மலேசியா கோலாலம்பூரில் ந்டைபெற்ற , நான் கலந்து கொண்ட மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் நாவல் பட்டறையில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள், தங்களுக்குப் பிடித்த நாவலைப் பற்றி பேச வேண்டும் என்ற பகுதி இடம்பெற்றிருந்தது. அதில் இடம் பெற்ற நாவல்களின் பட்டியலில் அதிக எழுத்தாளர்களைக் கவர்ந்தவையாக மலேசிய எழுத்தாளர்களின் இரு நாவல்கள் இடம் பெற்றன.
1. ரெ.கார்த்திகேசுவின் " சூதாட்டம் ஆடும் காலம் "
2. எஸ்.பி.பாமாவின் " தாயாக வேண்டும் "
செயற்கை கருத்தரிப்பு, சர்வாகேட் வுமன் *, மிட் மதர் * " என்பவற்றில் பெண் செயற்கை கருத்தரிப்பு, விந்துதானம் என்ற வகையில், அதை சுமந்து பெற்றெடுக்கும் பெண்ணின் தாய்மை உணர்வும், பெற்ற குழந்தையை பிரிய முடியாமையும் அதிகமாகப் பேசப்பட்டிருக்கின்றன. எஸ்.பி.பாமாவின் நாவலில் விந்துதானம் செய்பவர் கணவனின் அண்ணன் என்ற வகையில் பெண்ணின் கணவனும் , கணவனின் அண்ணனும் எதிர் கொள்ளும் உளவியல் சிக்கல்கள் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசப்பட்டதால் அதிகப் பேரை கவர்ந்திழுத்திருக்கிறது.
சந்திரனும் மேனகாவும்படித்து வேலைக்குப் ”போன ஜாதியில்” நட்பாகி, திருமணம் செய்து கொண்டவர்கள் தான். சந்திரன் பெண்ணை பாலியல் ரீதியாக திருப்தி படுத்துபவன்தான். ஆனால் உயிர்சத்து இல்லாதவன். எனவே குழந்தை பாக்கியம் இல்லாமல் போகிறது. பொட்டையன், ஒன்பது என்ற வசவுகள் மறைமுகமாக அவன்மீது வீசப்படுகிறது. அண்ணன் ராஜாராமிடமிருந்து விந்தைப் பெற்று தாயாக சந்திரன் சிபாரிசு செய்கிறான். மேனகாவுக்கு அதிர்ச்சி. ஒரே குடும்பத்திலிருந்தா? குடும்பத்தினரின் ஒத்துழைப்பு ஒத்துக் கொள்ளச் செய்கிறது. மேனகா கர்பமாகியிருக்கும் போது அண்ணனின் பூரிப்பும் சந்தேக மிருகத்தை அடக்கி வைத்துப் பார்ப்பதில் அதன் பின் சந்திரன் போராடி ஓய்ந்து போகிறான். வளைகாப்பு, பிரசவம், குழந்தை வளர்ப்பு என்ற நிலைகளில் சந்தேக மிருகம் விஸ்வரூபித்து அடங்குகிறது. இந்த மிருகம் ஆடும் ஆட்டத்துள் மூவரும் அகப்பட்டு உச்சபட்சமாய் சந்திரன் சிதைந்து போகிறான். ஒரே வீட்டில் இருக்கும் அபாயம் தவிர்த்து, வேலையில் மாற்றல் கேட்டு மனைவி பெற்ற பிள்ளையை அண்ணனிடம் விட்டுவிட்டு வேறு ஊருக்கு மனைவியுடன் போகிறான். பிரச்னையின் தீர்வாக பாமா வைக்கும் இறுதிக்கட்ட விசயம் வெகுசுவாரஸ்யமானது.
பாமாவின் எழுத்தின் தீவிரம் பலவகையில் வெளிப்பட்டிருக்கிறது.. பாலியல் ரீதியான உடம்பு சுகத்திலிருந்து பிள்ளையாய் கரு இன்னொரு உடம்பாய் மாறும் சுகம் வரைக்கும் ஒளிவு மறைவில்லாத சிலாய்கிப்புகள். கர்ப்பிணி உடல் சார்ந்த பூரிப்பு, சமையல் ருசி, குழந்தைக்கு பெயர் தேர்வு, குழந்தையின் மலவாடையை ரசிப்பது, மலம்கூட ரசிக்கத்தக்கதாய் மாறுவது என்றெல்லாம் சரளமாக எழுதிச் செல்கிறார்.
பிறக்கும் குழந்தை அண்ணனின் அச்சு போல பிறந்தால் மற்றும் அண்ணனின் தாவக் கொட்டை கீறல் முகமாக பிறந்தால் என்ன செய்வது என்ற பயம் விரிவாக சொல்லப் பட்டிருக்கிறது. இதற்கு ஒப்புவமையாக கலைஞர் கருணாநிதியின் கதை " வான்கோழி " சொல்லப்பட்டிருக்கிறது. அதில் ஆண்மையில்லாத கணவன் வேலைக்காரனைக் கொண்டு மனைவியைத் திருப்தி படுத்துகிறான். பிறக்கும் குழந்தை வேலைக்காரனின் சாயலில் அவனின் ஆறு விரல்களைக் கொண்டே பிறக்கிறது.
தமிழ்த் திரைப்படங்கள் சாதாரண குடும்ப நபர்களை இத்துடன் தொடர்புடன் பாதிப்பதையும், தமிழ்த் திரைப்படங்கள் தமிழர்களை பாதிக்கிற விசயத்தின் ஆய்வாகக் கொள்ளலாம். இந்த ஆய்வு சமாச்சாரத்தைப் போல பாமா தேர்ந்த சமையல் குறிப்புகள், திரைப்படங்கள், இலக்கியக் குறிப்புகள், பத்மா என்ற பெண் எழுத்தாளரின் படைப்புகள் என்று பல்வேறு அடுக்குகளில் நிரப்புகிறார். இது நாவல் வாசிப்பில் சுவாரஸ்யம் கூட்டுகிறது. இதைத் தவிர கன்னிமேரி யேசு, நாய் பிணத்தைக் காணும் யேசுவின் வெள்ளைப் பல் தத்துவம் உட்பட பல, சுவாரஸ்யத்துக்குப் பயன்படுக்கின்றன.
ஒரே குடும்பத்து அண்ணன் தம்பி பங்காளிகள் ஆகிற அவலம் கூட்டு குடும்ப சிதைவின் அதிர்ச்சியை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். அதன் உச்சகட்டமாய் சந்திரனின் உரத்த அழுகையை எவ்வகையிலும் அதீதமாக எடுத்துக் கொள்ளமுடியாது.
மலேசிய தமிழர்களின் வாழ்க்கையை பல சிறுகதைகளிலும் வானொலி தொலைக்காட்சி நாடகங்களிலும் பதிவுசெய்திருக்கும் பாமா, இதில் விந்துதானம் பிரதானமாகவே என்றாலும் அதை சிறு கீற்றுகளாக அங்கங்கே உலவ விடுகிறார். எஸ்டேட்டில் வெள்ளைக்காரர்களின் ஆதீக்கம் பற்றி குறிப்பிடுகிறார். வெள்ளைக்காரனுக்குப்பின் வந்த தமிழனும், கிராணியும், மேனேஜரும் மக்களை பாடு படுத்திய விதத்தில், தமிழனுக்கு தமிழனே எதிரியாக இருக்கும் அவலம் தெரிகிறது. விந்துதான சிகிச்சை சிங்கப்பூரில் நடப்பதாக காட்டப்படுகிறது. மலேசியாவில் அதற்கு சட்ட ரீதியான அனுமதி இல்லை என்பது எங்கும் சொல்லப்படவில்லை. அரவாணிகள் பற்றிய எழுத்து வெளிப்பாட்டிற்கு மலேசிய அரசு நிர்வாக சமுகம் அனுமதித்தாலும், ஓரினப்புணர்ச்சியாளர்கள் பற்றிய எழுத்துக்கு அனுமதி இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. தலித் இலக்கிய வகைப்பாட்டிற்கான சமூக சூழல் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
விந்துதானம் செய்தபின் ஒரு குடும்பத்து அண்ணன் தம்பிகள் மத்தியில் ஏற்படும் உளவியல் சிக்கல்களை விரிவாகச் சொல்லும் இந்நாவலில் எது ஆண்மை என்று ஒரு விவாதப் பகுதிபோல் பல விசயங்கள் அமைந்திருக்கின்றன. ஒரு பெண்ணின் உணர்வுகளின் மொத்த வடிகாலாக அமைந்திருக்கும் தீவிரமானப் பகுதிகள் தீவிர பெண் எழுத்தின் வலிமையைப் புலப்படுத்துகிறது. எது பெண்மை என்று அதே சமயம் சிந்தனையைக் கிளறுகிறது. குடும்பம் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் இயங்கும் பெண்களின் உலகத்தை துல்லியமாக காட்டுகிறது. அதை தாண்டி உலகம் மிகப் பெரியது. அதை கவனிக்கத் தவறியிருக்கிறார்.
நாவல் பட்டறையில் அவரின் அடுத்த நாவலின் கதாநாயகன் பவித்திரன் என்று தெரிவித்தார். இந்த நாவலில் விந்துதானத்தில் பிறந்த குழந்தைக்கு பவித்திரன் என்றே பெயரிட்டு இருக்கிறார். பவித்திரம் தூய்மையானது, உண்மையானது, ராஜாராமின் விந்துதானத்தில் பிறந்தவன் என்றாலும் தூய்மையான உறவில் பிறந்தவன். அந்த உயிரணுவைக் கொடுத்தவனும் தூய்மையானவன், அதை சுமந்து பெற்றவளும் தூய்மையானவள், ரேவதியும் சந்திரனும் தூய்மையானவர்கள் என்ற குறிப்பு நாவலில் காணப்படுகிறது.
( தாயாக வேண்டும் எஸ்.பி.பாமா நாவல், உமா பதிப்பகம், கோலாலம்பூர், மலேசியா. கிளை - தமிழகம், )
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
/ 9486101003
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems