அன்று கால்களுடன் நடமாடிய பாம்புகள் இன்று கால்களை இழந்து ஊர்வனவாய் ஊர்ந்து திரியும் விந்தையை விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் எடுத்துக் காட்டியுள்ளனர். மரத்தில் வாழும் ஆசிய நாட்டுப் பறக்கும் பாம்புகள் தங்கள் உடல்களைத் தட்டையாக்கிக் கொண்டு; மரத்துக்கு மரம் தாவியும், நழுவியும் செல்லக் கூடியவை. பாம்பு தோன்றிய பின்பே மனிதன் பூமியிற் தோன்றினான். அப்பொழுது மூத்த பிறப்பான பாம்பு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. மனிதனைக் கண்டதும் சீறிப் பாய்ந்து அவனைக் கொத்தி நஞ்சூட்டிக் கொன்று குவித்து வந்தது. அவன் பாம்புக்குப் பயந்தும், அதனை வணங்கியும் வந்தான். ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?’, ‘நாதர் முடி மேலிருக்கும் நாகப் பாம்பே, நச்சுப் பையை வைத்திருக்கும் நாகப் பாம்பே!’, ‘கண்ணபிரான் துயிலும் ஐந்து தலை நாகம்’, ‘பாம்பென்றால் படையும் அஞ்சும்’, ‘நாகர் கோயில், நாகதம்பிரான் கோயில், நாகம்மாள் கோயில்’ போன்ற சொற் பதங்கள் மனிதன்; பாம்பை மதித்தும், பயந்தும், வணங்கியும் வந்தான் என்பதைக் காட்டுகின்றது.
பாம்புகளில் 2,700 க்கு மேற்பட்ட இனங்கள் உள்ளன. பாம்பு பல்லி இனத்தைச் சேர்ந்தது. இது 10 கோடி ஆண்டுகளுக்குமுன் தோன்றியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவை அதிகமாக வறண்ட பிரதேசத்தில் வாழ்கின்றன. அதிகமான பாம்புகள் முட்டையிட்டு, அடைகாத்து, 8 முதல் 10 கிழமைகளில் முட்டைகள் பொரித்து விடும். பாம்புகளில் அண்ணளவாக ஐந்திலொரு பங்குப் பாம்புகள் கருவுற்றுக் குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. இப்படியான பாம்புகள் வட அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படுகின்றன. இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை இவை கருவுற்றிருக்கும் காலமாகும். சிறிலங்கா, இந்தியா போன்ற வெட்பமுள்ள நாடுகளில் வாழும் பாம்புகளுக்குக் கூடிய நச்சுத் தன்மை உள்ளதை யாவரும் அறிவர். சிறிலங்காவில் நாகம், புடையன், விரியன், கண்ணாடிப் புடையன் போன்ற பாம்புகள் கடித்தால் மனிதன் தப்புவது கடினம். பாம்பினங்கள் அனைத்திற்கும் தலைவன் நாகப் பாம்பாகும். பாம்புகளில் நாகப் பாம்புகள் மட்டுந்தான் படம் விரித்து ஆடுவன. நாக இனத்தில் நால்வகைப் பாம்புகள் உள்ளன. அவையாவன:- (1) நல் நாகம், (2) அழல் நாகம், (3) பறை நாகம், (4) செட்டி நாகம் என்பன. நாகங்கள் ஓர் அரச பரம்பரையைச் சேர்ந்தவை. நல் நாகம் மெலிந்த, நீண்ட உருவமுடையது. இது தீண்டினால் நஞ்சை இறக்குவது சுலபம் என்று பாம்புக்கடி நிபுணர் கூறுவர். அழல் நாகம் குள்ளமாய் உருவத்தில் பருமனானது. இது மறைந்து வாழும். இதைக் காண்பது கடினம். கோயில் மரமான மருத மரந்தான் அதிகமாக அழல் நாகத்தின் உறைவிடம். இது கடித்தால் அழற்சி அதிகமென நிபுணர் கூறுவர். பறை நாகத்தின் அசைவு வேகம் மிகக் கூடியது. இது பறந்து தீண்டுமென மக்கள் மத்தியில் பெரும் பீதி உண்டு. எனவே இதைப் பறக்கும் நாகம் என்றும் கூறுவர். செட்டி நாகம் உருவத்திலும,; நீளத்திலும் ‘சாihப் பாம்பை’ ஒத்தது. இவையிரண்டிற்கிடையில் வித்தியாசம் காண்பது அரிது.
பண்டைக்காலக் காலுள்ள பாம்புகள்
லெபனான் (டுநடியழெn) பாறைகளில் ஒன்பதரைக் கோடி (9,50,00,000) ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்லினுட் படிந்த பாம்பின் படிமங்களை விஞ்ஞானிகள் புதுமை வாய்ந்த ஊடுகதிர்க் கூராய்வு மூலம் ஆய்வு மேற்கொண்ட பொழுது, இரண்டு சிறிய கால் எலும்புகள் பாம்பின் இடுப்பெலும்புடன் இணைந்துள்ள அதிர்ச்சிச் செய்தியைக் கண்டுபிடித்தனர். இப்படியான கல்லினுட் படிந்த கால் எலும்புகளுடனான பாம்பின் மூன்று உரு மாதிரிப் படிமங்கள் மாத்திரம் கிடைக்கப் பெற்றன. இவற்றில் ‘இயுபோடோவிஸ் டெஸ்கொன்சி’ என்ற பெயர் கொண்ட பாம்பின் படிமம் விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இப்பாம்பின் எலும்புக் கோர்வை நீளம் 50 செ.மீ. ஆகும். இதன் ஒரு கால் எலும்பு இரண்டு (02) செ.மீ. நீளமுடையது. இது பார்வைக்குத் தெரியும் வண்ணம் பாறையின் மேற்தளத்தில் அமைந்திருந்தது.
இரண்டாவது சிறிய காலெலும்பு பாறையுள் மறைந்திருந்தது. எனினும் இவ்வெலும்பின் முழுவிபரத்தையும் மின்காந்த ஊடுகதிர்க் கூராய்வு மூலம் விஞ்ஞானிகள் பெற்றுக் கொண்டனர். இந்தச் சிறிய கால் முழங்கால் மூட்டில் மடிந்தும், நான்கு கணுக்கால் எலும்புகளுடனும், பாதம், பெருவிரல் எலும்புகள் இன்றியும் இருந்ததை இத்தரவுகள் வெளிக்கொணர்ந்தன. இதன்படி இந்த இனப் பாம்பின் சிறிய கால்களின் வளர்ச்சி மிகக் குன்றி வருவதையும் விஞ்ஞானிகள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
பாம்பின் மரபுமூலத் தோற்றத்தை அறிவதற்கு இந்த ஆய்வின் பெறுபேறுகள் ஆய்வாளர்களுக்கு உறுதுணையாய் அமைந்துள்ளன. பாம்பினம் நிலவுலகில் வாழும் பல்லி இனத்தின் தோன்றலா,? அல்லது கடல்வாழ் ஓர் உயிரினத்தின் தோன்றலா? என்ற சூடான வாதத்துக்கு இந்த ஆய்வின் தரவுகள் விடை தந்துள்ளன என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆதிகாலப் பாம்பின் கால் எலும்புகளின் உட்புறக் கட்டுக்கோப்புகள் தற்பொழுது நிலவுலகில் வாழும் பல்லி இனத்தின் கால்களோடு ஒத்திருந்ததை மேற்கொண்ட ஆய்வு நிரூபித்துவிட்டது.
ஆய்வுக் குழுவினர்
மேற்காட்டிய ஆய்வுகள் ஓர் ஆய்வாளர் குழுவினருடன் பிரான்ஸ் நாட்டின் அலெக்சாந்திரா கவுஸ்சேயி என்ற விஞ்ஞானியின் தலைமையில் நடந்தது. இவருடன் பிரான்ஸ் நாட்டின் ஒரு நிறுவனத்தின் விஞ்ஞானிகளும் ஊடுகதிர்க் கூராய்வுப் படிவ ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இன்னும், யேர்மன் நாட்டுத் தொழில் நுட்ப அலுவலகத்தின் விஞ்ஞானிகள் நவீன நுட்பமான உகந்த செயற்கருவியில் படிவங்களை எடுத்து உருவாக்கம் செய்வதில் உதவினர். ‘இயுபோடோவிஸ் டெஸ்கொன்சி’ என்ற பாம்பின் படிமத்தின் பின்னாலுள்ள உறுப்பின் உட்கட்டமைப்பின் வெளிப்படுத்துகை, பாம்பு உறுப்பின் பின்னடைவின் செயற்பாட்டை அலசிஆராய்வதற்கு எமக்கு அதிகாரம் கொடுத்துள்ளது.” என்று ஆய்வுக் குழுவின் தலைமை விஞ்ஞானியான அலெக்சாந்திரா கவுஸ்சேயி கூறியுள்ளார். இந்த ஆய்வுகளின் தீர்வுமுடிவுகள் 08-02-2011 ஆம் திகதி கொண்ட விஞ்ஞானச் செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளது.
பறக்கும் பாம்புகள்
தென், தென் கிழக்கு ஆசியாவில் உள்ள உயர் மரங்களில் வாழும் ஐவகையான பறக்கும் பாம்புகள் இனம் காணப்பட்டுள்ளன. இவை எப்பொழுது வரும், போகும் என்று தெரியாத மக்கள் மிகவும் திகிலடைந்து, பயந்து, ஒதுங்கி, முடங்கி வாழும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இப் பாம்புகள் தமது பாதுகாப்பான தங்குமிடங்களிலிருந்து திடீரென விரைந்து செல்லக் கூடியவை. இவை பறப்பதற்குமுன் தமது உடல்களைத் தட்டையாக்கிக் கொண்டு, மரத்துக்கு மரம் தாவியும், நழுவியும் மிக விரைந்து செல்லக் கூடியன. இதிற் காட்டப்பட்ட பறக்கும் பாம்பின் படத்தை நிழற்படக் கருவியால் எடுக்கப்பட்டது.
இன்றைய ஊரும் பாம்பினம்
பண்டைக் காலத்தில் பாம்புகள் கால்களுடன் நடமாடியதையும், ஒன்பதரைக் கோடி (9,50,00,000) ஆண்டளவில் அவற்றின் கால்களின் வளர்ச்சி குன்றி வந்துள்ளதையும், அதன் பின்;னான பரிணாம வளர்ச்சியின் போது அவற்றின் கால்களின் வளர்ச்சி மேலும் குன்றிக் குறைந்து கால்களற்ற இன்றைய நிலைக்கு வந்து ஊர்வனவாய் ஊரும் நிலையெய்தியதையும், மேற்காட்டிய ஆய்வுகளின் பிரகாரம் கண்டு மகிழ்ந்தோம். இன்னும், மற்றைய உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் நடந்தேறிய மாற்றங்களை இக்கால நவீன விஞ்ஞான ஆய்வுகள் தந்துதவுமென்ற வேணவாவுடன் எதிர்பார்த்திருப்போம்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems