தோழர் பொன்னையன் தமிழ்தேசிய இனத்தின் போராளி என்று வை. கோ அவர்களைக் குறிப்பிட்டார். நான் அரசியல்வாதிகள் மத்தியில் இலக்கிய இதயம் கொண்டவர் என்கிறேன். எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளும் இணைந்து பல்வேறு போராட்டங்களையும், புரட்சிகர நடவடிக்கைகளிலும் முன்னின்றிருக்கிறார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கிறோம். அரசியல்வாதிகள் எழுத்தாளர்களின் நண்பர்களாக, வாசகர்களாக இருப்பது பலம் தருகிறது. லத்தின் அமெரிக்காவின் நோபல்பரிசு பெற்ற காப்ரியல் மார்க்கூஸ் அவர்களின் படைப்புகளின் வாசகன் பிடரல் காஸ்ரோ. தமிழகத்தில் பொதுவுடமை வாதிகளில் ஜீவா, பாலதண்டாயுதம் முதல் கொண்டு நல்லகண்ணு, சி.மகேந்திரன் வரை நல்ல இணக்கமானவர்களாக எழுத்தாளர்களுடன் இருக்கிறார்கள். வை.கோ. இலக்கிய இதயம் கொண்டவராக ஆறுதல் தருகிறார்.அவர் இயக்கம் சார்ந்த அருணகிரி, செந்திலதிபன், உடுமலை ரவி முதற்கொண்டு பொன்னியின் செல்வன் முதல் புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், தோப்பில் மீரான் உட்பட பல படைப்பாளிகள் பற்றி மணிக்கணக்கில் பேசும் இயல்புடையவர். அவர் தனக்குப் பிடித்த பல நூல்களைப் பற்றி விரிவாகவே பேசியிருக்கிறார்.
சமீபத்தில் எனக்குப்பிடித்த இரு நூலகளைப் பற்றி சொல்கிறேன். அமரர் பொன்னியின் செல்வன் பற்றிய வை.கோவின் உரையில் சோழர்களின் பெருமை பற்றி அற்புதமாகச் சொல்வார். சோழன் கடாரம் கொண்டவன். அந்த கடாரம் மலேசியாவின் கெடா மாநிலப்பகுதி. மலேசியாவில் சயாம் பர்மா இரயில் பாதை போடும் பணியில் நாற்பதுகளில் 2 லட்சம் தமிழர்கள் பலியாக்கப்பட்டார்கள். அதை பற்றி சொல்லும் நூல் சயாம் பர்மா இரயில் பாதை. அதேபோல் கொங்கு நாட்டில் இரயில் பாதைகள் பற்றின போராட்டம் ஒன்றை வை.கோ. கடந்த 5 ஆண்டுகளாய் நடத்தியிருக்கிறார். எத்தனைப் போராட்டங்கள். எத்தனை கூட்டங்கள்.பொள்ளாச்சி கேரளா கோட்டத்துடன் இணைக்கப்பட்டிருப்பது. உடுமலை சேலம் கோட்டத்துடன் இருப்பது காரணமாய் வஞ்சிக்கப்பட்டிருப்பது போராட்டத்தின் மையம்.இன்னும் உடுமலை பழனி ரயில் பாதை பயன்பாட்டிற்கு வரவைல்லை.எத்தனை பேரணிகள். இவற்றை உடுமலை ரவி ஒரு நூலாக ஆவணப்படுத்தியிருக்கிறார். இவை இரண்டு சமீபத்தில் என்னை பாதித்தவை. உடுமலை திண்டுக்கல் இரயில் பாதை பிடுங்கியெறியப்பட்டு புது பாதை முழுமையடையவில்லை. சாதாரண மக்களுக்கான குறைந்த கட்டண ரயில் பயணம், பாதுகாப்பான பயணம் பற்றியவை அடிப்படிடை உரிமை சார்ந்தது அவரின் போராட்டம்.இது போல் தொடர்ந்து அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுபவர் வை.கோ.இது போல் அணுசக்கிக்கெதிர், நதி நீர் பாதுகாப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு என்று அடிப்படை உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுகிறார். அவரின் தூத்துக்குடி ஸ்டெரிலைட் சுற்றுச்சூழல் போராட்டம் எனக்கு கார்ஸனின் “ மவுன வசந்தம் “ நூலை ஞாபகப்ப்டுத்துகிறது. கார்ஸனின் அந்த நூல் 1962 ல் வெளிவந்தது.நாற்பதுகளில் உலகின் பல பாகங்களில் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த மலேரியா காய்ச்சலுக்குக் காரணமான கொசுக்களை ஒழிக்க கண்டுபிடிக்கப்பட்ட டி.டி.டி. மருந்துக் கொல்லி சிறு நுண்ணுயிர்கள், வண்ணத்துப்பூச்சிகள்,மீன்களை கொல்லும் இயல்புடையது. அமெரிக்காவின் தேசிய சின்னத்தில் இடம்பெற்ற கழுகையும் கொன்றது. மனிதனுக்கும் ஆபத்தானது. இதை கார்ஸன் தந்து நூலில் விவரித்திருந்தார். அதன் பின் எழுத்தாளர்கள், சுற்றுசுழலாளர்கள் இணைந்து பல் போராட்டங்களை நடத்தினர். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடி அதைப்பற்றி ஆராய ஒரு கமிசனை நியமித்தார். அது மனிதர்கள் மீதான ஆபத்தை ஒத்துக் கொண்டு டி.டி.டி பயன்பாட்டை மெல்ல குறைத்துக் கொண்டு பின் முற்றிலும் தடை செய்யப்பட்ட்து. 1964ல் கார்சன் மரணமடைந்தார். 2001ல் கார்சனின் சுற்றுச்சூழல் பணிக்காக அமெரிக்காவின் உயரிய விருது தரப்பட்டது.அதேபோல் வை.கோ.வின் சுற்றுச்சூழல் போராட்டங்களும், சுத்தமான தண்ணீர், நதி நீர் பாதுகாப்பு குறித்த போராட்டங்களும் பெரிய அங்கீகாரத்தைப் பெறும் .
தாகூரின் 150 வது பிறந்த தின கொண்டாட்ட ஆண்டு இது .தாகூரின் “ எங்கே பயமில்லாமல் இருக்கிறதோ..” என்ற கவிதையின் அடையாளமாய் வை.கோ. பாராளுமன்றத்தில் பேசிய பல பேச்சுகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தியா இந்து நாடென்றால் சிதையுறட்டும், இந்திராவின் பேச்சுசுகளை இந்த நூற்றாண்டின் மகத்தான பொய்கள், இந்தியாவின் மைலாய் இலங்கையில் உள்ள வல்வெட்டித்துறை, கல்வி காவி மயமாக்க் கூடாது, இந்தியாவின் மனிதாபிமானம் அரைக் கொடி கம்பத்தில் பறக்கிறது, இலங்கையில் இந்திய ராணுவத்தின் அத்து மீறல்கள் என்று பயமில்லாத மனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இது போன்ற புத்தகங்கள் பல தலைமுறைகளுக்கு பேசப்படும் இயல்பு கொண்டதாகும். நுணுக்கமான நம்பகமான தகவல்கள், பாராளுமன்றத்தில் வை.கோ எழுப்பும் தார்மீகக் கேள்விகள், அறம் சார்ந்த, மனித உரிமை சார்ந்த நியாயங்கள் ஆகியவை நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன.சொல்லும் பாணியில் இருக்கிற இலக்கியத் தரம் கவனிக்கத் தக்கது. உரையின் ஊடாக ஸ்பார்டகஸ், கசபிளாங்கா, உலக இலக்கிய பாத்திரங்கள், இந்திய புராண கதைகளின் உவமைகள் அடுத்த நிலைக்கு புத்தகத்தை, நல்ல வாசிப்பிற்குக் கொண்டு சென்று பாராளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் கையில் வைத்திருக்கும் கையேடாக்குகிறது.
இதில் ஓரிடத்தில் எழுத்தாளர் குஷ்வந்த்சிங் சிறுபான்மை சீக்கியர் மீதான வன்முறைக்கு எதிரான வை.கோ.வின் குரலை பாராட்டி தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்கிறார். குஷ்வந்த்சிங் 20 ஆண்டுகளுக்குப் பின் சென்ற மாத ஆனந்தவிகடன் பேட்டியில் தமிழர்களின் நம்பிக்கைக்கான ஒரே அரசியல் தலைவர் வை. கோ.என்பதை உறுதிப்படுத்தியிருப்பது அவரின் தொடர்ந்த செயல்பாட்டை கவுரவத்துள்ளாக்குகிறது.
அவரின் பேச்சுசுகள் காற்றில் கலந்த பேரோசையாக இருந்தது இன்று புத்தகப் பதிவு பெற்றுள்ளது. ஒரு மொழியில் எழுதப்பட்ட புத்தகம் அந்த மொழிக்குள்ளேயே ஜீவிப்பதில்லை. எந்த மொழியையும் கடந்து செல்லும் இந்த நூலும் குறைந்த பட்சம் இந்திய மொழிகளில் இளம் தலை முறை பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கையேடாக மையும். அவை எழுப்பும் மனித உரிமை சார்ந்த கேள்விகள் இந்திய தேசியம் என்பது மாயை என்பதை நிலைநிறுத்தும்.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவரின் குரல் திட்டமிட்டு பாராளுமன்றத்தில் ஒலிக்காமல் முடக்கப்பட்டிருக்கிறது ஆனால் இந்தப் புத்தக வீச்சு இன்னும் பல மடங்கு வீரியமாய் ஒலிக்கும்.அவரின் பேச்சின் வலிமை பாராளுமன்றத் தூண்களையும் அசைய வைப்பது போல் ஒவ்வொரு கலாச்சார தூணையும் அதிரவைக்கும் இயல்பு கொண்டது. என் பேச்சின் வலிமை தமிழர்களுக்கு , தமிழ்நாட்டிற்கு, தமிழ் மொழிக்குப் பயன் படட்டும் என்கிறவர் அவர். அவரின் நீண்ட பயணங்களில் இனியும் இது ஒலிக்கட்டும். திருப்பூரில் இவ்வாண்டு தீபாவளியின் போது 2 தினங்களில் 5 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது,தமிழ் சமூகமே மதுவுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறது.இதிலிருந்து மீட்டெடுப்பது அவசியம். இதுவரை தமிழ் மக்கள் 49, 05,000 பேர் உலக சரித்திரத்தில் உயிர் இழந்திருக்கிறார்கள். ஈழப்போராட்டம், சயாம் பர்மா ரயில் பாதை போடும் பணி, சுனாமி, வெள்ளம், காலனிஆதிக்க கொடுமைகள், காணாமல் போனவர்கள் என்று... மதுவால் தமிழன் தற்கொலைக்குள் மூழ்கி காணாமல் போய்க்கொண்டிருக்கிறான். அதிலிருந்து தமிழனை மீட்க டிசம்பர் மாதத்திலான வை.கோ.வின் நீண்டபயணம் ஆயிரம் புதிய பூக்க்களை மலரச்செய்கிறதாக இருக்கும்.. ஒற்றை கலாச்சார பண்பாட்டை, உணவு முறையை, வாழ்க்கை முறையை முன்வைக்கும் உலக ஏகாதிபத்தியமும், கார்ப்பரேட்டுகளும் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்குஎதிரான போக்கை தொடர்ந்து வை. கோ. தன் படையுடன் எதிர் கொள்ளும் ஒரு குரூர சூழல் இன்றைக்கு உருவாக்கப்படிருக்கிறது. அதை வை.கோ தன் பலத்தால் எதிர்கொள்வார். தமிழ் இன மீட்சிக்காக அவர் தொடர்ந்து போராடும் அடையாளமே அவரின் பூரண மது விலக்கு போராட்ட நெடும் பயணம் என எண்ணுகிறேன்
. ( பாராளுமன்றத்தில் வை.கோ. தொகுப்பு: செந்திலதிபன், விலை ரூ 450, தாயகம், சென்ன்னி
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems