- கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும்,ந.சுப்புரெட்டியார் 100 கல்வி அறக் கட்டளையும் இணைந்து நடத்தும்,இணையவழிப் பண்பாட்டுக் கருத்தரங்கத் தொhடர் நிகழ்ச்சிகள் -
'முருக இலக்கியங்கள்' - 15.9.2020---20.9.2020
இங்கு என்னையழைத்த முருகேசன் அய்யா அவர்கட்கும்,என்னை அறிமுகம் செய்த எனது அன்புள்ள பிரியா அத்துடன், இந்நிகழ்வுக்குச் சமூகமளித்திருக்கும் முனைவர்கள், பார்வையாளர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எனது மாலை வணக்கங்கள்.
மானுடவியல் என்பது, விஞ்ஞான பூர்வமாக,ஒரு சமுதாயத்தின் கலாச்சாரத்தையும் அதன் வளர்ச்சிக்கு உந்துதலாக இருந்த சமுதாயத்தின் இனரீதியான தொன்மை. மொழி வளர்ச்சி,அத்துடன் மனரீதியான பரிமாணங்களையும் இணைத்துப் பரிசோதனை செய்தலாகும. மானுடவில் ரீதியில் முருகனைப் பற்றிய தகவல்களைப் படிக்கும்போது, அவை வேறெந்த குழுக்களுடனும் சம்பந்தப்படாமல்,தொல்காலம் தொடக்கம்
தமிழரின் தொன்மை,மொழி, வரலாறு,கலாச்சாரம்,பக்தி வழிபாடு எனப் பல அம்சங்களுடன் பின்னிப் பிணந்திருப்பது தெரிய வரும்.அவை வாய்வழியாக மட்டுமல்லாமல், வணக்கமுறையாக,இசை இயல் நாடகத்தோடு தொடர்ந்து இணைந்திருக்கின்றன.
கடவுளைப் பற்றிய ஆய்வை'இறைமை நூல்'அதாவது 'தியோலயி' என்று அழைப்பார்கள். ஆதி மனிதர்கள்,தாங்கள் வாழும் இயற்கைச் சூழ்நிலையின் நல்ல கெட்ட இயற்கை சக்திளை வணங்கினார்கள் என்பது மானுடவியல் ஆய்வுகளிற் தெரிய வருகிறது.
இதை ஆங்கிலத்தில் 'அனிமிஸம்-அதாவது 'ஆன்ம வாதம்' என்று பதிவிட்டிருக்கிறார்கள்.தெய்வ வழிபாட்டின் ஆரம்பமே இதுதான் என்ற வாதமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு'
எனற திருவள்ளுவரின் தொடக்கம் வழிபாட்டின் ஒரு அங்கமான தீயிசம் என்ற கோட்பாட்டை அதாவது ஆதிபகவான் என்ற 'ஒரு' அதிசக்தி என்பதைச் சொல்கிறது.
மானுடவியல் என்ற விஞ்ஞானபூர்வமான ஆய்வின் வல்லுனர்களில் ஒருத்தரான சி. ஏல். ஸ்றாஸ் 1991:76)இஅவர்களின் கருத்துப்படி,ஒரு சமுதாயம்,விஞ்ஞான ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ஒரு விடயத்தை முன்னெடுக்கும்போது. அவ்விடயம் அவர்கள் சார்ந்த சூழ்நிலை,சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உள்ளடங்கியதாகவிருக்கும்;. ஆனால்,கடவுள் பற்றிய தொன்மங்கள்,பெரும்பாலும் வாய்வழியாகப் பரப்பப் படுகிறது' என்கிறார். இதை ஆங்கிலத்தில் 'த சயன்ஸ் ஒவ் ஹியுமானிட்டி'என்று சொல்வார்கள்.
மானுடவியல் நோக்கில் தமிழரின் முருக வழிபாட்டின்,பல கூறுகள் -
அதாவது.பூஜை முறைகள்,நம்பிக்கைகள்.வள்ளி.முருகன் பற்றிய காதல் கதை,முருகனின் வீரம்,அழகை விபரிக்கும் முறை,என்பன,முருகனை வழிபட்ட சமுதாயத்தின் மனநிலையைக் காட்டுகிறது.மேலும்,ஆதித்தமிழரின்,இயற்கையை வழிபட்ட தொன்மம். சாதியமைப்பற்ற சமத்துவ சமுதாய நிலைi,பெண்களையும்,காதலையும் தமிழர் மதித்துக் கவுரவித்ததையும் முருகவழிபாடு காட்டுகிறது.
முருகனின் வணக்கமுறையிலுள்ள குறியீடுகளை அவதானித்த ஆழமான பார்வையில் முருகனின் 'வேல்' என்பது ஆதிகாலத்தில் மக்கள் வேட்டையாடவும்,தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் பாவித்த கல்லால் செதுக்கிய கூர்மையான ஆயதத்தைப் பிரதிபலிக்கிறது.
முருகு என்றால் அழகென்று முருகனை உருவகம் செய்த தமிழர்கள் அவன் கையில் உள்ள வேலுடன் இணைத்துத் தங்களைப் பாதுகாக்க வந்த போர்க்கடவளாக,தங்கள் பாதுகாவலனாக,தங்கள் துயர் தீர்க்க வந்த கலியுக வரதனாக வழிபடுகிறார்கள்.
ஆங்கில சரித்திர ஆய்வாளரும் ஒலிபரப்பாளருமான,திரு ,மைக்கல் வுட்(1995); என்பவரின் பதிவின்படி,முதலாம் நூற்றாண்டுக் கால கட்டத்தில்,'தாமிரபரணி ஆற்றுப் படுக்கையில் கிடைத்த வேலும் சேவலும் உள்ள உருவம் ஆண்தெய்வ வழிபாட்டின் தொன்மையைக் காட்டுகிறது' என்கிறார்.
'தென்னாடுடைய சிவனே போற்றி,என்னாட்டவருக்கும் இறைவா போற்றி' என்று சிவனைத் வணங்கும் தமிழர்கள்,சிவனின் மகன் என்று புராணங்களில் குறிப்பிடப்படும் முருகனைக் காலக் கிரமத்தில்த் தங்கள்'முதற்கடவுளாக.'தமிழ்க் கடவுளாக' வணங்குகிறார்கள்.
உதாரணமாக.'ஓம் என்ற பிரணவ மந்திரமான அகர,உகர,விந்து,நாத.சக்தி,காந்தத்தைத் தகப்பன்,சிவனுக்கே உணர்த்திய,'தகப்பன் சாமி'யாகத் தங்கள் முருகனைச,; சிவனுக்கும் மேலான சக்தியாக உயர்த்தி வணங்குகிறார்கள்.
மானிடவியல் பார்வையில் ஆதித் தமிழர்களின் வாழ்க்கையில்.போரும் காதலும்; முதன்மைப்படுத்தப் படுவது தெளிவாகிறது.மனிதரின் உணர்வுகளை யதார்த்தமாகப் பிரதி பலிக்கும் படைப்புகளாக அகநானுறும் புறநாறும் விளங்குகின்றன.அகநானுறு கி;மு.1-3ம் நூற்றாண்டு எழுதப்பட்டது.
அறிஞர் கமில் செவலபில் அவர்கள்,அறநானுறு பற்றிக் குறிப்பிடும்போது, 'வன் ஒவ் த மோஸ்ட் வலுயபில் கொலக்ஸன் ஒவ் போயம்ஸ்) என்று சொல்கிறார். அதாவது மிகவும் அளப்பரிய பெருமைவாய்ந்த கவிதைத் தொகுதி' என்கிறார்
மானிடவியல் ஆய்வின்படி,வள்ளி முருகன் காதல்க்;கதை ஒருகாலத்தில் தொல் குடிகளின் நாடோடிக் கதைகளாக இருந்திருக்கலாம்.மக்களின் புராதனக்கதைகள் அவர்களின் சரித்திரத்துடனிணைந்தது. அதன் பிரதிபலிப்பாகக்,கந்த புராணத்தில் வள்ளிக்கு முக்கிய இடம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
வள்ளி முருகன் காதற்கதை தமிழரின் இயல் இசை நாடகத்துடனிணைந்தது. இது பற்றி, ஆர்.ஆர்.மாரட் என்ற பிரித்தானிய மானுடவியலாளரின் கருத்துப்படி, 'ஆதிமக்களின் உணர்வுகள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைச் சூழலின் அடிப்படையில் வளர்ந்தன. எனவே அவர்களின் ஆடல் பாடல்.சடங்குகள்.அவர்களைப் பற்றிய வரலாற்றின் தனித்துவத்தைக் காட்டுகிறது என்கிறார். (என்கார்ட்டா 1994).
முருக வழிபாட்டுடன் தொடர்பு கொண்ட தழிழரைப் பொறுத்தவரையில்,அவர்களின் வரலாறு,ஆதிகாலத்தில் இயற்கையை வணங்கிய காலமான பல்லாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது.
ஆதி மனிதனின் இயற்கை வழிபாட்டில்,'கந்த' என்ற சொல் 'கந்து என்பது மரத்தின் 'கிளை'என்ற கருத்துடன் ஒன்று பட்டது.வள்ளிக் கொடி கடம்ப மரத்தைச் சுற்றிவளைந்து படர்வது.முருகனைக் 'கந்தா' 'கடம்பா' என்று வணங்கியிருக்கிறார்கள் தமிழர்கள்.
முருக வழிபாடு பற்றி, அறிஞர்,ரோமிலோ தாப்பரின்; கூற்றில்,'கிரேக்க பழய மருபுக் கதையான அவர்களின் வனக் கடவுள்,டையனேஸிஸ் கதையையும். தமிழரின் முருகக் கடவுள் கதையையும் ஒப்பிடல் வேண்டும். டையோனிஸிஸ், ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை அடைந்ததாகப் பழமரபக்கதைகள் குறிப்பிடுகின்றன. கிரேக்க நாகரீகத்தில் இவர் வனக்கடவுளாக வணங்கப்படுபவர்.குன்றுகளின் தலைவன்.மரங்களின் தலைவன். அவன் தொடர்பான விழாக்களில்.பெண்டிர் தம்மை மறந்து ஆடுவர். இப்படியான தகவல்களுடன்,தமிழரின் குன்றுக் கடவள்,மத்திய ஆசியவழியாக இந்தியாவை வந்தடைந்த, திராவிடரின் முருகக்கடவுளா?' என்ற கேள்வி எழுகிறது' என்கிறார். அத்துடன் அவரின்; ஆய்வில் முருகனைத் ஆதித் தமிழரின் போர்க்கடவுளாகக் காண்கிறார்.
திராவிடம்,தமிழ்மொழி போன்ற விடயங்களின் ஆதிமூலத்தை ஆய்வு செய்த அறிஞர் கமில் ஷிவலபில்( 17.9.1927- 17.01.2009),அவர்களின் கருத்துப்படி, 'தமிழர்கள்,பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னலான 'நியோலித்திக்';கால கட்டத்தில்,வாழ்ந்தவர்கள் என்று சொல்கிறார். அன்றிலிருந்து தமிழரின் வாழ்க்கை சமுதாய மாற்றத்துடன் முருகவழிபாடும் தொடர்கிறது.
முருகனின் தொன்மையைத் தமிழரின் கலாச்சார வளர்ச்சியுடன் நோக்கும்போது கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட,திருமுருகாற்றுப் படையில்,முருகன் குன்றுக்கடவுளாகப் போற்றப்படுகிறான்.இதில்,
'அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்,
வெஞசமரில் அஞ்சலென வேல் தோன்றும் -நெஞ்சில்,
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்,முரகா என்றோதுவார் முன்' என்று பாடப்பட்டிருக்கிறது.
தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களின் இடங்களிற்தான் பெரும்பான்மையான முருக தலங்களுள்ளன. முருக தலங்களில் திருச்செந்தூர் தவிர மற்ற இடங்களெல்லாம் மலைக் குன்றுகளில் அமைந்திருக்கின்றன. சோழர் காலத்தில் முருகன் 'கடவுளரின் கடவுளாக'உயர்த்தி வைக்கப் பட்டிருக்கிறான்.
எனவே,இப்படியான பல தகவல்களுடன்,முருக வழிபாட்டின் ஆழத்தையும் பன்முகமான குறிப்புக்களையும்.மானுடவியல் பார்வையில் ஆய்வு செய்கிறது இந்தச் சிறு கட்டுரை.
மானுடவியல் பார்வையில் முருகனை நோக்கும்போது, அந்த முருகனை வழிபடும் தமிழ்ச்; சமுதாயம் சார்ந்த, இனரீதியான வரலாறும், தொல்பொருள் சாட்சியங்களும் முக்கியம் என்புது மட்டுமல்லாமல்,மொழிரீதியான வளர்ச்சி,அரசியல் மாற்றங்கள்.அத்துடன் அவர்களின் கலாச்சாரம் சார்ந்த தேடுதல் என்பனவும் சாட்சியங்களாகவிருக்கின்றன.
முருக வழிபாட்டில் 'ஆறுமுகம்' என்ற அடையாளம்,டு,தமிழரின் அறிவு,வீரம்,செல்வம்,ஆளுமை,அன்பு,கவுரவம், எனும் ஆறு கூறுகளையும் பிரதிபலிக்கின்றன என்று சொல்கின்றனர் முன்னோர்.
அறிஞர் கமில் ஷெவல்பில்,தமிழரின் தொன்மையைப் பற்றிக் குறிப்பிடும்போது,
''.தமிழரின் கலாச்சாரத் தொன்மை மிகவும் தெளிவான நீட்சியைக் கொண்டது. வேறு எந்தக் கலாச்சாரத்திலிருந்தும், பிரிந்தோ.திரிவுபட்டோ வரவில்லை.தமிழர் கலாச்சாரமும் மொழியும் சமஸ்கிருதம் வருவதற்கு முதல் வளர்ந்தன' என்கிறார்.
உலகின் முது மொழியும்,இன்றும் தொடந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்மொழி ஆகக்குறைந்தது கி.மு.2500 ஆண்டுகளுக்கு மேலான,அதாவது 5000 வருட வளர்ச்சியுடையது என்பது மொழி ஆய்வு செய்வோரின் கருத்தாகும்
தமிழ் நாட்டில் உள்ள கீழடி தொல் ஆய்வில் எந்த விதமான உருவ வழிபாட்டுத் தடயங்களும் இருந்ததான தகவலை நான் இதுவரை காணவில்லை. இந்தக் காலகட்டம்,உருவ வழிபாடு வருவதற்கு முன்னிருந்த தமிழ் மக்களின் தொன்மைக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது.
ஆதிகால மக்களில் பல இனத்தவர்கள், ஒரு குறிப்பிட்ட முறையில் உருவ வழிபாட்டு முறை தோன்ற முதலே தங்கள் மூதாதையினரைத் தங்கள் வாழ்வின் வழிகாட்டிகாளக வணங்கி வாழ்ந்தவர்கள்.அந்த வழிபாடு'குல தெய்வ' வழிபாடாகும்.
இந்த ஆதி வழிபாட்டின் தொடர்ச்சி,இன்னும்,ஆதிகாலத் தமிழரின் கலாச்சாரங்களைக்; கொண்ட இலங்கை கிழக்கு மகாணத்தின் பிரத்pபலிக்கிறது. அங்கு, பழம் தமிழரின் தென்மோடி நாடகக் கூத்துக்கலை,நாடி வைத்தியம், பைத்திய மருத்துவம்,பாம்பு வைத்தியம் மூலிகை வைத்தியம்,மூலிகை வளர்ப்பு.என்பன போன்ற தொன்மங்களுடன் குல தெய்வ வழிபாடும் தொடர்கிறது.
எனது தகப்பனாரின் குல தெய்வம் குமாரசுவாமி. ஏங்கள் பகுதிகளில்,பல குல தெய்வங்களின் வழிபாடுகள்,கடல் நாச்சியம்மையார்,மாரியம்மன் போன்ற பெயர்களில் தொடர்கின்றன..
கிழக்கிலங்கைத் தொன்மைச் சடங்குகள் இலங்கையின் வேறு தமிழ்ப்பகுதிகளில்லை. உதாரணமாகப் போயாட்டும் சடங்கு போன்றவை. அத்துடன் எனது கிராமம் மாய மந்திர தொழில்களுக்குப் பெயர்போனது. இந்தத் தடயங்கள் அன்னியரால் அழிக்கப் படாத தொன்மங்கள். இம்மாவட்டங்களில்,முருக ஆலயங்களில் உருவ வழிபாட்டுக்குப் பதில் ' மூலஸ்தானத்தில்'வேல்' வழிபாடு நடக்கும்.
இந்தப் பகுதி மக்கள் கி;மு.259ல் அசோக அரசனால் கலிங்க நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்ட 150.000 சைவ மக்களில்; ஒருபகுதியினர் என்ற வரலாறுண்டு. இவர்களின்,வழிபாட்டுமுறை, சடங்குகள் மாதிரியானவை பாலி, பிஜி போன்ற தீவுகளில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. இவர்கள்,அங்கு'கேலிங்' மக்கள் என்று அழைக்கப் படுகிறார்கள்.
மானுடவியல் ஆய்வில் தமிழ் மக்கள்,தமிழ் மொழியைப் பேசும் திராவிட இனத்தைச் சேர்ந்த மக்கள்.அவர்கள,; உலகின் புராதனக் குடிகளில் ஒன்றாகக் கருதப் படுகிறார்கள். இவர்களின் புராதனம்,மேற்கு ஆசியாவில் தொடங்கி சிந்துவெளி நாகரீகம்வரை தொடர்கிறது. மேற்காசிய நாடுகளின் விவசாயத்தோடு தொடர்பான நாகரீகம் வளர்ந்த காலத்தில் இந்தியாவில் பல இடங்களில் பரந்த வாழ்ந்த நாகர்pக வளர்ச்சியின் பிரதிபலிப்புத்தான் 2500 வருடத்திற்கும் மேலான,250 ஏக்கர் நிலப் பரப்பில் காணப்பட்ட மிகத் தொன்மையுடைய.மொகான்சாதாரோ ஹரப்பா தொல்லாய்வுகள் என்றும் பார்க்கலாம். இந்தத் தொல் பொருட்கள் அன்று வாழ்ந்த மக்களின் கலாச்சாரத்தின் வளர்ச்சியைக் காட்டுகின்றன.
பூம்புகார் நகரும்; கி.மு.11.000 வருடங்களுக்கு முன் இருந்ததாகச் சொல்லப் படுகிறது.அதே மாதிரி,கிரேக்க நாகரீகம் பல்லாயிர வருட சரித்திர்தைக் கொண்டது. ஒன்பதினாயிரம் வருடங்களுக்கு முன் கடலில் அமிழ்ந்த,'அட்லான்டஸ்'தீவு பற்றி, உலகப் பெயர்பெற்ற தத்துவஞானி சாக்கிட்டஸின் மாணவரும்,மாமன்னர் அடெக்ஸாண்டருக்குக் கல்வி புகட்டிய அரிஸ்டாட்டிலின் ஆசிரியருமான தத்துவஞானி பிலாட்டோ அவர்கள் (கிமு.428,27அல்லது 424,423-348,347)கி;மு.5ம் நூற்றாண்டில் எழுதியிருக்கிறார். அதாவது, பத்தாயிரம் வருடங்களுக்கு முன் நாகரீகம் வளர்ந்த சமுதாயம் அந்தப் பிராந்தியத்திருந்து அழிந்திருக்கிறது என்பது தெரிகிறது..
இன்னொரு தகவல், இற்றைக்கு7500ம் ஆண்டு கால கட்டத்தில். மத்தியதரைக்கடற் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் பற்றிப் பலர் எழுதியிருக்கிறார்கள். அதன் பின் மொசப்பட்டெமியா போன்ற இடங்களில் மனித குடியேற்றத்தின் விருத்தி பற்றிக் குறிப்புகள் இருக்கின்றன. அதாவது.மேற்காசியாவில் வாழ்ந்த மக்கள் வேறு,பல்லிடங்களுக்கும் பரவியது தெரிகிறது.
பெரு வெள்ளத்தற்குப் பயந்து நகர்ந்த மக்கள் குன்றுகளில் குடியிருப்பை அமைத்தனரா என்பதும் கேள்வி. ஏனென்றால் முருகனுக்குக் குன்று வழிபாடு இருப்பதுபோல் மத்திய தரைக்கடல் நாடுகளில் பலதிலும் உயர் குன்ற வழிபாடுகள் உள்ளன. இந்த விடயம் இந்தக் கட்டுரையில் சில இடங்களில் மீண்டும் பேசப்படும்.
மொழி,ரீதியாகத் தமிழ் மொழியின் தொன்மையை ஆய்வு செய்யும்போது,உலகத்தில் பழைய மொழிகளாக நாற்பது மொழிகள் இருந்தன என்றும் அதில் தமிழ் மொழியும் ஒன்றாகும் என்று கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு சொல்கிறது.
மேற்காசிய, மத்திய தரைக் கடல் நாடுகளில் முதல் மொழிகளாகவிருந்த,சுமேரியன், எஜி;ப்திய மொழி,கிரேக்க மொழி,பினேசியன்,லத்தின மொழி;,பழைய,பாரசீகமொழி,வடக்கு,தெற்கு,அரபு மொழி,,இயேசு பேசிய அரமிக மொழி;,இந்தோ யூரேப்பியன் மொழி. சீன மொழி என்பன வழக்கத்திலிரந்த இருந்த அதே காலத்தில் பழைய தமிழ் மொழியும் இருந்த வரலாறுண்டு.
முருக வழிபாடும் தொல் தமிழரும்:
மேற்குறிப்பிட்ட மொழிகளைப் பேசிய,இன்றைய ஈராக்,ஈரான்,சிரியா பாலஸ்தீனம்,இஸ்ரேல் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகள் ஆதிக்குடிகளின் பண்பாட்டின் மூல இடங்களாக அமைந்திருந்தன.புகழ் பெற்ற சுமேரிய,பாபிலோனிய நாகரிகங்களுக்கும் திராவிடத் தமிழர் நாகரீகங்களுக்குமிடையே மிகுந்த ஒற்றுமைகளிருந்தன.
முருக வழிபாடு பற்றி, ரோமிலோ தாப்பரின்; கூற்றில்,'.கிரேக்க நாட்டில் டையோனிஸை வனக்கடவுளாக வழிபட்ட காலம் சொல்லப்படுகிறது. அதே காலகட்டத்தில் அங்கும் ஒரு வன தேவதை' டையானா' என்ற பெயரில் இருந்ததான வரலாறுண்டு.இது முருகனுக்கு வள்ளி இருப்பதை ஒத்திருக்கிறது.
முருகக் கடவுள் மாதிரியே' டையோனிஸிஸ்' என்ற வனக் கடவுள் கிரேக்க பாரம்பரியக் கடவுளர்களில் ஒருத்தர் இருந்தார் என்று கிரேக்க வரலாறும் சொல்கின்றன. மகா அலெக்ஷாண்டர் (356-323)இந்தியாவுக்கு கி;மு.326ல்; வரமுதல், ஆறாயிரம் வருடங்களுக்கு முன் டையோனிஸிஸ் இந்தியா (326-323) வந்ததாகவும் வரலாற்றுக் கதைகள் சொல்கின்றன.
முருகனை வழிபடும் தமிழர்கள் ஆதிகாலத்தில்,கிரேக்க நாட்டிலிருந்து பெயர்ந்த ஒரு இனக்குழு மக்களாக இருக்கலாம் என்று வேறு பல அறிஞர்களும்; கருதுகின்றனர். தமிழ் மக்கள்,'கிரேக்கத் தீவுகளில் ஒன்றான'கிரத்'இடத்திலிருந்து வந்த வழிமுறயினர்' என்று 'எடரால்' என்ற அறிஞர் சொல்வதாகத் தமிழ் அறிஞர் அறவாணன் குறிப்பிட்டிருக்கிறார்.(க.ப.அறவாணன்.1984)
அழிந்துவிட்ட 'மினோயன'; வரலாற்றைக் கொண்ட இந்த 'கிரத்' தீவில் வாழ்ந்த ஆதிக்குடிகள்,'தர்மிலை' என்று கிரேக்கர்களால் அழைக்கப் பட்டதாகக் கூறுகிறார் அறவாணன். மேலும், இம்மக்களுக்கும்,தமிழர்களுக்கும், தமிழ் மொழி ஒற்றுமையுடன் வழிபாட்டு ஒற்றுமைகளும் இருந்ததாகக் கூறுகிறார் இவர்.
தமிழ் மொழியின் தொன்மை பற்றி ஆய்வு செய்த ரொபோர்ட் கால்ட்வெல் 1814-1891); அவர்கள்.'திராவிடரின் மொழிகளிலுள்ள வார்த்தைகள் யூதர்களின் ஹீப்ரு மொழி,கிரேக்க மொழிகளிலுள்ள வார்த்தைகளை ஒத்திருப்பதாகச் சொல்கிறார்.
தமிழ்க் கிராமக் குகைகளில்,கி;மு 9-10 கால கட்டத்தைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகள், கால்ட்வெல் சொல்லும் காலகட்டத்தை ஒத்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கி.மு 11.10ம் நூற்றாண்டளவில்; கால,கடற் கோளால்,குமரிக்கண்டம் அழிந்ததாகச் சொல்லப் படுகிறது. அதுபற்றியோ தென் தமிழகம் அழிந்தது பற்றியோ ஆய்வுகள் பெரிதாக நடக்கவில்லை.
ஆனால் கி.மு.3000 அல்லது 2800 ஆண்டுகளுக்கு முன்,இந்தியாவைச் சூழ்ந்துள்ள இந்து சமுத்திரத்தில் விழுந்த ',கொமட்'; அதாவது 'வால்மீன்' அல்லது,மீட்டியோறைட்' என்ற பெரும் விண்வீழ் கல்லின் வீழ்ச்சியால்;; ஏற்பட்ட பிரமாண்டமான சுனாமியால் பெரிய தாக்கமுண்டானது என்று ஆய்வுகள் சொல்கிறது. இந்தத் தகவலுக்கும். பூம்புகார் அழிந்த சரித்திரத்திற்கும் தொடர்பு காணுதல் இன்றியடையாதது.
'சிலப்பதிகாரம்,(11:20-21)கலித் தொகை (104),புறநானுறு,(9) குறுந்தொகை(52),இளம் பூரணர் உரை,இறையனார் களவியல் உரை,அடியார்க்க நல்லாரின் சிலப்பதிகார உரை ஆகியவற்றில்,குமரிக்கண்டம்,பற்றியும்,அது,இன்றைய தென்னிந்தியாவின்,தெற்கேயிருந்து அழிந்தது பற்றியும்கூறப்படும் குறிப்புகளைக் கொண்டு,தமிழர் குமரிக் கண்டத்திற் தோன்றினர் என்று தமிழ் அறிஞர்கள் பலர் உரைக்கின்றனர்' என்கிறார் அறவாணன.
குமரிக் கண்டம்,ஆபிரிக்க.அத்துடன் மத்திதரைக்கடல் நாடுகளுடன் இணைந்த தொன்மை பற்றிக் குறிப்பிடும்போது, அங்கிருந்த பெரும்பாலான பழைய குடிகள் சூரியனை வணங்கியதாகச் சான்றுகள் உள்ளன.
முருகனைச் சூரியனின் மகனாக சங்கத் தமிழர் காலத்தில் எழுதப் பட்ட 'திருமுருகாற்றுப் படை'சொல்கிறது.
திராவிடத்தின் தொன்மையுடன் தொடர்புள்ள நாடான ஈரான் அதாவது அன்றைய பாரசீகத்தில் 'ஷொரஸ்ட்ரியன'என்ற மதத்தை வழிபடும் பாரசீக மக்களின் கடவுள் சூரிய பகவான்.கி.பி..633-.654 கால கட்டத்தில் முஸ்லிம்களின் படையெடுப்பின் பின் அவர்களின் மொழி காலச்சாரம் நிர்மூலமாக்கப் பட்டது. ஆனால் இன்னும் அங்கு சில இடங்களில் அந்த சூரியவணக்க முறை தொடர்கிறது.
எஜிப்திய அரசர்கள் கி;மு.3150- தொடக்கம் தங்களைச் சூரியனின் வம்சம் என்று சொல்லிக் கொண்டவர்கள்.எஜிப்தை வெற்றி கொண்ட அலெக்ஷாண்டா (கி மு 332);.தன்னைச் சூரியனின் அவதாரமாக அழைக்கும்படி எஜிப்திய மக்களுக்க ஆணையிட்டதாக வரலாறுண்டு.அதன்பின்னர், அவனால் அடிமைப்படுத்தப் பட்ட நாடுகளில் அவன்' சிக்கண்டர்' என்றும் வணங்கப்பட்டான்.மத்திய தரைக்கடல் நாடுகளில் 'இஸ்கந்தா' எனற பெயர் இன்றும் வழக்கத்திலுள்ளது.
கி.மு 323-326ல்) அலக்ஷாண்டர் இந்தியா வந்த கட்டத்தின் பின்தான்,முருகனைச்,சூரியனின் மகனாகச் சித்தரிக்கிறார்கள் என்பதும் ஒரு கதை.
அத்துடன்,அலெக்சாண்டருக்கும் பாரசீக மன்னருக்கும்; கி.மு.334ல் நடந்த போர்தான சூரன் போராகத்திரிவு படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலுமுண்டு. சில கால கட்டங்களில் சில குழுக்கள்,தங்களுத் தேவையான விதத்தில்,சில கடவுள்களை மேன்மை படுத்துவது காலம் காலமாக நடக்கும் விடயமாகும்..
முருகன் ஒரு குன்றுக்கடவுள்!
இதுபற்றி மேலே குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆபிரிக்காவிலுள்ள எஜித்தியப் பண்பாட்டிற்கும் சிந்துவெளி நாகரிகத்திற்கும். தொடர்பிருப்பதற்கு குன்றுகளில் உள்ள கடவுள் வழிபாட்டுத் தலங்களும் ஒரு காரணமாக இருக்கலாம். குன்றுகளில் கோவில் படைத்தவன் தமிழன். ஆபிரிக்காவில் 'இங்கா' இனத்தவர்,தமிழர்மாதிரியே குன்றுகளில் கோயில் கட்டி வழிபட்டிருக்கிறார்கள்.
தமிழர்களின்;'குன்றுக் கோயில்கள்' தழுவிய விதத்தில்,எஜிப்த்திய'பிரமிட்' என்பவை உண்மையான,மலைகளற்ற இடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட 'பெரியமேடுகளாக' என்ற கேள்வியும் எழுகின்றது.எஜிப்திய பிரமிட்டுக்களும்,கி.மு (4.700 வருடங்களுக்கு) முன்( 2630-2611).மன்னர் ட்ஜோஸர் என்பரால் கட்டப் பட்டிருக்கிறது.
முருகனைத் தமிழர் வழிபடும்,முறைகளில்,பல ஆதிக்குடிகளின் வழிபாட்டு,மிச்ச சொச்சங்கள் தங்கியிருக்கின்றன. இதற்கு முருக வழிபாட்டின் ஒரு கூறாய் விளங்கும்,ஆண் பெண்கள் ஒன்று சேர்ந்த பக்தி நடனமான'வெறியாடல்' சீரிய சான்றாக அமையக் காணலாம். இந்த வழிபாட்டு முறை மத்திய தரைக்கடல் பகுதி மக்களின் வழிபாட்டு முறையுடன் ஒத்திருக்கிறது.
எவ் டபிளியு.குளொத்தி ,(1978) என்பவரின் தகவலின்படி,சில புதை பொருட்களின் தடயங்கள் மத்தியதரைக்கடல் பகுதிக்கும் தமிழருக்குமிடையே நிலவிய தொன்மைத் தொடர்பை வலியுறத்துகின்றன. பெருங்கற்கால ஈமம் புதைகுழிகள், சிரிய நாட்டில் இருப்பதுபோல், காணப்படுகினறன. நீலகிரி மலைச்சாரலில் கிடைக்கப் பெற்ற வெண்கலக் கிண்ணங்கள் போன்று சிரியாவிலும் உள்ளன. திருநெல்வேலி (ஆதித்த நல்லூர்) பகுதியில்,கண்டெடுக்கப் பட்ட இரும்பாலான பொருட்கள் பால்ஸ்தீனத்தில் கண்டெடுக்கப்பட்டவற்றிற்கு ஈடானவையாகும்.'
ஆதித்தமிழர்கள் உலகிலிருந்த பல பழைய குடிகள்போல் பெண் தெய்வங்களை வழிபட்டவர்கள். தமிழரின் முருக வழிபாட்டில்,முருகனின் தாயாகக் கொற்றவை பதியப் பட்டிருக்கிறாள்.தமிழர்கள் வழிபாட்டில் பல தரப்பட்ட பெண் தெய்வங்கள் இருக்கிறார்கள, சக்தி வழிபாடு,அம்மன் வழிபாடு இன்னும் தொடர்கின்றன.இதற்கு உதாரணமாக இலங்கையின் கிழக்கில்,தொடர்ந்து போற்றப் படும்,தமிழரின்;,தாய்வளி மரபு ஒரு உதாரணம். அத்துடன், சுமேரிய நாகரிகத்திலுள்ள,'நாக வழிபாடு,தாய்த் தெய்வ வழிபாடு,கோவில் அமைப்புக்கள்,என்பன தமிழ் மக்களின் பண்பாட்டோடு ஒன்றிப் போவதாகக் கருதப்படுகிறது.
இந்தியத் தொன் மக்களிடையே பெண்வழிபாடு தொடர்ந்திருக்கிறது. இதற்கு உதராணமாக,வங்காளத்தில் தொடரும் காளி வழிபாடும்,நேபாளத்தில் நடக்கும் 'குமரி' வழிபாடும் மிச்ச சொச்சங்களாகும்.
முருக வழிபாடு மாதிரி வழிபாடுகளைக் கொண்ட.மேற்காசியாவின் தொன்மத்துடன் தொடர்புள்ள திராவிடர்கள், காலக்கிரமத்தில் இந்தியாவின் பல பாகங்களிலும் பரந்திருக்கிறார்கள். அவர்களின் சில காலச்சார மாற்றங்கள்; அந்தந்த இடங்களில் வாழ்வதற்கு ஏற்றதாக மாறியிருக்கலாம். அவர்கள் கால மாற்றத்தில் இந்தத்; திராவிடர், தெற்காசிய ஆதிக்குடிகளோடும்; கலந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஒருத்தரை ஒருத்தர் அடக்கியதாக வரலாறுகள் இல்லை. சமத்துவ சமுதாய முறை தொடர்ந்திருக்கிறது.
தமிழரின் தொன்மையை மத்திய ஆசியா,ஆபிர்காவுடன் தொடர்வு படுத்தி வரலாற்றை நோக்கும்போது,மிகப் புராதனமான வழிபாட்டு முறைகளைக் கொண்ட கதிர்காமக் கந்தனை வழிபடும், இலங்கையில் கிடைத்த தொல்பொருட்களையும் நாம் சேர்த்துக் கொள்வது தவிர்க்க முடியாது.
முருக வழிபாட்டின் ஆதிநிலம் இலங்கைத் தீவா என்ற கேள்வி தொடர்கிறது. காரணம் அங்கு முருக வழிபாடு தொன்று தொட்டு நடந்த பாரம்பரிய முறையைப் பின் பற்றி இன்றும் நடக்கிறது. சுமேரிய நாக வழிபாட்டு முறையுடன் வாழ்ந்த மக்கள் விஜயன் என்ற இந்திய இளவரசன் 2500 வருடங்களுக்கு முன் இலங்கைக்கு வரும்போது இலங்கையின் வடக்கில் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் வணிகத்தில் ஈடுபட்டவர்கள். தெற்கில் வாழ்ந்தவர்கள் இயக்கர்கள் என்பவர்கள்.இவர்கள் விவசாயம் மட்டுமன்றி,இயற்கையையுடன் பிணைந்த வன வாழ்க்கையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிறது வரலாறு.
முருகனைத் தங்கள் மைத்துனராக வழிபடும்,இலங்கையிலுள்ள பலாங்கொட என்னுமிடத்தில்,1930ம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட, தென்கிழக்காசியாவிலேயே மிகத் தொன்மையான.37.000 வருடமாகப் புதையுண்ட (ஹோமசேப்பியன்) மனித எலும்புக் கூடு,,ஆபிரிக் கண்டத்துடன் தொடர்புடையதாகக் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. இந்த எலும்புக் கூட்டுக்கு அண்மையில்,ஆபிரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட கல்லாலான சில ஆயதங்களும் இருந்தன.
அத்துடன்,இலங்கையின் தென்பகுதியில் கண்டெடுக்கப் பட்ட தொல் தாவரங்கள் தென்னிந்தியத் தாவரங்களுடன் ஒத்திருக்கின்றன.அப்படியானால்,இந்தியா,இலங்கை,மத்திய தரைக் கடல் நாடுகள்.ஆபிரிக்கா என்பனவற்றுடன் தொடர்புள்ளதாக இருந்திருந்திருக்கிறதா? ஆபிரிக்காவிலிருந்து,மனித இனம் வேறு பல்லிடங்களுக்குச் சென்ற கால கட்டத்தில் இலங்கையை அடைந்தவர்களாகக் கணிக்கப் படுகிறதா என்று யோசிக்கலாம்.
ஆனால்,இலங்கைக்கு வந்தவர்கள், அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற அபுரெஜினிய குடிமக்கள் அத்தனை மக்களும் இந்தியா வழியாகத்தான் சென்றார்கள் என்று மேற்குலக சரித்திர ஆய்வாளர் குறிப்பிடுகிறார்கள்.குமரிக்கண்டம் பற்றிய குறிப்புகள் பெரிதாகவில்லை.
இப்படி மிகவும் ஆதிகாலத்திலிருந்து இலங்கை சென்றவர்களின்; பரம்பரைதான் இன்று இலங்கையில,முருகனைத் தங்கள் மைத்துனராக வழிபடும்; வேடர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
தமிழர்களின் முருகக் கடவுள் வழிபாட்டை ஆய்வு செய்பவர்கள்,முருக வரலாற்றில் ஒரு பெரிய இடைவெளியிருப்பதாகச் சொல்கிறார்கள்.இயற்கையின் கடவுளாக. குறிஞ்சி நிலக் கடவுளாக வணங்கப்பட்ட முருகன், என்னவென்று கடவுளரின் கடவுளாக உயர்த்தப்பட்டான் என்ற வினா வருகிறது.இந்த நம்பிக்கைக்கும், சோழ மன்னர்கள் இந்தியாவில் மட்டுமல்லாது, கடல் கடந்து தங்கள் ஆட்சியைப் பரப்பியதும்; ஒரு காரணம் என்பது முக்கியமான தடயமாகும்.
மானுடவியல் ஆய்வுக்குச் சரித்திர சான்றுகள் இன்றியமையாதவை.கடந்த சில ஆயிரம் வருடங்களாக,அன்னியரின் வருகையால் தமிழ் இனத்தின், மொழியின் சரித்திரம் வேண்டுமென்றே.அழிக்கப் படுகிறது. மறைக்கப்படுகிறது, களவாடப்படுகிறது.திரிக்கப் படுகிறது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
ஒரு நாட்டைக் கைப்பற்ற விருபும்புவர்கள், அந்நாட்டு மக்களையும் கலாச்சாரத்தையும் அழிப்பார்கள் என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம.;
இயேசு பிறப்பதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பு, யூத மக்களின் கலாச்சாரத்தையழித்து அவர்களை அடிமையாக்கின் ரோமர்.
யூலியஸ் ஸீசரின் தலைமையில,;உரோமர் கி.மு. 55ல் பிரிட்டானியாவுக்குப் படையெடுத்தார்கள்.ரோமர் எழுதிய சரித்திரத்தின்படி,அக்காலத்தில்,இயற்கையை வணங்கிய,ஆணும் பெண்ணும் சமத்துவம் என்ற கோட்பாடுடைய ட்ருயிட்ஸ் சமுதாயம் பிரிட்டானியாவிலிருந்தது.அவர்களின் சமுதாயக் கட்டுமானங்களம்,,வணக்க,கலாச்சார முறைகளும் நிர்மூலமாக்கப்பட்டன.
ஆயிரத்து ஐந்நுர்று வருடங்களின் பின் ஆங்கிலேயர்கள் அவர்கள் கைப்பற்றிய நாடுகளிலுள்ள ஆதி மக்களை அழித்தொழித்தது அதற்கு ஒரு உதாரணம், அமெரிக்காவில் மட்டும் பத்து கோடிக்கு மேலான அமெரிக்க இந்தியர்களைக் கொலை செய்தார்கள்.அவர்களின் பெரும்பாலன கலாச்சாரம் நிர்மூலமாக்கப்பட்டது.
தென் அமெரிக்க நாடுகளை அடிமைப்படுத்திய போர்த்துக்கேயரும், ஸ்பானிஸ் நாட்டவரும் செய்த கொடுமைகளுக்கு ஒரு உதாரணமாக,ஸ்பானிஸ் படையினரால் அழிக்கப்பட்ட மாயன் கலாச்சாரத்தை எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், எத்தனை அன்னிய படையெடுப்பு நடந்தாலும், முருக வழிபாடு தமிழர்களிடையே தொடர்கிறது.தமிழர்களின்.பக்தி அளப்பரியது. பக்தி என்பது ஒருதனி மனித உணர்வாகும்.முருகன், தமிழரின் கடவுள்.தமிழ்த் தொன்மையின் வெளிப்பாடு. பன்னிரு தோள்களும் பன்னிரு உயிர் எழுத்துக்கள்.முருகு என்ற பதத்தில் 'மு' மெல்லினம்.'ரு'இடையினம்,'கு' வல்லினம்.என்று சொல்கின்றனர் அறிஞர்கள்.
முருகனின் ஆறு முகங்களையும் தமிழர்கள் வர்ணிக்கும்போது பல விளக்கங்களைத் தருகிறார்கள்.ச.வே.சுப்பிரமணியம்,ஜி.இராஜேந்திரன் (1985) என்ற அறிஞர்கள கூறும்போது, சங்ககாலத்தில் தமிழர்கள் வானியலில் வல்லுனர்களாக மேம்பட்டிருந்ததாகக் கூறுகிறார்கள். கிரேக்க,எஜிப்த் நாடுகளில் மட்டுமல்லாமல் பல நாடுகளில், நட்சத்திரங்கள் வணக்கத்துக்குரியதாகவும் வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறது.ஒறியன் என்றழைக்கப்படும்'மான்தலை' விண்மீன்குழவின் பிரதி பலிப்பாக மூன்று எஜிப்திய பிரமிட்சுகளும் கட்டப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.
சங்ககாலத்தில் முருகனைத் தமிழர்கள் 'சேயோன் என்றழைத்திருக்கிறார்கள். சேயோனின் மறுபெயர் செவ்வாய்.இந்நாள் முருகனின் நாளாகத் தமிழர்களால் வணங்கப் படுகிறது. நாசாவின் வானியல் ஆய்வில்
செவ்வாய்க் கிரகம் என்பது'சிவப்புக் கிரகம்' றெட் பிலானெட் என்று சொல்லப் படுகிறது.
சிவப்பு நிறமுடைய செந்திலாக முருகனை வழிபடுவதற்கும் செவ்வாய்க் கிரகத்திற்கம் ஏதும் தொடர்புண்டா என ஆய்வு செய்யவேண்டும்.
'முருகனின் பன்னிரண்டு கைகளும் பன்னிரண்டு மாதங்கள் என்றும்,ஆறு முகங்கள் ஆறு காலங்கள,அல்லது ஆறு புலன்கள்.அல்லது,அன்பு,உண்மை,அறிவு.இன்பம்,சக்தி. சித்தி என்ற பரிமாணங்களைக் கொண்டது என்றும் சொல்கிறார் அறிஞர் கமில சுவலபில (1975)
முருகனின்,இரு மனைவியரும் இரவும் பகலும் என்றும் அகமும் புறமும் என்றும்,இம்மை மறுமை எனறும்; சொல்வாருமள்ளர்.
தமிழ்க், கடவுள் தன்னை எதிர்த்த சூரபதுமனைக் கொலை செய்யாமல் அவனைத் தனது மயில் வாகனமாக்கியதாக்கியது தமிழரின், மன்னிக்கும் மனப்பான்மையைக் காட்டுகிறது என்பாருமுண்டு.
முருகனை வழிபட எடுக்கும்,காவடி என்பது.'கா' என்ற சொல்லின் திரிபே என்கின்றனர் அறிஞர்.ஒரு தலைவனுக்கு, அல்லது கடவுளுக்கு மக்கள் பிரியமாக எடுத்துச் செல்லும்,அரிசி, பழங்கள்,நெய்,தேன்,என்பன அடங்கும். இலங்கையின் கிழக்கின் கிராமப் பகுதியில் இந்தக் 'காவு' கொண்டு செல்லும் கலாச்சாரமிருந்தது.அந்த பாரம்பரியத்தின் நீடசிதான்; முருகனுக்கான. பால்காவடி, பன்னீர்க் காவடி,புஷ்பக் காவடி என்பவற்றன் மூலமாக இருக்கலாம்.
இலக்கியமும் தமிழும்:
'சீர்கெழு செந்திலும்.செங்கோடும் வெண்குன்றும்,ஏரகமும் நீங்கா இறைவன்' என்று சிலப்பதிகாரத்தில் முருகன் வர்ணிக்கப் படுகிறான்.இவனைத் தேடி. ஆண்களும் பெண்களும் காவடியாடிக்கொண்டு சமத்துவமாகக்; கதிர்காமம் செல்லும் முருக பக்தர்களின் தலயாத்திரை கண்கொள்ளாக் காட்சியாகவிருக்கும்.
வேலை வணங்கும் தொண்டமானாறு செல்வச்சன்னிதி, யாழ்ப்பாண மாவட்டத்திற் தொடங்குp, இலங்கையின் பெரு ஆறான மகாவலி கங்கை கடலுடன் கலக்கும்,திருகோணமலை மாவத்தின் கிளிவெட்டி மண் வெருகல் வேலாயுத சுவாமி கோயிலைத் தரிசித்து பின்னர் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பிலுள்ள,மண்டூர் தொடக்கம் திருக்கோயில் ஊரிலிலுள்ள சித்திர வேலாயுத கோவிலைத் தரிசித்து,உகந்தைக் கந்தன் கோயிலையும் வழிபட்ட பின் இந்த யாத்திரை கதிர்காமக்கந்தனிடம் முடியும்.
இந்த யாத்திரையில் தமிழ்பேசும் நல்லுலகின்; நகர்கள்,கிராமங்கள்.சேர்ந்த பக்தர்கள்,சாதி,மத,வர்க்க,ஆண்பெண்
பேதமற்று ஒன்று பட்டு முருகனிடம் செல்வார்கள்.
இந்த யாத்திரையில்,முருகனுக்காகப் பாடப்படும்,திருப்புகள்,காவடிச்சிந்து,கதிரமலைப் பற்று,கும்மிப்பாட்டு,குறவள்ளி பற்றிய காதற்பாடல்கள், தோத்திரப் பாடல்கள்,தத்துவப்பாடல்கள்,என்று பல தரப்பட்ட பாடல்கள் காற்றுடன் கலந்து வந்து வீடுகளில் உறங்கும் குழந்தையின் கனவிலும் தாலாட்டும்;.
இலங்கையில் ஆண்களும் பெண்களும் சமத்துவமாக ஆடிப்பாடுவதை அனுமான் கண்டதாக இராமயணம் சொல்கிறது.
ஒரு தனிமனிதன் தன் பக்தியை வெளிப் படுத்த, பாடுவது,ஆடுவது.விரதம் இருப்பது, மவுனம் இருப்பதெல்லாம் அவனின் தனியுணர்வை வெளிப்படுத்துவது. இந்த சுதந்திரம் முருக வழிபாட்டில் பிரதி பலிக்கும் தமிழர் பண்பாடாகும்.
முருகனைப் பற்றிய இலக்கியக் குறிப்புக்கள் சங்கத் தமிழ்க்காலத்திலிருந்து தொடர்கிறது.கி.மு.300-கி.பி.700 ஆண்டு வரை 'இலக்கியத் தமிழ்க்காலம்' என்று வர்ணிக்கப் பட்டிருக்கிறது.
இரண்டாம் நூற்றாண்டில் எழுதப் பட்டதாகச் சொல்லப்படும் திருமுருகாற்றப் படையில்,முருகன் குறிப்பிடப் படுகிறான்.'திருச் செந்தூர் புராணம்' என்ற பதிவில் வள்ளி முருகனின் முதற் மனைவியாகவும்,தெய்வஞானை பரதவப் பெண்ணாகவும்; பாடப் பட்டிருக்கிறது.
தமிழுக்கு இலக்கணம்; தந்த தொல்காப்பியத்தில் முதலாம் நூற்றாண்டிற் முருகன் குறிப்பிடப் படுகிறான்.
கி.பி.700-1600 காலகட்டம்,'பக்தித் தமிழ் கால கட்டம்'; என்று சொல்லப் படுகிறது.
9-10ம் நூற்றாண்டிலிருந்து,பல தமிழ் மன்னர்களால் பல கோயில்கள கட்டப்பட்டன.
வரகுணபாண்டியன் கி;பி; 9ம் நூறறாண்டில்; இலங்கைக்குப் படையெடுத்த வரலாறுண்டு. (சுப்பிரமணிய மணிய தேசிக சுவாமிகள் 1985).
சோழ மன்னன் 1017ல் இலங்கையைக்கைப் பற்றினான். யாழ்ப்பாணம் நல்லூர்க் கோயில்.சண்பகப் பெருமாள் என்பவரால்;1450ல் கட்டப்பட்டது. பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும்,மாவிட்டபுரம், கந்தசுவாமி கோயில், செல்வச் சன்னிதி முருகன் கோயில்,இணுவை முருகன் கோயில் என்பன போன்ற பல கோயில்கள் கட்டப் பட்டன.
கிழக்கு மாணத்தில சரித்திரம் விஜயன் இலங்கைக்கு வந்த காலத்துடன் தொடங்குகிறது.பாண்டிய பரம்பரையில் வந்த ஆச்சிகள், நாச்சிகள் ஆண்ட தடயங்கள் அங்குண்டு.சின்னக் கதிர்காமம் என்று சொல்லப்படும் மண்டூர் -தில்லை மண்டூர் என்ற இடத்தில் கந்தசாமி கோயில் கட்டப்பட்டது.திருக்கோயில் சித்திரவோலயுத ஆலயம்,சித்தாண்டி முருகன் கோயில்.திருகோணமலை கிளி வெட்டிப்பகுதியில் வெருகல் வேலாயுத ஸ்வாமி என்று பல கோயில்கள் இருக்கின்றன..
இக் கால கட்டத்தில், முருகன்,இந்தியா இலங்கை வாழ் தமிழர்களின் மூலக் கடவுளாக முதன்மை பெறுவது தெரிகிறது.
கச்சியப்பரின் கந்த புராணமும் இக்கால கட்டத்தில் எழுதப்பட்டது;.(ஆ. வேலுப்பிள்ளை(1985).
14ம் நூற்றாண்டில்,அருணகிரிநாதர் தனது பக்திப் பாடலால் முருகனை மக்கள் கடவுளாக்கினார்.அவர் முருகனுக்கு எழுதிய திருப்புகழில் உருகாதார் யாருமில்லை. பக்தித் தமிழைச் சாதாரண மக்களின் தமிழாகத் தனது முருக பாடல்களால் வரலாறு படைத்தவர் அருணகிரிநாதர்.
வள்ளியை, முருகனின் ஆறு சக்திகளில்.ஒரு சக்தியாகக் காண்கிறார் அருணகிரிநாதர்.
'ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே,
கூறுமடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே
குன்றுருக வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே,
மாறுபடு சூரih வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே,
ஆறு முகமான பொருள் நீயரள வேண்டும்,
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே' என்கிறார் அவர்.
வள்ளியையும் முருகனையும் தமிழ்ப் பகுதிகளிலுள்ள நாட்டுப் புற மக்கள் பாடியதைப்போல் வேறு எந்தக் கடவுளையும் பாடவில்லை.தமிழரின் முருக வழிபாடு, கவிதைப் பாடல்கள,;குறவஞ்சி.நாடகம்,தாலாட்டுப்பாடல்கள்,என்ற நீட்சியில் வளர்கின்றன.இயல் இசை.நாடகம் என்ற முத்தழின் அத்தனை கலைவடிவிலும் அவன் வழிபாடு தொடர்கிறது.
முருகனுக்கு,குமர குரபரர்,இராமலிங்க சுவாமிகள,;பாம்பன் சுவாமிகள்,அண்ணாமலை ரெட்டியார்,வண்ணாச்சரபம் தண்டபாணிசுவாமிகள் ஆகியோர் அரிய பெரிய பக்தி மாலைகளைப் பாடலாக அணிவித்திருக்கிறார்கள்.
1600 தொடக்கமுள்ள காலம் தொடக்கம் இன்று வரையுள்ள காலத்தை 'தூய தமிழ்க் காலம்' என்றும் வரையிடுவோர் உண்டு.
கடந்த சில நூற்றாண்டுகளாக பல் வித காரணங்களால் தமிழர்கள் உலகமெங்கும் பரந்து வாழ்கிறார்கள்;. அவர்களால் தங்களைக் காக்க வந்த கலியுக வரதனாக முருகர்ளின் வழிபாடும் பல்லிடங்களிலும் தொடர்கிறது.
கிரேதா யுகம் (182.800 வருடயங்கள);, திரேதா யுகம்(129600 வருடங்கள்);,துவாபர யுகம்(864.000 வருடங்கள்) என்ற மூன்று யுகங்கள் அழிந்தபின் இப்போது கலியுகம் (432.000 வருடங்கள்) 6000 ஆயிரம் அண்டுகாலம் நடக்கிறது. இந்தக்காலத்தில் நேர்மைக்கிடமிருக்காது.கொலை கொள்ளையதிகரிக்கும்.
இயற்கையின் கோரத்தால் பேரழிவுகள் நடக்கும்.அக்கினியின் கோபத்தால் காடு.வீடு மனைகள் எரிந்தழியும்.இடைவிடாத மழையினால் பயர்கள் அழியும்.பலர் குடி பெயர்வர். இந்தக் கலிகால கட்டம் எப்போது தொடங்கியது என்பதும் இந்த நம்பிக்கையுடைய திராவிடத் தமிழரின் வாழ்க்கையில் ஏற்படும் வாழ்க்கை மாற்றங்களையம் ஆய்வு செய்தல் நல்லது.ஏனென்றால் ஆறாயிரம் ஆண்டுகால கட்டம் என்பது பல மாற்றங்களைக் கொண்டு வந்தது என்று இந்தக் கட்டுரையில் பல இடங்களில் பதிவிடப்பட்டிருக்கிறது.
உதாரணமாக,கி.மு.3000-2800 வருடத்தில்,அதாவது இன்றைக்குக் கிட்டத்தட்ட ஆறாயிரம் வருடங்களுக்க முன்.இந்திய சமுத்திரத்தில் விழுந்த விண்கலத்தால்(மீட்றியோரைட்ஸ்) பேரழிவு நடந்தது என்பது வரலாறு. இக்கால கட்டம்,பேரெழுச்சியுடன் சங்கம் வளர்த்த பூம்புகார் அழிந்த காலமா என்பது கேள்வி. முரகனைக் கலியுகக் கடவுளாக நம்பிய கால கட்டத்தின் ஆரம்பமா இக்கால கட்டம் என்பதும் கேள்விக்குறியாகவிருக்கிறது.
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தென்னகத்துத் தமிழ் மக்கள் ஆங்கில ஆதிக்கவாதிகளால்,இலங்கை, மலேசியா,தென்ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற இடங்களிலுள்ள கரும்புத் தோட்டங்கள்,தேயிலை, காப்பித் தோட்டங்களில் வேலை செய்யக் கூலிகளாக அழைத்துச் சென்றார்கள்.அதே கால கட்டத்தில் வணிக ரீதியாக தமிழ்ச் செட்டி பரம்பரையினரும் மேற்குறிப்பட்ட நாடுகளுக்குச் சென்றனர்.
அவர்கள் சென்றவிடமெல்லாம் அவர்களின் பக்தியுடன்; கலியுக வரதனும் சென்றான்..
இலங்கையில் கொழும்பு மாகநரில் வணிக இடங்களான, மோதர,ஜிந்துப்பட்டி போன்ற இடங்களிலும் தமிழர்கள் வாழும் குடியிருப்புகளான, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை போன்ற இடங்களிலும் முருகனுக்குக் கோயில்கள் எழுந்தன.
இலங்கை,மலேசியா,தென்னாபிரிக்காவுக்கு உடல் உழைப்பாளிகளாகச் சென்ற தமிழர்களால் அவ்விடங்களிலும் முருக தலங்கள் எழுந்தன.
20ம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்தில் இலங்கையில் 'சிங்களம்'மட்டும் என்ற சட்டத்தால்; தமிழருக்குண்டான அரசியல் நெருக்கடியால் ஆங்கிலம் படித்த தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறி பிரித்தானியா,அவுஸ்திரேலியா,கனடா, அமெரிக்கா,நியுஷீலண்ட்,என்ற ஆங்கிலம் பேசும் நாடுகளுக்குச் சென்றார்கள்
மானுடவியல் அறிஞர்கள் சொல்வதுபோல், கடவள் வழிபாடு ஒரு மனிதனின்,கலாச்சாரத்துடன் மட்டுமல்லாது,மன உணர்வுடனும் ஒன்றிப் பிணைந்தது.1983ல் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் சிங்கள அரசால் தொடங்கப்பட்ட இன ஒழிப்பு நடவடிக்கையால், இலங்கைத் தமிழர்கள், ஆங்கிலம் பேசும் நாடுகள் மட்டுமன்றி, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் சென்றார்கள்.
இக்கால கட்டத்தில் தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் அளப்பரியன. அவற்றிலிருந்து தங்களைப் பாதுகாக்கக் கலியுகக் கந்தனை வழிபடுகிறார்கள்.முருக பக்தி உலகம் பரந்த தமிழனின் உதிரத்தில் ஊறிப்போயிருப்பது ஆதித் தமிழனின் இயற்கைக் கடவளாக வணங்கப் பட்ட முருகன் 21ம் நூற்றாண்டின் தமிழர்களின்.அகிலம் பரந்த அபரிமிதமான சக்தியாக உருவெடுத்திருக்கிறான்.
தமிழன் சென்ற இடமெல்லாம்,முருகனால் சைவம் வளர்கிறது. தமிழ் மொழியும் வளர்கிறது.
உலகின்,இருபத்தைந்து விகிதமான மக்களைத் தன் பிடியில் வைத்திருந்த இங்கிலாந்தில்,தமிழர்கள் உட்பட,உலகின் பல பாகங்களிலுமிருந்தும் இங்கு வந்த 330க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் சமத்துவமாக வாழ்கிறார்கள்.
முருகன் தனதுகுலமற்ற வள்ளியைக் காதற் திருமணம் செய்ததுபோல், பிரித்தானியாவில்,இந்த உலகத்திலேயே மிகப் பெருமளவிலான கலப்புக் காதல் திருமணங்கள் நடக்கின்றன.
அப்படியான இங்கிலாந்தில் தமிழர்கள்; இங்கு கால்பதித்த கடந்த,அறுபது ஆண்டுகளாக வாழ்கிறார்கள்.தமிழரின்,கலாச்சார பண்பாட்டு முறைகளை அவதானித்தும், அவர்களின் சமய நம்பிக்கைகளை மதித்தும், அவர்களின் அயராத உழைப்பு, கல்வியின் முன்னேற்றம் போன்ற பல காரணங்களாலும்;,பிரித்தானியாரால் தமிழர்கள் மிகவும் மதிக்கப் படுகிறார்கள்
இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 300.000-400.000 தமிழர்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.அவர்களிற் பெரும்பாலானவர்கள் இலங்கைத் தமிழர்கள். இலங்கையில் தொடர்ந்த அரசியற் பிரச்சினையால், 1950ம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து இங்கிலாந்துக்கு வரத் தொடங்கியவர்கள். 1970ம் ஆண்டின் மத்தியில், முருகனுக்கு ஆலயம் அமைப்பதும், தமிழில் பூசைகள் செய்வதற்குமான செயற்பாடுகளை,சைவசமய ஆர்வலரான திரு சபாபதிப் பிள்ளை அவர்கள் முன்னெடுத்தார்கள்.
அக்கால கட்டத்தில்,திருச்செந்தூர் முருகனின் சிலை ஒன்றை வைத்து,விம்பிள்டன் என்ற நகரில்,ஒரு பொது மண்டபத்தில் முருக வழிபாட்டைத் தமிழ்ப்பாடல்கள் வணக்கத்துடன் ஆரம்பித்தோம். அதைத் தொடர்ந்து,லண்டனின் வடக்கிலுள்ள ஹைகேட் உயர் குன்றம் என்ற இடத்தில்.முருகனுக்கு முதலாவது ஆலயம் 1980ம் ஆண்டுகளின் மத்தியில் உருவானது. தமிழில் பூஜைகள் ஆரம்பித்தன.
2002ம் ஆண்டு பிரித்தானியா மகாராணி, மான்மை மிகு, எலிசபெத் அவர்கள் தனது 60வது முடிசூட்டு விழா ஞாபகார்த்த நாளன்று, தமிழ்க் கடவுளான ஹைகேட் உயர் குன்று முருகனை வந்து தரிசித்துச் சென்றார்.
இன்று,லண்டன் மட்டுமல்ல,இங்கிலாந்தில்,பல இடங்களான,சிறிமுருகன் ஆலயம், ஈஸ்ட்ஹாம்,சிறி முருகன் ஆலயம். லெஸ்டர்முருகன் ஆலயம,; மில்டன் கீன்ஸ் முருகன் ஆலயம் கவன்ட்றி;,மோல்டன் நகர் முருகன் ஆலயங்கள், சிறி ஸ்கந்தவோல் ஆலயம் வேல்ஸ் நாட்டில் என்று பல இடங்களில்;; முருகன் வள்ளியுடன் பவனி வருகிறான்.
திருவிழாக்காலங்களில் லண்டனிலும் முருகன் ஆலயங்கள் அமைந்த மற்றைய மாநகரங்களிலும்; காவடியாட்டமும் தமிழில் ஒலிக்கும் திருப்புகழும் வானைப் பிழக்கின்றன. தமிழர்களின் வணக்கமுறையின் பாரம்பரியம் ஆங்கிலேயரைத் திகைக்கப் பண்ணுகிறது.
ஆங்கில சரித்திர ஆய்வாளரும், ஒலிபரப்பாளருமான மைக்கல் வுட் அவர்கள், தமிழர்களைப் பற்றிப் பேசும்போது,'இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் பாரம்பரிய தொன்மையான சரித்திரத்தைக் கொண்டவர்கள்'என்று சொல்லியிருக்கிறார்.
மானிடவியலாளர்கள்,கடவுளின் மகிமையை, மனிதர்களின் மனவளர்ச்சி,அறிவாற்றல்,நம்பிக்கை,என்பனவற்றுடன் இணைத்து ஆராய்கின்றனர்.
தமிழர்களின் பார்வையில், கந்தரனுபூதியில் சொல்லப்படும்
'உருவாய் அருவாய் உளதாய் இலதாய்,
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே'
என்று அனைத்து தத்துவங்களையும் உள்ளடக்கியவனாயிருக்கிறான் முரகன். இதை விட மந்திரம் வேNறுதும் தேவையா மனிதரை வழிநடத்த?
தமிழர்களால் வணங்கப்படும் எந்தக் கடவுளர்களுக்கும் கிடையாத விசேட ஸ்தானத்தில் முருகன் ஏற்றம் கண்டிருக்கிறான்.அவன் தமிழரின் முழுமுதற் கடவுள்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|