யாழ்ப்பாணத்தில் கிராமங்கள் தோறும் தடித்த கண்ணாடியிலான சுவர்கள் சமூகங்கக்கிடையில் கிடக்கின்றன.விடுதலைப் போராட்டத்தின் நசிவுக்கும் அது தான் ஒருவேளை காரணமாக இருக்குமோ?ஒவ்வொருவருமே கண்ணாடிக்குள்ளால் நிகழ்கிற அவலங்கள் ,அழுகுரல்களை எல்லாம் பார்க்கிறார்கள்.அறிகிறார்கள் தான்.ஆனால் காதில் விழாத செய்திகளைப் போல பார்த்து, பார்த்து கடந்து போய் விடுகிறார்கள். அரசியலமைப்பு தான் எல்லாவித மக்களையும் இணைக்கிறதைச் செய்கிறது.தமிழர் தரப்பில் உள்ள அரசியலமைப்புகளிற்கு உரிமைகள் இல்லை,அதிகாரம் இல்லை...என வே பலவீனப்பட்டுக் கிடப்பதால்,அவை வீச்சம் கொண்டு இயங்க திணறுகின்றன. அங்கங்கே இணைப்புகள் இல்லாமல் கிடப்பவையையில் பாசி,பங்கசு, பக்றிரியாக்கள் பற்றிக் கொள்வது போல,மனிதர்களின் பல்வேறு குணங்களால் விளையும் முறுகல் இழைகள் மலிந்து தொடர்பாடலில் விலகல்களை ஏற்படுத்தி விடுகின்றன.பிறகென்ன சாதித் தன்மைகள் தொடர்ந்து வாழும். மேம்படுத்துவதற்கான,அல்லது ஐக்கியப்படுத்துவதற்கான செயற்பாடுகள் இல்லாததால்...முன்னேற்றம் காணப்படுவதில்லை."தனிமனிதன் திருந்தினால் சமூகம் திருந்தி விடும்"என்கிறீர்களா?அது ஒரு கால்வீதம் தான் !
அரசியல் கட்டமைப்புகள் தாம் முக்கால்வாசியை சீர்படுத்துபவன.இலங்கையில் தமிழர்கள் ஒன்றுபட்டால்,சிங்களம் தமிழ்ப்பகுதிகளைக் கைப்பற்ற முடியாது.எனவே தான் "இனப்பிரச்சனையா"அப்படி ஒன்றே இல்லை"கொழும்பில் ஒற்றுமையாய் வசிக்கவில்லையா,அப்படி இங்கையும் இருக்க முடியாதா?"கொழும்பில் எத்தனை தமிழர் துரத்தியடிப்புகளும், அழிப்புகளும் நிகழ்ந்திருக்கின்றன?.இந்த வினா, விடைகள்....?,கொழும்பில் என கதை அளக்கிறவர்கள் ,அப்படி ஒன்றே நிகழவில்லை என்பது போல கடந்து போய் விடுகிறார்கள் .அவர்கள் வாரிசுகள், "எம் அப்பன், அம்மே எவ்வழி, அவ்வழியே யாமே ! " என மாலைக்கண்னுடன் பயணிக்கிறார்கள்.இதில் சிங்கள அரசியல்ப் பிரிவுவை. மட்டுமே குற்றம் சாட்ட ப்படுகிறது.வெளிவட்டத்தில் இருக்கிற எல்லா சிங்கள மக்க ளையும் அல்ல.
பாடசாலையில் வகுப்புகளில் படிக்கிற போதே அக்கண்ணாடியினூள்ளால் சென்று பழகிறார்களிற்கு பிரச்சனைகள் எழுகிற போது இச்சுவர்களே, அந்த நட்பை வளர்க்க,வளர்வதற்கு தடைகளாக இருந்து விடுகின்றன.
புதிதாய் மாறி வந்த உமா ஆசிரியைக்கு மறவன்புலம் சந்தியிலிருந்து வார திருப்பு முனையிலே, பெரிய நாற்சார வீட்டிலிருக்கிற பத்மநாதர் குடும்பத்தை நிறைய பிடித்திருந்தது . அந்த குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம்.அவர்களிடமிருக்கிற ஒளிவட்டங்கள் உமா ஆசிரியைக்கு நெருங்கிய உறவினர்களினுடையவையிற்கு ஒத்ததாக தெரிந்திருக்கலாம்.. இன்றைய உலகில் விஞ்ஞானமூளை கண்டு பிடிக்காத நிறைய விசயங்கள் இருக்கின்றன. இவர்கள் வீட்டில் தாத்தாவை "ஐயா"எனவும் அம்மம்மாவை "அவரது அம்மா'என்றும் அழைக்கிற வழக்கமே அவர்க ளுக்கும் இருந்தன.
அவர்களும், முன்பின் தொடர்போ...அவரை மகளாகப் பார்த்தார்கள்.. உமா ஆசிரியை நுழைக்கிற போது "என்ன இராசாத்தி முகம் வாடி இருக்கிறதே?"என்று பத்மநாதரின் துணைவியார் விசாரிக்கிற போதே குரலில் தேன் ஒழுகும். ராகி அண்ணருக்கு உமா ஆசிரியையைக் கண்டால் சந்தோசம் . ஏதாவது பிரச்சனையைக் கதைக்க வந்து விடுவார். அவர் பெரு வீதிப்புறமாக அதே வளவில் கடை வைத்திருக்கிறார். உமா ஆசிரியை, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் மனோவியலையும் ஒரு பாடமாக படித்திருந்தார். அதனால் எந்தப் பிரச்சனையையும் தீர்க்கமான பார்வையில் பார்க்க வல்லவராக வும் இருந்தார். காயப்படுத்தாத ஏற்புடைய தீர்வைக் கண்டு கூறி விடுவார். அதனால், காலப்போக்கில் அவ்விடத்திலுள்ள பல குடும்பச் சிக்கல்கள் அவிழ்ந்து கொண்டிருந்தன. பலர் வீட்டிற்கு வருவதற்கும் வழியில் மறித்துக் கதைப்பதற்குமான நிலை ஏற்பட்டு விட்டன.
.உமா ஆசிரியையிற்கு, ஒவ்வொருநாளும் அவர்கள் முகத்தைப் பார்த்து,பார்த்து ஆறுதல் அடைய ஒரு துயரம் இருக்கவே செய்தது ? அந்த வீட்டில் மூத்தவர் ராகி.உமா ஆசிரியைவின் கறுப்புத் தம்பி போல (இவர் கறுப்பாக இல்லை) இருந்தார். சந்திராவும், ராகியும் இரட்டையர்கள். .இருவர் குடும்பமும் அந்த வீட்டிலே இருந்தன.அச்சமயம், ராகியின் தம்பி குகாவிற்கு மணமாகி இருக்கவில்லை.உமா ஆசிரியைவில் ஏதோ ஒரு ஏக்கம் நிலவுவதுஅவர்கள் எல்லோருக்குமே புரிந்திருக்கிறது.
ராகி, குடும்ப சகிதமாக சனி ஞாயிறுகளில் அவர்கள் வீட்டுக்கும் வருவார்.அவர்களோடு இரண்டு குட்டிப் பிள்ளைகளும் வருவார்கள்.தங்கச்சிமார் அவர்களோடு விளையாடுவார்கள். மூர்த்திக்கு தான் விளையாட ஆட்கள் இல்லை.ஒதுங்கிப் போய் நிற்பான்.பேச்சின் நடுவே ராகி அண்ணனையும்,மஞ்சு அக்காவும் அவனுடனும் வாஞ்ஞையுடன் ஏதாவது பேசுவார்கள்.அல்லது உமா ஆசிரியைவிடம் விசாரிப்பார்கள்.கிராமும்,கிராமிய மக்களும் ஒரு நாட்டுக்கு அவசியம் என்பதை நிருபிக்கும் தர்ணங்கள்.வர்ணாச்சரமம் அது,இது என்பதை விட்டு சிலவற்றைக் கழித்து ,புகுத்தினாலே போதுமானதாகும்.இவை எல்லாம் ஒரு சிங்கள அரசால் செய்ய முடியாத விசயங்கள்.சிங்கள கிராமங்களிற்கு சில ஒற்றுமைகள் இருந்தாலும் வேற்றுமைகளும் இருக்கின்றன.மனிதர்களிற்கு நல்ல குணம் மட்டும் இருந்தால் போதாது ,விரிந்த மனமும் இருக்க வேண்டும்.நாட்டில் நிலவும் இனப்பிரச்சனை தீர முடியாத பிரச்சனை கிடையாது.தீர்க்கக் கூடிய பிரச்சனை தான்.இங்குள்ள மக்கள் சமூகப் பிரச்சனைகளை தீர்க்க முடியாதவை என நம்புவது போல நிறைய அறியாமைகளால் கட்டப் பட்டிருக்கின்றது. நல்நோக்கு கொண்ட சிந்தனைவாதியான காந்தி,"கிராமராட்சியம் காப்பாற்றப் பட வேண்டும்"எனக் கூறியது சிந்திக்காமல் அல்ல.
உமா ஆசிரியையோடு பிழங்கிய மற்றுமிரு குடும்பங்களில் ஒன்று தியாகராசர் குடும்பத்தினர் ,மற்றது நிரஞ்சலா அக்கா வீட்டின ரான பத்தி செல்லமுத்துக் குடும்பத்தினர். உமா ஆசிரியையால் பிள்ளைகள் மேலும் எல்லாரும் வாஞ்ஞையாகவும் இருந்தார்கள்.
உமா ஆசிரியை, அக்கா, தங்கச்சிகளுக்கு வேண்டிய உடைகளைத் தைத்தவர்கள் அந்த வீடுகளில் இருந்த விஜயா அக்காவும், நிரஞ்சலா அக்காவும் தான். உமா ஆசிரியை இவர்கள் வீட்டேயும் போய் பழகினார். நிரஞ்சலா வீட்டினர் கிருஸ்தவர்கள்.. இவர்கள் அங்கிருந்த பத்மநாதர் மற்றும் அவரது சகோதர குடும்பங்களோடு அவ்வளவாக பழகவில்லை. நிரஞ்சலாவின் அப்பா தான் மல்லிகைப் பூ கிராமத்தில் முதல் முதலிலேயே மாடி வீடு கட்டியவர்.
"எங்க வீட்டுப் பிள்ளை"சினிமாவில் வார மாதிரியான அழகான வெளி உப்பரிகையைக் கொண்ட அந்த வீட்டிலிருந்த பத்தியின் குடும்பமும் பெரிது தான்.மூத்தவர் நேவிக் கொமாண்டார்.அடுத்த இருவர் படிப்பில் சறுகி தகப்பனுக்கு பிடியாதவர்களாகி இருந்தார்கள்.இருவருமே லொரி ஓடினார்கள்.அடுத்து நிரஞ்சலா அக்கா,கடைசி ரேகா அக்கா. ரிசாங்கன் அண்ணையைக் கட்டிய சந்திரிகாயக்கா, சிங்களவர் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்.அவர் தங்கச்சியையும் கூடத் தான்.கொழும்பில் அருகில் இருந்த வீட்டிலே சிறு வயதிலிருந்தே ஒன்றாய் விளையாடி வளர்ந்த பிள்ளைகள்.இரு பிள்ளைகள் படிப்பில் சறுக்க ,தகப்பன் "உதவாக்கரைகள்"என ஒதுக்கத் தொடங்கினார். அவருடைய நெருங்கிய சிங்கள நண்பர் "டேய்,இப்படிச் செய்யாதே,பெடியங்களை முன்னுக்கு கொண்டு வார வழியைப் பார்"என்று கண்டித்தார்.நண்பரின் பெண் பிள்ளைகள் இருவரும் "நான் இவரை,இவரைக் கட்டிக் கொள்கிறேன்"என்று கல்யாணம் கட்டிக் கொண்டார்கள். தமிழரின் துரத்தியடிப்பு நிகழாதிருந்திருந்தால் கொழும்பை விட்டு இவர்கள் வந்திருக்க மாட்டார்கள். பெடியள்களும் தேறி இருப்பார்கள்.
மல்லிகைப் பூவுக்கு வந்ததில் நிச்சியமாக இனப்பிரச்சனையின் சரடு இருக்கலாம் எனவேப் படுகிறது. தமிழ்,சிங்களக் குடும்பங்கள் வடக்கு,கிழக்கில் பாதுகாப்பாய் இருக்கலாம். ஆனால்,சிங்களப் பகுதிகளில் இருக்க முடியாது. கொழும்பில் இருந்தவர்களால் லேசிலே இடம் பெயர்வது கூட முடியாததாக இருந்திருக்கும்.சிங்கள நண்பரின் அட்வைஸ்ஸால் ஒருவேளை வந்திருப்பார்களோ?
தங்கச்சிக்காரி அந்த கிராமத்தில் வசிக்கவில்லை. அடிக்கடி மகளுடன் வாறவர். அவரின் சொந்தம் அக்கா மட்டும் தானே. மூர்த்தியும் வவுனியாவில் இருந்த போது யாழ்ப்பாணத்திலிருக்கிற அவரது அம்மா வீட்டிற்கு நீள விடுதலை நாள்களில் வந்து நிற்பது போல இவர்களும் மறவன்புலத்திலிருக்கிற மாடி வீட்டிற்கும் வந்து நிற்பார்கள். இருவருமே நல்லாவே தமிழ் பேசுவார்கள். மறவன்புலத்தில் மூர்த்தி வீட்டிற்கு முன்னால் இருந்த சிறு காணித்துண்டில்,ஒரு பரப்பு இருக்குமா? தொடக்கத்தில்,அதில் இருந்த பழைய கொட்டில் போன்ற வீட்டை ரிசாங்கனும் சந்திரிகாவும் , திருத்தி சீர்ப்படுத்தி குடி வந்தார்கள். மூர்த்தி,முதல் முதலாக ஒரு கர்ப்பிணித் தாய்யின் அலறலை சந்திரிகாயக்கா அலறிய போதே கேட்டான்.அழகிய குழந்தையாக சிந்தியா அன்று பிறந்தாள்.அந்த வீட்டிலே ஒரு வருசம் இருந்திருப்பார்கள். பிறகு, அவர்கள் நாகேந்திரப் பகுதியில் புது வீடு கட்டிக் கொண்டு போனார்கள். புது வீட்டிலே மேலும், இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். கடைசி குட்டித் தம்பி. ஒரு தடவை கால் இறாத்தல் சக்கரையை வாங்கி மேசையில் வைத்து சமையலில் இருந்திருக்கிறார்.இரண்டு சிறு மகள்களையும் "தம்பியைப் பார்த்துக் கொள்ளுங்கள்"என்றிருக்கிறார்.திரும்பி வந்து பார்க்க ,சிறுமிகள் தங்களுக்குள் விளையாடிக் கொண்டிருக்க,பையன் எப்படியோ சக்கரைப் பொதியை எடுத்து திறந்து சுவைத்திருக்கிறான்.இனிப்பாக இருக்கவே வெண்னெய்யை உண்ட கண்ணன் போல முழுதையுமே சாப்பிட்டு விட்டு தாய்யைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.ரஞ்சியக்கா திகைத்துப் போய்யிருந்தார். மறவன்புலத்திலிருந்த அந்த மாடி வீட்டிற்கு இரு மருமகள்களும் குழந்தைகளுடன் வருவதற்கு மாமனார் தடை விதிக்கவில்லை.
அவருடைய ஆத்மார்ந்த நண்பரின் மகள் அல்லவா. மகன்மாரிலே அவருக்கு கோவம் நெடுகவிருந்தது. ரிசாங்கனும், துஸிதனும் அப்பாவிற்கு எதிரில் வீட்டிற்கு வருவதே இல்லை.தாய்யைப் பார்க்க வந்து வெளியில் இருந்து கதைத்து விட்டு போறதே இருந்தது. சிவாஜியின் திரைப்படம் போல தொடர்ச்சிக்கல். மூத்தமகனோடு வந்து செல்கிற ஒரு நேவி சிஸ்யன், ரேகா அக்காவை விரும்பி மணம் முடித்தார்.மூத்தவருக்கு அது பிடிக்கவில்லை.. படையிலே வேலை செய்கிறவர்கள் என்றாலே பிரச்சனை தானே.இளைப்பாரியவர்,குடும்ப பிரச்சனையில், விவாகரத்தாகி லண்டனுக்கும் போய் விட்டார். அங்கிருந்தவர் , அப்பார்ட்மெண்டிலே குடித்து சிகரட் பிடித்துக் கொண்டிருந்தவர் கட்டிலில் விழுந்து தூங்கி விட ,சிகரட் தனல் படுக்கையில் பட்டு எரிந்து அவரும் இறந்து போய் விட்டார்.தற்கொலை செய்யா விட்டாலும் விதி விரட்டுகிறது. சினிமா நடிகர் சுந்தர்ராஜன் போன்ற கம்பீரமான தோற்றம் கொண்ட அவரின் அவலச் சாவு கவலையை ஏற்படுத்தியது. பிறகு,பத்தி செல்லமுத்துவும்,மனைவியும் கொழும்பிற்குப் போய் விட்டார்களா? தெரியவில்லை.அந்த வீட்டை ரேகா அக்காவிற்கு சீதனமாகக் கொடுத்து விட்டிருந்தனர். நிரஞ்சலா அக்காவும் ,வெளிநாட்டுக்குச் சென்று மணமுடித்திருந்தார்
தியாகராசர் வீட்டிலே வளர்ந்த மகன் மூவர் ,இரு பெண்கள்.பெரிய தங்கச்சியே தையல் செய்தவர். தியாகராசரின் இரு மகன்மாரும் மூர்த்தியின் உமா ஆசிரியையைத் தேடி வந்து ,ஆர அமர இருந்து நீண்ட நேரம் கதைத்துக் கொண்டிருப்பார்கள். மூர்த்தியும் சட்டைகள் வாங்கி வர அவர்கள் வீட்டிற்கும் சென்று வாரவன்.இப்படி மறவன்புலத்தில் ஆட்கள் வந்து கதைப்பதில் உமா ஆசிரியையும் பெரும் ஆறுதல் அடைகிறார் . அந்த எல்லா வீடுகளிளிலும் உமா ஆசிரியையும் ஒரு மூத்த அக்காவாகவே விளங்கிறார். உமா ஆசிரியையின் வாழ்வில் அங்கே இருக்கிற காலமே ‘பொற்காலம்’ எனத் துணிந்து கூறலாம்.
உமா ஆசிரியையிற்கு ஏன் பத்மநாதர் தம்பதியினரின் முகத்தைப் பார்க்கும் ஏக்கம் ஏற்பட்டது, சதாப் பார்க்கிறார் ? என்பதை மூர்த்தியினால் சிறிது உய்த்துணரவே முடிகிறது .
அது, உமா ஆசிரியையின் வாழ்வில் துரத்தும் சோகச் சம்பவங்கள்! .உமா ஆசிரியை,இந்துமகளிர் கல்லூரியில் படிக்கிற போது சிமார்ட்கேர்ள் எனப் பெயர் எடுத்திருந்தார். அவரது அம்மா கூட "அவரின்(தாத்தா )தைரியம் அப்படியே இவளிடமே இருக்கிறது" என்பார்.உமா ஆசிரியையோடு மேலும் நான்கு சினேகிதிகள் சிமார்ட் குழு. அமரனின் உமா ஆசிரியை, யோகியின் தாய், நீராவியடியில் இருந்த மைதிலியின் தாய், அடுத்தது நாதனின் மனைவியாக இருக்க வேண்டும்.இவர்கள் அந்நாள்களில் " ஐந்து இளவரசிகள்"என அழைக்கப்பட்டார்கள். உமா ஆசிரியைவின் அப்பா செல்லச்சாமிப் பிள்ளை பள்ளிகூடத்திற்கே காணி வழங்கியவர். பள்ளிக்கூடத்தை விட்டு வெளியில் உமா ஆசிரியையும் தங்கச்சி செல்லமும் சினேகிதிகள் போல ஒன்றாகத் திரிகிறவர்கள்
கவலையற்ற பறவைகளாக சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த உமா ஆசிரியையும் தங்கச்சியும் மண வாழ்க்கையில் நுழைந்தார்கள். இருவருக்குமே ஒவ்வொரு வருச இடைவெளியில் திருமணம் நடந்திருக்க வேண்டும். தங்கச்சிக்குத் தான் முதலில் நடந்தது. ஒரு விபத்து போல நிகழ்ந்ததாகக் கேள்வி. போதிய விபரங்கள் மூர்த்தி க்குத் தெரியவில்லை. உமா ஆசிரியையிற்கு மூத்த மகன் பிறந்த போது , தங்கச்சிக்கு கடைசி மகள் பிறந்தாள். உமா ஆசிரியையிற்கு ஏற்கனவே மூத்த மகள் இருக்கிறாள். மூத்த மகனுக்கும், மூத்த மகனுக்கும் ஒரிரண்டு மாச வித்தியாசம் தான். அவளுக்கு ஒரு வயசாகிற போது,உமா ஆசிரியை, அயலிலிருந்த வீடொன்றில் வசித்தவர். தங்கச்சி அவரது அம்மா வீட்டிலே இருந்தவர். அவரது அம்மா வீட்டிலே தான் எல்லாப் பிள்ளைகளும் சேர்ந்து விளையாடுவார்கள். பக்கத்துக் கோவில் திருவிழாவில் எல்லோரும் நின்ற போது தங்கச்சி மூத்த மகளிடம் குழந்தையைக் கொடுத்து விட்டு வீட்டிற்கு தனியப் போய் இருக்கிறாள். அந்த குடும்பத்தில் என்னப் பிரச்சனையோ தெரியவில்லை. பக்கத்து வீட்டு பெரியக்கா தான் கோவிலுக்கு ஓடி வந்தார்," செல்லம் தன் மேல் மண்னெண்னெய்யை ஊற்றிக் கொண்டு நெருப்பை பத்த வைத்துக் கொண்டு விட்டார்"என்ற செய்தியைச் சொல்ல, குடும்பமே அலறியடித்து வீட்டிற்கு ஓடி வந்தார்கள். எல்லாமே முடிந்து விட்டிருந்தது.
ஈரச்சாக்கால் பெரியக்காவின் புருசன் தொட்டு பலர் சுத்தி செல்லத்தின் மேல் பரவிய தீயை அணைத்தாலும் பெருமளவில் எரிந்து போய் இருந்தார்.வாழை மரப்பட்டைகளால் சுற்றியும் யாழ்ப்பாணத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டோடினார்கள்.உமா ஆசிரியைவும் ஒரு வயசு அண்ணரை பெரியக்காவிடம் கொடுத்து விட்டு கூடவே அப்படி சென்றார் எட்டு நாட்கள் வரையில் ஆஸ்பத்திரியிலே இருந்த போது உமா ஆசிரியையிடம் :என்ர பிள்ளைகளை நீ பார்க்க வேண்டும்"என்று கேட்டுக் கொண்டு நிறைய பேசினார்கள். உமா ஆசிரியையிற்கு மட்டும் தான் ஏன் எரிபட்டாள்?என்ற உண்மை நிலவரம் தெரியும். உமா ஆசிரியையும் தெரிந்த எதையுமே வெளியில் சொல்லவில்லை. எட்டாம் நாள் உமா ஆசிரியையின் சினேகிதித் தங்கச்சியின் உயிரும் பிரிந்து விட்டது. பிள்ளைகள் வாழ்வில் ஏற்படுற சுழல்களுக்கு பெற்றோர்களின் செயல்களிற்கு ஏற்படுற பக்க விளைவுகள்... கூட காரணமாக இருக்கலாம்
.முத்தம்மாள் பழனிச்சாமியின் " நாடு விட்டு நாடு"என்ற புத்தகத்தை நூலகத்தில் எடுத்தோ வாங்கியோ வாசித்துப் பாருங்கள்.ஒரு ஆசிரியை எழுதிய சுயசரிதை, ஒருகொங்கு நாட்டு வெள்ளாளரின் கதையாக விரிகிறது. மூர்த்தியின் உமா ஆசிரியைவின் கதையிலும் அவர் கதையின் ஒற்றுமைகளை நிறையக் காணலாம் . எரிபடுவதற்கு முதல் தங்கச்சியின் கணவருக்கு உமா ஆசிரியையின் கணவரைப் பிடித்திருக்கிறது. அவரை மோட்டார் சைக்கிளில் ஏத்திக் கொண்டு நண்பராக யாழ்ப்பாணத்தில் திரிகிறவர். அவருக்குப் பருத்தித்துரையிலும் யாரோ ஒரு நண்பர் இருந்ததாகக் கேள்வி .அவரிடமும் சென்று எல்லாம் வாறவர். இவர் தான் மோட்டார் சைக்கிள் பிக்கப் , இறக்கல், ஏற்றல் எல்லாம்.இவரும் பிறகு இறந்து போனது அப்பரைப் பாதித்தது.அதற்குப் பிறகு அப்பாவிற்கு மாமனாரைப் பிடிப்பதில்லை.? வவுனியாவில் இருக்கிற போது மூர்த்தி, இன்னும் சிறுவனாய் இருக்கிற போதே அவனது அக்காவும், அண்ணரும் யாழ்ப்பாணத்திலிருக்கிற அவரது அம்மா வீட்டிலே இருந்து படிக்க போய் விட்டார்கள். மூர்த்தியின் அப்பாவுக்குக் குடிப் பாதிப்பு ஏற்பட்டு விட்டிருந்ததல்லவா, சின்ன வயசில் தொடங்கியதாலோ...கொஞ்சம் குடித்த உடனேயே வாய் விட்டு ஏசுற பழக்கம் இருக்கிறது. வவுனியாவில் கொஞ்ச வருசங்களிற்குப் பிறகு இவரும் இளைப்பாறி ஓய்வு பெற்று விட்டார். சம்பளம் பெறுகிற நாளிலிருந்து இரண்டு மூன்று நாள்கள் தான் பிரச்சனையான நாட்கள் . அவருக்கு நண்பரின் சாவும் ஞாபகம் வந்து விடும். உமாஆசிரியையின் அப்பாவை,இவரின் மாமாவைத் திட்டு ,திட்டு என திட்டித் தீர்த்து விடுவார். அடுத்த நாள் விடிந்த பிறகு ,உமா ஆசிரியை, அவர் கணவரோடு வாய்த் தர்க்கத்தில் ஈடுபடுவார். அவருக்கும் வெறி அவ்வளவாக முடிந்திருக்காது. ஏசுவார்.
மூர்த்தியும்,தங்கச்சிமாரும் மேசைக்கு கீழேயும் கதிரைக்கு கீழேயும் ஒளிந்து கொள்வார்கள். இருவரும் இவர்களை ஒன்றும் செய்வதில்லை தான். ஆனால் பயம். கொஞ்ச நேரத்தில் பயம் தெளிந்து விட அவர்களது அப்பாவும் , அம்மா உமா ஆசிரியைவும் கோபப் பட்டவர்கள் போல முகத்தை திருப்பிக் கொண்டு எதிர் எதிர் திசைகளில் போய் விடுவார்கள். ஒளிந்த இடத்தை விட்டு வெளியில் வர மாட்டார்கள். கடைசித் தங்கச்சி புத்திசாலி."இனி இவர்கள் கதைக்க மாட்டார்கள் "என்பான் மூர்த்தி."கதைப்பார்கள் என்கிறேன்"என்பாள் கடைசி."என்னத்திற்கு ? என்ன 'பெட்' கட்டப் போறிங்களா?"என்று அடுத்தது கிளறி விடும்."சரி பெட் பிடிக்கிறாயா?"கடைசி கையை நீட்டும். " சரி பெட்"என்று மூர்த்தி சொல்ல,"நீ தான் சாட்சி,நீ பெரிசா வந்து உழைக்கிற போது முதல் மாசச் சம்பளத்திலே எனக்கு ஐம்பது ரூபா தர வேண்டும்.சரியா?"என்று கேட்பாள். அவனும் "ஓம்" என்பான்.ஒரு கிழமை பேச்சு இருக்காது. பிறகு , அப்பாவும் , அம்மா உமா ஆசிரியைவும் கதைத்துக் கொள்வார்கள். மூர்த்தி தோற்றுப் போய் விடுவான். அடுத்த தங்கச்சியும் கடைசியும் சினேகிதிகளாகத் திரிபவர்கள்."அந்தக் காலத்தில் உன்னோட உமா ஆசிரியைவும், செல்லமும் திரிந்தது மாதிரி இருக்கிறது"என்று அவரது அம்மா யும் கூறுவார்.இருவரும் பள்ளிக்கூட வகுப்பில் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் ஒருத்தருக்கொருவர் கூறிக் கொள்வார்கள் .அவனிடமும் கூறுவார்கள். அப்படி ஒரு கூட்டணி அவர்களுக்கிடையில் நிலவின. "ஒவ்வொரு வயசு வித்தியாசம் என்பதால் இந்த கூட்டணி"என்று அவனது அண்ணன் கூறிச் சிரிப்பான். இவன் கடைசிக்கு குட்டுவான். அடுத்ததுக்கு குட்டவே மாட்டான். கடைசி அழுது போட்டு வந்து கதைக்கும். அடுத்தது வருசக் கணக்காக கோவம் போட்டு விடும். அது தெரியாமல் அவன் அண்ணரும் ,அக்காவும் சண்டை போட்டு கதைக்காமல் இருந்து விட்டது நிகழ்ந்திருக்கின்றது. .ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியானவர்களாகவே இருந்தார்கள். அக்காவிலே, புத்தரின் கருணை நோக்கல்கள் அதிகம். அண்ணர், ஒரு ஐன்ஸ்டைன். சொல்வது அதிகம் சரியாய் இருந்தாலும், கணக்கில் நிறுவப்பட்டது போல பிழையும் இருந்தால் “ 'சரி'யானதே “என சாதிப்பான். மூர்த்தி, சந்தர்ப்பவாதி, நாணல். அடுத்தது பிடிவாதம். கடைசி, சாதிக்கிறதில்லை ,ஆனால் புத்திசாலி.
மூர்த்தியின் அப்பரின் மற்ற நண்பரும் கொஞ்ச வயசிலே இறந்து போய் விட்டார். அப்பருடைய ஒரே நண்பர் அவர் மட்டும் தான் என்பார் உமா ஆசிரியை. தங்கச்சிட புருசனை ...நண்பர் என உமா ஆசிரியை, ஒருபோதும்கூற மாட்டார். அவருடைய ஒரே ஒரு புகைப்படம் வீட்டிலே இருந்தது. மற்றபடி அவரைப் பற்றிய விபரங்கள் தெரியாது.
அவரது அம்மாயே தங்கச்சியின் பிள்ளைகளிற்கு கார்டியனார்.
உமா ஆசிரியையிற்கு மூத்தவர் அண்ணர். பிறகு தம்பி. அடுத்து இரு தங்கச்சிமார், கடைசியில் ஒரு தம்பி. உமா ஆசிரியை தாத்தாவின் அச்சில் அப்படியே இருந்தார். "அவருடைய துணிச்சல், தைரியம் எல்லாம் உங்கம்மாவிடமே நிறைய இருக்கின்றன"என்று மூர்த்தியிடம் அவரது அம்மா அடிக்கடி கூறுவார். அவரது அம்மா இரவில் எழுந்து இறந்து போன மகளை நினைத்தும் அழுவார். அவர் வாழ்வைப் பற்றியும் மூர்த்தியும் வாயைக் கிளறுவான். தொட்டு தொட்டுச் சொல்லுவார். அவனுக்கு விளங்காது. அவருக்கும் வயசாகி இருந்ததால் ஞாபக மறதியும் இருக்கலாம் . தாத்தாவிற்கும் ,அவருக்கும் “உமா ஆசிரியைவிலே பாசம் அதிகம்”என்பார்.
"நீ பெரியவனாகி வேலைக்குப் போனால் போற, வாற போது லக்ஸ்பிறே ...போன்ற டின்களையும்வாங்கிக் கொண்டு வா. உன்னை நினைத்து நாம் இங்கே குடிப்போம். புஸ்டியாக எனக்கு தேகம் வைத்தாலும் வைத்து விடுமே" என்று கூறியும் சிரிப்பார்.முஸ்பாத்திக் குணமும் அவரது அம்மாயிடம் நிறைய இருக்கின்றது. அவனது அண்ணன் எப்பவும் அவசரப் படுறவன். "சுடு தண்ணிப் பிரக்கிரியாஸி"என்று அழைப்பார். "பீத்தல் பறங்கி" என்றும் அழைப்பார். மூர்த்தி வெளியிலே பெரிதாய் பிழங்கிறவனில்லை தானே. எனவே பேசுற போது தமிழ்ப் பாட தமிழிலேயே பேசுவான்."வாடா அப்பு செந்தமிழ்ப் புலவர்"என்று வாஞ்ஞையுடன் அழைப்பார்.
அந்த காலத்தில் உயர் வகுப்பில் பாசான பிறகு மேலே படிக்க விரும்பாது உமா ஆசிரியையும் ,இறந்து போன தங்கச்சியும் ஆசிரிய வேலையை விரும்புகிறோம் என்று தாத்தாவிடம் கூற அச்சமயம் தற்போதைய மாதிரியான இன முகங்கள் இருக்கவில்லை தானே. ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து உமா ஆசிரியை ஆசிரியை ஆனார். தங்கச்சியும் பிறகு ஆசிரியையானார். உமா ஆசிரியையின் அப்பாவும் முதலில் ஆசிரியர் தான். அந்த பாதையிலே அப்படியே இருவரும் மேற் கொண்டு படிக்க விரும்பி இருக்கலாம். மூர்த்தின் அப்பா நிலவளவையாளர்.அவர், கோல்ட் மெடல் வாங்கிய மாணவர் நிலவளவையானார் போல, இந்துக்கல்லூரியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார், மேற் கொண்டு பல்கலைக்கழகத்தில் படிக்க காசில்லாது, தியத்தலாவையில் இருந்த நிலவளவைப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து நிலவளவையானார் .தற்போது கல்வித் தரப்படுத்தலால் வாழ்வே மாயம் பாடுவது போல் அன்றைய நிலையில் மனவழுத்தத்திற்குள்ளாகிய அப்பா குடிக்கவும் தொடங்கினார். கல்யாணம் கட்டிய பிறகு குறையும் என எதிர்பார்த்தது நடக்கவில்லை. ஆனால், மனமொத்த தம்பதியினராகத் தான் இருக்கிறார்கள். இல்லா விட்டால் பிள்ளைகளான அவர்கள் ஏது ?
1958 இல் தங்கச்சியின் கோர மரணம்.அவரது அம்மா வீட்ட வார போதெல்லாம் தங்கச்சி எரிந்து கொண்டிருப்பது போலக் காட்சிகள் உமா ஆசிரியைவிற்குத் தெரிந்து கொண்டிருக்க, என்ன செய்வது எனத் தெரியாமல் இருக்க, உமா ஆசிரியையின் அப்பாவின் நண்பர் "தங்கச்சி,வவுனியாப் போல கொஞ்சம் தள்ளிய ஊரில் இருந்தால் காலம் ஆற்றும்" எனக் கருத்து தெரிவிக்க, உமா ஆசிரியையும் ஒத்துக் கொள்ள, மாணிக்கர் உமா ஆசிரியைவிற்கு மாறுதலைப் பெற்றுக் கொடுத்தார். அப்படி வவுனியா வந்தார்கள். அவரும் பிறகு வவுனியா கல்விக் கந்தோருக்கு மாறுதலைப் பெற்று வந்து உமா ஆசிரியையிற்கு கார்டியனாக இருந்திருக்கிறார்.
பிறகு, தாத்தாவும் இறந்து போய் விட்டார். செத்தவீட்டிற்கு உமா ஆசிரியை மட்டும் தனியாக யாழ்ப்பாணம் போய் வந்தார்.
உமா ஆசிரியை வவுனியாவிலேயே அப்படியே இருந்திருப்பார்.ஆனால் விதி ,உபத்திரவம் பிடித்த ஒன்றாயிச்சே ! .வவுனியாவில் தற்கொலை வீதம் அதிகம்.யாழ்ப்பாணத்தில் பெண்கள் அதிகமாக இறக்க (மணமானவர்கள் மத்தியில்),வவுனியாவிலே மணமாகாத பிரிவில் ஆண்,பெண் இரு பாலர் மத்தியிலும் அதிகரித்த தற்கொலைகள் இடம் பெறுகின்றன. அங்கே என்ன தான் பிரச்சனைகள் ? ஜி.சி.ஈ( ஓல் லெவல்)பரீட்சையில் பெயில்,பெற்றோர் ஏசினால் விவசாயத்திற்கு வைத்திருக்கிற பொலிடோல்(என்றே கூறக் கேட்டிருக்கிறான்)எடுத்து குடித்து காவியமாகி விடுகிறார்கள். வேலை கிடைக்காது விரக்தி அடைந்தாலும் குடிக்கிறார்கள். அதை விட இருட்டில் கிணறு தெரியாமல் கிணற்றில் விழுந்து இறந்தவர்களும் இருக்கிறார்கள்.இவ்வளவு குளங்கள் இருக்கின்றன.பாடசாலைக் கல்வியில் "நீச்சலையும்" ஒரு பாடமாக்கி கிழமையில் ஒரு நாள் அனைத்து மாணவர்களையும் குளக்கரைக்கு கூட்டிச் சென்று நீச்சலைப் பழக்கி இருந்தால் அந்தச் சாவுகள் குறையும். நிலமையை கொஞ்சம் மாற்றலாம். ஓடுகிற ரயில் முன்னால் பாய்ந்து சிதறு தேங்காய்களாகிறவர்களையும் இன்னும் யோசித்தால் குறைக்க ஏதாவது வழி பிறக்கும். சாவதற்கு முதல் சாவதானமாக அந்த உறவுகள் உறவினர்களிடம் விடை பெறுகிறது இருக்கே "பேயா,சாகிறதென்றால் போய்ச் சாவன்.ஏண்டா...சிலையின் எழுத்து போல வந்து 'அண்ணா, அக்கா,மாமி,மச்சான்...இப்படி தேன் ஒழுக பாசத்தைக் கொட்டிக் கதைக்கிறாய்.வாழ்நால் எல்லாம் உன்னை நினைத்து ,நினைத்து அழலோணும் என்ற என்ன குரூர ஆசை"திட்டித் தீர்க்காதவர்கள் இல்லை.அவர்கள் முடிவெடுக்கிறது ஒரு கண நேரம் தான்.அதைக் கடந்து விட்டார்கள் என்றால் இன்று அனேகர் உயிருடன் இருப்பார்கள்.முதலில் காலைச் சுற்றிய பாம்பாகக் கிடக்கிற இந்த இனப்பிரச்சனையை விட இவை ஒழியணும்".கடவுள் இவர்களின் குரல்களைக் கேட்பாரா?. மனிதர்கள் இருக்கிறார்கள்; இருக்கிறவர்கள் துணிந்து கேட்டாலே போதும் தான்.
பள்ளிகூடத்தில், இனப்பிரச்சனையை கைவிடு எனக் கற்பித்து வந்தால்சொல்லிக் கொடுத்தால் எல்லா மாணவர்களும் கவனிக்கவேச் செய்வார்கள். எப்படியாவது வெளிய மரணம் குரூரமாக விளையாடுறதை குறைத்தேயாக வேண்டும் !
உமா ஆசிரியையின் வாழ்வில் திரும்பவும் வந்த அந்த நாள் ,
வவுனியா மகாவித்தியாலயதில் அன்று என்றும் போல வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.பிஸ்கட் நிறுத்த நேரத்தில் மகாவித்தியாலயத்திற்கு முன்னால் செல்லும் கண்டிப் பெரு வீதியிருந்து தோணிக்கல் கிராமத்திற்கு கிளைக்கும் மண் ஒழுங்கை மூலையில் நிறையக் கூட்டம். மாணவர் சிலர் வேலிக் கம்பிக்குள்லாலும் புகுந்து ஓடிப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரோ ஒரு பெண் ,தன் மேல் மண்னெண்னெய்யை ஊத்தி எரிந்து போய் விட்டாளாம். வகுப்புகளைத் துறந்து மாணவர் பட்டாளம் அந்த வீட்டை நோக்கி படை எடுத்தது. மூர்த்தி யும் அவர்களில் ஒருத்தன்.என்ன தான் இவளுக்குப் பிரச்சனை?இரண்டு வயசு பையனை அறை ஒன்றில் பூட்டி விட்டு எரியூட்டியிருக்கிறாள். யாருக்குமே எதுவுமே புரியவில்லை.முதலில் ,வீதியாலே போய்க் கொண்டிருந்த சிலர் வீட்டினுள் எரிகிற உருவம் ஓடிக் கொண்டிருக்கிறதைப் பார்த்து ,குலறியடித்து கேட்டைத் திறந்து கொண்டு ஓட,மேலும் சிலர் சேர வீட்டுக்கு கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்துத் திறந்து கொண்டு போய் எப்படியோ சாக்கைத் தேடி எடுத்து ,கிடைத்த துணியை எடுத்து அவளை சுத்தி....தீயை அணைத்த போதும் அணுங்கிக் கொண்டிருந்தாள்.
அன்று தொலைபேசி,கைபேசி வசதிகள் எல்லாம் இல்லை.ஒரு மணி நேரத்திற்குப் பிறகே பொலிஸ் வந்தது. அம்புலன்ஸ் வர மேலும் ஒரு மணி நேரம் ஆகியது. .அதற்கிடையில், ஆசிரியர்களும் படை எடுத்திருந்தார்கள். குறிப்பாக உமா ஆசிரியையும் அவர்களில் ஒருத்தி. அவர் கலங்கிய கண்களுடன் சுருட்டி வைக்கப்பட்ட உயிருடன் தவித்துக் கொண்டிருந்த உடலைப் பார்த்துக் கொண்டே நின்றார்.பாடசாலையில் வகுப்புகள் தொடங்குவதற்கான மணி அடிக்கிற சத்தம் கேட்டது. யாருமே அதை அசட்டை செய்யவில்லை. அவர் கண்களில் அவருடைய தங்கச்சி தெரிந்திருக்க வேண்டும்.அவர் சாகிற போது இவளை விட ஒன்றிரண்டு வயசில் கூட இருந்திருக்கலாம். அறையில் பூட்டி வைத்திருந்த பையனை ஒரு பெண் தூக்கி வைத்திருந்தாள்.அதுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அதுக்கு இன்னொரு பெண் சிறு பொம்மையைக் காட்ட , கை நீட்ட கொடுத்து விட்டிருந்தாள்.இளம் வயதினான கணவனும் வந்து விட்டிருந்தான்.அவன் ஒரு பொறியலாளனோ,அல்லது வங்கியில் வேலை செய்கிறவனாக இருக்க வேண்டும். திக்பிரமை பிடித்தவனாக அவளையே பார்க்க , அவள் அழுது கொண்டிருந்தாள். வலியால் மட்டுமில்லை அவசரப்பட்டு செய்து விட்ட செயலுக்கும் சேர்த்தே அழுது கொண்டிருந்தாள் . வவுனியா, இப்பேர்ப்பட்ட இரண்டாங்கெட்ட ஊர் தான் !.
வீட்டிலே யாரும் ஏசினாலோ..உடனேயே பொலிடோலை வாய்யிலே வார்த்து விடுகிற குணம் மாற வேண்டும். ஏழ்மையில் இருக்கிற விவசாயிகளுக்கு அவற்றை எட்டாமல் வைக்க இரும்புப் பெட்டிகளோ எதுவுமே இல்லை.சின்னப் பிள்ளை கூட ஒரு எட்டு ஏறி விட்டால் எடுக்கக் கூடிய இடத்திலேயே கிடக்கின்றன. ஓடுற ரயிலுக்கு முன்னால் ஒரு பாய்கிற ஓட்டத்தில் வன்னியரை எவருமே விலத்த முடியாது .அல்லது இப்படி செய்தால் எரிகிற வலி,வேதனை இருக்கும் எனத் தெரியாமல் செய்து விட்டு, சிங்களக்காடையர்கள் எரித்தது போல துடித்துக் கொண்டு கிடக்கிறார்கள்.
வேலைக்குப் போற போது,அவள் "உமா ஆசிரியை வீட்ட போகணும்..."ஏதோ சொல்ல ,இவன் இப்ப இல்லை பிறகு என்று கூற ,அவள் அழுது அடம் பிடிக்க,"வேலைக்குப் போற நேரத்திலே..தரித்திரம் "என வாய் அவனை மீறி வார்த்தைகளைக் கொட்ட, ஆத்திரத்தில் இதோ...இவள், இதோ இப்படிக் கிடக்கிறாள்.
இனிமேலும் ஒரு பெண் ,இப்படி சாகக் கூடாது!, என்ற இலக்கில் எடுத்த சில சினிமா திரைப்படங்கள் பெண்களால் அதிகளவில் பார்க்கப் படுற வெற்றிப் படங்களாக ஓடுகின்றன.ஒரு அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய பொறுப்பு, அந்த இயக்குனர் திலகங்களிடம் இருக்க, கண்ட கிண்ட சமூக விரோதக் குழுக்களில் இருக்கிற பொறுப்புகள் எல்லாம் இலங்கையை ஆளும் அரசியல் தலைவர்களிடம் இருக்கின்றன .இத்தகைய பிழையான கதாநாயகர்களையே மக்கள் தெரிவதாலேயே, கலவரங்களிற்கு பொறுப்பு வகிக்காத மக்களையும் மூர்த்தி போன்றவர்கள் சேர்த்து திட்டி தீர்க்கிறார்கள் . இலக்கியப் படைப்புகளிலும் திட்டு சேர்வதற்குக் காரணமாகின்றன ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்காக குரல் கொடுத்த கொடுக்கிற பெரும்பான்மையின ஊடகவியலாளர்கள் இருந்திருக்கிறார்கள் .நாவலர் சைவத்தைக் காப்பாற்ற தயாரித்த வினாவிடை போல இனப்பிரச்சனையையும் வினா விடை களைஞ்சியமாக சேர்த்து தொகுத்தால் தான் , அவை தமிழர் தரப்பிலும் எழுகிற இனத்துவேசப் பேச்சுகளை குறைக்கும் எனப்படுகிறது. இன்றைய ஆளும் தலைவர்களின் அசட்டுப் பேச்சுக்களையும் குறைக்கும்.
நடந்து விட்டால் அந்தப் பயங்கரத்தை அப்படியே எழுத்தில் பதிய வைக்கிற வேலை கஸ்டமானது. பதியிற போது நிறைய உதைகள். அனுபவமில்லாத நிருபரின் எழுத்தில் நம்பகத் தன்மை பல வடிவத்தில் வீழ்த்தி இடிக்கும். வாசிக்கிறவர்களுக்கு நேரிலுள்ள சோகம் தெரியாமலே கடந்து போய் விடுகிற சறுக்கல்கள் ஏராளம் இருக்கின்றன. அவனுக்கே திருப்தியில்லை என மறுபடியும் எழுத.அப்பவும் சரியில்லை.பையித்தியம் பிடிக்காமல் விடாது.கடைசியில் இவ்வளவு தானப்பா...!இவ்வளவு தான்"என சொல்லி நழுவி விடுவதே நடக்கின்றன. சோகத்தில் முற்பது ,நாற்பது வீதமே தேறுகிறது. மூர்த்தி வீட்டில் மூர்த்தியை விட எவருக்குமே இந்த சம்பவம் தெரியாது.அவனுடைய தங்கச்சிமார் இருவரும் வவுனியா மகாவித்தியாலயத்தில் படிக்கவில்லை.வவுனியாக் குலத்திற்கு அண்மித்திருந்த கொன்வென்டில் ரிக்ஸாவைப் போல அலங்கரித்த மாட்டு வண்டில் ஒன்றில்(ஓற்றையா,இரட்டைத் திருகா..?மறந்திட்டான்)போய் வந்து கொண்டிருந்தார்கள்.உள்ளே இரண்டு பக்கத்திலும் குட்டி,குட்டிக் கதிரைகள் வரிசையில் கிடக்கும்.அதில் வேற வேற சிறுமிகளும் வருவார்கள்.அந்த வண்டிலேயே வவுனியா எம்.பி.யின் மகளும் கூட கொன்வென்டுக்கு போய் வந்து கொண்டிருந்தாள். பெரும்பாலும் சிறுமிகள் எல்லாரும் கொன்வெண்டிலே படித்துக் கொண்டிருந்தார்கள்.ஏன்? மூர்த்திக்குப் புரியவில்லை. ஸ்கூல் பஸ் போல அங்கே மாட்டு வண்டில் ஓடியது. ஒருசமயம் மழைநேரம் ஒரு தடவை வண்டில் பாதையை விட்டு விலகி சாய்ந்து விழுந்து விட்டது கூட நிகழ்ந்திருக்கிறது.ஒருத்தருக்கும் காயம் ஏற்படவில்லை.வண்டில்காரன் அனுபவஸ்தனில்லையா. திரும்ப நேராக்கி ஏற்றி வந்து பத்திரமாக இறக்கி விட்டிருக்கிறான்.சி றுமிகள் பெரிய வீரச்செயல் போல அதை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
தற்போதைய இனப்பிரச்சனையை, காலே பதிக்காத அடுத்த சந்ததிக்கு நீங்கள் அறுபது வீதமாக எப்படி கற்றுக் கொடுக்கப் போறீர்கள். அதையும் கற்றுக் கொடுத்தாகவே வேண்டும்.புலம் பெயர் நாடுகளும்,பிரஜாவுரிமையை வழங்கி இருந்தாலும் கூட அதுவும் ஒரு வகையில் இலங்கை போல "கொஞ்சம் படுகொலைகள் விலத்தப்பட்ட ஒரு நாடு தான் .
இலங்கையில்,தமிழர்கள் மீள கால் பதிக்கிறதுக்கான கலாச்சார வளர்ச்சிகளுக்கு மட்டுமே அவை வாய்ப்புககளை வழங்குகின்றன.புத்தர் போல நல்ல தலைவர்கள் அங்கும் தெரிகிற போது,ஆட்சிக்கு வாற போது உங்கள் காட்டில் மழை தான். உரிமைப் பிரச்சனைகளிற்கு அவர்களும் சேர்ந்து குரல் கொடுக்கிரார்கள். ஆனால் அந்த நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கிற பெரும் அமைப்புகளின் கீழ் இயங்கிற நாடு என்பதை மறந்து விட வேண்டாம்.அந்தந்த நாடுகளில் பெரிதாக கறுப்பு ,வெள்ளைப் பிரச்சனைகள் பெரிதாக வெடித்து காந்தியின் ஆர்ப்பாட்ட போராட்ட ஊர்வலங்களாகாக நடக்கிற போது இலங்கையின் அரசியமைப்பு அத்திவாரச் சட்டங்களிலே கிடக்கிற 'சிங்களம்"மட்டும் தான் என்கிற ரேசிச சட்டங்களிற்கும் எதிராகக் சேர்ந்து வெளிநாட்டில் (இருப்பவர்கள்) குரல் எழுப்பப் பழக வேண்டும்.பழங்குடி மக்கள் தொட்டு பல இனங்கள் அப்போராட்டங்களில் இணையிறது நிகழ்கின்றன.தமிழர்களும் இணைந்தால் தான் இங்கத்தைய இனவெறியர்களின் செவிப்பறைகளிலும் கிழிபடுறது போல விழும்.இந்த நிலையிலும் தம்மையும் தாழ்ந்தவர்களாக எண்ணி விடாமல் வர்த்தகப்பிரிவினர் நம்மவர்களின் வானில் பறக்கிற ,கடலில் கலக்கிற பணிகளில் தொடர்ந்தும் கால் பதித்துக் கொண்டும் போப்க பழகவும் வேண்டும். நம் கட்டுக்களை நாமே அவிழ்த்து விட்டால் தான் நாமும் சுதந்திரமாக பறந்தும் , கடலில் விரைந்தும் சாதனைகளைப் படைத்துக் கொண்டு போவோம்….என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
உமா ஆசிரியையின் இறந்து போன தங்கச்சி, கூட இந்தப் பெண் போல அசட்டுத் தவறைச் செய்திருக்கலாம். எல்லா இளம் பெண்களுக்கும் ஆணைப் போல வேலைக்குப் போற வாய்ப்புகள் கிடைப்பதில்லை .கிடைக்கிற மாதிரியாக நிலமைகளை மாற்ற வேண்டும். பிரச்சனையை ,சமூக வழிகளாலும், இனத்துவேசத்தால் இரட்டிப்படைய விடாமலும் சிந்திக்க வேண்டும்.
தமிழனின் சுய பொருளாதாரத்தை எரிக்கிற, அழிக்கிற பணி வெளியில் தொடர்ந்தபடியே இருக்கின்றன. அதோடு சேர்ந்து பெண்களிற்கான வேலைகள் மற்றும் சுய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான குரல்களையும் கூட எழுப்பத் தவறக் கூடாது.
வவுனியா ஒரு தனிமைப் பிடித்த பிரதேசம் என்பது ஏற்கனவே தெரிந்த விசயம்.இலங்கையிலேயே தற்கொலைகள் அதிகமான பிரதேசமும் அது தான்.. இளம் பிராயத்திற்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்றதை மத்தியரசு உணர்பவர்களாக மாறுகிற அதிசயம் நிகழாதா? பிராத்திப்போம். கடவுளோட புத்தரும் சேர்ந்து கண் திறக்கலாம்.
எல்லா அதிகாரங்களையும் திட்டமிட்டு குவித்து வைத்து போடும் ஆட்டம் சகிக்க முடியாதவையாகவே போய்க் கொண்டிருக்கின்றன. போர்கள் ….இரண்டு,மூன்று ...என தொடரும் சமிக்ஞைகளையே காட்டிக் கொண்டு நிற்கின்றன.
உமா ஆசிரியை வீட்டிலே வந்து "சாம்பலாதேவி சாம்பலாய் போய் விட்டாள்"என்று புலம்பிக் கொண்டிருந்தார்.அப்பா"யார் சாம்பலாதேவி?"என்று கேட்டார்."அது சாருதலாதேவி,பள்ளிக்கூடத்திற்கு முன்னால் இருக்கிற வீட்டிலே ஒரு அக்கா தனது இரண்டு வயசுப் பையனை ரூமிலே பூட்டி விட்டு,தன் மேல் மண்ணெண்னெய்யை ஊற்றிக் கொண்டு எரிந்து விட்டார்.கரிக்கட்டையாய் உயிர் அணுங்கலுடன் துணிகளால் சுருட்டி வைக்கப்பட்ட உடலை நான்,உமா ஆசிரியை எல்லாம் பார்த்தோம்.இண்டைக்குவகுப்புகளே ஒழுங்காக நடக்கவில்லை.ஆசிரியர்கள் தான் வகுப்புக்கு போங்கள் .இந்த மாதிரிக் காட்சிகளை பார்க்கக் கூடாது என்று விரட்டினார்கள்."நாங்கள் வந்த பிறகும் ,உமா ஆசிரியை கன நேரமாக பார்த்துக் கொண்டே நின்றார்"என்றான்.
இரண்டாம் மாதமே உமா ஆசிரியை"நாம யாழ்ப்பாணம் போய் விடுவோமா?"என்று அப்பாவிடம் கேட்டார்."ஓம் !. போய் விடுவது தான் நல்லது"என்றார் அப்பா."அவரது அம்மா வீட்டிற்கு கிட்டவும் இருக்கிறது நல்லதில்லை"என்று அப்பா உமா ஆசிரியைவைக் கேட்டுக் கொண்டார்.எனவே தான் கல்விக் கந்தோரில் உயர் அதிகாரியாக இருந்த உமா ஆசிரியையின் அப்பாவின் பழைய நண்பரான மாணிக்கவாசகரிடம் "கிராமப் புறமாகப் பார்த்து மாற்றத்தைத் தாருங்கள் "என்று கேட்டு மல்லிகைப் பூக் கிராமத்திற்கு பெற்றுக் கொடுக்க வந்திருக்கிறார்கள்.
அந்த சம்பவம் உமா ஆசிரியையை துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது. அவனுக்குத் தெரியாத பல விசயங்கள் எல்லாம் கூட பத்மநாதர் தம்பதியினருக்கு தெரிந்திருக்கலாம். உமா ஆசிரியையின் வீட்டில் நிகழ்ந்த அவலம், வவுனியாவில் கண்ட அவலம் பற்றி அவர்களிற்கு தெரிந்திராத போதிலும் உள்ளுணர்வு என்பது ஆற்றல் மிக்கதல்லவா,,துல்லியமாக உள்ளத்து நாண்களை அதிர வைத்து அறிந்து கொள்ள வைத்து விடுபன அல்லவா .
பத்மநாதரைப் பார்த்த போது உமா ஆசிரியையிற்கு அப்பாவைப் பார்க்கிற மாதிரியான ஒரு ஆறுதல் ஏற்பட்டது. அவருடைய வாழ்க்கைப்பட்டிருக்கிற மூத்த மகளுக்கும் உமா ஆசிரியைவின் வயசு தான். அவருடைய கடைசி மகனும் அந்த அக்காவுடனே தங்கி இருக்கிறான். அங்கேயும் கூட்டுக் குடும்ப முறைகளை உடையவர்கள். அன்புடன் அரவணைக்கும் தன்மை அவர்கள் இரத்தில் ஊறியது. பத்மநாதர் தம்பதியினர் உமா ஆசிரியையை முழுமனதுடன் மகளாகவே ஏற்றுக் கொண்டு விட்டிருக்கிறார்கள் .
மூர்த்திக்கு அவர்கள் வீட்டிலே அதிகம் பிடித்தவர் ‘குகா’ அண்ணை தான் .உமா ஆசிரியையின் கடைசித் தம்பியைப் போல இருந்தவர். அதே குணம் கொண்டவர் இவரின் திருமணம் கிழக்கு மாகாணத்திற்கு வர்த்தக அலுவலாக போன இடத்தில் நடந்து விட்டிருந்தது. பெரியக்கா வீட்டிலே நிகழ இருந்த அவர்களுடைய கடைசி தம்பி ஜெயாவின் திருமணத்திற்கு உமா ஆசிரியையிற்கு விசேச அழைப்பு . மறவன்புலத்தில் இவரிற்கு மேலும் இரு சகோதரர்களின் குடும்பங்களும் இருந்தன. அக்குடும்பங்கள் எல்லாம் உமா ஆசிரியையை முழுதாக மகளாக ஏற்றிருந்ததால் தான் அந்த அழைப்பு. மூர்த்தி, தங்கச்சிமார் இருவருடனும் உமா ஆசிரியையுடனும் அந்த திருமணத்திற்கு இவர்கள் மல்லிகைப் பூக் கிராமத்தில் பிடித்த பஸ்ஸில் ஏறிச் சென்றார்கள். மாப்பிள்ளை கணக்கியலாளராக இருந்தார். உமா ஆசிரியை மூலமாக அறிந்து வந்து மூர்த்தியுடன் வாரப்பாடாகக் கதைத்தார். மணமகளுக்கு "என்னுடைய அக்காக்களில் ஒருவர் "என உமா ஆசிரியைவை அறிமுகப்படுத்தினார்.
கல்யாணச் சாப்பாட்டை சந்தோசமாக சாப்பிட்டு விட்டு இவர்கள் திரும்பிய பஸ்ஸிலே மறவன்புலத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|