எதுக்கு சுத்தி வளைத்து? நேரடியாவே தெய்வத்திருமகன் படத்துக்கு வருகிறேன். அருமையான படம். பார்க்க நெகிழ்ச்சியா இருக்கிறது. விக்ரம் அருமையாக நடித்திருக்கிறார். ஆத்மார்த்தமான இசை. திரைக்கதை, வசனத்தில் நெகிழ்ச்சியும், நகைச்சுவையும் இழையோடுகிறது. பார்ப்பவர்கள் பல இடங்களில் அழுகிறார்கள். எல்லாம் சரி. ஆனால் படம் கொண்டாடப்பட வேண்டிய படமல்ல! நல்ல சினிமா அல்ல. தமிழ் சினிமாவின் வளர்ச்சியை கேள்விக்குறியாக்கி, கேலிக்கூத்தாக்கும் படம். பொறுங்கள். திட்டாதீர்கள். முழுதாக முடித்துக்கொள்கிறேன்.
நல்ல படம் அது சார்ந்த திரையுலகை உலக பார்வையாளர்கள் முன் பெருமையாக திரையிடப்பட வேண்டுமே தவிர, உலக பார்வையாளர்கள் முன் திரையிடப்படுவதற்கே அச்சம் தருவதாய் இருக்கக் கூடாது. சில ஆண்டுகள் முன்பு ப்ளாக் என்ற இந்திப்படம் வந்தது. அருமையான திரைப்படம். ராணி முகர்ஜீயும், அமிதாப்பு நடிப்பில் பின்னியிருப்பார்கள். இந்திய விமர்சகர்கள், ரசிகர்கள் எல்லோருமே அந்தப் படத்தைக் கொண்டாடினார்கள். ஆனால் அந்தப்படத்தை சர்வதேச விருதுகளுக்கு அனுப்ப முடியவில்லை. ஏனெனில் அது ஒரு வேற்றுநாட்டுப்படத்தின் தழுவல். அந்தப்படத்தை அனுப்ப பயந்து அதே ஆண்டு வெளிவந்த 'பெஹலி(Pehli)' என்ற படத்தை அனுப்பினார்கள். அது ராஜஸ்தானிய நாடோடிக்கதை ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டது. இது போன்றதொரு பயத்தைத் தருவதுதான் தெய்வத்திருமகன் படமும். இது நல்லபடம் தான் எனினும், சர்வதேச விருதுகளுக்கு அனுப்பப்பட்டால், திரைப்படங்கள் அது சார்ந்த சமூகத்தினை உலகிற்கு காட்டும் கண்ணாட்டியாக இருக்கும் சூழலில், தெய்வத்திருமகன் படத்தால் நம் திரைப்படங்களுக்கு சர்வதேச அளவில் அவமானம் தான் சேருமேயொழிய பாராட்டுக்களோ, புகழோ அல்ல.
போக்கிரி என்ற தெலுங்குப்படம் தமிழில் மீள் உருவாக்கம் (ரீமேக்) செய்யப்பட்டபோது, தெலுங்கு பதிப்பில் நடித்த மகேஷ்பாபுவின் மூக்கை உரியும் சேட்டைகளைக் கூட விஜய் அப்படியே தமிழ் போக்கிரியில் செய்திருப்பார். அப்போது ஊரே அவரைக் கிண்டல் செய்தது. காப்பி அடிக்கிறான் அது இது என குறை சொல்லியது. இப்போது தெய்வத்திருமகனில் விக்ரம், Sean Pennயின் நடிப்பை மிகச்சாதாரணமாக காப்பியடித்து நடித்திருக்கிறார். மகேஷ்பாபுவின் குரங்கு சேட்டையை களவாடியதற்கே விஜய்யை குறை சொன்ன நாம், Sean Pennயின் பல மாத உழைப்பை, ஆராய்ச்சியை ஒரே ஒரு DVDயைப் பார்த்து காப்பி அடித்து மிமிக்ரி செய்திருக்கும் விக்ரமை எவ்வளவு கேலி செய்ய வேண்டும்? கண்டிக்க வேண்டும்? ஆனால் விக்ரமின் நடிப்பைப் புகழ்ந்து கொண்டு வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். மகேஷ்பாபுவை தன் ஆக்ஷன் இமேஜை தக்கவைப்பதற்காக விஜய் காப்பி அடித்தார் என்றால், Sean Pennஐய் தன் சிறந்த நடிகர் இமேஜை தக்கவைப்பதற்காக விக்ரம் காப்பி அடித்துள்ளார். ரெண்டு பேருமே காப்பி. இதில் என்ன வித்தியாசம் கண்டுவிட்டீர்கள். (விக்ரமை விஜய்யுடன் ஒப்பிடுவதற்காக மன்னிக்கவும். அவரின் பல படங்களின் ரசிகனாய், அவர் நடிப்பிற்கு விசிறியாய் இருந்தும் அவரின் இந்த செயலை என்னால் ஏற்கவே முடியவில்லை)
தெய்வத்திருமகன் இயக்குனரிடம் சில கேள்விகள். அதெப்படி இணையத்தின் மூலம் உலகம் கையளவு சுருங்கியிருப்பது தெரிந்தும் தைரியமாக ஒரு படத்தை, அதுவும் ஆங்கிலப்படத்தைக் காப்பி அடிக்க முடிகிறது? ஆங்கிலப்படத்தை பார்க்கவேண்டுமென்றால் விஜய் டிவியிலும், சன் டிவிலயும் டப்பிங் செய்து ஒளிபரப்பும் போது பார்த்துக்கொள்வோமே? இதற்கு எதுக்கு நீங்கள் கஷ்டப்பட்டு இன்னொரு நடிகரை வைத்து எடுக்குறீர்கள்? மதராசப்பட்டணம் படத்திலேயே பல காட்சிகள் டைட்டானிக், லகான் படக்காட்சிகள் தான். இருந்தும் அந்தப் படத்தின் டெக்னிகல் விஷயங்களும், உங்கள் சொந்த காட்சிகள் சிலவும் உங்களை காப்பாற்றிவிட்டது. ஆனால் விக்ரமின் சிகையலங்காரத்தில் இருந்து கையை ஆட்டி ஆட்டி பேசும் மேனரிசம் வரை அச்சுஅசல் காப்பியடித்திருக்கிறீர்கள், இதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்? அதுவும் Iam Samக்கு ஒரு நன்றி கார்டு கூட போடாமல்? நீங்கள் Inspiration எனச் சொன்னால் கூட ஏற்றுகொள்ளலாம் ஆனால் நீங்கள் Iam Samஐ காட்சிக்கு காட்சி தமிழில் மீள் உருவாக்கம் செய்திருக்கிறீர்கள். உலக சினிமாவை காப்பி அடித்தால் வரும் சினிமாவும் உலகசினிமாவாகத்தான் இருக்கும். இதில் என்ன பெருமை? வந்துவிடப்போகிறது? இந்தப் படத்தால் நீங்கள் சார்ந்திருக்கும் திரையுலகத்திற்கு நல்ல பெயராவது கிடைக்குமென நினைக்கிறீர்களா? ஏற்கனவே இந்தி திரையுலகை காப்பியடிப்பதில் மன்னர்கள் என உலகம் விளிக்கும் வேலையில் தமிழ்சினிமா மானத்தையும் வாங்க வேண்டுமா? Iam Samஐ பணம் கொடுத்து உரிமைபெற்றிருக்க வேண்டாம், குறைந்தபட்சம் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் போட்டது போல மூலப்படத்திற்கு ஒரு நன்றி கூடவா உங்களால் போட முடியாது? உங்கள் மதராசப்பட்டணம் படத்தை வடநாட்டில் ஒரு இயக்குனர் அப்படியே காப்பி அடித்து உங்களுக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லையென்றால் என்ன குதி குதிப்பீர்கள்?
படம் நல்ல பொழுதுபோக்குப்படம் தான். கேவலமான தமிழ் சினிமா சூழலில் இது போன்ற படம் நல்ல ரசனை உள்ள ரசிகர்களுக்கு நல்ல தீனிதான். ஆனால் இந்தப் படத்தை கொண்டாடினால், புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு மிகப்பெரிய தவறான உதாரணாம் ஆகிவிடும். சரியான முறையில் சரியான படங்களை காப்பி அடித்தாலே தமிழ்நாட்டில் புகழ் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தை உருவாக்கி புதிதாய் சிந்திக்கும் திறனையே காலப்போக்கில் மழுங்கடித்துவிடும். அது தமிழ்சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்கு மிகப்பெரிய தடையாகிவிடும்.
அழகர்சாமியின் குதிரை படத்தை ஏன் நாம் இவ்வளவு கொண்டாடவில்லை? மண்ணையும், மக்களையும் சுமந்து திரியும் நெகிழ்ச்சியான கதைகள் நம் ஊரில் ஏராளமாக உண்டு. சிறுகதைகளாகவும் நாவல்களாகவும் புதைந்து கிடக்கின்றன. Iam Sam படத்தை உங்களால் பணம் கொடுத்து உரிமை பெற்று மீள் உருவாக்கம் செய்ய முடியாது. ஆனால் நம் ஊர் கதைகளை மிகச்சுலபமாக உரிமை பெறலாமே? அழகர்சாமியின் குதிரையை உலக அரங்கில் திரையிட்டால் உலகம் நம் சமூகத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும், நம் மதிப்பு...
Mujeeb Rahman (Google+) < •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|