அண்மையில் சிங்கப்புரிலிருந்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி 'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்: ஆழமும் அகலமும்' என்னும் தனது கட்டுரைகளை உள்ளடக்கிய நூலினையும், ம.நவீனை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'வல்லினம்' இதழின் 2010 ஆண்டு மலரினையும் அனுப்பியிருந்தார். அவருக்கு எமது நன்றி. முனைவர் ஸ்ரீலக்ஷ்மியின் நூல் பற்றிச் சில வரிகள். இது போன்ற நூல்களின் வருகையும், கட்டுரைகளும் மிகவும் அவசியம். இவ்விதமான பதிவுகள் புலம்பெயர்ந்து தமிழர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து படைக்கும் தமிழ் இலக்கியச் செயற்பாடுகள் அனைத்துக்கும் பொருந்தும். நூலின் 'என்னுரை' என்னும் முன்னுரையில் நூலாசிரியர் 'என்னைக் கவர்ந்த விஷயங்களுள் இலக்கியம் தலையாயது. இலக்கிய ஆர்வத்தின் உந்துதலால், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்னும் உத்வேகத்தால் இந்நூலை உருவாக்கியுள்ளேன். சிங்கப்பூர்ப் பொருளாதாரத்திற்கு உதவிய தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்திக் காட்டும் இலக்கியம், பண்பாடு போன்ற விஷயங்களில் எவ்வளவு அக்கறை காட்டுகின்றனர் என்பதைச் சிங்கப்பூரில் வாழும் மற்ற இனத்தவர் அறிந்துகொள்ள வேண்டும்; சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பற்றி உலகத்தமிழர்கள் அறிய வேண்டும் என்னும் வேட்கை எனக்கு உண்டு. இந்த வேட்கையே இந்நூலின் பிறப்புக்குக் காரணமாகும்.' என்று கூறுவார். மேலும் தொடர்ந்து கூறுகையில் 'சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் பற்றிய கட்டுரைகளைப் பலர் எழுதியிருந்தாலும், அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக உதிரிப்பூக்களைப்போலக் கிடக்கின்றன. என்னுடைய முயற்சியும் அப்படி வீணாகிவிடக் கூடாது. எதிர்கால ஆய்வுகளுக்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டும் என்னும் நோக்கத்தை இந்நூல் நிறைவேற்றும் என நம்புகிறேன். அக்கரை இலக்கியம் என்றோ, புலம்பெயர் தமிழர்களின் இலக்கியம் என்றோ அணுக விளைவோர்க்கு இந்நூல் அரிய கையேடு. காய்தல், உவத்தல், இல்லா மனநிலையோடு உண்மையை உரைக்க அஞ்சக்கூடாது என்னும் காந்திய இலக்கிய நெறியோடு இந்நூலை உருவாக்கியுள்ளேன்' என்று கூறுகின்றார். ஆசிரியரின் நம்பிக்கை பொய்த்துவிடவில்லை என்பதையே மேற்படி நூலின் உள்ளடக்கம் வெளிப்படுத்துகிறது.
சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தை அறிய விழையும் அனைவரும் மேற்படி நூலிலிருந்து தமது தேடலைத் தொடங்கும் வகையில் ஆசிரியர் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு கூறுகளையும் தனது ஆய்வு / சஞ்சிகைக் கட்டுரைகளுக்குரிய கூறும்பொருளாகப் பாவித்திருக்கின்றார். 'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் - ஒரு கண்ணோட்டம்', 'எண்பதுகளுக்குப் பின் சிங்கப்பூர்ப் புனைகதைகள்', 'சிங்கப்பூர்ப் படைப்பிலக்கியத் துறையில் பெண்களின் பங்களிப்பு, 'சிங்கப்பூர்ச் சிறுவர் இலக்கியம் - ஒரு சிந்தனை', 'தமிழ் நாடக நூல்கள் - ஓர் ஆய்வு', 'சிங்கப்பூரில் தமிழ்க் குடியேறிகள் படைத்த பயண நூல்கள்' போன்ற கட்டுரைகளையும், மற்றும் சிங்கைத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான சி.ந.சதாசிவப் பண்டிதரின் பங்களிப்பின் நிலை பற்றிய கட்டுரையினையும் கொண்டுள்ள இந்நூலின் மூலம் காலத்துக்குரிய பங்களிப்பினை ஆசிரியர் செய்துள்ளார். அதற்காக அவரைப் பாராட்டலாம்.
இந்த நூலின் கட்டுரைகளினூடு சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியச் செயற்பாடுகள் பற்றி அறிந்துகொள்வதோடு, சிங்கப்பூர் மக்களின் சமூக, பொருளியல் அமைப்பு பற்றி, அவற்றில் நிலவிடும் முரண்பாடுகள் பற்றி, அவர்தம் இலக்கிய வரலாறு மற்றும் முன்னோடிகள் பற்றி, அவர்தம் படைப்புகள் கூறும்பொருள் பற்றியெல்லாம் அறிந்துகொள்ள முடிகிறது. அத்துடன் ஆசிரியரின் கூறும் பொருள்மீதான ஆழ்ந்த ஞானம் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.
'வல்லினம் 2010' மலர் அண்மையில் வெளிவந்த காத்திரமானதோர் இலக்கிய மலராக, மலேசியா-சிங்கை கலை இலக்கியச் செயற்பாடுகளை ஆவணப்படுத்துமொரு சிறந்த ஆவணப்பதிவாக நாம் கருதுகிறோம். காத்திரமானதொரு மலரினைத் தந்ததற்காக அதனை வெளியிட்ட வல்லினம் இதழ் பாராட்டுதற்குரியது. கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் என மலர் பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது. குறிப்பாக சிங்கை எழுத்தாளர் இளங்கோவனுடனான நேர்காணல் அவரது ஆளுமையினை, அறிவினை, கலை இலக்கியச் செயற்பாடுகளையெல்லாம் துல்லியமாக வெளிப்படுத்துகிறது.
எழுத்தாளர் இளங்கோவனைப் பற்றி முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி 'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்: ஆழமும் அகலமும்' என்னும் நூலில் பின்வருமாறு பதிவு செய்திருப்பார்: 'தமிழ்க் கவிஞர் குழாத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுத் திகழும் புதிய தலைமுறைக் கவிஞர் இளங்கோவன். ஆங்கிலம், தமிழ், மலாய் என் மும்மொழிப் புலமை கொண்டவர். இருமொழிக் கவிஞர், நாடக எழுத்தாளர், நாடக இயக்குநர், புனைகதை எழுத்தாளர் எனப் படைப்பிலக்கியத் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் தமக்கெனத் தனியிடத்தைத் தக்க வைத்துக்கொண்டவர். தமிழ் எழுத்தாளர்களுக்குள் சர்ச்சைக்குரிய எழுத்தாளராக அடையாளங் காணப்பட்டவர். பல்துறைப் புலமை வாய்ந்த அறிவுஜீவியாகத் திகழ்பவர். கூரிய சிந்தனைத் திறனும், புதிய, நுட்பமான பார்வையும், மேதாவிலாசமும், உண்மையை உரக்க அஞ்சாத் துணிவும், தனித்தன்மையை இழந்துவிடாத ஆளுமையும் கொண்ட இக்கவிஞர் தென்கிழக்காசிய விருதினைப் பெற்றவர். இவர் 'விழிச் சன்னல்களின் பின்னாளிலிருந்து (1979), 'மெளனவதம்' (1984), 'இருமொழிக் கவிதைகள்' (1998) ஆகிய புதுக்கவிதை நூல்களைப் படைத்தவர். சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தில் புதுக்கவிதைத்துறையின் முன்னோடி என்னும் பெருமைக்குரியவர்' (பக்கம் 197) முனைவரின் பதிவு சரியானதுதான் என்பதை நிலைநிறுத்துகிறது எழுத்தாளர் இளங்கோவன் 'வல்லினம் 2010' மலருக்கு வழங்கிய நேர்காணல். அறிவுக்கு விருந்தளிக்கும் வகையில் மலரிலுள்ள ஆக்கங்கள் காணப்படுகின்றன. படைப்பாளிகளின் எழுத்தில் தெரியும் தெளிவும், ஞானச்சிறப்பும் குறிப்பிடத்தக்கவை. சிங்கப்பூர் மற்றும் மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் ம.நவீன், இளங்கோவன், தினேஸ்வரி, சிவா பெரியண்ணன், காளிதாஸ், கா.ஆறுமுகம், ஜெயந்தி சங்கர், கமலா அரவிந்தன், சித்ரா ரமேஷ், முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி, இராம.கண்ணபிரான், லதா, ஏ.தேவராஜன், யோகி எனப் படைப்பாளிகள் பலரின் ஆக்கங்களால் நிறைந்திருக்கும் மேற்படி வல்லினம் மலரைப் பற்றியும், முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி 'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்: ஆழமும் அகலமும்' என்னும் நூல் பற்றியும் இன்னுமொரு சமயம் விரிவாக எழுதப்படும்வரை. அவை பற்றிய அறிமுகக் குறிப்புகளாக இப்பத்திக் குறிப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
நூல்: 'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்: ஆழமும் அகலமும்'
ஆசிரியர்: முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி
வெளியீடு: மருதா பதிப்பகம்
முகவரி: 226 (188) Bharathi Salai, Royapettah, Chennai -600014, T.N. India
e-mail:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
வல்லினம்.காம் : www.vallinam.com.my
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems