ஈழத்துத் தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பு முயற்சிகள் முன்னரே பலராலும் முன்னெடுக்கப்பட்டே வந்துள்ளது. சமுதாயம்,பாசநிலா தொடங்கி இன்று வரை தொடர்கிறது.வி.பி.கணேசனால் தயாரிக்கப்பட்ட புதிய காற்று,நாடு போற்ற வாழ்க,நான் உங்களின் ஒருவன் கையைச் சுட்டுக்கொள்ளாத படங்களாகும் என கருதுகிறேன்.அதேபோல் வாடைக்காற்றும் அப்படியே.நிர்மலா சுமாரான படம்.எனினும் தயாரிப்பாளரால் மீண்டும் ஒரு படம் தயாரிக்க முடியவில்லை.குத்துவிளக்கும் பாடசாலை மானவர்களுக்கென சிறப்புக் காட்சிகள் காண்பிக்கப்பட்டன.படைப்புலகின் பிரபலங்கள் நடித்த பொன்மணி அவ்வளவாக ஓடவில்லை.சிங்களத்தமிழ்ப்படம் என்று தமிழக் பத்திரிகையில் வந்ததாகச் சொல்வர்.இசையமைப்பாளர் சண்'இளையநிலா' எனும் படத்தை எடுத்தார். கலாவதி, முத்தழகு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.பி.சைலஜா போன்றோ பாடிய பாடலுக்கு இலங்கை வானொலி அறிவிப்பாளராகக் கடமையாற்றிய ராஜகுரு சேனாதிபதி.கனகரத்தினம் பாடல்கலை எழுதியிருக்க சண் இசை அமைத்திருந்தார்.இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலில் விளம்பரமும் போனது.
அதே போலத் தான் நண்பர்கள் சேர்ந்து லெனின் மொறாயஸின் இயக்கத்தில் நல்லூர். மனோகரன்,ஹெலன்குமாரி,சந்திரகலா,சற்குணம் போன்றோரின் நடிப்பில் சினிமாஸ்கோபின் தயாரிக்கப்பட்டது.நேசன் அவர்களால் சிறப்பான முறையில் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தது. இவ்விரு படங்களும் 83 இனக்கலவரத்தின் போது அழிக்கப்பட்டன. வெளிவந்திருந்தால் நல்லதொரு பதிவை ஈழத்து திரைப்பட வரலாறு சொல்லியிருக்கும்.சர்மிளாவின் இதயராகம் வசூலினைப் பெற்ற படம் என்று சொல்லுவர். இதற்கிடையே மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களும்(சுமதி எங்கே,கலியுக காலம்,யார் அவள்,நான்கு லட்சம் இன்னும் பல),இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்புகளும் வந்து போயின.(நங்கூரம்,மாமியார் வீடு,இரத்தத்தின் ரத்தமே,நீலக் கடலின் ஓரத்திலே,பைலட் பிரேம்நாத்,மோகனப்புன்னகை,தீ,) தோட்டக்காரி படத்தைத் தந்த கிருஸ்ணமூர்த்தி மீனவப் பெண் எனும் திரைப்படத்தையும் தந்தார்.உதயகுமார்,சிறிசங்கர்,பாலன் போன்றோரின் நடிப்பில் வெளிவந்த மஞ்சள்குங்குமம் பலவருடங்களின் பின் சில மாற்றங்களுடன் மீண்டும் திரைக்கு வந்தது. உதயகுமாரின் நல்ல நடிப்பைப் பார்க்க முடிந்த படம்.
காத்திருப்பேன் உனக்காக,கோமாளிகள்,ஏமாளிகள்,மாமியார் வீடு தொழில் நுட்பங்கள் சிறப்பென்று சொல்ல முடியாவிட்டாலும் அதில் நடித்த கதாநாயகர்கள் பேசப்பட்டனர்.புகழ் பெற்ற நாடகக் கலைஞர்கள் நடித்து வெளிவந்த வாடைக்காற்று முதலில் நாவலாக வெளி வந்து வரவேற்பை பெற்றிருந்ததாலும்,விளம்பரங்களிலும் அதிக கவனம் செலுத்தியதினாலும் வசூலிலும் நம்பிக்கையைத் தோற்றுவித்தது. கடமையின் எல்லை,டாக்ஸி ட்றைவர்,நிர்மலா,வெண்சங்கு,தென்றலும் புயலும்,தெய்வம் தந்த வீடு,அநுராகம்,எங்களில் ஒருவன்,நெஞ்சுக்கு நீதி,அவள் ஒரு ஜீவநதி,பாதை மாறிய பருவங்கள் நல்ல பதிவுகளைக் கொண்ட படங்கள்.கதை சொல்லும் முறை,நடிப்பு,காட்சி ஒருங்கிணைப்பு,பாத்திரங்களின் மொழி அமைப்பு போன்ற பலவற்றில் முடிந்தளவு முயன்றுள்ளனர்.இந்திய,மேல் நாட்டு திரைப்படங்களைப் பார்த்து மோகித்தவர்களால் இத் திரைப்படங்களைப் பார்க்க முடியவில்லை.
மேலும்,இனக் கலவரம்,இன விடுதலை போராட்டம் பலரை இடம்பெயரச் செய்ததும்,பலரும் அதற்குள் உள்வாங்கப்பட்டு நல்ல படிப்பைத் தருவதில் முனைப்புக்காட்ட முனைந்தனர்.குறும்படங்களின் மூலமும் அவர்கள் தம்மை வளர்த்துக்கொள்ள,அப் பயிற்சியின் மூலம் முழு நீள திரைப்படங்களை தயாரிக்கும் திறனையும் வளர்த்தார்கள்.வன்னியில் நிதர்சனம் மூலம்தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள்,பின் ஆணிவேர்,எல்லாளன் போன்ற திரைப்படங்கள் நல்ல வெளிபாட்டைத் தந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் தந்தன.இன்று நெடுந்தீவு முகிலன்,மதிசுதா போன்று பலர் குறும் படம் மூலமும் பயிற்சிக்களத்தை உருவாக்கி வருகின்றனர். புலம்பெயர்ந்தவர்களும் தமது கல்வி,கணினிப் பயிற்சி என பலவற்றின் மூலம் தமது தேடலை படைப்பிலக்கியமாகவும், குறும்படங்கள்,திரைப்படங்களாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்திலும்,புலம்பெயர் நாடுகளில் நிறுவப்பட்ட திரைத் துறை சார் நிறுவனங்கள்,அமைப்புக்கள் போட்டிகளை நடத்தியும்,பயிற்சிப்பட்டறைகளைம் அதன் மூலம் பரிசுகள்,விருதுகளையும் கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.இப்போது இலங்கையிலும் அமைப்புக்கள் போட்டிகள் மூலம் தெரிவாகும் நிலை தோன்றியுள்ளதும் ஆரோக்கியமாகவே உள்ளன எனலாம். இன்று பல கலைஞர்கள் உற்சாகத்துடன் களம் இறங்கியும் உள்ளனர்.
தமிழியம்.சுபாஸ்,பாஸ்கரன்(மன்மதன்)லெனின்.எம்.சிவம் போன்ற பலர் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர். லண்டனில் மண்,'சிவசேனா',தமிழ்.எம்.ஐ- 7,ஆவும் வசப்படும் எனப் பல திரைப்படங்கள் பெரிதாகப் பேசப்படுகின்றன.டென்மார்க்கிலும் அப்படியே.சண்.கி.சே.துரை போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஆரோக்கியமாக செயல்படுகின்றனர்.கனடாவும் பேசப்படும் கலைஞர்களை உள்வாங்கியுள்ளன.தற்போது வெளி வந்திருக்கும் 'GUN & RING’' திரைப்படம் நிறைய எதிர்பார்ப்புடன் வந்து பலரையும் நிமிரவைத்துள்ளன.பத்திரிகைகள்,ஒலி/ஒளி ஊடகங்களும் சிலாகித்துப் பேசவைத்துள்ளதை ஈழத்து திரைப்படவரலாறு எனி சிறந்த பதிவுகளைத் தரும் என்றே கூறமுடியும்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems