்னவென்று நான் வியப்புறுகின்றேன். அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது, வானின் வைரம் போன்று விளங்குகின்றாய்."
அவனுக்கு 'அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது' என்னும் வரி மிகவும் விருப்பமானது. அவ்வரி அவனது கற்பனையை எப்பொழுதும் சிறகடிக்க வைக்கும் வரிகளிலொன்று. அங்கே உயரத்தில் விரிந்து , உயர்ந்து , பரந்து கிடக்கும் ஆகாயத்தில்தான் எத்தனை சுடர்கள்! எத்தனை நட்சத்திரக் கூட்டங்கள்! எத்தனை எத்தனை கருந்துளைகள்! எத்தனை பிரபஞ்சங்கள்! நினைக்கவே முடியாத அளவுக்கு விரிந்த பிரபஞ்சம்! அவனுக்குப் பல்விதக் கற்பனைகளை, கேள்விகளை அள்ளித்தருவது வழக்கம். அக்கேள்விகள் அவனது சிந்தனைக் குதிரைகளைத் தட்டிப் பயணிக்க வைக்கும் ஆற்றல் மிக்கவை. அச்சிந்தனைக் குதிரைப்பயணங்களிலுள்ள இன்பம் அவனுக்கு வேறெந்தப் பயணத்திலும் இருப்பதில்லை. முடிவற்று விரியும் சிந்தனைக்குதிரைகளின் பயணங்களுக்குத் தாம் முடிவேது? முப்பரிமாணச்ச்சிறைக்குள் வளையவரும் மானுட உலகின் பரிமாணங்களை மீறிய பரிமாணங்களை உள்ளடக்கியதாகப் புதிருடன் அவனுக்கு விரிந்து கிடக்கும் இரவு வானும், பிரபஞ்சமும், கொட்டிக்கிடக்கும் நட்சத்திரங்களும் தெரியும். 'டொரோண்டோ' நகரத்து வான் பூமத்திய ரேகைக்கு அருகிலிருக்கும் இரவு வானைப்போல் நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானல்ல. அதற்கு நகரிலிருந்து வெளியே செல்ல வேண்டும். நகரத்து ஒளிமாசிலிருந்து வெளியேற வேண்டும். இருந்தாலும் இருண்டு கிடக்கும் நகரத்து வானையும் கூர்ந்து நோக்கத்தொடங்கினால் ஒன்று, இரண்டு , மூன்று . .என்று இருட்டுக்குப் பழகிய கண்களுக்குத் தெரியத்தொடங்கிவிடும். அது போதும் அவனுக்கு.
•Last Updated on ••Wednesday•, 02 •September• 2020 12:11••
•Read more...•
18 August 2020 - London Time: 6.30 pm to 8.00 pm Poetry Translation Centre (London) நடாத்தும் கவிஞர் அனாரின் கவிதை மொழிபெயர்ப்பு நிகழ்வு நடைபெறும். ஆங்கிலேயர் மத்தியில் எமது ஈழத்துக் கவிதைகள் பரவ இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதில் நாம் அனைவரும் பங்குகொள்வது விரும்பத்தக்கது. கலந்துகொள்ள விரும்புவர்கள் தயவுசெய்து உடன் அறியத்தாருங்கள். சிறிய அன்பளிப்பு செய்ய வேண்டும். அதனை நான் செய்கிறேன்.
•Last Updated on ••Sunday•, 09 •August• 2020 01:49••
•Read more...•
'அலை' சஞ்சிகையின் ஏழாவது இதழில் (2.1.77) 'பிராய்டின் பாலியல் நோக்கும் மாக்ஸிசமும்' என்னுமொரு ஒரு பக்கக் கட்டுரையை எழுத்தாளர் ஞானி எழுதியுள்ளார். சிறு கட்டுரையானாலும் நல்லதொரு கட்டுரை, ஏனென்றால் நவகால மார்க்சிய அறிஞர்களிலொருவரான ஹேபேட் மார்குஸ் என்பவரின் மார்க்சியச் சிந்தனைகளின் ஒரு பகுதியை அறிமுகம் செய்வதால் நல்லதொரு கட்டுரை. இவ்வறிஞர் செய்தது என்ன? சிக்மண்ட் பிராய்டின் பாலியல் நோக்கு பற்றிய சிந்தனைகளை மார்க்சியத்துடன் இணைத்துப்பார்த்து, இவ்விரு கோட்பாடுகளின் அடிப்படையில் அவர் ஒரு முடிவுக்கு வருகின்றார் என்பதைக் கட்டுரை விபரிக்கின்றது. இதைச் சுருக்கமாகப் பின்வருமாறு கூறலாம்:
மார்க்சிய, பிராய்டிச சிந்தனைகளின் அடிப்படையில் இவர் இரண்டுக்குமிடையிலொரு தொடர்பினை ஏற்படுத்துகின்றார். இவரது கருத்துப்படி மனிதர் இரண்டு விதத்தாக்கங்களுக்கு ஆட்பட்டவர்கள். இன்பியற் போக்கு (Pleasure Principle) , யதார்த்தப்போக்கு (Reality Principle) ஆகியவையே இவை. ஆதியில் இன்பியற் போக்கினால் ஆட்பட்டிருந்த மனிதரை பின்னர் ஏற்பட்ட பொருளியற் சுரண்டல் சமுதாய அமைப்புகள் அந்நிலையிலிருந்து நீக்கி விட்டன. மனிதரை இன்பியற்போக்கிலிருந்து நீக்கி, யதார்த்தப்போக்குக்குள் பொருளியற் சுரண்டல் சமுதாய அமைப்புகள் தள்ளி விட்டன. மீண்டும் மனிதரை முன்பிருந்த இன்பியற் நிலைக்குக் கொண்டு செல்ல மீண்டும். மனிதரை வர்க்கபேதமற்ற சமுதாய நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு மார்க்சியம் உதவுகின்றது. இவைதாம் மார்க்சிய அறிஞர் ஹேபேட் மார்குஸின் சிந்தனைப்போக்கு. இதுதான் ஞானியின் கட்டுரையின் சாரமும் கூட.
•Last Updated on ••Sunday•, 09 •August• 2020 01:05••
•Read more...•
'டொரொண்டோ'வில் தொண்ணூறு வயதினைக் கடந்த நிலையிலோர் எழுத்தாளர் அமைதியாக வாழ்ந்து வருகின்றார். இவர் அதிகமாக எழுதியவரல்லர். கட்டுரைகள் , சிறுகதைகள் எனக் குறைந்த அளவிலேயே எழுதியிருக்கின்றார். ஆனால் இவர் சமூக, அரசியல் செயற்பாட்டாளராக வாழ்ந்தவர். நாற்பதுகளின் இறுதியில் இடதுசாரி அரசியலில் தீவிர தொண்டனாகச் செயற்பட்டவர் இவர் ஓர் ஆசிரியராகத் தன் பணியினைச் செய்தவர். இவரை மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா மல்லிகையின் அட்டைப்படமாகப்போட்டுக் கெளரவித்துள்ளார். இவர்தான் எழுத்தாளர் தி.இராஜகோபால்.
எழுத்தாளர் டொமினிக் ஜீவா இராஜகோபால் 'மாஸ்டர்' மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர். அவ்விதமே அவர் இராஜகோபால் அவர்களைக் குறிப்பிடுகின்றார். அவர் தன் நினைவுக் குறிப்புகளிலும் இவரைப்பற்றி நினைவு கூர்ந்திருக்கின்றார். 3.3.1967 சுதந்திரனில் வெளியான இவரது 'எங்கே போவேன்?' என்னும் சிறுகதை. சுதந்திரன் நடாத்திய பொங்கல் சிறுகதைப்போட்டியில் பாராட்டுப்பெற்ற சிறுகதைகளிலொன்றென்பதும் குறிப்பிடத்தக்கது.
உண்மையில் மேற்படி அட்டைப்படக் கட்டுரையினை ஆசிரியர் டொமினிக் ஜீவாவே எழுதியுள்ளார். அதிலவர் தான் முதன் முதலில் பூபாலசிங்கம் புத்தகசாலையிலேயே இராஜகோபால் அவர்களைக் கண்டதாகவும், பூபாலசிங்கம் அவர்களே அவரைத் தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இவை தவிர அவர் மேலும் சில முக்கியமான தகவல்களையும் அக்கட்டுரையில் பகிர்ந்துள்ளார். அவையாவன:
•Last Updated on ••Monday•, 03 •August• 2020 13:07••
•Read more...•
கடந்த இரு நாட்களாக பதிவிடும் மனநிலையில்லை. இதற்குக் காரணம் ஓவியர் நகுலேஸ்வரி (இயற்பெயர் மீனகுமாரி நகுலன்) அவர்களின் மறைவுதான், இவர் என் அம்மாவின் இளைய சகோதரியும் , முன்னாள் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையுமான அமரர் நகுலேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின் புதல்வி. குழந்தைப்பருவத்திலிருந்து நான் அறிந்த, நான் நன்கு பழகிய ஒருவர். எனக்கு அக்கா முறையானவர். தனது அறுபத்து நான்காவது வயதில் மாரடைப்பினால் மறைந்துவிட்டார். சிறந்த ஓவியர். இவரது ஓவியங்கள் சிலவற்றை இங்கு சென்ற வருடம் பதிவு செய்திருந்தேன். உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே இவர் இவ்விதம் ஓவியங்கள் வரைவது தெரியும். அவரும் அத்துடன் திருப்தியடைந்தவராகவேயிருந்தார். இவரை இத்துறையில் மேலும் ஊக்குவிப்பதற்காகவே பதிவுகள் இணைய இதழிலும், முகநூலிலும் இவரது ஓவியங்கள் சிலவற்றைப் பதிவு செய்திருந்தேன். அது அவருக்கு மகிழ்ச்சியைத்தந்தது. தொடர்ந்து இத்துறையில் அதிகமாக ஈடுபடுவாரென்றெண்ணியிருந்தேன். அது இனி நடைபெறப்போவதில்லை. அவரது இறுதிச் சடங்கும் அவரது விருப்புக்கேற்ப குடும்பத்தவர்கள், உறவினர்களுக்கு மட்டுமுரிய அந்தரங்க நிகழ்வாக அமைந்து விட்டது.
இவரது மறைவு குழந்தைப் பருவத்து நினைவுகள் பலவற்றை நினைவூட்டிவிட்டது. பாடசாலை விடுமுறை நாட்களில் சின்னம்மாவின் குழந்தைகளுடன் ஆச்சி வவுனியாவுக்கு வந்து விடுவார். அப்பொழுது நாம் வவுனியாவில் வசித்து வந்தோம். இல்லாவிட்டால் நாம் யாழ்ப்பாணத்துக்குச் சென்று விடுவோம். அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணத்தில் பார்த்த திரைப்படங்களின் கதைகளைச் சுவாரசியமாக எங்களுக்குக் கூறுவார். நாங்கள் சுற்றியிருந்து ஆவலுடன் கேட்போம். அவ்விதம் கூறிய திரைப்படங்களிலொன்று வாத்தியாரின் 'கன்னித்தாய்'. அக்கா என்னும் உரிமையுடன் 'டேய்..' என்று செல்லமாக அழைப்பார். அந்த அழைப்பை இனி நான் கேட்கப்போவதில்லை.
•Last Updated on ••Sunday•, 09 •August• 2020 01:47••
•Read more...•
நண்பர் மோகன் அருளானந்தம் மட்டக்களைப்பைச் சேர்ந்தவர். மட்டக்களப்புப் புனித மைக்கல் கல்லூரி மாணவர். கட்டடக்கலைஞர். என்னுடன் படித்தவர். பல வருடங்களுக்குப் பின்னர் அவருடன் உரையாடும் சந்தர்ப்பத்தை சமூக ஊடகமான 'வாட்ஸ்அப்' ஏற்படுத்தித்தந்தது. கட்டடக்கலை இறுதியாண்டில் இவர் என் அறை நண்பராகவுமிருந்தவர். தற்போது ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்.
மோகன் அருளானந்தமை நினைத்ததும் எனக்கு இரு மேனாட்டு நாவலாசிரியர்கள் நினைவுக்கு வருவார்கள். ஒருவர் அல்பேர்ட்டோ மொறாவியோ. அடுத்தவர் அலிஸ்டர் மக்லீன். அல்பேர்ட்டோ மொறாவியோ புகழ்பெற்ற இத்தாலிய நாவலாசிரியர். இவரது நாவல்களிலொன்றான 'இரு பெண்கள்' (Two Women) இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் ரோமில் வாழ்ந்துகொண்டிருந்த ஓரு விதவைப்பெண்ணும் , அவரது இரு பதின்ம வயதுப்பெண்களும் யுத்தத்தினால் எதிர்கொள்ளும் சவால்களை, பாலியல் வன்முறைகளை (நாசிகள் & நேசப்படைகளிடமிருந்து) விபரிக்கும். திரைப்படமாக வெளியானது . அதில் நடிகை சோபியா லாரென் நடித்திருந்தார். அதற்காக அவருக்குச் சிறந்த நடிகையென்ற ஆஸ்கார் விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. அடுத்தவர் அலிஸ்டர் மக்லீன் 'ஹன்ஸ் ஓஃப் நவரோன்' (The Guns of Navarone,) போன்ற சாகச நாவல்களை எழுதிய ஸ்கொட்டிஸ் எழுத்தாளர். இவர்கள் இருவரின் நாவலகளையே அதிகமாக வாசித்துக்கொண்டிருப்பார் மோகன். இவரை நினைத்ததும் இந்நாவலாசிரியர்களும் கூடவே நினைவுக்கு வருவார்கள்.
•Last Updated on ••Monday•, 07 •September• 2020 22:09••
•Read more...•
கறுப்பு ஜூலையில் நடைபெற்ற வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையில் இரண்டாவது தடவையாகத் தமிழ்க் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் ஜூலை 27. இன்றுதான் மருத்துவர் இராஜசுந்தரம் படுகொலை செய்யப்பட்டார். இத்தருணத்தில் அவருடன் பழகிய நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன். குறுகிய காலமே பழகியிருந்தாலும் என்மீது மறக்க முடியாத தடங்களை பதித்த இலட்சிய புருசர் அவர். அவருடன் ஜீப்பில் நாவலர் பண்ணைக்குச் செல்கையில், அவரது இருப்பிடத்தில் , இறம்பைக்குள அநாதைகள் விடுதியில் நடந்த 'தமிழீழமும், சமயமும்' கருத்தரங்கில் உரையாடிய தருணங்களை நினைத்துப் பார்க்கின்றேன். அவரோர் இலட்சிய புருசர். அயராது அகதிகளின் புனர்வாழ்வுக்காக உழைத்தவர்.
மருத்துவர் இராஜசுந்தரம் 23.03.1943 சோமசுந்தரம் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப்பிறந்தவர். பெற்றோர் ஆசிரியர்கள். இவர் ஆரம்பத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் படித்திருக்கின்றார். அப்பொழுது இளம் விவசாயிகள் சங்கத்தின் செயலாளராகவிருந்திருக்கின்றார். பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்றார். அப்பொழுது சாரணர் படைத்தலைவராகவிருந்திருக்கின்றார். 1963இல் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் ஒரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர் (ஆர்.எம்.பி). மனைவி சாந்தி காராளசிங்கம் மருத்துவர் (எம்.பி.பி.எஸ்). இவர் தனது மருத்துவக் கல்வி முடிந்ததும் லுனுகல, புசல்லாவ ஆகிய இடங்களிலுள்ள மருத்துவ நிலையங்களில் பணியாற்றினார். தோட்டத்தொழிலாளர்களின் உடலாரோக்கியத்தைப் பேணுவதில் கவனம் செலுத்தினார். அக்காலகட்டத்தில் இந்தியத் தொழிலாளர் பேரவையில் அங்கத்தினராகவும் விளங்கியிருக்கின்றார். காந்தியம் அமைப்பில் இணைந்து பணியாற்றுவதற்கு முன்னரே அவர் மலையக மக்களுடன் இணைந்து பணிபுரிந்து வாழ்ந்திருக்கின்றார், அவர்கள்தம் நல்வாழ்வில் அக்கறை காட்டியுள்ளார் என்பதை அறிய முடிகின்றது.
•Last Updated on ••Tuesday•, 28 •July• 2020 00:00••
•Read more...•
எண்ணிம ஆவணகம் /நூலகம் (https://archive.org) இணையத்திலுள்ள இணையத்தளங்களையெல்லாம் ஆவணப்படுத்தி வருகின்றது. நீங்கள் பதிவு செய்யாவிட்டாலும் கூட காலப்போக்கில் அவை உங்கள் தளங்களைக் கண்டு பிடித்து ஆவணப்படுத்திவிடும். நீங்கள் இத்தளத்துக்குச் சென்று உங்கள் தளத்தைத் தேடிப்பாருங்கள், காணக்கிடைக்காவிட்டால், அத்தளத்தில் உங்களுக்கான கணக்கொன்றை உருவாக்கி உங்கள் இணையத்தளத்தினைப் பதிவு செய்துகொள்ளுங்கள். ஒருவேளை நாளை உங்கள் தளம் இயங்காது போனால் கூட இவ்வெண்ணிம ஆவணகத்தில் அத் தளம் சேகரிக்கப்பட்டுக்கிடக்கும்.
மேலும் இங்கு கணக்கு உங்களுக்கு இருந்தால் உங்கள் படைப்புகளை மின்னூல்களாக்கி அங்கு சேகரித்துக்கொள்ளலாம். இது இலவசமாகத் தனது சேவையை வழங்கி வருகின்றது. உலகின் பல்வேறு மொழிகளிலுமுள்ள படைப்புகள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளதைக் காண முடியும்.
இங்கு நீங்கள் உங்களது இணையத்தளம், வீடியோ, ஆடியோ, இமேஜ், ஷாவ்ட்ஃபெயர் என்பவற்றை ஆவணப்படுத்த முடியும். எண்ணிம ஆவணகத்தின் இணையத்தள முகவரி: https://archive.org/
•Last Updated on ••Saturday•, 18 •July• 2020 21:31••
•Read more...•
இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த முக்கியமான பெண் ஆளுமைகளிலொருவரான பத்மா சோமகாந்தன் அவர்கள் நேற்று மறைந்த செய்தியினை அச்சூடகங்கள், சமூக ஊடகங்கள் , எண்ணிம ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். வருந்தினேன். ஐம்பதுகளின் ஆரம்பத்தில் சுதந்திரனில் புதுமைப்பிரியை என்னும் பெயரில் சிறுகதைப்போட்டியில் முதற் பரிசினைப் பெற்றதன் மூலம் தன் பக்கம் இலக்கிய உலகின் கவனத்தைத்திருப்பியவர். புனைவு, அபுனைவு என்னும் பிரிவுகளில் பல நூல்கள் இவரது படைப்புகளைத்தாங்கி வெளியாகியுள்ளன.
இவர் தன் கணவர் எழுத்தாளர் ஈழத்துச் சோமுவுடன் (சோமகாந்தன்) கனடாவுக்கு வருகை தந்தபோது அவர்கள் தங்கியிருந்த மிஸ்ஸிசாகா நகருக்கு எழுத்தாளர் கடல்புத்திரனுடன் சென்று சந்தித்தேன். சுமார் இரு மணி நேரம் இருவருடனும் பல்வேறு விடயங்களைப்பற்றிக் கலந்துரையாடிவிட்டுத் திரும்பினோம். அவர்களுடன் உரையாடியதை ஒலிப்பதிவு செய்திருந்தேன். ஆனால் அவ்வுரையாடல் ஒழுங்காங்கப் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. ஆழமான கிணறொன்றுக்குள் இருந்து பேசினால் எப்படியிருக்குமோ அப்படி ஒலிக்கும் நேர்காணலாக அமைந்து விட்டது. இடையில் பல இடங்கள் விடுபட்டும்போய்விட்டன. ஒலிப்பதிவுக் கருவியின் தவறாகவிருக்க வேண்டும். இருந்தும் அவர்கள் குரல்களைப் பதிவு செய்துள்ள ஒலிநாடாக்களை இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன்.
சோமகாந்தன் தன் எழுத்துலக அனுபவங்களை , தான் எழுதிய பல்வகை நூலுருப்பெற்ற படைப்புகளைப்பற்றி (இலக்கிய நினைவலைகள், இலங்கைத்தமிழர்தம் அரசியல் பிரச்சினை, முற்போக்கு எழுத்தாளர் சங்க வரலாறு, நாவல்கள் பற்றி ) உரையாடினார். அன்றிருந்த பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி போன்றவர்களைப் போன்ற ஆளுமைகளைத் தற்போது இலக்கிய உலகில் காண முடியவில்லை என்று அவர் கூறியதுடன் பேராசிரியர் கைலாசபதியுடனான அனுபவங்களையும் நினைவு கூர்ந்தார். கூடவே தான் பிறந்த இடத்து அவரது சமூகத்தின் நலிந்த நிலையினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள தன் நாவல் பற்றியும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன் வீரகேசரியில் தான் எழுதிக்கொண்டிருந்த பத்தி எழுத்துகள் பற்றியும் எடுத்துரைத்தார். சோமகாந்தன் அவர்களின் குரல் மிகவும் மென்மையானது. உள்ளத்தை வருடிச்செல்லும் தன்மை மிக்கது. தனித்துவமான குரலும் கூட. ஒருமுறை கேட்டாலும் மறக்க முடியாத குரல்.
•Last Updated on ••Thursday•, 16 •July• 2020 04:16••
•Read more...•
அண்மையில் நண்பர் தில்லைநாதன் கோபிநாத் எழுதிய 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்னும் நூலை வாசித்தேன். மேற்படி நூலின் தலைப்பு அவ்விதமிருப்பதால்தான் இப்பதிவை எழுத வேண்டிய தேவையேற்பட்டது. சில காரணங்களால் தவிர்க்கப்பட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டி ஆவணப்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்பதால்தானிந்த பதிவு. 'பதிவுகள்' இணைய இதழ் நூலகத்தின் ஆரம்பகாலத்திலிருந்தே அது பற்றிய செய்திகளை வெளியிட்டு அதன் முயற்சிகளுக்கு ஆதரவு வெளியிட்டு வருகின்றது. உலகளாவியரீதியில் தன் வாசகர்கள் மத்தியில் அது பற்றிய செய்திகளை எடுத்துச்செல்ல உதவி வருகின்றது. தனிப்பட்டரீதியிலும் எனது நூல்கள்,மின்னூல்கள் ,தனிப்பட்ட சேகரங்களை நூலகத்திட்டத்துக்கு வழங்கியுள்ளேன். என் நாவலான 'குடிவரவாளன்' நாவலையும் வழங்கியுள்ளேன். ஆனால் அவை தனிப்பட்ட ஒருவரின் பங்களிப்பு என்பதால் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதொன்றல்ல. இது போல் எழுத்தாளர்கள் பலர் , தனிப்பட்டவர்கள் பலர் தம்மிடமிருந்த நூல்களை நூலகத்திட்டத்துக்கு வழங்கியுள்ளார்கள். ஆனால் 'பதிவுகள்' என்னும் இணைய இதழ் நூலகத்திட்டம் பற்றிய தகவல்களைப்பிரசுரித்து உலகளாவியரீதியில் அது பற்றிய விபரங்களை எடுத்துச் சென்றிருப்பதால் நூலில் அது பற்றிக் குறிப்பிட்டிருக்கலாமென்று தோன்றியது.
நூலின் தலைப்பு 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்றிருப்பதால் , திண்ணை போன்ற இணைய இதழ்களெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளதால் ,'பதிவுகள்' பற்றியும் ஒரு வரியாவது குறிப்பிட்டிருக்கலாமென்று தோன்றியது. கோபி வேண்டுமென்றே தவிர்த்திருக்க மாட்டார். சில வேளை ஆரம்பகாலப் பதிவுகளில் வெளியான தகவல்கள் அவருக்கு முக்கியத்துவமில்லாமலிருந்திருக்கலாம் அல்லது ஞாபகத்திலில்லாமலிருந்திருக்கலாம். 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்னும் நூலின் தலைப்புக்கேற்ப 'பதிவுகள்' இணைய இதழும் ஆவணப்படுத்தப்பட வேண்டிய தன்னைப்பற்றிய தகவலைத் தான் தான் ஆவணப்படுத்த வேண்டுமென்ற நிலையில் இப்பதிவை முன் வைக்கின்றது. அதற்கொப்ப 2000ஆம் ஆண்டிலிருந்து பதிவுகள் இணைய இதழில் நூலகம் பற்றி வெளியான தகவல்கள் சிலவற்றைக் கீழே தருகின்றோம்.
நூலகம் தளத்தின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. நூலகம் தளம் இல்லாவிடின் பல இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய தகவல்கள் பலவற்றை என்னால் பெறவே முடியாது போயிருக்கும். இதன் வளர்ச்சிக்காக உழைத்த , உழைக்கும் அனைவரையும் வாழ்த்துகின்றேன்.
மேற்படி 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்னும் நூற் தலைப்பில் சிறியதோர் இலக்கணத்தவறுள்ளது. இருந்தாலும் இத்தவறுடனேயே வழக்கில் பலர் பாவிப்பதால் அது என்னைப்பொறுத்தவரையில் முக்கியமான தவறல்ல. ஆனால் நூலகம் பற்றிய நூலொன்றில் இவ்விதமான இலக்கணத்தவறு ஏற்படாமலிருந்திருக்கலாமென்று தோன்றியதால் சுட்டிக்காட்டுவது அவசியமானது. தலைப்பில் நமது என்று பன்மை வருவதால் நூலின் தலைப்பு " 'நமது வரலாற்றை நாங்கள்தாம் ஆவணப்படுத்த வேண்டும்" என்று வந்திருக்க வேண்டும்.
* தில்லைநாதன் கோபிநாத் - 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' : http://noolaham.net/project/750/75000/75000.pdf
•Last Updated on ••Wednesday•, 15 •July• 2020 13:17••
•Read more...•
1. கவிதை: கனவுக் குதிரைகள் (Dream Horses)!
(Walt Bresette நினைவாக)! ஆங்கிலத்தில்: அல் ஹண்டர் (Al Hunter) - கனடியக் கவிஞர் | தமிழில்: வ.ந.கிரிதரன்!
1
நிலவு வெளிச்சத்திற்குக் கீழாக விண்ணில் எனது கனவுக் குதிரைகள் தெற்கு நோக்கி ஓடும்.
தெற்கு: பயணம் இங்குதான் முடியும், அத்துடன் தெற்கு: பயணம் இங்குதான் மீண்டும் தொடங்கும் - ஆத்மாக்களின் பயணத்தில்.
•Last Updated on ••Tuesday•, 14 •July• 2020 15:33••
•Read more...•
-அண்மையில் முகநூலில் லடீஸ் வீரமணியின் நாடகப்பங்களிப்பு பற்றிய வ,ந.கிரிதரனின் பதிவொன்றையொட்டி கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் தெரிவித்திருந்த கருத்துகளிவை. - பதிவுகள் -
நித்தியானந்தன் முத்தையா: "1967 இல் ஊவாக்கல்லூரி நடத்திய கலை விழாவில் முற்போக்கு இலக்கியத்தின் மூத்த தலைமுறையாளர் அ .ந.கந்தசாமி அவர்கள் 'நாடகத்தை ரசிப்பது எப்படி?' என்ற பொருளில் ஆற்றிய சொற்பொழிவு ரசனை மிகுந்த ஒன்றாகும்.இவரது மறைவையடுத்து ஊவாக்கல்லூரித் தமிழ் மாணவர் மன்றம் அன்னாருக்கு முதல் அஞ்சலியைத் தெரிவித்து இரங்கற் கூட்டம் நடத்தியது." இது தினகரன் வார இதழில் 'துங்கிந்த சாரலில் ...ஒரு பதுளைக்காரனின் இலக்கியப்பதிவுகள்' என்ற தொடரில் (3.12. 1995) நான் எழுதிய குறிப்பு.
அப்போது ஊவாக்கல்லூரித் தமிழ் மாணவர் மன்றத்தின் செயலாளராக நானும் மலர்ப்பொறுப்பாளராக எஸ்.கணேசனும் செயற்பட்டோம். கொழும்பு சென்று அ.ந.கந்தசாமி அவர்களைச் சந்தித்து இப்பேச்சுக்கு ஒழுங்கு செய்தோம்.எங்கள் கல்லூரித் தமிழ் மன்றம் வெளியிட்ட 'இலக்கிய வெளியீடு' மலரில் நான் எழுதியிருந்த 'கம்பனும் பொதுவுடைமையும்' கட்டுரையைப்பாராட்டி அ.ந.கந்தசாமி அவர்கள் தனது உரையில் பாராட்டியது எனக்கு அப்போது பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது.
அ.ந.கந்தசாமி அவர்கள் உரையாற்றிய கடைசிக்கூட்டம் அவர் எங்கள் கல்லூரியில் பேசிய கூட்டம் என்று நினைக்கிறேன். அப்போது அவர் எழுதி, பாரி நிலைய வெளியீடாக வெளிவந்திருந்த ' வெற்றியின் ரகசியங்கள்' என்ற நூலை எனக்குத்தந்திருந்தார்.கொழும்பு சென்றபின், எனக்கு நன்றி தெரிவித்துக் கடிதமும் எழுதியிருந்தார். ஒரு சாதாரண பாடசாலை மாணவன் ஒருவனுடன் அவர் கொண்டிருந்த நேசஉணர்வு எனக்கு அவர்மீது பெரும் மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர் தனது இறுதிக் காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, லடீஸ் வீரமணியும் அவரது துணைவியாரும் அ .ந.கந்தசாமி அவர்களைக் கவனமாகப் பராமரித்தனர்.
•Last Updated on ••Monday•, 13 •July• 2020 02:03••
•Read more...•
அண்மையில் 'அரங்கு ஓர் அறிமுகம்' என்னுமோர் நூலை வாசித்தேன். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் சி.மெளனகுரு மற்றும் திரு.க.திலகநாதன் ஆகியோரால் எழுதப்பட்ட நூல். அமரர் சி.பற்குணம் நினைவு மலர்க்குழுவினால் வெளியிடப்பட்டது. அரங்கு பற்றியதோர் அறிமுக நூலாக இதனைக் குறிப்பிடலாம். தாமறிந்ததை இந்நூல் மூலம் அறியத்தந்திருக்கின்றார்கள். இந்நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது ஒருவரை எவ்வளவு நாசூக்காக இருட்டடிப்பு செய்யலாம் என்பதை உணர்ந்துகொண்டேன். இந்நூலில் நான் அவதானித்த ஒருவரைப்பற்றிய இருட்டடிப்பு பற்றிய என் எண்ணமே இப்பதிவு. இந்நூல் பற்றிய விமர்சனமல்ல. இந்நூல் அரங்கு பற்றிய நல்லதொரு நூலே. அதற்காக இதனை எழுதியவர்களும், வெளியிட்டவர்களும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் நூல்கள் எல்லாவற்றிலும் எழுதுபவர்கள் சார்ந்து இருட்டடிப்புகள் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. அவை தவிரக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் இப்பதிவை நான் இடுகின்றேனே தவிர நூலாசரியர்களைத் தனிப்பட்டரீதியில் தாக்குவதற்காகவல்ல.
நூலில் 'நாடகக் கலையின் இயல்புகள்', 'நாடகக் கலையின் தோற்றம்', 'மேல்நாட்டுப்பாரம்பரியத்தில் நாடகம்', 'தமிழ் நாட்டு நாடகப் பாரம்பரியம்', 'இலங்கைத் தமிழ் நாடகப் பாரம்பரியம்' மற்றும் 'நாடகத் தயாரிப்பு' ஆகிய தலைப்புகளில் ஆறு அத்தியாயங்களுள்ளன. இவற்றில், 'இலங்கைத் தமிழ் நாடகப் பாரம்பரியம்' என்னும் அத்தியாயத்திலுள்ள ஒரு தகவல் பற்றியதே எனது இப்பதிவு.
இவ்வத்தியாயத்தில் நவீன அரங்கு பற்றிய பகுதியில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை தொடக்கி வைத்த இயற்பண்பு நாடக மரபு பற்றிக்குறிப்பிடும் நூலாசிரியர்கள் பின்வருமாறு குறிப்பிடுவார்கள்:
"நாடகமறியாதோரினதும் சமூகப் பிரக்ஞையற்றோரினைதும் கையில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை தொடக்கி வைத்த இயற்பண்பு நாடக மரபு இவ்விதம் சீரழிய, நாடகப் பிரக்ஞையும், சமூகப் பிரக்ஞையும் உடைய மத்தியதர வர்க்கத்தினரிடையே இவ் இயற்பண்பு நாடக நெறி வளர்ச்சியடைகின்றது. நாடக நிலை நோக்குடனும் சமூகப்பிரக்ஞையுடனும் அதனை வளர்த்துச் சென்றவர்கள் பல்கலைக்கழகத்தினரும் அதனைச் சார்ந்தோருமே. இலங்கைப் பல்கலைகழகத் தமிழ்ச்சங்கம் அ.முத்திலிங்கத்தின் 'பிரிவுப்பாதை' (1959), 'குடித்தனம்' (1961), 'சுவர்கள்' (1961) ஆகிய நாடகங்களையும் , அ.ந,கந்தசாமியின் 'மதமாற்றம்' (1962), சொக்கனின் 'இரட்டை வேசம்' (1963) ஆகிய நாடகங்களையும் மேடையிட்டது. இந்நாடகங்களை க.செ.நடராசா, கா.சிவத்தம்பி, வீ.சுந்தரலிங்கம் , சரவணமுத்து ஆகியோர் தயாரித்தனர்." [பக்கம் 193]
•Last Updated on ••Saturday•, 11 •July• 2020 02:19••
•Read more...•
அண்மையில் 'Kälam / Tradition & Heritage /C.Anjalendran / The Architecture of the Tamil Hindus of Sri Lanka' என்னும் தலைப்பிடப்பட்ட , இலங்கைக் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனுடான நேர்காணலை உள்ளடக்கிய காணொளியொன்றினைப் பார்த்தேன். அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் சிலவற்றைப்பற்றிய என் கருத்துகளின் பதிவிது. காணொளிக்கான இணைப்பினை இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.
முன்னாள் வவுனியா பா.உ சி.சுந்தரலிங்கத்தின் பேரனும் , கட்டடக்கலைஞருமான அஞ்சலேந்திரனின் உரையிது. அஞ்சலேந்திரன் புகழ்பெற்ற இலங்கை, தெற்காசியக் கட்டடக்கலைஞர்களிலொருவர். இங்குள்ள காணொளியில் அஞ்சலேந்திரன் இந்துக் கட்டடக்கலை பற்றிக் கூறிய கருத்துகளிலிருந்து அவருக்கு இந்துக்கட்டடக்கலை பற்றி மேலோட்டமான புரிதல்தான் உள்ளதோ என்று சந்தேகப்படுகின்றேன். உதாரணத்துக்கு அவர் கோயில் விமானத்தைக் கோபுரமாகக் கருதிக் கூறிய கருத்துகள். பொதுவாகக் கட்டடக்கலை கற்கைநெறி மேனாட்டுக் கட்டடக்கலையை அடிப்படையாகக்கொண்டு கற்பிக்கப்படுவது. அதில் பாரம்பரியக் கட்டடக்கலை ஆழமாகக் கற்பிக்கப்படுவதில்லை. பெளத்தக் கட்டடக்கலை , இந்துக் கட்டடக்கலை பற்றியெல்லாம் கற்பிக்கப்படுவதில்லை. இதன் காரணமாகவும் அவரது புரிதலில் தெளிவின்மை ஏற்பட்டிருக்கலாம்.
•Last Updated on ••Sunday•, 02 •August• 2020 17:49••
•Read more...•
எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பிறந்ததினம் ஜூன 27!
யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள், பேராசிரியர்களை அதிக அளவில் கொண்ட பல்கலைக் கழகமொன்றுள்ளது. இங்கு தமிழ்ப்பேராசிரியர்கள் பலர் இது ஆரம்பித்த நாளிலிருந்து பணி புரிந்து வந்துள்ளார்கள். இவர்கள் இதுவரையில் இலங்கைத்தமிழ் இலக்கியத்தை வெளிப்படுத்தும் வகையில் இதுவரையில் கீழுள்ளவற்றில் எத்தனை விடயங்களைச் செய்துள்ளார்கள் என்பதை அறிந்தவர்கள் அறியத்தரவும்?
* இலங்கைத் தமிழ் இலக்கியத்தை வெளிப்படுத்தும் ஆய்வு நூல்கள் * ஆய்வுக் கட்டுரைகள்.. * இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலகட்டத்தை வெளிப்படுத்தும் ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள் * இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் வரலாற்றை வெளிப்படுத்தும் ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள். * இலங்கைதமிழ் இலக்கியத்தின் ஏனைய இலக்கியப்போக்குகளான பிரபஞ்ச யதார்த்தவாதம் பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள். * இலங்கைச் சிறுபான்மைத்தமிழரின் குரலினை வெளிப்படுத்தும் ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள். * இலங்கை மலையகத்தமிழர்களின் இலக்கியம் பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள். * இலங்கைத் தமிழ் முஸ்லீம் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியத்து ஆற்றிய பங்கு பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள். * இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்குப் பிறமொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள். * இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்கள், ஆய்வாளர்களை நினைவு கூர்ந்து எழுத்தப்பட்ட ஆக்கங்களைப்பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
இவற்றைப்பற்றித் தெரிந்தவர்கள் அறியத்தரவும், ஆனால் இவற்றையெல்லாம் தனித்திருந்து ஒருவர் சாதித்துள்ளார். இவர் வெளியிட்ட மல்லிகை சஞ்சிகைகளில் வெளியான ஆக்கங்களிலிருந்து இவை அனைத்தையும் உருவாக்க முடியும்.
•Last Updated on ••Thursday•, 02 •July• 2020 13:42••
•Read more...•
நாற்பதுகளில் (1940) சுவாமி ஞானப்பிரகாசர் முதல் முறையாகக் கோப்பாய்க் கோட்டை இருந்த இடத்தைக் கண்டுபிடித்து ஒரு கட்டுரையொன்றினை ஆங்கில ஆய்விதழொன்றில் எழுதியிருந்தார். எண்பதுகளில் நான் கலாநிதி கா.இந்திரபாலாவை யாழ்
பல்கலைக்கழகத்தில் சந்தித்தபோது அவர் காட்டினார். அந்த ஆய்விதழ் யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் இருக்கக்கூடும். அதனடிப்படையில் நான் அக்கோட்டையிருந்த இடத்தைப் பார்க்கச் சென்றேன். என்னுடன் நண்பர் ஆனந்தகுமார் வந்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். யாழ் பல்கலைக்கழகத்துக்கு அவருடனே சென்றிருந்தேன். கோப்பாய்க் கோட்டைக்குச் செல்கையிலும் அவர்தான் வந்திருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. பின்னர் அக்கோப்பாய்க் கோட்டை பற்றி எழுதி வீரகேசரிக்கு அனுப்பினேன். வீரகேசரி அதனைப் பிரசுரித்ததுடன் சன்மானமும் (ரூபா 35) அனுப்பியிருந்தார்கள்.
•Last Updated on ••Friday•, 03 •July• 2020 04:05••
•Read more...•
அண்மையில் மல்லிகை சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் செ.யோகராசா அன்று எழுதிய அ.ந.கந்தசாமியின் கவிதைப்பங்களிப்பு பற்றி எழுதிய கட்டுரையைப் பதிவிட்டிருந்தேன். அதற்குத் தன் எதிர்வினையாற்றிய கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரனுடன் கருத்துகளைப் பரிமாறும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் கேள்விகள் சிலவற்றுக்கு அவரும் சளைக்காமல் பதிலளித்தார். முடிவில் பார்த்தபோது அதுவே சிறியதொரு நேர்காணலாக இருப்பதை அறிந்தேன். அதனைத்தொகுத்து இங்கு பதிவு செய்கின்றேன். நண்பர்களே! நீங்கள் உங்கள் நட்பு வட்டத்திலுள்ள கலை, இலக்கிய , அரசியல் ஆளுமை எவருடனாவது இவ்விதமாகக் கேள்விகள் கேட்பதன் மூலம் நேர்காணலற்ற நேர்காணல்களைச் செய்ய முடியும். யார் சொன்னது முகநூல் ஆரோக்கியமற்றதென்று? இது முகநூலின் ஆரோக்கியமான விளைவுகளிலொன்று. எழுத்தாளர் எம்.எஸ்.எம். இக்பால் பற்றி கே.எஸ்.எஸ் அவர்களும், எழுத்தாளர் ஜவாப் மரைக்கார் அவர்களும் பின்வருமாறு கருத்துகளை முன் வைத்தார்கள்.
கே.எஸ்.சிவகுமாரன்: எம்.எஸ்.எம். இக்பால் அவர்கள் மறைந்து விட்டார்கள். அவர் ஒரு தீவிரவாசகர். காரசாரமாக விமர்சிப்பவர்
ஜவாத் மரைக்கார்: தனது வாழ்வின் இறுதிக்காலப் பகுதியில் ( 1975 தொடக்கம் மரணிக்கும் வரை) என்னுடன் நெருக்கமாகவும் அன்போடும் பழகியவர் எம்.எஸ்.எம். இக்பால். துணிந்த கட்டை
நான்: நான் மதிக்கும் எழுத்தாளர்களில் அவரும் முக்கியமானவர். அவரது கட்டுரைகள், கவிதைகளை மல்லிகை சஞ்சிகையில் கண்டிருக்கின்றேன். இலங்கைத்தமிழ் முற்போக்கு இலக்கியத்துக்கு முஸ்லீம் எழுத்தாளர்கள் பலர் மிகுந்த பங்களிப்பினை ஆற்றியிருக்கின்றார்கள். தேசாபிமானியிலிருந்து பிரிந்த பின்னர் இளங்கீரன் அவர்கள் பல மார்க்சிய ஆய்வுக்கட்டுரைகளைத் தொழிலாளி பத்திரிகையில் எழுதியிருக்கின்றார்.
•Last Updated on ••Tuesday•, 23 •June• 2020 14:55••
•Read more...•
இருண்டிருக்கும் மாநகரத்திரவு. இருளைக்கிழித்தொரு மின்னலின் கோடிழுப்பு. இடியின் பேரொலி. யன்னலினூடு பார்க்கையில் பேசாத்திரைப்படமாய் மழைக்காட்சி விரிகிறதெதிரே. இழந்தது உறவுகள் , உருண்டு புரண்ட மண் மட்டுமல்ல, இதுபோன்ற இயற்கை நிகழ்வுகளையும்தாமென்று உணர்ந்தது உள்ளம். இழந்ததையெண்ணிக் கழிவிரக்கமா? இன்னுமா? அன்று மட்டுமல்ல, இன்று மட்டுமல்ல, என்றுமே இருக்கப்போகும் உணர்வு இதுவென்றும் உணர்ந்தேன். உணர்வுகளுக்கு அடை போட முடியுமா? எதற்காக? யாருக்காக?
•Last Updated on ••Monday•, 22 •June• 2020 02:47••
•Read more...•
இலக்கிய நந்திகள் என்று நான் கருதுவது புத்திஜீவிப் பேராசிரியர்களில் சிலரை. இவர்கள் புத்தி ஜீவிகள். இவர்களுக்குப் பணம் ஊதியமாக வழங்கப்படுவது அவர்களது புத்தியைப் பாவித்து சீவியத்தை நடத்துவதற்காக. கூடவே ஆய்வுகள் செய்வதற்காக. ஆனால் இவர்கள் செய்வதென்ன? செய்ததென்ன? தங்கள் மேதமையைக் காட்டுவதற்காக, தங்களுக்குப் பிடித்த சிலரின் படைப்புகளை மட்டும் முன்னிறுத்தி தமக்குக் கீழ் சீடர்கள் வட்டமொன்றினை அமைத்துக்கொள்வார்கள். அதன் பின்னர் குருவும், சீடர்களும் ஒருவருக்கொருவர் உறுதுணையாகச் செயற்படுவார்கள். இவர்கள் மூலம் மறைக்கப்பட்ட இலக்கிய ஆளுமைகள் பலர்.
இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் அ.ந.கந்தசாமியின் கவிதைப்பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இதுவரை எனக்குத்தெரிந்து ஒரேயொரு பேராசிரியரே அதனைச் சரியாக உணர்ந்து மல்லிகையில் கட்டுரை எழுதியிருக்கின்றார். அவர் பேராசிரியர் செ.யோகராசா. அவர் 'நவீன ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சியில் அ.ந.கந்தசாமியின் பங்கு' என்னுமோர் அரிய கட்டுரையினை எழுதியிருக்கின்றார். மல்லிகை சஞ்சிகையில் வெளியான கட்டுரை அது. ஆனால் இதுவரையில் புத்திஜீவிப் பேராசிரியர்கள் எவராவது அ.ந.கந்தசாமியின் கவிதைப்பங்களிப்பு பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. இதுவோர் உதாரணம் மட்டுமே. இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் ஜாம்பவான்களிலொருவரான அ.ந.க.வின் படைப்புகளுக்கே இந்த நிலையென்றால் , மிகவும் தரமான படைப்புகளைத் தந்த எழுத்தாளர்கள், கவிஞர்களின் நிலையென்ன?
•Last Updated on ••Saturday•, 20 •June• 2020 22:10••
•Read more...•
இங்குள்ள 'மந்திரிமனை' ஓவியத்தை வரைந்திருப்பவர் ஓவியர் பிருந்தாயினி தீபனா. இதனைக் கட்டடக்கலைஞர் மயூரநாதன் அவர்கள் 'யாழ்ப்பாண நகரம் - 400' குழுமத்தில் பகிர்ந்துகொண்டிருந்தார். அவ்வோவியத்தை இப்பதிவுக்காக நன்றியுடன் பாவிக்கின்றேன்.
'மந்திரிமனை' என்னும் இக்கட்டடம் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான வரலாற்றுச் சின்னங்களிலொன்று. இக்கட்டடத்தின் முகப்பிலுள்ள தகவல்களின்படி இக்கட்டடம் 1890இல் கட்டப்பட்ட விபரமும், ஒரு குடும்பத்துக்குரியதென்பதும் தெரிய வரும். ஆனால் இக்கட்டடம் முக்கியத்துவம் பெறுவது பின்வரும் காரணங்களினால்:
இக்கட்டடத்தின் கட்டடக்கலை அம்சங்கள் திராவிட , ஐரோப்பியக் கட்டடக்கலை அம்சங்களை உள்ளடக்கியது. பாவிக்கப்பட்ட கட்டட மூலப்பொருட்கள். கட்டடக்கலை அம்சங்கள், கட்டப்பெற்ற காலகட்டம் எல்லாம் இக்கட்டடம் வரலாற்றுச் சின்னங்களிலொன்றாகக் கருதப்பட்டு பேணப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. இக்கட்டடம் 'மந்திரிமனை' என அழைக்கப்படுவதானது பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. இக்கட்டடம் உண்மையில் ஏற்கனவே இப்பகுதியில் தமிழரசர் காலத்திலிருந்து முக்கியத்துவம் பெற்ற கட்டடமொன்றிருந்த இடத்தில் கட்டப்பெற்ற ஒன்றா? அச்சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தனிப்பட்ட ஒருவரால் வாங்கப்பெற்று பழைய கட்டடமிருந்த இடத்தில் இக்கட்டடம் கட்டப்பெற்றதா? இவையெல்லாம் நியாயமான கேள்விகள். ஆய்வுகள் பதில்களை அடைய அவசியம்.
•Last Updated on ••Friday•, 19 •June• 2020 16:11••
•Read more...•
* மறுமலர்ச்சிக்காலம் இலக்கியச் சிறப்பிதழ் - கலைப்பெருமன்றம் உழவர் விழா மலர் , அம்பனை, தெல்லிப்பழை - 1973 -
இலங்கைத்தமிழ் இலக்கிய உலகம் பெருமைப்படத்தக்கதொரு மலரிது . இம்மலரில் எழுத்தாளர் அ.செ.முருகானந்தனுக்குச் 'சிந்தனைச் செல்வர்'என்னும் பட்டம் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார். அவரைப்பற்றி, அவரது இலக்கியப் பணி பற்றி இலக்கிய ஆளுமைகள் பலரின் அரிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
இதற்காக தெல்லிப்பழை கலைமன்றத்தினர், மலர்க்குழுவினர் ( ஆ.சிவநேசச் செல்வன், மயிலங்கூடலூர் பி.நடராசன், பொன்.நாகரத்தினம், வை.குணாளன்) பெருமைப்படலாம். மறக்காமல் கெளரவிக்கப்பட வேண்டிய இலக்கியவாதியொருவர் கெளரவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இவ்வமைப்பும், தொகுப்பாளர்களும் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகின்றார்கள். காரணம்: அ.செ.மு பற்றிய விரிவான மலர் என்பதுடன் அவர் 'சிந்தனைச் செல்வர்' என்னும் பட்டம் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார். அவ்வகையில் இதுவரை வெளியான முதலாவதும் , ஒரேயொரு நூலும் இதுதான். (நான் அறிந்தவரை) என்பதற்காக.
•Last Updated on ••Friday•, 19 •June• 2020 02:13••
•Read more...•
கனவுநிலாவின் அழகில் நானெனை மறந்திருந்தேன். அதன் தண்ணொளியில் சுகம் கண்டிருந்தேன். நனவுமேகங்களே உமக்கேனிந்தச் சீற்றம்? எதற்காக அடிக்கடி எழில் நிலாவை மூடிச்செல்ல முனைகின்றீர்கள்? நீங்கள் மூடுவதாலென் கனவுநிலாவின் எழில் மறைவதில்லை. நினைவுவானில் நீந்திவரும் நிலவை யாரும் மூடிட முடியாது. நனவுமேகங்களே! உம்மாலும்தாம். பார்க்கும் ஒரு கோணத்திலும்மால் மூட முடிவதுபோல் தெரிவதெல்லாம் முழு உண்மையல்ல. பின்னால் மறுகோணத்தில் நனவுவானில் நடைபயிலும் முழுநிலவின் நடையழகை யார்தான் தடுக்க முடியும். இரசிப்பதை யார்தான் தடுக்க முடியும். கனவுநிலவினெழிலில் களித்திருக்குமெனை யார்தானிங்கு தடுக்க முடியும்?
•Last Updated on ••Thursday•, 18 •June• 2020 18:34••
•Read more...•
இலங்கையிலிருந்து வெளியான ஈழகேசரி இளைஞர்களுக்காக ஒரு பகுதியை கல்வி அனுபந்தம் என்னும் பெயரில் தனிப்பத்திரிகையாக வெளியிட்டு வந்தது. அதன் மூலம் பின்னாள் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் கால் பதித்த எழுத்தாளர்கள் பலர் உருவானார்கள். அப்பகுதியில் பதினாறு வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அங்கத்தவர்களாகச் சேரலாம். ஒரு முறை அவர்களை ஊக்குவிக்கும் முகமாக யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியில் விழா நடத்தி பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டிகளில் விருதுகளும் வழங்கிக் கெளரவித்தது போற்றுதற்குரிய விடயம்.
மேற்படி மாணவர் பகுதியைத் 'தாத்தா' நடத்தினார். தாத்தா ஓய்வெடுக்கும் சமயத்தில் 'பாட்டி' நடத்தினார். அங்கத்தவர்களாகச் சேரும் மாணவர்களின் படைப்புகள் தெரிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டதுடன் , சிறுகதைப்போட்டிகளும் நடத்தப்பட்டன. அ.ந.கந்தசாமியின் மாணவர் அங்கத்துவன் இலக்கம்: 181. அப்பொழுது அவருக்கு வயது 14 (1938).
மாணவர்கள் அனுப்பும் படைப்புகளைப்பற்றி தாத்தா (அல்லது பாட்டி) தமது கருத்துகளைக் கூறுவார்கள். அனுப்பிய படைப்புகள் நல்லாயிருந்தன, அல்லது தரமாகவில்லை போன்ற தமது கருத்துகளைச் சுவையாகக் கூறி அவர்களை ஊக்குவித்தார்கள். அவற்றில் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளர்களான அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தன் போன்றோருடனெல்லாம் இளைஞர் பகுதித் 'தாத்தா' உரையாடியிருக்கின்றார்.
•Last Updated on ••Friday•, 19 •June• 2020 02:14••
•Read more...•
அண்மையில் ஜனவரி 2007 வெளிவந்த ஞானம் சஞ்சிகை பார்த்தேன். வரதர் சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. அதில் செ.சுதர்சன் எழுத்தாளர் வரதருடன் நிகழ்த்திய நேர்காணல் வெளியாகியுள்ளது. 'வரலாறு ஒன்றின் மூலமும் கடைசியுமான கதை சொல்லி' - அதில் வரதர் மறுமலர்ச்சி இயக்கம் பற்றியும், சஞ்சிகை பற்றியும் அளித்த பதில்கள் வியப்பினை அளிப்பவையாகவிருந்தன. இதுநாள் வரை அவர்மேல் வைத்திருந்த மதிப்பினை ஓரளவுக்குக் குறைக்கும் வகையிலான வகையில் அவர் எழுத்தாளர் ஒருவரை இருட்டடிப்பு செய்துள்ளார். அதுவும் முழுப் பூசுணைக் காயைச் சோற்றில் மறைப்பதைப்போன்றது. அந்த நேர்காணலில் ஓரிடத்திலாவது அவர் அ.ந.க பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. இது அ.ந.கந்தசாமியின் மறுமலர்ச்சி இயக்கத்துக்கான பங்களிப்பைத் திட்டமிட்டே மூடி மறைப்பதாகும். ஒருவர் மறைந்து விட்டால், அவரில்லையென்ற துணிவில் இது போல் சாதனையொன்றுக்குத் தாமே அதிக உரிமையினைக் கோரி வரலாற்றை மாற்ற முற்படுவர் சிலர். வரதர் எவ்விதம் அவ்விதம் தாழ்ந்தார்? எப்படி அ.ந.கந்தசாமியை மறுமலர்ச்சி இயக்கம் பற்றிக் குறிப்பிடுகையில் மறைக்க முடிந்தது? [ ஞானம் சஞ்சிகையி வெளியான வரதரின் நேர்காணல் - http://noolaham.net/project/11/1024/1024.pdf ]
மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்கிய இளைஞர்கள் பற்றிக் குறிப்பிடுகையில் மேற்படி இதழில் வெளியான 'ஒரு காலத்தின் காலாக அமைந்தவர்' என்னும் கட்டுரையில் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பை மறக்காமல் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு கூறுவார்: "1940களில் மறுமலர்ச்சிச் சங்கம் நிறுவப்பட்டது. இதனை வரதராசன், சோ.தியாகராசா, நாவற்குழியூர் நடராஜன், பஞ்சாட்சர சர்மா, அ,ந,கந்தசாமி ஆகியோர் நிறுவினர்" ஆனால் இங்கு பேராசிரியர் அ.செ.முருகானந்தனைத்தவற விட்டு விட்டார். சோ.தியாகராஜாவுக்குப் பதிலாக அ.செ.மு என்றிருக்க வேண்டும்.
•Last Updated on ••Sunday•, 28 •June• 2020 16:26••
•Read more...•
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்" - பாரதியார் - அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக முனைவர் ஆர்.தாரணியின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான மார்க் ட்வைனின் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) நாவல் விரைவில் நூலாகத் தமிழகத்தில் எழிலினி பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது. அவருக்கும் , பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.
•Last Updated on ••Wednesday•, 10 •June• 2020 09:34••
•Read more...•
"நான் என் பால்ய ,பதின்மப் பருவத்து வாசிப்பு, எழுத்தனுபவங்களை இங்கு எழுதுவதற்கு முக்கிய காரணம் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இவ்வனுபவங்களை அறிய வேண்டுமென்பதற்காகவே. பொதுவாக எழுத்தாளர்கள் தம் பால்ய, பருவத்து எழுத்து, வாசிப்பனுபவங்களை விரிவாக எழுதுவது குறைவு. எனது அப்பருவத்து அனுபவங்கள் இப்பொழுதும் மகிழ்ச்சியைத்தருவன. இந்நிலையில் இவற்றை வாசிக்கும் இளம் பருவத்தினருக்கும் இவ்வனுபவங்கள் நிச்சயம் இன்பத்தைத்தருவதுடன் , வாசிப்பு, எழுத்தில் ஆர்வமுள்ளவர்களை மேலும் இத்துறைகளில் ஆழ்ந்து ஈடுபடத்தூண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு." - வ.ந.கி -
மானுட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் முன் நிற்பது கவிதையே. அதற்கு நிகர் வேறெதுவுமில்லை. குறைந்த வரிகளில் உணர்வுகள் எவையாயினும் அவற்றை வெளிப்படுத்தக் கவிதைகளால்தாம் முடியும். என்னைப்பொறுத்தவரையில் என் கவனம் பதின்ம வயதுகளில் கவிதையின் பக்கம் திரும்பியதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: அப்பருவத்துக்குரிய உணர்வுகளுக்குக் கவிதை வரிகள் வடிகால்களாகவிருந்தன. அடுத்து எப்பொழுதுமே என் உள்ளத்தில் இருப்பு பற்றிய கேள்விகள் மற்றும் , வர்க்கம், வர்ணம், இனம்,மதம்,மொழி, நாடென்று பல்வேறு பிரிவுகளால் ஏற்படும் மானுடரின் வாழ்வியற் பிரச்சினைகள், அவற்றின் விளைவான சவால்கள், துயரங்கள் எல்லாம் சிந்தையிலேற்படுத்திய பாதிப்புகளுக்குரிய வடிகால்களாக,வெளிப்படுத்தும் சாதனங்களாக எழுத்துகளேயிருந்தன. கவிதைகளில் அவற்றைக் குறைந்த வரிகளில் வெளிப்படுத்த முடிந்தன. என் எழுத்துகளில் கவிதைகளுட்பட , நீங்கள் இம்மூவகைப்பண்புகளையும் காணமுடியும். இருப்பு பற்றிய கேள்விகள், மானுட அக உணர்வுகள் மற்றும் மானுடர் வாழும் சமூக, அரசியல் & பொருளியச் சூழல்களின் பாதிப்புகள் என் எழுத்துகளில் விரவிக் கிடப்பதை நீங்கள் காணலாம்.
•Last Updated on ••Wednesday•, 10 •June• 2020 18:22••
•Read more...•
எழுத்தாளர் அ.ந.கந்தசாமி சுதந்திரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியப்பீடத்தில் இருந்த காலகட்டம் சுதந்திரனைப் பொறுத்தவரையில் அதன் பொற்காலமென்றே கூறுவேன். அக்காலகட்டத்தில் அவர் எழுதிய படைப்புகளில் அ.ந.கந்தசாமி என்னும் பெயரில் எழுதிய படைப்புகள் , கவீந்திரன் என்னும் பெயரில் எழுதிய படைப்புகள் மற்றும் பண்டிதர் திருமலைராயர் ,கலையரசன் என்னும் பெயர்களில் எழுதிய படைப்புகள் கிடைத்துள்ளன. இவை அவர் எழுதிய முழுமையான படைப்புகள் என்று கூறுவதற்கில்லை. எமக்குக் கிடைத்த படைப்புகளிவை. அவர் சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் 1949 தொடக்கம் 1952 வரையிலான காலகட்டத்திலிருந்ததாக அறியப்படுகின்றது. இக்காலகட்டத்தில் கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, இலக்கியக் கட்டுரைகள் மற்றும் அவரளித்த குயுக்தி பதில்கள் என்பவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
இது போல் அ.ந.க.வின் படைப்புகளை ஆராய்பவர்கள் தேசாபிமானி ஆசிரியராகவிருந்த காலகட்டம், சுதந்திரன் காலகட்டம், ஶ்ரீலங்கா காலகட்டம், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த காலகட்டத்தில் அவர் இலக்கியப்பங்களிப்பு மற்றும் ஏனைய காலகட்டங்கள் என விரிவாக ஆராய வேண்டும். இவை தவிர அவரது மாணவப்பருவத்தில் அவருக்குக் களமமைத்துக்கொடுத்த ஈழகேசரி காலகட்டம், மறுமலர்ச்சிக் காலகட்டம் ஆகியவையும் விரிவாக ஆராயப்பட வேண்டும். மறுமலர்ச்சிக் காலகட்டம் என்றவுடன் போதிய ஆய்வுகளற்ற பலரும் (பேராசிர்கள் பலருட்பட) மறுமலர்ச்சிச் சஞ்சிகை வெளிவந்த காலகட்டத்தை மையமாகக்கொண்டே அவரது பங்களிப்பை ஆராய முற்படுகின்றார்கள். இது தவறான அணுகுமுறை. அ.ந.க மறுமலர்ச்சி அமைப்பின் ஸ்தாபகர்களிலொருவர். அதன் செயலாளராக இருந்தவர். எழுத்தாளர் பஞ்சாட்சர சர்மாவுக்குக் கடிதமெழுதி அவரை மறுமலர்ச்சிச் சங்கத்துக்குள் கொண்டு வந்தவர் அ.ந.கந்தசாமியே. இக்கடிதத்தை பஞ்சாட்சரசர்மாவின் நூலொன்றில் காணலாம். இதுபோல் மறுமலர்ச்சிச் சங்க அமைப்பினை உருவாக்கியவர்களில் அவர் ஒருவர் என்பதையும், அதன் செயலாளராக விளங்கியவர் என்பதையும் அவர் மல்லிகை சஞ்சிகைக்குத் தனது இறுதிக்காலத்தில் அனுப்பிய வில்லூன்றி மயானக் கவிதை உருவாகிய வரலாறு பற்றிய கட்டுரை தொடர்பாக எழுதிய கடிதத்தில் காணலாம். அதனையும் மல்லிகை சஞ்சிகையில் காணலாம்.
•Last Updated on ••Tuesday•, 09 •June• 2020 19:55••
•Read more...•
••Monday•, 08 •June• 2020 18:17•
??- பேர்ஸி பிஷ் ஷெல்லி | தமிழில்: வ.ந.கிரிதரன் -??
வ.ந.கிரிதரன் பக்கம்
கவிஞர் ஷெல்லியின் புகழ்பெற்ற கவிதைகளிலொன்று 'காதல் தத்துவம்' .இதனைத் தழுவி இதே பெயரில் இரு கவிஞர்கள் கவிதைளை எழுதியிருக்கின்றனர். ஒருவர் அ.ந.கந்தசாமி. இவரது கவிதை தேன்மொழி (1955) சஞ்சிகையில் வெளியானது. இன்னுமொரு தழுவல் கவிதையை எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகம் எழுதியிருக்கின்றார். அது ஈழநாட்டில் வெளியானது. மேலும் பலர் தழுவியோ அல்லது மொழிபெயர்த்தோ எழுதியிருக்கக்கூடும். இங்கு நான் இதே தலைப்பில் ஷெல்லியின் கவிதையை மொழிபெயர்த்திருக்கின்றேன். ஷெல்லியின் கவிதை மரபுக்கவிதை. ஆனால் அதனை அதன் கருத்தின் அடிப்படையில் தமிழாக்கம் செய்துள்ளேன். ஓரிரு மரபுக்கவிதையின் அம்சங்களிலிருந்தாலும் இது மரபுக்கவிதையல்ல. அறிஞர் அ.ந.கந்தசாமி, எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகம் ஆகியோர் தழுவி மொழிபெயர்த்த கவிதைகளையும் கீழே தந்துள்ளேன். அவற்றில் ஷெல்லியின் கவிதையிலுள்ள ஆத்மீக வெளிப்பாடு இல்லாதிருப்பதை அவதானிக்கலாம். அவர்கள்தம் கொள்கைகளுக்கேற்ப அதனை அவர்கள் தவிர்த்திருக்கக்கூடும். அதன் காரணமாகவே அதனைத்தவிர்த்து முழுமையான மொழிபெயர்ப்பாக இல்லாமல் தழுவித் தம் கவிதைகளைப்படைத்திருக்க வேண்டும்.
காதல் தத்துவம்
- பேர்ஸி பிஷ் ஷெல்லி | தமிழில்: வ.ந.கிரிதரன்
ஊற்றுகள் ஆற்றுடன் கலந்துவிடும். ஆறுகளோ ஆழியில் கலந்துவிடும். சொர்க்கக் காற்று எப்போதும் சேர்ந்தே கலந்து விடுமின் உணர்வுடனே. இங்கு எவையும் தனித்தில்லை; இறைவிதி வழியனைத்து மிங்கோர் ஆன்மா ஆகியிணைந்தே கலந்துவிடும்.. அடியேனிலையே அவ்விதமுன்னுடன் ஏன்?
•Last Updated on ••Monday•, 08 •June• 2020 18:36••
•Read more...•
"நான் என் பால்ய ,பதின்மப் பருவத்து வாசிப்பு, எழுத்தனுபவங்களை இங்கு எழுதுவதற்கு முக்கிய காரணம் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இவ்வனுபவங்களை அறிய வேண்டுமென்பதற்காகவே. பொதுவாக எழுத்தாளர்கள் தம் பால்ய, பருவத்து எழுத்து, வாசிப்பனுபவங்களை விரிவாக எழுதுவது குறைவு. எனது அப்பருவத்து அனுபவங்கள் இப்பொழுதும் மகிழ்ச்சியைத்தருவன. இந்நிலையில் இவற்றை வாசிக்கும் இளம் பருவத்தினருக்கும் இவ்வனுபவங்கள் நிச்சயம் இன்பத்தைத்தருவதுடன் , வாசிப்பு, எழுத்தில் ஆர்வமுள்ளவர்களை மேலும் இத்துறைகளில் ஆழ்ந்து ஈடுபடத்தூண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு." - வ.ந.கி -
பதின்ம வயதுகளில் ஈழநாடு மாணவர் மலரில் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நான் நாவலர் வீதியும், கே.கே.ஸ்.வீதியும் சந்திக்குமிடத்திலிருந்த சாந்தையர் மடப்பிள்ளையார் கோயில் வருடா வருடம் சிவராத்திரி தினத்தையொட்டி நடாத்தும் சமயக் கட்டுரைப்போட்டியில் பங்குபற்றியிருக்கின்றேன். 1971- 1974 காலகட்டத்தில் மூன்று தடவைகள் பங்கு பற்றியிருக்கின்றேன். நாவலர் பள்ளிக்கூடத்தில் போட்டி நடைபெற்றது. அவற்றில் இரு தடவைகள் முதலாவதாகவும், ஒருமுறை இரண்டாவதோ அல்லது மூன்றாவதாகவும் வந்திருக்கின்றேன். பரிசாகச் சான்றிதழும் , சமய நூல்களும் தந்தார்கள். அவற்றில் முதல் பரிசைப்பெற்ற ஒரு கட்டுரையொன்றின் தலைப்பு மட்டும் நினைவிலுள்ளது. அது 'சமயமும், விஞ்ஞானமும்' அதில் டார்வினின் கூர்ப்புக் கொள்கையையும் திருவாசகரின் 'புல்லாய்ப் பூண்டாய்..' என்று வரும் சிவபுராண வரிகளையும் ஒப்பிட்டு விஞ்ஞானம் இன்று கூறியதை அன்றே கூறியவர் மாணிக்கவாசகர் என்று வாதிட்டிருந்தேன். அப்போட்டிகளை நடத்துவதில் ஈடுபாடுள்ள இருவர் இன்னும் என் நினைவிலுள்ளார்கள். ஒருவர் இளம் வயதுடையவர். சாந்தையர் மடப்பிள்ளையார் கோயில் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளவர். நாவலர் வீதியில் வசித்தவர். அவருடன் காணப்பட்ட இன்னுமொருவர் ஆசிரியரைப்போன்று தென்பட்டார். கந்தசாமி என்று அவருக்குப்பெயர் என்று நினைவு. ஏனெனில் பெற்ற பரிசுச் சான்றிதழ்களிலும் இ.கந்தசாமி என்ற பெயரே இருந்ததாக நினைவு (சிலவேளை அது தவறாகக்கூட இருக்கலாம். நீண்ட காலமாகிவிட்டதால் நினைவில் உறுதியாக அப்பெயரில்லை.) ஆனால் பின்னர் கார்க்கியின் நூல்கள், அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவு நூல்கள் காரணமாகச் சமயம் மீதான ஈடுபாடு எனக்குக் குறைந்தது. கார்ல் மார்க்சின் கோட்பாடுகளை விரிவாக அறிந்த காலகட்டத்தில் விஞ்ஞானமே என் மெய்ஞ்ஞானமாயிற்று. எம் மானுட அறிவுக்குட்பட்ட விடயங்களை அறிவதற்கான, புரிதலுக்கான வழி அறிவியலே என்பதே தற்போது என் நிலைப்பாடு.
•Last Updated on ••Sunday•, 07 •June• 2020 18:39••
•Read more...•
"நான் என் பால்ய ,பதின்மப் பருவத்து வாசிப்பு, எழுத்தனுபவங்களை இங்கு எழுதுவதற்கு முக்கிய காரணம் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இவ்வனுபவங்களை அறிய வேண்டுமென்பதற்காகவே. பொதுவாக எழுத்தாளர்கள் தம் பால்ய, பருவத்து எழுத்து, வாசிப்பனுபவங்களை விரிவாக எழுதுவது குறைவு. எனது அப்பருவத்து அனுபவங்கள் இப்பொழுதும் மகிழ்ச்சியைத்தருவன. இந்நிலையில் இவற்றை வாசிக்கும் இளம் பருவத்தினருக்கும் இவ்வனுபவங்கள் நிச்சயம் இன்பத்தைத்தருவதுடன் , வாசிப்பு, எழுத்தில் ஆர்வமுள்ளவர்களை மேலும் இத்துறைகளில் ஆழ்ந்து ஈடுபடத்தூண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு." - வ.ந.கி -
ஈழநாடும் , நானும் (2): அப்பாவின் பெயரிலெழுதிய சித்திரைப்புத்தாண்டுக்கவிதையும், மட்டக்களப்பில் நடைபெற்ற அகில இலங்கைத்தமிழ்த்தின விழா நிகழ்வும்..
ஈழநாடு மாணவர் மலர் என் 'தீபாவளி தித்தித்தது' கட்டுரைக்குத் தந்த ஊக்கம் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டியது. மேலும் சில கதைகளை என் பாடசாலை அப்பியாசப் புத்தகத்தில் எழுதினேன். அவற்றில் ஒன்றின் தலைப்பு மட்டும் இன்னும் நினைவிலுள்ளது. கதையின் தலைப்பு - 'மழை பெய்து ஓய்ந்தது'. கதை ஆரம்பிக்கும்போதும் , முடியும் போதும் இடம்பெற்றிருக்கும் வசனங்கள்: 'மழை பெய்து ஓய்ந்தது'. :-) அதனை வழக்கம்போல் அப்பாவுக்குக் காட்டினேன். அவர் படித்துப்பாராட்டினார். அக்காலகட்டத்தில் எங்கள் வீட்டு அயல்வீட்டில் குடியிருந்த 'அன்ரி' ஒருவரும் அக்கதைக் 'கொப்பி'யை இரவல் வாங்கிச்சென்று வாசித்துவிட்டு வந்து பாராட்டினார்.
இதற்கிடையில் பொங்கல் திருநாளும் நெருங்கிக்கொண்டிருந்தது. அப்பொழுது அப்பா சுதந்திரன் பத்திரிகையையும் வாங்கிக்கொண்டிருந்தார்.அதில் நா.பாலேஸ்வரியின் 'எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு' தொடராக வெளிவந்துகொண்டிருந்ததாக நினைவு. அவரது எழுத்து நடையும் என்னை அக்காலகட்டத்தில் மிகவும் கவர்ந்திருந்தது என்பேன். அப்பருவ நினைவுகள் அழியாத கோலங்கள் என்பவை என்பதால் அவர் பற்றிய நினைவுகளும் அவரது தொடர்கதையின் சில பக்கங்களை மட்டுமே வாசித்திருந்தபோதிலும் நினைவில் பதிந்து விட்டன.
•Last Updated on ••Sunday•, 07 •June• 2020 18:38••
•Read more...•
"நான் என் பால்ய ,பதின்மப் பருவத்து வாசிப்பு, எழுத்தனுபவங்களை இங்கு எழுதுவதற்கு முக்கிய காரணம் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இவ்வனுபவங்களை அறிய வேண்டுமென்பதற்காகவே. பொதுவாக எழுத்தாளர்கள் தம் பால்ய, பருவத்து எழுத்து, வாசிப்பனுபவங்களை விரிவாக எழுதுவது குறைவு. எனது அப்பருவத்து அனுபவங்கள் இப்பொழுதும் மகிழ்ச்சியைத்தருவன. இந்நிலையில் இவற்றை வாசிக்கும் இளம் பருவத்தினருக்கும் இவ்வனுபவங்கள் நிச்சயம் இன்பத்தைத்தருவதுடன் , வாசிப்பு, எழுத்தில் ஆர்வமுள்ளவர்களை மேலும் இத்துறைகளில் ஆழ்ந்து ஈடுபடத்தூண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு." - வ.ந.கி -
என் பால்ய காலம் வவுனியாவில் கழிந்தது. என் வாசிப்புக்கும், எழுத்துக்கும் முக்கிய காரணம் அப்பா. வீட்டைத் தமிழகச் சஞ்சிகைகள், நூல்களால் நிறைத்திருந்தார். கல்கி, விகடன், கலைமகள், மஞ்சரி, தினமணிக்கதிர், ராணி, ஈழநாடு, சுதந்திரன், தினமணி் , இந்தியன் எக்ஸ்பிரஸ், ராணிமுத்து, குமுதம், அம்புலிமாமா, பொன்மலர் (காமிக்ஸ்) , பால்கன் (காமிக்ஸ்). என வாங்கிக்குவித்திருந்தார். இவைதவிர அவர் தனியாக ஆங்கில நூல்களடங்கிய புத்தக அலுமாரி வைத்திருந்தார். அதில் கிறகாம் கிறீன், ஆர்.கே.நாராயணன், டால்ஸ்டாய் , இர்விங் ஸ்டான் , டி.இ.லாரன்ஸ்௶, பி.ஜி.வூட் ஹவுஸ் என்று பலரின் நூல்கள் அவரிடமிருந்தன. இவை தவிர ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து, பாரதியார் கவிதைகள், புலியூர்க் கேசிகனின் உரையுடன் கூடிய சிலப்பதிகாரம் ,மணிமேகலை போன்ற பண்டைத்தமிழரின் காப்பியங்கள், கவிதைகள் வாங்கியிருந்தார். தமிழகத்தில் திமுக பதவியேற்றதும் நடைபெற்ற உலகத்தமிழராய்ச்சி மகாநாட்டையொட்டிச் சிறப்பானதொரு மலரை வெளியிட்டிருந்தார்கள். அம்மலரும் வீட்டிலிருந்தது. இதன் காரணமாக என் பால்ய பருவத்திலேயே நான் தீவிர வாசகனாக உருவெடுத்தேன். அப்பாவுக்கு வீட்டில் எப்பொழுதும் ராமாயணம், மகாபாரதம் இருக்க வேண்டும். குழந்தைகள் எங்கள் ஐவரின் பெயர்களையும் அவ்விரு காப்பியங்களிலிருந்துதாம் தெரிவு செய்திருந்தார்.
•Last Updated on ••Sunday•, 07 •June• 2020 18:38••
•Read more...•
நடேசன் அவர்கள் தனது 'இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா' என்னும் கட்டுரையில் பின்வருமாறு கூறியிருக்கின்றார்:
"போரின் விளைவால் புலம் பெயர்ந்து சென்ற எழுத்தாளர்களின் வரிசையில் இலங்கைத் தமிழர்களாகப் பலர் உண்டு . அதில் ஏற்கனவே எழுத்தாளராகப் புலம் பெயர்ந்தவர்களும், புலம் பெயர்ந்த பின்பு எழுத்தாளர்களானவர்களும் அடக்கம். இவர்களில் ஒற்றைக் கை விரல்களில் எண்ணக்கூடியவர்களே புலம்பெயர்ந்த இலக்கியம் என்று சிந்தித்துப் படைப்பவர்கள். மற்றையோர் கண்டங்கள் கடந்திருந்து , கால் நூற்றாண்டுகள் மேல் பாரிஸ் , லண்டன் , ரொரண்ரோ என வாழ்ந்தபோதிலும் ஊர் நினைவுகளை மீட்டுகிறார்கள். அது அவர்களது தவறல்ல . ஊர் நினைவுகள் ஒரு எலும்பில் புகுந்த சன்னம் போன்றது. இன்னும் அழுத்தமாகச் சொன்னால் அடிமை கொள்ளும் போதை போன்றது. விலகுவது சுலபமல்ல. நண்பர் ஷோபாசக்தி நேர்மையாக அதை சமீபத்திய செவ்வியில் ஒப்புக்கொண்டார். பலர் அதை ஏற்றுக்கொள்ளாமல் புலம்பெயர்ந்தவர்கள் என்ற லேபலுக்குள் இருந்து பால்ய கால நினைவுகளையும் இலங்கையில் நீடித்த போர் பற்றியும் எழுதுகிறார்கள் . நான்கூட அசோகனின் வைத்தியசாலை , உனையே மயல்கொண்டேன் முதலான அவுஸ்திரேலியாவின் வாழ்வு சார்ந்த நாவல்களை எழுதிவிட்டு மீண்டும் கானல் தேசம் என்ற போரக்கால நாவலை எழுதினேன்."
•Last Updated on ••Saturday•, 06 •June• 2020 20:08••
•Read more...•
அண்மையில் எழுபதுகளில் , யாழ்ப்பாணத்தில் எழுத்தாளர் சி.மகேஸ்வரன் (இந்து மகேஷ்) ஆசிரியராகவிருந்து வெளியிட்ட 'இதயம்' சஞ்சிகை பற்றியொரு குறிப்பினைப்பதிவு செய்திருந்தேன். அது பற்றி இந்து மகேசுக்கும் அறியத்தந்திருந்தேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார். அத்துடன் தான் முகநூலில் 'இதயம்' பற்றி எழுதிய பதிவு பற்றியும் அறியத்தந்திருந்தார். அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அத்துடன் அவர் ஜேர்மனியிலிருந்து 1998 -2008 காலகட்டத்தில் 'பூவரசு' என்னும் பெயரில் சஞ்சிகையொன்றினை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
மூன்று இதயம் இதழ்கள் நூலகம் தளத்திலுள்ளன: http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
அவர் அனுப்பிய மின்னஞ்சல் கீழே:
"அன்பிற்கினிய கிரிதரன்! வணக்கம். அவ்வப்போது உங்கள் முகநூல்பக்கமும் வந்துபோகிறேன். இதயம் வெளியான காலகட்டம் (1971) நம்நாடு போர்ச்சூழலுக்குள் சிக்கியிருந்ததால் புத்தக வெளியீட்டிலும் அதன் விநியோகத்திலும் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு வருடத்துக்குமேல் தாக்குப்பிடிக்க முடியாமல் இதயம் துடிப்படங்கிப் போயிற்று. ஆனாலும் வெளியான ஒரு சில இதழ்களிலேனும் பயனுள்ள சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறோம் என்ற நிறைவை உங்களது முகநூல்பதிவு தந்திருக்கிறது. திரு.மணியம் அவர்களையும் இரசிகமணி கனக் செந்திநாதன் அவர்களையும் இதயம் இதழுக்காகவும், ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்களை வரதர் அவர்களின் வெள்ளி இதழுக்காகவும் நேரடியாகச்சென்று பேட்டி எடுத்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகவே பூவரசு இதழிலும் நமது கலைஞர்கள் என்னும் பகுதியில் புலம்பெயர் கலைஞர்கள் பலரது பேட்டிகளும் பிரசுரமாகியிருக்கின்றன. அன்புடன் இந்துமகேஷ்"
•Last Updated on ••Tuesday•, 02 •June• 2020 23:21••
•Read more...•
- பதிவுகள் இணைய இதழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான கவிஞர் வேதா இலங்காதிலகம் அவர்களின் கவிதைத் தொகுப்பான 'மனக்கடல் வலம்புரிகள்' இலங்கையில் ஜீவநதி பதிப்பகத்தின் நூற்றி நாற்பத்தெட்டாவது வெளியீடாக வெளிவந்துள்ளது. அத்தொகுப்புக்கு நான் எழுதிய அணிந்துரையிது. நூலைச்சிறப்பாக, அழகான வடிவமைப்புடன் வெளியிட்டுள்ளார்கள் ஜீவநதி பதிப்பகத்தினர். பதிப்பகத்தினருக்கும், கவிஞருக்கும் வாழ்த்துகள். - வ.ந.கிரிதரன் -
கவிஞர் வேதா இலங்காதிலகத்தை நான் முதன் முதலில் அறிந்துகொண்டது 'பதிவுகள்' இணைய இதழ் மூலமாகத்தான். 'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து தமிழகம் தொடக்கம் உலகின் ஏனைய பாகங்கள் பலவற்றில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் பலர் தம் படைப்புகளை அனுப்பி ஆக்கப்பங்களிப்பு செய்து வருகின்றார்கள். 'பதிவுகள்' எழுத்தாளர் ஒருவரின் கவிதைகள் நூலுருப்பெறுவது மகிழ்ச்சியினைத்தருகின்றது. கவிஞர் வேதா இலங்காதிலகம் இணைய இதழ்கள், தமிழ் வானொலிகள் என ஊடகங்கள் பலவற்றில் அயராது தொடர்ச்சியாக எழுதிவருபவர். தொடர்ச்சியாக , சளைக்காமல் அவர் தொடர்ந்து எழுதிவருவது அவரது எழுத்து மீதான பற்றினை வெளிப்படுத்துமொரு செயல்.
வேதா இலங்காதிலகத்தின் கவிதைகளை வாசித்தபொழுது எனக்கு முதலில் அவற்றில் தென்பட்ட பிரதான அம்சங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடுவேன். அவை மானுட நேயத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. அவை மானுட உயர்வுக்கான வழிமுறைகளை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. அவை மானுடர்தம் தாய்மொழியின் முக்கியத்துவத்தை, அதன் மீதான பற்றினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. அவை மானுடர்தம் பல்வகை உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. அவை மானுடர் வாழும் இயற்கைச்சூழலை, அதன் அழகினை விதந்தோடுபவையாகவுள்ளன. இவற்றுடன் அவ்வப்போது அவரது கற்பனையாற்றலை, படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் கவிதைகளில் தென்படும் உவமைகள், உருவகங்கள் அமைந்துள்ளன. இவ்வகையில் சிறப்புற்றிருக்கும் கவிதைகளை உருவாக்க அவர் பாவித்திருக்கும் எளிமையான மொழியின் இனிமையும் அவரது கவிதைகளின் முக்கியமான அம்சங்களிலொன்று. இவை பற்றிச் சுருக்கமாக இனி நோக்குவோம்.
•Last Updated on ••Tuesday•, 02 •June• 2020 21:17••
•Read more...•
அறுபதுகளில் , எழுபதுகளில் தமிழ் வெகுசன வாசகர்கர்கள் இவரின் எழுத்துகளைத்தீவிரமாக வாசித்தார்கள். ஆனால் இன்று அவரது படைப்புகளை ஏனைய வெகுசனப் படைப்பாளிகளான நா.பார்த்தசாரதி, அகிலன், சாண்டில்யன் .. போன்றோரின் படைப்புகளை வாசிப்பது போல் வாசிப்பதாகத்தெரியவில்லை. ஏனையவர்களின் படைப்புகளைப்போல் பதிப்புகள் பல கண்டதாகத்தெரியவில்லை. ஏன் என்று யோசித்துப்பார்ப்பதுண்டு. இவரது பல நாவல்கள் ஆனந்த விகடனில் தொடர்களாக வெளியாகின. விகடனின் எண்ணிக்கையும் அவற்றால் அதிகரித்தது. அவர்தான் மணியன். வேங்கட சுப்பிர மணியன் என்பது முழுப்பெயர். திரையுலகிலும் இவரது படைப்பான இதயவீணை வெளியாகி வெற்றியடைந்தது. திரைக்கதை எம்ஜிஆர் மயப்படுத்தப்பட்டிருந்தது.
காதலித்தால் போதுமா என்னும் நாவலில் தொடங்கி (ஓவியர் மாயாவின் ஓவியங்களுடன் வெளியாகிய நாவல்) நீரோடை, தேன் சிந்தும் மலர், இதய வீணை, நெஞ்சோடு நெஞ்சம், உண்மை சொல்ல வேண்டும், உன்னை ஒன்று கேட்பேன், என்னைப்பாடச் சொன்னால், லவ் பேர்ட்ஸ். என்று பல தொடர்கதைகளை எழுதினார். இவற்றில் லவ்பேர்ட்ஸ் நாவலைக் குமாரி பிரேமலதா என்னும் பெயரில் எழுதினார். இந்நாவலுக்கு மட்டும் ஓவியர் ஜெயராஜ் கவர்ச்சிகரமான ஓவியங்களை வரைந்திருந்தார். ஏனைய நாவல்கள் அனைத்துக்கும் ஓவியர் மாயாவே ஓவியங்கள் வரைந்திருந்தார். இவற்றில் இதயவீணை, உண்மை சொல்ல வேண்டும் ஆகியவை மிகுந்த வரவேற்பைப்பெற்றதாக நினைவு. காதலித்தால் போதுமாவை நான் விகடன் பிரசுரமாகத்தான் வாசித்தேன். அது தொடராக வெளியானபோது நான் இதழ்களில் வெளியான தொடர்களை வாசிக்கத்தொடங்கியிருக்க வில்லை.
பல்வேறு நாடுகளுக்குச் சென்று தன் பயண அனுபவங்களை இதயம் பேசுகிறது என்று எழுதினார். அவையும் அவை வெளியான காலகட்டத்தில் வாசகர்களின் பேராதரவைப்பெற்றன. அதனால்தான் விகடன் நிர்வாகம் அவரை மீண்டும் மீண்டும் வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பியது. எம்ஜிஆரின் நம்பிக்கைக்குப்பெரிதும் உகந்தவர்களிலொருவராக விளங்கியவர். பின்னர் ஆனந்த விகடனிலிருந்து வெளியாகி 'இதயம் (பேசுகிறது') என்னும் சஞ்சிகையைத்தொடங்கினார்.
•Last Updated on ••Tuesday•, 02 •June• 2020 10:05••
•Read more...•
மே 31, 1981. யாழ் பொது சன நூலகம் எரிக்கப்பட்ட நாள். யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம். நாகரிகத்தின் உச்சியிலிருப்பதாகக் கூறிப் பெருமிதமுறும் மனித இனமே நாணித்தலை குனிய வேண்டிய தினம். நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதிகளெல்லாம் நெருப்போடு நெருப்பாக அழிந்தே போய்விட்டன. இவற்றின் அழிவினைத் தாங்க மாட்டாத பாதிரியார் ஒருவரும் (தாவீது அடிகள்) மாரடைப்பால் இறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
பொதுவாக அவ்வப்போது யாழ் பொதுசன நூலகம் பற்றிய நினைவுகள் தோன்றுவதுண்டு. இந்த நூலகத்துடனான எனது உறவு பின்னிப்பிணைந்ததொன்று. என் மாணவப்பருவத்துத் தோழர்களில் முக்கியமான தோழனாக விளங்கிய நூலகம். பன்முகப்பட்ட அறிவினை அள்ளி வழங்கிய சிறந்த நண்பன். எவ்வித எதிர்பார்ப்புகளுமற்று அதனை வாரி வழங்கிய நண்பன். யாழ் பொது நூலகத்தை எண்ணியதும் எப்பொழுது முதன் முதல் அதனுடனான எனது தொடர்பு ஏற்பட்டது என்று எண்ணிப்பார்க்கின்றேன்.
•Last Updated on ••Monday•, 01 •June• 2020 22:50••
•Read more...•
••Saturday•, 30 •May• 2020 22:09•
??- ஆங்கிலத்தில்: கவிஞர் பைரன் (பைரன் பிரபு) | தமிழில்: வ.ந.கிரிதரன்??
வ.ந.கிரிதரன் பக்கம்
கவிஞர் பைரனின் (Lord Byron) பிரபல்யமான கவிதைகளிலொன்று 'எனது இனிய மேரி ஆனுக்கு' (To My Dear Mary Anne ). அவரது பதினைந்தாவது வயதில் ஏற்பட்ட முதற் காதல் தோல்வியையடுத்து தன் இழந்த காதலி மேரி ஷாவேர்த்தை (Mary Anne Chaworth) நினைத்து எழுதிய கவிதை. எனக்குப் படைப்பொன்றின் மொழிபெயர்ப்பானது முடிந்தவரை வரிக்கு வரி இருக்க வேண்டும். அதுவே சிறந்த மொழிபெயர்ப்பு என்பது என் கருத்து. ஏனென்றால் பொருளினை உள்வாங்கி அதனடிப்படையில் படைப்பொன்று மொழிபெயர்க்கப்படும்போது மூலத்திலிருந்து மொழிபெயர்ப்பானது பெரிதும் வேறுபட்டு விடுகின்றது. இக்கவிதை இயலுமானவரையில் வரிக்கு வரி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
1,
சென்றுவருகிறேன் என் இனிய மேரி, நிரந்தரமாகவே. அவளிடமிருந்து நான் விரைவாகவே விடைபெற வேண்டும். எம்மிருவரையும் *விதித்தேவதைகள் பிரித்தாலும் அவளது உருவம் என் நெஞ்சில் குடியிருக்கும்.
•Last Updated on ••Sunday•, 31 •May• 2020 00:23••
•Read more...•
வசந்தம்' சஞ்சிகையின் மார்ச் 10, 1966 இதழில் வெளியான ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதை என் கவனத்தைக் கவர்ந்தது. அது ஒரு மெக்சிகோ நாட்டுச் சிறுகதை. எழுதியவர் யுவன் றுல்போ. தமிழாக்கம் செய்தவர் எழுத்தாளர் அ.கந்தசாமி. இவர்தான் எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்று விளங்கிய பெளதிக ஆசிரியர்களிலொருவர். கல்விப்பொதுத்தராதர சாதாரண, உயர்தர மாணவர்களுக்கான பெளதிகப் பாடத்துக்கு இவரது 'டியூசன்' வகுப்புகள் பிரசித்தம். நானும் இவரிடம் உயர்தர வகுப்புக்கான பெளதிகப் பாடத்துக்கு டியூசன் எடுத்திருக்கின்றேன். கனடாவில் வெளியான 'ழகரம்' சஞ்சிகையின் ஆசிரியரும் இவரே. கதை, சிறுகதை, கவிதை , கட்டுரை என இவரது இலக்கியப் பங்களிப்பும் பரந்தது.
'வசந்தம்' சஞ்சிகையின் ஆசிரியர் எழுத்தாளர் இ.செ.கந்தசாமி. ஆரியர் வீதி, கொழும்புத்துறையில் வசிக்கும் இ.செ.கந்தசாமியால் ஶ்ரீ பார்வதி அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படும் சஞ்சிகையென்று சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கதையை முதலில் வாசித்தபோது அறிஞர் அ.ந.கந்தசாமி எழுதிய கதையோ என்று நினைத்தேன். அக்கால சஞ்சிகைகள், பத்திரிகைகள் பலவற்றில் எழுத்தாளரின் பெயர்களில் எழுத்துப்பிழைகள் ஏற்படுவதையும் அவதானித்துள்ளேன். இ.பத்மநாபன் இ.பத்மநாதன் என்றும், நா.சுப்பிரமணியன் நா.சுப்பிரமணியம் என்றும் வெளியாகியுள்ளன. இதுபோல் அ.ந.கந்தசாமி என்பதிலுள்ள ந விடுபட்டுப் போயிருக்குமோ என்னும் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அச்சந்தேகம் நீங்கிவிட்டது. இதனை எழுதியவர் எழுத்தாளர் அ.கந்தசாமி என்பதை அறிந்துகொண்டேன்.
•Last Updated on ••Monday•, 01 •June• 2020 22:39••
•Read more...•
அறுபதுகளில், எழுபதுகளில் & எண்பதுகளில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களுக்கு ஓவியர் மணியமென்றால் நன்கு தெரிந்த ஒருவர். தமிழகத்து ஓவியர் மணியம் அல்லர் இவர். இவர் யாழ்ப்பாணத்து ஓவியர் மணியம். அக்காலகட்டத்தில் யாழ் திரையுரங்குகளில் உச்ச நட்சத்திரங்களின் (எம்ஜிஆர் & சிவாஜி) திரைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம் ஒன்று மட்டும் நிச்சயம். அது அநேகமாக அத்திரைப்படத்துக்கு ஓவியர் மணியம் ஒரு பிரும்மாண்டமான கட் அவுட் வரைந்திருப்பார் என்பதுதான். இவரைப்பற்றி நினைத்தாலே காவல்காரன், அடிமைப்பெண், நீதி, ராஜா, பாபு, நீரும் நெருப்பும், அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன் , நாளை நமதே திரைப்படங்களுக்கு இவர் வரைந்த கட் அவுட்டுகள் நினைவில் வந்து போகும், இவரைப்பற்றியும் இவரது கட் அவுட்டுகள் பற்றியும் அவ்வப்போது முகநூற் பதிவுகள் இட்டிருக்கின்றேன். ஆனால் ஓவியர் மணியம் பற்றிய அதிக தகவல்களைப்பெற முடியாதிருந்தது.
இந்நிலையில் நூலகம் எண்ணிம நூலகத்தில் பழைய சஞ்சிகைகள் மேய்ந்து கொண்டிருந்தபோது யாழ்ப்பாணத்திலிருந்து எழுபதுகளில் எழுத்தாளர் சி.மகேஸ்வரனை ஆசிரியராகக்கொண்டு வெளியான 'இதயம்' சஞ்சிகைகளின் சில பிரதிகள் வாசிக்கக்கிடைத்தன. காத்திரமான விடயங்களைத்தாங்கி வெளிவந்த கலை, இலக்கிய மாத இதழ் 'இதயம்'. சி.மகேஸ்வரனே எழுத்தாளர் இந்து மகேஸ் என்று இப்பதிவுக்கான தனது எதிர்வினையொன்றில் எழுத்தாளர் வி.ரி.இளங்கோவன் அறியத்தந்திருந்தார். இன்றுதான் எழுத்தாளர் இந்து மகேஸ்தான் இதயம் சஞ்சிகை ஆசிரியர் என்னும் விடயத்தை முதன் முறையாக அறிந்துகொண்டேன். தகவலுக்கு நன்றி இளங்கோவன் அவர்களே.
•Last Updated on ••Friday•, 29 •May• 2020 14:17••
•Read more...•
அறிவொளி சஞ்சிகையின் 1967 தை மாத இதழில் வெளியான 'இராமன் விளைவு' என்னும் அறிவியற் கட்டுரை என்னைச் சஞ்சிகையின் பக்கங்களைப் புரட்டியதுமே கவர்ந்தது. முதன் முதல் நோபல் பரிசு பெற்ற சேர்.சி.வி.ராமன் அதனை இயற்பியலுக்காகப்பெற்றார். அவர் கண்டுபிடித்த கண்டு பிடிப்பே 'இராமன் விளைவு'. இயற்பியலில் பல்கலைக்கழக மட்டத்தில் கற்பிக்கப்படுகின்றது. அவரது கண்டு பிடிப்பே வானம் ஏன் நீல நிறமாக விளங்குகின்றது என்பதற்கான காரணத்தை விளக்குகின்றது என்பது பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் அது தவிர மேலதிகமாக எவற்றையும் அறிந்திருக்க மாட்டீர்கள்.
அந்தக் கண்டுபிடிப்பே ஒளியின் அலை, மற்றும் துகள் கொள்கையினை விளக்கப்போதுமானது. அதனையும் குவாண்டம் இயற்பியல் பற்றியும் , ஐன்ஸ்டைனின் போட்டோன்கள் பற்றிய கண்டு பிடிப்பு பற்றியும் இ.பத்மநாபனின் இவ்வறிவியற் கட்டுரை விளக்கமாக விபரிக்கின்றது. அதனால் அக்கட்டுரை வெளியான அறிவொளி சஞ்சிகையினை வாசிக்க அதற்கான இணைப்பிங்கே: http://noolaham.net/project/390/38918/38918.pdf
நான் இதுவரை தமிழில் 'ராமன் விளைவு' பற்றிய அறிவியற் கட்டுரை வேறு வாசித்ததில்லை. வந்திருக்கலாம். நான் அறியவில்லை. ஆனாலிந்த அறிவியற் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. ஒளியின் அலை, மற்றும் துகள் பண்புகளை அழகாக ராமன் விளைவு மூலம் வாசிக்கும் எவரும் அறியும் வண்ணம் கட்டுரையாளர் இ.பத்மநாபன் இக்கட்டுரையினை எழுதியிருந்தார்.
இ.பத்மநாபனின் மேலும் சில அறிவியற் கட்டுரைகளை இலங்கையில் வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட நவீன விஞ்ஞானி பத்திரிகையிலும் அறிவியல் மேதைகள் பற்றி எழுதியுள்ளார். அவையும் என்னை மிகவும் கவர்ந்தன. நவீன விஞ்ஞானி பத்திரிகையில் வெளியான இ.பத்மநாபனின் அறிவியற் கட்டுரைகள் பற்றிய விபரங்கள் வருமாறு ( என் கண்களுக்கு அகப்பட்டவை):
•Last Updated on ••Saturday•, 23 •May• 2020 21:53••
•Read more...•
அஞ்சலி' சஞ்சிகையின் ஆகஸ்ட் 1971 இதழில் வெளியான 'ஒரு வரலாறு ஆரம்பமாகின்றது' நல்லதொரு சிறுகதை. நெடுந்தீவில் வாழும் மீனவர்களைப்பற்றிய கதை. அவர்களுக்கிடையில் நிலவும் உட்பிரிவுகள், அதனாலேற்படும் வறட்டுக் கெளரவப்பிரச்சினைகள், கடலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இயற்கை ஏற்படுத்தும் இருப்பிடப் பிரச்சினைகள் , தொழிலாளர் & முதலாளி முரண்பாடுகள் , கூளக்கடாய்ப் பறவை, இராவணன் மீசை, கத்தாளைச் செடிகள் என எனப் பலவற்றை விபரிக்கும் மண் வாசனை மிகுந்த சிறுகதை.
கதாசிரியர் ஜெயபாலன் என்றுள்ளது. கதைக்களம் நெடுந்தீவென்பதால் ஜெயபாலன் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனாகவிருக்க வேண்டும். இச்சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட சிந்தனை: ஜெயபாலன் கவிதையில் செலுத்திய நாட்டத்தைப் புனைகதையிலும் அதிகம் செலுத்தியிருக்க வேண்டும். மண் வாசனை தவழும் புனைவுகள் பல கிடைத்திருக்கும்.
ஒரு கேள்வி? இக்கதையில் வெல்லைக் கடற்கரை என்று வருவது அப்படித்தான் அழைக்கப்படுகின்றதா? அல்லது வெள்ளைக்கடற்கரை என்று அழைக்கப்படுகின்றதா? அறிந்தவர்கள் அறியத்தரவும்.
ஆகஸ்ட் 1971 'அஞ்சலி'க்கான இணைப்பு: http://noolaham.net/project/15/1500/1500.pdf
மேற்படி முகநூற் பதிவுக்கான எதிர்வினைகள்:
K S Sivakumaran VIS Jeyapalan is a versatile poet,actor and writer. Cheers to him
Giritharan Navaratnam Your article is also in the issue.... 1 K S Sivakumaran Is it? Kindly send a photocopy of it to me dear friend VNG. I don't hava clipping.Thanks.
Thavarajah Arulkumaran நல்ல பதிவு.
Indran Rajendran உண்மைதான். ஆனால் இப்போதுகூட கெட்டுவிடவில்லை. ஜெயபாலன் கதையில் கவனம் செலுத்தலாம்.
Giritharan Navaratnam செக்குமாடு என்று குறுநாவலொன்று எழுதியிருக்கின்றார். எஸ்.பொ. & இந்திரா பார்த்தசாரதி தொகுத்த தொகுப்பிலுள்ளது.
•Last Updated on ••Friday•, 22 •May• 2020 11:12••
•Read more...•
இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த 'அஞ்சலி' சஞ்சிகையும் , அது வெளியிட்ட மூன்று சிறப்பிதழ்களும் (மலையக, வடக்கு & கிழக்கு)!
'அஞ்சலி' என்னும் சிற்றிதழ் எழுபதுகளின் ஆரம்பத்தில் வத்தளையிலிருந்து வெளியாகியுள்ளது. ஏ.எம்.செல்வராசா இதன் நிர்வாக ஆசிரியர். காரியாலய முகவரி: முகவரி: 198 நீர்கொழும்பு வீதி, வத்தளை. இச்சஞ்சிகையின் பத்து இதழ்கள் 1971- 1972 வரை, எண்ணிம நூலகமான 'நூலகம்' இணையத்தளத்திலுள்ளன. கண்ணைக்கவரும் அட்டைப்பட ஓவியங்களுடன் வெளிவந்த அஞ்சலி இதழ்களில் வட கிழக்கு, மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பலரின் பல்வகைப்படைப்புகளையும் காணமுடிகின்றது. ஓவியர் வீகேயின் (வி.கனகலிங்கம்) கைவண்ணம் இதழ்களெங்கும் பரவிக்கிடக்கின்றது. கஸ்தூரி, சந்ரா போன்றோரின் ஓவியங்களையும் காண முடிகின்றது.
உதாரணத்துக்கு நாமெல்லாரும் நன்கறிந்த படைப்பாளிகள் தொடக்கம் , புதியவர்கள் வரை சிறுகதை, கட்டுரை, கவிதை, தொடர்கதைகள் ஆகியவை இலக்கியத்தின் வரலாறு, சமூகம், நாடோடி இலக்கியம், வரலாறு, தொல்லியல், மொழிபெயர்ப்பு போன்ற பிரிவுகளில் இவ்விதழ்களிலுள்ளன. அருள் சுப்பிரமணியம், குப்பிழான் ஐ.சண்முகம், செ.யோகநாதன், தெளிவத்தை ஜோசப், கே.கணேஷ், என்.எஸ்.எம்.ராமையா, கலாநிதி கா.இந்திரபாலா, கலாநிதி க.கைலாசபதி, கலாநிதி கா.சிவத்தம்பி, முருகையன், காரை செ.சுந்தரம்பிள்ளை, ஜெயபாலன், ந.பாலேஸ்வரி, யாழ்நங்கை, மலரன்பன், செங்கை ஆழியான் , இரசிகமணி கனக செந்திநாதன், மு.கனகராசன், எம்.ஏ.நுஃமான், சபா. ஜெயராசா, அகஸ்தியர், மாத்தளை செல்வம், அல்.ஹாஜ்.ஆ.மு.ஷரிபுத்தீன், பஸீல் காரியப்பர், சி.மெளனகுரு, திக்கவயல் தர்மகுலசிங்கம், மருதூர்க்கொத்தன் , பரிபூரணன் , வ.அ.இராசரத்தினம்.. என்று பலரின் படைப்புகளையும் அஞ்சலி இதழ்களில் காண முடிகின்றது.
•Last Updated on ••Thursday•, 21 •May• 2020 12:18••
•Read more...•
பட்டாபிராம ரெட்டி தயாரித்து, இயக்கிய கன்னடத்திரைப்படம்தான் எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் புகழ்பெற்ற நாவலான 'சம்ஸ்காரா'. பட்டாபிராம ரெட்டியும் எழுத்தாளர், கவிஞர், படத்தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதை வசனகர்த்தா எனப்பன்முகக் கலையாளுமை மிக்க ஒருவர். இவற்றுடன் சமுக, அரசியற் செயற்பாட்டாளரும் கூட.
இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இவரது மனைவி சிநேகலதா ரெட்டியும் இவரைப்போன்று பன்முகக் கலையாளுமை மிக்க ஒருவர். மேடை, சினிமா நடிகை. சமூக, அரசியற் செயற்பாட்டாளர். இந்தியாவில் அவசரகால நிலை நிலவியபோது சிறைவாசம் எட்டு மாதங்கள் அனுபவித்தவர். சிறையில் பல்வகைச்சித்திரவதைகளை அனுபவித்தவர். சிறையில் தொய்வு நோயால் அவதிப்பட்ட இவர் அதன் காரணமாகவே நினைவிழந்தும் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிறையிலிருந்து பரோலில் விடுவிக்கப்பட்டு , அடுத்தவாரமே சிறைச்சித்திரவதைகள், சிறையில் கவனிக்கப்படாத உடல்நிலை காரணமாக மரணித்தவர். இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக்குப் பலியாகிய முதலாவது நபர் இவரே. இத்தனைக்கும் காரணம் இவர் அப்போது தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணான்டஸுடன் தொடர்பிலிருந்தார் என்பது மட்டுமே. முன்னாள் அமைச்சரும், அரசியல்வாதியும் இவரிருந்த சிறையில் அப்போது அடைக்கப்பட்டிருந்த மது தாண்டவதே இரவுகளில் சித்திரவதைகளால் அலறும் சிநேகலாதாவின் குரலொலி கேட்டதாகத் தனைது நினைவுக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். சிநேகலதாவும் சிறைக்குறிப்புகளை எழுதியுள்ளார். இவரது மகள் எழுத்தாளரும் , மனித உரிமைச் செயற்பாட்டாளருமான நந்தனா ரெட்டி உருவாக்கிய வேலை பார்க்கும் குழந்தைகளுக்கான , பெங்களூரை மையமாகக்கொண்டியங்கும் இலாப, நோக்கற்று இயங்கும் அமைப்பு அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் (2012) பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சிநேகலதா ரெட்டி, பட்டாபிராம ரெட்டி தம்பதியின் மகனும் ஓர் இசைக்கலைஞரே.
இத்திரைப்படத்தில் கதாநாயக வேடத்தில் நடித்திருப்பவர் கன்னடச் சினிமா, நாடக உலகில் நன்கறியப்பட்டவரும், அண்மையில் மறைந்தவருமான கிரீஷ் கர்னாட். இவரும் இயக்குநர், எழுத்தாளர், நாடகாசிரியர், திரைக்கதை வசனகர்த்தா எனப் பன்முகக்கலைத்திறமை மிக்கவராக விளங்கியவர்.
•Last Updated on ••Wednesday•, 20 •May• 2020 17:38••
•Read more...•
அண்மையில் ஶ்ரீ வாசவி கல்லூரியில் (ஈரோடு) ஏழு நாள் இணையப்பட்டறையொன்று 'மொழிபெயர்[ப்பும், ஆய்வும் - சமகாலப் பார்வை' “Translation and Research – A Contemporary Perspective” என்னும் தலைப்பில் நடைபெற்றது. அதனை ஒருங்கிணைத்து நடாத்தியவர் முனைவர் என்.மைதிலி. இப்பட்டறையில் கலந்துகொண்டு , நீண்டதொரு உரையினை அரச கலை & அறிவியற் கல்லூரியில் (அவிநாசி) உதவிபேராசிரியராகவும், ஆங்கிலத்துறைத் தலைவராகவும் பணியாற்றும் முனைவர் ர.தாரணி அவர்கள் 'மொழிபெயர்ப்பு, ஆய்வும் - இணைக்கும் புள்ளிகள்' ( “Translation and Research – the Connecting Dots”) என்னும் தலைப்பில் நிகழ்த்தினா. அவ்வுரையினை உள்ளடக்கிய காணொளிக்கான இணைய இணைப்பினை அனுப்பியிருந்தார் முனைவர் ர.தாரணி. அதற்காக அவருக்கு என் நன்றி. அத்துடன் அக்காணொளியினை உங்களுடன் பகிர்ந்தும்கொள்கின்றேன். https://youtu.be/GA3SUsC_eb0
அவரது நீண்ட உரையின் முதல் பகுதி சுமார் நாற்பது நிமிடங்கள் மொழிபெயர்ப்பு பற்றியதாகவும், அடுத்த ஒருமணி நேரம் ஆய்வு, மொழிபெயர்ப்பும் ஆய்வும் ஆகியவை பற்றியவையாகவும் அமைந்திருந்தன. மொழிபெயர்ப்பு பற்றிய உரையில் மொழிபெயர்ப்பின் வரலாறு, காலனியாக்கத்திற்குப் பின், மற்றும் முன் காலகட்டத்தில் முறையே உலகில், இந்தியாவில் நடைபெற்ற மொழிபெயர்ப்பு முயற்சிகள், அவை ஆரம்பத்தில் சமய நூல்களின் மொழிபெயர்ப்புகளின் வரலாறாகவே இருந்தன என்பது பற்றிய வரலாறு பற்றிக் குறிப்பிட்ட அவர், இந்தியாவைப்பொறுத்தவரையில் அவ்விதமான மொழிபெயர்ப்புகள் சமூகத்தின் உயர்வர்க்கத்தினரின் மொழியான சமஸ்கிருதத்திலேயே அமைந்திருந்தன என்றும் , அதனை உடைத்தவர் புத்தரே என்றும் குறிப்பிட்டார். புத்தர் அவ்வகையான சமயத்தத்துவ நூல்களை பாலி மொழியில் மொழிபெயர்த்து ஏனைய வர்க்கத்தினரையும் சென்றடைய வைத்தார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
•Last Updated on ••Tuesday•, 19 •May• 2020 23:35••
•Read more...•
முள்ளிவாய்க்காலின் துயரம்
மடிந்தவர்தம் துயரம்
மட்டுமன்று. இம்
மண்ணின் துயரம்!
மணிபல்லவத்தின் துயரம்.
மாநிலத்தின் துயரம்.
மானுடரின் துயரம்.
•Last Updated on ••Monday•, 18 •May• 2020 08:14••
•Read more...•
எழுத்தாளர் யேசுராசா அவர்கள் அண்மையில் தனது முகநூற் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
"நா. பார்த்தசாரதியின் ‘குறிஞ்சிமலர்’, ‘பொன்விலங்கு’, போன்ற நாவல்களை எனது பதின்ம வயதில் விருப்புடன் வாசித்திருக்கிறேன். ஒழுக்க விழுமியங்களையும் இலட்சிய நோக்குகளையும் எம்மனதில் விதைத்தவை அவை (மு. வரதராசனின் படைப்புகளும் அவ்வாறான வையே!). தற்போது எமது விமர்சகர் பலர், இவர்களது படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை; இன்றைய நிலையில் அவை இலக்கியமாக என்னைக் கவருமா என்பதை, மறுபடி வாசித்த பின்னர்தான் கூற முடியும்."
இதற்கான எனது எதிர்வினை: நிச்சயமாகக் கவராது. ஆனால் அவை உங்கள் வாசிப்பின் ஒரு காலகட்டத்தை நினைவூட்டுவதால் நிச்சயம் அவற்றைக்கையிலெடுத்ததும் மகிழ்ச்சியைத்தரும். இன்றைய நிலையில் அவை இலக்கியமா என்று பார்க்கக்கூடாது. அன்றைய நிலையில் ,உங்களது இளமைபருவத்தில், அவை உங்களைக் கவர்ந்ததா என்பதுதான் முக்கியம்.ஏனென்றால் இன்று நீங்கள் இவ்வளவுதூரம் வளர்ந்திருக்கின்றீர்கள் என்றால் அதற்குக் காரணம் அன்று நீங்கள் குறிஞ்சி மலர், பொன்விலங்கு போன்ற வெகுசனப்படைப்புகளை வாசித்து, வாசிப்பதில் ஆர்வம்கொண்டு வளர்ந்ததால்தான். அவையெல்லாம் ஒருவரின் வாசிப்பின் பரிணாம வளர்ச்சியில் தவிர்க்க முடியாத படிக்கட்டுகள்.
•Last Updated on ••Sunday•, 17 •May• 2020 10:54••
•Read more...•
ஜப்பானியத் திரைப்பட இயக்குநர் அகிரா குரோசாவாவின் 'டேர்சு உசாலா' திரைப்படம் இவ்வரிசையில் என் அடுத்த தேர்வு. 'டேர்சு உசாலா' (Dersu Uzala) ருஷ்யாவின் தூரகிழக்குபகுதியான பனி சூழ்ந்த சைபீரிய வனப்பகுதியில் ஆய்வுப்பணிகளைச் செய்த ஆய்வாளர் விளாமிடீர் ஆர்செனியேவ் (Vladimir Arsenyev) தன் அனுபவங்களைப் பயண நூல்களாக வெளியிட்டுள்ளார். அவ்விதமான ஆய்வுப் பயணங்களிரண்டை மூலக்கதையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமே 'டேர்சு உசாலா'. திரைப்படம் இரு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முதற்பகுதி முதற்பயணத்தில் அவருக்கு அறிமுகமாகிப் பயணத்தின் முடிவில் மீண்டும் தன் வனப்பகுதிக்கே திரும்பும் அப்பகுதி வேட்டக்காரனான பூர்வீக மனிதன் ஒருவனைப் பற்றி விபரிக்கின்றது. அவனது பெயர்தான் டேர்சு உசாலா. திரைக்கதை ஆய்வாளரின் பயணங்கள் பற்றிய நனவிடை தோய்தலாக ஆரம்பமாகின்றது.
இரண்டாம் பகுதி அடுத்த பயணத்தை மையமாகக்கொண்டது. ஏழு வருடங்கள் கழிந்து மீண்டும் அவர் அப்பகுதிக்கு நில அளவை ஆய்வுக்காகச் தன் குழுவினருடன் செல்கையில் மீண்டும் அம்மனிதன் எதிர்ப்படுகின்றான். பயணத்தின் முடிவில் டேர்சு உசாலா பார்வைக்குறைபாட்டினை உணர்கின்றான். அக்குறைபாட்டுடன் தனித்து அவ்வனப்பகுதிக்குள் தன்னால் தப்பிப்பிழைக்க முடியாதென்று உணர்கின்றான். அதன் காரணமாக இம்முறை அப்பயண முடிவில் அவன் ஆர்னிசேவுடன் அவருடைய இல்லத்துக்குத் திரும்பச் சம்மதிக்கின்றான். இவ்விதம் திரும்பும் அவன் நகரம் தன் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்புடையதல்ல என்பதை உணர்கின்றான். இதற்கிடையில் அவன் ஆர்செனியேவின் குடும்பத்துடனும் குறிப்பாக அவரின் பால்ய வயதுப்பையனுடனும் நன்கு பழகி விடுகின்றான். இறுதியில் நகர் அவனது வாழ்க்கைக்கு ஒத்து வரவில்லையென்பதால் காடு நோக்கித் திரும்புகின்றான். திரும்பும் வழியில் அவனுக்கு என்ன நடக்கின்றது? என்பதை நாவல் விபரிக்கின்றது. அதுதான் நாவலின் கிளைமாக்ஸ்.
•Last Updated on ••Sunday•, 17 •May• 2020 09:49••
•Read more...•
அண்மையில் எழுத்தாளரும், ஓவிய, காணொளிக் கலைஞருமான தமயந்தியின் முகநூலில் எழுத்தாளர் கற்சுறா எழுதியிருந்த பதிவொன்றில் காணப்பட்ட வசனனங்கள் என் கவனத்தை ஈர்த்தன. அது இதுதான்: "ஒரு புகைப்படம் என்பது ஒரு புகைப்படக் காரனுக்கு தொழில் அல்ல. அது அவனது அரசியலைப் பேசுபவை" உண்மையில் நான் அறிந்த புகைப்படக் கலைஞர்கள் பலர் சிறந்த புகைப்படக் கலைஞர்கள். அவர்களில் பலருக்குப் புகைப்படம் என்பது தொழில். இது ஓவியர்களுக்கும் பொருந்தும், இவர்களெல்லாரும் தம் கலையை விற்றவர்கள்; விற்பவர்கள். இவர்கள் எல்லாரும் சிறந்த புகைப்படக் கலைஞர்கள்; ஓவியர்கள். இந்த வசனங்களைப்பார்த்ததும் முதலில் என் நினைவுக்கு வந்தவர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த , வெள்ளையினத்தவரான கெவின் கார்ட்டர். உலகின் மிகச்சிறந்த புகைப்படக்கலைஞர்களில் ஒருவராக விளங்கியவர். உலகின் பல பகுதிகளிலும், தென்னாபிரிக்காவிலும் நடந்த மானுட துயரம் மிகுந்த மோதல்கள் பலவற்றின் மானுட துயரங்களைப் புகைப்படங்களாக்கியவர்.
•Last Updated on ••Saturday•, 16 •May• 2020 01:32••
•Read more...•
தமிழ்த்திரையுலகில் சத்யஜித் ரே போன்று யாராவது இருக்கின்றார்களா என்று எண்ணிப்பார்த்தால் முழுமையாக அவரைப்போன்றில்லாவிட்டாலும், ஒரளுக்காவது அவரைப்போன்ற ஒருவர் இருக்கின்றார். யார் அவர் என்று நீங்கள் கேட்கலாம். அவரும் சத்யஜித் ரே போல் பன்முகத்திறமை வாய்ந்தவர்தான். சத்யஜித் ரே இயக்கம், திரைக்கதை, கதை, இசை என்று பன்முகத்திறமை வாய்ந்தவர். அவர் சில படங்களுக்கு இயக்கத்துடன் இசையினையும் வழங்கியிருக்கின்றார். இவரும் பன்முகத்திறமை வாய்ந்தவர்தான். இயக்கம், ஓளிப்பதிவு, 'எடிட்டிங்', திரைக்கதை, கதை என்று பன்முகத்திறமை வாய்ந்தவர்தான்.
இருவருக்கும் இன்னும் சில ஒற்றுமைகளுள்ளன. இருவருமே எழுத்தாளர்கள். அது தவிர இருவருமே 'பைசிக்கிள் தீவ்' திரைப்படத்தைப்பார்த்து விட்டு , அதன் தூண்டுதலால் தரமான சினிமாவை எடுக்க வேண்டுமென்று ஆர்வம் கொண்டவர்கள். இப்பொழுது உங்களுக்கு அவர் யாரென்பது புரிந்திருக்கும். அவர்தான் பாலு மகேந்திரா. ஏன் பாலு மகேந்திராவை நூற்றுக்கு நூறு வீதம் சத்யஜித் ரேயுடன் ஒப்பிட முடியாது என்று கேட்கலாம். அதற்குக் காரணம்: ரே ஒருபோதுமே வர்த்தக சினிமாவுக்காக விட்டுக்கொடுத்தவரல்லர். ஆனால் பாலு மகேந்திரா விட்டுக்கொடுத்தவர். அதனால் அவரது திரைப்படங்கள் பல ரேயின் படங்களைப்போன்று உன்னத நிலையினை அடையவில்லை. அவரே இதனை உணர்ந்திருக்கின்றார். அதனால்தான் அவர் தான் எடுத்த படங்களிலேயே தனக்குப் பிடித்த படங்கள் வீடு மற்றும் சந்தியாராகம் மட்டுமே என்று கூறியிருக்கின்றார். இவையிரண்டிலுமே குறைந்தளவு விட்டுக்கொடுப்புகள் செய்ததாகவும் நினைவு கூர்ந்திருக்கின்றார்.
•Last Updated on ••Friday•, 15 •May• 2020 11:27••
•Read more...•
திரைப்படம் - 3- சத்யஜித் ரேயின் 'அபுர் சன்சர்' , 1959, (The World of Apu - அபுவின் உலகம்)
வங்கநாவலாசிரியர் விபூதி பூஷன் பந்தோபாத்யாயவின் நாவலை வைத்து மூன்று திரைப்படங்கள் எடுத்துள்ளார் இயக்குநர் சத்யஜித் ராய். முன்றுமே அபு என்னும் சிறுவனின் வாழ்க்கையை வளர்ந்து பெரியவனாகி அவன் எதிர்கொள்ளும் மானுட வாழ்வுச் சவால்களை விபரிப்பது. முதலாவது பதேர் பாஞ்சாலி. மிகுந்த புகழை அவருக்குப் பெற்றுத்தந்தது. அடுத்தது அபராஜிதா. மூன்றாவது அபுர் சன்சர் ( அப்புவின் உலகம் - The World of Apu ). இத்திரைப்படம் இந்திய மத்திய அரசின் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதினைப்பெற்றுள்ளதுடன், சர்வதேச நாடுகளின் விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. தி டைம்ஸ் சஞ்சிகை அபுவின் வாழ்வை விபரிக்கும் இம்மூன்று திரைப்படங்களையும் உலகளாவிய மிகச்சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் சேர்த்துள்ளதும் மேலும் பல ஊடகங்களும் இவ்வாறே இப்படத்துக்குக் புகழ்மாலை சூடியுள்ளதும் குறிப்பிடத்தக்கவை. தவிர பல மேலைத்தேயத்திரைப்படங்கள் சிலவற்றில் இதன் தாக்கமிருப்பதையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நான் பார்த்த சத்யஜித் ராயின் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது எதுவென்றால் (அனைத்துமே பிடித்தவை என்றாலும்) இதனையே குறிப்பிடுவேன். .வேலையில்லாப்பட்டதாரியான இளைஞன் அபுவின் கல்கத்தா நகர வாழ்க்கையை படத்தின் ஆரம்பம் மிகவும் தத்ரூபமாக விபரிக்கின்றது. எனக்கு கொழும்பு, நியூயார்க் என்று மாநகர்களில் வாழ்ந்த இளம்பருவத்து நகர் வாழ்வினை நினைவூட்டியது. ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய புகழ்பெற்ற நாவலான 'குற்றமும் தண்டனையும்' நாவலில் நாயகனின் மாஸ்கோ நகர வாழ்க்கையை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். எனக்கு இப்படத்தைப் பார்க்கும்போது அந்நாவலின் நினைவுகள் தோன்றின.
•Last Updated on ••Thursday•, 14 •May• 2020 08:50••
•Read more...•
பொதுவாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலிருந்து நூற்றுக்கணக்கில் இலவசப்பத்திரிகைகள் வெளியாகின்றன. இவற்றின் அடிப்படை நோக்கம் பணம் சம்பாதிப்பது. அதனையே அடிப்படையாகக்கொண்டு வெளியாவதால், எனக்குத்தெரிந்து கொள்கைகப்பிடிப்புள்ள எழுத்தாளர்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் சிலர் கூட இவ்விதப்பத்திரிகைகளை வெளியிடத்தொடங்கியதும் வியாபாரிகளாக உருமாறியதைக் கண்டிருக்கின்றேன். இவ்விதமான இலவசப்பத்திரிகைகளில் எனக்குத்தெரிந்து ஒரு பத்திரிகை மட்டுமே இலவசப்பத்திரிகையாக வெளிவரும் அதே சமயம் தரமான சமூக, கலை, இலக்கியப் பத்திரிகையாகவும் வெளியாகின்றது. அதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது கொள்கைப்பிடிப்புள்ள கலைஞர் , எழுத்தாளர் ஒருவரிடமிருந்து அப்பத்திரிகை வெளியாவதுதான். இவரை நான் முதலில் அறிந்து கொண்டது நாடக நடிகராக. டொராண்டோ, கனடாவிலுள்ள தேடகம் போன்ற அமைப்புகளின் நாடகங்களில் நடித்த , நடிப்புத்திறமையுள்ள நடிகர்களிலொருவராகவே அறிந்திருக்கின்றேன். அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத ஒருவராகவே அறிந்திருந்தேன். அவர்தான் தாய்வீடு மாதப்பத்திரிகையின் ஆசிரியரும் , வெளியீட்டாளருமான டிலிப்குமார் ஜெயரட்ணம். ஆரம்பத்தில் எழுத்தாளர் 'அசை சிவதாசன்' வீடுவிற்பனை முகவராக உருமாறியபோது வெளியிட்ட 'வீடு' பத்திரிகை நின்றுபோனபோது அதனைப்பொறுப்பெடுத்து "தாய்'வீடு'" மாதப்பத்திரிகையாக வெளியிடத்தொடங்கினார். இவரும் எனக்குத்தெரிந்த ஏனைய சிலரைப்போல் பணம் சம்பாதிப்பதையே அடிப்படையாகக் கொண்டு வழி மாறிச் சென்று விடுவாரோ என்று ஆரம்பத்தில் எண்ணியதுண்டு. ஆனால் அவ்விதமில்லாமல் தாய்வீடு பத்திரிகையைத் தரமானதொரு கலை, இலக்கிய, சமூக, அரசியல் பத்திரிகையாகவும் வெளியிட்டுக்கொண்டும், அதே சமயம் அதனையொரு வருமானம் ஈட்டும் சாதனமாகவும் நிலைநிறுத்திக்கொண்டு இன்றுவரை வெளியிட்டு வருகின்றார் டிலிப்குமார்.
•Last Updated on ••Thursday•, 14 •May• 2020 02:30••
•Read more...•
சத்யஜித் ராயின் கடைச்சிப்படம் இந்தப்படம். இந்திய - பிரெஞ்சுக் கூட்டுத்தயாரிப்பு. இது சத்யஜித் ராயின் 'அதிதி' சிறுகதையொன்றின் திரை வடிவம். இத்திரைப்படத்தின் இயக்கம், இசை, திரைக்கதை எல்லாவற்றையுமே மிகவும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் சத்யஜித் ராய். இத்திரைப்படத்துக்கு இந்திய மத்திய அரசின் விருதுகளுடன் , சர்வதேசத் திரைப்பட விழா விருதுகளும் கிடைத்துள்ளன. வங்காள நடிகர் உத்பால் தத் (Utpal Dutt) மிகச்சிறந்த நடிகர்களிலொருவர்.
இத்திரைப்படத்தில் பல வருடங்களுக்கு முன் இளம் வயதில் வீடு துறந்து, மேற்கு நாடுகள் பலவும் அலைந்து திரிந்து, மானுடவியலில் பட்டம் பெற்று அத்துறையில் ஊடகங்களுக்கு எழுதி வருபவராக விளங்கும் மனோமோகன் மித்ராவாக அவர் நடித்திருக்கிறார். பல தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் தன் மருமகள் வீட்டுக்கு விருந்தினராக, அந்நியராக வருகை தருகின்றார். அவரை அவர் உறவினர்கள் எவ்விதம் வரவேற்கின்றார்கள், உபசரிக்கின்றார்கள் , முடிவில் அவர் என்ன செய்கின்றார் என்பதை விளக்குவதுதான் திரைக்கதையின் பிரதான நோக்கம். அவரது நடிப்பும், அப்பாத்திரச்சிறப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. இவரது பாத்திரத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றிய முக்கிய எண்ணங்களிலொன்று எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது புகழ்பெற்ற நாவலான 'ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்' நாவலின் நாயகனாகப் படைத்த ஹென்றி என்னும் பாத்திரத்தை இத்திரைப்படத்தில் வரும் மனோமோகன் மித்ரா பாத்திரம் ஏற்படுத்திய தூண்டல் காரணமாகப் படைத்திருப்பாரோ என்ற எண்ணம்தான். இத்திரைப்படத்தின் முடிவும், அவர் எதற்காக வருகின்றார் என்பதற்கான முக்கிய நோக்கமும் அவ்விதமான எண்ணத்தை ஏற்படுத்தியது. நீங்களும் பார்த்துப்ப்பாருங்கள். முடிவு செய்து கொள்ளுங்கள்.
•Last Updated on ••Thursday•, 14 •May• 2020 02:10••
•Read more...•
முகநூலில் பத்து நாட்களுக்குத் தொடர்ச்சியாகப் பத்து திரைப்படங்களை பதிவிட்டு ஞாபகப்படுத்த வேண்டும் என்று நண்பர் பரதன் நவரத்தின் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையேற்று நாளொன்றுக்கு ஒவ்வொரு திரைப்படம் பற்றிய விபரங்களைப் பதிவு செய்து வருகையில் ஏன் அத்திரைப்படங்களைப் பதிவுகள் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தக் கூடாது என்று தோன்றியது. இத்தருணத்தை இயக்குநர் சத்யஜித் ரேயின் திரைப்படங்களில் யு டியூப்பில் கிடைக்கும் அனைத்தையும் பார்ப்பதற்கு முடிவு செய்தேன். அவ்வகையில் முதலாவதாக அறிமுகம் செய்யும் திரைப்படம் அவரது 'சாருலதா' திரைப்படம்.
நல்லதொரு திரைப்படம் எவ்வகையில் அமைந்திருக்க வேண்டுமென்பதற்கு உதாரணங்களாக அமைபவை அவரது திரைப்படங்கள். திரைப்படமொன்றின் இயக்கம், கதை, ஒளிப்பதிவு, நடிப்பு , திரைக்கதை & இசை இவை யாவுமே எவ்விதம் அமைய வேண்டுமென்பதற்கு உதாரணங்களாக அமைபவை அவரது திரைப்படங்கள். பாத்திரங்களுகேற்ற சிறந்த , பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதுடன் அவர்களை எவ்விதம் இயக்க வேண்டுமென்பதை இன்றுள்ள இயக்குநர்கள், சினிமாத்துறைப் பல்வகைக் கலைஞர்களும் அறிந்துகொள்ள வேண்டும்.
சாருலதா ஒரு காவியம். ரவீந்திரநாத் தாகூரின் 'சிதைந்த கூடு' என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். பார்க்கையில் சிறந்ததொரு கவிதையை வாசிப்பது போன்று சட்டத்துக்குச் சட்டம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் சத்யஜித் ரேய் உலக சினிமாவுக்கு இந்தியா வழங்கிய மாபெரும் கொடை. எழுத்து, இயக்கம், இசையமைப்பு என அவரது பல்வகைத்திறமை வாய்ந்தவர்.
ஒன்று மட்டும் நிச்சயம். இந்தப் பத்துப் படங்களையும் பார்த்தீர்களென்றால் முடிவில் உங்களுக்குச் சிறந்த திரைப்படம் பற்றிய புரிதல் (இயக்கம், கதை, ஒளிப்பதிவு, இசை & நடிப்பு போன்றவற்றில்) நிச்சயம் ஏற்படும் என்பது மட்டும் நிச்சயம். எனவே பொழுதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
•Last Updated on ••Tuesday•, 12 •May• 2020 11:45••
•Read more...•
புகலிடத்தமிழர்கள் மத்தியிலிருந்து ஒரு பதிப்பகம் எவ்வித ஆரவாரமுமின்றி உலகத்தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்து வருகின்றது. இதற்குக் காரணமான இதன் உரிமையாளரான எழுத்தாளரின் தன்னடக்கம் மதிப்புக்குரியது. எழுத்தாளர் வேறுயாருமல்லர் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான எழுத்தாளர் த.அகிலனே. 'மரணத்தின் வாசனை: போர் தின்றவர்களின் கதை' மூலம் எமக்கெல்லாம் அறிமுகமானவர். போர்ச்சூழலில் மக்கள் மரணத்துள் எவ்விதம் வாழ்ந்திருந்தார்கள் , எவ்விதம் அதனை எதிர்கொண்டார்கள் என்பவற்றை வெளிப்படுத்தும் கதைகளின் தொகுதி. முக்கியமான போர்க்கால இலக்கியப் பிரதிகளிலொன்று. கதை, கவிதை , கட்டுரை நூல் வெளியீடு என இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்துபட்டது.
வாழ்த்துகின்றோம் 'வடலி' பெரும் பனையாக வளர்ந்திட, உயர்ந்திட, மேலும் பல வளங்களை வாசகர்களுக்கு, தமிழ் இலக்கியத்துக்கு வழங்கிட வளர.
இதுவரை உருவாகிய குறுகிய காலத்திலிருந்து இப்பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் , நேர்த்தியான வடிவமைப்புடன் வெளியான தன்மை வடலிக்கு மிகப்பெரிய வளர்ச்சியினை எதிர்காலத்தில் அடைய உதவுமென்பது வெள்ளிடைமலை.
•Last Updated on ••Wednesday•, 06 •May• 2020 16:59••
•Read more...•
எழுத்தாளர் அ.யேசுராசாவின் தமிழ் இலக்கியத்துக்கான முக்கிய பங்களிப்புகளாக அவர் வெளியிட்ட அலை சஞ்சிகை, கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், உலக சினிமா பற்றிய கட்டுரைகளைக் குறிப்பிடுவேன். அவரது 'நல்லம்மாவின் நெருப்புச் சட்டி' அவரது கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை. உண்மையான உணர்வுகளின், அனுபவங்களின் வெளிப்பாடாக அமைந்த சிறந்ததொரு கவிதை. அண்மையில் அவரது மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்பான 'பனிமழை' தொகுப்பினை வாசித்தேன். எண்ணிம நூலகமான நூலகம் தளத்திலுள்ளது. அதற்கான இணைய இணைப்பு: http://www.noolaham.net/project/01/45/45.htm
நூலின் என்னுரையிலிருந்து அ.யேசுராசவின் ஏனைய புனைபெயர்களையும் அறிய முடிகின்றது. அலை, புதிசு, களனி, திசை, தாயகம், கவிதை ஆகிய இதழ்களில் சொந்தப்பெயரிலும் , கடலோடி, ஜெயசீலன் ஆகிய புனைபெயர்களிலும் வெளியான மொழிபெயர்ப்புக் கவிதைகள் இவை. இவற்றை இந்தியா, இலங்கை, ரஷ்யா, ஸ்பெயின், இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, யூகோஸ்லாவியா, உருகுவே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பதினான்கு கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்திலருந்து தமிழுக்குக் கொண்டு வந்திருக்கின்றார் அ.யேசுராசா. அட்டைப்பட ஓவியத்தை ஓவியர் ரமணி வரைந்திருக்கின்றார்.
இந்நூலுக்குச் சிறப்பான முன்னுரையொன்றினை எழுதியிருக்கின்றார் கவிஞர் சோ.பத்மநாதன். அவரும் கூட சிறந்த மொழிபெயர்ப்பாளர். அவர் தனது முன்னுரையில் மொழிபெயர்ப்பு பற்றிக் கூறிய கூற்றுகள் என்னைக் கவர்ந்தன. படைப்புகளை மொழிபெயர்க்க விரும்பும் எவரும் கவனிக்க வேண்டிய கருத்துகள் அவை. அவற்றில் சிலவற்றை இங்கு தருகின்றேன்:
•Last Updated on ••Saturday•, 02 •May• 2020 10:30••
•Read more...•
கணையாழி சஞ்சிகையின் மே 2020 இதழில் எனது கட்டுரையான 'பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற்காதல் பற்றி' என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் சென்று வாசிக்கவும். 'கணையாழி' சஞ்சிகை இணையப்பதிப்பாக வெளியாகின்றது. வாங்கிப்படிக்க நீங்கள் நாட வேண்டிய இணைய இணைப்பு: https://www.magzter.com/IN/Kanaiyazhi/Kanaiyazhi/Art/
நான் எனது பத்து வயதிலிருந்து வ.ந.கிரிதரன் என்னும் பெயரில் எழுதிக்கொண்டு வருகின்றேன். ஆங்கிலத்தில் V.N.Giritharan என்று எழுதிக்கொண்டு வருகின்றேன். என் நூல்கள் தமிழகத்திலும் 1996இல் வ.ந.கிரிதரன் என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழகத்திலுள்ள மணிமேகலை பதிப்பகம் வி.என்.கிரிதரன் என்னும் பெயரில் இன்னுமோர் எழுத்தாளரின் நூலை வெளியிட்டுள்ளது. இத்தனைக்கும் மணிமேகலை பிரசுர உரிமையாளர் ரவி தமிழ்வாணனுக்கு என் பெயர் தெரியாதென்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் பல வருடங்களுக்கு முன்னர் அவர் பதிவுகளுக்கு அவரது புத்தக வெளியீடுகள் சம்பந்தமாகக் கடிதமொன்று அனுப்பியிருந்தார். ஆனால் அவர் V.N கிரிதரன் என்னும் பெயரில் எதற்காக இன்னுமொருவரின் நூலை வெளியிட்டார்? அவ்விதம் V.N.கிரிதரன் என்று எழுதியவர் எதற்காக அப்பெயரில் எழுதினார்? அதிலுள்ள வி என்பது அவரது தந்தையையோஅல்லது அவரது பிறந்த ஊரையோ குறிக்கின்றதா? இவ்விதமாக ஏற்கனவே எழுத்தாளர் ஒருவர் அப்பெயரில் எழுதிக்கொண்டிருந்தால் நூலொன்றினை வெளியிடுபவர் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக அப்பெயரில் வேறோர் எழுத்தாளரின் நூலினை வெளியிடுவதைத்தவிர்க்க வேண்டும். ஆனால் ரவி தமிழ்வாணம் தவிர்க்கவில்லை.
நான் குறிப்பிடும் புத்தகத்தின் பெயர்: முத்தமிழில் நல்முத்துக்கள் ; எழுதியவர்கள்: V.N.கிரிதரன் & S.N.கிருஷ்ணமூர்த்தி ; வெளியிட்டவர்கள்: மணிமேகலை பதிப்பகத்தினர்.
•Last Updated on ••Thursday•, 30 •April• 2020 13:08••
•Read more...•
எழுத்தாளர் தமயந்தி (தமயந்தி சைமன்) பல்கலை வித்தகர். எழுத்து, நடிப்பு, புகைப்படம் & காணொளி என இவரது ஆற்றல் பன்முகப்பட்டது, இவர் முகநூலில் பகிர்ந்துகொண்ட காணொளிகள், ஓவியங்கள் பலவற்றை மறக்கவே முடியாது, அவற்றுக்காக அவர் பல சமயங்களில் மணிக்கணக்காகக் காத்துக்கிடப்பதுமுண்டு.
ஒருமுறை இரவு முழுக்கக் காத்திருந்து தவளைகளின் சங்கீதக் கச்சேரியைக் கேட்பதற்காக எடுத்துப் பதிவு செய்திருந்த காணொளியை என்னால் மறக்கவே முடியாது. ஒரு காலத்தில் மழைக்கால இரவுகளில் , ஓட்டுக்கூரைகளில் பட்டுச் சடசடக்கும் மழையொலிகளூடே வயற்புறங்களிலிருந்து ஒலிக்கும் தவளைக்கச்சேரிகளை இரசிப்பதில் பெரு விருப்புடைய எனக்கு பல வருடங்களுக்குப் பின்னர் அவ்விதம் தவளைகளின் கச்சேரியினை இரசிக்கும் சந்தர்ப்பத்தையேற்படுத்தித்தந்த காணொளி அது.
இங்குள்ள புகைப்படத்தைப்பாருங்கள். எவ்வளவு அற்புதமாகக் காட்சியைக் கமராவுக்குள் கலைத்துவத்துடன் கொண்டு வந்திருக்கின்றார். நம்மத்தியில் இவ்விதமான கலைஞரொருவர் வாழ்கின்றாரென்பதையிட்டு நாம் நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
•Last Updated on ••Tuesday•, 28 •April• 2020 17:40••
•Read more...•
கோமாளிகள்! இலங்கைத்தமிழ் சினிமாவில் அதிக வசூலையீட்டிய திரைப்படம். இத்திரைப்படம் வெளியானபோது யாழ்ப்பாணம் , கொழும்பு நகர்களில் ஐம்பது நாள்களைக்கடந்து ஓடியது. ஏனைய இடங்களிலும் நன்கு ஓடியது நினைவிலுள்ளது. வி.பி.கணேசனின் 'புதிய காற்று' வெற்றியைத்தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகியபோது இதனை நான் பார்க்கவில்லை. யாழ் வின்சர் திரையரங்கில் ஓடியது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் 'கோமாளிகள் கும்மாளம்' என்னும் பெயரில் சுமார் இரண்டு வருடங்கள் வாராவாரம் ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பைப்பெற்ற வானொலி நாடகமிது.
எஸ்.ராம்தாசின் கதை, திரைக்கதை வசனத்தில், எஸ். இராமநாதனின் இயக்கத்தில் வெளியான திரைப்படத்துக்கு இசையினை கண்ணன் - நேசம் இரட்டையர் அமைத்திருந்தனர். ஒளிப்பதிவு - ஜே. ஜே. யோகராஜா. இராமநாதன், யோகராஜா இருவரும் சிங்களத்திரையுலகில் நன்கு பிரபலமானவர்களாக விளங்கினார்கள். படத்தைத்தயாரித்தவர் வர்த்தகரான எம். முகம்மது எஸ்.ராம்தாஸ், அப்துல் ஹமீட், ஆனந்தராணி இராஜரத்தினம் (இன்று ஆனந்தராணி பாலேந்திரா), சுப்புலட்சுமி காசிநாதன், சில்லையூர் செல்வராசன், கே.ஏ.ஜவாஹர், செல்வம் பெர்ணாண்டோ, கமலினி செல்வராசன், எஸ்.செல்வசேகரன், ரி.ராஜகோபால், ஜேசுரட்னம், கே.சந்திரசேகரன் என்று புகழ்பெற்ற வானொலிக் கலைஞர்கள் பலர் நடித்திருந்தார்கள்.
'பல்கலைவேந்தர்' சில்லையூர் செல்வராசனின் வானொலி, திரைப்படப்பங்களிப்பு முக்கியமானது. இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் முன்னோடிகளிலொருவராகக் கருதப்படுபவர். அது பற்றிக் கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரனும் கட்டுரையொன்றினை எழுதியிருந்தார். நினைவுக்கு வருகின்றது. சில்லையூர் செல்வராசன் 'தணியாத தாகம்' (திரைப்படச் சுவடி), விவரணத்திரைப்படங்கள் ( ‘கமம்’, ‘தங்கமே தங்கம்’, ‘பாதைதெரியும் பார்’ என்பவை அவற்றுட் சில. ‘கமம்’ புதுடில்லி பேர்லின் திரைப்பட விழாக்களில் விருதுகளைப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது).
•Last Updated on ••Monday•, 27 •April• 2020 10:44••
•Read more...•
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக்கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. இன்றுள்ள சூழலைப்பாவித்து அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தில் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:
https://www.sparknotes.com/shakespeare/#jumpTo-no-fearno
•Last Updated on ••Saturday•, 25 •April• 2020 17:17••
•Read more...•
இன்றுள்ளது போல் எம் பெண்கள் தொலைக்காட்சிச் 'சீரியல்'களில் மூழ்கிக் கிடக்காத காலகட்டம். தமிழ் வார இதழ்களில், மாதாந்த நாவல்களில் மூழ்கிக்கிடந்த காலகட்டம். அக்காலகட்டத்தில் ஒவ்வொரு வாரமும் ஒருநாள் அவர்கள் தவறாமல் இலங்கை வானொலியின் முன் கூடுவார்கள். அது 'பல்கலை வேந்தர்' சில்லையூர் செல்வராசனின் 'தணியாத தாகம்' வானொலி நாடகத்தைக் கேட்பதற்காகத்தான். என் உறவுக்கார அக்காமார் பலர் இவ்விதம் கூடிக் கேட்பார்கள். நான் அந்நாடகத்தைத் தொடர்ச்சியாகக் கேட்டு இரசித்தவன் அல்லன். ஆனால் எல்லோரும் இவ்வளவு ஆர்வத்துடன் அந்நாடகத்தைக் கேட்டதால் அந்நாடகம் என் கவனத்தையும் சிறிது ஈர்த்தது.
இலங்கை மக்கள் வங்கியின் ஆதரவுடன் ஒலிபரப்பாகிய அந்நாடகத்தின் இடையில் ஒலிக்கும் சில்லையூர் செல்வராசன் & கமலினி செல்வராசன் தம்பதியினர் இணைந்து பாடும் 'அத்தானே அத்தானே! எந்தன் ஆசை அத்தானே' பாடலை யார் மறப்பார்?
இந்நூலைச் சில்லையூர் செல்வராசன் ஒரு திரைப்படச் சுவடியாகவே எழுதியிருப்பதை நூலின் முதற் பதிப்புக்கான முன்னுரையின் மூலம் அறிய முடிகின்றது. அது 1971இல் வெளியாகியுள்ளது. இரண்டாவது பதிப்பை எழுத்தாளர்கள் புலோலியூர் ஆ.இரத்தினவேலோனும், எஸ்.ரஞ்சகுமாரும் இணைந்து 'மீரா பதிப்பகம்' மூலம் 1999இல் வெளியிட்டுள்ளார்கள். நூலைச் சில்லையூர் செல்வராசன் தனக்கேயுரிய பாணியில் தன் மனைவி கமலினி செல்வராசனுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். கவிஞரான அவர் 'தான்தோன்றிக்கவிஞர்' என்று அறியப்பட்டவர். தான் தோன்றித்தனமாக எழுதாமல் சமர்ப்பணத்தை விடுகதைப் பாணியில் ஒரு கவிதை மூலம் சமர்ப்பித்திருக்கின்றார். அக்கவிதை வருமாறு:
"எழுதுவித்தவளுக்கு! மன்னி செகராச வல்லி என நாமத்துட் பின்னி உயிர்க் குள்ளும் பிணைப்பாகி - முன்னின்று எவள் எனை இக்காதை எழுதுவித் தாளோ அவளுக் கிந் நூல் அர்ப் பணம்'
மன்னி செகராச வல்லி என்னும் பெயருக்குள் மறைந்துள்ளார் கமலினி செல்வராசன். வித்தியாசமான, தனித்துவம் வாய்ந்த சமர்ப்பணம். இந்நூலினை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்: http://noolaham.net/project/27/2606/2606.pdf
இந்நூல் பற்றிய தனது முகவுரையில் கமலினி செல்வராசன் அவர்கள் பின்வருமாறு தன் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கின்றார்:
•Last Updated on ••Saturday•, 25 •April• 2020 01:00••
•Read more...•
இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் 'புதுசு' சஞ்சிகையின் பங்களிப்பும் முக்கியமானது. எழுத்தாளர் நா.சபேசனை நிர்வாக ஆசிரியராகவும், எழுத்தாளர்களான இளவாலை விஜேந்திரன், பாலசூரியன், அ.ரவி ஆகியோரை உள்ளடக்கிய ஆசிரியர் குழுவையம் கொண்டு வெளியான சஞ்சிகை. காலாண்டிதழாக ஆரம்பித்த 'புதுசு' பல்வேறு சிக்கல்கள் காரணமாக ஒழுங்காக வெளிவரவில்லையென்று அறிகின்றோம். 'புதுசு'சஞ்சிகையில் கவிதைகளே அதிகமாகவே இடம் பெற்றிருக்கின்றன. கவிதைகள் தவிர கதை, கட்டுரை என 'புதுசு'வின் பங்களிப்பு பன்முகப்பட்டது. சமூக, அரசியலை உள்ளடக்கிய கட்டுரைகள் 'புதுசு'வில் வெளிவந்துள்ளன. இலங்கைத்தமிழர் விடயத்தில் , அவர்தம் உரிமைப்போராட்டத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்க இடதுசாரிகள் தவறிவிட்டனர் என்பதை வெளிப்படுத்தும் கட்டுரை, மலையகத்தமிழ் மக்களின் பிரச்சனைகள் எனப் 'புதுசு' சஞ்சிகையும் இலங்கைத்தமிழர்கள் அனைவரினதும் பிரச்னைகள் பற்றிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
'புதுசு' பற்றிய கலாநிதி நா.சுப்ரமணியனின் 'ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் 'புதுசு'வின் பண்பும் பணிவும்' என்னும் கட்டுரையினை ஈழநாடு வாரமலரில் எழுதியுள்ளார். 30.3.1986 அன்று வெளியான மலரில் இடம் பெற்றுள்ள அக்கட்டுரையை தொடராக மேலுமிரு ஈழநாடு வாரமலர்களில் வெளியாகியுள்ளது. அவற்றை வாசிப்பதற்குரிய இணைய இணைப்புகளைக் கீழே தருகின்றேன்.
எழுத்தாளர் டொமினிக் ஜீவா பற்றிய முகநூல் பதிவொன்றுக்கு எதிர்வினையாற்றிய எழுத்தாளர் மாலன் அவர்கள் பின்வருமாறு கேட்டிருந்தார்" இலங்கையின் இதழியல் வரலாறு பற்றி ஒரு நூல் எழுதப்பட வேண்டும்.எத்தனை பெரும் ஆளுமைகள்! ஏன் நீங்களோ முருகபூபதியோ முயற்சிக்கக் கூடாது?"
அதற்கு நான் பின்வருமாறு பதிலளித்திருந்தேன்: "முருகபூபதியே பொருத்தமானவர். அவர் ஏற்கனவே நிறைய எழுதியுள்ளார். நூல்கள் பல எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் பலருடன் அதிகமாகப்பழகியுள்ளார். வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் அவர் பணியாற்றியதும் அதற்கு அவருக்கு உதவியாகவுள்ளது. அவரிடம் இது பற்றித்தெரிவிக்கின்றேன்."
இது பற்றி முருகபூபதி அவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதற்கு முருகபூபதி அவர்கள் உடனடியாகவே பின்வருமாறு பதிலளித்திருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்:
"அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். நீங்கள் அனைவரும் நலமாக இருக்கவேண்டும். இங்கு நாமும் வீட்டில்தான் முடங்கியிருக்கின்றோம். தங்களது அண்மைய இரண்டு பதிவுகள் ( காவலூர் ஜெகநாதன் – மல்லிகை ஜீவா ) படித்தேன். நல்ல பதிவு. தாமதிக்காமல், பிரான்ஸில் வதியும் ஈழநாடு ( டான் ரீவி) குகநாதனுக்கும் ( காவலூர் ஜெகநாதனின் தம்பி ) அதனை பகிர்ந்துகொண்டேன்.
•Last Updated on ••Wednesday•, 22 •April• 2020 11:35••
•Read more...•
தீர்த்தக்கரை எண்பதுகளின் ஆரம்பத்தில் கண்டியிலிருந்து வெளியான சஞ்சிகை. எல்.சாந்திகுமாரை ஆசிரியராகக்கொண்டு காலாண்டிதழாக வெளியான பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் எஸ்.நோபேட் (இவர்தான் 'புதியதோர் உலகம்' எழுதிய 'கோவிந்தன்'. ஏனைய புனைபெயர்கள்: ஜீவன், கேசவன். இயற்பெயர் சூசைப்பிள்ளை நோபேட். திருகோணமலையைச் சேர்ந்தவர்). . எம்.தியாகராம் & எல்.ஜோதிகுமார் ஆகியோர் அடங்கியிருந்தனர். நூலகம் தளத்தில் 1980-1982 காலகட்டத்தில் வெளியான 'தீர்த்தக்கரை'யின் ஐந்து இதழ்களுள்ளன. தீர்த்தக்கரை சஞ்சிகை மொத்தம் ஐந்து இதழ்களே வெளிவந்ததாக அறிகின்றேன். இதன் பின்னர் 1992 தொடக்கம் 2014 காலப்பகுதியில் அவ்வப்பொது தடை பட்ட நிலையில் 'நந்தலாலா' சஞ்சிகை காலாண்டிதழாக வெளியானது. 'நந்தலாலா'வை வெளியிட்டது நந்தலாலா இலக்கிய வட்டம். ஆனால் தீர்த்தக்கரையில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதுபோல் நந்தலாலா சஞ்சிகையில் நந்தலாலா இலக்கிய வட்டத்தில் உள்ளவர்கள் யார் யார், நந்தலாலாவின் ஆசிரியர், ஆசிரியர் குழுவினர் யார் யார் என்பவை போன்ற விபரங்களைச் சஞ்சிகையில் காண முடியவில்லை. ஆனால் தீர்த்தக்கரை குழுவினரே நந்தலாலாவையும் வெளியிட்டனர் என்பதை ஊகிக்க முடிகின்றது.
தீர்த்தக்கரை, நந்தலாவா இரண்டுமே இலங்கைத்தமிழ் இலக்கியப்பரப்பில் வெளியான சஞ்சிகைளில் முக்கியமானவை. இவற்றைக் கலை, இலக்கிய சஞ்சிகைகள் என்று மேலோட்டமாகக் கூறிக் கடந்து விடமுடியாது. சமூக, அரசியல் விடயங்களைத் தாங்கி வெளியான கலை, இலக்கிய சஞ்சிகைகள் இவை. இவற்றை வெளியிட்டவர்களுக்குக் குறிப்பிட்ட அரசியல் பார்வை இருந்தது. மார்க்சியக் கண்ணோட்டத்தில் மக்களின் பிரச்சினையை அணுகினார்கள். அவ்வணுகளில் அவர்களுக்குத் தெளிவான பார்வையிருந்தது. இலங்கையின் மலையக மக்களின் சமூக, அரசியல் பிரச்சினைகள், இலங்கைத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம், உலக அரசியல் இவை அனைத்தையுமே இவரகள் அணுகுவதில் இவர்கள் கொண்டிருந்த தெளிவான பார்வை சஞ்சிகைகளில் வெளியான படைப்புகள் எல்லாவற்றிலுமே புலப்படுகின்றன.
•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 00:21••
•Read more...•
இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு எழுத்தாளர் ஒருவரின் பங்களிப்பு மகத்தானது மட்டுமல்ல பிரமிக்க வைப்பதும் கூட. இவரது எழுத்துலகப் பங்களிப்பும் முக்கியமானது என்றபோதும் பிரமிக்க வைப்பது இவர் இலக்கிய உலகுக்கு ஆற்றிய இன்னுமொரு முக்கியமான பங்களிப்புத்தான். இவர் முற்போக்கு இலக்கியத்தைத் தன் பாதையாக ஏற்றுக்கொண்டதுடன் , செயற்பட்டவரும் கூட, சுயமாக வாசித்துத் தன் எழுத்தாற்றலை, ஞானத்தினை வளர்த்துக்கொண்டவர். இவர் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தைச் சேர்ந்தவராகவிருந்தபோதும்கூட சகல பிரிவு எழுத்தாளர்களுக்கும் களமமைத்துக்கொடுத்தார். நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் உருவாக, வளர அவர் அமைத்துக்கொடுத்த களம் உதவியது. அதுதான் அவரது மிக முக்கியமான இலக்கியப்பங்களிப்பு. அவர்தான் எழுத்தாளரும், மல்லிகை சஞ்சிகை ஆசிரியருமான டொமினிக் ஜீவா.
ஓவ்வொரு தடவை மல்லிகை இதழ்களைப் புரட்டும்போதும் ஏற்படும் பிரமிப்புக்கு அளவில்லை. முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தில் அவர் இருந்தாலும், மல்லிகையில் அனைவருமே எழுதினார்கள். எழுத்தாளர் எஸ்.பொ. ஒருவரின் படைப்புகளைத் தவிர ஏனைய பல்வேறு இலக்கியக் குழுக்களைச் சார்ந்தவர்களின் படைப்புகளையெல்லாம் மல்லிகையில் காணலாம். எழுத்தாளர் மு.தளையசிங்கம் எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் சு.வில்வரத்தினம் எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் மு.பொன்னம்பலம் எழுதியிருக்கின்றார். கவிஞர் கந்தவனம் எழுதியிருக்கின்றார். கலாநிதி க.கைலாசபதி எழுதியிருக்கின்றார். அறிஞர் அ.ந.கந்தசாமி எழுதியிருக்கின்றார். ஒவ்வொரு காலகட்டத்திலும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கெல்லாம் மல்லிகையில் இடம் கிடைத்திருக்கின்றது. கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன், வடகோவை வரதராஜன், தாமரைச்செல்வி , கே.எஸ்.சுதாகர் என்று அன்று இளையவர்களாகவிருந்த பலர் எழுதியிருக்கின்றார்கள்.
•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 00:19••
•Read more...•
ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டக்காலத்தில் அமைப்புகளின் உள் முரண்பாடுகள், புற முரண்பாடுகள் பலரை பலி வாங்கியுள்ளன. இலங்கை அரசுக்கும், போராட்ட அமைப்புகளுக்குமிடையிலான மோதல்கள் பலரைப் பலியாக்கியிருக்கின்றது. போராட்டம் காரணமாக அமைப்புகளினால் பல்வேறு அரசியல் காரணங்களினால் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்விமான்கள், பொதுமக்கள் எனப்பலர் பலியாகியுள்ளனர். அவர்களின் இழப்புகள் ஈடு செய்யப்பட முடியாதவை. அவர்களில் ஒருவர்தான் எழுத்தாளர் காவலூர் எஸ்.ஜெகநாதன். எனக்குக் காவலூர் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் இவர்தான். காவலூருக்கு இவரைப்போல் பெருமை சேர்த்தவர் வேறொருவர் இலர். அவ்வளவுக்குப் பத்திரிகை, சஞ்சிகைகள், வானொலியிலெல்லாம் காவலூரின் பெயரை ஒலிக்க வைத்தவர் இவர். அண்மையில் நூலகம் தளத்தில் பழைய மல்லிகை போன்ற சஞ்சிகைகள், பத்திரிகைகளைத் தேடிக்கொண்டிருந்தபோது எங்கு தேடினாலும் என் கண் முன்னாள் வந்து நிற்கும் எழுத்தாளராக விளங்கியவர் இவரே. அவ்வளவுக்கு அவர் தீவிரமாக எழுத்துலகில் இயங்கிக்கொண்டிருந்தார். மல்லிகை, வீரகேசரி, சுடர் என்று அவரது படைப்புகள் வெளிவராத பத்திரிகை, சஞ்சிகைகளே இல்லையெனலாம்.
இலங்கையில் பட்டம் பெற்று நல்ல பணியில் இருந்தவர் 83 ஜூலைக்கலவரத்தைத்தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாகத் தமிழகம் சென்றார். தன் குடும்பத்தாரைப் பாதுகாப்பாக அங்கு தங்க வைத்துவிட்டு அடிக்கடி இலங்கை வந்து போய்க்கொண்டிருந்தார். அவ்விதமானதொரு சூழலில் திடீரெனக் கடத்தப்பட்டுக் காணாமல் போனார். பின்னர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. அவர் கொல்லப்பட்டது பற்றிப் பலவிதமான தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இத்தகவல்களை காவலூர் ஜெகநதன் பற்றிய என் முகநூல் பதிவொன்றின்போது எதிர்வினையாற்றிய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களினால் பதிவு செய்யப்பட்டன. அவர் அமைப்பொன்றினால் கடத்தப்பட்டு இன்னுமோர் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், பின்னர் அவ்வமைப்பினால் கொல்லப்பட்டதாகவும் அத்தகவல்கள் கூறின. அதற்கு அவரைக் கைது செய்த அமைப்பின் தலைவர் கூறிய காரணம் அவர் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதுதான். அப்பதிவுக்கு எதிர்வினையாற்றியிருந்த காவலூர் ஜெகநாதனின் சகோதரரான எழுத்தாளர் எஸ்.எஸ்.குகநாதன் அக்காலகட்டத்தில் தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கை எழுத்தாளர் ஒருவர் காவலூர் ஜெகநாதன் தமிழகத்தில் குறுகிய காலத்தில் அடைந்த செல்வாக்கினைக்கண்டு பொறுக்க மாட்டாமல் அவர் மேல் அவ்விதமானதொரு பழியைப்போட்டதாகவும், அதன் காரணமாகவே அவரது நண்பரான அமைப்பின் தலைவர் அவரைக் கைது செய்ததாகவும் தன் கருத்தினைப் பதிவு செய்திருந்தார். ஆனால் இன்று அவரைக் கைது செய்த அமைப்பின் தலைவரும் இல்லை. கொன்ற அமைப்பின் தலைவரும் இல்லை. ஆனால் காவலூர் ஜெகநாதன் உயிருடன் இல்லாவிடினும் அவர் படைப்புகளூடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இனியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்துகொண்டுதானிருப்பார். அவ்வளவுக்கு அவர் படைப்புகள் தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்திருக்கின்றன. அப்படைப்புகள் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகளினூடு , அவர் வெளியிட்ட படைப்புகளூடு அவர் வாழ்ந்துகொண்டிருப்பார்.
•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 00:20••
•Read more...•
எண்ணிம நூலகமான 'நூலக'த்தில் எழுபதுகளில் சுதந்திரன் பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட 'சுடர்' சஞ்சிகையின் ஆடி 1975 தொடக்கம் ஜூன்/ஆடி 1983 வரைக்குமாக 32 இதழ்களைக் காண முடிந்தது. அவற்றை மேலோட்டமாகப் பார்த்தபோது வரதர், இரசிகமணி கனக செந்திநாதன், கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை , எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் தொடக்கம், அனலை இராசேந்திரம், காவலூர் ஜெகநாதன், தாமரைச்செல்வி, தமிழ்ப்பிரியா, மண்டைதீவு கலைச்செல்வி, கோப்பாய் சிவம், கே.எஸ்.ஆனந்தன், இளவாலை விஜேந்திரன், வாகரைவாணன், கே.ஆர்/டேவிட், தென்மட்டுவில் கண்ணன், மங்கை கங்காதரம் என்று மேலும் பலரின் பல்வகைப் படைப்புகளையும் காண முடிந்தது. கலாமோகனின் இலக்கியக் கட்டுரகளையும் காண முடிந்தது.
கலை, இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்த 'சுடர்' சஞ்சிகையும் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு மிகவும் வளம் சேர்த்த சஞ்சிகைகளிலொன்றாகக் கருதலாம். 'சுடர்' சஞ்சிகையில் மேலுள்ள எழுத்தாளர்களுடன் மேலும் புதிய எழுத்தாளர்கள் பலர் பங்களித்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. 'சுடர்' சஞ்சிகை மரபுக்கவிதை, புதுக்கவிதைக்கென பக்கங்களை ஒதுக்கியிருந்தது. புதுக்கவிதைப் பக்கத்தில் பல இளையவர்கள் எழுதியிருந்தனர். பக்கங்களில் ஆங்காங்கே நறுக்குக் கவிதைகளையும் கவிஞர்கள் பலர் எழுதியிருந்தனர். குறிப்பாகக் கவிஞர் காசி ஆனந்தனின் 'கணைக் கவிதை'களைக் குறிப்பிடலாம். இவை தவிர ஆரத்தியின் 'இலக்கியச் சோலை' பத்தியில் எழுத்தாளர்கள் பலரைப்பற்றிய அறிமுகக் குறிப்புகள், வாழ்த்துக்குறிப்புகள் நிறைந்திருந்தன. வடகோவை வரதராஜன், தாமரைச்செல்வி, அ.செ.முருகானந்தன், சாரதா சண்முகநாதன், தமிழ்ப்பிரியா என்று பலரைப்பற்றிய குறிப்புகள் காணப்பட்டன. மேலும் இளம் எழுத்தாளர்கள் பலரை அறிமுகப்படுத்தும் பகுதியையும் சுடர் உள்ளடக்கியிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
•Last Updated on ••Wednesday•, 22 •April• 2020 11:37••
•Read more...•
எழுத்தாளர் நீர்வை பொன்னையனின் மறைவு பற்றி முகநூற் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். எழுத்தாளர் நீர்வை பொன்னையன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவரது 'மேடும் பள்ளமும்' சிறுகதைத்தொகுதிதான். தனது இருபத்தேழாவது வயதிலிருந்து எழுத்துத்துறைக்கு வந்தவர் எழுத்தாளர் நீர்வை பொன்னையன். அவர் தான் எழுதிய முதலாவது சிறுகதை வெளிவந்த ஆண்டு 1957 என்று அண்மையில் ஆதவன் தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணலொன்றில் கூறியிருக்கின்றார். அது வெளியானது ஈழநாடு வாரமலரில் என்றும் கூறியிருக்கின்றார். அதனைப்பாராட்டி அப்போது ஈழநாடு ஆசிரியராகவிருந்த இரா. அரியரத்தினம் தனக்குக் கடிதமொன்றினை எழுதியதாகவும் அந்நேர்காணலில் அவர் கூறியிருக்கின்றார். அதே சமயம் 1961ஆம் ஆண்டு வெளியான தனது முதலாவது கதைத்தொகுதியான 'மேடும் பள்ளமும்' தொகுதிக்கான முன்னுரையில் அவர் தான் முதலாவதாக எழுதிய சிறுகதை 'புயல்' என்று குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் அத்தொகுதியி;லுள்ள சிறுகதைகளை வெளியிட்டதற்காக தேசாபிமானி, தினகரன், வீரகேசரி, கலைமதி, தாமரை, தமிழன், கலைச்செல்வி ஆகியவற்றில் வெளிவந்தவை என்றும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கின்றார். அங்கு அவர் ஈழநாடு பற்றியெதுவும் குறிப்பிடவில்லை. இக்குழப்பம் எனக்கு அண்மையில் அவர் நேர்காணலைக் கேட்டதிலிருந்து ஏற்பட்டதொன்று. ஏனென்றால் அவரது 'மேடும் பள்ளமும்' சிறுகதைத்தொகுதியைப் பல வருடங்களுக்கு முன்னர் வாசித்ததிலிருந்து அவரது முதற்கதை 'புயல்' என்றே எண்ணியிருந்தேன். ஒரு வேளை அவர் அத்தொகுதி வெளியானபோது ஈழநாடு பற்றிக் குறிப்பிட மறந்திருக்கலாம். முதற்கதை 'புயல்' என்று தவறுதலாகவும் குறிப்பிட்டிருக்கலாம். 1957 ஆம் ஆண்டுக்குரிய ஈழநாடு வாரமஞ்சரிப் பிரதிகளைப் பார்த்து முடிவு செய்ய வேண்டிய விடயமிது.
இருந்தாலும் 'மேடும் பள்ளமும்' அவரது முதற்கதையோ இல்லையோ அவரது ஆரம்பக் கதைகளிலொன்று. 1930ஆம் ஆண்டு பிறந்த அவர் தனது இளமைப்பருவத்திலேயே சிறுகதைகள் எழுதத்தொடங்கி விட்டார். எனக்கு நீர்வை பொன்னையன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவரது முதற் சிறுகதைத்தொகுதியான 'மேடும் பள்ளமும்'தான். அதிலுள்ள 'மேடும் பள்ளமும்' சிறுகதைதான். அவரது ஆரம்ப சிறுகதையே அவரை நினைவு படுத்தும் சிறுகதையாக அமையும் வகையில் சிறப்பாக எழுதியிருப்பது அவரது எழுத்தாற்றலுக்குச் சான்று. 'மேடும் பள்ளமும்' சிறுகதையின் கரு இதுதான்: அக்கிராமத்தின் உயர்குடி நில உடமையாளன் ஒருவனிடமிருந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் விளைவித்துக் கொண்டிருந்தான் ஒரு தொழிலாளி. அவன் சமூகத்தின் அடிமட்டத்தைச் சேர்ந்த தாழ் குடிகளில் ஒருவன். பயிருக்குப் பயன்படாது என்ற நிலைலியிருந்த மேட்டு நிலத்தை எடுத்து நெல் விளைவித்தான் அவன். கடந்த இரு வருடங்களாக அவனுக்கு நட்டத்தை ஏற்படுத்திய அந்த மேட்டு நில வயல் அவ்வருடம் அவனுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்தது. வழக்கமாக விளைச்சலைக் கொடுக்கும் அந்நில உடமையாளனின் பள்ள நில வயல் அம்முறை பெய்த பெரு மழை ஏற்படுத்திய அழிவினால் பாதிப்புற்றிருந்தது. இதனால் மனம் புழுங்கிய அந்நில உடமையாளன் அத்தொழிலாளியை உடனடியாகவே குத்தகைப்பணப் பாக்கியைக் கட்டும்படி வற்புறுத்தினான். அவ்விதம் கட்டாவிட்டால் அவனது விளைச்சலைத் தானே சாகுபடி செய்யப்போவதாகப் பயமுறுத்தி இறுதியில் அவ்விதமே செய்கின்றான். அத்தொழிலாளியையும் அடித்துப் பள்ள வயலின் மூலையில் போட்டு விடுகின்றான். இதனால் வெகுண்டெழுந்த தொழிலாளர்கள் ஒன்று அந்நில உடமையாளனுக்குக்கெதிராகத் திரண்டு எழுகின்றார்கள். அம்மேட்டு நிலத்தை நோக்கி, தாழ் நிலத்து வயலில் அடிபட்டுக் காயமடைந்து கிடந்த அந்தத்தொழிலாளியையும் சுமந்தபடி மேட்டு நிலத்தை நோக்கிச் செல்கின்றார்கள். இதுதான் கதை. இச்சிறுகதையினை நீர்வை பொன்னையன் அவர்கள் சிறப்பாகவே எழுதியிருக்கின்றார். இதுவொரு குறியீட்டுக் கதை. வர்க்கமற்ற சமுதாயத்துக்கான போராட்டத்துக்குத் தொழிலாளிகள் திரண்டெழுவதை விபரிக்கும் குறியீட்டுக் கதை.
•Last Updated on ••Wednesday•, 22 •April• 2020 16:45••
•Read more...•
அருண்மொழி தேவன் (அருண்மொழி) இவர் ஓர் எழுத்தாளர்; நாடக நடிகர். சஞ்சிகையொன்றினை 1962- 1964 காலகட்டத்தில் நடத்தியிருக்கின்றார். இவ்விதழின் உதவி ஆசிரியராகவிருந்தவர் பா.மகேந்திரன். இவரே பின்னர் தமிழ்த்திரையுலகில் புகழ் பெற்ற இயக்குநரும் , ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா என்று , இப்பதிவுக்கான முகநூல் எதிர்வினையொன்றில் பிரபல கலை,இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் சுட்டிக்காட்டியிருந்தார். அவருக்கு என் நன்றி.
அக்காலகட்டத்தில் வெளியான மேற்படி சஞ்சிகையின் நான்கு இதழ்களையே நூலகம் எண்ணிம நூலகத்தில் காண முடிந்தது. அவற்றைப் புரட்டிப்பார்த்தேன். எனக்கு மிகவும் வியப்பாகவிருந்தது. காரணம்? இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த இலக்கியத்தின் பல்துறைகளையும் நேர்ந்த படைப்புகள் (கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை அவ்விதழ்களில் என்னால் காண முடிந்தது. ஆனால் இதுவரையில் நானறிந்த வரையில் இதழாசிரியரைப்பற்றியோ அல்லது சஞ்சிகை பற்றியோ எங்கும் வாசித்ததாக நினைவிலில்லை.. கலாநிதி சி. மௌனகுரு, கலாநிதி சித்திரலேகா மெளனகுரு & கலை,இலக்கிய விமர்சகரும், கவிஞனுமான எம். ஏ. நுஃமான் ஆகியோர் இணைந்து எழுதிய 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்' என்னும் நூலிலும் தேடிப்பார்த்தேன். தேனருவி பற்றியோ அதன் ஆசிரியர் அருண்மொழி தேவன் (அருண்மொழி) பற்றியோ தகவல்கள் எவற்றையும் அறிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை இவர்களுக்கெல்லாம் தேனருவி பற்றியோ அதன் படைப்புகள் பற்றியோ தெரிந்திருக்காமல் இருக்கக்கூடுமோ என்றெண்ணியவாறு 'தேனருவி' சஞ்சிகையையின் சேமிக்கப்பட்டிருந்த இதழ்களைப் புரட்டியபோதுதான் அதன் இலக்கியப் பங்களிப்பினைப் புரிந்துகொண்டேன். அப்பொழுது எனக்கு எழுந்த முக்கியமான கேள்வி இதுதான்: "எதற்காக? எதற்காக 'தேனருவி' சஞ்சிகையும், அதன் ஆசிரியரும் கலை, இலக்கிய விமர்சகர்களாள் இருட்டடுப்பு செய்யப்பட்டார்கள்? இத்தனைக்கும் இளஞரான நுஃமானின் 'எச்சில் எனினும்...' என்னும் காதற் சிறுகதை கூடத் 'தேனருவி' இதழொன்றில் வெளியாகியுள்ளது.
அருண்மொழிதேவன் அவர்கள் 'தேனருவி' சஞ்சிகையை மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் வெளியிட்டுள்ளார். பலருக்குக் களமமைத்துக்கொடுத்துள்ளார். * தேனருவி சஞ்சிகையின் ஆசிரியரான அருண்மொழி தேவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரென்று கலை, இலக்கிய விமர்சகரான கே.எஸ்.சிவகுமாரன் இப்பதிவுக்கான தனது முகநூல்எதிர்வினையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். அவருக்கு நன்றி. உண்மையில் அருண்மொழி தேவன் (அருண்மொழி) இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்புகள் பலவற்றை வெளியிட்டு ஆக்கபூர்வமான பங்களிப்பினைச் செய்துள்ளார். 'வானொலி நாடகக் குழு' நாடக அமைப்பினருடன் இணைந்து தமிழ் நாடகத்துறைக்கும் பங்களிப்பு செய்துள்ளார். அவை பாராட்டப்பட வேண்டியவை. ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை.
இவ்விதமான இருட்டடிப்புகளுக்கு முக்கிய காரணங்களிலொன்று. கலை, இலக்கிய விமர்சகர்கள் பாரபட்சமாகச் செயற்படுவது. இவர்கள் எழுதுவதன் அடிப்படையிலேயே ஏனையோரும் ஆய்வுகள் செய்வதால் இவர்களால் தவற விடப்படும் எழுத்தாளர்கள், சஞ்சிகைகள், படைப்புகள் பல தொடர்ந்தும் இவை பற்றி ஆய்வு செய்யும் ஏனையவர்களாலும் தவறவிடப்படுகின்றன. ஆனால் இன்று இணையத்தின் வருகையும், எண்ணிம நூலகங்களின் உருவாக்கமும் இவ்விதம் தவற விடப்பட்டவர்களையெல்லாம் இனங்காண்பதற்கு மிகவும் உதவியாகவிருக்கின்றன. 'நூலகம்' என்னும் எண்ணிம நூலகத்தில் இவ்விதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதால்தானே என்னால் இவற்றைப்பற்றி அறிய முடிந்தது.
•Last Updated on ••Thursday•, 26 •March• 2020 10:16••
•Read more...•
'நூலகம்' தளத்தில் சஞ்சிகைகள் பகுதியை மேய்ந்துகொண்டிருக்கையில் கண்களில் பட்ட சஞ்சிகை 'அமிர்த கங்கை'. எழுத்தாளர் செம்பியன் செல்வனை கெளரவ ஆசிரியராகக்கொண்டு வெளியாகிய சஞ்சிகையின் 12 இதழ்கள் ( ஜனவரி 1986 தொடக்கம் ஜூன் 1987 வரையிலான காலகட்டத்துக்குரிய) சேகரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஏப்ரில் 1986, செப்டெம்பர் 1986, டிசம்பர் 1986, ஜனவரி 1987, பெப்ருவரி 1987 ஆகிய இதழ்களைக் காணவில்லை. ஜனவரி 1986 வெளியான இதழே முதலாவது இதழ்.
இதழில் சிறுகதைகள், தகவல்கள், குட்டிக்கதைகள், செம்பியன் செல்வனின் உருவகக்கதைகள், ஓவியர் ரமணியின் ஓவியங்களுடன் கூடிய 'ரமணி'என்னும் சிறுவர் பகுதி, கட்டுரைகள், செங்கை ஆழியானின் 'தீம்தரிகிட தித்தோம்' தொடர் நாவல், புதுமைப்பித்தனின் பேஸிஸ்ட் ஜடாமுனி (பாஸிச வரலாறு) என்னும் தலைப்பிலான முசோலினி பற்றிய தொடர், சத்ஜித்ரேயின் வங்காள நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பின் (லீலா றே மொழிபெயர்த்தது) தமிழ் மொழிபெயர்ப்பு 'பக்திக் சந்த்' தலைப்பில் வெளியான தொடர், கேலிச்சித்திரங்கள் இவற்றுடன் சஞ்சிகையின் இறுதிப்பகுதியில் சோதிடம் (இராசி பலன்) ஆகியவை காணப்பட்டன. சத்ஜித்ரேயின் தொடரைத் தமிழாக்கம் செய்தவர் எழுத்தாளர் சொக்கன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
•Last Updated on ••Saturday•, 03 •October• 2020 08:45••
•Read more...•
1. சுந்தரின் 'கொரோனா' கேலிச்சித்திரம் (ஒரு கற்பனை)
கொஞ்ச நேரம் கொரோனாவை மறந்து விட்டு சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரத்தில் சிரித்து சந்தோசமாகவிருப்போமென்று 'நூலகம்' தளத்திலுள்ள சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரங்கள் அடங்கிய தொகுப்பு நூலான 'சிரித்திரன் சித்திரக்கொத்து' நூலைப் புரட்டினேன். முதலில் கண்களில் பட்டது இந்தக் கேலிச்சித்திரம்.
தற்போது தேர்தல் காலம். கொரோனா வந்து எல்லாவற்றையும் தடுத்து விட்டதே என்று நினைத்தேன்.
இந்தக் கேலிச்சித்திரம் சிறு மாற்றத்துடன் இக்காலகட்டத்துக்கும் பொருந்துமேயென்று தோன்றியது.
படத்தில் நோயால் படுக்கையிலிருக்கிற முதியவரை நாடி தேர்தல் வேட்பாளர் வந்து நிற்கிறார். அவரைப்பார்த்து அந்த முதியவர் "தம்பி அழாதை. வோட்டுப்போடுற நாள் வர கால் சுகப்பட்டுப்போம். நான் ஓடி வந்து உனக்கு வோட்டுப் போடுறன்" என்கின்றார்.
முதியவர் கூறுவதை ""தம்பி அழாதை. வோட்டுப்போடுற நாள் வர கொரோனா சுகப்பட்டுப்போம். நான் ஓடி வந்து உனக்கு வோட்டுப் போடுறன்" என்று மாற்றினால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன் சிரிக்கப் போன இடத்திலும் சிந்தனையில் கொரோனாதான்
•Last Updated on ••Saturday•, 21 •March• 2020 16:24••
•Read more...•
[ இன்ஸான் முஸ்லிம் வாரப்பத்திரிகையில் வெளியான சிறுகதைகளைப்பற்றிய ஆவணச்சிறப்புள்ள இப்பதிவினை எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அதனை நான் இங்கு பதிவு செய்கின்றேன். - வ.ந.கி -]
21.6.1967 தொடக்கம் 4.7.1969 வரை இலங்கையில் வெளிவந்த வாரப் பத்திரிகை ‘ இன்ஸான் ‘ .அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக , முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கில் இப்பத்திரிகை வெளியானது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ( ரஷ்ய சார்பு ) நிதியுதவியில் இப்பத்திரிகை வெளியிடப்பட்டதாயினும் தன்னையொரு கம்யூனிஸ்ட் பத்திரிகையாக அது இனங்காட்டிக்கொள்ளவில்லை. இதன் ஆசிரியர் அபூதாலிப் அப்துல் லதீஃப் . துணை ஆசிரியர் பண்ணாமத்துக்கவிராயர் பாரூக். எனினும் , அவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளிப்படுத்தப்படவில்லை. அப்பத்திரிகையில் எழுதியவர்களுக்கோ அதன் வாசகர்களுக்கோ தெரியாத இரகசியங்களாகவே இவை இருந்ததெனலாம். ‘ கௌரவ ஆசிரியர் : எஸ்.எச்.ஏ. வதூத் ‘ என நண்பர் ஒருவரின் பெயர் பின்னாள்களில் பொறிக்கப்பட்டது. இலங்கை முஸ்லிம்களின் பேச்சு வழக்குச் சொற்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பத்திரிகை முஸ்லிம்கள் மத்தியில் அன்று பிரபலம் பெற்றிருந்தது.
இன்ஸான் ஓர் அரசியல் பத்திரிகையாக இருந்தபோதிலும் ( மொழி பெயர்ப்பு உட்பட ) சிறுகதை , கவிதை , கட்டுரைகள் என கலை – இலக்கிய ஆக்கங்களுக்கும் முக்கியத்துவமளித்தது. பின்னாளில் புகழ் பெற்ற பல எழுத்தாளர்கள் , ' தாம் இன்ஸான் பண்ணையில் வளர்ந்தவர்கள் ' என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் அளவுக்கு அவர்களின் பயில்களமாக இன்ஸான் அமைந்தது.
•Last Updated on ••Wednesday•, 18 •March• 2020 16:59••
•Read more...•
அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள் இன்ஸான் பத்திரிகையில் 'யூத -அரபு பற்றி பேட்ரண்ட் ரஸல்'என்றொரு கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரையானது இன்ஸான் பத்திரிகையில் 21.7,1967 , 28.7.1967 ஆகிய திகதிகளில் 'யூத - அரபு உறவு பற்றி பேட்ரண்ட் ரஸல்' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. பேட்ரண்ட் ரஸலின் நூல்களிலிருந்து யூத அராபிய உறவு பற்றிய பேட்ரண்ட் ரஸலின் கருத்துகளை ஆராய்ந்து அ.ந.க எழுதிய கட்டுரை.
•Last Updated on ••Wednesday•, 18 •March• 2020 19:18••
•Read more...•
ரஜனிகாந்தின் முதல்வர் பதவி தனக்கு வேண்டாம் என்ற பேச்சினைக் கேட்டேன். முதலில் கேட்கையில் அவர் கூறுவது நல்லது என்பதுபோல் தோன்றினாலும், சிறிது சிந்திக்கையில் அரசியலில் இறங்கும் துணிவு அவரிடமில்லை என்ற முடிவே ஏற்படுகின்றது. இளைஞர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறுகின்றார். இருக்கும் பலமான கட்சிகளை எதிர்த்துப் போராடுவது அவ்வளவு எளிமையானது அல்ல என்று அஞ்சுகின்றார். தேர்தலில் இறங்கினால் வெற்றி நிச்சயம் என்றால்தான் அவர் வருவார் என்று கூறுகின்றார். அண்ணா சிறந்த தலைவர் என்று கூறுகின்றார். அண்ணா பல தலைவர்களை உருவாக்கினார் என்று கூறுகின்றார்.
அறிஞர் அண்ணா அரசியலில் நுழைந்தபோது அவர் தன் இருபதுகளில் இருந்தார். அவர் பெரியாருடன் முரண்பட்டு பிரிந்து திமுகவை உருவாக்கியபோது அவரது வயது 41. சுமார் நாற்பது வருடங்கள் கழிந்த பின்னர்தான் அவர் ஆட்சியையே பிடிக்கின்றார். எம்ஜிஆர் அரசியலில் தன் வயது முப்பதுகளில் இருந்தபோது ஈடுபட்டார். தான் நம்பிய அரசியல் கருத்துகளைத் தன் திரைப்படங்களில் , உரைகளில் வெளிப்படுத்தினார். பின்னர் திமுக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அவர் திமுகவின் பலத்தை எண்ணி அஞ்சவில்லை. துணிந்து கட்சியைத் தொடங்கினார்.தன் இரசிகர்களை, தொண்டர்களை மட்டுமே நம்பினார். அவர் ஆட்சியைப்பிடித்தபோது அவருக்கு வயது அறுபது. ஜெயலலிதா அரசியலில் தீவிரமாக நுழைந்தபோது அவரது வயது முப்பதுகளில் இருந்தது. தொடர்ந்து வாழ்க்கையை நாட்டு அரசியலுக்கே அர்ப்பணித்தார். கலைஞர் தன் இளமைப்பருவத்தில் அரசியலில் ஈடுபட்டார். பல்லாண்டுகள் அரசியலில் தன்னைப்பிணைத்துக்கொண்டவர் அவர். தன் எழுத்தால், தன் பேச்சால் தான் நம்பிய கொள்கைகளுக்காகச் செயலாற்றினார்.
•Last Updated on ••Friday•, 13 •March• 2020 14:26••
•Read more...•
எனது நாவலான தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான 'குடிவரவாளன்' நாவல் பற்றி பற்றி முனைவர் ஆர்.தாரணி ‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' ('சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை') என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே எனது படைப்புகள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளைக் கருத்தரங்குகளில் சமர்ப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் என் படைப்புகளை அறிந்துகொண்டது இணையத்தின் மூலமாகவே என்பது இணையத்தின் ஆக்கபூர்வமான நன்மையொன்றினை வெளிப்படுத்துகின்றது. அக் கட்டுரையின் முக்கியமான என்னால் தமிழாக்கம் செய்யப்பட்ட பகுதிகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். நாவலினை நன்கு உள் வாங்கித் தன் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி.
இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'An Immigrant' (லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) நாவலைத் தனது புகலிட இலக்கியங்கள் பற்றிய பிரிவுக்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வு செய்திருந்த விடயத்தினை இணையம் வாயிலாக அறிந்துள்ளேன். குடிவரவாளன் நாவல் ஆங்கிலத்தில் 'An Immigrant' என்னும் தலைப்பில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' ('சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை') - முனைவர் ஆர்.தாரணி ; தமிழில்: வ.ந.கிரிதரன்-
'குடிவரவாளன்' கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப்பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும் போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப்படுகொலையினைத்தாங்கிநிற்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற 1983 ஜூலைக் இனக்கலவரத்தில் தம் உயிர்களை, உடமைகளை, நாட்டை மற்றும் மானுட அடையாளத்தைக்கூட இழந்த மக்களுக்கான தனித்துவம் மிக்க அஞ்சலியாகவும் இந்நூல் இருக்கின்றது. நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் , கதாசிரியர் , கலவரத்தினுள் அகப்பட்ட இளங்கோ என்னும் இளைஞனின் நிலையினை உயிரோட்டத்துடன் விபரிக்கின்றார். தன் சொந்த மண்ணில் இனத்துவேசிகளால் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளங்கோ அந்தப்பூதங்களிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்குத்தப்புவதற்கு முயற்சி செய்கின்றான். இப்படைப்பானது கலவரத்தைப்பற்றிய , இளங்கோ என்னும் மனிதனின் பார்வையில் , நெஞ்சினை வருத்தும் வகையிலான ஆசிரியரின் விபரிப்பாகும்.
•Last Updated on ••Saturday•, 14 •March• 2020 13:07••
•Read more...•
எந்த விடயத்தைப் பற்றி எழுதுவதென்றாலும் முதலில் அந்த விடயத்தைப்பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். அது பற்றிப் பல்வேறு கோணங்களில் விளக்கமளிக்கும் நூல்களை, கட்டுரைகளை வாசியுங்கள். அது பற்றிய புரிதல் நன்கு ஏற்பட்டதும் அது பற்றி மிகவும் எளிமையாக அதே சமயம் மிகவும் ஆழம் நிறைந்ததாகவும் எழுதுங்கள். எளிமையாகவும், ஆழம் நிறைந்ததாகவும் எப்படியிருக்க முடியும் என்று ஆச்சரியப்படுகின்றீர்களா? தெரியாவிட்டால் மகாகவி பாரதியாரின் மகத்தான கவிதைகள் போன்ற பல படைப்புகளை இருக்கின்றனவே. 'நிற்பதுவே நடப்பதுவே ' கவிதையை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் அக்கவிதையில் பாவிக்கப்பட்டுள்ள சொற்கள் எவ்வளவு எளிமையானவை. ஆனால் அக்கவிதை கூறும் பொருள் அவ்வளவு எளிமையானதுதானா? இல்லையே . மிகவும் ஆழமானது. அதுபோல்தான் அவரது 'இன்று புதிதாய்ப்பிறந்தோம்' போன்ற கவிதைகளும். கவிஞர் கண்ணதாசனின் பல சிறந்த திரைப்படப்பாடல்களும் எளிமையும், ஆழமும் நிறைந்தவைதாம். இவ்வகையில் எளிமையான ஆற்றொழுக்குப்போன்றதொரு நடையில் ஆழமான விடயங்களை எழுதுவதில் , கூறுவதில் வல்லவராக விளங்கியவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி. ஸ்டீபன் ஹார்கிங் வானியற்பியலில் சிறந்த அறிவியல் அறிஞராக விளங்கியவர். அவர் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் சார்பியற் தத்துவம், குவாண்டம் இயற்பியல் போன்ற விடயங்களைப்பற்றியெல்லாம் மிகவும் எளிமையான நடையில் 'காலத்தின் சுருக்கமான வரலாறு' என்னும் அற்புதமானதொரு அறிவியல் நூலினை எழுதியுள்ளார். எளிமையும், ஆழமும் நிறைந்த நூல் அது.
•Last Updated on ••Saturday•, 07 •March• 2020 18:14••
•Read more...•
இலங்கையின் முன்னாள் பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க (இவர் உலகின் முதலாவது பெண் பிரதமர்) பற்றிய எழுத்தாளர் பொ. கருணாகரமூர்த்தியின் முகநூற் பதிவொன்று ஏற்படுத்திய நினைவலைகள் இவை:
எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் (Karunaharamoorthy Ponniah) ஶ்ரீமாவோ அம்மையார் பற்றிய முகநூற் பதிவு: "ஆனந்தசங்கரி அவர்கள் பதவியில்லாமல் இருந்தபோது 1983 இல் பெர்லினில் கூடியிருந்த நண்பர்களிடத்தில் சொன்னது: “ இந்தக்கூட்டணி, மாட்டணி ஒன்றுந்தேவையில்லை, அமிரை வீட்டில இருக்கவைச்சிட்டு.....நாலு எம்பிக்களை தமிழ்ப்பகுதியிலிருந்து அவளுக்கு (ஸ்ரீமாவோ) அனுப்பியிருந்தால் தமிழர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அவளிட்ட வாங்கியிருக்கலாம்…………. முட்டாள் தமிழர்களுக்கு மூளை ஒருநாளும் வேலை செய்யாதென்றன். வெங்காயம் விளைஞ்சநேரம் வெங்காயத்தையும், மிளகாய் விளைஞ்சநேரம் மிளகாயையும் அரசாங்கக்காசில இறக்குமதிசெய்து ஜே.ஆரைபோல தமிழர்களுக்கு வம்புபண்ற கெடுபுத்தி அவளுக்கில்லை, அவள் மனுஷி……. !” நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"
என்னைப்பொறுத்தவரையில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க கொண்டு வந்த புதிய அரசியலமைப்புச் சட்டம், தரப்படுத்தல் ஆகியவை, தமிழ் இளைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது போன்றவற்றால் எழுந்த எதிர்ப்பு தமிழரசுக்கட்சியினரைக் கூட்டணி அமைத்து தமிழீழம் கேட்க வைத்தது. மாவை சேனாதிராஜா, வண்ணை ஆனந்தன் என்று 42 தமிழ் இளைஞர்கள் (தமிழ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த) கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். ஆனால் உண்மையில் ஶ்ரீமாவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட நன்மைகளாக நான் கருதுவது:
•Last Updated on ••Friday•, 06 •March• 2020 10:52••
•Read more...•
2020 மார்ச் மாதக் கணையாழி இதழில் எனது கட்டுரையான 'விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை' நாவல் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது . கூடவே நண்பர் கே.எஸ்.சுதாகரின் 'தலைமுறை தாண்டிய தரிசனங்கள்' சிறுகதையும் வெளியாகியுள்ளது. எனது கட்டுரையின் பக்கங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
இதுவரை கணையாழி சஞ்சிகையில், தொகுப்பு நூலில் வெளியான எனது ஏனைய படைப்புகள்:
1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.) 2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை). 3. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன் 4. 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை) 5. ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்- (கணையாழி மே 2012) 6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் - 7. கணையாழி செப்டம்பர் 2017: கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் - 8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயின் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -
•Last Updated on ••Wednesday•, 04 •March• 2020 09:55••
•Read more...•
ஊர்துஞ்சும் நள்ளிரவு. விரிவெளி பார்த்திருந்தேன். இரவுவான்! புட்களற்ற மாநகரின் நள்ளிரவு நத்துகள் ஒலியேதுமில்லை. ஆந்தைகளின் அலறல்கள் எங்கே? வெளவால்கள்தம் சலசலப்புமில்லை. வாகன இரைச்சல் மட்டும் சிறிது தொலைவில் சிறிய அளவில். உப்பரிகையின் மூலையில் தூங்கும் மாடப்புறாக்களின் அசைவுகள் அவ்வப்போது கேட்கும் சூழல். விரிவெளியில் சுடரும் ஒளிச்சிதறல்கள் பல்வகை எண்ணங்கள் நெஞ்சில். எங்கோ ஒரு கோடியில் இங்கு நான். அங்கு நீ! எங்கே? சாத்தியமுண்டா?
•Last Updated on ••Wednesday•, 26 •February• 2020 21:08••
•Read more...•
கண்ணம்மா! அலைக்கூம்புக்குள் விரிந்திருக்கின்றதடி நம்காலவெளி. ஆம்! கூம்புக்காலவெளியில் நாம் கும்மாளமடிக்கின்றோமடி. கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம். நாமறியாக் காலவெளி அது கண்ணம்மா! கண்ணம்மா! நீ இவைபற்றி என்றாவது கருத்தில் கொண்டதுண்டா? கூறடி! இருப்புப்பற்றி இங்கு நினைப்பதிலுண்ட இன்பம் வேறொன்றுண்டோ கண்ணம்மா. காலவெளியடி கண்ணம்மா! நீ என் காலவெளியடி கண்ணம்மா!
•Last Updated on ••Tuesday•, 25 •February• 2020 12:48••
•Read more...•
ஆனந்த விகடன் சஞ்சிகை தமிழ் இலக்கியச் சூழலில் வெளிவரும் முக்கியமான வெகுசன இதழ்களிலொன்று. தமிழ் இலக்கிய வரலாறு பற்றி எழுதுபவர்கள் விகடன் போன்ற வெகுசன இதழ்கள் ஆற்றிய பங்களிப்புகள் பற்றிக் குறிப்பிடுவதில்லை. முனைவர்கள் தொடக்கம் சிறு சஞ்சிகை ஆசிரியர்கள் வரைக்கும் இப்போக்கினைக் காணலாம். வெகுசன சஞ்சிகைகள், பத்திரிகைகள் வாசகர்களின் உணர்வுகளுக்குத்தீனி போட்டு, பணம் சம்பாதிப்பதையே பிரதானமாகக்கொண்டு செயற்படுபவை. அதனால் அவற்றில் வெளியாகும் படைப்புகள் அனைத்துமே ஒதுக்கித்தள்ளப்பட வேண்டும் என்பது அர்த்தமல்ல. தமிழ் வாசகர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்ததில் அவற்றின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில் குறை நிறைகளுடன் அவற்றின் பங்களிப்பு அணுகப்பட வேண்டியவை. அவற்றின் ஆரோக்கியமான பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட வேண்டியவை. ஆனால் அதனை நம் விமர்சகப்பெருந்தகைகளோ, சிறு சஞ்சிகை ஆசிரியர்களோ செய்வதில்லை. இவர்களது எழுத்துகளில் எங்குமே இச்சஞ்சிகைகளின் ஆக்கபூர்வமான பங்களிப்பு பற்றியோ, இச்சஞ்சிகைகளில் வெளியான முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள் பற்றியோ தகவல்களோ, கட்டுரைகளோ வெளிவருவதில்லை.
அதே சமயம் இவ்வகையான பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்தால் பலரைச் சென்றடையும் சூழல் உண்டு. இதனாலோ என்னவோ இவ்வகையான ஊடகங்கள் வழங்கும் விருதுகளுக்கு மட்டும் இவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். உதாரணத்துக்கு விகடன் விருதுகள் பற்றிக் குறிப்பிடலாம். விகடன் விருது கொடுத்தால் விகடனின் ஆக்கபூர்வமான இலக்கியப்பங்களிப்புகளையெல்லாம் சுட்டிக்காட்டாத எழுத்தாளர்கள், கவிஞர்கள், இதழாசிரியர்கள் எல்லாரும் , விகடன் விருது பெற்ற செய்திகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து முகநூலில், வலைப்பதிவுகளில் விளம்பரப்படுத்திக் களிப்படைகின்றார்கள். காரணம் விகடன் விருது அவர்களது பெயர்களை இலட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சென்று சேர்க்கின்றதல்லவா?
இவர்கள் செய்நன்றிக்கடனாக ஒன்று செய்யலாம். விகடன் போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வரும் இலக்கியத்தரம் மிக்க படைப்புகளை, சமூக, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களைப்பற்றியாவது அவ்வப்போது தம் எழுத்துகளில் வெளிப்படுத்தலாம். செய்வார்களா?
•Last Updated on ••Thursday•, 20 •February• 2020 01:40••
•Read more...•
காலவெளியிடையே கண்ணம்மா உன் கனிமனம் எண்ணி வியக்கின்றேன். காலவெளியிடையே கண்ணம்மா கணமும் பறந்திட விளைகின்றேன். காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா களித்திட கணமும் எண்ணுகின்றேன். சூழலை மீறியே கண்ணம்மா அவன்போல் சிந்திக்க விரும்புகின்றேன். காலமென்றொன்றில்லை கண்ணம்மா. வெளியும் அவ்வாறே என்றான் கண்ணம்மா. காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு உண்மையென்றுரைத்தான். அவனறிவின் உச்சம் பற்றி கண்ணம்மா பிரமித்துப்போகின்றேன். மனத்து அசை இன்னும் முடியவில்லை.
•Last Updated on ••Tuesday•, 18 •February• 2020 11:49••
•Read more...•
காலவெளிச் சட்டங்களைக் கோத்து உருவானதிந்த இருப்படி கண்ணம்மா! இவ்விருப்புமொரு காலவெளிப் படம் என்பதையுணர்வாயாயடி நீ! என்னாசையொன்றுள்ளதென்பேன். என்னவென்று நீ அறியின் நகைக்கக்கூடும். ஒருபோதில் ,உணர்வுகள் கிளர்தெழுந்த பருவத்தினொரு போதில் உனைப்பார்த்த உணர்வுகளுளவே. அவ்வுணர்வுகளைப் பிரதிபலிக்கும் காட்சிகளுளவே. அப்போது கண்ணம்மா! அதிகாலைநேரம். ஆடியசைந்து நீ வந்தாய் பொழுதின் எழிலென. நினைவுள்ளதா? இருக்கிறதெனக்கு. மார்புற நூல்தாங்கி, முகம் தாழ்த்தி நடந்து வந்தாய்; அது உன் பாணி. நிலம்பார்த்து நடக்குமுனக்கு நடப்பதற்கு, நேரெதிர்க் காட்சிகள் தெரிவதெப்படி என்று வியப்பதுண்டு அப்போது. இருபுறம் பிரிகுழல் இடைவரை இருந்தசைய , பொட்டிட்ட வதனத்தில் நகையேந்தி நீ' நடந்துவருமெழிலில் பொழுது சிறக்கும். ஒருபோதில் வழக்கம்போல் அசைந்து சென்றாய் அதிகாலைப்பொழுதொன்றில். அவ்விதம் சென்று சந்தி திரும்புகையில் ஓரப்பார்வைக்கணை தொடுத்துச் சென்றாய். நினைவிருக்கிறதா? ஆனால் எனக்கு இருக்கிறதடி. அக்கணத்தைச் சிறைப்படுத்தி ஆழ்மனத்தினாழத்தே பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அதற்கு எப்போதுமில்லையடி விடுதலை. ஆயுள் தண்டனைதான். இருக்கும் வரை அதனாயுள் அங்குதான்.
•Last Updated on ••Tuesday•, 18 •February• 2020 11:48••
•Read more...•
கொரொனா வைரஸ் என்றொரு வைரஸ் ஆட்டிப் படைக்குது அகிலத்தை இன்று. இரும்புத் திரைக்குள் என்ன நடக்குது? சொல்வ தெல்லாம் உண்மை தானா? இதுவரை நாங்க கண்ட தில்லை இந்த வைரசை என்ற போதும் அச்சம் பெரிய வியாதி அன்றோ அறிந்து துணிந்து எதிர்த்து நிற்போம்.
•Last Updated on ••Thursday•, 13 •February• 2020 12:17••
•Read more...•
இன்று 'வாட்ஸ் அப்'பில் என் கடைசித்தங்கை தேவகி ஒரு செய்தியினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அது முன்னாள் யாழ் நகர மேயர் இராசா விசுவநாதன் அவர்களின் மரணச்செய்தி. இவரது மரணத்தால் துயருறும் அனைவர்தம் துயரிலும் நானும் என் அம்மா சார்பில் கலந்துகொள்கின்றேன். அம்மா சார்பில் என்று கூறுவதற்குக் காரணமுண்டு. முன்னாள் மேயர் இராசா விசுவநாதனின் காலத்து மாநகரசபை நிர்வாகம் தனித்துவம் வாய்ந்ததாக நான் எண்ணவில்லை. உண்மையில் அக்காலகட்டத்தில் யாழ் மாநகரத்திலுள்ள பழமையின் சின்னங்களைப்பேணும் அவசியம் பற்றிய கட்டுரை ஒன்றினை ஈழநாடு (யாழ்ப்பாணம்) பத்திரிகையில் எழுதினேன். முழுப்பக்க அக்கட்டுரையை ஈழநாடு வாரமலர் முக்கியத்துவம் கொடுத்துப்பிரசுரித்திருந்தது. அதில் யாழ் பழைய சந்தையிலிருந்த கங்கா சத்திரத்தைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தியிருந்தேன். ஆனால் யாழ் மாநகரசபை அது பற்றிக் கவனத்திலெடுத்திருக்கவில்லை. அக்கட்டுரை வெளியாகிச் சிறிது காலத்திலேயே அக்கட்டடம் உடைத்தழிக்கப்பட்டது.
ஆனால் திரு.இராசா விசுவநாதன் அவர்கள்மீது அவரது அரசியலுக்கப்பால் எனக்கு மிகுந்த மரியாதையுண்டு. அவர் அக்காலகட்டத்தில் வெற்றிகரமான வழக்கறிஞராக விளங்கினார். என்பதற்காக அல்ல. பின். அம்மாவின் பால்ய காலத்திலிருந்து அவரது இறுதிவரை அவரது அன்புக்குரியவர்களாக விளங்கியவர்கள் விசுவநாதன் தம்பதியினர் என்பதற்காக. அம்மா யாழ் இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகப்பணி புரிந்த காலத்திலும் அவருக்குப் பிரியமாக இருந்த சிநேகிதிகளாக அவருக்குச் சிலர் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர் திருமதி விசுவநாதன். 'விசுவநாதன் டீச்சர்' என்றறியப்பட்ட இவரது பெயர் தவமணி.
•Last Updated on ••Wednesday•, 12 •February• 2020 09:44••
•Read more...•
அண்மையில் தனது நூற்றி மூன்றாவது வயதில் மறைந்த நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) உலகச்சினிமாவில் முக்கியமானதோர் ஆளுமை. மூன்று தடவைகள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இவருக்குக் கிடைக்காத அவ்விருது இவரது மகன் மைக்கல் டக்ளசுக்குக் கிடைத்தது. ஆனால் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பின்னர் கிடைத்தது. இவர் இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகத்திறமை மிக்க நடிகர்களிலொருவர்.
இவரை நினைத்தாலே முதலில் நினைவுக்கு வருவது ஸ்டான்லி கூப்ரிக்கின் இயக்கத்தில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த ஸ்பார்ட்டகஸ் திரைப்படமே . அதில் அவர் ரோமானிய அடிமைகளிலொருவராக நடித்திருப்பார். அடுத்து ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் லஸ்ட் ஃபோர் லைஃப் (Lust for Life - வாழ்வுக்கான காமம்) .ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் அவர் அதற்காக ஆஸ்காரின் சிறந்த நடிகர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ருஷ்யாவிலிருந்து , உலகம் போரில் மூழ்கியிருந்த காலகட்டத்தில் அமெரிக்காவுக்கு வந்த யூதக் குடிவரவாளர்கள் இவரது பெற்றோர். இரண்டாவது உலக யுத்தக் காலகட்டத்தில் அமெரிக்கக் கடற்படையிலிணைந்து பணியாற்றினார். பின்னர் நாடக மேடை நடிகராக நடித்துத் திரையுலகுக்குள் நுழைந்தார். சிறுவயதில் குடும்பப் பாரத்தைச் சுமப்பவதற்காகப் பல்வேறு வேலைகளைச் செய்தார். பின்னர் வளர்ந்து திரைப்பட நடிகரானதும் , தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். இவரது புகழ்பெற்ற திரைப்படமான ஸ்பார்ட்டகஸ் திரைப்படத்தை அக்காலகட்டத்தில் யாரும் அறிந்திராத ஸ்டான்லி கூப்ரிக்கின் இயக்கத்தில் தயாரித்தது இவரது நிறுவனமான 'பிரியானா புரடக்ஸன்ஸ்' (Bryna Productions) நிறுவனமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
கென் கேசி (Ken Kesey) எழுதிய நாவலான One Flew Over the Cuckoo's Nest (குயில் கூட்டுக்கு மேலால் பறந்த ஒன்று) ஜாக் நிக்கல்சனின் நடிப்பில் திரைப்படமாக வெளியாவதற்கு முன்னர் அதில் நடிகராக அதே வேடத்தில் நடித்தவர் இவர். அதற்கான உரிமையினைப்பெற்றவர், அதில் நடிக்காமல் அதைத் தன் மைக்கல் டக்ளஸிடம் கொடுத்துவிட அவர் ஜாக் நிக்கல்சனை வைத்துத்தயாரித்து வெளியிட்டார். ஆஸ்கார் விருதுகளை அள்ளிச்சென்ற திரைப்படம் அது. அதில் நடிக்காதற்காகப் பின்னர் கேர்க் டக்ளஸ் வருந்தியதாக எங்கோ வாசித்த ஞாபகம்.
•Last Updated on ••Monday•, 10 •February• 2020 00:50••
•Read more...•
கண்ணம்மா! நேற்று -இன்று - நாளை என்று காலத்தின் ஒரு திசை பயணத்தில் மீளுதல் சாத்தியமற்றதா? ஆயின் 'அறிவுணர்'வுக்கு அது இல்லை. ஆம்! அது இல்லை. எது? ஆம்! அதுதான். அதுதான்.ஆம்! அது இல்லை. தயக்கமெதுவற்று அதனால் தங்குதடையின்றிப் பயணிக்க முடியும். நேற்று - இன்று - நாளை காலத்தின் அர்த்தமற்றதொரு நிலை 'அறிவுணர்'வுக்குண்டு. குவாண்டம் நுரையில் கிடக்கும் இருப்பில் நேரத்துக்கும் அர்த்தமுண்டோ? அங்கு அனைத்துமே சம காலத்தில் இருப்பன. அறிவாயா கண்ணம்மா! காலமே காலமாகி விட்ட நிலைதான் குவாண்டம் நிலை. ஆம் ! அந்த நிலை. என் 'அறிவுணர்'வு கொண்டு என்னால் எங்கும் பயணிக்க முடியும் கண்ணம்மா! உனக்கது புரியுமா?
•Last Updated on ••Saturday•, 08 •February• 2020 10:58••
•Read more...•
. உலகத்தமிழர்கள் மத்தியில் அறிஞர் அண்ணாவுக்கு மிகுந்த மதிப்பு உண்டு. தமிழக அரசியலிலும் சரி, கலை, இலக்கிய வரலாற்றிலும் சரி திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு மறுக்க முடியாத இடமுண்டு. சமூதாயச்சீர்திருத்தக் கருத்துகளை, மதரீதியிலான சுரண்டல்களை, தமிழர்களின் தாழ்ந்து போன நிலைக்குக் காரணங்கள் எவை என்பது பற்றிய கருத்துகளை எனத் தமிழ் மக்களை விழிப்படைய வைத்ததில் திமுகவினருக்குச் சிறப்பானதோரிடமுண்டு. அவர்களது பகுத்தறிவுக் கருத்துகளை, மதச்சார்பற்ற கருத்துகளை திரைப்படங்கள், எழுத்துகள் மூலம், உரைகள் மூலம் கொண்டு சேர்த்தவர்கள் அவர்கள். குறிப்பாக மதம் எவ்வளவுதூரம் மக்களை வர்ணரீதியாகப்பிரித்து வைத்திருக்கின்றது என்பதைப்புள்ளி விபரங்களுடன் , தர்க்கரீதியாக, சுவையான அடுக்குமொழித்தமிழில் எடுத்துக்காட்டியவை அறிஞர் அண்ணாவின் எழுத்துகள். உண்மையில் நாடகம், சினிமா போன்றவற்றில் நாற்பதுகளின் இறுதிக்காலத்திலிருந்து அறுபதுகளில் திமுக ஆட்சியினைப் பிடிக்கும் வரையிலான காலகட்டத்தில் தமிழகக்கலை, இலக்கியம் மற்றும் அரசியலில் திமுக வகித்த ஆரோக்கியமான பங்கு முக்கியமானது.
