பண்டைய இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் புலமை மரபு கொண்டவர் பேராசிரியர் சிவத்தம்பி. சமூகம், பண்பாடு, கருத்துநிலை, அரசியல் போன்ற களங்களின் ஊடாட்டம் சார்ந்து பார்க்கும் ஆய்வு செய்யும் ஒரு புதிய மரபை தமிழுக்கு வழங்கியவர்.
ஊடகம், கலை, இலக்கணம், பண்பாடு சார்ந்து பேராசிரியர் சிவத்தம்பி வெளிப்படுத்திய பார்வைகள் புதிய வளங்கள் கொண்டவை. தமிழியல் ஆய்வுக்குரிய அனைத்துச் சாத்தியப்பாடுகளையும் தன்னகத்தே கொண்டவை. இன்று எம் தமிழர் மத்தியில் வாழ்ந்தவர்களுள் சிந்தனையாலும் செயலாலும் மேற்கிளம்பி ஆளுமைப் பொலிவாக உயர்ந்து நின்றவர் பேராசிரியர் சிவத்தம்பி. தமிழியல் ஆய்வுச் செல்நெறியில் அவர் விட்டுச்சென்ற தடங்கள் ஆழமும் விரிவும் மிக்கவை.
தமிழகத்தில் பேராசிரியர் ....
பேராசிரியர் சிவத்தம்பியின் நூல்கள் சில.... ...
1. பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்.
2. இலக்கியமும் கருத்துநிலையும்.
3. பண்டைத் தமிழ்ச் சமூகம்... .. வரலாற்றுப் புரிதலை நோக்கி... ..
4. தனித்தமிழ் இயக்கத்தின் அரசியற் பின்னணி..
5. யாழ்ப்பாணம் : சமூகம் பண்பாடு கருத்துநிலை...
6. தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்
7. ஈழத்தில் தமிழ் இலக்கியம்
8. அரங்கு ஓர் அறிமுகம்
9. தமிழ்ப் பண்பாட்டில் சினிமா
10. தமிழ்ச் சமூகமும் பண்பாட்டில் மீள் கண்டுபிடிப்பும்.
11. இலக்கியமும் வாழ்க்கையும்
12. இலக்கணமும் சமூக உறவுகளும்
13. நாவலும் வாழ்க்கையும்
14. தமிழில் இலக்கிய வரலாறு.
15. கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்...
பேரறிஞர் சிவத்தம்பி அவர்கட்கு எமது அஞ்சலிகள்... ...!
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.....
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
கார்த்திகேசு சிவத்தம்பி (கரவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை), (பிறப்பு மே 10, 1932) ஒரு முக்கிய தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் ஆவார். கல்வியும் கல்விப்பணியும்ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் கொழும்பு ஷாகிரா கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார். இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். ஐக்கிய இராச்சியத்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் (Ph.D) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்.
தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டு வரை பணி புரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.
கலைப் பங்களிப்புபல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.
இலங்கையர்கோன் எழுதிய "விதானையார் வீட்டில்" தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.
ஆக்கங்கள்ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பல்வேறு துறைகளிலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்குப் புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின் கலைகள் எனப் பல்வேறு துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.
இவர் பற்றிய படைப்புக்கள்தமிழக அரசின் திரு.வி.க. விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட ஈழத்தமிழ் அறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆளுமை விகசிப்பின் சில ஊற்றுக்களை பதிவு செய்யும் வகையில், 'கரவையூற்று' எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கொழும்புக் கிளை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 'கரவையூற்று' நூலின் தொகுப்பு ஆசிரியர் வீ.ஏ.திருஞானசுந்தரம்.
•<• •Prev• | •Next• •>• |
---|