தொன்மத்தின் மீது தேவகாந்தனுக்கு இருப்பது தீராக் காதலல்ல் தீராக்காமம். தொன்மத்தை மையப்படுத்திய தேவகாந்தனின் புனைகதைகளில் இரு விடயங்கள் அடிப்படையாக இருப்பதனை எடுத்துக் காட்டலாம். முதலில் ஏற்கனவே உள்ள நமக்கும் தெரிந்திருக்கும் தொன்மத்தை முன்வைத்தல். அடுத்தது அந்தத் தொன்மத்துக்கு சமாந்தரமாக இன்னொரு தொன்மத்தை உருவாக்கி இடைபுகுத்துதல். இதைத்தான் “பிறந்தவர் உறுவது பெருகிய துன்பம்” என்ற கருத்தியல் வழியாகச் சமூகத்தில் ‘ஊடு நிகழ்த்துகை’அவரால் மேற்கொள்ளப்படுகிறது. அந்த ஊடு நிகழ்த்துகையோடு இணைந்த மீள் வாசிப்பின் கலைப புனைவாக நாவல் நீண்டு செல்கிறது. ‘கதை சொல்லல்’ ‘கதை இணக்குதல்’ ஆகிய இருவகை நுட்பங்களிலும் நுண்ணாற்றல் மற்றும் நுண் அனுபவம் கொண்ட தேவகாந்தனின் கதை விசையூட்டற் செயற்பாடு வாசிப்பை நேர்பட நடத்திச் செல்கின்றது… “ என பேராசிரியர் சபா .ஜெயராசா குறிப்பிட்டுள்ளார்.
இங்கே கதை சொல்லல் என்பது ஏற்கெனவேயுள்ள நமக்குத் தெரிந்திருக்கும் தொன்மத்தை முன்வைத்தலைக் குறிப்பதாகும். இந்தக் கதை சொல்லல் செயற்பாட்டிலும் தேவகாந்தன் எந்தவொரு மீறலையும் செய்திருக்கவில்லை. மாறாக கயவாகு மன்னனைப் பற்றிய குறிப்புää சமந்தகூடம்ää நாகவழிபாடுää மணிபல்லவம்ää பூம்புகார் தமிழ்ப்பௌத்தத் துறவிகள்ää கடலோடிகள்ää மணி வியாபாரிகள்ää பூம்புகார் நகரம் என எல்லாவற்றையுமே மூலத் தொன்மத்துக்கு ஒத்திசைவாகவே இயன்றவரை விபரித்துச் சென்றிருக்கிறார். இது கதை சொல்லலில் வாசகனுக்கு இயல்பாவே ஒரு நம்பகத்தன்மையைத் தோற்றுவிக்கின்றது.
‘கதை இணக்குதல்’ என்பதுதான் நமக்குத் தெரிந்திருக்கும் தொன்மத்திற்குச் சமாந்தரமாக இன்னொரு தொன்மத்தை உருவாக்கி இடையில் புகுத்துவது. இதிலே அஞ்சுகன் என்ற கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகின்றது. அதனுடன் கோடன்ää மாதங்கிää “துறவி தர்மகீர்த்திää சங்கமின்னாள் போன்ற துணைக்கதாபாத்திரங்களையும் இணைத்து புதுத் தொன்மம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இக்கதாபாத்திரங்களுக்கு இடையே நிகழும் உரையாடல்களின் ஊடாகவும் அஞ்சுகனின் மானசீக உரையாடல் மற்றும் நினைவு கூர்தலின் ஊடாகவும் புனைவின் பெரும்பகுதி நகர்த்தப்படுகிறது. ஏற்கனவே வாசகனுக்குப் பரிச்சயமான தொன்மத்தை வலுப்படுத்தும் போக்கைத்தான் அவதானிக்க முடிகிறது. இங்கே எந்தவொரு குறுக்கீட்டையும் நிகழ்த்துவதற்குத் தேவகாந்தன் எத்தனிக்கவில்லை. தனக்கென்றொரு மொழியை வாலாயப்படுத்திக் கொண்டு சீரான கதியில் முன்னேறிச் செல்கிறார்.
தேவகாந்தன் இயல்பாகவே நுட்பமாகக் கதை புனையும் தாடனம் கைவரப்பெற்றவர். என்பதை இதற்கு முன்னைய புதினங்கள் சான்று பகர்கின்றன. ஒரு தடங்கலற்ற இயல்பான கதையோட்டம் இவரது தனித்துவம் எனலாம். இங்கே எடுத்துக்காட்டப்படவேண்டிய இன்னொரு முக்கிய அம்சம் யாதெனில் தேவகாந்தன் எழிதில் வாசகருக்கு உணர்வுத் தொற்றுதலை ஏற்படுத்தக் கூடிய வகையில் தனது கதை மாந்தரை உருவாக்கக்கூடிய நுட்பத்தை கையாளக்கூடியவராக இருக்கிறார். இந்தப் புதினத்தில் அஞ்சுகன்ää கோடன்ää மாதங்கிää போன்ற கதாமாந்தர்களை இதற்கு எடுத்துக் காட்டாக்கலாம்.
