••Sunday•, 14 •February• 2021 00:23•
??- கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
”அண்ணா! இஞ்சை வந்து பார் அம்மாவை...” வரதலிங்கத்தின் காதிற்குள் கிசுகிசுத்தான் சதாநேசன். இருவரும் பூனை போல கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்து, அம்மாவின் அறையை நோக்கிச் சென்றார்கள்., மறைவாக நின்று அம்மாவை எட்டிப் பார்த்தார்கள்.
அம்மா படுக்கையில் அமர்ந்தவாறு, வரதலிங்கம் சுவிஷில் இருந்து கொண்டுவந்த ஆடைகளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் பஞ்சு போன்ற பாதங்கள் கட்டிலிலிருந்து நீண்டு அந்தரத்தில் தொங்கி ஆடிக்கொண்டிருந்தன. மனம் எங்கோ லயித்திருக்க, உதடுகள் மெல்லச் சிரிப்பதும் மூடுவதுமாக இருந்தன.
அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக இன்று காலைதான் வரதலிங்கமும் மனைவியும் சுவிஷிலிருந்து வந்திருந்தார்கள். வரதலிங்கம் ஒரு பக்திப்பழம். தனது கற்பித்தல் தவிர்ந்த நேரங்களில் - சுவிஷ் கோவில் ஒன்றில், அங்கீகரிக்கபடாத மந்திரங்கள் தெரியாத, மடைப்பள்ளி ஐயராக இருக்கின்றான். அவன் அம்மாவிற்காக சுவிஷில் இருந்து விலையுயர்ந்த ஆடைகளை வாங்கியிருந்தான். அம்மா வெள்ளை ஆடைகளை அணிவதில்லை. அதே நேரத்தில் மயிர்க்கூச்செறியும் ஆடைகளையும் தெரிவு செய்வதில்லை. மெல்லிய வர்ணங்கள்தான் அவர் விருப்பம். இதை ஏற்கனவே அறிந்திருந்த வரதலிங்கத்தின் மனைவி, அவருக்குப் பொருத்தமான ஆடைகளை வாங்கி வந்து அசத்தியிருந்தாள். வரதலிங்கத்திற்கும் சதாநேசனுக்கும் பின்னாலே நின்று தலையை நீட்டி மடக்கி அம்மாவை எட்டிப் பார்த்ததில் அவளுக்கு மூச்சிரைத்தது. உயரம் கட்டை என்பதால் துள்ளித்துள்ளி ஓசை எழுப்பியபடி அந்த அதிசயக் காட்சியைப் பார்த்தாள். அவளின் தொங்கலைப் பார்த்த இருவருக்கும் சிரிப்பு வர, அடக்க முடியாமல் போய்விட்டது. அதுவே அம்மாவின் செய்கைக்கு முற்றுபுள்ளி வைத்தது. நிமிர்ந்து அவர்களைப் பார்த்தார் அம்மா.
“அம்மா! நாளைக்கு நீங்கள் ஒரு ஸ்பீச் குடுக்க வேணும்” என்றான் சதாநேசன்.
“எடப் போடா நீ…” என்றார் அம்மா.
“எண்பதாவது பிறந்த நாள் அம்மா… சும்மாவே! எவ்வளவு காசு செலவழிச்சு, ஹோல் எடுத்து, தடல்புடலாச் செய்யுறம். அம்மாவின் பிறந்தநாளுக்காக பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டிலிருந்து வருகினம். நீங்கள் உங்கட வித்துவத்தைக் காட்டவேணும் அம்மா“ என்று சதாநேசன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
•Last Updated on ••Sunday•, 14 •February• 2021 00:27••
•Read more...•
••Sunday•, 31 •January• 2021 20:46•
??- - ஶ்ரீராம் விக்னேஷ் -??
சிறுகதை
கீழ்வரும் சங்கப் பாடலிலிருந்து தற்போதய காலத்துக்கொப்ப பிறந்த சிறுகதை: தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என அறிந்த பரத்தை, அத் தலைவியின் தோழியர் கேட்கும்படி இதனைக் கூறியது. கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்பழன வாளை கதூஉம் ஊரன்,எம் இல் பெருமொழி கூறித், தம் இல்கையும் காலும் தூக்கத் தூக்கும்ஆடிப் பாவை போல,மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே. - குறுந்தொகை 8, ஆலங்குடி வங்கனார் -
பொருள்:வயலில் உள்ள மரத்திலிருந்து விளைந்து விழும் இனிய பழத்தை குளத்தில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணும் நாட்டவன், என்னுடைய வீட்டில் என்னைப் பெருமைப்படுத்தும் சொற்களைக் கூறுவான். ஆனால் தன்னுடைய வீட்டில், முன் நின்றார் தம் கையையும் காலையும் தூக்கத் தூக்க, தானும் கையையும் காலையும் தூக்குகின்ற, கண்ணாடியில் தோன்றுகின்ற நிழல் பாவையைப் போல், தன்னுடைய மனைவிக்கு, அவள் விரும்பியவற்றைச் செய்வான்.
“பாருங்க மேடம்…… உங்களைத்தான்…. உங்களைத்தான்……”
திரும்பினேன்.
”அபரஞ்சி….. ”
இறந்து போனதாக கருதப்பட்ட என்னுயிர்த் தோழி.
“ரஞ்சி……………” என்னை மறந்து சத்தமிட்டேன்.
அங்கே –
சொகுசுக் கார் ஒன்றில் மிகவும் தோரணையாக தனியொருத்தியாக அவள்.
நாற்பது கடந்த நிலையிலும், முப்பதாகவே பிரகாசிக்கின்றாள். குடுகுடுப்பைக் காரர்கள் போல விடாமல் பேசும் தன்மை அவளது முத்திரை.
கொழும்பு சர்வதேச விமானத்தளம்.
•Last Updated on ••Monday•, 01 •February• 2021 06:24••
•Read more...•
••Sunday•, 31 •January• 2021 10:06•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
இந்த நாட்டில் இரவில் வானில் நட்சத்திரங்களைப் பார்க்க முடியாது.தவிர பகலில் முகில்கள் வரையும் பல்வேறான அழகிய தோற்றங்களைப் பார்க்க முடியும்.இருள் பிரியாத காலைவேளையில் மணி,இடையிடையே வானில் முகில்களின் அழகையும் பார்த்தவாறு அவசரமில்லாமல் நடந்து வந்து கொண்டிருந்தான்.சில நாட்களாக முன்னால் நடந்து போற அண்ணர்,பார்த்தாலேயே தெரியும்,ஈழத்தமிழர் என்று.அணியிற ஆடையிலே துப்பரவாக அக்கறை இல்லை.தோய்த்து தூய்மையாய் அணிந்தாலே போதும் என்ற மாதிரி சிறு கசங்கலுடன் சேர்ட்,காற்சட்டைக்குள் விடாது பறக்க விச்ராந்தியாக கை விரலில் ஒரு சிகரட் புகைய ...யாராய் இருக்கும்?மணிக்கு அறியும் ஆவல் கிளரவேச் செய்தது.அவன் இன்னும் சிறிய தூரம் நடக்க வேண்டும்.அவர் ஓடுற சிற்றூர்ந்து கராஜ்ஜுக்குள் நுழைந்தார்.ஓடு பாதையிலும்,பக்கத்திலிருந்த சிறு காணித்துண்டிலும் இறுக்கமாக சில சிற்றூர்ந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.இவனுடைய கராஜ்ஜுக்கு பெரிய வளவு இருந்தது.தவிர இருபதுக்கு மேலே ...நிற்பது வழக்கம்.
இவர் சிற்றூர்ந்து ஓட்டுனர் ,தெரிகிறது.இவன் ஓரே இடத்திலேயே நீண்ட காலமாக எடுத்து ஓடுறதாலே மற்றவற்றுக்குள் போய் பார்த்திருக்கவில்லை.அவன் வரும் பேருந்திலே சிலவேளை வருவார். முதலிலும் வந்திறங்கி இருப்பார்.விறு விறு நடை.அடிக்கடி ஒரு சிகரட் புகைகிறது.சங்கிலியாக புகைப் பிடிப்பவரா?நடக்கவிட்டு பின்னால் துரத்தி வருகிறான். ஒரு நாளும் எட்டி நடைப் போட்டு அவருடன் கதைத்ததில்லை.நடைப் பயிற்சி நடை பெறுகிறது.அவனுக்கு உடல்ப் பயிற்சி தேவை என வேளைக்கே இறங்கி நடக்கிறான்.தவற விட்ட போது அவர் விடுப்பில் நின்றிருக்கலாம்.நடந்த பிறகு ஓடுறது புத்துணர்ச்சியாக இருக்கிறது.நம்ப மாட்டீர்கள்.இப்படி இரண்டு,மூன்று மாசங்கள் ஓடி விட்டன.வாழ்க்கையில் தான் எத்தனைப்பாடங்கள்?உயர் வகுப்பைப் போல பாடங்களைக் குறைத்து விட வேண்டும் தான்.தலையில்.... கொதிக்கிற பிரச்சனைகளை இலேசிலே இறக்கி வைக்க முடியிறதில்லை.நிதானமும் வேண்டும் என்று நடக்கிறான்.வேலை முடிந்த பிறகும் இரவில் தூங்கி ஒரு விழிப்பு வருகிற போது பத்மாசனமும் போட்டு கையில் சிறிய றபர் உருண்டைகளை வைத்து 'சாந்தி,சாந்தி"என உருவும் போடுறான் .சிந்தனைகள் ஒழுங்காய் வர போராட வேண்டியிருக்கிறது.
•Last Updated on ••Monday•, 01 •February• 2021 06:25••
•Read more...•
••Wednesday•, 27 •January• 2021 11:14•
??- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -??
சிறுகதை
சிவா தனது மனைவி கலாவின் சின்னம்மா தேவராணியை அன்று பினனேரம் சென்று பார்ப்பதாக முடிவு கட்டிய விடயம் அவனது நண்பன் ஒருத்தனின் எதிர்பாராத வருகையால் தடைபட்டுக் கொண்டிருக்கிறது.
வந்திருந்த நண்பனுக்குத் தேனீர் கொண்டு வந்த கலாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைச் சிவா அவதானித்தபோது தர்மசங்கடமாகவிருக்கிறது.கலா, இலங்கைக்கு விடுதலைக்கு வரத்திட்டமிட்ட உடனேயே இந்தத் தடவையாவது தனது சின்னம்மாவைப் போய்ப் பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையைத் தனது கணவனிடம் மிகவும் அழுத்தமாகச் சொல்லி விட்டாள்.
சிவா தனது குடும்பத்துடன் நீண்ட நாளைக்குப் பின் லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்திருக்கிறான். தனது இளவயதில் சின்னம்மா தன்னை அன்புடன் பார்த்துக் கொண்டதை, கலா பல தடவைகள் அவனுக்குச் சொல்லியிருக்கிறாள். தங்கள் தகப்பன் லண்டனுக்கு வந்த காலத்தில் தங்களுடன் வாழ்ந்த தனது சின்னம்மா கலாவின் இளவயது ஞாபகங்களுடன் இணைந்திருப்பது சிவாவுக்குத் தெரியும்.
கலாவின் தாய் ஒரு ஆசிரியை, அப்போது தங்களைத் தங்கள் சின்னம்மா தனது குழந்தைகள் மாதிரிப் பராமரித்த விடயத்தைக் கலா சிவாவுக்குச் சொல்லும்போது அவள் கண்களின் நீர் கட்டும்.
கலா, இலங்கையின் போர் காலத்தில் பிறந்து வளர்ந்தவள். சாதாரண வாழ்க்கைமுறை தெரியாத அசாதாரண வாழக்கையுடன் வளர்ந்த தமிழ்க் குழந்தைகளில் ஒருத்தி.
இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை ஒட்டு மொத்தமாக வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் ஊசலாடிக்கொண்டிருந்த கால கட்டமது.போருக்காகப் பல இளவயதுத் தமிழ்க்; குழந்தைகளின் எதிர்காலம் சூறையாடப்பட்ட கொடிய நேரமது. உலகம் புரியாத வயதில், எதிரியுடன் போராட துப்பாக்கி தூக்கி இறப்பதை விட அன்னிய நாட்டில் கடினவேலை செய்து பிழைக்க ஓடிவந்தவர்கள் பலர்.
•Last Updated on ••Wednesday•, 27 •January• 2021 11:35••
•Read more...•
••Monday•, 11 •January• 2021 21:44•
??- ஸ்ரீரஞ்சனி -??
சிறுகதை
“சங்கர், நீங்க தனியத்தானே இருக்கிறீங்க, உங்களோடை ஒருத்தரும் இல்லைத்தானே?”
“ஓம், நான் தனியத்தான் இருக்கிறன்”
“என்ரை பெயர் ஜோசேப். நான் ஒரு லோயர், சட்ட உதவி நிலையத்திலிருந்து கதைக்கிறன். குடிச்சிட்டு வாகனம் ஓடினதெண்டும் மனைவியைத் தாக்கினதெண்டும் உங்களிலை குற்றம்சாட்டப்பட்டிருக்கு …”
“குடிச்சதெண்டு என்னைப் பொலிஸ் பிடிக்கேல்லை, அப்பிடி நான் குடிக்கவுமில்லை”
“சரி, நானும் யூனிவேசிற்றிலை இருக்கேக்கே குடிச்சிட்டு வாகனமோட்டியிருக்கிறன்தான். அது பிரச்சினையில்லை. ஆனா, பிழையை ஒத்துக் கொள்ளவேணும்… சரி, அதைப் பத்திப் பிறகு உங்கடை லோயரோடை கதையுங்கோ. இப்ப உங்கடை உரிமையள் என்னெண்டு சொல்லத்தான் நான் கோல் பண்ணினான்.”
“ஓ, ஓகே”
“பொலிஸ் உங்களிட்டை என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாதேங்கோ, நீங்க சொல்றதை உங்களுக்கெதிராக அவை கோட்டிலை பாவிக்கேலும். அவை என்னத்தைக் கேட்டாலும், லோயர் கதைக்கவேண்டாமெண்டு சொன்னவர், லோயர் கதைக்கவேண்டாமெண்டு சொன்னவர் எண்டு திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருங்கோ, சரியோ!”
“ஓ, ஓகே”
“ஆனா அவை ஏதாவது செய்யச் சொல்லி உங்களைக் கேட்டால் நீங்க செய்யோணும். அதுக்கு மறுப்புச்சொல்லேலாது. உதாரணத்துக்கு உங்கடை ரத்தத்திலை இருக்கிற அற்கோலின்ரை அளவைப் பாக்கிறதுக்கா ஊதச்சொல்லி அவை உங்களைக் கேட்கக்கூடும்.”
•Last Updated on ••Monday•, 11 •January• 2021 21:46••
•Read more...•
••Wednesday•, 06 •January• 2021 13:26•
??- குரு அரவிந்தன் -??
சிறுகதை
‘நிலா, நிலா..!’ வாசலில் நின்று குரல் கொடுத்தாள் ரதி.
குரல் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்த நிலா, பக்கத்து தெருவில் வசிக்கும் ரதி வாசலில் நிற்பதைக் கண்டாள். இரண்டோ மூன்று முறை கோயிலில் சந்தித்ததால் சினேகிதமாகியிருந்தாள்.
‘என்ன ரதியக்கா? உள்ளே வாங்கோ!’
‘நாய் குரைக்குது, கடிக்குமா?’
‘இல்லையக்கா, கட்டியிருக்குது, தெரியாதவையைக் கண்டால் குரைக்கும், அவ்வளவுதான்!’ ரதி கேற்ரைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தாள். ‘குரைக்கிற நாய் கடிக்காது என்று சொல்லுவினம்..!’ ‘நீங்கள் இதை சொல்லுறீங்க, போனகிழமை அவர் பயணத்தால வீட்டை வரேக்கையும் அவரை வாசல்ல கண்டிட்டு, யாரோ என்று நினைத்துக் குரைக்கத் தொடங்கி விட்டுது..!’
பெரிய காணியின் நடுவே கட்டப்பட்ட பெரியகல்வீடு பார்ப்தற்கு அழகாக இருந்தது. வீட்டின் இரு பக்கமும் சோலை போல வாழை, மா, பலா என்று பழமரங்களால் நிறைந்திருந்தது. முன்பக்கத்தில் பல வர்ணங்களில் அழகான ரோஜாக்கள், செவ்வரத்தைகள், நந்தியாவட்டை என்று பூச்செடிகள் அழகாகப் பூத்திருந்தன. குழாய்க் கிணற்றுத் தண்ணீர்த்தாங்கியும் உயரமாகத் தெரிந்தது.
நாயைக் கட்டிப் போட்டிருந்ததால், பயமில்லாமல் அணில்கள் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. தேனருந்தத் தேனீக்கள் ரீங்காரமிட்டுப் பொருத்தமான பூக்களைத் தேடிக்கொண்டிருந்தன. பழங்களைத் தேடிக் குருவிகள் கிளைகளில் தாவிக்கொண்டிருந்தன. ஆளிருந்தும் ஆளரவம் இல்லாத வீடுபோல காட்சி தந்தது.
•Last Updated on ••Wednesday•, 06 •January• 2021 13:37••
•Read more...•
••Monday•, 04 •January• 2021 22:03•
??- கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
காலை. காங்கேசன்துறை வீதி கலகலப்பாகத் தொடங்கிவிட்டது. துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் குச்சொழுங்கை வழியாக வந்த கிருஷ்ணவேணி கோவிலை நோக்கிச் சென்றாள். பாதணிகளை வீதியிலே கழற்றிவிட்டு நின்றபடியே கும்பிட்டுக் கொண்டாள். கோபுரத்தின் உச்சிவரை நிமிர்ந்தன அவள் கண்கள். அவளைக் கடந்து போவோர் அவளை ஒருகணம் திருப்பிப் பார்க்கின்றனர். திரும்பிப் பார்க்க வைக்கும் அழகுதான். மெல்லிய உயர்ந்த தேகம் கொண்ட அவள், இறுக வரிந்த மயில்நீல வர்ணச் சேலையில் தங்க விக்கிரகம் போல ஜொலிக்கின்றாள். நெற்றியில் திருநீற்றின் குறியும் பொட்டும், மல்லிகை மொட்டுகள் பிரிந்து மணம் கமிழ்க்கும் மாலையுமாக – பார்ப்பவர்கள் அவளையும் சேர்த்துக் கும்பிடத் தோன்றும். தினமும் அப்படித்தான் அவள் வேலைக்குப் போய் வருவாள். யாழ்ப்பாண நகரில் தனியார் கொம்பனி ஒன்றில் இலிகிதராக வேலை செய்கின்றாள்.
பின்னர் வீதியை இருமருங்கும் பார்த்துவிட்டு, குறுக்காக வீதியைக் கடந்து எதிரே இருக்கும் பஸ் ஸ்ராண்டை நோக்கிச் சென்றாள். அங்கே அவளது தோழி இந்திரா நின்றுகொண்டிருந்தாள். அனேகமான வேளைகளில் இருவரும் ஒன்றாகத்தான் வேலைக்குப் போய் வருவார்கள். தகரத்திலான பஸ் ஸ்ராண்டிற்குள் காலை இளம் வெய்யில் அட்டகாசம் போட்டது. இருவரும் உள்ளே போய் அமர்ந்து கொண்டார்கள்.
கலகலப்பாகப் பேசும் இந்திரா இன்று அமசடக்காக இருக்கின்றாள். முகம் கூடக் கறுத்துப் போய் இருந்தது. கவலையுடன் கிருஷ்ணவேணியைப் பார்த்தாள். மெதுவாக நகர்ந்து அவள் தோள் மீது தலை சாய்த்தாள். காதிற்குள் ஏதோ ரகசியம் சொல்லிவிட்டு, தயக்கத்துடன் மொபைல்போனைத் திறந்து சில படங்களைத் தட்டிக் காண்பித்தாள்.
அகிலன் ஒரு பெண்ணுடன் நெருங்கியிருக்கும் சில புகைப்படங்கள்.
அகிலன் தற்போது அவுஸ்திரேலியாவில் அல்லவா இருக்கின்றான்!
நெஞ்சு திக்கென்றது கிருஷ்ணவேணிக்கு. திகைப்பில் படீரென அவளையுமறியாமல் மொபைல்போனைத் தட்டிவிட்டாள். பத்திரகாளியாட்டம் எழுந்தாள். தொங்கல் நடையில் வீதிக்குக் குறுக்காகப் பாய்ந்தாள். வாகனமொன்று கிரீச்சிட்டு அவளை மருவிக்கொண்டு ஓடியது. சத்தம் கேட்டு வீதியில் நின்றவர்கள் தலையில் கையை வைத்தார்கள்.
•Last Updated on ••Monday•, 04 •January• 2021 22:05••
•Read more...•
••Monday•, 04 •January• 2021 21:43•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
அவன் இயக்கத்தில் சேர்ந்த பிறகு பல்வேறு அனுபவங்களைப் பெறுவது ஆச்சரியமாக.... இருக்கிறது. மாலை நேரம்.இருள் மெல்ல, மெல்ல மங்கலாகக் கவியத் தொடங்கி இருந்தது. வீதிப்புறத்தில் சிறிய தொலைவிலிருந்து " குக் கூ ,குக் கூ ! " குயில் கூவும் குரல் கேட்டது. குயில் கூவுதாக்கும் என சீலன் நினைத்துக் கொண்டான்." என்ன ஒரு கூவல் ! ,இது , ஒரு சிறுமி ஒருத்தி குயிலைப் போலக் கூவுகிறாள். நல்ல குரல் வளம். இவளைக் கண்டுப் பிடித்து சினிமாப்பாடல்களை பாட பழக்கினால் கலக்குவாள்"என்றார் அம்மா. அம்மா,அராலிப் பள்ளிக்கூடத்தில் படிப்பிக்கிற மங்களம் ஆசிரியை .அவனும் அந்த பள்ளிக்கூடத்திலே தான் பத்தாம் வகுப்பைக் குறைத்து ஒன்பதாம் வகுப்பாக்கி இருந்த புதிய கல்வித் திட்டத்தில் படித்திருந்தான்.பிறகு எங்கெங்கோ...?அதை பிறகுப் பார்ப்போம்.சும்மா சொல்லக் கூடாது. குயிலே தோற்று விடும்.அந்த மாதிரிக் கூவல் .அவன் உடனேயே வெளியே ஓடிப் போய் வீதியில் பார்த்தான்.அது மண் ஒழுங்கை,சிறிது சென்ற பிறகு ,மற்ற ஒழுங்கையை அடைந்து விடும்.சந்தியில் குடி நீர்க்குழாய் இருக்கிறது. அது சற்றுத் தொலைவு. இருள் கூட கூடி விட்டிருந்தது. சென்று வலது,இடது பார்த்து கண்டுப் பிடிப்பது சிரமம். சிறுமி என்பதால் கூவி விட்டு ஓடி இருப்பாள். அது சரி ! ,குரல் சிறுமியின் குரல் ? என்பதை எப்படி கண்டு பிடித்தார்?.ஆச்சரியம் தான்.பெரிசுகளிற்கு இந்த விளையாட்டு சரி வராது.
தொடர்ந்து பலநாட்கள் தொடர்ச்சி ...என்றில்லை, அந்தக் கூவல்கள் இருள் பின்னணியில் கேட்டுக் கொண்டே இருந்தன. கண்டு பிடிப்பது சுலபமாக இருக்கவில்லை. அம்மாவிற்கு நிருபர் மூளை, அந்தக் குயிற்காரி யார் என்பதைக் கண்டு பிடித்து விட்டார்." ரீச்சர் ,இவள் நல்லாய்க் கூவுவாள்" எனச் சுகந்தியை அவள் தோழி சொல்லிக் காட்டிக் கொடுத்து விட்டாள். கறுத்த சிறுமி, கறுப்பென்றால் அதிகம் கலரைச் சேர்த்து விடாதீர்கள். "நீயா ,அந்தக் குயில்"என அம்மா, அவளை ஆச்சரியத்துடன் அழைத்து விசாரித்தார். அம்மாவை எல்லாச் சின்னப்பிள்ளைகளிற்கு மட்டுமில்லை பெரிய மாணவர்களிற்கும் நன்கு பிடிக்கும்.அம்மா, படிப்பிக்க வந்த நாளே, பேருந்திலிருந்து உள்ளே நன்கு தள்ளி இருக்கிற பள்ளிக்கூடத்திற்கு நடந்துச் செல்கிற போது, சிறுவர்களிற்கு யார் எனத் தெரியாது கிராமத்திற்கு வந்திருக்கிற புதியவராக இருக்க வேண்டும் என நினைத்த உதயன், தனது நண்பர்க்குழாமுடன் ஒரு மதகிலிருந்து கடந்து போக "மெல்லப் போ, மெல்லப் போ மெல்லிடை என்னவாகும்.."எனப் பாடினான்.
•Last Updated on ••Sunday•, 31 •January• 2021 10:11••
•Read more...•
••Monday•, 28 •December• 2020 22:29•
??- குரு அரவிந்தன் -??
சிறுகதை
‘அண்ணி வந்து சாப்பிடுங்களேன்..!’
‘இல்லை நிலா எனக்குப் பசிக்கலை..!’
‘இரண்டு நாளாய் நானும் பார்க்கிறேன், மதியம் ஒரு சாப்பாட்டோட நீங்க இருக்கிறீங்க ஏன் அண்ணி?’
‘எங்க ஊர்க் கோயில் உற்சவம் நடக்குது அதுதான் விரதம் இருக்கிறேன்..!’ என்றாள் சுபா.
‘சரி, காலையில சாப்பிடாட்டி விரதம் என்று எடுத்துக்கலாம் அதுக்காக நீங்க இரவிலும் சாப்பிடாமல் இருக்கணுமா?’
சுபா சிரித்துச் சமாளிக்கப் பார்த்தாள்.
‘டயற்ரிங் என்று சொல்லப் போறீங்களா..? அளவாய், அழகாயிருக்கிறீங்க, என்னுடைய கண்ணே பட்டிடும் போல இருக்கு, இதைவிட மெலிஞ்சால் வடிவாயிருக்காது அண்ணி, ஏன் சாப்பிறதில்லை?’
சுபா எதுவும் சொல்லாது மௌனமானாள்.
‘அண்ணா ஏதாவது சொன்னானா, சொல்லுங்கண்ணி..?’
சுபா சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டுக் கேட்டாள்,
‘உங்கண்ணா சாப்பிடாமல் பட்டினி இருப்பாரா?’
‘அவரா, பசிதாங்கவே மாட்டார்..! ஒரு நேரம் சாப்பாடு தாமதமானாலே கொதிச்சுப் போயிடுவாரே’
•Last Updated on ••Monday•, 28 •December• 2020 22:34••
•Read more...•
••Monday•, 30 •November• 2020 22:14•
??- குரு அரவிந்தன் -??
சிறுகதை
மகப்பேறு மருத்துவமனைப் படுக்கையில் அரைகுறை மயக்கத்தில் இருந்த நிருவிடம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள் நர்ஸ்.
குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தவள், ‘செல்லக்குட்டி கண்ணா’ என்று குழந்தையின் கன்னத்தில் மெதுவாக முத்தம் ஒன்றைப் பதித்து விட்டுக் குழந்தையை அணைத்து முகம் புதைத்து விசும்பத் தொடங்கினாள்.
‘அம்மா குழந்தையைக் கொடுங்க நான் வெச்சிருக்கிறேன்’ என்றாள் இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்து கொண்ட தாதி.
‘நோ.. நோ.. இவன் அவரோட செல்லக் கண்ணன், அவர் வரும்வரை நான்தான் கவனமாய் வெச்சிருப்பேன்’ ஒரு மனநோயாளிபோல வீரிட்டவள், மறுகணம் குழந்தையைத் தனக்குள் இறுகவணைத்தபடி மௌனமானாள். பொதுவாகப் பிரசவம் முடிந்ததும் சில தாய்மார் இப்படியான ‘போஸ்ட்பாட்டும்’ மனநோயால் பாதிக்கப்படுவதுண்டு என்பதைத் தாதி அறிந்தேயிருந்தாள்.
‘என்னம்மா, என்னாச்சு..?’ என்ற தாதியின் ஆதரவான கேள்விக்கு, வேதனை தாங்காது உடைந்து போயிருந்தவள், அப்படியே கொட்டித் தீர்த்தாள்.
என்றுமில்லாதவாறு அதிகாலையில் செல்போன் சிணுங்கிது.
படுக்கையில் இருந்தபடியே திரும்பிப் பார்த்தேன். அவருடைய செல்போன்தான் அழைத்தது. அவரோ அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரது தூக்கத்தைக் கெடுக்காமல் செல்போனை எடுத்துப் பார்த்தேன். மருத்துவமனையில் இருந்துதான் அந்த அழைப்பு வந்திருந்தது.
•Last Updated on ••Monday•, 30 •November• 2020 22:16••
•Read more...•
••Monday•, 23 •November• 2020 00:46•
??- தேவகாந்தன் -??
சிறுகதை
அதுவரை பக்கத்திலிருந்த நண்பன் முருகவேல் சிறிதுநேரத்திற்கு முன்னர்தான் டான் தொலைக்காட்சியில் செய்தி பார்க்கவென உள்ளே எழுந்துபோனான். அவனுக்குமே அந்த உந்துதல் எழுந்தது. பின் ஏதோவொரு சலிப்பில் பேசாமல் இருந்துகொண்டான்.
பகலிலே அந்த இடத்தில் தோன்றியிருக்கக்கூடிய அவசங்கள், வெளிச்சம் படராது இருள் விழுந்த முற்றத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த அவனிடத்தில் அப்போது எழுந்திருக்கவில்லை. உருவத்தை இருட்டில் கரைத்துவிட்டு இருப்பதுபோல் ஓர் நிறைவு.
அவன் வானெறிந்த நட்சத்திரங்களும், அதன் மேலலைந்த மேகங்களும் கவனமின்றிக் கண்டபடி இருந்தான். திடீரென கோவில் வளவு மரக்கூடலிலிருந்து ஒரு சாக்குருவி அலறியடித்துப் பறந்தது. அவனது உடம்பு அந்தத் திடீர் சத்தத்தில் லேசாக ஆடியது. கடந்த சில தினங்களாக அவ்வாறுதான் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு இருக்கின்ற ஒரு ஆத்துமம் அந்தமாதிரித்தான் எந்தவொரு திடீர்ச் சத்தத்திலும் சந்தடியிலும் திடுக்காட்டம் அடையுமோ?
கீழ் வான் மூலையிருளினுள் சாக்குருவியின் கதறல் போய் மறைய, சூழல் அவதானத்துக்கு வந்தது. சிறிதுநேரத்தில் தெருவில் நிலந்தீற்றிய காலடிச் சத்தம் அவன் கேட்டான். அது மெலிந்து மெலிந்து வந்து வேலிக்கு வெளியே ஓரிடத்தில் சடுதியாய் நின்றதும் தெரிந்தது.
வேலியின் கீழ்ப் பகுதியிலுள்ள முட்கம்பி வரிகளுக்கு மேலாக பக்கப்பாட்டில் தகரங்கள் அடித்திருந்தன. போன மாரியின் கடும் காற்றுக்கு அதில் நட்டிருந்த காட்டுக்கட்டை சரிந்து தகர இணைப்பு ஊடு விட்டிருந்த இடத்தில்தான் காலடி அரவம் அடங்கியிருந்தது. அவனுக்கு எழுந்து உள்ளே போய்விடுகிற அவதி. ஆனாலும் இருளில் இன்னும் நம்பிக்கைவைத்து அவன் விநாடிகளை விழுங்கிக்கொண்டிருந்தான்.
•Last Updated on ••Tuesday•, 24 •November• 2020 11:00••
•Read more...•
••Sunday•, 22 •November• 2020 14:43•
?? - குரு அரவிந்தன் -??
சிறுகதை
அமீரா தூக்கத்தில் வீரிட்டபடி எழுந்தாள்.
‘என்னம்மா என்னாச்சு கனவு கண்டியா?’ அருகே படுத்திருந்த தாய் அவளை அணைத்து ஆறதல் சொன்னாள்.
‘டாட் சொன்ன சொல்லைக் காப்பாற்ற இல்லையேம்மா’ என்று சொல்லி விம்மி விம்மி அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் தூங்க வைத்தாலும் மெலோடியால் தூங்க முடியவில்லை. மகளை மட்டுமல்ல, தன்னையும் ஏமாற்றி விட்ட துயரத்தில் குலுங்கிக் குலுங்கி அழுதாள். வேகமாக நடந்து முடிந்த எல்லாமே ஒரு கனவு போல அவளது கண்ணுக்குள் நிழலாடியது.
19-3-2020 – நியூயோர்க் நகரம்.
வேலைக்கு வரும்போதே அவன் இருமிக்கொண்டுதான் வந்தான். இவனுடன் ஒன்றாக வேலை செய்பவன் நேற்றும் இருமிக்கொண்டு இருந்ததை இவனால் சகிக்க முடியவில்லை. இன்று அவனுக்குச் சாதுவான ஜுரமும் இருந்தது. ‘இந்தா பார் வேலை வேலை என்று அலையாதே, சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம், புரியுதா..? பேசாமல் இரண்டு நாள் ஓய்வெடுத்துக் கொள், நான் சமாளிக்கிறேன்’ என்று சொல்லி அவனைக் கட்டாயப் படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.
சாதாரண புளு ஜுரம் என்று நினைத்துதான் அவனை ஓய்வெடுக்கச் சொல்லியிருந்தான். அவசரமாகச் செய்து முடிக்க வேண்டிய வேலை என்று முதலாளி ஏற்கனவே சொல்லி அனுப்பி இருந்ததால், இவன் கட்டாயம் வேலைக்குப் போகவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தன்னை ஆளாகிக் கொண்டான். 25 வருட தொழில் அனுபவம் இவனுக்கு இருந்தது. தொழில் நிமிர்த்தம் ரொலாண்டோ சிலநாட்களாக அரேன்ஞ்கவுண்டியில் இருந்து நியூயோர்க் மான்ஹற்ரன் நகரத்தில் உள்ள மருத்துவமனைக்குத் தொலைதொடர்பு சாதனங்களை பழுதுபார்ப்பதற்காகச் சென்று வந்தான்.
•Last Updated on ••Monday•, 30 •November• 2020 22:15••
•Read more...•
••Tuesday•, 27 •October• 2020 23:45•
??- ஶ்ரீரஞ்சனி -??
சிறுகதை
என்ர நெஞ்சில தலைவைச்சுப்படுத்திருந்த சுமி இன்னும் விசும்பிக்கொண்டிருந்தாள். ஒரு கையால அவளின்ர தலையக் கோதினபடியும், மற்றக் கையால அவளை அணைச்சபடியும் அவளருகில நான் படுத்திருந்தன். எனக்கும் அழுகைவந்தது. மனசு படபடத்தது. திரைச்சீலைகள் அங்குமிங்குமா ஆடிக்கொண்டிருந்துது.
“சொறி குட்டி, அம்மா அடிச்சிருக்கக்கூடாது, கத்தியிருக்கக்கூடாது… சொறியடா கண்ணா, இனி அம்மா இப்பிடியெல்லாம் செய்யமாட்டன்… அழாதையடா குஞ்சு…” மிகக் கனிவுடனும் குற்றவுணர்வுடனும் திரும்பவும் சொன்னன்.
“எனக்குச் சரியாய் தண்ணி விடாய்ச்சதம்மா. அதுதான் பைப்பைக் கண்டோனை …”
“ஓமடா, எனக்கு விளங்குது. ஆனா என்ன நடந்தாலும் எனக்கது தெரியோணும். அம்மாக்கு என்னத்தை எண்டாலும் சொல்லலாமெண்ட துணிவு உனக்கிருக்கோணும்.”
சுமி தலையை ஆட்டினபடி என்னை இறுகக் கட்டிக்கொண்டாள்.
“ம்ம், ஓகே, புத்தகம் வாசிப்பமா குட்டி? பிள்ளையின்ரை சின்னக் காலாலை ஓடிப்போய் விருப்பமான ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வாடா.”
ரொபேட் மஞ்சின் ‘லுக் அற் மீ’ வாசித்து முடிந்ததும் பழையபடி அவள் கலகலப்பானாள். பிள்ளைகளின் சிறப்பே இதுதான். மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலாயிருந்துது.
“குட் நைற் சுவீட்டி,” அவளின்ர நெத்தியில முத்தமிட்ட நான் அவளை வடிவாய்ப் போத்திவிட்டு அந்த அறையைவிட்டு வெளியேறினன்.
•Last Updated on ••Tuesday•, 27 •October• 2020 23:53••
•Read more...•
••Friday•, 23 •October• 2020 22:35•
??- முனைவர் அரங்க.மணிமாறன் -??
சிறுகதை
“வாட் நான்சென்ஸ்! உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு மிருதுளா? என்று மனைவியிடம் கொந்தளித்தான் கணவன் வருண்.
“ஏன் இப்படி கோபப்படுறீங்க? கொஞ்சம் அவசரபடாம, கோபப்படாம, பொறுமையா யோசிச்சிப்பாருங்க”.
“இல்ல மிருதுளா நான் கோபப்படவும் இல்ல, அவசரபடவும் இல்ல! நான் ரொம்ப கூலதான் இருக்கேன். ஆனா நீ சொல்லற விஷயம் கொஞ்சமாவது நியாமா? சரிபடுமா? நடக்குமான்னு நீயே யோசிச்சிப்பாரு!”
“வெளியில யாராவது கேள்விபட்டாக்கூட, நம்பள பத்தி என்ன நெனப்பாங்க? ரொம்ப கேவலமா பேசுவாங்க! என்னை பத்தியும், உன்ன பத்தியும் என்ன நெனப்பாங்கன்னு கொஞ்சமாவது யோசிச்சிப் பாத்தியா? நீ என்ன சமாதானம் சொன்னாலும் நியாயம் சொன்னாலும் என்னால ஏத்துக்கவே முடியாது!”
“ஏங்க நாம வாழறது, நமக்காகத்தாங்க. ஊரு உலகத்துக்காக இல்ல! நாலு பேரு என்ன சொல்லுவாங்க நாலு பேரு என்ன நெனப்பாங்கன்னு, அதையே யோசிச்சி பயந்துகிட்டிருந்தா நம்ம வாழ்க்கைய நிம்மதியா வாழ முடியாது. இத மட்டும் உறுதியா நெனச்சிக்குங்க! "
"அதில்ல மிருதுளா, இது நீயோ நானோ மட்டும் சம்பந்தபட்ட விஷயமில்லையே? சம்பந்தபட்ட ரெண்டு பேரின் விருப்பமும் முக்கியமில்லையா? "
"ஆமா நீங்க சொல்லறத முழுசா ஏத்துக்கிறேன்! ஆனா நாமதான் அவங்களுக்கும் சொல்லி புரியவைக்கணும்."
"சினிமாத்தனமா இருக்கு மிருதுளா நீ சொல்லறது. சினிமாவுல வேணும்னா நீ சொல்லற மாதிரி நடக்கலாம். சினிமாதானே அது கற்பனையில எடுக்கறதால வேணா ஏத்துக்குவாங்க. அதையே நிஜத்துல நடத்துனா, எள்ளி நகையாடுவாங்க. சும்மாவா சொன்னாங்க, உலை வாய மூடுனாலும் மூடலாம், ஊர்வாய மூட முடியாதுன்னு!"
•Last Updated on ••Friday•, 23 •October• 2020 23:06••
•Read more...•
••Friday•, 23 •October• 2020 21:11•
??- யோகன் (கன்பரா) -??
சிறுகதை
எட்டு மணியாகி விட்டது. இன்னும் அரியம் என்று அவர் கூப்பிடும் அவர் மனைவி அரியமலர் எழுந்திருக்கவில்லை.. யன்னல் திரையை விலக்கி வெய்யில் வந்து விட்டதா என்று பார்த்துவிட்டு உள்ளே போக திரும்பியபோதுதான் சுந்தரம்பிள்ளைக்கு கார்ப்பெட்டில் விழுந்துகிடந்த போட்டொ எதேச்சையாக கண்ணில் பட்டது. கண்ணாடி குறுக்காக உடைந்துபிரேமும் படமும் மட்டும் தப்பியது..
அரியத்துக்குத் சொல்லாமல் கண்ணாடித் துண்டுகளை குப்பைத் தொட்டிக்குள்; போட்டுவிட்டு படத்தையும் பிரேமையும் அலுமாரிக்கு மேலே வைத்தார். கண்ணாடிப் படம்உடைந்தால் வீட்டுக்கு கூடாது என்பாள் அரியம். தமிழ்ப் படங்களில் வருமல்லவா? பூவை பறித்து வந்து சாமிப் படத்தில் வைக்க அது கீழே விழும்!. அல்லது எங்கிருந்தோ வீட்டுக்குள் வரும் காற்றினால் விளக்கு ஒன்று அணையும்! இதுவும் அந்தக் கேஸ்தானோ ? பிள்ளைக்கு மனம் பதறியது. கொஞ்ச நாட்களாக ஒன்று மாறி ஒன்றாக வருத்தப் படுக்கையில் கிடக்கும் அரியத்துக்குத்தான் எதேனும் நடந்துவிடுமோ.? போட்டோ உடைந்ததை அரியத்துக்குச் சொல்லக்கூடாது. சொன்னால் யோசித்து இன்னும் வருத்தம்கூடிவிடும். அவரது அறை அரியத்தின் அறையைப் பார்த்தபடி நேர் எதிரே இருந்தது. "அரியம் அரியம் " கூப்பிட்டவாறேஅரியத்தின் அறைக்குள் செல்ல யுகலிப்டஸ் மணம் பரவிய நீராவி மூக்கினுள் அடித்தது. இரவெல்லாம் இருமிக்கொண்டிருந்து காலையில்தான் அயர்ந்து தூங்குகிறாள். கையுடன் கொண்டு வந்த அவர் தயாரித்த ஓட்ஸ் கஞ்சியையும் தேநீரையும் அரியத்தின் கட்டிலுக்குப் பக்கத்திலுள்ள சிறிய ஸ்டூலில் வைத்து விட்டு அவளை எழுப்பாமல் திரும்பினார். அறை யின் மூலையில் இரு கதிரைகளும் ஸ்டூலும் மேலே கரம் போட்டில் காய்கள் சிதறிக் கிடந்தன. வரவேற்பறையில் கிடந்த கரம் போட்டை உள்ளே அரியத்தின் அறைக்குள் கொண்டு வைத்திருந்தார்.
•Last Updated on ••Friday•, 23 •October• 2020 21:48••
•Read more...•
••Tuesday•, 13 •October• 2020 09:45•
??- முருகபூபதி -??
சிறுகதை
“ வீடு திரும்பியதிலிருந்து என்ன யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்…? “ வீட்டின் விட்டத்தை பார்த்துக்கொண்டு திக்பிரமையுடன் இருந்த என்னை மனைவி பின்புறமாக வந்து தோளில் தட்டினாள்.
“ ஒன்றுமில்லை “ தொடர்ந்தும் மௌனமாக கைத்தொலைபேசியில் வாட்ஸ் அப் அலைப்பறைகளை பார்க்கின்றேன். எனது இளைய மகள் என்னை அநாவசியமாக இதற்குள் இழுத்துவிட்டாள்.
தொடர்புக்கு மாத்திரம் இதுவரை காலமும் பாவித்த கைத்தொலைபேசியில் உலகமே அடங்கிவிட்டது. தினமும் காலை எழுந்ததும், வாட்ஸ் அப்பில் வரும் வேடிக்கைகளுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி என்று ஒற்றை வரியில் பதில் கொடுக்காதுவிட்டாலும் , ஏன்..? எதற்கு..? என்று விசாரிப்பதற்கும் ஒரு பெரிய வட்டம் உருவாகிவிட்டது.
அந்த ஒற்றைவரிக்கு மேல் எதனையும் நான் எழுதுவதும் இல்லை. இன்று வெளியே நடைப்பயற்சிக்கு சென்றபோது அறிந்த தகவல் உண்மையா..? கண்ட காட்சி பொய்யா… ? அவ்வாறாயின் நேற்று நான் அந்த எலிஸபெத்துடன் பேசியது வெறும் பிரமைதானா..?
கண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் எதிரொலியாக மனப்பிராந்தியும் வருமோ. வீட்டுக்குள் அதிக நேரம் அடங்கியிருப்பதனாலும், சமூக இடைவெளி பேணவேண்டி நேர்ந்தமையாலும் குடும்பங்களுக்குள் பிரச்சினைகள் கூடியிருப்பதாகவும், சில சிக்கல்கள் விவாகரத்து வரையும் சென்றுவிட்டதாகவும், மன அழுத்தம் சமூகத்தில் கூடிவிட்டதாகவும் சொல்கிறார்களே..?
•Last Updated on ••Tuesday•, 13 •October• 2020 09:47••
•Read more...•
••Tuesday•, 06 •October• 2020 02:42•
??- கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
“நிர்மலன்….. என்ன காணும்…. வந்த நேரம் தொடக்கம் ஒரே யோசனையா இருக்கின்றீர்?” நிர்மலனின் தோளை இறுகப் பற்றி புளியமரக் கொப்பை உலுப்புவது போல உலுப்பிவிட்டுச் சிரித்தார் தவராசா.
புளியம்பழங்கள் ஒன்றும் உதிர்ந்து விழவில்லை. மாறாக வெறித்த பார்வையுடன் தவராசாவை உற்று நோக்கினான் நிர்மலன்.
“நிர்மலன்… குளிச்சுப்போட்டு சாப்பிட வாரும். வெளிக்கிட்ட நேரத்திலையிருந்து நல்ல சாப்பாடும் சாப்பிட்டிருக்கமாட்டீர்” என்றார் தவராசாவின் மனைவி ஈஸ்வரி.
நிர்மலன் இலங்கையிலிருந்து ஒன்பது மணி நேரம் வான் பறப்பை மேற்கொண்டு, தனது திருமணத்திற்காக அவுஸ்திரேலியா வந்து சேர்ந்திருக்கின்றான். இலங்கையில் நிர்மலனிற்கு அம்மாவும் அக்காவும் இருக்கின்றார்கள். அவுஸ்திரேலியாவில் உறவினர் என்று சொல்லிக் கொள்வதற்கு தவராசாவையும் ஈஸ்வரியையும் தவிர வேறு ஒருவரும் அவனுக்கு இல்லை. ஈஸ்வரி நிர்மலனின் அம்மா வழி உறவு. அவர்கள் இருவரும் தான் நிர்மலனின் திருமணத்திற்கான பெற்றோர்கள். இந்தக் கலியாணத்தை சரிவரப் பொருத்தியவர்கள்.
சாப்பாடு பரிமாறும் போது பொரித்த கோழிக்காலையும், அவித்த முட்டையையும் எடுத்து நிர்மலினின் சாப்பாட்டிற்குள் புதைத்து வைத்துவிட்டு, “உம்… இனிச் சொல்லு” என்றார் ஈஸ்வரி.
நிர்மலன் சாப்பாட்டைப் பார்த்தான். தீக்கோழி தலையை மணலிற்குள் புதைத்து உடம்பை வெளியே நீட்டுவது போல, கோழிக்காலின் ஒருபகுதி வெளியே நீண்டிருந்தது. முன்னே எதிராகவிருந்த ஆசனங்களில் ஆணும் பெண்ணுமாக, ஈஸ்வரியின் இரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள். வயதில் மிகவும் சிறியவர்களான அவர்கள் நிர்மலனின் முகத்தையும் கோழிக்காலையும் மாறிமாறிப் பார்த்தபடி இருந்தார்கள்.
•Last Updated on ••Tuesday•, 06 •October• 2020 02:44••
•Read more...•
••Tuesday•, 29 •September• 2020 10:46•
??- இரகமத்துல்ல ( மெல்பன் – ஆஸ்திரேலியா ) -??
சிறுகதை
இவ்ளோ நாள் எங்கே இருந்தீங்க ப்ரோ?"...
"டீக்கடைல பாஸ், அதே டீக்கடை பெஞ்சுலதான்..."
அது ஒரு பிரபல திரைப்படத்தின் வெற்றி விழா. பல பெரிய புள்ளிகள் இணைந்திருக்கும் வட்டம். அதில், நான்... இப்படத்தின் வசனங்கள் எழுதிய இளம் வசனகர்த்தா. வரிசையாக பல கலைஞர்கள் பரிசு பெற்ற பின், என் முறை வந்து, நானும் பரிசு பெற்று, சில வார்த்தைகள் பேசிய பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளன், அவன் வாங்கும் சம்பளத்திற்கு என்னிடம் கேட்ட கேள்விக்கு பதில்தான், நீங்கள் மேலே படித்தது.
கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு முன் சென்னை வந்தேன். சொந்த ஊரில் நண்பர் ஒருவரின் அறிமுகத்தில் தமிழ் சினிமாவின் கோட்டையாம் "கோடம்பாக்கத்தில்" ஒரு குறுக்கு சந்தில் மேன்ஷன் மாதிரியும் இல்லாமல் வீடு மாதிரியும் இல்லாமல் இருந்த ஒரு பழைய கட்டிடத்தில், புறாக்கூண்டு அறைகளில், என்னை மாதிரியே கனவுகளை சுமந்து வந்திருந்த படைப்பாளிகளில் ஒருவனாக தஞ்சம் புகுந்தேன். தூங்கும் நேரம் போக, சந்து முனையில் இருந்த காஜா பாயின் "டீக்கடை"தான் எங்களுக்கு சகலமும். டீக்கடைதான் என்றாலும் பீடி, சிகரெட்டு, கடலை மிட்டாய், வாழைப்பழம் என்று சிறிய பெட்டிக்கடைதான் அது. ஆனால் காஜா பாயின் டீதான் பிரசித்தம்.
காஜா பாய்... இன்றைய தேதிக்கு சுமார் 60, 63 வயது மதிக்கத்தக்க உருவம். ஆனால் 45 வயதுக்குரிய சுறுசுறுப்புடன் கூடிய திடகாத்திரம். தலையில் தொழுகை தொப்பியுடன், முண்டா பனியனும், கட்டம் போட்ட கைலியும்தான் அவரின் அடையாளம். மனைவி இறந்து விட்டார், ஒரு பையன், ஒரு பெண். இருவரும் நன்றாக படிப்பார்கள் என்று மட்டும் சொல்லுவார். நடக்கும் தூரத்தில் சொந்தமாக சின்னதாய் ஒரு வீடு. அவ்வளவுதான் தெரியும். பிள்ளைகள் கடைக்கு வருவது வெகு அரிது. எப்போது சாப்பிடுவார், தூங்குவார் என்றே தெரியாது. பெரும்பாலான நேரம் டீக்கடையில்தான் இருப்பார். அவ்வப்போது கூட்டம் குறைவாக இருக்கும்போது கடையை விட்டு வெளியே வந்து பத்தடி தள்ளி சென்று, பீடி பற்ற வைத்து இரண்டு அல்லது மூன்று இழுப்பு இழுத்து விட்டு, பீடியை கையால் அணைத்து, கடையில் உள்ள குப்பை தொட்டியில் கொண்டு வந்து போடுவார். செய்யும் எல்லா செயல்களிலும் அவ்வளவு சுத்தம் பார்ப்பார். பீடி இழுத்துவிட்டு வந்தால் கட்டாயம் டீக்கு போட வைத்திருக்கும் ஏலக்காய்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொள்வார்.
•Last Updated on ••Tuesday•, 29 •September• 2020 17:59••
•Read more...•
••Sunday•, 20 •September• 2020 11:08•
??- முருகபூபதி -??
சிறுகதை
“ அப்பா… உங்களது மெயிலுக்கு ஒரு தகவல் இணைத்துள்ளேன். “ என்றாள் மூத்த மகள்.
நான் வெளியே புல்வெட்டிக்கொண்டிருந்தபோது மகளின் அழைப்பு எனது பொக்கட்டில் இருந்த கைத்தொலைபேசியில் சிணுங்கியவாறு வந்தது.
புல்வெட்டும் இயந்திரத்தை நிறுத்திவிட்டு, “ என்ன தகவல்…? “ எனக்கேட்டேன்.
“ நாளைக்கு மகள் ஜானுவின் பிறந்த தினம். யாரும் வரமுடியாது. ஐந்து மைல்களுக்கு அப்பால் எவரும் நகரமுடியாது. கம்பியூட்டரின் முன்னால் அமர்ந்து ஸும் ஊடாக சந்தித்துப்பேசி பிறந்த தினத்தை கொண்டாடவிருக்கிறோம். நீங்கள் நாளை ஃபிரீயாக இருப்பீங்கதானே…? “
“ நான், பேத்தியை மிகவும் மிஸ்பண்ணுகிறேன். அவளை மட்டுமல்ல, எனது எல்லாப்பேரக்குழந்தைகளையும் மிஸ்பண்ணிக்கொண்டிருக்கிறேன். என்றைக்குத்தான் இந்தக் கொரோனா போய்த்தொலையுமோ தெரியாது. ஆறு ஏழு மாதமாகிவிட்டது குழந்தைகளைப்பார்த்து “ சொல்லும்போது எனக்கு தொண்டை அடைத்தது.
கண்கள் கலங்கின. சிரமப்பட்டு அடக்கினேன்.
“ என்னப்பா செய்யிறது. நானும் அவரும்கூட வீட்டிலிருந்துதான் ஒன்லைனில் வேலைசெய்கிறோம். ஆளுக்கொரு அறையை எடுத்துக்கொண்டு, காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிவரையும் அசையமுடியாத வேலை. பிள்ளைகள் இருவருக்கும் தெரியும்தானே…? அவர்களுக்கும் படிப்பு வீட்டிலிருந்துதான். ஒன்லைன் ஸ்டடி. அவர்களையும் கவனித்துக்கொள்ளவேண்டும். வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. “ மகள் மறுமுனையிலிருந்து அலுத்துக்கொண்டாள்.
எனது இளைய மகளுக்கும் இளைய மகனுக்கும் மற்றும் சில உறவினர்களுக்கும் தகவல் சொல்லவேண்டும், நாளை ஸ்கைப் ஸுமில் பேசுவோம் எனச்சொல்லிவிட்டு, மூத்த மகள் இணைப்பினை துண்டித்துக்கொண்டாள்.
•Last Updated on ••Sunday•, 20 •September• 2020 11:14••
•Read more...•
••Monday•, 07 •September• 2020 21:54•
??- ஶ்ரீரஞ்சனி -??
சிறுகதை
ஜன்னல் கண்ணாடிக்கூடாக வெளியே வெறிச்சுப் பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர். மேப்பிள் மரத்தில் ஒரு சில அரும்புகள் துளிர்விட்டுக்கொண்டிருந்தன. அங்கும் இங்குமா சில பறவைகள் பாடிக்கொண்டிருந்தன. ஆனால் தெரு மட்டும் வெறிச்சோடிப் போயிருந்தது. தேடிப்பிடித்தால் காணக்கூடியளவில் மிகச் சிலர் ஆளுக்கு ஆள் வெகுதொலைவில் முகமூடிகளுடன் வேகமாக நடந்துகொண்டிருந்தனர். பக்கத்திலிருந்த பூங்காவில் அணில்கள் மட்டும் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தன. குளிரோ, வெய்யிலோ எதுவானாலும் ரிம் ஹோட்டன்ஸ் கோப்பி வாங்குவதற்காகக் காத்திருக்கும் கார்களையும் மனிதர்களையும் அவன் பார்த்து நீண்ட நாட்களாகியிருந்தது.
மேசைமேல் ஏற்றப்பட்டிருந்த கதிரைகளும், கலகலத்திருக்கும் அந்தவிடத்தில் இருந்த மயான அமைதியும் அவனுக்குப் பூதாகரமாகத் தெரிந்தன. இந்த அமைதி, இந்த வேலை, கனடாவுக்கு மனைவி சாந்தியின் வரவு … என அவன் வாழ்வுடன் தொடர்பான அனைத்துமே பதிலற்ற கேள்விகளாக மெதுமெதுவாக விசுவரூபமெடுத்துக் கொண்டிருந்தன.
‘கெதியிலை புரோமோசனுக்கு அப்பிளை பண்ணோணும். அப்பத்தான் சாந்தி வரேக்கே சிலவுக்குக் கட்டுபடியாகுமெண்டு நினைச்சுக்கொண்டிருக்க, ம்ம், சத்தமில்லாமல் நான் யுத்தம்செய்வன் எண்டு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிற இந்தக் கொரோனா வந்து நிலைமையை அடியோடு மாத்திப்போட்டுது, சீ…’
அவன் மனசுக்குள் பொங்கிய விரக்தியை, தொற்று வராமல் இருக்கிறதே பெரியவிஷயமென்ற அறிவு சமாதானப்படுத்த முயன்றபோது, மாற்றக்கூடியவற்றை மாற்றக்கூடிய வல்லமையையும் மாற்றமுடியாதவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனவலிமையையும் வளர்த்துக்கொள் என எங்கோ வாசித்த ஒரு வாசகம் அவன் நினைவுக்கு வந்து அவன் இதயத்தை ஆதரவுடன் தடவிக்கொடுத்தது.
•Last Updated on ••Monday•, 07 •September• 2020 22:20••
•Read more...•
••Monday•, 07 •September• 2020 08:14•
??- குரு அரவிந்தன் -??
சிறுகதை
(செல்போன்கள் பாவனைக்கு வரமுன்பு கனடாவில் நடந்த ஒரு சம்பவம் சிறுகதையாக்கப்பட்டது)
வாசலில் அழைப்பு மணி கேட்டது. கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன். எட்டு வயது மதிக்கத்தக்க பையன் ஒருவன் வாசலில் நின்றான். முகத்தில் ஒரு துடிப்புத் தெரிந்தது.
‘நைக்கி’ ரீ சேட், நைக்கி சூ, நைக்கி காப். எல்லாமே நைக்கி மயம். தொப்பியின் முன் பக்கத்தைத் திருப்பி பின் பக்கமாகப் போட்டிருந்தான்.
‘ஜெஸ்........மே ஐ ஹெல்ப் யூ’ என்றேன்.
‘ஹாய்!...... அங்கிள், ஐ யாம் கிறிஸ்தோஃபர். வீ....ஆ.... கோயிங் டு....பி...யுவ நெய்பேர்ஸ்’.
என்று அறிமுகம் செய்து சைகையால் அடுத்த வீட்டைக் காட்டினான். வெளியே எட்டிப் பார்த்தேன். அடுத்த வீட்டிற்கு முன்னால் வண்டியில் இருந்து வீட்டுத் தளபாடங்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள்.
‘ஹாய்....ஐ...ஆம்....சிவா...கிளாட்யு மீட்யூ, யூ ஆர் வெல்க்கம்’
‘டாட்..!’ இங்கிருந்தே குரல் கொடுத்தான் கிறிஸ்தோஃபர்.
முப்பத்தைந்து வயது மதிக்கத் தக்க ஒருவர் வந்தார்.
‘மீட் மை டாட்,... டாட் ஹீ ஸ் மிஸ்டர் சிவா!’ என்றான் கிறிஸ்தோஃபர்.
‘ஹாய்’ என்று நீட்டிய கையைக் குலுக்கினேன்.
•Last Updated on ••Monday•, 07 •September• 2020 08:16••
•Read more...•
••Friday•, 04 •September• 2020 23:26•
??- முருகபூபதி??
சிறுகதை
அம்மா மீண்டும் அவளது திருமணப்பேச்சை ஆரம்பித்தமையால் அன்றைய காலைப்பொழுது அந்த வீட்டில் கோபத்துடன் விடிந்தது. இருவருக்கும் கோபம்.
அம்மா தனது கோபத்தை சமையலறையில் காண்பித்தார். அவள் குளியலறையில் காண்பித்தாள்.
சாப்பாட்டு மேசையில் மெதுவாக வைக்கவேண்டிய கண்ணாடிப்பாத்திரம் வெடிப்பு கண்டது. குளியலறை பிளாஸ்ரிக் வாளி தண்ணீரோடு சரிந்தது.
அவள் வேலைக்குப்புறப்படும் வேளையில், தனது திருமணப்பேச்சை எடுக்க வேண்டாம் என்று எத்தனை தடவை அம்மாவிடம் சொன்னாலும் அம்மாவின் பெற்றமனம் பித்துத்தான்.
அம்மா, மகள் பிரபாலினிக்கான மதிய உணவைத்தயாரித்து எவர்சில்வர் கரியரில் வைத்து மூடி, அருகே ஒரு சிறிய தண்ணீர்போத்தலும் வைத்தார்.
" இன்றைக்கு அவர்கள் வருகிறார்கள். நீ நல்லதொரு முடிவாகச்சொல்லவேண்டும். சாதகப் பொருத்தம் நன்றாக இருக்கிறது. எவ்வளவு காலத்திற்கு இப்படியே இருக்கப்போகிறாய்...? "
" ஏய்... மிஸிஸ் குசலாம்பிகை வேல்முருகு... உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா...?"
பிரபாலினிக்கு அம்மாவிடத்தில் நேசம் அதிகரித்தாலும் கோபம் அதிகரித்தாலும் இவ்வாறு ஒருமையில்தான் அழைப்பாள். அம்மா என அழைப்பது அபூர்வம்.
மகள் இயல்பு தெரிந்தமையால் எந்தச்சலனமும் இன்றி, நேசத்தையும் கோபத்தையும் பெற்றமனம் சகித்து தாங்கிக்கொள்கிறது.
பிரபாலினி காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்.
அவளுக்கு அம்மா பேசும் வரன்கள் விருப்பமில்லை.
கைநீட்டி அடிக்காத, தாழ்வுச்சிக்கல் இல்லாத கணவன் வேண்டும். தன்னோடு நட்பாக இணக்கமாக உறவாடவேண்டும். இந்த விதிமுறைகளுக்குட்படும் துணையைத்தான் அவள் தேடுகிறாள். அந்தத் தெரிவுக்குள் இதுவரையில் எவரும் வரவில்லை.
•Last Updated on ••Friday•, 04 •September• 2020 23:29••
•Read more...•
••Sunday•, 23 •August• 2020 10:18•
??- எஸ்.அகஸ்தியர் -??
சிறுகதை
திருமணமாகி ஒரு நாள் கழிந்துவிட்டது. மலர்மணிக்கு இப்பவும் அந்த அந்த நினைவு நெஞ்சை அறுத்து வருகிறது. அதை நினைக்கிறபோது அவள் தேகம் குலுங்கித் தவளைச் சதையாட்டம் நுளுந்திற்று. நெஞ்சில் மின்னல் அடிக்கிற ஒரு திடுக்காட்டம்.
அதை எப்படிப் புரட்டினாலும் மனசு அதுக்கு ஒப்புதில்லை.
முகத்தில் தடவிய பூசல் மா பூஞ்சாணம் பிடித்த விறுத்தத்தில் தெரிகிறது. கண்ணாடி எதிரே நின்று தன்னைப் பார்த்ததும் தனக்கே முகம் சுழித்துக் கொண்டாள்.
அப்படிச் சுழித்ததை நினைக்க, சடலத்தை நாணம் எகிறிக் குருகிற்று. நெஞ்சுப் பூரிப்பு உடனே அடங்கி மரித்தது. அப்பவும் சொண்டுக்குள் வந்த சிரிப்பு பூ மடல் விரிகிற மாதிரி அருக்கூட்டி வெடித்தது.
அந்தச் சொண்டுச் சிரிப்பும் நத்தைக் கணியம் ‘டக்’கென்று சுருங்கிற்று. சுருங்கின வாய்ச்சொண்டில் ஒரு ரஸ நுளம்பல் தேங்கிற்று. நுளம்பின சொண்டுகள் அப்பால் வறண்டு கொண்டன.
அழகே சாகிறதாக மறுவிநாடி அவளுக்கு ஒரு நினைவு சுமை வைத்து, அதுவும் அவள் கமண்டலத்தில் ஏறிற்று. அவள் பச்சோந்தி மனசு தாமரைத் தண்ணீராகக் குண்டுகட்டி நெஞ்சிற் துன்ன, சடலம் தும்பு சூர்த்திற்று. பூ விழுகிற மாதிரிக் கை போட்டு கன்னத்தில் தடவிக்கொண்டாள். தடவின விரல்களில் எலும்பிச்சங்கோது கணியம் நெய்யிட்ட சொக்கை பாம்பு வழுப்பாய் உணர்த்திற்று.
‘ஆஹ்’
இருதயச் சோணத்தில் ஊசி ஏறின வாதை. அவள் கண்ணைக் கிழித்து அது கண்ணீராய் ஊனித்தது.
‘மனசால தொட்டு ஒருதனை நினைச்சிட்டு, அடுத்தவனோட உறவு வைச்சுக் கொள்றது நெறி தவறின வேலை’ என்று மகேஸ்வரி ‘குத்தி’ச் சொன்னதுக்கு, ‘அப்பிடிப் பாத்தா, அடுத்தவனோட உறவு வைச்சுக் கொள்ள முன்னம் மனசால எவனையும் தனக்குள் நினையாத ஒரு பொம்புளை ஆரடி இந்த உலகத்தில் இருக்கிறாள் காட்டடி? யெண்டு கேட்டு அவள் வாயை உடனே அடைச்சிருந்தால் அப்பவே ஒரு முற்றுக் கண்டிருக்கலாம்’ என்று இப்ப தன்னுள்; எண்ணி வருந்திக்கொண்டாள். ‘இது பெண் புத்தி’ என்று புறுபுறுத்த வாய்க்குள், ‘எண்டாலும் மகேஸ்வரியை மறுக்காக் கண்டால் அதுக்குத் தக்க பதில் இக்கலாம்’ என்று திருப்திப்பட்டுக் கொண்ட மலர்மணி, அப்பால் அந்தத் தென்பும் அற்றுச் சாம்பினாள்.
•Last Updated on ••Wednesday•, 02 •December• 2020 13:27••
•Read more...•
••Saturday•, 15 •August• 2020 20:09•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
"முதலில் இந்தத் தலைமுறைகளை (முறை கிறை பார்க்கிற மரபுகளை ) ஒழிக்கணும்"சாந்தன் உள்ளுக்குள் குமுறினான்.அவன் ஏற்கனவே . இவற்றை இனம் கண்டு தான் இருந்தான். இருந்தாலும் எந்த ஒரு மாறுதலையும் அதில் ஏற்படுத்தி விட முடியவில்லை. ஆசிரியையின் பையன் என்ற பிம்பம் வேறு அவனை சுயமாக வாழ விடவில்லை என்று தோன்றுகிறது. அவன் அதை விடுதலைக்கு தாரை வார்க்கப் படட்டும் என்றே செயல்பட்டிருக்கிறான். அதில் ஏற்பட்ட சிந்தனைகள் அவனை மூடி காலம் முழுதும் கரைந்து விடும் என்று நினைத்திருந்தான். மாறி விட்டது.
சென்ற வாரம் தொலைபேசி அழைப்பில் பேசிய கணேஸ் ,"நான் ஒவ்வொரு நாளும் திருக்குறளில் ஒரு அதிகாரத்தைப் படிக்க தொடங்கி இருக்கிறேன்"என்றான். திருக்குறளில்,' அனைத்தும் இருக்கின்றன'என்பதை அவனும் கேள்விப் பட்டேயிருக்கிறான். இன்னமும் வாசிக்கிறதில் இறங்கவில்லை."நிலையாமை என்ற அதிகாரத்தை கணனி யூ டியூப்பில் திறந்து கேட்கத் தொடங்கினான். வாசிக்கப் பஞ்சிபடுறதை இப்படி கேட்கிறதும் பழக்கமாகி வருகிறது. அந்த ஒரு அதிகாரத்திலேயே வாழ்வை முழுதுமே அறிந்து விடலாம் தான். மனம் கேவிக் கொண்டேயிருக்கிறது. ஆனால்,அதில் அறத்தை அழுத்திச் சொல்லுறது…. மனத்தை ஆற்றவில்லை.
•Last Updated on ••Saturday•, 15 •August• 2020 20:13••
•Read more...•
••Monday•, 27 •July• 2020 00:50•
??- முல்லைஅமுதன் -??
சிறுகதை
அப்பாவின் முகத்தில் எப்படி முழிப்பது?
பயத்தினால் கண்கள் இருண்டது.
'இண்டைக்கும் அடிவிழப்போகுது'
மாமி முந்தி அடிவிழாமல் தடுத்தவ.அவவும் உயிரோட இல்லை.அம்மா பாவம்..அப்பாவின் கோபத்திற்கு முன்னால் அவளால் ஒன்றும் செய்யமுடியாது.
அப்பாவும் கோபம் வந்தால் சப்பாத்துக் காலால்,தன் இடுப்பு பெல்ட்டைக் கழற்றி அதுவும் இல்லாட்டி கிடைக்கிற பொருளால் ஓங்கி விளாசுவார்.கோபம் வரும்போது என்ன செய்வதென்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
முன்பொருமுறை கூட வின்ஸரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரவும்,சந்தியில் திரும்பிய பஸ்ஸுக்குள்ளிருந்த அப்பா காணவும் சரியாக இருந்தது..வீட்டுக்குப் போக 'ஒரே சமா தான்'
அடியில் முதுகு வலித்தது.அவரின் கோபம்நியாயமானதுதான் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.பாடசாலைக்குப் போய் முதலாம் பாடம் முடிய ரிஜிஸ்தரில் பெயர் வந்தேன் மிஸ் சொன்னாப்பிறகு மெதுவாய் கன்ரீனுக்குப் போறமாதிரிப் போய் முன் தயார்நிலையில் இருந்த சைக்கிளில் காலைக்காட்சிக்குப் போய்விடுவோம்.தெரிந்தால் வீட்டில் அடிவிழும்..ஹெட்மாஸ்டரிடம் வாங்கிக் கட்டவேண்டிவரும். பெற்றோரைக் கூட்டைவரச் சொல்வதில்லை.கொண்டுபோய் அங்கு சேர்த்த மாமாவும் அங்குதான் உலோகவேலை கற்பித்துகொண்டிருந்ததால் அவர் குற்றச்சாட்டைக் கையிலெடுத்தபடி வீட்டை வந்துவிடுவார்.
•Last Updated on ••Monday•, 27 •July• 2020 00:57••
•Read more...•
••Wednesday•, 08 •July• 2020 14:14•
??- முனைவர் இரா.சி.சுந்தரமயில், இணைப்பேராசிரியர், துறைத்தலைவர் (பொ.), தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, பீளமேடு, கோயம்புத்தூர் - ??
சிறுகதை
ஒரு வாரத்திற்கு முன்பு அப்பாவின் அலைபேசியிலிருந்து வந்த ஒற்றை வரி ஓராயிரம் முறை கமலக்கண்ணனின் காதுகளில் ஒலித்து மீண்டிருக்கும்.
வேக வேகமாக ஒட்டமும் நடையுமாக பதட்டத்துடன் விமான நிலையத்திற்குள் நுழைந்தான். சிறிது தாமதித்திருந்தாலும் விமானம் அவனைப் புறம் தள்ளிவிட்டுப் பறந்திருக்கும் இறந்துபோன அறிவுநம்பியின் ஆன்மா பயணிக்கும் உயரம் நோக்கி. நல்லவேளையாக வேகத்துடன் செயல்பட்டதால் விமானத்தில் இடம்பிடித்தான். எது எப்படியோ அப்பாவின் சடலத்தையாவது பார்க்க முடியுமா?. அறிவுநம்பியின் முதுகைப்போல் கேள்விக்குறிதான் மிச்சம். இருக்கையில் ஏறி அமர்ந்துகொண்டான். பெருமூச்சின் சத்தம் அருகில் இருப்பவரைத் திரும்பிப்பார்க்க வைத்தது. சீட்பெல்ட்டை அணிந்து கொண்டு கண்மூடினான். எண்ணங்கள் விழித்துக்கொண்டன.
* கால்க்கிலோ தக்காளியும் கொஞ்சம் மல்லித்தழையும் கொடு குமாரு."
"இதோ தர்றேன் சார்"
" ........................"
"கேரட்டு, கத்திரிக்கா, தேங்கா எல்லாம் இப்பத்தான் வந்து எறங்கியிருக்கு. தரட்டுங்களா சார்."
கேரட்டைக் கையில் எடுத்துப் பார்த்துக்கொண்டே "ம்ம்... சரி ரெண்டு கேரட்டும் ஒரு தேங்காயும் கொடு" என்றார் அறிவுநம்பி.
"அது என்னங்க சார் ரெண்டு கேரட்டு. ஒன்னு கால்க்கிலோ கேளுங்க இல்ல அரக்கிலோ கேளுங்க. இல்லேன்னா அப்பா, அம்மா, புள்ளன்னு தலைக்கு ஒன்னு மூனா வாங்குங்க சார். ஒன்னத்துக்கும் இல்லாம ரெண்டு கேட்கறீங்க."
வாய்ஜாலத்தை விற்று வருமானத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தான் காய்க்கடைக்காரன் குமார்.
•Last Updated on ••Wednesday•, 08 •July• 2020 14:25••
•Read more...•
••Wednesday•, 08 •July• 2020 13:56•
??- கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
நியூசிலாந்திற்குப் புதிதாக வந்த நேரம். ஓக்லாந்தில் மெடோபாங் என்னுமிடத்தில் இருந்தோம். குளிர் காலம். எங்குமே பனிப்புகாரும் மழைத்தூறலுமாக இயற்கை. வெய்யில் தெறிக்கும் போதெல்லாம் வீதியிலே பொற்காசுகள் கொட்டிக் கிடப்பது போல் மினுங்கி மினுங்கி மயக்கும். வேலை வில்லட்டியில்லாமல், சென்ரர்லிங் தந்த காசை செலவழித்துக்கொண்டு, வேலைகளுக்கு மனுப் போடுவதும், புதிதாக ‘எதைப் படிக்கலாம்’ என ஆராய்ச்சியில் ஈடுபடுவதுமாகப் பொழுதுகள் கரைந்தன.
காலை உணவருந்திவிட்டு, பிள்ளைகளை பிறாமிற்குள் தள்ளிக்கொண்டு அருகே உள்ள பூங்காவில் சந்திப்போம். குளிருக்கு உடுப்பு மாத்துவது என்பது ஒரு ஓரங்க நாடகம். பூங்காவில் குறைஞ்சது ஒவ்வொருநாளும் ஆறேழு குடும்பத்தினரைச் சந்திக்கலாம். சூரியன் மதியம் என்று சொல்லும் வரைக்கும் பலதும் பத்தும் கதைப்போம். பிள்ளைகள் ஊஞ்சல் சறுக்கீஸ் என்று விளையாடுவார்கள். மகிழ்ச்சியான பொழுதுகள்.
அங்கேதான் முதன்முதலில் முரளிதரன் குடும்பத்தினரையும் சந்தித்தோம். அவர்களின் மகனும், எங்களின் மகனும் அங்கே ஒன்றாய் விளையாடுவார்கள். ஜனனி---முரளியின் மனைவி---அப்போது கர்ப்பிணி. ஏழு மாதங்கள் எனச் சொன்ன ஞாபகம். அவர்கள் வெலிங்டன் என்னுமிடத்தில் இரண்டு வருடங்கள் இருந்துவிட்டு, முரளிதரனுக்கு அங்கு வேலை கிடைக்காததால் ஓக்லாந்திற்கு வந்திருந்தார்கள். ஜனனி ஏதோ ஒரு ஐ.ரி கொம்பனியில் பகுதி நேர வேலை செய்ததாகச் சொன்னாள். எனது மனைவிக்கு ஜனனியை மிகவும் பிடித்துப் போனது. அப்புறம் தினமும் அவர்களுடன் சந்திப்பு, போதாக்குறைக்கு தொலைபேசி உரையாடல்கள். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாக்கள், விருந்துபசாரங்கள்.
ஜனனி குழந்தை பெறுவதற்காக கிறீன்லேன் என்னுமிடத்திலுள்ள வைத்தியசாலைக்குச் சென்றிருந்தாள். அப்போது உச்சக்கட்ட குளிர்காலம் என்பதால் சிறிது நேரம் அவர்களுடன் நின்றுவிட்டுத் திரும்பிவிட்டோம். முரளி மகனையும் வைத்துக் கொண்டு வைத்தியசாலையில் தங்கிவிட்டான். முரளி தனது அம்மா வெலிங்டனில் தனது தங்கையுடன் இருப்பதாகவும், இன்னும் சில தினங்களில் ஓக்லாந்து வந்துவிடுவார் எனவும் சொன்னான்.
•Last Updated on ••Wednesday•, 08 •July• 2020 14:38••
•Read more...•
••Saturday•, 20 •June• 2020 17:04•
??- முல்லை அமுதன் -??
சிறுகதை
அவள் அப்படிக் கேட்டுவிட்டாள் என்பதற்காக மனைவியிடம் சொல்லியிருக்கக்கூடாது.அதனை எப்படி எடுத்துக்கொள்வாளோ?ஒருபெண் கேட்டதை இவளிடம் சொல்லி என்னைப் பற்றிய அபிப்பிராயத்தைப் புரட்டிவிடப்போகிறதோ தெரியவில்லை.'
மனதுள் புழுங்கினான்.
மணியமென்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சுதந்திரபுரத்தில் பலசரக்குக் கடை வைத்திருப்பவன்..அவனின் மனைவி சுகந்தியைத் திருமணம் செய்து ஐந்துவருடங்கள் ஆகிவிட்டது.எனினும் குழந்தைகளில்லை.ஆனாலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்துவந்தனர். ஊரிலும் அவர்களுக்கு நல்லபெயர்.
கடைக்கு பலரும் வந்து போவார்கள்.
சிறுசிறு பொருட்களைவாங்க வருபவர்கள்..உதவி கேட்டு வருபவர்கள்..ஒசிப்பேப்பர் வாசிக்கவருபவர்கள்...சுகத்தியுடன் அரட்டை அடைக்க வருபவர்கள்..எப்போதும் கடை கலகலப்பாகவே இருக்கும். கடையை மூடியபின்பே வீட்டிற்குப் போவதால் கடைக்குப் பின் புறமாகவே மதிய உணவை சமைத்துச் சாப்பிடுவார்கள்.
'எதற்கு வீடு..?அதை விற்றுவிட்டு கடையைக் கொஞ்சம் பெருப்பிக்கலாமே' சுப்பையா அண்ணரின் ஆலோசனையை முற்றாக இருவரும் மறுதலித்தனர்.
'இன்றைக்கு கடை நல்ல வருமானம் தருகிறது. அதற்காக வீட்டை விற்று கடையைப் பெருப்பிக்கும் எண்ணத்தால் ஒருவேளை கடை நடத்தமுடியாமல் போனால் வீடாவது மிஞ்சுமே? கடைசிக் காலத்திலாதாவது எங்களுக்கு இருக்கட்டுமே.. வீடு என்ற ஒன்று குடும்பத்திற்கு வேMகாணும்'
•Last Updated on ••Saturday•, 20 •June• 2020 17:26••
•Read more...•
••Tuesday•, 16 •June• 2020 16:35•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
யாழ்ப்பாணத்தில் கிராமங்கள் தோறும் தடித்த கண்ணாடியிலான சுவர்கள் சமூகங்கக்கிடையில் கிடக்கின்றன.விடுதலைப் போராட்டத்தின் நசிவுக்கும் அது தான் ஒருவேளை காரணமாக இருக்குமோ?ஒவ்வொருவருமே கண்ணாடிக்குள்ளால் நிகழ்கிற அவலங்கள் ,அழுகுரல்களை எல்லாம் பார்க்கிறார்கள்.அறிகிறார்கள் தான்.ஆனால் காதில் விழாத செய்திகளைப் போல பார்த்து, பார்த்து கடந்து போய் விடுகிறார்கள். அரசியலமைப்பு தான் எல்லாவித மக்களையும் இணைக்கிறதைச் செய்கிறது.தமிழர் தரப்பில் உள்ள அரசியலமைப்புகளிற்கு உரிமைகள் இல்லை,அதிகாரம் இல்லை...என வே பலவீனப்பட்டுக் கிடப்பதால்,அவை வீச்சம் கொண்டு இயங்க திணறுகின்றன. அங்கங்கே இணைப்புகள் இல்லாமல் கிடப்பவையையில் பாசி,பங்கசு, பக்றிரியாக்கள் பற்றிக் கொள்வது போல,மனிதர்களின் பல்வேறு குணங்களால் விளையும் முறுகல் இழைகள் மலிந்து தொடர்பாடலில் விலகல்களை ஏற்படுத்தி விடுகின்றன.பிறகென்ன சாதித் தன்மைகள் தொடர்ந்து வாழும். மேம்படுத்துவதற்கான,அல்லது ஐக்கியப்படுத்துவதற்கான செயற்பாடுகள் இல்லாததால்...முன்னேற்றம் காணப்படுவதில்லை."தனிமனிதன் திருந்தினால் சமூகம் திருந்தி விடும்"என்கிறீர்களா?அது ஒரு கால்வீதம் தான் !
அரசியல் கட்டமைப்புகள் தாம் முக்கால்வாசியை சீர்படுத்துபவன.இலங்கையில் தமிழர்கள் ஒன்றுபட்டால்,சிங்களம் தமிழ்ப்பகுதிகளைக் கைப்பற்ற முடியாது.எனவே தான் "இனப்பிரச்சனையா"அப்படி ஒன்றே இல்லை"கொழும்பில் ஒற்றுமையாய் வசிக்கவில்லையா,அப்படி இங்கையும் இருக்க முடியாதா?"கொழும்பில் எத்தனை தமிழர் துரத்தியடிப்புகளும், அழிப்புகளும் நிகழ்ந்திருக்கின்றன?.இந்த வினா, விடைகள்....?,கொழும்பில் என கதை அளக்கிறவர்கள் ,அப்படி ஒன்றே நிகழவில்லை என்பது போல கடந்து போய் விடுகிறார்கள் .அவர்கள் வாரிசுகள், "எம் அப்பன், அம்மே எவ்வழி, அவ்வழியே யாமே ! " என மாலைக்கண்னுடன் பயணிக்கிறார்கள்.இதில் சிங்கள அரசியல்ப் பிரிவுவை. மட்டுமே குற்றம் சாட்ட ப்படுகிறது.வெளிவட்டத்தில் இருக்கிற எல்லா சிங்கள மக்க ளையும் அல்ல.
•Last Updated on ••Tuesday•, 16 •June• 2020 16:49••
•Read more...•
••Monday•, 15 •June• 2020 01:26•
?? - செ.டானியல் ஜீவா -??
சிறுகதை
அம்மா பரலோக மாதாக் கோயிலுக்குப் பின்னேரம் ஆறுமணியளவில் போயிற்று வந்து எங்கள் வீட்டின் படிக்கட்டில் உட்கார்ந்து இருந்தாள். நான் அப்போது தான் பின்னேரக் கடனை கடற்கரையில் கழித்து விட்டு கடலிலேயே கழுவி விட்டு வீட்டிற்கு வந்து படிப்பதற்கு ஆயத்தப்படுத்தினேன். அம்மாவை உற்றுப் பார்த்தேன். கண்கள் அழுது வீங்கியிருந்தது. நேற்று முன் தினம் தான் நாங்கள் புதிதாக சிறகு வலை பின்னி இன்று மதியம்தான் பரவைக் கடலில் பாய்ந்து போட்டு வந்த அப்பா களைத்ததுப் போய் விறாந்தையில் தூங்கிக்கொண்டிருந்தார். அவருடைய மூச்சொலி காற்றில் கலந்து எங்கும் பரவியது. தூங்கிக் கொண்டிருந்தாலும் அவருடைய உடல் போர் வீரர்கள் போல் கம்பீரமாக இருந்தது.
அம்மாவின் முகம் எப்போதும் என் மனதில் ஓரத்தில் தெளிவாகத் தெரியும். கறுத்த தலைமுடியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளை முடி படர்ந்திருக்கும். இரண்டு காதின் ஓரமாகவும் சில முடிகள் கீழ் நோக்கிச் சுருண்டும் நெளிந்தும் கிடக்கும்.
மளையாளப் படமான செம்மீனில் வரும் செம்பன்குஞ்சுவின் மனைவி சக்கி போலவே தோற்றமும், உடையும் அணிந்து வீட்டில் இருப்பார். எங்க ஊரில் அப்படி யாரையும் நான் கண்டதில்லை. ஆனால் வெளியில் செல்லும் போது வழமையான சாறியும், சட்டையுடனுமே செல்வார். அம்மா என்னைப் பார்த்து அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
•Last Updated on ••Monday•, 15 •June• 2020 01:44••
•Read more...•
••Friday•, 05 •June• 2020 14:21•
??- கடல்புத்திரன்-??
சிறுகதை
யார் இவர்கள் ? , உறவுச் சங்கியில் இருப்பவர்கள் என்று தெரியும்.அவனுக்கு அடுத்த கீழ் வகுப்பில் படித்தவர்வர்கள்.ஆனந்தி ,விதுரன்.இருவருமே இரட்டையர்களாக இருப்பார்களோ ?, உருவ ஒற்றுமையில் அச்சாகவிருந்தார்கள் ,தவிர ஒரே வகுப்பிலே வேற படிக்கிறார்கள்.பள்ளிக்கூடத்திலே, சின்ன வகுப்பு மாணவர்கள் எல்லாரையுமே திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டு தானிருந்தார்கள். மாநிறத்தில் கூடிக் குறையிற ,ஓரிருவர் கறுப்பாகக் கூட திகழ்கிற நிலையிலே பால் போல வெள்ளைப் பிள்ளைகளாக அவர்கள் பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏன் பார்க்க மாட்டார்கள்? பிஸ்கட் பிரேக் நேரத்தில்,மணி அடிக்கிற வரைக்கும் எல்லாரும் ஓடியாடி விளையாடிக் கொண்டே இருப்பார்கள்.அண்ணா, அக்கா படித்த வகுப்புகளையும் அச்சயத்தில் எட்டிப் பார்த்து விட்டு வருபவன் முருகவேல் . மற்ற சிறுவர்களிற்கும் அந்த பையித்தியம் இருந்ததுவெள்ளி பார்க்கிறது, விடுப்பு கேட்கிறதெல்லாம் சின்ன வயசிலிருந்தே முளை விடுற சமாச்சாரங்கள் தான். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.அதுவும், பெண்கள் முகம் துலக்கமாகவே பளிச்செனக் காட்டிக் கொடுத்து விடும்.சந்தோசம்,அழுகை எல்லாம் அவர்களிடமிருந்து பிரவாகிப்பதால் பெரியவர், சிறியவர் எல்லோரும் அவர்களுடனே அன்புடன் பேசுறது,சொக்கிலேற்றுகள் ...கொண்டு வந்தால் முதலில் கொடுப்பதெல்லாம் நிகழ்கிறது.பெடியள் முகம் ,கடும் போக்கான சிங்களத் தலைவர்களைப் போல இல்லா விட்டாலும் அமுத்தலாத் தனம் போன்ற மாசுகள் இருக்கவேச் செய்கின்றது. முருகுவே,தங்கச்சியின் தலையில் குட்டி விட்டு,கையிலிருக்கிறதை பறித்துக் கொண்டு ஓடி இருக்கிறான்.பிறகு ,அவள் விக்கி,விக்கி அழுகிறதைப் பார்க்கப் பொறுக்க முடியாமல் கொடுத்தும் விட்டிருக்கிறான். ஆனால்,அந்த குணங்கள் இவர்கள் மத்தில் இருக்கின்றன.
வவுனியா மகாவித்தியாலக் கட்டிடங்கள் ஒவ்வொரு கோணத்தில் நீளப்பாட்டுக்கு, கிடைப்பாட்டுக்கு,என கட்டப்பட்டிருந்தன.கோணப்பாட்டிலே இல்லை. ஆனால், ஒவ்வொன்றுமே நீள,நீள கட்டிடங்கள்.அதிபரின் கட்டிடத்திலிருந்து வாறவர்கள் , ஆய்வுக்கூடக் கட்டிட மூலையால் திரும்பி கீழே இருக்கிற ஒன்றிலே இருந்து நாலு வரைக்கும் வகுப்புகள் இருக்கிற கிடையாக விருக்கிற கட்டிடத்திற்கு வருவார்கள்.
•Last Updated on ••Friday•, 19 •June• 2020 00:30••
•Read more...•
••Tuesday•, 26 •May• 2020 08:35•
??- வ.ஐ.ச. ஜெயபாலன் -??
சிறுகதை
- 'அஞ்சலி' (இலங்கை) சஞ்சிகையின் ஆகஸ்ட் 1971 இதழில் வெளியான கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் 'ஒரு வரலாறு ஆரம்பமாகின்றது' நல்லதொரு சிறுகதை. நெடுந்தீவில் வாழும் மீனவர்களைப்பற்றிய கதை. அவர்களுக்கிடையில் நிலவும் உட்பிரிவுகள், அதனாலேற்படும் வறட்டுக் கெளரவப்பிரச்சினைகள், கடலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இயற்கை ஏற்படுத்தும் இருப்பிடப் பிரச்சினைகள் , தொழிலாளர் & முதலாளி முரண்பாடுகள் , கூளக்கடாய்ப் பறவை, இராவணன் மீசை, கத்தாளைச் செடிகள் என எனப் பலவற்றை விபரிக்கும் மண் வாசனை மிகுந்த சிறுகதை. - பதிவுகள் -
பனங்கூடலுக்கு மேற்புறமாக ஒரு நாரை பறந்து வந்தது. அந்த நாரையின் இறக்கைக்கள் மெதுவாகவே அசைந்ததில், அது களைப்படைந்திருக்கிறதென்பதும் விரைவில் எங்காவது ஒரு பனை மரத்தில் இறங்கித் தரிக்கும் என்பதும் ஊகிக்கக்கூடியதாக இருந்தது.
பனங்காணி கடற்கரையில் மணல் புட்டி ஒன்றில் நின்று அந்த நாரையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அருளப்பன்.
“என்ன மச்சான் ஆகாயத்தை பார்த்துக் கொண்டு நிற்கிறாய்..."
“இல்ல, ஒரு கூளக் கிடாய் பறந்து போகுது அங்காரன்...”
“இப்பதான் இந்தியாப் பக்கம் கிடந்து பறந்திருக்கிறார்...
எங்கவண்டாலும் பனை வட்டில குந்துவார்...இல்லையே மச்சான்...”
“உம்...”
“மச்சான் வாடா...வாடி முதலாளியின்ர துவக்கை கேட்டா தருவார் வேண்டிக் கொண்டு போய் வெடி வைப்போம்...இப்ப எங்கயும் ஒரு பனை வட்டில குந்துவார்...”
“கறுமம்...நான் வரவில்லை...நீ போறதண்டா போ....” “நீ போனாப் போதும் மச்சான்...”
“இந்தச் சந்தியாபோனா எப்படியும் சுடுவான், பங்கு வேணுமண்டா வா...” “சந்தியா வானத்தை மீண்டும் ஆராய்ந்தான், நாரை மெல்லக் கீழே இறங்கி மாயனத்திற்கு அண்மையில் நின்ற ஒற்றை பனைமரமொன்றில் அமர்ந்தது"
“குந்தீற்றார்... .” கத்தியபடி வாடியை நோக்கி ஓடினான் சந்தியா. அவனது கால்களுள் பட்டு நசுங்கும் இளம் கோரைப் புற்களை பச்சா தாபத்துடன் பார்த்துப் பெரு மூச்சு விட்டான் அருளப்பு.
** ** **
கோடை காலத்தில் மணற் கிணத்தடி, மாரி காலத்தில் பனங்காணி என்று மாறி மாறி மூட்டை முடிச்சுக்களுடன் நெடுந்தீவில் கிழக்கும் மேற்குமாக இடம்பெயரும் நாடோடி வாழ்க்கைதான் மீனவர்களது வாழ்க்கை. காற்று மாறும் பருவங்களில் அவர்கள் காற்றொதுக்கான கரைகளை நாடி இடம் பெயருவார்கள்.
•Last Updated on ••Tuesday•, 26 •May• 2020 09:03••
•Read more...•
••Wednesday•, 20 •May• 2020 08:04•
??- முருகபூபதி-??
சிறுகதை
பேத்திக்கு ஆறுவயதாகிறது. பாடசாலைக்குப்போகிறாள். அங்கு ஆங்கில மொழிக்கல்வி. இதுதவிர வாராந்தம் மேலும் மூன்று இடங்களில் படிக்கவும் பயிற்சிக்கும் செல்கிறாள்.
அவை: தமிழ்ப்பள்ளி, நீச்சல் பயிற்சி, பரதநாட்டிய பயிற்சி. அனைத்துக்கும் உற்சாகமாக சென்று வருகிறாள். குடியுரிமை அவுஸ்திரேலியாவில். அதனால் ஆங்கில மொழிக்கல்வி. தாய்மொழி தமிழ்., தமிழை மறந்துவிடக்கூடாது என்பதற்காக பெற்றோரின் கட்டாயத்தில் வாராந்தம் ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் இயங்கும் தமிழ்ப்பள்ளிக்கு செல்கிறாள்.
இங்கு பிள்ளைகளுக்கு நீச்சலும் தெரிந்திருக்கவேண்டும். அவள் செல்லும் பிரதான பாடசாலையில் விளையாட்டு, தேகப்பயிற்சியுடன் நீந்தவும் கற்றுக்கொடுக்கிறார்கள். இது தவிர வீட்டிலிருந்தும் பிரதி சனிக்கிழமை தோறும் வேறு ஒரு இடத்தில் அவள் தகப்பன், அதுதான் எனது மருமகன் நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச்செல்கிறார்
எனது மகளின் அதாவது எனது பேத்தியின் தாயின் இந்திய சிநேகிதி ஒருத்தியின் மகளும் நடன பயிற்சிக்கு செல்வதைப்பார்த்து எனது பேத்தியும் அங்கு செல்ல விரும்பினாள்.
நடனத்தில் இருக்கும் ஆர்வத்தைக்காட்டிலும் தாயின் சிநேகிதியின் மகளுடன் வார விடுமுறையில் நடனம் ஆடுவதற்கு பேத்திக்கு ஆர்வம் அதிகம்.
இவ்வளவுக்கும் மத்தியில் பிரதி வெள்ளிதோறும் மகள் வீட்டுக்குச்செல்லும்போது எனது மனைவியும் உடன்வருவதால், பேத்தியுடன் கொஞ்சி சிரித்து மகிழ்ந்து அவளுடன் பொழுதை போக்குவோம்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையும் சரியாக எட்டு மணிக்கு பேத்தியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துவிடும். எனது மகள், தனது கைத்தொலைபேசியில் Appa என்ற பெயருடன் எனது கைத்தொலைபேசி இலக்கங்களை பதிவுசெய்து வைத்திருக்கிறாள்.
•Last Updated on ••Wednesday•, 20 •May• 2020 08:12••
•Read more...•
••Saturday•, 09 •May• 2020 10:24•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
வவுனியாவில், பத்து வருசங்களிற்கு மேலே , பணி புரிந்ததில் பார்வதி ஆசிரியைக்கு அலுப்பு ஏற்பட்டிருருந்தது .'ஒரு மாறுதல் தேவை’ என நினைத்தார். கல்விக்கந்தோரில் இவரின் அப்பாவிற்கு தெரிந்தவரான மகாலிங்கம் , இராசையா போன்ற அதிகாரிகள் இருந்தார்கள். மகாவித்தியாலயதிற்கு அண்மித்தே கல்விக் கந்தோரும் இருந்தது, அதிபரிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு நேரிலே சென்று விண்ணப்பத்தை கையளித்தார். யாழ்ப்பாணம் தான் விருப்பப் பிரதேசமாக இருந்தது. இங்கே வருவதற்கு முதல் அங்கே தான்...சிறு வயதில் பணியைத் தொடங்கி இருந்தவர். கல்யாணம் முடித்த பிறகு கொஞ்சம் தள்ளி இருந்தால்... என்ன, என்று வவுனியாவைத் தெரிய ...அம்மாவிற்கு என்னம் காரணங்கள் ? அவருடைய மகன் திலீபனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அன்று, தெரியிற வயசுமில்லை ,பன்னிரெண்டு, பதின்மூன்று என்ற..பிஞ்சுப்பருவம் ! ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விருட்ச விருப்பம் ? அதிபரிடம் ஏற்கனவே கதைத்திருந்தார். எப்பவுமே உடம்பை ஒரு வித ஆட்டத்துடன் கதைக்கிற சத்குருநாதன், அரசியல் மேடைகளில் பிரச்சார பீரங்கியாக ...போக வேண்டியவர், அதிபராகி அரசியலில் சம்பாதிக்க முடியாத ‘நல்லவர்’ என்ற பெயரை ஆசிரியர் ,மாணவர் மத்தியில் சம்பாதித்து விட்டிருக்கிறார். நிச்சியமாக அவர் கதைப்புத்தகம் வாசிக்கிற ஒரு இலக்கியவாதியாகவும் இருக்கவே வேண்டும் ! ஒருவேளை , மனுசர் ஆங்கிலத்தில் படிக்கிறாரோ ?. கனகாலமாக அதிபராக வீற்றிருக்கிறார் . புரிந்து கொள்ளக் கூடியவர், வயதில் பெரியவர் ."தங்கச்சி, உதவி ஏதாவது செய்ய வேண்டுமா? " எனக் கேட்டார். " இல்லை சேர், தெரிந்தவர்கள் இருவர் அங்கே இருக்கிறார்கள் " என்று பள்ளிக்கூட நேரத்தில் அனுமதிப் பெற்றுச் சென்றார் .
•Last Updated on ••Saturday•, 09 •May• 2020 10:41••
•Read more...•
••Monday•, 20 •April• 2020 08:15•
??- முனைவர்கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை ,அறிவியல்கல்லூரி,கோவை -??
சிறுகதை
கணுக்காலின் மேற் கெண்டையில் முதிர்வின் வலைப்போர்த்தியக் கால் தோலில், புடைத்திருந்த நரம்பில் குருதி பெருக, எக்கி பரண்மேல் எதையோ துழாவினாள் 'செள்ளி'. அவளின் எழுபது வயதை எப்பொழுதுமே முப்பதாக காட்சிப்படுத்தும் உடல்திறம் இன்றும் இவளுடன் நீண்டிருந்தது. வயதின் முதிர்வினை அண்டவிடாது மாயம் செய்யும் அவளை கண்டு வியக்காதவர்கள் அவ்வூரில் யாருமில்லை. இன்னும் சுருக்கமடையாத உள்ளத்தாலும், குழந்தைகளுக்கான கைதேர்ந்த நாட்டு மருத்துவத்தாலும் அவள் அவ்வூரில் விசலமடைந்து கொண்டே இருந்தாள். கைகளால் துழாவி துழாவித்தேட அவளுக்கு அது கிடைத்தப்பாடில்லை.
சலித்துக்கொண்டே அடுக்களையில் இருக்கும் முக்காலியை எடுத்துவந்து அதன்மேல் ஏறி தேடினாள். அதன்மேல் ஏறி எட்டிப்பார்த்தாள். பரணின் பாதிவரை மட்டுமே காட்சிப்பட, மேலும் தொடர்ந்த முயற்சியில் கண்விழிப்படலம் நோவுற அவளின் தேடல் தொடர்ந்தது. அவளின் செவிகளோ கடும் வயிற்றுப்போக்கால் அவதியுறும் அவளின் பதினோரு மாதப் பெயர்த்தி 'மணியின்' நலிவு ஓலத்தை கூர்மையாக கேட்டுக்கொண்டே தன் மனிதில் நோவினைச் சேர்த்துக்கொண்டிருந்தாள். 'ஈரமாசியே! ஈரமாசியே!' என்று தன் குலத்தெய்வத்தின் பெயரினை முனங்கியப்படியே அவளின் தேடல் தீவிரமாகத் தொடர்ந்தது.
•Last Updated on ••Monday•, 20 •April• 2020 08:21••
•Read more...•
••Wednesday•, 08 •April• 2020 08:43•
??- எழுதியவர்: கடல்புத்திரன் -??
சிறுகதை
பல்கணியில் நின்ற சதாசிவம்,சுருட்டின் புகையை ஆசை தீர இழுத்து அனுபவித்தார்.தொண்டை கமறியது.வட்டம்,வட்டமாக புகையை விடுறதில் எல்லாம் இறங்கவில்லை.பக்கத்து வீட்டுக்காரர் வயதான சீனர்.அவருடைய மகன் ,மகள்...என கூட்டுக் குடும்பத்துடன் இருக்கிறார். அவர் வீட்டை விட்டுப் போறது தெரிந்தது.பார்க்கிற்குத் தான் போறார் .இவர், போகிற பிரகலாதன் பார்க்கிற்கு காலையிலே மற்ற சீனர்களும் வந்து … காற்றைக் கையால் வெட்டி,வெட்டி பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பார்கள்
அவருடைய மனைவி ,எப்பவோ இறந்திருக்க வேண்டும்.வயசை சொல்ல முடியாது. எழுபத்தஞ்சு ... . இருக்கலாம். பாரியாருடன் திரிகிற இவர்களைப் பார்த்து நட்பாக சிரிக்கிறவர். இவர்களுக்கு தான் என்னவோ அவர்களுடன் .. சேர்ந்து சரியா ய் பழகத் தெரியவில்லை .
சிறைக்குள் இருக்கிறது போன்றது தானே வெளிநாட்டு. வாழ்க்கை. ஆனால் திறந்த வெளிச்…. சாலை போன்ற வசதி இருக்கிறது. எதிர்படுற போது புன்னகைக்கிறது. இவருடைய சுருட்டுப் புகை சமயத்தில் அவர்களுடைய வீட்டுப் பக்கம் போய் விடும். அதை ஒரு குற்றமாக எடுத்துக் கொள்வதில்லை. சுருட்டுக்கிழம், அனுபவிக்கிறது அற்ப சந்தோசம், அதைப் போய் குழப்புவானேன்…? என பிள்ளைகளும் விட்டு விட்டார்கள்.
பெரியவர் இவர்க்கு யாலுயாய் இருப்பது தான் முக்கியக் காரணம்.பிள்ளைகளும் விளங்கிக் கொள்ள மாட்டார்களா, என்ன !
இவரும், அன்னமும் மகளோட தான் இருக்கிறார்கள்.ஒரே பேத்தி,சித்திரா ..கொஞ்சம் வளர்ந்து விட்டாள். சிலவேளை இவர்களோட பார்க்கிற்கு வருவாள். ரேவதியும், கமலும் சரியான உழைக்கிற மெசின்கள். வேற என்ன சொல்றது?, அவர்களும் கிழவர்களாகினால் தான் பார்க்கின் அருமை தெரியும். இப்ப நண்பிகள், நண்பர் வீட்ட ..என விசிட் பண்ணுகிறார்கள் .பார்க்கிற்கெல்லாம் வருவதில்லை.
சீனரின் பிள்ளைகளும் கூடத் தான் அந்த அழகான பார்க்கிற்கு வருவதில்லை. இந்த நாட்டுக் கலாசாரப்படி நைட் கிளப்புகளிற்குப் போகிறார்களோ?
•Last Updated on ••Saturday•, 09 •May• 2020 10:41••
•Read more...•
••Friday•, 27 •March• 2020 17:12•
??- செ.டானியல் ஜீவா -??
சிறுகதை
வானம் இலவம் பஞ்சுக் கூட்டத்தால் நிறைந்து கிடந்தது. சுற்றிலும் ஆள் அரவமற்ற தனிமையின் சூழலை உணர்ந்தேன். மனம் ஒரு நிலையற்றுத் தாவித்தாவி அலைந்தது. ஏனோ என் நினைவுகள் எங்க ஊர் கடற்கரையை நோக்கி நகர்ந்தது. கொடியில் காயப்போட்ட ஆச்சியின் சேலையைப்போல் பரவைக்கடல் பரந்து விரிந்து உறக்கமற்று என்னைப்போல் கிடந்தது.
சிந்தையில் ஏதேதோ நினைவுகள் வந்து மனதை அலைக்களித்தது. கடந்துவிட்ட என் வாழ்க்கையில் வந்துபோன உறவுகளின் நினைவுகள் ஏக்கத்தைச் சுமந்தும், ஒருசில வலிகளைச் சுமந்தும் இதயத்தை வருடிச் சென்றன. அந்த நினைவுகளில் நட்புக்கு முதலிடம் இருந்தது. காதலுக்கும் அதில் இடம் இருந்தது. என் காதல் ஒருதலைக் காதலானதால் மனதுக்குள் புதைந்தே கிடந்தது. தமிழனின் வாழ்வை புரட்டிப்போட்ட ஈழப்போர், என் வாழ்க்கையின் திசையையும் மாற்றியது. நெருக்கடியான நேரத்தில் என் கூடவே இருந்த நண்பன் ‘எமில்’ என் நினைவுக் கண்ணில் வந்து வட்டமிட்டான்.
என் நண்பன் எமிலுக்கும், மேரிக்கும் இடையில் காதல் தொடங்கிய காலகட்டம். முதலில் காதலைச் சொன்னது மேரிதான். ஆனால் எமில் அதை உடனும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் மறுப்புக்குக் காரணம் இருந்தது. சின்ன வயதிலிருந்தே தன்னை எடுத்துவளர்த்த வீட்டிற்கு மருமகனாகப் போவது அவனுக்கு உறுத்தலாக இருந்தது. ஆனால், மேரி தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சியால் அவனைத் தன் வழிக்கே கொண்டு வந்துவிட்டாள். அவளுடைய விடாப்பிடியான அன்பு அவனை ஆட்கொண்டது. எமில் காதலை ஏற்றுக்கொண்டதிலிருந்தே மேரிக்கு அவன்மேலிருந்த பிரியம் முன்னைவிட பலமடங்காகியது.
மேரியின் அப்பா சூசையப்பர் நல்ல உயரமானவர். சிவலையாக இருப்பார். அவருடைய முகம் மேலிருந்து கீழாக ஒடுங்கி ஏசுவின் முகம் போல் இருக்கும் .மேரியின் அம்மாவைக் காதலித்தே திருமணம் செய்தவர். சாதுவானவர், கபடமற்றவர் என்று ஊரில் பலர் அவரைப் பற்றிப் பேசிக் கொள்வார்கள். அவர் கதைக்கும் பொழுது அவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும். மனைவி, பிள்ளைகள் மீது தீராத அன்பு கொண்டவர். யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் கடையொன்றில் வேலை செய்கிறார். அவரது மீசையைப் பார்த்து “அப்பா உங்கட மீசை பாரதியின் மீசை போல இருக்கிறது” என்று கிண்டல் செய்வாள் மேரி.
•Last Updated on ••Monday•, 15 •June• 2020 01:30••
•Read more...•
••Monday•, 23 •March• 2020 21:53•
?? - வசந்ததீபன் (போடிநாயக்கனூர், தேனி மாவட்டம்) -??
சிறுகதை
அவன் மெளனமாக அமர்ந்திருந்திருந்தான்.சுற்றிலும் நண்பர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
"அதற்கு சொந்தக்காரர் நீங்களா..? நம்ப முடியல்லையே..."
"வேறொருத்தர..சொல்றாங்களே..? அதுவும் இறந்து போன..புகழ்பெற்ற .. சினிமா மெட்டில்..அரசியல் கலந்து..தேர்தல் களங்களில்..அரசியல் மேடைகளில்.. பாடும் பாடகர் பெயரை குறிப்பிடுகிறார்களே..?"
"உண்மையா..இல்லை..புகழ்ச்சிக்காக நீங்கள் இட்டுக்கட்டியதா...?"
"இன்னைக்கி..இந்த மாதிரி ..சொல்லிக்கிட்டு..நிறையப் பேர்..கோர்ட்..வழக்குக்குன்னு...நாட்ல..நிறைய நிகழ்வுகள்..அன்றாடம் நடந்துக்கிட்டிருக்கு..."
இன்னும் சிலர் அவனை சொல் என்ற மொன்னையான கத்தியால் கீறி தங்களின் அடிமன இச்சைகளை தீர்த்துக் கொண்டிருந்தனர்.
எல்லாவற்றையும் சிறு புன்னகையில் சுவீகரித்துக் கொண்டிருந்த அவன் முப்பது வருடங்களுக்கு முன் தன் கல்லூரிக் காலத்திற்குள் பயணித்தான்.
கூழாங்காறு என்ற கூவலிங்க ஆற்றின் தென்கரையில்..புளியமரங்கள் சூழ்ந்து அந்த கல்லூரி இருந்தது. மேற்கில் மேற்குத்தொடர்ச்சி மலையும்,தெற்கில் தனித்து நின்ற குன்றின் மேல் சிவன் கோவிலும், மானாவாரி புழுதிக்காடுகளுமாக அதன் எல்லைகள் இருந்தன.
ஆறு மிகப் பெரிதானதாய் இல்லாமல் நீரோடை போல இருக்கும். அதன் இருகரைகளிலும் தென்னந்தோப்புகள்..பார்ப்பதற்கு..மிக அழகான சோலைவனம் போல் காட்சியளிக்கும்.
"நண்பா..நண்பா..என யாரோ தன்னைத் தொட்டு உலுக்கிய போது தான் அவன் இயல்பு நிலைக்குத் திரும்பினான் அவன்.
எதிரே கோபமும் சீற்றமும் நிரம்பித் ததும்பும் முகங்களோடிருக்கும் நண்பர்களைக் கண்டதும் அவனுக்குள் பதட்டம் பரவியது.
அவசரமாக பேசத் தொடங்கினான்," மன்னியுங்கள் நண்பர்களே..உங்களின் கேள்விகள் என்னை..பழைய காலத்திற்குள் இழுத்துக் கொண்டு போய் விட்டது..அதான்..நான்..என்னை மறந்த நிலைக்குள் இருந்து விட்டேன்..மற்றபடி உங்களின் கேள்விகளை அலட்சியப் படுத்திட நான் முனையவில்லை..மன்னியுங்கள்.."
•Last Updated on ••Monday•, 23 •March• 2020 21:56••
•Read more...•
••Thursday•, 05 •March• 2020 09:01•
??-கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
- குவீன்ஸ்லாந்து தமிழ்மன்றம் நடத்திய `அவுஸ்திரேலியா – பலகதைகள்’ சிறுகதைப்போட்டியில் முதல் இடம் பெற்றது (2019) -
பல்கலைக்கழகத்தின் கிழக்குப்புறப் படிக்கட்டுகளின் ஒரு அந்தத்தில், புத்தகங்களைப் பரப்பியபடி காத்திருந்தாள் கரோலின். கரோலின் அவுஸ்திரேலியா நாட்டு வெள்ளை இனத்துப் பெண். மருத்துவம் பயில்வதில் மூன்றாம் ஆண்டில் இருந்தாள்.
அடோனி அவளைக் கடந்து போகும் தருணங்களில் தன் வசம் இழந்து விடுவாள். புத்தகத்தைச் சற்றுக் கீழ் இறக்கி, மாரளவில் பிடித்துக்கொண்டு, கடைக்கண்ணால் ஒருதடவை அவனைப் பார்ப்பாள். ‘ஏதாவது கதையேன்’ என்பது போன்று அந்தப் பார்வை இருக்கும். அடோனி ஒரு அபொறியினல், திருடப்பட்ட தலைமுறையைச் சார்ந்தவன். மேற்கு அவுஸ்திரேலியாவில் இருந்து படிப்பதற்காக மெல்பேர்ண் வந்திருந்தான்.
இப்படித்தான், அன்று அடோனி அவளைக் கடந்து செல்கையில், திடீரென கரோலின் தன் இருப்பை விட்டு எழுந்து நின்று புன்னகைத்தாள். எத்தனை நாள் தான் கடைக்கண்ணால் வெட்டுவது? அடோனி பயந்தே போய்விட்டான். பளிங்குக்கண்கள், மெல்லிய கீற்றுப் போன்ற புருவங்கள், கூரிய நாசி, காற்றிலாடும் பறவையின் மெல்லிய பொன்நிற இறகுகளாகக் கூந்தல், பரிதிவட்டம் போன்றதொரு ஓலைத்தொப்பி. ஏதோ ஒரு பெயர் தெரியாத சென்றின் நறுமணம் ஒன்று அவளிடமிருந்து பிரிந்து வந்து அவனைச் சூழ்ந்து கொண்டது. இவை எல்லாமுமாகச் சேர்ந்து அவனைப் பொறி போல அப்பிக் கொண்டது. அதுவே அவர்களின் மூச்சு முட்டும் தூரத்திற்குள்ளான முதல் அறிமுகம்.
“ஹலோ” பட்டெனப் பேசும் ஆசாமி கரோலின். அப்பாவி என எழுதி ஒட்டியிருக்கும் தன் அகன்ற விழிகளால் அடோனி அவளை முழுசிப் பார்த்தான். போய்விட்டான்.
பூர்வீகக்குடிகளும், அவர்களுக்குப் பிறந்த கலப்பினத்தவரும் படிப்பதற்கு வருவதே குறைவு. அடோனி மருத்துவம் படிக்க வந்தது பலருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. அவுஸ்திரேலியாவில் பூர்வீகக்குடிகளின் உடல் ஆரோக்கியம் ஏனையவர்களைக் காட்டிலும் குறைவாக இருந்ததும், அவர்கள் இள வயதிலேயே மரணமடைந்து வருவதையும் பள்ளியில் படிக்கும்போது அடோனி அறிந்திருந்தான். அதுவே அவனை மருத்துவம் படிக்கத் தூண்டியிருக்கலாம்.
•Last Updated on ••Wednesday•, 08 •July• 2020 14:04••
•Read more...•
••Wednesday•, 26 •February• 2020 10:02•
??- முருகபூபதி -??
சிறுகதை
பேரின்பத்தார் என்ற பேரின்பநாயகத்திற்கு தற்போது அந்த பொதுத்தொண்டின் மீது வெறுப்பு வந்துவிட்டது. அவர் சில பொதுப்பணிகளில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டர். ஆனால், குறிப்பிட்ட அந்தத் தொண்டின் மீதுதான் அவருக்கு மனக்குறை வந்துவிட்டது. அக்குறை வயிற்றில் அல்சர் வருமளவுக்கு மன அழுத்தம் கொடுத்துவிட்டது.
இரவில் தூக்கமும் அல்சரினால் அடிக்கடி கலைந்துவிடும். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மும்மொழியிலும் எழுதவும் பேசவும் மொழிபெயர்க்கவும் நல்ல ஆற்றல் உள்ளவர்.
ஊரில் வசதிபடைத்தவர்கள் இறந்துவிட்டால், பத்திரிகை, வானொலிக்கு மரண அறிவித்தல் எழுதிக்கொடுப்பது முதல், அந்தியேட்டி வரும் வேளையில் கல்வெட்டு எழுதிக்கொடுப்பதும் அவரது வேதனம் ஏதும் இல்லாத தொண்டு.
எண்பதுக்குப்பின்னர் அவரது ஊரைச்சேர்ந்தவர்கள், கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து சென்று வதிவிடம் பெற்று - எவரேனும் அங்கே இறந்துவிட்டால், பேரின்பத்தாரைத்தான் தொடர்புகொள்வார்கள்.
தேமதுரத் தமிழோசை அங்கெல்லாம் பரவினாலும், இந்த கல்வெட்டு கலாசாரத்தையும் தம்மோடு எடுத்துச்சென்ற ஈழத்து தமிழர்களுக்கு எவ்வாறு கல்வெட்டு எழுதுவது என்பதை அங்கே யாரும் பயிற்றுவிக்கவில்லையோ..? என்று தனது மனைவியிடம் அடிக்கடி சொல்லி வருந்துபவர்.
கடல் கடந்து சென்ற பலரது மரணச்சடங்குகளை ஊரிலிருந்து ஸ்கைப்பிலும், தபாலில் வந்த இறுவட்டிலிருந்தும் பார்த்திருப்பவர்.
•Last Updated on ••Wednesday•, 26 •February• 2020 10:04••
•Read more...•
••Saturday•, 22 •February• 2020 11:25•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
[ இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட 'அமெரிக்கா' தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட 'பனையும் பனியும்' சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது. முதலில் தாயகம் (கனடா) பத்திரிகையில் 'ஒரு மாட்டுப்பிரச்சினை' என்னும் தலைப்புடன் வெளியாகியது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பானது (லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) இலண்டலிலிருந்து வெளியாகும் 'தமிழ் டைம்ஸ்' ஆங்கில இதழில் வெளியாகியுள்ளது. ]
ஞாயிற்றுக் கிழமையாதலால் 'றோட்டி'னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட்' 'சென்ற்கிளயர்' மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித 'டென்ஷ'னுமின்றிப் பின்னால் 'ஹோர்ன்' அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'ஹோர்ன்' அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. 'நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை' இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். 'நகரம் வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்' என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடணும் அவன் சிந்தித்துக் கொள்வான்.
'ஓல்ட்வெஸ்டன்' றோட்டைக் கடந்து 'கீல் இண்டர்செக்ஷ'னையும் கடந்து கார் விரைந்தது. இடப்புறத்தில் 'கனடாபக்கர்ஸி'ன் 'ஸ்லோட்டர்' ஹவுஸ்' பெரியதொரு இடத்தைப் பிடித்துப் ப்டர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மாடுகளைத் துண்டு போடும் பெரியதொரு கசாப்புக்கூடம்.
பொன்னையா இயற்கையிலேயே சிறிது கருணை வாய்ந்தவன். ஏனைய உயிர்களின்மேல் அன்பு வைக்க நினைப்பவன். ஊரிலை இருக்கும் மட்டும் சுத்த சைவம்தான். இங்கு வந்ததும் கொஞ்சங்கொஞ்சமாக மாறி விட்டான். 'இங்கத்தைய கிளைமட்டிற்கு இதையும் சாப்பிடாட்டி மனுஷன் செத்துத் துலைக்க வேண்டியதுதான்'. திடீரென் ஊர்ந்து கொண்டிருந்த 'டிரபிக்' தடைப்பட்டது. பொன்னையா மணியைப் பார்த்தான். நேரம் பதினொன்றையும் தாண்டி விட்டிருந்தது. பஞ்சாப்காரன் பத்து மணிக்கே வரச்சொல்லியிருந்தான். பொன்னையாவிற்குத் தெரிந்த ஓரளவு நாணயமான கராஜ் அந்தப் பஞ்சாப்காரனின் கராஜ்தான். ஸ்டியரிங்கில் மெல்லியதொரு உதறல் நேற்றிலிருந்து. அதனைக் காட்டத்தான் பொன்னையா விரைந்து கொண்டிருந்தான். 'நேரங் கெட்ட நேரத்திலை இதென்ன டிரபிக் புளக்..' இவ்விதம் எண்ணியபடி டிரபிக் தடைப்பட்டதற்குக் காரணம் என்னவாகயிருக்குமென் எதிரே நோக்கினான்.
•Last Updated on ••Thursday•, 23 •April• 2020 14:36••
•Read more...•
••Thursday•, 13 •February• 2020 12:38•
?? - குரு அரவிந்தன் -??
சிறுகதை
அவன் உள்ளே வரும்போது ஹாலில் அவள் தனியே டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள்.
யார் இந்தப் பெண்? தங்கையின் சினேகிதியாக இருக்குமோ?
அவன் அவளைக் கவனிக்காதது போலக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவளைக் கடந்து தனது அறைக்குச் சென்றான்.
தங்கைக்கு இப்படி ஒரு அழகான சினேகிதி இருப்பது கூட அவனுக்கு இதுவரை தெரியாமற் போச்சே என்று வருத்தப்பட்டான்.
அவளைப் பார்த்த உடனேயே அவன் மனத்தில் என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்வு ஏற்படுவதை உணர்ந்தான். எத்தனையோ பதுமவயதுப் பெண்களைப் பார்த்திருக்கிறான், பழகியிருக்கிறான் ஆனால் சட்டென்று இப்படி ஒரு உணர்வு அவனுக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை.
அவளைப் பார்த்ததும், இரசாயண மாற்றங்கள் சட்டென்று தனது உடம்பில் ஏற்பட்டதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைத்துப்பார்த்தான். எப்படியாவது மீண்டும் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்க்க வேண்டும் போலவும், அவளோடு ஒருமுறையாவது பேசிவிட வேண்டும் என்பது போன்று வெறித்தனமான அந்த உணர்வு அவனுக்குள் அலை மோதிக் கொண்டிருந்தது.
தனது அறைக்குள் சென்று, அறைக்குள் இருந்தபடியே அவளைப் பார்க்கக் கூடியதாக அறைக்கதவை கொஞ்சமாகத் திறந்து வைத்தான். அவள் இவன் இருந்த அறைப்பக்கம் திரும்பிய போதெல்லாம் இங்கிருந்தே அவளது முகத்தை உன்னிப்பாய்க் கவனித்தான்.
•Last Updated on ••Monday•, 24 •February• 2020 10:41••
•Read more...•
••Friday•, 07 •February• 2020 12:42•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- இச்சிறுகதை அமரர் எழுத்தாளர் குகதாசன் இதழாசிரியராகவிருந்த சமயம் வெளியான யாழ் இந்துக்கல்லூரிச் (கனடா) சங்கம் வெளியிட்ட 'கலையரசி' மலருக்காக எழுதப்பட்ட சிறுகதை. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. சிறுகதைகள்.காம் இணையத்தளத்திலும் இடம் பெற்றுள்ளது.-
யன்னலினூடு தெரிந்த அதிகாலை வானத்தைப் பார்த்தார் சுப்ரமணியம் மாஸ்ட்டர். மெல்லிய இருட்போர்வையின் அரவணைப்பில் சுகம் கண்டுகொண்டிருந்த பூமிப் பெண்ணிற்கு உறக்கத்தை விட்டெழுவதற்கு இன்னும் மனம் வராமல் அப்படியே படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருப்பது போல் பட்டது. விடிவெள்ளி பிரகாசத்துடன் விடிவை கட்டியம் கூறி வரவேற்றுக் கொண்டிருந்தது. ஊரில் இருந்த மட்டும் அவரிற்கு மிகவும் பிடித்தமானவை அதிகாலையில் எழுந்து கல்லுண்டாய் வெளியினூடாக நடந்து வருவதும், விடிவெள்ளியின் அழகில் மெய் மறப்பதும் தான்."மாஸ்ட்டர், மாஸ்ட்டர்" என்று எவ்வளவு பெரிய பெருமை அவரிற்கு."படிப்பிற்கு மாஸ்ட்டரின் பிள்ளைகளைக் கேட்டுத்தான்" என்று கதைப்பார்கள்.'வர மாட்டேன், வர மாட்டேன்' என்றிருந்தவரை மகன் தான் வற்புறுத்தி கனடா வரவழைத்திருந்தான். வந்து ஒரு வருடத்திற்குள்ளேயே அவரிற்கு வாழ்க்கை போதும் போதுமென்றாகி விட்டது. நான்கு சுவர்களிற்குள்ளேயே வாழக்கை அதிகமாகக் கழிகின்றது. இயற்கையை இரசித்து ஆனந்தமாகப் பறந்து கொண்டிருந்த பறவையைப் பிடித்துக் கூட்டினுள் அடைத்து வைத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அவர் நிலை.
ஊரில் நிலவிய அந்த சமூக வாழ்வியற் தொடர்புகள் இங்கு அற்றுத் தான் போய் விட்டன. அங்கு...பொழுது விடிவதிலும் ஒரு அழகு. பொழுது சாய்வதிலும் ஒரு அழகு.இரவெல்லாம் நட்சத்திரப் படுதாவாகக் காட்சியளிக்கும் விண்ணைப் பார்ப்பதிலுள்ள இன்பத்தைப் போன்றதொரு இன்பமுண்டோ? மின்மினிப் பூச்சிகளும் இரவுக்கால நத்துக்களின் விட்டு விட்டுக் கேட்கும் ஓசைகளும் இன்னும் காதில் கேட்கின்றன. மழை பெய்வதென்றால் சுப்ரமணிய வாத்தியாரிற்கு மிகவும் பிடித்ததொரு நிகழ்வு. 'திக்குகள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தோம்' போடுமந்த மழையிருக்கிறதே...'வெட்டியிடிக்கும் மின்னலும்' 'கொட்டியிடிக்கும் மேகமும்' 'விண்ணைக் குடையும் காற்றும்'...வானமே கரை புரண்டு பெய்யும் அந்த மழையின் அழகே தனி அழகு. இங்கு பொழுது புலர்வதும் தெரிவதில்லை. பொழுது சாய்வதும் தெரிவதில்லை. மழை பெய்வதும் இன்பத்தினைத் தருவதில்லை. மூளியாகக் காட்சியளிக்கும் நகரத்து இரவு வானம் இழந்து விட்ட இனபத்தினை நினைவு படுத்தி சோகிக்க வைக்கும். நாள் முழுக்க நாலு பேருடன் கதைத்துக் கொண்டிருந்தவரிற்கு கனடா வாழ்க்கை நான்கு சுவரிற்குள் நரகமாக விளங்கியது. எந்த நேரமும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தவரிற்கு ஓய்ந்து கிடப்பது கொடிதாகவிருந்தது. 'திக்குத் தெரியாத கட்டடக் காட்டினுள்' வந்து சிக்கி விட்டோமோவென்று பட்டது. அதே சமயம் மகனை நினைத்தாலும் கவலையாகத் தானிருந்தது.
•Last Updated on ••Friday•, 07 •February• 2020 12:49••
•Read more...•
••Thursday•, 06 •February• 2020 00:41•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நு¡லகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நூலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நூலகத்தின் சிறுவர் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நூலகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நு¡லொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காழியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்குச் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பெரியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.
" என்ன தூக்கக் கலக்கமா " என்றேன்.
" இல்லை மனிதா! சரியான களைப்பு. வேலைப் பளு" என்று கூறிச் சென்றான்.
சிறிது நேரத்தில் மீண்டுமொருமுறை அவன் வந்த பொழுது அவனுக்கும் எனக்குமிடையில் சிறிது நெருக்கம் ஏற்பட்டிருந்தது.
"என்ன அடிக்கடி இங்கு நூல்கள் திருட்டுப் போகின்றனவா?" என்றேன்.
அதற்கவன் "இந்தப் பாடசாலைக் குழந்தைகள் பொல்லாததுகள். கணினிப் புத்தகங்களிலுள்ள சிடிகளை திருடிச் சென்று விடுவார்கள். சரியான தொல்லை. ஆனால்.." என்றான்.
"என்ன ஆனால்..?" என்றேன்.
"ஆனால்.. நானும் ஒருகாலத்தில் கலிபோர்னியாவில் இதையெல்லாம் செய்து திரிந்தவன் தான்" என்றான்.
"என்ன நீ கலிபோரினியாவிலிருந்தவனா?"
" ஆமாம் மனிதனே! அது ஒரு பெரிய கதை. அது சரி நீ எந்த நாட்டவன்.?"
•Last Updated on ••Thursday•, 06 •February• 2020 00:49••
•Read more...•
••Wednesday•, 29 •January• 2020 08:50•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- தாயகம் (கனடா) சஞ்சிகையில் முதலில் வெளியான சிறுகதை. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் பிரசுரமானது. ஸ்நேகா (தமிழகம்) / மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. -
கடந்த ஒரு மணிநேரமாக இவன் நடந்துகொண்டிருக்கின்றான். யார் இவன் என்கின்றீர்களா? வேறு யாருமில்லை. இவன்தான். இவன் இவனேதான். அவன் அவனேதான் என்று சொல்வதில்லையா? அது போல்தான். இவனும்இவனேதான். இவனிற்குக் கொஞ்சநாட்களாகவே ஒரு சந்தேகம். என்னவென்று கேட்கின்றீர்களா? வேறொன்றுமில்லை. வழக்கமாக நம்நாட்டு வேதாந்திகளிற்கு வரும் சந்தேகங்களில் முக்கியமானதொன்றுதான். 'நான் யார்.நானென்றால் நான் யார்? இது தான் இவனது சந்தேகம். அதற்கு முன்னால் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அது என்ன? அதுதான் இவன் நடந்து கொண்டிருக்கின்ற பாதை, 'நான் கடந்து வந்த பாதை' என்றிருக் கின்றதே அது போல் தான் இவன் கடந்து கொண்டிருக்கின்ற இந்தப் பாதையும். இவன் சிறுவனாகயிருந்தபோது இந்தப் பாதையைப் பற்றி இவன் படித்திருக்கின்றான். இன்னமும் ஞாபகத்தில் இருக்கின்றது. இவனிற்குப்புவியியல் கற்பித்த ஆசிரியையின் ஞாபகம் கூட இருக்கின்றது. இவ்வளவுஞாபகசக்திமிக்க இவனிற்கு இவனைப் பற்றி மட்டும் அப்படியெப்படி சந்தேகம் வரலாம் என்கின்றீர்களா? பொறுங்கள்! சற்றே பொறுங்கள். அதற்கு முன் இவன் கடந்து செல்கின்ற பாதையைப் பற்றிச்சிறிது பார்ப்போம்.
•Last Updated on ••Wednesday•, 29 •January• 2020 11:07••
•Read more...•
••Monday•, 20 •January• 2020 10:14•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- முதலில் தாயகம் சஞ்சிகையில் (கனடா) வெளியான சிறுகதை. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் வெளியானது. தமிழகத்திலிருந்து ஸ்நேகா (தமிழகம்)- மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட 'அமெரிக்கா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. இது பற்றி எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்கள் தொகுப்புக்கான அணிந்துரையில் 'சுண்டெலி ஒன்றின் மூலம் உயிர்வாழ்வின் மனித அடித்தள இருத்தலியலின் தாற்பரியத்தைக் கூற முயன்றுள்ளார்.' என்று கூறியிருக்கின்றார். -
"...இந்தப் பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருமே தனது வாழ்நாளில் இயலுமானமட்டும் முயன்றுதான் பார்க்கின்றது சுண்டெலியைப் போல் ஏன் என்னைப் போல் என்றும் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். நாட்டில் பிரச்சினை மூண்டுவிட்டதென்று சொந்த மண்ணைவிட்டு வந்ததிலிருந்து இன்றுவரை எத்தனை வழிகளில் எத்தனை முயற்சிகள். ஒன்று சரி வந்தால் இன்னுமொரு முயற்சி. ஒன்று பிழைத்து விட்டாலும் இன்னுமொரு முயற்சி. எத்தனை அதிசயமான பிரமாண்டமான பிரபஞ்சம். புதிர்கள் நிறைந்த பிரபஞ்சம்..."
கரப்பான் தொல்லையைத் தாங்க முடியவில்லை. எல்லா வழிகளிலும் முயன்று பார்த்தாகி விட்டது. சீனாக்காரனின் 'சாக்' தொடக்கம் முயலாத வழிகளில்லை. வெற்றி கரப்பான் பூச்சிக்குத்தான். பேசாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு 'அப்பார்ட்மென்ற்' விட்டு 'அப்பார்ட்மென்ற்' மாறினால் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதைதான். கரப்பான் பூச்சிகளிற்குப் பதில் சுண்டெலிகளின் தொல்லை. கனடாவில் கட்டடங்கள்தான் உயர்ந்தனவே தவிர எலிகளல்ல. கொழுத்துக் கொழுத்து உருண்டு திரிந்த ஊர் எலிகளைப் பார்த்த எனக்கு இந்தச் சுண்டெலிகள் புதுமையாகத் தெரிந்தன. நாட்டுக்கு நாடு மண்ணுக்கு மண் உயிர்கள் பல்வேறு வடிவங்களில் உருமாறி வாழத்தான் செய்கின்றன.
•Last Updated on ••Monday•, 20 •January• 2020 10:24••
•Read more...•
••Thursday•, 16 •January• 2020 10:34•
??-வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- இச்சிறுகதை முதலில் உயிர்நிழல் (பிரான்ஸ்) சஞ்சிகையில் வெளியாகியது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியது. -
யன்னலினூடு உலகம் எதிரே விரிந்து கிடக்கின்றது. யன்னலினூடு விரிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் ரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப் போன்றதொரு ஆனந்தம். 'பேப்' வீதி வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பதில் ஒரு 'திரில்' இருக்கத்தான் செய்கின்றது. கரிபியன் தீவுகளைச் சேர்ந்த 'யமேய்க்க' மனிதர்கள்; கயானா இந்தியர்கள்; இவர்கள் வெள்ளயர்களால் கூலிவேலைகளிற்காக ஆரம்பத்தில் கொண்டு செல்லப் பட்டவர்களின் சந்ததியினர். 'பேப்' வீதியை அண்மித்துள்ள பகுதி கிரேக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதி. டொராண்டோ மாநகரில் இது போல் பல பகுதிகளைக் காணலாம். 'சிறு இந்தியா' , 'சிறு இத்தாலி'..இப்படி பல பகுதிகள்.
அது ஒரு மாலை நேரம். மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கியிருந்த சமயம். இலேசாக மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல் யன்னலினூடாக எதிரே விரிந்திருந்த உலகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.
'யன்னல்'. அன்னியர் வருகையால் தமிழிற்குக் கிடைத்த இன்னுமொரு சொல். 'சப்பாத்து' 'அலுகோசு' போல் போர்த்துக்கேயரின் வருகை பதித்து விட்டுச் சென்றதொரு சொல் 'யன்னல்'. 'யன்னல்' யன்னலாக நிலைத்து நின்று விட்டது. 'சாளர'த்தை விட எனக்கு 'யன்னல்' என்ற சொல்லே பிடித்து விட்டிருந்தது. 'மின்ன'லிற்கு எதுகையாக நன்கு அமைந்த சொல் யன்னல். யன்னல் என்ற பெயரிற்கு ஒரு மகிமை இருக்கத்தான் செய்கிறது. உலகப் பணக்காரனை உருவாக்கியதும் ஒரு 'யன்னல'ல்லவா! யன்னலின் மறைவில் உலகை ரசிக்கலாம் இணையத்தில். இங்கும் தான். திரும்பிப் பார்த்தாலொழிய யார்தான் கண்டு பிடிக்கக்கூடும்? தனித்தமிழ் தனித்தமிழென்று சொல்லி நின்றிருந்தால் தமிழ் நல்லதொரு சொல்லினை இழந்திருக்கும். வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு என்போம். வந்தாரை வரவேற்று உபசரிப்பது தமிழ்ப் பண்பென்று புளகாங்கிதம் அடைகின்றோம். வந்த சொல்லினை வரவேற்று உள்வாங்குவம் மொழி தமிழ் மொழி என்று இறும்பூதெய்வதிலென்ன தயக்கம்?
•Last Updated on ••Thursday•, 16 •January• 2020 11:23••
•Read more...•
••Monday•, 13 •January• 2020 10:34•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
“ பணத் தாள்கள், சில மனிதர்களை மாற்றி விடுகின்றன, என்னையல்ல”இப்படி நினைப்பவன் இராசாத்தி . அவனை,” பிறர் , பொக்கற்றிலிருந்து எடுப்பது குற்றம் போல,நிலத்திலிருந்தும் எடுக்கிறதும் குற்றம் தானே?”…என்ற சிந்தனை கலைத்துக் கொண்டே இருக்கிறது.
வீதியில் கிடக்கிற போது ,வெறுமனே கிடக்கிறதே என்று அதனை கடந்தும் போகவும் முடிகிறதா, முடியிறதில்லையே?.”. கனம் கோர்ட்டார் அவர்களே, இலங்கைப் பயங்கரவாதச் சட்டத்தில் எவை,எவையெல்லாம் குற்றங்கள்?அஸ்கிரியப் பீட தேரர்களிடம் கேட்டு, கேட்டுச் தீராத சந்தேகங்களை….எல்லாம் எங்கே தீர்த்துக் கொள்வது.? என்ற அவசரத்தில் ,கழுத்தும் வாங்கி," அட ,கழுத்திலேயும் ஒரு நோ !
இலங்கை அரச அதிபர்கள்,சொந்த மூளை கழற்றி ,இரவலைப் பொறுத்தி ...நீண்ட நாள்களாகி விட்டன.அந்த மூளையோ துருப் பிடித்து,துருப் பிடித்து,இனப்படுகொலை வரைப் படத்தை பிரதி எடுத்து, கட்டளைகளை பிறப்பிக்கத் தொடங்கி ,புத்தரிசத்தைத் தொலைத்தும் கனகாலமாகி விட்டன.
"எந்தக் காலத்திற்லும் பயங்கரவாதச் சட்டங்களையும் ,அவசரகாலச் சட்டங்களையும் ...அகற்றி விடாதீர்கள். அவை தான் ...அத்திவாரங்களே!" அசரீரிகள் அவர்களுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. காலடியில் கிடக்கும் அற்பர்களிற்கு விளங்கிறதோ, இல்லையோ," அந்தக் கொள்கைகளில் கால் வைத்தவர்களிற்கெல்லாம் அது மீற முடியாத கட்டாய விதி !". இலங்கை அதிபர்கள் ,"என்னால்,இவர்களை மீறி எதையுமே செய்ய முடியிறதில்லையே” என்று கதறுகிறார்கள்.
•Last Updated on ••Monday•, 13 •January• 2020 10:45••
•Read more...•
••Wednesday•, 08 •January• 2020 10:19•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- புகலிட வாழ்பனுபவங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட எனது சிறுகதைகள் இவை. புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த ஒருவர் அடையும் பல்வகை அனுபவங்களை விபரிப்பவை இவை. இவை பதிவுகள் இணைய இதழில் 'வ.நகிரிதரனின் புகலிடச் சிறுகதைகள்' என்னும் தலைப்பில் தொடர்ச்சியாகப் பிரசுரமாகும் - வ.ந.கி -
கி.பி.1964ஆம் ஆண்டு தை மாதம் 14ந்திகதி, தமிழ் மக்களின் முக்கிய திருநாளான தைப்பொங்கள் திருநாளன்று, அவன் இந்து சமுத்திரத்தின் முத்து , சொர்க்கம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற, ஒரு காலத்தில் போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் காலனியாக விளங்கிய, 'சிலோன் (Ceylon) என்றழைக்கப்பட்ட, தீவான இன்று ஸ்ரீலங்கா என்றழைக்கப்படுகின்ற இலங்கைத் தீவில் அவதரித்தான். அவன் அவதரித்தபொழுது அவனுக்கொன்றும் இவ்விதம் அவனது வாழ்க்கை பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் அலைக்கழியுமென்று தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்ததில்லை. ஆனால் தீவின் தொடர்ச்சியான அரசியல் நிலைகள் அவனைப் புலம்பெயர வைத்து விட்டன. இன்று அவன் வட அமெரிக்காவின் முக்கியமானதொரு நாடான கனடாவின் குடிமகன். இது அவனைப்பற்றிய சுருக்கமான வரலாறு. என்புருக்குமொரு அதிகாலைப் பொழுது. அவன் வேலை செல்வதற்காக போக்குவரத்து வாகனத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். அருகிலொரு வெள்ளையின நடுத்தர வயதினன் அவனுக்குத் துணியாக. அவர்களிருவரையும்தவிர வேறு யாருமே அச்சமயத்தில் அங்கிருக்கவில்லை. நிலவிய மெளனத்தினைக் கலைத்தவனாக அந்த வெள்ளையினத்தவன் அவர்களிருவருக்கிமிடையிலான உரையாடலினைத் தொடங்கினான்:
"இன்று வழமைக்கு மாறாகக் குளிர் மிக அதிகம்!"
இங்கு ஒருவரையொருவர் சந்திக்கும்பொழுது அதிகமாகக் காலநிலையினைப் பற்றி அல்லது 'ஹாக்கி' அல்லது 'பேஸ் பால்' விளையாட்டு பற்றியுமே அதிகமாக உரையாடிக் கொள்வார்கள். வருடம் முழுவதும் மாறி மாறிக் காலநிலையினைக் குறை கூறல் பொதுவானதொரு விடயம்.
•Last Updated on ••Wednesday•, 08 •January• 2020 10:47••
•Read more...•
••Monday•, 30 •December• 2019 14:30•
??- ஸ்ரீராம் விக்னேஷ், வீரவநல்லூர் (தமிழகத்து நெல்லை மாவட்டம்) -??
சிறுகதை
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்திலேறி அதிலே தொங்கிக்கொண்டிருந்த உடலைக் கீழே தள்ளிய கதைபோல, ராதாவுடன் மூன்று தடவைகள் பேசியும் மனதுக்கு ஒவ்வாமல், நான்காவது தடவையாக மீண்டும் என் மொபைல்போனை எடுத்தேன்.
எனது நம்பரைப் பார்த்ததும், மிகவும் கடுப்பானாள் அவள்.
“சரியாப் போச்சு…. உருப்பட்ட மாதிரித்தான்…. யேப்பா…. நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன்…. ஏதோ சின்ன வயசிலயிருந்து நாம ரண்டு பேரும் ஒண்ணாவே படிச்சோம், வளந்தோமேங்கிறதுக்காக, என் கேசைக் கொண்டுவந்து ஒங்கிட்ட குடுத்தேன்…. உன்னயவிட பெரிய லாயர்மார் இருந்துங்கூட, ஒன்னோட ஆர்கியூமெண்டில நம்பிக்கை வெச்சுத்தான் இந்தக் கேசைத் தந்தேன்…. ஆனா, நீ அப்பப்ப புத்திமாறிப் போயி, செட்டில்மெண்டாய் ஆகிடுன்னு அட்வைஸ் பண்ணிக்கிட்டு வர்ரே…. நீ வக்கீல் வேலைக்கு வர்ரதை விட்டு, பேசாம கல்யாண தரகர் வேலைக்கு போயிருக்கலாமில்ல…. சீ….”
வெறுத்துப்போய் பேசினாள் ராதா.
நான் கோபப்படவில்லை. எனக்கு அவள்மீது அனுதாபமே நிறைந்து நின்றது.
காரணம் : எனது பால்யகால பள்ளித் தோழி அவள். பள்ளிக்குச் செல்லும்போதும், திரும்பி வரும்போதும் நான் அவளுக்கு வழித்துணையாய் சென்று வருவேன். அன்று அரும்பிய பாசம்….. இன்றும் தொடர்கிறது
நான் விடவில்லை. தொடர்ந்தேன்.
“ராதா…. இனிமேலைக்கு நான் இதைப்பத்தி பேசப்போறதில்லை.. ஏன்னா, உனக்கே தெரியும்…. இன்னிக்கு உன் கேஸ் பைனல் ஆகப் போறது…. உனக்கும் பொன்னரசுவுக்கும் டைவர்ஸ் கிளியராகப் போவுது…. நான் ஒரு வக்கீலா இருந்து, இந்தக் கேசை உனக்காக ஆஜராகி நடத்தினது வாஸ்தவம்தான்…. ஆனா, உள்ளூர என் மனசாட்சியோ ஒரு குடும்பத்தைப் பிரிக்க உதவுறமாதிரி உறுத்திக்கிட்டிருக்கு…. இப்பகூட ஒண்ணும் கெட்டுப் போகல்லை…. உன்கூட சேந்து வாழுறதாயும், இனி எந்தத் தப்புமே பண்ணமாட்டேன்னும் பொன்னரசு கோர்ட்டில அழுதது எனக்கே சங்கடமாயிருந்திச்சு…. அதனாலதான் சொல்றேன்…. நீ செட்டில்மெண்ட் ஆகிப் போறதாயிருந்தா இதை ஒரு கடைசி சந்தர்ப்பமா எடுத்துக்க…. இதை நான் உன்னோட லாயராக சொல்ல வரல்லை…. உன்னோட பால்ய சிநேகிதனா சொல்றேன்…. மூணு வயசில உனக்கும் ஒரு குழந்தை இருக்கு…. ஆம்பிளை துணை இல்லாம அதை வளக்கவோ, இல்ல ஒரு பாதுகாப்பா வாழவோ முடியும்னு எப்பிடி நெனைக்கிறே….”
•Last Updated on ••Monday•, 30 •December• 2019 14:35••
•Read more...•
••Sunday•, 29 •December• 2019 02:58•
??- ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா -??
சிறுகதை
உதிர்தலும் ஓர் அழகுதான்.
அவளுக்குள் எழுந்த அந்த ரசனை, நா. முத்துகுமாரின் ‘மலர் மட்டுமா அழகு, விழும் இலை கூட ஒரு அழகு’ என்ற பாடல்வரிகளை அவளுக்கு நினைவுபடுத்தியது. இலைகளை உதிர்க்கத் தயாராகியிருந்த அந்த மரங்களின் கிளைகளின் இடுக்குகளுக்கிடையே ஊடறுத்துச் சென்ற சூரியஒளிக் கீற்றுக்கள், ஓவியன் ஒருவன் கவனமாகப் பார்த்துப்பார்த்து வர்ணமிட்டதுபோலத் தோற்றமளித்த அந்த இலைகளுக்கு மேலும் அழகுசேர்த்தன. காற்றில் சலசலத்த இலைகளில் சில காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அண்ணாந்து பார்த்த அவளின் முகத்தை மெல்லத் தொட்டுப் போயின. ஒரு கணம், அவளின் மனம் ஒரு குழந்தையைப்போல ஆர்ப்பரித்துக்கொண்டது.
மரங்களின் கீழே குவிந்திருந்த இலைகளின்மேல் மெதுவாகக் காலடிவைத்து, அவை சரசரக்க அவள் நடந்தாள். விழுந்திருக்கும் இலைகளைக் கூட்டிக்குவிப்பதும் பின் அவற்றின் மேலேறிக் குதிப்பதும், விதம் விதமான வடிவங்களில் உள்ள இலைகளைச் சேகரிப்பதுமாக அம்மாவுடன் அந்தக் காலத்தில் அவள் விளையாடிய விளையாட்டுக்கள் அவளின் நினைவுக்கு வந்தன. அப்படியே சின்னப் பிள்ளையாக, அம்மாவின் ஒரு குட்டித் தேவதையாக, உறவுகளில் எந்தச் சிக்கலுமில்லாத ஒரு சிறுமியாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாகவிருந்திருக்கும், நினைப்பில் அவள் கண்கள் கசிந்தன.
இயற்கை எப்போதுமே அழகானதுதான். பருவகாலத்து மாற்றங்களை ஆவலுடன் வரவேற்பதும், அவற்றுக்குள் அமிழ்ந்து குதூகலிப்பதும், பருவத்துக்கேற்ற வகையில் விளையாடுவதும்கூட எவ்வளவு இனிமையானவையாக இருக்கின்றன. ஆனால், அதே உதிர்தல்கள், விலகல்கள், விரிசல்கள் வாழ்க்கையில் ஏற்படும்போதுமட்டும் அவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாமல் மனசு மிகவும் வலிக்கிறது. ஒவ்வொரு புதுத்தளிரையும், ஒவ்வொரு புதுஅரும்பையும் பார்க்கும்போது உருவாகும் பரவசமும் சிலிர்ப்பும், உறவுகள் உருவாகும்போது இன்னும் அதிகமாகவே வந்து மனதை நிறைத்துவிடுகிறது, ஆனால், அதே உறவுகள் விலகும்போது மட்டும் அதே லயிப்புடன் பார்க்கமுடிவதில்லை என்ற ஒப்பீடு அவளின் கண்களை மீளவும் நனைத்தது.
மகிழ்ச்சிதரும் ஆரவாரிப்பும், இழப்புத்தரும் வேதனையுமின்றி, Giver என்ற நாவலில் வரும் மனிதர்களைப்போல உணர்ச்சி என்றே ஒன்றில்லாமல் வெறுமன கடமையை மட்டும் செய்துகொண்டு வாழமுடிந்தால், இந்த உலகத்தில் பல பிரச்சினைகள் குறைந்துவிடும் … பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளியேறியது.
“அன்பு செய்யுங்கள், அன்பே தெய்வம், அன்பு செய்வது பலவீனமல்ல, அன்பை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள் … எல்லாமே கேட்க நல்லாத்தானிருக்கு. ஆனா எதிர்பாப்பில்லாமல் அன்புவைக்கிறது எண்டது … ம், ஐயோ என்னாலை முடியாதப்பா. உதவிசெய்யிறது வேறை, அன்பு வைக்கிறதெண்டது வேறை … சரி, அன்பு எண்டது சுயநலமும் கலந்ததுதான், இருக்கட்டுமே, எனக்கெண்டு நேரமொதுக்கேலாத, என்ரை உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காத அன்பு ஒண்டும் எனக்கு வேண்டாம்,” வாய் விட்டே அவள் சொல்லிக்கொண்டாள்.
“குளிர்வர முதல் மரங்களெல்லாம் தங்கடை இலையளை உதிர்க்கிறதும் சுயநலத்திலைதானே. இலையளை வைச்சிருந்தா தாங்க பிழைக்கேலாது எண்டுதானே அதுகளை உதிர்க்குதுகள். பின்னையென்ன, சீ பாவம் அந்த இலையள் குளிரிலை கருகிப் போடுமெண்டு நினைச்சே அதுகளை உதிர்க்குதுகள் … உறவுகளும் ஒரு வகையான addictionதான் எண்டு பிரேம் அண்டைக்குச் சொல்லேக்கே அவனும் இப்பிடித்தான் நினைச்சிருப்பான். என்னோடை தொடர்புகளை அவன் குறைச்சது அவனையும் அவன் முக்கியமெண்டு நினைக்கிற உறவையும் காப்பாத்துற ஒரு முயற்சியாத்தானிருக்கும்…” அவளின் உள்மனம் அவளுடன் பேசியது.
•Last Updated on ••Sunday•, 29 •December• 2019 03:07••
•Read more...•
••Thursday•, 12 •December• 2019 09:29•
??- சுருளிதுரை, பரவை,மதுரை -??
சிறுகதை
வண்டி மேற்காமா கிளம்ப, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் எனக் கண்டக்டர் கூவிக் கொண்டு இருக்க, டிரைவர் ஆக்ஸ் லேட்டரை லேசாக அழுத்திக் கொண்டே இருக்க வண்டி புறப்படுவது போல... உறுமிக்கொண்டு இருக்கு, “ஒட்டன் சத்திரம், தாராபுரம் இருந்தா ஏறு, இடையிலே... எங்கயும் நிக்காது... பைப்பாஸ் வழியா போறது...” எனக்கத்திக்கொண்டே இருந்தார்.
“டைம்பாஸ் கதைப்புத்தகம் சார், அஞ்சு இருபது ரூபா சார், அஞ்சு இருபது ரூவா... எந்தப் புத்தகத்த வேணும்னாலும் எடுத்துக்கிடலாம்... சார் டைம்பாஸ் புத்தகம் சார்...” கூவிக்கிட்டே ஒவ்வொரு பஸ்ஸாக ஏறி இறங்கினான்...
“என்ன இவன் பழைய புத்தகத்துக்கு விலைச் சொல்லுறானே ஒன்னும் புரியலயே...” 60 வயது நிரம்பிய பெரிய மனுஷன் புலம்பிக்கிட்டே “காலம் மாறிப்போச்சு...”
“மாதுளை கிலோ எம்பது, எம்பது”
“வெள்ளரிக்கா பாக்கெட் பத்து ரூபாய்...”
“டக்! டக்! வேர்கடலை, வேர்கடலை...” எனக் கூவிக்கொண்டே தள்ளு வண்டியில் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் இயல்பான பரபரப்புடன் இருந்தது...
“சார் திருப்பூர், திருப்பூர் பைப்பாஸ்...”
“அக்கா மல்லிப்பூ மல்லிப்பூ. நூறு பத்துரூபா, ஒரு முழம் இருபது அக்கா. வாங்கிக்கக்கா...”
சாயங்கால மஞ்சள் வெயில் அடிக்க, மஞ்சள் நிற சேலையில் நாற்பது வயது மதிக்கதக்க நல்ல வாசனையோ இன்னும் இளமை நீங்காத முதுமை தொடாத நிலையில் பின்பக்க படியில் வேகமாக துள்ளிக் குதித்து ஏறி கடைசி சீட்டுக்கு முந்திய சீட்டில் வந்து அமர்ந்தாள், பஸ் மெல்ல ஊர்ந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது... குரு தியேட்டர் திரும்பி... வைகைப்பாலம் கடந்து பாத்திமா கல்லூரி சாலையைப் பிடித்து போய்க் கொண்டு இருந்தது...
“டிக்கெட்... டிக்கெட்... எடுங்க” எனக் கேட்டுக்கிட்டு வர.. இதுவரை புரிந்தும் புரியாமலும் இருந்த புதுப்பாடலைப் போட்டதில் டிக்கெட் கேட்டவுக ஊர் சரியா கேட்காம மாத்திக் கொடுக்க... “மலைப்பாக, பாட்டச் சத்தமா வேற வச்சு... பாட்ட கேட்க முடியல... ஏங்க சத்தத்தை கொஞ்சம் குறைக்கச் சொல்லுங்க...”
•Last Updated on ••Thursday•, 12 •December• 2019 09:35••
•Read more...•
••Friday•, 15 •November• 2019 08:52•
??- தேவகி கருணாகரன் (சிட்னி அவுஸ்திரேலியா) -??
சிறுகதை
என்னுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சேர்ந்து எனது எண்பதாவது பிறந்த நாளை அமோகமாக சிட்னியில் கொண்டாடினார்கள். என் மூத்த பேத்தி மாதுமையும் மூத்த பேரன் கபிலனும் கேக் வெட்டியபபின் என்னைப் பற்றி சிறு சொற்பொழிவு ஆற்றி என்னையும் எல்லோரையும் மகிழ்வித்தார்கள்.
பேரன் கபிலன், “அப்பம்மாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த பூமியில் எண்பது வருடங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் அப்பம்மா, இது மிக நீண்டகாலம் ஒரு சாதனை எனச் சொல்லலாம். 1938 இல் இந்த உலகைச் சுற்றி வர நாலு நாள் எடுத்தது. அந்தக் கால கட்டத்திலே ஒருவரின் வருடாந்தச் சம்பளம் $1700 ஆக இருந்தது. அவுஸ்திரேலியாவில் ஒரு கட்டிப் பாண் ஒன்பது சதம், நீங்கள் பிறந்த வருடத்திலே தான் சவுதி அரேபியாவில் எண்ணை கண்டுபிடிக்கப்பட்டது. நம்புகிறீர்களோ இல்லையோ அது சர்வாதிகாரர்களின் காலம், சகாப்தம். ஸ்டாலின், முசலோனி, ஹிட்லர் ஆகியோர் அதிகாரத்தில் இருந்த காலம். இப்படிச் சரித்திர முக்கியத்துவமான காலத்தில் பிறந்திருக்கிறீர்கள். பேரப் பிள்ளைகளான எங்களுக்கு பெருமையாகவிருக்கிறது. அதுமட்டுமா, ஹிட்டலர் யூத மக்களை கொடுமைப் படுத்தியகாலமும் அதுதான்.” எனக்கூறியதோடு தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது பள்ளி விடுதலை நாட்களில் என்னோடு கழித்த இன்பமான நினைவுகளைப் பகிர்ந்து என்னையும் எல்லோரையும் மகிழ்வித்தான்.
இந்தச் சொற்பொழிவு என்னை பின்னோக்கி சிந்திக்க வைத்தது. என் நினைவு தெரிந்த நாள் முதல் இந்த எண்பது வயது வரை கண்ட மாற்றங்களோ ஆயிரம் ஆயிரம். அந்த நினைவுகள் என் நெஞ்சினிலே திரும்பி எழ மனதிலே சொல்லமுடியாத ஏக்கமும் தாபமும் எழுந்தது.
இரண்டாவது மகா யுத்தம் தொடங்குவதற்கு மூன்று வருடங்களுக்கு முன், ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்தி எட்டில், தாய் தந்தையருக்கு எட்டாவது குழந்தையாக இந்தப் பூமியில், கொக்குவில் கிராமத்தில் இருந்த எனது பாட்டா பாட்டி வீட்டில் பிறந்தேன். எனக்கு சிந்தாமணி எனப் பெயரும் வைத்தார்கள். எனக்கு ஆறு வயதாக இருக்கும் போது, ஏன் எனக்கு இந்த பழங் காலத்துப் பெயரை சூட்டினீர்கள் என பெற்றோரிடம் கேட்டதற்கு, ஐம் பெருங் காப்பியங்களில் ஒன்றான சிந்தாமணி சினிமாப் படமாக 1937 ஆம் ஆண்டில் வெளிவந்து மக்களிடையே புகழ் பெற்றிருந்தது, அம்மாவிற்கும் அந்தப் பெயர் பிடித்திருந்ததால், அந்தப் பெயரை எனக்கு வைத்தார்களாம்.
•Last Updated on ••Friday•, 15 •November• 2019 09:14••
•Read more...•
••Monday•, 11 •November• 2019 08:19•
?? - சுப்ரபாரதிமணியன் -??
சிறுகதை
குப்பென்று வீசிய முகப்பவுடர் வாசம் தன் பக்கத்தில் அதே இருக்கையின் ஒரு பகுதியில் உட்கார்ந்திருப்பவளிடமிருந்து ஊடாடியதை உணர்ந்தான் அவன்..காலி இருக்கையில் யாரோ பெண் உட்கார்கிறார் என்பது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. யார் என்று கூர்ந்து பார்ப்பது நாகரீகமாக இருக்காது என்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பி வெளிக்காட்சியைப் பார்த்தான், குமரன் நினைவு மண்டபத்தைக் கடந்து பேருந்து அண்ணாவையும் பெரியாரையும் ஒருங்கே காட்டியபடி நகர்ந்தது. அதீத பவுடர் வாசமும் இன்னொரு உடம்பு வெகு அருகிலிருப்பதும் உடம்பைக்கிளர்ச்சி கொள்ளச்செய்தது அவனுக்கு.
பாலம் ஏறும் போது பேருந்துத் திரும்பியதில் அவளின் உடம்பு அவனுடன் நெருங்கி வந்த போது கிளர்ச்சியாக இருந்தது. அந்த முகத்தைக் கூர்ந்து கவனித்தான் . முகச்சவரம் செய்யப்பட்டு பவுடர் இடும்போது தன் முகம் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது. இன்னும் கூர்ந்து கவனிப்பதை அவளும் பார்த்தாள்.
அது திருநங்கையாக இருந்தது. அவன் உடம்பின் கிளர்ச்சி சற்றே அடங்குவதாக இருந்தது. ஆனால் அந்த உடம்பின் நெருக்கமும் உடம்பு வாசனையும் அவனுக்குப் பிடித்திருந்தது. நெருக்கமாக்கிக் கொண்டான்.
நெருப்பரிச்சல் பகுதியில் திருநங்கைகள் அதிகம் இருப்பதைக் கவனித்திருக்கிறான். பிச்சையெடுக்கிற போது அவர்களின் அதட்டல் மிகையாக இருந்திருக்கிறது, பிச்சை கிடைக்காத போது உடம்ப்பின் பாகங்களைக் காட்டியும் உடலை பகிரங்கப்படுத்தியும் செய்யும் சேஷ்டைகளோ பிரதிபலிப்புகளோ அவனை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.பிச்சை கேட்டு கொடுக்காத ஒருவனைத் தொடர் வண்டிப்பெட்டியிலிருந்து தள்ளிக் கொன்ற சம்பவம் சமீபத்தில் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
பெரிய கட்டிடங்கள் மின்விளக்குகளை பொருத்திக்கொண்டு தங்களை அழகாக்கிக் கொண்டிருந்தன. பேருந்தின் வேக இயக்கத்தில் அவள் வெகு நெருக்கமாக தன் உடம்பைப் பொருத்திக் கொள்வது தெரிந்த்து.. அவனுக்கும் இசைவாக இருப்பது போல் இருந்தான்.பயணம் ரொம்பதூரம் தொடர வேண்டும் என நினைத்தான்.
•Last Updated on ••Monday•, 11 •November• 2019 08:50••
•Read more...•
••Friday•, 08 •November• 2019 00:03•
??- ஸ்ரீராம் விக்னேஷ் (வீரவநல்லூர்., நெல்லை, தமிழகம்) -??
சிறுகதை
எனக்கு நல்லா நினைவிருக்கு….., இருவத்தஞ்சு வரியமாகுது…. தைப்பொங்கல் கழிஞ்சு மற்றநாள் மாட்டுப்பொங்கல் அண்டைக்குத்தான் எங்கடை அன்னக்குட்டியும் பிறந்தது.
“அன்னக்குட்டி…….”
ஓமோம்…. நான் அப்படித்தான் கூப்பிடுவேன்.
அன்னக்குட்டியிலையிருந்து நான் பத்து வயது மூப்பு. என்னோடை கூடப்பிறந்த பொம்பிளைபிள்ளையள் ஒருத்தரும் இல்லையே எண்டதாலையும் , அது என்ரை அம்மம்மா யாழ்ப்பாணத்திலையிருந்து ஆசையாய் வாங்கி அனுப்பிவிட்ட மாட்டின்ரை முதல் பசுக்கண்டு எண்டதாலையும், அன்னலச்சுமி எண்ட அவ பேரை வைச்சோம். என்னைப் பொறுத்தமட்டிலை, அன்னக்குட்டி எங்கடை குடும்பத்திலை ஒருத்தி. என்ரை தங்கச்சி…..!
“அன்னக்குட்டி ….. அண்ணை பள்ளிக்குடம் போட்டு வாறன்…. நீ அம்மாட்டை பால்குடிச்சிட்டு நல்லபிள்ளையா பேசாமல் இருக்கவேணும் தெரியுமோ….. துள்ளிப்பாஞ்சு விளையாடுறோமே எண்டு நினைச்சுக்கொண்டு கிணத்தடிப்பக்கம் போவுடாதை…. சரியோ…. கிணத்துக்கை ஒரு கிழவன் இருக்குது…. உன்னைப் பிடிச்சுப்போடும்….”
பள்ளிக்குடம் போகத் துவங்கிறத்துக்கு முதலெல்லாம், என்ரை அம்மாவும் இப்பிடித்தான் என்னட்டையும் அடிக்கடி சொல்லிச் சொல்லி வெருட்டிறவ…. நானும் அதுமாதிரிச் சொல்லிக்கில்லி வெருட்டி வைக்காட்டா, உது சும்மா கிடக்காது கண்டியளோ….
பள்ளிக்கூடத்தில இருக்கையுக்கையும் அன்னக்குட்டியின்ரை நினைவுதான்…..
வீட்டுக்கு வந்தாலும், நேரா கொட்டிலுக்குப் போய், பத்து நிமிசமாவது அன்னக்குட்டியோடை கதைச்சுப்போட்டுப் போனாத்தான் எனக்குப் பத்தியப்படும்….
•Last Updated on ••Friday•, 08 •November• 2019 00:06••
•Read more...•
••Tuesday•, 08 •October• 2019 23:03•
??- யோகராணி கணேசன் -??
சிறுகதை
பொறியியல் கல்லூரியில் உயிர்வேதியியல் பிரிவில் இரண்டாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்த காலமது. என்னை விட ஏழு எட்டு வயது குறைவானவர்களுடனான கல்விப்பயணம். அதிகளவிலான நோர்வேஜியர்களையும் ஒரு சில வெளி நாட்டவர்களையும் கொண்டிருந்த அந்தப் பிரிவில் இலங்கையர்கள் என்று சொல்வதற்கு என்னோடு இன்னுமொரு இளம் மாணவி மட்டுமே.
இரசாயனவியல் தொழில்நுட்பம் என்னும் பாடம் தொடர்பாக ஒர் ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்காக ஒரு மதுபானங்கள், குளிர்பானங்கள் தயாரிக்கப்படும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்றிற்கு சென்றிருந்தோம். எங்களுக்கு விரிவுரையாளராக இருந்தவர் பின்லாந்து நாட்டைச்சேர்ந்த ஒரு பெண்மணி. இரசாயனவியலில் முதுகலைமானிப்பட்டம் பெற்றவர். எல்லோரும் வரவேற்பறையில் எங்கள் வருகையை பதிவு செய்துவிட்டு காத்திருந்தோம். சரியாக குறிக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு உயர்ந்த சற்று தடித்த தோற்றமுடைய மனிதர் அங்கு வந்தார். கைகுலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நாங்கள் தொழிற்சாலையைப் பார்வையிடுவதற்காக அந்த மனிதரை பின்தொடர்ந்து சென்றோம்.
ஒவ்வொரு கட்டங் கட்டமாக பார்வையிட்டோம். மாணவரின் கேள்விகளுக்கும், விரிவுரையாளரின் வினாக்களுக்கும் மிக சாதாரணமாக விளக்கம் கொடுத்தார் அந்த மனிதர். கணினியின்( computer )துணைகொண்டு தொழிற்சாலை இயந்திரங்களை ஒவ்வொரு படிவத்திற்கும் நகர்த்துவதையும்,கண்காணிப்பதையும் ( process technical ) அவதானிப்பதே எங்களுடைய நோக்கமாக இருந்தது. இங்கு 1500 இற்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள். இடையிடையே பேசிக்கொண்டதில் அந்த மனிதர்தான் அந்த நிறுவனத்தின் நிர்வாகி என்று தெரியவந்தது.
•Last Updated on ••Tuesday•, 08 •October• 2019 23:08••
•Read more...•
••Thursday•, 26 •September• 2019 09:37•
??- நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -??
சிறுகதை
எனக்குப் பிடிக்கல்லை. உனக்கு கதை எழுத வரவில்லை. அப்படி எழுதிறதில்லை. அதெல்லாம் பழைய முறை. அதிக விளக்கம் தேவையில்லை. வர்ணிப்புக்களும் வேண்டாம். பொறு ஒரு கதை எழதி ரைப் செய்து கொண்டிருக்கிறன். விரைவில் அனுப்பி விடுவேன். அதைப்பார். அதைப்பார்த்திட்டு என்ன மாதிரி எண்டு சொல்லு. கவிதைகள் எழுதுவது நல்லாயிருக்கு ஆனால் சிறுகதை... அந்தரப்படாதை நல்லா வாசி நல்ல புத்தகங்களை வாசி. சும்மா வாசிக்கிறதில்லை. நல்லாக உள்வாங்கிää அதுக்குள்ள போய்த்திளைத்துää ரசித்து வாசிக்கவேண்டும். இவைகள் அவனின் அறிவுரை.
நல்ல காலம் இவர் ஆசிரியத்தொழில் பார்க்கவில்லை. நறுக்காக நேருக்குநேர் பிழைகளைச் சுட்டிக்காட்டுகிறார். இப்படி மாணவர்களை வழிநடத்தினால் மனமுறிந்து தொடர்ந்து கல்வி கற்பதை விட்டுவிட்டு வேறு ஏதாவது தொழில்தான் பார்த்திருப்பார்கள்.
ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான அறிவும்ää அனுபவத் திரட்டுக்களும்ää கற்பிக்கும் பாடத்தில் பூரண தீர்க்கமான சிந்தனையும் நிறைந்திருக்க வேண்டும் என்று அறிந்திருந்தாள். மாணவர்களின் மனது பாதிக்காவண்ணம் கல்வியைப்; புகட்டுவதில் கையாளும் பல்வேறு முறைகளை பரீட்சித்த காலங்கள் அவள் கண்முன் கரைபுரண்டு ஓடிவிட்டன.
நேருக்கு நேர் சுட்டிக் காட்டும்போது மனதிருத்தித் திருந்தும் பக்குவமும் பெற்றிருந்தாள்.
எவ்வளவு நல்ல குணம் அவனுக்கு. மறைவின்றிக் கூறுவது. நேருக்கு நேரே ஆளைத்தெரியாத போதே அவனின் எழுத்தில் ஒரு கவர்ச்சி. வீட்டிற்கு வந்த ஒரு கடிதம் தான். ஆனால் அவளின் பெயர் குறிப்பிட்டும் வரவில்லை. சம்பிரதாயத்திற்குச் சரி. பரவாயில்லை. அவள் அந்தக் கடிதத்தினைப் பத்திரப்படுத்தி ‘பைலில்’ இன்னும் வைத்திருக்கிறாள். கடிதத்தில் எழுதிய விடயங்கள் அல்ல அதனை எழுதிய முறை. கடிதம் எழுதுவதற்கும் கலை வேண்டும் என எண்ணிக் கொண்டாள். ஆருக்குத் தெரியும்? இலங்கையில் எங்கெங்கோ இருந்த நாங்கள் பிரான்ஸ்ää இங்கிலாந்து என்று வந்து வாழ்வோம் என்றுää அதுவும் அவனும் இங்கிலாந்துக்கு வந்து எங்கட வீட்டுக்கு வருவான் என்று.
அவனின் சிறுகதையும் வந்தது. அவள் இழைத்துää ரசித்து வாசித்து அதில் அவனைக் கண்டாள்.
அவனோடு பழகும்போது இப்படித்தான் இருப்பான் எனக் கற்பனை செய்தாளோ அப்படியேதான் இருக்கிறான். மாற்றமில்லை. சிரிää சிரி என்று தனக்குள் சிரித்துக்கொண்டாள். கதை நல்லம். அனுபவத் திரட்டுக்கள் செறிந்து இருந்தது. கடந்த காலம்ää நிகழ்காலம்ää எதிர்காலத்திற்கு அறிவுரை கூட இருந்தன. இதுதான் சமூகமாற்றத்துக்கான இலக்கியம். எந்த ஒரு இலக்கியமும் வாசகனைச் சிந்திக்கத் தூண்டியது என்றால் அந்தப் படைப்பாளிக்கு வெற்றி என்று அவளின் அப்பா அடிக்கடி கூறுவார்.
கதையை வாசித்து முடிந்ததும் அளவில்லாத சந்தோஷம் அவளுக்கு. தான் சிறுகதை எழுதியது மாதிரி. அவனோடு கனக்க கதைக்க வேண்டும்போல இருக்கு. அது எப்படி? கருத்துக்கள் கட்டாயம் பரிமாற வேண்டும். அவனோடு கதைத்தால் கனக்க விடயங்களை அறியலாம். அறிவை வளர்க்கலாம். மனிதர்கள் எல்லாம் தெரிந்திருக்கவேண்டும். ‘உம்’ என்று சும்மா இருக்கக்கூடாது. மனிதர்களின் தேடலின் வெற்றியே இன்றைய உலகின் நவீன வாழ்க்கை.
•Last Updated on ••Thursday•, 26 •September• 2019 09:40••
•Read more...•
••Thursday•, 26 •September• 2019 09:32•
??- கடல்புத்திரன் (ந.பாலமுரளி) -??
சிறுகதை
அன்றைய நாள், இப்படி அகோரமாக முடியும் என யார் தான் நினைத்திருப்பார்கள் ?
உயிரை உறைய வைக்கும் பலவித ஆடவர்களின் கூக்குரல்களைக் கேட்ட அயலவர்கள் வேலணையில் சற்று தள்ளி உள்ளே இருந்த முல்லை இயக்க காம்பிலிருந்த பெடியள்களிடம் பதற்றமாக சொல்லிய போது...சரிவர விளங்கவில்லை. "ஐய்யோ,போய்க் காப்பாற்றுங்கள் ,பிசாசுகள்,மண்டைதீவுக் கடற்கரையில் படுகொலை செய்கிறார்கள்,கெதியாய் போங்கள்"எனக் கூறிய போது அவசரமாக ஆயுதங்களுடன் தாகுதல்க் குழு வானில் விரைந்தது.பின்னால் சைக்கிளில்,மோட்டார் சைக்கிளிலும் மேலும் உதவிக்காக சில தோழர்களும் பறந்தார்கள்.
காம் பொறுப்பாளர் செல்வன் எல்லாரையும் அனுப்பி விட்டு வோக்கியில் சங்கேத முறையில் வரும் செய்திகளுக்காக காத்திருந்தான்.காம்பையும் தயார் நிலைக்குட் படுத்தி இருந்தான்.தாக்குதலுக்கு உள்ளாகலாம்,எதிர் கொள்ளலாம்,பின் வாங்க வேண்டியும் நேரலாம். எதிர்வு கூற முடியாத நிலை.
கிட்ட நெருங்கிற போது சிங்களச் சொற்கள் காற்றிலே மிதந்து வந்தன.ஆட்கள் நடமாட்டம் தூரத்தே தெரிந்தது. யோசிக்க நேரமில்லை.அந்த திசையில் கொல்லைக்குப் போன சனம் ஏதும் இருக்குமா...என எல்லாம் பார்க்க முடியவில்லை.ஆட்களைப் பார்த்து வேட்டுகளை தீர்த்தார்கள். "வந்திட்டாங்கள்"என சிங்களத்தில் கத்திக் கொண்டு இரண்டு ,மூன்று விசைப் படகளில் ஏறிப் பறந்தார்கள்.யாராவது காயப்பட்டார்களா?இல்லையா என்பது இவர்களுக்கு தெரியவில்லை.
கிட்ட நெருங்கிப் பார்த்த போது பெடியள்கள் சிலருக்கே தலை கிறுகிறுத்தன."புளுதியில் எறிவதற்கா இந்தத் தமிழனை படைத்திருக்கிறான்"பார்த்தனுக்கு மனம் வெகுவாக புளுங்கியது.பார்த்த மாத்திரத்திலே இன்னொரு 'குமுதினிக் கொலை'அவனுக்கு ஒரு நொடியில் புரிந்தது.ஒரு தொகை பேரினர்.யாராவது ஒரிருவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கலாம்.அவன் பாசம் வைத்திருக்கிற கடைசித் தம்பி குகன் வயசிலே நாலைந்து பேர்கள்,அவன் வயதில் பெரும்பாலானவர்,அப்பு வயசில் கூட ஒருவர்.
எல்லாருக்கும் தினவெடுத்த கடல் தோள்கள் ,எந்த வயசிலும் உடலில் உரமேறி போய்க் கொண்டிருக்கிற கடற் குழந்தைகள் .வெட்டு,கொத்துக்கள் ஒன்றா,இரண்டா...?சே, என்ன மாதிரி எல்லாம் கிழித்திருக்கிறார்கள்,என்ன ஜென்மங்கள் இவர்கள்??. உலகில் உள்ள எல்லா பயங்கர தொன்மங்களையும் இறக்குமதியாக்கி, அவர்களின் வழிகாட்டலில் சிங்களவன் செய்கிறானா? இல்லை,வந்தவன் செய்கிறானா? என புரியாமலே.....தமிழர்களை சர்வ அசாதாரணமாகவே சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவன் இந்த உடம்பைப் பெறுவதற்காக இவர்களில் நான் பிறந்திருக்கக் கூடாதா?என்று சிறு வயதில் எவ்வளவு ஏங்கி இருக்கிறான்.இவன் மனதில் என்றைக்கும் கடலுக்கு பெரும் இடம் உண்டு.
•Last Updated on ••Thursday•, 03 •October• 2019 23:25••
•Read more...•
••Friday•, 13 •September• 2019 06:56•
??- முல்லை அமுதன் -??
சிறுகதை
அப்பா என்றில்லை..யாவர்க்கும் பொதுவான குணம்தான்.அப்பா என்பதினால் அதிகமாய் கவனத்தில் கொள்கிறோம். அவ்வளவே. காலை, மாலை, இரவு என மாறுகின்ற பொழுதுகளுடன் நாமும் நகர்ந்துகொண்டிருக்கிறோம்.
தன்னம்பிக்கை மிக்கவர் அப்பா.வாழ்வின் சகல அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்டவர்.
ஒருநாள் மாலைநேரம் இரத்தம் சொட்டச் சொட்ட பரிதவித்துவந்தது பூனை.. விறாந்தை முழுக்க ரத்தம்.
அப்படியே அனைத்துத் தூக்கிப்பிடிக்க அம்மா துணியால் துடைத்துவிட்டு இன்னொரு துணியால் இரத்தம் வந்த பகுதியை கட்டிவிட்டால்.வலியால் பூனை துடித்தது.
அம்மா அப்பாவைத் திரும்பிப்பார்த்தாள்.
'உடைஞ்சு போச்சு எண்டு தெரியும்..அதைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போறதுக்கு பொருட்காட்சிக்கு வைக்கபோற மாதிரி...'
அப்பா எதுவும் பேசவில்லை.
அந்தக் கண்ணாடியை தனது பதினைந்தாவது வயதில் தனது முதல் உழைப்பில் வாங்கியதாக பெருமையாகச்சொல்வார்.
முகச்சவரம் செய்வதற்கு சலூனுக்குப் போனதில்லை.முகச்சவரம் செய்யும் கருவிக்குள் பிளேட்டைப்பொருத்தி முகச்சவரம் ச்ய்வார்..அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார்...
எங்களுக்கும் பழகிப்போயிற்று..அறைக்குள் கண்ணாடி இருந்தாலும் பவுடர் போடவும்,பொட்டுச் சரியோ எனப்பார்க்கவும் அம்மாவும் தங்கைகளும் முண்ணனியில் நிற்பார்கள்.நானும் தலையைச் சீவவும்,பவுடர் போடவும் தான் என்றாலும், அவ்வப்போது வளர்கிற தாடியை பார்த்து உள்ளுக்குள் குதூகலிக்கவும் அந்தக் கண்ணாடியின் உதவி தேவைப்பட்டது.
அடுக்களையிலிருந்து அம்மா தங்கைகளைக் கூப்பிட்டாலும், ம் ..ம் என்று வெகுநேரம் கண்ணாடியின் முன்னால் நிற்பதைக் காண அம்மாவிற்கு கோபமாக வரும்.விறகுக்கட்டையுடன் வர அம்மா.. என்றபடி அறைக்குள் நுழைந்துவிடுவார்கள்.
•Last Updated on ••Friday•, 13 •September• 2019 07:01••
•Read more...•
••Sunday•, 25 •August• 2019 03:37•
??- எஸ். அகஸ்தியர் -??
சிறுகதை
பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் (29.8.1926 – 08.12.1995) பிறந்தநாளை நினைவு கூரும் முகமாக அவர் எழுதிய இச்சிறுகதையை அனுப்பி வைத்தவர் எழுத்தாளர் நவயோதி யோகரட்ணம்.
... அவள் வயிற்றுப் பிள்ளைக்காரி. புருஷன் தோட்டக் கூலி. படி உயர்வு கேட்டு ‘ஸ்ரைக்’ செய்த வேளை பொலீஸ் படை நடத்திய துப்பாக்கி வேட்டையில் ஒரு காலை இழந்து போனான். கூலி கூட்டாத தோட்டச் சொந்தக்காறன் கால் இழந்தவனைக் கட்டி அழுவானா? அவன் சீட்டுக் கிழித்து விட்டான்....
கண்டி நகரத்து மெயின் வீதியை அண்டிய கட்டுக்கலைத் தோட்டத்து மலைச்சாரலின் கீழே செங்குத்தாக விழுகிறது ஒரு பள்ளத்தாக்கு. அதை மருவி ஒரு மண்டபம்.
அதுதான் விநாயகமூர்த்தி எழுந்தருளிய திருக்கோயில்.
கிழக்கு முக வாசல்; மேற்கால் இடக் கை மடப்பள்ளி. ‘பெரிய புள்ளி’களின் பாத்தியத்தையும் அதற்கு உண்டு. ‘பக்கத்தேயுள்ள இந்து சபையின் கடாட்சத்தால்தான் அது உயிர் வாழ்கிறது’ என்று வெளியூரில் பேச்சு. வருஷந்தோறும் வருகிற விழாக்களுக்கு அதுவே நெய்வேத்திய ஸ்தலம். தனவான்களுக்கு நோய் நொடி கண்டால் அங்கு விசேஷ அன்னதானங்களும் உண்டு. அரிசிப் பஞ்சமிருந்தும் இப்படி அன்னதானங்களுக்கு ஈடுகொடுக்கிற சூத்திரம் விநாயக மூர்த்திக்கே வெளிச்சம். ஆனால், அவரோ வாய் விடாச்சாதி. கேட்பானேன்? பிச்சைப் பட்டாளங்களுக்குக் காலகதியில் அதுவோர் அன்ன சத்திரமாகவே விளங்கியது.
தூர ஒரு மேட்டுத் திடல். அந்த மேட்டுத் திடலில் ஏலவே இடம் பிடித்துக் ‘குடித்தனம்’ நடத்துகிற தோட்டிகளுடன், அன்று வெள்ளியும் வெறு வயிறுமாக வந்து சேர்ந்தாள் மூக்காயி.
அவன் வயிற்றுப் பிள்ளைக்காரி. புருஷன் தோட்டக் கூலி. புடி உயர்வு கேட்டு ‘ஸ்ரைக்’ செய்த வேளை பொலிஸ் படை நடத்திய துப்பாக்கி வேட்டையில் ஒரு காலை இழந்து போனான். கூலி கூட்டாத தோட்டத்துச் சொந்தக்காறன் கால் இழந்தவனைக் கட்டி அழுவானா? அவன் சீட்டுக் கிழித்து விட்டான். சங்கம் அவனுக்காகப் போராடியது. என்றாலும், சங்கத்துக்கும் தெரியாமல் எங்காவது கோயில் குளத்தை அண்டி வயிறு வளர்க்கலாம் என்ற தீர்மானத்துடன் குழந்தை குட்டிகளோடு நகரத்தைத் தேடி வந்தாயிற்று. கடைசியாக இந்த விநாயமூர்த்தி மேட்டுத்திடல்தான் கைகொடுத்தது.
இந்த புதுக் குடித்தனத்தைக் கண்ட சிறுவர்கள் ‘கிலு முலு’த்துக்கொண்டு சூழ்ந்து கொண்டார்கள். தங்கள் நிர்வாண கோலத்தைப் பற்றிய கூச்சம் அவர்களுக்குத் தட்டியபோதும், அந்தப் புதுத் தம்பதியை விடுப்புப் பார்க்கவே ஆசை, சிறுவர்களின் தாய்மார்கள் தங்கள் பணிவிடைகளை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு வந்த தம்பதியோடு அளாவத் தொடங்கினார்கள்.
‘எங்கிட்டால வர்றீங்க?’ என்று கேட்டாள் ஆத்தா.
‘மடக்கும்பரத் தோட்டத்திலேந்து வரோம்’ என்றாள் மூக்காயி.
‘அம்மாடி. பெறுமாத வயித்துக்காரியாச்சே. அந்தால அக்கம் பக்கமா எடங் கெடைக்கலியா?’
‘ஒழைக்கிறவங்களே லயங்கள்லே அடைஞ்சிட்டிருக்கப்போ, ஒழைச்சுக்க வக்கில்லாத நம்பளுக்கு எடங்கெடைக்குங்களா?’
•Last Updated on ••Sunday•, 25 •August• 2019 03:47••
•Read more...•
••Thursday•, 15 •August• 2019 06:49•
??- முல்லைஅமுதன் -??
சிறுகதை
இந்த வாடகை அறைக்கு வந்து இன்றுடன் ஒரு வருடமாகிவிட்டது.
'அப்பாடா'
பல நாட்கள் பலரிடமும் சொல்லிவைத்து கிடைத்த அறைக்கு வந்து சிலநாட்களிலேயே பிடித்துப்போய்விட்டது என்பதை விட பழகிக்கொள்ள மனிதர்கள் கிடைத்ததும் மகிழ்வைத் தந்ததென்றுதான் சொல்லவேண்டும். சாப்பாட்டுடன் அறைக்குமாக கிழமை வாடகையாகத் தரவேண்டும் என்பதே பேச்சு. எனினும் அவ்வப்போது கிழமை தவறியும் விடுகிறது.ஊருக்குப் பணம் அனுப்பவேண்டும்...அம்மாவின் அறுவைச் சிகிச்சைக்கு, அப்பாவின் ஆஸ்துமாவிற்கு மருந்தெடுக்க... கல்லூரிக்குப் போகமிதிவண்டி வாங்க பிரியப்பட்ட தங்கைக்கு...இன்னும் இன்னும் தேவைகள் அதிகமாகவே மனதை அரிக்கும்..இரவு வேலை..பகலில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் பகுதிநேரவேலை என தும்படிக்கவேண்டியிருந்தது...சம்மலமும் வரத் தாமதமாகும்.சண்டைபோடவும் முடியாத இக்கட்டு..இவற்றையெல்லம் அறிந்து எனக்கென விட்டுக்கொடுத்து சமாளித்தபடி ...வாடகை கேட்டு நெருக்கடி தராமல் இருக்கும்படியான வீட்டுக்காரர்...மணியண்ணை..கம்பீரம் என்று சொல்லமுடியாவிட்டாலும் மனிதன் என்கிற உயிர்க்கூட்டைச் சுமந்தவாறு தானுண்டு தன்வேலையுண்டு என்றிருப்பவர்.அவரின் மனைவியோ எப்போதும் அலைபேசியை நோண்டியபடியே இருப்பவள்.சமைத்தபடியே காதுக்குள் அலைபேசியை செலுத்தி...தலையை ஒருக்கழித்தபடி பேசிக்கொண்டுப்பார்..கை அலுவலில் இருக்கும்...உடுப்புத் தோய்க்கும்போதும் யாருடனாவது பேசிக்கொண்டிருப்பார்...கலகலப்பானவர்.
'தம்பி சாப்பிட்டியே..கறி பிடிச்சுதோ?..'
'ஓமோம்' தலையசைப்பேன்..
மணியண்ணை கொடுப்புக்குள் சிரித்தபடி நகர்வார்.
மனைவியின் சாப்பாட்டின் ருசி அவருக்குத்தான் தெரியும்.
குறை சொல்லும்படியாக இல்லை..
நன்றாகத் தான் அவர் சமைப்பார்.
'அக்கா'
'கடைப்பக்கம் போறன்..என்ன வேணும்?..'
சிலவற்றைச் சொல்லுவார்..சில சமயங்களில் வேண்டாம் என்பார்..
•Last Updated on ••Friday•, 08 •November• 2019 00:05••
•Read more...•
••Sunday•, 11 •August• 2019 19:24•
??-ஸ்ரீராம் விக்னேஷ் - (எ) - இரத்தினசிங்கம் விக்னேஸ்வரன் – (தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், வீரவ நல்லூர் ) -??
சிறுகதை
- "கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ,சர்வதேச அளவிலான சிறுகதைப் போட்டி - 2019 ல் இந்தச் சிறுகதை, மூன்றாவது பரிசு பெற்று, உலக அரங்கில் எழுத்தாளன் என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இதற்காக மாண்புடை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்துக்கு என் மனம் நிறை நன்றி! நன்றி!" - ஸ்ரீராம் விக்னேஷ்
பத்திரிகைத்துறையில் எனது பதினெட்டு ஆண்டுகால அனுபவத்தில், ஓய்வுபெற்ற தமிழாசிரியர் திரு.கங்காதரன் போன்ற ஒரு விமர்சகரைப் பார்த்ததேயில்லை. சொல்லப்போனால், எனது பள்ளிக் காலத்திலிருந்து, பல்கலைக்கழக நாட்களிலும், பின் பத்திரிகை நிருபராகப் பணிபுரிந்த வேளையிலும், தொடர்ந்து அவரது விமர்சனங்களை அவ்வப்போ, பல பத்திரிகைகளில் படித்திருக்கின்றேன். ஆனால், தற்போது.... மூன்று ஆண்டுகளாகப், பொறுப்பாசிரியராய் நான் சென்னையிலே பணியாற்றும் “சிறகுப்பேனா” வாரப்பத்திரிகைக்கு அவரிடமிருந்து விமர்சனங்கள் அடிக்கடி வந்துகொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில்தான், அவரைப்பற்றிய விபரங்களை என்னால் அறியமுடிந்தது.
கங்காதரனுக்கு வயது எழுபது. மனைவியை இழந்தவர். திருநெல்வேலி மாவட்டம் – வீரவ நல்லூரில் ; மகன், மருமகள், பேத்தி என்ற உறவுகளுடன் வாழும் அவர், தனது மாதாந்த ஓய்வூதியப் பணத்திலே பாதிக்குமேல், தன்னுடைய இலக்கியப் பசிக்குத் தீனிபோடுவதில் செலவு செய்கின்றார். உள்ளூர் நூலகத்துப் புரவலர்களில் ஒருவராக இருக்கின்றார். அஞ்சல் அட்டை, அஞ்சல் உறை, மற்றும் தபால் தலை, ஆகியன வாங்கி வைத்துவிட்டு, பத்திரிகைகளுக்கும், அதிலே எழுதும் படைப்பாளிகளுக்கும் என, மாறிமாறித் தனது மனப்பூர்வமான பாராட்டுக்கள், கண்டனங்கள், சுயகருத்துக்கள் ஆகியவற்றை எழுதி அனுப்புகிறார். தமிழ் சம்பந்தமான மாநாடுகள், விழாக்கள் எங்காயினும் அங்கிருப்பார். நாலாவது தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்தபோது, அங்குசென்றவர் சிங்களப் போலீசின் தாக்குதலுக்குள்ளாகிப், பட்ட காயங்களைக் காட்டி, “வீரமண்ணில் கிடைத்த விழுப்புண்” என்று இப்போதும் பெருமை பேசுகின்றார்.
“சிறகுப்பேனா”வில், “மெய்க்கீர்த்தி” என்னும் புனைபெயரில், நான் எழுதிவரும், “அவள் ஒரு காவல்தெய்வம்” என்னும் தொடரில், இதுவரை வெளிவந்த நாற்பத்தி ஆறு தொடருக்கும், தவறாது விமர்சனக் கடிதங்கள் எழுதியிருந்தார். பேச்சளவிலேதான் அவை கடிதங்கள். ஒவ்வொன்றும் திறனாய்வுத் தீபங்கள். “யார் சார் அந்த மெய்க்கீர்த்தி? அவரை நேரிலே பார்க்கவேண்டும்போல இருக்கின்றது....” அடிக்கடி கேட்டு எழுதுவார்.
கதையின் நாயகி சுமித்ரா. வயது இருபத்தெட்டு. உறவினர் யாருமில்லை. எட்டு வயதில் பெற்றோரை இழந்து, “அநாதை” ஆகியவள். குழந்தைகளைக் கடத்தி விற்கும் கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டு, பம்பாயில் விற்கப்படுகின்றாள். ஆனால், அங்கிருந்து தப்பி, குழந்தையற்ற பணக்காரத் தம்பதிகள் ஒன்றால், தத்தெடுக்கப்படுகின்றாள். காலப்போக்கில், சுமித்ராவின் சுவீகாரப் பெற்றோரும் காலமாக, அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசான அவள், அவற்றையெல்லாம் விற்றுவிட்டு ஊருக்கே வந்து, “அநாதை ஆசிரமம்” ஒன்றை நிறுவுகின்றாள். கணிசமான அளவு குழந்தைகள் – முதியோர்கள் சேருகின்றனர்.
•Last Updated on ••Sunday•, 11 •August• 2019 22:03••
•Read more...•
••Friday•, 19 •July• 2019 21:05•
??- கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி 2018 இல் முதற் பரிசு பெற்ற சிறுகதை கே.எஸ்.சுதாகரின் 'பாம்பும் ஏணியும்'. நடுவர் குழு தோழர்கள் ம.காமுத்துரை, தேனி சீருடையான், அல்லி உதயன் ஆகியோர் சிறந்த கதைகளை முதல் மூன்று சுற்றுகளில் தேர்வு செய்தனர். இறுதிச் சுற்றில் பரிசுக்குரிய கதைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர்.உதயசங்கர் அவர்களை தலைமையாகக் கொண்டு நடுவர் குழு இறுதி செய்தது. - பதிவுகள் -
சனசந்தடியான நாற்சந்தி. சந்தியிலிருந்து தெற்குப்புறமாக நாலைந்து கடைகள் தாண்டினால் ‘பிறின்சஸ் றெஸ்ரோரன்’ வரும். சுமாரான கடை. ஜனகன் பெரும்பாலான நாட்களில் தனக்குத் தேவையான உணவை அங்குதான் எடுத்துச் செல்வான்.
’பிறின்சஸ்’ என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அங்கு யாரும் வேலை செய்வதாகத் தெரியவில்லை. ஒரு வயது முதிர்ந்தவர் திருநீற்றுப்பூச்சுடன் பக்திப்பாடல்களை முணுமுணுத்தபடி கல்லாவில் இருப்பார். அவரின் மனைவியும், கூடமாட எடுபிடி வேலை செய்யும் ஒரு பையனும் அங்கே இருப்பார்கள். சமையல் அறைக்குள் யார் யாரெல்லாம் இருப்பார்கள்?
சமீப நாட்களாக குசினிக்குள் வேலை செய்யும் ஒருவர், மறைவாக ஒழித்து நின்று ஜனகனைப் பார்க்கின்றார். ஜனகனும் அதை அறிவான். கண்களைப் பார்த்தால் பெண்போல இருக்கின்றாள். ஒருபோதும் நேரில் கண்டதில்லை.
ஜனகன் கம்பீரமான உயர்ந்த இளைஞன். கூரிய மூக்கு. அளவாக வெட்டப்பட்ட மீசை. ஸ்ரைல் கண்ணாடி. பார்த்த மாத்திரத்தில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் தோற்றம். எப்போதும் அயன் செய்யப்பட்டு மடிப்புக் குலையாத ஆடை. சமயத்தில் தருணத்திற்கேற்றபடி நகைச்சுவையை அள்ளி வீசுவான். கல்லாவில் இருக்கும் முதியவருடன் அடிக்கடி பேச்சுக் கொடுப்பான்.கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சினிமா.
இன்று காலை கடையில் அலுவலை முடித்துக் கொண்டு வெளியேறுகையில் அவனுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. கசக்கி எறியப்பட்ட கடதாசித் துண்டு ஒன்று அவன் கால் முன்னே வந்து விழுந்தது.
குப்பைக்கூடைக்குள் அதை எறியப்போனவன், ஏதோ ஒரு யோசனை வந்ததில் அதை பிரித்துப் பார்த்தான்.
“நீங்கள் தனியாகவா இருக்கின்றீர்கள்?” என அதில் எழுதி இருந்தது.
ஜனகனின் மனம் குழம்பியது. குரங்கு போலக் கும்மியடித்தது. அன்று அவனால் ஒழுங்காக வேலை செய்யமுடியவில்லை. வீட்டிற்கு வந்தால் உறங்க முடியவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வது? பெண்ணை நேரில் பார்க்காமல் எப்படி?
•Last Updated on ••Friday•, 19 •July• 2019 21:20••
•Read more...•
••Saturday•, 06 •July• 2019 00:36•
??- ஸ்ரீராம் விக்னேஷ், (தமிழகத்து நெல்லை) வீரவநல்லூர் –??
சிறுகதை
“ நாட்டில நடக்கிற தப்புகளையெல்லாம் என்னால முடிஞ்சவரைக்கும் தடுக்கணும்…. சம்மந்தப்பட்டவங்களைப் புடிச்சு சட்டத்துக்கு முன்னால நிக்கவெச்சுத் தண்டிக்கணும்…. இந்த ஒரே நோக்கத்துக்காகத்தான் நான் இந்தப் போலீஸ் வேலையை விரும்புறேனே தவிர, வேற எந்த நோக்கமும் எனக்குக் கிடையாது ஐயா….” பணிவோடு பேசினேன் நான்.
என் பேச்சுக்குள் பொதிந்து கிடந்த கம்பீரத்தையும், எதிர்காலத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கப் போவதுபோல, அதன்மேல் தெரிந்த களையையும், அன்பழகன் ஐயா உள்ளூர எடைபோடுவதை என்னால் உணர முடிகின்றது. அறுபது வயதைக் கடந்துவிட்டபோதும், இன்னமும் துடியாட்டமாய் செயல்படும் அன்பழகன் ஐயா முகத்திலே இலேசானதோர் புன்னகை தெரிந்தது.
“இந்த பாருப்பா…. என் வயசில பாதிக்கும் கம்மியானவன் நீ…. அத்தோட ஒலகத்தைப்பத்தி எம்புட்டு தெரிஞ்சுகிட்டிருக்கியோ எனக்கு தெரியாது…. கடமை, நேர்மை அப்பிடி இப்பிடீன்னு சொல்லிக்கிட்டு, இந்த உத்தியோகத்துக்கு போறவங்க ரொம்பப்பேரு, நாளைக்கு நாலு காசைக் காணுறப்போ, கையை அழுக்கு ஆக்கிடுராங்க…. நீ அப்பிடிச் செய்வேன்னு நான் சொல்ல வரல்ல…. நீயா விரும்பாவிட்டாலும், நீ இருக்கக்கூடிய சூழ்நிலை உன்னய செய்ய வெச்சிடும்….”
சூழ்நிலையின் நிதர்சனத்தை எண்ணி நொந்தபடி பேசினார்.
“ ஐயா…. நீங்க சொல்றது எனக்குப் புரியாமலில்லை…. அதே டயிம் அடுத்தவங்க கடமையில நான் குறுக்கை போகப்போறதும் இல்லை…. என் கடமையில யாரையும் கிராஸ்பண்ண விடப்போறதும் இல்லை…. மிஞ்சிப்போனா என்ன பண்ணிடுவாங்க…. தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திப்புடுவோம்னு மெரட்டுவாங்க…. மாத்திட்டுப் போகட்டுமே…. அதுக்குமேல என்ன பண்ணுவாங்க…. வெசத்தையா வெச்சுடுவாங்க…. அப்பிடீன்னாலும் பரவாயில்ல….”
என் பேச்சிலே தெரிந்த உறுதி, அன்பழகன் ஐயாவை சிறிது அதிர வைத்தது. தொடர்ந்து அவரது பேச்சிலே சிறிது கோபம் தெரிந்தது.
“ஏ…. என்னப்பா பேசுறே…. கொஞ்சம் நல்ல வார்த்தையாய் பேசுப்பா….”
நான் தொடர்ந்தேன்.
•Last Updated on ••Saturday•, 06 •July• 2019 00:38••
•Read more...•
••Monday•, 27 •May• 2019 08:34•
?? - ஸ்ரீராம் விக்னேஷ்…., வீரவநல்லூர்….( நெல்லை மாவட்டம்.) -??
சிறுகதை
- கவிஞர் தமிழ்க்கனல், கவிஞர் இளசை அருணா ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு, நவம்பர் - 2004 ல், எட்டயபுரம் – பாரதியார் மணிமண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்ட, “கரிசல் காட்டுக் கதைகள்” சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்த சிறுகதை இது.) -
பெளர்ணமி நிலவின் ஆக்கிரமிப்பு மீண்டும் ஒரு பகலை உருவாக்கியிருந்தது. பனிக்காலத் தொடக்கத்தின் மெல்லிய வருடலினால், உடம்பை இலேசாக நெளித்துக்கொண்டேன்.
என்னைத் தோளில் சுமந்தபடி நடந்துகொண்டிருந்த தாத்தாவின் கம்பீரம் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தது.
தெற்கே இரண்டு மைலுக்கப்பால், ரயில் பாதையில் புகையைக் கக்கிக்கொண்டு குமுறிச் செல்லும் “கூட்ஸ்” வண்டியின் ஒலி தெளிவாகக் கேட்டது.
“பேராண்டி…. மணி ரண்டு ஆயிடுச்சுல…. சினிமா முடிஞ்ச உடனே கிளம்பியிருக்கணும்…. ரொட்டிக்கடைக்குப் போனதால லேட்டாயிடிச்சு…. சரி…. சரி…. நல்லா கெட்டியா உக்காந்துக்க…. தூங்கிக் கீங்கி விழுந்துடாதல…. இன்னும் சத்துநேரத்தில வீடு வந்திடும்…. சரியா…..”
“ நான் ஒண்ணும் தூங்கல்ல தாத்தா….” பதில் கூறினேன் நான்.
இலேசாகத் திமிறினார் தாத்தா. அவர் பேச்சிலே சிறிது கோபம் அடுத்து வெளிவந்தது.
“என்னலே…. தாத்தா, பூத்தாண்ணுகிட்டு…. பேராண்டியிண்ணு கூப்பிடச் சொல்லிக்கிட்டு வர்றேன்…. நீ என்னமோ ஓம்புட்டு இஷ்டத்துக்கு இழுத்து உட்டுக்கிட்டே போறே…. சொல்லுலே….”
“சரிலே…. பேராண்டீ………………..” சத்தமாகச் சொன்னேன் நான்.
“கெக்கெக்கே….” என்று தனது பொக்கை வாயால் சிரித்துக்கொண்டார் தாத்தா. தன்னோடு சரிக்குச் சரியாக நான் பேசுவதில் அவர் கண்ட இன்பம் என்னவோ!
“பேராண்டி…. எனக்கொரு சந்தேகம்….” மெதுவாகக் கேட்டேன்.
தாத்தா உற்சாகமானார்.
“கேளுல…. கேளு…. என்னா சந்தேகம்…. எப்ப உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்னு கேக்கப்போறியா…. இருலே…. தாத்தா மொதல்ல ஒண்ணு கட்டிக்கிட்டு, அப்புறமா உனக்கு ஒண்ணு கட்டி வெக்கிறேன்….”
சொல்லிவிட்டு மீண்டும் “கெக்கெக்கே….” சிரிப்பு தாத்தாவுக்கு.
மீண்டும் நெளிந்தேன் நான். பதிலடி கொடுக்க நினைத்தேன்.
“எதுக்கு பேராண்டி ஆளுக்கு ஒண்ணு…. பேசாம நாம ரண்டுபேருமா ஒரு பொண்ணையே கட்டிக்குவோம்….”
தாத்தாவுக்கு பெரிய குஷி. அவர் சிரித்த சிரிப்பின் குலுக்கலால் என் அடிவயிறு கலங்கியது.
எனக்கு சிறிது கோபம். பேசாமல் இருந்தேன் நான். தாத்தா என்னை உலுக்கினார்.
“பேராண்டி…. என்னலே உம்முண்ணு இருக்கே…. நீ கேக்கவந்த விசயத்தை மறந்திட்டியா…. சரிசரி…. இப்ப கேளு….”
“இப்ப உம்பேரு என்ன உண்டோ…. அதே பேருதான் எனக்கும் வச்சிருக்கு…. இல்லியா…. அது ஏன்….?”
•Last Updated on ••Saturday•, 15 •June• 2019 20:12••
•Read more...•
••Wednesday•, 22 •May• 2019 08:22•
?? எழுதியவர்: கடல்புத்திரன்??
சிறுகதை
பெரும்பாலானவர்கள் தம் காருக்கு லஸ்மி,சித்தினி..என்றெல்லாம் செல்லப் பெயர் சூட்டி கண்மணி எனக் கொண்டாடுவார்கள். அதற்கு என்னம் காயம் பட்டால் தலைகீழாய் பதற்றம் தொற்றிக் கொள்ளும்."கட்டல்ட் சீரா"காரை முந்தி வேலைசெய்த ...தளத்தில் கணேஸ்,"டேய் ,சுப்பர் காராடா,மச்சாள், அவ்வளவு பெரிய பிழை இல்லாமல் கனநாளைக்கு ஓடுவாள், ஓட்டம் அந்த மாதிரி இருக்குமடா"என்று ஒவ்வொரு நாளும் அவளைப் பற்றி புகழ்ந்து, புகழ்ந்து... தள்ளிக் கொண்டிருப்பான், ஓடிக் கொண்டிருந்த யப்பான் காரையும் பின்னால் ஒருவன் வந்து இடிக்க, சொன்னால் நம்ப மாட்டீர்கள் ,அதன் செசியே சிறிது வளைந்து விட்டது. பின்னால் இடித்தவனில் பிழை. மூன்றாந் தரக் காப்புறுதி தான், இவனிலே பிழை என்றால், ஐய்யா, தலையிலே கையை வைத்துக் கொண்டு ... இருக்க வேண்டியது தான்.
அதை விட அதிசயம் அடிபட்ட பிறகும் கார் ஓடியது தான். யப்பான் கார் , கால் கை போனாலும் ஓடுற கார் .
அதனாலே அதற்கு மவுசும் அதிகம்.ஆனால் அவனுக்கு வெறுத்து விட்டது. பதிவு மையத்தில் புகாரை பதித்து விட்டு, காப்புறுதிக்காரனுக்கு தெரிவிக்க, அவன் அடிபட்டுத் திருத்துற கார் கராஜ் ஒன்றிட விலாசத்தைத் தெரிவித்தான். "அங்கே கொண்டு போய் விடு"என்றான். பிறகும், அவனுக்கு சார்ப்பாகவே நடக்கிறது."செசி வளைந்ததால் கழிக்க வேண்டியது தான்"கராஜ்காரன் தெரிவிக்க, "நட்ட ஈடாக 2000 டொலர்கள் தர முடியும்,என்ன சொல்றே"என காப்புறுதிக்காரன் ,ரிம் கொட்டேனில் வந்து சந்தித்துக் கதைத்தான்.இந்தியன்.சுழியன்கள் என்று இந்த நிறுவனமும் இவர்களையே இப்படியான விசயங்களிற்கு அனுப்புகிறார்கள்."அவ்வளவு தான் தர முடியும்.அது தான் அதனுடைய பெறுமதி "என்றான்.காரையே அவன் 1500 டொலருக்குத் தான் வாங்கியவன்."சரி" என்றான். செக்கை எழுதி யே கொண்டு வந்திருக்கிறான். உடனேயே தந்தான், குடித்த கோப்பிக்கும் அவனே காசைக் கொடுத்திருந்தான்.
பிறகென்ன தேடி அலைந்து இந்த கட்டலஸ் சீரா, பழைய காரை 2000 டொலருக்கு வாங்கி இருந்தான். இந்தக் காரின் தயாரிப்பை இப்ப நிறுத்தி விட்டார்கள். காரை, புகழ்வதை கணேஸ் மட்டும் நிறுத்தவே இல்லை. காரில் ஓட்டத்திலே பிழை இல்லை தான் . அதாவது எஞ்சின் நல்லது. ஆனால்,எரிபொருள் ஓடுற குழாய்கள் மாற்ற வேண்டி வந்தது. எரிபொருள் தாங்கியில் ஓட்டை விழுந்து அதையும் மாற்றியது. நிறுத்தியில் மாற்றும்.முக்கிய பகுதியை விட மற்றப் பகுதிகள் எல்லாத்திற்கும் கராஜ்காரனுக்கு 200 டொலர் படிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான். காரை வைத்திருக்கிறவர்கள் அதைப் பற்றிய அறிவையும் காட்டாயம் கொண்டிருக்க வேண்டும். ஊரிலே என்றால் பழுதான பகுதியை வெட்டி எறிந்து விட்டு ,கராஜ் ஆள் தானே கூட தயாரித்து ஒட்டி அந்த மாதிரி ஓட வைத்து விடுவான். இங்கே,மீள உயிர்ப்பிக்கிற பகுதிகள் மலிவு சிலவேளை முழு தொகுதியையே மாற்றுவார்கள். ஆனால்,தொட்டதுக்கும் 200 டொலர் அழ வேண்டி வரும் ஊரிலே செலவும் குறைவு.
இப்ப பேவிய்யூ வீதியிலே வேலைக்குப் போய்க் கொண்டிருந்த போது பின் பக்க இடது ரயரிலே காற்றுப் போய் விட்டது.
•Last Updated on ••Wednesday•, 22 •May• 2019 08:29••
•Read more...•
••Saturday•, 11 •May• 2019 08:10•
??- ஸ்ரீராம்விக்னேஷ், (வீரவ நல்லூர், நெல்லை மாவட்டம்) -??
சிறுகதை
அதிகாலை ஐந்துமணி. அறையின் கதவு தட்டப்படும் சத்தம். எரிச்சலாக இருந்தது.
சட்டைகூட போடாமல், பெனியனுடன்சென்று கதவைத் திறந்தேன்.
அங்கே… அறிமுகமில்லாத ஒரு சிறுவன்.
“யாரப்பாநீ…. காலங்காத்தால வந்து கதவைத்தட்டி உசிரைவாங்குறே… எதுக்கு…? ’’
கொட்டாவி விட்டபடி கேட்டேன்.
தெருவில் பால்க்காரர்களின் சைக்கிள் ’பெல்’ ஒலி…. இட்லிக்கடையில் ஒலிக்கும் பக்திப்பாடல்….. ஆகியன வைகறையை வரவேற்றன.
அந்தச்சிறுவன், என்னை ஏறஇறங்க நோக்கினான். வலக்கரம் நெற்றிக்குச்சென்றது. ‘’சலாம்’’ போட்டான்.
“வணக்கம்சார்…. எம்பேரு சுப்புறுமணியன்… வயசுபன்னிரண்டு… எல்லாரும்என்னய “சுப்புறு”ண்ணு கூப்பிடுவாங்க… வீடுவீடாய்ப் போயி அவங்கசொல்ற வேலைய செஞ்சு குடுப்பேன்….”
பேச்சினில் பணிவு. பார்வையில்கம்பீரம். “மனக் கேமரா” வில் அவனைக் “கிளிக்” செய்தேன்.
தொடர்ந்து அவனே பேசினான்.
“ நேத்து பகல்பூராவும் நீங்க வீடுதேடி அலைஞ்சதும்., பூசாரி அருணாசலம்ஐயா தயவால சாயந்தரம்போல இந்த “ரூம் “ கெடைச்சதும்… வரையில எனக்குத்தெரியும்….”
நான் குறுக்கிட்டேன்.
“சரி..சரி… இப்பநீ எதுக்குவந்தே… சொல்லிட்டுக் கெழம்பு ”
“தப்பா நெனைக்காதீங்க…. பஞ்சாயத்துநல்லீல தண்ணிவருது…. குடமோ, பானையோ இருந்தாக் குடுங்க…. சத்தே நேரமானா கூட்டம்ஜாஸ்தியாகிடும்…. “பணிவாக வந்தது அவன் குரல்.
நேற்று மதியமே பூசாரி அருணாசலம் அண்ணாச்சி கூறியிருந்தார்., “ தண்ணிபுடிக்கக் குடம் ஒண்ணு வாங்கிக்க….”
அப்போது வாங்குவதற்கு மறந்துவிட்டேன். இப்போது இந்தச் சிறுவன் முன்னே தலை சொறிந்தேன்.
“ இல்லைப்பா…. நான் குடமெதுவும் வாங்கிக்கல்ல….. இண்ணைக்கு வாங்கிக்கிறேன்…. நாளையிலயிருந்து தண்ணிபுடிச்சுக் குடு……”
பதிலை எதிர்பாராமல், கதவை அடைத்தேன். தூக்கம் உலுக்கி எடுத்தது.
•Last Updated on ••Monday•, 27 •May• 2019 08:35••
•Read more...•
••Saturday•, 06 •April• 2019 23:33•
??- இராஜேஸ்வரி பாலசுப்பிரணியம் -??
சிறுகதை
லண்டன் 2019-
அது ஒரு அழகான காலைநேரம். லண்டனில் வசந்தகாலம் முடிந்து விட்டது.சாடையான இளம் குளிர்காற்றின் தழுவலில் தோட்டத்து செடி கொடிகள் இணைந்து சிலிர்த்துக் கொண்டிருந்தன.பழுத்துக் கொண்டிருக்கும் தக்காளிகள் காலைச்சூரியனின் இளம் சூட்டில் பளபளத்தன. வேலியில் படர்ந்து பூத்துக் கிடந்த சிறுமல்லிகையின் மணம் மனத்திற்கு இதமளித்தது. வசந்த காலம் முடியப்போகிறது. தோட்டத்தில் போட்டிருந்த மரக்கறிவகைகள் தங்கள் சேவையைமுடித்த திருப்தியுடன் கொஞ்சம் கொஞ்சமாக வாடத் தொடங்கி விட்டன. ஒரு சில மாதங்களுக்கு முன் விதைத்த சிறு பயிர்கள் முளைத்து வளர்ந்து அதைச் செய்தவளுக்குப் பல விதமான பரிசுகளைக் காய்களென்றும் பழங்களென்றும் கொடுத்துவிட்டு கால மாற்றத்தில் தளர்ந்து,முதிர்ந்து தங்கள் வாழ்க்யை முடித்துக் கொண்டிருக்கின்றன.
'நானும் அப்படியா? இந்த செடி கொடிகள் தங்களை இந்தப் பூமியில் விதைக்கச் சொல்லி யாரையும் கேட்கவில்லை, எனது திருப்திக்கு எனது தேவைக்கு விதைத்தேன், பாதுகாத்தேன், இன்று அந்த விதையின் பல பரிமாணங்களை ஒரு பாதுகாவலன் மாதிரிப் பார்த்தக் கொண்டிருக்கிறேன்' வாடித் தளர்ந்து கொண்டிருக்கும் திராட்சையிலைகளைத் தடவியபடி யோசித்துக் கொண்ட போது அவள் மனம் சட்டென்று அவளைப் பற்றிக் கேள்வி கேட்டது.
'வாழ்க்கை என்ற வெற்றுக் கானல் நீரோட்;டத்தில் நானும் இப்படித்தானா? என்னைப் போன்ற பல பெண்களும் இப்படித்தானா, சுயமாக எதுவும் செய்ய முடியாத வெற்றுவிதைத் தொடர்களா,கானல் நீரோட்டத்தில் வெறும் பிம்பங்களா? ஞானேஸ்வரி தன்னைத்தானே கேட்டுக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள்ளிருந்து அவள் கணவரின் குரல் சத்தமாக அவளையழைத்தது.
'ஞானேஸ்வரி. யாரோ கதவைத் தட்டுகினம்'. அவர் மிகவும் சத்தமாக அவளையழைக்கிறார்.
அவளின் கணவருக்குப் பல வருத்தங்கள். பெரிதாக நடந்து திரிய முடியாது. அவள் ஒரு இயந்திரம்.அவர் அழைத்த குரலுக்கு அசைந்து திரியும் ஒரு நடமாடும் மனித இயந்திரம்.
அவள் தோட்டத்திலிருந்து வீட்டுக்குச் சென்று கதவைத் திறந்தாள்.
ஞானேஸ்வரி தனக்கு முன்னால் நிமிர்ந்து நின்றிருந்த ஆங்கிலேயப் பெண்மணியை ஏற இறங்கப் பார்த்தாள். அன்று திங்கட் கிழமை.வெளியில் பாடசாலை போகும் குழந்தைகள், வேலைக்குப்போகும் மாந்தர்கள் என்று தெருவில் பல சந்தடிகள். வந்து நின்ற ஆங்கிலேயப் பெண்மணி,' ஹலோ எனது பெயர் மேரி டானியல், உள்ளூராட்சியின் முதியோர் நலவிடயங்களைச் சார்ந்த விசாரணைப் பிரிவிலிருந்து வருகிறேன். நீங்கள் திருமதி அருளம்பலம் ஞானேஸ்வரிதானே?'.
அவள் ஒரு அழகிய பெண். குரலும் மிகவும் இனிமையாகவும் கனிவாகவுமிருந்தது. முதியோர்களின் பராமரிப்புக்கென்றே பிறந்த அன்பான முகத்தில் ஒரு அழகிய சிறு புன்முறுவல் தவழ்ந்துகொண்டிருந்தது.
•Last Updated on ••Tuesday•, 16 •April• 2019 02:37••
•Read more...•
••Saturday•, 16 •March• 2019 01:17•
??- எஸ் அகஸ்தியர் -??
சிறுகதை
- எழுத்தாளர் அகஸ்தியரின் நினைவு தினம் டிசம்பர் 8. அதனையொட்டி அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம் அனுப்பிய சிறுகதை. மின்னஞ்சல்களுக்குள் மறைந்து தவறிவிட்டதை இன்று கண்டுணர்ந்தோம். -பதிவுகள் -
இவன் தற்காலத்து நாகரிகப் பையன். ஆனால், யாழ்ப்பாண வைதீகப் பிடிப்பு இறுக்கம். சமய ஆசாரங்கள், விளையாட்டு வினோதங்கள், கோயில் திருவிழாக்கள் என்று நிகழ்ந்தால் நாட்டுப் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக இவன் கண்ட அரசியல் ஞானம். இளம் சந்ததியான இவனுக்கும் பழம் முத்துப் பாட்டியே ஞானக்குரு.
‘இந்தா ரண்டரையாகுது....’
சுரேஷ் மனசுள் லேசான கீத சுகம் நீவிற்று. சோர்ந்த உடல் சுரீரித்து, சடுதி உற்சாகம் கொண்டது. இடது கை விளிம்புச் சட்டை கிளப்பி ‘வார்ச்’ பார்க்க, முகத்தில் குதூகல மையல் பம்மிய ஆனந்த பரவசம்.
‘இன்னும் அஞ்சு நிமிசம் இருக்கு’
‘சேவையர் சூட்’ அவன் கையில் அவசரகோலமாகியது. ‘ஹங்கரில்’ கொழுவினான். ‘பாத்றூம் பேஷன் பைப்’ திறந்து சாடையாக முகம் அலம்பி, துவாய் எடுத்துப் பறதியாகத் துடைத்த பின், ‘சிவில் சேட்’, ‘ஜக்கற்’, ‘சூஷ்’ மாட்டினான்.
‘இனி வெளிக்கிடுவம்’
அடுக்குப் பண்ண, ‘பத்ரோன்’ இவன் எதிரே ருத்திரசர்மன் மாதிரி ‘றெஸ்ரோறன்’ சாலைக்கு வெளியே நிற்கின்றான்.
அவன் முகத்தில் மலர்ச்சி ததும்பும் சிரிப்புக் கவியவில்லை. கண்களில் அக்கினி கக்கிற மின்னல். சாந்தமான முகபாவம் தேங்கிய போதும், ‘விறுமசத்தி’ சாடை பத்ரோன் முகம் ‘சப்’பென்று இருக்கிறது.
தன்னுள் சுரேஷ் ‘கறுமுறு’த்தான் :
‘உவன் பத்ரோன் நெடுகலும் உப்பிடித்தான்’
பரவச நிலை குலைந்து நிற்கையில் நெஞ்சு நீவி ஒரு பெருமூச்சு. இவனை மீறிக் குதறிப் போயிற்று.
‘வெளிக்கிட்டாச்சு, மெல்லமா நடையைக் கட்டுவம்’
மனசு கிளர்த்திற்று : ஓர் இடறல்.
‘பொன்ஸர்’ சொல்லுவமா, விடுவமா?’ புருவம் நெருட, கண நேர யோசினை. பத்ரோன் பார்வை ‘இதமாக’த் தோணுவதாயில்லை.
•Last Updated on ••Saturday•, 16 •March• 2019 01:22••
•Read more...•
••Monday•, 18 •February• 2019 06:39•
?? - ஆபிதீன் -??
சிறுகதை
* சமர்ப்பணம் : மறைந்த உயிர் நண்பர் தாஜுக்கு
பறப்பதற்குத் தயாராக இருக்கும் ஒற்றை இறக்கையுள்ள விமானத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? எங்கள் ஊரில் சில வீடுகளில் இருக்கிறது - மொட்டை மாடி மேல். 'கப்பக்கார வூடு' என்றால் முறைப்படி கப்பல்தானே இருக்க வேண்டும். இல்லை, அந்தக் காலத்தில் சைக்கூன் சிங்கப்பூர் என்று போய் பெரும்பணம் சம்பாதித்த சில சபராளிகள் அப்படித்தான் சும்மா விமானங்களை பெருமைக்காக வீட்டின் மேல் நிறுத்தினார்கள். முழுக்க முழுக்க சிமெண்ட்டால் கட்டப்பட்ட சிறு விமானங்கள்! எந்த நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் முஸ்லீம்கள் நிகழ்த்தவில்லையென்று யார் சொன்னது? இப்போது உள்ள பரம்பரைக்கு அதற்கு பெயிண்ட் அடிக்கக்கூட முடியாததில் விமானங்களுக்கு ரோஷம் வந்து ஒரு பக்க இறக்கைகளை ஒடித்துக் கொண்டு விட்டன. புதிதாக அரபுநாடு போய் திரும்ப வரும் கப்பவூட்டுத் தம்பிகள், கஞ்சத்தனமாக தங்கள் வீட்டு நிலைப்படியிலோ புதிதாக வாங்கிய பைக்கிலோ அல்லது வேனிலோ 'இது அல்லாஹ்வின் அருட்கொடை' என்று ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதைப் பார்த்துத் திகைத்துப்போய் முடமாகிவிட்டன என்றும் சொல்லலாம்.
கப்பக்கார வீடு... கட்ட வெளக்கமாறானாலும் கப்ப வெளக்கமாறு...
எல்லாமே கப்பல் சம்பந்தப்பட்டது. இந்த மாலிமார், மரைக்காயர் எல்லாம் என்ன? கப்பல் சம்பந்தப்பட்ட பெயர்கள்தான். அதற்காக ரஜூலா கப்பலில் கக்கூஸ் கழுவிக் கொண்டிருந்த என் பெரிய மாமாவும், கப்பலே பார்க்காமல் விமானத்தில் கத்தாருக்குப் போன என் சின்ன மச்சானும் தன் பெயரை 'நகுதா' (கப்பல் கேப்டன்) என்று இன்னும் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது! போதாதற்கு ஊர் அவுலியா வேறு மூழ்கவிருந்த ஒரு கப்பலைக் காப்பாற்றித் தொலைத்தார்கள். அவர்களின் கந்தூரியில் , பல வகை டிசைன் கப்பல்கள் - சோகப்பட்டினத்திலிருந்து நாங்கூர் வரை - 7 கி.மீ தூரம் ரோட்டிலேயே வந்து , ஊரெல்லாம் சுற்றும். சில ரயில்கள் , விமானங்கள் கூட ரோட்டில் ஓடுவதுண்டு. எல்லாம் அவுலியாவின் மகிமை !
கப்பக்கார வூட்டு ஆண்பிள்ளைகளை 'கப்பவூட்டுத் தம்பி' என்று செல்லமாக அழைக்கும் ஊர் அது . கப்பவூட்டு பெரியதம்பி; நடுத்தம்பி ; சின்னதம்பி ; தம்பி... அவரின் 'தம்பி'...
சிராஜுதீனும் என்னைப் போல ஒரு கப்ப வூட்டுத் தம்பிதான். ஆனால் பக்கத்து ஊர். உட்டச்சேரி என்ற உண்மையான பெயரை எழுதினால் அடிக்க வந்துவிடுவார்கள் என்பதால் வேண்டாம்.
சிராஜின் உற்சாகம் எனக்கும் ஒரு நாள் தொற்றியது. துபாய் வந்ததிலிருந்து 'ஒரு நல்ல செய்தி' என்று அன்றுதான் சொல்கிறார்.
'எழுதுறதை வுட்டுப்புட்டீங்களோ ?' - வெடைத்தேன். சந்தோஷமாக இருக்கும்போது நாம் உண்மையை சொன்னாலும் அது வேடிக்கையாகவே எடுத்துக் கொள்வார்கள். நான் சொன்னது பொய். சிராஜ் நன்றாகவே எழுதுவார்.
'இல்லே.. அதைவிட சந்தோஷம். ரூமுக்கு ராத்திரி வர்றீங்க. கொண்டாடுறோம்!'. போனை வைத்து விட்டார். அர்த்தம் என்ன என்ன என்று படித்தவரைக் கேட்க வைக்கும் அவரது கவிதைகளின் சஸ்பென்ஸ் மாதிரி இருந்தது. அது எனக்கும் பிடித்திருந்தது. சொட்டுச் சொட்டாக வடித்தாலும் அல்லது 'சர்'ரென்று ஊற்றினாலும் நீரா, உருகும் பனிக்கட்டியா என்று புரியாத வெண் மயக்கம்தான். இருந்தாலும் என்ன, அவரை எனக்குப் பிடிக்கும். அதிகாரம் செய்யும் அன்பு அவருடையது. எங்கே பார்த்தாலும் 'எப்படி இருக்கிறீங்க?' என்று மணிக்கட்டை அவர் அழுத்தும் அழுத்தில் என் நரம்புகள் முழுக்கப் பாயும் அன்பெனும் இரத்தம்...
•Last Updated on ••Monday•, 18 •February• 2019 06:42••
•Read more...•
••Thursday•, 14 •February• 2019 00:59•
?? - குரு அரவிந்தன் -??
சிறுகதை
நான் கன்னத்தைத் தடவிப் பார்த்தேன்.
‘ஏன் வலிக்கவில்லை?’
‘என்கிட்ட வேண்டாம்’ என்பது போல் அவள் என்னை முறைத்தபடி நகர்ந்தாள். நல்ல காலம் கன்னத்தில் அறையவில்லை. அவள் என்னைப் பார்த்த பார்வை கன்னத்தில் அறைந்தது போல இருந்தாலும் ஏனோ எனக்கு அது வலிக்காத ஒருவித சுகத்தைத் தந்தது.
நான் என்னை மறந்து அவளைப் பார்த்தபடியே நின்றதை அவள் கவனித்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த முறைப்போ என்று நினைத்தேன். நாகரிகம் கருதி நான் அவளை அப்படி வைத்தகண் வாங்காது ஒரேயடியாகப் பார்த்திருக்கக்கூடாது என என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். ஆனாலும் என்ன செய்வது, பொம்மைகளுக்கு நடுவே பொம்மைபோல நின்ற, பிரமிக்கத்தக்க அவளது அழகுதான் என்னை அப்படி வெறித்துப் பார்க்க வைத்தது.
உள்ளக கணக்குப் பரிசோதனைக்காக நாங்கள் அந்த நிறுவனத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு. எங்களுக்காகத் தனியாக ஒரு தடுப்பறையை அவர்கள் ஒதுக்கித் தந்திருந்தார்கள். ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் என்பதால் முன்பக்கத்தில் கண்ணாடி யன்னல்கள் ஓரமாக அழகான ஆடைகள் அணிந்த அலங்காரப் பொம்மைகளை வைத்திருந்தார்கள்.
அந்தப் பொம்மைகளுக்கு நடுவேதான், ஆடை மாற்றிக் கொண்டிருந்த அவள் தற்செயலாக எனது கண்ணில் பட்டாள். புதியவளாக இருக்கலாம், அவளும் ஒரு அழகிய பொம்மைபோலக் கண்ணாடி யன்னலுக்கு வெளியே எதையோ பார்த்துக் கொண்டு நின்றதால், முதலில் நான் அதில் கவனம் செலுத்தவில்லை. அவள் அசைந்த போதுதான் அவள் நிஜம் என்பதைப் புரிந்து கொண்டேன். புதிதாக அவர்கள் அறிமுகப் படுத்தும் ஆடைகளை இப்படித்தான் அடிக்கடி பொம்மைகளுக்கு மாற்றிக் காட்சிக்கு வைப்பார்கள். அன்று அதைத்தான் அவள் செய்து கொண்டிருந்தாள், அதாவது அலங்காரப் பொம்மைகளுக்கு ஆடை மாற்றிக் கொண்டிருந்தாள்.
அவளது அழகை நான் ரசித்தேன். இவ்வளவு கொள்ளை அழகை எங்கிருந்து இவள் பெற்றாள்? சொற்ப நேரம் பார்த்த அவளது அசைவுகள் ஒவ்வொன்றும் எனது மனத்திரையில் பதிந்து என் உணர்வுகளைத் தூண்டி எனக்குள் என்னவோ செய்தது. அன்று மதியம் உணவருந்திய பின் ஓய்வெடுக்கும் அறையில் நாங்கள் சற்று நேரம் கரம் விளையாடினோம். தண்ணீர் எடுப்பதற்கு தற்செயலாக உள்ளே வந்தவள், அருகே வந்து எங்கள் ஆட்டத்தைப் பார்த்து ரசித்தாள்.
‘ஹாய். ஐயாம் தீபா’ என்று ஆங்கிலத்தில் தன்னை அறிமுகம் செய்தவள், ‘நானும் உங்களோடு விளையாட்டில் பங்குபற்றலாமா?’ என்று கேட்டாள். ‘கோலக் குயிலோசை உனது குரலினிமையடீ!’ சட்டென்று பாரதியின் கவிதை வரிகள் ஞபகம் வந்தது. இவளுடைய நடையுடை பாவனையைப் பார்த்தபோது பாரதியின் புதுமைப் பெண்ணாக இவளும் இருப்பாளோ என்று எண்ணத்தோன்றியது.
•Last Updated on ••Thursday•, 14 •February• 2019 01:04••
•Read more...•
••Saturday•, 26 •January• 2019 00:27•
??- முனைவர் ஆ.சந்திரன் , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், வேலூர் -??
சிறுகதை
நிலத்தின் நீர் வேட்கை முற்றிலும் பூர்த்தியானதைப் பசுமையின் கரங்கள் வானத்திற்குத் தெரிவித்துக்கொண்டிருந்தன. நைட் வாச்மேன் வேலைக்குப் போய்த்திரும்பிய சோர்வைப் போக்கிக்கொள்ள போர்வைகள் சூரியக்குளியல் மூழ்கின. மாலைச் சூரியன் நீச்சல் பழக கடலை நோக்கி விரைந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பதறிய தலைவிக்கு அன்றை இரவு யுகத்தின் எல்லையாக நீண்டது. அது அவளுக்கு ஒரு முடிவை எடுக்க போதுமான இடைவெளியைத் தந்திருந்தது. அதனால் சூரிய உதயம் அவளுக்கு இனிய பொழுதாய் இருந்தது.
திருமணத்திற்குப் பிறகு வீட்டைவிட்டுத் தனியாகப் போவது இதுதான் முதல் முறை என்றாலும், அவளுக்கு அதைப் பற்றிய சிந்தனை ஏதும் அப்போது ஏற்படவில்லை. கதிரவனின் சூட்டை இலவசமாக வாங்கிக்கொண்டிருந்த தரையின் மேற்பரப்பு அவளைப் பரிசோதிக்க ஆரம்பித்தது. அவற்றின் சோதனைகளைப் பற்றிச் சிந்திக்கவிடாமல் செய்தன பிரிந்து சென்ற காதலனின் நினைவுகள்.
அவளுடைய நடையின் வேகம் தளர ஆரம்பித்தது. நீண்டதூரம் நடந்த களைப்பும் சூரியனின் வெக்கையும் அவளுடைய பெண்மையை உணர்த்தி பயமுருத்திப் பார்த்தன என்றாலும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.
தென்னை மர நிழலில் அழையாத விருந்தாளியாய் அவள் அடைக்கலம் புகுந்த போது சூரியன் பூமியை தொண்ணூறு டிகிரி கோணத்தில் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையின் உக்கிரத்திற்கு மரத்தடியில் நிழலுக்கு ஒதுங்கியவர்களின் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையே முதன்மைச் சாட்சியங்களாய் இருந்தன.
அடிவயிற்றைத் தடவிய விரல்களின் பூரிப்பை முகம் வெளிக்காட்ட நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். தென்றலின் ஸ்பரிசம் அவளைத் தீண்டும் தருணங்களில் மட்டும் வெயிலின் சோர்வு ஓய்வு கொண்டது.
நூடுல்ஸ்க்கு வெள்ளையடித்தது போன்ற தலையைக் கொண்ட பெண்ணின் கண்கள் நிழலுக்கு ஒதுங்கிய தலைவியை ஸ்கேன் செய்துகொண்டிருந்தன. வயதிற்கு மீறித்தெரிந்த அழகினைப் பெருமூச்சுடன் கூடிய அவளுடைய பார்வைத் தோலுத்துக் காட்டியது. அதை முதல் பார்வையிலேயே புரிந்துகொண்ட தலைவி, தன்னுடைய பார்வையை மரத்தின் நிழலில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த எறும்பின் மீது திருப்பினாள். அப்போதும் அவளுடைய கைகள் அடிவயிற்றைத் தடவியவாறே இருந்தன.
இளமைத் தோற்றமுடன் காணப்பட்ட முதியவள் இவ்வாறு சொன்னாள் இளம்பெண்ணைப் பார்த்து. “இந்த வெக்கையில் தனியாய் எங்கே போகிறாய் பெண்ணே! துணைக்கு யாரையாவது அழைத்து வந்திருக்கக் கூடாதா?........” என்று.
•Last Updated on ••Saturday•, 26 •January• 2019 00:34••
•Read more...•
••Tuesday•, 22 •January• 2019 01:39•
??- சீர்காழி தாஜ் -??
சிறுகதை
எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் மறைவினையொட்டி , பதிவுகள் இணைய இதழில் வெளியாகிய அவரது சிறுகதையான 'பால்ய விவாஹம்' மீள்பிரசுரமாகின்றது -
- எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள், பல்வேறு விடயங்கள் பற்றிய கருத்துகள் பலவற்றை உங்களில் பலர் இணையத்தில் வலைப்பூக்களில், இணைய இதழ்களில் (பதிவுகள் உட்பட), முகநூலில் படித்திருக்கலாம். எனக்கு அவரது எழுத்தில் பிடித்த விடயங்களிலொன்று அவரது நடை. ஒருவித நகைச்சுவை ததும்பும் எள்ளல் நடை. அடுத்தது அவரது சிந்தனைப்போக்கு. ஒரு விடயத்தைப் பற்றி பல்வேறு திக்குகளில் படிப்பவர் சிந்தனையைத் தூண்டும் வகையில் சிந்திப்பது. இன்னுமொரு முக்கியமான விடயத்திலும் அவரை எனக்குப் பிடிக்கும். பாசாங்குத்தனமற்ற, வெளிப்படையான , தற்பெருமையற்ற ஆளுமை. அவரது எழுத்தில் காணப்படும் இன்னுமொரு விடயம்: கூர்ந்து அவதானித்தல். தன்னைச் சுற்றிவரும் உலகில் நடைபெறும் செயல்களை, உறவுகளை. நிலவும் வாழ்வியற் போக்குகளை இவற்றையெல்லாம் மிகவும் கூர்ந்து அவதானிப்பது அவரது இன்னுமொரு திறமையான பண்பு. 'பால்ய விவாஹம்' என்ற அவரது இந்தச் சிறுகதையின் தலைப்பினைப் பார்ததும் 'பால்ய விவாகம்' பற்றிய விமர்சனமாக இருக்குமோ என்று எண்ணி வாசித்தால் இந்தச் சிறுகதையில் விரிந்த உலகு என்னைப் பிரமிக்க வைத்தது.
ஒரு சிறுவனுக்கு காய்க்காத வீட்டு வளவு மா மரத்துடன் நடைபெறும் பால்ய விவாஹம் பற்றியதே கதையின் மையக்கருத்து. அந்தச் சிறுவனே கதை சொல்லியும்; அவனது பெயரும் தாஜ் என்றிருப்பது கதையின் நடையில் ஒருவித சுயசரிதத் தன்மையினைப் படர விடுகிறது. ஆனால் அவர், தாஜ், தனது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் பின்னிய சிறுகதையாகத்தான் இதனைக் கொள்ளவேண்டும். அவ்விதம் மரத்துடனான திருமணம் அந்த மரத்தைக் காய்க்க வைக்குமென்ற கருத்தொன்றும் அந்தச் சிறுவன் வாழும் சீர்காழி இஸ்லாமிய சமூகத்தில் நிலவுகின்ற விடயத்தை இச்சிறுகதை வெளிப்படுத்துகின்றது. இதனைக் குழந்தைப் பேறில்லாது வாடும் பெண்களுக்கும் குறியீடாகக் கருத முடியும். இந்த கருத்தினூடு விரியும் கதையில் வரும் பாட்டி பாத்திரம் மிகவும் இயல்பான அனைவர் வாழ்வில் வந்துபோகும் பாத்திரம். உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றது. இது தவிர இந்தச் சிறுகதையில் சீர்காழியில் வாழும் இஸ்லாமிய மக்களிடையே நிலவும் பேச்சுத்தமிழை வாசிப்பில் நாம் அறிந்துகொள்கின்றோம். அத்துடன் அச்சமுதாயத்தின் வாழ்வில கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பற்றியெல்லாம் இச்சிறுகதையினூடு அறிந்துகொள்கின்றோம். இது தவிர சுற்றியுள்ள இயற்கை பற்றிய அழகான வர்ணனையும் கதையில் விரவிக் கிடக்கின்றது. தாஜ் அவர்களின் இச்சிறுகதையான 'பால்ய விவாஹம்' சிறுகதை இதுவரை நான் வாசித்த அவரது சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை. உங்களையும் நிச்சயம் கவர்ந்திழுக்கும். வாசித்துப் பாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள் -
சிறுகதை: பால்ய விவாஹம் - சீர்காழி தாஜ்
இன்று வியாழக்கிழமை. நாளை வெள்ளி! ‘பள்ளி’ கிடையாது. கண்விழித்தவுடன் தோன்றிய முதல்நினைவே சந்தோஷம் தந்தது. நாளைக்கு காலை ஏழு, ஏழரை வரை துங்கலாம். எட்டும் தூங்கலாம். என்னை எழுப்ப என் அம்மா நிலையாய் நிற்கும்தான். ‘இத்தனை நேரம் தூங்குறானேன்னு…!’ பாட்டி விடாது. “பிள்ளை நல்லா தூங்கட்டும்டீ….” என சொல்வார்களே தவிர, எழுப்ப சம்மதிக்க மாட்டார்கள். ஆனால், பள்ளி இருக்கும் நாள்தோறும், என் பாட்டிதான் என்னை எழுப்பி விடும். அஞ்சேகால் விட்டா… அஞ்சரை! கொல்லை நடைக்கு போய் கிணற்றடியில் ‘கைகால்’ அலம்பிவிட்டு, பல்விளக்கச் சொல்லும். தூக்கம் கலையாது எழுந்து போய், கொல்லைக் கதவை திறப்பேன். திறந்த நாழிக்கு, கோழிகளின் அதன் குஞ்சுகளின் கெக்கரிப்பு, தூக்கக் கலக்கத்தை விரட்டும். இந்தக் கெக்கரிப்புதான் தினம்தினம் நான் கேட்கும் முதல் இசை! கொல்லைத் தாழ்வாரத்தின் கிழக்குப்பக்க மூலையில், கள்ளிப்பலகையிலான, கம்பி வலையிட்ட கோழிப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கோழிகளையும் குஞ்சுகளையும் பார்க்க ஆவலெழும்! இன்னும் தீரவிடியாத, அந்த இருட்டில், அதுகள் எதுவும் சரியா தெரியாது. சப்தம் மட்டும்தான் ஆறுதல். தாழ்வாரத்திலிருந்து படியிறங்கி, இடதுபுறம் திரும்பி, பத்து தப்படி வைத்தால், சின்ன கிணறு. அதைச்சுற்றி சிமெண்ட்தளம்! கிணற்றை குனிஞ்சுப் பார்க்க மாட்டேன். பயம். பார்த்தாலும், தண்ணீர் தெரியாது. இருட்டுத்தான் கிடக்கும்! கொஞ்சத்துக்கு விடியல் கண்டுவிட்டதென்றாலும், எங்க வீட்டுக்கொல்லை இன்னும் இருட்டுதான்!
•Last Updated on ••Tuesday•, 22 •January• 2019 01:41••
•Read more...•
••Tuesday•, 22 •January• 2019 01:32•
??- சீர்காழி தாஜ் - ??
சிறுகதை
- எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் மறைவினையொட்டி , பதிவுகள் இணைய இதழில் வெளியாகிய அவரது 'தங்ஙள் அமீர்' குறுநாவலை மீள்பிரசுரம் செய்கிறோம் -
- புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அன்னிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் 'தங்ஙள் அமீர்' இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. 'தங்ஙள் அமீர்' என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர் இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக 'தங்ஙள் அமீரை'ப் பாவிப்பதும்தாம். இஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்ஙள் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்ஙள் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைப் பயன்படுத்துவாரானால் தமிழ் இலக்கிய உலகுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு முகத்தினைக் காட்டும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் குறுநாவலாக இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடொன்றின் தமிழர் வர்த்தக வாழ்வை, அங்கும் மக்களின் மூட நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்டு தொடரும் பணம் பெருக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை விபரிக்கும் 'தங்ஙள் அமீர்' வித்தியாசமான , முக்கியமான படைப்பு. நாஞ்சில் நாடனின் 'மிதவை' (உள்ளூர் புலம் பெயர்தலை விபரிக்கும்), காஞ்சனா தாமோதரனின் , ஜெயந்தி சங்கரின் , ப.சிங்காரத்தின் படைப்புகள் வரிசையில் தமிழக எழுத்தாளர் ஒருவரின் புலம் பெயர் அனுபவங்களின் பிரதிபலிப்பு சீர்காழி தாஜின் ''தங்ஙள் அமீர்'. இக்குறுநாவலினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுப்பிய எழுத்தாளர் தாஜ் நன்றிக்குரியவர். -வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்-
குறுநாவல்: தங்ஙள் அமீர் (பதிவுகள் - 23 April 2014)
"நேற்று 'அல் - முராஃபி'க்கு போனீங்களா?, போக்கரை சந்திச்சீங்களா?" - எங்க மேனேஜர் 'ஜெம்', எதிர்பக்கத்து கேபினிலிருந்து எழுப்பிய அந்தக் கேள்வி எனக்கானது. காலையில் அலுவலகம் போனவுடன், மேனேஜர் ரூமுக்கும், அக்கவுண்டண்ட் ரூமுக்கும் எதிரே, பக்கவாட்டுத் தடுப்பினுள் காணும் டீ டேபிளில், காஃபி உண்டாக்கி; நானும், ஸ்டோர்கீப்பர் ஜமாலும் குடிக்கத்தொடங்கிய போதுதான், ஜெம் அலுவலகம் வந்தார். இருக்கையில் அவர் அமர்ந்த நாழிக்கு அப்படி கேட்டதென்பது எனக்கு குழப்பத்தைத் தந்தது.
'அல் முராஃபி' ஒரு சூப்பர் மார்க்கெட். ரியாத் புறநகர்ப் பகுதியான 'அல் நசீம்'-ல் உள்ளது. அதன் பர்ச்சேஸ் மேனேஜர்தான் போக்கர்! அவனைப்பற்றிதான் கேட்கிறார். மலையாளியான அவன் பெயர் பக்கர் குஞ்சு. பக்கர் குஞ்சு, வழக்கில் போக்கராகிப் போனான். எங்க மேனேஜருக்கு அவன் கூட்டுக்காரனும்கூட. வியாபாரரீதியில் எங்களுக்கு நிறைய ஆர்டர்கள் தரக்கூடியவன். அதற்கு ஈடாக மாதம்தட்டாமல் நாங்கள் தரக்கூடிய அன்பளிப்பு கவர் கனமானது! சிரிப்பற்ற அவனது முகத்தில் சிரிப்பை வரவழைப்பது! அவனது எத்தனையோ சௌதி சம்பாத்திய சந்தோஷங்களில் இதுவும் ஒன்று.
•Last Updated on ••Tuesday•, 22 •January• 2019 01:38••
•Read more...•
••Thursday•, 13 •December• 2018 00:25•
??- -ஸ்ரீராம் விக்னேஷ் (நெல்லை.,வீரவநல்லூர் --??
சிறுகதை
- இடங்கள்,காலங்கள்,அடிப்படைச் சம்பவங்கள் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு ஆக்கப்பட்ட, கற்பனைப் படைப்பு. -
1.
1973ம், 1974ம் வருட, 9ம்,10ம் வகுப்புகள் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் -
நான் தங்கியிருந்த “யாழ்.மத்திய கல்லூரி”யின் விடுதியும், அதாவது “ஹாஸ்ட” லும் ஊரோடொத்து உறங்கிக்கொண்டிருந்தது. மாடியிலுள்ள மண்டபத்தில்தான் எனது பெட்டி படுக்கைகளும், கட்டிலும் இருந்தன. நல்ல சொகுசான கட்டிலாக இருந்தும், இன்னும் தூக்கமே வரவில்லை.
எங்கள் விடுதிக்குத் தெற்கேயிருந்த, முதலாம் குறுக்குத்தெருப் பக்கமாக எங்கோ ஒரு மூலையில் நாய்கள் குரைத்துச் சத்தமிட்டுக்கொண்டிருந்தன.
தலையணைக்கு கீழே வைத்திருந்த ஒளிப்பேழையை, அதாவது “ டார்ச்லைட்”டை எடுத்து, பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த சகமாணவன் மூர்த்தியைக் கவனித்தேன். வாயைப் பிளந்தபடி நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான்.
சுவர்க் கடிகாரத்தை நோக்கினேன். அது ஏற்கனவே நேற்று மாலை ஐந்து மணிக்கே உறங்கிவிட்டது.
என்னிடமும் கைக்கடிகாரம் கிடையாது. அதிகாலை ஐந்து மணிக்கு விடுதிக் காவலர், அதாவது, ஹாஸ்டல் வாச்மேன் மணி அடிக்கும்வரை விடுதிக்குள் மின்விளக்கு, அதாவது லைட்டு போடக்கூடாது என்பது விடுதி நிர்வாகத்தின் கண்டிப்பான உத்தரவு. எனினும், மணியோ நான்கை அண்மித்துவிட்டால் குளியலறை, அதாவது, பாத்ரூம் சென்று நிம்மதியாகக் குளிக்கலாம். மற்றவர்களும் எழுந்துவிட்டால், போட்டி போட்டுத்தான் குளிக்கும் நிலை வரும்.
எங்கள் விடுதிக்கு - வடக்கே, சமீபமாகத்தான் மணிக்கூண்டுக் கோபுரம் எழுந்தருளியுள்ளது. நேரத்தைக் கவனித்தேன். எதிர்பார்த்தபடி நிலைமை சாதகமாகவே இருந்தது. ஆமாம்: மணி நான்கு.
“தமிழன் என்று சொல்லடா…. தலை நிமிர்ந்து நில்லடா….” என்று சொன்னவர், தலை நிமிர்ந்தாரோ இல்லையோ…. ஆனால், அந்த மணிக்கூண்டுக் கோபுரம் மட்டும் தலை நிமிர்ந்து நின்றது.
என் பார்வையின் கோணத்தை சற்று இடதுபுறம் திருப்பினேன். இந்தியாவிற்கு ஒரு தாஜ்மகால் கிடைத்தது போன்று, இலங்கையின் – முக்கியமாக யாழ்ப்பாணத்தின் தாஜ்மஹாலாக, சரஸ்வதியின் ஆலயமான யாழ். நூலகம்…. ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகமாக பிரகாசித்துக்கொண்டிருந்தது.
விடிந்தால் வெள்ளிக்கிழமை. இன்னும் ஒரு மணி நேரத்தில், காவலாளி மணியடித்துவிடுவார். காலையில், சக இந்து மாணவர்களோடு நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு போகவேண்டும். அதுவும், நடந்தே சென்றுவருவோம். எட்டுமணிக்கெல்லாம் விடுதிக்கு வந்து சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு கிளம்புவோம்.
•Last Updated on ••Thursday•, 13 •December• 2018 07:41••
•Read more...•
••Friday•, 07 •December• 2018 07:57•
??- முனைவர் ஆ.சந்திரன் -??
சிறுகதை
கிணற்றில் புதிதாய் வளர்ந்த மரத்தை அந்த ஊர் மக்கள் வந்து அதிசயமாகப் பார்த்தார்கள் என்றாலும், தங்களுடைய அவசரமான கடமைகளில் முழ்கியதால் அதை யாரும் பெருசாகக் கண்டுகொள்ளவில்லை. கையில் தடியுடன் தள்ளாடி வந்த ஒரு பாட்டி பாறையின் மீது படர்ந்திருந்த பச்சைப் பாம்புகள் போல் படர்ந்திருந்த கொடிகளை வணங்கிவிட்டு மெல்ல நடந்து சென்றவர் சரித்திரப் புகழ் மிக்க கோயிலில் இருந்த தெய்வத்தை வணங்கிச் சென்றார். அது அந்த ஊரில் இருந்த சிலருக்கு ஒருவித பதட்டத்தை அளித்தது. இது ஒரு பழைய கதை. இந்த விசயம் அந்த ஊரில் இருந்த சிலருக்கு மட்டுமே தெரியும் என்பதும் தனிக்கதை.
மெல்ல மெல்ல அவ்வாறான பல கதைகள் அந்த ஊரில் உள்ள மக்களின் நினைவுகளில் இருந்து காணாமல் போய்க்கொண்டிருந்தன.
ஊருணியாக இருந்த அந்த கிணற்றில் முதன் முதலில் யார் தம் வீட்டின் குப்பைகளைக் கொட்டினார்கள் என்பதே அப்போது யாருக்கும் நினைவில் இல்லை.
அப்போது நாட்டில் ஒரே கலவரம் நிலவியது. அந்தக் கலவரத்தில் அதுவரை அணிந்திருந்த வெள்ளை வேட்டிச் சட்டைகள் எல்லாம் குருதி படிந்து தன் வெண்மையைப் பறிகொடுத்தன.
கலவரத்தில் ஒருவன் இருளரக்கனைக் கண்டதாகக் கூறினான்.
அவன் பெயர் நிக்கிலாக்கி.
அவனது உரையாடலைச் செவிமடுக்க யாருக்கும் நேரம் கிடைக்கவில்லை.
உண்மையைக் கூற வேண்டுமென்றால் அவன் சொல்வது யாருடைய மூலைக்கும் எட்டவில்லை.
ஆனாலும் யாராவது ஒருத்தர் நான் சொல்லுவதைக் கேட்டுவிடுவார்களா?
நான் பார்த்துக்கொண்டிருக்கும் இருளரக்கனை அவர்களுக்கும் காட்டிவிட முடியாதா? என்று அவனுக்கு ஒரு நப்பாசை.
அதனால் அவன் தொடர்ந்து அவனைப்பற்றி மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
என்றாவது ஒருநாள் எல்லா மக்களும் இருளரக்கனையும் அவனது கூட்டாளிகளையும் கண்டுகொள்வார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு மெல்ல வர ஆரம்பித்தது.
அப்போது நிக்கிலாக்கி ஒரு படி மேல் சென்று கொண்டிருந்தான்.
யார் இந்த இருளரக்கன்? அவன் எங்கிருந்து வந்தான்?. எவ்வளவு காலமாய் இந்த ஊரை சூறையாடிக்கொண்டிருக்கிறான் என்று அவன் முன் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டிருந்தான்.
•Last Updated on ••Friday•, 07 •December• 2018 07:59••
•Read more...•
••Sunday•, 14 •October• 2018 21:53•
??- பொன் குலேந்திரன் (கனடா) -??
சிறுகதை
யாழ்ப்பாணத்தில் இருந்து நல்லூரூடாக பருத்திதுறைக்கு போகும் வீதியில் 8கி மீ தூரத்தில் கல்வியங்காடு.கிராமம் உள்ளது ஒரு காலத்தில் கள்ளிக்காடாக் இருந்த 700 ஏக்கர் கொண்டதாக ஒருந்த இக கிராமத்தின் பெயர் , காலப் போக்கில் மருவி கல்வியன்காடு ஆயிற்று . இக்கிராமத்தின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குவது விவசாயமாகும். கால்நடைச் செல்வங்களாக கறவைப் பசுக்களும், ஆடுகளும் இகிரமத்தில் வளர்க்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் பரராஜசேகர மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த போது கல்வியங்காடு அம்மன்னனின் அவைப் பிரதிநிதியான சூரியமூர்த்தி தம்பிரானின் ஆட்சிப் பொறுப்பின் கீழ் அமைந்தது எனக் கல்வியங்காட்டுச் செப்பேடு கூறுகின்றது.. கல்வியங்காடு சந்தைக்கு அருகே பல வருடங்களாக பலசரக்கு கடை நடத்துபவர் இராசையா அவரின் மகன் சிவகாந்தன் (காந்தன்) 8 கி மீ தூரம் நடந்து சென்று வண்ணார்பன்னையில் உள்ள யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றான். அவ்வளவு தூரம் நடந்து சென்று கல்வி பயில அந்தக் கல்லூரியை தெரிந்து எடுக்க வேண்டிய காரணம், . காந்தனின் தாய் மாமன் சிவலிங்கம் (சிவா) அந்த கல்லூரியில் படித்து,. அதன் பின் கொழும்பு பல்கலைக் கழகம் சென்று படித்து பொறியாளரானவர்
கொழும்பில் உள்ள வோக்கர்ஸ்(Walkers) தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்தார் . தன்னைப் போல் தன். மருமகனும் அக்கல்லூரியில் படித்து பொறியாளராக வரவேண்டும் என்பது அவர் விருப்பம் அதன் விளைவே காந்தன் என்ற சிவகாந்தன் மூன்று கிலோ நிறை உள்ள புத்கங்களை சுமந்து கொண்டு, வியர்வை சிந்த கல்லூரிக்கு படிக்கச் செல்வது அவனுக்கு கிடைத்த தண்டனை . கோப்பாயில் இருந்து வரும் அவனோடு படிக்கும் அவனின் இரு நண்பர்கள் சொந்தத்தில் சைக்கில் வைத்திருந்தார்கள். அவர்கள் ஒரு போதும் காந்தனை தங்களோடு சைக்கிளில் கல்லூரிக்கு வரும்படி கேட்டதில்லை.
யாழ்ப்பாணம், ஒரு விவசாய மாவட்டம். மற்றும் ஒரு பெரிய நடுத்தர மக்கள் தொகை ஆகியவை, பாரம்பரிய சைக்கில் கலாச்சாரத்தி லிருந்து ஒரு மோட்டார் சைக்கில் கலாச்சாரத்துக்கு , மாறியுள்ளது . யாழ்ப்பாண மக்களை சோம்பேறியாக்குவதற்கு புலம்பெயர்ந்தோரரே காரணம் என ஊடகங்கள் குற்றம் சாட்டின. சில பல்கலைக்கழக மாணவர்கள் தமது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில், மோட்டார்-பைக் மூலம் தனது வளாகத்திற்கு செல்கிறார். 1983 இல் உள்நாட்டுப் போரில் வெற்றிபெறுவதற்கு முன், ஒவ்வொரு வீட்டிற்கும் அநேகமாக ராலே பிராண்ட் சைக்கிள் பின்னுக்கு கரியரும், முன்னுக்கு ஒரு பாஸ்கட்டும் இரவில் வெலிங்டன் தியேட்டரில் இரண்டாம் ஷோ போக்குவரத்துக்கு தேவையான வடிவமாக இருந்தது , ஒரு கிராமத்திற்கு சராசரியாக ஒரு மோட்டார்-பைக்கைக் கொண்டது. வடக்கில் மோதல் கணிசமான பகுதியில் சிறிய அல்லது எரிபொருள் இல்லாமல், குடியிருப்பாளர்கள் எல்லா இடங்களிலும் பயணம் செய்ய சைக்கிள்களைப் பயன்படுத்தினர். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கிளிநோச்சிகு பலர் சைக்கிளில் பயணித்தனர். அதே நேரத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் தமது தினசரி போக்குவரத்துக்காக சைக்கிள்களையும் பயன்படுத்தினர். யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவர் . பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்தில் 32 கி மீ தூரத்தில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சைக்கிளில் சென்றார். . உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், ஒவ்வொரு வீட்டிலும் யாழ்ப்பாணத்தில் சராசரியாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இன்று வரை யாழ்ப்பாணத்தில் சுமார் 7௦௦௦0 மோட்டார் பைக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் 20% க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு மோட்டார் பைக்கை வைத்திருக்கிறார்கள்.. முன்னதாக ஒப்பிடும்போது யாழ்ப்பாணத்தில் ஒப்பிடும்போது எரிபொருள் நுகர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாண மக்கள் அன்றாடம் பொருளாதார ரீதியாகவும் பணக்காரர்களாகவும் பணியாற்றியுள்ளனர், அத்தியாவசியமான விடயங்களில் தமது பணத்தை செலவழித்துள்ளனர். இன்று யாழ்ப்பாண இளைஞர்கள் கனடா . அவுஸ்த்ரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் ஈழத்து புலம்பெயர்ந்தோரிடம் இருந்து சும்மா வரும் பணத்தில் வாழ்கின்றனர், மற்றும் சோம்பேறியாகி பொதை மருந்துக்கு அடிமையாகி பாலியல் வன்முறை செய்து வருகின்றனர். குற்ற செயலைப் புரிந்து விட்டு சில மாபியா குழுக்கள் விரைவில் தப்பி ஓட பெரும் உதவியாக மோட்டார் சைக்கில் இருக்கிறது என்பது பலரின் கருத்து
•Last Updated on ••Sunday•, 14 •October• 2018 21:56••
•Read more...•
••Sunday•, 14 •October• 2018 21:46•
??- - அண்டனூர் சுரா, புதுக்கோட்டை , தமிழ்நாடு - -??
சிறுகதை
பயணிகளின் கைகளில் பதினொறாம் விரலாக ஆண்ட்ராய்டு முளைத்திருந்தது. அவர்கள் முகநூல், வாட்ச்அப் இரண்டில் ஒன்றில் மூழ்கி தன்னைத் தானே கரைத்துகொள்வதாக இருந்தார்கள். பலரின் முகநூல் , வாட்ச்அப் புரோபைல் படமாக ஆஷிபா என்கிற காஷ்மீர் சிறுமியிருந்தாள்.
பலரின் கட்டை விரல்கள் ஆண்ட்ராய்டு திரையை கீழிருந்து மேல் நோக்கித் தள்ளுவதாக இருந்தது. ஒரு ஆணின் கட்டளைக்கு பயந்தோடும் பெண்ணைப்போல திரை கீழிருந்து மேல் நோக்கி ஓடியிருந்தது. ஓடிய அத்தனை வேகத்திலும் ஆஷிபாவின் முகம் மட்டும் தனித்து தெரிந்தது. கத்தரிப்பூ ஆடையில் ஆங்காங்கே மஞ்சள் நிறம் தெறிக்க ஆஷிபா தரையில் குப்புறக் கிடந்தாள். அது வெறும் புகைப்படம்தான் என்றாலும் அப்படம் பலரையும் இரங்க வைக்கவும், கோபமூட்டவும் செய்திருந்தது.
ஆஷிபா சிரித்த முகமாக இருந்தாள். பால்வடியும் முகம். கன்னங்கள் இரண்டும் தங்கக்கின்னங்களாக இருந்தன. உதடு நிறையும் சிரிப்பு. ரோஜா இதழ் சருமம். ஒன்றிரண்டு பேர் ஆஷிபாவை திரையில் நிறுத்தி பார்த்தவண்ணமிருந்தனர். சிலர் ‘ இச்...’ கொட்டிக்கொண்டார்கள்.
ஒருவரின் கையில் தினசரி இருந்தது. அதை நீள்வாக்கில் மடித்து ஆஷிபா முகம் தெரியும்படியாக வைத்துக்கொண்டு அவள் குறித்தச் செய்தியை வாசித்துக்கொண்டிருந்தார். ஒரு பெரியவர் தினசரியை எட்டிப்பார்த்துவிட்டு சொன்னார் ‘ ஏன்தான் இவள் குதிரையை தனி ஒருவளாக நின்று மேய்த்தாளோ...?’. அவருக்கானப் பதில் பின் இருக்கையிலிருந்து வந்தது. அப்பதிலைச் சொன்னவர் ஒரு பெண்ணாக இருந்தார் ‘ ஏன் மேய்த்தாலாம்..., அப்பன் பாக்கெட்டை நிரப்பத்தான்...’
முன்னவர் பின்னவரைத் திரும்பிப்பார்த்தார். ‘ என்ன இருந்தாலும் அவள் பெண். குழந்தை வேறு இல்லையா...?. காலம் கெட்டுக்கிடக்குது. ஒரு பெண், அதுவும் சிறுமி ஒத்தையாளாக குதிரை மேய்க்கப் போயிருக்க வேண்டியதில்லை என்கிறேன்...’
‘அதுக்காகப் போகிற இடமெல்லாம் பொம்பளைப்பிள்ள யாரையேனும் துணைக்கு அழைச்சிக்கிட்டேவா போகமுடியும்...’
‘ பின்னே வேண்டாமா...?’
‘ இப்ப இவ செத்து குழிக்கு போயிருக்காள், அவளுக்குத் துணையா யாரை அனுப்பி வைக்கிறதாம்..? ம்.....’ அவள் கேட்டக் கேள்விக்கு பெரியவரிடம் பதில் இருந்திருக்கவில்லை. கைகளைப் பிசைந்தபடி நின்றுகொண்டிருந்தார்.
•Last Updated on ••Sunday•, 14 •October• 2018 21:49••
•Read more...•
••Tuesday•, 28 •August• 2018 14:49•
??-ஸ்ரீராம் விக்னேஷ்- (வீரவ நல்லூர், நெல்லை மாவட்டம்)??
சிறுகதை
- தமிழகத்தில் வெளிவரும் பிரபல “தினமலர்” பத்திரிகையின் நிறுவனர் - அமரர். டி.வி.ராமசுப்பையர்அவர்களது, நினைவு தினத்தை முன்னிட்டு, வருடாந்தம் நடத்தப்படும், “அமரர்.டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப் போட்டி” வரிசையில், 1999ம் ஆண்டு, முதற் பரிசாக ரூ.7500 பெற்றுத் தந்த சிறுகதை இது. - ஸ்ரீராம் விக்னேஷ் -
“பாருப்பா, மனுசன் அம்பது வயசாகியும்,என்னமாதிரி பறந்து பறந்து நியூஸ் கவர்பண்ராரு….ரிப்போட்டர்ன்னா இப்பிடித்தான் இருக்கணும்….”
சீப் எடிட்டர் சீனிவாசன், தன் நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டதாக சப்-எடிட்டர் சாரங்கபாணி எனக்குச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்ட சம்பவம் நடந்து மூன்று மாதமாகிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நானும்,சாரங்கபாணியும் ஒன்றாகத்தான் இந்த தினசரிப் பத்திரிகையில் நிருபராகச் சேர்ந்தோம். எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கெல்லாம், ஒன்றாகவே சென்று செய்திகள் தொகுத்திருக்கின்றோம்.
அவரது எம்.ஏ., பட்டப்படிப்பும், எனது எஸ்.எஸ்.எல்.சி.யும் நாளடைவில் எங்கள் இருவரின் தொழில்ரீதியான அந்தஸ்தில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, அன்றய நட்பு இன்றும் நீடிக்கத்தான் செய்கிறது.
இருந்தும், கடந்த இரண்டு மாதமாக நிருபர் பணியில் நான் இல்லை.
நான் என்னதான் தவறு செய்துவிட்டேன்? எனது தவறாக அவர்களின் கண்ணிலே பட்டது என்ன?
மாற்றுப் பத்திரிகையொன்றில், பணிபுரியும் மனோகரனோடு பேசுவதும், பழகுவதும்தான்.
அந்த மனோகரன் எங்கள் பத்திரிகையில் சிலகாலம் பணி செய்தவர்.என்னைவிட பதினைந்து வயது இளையவர்.முன்னேறத் துடிக்கும் இளைஞர். அதைவிட, பத்திரிகைத்துறையில் எனது சீடரும் கூட.
இந்தச் சந்திப்பும், வார்த்தைப் பரிமாறல்களும் அடிக்கடி நடப்பதுதான்.
சமீபத்தில் ஒருதடவை மனோகரன் என்னைச் சந்தித்தபோது என்னிடம் கேட்டார்;
“சார்…. ஒரு வித்தியாசமான பேட்டி எடுத்திருக்கிறேன்….பிரிண்டிங்குக்கு குடுக்கிறத்துக்கு முன்னால ஒருதடவை உங்ககிட்ட காட்டி, உங்க ஒப்பீனியனைக் கேட்டு, கரெக்ஷன் பண்ணிட்டு குடுக்கலாம்னு நினைக்கிறேன் சார்…. லைட்டா கொஞ்சம் பாக்கிறீங்களா….”
வஞ்சகமில்லாத பேச்சுவார்த்தையில் குழந்தைத்தனம். நான் பக்குவமாகச் சொன்னேன்.
•Last Updated on ••Tuesday•, 28 •August• 2018 15:05••
•Read more...•
••Wednesday•, 01 •August• 2018 21:54•
?? - கடல்புத்திரன் -??
சிறுகதை
இங்கே வந்தவர்களில், இந்த இருபது வருசங்களில் எத்தனை பேர்கள் கழன்று போய் விட்டார்கள்..இப்ப, இவனும்? நினைக்க, நினைக்க மனசு. கனக்கிறது.
வந்த புதிதில் தேவன் வேலை செய்து கொண்டிருந்த உணவகத்திலேயே இவனும் வலது காலையை எடுத்து வைத்து "வேலைக்கு ஆட்கள் எடுக்கிறீர்களா?"என்று கேட்டுச் சேர்ந்திருந்தான் .உணவகத்தின் இயக்குனர் 'பில்' நல்லவர் ,கறுப்பினத்தவர் ! , கறுப்பர்களும் ஈழத் தமிழர்கள் போல. அடக்குமுறை களில் சதா சீரழிந்தவர்கள்.அவருக்கு ஈழத்தமிழர் மீது அனுதாபம்அந்த மாதிரி இருந்தது. .அவனின் சமூக எண்,மற்றும் வதியும் விலாசம்,தொலைபேசி எண் முதலானவற்றைக் குறித்து வைத்து ஒரு -ஃபைலைத் திறந்து அவனை வேலையில் சேர்த்து விட்டிருந்தார்,
“நாளையிலிருந்து நீ வேலைக்கு வரலாம், என்ன சொல்கிறாய் "என்று சிரித்தார்.அன்றைக்கே சேர்த்திருக்கலாம்.அவன் உச்சியைப் பிளக்கிற வெய்யில் சென்றது. தோல் எரிய, .களைச்சுப் போன முகத்துடன் இருந்தான். சுத்தம் முக்கியம்.அன்றன்றைக்கு வெளுத்த வெள்ளை சேட்,வெள்ளைக் நீள் கால்சாராய்க்கு மாறிக் கொண்டு, தலை மயிருக்கு நெட் தொப்பி போட்டுக் கொண்டு தான் வேலையை தொடங்குவார்கள். நண்பகல் வேளை வேர்வையில் குளித்திருந்தான் .ஃபிரஸ்ஸாக தொடங்க வேண்டும் என்று நினைத்தாரோ?
அடுத்த நாள் தான் அவனுக்குத் தெரிந்தது நுழைந்திருப்பது குட்டி யாழ்ப்பாணம் என்பது.எல்லாருமே கிட்டாரடியில் சேர்ந்தே, பிறகு பல்வேறு சமையல் பிரிவுகளிற்கு தரம் உயர்த்தப்பட்டு வேலை செய்துகொண்டிருப்பவர்கள்.தேவனுக்கு கோழிகளை நீளக் கம்பிகளில் கொளுவி 'அவனி'ல் செருகி ,வெந்ததும், மெசின் மணி அடிக்க,எடுத்து பிளாஸ்டிக் கூடையில் கொட்டுற 'குக்' வேலை. வெக்கையிலே அவனும் கூட கிடந்து வெந்து கொண்டிருந்தான்.
தேவனுக்கு சிரிச்ச முகம்.தோழமையுடன் கதைக்கிறதால்.அவனை பார்த்தவுடனேயே பிடித்து விட்டிருந்தது.
'கிட்டார'டியில் இருந்த சூரி அவனுக்கு வேலையை கற்றுக் கொடுத்தான். சிறிய வண்டிலில். மேல்,கீழ் தட்டுகளில் வைத்துள்ள பிளாஸ்டிக் கூடைகளில் ,வந்தவர்கள் சாப்பிட்டு விட்டுப் போகிற ...தட்டுக்க ளை,கிளாஸ்களை வெவ்வேறாக எடுத்து மெசினடிக்கு ஓட்டி வர வேண்டும்.
•Last Updated on ••Thursday•, 02 •August• 2018 00:10••
•Read more...•
••Monday•, 16 •July• 2018 10:37•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
நீண்ட நாட்களின் பின் நண்பனைச் சந்தித்தேன். வழக்கத்துக்கு மாறாக மகிழ்ச்சியுடனிருந்தான். இவனைக் கண்டதும் எனக்குப் பழைய ஞாபகங்கள் சில எழுந்தன. பதின்ம வயதினில் இவனொருத்தியின் மேல் காதல் மிகுந்திருந்தான். அதை அவளுக்கும் தெரியப்படுத்தியிருந்தான். அவளோ அதைத்தூக்கி எறிந்துவிட்டுச் சென்று விட்டாள். ஆனால் அவள் மீதான காதலை மட்டும் இவன் விடவேயில்லை. அவளையே நினைத்துக்கொண்டிருந்தான். எப்பொழுதும் அவனுடன் கதைக்கும்போதும் உரையாடலில் நிச்சயம் அவளது பெயரும் வரும். நீண்ட காலமாக அவளைப்பற்றிய தகவல்கள் கிடைக்காததால் அவன் பல்வேறு நினைவுகளில் மூழ்கியிருந்தான். யுத்தபூமியில் அவள் இன்னும் இருக்கின்றாளா என்றும் சந்தேகப்பட்டான். இந்நிலையில் யுத்தம் முடிந்தபின்னர் ஒரு சமயம் இவன் அவளை முகநூலில் சந்தித்தான். அவள் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றான். அவளுடன் தொடர்பு கொண்டான். அவள் குடும்பம், பிள்ளைகள் என்று நன்றாக இருப்பதை அறிந்து உண்மையில் மகிழ்ச்சி கொண்டான். அதனைக்காணும் சமயங்களெல்லாம் கூறுவான். இளமையில்அவளது காதல்தான் கிடைக்கவில்லையென்றாலும் முதுமையில் அவளது நட்பு கிடைத்தது தன் பாக்கியமே என்றான்.
அவனைப்பற்றி இவ்வளவு நினைவுகளும் மீண்டும் நினைவிலாடின. "என்னடா இந்தப்பக்கம். எப்படியிருக்கிறாய்?' என்றேன்.
"எனக்கென்ன குறை. நல்லாத்தானிருக்கிறன்" என்றவன் தான் எழுதி வைத்திருந்த கவிதையொன்றினைத் தந்தான். வாசித்துப் பார்த்தேன். 'சந்திப்பு' என்னும் பெயரில் எழுதப்பட்டிருந்த சிறு கவிதை அது.
•Last Updated on ••Monday•, 16 •July• 2018 14:47••
•Read more...•
••Saturday•, 07 •July• 2018 21:53•
?? - வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- "வேதாளம் சொன்ன 'சாட்' கதை" என்னுமிந்தச் சிறுகதை திண்ணை ஆகஸ்ட் 12, 2001 இதழில் வெளியான எனது சிறுகதை. நானே மறந்திருந்த இச்சிறுகதை அண்மையில் என் கூகுள் தேடலில் மீண்டும் வந்தகப்பட்டுக்கொண்டது. முனைவர் வெங்கட்ரமணனின் 'திண்ணைச் சிறுகதைகள் தேர்விலொரு சிறுகதையாக' அத்தேடலில் என்னை மீண்டும் வந்தடைந்த சிறுகதையிது. -
முற்றும் மனந்தளராத விக்கிரமன் வழக்கம் போல் முருங்கையிலேறி வேதாளத்துடன் இறங்கிய பொழுது, எள்ளி நகைத்த வேதாளம் அவனைப் பார்த்துப் பின் வருமாறு கூறத் தொடங்கியது.
‘ விக்கிரமா! நான் ஒரு கதை கூறப் போகின்றேன். இது சைபர் உலகு பற்றியதொரு கதை. இதற்கான கேள்விக்குாிய பதிலைத் தொிந்திருந்தும் நீ கூறாது விட்டாயானால் உன் தலை வெடித்துச் சிதறி சுக்கு நூறாகி விடும். ‘ இவ்விதம் ஆரம்பித்த வேதாளம் தன் கதையினைக் கூற ஆரம்பித்தது.
ராமநாதன் அன்று மிகவும் ஜாலியான மனோநிலையில் இருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் மனைவி பானுமதி வேலைக்குப் போய்விடுவாள். அவள் செய்வது ‘கிரேவ்யார்ட் சிவ்ட் ‘. நள்ளிரவிலிருந்து காலை வரை கனடாவின் பிரபல வங்கியொன்றின் தகவல் மையத்தில் வேலை. ராமநாதன் ஜாலியான மனோநிலையில் இருந்ததற்குக் காரணமிருந்தது. கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் ‘சாட் ‘டில் ஒரு சிநேகிதி அகப்பட்டிருந்தாள். இதுதான் அவன் முதன் முறையாக ஒரு பெண்ணுடன் சாட் செய்வது. கடந்த இரண்டு நாட்களாக ஒருவிதமான கிளூகிளுப்பு. புது மாப்பிள்ளை போன்ற உற்சாகம். அவனில் தொிந்த மாற்றத்தை பானுமதியும் கவனித்துக் கொண்டிருந்தாள்.ஆனால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பானுமதி வேலைக்கு இறங்குவதற்கு ஆயத்தமானாள்.
‘என்னங்க, அப்ப நான் போயிட்டு வரட்டா ‘
‘ம்.. ‘ ராமநாதன் கணினியை ‘ஆன் ‘ பண்ணினான்.
‘என்ன நான் சொல்லுவது காதில் விழுகிறதா ? ‘ பானுமதியின் குரலில் சிறிது கடுமை தொிந்தது.
‘குழந்தை கட்டிலோரத்திலை படுத்திருக்கு..பார்த்துக் கொள்ளுங்க…பால் கரைத்து வைத்திருக்கிறேன். அழுதாலெடுத்துக் குடுங்கோ.. ‘
‘ம்.. ‘
‘ உணவெல்லாம் வெளியிலை இருக்கு. சாப்பிட்டதும் ஃபிரிட்ஜிற்குள் வைத்து விடுங்கோ..என்ன ? ‘
‘டோண்ட் வொரி ஐ வில் மனேஜ் இட்.. நீர் போய் வாரும் ‘
‘இப்பிடித்தான் எப்பவும் சொல்லுவீங்க..விடிய வந்தால் எல்லாம் வெளியிலை கிடக்கும்.. எத்தனை தரம் கொட்டியாச்சு..கொஞ்சமாவது கவனம் இருக்குதாயென்ன ? ‘
•Last Updated on ••Saturday•, 07 •July• 2018 22:02••
•Read more...•
••Thursday•, 28 •June• 2018 05:59•
?? -ஸ்ரீராம் விக்னேஷ் -??
சிறுகதை
பஸ்சுக்குள் நான் ஏறி உட்காரவும், பஸ் புறப்படவும் சரியாக இருந்தது. நேரத்தைக் கவனித்தேன். அதிகாலை ஐந்து மணி. முல்லைக்குடிக்குச் சென்றடையும்போது, பகல் பத்துமணி ஆகிவிடும்.
உள்ளத்திலே ஒரு படபடப்பு.
சென்ற வாரம் ஊரிலிருந்து திரும்பும்போது, அப்பாவிடம் வழிக்குவழி சொல்லிவிட்டு வந்தேன்.
“பெரியப்பா வீட்டு ஆளுங்ககூட எந்தப் பிரச்சினையும் வேணாம்பா…..”
வந்து ஒரு வாரந்தான் ஆகின்றது. அதற்குள் நேற்று மீண்டும் தகராறு. அதிகாலை மூன்று மணிக்கு பாலுமாமா போன்பண்ணுகின்றார்.
நேற்றிரவு பதினொரு மணிபோல அப்பாவும், கூட நாலைந்து பேரும், கையில் ஆளுக்கொரு வீச்சரிவாள் எடுத்துக்கொண்டு பெரியப்பா இடத்துக்குப் போக, அங்கே அவர்களின் கையிலும் வீச்சரிவாள்….!
பெரியநங்கை ஏரிக்கரையில் விளையாடியிருக்கின்றார்கள்.
நல்லவேளை, உயிர்ச் சேதம் எதுவுமில்லை. படுகாயங்களுடன் முல்லைக்குடி ஆஸ்பத்திரியில் அனைவருமே அட்மிட்.
முல்லைக்குடியிலுள்ள “பெரிய நங்கை ஏரி” எங்களது குடும்பச் சொத்து.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை, எனது அப்பாவின் சந்ததியர்கள் நிலக்கிழார்களாக இருந்திருக்கின்றார்களாம்.
முல்லைக்குடி கிராமத்தின் முக்கால்பங்கினுக்கு மேல்பட்ட நிலங்கள் எங்களுக்கே சொந்தமாக இருந்தன.
வருடந்தோறும் மாரிகாலத்தில் ஏற்படுகின்ற அடைமழை காரணமாக முல்லைக்குடி குளத்திலே ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கால் முதலில் பாதிக்கப்படுவது எங்கள் வயல்களே.
இதனைத் தடுக்கவும், கோடைகாலத்துப் பாசனத் தேவைகள் கருதியும், சுமார் முப்பது ஏக்கர் பரப்பளவில், என் அப்பாவின் பாட்டியார் “பெரிய நங்கை” அவர்களின் காலத்தில், உருவாக்கப்பட்டதுதான் இந்த “பெரியநங்கை ஏரி”.
அவரின் ஒரே மகன்தான் எனது தாத்தா.
என் தாத்தாவுக்குத் திருமணமாகி, என் அப்பா பிறந்த பின்புதான் - தாத்தா பற்றிய ஒரு உண்மை தெரியவந்தது.
•Last Updated on ••Thursday•, 28 •June• 2018 06:04••
•Read more...•
••Thursday•, 22 •February• 2018 07:56•
?? - பொன் குலேந்திரன் – கனடா -??
சிறுகதை
இலங்கையில் “உடப்பு “என்றவுடன் நம் நினைவில் வந்து நிற்பது தீக்குளிப்பு திருவிழா, வில்லுப்பாட்டு, கரகாட்டம். கும்மி, கரை வலை இழுக்கும்போது மீனவர்கள் ஒத்து பாடும் அம்பா பாடலுமே . கரப்பந்தாட்டத்துக்கும் அக்கிராமம் பிரசித்தமானது.. தென்னிந்தியாவை முஸ்லீம்கள் ஆட்சிசெய்தபோது , 16ம் நூற்றாண்டில் மதுரை மங்கம்மாவுக்கும் இராமநாதபுரம் ராசாவுக்குமிடையே போர் மூண்ட நேரம் மதமாற்றத்துக்கு பயந்து 18 குடும்பங்கள் 12 வள்ளங்களில் புலம் பெயர்ந்து, நன்நீர் தேடி. கற்பிட்டி. உடப்பு ஆனவாசல் முதல் கலாஓய வரை குடியேறினர் இவர்கள் வீரமிக்க திடகாத்திரமான மக்கள். மன்னாருக்கும் புத்தளத்துக்கும் இடைப்பட்ட பகுதி ஒரு காலத்தில் செழித்து திகழ்ந்தது. தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய இவர்கள் தங்கள் குல தெய்வம் ஸ்ரீ திரௌபதையம்மனுக்கு கோயில் அமைத்து வழிபட்டனர். மீன் பிடித்தலும் முத்துக்குளித்தலும் இவர்கள் தொழில் .. இக்கிராமத்தை சுற்றி பௌத்தர்களும், கத்தொலிக்ர்களும், இஸ்லாமியர்களும் வாழும் பல சிங்கள கிராமங்கள் உண்டு , வடமேல் மாகாணத்தில், கொழும்பு புத்தளம் வீதியில் பத்துளு ஓயாச்சந்தியிலிருந்து வடமேற்காக 4 மைல் தூரத்தில் இந்து சமுத்திரத்தின் கரையோரத்தில் உடப்பு கிராமம் அமைந்துள்ளது. ஏறக்குறைய 4000 தமிழ் குடும்பங்கள் இவ்வூரில் வாழ்கின்றன. இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலானோர் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள். இவ்வூரின் தெற்கே குறுமண்கழி என்ற கடலுடன் தொடர்பற்ற உப்புநீர் நிறைந்த அளமும் . கிழக்கே ஒல்லாந்தரின் வெட்டுவாய்க்காலும் , வடக்கே இவ்வூரார் வாழும் ஆண்டிமுனைக் கிராமமும் , மேற்கே இந்து சமுத்திரமும் காணப்படும். கொழும்பையும் புத்தளத்தையும் இணைக்கும் நீர்பாதையாக ஒல்லாந்தரின் வெட்டுவாய்க்கால் அமைந்துள்ளது. முற்காலத்தில் சரியான பாதைபோக்குவரத்து இல்லாத காரணத்தால் இவ்வாய்க்கால் வர்த்தகப் பொருட்கள் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது. ஊருக்கு ஒரு மைல் தூரத்தில் உள்ள ஆண்டிமுனையில், கடற்கரையோரத்துக்கு அன்மையில் நன்னீர் ஊற்றுகளும் குளிக்கும் கிணறுகளுமுண்டு. இவ்வூருக்கு அண்மையில் உள்ள பத்துளு ஓயாவென்ற ஆற்றின் முனையில் உள்ள மண்ணை நீக்க உடைப்பு ஏற்படுத்தி ஆற்றின் வெள்ள நீர் கடலுக்குபாச்சுவதன் மூலம் புத்தளம் முதல் ஆனைவிழுந்தாவ பிரதேசங்கள் வரையுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாற்றப்படகின்றன. ஆற்றின் முனையில் உள்ள உடைப்பே பின் மருவி உடப்பாகியதென்பது பலர் கருத்து.
பழந் தமிழரின் தொன்மையான கலைகளுள் வில்லுப்பாட்டு. இந்தக் கிராம மக்களின் பிரதான இசைக் கலைகளில் ஓன்று வில்லைப் பிரதான இசைக் கருவியாகவும்,உடுக்கை, குடம், தாளம், கட்டைஹார்மோனியம் போன்றவற்றைத் துணைக் கருவிகளாகவும் கொண்டு இசைக்கப்படுவது வில்லுப்பாட்டு. அதோடு அக்கிராம பெண்கள் நாட்டுப் பாடல்கள் பாடுவதில் சிறந்தவர்கள். பொதுவாகப் புராண இதிகாசக் கதைகளும் கட்டபொம்மன் கதை, காந்தி மகான் கதை, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.கதை,பாரதி கதைகளும் வில்லுப் பாட்டாகப் பாடப் படுவதுண்டு. தெம்மாங்கு முதலான நாட்டுப்புறப் பாடல் மெட்டுக்களும் கூத்துப் பாடல் மெட்டுக்களும் வில்லிசையிற் கையாளவதில் பெரியதம்பி சோமஸ்கந்தர் உடப்பு கிராமத்தில் புகழ் பெற்றவர். அவருக்கு ஆசான் அவருடைய தந்தை பெரியதம்பி. கந்தர் என்று ஊர் வாசிகலாள் அழைக்கபடும் சோமஸ்கந்தர் அரச சேவையில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1950 இல் ஆசிரிய நியமனம் பெற்று கொழும்பில் தங்கியிருந்து பணியாற்றிய காலத்தில் திரைப்படநடிகரும் வில்லிசையாளருமாகிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் தொடர்பு இவருக்குக் கிட்டியது. நாடக உத்திகளையும் வில்லிசை நுட்பங்களையும் கலைவாணிரிடமிருந்து கற்றுக்கொண்ட கோவில்களில் வில்லிசை நிகழ்ச்சியை நடத்தினார்
•Last Updated on ••Thursday•, 22 •February• 2018 08:05••
•Read more...•
••Friday•, 16 •February• 2018 08:56•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- இச்சிறுகதை ஏற்கனவே 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. தற்போது எனது முகநூல் நண்பரும், பல தமிழ்ப்படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்தவருமான எழுத்தாளர் ஜி.ஜி..சரத் ஆனந்த அவர்கள் இச்சிறுகதையினையும் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்துள்ளார். இதுபற்றிய தகவலை அவர் அறியத்தந்திருந்தார். இதற்காக அவருக்கு எனது நன்றி. -
அதிகம் நடமாட்டமில்லாமலிருந்தது அந்த 'பார்'. வியாழன் வெள்ளியென்றால் களை கட்டி விடும். திங்களென்றபடியால் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. ஓரிருவர்களேயிருந்தார்கள். 'சிக்கன் விங்ஸ்'உம் 'பட்வைசர்' பியரையும் கொண்டுவரும்படி 'வெயிட்டரிடம்' கூறிவிட்டுச் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தேன். நினைவெல்லாம் வசுந்தராவே வந்து வந்து சிரித்துக் கொண்டிருந்தாள். என் பால்ய காலத்திலிருந்து என் உயிருடன் ஒன்றாகக் கலந்து தொடர்ந்திருந்த பந்தம். இருபது வருடத் தீவிரக் காதல். எனக்குத் தெரிந்த முகவன் ஒருவன் மூலம் அண்மையில் தான் கனடா அழைத்திருந்தேன். அவ்விதம் அழைத்ததற்காகத் தற்போது கவலைப் பட்டேன். அவளது வாழ்க்கையை மட்டுமல்ல என் வாழ்க்கையையுமே சீரழித்து விட்டேனா? இவ்வளவு நாள் பொறுத்திருந்தவன் இன்னும் சில வருடங்கள் பொறுத்திருக்கக் கூடாதா? எனக்குக் கனடா நாட்டு நிரந்தரக் குடியுரிமை கிடைத்ததும் முறையாக அவளை அழைத்திருக்கலாமே. ஒரு விதத்தில் அவளுக்கேற்பட்ட இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமாக இருந்து விட்டேனே. இது போன்ற பல சம்பவங்களைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தேன். ஆனால் எனக்கு இவ்விதம் ஏற்படுமென்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லையே.
அந்த முகவன் திருமணமானவன். பார்த்தால் மரியாதை வரும்படியான தோற்றம். அதனை நம்பி ஏமாந்து விட்டேன். வசுந்தராவின் பயணத்தில் வழியில் சிங்கப்பூரில் மட்டும் தான் ஒரு தரிப்பிடம். தனது மனைவியென்று அவளை அவன் அழைத்து வருவதாகத் திட்டம். பொதுவாக இவ்விதம் பெண்களை அழைத்து வரும் சில முகவர்கள் சூழலைப் பயன்படுத்தி, ஒன்றாகத் தங்கும் விடுதிகளில் வைத்துப் பல பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகக் கதைகள் பல கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் எனக்கே இவ்விதமேற்படுமென்று நான் நினைத்துப் பார்த்தேயிருக்கவில்லை. கனடா வந்ததும் வசுந்தரா கூறியதும் என்னால் நம்பவே முடியவில்லை. இவர்கள் இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்திருக்கின்றார்கள். அருந்தும் பானத்தில் அவன் போதை மருந்தொன்றினைக் கலந்து கொடுத்து இவள் மேல் பாலியல் வல்லுறவு வைத்திருக்கின்றான். மறுநாள் தான் இவளுக்கே தெரிந்திருக்கின்றது. அது மட்டுமல்ல. இவள் விரும்பினால் இவளைத் தொடர்ந்து 'வைத்திருப்பதாக'க் கூடக் கூறியிருக்கின்றான். இவன் இது போல் ஏற்கனவே வேறு சில பெண்களுடனும் இவ்விதம் நடந்திருக்கின்றான். அவர்களிலொருத்தி இங்கு புகார் செய்து தற்போது சிறையிலிருக்கின்றான்.
இப்போது என் முன் உள்ள பிரச்சினை......வசுந்தராவை ஏற்பதா இல்லையா என்பது தான். ஐந்து வயதிலிருந்தே இவளை எனக்குத் தெரியும். ஒன்றாகப் பாடசாலை சென்று, படித்து, வளர்ந்து உறவாடியவர்கள். இவளில்லாமல் என்னாலொரு வாழ்வையே நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால்...இவளது இன்றைய நிலை என் மனதில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தி விட்டதென்னவோ உண்மைதான். தத்துவம் வேறு நடைமுறை வேறு என்பதை உணர வைத்தது இவளுக்கேற்பட்ட இந்தச் சம்பவம். பார்க்கப் போனால் தவறு இவளுடையதல்லவே. ஒரு விதத்தில் நானும் காரணமாகவல்லவா இருந்து விட்டேன்....
'நண்பனே. நான் உன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளலாமா?"
•Last Updated on ••Monday•, 16 •December• 2019 00:59••
•Read more...•
••Thursday•, 15 •February• 2018 17:57•
?? சுதாராஜ் -??
சிறுகதை
மயிலண்ணையைக் காணவில்லை!
இதிலேதான் படுத்திருந்தார்… விறாந்தையில்! படுத்த பாய் விரித்தபடி கிடக்கிறது. ஆளைக் காணோம்! எங்கே போயிருப்பார்… இந்த இரவு நேரத்தில்?
விறாந்தையில் எனது படுக்கையிற் கிடந்தவாறே விழிகளாற் துளாவி முற்றத்தைப் பார்த்தேன். வெளியே இருளில் மறைந்து மறைந்து ஓர் உருவம் அசைவதுபோலத் தெரிகிறது. அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார் மயிலண்ணை?
நல்ல உன்னிப்பாகக் கவனித்தேன். அட, அது மயிலண்ணையில்லை… மங்கலான நிலா வெளிச்சத்தில் காற்றில் அசையும் செடிகளின் நிழல்கள் யாரோ அசைவதைப் போலத் தோற்றமளிக்கிறது!
வாசற்படியில் நாய் படுத்திருக்கிறதா என எட்டிப் பார்த்தேன். வீட்டிலிருந்து யாராவது இரவில் வெளியே இறங்கிப் போனால் நாயும் பிறகாலே போய்விடும். திரும்ப வந்து அவர்கள் படுத்த பிறகுதான் அதுவும் படியிலே படுத்துக்கொள்ளும். நாய் அங்கேதான் கிடக்கிறது. அப்படியானால் மயிலண்ணை வெளியேயும் போகவில்லை. உள்ளேயும் இல்லையென்றால் ஆளுக்கு என்ன நடந்தது?
அம்மாவை எழுப்பி விஷயத்தைச் சொல்லலாமா என எண்ணினேன். அம்மா எவ்வித அங்க அசைவுகளுமின்றி ஒரு பக்கம் சரிந்த வாக்கில்… நல்ல உறக்கம் போலிருக்கிறது. எத்தனை நாட்கள் கெட்ட உறக்கமோ?
'தம்பி உன்னை நினைச்சு நினைச்சு ராவு ராவாய் நித்திரையில்லையடா!"
'சும்மா கனக்க யோசிச்சு மண்டையைப் போட்டு உடைக்காதையுங்கோ… நான் அரசாங்க உத்தியோகக்காரன் எண்டு அத்தாட்சி காட்டினால் பிடிக்கமாட்டாங்கள்."
அம்மாவின் ஆறுதலுக்காக இப்படிச் சொல்லுவேன். சிறிய அரச உத்தியோகத்துக்காக கிளிநொச்சி வந்தவன் நான். மிகுதி நேரத்தில் விவசாயத்தில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தில் கிளிநொச்சியிலே காணி வேண்டி வீடு கட்டி ஸ்திரமானவன்.
'நல்ல கதை பேசுகிறாய்… உன்ரை வயசில எத்தனை பெடியளை.. அவங்களும் அரசாங்க உத்தியோகக்காறர்தானே… பிடிச்சுக்கொண்டு போனவங்கள்.. பிறகு என்ன கதி எண்டு இன்னும் தெரியாது!"
நடுச் சாமங்களிலும் இருள் அகலாத விடியப்புற நேரங்களிலும் தேடுதல்வேட்டை நடக்கிறது. இதனால் அம்மாவுக்கு உறக்கமில்லை. என் வயசு நல்ல பதமான வயசு! அம்மா எனக்காக கண்களில் எண்ணெயை ஊற்றிக் காத்திருப்பாள். படலைப் பக்கம் போய் ஏதாவது அசுகை தென்படுகிறதா என்று பார்த்திருப்பாள். நான் உறங்கும் பொழுதெல்லாம் அவள் விழித்திருப்பாள்.
இதனால் அம்மாவின் நித்திரையைக் குழப்ப மனம் வரவில்லை. இன்னும் சற்று நேரம் பொறுத்திருந்து பார்க்கலாம்… மயிலண்ணையின் கதி என்னவென்று.
மயிலண்ணை எனக்கு நெடுநாட் பழக்கமுடையவரல்ல.
•Last Updated on ••Thursday•, 15 •February• 2018 17:59••
•Read more...•
••Friday•, 29 •December• 2017 08:39•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
பொன்னம்பி அவனிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தான்."நீ (அரசியல்)அமைப்பிலே வேலை செய்யாமல் வெளியிலே போய் பயிற்சி எடுக்கணும் என்று அவசரப்படுகிறாய்.உனக்குத் தெரியுமா, இங்கே(தளத்திலே) வேலை செய்வது தான் முக்கியமானது,ஒரு காலத்தில் உணர்வாய்!"என்றான். இதையெல்லாம் நின்று நிதானிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை..
.மனோவும் ,சதிஸும் ...கிராமத்திலிருந்து பயிற்சிற்குச் சென்ற பிறகு இவனுக்கு மன அலைகள் அடிப்பது அதிகமாகியிருந்தன.
.மனோ,அவனுடன் சிறு வயதிலிருந்து படித்த நல்ல நண்பன்.சதாசிவம் வாத்தியாரின் பல பிள்ளைகளில் ஒருத்தன். ரமேஸினுடைய அம்மாவும் அங்கே படிப்பிக்கிற சந்திரா ஆசிரியை தான். சதிஸ் கிராமத்தில் இருந்து வட்டுக்கோட்டையில் படித்திருக்கிறவன். மனோவிற்கு நண்பன். எனவே இவனுக்கும் பழக்கம் . பிறகு, வேற வேற பள்ளிக்கூடங்களிற்கு படிக்கப் போய் ....இப்ப காலமும் நிறைய மாறி… விட்டிருக்கிறது சதீஸ் பட்டப்படிப்புக்கு தெரிவாகி பல்கலைக்கழகத்தில் . படிக்கிறவன்.
முதல் நாள் அமைப்புத் தோழர்களான பொன்னம்பியும், ரகுவும் வந்திருந்தவர்களின் புனை பெயரின் கீழ் (விபரங்களை) சிறு குறிப்புக்களை திரட்டிக் கொண்டிருந்தார்கள். பொன்னம்பிக்கு இவனை ஏனோ பிடித்திருந்தது. நண்பனாகி ...இந்த கேள்வியை எழுப்புகிறான்.
இவனுக்கு எப்படி ஒரு விடுதலை அமைப்பு இயங்கிறது என்பதே தெரியாதவன். ‘போராளிகள்’ ஆயுதம் தூக்கியவர்கள் எண்ணமே அவன் மனதில் இருக்கிறது. எனவே, விடுதலையைப்பற்றி தெரிவதற்காகவும் இங்கே வீட்டை விட்டு ஓடி வந்திருக்கிறான். இப்ப, விடுதலை விசயங்கள் தெரியாத மாதிரி….,அப்ப, படிக்கிற காலத்திலே விளையாட்டின் அவசியமும் அவனுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது. கிராமப் பள்ளிக்கூடம் என்பதால் மாற்றாந் தாயின் பிள்ளைகள் போன்ற புறக்கணிப்புக்கள் அதிகம், ஆசிரியர்கள் பற்றாக்குறைகள், சுகாதாரம்,கணிதம், விஞ்ஞானம்... என எடுக்கிறவரான லிங்கம் மாஸ்ரர் தமிழ்ப்பாடம் எடுக்கிறார் (இவர் பத்திரிகையில் எழுதுறவர் என்பதால்,அதிபர், ஒருமாதிரி அவரை பப்பாவில் ஏற்றி, மடக்கிப் பேசி... சாதித்து விட்டார்). உடற் பயிற்சிக்கென ஒரு ஆசிரியர் இல்லை. எனவே, அங்கே மற்றைய கிராமப் பள்ளிக்கூடங்களைப் போல கால்பந்து,கிரிகெட்(கொக் போலில் வேறு விளையாட வேண்டும்,நினைத்துப் பார்க்கவே வேண்டாம்),எல்லே.. என …விளையாட்டுக் குழுக்கள் (டீம்கள்)ஒன்றிரண்டு கூட எழவில்லை. இருந்திருந்தால் மாணவர்கள் அதில் பங்கு பற்றியிருப்பார்கள். இவற்றை விட சாரணர்,பொலிஸ், ஆமிக் கடேஸ் என அமைப்புகளும் இருக்கின்றன. கிராமங்கள் அவற்றைக் கனவில் தான் பார்க்க வேண்டும். இவற்றை விட இலக்கியக்குழுக்கள் என கலை விழாக்களை நடத்துறவையும் இருக்கின்றன. நகரத்தினரை விட கிராமத்தவர்களில் கதைப்புத்தகங்கள் வாசிக்கிற பழக்கம் குறையுறதுக்கும் இதுவும் காரணம்.
•Last Updated on ••Friday•, 29 •December• 2017 08:44••
•Read more...•
••Wednesday•, 13 •December• 2017 19:23•
??- சுதாராஜ் -??
சிறுகதை
பஸ் வந்து நின்றது. இந்த பஸ்ஸில் ஏறுவதா விடுவதா என்பதுதான் இவரது பிரச்சினை. இது இவர் போகவேண்டிய பஸ்தான். ஆமர்வீதிச் சந்தியிலிருந்து தெகிவளை வரை போகவேண்டும். அதற்கான சில பஸ்கள் ஏற்கனவே வந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு போய்விட்டன. இவர் எதிலும் ஏறவில்லை. பஸ்ஸில் நெருக்கடிகூட இல்லை. இவர் குழம்பிப் போய் நின்றார். இப்போது வந்து நிற்கிற இந்த பஸ்ஸில் ஏறுவதா வேண்டாமா?
சனிக்கிழமையாதலால் மதியம் ஒருமணியுடன் வேலை நேரம் முடிந்து விட்டது. பசி வயிற்றைப் பிடுங்கியது. ஏனைய நாட்களில் மனைவி அதிகாலையிலேயே சமைத்து ஸ்கூலுக்குப் போகும் பிள்ளைகளுக்கும் கொடுத்து> இவருக்கும் சாப்பாட்டுப் பார்சலைத் தந்துவிடுவாள். சனிக்கிழமைகளில் அதிகாலைச் சமையலுக்கு ஓய்வு. வீட்டுக்குப் போய்ச் சேர இரண்டு இரண்டரைக்கு மேலாகிவிடும். அங்கு இங்கு என்று நிற்காமல் விறு விறுவென பஸ் நிறுத்;தம்வரை நடந்தார்.
வெயில் தலையைச் சுட்டெரித்தது. இவருக்குத் தலைமுடி குறைவு. தலையைத் தொட்டு தடவிக்கொண்டு நடந்து வந்தார். தெரிந்தவர்கள் ஓரிருவர் தென்பட்டாலும் நிற்காது அவர்களுக்கு ஒரு முகஸ்துதிச் சிரிப்பை மட்டும் காட்டிக்கொண்டு வந்தார். இந்தவிதமான சிரிப்பு அவரிடம் எப்போதும் ரெடியாக இருக்கும்.
எல்லோருக்கும் அவசரம். தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ யாராயிருந்தாலும் வீதியின் இரு மருங்கும் ஏதோ ஒரு வேகத்தில் போய்க்கொண்டேயிருந்தார்கள். வாகனங்கள் என்றால் அதைவிட மோசம். அவை யாரையும் பொருட்படுத்தாமல் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக ஓடிக் கொண்டிருந்தன. அவர்கள் அவற்றையும் பொருட்படுத்தாமல் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் வீதிக்குக் குறுக்காகப் போகிறார்கள். என்ன அவசரமென்றாலும் இவர் மஞ்சள் கோடு போட்டிருக்கும் இடத்தில் நின்று பார்த்து வாகனங்களற்ற வேளையிற்தான் வீதியைக் கடந்து மறுபக்கம் போவார். அப்படி எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுள்ள மனுசன்தான் இவர். இன்றைக்கு ஏன் இப்படி…?
பஸ் நிறுத்தத்துக்கு வந்து பேஸைக் கையிலெடுத்தபோதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. என்ன தேவையேற்பட்டாலும் பஸ்ஸிற்குரிய காசை வேறாக வைத்திருப்பார். இன்று அந்த வழக்கம் தவறிவிட்டது. பேஸில் பத்து ரூபா மட்டும் இருந்தது. தெகிவளைவரை போவதற்கு இது போதாது.
இந்த நிலைமைக்கு அந்தப் பெண்தான் காரணமோ?
•Last Updated on ••Wednesday•, 13 •December• 2017 19:25••
•Read more...•
••Monday•, 11 •December• 2017 18:52•
?? - எஸ். அகஸ்தியர் -??
சிறுகதை
அதிகாரத்துவம் கல்வித் தரத்தை ஒரே மட்டத்தில் அமைத்தபோது. அதன் ‘தரப்புள்ளி’களில் ‘குல்லா’ மாட்டி. ‘இனப்பாகுபாடு’ வைத்த, தமிழ் மாணவர் சிரங்களையே கொய்கின்ற ‘தரப்படுத்தல்’ வாளை வீசியபோது, அது தன் இனத்துக்கு விட்ட சவாலெனக் கருதி, இவன்போல் சக மாணவ உலகமே கெம்பியது.
மேசை கொள்ளாமல் சிதறுண்டு கிடக்கிற புத்தகங்கள் - கொப்பிகள் - நோட்ஸ் தாள்களை ஒழுங்கு பண்ணி அழகாக வரிசைப் படுத்தவும் அவன் மனசு ஏவுகிறதில்லை – நேரமில்லை.
ஒரே கரிசனையோடு வாசிப்பு.
புத்தகம் விரித்தால், ‘போல்ட்பென்’ எடுத்தால் அததிலேயே ஆழ்ந்துவிடுகிற போக்கு.
‘எலாம்’ வைத்த மணிக்கூடு ‘கிணிங்’கிட்டால் புரைகிற தேகம் எப்பன் சிலும்பும். நிலை குலைந்து தலை நிமிர்த்தும்போது மணிக்கூட்டை நுணாவின கண்கள் சாடையாக அறையை மேயும்.
சுருட்டி மூலைப்பாடத்தே கிடக்கிற பாய் கும்பகர்ணனை நினைவு படுத்தி வெருட்டும் - அசையான்.
அத்தோடு நேர சூசிப்படி அடுத்த கொப்பி – புத்தகம் எடுபடும் -விரிபடும்.
எரிகிற விளக்கு அணைகிற சாயல் மண்டி வருகிற இருளாக உணர்த்துகிறபோதுதான், அம்மா, லாம்புக்கு எண்ணெய் விட்டுக் கொளுத்தித் தாங்கோ என்ற குரல் கீறலாகக் கமறி வரும்.
படிக்கவென்று குந்தினால் ஒரே இருக்கை – கதிரை புண்டுவிட்டது. அதன் கவனிப்பும் இல்லை. பிரப்ப நார் பிய்ந்து சிலும்பாகிக் குழிபாவிய நிலையிலும் குறாவி இருந்து ஒரே வாசிப்பு – வைராக்கியத்தோடு.
முழு விஸ்வாசத்தோடு தன்னை மாய்த்து என்னைப் படிப்பிக்கிற அம்மாவுக்கு – பெண் பிறவிகளுக்கு நான்தான் ஒரு ஆறுதல்’.
எப்பவும் அவன் மனசில் ஒரு குடைவு.
மைந்தன் படிப்பில் மூழ்குகிற கோலத்தை, அவள் - தாயானவள், கதவை நீக்கிவிட்டு வயிறு குதற – நெஞ்சு புரைய, ஒரு தவிப்போடு கண்ணூனிப் பார்ப்பான்.
அவளை மீறி எழும் பெரும்மூச்சு இதயத்துள் கழித்து அடங்கும். சிலவேளை கொட்டாவியோடு கண்ணீர் சிதறும்.
அவள் இடையறாது சொல்லிக்கொள்வாள்.
மூண்டு பெண் குஞ்சுக்க இது ஒரு ஆண் தவ்வல். அஞ்செழுத்தும் தேப்பன்தான். மேலைக்கு நல்லாப் படிச்சு ஒரு ‘ஆளா வந்திட்டுதெண்டா - இதை ஒரு ‘ஆளாக்கி’ப்போட்டனெண்டா, நிம்மதியாக கண்மூடியிடுவன்.
ஆதங்கம் அந்தரிப்பாக அவள் நெஞ்சு குதிக்கும்.
எந்த நேரமும் - நெடுக, நெடுக இப்படித்தான்.
‘இந்த முறை கட்டாயம் ‘கம்பசு’க்கு எடுபடுவன்’ என்ற திட மனம் அவன் நெஞ்சில் வஜ்ஜிரம் பாய்ச்சியிருக்கிறது.
•Last Updated on ••Monday•, 11 •December• 2017 18:58••
•Read more...•
••Saturday•, 04 •November• 2017 13:06•
??- சுதாராஜ் -??
சிறுகதை
மூச்சு வாங்க வாங்க சைக்கிள் பெடலை மிதித்தார். விரைவாக வீட்டுக்குப் போகவேண்டும். வயதான மனைவியின் நினைவுகள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. நோய் நிலைமை எப்படியோ…. ஏதாவது சாப்பிட்டிருப்பாளோ! மருமகள் ஏதோ ஒரு வழி பார்த்து சாப்பாடு கொடுத்திருப்பாள் எனச் சமாதானமடைய முயன்றார். அடுத்த கணமே துணுக்குறும் மனசு. பாவம்.. அவள்தான் என்ன செய்வாள்? தன் மூன்று குஞ்சுகளின் வயிற்றுப் பாட்டையும் பார்க்கமுடியாமல்.. தானும் மெலிந்து எலும்பும் தோலுமாகப் போனாள். பிள்ளைகளின் பட்டினியைத் தாங்காமால் அவள் அடிக்கடி சொல்வதும் நினைவில் வந்தது.
'நாங்கள்தான் பெரியாக்கள் எப்படியாவது கிடக்கலாம்! சின்னஞ்சிறுசுகள் என்ன செய்யும்?"
எவ்வளவு இலகுவாகச் சொல்லியாயிற்று. பெரிய ஆட்கள் எப்படியாவது கிடக்கலாம் என்று! எப்படிக் கிடப்பது? சைக்கிள் பெடலை மிதிக்க மிதிக்க இழைக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி வரை போய்த் திரும்புவதற்குள் பதினைந்து.. இருபது மைல் வரை அலைந்திருக்கிறார். அப்புவுக்கு எழுபத்திரண்டு வயதானாலும் தளராதிருந்த மேனி. வேலை செய்து இறுகிய உடம்பு. இப்போது ஆட்டம் காண்கிறது. ஊட்டச்சத்து இல்லை. அன்றாடம் ஒருவேளை சாப்பிடக் கிடைப்பதே பெரிய புண்ணியம். பசி மயக்கம் கால்களுக்கு நடுக்கத்தைக் கொடுக்கிறது. தலை சுற்றுகிறது. எதிலாவது சற்றுப் பிடித்துக்கொண்டு நிற்கவேண்டும். இளைப்பாற வேண்டும். 'ஏதாவது பாத்துக்கொண்டு வாறன்!" எனக் காலையில் புறப்பட்டு வந்தவருக்கு ஒரு இடத்திலும் பணம் புரளவில்லை. மனைவியின் நோய் பரிகாரம் செய்யப்படாமல் நாளுக்கு ஒரு வியாதியாகப் பரிமாணம் எடுக்கிறது. மூச்செடுக்கக் கஷ்டப்படுகிறாள். நெஞ்சுவலி.. இருக்க, எழும்ப யாராவது பிடித்துவிடவேண்டியுள்ளது. மிக முயன்று ஒவ்வொரு அடியாக அளந்து வைப்பதுபோலத்தான் நடக்கமுடிகிறது. இப்படியே விட்டால் என்ன செய்யுமோ என அவருக்குப் பயமாக இருக்கிறது. ஒருவேளை தன்னைவிட்டு அவள் போயே போய்விடுவாளோ? நல்ல ஸ்பெஷலிஸ்ட் டொக்டரிடம் அவளைக் காட்டவேண்டும். மருந்து எடுக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும்! பல இடங்களிலும் அலைந்து.. இறுதி முயற்சியாக, தான் வேலை செய்யும் தோட்டக்காரரிடம் போனார்.
'என்ன அப்பு.. இந்த நேரம்?"
விஷயத்தைச் சொன்னார்.
'ஒரு நூறு ரூபாய் தந்தியளெண்டால் பிறகு வேலை செய்யிறதிலை கழிச்சுவிடலாம்!"
•Last Updated on ••Wednesday•, 13 •December• 2017 19:24••
•Read more...•
••Wednesday•, 04 •October• 2017 16:49•
??- சுதாராஜ் -??
சிறுகதை
லிஃப்ட் இல்லாத மாடிப்படிகளில் ஏறி மூன்றாவது தட்டுக்கு வந்து கோலிங் பெல்லை ஒலித்தபோது வழக்கம்போல அப்பாதான் கதவைத் திறந்தார். இதை அவளுக்காக மனமுவந்து செய்யும் ஒரு உதவிபோல இதற்காகவே காத்துக்கொண்டிருப்பவர்போல பெல் ஒலித்த மாத்திரத்திலேயே கதவைத் திறந்து கண்களால் இரக்கமாகச் சிரித்துக்கொண்டு தோன்றுவார். அவருக்கு இதயத்திலிருந்து சுரந்து வரும் இந்த இரக்கத்தை தவிர வேறு எதையும் தரமுடியவில்லை. குடும்பத்தில் மூத்தவளாகப் பிறந்த இந்தப் பெண் நாற்பது வயதாகியும் இன்னும் ஒருத்தனுக்கு வாழ்க்கைப்படாமல் தன் குடும்பத்துக்காக உழைத்துப் போடுகிறாளே என அப்பா இரக்கப்படுவது போலிருக்கும்.
அலுவலகத்தில் நாள்முழுவதும் காய்ந்த அலுப்பு… பஸ் நெரிசல்களில் நசுங்கிய சினம்… மாடிப்படிகளில் ஏறிவந்த களைப்பு எல்லாம் அப்பாவின் முகத்திலுள்ள கருணையைக் கண்டதும் பறந்துவிடும். அவர் முகதரிசனத்தைப் பெற்றுக்கொண்டே வீட்டினுள் நுழையும்போது ஒரு புத்துணர்சி கிடைக்கும்.
உள்ளே வந்ததும் கதவை ஓசைப்படாது சாத்திவிட்டு வந்து அப்பா கதிரையில் அமர்ந்துகொள்வார். நாள் முழுவதும் அந்தக் கதிரையே அவருக்குத் தஞ்சம். அதனால்தான் அதற்கு ‘அப்பாவின் கதிரை’ எனப் பெயர் வந்தது. வெளிக்கேட்காது அடங்கிப்போகும் குரலில் அடிக்கடி செருமுவார். யாருடனும் பேசுவது குறைவு. அப்படி இருந்தவாறே எத்தனை விடயங்களுக்காகக் கவலைப்படுகிறாரோ? வரிசையாகப் பெற்றெடுத்த ஐந்து பெண்களுக்கும் உரிய காலத்தில் கல்யாணம் செய்துவைக்க முடியவில்லையே என்ற கவலையில் தோய்ந்து… அவரது முகம் எப்போதும் மன்னிப்புக் கோருவது போன்றதொரு பாவனையில் மாறிப்போய்விட்டது.
அறையுட் சென்று மேஜையிற் கைப்பையைப் போட்டாள். செருப்பை ஒரு பக்கம் கழற்றிவிட்டு கட்டிலில் நீட்டி நிமிர்ந்து படுத்தாள். அது டபிள் பெட். இரவில் அந்தக் கட்டிலில் தங்கைகளில் ஒருத்தி சேர்ந்து பகிர்ந்துகொள்வாள்.
அம்பிகா பக்கத்தில் படுத்தாளென்றால் தொல்லைதான். உறக்கம் வரும்வரை அலுப்புக் கொடுப்பாள். வயதுக்குரிய பக்குவம் இல்லாதவள்போல சிறு பிள்ளைமாதிரி விளையாடும் பெண். இந்த வயதிலும் விளையாட்டும் வேடிக்கையும் இவளுக்கு வேண்டியிருக்கிறது. இப் பூவுலகில் முப்பத்தைந்து வருடங்களைக் கழித்த பெருமை இவளுக்கு உண்டு. அப்பாவுக்கு மூன்றாவது செல்வம்.
•Last Updated on ••Wednesday•, 04 •October• 2017 17:02••
•Read more...•
••Friday•, 22 •September• 2017 17:34•
??- எழுதியவர்: கடல்புத்திரன் -??
சிறுகதை
மழை தூறிக் கொண்டிருந்தது. காரில்,வானில் வந்த சகோதரங்களும்,சப்வேய்யில் ஏறி ,விரைவு பேருந்து எடுத்த வதனாவின் சினேகிதி சந்திரா, அவர் கணவர் தில்லையும்...என ‘பியரன் சர்வ தேச விமான நிலைய’த்திற்கு வந்தவர்கள், நேரத்தைப் போக்காட்ட …. கதைத்துக் கொண்டு கொண்டிருந்தார்கள். லண்டனிலிருந்து வதனாக் குடும்பம் கோடை விடுமுறையைக் கழிக்க கல்கறி நகரத்திற்கு பறக்கிறது.அந்த விமானம் கல்கறிக்கு நேரடியாகப் போகவில்லை. அவர்களை பியர்சனில் இறக்கி ,வேற விமானத்தில் மாற விட்டுப் போகிறது.
விமானம் ஏற்கனவே இறங்கி விட்டதை மேலே தெரிகிற ‘கணனி’த் திரை காண்பிக்கிறது.
பொதிகளை இறக்கிற போதான சுங்க சோதிப்பு போதுமானது தான்,ஆனால் திரும்ப ஏற்றுறதிற்கும் நடைபெறுகிறது.உள்ளே இருக்கிற போது முகநூலில் தொடர்பு கொள்ள முடியாது...போல… பிரச்சனைகள் இருக்க வேண்டும். அலை பேசி,மடிக்கணனிகளை 'டேர்ன் ஓவ்' பண்ண வைத்திருப்பார்களோ? பிறகு, 5 மணி நேரத்திலே அடுத்த விமானம் எடுக்க இருக்கிறார்கள். அடுத்த விமானம் எடுக்க இரண்டு மணி நேரத்திற்கு முதலும் உள்ளே சென்று விட வேண்டும் அந்த இடைப்பட்ட நேரத்திலேயே சந்திக்கவே ஆவலுடன் வருகிறார்கள். ..அந்த நேரமும் சுருங்கிறது என்ற கவலை.
ஒரு மணி நேரமும் பறந்து விட்டது. இன்னுமா...விடவில்லை? என கிருபா சலிக்கிறார்.பொறுமை இழப்பு சிறிது எட்டிப் பார்க்கிறது.
“இப்ப, இவர்களிற்கு இருக்கிற பயத்தாலே 2 மணி நேரம் எடுத்து தான் விடுகிறார்கள்" என தில்லை அனுபவத்தில் முணுமுணுக்கிறார்.
அவர்கள் வாகன தரிப்பு நிலையத்தில் நிறுத்தி விட்டு பயணிகள் விமானம் ஏறுகின்ற பகுதியியாலேயே வந்த போது, நிறைய இடத்தை கயிறுகள் கட்டிய 'லைன்'கள் பிடித்துக் கொண்டிருந்தன. பயங்கரவாதிகளின் கை ஓங்கி விட்டது போல ….பாதுகாப்புச் சோதனைகள். ‘இது ஒரு சர்வ தேச விமான நிலையமா?என நொடிச் சந்தேகம் கூட வருகிறது. தீமையிலும் ஒரு... நன்மை, அதனால் பொதிகளின் நிறைகள் குறைந்தது விமானத்திற்கு நல்லம் தான். உள்ளே , முந்திய மாதிரி அன்பளிப்புக் கடைகள் இல்லாதையும், உணவகங்கள் பல காணாமல் போனதையும், ஒரே ஒரு 'ரிம் ஹோற்றன்' கோப்பிக் கடை மட்டும் பாம்புக் கீயூவோடு இருப்பதையும் பார்த்து வந்தார்கள்.
•Last Updated on ••Saturday•, 23 •September• 2017 05:36••
•Read more...•
••Friday•, 15 •September• 2017 17:59•
??- கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
புரட்டாதி மாதம். சிட்னியில் குளிர் குறையத் தொடங்கிவிட்டது. மாலை நேரம். துவாரகன் தனது நண்பி லோறாவுடன் நியூமன் என்ற நோயாளியை சந்திக்கப் போயிருந்தான்.
துவாரகனும் லோறாவும் மருத்துவபீட இறுதிவருட மாணவர்கள். பேராசிரியர் நெயில் றொபின்ஷன் பாடமொன்றின்---long integrated population medicine (IPM)--- ஒப்படைக்காக மாணவர்களைப் பல குளுக்களாகப் பிரித்திருந்தார். . Choronic diseases – asthma, cancer, diabetes, heart diseases - சம்பந்தமான நோயாளர்களை, வருடத்திற்கு குறைந்தபட்சம் பன்னிரண்டு தடவைகள் நேரில் சந்திக்க வேண்டும். நோயாளியுடன் கலந்துரையாடி குறிப்புகள் எடுக்க வேண்டும்.
இவர்கள் குழுவில் ஜொனதான், அன்டி நூஜ்ஜின், கான், ஜெசிக்கா, லோறா, ஜுவான் என மொத்தம் ஏழு பேர்கள் இருந்தார்கள். விரிவுரைகள் இல்லாத மாலை நேரங்களில் துவாரகனும் லோறாவும் நியூமனை சந்திப்பது வழக்கம்.
பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருந்தது. காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக் கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். அவருக்கு ஒரு எழுபது வயது இருக்கலாம். அந்த முதியவரின் ஒத்துழைப்பு இவர்களுக்கு வியப்பைத் தந்தது. எல்லா நோயாளிகளும் இந்தத் திட்டத்திற்கு உதவிபுரிய முன்வருவதில்லை. நோயின் உக்கிரத்துடன் போராடிக்கொண்டிருக்கும் அவர்கள் தம் எதிர்கால சந்ததியினர் வளமாக வாழ செய்யும் ஒரு சேவை இது. கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். வேலிக்கரையோரமாக அப்பிள், பீச்சஸ் எலுமிச்சை மரங்கள். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவர்களுக்கான கதிரைகளும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் கடதாசி மீது சில தட்டுமுட்டுச் சாமான்களுடன் நாலைந்து புத்தகங்களும், அன்றைய புதினப்பத்திரிகையும் இருக்கும்.
இன்று நியூமனைக் காணவில்லை. மூன்று கதிரைகள் போடப்பட்டிருந்தன. இவர்கள் தயங்கியபடியே மேசைக்குக் கிட்டப் போய் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தார்கள். மேசையில் நிறையப் புத்தகங்கள் இருந்தன. கதவு திறந்து கொண்டது.
நியூமன் வெளியே வந்தார். கம்பீரமான ஆடையுடன் ஒரு கனவான் போலக் காட்சி தந்தார். இவர்களுக்காகவே ஜன்னலிற்குள்லால் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார் போலும்.
•Last Updated on ••Friday•, 15 •September• 2017 18:01••
•Read more...•
••Friday•, 15 •September• 2017 17:55•
??- சுதாராஜ் -??
சிறுகதை
காத்திருத்தல் என்பது அவனைப் பொறுத்தவரை பொறுக்க முடியாத விஷயம். ஆனால் சில வேளைகளில் மனதைச் சோதிப்பதுபோல தவிர்க்க முடியாத காத்திருத்தல்கள் ஏற்பட்டுவிடுகின்றன. அப்பொழுதெல்லாம் தனது அப்போதைய தேவையை மறந்து இயற்கையோடு ஒன்றிப்போய் மனதை இதப்படுத்திக்கொள்வான். மதியம் கொழும்பிலிருந்து கிளம்புகிற புகையிரதம் மழை காரணத்தினாற்போலும் வழக்கத்தைவிடத் தாமதமாகவே அனுராதபுரம் வந்து சேர்ந்தது. அதுவரை காத்திருந்தவர்கள் சொற்பநேர இடத்துக்காக முண்டியடித்து இடித்துக்கொண்டு ஏறினார்கள். அந்த அமளி முடிந்தபிறகு அவன் ஏறினான். இருக்க இடமில்லாததால் நின்றான். வெளியே மழை பெய்துகொண்டிருந்தாலும் சனவெக்கையில் வியர்க்கத் தொடங்கியது. வடக்கிலிருந்து கொழும்பு செல்கிற புகையிரதமும் தாமதமாகவே வருகிறதாம். ‘குறோங்சிங்’கிற்காக இது காத்திருக்கவேண்டும். வியர்வையையும் சனவெக்கையையும் சகித்துக்கொள்கிற ஆற்றலில்லாதவனாய் இறங்கி மேடைக்கு வந்தான்.
மழையைக் கண்டு சுவரோரமாக ஒதுங்கியிருக்கிற மனிதர்களின் அடக்கத்தையும் றெயினிலிருந்து குதித்து தண்ணீர் எடுப்பதற்காக போத்தலோடு ஓடுகிற சிலரையும் பார்துக்கொண்டு நின்றான். பின்னர் தற்செயலாகத் திரும்பியபொழுது புகையிரதத்துள்ளிருந்து அவள் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டான். ஓர் அழகிய ரோசாமலரைப் போல அவளது முகம் தோற்றமளித்தது. அப்படி ஒரு கவிதையை ரசிப்பதுபோல அவளைக் கற்பனைக்குட்படுத்திப் பார்த்தான். அவன் கவனிப்பதைக் கண்டதும் அவள் பார்வையைத் திருப்பினாள். அவள் தன்னை நெடுநேரமாகவே பார்த்துக்கொண்டிருந்திருக்கிறாள் என நினைத்தான். தனது பார்வை அவள் பக்கம் திரும்பியபோது திடுக்குற்றவள்போல சட்டென மறுபக்கம் திரும்பியதற்கு அதுதான் காரணமாயிருக்கலாம். எதற்காக அப்படிப் பார்த்திருக்கவேண்டும் என எண்ணியபொழுது ஒருவேளை மீண்டும் பார்ப்பாளோ என்ற சபலமும் தோன்றியது. அவள் திரும்பவும் பார்த்தாள். தான் இன்னும் அவளையே பார்த்துக்கொண்டிருக்கும் ரகசியத்தை அவள் அறியக்கூடாது என அவசரமாக வேறு பக்கம் திரும்பினான்.
மழையில் நனைந்துகொண்டு நிற்கிற செம்மறியாட்டைப்போல புகையிரதம் சூடு சுரணையில்லாமல் நிற்கிறது. மழை நீர் அதன் மேல் விழுந்து சிறிய பூச்சிகளைப்போலத் தெறித்துப் பறக்கிறது. பூட்டப்பட்ட கண்ணாடியில் முத்துமணிகளாக உருள்கிறது… தூரத்தே உரத்துப் பெய்துகொண்டு ஒரே புகைமூட்டமாகத் தெரிகிறது. ஆவியாக மேலே செல்கிற நீர் ஒரு ஷவரைத் திறந்துவிட விழுகிற தூறல்களாகக் கொட்டும் அழகை வியப்பவன்போல் வானத்தையே பார்த்துக்கொண்டு நின்றான்.
•Last Updated on ••Friday•, 15 •September• 2017 17:56••
•Read more...•
••Tuesday•, 29 •August• 2017 14:19•
??- சுதாராஜ் -??
சிறுகதை
'ஆனைவாழை குலை போட்டிருக்கு!"
வீட்டுக்கு வந்து பயணக்களைப்பு ஆற அமர முதலே இந்தச் செய்தியை மனைவி சொன்னாள். அதைக் கேட்டதும் 'அட! அப்படியா..” என்றொரு சந்தோஷம் மனதிற்குள் தோன்றினாலும் நிதானமாக நின்று உடைகளை மாற்றினான்.
'கேட்டுதே? ஆனைவாழையெல்லே குலை போட்டிருக்கு எண்டு சொல்லுறன்!”
'ஓம்! ஓம்! பாப்பம்.." என அவன் மனைவியைப் பார்த்துச் சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
'ஓமடா தம்பி!... நல்ல பெரிய குலை..!" என அம்மா சொன்னாள்.
'ஆனைவாழை பெரிசாத்தான் குலைபோடும்.." என முற்றும் தெரிந்தவன்போல அவன் கூறினான். ஆனால் ஆனைவாழை பெரிசாகவா சிறிசாகவா குலை போடும் என்பது அவனுக்குத் தெரியாது. ஆனை வாழைப்பழம் பெரிசாக இருப்பதால் ஆனைவாழைக்குலையும் பெரிசாக இருக்குமென ஊகித்திருந்தான். அல்லது ஏன்தான் அந்த வாழைக்கு ஆனைவாழை எனப் பெயர் வந்தது என்பதும் புரியவில்லை.
சிறு பிராயத்தில் பாடசாலையின் ஒரு விடுமுறைக் காலத்தில் அப்பாவோடு கொழும்பு கண்டி போன்ற வெளியூர்களுக்குச் சுற்றுலா போயிருந்தபோதுதான் முதலில் ஆனை வாழையைப்பற்றி அறிந்துகொண்டான். அப்போது சாப்பாட்டுக் கடையொன்றில் சாப்பிடப் போயிருந்தபொழுது வாழைப்பழம் கொண்டு வரும்படி அப்பா ஓடர் கொடுத்தார். வெயிட்டர் ஒரு தட்டில் வாழைப்பழச் சீப்பைக் கொண்டுவந்து வைத்தான். அவன் அதைப் பார்த்துவிட்டு “பழுக்கயில்ல.. காய்..!” என்றான்.
'இல்லை… அது நல்ல பழம்!" என்றார் அப்பார்.
•Last Updated on ••Tuesday•, 29 •August• 2017 14:21••
•Read more...•
••Friday•, 18 •August• 2017 15:01•
??- பல்லக்கு -??
சிறுகதை
எம தர்ம ராஜனின் வாகனமான எருமையின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகள் திடீரென்று சிகப்பு வெளிச்சத்துடன் எச்சரிக்கை சமிக்கைச் செய்தது. அசவர வேலையாக போய்க் கொண்டிருந்த எம தர்மன் “என்ன !? யாரது ,என்னாயிற்று ” எனப் பதட்டமாக கேட்டார்.
அம்மணிகள் பேசவும், கேட்கவும் ,அவசர சமிக்கைச் செய்யவும் வடிவமைக்கப் பட்டிருந்தது.
மறுமுனையில் ,சித்ரகுப்தன் “தலைவா! நம் கணிணி நிலயத்தை எவரோ 'ஹாக்' செய்துவிட்டார்கள்! ”
“'ஹாக்' ..!? அப்படி என்றால் ? ,விவரமாக சொல்லுங்கள்” எனக் கேட்டார்
“எவரோ நம் கணிணியில் இருந்த சில கணக்கு பையில்களை களவாண்டு விட்டார்கள்!”
“அப்படியா! எந்த கணக்கு !! ” என அதிர்ந்துக் கேட்டார்.
“பாவ புண்ணிய கணக்கு பையில் களவாடப்பட்டது. இந்தந்த செயலுக்கு இவ்வளவு புண்ணியம், பாவம் என அளவு கணக்கு இருந்தது அல்லவா!? அது..”
“ஓ..ஓ !! அது முக்கியமான கணக்கு ஆயிற்றே ! அதை கொண்டு தானே ஒவ்வொரு மானிடருக்குமான மொத்த கணக்கு ரிப்போர்ட் ,மும்மூர்த்திகளுக்கும் நாம் அனுப்புகிறோம். இதை திரும்பப் பெற வழி இருக்கிறதா என கணிணி துறையினரிடம் கேட்டீர்களா?”
“நம் கணிணி துறை ,அசட்டு நம்பிக்கையில் அதற்கு 'பேக்-அப்' எடுக்கவில்லையாம் ..ஆகையால் 'ரி-கவர்' செய்ய முடியாது எனச் சொல்லி விட்டார்கள் !”
“சரி , அப்படியானால் இதை மூம்மூர்த்திகளுக்கும் உடனே தெரியப் படுத்துங்கள் ,சித்ரகுப்தன்..”
உடனே மூம்மூர்த்திகளோடு அசவர கூட்டம் கூட்டப்பட்டது.
•Last Updated on ••Tuesday•, 22 •August• 2017 04:26••
•Read more...•
••Saturday•, 12 •August• 2017 12:27•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- தாயகம் (கனடா), சுவடுகள் (நோர்வே) ஆகிய சஞ்சிகைகளில் வெளியான சிறுகதைகள் இவை. எனது 'அமெரிக்கா' தொகுப்பிலும் அடங்கியுள்ளன. இவற்றில் சுவடுகள் (நோர்வே) சஞ்சிகையில் வெளியான 'பொந்துப்பறவைகள்' சிறுகதை. சிங்கப்பூர் கல்வி அமைச்சு பாடசாலை மாணவர்களுக்கான தமிழ்ப்பாடக் கல்வித்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. - வ.ந.கி -
எனது கதைகள் வ.ந.கிரிதரன் -- அமெரிக்கா தொகுப்புக்கான என்னுரை. -
எமது புலம் பெயர்ந்த சூழலில் ஏற்படும் நிலைமைகளையும், அதேசமயம் எமது நாட்டுப் பிரச்சனைகளை மையமாக வைத்தும் என் படைப்புக்கள் எழுந்துள்ளன. இன்றைய புலம்பெயர்ந்த எமது தமிழ்த் தலைமுறையைப் பொறுத்தவரையில், புலம் பெயர்ந்த நாட்டுச் சூழலிற்கும், புலத்தின் நினைவுகளிற்குமிடையில் அகப்பட்டு ஒரு வித திரிசங்கு வாழ்க்கை நடத்தும் தலைமுறை. இத்தலைமுறையினரில் நானும் ஒருவன் என்ற வகையில் எனது படைப்புகளில் புலத்தின் பிரச்சனைகளையும், புலம் பெயர்ந்த நாட்டுச் சூழலின் நிலைமை களையும் சித்தரிப்பதை என்னால் தவிர்க்க முடியாது. நிறப்பிரச்சனை யென்பது புலம் பெயர்ந்து வாழும் குழலின் முக்கியமான பிரச்சனை. புலம் பெயர்ந்த ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை. நாளைய எம் தலைமுறையும் இதற்கு விதிவிலக்கல்ல. எமது படைப்புக்கள் இப்பிரச்சினையை வெளிப்படுத்தும் அதேசமயம் புதிய சூழலின் ஏனைய பிரச்சனைகளையும், ஆராய வேண்டும். பூர்வீக இந்தியர்களின் பிரச்சினை, இந்நாட்டுப் பொருளாதாரச் சூழலால் உருவாகும் நிர்ப்பந்தங்கள், வாழ்வில், அவற்றாலேற்படும் தாக்கங்கள், பெண்களின் நிலைமை, புதிய சூழல் நம்மவர் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள், அனுபவங்கள்இவற்றையெல்லாம் நாம் எம் படைப்புகளில் வெளிப்படுத்த வேண்டும். அதேசமயம் நாட்டுப்பிரச்சனை காரணமாக ஓடிவந்தவர்கள் நாங்கள். அப்பிரச்சனையை மீண்டும் மீண்டும் கூறுவதென்பது தவறானதல்ல, தவிர்க்க முடியாததும் கூட.
அண்மைக் காலமாக எம்மவர்களில் சிலர் ‘புலம் பெயர்த்த எழுத்தாளரின் படைப்புக்கள் தொடர்ந்தும் பிறந்த நாட்டுப் பிரச்சனைகளை, விரக்தியையே புலப்படுத்தி வருகின்றன. இவர்கள் புகுந்த நாட்டுச் குழலை மையமாக வைத்துப் படைப்புக்களை உருவாக்க வேண்டும்' என்ற கருத்துப்பட கூறி, எழுதிவருகின்றார்கள். இவர்களது கருத்துப்படி புகுந்தநாட்டுச்சூழலை வைத்து எழுதுவதுதான் இலக்கியத்தரமானதாக அமையுமென்ற நோக்கமும் இழையோடுகின்றது. இவர்களெல்லாம் ஒன்றை உணரவேண்டும். தரமான படைப் பென்பது எதனைப் பற்றியதாகவும் இருக்கலாம்.இரண்டாம்உலக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யூத எழுத்தாளர்களின் படைப்புகளில் சிறந்த படைப்புக்கள் அவர்களது சொந்த நாட்டுப் பிரச்சனையை மையமாக, வைத்து எழுந்தவையே. உதாரணமாக போலந்து யூத இனத்தைச் சேர்ந்து ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் Painted Birds என்ற மிகப் பிரபலமான நாவலைக் குறிப்பிடலாம். 1991 இல் தற்கொலை செய்து கொண்ட கொஸின்ஸ்கியின் படைப்புக்கள் பிரச்சனைக்குரியவை. நிறமூட்டப் பட்ட பறவைகள்' (Painted Birds) நாவலில், யூதச் சிறுவனாக யுத்தச் சூழலில், நான்காண்டுகளாக கிழக்கு ஐரோப்பியநாடுகளில் அலைந்து திரிந்த தனது சொந்த அனுபவங்களையே கொளின்ஸ்கி விபரிக்கின்றான். இன்று இந்தப்படைப்பு: ஆங்கில இலக்கியத்தின் முக்கிய படைப்புக்களில் ஒன்றாக விளங்குகின்றது. இதனை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். கொஸின்ஸ்கியால் அவர்மேல் அவரது சொந்த நாட்டு அரசியல்நிலைமை ஏற்படுத்திய பாதிப்பை மறக்கமுடியவில்லை, அதனைப்படைக்காமல் இருக்கவும் முடியவில்லை.
•Last Updated on ••Friday•, 24 •November• 2017 14:34••
•Read more...•
••Tuesday•, 08 •August• 2017 07:07•
?? - வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- இச்சிறுகதை முதலில் தேடல் (கனடா) சஞ்சிகையில் வெளியானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம் மற்றும் மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளியான 'அமெரிக்கா'த் தொகுப்பிலும் இச்சிறுகதை பிரசுரமாகியுள்ளது. -
ஜெயகாந்தனின் ரிஷிமூலத்தில் வரும் ராஜாராமனைப் போல்தாடி மீசை வளர்த்திருந்தான். கால்களில் ஒன்றினைச் சப்பணமிட்ட நிலையிலும் மற்றதை உயர்த்தி மடக்கி முழங்காலினை வலது கையினால் பற்றியிருந்தான். இடதுகையை பின்புறமாக நிலத்தில் ஊன்றியிருந்தான். முடிநீண்டு வளர்ந்து கிடந்தது, வாயினில் பாதித்துண்டு சிகரட் புகைந்த படியிருந்தது. கண்களில் மட்டும் ஒரு விதமான ஒளி வீச்சு விரவிக் கிடந்தது. மான் தோலில் அமர்ந்திருக்கும் சாமியாரைப் போல மான் ஹோலின் மேல் அமர்ந்திருந்தவனின் தோற்றமிருந்தது. இவன் நடைபாதை நாயகர்களிலொருவனென்றால் நான் ஒரு நடைபாதை வியாபாரி. "கொட் டோக்" (Hot Dog) விற்பது என் தொழில். வடக்கில்'தொலைவில் ஒண்டாரியோ பாராளுமன்றக் கட்டடம் தெரிந்தது. எமக்குப் பின்புறமாக புகழ்பெற்ற குழந்தைகளிற்கான வைத்தியநிலையம், 'சிக்கிட்ஸ்'ஹாஸ்பிடல் அமைந்து கிடந்தது சிறிது நேரம் சாமியார் ஒண்டாரியோ பாராளுமன்றத்தையே பார்த்தபடியிருந்தான். பிறகு சிரித்தான். 'ஏன் சிரிக்கிறாய்' என்றேன் 'பார்த்தாயா காலத்தின் கூத்தை. '
'காலத்தின் கூத்தா...' 'காலத்தின் கூத்தில்லாமல் வேறென்ன'
சிறிது நேரம் ஆகாயத்தைப் பார்த்தான், அதில் முழுமதியை ரசித்தான்.
நேரத்துடனேயே இருட்டத் தொடங்கிவிட்டது. இன்னமும் மாநகரத்தின் பரபரப்பு குறையவில்லை. ஆளுக்கு ஆள் அரக்கப் பரக்க நடந்துகொண்டிருந்தார்கள். இதற்கிடையில், எனக்கும் ஒரு சில 'கஸ்டமர்'கள் வந்தார்கள். எனது வாடிக்கையாளர்களில் ஒருவனான நைஜீரியா டாக்ஸி டிரைவர் டாக்ஸியை வீதியோரம்நிறுத்திவிட்டு வந்தான்.
'ஹாய். எப்படியிருக்கிறாய் 'சீவ் (Chief)' வென்றேன்.
'பிரிட்டி குட் மான். நீஎப்படி' யென்றான்.
'எனக்கென்ன. நான் எப்பொழுதுமே ஓ.கே.தான்' என்று விட்டுச் சிரித்தான். அருகிலிருந்த சாமியும் சிரித்தான்.
•Last Updated on ••Friday•, 24 •November• 2017 14:12••
•Read more...•
••Thursday•, 03 •August• 2017 21:36•
??- சுதாராஜ் -??
சிறுகதை
இது ஒரு துப்பறியும் கதையோ மர்மக் கதையோ அல்ல என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். எனினும் இந்தக் கதை இப்படித்தான் தொடங்குகிறது..
நட்ட நடு நிசி!
வாசற் கதவடியில் தடபுட என ஓசைகள்! அதன் பின் யார் யாரோ அழைக்கும் குரல்கள்!
வீட்டிற்குள் நின்றபடியே யன்னலூடு பார்த்தேன். கேற்றிற்கு வெளியே ஐந்தாறு பேர் நிற்பது வீதி வெளிச்சத்தில் தெரிந்தது. முன் பின் தெரியாத முகங்கள். மோட்டார் சைக்கிளில் இருந்தபடியே கூப்பிட்டார்கள். ஒருவன் கேற்றைத் திறப்பதற்கு முனைகிறான். கேற் பூட்டப்பட்டிருக்கிறது.
முன் மின் விளக்குகளைப் போட்டேன். மனதுக்குள் சற்றுத் தயக்கம். துணைவியை (மனைவி) எழுப்பலாமா என்று யோசித்தேன். (மனைவி இப்படியான நேரங்களில் துணைவி ஆகிவிடுகிறாள்!) இந்த நேரம் கெட்ட நேரத்தில் வந்து கூப்பிடுகிறார்களே.. யாரோ? எவரோ? எதற்கு வந்தார்களோ?
போவதா? விடுவதா?
விடாது அழைத்துக்கொண்டிருந்தார்கள்.
'கொஞ்சம் பொறுங்க…! வாறன்!"
இந்தக் குரலை அவர்களுக்கு எந்த மொழியில் வெளிப்படுத்துவது என்று தெரியாமலிருந்தது. சிங்களமா? தமிழா? வந்தவர்களின் சொந்தமொழி எதுவாயிருக்கும்?
வீட்டுக் கதவைத் திறந்தேன்.. தயக்கத்துடன்தான். எனினும் நான் இன்னும் அவர்கள் முன்னே போவதற்குத் தயாரில்லை. மனைவியின் முகத்தைப் பார்த்தேன்.. 'ஆட்கள் ஆரெண்டு தெரியாது… போகவேண்டாம்.." கையைப் பிடித்து இழுத்தாள்.
•Last Updated on ••Thursday•, 03 •August• 2017 21:40••
•Read more...•
••Sunday•, 30 •July• 2017 05:54•
??- சிங்கள மொழியில் - அஜித் பெரகும் திஸாநாயக } தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் -??
சிறுகதை
நயனா வீட்டுக்குள் நுழையும்போது அது சகதிக் குவியலாகக் கிடந்தது. அவள் எப்போதும் பெருக்கித் துடைத்து தூய்மையாக வைத்திருந்த பளிங்குத் தரையானது, கோப்பி நிற அழுக்குச் சேறு படிந்து சேற்று வயல்வெளி போல ஆகியிருந்தது. வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த சோபா கதிரையின் இருக்கைகள் சேற்றிலும் தண்ணீரிலும் ஊறிப் போயிருந்தன. பிளாஸ்டிக் கதிரைகள், புகைப்படங்கள், அலங்காரப் பொருட்கள் எல்லாம் மிதந்து சென்று ஆங்காங்கே ஒதுங்கியிருந்தன. சுவரில் கழுத்தளவு உயரத்தில் மஞ்சள் நிற நீரின் அடையாளம் படிந்திருந்தது.
அறையிலிருந்த அலுமாரியைத் திறந்து பார்த்தவளின் நெஞ்சம் அதிர்ந்து போனது. சேலைகள், சட்டைகள், பிள்ளைகளின் ஆடைகள் அனைத்திலிருந்தும் அழுக்குத் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அலுமாரியின் இழுப்பறையைத் திறந்து பார்த்தாள். முக்கியமான பத்திரங்கள் அனைத்துமே நனைந்து போயிருந்தன. அவற்றுக்கிடையே தங்க நகைகளை அடகு வைத்தமை சம்பந்தமான முக்கியமான காகிதங்களும் அடங்கியிருப்பது நினைவுக்கு வந்து அவளது கை தானாகவே கழுத்தை நோக்கிச் சென்றது.
அவள் கட்டிலின் மீது அமர்ந்து கொண்டாள். அதிலும் ஈரத்தை உணர்ந்தவள் உடனே எழுந்து நின்றாள். எழுந்ததுமே கட்டில் ஒரு புறமாக சாய்ந்து கொண்டது. அட்டைப் பலகைகளால் செய்யப்பட்ட அதை மீண்டும் பாவிப்பது சாத்தியமில்லை. அது இப்போது நனைந்து ஊறி பப்படத்தைப் போல உப்பிப் போய்விட்டிருந்தது. வீட்டுச் சாதனங்களை வாங்குவதற்காகப் பெற்றுக் கொண்ட கடனைக் கூட இன்னும் செலுத்தி முடிக்கவில்லை.
பிள்ளைகளின் அறை முழுவதும் புத்தகங்களும், கொப்பிகளும் பரந்து கிடந்தன. அவற்றின் மேலே அடுக்கடுக்காக சேறும் சகதியும் படிந்திருந்தன. கறுப்பு நிற அழுக்குச் சேற்றிலிருந்து மூக்கைத் துளைக்கும் நாற்றம் கிளம்பியதால் அவள் மூக்கைப் பொத்திக் கொண்டாள். அழுக்காகி, சகதி படிந்து அறையின் மத்தியில் வீழ்ந்து கிடந்த மகளின் பொம்மையொன்றைக் கண்டதும், அண்மையில் இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக் கொல்லப்பட்ட குழந்தையொன்றின் சடலம் நினைவுக்கு வந்தது. அவளுக்கு வெள்ள நிவாரண முகாமில் விட்டுவந்த மகள் நினைவில் வந்தாள்.
•Last Updated on ••Sunday•, 30 •July• 2017 06:04••
•Read more...•
••Friday•, 28 •July• 2017 08:48•
??- எம் எம் நெளஷாத் , இலங்கை -??
சிறுகதை
டாக்டரின் பெயர் யுக்ஸியி. அந்தப் பெயர் யாருக்கும் தெரியாது. எல்லோரும் அவரை தங்கப் புத்தகம் என்று செல்லமாக அழைத்தார்கள். தங்கத்திற்கு நிகரான நற்குணங்களை அவர் கொண்டிருந்தார் என்பதற்காகத் தான் அவருக்கு அந்தப் பெயரைச் சூடியிருந்தார்கள் என்றால் அது தவறு. யுக்ஸியின் மேசையிலே தங்க நிறத்தில் பைண்டு செய்யப்பட்ட ஒரு புத்தகம் இருந்தது. பார்ப்போரின் கண்ணைக் கவரும் விதத்தில் அசல் தங்கப்பாளம் போல் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது அந்தப் புத்தகம். அந்தப் புத்தகத்தை அழகிய கண்ணாடிப் பேழையிலே பத்திரப்படுத்தி வைத்திருந்த குறும்புக்காரான அவர் கண்ணாடிப் பேழை மீது ‘இது தங்கம்’ என்று செதுக்கியும் விட்டார். அதன் பிறகு தங்கப் புத்தகமாகி விட்டார் யுக்ஸியி.
புதியவர்கள் யாரும் அந்தப் பேழையைச் சுட்டிக்காட்டி ‘இது என்ன டாக்டர்?’ என்று கேட்டு விட்டால் போதும் ‘அது தங்கம் தொடாதீர்கள்’ என்று சீரியசாகச் சொல்லுவார் யுக்ஸியி. சுவாரஷ்யம் என்னவென்றால் சிகிச்சைக்காக வந்த திருடனொருத்தன் அந்தப் புத்தகத்தை உண்மையிலே தங்கமென நம்பி களவாடிப் போனான். ஒருசில நாட்களில் ‘மன்னிக்கவும்’ என்ற கடித்தோடு புத்தகப்பேழை திரும்பி வந்து விட்டது.
சிறிய அந்தப் புத்தகம் Hutchison’s clinical methods என்ற ஆங்கில மருத்துவ நூல் ஆகும். மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இந்நூலின் பெறுமதி நன்றாகத் தெரியும். நோயாளியொருவரோடு எப்படி உரையாடுவது, நோய் அறிகுறிகள், நோய் திருஷ்டாந்தத்தை எப்படி அறிந்து கொள்வது, வயிற்றை, கால்களை, இதயத்தை, நுரையீரலை, தலையை, தோலை எப்படிப் பரிசோதிப்பது என்று அந்நூலில் விலாவாரியாகப் போட்டிருப்பார்கள். அந்நூலிலுள்ள தாற்பரியங்களைக்; கற்றுத் தேறாமல் யாரும் டாக்டராகி விடமுடியாது. அற்புதமான அப்புத்தகம் யுக்ஸியி மருத்துவக் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்தபோது செய்த சாதனைகளுக்காக கிடைத்ததா என்றால் அப்படி இல்லை.
யுக்ஸியி ஓய்வாக இருக்கும் வேளையில் படிக்கும்போது செய்த முட்டாள் தனங்களை நினைத்து தன்னுடைய தலையிலே தானே குட்டிக் கொள்வார்; சிலவேளை குபீரென்று சிரித்தும் விடுவார். அப்படிச் செய்த முட்டாள்தனத்திற்கு கிடைத்த பரிசுதான் அந்தத் தங்க பைண்டு தங்க புத்தகம்.
•Last Updated on ••Friday•, 28 •July• 2017 08:49••
•Read more...•
••Sunday•, 23 •July• 2017 23:49•
??- முல்லைஅமுதன் -??
சிறுகதை
அவசரமாக நிலக்கீழ் தொடரூந்திலிருந்து இறங்கி படைகளில் ஏறினேன்.
'பின்னேரம் வேலைக்கும் போகவேணும்'
'அதுக்குள்ள எத்தனை அலைபேசி வந்திருக்குமோ தெரியாது'.
சனக்கூட்டம் அதிகமாக இருந்தது.
எல்லோரின் முகத்திலும் அதே அவசரம்...
சிலர் கைகளில் அன்றைய தினசரி...புத்தகம்,சிறிய அல்லது பெரிய கைப்பை..அதை விட அலைபேசியை நோண்டியபடி வருவதும் போவதுமாய் இருந்தனர்.
இரண்டு மூன்று எனப் படிகளில் காலை வைத்துவிட்டேன்.
கடகடவென்று மேலிருந்து வந்தவன் இடித்துவிட்டு ஏதும் நடவாதது போல கீழிறங்கினான்.
எதுவுமே அவனிடமிருந்து வரவில்லை...இடித்ததற்கான சமாதானம் அவனிடமிருந்து இல்லவே இல்லை.
தடுமாறியபடி என்னை நிதானப்படுத்தி திரும்பிப் பார்த்தேன்.
எதிர்பார்க்கவில்லை...
கோபப்பட்டான்.
'உன்னில தான் பிழை' என்பது பார்த்தான்.
சரி..அவசரமாக்கும்..போகட்டும்' என்று என்னையே சமாதானப்படுத்திருக்கலாம்.
•Last Updated on ••Sunday•, 23 •July• 2017 23:50••
•Read more...•
••Wednesday•, 19 •July• 2017 11:30•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
எல்லாருக்குமே நேரான படிப்பு அமைவதில்லை. உயர்வகுப்பு வெறும் அனுபவங்களைக் காவியதோடு முடிந்து விட, கொக்குவில் தொழினுட்பக்கல்லூரியில் புதிதாக படம்பயில்வரைஞர் வகுப்பில் படிக்க குலேந்திரன் தெரிவாகி இருந்தான். முதல் நாள் பஸ்ஸில் வந்திருக்கலாம். ஓட்டைச் சைக்கிளில் உழக்கி வேர்க்க விறுவிறுக்க வந்திருந்தான். உடம்பு சூடாக இருந்ததது. ஓபிசில் இருக்கிற கிளார்க், "வகுப்பு மாடியில் இருக்கிறது" என சொல்ல மேலேற காற்றும் வீச இதமாக இருக்கிறது. உடம்பில் ஓடி மறையிற குளிரை அனுபவித்தான். "முருகா, இந்த வகுப்பாவது ஒரு வேலைக்குரிய தகமையை பெற வைப்பாயா?" என வேண்டிக் கொண்டு கலகலவென இருக்கிற வகுப்பினுள் நுழைந்தான்.
அவனைக் கண்டு விட்ட சந்திரன் "ஹாய்! குலேந்திரன்" என்று அவனிடம் வந்தான். இவனுக்கும் ஆச்சரியத்தால் கண்கள் விரிகின்றன. சந்திரனை சிறு வயதிலிருந்தே தெரியும். அப்ப, இவனும், அவனும் குட்டியர்கள். அவ்வளவாக பழகியதில்லை, ஆனால் தெரியும் ஆச்சி வீட்டிற்கு அயலிலே இருந்தவர்கள். அவனுக்கு 2 அண்ணரும், ஒரு தங்கச்சியும். சின்னண்ணன் இவனுடைய அண்ணருடன் ஒரே வகுப்பில் படிக்கிறவன். பெரியவர், இவனின் மாமாவின் (அம்மாட கடைசித் தம்பி) நண்பர். அவர்களுடைய அப்பர் கொழும்பிலே பிரபல கம்பெனி ஒன்றிலே நல்ல பதவியிலே இருந்தார்.. இப்ப அவரும் காலமாகி விட்டார் என்பது தெரியும்.
ஆச்சி வீட்டிலே, காலம் சென்ற சுந்தரி சின்னம்மாவின் பிள்ளைகளும் இருந்தார்கள், இவனை விட மூத்தவர்களும்; அக்கா, அண்ணாவின் வயசு மட்டத்தவர்கள், அவர்கள் தான் இவர்களை மேய்க்கிறவர்கள். அக்காவும், அண்ணாவும் அங்கே இருந்தே இந்து, மகளிர் கல்லுரிகளில் படித்துக் கொண்டிருந்தார்கள். சனி, ஞாயிறுகளில் சிலசமயம் தான் கிராமத்து வீட்டுக்கு வருவார்கள். அம்மாவோடு இவனோ, தங்கச்சிகளில் ஒருவரோ அடிக்கடி ஆச்சி வீட்ட விசிட் பண்ணுவார்கள் . வருடாந்த பள்ளி விடுமுறையில் ஓரேயடியாய் சென்று ஒன்று, இரண்டு கிழமை என்று ஆச்சி வீட்டிலே வந்து தங்கி விடுவார்கள். அப்பா, அவ்வளவாய் அங்கே வருவதில்லை.
•Last Updated on ••Wednesday•, 19 •July• 2017 11:38••
•Read more...•
••Thursday•, 06 •July• 2017 08:52•
?? -வ.ந.கிரிதரன் - ??
சிறுகதை
நான் -வ.ந.கிரிதரன் - எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானவை. 'சொந்தக்காரன்' கணையாழி சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் (2000) வெளியானது. 'வீட்டைக் கட்டிப்பார்' ஜீவநதி (இலங்கை) சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் வெளியானது. ஏனையவை இசங்கமம், மானசரோவர், தாயகம் (கனடா) மற்றும் தேடல் (கனடா) ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. 'யன்னல்' உயிர்நிழல் (பாரிஸ்) சஞ்சிகையில் வெளியானது. மேலும் சில சிறுகதைகள் மான்ஹோல் (தேடல் - கனடா), , பொந்துப்பறவைகள் (சுவடுகள் - நோர்வே), 'பூர்வீக இந்தியன்' (தாயகம்) ஆகிய சிறுகதைகளும் புகலிட அனுபவங்களைப் பேசுபவை. அவை கை வசம் தட்டச்சுச் செய்யப்பட்ட நிலையில் இல்லாததால் இங்கு சேர்க்கப்படவில்லை. 'சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை' ஞானம் (இலங்கை) சஞ்சிகையின் புலம்பெயர்தமிழர் சிறப்பிதழ் மற்றும் திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியுள்ளது. இவற்றில் பல சிறுகதைகள் ஈழநாடு (கனடா), சுதந்திரன் (கனடா) மற்றும் வைகறை (கனடா) ஆகியவற்றில் மீள்பிரசுரமாகியுமுள்ளன. மணிவாணன் என்னும் புனைபெயரிலும் புகலிட அனுபவங்களை மையமாக வைத்துச் சிறுகதைகள் சில எழுதியிருக்கின்றேன். அவையும் கைவசம் தட்டச்சு செய்த நிலையில் இல்லாத காரணத்தால் இங்கு சேர்க்கப்படவில்லை. புகலிட அனுபவங்களை மையமாக வைத்து இரு நாவல்களும் எழுதியுள்ளேன். 'அமெரிக்கா' ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும், 'குடிவரவாளன் ' ஓவியா பதிப்பக வெளியீடாகவும் வெளியாகியுள்ளன. இவற்றைப்பற்றித் தமிழகப்பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்யபட்டுள்ளன. ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தொகுக்கப்பட்ட சிறுகதைகள் விபரங்கள் வருமாறு:
•Last Updated on ••Friday•, 24 •November• 2017 14:09••
•Read more...•
••Thursday•, 06 •July• 2017 08:42•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
நான் - வ.ந.கிரிதரன் - எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானவை. 'சொந்தக்காரன்' கணையாழி சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் (2000) வெளியானது. 'வீட்டைக் கட்டிப்பார்' ஜீவநதி (இலங்கை) சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் வெளியானது. ஏனையவை இசங்கமம், மானசரோவர், தாயகம் (கனடா) மற்றும் தேடல் (கனடா) ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. 'யன்னல்' உயிர்நிழல் (பாரிஸ்) சஞ்சிகையில் வெளியானது. மேலும் சில சிறுகதைகள் மான்ஹோல் (தேடல் - கனடா), , பொந்துப்பறவைகள் (சுவடுகள் - நோர்வே), 'பூர்வீக இந்தியன்' (தாயகம்) ஆகிய சிறுகதைகளும் புகலிட அனுபவங்களைப் பேசுபவை. அவை கை வசம் தட்டச்சுச் செய்யப்பட்ட நிலையில் இல்லாததால் இங்கு சேர்க்கப்படவில்லை. 'சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை' ஞானம் (இலங்கை) சஞ்சிகையின் புலம்பெயர்தமிழர் சிறப்பிதழ் மற்றும் திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியுள்ளது. இவற்றில் பல சிறுகதைகள் ஈழநாடு (கனடா), சுதந்திரன் (கனடா) மற்றும் வைகறை (கனடா) ஆகியவற்றில் மீள்பிரசுரமாகியுமுள்ளன. மணிவாணன் என்னும் புனைபெயரிலும் புகலிட அனுபவங்களை மையமாக வைத்துச் சிறுகதைகள் சில எழுதியிருக்கின்றேன். அவையும் கைவசம் தட்டச்சு செய்த நிலையில் இல்லாத காரணத்தால் இங்கு சேர்க்கப்படவில்லை. புகலிட அனுபவங்களை மையமாக வைத்து இரு நாவல்களும் எழுதியுள்ளேன். 'அமெரிக்கா' ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும், 'குடிவரவாளன் ' ஓவியா பதிப்பக வெளியீடாகவும் வெளியாகியுள்ளன. இவற்றைப்பற்றித் தமிழகப்பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்யபட்டுள்ளன. ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தொகுக்கப்பட்ட சிறுகதைகள் விபரங்கள் வருமாறு:
•Last Updated on ••Saturday•, 17 •March• 2018 12:34••
•Read more...•
••Tuesday•, 20 •June• 2017 23:21•
??- சுப்ரபாரதிமணியன் - ??
சிறுகதை
காலை வானம் வெளிறிப் போயிருந்தது. நிலவு எங்கோ சென்று தொலைந்து போய்விட்டிருந்தது. மேகங்களின் கூட்டணி ராட்சத உருவங்களைக் கலைத்துப் போட்டுப் போனது. இப்படி காலை நேரத்து வானத்தை வேடிக்கை பார்த்து ரொம்ப நாளாகி விட்டது முத்து லட்சுமிக்கு.புறாக்கூண்டை விட்டு ரெண்டு நாள் விடுமுறை என்று பெனாசிர் சொல்லியிருந்தாள். புறாக்கூண்டு இப்படி நெருக்கமாக இருக்குமா. அலைந்து திரிய இடமில்லாமல் போய் விடலாம். ஆனால் நின்று கொண்டுத் தூங்குவதற்கு இடம் கிடைத்து விடும். புறாகூண்டு வீடு என்பதற்கு பதிலாக லைன் வீடு என்று சுலபமாகச் சொல்லிவிடலாம் என்று முத்துலட்சுமி நினைப்பாள்.
பெனாசிர் ஊருக்குப் போகிறாள். காலைப் பயணம் சுலபமாக இருக்கும் என்பதால் கிளம்பிவிட்டாள். பனிரண்டு மணி நேரப் பயணம். அவசரமாய் வரச் சொல்லி தகவல் வந்திருந்தது. சின்ன சீட்டு ஒன்று எடுத்த பணமும் பெனாசீர் கைவசம் இருந்தது.
“என்னமோ ரகசியம் மாதிரி வா. வான்னு கூப்புடறாங்க. அப்பா, அம்மா யாராச்சுக்கும் உடம்பு செரியில்லாமப் போயிருக்கும்.”
“இல்லே வேற விசேசம்ன்னு இருக்கலாமில்லே”
“அப்பிடி ஒன்றும் தெரியலெ”
“ஊருக்குப் போன தெரிஞ்சிடப் போகுது”
ரேஷன் கடைக்குப் போய் அவமானப்பட்டதைப் பற்றி சற்று உரக்கவே பேசி சண்டை இட வேண்டும் என்று நினைத்திருந்தாள் முத்துலட்சுமி. ஆனால் இரவில் தாமதமாக வந்த அவள் ஊருக்குப் போகவிருப்பதைச் சொன்னபின் அதைப்பற்றி விரிவாய் பேசவில்லை.ரேஷன் கடையில் பார்வையில் பட்ட அந்த இளைஞனை அவனின் புது உடையை முன்னிட்டு வெறித்துப் பார்த்திருக்கக் கூடாது என்று பட்டது. முத்து லட்சுமிக்கு, அவன் ஜீன்ஸ் கீழ் உடையில் கிழிசல்கள் இருந்தன. சட்டையிலும் ஓட்டைகள் இருந்தன. காதில் கடுக்கன் போட்டிருந்தான். தலையில் இருந்த கறுத்த மயிர்களைப் பிரித்தெடுத்தமாதிரி பிரவுன் வர்ணம் போடப்பட்டிருந்தது.
•Last Updated on ••Tuesday•, 20 •June• 2017 23:24••
•Read more...•
••Thursday•, 01 •June• 2017 00:30•
??- சுப்ரபாரதிமணியன் -??
சிறுகதை
பழையனூரில் மூன்று பேருந்து நிறுத்தங்கள் உLLanண்டு. எதிலும் நிழலில் நின்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிழல் குடையோ மறைப்புகளோ இல்லை. வெய்யிலானாலும் மழையானாலும் ஏதாவது மரத்தடி கிடைத்தால் பாக்யம் என்பது போல் தவிப்பார்கள் சுடுமணலில் கால்களை வைத்தவர்கள் போல் தள்ளாடுவார்கள். ஆண்கள் ஏதாவது தேநீர் கடையில் போய் தேனீர் குடித்து விட்டு கொஞ்சம் நேரம் உட்கார அனுமதி கிடைக்கும். பெண்கள் என்றால் தெருதான். தெருவில்தான் நிற்கவேண்டும். வெயிலில் காயவேண்டும் .
முதல் பேருந்து நிறுத்தம் பழைய பழையனூர் . பத்து பேர் கொண்ட கும்பல் பூவரச மரத்தடியில் இருந்தது. நூறு நாள் திட்ட வேலைக்கு போகிறவர்களை அங்கு வரச் சொல்லியிருந்தான் சூப்பர்வைசர் மங்கள கிருஷ்ணன். வாய்க்கால் மேடு பகுதிக்கு போக வேண்டியிருக்கும் என்று சொல்லியிருந்தான். அருணாதேவி அந்தக் கும்பலில் அன்று சேர்ந்திருந்தாள்.
எங்கு வேலைக்குச் சென்றாலும் அதிகபட்சம் மூன்று மாதங்கள் செய்வாள். அப்புறம் வேலை இடம் மாற்ற புது இடம் தேடுவாள்.முன்பு வேலை செய்த இடங்களில் ஆண்களின் தொல்லை பற்றி சொல்வாள்.
" பார்க்கற பார்வை...சேலையிலிருந்து ஆரம்பிச்சு மெதுவா கேக்கறது. சாப்பாட்டு பொட்டலம் வாங்கித் தந்துன்னு ஆரம்பிச்சு மொக்கை போடுவானுக..."
" நீ என்ன அவ்வளவு பெரிய அழகியா அருணா..."
" இங்க இருக்கறவங்களெ விட அழகுதா..."
" செரி... செரி... பேரழகியா நெனச்சக்காதே"
•Last Updated on ••Thursday•, 01 •June• 2017 00:32••
•Read more...•
••Wednesday•, 31 •May• 2017 07:16•
??- முல்லைஅமுதன் -??
சிறுகதை
அவன் இறங்கி நடந்தான்.
இரண்டுவாரங்களுக்கு முன்பே அனுமதி கேட்டிருந்தான்.
பதினெட்டாம் திகதி நிகழ்வொன்றிருக்கிறது.. போகவேணும்..
முகத்தைப் பார்க்காமலேயே முதலாளியின் மனதைப் படம் பிடித்தான்.
லீவு?
பதில் இல்லை..
தராவிட்டால் வேலை அம்போதான்.. பரவாயில்லை.. நினைத்தான்.
நேற்றிரவு வேலை முடிய சொல்லிவந்தான்.
'நாளை வரமாட்டன்...முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக்கு போறன்'
அதே மௌனம்.
அவரும் அகதியாய் வந்தவர்தான்.
•Read more...•
••Wednesday•, 31 •May• 2017 07:07•
?? - கடல்புத்திரன் -??
சிறுகதை
முன்பெல்லாம் நகரக்காவலர், அவர்களின் உபபிரிவான பார்க்கிங் ஒபிசர் … மட்டுமில்லை, நகரசபையும் கூட தன்பங்கிற்கு டிக்கற் வழங்குவதற்கு ஆட்களை அனுப்பிக் கொண்டிருதிருந்தது. ‘பொது மக்களின் வாகன நிறுத்ததிலும் நிறுத்தக் கூடாது . பட்ட காலே படும் போல , அதற்கும் டிக்கெட் கிடைத்துக் கொண்டிருக்கும். சில "டாக்ஸி" கம்பனிகள் ஏற்கனவே, சிறிது பாரம் கூடிய கணனியைப் பொறுத்தி, அவசர ,அவசிய விபரங்களை வழங்குவதற்கு மட்டும் ரேடியோவை பயன்படுத்திக் கொண்டிருந்தன. ‘ஜி.பி.எஸ் கருவி’ விற்பனைக்கு வந்த பிறகு,வீதிகள் விபரங்கள் அடங்கிய பெரிய வரை புத்தகத்தைக் வைத்திருக்கிறதும் ஓட்டிகளிடம் குறைந்து விட்டன. சாந்தன், இன்னமும் ...புத்தகமும் வைத்திருக்கிறவர்களில் ஒருத்தன்.
நகரசபை, வர்த்தக மையங்களில் இரண்டு அல்லது மூன்று "டாக்ஸி"கள் நிறுத்தும் தரிப்புகளையே பெரும்பாலும் ஏற்படுத்தி வைத்திருந்தனர்.அவற்றில் கொண்டு போய் நிறுத்த எல்லா "டாக்ஸி"களும் போட்டி போட்டால்.. எப்படி.?அதற்கு மேலே ..நிறுத்தினால்,வீதிச்சட்டத்தை மீறிய குற்றம். "டாக்ஸி"க் கம்பனிகள், சட்டை செய்யாமல் . சேவையை செய்வதற்கு தமக்கென பிறிம்பான சட்டங்களை, விதிமுறைகளை தயாரித்து வைத்திருந்தன.அவை நகரம் ஏற்படுத்திய சட்ட முறைகளோடு அவ்வளவாக ஒத்து போகவில்லை.வீதிச்சட்டத்தை மீறினால் பொலிஸ் டிக்கற்றை தருவான்.அவர்களுடைய தயாரிப்புபே மீறல்கள். நீயாச்சு, நகரகாவலராயிற்று.."என விட்டேந்தியாகவே விட்டிருந்தார்கள்.
பார்கிங் டிக்கற்றுக்கள் வைப்பதில் கண்கொத்திப் பாம்பாக நடக்கிற பொலிஸ்,பார்சல்(பொதிகள்) பெறுவதற்கு நிறுத்தினால் கூட டிக்கற் வைக்கிறவர்களாக இழிந்து போய் இருந்தார்கள். ஓட்டிகள் வழக்கை சட்டமன்றத்திற்கு கொண்டு போகலாம். போவார்கள்.ஆனால்,அடிப்படையில் பொலிஸும், நீதிமன்றமும் ஒரே கூட்டம் தான்.நகரத்தை காப்பாற்றுவதாகக் கூறி பொலிஸ் ,பொதுமக்களைச் சுடுகிறது.அதற்கு ஏதோதோ காரணங்களை எல்லாம் அடுக்கிறார்கள்.. எந்த பொலிஸ்காரர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்?. அதே கதை தான். (சட்டமன்றுக்கு) போவதால் கட்டவேண்டிய தொகை சிறிதளவு குறையும்.அவ்வளவு தான்
•Last Updated on ••Wednesday•, 31 •May• 2017 07:11••
•Read more...•
••Wednesday•, 03 •May• 2017 06:21•
??சுதாராஜ்??
சிறுகதை
புது வருடப்பிறப்புக்கு நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன என்பது அவருக்குப் பயமாயிருந்தது. இன்னும் மூன்று கிழமைகளே இருக்கும் நிலையில் நாட்கள் ஒவ்வொன்றாகக் கடந்து போகப் போகப் பயம் அதிகரித்துக்கொண்டிருந்தது. எப்படிச் சமாளிக்கப்போகிறேனோ என்ற முளுசாட்டம். பிள்ளைகளுக்கு புத்தாடை உடுதுணிகள் வாங்கவேண்டும். ஐந்து பேருக்கும் வாங்குவதானால் எவ்வளவு தேவைப்படும்? அதற்கு எங்கே போவது?
போன வருடத்தைப்போல இந்த வருடமும் கடத்திவிடமுடியாது போலிருந்தது. மூத்த மகன் பிரகாஸ் ஏற்கனவே அவருக்குச் சொல்லிவிட்டான்.
'அப்பா…! எனக்கு இந்தமுறை வருடப்பிறப்புக்கு நீல சேர்ட் வாங்கித் தாங்கோ…! ஸ்கூலுக்கும் போடக்கூடியதாய் இருக்கும்!"
வருடப்பிறப்பு என்பது ஒரு சாட்டுத்தான். பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்குப் போடுவதற்கு உடை தேவைப்படுகிறது. மனைவி சரசுகூட அவருக்கு அவ்வப்போது சொல்லுவதுண்டு.
'ஒரு ஆமான உடுப்பில்லாமல் அதுகள் எப்படி ஸ்கூலுக்குப் போறது?"
அவர் அப்போது மனைவியைச் சினந்து பேசுவார்.
'என்ன சரசு?... நிலைமை தெரியாதமாதிரி கதைக்கிறீர்…என்னை என்ன செய்யச் சொல்லுறீர்?"
அவளுக்கு நிலைமை தெரியும் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அவளும்தான் என்ன செய்வாள்? வேறு யாருக்குப் போய் முறையிடுவாள்? எனினும் அப்படிச் சத்தம் போட்டால் அவள் திரும்பவும் அந்தக் கதையை எடுக்கமாட்டாள்.
•Last Updated on ••Wednesday•, 03 •May• 2017 06:26••
•Read more...•
••Sunday•, 16 •April• 2017 07:19•
??- கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
ரவிராஜ் வீடு ஒன்றை வாங்கினான். மனைவி பவித்திராவிற்கு வீடு நன்றாகப் பிடித்துக் கொண்டது. உரிமையாளர் வீட்டைச் சுற்றிக் காட்டினார். வீட்டைப் பற்றி விலாவாரியாகச் சொன்னார். ஒரு குடும்பத்தைத் தவிர, அயலவர்களைப் பற்றி பெருமையாகச் சொன்னார். இவர்களுக்கு எதிர்ப்புறமாக இருந்த வீட்டுக்காரர்களில் அவருக்கு திருப்தி இருக்கவில்லை. அவர்களைப் பற்றி மேலெழுந்தவாரியாக சில குறைபாடுகளைச் சொன்னார்கள். மனைவி விவாகரத்துப் பெற்றவள். மூன்று பெண்பிள்ளைகள். குப்பைக்குடும்பம். கூத்துக்குடும்பம். இவை போதாதா அந்தக் குடும்பத்துடன் பழகுவதா இல்லையா என மூடிவு செய்ய? ரவிராஜ் குடும்பத்தினர் அவர்களுடன் பழகுவதில்லை என முடிவு செய்தனர்.
வீட்டிற்குப் போன முதல்நாள் மாலை நேரம் – பக்கத்து வீட்டுப் பெண்பிள்ளை---ஏழோ எட்டோ படிக்கக்கூடும்--- தனது நண்பி ஒருத்தியுடன் வந்து வீட்டின் கதவைத் தட்டினாள். அவள் தன் மார்புடன் இரண்டு பந்துகளை அணைத்திருந்தாள். மகனை தங்களுடன் விளையாட அனுப்பும்படி கேட்டாள். மகன் படிக்கப் போய்விட்டதாக பொய் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாள் பவித்திரா.
அந்த வீட்டில் இரவு முழுவதும் திருவிழா போல விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். எந்நேரமும் கார்கள்---கார் என்று சொல்லமுடியாது வாகனங்கள்---வருவதும் போவதுமாக நிறைந்திருக்கும். அதே போல எல்லாவிதமான மனிதர்களும் வந்து போவார்கள். அந்த வீட்டிற்கு புல்லு வெட்டுபவனின் கார் பெட்டியுடன் சிலவேளைகளில் இரவும் தரித்து நிற்கும். வந்து போகும் பெண்களில் அனேகமானவர்கள் இளமையாக இருக்கின்றார்கள்..
•Last Updated on ••Sunday•, 16 •April• 2017 07:21••
•Read more...•
••Friday•, 17 •March• 2017 00:05•
??- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -??
சிறுகதை
'நாங்கள் லண்டனுக்கு கப்பலால்தான் பயணம் செய்து வந்தோம். கறிக்குப் போடுகிற மிளகாய்த்தூள், சமைக்கிறதுக்கு கருவாடு, கோப்பி போன்ற சாமான்களை யாழ்ப்பாணத்திலிருந்துதான் கொண்டு வருவோம். அப்படிக் கொண்டு வந்தால்தான் எங்கட சாப்பாட்டை கொஞ்சம் சுவைபடச் சாப்பிடலாம். இலங்கையிலிருந்து மேற்படிப்புக்கென்று வருகிறவர்கள் எல்லோரும்; கட்டிக் காவிக் கொண்டுதான் வருவோம். யாழ்ப்பாணத்தை இறக்குமதி செய்தது போலல்லவோ இப்போது லண்டனில் எல்லாப் பொருட்களும் இருக்குது.
என்னுடைய பிள்ளைகள் லண்டனில் படித்துப் பட்டம் பெற்றார்கள். ஆனால் திருமணம் என்பதில் நாட்டம் கொள்ளாது இருந்துவிட்டார்கள். இப்ப துயர உணர்வில் வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள். திருமணத்தை விரும்பாது சுதந்திரமாக வாழவேண்டும் என்று தனிமையில் வாழ்கின்றவர்களும் இருக்கிறார்கள். வெளிநாட்டவர்களில் மோகங்கொண்டு கல்யாணம் செய்தவர்களும் உண்டு. சிலர் சிறப்பாக இருக்கிறார்கள். சிலரின் வாழ்க்கை இடையில் முறிந்தும், சீர்கெட்டுப்போயும்; இருக்குது. நவீன உலகில் திருமண வாழ்வும் புதுப்புது உருவம் பெற்றுக்கொண்டுதான் வருகின்றது. என்ன இருந்தாலும் என்ர பிள்ளைகள் தனித்து வாழ்வது என் சிந்தனையை எந்த நேரமும் அரித்துக்கொண்டுதான்; இருக்குது’ என்று இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கும் அன்ரி எப்போதும் தான் படிக்க வந்த பெருமையையும்;, தனது பிள்ளைகளின் கவலையையும் கூறிக்;கொண்டே இருப்பார்.
ஷாலினியுடன் அன்ரியின்; ஆதங்கத்தைக் கதைத்துக் கொண்டிருந்தேன். திருமணங்கள் பற்றித் திரும்பியது பேச்சு.
இலங்கையில் பெற்றோர் விருப்பத்தின்படி திருமணம் முடித்து வந்தவள் ஷாலினி. லண்டனில் பிறந்து வளர்ந்தவர்தான் மாப்பிள்ளை. தற்போது ஷாலினி லண்டனில் தனியார் வைத்தியசாலையில் தாதியாக வேலை பார்க்கிறாள். பட்டப்படிப்பிற்காக லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டும் இருக்கின்றாள் ஷாலினி.
•Last Updated on ••Friday•, 17 •March• 2017 00:10••
•Read more...•
••Tuesday•, 07 •March• 2017 22:50•
??- சுதாராஜ் - ??
சிறுகதை
காலையில் விழித்தெழுந்ததும் கபினை விட்டு வெளியே வந்து சூரியன் எந்தப் பக்கத்தில் உதித்திருக்கிறான் என்று பார்த்தான். அவனுக்கு சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும். ஊரிலென்றால் கிழக்குமுகம் பார்த்த வீடு. காலையில் முன் விறாந்தையில் நின்று பார்த்தால்.. காற்றிலசையும் தென்னோலைகளுக்கு ஊடாக பளிச் பளிச் என சூரியன் தோன்றிக்கொண்டு வருவான். அப்போதெல்லாம் அப்பா தலைக்கு மேலாக கையை உயர்த்தி சூரிய நமஸ்காரம் செய்யும்போது பார்க்க அவனுக்கு வேடிக்கையாயிருக்கும். இப்போது மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்திருக்கும் தனிமையில் அவனுக்கும் கடவுள் வணக்கமும் பிரார்த்தனையும் தேவைப்படுகிறது.
கப்பலுக்கு வேலைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. சிறீலங்காவில் யுத்த காலத்தில் வேலைகளேதுமின்றி கஷ்டமும் கடனும் பட்டு வாழ்ந்த வாழ்க்கை வேணாமென்று போயிருந்தது. அதையெல்லாம் நிவர்த்திக்கமுடியாதா என்ற நைப்பாசையிற்தான் கப்பலில் வேலைக்கு வந்து சேர்ந்தான். ஒரு வருடம் வேலை செய்துவிட்டு ஊரோடு போய்ச் சேர்ந்துவிடலாம் என்றுதான் ஓர் உத்தேசம் இருந்தது. வருடங்கள் கடந்துகொண்டிருக்கின்றன... அவனது கடன் பிரச்சினைகள் தீர்ந்தபாடுமில்லை... வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபாடுமில்லை.
கப்பற்தளத்தின் பின் பக்கமாக வந்து நின்று வானத்தைப் பார்த்தான். கப்பலில் பயணிக்கும்போது திசைகள் மாறிவிடுகிறது. முதல் நாள் பயணித்த திசை, காலையில் விழிக்கும்போது மாறியிருக்கும்.. கப்பல் வேறு ஒரு திசையில் போய்க்கொண்டிருக்கும். ஒரே திசையில் பயணித்தாலும் பாகைக் கணக்கிலேனும் பக்கங்கள் மாறிவிடும். கடலலைகளில் கப்பல் அசையும்போது சூரியனும் வானத்தில் ஏய்த்து விளையாடுவதுபோலிருக்கும். கருமேகங்களுக்குள்ளிருந்து சூரியன் வெளிப்படும்போது தோன்றும் ஒளிர்வு மனதில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தும். கைகளை உயர்த்தி வணங்கும்போது அவனுக்குக் கண்கள் கலங்கியது. அது, அந்த சூரிய ஜோதியின் தாக்கத்தினாலும் மனைவி பிள்ளைகளை நினைத்த பிரிவாற்றாமையாலும் கிளர்ந்த ஓர் உணர்ச்சி வசமாயிருக்கலாம். அவன் மௌனமாகிப்போனான். அப்படியே கண்களை மூடி மனசு தியானித்தது. இது வழக்கமான சங்கதிதான். கப்பல் வாழ்வில் ஒவ்வொரு காலையும் கண் கலங்கலுடன்தான் புலர்கிறது.
•Last Updated on ••Tuesday•, 07 •March• 2017 22:51••
•Read more...•
••Monday•, 20 •February• 2017 23:55•
??- ராஉல் டேவிட் | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -??
சிறுகதை
அந்தச் சம்பவம் நடைபெறும்போது கட்டன்ஹா - டொம்பூலா தம்பதி, இஸாக் ஆற்றுக்கும், உலம்பு மலைக்குமிடைப்பட்ட செழிப்பான நிலப் பகுதியில் எழில் வாய்ந்த கிராமமான டுங்காவில் வசித்து வந்தனர். நரைத்த தலைமயிரையும் நீண்ட அனுபவங்களையும் கொண்ட, அப் பிரதேசத்தில் பிரசவம் பார்க்கும் முதியவளான நெகும்மின் உதவியோடு அந்தக் குடும்பத்துக்கு குழந்தைகள் மூவர் இணைந்தனர்.
அவர்களுக்கு வேண்டிய அனைத்துமே பரிபூரணமாக இருந்ததால், கட்டன்ஹாவோ டொம்பூலாவோ குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குச் சொந்தமான பல ஹெக்ரயர்கள் விசாலமான விவசாய நிலத்தில் நல்ல அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. விலங்குப் பண்ணையிலிருந்தும் நல்லதொரு வருமானம் கிடைத்தது.
1937 வரைக்கும் அவர்கள் மிகவும் மகிழ்வாக வாழ்ந்தனர். 1937 இல் திடீரென நடந்த ஒரு சம்பவத்தின் பலனாக அவர்களது அமைதியும் சந்தோஷமும் நிறைந்த உலகம் சிதறிப் போனது. அடிமைகளாக வேலை செய்விக்க மனிதர்களைப் பிடித்துப் போகும் சமயத்தில் கட்டன்ஹாவும் சிக்கிக் கொண்டான்.
இவ்வாறாக மனிதர்களைப் பிடித்து அடிமை வேலைகளுக்காகக் கொண்டு செல்வதென்பது தேச மக்களுக்கு பெருந் துயரத்தைத் தருமொன்றாக இருந்ததோடு, ஓரோர் குடும்பத்தின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. வரிகளைக் கட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு மாற்றம் செய்வது ஆகியன மக்களை இவ்வாறு பிடித்துச் செல்வதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. எனினும் உண்மையில் இவ்வாறான ஆட்கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவது சாந்தோம், ப்ரின்ஸஸ் தீவுகளில் அடிமை வேலைகளுக்காக ஆட்களைப் பெற்றுக் கொள்வதற்கேயாகும்.
•Last Updated on ••Tuesday•, 21 •February• 2017 00:02••
•Read more...•
••Monday•, 20 •February• 2017 23:55•
??- ராஉல் டேவிட் | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -??
சிறுகதை
அந்தச் சம்பவம் நடைபெறும்போது கட்டன்ஹா - டொம்பூலா தம்பதி, இஸாக் ஆற்றுக்கும், உலம்பு மலைக்குமிடைப்பட்ட செழிப்பான நிலப் பகுதியில் எழில் வாய்ந்த கிராமமான டுங்காவில் வசித்து வந்தனர். நரைத்த தலைமயிரையும் நீண்ட அனுபவங்களையும் கொண்ட, அப் பிரதேசத்தில் பிரசவம் பார்க்கும் முதியவளான நெகும்மின் உதவியோடு அந்தக் குடும்பத்துக்கு குழந்தைகள் மூவர் இணைந்தனர்.
அவர்களுக்கு வேண்டிய அனைத்துமே பரிபூரணமாக இருந்ததால், கட்டன்ஹாவோ டொம்பூலாவோ குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குச் சொந்தமான பல ஹெக்ரயர்கள் விசாலமான விவசாய நிலத்தில் நல்ல அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. விலங்குப் பண்ணையிலிருந்தும் நல்லதொரு வருமானம் கிடைத்தது.
1937 வரைக்கும் அவர்கள் மிகவும் மகிழ்வாக வாழ்ந்தனர். 1937 இல் திடீரென நடந்த ஒரு சம்பவத்தின் பலனாக அவர்களது அமைதியும் சந்தோஷமும் நிறைந்த உலகம் சிதறிப் போனது. அடிமைகளாக வேலை செய்விக்க மனிதர்களைப் பிடித்துப் போகும் சமயத்தில் கட்டன்ஹாவும் சிக்கிக் கொண்டான்.
இவ்வாறாக மனிதர்களைப் பிடித்து அடிமை வேலைகளுக்காகக் கொண்டு செல்வதென்பது தேச மக்களுக்கு பெருந் துயரத்தைத் தருமொன்றாக இருந்ததோடு, ஓரோர் குடும்பத்தின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. வரிகளைக் கட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு மாற்றம் செய்வது ஆகியன மக்களை இவ்வாறு பிடித்துச் செல்வதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. எனினும் உண்மையில் இவ்வாறான ஆட்கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவது சாந்தோம், ப்ரின்ஸஸ் தீவுகளில் அடிமை வேலைகளுக்காக ஆட்களைப் பெற்றுக் கொள்வதற்கேயாகும்.
•Last Updated on ••Tuesday•, 21 •February• 2017 00:02••
•Read more...•
••Wednesday•, 25 •January• 2017 20:26•
??- முல்லை அமுதன் - ??
சிறுகதை
'அப்பா!'
கூப்பிட்ட தொனி கோபமா அல்லது அப்பாவின் இயலாமை மீதான கழிவிரக்கமா?
மௌனமாக திரும்பினேன்.
விழிகளை அகலத்திறந்து அவளைப் பார்க்கையில்.. என் கேள்வியின் அர்த்தம் பார்வையில் தெரிந்திருக்கவேண்டும்.
சொன்னாள்.
'ஏனப்பா..உங்களைப் போல நானும் எழுத வேண்டும்..என்னை என் பாட்டில் விட்டுவிடுங்களேன்'
அதற்கு..?
அருகில் வந்து அமர்ந்தேன்.அவள் ஏதோ சொல்ல நினைக்கிறாள். சொல்லட்டுமே.
அவளின் குரல் வரட்டுமே.
எத்தனை நாள் பூட்டிவைத்திருக்கும் கேள்வியும் அது எனில் கேட்டுவிட்டுப்போகட்டுமே.
•Last Updated on ••Wednesday•, 25 •January• 2017 20:32••
•Read more...•
••Tuesday•, 01 •November• 2016 18:38•
??-கே.எஸ்.சுதாகர் ??
சிறுகதை
இரவின் பனியில் நனைந்த ‘அக்பர்’ பாலத்தின்மீது, நான்கு பெண்கள் நடுங்கியபடி பொறியியல்பீடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
மகாவலி நதிக்குக் குறுக்காக இரண்டு தூண்களின் உதவியுடன் கம்பீரமாக நிற்கும் அந்தப் பாலம் இடிந்து விழக்கூடும் என்ற நடுக்கம் அல்ல அது. எதிராக வந்து கொண்டிருக்கும் ஐந்து ராக்கிங் பூதங்களைக் கண்டுவிட்ட பயப்பீதி அது.
”பெயர்களை ஒவ்வொருத்தராகச் சொல்லுங்கள்!”
“பரமேஸ்வரி, கெளசி, பல்லவி, தாரினி”
இந்த விளையாட்டு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றது.
“பல்லவி மாத்திரம் இதிலை நிக்கலாம். மற்ற மூண்டு பேரும் எங்களோடை வாருங்கள்” சொல்லிவிட்டு அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்த பூதங்களில் நான்கு போயின.
கருணா மாத்திரம் பல்லவியுடன் நின்றான். சந்தித்த முதல்நாளே கருணாவின் கண் அவள்மீது பட்டுவிட்டது.
ஹந்தான மலைச்சாரலில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளிக்கற்றைகள் பல்லவியின் மீது படர முகம் ஜோராக ஜொலித்தது. சினிமாப்படங்களில் வருவது போல தென்றல் அவள் கேசங்களைச் சிலிர்க்க வைத்தது. பல்லவி குள்ள உருவம் என்றாலும் அழகுராணிதான். இரட்டைப்பின்னலை முன்னாலே தூக்கி வாகாக வீசியிருப்பாள். அதில் கருணாவின் மனம் ஏறி இருந்து ஊஞ்சல் ஆடும்.
“என்னைத் திருமணம் செய்வாயா?” நிஜத்தைப் பகிடியாகத் திரித்து கேள்வியாக்கித் தூது விட்டான் கருணா.
•Last Updated on ••Tuesday•, 01 •November• 2016 18:45••
•Read more...•
••Friday•, 14 •October• 2016 17:41•
??- வே.ம.அருச்சுணன் – மலேசியா -??
சிறுகதை
மாலை வேளையில் அது. கோவில் அலுவலகத்தில் தலைவரும் செயலாளரும் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தீபாவளி விருந்து நிகழ்வு பற்றி தீவிர ஆலோசனை செய்கின்றனர்.
“காளி...இந்த ஆண்டு நம்ம ‘கம்போங் மிஸ்கின்’ கோவில்ல தீபாவளி விருந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பா நடத்திடனும்னு நினைக்கிறேன்.... நீ என்னப்பா சொல்ற?” மீசையை முறுக்கியபடி தலைவர் மாயாண்டி கேட்கிறார்.
“புதுசா நான் என்ன சொல்லப் போறேன் தலைவரே? பல வருசமா தீபாவளி விருந்து நிகழ்ச்சிய நடத்தி வரோம். இந்தப் புறம்போக்கு நிலத்துல வாழ்ற ஏழை மக்கள் வருசத்துல ஒரு நாளாவது சந்தோசமா ஆட்டுக் கறியோடு வயிறாறச் சாப்பிடனும். சந்தோசமா ஆடி பாடி மகிழனும். நாம கோயில் கட்டிப் பத்து வருசமாச்சு. அதனால, இந்தப் பத்தாமாண்டு கோவில் திருவிழாவில பத்துக்கிடாக்களை வெட்டி நம்ம முனியாண்டி சாமிக்குப் படையல் போட்டு அமர்க்களப்படுத்திடனும் தலைவரே.இதுதான் என்னோட ஆசை” கோவில் செயலாளர் காளி பெரிய எதிர்பார்ப்புடன் கூறுகிறான்.
“பத்தில்ல காளி.... இருபது கிடாக்கள வெட்டி நம்ம கம்பம் மட்டுமல்லாம...சுற்று வட்டாரத்துல இருக்கிற ஏழைபாளைகளுக்கெல்லாம் பெரிய அளவில பத்தாமாண்டுக் கோவில் திருவிழாவையும் தீபாவளி விருந்தையும் தடபுடலா விருந்து வெச்சு அசத்திடுவோம் அசத்தி.....!” தலைவர் மாயாண்டி உற்சாகமாகப் பேசுகிறார்.
“இந்த வட்டாரத்தில, இதுவரையிலும் யாரும் நடத்திடாத அளவில மிக விமர்சியா தீபாவளி விருந்தை நடத்திக் காட்டுவோம் காளி” மீசையை வேகமாக முறுக்கிவிடுகிறார் தலைவர்.
“தலைவரே....உங்கப் புண்ணியத்தாலே வருசா வருசம் கோவில்ல தீபாவளி விருந்துல சுவையான ஆட்டுக் கறியோட வயிறாரச் சோறு சாப்பிட முடியுது. என் புருசன் இறந்த பிறகு நான் ஒண்டியா.... உழைச்சு சின்னஞ்சிறுசுகளா இருக்கிற என்னோட ஐந்து புள்ளைங்களக் காப்பாற்ற பாடு இருக்கே அந்த முனியாண்டி சாமிக்குத்தான் தெரியும்.நீங்க மவராசனா இருக்கனும் சாமி”
•Read more...•
••Saturday•, 08 •October• 2016 23:32•
??- அகணி சுரேஸ் -??
சிறுகதை
சிக்காகோ ஓ ஹரே சர்வதேச விமானநிலையத்தில் இருந்து காலை 10:40க்குப் புறப்பட்ட அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானம் ரொறன்ரோ நோக்கி;ப் பறந்து கொண்டிருந்தது.
“முப்பத்தாறு வருடங்களுக்குப் பிறகு எனது நண்பன் குமாரினை சந்திக்கப் போறேன் என்று நினைக்க மகிழ்ச்சியாகவும், மிகவும் நெருங்கிப் பழகிய நண்பன் ஒருவனுடன் கடந்த முப்பத்தாறு வருடங்களாக எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்திட்டன் என்று நினைக்க குற்ற உணர்வும் என் மனதைப் போட்டு உறுத்துது” என்று புலம்பிக் கொண்டு விமானத்தில் இருக்கையில் இருந்தவாறு தனது இளமைக்கால நினைவுகளை மனதில் மீளோட்டம் செய்து கொண்டிருந்தான் சுதன். அவனோடு பயணம் செய்து கொண்டிருந்த மனைவி ரேகா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். விமானத்தின் பறப்பு வேகத்தையும் மேவிய வேகத்துடன் கடந்த கால நினைவுகள் சுதனின் மனதில் அலையலையாக எழுந்தன……………
யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரித் தொகுதியில் அமைந்து எண்ணற்ற கலைத்துறை மாணவர்களையும் ஒருசில விஞ்ஞான மாணவர்களையும் பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் அனுப்பி வரும் சாதனையால் சாவகச்சேரி இந்துக்கல்லூரி என்று எல்லோராலும் நன்கு அறியப்பட்ட ஒரு முதன்மைநிலைக் கல்லூரியாக விளங்கும் கல்லூரியில் தரம் நான்கு முதல் சாதாரண தரம் வரை ஒன்றாகப் படித்தவர்கள் சுதனும், குமாரும். அவர்களின் வீடுகள் கல்லூரியிலிருந்து எதிர்த்திசைகளில் பத்து மைல் தூர இடைவெளியில் இருந்தபோதும் கல்லூரியில் இணைபிரியா நண்பர்களாக இருந்தார்கள்.
சாதாரணதரக் கல்விக்குப் பின்னர் உயர்தரத்தில் சுதன் உயிரியல் துறைக்கும், குமார் கணிதத்துறைக்கும் சென்று படிக்க வேண்டியிருந்ததால் எற்பட்ட பிரிவினைக் கூட ஏற்றுக்கொள்ளமுடியாது இருவரும் திண்டாடியவர்கள். உயர்தர வகுப்பிலும் இரசாயன பாடத்துக்குச் சுதனின் வழிகாட்டலும், பௌதீகப் பாடத்திற்கு குமாரின் வழிகாட்டலும் பெற்றுக் கொண்டு இருவரும் தத்தமது துறைகளில் சிறப்பாகப் படித்தார்கள்.
உயர்தரப் பரீட்சையில் சுதன் கொழும்பு மருத்துவக் கல்லூரிக்கும், குமார் பேராதனைப் பொறியியல் துறைக்கும் அனுமதி பெற்றார்கள். பல்கலைக்கழகம் செல்வதற்காகக் காத்திருந்த காலத்தில் சாவகச்சேரியில் புகழ்பெற்ற ஆங்கில ஆசிரியரான சிரோன்மணி ஆசிரியரிடம் பிரத்தியேகமாகச் சென்று ஆங்கிலம் படித்தார்கள். இவர்களைப் போன்று பல்கலைக்கழக அனுமதி பெற்ற பல மாணவர்களும் அந்த வகுப்புக்கு வந்திருந்தார்கள். ஆங்கிலம் கற்பதற்கு மேலாக அங்கு வந்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் நட்பை ஏற்படுத்திப் பழகி வந்தார்கள்.
•Last Updated on ••Saturday•, 08 •October• 2016 23:36••
•Read more...•
••Tuesday•, 04 •October• 2016 18:51•
??- இரா.சி.சுந்தரமயில் -??
சிறுகதை
அப்பா வழக்கம் போல 5 மணிக்கு எழுந்து கடன் முடித்து, குளித்து, ஸ்லோகம் சொல்லிக் கொண்டே வேஷ்டி உடுத்தி, நெற்றியில் பட்டையிட்டு, பொட்டு வைத்து, காவித்துண்டை பெல்ட்டுப் பட்டையாகக் கட்டிக்கொண்டு 6 மணிக்கு கோயிலுக்குச் சென்றவர் சரியாக ஒருமணி நேரம் கழித்துத் தான் வீடு திரும்புவார்.
போகும் போது “மலர், கனகா எழுந்திரிங்க. பொம்பளப் பிள்ளைங்களுக்கு ஆறு மணிக்கு மேல என்ன தூக்கம்?” என்று குரல் கொடுத்துவிட்டுத்தான் சென்றார். என்றாலும் கூட இருவரும் அப்பாவின் காலடி சத்தம் கேட்டுப் பாய், தலையணைகளை சுருட்டிக் கொண்டு படுத்திருந்த சுவடு தெரியாமல் எழுந்து ஆளுக்கொரு திக்காக ஓடினார்கள்.
“கனகா . . . . . கனகா . . . . .” “என்னப்பா”. குளியலறைக்குள்ளிருந்து குரல் கொடுத்தாள் கனகா,
“மலர் . . . . . மலர் . . . . .”
"இந்தா வந்துட்டேம்பா…” படித்துக்கொண்டிருந்தவளைப் போல பாவணை செய்து கொண்டிருந்த மலர் புத்தகமும் கையுமாக அப்பாவின் முன் வந்து நின்றாள்.
“படிச்சிட்டுருக்கியா. சரிசரி அம்மா எங்கன்னு சொல்லிட்டுப் போ”
“அம்மா அடுப்படில உங்களுக்கு இட்லி ஊத்திட்டிருக்காங்கப்பா”.
“உங்கப்பன் தலையைக் கண்டதும் தானே உங்கம்மா அடுப்படியில கால வைப்பா” என்று மலரிடம் திட்டிவிட்டு தன்னுடைய எழுத்து வேலையைத் தொடர்ந்தார் அப்பா. பத்து நிமிடம் கூட கழிந்திருக்காது அடுப்படியைப்பார்த்துக் குரல் கொடுத்தார்.
•Last Updated on ••Tuesday•, 04 •October• 2016 18:59••
•Read more...•
••Tuesday•, 06 •September• 2016 19:03•
??- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை -??
சிறுகதை
பிணத்தை மடியில் வைத்துக் கொண்டு, அதனைக் கொஞ்சுவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருக்க முடியும்? புஷ்பமாலா தனது கால்கள் விறைத்திருப்பது போல உணர்ந்தாள். காலை நீட்டவும் முடியாது, வேறு விதமாக உட்காரவும் முடியாது என்பதால் மிகவும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள். உடுத்திருந்த அசுத்தமான சீத்தைத் துணி அவளை அக் குழந்தைக்குத் தாயாகக் காட்டியது. காலையில் வரும்போது குடித்த வெறும் தேனீருக்குப் பிறகு எதுவும் கிடையாது. மத்தியானப் பொழுதுக்கு வெயில் ஏறியிருந்தது. பசித்தது. ஏஜண்ட்காரன் எதையாவது சாப்பிடக் கொண்டுவருவான் என்ற மெல்லிய நம்பிக்கை மனதுக்குள் ஓடியது. ஆனால் நிச்சயமில்லை. விகாரையைத் தரிசிக்க வரும் யாராவது புண்ணியவான்கள் அவள் மேலோ அந்தக் குழந்தையின் மீதோ ஏதேனும் பரிதாபப்பட்டு உணவாக எதுவும் போட்டுவிட்டுப் போனால்தான் உண்டு. விரித்து வைத்திருந்த வெள்ளைத் துணியில் சில்லறைகள், பத்து, இருபது ரூபாய் நோட்டுக்கள் சேர்ந்திருக்கின்றனதான். அவற்றை எடுத்துக் கொண்டு போய் ஏதாவது வாங்கி வந்து உண்ணும் நப்பாசையும் உள்ளுக்குள் எழுந்தது. சாத்தியமில்லை. ஏஜண்ட்காரன் எங்கிருந்தாவது நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பான். அவனது பார்வையைத் தாண்டிப் போய் எதுவும் செய்ய முடியாது. அவ்வளவு தைரியமில்லை. போன வாரம் இப்படித்தான். பணம் ஏதாவது ஒளித்து வைத்திருக்கிறாளா என குமாரியின் ஆடையை அவிழ்த்துப் பார்த்தார்கள். அவளால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. என்ன செய்ய முடியும்? வீரு வீரென்று பிரம்பால் அடிவாங்குவதை விடவும் 'பாருய்யா பாரு..எங்கேயும் எதுவும் மறைச்சு வைக்கல' என்று கத்தி அவளே உடுப்பை அவிழ்த்துக் காண்பித்தாள். அன்று முழுக்க அவள் எதுவும் சாப்பிடவில்லை. அழுது கொண்டே இருந்தாள்.
பிணத்தின் மீது இலையான்கள் மொய்த்துக் கொண்டே இருந்தன. அது பிணம் என்பது இலையான்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டிருக்கிறது. இலையான்களால் எப்படியும் ஒரு பிணத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இலையான்களால் மட்டுமல்ல. பிண வாடையை மோப்பம் பிடித்துத் தேடி வரும் நாய், பூனைகள் கூட பிணத்தை அடையாளம் கண்டு இழுத்துப் போக முயற்சிக்கும். அதனால்தான் புஷ்பமாலா பிணத்தைத் தனது மடியை விட்டு இறக்கவும் இல்லை. அங்கு இங்கென நகரவும் இல்லை. காசு போட்டுச் செல்லும் எவராலும் கூட அது பிணம்தான் என இன்னும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவர்கள் சந்தேகப்படக் கூட இல்லை. வெறுமனே அசுத்தமான ஆடைகளைப் பார்த்துக் கொண்டு அசூசை பட்டுக்கொண்டு தூரத்திலிருந்து காசை விட்டெறிந்துவிட்டுச் செல்கிறார்கள். எவனாவது கண்டுபிடித்து விட்டால் அவளும் அவளது கூட்டமும் சிறையில் கம்பியெண்ண வேண்டியதுதான். அவள் இதற்கு முன்பும் சிறைக்குப் போயிருக்கிறாள். அப்பொழுது அவள் சிறுமி. கஞ்சா வைத்திருந்ததற்காக அவளது அப்பாவைக் கைது செய்து கொண்டு போயிருந்தார்கள். அம்மாவுடன் அவள் அப்பாவைப் பார்க்கப் போயிருக்கிறாள். பொலிஸார் அடித்து அப்பா செத்துப் போனதால் அப்பாவைப் பிணமாகத்தான் வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். புஷ்பமாலாவுக்கு எல்லாம் நன்றாக நினைவிருக்கிறது. அவளுக்கு அதுதான் பிரச்சினை. எதுவும் மறந்து தொலைய மாட்டேனென்கிறது. சின்னச் சின்ன விஷயங்கள் கூட நினைவிருக்கிறது. அவளும் பல விஷயங்களை மறந்துவிட தீராது முயற்சிக்கிறாள். ஒருபோதும் முடியவேயில்லை. முக்கியமாக மாதந்தோறும் அவளது வீட்டில் கிடக்கும் பிணங்கள். பல நாட்கள் இரவுகளில் அவள் தூங்காமல் விழித்திருந்திருக்கிறாள். என்னதான் அவர்களின் வாயில் அலறிவிடாமல் இருக்க பழந்துணியைத் திணித்து அடைத்திருந்த போதிலும் அவர்கள் வாய்க்குள்ளேயே கதறும் சப்தம் அவளது கனவில் கூடக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
•Last Updated on ••Tuesday•, 06 •September• 2016 19:04••
•Read more...•
••Thursday•, 01 •September• 2016 17:07•
??- எஸ். அகஸ்தியர் -??
சிறுகதை
- எழுத்தாளர் அகஸ்தியரின் பிறந்த தினம் ஆகஸ்ட் 29. அவர் நினைவாக அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைந்த அகஸ்தியரின் சிறுகதை 'வட்டி' அவர் நினைவாகப்பிரசுரமாகின்றது. - பதிவுகள் -
‘தாரு வூட்டில? கதவைப் பூட்டிக்கிட்டிருக்கீங்கலே, எந்திரிச்சு வெளியே வாங்கலேன்?’
பாத்திமாதான் வந்து கரிக்கிறாள். காலங் காத்தால வேறு யார் இப்படி வருவது? ‘நான் கூப்புட்டுக்கிட்டே இருக்கேன். ஓத்தரும் பேசாம அப்புடியே அமுங்கிப் பேயித்திருக்கீங்கலே. அது என்னில தாண்டியம்மா குத்தம்...நான் சும்மா இரிக்கிய ஏலாம எண்ணிக் குடுத்துப்போட்டு இப்ப நாயா அலஞ்சு திரியிறனல்ல..? வூடு தேடியாந்து கூப்பிட்டாக்கா வந்து ஏனென்னும் கேட்கிறதாக் காங்கலியே? ஏய், தாரு வீட்டில, எந்திரிக்சு வெளியால வாங்கலேன்...’ பலகைக் கதவு திறபடுகிறது, வீட்டுப்பெண் மொட்டாக்குடன் வெளியே வந்தாள். ‘ஏன்ரியும்மா இம்மட்டு நேரமா உள்ளுக்க என்ன செஞ்சுக்கிட்டிருந்தீங்க. செல்லம் பொழிஞ்சிக்கிட்டிருந்தீங்கலா?’ ‘கோவிச்சசுக்காதையுங்க ராத்தா. புள்ளைங்கள வூட்டுல உட்டுட்டுக் கக்கூசுக்குப் பேயித்திற்று இப்பதான் வந்தன்’ பாத்திமாவுக்கு மனசு கொஞ்சம் இளகிற்று. ஆனாலும், அதுவே பின் கொதித்து வேறு உருவெடுத்துச் சாடியது. ‘ஏன். ‘அதெ’ இன்னும் கொண்ணாந்து குடுக்காம இரிக்கீங்க, எத்தனை தரமா அதுக்காவ நடக்கிறது?’
•Last Updated on ••Thursday•, 01 •September• 2016 17:21••
•Read more...•
••Tuesday•, 09 •August• 2016 23:25•
??- பரதன் நவரத்தினம் -??
சிறுகதை
யாழ்ப்பாணம் .காலை ஏழு மணியளவில் கோண்டாவில் இருபாலை வீதியில் பச்சை பசேல் என்ற தொட்டவெளிக்குள் இருக்கும் அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு மொட்டார் சயிக்கில் வந்து நிற்கின்றது . முற்றத்தை கூட்டிக்கொண்டிருந்த அபிராமி விளக்குமாற்றை போட்டுவிட்டு வீட்டிக்குள் வந்து ,
“அப்பா ஊரெழு இராசையா மாஸ்டரின் மகன் வந்திருக்கின்றார்" .
நம்பி என்ற பெயர் வாயில் வராமல் இராசையா மாஸ்டரின் மகன் என்று மகள் அவரை அழைப்பது வசந்தனுக்கு தெரியும் .
காலையில் சனம் வந்து வரிசையில் குவிய முதல் போனால் தான் நல்ல ஆட்டு இறைச்சி வாங்கலாம் என்று வெளிக்கிட்டுகொண்டிருந்த வசந்தன் "என்ன இந்த நேரம் நம்பி வந்திருக்கின்றான் " என்று மனதில் நினைத்தபடி வெளியே வருகின்றான் .
“நம்பி ,என்னடா இ |