- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -
அமெரிக்காவில் தேர்தலில் தான் தோல்வியுற்றேன் என்பதனை ஏற்க டொனால்ட் ரம்ப் மறுக்கின்றார். சட்டரீதியாக போராடுவேன் என சபதம் எடுத்து களத்தில் இறங்கியுள்ளார். அங்கு ஒவ்வொரு மாநிலத்துக்குமென வாக்குகள் உள்ளன.; வாக்களிப்பின் பின்னர் தமது மாநிலத்தில் வெற்றி பெற்ற ஜனாதிபதி வேட்பாளரை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும். பின்னர் அதனை கொங்கிரஸ் உறுதிப்படுத்தும் Electoral votes முறையை சில தடவைகள் மாற்ற முற்பட்ட போது, தென் மாநிலங்கள் மறுத்து விட்டன. பல தேர்தல்களில் இந்த தென் மாநிலங்களே இறுதியாக ஜனாதிபதியை தீர்மானிக்கின்றன. ஆனால் இந்தியாவில் ஆவணி 2019ல் காஸ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்படுகின்றது. இவ்வாறான விடயத்தை அமெரிக்காவில் செய்ய முடியாது. கனடாவில் கியுபெக் மாநிலம் இரண்டு தடவைகள், பிரிந்து செல்வதற்காக வாக்கெடுப்பு நடாத்தியது. அதே போல் ஸ்கொற்லன்ட்டும் வாக்கெடுப்பு நடாத்தியது. 750 மொழிகளைக் கொண்ட ஒரு உப கண்டத்தில் இவையாவும் சாத்தியமற்றவை. ஐரோப்பாவில் பெரும்பாலும் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மொழி பேசும் மக்களைக் கொண்டுள்ளது. அப்படிப்பார்ப்பின் இந்தியாவும் ஒரு கண்டமாகும். ஆனால் ஒரு மொழி, ஒரு யாப்பு, ஒரு மதம், ஒரு நாடு என இந்தியா மாறிவருகின்றது. மாற்றப்படுகின்றது. இந்தியா உயர் சாதி இந்துக்களின் நாடாக மாற்றப்பட்டு வருகின்றது. மாநில சுதந்திரங்களும் படிப்படியாக பறிக்கப்படுகின்றன.
இவற்றை விமர்சித்து அருந்ததி றோய் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அஷாடி (Azadi: Freedom. Fascism. Fiction) நூல் வெளிவந்துள்ளது. 2018லிருந்து 2020 வரையில் எழுதப்பட்ட மற்றும் உரைகளின் தொகுப்பே இந் நூல். நூல் பிரதானமாக காஸ்மீர் வன்முறைகளுடன், கொரோன உட்பட்ட அரசியல் பிரச்சினைகளை மையப்படுத்திய கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அஷாடி என்பது ஒரு உருதுச் சொல். அஷாடி என்றால் சுதந்திரம் என அர்த்தம்.
இன்று அருந்ததி றோயின் Walking with the Comrades என்ற நூலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் தனது பட்டபின் படிப்பு பாடத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது. அருந்ததி றோய் தொடர்ச்சியாக இந்தியாவில் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார். இதன் பின்னால் ஆர்.எஸ்.எஸ் ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி உள்ளது எனத் தெரிகின்றது.
அஷாடி நூலில் அருந்ததி றோய், பி.ஜே.பி யையும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் யையும் கடுமையாக விமர்சிக்கின்றார். உலகெங்கும் அகதிகளை எவ்வாறு கவனிப்பது, உதவுவது என ஆலோசித்து வருகையில், இந்தியா தனது சுதந்திர பிரசைகளை அகதிகளாக உருவாக்கி வருவதாக விமர்சிக்கின்றார். இது புதிய இந்திய பிரசைகளுக்கான சட்ட மாற்றத்தின் விளைவு The Graveyard Talks Back :Fiction in the time of fake news என்ற கட்டுரை இத் தொகுப்பில் மிக முக்கிய கட்டுரை. இந்திய சிறுபான்மையினமான முஸ்லீம்கள் மீது, ஆளும் கட்சியின் வன்முறைகளின் கோரமுகத்தை தனக்கேயுரிய கோபத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.
அருந்ததி றோய் இன்றைய அரசின் அதிகார வன்முறைகளுக்கான காரணங்களை தனியாக இந்துத் தேசியம் என்ற ஒன்றினூடாக மட்டும் பார்க்கவில்லை. Capitalism’s gratuitous wars and sanctioned greed have jeopardized the planet and filled it with refugees. (page 73) முதலாளித்துவம், சாதியம், வர்க்கம் போன்றவற்றின் விளைவுகளையும், இவற்றால் தோற்றுவிக்கப்படும் வன்முறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு அரச இயந்திரம் அதிகார வன்முறையில் இறங்கவும், சிறுபான்மையினர் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களை ஒடுக்கவும், இவை எவ்வாறு துணை போகின்றன என்பதனையும் விமர்சித்துள்ளார்.
மிகப் பெரிய தனியார் நிறுவனங்கள், மத நிறுவனங்கள் அதிகார வன்முறையில் செயல்படும் அரசுக்கு உதவுகின்றன. இவை ஒரு சுதந்திர, சமத்துவ சமூக உருவாக்கலை கட்டுடைக்கின்றன. எனவே இவற்றின் அழிவில் அல்லது மாற்றத்திலேயே புதிய சமூக உருவாக்கம் சாத்தியம் என அருந்ததி றோய் கருதுகின்றார்.
மோடியின் அரசை, ஜேர்மனியின் நாசி அமைப்புக்கு ஒத்ததாக கருதுகின்றார்.
இறுதிக் கட்டுரையில் கொரோனாவால் எவ்வாறு வறிய மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதனை தெரிவிக்கின்றார். இவ் விடயத்தில் டொனால்ட் ரம்ப்பையும் விமர்சிக்கின்றார் Hospital doors have too often been closed to the less fortunate citizens of the United States. It hasn’t mattered how sick they’ve been, or how much they’ve suffered. At least not until now-because now, in the era of “The Virus”, a poor person’s sickness can affect a wealthy society’s health.. அமெரிக்காவும், மோடியின் அரசும் கொரோனா விடயத்தை கையாளும் முறையை விமர்சிக்கின்றார்.
2020 ஆரம்பத்தில் டொனால்ட் ரம்ப் டெல்லியில் தங்கியிருந்த போது, டெல்லியில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. பலர் கொல்லப்படுகின்றனர். ரம்ப் இறுதி வரை ஏன், என்னத்துக்காக எனக் கேட்கவுமில்லை, கண்டிக்கவுமில்லை. அமெரிக்க மக்களை அனுதாபத்துடன் நோக்கும் அருந்ததி றோய், ஆட்சி மாற்றம் மாற்றத்தைக் கொண்டுவரும் எனக் கருதவில்லை. ஒரு நூலில் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தையும், ஒரு சிறிய கட்டுரையில் கொண்டுவரமுடியாது. இன்றைய கால கட்டத்தில் அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் அஷாடி.
My Seditious Heart: Collected Non-Fiction.என்ற நூலின் தொடர்ச்சியாக இந்நூலை கருதலாம்
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems