‘அசோகனின்வைத்தியசாலை’என்ற நாவல், அவுஸ்திரேலியாவில், மிருக வைத்தியராகவிருக்கும், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து அங்குவாழும் நொயல் நடேசனின் மூன்றாவது நாவலாகும். இந்த நாவலுக்கு, இதுவரை ஒரு சிலர் முகவுரை, கருத்துரை, விமர்சனம் என்ற பல மட்டங்களில் தங்கள் கருத்துக்களைப் படைத்திருக்கிறார்கள். இந்த நாவலுக்கு, இன்னுமொரு புலம் பெயர்ந்த எழுத்தாளர் என்ற விதத்தில், இவரின் நாவல் பற்றிய சில கருததுக்களையும, இவருடைய நாவலில் படைக்கப் பட்டிருக்கும் பெண் பாத்திரங்கள் பற்றி, எனது சில கருத்துக்களையும் சொல்ல வேண்டுமென்று பட்டதால், இந்தச் சிறு விமர்சனத்தை வைக்கிறேன். அவுஸ்திரேலியா, அமெரிக்கா,நியுசீலாந்து, கனடா போன்ற ஒரு புதிய உலகம். அவுஸ்திரேலியா கிட்டத்தட்ட இருநூறு வருடங்களுக்குக் கொஞ்சம் கூடுதலான சரித்திரத்தைக் கொண்டது. உலகின் பல தரப்பட்ட மக்களும் குடியேறிய நாடு. பல நாடுகளிலுமிருந்து போன மக்கள் தங்களுடன் தரப்பட்ட கலை,கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்டு சென்றவர்கள். தாங்கள் கொண்ட சென்ற புகைப்படத்திலுள்ள தங்களின் இளமைக் கால நினைவுகளுடன், தங்கள் பழைய சரித்திரத்தைப் பிணைத்துக் கொண்டவர்கள்.
அவுஸ்திரேலியாவுக்குப் பல மேலைநாட்டாரின் தொடர்பு, நீண்டகாலமாக இருந்தாலும், இருந்தாலும், 1770, பிரித்தானியாவைச்சேர்ந்தகப்டன்.ஜேம்ஸ்குக் என்றவர்தான், 70.000 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வாழ்வதாகச் சொல்லும் அபர்ஜனிய மக்களின் நாட்டை, பிரித்தானியாவுக்குச் சொந்தமான நாடு என்ற பிரகடனத்தைச் செய்தவர்.அதைத் தொடர்ந்து, தங்கள் நாட்டில் குற்றம் செய்தவர்களை அனுப்பும் இடமாக அவுஸ்திரேலியாவைப் பிரித்தானியா பாவித்தது.
1788ல் 11 கப்பல்களில் 1500 குற்றவாளிகள்,பெரும்பாலும் ஆண்கள், குற்றவாளிகள், அவர்களுடன், ஒரு சில பெண்குற்றவாளிகள், இவர்களிற் பெரும்பாலோர் லண்டன் தெருக்களில் வறுமைக்கோட்டில் வாழ்ந்த அயர்லாந்து நாட்டைச்சேர்ந்தவர்கள். மற்றவர்கள், பிரித்தானிய சமூகக் கண்ணோட்டத்தில் வறுமை நிலையால்’ திருடிப் பிழைக்கும்,கிழக்கு லண்டனைச் சேர்ந்த ஏழைக் கூட்டத்தினராகும். அத்துடன் அவர்களைப் மேற்பார்வை பார்க்கச் சில உத்தியோகத்தர்கள் பிரித்தானியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்லப் பட்டார்கள். இவர்கள் எந்த புகைப்படத்தையும் தங்களுடன் கொண்டு செல்லவில்லை. தங்களின் பழைய நினைவுகளை, வாய்மூலமாகத் தஙகள் சந்ததியினரிடம் விட்டுச் சென்றவர்கள். 1850ம் ஆண்டுகளில் மெல்போர்ண் என்ற பகுதியில் தங்கம் கண்டபிடிக்கப் பட்டதால்,பெருவாரியான பிரித்தானிய, அயர்லாந்து, ஸ்கொட்டிஷ் வெள்ளையினத்தவர் அவுஸ்திரேலியாவுக்குப் போனார்கள்.
அதன்பின் பல பொருளாதார மாற்றத்தைக் கண்ட அந்த நாடு, வெள்ளையர் தவிர யாரும் போக முடியாத நாடாகவிருந்தது. 1962ம் ஆண்டில் இலங்கையில், திருமதி பண்டாரநாயக்கா, சிங்கள மொழியைக் கல்வி மொழியாக ஒட்டுமொத்தமாகப் பிரகடனம் செய்தபோது, ஆங்கில வழி முறை வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்து இலங்கையில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வந்த, ‘பேர்கர் என்ற வெள்ளையிளப் பரம்பரையினர் பெருவாரியாக அவஸ்திரேலியாவுக்குச் சென்றார்கள்.
70ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில்,அமெரிக்கர் வியட்நாமை விட்டுத் துரத்தப் பட்டதும்,பல வியடநாமியர் படகுகளில் அகதிகளாகப் பல நாடுகளுக்கும் சென்றார்கள்.அப்போது, அவஸ்திரேலியாவில், மால்க்கம் பிறேசர் பிரதமராக இருந்தார். ‘வியட்நாம் படகு அகதிகள்’, அவரின் கருணையால் அவஸ்திரேலியாவின் ‘வேற்று மனிதர்களாக’அங்கு சென்றார்கள். சிட்னி ஒரு பாரம்பரிய பழைய,பிரிதானிய சின்னங்களைக்கொண்ட நகரம் மெல்பேர்ண், பணக்கார வர்க்கத்தின் பரம்பரையில் வளர்ந்த நகரம். இந்த நகரத்தில், தேனில் வந்து விழும் ஈக்களாகப் பலநாட்டு மக்களும் வந்து சேருகிறார்கள்.
இந்நாவல் மெல்போர்ன் நகரை மையப் படுத்தி எழுதியநாவல். இதில் வரும் பாத்திரங்கள்,வெவ்வேறு காலகட்டத்தில் அங்கு வந்தவர்கள். பொருளாதார,நிமித்தமாகப் பல நாட்டாரும்,அரசியல் காரணங்களுக்காக,மத்திதரைக்கடல் நாடுகள், இலங்கை போன்ற நாடுகளிலிருமிருந்து பலர் அங்கு சென்றிருக்கிறார்கள்.அவர்களுடன், தங்கள் கலை, கலாச்சார, சமய, அரசியல்,கோட்பாடுகiயும் தங்கள் வாழ்க்கையின் நியதிகளுடன் மூட்டைகட்டி வைத்திருக்கிறார்கள.அவையின் தாக்கங்கள் அவர்களிடமிருந்து விலகிப்போவது அரிது.
2011ல் அவுஸ்திரேலியா சென்றபோது, லண்டனிலுள்ள எனது சினேகிதியின் சொந்தக் காரர்களான, ஒரு ஆங்கிலேயக் குடும்பத்தை சிட்னியில் சந்தித்தபோது, இங்கிலாந்தை விட்டு அவுஸ்திரேலியாவுக்குப் போய் ஐம்பது வருடங்கள் தாண்டியிருந்தாலும்,அவர்களின் வாழ்க்கையில் பல அம்சங்கள் இன்னும் பிரித்தானியாவுக்குள் பிணைந்திருப்பது துல்லியமாகத் தெரிந்தது. அவுஸ்திரேலியவிலுள்ள , அடலேட் என்னுமிடத்தில் வாழும் ஆங்கிலேய பரம்பரையினர் இன்னும், தங்கள் பின்னேர தேனிர் வேளைக்கு,அந்தக் காலத்தில் பிரித்தானியாவில் ஆங்கிலேயர் சாப்பிட்ட ‘கியுகம்பர் சாடண்ட் விச்’ சாப்பிடுவதாகச் சொல்லப்பட்டது. ஆங்கிலேயரின் அந்தப் பழக்கும் இங்கு பிரித்தானியாவில் மிகவும் அருகி விட்டது.
புலம் பெயர்ந்த மக்களை-அவர்கள் என்ன இனத்தைச் சேர்ந்தவர்கள், என்ன மொழி பேசுகிறவர்கள்,என்னமாதிரியான பொருளாதாரப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் என்பவைக்கு அப்பால், அவர்கள் எப்படித் ‘தங்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும் பாரிய உணர்வான தனித்துவத்தைப் பலகோணங்களிலும் பிரதி பலிக்கிறார்கள் என்பதை அவர்களுடன் பழகும்போது புரிந்து கொள்ளலாம். இதற்கு நான் முன்னர் சொன்ன,’கியுகம்பர் சாண்ட்விச்’ ஒரு உதாரணம்.
புலம் பெயர்ந்த தமிழன் ஒருத்தனின்,’தனித்துவம்’ தேடும்,பல அம்சங்களை’அசோகனின்’ வைத்தியசாலை சொல்ல வருகிறதா என்ற கேள்வி அந்த நாவலைப் படிக்கும்போது எனககுள் எழுந்தது. இது தமிழர்களுக்காக எழுதப் பட்டதா அல்லது , புலம் பெயர்ந்த தமிழர்pன் வாழ்க்கையில்,மட்டுமல்லாது, பலம் பெயாந்த பல இன மக்களுக்கிடையே ஏற்படும் பல முரண்பாடுகளை,அவை உத்தியோக ரீதியான மட்டுமல்ல,பல கலாச்சாரக் கோட்பாடுகளின், அடிப்படையின், முரண்பாடுகளையும்,அதற்கு முகம் கொடுத்து,ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்க்கையைக் கொண்டு நடத்தும் போராட்டத்தை,மனேதத்துவ ரீதியான நீச்சலை மற்ற இனத்தவர்களும் அறிய வேண்டும் என்ற ரீதியில் எழுதப்பட்டதா என்ற கேள்வி வருகிறது.
அன்னியம், புகலிடம்,புதிய சூழ்நிலை,என்பற்றை சட்டென்று முகம் கொடுத்து, பிரித்தானியர் கொண்டு சென்ற, விலங்கிட்ட மக்களைப்போல், தமிழர்களும்,சட்டென்று பல இடங்களுக்கும் ‘அகதி’என்ற விலங்கை மாட்டிக் கொண்டு,’சுதந்திரமாகச் சென்றவர்கள்.அகதி விலங்கைக் கழட்டப் புலம் புகுந்த இடங்களின் கல்வி, கலாச்சாரம், பழகுமுறை என்பற்றைப் பாவிக்க வேண்டியிருந்தது.
‘புலம் பெயர்ந்த வாழ்வு, ஒரு விதத்தில் ஆழமான கடலில் விழுந்தவனது நிலைபோல்,தொடர்ச்சியாகக் கைகால்களை அடித்துக் கொண்ட நீந்திக் கொண்டிருந்தால்தான் மிதக்க முடியம்’ (பக்கம்171) என்று இந்நாவலில் வரும் சிவா என்ற தமிழ்ப் பாத்திரம் நினைக்கிறான். இந்த நாவலில் வரும் கணிசமான பாத்திரங்கள் பல நாடுகளிலிலுமிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள். உத்தியோக ரீதியாக ஒரு,மிருக வைத்தியசாலை என்ற கூடத்தில் அடைக்கப் பட்ட மனிதர்கள்.
உலகில், எந்த இடமென்றாலும்,வேலை செய்யுமிடயங்கள் என்பன,ஒரு பிரமாண்டமான பிரபஞசத்தின் சிறு வட்டமாகும். அந்த வட்டத்துக்குள் வாழ ,வேலை செய்ய, மற்றவர்களைப் புரிந்து கொள்ள வரப் பல பரிமாணங்களை முகம் கொடுக்கவேண்டும்.
உலககில் பரந்து வாழும் பத்து இலட்சத்துக்குமான இலங்கைத் தமிழர்களில், 70.000 பேர்கள் அவுஸ்திரேலியாவில் இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.இவர்கள்,ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் புலம் பெயரும் பல தரப்பட்ட மக்கள் பலமாதிரியான சரித்திரத்தைக் கொண்டவர்கள்..
புலம் பெயர்ந்த மக்கள், தாங்கள் புகந்த நாட்டில் வாழும் தங்களின் நாட்டைச்சேர்ந்த மக்களுடன் ஒரு இறுக்கமான தொடர்பை உண்டாக்குவது,அவர்களின் புலம் பெயர்வாழ்க்கைக்கு ஒரு பாதுகாப்பான,பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத விடயமாகக் கருதுகிறார்கள்.இதனால், புலம் பெயர் சமுதாயங்களை,அந்தந்த சமுதாயத்திலுள்ள,ஆளுமைபடைத்த ஒரு சிலர் ஆதிக்கத்தில் வைத்திருப்பது, புலம் பெயர்ந்த மக்களிடையே பரவலாகத் தொடரும் ஒரு விடயமாகும்.இதனால், புலம் பெயர்ந்த மக்களின் சுயமை, தனித்துவம் என்பன வளர்வதற்குச் சில தடைகள் உண்டு. புலம் பெயர்ந்த மக்கள், தாங்களின் கலாச்சாரத்தைக் காப்பாற்றக் கோயிற் சடங்குகள்,சமுதாய நிகழ்ச்சிகள் தொடக்கம் பலவற்றிற் தங்களை ஈடுபடுத்திக் கொள்;வதால்,அவர்கள் அந்த சமூகத்தின் ‘பாதுகாவலர்;களில்’ ஒருத்தனான உயர்வு நிலை யடைகிறான்.
ஆனால், பல காரணிகளால்,தங்கள் இனத்தைச்சேர்ந்த மக்களின் தொடர்பற்று, அல்லது பல காரணங்களால் தொடர்பறுந்து வாழ்பவர்களிற் சிலர் தங்களோடு சினேகிதமாகவிருக்கும், ‘மற்றவர்களின் விருப்பு, வெறுப்புக்களுக்கள், தங்களைத் தெரியாமலே தங்களையிணைத்துக் கொள்கிறார்கள்.;அதனால் வரும் விளைவுகளால், தங்களைத் தாங்களே கேள்வி கேட்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.
இந்த நாவலின் நாயகன் ஒரு இலங்கைத் தமிழன். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுடன் பெரிய தொடர்புகளை வைத்திருக்கும் வாய்ப்பைக் கொடுக்காத உத்தியோகத்திலிருப்பவன். ஓரு மிருக வைத்தியராக அவுஸ்திரேலியாவில் வேலை செய்யும்போது. நாய் ,பூனைக்கு வைத்தியம் தேடி வரும் தமிழர்கள் ஒரு கோடியில் ஒருத்தராகவிருக்கும் அதனால் சிவா ஒருவித்தில் தனது சமூகத்தில் இருந்து அன்னியப் பட்டவன். நீண்ட நேர வேலைசெய்யும் உத்தியோகக் கலாச்சாரத்தில்,தமிழர்களைத் தேடிப்போய் அவர்களுடன் நேரம் செலவளிக்க முடியாத அல்லது தேவையற்ற யாதார்தமிருப்பதால் சிவாவின் உத்தியோக வாழ்க்கையும் சிலவேளைகளில் ஓய்வு நேர வாழ்க்கையும் மற்றவர்களுடன் இணைந்து திரியும் சந்தர்ப்பங்களைக் கூட்டுகிறது.
சிவா போன்ற தமிழன்,சட்டென்று வேரறுபட்ட கிளையாக எங்கேயோ போய், நடப்பட்டு மரமாக வரவேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழ்க்கையை முகம் கொடுத்தவன். அவன்,மேற்கு கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட நாடுகளில், ஒரு ஸ்தாபனத்தில் வேலைசெய்யும்போது அங்கு காணும் பல தரப்பட்ட மனிதர்கள், அவர்களின் கலாச்சாரப் பண்பாடுகள், பாலியல் வேறுபாடுகள்,பெண்களின் நெருக்கமான உறவுகள்,வேலையில் உண்டாகும் முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கும் செயற்பாடுகள்,தன்னைத் தெரியாமல் ஒரு ஆழமான பிரச்சினைக்குள் கால்வைத்தால் அது வாழ்க்கையின் பாதையையே திருப்பி வீடும் என்ற அதிர்ச்சி எப்படி ஒரு மனிதனை உலுக்கும் என்பன இந்நாவலில் யதார்த்தமாக வருகின்றன. மேற்கு கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்த ஒரு சூழலில், மிகவும் இறுக்கமான கோட்பாடுகளைக் கொண்ட குடும்பப் பிணைப்புக்களைக் கொண்ட ஒரு சாதாரண தமிழ் மனிதனின், அன்றாட உத்தியோக வாழ்க்கையின் பன்முகப் பிரச்சினையை ஒளிவு மறைவின்றி எடுத்துக் காட்டும் நேர்மையான நாவலிது.
பன்முகக் கலாச்சார, பாலியல், பாலின,இனவாதக் கோட்பாடுடையவர்களுடன் தன்னைத் தெரியாமல் பல பிரச்சினைகளுக்கு அகப்படடு,அவற்றிற்கு முகம் கொடுக்கும், ஒரு கதாநாயகன்தான், அசோகனின் வைத்தியசாலை நாவலில் வரும் சிவா சுந்தரம் பிள்ளை. அவன் ஒரு தமிழ்ச்சமூகத்தைச் சோந்த மனிதனாகவிருந்தாலும், அவரின் உத்தியோக வாழ்க்கையில் அவரைப் போல், பல நாடுகளளிலுமிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களுடன் இணைப்பு உண்டாகிறது; இவர்களில் கார்லோஸ், சேரமும் சாம் என்ற பேர்வளியும்; மத்திய தரைக்கடற் பகுதி நாடுகளிலிருந்து வந்தவர்கள். ஆண்களின் ஆளுமையை மேலாக மதிக்கும் கலாச்சாரப் பின்னணியைக் கொண்டவர்கள்.
இவர்களின்; மூலம் ‘மற்றவர்களின்’ஈடுபாட்டையும் இரசனையையும் சிவா,அவரின் வாழ்க்கைக்குள் உள்வாங்கிக் கொண்டவன்.தனக்குப் பழக்கமில்லாத உலகத்துக்குப் போய் இனிப்புக் கடையயைப் பார்த்துப் பரபரக்கும் குழந்தையைப் போல், ஆண்கனிள் கருத்தையும் பணத்தையும் கவரும் ‘போல் டான்ஸ்’, ஸ்ரிப்டிஸ் கிளப், ;டொப்லெஸ் பார் என்பதைக் கண்டு,தனது ஆண்மையின் இரசிப்புத் தனத்தை,மனைவிக்குத் தெரியாமல் இரகசியமாகச் சந்தோசிக்கத் தெரிந்தவன்.
இவர்கள் தங்களின் உத்தியோகத்தில் திறமையுள்ளவர்களாகவிருந்தாலும், இவர்களின் பொழுது போக்கு இரசனைகள், அவஸ்திரேலியாவின் இரண்டாம் தலைமுறையினரான ஸரீவனையும்,ரிம் பார்த்லோமியசையும் இவர்களுடன் முரண்பட வைக்கிறது. அதற்குக் காரணம், தாங்கள் வேற்று நாட்டார் என்ற பேதம் என்று சிவா தனக்குத்தானே சொல்லிக் கொண்டாலும், அந்தப் பேதங்களையும் தாண்டிய சில அடிப்படைப் புரிந்தணர்வுகள் அங்கில்லை என்பது நாவல் சுட்டிக் காட்டுகிறது.
‘பழிவாங்கல் மனித உணர்வு ரிம் பார்த்லோமிஸ்க்கும் சிவாவுக்கும் உள்ள உத்தியோக ரீதியாக உள்ள முரண்பாடு இனப்பாகுபாட்டின் நிழற்போர் ’(பக்கம124) என்று சிவா சொல்வதை, இரண்டாம் தலைமுறையினர், இருநாட்டிலிருந்து ,வேறுபட்ட பலாச்சாரங்களிலிருந்து போன மனிதர்கள் ஒன்றாக வேலை செய்யும்போது உண்டாகும்,விபரிக்க முடியாத,இருதலைமுறையினருக்கு,ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ளாத (இன்ரஜெனரெஷனல் கொன்விலிக்ட்) அடி;படையிலான உரசல்கள் என்றும் விமர்சிக்கலாம்.
புலம் பெயரும் முதலாவது தலைமுறையினரின், வாழ்க்கையின் மிகப் பெரும்’சந்தோசங்களாக’ அல்லது இரகசியமாக ‘ஸ்ரிப்டிஸ் கிளப்புக்கப் போவது போன்றவை நடக்கின்றன். ஆண்களின் ஆளுமை கொண்ட நாடுகளிலிருந்து போனவர்களின் மனப்பான்மை’பெண்கள் என்றால் நுகர் பொருட்கள்’ என்தன் தாற்பரியத்தை விளக்குகிறது. தங்கள் நாடுகளிற் கிடைக்காத இனிப்புப் பண்டங்களாக இவை இனிக்கின்றன.புலம் பெயர்ந்த நாட்டார் ‘வணங்கும்’ பல விடயங்களான புட்போல், கிரிக்கட் என்பன இவர்களைப் போன்ற,முதற்தலைமுறை புலம் பெயர்ந்தோரக்கு உணர்ந்து கொள்ளப் பலகாலங்கள் எடுக்கின்றன.
அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் பொழுது போக்கில்,புட்;போல் கொமடிக் கிளப்ஸ்,பொப்,ஜாஸ்,நவீன நாடகங்கள் உள்வாங்கப் படுகின்றன.’போல் டான்ஸ்,ஸ்ரிப்டிஸ்,டொப்லஸ் கிளப்புக்கள் மேல் நாட்டில் பிறந்து வளர்ந்த இளம் தலை முறையினருக்கத் தேவையில்லை. அவர்கள், சிறுவயதிலிருந்து ஒரு ஆரோக்கியமான ஆண் பெண் உறவை வளர்த்துக்கொள்ள மேல் நாட்டுக் கலாச்சாரம் முதிர்ச்சி பெற்றிக்கிறது. அந்த அனுபவமற்ற,மூன்றாம் நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்த முதலாம் தலைமுறைக்கு அவை தேனாக இனிக்கிறது.
புலம் பெயர்ந்த முதலாவது தலைமுறையைச் சேர்ந்த சிவா, ஒரு மிருக வைத்தியசாலையில் வேலை செய்யும்போது, தனது தொழிலிற் திருப்தி கிடைத்தாலும்அங்கு அவனுடன் வேலை செய்யும் பல்வேறு மனிதர்கள்,சமுதாயப் பின்னல்களைக் கண்டு குழம்பும்போது ‘கொலிங்வுட் என்ற பூனை அவனுடன் பேசுகிறதாக நாவலாசிரியர் சொல்கிறார். மனிதர் வளர்க்கும் மிருகங்கள், மனிதர்களின், சொந்தக்காரர்கள், குழந்தைகளை விடத் தன்னை வளர்க்கும் மனிதரைக் கூடுதலாகப் புரிந்து கொள்பவை. அந்த மிருகங்களுக்குப்பேச முடியாவிட்டாலும், தங்களின் பார்வை, முனகல்கள், உரசல்கள் மூலம் தங்கள் அன்பை, ஆதங்கத்தை, கோபத்தை, குறைகளை,எடுத்தக்கூறுபவை.
மிருக வைத்தியருடன் பேசும் கொலிங்வுட, இந்த நாவலின் மனச்சாட்சியான பாத்திரத்தை வகிக்கிறது. உத்தியோகத்தில், யாருடன், எப்படிப் பழகவேண்டும் என்று சொல்கிறது. அழகாள பெண்ணுடன் தொடர்ந்து வேலை செய்யம்போது வரும் சபல உணர்வுகளால் வரும் பிரச்சினைகளை அடிக்கடி ஞாபகமூட்டுகிறது.
இது ஒவ்வொரு மனிதனும்,நான் சரியான வழியிற் செல்கிறேனா, எனது வேலையைச் சரியாகச் செய் கிறேனா என்று கேட்பதை ஒரு பூனையின் வாய்மூலம் சொல்ல வருகிறது.
கதையில்,சிவாவின் சிந்தனையைக் கிளறும் ஷாரன் என்ற அழகிய,இளம் மிருக வைத்தியர், சிவா வேலைக்குச் சேர்ந்த அடுத்த நாள் வேலைக்கு வந்து சேர்கிறாள். அவள் வேலையை விட்டுச் சென்றதும் சிவா அங்கு வேலை செய்வதை விடுகிறான்.
ஷாரன் தனது கணவனிடமிருந்து.பொருளாதார, பாலுறவு,விடுதலை தேடியும் அவனது வன்முறைச் செயற்பாடுகளிலுமிருந்து தப்பவும் வேலைக்கு வந்தவள். சிவா தனது படிப்பு, வேலையில்லா விட்டால் வாழமுடியாது என்ற நிர்ப்பந்தத்தால் வேலைக்கு வந்தவன். இருவரும் தங்களின் வேலையிடத்தை ஒரு தவிர்க்க முடியாத காரணங்களால் தக்கவைத்தவர்கள். கணவரிடமிருந்து விடுதலைக்கு தனது வேலையைப் பாவித்த ஷாரன் அவன் இறந்ததும் வேலையைவிட்டுச் செல்கிறாள். அதற்கிடையில்,தனது தேவைக்குத் தன்னுடன் பழகும் சிலரைப் பாவித்துத் தனது எதிர்பார்ப்புக்களை வெற்றி கொள்கிறாள்.சிவாவும் அந்த வேலையிலிருந்து நிறையப் பழகி இன்னொரு வேலைக்குத் தன்னைத் தயாராக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ‘புகலிடவாசி. அந்தக் கால கட்டத்தில், தனக்கு விரும்பமானவர்களுடன், பிரச்சினைதராதவர்களுடன் பழகுகிறான்.
சக உத்தியோகத்தர் போலின் என்ற பெண்ணுடன்,’ நீ மானசீகக் காதல் வைத்திருக்கிறாய்’ என்று கொலிங்வுட் பூனை(மனச்சாட்சி) சொல்கிறது. போலின் என்ற பெண் கவுரமாகப் பழகுபவள். அழகானவள். மற்றவர்களைத் தனது சக உத்தியோகத்தராக மதிக்கத் தெரிந்தவள்.
மாணவ, மாணவிகளுக்கத் தங்களுக்குப் பிடித்த,ஆசிரியை ஆசிரியர்களில் வரும் உணர்வு இது.மரியாதையுடன் பயமும் கலந்தது. வரம்பு மீறாதவரையும் பாதுகாப்பானது. உபயோகமானது.
அடுத்ததாக,சிவா பேசிக் கொள்ளும் பெண்பாத்திரம் சாண்டரா என்பவள். இவள் ஒரு லெஸ்பியன். எல்லோரையும் சமமாக நடத்துபவள். ஆனால் மற்றவர்கள் இவளை ஒரு ‘தீண்டாத ‘பெண்ணாக நடத்துபவராகச் சித்தரிக்கிறார்.மிக நாகரீகமான மேற்கு நாடுகளில், எல்லோரும் சமம் என்று பேசிக் கொண்டாலும், இனரீதியாக, பாலியல் ரீதியாக, உன்று பல விதத்தில் ஓரளவு தீண்டாமை இருக்கத்தான் செய்கிறது அதற்கு அவுஸ்திரேலியா புறம்பானது அல்ல என்பத நாவலிற் தெளிவாக வருகிறது.
ஷாரனுக்கம் சிவாவுக்கும் உள்ள உறவு ஒரு மனபலமற்ற ஆணுக்கும், அழகு என்ற ஆயதத்தை வைத்துக்கொண்ட பலமுள்ள ஒரு ‘ஆங்கிலேயப் பரம்பரைப்’ பெண்ணுக்குமான பலப்பரீட்சை. அதில் ஷாரன் வெற்று விட்டாள். அதன் ஆளமான பரிமாணத்தை முழுக்கப் புரிந்து கொள்ள சிவா என்ற பாத்திரத்துக்கு ஒரு ஆயள் காலமும் போதாது. நாவலின் கதையைச் சொல்லி வாசகர்களைப்’ போரடிக்க’ விரும்பவில்லை.
இந்தியாவைக் கொஞ்சம் சொஞ்சமாகத் தங்களுடையதாக்கிய ஆங்கிலேயர்,இந்தியாவின் நிலங்களை ஆக்கிரமித்து,அந்நிலங்களில் ‘அபின் மருந்து’ விதைத்து ,அதைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்து,12கோடிச் சீனரைப் போதை மருந்துக்கு ஆளாக்கி அந்நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்தார்கள். சீpனர்கள் புரட்சி செய்தபோது (1838),அவர்களைப் பிர்த்தானியர், தங்களின் ஆதாயத்தில கைவைப்பதாகப் பழி சொல்லிப் பீரங்கிக் குண்டுகளாற் அழித்தழித்தார்கள்.அன்னியரிடம் நிலத்தைப் பறிகொடுத்த இந்தியர் கோடிக்கணக்கில் பட்டினியால் இறந்தார்கள்.இவர்களின் புரட்சி பல கால கட்டங்களில் பன்னுறு இந்தியர் மடிந்த,பிரித்தானிய இராணுவக் கொடுமைகளில் முடிந்தது. இந்தப் பரம்பரையில் வந்த ஆங்கிலேய,இராணுவ அதிகாரியின் மகள் ஷாரன் என்பவள்.
ஷரெனுக்குத் தன் கணவர் கிறிஸ்டியனில் மட்டுமல்ல,தன்னைச் சிறுவயதில் ஆட்டிப்படைத்த, தனது தாய்க்குத் துரோகம் செய்த தகப்பனில் ஆத்திரம்.ஆண்வர்க்கத்திலுள்ள கோபத்தைத் தீர்க்க சிவா என்ற அப்பாவியைப் ‘பாவித்து’ வெற்றிபெறுகிறாள். இந்த ‘மக்கவெலியன்’தியறியைப் புரிந்து கொள்ளாத சிவா,வேறோரு வேலை தேடும் சாட்டில், இன்னொரு இடம் தேடுகிறார்.
அந்த வைத்தியசாலையில். எல்லோரடனும் அன்புடனும் பழகும் மேலதிகாரியாக ஒரு பிரித்தானியர் வருகிறார். அறுபது வருடங்களுக்கு முன்,தனது ஆறு வயதில்,தொழில் தேடி அவுஸ்திரேலியாவுக்கு வந்த பிரித்தானிய தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். இந்தியாவுக்குச் சுதந்திரம’; கொடுக்குப் பிரித்தானியாவில் முழக்கமிட்ட தொழிளாளர் வர்க்கத்தின் பிரதிநிதியவர். 1947ல் இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்த, தொழிற்கட்சியப் பிரதமர் கிலமனட் அட்லியின் ஆத்மாவின் சிறு காற்று அவர். தன்னுடன் வேலை செய்யும் சமமாக நடத்துகிறார். பிரித்தானியாவின் இருமுகங்களையும், தன்னையறியாமலே, மிக மிக அழகாகப் படைத்திருக்கிறார் இந்த ஆசிரியர்.
லண்டனில் கடந்த 44 வருட வாழக்கையில்,35 வருடங்கள் பல உத்தியோகங்கள் பார்த்திருக்கிறேன். பல தரப்பட்ட கலாச்சாரப் பின்னணியுடன் இங்கிலாந்துக்கு பல நாடுகளிலிமிருந்து வந்தவர்களுடன் கடைமை செய்திருக்கிறேன். எனது உத்தியோகத்தில ‘ அசோகனின் வைத்தியசாலையில் வரம் பெரும்பாலான உத்தியோகத்தர்களைச் சந்தித்திப்பது தவிர்க்க முடியாதது. ‘அசோகனின் வைத்தியசாலையில்’ வரும் காலோஸ்,’உத்தியோகத்துடன் சம்பந்தப் பட்டவர்களுடன் வைக்கும் உறவுகள், தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும்’ என்று சிவாவுக்கு அடிக்கடி சொல்கிறான். ஓரு பெண்பொறுக்கியாக, மனைவிக்குத் துரோகம் செய்பவனாகக் கதையில் சித்தரிக்கப் படும் காலோஸ் சேரம் என்ற சிவாவின் மேலதிகாரி, ‘போல் டான்ஸ், ‘டொப்லஸ் கிளப்ஸ,ஸ்ரிப்டிஸ் கிளப்’ என்று ஒன்றாகத் திரிபவர்கள். ஆனாலும்,அவனுக்கும் ஒரு நடைமுறைக் கட்டுப்பாடிருக்கிறது;. வேலை செய்பவர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வதில்லை என்று. ஆனால், தனது மனச்சாட்சியான கொலிங்வுட் பூனை,’ட்ராமா குயின் ஷரனுடன் ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ளாதே’ என்று எத்தனையோதரம் சொல்லியும் சிவா பெரிதுபடுத்தாமல், ஷரனின் அழகில் மயங்கத் தன்னைப் பிரச்சினைக்குள் தள்ளி விட்டது, மனிதன், தனக்கு முன்னால் தான் ஆசைப்பட்ட பொருளிருந்தால் அதை அடைய ,நீதி நேர்மை,அத்துடன் தனது மனச்சாட்சிக்கும் மதிப்புக் கொடுப்பதில்லை என்பதைத் துல்லியமாகக் காட்டகிறது;.
புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களில், நடேசனின் படைப்புக்கள் ஒரு விசேட தரத்தைக் கொண்டவை. மற்றவர்கள் புரிந்து கொள்ளாத விடயத்தைக் காட்டுபவை. சிலவேளைகளில் தர்க்கங்களையம் உண்டாக்குபவை. தரமானவைதான் எப்போதும் தர்க்கங்களையுண்டாக்குபவை. அவற்றைத் தேடிவாசித்தால் இலக்கியவாதிகளுக்குப் பலம் பெயாந்த இலங்கைத் தமிழர்களின் எழுத்தின் இன்னொரு பரிமாணம் தெரிய வரும்.
அனுப்பியவர்: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|