“…. வெய்யில் மேலே மேலேயென ஏறி இளவேனிலும் சூடு கொள்ளத் தொடங்கியது. பின்னாலே நின்ற ஒரு பெருநிழல் மரத்தின்கீழ் சங்கமின்னாள் சென்றமர்ந்தாள். சிறிது நேரத்தில் கோமுகித் திசையிலிருந்து வந்து துறவி சங்கமின்னாளின் அருகே அமர்ந்தார்.
வாருங்கள் அடிகளே! என்று வரவேற்றாள் சங்கமின்னாள். பின் அவள் நிமிர்ந்து அவரை வெறிதே பார்த்தாள். அந்த வெறிதும் ஒரு கேள்வியையே அர்த்தமாக்கியிருந்தது.
அஞ்சுகனை யாரும் கண்டிருக்கவில்லை. அதுபோலத் தகவலும் கொண்டிருக்கவில்லை. அவன் இல்லாமல்தான் ஆனானென இனி நாம் நம்பலாம். பௌத்தநெறி கொண்டிராதவன்; ஆனாலும் அவன் ஒரு திறன் கொண்டிருந்தான். அவன் மிகச் சிக்கலான தத்துவ விவகாரங்களையும் மிக நுண்மையாக விளங்கிக் கொண்டான். அவன் ஒரு பாட்டு எழுதிவிட்டுப் போயிருக்கலாம் என்பதே என் துக்கம். சதா இடையில் எழுத்தாணியும் ஏட்டு நறுக்குகளும் கொண்டு அலைந்தான். அவனுள் அது பெரிய விருப்பமாய் இருந்தது. ஆகியிருப்பின் காலம் கடந்தும் ஒரு நினைவாக அப்பாட்டில் அவன் நின்றிருப்பான்..
அவனது நண்பர்கள்… கோடனும் மாதாங்கியும்….? அவர்களும் கடல் பொங்கியெழுந்த காலத்தில் புகாரில் இருந்திருப்பர் போல”
இந்தப் பகுதியை வாசித்து முடிக்கும்போது அஞ்சுகன்ää கோடன்ää மாதங்கிää ஆகியோரது இழப்பின் துயரத்தை வாசகன் உணர்வான். ஏனெனில் இந்த மூவரினது கதாபாத்திரங்களையும் தேவகாந்தன் அந்தளவிற்குச் சிறப்பாக உருவாக்கி வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் குறிப்பிடத்தக்க இன்னொரு முக்கிய அம்சம் தேவகாந்தனின் மொழிப்புனைவாகும். இவ்விதம் தொன்மங்களை முன்வைத்து எழுதப்படும் புனைவுகளில் கையாளப்படும் மொழியென்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது இயல்பானதுதான். தேவகாந்தன் இதை நன்குணர்ந்து எழுதுவது வரவேற்கத்தக்கதுதான். அவர் இந்த வகைப் புனைகதைளுக்கான மொழியில் அதீத கவனங் கொள்கிறார். குறிப்பாக தனக்கென ஒரு மொழியைப் புனைவதில் தீவிர கவனம் செலுத்துகிறார். அது சில இடங்களில் வசீகரிக்கின்றது. சிறப்பாகவுமிருக்கிறது. ஆனால் வேறு சில இடங்களில் செயற்கைத் தனமாகவும் புனைவை மீறித் துருத்திக் கொண்டிருப்பதையும் குறிப்பிடவேண்டியுள்ளது. இவ்விடங்களில் தேவகாந்தன் மொழிப்புனைவைத் தவிர்த்துக் கொள்வதைப் பற்றி மீள்பரிசீலனை செய்வது சிறப்பாக இருக்கும். என்பது எனது தாழ்மையான கருத்து. இது அவரது பலமாக இருக்கும்வரை வரவேற்புக்குரியதாக இருக்கும் . அது பலவீனமாகிவிடக்கூடாது.
தொகுத்து நோக்கும்போது “மேகலை கதா” ஒரு சமநிலையோடு எழுதப்பட்டிருக்கின்றது என்பதை அவதானிக்க முடிகின்றது. தொன்மத்தின் மீதான தேவகாந்தனின் தீராக் காமம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே என் போன்ற வாசகர்களின் பேரவா.
அனுப்பியவர்: bdevakanthan@yahoo.
•Next• •>• |
---|