சினிமாவைப்பொறுத்தவரையில் பாடல்கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தை வசனத்துக்கு மாற்றியவர்கள் திமுகவினர் என்று கூறலாம். திரைப்படங்களில் சமுதாயச்சீர்திருத்தக் கருத்துகளை மையமாக வைத்துக் கதைகளைப் பின்னினார்கள். அறிஞர் அண்ணாவின் கதை, வசனத்தில் திரைப்படங்களாக அவரது நாடகங்கள், நாவல்கள் வெளிவந்தன. உதாரணத்துக்கு 'ஓர் இரவு ' நாடகம் திரைப்படமாகியதையும், 'ரங்கோன் ராதா' நாவல் திரைப்படமாகியதையும் குறிப்பிடலாம். 'நல்லதம்பி', 'வேலைக்காரி', 'ஓர் இரவு' 'ரங்கோன் ராதா' போன்ற அறிஞர் அண்ணாவின் திரைப்படங்கள் அவரது திரையுலகப்பங்களிப்பைப்பொறுத்தவரையில் முக்கியமானவை.
•Last Updated on ••Tuesday•, 04 •February• 2020 11:43••
•Read more...•
உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ? நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம் உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ? நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று.உண்மையாக நீ இருக்கின்றாயென்று. என்னை விட்டுத் தனியாக எப்பொழுதுமே இருப்பதாக நீ கூறுகின்றாய். எவ்விதம் நம்புவது.
ஆயிரம் மில்லியன் ஒளிவருடங்களிற்கு அப்பாலிருந்து இருந்து வரும்ஒளிக்கதிர்களுக்கும் உன்னிலிருந்து வரும் ஒளிக்கதிர்களுக்கும் இடையிலென்ன வித்தியாசம் ?நேரத்தினைத் தவிர.
•Last Updated on ••Saturday•, 08 •February• 2020 11:00••
•Read more...•
ஒளிக்கூம்புக்குள் விரிந்து , சுருங்கி, மீண்டும் விரிந்து கிடக்குமென் அண்டம். அடியே! அண்டத்தில் நீ இங்கெங்கு சென்றிடினும் உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து மறைந்துவிடவே முடியாதடி. ஏனென்று கேட்கின்றாயா? நீயே அறிந்துகொள் நீயே புரிந்துகொள் என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை. உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை வைக்கப்போவதில்லை. நானே கூறுகின்றேன் விளக்கம் கண்ணம்மா! உன்னால் புரிந்துகொண்டிட முடிந்தால் புரிந்துகொள். ஏனென்றால் இப்பிரபஞ்சத்துடனான என் உறவு ஏன் உன் உறவும் கூடத்தான் ஒருபோதுமே பிரிக்கப்பட முடியாதடீ. இருந்தாலும் கவலையை விடு. இன்னும் சிறிது விளக்குவேன். நீ, நான் , இங்குள்ள அனைத்துமே துகள்களின் நாட்டியம்தாம். சக்தியின் வடிவம்தான். புரிந்ததா சகியே!
•Last Updated on ••Saturday•, 08 •February• 2020 11:00••
•Read more...•
இன்று பிற்பகல் 'ஃபிளெமிங்டன் பார்க்'கில் அமைந்திருக்கும் 'டொராண்டோ பொதுசன நூலக'க்கிளைக்குச் சிறிது நேரம் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. அவ்வப்போது இந்நூலகக்கிளையில் தமிழ் நூல்களை இரவல் பெறச்செல்வதுண்டு. ஏதாவது புதிய தமிழ்ப்புத்தகங்கள் வந்திருக்கின்றனவா என்று பார்ப்பதற்காகச் சென்ற எனக்கு அதிர்ச்சியினையூட்டும் நிலையே ஏற்பட்டது. அங்கு தமிழ்ப்புத்தகங்கள் எவற்றையுமே காணவில்லை. அங்கு கடமையிலிருந்த இளம் பணியாளரிடம் சென்று தமிழ்ப்புத்தகங்கள் எங்கே? என்ன நடந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதிலே என் அதிர்ச்சிக்குக் காரணம். அவர் 'இன்னும் ஓரிரு மாதங்களில் 'டொரோண்டோ'விலுள்ள நூலகக் கிளைகளிலிருந்து அனைத்துத் தமிழ் நூல்களும் எடுக்கப்பட்டு விடும்' என்று கூறியதை என்னால் ஒரு கணம் நம்பவே முடியவில்லை. 'என்ன! எல்லா நூலகக் கிளைகளிலிருந்துமா?' என்று வியப்புடன் கேட்டேன்.
என் கேள்வியில் தொனித்த வியப்பினையும், கவலையினையும் அவதானித்த அவர் 'துரதிருட்டவசமாக அதுதான் நிலை. ஃபிரெஞ்ச் & சீனமொழி நூல்களைவிட ஏனைய மொழி நூல்கள் அனைத்தையும் எடுத்துவிடப்போகின்றார்கள். இது பற்றி எங்களுக்கு அறிவித்தல் வந்திருந்தது. இன்னும் ஓரிரண்டு மாதங்களில் முழுமையாக எடுத்து விடுவார்கள்' என்று துயர் கலந்த தொனியில் பதிலிறுத்தார். பதிலுக்கு நான் அப்படியென்றால் அவ்விதம் நீக்கப்படும் தமிழ்நூல்களை வாங்க முடியுமா?' என்றன். அதற்கவர் அதே துயர் கலந்த தொனியில் 'அநேகமாக 'ரீசைக்கிள்' செய்வார்கள் 'என்றார்.
உண்மையிலேயே அதிர்ச்சியினைத்தந்த செய்திதான். எம் தலைமுறையுடன் அதிகமாக நூலகங்களில் தமிழ் நூல்களை இரவல் பெற்று யாருமே படிக்கப்போவதில்லை என்னும் எண்ணமே ஒருவிதத் துயரினைத் தந்தது.
உடனடியாக எழுத்தாளர் சின்னையா சிவனேசனின் (எழுத்தாளர் துறைவன்) நினைவு வரவே அவருக்கு இது பற்றிய செய்தியொன்றினை அனுப்பி விசாரிக்கலாம் என்றெண்ணினேன். அவரிடம் இதுபற்றி விசாரித்துத் தகவலொன்றினை அனுப்பினேன். அதற்கு அவர் இச்செய்தி தனக்குப் புதியதென்றும், அப்படி நடப்பது நம்மவர் நூலகக்கிளைகளைப் பாவிப்பதைப்பொறுத்தது. தமிழ் நூல்களுக்குத் தேவையில்லாவிடில் நூலகம் தமிழ்ப்புத்தகங்களை வாங்குவதற்கு 'ஓர்டர்' தராது. இது தமிழ் மக்களைப்பொறுத்தது என்று உடனடியாகவே பதிலை அனுப்பியிருந்தார். நூலகத்துக்குத் தமிழ் நூல்களைத் தெரிவு செய்யும் ஒருவராக அவர் விளங்கியவர் என்பதை அறிந்திருக்கின்றேன். இப்போதும் அப்பணியில் அவரிருக்கின்றாரா? என்று தெரியவில்லை.
•Last Updated on ••Sunday•, 02 •February• 2020 09:58••
•Read more...•
அண்மையில் இலண்டனிலிருந்து பேராசிரியர் கோபன் மகாதேவா அனுப்பிய 'பூந்துணர் '(Perceptions in Bloom) தொகுப்பு நூல் கிடைத்தது. எழுத்தாளர் சின்னையா சிவனேசன் மூலம் அனுப்பியிருந்தார். இருவருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 'பிரித்தானிய 'ஈழவர் இலக்கியச் சங்க எழுத்தாளர்கள்' அமைப்பு மாதாமாதம் நடத்திய இலக்கிய நிகழ்வுகளில் வாசிக்கப்பட்ட 61 படைப்புகளின் தொகுப்பு நூலே இத்தொகுப்பு நூல். இவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் கோபன் மகாதேவா, இணைப்பாளராக விளங்கிய அமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் பெருமுயற்சியினால் இத்தொகுப்பு நூல் வெளியாகியுள்ளது. இத்தொகுப்பில் ஆங்கில மற்றும் தமிழ்ப்படைப்புகளுள்ளன. தமிழ்த்தொகுப்புகளைப் பொறுத்தவரையில் பேராசிரியர் கோபன் மகாதேவா, திருமதி அமரர் சீதாதேவி கோபன்மகாதேவா , இணைப்பாளராக விளங்கிய அமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் மற்றும் திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம் ஆகியோரின் படைப்புகளை அதிகமாகக் காணமுடிகின்றது. இந்நூலின் முன்னுரையில் முதற்தொகுப்பு 2007 மார்கழியில் வெளிவந்ததாகவும், இது 2011ற்கான தொகுப்பு என்றும், 2008, 2009 & 2010 ஆண்டுகளில் தொகுப்பு நூல் வெளியாகவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 'பூந்துணர் 2010' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் நூலின் உள்ளே முதற் பதிப்பு 2011 என்றும் , காப்புரிமை 2010 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொகுப்பு வெளியான ஆண்டு பற்றிய குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.
நூலின் கட்டுரைகளின் கூறுபொருளைப்பற்றிப்பார்க்கையில் அவை பன்முகத்தன்மை வாய்ந்தவை. இலக்கியம், அரசியல், சமூகம், அறிவியல் , புகலிடம் அனுபவம், இயற்கை ,நூல் விமர்சனம் என்று அவை பல்வகையின. இவை பற்றிய படைப்புகளுடன், அத்துறைகளில் சிறந்து விளங்கிய ஆளுமையாளர்களைப்பற்றிய கட்டுரைகள் பலவற்றையும் காணமுடிகின்றது. தொகுப்பின் முதற்கட்டுரையினை அமரர் திருமதி சீதாதேவி கோபன்மகாதேவா எழுதியுள்ளார். தலைப்பு 'காந்தியும் விடுதலை வேட்டைகளும்; என்றுள்ளது. 'காந்தியும் விடுதலை வேட்கைகளும்' என்றிருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். மகாத்மாவைப்பற்றிய நல்லதொரு கட்டுரை. கட்டுரை சுருக்கமாக (ஆனால் சுவையான நடையில்) காந்தியைப்பற்றி 'உயிரினமும் சுதந்திரமும், 'காந்தியின் வாழ்க்கையும் முயற்சிகளும் சாதனைகளும் என்னும் உபதலைப்புகளில் ஆராய்கிறது. சுருக்கமான ஆனால் தெளிவான கட்டுரை. மகாத்மாவின் வாழ்வு பற்றிய நல்லதோர் ஆவணக்கட்டுரை. அதனைத்தொடர்ந்து பேராசிரியர் கலாநிதி கோபன் மகாதேவா 'மகாத்மா காந்தியின் வாழ்க்கை ஆராய்ச்சிக்காக உகந்த சில கருவூலகங்கள்' என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். இதுவொரு வித்தியாசமான கட்டுரை. காந்தியைப்பற்றிய ஆராய்ச்சி செய்யும் எவரும் எடுக்க வேண்டிய பல்வகைத் தலைப்புகளைப் பட்டியலிடும் கட்டுரை. இவர் குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி, அதனைப் பல தொகுப்பு நூல்களாக்கலாம், அவ்விதம் செய்யின் அவை மகாத்மா காந்தி பற்றிய விரிவான அவரது குறை , நிறைகளை வெளிப்படுத்தும் தொகுப்புகளாக அமையும். இவ்விதம் செய்வதாயின் அதற்கு எவ்வளவு செலவாகும் என்பது பற்றியும் தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார் கட்டுரையாசிரியர் இக்கட்டுரையில். நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களும் 'பார் போற்றும் சாதனையாளர் மகாத்மா காந்தி' என்று நல்லதொரு கட்டுரையினை எழுதியுள்ளார். மகாத்மா காந்தியின் வாழ்க்கை பற்றி, அவரது சமூக, அரசியல் மற்றும் பொருளியற் கோட்பாடுகள் பற்றி அறிய விரும்பும் எவருக்குமுரிய நல்லதொரு அறிமுகக் கட்டுரை.
•Last Updated on ••Saturday•, 25 •January• 2020 00:04••
•Read more...•
எழுத்தாளர் எஸ்.குணேஸ்வரன் ஜனவரி 24,25 & 26 தினங்களில் யாழ் முற்றவெளியில் நடைபெறவுள்ள 'எங்கட புத்தகம் - கண்காட்சியும், விற்பனையும்' நிகழ்வு பற்றிய தகவலை அனுப்பியிருந்தார். அதனை நானிங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். முக்கியமான நிகழ்வு. வரவேற்கப்பட வேண்டிய நிகழ்வு. புத்தகப்பிரியர்கள் அனைவரும் திரண்டு சென்று வாங்கி ஆதரியுங்கள்.
எனக்கு ஒரு மிகப்பெரிய ஆசையுள்ளது. அது: தமிழ் எழுத்தாளர்கள் தம் எழுத்துகள் மூலம் வாழும் நிலை தோன்றவேண்டும். உலகமெங்கும் கோடிக்கணக்கில் தமிழர்கள் வாழும் நிலையில் இன்னும் இது சாத்தியமாகவில்லையே என்னும் கவலை எனக்கு எப்போதுமுண்டு. அந்நிலை மாறவேண்டும். இலங்கைத்தமிழர்கள் அவர்கள் இலங்கையில் இருந்தாலும், புலம் பெயர்ந்து ஏனைய நாடுகளில் வாழ்ந்தாலும் பல விடயங்களில் முன்மாதிரியாக விளங்குகின்றார்கள். சின்னஞ்சிறு தீவில் வாழும் தமிழர்களால் எவ்விதம் இவ்விதம் பல சாதனைகளைச் சாதிக்க முடிகின்றது என்று சில வேளைகளில் நான் நினைப்பதுண்டு. இவ்விடயத்திலும் இலங்கைத்தமிழர்கள் அதனைச் சாதிக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு உங்களைப்பற்றிய நம்பிக்கையான , ஆரோக்கியமான சிந்தனை அவசியம். நாம் எம்மவர்கள்தம் கலை, இலக்கியப்படைப்புகள் எவையாவினும் அவற்றை ஆதரிப்போம். அவை வளர்ச்சியுற முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று உறுதி எடுங்கள். இது போன்ற புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகையில் செல்லுங்கள். இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை உள்ளடக்கிய புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்லுங்கள். அதிக அளவில் வாங்குங்கள். வாசியுங்கள். எனக்கு நிச்சயம் நம்பிக்கையுண்டு. இலங்கைத்தமிழர்கள் நிச்சயமாக தமிழ் எழுத்தாளர்கள் தம் எழுத்துகள் மூலம் வாழும் நிலையினை உருவாக்குவார்கள். அதனை உலகத்தமிழர்கள் பெருமையுடன் பார்க்கத்தான் போகின்றார்கள்.
•Last Updated on ••Saturday•, 18 •January• 2020 12:49••
•Read more...•
நூலகம் நிறுவனம் இப்பொங்கல் திருநாளன்று பதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்து பதினாறாவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கின்றது. மனம் நிறைந்த வாழ்த்துகள். தற்காலச்சூழலில், இலங்கைத்தமிழர்கள் அழிவுகள் பலவற்றைச் சந்தித்து மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ள சூழலில் நூலகம் நிறுவனம் ஆற்றிவரும் சேவை மகத்தானது. நூலகம் நிறுவனம் பற்றிய சுருக்கமான ஆணால் தெளிவான அறிமுகத்தை நூலக நிறுவன இணையத்தளத்திலுள்ள அதன் அறிமுகக் குறிப்பிலிருந்து அறிந்துகொள்ளலாம். அவ்வறிமுகக் குறிப்பில் அது தன்னைப் பற்றிப்பின்வருமாறு கூறுகின்றது:
"நூலக நிறுவனமானது இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகள், மரபுரிமைகளை ஆவணப்படுத்திப் பாதுகாத்து இலவசமாகத் திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்யும் முக்கிய பணியை செயற்படும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்."
ஆரம்பத்தில் நூலக நிறுவனமானது எண்ணிம நூலகச் செயற்பாட்டையே பிரதானமாகக் கொண்டிருந்தாலும் , இன்று அதன் சேவைகள் சேகர அபிவிருத்தி , பள்ளிக்கூடம்), உசாத்துணை வளங்கள் , எண்ணிம ஆவணகம், சுவடி ஆவணகம் , பல்லூடக ஆவணகம், நூலக நிறுவன நிகழ்ச்சிகள் & ஆய்வு அடிப்படையிலான செயற்பாடுகள் என்று பரந்த அளவில் விரிவடைந்துள்ளது அதன் பிரமிக்கத்தக்க வளர்ச்சியினை எடுத்துக்காட்டுகின்றது.
நூலகம் நிறுவனத்தின் பிரதான பகுதியான எண்ணிம நூலகம் நான் அடிக்கடி பாவிக்கும் நூலகம். ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் , வாசகர்கள் எனப்பல்வகைப்பட்ட்ட மானுடர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும் எகையில் வளர்ந்துள்ளது. பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த அரிய பல நூல்கள் சஞ்சிகைகள, பத்திரிகைகள், பிரசுரங்கள், நினைவு மலர்கள், சிறப்பு மலர்கள் எனப் பல்வகை நூல்களையும் இங்கு ஆவணப்படுத்தியுள்ளார்கள். தனிப்பட்டரீதியில் நான் நூலக நிறுவன இணையத்தளத்தின் எண்ணிம நூலகத்திலிருந்து மிகுந்த பயனை அடைந்திருக்கின்றேன். பல அரிய நூல்களை, சஞ்சிகைகளை & பத்திரிகைகளை அங்கு வாசித்திருக்கின்றேன், இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளிகள் பலரின் ஆக்கங்கள் பலவற்றை இந்நூலகம் வாயிலாகப் பெற்றுப்பயனடைந்திருக்கின்றேன். கட்டுரைகளில் சான்றாதாரங்களாகப் பாவித்துள்ளேன்.
•Last Updated on ••Wednesday•, 15 •January• 2020 11:13••
•Read more...•
அழியாத கோலங்கள்: ஜிம் பிறவுனின் 'எல் கொண்டர்'
பொதுவாக வெஸ்டேர்ன் திரைப்படங்களில் கறுப்பின நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பது குறைவு. ஆனால் அவ்விதமாக நடித்த நடிகர் ஒருவரின் திரைப்படத்தையும் என் பதின்ம வயதுகளில் (நான் பார்த்துக் குவித்த ஆங்கிலத் திரைப்படங்களில்) பார்த்திருக்கின்றேன்.
இவரது ஓரிரு திரைப்படங்களே அக்காலகட்டத்தில் வெளிவந்ததாக நினைவு. இவரது படங்களைப்பார்ப்பதற்கு இளைஞர்கள் முண்டியடிப்பார்கள். அந்த நடிகர்தான் ஜிம் பிறவுண். அந்தத்திரைப்படம் 'எல் கொன்டொர்' (El Condor).
பாதுகாப்பான மண் கோட்டையொன்றில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தைக் கொள்ளையடிப்பதற்காக இவரும், எனக்கு மிகவும் பிடித்த இன்னுமொரு நடிகரான லீ வான் கிளீவ் (Lee Van Cleef) இணைந்து அமெரிக்க இந்தியர்களின் குழுவொன்றும் செல்வார்கள். கண்களைச் சுருக்கி, இதழ்க்கோடியில் இலேசாகச் சிரிப்பைத் தவழவிடும் லீ வான் கிளீவ்வின் நடிப்பு எப்பொழுதும் என்னை மிகவும் கவர்ந்ததொன்று. The Good The Bad and The Ugly திரைப்படத்தில் கெட்டவனாக (The Bad) நடித்திருப்பவர் இவரே. இவரது பல திரைப்படங்கள் அக்காலகட்டத்தில் யாழ்நகரில் திரையிடப்பட்டன. 'சபாட்டா (Sabata)' தொடர் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. 'அடியோஸ் சபாட்டா', 'ரிடேர்ன் ஆஃப் சபாட்டா' ஆகியவை நினைவில் நிழலாடுகின்றன.
அக்கோட்டையினைப் பாதுகாக்கும் அதிகாரியாக 'பற்ரிக் ஒ''நீல்' (Patrick O'Neal) நடித்திருப்பார். அவரது மனைவியாகப் தொலைக்காட்சி நடிகையாகவிருந்து திரைப்பட நடிகையாகப் புகழ்பெற்ற மரியானா ஹில் (Marianna Hill) நடித்திருப்பார். இவரது தந்தையான ஃப்ராங் ஸ்வார்ஸ்கோஃப் (Frank Schwarzkopf) ஒரு கட்டடக்கலைஞர். போர்த்துக்கீசர். ஜோர்ஜ் புஷ் சீனியர் காலத்தில் ஈராக்குடன் நடந்த வளைகுடா யுத்தத்தில் அமெரிக்கா இராணுவத்தளபதியாக யுத்தத்தை வழி நடத்திய நோர்மன் ஸ்வார்ஸ்கோஃப்பின் மைத்துனர். இவர் தனது தாயாரின் குடும்பப்பெயரான ஹில் என்பதைத்தன் குடும்பப்பெயராக வரித்துக் கொண்டவர்.
•Last Updated on ••Sunday•, 12 •January• 2020 02:28••
•Read more...•
காலத்துக்காலம் நாடுகளில் இலக்கியக் குழுக்கள் இயங்கும். இவற்றின் பின்னால் இவற்றின் சீடர்கள் இணைந்து இவர்களின் அங்கீகாரத்துக்காக அலைவார்கள். ஆதரவாகச் செயற்படுவார்கள். பதிலுக்கு இவர்கள் சீடப்பிள்ளைகளின் படைப்புகள் அவை எத்தகையவையாகவிருந்தபோதும் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். ஒருவருக்கொருவர் அங்கீகாரம். இதுதான் இதன் பிரதான நோக்கம். இக்குழுக்கள் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் & சஞ்சிகைகளைக் கைகளில் போட்டுக்கொள்வார்கள். அவையும் இக்குழுக்களின் பிதாமகர்களைத் தூக்கிப்பிடித்துக்கொள்வார்கள். இவை போன்ற இலக்கியக் குழுக்களின் ஆதிக்கம் முன்பு பலமாக இருந்தது. ஆனால் இன்று இணையத்தின் வருகை, முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் வருகை அவ்வகையான ஆதிக்கத்தை ஆட்டங்காண வைத்து விட்டது. இணையத்தின் மூலம் உலகத்தின் பல்வேறு பாகங்களிலுமுள்ள வாசகர்களை இலகுவாக எழுத்தாளர்கள் அணுக முடிகின்றது.
கனடாவைப்பொறுத்தவரையில் தற்போதுள்ள குழுக்களில் முக்கியமானது மூன்று குழுக்களின் கூட்டிணைப்பு. 'அன்னை -இல்லம்' பத்திரிகை, 'நேரம்'சஞ்சிகை மற்றும் 'தமிழ்-விருது' ஆகிய குழுக்கள் இணைந்து கூட்டுக் குழுவாக இயங்குகின்றன. இக்குழுக்களில் இணைந்து முனைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் சிலர் தீவிரமாக இயங்குகின்றார்கள். இவர்கள் தம் குழுக்களைச் சாராதவர்களின் படைப்புகளை வாசிப்பதில்லை. அவை பற்றிக் கதைப்பதோ , எழுதுவதோ இல்லை.
•Last Updated on ••Sunday•, 12 •January• 2020 23:47••
•Read more...•
இச்சிறுகதை உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவான சிறுகதை. ஒரு முறை வீடற்ற வீதி மனிதர் ஒருவரை 'டொராண்டோ' நகரின் வீதியொன்றில் சந்தித்தேன். அவருடனான எனது அனுபவத்தை மையமாக வைத்து உருவான கதையிது. கதையில் அம்மனிதரின் உண்மைப்பெயரை , உரையாடலின்போது அவர் கூறிய பெயரை, பாவித்துள்ளேன். பின்னரே அறிந்துகொண்டேன் அவ்வீதி மனிதர் உரையாடலின்போது கூறிய தகவல்கள் பொய்யல்ல என்பதை. அம்மனிதரின் முழுப்பெயர்ட் கெவின் கிளார்க் (Kevin Clarke). இவரைப்பற்றிய விக்கிபீடியாத் தகவல்களைப் பின்வரும் இணைப்பில் காணலாம்: https://en.wikipedia.org/wiki/Kevin_Clarke_(politician)
இவருடன் உரையாடியபோது இவர் தான் 'டொரோண்டோ நகரின் முதல்வர் பதவிக்குப் போட்டியிடப்போவதாகக் கூறியபோது நான் அதனை உளவளர்ச்சி பாதிப்புற்ற வீதி மனிதர் ஒருவரின் கூற்றாகவே எண்ணியிருந்தேன். இருந்தாலும் நடந்த சம்பவத்தை மறக்காமல் பதிவு செய்ய வேண்டுமென எண்ணி அதனை ஒரு சிறுகதையாக எழுதினேன். அவ்விதம் எழுதுகையில் அம்மனிதர் தெரிவித்த பெயரினையே பாவித்தேன். இச்சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பின்னர் பத்திரிகைச் செய்தியொன்றில் பே வீதியும் , அடிலெய்ட் வீதியும் சந்திக்கும் சந்திக்கண்மையில் வீடற்ற மனிதர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டை பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் ஒருவர் மீது வழக்குப் பதிவான விடயத்துடன் அம்மனிதரே 'டொராண்டோ மாநகர முதல்வர் பதவிக்குப் போட்டியிட்ட கெவின் கிளார்க் என்னும் விபரமும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்பொழுதே அறிந்து கொண்டேன் அம்மனிதரும் நான் சந்தித்த வீதி மனிதரும் ஒருவரென்பதை. அவர் கூறியவை பொய்யல்ல என்பதை. அம்மனிதருடனான உரையாடலின்போது அம்மனிதர் எனக்குக் கூறியவற்றை வைத்தே கதையின் உரையாடலினைப் பின்னியுள்ளேன். விக்கிபீடியாவிலுள்ள இவரைப் பற்றிய குறிப்புகள் இவர் ஒரு காலத்தில் ஸ்கார்பரோ பகுதியில் ஆசிரியராகவிருந்ததைத் தெரிவிக்கின்றன.
'டொரோண்டோ' அனுபவங்களை மையமாக வைத்துப் பல சிறுகதைகளை எழுதியுள்ளேன். அவ்வகையில் அவ்வனுபவங்கள் மறக்க முடியாதவை; முக்கியமானவை. -
•Last Updated on ••Monday•, 06 •January• 2020 09:31••
•Read more...•
இன்னுமோர் ஆண்டு! புத்தாண்டு! புத்தாண்டே! உனக்கு வயது எப்பொழுதுமே ஒன்றுதான். வயது ஒன்றானதும் மீண்டும் வந்து பிறக்கின்றாய். ஆனால் அந்தவோராண்டினுள்தான் நீ எத்தனை எத்தனை மாற்றங்களை இப்புவியில் ஏற்றி விடுகின்றாய். உருவாக்கி விடுகின்றாய்.
இன்பமும் , துன்பமும் இருப்பின் இயற்கையென்பதை எடுத்துக்காட்டி நிற்கின்றாய். உணர்ந்து பின் மீண்டும் உறுதியுடன் இருப்பினை எதிர்நோக்கத்தானோ நீ மீண்டுமொரு பிறப்பினை மறு வருடத்திலேயே எடுக்கின்றாய்?
இன்று புதியாய்ப்பிறந்தோமென்று நீ இங்கு வந்து மீண்டும் பிறப்பதற்கு எடுக்கும் காலமோ ஒராண்டு! உன் வழியில் நாமும் மீண்டுமிங்கு உதிப்போம்; உரமுடன் உலகத்தை உள்வாங்கி எதிர்கொள்வோம்.
உலகைச் சீரழிக்க மாட்டோம். உலகைச் சீரமைப்போம் என்றோர் உறுதி எடுப்போம். அதையும் உணர்வுபூர்வமாகவே எடுப்போம். இவ்வுலக உயிரனைத்துமெம் உறவுகளென்றெண்ணி உண்மை உணர்ந்து இம்மண்ணை இன்பப்பூக்காடாக்குவோம். இதற்காக இணைந்து எழுவோம்; உயர்வோம்.
புத்தாண்டே! நீ வாழ்க! வருக! இப் புவிதனை நீ புத்துணர்ச்சியால்,. பேரின்பத்தால் பொங்க வைப்பாய். மகிழ்ச்சிக்கடலால் மூழ்கடிப்பாய்.
•Last Updated on ••Tuesday•, 31 •December• 2019 12:35••
•Read more...•
எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அண்மையில் தான் முன்னர் யாழ் உதயன் பத்திரிகையில் தனது யாழ்ப்பாண டியூசன் நிலையங்கள் பற்றி எழுதிய கட்டுரையினை முகநூலில் பகிர்ந்திருந்தார். அக்கட்டுரையின் இறுதிப்பந்தியின் வரிகளை கவிதையாக அடுக்கி அதற்கு 'தேவதைகளுக்கு வயசாவதில்லை' என்று தலைப்புமிட்டுள்ளேன். அதனையே இங்கு பகிர்ந்துள்ளேன். கட்டுரையின் இறுதி வரிகளிலுள்ள கவித்துவமே என்னை இவ்வாறு வரிகளைக்கவிதையாக அடுக்கத்தூண்டியது. |